अस्मिन्नध्याये एष वाक्यार्थः — जगदुत्पत्तिस्थितिप्रलयकृदसंसारी सर्वज्ञः सर्वशक्तिः सर्ववित्सर्वमिदं जगत्स्वतोऽन्यद्वस्त्वन्तरमनुपादायैव आकाशादिक्रमेण सृष्ट्वा स्वात्मप्रबोधनार्थं सर्वाणि च प्राणादिमच्छरीराणि स्वयं प्रविवेश ; प्रविश्य च स्वमात्मानं यथाभूतमिदं ब्रह्मास्मीति साक्षात्प्रत्यबुध्यत ; तस्मात्स एव सर्वशरीरेष्वेक एवात्मा, नान्य इति । अन्योऽपि ‘स म आत्मा ब्रह्मास्मीत्येवं विद्यात्’ इति
‘आत्मा वा इदमेक एवाग्र आसीत्’ (ऐ. उ. १ । १ । १) ‘ब्रह्म ततमम्’ (ऐ. उ. १ । ३ । १३) इति चोक्तम् । अन्यत्र च
(ச.பா) இந்த நான்காவது அத்தியாயத்தில் கூறப்பட்ட பொருள் என்னவெனில் ஜகத்தினுடைய உற்பத்தி, ஸ்திதி, லயம் இவைகளை செய்பவனாயும், ஆனால் அதேசமயம் அசம்சாரியாயும், சர்வக்ஞனாயும் எல்லாசக்தியும் படைத்தவனாயும், எல்லாவற்றையும் அறிந்தவனாயும், எல்லா இந்த ஜகத்தும் தன்னைக்காட்டிலும் வேறு வஸ்துவாய் இன்றி தன்னையே உபாதானமாகக் கொண்டு ஆகாசம் முதலான கிரமப்படி ஸ்ருஷ்டித்து தன்னுடைய ஆத்ம பிரபோதத்திற்காக பிராணனுடன் கூடிய எல்லா சரீரங்களிலும் நுழைந்தார். அவ்வாறு நுழைந்தபின்பும், தன்னுடைய ஆத்மா முன்போலவே பிரஹ்மமாய் இருக்கிறது. அதாவது நான் பிரஹ்மமாய் இருக்கிறேன் என்று சாக்ஷாத்தாக அறியவும் செய்தது. ஆகையால் அவனே எல்லா சரீரங்களிலும் ஒரே ஆத்மாவாக விளங்குகிறான். அவரைத் தவிர வேறு ஒருவன் இல்லை என்பது உறுதியாயிற்று. ஆத்மாவிற்கு சமமான மற்றொரு ஆத்மா இல்லை என்பதை விளக்குவதற்காகவே “इदं एकं एव अग्र आसीत्” என்று கூறப்பட்டது. “ब्रह्मततमम्” பிரஹ்மமாகவே எங்கும் விரிந்து, பரந்து உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
सर्वगतस्य सर्वात्मनो वालाग्रमात्रमप्यप्रविष्टं नास्तीति कथं सीमानं विदार्य प्रापद्यत पिपीलिकेव सुषिरम् ।
(ச.பா) (பூர்வ) மேலும் வேறு இடங்களில் எங்கும் நிறைந்தவனாய், சர்வாத்மாவாய், இருப்பவனின் வால் மட்டும் நுழையவில்லை என்று பொருள் கொண்டுவிடக்கூடாது என்றே சீமாவை பிளந்துகொண்டு உள்ளே நுழைந்தார் என்று கூறப்பட்டது. அது எதுபோல் எனில் எறும்பு பொந்தில் நுழைவது போல்.
नन्वत्यल्पमिदं चोद्यम् । बहु चात्र चोदयितव्यम् । अकरणः सन्नीक्षत । अनुपादाय किञ्चिल्लोकानसृजत । अद्भ्यः पुरुषं समुद्धृत्यामूर्छयत् । तस्याभिध्यानान्मुखादि निर्भिन्नं मुखादिभ्यश्चाग्न्यादयो लोकपालाः । तेषां चाशनायादिसंयोजनं तदायतनप्रार्थनं तदर्थं गवादिप्रदर्शनं तेषां च यथायतनप्रवेशनं सृष्टस्यान्नस्य पलायनं वागादिभिस्तज्जिघृक्षेति । एतत्सर्वं सीमाविदारणप्रवेशसममेव ॥
(ச.பா) (சித்தாந்தீ) மேலும் இது மிகவும் சிறிய கேள்வி. இங்கு மிகவும் கேட்கப்பட வேண்டியது உள்ளது. கரணமற்றவனாய் இருந்துகொண்டு பார்ப்பவனாயும், எந்த உபாதானமும் இன்றி தண்ணீரிலிருந்து சில லோகங்களையும் அவ்வாறே தண்ணீர்மயமான நிலையிலிருந்து புருஷனை எடுத்து ஒரு உருவத்தை உண்டாக்கினார். அவருடைய தியான மாத்திரத்தால் முகம் முதலான துவாரங்கள் பிளவுபட்டன. அவ்வாறு பிளவுபட்ட முகம் முதலான துவாரங்களிலிருந்து அக்னி முதலான லோகபாலர்களும் அவர்களுக்கு உணவு, தாகம் முதலியவைகளை கற்பித்து இணைத்தலும் ஏற்பட்டது. அவைகள் தாம் வாழ ஒரு இடத்தைப் பிரார்த்திக்க அதற்காக பசு முதலான ரூபங்களைக் காட்டிலும் அதில் அவைகள் தன் இருப்பிடத்தில் நுழைந்ததும், அவ்வாறு படைக்கப்பட்டவைகளுக்காக படைக்கப்பட்ட அன்னங்கள் ஓடுதலும் அவைகளை வாக் முதலிய இந்திரிய வியாபாரங்களால் பற்ற முயன்றதும் கூறப்பட்டது. இவையாவும், வகுட்டின் மத்தியில் பிளந்துகொண்டு உள்ளே ஜீவாத்மாவாய் நுழைந்ததற்கு சமானமானவையே.
अस्तु तर्हि सर्वमेवेदमनुपपन्नम् ।
(ச.பா) (பூர்வ) இருக்கட்டும், இவையாவும் பொருந்தாதவையே என்று கூறுவானேயானால்
न, अत्रात्माववोधमात्रस्य विवक्षितत्वात्सर्वोऽयमर्थवाद इत्यदोषः । मायाविवद्वा ; महामायावी देवः सर्वज्ञः सर्वशक्तिः सर्वमेतच्चकार सुखावबोधप्रतिपत्त्यर्थं लोकवदाख्यायिकादिप्रपञ्च इति युक्ततरः पक्षः । न हि सृष्ट्याख्यायिकादिपरिज्ञानात्किञ्चित्फलमिष्यते । ऐकात्म्यस्वरूपपरिज्ञानात्तु अमृतत्वं फलं सर्वोपनिषत्प्रसिद्धम् । स्मृतिषु च गीताद्यासु
‘समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरम्’ (भ. गी. १३ । २७) इत्यादिना ।
(ச.பா) (சித்தாந்தீ) அது அவ்வாறல்ல. இவையாவும் இங்கு ஆத்மா அவபோதனத்திற்கு மாத்திரமே விவக்ஷிக்கப்பட்டதால் இவையாவும் அர்த்தவாதம் என்பதால் தோஷம் ஆகாது. மாயாவி போல் பெரிய மாயாவியாக உள்ள தேவன், எல்லாம் அறிந்தவன். எல்லா சக்தியும் படைத்தவன். இதை யாவற்றையும் செய்தான் என்று கூறுவது சுகமாய் பிரஹ்மத்தை அவபோதனம் அடைவதற்காக ஆகும். எனவேதான் உலகத்தில் கூறப்படும் கதைகள் போல் இதுவும் கூறப்பட்டது என்பது மிகவும் உக்தமான பக்ஷமாகும். சிருஷ்ட்டி முதலிய கிரமத்தையோ அல்லது அவைகளைப் பற்றி அறிவதனாலோ எவ்வித பயனும் கிடைப்பது இல்லை. ஆத்மாவின் ஏகத்துவ சொரூபத்தை அறிவதால் ஏற்படும் அம்ருதத்துவம் என்ற பலமே எல்லா உபநிஷத்திலும் பிரசித்தமானது. ஸ்மிருதிகளான கீதை முதலானவைகளில் “समं सर्वेषु भूतेषु तिष्द्भन्तं परमेश्वरम्” எல்லா பூதங்களிலும் சமானமாய் இருக்கக்கூடிய பரமேஸ்வரனை அறிவோம் என்பது போன்ற வாக்கியங்களாலும் இந்த தத்துவமே உணர்த்தப்படுகிறது.
ननु त्रय आत्मानो भोक्ता कर्ता संसारी जीव एकः सर्वलोकशास्त्रप्रसिद्धः । अनेकप्राणिकर्मफलोपभोगयोग्यानेकाधिष्ठानवल्लोकदेहनिर्माणेन लिङ्गेन यथाशास्त्रप्रदर्शितेन पुरप्रासादादिनिर्माणलिङ्गेन तद्विषयकौशलज्ञानवांस्तत्कर्ता तक्षादिरिव ईश्वरः सर्वज्ञो जगतः कर्ता द्वितीयश्चेतन आत्मा अवगम्यते ।
‘यतो वाचो निवर्तन्ते’ (तै. उ. २ । ४ । १) ‘नेति नेति’ (बृ. उ. ३ । ९ । २६) इत्यादिशास्त्रप्रसिद्ध औपनिषदः पुरुषस्तृतीयः । एवमेते त्रय आत्मानोऽन्योन्यविलक्षणाः । तत्र कथमेक एवात्मा अद्वितीयः असंसारीति ज्ञातुं शक्यते ?
