द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

श्रीमद्भगवद्गीताभाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

ஶ்ரீமத்பகவத்கீதாபாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

सर्वस्यैव गीताशास्त्रस्य अर्थः अस्मिन् अध्याये उपसंहृत्य सर्वश्च वेदार्थो वक्तव्यः इत्येवमर्थः अयम् अध्यायः आरभ्यते ।
இந்த அத்யாயத்தில் கீதா சாஸ்திரம் முழுவதின் அர்த்தத் தையும், எல்லா வேதங்களின் அர்த்தத்தையும் சுருக்கமாகக் கூறவேண்டும் என்று இந்த அத்தியாயம் ஆரம்பிக்கப்படுகிறது.
सर्वेषु हि अतीतेषु अध्यायेषु उक्तः अर्थः अस्मिन् अध्याये अवगम्यते । अर्जुनस्तु संन्यासत्यागशब्दार्थयोरेव विशेषबुभुत्सुः उवाच —
இதற்கு முன்னுள்ள அத்தியாயங்களில் கூறப்பட்ட அர்த்தமா னது இந்த அத்தியாயத்தில் அறியப்படுகிறது. அர்ஜுனன் சந்நியா சம், தியாகம் இவைகளின் அர்த்தத்தின் வேறுபாட்டை அறிவ தற்கு இச்சையுடன் கூறினான்.
अर्जुन उवाच —
அர்ஜுனன் கூறினான்
संन्यासस्य महाबाहो तत्त्वमिच्छामि वेदितुम् ।
त्यागस्य च हृषीकेश पृथक्केशिनिषूदन ॥ १ ॥
ஸந்ந்யாஸஸ்ய மஹாபாஹோ தத்வமிச்சாமி வேதிதும் ।
த்யாகஸ்ய ச ஹ்ருஷீகேச ப்ருதக்கேசிநிஷூதன ॥ 1 ॥
संन्यासस्य संन्यासशब्दार्थस्य इत्येतत् , हे महाबाहो, तत्त्वं तस्य भावः तत्त्वम् , याथात्म्यमित्येतत् , इच्छामि वेदितुं ज्ञातुम् , त्यागस्य च त्यागशब्दार्थस्येत्येतत् , हृषीकेश, पृथक् इतरेतरविभागतः केशिनिषूदन ।
ஹே மஹாபாஹோ! ஹே ஹ்ருஷிகேச! ஹே கேசினிஷூ தன! சந்நியாச அர்த்தத்தையும் அதனுடைய ஸ்வரூபத்தின் உண் மையான தத்துவத்தையும், அவ்வாறேதியாக சப்தத்தின் அர்த்தத் தையும் அதனுடைய உண்மையான தத்துவத்தையும் வெவ்வே றாக பிரித்து அறிய விரும்புகிறேன்.
केशिनामा हयच्छद्मा कश्चित् असुरः तं निषूदितवान् भगवान् वासुदेवः, तेन तन्नाम्ना सम्बोध्यते अर्जुनेन ॥ १ ॥
பகவான் வாசுதேவனானவர் குதிரை வடிவெடுத்த கேஷ என்ற பெயருடைய அசுரனை சம்ஹாரம் செய்தார். அதனால் அவர் கேசினிஷூதன என்று அர்ஜுனனால் விளிக்கப்படுகிறார்.
संन्यासत्यागशब्दौ तत्र तत्र निर्दिष्टौ, न निर्लुठितार्थौ पूर्वेषु अध्यायेषु । अतः अर्जुनाय पृष्टवते तन्निर्णयाय —
அங்கு முன் அத்யாயங்களில் சந்நியாசம், தியாகத்தைப் பற்றி கூறி இருந்தாலும் தெளிவாக இல்லாததினால் (அதனைக் குறித் துக்) கேட்ட அர்ஜுனனுக்கு தெளிவுபடுத்துவதற்காக:-
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவான் கூறினார்-
काम्यानां कर्मणां न्यासं संन्यासं कवयो विदुः ।
सर्वकर्मफलत्यागं प्राहुस्त्यागं विचक्षणाः ॥ २ ॥
காம்யானாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்ந்யாஸம் கவயோ விது: ।
ஸர்வகர்மபலத்யாகம் ப்ராஹுஸ்த்யாகம் விசக்ஷணா: ॥ 2 ॥
काम्यानाम् अश्वमेधादीनां कर्मणां न्यासं संन्यासशब्दार्थम् , अनुष्ठेयत्वेन प्राप्तस्य अनुष्ठानम् , कवयः पण्डिताः केचित् विदुः विजानन्ति ।
சில பண்டிதர்கள் (சாஸ்திரத்தால் விதிக்கப்பட்ட) அனுஷ்ட்டா னம் செய்யவேண்டிய அச்வமேதம் முதலிய காமிய கர்மங்களை அனுஷ்ட்டிக்காமல் இருப்பதே சந்நியாசம் என்றபதத்தின் அர்த்தம் என்று அறிகிறார்கள்.
नित्यनैमित्तिकानाम् अनुष्ठीयमानानां सर्वकर्मणाम् आत्मसम्बन्धितया प्राप्तस्य फलस्य परित्यागः सर्वकर्मफलत्यागः तं प्राहुः कथयन्ति त्यागं त्यागशब्दार्थं विचक्षणाः पण्डिताः ।
அனுஷ்டிக்கப்படுகின்ற நித்யநைமித்திக கர்மங்களெல் லா வற்றினுடைய (பலனும் செய்பவனைத் தொடருமாதலால் அவ்வாறு) தன்னைத் தொடர்ந்து வரும் பலனை பரித்யாகம் செய்வது ஸர்வ கர்ம பலத்தியாகமெனப்படுகிறது. அதவது விட்டுவிடுதலை த்யாகமென்னும் சப்ததத்தின் பொருளாக ஞானிகள் கூறுகிறார்கள்.
यदि काम्यकर्मपरित्यागः फलपरित्यागो वा अर्थः वक्तव्यः, सर्वथा परित्यागमात्रं संन्यासत्यागशब्दयोः एकः अर्थः स्यात् , न घटपटशब्दाविव जात्यन्तरभूतार्थौ ॥
காமிய கர்ம பரித்யாகத்தின் அர்த்தமோ, பலபரித்யாகத்தின் அர்த்தமோ கூறவேண்டிய இடத்தில் சந்நியாசம், தியாகம் இரண் டின் அர்த்தமும் எப்பொழுதும் தியாகம் என்றஒரே அர்த்தமாகும். குடம், வஸ்திரம் என்பது போல் வெவ்வேறு ஜாதியின் அர்த் தத்தை விளக்குவதல்ல.
ननु नित्यनैमित्तिकानां कर्मणां फलमेव नास्ति इति आहुः । कथम् उच्यते तेषां फलत्यागः, यथा वन्ध्यायाः पुत्रत्यागः ।
நித்திய நைமித்திய கர்மங்களுக்கு பலனே இல்லை. அவ்வாறு இருக்கும்பொழுது எவ்வாறு பலத்தியாகத்தைக் கூற லாம்? வந்தியா புத்திரனைத் த்யாகம் செய்வது போல் (அல்லவா இருக்கிறது)
नैष दोषः, नित्यानामपि कर्मणां भगवता फलवत्त्वस्य इष्टत्वात् । वक्ष्यति हि भगवान् ‘अनिष्टमिष्टं मिश्रं च’ (भ. गी. १८ । १२) इति ‘न तु संन्यासिनाम्’ (भ. गी. १८ । १२) इति च । संन्यासिनामेव हि केवलं कर्मफलासम्बन्धं दर्शयन् असंन्यासिनां नित्यकर्मफलप्राप्तिम् ‘भवत्यत्यागिनां प्रेत्य’ (भ. गी. १८ । १२) इति दर्शयति ॥ २ ॥
இந்த தோஷம் பொருந்தாது. நித்ய கர்மங்களுக்கு பலன் ஏற்படுகிறது என்பதில் பகவானுக்கு இஷ்டமானதினால், இனிபகவான் கூறப்போகிறார்.அநிஷ்ட்டம் என்றும் நது சந்நியா சினாம் என்றும். சந்நியாசிகளுக்கு கர்மபலத்தில் சம்பந்தம் இல்லாததையும் சந்நியாசி அல்லாதவர்களுக்கு நித்ய கர்மத்தினால் பலத்தின் அடைவையும் பவத்யத்யாகினாம் ப்ரேத்ய என்று இனி காண்பிக்கப்போகிறார்.
त्याज्यं दोषवदित्येके कर्म प्राहुर्मनीषिणः ।
यज्ञदानतपःकर्म न त्याज्यमिति चापरे ॥ ३ ॥
த்யாஜ்யம் தோஷவதித்யேகே கர்ம ப்ராஹுர்மநீஷிண: ।
யக்ஞதானதப:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே ॥ 3 ॥
त्याज्यं त्यक्तव्यं दोषवत् दोषः अस्य अस्तीति दोषवत् । किं तत् ? कर्म बन्धहेतुत्वात् सर्वमेव । अथवा, दोषः यथा रागादिः त्यज्यते, तथा त्याज्यम् इति एके कर्म प्राहुः मनीषिणः पण्डिताः साङ्ख्यादिदृष्टिम् आश्रिताः, अधिकृतानां कर्मिणामपि इति ।
அதற்கு தோஷம் இருக்கிறது இருப்பதால் தோஷத்தைப் போல் தள்ளத்தக்கது. அது எது? பந்தத்திற்கு ஹேதுவாய் இருக்கும் கர்மங் கள் எல்லாம் என்று சாங்கியம் முதலிய மதத்தைத் தழுவிய பண்டிதர் கள் கூறுகிறார்கள். ஆகையால் ராகத்வேஷத்தைத் தியாகம் செய்வது போல் கர்மத்தில் அதிகாரமுடைய கர்மிகளும் அந்தக் கர்மங்களை தியாகம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.
तत्रैव यज्ञदानतपःकर्म न त्याज्यम् इति च अपरे ॥
இதைக் குறித்து சிலர் யக்ஞம், தானம் தபஸ், கர்மம் இவைகளை தியாகம் செய்யக்கூடாது என்கிறார்கள்.
कर्मिणः एव अधिकृताः, तान् अपेक्ष्य एते विकल्पाः, न तु ज्ञाननिष्ठान् व्युत्थायिनः संन्यासिनः अपेक्ष्य ।
இந்த மாறுபட்ட கருத்துக்கள் எல்லாம் அதிகாரமுடையவர்க ளைக் குறித்தே அன்றி விரக்தனாகிய (வைராக்யபுருஷனாகிய) ஞானநிஷ்டை உடைய சந்நியாசினிடத்தில் அல்ல.
‘ज्ञानयोगेन साङ्ख्यानां निष्ठा मया पुरा प्रोक्ता’ (भ. गी. ३ । ३) इति कर्माधिकारात् अपोद्धृताः ये, न तान् प्रति चिन्ता ॥
சாங்கிய யோகியினுடைய நிஷ்ட்டை ஞானயோகத்தில் உண்டாகும் என்று என்னால் முன்பே கூறப்பட்டது.அவ்வாறே கர் மாதிகாரிகளை காட்டிலும் வேறு என்று பிரித்துக் காண்பிக்கப்பட் டது. இந்த விஷயத்தைக் குறித்து ஒரு விசாரமும் தேவை இல்லை.
ननु ‘कर्मयोगेन योगिनाम्’ (भ. गी. ३ । ३) इति अधिकृताः पूर्वं विभक्तनिष्ठाः अपि इह सर्वशास्त्रार्थोपसंहारप्रकरणे यथा विचार्यन्ते, तथा साङ्ख्या अपि ज्ञाननिष्ठाः विचार्यन्ताम् इति ।
கர்மயோகேன யோகினாம்' என்று முன்பு கர்மத்தில் அதிகார முடையவர்களினுடைய நிஷ்ட்டையானது வேறுபடுத்தப்பட்டிருந் தும் இங்கு எல்லா சாஸ்திரங்களையும் முடிக்கின்றஇந்த பிரகரணத் தில் எவ்வாறு விசாரிக்கப்படுகின்றதோ அவ்வாறேசாங்கியர்களின் அதாவது ஞானிகளின் ஞானநிஷ்ட்டையையும் விசாரிக்கலாம்.
न, तेषां मोहदुःखनिमित्तत्यागानुपपत्तेः ।
அவ்வாறு அல்ல. அவர்களின் தியாகமானது மோஹம், துக்கம் இவைகளினால் ஏற்பட்டதல்ல.
न कायक्लेशनिमित्तं दुःखं साङ्ख्याः आत्मनि पश्यन्ति, इच्छादीनां क्षेत्रधर्मत्वेनैव दर्शितत्वात् । अतः ते न कायक्लेशदुःखभयात् कर्म परित्यजन्ति ।
இச்சை முதலியவைகளை சரீரத்தின் தர்மமாக பார்ப்பதால் சரீரப்பீடையினால் ஏற்படும் துக்கங்களை ஞானிகள் (சாங்கியர்கள்) ஆத்மாவிடத்தில் பார்ப்பதில்லை. ஆகையால் அவர்கள் சரீர பீடையினால் ஏற்படும் துக்கத்திற்கு பயந்து கர்மத்தை விடுகிறார்கள் இல்லை.
नापि ते कर्माणि आत्मनि पश्यन्ति, येन नियतं कर्म मोहात् परित्यजेयुः ।
அவ்வாறே அவர்கள் ஆத்மாவிடத்தில் கர்மங்களை பார்ப்ப தில்லை. ஆகையால் மோஹத்தினால் செய்யப்படும் நித்திய கர்மங்களை விட்டுவிடக்கூடும்.
गुणानां कर्म ‘नैव किञ्चित्करोमि’ (भ. गी. ५ । ८) इति हि ते संन्यस्यन्ति । ‘सर्वकर्माणि मनसा संन्यस्य’ (भ. गी. ५ । १३) इत्यादिभिः तत्त्वविदः संन्यासप्रकारः उक्तः ।
கர்மமானது குணங்களினுடையதே என்னுடையது அன்று என்று விட்டுவிடுகிறார்கள். சர்வ கர்மானி மனசா சந்நியஸ்ய) என்பது முதலியவைகளால் தத்துவத்தை அறிந்தவர்களின் சந்நியாச முறையானது கூறப்பட்டது.
तस्मात् ये अन्ये अधिकृताः कर्मणि अनात्मविदः, येषां च मोहनिमित्तः त्यागः सम्भवति कायक्लेशभयाच्च, ते एव तामसाः त्यागिनः राजसाश्च इति निन्द्यन्ते कर्मिणाम् अनात्मज्ञानां कर्मफलत्यागस्तुत्यर्थम् ।
ஆகையால் எந்த மற்ற ஆத்மக்ஞானம் அற்ற அதிகாரிகள் மோஹத்தினாலும் சரீர சிரமத்தின் பயத்தினாலும் கர்மங்கள் செய்வதை விட்டுவிடுகிறார்கள். அவர்கள் ராஜச, தாமச தியாகிகள் என்று இகழப்படுவது ஆத்மஞானம் அற்ற கர்மிகளின் கர்மபலத்தியாகத்தைப் புகழ்வதற்காகக் கூறப்பட்டதாகும்.
‘सर्वारम्भपरित्यागी’ (भ. गी. १२ । १६) ‘मौनी सन्तुष्टो येन केनचित् । अनिकेतः स्थिरमतिः’ (भ. गी. १२ । १९) इति गुणातीतलक्षणे च परमार्थसंन्यासिनः विशेषितत्वात् । वक्ष्यति च ‘निष्ठा ज्ञानस्य या परा’ (भ. गी. १८ । ५८) इति । तस्मात् ज्ञाननिष्ठाः संन्यासिनः न इह विवक्षिताः ।
எல்லாக்கர்மங்களின் ஆரம்பத்தையும் விட்டவன் (சர்வாரம்ப பரித்யாகி) மௌனி, எது கிடைத்தாலும் சந்தோஷமாக இருப்பவன் (சந்நுஷ்ட்டோ யேன கேனசித்), தங்கும் இடம் இல்லா தவன் (அநிகேத: ஸ்திரமதி:) ஸ்திரமான புத்தியுடையவன் என்று பரமார்த்த சந்நியாசியின் குணாதீத (குணங்களைக் கடந்த) லக்ஷணங்களினால் அவர்களைச் சிறப்பித்துக் கூறுகிறார். ஆகை யால் இங்கு ஞானநிஷ்ட்டை உடைய சந்நியாசிகளை குறித்து இங்கு கூறப்படவில்லை.
कर्मफलत्यागः एव सात्त्विकत्वेन गुणेन तामसत्वाद्यपेक्षया संन्यासः उच्यते, न मुख्यः सर्वकर्मसंन्यासः ॥
கர்மபலத்தியாகமேதான் ராஜச த்யாகத்தை, தாமச த்யாகத்தை அபேக்ஷித்து சாத்விக குணமுடையதாய் இருப்பதால் சந்நியாசம் என்று கூறப்பட்டது. ஆகையால் அதுவே முக்கிய சர்வகர்ம சந்நியாசமாகாது.
सर्वकर्मसंन्यासासम्भवे च ‘न हि देहभृता’ (भ. गी. १८ । ११) इति हेतुवचनात् मुख्य एव इति चेत् ।
ந ஹி தேஹப்ருதா' உடம்பை உடையவனால் என்று பகவான் கூறிய காரணத்தால் எல்லாக்கர்மங்களையும் விட்டுவிட முடியாது என்பதால் இது முக்கியமான சந்நியாசமே எனில்-
न ; हेतुवचनस्य स्तुत्यर्थत्वात् । यथा ‘त्यागाच्छान्तिरनन्तरम्’ (भ. गी. १२ । १२) इति कर्मफलत्यागस्तुतिरेव यथोक्तानेकपक्षानुष्ठानाशक्तिमन्तम् अर्जुनम् अज्ञं प्रति विधानात् ; तथा इदमपि ‘न हि देहभृता शक्यम्’ (भ. गी. १८ । ११) इति कर्मफलत्यागस्तुत्यर्थम् ।
அவ்வாறு அல்ல. காரணத்தைக் கூறும் வசனமானது ஸ்துதி யின் பொருட்டாகும். (த்யாகாச்சாந்திரனந்தரம்-) தியாகத்திற்குப் பின் உடனே சாந்தி ஏற்படுகிறது என்று கர்மபலத்தியாகத்தை துதி செய்வதற்காகவே. கூறப்பட்ட அநேக விதமான சாதனங்களை அனுஷ்ட்டிக்க சக்தி அற்றஅக்ஞானியாகிய அர்ஜுனனைக் குறித்து விதிக்கப்பட்டதால். அவ்வாறேஇங்கும், ந ஹி தேஹப் ருதா சக்யம்- உடம்பை உடையவனால் முடியாது என்று கூறியது கர்மபலத்தியாகத்தைப் போற்றுவதற்காகக் கூறப்பட்டது.
‘सर्वकर्माणि मनसा संन्यस्य नैव कुर्वन्न कारयन्नास्ते’ (भ. गी. ५ । १३) इत्यस्य पक्षस्य अपवादः केनचित् दर्शयितुं शक्यः ।
எல்லாக் கர்மங்களையும் மனதினால் துறந்து நான் ஒன்றும் செய்யாமலும் ஒன்றையும் செய்விக்காமலும் இருப்பதில்லை என்ற இந்த நியாயத்தை ஒருவராலும் விளக்கிக்காட்ட முடியாது.
तस्मात् कर्मणि अधिकृतान् प्रत्येव एषः संन्यासत्यागविकल्पः । ये तु परमार्थदर्शिनः साङ्ख्याः, तेषां ज्ञाननिष्ठायामेव सर्वकर्मसंन्यासलक्षणायाम् अधिकारः, न अन्यत्र, इति न ते विकल्पार्हाः ।
ஆகையால் கர்மாதிகாரி விஷயத்தில்தான் சந்நியாசம் மற்றும் தியாக சம்பந்தமான விகல்பங்களும் (வேறுபாடுகளும்) ஆகும். எவர்கள் பரமார்த்த தர்சிகளாகவும், சாங்கியர்களாகவும் உள்ளார் களோ அவர்கள் எல்லாக் கர்மங்களையும் துறந்த லக்ஷணம் உடைய ஞான நிஷ்ட்டையில் அதிகாரம் உடையவர்கள். மற்றவை களில் அல்ல. ஆகையால் அவர்கள் விகல்பங்களுக்கு அதிகாரிகள் அல்ல.
तच्च उपपादितम् अस्माभिः ‘वेदाविनाशिनम्’ (भ. गी. २ । २१) इत्यस्मिन्प्रदेशे, तृतीयादौ च ॥ ३ ॥
இந்த சித்தாந்தத்தையே நம்மால் வேதாவினாசினம் என்ற ஸ்லோகத்தின் வியாக்யானத்திலும், மூன்றாவது அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
तत्र एतेषु विकल्पभेदेषु —
இனி இந்த விகல்ப பேதங்களில்.
निश्चयं शृणु मे तत्र त्यागे भरतसत्तम ।
त्यागो हि पुरुषव्याघ्र त्रिविधः सम्प्रकीर्तितः ॥ ४ ॥
நிச்சயம் ச்ருணு மே தத்ர த்யாகே பரதஸத்தம ।
த்யாகோ ஹி புருஷவ்யாக்ர த்ரிவித: ஸம்ப்ரகீர்தித: ॥ 4 ॥
निश्चयं शृणु अवधारय मे मम वचनात् ; तत्र त्यागे त्यागसंन्यासविकल्पे यथादर्शिते भरतसत्तम भरतानां साधुतम ।
பரதகுலத்தில் மிகச் சிறந்தவனே! தியாகம் மற்றும் சந்நியாச விகல்பங்களை என்னுடைய வசனத்தினால் எப்படி உணர்த்தப் பட்டதோ அவ்வாறு நிச்சயித்துக் கொள்.
त्यागो हि, त्यागसंन्यासशब्दवाच्यो हि यः अर्थः सः एक एवेति अभिप्रेत्य आह — त्यागो हि इति । पुरुषव्याघ्र, त्रिविधः त्रिप्रकारः तामसादिप्रकारैः सम्प्रकीर्तितः शास्त्रेषु सम्यक् कथितः ।
தியாகம், சந்நியாசம் என்ற சொற்களின் பொருள் ஒன்றே என்ற அபிப்பிராயத்தால் தியாகம் என்று கூறுகிறார். ஹே மனிதருள் சிம் மம் போன்றவனே அந்த தியாகமானது சாஸ்திரங்களில் தாமஸம் முதலிய மூன்றுவிதமாக (நன்றாக) திடமாகக் கூறப்பட்டுள்ளது.
यस्मात् तामसादिभेदेन त्यागसंन्यासशब्दवाच्यः अर्थः अधिकृतस्य कर्मिणः अनात्मज्ञस्य त्रिविधः सम्भवति, न परमार्थदर्शिनः, इत्ययमर्थः दुर्ज्ञानः, तस्मात् अत्र तत्त्वं न अन्यः वक्तुं समर्थः । तस्मात् निश्चयं परमार्थशास्त्रार्थविषयम् अध्यवसायम् ऐश्वरं मे मत्तः शृणु ॥ ४ ॥
எதனால் கர்மத்தில் அதிகாரமுடைய கர்மிகளாகிய அக்ஞா னிகளுக்கு தாமச முதலிய பேதங்களினால் தியாக, சந்நியாச சொற்களுடைய பொருள் மூன்றுவிதமாகக் கூறப்படுகிறதோ அவ்வாறு பரமார்த்த ஞானிக்கு கிடையாது என்பதால் இதை அறிவது மிகக் கடினம் ஆகையால் இந்த விஷயத்தில் இதன் தத்துவத்தை மற்றவர்களால் கூறமுடியாது. ஆகையால் நிச்சயமான உண்மையான சாஸ்திர விஷயத்தில் என்னால் நிர்ணயம் செய்யப்பட்ட அபிப்பிராயத்தைக் கேள்.
कः पुनः असौ निश्चयः इति, आह —
இனி அந்த நிச்சயமானது எது? என்பதைக் கூறுகிறார்–
यज्ञदानतपःकर्म न त्याज्यं कार्यमेव तत् ।
यज्ञो दानं तपश्चैव पावनानि मनीषिणाम् ॥ ५ ॥
யக்ஞதானதப: கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத் ।
யக்ஞோ தானம் தபச்சைவ பாவநானி மனீஷிணாம் ॥ 5 ॥
यज्ञः दानं तपः इत्येतत् त्रिविधं कर्म न त्याज्यं न त्यक्तव्यम् , कार्यं करणीयम् एव तत् । कस्मात् ? यज्ञः दानं तपश्चैव पावनानि विशुद्धिकराणि मनीषिणां फलानभिसन्धीनाम् इत्येतत् ॥ ५ ॥
யக்ஞம், தானம், தபஸ் என்றஇந்த மூன்று விதக் கர்மங்களை விடக்கூடாது. அது அவசியம் செய்யப்படவேண்டியதே. ஏனெனில் யக்ஞம், தானம், தபஸ் என்பவைகள் தூய்மைப்படுத்து வதே. மனீஷிணாம் என்றால் பலத்தில் இச்சை அற்றவர்களுக்கு இவைகள் தூய்மைப்படுத்துவன ஆகும்.
एतान्यपि तु कर्माणि सङ्गं त्यक्त्वा फलानि च ।
कर्तव्यानीति मे पार्थ निश्चितं मतमुत्तमम् ॥ ६ ॥
ஏதான்யபி து கர்மாணி ஸங்கம் த்யக்த்வா பலானி ச ।
கர்தவ்யாநீதி மே பார்த நிச்சிதம் மதமுத்தமம் ॥ 6 ॥
एतान्यपि तु कर्माणि यज्ञदानतपांसि पावनानि उक्तानि सङ्गम् आसक्तिं तेषु त्यक्त्वा फलानि च तेषां परित्यज्य कर्तव्यानि इति अनुष्ठेयानि इति मे मम निश्चितं मतम् उत्तमम् ॥
யக்ஞம், தானம், தபஸ் ஆகிய கர்மங்கள் தூய்மைப்படுத்துப வைகளானாலும் அதன் விஷயத்தில் ஆஸக்தி அற்று (பற்றற்று) அவ்வாறே பலத்தில் ஆசை அற்று அந்தக் கர்மங்களை அனுஷ்ட் டிக்க வேண்டும் என்பது எனது நிச்சயமான மேலான கருத்தாகும்.
‘निश्चयं शृणु मे तत्र’ (भ. गी. १८ । ४) इति प्रतिज्ञाय, पावनत्वं च हेतुम् उक्त्वा, ‘एतान्यपि कर्माणि कर्तव्यानि’ इत्येतत् ‘निश्चितं मतमुत्तमम्’ इति प्रतिज्ञातार्थोपसंहार एव, न अपूर्वार्थं वचनम् , ‘एतान्यपि’ इति प्रकृतसंनिकृष्टार्थत्वोपपत्तेः ।
நிச்சயம் ச்ருணு மே தத்ர = இந்த விஷயத்தில் என்னுடைய நிச்சயத்தைக் கேள். என்று பிரதிக்ஞை செய்து தூய்மைப்படுத்துவ தில் காரணத்தைக் (ஹேதுவைக் ) கூறி இந்தக் கர்மங்கள் எல்லாம் அவசியம் செய்யவேண்டியதே என்று இந்த நிச்சயமான மேலான கருத்து என்று பிரதிக்ஞை செய்ததை முடிப்பதற்காகவே அன்றி அபூர்வமான விஷயத்தின் விளக்கமல்ல. ஏனெனில் ஏ தானி=இவைகள் என்ற சொல் இந்த பிரகரணத்தில் மிகவும் பக்கத் தில் உள்ள விஷயத்தைக் குறிக்கிறது.
सासङ्गस्य फलार्थिनः बन्धहेतवः एतान्यपि कर्माणि मुमुक्षोः कर्तव्यानि इति अपिशब्दस्य अर्थः । न तु अन्यानि कर्माणि अपेक्ष्य ‘एतान्यपि’ इति उच्यते ॥
ஆசக்தியும் பலத்தில் இச்சை உள்ளவர்களால் செய்யப்படும் கர்மங்கள் பந்தத்திற்கு ஹேதுவாய் இருந்தாலும் பலத்தில் இச்சை யற்றமுமூக்ஷுக்களாலும் அவசியம் செய்யவேண்டும் என்பதைக் காட்டுவதற்காக வந்த (அபி= உம்) என்றசொல்லின் அர்த்தமாகும். இங்கு மற்றகாமிய கர்மங்களைக் குறித்து ஏதானி என்றசொல்லு டன் அபி என்றசொல்லின் பிரயோகம் அல்ல என்பதாகும்.
अन्ये तु वर्णयन्ति — नित्यानां कर्मणां फलाभावात् ‘सङ्गं त्यक्त्वा फलानि च’ इति न उपपद्यते । अतः ‘एतान्यपि’ इति यानि काम्यानि कर्मणि नित्येभ्यः अन्यानि, एतानि अपि कर्तव्यानि, किमुत यज्ञदानतपांसि नित्यानि इति ।
வேறு சிலர் நித்திய கர்மாக்களுக்கு பலன் இல்லாததினால் பலத்தை விடுவது என்பது பொருந்தாது என்று கூறுவர். ஆகை யால் ஏதானி என்ற பதத்தின் அபிப்பிராயம் என்னவெனில் நித்திய கர்மாக்களைக் காட்டிலும் காமியகர்மாக்கள் வேறு ஆனாலும் செய்யவேண்டியதே. இவ்வாறு இருக்கும்பொழுது யக்ஞ, தான, தபஸ் ஆகிய நித்யகர்மாக்களை குறித்துக் கூறவும் வேண்டுமோ?
तत् असत् , नित्यानामपि कर्मणाम् इह फलवत्त्वस्य उपपादितत्वात् ‘यज्ञो दानं तपश्चैव पावनानि’ (भ. गी. १८ । ५) इत्यादिना वचनेन ।
அது பொருந்தாது. ஏனெனில் நித்திய கர்மாக்களுக்கும் பலன் இருப்பது கூறப்பட்டிருப்பதால். (யக்ஞோ தானம் தபச்சைவ பாவ னானி) யக்ஞம் தானம், தபஸ் இவைகள் தூய்மைப்படுத்துபவை என்பது முதலிய வசனங்களால் கூறப்பட்டிருப்பதால்.
नित्यान्यपि कर्माणि बन्धहेतुत्वाशङ्कया जिहासोः मुमुक्षोः कुतः काम्येषु प्रसङ्गः ?
நித்திய கர்மங்களும் பந்தத்திற்கு ஹேது (காரணம்) என்று சங்கித்து அதை விடுவதற்கு இச்சை உள்ள முமூக்ஷக்கள் காமிய கர்மங்களில் எவ்வாறு பிரவிருத்திப்பார்கள்.
‘दूरेण ह्यवरं कर्म’ (भ. गी. २ । ४९) इति च निन्दितत्वात् , ‘यज्ञार्थात् कर्मणोऽन्यत्र’ (भ. गी. ३ । ९) इति च काम्यकर्मणां बन्धहेतुत्वस्य निश्चितत्वात् , ‘त्रैगुण्यविषया वेदाः’ (भ. गी. २ । ४५) ‘त्रैविद्या मां सोमपाः’ (भ. गी. ९ । २०) ‘क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति’ (भ. गी. ९ । २१) इति च, दूरव्यवहितत्वाच्च, न काम्येषु ‘एतान्यपि’ इति व्यपदेशः ॥ ६ ॥
தூரேண ஹ்யவரம் கர்ம) சகாம கர்மம் மிகவும் கீழானது என்று நிந்தித்தலாலும், (யக்ஞார்த்தாத்கர்மணோஅன்யத்ர) யக்ஞார்த்த கர்மங்களைக் காட்டிலும் மற்றகர்மங்கள் பந்தத்திற்கு காரணமாகிறது என்று நிச்சயித்தலாலும், (த்ரைகுண்யவிஷயா வேதா:) மூன்று குணங்களின் விஷயங்கள் வேதங்கள், த்ரைவித்யா மாம் ஸோமபா: = மூன்றுவேதங்களை அறிந்தவர்கள் சோமபானத்தை அருந்தியவர்கள் ஆவார்கள். க்ஷணே புண்யே மர்த்திய லோகம் விசந்தி = புண்யங்கள் தீர்ந்த உடன் மனுஷ்ய லோகத்தை அடைகிறார்கள் என்று காம்யகர்ம விஷயங்களை மிகவும் தூரமாக ஒதுக்கி உள்ளதாலும் ஏதான்யபி என்று கூறியது காமிய கர்ம விஷயங்களில் அல்ல என்பது ஆகும்.
तस्मात् अज्ञस्य अधिकृतस्य मुमुक्षोः —
ஆகையால் அக்ஞானியாகிய கர்மாதிகாரி முமூக்ஷவின் பொருட்டு -
नियतस्य तु संन्यासः कर्मणो नोपपद्यते ।
मोहात्तस्य परित्यागस्तामसः परिकीर्तितः ॥ ७ ॥
நியதஸ்ய து ஸந்ந்யாஸ: கர்மணோ நோபபத்யதே ।
மோஹாத்தஸ்ய பரித்யாகஸ்தாமஸ: பரிகீர்த்தித: ॥ 7 ॥
नियतस्य तु नित्यस्य संन्यासः परित्यागः कर्मणः न उपपद्यते, अज्ञस्य पावनत्वस्य इष्टत्वात् । मोहात् अज्ञानात् तस्य नियतस्य परित्यागः ।
விதிக்கப்பட்ட நித்திய கர்மாக்களை தியாகம் செய்தல் (விட்டு விடுதல்) கூடாது . ஏன் எனில் அக்ஞானிக்கு நித்ய கர்மா தூய்மைப் படுத்துவதற்கு காரணமாகிறது. ஆகையால் மோஹத்தினால் (அக்ஞானத்தினால்) நித்யகர்மாவைத் தியாகம் செய்யக்கூடாது.
नियतं च अवश्यं कर्तव्यम् , त्यज्यते च, इति विप्रतिषिद्धम् ; अतः मोहनिमित्तः परित्यागः तामसः परिकीर्तितः मोहश्च तमः इति ॥ ७ ॥
நித்யகர்மாவை அவசியம் செய்யவேண்டும். அதைத் தியா கம் செய்தல் கூடாது. ஆகையால் மோஹத்தின் நிமித்தத்தினா லேயே விடப்படுகிறது. மோஹமே தமஸ் ஆகும். ஆனால் இதைத் தாமஸ தியாகம் எனப்படுகிறது.
किंच
மேலும்-
दुःखमित्येव यत्कर्म कायक्लेशभयात्त्यजेत् ।
स कृत्वा राजसं त्यागं नैव त्यागफलं लभेत् ॥ ८ ॥
து:கமித்யேவ யத் கர்ம காயக்லேசபயாத் த்யஜேத் ।
ஸ க்ருத்வா ராஜஸம் த்யாகம் நைவ த்யாகபலம் லபேத் ॥ 8 ॥
दुःखम् इति एव यत् कर्म कायक्लेशभयात् शरीरदुःखभयात् त्यजेत् , सः कृत्वा राजसं रजोनिर्वर्त्यं त्यागं नैव त्यागफलं ज्ञानपूर्वकस्य सर्वकर्मत्यागस्य फलं मोक्षाख्यं न लभेत् नैव लभेत ॥ ८ ॥
எல்லாக் கர்மங்களும் துக்கரூபமானது என்று நினைத்தும், சரீ ரத்திற்கு கஷ்டம் ஏற்படும் என்ற பயத்தினால் கர்மங்களை தியாகம் செய்கிறான். அது ராஜஸ தியாகமாகும். இந்த த்யாகத்திற்கு ஞான பூர்வகமாக ஏற்படும் ஸர்வகர்ம தியாகத்தினால் ஏற்படும் மோஹம் என்கின்ற பலனை அடையமாட்டான்.
कः पुनः सात्त्विकः त्यागः इति, आह —
இனி சாத்விக த்யாகம் என்பது யாதெனில்?-
कार्यमित्येव यत्कर्म नियतं क्रियतेऽर्जुन ।
सङ्गं त्यक्त्वा फलं चैव स त्यागः सात्त्विको मतः ॥ ९ ॥
கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதேஅர்ஜுன ।
ஸங்கம் த்யக்த்வா பலம் சைவ ஸ த்யாக: ஸாத்த்விகோ மத: ॥ 9 ॥
कार्यं कर्तव्यम् इत्येव यत् कर्म नियतं नित्यं क्रियते निर्वर्त्यते हे अर्जुन, सङ्गं त्यक्त्वा फलं च एव ।
ஹே அர்ஜுன! அவசியம் நித்யகர்மாவைச் செய்ய வேண்டியதே என்று அறிந்து நித்யகர்மாவில் பற்றற்று பலனையும் துறந்து அனுஷ்ட்டிக்கிறான்.
नित्यानां कर्मणां फलवत्त्वे भगवद्वचनं प्रमाणम् अवोचाम । अथवा, यद्यपि फलं न श्रूयते नित्यस्य कर्मणः, तथापि नित्यं कर्म कृतम् आत्मसंस्कारं प्रत्यवायपरिहारं वा फलं करोति आत्मनः इति कल्पयत्येव अज्ञः । तत्र तामपि कल्पनां निवारयति ‘फलं त्यक्त्वा’ इत्यनेन । अतः साधु उक्तम् ‘सङ्गं त्यक्त्वा फलं च’ इति ।
நித்யகர்மங்களுக்கு பலன் இருக்கிறது என்பதற்கு பகவானு டைய வாக்கே பிரமாணம் என்று கூறினோம். அல்லது நித்யகர்மா விற்கு பலன் இருக்கிறது என்று கேட்கப்படாவிட்டாலும் நித்ய கர்மா செய்வதால் அந்தக்கரண சுத்தி, நரகத்திலிருந்து நிவிர்த்தி யாகிய பலன் தனக்கு உண்டாகும் என்று அக்ஞானி கல்பனை செய்கிறான். அங்கு அந்த கல்பனையையும் பலனைத் துறந்து என்று கூறிய வாக்கின் படி தள்ளத்தக்கதாகிறது. ஆகையால் சங் கம் த்யக்த்வா பலம் ச என்று கூறியது சரியே.
सः त्यागः नित्यकर्मसु सङ्गफलपरित्यागः सात्त्विकः सत्त्वनिर्वृत्तः मतः अभिप्रेतः ॥
அந்த தியாகமானது நித்யகர்மங்களில் சங்கபல தியாகமாய் இருப்பதால் சாத்விக குணத்தினால் ஆனது என்பது கருத்தாகும்.
ननु कर्मपरित्यागः त्रिविधः संन्यासः इति च प्रकृतः । तत्र तामसो राजसश्च उक्तः त्यागः । कथम् इह सङ्गफलत्यागः तृतीयत्वेन उच्यते ? यथा त्रयो ब्राह्मणाः आगताः, तत्र षडङ्गविदौ द्वौ, क्षत्रियः तृतीयः इति तद्वत् ।
இந்த சந்தர்ப்பத்தில் கர்மபரித்யாகமானது மூன்றுவிதமான சந்நியாசமாகக் கூறப்படுகிறது. அவைகளில் ராஜஸத்யாகம், தாமஸதியாகம் கூறப்பட்டு விட்டது. ஆனால் மூன்றாவதான சாத்வீக த்யாகத்தை கர்மதியாகத்தை விட்டு, ஆஸக்தி தியாகத் தையே ஏன் கூறி இருக்கிறீர்கள்? மூன்றாவதாக கூறப்பட்டுள்ள தால் மூன்று பிராஹ்மணர்கள் வந்தார்கள் அவர்களில் இருவர் ஆறு அங்கங்களையும் அறிந்தவர்கள். மற்றொருவர் க்ஷத்திரியன் என்று கூறுவது போல் அல்லவா இருக்கிறது.
नैष दोषः त्यागसामान्येन स्तुत्यर्थत्वात् । अस्ति हि कर्मसंन्यासस्य फलाभिसन्धित्यागस्य च त्यागत्वसामान्यम् । तत्र राजसतामसत्वेन कर्मत्यागनिन्दया कर्मफलाभिसन्धित्यागः सात्त्विकत्वेन स्तूयते ‘स त्यागः सात्त्विको मतः’ इति ॥ ९ ॥
இந்த தோஷம் இல்லை. ஏன் எனில் தியாகமானது சமமாய் இருப்பதால் துதிப்பதற்காகவே கூறப்பட்டது. கர்ம சந்நியாசிக்கும் பலனையும் ஆஸக்தியையும் தியாகம் செய்தவனுக்கும் தியாக மாத்திரத்தில் சமானத்தன்மை இருக்கிறது அவைகளில் கர்மதியா கத்தை ராஜஸம் தாமஸம் தியாகம் எனக்கூறி அதை நிந்தை செய் துவிட்டு கர்மபலம், ஆஸக்தி இவைகளை தியாகம் செய்தவன் சாத்வீக தியாகம் என்று அதைத் துதி செய்கிறான்.
यस्तु अधिकृतः सङ्गं त्यक्त्वा फलाभिसन्धिं च नित्यं कर्म करोति, तस्य फलरागादिना अकलुषीक्रियमाणम् अन्तःकरणं नित्यैश्च कर्मभिः संस्क्रियमाणं विशुध्यति ।
எந்த ஒரு கர்மத்தில் அதிகாரம் உள்ளவன் ஆஸக்தியையும், பலத்தில் இச்சையையும் தியாகம் செய்து நித்திய கர்மாவைச் செய் கிறானோ அவனுடைய பலம், ஆஸக்தி முதலிய தோஷங்க ளால் கலங்கப்படாத அந்தக்கரணம் நித்யகர்மாக்களின் அனுஷ்ட் டானத்தினால் சுத்தப்படுத்தப்பட்டு தூய்மை அடைகிறது.
विशुद्धं प्रसन्नम् आत्मालोचनक्षमं भवति । तस्यैव नित्यकर्मानुष्ठानेन विशुद्धान्तःकरणस्य आत्मज्ञानाभिमुखस्य क्रमेण यथा तन्निष्ठा स्यात् , तत् वक्तव्यमिति आह —
சுத்தமாயும், பிரசன்னமாயும் உள்ள அந்தக்கரணம் ஆத்மவி ஷயத்தில் விசாரிக்க ( ஆலோசிக்க) சாமர்த்தியமுடையதாகிறது. அவனுக்கே நித்திய கர்மானுஷ்ட்டானத்தால் சுத்தாந்தக்கரணமு டைய ஆத்மஞானத்திற்கு எதிர்முகப்பட்டவனுக்கு எவ்வாறு கிரம மாக அந்த நிஷ்ட்டை உண்டாகும் என்பதைக் கூறவேண்டும் என்று கூறுகிறார்-
न द्वेष्ट्यकुशलं कर्म कुशले नानुषज्जते ।
त्यागी सत्त्वसमाविष्टो मेधावी च्छिन्नसंशयः ॥ १० ॥
ந த்வேஷ்ட்யகுசலம் கர்ம குசலே நானுஷஜ்ஜதே ।
த்யாகீ ஸத்வஸமாவிஷ்டோ மேதாவீ சின்னஸம்சய: ॥ 10 ॥
न द्वेष्टि अकुशलम् अशोभनं काम्यं कर्म, शरीरारम्भद्वारेण संसारकारणम् , ‘किमनेन ? ’ इत्येवम् ।
நன்மையைத் தராத காமியகர்மங்களை துவேஷிக்கக்கூடாது. காம்யகர்மம் மறுபிறப்பை அளிக்கவல்லது. ஆகையால் சம்சாரத் திற்குக் காரணமாகிறது. இதனால் எனக்கு என்ன பிரயோஜனம் என்று அதை தூஷிக்கக்கூடாது.
कुशले शोभने नित्ये कर्मणि सत्त्वशुद्धिज्ञानोत्पत्तितन्निष्ठाहेतुत्वेन ‘मोक्षकारणम् इदम्’ इत्येवं न अनुषज्जते अनुषङ्गं प्रीतिं न करोति इत्येतत् ।
நன்மையைத் தரக்கூடிய நித்யகர்மங்கள் சித்த சுத்தி வாயி லாக ஞானம் உண்டாகி அதில் நிலைப்பதினால் மோக்ஷத்திற்கு காரணம் இது என்று இவ்வாறு அதில் ஆஸக்தியும் கொள்ளக் கூடாது. அங்கும் தனக்குப் பிரயோஜனம் இல்லை என்றால் அதிலும் பிரீதி வைப்பதில்லை.
कः पुनः असौ ? त्यागी पूर्वोक्तेन सङ्गफलत्यागेन तद्वान् त्यागी, यः कर्मणि सङ्गं त्यक्त्वा तत्फलं च नित्यकर्मानुष्ठायी सः त्यागी ।
அவன் யார்? தியாகீ. முன்பு கூறப்பட்ட ஆஸக்தியையும் பல னையும் தியாகம் செய்தவன் தியாகி. எவன் கர்மங்களில் ஆஸக்தி யையும், பலனையும் தியாகம் செய்து நித்திய கர்மங்களை அனுஷ்ட்டிக்கிறானோ அவனே தியாகி.
कदा पुनः असौ अकुशलं कर्म न द्वेष्टि, कुशले च न अनुषज्जते इति, उच्यते —
எப்பொழுது அவன் நன்மை தராத காமிய கர்மங்களில் துவே ஷமும், நன்மை தரும் நித்ய கர்மங்களில் ஆஸக்தி அற்றும் இருப் பான் என்பதைக் கூறுகிறார்-
सत्त्वसमाविष्टः यदा सत्त्वेन आत्मानात्मविवेकविज्ञानहेतुना समाविष्टः संव्याप्तः, संयुक्त इत्येतत् ।
எப்பொழுது ஆத்மா அநாத்மாக்களின் விவேக ஞானத்திற்கு காரணமான சத்துவகுணம் கூடுகிறதோ அப்பொழுது என்க.
अत एव च मेधावी मेधया आत्मज्ञानलक्षणया प्रज्ञया संयुक्तः तद्वान् मेधावी । मेधावित्वादेव च्छिन्नसंशयः छिन्नः अविद्याकृतः संशयः यस्य ‘आत्मस्वरूपावस्थानमेव परं निःश्रेयससाधनम् , न अन्यत् किञ्चित्’ इत्येवं निश्चयेन च्छिन्नसंशयः ।
ஆகையால் தான் தன்னுடைய மேதா விலாசத்தால் ஆத்ம ஞான லக்ஷணமாகிய பிரக்ஞையுடன் கூடியவன் மேதாவீ. அவனு டைய மேதா விலாசத்தால் அவித்யையினால் உண்டான சந்தே ஹங்கள் நீங்கி எவனுக்கு ஆத்மஸ்வரூபத்திலேயே நிலைத்தலே மேலான நிச்ரேயஸ் சாதனம் மற்றவைகள் சிறிதும் அல்ல என்ற நிச்சய புத்தியுடையவன் சந்தேஹம் அற்றவன்.
