द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

ऐतरेयोपनिषद्भाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

ஐதரேயோபநிஷத்பாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

परिसमाप्तं कर्म सहापरब्रह्मविषयविज्ञानेन । सैषा कर्मणो ज्ञानसहितस्य परा गतिरुक्थविज्ञानद्वारेणोपसंहृता । एतत्सत्यं ब्रह्म प्राणाख्यम् । एष एको देवः । एतस्यैव प्राणस्य सर्वे देवा विभूतयः । एतस्य प्राणस्यात्मभावं गच्छन् देवता अप्येति इत्युक्तम् । सोऽयं देवताप्ययलक्षणः परः पुरुषार्थः । एष मोक्षः । स चायं यथोक्तेन ज्ञानकर्मसमुच्चयेन साधनेन प्राप्तव्यो नातः परमस्तीत्येके प्रतिपन्नाः । तान्निराचिकीर्षुरुत्तरं केवलात्मज्ञानविधानार्थम् ‘आत्मा वा इदम्’ इत्याद्याह ।
(ச.பா) (அ - கை) அபரபிரஹ்ம விஷய விக்ஞானத்தோடு கர்மமார்க்கமானது ஒரு முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. ஞானத்துடன் கூடிய கர்மாவினாலேயே முற்கூறப்பட்ட விஷய விக்ஞானத்தின் வாயிலாக மேல் நிலை ஏற்படுகிறது என்று கூறி கர்ம விஷயங்களை உபசம்ஹாரம் செய்தார். “एतत्सत्यं ब्रह्म प्राणाख्यम्” பிராணன் என்ற இந்த பிரஹ்மமே சத்தியமானது, “एष एको देवः” இவன் ஒருவனே தேவன். “एतस्यैव प्राणस्य सर्वे देवा विभूतयः” இந்த பிராணனுடைய விபூதியே இந்த எல்லா தேவர்களும், “एतस्य प्राणस्यात्मभावं गच्छन्देवता अप्येति” இந்தப் பிராணனுடைய ஆத்ம பாவத்தை அடைவதே புருஷார்த்தம் என்று தேவதைகளும் முயற்சிக்கின்றனர். அந்தப்பிராண தேவதையின் சொரூபத்தை அடையும் லக்ஷணமானதே பரமபுருஷார்த்தம். இதுவே மோக்ஷம். இந்த மோக்ஷத்தை கூறப்பட்ட முறையோடு ஞான, கர்மாக்களை இணைத்து செய்யும் சாதனத்தால் அடையத்தக்கது ஆகும். எனவே இதற்கு மேல் ஒன்றும் இல்லை என்று சிலர் தீர்மானம் செய்தனர். அதை நிராகரிப்பதற்காகவும், கேவல ஆத்ம ஞானத்தை நிரூபிப்பதற்காகவும் ஆத்மா வா இதம் (आत्मा वा इदम्) என்று இந்த உபநிஷத்தைத் தொடங்குகிறார்.
कथं पुनरकर्मसम्बन्धिकेवलात्मविज्ञानविधानार्थ उत्तरो ग्रन्थ इति गम्यते ?
(ச.பா) (பூர்வ) கர்ம சம்பந்தம் இல்லாமல் கேவல ஆத்மஞானத்தை விளக்குவதற்காகவே மேல் கிரந்தம் ஆரம்பிக்கப்படுகிறது என்று எவ்வாறு கூறப்படுகிறது?
अन्यार्थानवगमात् । तथा च पूर्वोक्तानां देवतानामग्न्यादीनां संसारित्वं दर्शयिष्यत्यशनायादिदोषवत्त्वेन ‘तमशनायापिपासाभ्यामन्ववार्जत्’ (ऐ. उ. १ । २ । १) इत्यादिना । अशनायादिमत्सर्वं संसार एव परस्य तु ब्रह्मणोऽशनायाद्यत्ययश्रुतेः ।
(ச.பா) (சித்தாந்தீ) வேறு அர்த்தத்தை நாம் அந்தக்கிரந்தங்களில் இருந்து புரிந்து கொள்ளாததால், அது ஆத்ம ஞானத்தை விதிப்பதற்காகவே என்று கொண்டோம். மேலும் முற்கூறப்பட்ட அக்னி முதலான தேவதைகளுக்கு பசி, தாகம், உண்ணுதல் என்ற தோஷங்களோடு கூடியிருப்பதால் அவைகளுக்கு சம்சாரித்துவம் உண்டு என்று விளக்கப் போகிறார். அந்த பசி, தாகம் இவைகளுடன் அக்னி யாதி தேவதைகள் உள்ளனர் என்று மந்திரம் கூறப்போகிறது. பசி, தாகம் இவைகளுடன் கூடியயாவும் சம்சாரமேயாகும். பரப்பிரஹ்மத்திற்கு அவையேதும் கிடையாது என்று சுருதி கூறுகிறது.
भवत्वेवं केवलात्मज्ञानं मोक्षसाधनम् , न त्वत्राकर्म्येवाधिक्रियते ; विशेषाश्रवणात् । अकर्मिण आश्रम्यन्तरस्येहाश्रवणात् । कर्म च बृहतीसहस्रलक्षणं प्रस्तुत्य अनन्तरमेवात्मज्ञानं प्रारभ्यते । तस्मात्कर्म्येवाधिक्रियते ।
(ச.பா) (பூர்வ) அவ்வாறே இருக்கட்டும், கேவல ஆத்ம ஞானமே மோக்ஷத்திற்கு சாதனம் என்பது இல்லை. இங்கு கர்மாக்கள் அற்றவனைப் பற்றியே கூறப்படுகிறது. அதைப்பற்றி விசேஷமாக எதுவும் கூறப்படவில்லை. அகர்மி (अकर्मि) அதாவது கர்மாக்கள் அற்றவன் என்று ஒரு ஆச்சிரமம் இருப்பதாக நாம் கேட்டது கிடையாது. கர்மாவோவெனில் மிகப்பெரியது. ஆயிரம் லக்ஷணங்களோடு கூடியது. அதைப்பற்றி நன்கு விளக்கிய பின்னரே ஆத்மக் ஞானத்தைப்பற்றி கூறத் தொடங்கப்படுகிறது. ஆதலால் இவைகள் யாவும் கர்ம மார்க்கத்தை அனுசரித்தவனுக்காகவே கூறப்பட்டது ஆகும்.
न च कर्मासम्बन्ध्यात्मविज्ञानम् , पूर्ववदन्ते उपसंहारात् । यथा कर्मसम्बन्धिनः पुरुषस्य सूर्यात्मनः स्थावरजङ्गमादिसर्वप्राण्यात्मत्वमुक्तं ब्राह्मणेन मन्त्रेण च‘सूर्य आत्मा’ (ऋ. सं. १ । ११५ । १) इत्यादिना, तथैव ‘एष ब्रह्मैष इन्द्रः’ (बृ. उ. ३ । १ । ३) इत्याद्युपक्रम्य सर्वप्राण्यात्मत्वम् । ‘यच्च स्थावरम् , सर्वं तत्प्रज्ञानेत्रम्’ (बृ. उ. ३ । १ । ३) इत्युपसंहरिष्यति ।
(ச.பா) மேலும் கர்ம அசம்பந்தியான ஆத்மவிக்ஞானத்தை முன்னதைபோல் இருதியில் உபசம்ஹாரம் செய்யவும் இல்லை. எவ்வாறு எனில் கர்ம சம்பந்தியான புருஷனுக்கு சூரியாத்ம ஸ்வரூபமாய் ஸ்தாவரஜங்கமாதி சமஸ்த பிராணிகளுக்கும் ஆத்மத்தன்மை கூறப்பட்டது. பிராஹ்மணத்தாலும், மந்திரத்தாலும் “सूर्य आत्मा” சூரியனே ஆத்மா என்பவைகளால் கூறப்பட்டது. அவ்வாறே“एष ब्रह्मैष इन्द्रः” இந்த பிரஹ்மாவே இந்த இந்திரன் என்று தொடங்கி எல்லாப்பிராணிகளின் ஆத்மத்துவம் என்று கூறப்பட்டது. “यच्च स्थावरं सर्व तत्प्रज्ञानेत्रम्” இந்த ஸ்தாவரங்கள் எவைகள் உண்டோ அவைகள் யாவும் அந்தப்பிரக்ஞையைக் கண்ணாகக் கொண்டது என்று உபசம்ஹாரம் செய்யப்போகிறார்.
तथा च संहितोपनिषत् — ‘एतं ह्येव बह्वृचा महत्युक्थे मीमांसन्ते’ (ऐ. आ. ३ । २ । ३ । १२) इत्यादिना कर्मसम्बन्धित्वमुक्त्वा ‘सर्वेषु भूतेष्वेतमेव ब्रह्मेत्याचक्षते’ इत्युपसंहरति । तथा तस्यैव ‘योऽयमशरीरः प्रज्ञात्मा’ इत्युक्तस्य ‘यश्चासावादित्य एकमेव तदिति विद्यात्’ इत्येकत्वमुक्तम् । इहापि ‘कोऽयमात्मा’ (ऐ. उ. ३ । १ । १) इत्युपक्रम्य प्रज्ञात्मत्वमेव ‘प्रज्ञानं ब्रह्म’ (ऐ. उ. ३ । १ । ३) इति दर्शयिष्यति । तस्मान्नाकर्मसम्बन्ध्यात्मज्ञानम् ।
(ச.பா) அவ்வாறே ரிக் சம்ஹிதையின் உபநிஷத்தில் “एतं ह्येव बह्वृच महत्युक्थे मीमांसन्ते” இந்தப் பிராணாத்ம ஸ்வரூபத்தையே பஹ்வ்ருசா எனப்படும் ரிக் வேதத்தால் மஹத்தைப்பற்றி விசாரணை செய்யப்படுகிறது என்பவைகளால் கர்ம சம்பந்தித் தன்மையைக் கூறிவிட்டு “सर्वेषु भूतेष्वेतमेव ब्रह्मेत्याचक्षते” எல்லா பூதங்களிலும் இதையே பிரஹ்மம் என்று கூறுகின்றனர் என்று உபசம்ஹாரம் செய்கிறார். எனவே எவன் ஒருவன் சரீரமற்றவனாயும், பிரக்ஞையே ஆத்மா என்று கூறப்பட்டானோ அவனுக்கே அந்த இவனே சூரியனிலும் இருக்கிறான். அங்கும், இங்கும் இருப்பது ஒன்றே என்று அறிவாயாக என்று ஏகத்துவத்தை கூறுகிறார். “योऽयमशरीरः प्रज्ञात्मा” இந்த சரீரம் அற்றவனான பிரக்ஞா ரூபமானவனே ஆத்மா என்றும் “यश्चासावादित्य एकमेव तदिनि विद्यात्” எந்த இவன் பிரக்ஞா ரூபமாய் இருக்கிறானோ அவனே சூரியனிலும் விளங்குகிறான் அதை ஒன்று என்று அறிவாயாக) இங்கும் “कोऽयमात्मा” அந்த ஆத்மா என்பவன் யார்? அல்லது இந்த ஆத்மா யார்? என்று தொடங்கி பிரக்ஞாத்மத்துவத்தையே “प्रज्ञानं ब्रह्म” பிரக்ஞானமே பிரஹ்மம் என்று காண்பிக்கப்போகிறார். ஆதலால் ஆத்மக்ஞானம் கர்ம சம்பந்தமில்லாததாக இல்லை. (கர்ம சம்பந்தமுடையது என்பதாம்)
पुनरुक्त्यानर्थक्यमिति चेत् — ‘प्राणो वा अहमस्म्यृषे’ इत्यादिब्राह्मणेन ‘सूर्य आत्मा’ इति च मन्त्रेण निर्धारितस्यात्मनः ‘आत्मा वा इदम्’ इत्यादिब्राह्मणेन ‘कोऽयमात्मा’ (ऐ. उ. ३ । १ । १) इति प्रश्नपूर्वकं पुनर्निर्धारणं पुनरुक्तमनर्थकमिति चेत् , न ; तस्यैव धर्मान्तरविशेषनिर्धारणार्थत्वान्न पुनरुक्ततादोषः ।
(ச.பா) இதை (புனருக்தி) என்று கூறுவோம். அது எவ்வாறு எனில் “प्राणो वा अहमस्म्यृषे” ஹே! மஹரிஷியே! நான் பிராணனாய் இருக்கிறேன் என்பன போன்ற பிராஹ்மண வாக்கியத்தாலும், “सूर्य आत्मा” சூரியன் ஆத்மா என்ற மந்திரங்களாலும், நிர்தாரணம் செய்யப்பட்ட ஆத்மாவிற்கே “आत्मा वा इदम्” இந்த ஆத்மா என்பன போன்ற பிராஹ்மண வாக்கியங்களால் இந்த ஆத்மா யார் என்று கேள்வி பூர்வகமாய் அதை மறுபடி நிர்தாரணம் செய்தல் புனருக்தியாகி அது பொருள் அற்றதாக ஆகிவிடாதோ எனில், அது அவ்வாறு அல்ல, அந்த ஆத்மாவிற்கே வேறு தர்மங்களை விசேஷமாக நிர்தாரணம் செய்வதற்காக முற்கூறப்பட்ட வாக்கியங்கள் வந்தமையால் இப்பொழுது “आत्मा वा इदम्” என்று கூறத்தொடங்குவது புனருக்தி தோஷத்தைக் கொண்டதாக ஆகாது.
कथम् ? तस्यैव कर्मसम्बन्धिनो जगत्सृष्टिस्थितिसंहारादिधर्मविशेषनिर्धारणार्थत्वात् केवलोपास्त्यर्थत्वाद्वा ; अथवा, आत्मेत्यादिः परो ग्रन्थसन्दर्भः आत्मनः कर्मिणः कर्मणोऽन्यत्रोपासनाप्राप्तौ कर्मप्रस्तावेऽविहितत्वाद्वा केवलोऽप्यात्मोपास्य इत्येवमर्थः । भेदाभेदोपास्यत्वाच्च ‘एक एवात्मा’ कर्मविषये भेददृष्टिभाक् । स एवाकर्मकाले अभेदेनाप्युपास्य इत्येवमपुनरुक्तता ॥
(ச.பா) அது எவ்வாறு? எனில் அந்த கர்ம சம்பந்தியான ஆத்மாவிற்கே ஜகத்தின் சிருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹாரம் போன்ற தர்ம விசேஷங்களை நிர்தாரணம் செய்யும் முறையில் அந்த வாக்கியங்கள் கூறப்பட்டன. அல்லது அதைக்கேவலம் உபாசிக்கத்தகுந்தது என்பதற்காகவும் கூறப்பட்டிருக்கலாம். அல்லது ஆத்மாவைப் பற்றி மற்றொரு நூ லை தொடங்குவதால் ஆத்மாவிற்கு கர்மித்துவமும், அந்தக் கர்மித்துவத்தைப் பெற்றமையால் அந்த கர்மாக்களைச் செய்யும் காலத்தைத் தவிர அதை உபாசனை செய்யக்கூடிய தன்மை ஏற்படாமையாலும், அது கர்மாக்கள் இல்லாத இடத்திலும், அதை கேவலம் உபாசிக்கத்தகுந்தது என்பதை கூறும் பொருளிலும், அவ்வாக்கியங்கள் வந்தவையாகும். பேதா பேதங்களுடன் கூட அந்த ஒரே ஆத்மாவே உபாசிக்கத்தக்கது. அந்தக் கர்மாக்களே வேறுபடும். அந்த கர்மாக்களே திருஷ்டிக்கு விஷயமானது. அந்த ஆத்மா இவ்வாறு இருப்பினும் கர்மாக்களை செய்யும் காலங்களில் அது எவ்வித பேதமும் அற்றது என்று உபாசிக்கத்தகுந்தது என்றபொருளில் கூறப்பட்டது என்றும் இவ்வாறு பலவாறாக அதற்கு புனர்ருக்தி தோஷம் ஏற்படுவது இல்லை.
‘विद्यां चाविद्यां च यस्तद्वेदोभयं सह । अविद्यया मृत्युं तीर्त्वा विद्ययामृतमश्नुते’ (ई. उ. ११) इति ‘कुर्वन्नेवेह कर्माणि जिजीविषेच्छतं समाः’ (ई. उ. २) इति च वाजिनाम् । न च वर्षशतात्परमायुर्मर्त्यानाम् , येन कर्मपरित्यागेन आत्मानमुपासीत । दर्शितं च ‘तावन्ति पुरुषायुषोऽह्नां सहस्राणि भवन्ति’ इति । वर्षशतं चायुः कर्मणैव व्याप्तम् । दर्शितश्च मन्त्रः ‘कुर्वन्नेवेह कर्माणि’ इत्यादिः ; तथा ‘यावज्जीवमग्निहोत्रं जुहोति’ ‘यावज्जीवं दर्शपूर्णमासाभ्यां यजेत’ इत्याद्याश्च ; ‘तं यज्ञपात्रैर्दहन्ति’ इति च । ऋणत्रयश्रुतेश्च । तत्र हि पारिव्राज्यादिशास्त्रम् ‘व्युत्थायाथ भिक्षाचर्यं चरन्ति’ (बृ. उ. ३ । ५ । १) (बृ. उ. ४ । ४ । २२) इत्यात्मज्ञानस्तुति - परोऽर्थवादोऽनधिकृतार्थो वा ।
(ச.பா) “विद्यां चाविद्यां च यस्तद्वेदोभय ँसह। अविद्यया मृत्युं तीर्त्वा विद्ययामृतमश्नुते” எந்த ஒரு சாதகன் ஒரே சமயத்தில் வித்தையையும், அவித்தையையும் அறிந்து அவித்தையினால் மிருத்யுவைக் கடந்து வித்யையால் அம்ருதத்துவத்தை அடைகிறான் என்றும், “कुर्वन्नवेह कर्माणि जिजीविषेच्छत ँसमाः” இங்கு வேதோக்தமான கர்மங்களை செய்துக்கொண்டே நூ று ஆண்டுகள் வாழ விரும்புதல் வேண்டும். அல்லது நீ இங்கு நூ று ஆண்டுகள் வாழவிரும்புவாயேயானால் அதுவரையிலும் கர்மாக்களை செய்து கொண்டே இருப்பாயாக, என்றும் ஈசாவாஸ்யத்தில் கூறப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு நூ று வருஷங்களுக்கு மேல் ஆயுள் கிடையாது. எதனால் கர்மத்தை விட்டு ஆத்மாவை உபாசிக்க முடியாது போனால் கர்மாக்களையாவது செய்து கொண்டு இரு. அந்த கர்ம ஸ்வரூபமாய் ஆத்மாவை உபாசிப்பாயாக என்று கூறப்பட்டதோ. மேலும் காண்பிக்கப்பட்டுள்ளது சுருதியில் “तावन्ति पुरुषायुषोऽनां सहस्राणि भवन्ति” ஆயிரம் பகல்கள் புருஷனின் ஆயுள்காலம் ஆகும். இங்கு ஆயிரம் பகல்கள் என்பது நூ று வருஷங்களைக் குறிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நூ று வயது காலமும் கர்மாக்களினாலேயே வியாபிக்கப்பட்டதாய் இருக்கும். அதைக் காண்பிக்கும் மந்திரமே “कुर्वन्नेवेह कर्माणि” இங்கு கர்மாக்களை செய்து கொண்டே, என்பன போன்ற வாக்கியங்கள் ஆகும். அவ்வாறே “यावज्जीवमग्निहोत्रं जुहोति” உயிர் உள்ள வரையில் அக்னி ஹோத்திரம் செய்கிறான். “यावज्जीवं दर्शपूर्णमासाभ्यां यजेत” உயிர் உள்ளவரை தர்ச பூர்ணமாச யாகங்களைச் செய்தல் வேண்டும் என்பவைகளாலும் “तं यज्ञपात्रैर्दहन्ति” அந்த அக்னி ஹோத்திரியை யக்ஞபாத்திரங்களுடன் கூடவே சம்ஸ்காரம் செய்கின்றனர் என்பவைகளாலும், மூன்று ரிணங்களைப் பற்றி கூறும் சுருதிகளாலும் புருஷன், ஆத்மாவை அறிந்துகொள்ள வேண்டும் என்று உணர்த்தப்பட்டதாக ஆயிற்று.

(ऋणत्रयम्- தேவரிணம், ரிஷிரிணம், பித்ருரிணம்)

(பிரஹ்மச்சரியத்துடன் வேதாத்தியயனம் செய்வதால் ரிஷிரிணமும், கிரஹஸ்தனாகி யாகங்கள் செய்வதால் தேவரிணமும், பிரஜைகளை அடைவதால் பித்ருரிணமும் தீரும்.) அங்கு பரிவிராஜகர்களுடைய முறையை நிர்ணயிக்கும் சாஸ்திரம் மேல் எழுந்து “व्युत्थायाथ भिक्षाचर्यं चरन्ति” இந்த ஈஷணைகளை எல்லாம் விட்டு, எல்லாவற்றையும் துறந்து பிக்ஷை எடுத்துக்கொண்டு சஞ்சரிக்கின்றனர் என்று ஆத்மக்ஞானத்தைத் துதிக்கக் கூடிய அர்த்தவாதமாம். இங்கு கூறப்பட்டதா?
न, परमार्थात्मविज्ञाने फलादर्शने क्रियानुपपत्तेः — यदुक्तं कर्मिण एव चात्मज्ञानं कर्मसम्बन्धि चेत्यादि, तन्न ; परं ह्याप्तकामं सर्वसंसारदोषवर्जितं ब्रह्माहमस्मीत्यात्मत्वेन विज्ञाने, कृतेन कर्तव्येन वा प्रयोजनमात्मनोऽपश्यतः फलादर्शने क्रिया नोपपद्यते ।
(ச.பா)அவ்வாறு அல்ல; ஏன் எனில் பரமார்த்த விக்ஞானத்திற்கு எப்பலமும் இல்லாததால் அதற்கு எந்த செயலும் பொருந்தாது. இதுவே கூறப்பட்டுள்ளது. “கர்மாக்களை அனுசரிக்கும் கர்மடர்களுக்கு ஆத்மக்ஞானமும் கர்மாக்களை அனுசரித்து ஏற்படும் ஞானமும் கூறப்பட்டு உள்ளது என்பன போன்ற வாக்கியங்கள் உள்ளனவே எனில் அது சரியானது அல்ல. ஆப்தகாமனாய் எல்லா சம்சார தோஷங்களும் நீங்கி நானே அந்த பிரஹ்மமாய் இருக்கிறேன் என்ற விக்ஞானம் வந்தபொழுது இதுவரை செய்த கர்மாக்களாலோ, இனிசெய்ய வேண்டிய கர்மாக்களாலோ எவ்வித பிரயோஜனத்தையும் ஆத்ம சம்பந்தமாக அறியாதவனுக்கு எந்த பலத்தையும் அபேக்ஷித்த எந்தக் கிரியையும் ஏற்படுவது இல்லை.
फलादर्शनेऽपि नियुक्तत्वात्करोतीति चेत् , न ; नियोगाविषयात्मदर्शनात् । इष्टयोगमनिष्टवियोगं वात्मनः प्रयोजनं पश्यंस्तदुपायार्थी यो भवति, स नियोगस्य विषयो दृष्टो लोके, न तु तद्विपरीतनियोगाविषयब्रह्मात्मत्वदर्शी ।
(ச.பா) பலம் காணாது போனாலும் அந்தக் கர்மாக்களில் அவன் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதால் அவைகளை செய்கிறான் என்று கூறுவாயேயானால் அதுவும் சரியல்ல. இவ்வாறு ஈடுபடுத்தப்படும் கிரியாவிஷயத்தால் ஆத்மதரிசனத்திற்கு பிரயோஜனமும் அநிஷ்ட்டத்தை நீக்குவதும் உள்ள ஆத்மாவிற்கு ஏற்படும் பிரயோஜனத்தைக் கண்டு அந்த இரண்டு பலன்களையும் அல்லது உபாயங்களையும் எவன் எதிர்பாக்கிறானோ அவனே அந்த ஈடுபடுத்தப்படுவதற்கு விஷயமாகிறானே அன்றி அதற்கு மாறுபட்ட பிரஹ்மாத்ம தர்சி அந்த கர்மாக்களில் ஈடுபடுவது இல்லை.
ब्रह्मात्मत्वदर्श्यपि संश्चेन्नियुज्येत, नियोगाविषयोऽपि सन्न कश्चिन्न नियुक्त इति सर्वं कर्म सर्वेण सर्वदा कर्तव्यं प्राप्नोति । तच्चानिष्टम् । न च स नियोक्तुं शक्यते केनचित् । आम्नायस्यापि तत्प्रभवत्वात् । न हि स्वविज्ञानोत्थेन वचसा स्वयं नियुज्यते । नापि बहुवित्स्वामी अविवेकिना भृत्येन ।
(ச.பா) பிரஹ்மாத்மத்துவ தரிசியாய் இருப்பினும் கூட அவன் அந்தக்கர்மாக்களுடன் ஈடுபடுத்தி இணைக்கப்படுகிறான் என்றால் அப்பொழுது எவனுமே கர்மாக்களில் ஈடுபடாதவனாக இருக்கவும் முடியாது
आम्नायस्य नित्यत्वे सति स्वातन्त्र्यात्सर्वान्प्रति नियोक्तृत्वसामर्थ्यमिति चेत् , न ; उक्तदोषात् । तथापि सर्वेण सर्वदा सर्वमविशिष्टं कर्म कर्तव्यमित्युक्तो दोषोऽप्यपरिहार्य एव ।
(ச.பா)அந்நிலையில் எல்லாக்கர்மாக்களும் எல்லோராலும் எப்பொழுதும் செய்யத்தக்கதாக ஆகும். என்றநிலையே ஏற்படும். அது நமக்கு இஷ்டடமானது அல்ல. மேலும் யாராலும் அவனை எதோடும் இணைப்பதற்கு எவராலும் முடியாது. வேதங்கள் கூட அந்த அந்தக் கர்மாக்களுக்கு ஏற்றவனையே அவை அவைகளுடன் இணைக்கிறதே அன்றி தன்னுடைய சுவச்சந்தமான விக்ஞானத்தால் எழுந்த வார்த்தைகளால் தான் நேரிடையாக இணைப்பது இல்லை. இது எது போல் எனில் அறிவாளியான எஜமானனை அவிவிவேகியான வேலைக்காரன் ஏவுவதை எங்கும் கண்டது இல்லை சுருதிகளுக்கு நித்தியத்துவம் இருப்பினும் சுவதந்திரமாய் எல்லோரையும் நியமனம் செய்வதற்கு அதற்கு சாமர்த்தியம் உண்டு என்று கூறினாலும் அதுவும் சரியல்ல. இதுவும் முற்கூறிய தோஷத்தை கொண்டதே ஆகும். அவ்வாறு இருப்பினும் எல்லோராலும் எப்பொழுதும் எல்லாக் கர்மாக்களும் மிச்சமில்லாமல் பூர்ணமாக செய்யத்தக்கது என்று ஆகிவிடும் என்று முன் கூறப்பட்ட தோஷமானது நீக்க முடியாததேயாகும்.
तदपि शास्त्रेणैव विधीयत इति चेत् — यथा कर्मकर्तव्यता शास्त्रेण कृता, तथा तदप्यात्मज्ञानं तस्यैव कर्मिणः शास्त्रेण विधीयत इति चेत् , न ; विरुद्धार्थबोधकत्वानुपपत्तेः । न ह्येकस्मिन्कृताकृतसम्बन्धित्वं तद्विपरीतत्वं च बोधयितुं शक्यम् । शीतोष्णत्वमिवाग्नेः ।
(अनुवादः) அதுவும் சாஸ்திரத்தாலேயே விதிக்கப் பட்டுள்ளது என்று கூறுவாயேயானால்--- - --எவ்வாறு கர்மாக்கள் செய்யத்தக்கவை என்று சாஸ்திரங்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளதோ அவ்வாறே இந்த ஆத்மக்ஞானமும் அந்த கர்ம மார்க்கத்தை அனுசரிப்பவனுக்கே சாஸ்திரங்களால் விதிக்கப்பட்டுள்ளன என்று கூறுவாயேயானால் அதுவும் சரியானது அல்ல. அப்பொழுது முரண்பாடான பொருளை போதிக்கும் தன்மை சாஸ்திரங்களுக்கு ஏற்படும். அதுவும் நமக்கு சம்மதம் ஆகாது. ஒரே பொருளை செய்யாதே என்றும் செய் என்றும் அதற்கு விபரீதமாகவும், போதிப்பதற்கு முடியாது. அக்னிக்கு சீதமும், உஷ்ணமும் ஒரே சமயத்தில் ஏற்படுவது இல்லை.
न चेष्टयोगचिकीर्षा आत्मनोऽनिष्टवियोगचिकीर्षा च शास्त्रकृता, सर्वप्राणिनां तद्दर्शनात् । शास्त्रकृतं चेत् , तदुभयं गोपालादीनां न दृश्येत, अशास्त्रज्ञत्वात्तेषाम् । यद्धि स्वतोऽप्राप्तम् , तच्छास्त्रेण बोधयितव्यम् । तच्चेत्कृतकर्तव्यताविरोध्यात्मज्ञानं शास्त्रेण कृतम् , कथं तद्विरुद्धां कर्तव्यतां पुनरुत्पादयेत् शीततामिवाग्नौ, तम इव च भानौ ?
(अनुवादः) சாஸ்திரங்கள் ஒவ்வொருவருக்கும் இஷ்ட்டமான பொருளை அடைவதற்கும், அநிஷ்ட்டத்தை நீக்குவதற்கும் விரும்பியே எல்லாபிராணிகளுக்கும் பொதுவாக சாஸ்திரம் செய்யப்பட்டுள்ளது என்று கூறுவாயேயானால் இந்த இரண்டுமே பசுவை மேய்க்கும் இடையர்களுக்கு சாஸ்திரக்ஞானமோ திருஷ்ட்டஞானமோ ஏற்படுவது இல்லை, பூர்வபக்ஷியான நீ கூறும் முறையை அனுசரித்தால் கோபாலனுக்கும், இவ்விரண்டும் ஏற்படவேண்டும். எது சுவயமாக அறியப்படவில்லையோ அதை சாஸ்திரத்தால் அறியப்படவேண்டும். அதுயாதெனில் செய்தது செய்யத்தக்கது இவை இரண்டிற்கும் விரோதமின்றி ஆத்மக்ஞானமானது சாஸ்திரங்களால் விளக்கப்பட்டு உள்ளது. சாஸ்திரத்தால் இது செய்யப்பட்டு உள்ளது எனில் அதற்கு விரோதமான செய்யத்தக்கதை போதித்ததாக ஆகும். அது எவ்வாறு எனில் அக்னியில் குளிர்ச்சியையும், சூரியனில் இருளையும் உண்டுபண்ணுவது போல.
न बोधयत्येवेति चेत् , न ; ‘स म आत्मेति विद्यात्’ (कौ. उ. ३ । ९) ‘प्रज्ञानं ब्रह्म’ (ऐ. उ. ३ । १ । ३) इति चोपसंहारात् । ‘तदात्मानमेवावेत्’ (बृ. उ. १ । ४ । ९) ‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) इत्येवमादिवाक्यानां तत्परत्वात् । उत्पन्नस्य च ब्रह्मात्मविज्ञानस्याबाध्यमानत्वान्नानुत्पन्नं भ्रान्तं वा इति शक्यं वक्तुम् ।
(अनुवादः) சாஸ்திரம் அவ்வாறு போதிக்கவில்லை எனில் அது சரியல்ல. “स म आत्मेति विद्यात्” “प्रज्ञानं ब्रह्म” சாஸ்திரம் அது உன்னுடைய ஆத்மாவென்று அறிவாயாக. பிரக்ஞானமே பிரஹ்மம் என்று இங்கு முடிவுரைக்குக் கொண்டுவருகிறது. “तदात्मानमेवावेत्” “तत्त्वमसि” அந்த ஆத்மாவை அறிவாயாக. அதுவாகவே நீ இருக்கிறாய் என்ற வாக்கியங்கள் ஆத்மபரமானவை, இந்தவாக்கியங்கள் பிரஹ்மக்ஞானம் உண்டானவனுக்கு எந்த பாதகமும் விளையாததால் அவனைக்குறித்து கூறியது அல்ல. ஆத்மக்ஞானம் உண்டாகாது பிராந்திநிலையில் உள்ளவனுக்காகவே இவை கூறப்பட்டுள்ளன என்பது இல்லை.