(ச.பா) (பூர்வ) மேலும் ஜீவன் ஈஸ்வரன் நிர்விசேஷப் பிரஹ்மா என்று மூன்று ஆத்மாக்கள். போக்த்தா, கர்த்தா, சம்சாரி என்பவன் ஜீவன் என்று சர்வலோகத்திலும் உள்ள சாஸ்திரங்களில் பிரசித்தமாகும். அநேக பிராணிகளின் கர்மபல போகத்திற்கு யோக்கியமான அநேக அதிஷ்ட்டானங்கள் போல் உலக இயல்படி தேக நிர்மானம் என்ற காரணத்தால் சாஸ்த்திரத்தில் காட்டியபடி விளக்கப்பட்டு உள்ளது. பட்டணம், உப்பரிகைகள் மாளிகைகள் இவைகளைப் படைக்கும் காரணத்தால், அந்த கட்டிட விஷயமான விசேஷ புத்திக்ஞானத்தை உடைய கொத்தன், தச்சன், இவர்களைப் போன்று ஈஸ்வரன் சர்வக்ஞனாயும், ஜகத்திற்கு கர்த்தாவாயும், இரண்டாவது சேதன ஆத்மா போல் புரிந்து கொள்ளப்படுகிறான். “यतो वाचो निवर्तन्ते” “नेति नेति” எவ்விடத்தை எட்ட முடியாது வாக்குகள் திரும்புகின்றனவோ, இது அல்ல. இது அல்ல என்பது போன்ற வாக்கியங்களினால் சாஸ்திரங்களில் பிரசித்தமான உபநிஷத்துக்களால் பிரதிபாதனம் செய்யப்பட்ட புருஷன் மூன்றாமவன். இவ்வாறு இந்த மூன்று ஆத்மாக்களும் ஒன்றுக்கொன்று விலக்ஷணமானவை. இங்கு எவ்வாறு ஒரே ஆத்மாவாயும், தனக்கு இரண்டாவது அற்றவனாயும் அசம்சாரியாயும் உள்ள ஆத்மா அறியமுடியும். அங்கு ஜீவன்தான் எவ்வாறு அறியமுடியும்?
तत्र जीव एव तावत्कथं ज्ञायते ?
(ச.பா) (சித்தாந்தீ) இங்கு ஜீவன்தான் இவ்வாறு அறியப்படுகிறது. எவ்வாறு எனில்.
नन्वेवं ज्ञायते श्रोता मन्ता द्रष्टा आदेष्टाघोष्टा विज्ञाता प्रज्ञातेति ।
(ச.பா) (பூர்வ) கேட்பவன், நினைப்பவன், பார்ப்பவன், கட்டளையிடுபவன், கோசம் செய்பவன், விக்ஞானத்தால் அறிபவன், பிரக்ஞானத்தால் அறிபவன் என்று அறியப்படுகிறது.
(ச.பா) (சித்தாந்தீ) மேலும் ஒன்றுக்கொன்று முரண்பாடாகவும் அறியப்படுகிறது சிரவணாதி கருத்திருவத்தால் எண்ணப்பட்டவனாயும். மனனம் செய்பவன் விக்ஞானம் அற்றவனாயும், சில சமயம் விக்ஞானவனாயும் அறியப்படுகிறான். அவ்வாறு அல்ல. புத்தியை எண்ணுபவனாயும் அவ்வாறு எண்ணுபவன் விக்ஞானத்தை அறியாதவனாயும் இருக்கிறான் என்பதை அறிவாயாக என்பன போன்ற வாக்கியங்களால் இது முரன்பாடாகவே தோன்றுகிறது.
सत्यं विप्रतिषिद्धम् , यदि प्रत्यक्षेण ज्ञायेत सुखादिवत् । प्रत्यक्षज्ञानं च निवार्यते
‘न मतेर्मन्तारम्’ (बृ. उ. ३ । ४ । २) इत्यादिना । ज्ञायते तु श्रवणादिलिङ्गेन ; तत्र कुतो विप्रतिषेधः ।
(ச.பா) (பூர்வ) சத்யம். (ஆத்மா) சுகம் முதலானவைகள் போல் பிரத்தியக்ஷ ஞானத்தால் அறியப்படுமேயானால். அப்பொழுது பிரத்தியக்ஷ ஞானமானது “न मतेर्मन्तारम् मन्वीथाः” (ந மதேர்மந்தாரம் மந்வீதா:) ஒன்றை வேறோன்றாக பார்த்தல் என்பன போன்ற வாக்கியங்களால் நிவராணம் செய்யபடுவதும் இல்லை. சிரவணம் முதலான ஹேதுக்களால் அங்கு எங்கோ ஓர் இடத்தில் விரோதம் இல்லாமல் எவ்வாறு இருக்கும்?
ननु श्रवणादिलिङ्गेनापि कथं ज्ञायते, यावता यदा शृणोत्यात्मा श्रोतव्यं शब्दम् , तदा तस्य श्रवणक्रिययैव वर्तमानत्वान्मननविज्ञानक्रिये न सम्भवत आत्मनि परत्र वा । तथा अन्यत्रापि मननादिक्रियासु । श्रवणादिक्रियाश्च स्वविषयेष्वेव । न हि मन्तव्यादन्यत्र मन्तुः मननक्रिया सम्भवति ।
(ச.பா) (சித்தாந்தீ) மேலும் சிரவணம் முதலான ஹேதுக்களால் எப்பொழுது ஆத்மாவானவன் கேட்க வேண்டிய சப்தத்தைக் கேட்கிறான் என்று கூறப்பட்டதால் அப்பொழுது அவனுக்கு சிரவணம் என்ற செயலே உள்ளதால் மனனம் விக்ஞானம் என்ற செயல்கள் ஆத்மாவிலோ அல்லது வேறு இடத்திலோ ஏற்படுவது இல்லை. அவ்வாறே வேறு பல எண்ணுதல் போன்ற காரியங்களில் சிரவணம் முதலான காரியங்கள் தன்னுடைய விஷயத்திலேயே இருக்கின்றனவே அன்றி மற்ற விஷயங்களில் ஏற்படுவது இல்லை. நிலுனப்பவனுக்கு நினைத்தல் என்ற மனனக்கிரியையைத் தவிர வேறு ஏதும் சம்பவிப்பது இல்லை.
ननु मनसः सर्वमेव मन्तव्यम् ।
(ச.பா) (பூர்வ) மேலும் மனதாலேயே எல்லாம் நினைக்கத்தக்க (மனனம் செய்யத்தக்க) தாகும்.
सत्यमेवम् ; तथापि सर्वमपि मन्तव्यं मन्तारमन्तरेण न मन्तुं शक्यम् ।
(ச.பா) (சித்தாந்தீ) சத்தியம் (உண்மை) அது அவ்வாறே இருப்பினும் நினைக்கத்தகுந்தயாவும், நினைப்பவன் ஒருவன் இன்றி நினைக்க முடியாதவையாகும்.
यद्येवं किं स्यात् ?
(ச.பா) (பூர்வ) அவ்வாறு எனில் என்ன ஏற்படும்.?
इदमत्र स्यात् — सर्वस्य योऽयं मन्ता, स मन्तैवेति न स मन्तव्यः स्यात् । न च द्वितीयो मन्तुर्मन्तास्ति । यदा स आत्मनैव मन्तव्यः, तदा येन च मन्तव्य आत्मा आत्मना, यश्च मन्तव्य आत्मा, तौ द्वौ प्रसज्येयाताम् । एक एव आत्मा द्विधा मन्तृमन्तव्यत्वेन द्विशकलीभवेद्वंशादिवत् , उभयथाप्यनुपपत्तिरेव । यथा प्रदीपयोः प्रकाश्यप्रकाशकत्वानुपपत्तिः, समत्वात् , तद्वत् ।
(ச.பா) (சித்தாந்தீ) கூறப்போவதே ஏற்படும். இவையாவற்றையும் எவன் ஒருவன் நினைக்கிறானோ, அவன் நினைப்பவனாக அறிகிறானே அன்றி, நினைக்கத்தக்கவனாக ஆவது இல்லை. எண்ணுபவனை எண்ணக்கூடிய இரண்டாவது ஒருவன் இல்லை. எப்பொழுது அவன் ஆத்மாவினாலேயே எண்ணத்தக்கவனாக ஆகிறானோ அப்பொழுது எதனால் அவன் எண்ணப்படுகிறானோ அப்பொழுது ஆத்மாவினாலேயே ஆத்மா எண்ணப்பட்டதாக ஆகிறது. அப்பொழுது எண்ணும் (நினைக்கும்) ஆத்மா, நினைக்கப்படும் ஆத்மா என்று இரண்டு ஆத்மாக்கள் ஏற்படும். ஒரே ஆத்மா நினைப்பவன், நினைக்கப்படுபவன் என்று மூங்கில் பிளப்பது போல் இரண்டாக பிளவுபடுகிறான் என்று கூறுவதும் பொருந்தாது. இவ்விரண்டுமே பொருத்தமற்றது. எவ்வாறு எனில் தீ பந்தத்திற்கு பிரகாசிக்கும் தன்மை, பிரகாசப்படுத்தும் தன்மை இரண்டுமே ஒரே சமானமாய் இருப்பதால் அதை அநுபபத்தி என்று கூறினோமோ அவ்வாறே இங்கும் அநுபபத்தி ஏற்படும்.
