द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

श्रीमद्भगवद्गीताभाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

ஶ்ரீமத்பகவத்கீதாபாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

ओं नारायणः परोऽव्यक्तादण्डमव्यक्तसम्भवम् ।
अण्डस्यान्तस्त्विमे लोकाः सप्तद्वीपा च मेदिनी ॥

स भगवान् सृष्ट्वेदं जगत् , तस्य च स्थितिं चिकीर्षुः, मरीच्यादीनग्रे सृष्ट्वा प्रजापतीन् , प्रवृत्तिलक्षणं धर्मं ग्राहयामास वेदोक्तम् ।
அந்த பகவான் ஆனவர் இந்த ஜகத்தை ச்ருஷ்டி செய்து அதன் ஸ்திதியில் இச்சை உடையவராய் முதலில் மரிசீ முதலிய ப்ரஜா பதிகளை ச்ருஷ்டித்து அவர்களை வேதத்தில் கூறப்பட்ட ப்ரவ்ருத்தி லக்ஷணதர்மத்தை கடைபிடிக்கும்படி செய்தார்.
ततोऽन्यांश्च सनकसनन्दनादीनुत्पाद्य, निवृत्तिलक्षणं धर्मं ज्ञानवैराग्यलक्षणं ग्राहयामास ।
அதன் பின்னர் ஸனக ஸனந்தநாதிகளை ச்ருஷ்டி செய்து நிவ்ருத்திலக்ஷணமான ஞானவைராக்யலக்ஷணதர்மத்தை கடைபிடிக்கச் செய்தார்.
द्विविधो हि वेदोक्तो धर्मः, प्रवृत्तिलक्षणो निवृत्तिलक्षणश्च ।
வேதத்தில் கூறப்பட்டுள்ள தர்மமானது ப்ரவ்ருத்திலக்ஷணம், நிவ்ருத்திலக்ஷணம் என்று இருவிதமாக இருக்கின்றது.
जगतः स्थितिकारणम् । प्राणिनां साक्षादभ्युदयनिःश्रेयसहेतुर्यः स धर्मो ब्राह्मणाद्यैर्वर्णिभिराश्रमिभिश्च श्रेयोर्थिभिः अनुष्ठीयमानो ।
(வேதத்தில் கூறிய ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி என்னும் இருவகை தர்மமே) உலகத்தை நிலைபெறச்செய்கிறது. பிராணிகளுக்கு (ஜீவர்களுக்கு) இகபரலோக ஸுகத்தையும், முக்தியையும் நேரடியாக தருவதான தர்மமே ஸ்ரேயஸ்ஸை (நன்மையை) விரும்பும் பிராமணர் முதலிய வர்ணத்தாராலும் ஆஸ்ரமத்தாராலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
दीर्घेण कालेन । अनुष्ठातॄणां कामोद्भवात् हीयमानविवेकविज्ञानहेतुकेन अधर्मेण अभिभूयमाने धर्मे, प्रवर्धमाने च अधर्मे, जगतः स्थितिं परिपिपालयिषुः स आदिकर्ता नारायणाख्यो विष्णुः भौमस्य ब्रह्मणो ब्राह्मणत्वस्य रक्षणार्थं देवक्यां वसुदेवादंशेन कृष्णः किल सम्बभूव ।
நீண்டகாலம் அனுஷ்டானம் செய்பவர்களுக்கு காமம் உண்டாகி விவேக விக்ஞானத்தின் தேய்வின் காரணமான அதர்மத்தினால் தர்ம மானது நலிந்து அதர்மமானது விருத்தி அடையும் ஸமயத்தில் ஜகத் ஸ்திதியை நன்றாக ரக்ஷிக்கும் பொருட்டு அந்த ஆதி கர்த்தா வான நாராயணன் எனும் விஷ்ணுவானாவர் இந்த பூமியில் உள்ள பிராமணர்களின் பிராமணத்துவத்தை ரக்ஷிக்கும் பொருட்டு தேவகியின் இடத்தில் வசுதேவருடைய அம்சமாக கிருஷ்ணர் அவதரித்தார் என்பது பிரசித்தம்.