त्यागेऽपि प्रयोजनाभावस्य तुल्यत्वमिति चेत् ‘नाकृतेनेह कश्चन’ (भ. गी. ३ । १८) इति स्मृतेः — य आहुर्विदित्वा ब्रह्म व्युत्थानमेव कुर्यादिति, तेषामप्येष समानो दोषः प्रयोजनाभाव इति चेत् , न ; अक्रियामात्रत्वाद्व्युत्थानस्य । अविद्यानिमित्तो हि प्रयोजनस्य भावः, न वस्तुधर्मः, सर्वप्राणिनां तद्दर्शनात् , प्रयोजनतृष्णया च प्रेर्यमाणस्य वाङ्मनःकायैः प्रवृत्तिदर्शनात् , ‘सोऽकामयत जाया मे स्यात्’ (बृ. उ. १ । ४ । १७) इत्यादिना पुत्रवित्तादि पाङ्क्तलक्षणं काम्यमेवेति ‘उभे ह्येते साध्यसाधनलक्षणे एषणे एव’ (बृ. उ. ३ । ५ । १) इति वाजसनेयिब्राह्मणेऽवधारणात् ।
(अनुवादः) ஈஷணா திரயங்களை விடுவதாலும், வித்வானுக்கு கர்மாக்களை விடுவதாலும் பிரயோஜனம் இன்மை ஒரே மாதிரியானதே என்றால் “नाकृतेनेह कश्चन” இவ்வுலகில் எந்த ஓருவனும் கர்மாக்கள் செய்யாமல் எந்தப்பயனையும் அடைவது இல்லை, என்று ஸ்மிருதிகள் கூறுகின்றன. மேலும் சிலர் கூறுவர் பிரஹ்மத்தை உணர்ந்து யாவற்றையும் துறந்து செல்லவே வேண்டும் என்று கூறும் இடத்தும் எந்த பிரயோஜனமும் இல்லை என்ற சமான தோஷமே ஏற்படுகிறது என்று கூறுவாயேயானால் அது சரியல்ல. இங்கு வியுக்தானம் என்பது எல்லாவற்றையும் உதரிவிட்டு செல்லுதல் ஆகும். அந்த வியுக்தானத்திற்கு எச்செயலும் செய்யாமை என்பதே ஏற்படும். பிரயோஜனத்தின் பாவம் அதாவது பிரயோஜனத்தால் ஏற்படும் பாவம் அவித்தியா நிமித்தத்தால் உண்டானதே அன்றி வஸ்துதர்மம் ஆகாது. எல்லா பிராணிகளிடத்தும் அதைக் காண்கிறோம். பிரயோஜனத்தில் ஏற்பட்ட ஆசையால் பிரேணை செய்யப்பட்டவனே வாக்கு, மனம், உடல் இவைகளால் பிரவிர்த்திக்கிறான் என்று கண்டுள்ளோம். “सोऽकामत जाया मे स्यात्”அவன் விரும்பினான் எனக்கு மனைவி உண்டாகட்டும் என்று என்பன போன்ற வாக்கியங்களால் மகன், செல்வம், என்ற தனக்கு உடன்பட்ட பாங்க்த லக்ஷணமான பொருள்களையே விரும்புகிறான். “उभे ह्येते एषणे एव” சாத்திய சாதன லக்ஷணமான இவ்விரண்டுமே ஈ‌ ஷணைகளோ ஆகும், என்று ரிக்வேத பிராஹ்மணத்தில் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளது.
अविद्याकामदोषनिमित्ताया वाङ्मनःकायप्रवृत्तेः पाङ्क्तलक्षणाया विदुषोऽविद्यादिदोषाभावादनुपपत्तेः क्रियाभावमात्रं व्युत्थानम् , न तु यागादिवदनुष्ठेयरूपं भावात्मकम् । तच्च विद्यावत्पुरुषधर्म इति न प्रयोजनमन्वेष्टव्यम् । न हि तमसि प्रवृत्तस्य उदित आलोके यद्गर्तपङ्ककण्टकाद्यपतनम् , तत्किम्प्रयोजनमिति प्रश्नार्हम् ।
அந்த சாத்திய சாதனங்கள் யாவை எனில் அவித்தையால் உண்டான விருப்பம் எனப்படும் தோஷத்தை நிமித்தமாகக்கொண்டு வாக்கு, மனது, உடல் இவைகளுடைய பிரவிர்த்தியால் பாங்க்தம் என்று கூறப்பட்ட ஐந்து விஷயங்களும் வேண்டப்பட்டதாக ஆகின்றன.

(अनुवादः) வித்வானுக்கோ அவித்தையால் ஏற்படும் தோஷம் இன்மையால் அவருக்கு செயலின் இன்மையே வியுக்தானம் என்ற எழுச்சி யாகும் அது யாகம் முதலானவைகள் போல் அனுஷ்ட்டேயரூபமாயோ பாவாத்மகமாயோ இருப்பது அல்ல. அது வித்தையைப்போல் புருஷதர்மமும் அல்ல. அதற்கு ஏதாவது பலன் கூறவேண்டும் என்றால் அதை எங்காவது தேடித்தான் கணடுபிடிக்க வேண்டும். இருளில் நுழைந்தவனுக்கு பிரகாசம் வந்தபொழுது அங்கு இருக்கும் குழி, சேறு, முள் இவைகளில் விழாமை என்பது எவ்வகைப் பிரயோஜனத்தைச் சேர்ந்தது என்ற கேள்வி எழும்.
व्युत्थानं तर्ह्यर्थप्राप्तत्वान्न चोदनार्थ इति । गार्हस्थ्ये चेत्परं ब्रह्मविज्ञानं जातम् , तत्रैवास्त्वकुर्वत आसनं न ततोऽन्यत्र गमनमिति चेत् , न ; कामप्रयुक्तत्वाद्गार्हस्थ्यस्य । ‘एतावान्वै कामः’ (बृ. उ. १ । ४ । १७) ‘उभे ह्येते एषणे एव’ (बृ. उ. ३ । ५ । १) (बृ. उ. ४ । ४ । २२) इत्यवधारणात् कामनिमित्तपुत्रवित्तादिसम्बन्धनियमाभावमात्रम् ; न हि ततोऽन्यत्र गमनं व्युत्थानमुच्यते । अतो न गार्हस्थ्य एवाकुर्वत आसनमुत्पन्नविद्यस्य । एतेन गुरुशुश्रूषातपसोरप्यप्रतिपत्तिर्विदुषः सिद्धा ।
(अनुवादः) அவ்வாறு எழுச்சி பெற்றவனுக்கு அந்த எழுச்சியை அடைந்தமையால் எந்த தூண்டுதலும் அவனுக்கு இல்லை கிரஹஸ்த தர்மத்திலோவெனில் அந்தப்பரப்பிரஹ்மத்தைப் பற்றிய விக்ஞானம் உண்டாகுமேயானால் அவன் அங்கேயே எச்செயலையும் செய்யாமல் நிலையாய் இருக்கட்டுமே, அதைவிட்டு ஏன் மற்றொரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று கூறுவாயேயானால் அதுவும் சரியல்ல. கிரஹஸ்த்த தர்மமானது ஒருவித விருப்பத்தோடு பிரயோகிக்கப்பட்டது ஆகும். அதாவது அங்கு சில விருப்பங்களைக் கொண்டே கிரஹஸ்த்தாஸ்ரமத்தில் பிரவிர்த்திக்கின்றான். “एतावान्वै कामः” इति “उभे ह्येते एषणे एव”. அவனுடைய காமனை இவ்வளவே இந்த இரண்டும் ஈஷ்ணைகளே என்று சுருதி முதலிலேயே நிச்சயம் செய்து உள்ளது. விருப்பத்தை நிமித்தமாகக் கொண்டு உண்டான மகன், செல்வம், என்பவைகளின் சம்பந்தத்தோடு நியமமாய் இல்லாமல் உள்ளதே வியுக்தானம், அதுவன்றி வெளியில் எங்கோ செல்வது வியுக்த்தானம் என்ற எழுச்சியாகாது, ஆகையால் வித்தையினுடைய உத்பத்தி ஏற்பட்ட கிரஹஸ்தனுக்கு ஆசனம் முதலானவைகளைக் கொடுத்து உபசரிக்கவேண்டும் என்று கூறவில்லை. இதனால் வித்வான்களுக்கு குரு சிஷ்ருஷை தவம் இவைகளில் பிரதிப்பத்தி கொள்ளவேண்டும் என்று சித்தம் ஆயிற்று.
अत्र केचिद्गृहस्था भिक्षाटनादिभयात्परिभवाच्च त्रस्यमानाः सूक्ष्मदृष्टितां दर्शयन्त उत्तरमाहुः । भिक्षोरपि भिक्षाटनादिनियमदर्शनाद्देहधारणमात्रार्थिनो गृहस्थस्यापि साध्यसाधनैषणोभयविनिर्मुक्तस्य देहमात्रधारणार्थमशनाच्छादनमात्रमुपजीवतो गृह एवास्त्वासनमिति ;
(अनुवादः) (ச.பா) இங்கு சில கிரஹஸ்தர்கள் பிக்ஷகை்குச் செல்லுதல் என்ற பயத்தாலும், அதனால் ஏற்படும் சில அவமானங்களாலும் பயந்தவர்களாகி சூக்ஷமதிருஷ்ட்டியின் தன்மையை காண்பிப்பவர்களாகி இவ்வாறு பதில் கூறுகின்றனர். பிக்ஷுவுக்குக்கூட பிக்ஷாடணம் முதலிய நியமங்கள் காணப்படாததால் தேஹத்தை தரிப்பதற்கு மாத்திரம் விரும்பும் கிரஹஸ்தனுக்குக்கூட அதாவது சாத்தியம் சாதனம் என்ற இரு ஈ.க்ஷணைகளில் இருந்தும் விடுபட்ட கிரஹஸ்தனுக்கு தேஹத்தை தரிப்பதின் பொருட்டான உணவு, உடை, இவைகள் மாத்திரமே அபேக்ஷிக்கும் கிரஹஸ்தனுக்கு கிரஹமே ஆசனமாக இருக்கட்டும் என்று. (கூறுவர்)
न, स्वगृहविशेषपरिग्रहनियमस्य कामप्रयुक्तत्वादित्युक्तोत्तरमेतत् । स्वगृहविशेषपरिग्रहाभावे च शरीरधारणमात्रप्रयुक्ताशनाच्छादनार्थिनः स्वपरिग्रहविशेषभावेऽर्थाद्भिक्षुकत्वमेव ।
(ச.பா) தன்னுடைய வீட்டை விசேஷமாக எடுத்துக்கொள்ளாது போனாலும் அங்கு அவனுடைய விசேஷமான காமனையுடன் கூட அங்கு பிரவிர்த்தி ஏற்படுகிறது என்பது இல்லை என்று முன்பே பதில் கூறிவிட்டோம், தன்னுடைய கிரஹத்தை விசேஷமாக ஏற்றுக்கொள்ளாத நிலையில் சரீரத்தை மாத்திரம் தரிப்பதற்கான உவ்வு, உடை இவைகளை விரும்பும் கிரஹஸ்தனுக்கு தன்னுடைய பரிக்கிரஹம் என்றபாவனை இல்லாத நிலையில் அவனுக்கும் சொல்லாமலேயே பிக்ஷுகத்துவமே ஏற்படுகிறது.
शरीरधारणार्थायां भिक्षाटनादिप्रवृत्तौ यथा नियमो भिक्षोः शौचादौ च, तथा गृहिणोऽपि विदुषोऽकामिनोऽस्तु नित्यकर्मसु नियमेन प्रवृत्तिर्यावज्जीवादिश्रुतिनियुक्तत्वात्प्रत्यवायपरिहारायेति । एतन्नियोगाविषयत्वेन विदुषः प्रत्युक्तमशक्यनियोज्यत्वाच्चेति ।
(ச.பா) சரீரதாரணத்தை விரும்பும் பிக்ஷவுக்கு பிக்ஷாடணம் முதலிய பிரவிர்த்திகளில் எவ்வாறு ஒரு கட்டுப்பாடு பிக்ஷுவுக்கும் சௌக்ஷம் முதலானவைகளில் உள்ளதோ, அவ்வாறே கிரஹஸ்தனாயும், வித்வானாயும், காமம் அற்றவனாயும், உள்ள கிரஹஸ்தனுக்கும் நித்திய கர்மங்களில் “यावज्जीवं” என்ற சுருதி வாக்கியங்களால் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்கியங்களுக்கு ஏற்ப நித்திய கர்மாக்களில் பிரவிர்த்தியானது ஏற்படட்டும். இதனால் ஏற்படும் பிரத்தியவாயமும் நிராகரிக்கப்பட்டது ஆகும். இதனால் இந்த கட்டுப்பாட்டிற்கு வித்வானும் விஷயமாய் இருப்பதால் அவனுக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லை என்று கூறமுடியாது.
यावज्जीवादिनित्यचोदनानर्थक्यमिति चेत् ?
(ச.பா) (பூர்வ) “यावज्जीवं” முதலிய சுருதி வாக்கியங்கள் நித்தியம் தூண்டுகின்றன என்பதால் அதற்கு பொருளே இல்லை என்று கூறுவாயேயானால்?
न ; अविद्वद्विषयत्वेनार्थवत्त्वात् । यत्तु भिक्षोः शरीरधारणमात्रप्रवृत्तस्य प्रवृत्तेर्नियतत्वम् , तत्प्रवृत्तेर्न प्रयोजकम् । आचमनप्रवृत्तस्य पिपासापगमवन्नान्यप्रयोजनार्थत्वमवगम्यते । न चाग्निहोत्रादीनां तद्वदर्थप्राप्तप्रवृत्तिनियतत्वोपपत्तिः ।
(ச.பா) (சித்தாந்தீ) அது அவ்வாறு அல்ல. அந்த சுருதி அவித்வான்களுடைய விஷயத்தில் பொருள் உள்ளதாக உள்ளது. மேலும் சரீரதாரணத்தில் மாத்திரம் பிரவிர்த்தித்துள்ள பிக்ஷுவிற்கு அந்த பிரவிர்த்தி ஒரு நியமத்துடன் கூடியதாகவும் உள்ளது என்பது இல்லை. அதனால் அப்பிரவிர்த்தி எந்த பிரயோஜனத்துடன் கூடியதும் அன்று. இந்தப்பிரவிர்த்தி ஆசமனம் செய்ய பிரவிர்த்தவனுக்கு தாகம் அடங்குவது போல் மற்றொரு பிரயோஜனமானது எந்தப்பொருளாலும் புரிந்து கொள்ளப்படுவதும் இல்லை. அக்னிஹோத்திரம் முதலானவைகளுக்கு முற்கூறியது போல் ஏதோ ஓரு பிரயோஜனம் ஏதிர்பாராமல் நியமமாய் கிடைக்கிறது என்பதும் இல்லை.
अर्थप्राप्तप्रवृत्तिनियमोऽपि प्रयोजनाभावेऽनुपपन्न एवेति चेत् ?
(ச.பா) (பூர்வ) வேறு பொருளால் ஏற்பட்ட பிரவிர்த்திநியமம் கூட பிரயோஜனம் இல்லாதபொழுது அதுவும் பொருத்தமற்றதே என்று கூறுவாயேயானால் அதுவும் சரியல்ல.
न ; तन्नियमस्य पूर्वप्रवृत्तिसिद्धत्वात्तदतिक्रमे यत्नगौरवादर्थप्राप्तस्य व्युत्थानस्य पुनर्वचनाद्विदुषो मुमुक्षोः कर्तव्यत्वोपपत्तिः । अविदुषापि मुमुक्षुणा पारिव्राज्यं कर्तव्यमेव ; तथा च ‘शान्तो दान्तः’ (बृ. उ. ४ । ४ । २३) इत्यादिवचनं प्रमाणम् । शमदमादीनां चात्मदर्शनसाधनानामन्याश्रमेष्वनुपपत्तेः । ‘अत्याश्रमिभ्यः परमं पवित्रं प्रोवाच सम्यगृषिसङ्घजुष्टम्’ (श्वे. उ. ६ । २१) इति च श्वेताश्वतरे विज्ञायते । ‘न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशुः’ (कैवल्य २) इति च कैवल्यश्रुतिः । ‘ज्ञात्वा नैष्कर्म्यमाचरेत्’ इति च स्मृतेः । ‘ब्रह्माश्रमपदे वसेत्’ इति च ब्रह्मचर्यादिविद्यासाधनानां च साकल्येनात्याश्रमिषूपपत्तेर्गार्हस्थ्येऽसम्भवात् । न च असम्पन्नं साधनं कस्यचिदर्थस्य साधनायालम् । यद्विज्ञानोपयोगीनि च गार्हस्थ्याश्रमकर्माणि, तेषां परमफलमुपसंहृतं देवताप्ययलक्षणं संसारविषयमेव । यदि कर्मिण एव परमात्मविज्ञानमभविष्यत् , संसारविषयस्यैव फलस्योपसंहारो नोपापत्स्यत ।
(ச.பா) (சித்தாந்தீ) ஏன்எனில் அதை நியமனம் செய்யக்கூடிய வாக்கியமும் பிரவிர்த்தியும் முன்பே சித்தியாய் விட்டதால் அதை செய்யாது விடும்பொழுது அதை செய்வதற்கான முயற்சியின் அதிகமும் அதனால் ஏற்பட்ட வியுக்தானமும் மறுபடியும் கூறப்படுவதால் முற்கூறப்பட்ட செயல்கள் வித்வானாலும் செய்யத்தக்கவையே என்று கூறப்பட்டது பொருத்தமாகும். அவித்துவானாய் இருப்பினும் முமூக்ஷுவாய் இருப்பவரால் பரிவிராஜகத்தன்மை ஏற்கத்தக்கதே. எனவேதான் “शान्तो दान्तः” புலன் அடக்கத்தோடும், மன ஒடுக்கத்தோடும் என்று கூறப்பட்டது. இத்தகைய வாக்கியங்களே இதற்குப் பிரமாணமாகும். ஆத்ம தரிசனத்திற்கு சாதனங்களான சமம், தமம் முதலியவைகள், வேறு ஆசிரமத்தில் பொருந்தாது. ஸ்வேதாஸ்வதர உபநிஷத்தில் “अत्याश्रमिभ्यः परमं पवित्रं प्रोवाच सम्यगृषिसङ्घजुष्टम्” மந்திர சமூகத்தாலும், ஞானிகளின் சமூகத்தாலும் சூழப்பட்டுள்ள நிலையில் மகரிஷி அத்யாசிரிமிகளைக் குறித்து இந்த பவித்திரமான வாக்கியத்தைக் கூறினார் என்று விளக்கப்பட்டுள்ளது. கைவல்லிய உபநிஷத்திலும் “न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशु” கர்மாக்களினாலோ, பிரஜைகளாலோ, தனத்தாலோ, அம்ருதத்துவத்தை அடையமுடியாது. தியாகத்தால் மாத்திரமே அம்ருதத்துவத்தை அடைந்தனர் என்று கூறுகிறது. அவ்வாறே ஸ்மிருதி வாக்கியங்களும் “ज्ञात्वा नैष्कर्म्यमाचरेत्” பிரஹமத்தை அறிந்து கர்மபலத்தியாக ரூபமான காரியங்களை செய்தல் வேண்டும் என்று கூறுகின்றன. அவையே “ब्रह्माश्रमपदे वसेत्” பிரஹ்மத்தை அடைவதற்கு சாதனமான ஆஸ்ரமத்தில் வசிக்கவேண்டும் என்றும் கூறுகின்றன. பிரஹ்மசரியம் முதலான வித்தைக்கு சாதனமான எல்லாசாதனங்களும் ஓன்றுகூடி அத்தியாஸ்ரமிகளுக்கு ஒத்தவைகளாய் கூறப்பட்டுள்ளன. இவைகள் கிரஹஸ்த தர்மத்திற்கு பொருந்தாதவையாகும். பொருந்தாத சாதனம் எந்தக்காரியத்திற்கும் அதை சாதிப்பதற்கான சக்திபடைத்ததாக ஆகாது. எவை விக்ஞானத்திற்கு பயன்படுபவையாயும், கிரஹஸ்தாஸ்ரமத்திற்கு ஒத்ததாயும் உள்ளதோ அந்தக் கர்மாக்கள் மாத்திரம் பலத்துடன் கூடியவையாக கூறப்பட்டிருக்கின்றன. அவைகள் தேவதா தன்மையை அடையும் லக்ஷணத்தோடு கூடிய பலன்களாகும். எனவே அவைகளும் சம்சார விஷயமே. கர்ம மார்க்கத்தை அனுசரிப்பவர்களுக்கே பரமாத்ம வித்தை ஏற்படுமேயானால் சம்சார விஷயமான பலத்திற்கு உபசம்ஹாரம் ஏற்படாது. அது யாவருக்கும் இஷ்டமில்லை.
अङ्गफलं तदिति चेत् ; न, तद्विरोध्यात्मवस्तुविषयत्वादात्मविद्यायाः । निराकृतसर्वनामरूपकर्मपरमार्थात्मवस्तुविषयमात्मज्ञानममृतत्वसाधनम् । गुणफलसम्बन्धे हि निराकृतसर्वविशेषात्मवस्तुविषयत्वं ज्ञानस्य न प्राप्नोति ; तच्चानिष्टम् , ‘यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्’ (बृ. उ. २ । ४ । १४) इत्यधिकृत्य क्रियाकारकफलादिसर्वव्यवहारनिराकरणाद्विदुषः ; तद्विपरीतस्याविदुषः ‘यत्र हि द्वैतमिव भवति’ (बृ. उ. २ । ४ । १४) इत्युक्त्वा क्रियाकारकफलरूपस्य संसारस्य दर्शितत्वाच्च वाजसनेयिब्राह्मणे । तथेहापि देवताप्ययं संसारविषयं यत्फलमशनायादिमद्वस्त्वात्मकं तदुपसंहृत्य केवलं सर्वात्मकवस्तुविषयं ज्ञानममृतत्वाय वक्ष्यामीति प्रवर्तते ।
(ச.பா) அந்தவிஷயம் அங்க பலமாகட்டுமே என்று கூறினால் அதுவும் சரியல்ல. ஆத்மவித்தைக்கு சம்சாரத்திற்கு விருத்தமான ஆத்ம வஸ்துவே விஷயம் என்று நிர்ணயித்து கூறப்பட்டுள்ளது. எல்லா நாமரூப கர்மாக்களையும் நிராகரித்து ஆத்மவஸ்து பரமாய் உள்ள ஆத்மவிஷயமே ஞானாமிருதத்தின் சாதனம் ஆகும். குணபலசம்பந்தத்துடன் கூடியிருக்குமேயானால் எல்லாவற்றையும் நிராகரித்ததும் சர்வவிசேஷமாகியும் உள்ள ஆத்ம வஸ்து விக்ஞானத்திற்கு விஷயமாக ஆகாது. அது நமக்கு இஷ்ட்டம் அல்ல. “यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्” எங்கு இதனுடையவே சர்வாத்மபாவனையை அடைந்ததோ என்று கூறத்தொடங்கி வித்வான்களுக்கு செயல், அதன் காரகம் அதனால் ஏற்படும் பலம் என்ற சர்வவியவகாரங்களும் நிராகரணம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு மாறுபட்ட அவித்வான்களுக்கோ துவைதமே ஏற்படுகிறது என்று கூறி செயல், அதன் காரகம், அதனால் ஏற்படும் பலம். இவைகளைக் கொண்ட சம்சாரமே வாஜசனேயம் என்ற ஈசாவாஸ்யத்தில் காண்பிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறே இங்கும் தேவதையாக ஆனால் கூட அது சம்சார விஷயமே. அதனுடைய பலம் சாப்பிடுதல், தாகம் என்ற விஷயத்தோடு கூடினதாயும் அதனுடைய பலன் சம்சாரம் என்றும் உபசம்ஹாரம் செய்து சுத்தமான சர்வாத்மகமான ஆத்மவஸ்து விஷயமான ஞானத்தை அமிருதத்துவத்தை அடைவதின் பொருட்டு தொடங்குகிறேன் என்று உபநிஷத்து பிரவிர்த்திக்கிறது.
ऋणप्रतिबन्धश्चाविदुष एव मनुष्यपितृदेवलोकप्राप्तिं प्रति, न विदुषः ; ‘सोऽयं मनुष्यलोकः पुत्रेणैव’ (बृ. उ. १ । ५ । १६) इत्यादिलोकत्रयसाधननियमश्रुतेः । विदुषश्च ऋणप्रतिबन्धाभावो दर्शित आत्मलोकार्थिनः ‘किं प्रजया करिष्यामः’ (बृ. उ. ४ । ४ । २२) इत्यादिना । तथा ‘एतद्ध स्म वै तद्विद्वांस आहुर्ऋषयः कावषेयाः’ इत्यादि ‘एतद्ध स्म वै तत्पूर्वे विद्वांसोऽग्निहोत्रं न जुहवाञ्चक्रुः’ (कौ. उ. २ । ५) इति च कौषीतकिनाम् ।
(ச.பா) முக்கடன்கள் என்பது அவித்வான்களுக்கே. அதுவே அவர்களுக்கு மனுஷ்ய லோகம், பிதுர்லோகம், தேவலோகம் இவைகளை அடைவதற்கு காரணமாக ஆகிறது. இந்த முக்கடன்கள் வித்வான்களுக்கு இல்லை. “सोऽयं मनुष्यलोकः पुत्रेणैव” இத்தகைய உபாசகன் மகனாலேயே மனுஷ்ய லோகத்தை ஜெயித்தவனாக ஆகிறான், என்பன போன்ற சுருதிவாக்கியங்களால் மூன்று லோகங்களையும் ஜெயிப்பதற்கான சாதனங்கள், நியமனம் செய்யப்பட்டுள்ளன. ஆத்மலோகத்தை விரும்பும் வித்வான்களுக்கு அந்த ரிணப் பிரதிபந்தங்களுடைய இல்லாமையை. “किं प्रजया करिष्यामः” நாம் பிரஜைகளால் என்ன செய்யப்போகிறோம் என்பன போன்ற சுருதி வாக்கியங்கள் விளக்குகின்றன. அவ்வாறே “एतद्ध स्म वै तद्विद्वांस्ा आहुर्ऋ षयः कावषेया” காவஷேயர் என்ற மகரிஷிகள் இதைக்காட்டிலும் எங்களால் அடையத்தகுந்தது ஒன்றும் இல்லை. எனவே எங்களுக்கு அத்தியயனம், யாகம், புத்திரர்களை அடைதல் என்பவைகளால் எப்பயனும் இல்லை. மேலும் “एतद्ध स्म वै तत्पूर्वे विद्वांसोऽग्निहोत्रं न जुहवाञ्चक्रुः” இதனாலேயே நம்முன்னோர் களாயும். வித்வான்களாயும் உள்ள மகரிஷிகள் அக்னிஹோத்திரம் முதலானவைகளை செய்யவில்லை என்று கௌஷீதகர்களும் விளக்கியுள்ளனர்.
अविदुषस्तर्हि ऋणानपाकरणे पारिव्राज्यानुपपत्तिरिति चेत् ?
(ச.பா) (பூர்வ) மேலும் அவித்வான்களுக்கு அந்த மூன்று கடன்களையும் நீக்காத வரையில் பரிவிராஜகத்துவம் என்பது ஏற்படுவது இல்லை என்று கூறுவாயேயானால்
न, प्राग्गार्हस्थ्यप्रतिपत्तेर्‌ऋणित्वासम्भवादधिकारानारूढोऽपि ऋणी चेत्स्यात् , सर्वस्य ऋणित्वमित्यनिष्टं प्रसज्येत । प्रतिपन्नगार्हस्थ्यस्यापि ‘गृहाद्वनी भूत्वा प्रव्रजेद्यदि वेतरथा ब्रह्मचर्यादेव प्रव्रर्जेद्गृहाद्वा वनाद्वा’ (जा. उ. ४) इत्यात्मदर्शनसाधनोपायत्वेनेष्यत एव पारिव्राज्यम् । यावज्जीवादिश्रुतीनामविद्वदमुमुक्षुविषये कृतार्थता । छान्दोग्ये च केषाञ्चिद्द्वादशरात्रमग्निहोत्रं हुत्वा तत ऊर्ध्वं परित्यागः श्रूयते ।
(ச.பா) அதுவும் சரியன்று. (காருகஸ்த்திய) கிரஹஸ்தாஸ்ரமத்தை அடைவதற்கு முன்பேயே அவனுக்கு ரிணித்துவம் என்ற கடன்பட்ட தன்மை ஏற்படாததால், அந்த அதிகாரத்தை அவன் அடையாததால் அவன் எக்கடனும் அற்றவனாய் என்று கூறத்தொடங்கினால் அதுவும் பொருத்தமாக ஆகாது. ஏன்எனில் எல்லோருக்கும் கடன் இல்லாமை ஏற்பட்டு விடும். கிரஹஸ்தாஸ்ரமத்தை அடைந்து இருக்கும் போதிலும் அவனுக்காகவே வரப்போகும் சுருதி விளக்கியுள்ளது. “गृहाद्वनी भूत्वा प्रव्रजेद्यदि वेतरथा ब्रह्मचर्यादेव प्रवजेद्गृहाद्वा वनाद्वा” கிரஹஸ்தாஸ்ரமத்திலிருந்து வானபிரஸ்தாஸ்ரமத்தை அடைந்து அதனின்று பரிவிராஜாஸ்ரமத்தை அடைய வேண்டும் என்றும். பிரஹ்மத்தை அறிய வேண்டும் என்ற நிலை வந்த உடனேயே பிரஹ்ம சரியத்தினின்றே பரிவிராஜகத்துவத்தை, அதாவது சந்நியாசத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு இல்லையெனில் கிரஹஸ்தாஸ்ரமத்தில் இருந்தோ வானபிரஸ்தாஸ்ரமத்தில் இருந்தோ, எந்நிலையில் முமூக்ஷுத்துவம் என்ற தூண்டுதல் ஏற்படுகிறதோ அப்பொழுதே சந்நியாசத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஆத்மதரிசனத்திற்கு உபாயமான சாதனமாய் பாரிவிராஜம் என்ற சந்நியாசம் விரும்பப்படுகிறது. (पावत्जीवम्) முதலான சுருதிவாக்கியங்கள் அவித்வான்களாயும், முமூக்ஷுத்தன்மை பெறாதவர்கள் விஷயத்தில் கிருதார்த்தமானவை. சாந்தோக்கிய உபநிஷத்திலும் சிலருக்கு பன்னிரண்டு நாட்கள் அக்னிஹோத்திரம் செய்தபின் அதை தியாகம் செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை அறிகிறோம்.
यत्त्वनधिकृतानां पारिव्राज्यमिति, तन्न ; तेषां पृथगेव ‘उत्सन्नाग्निरनग्निको वा’ इत्यादिश्रवणात् ; सर्वस्मृतिषु च अविशेषेण आश्रमविकल्पः प्रसिद्धः, समुच्चयश्च ।
(ச.பா) எது இதில் அதிகாரமற்றவர்களுக்கே பாரிவிராஜ்யகம் என்ற சந்நியாசம் கூறப்பட்டுள்ளது என்று கூறுவோமேயானால் அதுவும் சரியல்ல. அவர்களுக்கு அக்னியை விட்டவராய் இருந்தாலும், அக்னியை ஸ்வீகரித்துக்கொள்ளாதவராக இருந்தாலும் அவர்களுக்கு தனியாக விஷயங்களும், கட்டளைகளும், கூறப்பட்டுள்ளன என்பது எல்லா ஸ்மிருதிகளிலும் விளக்கப்பட்டுள்ளது. அங்கே ஆசிரமவிகல்பங்களும் பொதுவாக கூறப்பட்டுள்ளது என்பது மிகவும் பிரசித்தம்.
यत्तु विदुषोऽर्थप्राप्तं व्युत्थानमित्यशास्त्रार्थत्वे, गृहे वने वा तिष्ठतो न विशेष इति, तदसत् । व्युत्थानस्यैवार्थप्राप्तत्वान्नान्यत्रावस्थानं स्यात् । अन्यत्रावस्थानस्य कामकर्मप्रयुक्तत्वं ह्यवोचाम ; तदभावमात्रं व्युत्थानमिति च ।
(ச.பா) மேலும் வித்வான்களுக்கு பொருளால் கொள்ளத்தக்க வியுக்தானம் என்ற எழுச்சி அசாஸ்திரியமாய் உள்ளதாலேயே கிரஹத்தில் இருப்பினும், வனத்தில் இருப்பினும் அவர்களுக்கு எந்த விசேஷமும் இல்லை என்று கூறுவதும் தப்பாகும். அந்த எழுச்சியே பொருளாக உள்ளதால் வேறு இடத்தில் வசித்தல் என்பது ஏற்படாது. இதைத்தவிர வேறு இடத்தில் வசிப்பவனுக்கு அவன் செயல்கள் காம கர்மங்களை உத்தேசித்து ஏற்பட்டது என்று தெளிவாக விளக்கியுள்ளார். அந்த காம கர்மங்களில் பற்றின்மையே வியுக்தானம் என்ற எழுச்சியாகும்.