न च मन्तुर्मन्तव्ये मननव्यापारशून्यः कालेऽस्त्यात्ममननाय । यदापि लिङ्गेनात्मानं मनुते मन्ता, तदापि पूर्ववदेव लिङ्गेन मन्तव्य आत्मा, यश्च तस्य मन्ता, तौ द्वौ प्रसज्येयाताम् ; एक एव वा द्विधेति पूर्वोक्तो दोषः । न प्रत्यक्षेण, नाप्यनुमानेन ज्ञायते चेत् , कथमुच्यते
‘स म आत्मेति विद्यात्’ (कौ. उ. ३ । ९) इति, कथं वा श्रोता मन्तेत्यादि ?
(ச.பா) மேலும் நினைப்பவனுக்கு நினைக்கும் (மனனம் செய்யும்) விஷயத்தில் மனன வியாபார சூன்யமான காலமானது இல்லை, ஆத்மா சொரூப மனனத்திற்கு அவனுக்கு மனனமற்ற(நினைப்பு அற்ற) காலம் இல்லை. எப்பொழுதாவது மிகவும் சூக்ஷ்மமாக ஆத்மாவை எண்ணுபவன் நினைக்கிறான் என்று கூறினாலும் முன்போலவே எந்த சூக்ஷ்மமான ஆத்மா நினைக்கத்தக்கதாக உள்ளதோ இந்நிலையிலும், ஆத்மா அதை நினைப்பவன், என்ற இரண்டும் மறுபடியும் ஏற்படும். அவன் ஒருவனேயா? அல்லது இரண்டாகப் பிரிந்தவனா என்ற முற்கூறப்பட்ட தோஷம் ஏற்படும். ஆத்மாவானவன் பிரத்தியக்ஷத்தாலோ அநுமானத்தாலோ அறியப்படாமல் போவானேயானால் அவனை ஒரே சமானமான ஆத்மா அறியத்தக்கவன் என்று கூறியது எவ்வாறு பொருந்தும்? எவ்வாறு சுரோதா, மந்தா என்று கூறியவையும் பொருந்தும்?
ननु श्रोतृत्वादिधर्मवानात्मा, अश्रोतृत्वादि च प्रसिद्धमात्मनः ; किमत्र विषमं पश्यसि ?
(ச.பா) (பூர்வ) மேலும் சுரோத்திருத்துவம் முதலான தருமங்களுடன் கூடிய ஆத்மாவிற்கு சுரோத்திருத்துவம் முதலானவைகள் பிரசித்தமாகவே உள்ளன. இங்கு என்ன வேறுபாட்டைக் காண்கிறாய்?
यद्यपि तव न विषमम् ; तथापि मम तु विषमं प्रतिभाति । कथम् ? यदासौ श्रोता, तदा न मन्ता ; यदा मन्ता, तदा न श्रोता । तत्रैवं सति, पक्षे श्रोता मन्ता, पक्षे न श्रोता नापि मन्ता । तथा अन्यत्रापि च ।
(ச.பா) (சித்தாந்தீ) நீ எந்த மாறுபாட்டை காணவில்லை என்று கூறினாலும், அங்கு ஏதோ மாறுபாடு (விஷமம்) எனக்கு தோன்றுகிறது. அது எவ்வாறு எனில் எப்பொழுது இவன் சுரோதாவாக இருக்கிறானோ அப்பொழுது அவன் மந்தாவாக இருப்பது இல்லை. எப்பொழுது மந்தாவாக இருக்கிறானோ அப்பொழுது சுரோதாவாகவும் இருப்பதும் இல்லை. இந்த பக்ஷத்தில் சுரோதா, மந்தாவாக இருப்பது இல்லை. மந்தா சுரோதாவாக இருப்பது இல்லை என்பது ஆயிற்று. அவ்வாறே மற்ற இடங்களிலும் ஏற்படுகிறது.
यदैवम् , तदा श्रोतृत्वादिधर्मवानात्मा अश्रोतृत्वादिधर्मवान्वेति संशयस्थाने कथं तव न वैषम्यम् ? यदा देवदत्तो गच्छति, तदा न स्थाता, गन्तैव । यदा तिष्ठति, न गन्ता, स्थातैव ; तदास्य पक्ष एव गन्तृत्वं स्थातृत्वं च, न नित्यं गन्तृत्वं स्थातृत्वं वा, तद्वत् ।
(ச.பா) சுரோத்திருத்துவ தர்மவானாய் ஆத்மா இருக்கிறானா அல்லது அச்ஸ்ரோத்திருத்துவ தர்மவானாய் ஆத்மா இருக்கிறானா என்ற சம்சயம் வரும்பொழுது உனக்கும் அந்த மாறுபாடு எவ்வாறு தோன்றாமல் போகும். எப்பொழுது தேவதத்தன் செல்கிறானோ அப்பொழுது அவன் நிற்பவனாய் இல்லை. செல்பவனாகவே இருக்கிறான். எப்பொழுது தேவதத்தன் நிற்கிறானோ அப்பொழுது அவன் செல்பவனாக இல்லை. நிற்பவனாகவே இருக்கிறான். இந்தப் பக்ஷத்தில் செல்லும் தன்மையும், நிற்கும் தன்மையும் நித்தியமானவைகள் அல்ல. அதேபோல் மறுபக்ஷத்திலும் கொள்ளத்தக்கது.
तथैवात्र काणादादयः पश्यन्ति । पक्षप्राप्तेनैव श्रोतृत्वादिना आत्मोच्यते श्रोता मन्तेत्यादिवचनात् । संयोगजत्वमयौगपद्यं च ज्ञानस्य ह्याचक्षते । दर्शयन्ति च अन्यत्रमना अभूवं नादर्शम् इत्यादि युगपज्ज्ञानानुत्पत्तिर्मनसो लिङ्गमिति च न्याय्यम् ।
(ச.பா) இங்கு கணாதர் முதலானவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். ஒரு பக்ஷத்தால் அடைந்த சுரோத்திருத்துவம் முதலானவைகளால் ஆத்மா கூறப்படுகிறது. சுரோதா, மந்தா என்பவைகளால், இவைகளின் இணைப்பால் ஞானம் ஒரே சமயத்தில் இரண்டு ஞானங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அது பொருந்துவதும் இல்லை. அவர்களே கூறுகின்றனர். நான் வேறு எங்கோ நினைவாக இருந்தேன் இதைப் பார்க்கவில்லை என்று, ஒரே சமயத்தில் மனதிற்கு இரண்டு ஞானங்கள் சூக்ஷ்மமாய் ஏற்படுகின்றன என்று கூறுவதும் நியாயமாகாது என்று கூறுவதும் சரியல்ல.
भवत्वेवं किं तव नष्टं यद्येवं स्यात् ?
(ச.பா) (பூர்வ) இரண்டு ஞானங்கள் ஒரே சமயத்தில் ஏற்படுவதில் உனக்கு என்ன நஷ்ட்டம்.?
अस्त्वेवं तवेष्टं चेत् ; श्रुत्यर्थस्तु न सम्भवति ।
(ச.பா) (சித்தாந்தீ) உனக்கு நஷ்ட்டம் இல்லையெனில் எனக்கு எந்த ஆக்ஷபேனையும் இல்லை. ஆனால் சுருதியின் அர்த்தமானது அவ்வாறு பொருள் கொள்ள இடம் தரவில்லை.
किं न श्रोता मन्तेत्यादिश्रुत्यर्थः ?
(ச.பா) (பூர்வ) சுரோதாவாய் இருப்பவன் மந்தாவாய் இருப்பது இல்லை என்பதே சுருத்யர்த்தமாகும்.
न, न श्रोता न मन्तेत्यादिवचनात् ।
(ச.பா) (சித்தாந்தீ) அது அல்வாறு அல்ல, வேதமே சுரோதாவாகவும் இல்லை. அவன் மன்தாவாகவும் இல்லை என்று கூறுகிறது. சுரோதாவாகவும் இல்லை. மந்தாவாகவும் இல்லை என்ற வசனங்களால் முற்கூறப்பட்டது விளக்கப்பட்டதாகும்.
ननु पाक्षिकत्वेन प्रत्युक्तं त्वया ;
(ச.பா) (பூர்வ) மேலும் பூர்வபக்ஷியான உன்னால் ஒரு பக்ஷத்தை அனுசரித்தே கூறப்பட்டதே அன்றி அது நித்தியாமாக உன்னால் கூறப்படவில்லை.
(ச.பா) (சித்தாந்தீ) ஏன்எனில் நீ சுரோத்திருத்துவம் முதலான தர்மங்களை ஏற்றுக்கொண்டுள்ளாய். சுருதிகளில் கேட்பவனுக்கு கேட்கப்படும் விஷயத்திலிருந்து மாறுபாடு இல்லை. “न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते” கேட்பவனுக்கும், கேட்கும் விஷத்திற்கும். மாறுபாடு இல்லை. என்ற சுருதிவாக்கியங்கள் உள்ளன. கேட்பதற்கும். கேட்கும் தர்மத்திற்கும் அநித்தியம் என்று கூறுதல் சுருதிக்கு விரோதமாகும்.
एवं तर्हि नित्यमेव श्रोतृत्वाद्यभ्युपगमे, प्रत्यक्षविरुद्धा युगपज्ज्ञानोत्पत्तिः अज्ञानाभावश्चात्मनः कल्पितः स्यात् । तच्चानिष्टमिति ।
(ச.பா) (பூர்வ) இவ்வாறு இருப்பின் சுரோத்திருத்துவம் முதலானவைகளை நித்தியம் என அங்கீகரிப்போமானால் அது பிரத்தியக்ஷத்திற்கு விரோதமாயும், ஒரே சமயத்தில் ஞானோத்பத்தியும், அக்ஞானத்தின் இன்மையும் ஆத்மாவிற்கு கல்பிக்கப்பட்டதாக ஆகும்.. அநிஷ்ட்டமானதே.