यः अधिकृतः पुरुषः पूर्वोक्तेन प्रकारेण कर्मयोगानुष्ठानेन क्रमेण संस्कृतात्मा सन् जन्मादिविक्रियारहितत्वेन निष्क्रियम् आत्मानम् आत्मत्वेन सम्बुद्धः, सः सर्वकर्माणि मनसा संन्यस्य नैव कुर्वन् न कारयन् आसीनः नैष्कर्म्यलक्षणां ज्ञाननिष्ठाम् अश्नुते ।
எந்த அதிகாரி புருஷன் முன்பு கூறியவாறு கர்மயோக அனுஷ்ட்டானத்தினால் கிரமமாக பண்படுத்தப்பட்ட அந்தக்கர ணம் உடையவனாய் இருந்துகொண்டு ஜன்மம் முதலிய விகாரங் கள் அற்று கிரியை (செயல்) அற்றஆத்மாவை ஆத்மாவாக அறிகி றானோ அவன் (சர்வ கர்மாணி மனசா சந்நியஸ்ய) எல்லாக் கர்மங் களையும் மனதினால் தியாகம் செய்து (நைவ குர்வந்ந காரயன் ஸீன:) ஒன்றும் செய்யாமலும், செய்விக்காமலும் இருப்பவன் நைஷ்கர்ம்ய லக்ஷணமாகிய (கிரியை அற்றதாகிய) ஞான நிஷ்ட் டையை அடைகிறான்.
इत्येतत् पूर्वोक्तस्य कर्मयोगस्य प्रयोजनम् अनेनैव श्लोकेन उक्तम् ॥ १० ॥
இவ்வாறு இந்த முன் கூறப்பட்ட கர்மயோகத்தினுடைய பிர யோஜனம் இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டது.
यः पुनः अधिकृतः सन् देहात्माभिमानित्वेन देहभृत् अज्ञः अबाधितात्मकर्तृत्वविज्ञानतया ‘अहं कर्ता’ इति निश्चितबुद्धिः तस्य अशेषकर्मपरित्यागस्य अशक्यत्वात् कर्मफलत्यागेन चोदितकर्मानुष्ठाने एव अधिकारः, न तत्त्यागे इति एतम् अर्थं दर्शयितुम् आह —
மேலும் எவன் கர்மாதிகாரியாய் இருந்துகொண்டு தேஹத்தில் ஆத்மா என்று அபிமானம் கொண்டதினால் தேஹத்தை உடைய அக்ஞானி ஆத்மாவினிடத்தில் கர்த்ருத்வ ஞானம் நீங்காததினால் நான் கர்த்தா என்றநிச்சயித்த புத்தி உடையவனாய் இருத்தலால் கர் மம் முழுவதையும் தியாகம் செய்ய முடியாததினால் கர்மபலத்தை தியாகம் செய்து விஹிதகர்மாவை அனுஷ்ட்டானம் செய்வதி லேயே அதிகாரம் இருக்கிறது. அதை தியாகம் செய்வதில் அல்ல என்பதை காண்பிப்பதற்காகக் கூறுகிறார்-
न हि देहभृता शक्यं त्यक्तुं कर्माण्यशेषतः ।
यस्तु कर्मफलत्यागी स त्यागीत्यभिधीयते ॥ ११ ॥
நஹி தேஹப்ருதா சக்யம் த்யக்தும் கர்மாண்யசேஷத: ।
யஸ்து கர்மபலத்யாகீ ஸ த்யாகீத்யபிதீயதே ॥ 11 ॥
न हि यस्मात् देहभृता, देहं बिभर्तीति देहभृत् , देहात्माभिमानवान् देहभृत् उच्यते, न विवेकी ; स हि ‘वेदाविनाशिनम्’ (भ. गी. २ । २१) इत्यादिना कर्तृत्वाधिकारात् निवर्तितः । अतः तेन देहभृता अज्ञेन न शक्यं त्यक्तुं संन्यसितुं कर्माणि अशेषतः निःशेषेण । तस्मात् यस्तु अज्ञः अधिकृतः नित्यानि कर्माणि कुर्वन् कर्मफलत्यागी कर्मफलाभिसन्धिमात्रसंन्यासी सः त्यागी इति अभिधीयते कर्मी अपि सन् इति स्तुत्यभिप्रायेण ।
தேஹப்ருத் என்றால் தேஹத்தைத் தாங்குபவன், தேஹத்தில் அபிமானம் உள்ளவன் தேஹப்ருத் எனப்படுகிறான். வேதாவினா சினம் முதலியவைகளால் உடம்பையும், ஆத்மாவையும் வேறாக அறிந்த அந்த விவேகி புருஷன் உடம்பை சுமப்பவன் அல்லன் என்பது தெரிகிறது. ஆகையால் அவன் கர்த்தா என்னும் அதிகாரம் அவனுக்கு நீங்கிவிட்டது என்பது தெரிகிறது. ஆகையால் அக்ஞானியாகிய தேஹத்தை உடையவன் கர்மங்கள் முழுவதையும் தியாகம் செய்யமுடியாது. ஆகையால் அக்ஞானி யாகிய அதிகாரி நித்யகர்மாக்களை செய்யும்பொழுது கர்மத்தின் பலனை மாத்திரம் எதிர்நோக்காமல் இருக்கும் சந்நியாசியே தியாகி. அவன் கர்மம் செய்பவனாய் இருந்தாலும் ஸ்துதியின் பொருட்டு தியாகி என்று கருதப்படுகிறான்.
तस्मात् परमार्थदर्शिनैव अदेहभृता देहात्मभावरहितेन अशेषकर्मसंन्यासः शक्यते कर्तुम् ॥ ११ ॥
ஆகையால் தேஹத்தைத் தாங்காதவன் அதாவது தேஹத்தில் அபிமானம் அற்றவனாயும் பரமார்த்த தர்சியாகவும் உள்ளவனா லேயே கர்மம் முழுவதையும் தியாகம் செய்யமுடியும்.
किं पुनः तत् प्रयोजनम् , यत् सर्वकर्मसंन्यासात् स्यादिति, उच्यते —
சர்வகர்ம பரித்தியாகத்தினால் என்ன பலன் உண்டாகும்? அது என்ன? என்பதைக் கூறுகிறார்-
अनिष्टमिष्टं मिश्रं च त्रिविधं कर्मणः फलम् ।
भवत्यत्यागिनां प्रेत्य न तु संन्यासिनां क्वचित् ॥ १२ ॥
அநிஷ்டமிஷ்டம் மிச்ரம் ச த்ரிவிதம் கர்மண: பலம் ।
பவத்யத்யாகினாம் ப்ரேத்ய ந து ஸந்ந்யாஸினாம் க்வசித் ॥ 12 ॥
अनिष्टं नरकतिर्यगादिलक्षणम् , इष्टं देवादिलक्षणम् , मिश्रम् इष्टानिष्टसंयुक्तं मनुष्यलक्षणं च, तत्र त्रिविधं त्रिप्रकारं कर्मणः धर्माधर्मलक्षणस्य फलं ।
அநிஷ்ட்டம் என்றால் நரகம் மற்றும் பசுபக்ஷி முதலிய பிறப்பு கள். இஷ்ட்டம் என்றால் தேவர்கள் முதலிய பிறப்பு, அவ்வாறே மிஸ்ரம் (கலப்பு) என்றால் இஸ்ட்டம், அநிஷ்ட்டம் ஆகியவை கலந்த மனிதப்பிறப்பு என்று இவ்வாறாக புண்ய, பாபங்களுடன் கூடிய கர்மபலன்கள் மூன்றுவிதமாக இருக்கின்றன.
बाह्यानेककारकव्यापारनिष्पन्नं सत् अविद्याकृतम् इन्द्रजालमायोपमं महामोहकरं प्रत्यगात्मोपसर्पि इव — फल्गुतया लयम् अदर्शनं गच्छतीति फलनिर्वचनम् ।
கர்மபலன் வெளியில் உள்ள பல கர்த்தா, கர்மம் முதலிய காரகங்களின் வியாபாரத்தோடு கூடிய பாவ பதார்த்தம் அவித் யையினால் உண்டானது. இந்திர ஜாலத்திற்கு ஒப்பானது. பிரத்யக் ஆத்மாவை அடைந்திருப்பது போல் மோஹத்தைச் செய்கிறது. சாரமற்றதால் இல்லாமற்போகிறது என்பதால் பலன் எனப்பட்டது. இவ்வாறு கர்மபலனானது வியாக்யானம் செய்யப்பட்டது.
तत् एतत् एवंलक्षणं फलं भवति अत्यागिनाम् अज्ञानां कर्मिणां अपरमार्थसंन्यासिनां प्रेत्य शरीरपातात् ऊर्ध्वम् । न तु संन्यासिनां परमार्थसंन्यासिनां परमहंसपरिव्राजकानां केवलज्ञाननिष्ठानां क्वचित् ।
உண்மையான சந்நியாசத்தைக் கொள்ளாத கர்மிகளாகிய அக் ஞானிகள் இந்த சரீரம் வீழ்ந்தபின் இவ்வாறு இந்த லக்ஷணங்க ளோடு கூடிய அநித்திய பலத்தை அடைகிறார்கள். கேவலம் ஞானநிஷ்ட்டையை மாத்திரம் உடைய பரமஹம்ஸ சந்நியாசிகள் ஒருநாளும் இந்த பலத்தை அடையமாட்டார்கள்.
न हि केवलसम्यग्दर्शननिष्ठा अविद्यादिसंसारबीजं न उन्मूलयति कदाचित् इत्यर्थः ॥ १२ ॥
கேவல சம்யக் தர்சன நிஷ்டையானது சம்சாரத்திற்கு காரணமான அவித்யையைப் போக்காமல் ஒருபொழுதும் இருக்காதன்றோ என்பது பொருள்.
अतः परमार्थदर्शिनः एव अशेषकर्मसंन्यासित्वं सम्भवति, अविद्याध्यारोपितत्वात् आत्मनि क्रियाकारकफलानाम् ; न तु अज्ञस्य अधिष्ठानादीनि क्रियाकर्तृकारकाणि आत्मत्वेनैव पश्यतः अशेषकर्मसंन्यासः सम्भवति तदेतत् उत्तरैः श्लोकैः दर्शयति —
ஆகையால் கிரியா, காரக மற்றும் பலன் முதலியவைகள் ஆத்மாவிடத்தில் ஆரோபம் செய்யப்பட்டிருப்பதால் பரமார்த்த தர்சீ (ஆத்மக்ஞானி) எல்லா கர்மங்களையும் மிச்சம் இல்லாமல் தியாகம் செய்ய முடியும். கர்மங்கள் செய்யும் அக்ஞானி சரீரம் முதலிய அதிஷ்ட்டானங்களால் செய்யப்படும் கிரியை, கர்த்தா முதலிய காரகங்களை ஆத்மாவாகவே பார்ப்பதால் கர்மங்கள் முழுவதையும் தியாகம் செய்தல் என்பது முடியாது. அந்த இந்த விஷயத்தை இனிவரும் ஸ்லோகங்களில் காண்பிக்கின்றார்.
पञ्चैतानि महाबाहो कारणानि निबोध मे ।
साङ्ख्ये कृतान्ते प्रोक्तानि सिद्धये सर्वकर्मणाम् ॥ १३ ॥
பஞ்சைதானி மஹாபாஹோ காரணானி நிபோத மே ।
ஸாங்க்யே க்ருதாந்தே ப்ரோக்தானி ஸித்தயே ஸர்வகர்ம ணாம் ॥ 13 ॥
पञ्च एतानि वक्ष्यमाणानि हे महाबाहो, कारणानि निर्वर्तकानि निबोध मे मम इति ।
ஹே மஹாபாஹோ! இனி கூறப்போகும் ஐந்து காரணங் களை அதாவது ஐந்துவிதமான கர்மசாதனங்களை நீ என்னிடமி ருந்து அறிந்து கொள்.
उत्तरत्र चेतःसमाधानार्थम् , वस्तुवैषम्यप्रदर्शनार्थं च । तानि च कारणानि ज्ञातव्यतया स्तौति ।
இனிமேல் வருபவைகளால் சித்த சமாதானத்திற்காகவும், (அதிஷ்ட்டானம்) சரீரம், காரகங்கள் பலன் முதலியவற்றின் வேற்று மைகளை காண்பிப்பதற்காகவும் அந்த ஐந்து காரணங்களை அறி யவேண்டியதின் அவசியத்தைக் கூறி அதை புகழ்கின்றார்.
साङ्ख्ये ज्ञातव्याः पदार्थाः सङ्ख्यायन्ते यस्मिन् शास्त्रे तत् साङ्ख्यं वेदान्तः । कृतान्ते इति तस्यैव विशेषणम् । कृतम् इति कर्म उच्यते, तस्य अन्तः परिसमाप्तिः यत्र सः कृतान्तः, कर्मान्तः इत्येतत् । ‘यावानर्थ उदपाने’ (भ. गी. २ । ४६) ‘सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते’ (भ. गी. ४ । ३३) इति आत्मज्ञाने सञ्जाते सर्वकर्मणां निवृत्तिं दर्शयति ।
அறியப்படவேண்டிய விஷயங்கள் எந்த சாஸ்திரத்தில் உணர்த்தப்படுகிறதோ அது சாங்கியம் எனப்படும் வேதாந்தம் ஆகும், அதற்கு கிருதாந்தம் என்பது விஷேசணமாகும். செயல் என்று கர்மத்தைக் கூறுகிறார்கள். எங்கு கர்மங்கள் செய்வது முடிவடைகிறதோ அது க்ருதாந்தம் எனப்படும். (கருமங்கள் செய்வதின் முடிவு) (யாவானர்த்த உதபானே) நீர் நிலையில் (ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஞானே பரிசமாப்யதே) ஹே பார்த்த எல்லாக் கர்மங்களும் ஞானத்தில் முடிகிறது என்று ஆத்மக் ஞானம் உண்டான உடன் எல்லாக் கர்மங்களும் நிவிர்த்தியாகிறது என்று காண்பிக்கிறார்.
अतः तस्मिन् आत्मज्ञानार्थे साङ्ख्ये कृतान्ते वेदान्ते प्रोक्तानि कथितानि सिद्धये निष्पत्त्यर्थं सर्वकर्मणाम् ॥ १३ ॥
ஆகையால் ஆத்மக்ஞானத்தை தரக்கூடிய க்ருதாந்தம், சாங் கியம் எனப்படும் வேதாந்த சாஸ்திரத்தில் கூறப்பட்டது அடைவ தற்கான இந்த ஐந்துவகை கர்மங்களையும் கேள்.
कानि तानीति, उच्यते —
அவைகள் எவை என்று கூறுகிறார்-
अधिष्ठानं तथा कर्ता करणं च पृथग्विधम् ।
विविधाश्च पृथक्चेष्टा दैवं चैवात्र पञ्चमम् ॥ १४ ॥
அதிஷ்டானம் ததா கர்தா கரணம் ச ப்ருதக்விதம் ।
விவிதாச்ச ப்ருதக்சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம் ॥ 14 ॥
अधिष्ठानम् इच्छाद्वेषसुखदुःखज्ञानादीनाम् अभिव्यक्तेराश्रयः अधिष्ठानं शरीरम् , तथा कर्ता उपाधिलक्षणः भोक्ता, करणं च श्रोत्रादि शब्दाद्युपलब्धये पृथग्विधं नानाप्रकारं तत् द्वादशसङ्ख्यं विविधाश्च पृथक्चेष्टाः वायवीयाः प्राणापानाद्याः दैवं चैव दैवमेव च अत्र एतेषु चतुर्षु पञ्चमं पञ्चानां पूरणम् आदित्यादि चक्षुराद्यनुग्राहकम् ॥ १४ ॥
அதிஷ்ட்டானம் என்பது விருப்பு, வெறுப்பு, சுகம், துக்கம், ஞானம் முதலியவைகள் வெளிப்படுவதற்கு ஆஸ்ரயமாக உள்ள இடம் சரீரமாகும். அவ்வாறேகர்த்தா என்பது உபாதிகளை உடைய போக்தா. கரணம் என்பது சப்தம் முதலியவைகளை அறியும் செவி முதலியவைகளாகிய அநேகவிதமான கருவிகள் பன்னி ரெண்டாகும். வெவ்வேறாக தனித்தன்மையுடன் செயல்படு கின்றபிராண அபான முதலியவாயுக்கள். இந்த நான்கும் ஐந்தா வதாகிய தேவதையின் உதவியினால் செயல்பட்டு பூரணமடைகிறது. அது எவ்வாறெனில் கண் முதலிய இந்திரியங்களை அனுக்ர ஹிக்கும் சூரியன் முதலியவைகள் தேவதைகள் போல் அனுக்கிர ஹித்து பூரணமாகிறது.
शरीरवाङ्मनोभिर्यत्कर्म प्रारभते नरः ।
न्याय्यं वा विपरीतं वा पञ्चैते तस्य हेतवः ॥ १५ ॥
சரீரவாங்மனோபிரியத்கர்ம ப்ராரபதே நர: ।
ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ: ॥ 15 ॥
शरीरवाङ्मनोभिः यत् कर्म त्रिभिः एतैः प्रारभते निर्वर्तयति नरः, न्याय्यं वा धर्म्यं शास्त्रीयम् , विपरीतं वा अशास्त्रीयम् अधर्म्यं यच्चापि निमिषितचेष्टितादि जीवनहेतुः तदपि पूर्वकृतधर्माधर्मयोरेव कार्यमिति न्याय्यविपरीतयोरेव ग्रहणेन गृहीतम् , पञ्च एते यथोक्ताः तस्य सर्वस्यैव कर्मणो हेतवः कारणानि ।
சரீரம், வாக்கு மனம் ஆகிய மூன்றினாலும் மனிதன் சாஸ்திரத் தில் உள்ள நியாயமான தர்மத்துடன் சாஸ்திரத்தில் கூறப்பெற்ற தும், அல்லது தர்மத்திற்கு விரோதமான சாஸ்திரத்தில் இல்லாத கர் மங்களைச் செய்கிறான். இவை எல்லாவற்றிற்கும் மேலே கூறிய ஐந்தும் கர்மத்திற்கு காரணமாகின்றன. இமை கொட்டுதல் முதலிய ஜீவிப்பதற்கு காரணம் எதுவோ அதுவும் முன்பு செய்யப்பட்ட தர்ம, அதர்மங்களின் காரியம் ஆதலால் நேர்மையானது, விரோதமா னது என்ற நியாயத்தினால்தான் கிரஹிக்கப்படுகிறது.
ननु एतानि अधिष्ठानादीनि सर्वकर्मणां निर्वर्तकानि । कथम् उच्यते ‘शरीरवाङ्मनोभिः यत् कर्म प्रारभते’ इति ।
அதிஷ்ட்டானம் முதலியவைகளே எல்லாக் கர்மங்களுக்கும் காரணமாய் இருக்கையில் எவ்வாறு மனம், வாக்கு, சரீரம் இவைகளால் கர்மம் செய்யப்படுகிறது என்று கூறமுடியும்?
नैष दोषः ; विधिप्रतिषेधलक्षणं सर्वं कर्म शरीरादित्रयप्रधानम् ; तदङ्गतया दर्शनश्रवणादि च जीवनलक्षणं त्रिधैव राशीकृतम् उच्यते शरीरादिभिः आरभ्यते इति । फलकालेऽपि तत्प्रधानैः साधनैः भुज्यते इति पञ्चानामेव हेतुत्वं न विरुध्यते इति ॥ १५ ॥
இந்த தோஷம் ஏற்படாது. விஹித கர்மங்களும், நிஷித்த கர்மங்களும் ஆகிய எல்லாக் கர்மங்களுக்கும் சரீரம், வாக்கு மனம் ஆகிய இம்மூன்றும் முக்யமானவை. அவ்வாறேபார்த்தல் கேட்டல் முதலிய ஜீவனத்திற்கு காரணமான செயல்களும் அந்த கர்மங்களுக்கு அங்க பூதமாகிறது. ஆகையால் எல்லாக்கர்மங்க ளும் மூன்றுவிதமாகப் பிரிக்கப்பட்டு சரீரம் முதலியவைகளால் செயல்படுகின்றன என்று கூறப்படுகின்றது. அவ்வாறேபலனை அனுபவிக்கும் சமயத்திலும் சரீரம் முதலிய பிரதான காரணங்க ளால் தான் பலபோகம் ஏற்படுகிறது. மேலே கூறப்பட்ட அதிஷ்ட் டானம் முதலிய ஐந்து காரணங்கள் ஏதுவானது சரியே. விரோதம் அல்ல.
तत्रैवं सति कर्तारमात्मानं केवलं तु यः ।
पश्यत्यकृतबुद्धित्वान्न स पश्यति दुर्मतिः ॥ १६ ॥
தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மானம் கேவலம் து ய: ।
பச்யத்யக்ருதபுத்தித்வான்ன ஸ பச்யதி துர்மதி: ॥ 16 ॥
तत्र इति प्रकृतेन सम्बध्यते । एवं सति एवं यथोक्तैः पञ्चभिः हेतुभिः निर्वर्त्ये सति कर्मणि । तत्रैवं सति इति दुर्मतित्वस्य हेतुत्वेन सम्बध्यते । तत्र एतेषु आत्मानन्यत्वेन अविद्यया परिकल्पितैः क्रियमाणस्य कर्मणः ‘अहमेव कर्ता’ इति कर्तारम् आत्मानं केवलं शुद्धं तु यः पश्यति अविद्वान् ; कस्मात् ? वेदान्ताचार्योपदेशन्यायैः अकृतबुद्धित्वात् असंस्कृतबुद्धित्वात् ।
தத்ர என்றபதம் (ப்ரகிருதத்தில்) இப்போது கூறிவரும் கர்மத் தோடு சம்பந்தப்படுகிறது. இவ்வாறு இருக்கும்பொழுது இவ்வாறு கூறப்பட்ட ஐந்து கரணங்களால் எல்லாக் கர்மங்களும் அனுஷ்ட் டிக்கப்படுகின்றன. அங்கு இவ்வாறு இருக்கும்பொழுது தீமை யான புத்திக்கு ஏதுவாகிறது. ஆகையால் அவைகளில் ஆத்மா விற்கு அன்னியமில்லை என்று அவித்யையினால் கல்பித்து அவர்களால் அனுஷ்ட்டிக்கப்படும் கர்மங்களுக்கு நானே கர்த்தா என்று சுத்தமான ஆத்மாவை கர்த்தாவாக அவித்வான் பார்க்கி றான். ஏன் எனில் வேதாந்த வாக்கியங்களினாலும் ஆசாரிய உபதேசங்களாலும், யுக்தியினாலும் சுத்தப்படுத்தப்படாத (பண்படுத்தப்படாத) புத்தி உடையவனாய் இருப்பதால்.
योऽपि देहादिव्यतिरिक्तात्मवादी आत्मानमेव केवलं कर्तारं पश्यति, असावपि अकृतबुद्धिः ; अतः अकृतबुद्धित्वात् न सः पश्यति आत्मनः तत्त्वं कर्मणो वा इत्यर्थः ।
அவ்வாறேஎவன் சரீரம் முதலியவைகளைக் காட்டிலும் ஆத் மாவை வேறாகப் பார்ப்பவன் சரீரம் முதலியவற்றைக் காட்டிலும் வேறாக ஆத்மாவைக் கர்த்தாவாக அறிகிறான். அதுவும் அக்ருத புத்தியாகும் (பண்படுத்தப்படாத புத்தியாகும்) ஆகையால் அந்த பண்படுத்தப்படாத புத்தி உடையவன் ஆத்மாவின் தத்துவத் தையோ கர்மங்களின் தத்துவத்தையோ அறிந்தவன் அல்ல என் பது அபிப்பிராயம்.
अतः दुर्मतिः, कुत्सिता विपरीता दुष्टा अजस्रं जननमरणप्रतिपत्तिहेतुभूता मतिः अस्य इति दुर्मतिः । सः पश्यन्नपि न पश्यति, यथा तैमिरिकः अनेकं चन्द्रम् , यथा वा अभ्रेषु धावत्सु चन्द्रं धावन्तम् , यथा वा वाहने उपविष्टः अन्येषु धावत्सु आत्मानं धावन्तम् ॥ १६ ॥
ஆகையால் அது தீயபுத்தியாகும். எவருடைய புத்தியானது குறுகியதாகவும், விபரீதமானதாயும், பொல்லாததாயும், எப்பொழு தும் ஜன்மம், மரணம் ஆகியவைகளை அடைவதற்கான காரண மாய் உள்ளதோ அவன் துர்மதியை உடையவன். அவன் பார்த்தா லும் உண்மையை அறிவதில்லை, எவ்வாறு கண்களில் திமிரநோய் உடையவன் சந்திரனை இரண்டாகக் காண்கிறானோ அவ் வாறேமேகங்கள் ஓடும்பொழுது சந்திரன் ஓடுவது போலும், வாஹ னத்தில் இருப்பவன்(வண்டியில் இருப்பவன்) மற்றஓடுகின்றவைக ளைப் பார்த்து தான் ஓடுவதுபோலும் பார்க்கிறான்.
कः पुनः सुमतिः यः सम्यक् पश्यतीति, उच्यते —
இனி எவன் நன்றாகப் (வாஸ்தவமாக) பார்க்கின்றானோ அந்த நல்ல புத்தி உடையவன் யார்?
यस्य नाहङ्कृतो भावो बुद्धिर्यस्य न लिप्यते ।
हत्वापि स इमांल्लोकान्न हन्ति न निबध्यते ॥ १७ ॥
யஸ்ய நாஹங்க்ருதோ பாவோ புத்திர்யஸ்ய ந லிப்யதே ।
ஹத்வாபி ஸ இமாம்லோகான்ன ஹந்தி ந நிபத்யதே ॥ 17 ॥
यस्य शास्त्राचार्योपदेशन्यायसंस्कृतात्मनः न भवति अहङ्कृतः ‘अहं कर्ता’ इत्येवंलक्षणः भावः भावना प्रत्ययः — एते एव पञ्च अधिष्ठानादयः अविद्यया आत्मनि कल्पिताः सर्वकर्मणां कर्तारः, न अहम् , अहं तु तद्व्यापाराणां साक्षिभूतः ‘अप्राणो ह्यमनाः शुभ्रो ह्यक्षरात्परतः परः’ (मु. उ. २ । १ । २) केवलः अविक्रियः इत्येवं पश्यतीति एतत् ।
சாஸ்திரம், ஆச்சார்ய உபதேசம் அவ்வாறேயுக்தி இவைக ளால் நன்கு பண்படுத்தப்பட்ட புத்தி உடையவனுக்கு நான் கர்த்தா என்றபாவனையானது தோன்றாது. ஏன் எனில் அவன் இவ்வாறு அறிந்திருக்கிறான். அது என்னவெனில் அவித்யையானது ஆத் மாவினிடத்தில் அத்யாரோபம் செய்யப்பட்டுள்ளது. சரீரம் முத லிய ஐந்து காரணங்களே எல்லாக் கர்மங்களுக்கும் கர்த்தா, நான் அல்ல. நான் அந்த வியாபாரங்களுக்கு சாக்ஷி மாத்திரமாக இருக் கிறேன் என்று அறிந்திருக்கிறான். அப்ராணோ ஹ்யமனா: சுப்ரோ அக்ஷராத்பரத: பர: = பிராணன் அற்றவன், மனம் அற்றவன், தூய் மையானவன், அக்ஷரத்தைக் காட்டிலும் மேலானவன் தனிமையா னவன், கிரியை (செயல்) அற்றவன் என்று இவ்வாறு பார்க்கிறான்.
बुद्धिः अन्तःकरणं यस्य आत्मनः उपाधिभूता न लिप्यते न अनुशयिनी भवति — ‘इदमहमकार्षम् , तेन अहं नरकं गमिष्यामि’ इत्येवं यस्य बुद्धिः न लिप्यते — सः सुमतिः, सः पश्यति ।
எவனை தன்னுடைய உபாதியாகிய அந்தக்கரணம் ஒட்டுவ தும் அவனைத் தபப்படுத்துவதும் இல்லையோ அவன் நல்ல புத் தியை உடையவன், அவனே அறிகிறான். எவ்வாறு எனில் நான் தீய செயல்கள் உடையவன். ஆகையால் நரகத்திற்கு செல்வேன் என்றபுத்தி எவனுக்கு இல்லையோ அவன் நல்ல புத்தி உடைய வன் ஸுமதி: அவனே உண்மையை அறிகிறான்.
हत्वा अपि सः इमान् लोकान् , सर्वान् इमान् प्राणिनः इत्यर्थः, न हन्ति हननक्रियां न करोति, न निबध्यते नापि तत्कार्येण अधर्मफलेन सम्बध्यते ॥
அவன் இந்த எல்லாம் பிராணிகளையும் கொன்றாலும் கொலைச்செயலைச் செய்கிறவனில்லை. மேலும் அதனால் விளையும் அதர்ம பலலனாலலும் சம்பந்தப்படுகிறவனு மில்லை என்பது அர்த்மாகும்.
ननु हत्वापि न हन्ति इति विप्रतिषिद्धम् उच्यते यद्यपि स्तुतिः ।
கொன்றாலும் கொல்லவில்லை என்று கூறுவது பொருந்தாது. (ஞானியின்) ஸ்துதியின் பொருட்டே ஆகுமெனில்-
नैष दोषः, लौकिकपारमार्थिकदृष्ट्यपेक्षया तदुपपत्तेः ।
இந்த தோஷமானது கிடையாது லௌகிக (வியாவகாரிக) பார மார்த்திக திருஷ்ட்டியை அனுசரித்து கூறப்பட்டதாகும்.
देहाद्यात्मबुद्ध्या ‘हन्ता अहम्’ इति लौकिकीं दृष्टिम् आश्रित्य ‘हत्वापि’ इति आह । यथादर्शितां पारमार्थिकीं दृष्टिम् आश्रित्य ‘न हन्ति न निबध्यते’ इति । एतत् उभयम् उपपद्यते एव ।
தேஹம் முதலியவைகளில் உள்ள ஆத்ம புத்தியினால் நான் கொல்வேன் என்பது லௌகிக திருஷ்ட்டியை சார்ந்து கொன்றா லும் என்று கூறப்பட்டது. முன்பு உபதேசிக்கப்பட்ட பாரமார்த்திக திருஷ்ட்டியை அனுசரித்து கொல்லுவதும் இல்லை. அதனுடன் பந்தப்படுவதும் இல்லை என்றஇந்த இரண்டும் கூறப்பட்டது.
ननु अधिष्ठानादिभिः सम्भूय करोत्येव आत्मा, ‘कर्तारमात्मानं केवलं तु’ (भ. गी. १८ । १६) इति केवलशब्दप्रयोगात् ।
கர்த்தாரமாத்மானம் கேவலம் து என்று கேவல சப்தத்தைப் பிரயோகம் செய்துள்ளதால் ஆத்மா அதிஷ்ட்டானம் (சரீரம்) முத லியவைகளுடன் சேர்ந்து கர்மம் செய்கின்றது எனில்-
नैष दोषः, आत्मनः अविक्रियस्वभावत्वे अधिष्ठानादिभिः, संहतत्वानुपपत्तेः ।
இந்த தோஷம் கிடையாது. ஏன் எனில் ஆத்மாவிற்கு கிரியை அற்றிருத்தல் என்பது ஸ்வபாவமாவதால் அதிஷ்ட்டானம் (சரீரம்) முதலியவற்றுடன் சேர்ந்திருத்தல் பொருந்தாது.
विक्रियावतो हि अन्यैः संहननं सम्भवति, संहत्य वा कर्तृत्वं स्यात् ।
கிரியை உடையவைகளுக்குத்தான் மற்றவைகளுடன் சம்பந் தம் உண்டாகிறது. சம்பந்தப்பட்டு கர்த்தாவாகிறது.
न तु अविक्रियस्य आत्मनः केनचित् संहननम् अस्ति इति न सम्भूय कर्तृत्वम् उपपद्यते । अतः केवलत्वम् आत्मनः स्वाभाविकमिति केवलशब्दः अनुवादमात्रम् ।
கிரியை அற்றஆத்மா ஒன்றுடனும் பந்தப்படாது. ஆகையால் அதற்கு கர்த்திருத்துவம் ஏற்படாது. ஆகையால் ஆத்மாவிற்குத் தனித்தன்மை (கேவலம்) என்பது ஸ்வபாவமானது என்று இங்கு கேவல சப்தமானது அதன் இயல்பினைக் குறிப்பதற்காக வந்தது.
अविक्रियत्वं च आत्मनः श्रुतिस्मृतिन्यायप्रसिद्धम् । ‘अविकार्योऽयमुच्यते’ (भ. गी. २ । २५) ‘गुणैरेव कर्माणि क्रियन्ते’ (भ. गी. ३ । २७) ‘शरीरस्थोऽपि न करोति’ (भ. गी. १३ । ३१) इत्यादि असकृत् उपपादितं गीतास्वेव तावत् । श्रुतिषु च ‘ध्यायतीव लेलायतीव’ (बृ. उ. ४ । ३ । ७) इत्येवमाद्यासु ।
ஆத்மாவின் அவிக்ரியத்தன்மையானது சுருதி, ஸ்மிருதி, நியாயங்களில் பிரசித்தமாக உள்ளது. அவிகார்யோயமுச்யதே = அது அவிகாரி எனப்படுகிறது. குணைரேவ கர்மாணி க்ரியந்தே எல்லாக் கர்மங்களும் குணங்களினாலேயே செய்யப்படுகின்றன. சரீரஸ்த்தோபி ந கரோதி = சரீரத்தில் இருந்தாலும் அது செய்வ தில்லை என்று அநேக தடவை கீதையில் கூறப்பட்டுள்ளது. மேலும் ச்ருதிகளிலும் த்யாயதீவ லேலாயதீவ தியானிப்பது போலும், செயல்படுவது போலும் என்பது முதலியவைகளினால் கூறப்பட்டுள்ளது.
न्यायतश्च — निरवयवम् अपरतन्त्रम् अविक्रियम् आत्मतत्त्वम् इति राजमार्गः ।
அவ்வாறேயுக்தி பூர்வகமாகவும், ஆத்ம தத்துவமானது அவ யவம் அற்றது, பர தந்திரமற்றது கிரியை அற்றது என்பது அறியப் பட்ட ராஜமார்க்கமாகும்.
विक्रियावत्त्वाभ्युपगमेऽपि आत्मनः स्वकीयैव विक्रिया स्वस्य भवितुम् अर्हति, न अधिष्ठानादीनां कर्माणि आत्मकर्तृकाणि स्युः । न हि परस्य कर्म परेण अकृतम् आगन्तुम् अर्हति । यत्तु अविद्यया गमितम् , न तत् तस्य ।
ஆத்மாவிற்கு கிரியாதன்மையை ஒப்புக்கொண்டாலும் தனக்கு தன்னுடைய செயலினாலேயே (கிரியையினாலேயே) விக் ரியையானது ஏற்படுவது பொருந்தும். அதிஷ்ட்டானம் முதலிய (ச ரீரம் முதலிய) வைகளின் கர்மங்கள் ஆத்மாவினுடைய கர்மங்க ளாகாது. ஒருவர் செய்த கர்மம், கர்மம் செய்யாத மற்றொருவருக்கு பலனைக் கொடுப்பது என்பது பொருந்தாது. அது அவித்யையி னால் ஆரோபம் செய்யப்பட்டது. உண்மையில் ஆத்மாவிற்குக் கிடையாது.
यथा रजतत्वं न शुक्तिकायाः ; यथा वा तलमलिनत्वं बालैः गमितम् अविद्यया, न आकाशस्य, तथा अधिष्ठानादिविक्रियापि तेषामेव, न आत्मनः ।
எவ்வாறு வெள்ளியினுடைய தத்துவம் சிப்பிக்கு (கிளிஞ்ச லுக்கு) ஆகாதோ, அவ்வாறு சிற்றறிவுடையவர்களுக்கு அவித் யையினால் ஆரோபிக்கப்பட்ட இருப்பிடமும் மலினத்தன்மை யும் ஆகாசத்திற்கில்லையோ அவ்வாறே அதிஷ்ட்டானம்(சரீரம்) முதலிய ஐந்து காரணங்களின் விகாரங்களும் அவைகளுக்கே அன்றி ஆத்மாவிற்கு அல்ல.
तस्मात् युक्तम् उक्तम् ‘अहङ्कृतत्वबुद्धिलेपाभावात् विद्वान् न हन्ति न निबध्यते’ इति ।
ஆகையால் நான் செய்கிறேன் என்ற புத்தி இல்லாத வித்வான் கொல்லுவதும் இல்லை, அந்தப் பலன்களில் பந்தப்படுவதும் இல்லை என்று யுக்தியானது கூறப்பட்டது
‘नायं हन्ति न हन्यते’ (भ. गी. २ । १९) इति प्रतिज्ञाय ‘न जायते’ (भ. गी. २ । २०) इत्यादिहेतुवचनेन अविक्रियत्वम् आत्मनः उक्त्वा, ‘वेदाविनाशिनम्’ (भ. गी. २ । २१) इति विदुषः कर्माधिकारनिवृत्तिं शास्त्रादौ सङ्क्षेपतः उक्त्वा, मध्ये प्रसारितां तत्र तत्र प्रसङ्गं कृत्वा इह उपसंहरति शास्त्रार्थपिण्डीकरणाय ‘विद्वान् न हन्ति न निबध्यते’ इति ।
நாயம் ஹந்தி ந ஹன்யதே = கொல்லுவதும் இல்லை, கொல் லப்படுவதும் இல்லை, என்பது முதலிய ஏது வசனங்களால் ஆத்மாவிற்கு கிரியை அற்றதன்மையைக் கூறி வேதாவினாசினம் என்ற ஸ்லோகத்தினால் வித்வானுக்கு கர்மத்தில் அதிகாரம் கிடையாது என்று சுருக்கமாகக் கூறி மத்தியில் அங்கு அங்கு அதைப் பற்றி விஸ்தரித்து இப்பொழுது இங்கு சாஸ்திரத்தில் உள்ள அர்த்தத் தைத் திரட்டி வித்வான் கொல்லுவது இல்லை என்றும், பந்தப்படுவ தில்லை என்று கூறி முடிவுக்குக் கொண்டு வருகிறார்.
एवं च सति देहभृत्त्वाभिमानानुपपत्तौ अविद्याकृताशेषकर्मसंन्यासोपपत्तेः संन्यासिनाम् अनिष्टादि त्रिविधं कर्मणः फलं न भवति इति उपपन्नम् ; तद्विपर्ययाच्च इतरेषां भवति इत्येतच्च अपरिहार्यम् इति एषः गीताशास्त्रार्थः उपसंहृतः ।
இவ்வாறு இருக்கும்பொழுது தேஹத்தை உடையவன் என்றஅபிமானம் இல்லாததினால் அவித்யையினால் உண்டான மீதமில்லாமல் எல்லாக்கர்மங்களிலும் சந்நியாசம் ஏற்பட்ட சந்நி யாசிகளுக்கு அநிஷ்ட்டம் முதலிய மூன்று விகர்ம பலன்கள் கிடையாது என்பது பொருந்தும். இதற்கு மாறாக மற்றவர்களுக்கு உண்டு அதை நீக்கமுடியாது என்று கூறி இந்த கீதா சாஸ்திரத்தின் அர்த்தம் முடிக்கப்பட்டது.
स एषः सर्ववेदार्थसारः निपुणमतिभिः पण्डितैः विचार्य प्रतिपत्तव्यः इति तत्र तत्र प्रकरणविभागेन दर्शितः अस्माभिः शास्त्रन्यायानुसारेण ॥ १७ ॥
நல்ல நிபுணபுத்தியுள்ளவர்களாகிய (திறமையான புத்தி உள்ள வர்களாகிய) பண்டிதர்களால் அந்த இந்த வேதார்த்த சாரத்தை விசாரித்து (யதார்த்த ஞானம்) அடையவேண்டும் என்று அங்கு அங்கு பிரகரணத்தை பிரித்து சாஸ்திரத்தின் படியும், யுக்தியின் படியும் எங்களால் காண்பிக்கப்பட்டது.
अथ इदानीं कर्मणां प्रवर्तकम् उच्यते —
இப்பொழுது கர்மங்களின் பிரவிருத்தியை (தூண்டுதலை) கூறுகிறார்-
ज्ञानं ज्ञेयं परिज्ञाता त्रिविधा कर्मचोदना ।
करणं कर्म कर्तेति त्रिविधः कर्मसङ्ग्रहः ॥ १८ ॥
ஞானம் ஞேயம் பரிக்ஞாதா த்ரிவிதா கர்மசோதனா ।
கரணம் கர்ம கர்தேதி த்ரிவித: கர்மஸங்க்ரஹ: ॥ 18 ॥
ज्ञानं ज्ञायते अनेन इति सर्वविषयम् अविशेषेण उच्यते । तथा ज्ञेयं ज्ञातव्यम् , तदपि सामान्येनैव सर्वम् उच्यते । तथा परिज्ञाता उपाधिलक्षणः अविद्याकल्पितः भोक्ता । इति एतत् त्रयम् अविशेषेण सर्वकर्मणां प्रवर्तिका त्रिविधा त्रिप्रकारा कर्मचोदना ।
ஞானம் என்பது எல்லாவிஷயங்களையும் மீதம் இல்லாமல் எதனால் உணர்த்தப்படுகிறதோ அதுவாகும். அவ்வாறேஞேயம் என்பது அறியப்படவேண்டியது, அது சாமான்யமாக எல்லா பதார்த்தங்களின் ஞானத்தையும் குறிக்கிறது. அவ்வாறேபரிக் ஞாதா என்பது அவித்யையினால் கல்பிக்கப்பட்ட உபாதியுடன் கூடிய போக்தா ஆகிய இம்மூன்றும் மிச்சம் இல்லாமல் எல்லாக் கர்மங்களையும் தூண்டக்கூடியது. கர்மங்களைத் தூண்டுவது மூன்று பிரகாரமாக இருக்கிறது.
ज्ञानादीनां हि त्रयाणां संनिपाते हानोपादानादिप्रयोजनः सर्वकर्मारम्भः स्यात् ।
இந்த ஞானம், ஞேயம், ஞாதா என இம்மூன்றும் ஒன்று சேரும் பொழுது எடுத்துக்கொள்ளுவதற்கும், விடுவதற்கும் ஆகிய பிர யோஜனத்திற்காகவும் கர்மங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன.
ततः पञ्चभिः अधिष्ठानादिभिः आरब्धं वाङ्मनःकायाश्रयभेदेन त्रिधा राशीभूतं त्रिषु करणादिषु सङ्गृह्यते इत्येतत् उच्यते —
சரீரம் (அதிஷ்ட்டானம்) முதலிய ஐந்து ஆச்ரயங்களால் செய் யப்பட்டு அவ்வாறே மனோ, வாக்கு, காயம் இவைகளின் ஆச்ரய பேதத்தால் எல்லாக் கர்மங்களும் கரணங்களில் மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. அதைக் குறிப்பிடுகிறார்-
करणं क्रियते अनेन इति बाह्यं श्रोत्रादि, अन्तःस्थं बुद्ध्यादि, कर्म ईप्सिततमं कर्तुः क्रियया व्याप्यमानम् , कर्ता करणानां व्यापारयिता उपाधिलक्षणः, इति त्रिविधः त्रिप्रकारः कर्मसङ्ग्रहः ।
எதனால் கர்மங்கள் செய்யப்படுகிறதோ அது கரணம். அது வெளியில் உள்ள செவி முதலியவைகளும், அந்தக்கரணத்தில் உள்ள புத்தி முதலியவைகள். கர்மம் என்பது கர்த்தாவிற்கு மிக வும் விருப்பமானதை அடைவதற்கான செயல்களில் ஈடுபடுவது. கர்த்தா என்பது இந்திரியங்களை அதன், அதன் செயல்களில் ஈடு படுத்தும் உபாதி உடைய ஜீவன். இவ்விதமாக கர்மத்திற்கு மூன்று விதமான சங்கிரஹமாகும்.
सङ्गृह्यते अस्मिन्निति सङ्ग्रहः, कर्मणः सङ्ग्रहः कर्मसङ्ग्रहः, कर्म एषु हि त्रिषु समवैति, तेन अयं त्रिविधः कर्मसङ्ग्रहः ॥ १८ ॥
எதில் நன்றாக தங்குகிறதோ (எதில் நன்றாக கிரஹிக்கப்பட்டி ருக்கிறதோ) அது சங்கிரஹமாகும். கர்மம் எதில் தங்குகிறதோ அது கர்ம சங்கிரஹமாகும். ஏன் எனில் இந்த மூன்று காரகங்களில் கர்மம் நிலைபெற்றிருக்கிறது. ஆகையால் கர்ம சங்கிரஹம் மூன்று விதமாக இருக்கிறது.
अथ इदानीं क्रियाकारकफलानां सर्वेषां गुणात्मकत्वात् सत्त्वरजस्तमोगुणभेदतः त्रिविधः भेदः वक्तव्य इति आरभ्यते —
இப்பொழுது செய்கை செய்யும் கருவிகள், அதன் பலன்கள் எல்லாம் குணவடிவமாக இருப்பதால் சத்வ, ரஜஸ், தமோ குணங்க ளின் பேதங்களினால் மூன்றுவித பேதங்கள் கூறுவதற்காக ஆரம் பிக்கப்படுகின்றன.