यथाकामित्वं तु विदुषोऽत्यन्तमप्राप्तम् , अत्यन्तमूढविषयत्वेनावगमात् । तथा शास्त्रचोदितमपि कर्मात्मविदोऽप्राप्तं गुरुभारतयावगम्यते ; किमुत अत्यन्ताविवेकनिमित्तं यथाकामित्वम् ? न ह्युन्मादतिमिरदृष्ट्युपलब्धं वस्तु तदपगमेऽपि तथैव स्यात् , उन्मादतिमिरदृष्टिनिमित्तत्वादेव तस्य । तस्मादात्मविदो व्युत्थानव्यतिरेकेण न यथाकामित्वम् , न चान्यत्कर्तव्यमित्येतत्सिद्धम् ।
(ச.பா) எவ்வாறு காமித்துவம் என்பது வித்வான்களுக்கு அத்தியந்தமாக அப்பிராப்தம் என்று கூறப்பட்டதோ அவ்வாறே அந்தக்காமித்துவம் என்பது அத்தியந்த மூடவிஷயமானது என்பது அறியப்படுகிறது. அவ்வாறே சாஸ்திரங்களால் தூண்டப்பட்டவைகளாய் இருப்பினும் அந்த கர்மாக்கள் ஆத்மவித்துகளுக்கு அப்பிராப்தமாகவே கருதப்படுகிறது. அவை அவர்களுக்கு பெரிய சுமையாக அறியப்படுகிறது. இவைகள் மிக அவிவேகிகளின் பொருட்டு காமித்துவம் போல் கூறப்பட்டவைகளாகும் சித்தபிரமை, தலைசுற்றல் இவைகளால் ஏற்பட்ட கண்திரையில் அறியப்பட்ட வஸ்து அது மறைந்த போதிலும் கூட எப்பலனும் ஏற்படுவது இல்லை. ஏன்எனில் பித்தம், விழித்திரை இவைகளிள் தோஷத்தால் இவை ஏற்பட்டது, தோஷத்தால் உண்டானவை தோன்றினாலும் மறைந்தாலும் எந்தப்பயனும் இல்லை. எனவே ஆத்மவித்துகளுக்கு வியுக்தானத்தைத்தவிர காமிகளுக்கு ஏற்படுவது போல் எந்த செயலும் கர்த்தவ்யமாய் ஏற்படுவது இல்லை என்று சித்தம் ஆயிற்று.
यत्तु ‘विद्यां चाविद्यां च यस्तद्वेदोभयं सह’ (ई. उ. ११) इति न विद्यावतो विद्यया सहाविद्यापि वर्तत इत्ययमर्थः ; कस्तर्हि ? एकस्मिन्पुरुषे एते न सह सम्बध्येयातामित्यर्थः ; यथा शुक्तिकायां रजतशुक्तिकाज्ञाने एकस्य पुरुषस्य । ‘दूरमेते विपरीते विषूची अविद्या या च विद्येति ज्ञाता’ (क. उ. १ । २ । ४) इति हि काठके । तस्मान्न विद्यायां सत्यामविद्यायाः सम्भवोऽस्ति ।
(ச.பா) மேலும் எவர்கள் “विद्यां चाविद्यां च यस्तद्वेदोभयँसह” எந்த ஒரு சாதகர் வித்தையையும், அவித்தையும் ஒரே சமயத்தில் அறிகிறாரோ என்று கூறிய இடத்தில் வித்தையை உடைய வித்வானுக்கு வித்தையுடன் கூடவே அவித்தையும் இருக்கிறது என்பது அர்த்தம் அல்ல. அவ்வாறு எனில் ஒரு புருஷனிடத்தில் ஒரே சமயத்தில் அவை சம்பந்தத்தை அடையட்டும் என்று கூறுவது எப்படி?. எவ்வாறு கிளிஞ்சலில் ரஜதக்ஞானமும், சுக்திக்ஞானமும் ஏற்படுகிறதோ அவ்வாறு எனில் அதுவும் சரியன்று, இதை காடகத்தில் விளக்குகிறார். எவ்வாறு எனில் “दूरमेते विपरिते विषूची अविद्या या च विद्येति ज्ञाता” வித்தை, அவித்தை இரண்டும் வெகுதூரமாக வேறுபட்டவை. இது விஷுச்சி என்ற வயிற்றுப்போக்குப்போல் தூரவிளக்கத்தக்கது. அவித்தை வித்தை அறியப்பட்டபொழுது அவித்தை எட்டவிலகிவிடும் என்று காடகத்தில் விளக்கப்பட்டுள்ளது. எனவே வித்தை ஏற்பட்ட பொழுது அங்கு அவித்தைக்கு சிறிதளவு சம்பந்தம் கூட கிடையாது.
‘तपसा ब्रह्म विजिज्ञासस्व’ (तै. उ. ३ । २ । २) इत्यादिश्रुतेः । तपआदि विद्योत्पत्तिसाधनं गुरूपासनादि च कर्म अविद्यात्मकत्वादविद्योच्यते । तेन विद्यामुत्पाद्य मृत्युं काममतितरति । ततो निष्कामस्त्यक्तैषणो ब्रह्मविद्यया अमृतत्वमश्नुत इत्येतमर्थं दर्शनयन्नाह —‘अविद्यया मृत्युं तीर्त्वा विद्ययामृतमश्नुते’ (ई. उ. ११) इति ।
(ச.பா) மேலும் “तपसा ब्रह्म विजिज्ञासव” தவத்தால் பிரஹ்மத்தை அறிந்துகொள்ள முயல்வாயாக என்பன போன்றசுருதி வாக்கியங்களாலும் விளக்கப்பட்டுள்ளது. தவம் முதலான வித்தையின் உற்பத்திக்கு சாதனங்களும், குரு உபாசனைமுதலான கர்மாக்களும், அவித்தியாத்மகங்களானதால் அவை அவித்தை என்று கூறப்படுகிறது. அவைகளால் வித்யோத்பத்தியை அடைந்து மிருத்யுவையும், காமனைகளையும் கடந்தவனாகிறான். எனவே நிஷ்காமனாயும், ஈ.ஷணாதிரியங்களை விட்டவனாயும் உள்ள சாதகனே பிரஹ்மவித்தையால் அம்ருதத்துவத்தை அடைகிறான் என்று கூறப்பட்டுள்ளது. இதேபொருளை ஈ.சாவாஸியத்தில் காண்பிப்பவராக கூறுகிறார் “अविद्या मृत्युं तीर्त्वा विद्ययाऽमृतमश्नुते” அவித்தை எனப்படும் முற்கூறப்பட்ட தவம், குருசிஷ்ருஷை இவைகளால் மிருத்யுவைக்கடந்து, வித்தையால் அம்ருதத்துவத்தை அடைகிறான் என்று கூறப்பட்டுள்ளது.
यत्तु पुरुषायुः सर्वं कर्मणैव व्याप्तम् , ‘कुर्वन्नेवेह कर्माणि जिजीविषेच्छतं समाः’ (ई. उ. २) इति, तदविद्वद्विषयत्वेन परिहृतम् , इतरथा असम्भवात् । यत्तु वक्ष्यमाणमपि पूर्वोक्ततुल्यत्वात्कर्मणा अविरुद्धमात्मज्ञानमिति, तत्सविशेषनिर्विशेषात्मविषयतया प्रत्युक्तम् ; उत्तरत्र व्याख्याने च दर्शयिष्यामः । अतः केवलनिष्क्रियब्रह्मात्मैकत्वविद्याप्रदर्शनार्थमुत्तरो ग्रन्थ आरभ्यते ॥
(ச.பா) எந்த ஒரு புருஷனுடைய, ஆயுள்காலம் முழுவதும் கர்மாக்களினாலே வியாபிக்கப்பட்டுள்ளதோ அதையே “कुर्वन्नेवेह कर्माणि जिजीविषेच्छतँसमाः” நூ று ஆண்டுகாலம் வாழ விரும்புவாயேயானால் கர்மாக்களை செய்து கொண்டே இருப்பாயாக என்று அதை அவித்துவானுடைய விஷயமாக கூறி நீக்கியுள்ளார். அதை வேறு வழியாக சமன்வயப்படுத்த முடியாது. மேலும் கூறப்போகும் விஷயமும் முற்கூறிய விஷயத்திற்கு சமானமானதால் கர்மாக்களுடன் விருத்தமற்றது ஆத்மக்ஞானம். அது சவிசேஷ, நிர்விசேஷமானது என்பதை விளக்குவதற்காகவே மேல் கிரந்தத்தைத் தொடங்குகிறார். அந்த இடங்களில் வியாக்கியானம் செய்யும்பொழுது நன்கு விளக்கிக் காண்பிப்போம். எனவே சுத்தமாயும் எச்செயலும் அற்றதாயும் உள்ள பிரஹ்மத்தின் ஏகாத்துமத்வத்தை விளக்கும் வித்தையை காண்பிப்பதற்காக மேலே நூ ல் ஆரமபிக்கப்படுகிறது.
आत्मा वा इदमेक एवाग्र आसीत् । नान्यत्किञ्चन मिषत् । स ईक्षत लोकान्नु सृजा इति ॥ १ ॥
आत्मेति । आत्मा आप्नोतेरत्तेरततेर्वा परः सर्वज्ञः सर्वशक्तिरशनायादिसर्वसंसारधर्मवर्जितो नित्यत्यशुद्धबुद्धमुक्तस्वभावोऽजोऽजरोऽमरोऽमृतोऽभयोऽद्वयो वै । इदं यदुक्तं नामरूपकर्मभेदभिन्नं जगत् आत्मैव एकः अग्रे जगतः सृष्टेः प्राक् आसीत् ।
(ச.பா) ஆத்மா என்று. ஆத்மா என்ற சொல்லுக்கு எல்லாவற்றையும் அடைகிறான், எல்லாவற்றையும் தானே உண்கிறான் என்பதாலும், எல்லாவற்றிற்கும் மேல்பட்டவனாயும், சர்வக்ஞனாயும், எல்லா சக்தியும் படைத்தவனாயும், பசி, தாகம், போன்ற எல்லா சம்சார தர்மங்களும் அற்றவனாயும், எப்பொழுதும் உள்ளவனாயும் பரம சுத்தனாயும், முக்தனாயும் இவைகளையே தன் சுபாவமாக கொண்டவனாயும், பிறப்பற்றவனாயும், முதுமை அற்றவனாயும், மரணதர்மம் அற்றவனாயும், பயமற்றவனாயும், தனக்கு இரண்டாவது அற்றவனாயும் உள்ள பரமாத்மா என்று பொருள் கொள்ளப்படுகிறது. இந்த ஆத்மாவே நாம, ரூப கர்மங்களில் இருந்து வேறுபட்டதாயும், ஜகதாத்மஸ்வரூபமாயும், நாம் காணும் இந்த படைப்பிற்கு முன்பு ஒன்றாகவே இருந்தது.
किं नेदानीं स एवैकः ?
(ச.பா) (பூர்வ) அந்த ஆத்மா இப்பொழுது ஒன்றாக இல்லையா?
न ।
(ச.பா) (சித்தாந்தீ) எனில் அவ்வாறு அல்ல.
कथं तर्हि आसीदित्युच्यते ?
(ச.பா) (பூர்வ) அவ்வாறு அல்ல எனில் எது ஒன்றாக இருந்தது என்று கூறுவானேன்?
यद्यपीदानीं स एवैकः, तथाप्यस्ति विशेषः । प्रागुत्पत्तेः अव्याकृतनामरूपभेदमात्मभूतमात्मैकशब्दप्रत्ययगोचरं जगत् इदानीं व्याकृतनामरूपभेदत्वादनेकशब्दप्रत्ययगोचरमात्मैकशब्दप्रत्ययगोचरं चेति विशेषः ।
(ச.பா) (சித்தாந்தீ) இப்பொழுது அவன் ஒருவனாகவே இருந்தாலும் அதில் ஒரு விசேஷம் உள்ளது இந்த ஜகத் உற்பத்திக்கு முதலில் அவ்யாகிருதமாய் நாம, ரூப பேதங்கள் அற்றதாய் ஆத்மா என்ற ஒரே சப்தத்துடன் ஒரே ஆத்மா (ஒன்றே ஆத்மா என்ற சப்தத்திற்கு கோசரமாகும் விஷயமாய் இருந்தது) இப்பொழுது ஜகத் முதலானவைகள் வியாகிருதத்துவத்தை அடைந்து அதனால் அநேக பேதத்தை அடைந்து அநேக பிரத்யய கோசரமாய் உள்ள இந்த ஆத்மா ஒன்று என்ற சப்தத்திற்கு கோசரமாய் (விஷயமாய்) இருந்தது என்பது விசே ஷம்.
यथा सलिलात्पृथक् फेननामरूपव्याकरणात्प्राक्सलिलैकशब्दप्रत्ययगोचरमेव फेनम् , यदा सलिलात्पृथङ् नामरूपभेदेन व्याकृतं भवति, तदा सलिलं फेनं चेति अनेकशब्दप्रत्ययभाक् सलिलमेवेति चैकशब्दप्रत्ययभाक्च फेनं भवति, तद्वत् ।
(ச.பா) எவ்வாறு எனில் தண்ணீரைக் காட்டிலும் நுரை என்ற நாமரூபமான வியாவ்ருதியை அடைவதற்கு முன்னிலையில் தண்ணீர் என்ற ஒரு சப்தத்திற்கு கோசரமாய் இருக்கும் தன்மையையே நுரை பெற்று இருந்தது. எப்பொழுது தண்ணீரைக் காட்டிலும் (நுரையானது) தனியான நாமரூப பேதத்தால் வியாகிருதம் ஆகிறதோ அப்பொழுது தண்ணீர் நுரை என்பன போன்ற அநேக சப்தங்களில் பிரத்தியயத்திற்கு விஷயமாக அந்தத் தண்ணீரே ஆகிறது. ஒரே சப்தத்திற்கு கோசரமான தண்ணீர் எப்படி நுரை ஆகிறதோ அதுபோல்.
न अन्यत्किञ्चन न किञ्चिदपि मिषत् निमिषद्व्यापारवदितरद्वा । यथा साङ्‍ख्यानामनात्मपक्षपाति स्वतन्त्रं प्रधानम् , यथा च काणादानामणवः, न तद्वदिहान्यदात्मनः किञ्चिदपि वस्तु विद्यते । किं तर्हि ? आत्मैवैक आसीदित्यभिप्रायः ।
(ச.பா) அதைக் காட்டிலும் வேறு எந்த ஒருசிறு விஷயம் கூட வியாபாரத்துடன் அல்லது செயலுடன் இருக்கவில்லை. சாங்கியர்களின் ஆத்மபக்ஷபாதியான சுவதந்திரமான பிரதானம் உள்ளதோ அது போலோ,, காணாதர்களின் ஆத்மாவைக் காட்டிலும் அணுக்கள் வேறுபட்டதாக உள்ளதோ அதுபோலே ஆத்மாவைக் காட்டிலும் எந்த ஒரு வஸ்துவும் இருக்கவில்லை. அவ்வாறு எனில் என்னதான் இருந்தது எனில் ஆத்மா ஒன்றே இருந்தது என்பது அபிப்ராயம்.
सः सर्वज्ञस्वाभाव्यात् आत्मा एक एव सन् ईक्षत । ननु प्रागुत्पत्तेरकार्यकरणत्वात्कथमीक्षितवान् ? नायं दोषः, सर्वज्ञस्वाभाव्यात् । तथा च मन्त्रवर्णः — ‘अपाणिपादो जवनो ग्रहीता’ (श्वे. उ. ३ । २९) इत्यादिः । केनाभिप्रायेणेत्याह — लोकान् अम्भःप्रभृतीन्प्राणिकर्मफलोपभोगस्थानभूतान् नु सृजै सृजेऽहम् इति ॥
(ச.பா) அந்த ஆத்மாவானவன் சர்வக்ஞ சுபாவமாய் உள்ளதால் அவன் ஒருவனாகவே இருந்துக்கொண்டு இந்த லோகங்களை படைப்பேன் என்று பார்த்தான்.இங்கு ஒரு சம்சயம். உற்பத்தியின் முன்நிலையில் அகாரிய, காரணமாய் உள்ளதால் எவ்வாறு பார்த்தான் என்றால், இது தோஷமாகாது. ஏன்எனில் அவன் சர்வக்ஞ சுபாவத்தைப் பெற்றமையால். அவ்வாறே மந்திரம் கூறுகிறது. “अपाणिपादो जवनो ग्रहीता” கால், கைகள் அற்றவன், ஆனால் எதையும் வேகமாகப் பிடிப்பவன் என்பன போன்ற மந்திரங்கள் உள்ளன. இந்த மந்திரங்கள் என்ன அபிப்ராயத்தில் கூறப்பட்டன என்று கூறுகிறார். பிராணிகளின் கர்ம, பல ஸ்தான பூதமான தண்ணீர் முதலான லோகங்களை படைப்பேன் என்று பார்த்தார்.
एवमीक्षित्वा आलोच्य
(ச.பா) (அ.கை) இவ்வாறு பார்த்து அதாவது ஆலோசித்து
स इमांल्लोकानसृजत । अम्भो मरीचीर्मरमापोऽदोऽम्भः परेण दिवं द्यौः प्रतिष्ठान्तरिक्षं मरीचयः । पृथिवी मरो या अधस्तात्ता आपः ॥ २ ॥
सः आत्मा इमान् लोकान् असृजत सृष्टवान् । यथेह बुद्धिमांस्तक्षादिः एवंप्रकारान्प्रासादादीन्सृजे इतीक्षित्वा ईक्षानन्तरं प्रासादादीन्सृजति, तद्वत् ।
(ச.பா) (இவ்வாறு பார்த்து ஆலோசித்த) அந்த ஆத்மா இந்த லோகங்களைப் படைத்தார். எவ்வாறு இந்த லோகத்தில் தற்போது புத்திமானான தச்சர், கொத்தர், முதலானவர்கள் இந்த இடத்தில் இத்தகைய உப்பரிகையை (மாளிகை) முதலில் ஆலோசித்து பின்பு திட்டமிட்டு, அவைகளைப் படைக்கிறார்களோ, அதுபோல் படைத்தார் என்பது பொருள்.
ननु सोपादानस्तक्षादिः प्रासादादीन्सृजतीति युक्तम् ; निरुपादानस्त्वात्मा कथं लोकान्सृजतीति ?
(ச.பா) (சங்கை) மேலும் தச்சர், கொத்தர் முதலானவர்கள் உபாதான காரணங்களுடன் கூடியவர்கள். அவர்கள் வீடு, மாடி, உப்பரிகை இவைகளைப் படைக்கிறார்கள் என்பது பொருத்தம். எந்த உபாதான காரணமும் அற்ற ஆத்மா எவ்வாறு உலகங்களைப் படைக்கும் எனில்?
नैष दोषः । सलिलफेनस्थानीये आत्मभूते नामरूपे अव्याकृते आत्मैकशब्दवाच्ये व्याकृतफेनस्थानीयस्य जगतः उपादानभूते सम्भवतः । तस्मादात्मभूतनामरूपोपादानभूतः सन् सर्वज्ञो जगन्निर्मिमीते इत्यविरुद्धम् ।
(ச.பா) (ஸமாதானம்) இது தோஷமாகாது,. அவ்யாகிருத சொரூபத்தில் தண்ணீருடன் நுரையின் ஸ்தானத்தில் இருந்த நாம, ரூபங்கள் ஆத்ம பூதமாய், ஆத்மசப்தத்தால் சொல்லத்தக்கவையாய் இருந்தன. அதுபோல் வ்யாகிருத நிலையில் நுரையின் ஸ்தானத்தில் இருக்கும் ஜகத்திற்கு உபாதானமாய் ஆயின. அதனால் ஆத்ம பூதமான நாம ரூபங்களுக்கு உபாதான காரணமாகி எல்லாவற்றையும் அறிந்தவனாய் இந்த ஜகத்தைப் படைத்தான் என்பதும் விருத்தம் ஆகாது.
अथवा, विज्ञानवान्यथा मायावी निरुपादानः आत्मानमेव आत्मान्तरत्वेन आकाशेन गच्छन्तमिव निर्मिमीते, तथा सर्वज्ञो देवः सर्वशक्तिर्महामायः आत्मानमेव आत्मान्तरत्वेन जगद्रूपेण निर्मिमीते इति युक्ततरम् । एवं च सति कार्यकारणोभयासद्वाद्यादिपक्षाश्च न प्रसज्जन्ते, सुनिराकृताश्च भवन्ति ।
(ச.பா) அல்லது எவ்வாறு விக்ஞானத்தோடு கூடினவனாயும், உபாதான காரணமற்றவனாயும், உள்ள மாயாவி தன்னிலேயே மற்றொருவனை தன்போல் படைத்துக்கொண்டு அவன் ஆகாசத்தில், நடப்பது போலும், படைத்துக் காட்டுகிறானோ அவ்வாறே சர்வக்ஞனாயும், சர்வசக்திமானாயும் உள்ள ஆத்மதேவன் மஹாமாயமான ஜகத்ரூபமான மற்றொரு ஆத்மாவை ஆத்மா போல் படைக்கிறான் என்பதும் மிகவும் பொருத்தமானதாகும். இவ்வாறு இருக்கும் நிலையில் காரிய, காரணம் என்ற இரண்டு பக்ஷங்களும் இல்லாத நிலையில் இதுவும் அசத்தாகும் என்பது பொருந்தாது. ஏன்எனில் இந்த பக்ஷங்கள்யாவும் முன்பே நிராகரிக்கப்பட்டன. (அந்த அசத்துகளை வைத்து இந்த சத்தை நிரூபித்தார். இந்த சத்தை வைத்து இந்த அசத்துகளை அன்றே நிராகரித்துவிட்டார்)
कान् लोकानसृजतेत्याह — अम्भो मरीचीर्मरमापः इति । आकाशादिक्रमेण अण्डमुत्पाद्य अम्भःप्रभृतीन् लोकानसृजत । तत्र अम्भःप्रभृतीन्स्वयमेव व्याचष्टे श्रुतिः ।
(ச.பா) எந்த எந்த லோகங்களைப் படைத்தார்? अम्भो मरीचीर्मरमाप என்ற இந்த லோகங்களைப் படைத்தார். ஆகாசம் முதலான கிரமத்துடன் கூடிய அண்டங்களைப் படைத்து தண்ணீர் முதலான லோகங்களைப் படைத்தார். இங்கு தண்ணீர் முதலான லோகங்கள் என்ற வார்த்தைக்கு சுருதியே விளக்கம் கூறுகிறது.
अदः तत् अम्भःशब्दवाच्यो लोकः, परेण दिवं द्युलोकात्परेण परस्तात् , सोऽम्भःशब्दवाच्यः, अम्भोभरणात् । द्यौः प्रतिष्ठा आश्रयः तस्याम्भसो लोकस्य । द्युलोकादधस्तात् अन्तरिक्षं यत् , तत् मरीचयः । एकोऽपि अनेकस्थानभेदत्वाद्बहुवचनभाक् — मरीचय इति ; मरीचिभिर्वा रश्मिभिः सम्बन्धात् । पृथिवी मरः — म्रियन्ते अस्मिन् भूतानीति । याः अधस्तात् पृथिव्याः, ताः आपः उच्यन्ते, आप्नोतेः, लोकाः । यद्यपि पञ्चभूतात्मकत्वं लोकानाम् , तथापि अब्बाहुल्यात् अब्नामभिरेव अम्भो मरीचीर्मरमापः इत्युच्यन्ते ॥
(ச.பா) கீழே உள்ளவைகள் தண்ணீர் என்ற சப்தத்திற்கு வாச்சியமான லோகங்கள் ஆகும். “परः” என்ற சப்தத்தால் தேவலோகம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. கீழே உள்ள தண்ணீர் என்ற சப்தத்திற்கு வாச்சியமாக உள்ள லோகங்களைக் காட்டிலும் மேல் நிலையில் உள்ளது. மேலும் அந்த “द्यलोकं” என்ற தேவலோகம், தண்ணீர் என்ற சப்தத்தால் கூறப்பட்ட லோகங்களுக்கு ஆசிரியமானது. தேவலோகத்திற்கும் இந்த கீழ் உள்ள லோகங்களுக்கும் இடையில் உள்ள அந்தரிக்ஷம் என்ற லோகம் “परिचयः” (மரீச்சய:) என்று கூறப்பட்டன. அவன் ஒருவனாய் இருப்பினும், அனேக ஸ்தானங்களை வகிக்கும்பொழுது அந்த பேதங்களை அடைகிறான் என்பதால் பன்மையில் மரீச்சய: என்று கூறப்பட்டது. அவை கிரணங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதாலும் பிரிதிவியையும், “मरः” என்று சுருதி கூறுகிறது. ஏன்எனில் இதில் பூதங்கள் மரணம் அடைவதால் “मरः” என்று ஆயிற்று. இதற்குக் கீழ் உள்ள வோகம் “आपः” தண்ணீர் என்று கூறப்படுகிறது. இதில் எல்லாம் அடையப்படுவதால் அவ்வாறு கூறப்பட்டது. லோகங்கள் பஞ்ச பூதாத்மகமாய் இருப்பினும் கூட தண்ணீர் மிகுந்து உள்ளதால் அவைகள் தண்ணீர் என்றும் கிரணங்கள் என்றும் மரம் என்றும் (आप) ஆபஹ என்றும் தண்ணீரின் பலதரப்பட்ட பெயர்களால் கூறப்படுகின்றன.
सर्वप्राणिकर्मफलोपादानाधिष्ठानभूतांश्चतुरो लोकान्सृष्ट्वा
(ச.பா) (அ.கை) எல்லா பிராணிகளின் கர்மபல அதிஷ்டான பூதமான நான்கு லோகங்களையும் படைத்து -
स ईक्षतेमे नु लोका लोकपालान्नु सृजा इति । सोऽद्भ्य एव पुरुषं समुद्धृत्यामूर्छयत् ॥ ३ ॥
सः ईश्वरः पुनरेव ईक्षत — इमे नु तु अम्भःप्रभृतयः मया सृष्टा लोकाः परिपालयितृवर्जिता विनश्येयुः ; तस्मादेषां रक्षणार्थं लोकपालान् लोकानां पालयितॄन् नु सृजै सृजेऽहम् इति ।
(ச.பா) அதன்பின் அந்த ஈசுவரனானவன் இவ்வாறு எண்ணினான். இந்த பிருதிவி முதலான என்னால் படைக்கப்பட்ட இந்த லோகங்கள் அதை பரிபாலிப்பவர்கள் இல்லாது போனால் நாசத்தை அடைந்துவிடும். ஆகையால் இவைகளைக் காப்பதின் பொருட்டு இவைகளைப் பரிபாலிக்கும் பாலகர்களை நான் படைப்பேன் என்று எண்ணினார்.
एवमीक्षित्वा सः अद्भ्य एव अप्प्रधानेभ्य एव पञ्चभूतेभ्यः, येभ्योऽम्भःप्रभृतीन्सृष्टवान् , तेभ्य एवेत्यर्थः, पुरुषं पुरुषाकारं शिरःपाण्यादिमन्तं समुद्धृत्य अद्भ्यः समुपादाय, मृत्पिण्डमिव कुलालः पृथिव्याः, अमूर्छयत् मूर्छितवान् , सम्पिण्डितवान्स्वावयवसंयोजनेनेत्यर्थः ॥
(ச.பா) இவ்வாறு எண்ணி அந்த ஈசுவரனானவன் பிருதிவி முதலான தண்ணீரைப் பிரதானமாகக் கொண்ட எந்த லோகங்களைப் படைத்தாரோ அவைகளில் இருந்தே புருஷாகாரத்தை உடைய தலை, கை, கால் இவைகளுடன் கூடிய ரூபத்தை மண்ணிலிருந்து குயவன் மண்பிண்டத்தை உருட்டி எடுப்பது போல் எடுத்து அந்தப் பிண்டத்தை அவயங்களுடன் கூடியதாகச் செய்தார் என்பது பொருள்.
तमभ्यतपत्तस्याभितप्तस्य मुखं निरभिद्यत यथाण्डं मुखाद्वाग्वाचोऽग्निर्नासिके निरभिद्येतां नासिकाभ्यां प्राणः प्राणाद्वायुरक्षिणी निरभिद्येतामक्षिभ्यां चक्षुश्चक्षुष आदित्यः कर्णौ निरभिद्येतां कर्णाभ्यां श्रोत्रं श्रोत्राद्दिशस्त्वङ् निरभिद्यत त्वचो लोमानि लोमभ्य ओषधिवनस्पतयो हृदयं निरभिद्यत हृदयान्मनो मनसश्चन्द्रमा नाभिर्निरभिद्यत नाभ्या अपानोऽपानान्मृत्युः शिश्नं निरभिद्यत शिश्नाद्रेतो रेतस आपः ॥ ४ ॥ इति प्रथमः खण्डः ॥
तं पिण्डं पुरुषविधमुद्दिश्य अभ्यतपत् , तदभिध्यानं सङ्कल्पं कृतवानित्यर्थः, ‘यस्य ज्ञानमयं तपः’ (मु. उ. १ । १ । ९) इत्यादिश्रुतेः । तस्य अभितप्तस्य ईश्वरसङ्कल्पेन तपसाभितप्तस्य पिण्डस्य मुखं निरभिद्यत मुखाकारं सुषिरमजायत ; यथा पक्षिणः अण्डं निर्भिद्यते एवम् । तस्माच्च निर्भिण्णात् मुखात् वाक् करणमिन्द्रियं निरवर्तत ; तदधिष्ठाता अग्निः, ततो वाचः, लोकपालः । तथा नासिके निरभिद्येताम् । नासिकाभ्यां प्राणः, प्राणाद्वायुः ; इति सर्वत्राधिष्ठानं करणं देवता च — त्रयं क्रमेण निर्भिण्णमिति । अक्षिणी, कर्णौ, त्वक् , हृदयमन्तःकरणाधिष्ठानम् , मनः अन्तःकरणम् ; नाभिः सर्वप्राणबन्धनस्थानम् । अपानसंयुक्तत्वात् अपान इति पाय्विन्द्रियमुच्यते ; तस्मात् तस्याधिष्ठात्री देवता मृत्युः । यथा अन्यत्र, तथा शिश्नं निरभिद्यत प्रजननेन्द्रियस्थानम् । इन्द्रियं रेतः रेतोविसर्गार्थत्वात्सह रेतसोच्यते । रेतस आपः इति ॥
(ச.பா) இத்தகைய பிண்டத்தை புருஷவிதமாக ஆகவேண்டும் என்று உத்தேசித்து தவம் செய்தார். இங்கு தவம் என்பது அது அவ்வாறு இருக்கவேண்டும் என்று தியானித்து சங்கல்பம் செய்தார் என்பது பொருள். “यस्य ज्ञानमयं तपः” எவனுக்கு ஞானமே தவமோ என்று சுருதிகள் கூறும். இவ்வாறு ஈஸ்வரனின் சங்கல்பமாகிற தவத்தால் தியானிக்கப்பட்ட பிண்டத்திற்கு முகம்(வாய்) உண்டாயிற்று. அதாவது வாய் போன்ற ஒரு பள்ளமான துவாரம் உண்டாயிற்று. எவ்வாறு பக்ஷிகளின் முட்டை வெடிக்குமோ அதுபோல், இவ்வாறு உண்டான வாயிலிருந்து வாக்கரணமான இந்திரியமும் அதற்கு அதிஷ்ட்டாதாவான அக்னியும், அதிலிருந்து வாக்கும், லோகபாலனும் உண்டாயினர். அவ்வாறே இரு மூக்குகளும் உண்டாயின. அந்த மூக்குகளில் இருந்து பிராணனும் பிராணன்களிலிருந்து வாயுவும் உண்டாயின. இவ்வாறு எல்லா இடத்திலும் அதிஷ்ட்டானம், கரணம், அந்த தேவதை என்ற மூன்றும் கிரமமாக தோன்றின. இருகண்கள், இருகாதுகள், தோல் ஹ்ருதயம், அந்தக்கரணமான அதிஷ்ட்டானம், மனம் என்ற அதிஷ்ட்டானம், தொப்புள் என்ற சர்வ பிராணன்களையும் பந்தனம் செய்யும் ஸ்தானம்யாவும் தோன்றின. எனவேதான் அபானத்துடன் கூடியதால் அபானத்தை வெளியேற்றும் ஸ்தானம் பாயு என்ற இந்திரியமாகக் கூறப்படுகிறது. அதற்கு அதிஷ்ட்டான தேவதை மிருத்யுவாகும். எவ்வாறு மற்றஇடங்கள் தோன்றினவோ அவ்வாறே ஜனனேந்திரியமும் அதிலிருந்து வெளிப்படும் வீரிய இந்திரிய ஸ்தானமும் உண்டாயின. வீரியம் வெளிப்படுவதால் அது ரேதஸ் என்று கூறப்பட்டது.