नोभयदोषोपपत्तिः, आत्मनः श्रुत्यादिश्रोतृत्वादिधर्मवत्त्वश्रुतेः । अनित्यानां मूर्तानां च चक्षुरादीनां दृष्ट्याद्यनित्यमेव संयोगवियोगधर्मिणाम् । यथा अग्नेर्ज्वलनं तृणादिसंयोगजत्वात् , तद्वत् । न तु नित्यस्यामूर्तस्यासंयोगविभागधर्मिणः संयोगजदृष्ट्याद्यनित्यधर्मवत्त्वं सम्भवति । तथा च श्रुतिः
‘न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते’ (बृ. उ. ४ । ३ । २३) इत्याद्या । एवं तर्हि द्वे दृष्टी चक्षुषोऽनित्या दृष्टिः, नित्या चात्मनः । तथा च द्वे श्रुती श्रोत्रस्यानित्या, नित्या चात्मस्वरूपस्य । तथा द्वे मती विज्ञाती बाह्याबाह्ये । एवं ह्येव चेयं श्रुतिरुपपन्ना भवति — ‘दृष्टेर्द्रष्टा श्रुतेः श्रोता’ इत्याद्या ।
(ச.பா) (சித்தாந்தீ) முற்கூறப்பட்ட கேட்டல் முதலான தர்மத்துடன் கூடிய சுருதி வாக்கியங்களால் ஆத்மாவிற்கு முற்சொன்ன இரண்டு தோஷங்கள் ஏற்படுவது இல்லை. ஏன்எனில் அநித்தியங்களாயும். மூர்த்தங்களாயும் உள்ள சக்ஷுஸ் முதலானவைகளுக்குப் பார்த்தல் (பார்வை) முதலான சம்யோக, வியோக தர்மங்கள் அநித்தியமானவையே. எவ்வாறு எனில் புல் முதலானவைகளின் சேர்க்கையால் அக்னியின் ஜ்வலனம், எவ்வாறு அநித்தியமோ அவ்வாறே இவையும் அநித்தியமானவையே. சம்யோகமில்லாத தர்மத்தை உடையதாயும், அமூர்த்தமாயும் நித்தியமாயும் உள்ள (ஆத்மாவிற்கு) சம்யோகத்தால் உண்டாகும் திருஷ்ட்டி முதலான அநித்திய தர்மத்துடன் கூடியிருக்கும் தன்மை ஏற்படாது. இதையே சுருதி கூறகிறது. “न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते” பார்வையாகவே உள்ளவனுக்கு பார்வையில் மாறுபாடு ஏற்படுவது இல்லை. என்று கூறுகிறது. இவ்வாறு இருப்பின் இரண்டு திருஷ்ட்டிகள் ஏற்படும் கண்ணின் பார்வை அநித்தியமானது. ஆத்மாவின் பார்வை நித்தியமானது என்று, அவ்வாறே இரண்டு கேட்டலும் ஏற்படும். சிரவணேந்திரியத்தால் கேட்டல் அநித்தியமும், ஆத்மஸ்வரூபத்தின் சிரவணம் நித்தியமும் ஆகும். அவ்வாறே இரண்டு புத்திகள் ஏற்படும் வெளியில் இருப்பதை அறிவது ஒன்று. ஆந்தரத்தில் அறிவது ஒன்று. இதனாலேயே கீழ்க்கண்ட சுருதி வாக்கியமானது ஏற்பட்டது. “दृष्टेर्द्रष्टा श्रुतेः श्रोता” பார்வை, பார்ப்பவன், சிரவணத்தை சிரவணம் செய்பவன் என்ற வாக்கியங்கள் தோன்றின.
लोकेऽपि प्रसिद्धं चक्षुषस्तिमिरागमापाययोः नष्टा दृष्टिः जाता दृष्टिः इति चक्षुर्दृष्टेरनित्यत्वम् । तथा च श्रुतिमत्यादीनामात्मदृष्ट्यादीनां च नित्यत्वं प्रसिद्धमेव लोके । वदति ह्युद्धृतचक्षुः स्वप्नेऽद्य मया भ्राता दृष्ट इति । तथा अवगतबाधिर्यः स्वप्ने श्रुतो मन्त्रोऽद्येत्यादि । यदि चक्षुःसंयोगजैवात्मनो नित्या दृष्टिस्तन्नाशे नश्येत् , तदा उद्धृतचक्षुः स्वप्ने नीलपीतादि न पश्येत् ।
‘न हि द्रष्टुर्दृष्टेः’ (बृ. उ. ४ । ३ । २३) इत्याद्या च श्रुतिः अनुपपन्ना स्यात् । ‘तच्चक्षुः पुरुषे येन स्वप्नं पश्यति’ इत्याद्या च श्रुतिः ।
(ச.பா) உலகியலிலும் கூட கண்ணிற்கு திரைபடரும் காலத்தில் பார்வை நஷ்ட்டமடைந்ததாக ஆகிறது. அப்பொழுது பார்வை நஷ்ட்டமாகிவிட்டது என்று கூறுவதால் கண்ணிற்கு பார்வை அநித்தியம் என்பது ஊர்ஜிதமாகியது. அவ்வாறே கேட்டல், நினைத்தல் ஆத்மாவினுடைய திருஷ்ட்டியில் ஆத்மாவைப் பொருத்தவரையில் நித்தியத்துவமும், வெளிப்பிரபஞ்ச விஷயத்தில் அநித்தியத்துவமும் ஏற்படுகிறது. அதனாலேயே உலகில் கூறுகிறான் கண்ணை நன்றாக மூடிக்கொண்டு தூங்கியபொழுது கனவில் என் அண்ணன், என்னால் பார்க்கப்பட்டான் என்று. அவ்வாறே செவிடன் கூறுகிறான். சொப்பனத்தில் நான் இந்த மந்திரத்தைக் கேட்டேன் என்று, சக்ஷீசின் சம்யோகத்தாலேயே ஆத்மாவிற்கு நித்திய திருஷ்டியானது ஏற்படுமேயானால் அந்த திருஷ்ட்டியின் சேர்க்கை இல்லாதபொழுது அதுவும் நாசத்தை அடையும், இந்நிலையில் கண்ணை மூடிக்கொண்டு சொப்பனம் பார்ப்பவன், நீலம், மஞ்சள், முதலானவைகளைப் பார்க்கமாட்டான். “न हि द्रष्टुर्दृष्टेः”பார்ப்பவனின், பார்வையாக இல்லை என்ற ஸ்ருதி வாக்கியங்களும் பொருந்தாதவையாக ஆவது இல்லை. “तच्चक्षुः पुरुषो येन स्वप्ने पश्यति” அதுவே புருஷனில் சக்ஷுஸ் ஆகிறது. அதனாலேயே சொப்பனத்தில் பார்க்கிறான் என்ற சுருதி வாக்கியங்கள் இதை விளக்குகின்றன.
नित्या आत्मनो दृष्टिर्बाह्यानित्यदृष्टेर्ग्राहिका । बाह्यदृष्टेश्च उपजनापायाद्यनित्यधर्मवत्त्वात् ग्राहिकाया आत्मदृष्टेस्तद्वदवभासत्वमनित्यत्वादि भ्रान्तिनिमित्तं लोकस्येति युक्तम् । यथा भ्रमणादिधर्मवदलातादिवस्तुविषयदृष्टिरपि भ्रमतीव, तद्वत् । तथा च श्रुतिः
‘ध्यायतीव लेलायतीव’ (बृ. उ. ४ । ३ । ७) इति । तस्मादात्मदृष्टेर्नित्यत्वान्न यौगपद्यमयौगपद्यं वा अस्ति ।
(ச.பா) நித்தியமான ஆத்மாவினுடைய திருஷ்ட்டி பாஹ்யமான அநித்திய திருஷ்ட்டிகளையும் கிரஹிக்கக் கூடியதே. பாஹ்ய திருஷ்ட்டிக்கு நிலைத்திருக்காமை முதலான தர்மங்கள் இருப்பதால் அதை கிரஹிக்கக்கூடிய ஆத்ம திருஷ்டிக்கு அவைகளைப் போலேயே ஆபாசகத்துவமும், அநித்தியம் முதலானவைகளும் லோகத்திற்கு பிராந்தி நிமித்தத்தால் உண்டானது என்பதே பொருத்தம். எவ்வாறு எனில் சுற்றுதல் போன்ற கொள்ளிக்கட்டையின் வஸ்து விஷயமான திருஷ்ட்டி கூட சுற்றுவது போல் தோன்றுகிறதோ அவ்வாறு இங்கும் கொள்ளவேண்டும். இதையே சுருதி கூறுகிறது. எண்ணுவது போல் இங்கும், அங்கும் அலைபாய்வது போல் என்று கூறுகிறது. எனவே ஆத்மதிருஷ்ட்டிக்கு நித்தியத்துவம் தீர்மானமானபடியால் அதற்கு ஒரே சமயத்தில் தோன்றுவதோ, தோன்றாமல் இருப்பதோ கிடையாது.