ज्ञानं कर्म च कर्ता च त्रिधैव गुणभेदतः ।
प्रोच्यते गुणसङ्ख्याने यथावच्छृणु तान्यपि ॥ १९ ॥
ஞானம் கர்ம ச கர்தா சத்ரிதைவ குணபேத்த: ।
ப்ரோச்யதே குணஸங்க்யானே யதாவச்ச்ருணு தான்யபி ॥ 19 ॥
ज्ञानं कर्म च, कर्म क्रिया, न कारकं पारिभाषिकम् ईप्सिततमं कर्म, कर्ता च निर्वर्तकः क्रियाणां त्रिधा एव, अवधारणं गुणव्यतिरिक्तजात्यन्तराभावप्रदर्शनार्थं गुणभेदतः सत्त्वादिभेदेन इत्यर्थः । प्रोच्यते कथ्यते गुणसङ्ख्याने कापिले शास्त्रे,
இங்கு கர்மம் என்றது கிரியை (செயல்) என்ற பொருளில் வந் துள்ளது. கர்த்தாவினுடைய மிகுந்த விருப்பத்திற்காக செய்யப்படு கின்றகர்மம் பாரிபாஷிகமாகக் கூறப்பட்ட காரகமன்று. கர்த்தா என் றால் காரியத்தைச் செய்து முடிப்பவன். ஞானம், கர்மம், கர்த்தா ஆகிய இவை மூன்றிற்கும் குணங்களால் வேற்றுமையைத் தவிர வேறு வகையாக இல்லை என்பதை விளக்குவதற்காக மூன்று வகை எனக்கூறப்பட்டது. செயல்கள் மூன்று விதமாகவே கூறப்பட் டது குணத்தை விடுத்து வேறு ஜாதி இல்லை என்பதைக் காட்டுவ தற்காக சத்துவாதிபேதம் காட்டப்பட்டது என்பது பொருள். குணங் களை ஆராய்ந்து கூறும் கபிலருடைய சாங்கிய சாஸ்திரத்திலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
तदपि गुणसङ्ख्यानशास्त्रं गुणभोक्तृविषये प्रमाणमेव । परमार्थब्रह्मैकत्वविषये यद्यपि विरुध्यते ।
அந்த குணஸாங்கிய சாஸ்திரமும் குணங்களுடைய போக்தா விதத்திற்கு பிரமாணமே அன்றி பரமார்த்த பிரஹ்ம ஐக்ய ஞான விஷயத்திற்கு மாறானதாகும்.
तथापि ते हि कापिलाः गुणगौणव्यापारनिरूपणे अभियुक्ताः इति तच्छास्त्रमपि वक्ष्यमाणार्थस्तुत्यर्थत्वेन उपादीयते इति न विरोधः ।
எவர்கள் கபில சாங்கியத்தைப் பற்றுகிறார்களோ அவர்கள் குணம், குணத்தின் வியாபாரத்தை (செயலை) நிரூபிப்பதில் வல்ல வர்கள். ஆகையால் அந்த சாஸ்திரமானது இனி கூறப்போ கிறவிஷயத்தை புகழுவதற்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆகையால் அந்த சாஸ்திரம் விரோதமல்ல.
यथावत् यथान्यायं यथाशास्त्रं शृणु तान्यपि ज्ञानादीनि तद्भेदजातानि गुणभेदकृतानि शृणु, वक्ष्यमाणे अर्थे मनःसमाधिं कुरु इत्यर्थः ॥ १९ ॥
ஞானம், கர்மம், கர்த்தா என்பனவற்றையும் குணங்களின் பேதத்தாலான அவைகளின் பேதத்தையும் யுக்திக்கும் சாஸ்த்திரத் திற்கும் பொருந்துமாறு (கூறுகிறேன்) கேள். இனிக்கூறப்போகும் விஷயத்தில் மனதை அலையவிடாமல் ஒருமுகப்படுத்து என்பது பொருள்.
ज्ञानस्य तु तावत् त्रिविधत्वम् उच्यते —
முதலில் ஞானத்திற்குள்ள மூன்றுவிதபேதம் கூறப்பட்டுள்ளது-
सर्वभूतेषु येनैकं भावमव्ययमीक्षते ।
अविभक्तं विभक्तेषु तज्ज्ञानं विद्धि सात्त्विकम् ॥ २० ॥
ஸர்வபூதேஷு யேனைகம் பாவமவ்யயமீக்ஷதே ।
அவிபக்தம் விபக்தேஷு தஜ்ஞானம் வித்தி ஸாத்த்விகம் ॥ 20 ॥
सर्वभूतेषु अव्यक्तादिस्थावरान्तेषु भूतेषु येन ज्ञानेन एकं भावं वस्तु — भावशब्दः वस्तुवाची, एकम् आत्मवस्तु इत्यर्थः ; अव्ययं न व्येति स्वात्मना स्वधर्मेण वा, कूटस्थम् इत्यर्थः ; ईक्षते पश्यति येन ज्ञानेन ।
அவ்யக்தம் முதல் ஸ்தாவரம் வரையிலும் உள்ள எல்லாப் பிராணிகளிடத்தும் ஒரே பாவவஸ்துதான் இருக்கிறது என்று ஞானத்தினால் அறியப்படும் ஒரே வஸ்து ஆத்மவஸ்து என்பது பொருள். பாவ சப்தமானது வஸ்து என்பதின் வாசகமாகும். அந்த ஆத்மவஸ்து அவ்யயம். அதாவது தன்னுடைய தர்மத்தினின்றும் (தனது நிலையினின்றும்) மாறுபடாதது. அல்லது நித்யமான கூடஸ்த்தன் என்பது பொருள். எந்த ஞானத்தினால் அறிகிறதோ என்பது ஆகும்.
तं च भावम् अविभक्तं प्रतिदेहं विभक्तेषु देहभेदेषु न विभक्तं तत् आत्मवस्तु, व्योमवत् निरन्तरमित्यर्थः ; तत् ज्ञानं साक्षात् सम्यग्दर्शनम् अद्वैतात्मविषयं सात्त्विकं विद्धि इति ।
எந்த பகுக்கப்படாத வஸ்துவானது (பாவமானது) ஒவ்வொரு தேஹ பேதத்திலும் பகுக்கப்படாமல் ஆகாயம் போல் எப்பொழுதும் இருக்கிறதோ அது ஆத்மவஸ்து என்பது பொருள். அந்த ஞானமா னது அதாவது அந்த சம்யக்தர்சனம் சாத்விகம் என்று அறி.
यानि द्वैतदर्शनानि तानि असम्यग्भूतानि राजसानि तामसानि च इति न साक्षात् संसारोच्छित्तये भवन्ति ॥ २० ॥
எந்த துவைத தர்சனங்கள் ஆகிய அசம்யக்ஞானம் (விபரீத ஞானம்) ராஜசமானதும் தாமஸமானதுமாகும். ஆகையால் அவை சம்சாரத்தைப் போக்குவதற்கான சாக்ஷாத் - (நேரான) காரணமாகாது.
पृथक्त्वेन तु यज्ज्ञानं नानाभावान्पृथग्विधान् ।
वेत्ति सर्वेषु भूतेषु तज्ज्ञानं विद्धि राजसम् ॥ २१ ॥
ப்ருதக்த்வேனது யஜ்ஞானம் நாநாபாவான்ப்ருதக்விதான் ।
வேத்தி ஸர்வேஷு பூதேஷு தஜ்ஞானம் வித்தி ராஜஸம் ॥ 21 ॥
पृथक्त्वेन तु भेदेन प्रतिशरीरम् अन्यत्वेन यत् ज्ञानं नानाभावान् भिन्नान् आत्मनः पृथग्विधान् पृथक्प्रकारान् भिन्नलक्षणान् इत्यर्थः, वेत्ति विजानाति यत् ज्ञानं सर्वेषु भूतेषु, ज्ञानस्य कर्तृत्वासम्भवात् येन ज्ञानेन वेत्ति इत्यर्थः, तत् ज्ञानं विद्धि राजसं रजोगुणनिर्वृत्तम् ॥ २१ ॥
ஒவ்வொரு சரீரத்திலும் பேதமாகவும், அந்நியமாகவும் ஆத்மாவைக் காட்டிலும் வேறாகவும் உள்ள லக்ஷணங்களுடன் கூடியதை எல்லா பிராணிகளிடத்திலும் உள்ள ஆத்மாவாக அறி யும் ஞானம் என்றதால் ஞானம் கர்த்தாவாக சொல்லப்படாமை யால் எந்த ஞானத்தினால் அறிகிறானோ என்று பொருள் கொள்ள வேண்டும் என்பது பொருள். அந்த ஞானம் ரஜோகுணத்தினால் ஆனதாகும்.
यत्तु कृत्स्नवदेकस्मिन्कार्ये सक्तमहैतुकम् ।
अतत्त्वार्थवदल्पं च तत्तामसमुदाहृतम् ॥ २२ ॥
யத்து க்ருத்ஸ்னவதேகஸ்மின்கார்யே ஸக்தமஹைதுகம் ।
அதத்வார்தவதல்பம் ச தத்தாமஸமுதாஹ்ருதம் ॥ 22 ॥
यत् ज्ञानं कृत्स्नवत् समस्तवत् सर्वविषयमिव एकस्मिन् कार्ये देहे बहिर्वा प्रतिमादौ सक्तम् ‘एतावानेव आत्मा ईश्वरो वा, न अतः परम् अस्ति’ इति, यथा नग्नक्षपणकादीनां शरीरान्तर्वर्ती देहपरिमाणो जीवः, ईश्वरो वा पाषाणदार्वादिमात्रम् , इत्येवम् एकस्मिन् कार्ये सक्तम्  ।
பூதவிகாரங்கள் பலவாயிருக்க ஒரே காரியமான தேஹத் திலோ அல்லது வெளியில் விக்ரஹங்களில் இவ்வளவுதான் ஆத்மா அல்லது ஈஸ்வரன் இதற்குமேல் இல்லை என்று கருதியதி னால் ஆத்மா பரம்(மேலானது அல்ல என்று எவ்வாறு திகம்பர ஜைனர்கள் ஆத்மா சரீரம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு பரிணாமம் அடைந்த ஜீவன் ஈஸ்வரன் என்றும் அல்லது கல், கட்டை முதலியைவகளால் எவ்வளவு அளவோ அவ்வ ளவே ஆத்மா அல்லது ஈஸ்வரன் என்று ஒரே காரியத்தில் பற்று கொள்கிறான்.
अहैतुकं हेतुवर्जितं निर्युक्तिकम् , अतत्त्वार्थवत् अयथाभूतार्थवत् , यथाभूतः अर्थः तत्त्वार्थः, सः अस्य ज्ञेयभूतः अस्तीति तत्त्वार्थवत् , न तत्त्वार्थवत् अतत्त्वार्थवत् ; अहैतुकत्वादेव अल्पं च, अल्पविषयत्वात् अल्पफलत्वाद्वा । तत् तामसम् उदाहृतम् । तामसानां हि प्राणिनाम् अविवेकिनाम् ईदृशं ज्ञानं दृश्यते ॥ २२ ॥
இது யுக்திக்குப் பொருந்தாது. எவ்வாறு உள்ளதோ அவ்வாறு அறிவது தத்துவார்த்தமாகும். அவ்வாறு அல்லாதது அதத்துவார்த் தமாகும். அவனுக்கு அது அறியப்படவேண்டியது. அது ஞேயமா கும், அதுவே தத்துவார்த்தமாகும். அந்த தத்துவார்த்தமில்லா விடில் அது அதத்துவார்த்தமாகும். அதற்கு ஹேது (காரணம்) இல்லாததால் அது அல்பமாகும். ஏன் எனில் அது அல்ப விஷயமும், அல்ப பலனும் உடையது. ஆகையால் அந்த ஞானம் தாமஸம் எனப்படும். தாமஸ குணமுடைய ஜீவர்களாகிய அவிவேகிகளுக்கு இவ்வாறான ஞானம் காணப்படுகிறது.
अथ इदानीं कर्मणः त्रैविध्यम् उच्यते —
இப்பொழுது கர்மத்தினுடைய மூன்றுவித பேதமானது கூறப் படுகிறது-
नियतं सङ्गरहितमरागद्वेषतःकृतम् ।
अफलप्रेप्सुना कर्म यत्तत्सात्त्विकमुच्यते ॥ २३ ॥
நியதம் ஸங்கரஹிதமராகத்வேஷத: க்ருதம் ।
அபலப்ரேப்ஸுனா கர்ம யத்தத்ஸாத்விகமுச்யதே ॥ 23 ॥
नियतं नित्यं सङ्गरहितम् आसक्तिवर्जितम् अरागद्वेषतःकृतं रागप्रयुक्तेन द्वेषप्रयुक्तेन च कृतं रागद्वेषतःकृतम् , तद्विपरीतम् अरागद्वेषतःकृतम् , अफलप्रेप्सुना फलं प्रेप्सतीति फलप्रेप्सुः फलतृष्णः तद्विपरीतेन अफलप्रेप्सुना कर्त्रा कृतं कर्म यत् , तत् सात्त्विकम् उच्यते ॥ २३ ॥
எந்த நித்ய கர்மமானது பற்று அற்றும், ராகத்வேஷமற்றும் பலத்தில் இச்சை அற்றும் உள்ள கர்த்தாவால் செய்யப்படுமோ அந்த கர்மம் சாத்வீக கர்மம் எனப்படும்.
यत्तु कामेप्सुना कर्म साहङ्कारेण वा पुनः ।
क्रियते बहुलायासं तद्राजसमुदाहृतम् ॥ २४ ॥
யத்து காமேப்ஸுனா கர்ம ஸாஹங்காரேன வா புன: ।
க்ரியதே பஹுலாயாஸம் தத்ராஜஸமுதாஹ்ருதம் ॥ 24 ॥
यत्तु कामेप्सुना कर्मफलप्रेप्सुना इत्यर्थः, कर्म साहङ्कारेण वा—
போகரூப பலத்தில் இச்சை உடையவனாய் அல்லது அஹங் காரத்துடன் கூடியவனாய் உள்ளவனால் செய்யப்படும் கர்மம்-
साहङ्कारेण इति न तत्त्वज्ञानापेक्षया । किं तर्हि ? लौकिकश्रोत्रियनिरहङ्कारापेक्षया । यो हि परमार्थनिरहङ्कारः आत्मवित् , न तस्य कामेप्सुत्वबहुलायासकर्तृत्वप्राप्तिः अस्ति ।
இந்த ஸ்லோகத்தில் கூறிய அஹங்காரத்துடன் என்று கூறி யது தத்துவ ஞானத்தை அபேக்ஷி த்துக் கூறவில்லை. ஏன் எனில் வேத சாஸ்திரத்தை அறிந்த லௌகிகர்களுடைய அஹங்கா ரத்தை அபேக்ஷித்துக் கூறப்பட்டதாகும். எவனொருவன் உண் மையான (பரமார்த்த)அஹங்காரம் அற்ற ஆத்மவித்தோ அந்த ஆத்மாவை அறிந்தவனுக்கு காமத்தில் உள்ள இச்சையால் மிகுந்த பிரயாசையுடன் கூடிய கர்த்திருத்துவமானது கிடையாது.
सात्त्विकस्यापि कर्मणः अनात्मवित् साहङ्कारः कर्ता, किमुत राजसतामसयोः ।
சாத்விக கர்மாவைச் செய்யும் அக்ஞானியாகிய கர்த்தா (ஆத்மதத்துவத்தை அறியாதவன்) அஹங்காரத்துடன் கூடியவ னாகிறான். அவ்வாறு இருக்கும்பொழுது ராஜஸ, தாமஸ கர்த்தாக்களைப் பற்றி கூறவும் வேண்டுமோ?
लोके अनात्मविदपि श्रोत्रियो निरहङ्कारः उच्यते ‘निरहङ्कारः अयं ब्राह्मणः’ इति । तस्मात् तदपेक्षयैव ‘साहङ्कारेण वा’ इति उक्तम् । पुनःशब्दः पादपूरणार्थः ।
உலகில் ஆத்மதத்துவத்தை அறியாதவனை இந்த பிராஹ்ம ணன் சாஸ்திரத்தை அறிந்தவன், அஹங்காரமற்றவன் என்று கூறு கிறார்கள். ஆகையால் அதை அபேக்ஷித்து அஹங்காரத்துடன் கூடிய கர்த்தா என்று கூறப்பட்டது. புன:என்ற சொல்லானது அந்த பாதத்தை முடிப்பதற்காக என்பது பொருள்.
क्रियते बहुलायासं कर्त्रा महता आयासेन निर्वर्त्यते, तत् कर्म राजसम् उदाहृतम् ॥ २४ ॥
கர்த்தாவால் மிகுந்த பிரயாசையுடன் எந்த கர்மமானது செய் யப்படுகிறதோ அது ராஜசம் எனப்படும்.
अनुबन्धं क्षयं हिंसामनपेक्ष्य च पौरुषम् ।
मोहादारभ्यते कर्म यत्तत्तामसमुच्यते ॥ २५ ॥
அநுபந்தம் க்ஷயம் ஹிம்ஸாமனபேக்ஷ்ய ச பௌருஷம் ।
மோஹாதாரப்யதே கர்ம யத்தத்தாமஸமுச்யதே ॥ 25 ॥
अनुबन्धं पश्चाद्भावि यत् वस्तु सः अनुबन्धः उच्यते तं च अनुबन्धम् , क्षयं यस्मिन् कर्मणि क्रियमाणे शक्तिक्षयः अर्थक्षयो वा स्यात् तं क्षयम् , हिंसां प्राणिबाधां च ; अनपेक्ष्य च पौरुषं पुरुषकारम् ‘शक्नोमि इदं कर्म समापयितुम्’ इत्येवम् आत्मसामर्थ्यम् , इत्येतानि अनुबन्धादीनि अनपेक्ष्य पौरुषान्तानि मोहात् अविवेकतः आरभ्यते कर्म यत् , तत् तामसं तमोनिर्वृत्तम् उच्यते ॥ २५ ॥
அனுபந்தம் என்பது பின்னால் உண்டாகும் வஸ்து எதுவோ அது அனுபந்தம் எனப்படுகிறது. க்ஷயம் என்பது கர்மம் செய்யும் பொழுது ஏற்படும் சக்தியின் நஷ்ட்டமும், செல்வத்தின் குறைவும் ஆகும். பிராணிகளை ஹிம்சித்தல், ஒன்றையும் அபேக்ஷிக்காமல் என்னுடைய புருஷ சாமர்த்தியத்தினாலேயே இந்த கர்மத்தைச் செய்யமுடியும் என்ற தன்னுடைய சாமர்த்தியம் ஆகிய அனுபந் தம் முதல் ஒன்றையும் அபேக்ஷிக்காத புருஷ சாமர்த்தியம் வரை யிலும் உள்ள இவைகள் எல்லாம் அவிவேகத்தினால் உண்டானது. அந்த அவிவேகத்தால் செய்யும் கர்மம் தமோகுணத்தால் ஆனது என்று கூறப்பட்டது.
इदानीं कर्तृभेदः उच्यते —
मुक्तसङ्गोऽनहंवादी धृत्युत्साहसमन्वितः ।
सिद्ध्यसिद्ध्योर्निर्विकारः कर्ता सात्त्विक उच्यते ॥ २६ ॥
முக்தஸங்கோஅநஹம்வாதீ த்ருத்யுத்ஸாஹஸமன்வித: ।
ஸித்த்யஸித்த்யோர்நிர்விகார: கர்தா ஸாத்விக உச்யதே ॥ 26 ॥
मुक्तसङ्गः मुक्तः परित्यक्तः सङ्गः येन सः मुक्तसङ्गः, अनहंवादी न अहंवदनशीलः, धृत्युत्साहसमन्वितः धृतिः धारणम् उत्साहः उद्यमः ताभ्यां समन्वितः संयुक्तः धृत्युत्साहसमन्वितः, सिद्ध्यसिद्ध्योः क्रियमाणस्य कर्मणः फलसिद्धौ असिद्धौ च सिद्ध्यसिद्ध्योः निर्विकारः, केवलं शास्त्रप्रमाणेन प्रयुक्तः न फलरागादिना यः सः निर्विकारः उच्यते । एवंभूतः कर्ता यः सः सात्त्विकः उच्यते ॥ २६ ॥
பற்றைத் துறந்தவன் எவனோ அவன் முக்தஸங்கன். (நான் செய்தேன்) என்று நான் நான் என்று கூறாதவன் அநஹம்வாதி. தாரண சக்தியும், முயற்சியும் ஆகிய இரண்டும் உள்ளவன் த்ருதி உத்ஸாஹ சமன்வித: செய்த கர்மத்திற்குப் பலன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் சாஸ்திரப்பிரமாணப்படி செய்யப்பட்டது. பலத்தில் உள்ள இச்சைக்காக அல்ல என்று எவன் கர்மத்தைச் செய்கிறானோ அவன் நிர்விகாரன் எனப்படுகிறான். இவ்வாறு உள்ள கர்த்தா எவனோ அவன் சாத்விகன் என்று கூறப்படுகிறான்.
रागी कर्मफलप्रेप्सुर्लुब्धो हिंसात्मकोऽशुचिः ।
हर्षशोकान्वितः कर्ता राजसः परिकीर्तितः ॥ २७ ॥
ராகீ கர்மபலப்ரேப்ஸுர்லுப்தோ ஹிம்ஸாத்மகோஅசுசி: ।
ஹர்ஷசோகான்வித: கர்தா ராஜஸ: பரிகீர்தித: ॥ 27 ॥
रागी रागः अस्य अस्तीति रागी, कर्मफलप्रेप्सुः कर्मफलार्थी इत्यर्थः, लुब्धः परद्रव्येषु सञ्जाततृष्णः, तीर्थादौ स्वद्रव्यापरित्यागी
ராகம் எவனுக்கு உள்ளதோ அவன் ராகி. பலத்தில் ஆசை உள்ளவனும், மற்றவர்களுடைய செல்வத்தில் ஆசை உள்ளவ னும் தீர்த்த முதலிய ஸ்தலங்களில் தன்னுடைய செல்வத்தை தானம் செய்யாதவன்.
हिंसात्मकः परपीडाकरस्वभावः, अशुचिः बाह्याभ्यन्तरशौचवर्जितः, हर्षशोकान्वितः इष्टप्राप्तौ हर्षः अनिष्टप्राप्तौ इष्टवियोगे च शोकः ताभ्यां हर्षशोकाभ्याम् अन्वितः संयुक्तः, तस्यैव च कर्मणः सम्पत्तिविपत्तिभ्यां हर्षशोकौ स्याताम् , ताभ्यां संयुक्तो यः कर्ता सः राजसः परिकीर्तितः ॥ २७ ॥
மற்றவர்களைத் துன்புறுத்தும் சுவபாவம் உள்ளவன், வெளியிலும், உள்ளும் சுத்தமற்றவன். பிரியமானது கிடைத்த உடன் சந்தோஷப்படுவதும், தனக்கு விருப்பமில்லாதது கிடைக்கும்போதும், தனக்கு விருப்பமானது நாசம் அடையும் போதும் துக்கப்படுவது. இந்த சந்தோஷம் துக்கத்துடன் கூடியவனுக்குத்தான் கர்மத்தினால் கிடைத்ததற்கும் கிடைக்காததற்கும் ஏற்படும் சந்தோஷமும் துக்கமும் ஆகும். அவைகள் எவனுக்கு இருக்கிறதோ அந்த கர்த்தா ராஜஸன் எனப்படுகிறான்.
अयुक्तः प्राकृतः स्तब्धः शठो नैकृतिकोऽलसः ।
विषादी दीर्घसूत्री च कर्ता तामस उच्यते ॥ २८ ॥
அயுக்த: ப்ராக்ருத: ஸ்தப்த: சடோ நைஷ்க்ருதிகோஅல்ஸ: ।
விஷாதீ தீர்கஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே ॥ 28 ॥
अयुक्तः न युक्तः असमाहितः, प्राकृतः अत्यन्तासंस्कृतबुद्धिः बालसमः, स्तब्धः दण्डवत् न नमति कस्मैचित् , शठः मायावी शक्तिगूहनकारी, नैकृतिकः परविभेदनपरः, अलसः अप्रवृत्तिशीलः कर्तव्येष्वपि, विषादी विषादवान् सर्वदा अवसन्नस्वभावः, दीर्घसूत्री च कर्तव्यानां दीर्घप्रसारणः, सर्वदा मन्दस्वभावः, यत् अद्य श्वो वा कर्तव्यं तत् मासेनापि न करोति, यश्च एवंभूतः, सः कर्ता तामसः उच्यते ॥ २८ ॥
மனதை ஒருநிலைப்படுத்தாதவன், மிகுந்த பண்படுத்தப் படாத புத்தி உடையவன் மூடனுக்கு ஒப்பானவன். கம்பு போல் ஒருவரையும் வணங்காதவன், தன்னுடைய சாமர்த்தியத்தை மறைத்து வைக்கும் கபடமுள்ளவன். மற்றவர்களுடைய பிரவிருத் தியை கெடுப்பவன். செய்யவேண்டியவைகளிலும் சோம்பேறி யாய் இருப்பவன். எப்பொழுதும் சோகமுடன் இருப்பவன். செய்ய வேண்டியவைகளை இன்று, நாளை என்று மாதமானாலும் செய்யா மல் நீண்டகாலம் இழுத்தடிப்பவன். இவ்வாறு எவன் உள்ளானோ அந்த கர்த்தா தாமஸன் என்று கூறப்படுகிறான்.
बुद्धेर्भेदं धृतेश्चैव गुणतस्त्रिविधं शृणु ।
प्रोच्यमानमशेषेण पृथक्त्वेन धनञ्जय ॥ २९ ॥
புத்தேர்பேதம் த்ருதேச்சைவ குணதஸ்த்ரிவிதம் ச்ருணு ।
ப்ரோச்யமானமசேஷேண ப்ருதக்த்வேன தனஞ்ஜய ॥ 29 ॥
बुद्धेः भेदं धृतेश्चैव भेदं गुणतः सत्त्वादिगुणतः त्रिविधं शृणु इति सूत्रोपन्यासः । प्रोच्यमानं कथ्यमानम् अशेषेण निरवशेषतः यथावत् पृथक्त्वेन विवेकतः धनञ्जय ।
ஹே தனஞ்ஜய! புத்திக்கும் திருதிக்கும் (உறுதிக்கும்) சத்து வாதி குணங்களின்படி மூன்றுவிதமான பேதங்களை தகுந்தவாறு பிரித்து மீதம் இல்லாமல் முழுமையாகக் கூறப்போவதைக் கேள் என்று சூத்ரரூபமாகக் கூறப்பட்டது.
दिग्विजये मानुषं दैवं च प्रभूतं धनं जितवान् , तेन असौ धनञ्जयः अर्जुनः ॥ २९ ॥
திக்விஜய சமயத்தில் அர்ஜுனனால் மனிதர்களுடையவும், தேவர்களுடையவுமான மிகுந்த செல்வமானது (தனமானது) ஜெயிக்கப்பட்டது. ஆகையால் அவனுக்கு தனஞ்ஜயன் என்ற பெயர் ஏற்பட்டது.
प्रवृत्तिं च निवृत्तिं च कार्याकार्ये भयाभये ।
बन्धं मोक्षं च या वेत्ति बुद्धिः सा पार्थ सात्त्विकी ॥ ३० ॥
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாபயே ।
பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்தி: ஸா பார்த ஸாத்விகீ ॥ 30 ॥
प्रवृत्तिं च प्रवृत्तिः प्रवर्तनं बन्धहेतुः कर्ममार्गः शास्त्रविहितविषयः, निवृत्तिं च निर्वृत्तिः मोक्षहेतुः संन्यासमार्गः — बन्धमोक्षसमानवाक्यत्वात् प्रवृत्तिनिवृत्ती कर्मसंन्यासमार्गौ इति अवगम्यते
பிரவிருத்தி என்பது பந்தத்திற்கு ஹேதுவாகிய கர்மமார்க்கமா கும். நிவிருத்தி என்பது மோக்ஷத்திற்கு ஹேதுவாகிய சந்நியாச மார்க் கமாகும். பந்தம், மோக்ஷங்களுடன் பிரவிருத்தி, நிவிருத்தியும் சம மான வாக்கியமாய் இருப்பதால் பிரவிருத்தியும் நிவிருத்தியும் கர்ம சந்நியாசம் என்கின்ற இரு யோகங்கள் என்று அறியப்படுகின்றது.
कार्याकार्ये विहितप्रतिषिद्धे लौकिके वैदिके वा शास्त्रबुद्धेः कर्तव्याकर्तव्ये करणाकरणे इत्येतत् ; कस्य ? देशकालाद्यपेक्षया दृष्टादृष्टार्थानां कर्मणाम् ।
விதிக்கப்பட்ட கர்மம், விலக்கப்பட்ட கர்மம், செய்யப்பட வேண்டியது, செய்யக்கூடாதது, செய்வதும் செய்யாததும் ஆகியவை யையும் அறிகிறான். அது எதனுடைய சம்பந்தத்தால் எனில் தேசம், காலம் இவைகளை அனுசரித்து எந்த திருஷ்ட்ட அதிருஷ்ட்ட பலன் ஏற்படுகிறதோ அந்த கர்ம சம்பந்தத்தால் ஆகும்.
भयाभये बिभेति अस्मादिति भयं चोरव्याघ्रादि, न भयं अभयम् , भयं च अभयं च भयाभये, दृष्टादृष्टविषययोः भयाभययोः कारणे इत्यर्थः । बन्धं सहेतुकं मोक्षं च सहेतुकं या वेत्ति विजानाति बुद्धिः, सा पार्थ सात्त्विकी ।
இதனால் பயப்படுதல் பயம் ஆகும். பயத்திற்கு மாறானது அபயம். இவ்விரண்டையும் அதாவது இம்மை மறுமை விஷயத் தில் பயம், அபயம் இவற்றின் காரணத்தையும் புத்தி அறிகிறது. ஹே பார்த்த அவ்வாறே காரணத்துடன் பந்தத்தையும் மோக்ஷத் தையும் எந்த புத்தி அறிகிறதோ அது சாத்வீக புத்தியாகும்.
तत्र ज्ञानं बुद्धेः वृत्तिः ; बुद्धिस्तु वृत्तिमती । धृतिरपि वृत्तिविशेषः एव बुद्धेः ॥ ३० ॥
ஞானம் புத்தியினுடைய விருத்தியாகும். புத்தி விருத்தியுடன் கூடியதாகும். உறுதியும் (த்ருதியும்) புத்தியினுடைய விருத்தி விசே ஷமேயாகும்.
यया धर्ममधर्मं च कार्यं चाकार्यमेव च ।
अयथावत्प्रजानाति बुद्धिः सा पार्थ राजसी ॥ ३१ ॥
யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச ।
அயதாவத்ப்ரஜானாதி புத்தி: ஸா பார்த ராஜஸீ ॥ 31 ॥
यया धर्मं शास्त्रचोदितम् अधर्मं च तत्प्रतिषिद्धं कार्यं च अकार्यमेव च पूर्वोक्ते एव कार्याकार्ये अयथावत् न यथावत् सर्वतः निर्णयेन न प्रजानाति, बुद्धिः सा पार्थ, राजसी ॥ ३१ ॥
ஹே பார்த்த! எந்த புத்தியானது சாஸ்திரத்தில் விதித்த தர்மத் தையும், சாஸ்திரத்தில் விலக்கப்பட்ட அதர்மத்தையும் அவ் வாறேமுன்பு கூறிய செய்யப்படவேண்டியதையும், செய்யக்கூடா ததையும் உள்ளவாறு அல்லாமல் நிச்சயமற்று அறிகிறதோ அது ராஜஸமாகும்.
अधर्मं धर्ममिति या मन्यते तमसावृता ।
सर्वार्थान्विपरीतांश्च बुद्धिः सा पार्थ तामसी ॥ ३२ ॥
அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸாவ்ருதா ।
ஸர்வார்தான் விபரீதாம்ச்ச புத்தி: ஸா பார்த தாமஸீ ॥ 32 ॥
अधर्मं प्रतिषिद्धं धर्मं विहितम् इति या मन्यते जानाति तमसा आवृता सती, सर्वार्थान् सर्वानेव ज्ञेयपदार्थान् विपरीतांश्च विपरीतानेव विजानाति, बुद्धिः सा पार्थ, तामसी ॥ ३२ ॥
விலக்கப்பட்டதையும் விதித்ததையும் தமஸினால் மறைக்கப் பட்டு எல்லா ஞேயவஸ்துக்களையும் விபரீதமாக எந்த புத்தி உணர்கிறதோ அது தாமஸீ புத்தியாகும்.
धृत्या यया धारयते मनःप्राणेन्द्रियक्रियाः ।
योगेनाव्यभिचारिण्या धृतिः सा पार्थ सात्त्विकी ॥ ३३ ॥
த்ருத்யா யயா தாரயதே மந:ப்ராணேந்த்ரியக்ரியா: ।
யோகேநாவ்யபிசாரிண்யா த்ருதி: ஸா பார்த ஸாத்விகீ ॥ 33 ॥
धृत्या यया — अव्यभिचारिण्या इति व्यवहितेन सम्बन्धः, धारयते ; किम् ? मनःप्राणेन्द्रियक्रियाः मनश्च प्राणाश्च इन्द्रियाणि च मनःप्राणेन्द्रियाणि, तेषां क्रियाः चेष्टाः, ताः उच्छास्त्रमार्गप्रवृत्तेः धारयते धारयति — धृत्या हि धार्यमाणाः उच्छास्त्रमार्गविषयाः न भवन्ति — योगेन समाधिना, अव्यभिचारिण्या, नित्यसमाध्यनुगतया इत्यर्थः ।
உறுதியாய் என்பதுடன் தள்ளி உள்ள அவ்யபிசாரிa = மாறு படாதது என்பதற்கு சம்பந்தம் இருக்கிறது. எதில் உறுதியாக (தாங் குகின்றது) இருக்கிறது எனில் மனம், பிராணன், இந்திரியங்கள் இவைகளின் செயல்கள் உறுதியாக சாஸ்திரத்தில் இல்லாதவைக ளில் பிரவிருத்திப்பது இல்லை. யோகத்தினால் என்றால் சமாதி யால் எப்பொழுதும் மாறுபடாமல் தொடர்வது என்பது பொருள்.
एतत् उक्तं भवति — अव्यभिचारिण्या धृत्या मनःप्राणेन्द्रियक्रियाः धार्यमाणाः योगेन धारयतीति । या एवंलक्षणा धृतिः, सा पार्थ, सात्त्विकी ॥ ३३ ॥
மாறுபடாத உறுதியினால் மன, பிராண இந்திரியங்களின் செயல்களை அடக்கியதால் ஒருமுகப்பட்டு அதிலிருந்து நீங்காத உறுதியுடன் யோகத்தில் இருந்து நீங்காமல் இருப்பதற்காக அவற்றை உறுதியாக அடக்கி இருத்தல் சாத்வீக த்ருதியாகும்.
यया तु धर्मकामार्थान्धृत्या धारयतेऽर्जुन ।
प्रसङ्गेन फलाकाङ्क्षी धृतिः सा पार्थ राजसी ॥ ३४ ॥
யயாது தர்மகாமார்தாந்த்ருத்யா தாரயதேஅர்ஜுன ।
ப்ரஸங்கேன பலாகாங் த்ருதி: ஸா பார்த ராஜஸீ ॥ 34 ॥
यया तु धर्मकामार्थान् धर्मश्च कामश्च अर्थश्च धर्मकामार्थाः तान् धर्मकामार्थान् धृत्या यया धारयते मनसि नित्यमेव कर्तव्यरूपान् अवधारयति हे अर्जुन ।
ஹே அர்ஜுனா! அந்த உறுதியின் வாயிலாக தர்மம், அர்த் தம், காமம் (அறம், பொருள், இன்பம்) ஆகிய புருஷார்த்தங்கள் அவசியம் நித்யம் செய்யவேண்டியவைகள் என்று மனதில் நிச்ச யம் செய்து கொள்கிறான்.
प्रसङ्गेन यस्य यस्य धर्मादेः धारणप्रसङ्गः तेन तेन प्रसङ्गेन फलाकाङ्क्षी च भवति यः पुरुषः, तस्य धृतिः या, सा पार्थ, राजसी ॥ ३४ ॥
அறம் பொருள் முதலியவற்றில் எது வேண்டுமோ என்று நினைக்கிறானோ அவ்வாறே அதன் பலனையும் எதிர்பார்ப்பவ னாகிறான். ஹே பார்த்த! அப்படிப்பட்ட மனிதனுடைய உறுதியா னது ராஜஸமாகும்.
यया स्वप्नं भयं शोकं विषादं मदमेव च ।
न विमुञ्चति दुर्मेधा धृतिः सा तामसी मता ॥ ३५ ॥
யயா ஸ்வப்னம் பயம் சோகம் விஷாதம் மதமேவ ச ।
ந விமுஞ்சதி துர்மேதா த்ருதி: ஸா தாமஸீ மதா ॥ 35 ॥
यया स्वप्नं निद्रां भयं त्रासं शोकं विषादं विषण्णतां मदं विषयसेवाम् आत्मनः बहुमन्यमानः मत्त इव मदम् एव च मनसि नित्यमेव कर्तव्यरूपतया कुर्वन् न विमुञ्चति धारयत्येव दुर्मेधाः कुत्सितमेधाः पुरुषः यः, तस्य धृतिः या, सा तामसी मता ॥ ३५ ॥
எந்த உறுதியினால் தூக்கம், பயம், துக்கம், மதம் அதாவது விஷயங்களை அனுபவிப்பதுவே மேலான புருஷார்த்தம் என்று அதிலேயே மதம் பிடித்தவன் போல் அதையே எப்பொழுதும் அவசியம் செய்து கொண்டு இருக்கவேண்டும் என்று நினைத்து குறுகிய புத்தி உடைய மனிதன் அதையே செய்து கொண்டு அதி லிருந்து விடுபடமாட்டான். அப்படிப்பட்டவனுடைய உறுதியா னது தாமஸமாகும்.
गुणभेदेन क्रियाणां कारकाणां च त्रिविधो भेदः उक्तः । अथ इदानीं फलस्य सुखस्य त्रिविधो भेदः उच्यते —
செயல்களுக்கும் செய்கைகளுக்கும் குணங்களினால் உள்ள மூன்று வித பேதம் கூறப்பட்டது . இப்பொழுது பலனாகிய சுகத் திற்கு உள்ள மூன்று வித பேதம் கூறப்படுகிறது.
सुखं त्विदानीं त्रिविधं शृणु मे भरतर्षभ ।
अभ्यासाद्रमते यत्र दुःखान्तं च निगच्छति ॥ ३६ ॥
ஸுகம் த்விதானீம் த்ரிவிதம் ச்ருணு மே பரதர்ஷப் ।
அப்யாஸாத்ரமதே யத்ர து:காந்தம் ச நிகச்சதி ॥ 36 ॥
सुखं तु इदानीं त्रिविधं शृणु, समाधानं कुरु इत्येतत् , मे मम भरतर्षभ ।
ஹே பரத ரிஷப! மனதை நிறுத்தி இப்பொழுது சுகத்தின் மூன்று வித பேதத்தைக் கேள்.
अभ्यासात् परिचयात् आवृत्तेः रमते रतिं प्रतिपद्यते यत्र यस्मिन् सुखानुभवे दुःखान्तं च दुःखावसानं दुःखोपशमं च निगच्छति निश्चयेन प्राप्नोति ॥ ३६ ॥
பழக்கத்தினாலும், அடிக்கடி அனுபவிப்பதாலும், அடிக்கடி அதையே திரும்ப திரும்ப செய்வதனாலும் அதில் பிரியமேற் பட்டு அதை ரமிக்கிறான். அங்கு மனிதன் துக்கத்தின் முடிவை அடைகிறான். சந்தேஹமற்ற துக்கம் சாந்தமாகிறது.
यत्तदग्रे विषमिव परिणामेऽमृतोपमम् ।
तत्सुखं सात्त्विकं प्रोक्तमात्मबुद्धिप्रसादजम् ॥ ३७ ॥
யத்ததக்ரே விஷமிவ பரிணாமேஅம்ருதோபமம் ।
தத்ஸுகம் ஸாத்விகம் ப்ரோக்தமாத்மபுத்திப்ரஸாதஜம் ॥ 37 ॥
यत् तत् सुखम् अग्रे पूर्वं प्रथमसंनिपाते ज्ञानवैराग्यध्यानसमाध्यारम्भे अत्यन्तायासपूर्वकत्वात् विषमिव दुःखात्मकं भवति, परिणामे ज्ञानवैराग्यादिपरिपाकजं सुखम् अमृतोपमम् ।
முதன்முதலில் சுகத்தை அடைவதற்கு ஞான வைராக்கிய தியான சமாதி இவைகளின் ஆரம்பிக்கும்பொழுது மிகவும் பிரயா சையுடனும் மிகுந்த உழைப்புடன் செய்யவேண்டியதாய் உள்ள தால் அந்த சுகம் விஷத்திற்கு ஒப்பாக துக்கமயமாய் இருக்கிறது. ஞான வைராக்யம் முதலியவைகளால் பரிபாகம் அடைந்தபொ ழுது அந்த சுகமே அம்ருதத்திற்கு ஒப்பாகிறது.
तत् सुखं सात्त्विकं प्रोक्तं विद्वद्भिः, आत्मनः बुद्धिः आत्मबुद्धिः, आत्मबुद्धेः प्रसादः नैर्मल्यं सलिलस्य इव स्वच्छता, ततः जातं आत्मबुद्धिप्रसादजम् । आत्मविषया वा आत्मावलम्बना वा बुद्धिः आत्मबुद्धिः, तत्प्रसादप्रकर्षाद्वा जातमित्येतत् । तस्मात् सात्त्विकं तत् ॥ ३७ ॥
ஆத்மபுத்தி பிரசாதத்தால் தெளிந்த நீர் போல் மலினமற்ற தன் னுடைய புத்தியின் பிரசாதத்தால் உண்டான ஆத்ம விஷய புத்தி அதாவது ஆத்மாவையே அவலம்பித்த புத்தியினால் உண்டான தால் அந்த சுகம் சாத்விகம் எனப்படும்.
विषयेन्द्रियसंयोगाद्यत्तदग्रेऽमृतोपमम् ।
परिणामे विषमिव तत्सुखं राजसं स्मृतम् ॥ ३८ ॥
விஷயேந்த்ரியஸம்யோகாத்ததக்ரேஅம்ருதோபமம் ।
பரிணாமோ விஷமிவ தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம் ॥ 38 ॥
विषयेन्द्रियसंयोगात् जायते यत् सुखम् तत् सुखम् अग्रे प्रथमक्षणे अमृतोपमम् अमृतसमम् , परिणामे विषमिव, बलवीर्यरूपप्रज्ञामेधाधनोत्साहहानिहेतुत्वात् अधर्मतज्जनितनरकादिहेतुत्वाच्च परिणामे तदुपभोगपरिणामान्ते विषमिव, तत् सुखं राजसं स्मृतम् ॥ ३८ ॥
விஷயம் இந்திரியம் இவைகளின் சேர்க்கையால் எந்த சுகம் உண்டாகிறதோ அது முதலில் அம்ருதத்திற்கு ஒப்பானதாய் இருக்கும். அதன் மாறுபாட்டால் விஷம் போல் ஆகிவிடும். பலம், வீர்யம், பிரக்ஞை, மேதை, தனம், உற்சாகம், இவைகளுக்கு ஹானி (கெடுதல்) ஏற்படுவதாலும், அதர்மத்தினால் உண்டாகும் ராகம் முதலியவற்றிற்குக் காரணமாய் இருப்பதால் அந்த மாறுபாடானது தன்னுடைய நுகர்ச்சி முடிவடைந்த பின் அது விஷத்திற்கு ஒப்பாகிறது. ஆகையால் அந்த சுகம் ராஜசம் எனப்படுகிறது.
यदग्रे चानुबन्धे च सुखं मोहनमात्मनः ।
निद्रालस्यप्रमादोत्थं तत्तामसमुदाहृतम् ॥ ३९ ॥
யதக்ரே சாநுபந்தே ச ஸுகம் மோஹநமாத்மன: ।
நித்ராலஸ்யப்ரமாதோத்தம் தத்தாமஸமுதாஹ்ருதம் ॥ 39 ॥
यत् अग्रे च अनुबन्धे च अवसानोत्तरकाले च सुखं मोहनं मोहकरम् आत्मनः निद्रालस्यप्रमादोत्थं निद्रा च आलस्यं च प्रमादश्च तेभ्यः समुत्तिष्ठतीति निद्रालस्यप्रमादोत्थम् , तत् तामसम् उदाहृतम् ॥ ३९ ॥
எந்த சுகமானது நுகர்ச்சியின் ஆரம்பத்திலும் முடிவிலும் தன்னை மோஹிக்க செய்கிறதாய் தூக்கம் சோம்பல், மயக்கம் இவை களால் உண்டாகிறதாய் இருக்கிறதோ அது தாமசம் எனப்படும்.
अथ इदानीं प्रकरणोपसंहारार्थः श्लोकः आरभ्यते —
இப்பொழுது பிரகரணத்தை முடிப்பதற்கான ஸ்லோகம் ஆரம்பிக்கப்படுகிறது.
न तदस्ति पृथिव्यां वा दिवि देवेषु वा पुनः ।
सत्त्वं प्रकृतिजैर्मुक्तं यदेभिः स्यात्त्रिभिर्गुणैः ॥ ४० ॥
ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வா திவி தேவேஷுவா புன: ।
ஸத்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதேபி: ஸ்யாத்த்ரிபிர்குணை: ॥ 40 ॥
न तत् अस्ति तत् नास्ति पृथिव्यां वा मनुष्यादिषु सत्त्वं प्राणिजातम् अन्यद्वा अप्राणि, दिवि देवेषु वा पुनः सत्त्वम् , प्रकृतिजैः प्रकृतितः जातैः एभिः त्रिभिः गुणैः सत्त्वादिभिः मुक्तं परित्यक्तं यत् स्यात् , न तत् अस्ति इति पूर्वेण सम्बन्धः ॥ ४० ॥
சத்வம் என்றால் மனிதர்கள் முதலிய பிராணன் உடையவைக ளும், பிராணன் இல்லாத பொருள்களும் இவ்வுலகிலோ, ஸ்வர்க் கத்திலோ, தேவதைகளிடமோ இந்த பிரகிருதியினாலான சத்வ, ரஜஸ்,தமஸாகிற மூன்று குணங்களை விட்டு ஒருபோதும் இல்லை.