ब्राह्मणत्वस्य हि रक्षणे रक्षितः स्याद्वैदिको धर्मः, तदधीनत्वाद्वर्णाश्रमभेदानाम् ॥
பிராமணத்துவத்தை ரக்ஷிப்பதினாலேயே வைதீகதர்மம் ரக்ஷிக்கப்பட்டதாக ஆகின்றது. ஏனெனில் வர்ணாச்ரமதர்மங்கள் தர்மத்திற்கு அதீனமாக இருக்கின்றது.
स च भगवान् ज्ञानैश्वर्यशक्तिबलवीर्यतेजोभिः सदा सम्पन्नः त्रिगुणात्मिकां स्वां मायां मूलप्रकृतिं वशीकृत्य, अजोऽव्ययो भूतानामीश्वरो नित्यशुद्धबुद्धमुक्तस्वभावोऽपि सन् , स्वमायया देहवानिव जात इव च लोकानुग्रहं कुर्वन् इव लक्ष्यते ।
இந்த பகவான் ஆனவர் ஞானம், ஐச்வர்யம், சக்தி, பலம், வீர்யம், தேஜஸ் இவைகளுடன் எப்பொழுதும் கூடியவராகி முக்குணாத் மகமான வைஷ்ணவீ எனப்படும் தன்னுடைய சுய மாயையான மூலப்ரக்ருதியை வசப்படுத்தி பிறப்பற்றவராயும் அவ்யயமாயும் பூதங் களுக்கெல்லாம் ஈச்வரராயும் நித்ய சுத்த புத்த முக்த ஸ்வபாவமுடை யவராய் இருந்தாலும் தன்னுடைய மாயையினால் தேகம் உடையவர் போலும், பிறந்தவர் போலும், லோகானுக்ரஹம் செய்துகொண்டி ருப்பவராக அறியப்படுகிறார்.
स्वप्रयोजनाभावेऽपि भूतानुजिघृक्षया वैदिकं धर्मद्वयम् अर्जुनाय शोकमोहमहोदधौ निमग्नाय उपदिदेश, गुणाधिकैर्हि गृहीतोऽनुष्ठीयमानश्च धर्मः प्रचयं गमिष्यतीति ।
தனக்கு ஒரு பிரயோஜனம் இல்லாவிடினும் பூதங்களை அனுகிர ஹிக்கும் இச்சையினால் சோகமோஹமாகிய பெருங்கடலில் மூழ்கிய அர்ஜுனனை (நிமித்தமாக வைத்து) இருவித தர்மங்களையும் உபதேசித்தார். அதிக நற்குணமுள்ள புருஷரால் ஏற்றுக்கொள்ளப் பட்டு அனுஷ்டிக்கப்பட்ட தர்மமானது நன்றாக பரவும் என்று உபதேசித்து அருளினார்.
तं धर्मं भगवता यथोपदिष्टं वेदव्यासः सर्वज्ञो भगवान् गीताख्यैः सप्तभिः श्लोकशतैरुपनिबबन्ध ॥
அந்த தர்மத்தை பகவான் எவ்வாறு உபதேசம் செய்தாரோ அவ்வாறே ஸர்வக்ஞரான வ்யாஸபகவான் கீதா என்ற பெயருடன் எழுநூறு ஸ்லோகங்களால் க்ரந்தத்தை அமைத்தார்.
तदिदं गीताशास्त्रं समस्तवेदार्थसारसङ्ग्रहभूतं दुर्विज्ञेयार्थम् ।
அந்த இந்த கீதா சாஸ்திரமானது எல்லாவேதார்த்த ஸாரத்தின் சுருக்கம் ஆகும். அதனால் அதன் அர்த்தத்தை அறிவது மிக்க கடினமாகும்.