बाह्यानित्यदृष्ट्युपाधिवशात्तु लोकस्य तार्किकाणां च आगमसम्प्रदायवर्जितत्वात् अनित्या आत्मनो दृष्टिरिति भ्रान्तिरुपपन्नैव । जीवेश्वरपरमात्मभेदकल्पना च एतन्निमित्तैव । तथा अस्ति, नास्ति, इत्याद्याश्च यावन्तो वाङ्मनसयोर्भेदा यत्रैकं भवन्ति, तद्विषयाया नित्याया दृष्टेर्निर्विशेषायाः । अस्ति नास्ति, एकं नाना, गुणवदगुणम् , जानाति न जानाति, क्रियावदक्रियम् , फलवदफलम् , सबीजं निर्बीजम् , सुखं दुःखम् , मध्यममध्यम् , शून्यमशून्यम् , परोऽहमन्यः, इति वा सर्ववाक्प्रत्ययागोचरे स्वरूपे यो विकल्पयितुमिच्छति, स नूनं खमपि चर्मवद्वेष्टयितुमिच्छति, सोपानमिव च पद्भ्यामारोढुम् ; जले खे च मीनानां वयसां च पदं दिदृक्षते ;
‘नेति नेति’ (बृ. उ. ३ । ९ । २६) ‘यतो वाचो निवर्तन्ते’ (तै. उ. २ । ४ । १) इत्यादिश्रुतिभ्यः,
‘को अद्धा वेद’ (ऋ. सं. १ । ३० । ६) इत्यादिमन्त्रवर्णात् ॥
(ச.பா) பாஹ்யமாய் ஏற்படும், அநித்திய திருஷ்ட்டியானது லோகத்திற்கு உபாதிவசத்தால் ஏற்படுகிறது. தார்க்கிகரோவெனில் (நியாய சாஸ்திரக்காரர்கள்) ஆகமம், சம்பிரதாயம் என்று ஒன்றும் இல்லாததால் ஆத்மாவிற்கு அநித்திய திருஷ்ட்டி என்ற பிராந்தி அவர்களுக்குப் பொருத்தமானதே. ஜீவன், ஈஸ்வரன், பரமாத்மா என்ற பேதகல்பனை கேவலம் நிமித்தத்தால் ஏற்படுகிறது. எனவே இருக்கிறது, இல்லை என்ற வாக்கு, மனசு, இவைகளுடைய பேதங்கள் எதுவரை இருக்கிறதோ அதுவரை இந்த பேதங்களும் உண்டு. எங்கு திருஷ்ட்டி ரூபமாயும், நிர்விக்ஷமோயும், எங்கு ஒன்றாயும், நித்தியமாயும் உள்ள ஆத்மதிருஷ்டி ஏற்படுகிறதோ அங்கு இந்த பேதங்களும் அற்றுப்போகும். இருக்கிறது என்றும், இல்லை என்றும், அது ஒன்றே என்றும், பலவிதமானது என்றும், குணத்தோடு கூடியது என்றும், குணமற்றது என்றும், அறிகிறது என்றும், அறிவது இல்லை எனறும், செயலோடு கூடியது என்றும், செயலற்றது என்றும், பலத்தோடு கூடியது என்றும், பலமற்றது என்றும், பீஜத்தோடு கூடியது என்றும், பீஜமற்றது என்றும், சுகம் என்றும், துக்கம் என்றும், நடுவில் உள்ளது என்றும், நடுவில் இல்லாதது என்றும், சூன்யமானது என்றும், நான் எல்லாவற்றிற்கும் மேல்பட்டவன் என்றும், இவ்வாறு பலவாறாக, எல்லா வாக்குகளுக்கும் அப்பாற்பட்ட சொரூபத்தில் எவன் விகல்பிக்க எண்ணுகிறானோ அவன் நிச்சயமாக ஆகாசத்தை தோல்போல் சுருட்ட விரும்புகிறான், ஆகாசத்தில் ஒரு படியைக் கட்டிக்கொண்டு அதில் ஏறவிரும்புகிறான். தண்ணீரில் மீன்களின் கால்களையும், விண்ணில் பக்ஷிகளின் கால்களையும் காண விரும்புகிறான். ஏன் எனில் “நேதி, நேதி” என்றும் “यतो वाचो निवर्तन्ते” என்ற சுருதி வாக்கியங்களாலும் “को अद्धा वेद” எவன் அதை சாக்ஷாத் அறிகிறான் என்ற மந்திரங்களாலும் வர்ணிக்கப்பட்ட சொரூபத்தை விகல்பிக்க விரும்புபவன் முற்கூறப்பட்டவனே.
कथं तर्हि तस्य स म आत्मेति वेदनम् ; ब्रूहि केन प्रकारेण तमहं स म आत्मेति विद्याम् ।
(ச.பா) (பூர்வ) அவ்வாறு எனில் அவனுக்கு எவ்வாறு என்னுடைய ஆத்மா என்று உணர்வு ஏற்படுகிறது என்பதைக் கூறு. மேலும் எவ்வாறு எந்த பிரகாரத்தால் அதை நானாக (அதுவே என் ஆத்மா என்று) அறிய முடியும்.
अत्राख्यायिकामाचक्षते — कश्चित्किल मनुष्यो मुग्धः कैश्चिदुक्तः कस्मिंश्चिदपराधे सति धिक्त्वां नासि मनुष्य इति । स मुग्धतया आत्मनो मनुष्यत्वं प्रत्याययितुं कञ्चिदुपेत्याह — ब्रवीतु भवान्कोऽहमस्मीति । स तस्य मुग्धतां ज्ञात्वा आह — क्रमेण बोधयिष्यामीति । स्थावराद्यात्मभावमपोह्य न त्वममनुष्य इत्युक्त्वोपरराम । स तं मुग्धः प्रत्याह — भवान्मां बोधयितुं प्रवृत्तस्तूष्णीं बभूव, किं न बोधयतीति । तादृगेव तद्भवतो वचनम् । नास्यमनुष्य इत्युक्तेऽपि मनुष्यत्वमात्मनो न प्रतिपद्यते यः, स कथं मनुष्योऽसीत्युक्तोऽपि मनुष्यत्वमात्मनः प्रतिपद्येत ?
(ச.பா) (சித்தாந்தீ) இங்கு ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு முட்டாள் மனுஷ்யன் ஒரு சமயத்தில் ஏதோ ஒரு அபராதத்தைக் குறித்து நீ மனுஷ்யனே இல்லை என்று சொன்னார்கள். இதனால்தான் மனுஷ்யத் தன்மையை இழந்ததாக எண்ணிய அந்த முட்டாள் ஒருவனை அடைந்த தன் மனுஷ்யத் தன்மையை மறுபடியும் அடைவதற்கு வழி என்ன என்று கேட்டான். நீ யாராக இருக்கிறாய் என்று கூறு என்று அவர் திருப்பிக்கேட்டார். அதற்கு அவன் விழிக்கவே அவனுடைய முட்டாள் தனத்தை உணர்ந்த அவர் அவனுக்கு கிரமமாக போதிப்பேன் என்று தொடங்கி அவனுக்கு ஸ்தாவரம் முதலான தன்மைகள், அதன் பாவங்கள் உனக்கு இல்லை என்று கூறி புரியவைத்து சிறிது நேரம் சும்மா இருந்தார். அந்த நிலையில் அந்த முட்டாள் அவரைப் பார்த்து சொன்னான், தாங்கள் எனக்கு போதிக்க தொடங்கிவிட்டு இப்பொழுது ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டீரே என்றான். இத்தகையதே முற்கூறியவர்களின் வாக்கியங்கள். அவனுக்கு மனுஷ்யத்துவம் இல்லை என்று சொன்ன போதும் கூட அவனுடைய மனுஷ்யத்துவம் போவதும் இல்லை. அத்தகையவனுக்கு நீ மனுஷ்யனாய் இருக்கிறாய் என்று போதிக்கப்பட்டும் கூட அவன் தனக்கு மனுஷ்யத்துவம் இருப்பதை அறியப்போவதும் இல்லை.
(ச.பா) எனவே சாஸ்திரத்தால் உபதேசிக்கப்பட்ட மார்க்கமே ஆத்மா அவபோதத்திற்கு விதியாகும். இதற்கு வேறு மார்க்கம் கிடையாது. அக்னியின் தஹிக்கும் தன்மை, திரணத்தைக் காட்டிலும் வேறு ஒன்றாலும் வெளிப்படுத்த முடியாது. எனவே சாஸ்திரமானது ஆத்மஸ்வரூபத்தை போதிப்பதற்கு பிரவிர்த்ததாக ஆகி இவனுக்கு மனுஷ்யத்துவம் முதலானவைகளில் நிஷேதம் செய்வதின் வாயிலாக, நேதி, நேதி என்று கூறி ஓய்வுபெற்றது. எனவே ஆந்திரமாயும், பாஹ்யமற்றதாயும் உள்ள ஆத்மாவான பிரஹ்ம சொரூபம் எல்லாருக்கும் அனுபவத்தால் உணரத்தக்கது என்பது சுருதியின் கட்டளையாகும். எனவே “तत्त्वमसि” அதுவாகவே நீ இருக்கிறாய், “यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत्केन कं पश्येत्” எங்கு இவையாவும் ஆத்மாவாய் ஆகிவிட்டதோ அப்பொழுது யாரால் யார் பார்க்கப்படுவான் என்பன போன்றவைகளாலும், சுருதி வாக்கியங்கள் விளக்குகின்றன.