सर्वः संसारः क्रियाकारकफललक्षणः सत्त्वरजस्तमोगुणात्मकः अविद्यापरिकल्पितः समूलः अनर्थः उक्तः, वृक्षरूपकल्पनया च ‘ऊर्ध्वमूलम्’ (भ. गी. १५ । १) इत्यादिना ।
எல்லா சம்சாரத்தையும் செயல், செயல்பாடுகள் பலன்கள் ஆகிய லக்ஷணங்களுடையவையாயும், சத்வ, ரஜஸ், தமோ குண மயமானதாயும், அவித்யையினால் கல்பிக்கப்பட்டதாயும், கார ணத்துடன் கூடியதாயும் அனர்த்தமாயும் விருக்ஷ (மர) ரூபமாக கல்பனை செய்து (ஊர்த்துவ மூலம்) என்பது முதலியவைகளால் கூறப்பட்டது.
அவ்வாறே அதை அசங்கசஸ்த்ரேண த்ருடேந சித்த்வா தத: பதம் தத் பரிமார்க்கி தவ்யம் = அதை திடமான பற்றின்மையாகிய கோடாலியால் வெட்டியபின் அந்த நிலையைத் தேடவேண்டும் என்று கூறப்பட்டது.
तत्र च सर्वस्य त्रिगुणात्मकत्वात् संसारकारणनिवृत्त्यनुपपत्तौ प्राप्तायाम् , यथा तन्निवृत्तिः स्यात् तथा वक्तव्यम् ।
அங்கு எல்லாம் முக்குணத்தின் காரியமாய் இருப்பதால் சம்சா ரத்தினுடைய காரணம் நிவிருத்தி (நாசம்) ஆகாததால் அதை எந்த உபாயத்தால் நாசம் செய்ய முடியுமோ அந்த உபாயத்தைக் கூற வேண்டும்.
सर्वश्च गीताशास्त्रार्थः उपसंहर्तव्यः, एतावानेव च सर्ववेदस्मृत्यर्थः पुरुषार्थम् इच्छद्भिः अनुष्ठेयः इत्येवमर्थम् ‘ब्राह्मणक्षत्रियविशाम्’ इत्यादिः आरभ्यते —
கீதா சாஸ்திரத்தின் பொருள் முழுவதையும் முடிப்பதற்காக எல்லா வேதங்களின் அர்த்தமும், ஸ்ம்ருதிகளின் அர்த்தமும், மோக்ஷமாகிய பரம புருஷார்த்தத்தை அடைய விரும்புவோரால் கடைபிடிக்கவேண்டியதும் இவ்வளவுதான் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக ப்ராஹ்மணக்ஷத்ரியவிசாம் என்பது முதலிய ஸ்லோகங்களை ஆரம்பிக்கின்றார்.
ब्राह्मणक्षत्रियविशां शूद्राणां च परन्तप ।
कर्माणि प्रविभक्तानि स्वभावप्रभवैर्गुणैः ॥ ४१ ॥
ப்ராஹ்மணக்ஷத்ரியவிசாம் சூத்ராணாம் ச பரந்தப் ।
கர்மாணி ப்ரவிபக்தானி ஸ்வபாவப்ரபவைர்குணை: ॥ 41 ॥
ब्राह्मणाश्च क्षत्रियाश्च विशश्च ब्राह्मणक्षत्रियविशः, तेषां ब्राह्मणक्षत्रियविशां शूद्राणां च — शूद्राणाम् असमासकरणम् एकजातित्वे सति वेदानधिकारात् — हे परन्तप, कर्माणि प्रविभक्तानि इतरेतरविभागेन व्यवस्थापितानि ।
ஹே பரந்தப்! பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் அவ்வாறே சூத்திரர்களும் அவர் அவர்களுடைய குணங்களுக் கேற்றவாறு கர்மங்கள் பிரித்து விதிக்கப்பட்டுள்ளன. பிராமணர் கள் முதலியவர்களுடன் சூத்திரர்களையும் சமப்படுத்திக் கூறப்ப டவில்லை. ஏன் எனில் அவர்கள் ஒரு பிறப்பாளர் என்றால் உபநய னம் அவர்களுக்கு கிடையாது. ஆகையால் அவர்களுக்கு வேதத்தை ஓதுவதில் அதிகாரம் கிடையாது.
केन, स्वभावप्रभवैः गुणैः, स्वभावः ईश्वरस्य प्रकृतिः त्रिगुणात्मिका माया सा प्रभवः येषां गुणानां ते स्वभावप्रभवाः, तैः, शमादीनि कर्माणि प्रविभक्तानि ब्राह्मणादीनाम् ।
எவ்வாறு எதனால் பகுக்கப்பட்டது? ஈஸ்வரருடைய ஸ்வபா வமாகிய ப்ரக்ருதி எனப்படும் முக்குணமாகிய மாயை அந்த மாயையைப் பிறப்பிடமாகக் கொண்டு வெளிப்பட்ட குணங்களா கிய சமம், தமம் முதலிய (அகக்கரண தண்டம், புறக்கரண தண்டம் முதலிய) கர்மங்களால் பிராமணர் முதலியவர்களுக்கு கர்மங்கள் பகுக்கப்பட்டது.
अथवा ब्राह्मणस्वभावस्य सत्त्वगुणः प्रभवः कारणम् , तथा क्षत्रियस्वभावस्य सत्त्वोपसर्जनं रजः प्रभवः, वैश्यस्वभावस्य तमउपसर्जनं रजः प्रभवः, शूद्रस्वभावस्य रजउपसर्जनं तमः प्रभवः, प्रशान्त्यैश्वर्येहामूढतास्वभावदर्शनात् चतुर्णाम् ।
அல்லது பிராமணர்களுடைய ஸ்வபாவத்திற்குக் காரணம் சத் துவகுணத்தின் ஆதிக்யம். க்ஷத்திரிய ஸ்வபாவத்திற்குக் காரணம் ரஜோகுணத்தின் ஆதிக்யம். வைச்யர்களின் ஸ்வபாவத்திற்குக் காரணம் தமோ குணம். தாழ்த்தப்பட்ட ரஜோகுணமாகும். சூத்திர ருடைய ரஜோகுணம் தாழ்த்தப்பட்டு தமோகுணத்தின் ஆதிக்ய மாகும். இவ்வாறு அந்த நான்கு வர்ணத்தாருடைய குணத்திற்கு ஏற்றவாறு உள்ள ஸ்வபாவம் வரிசையாக சாந்தி (அமைதி), ஐஸ்வர்யம் (ஆளும் தன்மை), முயற்சி, மூடத்தன்மை என்று காணப்படுகிறது.
अथवा, जन्मान्तरकृतसंस्कारः प्राणिनां वर्तमानजन्मनि स्वकार्याभिमुखत्वेन अभिव्यक्तः स्वभावः, सः प्रभवो येषां गुणानां ते स्वभावप्रभवाः गुणाः ;
அல்லது முன் ஜன்மங்களில் செய்த கர்மங்களின் சம்ஸ்காரத் தால் ஜீவர்களுக்கு இந்த ஜன்மத்தில் தன் பலனைக் கொடுக்க தலைப்படும் பொழுது அதனை ஸ்வபாவம் என்கிறோம். அந்த ஸ்வபாவத்தினாலேயே குணங்கள் உண்டாவதற்குக் காரண மாகிறது. அதுவே ஸ்வபாவமாக உண்டாகும் குணமாகும்.
गुणप्रादुर्भावस्य निष्कारणत्वानुपपत्तेः । ‘स्वभावः कारणम्’ इति च कारणविशेषोपादानम् ।
குணங்கள் வெளிப்படுவதற்கு காரணம் இல்லாதிருத்தல் பொருந்தாது. ஆகையால் ஸ்வபாவமே காரணம் என்று விசேஷமாக மற்றொரு காரணம் சொல்லப்பட்டது. (குணங்கள் வெளிப்படுவதற்கு பிரகிருதி முதல்காரணம், மற்றொரு காரணம் ஸ்வபாவமாகும்)
एवं स्वभावप्रभवैः प्रकृतिभवैः सत्त्वरजस्तमोभिः गुणैः स्वकार्यानुरूपेण शमादीनि कर्माणि प्रविभक्तानि ॥
இவ்வாறு ஸ்வபாவத்தையும் பிரகிருதியையும் காரணமாக உடைய சத்துவ ரஜோ தமோ குணங்களுக்கு ஏற்றவாறு அமைதி முதலிய கர்மங்கள் பகுக்கப்பட்டன.
ननु शास्त्रप्रविभक्तानि शास्त्रेण विहितानि ब्राह्मणादीनां शमादीनि कर्माणि ; कथम् उच्यते सत्त्वादिगुणप्रविभक्तानि इति ।
ஆனால் பிராமணர் முதலிய வர்ணத்தாருக்கு சமம் முதலிய கர்மாக்கள் சாஸ்திரத்தினால் பகுக்கப்பட்டு விதிக்கப்பட்டது. அவ் வாறு இருக்கையில் எதனால் சத்துவகுண முதலியவைகளால் பகுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது?
नैष दोषः ; शास्त्रेणापि ब्राह्मणादीनां सत्त्वादिगुणविशेषापेक्षयैव शमादीनि कर्माणि प्रविभक्तानि, न गुणानपेक्षया, इति शास्त्रप्रविभक्तान्यपि कर्माणि गुणप्रविभक्तानि इति उच्यते ॥ ४१ ॥
இது தோஷமல்ல ஏன் எனில் சாஸ்திரத்திலும் சத்துவ முதலிய குணங்களை வைத்தே பிராமணர் முதலியவர்களின் சமதமாதிகர் மங்கள் பகுக்கப்பட்டுள்ளது. குணங்களைத் தவிர்த்து பகுக்கப்பட வில்லை. ஆகையால் சாஸ்திரத்தில் பகுக்கப்பட்ட கர்மங்கள் குணங்களினாலேயே பகுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
कानि पुनः तानि कर्माणि इति, उच्यते —
மற்றும் அந்தக்கர்மாக்கள் எவை என்று கூறப்படுகிறது-அவதாரிகை:
शमो दमस्तपः शौचं क्षान्तिरार्जवमेव च ।
ज्ञानं विज्ञानमास्तिक्यं ब्रह्मकर्म स्वभावजम् ॥ ४२ ॥
சமோ தமஸ்தப: சௌசம் க்ஷாந்திரார்ஜவமேவ ச ।
ஞானம் விஞ்ஞானமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம் ॥ 42 ॥
शमः दमश्च यथाव्याख्यातार्थौ, तपः यथोक्तं शारीरादि, शौचं व्याख्यातम् , क्षान्तिः क्षमा, आर्जवम् ऋजुता एव च ज्ञानं विज्ञानम् , आस्तिक्यम् आस्तिकभावः श्रद्दधानता आगमार्थेषु, ब्रह्मकर्म ब्राह्मणजातेः कर्म स्वभावजम् ।
சமம், தமம் முன்பே வியாக்யானம் செய்யப்பட்டுள்ளது. அவ் வாறே தபஸானது சரீர முதலிய பேதத்தினால் முன்பே மூவகையா கக் கூறப்பட்டுள்ளது. சௌசமும் (சுத்தத்தன்மை) வியாக்யானம் செய்யப்பட்டது. பொறுமை, ஆர்ஜவம் என்றால் அந்தக்கரணத் தின் நேர்மை,அவ்வாறே ஞானம் விஞ்ஞானம் மேலும் ஆஸ்திகத் தன்மை என்றால் சாஸ்திர விஷயங்களில் சிரத்தை இவைகள் பிராஹ்மண ஜாதியினருக்கு உள்ள ஸ்வபாவமான கர்மமாகும்.
यत् उक्तं स्वभावप्रभवैर्गुणैः प्रविभक्तानि इति तदेवोक्तं स्वभावजम् इति ॥ ४२ ॥
எது கூறப்பட்டதோ அது ஸ்வபாவப்ரபவை: குணை: ப்ரவிபக் தானி = ஸ்வபாவத்தால் உண்டாகின்றவைகள் என்று கூறப்பட்டது.
शौर्यं तेजो धृतिर्दाक्ष्यं युद्धे चाप्यपलायनम् ।
दानमीश्वरभावश्च क्षात्रं कर्म स्वभावजम् ॥ ४३ ॥
சௌர்யம் தேஜோ த்ருதிர்தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயனம் ।
தானமீச்வர பாவச்ச க்ஷத்ரகர்ம ஸ்வபாவஜம் ॥ 43 ॥
शौर्यं शूरस्य भावः, तेजः प्रागल्भ्यम् , धृतिः धारणम् , सर्वावस्थासु अनवसादः भवति यया धृत्या उत्तम्भितस्य, दाक्ष्यं दक्षस्य भावः, सहसा प्रत्युत्पन्नेषु कार्येषु अव्यामोहेन प्रवृत्तिः, युद्धे चापि अपलायनम् अपराङ्मुखीभावः शत्रुभ्यः ।
சூரனுடைய தன்மை சௌரியம். தேஜஸ் என்பது துணிவு. த்ருதி என்றால் தாங்குகிறசக்தி. அதனால் எந்த நிலையிலும் அயர்ந்திடாமல் இருக்கும் தன்மை. தாக்ஷ்யம் என்றால் சாமர்த்தி யம், சுறுசுறுப்புத்தன்மை. நடுவில் தானாக வந்த காரியங்களில் மோஹமடையாமல் எடுத்த காரியத்தில் ஈடுபடுதல். யுத்தத்திலும் எதிரிகளைக் கண்டு புறமுதுகு காட்டி ஓடாமல் இருத்தல்.
दानं देयद्रव्येषु मुक्तहस्तता, ईश्वरभावश्च ईश्वरस्य भावः, प्रभुशक्तिप्रकटीकरणम् ईशितव्यान् प्रति ।
தானம் என்பது மற்றவர்களுக்குக் கொடுப்பதில் பற்று அற்றகைகள் உடையவனாய் இருத்தல். ஈஸ்வர பாவம் என்றால் எவர்கள் ஆளப்படவேண்டியவர்களோ அவர்களைக் குறித்து ஆளும்தன்மை.
क्षात्रं कर्म क्षत्रियजातेः विहितं कर्म क्षात्रं कर्म स्वभावजम् ॥ ४३ ॥
க்ஷத்திரிய கர்மம் என்றால் க்ஷத்திரிய ஜாதிக்கு விதிக்கப்பட்ட கர்மா. அது அவர்களுடைய ஸ்வபாவமான கர்மா.
कृषिगौरक्ष्यवाणिज्यं वैश्यकर्म स्वभावजम् ।
परिचर्यात्मकं कर्म शूद्रस्यापि स्वभावजम् ॥ ४४ ॥
க்ருஷீகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைச்யகர்ம ஸ்வபாவஜம் ।
பரிசர்யாத்மகம் கர்ம சூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம் ॥ 44 ॥
कृषिगौरक्ष्यवाणिज्यं कृषिश्च गौरक्ष्यं च वाणिज्यं च कृषिगौरक्ष्यवाणिज्यम् , कृषिः भूमेः विलेखनम् , गौरक्ष्यं गाः रक्षतीति गोरक्षः तस्य भावः गौरक्ष्यम् , पाशुपाल्यम् इत्यर्थः, वाणिज्यं वणिक्कर्म क्रयविक्रयादिलक्षणं वैश्यकर्म वैश्यजातेः कर्म वैश्यकर्म स्वभावजम् ।
உழுதல், பசுக்களை ரக்ஷிப்பது, வியாபாரம் செய்தல் இவை வைசியர்களுடைய ஸ்வபாவமாக ஏற்பட்ட கர்மா. உழுதல் என் பது நிலத்தை உழுதல், பசுக்களைக் காப்பாற்றும் தன்மை, விற்றல், வாங்குதல் ஆகிய தன்மை உடையது வியாபாரம்.
परिचर्यात्मकं शुश्रूषास्वभावं कर्म शूद्रस्यापि स्वभावजम् ॥ ४४ ॥
மற்ற மூன்று வருணதத்தாராலிடப்பட்ட பணி செய்வது (உழியம் செய்வது) சூத்திரனுக்கு இயல் பாயுண்டாகிய கருமம்.
एतेषां जातिविहितानां कर्मणां सम्यगनुष्ठितानां स्वर्गप्राप्तिः फलं स्वभावतः
இந்த ஜாதிகளுக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை நன்றாக அனுஷ்ட்டிப்பவர்களுக்கு (கடைபிடிப்பவர்களுக்கு) ஸ்வபாவமா கவே ஸ்வர்க்கத்தை அடையும் பலன் உண்டாகும்.
‘वर्णा आश्रमाश्च स्वकर्मनिष्ठाः प्रेत्य कर्मफलमनुभूय ततः शेषेण विशिष्टदेशजातिकुलधर्मायुःश्रुतवृत्तवित्तसुखमेधसो जन्म प्रतिपद्यन्ते’ (गौ. ध. २ । २ । २९), (मै. गौ. ध. ११ । ३१) इत्यादिस्मृतिभ्यः ; पुराणे च वर्णिनाम् आश्रमिणां च लोकफलभेदविशेषस्मरणात् ।
தங்களுடைய கர்மத்திலேயே நிலைத்த வர்ணாஸ்ரமத்தவர் கள் சரீரத்திலிருந்து கிளம்பி கர்மபலத்தை அனுபவித்துவிட்டு அதில் உள்ள மீதமுள்ள கர்மபலத்திற்கு ஏற்ற சிறந்த தேசம்,காலம், ஜாதி, குலம், தர்மம், ஆயுள், வித்யா(கல்வி), நடத்தை, செல்வம், சுகம், மேதை முதலியவைகளுடன் கூடிய ஜன்மாவை எடுக்கிறார் கள் என்பது முதலிய ஸ்ம்ருதிகளிலும், புராணங்களிலும் வர்ணாஸ்ரமிகளுக்கு ஏற்றவாறு லோகப் பிராப்தியாகிய பல பேதமானது கூறப்பட்டுள்ளது.
कारणान्तरात्तु इदं वक्ष्यमाणं फलम् —
இனி கூறப்போகிற இந்த பலமும் வேறு காரணத்தால் விளக்கப்படுகிறது.
स्वे स्वे कर्मण्यभिरतः संसिद्धिं लभते नरः ।
स्वकर्मनिरतः सिद्धिं यथा विन्दति तच्छृणु ॥ ४५ ॥
ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத: ஸம்ஸித்திம் லபதே நர: ।
ஸ்வகர்மநிரத: ஸித்திம் யதா விந்ததி தச்ச்ருணு ॥ 45 ॥
स्वे स्वे यथोक्तलक्षणभेदे कर्मणि अभिरतः तत्परः संसिद्धिं स्वकर्मानुष्ठानात् अशुद्धिक्षये सति कायेन्द्रियाणां ज्ञाननिष्ठायोग्यतालक्षणां संसिद्धिं लभते प्राप्नोति नरः अधिकृतः पुरुषः ।
கூறப்பட்ட லக்ஷண பேதங்களுடைய தங்கள் தங்கள் கர்மத் தில் ருசியுடன் கூடி அதிலேயே ஈடுபாடு உடையவர்களாகி நல்ல சித்தியை அடைகிறார்கள். எவ்வாறெனில் ஸ்வகர்ம அனுஷ்ட்டானத்தினால் அந்தக்கரணத்தில் உள்ள மலம் நீங்கிய தால் தேஹம் இந்திரியங்கள் ஞானநிஷ்ட்டைக்கு வேண்டிய யோக்யதையை அதிகாரி புருஷன் அடைகிறான்.
किं स्वकर्मानुष्ठानत एव साक्षात् संसिद्धिः ? न ; कथं तर्हि ? स्वकर्मनिरतः सिद्धिं यथा येन प्रकारेण विन्दति, तत् शृणु ॥ ४५ ॥
ஸ்வகர்மா அனுஷ்டானத்தினாலேயே நல்ல சித்தியை(மோக்ஷத் தை) அடைகிறானா? அல்ல எனில் எவ்வாறு ஸ்வகர்மாவிலேயே நிலைத்திருப்பவன் சித்தியை அடைகிறான் என்பதைக் கேள்.
यतः प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततम् ।
स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः ॥ ४६ ॥
யத: ப்ரவ்ருத்திர்பூதானாம் யேன ஸர்வமிதம் ததம் ।
ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மானவ: ॥ 46 ॥
यतः यस्मात् प्रवृत्तिः उत्पत्तिः चेष्टा वा यस्मात् अन्तर्यामिणः ईश्वरात् भूतानां प्राणिनां स्यात् , येन ईश्वरेण सर्वम् इदं ततं जगत् व्याप्तं स्वकर्मणा पूर्वोक्तेन प्रतिवर्णं तम् ईश्वरम् अभ्यर्च्य पूजयित्वा आराध्य केवलं ज्ञाननिष्ठायोग्यतालक्षणां सिद्धिं विन्दति मानवः मनुष्यः ॥ ४६ ॥
எந்த அந்தர்யாமியாகிய ஈஸ்வரனிடத்தினின்று எல்லாப் பிரா ணிகளுக்கும் பிரவிருத்தி அதாவது உத்பத்தி, செயல்கள் ஏற்படுகி றதோ மேலும் எந்த ஈஸ்வரனால் இந்த எல்லா ஜகத்தும் வியாபிக் கப்பட்டதோ அந்த ஈஸ்வரனை வர்ணங்களுக்கு (ஜாதிகளுக்கு) ஏற்றவாறு கூறிய தங்களுடைய கர்மங்கள் வாயிலாக பூஜை செய்து, ஆராதனை செய்து மனிதன் ஞானநிஷ்ட்டைக்கு வேண்டிய யோக்கியதையை அடைகிறான்.
यतः एवम् , अतः —
எதனால் இவ்வாறோ அதனால்-
श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्ठितात् ।
स्वभावनियतं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् ॥ ४७ ॥
ச்ரேயான்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத் ।
ஸ்வபாவநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம் ॥ 47 ॥
श्रेयान् प्रशस्यतरः स्वो धर्मः स्वधर्मः, विगुणोऽपि इति अपिशब्दो द्रष्टव्यः, परधर्मात् । स्वभावनियतं स्वभावेन नियतम् , यदुक्तं स्वभावजमिति, तदेवोक्तं स्वभावनियतम् इति ; यथा विषजातस्य कृमेः विषं न दोषकरम् , तथा स्वभावनियतं कर्म कुर्वन् न आप्नोति किल्बिषं पापम् ॥ ४७ ॥
தன்னுடைய தர்மம் மேன்மை உள்ளதாக இல்லாவிடினும் பரதர் மம் (பிறதர்மம்) மிகப் போற்றத்தக்கதாயினும் அதை அனுஷ்ட்டா னம் செய்வதைக் காட்டிலும் ஸ்வதர்மமே மிகவும் மேன்மையானது. எவ்வாறு விஷத்தில் உற்பத்தியான கிருமிக்கு விஷம் தோஷமா காதோ அவ்வாறே ஸ்வபாவமாக தனக்கு நியமிக்கப்பட்ட(அமைந்த) கர்மத்தை செய்வதினால் மனிதனுக்கு பாபம் உண்டாகாது.
स्वभावनियतं कर्म कुर्वाणो विषजः इव कृमिः किल्बिषं न आप्नोतीति उक्तम् ; परधर्मश्च भयावहः इति, अनात्मज्ञश्च ‘न हि कश्चित्क्षणमपि अकर्मकृत्तिष्ठति’ (भ. गी. ३ । ५) इति । अतः —
எது முன்பு ஸ்வபாவம் (ஸ்வபாவமாகவே உண்டானது) என்று கூறப்பட்டதோ அதுவே ஸ்வபாவநியதம் (ஸ்வபாவமாகவே அமைந்தது) என்ற பதத்தால் கூறப்படுகிறது. ஸ்வபாவமாகவே அமைந்த கர்மம் ஸ்வபாவநியத கர்மம் எனப்படுகிறது.
सहजं कर्म कौन्तेय सदोषमपि न त्यजेत् ।
सर्वारम्भा हि दोषेण धूमेनाग्निरिवावृताः ॥ ४८ ॥
ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி நத்யஜேத் ।
ஸர்வாரம்பா ஹி தோஷேண தூமேநாக்னிரிவாவ்ருதா: ॥ 48 ॥
सहजं सह जन्मनैव उत्पन्नम् । किं तत् ? कर्म कौन्तेय सदोषमपि त्रिगुणात्मकत्वात् न त्यजेत् ।
பிறவி எடுக்கும்போது இயற்கையாகவே உண்டாவது கர்மா. அது யாது? ஹே கௌந்தேய! அது முக்குணங்களால் ஆனதால் தோஷமுடையதாய் இருந்தாலும் அதை விடக்கூடாது
सर्वारम्भाः आरभ्यन्त इति आरम्भाः, सर्वकर्माणि इत्येतत् ; प्रकरणात् ये केचित् आरम्भाः स्वधर्माः परधर्माश्च, ते सर्वे हि यस्मात् — त्रिगुणात्मकत्वम् अत्र हेतुः — त्रिगुणात्मकत्वात् दोषेण धूमेन सहजेन अग्निरिव, आवृताः ।
எவை ஆரம்பிக்கின்றனவோ அவை ஆரம்பங்கள் எனப்படு கிறது. அது எது எனில் இந்தப் பிரகரணப்படி எல்லாக் கர்மங்களும் ஆகும். அவைகள் எவை எனில் தன்னுடைய தர்மங்கள், பிறரு டைய தர்மங்கள் இவை எல்லாம் முக்குணங்களின் வடிவமாய் இருப்பதால் தோஷமுடையதாய் இருக்கின்றன. எவ்வாறு இயற்கை யாகவே அக்னியை புகையானது மறைப்பது போல் ஆகும்.
सहजस्य कर्मणः स्वधर्माख्यस्य परित्यागेन परधर्मानुष्ठानेऽपि दोषात् नैव मुच्यते ; भयावहश्च परधर्मः । न च शक्यते अशेषतः त्यक्तुम् अज्ञेन कर्म यतः, तस्मात् न त्यजेत् इत्यर्थः ।
இயற்கையான தன்னுடைய தர்மத்தை விட்டு மற்றவர்களு டைய தர்மத்தை அனுஷ்ட்டானம் செய்தாலும் தோஷமானது வில காது. பரதர்மமானது பயத்தை அளிக்க வல்லது. அக்ஞானியினால் மிச்சமில்லாமல் கர்மம் முழுவதையும் விடமுடியாது, ஆகையால் இயற்கையான தன்னுடைய கர்மத்தை விட்டுவிடக்கூடாது.
किम् अशेषतः त्यक्तुम् अशक्यं कर्म इति न त्यजेत् ? किं वा सहजस्य कर्मणः त्यागे दोषो भवतीति इति ।
கர்மம் முழுவதையும் விடமுடியாததினால் கர்மத்தை விடாதே என்று கூறப்பட்டதா? அல்லது இயற்கையான தன்னு டைய தர்மத்தை விடுவதால் தோஷம் உண்டாகும் என்பதாலா?
किं च अतः ?
அதனால் என்ன உண்டாகும்?
यदि तावत् अशेषतः त्यक्तुम् अशक्यम् इति न त्याज्यं सहजं कर्म, एवं तर्हि अशेषतः त्यागे गुण एव स्यादिति सिद्धं भवति ।
கர்மம் முழுவதும் விடுதல் முடியாததால் தன்னுடைய இயற் கையான கர்மத்தை விட வேண்டியதில்லை என்று ஆவதால் கர் மம் முழுவதையும் விடுவதில் நன்மையே ஏற்படுகிறது என்று ஆகிறது.
सत्यम् एवम् ; अशेषतः त्याग एव न उपपद्यते इति चेत् ।
உண்மைதான். கர்மம் முழுவதையும் விடுவது இயலாது எனில்.
किं नित्यप्रचलितात्मकः पुरुषः, यथा साङ्ख्यानां गुणाः ? किं वा क्रियैव कारकम् , यथा बौद्धानां स्कन्धाः क्षणप्रध्वंसिनः, उभयथापि कर्मणः अशेषतः त्यागः न सम्भवति ।
சாங்கியவாதிகளினுடைய குணங்களைப் போல் ஆத்மாவா னது எப்பொழுதும் சலன ஸ்வபாவமுடையதாய் இருக்கிறதா? அல்லது பௌத்த மதத்தைப் பின்பற்றுவர்களுக்கு ஒவ்வொரு க்ஷணமும் அழிக்கின்ற ரூபம், வேதனை, விக்ஞானம், சம்க்ஞா மற்றும் சம்ஸ்காரம் ஆகிய ஐந்து ஸ்கந்தங்களைப் போல செய்கை யையே செய்யும் பொருளாக ஆத்மா இருக்கிறதா? இவ்விருவ கையாகவும் கர்மத்தை முழுவதுமாக விடமுடியாது.
अथ तृतीयोऽपि पक्षः — यदा करोति तदा सक्रियं वस्तु । यदा न करोति, तदा निष्क्रियं तदेव । तत्र एवं सति शक्यं कर्म अशेषतः त्यक्तुम् ।
மூன்றாவது பக்ஷத்தில் அந்த பொருள்(ஆத்மா) எப்பொழுது செயல்படுகிறதோ அப்பொழுது செயல் உடையதாகிறது. செயல் அற்றபொழுது செயல் அற்றதாகிறது. இவ்வாறு இருக்கும்பொழுது கர்மங்கள் முழுவதையும் விடமுடியும்.
अयं तु अस्मिन् तृतीये पक्षे विशेषः — न नित्यप्रचलितं वस्तु, नापि क्रियैव कारकम् । किं तर्हि ? व्यवस्थिते द्रव्ये अविद्यमाना क्रिया उत्पद्यते, विद्यमाना च विनश्यति । शुद्धं तत् द्रव्यं शक्तिमत् अवतिष्ठते । इति एवम् आहुः काणादाः । तदेव च कारकम् इति ।
இந்த மூன்றாவது பக்ஷத்தில் வித்தியாசம் என்னவெனில் இதில் ஆத்மவஸ்து எப்பொழுதும் சலிக்கிறதில்லை. லும் செய்கையே செய்யும் பொருளாகவும் இல்லை. பின் எவ்வாறு இருக்கிறது எனில் தன் ஸ்வரூபத்திலேயே நிலைத்திருக்கும் பொருளில் இல்லாத செயல் உண்டாகி, உண்டாவதால் அது நாசமா கிறது. சுத்தத் திரவியம் (சுத்தப் பொருளானது) செய்கைக்குக் காரணமான சக்தி உடையதாய் இருக்கிறது என்றும் அதுவே செய்யும் பொருளென்றும் காணாதர்கள் கூறுவர்.
अस्मिन् पक्षे को दोषः इति ।
இக்கோட்பாட்டில் (இந்தபக்ஷத்தில்) என்னதோஷம்? என்று
अयमेव तु दोषः — यतस्तु अभागवतं मतम् इदम् ।
பகவானுடைய கொள்கைக்கு மாறாய் இருப்பதால் இதுவே இந்த மதத்திற்கு தோஷமாகும்.
कथं ज्ञायते ?
அதை எவ்வாறு அறிவது?
यतः आह भगवान् ‘नासतो विद्यते भावः’ (भ. गी. २ । १६) इत्यादि । काणादानां हि असतः भावः, सतश्च अभावः, इति इदं मतम् अभागवतम् ।
எதனால் பகவான் நாசதோ வித்யதே பாவ: = அஸத்திலிருந்து பாவம் உண்டாகாது, இவை முதலியவைகளால் கூறியுள்ளாரோ அதனால். அஸத்திலிருந்து பாவமும், ஸத்திலிருந்து அபாவமும் தோன்றும் என்பது கணாதர்களுடைய கொள்கை. ஆகையால் இது அபாகவதம். (பகவானது உபதேசத்திற்கு மாறானது)
अभागवतमपि न्यायवच्चेत् को दोषः इति चेत् ।
பகவானுடைய கொள்கைக்கு மாறாய் இருந்தாலும் யுக்திக்குப் பொருத்தமாய் இருப்பதால் என்ன தோஷம்? எனில்
उच्यते — दोषवत्तु इदम् , सर्वप्रमाणविरोधात् ।
கூறுகிறேன். இது சுருதிப் பிரமாணத்திற்கு விரோதமாய் இருப் பதால் தோஷமுடையது.
कथम् ?
எவ்வாறு?
यदि तावत् द्व्यणुकादि द्रव्यं प्राक् उत्पत्तेः अत्यन्तमेव असत् , उत्पन्नं च स्थितं कञ्चित् कालं पुनः अत्यन्तमेव असत्त्वम् आपद्यते, तथा च सति असदेव सत् जायते, सदेव असत्त्वम् आपद्यते, अभावः भावो भवति, भावश्च अभावो भवति इति ।
அணுக்கள் முதலிய திரவியம் (பொருள்) உத்பத்திக்கு முன்பே முற்றிலும் அசத்தாய் இருந்தால் சிறிதுகாலம் இருந்து பின் முற்றிலும் அசத்தாகவே ஆகிறது. அவ்வாறு இருக்கும்பொழுது அசத்தே சத்தாகிறது. அபாவமானது பாவமாகிறது. பாவமானது அபாவமாகிறது என்றால்
तत्र अभावः जायमानः प्राक् उत्पत्तेः शशविषाणकल्पः समवाय्यसमवायिनिमित्ताख्यं कारणम् अपेक्ष्य जायते इति ।
அங்கு உத்பத்தியான அபாவம், உத்பத்தி ஆவதற்கு முன் முயல்கொம்பு போல் முற்றிலும் அசத்தாய் இருந்தது. சமவாயி, அசமவாயி, நிமித்தம் எனப்படும் மூன்று காரணங்களை அபேக்ஷித்து உத்பத்தி ஆகிறது என்று
न च एवम् अभावः उत्पद्यते, कारणं च अपेक्षते इति शक्यं वक्तुम् , असतां शशविषाणादीनाम् अदर्शनात् ।
ஆனால் அபாவம் இவ்வாறு உண்டானது அல்லது காரணத்தை அபேக்ஷிக்கிறது என்று கூறுவது பொருந்தாது. ஏன்எனில் முயல் கொம்பு முதலியவைகளில் அவ்வாறு காணப் படவில்லை.
भावात्मकाश्चेत् घटादयः उत्पद्यमानाः, किञ्चित् अभिव्यक्तिमात्रे कारणम् अपेक्ष्य उत्पद्यन्ते इति शक्यं प्रतिपत्तुम् ।
உத்பத்தியை உடைய கடம் முதலியவைகள் பாவரூபம் என்று எடுத்துக்கொண்டால் வெளிப்படுதல் ஏதாவது காரணத்தை அபேக்ஷித்து உத்பத்தி ஆகிறது என்று அறிந்துகொள்ள முடியும்.
किञ्च, असतश्च सतश्च सद्भावे असद्भावे न क्वचित् प्रमाणप्रमेयव्यवहारेषु विश्वासः कस्यचित् स्यात् , ‘सत् सदेव असत् असदेव’ इति निश्चयानुपपत्तेः ॥
மேலும் அசத்திலிருந்து சத்பாவமும், சத்திலிருந்து அசத் பாவமும் பிரமாண பிரமேய வியவஹாரத்தில் ஒருவருக்கும் நம்பிக்கை உண்டாகாது. இவ்வாறு புரிந்து கொண்டால் அசத் அசத்தே. சத் சத்தே என்ற நிச்சயம் உண்டாகாது.
किञ्च, उत्पद्यते इति द्व्यणुकादेः द्रव्यस्य स्वकारणसत्तासम्बन्धम् आहुः । प्राक् उत्पत्तेश्च असत् , पश्चात् कारणव्यापारम् अपेक्ष्य स्वकारणैः परमाणुभिः सत्तया च समवायलक्षणेन सम्बन्धेन सम्बध्यते । सम्बद्धं सत् कारणसमवेतं सत् भवति ।
மேலும் உற்பத்தியாகிறது என்பதால் இரு அணுக்கள் முதலிய திரவியம் தன்னுடைய காரணமும், சத்தா சம்பந்தமும் என்று கூறுவார்கள். உத்பத்திக்கு முன் அசத்தாய் இருந்து பிறகு தன்னுடைய காரணரூபமான பரமாணுவினாலும் சத்தையினாலும் சமவாயரூப சம்பந்தத்தினால் உண்டாகிறது. உண்டாகி காரணத்து டன் சேர்ந்து சத் ஆகிறது.
तत्र वक्तव्यं कथम् असतः स्वं कारणं भवेत् सम्बन्धो वा केनचित् स्यात् ? न हि वन्ध्यापुत्रस्य स्वं कारणं सम्बन्धो वा केनचित् प्रमाणतः कल्पयितुं शक्यते ॥
இங்கு எவ்வாறு அசத்திற்கு சத்காரணமோ, சம்பந்தமோ அல் லது வேறு ஒன்றாலே உண்டாகும் என்று கூறப்படவேண்டும். மலடி மகனிடத்தில் சத்தா சம்பந்தமோ, காரணமோ ஒருவராலும் பிரமாண மூலமாக கல்பிக்கமுடியாது.
ननु नैवं वैशेषिकैः अभावस्य सम्बन्धः कल्प्यते । द्व्यणुकादीनां हि द्रव्याणां स्वकारणसमवायलक्षणः सम्बन्धः सतामेव उच्यते इति ।
வைசேஷிக மதவாதிகளால் அபாவ (இல்லாத) பொருளுக்குச் சம்பந்தம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தம்காரணத்தோடு ஸமவாயமாகிய ஸம்பந்தானது இரு அணுக்கள் முதலிய திரவியப் பொருட்களான பாவ (உள்ள) பொருள்கட்கேயல்லவா கூறப்படு கின்றது என்பதாம்.
न, सम्बन्धात् प्राक् सत्त्वानभ्युपगमात् । न हि वैशेषिकैः कुलालदण्डचक्रादिव्यापारात् प्राक् घटादीनाम् अस्तित्वम् इष्यते । न च मृद एव घटाद्याकारप्राप्तिम् इच्छन्ति । ततश्च असत एव सम्बन्धः पारिशेष्यात् इष्टो भवति ।
அவ்வாறல்ல, சம்பந்தத்திற்கு முன்னர் உள்ளனவாகக் கொள்ளாததால், வைசேஷிகர்களால் குயவன், தடி, சக்கிரம் முதலியவற்றின் செய்கைக்கு முன் குடம் முதலியன உள்ளனவாக (அஸ்தித்வம்) ஏற்றுக்கொள்ளப்படவில்லை மேலும் மண்ணே குடம் முதலிய உருவத்தையடைதலையும் ஏற்கவில்லை. ஆகவே பாரிசேஷநியாயத்தால் இல்லாத பொருளுக்கேதான் ஸம்பந்தம் ஏற்படுகின்றது.
ननु असतोऽपि समवायलक्षणः सम्बन्धः न विरुद्धः ।
இவ்வாறாயின் இல்லாத பொருளுக்கும் ஸமவாயமாகிய ஸம்பந்தம் விரோதப்படாது.
न ; वन्ध्यापुत्रादीनाम् अदर्शनात् ।
அவ்வாறு கூறுவது சரியில்லை. ஏனென்றால் மலடிமகன் முத லியவைகளின் ஸம்பந்தம் வேறு எவரிடமும் காணப்படாததால்
घटादेरेव प्रागभावस्य स्वकारणसम्बन्धो भवति न वन्ध्यापुत्रादेः, अभावस्य तुल्यत्वेऽपि इति विशेषः अभावस्य वक्तव्यः ।
குடம் முதலியவற்றினது முன்னின்மைக்குத்தான் (ப்ரகபா வம்) தன் காரணத்தோடு ஸம்பந்தமாகின்றது. மலடிமகன் முதலிய வற்றிற்கு இல்லை ஆகவே அபாவமென்பது ஸமமாயிருந்தாலும் ஒரு அபாவதினின்றும் மற்றோர் அபாவத்திற்கு வேற்றுமை கூற வேண்டும்.
एकस्य अभावः, द्वयोः अभावः, सर्वस्य अभावः, प्रागभावः, प्रध्वंसाभावः, इतरेतराभावः, अत्यन्ताभावः इति लक्षणतो न केनचित् विशेषो दर्शयितुं शक्यः ।
ஒன்றின்மை, இரண்டின்மை, எல்லாமின்மை ,முன்னின்மை பின்னின்மை, ஒன்றிலொன்றின்மை,முற்றிலுமின்மை என்ற லக்ஷ ணங்களுக்கு வேற்றுமையைக் காட்ட ஒருவராலும் இயலாது.
असति च विशेषे घटस्य प्रागभावः एव कुलालादिभिः घटभावम् आपद्यते सम्बध्यते च भावेन कपालाख्येन, सम्बद्धश्च सर्वव्यवहारयोग्यश्च भवति, न तु घटस्यैव प्रध्वंसाभावः अभावत्वे सत्यपि, इति प्रध्वंसाद्यभावानां न क्वचित् व्यवहारयोग्यत्वम् , प्रागभावस्यैव द्व्यणुकादिद्रव्याख्यस्य उत्पत्त्यादिव्यवहारार्हत्वम् इत्येतत् असमञ्जसम् ; अभावत्वाविशेषात् अत्यन्तप्रध्वंसाभावयोरिव ।
மேலும் எவ்விதத்திலும் வேற்றுமை இல்லாததால், குடத்தினு டைய (முன் அபாவம்) முன்னின்மைதான் குயவன் முதலிய பொருள்களால் குடமுண்டாதலாகின்றது. கபாலமென்னும் பெயரு டைய தன் காரணமான பாவப் பொருளோடு சேர்ந்து (உற்பத்தி முதலிய) எல்லா வியவகாரங்களுக்கு யோக்யதையாகின்றது. ஆனால் குடத்தினுடைய எந்த ப்ரத்வம்ஸாபாவமோ அது அபா வத்துவத்தில் சமானமாயிருந்தாலும் சம்பந்தமாகாது. இதுபோல ப்ரத்வம்ஸாபாவ முதலிய அபாவங்கள் வியவகாரங்களுக்கு எவ்விடத்திலும் யோக்யதையில்லை.இரு அணுக்கள் முதலாக கூறப்படும் பொருள்களினுடைய ப்ராகபாவமேதான், உற்பத்தி முதலிய வியவகாரங்களுக்கு உரியது என்பது பொருந்தாதது. அபாவமாயிருத்தற்கு வேற்றுமையில்லாததால் அத்யந்தா பாவ மும் ப்ரத்வம்ஸாபாவமும் போல (ப்ராகபாவமானது ப்ரத்வம்ஸா பாவ முதலியவைகளைப் போல தானும் அபாவமாயுள்ளதால் உற்பத்தி முதலிய வியவகாரங்களுக்கு உரியதாகாது என்பதே.)
ननु नैव अस्माभिः प्रागभावस्य भावापत्तिः उच्यते ।
ஆனால் எங்களால் பிராகபாவத்திற்கு பாவம் உற்பத்தி ஆகிறது என்று கூறவில்லை.
भावस्यैव तर्हि भावापत्तिः ; यथा घटस्य घटापत्तिः, पटस्य वा पटापत्तिः । एतदपि अभावस्य भावापत्तिवदेव प्रमाणविरुद्धम् ।
அவ்வாறானால் பாவத்திற்கே பாவத்தின் உற்பத்தி. எவ்வாறு எனில் கடம் கடரூபமாவது போலும், வஸ்திரம் வஸ்திரரூபமாவது போலும், ஆனால் அபாவம் பாவரூபமாவது எவ்வாறு பிரமாணத் திற்கு விருத்தமோ அவ்வாறே இதுவும் விருத்தமாகும்.
साङ्ख्यस्यापि यः परिणामपक्षः सोऽपि अपूर्वधर्मोत्पत्तिविनाशाङ्गीकरणात् वैशेषिकपक्षात् न विशिष्यते  ।
சாங்கியர்களுடைய மதத்திலும் எந்த பரிணாமவாதமுள் ளதோ அதிலும் அபூர்வ தர்மத்தின் உற்பத்தியும் விநாசமும் அங் கீகரிக்கப்பட்டுள்ளதால் வைசேஷகர்களைக் காட்டிலும் வேறுபட வில்லை.
अभिव्यक्तितिरोभावाङ्गीकरणेऽपि अभिव्यक्तितिरोभावयोः विद्यमानत्वाविद्यमानत्वनिरूपणे पूर्ववदेव प्रमाणविरोधः ।
வெளிப்படுதல், மறைதல் என்பதை அங்கீகரித்தலிலும் வெளிப்படுதல், மறைதல் என்பவைக்கு இருத்தல், இல்லாமை என் பதை நிருபித்தலில் முன்பு போலவே பிரமாண விரோதமேற்படும்.
एतेन कारणस्यैव संस्थानम् उत्पत्त्यादि इत्येतदपि प्रत्युक्तम् ॥
உத்பத்தி முதலியவைகளின் இருப்பு காரணத்திற்குத்தான் என்றமதமும் இதனால் கண்டனம் செய்யப்படுகிறது.
पारिशेष्यात् सत् एकमेव वस्तु अविद्यया उत्पत्तिविनाशादिधर्मैः अनेकधा नटवत् विकल्प्यते इति । इदं भागवतं मतम् उक्तम् ‘नासतो विद्यते भावः’ (भ. गी. २ । १६) इत्यस्मिन् श्लोके, सत्प्रत्ययस्य अव्यभिचारात् , व्यभिचाराच्च इतरेषामिति ॥
ந அசதோ வித்யதே பாவ: என்ற இந்த ஸ்லோகத்தின் பாரி சேஷ பிரமாணத்தால் சத் ஒன்றே உண்மையான வஸ்து(பொருள்) அவித்யையினால் நாடகம் போல் உத்பத்தி, விநாசம் முதலிய தர் மங்கள் அநேகவிதமாக கல்பனை செய்யப்படுகிறது என்று பகவா னால் அருளிச் செய்யப்பட்டது. உள்ளது என்ற அறிவு ஒருநாளும் மாறாது. மற்ற ஞானமே மாறுதலுடையது.
कथं तर्हि आत्मनः अविक्रियत्वे अशेषतः कर्मणः त्यागः न उपपद्यते इति ।
ஆத்மா நிர்விகாரமாய் இருக்கையில் எவ்வாறு கர்மத்தை முற்றிலும் துறப்பது என்பது முடியாது என்று கூறப்பட்டது.