तदर्थाविष्करणायानेकैर्विवृतपदपदार्थवाक्यार्थन्यायमपि अत्यन्तविरुद्धानेकार्थवत्वेन लौकिकैर्गृह्यमाणमुपलभ्य अहं विवेकतोऽर्थनिर्धारणार्थं सङ्क्षेपतो विवरणं करिष्यामि ॥
அந்த அர்த்தத்தை வெளிபடுத்துவதற்காக பலரால் பதம், பதார்த்தம், வாக்யார்த்தம், ந்யாயம், முதலியவைகளால் விளக்கப்பட் டிருந்தாலும் உலகத்தவர்கள் அநேக மாறுபட்ட அர்த்தங்கள் உடையதாக கிரஹித்துக்கொண்டார்கள். அவர்களை உத்தேசித்து நான் விவேகத்துடன் கூடிய அர்த்தத்தை நன்றாக நிர்ணயம் செய்யும் பொருட்டு சுருக்கமாக விவரிக்கப்போகிறேன்.
तस्य अस्य गीताशास्त्रस्य सङ्क्षेपतः प्रयोजनं परं निःश्रेयसं सहेतुकस्य संसारस्य अत्यन्तोपरमलक्षणम् । तच्च सर्वकर्मसंन्यासपूर्वकादात्मज्ञाननिष्ठारूपात् धर्मात् भवति ।
சுருங்கக்கூறின் இந்த கீதா சாஸ்திரத்தினுடைய ப்ரயோஜனம் என்னவெனில் ஸம்ஸாரமானது அதன் மூலகாரணத்துடன் நீங்குத லாகிய மோக்ஷம் தான். அது முற்றிலும் ஸர்வகர்ம ஸந்யாஸத்துடன் கூடிய ஆத்மநிஷ்டையாகிய தர்மத்தினால் உண்டாகிறது.
तथा इममेव गीतार्थं धर्ममुद्दिश्य भगवतैवोक्तम् — ‘स हि धर्मः सुपर्याप्तो ब्रह्मणः पदवेदने’ (अश्व. १६ । १२) इति अनुगीतासु ।
அவ்வாறே இந்த கீதார்த்த தர்மத்தை உத்தேசித்தே பகவான் அனுகீதாவில் இவ்வாறு கூறியுள்ளார். அந்த பிரம்மபதத்தில் நிலைபெறுவதற்கு அந்த தர்மமே போதுமானது.
किम् च अन्यदपि उक्तम् —
மேலும் அதே இடத்தில் ஒன்றும் கூறியுள்ளது.
‘नैव धर्मी न चाधर्मी न चैव हि शुभाशुभी । (अश्व. १९ । ७)
‘यः स्यादेकासने लीनस्तूष्णीं किञ्चिदचिन्तयन्’ (अश्व. १९ । १)
எவன் ஏக ஜகத் காரணமாகிய ப்ரம்மத்தில் லயித்து சிறிதும் நினைக்காமல் தூஷ்ணீம் பாவத்தில் (சும்மா இருத்தலே) இருக்கிறானோ அவனுக்கு புண்ணியமுமில்லை பாவமுமில்லை அவைகளின் பலன்களான ஸுக துக்கங்களுமில்லை.
‘ज्ञानं संन्यासलक्षणम्’ (अश्व. ४३ । २६) इति च ।
மேலும் ஞானம் என்பது ஸந்யாஸம் என்றும் கூறப்படுகிறது.
இந்த கீதாசாஸ்திரத்திலும் முடிவில் அர்ஜுனன் பொருட்டு இவ்வாறு கூறப்பட்டது எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டு என் ஒருவனை சரணமடை என்று
अभ्युदयार्थोऽपि यः प्रवृत्तिलक्षणो धर्मो वर्णानाश्रमांश्चोद्दिश्य विहितः, स देवादिस्थानप्राप्तिहेतुरपि सन् , ईश्वरार्पणबुद्ध्या अनुष्ठीयमानः सत्त्वशुद्धये भवति फलाभिसन्धिवर्जितः ।
ஸம்ஸாரத்தின் நன்மைக்காக உள்ள நிலையற்ற பலன்களுடன் கூடியதாயிருக்கும் எந்த ப்ரவ்ருத்தி லக்ஷண தர்மம் வர்ணாச் ரமங்களை உத்தேசித்து விதிக்கப்பட்டதோ அது தேவதாதி ஸ்தானங் களை அடைவதற்கு காரணமாயிருந்தாலும் பலத்தில் இச்சையற்ற ஈச்வரார்ப்பண புத்தியால் அனுஷ்டிக்கப்பட்டால் அந்தக்கரண சுத்தியின் பொருட்டாகிறது.