इति प्रथमखण्डभाष्यम् ॥
ता एता देवताः सृष्टा अस्मिन्महत्यर्णवे प्रापतंस्तमशनायापिपासाभ्यामन्ववार्जत्ता एनमब्रुवन्नायतनं नः प्रजानीहि यस्मिन्प्रतिष्ठिता अन्नमदामेति ॥ १ ॥
ता एता अग्न्यादयो देवताः लोकपालत्वेन सङ्कल्प्य सृष्टा ईश्वरेण अस्मिन् संसारार्णवे संसारसमुद्रे महति अविद्याकामकर्मप्रभवदुःखोदके तीव्ररोगजरामृत्युमहाग्राहे अनादौ अनन्ते अपारे निरालम्बे विषयेन्द्रियजनितसुखलवलक्षणविश्रामे पञ्चेन्द्रियार्थतृण्मारुतविक्षोभोत्थितानर्थशतमहोर्मौ महारौरवाद्यनेकनिरयगतहाहेत्यादिकूजिताक्रोशनोद्भूतमहारवे सत्यार्जवदानदयाऽहिंसाशमदमधृत्याद्यात्मगुणपाथेयपूर्णज्ञानोडुपे सत्सङ्गसर्वत्यागमार्गे मोक्षतीरे एतस्मिन् महत्यर्णवे प्रापतन् पतितवत्यः ।
(ச.பா) இந்த அக்னி முதலான தேவதைகளை ஈஸ்வரன் லோகபாலர்களாய் சங்கல்ப ரூபமாய் ஸ்ருஷ்ட்டித்து இந்த பெரிய சம்சார சமுத்திரத்தில் தள்ளினார். அல்லது அவைகள் சம்சார சமுத்திரத்தில் வீழ்ந்தன. இந்த சம்சார சமுத்திரமானது மிகப்பெரியது. அவித்தியா காமகர்மங்களால் உண்டான துக்கம் என்ற தண்ணீரால் நிரம்பியது. கொடுமையான ரோகங்கள், முதுமை, மரணம் முதலான முதலைகளுடன் கூடியது. அநாதியானது என்பதில் கரைகாண முடியாதது. எப்பிடிப்பும் அற்றது. விஷருயந்திரியங்களில் இருந்து உண்டான சுகலேசம் என்பதால் சிறிது ஒய்வு உடையது. பஞ்சேந்திரியங்களுடைய விஷயங்களான தாகம், காற்று, அலைக்களித்தல் என்பவைகளால் உண்டான அநர்த்த கூட்டங்களாகிய அலையுடன் கூடியது. மஹாரெளரவம் என்பன போன்ற அநேக படுகுழிகளுடன் கூடியதும், அந்த நரகக்குழிகளில் விழுந்தவர்கள் ஹா, ஹா என்று இடும் கூச்சலால் பெரும் சப்தத்துடன் கூடியது. இத்தகைய சமுத்திரத்தில் சத்தியம், நேர்மை, தானம், தயை, அஹிம்சை, சமம், தமம், திருதி முதலான ஆத்மகுணங்களுடன் கூடிய உணவால் நிரம்பிய ஞானம் என்ற துடுப்புடன் கூடியதும் படகுடன் கூடியதும், சத்சங்கம், சர்வத்தியாகம் என்ற வழியையுடையதும், மேற்சொன்னப் படகில் ஏறி ஞானம் என்ற துடுப்பால் தள்ளி முற்கூறப்பட்ட வழியுடன் சென்றால் மோக்ஷம் என்ற கரையை உடையதுமான இந்த பெரிய சம்சார சாகரத்தில் அந்த படைப்புகள்யாவும் வீழ்ந்தன.
तस्मादग्न्यादिदेवताप्ययलक्षणापि या गतिर्व्याख्याता ज्ञानकर्मसमुच्चयानुष्ठानफलभूता, सापि नालं संसारदुःखोपशमायेत्ययं विवक्षितोऽर्थोऽत्र । यत एवम् , तस्मादेवं विदित्वा, परं ब्रह्म, आत्मा आत्मनः सर्वभूतानां च, यो वक्ष्यमाणविशेषणः प्रकृतश्च जगदुत्पत्तिस्थितिसंहारहेतुत्वेन, स सर्वसंसारदुःखोपशमनाय वेदितव्यः । तस्मात् ‘एष पन्था एतत्कर्मैतद्ब्रह्मैतत्सत्यम्’ (ऐ. उ. २ । १ । १) यदेतत्परब्रह्मात्मज्ञानम् , ‘नान्यः पन्था विद्यतेऽयनाय’ (श्वे. उ. ३ । ८) (श्वे. उ. ६ । १५) इति मन्त्रवर्णात् ।
ஆகையால் அக்னி முதலான தேவதைகளுடைய பாவத்தை அடையும் தன்மை எவ்வாறு விளக்கப்பட்டதோ எது ஞானகர்மாக்களை சேர்த்துச் செய்வதால் அதற்குப் பலமாகக் கூறப்பட்டதோ அது சம்சார துக்கத்தை நீக்குவதின் பொருட்டு போதுமானது அன்று என்ற பொருளையே சொல்ல விரும்பி இவ்வாறு கூறினார். எனவே இதை இவ்வாறு உணர்ந்து பரப்ரஹ்மமான ஆத்மா எது, சர்வபூதங்களுக்கும் ஆத்மாவாக விளங்குகிறது என்பதை எல்லா விசேஷங்களுக்கும் விசேஷமாய் உள்ளது என்று கூற விரும்பி எதை இங்குகூற விளைந்தாரோ அதுவே ஜகத்தினுடைய உற்பத்தி, ஸ்திதி, ஸம்ஹாரம் இவைகளுக்கு காரணமாயும் உள்ளதோ எது அறியப்பட்ட பொழுது எல்லா சம்சார துக்கங்களும் நீங்கி எவ்வுபாதியும் இன்றி விளங்குகிறதோ அந்த பிரஹ்மமானது அறியத்தக்கது. எனவேதான் சுருதிகள் “एष पन्था एतत्कर्मैतद्ब्रह्मैतत् सत्यम्” இதுவே வழி. இந்த பிரஹ்மரூபமே கர்மரூபமானது, இந்த பிரஹ்மமே சத்தியமானது என்று எந்த பரப்பிரஹ்மமானது கூறப்பட்டுள்ளதோ அதுவே ஆத்மக் ஞானமாகும். “नान्यः पन्था विद्यतेऽयनाय” இந்த ஆத்மஸ்வரூபத்தை உணரும் ஆத்ம ஞானத்தைத்தவிர வேறு மீள்வதற்கு வழி ஏதும் கிடையாது என்ற மந்திரங்களால் வர்ணிக்கின்றன.
तं स्थानकरणदेवतोत्पत्तिबीजभूतं पुरुषं प्रथमोत्पादितं पिण्डमात्मानम् अशनायापिपासाभ्याम् अन्ववार्जत् अनुगमितवान् संयोजितवानित्यर्थः । तस्य कारणभूतस्य अशनायादिदोषवत्त्वात् तत्कार्यभूतानामपि देवतानामशनायादिमत्त्वम् । ताः ततः अशनायापिपासाभ्यां पीड्यमानाः एनं पितामहं स्रष्टारम् अब्रुवन् उक्तवत्यः । आयतनम् अधिष्ठानं नः अस्मभ्यं प्रजानीहि विधत्स्व, यस्मिन् आयतने प्रतिष्ठिताः समर्थाः सत्यः अन्नम् अदाम भक्षयाम इति ॥
ஸ்தானம், கரணம், தேவதை இவைகளின் உற்பத்திக்கு பீஜமாக உள்ள முதலில் உண்டு பண்ணப்பட்ட பிண்டரூபமான அந்த புருஷனை பசி, தாகம், இவைகளுடன் இணைத்தார் என்பது பொருள். இவ்வாறு காரணபூதமான அது பசி, தாகம் முதலான தோஷங்களைப் பெற்றிருந்தமையால் அதன் காரியபூதமான தேவதைகளுக்கும் பசி, தாகம் முதலான தோஷங்களுடன் கூடியிருக்கும் தன்மை ஏற்படுகிறது. இவ்வாறு படைக்கப்பட்டு பசி, தாகங்களுடன் இணைக்கப்பட்டவைகள், அவைகளால் துன்புற்றவைகளாகி தன்னை படைத்த பிதாமகனை நோக்கி கூறலாயின. எங்களுக்கு ஒரு அதிஷ்ட்டானத்தை படைப்பாயாக என்று, அதில் இருந்துகொண்டு சாமர்த்தியத்தை அடைந்தவர்களாகி அன்னத்தை உண்போமோ (அத்தகைய அதிஷ்ட்டானத்தைப் படைப்பீராக என்று கூறின).

(ச.பா) இவ்வாறு அந்த தேவதைகளால் கூறப்பட்ட ஈஸ்வரனானவர்
एवमुक्त ईश्वरः
(ச.பா) (அ.கை) இவ்வாறு அந்த தேவதைகளால் கூறப்பட்ட ஈஸ்வரனானவர்
ताभ्यो गामानयत्ता अब्रुवन्न वै नोऽयमलमिति । ताभ्योऽश्वमानयत्ता अब्रुवन्न वै नोऽयमलमिति ॥ २ ॥
ताभ्यः देवताभ्यः गां गवाकृतिविशिष्टं पिण्डं ताभ्य एवाद्भ्यः पूर्ववत्पिण्डं समुद्धृत्य मूर्छयित्वा आनयत् दर्शितवान् । ताः पुनः गवाकृतिं दृष्ट्वा अब्रुवन् । न वै नः अस्मदर्थम् अधिष्ठाय अन्नमत्तुम् अयं पिण्डः अलं न वै । अलं पर्याप्तः । अत्तुं न योग्य इत्यर्थः । गवि प्रत्याख्याते तथैव ताभ्यः अश्वम् आनयत् । ता अब्रुवन् — न वै नोऽयमलमिति, पूर्ववत् ॥
(ச.பா) அந்த தேவதைகளின் பொருட்டு முன்பு கூறப்பட்டது போலவே அந்தத் தண்ணீரிலிருந்து பசுவின் ஆகிருதியுடன் கூடியதான ஒரு பிண்டத்தைத் திரட்டி எடுத்து அதை பசுவாக ஆக்கி அந்த தேவதைகளுக்குக் காண்பித்தார். அந்த தேவதைகள் பசுவின் ஆகிருதியைப் பார்த்து கூறினர். எங்களின் பொருட்டு உம்மால் படைக்கப்பட்ட இந்த பிண்டம், எங்களால் அதிஷ்ட்டானமாகக் கொண்டு, எங்களால் அன்னத்தை உண்பதற்குப் போதுமானது அன்று என்று கூறினர். இங்கு “न अलम्” என்ற சொல்லுக்கு நாங்கள் அதை அதிஷ்ட்டானமாகக் கொண்டு எங்களுக்கு வேண்டிய அன்னத்தை உண்பதற்கு யோக்கியமானது அன்று அது என்று கூறின என்பது பொருள். இவ்வாறு பசுவை நிராகரித்த தேவதைகளின் பொருட்டு அவர் முன்போலவே குதிரையின் ஆகிருதியான ஒரு பிண்டத்தைக் கொணர்ந்து காட்ட தேவர்கள் முன்போலவே இதுவும் எங்களுக்கு போதுமானது அன்று என்று கூறினார்.
सर्वप्रत्याख्याने -
(ச.பா) (அ.கை) இவ்வாறு விவேகமற்ற சமஸ்த பிராணி பிண்டங்களையும் நிராகரித்த.
ताभ्यः पुरुषमानयत्ता अब्रुवन्सु कृतं बतेति पुरुषो वाव सुकृतम् । ता अब्रवीद्यथायतनं प्रविशतेति ॥ ३ ॥
ताभ्यः पुरुषमानयत् स्वयोनिभूतम् । ताः स्वयोनिं पुरुषं दृष्ट्वा अखिन्नाः सत्यः सु कृतं शोभनं कृतम् इदमधिष्ठानं बत इति अब्रुवन् । तस्मात्पुरुषो वाव पुरुष एव सुकृतम् , सर्वपुण्यकर्महेतुत्वात् ; स्वयं वा स्वेनैवात्मना स्वमायाभिः कृतत्वात्सुकृतमित्युच्यते ।
(ச.பா) இவ்வாறு அந்த தேவதைகள் எல்லாவற்றையும் நிராகரித்த பொழுது அவர்களின் பொருட்டு தங்களுக்கு காரண பூதமான புருஷரூபத்தைக் கொணர்ந்து காட்டினார். அந்த தேவதைகளும் தங்களுக்கு காரணமான புருஷரூபத்தைக் கண்டு துக்கம் இல்லாதவர்களாக ஆகி மிகவும் அழகான அதிஷ்ட்டானத்தை உண்டாக்கினீர். மிகவும் ஆச்சரியமானது என்று கூறினர். எனவேதான் புருஷனானவன் எல்லா புண்ய கர்மங்களுக்கும் ஹேதுவாய் இருப்பதால் மிகவும் சுகிருதம், சோபனம் என்று கூறப்படுகிறது. அவர்கள் நுழையும்படியாக ஈஸ்வரனானவன் தன்னிலையிலேயே தானே தன்மாயையால் இவ்வாறு படைத்தார் என்பதாலும் சுகிருதம் என்று கூறப்பட்டது.
ताः देवताः ईश्वरः अब्रवीत् इष्टमासामिदमधिष्ठानमिति मत्वा — सर्वे हि स्वयोनिषु रमन्ते ; अतः यथायतनं यस्य यत् वदनादिक्रियायोग्यमायतनम् , तत् प्रविशत इति ॥
(ச.பா) அந்த தேவதைகளைப் பார்த்து ஈஸ்வரன் கூறலானார். இந்த அதிஷ்ட்டானம் உங்களுக்கு இஷ்டமானதா, எல்லோரும் தன் காரணத்தில் ரமிப்பது இயற்கை ஆதலால் அவர் அவ்வாறு கேட்டார். எனவே எவனுக்கு அந்த இருப்பிடமானது உள்ளதோ அது அவனுக்கே இன்பமானது என்பதால் அநாதியாய் உண்டான இந்த இருப்பிடங்களில் அந்த தேவதைகள் பிரவேசித்தனர்.
तथास्त्वित्यनुज्ञां प्रतिलभ्येश्वरस्य नगर्यामिव बलाधिकृतादयः-
(ச.பா) (அ-.கை) அவ்வாறே ஆகட்டும் என்று அந்த ஈஸ்வரனின் அனுமதி பெற்ற தேவர்கள், அரசனின் அனுமதியைப் பெற்ற சேனாதிபதி முதலானவர்கள் நகரத்தில் புகுந்து அந்தந்த ஸ்தானத்திலேயே ஆக்கிரமித்துக் கொள்வது போல் ஆக்கிரமித்துக் கொண்டனர்.
अग्निर्वाग्भूत्वा मुखं प्राविशद्वायुः प्राणो भूत्वा नासिके प्राविशदादित्यश्चक्षुर्भूत्वाक्षिणी प्राविशद्दिशः श्रोत्रं भूत्वा कर्णौ प्राविशन्नोषधिवनस्पतयो लोमानि भूत्वा त्वचं प्राविशंश्चन्द्रमा मनो भूत्वा हृदयं प्राविशन्मृत्युरपानो भूत्वा नाभिं प्राविशदापो रेतो भूत्वा शिश्नं प्राविशन् ॥ ४ ॥
अग्निः वागभिमानी वागेव भूत्वा स्वयोनिं मुखं प्राविशत् तथोक्तार्थमन्यत् । वायुर्नासिके, आदित्योऽक्षिणी, दिशः कर्णौ, ओषधिवनस्पतयस्त्वचम् , चन्द्रमा हृदयम् , मृत्युर्नाभिम् , आपः शिश्नम् , प्राविशन् ॥
(ச.பா) வாக் இந்திரியத்தின் அபிமானி தேவதையான அக்னி வாக்காகவே ஆகி தன்னுடைய பிறப்பிடமான வாயில் நுழைந்தார். இவ்வாறே மற்றவர்களையும் கொள்ளவேண்டும். வாயுதேவன் மூக்குகளையும், சுரியதேவன் கண்களையும், திக்தேவன் காதுகளையும், செடி, மரம், கொடி, இவைகள் துவக் இந்திரியத்தையும், சந்திரன் அந்தக்கரணமான மனதாகி ஹிருதயத்தையும், மிருத்யு நாபியையும், வருணதேவன் ஜனன இந்திரியத்தையும் நுழைந்தனர் என்பது பொருள்.
एवं लब्धाधिष्ठानासु देवतासु -
(ச.பா) (அ.கை) இவ்வாறு தேவதைகள் அதிஷ்டானங்களைப் பெற்றபொழுது
तमशनायापिपासे अब्रूतामावाभ्यामभिप्रजानीहीति । ते अब्रवीदेतास्वेव वां देवतास्वाभजाम्येतासु भागिन्यौ करोमीति । तस्माद्यस्यै कस्यै च देवतायै हविर्गृह्यते भागिन्यावेवास्यामशनायापिपासे भवतः ॥ ५ ॥
निरधिष्ठाने सत्यौ अशनायापिपासे तम् ईश्वरम् अब्रूताम् उक्तवत्यौ — आवाभ्याम् अधिष्ठानम् अभिप्रजानीहि चिन्तय विधत्स्वेत्यर्थः । स ईश्वर एवमुक्तः ते अशनायापिपासे अब्रवीत् । न हि युवयोर्भावरूपत्वाच्चेतनावद्वस्त्वनाश्रित्य अन्नात्तृत्वं सम्भवति । तस्मात् एतास्वेव अग्न्याद्यासु वां युवां देवतासु अध्यात्माधिदेवतासु आभजामि वृत्तिसंविभागेनानुगृह्णामि । एतासु भागिन्यौ यद्देवत्यो यो भागो हविरादिलक्षणः स्यात् , तस्यास्तेनैव भागेन भागिन्यौ भागवत्यौ वां करोमीति । सृष्ट्यादावीश्वर एवं व्यदधाद्यस्मात् , तस्मात् इदानीमपि यस्यै कस्यै च देवतायै देवताया अर्थाय हविर्गृह्यते चरुपुरोडाशादिलक्षणं भागिन्यौ एव भागवत्यावेव अस्यां देवतायाम् अशनायापिपासे भवतः ॥
(ச.பா) அதிஷ்ட்டான அற்றவைகளான பசி, தாகம் முதலியவைகள் அந்த ஈஸ்வரனை நோக்கி ஐயனே எங்களுக்கும் ஒரு அதிஷ்டானத்தை சிந்திப்பீராக என்று கூறின என்பது பொருள். அதிஷ்டானத்தைப் படைப்பீறாக என்பது அர்த்தம். இவ்வாறு பசி, தாகத்தால் வேண்டப்பட்ட அந்த ஈஸ்வரன் அவைகளை நோக்கிக் கூறினார். உங்களுக்கு பாவரூபத்துவம் இல்லாததால் சேதன ஸ்வரூபங்களைப் போல் ஒரு வஸ்துவைப் பற்றிக்கொண்டு சாப்பிடும் தன்மை ஏற்படாது. எனவே இந்த அக்னி முதலான தேவதைகளிடத்திலேயே உங்களை ஆதிதைவிக, ஆத்யாத்மிக, ஸ்வபாவத்துடன் கூடிய விருத்தியை உடையவர்களாக உங்களை இணைத்து அனுக்கிரஹம் செய்கிறேன் என்று கூறினார். இவர்களிடத்தில் நீங்கள் பாகத்தை (பங்கு) உடையவர்களாக ஆவீர்களாக. எனவேதான் அந்த ஈஸ்வரன் சொல்படி சிருஷ்ட்டி காலம் தொடங்கி இன்றுவரை எந்த ஒரு தேவதையின் பொருட்டாவது சரு, புரோடாசம், போன்ற ஹவிசை நாம் எடுப்போமேயானால் அதில் இந்த பசி, தாகங்களும் அந்த தேவதைகளுடன் பங்கு கொண்டவைகளாக உள்ளன.
इति द्वितीयखण्डभाष्यम् ॥
स ईक्षतेमे नु लोकाश्च लोकपालाश्चान्नमेभ्यः सृजा इति ॥ १ ॥
सः एवमीश्वरः ईक्षत । कथम् ? इमे नु लोकाश्च लोकपालाश्च मया सृष्टाः, अशनायापिपासाभ्यां च संयोजिताः । अतो नैषां स्थितिरन्नमन्तरेण । तस्मात् अन्नम् एभ्यः लोकपालेभ्यः सृजै सृजे इति ।
(ச.பா) அந்த ஈஸ்வரனானவர் இவ்வாறு எண்ணினார். என்னால் படைக்கப்பட்ட இந்த லோகங்களும், லோகபாலர்களும் பசி, தாகத்துடனும் இணைக்கப்பட்டுவிட்டனர். இவர்கள் எவ்வாறு ஜீவிப்பர் பசி, தாகங்களுடன் இணைக்கப்பட்டதால் அன்னம் இன்றி இவர்களால் நிலைபெறும் தன்மை முடியாததாகும். எனவே இந்த லோக பாலர்களின் பொருட்டு அன்னத்தைப் படைப்பேன் என்று எண்ணினார்.
एवं हि लोके ईश्वराणामनुग्रहे निग्रहे च स्वातन्त्र्यं दृष्टं स्वेषु । तद्वन्महेश्वरस्यापि सर्वेश्वरत्वात्सर्वान्प्रति निग्रहे अनुग्रहे च स्वातन्त्र्यमेव ॥
(ச.பா) இவ்வாறே அன்றோ உலகில் ஈஸ்வரர்களுக்கு நிக்கிரக அனுக்ரஹங்களில் சுதந்திரத்தன்மை காணப்படுகிறது. அதுபோலவே மஹேஸ்வரனுக்கும் அவன் சர்வேஸ்வரன் ஆனதினால் அவனுக்கு எல்லோரையும் நிக்கிரஹிக்கவும், அனுக்கிரஹிக்கவும் ஸ்வாதந்திரியம் இருக்கிறது.
सोऽपोऽभ्यतपत्ताभ्योऽभितप्ताभ्यो मूर्तिरजायत । या वै सा मूर्तिरजायतान्नं वै तत् ॥ २ ॥
सः ईश्वरः अन्नं सिसृक्षुः ता एव पूर्वोक्ता अपः उद्दिश्य अभ्यतपत् । ताभ्यः अभितप्ताभ्यः उपादानभूताभ्यः मूर्तिः घनरूपं धारणसमर्थं चराचरलक्षणम् अजायत उत्पन्नम् । अन्नं वै तत् मूर्तिरूपं या वै सा मूर्तिरजायत ॥
(ச.பா) அந்த ஈஸ்வரனானவர் இவைகளுக்கு அன்னம் படைக்க விரும்பி முற்கூறப்பட்ட அப் (अप्) திரவியத்தையே அடைந்தார். அவ்வாறு தியானித்து அடையப்பட்டதும் உபாதானமாயும் உள்ள ’அப்’ திரவியத்திலிருந்து ஒரு உருவத்தை தரிக்கும் சாமர்த்தியத்தோடு கூடியதும் ஒரு உருவத்தை உடையதும் சராசர லக்ஷணமாய் உள்ள அன்னங்கள் உண்டாயின. எதனால் அந்த மூர்த்தத்தை அடைந்ததோ அதனால் கை கால்களுடன் கூடியதாயும், வேறு இடங்களில் நெல் முதலியவைகள் போன்று ஒரு உருவத்தைப் பெற்றவையாயும் அந்த அன்னங்கள் ஆயின.
तदेनदभिसृष्टं पराङत्यजिघांसत्तद्वाचाजिघृक्षत्तन्नाशक्नोद्वाचा ग्रहीतुम् । स यद्धैनद्वाचाग्रहैष्यदभिव्याहृत्य हैवान्नमत्रप्स्यत् ॥ ३ ॥
तदेनत् अन्नं लोकलोकपालान्नार्थ्यभिमुखे सृष्टं सत् , यथा मूषकादिर्मार्जारादिगोचरे सन् , मम मृत्युरन्नाद इति मत्वा परागञ्चतीति पराङ् पराक्सत् अत्तॄन् अतीत्य अजिघांसत् अतिगन्तुमैच्छत् , पलायितुं प्रारभतेत्यर्थः ।
(ச.பா) லோகம், லோகபாலர்கள் இவர்கள் எதிரிலேயே அவர்களுக்கான அன்னம் சிருஷ்ட்டிக்கப்பட்டது. அது எவ்வாறு எனில் எலி முதலானவை பூனை முதலானவைகளுக்கு எதிரிலேயே படைக்கப்ட்டது. அவ்வாறு படைக்கப்பட்ட அன்னங்கள் என்னை சாப்பிடக்கூடிய இந்த அன்னாதங்கள் (சாப்பிடக்கூடியவை) எநக்கு மிருத்யு என்று எண்ணி திரும்பிப் பார்க்காது அந்த அன்னாதங்களைத் தாண்டி ஓடலாயின.
तमन्नाभिप्रायं मत्वा स लोकलोकपालसङ्घातकार्यकरणलक्षणः पिण्डः प्रथमजत्वादन्यांश्चान्नादानपश्यन् , तत् अन्नं वाचा वदनव्यापारेण अजिघृक्षत् ग्रहीतुमैच्छत् । तत् अन्नं नाशक्नोत् न समर्थोऽभवत् वाचा वदनक्रियया ग्रहीतुम् उपादातुम् । सः प्रथमजः शरीरी यत् यदि ह एनत् वाचा अग्रहैष्यत् गृहीतवान्स्यात् अन्नम् , सर्वोऽपि लोकः तत्कार्यभूतत्वात् अभिव्याहृत्य हैव अन्नम् अत्रप्स्यत् तृप्तोऽभविष्यत् । न चैतदस्ति । अतो नाशक्नोद्वाचा ग्रहीतुमित्यवगच्छामः पूर्वजोऽपि ।
(ச.பா) அந்த அன்னத்தின் அபிப்ராயத்தை அறிந்த லோகம், லோகபாலர்கள் என்ற சங்காதமாய் காரிய, காரண லக்ஷணத்தோடு விளங்கும் அந்த விராட்ரூபமான பிண்டம் தான் முதல் தோன்றல் ஆதலால் மற்ற அன்னாதங்களை பார்த்தது. அந்த அன்னத்தை வாக் இந்திரியத்தின் பேசுதல் என்ற வியாபாரத்தால் பற்றுவதற்கு முயன்றது. அவ்வாறு பற்றுவதற்கு இயலாததாக ஆயிற்று. அதாவது பேச்சால் உணவைப் பற்ற முடியவில்லை. அந்த முதல் தோன்றலான (விராட்ரூபமான) சரீரி இந்த உணவை வாக் இந்திரிய வியாபாரமான பேச்சால் பற்றி இருப்பானேயானால் அது அதை அனுசரித்து எல்லா லோகமும் அதன் காரியரூபமாய் விளங்குவதால் அன்னம் என்று சொல்லியே, அவ்வாறு சொல்லுவதாலேயே உண்டது போன்ற திருப்தியை அடைந்தவனாக ஆவான். அவ்வாறு ஆவது இல்லை. எனவே உணவை வாக் இந்திரிய வியாபாரத்தால் கிரஹிக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்கிறோம். விராட் சொரூபத்திற்கும் இதேநிலைதான்.
समानमुत्तरम् ।
(ச.பா) (அ.கை) மேலே வருகின்றதும் இதற்குச் சமானமாயுள்ளது.
तत्प्राणेनाजिघृक्षत्तन्नाशक्नोत्प्राणेन ग्रहीतुम् । स यद्धैनत्प्राणेनाग्रहैष्यदभिप्राण्य हैवान्नमत्रप्स्यत् ॥ ४ ॥
तच्चक्षुषाजिघृक्षत्तन्नाशक्नोच्चक्षुषा ग्रहीतुम् । स यद्धैनच्चक्षुषाग्रहैष्यद्दृष्ट्वा हैवान्नमत्रप्स्यत् ॥ ५ ॥
तच्छ्रोत्रेणाजिघृक्षत्तन्नाशक्नोच्छ्रोत्रेण ग्रहीतुम् । स यद्धैनच्छ्रोत्रेणाग्रहैष्यच्छ्रुत्वा हैवान्नमत्रप्स्यत् ॥ ६ ॥
तत्त्वचाजिघृक्षत्तन्नाशक्नोत्त्वचा ग्रहीतुम् । स यद्धैनत्त्वचाग्रहैष्यत्स्पृष्ट्वा हैवान्नमत्रप्स्यत् ॥ ७ ॥
तन्मनसाजिघृक्षत्तन्नाशक्नोन्मनसा ग्रहीतुम् । स यद्धैनन्मनसाग्रहैष्यद्ध्यात्वा हैवान्नमत्रप्स्यत् ॥ ८ ॥
तच्छिश्नेनाजिघृक्षत्तन्नाशक्नोच्छिश्नेन ग्रहीतुम् । स यद्धैनच्छिश्नेनाग्रहैष्यद्विसृज्य हैवान्नमत्रप्स्यत् ॥ ९ ॥
तदपानेनाजिघृक्षत्तदावयत् । सैषोऽन्नस्य ग्रहो यद्वायुरन्नायुर्वा एष यद्वायुः ॥ १० ॥
तत्प्राणेन तच्चक्षुषा तच्छ्रोत्रेण तत्त्वचा तन्मनसा तच्छिश्नेन तेन तेन करणव्यापारेण अन्नं ग्रहीतुमशक्नुवन्पश्चात् अपानेन वायुना मुखच्छिद्रेण तत् अन्नम् अजिघृक्षत् , तदावयत् तदन्नमेवं जग्राह अशितवान् । तेन स एषः अपानवायुः अन्नस्य ग्रहः अन्नग्राहक इत्येतत् । यद्वायुः यो वायुरन्नायुः अन्नबन्धनोऽन्नजीवनो वै प्रसिद्धः, स एष यो वायुः ॥
(ச.பா) அதை பிராணனாலும் சக்ஷுஸாலும், காதாலும், துவக் இந்திரியத்தாலும், மனதாலும், ஜனனேந்திரியத்தாலும், அதாவது அந்த, அந்த கரண வியாபாரத்தால் அன்னத்தை கிரஹிக்கமுடியாததாகி பின் அபான வாயுவால் முகத்துவாரத்தின் வழியாக அன்னத்தை உள்ளே இழுத்தது., இவ்வாறு அன்னத்தை சாப்பிட்டான். அதனாலேயே இந்த அபான வாயு அன்னகிராஹகம் (அன்னத்தை இழுப்பது என்று கூறப்பட்டது). எந்த வாயு அன்னத்திற்கு ஆயுள் என்றும் அன்னத்தைக் கட்டும் கயிறு என்றும், அன்னத்தால் ஜீவிப்பது என்றும், லோகத்தில் பிரசித்தமாக உள்ளது.
स ईक्षत कथं न्विदं मदृते स्यादिति स ईक्षत कतरेण प्रपद्या इति स ईक्षत यदि वाचाभिव्याहृतं यदि प्राणेनाभिप्राणितं यदि चक्षुषा दृष्टं यदि श्रोत्रेण श्रुतं यदि त्वचा स्पृष्टं यदि मनसा ध्यातं यद्यपानेनाभ्यपानितं यदि शिश्नेन विसृष्टमथ कोऽहमिति ॥ ११ ॥
सः एवं लोकलोकपालसङ्घातस्थितिम् अन्ननिमित्तां कृत्वा पुरपौरतत्पालयितृस्थितिसमां स्वामीव ईक्षत — कथं नु केन प्रकारेण नु इति वितर्कयन् , इदं मत् ऋते मामन्तरेण पुरस्वामिनम् ; यदिदं कार्यकरणसङ्घातकार्यं वक्ष्यमाणं कथं नु खलु मामन्तरेण स्यात् परार्थं सत् । यदि वाचाभिव्याहृतमित्यादि केवलमेव वाग्व्यवहरणादि, तन्निरर्थकं न कथञ्चन भवेत् बलिस्तुत्यादिवत् । पौरबन्द्यादिभिः प्रयुज्यमानं स्वाम्यर्थं सत्स्वामिनमन्तरेण असत्येव स्वामिनि, तद्वत् ।
(ச.பா) (இவ்வாறு போகம் முதலானவைகளின் காரண பூதமான லோகங்களையும், அந்த போகங்களுக்கு இருப்பிடமான சமஷ்டி, வியஷ்டி, சரீரத்தினுடையவும், போக உபகரணங்களான வாக் முதலானவைகளை சமஷ்டி சரீரத்தில் லோக பாலத் தன்மையோடும், வியஷ்ட்டி சரீரத்தில் கரணங்களின் அதிஷ்ட்டானத் தன்மையோடும், நிலைபெறச் செய்தார். இவ்வாறு இருக்கின்ற தேவதைகளை போகத்தில் பிரேரணை செய்வதற்காக பசி தாகங்களைப் படைத்தார். அதனால் தூண்டப்பட்டு கரணங்களில் இருக்கும் அதிஷ்ட்டான தேவதைகள் சப்தாதி விஷயங்களை கிரஹிக்கும் லக்ஷணங்களோடு கூடினவைகளாயும், அந்த போகங்கள் அபான விருத்தியோடு கூடி பிராண நிஷ்ட்டமாகி அன்னபானங்களை கிரஹிக்கும் லக்ஷணங்களோடு கூடினவைகளாக ஆயின. அந்த போகங்களோடு கூடிய ஆத்மாவிற்கு சம்சாரித்துவம் சித்திப்பதின் பொருட்டு இதுவரை சிருஷ்ட்டியைப் பற்றி கூறி இனிமேல் சம்சாரியான போக்தாவை எடுத்துக்காட்ட விரும்பி சிருஷ்ட்டாவான ஈஸ்வரனுடைய விசாரத்தை மேலே தொடங்குகிறார்.) இவ்வாறு அந்த ஈஸ்வரன் லோகம், லோக பாலர்கள் என்ற சங்காத ரூபமான சமஷ்டி, வியஷ்டிகளைப் படைத்து, அவைகளுடைய இருக்கை அன்ன பானங்களை நிமித்தமாக கொண்டதாகச் செய்து, பட்டணம், அதில் வாழும் மக்கள், அதைப் பரிபாலிப்பவர்கள் என்பன போன்று முற்கூறப்பட்டவைகளைச் செய்து எஜமானனைப் போல் தான் மறுபடியும் பார்த்தார். எவ்வாறு பார்த்தார் எனில் இவை எல்லாம் அதாவது இந்த பட்டண ரூபமானயாவும், பட்டனத்தின் தலைவனான ராஜாவைப் போல் நான் இன்றி எவ்வாறு இருக்கும். வாக்கால் சொல்லாகிற வியாபாரத்தால் கூறப்படுமேயானால் அது பொருள் அற்றதாக ஆகும். அது ஒருபோதும் பொருள் அற்றதாக ஆகக்கூடாது. யாசகர்கள் துதிப்பது போல் இது பொருள் அற்றதாக ஆகக்கூடாது. அது எவ்வாறு எனில் பட்டணத்தில் உள்ள துதிப்பவர்களால் ஸ்வாமியின் பொருட்டு துதிக்கப்படும் துதி சுவாமி இருந்தாலேயே பலன் உள்ளதாக ஆகும். ஸ்வாமி இல்லாவிடில் அது பலன் அற்றதாக ஆகிவிடும்.