यदि वस्तुभूताः गुणाः, यदि वा अविद्याकल्पिताः, तद्धर्मः कर्म, तदा आत्मनि अविद्याध्यारोपितमेव इति अविद्वान् ‘न हि कश्चित् क्षणमपि अशेषतः त्यक्तुं शक्नोति’ (भ. गी. ३ । ५) इति उक्तम् ।
குணங்கள் உண்மையான வஸ்துவாய் இருந்தாலும் சரி, அவித்யையினால் கல்பிக்கப்பட்டிருந்தாலும் சரி. அந்த தர்மமா கிய கர்மம் அவித்யையினால் ஆத்மாவில் ஆரோபிக்கப்பட்டதே தான். ஆகவே அக்ஞானி ஒரு க்ஷணமும் கர்மம் முழுவதையும் விடுவதற்கு முடியாது என்று கூறப்பட்டது.
विद्वांस्तु पुनः विद्यया अविद्यायां निवृत्तायां शक्नोत्येव अशेषतः कर्म परित्यक्तुम् , अविद्याध्यारोपितस्य शेषानुपपत्तेः ।
ஞானிக்கு வித்யையினால் அவித்யாநாசம் ஆனபொழுது கர்மம் முழுவதையும் விட்டுவிட முடியும். ஏன் எனில் அவித்யை யினால் ஏற்பட்ட ஆரோபம் செய்யப்பட்ட வஸ்துவின் மிச்சம் இல்லாததால் ஆகும்.
न हि तैमिरिकदृष्ट्या अध्यारोपितस्य द्विचन्द्रादेः तिमिरापगमेऽपि शेषः अवतिष्ठते ।
திமிரதோஷமுள்ள கண்களின் பார்வையால் ஆரோபம் செய்யப்பட்ட இரு சந்திரர்கள் முதலியவைகள் கண்களின் திமிர தோஷம் நீங்கிய உடன் மிச்சமில்லாமல் நீங்கி விடுகிறது.
சர்வகர்மாணி மனசா என்பவை முதலியவைகளாலும் அவ்வாறே ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத: ஸம்ஸித்திம் லபதே நர: ஸ்வகர்மணா தமப்யச்ர்ய ஸித்திம் விந்ததி மானவ என்பவைகளாலும் கூறியவை பொருத்தமானதே
या कर्मजा सिद्धिः उक्ता ज्ञाननिष्ठायोग्यतालक्षणा, तस्याः फलभूता नैष्कर्म्यसिद्धिः ज्ञाननिष्ठालक्षणा च वक्तव्येति श्लोकः आरभ्यते —
கர்மத்தினால் ஸித்தியான ஞானநிஷ்ட்டைக்கான யோக்ய தைக் கூறப்பட்டதோ அதன் பலனாகிய ஞானநிஷ்ட்டை ரூபமான நைஷ்கர்ம்ய ஸித்தியை கூறுவதற்காக இந்த ச்லோகம் ஆரம்பிக் கப்படுகிறது.
असक्तबुद्धिः सर्वत्र जितात्मा विगतस्पृहः ।
नैष्कर्म्यसिद्धिं परमां संन्यासेनाधिगच्छति ॥ ४९ ॥
அஸக்தபுத்தி: ஸர்வத்ர ஜிதாத்மா விகதஸ்ப்ருஹ: ।
நைஷ்கர்ம்யஸித்திம் பரமாம் ஸந்ந்யாஸேனாதிகச்சதி ॥ 49 ॥
असक्तबुद्धिः असक्ता सङ्गरहिता बुद्धिः अन्तःकरणं यस्य सः असक्तबुद्धिः सर्वत्र पुत्रदारादिषु आसक्तिनिमित्तेषु,
பற்றுதல் ஏற்படக்காரணமான மகன், மனைவி முதலிய விஷ யங்களில் பற்று அற்ற அந்தக்கரணம் உடையவன் எவனோ அவன் பற்றற்றபுத்தி உடையவன்.
जितात्मा जितः वशीकृतः आत्मा अन्तःकरणं यस्य सः जितात्मा,
மனதை வென்றவன் (வசப்படுத்தியவன்) ஜிதாத்மா.
विगतस्पृहः विगता स्पृहा तृष्णा देहजीवितभोगेषु यस्मात् सः विगतस्पृहः,
சரீரம், ஜீவனம் மேலும் போகங்களில் உள்ள ஆசை அற்ற வன் விகதஸ்ப்ருஹ:
यः एवंभूतः आत्मज्ञः सः नैष्कर्म्यसिद्धिं निर्गतानि कर्माणि यस्मात् निष्क्रियब्रह्मात्मसम्बोधात् सः निष्कर्मा तस्य भावः नैष्कर्म्यम् , नैष्कर्म्यं च तत् सिद्धिश्च सा नैष्कर्म्यसिद्धिः, निष्कर्मत्वस्य वा निष्क्रियात्मरूपावस्थानलक्षणस्य सिद्धिः निष्पत्तिः, तां नैष्कर्म्यसिद्धिं परमां प्रकृष्टां कर्मजसिद्धिविलक्षणां सद्योमुक्त्यवस्थानरूपां संन्यासेन सम्यग्दर्शनेन तत्पूर्वकेण वा सर्वकर्मसंन्यासेन, अधिगच्छति प्राप्नोति । तथा च उक्तम् — ‘सर्वकर्माणि मनसा संन्यस्य नैव कुर्वन्न कारयन्नास्ते’ (भ. गी. ५ । १३) इति ॥ ४९ ॥
அவ்வாறான ஆத்மஞானி நைஷ்கர்ம்ய சித்தியை அடைகி றான்.கிரியை அற்ற பிரஹ்மமே ஆத்மா என்ற ஞானம் அடைந்த தால் அவனுடைய எல்லா கர்மாக்களும் நிவிர்த்தியாகி விடுகிறது. (நீங்கிவிடுகிறது). அதுவே நிஷ்கர்மா- கர்மங்கள் இல்லாதது, அதன் தன்மையே நைஷ்கர்ம்யம். நைஷ்கர்ம்யத்தை அடைதலே நைஷ்கர்மிய சித்தியாகும். இவ்வாறு கர்மத்தினால் அடையப்பட் டதைக் காட்டிலும் வேறானாதாயும் (விலக்ஷணமானதாயும்) உடனே முக்தியைக் கொடுப்பதான முடிவான சித்தி. சம்யக் தர்ச னத்தினாலாவது, எல்லாக் கர்மங்களையும் துறத்தலினாலாவது அதை அடைய முடியும். அவ்வாறே சர்வகர்மாணி மனசா சந்யஸ்ய நைவ குர்வன்ன காரயன்னாஸ்தே = எல்லாக் கர்மங்க ளையும் மனதினால் துறந்து செய்வதுமில்லை, செய்விப்பதும் இல்லை என்று கூறப்பட்டது.
पूर्वोक्तेन स्वकर्मानुष्ठानेन ईश्वराभ्यर्चनरूपेण जनितां प्रागुक्तलक्षणां सिद्धिं प्राप्तस्य उत्पन्नात्मविवेकज्ञानस्य केवलात्मज्ञाननिष्ठारूपा नैष्कर्म्यलक्षणा सिद्धिः येन क्रमेण भवति, तत् वक्तव्यमिति आह —
முன்பு கூறப்பட்ட ஸ்வதர்மானுஷ்ட்டானத்தினால் ஈஸ்வர ஆராதனை செய்ததினால் உண்டான ஞானநிஷ்ட்டையை அடை வதற்கான யோக்யதா ரூப சித்தியை அடைந்தவனுக்கு ஏற்பட்ட ஆத்ம விக்ஞானமாகிய கேவல ஆத்ம ஞானத்திலேயே நிலைத்தி ருப்பதாகிய நைஷ்கர்ம்ய சித்தியானது எவ்வாறு ஏற்படுகிறது என்று விளக்குவதற்காக கூறுகிறார்.
सिद्धिं प्राप्तो यथा ब्रह्म तथाप्नोति निबोध मे ।
समासेनैव कौन्तेय निष्ठा ज्ञानस्य या परा ॥ ५० ॥
ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம ததாப்நோதி நிபோத மே ।
ஸமாஸேநைவ கெளந்தேய நிஷ்டா ஞானஸ்ய யா பரா ॥ 50 ॥
सिद्धिं प्राप्तः स्वकर्मणा ईश्वरं समभ्यर्च्य तत्प्रसादजां कायेन्द्रियाणां ज्ञाननिष्ठायोग्यतालक्षणां सिद्धिं प्राप्तः — सिद्धिं प्राप्तः इति तदनुवादः उत्तरार्थः ।
தன்னுடைய கர்மத்தால் ஈஸ்வரனை நன்றாக பூஜித்து அந்த பிரகாசத்தால் காயம், இந்திரியங்களுக்கு ஞானநிஷ்ட்டை அடை வதற்கான யோக்யதை அடைந்த புருஷன் என்று கூறியது பின்வ ரும் விஷயத்தை குறிப்பிடுவதற்காக அனுவதிக்கப்பட்டது. (கூறப் பட்டது)
किं तत् उत्तरम् , यदर्थः अनुवादः इति, उच्यते ।
பின்னால் எதற்காக அனுவதிக்கப்பட்டதோ அந்த பின்னால் வரும் விஷயம் யாது? என்று கூறப்படுகிறது.
यथा येन प्रकारेण ज्ञाननिष्ठारूपेण ब्रह्म परमात्मानम् आप्नोति, तथा तं प्रकारं ज्ञाननिष्ठाप्राप्तिक्रमं मे मम वचनात् निबोध त्वं निश्चयेन अवधारय इत्येतत् ।
எவ்வாறு ஞானநிஷ்ட்டையாகிய பரமாத்மாவை அடைவா னோ அவ்வாறு ஞானநிஷ்ட்டையை அடைவதற்கான கிரமத்தை என்னுடைய வசனங்களால் நீ நிச்சயமாக அறிந்துகொள்.
किं विस्तरेण ? न इति आह — समासेनैव सङ्क्षेपेणैव हे कौन्तेय, यथा ब्रह्म प्राप्नोति तथा निबोधेति । अनेन या प्रतिज्ञाता ब्रह्मप्राप्तिः, ताम् इदन्तया दर्शयितुम् आह — ‘निष्ठा ज्ञानस्य या परा’ इति । निष्ठा पर्यवसानं परिसमाप्तिः इत्येतत् । कस्य ? ब्रह्मज्ञानस्य या परा ।
அந்த ஞான நிஷ்டையானது விஸ்தாரமாக கூறப்படுமா? எனில், இல்லை ஹே கௌந்தேய! சுருக்கமாக கூறுகிறேன். எவ் வாறு பிரஹ்மத்தை அடைய முடியுமோ அவ்வாறு அறிந்துகொள் என்று இந்த வாக்கியத்தால் பிரதிக்ஞை செய்கிறார். அதனால் இது தான் என்று ஸ்பஷ்ட்டமாக காண்பிப்பதற்காக ஞானத்தின் பரா நிஷ்ட்டா (மேலான நிஷ்ட்டை) என்று கூறுகிறார். அதைக் கேள். நிஷ்ட்டை என்பது பரிசமாப்தி அதாவது முடிவான நிலை. அது எது எனில் பிரஹ்ம ஞானமாகிய மேலான பரா பரிசமாப்தியாகும், அல்லது முடிவான நிலையாகும்.
कीदृशी सा, यादृशम् आत्मज्ञानम् । कीदृक् तत् ? यादृशः आत्मा । कीदृशः सः ? यादृशो भगवता उक्तः, उपनिषद्वाक्यैश्च न्यायतश्च ॥
அந்த ஆத்மஞான நிஷ்ட்டை) எப்படிப்பட்டது? ஆத்மக்ஞா னம் எவ்விதமோ அவ்விதம். அது எப்படிப்பட்டது? பகவானால் எவ்வாறு கூறப்பட்டதோ அவ்வாறே உபநிஷத் வாக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறே யுக்திகளாலும் ஸித்திக்கிறது.
ननु विषयाकारं ज्ञानम् । न ज्ञानविषयः, नापि आकारवान् आत्मा इष्यते क्वचित् ।
ஞானம் விஷயாகாரமாகும். ஆனால் ஆத்மா விஷயமோ, வடிவம் உடையதாகவோ எவ்வகையாலும் ஆகாது.
ஆனாலும் ஆதித்யவர்ணம், பாரூப:, ஸ்வயம்ஜ்யோதி: என்று வடிவம் ஆத்மாவிற்கு இருப்பது போல் ஸ்ருதியில் கூறப்பட்டுள் ளதே எனில்
न ; तमोरूपत्वप्रतिषेधार्थत्वात् तेषां वाक्यानाम् — द्रव्यगुणाद्याकारप्रतिषेधे आत्मनः तमोरूपत्वे प्राप्ते तत्प्रतिषेधार्थानि ‘आदित्यवर्णम्’ (श्वे. उ. ३ । ८) इत्यादीनि वाक्यानि । ‘अरूपम्’ (क. उ. १ । ३ । १५) इति च विशेषतः रूपप्रतिषेधात् । अविषयत्वाच्च — ‘न सन्दृशे तिष्ठति रूपमस्य न चक्षुषा पश्यति कश्चनैनम्’ (श्वे. उ. ४ । २०) ‘अशब्दमस्पर्शम्’ (क. उ. १ । ३ । १५) इत्यादेः ।
அவ்வாறு அல்ல. அந்த வாக்கியங்கள் தமோ குண வடிவ முள்ளவைகளை நிராகரிப்பதற்காக கூறப்பட்டவை. ஆத்மாவிற்கு திரவியம் குணம் முதலியவற்றின் ஆகாரங்களை நிஷேதிக்க இருள்வடிவத் தன்மை ஏற்படுமே என்ற சந்தேஹம் ஏற்படும். அதை நீக்குவதற்காக ஆதித்யவர்ணம் முதலிய வாக்கியங்கள் கூறப்பட்டன. விசேஷமாக அதற்கு ரூபம் இல்லை என்பதைக் காட்டுவதற்காக என்றும் கூறப்பட்டது. ஆத்மா ஒன்றுக்கும் விஷ யமல்ல என்பது: ந சம்த்ருசே திஷ்டதி ரூபமஸ்ய ந சக்ஷஷா பச்யதி கச்சனைனம், அசப்தமஸ்பர்ஷம் முதலிய வாக்கியங் களால் கூறப்பட்டுள்ளது.
तस्मात् आत्माकारं ज्ञानम् इति अनुपपन्नम् ॥
ஆகையால் ஆத்மாகாரம் ஞானம் என்று கூறுவது பொருந்தாது.
कथं तर्हि आत्मनः ज्ञानम् ? सर्वं हि यद्विषयं यत् ज्ञानम् , तत् तदाकारं भवति । निराकारश्च आत्मा इत्युक्तम् । ज्ञानात्मनोश्च उभयोः निराकारत्वे कथं तद्भावनानिष्ठा इति ।
எவ்வாறு ஆத்மாவினுடைய ஞானம் ஏற்படும்? எல்லா ஞானங்களும் எந்த விஷயத்தை அறிகிறதோ அந்த அந்த ஆகார மாகிறது. ஆத்மாவோ ஆகாரமற்றது. (நிர்விகாரமாகும்) என்று கூறப்பட்டுள்ளது. ஞானம், ஆத்மா இரண்டும் நிராகாரமாய் இருப் பதால் எவ்வாறு அந்த பாவனா (தியான) நிஷ்ட்டையாகும்.
न ; अत्यन्तनिर्मलत्वातिस्वच्छत्वातिसूक्ष्मत्वोपपत्तेः आत्मनः । बुद्धेश्च आत्मवत् नैर्मल्याद्युपपत्तेः आत्मचैतन्याकाराभासत्वोपपत्तिः ।
அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏனெனில் ஆத்மா முற்றிலும் நிர்மலமாயும், ஸ்வச்சமாயும், சூக்ஷ்மமாயும் இருக்கிறது. அவ் வாறே புத்திக்கும் ஆத்மாவிற்கு சமமான நிர்மலம் முதலியவை கள் இருக்கின்றன. ஆகையால் அதற்கு ஆத்ம சைதன்ய ஆகார மான ஆபாசம் ஏற்படுகிறது.
बुद्ध्याभासं मनः, तदाभासानि इन्द्रियाणि, इन्द्रियाभासश्च देहः । अतः लौकिकैः देहमात्रे एव आत्मदृष्टिः क्रियते ।
புத்தி ஆபாசம் மனம், மனதின் ஆபாசம் இந்திரியங்கள், இந் திரியங்களின் ஆபாசம் தேஹமாகும். ஆகையால் லௌகிகர்கள் தேஹமாத்திரத்திலேயே ஆத்ம திருஷ்ட்டியைச் செய்கிறார்கள்.
देहचैतन्यवादिनश्च लोकायतिकाः ‘चैतन्यविशिष्टः कायः पुरुषः’ इत्याहुः । तथा अन्ये इन्द्रियचैतन्यवादिनः, अन्ये मनश्चैतन्यवादिनः, अन्ये बुद्धिचैतन्यवादिनः ।
தேஹமே ஆத்மா என்கின்ற வாதிகள் லோகாயதர்கள் சைதன் யத்துடன் கூடிய தேஹமே ஆத்மா என்கிறார்கள். அவ்வாறே இந் திரிய சைதன்யவாதிகள், இந்திரியமே சைதன்யம் என்கிறார்கள். மனதை சைதன்யம் என்றும் வேறு சிலர் புத்தியை சைதன்யம் என்றும் கூறுகின்றனர்.
ततोऽपि आन्तरम् अव्यक्तम् अव्याकृताख्यम् अविद्यावस्थम् आत्मत्वेन प्रतिपन्नाः केचित् ।
அதைக் காட்டிலும் உள்ளே வியாபித்திருக்கின்ற அவ்யக்தம், அவ்யாகிருதம் எனப்படுகின்றஅவித்யையை ஆத்மாவாக சிலர் அறிகின்றார்கள்.
सर्वत्र बुद्ध्यादिदेहान्ते आत्मचैतन्याभासता आत्मभ्रान्तिकारणम् इत्यतश्च
புத்தி முதல் தேஹம் வரையிலும் எங்கும் உள்ள ஆத்ம சைதன்ய ஆபாசமானது ஏற்பட ஆத்மபிராந்தி காரணமாகும்.
आत्मविषयं ज्ञानं न विधातव्यम् । किं तर्हि ? नामरूपाद्यनात्माध्यारोपणनिवृत्तिरेव कार्या, नात्मचैतन्यविज्ञानं कार्यम् , अविद्याध्यारोपितसर्वपदार्थाकारैः अविशिष्टतया दृश्यमानत्वात् इति ।
ஆகையால் ஆத்மஞான விஷயம் விதிக்கப்பட்டது அல்ல. ஆனால் எது விதிக்கப்பட்டது எனில் நாம ரூப முதலிய அநாத்ம அத்யாரோபமே நிவிர்த்திக்க செயல்படவேண்டுமே தவிர ஆத்ம சைதன்ய ஞானத்தில் செயல்படவேண்டியது ஒன்றுமில்லை. ஏனெ னில் ஆத்மாவிடத்தில் அவித்யா அத்யாரோபத்தினாலேயே எல்லா பதார்த்தா காரத்துடன் கூடியதாக கிரஹிக்கப்பட்டதால் ஆகும்.
अत एव हि विज्ञानवादिनो बौद्धाः विज्ञानव्यतिरेकेण वस्त्वेव नास्तीति प्रतिपन्नाः, प्रमाणान्तरनिरपेक्षतां च स्वसंविदितत्वाभ्युपगमेन ।
ஆகையால் விக்ஞானவாதிகளாகிய பௌத்தர்கள் விக்ஞானத் தைக் காட்டிலும் வேறு ஒரு வஸ்து இல்லை என்ற முடிவிற்கு வந்த வர்கள் ஸ்வசம்வேதியத்தைப் (தனக்குத் தானே அறிவதை) பற்றிக் கொண்டு மற்றபிரமாணங்களை சரியெனக் கொள்வதில்லை.
तस्मात् अविद्याध्यारोपितनिराकरणमात्रं ब्रह्मणि कर्तव्यम् , न तु ब्रह्मविज्ञाने यत्नः, अत्यन्तप्रसिद्धत्वात् ।
ஆகையால் அவித்யா அத்யாரோபத்தை நீக்குவது மாத்திரமே பிரஹ்மத்திடத்தில் கர்த்தவ்யம் (அவசியம் செயல்படவேண்டியது). ஆனால் பிரஹ்மஞானத்தில் கர்த்தவ்யம் கிடையாது. ஏனெனில் பிரஹ்மமானது மிகப்பிரசித்தமாய் இருப்பதால்.
अविद्याकल्पितनामरूपविशेषाकारापहृतबुद्धीनाम् अत्यन्तप्रसिद्धं सुविज्ञेयम् आसन्नतरम् आत्मभूतमपि, अप्रसिद्धं दुर्विज्ञेयम् अतिदूरम् अन्यदिव च प्रतिभाति अविवेकिनाम् ।
பிரஹ்மமானது மிகவும் பிரசித்தமாயும், நன்கு அறியப்பட்ட தாயும், மிக அருகில் இருப்பதாயும் ஆத்ம ஸ்வரூபமாய் இருந்தா லும், விவேகமற்ற மனிதர்களுக்கு அவித்யையினால் கல்பிக்கப் பட்ட நாமரூப பேதத்தினால் அவர்களுடைய புத்தியானது கவரப் பட்டதால் அப்ரசித்தமாயும் அறிவதற்கு மிகக் கடினமாயும், மிக தூரத்தில் இருப்பதாயும், வேறாக இருப்பதாயும் தோன்றுகிறது.
बाह्याकारनिवृत्तबुद्धीनां तु लब्धगुर्वात्मप्रसादानां न अतः परं सुखं सुप्रसिद्धं सुविज्ञेयं स्वासन्नतरम् अस्ति । तथा चोक्तम् — ‘प्रत्यक्षावगमं धर्म्यम्’ (भ. गी. ९ । २) इत्यादि ॥
குரு, கிருபை உடைய வெளிவிஷயங்களில் இருந்தும் வில கிய புத்தியுடையவர்கள். ஆகையால் அதைக் காட்டிலும் மேலான சுகமானதாயும் மிகவும் பிரசித்தமானதாயும், நன்கு அறியப்பட்ட தாயும் மிகவும் அருகில் இருப்பதாயும் உள்ளது வேறு கிடையாது. அவ்வாறே பிரத்யக்ஷாவகமம் தர்ம்யம் என்பது முதலியவை களால் கூறப்பட்டுள்ளது.
केचित्तु पण्डितंमन्याः ‘निराकारत्वात् आत्मवस्तु न उपैति बुद्धिः । अतः दुःसाध्या सम्यग्ज्ञाननिष्ठा’ इत्याहुः।
தாங்கள் பண்டிதர்கள் என்று நினைத்துக் கொண்ட சிலர் ஆத்மா நிராகாரமானதால் (வடிவமற்றதால்) புத்தி அதை அடைய முடியாது. ஆகையால் சம்யக் ஞான நிஷ்ட்டையை அடைய முடியாது என்று கூறுவர்.
सत्यम् ; एवं गुरुसम्प्रदायरहितानाम् अश्रुतवेदान्तानाम् अत्यन्तबहिर्विषयासक्तबुद्धीनां सम्यक्प्रमाणेषु अकृतश्रमाणाम् । तद्विपरीतानां तु लौकिकग्राह्यग्राहकद्वैतवस्तुनि सद्बुद्धिः नितरां दुःसम्पादा, आत्मचैतन्यव्यतिरेकेण वस्त्वन्तरस्य अनुपलब्धेः ।
குரு கிருபை அற்றவர்களுக்கும் வேதாந்த சிரவணம், அற்ற வர்களாயும் விஷயத்தில் மிகுந்த பற்றுடைய புத்தி உடையவர்க ளாயும் நல்ல பிரமாணங்களில் முயற்சி இல்லாதவர்களுக்கு அடைவது கடினமாகும். ஆனால் அவர்களைக் காட்டிலும் மாறா னவர்களுக்கு லௌகிக அறிபடும், அறிபடாத துவைத வஸ்துக் களை சத்திய வஸ்துவாக அறிவது என்பது மிகவும் கடினமாகும். ஏனெனில் அவர்களுக்கு ஆத்ம சைதன்யத்தை தவிர வேறு வஸ்து இருப்பதாகக் காண்பதில்லை.
यथा च ‘एतत् एवमेव, न अन्यथा’ इति अवोचाम ; उक्तं च भगवता ‘यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुनेः’ (भ. गी. २ । ६९) इति ।
இது எவ்வாறு கூறப்பட்டதோ அவ்வாறுதான். வேறுவிதமாக இல்லை என்று கூறினோம். பகவானும் யஸ்யாம் ஜாக்ரதி பூதானி ஸா நிசா பச்யதே முனே: என்று கூறியுள்ளார்.
तस्मात् बाह्याकारभेदबुद्धिनिवृत्तिरेव आत्मस्वरूपावलम्बनकारणम् । न हि आत्मा नाम कस्यचित् कदाचित् अप्रसिद्धः प्राप्यः हेयः उपादेयो वा ।
ஆகையால் வெளித்தோற்றமுடைய நாநா பேதபுத்தியின் நீக் கமே ஆத்மஸ்வரூபத்தை அடைவதற்குக் காரணமாகிறது. ஆகை யால் ஆத்மா என்பது ஒருவருக்கும், ஒருபொழுதும் பிரசித்தம் அற்று இல்லை. அவ்வாறே கொள்ளக்கூடிய பொருளாகவோ தள் ளக்கூடிய பொருளாகவோ இல்லை.
अप्रसिद्धे हि तस्मिन् आत्मनि स्वार्थाः सर्वाः प्रवृत्तयः व्यर्थाः प्रसज्येरन् । न च देहाद्यचेतनार्थत्वं शक्यं कल्पयितुम् । न च सुखार्थं सुखम् , दुःखार्थं दुःखम् । आत्मावगत्यवसानार्थत्वाच्च सर्वव्यवहारस्य ।
ஆத்மா பிரசித்தமற்ற பொருளாயின் (தெரியாத பொருளா யின்) தனக்காகச் செய்யப்படும் எல்லா பிரவிருத்திகளும் பிரயோ ஜனமற்றதாய் விடும். ஏனெனில் தேஹாதிகளாகிய அசேதனத் திற்கு புருஷார்த்தத்தைக் (பலனை) கல்பிக்கமுடியாது. எல்லா விய வஹாரங்களும், சுகத்திற்காக சுகமும், துக்கத்திற்காக துக்கமும் கல் பிக்கப்படவில்லை. ஆனால் எல்லா வியவஹாரங்களும் ஆத் மாவை அறிவதில் (ஆத்மக்ஞானத்தில்) முடிவடைகிறது.
तस्मात् यथा स्वदेहस्य परिच्छेदाय न प्रमाणान्तरापेक्षा, ततोऽपि आत्मनः अन्तरतमत्वात् तदवगतिं प्रति न प्रमाणान्तरापेक्षा ; इति आत्मज्ञाननिष्ठा विवेकिनां सुप्रसिद्धा इति सिद्धम् ॥
ஆகையால் தன்னுடைய தேஹத்தை அறிவதற்கு வேறு பிர மாணம் வேண்டியதில்லையோ, அதைக் காட்டிலும் தனக்கு மிக வும் சமீபத்தில் இருக்கிறதால் ஆத்மாவை (தன்னை) அறிவதற்கு வேறு பிரமாணத்தை அபேக்ஷிக்கவில்லை. ஆகையால் விவேகி களுக்கு ஆத்மா மிகவும் பிரசித்தமானது என்பது சித்திக்கிறது. (நி ரூபிக்கப்பட்டது)
येषामपि निराकारं ज्ञानम् अप्रत्यक्षम् , तेषामपि ज्ञानवशेनैव ज्ञेयावगतिरिति ज्ञानम् अत्यन्तप्रसिद्धं सुखादिवदेव इति अभ्युपगन्तव्यम् ।
எவர்களுடைய மதத்தில் ஞானமானது ஒத்துக்கொள்ளப்படா ததாயும், பிரத்யக்ஷம் அற்றதாயும் இருக்கிறதோ அவர்களும் ஞானத்தினாலேயே ஞேயவஸ்துவை அறிந்து கொள்ள முடியும். ஆகையால் ஞானம் சுகம் முதலியவைகளைப் போல் மிகவும் பிர சித்தமானது என்று ஏற்றுக்கொள்ளவேண்டும்.
जिज्ञासानुपपत्तेश्च — अप्रसिद्धं चेत् ज्ञानम् , ज्ञेयवत् जिज्ञास्येत । यथा ज्ञेयं घटादिलक्षणं ज्ञानेन ज्ञाता व्याप्तुम् इच्छति, तथा ज्ञानमपि ज्ञानान्तरेण ज्ञातव्यम् आप्तुम् इच्छेत् । न एतत् अस्ति ।
ஞானத்தை அறிவதற்கு இச்சை ஏற்படுவதில்லை. ஞானம் பிர சித்தமற்றதாய் இருந்தால் அல்லவா அதை அறிய இச்சை கொள் ளவேண்டும். எவ்வாறு ஞேய வஸ்துக்களாகிய கடம் முதலிய ஞேய பதார்த்தங்களை ஞாதாவானவன் (அறிபவன்) ஞானத்தி னால் அறிய இச்சிக்கிறான். அவ்வாறே ஞானத்தையும் வேறு ஞானத்தினால் ஞாதாவானவன் அறிய விரும்பலாம். ஆனால் அவ்வாறு இயலாது.
अतः अत्यन्तप्रसिद्धं ज्ञानम् , ज्ञातापि अत एव प्रसिद्धः इति । तस्मात् ज्ञाने यत्नो न कर्तव्यः, किं तु अनात्मनि आत्मबुद्धिनिवृत्तावेव । तस्मात् ज्ञाननिष्ठा सुसम्पाद्या ॥ ५० ॥
ஆகையால் ஞானம் மிகவும் பிரசித்தமாய் இருக்கிறது. ஆகையால் ஞாதாவும் பிரசித்தமாகவே இருக்கிறது. ஆகையால் ஞானத்தை அடைவதற்கு செய்யவேண்டியது (கர்த்தவ்யம்) ஒன்று மில்லை. ஆனால் அநாத்மாவை நிவர்த்தியே செய்யத்தக்கது. (கர்த்தவ்யம்) ஆகையால் ஞானநிஷ்டை அவசியம் சம்பாதிக்கத் தக்கது.
सा इयं ज्ञानस्य परा निष्ठा उच्यते, कथं कार्या इति —
இந்த ஞானத்தினுடைய மேலான நிஷ்ட்டையை எவ்வாறு செய்யவேண்டும் என்று கூறுகிறார்-
बुद्ध्या विशुद्धया युक्तो धृत्यात्मानं नियम्य च ।
शब्दादीन्विषयांस्त्यक्त्वा रागद्वेषौ व्युदस्य च ॥ ५१ ॥
புத்த்யா விசுத்தயா யுக்தோ த்ருத்யாத்மானம் நியம்ய ச ।
சப்தாதீன்விஷயாம்ஸ்த்யக்த்வா ராகத்வேஷௌ வ்யுதஸ்ய ச ॥ 51 ॥
बुद्ध्या अध्यवसायलक्षणया विशुद्धया मायारहितया युक्तः सम्पन्नः, धृत्या धैर्येण आत्मानं कार्यकरणसङ्घातं नियम्य च नियमनं कृत्वा वशीकृत्य, शब्दादीन् शब्दः आदिः येषां तान् विषयान् त्यक्त्वा, सामर्थ्यात् शरीरस्थितिमात्रहेतुभूतान् केवलान् मुक्त्वा ततः अधिकान् सुखार्थान् त्यक्त्वा इत्यर्थः, शरीरस्थित्यर्थत्वेन प्राप्तेषु रागद्वेषौ व्युदस्य च परित्यज्य च ॥ ५१ ॥
கபடமற்றநன்கு பண்படுத்தப்பட்ட புத்தியை உடையவன் தைரியத்துடன் இந்த காரியகரண சங்காதமாகிய சரீரம் இந்திரியங் களை வசம் செய்து சப்தம் முதலிய வெளிவிஷயங்களை தியாகம் செய்து தன் சாமர்த்தியத்தால் சரீர நிலைத்தலுக்கு வேண்டியவைக ளைத் தவிர அதற்கு அதிகமான சுகபோகங்களை விடவேண்டும் என்பது பொருள். சரீர நிலைத்தலுக்கு தேவையானவை எது கிடைத் தாலும் அதில் விருப்பு, வெறுப்பற்று ஏற்றுக்கொள்ளவேண்டும்.
ततः —
அதன்பின்.
विविक्तसेवी लघ्वाशी यतवाक्कायमानसः ।
ध्यानयोगपरो नित्यं वैराग्यं समुपाश्रितः ॥ ५२ ॥
விவிக்தஸேவீ லக்வாசீ யதவாக்காயமானஸ: ।
த்யானயோகபரோ நித்யம் வைராக்யம் ஸமுபாச்ரித: ॥ 52 ॥
विविक्तसेवी अरण्यनदीपुलिनगिरिगुहादीन् विविक्तान् देशान् सेवितुं शीलम् अस्य इति विविक्तसेवी, लघ्वाशी लघ्वशनशीलः — विविक्तसेवालघ्वशनयोः निद्रादिदोषनिवर्तकत्वेन चित्तप्रसादहेतुत्वात् ग्रहणम् ।
விவிக்தசேவீ என்றால் காடு, நதி, நதிக்கரை, மலை, குகை முத லிய ஒருவரும் அற்ற தனிமையான இடத்தில் இருப்பதில் விருப்ப முள்ளவன். குறைந்த உணவை உண்ணுபவன். தனிமையில் இருப் பவனும், குறைந்த உணவை உட்கொள்பவனாகிய அவனுக்குத் தூக்கம் முதலிய தோஷங்கள் நீங்குவதால் சித்த சுத்திக்கு ஏதுவாகி றது. ஆகையால் அதை மேற்கொள்ளவேண்டும்.
यतवाक्कायमानसः वाक् च कायश्च मानसं च यतानि संयतानि यस्य ज्ञाननिष्ठस्य सः ज्ञाननिष्ठः यतिः यतवाक्कायमानसः स्यात् । एवम् उपरतसर्वकरणः सन् ।
வாக்கு காயம் மனம் இவைகளை வசப்படுத்திய ஞான நிஷ்ட்டை எவனுக்கோ அந்த ஞானநிஷ்ட்டை உடைய சந்நியாசி மனோ வாக்கு காயத்தை அடக்கியவனாகிறான். இவ்வாறு இந்திரி யங்களை அடக்கியவனாய் இருந்துகொண்டு.
ध्यानयोगपरः ध्यानम् आत्मस्वरूपचिन्तनम् , योगः आत्मविषये एकाग्रीकरणम् तौ परत्वेन कर्तव्यौ यस्य सः ध्यानयोगपरः नित्यं नित्यग्रहणं मन्त्रजपाद्यन्यकर्तव्याभावप्रदर्शनार्थम् ।
தியானம் என்பது ஆத்மஸ்வரூபத்தை சிந்தித்தலாகும். யோகம் என்பது ஆத்மவிஷயத்தில் ஏகாக்கிரம் செய்வது ஆகும். அந்த தியானயோகத்திலேயே ஈடுபட்டுள்ளானோ அவனே தியா னயோகபரன். நித்தியம் என்று கூறியது மந்திரஜபம் முதலியவை கள் செய்யவேண்டியதில்லை என்று தெரிவிப்பதற்காகவே ஆகும்.
वैराग्यं विरागस्य भावः दृष्टादृष्टेषु विषयेषु वैतृष्ण्यं समुपाश्रितः सम्यक् उपाश्रितः नित्यमेव इत्यर्थः ॥ ५२ ॥
வைராக்கியம் எனப்படும் விராகபாவம் ஆனது அறிபடும் பொருள்களிலேயும் அறிபடா பொருள்களிலேயும் (இவ்வுலக, மேலுலகங்களில் உள்ள போகங்களில்) உள்ள ஆசை அற்றிருக் கும் தன்மை உடையவன்.
किञ्च —
மேலும்
अहङ्कारं बलं दर्पं कामं क्रोधं परिग्रहम् ।
विमुच्य निर्ममः शान्तो ब्रह्मभूयाय कल्पते ॥ ५३ ॥
அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம் ।
விமுச்ய நிர்மம: சாந்தோ ப்ரஹ்மபூயாய கல்பதே ॥ 53 ॥
अहङ्कारम् अहङ्करणम् अहङ्कारः देहादिषु तम् , बलं सामर्थ्यं कामरागसंयुक्तम् — न इतरत् शरीरादिसामर्थ्यं स्वाभाविकत्वेन तत्त्यागस्य अशक्यत्वात् — दर्पं दर्पो नाम हर्षानन्तरभावी धर्मातिक्रमहेतुः ‘हृष्टो दृप्यति दृप्तो धर्ममतिक्रामति’ (आ. ध. सू. १ । १३ । ४) इति स्मरणात् ; तं च ।
தேஹம் இந்திரியங்களில் நான் என்கின்றபாவம் அஹங்கா ரம் ஆகும். பலம் என்பது காமம், ராகத்துடன் கூடியது ஆகும். ஸ்வாபிகமாக உள்ள சரீரம் முதலியவற்றின் பலத்தை விட முடியாது. தர்பம் என்பது களிப்பிற்குப் பின் தோன்றுவதும் தர்மத்தை மீறியதால் உண்டாகும் கர்வமாகும். ஏன் எனில் ஹ்ருஷ்டோ த்ருப்யதி த்ருப்தோ தர்மமதிக்ராமதி = களிப்பினால் தர்ப்பம் அடைகிறான். தர்ப்பத்தினால் தர்மத்தை மீறுகிறான் என்று ஸ்ம்ருதியிலும் கூறப்பட்டுள்ளது.
कामम् इच्छां क्रोधं द्वेषं परिग्रहम् इन्द्रियमनोगतदोषपरित्यागेऽपि शरीरधारणप्रसङ्गेन धर्मानुष्ठाननिमित्तेन वा बाह्यः परिग्रहः प्राप्तः, तं च विमुच्य परित्यज्य ।
இச்சை என்றால் காமம். துவேஷத்தின் மறுபெயர் க்ரோதம். பரிக்கிரஹம் என்றால் இந்திரியங்கள், மனம் இவைகளில் உள்ள தோஷங்களைத் தியாகம் செய்திருந்தாலும், சரீரம் நிலைத்தல் பொருட்டும், தர்மானுஷ்ட்டானத்திற்காகவும், மேற்கொண்டதற்கா கவும், வெளியில் உள்ளவை வந்து சேரும். அதையும் தியாகம் செய்து.
परमहंसपरिव्राजको भूत्वा, देहजीवनमात्रेऽपि निर्गतममभावः निर्ममः, अत एव शान्तः उपरतः, यः संहृतहर्षायासः यतिः ज्ञाननिष्ठः ब्रह्मभूयाय ब्रह्मभवनाय कल्पते समर्थो भवति ॥ ५३ ॥
பரமஹம்ஸ பரிவ்ராஜனாகி (சந்நியாசி ஆகி) தேஹம் நிலைத் தற்கு மாத்திரம் கூட என்னுடையது என்றபாவனை அற்றிருத்தல் நிர்மம. அதனால் சாந்தி அதாவது உபரதி உண்டாகிறது. அந்த ஞானநிஷ்ட்டனாகிய சந்நியாசியானவன் ப்ரஹ்மரூபமாவதற்கு தகுதி உடையவனாகிறான்.
अनेन क्रमेण —
இந்தக் கிரமமாக
ब्रह्मभूतः प्रसन्नात्मा न शोचति न काङ्क्षति ।
समः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते पराम् ॥ ५४ ॥
ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா ந சோசதி ந காங்க்ஷதி ।
ஸம: ஸர்வேஷு பூதேஷு மத்பக்திம் லபதே பராம் ॥ 54 ॥
ब्रह्मभूतः ब्रह्मप्राप्तः प्रसन्नात्मा लब्धाध्यात्मप्रसादस्वभावः न शोचति, किञ्चित् अर्थवैकल्यम् आत्मनः वैगुण्यं वा उद्दिश्य न शोचति न सन्तप्यते ; न काङ्क्षति ।
பிரஹ்மத்தை அடைந்தவன் அத்யாத்ம பிரசாதத்தை அடைந்து துக்கத்தை அடைவதில்லை. ஆசைப்படுவதும் இல்லை (இச்சிப்பதும் இல்லை). பதார்த்தம் நஷ்ட்டமானாலும், தனக்கு குறைவு இருந்தாலும் அதைக் குறித்து துக்கப்படுவது இல்லை. ஒரு பொருளையும் இச்சிப்பதும் இல்லை.
ब्रह्मभूतस्य अयं स्वभावः अनूद्यते — न शोचति न काङ्क्षति इति ।
"ந சோசதி ந காங்க்ஷதி” என்று கூறி பிரஹ்மத்தை அடைந்தவ னுடைய ஸ்வபாவமானது எடுத்துரைக்கப்பட்டது.
न हि अप्राप्तविषयाकाङ्क्षा ब्रह्मविदः उपपद्यते ; ‘न हृष्यति’ इति वा पाठान्तरम् ।
ஏனெனில் பிரஹ்மத்தை அறிந்தவன் அடையாத விஷயங்க ளில் ஆசை வைக்கமாட்டான். அல்லது நகாங்க்ஷதி என்பதற்கு பதிலாக நஹ்ருஷ்யதி என்றபாடமும் உள்ளது.
समः सर्वेषु भूतेषु, आत्मौपम्येन सर्वभूतेषु सुखं दुःखं वा सममेव पश्यति इत्यर्थः । न आत्मसमदर्शनम् इह, तस्य वक्ष्यमाणत्वात् ‘भक्त्या मामभिजानाति’ (भ. गी. १८ । ५५) इति ।
சமம் என்றால் எல்லா ஜீவர்களிடத்தும் உள்ள சுகம், துக்கம் தனக்கு உள்ளதுபோல் சமமாகப் பார்ப்பது ஆகும். இவ்விடத்தில் ஆத்மாவை சமபாவமாக காண்பது அல்ல. ஏனெனில் இனிவரும் ஸ்லோகத்தில் பக்த்யா மாமபிஜானாதி என்று கூறப்பட்டுள்ளது.
एवंभूतः ज्ञाननिष्ठः, मद्भक्तिं मयि परमेश्वरे भक्तिं भजनं पराम् उत्तमां ज्ञानलक्षणां चतुर्थीं लभते, ‘चतुर्विधा भजन्ते माम्’ (भ. गी. ७ । १६) इति हि उक्तम् ॥ ५४ ॥
இவ்வாறுள்ள ஞானநிஷ்ட்ட புருஷன் என்னுடைய பரமேஸ் வர ஸ்வரூபத்தினிடத்தில் ஞானரூபமான நான்காவதான மேலான பக்தியை அடைகிறான் என்று சதுர்விதா பஜந்தேமாம் என்று கூறப்பட்டது.
ततः ज्ञानलक्षणया —
இதன்பின் ஞானமாகிய-
भक्त्या मामभिजानाति यावान्यश्चास्मि तत्त्वतः ।
ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम् ॥ ५५ ॥
பக்த்யா மாமபிஜானாதி யாவான்யச்சாஸ்மி தத்வத: ।
ததோ மாம் தத்வதோ ஞாத்வா விசதே ததனந்தரம் ॥ 55 ॥
भक्त्या माम् अभिजानाति यावान् अहम् उपाधिकृतविस्तरभेदः, यश्च अहम् अस्मि विध्वस्तसर्वोपाधिभेदः उत्तमः पुरुषः आकाशकल्पः, तं माम् अद्वैतं चैतन्यमात्रैकरसम् अजरम् अभयम् अनिधनं तत्त्वतः अभिजानाति ।
உபாதிகளினால் நான் பலவித பேதங்கள் உடையவன் போல் இருப்பதாகவும், நான் உபாதி பேதங்களற்ற மேலான புருஷனாயும் ஆகாசத்திற்கு ஒப்பாக எங்கும் நிறைந்தவனாயும் இருக்கும் என்னை த்வைதமற்றவன், சைதன்ய ஏகரச ரூபன், பிறப்பற்றவன், மூப்பற்றவன், மரணமற்றவன், பயம் அற்றவன், முடிவு அற்றவன், என்னுடைய தத்துவத்தை (உண்மைஸ்வரூபத்தை) பக்தியினால் அறிகிறான்.
ततः माम् एवं तत्त्वतः ज्ञात्वा विशते तदनन्तरं मामेव ।
இவ்வாறு என்னை உள்ளவாறு அறிந்து அதன்பின் என்னையே அடைகின்றான்.
नात्र ज्ञानप्रवेशक्रिये भिन्ने विवक्षिते ‘ज्ञात्वा विशते तदनन्तरम्’ इति । किं तर्हि ? फलान्तराभावात् ज्ञानमात्रमेव, ‘क्षेत्रज्ञं चापि मां विद्धि’ (भ. गी. १३ । २) इति उक्तत्वात् ॥
இங்கு அதை அறிந்து, அதன் பின் அடைகிறான் என்று கூறியது ஞானம், அதன்பின் அதை அடைவது என்று வெவ்வே றாக விளக்கப்படவில்லை. எவ்வாறு எனில் ஞானமே தான் பலம் அதைக் காட்டிலும் வேறு பலன் கிடையாது. இதையே க்ஷேத்ரக்ஞம் சாபி மாம் வித்தி என்று கூறப்பட்டதால்.
ननु विरुद्धम् इदम् उक्तम् ‘ज्ञानस्य या परा निष्ठा तया माम् अभिजानाति’ इति । कथं विरुद्धम् इति चेत् , उच्यते — यदैव यस्मिन् विषये ज्ञानम् उत्पद्यते ज्ञातुः, तदैव तं विषयम् अभिजानाति ज्ञाता इति न ज्ञाननिष्ठां ज्ञानावृत्तिलक्षणाम् अपेक्षते इति ; अतश्च ज्ञानेन न अभिजानाति, ज्ञानावृत्त्या तु ज्ञाननिष्ठया अभिजानातीति ।
எந்த ஞானத்தின் மேலான (பரா) நிஷ்ட்டையோ அந்த ஞானத் தால் என்னை அறியமுடியும் என்று கூறியது பொருந்தாது. எதனால் பொருந்தாது எனில் கூறப்படுகிறது. எப்பொழுது எந்த விஷயத்தில் ஞாதாவிற்கு (அறிபவனுக்கு) அந்த விஷயத்தின் ஞானம் உண்டாகி றதோ அப்பொழுது ஞாதா அறிகிறான். அதற்கு அடிக்கடி ஆவர்த்தி செய்யவேண்டிய ஞானநிஷ்ட்டை தேவையில்லை. ஆகையால் ஞேயவஸ்துவை ஆத்மாவை (தன்னை) ஞானத்தினால் அவன் அறிவதில்லை. ஞானவிருத்திரூப ஞானநிஷ்ட்டையினால் அறிகிறான் என்று கூறுதல் பொருத்தமற்றதாக இருக்கிறது.