शुद्धसत्त्वस्य च ज्ञाननिष्ठायोग्यताप्राप्तिद्वारेण ज्ञानोत्पत्तिहेतुत्वेन च निःश्रेयसहेतुत्वमपि प्रतिपद्यते ।
சித்த சுத்தி உடையவனுக்கு ஞான நிஷ்டைக்கு தேவையான தகுதி அடைவதின் மூலமாக ஞான உற்பத்திக்கு காரணமாவதால் (அந்த ப்ரவ்ருத்தி தர்மமானது) மேலான மோக்ஷ பலத்திற்கு காரணத் தன்மையை அடைகின்றது.
அவ்வாறே இந்த அர்த்தத்தை கருதியே இனி கூறப்போகிறார். கர்மங்களை ப்ரம்மத்தினிடத்தில் அர்ப்பணித்து, யோகிகள் சித்தசுத்தியின் பொருட்டு பற்றற்று கர்மங்களை செய்கிறார்கள் என்று
इमं द्विप्रकारं धर्मं निःश्रेयसप्रयोजनम् , परमार्थतत्त्वं च वासुदेवाख्यं परं ब्रह्माभिधेयभूतं विशेषतः अभिव्यञ्जयत् विशिष्टप्रयोजनसम्बन्धाभिधेयवद्गीताशास्त्रम् ।
இந்த இருவிதமான தர்மத்திற்கு ப்ரயோஜனமான மேலான மோக்ஷ பலமாகிய வாசுதேவன் எனப்படும் பரப்ரம்ஹ ரூபமான பரமார்த்த தத்துவத்தை விசேஷமாக வெளிப்படுத்துகிற இந்த கீதாசாஸ்த்ரம் அசாதாரண ப்ரயோஜனம், ஸம்பந்தம் மேலும் விஷயத்துடன் கூடியதாயிருக்கிறது.
यतः तदर्थविज्ञाने समस्तपुरुषार्थसिद्धिः, अतः तद्विवरणे यत्नः क्रियते मया ॥
எதனால் அந்த கீதையின் அர்த்தத்தை அறிவதால் எல்லா புருஷார்த்தங்களும் அடையப்படுகிறதோ அதனால் அதை வ்யாக்கியானம் செய்வதற்கு முயற்சி செய்கிறேன்.
धृतराष्ट्र उवाच —
த்ருதராஷ்ட்ர உவாச-
धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः ।
मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय ॥ १ ॥
தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ: ।
மாமகா: பாண்டவாச்சைவ கிமகுர்வத ஸஞ்சய ॥ 1 ॥
सञ्जय उवाच —
ஸஞ்ஜய உவாச-
दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा ।
आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत् ॥ २ ॥
த்ருஷ்ட்வா து பாண்டவானீகம் வ்யூடம் துர்யோதனஸ்ததா ।
ஆசார்யமுபஸங்கம்ய ராஜா வசனமப்ரவீத்: ॥ 2 ॥
पश्यैतां पाण्डुपुत्राणामाचार्य महतीं चमूम् ।
व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता ॥ ३ ॥
பச்யைதாம் பாண்டுபுத்ராணா மாசார்ய மஹதீம் சமூம் ।
வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ சிஷ்யேண தீமதா. ॥ 3 ॥
अत्र शूरा महेष्वासा भीमार्जुनसमा युधि ।
युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः ॥ ४ ॥
அத்ர சூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுனஸமா யுதி ।
யுயுதானோ விராடஸ்ச த்ருபதஸ்ச மஹாரத: ॥ 4 ॥
धृष्टकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् ।
पुरुजित्कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः ॥ ५ ॥
த்ருஷ்டகேதுஸ்சேகிதான: காசிராஜஸ்ச வீர்யவான் ।
புருஜித் குந்திபோஜஸ்ச சைப்யஸ்ச நரபுங்கவ: ॥ 5 ॥
युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् ।
सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः ॥ ६ ॥