तस्मान्मया परेण स्वामिना अधिष्ठात्रा कृताकृतफलसाक्षिभूतेन भोक्त्रा भवितव्यं पुरस्येव राज्ञा । यदि नामैतत्संहतकार्यस्य परार्थत्वम् , परार्थिनं मां चेतनं त्रातारमन्तरेण भवेत् , पुरपौरकार्यमिव तत्स्वामिनम् । अथ कोऽहं किंस्वरूपः कस्य वा स्वामी ?
(ச.பா) எனவே எல்லாவற்றிற்கும் பரமாயும் அதிஷ்ட்டாவாயும், ஸ்வாமியாயும், கிருதாகிருத பலன்களுக்கு சாக்ஷி பூதமாயும், அவ்வாறு சாக்ஷி பூதமாய் போக்தாவாக என்னால் இருக்கத்தக்கது ஆகும். எவ்வாறு எனில் பட்டணத்திற்கு அரசன் போல், இவ்வாறு இருப்பின் இம்மாதிரி சமஷ்டி, வியஷ்டிகளில் சம்ஹத காரியங்களுக்கு பரார்த்தத்துவம் ஏற்படும் பொழுது, பரார்த்தியான (பரமார்த்தமான) சேதனா ரூபமான என்னையன்றி அவை நடைபெறா. ராஜா இருந்தாலே பட்டணம், அதில் வாழும் மக்கள் இவர்களின் காரியங்கள் நடைபெறும். ஆகவே நான் யார்? என்ன சொரூபமானவன்? எதற்கு நான் சுவாமி?
यद्यहं कार्यकरणसङ्घातमनुप्रविश्य वागाद्यभिव्याहृतादिफलं नोपलभेय राजेव पुरमाविश्याधिकृतपुरुषकृताकृतादिलक्षणम् , न कश्चिन्माम् अयं सन् एवंरूपश्च इत्यधिगच्छेद्विचारयेत् । विपर्यये तु, योऽयं वागाद्यभिव्याहृतादीदमिति वेद, स सन् वेदनरूपश्च इत्यधिगन्तव्योऽहं स्याम् , यदर्थमिदं संहतानां वागादीनामभिव्याहृतादि । यथा स्तम्भकुड्यादीनां प्रासादादिसंहतानां स्वावयवैरसंहतपरार्थत्वम् , तद्वदिति ।
(ச.பா) நான் காரிய கரணங்களின் சேர்க்கையான இதில் பிரவேசித்து வாக், முதலானவைகளால் சொல்லப்படும், பலனை அடையாமல் போவேனேயானால் அதாவது பட்டணத்தில் பிரவேசித்த ராஜா அங்கு அதிகாரத்தில் உள்ள புருஷர்களை பார்க்காமல் இருப்பானேயானால் அவரை யாரும் புரிந்துகொள்ள மாட்டார்கள். எனவே இதில் நான் புகுந்து, நான் யார் என்ற விசாரம் செய்யும்படி செய்வேன். அதற்காகவே வாக் முதலான சங்காதங்கள் யாவும் உண்டுபண்ணப்பட்டன. அது எவ்வாறு எனில் மாளிகை, நிலைபெற அது மாளிகையாகவே விளங்க தூண், சுவர், திண்ணை இவைகள்யாவும், பரமார்த்தமாய் விளங்குகிறதோ அதுபோல் இந்த வாக் முதலான கரண வியாபாரங்களும் இருக்கும்.
एवमीक्षित्वा अतः कतरेण प्रपद्या इति । प्रपदं च मूर्धा च अस्य सङ्घातस्य प्रवेशमार्गौ ; अनयोः कतरेण मार्गेणेदं कार्यकरणसङ्घातलक्षणं पुरं प्रपद्यै प्रपद्ये इति ॥
(ச.பா) இவ்வாறு (ஆலோசித்து) எந்த மார்க்கத்தால் இதனுள் நுழைவேன் என்று ஆலோசித்தார். கால்நுனியும் உச்சியும் இச்சங்காதத்திற்கு இரண்டு மார்க்கங்கள். இக்கார்ய கரண சங்காதமாகிய பட்டனத்தினுள் இவ்விரண்டு மார்க்கங்களில் எந்த வழியில் புகுதல் வேண்டும் என்று (ஆலோசிக்கலானார்)
एवमीक्षित्वा न तावन्मद्भृत्यस्य प्राणस्य मम सर्वार्थाधिकृतस्य प्रवेशमार्गेण प्रपदाभ्यामधः प्रपद्ये । किं तर्हि, पारिशेष्यादस्य मूर्धानं विदार्य प्रपद्ये इति लोक इव ईक्षितकारी --
(ச.பா) (அ.கை) இவ்வாறு பார்த்து நினைத்து ஆலோசித்து என்னுடைய வேலையாளான பிராணணுக்கு நான் இன்றி எந்த இயக்கமும் ஏற்படாது. ஆதலால் நான் ஒரு பிரவேச மார்க்கத்தால் பிரவேசிக்கிறேன். இதனால் என்ன ஏற்பட்டது எனில் மூர்த்தாவை (உச்சந்தலையை பிளந்து கொண்டு) நுழைவேன் என்ற உலக இயல் போல ஆலோசித்து
स एतमेव सीमानं विदार्यैतया द्वारा प्रापद्यत । सैषा विदृतिर्नाम द्वास्तदेतन्नान्दनम् । तस्य त्रय आवसथास्त्रयः स्वप्ना अयमावसथोऽयमावसथोऽयमावसथ इति ॥ १२ ॥
य स्रष्टेश्वरः, स एतमेव मूर्धसीमानं केशविभागावसानं विदार्य च्छिद्रं कृत्वा एतया द्वारा मार्गेण इमं कार्यकारणसङ्घातं प्रापद्यत प्रविवेश । सेयं हि प्रसिद्धा द्वाः, मूर्ध्नि तैलादिधारणकाले अन्तस्तद्रसादिसंवेदनात् । सैषा विदृतिः विदारितत्वाद्विदृतिर्नाम प्रसिद्धा द्वाः ।
(ச.பா) எல்லாவற்றையும் படைத்தவனான ஈஸ்வரன் இவ்வாறு தீர்மானித்து மூர்த்தாவில் கேசங்களின் விபாகம் செய்யப்பட்ட இடத்தில் அந்த பிரிவின் முடிவில் (வகுடின் முடிவில்) பிளந்துகொண்டு அங்கு ஒரு துவாரத்தை உண்டு பண்ணிக்கொண்டு அந்த மார்க்கத்தால் காரிய, கரணங்களின் சேர்க்கையான இந்த லோகத்தில் பிரவேசித்தார். அந்த துவாரமானது மிக பிரசித்தமானது. அது எவ்வாறு எனில் உச்சந்தலையில் எண்ணெய் முதலானவைகளை தேய்க்கும் பொழுது அதனுடைய ரசத்தை உணருவதால் அது மிகவும் பிரசித்தமானது. அது பிளந்துகொண்டு ஈஸ்வரன் உள்ளே நுழைந்ததால் வித்ருதி என்ற பிரசித்தமான வாயிலாகும்.
इतराणि तु श्रोत्रादिद्वाराणि भृत्यादिस्थानीयसाधारणमार्गत्वान्न समृद्धीनि नानन्दहेतूनि । इदं तु द्वारं परमेश्वरस्यैव केवलस्येति । तदेतत् नान्दनं नन्दनमेव । नान्दनमिति दैर्घ्यं छान्दसम् । नन्दत्यनेन द्वारेण गत्वा परस्मिन्ब्रह्मणीति ।
(ச.பா) மற்றவைகளான காது முதலிய துவாரங்கள் வேலைக்காரனின் நிலையில் இருக்கும் சாதாரணமானவர்களின் மார்க்கமானதால் அவைகள் சிறப்புப் பெற்றவையும் அல்ல. ஆனந்தத்திற்கு காரணமானவையும் அல்ல. இந்த விதாரியம் என்ற வாயில் கேவலம் பரமேஸ்வரனுக்கு மாத்திரமே ஏறப்பட்டது. அத்தகைய இந்த வாயில் சந்தோஷத்தைத் தருவது ஆனந்தம் என்ற நெடில் வேதத்திற்குப் பொருந்தும். இந்த துவாரத்தால் வெளிக்கிளம்பி மறுபடியும் பரப்பிரஹ்மத்தில் லயிப்பதால் இது ஆனந்தம் என்று கூறப்பட்டது.
तस्यैवं सृष्ट्वा प्रविष्टस्यानेन जीवेनात्मना राज्ञ इव पुरम् , त्रय आवसथाः — जागरितकाले इन्द्रियस्थानं दक्षिणं चक्षुः, स्वप्नकाले अन्तर्मनः, सुषुप्तिकाले हृदयाकाश इत्येते ; वक्ष्यमाणा वा त्रय आवसथाः — पितृशरीरं मातृगर्भाशयः स्वं च शरीरमिति ।
(ச.பா) இவ்வாறு படைத்து அதனுள் ஜீவாத்ம பாவத்தோடு பட்டணத்தில் அரசன் நுழைந்தது போல் நுழைந்த ஈஸ்வரனுக்கு மூன்று நிலைபெறும் ஸ்தானங்கள் உண்டு. ஜாக்ரத் காலத்தில் இந்திரியஸ்தானமான வலது கண் இருப்பிடம் ஆகும். ஸ்வப்பன காலத்தில் உள்மனம் இருப்பிடமாகும். சுழுப்தி காலத்தில் ஹிருதயாகாசம் இருப்பிடம் ஆகும் என்றே, அல்லது கூறப்போகும் மூன்று ஸ்தானங்களோ அந்த ஈஸ்வரனின் இருப்பிடங்கள். தந்தையின் சரீரம், மாதாவின் கர்பாசயம், தன்னுடைய சரீரம் என்றும் மூன்று ஸ்தானங்கள் கொள்ளலாம்.
त्रयः स्वप्ना जाग्रत्स्वप्नसुषुप्त्याख्याः । ननु जागरितं प्रबोधरूपत्वान्न स्वप्नः । नैवम् ; स्वप्न एव । कथम् ? परमार्थस्वात्मप्रबोधाभावात् स्वप्नवदसद्वस्तुदर्शनाच्च । अयमेव आवसथश्चक्षुर्दक्षिणं प्रथमः । मनोऽन्तरं द्वितीयः । हृदयाकाशस्तृतीयः । अयमावसथः इत्युक्तानुकीर्तनमेव । तेषु ह्ययमावसथेषु पर्यायेणात्मभावेन वर्तमानोऽविद्यया दीर्घकालं गाढं प्रसुप्तः स्वाभाविक्या, न प्रबुध्यतेऽनेकशतसहस्रानर्थसंनिपादजदुःखमुद्गराभिघातानुभवैरपि ॥
(ச.பா) ஜாக்ரத், சொப்பனம், சுழுத்தி என்ற மூன்று நிலைகளையும், மூன்று இருப்பிடங்களாகவும் கூறலாம். மேலும் ஜாக்ரத் என்பது பிரபோத ரூபமானதால் அது ஸ்வப்னமாகாது எனில் அது அவ்வாறு அல்ல. அதுவும் சொப்பனமே. எவ்வாறு எனில் உண்மையான பரமார்த்த சொரூபமான தன்னுடைய ஆத்மப் பிரபோதம் இல்லாமையும், சொப்பனம் போல் இதிலும் அசத் வஸ்து தர்சனமும் ஏற்படுவதால் இதுவும் சொப்பனமே. இந்த மூன்று வாஸஸ்தானங்களில் வலது கண் முதலானது. உள்மனம் இரண்டாவது ஆகும். ஹிருதயாகாசம் மூன்றாவது. இவைகளை வாசஸ்தானங்கள் என்று கூறுவதாலேயே இந்த வாஸஸ்தானங்களில் மாறி, மாறி ஆத்ம பாவத்துடன் இருந்த போதிலும், அவித்தையால் நீண்டகாலம் ஸ்வாபாவிகமான அவித்தையால் ஆழ்ந்து உறங்குகிறான். அநேக கோடி அனர்த்தங்களின் சேர்க்கையினால் ஏற்படும் துக்கானுபவங்களாகிய சம்மட்டியால் அடிக்கப்பெற்ற அனுபவங்களாலும் கூட அவன் விழித்துக்கொள்வதில்லை.
स जातो भूतान्यभिव्यैख्यत्किमिहान्यं वावदिषदिति । स एतमेव पुरुषं ब्रह्म ततममपश्यदिदमदर्शमिती३ ॥ १३ ॥
स जातः शरीरे प्रविष्टो जीवात्मना भूतानि अभिव्यैख्यत् व्याकरोत् । स कदाचित्परमकारुणिकेन आचार्येणात्मज्ञानप्रबोधकृच्छब्दिकायां वेदान्तमहाभेर्यां तत्कर्णमूले ताड्यमानायाम् , एतमेव सृष्ट्यादिकर्तृत्वेन प्रकृतं पुरुषं पुरि शयानमात्मानं ब्रह्म बृहत् ततमं तकारेणैकेन लुप्तेन तततमं व्याप्ततमं परिपूर्णमाकाशवत् प्रत्यबुध्यत अपश्यत् । कथम् ? इदं ब्रह्म मम आत्मनः स्वरूपमदर्शं दृष्टवानस्मि । अहो इति । विचारणार्था प्लुतिः पूर्वम् ॥
(ச.பா) இவ்வாறு சரீரத்தில் ஜீவாத்ம பாவத்துடன் நுழைந்த ஈஸ்வரன் அந்த பூதங்களைப் பகுத்து அறிந்தார். இவ்வாறு சரீரத்தில் ஜீவாத்ம பாவத்தை அடைந்தவற்கு ஏதோ ஒரு சமயத்தில் பரமகாருண்யகரான ஆச்சாரியரால் ஆத்மஞான பிரபோதத்தை ஏற்படுத்தும் வேதாந்த மஹாவாக்கியம் எனப்படும் பெரும் முரசு கொண்டு அவன் காதின் பக்கத்தில் அறைந்த பொழுது (சப்தம் செய்த பொழுது)சிருஷ்டி முதலானவைகளுக்கு கர்த்தாவாய் இப்பொழுது பிரகிருதத்தில் இந்த பட்டணத்தில் வாழும் தன்னை எங்கும் வியாபித்தவனாயும், எதிலும், எங்கும், எப்பொழுதும் நிறைந்ததாயும் ஆகாசம் போல் பரிபூரணமானவனாயும் தன்னை உணர்ந்தார். இங்கு வந்துள்ள ”த” காரம் ப்லுதம் என்ற மிக தீர்க ஸ்வரமாகும். அது பிரஹ்மத்தினுடைய மிகப்பெரும் தன்மையை விளக்குவதற்காக வந்தது. எவ்வாறு அறிந்தார்? இந்த பிரஹ்மமே என் ஆத்மஸ்வரூபம். இதா நான் அறிந்து, பார்த்து, உணர்ந்து இதில் உறைந்தவனாய் இருக்கிறேன். இங்கு அஹோ என்ற சொல் அவருடைய விசாரத்தை விளக்குவதற்கு வந்த ஆச்சரியத்தைக் குறிக்கும் ப்லுதம் என்ற தீர்க்க ஸ்வரம் ஆகும்.
तस्मादिदन्द्रो नामेदन्द्रो ह वै नाम तमिदन्द्रं सन्तमिन्द्र इत्याचक्षते परोक्षेण । परोक्षप्रिया इव हि देवाः परोक्षप्रिया इव हि देवाः ॥ १४ ॥ इति तृतीयः खण्डः ॥
यस्मादिदमित्येव यत्साक्षादपरोक्षाद्ब्रह्म सर्वान्तरमपश्यत् न परोक्षेण,
(ச.பா) (அ.கை) எதனால் இவ்வாறு பிரஹ்மத்தை சாக்ஷாத்தாகவும், அபரோக்ஷமாயும், எங்கும் வியாபித்ததாயும், சர்வாந்தரமாயும், அபரோக்ஷமாய் பார்த்தாரோ.
तस्मात् इदं पश्यतीति इदन्द्रो नाम परमात्मा । इदन्द्रो ह वै नाम प्रसिद्धो लोके ईश्वरः । तम् एवम् इदन्द्रं सन्तम् इन्द्र इति परोक्षेण परोक्षाभिधानेन आचक्षते ब्रह्मविदः संव्यवहारार्थं पूज्यतमत्वात्प्रत्यक्षनामग्रहणभयात् । तथा हि परोक्षप्रियाः परोक्षनामग्रहणप्रिया इव एव हि यस्मात् देवाः । किमुत सर्वदेवानामपि देवो महेश्वरः । द्विर्वचनं प्रकृताध्यायपरिसमाप्त्यर्थम् ॥
(ச.பா) அதனாலேயே இதைப் பார்க்கிறான் என்று “इदन्द्रं परमात्मा” என்று சொல்லப்பட்டது. “इदन्द्र” என்பது லோகத்தில் ஈஸ்வரன் என்ற பொருளில் பிரசித்தமானது. இவ்வாறு எங்கும் வியாபித்திருக்கக்கூடிய பிரஹ்மத்தை வியவகாரத்தின் பொருட்டு பிரஹ்ம வித்துக்கள் பரோக்ஷமாய் கூறுகின்றனர். மேலும் பிரஹ்ம்மம் மிகவும் மரியாதைக்கு உரியதும் ஆனதால் அதை பிரத்யக்ஷமாய் பெயர் சொல்லுவதற்கு சுருதியே பயந்து இவ்வாறு கூறலாயிற்று. அது எவ்வாறு எனில் தேவர்கள் எதிரில் சாக்ஷாத்தாக தம் பெயரை சொல்ல விரும்பாதவர்கள். அவ்வாறே பரோக்ஷத்தில் பெயரைக் கூறுவதில் பிரியமானவர்கள். இவ்வாறு தேவர்களே இருக்கையில் தேவதேவனான மஹேஸ்வரனைப் பற்றி கூறவும் வேண்டுமோ? அதையே இரண்டாவது முறைக் கூறுவது இந்த அத்தியாயத்தின் பூர்த்தியை விளக்குவதற்காக ஆகும்.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ ऐतरेयोपनिषद्भाष्ये प्रथमोऽध्यायः ॥
इति तृतीयखण्डभाष्यम् ॥
अस्मिन्नध्याये एष वाक्यार्थः — जगदुत्पत्तिस्थितिप्रलयकृदसंसारी सर्वज्ञः सर्वशक्तिः सर्ववित्सर्वमिदं जगत्स्वतोऽन्यद्वस्त्वन्तरमनुपादायैव आकाशादिक्रमेण सृष्ट्वा स्वात्मप्रबोधनार्थं सर्वाणि च प्राणादिमच्छरीराणि स्वयं प्रविवेश ; प्रविश्य च स्वमात्मानं यथाभूतमिदं ब्रह्मास्मीति साक्षात्प्रत्यबुध्यत ; तस्मात्स एव सर्वशरीरेष्वेक एवात्मा, नान्य इति । अन्योऽपि ‘स म आत्मा ब्रह्मास्मीत्येवं विद्यात्’ इति ‘आत्मा वा इदमेक एवाग्र आसीत्’ (ऐ. उ. १ । १ । १) ‘ब्रह्म ततमम्’ (ऐ. उ. १ । ३ । १३) इति चोक्तम् । अन्यत्र च
(ச.பா) இந்த நான்காவது அத்தியாயத்தில் கூறப்பட்ட பொருள் என்னவெனில் ஜகத்தினுடைய உற்பத்தி, ஸ்திதி, லயம் இவைகளை செய்பவனாயும், ஆனால் அதேசமயம் அசம்சாரியாயும், சர்வக்ஞனாயும் எல்லாசக்தியும் படைத்தவனாயும், எல்லாவற்றையும் அறிந்தவனாயும், எல்லா இந்த ஜகத்தும் தன்னைக்காட்டிலும் வேறு வஸ்துவாய் இன்றி தன்னையே உபாதானமாகக் கொண்டு ஆகாசம் முதலான கிரமப்படி ஸ்ருஷ்டித்து தன்னுடைய ஆத்ம பிரபோதத்திற்காக பிராணனுடன் கூடிய எல்லா சரீரங்களிலும் நுழைந்தார். அவ்வாறு நுழைந்தபின்பும், தன்னுடைய ஆத்மா முன்போலவே பிரஹ்மமாய் இருக்கிறது. அதாவது நான் பிரஹ்மமாய் இருக்கிறேன் என்று சாக்ஷாத்தாக அறியவும் செய்தது. ஆகையால் அவனே எல்லா சரீரங்களிலும் ஒரே ஆத்மாவாக விளங்குகிறான். அவரைத் தவிர வேறு ஒருவன் இல்லை என்பது உறுதியாயிற்று. ஆத்மாவிற்கு சமமான மற்றொரு ஆத்மா இல்லை என்பதை விளக்குவதற்காகவே “इदं एकं एव अग्र आसीत्” என்று கூறப்பட்டது. “ब्रह्मततमम्” பிரஹ்மமாகவே எங்கும் விரிந்து, பரந்து உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
सर्वगतस्य सर्वात्मनो वालाग्रमात्रमप्यप्रविष्टं नास्तीति कथं सीमानं विदार्य प्रापद्यत पिपीलिकेव सुषिरम् ।
(ச.பா) (பூர்வ) மேலும் வேறு இடங்களில் எங்கும் நிறைந்தவனாய், சர்வாத்மாவாய், இருப்பவனின் வால் மட்டும் நுழையவில்லை என்று பொருள் கொண்டுவிடக்கூடாது என்றே சீமாவை பிளந்துகொண்டு உள்ளே நுழைந்தார் என்று கூறப்பட்டது. அது எதுபோல் எனில் எறும்பு பொந்தில் நுழைவது போல்.
नन्वत्यल्पमिदं चोद्यम् । बहु चात्र चोदयितव्यम् । अकरणः सन्नीक्षत । अनुपादाय किञ्चिल्लोकानसृजत । अद्भ्यः पुरुषं समुद्धृत्यामूर्छयत् । तस्याभिध्यानान्मुखादि निर्भिन्नं मुखादिभ्यश्चाग्न्यादयो लोकपालाः । तेषां चाशनायादिसंयोजनं तदायतनप्रार्थनं तदर्थं गवादिप्रदर्शनं तेषां च यथायतनप्रवेशनं सृष्टस्यान्नस्य पलायनं वागादिभिस्तज्जिघृक्षेति । एतत्सर्वं सीमाविदारणप्रवेशसममेव ॥
(ச.பா) (சித்தாந்தீ) மேலும் இது மிகவும் சிறிய கேள்வி. இங்கு மிகவும் கேட்கப்பட வேண்டியது உள்ளது. கரணமற்றவனாய் இருந்துகொண்டு பார்ப்பவனாயும், எந்த உபாதானமும் இன்றி தண்ணீரிலிருந்து சில லோகங்களையும் அவ்வாறே தண்ணீர்மயமான நிலையிலிருந்து புருஷனை எடுத்து ஒரு உருவத்தை உண்டாக்கினார். அவருடைய தியான மாத்திரத்தால் முகம் முதலான துவாரங்கள் பிளவுபட்டன. அவ்வாறு பிளவுபட்ட முகம் முதலான துவாரங்களிலிருந்து அக்னி முதலான லோகபாலர்களும் அவர்களுக்கு உணவு, தாகம் முதலியவைகளை கற்பித்து இணைத்தலும் ஏற்பட்டது. அவைகள் தாம் வாழ ஒரு இடத்தைப் பிரார்த்திக்க அதற்காக பசு முதலான ரூபங்களைக் காட்டிலும் அதில் அவைகள் தன் இருப்பிடத்தில் நுழைந்ததும், அவ்வாறு படைக்கப்பட்டவைகளுக்காக படைக்கப்பட்ட அன்னங்கள் ஓடுதலும் அவைகளை வாக் முதலிய இந்திரிய வியாபாரங்களால் பற்ற முயன்றதும் கூறப்பட்டது. இவையாவும், வகுட்டின் மத்தியில் பிளந்துகொண்டு உள்ளே ஜீவாத்மாவாய் நுழைந்ததற்கு சமானமானவையே.
अस्तु तर्हि सर्वमेवेदमनुपपन्नम् ।
(ச.பா) (பூர்வ) இருக்கட்டும், இவையாவும் பொருந்தாதவையே என்று கூறுவானேயானால்
न, अत्रात्माववोधमात्रस्य विवक्षितत्वात्सर्वोऽयमर्थवाद इत्यदोषः । मायाविवद्वा ; महामायावी देवः सर्वज्ञः सर्वशक्तिः सर्वमेतच्चकार सुखावबोधप्रतिपत्त्यर्थं लोकवदाख्यायिकादिप्रपञ्च इति युक्ततरः पक्षः । न हि सृष्ट्याख्यायिकादिपरिज्ञानात्किञ्चित्फलमिष्यते । ऐकात्म्यस्वरूपपरिज्ञानात्तु अमृतत्वं फलं सर्वोपनिषत्प्रसिद्धम् । स्मृतिषु च गीताद्यासु ‘समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरम्’ (भ. गी. १३ । २७) इत्यादिना ।
(ச.பா) (சித்தாந்தீ) அது அவ்வாறல்ல. இவையாவும் இங்கு ஆத்மா அவபோதனத்திற்கு மாத்திரமே விவக்ஷிக்கப்பட்டதால் இவையாவும் அர்த்தவாதம் என்பதால் தோஷம் ஆகாது. மாயாவி போல் பெரிய மாயாவியாக உள்ள தேவன், எல்லாம் அறிந்தவன். எல்லா சக்தியும் படைத்தவன். இதை யாவற்றையும் செய்தான் என்று கூறுவது சுகமாய் பிரஹ்மத்தை அவபோதனம் அடைவதற்காக ஆகும். எனவேதான் உலகத்தில் கூறப்படும் கதைகள் போல் இதுவும் கூறப்பட்டது என்பது மிகவும் உக்தமான பக்ஷமாகும். சிருஷ்ட்டி முதலிய கிரமத்தையோ அல்லது அவைகளைப் பற்றி அறிவதனாலோ எவ்வித பயனும் கிடைப்பது இல்லை. ஆத்மாவின் ஏகத்துவ சொரூபத்தை அறிவதால் ஏற்படும் அம்ருதத்துவம் என்ற பலமே எல்லா உபநிஷத்திலும் பிரசித்தமானது. ஸ்மிருதிகளான கீதை முதலானவைகளில் “समं सर्वेषु भूतेषु तिष्द्भन्तं परमेश्वरम्” எல்லா பூதங்களிலும் சமானமாய் இருக்கக்கூடிய பரமேஸ்வரனை அறிவோம் என்பது போன்ற வாக்கியங்களாலும் இந்த தத்துவமே உணர்த்தப்படுகிறது.
ननु त्रय आत्मानो भोक्ता कर्ता संसारी जीव एकः सर्वलोकशास्त्रप्रसिद्धः । अनेकप्राणिकर्मफलोपभोगयोग्यानेकाधिष्ठानवल्लोकदेहनिर्माणेन लिङ्गेन यथाशास्त्रप्रदर्शितेन पुरप्रासादादिनिर्माणलिङ्गेन तद्विषयकौशलज्ञानवांस्तत्कर्ता तक्षादिरिव ईश्वरः सर्वज्ञो जगतः कर्ता द्वितीयश्चेतन आत्मा अवगम्यते । ‘यतो वाचो निवर्तन्ते’ (तै. उ. २ । ४ । १) ‘नेति नेति’ (बृ. उ. ३ । ९ । २६) इत्यादिशास्त्रप्रसिद्ध औपनिषदः पुरुषस्तृतीयः । एवमेते त्रय आत्मानोऽन्योन्यविलक्षणाः । तत्र कथमेक एवात्मा अद्वितीयः असंसारीति ज्ञातुं शक्यते ?
(ச.பா) (பூர்வ) மேலும் ஜீவன் ஈஸ்வரன் நிர்விசேஷப் பிரஹ்மா என்று மூன்று ஆத்மாக்கள். போக்த்தா, கர்த்தா, சம்சாரி என்பவன் ஜீவன் என்று சர்வலோகத்திலும் உள்ள சாஸ்திரங்களில் பிரசித்தமாகும். அநேக பிராணிகளின் கர்மபல போகத்திற்கு யோக்கியமான அநேக அதிஷ்ட்டானங்கள் போல் உலக இயல்படி தேக நிர்மானம் என்ற காரணத்தால் சாஸ்த்திரத்தில் காட்டியபடி விளக்கப்பட்டு உள்ளது. பட்டணம், உப்பரிகைகள் மாளிகைகள் இவைகளைப் படைக்கும் காரணத்தால், அந்த கட்டிட விஷயமான விசேஷ புத்திக்ஞானத்தை உடைய கொத்தன், தச்சன், இவர்களைப் போன்று ஈஸ்வரன் சர்வக்ஞனாயும், ஜகத்திற்கு கர்த்தாவாயும், இரண்டாவது சேதன ஆத்மா போல் புரிந்து கொள்ளப்படுகிறான். “यतो वाचो निवर्तन्ते” “नेति नेति” எவ்விடத்தை எட்ட முடியாது வாக்குகள் திரும்புகின்றனவோ, இது அல்ல. இது அல்ல என்பது போன்ற வாக்கியங்களினால் சாஸ்திரங்களில் பிரசித்தமான உபநிஷத்துக்களால் பிரதிபாதனம் செய்யப்பட்ட புருஷன் மூன்றாமவன். இவ்வாறு இந்த மூன்று ஆத்மாக்களும் ஒன்றுக்கொன்று விலக்ஷணமானவை. இங்கு எவ்வாறு ஒரே ஆத்மாவாயும், தனக்கு இரண்டாவது அற்றவனாயும் அசம்சாரியாயும் உள்ள ஆத்மா அறியமுடியும். அங்கு ஜீவன்தான் எவ்வாறு அறியமுடியும்?
तत्र जीव एव तावत्कथं ज्ञायते ?
(ச.பா) (சித்தாந்தீ) இங்கு ஜீவன்தான் இவ்வாறு அறியப்படுகிறது. எவ்வாறு எனில்.
नन्वेवं ज्ञायते श्रोता मन्ता द्रष्टा आदेष्टाघोष्टा विज्ञाता प्रज्ञातेति ।
(ச.பா) (பூர்வ) கேட்பவன், நினைப்பவன், பார்ப்பவன், கட்டளையிடுபவன், கோசம் செய்பவன், விக்ஞானத்தால் அறிபவன், பிரக்ஞானத்தால் அறிபவன் என்று அறியப்படுகிறது.
ननु विप्रतिषिद्धं ज्ञायते यः श्रवणादिकर्तृत्वेन अमतो मन्ता अविज्ञातो विज्ञाता इति च । तथा ‘न मतेर्मन्तारं मन्वीथा न विज्ञातेर्विज्ञातारं विजानीयाः’ (बृ. उ. ३ । ४ । २) इत्यादि च ।
(ச.பா) (சித்தாந்தீ) மேலும் ஒன்றுக்கொன்று முரண்பாடாகவும் அறியப்படுகிறது சிரவணாதி கருத்திருவத்தால் எண்ணப்பட்டவனாயும். மனனம் செய்பவன் விக்ஞானம் அற்றவனாயும், சில சமயம் விக்ஞானவனாயும் அறியப்படுகிறான். அவ்வாறு அல்ல. புத்தியை எண்ணுபவனாயும் அவ்வாறு எண்ணுபவன் விக்ஞானத்தை அறியாதவனாயும் இருக்கிறான் என்பதை அறிவாயாக என்பன போன்ற வாக்கியங்களால் இது முரன்பாடாகவே தோன்றுகிறது.