यावदयमेव यथोक्तमिममात्मानं न वेत्ति, तावदयं ब्राह्मानित्यदृष्टिलक्षणमुपाधिमात्मत्वेनोपेत्य अविद्यया उपाधिधर्मानात्मनो मन्यमानो ब्रह्मादिस्तम्बपर्यन्तेषु स्थानेषु पुनः पुनरावर्तमानः अविद्याकामकर्मवशात्संसरति । स एवं संसरन् उपात्तदेहेन्द्रियसङ्घातं त्यजति । त्यक्त्वा अन्यमुपादत्ते । पुनः पुनरेवमेव नदीस्रोतोवज्जन्ममरणप्रबन्धाविच्छेदेन वर्तमानः काभिरवस्थाभिर्वर्तते इत्येतमर्थं दर्शयन्त्याह श्रुतिः वैराग्यहेतोः —
(ச.பா) எதுவரை இவ்வாறு சுருதியால் விளக்கப்பட்ட ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்து அனுபவிக்காமல் இருக்கிறானோ அதுவரை இஹ்ன் பாஹ்யமாயும் அநித்தியமாயும், அநித்திய திருஷ்ட்டி லக்ஷணமாயும், உள்ள உபாதிகளை ஆத்மாவாய் அவித்தையின் உபாதி தர்மங்களை ஆத்மாவாக எண்ணியவனாக ஆகி சதுர்முகப் பிரஹ்மா தொடங்கி ஸ்தம்பபரியந்தமான தேவதைகள், பறவைகள், குறுக்காய் வளர்பவைகள் மனுஷ்யர்கள் இது போன்ற ஜீவஸ்தானங்களில் மறுபடியும், மறுபடியும், சுழல்பவனாக ஆகி அவித்யா, காம, கர்மவசத்தால் மறுபடியும், மறுபடியும் பிறவிப்பெருங்கடலில் சுழன்று உழல்கிறான். அவன் இவ்வாறு சம்சாரத்தில் உழல்பவனாகி ஒரு தேஹேந்திரிய சேர்க்கையை அடைகிறான். அதை பின்பு விடுகிறான். மறுபடியும் மற்றொன்றை அடைகிறான். இவ்வாறு மறுபடியும் மறுபடியும் நதியின் பிரவாகம் போல் பிறத்தல், இறத்தல் என்ற பிரபந்தத்தில் (கட்டுப்பாட்டில்) இடைவிடாமல் இருந்தவனாகி வாயால் சொல்ல முடியாத அவஸ்தைகளில் இருந்து உழல்கிறான் என்ற அர்த்தத்தை சுருதி வைராக்கியத்தை உண்டாக்குவதற்காக மேலே சொல்லத் தொடங்குகிறது.
पुरुषे ह वा अयमादितो गर्भो भवति । यदेतद्रेतस्तदेतत्सर्वेभ्योऽङ्गेभ्यस्तेजः सम्भूतमात्मन्येवात्मानं बिभर्ति तद्यथा स्त्रियां सिञ्चत्यथैनज्जनयति तदस्य प्रथमं जन्म ॥ १ ॥
अयमेवाविद्याकामकर्माभिमानवान् यज्ञादिकर्म कृत्वा अस्माल्लोकाद्धूमादिक्रमेण चन्द्रमसं प्राप्य क्षीणकर्मा वृष्ट्यादिक्रमेण इमं लोकं प्राप्य अन्नभूतः पुरुषाग्नौ हुतः । तस्मिन्पुरुषे ह वै अयं संसारी रसादिक्रमेण आदितः प्रथमतः रेतोरूपेण गर्भो भवतीति एतदाह — यदेतत्पुरुषे रेतः, तेन रूपेणेति ।
(ச.பா) இந்தப் புருஷனே அதாவது அவித்தியை காமம், கர்மம், இவைகளில் அபிமானம் கொண்டவனாகி, யக்ஞாதி கர்மாக்களை செய்து இந்த லோகத்திலிருந்து தூமாதி மார்க்கத்தின் வழியாக சந்திரனை அடைந்து தன்னுடைய புண்ணியபாபாதி கர்மாக்கள் அநேகமாக நாசம் அடைந்த போது மழை முதலான கிரமமாக இந்த லோகத்தை அடைந்து அன்னமாக ஆகி புருஷன் என்றஅக்னியில் ஹோமம் செய்ப்படுகிறான். இவ்வாறு ஹோமம் வாயிலாக தான் அடைந்த புருஷரிடத்தில் இந்த சம்சாரியானவன் முதலில் ரசாதிக்கிரமமாக வீரிய ரூபமான பரிணாமத்தை அடைந்து கர்ப்பமாக ஆகிறான். அதாவது புருஷனிடத்தில் ரேதோ ரூபமான சரீரத்தை அடைகிறான்.
तच्च एतत् रेतः अन्नमयस्य पिण्डस्य सर्वेभ्यः अङ्गेभ्यः अवयवेभ्यो रसादिलक्षणेभ्यः तेजः साररूपं शरीरस्य सम्भूतं परिनिष्पन्नं तत् पुरुषस्य आत्मभूतत्वादात्मा, तमात्मानं रेतोरूपेण गर्भीभूतम् आत्मन्येव स्वशरीर एव आत्मानं बिभर्ति धारयति ।
(ச.பா) இந்த ரேதோரூபமானது அன்னமயமான பிண்டத்தின் எல்லா அவயவங்களில் இருந்தும் அவைகளின் சாரரூபமான சரீரத்தில் உண்டாவதாலும், அந்தப் புருஷனுடனேயே ஒன்று இருப்பதாலும் இதை ஆத்மா என்று கூறப்பட்டது. இவ்வாறு தன்னில் தானாகவே ரேதோ ரூபமாக கர்பம் அடைந்துள்ள இவனை தன்னுடைய சரீரத்திலேயே புருஷன் தாங்குகிறான்.
तत् रेतः स्त्रियां सिञ्चति यदा, यदा यस्मिन्काले भार्या ऋतुमती तस्यां योषाग्नौ स्त्रियां सिञ्चति उपगच्छन् , अथ तदा एनत् एतद्रेतः आत्मनो गर्भरूपं जनयति पिता । तत् अस्य पुरुषस्य स्थानान्निर्गमनं रेतःसेककाले रेतोरूपेण अस्य संसारिणः प्रथमं जन्म प्रथमावस्थाभिव्यक्तिः । तदेतदुक्तं पुरस्तात् ‘असावात्मा अमुमात्मानम्’ इत्यादिना ॥
(ச.பா) இவ்வாறு ரேதோ ரூபமானவன் எந்தக்காலத்தில் ருதுமதியாகிய பத்தினி என்ற அக்னியில் ஹோமம் செய்யப்படுகிறானோ அப்பொழுது அவளை அடையச் செய்கிறான். அதாவது தன்னில் கர்ப பூதமாய் இருந்த இவனை மனைவியை அடையும்படிச் செய்கிறான். எப்பொழுது இவன் தந்தையாகிய புருஷனுடைய சரீரத்திலிருந்து வீரிய ரூபமாய் வெளிப்படுகிறானோ அப்பொழுது இந்த சம்சாரியின் முதல் ஜன்மம் ஏற்படுகிறது. அதாவது முதல் அவஸ்தை கண்ணுக்குப் புலனாகிறது. இதுவே முதலில் இந்த தந்தை ரூபமான புருஷனானவன் தன்னிடத்தில் ஆத்மா போல் இருந்தவனை வெளிப்படுத்துகிறான் என்பன போன்ற வாக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன.
तत्स्त्रिया आत्मभूयं गच्छति यथा स्वमङ्गं तथा । तस्मादेनां न हिनस्ति सास्यैतमात्मानमत्र गतं भावयति ॥ २ ॥
तत् रेतः यस्यां स्त्रियां सिक्तं सत्तस्याः स्त्रियाः आत्मभूयम् आत्माव्यतिरेकतां यथा पितुः एवं गच्छति प्राप्नोति यथा स्वमङ्गं स्तनादि, तथा तद्वदेव । तस्माद्धेतोः एनां मातरं स गर्भो न हिनस्ति पिटकादिवत् । यस्मात्स्तनादि स्वाङ्गवदात्मभूयं गतम् , तस्मान्न हिनस्ति न बाधत इत्यर्थः ।
(ச.பா) இந்த ரேதஸ் ஆனது எந்த ஸ்திரீயினிடத்தில் ஹோமம் செய்யப்பட்டு நிலை பெற்றுள்ளதோ அப்பொழுது அவளுக்கு அவளின்றி வேறுபாடின்றி எவ்வாறு தந்தையிடத்தில் இருந்ததோ அவ்வாறே ஸ்திரீயினிடத்திலும் ஒன்றி விடுகிறது. எவ்வாறு எனில் அவளுடைய ஸ்தனம் முதலான அங்கங்கள் போல் ஒன்றி விடுகிறது. அதனாலேயே இந்த வீரியமானது தாயாரான அந்த ஸ்த்ரீயை முள், சலாகை போல் கொல்வதில்லை. எதனால் ஸ்தனம் முதலானவைகள் தன்னுடைய அங்கம் முதலானவைகள் போல் ஆத்ம பூதமாக ஆகின்றனவோ அதுபோல் இந்த புருஷ பிரவேசமும் பாதிப்பது இல்லை என்பது பொருள்.
सा अन्तर्वत्नी एतम् अस्य भर्तुरात्मानम् अत्र आत्मन उदरे गतं प्रविष्टं बुद्ध्वा भावयति वर्धयति परिपालयति गर्भविरुद्धाशनादिपरिहारम् अनुकूलाशनाद्युपयोगं च कुर्वती ॥
(ச.பா) அந்த கர்பினியான ஸ்த்ரீ பர்த்தாவின் ஆத்மாவை தன்னுடைய வயிற்றில் பிரவேசித்ததாக அறிந்து பாவிக்கிறாள், வளர்க்கிறாள், பரிபாலனம் செய்கிறாள். அதாவது கர்ப்பத்திற்கு விருத்தமான ஆகாரம் முதலானவைகளை நீக்குகிறாள். கர்ப்பம் விருத்தி ஆவதற்கு அனுகூலமான உணவு, பானம் முதலியவைகளை மேற் கொள்ளுகிறாள்.