யுதாமன்யுஸ்ச விக்ராந்த உத்தமௌஜாஸ்ச வீர்யவான் ।
ஸௌபத்ரோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வ ஏவ மஹாரதா: ॥ 6 ॥
अस्माकं तु विशिष्टा ये तान्निबोध द्विजोत्तम ।
नायका मम सैन्यस्य संज्ञार्थं तान्ब्रवीमि ते ॥ ७ ॥
அஸ்மாகம் து விசிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம ।
நாயகா மம ஸைன்யஸ்ய ஸம்ஞார்த்தம் தான் ப்ரவீமி தே ॥ 7 ॥
भवान्भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः ।
अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिर्जयद्रथः ॥ ८ ॥
பவான் பீஷ்மஸ்ச கர்ணஸ்ச க்ருபஸ்ச ஸமிதிஞ்ஜய: ।
அச்வத்தாமா விகர்ணஸ்ச ஸௌமதத்திஸ்ஜயத்ரத: ॥ 8 ॥
अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः ।
नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः ॥ ९ ॥
அன்யே ச பஹவ: சூரா மதர்த்தே த்யக்தஜீவிதா: ।
நானா ஸஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்தவிசாரதா: ॥ 9 ॥
अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितम् ।
पर्याप्तं त्विदमेतेषां बलं भीमाभिरक्षितम् ॥ १० ॥
அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷி தம் ।
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷி தம்: ॥ 10 ॥
अयनेषु च सर्वेषु यथाभागमवस्थिताः ।
भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि ॥ ११ ॥
அயனேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா ।
பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த: ஸர்வ ஏவ ஹி ॥ 11 ॥
तस्य सञ्जनयन्हर्षं कुरुवृद्धः पितामहः ।
सिंहनादं विनद्योच्चैः शङ्खं दध्मौ प्रतापवान् ॥ १२ ॥
தஸ்ய ஸஞ்ஜனயன் ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ: ।
ஸிம்ஹநாதம் விநத்யோச்சை: சங்கம் தத்மௌ ப்ரதாபவான் ॥ 12 ॥
ततः शङ्खाश्च भेर्यश्च पणवानकगोमुखाः ।
सहसैवाभ्यहन्यन्त स शब्दस्तुमुलोऽभवत् ॥ १३ ॥
தத: சங்காச்ச பேர்யச்ச பணவாநககோமுகா: ।
ஸஹஸைவாப்யஹன்யந்த ஸ சப்தஸ்துமுலோபவத் ॥ 13 ॥
ततः श्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ ।
माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः ॥ १४ ॥
தத: ச்வேதைர்-ஹயைர் யுக்தே மஹதி ஸ்யந்தனே ஸ்திதௌ ।
மாதவ: பாண்டவச்சைவ திவ்யௌ சங்கௌ ப்ரதத்மது: ॥ 14 ॥
पाञ्चजन्यं हृषीकेशो देवदत्तं धनञ्जयः ।
पौण्ड्रं दध्मौ महाशङ्खं भीमकर्मा वृकोदरः ॥ १५ ॥
பாஞ்சஜன்யம் ஹ்ருஷீகேசோ தேவதத்தம் தனஞ்ஜய: ।
பௌண்ட்ரம் தத்மௌ மஹாசங்கம் பீமகர்மா வ்ருகோதர: ॥ 15 ॥
अनन्तविजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः ।
नकुलः सहदेवश्च सुघोषमणिपुष्पकौ ॥ १६ ॥
அனந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ர யுதிஷ்டிர: ।
நகுல: ஸஹதேவச்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ ॥ 16 ॥
काश्यश्च परमेष्वासः शिखण्डी च महारथः ।
धृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजितः ॥ १७ ॥
காச்யச்ச பரமேஷ்வாஸ: சிகண்டீ ச மஹாரத: ।
த்ருஷ்த்டயும்னோ விராடச்ச ஸாத்யகீச்சாபராஜித: ॥ 17 ॥
द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते ।
सौभद्रश्च महाबाहुः शङ्खान्दध्मुः पृथक्पृथक् ॥ १८ ॥
த்ருபதோ த்ரௌபதேயாச்ச ஸர்வச: ப்ருதிவீபதே ।
ஸௌபத்ரச்ச மஹாபாஹு: சங்காந்தத்மு: ப்ருதக் ப்ருதக் ॥ 18 ॥
स घोषो धार्तराष्ट्राणां हृदयानि व्यदारयत् ।
नभश्च पृथिवीं चैव तुमुलो व्यनुनादयन् ॥ १९ ॥
ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயானி வ்யதாரயத் ।
நபச்ச ப்ருதிவீம்சைவ துமுலோ வ்யனுனாதயன் ॥ 19 ॥
अथ व्यवस्थितान्दृष्ट्वा धार्तराष्ट्रान्कपिध्वजः ।
प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः ॥ २० ॥
அத வ்யவஸ்திதான் த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ரான்கபித்வஜ: ।
ப்ரவ்ருத்தே சஸ்த்ரஸம்பாதே தனுருத்யம்ய பாண்டவ: ॥ 20 ॥
हृषीकेशं तदा वाक्यमिदमाह महीपते ।
अर्जुन उवाच —
सेनयोरुभयोर्मध्ये रथं स्थापय मेऽच्युत ॥ २१ ॥
ஹ்ருஷீகேசம் ததா வாக்யமிதமாஹமஹீபதே ।
அர்ஜுன உவாச —
ஸேனயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மேச்யுத ॥ 21 ॥
यावदेतान्निरीक्षेऽहं योद्धुकामानवस्थितान् ।
कैर्मया सह योद्धव्यमस्मिन्रणसमुद्यमे ॥ २२ ॥
யாவதேதான்னிரீக்ஷேஅஹம் யோத்துகாமானவஸ்திதான் ।
கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மின் ரணஸமுத்யமே ॥ 22 ॥
योत्स्यमानानवेक्षेऽहं य एतेऽत्र समागताः ।
धार्तराष्ट्रस्य दुर्बुद्धेर्युद्धे प्रियचिकीर्षवः ॥ २३ ॥
யோத்ஸ்யமானானவேக்ஷேஅஹம் ய ஏதேஅத்ர ஸமாகதா: ।
தார்த்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்: யுத்தே ப்ரியசிகீர்ஷவ: ॥ 23 ॥
सञ्जय उवाच —
சஞ்ஜய உவாச
एवमुक्तो हृषीकेशो गुडाकेशेन भारत ।
सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम् ॥ २४ ॥
ஏவமுக்தோ ஹ்ருஷிகேசோ குடாகேசேன பாரத ।
ஸேனயோருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம் ॥ 24 ॥
भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च महीक्षिताम् ।
उवाच पार्थ पश्यैतान्समवेतान्कुरूनिति ॥ २५ ॥
பீஷ்மத்ரோணப்ரமுகத: ஸர்வேஷாம் ச மஹீக்ஷி தாம் ।
உவாச பார்த்த பச்யைதான் ஸமவேதான் குரூநிதி ॥ 25 ॥
तत्रापश्यत्स्थितान्पार्थः पितॄनथ पितामहान् ।
आचार्यान्मातुलान्भ्रातॄन्पुत्रान्पौत्रान्सखींस्तथा ॥ २६ ॥
தத்ராபச்யத்ஸ்திதான் பார்த்த: பித்ரூனத பிதாமஹான் ।
ஆசார்யான் மாதுலோன் ப்ராத்ரூன் புத்ரான் பௌத்ரான் ஸகீம்ஸ்ததா ॥ 26 ॥
श्वशुरान्सुहृदश्चैवसेनयोरुभयोरपि ।
तान्समीक्ष्य स कौन्तेयः सर्वान्बन्धूनवस्थितान् ॥ २७ ॥
ச்வசுரான் ஸுஹ்ருதச் சைவ ஸேனயோ ருபயோரபி ।
தான்ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய: ஸர்வான்பந்தூனவஸ்திதான் ॥ 27 ॥