नैष दोषः ; ज्ञानस्य स्वात्मोत्पत्तिपरिपाकहेतुयुक्तस्य प्रतिपक्षविहीनस्य यत् आत्मानुभवनिश्चयावसानत्वं तस्य निष्ठाशब्दाभिलापात् ।
இந்த தோஷம் ஞானத்திற்கு இல்லை. ஏன் எனில் ஞானம் உண்டாவதற்கும் பரிபாகத்திற்கும் காரணமும், தடைகள் இல்லாத துமாய் ஆத்ம அனுபவத்தினால் நிச்சயமான முடிவு எதுவோ அதை நிஷ்ட்டை என்ற சப்தத்தினால் விளக்கப்படுகிறது.
शास्त्राचार्योपदेशेन ज्ञानोत्पत्तिहेतुं सहकारिकारणं बुद्धिविशुद्धत्वादि अमानित्वादिगुणं च अपेक्ष्य जनितस्य क्षेत्रज्ञपरमात्मैकत्वज्ञानस्य कर्तृत्वादिकारकभेदबुद्धिनिबन्धनसर्वकर्मसंन्याससहितस्य स्वात्मानुभवनिश्चयरूपेण यत् अवस्थानम् , सा परा ज्ञाननिष्ठा इति उच्यते ।
சாஸ்திரம் குரு உபதேசத்தினால் ஞானம் உண்டாவதற்கும் அது முதிர்ந்து பக்குவத்திற்கான காரணத்திற்கு உபயோகமாய் உள்ள அமானித்துவாதி அந்தக்கரண சுத்தி முதலியவைகளை அபேக்ஷித்து உண்டான க்ஷேத்திரக்ஞ பரமாத்மா ஒன்றே என்ற ஞானத்திற்கு கர்த்தா முதலிய காரகபேத புத்தியினால் பந்தப்பட்ட எல்லாக் கர்மங்களையும் விட்டு நீங்கியவனுடைய ஸ்வாத்ம அனுபவ நிச்சய ரூபமாக எந்த நிலைத்தல் உள்ளதோ அது மேலான ஞான நிஷ்ட்டை என்று கூறப்பட்டது.
सा इयं ज्ञाननिष्ठा आर्तादिभक्तित्रयापेक्षया परा चतुर्थी भक्तिरिति उक्ता । तया परया भक्त्या भगवन्तं तत्त्वतः अभिजानाति, यदनन्तरमेव ईश्वरक्षेत्रज्ञभेदबुद्धिः अशेषतः निवर्तते । अतः ज्ञाननिष्ठालक्षणया भक्त्या माम् अभिजानातीति वचनं न विरुध्यते ।
இந்த ஞானநிஷ்ட்டையானது ஆர்த்தன் முதலிய மூன்று பக் திகளைக் காட்டிலும் மேலானது. இது நான்காவதாகிய பக்தி என்று கூறப்பட்டது. அந்த மேலான பக்தியினால் பகவானை உள்ளபடி அறிந்துகொள்கிறான். அதன் பின்னரே ஈஸ்வரன் க்ஷேத்திரக்ஞன் என்றபேதபுத்தி அடியோடு நீங்குகிறது. ஆகையால் ஞான நிஷ்ட்டை ரூப பக்தியினால் என்னை அறிகிறான் என்று கூறிய வசனம் விருத்தமானது அல்ல.
अत्र च सर्वं निवृत्तिविधायि शास्त्रं वेदान्तेतिहासपुराणस्मृतिलक्षणं न्यायप्रसिद्धम् अर्थवत् भवति —
இவ்வாறு இருப்பதால் எல்லா நிவிர்த்தி மார்க்கத்தை விதிக் கின்ற வேதாந்தம், இதிஹாசங்கள் புராணங்கள் ஸ்மிருதிகள் எல்லாம் அர்த்தமுள்ளதாகினற்ன.
‘विदित्वा . . . व्युत्थायाथ भिक्षाचर्यं चरन्ति’ (बृ. उ. ३ । ५ । १) ‘तस्मान्न्यासमेषां तपसामतिरिक्तमाहुः’ (तै. ना. ७९) ‘न्यास एवात्यरेचयत्’ (तै. ना. ७८) इति । ‘संन्यासः कर्मणां न्यासः’ ( ? ) ‘वेदानिमं च लोकममुं च परित्यज्य’ (आ. ध. २ । ९ । १३) ‘त्यज धर्ममधर्मं च’ (मो. ध. ३२९ । ४०) इत्यादि । इह च प्रदर्शितानि वाक्यानि ।
விதித்வா வ்யுத்தாயாத பிக்ஷாசர்யம் சரந்தி = அறிந்து விரக்தி அடைந்தவனாகி பிக்ஷை எடுத்து சஞ்சரிக்கின்றார்கள்., தஸ்மான் ந் யாஸமேஷாம் தபஸாமதிரிக்தமாஹு: = இந்த ந்யாஸமானது தபஸ் ஸைக் காட்டிலும் மேலானது என்று கூறுவர். ந்யாஸ ஏவாத்யரேச்ச யத் = ஆகையால் சந்நியாசத்தையே மேற்கொள் என்பது சந்நியா சம் அதாவது கர்மாக்களை விடுதல் ஆகும். வேதாநிமம் ச லோகம மும் ச பரித்யஜ்ய = வேதங்களையும், இகலோகத்தையும் மேல் உல கத்தையும் தியாகம் செய்து, த்யஜ தர்மமதர்மம் ச = தர்மங்கள், அதர் மங்கள் (விதி, நிஷேதங்கள்) இரண்டையும் விட்டுவிடு, என்பது முதலிய வாக்கியங்களால் காண்பிக்கப்பட்டுள்ளது.
न च तेषां वाक्यानाम् आनर्थक्यं युक्तम् ; न च अर्थवादत्वम् , स्वप्रकरणस्थत्वात् ।
அந்த வாக்கியங்கள் அர்த்தமற்றதாகவோ, அர்த்தவாதமா கவோ (கௌணமாகவோ) கருதுதல் சரியல்ல. ஏன் எனில் தமது பிரகரணத்தில் உள்ளவைகளேயாகும்.
प्रत्यगात्माविक्रियस्वरूपनिष्ठत्वाच्च मोक्षस्य । न हि पूर्वसमुद्रं जिगमिषोः प्रातिलोम्येन प्रत्यक्समुद्रजिगमिषुणा समानमार्गत्वं सम्भवति ।
மோக்ஷம் என்பது கிரியை அற்றபிரத்யக் ஆத்ம ஸ்வரூ பத்தில் நிச்சய ரூபமாக நிலைத்திருத்தலே ஆகும். ஆகையால் கிழக்கு திசையில் உள்ள சமுத்திரத்திற்கு செல்ல இச்சிப்ப வனுடைய மார்க்கமும், மேற்கு திசையில் உள்ள சமுத்திரத்திற்கு செல்ல இச்சிப்பவனுடைய மார்க்கமும் ஒரே மார்க்கமாக (வழியாக) இருக்காது.
प्रत्यगात्मविषयप्रत्ययसन्तानकरणाभिनिवेशश्च ज्ञाननिष्ठा ; सा च प्रत्यक्समुद्रगमनवत् कर्मणा सहभावित्वेन विरुध्यते ।
பிரத்யக் ஆத்மவிஷயமான ப்ரதீதியின் (உணர்வின்) தொடர்ச்சியை மிகுந்த ஊக்கத்துடனும், ஆக்ரோஷத்துடன் மேற்கொள்ளுதலே ஞானநிஷ்ட்டையாகும். அந்த நிஷ்ட்டை யானது கிழக்குத் திசையில் உள்ள சமுத்திரத்திற்கு செல்லுவது போல் ஆகும். கர்ம மார்க்கமானது அதற்கு முற்றிலும் மாறான மேற்கு சமுத்திரத்திற்கு செல்லுவதுபோல் விருத்தமானதாகும்.
पर्वतसर्षपयोरिव अन्तरवान् विरोधः प्रमाणविदां निश्चितः । तस्मात् सर्वकर्मसंन्यासेनैव ज्ञाननिष्ठा कार्या इति सिद्धम् ॥ ५५ ॥
மலைக்கும், கடுகுக்கும் உள்ளது போல் வேறுபாடு உடையது என்று சாஸ்திர பிரமாணத்தை அறிந்தவர்களுடைய நிச்சயமாகும். ஆகையால் எல்லாக் கர்மங்களையும் விட்டு விட்டே ஞானநிஷ்ட் டையை கைகொள்ளவேண்டும் என்பது சித்தமாகிறது.
स्वकर्मणा भगवतः अभ्यर्चनभक्तियोगस्य सिद्धिप्राप्तिः फलं ज्ञाननिष्ठायोग्यता, यन्निमित्ता ज्ञाननिष्ठा मोक्षफलावसाना । सः भगवद्भक्तियोगः अधुना स्तूयते शास्त्रार्थोपासंहारप्रकरणे शास्त्रार्थनिश्चयदार्ढ्याय —
தன்னுடைய கர்மங்களினாலும் பகவானை பூஜை செய்தல் முதலிய பக்தியோகத்தினால் ஞானநிஷ்ட்டைக்கான யோக்யதை என்றபலன் அடையப்படுகிறது. ஞானநிஷ்ட்டையும் அதனால் முடிவான மோக்ஷமும் எதன் நிமித்தத்தால் ஏற்படுகிறதோ அந்த பகவத் பக்தி யோகத்தை இப்பொழுது சாஸ்திர அர்த்தத்தை முடிக் கின்ற இந்த பிரகரணத்தில் சாஸ்திரார்த்தத்தின் நிச்சயத்தை திட மாக்குவதற்காக ஸ்துதிக்கின்றார் (புகழுகின்றார்)
सर्वकर्माण्यपि सदा कुर्वाणो मद्व्यपाश्रयः ।
मत्प्रसादादवाप्नोति शाश्वतं पदमव्ययम् ॥ ५६ ॥
ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வணோ மத்வயபாச்ரய: ।
மத்ப்ரஸாதாதவாப்நோதி சாச்வதம் மதமவ்யயம் ॥ 56 ॥
सर्वकर्माण्यपि प्रतिषिद्धान्यपि सदा कुर्वाणः अनुतिष्ठन् मद्व्यपाश्रयः अहं वासुदेवः ईश्वरः व्यपाश्रयो व्यपाश्रयणं यस्य सः मद्व्यपाश्रयः मय्यर्पितसर्वभावः इत्यर्थः । सोऽपि मत्प्रसादात् मम ईश्वरस्य प्रसादात् अवाप्नोति शाश्वतं नित्यं वैष्णवं पदम् अव्ययम् ॥ ५६ ॥
எல்லாக்கர்மங்களையும் நிஷித்த கர்மங்களையும் எப்பொழு தும் செய்து கொண்டிருந்தாலும் வாசுதேவனாகிய என்னையே பூர் ணமாக ஆச்ரயித்துக் கொண்டிருக்கிறானோ அவன் என்னிடத்தி லேயே எல்லாவற்றையும் அர்ப்பணித்து சர்வாத்மபாவத்தை அடைந்தவனாவான் என்பது பொருள். அவனும் ஈஸ்வரனாகிய என்னுடைய கிருபையினால் (அனுக்ரஹத்தால்) நித்யமான, நாச மற்ற வைஷ்ணவ பதத்தை அடைவான்.
यस्मात् एवम् —
எதனால் இவ்வாறோ அதனால்
चेतसा सर्वकर्माणि मयि संन्यस्य मत्परः ।
बुद्धियोगमपाश्रित्य मच्चित्तः सततं भव ॥ ५७ ॥
சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர: ।
புத்தியோகமுபாச்ரித்ய மச்சித்த: ஸததம் பவ ॥ 57 ॥
चेतसा विवेकबुद्ध्या सर्वकर्माणि दृष्टादृष्टार्थानि मयि ईश्वरे संन्यस्य ‘यत् करोषि यदश्नासि’ (भ. गी. ९ । २७) इति उक्तन्यायेन, मत्परः अहं वासुदेवः परो यस्य तव सः त्वं मत्परः सन् मय्यर्पितसर्वात्मभावः बुद्धियोगं समाहितबुद्धित्वं बुद्धियोगः तं बुद्धियोगम् अपाश्रित्य अपाश्रयः अनन्यशरणत्वं मच्चित्तः मय्येव चित्तं यस्य तव सः त्वं मच्चित्तः सततं सर्वदा भव ॥ ५७ ॥
விவேகபுத்தியால் இகலோக பரலோக போகத்திற்கான எல் லாக்கர்மங்களையும் ஈஸ்வரனாகிய என்னில் சமர்ப்பணம் செய்து யத்கரோஷி யதச்னாசி என்று சொல்லப்பட்ட பாவனையால் வாசு தேவனாகிய என்பரமாகவே இருந்துகொண்டு என்னிடத்திலேயே நிலைநிறுத்திய புத்தியாகிய புத்தியோகத்தை தழுவி அனந்ய சரணாகதியை அடைந்து என்னிடத்திலேயே நிலைத்த சித்த முடையவனாகிய அந்த நீ எப்பொழுதும் என்னிடத்திலேயே சித்தமுடையவனாய் இருப்பாயாக.
मच्चित्तः सर्वदुर्गाणि मत्प्रसादात्तरिष्यसि ।
अथ चेत्त्वमहङ्कारान्न श्रोष्यसि विनङ्क्ष्यसि ॥ ५८ ॥
மச்சித்த: ஸர்வதுர்காணி மத்ப்ரஸாதாத்தரிஷ்யஸி ।
அத சேத்வமஹங்காரான்ன ச்ரோஷ்யஸி வினங்க்ஷ்யஸி ॥ 58 ॥
मच्चित्तः सर्वदुर्गाणि सर्वाणि दुस्तराणि संसारहेतुजातानि मत्प्रसादात् तरिष्यसि अतिक्रमिष्यसि । अथ चेत् यदि त्वं मदुक्तम् अहङ्कारात् ‘पण्डितः अहम्’ इति न श्रोष्यसि न ग्रहीष्यसि, ततः त्वं विनङ्क्ष्यसि विनाशं गमिष्यसि ॥ ५८ ॥
என்னிடத்திலேயே நிலைத்த சித்தமுள்ள நீ என்னுடைய அனுக்கிரஹத்தால் சம்சாரத்தில் உண்டாகும் எல்லா கஷ்ட நஷ்ட்டங்களையும் தாண்டிவிடுவாய். ஆனால் என்னால் உனக்கு செய்யப்பட்ட உபதேசத்தை அஹங்காரத்தால் நான் பண்டிதன் என்று நினைத்துக் கொண்டு நான் கேட்கமாட்டேன். நான் கிரஹிக் கமாட்டேன் என்றால் அதனால் நீ நாசத்தை அடைவாய்.
इदं च त्वया न मन्तव्यम् ‘स्वतन्त्रः अहम् , किमर्थं परोक्तं करिष्यामि ? ’ इति —
நான் ஸ்வதந்திரமானவன் எதன் பொருட்டு மற்றவர் கூறுவதை செய்யவேண்டும் என்று கருதக்கூடாது என்பதால்-
यद्यहङ्कारमाश्रित्य न योत्स्य इति मन्यसे ।
मिथ्यैष व्यवसायस्ते प्रकृतिस्त्वां नियोक्ष्यति ॥ ५९ ॥
யதஹங்காரமாச்ரித்ய ந யோத்ஸ்வ இதி மன்யஸே ।
மித்யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ருதிஸ்த்வாம் நியோஷ் யஸி ॥ 59 ॥
यदि चेत् त्वम् अहङ्कारम् आश्रित्य न योत्स्ये इति न युद्धं करिष्यामि इति मन्यसे चिन्तयसि निश्चयं करोषि, मिथ्या एषः व्यवसायः निश्चयः ते तव ; यस्मात् प्रकृतिः क्षत्रियस्वभावः त्वां नियोक्ष्यति ॥ ५९ ॥
எதனால் நீ இந்த அஹங்காரத்தை அடைந்து நான் யுத்தம் செய்யமாட்டேன் என்று நினைத்து நிச்சயம் செய்தாயாகில் அது மித்தையே. ஏன் எனில் உன்னுடைய இயற்கையான க்ஷத்திரிய ஸ்வபாவம் உன்னை அதில் ஈடுபடுத்திவிடும்.
यस्माच्च —
ஏன் எனில்-
स्वभावजेन कौन्तेय निबद्धः स्वेन कर्मणा ।
कर्तुं नेच्छसि यन्मोहात्करिष्यस्यवशोऽपि तत् ॥ ६० ॥
ஸ்வபாவஜேன கௌந்தேய நிபத்த: ஸ்வேந கர்மணா ।
கர்தும் நேச்சஸி யன்மோஹாத்கரிஷ்யஸ்யவசோஅபிதத் ॥ 60 ॥
स्वभावजेन शौर्यादिना यथोक्तेन कौन्तेय निबद्धः निश्चयेन बद्धः स्वेन आत्मीयेन कर्मणा कर्तुं न इच्छसि यत् कर्म, मोहात् अविवेकतः करिष्यसि अवशोऽपि परवश एव तत् कर्म ॥ ६० ॥
ஹே கௌந்தேய! ஸ்வபாவத்தால் உண்டான முற்கூறிய சூரத் தன்மை முதலியவைகளால் பந்தப்பட்டவனாய் உன்னுடைய ஸ்வதர்மத்தை நீசெய்ய விரும்பவில்லை என்றால் அது அவிவேகத்தின் வசப்பட்டு செய்வாய். அது உன் வசம் அல்ல. அந்த கர்மாபரவசமேயாகும்.
यस्मात् —
ஏனெனில்
ईश्वरः सर्वभूतानां हृद्देशेऽर्जुन तिष्ठति ।
भ्रामयन्सर्वभूतानि यन्त्रारूढानि मायया ॥ ६१ ॥
ஈச்வர: ஸர்வபூதானாம் ஹ்ருத்தேசேஅர்ஜுன திஷ்டதி ।
ப்ராமயந்ஸர்வபூதானி யந்த்ராரூடானி மாய்யா ॥ 61 ॥
ईश्वरः ईशनशीलः नारायणः सर्वभूतानां सर्वप्राणिनां हृद्देशे हृदयदेशे अर्जुन शुक्लान्तरात्मस्वभावः विशुद्धान्तःकरणः — ‘अहश्च कृष्णमहरर्जुनं च’ (ऋ. मं. ६ । १ । ९ । १) इति दर्शनात् — तिष्ठति स्थितिं लभते ।
ஹே அர்ஜுன! எல்லோரையும் ஆளும் திறமை உள்ள நாராயணன் எல்லோருடைய இருதய பிரதேசத்தில் அதாவது சுத்தாந்தக் கரணத்தில் விளங்குகிறார். இங்கு அர்ஜுனன் என்று கூறியது அர்ஜுன என்றால் வெள்ளை நிறமாகும். இங்கு சுத்தாந்த கரணத்தை குறிப்பிடுவதாக ஆகிறது. அஹச்ச க்ருஷ்ணமஹரர் ஜுனம் ச என்பதிலிருந்து அறிய முடிகிறது.
तेषु सः कथं तिष्ठतीति, आह —
அவர் (ஈஸ்வரன்) எவ்வாறு இருக்கிறார் என்று கூறுகிறார்-
भ्रामयन् भ्रमणं कारयन् सर्वभूतानि यन्त्रारूढानि यन्त्राणि आरूढानि अधिष्ठितानि इव — इति इवशब्दः अत्र द्रष्टव्यः — यथा दारुकृतपुरुषादीनि यन्त्रारूढानि । मायया च्छद्मना भ्रामयन् तिष्ठति इति सम्बन्धः ॥ ६१ ॥
எல்லாப் பிராணிகளையும் எந்திரத்தில் ஏற்றினவைபோல் ஆட்டுவிப்பது போல் ஆட்டுவிக்கின்றார். எவ்வாறு மரத்தால் செய்யப்பட்ட மனிதர்கள் முதலியவைகளை யந்திரத்தினால் ஏற் றப்பட்டு மாயையால் ஆட்டுவிப்பது போல் இருக்கிறதோ அவ் வாறு என்று சம்பந்தப்படுத்தவேண்டும்.
तमेव शरणं गच्छ सर्वभावेन भारत ।
तत्प्रसादात्परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् ॥ ६२ ॥
தமேவ சரணம் கச்ச ஸர்வபாவேன் பாரத ।
தத்ப்ரஸாதாத்பராம் சாந்திம் ஸ்தானம் ப்ராப்ஸயஸி சாச்வதம் ॥ 62 ॥
तमेव ईश्वरं शरणम् आश्रयं संसारार्तिहरणार्थं गच्छ आश्रय सर्वभावेन सर्वात्मना हे भारत । ततः तत्प्रसादात् ईश्वरानुग्रहात् परां प्रकृष्टां शान्तिम् उपरतिं स्थानं च मम विष्णोः परमं पदं प्राप्स्यसि शाश्वतं नित्यम् ॥ ६२ ॥
சம்சாரமாகிய கஷ்ட்டத்தை நீக்க அந்த ஈஸ்வரனைச் சரணம் அடைவாய். ஹே பாரத! சர்வாத்ம பாவனையினால் ஆச்ரயத்தை அடைந்து அதனால் ஈஸ்வர அனுக்ரஹத்தால் விஷ்ணுவாகிய என்னுடைய மேலான ஸ்தானத்தை அதாவது சாந்தி என்கின்ற உபரதியை எப்பொழுதும் அடைவாய்.
इति ते ज्ञानमाख्यातं गुह्याद्गुह्यतरं मया ।
विमृश्यैतदशेषेण यथेच्छसि तथा कुरु ॥ ६३ ॥
இதி தே ஞானமாக்யாதம் குஹ்யாத்குஹ்யதரம் மயா ।
விம்ருச்யைததசேஷேண யதேச்சஸி ததா குரு ॥ 63 ॥
इति एतत् ते तुभ्यं ज्ञानम् आख्यातं कथितं गुह्यात् गोप्यात् गुह्यतरम् अतिशयेन गुह्यं रहस्यम् इत्यर्थः, मया सर्वज्ञेन ईश्वरेण । विमृश्य विमर्शनम् आलोचनं कृत्वा एतत् यथोक्तं शास्त्रम् अशेषेण समस्तं यथोक्तं च अर्थजातं यथा इच्छसि तथा कुरु ॥ ६३ ॥
ஈஸ்வரனாகிய என்னால் ரஹஸ்யத்திலும் ரகஸ்யமான மிகவும் காப்பாற்றப்பட வேண்டிய மிகுந்த ரகஸ்யமான ஞானம் உன் பொருட்டு உபதேசிக்கப்பட்டது. சர்வக்ஞனாகிய ஈஸ்வரானாகிய என்னால் கூறப்பட்ட சாஸ்திரத்தின் அர்த்தத்தை பூர்ணமாக விசாரம் செய்து நன்றாக ஆலோசித்து நீ எவ்வாறு விரும்புகிறாயோ அவ்வாறு செய்.
भूयोऽपि मया उच्यमानं शृणु —
மறுபடியும் என்னால் கூறப்படுவதைக் கேள்.
सर्वगुह्यतमं भूयः शृणु मे परमं वचः ।
इष्टोऽसि मे दृढमिति ततो वक्ष्यामि ते हितम् ॥ ६४ ॥
ஸர்வகுஹ்யதமம் பூய: ச்ருணு மே பரமம் வச: ।
இஷ்டோஅஸி மே த்ருடமிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம் ॥ 64 ॥
सर्वगुह्यतमं सर्वेभ्यः गुह्येभ्यः अत्यन्तगुह्यतमम् अत्यन्तरहस्यम् , उक्तमपि असकृत् भूयः पुनः शृणु मे मम परमं प्रकृष्टं वचः वाक्यम् ।
எல்லா ரஹஸ்யங்களிலும் மிகவும் ரஹஸ்யமானது உனக்கு கூறி இருந்தாலும் மறுபடியும் கூறப்போகும் எனது மேலான வச னத்தைக் கேள்.
न भयात् नापि अर्थकारणाद्वा वक्ष्यामि ; किं तर्हि ? इष्टः प्रियः असि मे मम दृढम् अव्यभिचारेण इति कृत्वा ततः तेन कारणेन वक्ष्यामि कथयिष्यामि ते तव हितं परमं ज्ञानप्राप्तिसाधनम् , तद्धि सर्वहितानां हिततमम् ॥ ६४ ॥
நான் பயத்தினாலோ அல்லது பொருளுக்கு ஆசைப்பட்டோ சொல்லவில்லை ஆனால் நீ எனக்கு திடமான அதாவது மாறு பட்ட மிகவும் பிரியனாய் இருக்கிறாய். ஆகையால் உனக்கு ஹித மான ஞானப்பிராப்தி சாதனத்தைக் கூறுகிறேன். அதுவே எல்லா ஹிதத்திற்குள் மிகவும் ஹிதமானது. (நன்மை தருபவைகளுள் மிகவும் நன்மை தரக்கூடியது) ஆகும்.
किं तत् इति, आह —
அது எது என்று கூறுகிறார்
मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु ।
मामेवैष्यसि सत्यं ते प्रतिजाने प्रियोऽसि मे ॥ ६५ ॥
மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு ।
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோஅஸி மே ॥ 65 ॥
मन्मनाः भव मच्चित्तः भव । मद्भक्तः भव मद्भजनो भव । मद्याजी मद्यजनशीलो भव । मां नमस्कुरु नमस्कारम् अपि ममैव कुरु ।
என்னையே சிந்திப்பவனாக ஆகு. என்னுடைய பக்தனாக வும், என்னையே பஜிப்பவனாகவும் ஆகு. என்னையே பஜனை செய். என்னையே நமஸ்காரம் செய்.
तत्र एवं वर्तमानः वासुदेवे एव समर्पितसाध्यसाधनप्रयोजनः मामेव एष्यसि आगमिष्यसि । सत्यं ते तव प्रतिजाने, सत्यां प्रतिज्ञां करोमि एतस्मिन् वस्तुनि इत्यर्थः ; यतः प्रियः असि मे ।
இவ்வாறு இருந்துகொண்டு வாசுதேவனாகிய என்னிடத்தில் எல்லா சாதன சாத்தியங்களின் பிரயோஜனங்களை அர்ப்பித்ததன் பிரயோஜனமாகிய என்னையே அடைவாய். இந்த விஷயத்தில் உனக்கு சத்தியம் செய்கிறேன். ஏனெனில் எனக்கு நீ பிரியமானவ னாய் இருக்கிறாய்.
एवं भगवतः सत्यप्रतिज्ञत्वं बुद्ध्वा भगवद्भक्तेः अवश्यंभावि मोक्षफलम् अवधार्य भगवच्छरणैकपरायणः भवेत् इति वाक्यार्थः ॥ ६५ ॥
இவ்வாறு பகவானுடைய சத்ய பிரதிக்ஞையை அறிந்து பக வானை பக்தி செய்வதினால் அவசியம் மோக்ஷபலன் கிடைக்கும் என்று அறிந்து பகவானை சரணடைதலிலேயே ஈடுபாடு ஏற்பட வேண்டும் என்பது வாக்கியார்த்தமாகும்.
कर्मयोगनिष्ठायाः परमरहस्यम् ईश्वरशरणताम् उपसंहृत्य, अथ इदानीं कर्मयोगनिष्ठाफलं सम्यग्दर्शनं सर्ववेदान्तसारविहितं वक्तव्यमिति आह —
கர்மயோக நிஷ்ட்டையின் பரமரஹஸ்யமான ஈஸ்வர சரணா கதியை முடித்தபின் இப்பொழுது கர்மயோகநிஷ்டையின் பல ரூபமாகிய எல்லா வேதாந்தங்களிலும் உணர்த்தப்பட்ட சம்யக் தர் சனத்தை (யதார்த்த ஞானத்தை) விளக்கவேண்டும் என்பதற்காக பகவான் கூறுகிறார்-
सर्वधर्मान्परित्यज्य मामेकं शरणं व्रज ।
अहं त्वा सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः ॥ ६६ ॥
ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ ।
அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: ॥ 66 ॥
सर्वधर्मान् सर्वे च ते धर्माश्च सर्वधर्माः तान् — धर्मशब्देन अत्र अधर्मोऽपि गृह्यते, नैष्कर्म्यस्य विवक्षितत्वात् , ‘नाविरतो दुश्चरितात्’ (क. उ. १ । २ । २४) ‘त्यज धर्ममधर्मं च’ (मो. ध. ३२९ । ४०) इत्यादिश्रुतिस्मृतिभ्यः ।
எல்லா தர்மங்களையும் என்கின்றபொழுது அதர்மத்தையும் கொள்ளவேண்டும். ஏன் எனில் நைஷ்கர்ம்யம் = கர்மமற்ற தன்மை, விளக்கப்பட்டுள்ளதால் (நாவிரதோ துச்சரிதாத் = எவன் கெட்ட நடத்தைகளிலிருந்து விரக்தி அடையவில்லையோ, த்யஜ தர்மமதர்மம் ச = தர்மத்தையும் அதர்மத்தையும் விட்டுவிடு என்று சுருதி ஸ்மிருதிகளிலும் கூறப்பட்டுள்ளது.
सर्वधर्मान् परित्यज्य संन्यस्य सर्वकर्माणि इत्येतत् । माम् एकं सर्वात्मानं समं सर्वभूतस्थितम् ईश्वरम् अच्युतं गर्भजन्मजरामरणवर्जितम् ‘अहमेव’ इत्येवं शरणं व्रज, न मत्तः अन्यत् अस्ति इति अवधारय इत्यर्थः ।
எல்லா தர்மங்களையும் தியாகம் செய் என்றால் எல்லா கர்மங் களையும் தியாகம் செய் என்று அர்த்தம் செய்யவேண்டும். எல்லா வற்றிற்கும் ஆத்மாவாயும், சமமாயும், எல்லா பூதங்களிடத்தும் நிலை பெற்றிருக்கும் ஈஸ்வரனாயும், நழுவுதல் அற்றவனாயும், கர்ப்பத்தில் இருத்தல், பிறப்பு, மூப்பு, மரணம் ஆகியவைகள் அற்றநானே என்று இவ்வாறு என் ஒருவனையே சரணம் அடை. என்னைத் தவிறவேறு ஒன்றுமில்லை என்று அறிந்துகொள் என்று பொருள்.
अहं त्वा त्वाम् एवं निश्चितबुद्धिं सर्वपापेभ्यः सर्वधर्माधर्मबन्धनरूपेभ्यः मोक्षयिष्यामि स्वात्मभावप्रकाशीकरणेन । उक्तं च ‘नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता’ (भ. गी. १० । ११) इति । अतः मा शुचः शोकं मा कार्षीः इत्यर्थः ॥ ६६ ॥
நான் இவ்வாறு நிச்சய புத்தியுள்ள உன்னை எல்லா தர்மாதர் மங்களினால் பந்த ரூபமான எல்லா பாபங்களில் இருந்தும் ஸ்வாத்ம பாவத்தை பிரகாசிக்கச் செய்து விடுவிப்பேன். நாசயாம் யாத்மபாவஸ்தோ ஞானதீபேன பாஸ்வதா = நான் இதயத்தில் இருக்கின்றபிரகாச மயமான ஞான தீபத்தினால் நாசம் செய்வேன், என்று கூறப்பட்டது ஆகையால் சோகம் (வருத்தம்) கொள்ளாதே என்பது பொருள்.
“शास्त्रस्य उपसंहारप्रकरणम्”
இந்த BG_C18_V66_B04_TA முடிக்கின்றபிரகரணம்
अस्मिन्गीताशास्त्रे परमनिःश्रेयससाधनं निश्चितं किं ज्ञानम् , कर्म वा, आहोस्वित् उभयम् ? इति ।
இந்த கீதா சாஸ்திரத்தில் நிச்ரேயஸ்ஸிற்கான அதாவது மோக்ஷத்திற்கான சாதனம் ஞானமா? கர்மமா? அல்லது இரண்டுமா?
कुतः संशयः ?
எதற்காக ௪ந்தேகம் ?
‘यज्ज्ञात्वामृतमश्नुते’ (भ. गी. १३ । १२) ‘ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम्’ (भ. गी. १८ । ५५) इत्यादीनि वाक्यानि केवलाज्ज्ञानात् निःश्रेयसप्राप्तिं दर्शयन्ति । ‘कर्मण्येवाधिकारस्ते’ (भ. गी. २ । ४७) ‘कुरु कर्मैव’ (भ. गी. ४ । १५) इत्येवमादीनि कर्मणामवश्यकर्तव्यतां दर्शयन्ति ।
யஜ்ஞாத்வா அம்ருதமச்னுதே = எதை அறிந்து அமிருதத்தை அடைகிறான், ததோ மாம் தத்வதோ ஞாத்வா விசதே ததனந்தரம் = பிறகு என்னை உள்ளவாறு அறிந்து அதன்பின் அடைகிறான், என்பது முதலிய வாக்கியங்களால் ஞானத்தினால் மட்டுமே மோக்ஷத்தை அடைய முடியும் என்று காண்பிக்கிறார். அவ்வாறே கர்மண்யேவாதிகாரஸ்தே, குரு கர்மைவ, முதலிய வாக்கியங்க ளால் கர்மங்களை அவசியம் கடைபிடிக்கவேண்டியதை உபதே சிக்கிறார்.
एवं ज्ञानकर्मणोः कर्तव्यत्वोपदेशात् समुच्चितयोरपि निःश्रेयसहेतुत्वं स्यात् इति भवेत् संशयः।
இவ்வாறு ஞானம் கர்மம் இவைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தைப் போதிப்பதால் இரண்டையும் சேர்த்தே (சமுச்சயம் செய்து) கடைபிடிப்பதே மோக்ஷத்திற்கு சாதனம் ஆகலாம் என்ற சந்தேகம் உண்டாகலாம்.
कस्यचित् । किं पुनरत्र मीमांसाफलम् ।
இங்கு இந்த விசாரத்தின் (மீமாம்சையின்) பலன்தான் என்ன?
ननु एतदेव — एषामन्यतमस्य परमनिःश्रेयससाधनत्वावधारणम् ; अतः विस्तीर्णतरं मीमांस्यम् एतत् ॥
அதனால் இவைகள் மூன்றினுள் ஏதாவது ஒன்றே மோக்ஷத் திற்கு சாதனமாகும். ஆகையால் இதற்கு விஸ்தாரமாக விசாரம் செய்ய வேண்டியது ஆகும்.
“सिद्धान्तप्रतिपादनम्”
(சித்தாந்தத்தின் BG_C18_V66_B11_TA)
आत्मज्ञानस्य तु केवलस्य निःश्रेयसहेतुत्वम् , भेदप्रत्ययनिवर्तकत्वेन कैवल्यफलावसायित्वात् ।
ஆத்மக்ஞானமே மோக்ஷத்திற்கு பரம சாதனமாகும். ஏன்எனில் பேதக்ஞானத்தை நிவர்த்தி செய்து கைவல்ய பதத்தில் முடிவதாய் இருப்பதால்.
क्रियाकारकफलभेदबुद्धिः अविद्यया आत्मनि नित्यप्रवृत्ता — ‘मम कर्म, अहं कर्तामुष्मै फलायेदं कर्म करिष्यामि’ इति इयम् अविद्या अनादिकालप्रवृत्ता ।
கிரியா காரக பலபேத புத்தி அவித்யையினால் ஆத்மாவிடத் தில் எப்பொழுதும் பிரவிர்த்திக்கின்றது. ஏனெனில் இது என்னு டைய கர்மா அதற்கு நான் கர்த்தாவாக இருக்கிறேன். நான் இந்த பலனுக்காக கர்மம் செய்யப்போகிறேன் என்று அவித்யையினால் அநாதிகாலமாக பிரவிருத்திக்கிறது.
अस्या अविद्यायाः निवर्तकम् ‘अयमहमस्मि केवलोऽकर्ता अक्रियोऽफलः ; न मत्तोऽन्योऽस्ति कश्चित्’ इत्येवंरूपम् आत्मविषयं ज्ञानम् उत्पद्यमानम् , कर्मप्रवृत्तिहेतुभूतायाः भेदबुद्धेः निवर्तकत्वात् ।
நான் ஒன்றே, அகர்த்தா கிரியை அற்றவன், பலன் அற்றவன், என்னைக் காட்டிலும் வேறு ஒன்றுமில்லை என்ற ஆத்மவிஷய மான ஞானம் இந்த அவித்யையை நாசம் செய்யக் கூடியது. ஏனெ னில் இவ்வாறாக உண்டாகும் ஆத்மஞானம் கர்ம பிரவிர்த்திக்கு காரணமான பேதபுத்தியை நீக்குவதால் ஆகும்.
तु - शब्दः पक्षव्यावृत्त्यर्थः — न केवलेभ्यः कर्मभ्यः, न च ज्ञानकर्मभ्यां समुच्चिताभ्यां निःश्रेयसप्राप्तिः इति पक्षद्वयं निवर्तयति ।
து என்ற சொல்லானது கர்மத்தினாலோ அல்லது ஞானகர்ம சமுச்சயத்தினாலோ மோக்ஷப் பிராப்தி அடைய முடியாது என்ப தால் இந்த இரண்டு பக்ஷங்களும் தள்ளப்பட்டதாகிறது.
अकार्यत्वाच्च निःश्रेयसस्य कर्मसाधनत्वानुपपत्तिः । न हि नित्यं वस्तु कर्मणा ज्ञानेन वा क्रियते ।
மோக்ஷமானது காரியம் அல்ல. ஆகையால் கர்மம் அதற்கு சாதனமாகாது. மேலும் எந்த ஒரு நித்ய வஸ்துவும் (ஸ்வத: ஸித்தவஸ்துவும்) கர்மத்தினாலோ, ஞானத்தினாலோ உண்டாக்க முடியாது.
केवलं ज्ञानमपि अनर्थकं तर्हि ?
அவ்வாறானால் கேவலம் ஞானமும் அர்த்தமற்றதாகி விடுமே?
न, अविद्यानिवर्तकत्वे सति दृष्टकैवल्यफलावसानत्वात् । अविद्यातमोनिवर्तकस्य ज्ञानस्य दृष्टं कैवल्यफलावसानत्वम् , रज्ज्वादिविषये सर्पाद्यज्ञानतमोनिवर्तकप्रदीपप्रकाशफलवत् । विनिवृत्तसर्पादिविकल्परज्जुकैवल्यावसानं हि प्रकाशफलम् ; तथा ज्ञानम् ।
அவ்வாறு அல்ல ஏனெனில் அவித்யை ஞானத்தினால் நிவர்த்தி ஆவதினாலேயே மோக்ஷத்தின் அடைவு ஆகிய முடி வான பலன் காணப்படுகிறது. அவித்யை ஆகிய தமஸை நிவர்த்தி செய்கின்றஞானத்தினுடைய கைவல்ய பலத்தின் அடைவானது பிரத்யக்ஷமாய் இருக்கிறது. எவ்வாறு கயிறு முதலிய விஷயத்தில் சர்ப்பம் முதலிய அக்ஞானமாகிய தமசை போக்கடிக்கக் கூடிய தீப பிரகாசத்தின் பலனாகிய சர்ப்பத்தின் (ஞானத்தை) விகல் பத்தை நீக்குதலே ரஜ்ஜுவை (கயிற்றை) மாத்திரம் முடிவாகக் கொண்டதோ அவ்வாறே ஞானமாகும்.
दृष्टार्थानां च च्छिदिक्रियाग्निमन्थनादीनां व्यापृतकर्त्रादिकारकाणां द्वैधीभावाग्निदर्शनादिफलात् अन्यफले कर्मान्तरे वा व्यापारानुपपत्तिः यथा, तथा दृष्टार्थायां ज्ञाननिष्ठाक्रियायां व्यापृतस्य ज्ञात्रादिकारकस्य आत्मकैवल्यफलात् कर्मान्तरे प्रवृत्तिः अनुपपन्ना इति न ज्ञाननिष्ठा कर्मसहिता उपपद्यते ।
வெட்டுதல், நெருப்பை உண்டாக்குவதற்காக கடைதல் முத லிய செய்கைகளில் கர்த்தா முதலிய காரகங்கள் செயல்படும்பொ ழுது இரண்டாக்குதல் நெருப்பை அடைதல் முதலிய பலன்களைக் காட்டிலும் வேறு பலன்களுடைய வேறு கர்மங்களில் எடுபடமுடி யாதது போல் பயனுடன் கூடிய ஞானநிஷ்ட்டையாகிய ஞாதா முத லிய காரகங்களில் ஆத்ம கைவல்யபலத்தைக் காட்டிலும் வேறு பலனுடைய வேறு கர்மங்களில் பிரவர்த்திக்கமாட்டான். ஆகை யால் ஞான நிஷ்ட்டையானது கர்மத்துடன் கூடியது ஆகாது.
भुज्यग्निहोत्रादिक्रियावत्स्यात् इति चेत् , न ; कैवल्यफले ज्ञाने क्रियाफलार्थित्वानुपपत्तेः । कैवल्यफले हि ज्ञाने प्राप्ते, सर्वतःसम्प्लुतोदकफले कूपतटाकादिक्रियाफलार्थित्वाभाववत् , फलान्तरे तत्साधनभूतायां वा क्रियायाम् अर्थित्वानुपपत्तिः ।
சாப்பிடுதல், அக்னிஹோத்ரம் முதலிய கிரியைகளுக்கு சமா னமாகலாம் என்றால், கூறுவது சரியல்ல. ஏனெனில் கைவல்ய பலத்தை உடைய ஞானத்தில் கர்ம பலத்தில் இச்சை ஏற்படாது. எவ்வாறு பூர்ணமாக நீர் பெருகுகின்றபெரும் குளம் இருக்கையில் கிணறு, சிறு குளம் முதலியவைகளை ஏற்படுத்துவதற்கு விரும்பு வதில்லையோ அவ்வாறே வேறு பலனை அடைவதற்கான சாதனமாகிய வேறு கர்மங்களில் விருப்பமானது அமையாது.
न हि राज्यप्राप्तिफले कर्मणि व्यापृतस्य क्षेत्रमात्रप्राप्तिफले व्यापारः उपपद्यते, तद्विषयं वा अर्थित्वम् ।
ஒரே ராஜ்யத்தையே அடைய விருப்பமுற்று அதற்கான கர் மத்தில் ஈடுபட்டவன் சிறிய வயலை அடைவதற்காக முயற்சியும், விருப்பமும் கொள்ளமாட்டானோ அவ்வாறு ஆகும்.
तस्मात् न कर्मणोऽस्ति निःश्रेयससाधनत्वम् । न च ज्ञानकर्मणोः समुच्चितयोः । नापि ज्ञानस्य कैवल्यफलस्य कर्मसाहाय्यापेक्षा, अविद्यानिवर्तकत्वेन विरोधात् ।
ஆகையால் ஒருநாளுகமானது மோக்ஷத்திற்கு சாதன மாகாது. அவ்வாறேஞான கர்ம சமுச்சயமும் ஆகாது. மோக்ஷத் தைப் பலமாக உடைய ஞானத்திற்கு கர்மத்தினுடைய சஹாயத்தை யும் (உதவியையும்) அபேக்ஷிக்கவில்லை. ஏனெனில் ஞானம் அவித்யையை நாசம் செய்கிறது. ஆகையால் ஞானம் கர்மத்திற்கு விரோதியாகும்.
न हि तमः तमसः निवर्तकम् । अतः केवलमेव ज्ञानं निःश्रेयससाधनम् इति ।
இருளை இருள் போக்காது அல்லவா. ஆகையால் ஞானமாத் திரமே மோக்ஷத்திற்கு சாதனமாகும்.
न ; नित्याकरणे प्रत्यवायप्राप्तेः, कैवल्यस्य च नित्यत्वात् । यत् तावत् केवलाज्ज्ञानात् कैवल्यप्राप्तिः इत्येतत् , तत् असत् ; यतः नित्यानां कर्मणां श्रुत्युक्तानाम् अकरणे प्रत्यवायः नरकादिप्राप्तिलक्षणः स्यात् ।
இவ்வாறு கூறுவது சரியல்ல. நித்யகர்மாவை செய்யாததினால் தீங்கு விளையும். மோக்ஷமோ நித்யமானது. இவ்வாறு இருப்பதி னால் ஞானத்தினால் மாத்திரம் மோக்ஷத்தின் அடைவு உண்டா கும் எனில், அது பொருந்தாது. ஏனெனில் சுருதியில் விதிக்கப் பட்ட நித்யகர்மங்களை அனுஷ்ட்டிக்காவிடில் நரகம் முதலிய தீமைகள் உண்டாகும்.
ननु एवं तर्हि कर्मभ्यो मोक्षो नास्ति इति अनिर्मोक्ष एव । नैष दोषः ; नित्यत्वात् मोक्षस्य । नित्यानां कर्मणाम् अनुष्ठानात् प्रत्यवायस्य अप्राप्तिः, प्रतिषिद्धस्य च अकरणात् अनिष्टशरीरानुपपत्तिः, काम्यानां च वर्जनात् इष्टशरीरानुपपत्तिः, वर्तमानशरीरारम्भकस्य च कर्मणः फलोपभोगक्षये पतिते अस्मिन् शरीरे देहान्तरोत्पत्तौ च कारणाभावात् आत्मनः रागादीनां च अकरणे स्वरूपावस्थानमेव कैवल्यमिति अयत्नसिद्धं कैवल्यम् इति ।
இவ்வாறானால் கர்மங்களினால் மோக்ஷம் கிடையாது என்ப தால் மோக்ஷமே இல்லை என்றாகிவிடும். ஆனால் மோக்ஷம் நித்தியமாய் இருப்பதால் இந்த தோஷம் ஏற்படாது. நித்ய கர்மங் களை அனுஷ்ட்டானம் செய்வதால் தீமை உண்டாகாது. நிஷித்த (தடை செய்யப்பட்ட) கர்மங்களை அனுஷ்ட்டிக்காததினால் விரும்பத்தகாத சரீரத்தின் அடைவு உண்டாவதில்லை. காமிய கர் மங்களை அனுஷ்ட்டிக்காததால் விருப்பமுள்ள சரீரத்தின் அடைவும் ஏற்படாது. அவ்வாறே இப்பொழுது உள்ள சரீரம் எடுத்ததற்கு காரணமான பிராரப்த கர்மமும் அதன் பலன் அனுபவித்து தீர்ந்த பின் இந்த சரீரம் வீழ்ந்த பின் வேறு தேஹத்தை எடுப்பதற்கான காரணம் இல்லாமையால் சரீரத்தில் உள்ள பற்றினால் ஏற்படும் நரகம் முதலியவைகள் நீங்கி தன் சுவரூபத்திலேயே நிலைத்தல் தான் மோக்ஷம் என்பதினால் பிரயத்தனம் இல்லாமலேயே மோக்ஷம் அடைய முடியும் எனில்.