सा भावयित्री भावयितव्या भवति तं स्त्री गर्भं बिभर्ति सोऽग्र एव कुमारं जन्मनोऽग्रेऽधि भावयति । स यत्कुमारं जन्मनोऽग्रेऽधि भावयत्यात्मानमेव तद्भावयत्येषां लोकानां सन्तत्या एवं सन्तता हीमे लोकास्तदस्य द्वितीयं जन्म ॥ ३ ॥
सा भावयित्री वर्धयित्री भर्तुरात्मनो गर्भभूतस्य भावयितव्या वर्धयितव्या च भर्त्रा भवति । न ह्युपकारप्रत्युपकारमन्तरेण लोके कस्यचित्केनचित्सम्बन्ध उपपद्यते । तं गर्भं स्त्री यथोक्तेन गर्भधारणविधानेन बिभर्ति धारयति अग्रे प्राग्जन्मनः । सः पिता अग्रे एव पूर्वमेव जातमात्रं कुमारं जन्मनः अधि ऊर्ध्वं जन्मनः जातं कुमारं जातकर्मादिना पिता भावयति । सः पिता यत् यस्मात् कुमारं जन्मनः अधि ऊर्ध्वं अग्रे जातमात्रमेव जातकर्मादिना यद्भावयति, तत् आत्मानमेव भावयति ; पितुरात्मैव हि पुत्ररूपेण जायते । तथा ह्युक्तम् ‘पतिर्जायां प्रविशति’ (हरि. ३ । ७३ । ७१) इत्यादि ।
(ச.பா) அந்த பத்தினி தன்னுடைய கர்பத்தில் தன்னுடைய பர்த்தாவின் புனர் ரூபத்தை பாவிப்பவளாக இருக்கிறாள். அத்தகைய பத்தினி பர்த்தாவினால் போஷித்து ரக்ஷிக்கத்தக்கவள். உலகில் உபகார பிரத்யுபகாரம் இன்றி யாருக்கும், எதனுடனும் சம்பந்தம் ஏற்படுவது இல்லை. அந்த கர்பத்தை ஸ்திரீயானவள் குழந்தை பிறக்கும் வரை முறையோடு கர்பத்தை சுமக்கிறாள். அந்த தகப்பனார் ஆனவர் முன்பே கர்பத்தில் தரிக்கப்பட்டவனாயும், பின்பு குமாரனாக பிறந்தவனை ஜாத கர்மா முதலான சம்ஸ்காரங்களால் மகிழ்விக்கச் செய்கிறார். அந்த தந்தையானவர் பிறந்த குழந்தையானவன், பிறப்பதற்கு முன்பேயே பாவிக்கிறார் என்று கூறப்பட்டதால் அந்த குழந்தையை தானாகவே பாவிக்கிறார். பிதாவே புத்திர ரூபமாக உன்டாகிறான் என்பது பொருள். அப்பொழுதே பதியானவன் பத்தினியிடத்தில் பிரவேசிக்கிறான் என்பது யுக்தமாகும், இதுவே கூறப்படுகிறது.
तत्किमर्थमात्मानं पुत्ररूपेण जनयित्वा भावयतीति ? उच्यते — एषां लोकानां सन्तत्यै अविच्छेदायेत्यर्थः । विच्छिद्येरन्हीमे लोकाः पुत्रोत्पादनादि यदि न कुर्युः । एवं पुत्रोत्पादनादिकर्माविच्छेदेनैव सन्तताः प्रबन्धरूपेण वर्तन्ते हि यस्मात् इमे लोकाः, तस्मात्तदविच्छेदाय तत्कर्तव्यम् ; न मोक्षायेत्यर्थः । तत् अस्य संसारिणः कुमाररूपेण मातुरुदराद्यन्निर्गमनम् , तत् रेतोरूपापेक्षया द्वितीयं जन्म द्वितीयावस्थाभिव्यक्तिः ॥
(ச.பா) அவன் எதற்காக தன்னை புத்திரரூபமாக உண்டாக்கிக்கொண்டு பாவிக்கிறான் என்று, இந்த லோகத்தில் உள்ள சந்ததி பரம்பரை விச்சேதம் இல்லாமல் இருப்பதின் பொருட்டு, ஒவ்வொருவரும் புத்திரனை உண்டாக்காமல் இருந்தால் இந்த உலகத்தில் உள்ள நல்ல பரம்பரை விச்சின்னமாகி விடும். இவ்வாறு புத்திரோத்பத்தி முதலான கர்மாக்கள் அவிச்சேதமாக தொடர்வதால்தான் பிரபந்த ரூபமாய் இந்த லோகமானது இயங்கி வருகிறது. இந்த தொடர்ச்சி இடையறாமல் இருப்பதற்கு முற்சொன்ன காரியங்கள் செய்யத்தக்கவை. ஆனால் அவை மோக்ஷத்தின் பொருட்டு ஆகாது என்பது பொருள். இவ்வாறு குமார ரூபமாய் அம்மாவினுடைய கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்ட சம்சாரிக்கு முற்சொன்ன வீரியரூபமான ரூபத்தைக் காட்டிலும் இது இரண்டாவது ஜன்மம் ஆகும். அதாவது இரண்டாவது அவஸ்தாரூபமான தோற்றம் ஆகும்.
सोऽस्यायमात्मा पुण्येभ्यः कर्मभ्यः प्रतिधीयते । अथास्यायमितर आत्मा कृतकृत्यो वयोगतः प्रैति स इतः प्रयन्नेव पुनर्जायते तदस्य तृतीयं जन्म ॥ ४ ॥
(ச.பா) இந்த புத்திராத்ம ஸ்வரூபமான சம்சாரியை தகப்பனார் ஆனவர் சாஸ்த்திரோக்தமான புண்ணிய கர்மாக்களால் தூய்மைப்படுத்தி தன் தந்தையாகிய தன்னுடைய ஸ்தானத்தில் இருந்து தன்னால் செய்ய வேண்டிய காரியங்களை செய்வதற்காக தன் பிரதிநிதியாக ஆக்குகிறார் என்பது பொருள். எனவே இதுவே வாஜசனேய வித்தையில் கூறப்பட்டுள்ளது. “पित्राऽनुशिष्टोऽहं ब्रह्माहं यज्ञ इति” தந்தையால் கட்டளை இடப்பட்ட நான் பிரஹ்ம ஸ்வரூபமானவன். யக்ஞம் முதலானவைகளை சித்த சுத்தியின் பொருட்டு செய்கிறேன் என்பன போன்ற வாக்கியங்கள் இதை விளக்குகின்றன.
अथ अनन्तरं पुत्रे निवेश्यात्मनो भारम् अस्य पुत्रस्य इतरः अयं यः पित्रात्मा कृतकृत्यः, कर्तव्यात् ऋणत्रयात् विमुक्तः कृतकर्तव्य इत्यर्थः, वयोगतः गतवयाः जीर्णः सन् प्रैति म्रियते । सः इतः अस्मात् प्रयन्नेव शरीरं परित्यजन्नेव, तृणजलूकादिवत् , देहान्तरमुपाददानः कर्मचितम् , पुनर्जायते । तदस्य मृत्वा प्रतिपत्तव्यं यत् , तत् तृतीयं जन्म ।
(ச.பா) பிறகு தந்தையானவர் தன்னுடைய சுமையை புத்திர ரூபமான தன்னிடத்தில் சுமத்திவிட்டு அந்த தந்தையான ஆத்மாவானவன் முக்கடன்களில் இருந்தும் விடுபட்டு கிருதகிருத்தியன் ஆகிறான். கிருத கிருத்ய: என்பதற்கு செய்யவேண்டியதை செய்து முடித்தவன் என்பது பொருள். இத்தகைய தந்தையானவன் வயது முதிர்ந்தவனாகி நலிந்து மரணமடைகிறான். அவன் இங்கு இருந்து மரணம் அடையும்பொழுதே அதாவது இந்த சரீரத்தை விடும் பொழுதே புல் அட்டை போல் (तृण जलूक) வேறு ஒரு சரீரத்தை தன்னுடைய கர்மாவினால் சம்பாதித்திக்கொண்டு மறுபடியும் பிறக்கிறான். இவ்வாறு அவனால் மறித்த பின் அடையக்கூடிய ஜன்மாவானது மூன்றாவது ஜன்மாவாகும்.
ननु संसरतः पितुः सकाशाद्रेतोरूपेण प्रथमं जन्म ; तस्यैव कुमाररूपेण मातुर्द्वितीयं जन्मोक्तम् ; तस्यैव तृतीये जन्मनि वक्तव्ये, प्रयतस्तस्य पितुर्यज्जन्म, तत्तृतीयमिति कथमुच्यते ?
(ச.பா) (சங்கை) மேலும் இவ்வாறு சம்சாரியாய் இருப்பவனுக்கு தந்தையிடம் இருந்து வீரியரூபமான ஜன்மா முதலாவது ஆகும். அவனுக்கே தாயாரிடம் இருந்து குமார ரூபமாய் உண்டாகும் ஜன்மா இரண்டாவது என்று கூறப்பட்டது. அவனுக்கே மூன்றாவது ஜன்மா கூறவேண்டியது இருக்க மரணமடைந்த தந்தையின் எந்த ஜன்மம் உண்டோ அதை இவனுடைய மூன்றாவது ஜன்மாவென்று எவ்வாறு கூறப்படுகிறது. அது எவ்வாறு பொருந்தும் எனில் பதில் கூறுகிறேன்.
