Smt. Sudarsanam
Smt P R Sudharsana has, over the last three decades, translated from Sanskrit into Tamil the prestigious commentaries of the Prasthana Traya Bhasya of Sri Shankaracharya. These include the Bhagavad Gita, ten principal Upanishads and the Brahma Sutra. She has been blessed immensely by her Gurus HH Jagadguru Sri Abhinava Vidyatirtha, HH Jagadguru Sri Bharati Tirtha Mahasannidhanam and HH Jagadguru Sri Vidhushekhara Bharati Sannidhanam. Her deep devotion to her Gurus, commitment and hard work is a dedication to our Sanatana Dharma.
During her youth she spent a lot of time learning from her teachers in Rajapalayam, Pandit KG Krishnamoorthy and Shantananda Swamigal. As much as she was learning personally she also took a lot of initiative to offer opportunities to women and families in Rajapalayam to learn too. Together with her late husband Sri PR Ramasubrahmaneya Rajha she is responsible for inviting and organizing Vedanta studies with HH Swami Chinmayananda, HH Swami Dayananda Saraswati and their many disciples. Together they have been blessed by the Adheenams in Tamil Nadu and several Mahatmas they have interacted with. She was personally responsible for bringing in a love for Sanskrit through Samskrita Bharati organisation for Rajapalayam. She has also interacted with scholars from the Madras Sanskrit college Sri Krishnamoorty Sastrigal, Sri Mani Dravid Sastrigal, Sri Goda Sastrigal and Sri K S Venkatrama Sastrigal of Vanivilas. Beginning under the guidance and encouragement of her late husband, she continues to manage a Veda Pathashala, a Sanskrit and Tamil library, Sastraprathishtha, Government partnered primary and high schools, temples and a tribal hostel. She fondly remembers how she was encouraged by her grandfather late Sri PAC Ramasamy Raja, her mother Smt Lingammal and her mother in law Smt Sethuramammal to study Vedanata. She is blessed with three children, grandchildren and great grandchildren who have imbibed the traditional values from her and, who respect and appreciate her.
ஸ்ரீமதி P.R. சுதர்ஸனம் அவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக ஸ்ரீ சங்கராச்சார்யாரின் பிரஸ்தான த்ரய பாஷ்யங்களின் மதிப்புமிக்க வர்ணனைகளை சமஸ்க்ருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார்கள். பகவத்கீதை, பத்து முக்கியமான உபநிடதங்கள் மற்றும் பிரம்ம ஸுத்திரங்கள் ஆகியன இதில் அடங்கும். அவரின் மானசீக குருக்களான ஸ்ரீஸ்ரீஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள், மஹா சந்நிதானம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதி தீர்த்த மஹாஸ்வாமிகள் மற்றும் சந்நிதானம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி தீர்த்த மஹாஸ்வாமிகளால் பெரிதும் ஆசிர்வதிக்கப்பட்டவர். தனது குருக்களின் மீது ஆழ்ந்த பக்தி, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவை நமது சனாதன தர்மத்திற்கான அவரின் அர்ப்பணிப்பாகும்.
தனது இளமை காலத்தில் அதிக நேரம் இராஜபாளையத்தில் இருந்த ஆசிரியர்களிடமிருந்தும் பண்டித் ஸ்ரீ. K.G. கிருஷ்ணமூர்த்தி மற்றும் சாந்தானந்தா ஸ்வாமிகளிடமிருந்தும் கற்றார். அவர் தனிப்பட்ட முறையில் தான் கற்றுக்கொண்டதைப் போலவே, ராஜபாளையத்தில் உள்ள பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கும் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களை வழங்க நிறைய முயற்சிகளை எடுத்தார். அவரது மறைந்த கணவர் ஸ்ரீ P.R. ராமசுப்பிரமணிய ராஜா அவர்களுடன் இணைந்து ஸ்வாமி சின்மயானந்தா, ஸ்வாமி தயானந்தா ஸரஸ்வதி மற்றும் ஆன்மீக பெரியோர்களை அழைத்து வேதாந்த வகுப்புகளை ஏற்பாடு செய்ததில் முக்கிய பொறுப்பு வகித்தார். அவர்கள் தொடர்பில் இருந்த தமிழ்நாட்டிலுள்ள ஆதீனங்களாலும் மற்றும் பல மகாத்மாக்களாலும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளார்கள். ராஜபாளையத்தில் சமஸ்கிருத பாரதி மூலம் ராஜபாளையம் மக்களுக்கு சமஸ்கிருதத்தின் மீது ப்ரிதி ஏற்பட அவர் தனிப்பட்ட முறையில் காரணமாக இருந்தார். சென்னை சமஸ்க்ருத கல்லூரி ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், ஸ்ரீ மணி திராவிட், ஸ்ரீ கோடா சாஸ்திரிகள் மற்றும் வாணிவிலாஸ் ஸ்ரீ K.S. வெங்கட்ராம சாஸ்திரிகள் போன்ற பண்டிதர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
தனது மறைந்த கணவரின் வழிகாட்டுதல் மற்றும் ஊக்கத்தின் பேரில், வேதபாடசாலை, சமஸ்க்ருதம் மற்றும் தமிழ் நூலகமான சாஸ்த்ர ப்ரதிஷ்டா, அரசுடன் இணைந்த ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளி, கோவில்கள் மற்றும் பழங்குடியினருக்கான விடுதி ஆகியவற்றை தொடர்ந்து நிர்வகித்து வருகிறார். அவரது மறைந்த தாத்தா ஸ்ரீ P.A.C. ராமசாமிராஜா, தாயார் ஸ்ரீமதி லிங்கம்மாள் மற்றும் மாமியார் ஸ்ரீமதி சேதுராமம்மாள் ஆகியோர் தன்னை வேதாந்தத்தை கற்க ஊக்கப்படுத்தியதை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார். மதிப்புடன் அன்புபாராட்டும் மூன்று குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளு பேரனுடன் அவர் ஆசிர்வதிக்கபட்டுள்ளார்.