सत्यं विप्रतिषिद्धम् , यदि प्रत्यक्षेण ज्ञायेत सुखादिवत् । प्रत्यक्षज्ञानं च निवार्यते ‘न मतेर्मन्तारम्’ (बृ. उ. ३ । ४ । २) इत्यादिना । ज्ञायते तु श्रवणादिलिङ्गेन ; तत्र कुतो विप्रतिषेधः ।
(ச.பா) (பூர்வ) சத்யம். (ஆத்மா) சுகம் முதலானவைகள் போல் பிரத்தியக்ஷ ஞானத்தால் அறியப்படுமேயானால். அப்பொழுது பிரத்தியக்ஷ ஞானமானது “न मतेर्मन्तारम् मन्वीथाः” (ந மதேர்மந்தாரம் மந்வீதா:) ஒன்றை வேறோன்றாக பார்த்தல் என்பன போன்ற வாக்கியங்களால் நிவராணம் செய்யபடுவதும் இல்லை. சிரவணம் முதலான ஹேதுக்களால் அங்கு எங்கோ ஓர் இடத்தில் விரோதம் இல்லாமல் எவ்வாறு இருக்கும்?
ननु श्रवणादिलिङ्गेनापि कथं ज्ञायते, यावता यदा शृणोत्यात्मा श्रोतव्यं शब्दम् , तदा तस्य श्रवणक्रिययैव वर्तमानत्वान्मननविज्ञानक्रिये न सम्भवत आत्मनि परत्र वा । तथा अन्यत्रापि मननादिक्रियासु । श्रवणादिक्रियाश्च स्वविषयेष्वेव । न हि मन्तव्यादन्यत्र मन्तुः मननक्रिया सम्भवति ।
(ச.பா) (சித்தாந்தீ) மேலும் சிரவணம் முதலான ஹேதுக்களால் எப்பொழுது ஆத்மாவானவன் கேட்க வேண்டிய சப்தத்தைக் கேட்கிறான் என்று கூறப்பட்டதால் அப்பொழுது அவனுக்கு சிரவணம் என்ற செயலே உள்ளதால் மனனம் விக்ஞானம் என்ற செயல்கள் ஆத்மாவிலோ அல்லது வேறு இடத்திலோ ஏற்படுவது இல்லை. அவ்வாறே வேறு பல எண்ணுதல் போன்ற காரியங்களில் சிரவணம் முதலான காரியங்கள் தன்னுடைய விஷயத்திலேயே இருக்கின்றனவே அன்றி மற்ற விஷயங்களில் ஏற்படுவது இல்லை. நிலுனப்பவனுக்கு நினைத்தல் என்ற மனனக்கிரியையைத் தவிர வேறு ஏதும் சம்பவிப்பது இல்லை.
ननु मनसः सर्वमेव मन्तव्यम् ।
(ச.பா) (பூர்வ) மேலும் மனதாலேயே எல்லாம் நினைக்கத்தக்க (மனனம் செய்யத்தக்க) தாகும்.
सत्यमेवम् ; तथापि सर्वमपि मन्तव्यं मन्तारमन्तरेण न मन्तुं शक्यम् ।
(ச.பா) (சித்தாந்தீ) சத்தியம் (உண்மை) அது அவ்வாறே இருப்பினும் நினைக்கத்தகுந்தயாவும், நினைப்பவன் ஒருவன் இன்றி நினைக்க முடியாதவையாகும்.
यद्येवं किं स्यात् ?
(ச.பா) (பூர்வ) அவ்வாறு எனில் என்ன ஏற்படும்.?
इदमत्र स्यात् — सर्वस्य योऽयं मन्ता, स मन्तैवेति न स मन्तव्यः स्यात् । न च द्वितीयो मन्तुर्मन्तास्ति । यदा स आत्मनैव मन्तव्यः, तदा येन च मन्तव्य आत्मा आत्मना, यश्च मन्तव्य आत्मा, तौ द्वौ प्रसज्येयाताम् । एक एव आत्मा द्विधा मन्तृमन्तव्यत्वेन द्विशकलीभवेद्वंशादिवत् , उभयथाप्यनुपपत्तिरेव । यथा प्रदीपयोः प्रकाश्यप्रकाशकत्वानुपपत्तिः, समत्वात् , तद्वत् ।
(ச.பா) (சித்தாந்தீ) கூறப்போவதே ஏற்படும். இவையாவற்றையும் எவன் ஒருவன் நினைக்கிறானோ, அவன் நினைப்பவனாக அறிகிறானே அன்றி, நினைக்கத்தக்கவனாக ஆவது இல்லை. எண்ணுபவனை எண்ணக்கூடிய இரண்டாவது ஒருவன் இல்லை. எப்பொழுது அவன் ஆத்மாவினாலேயே எண்ணத்தக்கவனாக ஆகிறானோ அப்பொழுது எதனால் அவன் எண்ணப்படுகிறானோ அப்பொழுது ஆத்மாவினாலேயே ஆத்மா எண்ணப்பட்டதாக ஆகிறது. அப்பொழுது எண்ணும் (நினைக்கும்) ஆத்மா, நினைக்கப்படும் ஆத்மா என்று இரண்டு ஆத்மாக்கள் ஏற்படும். ஒரே ஆத்மா நினைப்பவன், நினைக்கப்படுபவன் என்று மூங்கில் பிளப்பது போல் இரண்டாக பிளவுபடுகிறான் என்று கூறுவதும் பொருந்தாது. இவ்விரண்டுமே பொருத்தமற்றது. எவ்வாறு எனில் தீ பந்தத்திற்கு பிரகாசிக்கும் தன்மை, பிரகாசப்படுத்தும் தன்மை இரண்டுமே ஒரே சமானமாய் இருப்பதால் அதை அநுபபத்தி என்று கூறினோமோ அவ்வாறே இங்கும் அநுபபத்தி ஏற்படும்.
न च मन्तुर्मन्तव्ये मननव्यापारशून्यः कालेऽस्त्यात्ममननाय । यदापि लिङ्गेनात्मानं मनुते मन्ता, तदापि पूर्ववदेव लिङ्गेन मन्तव्य आत्मा, यश्च तस्य मन्ता, तौ द्वौ प्रसज्येयाताम् ; एक एव वा द्विधेति पूर्वोक्तो दोषः । न प्रत्यक्षेण, नाप्यनुमानेन ज्ञायते चेत् , कथमुच्यते ‘स म आत्मेति विद्यात्’ (कौ. उ. ३ । ९) इति, कथं वा श्रोता मन्तेत्यादि ?
(ச.பா) மேலும் நினைப்பவனுக்கு நினைக்கும் (மனனம் செய்யும்) விஷயத்தில் மனன வியாபார சூன்யமான காலமானது இல்லை, ஆத்மா சொரூப மனனத்திற்கு அவனுக்கு மனனமற்ற(நினைப்பு அற்ற) காலம் இல்லை. எப்பொழுதாவது மிகவும் சூக்ஷ்மமாக ஆத்மாவை எண்ணுபவன் நினைக்கிறான் என்று கூறினாலும் முன்போலவே எந்த சூக்ஷ்மமான ஆத்மா நினைக்கத்தக்கதாக உள்ளதோ இந்நிலையிலும், ஆத்மா அதை நினைப்பவன், என்ற இரண்டும் மறுபடியும் ஏற்படும். அவன் ஒருவனேயா? அல்லது இரண்டாகப் பிரிந்தவனா என்ற முற்கூறப்பட்ட தோஷம் ஏற்படும். ஆத்மாவானவன் பிரத்தியக்ஷத்தாலோ அநுமானத்தாலோ அறியப்படாமல் போவானேயானால் அவனை ஒரே சமானமான ஆத்மா அறியத்தக்கவன் என்று கூறியது எவ்வாறு பொருந்தும்? எவ்வாறு சுரோதா, மந்தா என்று கூறியவையும் பொருந்தும்?
ननु श्रोतृत्वादिधर्मवानात्मा, अश्रोतृत्वादि च प्रसिद्धमात्मनः ; किमत्र विषमं पश्यसि ?
(ச.பா) (பூர்வ) மேலும் சுரோத்திருத்துவம் முதலான தருமங்களுடன் கூடிய ஆத்மாவிற்கு சுரோத்திருத்துவம் முதலானவைகள் பிரசித்தமாகவே உள்ளன. இங்கு என்ன வேறுபாட்டைக் காண்கிறாய்?
यद्यपि तव न विषमम् ; तथापि मम तु विषमं प्रतिभाति । कथम् ? यदासौ श्रोता, तदा न मन्ता ; यदा मन्ता, तदा न श्रोता । तत्रैवं सति, पक्षे श्रोता मन्ता, पक्षे न श्रोता नापि मन्ता । तथा अन्यत्रापि च ।
(ச.பா) (சித்தாந்தீ) நீ எந்த மாறுபாட்டை காணவில்லை என்று கூறினாலும், அங்கு ஏதோ மாறுபாடு (விஷமம்) எனக்கு தோன்றுகிறது. அது எவ்வாறு எனில் எப்பொழுது இவன் சுரோதாவாக இருக்கிறானோ அப்பொழுது அவன் மந்தாவாக இருப்பது இல்லை. எப்பொழுது மந்தாவாக இருக்கிறானோ அப்பொழுது சுரோதாவாகவும் இருப்பதும் இல்லை. இந்த பக்ஷத்தில் சுரோதா, மந்தாவாக இருப்பது இல்லை. மந்தா சுரோதாவாக இருப்பது இல்லை என்பது ஆயிற்று. அவ்வாறே மற்ற இடங்களிலும் ஏற்படுகிறது.
यदैवम् , तदा श्रोतृत्वादिधर्मवानात्मा अश्रोतृत्वादिधर्मवान्वेति संशयस्थाने कथं तव न वैषम्यम् ? यदा देवदत्तो गच्छति, तदा न स्थाता, गन्तैव । यदा तिष्ठति, न गन्ता, स्थातैव ; तदास्य पक्ष एव गन्तृत्वं स्थातृत्वं च, न नित्यं गन्तृत्वं स्थातृत्वं वा, तद्वत् ।
(ச.பா) சுரோத்திருத்துவ தர்மவானாய் ஆத்மா இருக்கிறானா அல்லது அச்ஸ்ரோத்திருத்துவ தர்மவானாய் ஆத்மா இருக்கிறானா என்ற சம்சயம் வரும்பொழுது உனக்கும் அந்த மாறுபாடு எவ்வாறு தோன்றாமல் போகும். எப்பொழுது தேவதத்தன் செல்கிறானோ அப்பொழுது அவன் நிற்பவனாய் இல்லை. செல்பவனாகவே இருக்கிறான். எப்பொழுது தேவதத்தன் நிற்கிறானோ அப்பொழுது அவன் செல்பவனாக இல்லை. நிற்பவனாகவே இருக்கிறான். இந்தப் பக்ஷத்தில் செல்லும் தன்மையும், நிற்கும் தன்மையும் நித்தியமானவைகள் அல்ல. அதேபோல் மறுபக்ஷத்திலும் கொள்ளத்தக்கது.
तथैवात्र काणादादयः पश्यन्ति । पक्षप्राप्तेनैव श्रोतृत्वादिना आत्मोच्यते श्रोता मन्तेत्यादिवचनात् । संयोगजत्वमयौगपद्यं च ज्ञानस्य ह्याचक्षते । दर्शयन्ति च अन्यत्रमना अभूवं नादर्शम् इत्यादि युगपज्ज्ञानानुत्पत्तिर्मनसो लिङ्गमिति च न्याय्यम् ।
(ச.பா) இங்கு கணாதர் முதலானவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். ஒரு பக்ஷத்தால் அடைந்த சுரோத்திருத்துவம் முதலானவைகளால் ஆத்மா கூறப்படுகிறது. சுரோதா, மந்தா என்பவைகளால், இவைகளின் இணைப்பால் ஞானம் ஒரே சமயத்தில் இரண்டு ஞானங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அது பொருந்துவதும் இல்லை. அவர்களே கூறுகின்றனர். நான் வேறு எங்கோ நினைவாக இருந்தேன் இதைப் பார்க்கவில்லை என்று, ஒரே சமயத்தில் மனதிற்கு இரண்டு ஞானங்கள் சூக்ஷ்மமாய் ஏற்படுகின்றன என்று கூறுவதும் நியாயமாகாது என்று கூறுவதும் சரியல்ல.
भवत्वेवं किं तव नष्टं यद्येवं स्यात् ?
(ச.பா) (பூர்வ) இரண்டு ஞானங்கள் ஒரே சமயத்தில் ஏற்படுவதில் உனக்கு என்ன நஷ்ட்டம்.?
अस्त्वेवं तवेष्टं चेत् ; श्रुत्यर्थस्तु न सम्भवति ।
(ச.பா) (சித்தாந்தீ) உனக்கு நஷ்ட்டம் இல்லையெனில் எனக்கு எந்த ஆக்ஷபேனையும் இல்லை. ஆனால் சுருதியின் அர்த்தமானது அவ்வாறு பொருள் கொள்ள இடம் தரவில்லை.
किं न श्रोता मन्तेत्यादिश्रुत्यर्थः ?
(ச.பா) (பூர்வ) சுரோதாவாய் இருப்பவன் மந்தாவாய் இருப்பது இல்லை என்பதே சுருத்யர்த்தமாகும்.
न, न श्रोता न मन्तेत्यादिवचनात् ।
(ச.பா) (சித்தாந்தீ) அது அல்வாறு அல்ல, வேதமே சுரோதாவாகவும் இல்லை. அவன் மன்தாவாகவும் இல்லை என்று கூறுகிறது. சுரோதாவாகவும் இல்லை. மந்தாவாகவும் இல்லை என்ற வசனங்களால் முற்கூறப்பட்டது விளக்கப்பட்டதாகும்.
ननु पाक्षिकत्वेन प्रत्युक्तं त्वया ;
(ச.பா) (பூர்வ) மேலும் பூர்வபக்ஷியான உன்னால் ஒரு பக்ஷத்தை அனுசரித்தே கூறப்பட்டதே அன்றி அது நித்தியாமாக உன்னால் கூறப்படவில்லை.
न, नित्यमेव श्रोतृत्वाद्यभ्युपगमात् ,‘न हि श्रोतुः श्रुतेर्विपरिलोपो विद्यते’ (बृ. उ. ४ । ३ । २७) इत्यादिश्रुतेः ।
(ச.பா) (சித்தாந்தீ) ஏன்எனில் நீ சுரோத்திருத்துவம் முதலான தர்மங்களை ஏற்றுக்கொண்டுள்ளாய். சுருதிகளில் கேட்பவனுக்கு கேட்கப்படும் விஷயத்திலிருந்து மாறுபாடு இல்லை. “न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते” கேட்பவனுக்கும், கேட்கும் விஷத்திற்கும். மாறுபாடு இல்லை. என்ற சுருதிவாக்கியங்கள் உள்ளன. கேட்பதற்கும். கேட்கும் தர்மத்திற்கும் அநித்தியம் என்று கூறுதல் சுருதிக்கு விரோதமாகும்.
एवं तर्हि नित्यमेव श्रोतृत्वाद्यभ्युपगमे, प्रत्यक्षविरुद्धा युगपज्ज्ञानोत्पत्तिः अज्ञानाभावश्चात्मनः कल्पितः स्यात् । तच्चानिष्टमिति ।
(ச.பா) (பூர்வ) இவ்வாறு இருப்பின் சுரோத்திருத்துவம் முதலானவைகளை நித்தியம் என அங்கீகரிப்போமானால் அது பிரத்தியக்ஷத்திற்கு விரோதமாயும், ஒரே சமயத்தில் ஞானோத்பத்தியும், அக்ஞானத்தின் இன்மையும் ஆத்மாவிற்கு கல்பிக்கப்பட்டதாக ஆகும்.. அநிஷ்ட்டமானதே.
नोभयदोषोपपत्तिः, आत्मनः श्रुत्यादिश्रोतृत्वादिधर्मवत्त्वश्रुतेः । अनित्यानां मूर्तानां च चक्षुरादीनां दृष्ट्याद्यनित्यमेव संयोगवियोगधर्मिणाम् । यथा अग्नेर्ज्वलनं तृणादिसंयोगजत्वात् , तद्वत् । न तु नित्यस्यामूर्तस्यासंयोगविभागधर्मिणः संयोगजदृष्ट्याद्यनित्यधर्मवत्त्वं सम्भवति । तथा च श्रुतिः ‘न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते’ (बृ. उ. ४ । ३ । २३) इत्याद्या । एवं तर्हि द्वे दृष्टी चक्षुषोऽनित्या दृष्टिः, नित्या चात्मनः । तथा च द्वे श्रुती श्रोत्रस्यानित्या, नित्या चात्मस्वरूपस्य । तथा द्वे मती विज्ञाती बाह्याबाह्ये । एवं ह्येव चेयं श्रुतिरुपपन्ना भवति — ‘दृष्टेर्द्रष्टा श्रुतेः श्रोता’ इत्याद्या ।
(ச.பா) (சித்தாந்தீ) முற்கூறப்பட்ட கேட்டல் முதலான தர்மத்துடன் கூடிய சுருதி வாக்கியங்களால் ஆத்மாவிற்கு முற்சொன்ன இரண்டு தோஷங்கள் ஏற்படுவது இல்லை. ஏன்எனில் அநித்தியங்களாயும். மூர்த்தங்களாயும் உள்ள சக்ஷுஸ் முதலானவைகளுக்குப் பார்த்தல் (பார்வை) முதலான சம்யோக, வியோக தர்மங்கள் அநித்தியமானவையே. எவ்வாறு எனில் புல் முதலானவைகளின் சேர்க்கையால் அக்னியின் ஜ்வலனம், எவ்வாறு அநித்தியமோ அவ்வாறே இவையும் அநித்தியமானவையே. சம்யோகமில்லாத தர்மத்தை உடையதாயும், அமூர்த்தமாயும் நித்தியமாயும் உள்ள (ஆத்மாவிற்கு) சம்யோகத்தால் உண்டாகும் திருஷ்ட்டி முதலான அநித்திய தர்மத்துடன் கூடியிருக்கும் தன்மை ஏற்படாது. இதையே சுருதி கூறகிறது. “न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते” பார்வையாகவே உள்ளவனுக்கு பார்வையில் மாறுபாடு ஏற்படுவது இல்லை. என்று கூறுகிறது. இவ்வாறு இருப்பின் இரண்டு திருஷ்ட்டிகள் ஏற்படும் கண்ணின் பார்வை அநித்தியமானது. ஆத்மாவின் பார்வை நித்தியமானது என்று, அவ்வாறே இரண்டு கேட்டலும் ஏற்படும். சிரவணேந்திரியத்தால் கேட்டல் அநித்தியமும், ஆத்மஸ்வரூபத்தின் சிரவணம் நித்தியமும் ஆகும். அவ்வாறே இரண்டு புத்திகள் ஏற்படும் வெளியில் இருப்பதை அறிவது ஒன்று. ஆந்தரத்தில் அறிவது ஒன்று. இதனாலேயே கீழ்க்கண்ட சுருதி வாக்கியமானது ஏற்பட்டது. “दृष्टेर्द्रष्टा श्रुतेः श्रोता” பார்வை, பார்ப்பவன், சிரவணத்தை சிரவணம் செய்பவன் என்ற வாக்கியங்கள் தோன்றின.
लोकेऽपि प्रसिद्धं चक्षुषस्तिमिरागमापाययोः नष्टा दृष्टिः जाता दृष्टिः इति चक्षुर्दृष्टेरनित्यत्वम् । तथा च श्रुतिमत्यादीनामात्मदृष्ट्यादीनां च नित्यत्वं प्रसिद्धमेव लोके । वदति ह्युद्धृतचक्षुः स्वप्नेऽद्य मया भ्राता दृष्ट इति । तथा अवगतबाधिर्यः स्वप्ने श्रुतो मन्त्रोऽद्येत्यादि । यदि चक्षुःसंयोगजैवात्मनो नित्या दृष्टिस्तन्नाशे नश्येत् , तदा उद्धृतचक्षुः स्वप्ने नीलपीतादि न पश्येत् । ‘न हि द्रष्टुर्दृष्टेः’ (बृ. उ. ४ । ३ । २३) इत्याद्या च श्रुतिः अनुपपन्ना स्यात् । ‘तच्चक्षुः पुरुषे येन स्वप्नं पश्यति’ इत्याद्या च श्रुतिः ।
(ச.பா) உலகியலிலும் கூட கண்ணிற்கு திரைபடரும் காலத்தில் பார்வை நஷ்ட்டமடைந்ததாக ஆகிறது. அப்பொழுது பார்வை நஷ்ட்டமாகிவிட்டது என்று கூறுவதால் கண்ணிற்கு பார்வை அநித்தியம் என்பது ஊர்ஜிதமாகியது. அவ்வாறே கேட்டல், நினைத்தல் ஆத்மாவினுடைய திருஷ்ட்டியில் ஆத்மாவைப் பொருத்தவரையில் நித்தியத்துவமும், வெளிப்பிரபஞ்ச விஷயத்தில் அநித்தியத்துவமும் ஏற்படுகிறது. அதனாலேயே உலகில் கூறுகிறான் கண்ணை நன்றாக மூடிக்கொண்டு தூங்கியபொழுது கனவில் என் அண்ணன், என்னால் பார்க்கப்பட்டான் என்று. அவ்வாறே செவிடன் கூறுகிறான். சொப்பனத்தில் நான் இந்த மந்திரத்தைக் கேட்டேன் என்று, சக்ஷீசின் சம்யோகத்தாலேயே ஆத்மாவிற்கு நித்திய திருஷ்டியானது ஏற்படுமேயானால் அந்த திருஷ்ட்டியின் சேர்க்கை இல்லாதபொழுது அதுவும் நாசத்தை அடையும், இந்நிலையில் கண்ணை மூடிக்கொண்டு சொப்பனம் பார்ப்பவன், நீலம், மஞ்சள், முதலானவைகளைப் பார்க்கமாட்டான். “न हि द्रष्टुर्दृष्टेः”பார்ப்பவனின், பார்வையாக இல்லை என்ற ஸ்ருதி வாக்கியங்களும் பொருந்தாதவையாக ஆவது இல்லை. “तच्चक्षुः पुरुषो येन स्वप्ने पश्यति” அதுவே புருஷனில் சக்ஷுஸ் ஆகிறது. அதனாலேயே சொப்பனத்தில் பார்க்கிறான் என்ற சுருதி வாக்கியங்கள் இதை விளக்குகின்றன.
नित्या आत्मनो दृष्टिर्बाह्यानित्यदृष्टेर्ग्राहिका । बाह्यदृष्टेश्च उपजनापायाद्यनित्यधर्मवत्त्वात् ग्राहिकाया आत्मदृष्टेस्तद्वदवभासत्वमनित्यत्वादि भ्रान्तिनिमित्तं लोकस्येति युक्तम् । यथा भ्रमणादिधर्मवदलातादिवस्तुविषयदृष्टिरपि भ्रमतीव, तद्वत् । तथा च श्रुतिः‘ध्यायतीव लेलायतीव’ (बृ. उ. ४ । ३ । ७) इति । तस्मादात्मदृष्टेर्नित्यत्वान्न यौगपद्यमयौगपद्यं वा अस्ति ।
(ச.பா) நித்தியமான ஆத்மாவினுடைய திருஷ்ட்டி பாஹ்யமான அநித்திய திருஷ்ட்டிகளையும் கிரஹிக்கக் கூடியதே. பாஹ்ய திருஷ்ட்டிக்கு நிலைத்திருக்காமை முதலான தர்மங்கள் இருப்பதால் அதை கிரஹிக்கக்கூடிய ஆத்ம திருஷ்டிக்கு அவைகளைப் போலேயே ஆபாசகத்துவமும், அநித்தியம் முதலானவைகளும் லோகத்திற்கு பிராந்தி நிமித்தத்தால் உண்டானது என்பதே பொருத்தம். எவ்வாறு எனில் சுற்றுதல் போன்ற கொள்ளிக்கட்டையின் வஸ்து விஷயமான திருஷ்ட்டி கூட சுற்றுவது போல் தோன்றுகிறதோ அவ்வாறு இங்கும் கொள்ளவேண்டும். இதையே சுருதி கூறுகிறது. எண்ணுவது போல் இங்கும், அங்கும் அலைபாய்வது போல் என்று கூறுகிறது. எனவே ஆத்மதிருஷ்ட்டிக்கு நித்தியத்துவம் தீர்மானமானபடியால் அதற்கு ஒரே சமயத்தில் தோன்றுவதோ, தோன்றாமல் இருப்பதோ கிடையாது.
बाह्यानित्यदृष्ट्युपाधिवशात्तु लोकस्य तार्किकाणां च आगमसम्प्रदायवर्जितत्वात् अनित्या आत्मनो दृष्टिरिति भ्रान्तिरुपपन्नैव । जीवेश्वरपरमात्मभेदकल्पना च एतन्निमित्तैव । तथा अस्ति, नास्ति, इत्याद्याश्च यावन्तो वाङ्मनसयोर्भेदा यत्रैकं भवन्ति, तद्विषयाया नित्याया दृष्टेर्निर्विशेषायाः । अस्ति नास्ति, एकं नाना, गुणवदगुणम् , जानाति न जानाति, क्रियावदक्रियम् , फलवदफलम् , सबीजं निर्बीजम् , सुखं दुःखम् , मध्यममध्यम् , शून्यमशून्यम् , परोऽहमन्यः, इति वा सर्ववाक्प्रत्ययागोचरे स्वरूपे यो विकल्पयितुमिच्छति, स नूनं खमपि चर्मवद्वेष्टयितुमिच्छति, सोपानमिव च पद्भ्यामारोढुम् ; जले खे च मीनानां वयसां च पदं दिदृक्षते ; ‘नेति नेति’ (बृ. उ. ३ । ९ । २६) ‘यतो वाचो निवर्तन्ते’ (तै. उ. २ । ४ । १) इत्यादिश्रुतिभ्यः, ‘को अद्धा वेद’ (ऋ. सं. १ । ३० । ६) इत्यादिमन्त्रवर्णात् ॥
(ச.பா) பாஹ்யமாய் ஏற்படும், அநித்திய திருஷ்ட்டியானது லோகத்திற்கு உபாதிவசத்தால் ஏற்படுகிறது. தார்க்கிகரோவெனில் (நியாய சாஸ்திரக்காரர்கள்) ஆகமம், சம்பிரதாயம் என்று ஒன்றும் இல்லாததால் ஆத்மாவிற்கு அநித்திய திருஷ்ட்டி என்ற பிராந்தி அவர்களுக்குப் பொருத்தமானதே. ஜீவன், ஈஸ்வரன், பரமாத்மா என்ற பேதகல்பனை கேவலம் நிமித்தத்தால் ஏற்படுகிறது. எனவே இருக்கிறது, இல்லை என்ற வாக்கு, மனசு, இவைகளுடைய பேதங்கள் எதுவரை இருக்கிறதோ அதுவரை இந்த பேதங்களும் உண்டு. எங்கு திருஷ்ட்டி ரூபமாயும், நிர்விக்ஷமோயும், எங்கு ஒன்றாயும், நித்தியமாயும் உள்ள ஆத்மதிருஷ்டி ஏற்படுகிறதோ அங்கு இந்த பேதங்களும் அற்றுப்போகும். இருக்கிறது என்றும், இல்லை என்றும், அது ஒன்றே என்றும், பலவிதமானது என்றும், குணத்தோடு கூடியது என்றும், குணமற்றது என்றும், அறிகிறது என்றும், அறிவது இல்லை எனறும், செயலோடு கூடியது என்றும், செயலற்றது என்றும், பலத்தோடு கூடியது என்றும், பலமற்றது என்றும், பீஜத்தோடு கூடியது என்றும், பீஜமற்றது என்றும், சுகம் என்றும், துக்கம் என்றும், நடுவில் உள்ளது என்றும், நடுவில் இல்லாதது என்றும், சூன்யமானது என்றும், நான் எல்லாவற்றிற்கும் மேல்பட்டவன் என்றும், இவ்வாறு பலவாறாக, எல்லா வாக்குகளுக்கும் அப்பாற்பட்ட சொரூபத்தில் எவன் விகல்பிக்க எண்ணுகிறானோ அவன் நிச்சயமாக ஆகாசத்தை தோல்போல் சுருட்ட விரும்புகிறான், ஆகாசத்தில் ஒரு படியைக் கட்டிக்கொண்டு அதில் ஏறவிரும்புகிறான். தண்ணீரில் மீன்களின் கால்களையும், விண்ணில் பக்ஷிகளின் கால்களையும் காண விரும்புகிறான். ஏன் எனில் “நேதி, நேதி” என்றும் “यतो वाचो निवर्तन्ते” என்ற சுருதி வாக்கியங்களாலும் “को अद्धा वेद” எவன் அதை சாக்ஷாத் அறிகிறான் என்ற மந்திரங்களாலும் வர்ணிக்கப்பட்ட சொரூபத்தை விகல்பிக்க விரும்புபவன் முற்கூறப்பட்டவனே.
कथं तर्हि तस्य स म आत्मेति वेदनम् ; ब्रूहि केन प्रकारेण तमहं स म आत्मेति विद्याम् ।
(ச.பா) (பூர்வ) அவ்வாறு எனில் அவனுக்கு எவ்வாறு என்னுடைய ஆத்மா என்று உணர்வு ஏற்படுகிறது என்பதைக் கூறு. மேலும் எவ்வாறு எந்த பிரகாரத்தால் அதை நானாக (அதுவே என் ஆத்மா என்று) அறிய முடியும்.
अत्राख्यायिकामाचक्षते — कश्चित्किल मनुष्यो मुग्धः कैश्चिदुक्तः कस्मिंश्चिदपराधे सति धिक्त्वां नासि मनुष्य इति । स मुग्धतया आत्मनो मनुष्यत्वं प्रत्याययितुं कञ्चिदुपेत्याह — ब्रवीतु भवान्कोऽहमस्मीति । स तस्य मुग्धतां ज्ञात्वा आह — क्रमेण बोधयिष्यामीति । स्थावराद्यात्मभावमपोह्य न त्वममनुष्य इत्युक्त्वोपरराम । स तं मुग्धः प्रत्याह — भवान्मां बोधयितुं प्रवृत्तस्तूष्णीं बभूव, किं न बोधयतीति । तादृगेव तद्भवतो वचनम् । नास्यमनुष्य इत्युक्तेऽपि मनुष्यत्वमात्मनो न प्रतिपद्यते यः, स कथं मनुष्योऽसीत्युक्तोऽपि मनुष्यत्वमात्मनः प्रतिपद्येत ?
(ச.பா) (சித்தாந்தீ) இங்கு ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு முட்டாள் மனுஷ்யன் ஒரு சமயத்தில் ஏதோ ஒரு அபராதத்தைக் குறித்து நீ மனுஷ்யனே இல்லை என்று சொன்னார்கள். இதனால்தான் மனுஷ்யத் தன்மையை இழந்ததாக எண்ணிய அந்த முட்டாள் ஒருவனை அடைந்த தன் மனுஷ்யத் தன்மையை மறுபடியும் அடைவதற்கு வழி என்ன என்று கேட்டான். நீ யாராக இருக்கிறாய் என்று கூறு என்று அவர் திருப்பிக்கேட்டார். அதற்கு அவன் விழிக்கவே அவனுடைய முட்டாள் தனத்தை உணர்ந்த அவர் அவனுக்கு கிரமமாக போதிப்பேன் என்று தொடங்கி அவனுக்கு ஸ்தாவரம் முதலான தன்மைகள், அதன் பாவங்கள் உனக்கு இல்லை என்று கூறி புரியவைத்து சிறிது நேரம் சும்மா இருந்தார். அந்த நிலையில் அந்த முட்டாள் அவரைப் பார்த்து சொன்னான், தாங்கள் எனக்கு போதிக்க தொடங்கிவிட்டு இப்பொழுது ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டீரே என்றான். இத்தகையதே முற்கூறியவர்களின் வாக்கியங்கள். அவனுக்கு மனுஷ்யத்துவம் இல்லை என்று சொன்ன போதும் கூட அவனுடைய மனுஷ்யத்துவம் போவதும் இல்லை. அத்தகையவனுக்கு நீ மனுஷ்யனாய் இருக்கிறாய் என்று போதிக்கப்பட்டும் கூட அவன் தனக்கு மனுஷ்யத்துவம் இருப்பதை அறியப்போவதும் இல்லை.