अतिक्रान्तानेकजन्मान्तरकृतस्य स्वर्गनरकादिप्राप्तिफलस्य अनारब्धकार्यस्य उपभोगानुपपत्तेः क्षयाभावः इति चेत् ,
கடந்த பல ஜன்மங்களில் செய்த ஸ்வர்க்கம் நரகம் முதலிய வற்றை பலனாக உடையதும் இதுவரை பயனைக் கொடுக்கத் தலைப்படாத சஞ்சித கர்மங்களை அனுபவிக்காததால் அந்த கர்மங்கள் அழிந்து போகவில்லை என்றால்?
न ; नित्यकर्मानुष्ठानायासदुःखोपभोगस्य तत्फलोपभोगत्वोपपत्तेः । प्रायश्चित्तवद्वा पूर्वोपात्तदुरितक्षयार्थं नित्यं कर्म । आरब्धानां च कर्मणाम् उपभोगेनैव क्षीणत्वात् अपूर्वाणां च कर्मणाम् अनारम्भे अयत्नसिद्धं कैवल्यमिति ।
இவ்வாறு கூறுவது சரியல்ல. ஏனெனில் நித்யகர்மானுஷ்ட்டா னம் செய்யும்பொழுது உண்டாகும் பரிசிரமாகிய துக்கானுபவமா னது, அந்த (பாப) கர்மத்தின் பலனை அனுபவித்தாகிறது. அல்லது பிராயச்சித்த கர்மா போல் நித்ய கர்மாவும் முன்பு செய்த பாபத்தை நாசம் செய்வதாய் இருக்கிறது. பிராரப்த கர்மமானது அனுபவிப்ப தாலேயே நாசம் அடைகிறது. அபூர்வ கர்மங்கள் (புதிய கர்மங்கள்) ஆரம்பம் ஆகாததினால் பிரயத்தனம் இல்லாமலேயே மோக்ஷம் மோஹம் அடையக்கூடியதாகிறது.
न ; ‘तमेव विदित्वातिमृत्युमेति नान्यः पन्था विद्यतेऽयनाय’ (श्वे. उ. ३ । ८) इति विद्याया अन्यः पन्थाः मोक्षाय न विद्यते इति श्रुतेः, चर्मवदाकाशवेष्टनासम्भववत् अविदुषः मोक्षासम्भवश्रुतेः, ‘ज्ञानात्कैवल्यमाप्नोति’ ( ? ) इति च पुराणस्मृतेः ;
நீர் கூறும் சித்தாந்தம் சரியல்ல. ஏனெனில் தமேவ விதித் துவாதிம்ருத்யுமேதி நான்ய: பந்தா வித்யதே அயனாய = அதை அறிந்து மிருத்யுவைக் கடக்கிறான். இதைத் தவிற வேறு மார்க்கம் இல்லை என்று மோக்ஷத்தை அடைவதற்கு வித்யையைத் தவிற (ஞானத்தை தவிற) வேறு வழியில்லை என்று சுருதியினாலும் உரைக்கப்பட்டுள்ளது. அவ்வாறே ஆகாசத்தை சுருட்டுவது எவ்வாறு அசாத்தியமோ அவ்வாறு மோக்ஷம் என்பது அக்ஞானிக்கு அசாத்தியம் என்று சுருதி கூறுகிறது. ஞானத்தி னாலேயே மோக்ஷத்தை அடைகிறான் என்று புராணங்களிலும் ஸ்மிருதிகளிலும் கூறப்பட்டுள்ளது.
अनारब्धफलानां पुण्यानां कर्मणां क्षयानुपपत्तेश्च । यथा पूर्वोपात्तानां दुरितानाम् अनारब्धफलानां सम्भवः, तथा पुण्यानाम् अनारब्धफलानां स्यात्सम्भवः । तेषां च देहान्तरम् अकृत्वा क्षयानुपपत्तौ मोक्षानुपपत्तिः ।
பலனைக் கொடுக்கத் தலைபடாத புண்யகர்மங்கள் நாசம் அடையாது. எவ்வாறு முன்பு செய்த பாபகர்மங்கள் பலனைக் கொடுக்க தலைப்படவில்லையோ அவ்வாறே புண்ய கர்மங்க ளும் பலனைக் கொடுக்கத் தலைப்படாததாகிறது. அவர்களுக்கு வேறு தேஹம் எடுக்காமல் அவைகளை நாசமாக்க முடியாததால் மோக்ஷமானது கிடைக்காது.
धर्माधर्महेतूनां च रागद्वेषमोहानाम् अन्यत्र आत्मज्ञानात् उच्छेदानुपपत्तेः धर्माधर्मोच्छेदानुपपत्तिः ।
இதைத் தவிர புண்யம் பாபங்களுக்கு காரணங்களாகிய ராகம், துவேஷம் மோஹம் இவைகளை ஆத்மக்ஞானம் இல்லா மல் வேருடன் போக்க முடியாததால் புண்ய, பாபங்களையும் போக்கமுடியாது.
नित्यानां च कर्मणां पुण्यफलत्वश्रुतेः, ‘वर्णा आश्रमाश्च स्वकर्मनिष्ठाः’ (गौ. ध. सू. २ । २ । २९) इत्यादिस्मृतेश्च कर्मक्षयानुपपत्तिः ॥
மேலும் நித்ய கர்மாக்களுக்கு புண்யலோகத்தின் அடைவு ஸ்ருதிகளில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறே வர்ணா:ஆச்ரமாச்ச ஸ்வகர்மநிஷ்ட்டா: = என்று ஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளது.
ये तु आहुः — नित्यानि कर्माणि दुःखरूपत्वात् पूर्वकृतदुरितकर्मणां फलमेव, न तु तेषां स्वरूपव्यतिरेकेण अन्यत् फलम् अस्ति, अश्रुतत्वात् , जीवनादिनिमित्ते च विधानात् इति । न अप्रवृत्तानां कर्मणां फलदानासम्भवात् ; दुःखफलविशेषानुपपत्तिश्च स्यात् ।
நித்யகர்மங்கள் துக்கரூபமாய் இருப்பதால் முன்பு செய்த பாப கர்மங்களின் பலனே ஆகும். அதைத் தவிர வேறான பலன் உண்டு என்று சுருதியில் கேட்கப்படாததாலும் ஜீவித்திருப்பதற்கா கவே விதிக்கப்பட்டுள்ளது என்று எவர்கள் கூறுகிறார்களோ அந்த கொள்கை சரியானது அல்ல. ஏனெனில் கர்மபலத்தைத் தரக்கூடிய கர்மங்கள் செயல்பட துவங்கவில்லை. ஆகையால் பலன் ஏற்படாது. அவ்வாறே நித்யகர்மா அனுஷ்ட்டிப்பதில் ஏற்படும் சிரமமும் வேறு கர்மத்தின் பலனேயாகும்.
यदुक्तं पूर्वजन्मकृतदुरितानां कर्मणां फलं नित्यकर्मानुष्ठानायासदुःखं भुज्यत इति, तदसत् । न हि मरणकाले फलदानाय अनङ्कुरीभूतस्य कर्मणः फलम् अन्यकर्मारब्धे जन्मनि उपभुज्यते इति उपपत्तिः ।
முன் ஜன்மங்களில் செய்த பாபகர்மங்களின் பலனால் தான் நித்யகர்மானுஷ்ட்டானத்தால் ஏற்படும் சிரமமாகிய துக்கத்தை அனுபவிக்கின்றான் என்று நீ கூறினாயாகில் அது சரியல்ல. அவ்வாறே மரணகாலத்தில் பலனைக் கொடுக்கக்கூடிய கர்மத்தின் முனையே கிளம்பாத கர்மத்தினால் வேறு கர்மத்தினால் ஆரம்பிக் கப்படும் ஜன்மத்தில் அனுபவிப்பது என்பது பொருந்தாது.
अन्यथा स्वर्गफलोपभोगाय अग्निहोत्रादिकर्मारब्धे जन्मनि नरकफलोपभोगानुपपत्तिः न स्यात् ।
அவ்வாறெனில் ஸ்வர்க்க பல போகத்தின் பொருட்டு அக்னிஹோத்ராதி கர்மங்களால் ஆரம்பிக்கப்பட்ட ஜன்மத்திலேயே நரகத்தைத் தோற்றுவிக்கக்கூடிய கர்மபலனை அனுபவித்தல் பொருந்தாமை ஆகாது (பொருந்தும்)
तस्य दुरितस्य दुःखविशेषफलत्वानुपपत्तेश्च — अनेकेषु हि दुरितेषु सम्भवत्सु भिन्नदुःखसाधनफलेषु नित्यकर्मानुष्ठानायासदुःखमात्रफलेषु कल्प्यमानेषु द्वन्द्वरोगादिबाधनं निर्निमित्तं न हि शक्यते कल्पयितुम् , नित्यकर्मानुष्ठानायासदुःखमेव पूर्वोपात्तदुरितफलं न शिरसा पाषाणवहनादिदुःखमिति ।
மேலும் நித்திய கர்மாநுஷ்ட்டானத்தினால் ஏற்படும் சிரம மாகிய துக்கம் பாபங்களின் பல ரூப துக்கமாக ஆகாததால் கூறுவது பொருந்தாது. ஏனெனில் மேலும் அநேக துக்க ரூப பலன்களை மாத்திரமே உண்டாக்கும் அநேக விதமாகக் கல்பிக் கப்படுகின்ற துக்க பலனைக் கொடுக்கக்கூடிய சாதனங்களில் த்வந்துவங்கள், வியாதி முதலியவைகளுக்கு காரணமாக கூற முடியாது. அவ்வாறே நித்ய கர்மானுஷ்ட்டானத்தினால் ஏற்படும் ஆயாச துக்கம் முன் செய்த பாபகர்மங்களின் பலன் இல்லை யென்றால் தலையில் கல்லை சுமத்தல் அதன் பலனாகாதா?
अप्रकृतं च इदम् उच्यते — नित्यकर्मानुष्ठानायासदुःखं पूर्वकृतदुरितकर्मफलम् इति ।
அன்றியும் நித்யகர்மங்களை அநுஷ்டிப்பதிலேயுள்ள சிரமமும், துக்கமும் முன்செய்த பாப கர்மத்தின் பயன் என்பது பிரகரணத்தின் கருத்தல்லாததாக இது கூறப்படுகின்றது.
कथम् ?
எவ்வாறு?
अप्रसूतफलस्य हि पूर्वकृतदुरितस्य क्षयः न उपपद्यत इति प्रकृतम् । तत्र प्रसूतफलस्य कर्मणः फलं नित्यकर्मानुष्ठानायासदुःखम् आह भवान् , न अप्रसूतफलस्येति ।
முன் செய்த பாப கர்மத்தின் பலன் கொடுக்கத் தலைப்படாத பொழுது அந்த பலத்திற்கு நாசம் ஏற்படாது என்பது பிரகரணத் தின் கருத்து. அந்த இடத்தில் வெளிப்பட்ட கர்மத்தின் பலன் நித்ய கர்மானுஷ்ட்டானத்தினால் உண்டாகும் ஆயாச துக்கம் என்று பக வான் கூறினார். ஆனால் அது வெளிப்படாத பாப கர்மத்தின் பல னைக் கூறவில்லை.
अथ सर्वमेव पूर्वकृतं दुरितं प्रसूतफलमेव इति मन्यते भवान् , ततः नित्यकर्मानुष्ठानायासदुःखमेव फलम् इति विशेषणम् अयुक्तम् । नित्यकर्मविध्यानर्थक्यप्रसङ्गश्च, उपभोगेनैव प्रसूतफलस्य दुरितकर्मणः क्षयोपपत्तेः ।
ஆகையால் முன்பு செய்த எல்லா பாபகர்மங்கள், பலனை கொடுக்கத் தலைப்பட்டது என்று நீங்கள் கருதினால் நித்யகர்மா னுஷ்டானத்தினால் ஏற்படும் ஆயாச துக்கமே பலம் என்பது பொருந்தாது. அவ்வாறே அனுபவித்துத்தான் பலனைக் கொடுக் கத் தலைப்பட்ட பாபகர்மங்களின் வினை தீரும் என்று நித்யகர் மங்களை விதிக்கும் சாஸ்திரம் வீண் ஆகிவிடும்.
किञ्च, श्रुतस्य नित्यस्य कर्मणः दुःखं चेत् फलम् , नित्यकर्मानुष्ठानायासादेव तत् दृश्यते व्यायामादिवत् ; तत् अन्यस्य इति कल्पनानुपपत्तिः ।
மேலும் வேதத்தில் விதிக்கப்பட்ட நித்யகர்மத்தை அனுஷ்ட் டானம் செய்வதால் உண்டாகும் ஆயாச துக்கமே தேஹ பயிற்சி செய்யும் பொழுது உண்டாகும் சிரமம் போல் கர்மத்தின் பலன் என்றால் அதை வேறு கர்மத்தின் பலன் என்று கொள்ளக்கூடாது.
जीवनादिनिमित्ते च विधानात् , नित्यानां कर्मणां प्रायश्चित्तवत् पूर्वकृतदुरितफलत्वानुपपत्तिः । यस्मिन् पापकर्मणि निमित्ते यत् विहितं प्रायश्चित्तम् न तु तस्य पापस्य तत् फलम् । अथ तस्यैव पापस्य निमित्तस्य प्रायश्चित्तदुःखं फलम् , जीवनादिनिमित्तेऽपि नित्यकर्मानुष्ठानायासदुःखं जीवनादिनिमित्तस्यैव फलं प्रसज्येत, नित्यप्रायश्चित्तयोः नैमित्तिकत्वाविशेषात् ।
ஜீவித்தல் முதலியவற்றிற்காக விதிக்கப்பட்ட நித்யகர்மங்கள் பிராயச்சித்த கர்மங்களைப் போல் முன்பு செய்த பாபகர்மங்களின் பலனாக ஏற்றுக்கொள்ள முடியாது. எப்பொழுது பாப கர்மங்க ளுக்கு பிராயச்சித்த கர்மம் விதிக்கப்பட்டதோ அப்பொழுது அது பாபத்தின் பலனாகாது. ஆகையால் அந்த பாப கர்மத்தின் கார ணத்திற்குத்தான் பிராயச்சித்த கர்மத்தை அனுஷ்ட்டிப்பதினால் ஏற்படும் ஆயாச துக்கம் பலன் எனில் ஜீவித்தல் முதலியவற்றின் காரணத்திற்கும் நித்யகர்மானுஷ்ட்டானத்தால் ஏற்படும் ஆயாச துக்கம் பலனாகும். ஆகையால் நித்ய கர்மமும், பிராயச் சித்தகர்ம மும் ஒரே வகைதான்.
किञ्च अन्यत् — नित्यस्य काम्यस्य च अग्निहोत्रादेः अनुष्ठानायासदुःखस्य तुल्यत्वात् नित्यानुष्ठानायासदुःखमेव पूर्वकृतदुरितस्य फलम् , न तु काम्यानुष्ठानायासदुःखम् इति विशेषो नास्तीति तदपि पूर्वकृतदुरितफलं प्रसज्येत ।
மேலும் வேறு ஒரு தோஷம் உள்ளது. அது என்னவெனில் நித்யகர்மாவை அனுஷ்ட்டிப்பதால் உண்டாகும் துக்கமும், காமியகர்மங்களாகிய அக்னி ஹோத்திராதிகள் செய்யும்பொழுது ஏற்படும் சிரமமும் ஒன்றேயாகும். ஆதலால் நித்யகர்மாவினால் உண்டாகும் சிரமம் முன்பு செய்த பாப கர்மத்தின் பலன் என்றும், காமிய கர்ம அனுஷ்ட்டானத்தினால் ஏற்படும் சிரமமாகிய துக்கம் அதன் பலனாகாது என்று இவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு விசேஷ காரணம் ஒன்றுமில்லை. ஆகையால் காமிய கர்மங்களை அனுஷ்ட்டித்தால் உண்டாகும் ஆயாச துக்கமும் முன்பு செய்த பாபகர்மத்தின் பலனே ஆகும் என்று ஆகிவிடும்.
तथा च सति नित्यानां फलाश्रवणात् तद्विधानान्यथानुपपत्तेश्च नित्यानुष्ठानायासदुःखं पूर्वकृतदुरितफलम् इति अर्थापत्तिकल्पना च अनुपपन्ना,
அவ்வாறு இருக்கையில் வேதத்தில் நித்யகர்மாக்களுக்கு பலன் கூறாமையால் அவற்றைவிதித்தல் என்பது பொருந்தாததாய் இருப்பதால் நித்ய அனுஷ்ட்டான ஆயாச துக்கம் முன்பு செய்த பாபத்தின் பலனே என்றஅர்த்தா பத்தி பிரமாணம் பொருந்தாது.
एवं विधानान्यथानुपपत्तेः अनुष्ठानायासदुःखव्यतिरिक्तफलत्वानुमानाच्च नित्यानाम् ।
இவ்வாறாக நித்ய கர்மவிதியானது பொருந்தாததால் நித்யகர் மங்களை அனுஷ்ட்டித்தலால் உண்டாகும் ஆயாச துக்கங்களைக் காட்டிலும் வேறு பயன் இருக்கிறது என்று அனுமானிக்க வேண்டிவரும்.
विरोधाच्च ; विरुद्धं च इदम् उच्यते — नित्यकर्मणा अनुष्टीयमानेन अन्यस्य कर्मणः फलं भुज्यते इति अभ्युपगम्यमाने स एव उपभोगः नित्यस्य कर्मणः फलम् इति, नित्यस्य कर्मणः फलाभाव इति च विरुद्धम् उच्यते ।
அது விரோதமாய் இருப்பதால் நித்ய கர்மாவை அனுஷ்ட்டித்த லால் வேறு கர்மாவின் பலனை அனுபவிக்கிறான் என்று கூறுதல் பொருத்தமாகாது. ஏனெனில் அவ்வாறு எடுத்துக்கொண்டால் அந்த அனுபவிக்கப்பட்ட பலனும் நித்ய கர்மாவின் பலனாகும் என்பதும் நித்யகர்மாவிற்கு பலனில்லை என்று கூறுவதும் விரோதமாகும்.
किञ्च, काम्याग्निहोत्रादौ अनुष्ठीयमाने नित्यमपि अग्निहोत्रादि तन्त्रेणैव अनुष्ठितं भवतीति तदायासदुःखेनैव काम्याग्निहोत्रादिफलम् उपक्षीणं स्यात् , तत्तन्त्रत्वात् ।
மேலும் காமிய அக்கினிஹோத்திரம் முதலியவைகள் அனுஷ்ட்டிக்கும்பொழுது நித்ய அக்னி ஹோத்திராதிகளும் ஒரே முறையிலேயே அனுஷ்ட்டிக்கப்படுகின்றன. ஆகையால் அந்த ஆயாச துக்கத்தை அனுபவிப்பதாலேயே காம்ய அக்னி ஹோத்திராதிகளின் பலனும் நாசமாகிவிடும். ஏனெனில் பலன் அதனுடைய அதீனமாய் இருப்பதால் ஆகும்.
अथ काम्याग्निहोत्रादिफलम् अन्यदेव स्वर्गादि, तदनुष्ठानायासदुःखमपि भिन्नं प्रसज्येत । न च तदस्ति, दृष्टविरोधात् ; न हि काम्यानुष्ठानायासदुःखात् केवलनित्यानुष्ठानायासदुःखं भिन्नं दृश्यते ।
இவ்வாறு கருதினால் காமிய அக்னிஹோத்திரம் முதலியவற் றின் பலனாகிய சுவர்க்கம் முதலியவைகள் வேறு அதை அனுஷ்ட்டிப்பதில் உள்ள ஆயாச துக்கபலன் வேறு என்று ஆகி விடும். இதில் விரோதம் காணப்படுவதால், அவ்வாறு அல்ல. காமிய கர்மாக்கள் அனுஷ்ட்டிக்கப்படும் ஆயாச துக்கத்தைக் காட்டிலும் கேவல நித்யகர்மாவை அனுஷ்ட்டித்தலால் ஏற்படும் ஆயாச துக்கம் வேறு அல்ல.
किञ्च अन्यत् — अविहितमप्रतिषिद्धं च कर्म तत्कालफलम् , न तु शास्त्रचोदितं प्रतिषिद्धं वा तत्कालफलं भवेत् । तदा स्वर्गादिष्वपि अदृष्टफलाशासनेन उद्यमो न स्यात् ।
மேலும் விதிக்கப்பட்ட, விலக்கப்பட்ட கர்மங்களைக் காட்டி லும் வேறு கர்மா அதை அனுஷ்ட்டிக்கும் சமயத்திலேயே பல னைக் கொடுப்பதாய் இருக்கிறது. சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட, விலக்கப்பட்ட கர்மமோ அந்த சமயத்திலேயே பலனைக் கொடுப் பதாய் இல்லை. அவ்வாறு கொடுப்பதாய் இருந்தால் அதிருஷ்ட்ட பலன்களாகிய ஸ்வர்க்கம் முதலிய பலன்களைக் குறித்து ஒருவ ரும் முயற்சி செய்யமாட்டார்கள்.
अग्निहोत्रादीनामेव कर्मस्वरूपाविशेषे अनुष्ठानायासदुःखमात्रेण उपक्षयः नित्यानाम् ; स्वर्गादिमहाफलत्वं काम्यानाम् , अङ्गेतिकर्तव्यताद्याधिक्ये तु असति, फलकामित्वमात्रेणेति ।
அக்னிஹோத்ரம் முதலிய இயல்பாகவே பேதம் இல்லாது இருந்தால் அந்த நித்யகர்மா அனுஷ்ட்டிக்கும்பொழுது ஏற்படும் ஆயாச துக்கத்தை அனுபவிப்பதாலேயே வேறு பலன் இல்லாமல் போவதும், காம்ய கர்மாவை அனுஷ்ட்டிப்பதற்கு நித்யகர்மாவை அனுஷ்ட்டிப்பதில் உள்ள சிரமமே இருக்கிறது. அதற்கு குறை வாக இல்லை. இருந்தபோதிலும் பலனை விரும்புவதாலேயே சுவர்க்கம் முதலிய பலன்கள் கிடைக்கும் என்று கல்பிக்கமுடியாது.
तस्माच्च न नित्यानां कर्मणाम् अदृष्टफलाभावः कदाचिदपि उपपद्यते । अतश्च अविद्यापूर्वकस्य कर्मणः विद्यैव शुभस्य अशुभस्य वा क्षयकारणम् अशेषतः, न नित्यकर्मानुष्ठानम् ।
ஆகையால் எப்பொழுதும் நித்ய கர்மாவிற்கு அதிருஷ்ட்ட பலனே ஏற்படாது என்பது ஒருபொழுதும் சித்திக்காது. ஆகை யால் எல்லா சுப, அசுப கர்மங்களுக்கும் அவித்யை காரணமாய் இருப்பதால் ஞானத்தினாலேயே அவை முற்றிலும் நாசத்தை அடையும், நித்ய கர்மானுஷ்ட்டானத்தினால் அல்ல என்பது சித் திக்கிறது.
अविद्याकामबीजं हि सर्वमेव कर्म । तथा च उपपादितमविद्वद्विषयं कर्म, विद्वद्विषया च सर्वकर्मसंन्यासपूर्विका ज्ञाननिष्ठा —
ஏனெனில் எல்லாக் கர்மங்களும் அவித்யை, காமம் இவை களை காரணமுடையதாய் இருக்கிறது. அவ்வாறேஉணர்த் தப்பட்டது. கர்மம் அவித்வான் (அக்ஞானி) விஷயமாகும். வித்வா னுடைய (ஞானியினுடைய) விஷயம் எல்லாக் கர்மங்களையும் தியாகம் செய்தலுடன் கூடிய ஞானநிஷ்ட்டையாகும்.
உபௌ தௌ ந விஜானித: = அவ்விருவரும் அறியவில்லை. வேதாவிநாசினம் நித்யம் = அழியாததாக நித்யம் அறிகிறான். ஞானயோகேன சாங்கியானாம், கர்மயோகேன யோகினாம் = ஞான யோகத்தால் சாங்கியர்களுக்கும் கர்ம யோகத்தால் கர்மயோ கிகளுக்கும், அக்ஞானாம் கர்மசங்கினாம் = கர்மத்தில் பற்றுள்ள அக்ஞானிகளுக்கு தத்வவித்து = தத்துவத்தை அறிந்தவன், குணா குணேஷு வர்தந்தே இதி மத்வா ந சஜ்ஜதே = குணங்கள் குணங்க ளிலேயே இருக்கின்றன என்று அதில் பந்தப்படுவதில்லை. சர்வ கர்மாணி மனஸா ஸந்யஸ்யாஸ்தே = எல்லாக் கர்மங்களையும் சய்து விட்டு இருக்கிறான். நைவ கிஞ்ச்சித் கரோமீதி யுக்தோ மன்யேத தத்வவித் = தத்துவத்தை அறிந்த ஞானி நான் செய்தேன் என்று சிறிதும் நினைப்பதில்லை, என்றால் அக்ஞானி தான் அவ்வாறு நினைப்பான்.
आरुरुक्षोः कर्म कारणम् , आरूढस्य योगस्थस्य शम एव कारणम् ; उदाराः त्रयोऽपि अज्ञाः, ‘ज्ञानी त्वात्मैव मे मतम्’ (भ. गी. ७ । १८)
சித்த சுத்தி அடைந்து மேல் நிலையை அடைய விரும்புபவ னுக்கு கர்மம் சாதனமாகும். சித்தி அடைந்தவனாய் ஞான யோகத் தில் நிற்பதற்கு சமமே, (அகக்கரண தண்டமே) காரணமாகும். அக் ஞானிகளாகிய மூன்று வகையான பக்தர்களும் மேலானவர்களே. ஆனாலும் ஞானியே ஆத்மாவாகிய எனது சொரூபமாகும் என் பது என் கருத்தாகும்.
‘अज्ञाः कर्मिणः गतागतं कामकामाः लभन्ते’ ; अनन्याश्चिन्तयन्तो मां नित्ययुक्ताः यथोक्तम् आत्मानम् आकाशकल्पम् उपासते ।
அக்ஞானிகளாகிய கர்மிகள் வந்து போகின்றகாமனைகளை அடைகிறார்கள். எப்பொழுதும் வேறு ஒன்றையும் நினைக்காமல் முன்பு கூறப்பட்ட லக்ஷணங்களோடு கூடிய ஆகாயத்திற்கு ஒப்பா யும், நிர்மலமாயும் உள்ள ஆத்மாவாகிய என்னையே சிந்தித்துக் கொண்டு உபாசிக்கிறார்கள்.
‘ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते’, अर्थात् न कर्मिणः अज्ञाः उपयान्ति ।
ததாமி புத்தியோகம் தம் தேன மாமுபயாந்தி தே = நான் அவர்களுக்கு புத்தியோகத்தைத் தருகிறேன் அதனால் அவர்கள் என்னை அடைகிறார்கள், என்பதால் கர்மிகளாகிய அக்ஞானிகள் என்னை அடையமாட்டார்கள் என்பதாகும்.
भगवत्कर्मकारिणः ये युक्ततमा अपि कर्मिणः अज्ञाः, ते उत्तरोत्तरहीनफलत्यागावसानसाधनाः ;
பகவானின் பொருட்டு கர்மத்தைச் செய்யும் உத்தமமான யோகிகளாயினும் கர்மிகளான அக்ஞானிகளே. அவர்கள் பலனை தியாகம் செய்கின்றவரையில் உள்ள எல்லா தாழ்ந்த சாதனங்களில் ஈடுபட்டவர்களாகிறார்கள்.
अनिर्देश्याक्षरोपासकास्तु ‘अद्वेष्टा सर्वभूतानाम्’ (भ. गी. १२ । १३) इति आध्यायपरिसमाप्ति उक्तसाधनाः क्षेत्राध्यायाद्यध्यायत्रयोक्तज्ञानसाधनाश्च ।
இவ்வாறுதான் இருக்கிறது என்று நிர்தேசம் செய்யமுடியாத அக்ஷரத்தை உபாசிப்பவர்கள், அத்வேஷ்ட்டா சர்வபூதானாம் = எல்லா பூதங்களிடத்தும் துவேஷம் இல்லாதவன், என்பது முதல் அத்தியாயம் முடியும் வரையிலும் கூறப்பட்ட சாதனங்களையும், பதிமூன்றாவது அத்யாயம் முதல் மூன்று அத்தியாயங்களிலும் கூறப்பட்ட சாதனங்களை உடையவர்கள்.
अधिष्ठानादिपञ्चकहेतुकसर्वकर्मसंन्यासिनां आत्मैकत्वाकर्तृत्वज्ञानवतां परस्यां ज्ञाननिष्ठायां वर्तमानानां भगवत्तत्त्वविदाम् अनिष्टादिकर्मफलत्रयं परमहंसपरिव्राजकानामेव लब्धभगवत्स्वरूपात्मैकत्वशरणानां न भवति ; भवत्येव अन्येषामज्ञानां कर्मिणामसंन्यासिनाम् इत्येषः गीताशास्त्रोक्तकर्तव्यार्थस्य विभागः ॥
அதிஷ்ட்டானம் (உடம்பு) முதலிய ஐந்து காரணங்களுடன் கூடிய எல்லா கர்மங்களையும் தியாகம் செய்த, ஆத்மா ஒன்றே என்றும் கிரியை அற்றவர் என்றும் அறிந்த, மேலான ஞான நிஷ்ட்டையில் நிலைத்திருக்கின்ற பகவானுடைய தத்துவத்தை அறிந்த, பகவானுடைய ஸ்வரூபமாகிய ஆத்ம ஏகத்வத்தை சர ணடைந்த பரமஹம்ஸ பரிவ்ராஜக சந்நியாசிகளுக்கு பாவம், புண் யம், மிச்ரம் ஆகிய கர்மபலன்கள் மூன்றும் கிடையாது. மற்றவர் கள் சந்நியாசம் அற்றவர்களாகிய கர்மிகளுக்கு இந்த மூன்று பலன் களும் உண்டு என்று இந்த கீதா சாஸ்திரத்தில் கர்த்தவ்யம் (செய்ய வேண்டியது) அகர்த்தவ்யம் (செய்யவேண்டியதில்லை) என்று இரண்டு விதமாக பிரித்துக் கூறப்பட்டது.
अविद्यापूर्वकत्वं सर्वस्य कर्मणः असिद्धमिति चेत् ,
எல்லாக் கர்மங்களும் அவித்யையை காரணமாக உடையது என்பது பொருந்தவில்லை என்றால்.
न ; ब्रह्महत्यादिवत् । यद्यपि शास्त्रावगतं नित्यं कर्म, तथापि अविद्यावत एव भवति ।
அவ்வாறு அல்ல. பிரஹ்ம்மஹத்தி முதலிய பாப கர்மங்களைப் போல் எல்லாக் கர்மங்களும் அவித்தையினால் ஏற்பட்டவையே. நித்ய கர்மா சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டிருந்தாலும் அது அவித்யை உடைய புருஷனுக்கே அந்த கர்மா விதிக்கப்பட்டிருக்கிறது.
यथा प्रतिषेधशास्त्रावगतमपि ब्रह्महत्यादिलक्षणं कर्म अनर्थकारणम् अविद्याकामादिदोषवतः भवति, अन्यथा प्रवृत्त्यनुपपत्तेः, तथा नित्यनैमित्तिककाम्यान्यपीति ।
எவ்வாறு விலக்கப்பட்ட சாஸ்திரத்தில் உள்ள பிரஹ்மஹத்தி முதலிய கர்மங்களை செய்வதற்கு அநர்த்தத்திற்கு காரணமாகிய அவித்யை முதலிய தோஷங்களே காரணமாகிறது. வேறு காரணமல்ல. அவ்வாறே நித்ய, நைமித்திக, காமிய கர்மங்களில் ப்ரவிர்த்திப்பதற்கும் அவித்யா, காமம் முதலிய தோஷங்களே காரணமாகும்.
देहव्यतिरिक्तात्मनि अज्ञाते प्रवृत्तिः नित्यादिकर्मसु अनुपपन्ना इति चेत् ।
ஆனால் ஆத்மாவை சரீரத்தைக் காட்டிலும் வேறு என்று அறியாமல் நித்ய நைமித்திக முதலிய கர்மங்களில் பிரவிர்த்தியா னது ஏற்படாது.
न ; चलनात्मकस्य कर्मणः अनात्मकर्तृकस्य ‘अहं करोमि’ इति प्रवृत्तिदर्शनात् ।
அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏனெனில் ஆத்மா எதற்கு கர்த்தா வாக இல்லையோ அவ்வாறே அசைதல் ரூபமான(அக்ஞானிகளின்) கர்மத்தில் நான் கர்த்தா என்றபிரவிர்த்தியானது காணப்படுகிறது.
देहादिसङ्घाते अहंप्रत्ययः गौणः, न मिथ्या इति चेत् , न ; तत्कार्येष्वपि गौणत्वोपपत्तेः ।
தேஹம் முதலியவற்றின் சேர்க்கையினாலேயே நான் என்றும் எண்ணம் உபசாரமாக விளங்குகிறது. மித்தை அல்ல என்று கூறுதல் சரியல்ல. ஏனெனில் அவ்வாறு எடுத்துக்கொண்டால் அவைகளின் காரியங்களும் உபசாரமாகவே இருக்கும்.
आत्मीये देहादिसङ्घाते अहंप्रत्ययः गौणः ; यथा आत्मीये पुत्रे ‘आत्मा वै पुत्रनामासि’ (तै. आ. एका. २ । ११) इति, लोके च ‘मम प्राण एव अयं गौः’ इति, तद्वत् । नैवायं मिथ्याप्रत्ययः । मिथ्याप्रत्ययस्तु स्थाणुपुरुषयोः अगृह्यमाणविशेषयोः ।
எவ்வாறு ஆத்மாவை புத்ர நாமாஸி = ஏ புத்திரனே! நீ என்னு டைய ஆத்மா, என்ற சுருதியில் கூறி உள்ளவாறு தன்னுடைய புத்திரன் நான் என்ற பாவத்தை அடைகிறான். அவ்வாறே சம்சாரத் தில் (உலகில்) இந்த பசு என்னுடைய பிராணன் என்று தனக்குப் பிரியமான வஸ்துக்களில் நான் என்ற பாவம் ஏற்படுகிறதோ அவ்வாறே தேஹம் முதலிய சேர்க்கையிலும் நான் என்ற பாவம் விளங்குகிறது. அது மித்தை அல்ல. மித்தையாகவே தோன்றினால் அது எவ்வாறு ஸ்தாணு (கட்டை) புருஷன் என்ற பேதம் அறியா மல் ஸ்தாணுவினிடத்தில் புருஷனுடைய தோற்றம் உண்டாகிறது.
न गौणप्रत्ययस्य मुख्यकार्यार्थता, अधिकरणस्तुत्यर्थत्वात् लुप्तोपमाशब्देन ।
அவ்வாறு உபசாரமாக வந்த எண்ணம் முக்கியமான காரியத் திற்கு பயன்படாது. உபமை உருபு தொக்கி நிற்றலால் இந்த பிரகர ணத்தை துதிப்பதற்காக வந்ததாகும்.
यथा ‘सिंहो देवदत्तः’ ‘अग्निर्माणवकः’ इति सिंह इव अग्निरिव क्रौर्यपैङ्गल्यादिसामान्यवत्त्वात् देवदत्तमाणवकाधिकरणस्तुत्यर्थमेव, न तु सिंहकार्यम् अग्निकार्यं वा गौणशब्दप्रत्ययनिमित्तं किञ्चित्साध्यते ; मिथ्याप्रत्ययकार्यं तु अनर्थमनुभवति इति ।
எவ்வாறு தேவதத்தன் சிங்கமாயிருக்கிறான், மாணவன் நெருப்பாயிருக்கிறான் என்று சிங்கம் போல் குரூரமாயும், நெருப்பு போல் பொன்னிறமாயிருக்கிறான் என்ற ஒப்புவமையால் மாணாக்கனைப் புகழும் பொருட்டேயாம். உபசார வாசகமானது சிஹ்மத்தினுடைய கார்யம் போன்றது, அக்னியின் கார்யம் போன் றது என்று குறிப்பிடுவதற்கு சிறிதும் காரணமாக ஆகாது. ஆனால் (ஜன்ம மரணரூபமான) மித்யா கார்யமாகிய அநர்த்தம் (புருஷனால்) அனுபவிக்கப்படுகிறது.
गौणप्रत्ययविषयं जानाति ‘नैष सिंहः देवदत्तः’, तथा ‘नायमग्निर्माणवकः’ इति । तथा गौणेन देहादिसङ्घातेन आत्मना कृतं कर्म न मुख्येन अहंप्रत्ययविषयेण आत्मना कृतं स्यात् । न हि गौणसिंहाग्निभ्यां कृतं कर्म मुख्यसिंहाग्निभ्यां कृतं स्यात् । न च क्रौर्येण पैङ्गल्येन वा मुख्यसिंहाग्न्योः कार्यं किञ्चित् क्रियते, स्तुत्यर्थत्वेन उपक्षीणत्वात् ।
மேலும் உபச்சார வார்த்தைகளாகும் எண்ணத்தினால் குறிக்கப்படும் (தேவதத்தனையும், மாணவணையும்) இவன் சிங்கமில்லை, இவன் நெருப்பில்லை எனன வேறு ஒருவன் அறிகிறான், அவ்வாறே உடம்பு முதலியவற்றின் சேர்க்கையாகிய கௌண (உபச்சார) ஆத்மாவினால் செய்யப்பட்ட செய்கை யானது, நான் என்னும் எண்ணத்தினால் குறிக்கப்படும் வாஸ்தவ ஆத்மாவினால் செய்யப்பட்டதாகாது. கௌண சிங்கத்தாலும் கௌண நெருப்பினாலும் செய்யப்பட்ட செய்கையானது வாஸ்தவ சிங்கத்தாலும் வாஸ்தவ நெருப்பினாலும் (மாணவனது) பொன்நிறத்தினாலும் வாஸ்தவ சிங்கத்திறற்கும், நெருப்பிற்கும் ஒரு கார்யமும் செய்யப்படுவதில்லை. ஸ்துதி செய்யும் பொருட்டாய்த் தீர்ந்து (உபக்ஷண) போனமையால்.
स्तूयमानौ च जानीतः ‘न अहं सिंहः’ ‘न अहम् अग्निः’ इति ; न हि ‘सिंहस्य कर्म मम अग्नेश्च’ इति । तथा ‘न सङ्घातस्य कर्म मम मुख्यस्य आत्मनः’ इति प्रत्ययः युक्ततरः स्यात् ; न पुनः ‘अहं कर्ता मम कर्म’ इति ।
உபச்சார வார்த்தைகளால் புகழும்பொழுது நான் இந்த சிம்ஹம் இல்லை, நான் இந்த நெருப்பு இல்லை என்று தேவதத்த னுக்கு (அந்த மாணாக்கனுக்கு) தெரியும். அவ்வாறேசரீரம் முதலிய சேர்க்கையினால் ஆன கௌண ஆத்மாவினால் செய்யப் பட்ட கர்மங்கள் அஹம் பாவமாகிய (நான் என்றபாவமாகிய) உண்மையான முக்கிய ஆத்மாவாகிய என்னுடையது அல்ல என்ற எண்ணமானது பொருந்தும். மறுபடியும் நான் கர்த்தா, என்னுடையது கர்மா என்பது பொருந்தாததாக ஆகும்.
यच्च आहुः ‘आत्मीयैः स्मृतीच्छाप्रयत्नैः कर्महेतुभिरात्मा कर्म करोति’ इति, न ; तेषां मिथ्याप्रत्ययपूर्वकत्वात् । मिथ्याप्रत्ययनिमित्तेष्टानिष्टानुभूतक्रियाफलजनितसंस्कारपूर्वकाः हि स्मृतीच्छाप्रयत्नादयः ।
தன்னுடைய ஸ்மிருதி (ஞாபகம்) இச்சை மேலும் பிரயத்தினம் முதலிய கர்மங்களின் ஹேதுவினாலேயே ஆத்மா கர்மங்களை செய்கிறது என்று கூறுவதும் சரியல்ல. ஏன் எனில் அவை எல்லாம் மித்யா ஞானத்தின் காரணத்தால் தோன்றுகின்றன. மித்யா ஞானத் தினால் இஷ்ட்ட அநிஷ்ட்ட ரூபமாக அனுபவித்த கர்மபலத்தி னால் உண்டான சம்ஸ்காரத்தால் ஸ்ம்ருதி (ஞாபகம்) இச்சை, பிரயத்தனம் முதலியவைகள் உண்டா கின்றன.
यथा अस्मिन् जन्मनि देहादिसङ्घाताभिमानरागद्वेषादिकृतौ धर्माधर्मौ तत्फलानुभवश्च, तथा अतीते अतीततरेऽपि जन्मनि इति अनादिरविद्याकृतः संसारः अतीतोऽनागतश्च अनुमेयः ।
எவ்வாறு இந்த ஜன்மத்தில் தேஹம் முதலியவைகளின் சேர்க் கையின் அபிமானத்தினால் ராகத்துவேஷத்தினால் செய்யப்பட்ட தர்மம், அதர்மம் கர்மாக்களின் பலனை அனுபவிக்கிறாமோ அவ்வாறே கடந்த அதற்கும் கடந்த ஜன்மங்களிலும் அவ்வாறே இருந்ததால் முன்பு அனுபவித்ததும் இனி வரப்போகிறதுமான சம்சாரமானது (ஜன்மமரணத்துடன் கூடியது) அவித்யையினால் க்கப்பட்டது என்று அனுமானம் செய்யவேண்டும்.
ततश्च सर्वकर्मसंन्याससहितज्ञाननिष्ठया आत्यन्तिकः संसारोपरम इति सिद्धम् । अविद्यात्मकत्वाच्च देहाभिमानस्य, तन्निवृत्तौ देहानुपपत्तेः संसारानुपपत्तिः ।
ஆகையால் எல்லாக் கர்மங்களையும் விடுதலாகிய ஞான நிஷ்ட்டையினால் சம்சாரமானது முற்றிலும் நிவர்த்தியாகிறது என்று சித்திக்கிறது. தேஹ அபிமானமானது அவித்யா ரூபமாய் அந்த அவித்யையை நிவர்த்தி செய்வதால் தேஹப் பிராப்தி (வேறு தேஹத்தை அடைதல்) இல்லாததால் சம்சாரத்தை அடைய மாட்டான்.
देहादिसङ्घाते आत्माभिमानः अविद्यात्मकः । न हि लोके ‘गवादिभ्योऽन्योऽहम् , मत्तश्चान्ये गवादयः’ इति जानन् तान् ‘अहम्’ इति मन्यते कश्चित् ।
தேஹம் முதலியவையின் சேர்க்கையில் உள்ள நான் என்ற அபிமானம் அவித்யையினால் ஆனது. உலகத்தில் பசு முத லியவைகளைக் காட்டிலும் நான் வேறு. என்னைக் காட்டிலும் பசு முதலியவைகள் வேறு என்று அறிந்தவன் அவைகளில் நான் என்று ஒருநாளும் எண்ணமாட்டான். (நினைக்கமாட்டான்) அறியா மையால் ஸ்தாணுவில் புருஷனை எவ்வாறு பார்க்கிறானோ அவ்வாறே விவேகமற்றவன் தேஹ முதலிய சேர்க்கையில் நான் என்று பாவிக்கலாம். ஆனால் விவேகத்துடன் கூடியவன் அவ்வாறு செய்யமாட்டான்.
अजानंस्तु स्थाणौ पुरुषविज्ञानवत् अविवेकतः देहादिसङ्घाते कुर्यात् ‘अहम्’ इति प्रत्ययम् , न विवेकतः जानन् । यस्तु ‘आत्मा वै पुत्र नामासि’ (तै. आ. एका. २ । ११) इति पुत्रे अहंप्रत्ययः, स तु जन्यजनकसम्बन्धनिमित्तः गौणः । गौणेन च आत्मना भोजनादिवत् परमार्थकार्यं न शक्यते कर्तुम् , गौणसिंहाग्निभ्यां मुख्यसिंहाग्निकार्यवत् ॥
எவன் ஒருவன் ஆத்மா வை புத்ர நாமாஸி = புத்திரனே! நீ என்னுடைய ஆத்மா, என்று புத்திரனிடத்தில் உள்ள (அகம்) உபசார (கௌண) மாகும். இவ்வாறு உபசாரமாக கூறப்பட்ட ஆத்மாவினால் சாப்பிடுதல் முதலியவற்றைப் போல் உண்மை யான காரியத்தைச் செய்ய முடியாது. எவ்வாறு எனில் உபசார வாக் யங்களாகிய சிம்ஹம் அக்னி முதலியவைகள் முக்ய சிம்ஹம், நெருப்பு முதலியவைகளின் காரியத்தை செய்யாதது போலாகும்.
अदृष्टविषयचोदनाप्रामाण्यात् आत्मकर्तव्यं गौणैः देहेन्द्रियात्मभिः क्रियत एव इति चेत् ,
சுவர்க்கம் முதலிய அதிருஷ்ட்ட பலனை அடைவதற்காக கர் மங்களை விதித்த சுருதி பிரமாணமாய் இருப்பதால், சரீரம் இந்தி ரிய முதலிய கௌண ஆத்மாவைக் கொண்டு முக்ய ஆத்மா காரி யம் செய்யலாம் என்று ஏற்படுகிறது.
न ; अविद्याकृतात्मत्वात्तेषाम् । न च गौणाः आत्मानः देहेन्द्रियादयः ;
இவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன் எனில் அதனுடைய ஆத்ம பாவம் (நான் என்னும் பாவம்) அவித்யையினால் உண்டானது. சரீ ரம் இந்திரியம் கௌண ஆத்மா அல்ல. (மித்தையே)
किं तर्हि ?