नैष दोषः, पितापुत्रयोरेकात्मत्वस्य विवक्षितत्वात् । सोऽपि पुत्रः स्वपुत्रे भारं निधाय इतः प्रयन्नेव पुनर्जायते यथा पिता । तदन्यत्रोक्तमितरत्राप्युक्तमेव भवतीति मन्यते श्रुतिः । पितापुत्रयोरेकात्मत्वात् ॥
(ச.பா) (சமாதானம்) இது தோஷமாகாது. தந்தை மகன் இவர்களுள் உள் ஏகாத்மத்துவம் சொல்லப்பட்டதால் இது தோஷமாகாது. அந்த மகனும் தன்னுடைய புத்திரனிடத்தில் சுமையை சுமத்திவிட்டு மரணம் அடையும் பொழுதே தன்னுடைய தந்தையைப் போல் வேறு ஜன்மாவை அடை.வான். இதுவே வேறு இடத்தில் விளக்கமாக கூறப்பட்டுள்ளதால் இங்கும் கூறப்பட்டதாக ஆகிறது என்று எண்ணுகிறது சுருதி. ஏன் எனில் தந்தை மகனுள் ஏகாத்மத்துவம் உள்ளதால்
एवं संसरन्नवस्थाभिव्यक्तित्रयेण जन्ममरणप्रबन्धारूढः सर्वो लोकः संसारसमुद्रे निपतितः कथञ्चिद्यदा श्रुत्युक्तमात्मानं विजानाति यस्यां कस्याञ्चिदवस्थायाम् , तदैव मुक्तसर्वसंसारबन्धनः कृतकृत्यो भवतीति
(ச.பா) (அ.கை) இவ்வாறு முடிவற்ற சம்சாரப் பெருங்கடலில் முற்கூறப்பட்ட மூன்று சரீரங்களின் தோற்றத்தால் சம்சரித்துக்கொண்டு பிறவிமரணம் என்ற பிரவாகத் தொடரில் ஏறி சிக்குண்டவர்களாகி இந்த உலகில் உள்ள சமஸ்த ஜீவராசிகளும், சம்சாரம் என்ற பெரும் சமுத்திரத்தில் வீழ்ந்ததாய் உள்ளது. இவ்வாறு வீழ்ந்தவர்களில் சிலர் குரு அனுக்கிரஹத்தால் எப்படியோ ஒரு சமயம் சுருத்யுக்தமான ஆத்மாவை அனுபவபூர்வமாய் உணர்கிறார்களோ அப்பொழுது எந்த நிலையில் எந்த அவஸ்தையில் இருந்தாலும், அந்த க்ஷணத்திலேயே சமஸ்த சம்ஸார பந்தத்திலிருந்தும் விடுபட்டவராகி கிருதகிருத்தராக ஆகிறார் என்ற இந்த விஷயத்தை வாமதேவ ரிஷியானவர் இந்த மந்திரத்தால் கூறுகின்றா (என்று கூறுகிறார்.)
तदुक्तमृषिणा । गर्भे नु सन्नन्वेषामवेदमहं देवानां जनिमानि विश्वा । शतं मा पुर आयसीररक्षन्नधः श्येनो जवसा निरदीयमिति गर्भ एवैतच्छयानो वामदेव एवमुवाच ॥ ५ ॥
येतद्वस्तु, तत् ऋषिणा मन्त्रेणापि उक्तमित्याह —
(ச.பா) இப்பொருள் ரிஷியினால் மந்திரத்தினுள்ளும் கூறப்பட்டிருக்கின்றது என்கிறார்:-
गर्भे नु मातुर्गर्भाशय एव सन् , नु इति वितर्के । अनेकजन्मान्तरभावनापरिपाकवशात् एषां देवानां वागग्न्यादीनां जनिमानि जन्मानि विश्वा विश्वानि सर्वाणि अन्ववेदम् अहम् अहो अनुबुद्धवानस्मीत्यर्थः । शतम् अनेकाः बह्व्यः मा मां पुरः आयसीः आयस्यो लोहमय्य इवाभेद्यानि शरीराणीत्यभिप्रायः । अरक्षन् रक्षितवत्यः संसारपाशनिर्गमनात् अधः । अथ श्येन इव जालं भित्त्वा जवसा आत्मज्ञानकृतसामर्थ्येन निरदीयं निर्गतोऽस्मि । अहो गर्भ एव शयानो वामदेवः ऋषिः एवमुवाच एतत् ॥
(ச.பா) கர்பத்தில் வாமதேவர் தாயாரின் கர்பாசயத்தில் இருந்துகொண்டே இவ்வாறு கூறுகிறார். இங்கு “नु” என்பது விதர்க்கமாகும். அநேக ஜன்மாந்திரங்களில் ஏற்பட்ட பாவ பரிபாக வசத்தால் இந்த வாக், அக்னி முதலிய தேவர்களின் பிறப்பையும், ஏன்? இந்த முழு பிரபஞ்சத்தின் பிறப்பையும் நான் அறிந்தவனாய் உள்ளேன். இதை தொடர்ந்து உணர்கிறேன். அஹோ! ஆச்சரியம்! நான் (என்னை) முன்பு இரும்பு போல் பிளக்க முடியாத அநேகம் சரீரங்கள் சூழ்ந்துகொண்டு இருந்தன. என்னை வெளிவர முடியாமல் அவைகள் தடுத்தன என்பது பொருள். இப்பொழுது சம்சாரம் என்ற வலையிலிருந்து (பாசத்திலிருந்து) விடுபட்ட நான் வலையைக் கிழித்துக்கொண்டு அதிலிருந்து வெளிப்பட்ட கழுகு போல் நான் ஆத்மக்ஞானத்தால் உண்டான சாமர்த்தியத்தால் இந்த சம்சாரம் என்ற பெரும் கடலை மிகவும் வேகமாக கடந்தவனாக இருக்கின்றேன். அந்தோ ஆச்சரியம்! கர்பாசயத்தில் படுத்துக்கொண்டே வாமதேவ மஹரிஷியால் இவ்வாறு கூறப்பட்டது.
स एवं विद्वानस्माच्छरीरभेदादूर्ध्व उत्क्रम्यामुष्मिन्स्वर्गे लोके सर्वान्कामानाप्त्वामृतः समभवत्समभवत् ॥ ६ ॥ इति चतुर्थः खण्डः ॥
सः वामदेव ऋषिः यथोक्तमात्मानम् एवं विद्वान् अस्मात् शरीरभेदात् शरीरस्य अविद्यापरिकल्पितस्य आयसवदनिर्भेद्यस्य जननमरणाद्यनेकानर्थशताविष्टशरीरप्रबन्धस्य परमात्मज्ञानामृतोपयोगजनितवीर्यकृतभेदात् शरीरोत्पत्तिबीजाविद्यादिनिमित्तोपमर्दहेतोः शरीरविनाशादित्यर्थः । ऊर्ध्वः परमात्मभूतः सन् अधोभवात्संसारात् उत्क्रम्य ज्ञानावद्योतितामलसर्वात्मभावमापन्नः सन् अमुष्मिन् यथोक्ते अजरेऽमरेऽमृतेऽभये सर्वज्ञेऽपूर्वेऽनपरेऽनन्तरेऽबाह्ये प्रज्ञानामृतैकरसे स्वर्गे लोके स्वस्मिन्नात्मनि स्वे स्वरूपे अमृतः समभवत् आत्मज्ञानेन पूर्वमाप्तकामतया जीवन्नेव सर्वान्कामानाप्त्वा इत्यर्थः । द्विर्वचनं सफलस्य सोदाहरणस्य आत्मज्ञानस्य परिसमाप्तिप्रदर्शनार्थम् ॥
(ச.பா) அந்த வாமதேவ மஹரிஷியானவர் இப்பொழுது கூறப்பட்ட ஆத்மஞானத்தை இவ்வாறு அனுபவபூர்வமாய் உணர்ந்து, சரீரமானது அவித்யாகல்பிதமானதால் அது இரும்பு போல் கடினமானதால், அதைப் பிளந்துக்கொண்டு அதோடுமட்டுமன்றி ஜனனம், மரணம் என்ற அநேக அநர்த்தக் கூட்டங்களால் சூழப்பட்ட இந்த சரீரத் தொடரை ஆத்மக் ஞானத்தால் பிளந்துகொண்டு அந்த பிரமக்ஞானம் என்ற அம்ருதத்தால் உண்டான வீரியத்தால் இந்த சரீர உற்பத்திக்கு பீஜமான அவித்தையினால் உண்டான காரண சரீரத்தையும், நாசமாக்கிக்கொண்டு வெளிக்கிளம்பினார் என்று பொருள். சம்சாரத்திலிருந்து மேலே கிளம்பி பரமாத்ம பூதராகி ஞானத்தால் பிரகாசப்படுத்தப்பட்ட பரம பரிசுத்தமான சர்வாத்ம பாவத்தை அடைந்தவராகி இந்த முற்கூறப்பட்ட முதுமை அற்றதும், மரணமற்றதும், பழமையாகாததும், பயமற்றதும், சர்வக்ஞனானதும், தனக்கு முன்னிலையில் ஏதுமற்றதும், தனக்கு பின்பும் ஏதுமற்றதும், முடிவற்றதும், அபாஹ்யமாயும், பிரக்ஞான அம்ருதமான ஏகரசமாயும், பிரதீபம் (தீவட்டி போல்) உத்தமமான மோக்ஷ சாம்ராஜ்யத்திற்கு வழிகாட்டுவதாயும் உள்ள தன்னுடைய ஆத்மா ஸ்வரூபத்தில் ஆத்மஞானத்தால் நிறைவு பெற்று முதலில் அவாப்த சமஸ்த காமனாய் ஜீவித்திருக்கும் நிலையிலேயே பிரஹ்மத்துடன் ஒன்றிய ஜீவன்முக்தராகிறார். இங்கு இருமுறைகூறல் உதாரணத்துடன் ஆத்மக் ஞானத்தின் பூர்த்தியை தெரியப்படுத்துவதற்காகக் கூறப்பட்டது.
इति चतुर्थखण्डभाष्यम् ॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ ऐतरेयोपनिषद्भाष्ये द्वितीयोऽध्यायः ॥