तस्माद्यथाशास्त्रोपदेश एवात्मावबोधविधिः, नान्यः । न ह्यग्नेर्दाह्यं तृणादि अन्येन केनचिद्दग्धुं शक्यम् । अत एव शास्त्रमात्मस्वरूपं बोधयितुं प्रवृत्तं सत् अमनुष्यत्वप्रतिषेधेनेव ‘नेति नेति’ (बृ. उ. ३ । ९ । २६) इत्युक्त्वोपरराम । तथा ‘अनन्तरमबाह्यम्’ (बृ. उ. २ । ५ । १९) (बृ. उ. ३ । ८ । ८) ‘अयमात्मा ब्रह्म सर्वानुभूः’ (बृ. उ. २ । ५ । १९) इत्यनुशासनम् ; ‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) ‘यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत्केन कं पश्येत्’ (बृ. उ. २ । ४ । १४) (बृ. उ. ४ । ५ । १५) इत्येवमाद्यपि च ।
(ச.பா) எனவே சாஸ்திரத்தால் உபதேசிக்கப்பட்ட மார்க்கமே ஆத்மா அவபோதத்திற்கு விதியாகும். இதற்கு வேறு மார்க்கம் கிடையாது. அக்னியின் தஹிக்கும் தன்மை, திரணத்தைக் காட்டிலும் வேறு ஒன்றாலும் வெளிப்படுத்த முடியாது. எனவே சாஸ்திரமானது ஆத்மஸ்வரூபத்தை போதிப்பதற்கு பிரவிர்த்ததாக ஆகி இவனுக்கு மனுஷ்யத்துவம் முதலானவைகளில் நிஷேதம் செய்வதின் வாயிலாக, நேதி, நேதி என்று கூறி ஓய்வுபெற்றது. எனவே ஆந்திரமாயும், பாஹ்யமற்றதாயும் உள்ள ஆத்மாவான பிரஹ்ம சொரூபம் எல்லாருக்கும் அனுபவத்தால் உணரத்தக்கது என்பது சுருதியின் கட்டளையாகும். எனவே “तत्त्वमसि” அதுவாகவே நீ இருக்கிறாய், “यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत्केन कं पश्येत्” எங்கு இவையாவும் ஆத்மாவாய் ஆகிவிட்டதோ அப்பொழுது யாரால் யார் பார்க்கப்படுவான் என்பன போன்றவைகளாலும், சுருதி வாக்கியங்கள் விளக்குகின்றன.
यावदयमेव यथोक्तमिममात्मानं न वेत्ति, तावदयं ब्राह्मानित्यदृष्टिलक्षणमुपाधिमात्मत्वेनोपेत्य अविद्यया उपाधिधर्मानात्मनो मन्यमानो ब्रह्मादिस्तम्बपर्यन्तेषु स्थानेषु पुनः पुनरावर्तमानः अविद्याकामकर्मवशात्संसरति । स एवं संसरन् उपात्तदेहेन्द्रियसङ्घातं त्यजति । त्यक्त्वा अन्यमुपादत्ते । पुनः पुनरेवमेव नदीस्रोतोवज्जन्ममरणप्रबन्धाविच्छेदेन वर्तमानः काभिरवस्थाभिर्वर्तते इत्येतमर्थं दर्शयन्त्याह श्रुतिः वैराग्यहेतोः —
(ச.பா) எதுவரை இவ்வாறு சுருதியால் விளக்கப்பட்ட ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்து அனுபவிக்காமல் இருக்கிறானோ அதுவரை இஹ்ன் பாஹ்யமாயும் அநித்தியமாயும், அநித்திய திருஷ்ட்டி லக்ஷணமாயும், உள்ள உபாதிகளை ஆத்மாவாய் அவித்தையின் உபாதி தர்மங்களை ஆத்மாவாக எண்ணியவனாக ஆகி சதுர்முகப் பிரஹ்மா தொடங்கி ஸ்தம்பபரியந்தமான தேவதைகள், பறவைகள், குறுக்காய் வளர்பவைகள் மனுஷ்யர்கள் இது போன்ற ஜீவஸ்தானங்களில் மறுபடியும், மறுபடியும், சுழல்பவனாக ஆகி அவித்யா, காம, கர்மவசத்தால் மறுபடியும், மறுபடியும் பிறவிப்பெருங்கடலில் சுழன்று உழல்கிறான். அவன் இவ்வாறு சம்சாரத்தில் உழல்பவனாகி ஒரு தேஹேந்திரிய சேர்க்கையை அடைகிறான். அதை பின்பு விடுகிறான். மறுபடியும் மற்றொன்றை அடைகிறான். இவ்வாறு மறுபடியும் மறுபடியும் நதியின் பிரவாகம் போல் பிறத்தல், இறத்தல் என்ற பிரபந்தத்தில் (கட்டுப்பாட்டில்) இடைவிடாமல் இருந்தவனாகி வாயால் சொல்ல முடியாத அவஸ்தைகளில் இருந்து உழல்கிறான் என்ற அர்த்தத்தை சுருதி வைராக்கியத்தை உண்டாக்குவதற்காக மேலே சொல்லத் தொடங்குகிறது.
पुरुषे ह वा अयमादितो गर्भो भवति । यदेतद्रेतस्तदेतत्सर्वेभ्योऽङ्गेभ्यस्तेजः सम्भूतमात्मन्येवात्मानं बिभर्ति तद्यथा स्त्रियां सिञ्चत्यथैनज्जनयति तदस्य प्रथमं जन्म ॥ १ ॥
अयमेवाविद्याकामकर्माभिमानवान् यज्ञादिकर्म कृत्वा अस्माल्लोकाद्धूमादिक्रमेण चन्द्रमसं प्राप्य क्षीणकर्मा वृष्ट्यादिक्रमेण इमं लोकं प्राप्य अन्नभूतः पुरुषाग्नौ हुतः । तस्मिन्पुरुषे ह वै अयं संसारी रसादिक्रमेण आदितः प्रथमतः रेतोरूपेण गर्भो भवतीति एतदाह — यदेतत्पुरुषे रेतः, तेन रूपेणेति ।
(ச.பா) இந்தப் புருஷனே அதாவது அவித்தியை காமம், கர்மம், இவைகளில் அபிமானம் கொண்டவனாகி, யக்ஞாதி கர்மாக்களை செய்து இந்த லோகத்திலிருந்து தூமாதி மார்க்கத்தின் வழியாக சந்திரனை அடைந்து தன்னுடைய புண்ணியபாபாதி கர்மாக்கள் அநேகமாக நாசம் அடைந்த போது மழை முதலான கிரமமாக இந்த லோகத்தை அடைந்து அன்னமாக ஆகி புருஷன் என்றஅக்னியில் ஹோமம் செய்ப்படுகிறான். இவ்வாறு ஹோமம் வாயிலாக தான் அடைந்த புருஷரிடத்தில் இந்த சம்சாரியானவன் முதலில் ரசாதிக்கிரமமாக வீரிய ரூபமான பரிணாமத்தை அடைந்து கர்ப்பமாக ஆகிறான். அதாவது புருஷனிடத்தில் ரேதோ ரூபமான சரீரத்தை அடைகிறான்.
तच्च एतत् रेतः अन्नमयस्य पिण्डस्य सर्वेभ्यः अङ्गेभ्यः अवयवेभ्यो रसादिलक्षणेभ्यः तेजः साररूपं शरीरस्य सम्भूतं परिनिष्पन्नं तत् पुरुषस्य आत्मभूतत्वादात्मा, तमात्मानं रेतोरूपेण गर्भीभूतम् आत्मन्येव स्वशरीर एव आत्मानं बिभर्ति धारयति ।
(ச.பா) இந்த ரேதோரூபமானது அன்னமயமான பிண்டத்தின் எல்லா அவயவங்களில் இருந்தும் அவைகளின் சாரரூபமான சரீரத்தில் உண்டாவதாலும், அந்தப் புருஷனுடனேயே ஒன்று இருப்பதாலும் இதை ஆத்மா என்று கூறப்பட்டது. இவ்வாறு தன்னில் தானாகவே ரேதோ ரூபமாக கர்பம் அடைந்துள்ள இவனை தன்னுடைய சரீரத்திலேயே புருஷன் தாங்குகிறான்.
तत् रेतः स्त्रियां सिञ्चति यदा, यदा यस्मिन्काले भार्या ऋतुमती तस्यां योषाग्नौ स्त्रियां सिञ्चति उपगच्छन् , अथ तदा एनत् एतद्रेतः आत्मनो गर्भरूपं जनयति पिता । तत् अस्य पुरुषस्य स्थानान्निर्गमनं रेतःसेककाले रेतोरूपेण अस्य संसारिणः प्रथमं जन्म प्रथमावस्थाभिव्यक्तिः । तदेतदुक्तं पुरस्तात् ‘असावात्मा अमुमात्मानम्’ इत्यादिना ॥
(ச.பா) இவ்வாறு ரேதோ ரூபமானவன் எந்தக்காலத்தில் ருதுமதியாகிய பத்தினி என்ற அக்னியில் ஹோமம் செய்யப்படுகிறானோ அப்பொழுது அவளை அடையச் செய்கிறான். அதாவது தன்னில் கர்ப பூதமாய் இருந்த இவனை மனைவியை அடையும்படிச் செய்கிறான். எப்பொழுது இவன் தந்தையாகிய புருஷனுடைய சரீரத்திலிருந்து வீரிய ரூபமாய் வெளிப்படுகிறானோ அப்பொழுது இந்த சம்சாரியின் முதல் ஜன்மம் ஏற்படுகிறது. அதாவது முதல் அவஸ்தை கண்ணுக்குப் புலனாகிறது. இதுவே முதலில் இந்த தந்தை ரூபமான புருஷனானவன் தன்னிடத்தில் ஆத்மா போல் இருந்தவனை வெளிப்படுத்துகிறான் என்பன போன்ற வாக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன.
तत्स्त्रिया आत्मभूयं गच्छति यथा स्वमङ्गं तथा । तस्मादेनां न हिनस्ति सास्यैतमात्मानमत्र गतं भावयति ॥ २ ॥
तत् रेतः यस्यां स्त्रियां सिक्तं सत्तस्याः स्त्रियाः आत्मभूयम् आत्माव्यतिरेकतां यथा पितुः एवं गच्छति प्राप्नोति यथा स्वमङ्गं स्तनादि, तथा तद्वदेव । तस्माद्धेतोः एनां मातरं स गर्भो न हिनस्ति पिटकादिवत् । यस्मात्स्तनादि स्वाङ्गवदात्मभूयं गतम् , तस्मान्न हिनस्ति न बाधत इत्यर्थः ।
(ச.பா) இந்த ரேதஸ் ஆனது எந்த ஸ்திரீயினிடத்தில் ஹோமம் செய்யப்பட்டு நிலை பெற்றுள்ளதோ அப்பொழுது அவளுக்கு அவளின்றி வேறுபாடின்றி எவ்வாறு தந்தையிடத்தில் இருந்ததோ அவ்வாறே ஸ்திரீயினிடத்திலும் ஒன்றி விடுகிறது. எவ்வாறு எனில் அவளுடைய ஸ்தனம் முதலான அங்கங்கள் போல் ஒன்றி விடுகிறது. அதனாலேயே இந்த வீரியமானது தாயாரான அந்த ஸ்த்ரீயை முள், சலாகை போல் கொல்வதில்லை. எதனால் ஸ்தனம் முதலானவைகள் தன்னுடைய அங்கம் முதலானவைகள் போல் ஆத்ம பூதமாக ஆகின்றனவோ அதுபோல் இந்த புருஷ பிரவேசமும் பாதிப்பது இல்லை என்பது பொருள்.
सा अन्तर्वत्नी एतम् अस्य भर्तुरात्मानम् अत्र आत्मन उदरे गतं प्रविष्टं बुद्ध्वा भावयति वर्धयति परिपालयति गर्भविरुद्धाशनादिपरिहारम् अनुकूलाशनाद्युपयोगं च कुर्वती ॥
(ச.பா) அந்த கர்பினியான ஸ்த்ரீ பர்த்தாவின் ஆத்மாவை தன்னுடைய வயிற்றில் பிரவேசித்ததாக அறிந்து பாவிக்கிறாள், வளர்க்கிறாள், பரிபாலனம் செய்கிறாள். அதாவது கர்ப்பத்திற்கு விருத்தமான ஆகாரம் முதலானவைகளை நீக்குகிறாள். கர்ப்பம் விருத்தி ஆவதற்கு அனுகூலமான உணவு, பானம் முதலியவைகளை மேற் கொள்ளுகிறாள்.
सा भावयित्री भावयितव्या भवति तं स्त्री गर्भं बिभर्ति सोऽग्र एव कुमारं जन्मनोऽग्रेऽधि भावयति । स यत्कुमारं जन्मनोऽग्रेऽधि भावयत्यात्मानमेव तद्भावयत्येषां लोकानां सन्तत्या एवं सन्तता हीमे लोकास्तदस्य द्वितीयं जन्म ॥ ३ ॥
सा भावयित्री वर्धयित्री भर्तुरात्मनो गर्भभूतस्य भावयितव्या वर्धयितव्या च भर्त्रा भवति । न ह्युपकारप्रत्युपकारमन्तरेण लोके कस्यचित्केनचित्सम्बन्ध उपपद्यते । तं गर्भं स्त्री यथोक्तेन गर्भधारणविधानेन बिभर्ति धारयति अग्रे प्राग्जन्मनः । सः पिता अग्रे एव पूर्वमेव जातमात्रं कुमारं जन्मनः अधि ऊर्ध्वं जन्मनः जातं कुमारं जातकर्मादिना पिता भावयति । सः पिता यत् यस्मात् कुमारं जन्मनः अधि ऊर्ध्वं अग्रे जातमात्रमेव जातकर्मादिना यद्भावयति, तत् आत्मानमेव भावयति ; पितुरात्मैव हि पुत्ररूपेण जायते । तथा ह्युक्तम् ‘पतिर्जायां प्रविशति’ (हरि. ३ । ७३ । ७१) इत्यादि ।
(ச.பா) அந்த பத்தினி தன்னுடைய கர்பத்தில் தன்னுடைய பர்த்தாவின் புனர் ரூபத்தை பாவிப்பவளாக இருக்கிறாள். அத்தகைய பத்தினி பர்த்தாவினால் போஷித்து ரக்ஷிக்கத்தக்கவள். உலகில் உபகார பிரத்யுபகாரம் இன்றி யாருக்கும், எதனுடனும் சம்பந்தம் ஏற்படுவது இல்லை. அந்த கர்பத்தை ஸ்திரீயானவள் குழந்தை பிறக்கும் வரை முறையோடு கர்பத்தை சுமக்கிறாள். அந்த தகப்பனார் ஆனவர் முன்பே கர்பத்தில் தரிக்கப்பட்டவனாயும், பின்பு குமாரனாக பிறந்தவனை ஜாத கர்மா முதலான சம்ஸ்காரங்களால் மகிழ்விக்கச் செய்கிறார். அந்த தந்தையானவர் பிறந்த குழந்தையானவன், பிறப்பதற்கு முன்பேயே பாவிக்கிறார் என்று கூறப்பட்டதால் அந்த குழந்தையை தானாகவே பாவிக்கிறார். பிதாவே புத்திர ரூபமாக உன்டாகிறான் என்பது பொருள். அப்பொழுதே பதியானவன் பத்தினியிடத்தில் பிரவேசிக்கிறான் என்பது யுக்தமாகும், இதுவே கூறப்படுகிறது.
तत्किमर्थमात्मानं पुत्ररूपेण जनयित्वा भावयतीति ? उच्यते — एषां लोकानां सन्तत्यै अविच्छेदायेत्यर्थः । विच्छिद्येरन्हीमे लोकाः पुत्रोत्पादनादि यदि न कुर्युः । एवं पुत्रोत्पादनादिकर्माविच्छेदेनैव सन्तताः प्रबन्धरूपेण वर्तन्ते हि यस्मात् इमे लोकाः, तस्मात्तदविच्छेदाय तत्कर्तव्यम् ; न मोक्षायेत्यर्थः । तत् अस्य संसारिणः कुमाररूपेण मातुरुदराद्यन्निर्गमनम् , तत् रेतोरूपापेक्षया द्वितीयं जन्म द्वितीयावस्थाभिव्यक्तिः ॥
(ச.பா) அவன் எதற்காக தன்னை புத்திரரூபமாக உண்டாக்கிக்கொண்டு பாவிக்கிறான் என்று, இந்த லோகத்தில் உள்ள சந்ததி பரம்பரை விச்சேதம் இல்லாமல் இருப்பதின் பொருட்டு, ஒவ்வொருவரும் புத்திரனை உண்டாக்காமல் இருந்தால் இந்த உலகத்தில் உள்ள நல்ல பரம்பரை விச்சின்னமாகி விடும். இவ்வாறு புத்திரோத்பத்தி முதலான கர்மாக்கள் அவிச்சேதமாக தொடர்வதால்தான் பிரபந்த ரூபமாய் இந்த லோகமானது இயங்கி வருகிறது. இந்த தொடர்ச்சி இடையறாமல் இருப்பதற்கு முற்சொன்ன காரியங்கள் செய்யத்தக்கவை. ஆனால் அவை மோக்ஷத்தின் பொருட்டு ஆகாது என்பது பொருள். இவ்வாறு குமார ரூபமாய் அம்மாவினுடைய கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்ட சம்சாரிக்கு முற்சொன்ன வீரியரூபமான ரூபத்தைக் காட்டிலும் இது இரண்டாவது ஜன்மம் ஆகும். அதாவது இரண்டாவது அவஸ்தாரூபமான தோற்றம் ஆகும்.
सोऽस्यायमात्मा पुण्येभ्यः कर्मभ्यः प्रतिधीयते । अथास्यायमितर आत्मा कृतकृत्यो वयोगतः प्रैति स इतः प्रयन्नेव पुनर्जायते तदस्य तृतीयं जन्म ॥ ४ ॥
अस्य पितुः सोऽयं पुत्रात्मा पुण्येभ्यः शास्त्रोक्तेभ्यः कर्मभ्यः कर्मनिष्पादनार्थं प्रतिधीयते पितुः स्थाने पित्रा यत्कर्तव्यं तत्करणाय प्रतिनिधीयत इत्यर्थः । तथा च सम्प्रत्तिविद्यायां वाजसनेयके — ‘पित्रानुशिष्टोऽहं ब्रह्माहं यज्ञ इत्यादि प्रतिपद्यते’ (बृ. उ. १ । ५ । १७) इति ।
(ச.பா) இந்த புத்திராத்ம ஸ்வரூபமான சம்சாரியை தகப்பனார் ஆனவர் சாஸ்த்திரோக்தமான புண்ணிய கர்மாக்களால் தூய்மைப்படுத்தி தன் தந்தையாகிய தன்னுடைய ஸ்தானத்தில் இருந்து தன்னால் செய்ய வேண்டிய காரியங்களை செய்வதற்காக தன் பிரதிநிதியாக ஆக்குகிறார் என்பது பொருள். எனவே இதுவே வாஜசனேய வித்தையில் கூறப்பட்டுள்ளது. “पित्राऽनुशिष्टोऽहं ब्रह्माहं यज्ञ इति” தந்தையால் கட்டளை இடப்பட்ட நான் பிரஹ்ம ஸ்வரூபமானவன். யக்ஞம் முதலானவைகளை சித்த சுத்தியின் பொருட்டு செய்கிறேன் என்பன போன்ற வாக்கியங்கள் இதை விளக்குகின்றன.
अथ अनन्तरं पुत्रे निवेश्यात्मनो भारम् अस्य पुत्रस्य इतरः अयं यः पित्रात्मा कृतकृत्यः, कर्तव्यात् ऋणत्रयात् विमुक्तः कृतकर्तव्य इत्यर्थः, वयोगतः गतवयाः जीर्णः सन् प्रैति म्रियते । सः इतः अस्मात् प्रयन्नेव शरीरं परित्यजन्नेव, तृणजलूकादिवत् , देहान्तरमुपाददानः कर्मचितम् , पुनर्जायते । तदस्य मृत्वा प्रतिपत्तव्यं यत् , तत् तृतीयं जन्म ।
(ச.பா) பிறகு தந்தையானவர் தன்னுடைய சுமையை புத்திர ரூபமான தன்னிடத்தில் சுமத்திவிட்டு அந்த தந்தையான ஆத்மாவானவன் முக்கடன்களில் இருந்தும் விடுபட்டு கிருதகிருத்தியன் ஆகிறான். கிருத கிருத்ய: என்பதற்கு செய்யவேண்டியதை செய்து முடித்தவன் என்பது பொருள். இத்தகைய தந்தையானவன் வயது முதிர்ந்தவனாகி நலிந்து மரணமடைகிறான். அவன் இங்கு இருந்து மரணம் அடையும்பொழுதே அதாவது இந்த சரீரத்தை விடும் பொழுதே புல் அட்டை போல் (तृण जलूक) வேறு ஒரு சரீரத்தை தன்னுடைய கர்மாவினால் சம்பாதித்திக்கொண்டு மறுபடியும் பிறக்கிறான். இவ்வாறு அவனால் மறித்த பின் அடையக்கூடிய ஜன்மாவானது மூன்றாவது ஜன்மாவாகும்.
ननु संसरतः पितुः सकाशाद्रेतोरूपेण प्रथमं जन्म ; तस्यैव कुमाररूपेण मातुर्द्वितीयं जन्मोक्तम् ; तस्यैव तृतीये जन्मनि वक्तव्ये, प्रयतस्तस्य पितुर्यज्जन्म, तत्तृतीयमिति कथमुच्यते ?
(ச.பா) (சங்கை) மேலும் இவ்வாறு சம்சாரியாய் இருப்பவனுக்கு தந்தையிடம் இருந்து வீரியரூபமான ஜன்மா முதலாவது ஆகும். அவனுக்கே தாயாரிடம் இருந்து குமார ரூபமாய் உண்டாகும் ஜன்மா இரண்டாவது என்று கூறப்பட்டது. அவனுக்கே மூன்றாவது ஜன்மா கூறவேண்டியது இருக்க மரணமடைந்த தந்தையின் எந்த ஜன்மம் உண்டோ அதை இவனுடைய மூன்றாவது ஜன்மாவென்று எவ்வாறு கூறப்படுகிறது. அது எவ்வாறு பொருந்தும் எனில் பதில் கூறுகிறேன்.
नैष दोषः, पितापुत्रयोरेकात्मत्वस्य विवक्षितत्वात् । सोऽपि पुत्रः स्वपुत्रे भारं निधाय इतः प्रयन्नेव पुनर्जायते यथा पिता । तदन्यत्रोक्तमितरत्राप्युक्तमेव भवतीति मन्यते श्रुतिः । पितापुत्रयोरेकात्मत्वात् ॥
(ச.பா) (சமாதானம்) இது தோஷமாகாது. தந்தை மகன் இவர்களுள் உள் ஏகாத்மத்துவம் சொல்லப்பட்டதால் இது தோஷமாகாது. அந்த மகனும் தன்னுடைய புத்திரனிடத்தில் சுமையை சுமத்திவிட்டு மரணம் அடையும் பொழுதே தன்னுடைய தந்தையைப் போல் வேறு ஜன்மாவை அடை.வான். இதுவே வேறு இடத்தில் விளக்கமாக கூறப்பட்டுள்ளதால் இங்கும் கூறப்பட்டதாக ஆகிறது என்று எண்ணுகிறது சுருதி. ஏன் எனில் தந்தை மகனுள் ஏகாத்மத்துவம் உள்ளதால்
एवं संसरन्नवस्थाभिव्यक्तित्रयेण जन्ममरणप्रबन्धारूढः सर्वो लोकः संसारसमुद्रे निपतितः कथञ्चिद्यदा श्रुत्युक्तमात्मानं विजानाति यस्यां कस्याञ्चिदवस्थायाम् , तदैव मुक्तसर्वसंसारबन्धनः कृतकृत्यो भवतीति
(ச.பா) (அ.கை) இவ்வாறு முடிவற்ற சம்சாரப் பெருங்கடலில் முற்கூறப்பட்ட மூன்று சரீரங்களின் தோற்றத்தால் சம்சரித்துக்கொண்டு பிறவிமரணம் என்ற பிரவாகத் தொடரில் ஏறி சிக்குண்டவர்களாகி இந்த உலகில் உள்ள சமஸ்த ஜீவராசிகளும், சம்சாரம் என்ற பெரும் சமுத்திரத்தில் வீழ்ந்ததாய் உள்ளது. இவ்வாறு வீழ்ந்தவர்களில் சிலர் குரு அனுக்கிரஹத்தால் எப்படியோ ஒரு சமயம் சுருத்யுக்தமான ஆத்மாவை அனுபவபூர்வமாய் உணர்கிறார்களோ அப்பொழுது எந்த நிலையில் எந்த அவஸ்தையில் இருந்தாலும், அந்த க்ஷணத்திலேயே சமஸ்த சம்ஸார பந்தத்திலிருந்தும் விடுபட்டவராகி கிருதகிருத்தராக ஆகிறார் என்ற இந்த விஷயத்தை வாமதேவ ரிஷியானவர் இந்த மந்திரத்தால் கூறுகின்றா (என்று கூறுகிறார்.)
तदुक्तमृषिणा । गर्भे नु सन्नन्वेषामवेदमहं देवानां जनिमानि विश्वा । शतं मा पुर आयसीररक्षन्नधः श्येनो जवसा निरदीयमिति गर्भ एवैतच्छयानो वामदेव एवमुवाच ॥ ५ ॥
येतद्वस्तु, तत् ऋषिणा मन्त्रेणापि उक्तमित्याह —
(ச.பா) இப்பொருள் ரிஷியினால் மந்திரத்தினுள்ளும் கூறப்பட்டிருக்கின்றது என்கிறார்:-
गर्भे नु मातुर्गर्भाशय एव सन् , नु इति वितर्के । अनेकजन्मान्तरभावनापरिपाकवशात् एषां देवानां वागग्न्यादीनां जनिमानि जन्मानि विश्वा विश्वानि सर्वाणि अन्ववेदम् अहम् अहो अनुबुद्धवानस्मीत्यर्थः । शतम् अनेकाः बह्व्यः मा मां पुरः आयसीः आयस्यो लोहमय्य इवाभेद्यानि शरीराणीत्यभिप्रायः । अरक्षन् रक्षितवत्यः संसारपाशनिर्गमनात् अधः । अथ श्येन इव जालं भित्त्वा जवसा आत्मज्ञानकृतसामर्थ्येन निरदीयं निर्गतोऽस्मि । अहो गर्भ एव शयानो वामदेवः ऋषिः एवमुवाच एतत् ॥
(ச.பா) கர்பத்தில் வாமதேவர் தாயாரின் கர்பாசயத்தில் இருந்துகொண்டே இவ்வாறு கூறுகிறார். இங்கு “नु” என்பது விதர்க்கமாகும். அநேக ஜன்மாந்திரங்களில் ஏற்பட்ட பாவ பரிபாக வசத்தால் இந்த வாக், அக்னி முதலிய தேவர்களின் பிறப்பையும், ஏன்? இந்த முழு பிரபஞ்சத்தின் பிறப்பையும் நான் அறிந்தவனாய் உள்ளேன். இதை தொடர்ந்து உணர்கிறேன். அஹோ! ஆச்சரியம்! நான் (என்னை) முன்பு இரும்பு போல் பிளக்க முடியாத அநேகம் சரீரங்கள் சூழ்ந்துகொண்டு இருந்தன. என்னை வெளிவர முடியாமல் அவைகள் தடுத்தன என்பது பொருள். இப்பொழுது சம்சாரம் என்ற வலையிலிருந்து (பாசத்திலிருந்து) விடுபட்ட நான் வலையைக் கிழித்துக்கொண்டு அதிலிருந்து வெளிப்பட்ட கழுகு போல் நான் ஆத்மக்ஞானத்தால் உண்டான சாமர்த்தியத்தால் இந்த சம்சாரம் என்ற பெரும் கடலை மிகவும் வேகமாக கடந்தவனாக இருக்கின்றேன். அந்தோ ஆச்சரியம்! கர்பாசயத்தில் படுத்துக்கொண்டே வாமதேவ மஹரிஷியால் இவ்வாறு கூறப்பட்டது.
स एवं विद्वानस्माच्छरीरभेदादूर्ध्व उत्क्रम्यामुष्मिन्स्वर्गे लोके सर्वान्कामानाप्त्वामृतः समभवत्समभवत् ॥ ६ ॥ इति चतुर्थः खण्डः ॥
सः वामदेव ऋषिः यथोक्तमात्मानम् एवं विद्वान् अस्मात् शरीरभेदात् शरीरस्य अविद्यापरिकल्पितस्य आयसवदनिर्भेद्यस्य जननमरणाद्यनेकानर्थशताविष्टशरीरप्रबन्धस्य परमात्मज्ञानामृतोपयोगजनितवीर्यकृतभेदात् शरीरोत्पत्तिबीजाविद्यादिनिमित्तोपमर्दहेतोः शरीरविनाशादित्यर्थः । ऊर्ध्वः परमात्मभूतः सन् अधोभवात्संसारात् उत्क्रम्य ज्ञानावद्योतितामलसर्वात्मभावमापन्नः सन् अमुष्मिन् यथोक्ते अजरेऽमरेऽमृतेऽभये सर्वज्ञेऽपूर्वेऽनपरेऽनन्तरेऽबाह्ये प्रज्ञानामृतैकरसे स्वर्गे लोके स्वस्मिन्नात्मनि स्वे स्वरूपे अमृतः समभवत् आत्मज्ञानेन पूर्वमाप्तकामतया जीवन्नेव सर्वान्कामानाप्त्वा इत्यर्थः । द्विर्वचनं सफलस्य सोदाहरणस्य आत्मज्ञानस्य परिसमाप्तिप्रदर्शनार्थम् ॥
(ச.பா) அந்த வாமதேவ மஹரிஷியானவர் இப்பொழுது கூறப்பட்ட ஆத்மஞானத்தை இவ்வாறு அனுபவபூர்வமாய் உணர்ந்து, சரீரமானது அவித்யாகல்பிதமானதால் அது இரும்பு போல் கடினமானதால், அதைப் பிளந்துக்கொண்டு அதோடுமட்டுமன்றி ஜனனம், மரணம் என்ற அநேக அநர்த்தக் கூட்டங்களால் சூழப்பட்ட இந்த சரீரத் தொடரை ஆத்மக் ஞானத்தால் பிளந்துகொண்டு அந்த பிரமக்ஞானம் என்ற அம்ருதத்தால் உண்டான வீரியத்தால் இந்த சரீர உற்பத்திக்கு பீஜமான அவித்தையினால் உண்டான காரண சரீரத்தையும், நாசமாக்கிக்கொண்டு வெளிக்கிளம்பினார் என்று பொருள். சம்சாரத்திலிருந்து மேலே கிளம்பி பரமாத்ம பூதராகி ஞானத்தால் பிரகாசப்படுத்தப்பட்ட பரம பரிசுத்தமான சர்வாத்ம பாவத்தை அடைந்தவராகி இந்த முற்கூறப்பட்ட முதுமை அற்றதும், மரணமற்றதும், பழமையாகாததும், பயமற்றதும், சர்வக்ஞனானதும், தனக்கு முன்னிலையில் ஏதுமற்றதும், தனக்கு பின்பும் ஏதுமற்றதும், முடிவற்றதும், அபாஹ்யமாயும், பிரக்ஞான அம்ருதமான ஏகரசமாயும், பிரதீபம் (தீவட்டி போல்) உத்தமமான மோக்ஷ சாம்ராஜ்யத்திற்கு வழிகாட்டுவதாயும் உள்ள தன்னுடைய ஆத்மா ஸ்வரூபத்தில் ஆத்மஞானத்தால் நிறைவு பெற்று முதலில் அவாப்த சமஸ்த காமனாய் ஜீவித்திருக்கும் நிலையிலேயே பிரஹ்மத்துடன் ஒன்றிய ஜீவன்முக்தராகிறார். இங்கு இருமுறைகூறல் உதாரணத்துடன் ஆத்மக் ஞானத்தின் பூர்த்தியை தெரியப்படுத்துவதற்காகக் கூறப்பட்டது.
इति चतुर्थखण्डभाष्यम् ॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ ऐतरेयोपनिषद्भाष्ये द्वितीयोऽध्यायः ॥
ब्रह्मविद्यासाधनकृतसर्वात्मभावफलावाप्तिं वामदेवाद्याचार्यपरम्परया पारम्पर्यश्रुत्यावद्योत्यमानां ब्रह्मवित्परिषद्यत्यन्तप्रसिद्धाम् उपलभमाना मुमुक्षवो ब्राह्मणा अधुनातनाः ब्रह्म जिज्ञासवः अनित्यात्साध्यसाधनलक्षणात्संसारात् आ जीवभावाद्व्याविवृत्सवो विचारयन्तः अन्योन्यं पृच्छन्ति । कथम् ? —
(ச.பா) (அ.கை) வாமதேவர் முதலிய ஆச்சாரிய பரம்பரையாலும், சுருதிகளாலும், புலப்படுத்தப்பட்டதும், பிரஹ்மவித்தியா சாதனத்தால் அடையத்தக்க சர்வாத்மபலப்பிராப்தியை அடைய விரும்பிய பிரஹ்மசாரிகளும், சந்நியாசிகளும் ஆன முமூக்ஷுக்களான பரிஷத் (கூட்டங்கள்) அதாவது பிரஹ்மத்தை அறிய விரும்பிய பிராஹ்மணர்களான இன்றைய முமூக்ஷீக்கள் பிரஹ்மத்தை அறிய விரும்பியவர்களாகி அநித்தியமான சாத்திய, சாதன லக்ஷணங்களோடு கூடிய சம்சாரத்தினின்று ஜீவிக்கும் நிலையிலேயே விடுபட விரும்புபவராகி ஒருவருக்கொருவர் விசாரம் செய்துக்கொண்டு, ஒருவர் மற்றவனை இந்த ஆத்மா எத்தகையவன்? இவன் யார்? நாம் எந்த ஆத்மாவை இவனே ஆத்மாவென்று நேரிடையாக அறிந்து உபாசிப்போம். யார் அந்த ஆத்மா? என்று கேட்டுக்கொள்கின்றனர்.