பின் எவ்வாறு?
मिथ्याप्रत्ययेनैव अनात्मानः सन्तः आत्मत्वमापाद्यन्ते, तद्भावे भावात् , तदभावे च अभावात् ।
மித்யா ஞானத்தினாலேயே அசங்கமாகிய ஆத்மாவிற்கு சங்க ஆத்மத்துவம் ஏற்படுகிறது. ஆகையால் மித்யா ஞானம் இருக்கும் வரை (உடம்பு முதலியவை) ஆத்மாவாகக் கொள்ளப்ப டுகின்றன. மித்யா ஞானம் அழிந்துவிடில் (உடம்பு முதலியவைக ளில் உள்ள) ஆத்மா என்ற புத்தி நீங்கிவிடுகிறது.
अविवेकिनां हि अज्ञानकाले बालानां दृश्यते ‘दीर्घोऽहम्’ ‘गौरोऽहम्’ इति देहादिसङ्घाते अहंप्रत्ययः । न तु विवेकिनाम् ‘अन्योऽहं देहादिसङ्घातात्’ इति जानतां तत्काले देहादिसङ्घाते अहंप्रत्ययः भवति ।
அக்ஞான காலத்தில் விவேகமற்றமந்த புத்தி உள்ளவர்க ளுக்கு நான் பெரியவன், நான் கௌரவமானவன் என்று தேஹம் முதலியவற்றின் சேர்க்கையில் நான் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் நான் சரீரம் முதலிய சங்காதத்தைக் காட்டிலும் வேறு என்ற அறிவு உடைய விவேகிகளுக்கு அந்த சமயத்தில் சரீரம் முதலிய சங்காதத்தில் நான் என்ற புத்தி தோன்றாது.
तस्मात् मिथ्याप्रत्ययाभावे अभावात् तत्कृत एव, न गौणः ।
ஆகையால் மித்யா புத்தி இன்மையால் தேஹாத்ம புத்தியும் நீங்கிவிடுவதால் சரீரத்தில் உள்ள நான் என்ற புத்தி அவித்யையி னால் ஏற்பட்டதே அன்றி கௌண விருத்தியினால் அல்ல என்று சித்திக்கிறது.
पृथग्गृह्यमाणविशेषसामान्ययोर्हि सिंहदेवदत्तयोः अग्निमाणवकयोर्वा गौणः प्रत्ययः शब्दप्रयोगो वा स्यात् , न अगृह्यमाणविशेषसामान्ययोः ।
எதனிடத்தில் விசேஷமாகவும், சாமான்யமாகவும் தனித்தனி யாக அறியப்படுகிறதோ அப்பொழுது தான் சிம்ஹ தேவதத்தன், அக்னி மாணாக்கன் என்ற கௌண புத்தியோ அல்லது கௌண சப்த பிரயோகமோ இருக்கும். சாமானியம் என்று விசேஷம் கிரஹிக்கப்படாத போது ஏற்படாது.
यत्तु उक्तम् ‘श्रुतिप्रामाण्यात्’ इति, तत् न ; तत्प्रामाण्यस्य अदृष्टविषयत्वात् । प्रत्यक्षादिप्रमाणानुपलब्धे हि विषये अग्निहोत्रादिसाध्यसाधनसम्बन्धे श्रुतेः प्रामाण्यम् , न प्रत्यक्षादिविषये, अदृष्टदर्शनार्थविषयत्वात् प्रामाण्यस्य ।
சுருதி பிரமாணத்தால் இந்த பக்ஷமானது சித்திக்கிறது என்று கூறியது சரியல்ல. ஏனெனில் அந்த பிரமாணம் அதிருஷ்ட்ட விஷயத்தைக் குறித்ததாகும். பிரத்யக்ஷாதி பிரமாணங்களுக்கு எட்டாத விஷயங்களாகிய அக்னி ஹோத்திராதி சாத்ய, சாதன சம் பந்த விஷயத்திலேயே சுருதி பிரமாணமாகும். ஏனெனில் அதிருஷ்ட்ட விஷயத்தை தெரிவிப்பதற்காகவே சுருதிப் பிரமாணம் ஆகும். பிரத்யக்ஷாதி பிரமானங்களால் அறியப்படும் விஷயத்தில் இல்லை.
तस्मात् न दृष्टमिथ्याज्ञाननिमित्तस्य अहंप्रत्ययस्य देहादिसङ्घाते गौणत्वं कल्पयितुं शक्यम् ।
ஆகையால் தேஹாதி சங்காதத்தில் பிரத்யக்ஷமாகவே மித்யா ஞானத்தினால் தோன்றும் அகம் (நான்)என்ற புத்தியை கௌணம் என்று கூறுவது பொருந்தாது.
न हि श्रुतिशतमपि ‘शीतोऽग्निरप्रकाशो वा’ इति ब्रुवत् प्रामाण्यमुपैति । यदि ब्रूयात् ‘शीतोऽग्निरप्रकाशो वा’ इति, तथापि अर्थान्तरं श्रुतेः विवक्षितं कल्प्यम् , प्रामाण्यान्यथानुपपत्तेः, न तु प्रमाणान्तरविरुद्धं स्ववचनविरुद्धं वा ।
அக்னியானது குளிர்ச்சியாகவும் பிரகாசமற்றதாயும் இருக்கிறது என்று நூற்றுக்கணக்கான சுருதிகள் கூறினாலும், அந்த சுருதிகள் பிரமாணமாக ஆகாது. சுருதியில் அக்னி குளிர்ச்சி யானது, பிரகாசமற்றது என்று கூறியிருந்தாலும் அந்த சுருதிக்கு வேறு ஒரு அர்த்தத்தைக் காட்டுவதற்காக என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் வேறு விதமாக அதனுடைய பிரமாணம் சித்திக்காது. பிரத்யக்ஷம் முதலிய வேறு பிரமாணத்திற்கு விரோத மாகவோ சுருதியினுடைய தனது வசனத்திற்கு விருத்தமாகவோ சுருதியினுடைய அர்த்தத்தைக் கல்பனை செய்வது உசிதமல்ல.
कर्मणः मिथ्याप्रत्ययवत्कर्तृकत्वात् कर्तुरभावे श्रुतेरप्रामाण्यमिति चेत् ,
கர்மமானது மித்யா ஞானமுடைய புருஷனால் அல்லவா செய்யப்படுகிறது. அவ்வாறாகில் உண்மையில் கர்த்தா இல்லை என்பதால் சுருதிக்கு பிரமாண்ய தன்மை இல்லாமல் போய்விடுமே என்றால்.
न ; ब्रह्मविद्यायामर्थवत्त्वोपपत्तेः ॥
அவ்வாறு அல்ல. ஏனெனில் பிரஹ்ம வித்யைக்கு பயன் படுவதால்.
कर्मविधिश्रुतिवत् ब्रह्मविद्याविधिश्रुतेरपि अप्रामाण्यप्रसङ्ग इति चेत् ,
கர்மத்தை விதிக்கின்ற சுருதிபோல் பிரஹ்மவித்யா சுருதியும் பிரமாணம் ஆகாமல் ஆகிவிடுமே எனில்
न ; बाधकप्रत्ययानुपपत्तेः । यथा ब्रह्मविद्याविधिश्रुत्या आत्मनि अवगते देहादिसङ्घाते अहंप्रत्ययः बाध्यते, तथा आत्मन्येव आत्मावगतिः न कदाचित् केनचित् कथञ्चिदपि बाधितुं शक्या, फलाव्यतिरेकादवगतेः, यथा अग्निः उष्णः प्रकाशश्च इति ।
இவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன் எனில் அதை பாதிக்கும் (நீக்கும்) புத்தி இல்லாததினால். எவ்வாறு பிரஹ்ம வித்யையை விதிக்கும் சுருதியினால் ஆத்மசாக்ஷாத்காரம் அடைந்தவனுக்கு தேஹம் முதலிய சங்காதத்தில் உள்ள ஆத்மபுத்தி பாதிக்கப் படுகிறதோ அவ்வாறு ஆத்மாவில் ஏற்பட்ட ஆத்ம (நான் என்ற) பாவனை எதனாலும், எப்பொழுதும் எவ்விதமாகவும் பாதிக்க (நீக்க) முடியாது. ஆத்மக்ஞானத்திற்கு ஆத்மாவே பலனாகும். அதற்கு வேறு பலன் கிடையாது. எவ்வாறு அக்னி உஷ்ணமாயும் பிரகாசமாயும் இருப்பது போல் ஆகும்.
न च एवं कर्मविधिश्रुतेरप्रामाण्यम् , पूर्वपूर्वप्रवृत्तिनिरोधेन उत्तरोत्तरापूर्वप्रवृत्तिजननस्य प्रत्यगात्माभिमुख्येन प्रवृत्त्युत्पादनार्थत्वात् । मिथ्यात्वेऽपि उपायस्य उपेयसत्यतया सत्यत्वमेव स्यात् , यथा अर्थवादानां विधिशेषाणाम् ;
கர்மவிதி சுருதியும் பிரமாணமற்றதாக ஆகாது. ஏனெனில் முந்திய. முந்திய (ஸ்வாபாவிகமான) பிரவிர்த்திகளைத் தடுத்து புதிய புதிய முயற்சிகளை உண்டாக்கி (அந்தக்கரண சுத்தி வாயிலா க) அந்தராத்மாவை எதிர்நோக்கி திருப்புவதற்கான முயற்சியை யும் ஊக்கத்தையும் கொடுக்க வல்லதாய் இருக்கிறது. உபாயங்கள் (கருவிகள்) மித்தையாய் இருந்தாலும் உபாயம் அதாவது பலன் சத் யமாய் இருக்கிறது. ஆகையால் உபாயமும் சத்யமே எனப்படுகிற து.அவ்வாறே விதி வாக்கியத்தின் முடிவில் கூறப்படும் அர்த்த வாக்கியங்களும் சத்யம் என்று ஆகிறது.
लोकेऽपि बालोन्मत्तादीनां पयआदौ पाययितव्ये चूडावर्धनादिवचनम् ।
உலகத்தில் சிறுவர்கள் உன்மத்தர்கள் முதலியோர்களைக் குடிக்கச் செய்வதற்கு பால் குடித்தால் முடி வளரும் போன்றவார்த் தைகள் கூறுவது போலாகும்.
प्रकारान्तरस्थानां च साक्षादेव वा प्रामाण्यं सिद्धम् , प्रागात्मज्ञानात् देहाभिमाननिमित्तप्रत्यक्षादिप्रामाण्यवत् ।
ஆத்மக்ஞானம் உண்டாவதற்கு முன் தேஹ அபிமானத்தால் பிரத்யக்ஷம் முதலிய பிரமாணங்களுக்கு வேறு வகையிலே உள்ள (கர்மத்தை விதிக்கும்) சுருதிக்கு பிரமாணத் தன்மை அமைந்துள்ளது.
यत्तु मन्यसे — स्वयमव्याप्रियमाणोऽपि आत्मा संनिधिमात्रेण करोति, तदेव मुख्यं कर्तृत्वमात्मनः ; यथा राजा युध्यमानेषु योधेषु युध्यत इति प्रसिद्धं स्वयमयुध्यमानोऽपि संनिधानादेव जितः पराजितश्चेति, तथा सेनापतिः वाचैव करोति ; क्रियाफलसम्बन्धश्च राज्ञः सेनापतेश्च दृष्टः । यथा च ऋत्विक्कर्म यजमानस्य, तथा देहादीनां कर्म आत्मकृतं स्यात् , फलस्य आत्मगामित्वात् ।
ஆத்மா சுயமாக கர்மா செய்யாமல் இருந்தாலும் அதன் சந்நிதி மாத்திரத்தாலேயே கர்மா செய்கிறது. ஆகையால் ஆத்மா விற்கு முக்கிய கர்த்திருத்துவம் உள்ளது என்று நீ நினைப்பது, எவ்வாறு ராஜா தான் சுயமாக யுத்தம் செய்யாவிடினும் மற்றயுத்த வீரர் யுத்தம் செய்வதை ராஜா யுத்தம் செய்கிறார் என்று உபசாரமாக கூறப்படுகிறதோ அவ்வாறே ராஜா ஜெயிக்கிறார், தோற்கிறார் என்று கூறப்படுகிறது. அவ்வாறே சேனைத்தலைவரும் வெறும் வார்த்தையினாலேயே கட்டளையிடுகிறார். அப்படி இருந்தாலும் ராஜாவும், சேனைத்தலைவரும் அந்த யுத்தத்தின் பலனில் சம்பந் தப்படுகிறார்கள். அவ்வாறே ரித்விக்குகள் செய்யும் கர்மம் எஜமா ன்னுடையதாகிறது. இதுபோல் தேஹாதி சங்காதங்களின் கர்மம் ஆத்மாவினால் செய்யப்பட்டதாக ஆகிறது. ஏனெனில் அதன் பலன் ஆத்மாவையே அடைகிறது என்பது உபசாரமாகும்.
यथा वा भ्रामकस्य लोहभ्रामयितृत्वात् अव्यापृतस्यैव मुख्यमेव कर्तृत्वम् , तथा च आत्मनः इति ।
இதற்கு மற்றுமொரு உதாரணம். காந்தக்கல்லானது தான் சுய மாக செய்கையற்று இருந்தாலும் இரும்பை ஆட்டி வைக்கிறது. ஆகையால் அது முக்கிய கர்த்தா ஆவது போல் ஆத்மாவும் முக்கிய கர்த்தாவாகிறது.
तत् असत् ; अकुर्वतः कारकत्वप्रसङ्गात् ।
அவ்வாறு கருதுவது சரியல்ல. ஏனெனில் அவ்வாறு கருதினால் கிரியை அற்றஆத்மாவிற்கு காரகத்தை (செய்தலை) ஒப்புக்கொண்டதாகும். ஆகையால் இது உபசாரமே (கௌணமே) ஆகும்.
कारकमनेकप्रकारमिति चेत् , न ; राजप्रभृतीनां मुख्यस्यापि कर्तृत्वस्य दर्शनात् । राजा तावत् स्वव्यापारेणापि युध्यते ; योधानां च योधयितृत्वे धनदाने च मुख्यमेव कर्तृत्वम् , तथा जयपराजयफलोपभोगे ।
செயல்கள் (காரகம்) அநேகவிதமாய் இருக்கின்றது என்றால் அவ்வாறு அல்ல. ஏனெனில் ராஜா முதலியோரிடத்தும் முக்கிய செயல்பாடுகள் காணப்படுகிறது. ராஜா சுயமாகவும் யுத்தம் செய்கி றார். யுத்தவீரர்களை வைத்தும் யுத்தம் செய்கிறார். அவ்வாறே அவர்களுக்கு செல்வத்தைக் கொடுத்தும் யுத்தத்தை செய்விக்கி றார். ஆகையால் சந்தேஹமில்லாமல் அவர் முக்கிய கர்த்தாவாக இருக்கிறார். அவ்வாறேவெற்றி, தோல்வி முதலிய பலன்களை அனுபவிப்பதும் முக்ய செயலாகும்.
यजमानस्यापि प्रधानत्यागे दक्षिणादाने च मुख्यमेव कर्तृत्वम् ।
அவ்வாறே (கர்மாவைச் செய்யும்) எஜமானனும் பிரதானமான ஆஹூதியை தானம் கொடுப்பதாலும், அவ்வாறே தக்ஷிணைக் கொடுப்பதாலும் முக்கிய செயலாகும் அதாவது முக்கிய கர்த்தா வாகிறான்.
तस्मात् अव्यापृतस्य कर्तृत्वोपचारो यः, सः गौणः इति अवगम्यते । यदि मुख्यं कर्तृत्वं स्वव्यापारलक्षणं नोपलभ्यते राजयजमानप्रभृतीनाम् , तदा संनिधिमात्रेणापि कर्तृत्वं मुख्यं परिकल्प्येत ; यथा भ्रामकस्य लोहभ्रमणेन, न तथा राजयजमानादीनां स्वव्यापारो नोपलभ्यते । तस्मात् संनिधिमात्रेण कर्तृत्वं गौणमेव ।
கிரியை அற்றவஸ்துவில் கர்த்திருத்வத்தை ஏற்றிக் கூறல் உபசாரமாகும். அதாவது கௌணம் என்று அறியப்படுகிறது. ராஜா, யஜமானன் முதலியோரிடத்து தனது சொந்த செயலாகிய முக்கிய கர்த்திருத்துவமானது காணப்படவில்லையாயின் காந்தத்தின் சந்நி தியில் இரும்பானது செயல்படுவது போல் கர்த்திருத்துவத்தை கௌணமாக எடுத்துக்கொள்ளலாம். ராஜா முதலியோரிடத்து அவ் வாறு காணப்படவில்லை ஆகையால் சந்நிதி மாத்திரத்தால் உள்ள கர்த்திருத்துவமும் கௌணமேயாகும்.
तथा च सति तत्फलसम्बन्धोऽपि गौण एव स्यात् । न गौणेन मुख्यं कार्यं निर्वर्त्यते । तस्मात् असदेव एतत् गीयते ‘देहादीनां व्यापारेण अव्यापृतः आत्मा कर्ता भोक्ता च स्यात्’ इति ।
அவ்வாறானால் அதனுடைய பலத்தின் சம்பந்தமும் கௌண மேயாகும். ஏனெனில் கௌண கர்த்தாவால் முக்கிய (உண்மையான) காரியத்தைச் செய்யமுடியாது. இதனால் இது மித்யை ஆகும். இந்த மித்யையால் நிஷ்க்ரியமான ஆத்மா (கிரியை அற்றஆத்மா) தேஹ முதலியவைகளின் கிரியையினால் கர்த்தா, போக்தாவாகிறது.
भ्रान्तिनिमित्तं तु सर्वम् उपपद्यते, यथा स्वप्ने ; मायायां च एवम् । न च देहाद्यात्मप्रत्ययभ्रान्तिसन्तानविच्छेदेषु सुषुप्तिसमाध्यादिषु कर्तृत्वभोक्तृत्वाद्यनर्थः उपलभ्यते ।
எவ்வாறு சொப்பனத்தில் மாயையால் எல்லாம் உண்டாகி றதோ அவ்வாறே எல்லாம் பிராந்தியினால் உண்டாகின்றன.சரீரம் முதலியவைகளில் நான் என்ற புத்தி ரூப அக்ஞானத்தின் தொடர்ச்சி தடைபடும் பொழுது சுழுத்தி, சமாதி ஆகிய அவஸ்தை களில் கர்த்திருத்துவ, போக்திருத்துவ முதலிய அநர்த்தங்கள் அறியமுடியாது.
तस्मात् भ्रान्तिप्रत्ययनिमित्तः एव अयं संसारभ्रमः, न तु परमार्थः ; इति सम्यग्दर्शनात् अत्यन्त एवोपरम इति सिद्धम् ॥ ६६ ॥
ஆகையால் பிராந்தி ஞானத்தினால்தான் இந்த சம்சார மயக் கம். உண்மையில் இல்லை. இந்த சம்சார பிரமமானது சம்யக் ஞானத்தால் முற்றிலும் சாந்தி அடைகிறது. (நீங்குகிறது)
सर्वं गीताशास्त्रार्थमुपसंहृत्य अस्मिन्नध्याये, विशेषतश्च अन्ते, इह शास्त्रार्थदार्ढ्याय सङ्क्षेपतः उपसंहारं कृत्वा, अथ इदानीं शास्त्रसम्प्रदायविधिमाह —
கீதா சாஸ்திரம் முழுவதையும் முடித்து இந்த அத்யாயத்தின் முடிவில் விசேஷமாக சாஸ்திரத்தின் அர்த்தத்தை திடமாக்குவதற் காக சுருக்கமாகக் கூறி முடித்தபின் இப்பொழுது சாஸ்திர சம்பிர தாய விதியைக் கூறுகிறார்.
इदं ते नातपस्काय नाभक्ताय कदाचन ।
न चाशुश्रूषवे वाच्यं न च मां योऽभ्यसूयति ॥ ६७ ॥
இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசன ।
ந சாசுச்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோஅப்யஸூயதி ॥ 67 ॥
इदं शास्त्रं ते तव हिताय मया उक्तं संसारविच्छित्तये अतपस्काय तपोरहिताय न वाच्यम् इति व्यवहितेन सम्बध्यते ।
என்னால் உன் இதத்தின் பொருட்டு சம்சாரத்தைப் போக்குவ தற்காக உபதேசித்த இந்த சாஸ்திரத்தை தபஸ் இல்லாத மனிதர்க ளுக்கு சொல்லக்கூடாது என்பதுடன் சம்பந்தப்படுத்தவேண்டும்.
तपस्विनेऽपि अभक्ताय गुरौ देवे च भक्तिरहिताय कदाचन कस्याञ्चिदपि अवस्थायां न वाच्यम् ।
தபஸ்வியாய் இருந்தாலும் குரு, தெய்வத்தினிடம் பக்தி இல்லாதவர்களுக்கு ஒருபொழுதும், எந்த ஒரு நிலையிலும் கூறக்கூடாது.
भक्तः तपस्वी अपि सन् अशुश्रूषुः यो भवति तस्मै अपि न वाच्यम् ।
பக்தனாயும், தபஸ்வியாய் இருந்தாலும் பணிவிடை செய்யாத வனுக்கும் சொல்லக்கூடாது.
न च यो मां वासुदेवं प्राकृतं मनुष्यं मत्वा अभ्यसूयति आत्मप्रशंसादिदोषाध्यारोपणेन ईश्वरत्वं मम अजानन् न सहते, असावपि अयोग्यः, तस्मै अपि न वाच्यम् ।
அவ்வாறே வாசுதேவனாகிய என்னை சாதாரண மனிதனாக நினைத்து தன்னையே போற்றுதல் முதலிய தோஷங்களை ஆரோபித்து, என்னுடைய ஈஸ்வரத்தன்மையை அறியாமல் அதை சகித்துக்கொள்ள முடியாத அயோக்கியனும் கேட்கத்தகாதவன்.
भगवति अनसूयायुक्ताय तपस्विने भक्ताय शुश्रूषवे वाच्यं शास्त्रम् इति सामर्थ्यात् गम्यते ।
இதிலிருந்து பகவானிடத்தில் பக்தி உள்ளவனாயும், தபஸ்வி யாயும் பணிவிடை செய்பவனாயும் அவ்வாறேதோஷ திருஷ்ட்டி இல்லாதவனாயும் உள்ள புருஷனாலேயே சாஸ்திரமானது கேட் கப்படவேண்டுமென்று தெரிகிறது.
तत्र ‘मेधाविने तपस्विने वा’ (यास्क. नि. २ । १ । ६) इति अनयोः विकल्पदर्शनात् शुश्रूषाभक्तियुक्ताय तपस्विने तद्युक्ताय मेधाविने वा वाच्यम् । शुश्रूषाभक्तिवियुक्ताय न तपस्विने नापि मेधाविने वाच्यम् ।
மற்ற ஸ்மிருதிகளிலும் மேதாவிற்கும், தபஸ்விற்கும் வித்தியா சம் காணப்படுகிறது. ஆகையால் பணிவிடை பக்தியுடன் கூடிய தபஸ்வி அல்லது இந்த மூன்றும் உடைய மேதாவி கேட்கலாம் என்று அறியவேண்டும். பணிவிடை பக்தி இல்லாத தபஸ்வியும், இவைகள் இல்லாத மேதாவியும் கேட்கக்கூடாது.
भगवति असूयायुक्ताय समस्तगुणवतेऽपि न वाच्यम् । गुरुशुश्रूषाभक्तिमते च वाच्यम् इत्येषः शास्त्रसम्प्रदायविधिः ॥ ६७ ॥
பகவானிடத்தில் தோஷ திருஷ்ட்டி உடையவன் எல்லா நல்ல குணங்கள் இருந்தாலும் அவன் கேட்கக்கூடாது. குருவிற்கு பணிவிடை செய்தும், பக்தியுடன் கூடிய புருஷனால் கேட்கப்பட வேண்டும். இவ்விதமாக சாஸ்திர சம்பிரதாய விதி கூறப்படுகிறது.
सम्प्रदायस्य कर्तुः फलम् इदानीम् आह —
சாஸ்திர சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பவர்கள் அடையும் பலன் கூறப்படுகிறது.
य इमं परमं गुह्यं मद्भक्तेष्वभिधास्यति ।
भक्तिं मयि परां कृत्वा मामेवैष्यत्यसंशयः ॥ ६८ ॥
ய இமம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வபிதா சாஸ்யதி ।
பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்சய: ॥ 68 ॥
यः इमं यथोक्तं परमं परमनिःश्रेयसार्थं केशवार्जुनयोः संवादरूपं ग्रन्थं गुह्यं गोप्यतमं मद्भक्तेषु मयि भक्तिमत्सु अभिधास्यति वक्ष्यति, ग्रन्थतः अर्थतश्च स्थापयिष्यतीत्यर्थः, यथा त्वयि मया ।
எவன் இந்த மேலான நிச்ச்ரேயஸ் பலனை முன்பு கூறப்பட்ட வாறு கிருஷ்ணார்ஜுன சம்வாத ரூபமான மிகவும் ரஹஸ்யமான இந்த கீதா சாஸ்திரத்தை என்னிடம் பக்தி உள்ள பக்தர்களையே கேட்கச்செய்வானாக. கிரந்த ரூபமாகவோ அல்லது அர்த்தத் துடன் தெரிவிப்பாயாக என்பது பொருள். நான் எப்படி உனக்கு உபதேசம் செய்தேனோ அவ்வாறே தெரிவிப்பாயாக.
भक्तेः पुनर्ग्रहणात् भक्तिमात्रेण केवलेन शास्त्रसम्प्रदाने पात्रं भवतीति गम्यते ।
மறுபடியும் பக்தியைக் குறிப்பிடுவதால் மனிதன் கேவல பக்தி யினாலேயே சாஸ்திரத்தை அறிவதற்கு பாத்திரனாகிறான் என்று அறியப்படுகிறது.
कथम् अभिधास्यति इति, उच्यते —
எவ்வாறு கேட்கச் செய்யவேண்டும் என்பதைக் கூறுகிறார்-
भक्तिं मयि परां कृत्वा ‘भगवतः परमगुरोः अच्युतस्य शुश्रूषा मया क्रियते’ इत्येवं कृत्वेत्यर्थः । तस्य इदं फलम् — मामेव एष्यति मुच्यते एव । असंशयः अत्र संशयः न कर्तव्यः ॥ ६८ ॥
என்னிடத்தில் பரமபக்தியை செய்து என்றால் பகவானுக்கும், குருவிற்கும் நான் பணிவிடை செய்யவேண்டும் என்று செய்ப வன் என்னை அடைந்து முக்தி அடைவான் என்பதில் சந்தே ஹமே கொள்ளவேண்டியதில்லை.
किञ्च —
மேலும்
न च तस्मान्मनुष्येषु कश्चिन्मे प्रियकृत्तमः ।
भविता न च मे तस्मादन्यः प्रियतरो भुवि ॥ ६९ ॥
ந ச தஸ்மான்மனுஷ்யேஷு கச்சின்மே ப்ரியக்ருத்தம: ।
பவிதா ந ச மே தஸ்மாதன்ய: ப்ரியதரோ புவி ॥ 69 ॥
न च तस्मात् शास्त्रसम्प्रदायकृतः मनुष्येषु मनुष्याणां मध्ये कश्चित् मे मम प्रियकृत्तमः अतिशयेन प्रियकरः, अन्यः प्रियकृत्तमः, नास्त्येव इत्यर्थः वर्तमानेषु । न च भविता भविष्यत्यपि काले तस्मात् द्वितीयः अन्यः प्रियतरः प्रियकृत्तरः भुवि लोकेऽस्मिन् न भविता ॥ ६९ ॥
இந்த கீதா சாஸ்திரத்தின் சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பவர் கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள். மனிதர்களுள் அந்த பக்தர்களைக் காட்டிலும் பிரியமானவர்கள் ஒருவரும் இல்லை. அவர்கள் எனக்கு அளவு கடந்த பிரியமானவர்கள். இக்காலத்தில் மனிதர்களுள் எனக்காக அவர்களைக் காட்டிலும் மிகுந்த பிரியமான காரியத்தைச் செய்பவர்கள் ஒருவரும் இல்லை. அவ்வாறே சென்றகாலத்திலும் இனி வரும் காலத்திலும் இதை விட மிகப் பிரியமான காரியம் மற்றொன்று இல்லை.
योऽपि —
மற்றும் எவன்-
अध्येष्यते च य इमं धर्म्यं संवादमावयोः ।
ज्ञानयज्ञेन तेनाहमिष्टः स्यामिति मे मतिः ॥ ७० ॥
அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாதமாவயோ: ।
ஞானயக்ஞேன தேனாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி: ॥ 70 ॥
अध्येष्यते च पठिष्यति यः इमं धर्म्यं धर्मादनपेतं संवादरूपं ग्रन्थं आवयोः, तेन इदं कृतं स्यात् । ज्ञानयज्ञेन — विधिजपोपांशुमानसानां यज्ञानां ज्ञानयज्ञः मानसत्वात् विशिष्टतमः इत्यतः तेन ज्ञानयज्ञेन गीताशास्त्रस्य अध्ययनं स्तूयते ।
எவன் ஒருவன் நம் இருவரின் சம்வாத ரூபமான இந்த கீதா சாஸ்திரத்தைப் படிக்கிறானோ அவன் ஞானயக்ஞத்தைச் செய்த வன் ஆகிறான். விதியக்ஞம், ஜப யக்ஞம், உபாம்சு யக்ஞம், மானச யக்ஞம் ஆகிய இந்த நான்கு யக்ஞத்தைக் காட்டிலும் ஞானயக்ஞ மானது சிறப்பானது. ஆகையால் அந்த ஞானயக்ஞத்திற்கு சம மான கீதா சாஸ்திரத்தைப் படிப்பது போற்றப்படுகிறது.
விதியக்ஞம்- சரீரத்தால் செய்யப்படும் ப்ரஹ்மயக்ஞாதிகள் ஜபயக்ஞம் - சப்தமிட்டு உச்சரிக்கப்படும் பாராயணாதிகள் உபாம்சுயக்ஞம் - பிறர்க்குக் கேளாதபடி வாய்க்குள்ளாகவே உச்சரித்தல்
மானஸயக்ஞம் - மனதினால் தியானித்தல்
फलविधिरेव वा, देवतादिविषयज्ञानयज्ञफलतुल्यम् अस्य फलं भवतीति ।
அல்லது பலனை விதிப்பதாகவே ஆகும் எனில், தேஹாதி விஷய ரூப ஞான யக்ஞத்தின் பலனிற்குச் சமமானது இந்த (கீதா சாஸ்திரத்தின்) பலனாகும்.
तेन अध्ययनेन अहम् इष्टः पूजितः स्यां भवेयम् इति मे मम मतिः निश्चयः ॥ ७० ॥
இதைப் படிப்பதால் (அத்யயனம் செய்வதால்) நான் (பகவான்) பூஜிக்கப்பட்டவனாக ஆவேன் என்பது என்னுடைய கருத்தாகும்.
अथ श्रोतुः इदं फलम् —
அவ்வாறே கேட்பவனுக்கும் பலன் கிடைக்கிறது.
श्रद्धावाननसूयश्च शृणुयादपि यो नरः ।
सोऽपि मुक्तः शुभांल्लोकान्प्राप्नुयात्पुण्यकर्मणाम् ॥ ७१ ॥
ச்ரத்தாவானனஸூயச்ச ச்ருணுயாதபி யோ நர: ।
ஸோஅபி முக்த: சுபாம்ல்லோகான்ப்ராப்நுயாத்புண்யகர்ம ணாம் ॥ 71 ॥
श्रद्धावान् श्रद्दधानः अनसूयश्च असूयावर्जितः सन् इमं ग्रन्थं शृणुयादपि यो नरः, अपिशब्दात् किमुत अर्थज्ञानवान् , सोऽपि पापात् मुक्तः शुभान् प्रशस्तान् लोकान् प्राप्नुयात् पुण्यकर्मणाम् अग्निहोत्रादिकर्मवताम् ॥ ७१ ॥
சிரத்தையுடனும் அசூசை அற்றும் இருந்துகொண்டு இந்த கீதா சாஸ்திரத்தைக் கேட்பவன் பாபத்திலிருந்து விடுபட்டு அக்னி ஹோத்திரம் முதலிய புண்ய கர்மாக்களைச் செய்பவர்கள் அடையும் சுபகரமானதும், போற்றத்தக்கதுமான லோகங்களை அடைவான்.
शिष्यस्य शास्त्रार्थग्रहणाग्रहणविवेकबुभुत्सया पृच्छति । तदग्रहणे ज्ञाते पुनः ग्राहयिष्यामि उपायान्तरेणापि इति प्रष्टुः अभिप्रायः ।
சிஷ்யன் சாஸ்திரத்தின் அர்த்தத்தை புரிந்துகொண்டானா இல் லையா என்று அறிவதற்கு இச்சித்தவராய் பகவான் இவ்வாறு கேட் கிறார். அவன் புரிந்துகொள்ளவில்லை என்று தெரிந்தால் வேறு விதமாக (உபாயத்தால்) புரியவைக்க வேண்டும் என்பது கேட்பவ ருடைய அபிப்பிராயம் ஆகும்.
यत्नान्तरं च आस्थाय शिष्यस्य कृतार्थता कर्तव्या इति आचार्यधर्मः प्रदर्शितो भवति —
வேறு வகை முயற்சியினாலாவது சிஷ்யனை புரிய வைத்து க்ருதார்த்தன் ஆக்கவேண்டியது குருவினுடைய (ஆசாரியருடை ய) தர்மம் என்று காண்பிக்கப்பட்டதாகிறது.
कच्चिदेतच्छ्रुतं पार्थ त्वयैकाग्रेण चेतसा ।
कच्चिदज्ञानसंमोहः प्रणष्टस्ते धनञ्जय ॥ ७२ ॥
கச்சிதேதச்ச்ருதம் பார்த த்வயைகாக்ரேண சேதஸா ।
கச்சிதக்ஞானஸம்மோஹ: ப்ரநஷ்டஸ்தே தனஞ்ஜய ॥ 72 ॥
कच्चित् किम् एतत् मया उक्तं श्रुतं श्रवणेन अवधारितं पार्थ, त्वया एकाग्रेण चेतसा चित्तेन ? किं वा अप्रमादतः ।
ஹே பார்த்த! என்னால் உபதேசிக்கப்பட்ட இந்த சாஸ்திரத்தை ஏகாக்கிர சித்தத்துடன் கேட்டாயா? கேட்டு புத்தியில் ஸ்திரப்படுத் தினாயா? அல்லது பிரமாதத்தை அடைந்தாயா?
कच्चित् अज्ञानसंमोहः अज्ञाननिमित्तः संमोहः अविविक्तभावः अविवेकः स्वाभाविकः किं प्रणष्टः ? यदर्थः अयं शास्त्रश्रवणायासः तव, मम च उपदेष्टृत्वायासः प्रवृत्तः, ते तुभ्यं हे धनञ्जय ॥ ७२ ॥
ஹே தனஞ்ஜய! உன்னுடைய அக்ஞானத்தினால் உண்டான மோஹம் அதாவது ஸ்வபாவிகமான மோஹம் அல்லது சித்தத் தின் மூடத்தன்மை முற்றிலும் நஷ்ட்டமாகிவிட்டதா? அதற்கா கவே இந்த சாஸ்திரத்தைக் கேட்பதினால் உண்டாகும் சிரமமும் எனக்கு உபதேசம் செய்ததால் ஏற்பட்ட சிரமமும் ஏற்பட்டது.
अर्जुन उवाच —
அர்ஜுனன் கூறினான்
नष्टो मोहः स्मृतिर्लब्धा त्वत्प्रसादान्मयाच्युत ।
स्थितोऽस्मि गतसन्देहः करिष्ये वचनं तव ॥ ७३ ॥
நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதான்மயாச்யுத ।
ஸ்திதோஅஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசனம் தவ ॥ 73 ॥
नष्टः मोहः अज्ञानजः समस्तसंसारानर्थहेतुः, सागर इव दुरुत्तरः । स्मृतिश्च आत्मतत्त्वविषया लब्धा, यस्याः लाभात् सर्वहृदयग्रन्थीनां विप्रमोक्षः ; त्वत्प्रसादात् तव प्रसादात् मया त्वत्प्रसादम् आश्रितेन अच्युत ।
ஹே அச்யுத! என்னுடைய அக்ஞானத்தினால் உண்டான மோஹமானது எல்லா சம்சார ரூப அநர்த்தங்களுக்கும் காரண மாய் இருந்தது. அதைக் கடப்பது கடலைத் தாண்டுவது போல் மிக வும் கடினமானது. அந்த அக்ஞான மோஹமானது நஷ்ட்டமாகி விட்டது. தங்களுடைய கருணையினால் ஆத்மதத்துவ விஷ யத்தை அடைந்தேன். அதை அடைந்ததால் எல்லா முடிச்சுகளிலி ருந்து (சந்தேஹங்கள் என்னும் முடிச்சிலிருந்து) விடுபட்டேன். உன்னுடைய பிரசாதத்தை ஆச்ரயித்தினாலேயே பெறப்பட்டேன்.
अनेन मोहनाशप्रश्नप्रतिवचनेन सर्वशास्त्रार्थज्ञानफलम् एतावदेवेति निश्चितं दर्शितं भवति, यतः ज्ञानात् मोहनाशः आत्मस्मृतिलाभश्चेति ।
மோஹ நாசத்தின் விஷயமாக உண்டான கேள்வி, பதில் மூல மாக அக்ஞானத்தினால் உண்டான மோஹத்தின் நாசமும், ஆத்ம விஷயத்தின் அடைவும் திடமான நிச்சயத்தால் காண்பிக்கப்பட்டது. இதுவே எல்லா சாஸ்திரங்களின் அர்த்த ஞானத்தின் பலனாகும்.
तथा च श्रुतौ ‘अनात्मवित् शोचामि’ (छा. उ. ७ । १ । ३) इति उपन्यस्य आत्मज्ञानेन सर्वग्रन्थीनां विप्रमोक्षः उक्तः ।
அவ்வாறே சுருதியிலும் அநாத்மவித் சோசாமி = நான் ஆத் மாவை அறியாததினால் சோகத்தை அடைகிறேன் என்று கூறி அதை ஆத்மக்ஞானத்தினால் எல்லா முடிச்சுகளையும் நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பித்யதே ஹ்ருதயக்ரந்தி: = ஹ்ருதய முடிச்சானது நஷ்ட்டமா கிறது என்றும், தத்ர கோ மோஹ: க: சோக ஏகத்வமநுபச்யத: : அங்கு எல்லாம் ஒன்றாகவே அனுபவிப்பவனுக்கு எவ்வாறு மோஹமோ, சோகமோ ஏற்படும்? என்று உபநிஷத் மந்திரங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது.
अथ इदानीं त्वच्छासने स्थितः अस्मि गतसन्देहः मुक्तसंशयः । करिष्ये वचनं तव । अहं त्वत्प्रसादात् कृतार्थः, न मे कर्तव्यम् अस्ति इत्यभिप्रायः ॥ ७३ ॥
இப்பொழுது உங்களுடைய ஆக்ஞைப்படி (கட்டளைப்படி) இருக்கின்றேன். எனக்கு சந்தேஹம் நீங்கிவிட்டது. நீங்கள் கூறிய படி செய்கிறேன். நான் உங்களுடைய பிரசாதத்தால் கிருதார்த்தன் ஆகிவிட்டேன். எனக்கு செய்யவேண்டியது ஒன்றும் இல்லை என் பது அபிப்பிராயம்.
परिसमाप्तः शास्त्रार्थः । अथ इदानीं कथासम्बन्धप्रदर्शनार्थं सञ्जयः उवाच —
சாஸ்திர அர்த்தமானது முடிவிற்கு வந்தது. ஆகையால் இப் பொழுது கதையின் சம்பந்தத்தை காண்பிக்கும் பொருட்டு சஞ்ச யன் கூறினார்-
सञ्जय उवाच —
சஞ்சயன் கூறுகிறார்-
इत्यहं वासुदेवस्य पार्थस्य च महात्मनः ।
संवादमिममश्रौषमद्भुतं रोमहर्षणम् ॥ ७४ ॥
இத்யஹம் வாஸுதேவஸ்ய பார்தஸ்ய ச மஹாத்மன: ।
ஸம்வாதமிமமச்ரௌஷமத்புதம் ரோமஹர்ஷணம் ॥ 74 ॥
इति एवम् अहं वासुदेवस्य पार्थस्य च महात्मनः संवादम् इमं यथोक्तम् अश्रौषं श्रुतवान् अस्मि अद्भुतम् अत्यन्तविस्मयकरं रोमहर्षणं रोमाञ्चकरम् ॥ ७४ ॥
இவ்வாறு மஹாத்மாக்களான வாசுதேவருடையதும், அர்ஜு னனுடையதும் ஆன சம்வாதத்தை எவ்வாறு உரைக்கப்பட்டதோ அவ்வாறு கேட்டு மிகவும் ஆச்சர்யப்பட்டு மயிர்கூச்சல் உடைய வனாக நான் இருக்கிறேன்.
तं च इमम् —
அதையே மேலும்
व्यासप्रसादाच्छ्रुतवानिमं गुह्यतमं परम् ।
योगं योगेश्वरात्कृष्णात्साक्षात्कथयतः स्वयम् ॥ ७५ ॥
வ்யாஸப்ரஸாதச்ச்ருதவானேகுஹ்யமஹம் பரம் ।
யோகம் யோகேச்வராத்க்ருஷ்ணாத்ஸாக்ஷாத்கதயத: ஸ்வயம் ॥ 75 ॥
व्यासप्रसादात् ततः दिव्यचक्षुर्लाभात् श्रुतवान् इमं संवादं गुह्यतमं परं योगम् , योगार्थत्वात् ग्रन्थोऽपि योगः, संवादम् इमं योगमेव वा योगेश्वरात् कृष्णात् साक्षात् कथयतः स्वयम् , न परम्परया ॥ ७५ ॥
வியாசருடைய கிருபையால் திவ்யமான கண்களைப் பெற்று இந்த சிறந்த ரஹஸ்யமான சம்வாதத்தையும் யோகத்தையும் கேட் டேன் அல்லது இந்த சம்வாதமே யோகமாகும். இந்த சம்வாத ரூப யோகத்தை யோகேச்வரராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து நான் தானே நேரே கூறக்கேட்டேன். பரம்பரையாக அல்ல.
राजन् संस्मृत्य संस्मृत्य संवादमिममद्भुतम् ।
केशवार्जुनयोः पुण्यं हृष्यामि च मुहुर्मुहुः ॥ ७६ ॥
ராஜன்ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ஸம்வாதமிமமத்புதம் ।
கேசவார்ஜுனயோ: புண்யம் ஹ்ருஷ்யாமி ச முஹுர்முஹு: ॥ 76 ॥
हे राजन् धृतराष्ट्र, संस्मृत्य संस्मृत्य प्रतिक्षणं संवादम् इमम् अद्भुतं केशवार्जुनयोः पुण्यम् इमं श्रवणेनापि पापहरं श्रुत्वा हृष्यामि च मुहुर्मुहुः प्रतिक्षणम् ॥ ७६ ॥
ஹே ராஜா த்ருதராஷ்ட்ரா! கேசவ அர்ஜுனர்களுடைய பவித்திரமான சம்வாதத்தைக் கேட்டதாலேயே (சிரவணம் செய்த தாலேயே) பாபங்களைப் போக்கக்கூடியது. அதை அடிக்கடி ஒவ்வொரு க்ஷணமும் நினைத்து ஆனந்தம் அடைகிறேன்.
तच्च संस्मृत्य संस्मृत्य रूपमत्यद्भुतं हरेः ।
विस्मयो मे महान्राजन् हृष्यामि च पुनः पुनः ॥ ७७ ॥
தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபமத்யத்புதம் ஹரே: ।
விஸ்மயோ மே மஹான்ராஜன்ஹ்ருஷ்யாமி ச புன: புன: ॥ 77 ॥
तच्च संस्मृत्य संस्मृत्य रूपम् अत्यद्भुतं हरेः विश्वरूपं विस्मयो मे महान् राजन् , हृष्यामि च पुनः पुनः ॥ ७७ ॥
அவ்வாறே ஹே ராஜன்!ஹரியினுடைய அத்புதமான விச்வ ரூபத்தை நினைத்து நினைத்து ஆச்சரியப்படுகிறேன். அவ்வாறே மறுபடியும் மறுபடியும் நினைத்து ஆனந்தத்தை அடைகிறேன்.
किं बहुना —
அதிகம் கூறுவதால் என்ன -
यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः ।
तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम ॥ ७८ ॥
யத்ர யோகேச்வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ தனுர்தர: ।
தத்ர ஸ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம ॥ 78 ॥
यत्र यस्मिन् पक्षे योगेश्वरः सर्वयोगानाम् ईश्वरः, तत्प्रभवत्वात् सर्वयोगबीजस्य, कृष्णः, यत्र पार्थः यस्मिन् पक्षे धनुर्धरः गाण्डीवधन्वा, तत्र श्रीः तस्मिन् पाण्डवानां पक्षे श्रीः विजयः, तत्रैव भूतिः श्रियो विशेषः विस्तारः भूतिः, ध्रुवा अव्यभिचारिणी नीतिः नयः, इत्येवं मतिः मम इति ॥ ७८ ॥
எந்த பக்கத்தில் யோகேச்வரரான கிருஷ்ணர் இருக்கிறாரோ, அவ்வாறே காண்டீபம் என்னும் வில்லைத் தாங்கிய அர்ஜுனன் (பார்த்தன்) இருக்கிறானோ அந்த பாண்டவர்களுடைய பக்ஷத்தில் ஜெயம் உண்டாகும் அவ்வாறே சிறப்பான விபூதிகளும் விஸ்தார மாக இருக்கும். அவ்வாறே மாறுபாடற்றநீதியும் நிலைத்திருக்கும்.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये अष्टादशोऽध्यायः ॥
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே மோக்ஷஸந்யாஸயோகோ நாம் அஷ்டாதசோத்யாய:

@2023-26 Sanatana Sampatti Foundation (Regd.)