कोऽयमात्मेति वयमुपास्महे कतरः स आत्मा येन वा पश्यति येन वा शृणोति येन वा गन्धानाजिघ्रति येन वा वाचं व्याकरोति येन वा स्वादु चास्वादु च विजानाति ॥ १ ॥
यमात्मानम् अयमात्मा इति साक्षात् वयमुपास्महे कः स आत्मेति ; यं चात्मानमयमात्मेति साक्षादुपासीनो वामदेवः अमृतः समभवत् ; तमेव वयमप्युपास्महे को नु खलु स आत्मेति
(ச.பா) எந்த ஆத்மாவை இவனே ஆத்மா என்று சாக்ஷாத்தாக உபாசித்து வாமதேவர் மரண தர்மத்திலிருந்து விடுபட்டு பிராஹ்மாத்ம பாவத்தை அடைந்தாரோ அந்த ஆத்மாவை நாம் உபாசிப்போமாக. அந்த ஆத்மா யார் என்று அறிவோமாக.
एवं जिज्ञासापूर्वमन्योन्यं पृच्छताम् अतिक्रान्तविशेषविषयश्रुतिसंस्कारजनिता स्मृतिरजायत — तम् ‘प्रपदाभ्यां प्रापद्यत ब्रह्मेमं पुरुषम्’ ‘स एतमेव सीमानं विदार्य एतया द्वारा प्रापद्यत’ एतमेव पुरुषं द्वे ब्रह्मणी इतरेतरप्रातिकूल्येन प्रतिपन्ने — इति । ते चास्य पिण्डस्यात्मभूते । तयोरन्यतर आत्मोपास्यो भवितुमर्हति । योऽत्रोपास्यः, कतरः स आत्मा इति विशेषनिर्धारणार्थं पुनरन्योन्यं पप्रच्छुर्विचारयन्तः ।
(ச.பா) இவ்வாறு ஜிஐஞாசா பூர்வமாய் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்ளும் முமூக்ஷுக்களுக்கு விசேஷ விஷயமான சிரவண சம்ஸ்காரத்தால் ஸ்மிருதியானது உண்டாயிற்று. அந்த ஸ்மிருதி யாதெனில் பிரஹ்மம் என்ற பரம புருஷனை அடைவோமாக என்பதாகும். அவனே இந்த சீமா என்ற எல்லையை (பிரஹ்ம மந்திரத்தை) பிளந்து கொண்டு உள்ளே நுழைந்தான். அந்த புருஷனையே பிரஹ்மம் என்று உபாசிப்போம். இங்கு ஒன்றுக்கொன்று முரண்பாடான இரண்டு பிரஹ்மங்கள் அறியப்படுகின்றன. ஒன்று இந்தப் பிண்டத்திற்கு ஆத்ம பூதமானவை. மற்றொன்று ஆத்மாவென்று உபாசிக்கத்தக்கதாகும். அவைகளில் எது உபாசிக்கத்தக்கது? அந்த ஸ்வச்ச ஆத்மா எது? என்பதை விசேஷமாய் நிர்தாரணம் செய்யும் பொருட்டு அந்த முமூக்ஷுக்கள் ஒருவரை ஒருவர் கேள்விகள் கேட்டு விசாரிக்கின்றனர்.
पुनस्तेषां विचारयतां विशेषविचारणास्पदविषया मतिरभूत् । कथम् ? द्वे वस्तुनी अस्मिन्पिण्डे उपलभ्येते — अनेकभेदभिन्नेन करणेन येनोपलभते, यश्चैक उपलभते, करणान्तरोपलब्धिविषयस्मृतिप्रतिसन्धानात् । तत्र न तावत् येनोपलभते, स आत्मा भवितुमर्हति ।
(ச.பா) மறுபடியும் அவர்களுக்குள் விசாரிக்கும் கால் விசேஷத்தை விசாரிக்கக்கூடிய புத்தி உண்டாயிற்று. இவ்வாறு இந்த பிண்டத்தில் இரண்டு வஸ்துக்கள் அறியப்படுகின்றன. அநேக பேதங்களால் மாறுபட்ட கரணங்களால் இது எவ்வாறு அறியப்படும். எது இந்தக் கரணங்களால் அறியப்படும் விஷயங்களை நினைவு என்பதால் ஒன்று சேர்க்கிறது. எது இந்த வேறுபட்ட விஷயங்களை அறியக்கூடிய கரணங்களால் அறியப்படவில்லையோ அதுவே ஆத்மாவாக ஆவதற்கு ஏற்றது.
केन पुनरुपलभत इति, उच्यते — येन वा चक्षुर्भूतेन रूपं पश्यति, येन वा शृणोति श्रोत्रभूतेन शब्दम् , येन वा घ्राणभूतेन गन्धानाजिघ्रति, येन वा वाक्करणभूतेन वाचं नामात्मिकां व्याकरोति गौरश्व इत्येवमाद्याम् , साध्वसाध्विति च, येन वा जिह्वाभूतेन स्वादु च अस्वादु च विजानातीति ॥
(ச.பா) பின் அது எவ்வாறு அறியப்படும் எனில் கூறுகிறோம். எதனால் சக்ஷு பூதமாகி ரூபம் பார்க்கப்படுகிறது? எதனால் சுரோத்திர பூதமாகி சப்தங்கள் கேட்கப்படுகின்றன? எதனால் நுகரும் பொறியினதாய் வாசனைகள் நுகரப்படுகின்றன. எதனால் வாக்கரண பூதமாகி பசு, குதிரை என்ற நாம ரூபமான வாக்குகள், எதனால் ஜிஹ்வா பூதமாகி இது சாது, நல்லருசி உடையது. இது நல்ல ருசி அற்றது என்பது அறியப்படுகிறது. (என்று விசாரித்தனர்).
किं पुनस्तदेकमनेकधा भिन्नं करणम् ? इत्युच्यते-
(ச.பா) (அ.கை) மேலும் அது ஒன்றே பலவாறான கர்மத்தோடு கூடியதா? அல்லது அதுவே பலவிதமான கரணங்களாகிறதா? எனில் கூறப்படுகிறது:-
यदेतद्धृदयं मनश्चैतत् । संज्ञानमाज्ञानं विज्ञानं प्रज्ञानं मेधा दृष्टिर्धृतिर्मतिर्मनीषा जूतिः स्मृतिः सङ्कल्पः क्रतुरसुः कामो वश इति । सर्वाण्येवैतानि प्रज्ञानस्य नामधेयानि भवन्ति ॥ २ ॥
यदुक्तं पुरस्तात् प्रजानां रेतो हृदयं हृदयस्य रेतो मनः मनसा सृष्टा आपश्च वरुणश्च हृदयान्मनो मनसश्चन्द्रमाः, तदेवैतद्धृदयं मनश्च, एकमेव तदनेकधा । एतेनान्तःकरणेनैकेन चक्षुर्भूतेन रूपं पश्यति, श्रोत्रभूतेन शृणोति, घ्राणभूतेन जिघ्रति, वाग्भूतेन वदति, जिह्वाभूतेन रसयति, स्वेनैव विकल्पनारूपेण मनसा सङ्कल्पयति, हृदयरूपेणाध्यवस्यति । तस्मात्सर्वकरणविषयव्यापारकमेकमिदं करणं सर्वोपलब्ध्यर्थमुपलब्धुः ।
(ச.பா) முன்பு எது பிரஜைகளின் ரேதோ ரூபமான ஹிருதயம் என்றும், அந்த ஹிருதயத்தின் ரேதோ ரூபமானது (சார பூதமானது) மனஸ் என்றும், அந்த மனதால் தண்ணீரும், அதன் தேவதையான வருணனும் உண்டாயின என்றும், அந்த ஹிருதயத்திலிருந்து மனசும், மனதிலிருந்து சந்திரனும், அதுவே ஹிருதயம் என்றும் கூறப்பட்டு, ஹிருதயமும், மனமும் ஒன்றே அதுவே பலவாராக செயல்படுகிறது என்று விளக்கப்பட்டது. இத்தகைய ஒரே அந்தக்கரணமானது சக்ஷுஸ் பூதமாகும் பொழுது ரூபத்தைப் பார்க்கிறது. சுரோத்திர பூதமாகி சப்தங்களைக் கேட்கிறது. நுகரும் இந்திரியபூதமாக ஆகி மணத்தை நுகர்கிறது. வாக் பூதமாக ஆகி பேசுகிறது. நாக்கு பூதமாக ஆகி ருசியை சுவைக்கிறது. தன்னுடைய விகல்பரூபமான மனதால் எல்லாவற்றையும் விகல்பிக்கிறது. கடைசியில் ஹிருதய ரூபமாய் முடிவுறுகிறது. எனவே எல்லா கரண விஷயங்களின் வியாபாரமாகும். இந்த ஒரு கரணமே விஷயங்களை நுகருபவனுக்கு அதை நுகர்வதற்கான சாதனமாக ஆகிறது.
(ச.பா) இதையே கௌசீதகர்கள் இவ்வாறு கூறுவர். “प्रज्ञया वाचं समारुह्य वाचा सर्वाणि नामात्याप्नोति। प्रज्ञया चक्षु समारुध्य चक्षुषा सर्वाणि रूपाण्याप्नोति” பிரக்ஞையுடன் வாக் இந்திரியத்தில் பிரவேசித்து வாக்கால் எல்லா நாமங்களையும் அடைகிறான். அவ்வாறே பிரக்ஞையால் சக்ஷீர் இந்திரியத்தில் பிரவேசித்து எல்லா ரூபங்களையும் அடைகிறான் என்பன போன்ற வாக்கியங்கள் இதையே விவரிக்கின்றன. மேலும் வாஜசனேயத்தில் “मनसा ह्येव पश्यति मनसा श्रृणोति ह्य्दयेन हि रूपाणि जानाति” மனத்தினாலேயே பார்க்கிறான். மனதாலேயே கேட்கிறான். வருதயத்தினாலேயே ரூபங்களை அறிகிறான் என்பன போன்ற வாக்கியங்களால் விளக்கப்படுகிறது. எனவே ஹிருதயம், மனம் என்று சொல்லப்படுகிற அல்லது ஹிருதயம் எனப்படும், மனஸ் சப்தவாக்கியமாய் உள்ள அந்தக் கரணத்திற்கே எல்லா விஷயங்களையும் அடையும் தன்மை பிரசித்தமானது. அந்த ஸ்வரூபமானதே பிராணனும் ஆகும். “यो वै प्राणः सा प्रज्ञा या वै प्रज्ञा स प्राणः” எந்த ஒரு பிராணன் உண்டோ அதுவே பிரக்ஞை எனப்படும். எது பிரக்ஞை எனப்படுகிறதோ அதுவே பிராணனாகும் என்று பிராஹ்மண வாக்கியங்கள் கூறுகின்றன.
करणसंहतिरूपश्च प्राण इत्यवोचाम प्राणसंवादादौ । तस्माद्यत्पद्भ्यां प्रापद्यत, तद्ब्रह्म तदुपलब्धुरुपलब्धिकरणत्वेन गुणभूतत्वान्नैव तद्वस्तु ब्रह्म उपास्य आत्मा भवितुमर्हति । पारिशेष्याद्यस्योपलब्धुरुपलब्ध्यर्था एतस्य हृदयमनोरूपस्य करणस्य वृत्तयो वक्ष्यमाणाः, स उपलब्धा उपास्य आत्मा नोऽस्माकं भवितुमर्हतीति निश्चयं कृतवन्तः ।
(ச.பா) இந்தக் கரணங்களின் சேர்க்கை ரூபமானது அதாவது கரணங்கள் செயல்படும் தன்மையை பெற்றிருப்பது பிராணன் என்று பிராணசம்வாதங்களில் விளக்கியுள்ளோம். எனவே எது இந்த வழிமுறைகளால் அடையப்படுகிறதோ அது பிரஹ்மமாகும். அது அறிய வேண்டியவனுக்கு அறியத்தக்க கரணமாயும், குண பூதமாய் உள்ளதால் அந்த வஸ்து பிரஹ்மம் என்று உபாசிக்கத்தக்க வஸ்து ஆகாது. இவ்வாறு பகுத்துப் பார்க்கும் பொழுது எது அடையத்தக்கதோ அது அடையத்தக்கவனான மனோரூபமான ஹிருதயத்திற்கு கரணமான விருத்திகள் என்று கூறப்பட்டுள்ளனவேயன்றி அது நம்மால் அடையப்பட்டு உபாசிக்கக்கூடிய ஆத்மாவாக நமக்கு ஆகாது என்று அவர்கள் விசாரித்து நிச்சயம் செய்தனர்.
तदन्तःकरणोपाधिस्थस्योपलब्धुः प्रज्ञानरूपस्य ब्रह्मण उपलब्ध्यर्था या अन्तःकरणवृत्तयो बाह्यान्तर्वर्तिविषयविषयाः, ता इमा उच्यन्ते — संज्ञानं संज्ञप्तिः चेतनभावः ; आज्ञानम् आज्ञप्तिः ईश्वरभावः ; विज्ञानं कलादिपरिज्ञानम् ; प्रज्ञानं प्रज्ञप्तिः प्रज्ञता ; मेधा ग्रन्थधारणसामर्थ्यम् ; दृष्टिः इन्द्रियद्वारा सर्वविषयोपलब्धिः ; धृतिः धारणम् अवसन्नानां शरीरेन्द्रियाणां ययोत्तम्भनं भवति ; ‘धृत्या शरीरमुद्वहन्ति’ इति हि वदन्ति ; मतिः मननम् ; मनीषा तत्र स्वातन्त्र्यम् ; जूतिः चेतसो रुजादिदुःखित्वभावः ; स्मृतिः स्मरणम् ; सङ्कल्पः शुक्लकृष्णादिभावेन सङ्कल्पनं रूपादीनाम् ; क्रतुः अध्यवसायः ; असुः प्राणनादिजीवनक्रियानिमित्ता वृत्तिः ; कामः असंनिहितविषयाकाङ्क्षा तृष्णा ; वशः स्त्रीव्यतिकराद्यभिलाषः ; इत्येवमाद्या अन्तःकरणवृत्तयः उपलब्धुरुपलब्ध्यर्थत्वाच्छुद्धप्रज्ञानरूपस्य ब्रह्मण उपाधिभूतास्तदुपाधिजनितगुणनामधेयानि संज्ञानादीनि सर्वाण्येवैतानि प्रज्ञप्तिमात्रस्य प्रज्ञानस्य नामधेयानि भवन्ति, न स्वतः साक्षात् । तथा चोक्तम् ‘प्राणन्नेव प्राणो नाम भवति’ (बृ. उ. १ । ४ । ७) इत्यादि ॥
(ச.பா) அது அந்தக் கரணம் என்ற உபாதியில் நிலை பெற்றுள்ள அறிபவனான பிராக்ஞான ரூபத்தை உடைய பிரஹ்மத்திற்கு இவைகளை அறிவதற்காக பாஹ்யமாயும் அந்தரமாயும் எந்த அந்தக்கரண விருத்திகள் உண்டோ அவை இங்கு விளக்கப்படுகின்றன. சம்ஞானம் என்பது சேதனத்தின் பாவமாகும். ஆக்ஞானம் என்பது கட்டளையிடும் ஈசுவரபாவமாகும். விக்ஞானம் என்பது கலைகளைப் பற்றிய ஞானமாகும். பிரக்ஞானம் என்பது ஞப்தி என்ற பிரக்ஞையாகும். மேதை என்பது கற்ற நூ ல்களை மனதில் இருத்திக்கொள்ளும் சாமர்த்தியமாகும். திருஷ்ட்டி என்பது இந்திரியங்களின் வாயிலாக எல்லா விஷயங்களையும் அடைதலாகும். திருதி: என்பது தளர்ந்த சரீர இந்திரியங்களை மேன்படுத்திக் கொண்டுவந்து ஒரு நிலையில் நிறுத்திக் கொள்வது ஆகும். இந்த திருதி என்ற தைரியத்தால் சரீரத்தை சுமக்கிறான் என்று கூறுகின்றனர். மதி என்பது மனனமாகும். அந்த மனனத்தில் பெரும் சுதந்திரத் தன்மை மனீஷா எனப்பட்டது. ஜுதி: என்பது சரீரத்தில் ஏற்படும் துன்பங்களால் மனதிற்கு ஏற்படும் துக்கமாகும். ஸ்மிருதி என்பது ஸ்மரணம் ஆகும். சங்கல்பம் என்பது ரூபங்களை வெளுப்பு, கருப்பு போன்று சங்கல்பித்தலாகும். க்ருது: என்பது ஒரு தீர்மானம் செய்தல், அசு: என்பது மூசசு விடுதல் போன்ற ஜீவனக் கிரியைக்கு நிமித்தமாயுள்ள விருத்தியாகும். காமம் என்பது நம்மிடம் இல்லாத பொருளில், அதை அடைய நாம்படும் வேட்கையாகும். வச: ஸ்திரீ முதலான நமக்கு மாறுபட்ட விஷயங்களில் கொள்ளும் அபிலாஷையாகும் என்பன போன்ற அந்தக்கரண விருத்திகள் பிரக்ஞப்தி மாத்திரமாய் உள்ள அடைய விரும்புகிறவனுக்கு அதை அடையும் விஷயரூபமாய் உள்ளதால் இவை சுத்தப்பிரக்ஞான ரூபமான பிரஹ்மத்திற்கு உபாதி பூதமானவை. அந்த உபாதியால் உண்டான குணங்களால் ஏற்பட்ட பெயர்களே இந்த சம்ஞானம் முதலியவைகள். இவையாவும் பிரக்ஞப்தி மாத்திரமாய் உள்ள பிரக்ஞானத்திற்கு நாமதேயங்களேயாகும். இவை நேரிடையாக அதனுடன் சம்பந்தப்பட்டவை அல்ல. இதுவே கூறப்பட்டுள்ளது. “प्राणन्नेव प्राणो नाम भवति” ஜீவன நிமித்தமான ஸ்வாசம் விடுவதால் இவன் பிராணன் என்ற பெயர் பெற்றவனாக ஆகின்றான்.
एष ब्रह्मैष इन्द्र एष प्रजापतिरेते सर्वे देवा इमानि च पञ्च महाभूतानि पृथिवी वायुराकाश आपो ज्योतींषीत्येतानीमानि च क्षुद्रमिश्राणीव । बीजानीतराणि चेतराणि चाण्डजानि च जारुजानि च स्वेदजानि चोद्भिज्जानि चाश्वा गावः पुरुषा हस्तिनो यत्किञ्चेदं प्राणि जङ्गमं च पतत्रि च यच्च स्थावरम् । सर्वं तत्प्रज्ञानेत्रं प्रज्ञाने प्रतिष्ठितं प्रज्ञानेत्रो लोकः प्रज्ञा प्रतिष्ठा प्रज्ञानं ब्रह्म ॥ ३ ॥
स एषः प्रज्ञानरूप आत्मा ब्रह्म अपरं सर्वशरीरस्थः प्राणः प्रज्ञात्मा अन्तःकरणोपाधिष्वनुप्रविष्टो जलभेदगतसूर्यप्रतिबिम्बवत् हिरण्यगर्भः प्राणः प्रज्ञात्मा । एष एव इन्द्रः गुणात् , देवराजो वा । एष प्रजापतिः यः प्रथमजः शरीरी ; यतो मुखादिनिर्भेदद्वारेणाग्न्यादयो लोकपाला जाताः, स प्रजापतिरेष एव । येऽपि एते अग्न्यादयः सर्वे देवा एष एव ।
(ச.பா) அந்த, இந்த பிரக்ஞான ரூபமான ஆத்மாவே அபரப் பிரஹ்மமாயும், எல்லா சரீரங்களிலும் இருக்கக்கூடிய பிராணனாயும், பிரக்ஞாத்மாவாய், எல்லா அந்தக் கரண உபாதிகளிலும் பல நீர்நிலைகளில், பிரகாசிக்கும் சூரியனின் பிரதிபிம்பம் போல் எல்லாவற்றிலும் நுழைந்து பிரகாசிக்கும். ஹிரண்ய கர்பனாயும், பிராணனாயும், பிரக்ஞாத்மாவாயும் விளங்குகிறான். இந்த ஆத்மாவே குணங்களால் இந்திரனாயும், அல்லது தேவராஜனாயும் விளங்குகிறான். இவனே முதல் சரீரியான பிரஜாபதியாவான். அந்த முதல் சரீரியான இவனிடம் இருந்தே முகம் (வாய்) முதலான துவாரங்களும், அவைகளுக்கு அதிஷ்ட்டான தெய்வங்களான அக்னி முதலான லோகபாலர்களும் உண்டாயினர். அந்த பிரஜாபதியும் இந்த ஆத்மாவே. அக்னி முதலான எல்லா தேவர்களும் இவனே.
इमानि च सर्वशरीरोपादानभूतानि पञ्च पृथिव्यादीनि महाभूतानि अन्नान्नादत्वलक्षणानि एतानि । किञ्च, इमानि च क्षुद्रमिश्राणि क्षुद्रैरल्पकैर्मिश्राणि, इवशब्दः अनर्थकः, सर्पादीनि । बीजानि कारणानि इतराणि चेतराणि च द्वैराश्येन निर्दिश्यमानानि ।
(ச.பா) எல்லா சரீரங்களுக்கும் உபாதான பூதமான பிருதிவி முதலான பஞ்சமஹா பூதங்களும், அன்னம், அன்னாதம் என்ற லக்ஷணத்துடன் கூடிய மஹா பூதங்களும் இவனே. மேலும் இந்த மிக அல்ப வஸ்துக்களும் இவன் சாந்நித்தியத்தாலேயே பிரகாசிப்பதால் அவைகளும் இவனே. சர்பம் முதலானவைகளும், காரண பீஜங்களும் இரு பிறப்பானவைகளும், மேலே கூறப்போகிறவைகளும் இவனே.
कानि तानि ? उच्यन्ते — अण्डजानि पक्ष्यादीनि, जारुजानि जरायुजानि मनुष्यादीनि, स्वेदजानि यूकादीनि, उद्भिज्जानि च वृक्षादीनि । अश्वाः गावः पुरुषाः हस्तिनः अन्यच्च यत्किञ्चेदं प्राणि । किं तत् ? जङ्गमं यच्चलति पद्भ्यां गच्छति ; यच्च पतत्रि आकाशेन पतनशीलम् ; यच्च स्थावरम् अचलम् ; सर्वं तत् अशेषतः प्रज्ञानेत्रम् , प्रज्ञप्तिः प्रज्ञा, तच्च ब्रह्मैव, नीयतेऽनेनेति नेत्रम् , प्रज्ञा नेत्रं यस्य तदिदं प्रज्ञानेत्रम् ; प्रज्ञाने ब्रह्मण्युत्पत्तिस्थितिलयकालेषु प्रतिष्ठितम् , प्रज्ञाश्रयमित्यर्थः । प्रज्ञानेत्रो लोकः पूर्ववत् ; प्रज्ञाचक्षुर्वा सर्व एव लोकः । प्रज्ञा प्रतिष्ठा सर्वस्य जगतः । तस्मात् प्रज्ञानं ब्रह्म ।
(ச.பா) அவையாவை எனில் கூறுவோம். அண்டஜானி என்பவைகள் பக்ஷிகள், ஜராயுஜானி என்பது மனுஷ்யர் முதலியவைகள் ஆகும். ஸ்வேதஜானி கொசு, சீலைப்பேன் முதலியவைகளாகும். உத்பிஜானி விதையை பிளந்துகொண்டு கிளம்பும் மரம், செடி, கொடிகள் முதலியனவாகும். குதிரைகள், பசுக்கள், மனிதர்கள், யானைகள் இன்னும் மீதியுள்ள எல்லாப் பிராணி ஜாதங்களும் இதனுள் அடங்கும். அவையாவை? ஜங்கமம் என்பது காலால் நடந்து அசைந்து செல்வது. மேலும் உயரக்கிளம்பி பறப்பது, மேலும் பக்ஷியாயினும், ஆகாசத்தில் பறக்க முடியாததும் இதில் அடங்கும். எது அசைய முடியாத ஸ்தாவரங்களோ அவைகளும் இதற்கு உட்பட்டதே. இவ்வாறு மிச்சமில்லாதயாவும் பிரக்ஞாநேத்திரம் எனப்படும். பிரக்ஞா என்பது பிரக்ஞப்தி. அதனால் நடத்தி செல்லப்படுவது பிரக்ஞாநேத்திரம் . அதன் சாநித்தியமே இங்கு நேத்திரம் எனப்படும். இத்தகைய பிரக்ஞானமான பிரஹ்மத்தில் உற்பத்தி, ஸ்திதிலய காலங்களில் அதை ஆசிரயித்து இவையாவும் நிலைபெற்றுள்ளது என்பது பொருள். பிரக்ஞா நேத்திரமானது லோகம் என்பதை முன்போல் பொருள் கொள்ளவேண்டும். அல்லது எல்லாலோகமும் பிரக்ஞையையே சக்ஷுஸாக கொண்டுள்ளது என்றும் பொருள் கொள்ளலாம். எல்லா ஜகத்திற்கும் இந்த பிரக்ஞையே நிலைக்களமானது. எனவேதான் பிரக்ஞானம் பிரஹ்மா என்று கூறப்பட்டது.
तदेतत्प्रत्यस्तमितसर्वोपाधिविशेषं सत् निरञ्जनं निर्मलं निष्क्रियं शान्तम् एकम् अद्वयं ‘नेति नेति’ (बृ. उ. ३ । ९ । २६) इति सर्वविशेषापोहसंवेद्यं सर्वशब्दप्रत्ययागोचरं तदत्यन्तविशुद्धप्रज्ञोपाधिसम्बन्धेन सर्वज्ञमीश्वरं सर्वसाधारणाव्याकृतजगद्बीजप्रवर्तकं नियन्तृत्वादन्तर्यामिसंज्ञं भवति । तदेव व्याकृतजगद्बीजभूतबुद्ध्यात्माभिमानलक्षणं हिरण्यगर्भसंज्ञं भवति । तदेव अन्तरण्डोद्भूतप्रथमशरीरोपाधिमत् विराट्प्रजापतिसंज्ञं भवति । तदुद्भूताग्न्याद्युपाधिमत् देवतासंज्ञं भवति । तथा विशेषशरीरोपाधिष्वपि ब्रह्मादिस्तम्बपर्यन्तेषु तत्तन्नामरूपलाभो ब्रह्मणः । तदेवैकं सर्वोपाधिभेदभिन्नं सर्वैः प्राणिभिस्तार्किकैश्च सर्वप्रकारेण ज्ञायते विकल्प्यते च अनेकधा । ‘एतमेके वदन्त्यग्निं मनुमन्ये प्रजापतिम् । इन्द्रमेकेऽपरे प्राणमपरे ब्रह्म शाश्वतम्’ (मनु. १२ । १२३) इत्याद्या स्मृतिः ॥
(ச.பா) அத்தகைய பிரக்ஞானமே எல்லா உபாதிகளும் நீங்கப் பெற்றதாயும், எந்த மறைவோ, தடையோ அற்றதாயும், நிர்மலமாயும், எச்செயலும் அற்றதாயும், பரம சாந்தமானதாயும் ஒன்றாயும், தனக்கு இரண்டாவது அற்றதாயும், நேதி, நேதி என்று எல்லா விசேஷங்களையும், நீக்குங்கால் எது உணர்வு ஸ்வரூபமாய் அறியத்தக்கதாயும், எல்லா சப்தங்களாலும் அறியத்தக்க ஞானத்திற்கு கோசரமாயும் இருக்கும் அந்த பிரக்ஞானமானது மிகவும் சுத்தமான பிரக்ஞை என்ற உபாதியுடன் சம்பந்தப்படும் பொழுது சர்வக்ஞனான ஈஸ்வரனாயும், சர்வ சாதாரணமான அவ்யாகிருதமான ஜகத் பீஜத்தை பிரவிருத்திப்வனாயும், எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவதாலும், அந்தர்யாமி என்று கூறப்படுபவனாகவும் ஆகிறான். அந்தப் பிரக்ஞானமே வியாகிருதமான ஜகத்திற்கு பீஜபூதமான புத்தியாத்மாவை அபிமானிக்கும் நிலையில் ஹிரண்யகர்பன் என்று பெயர் பெற்றவனாக ஆகிறான். அந்தப் பிரக்ஞானமயன் தன்னில் படைக்கப்பட்ட அண்டத்திலிருந்து உண்டான முதல் சரீரத்தை உபாதியாக கொண்டபோது விராட் என்றும், பிரஜாபதி என்றும் பெயர் பெற்றவனாக ஆகிறான். அதில் உண்டான அக்னி முதலான உபாதிகளோடு கூடின தேவதைகளாக அழைக்கப்படுபவனாகவும் ஆகிறான். அவ்வாறே விசேஷ சரீர உபாதிகளிலும் அந்த, அந்தப் பெயர் பெற்றவனாக ஆகிறான். இவ்வாறு சதுர்முகப் பிரஹ்மா தொடங்கி ஸ்தம்பபரியந்தமாய் உள்ள எல்லாவற்றிலும் அந்த, அந்த நாமரூபத்தை அந்த பிரஹ்மம் லாபமாக அடைகிறது. அந்தப்பிரக்ஞானம் ஒன்றே எல்லா உபாதி பேதங்களால் மாறுபட்டதாயும், எல்லா பிராணிகளாலும் தார்கிகர்களாலும், பலப்பிரகாரமாய் அறியப்பட்டு பலவாறாக கல்பிக்கப்படுகிறது. “एतमेके वदन्त्यग्निं मनुमन्ये प्रजापतिम्। इन्द्रमेकऽपरे प्राणमपरे ब्रह्म शाश्वतम्” இந்த பிரக்ஞான ஸ்வரூபத்தை சிலர் அக்னி என்றும் மற்றும் சிலர் மனது என்றும், சிலர் பிரஜாபதி என்றும், மற்றொரு சாரார் இந்திரன் என்றும், வேறுசிலர் பிராணன் என்றும் இந்த சாஸ்வதமான பிரஹ்மத்தை பலவாறாக கூறுவர் என்பன போன்ற ஸ்மிருதி வாக்கியங்கள் இதையே விளக்குகின்றன.
स एतेन प्रज्ञेनात्मनास्माल्लोकादुत्क्रम्यामुष्मिन्स्वर्गे लोके सर्वान्कामानाप्त्वामृतः समभवत्समभवत् ॥ ४ ॥ इति पञ्चमः खण्डः ॥
स वामदेवोऽन्यो वा एवं यथोक्तं ब्रह्म वेद प्रज्ञेनात्मना, येनैव प्रज्ञेन आत्मना पूर्वे विद्वांसोऽमृता अभूवन् तथा अयमपि विद्वान् एतेनैव प्रज्ञेन आत्मना अस्मात् लोकात् उत्क्रम्येत्यादि व्याख्यातम् । अस्माल्लोकादुत्क्रम्य अमुष्मिन् स्वर्गे लोके सर्वान्कामान् आप्त्वा अमृतः समभवत्समभवदित्योमिति ॥
(ச.பா) அந்த வாம தேவரானவர் முற்கூறப்பட்ட அந்த பிரக்ஞான ஸ்வரூபத்தை பிரஹ்மமாக உணர்ந்து அந்த பிரக்ஞான ஆத்மாவினால் முந்தைய வித்வான்கள் எவ்வாறு அம்ருத ஸ்வரூபத்தை அடைந்தார்களோ அவ்வாறே இந்த வாமதேவரான வித்வானும், இந்த பிரக்ஞான ஆத்மாவாக இந்த லோகத்திலிருந்து வெளிக்கிளம்பினார். என்பன போன்ற இவையாவும் முன்பே விவரிக்கப்பட்டதே, இந்த லோகத்திலிருந்து வெளிக்கிளம்பி தன் ஸ்வரூபமாகிற லோகத்தில் அவாப்த சமஸ்த்தகாமனாய், அம்ருத ஸ்வரூபனாய் ஆனார் என்று ஓம்.
इति पञ्चमखण्डभाष्यम् ॥