कृपया परयाविष्टो विषीदन्निदमब्रवीत् ।
दृष्ट्वेमान्स्वजनान्कृष्ण युयुत्सून्समुपस्थितान् ॥ २८ ॥
க்ருபயா பரயாவிஷ்டோ விஷீதன்னிதமப்ரவீத் ।
த்ருஷ்ட்வேமம் ஸ்வஜனம் க்ருஷ்ண யுயுத்ஸும் ॥ 28 ॥
सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति ।
वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते ॥ २९ ॥
ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிசுஷ்யதி ।
வேபதுச்ச சரீரே மே ரோமஹர்ஷச்ச ஜாயதே ॥ 29 ॥
गाण्डीवं स्रंसते हस्तात्त्वक्चैव परिदह्यते ।
न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः ॥ ३० ॥
காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரிதஹ்யதே ।
ந ச சக்னோம்யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மன: ॥ 30 ॥
निमित्तानि च पश्यामि विपरीतानि केशव ।
न च श्रेयोऽनुपश्यामि हत्वा स्वजनमाहवे ॥ ३१ ॥
நிமித்தானி ச பச்யாமி விபரீதானி கேசவ ।
ந ச ச்ரேயோஅனுபச்யாமி ஹத்வா ஸ்வஜனமாஹவே ॥ 31 ॥
न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च ।
किं नो राज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा ॥ ३२ ॥
ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகானி ச ।
கிம் நோ ராஜ்யேன கோவிந்த கிம் போகைர் ஜீவிதேன வா ॥ 32 ॥
येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगाः सुखानि च ।
त इमेऽवस्थिता युद्धे प्राणांस्त्यक्त्वा धनानि च ॥ ३३ ॥
யேஷாமர்தே காங்க்ஷி தம் நோ ராஜ்யம் போகா: ஸுகானி ச ।
த இமேஅவஸ்திதா யுத்தே ப்ராணாம்ஸ் த்யக்த்வா தனானி ச ॥ 33 ॥
आचार्याः पितरः पुत्रास्तथैव च पितामहाः ।
मातुलाः श्वशुराः पौत्राः स्यालाः सम्बन्धिनस्तथा ॥ ३४ ॥
ஆசார்யா: பிதர: புத்ராஸ்ததைவ ச பிதாமஹா: ।
மாதுலா: ஸ்வசுரா: பௌத்ரா:ஸ்யாலா: ஸம்பந்தினஸ்ததா ॥ 34 ॥
एतान्न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन ।
अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किं नु महीकृते ॥ ३५ ॥
ஏதாந்ந ஹந்துமிச்சாமி க்னதோஅபி மதுஸூதன ।
அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ: கிம் நு மஹீக்ருதே ॥ 35 ॥
निहत्य धार्तराष्ट्रान्नः का प्रीतिः स्याज्जनार्दन ।
पापमेवाश्रयेदस्मान्हत्वैतानाततायिनः ॥ ३६ ॥
நிஹத்ய தார்தராஷ்ட்ரான்ன: கா ப்ரீதி: ஸ்யாஜ்ஜநார்த்தன ।
பாபமேவாச்ரயேதஸ்மாந் ஹத்வைதானா-ததாயின: ॥ 36 ॥
तस्मान्नार्हा वयं हन्तुं धार्तराष्ट्रान्सबान्धवान् ।
स्वजनं हि कथं हत्वा सुखिनः स्याम माधव ॥ ३७ ॥
தஸ்மான்னார்ஹாவயம்ஹந்தும் தார்தராஷ்ட்ரான் ஸ்வபாந்தவான் ।
ஸ்வஜனம் ஹி கதம் ஹத்வா ஸுகின: ஸ்யாம மாதவ ॥ 37 ॥
यद्यप्येते न पश्यन्ति लोभोपहतचेतसः ।
कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे च पातकम् ॥ ३८ ॥
யத்யப்யேதே ந பச்யந்தி லோபோபஹதசேதஸ: ।
குலக்ஷயக்ருதம் தோஷம் மித்ரத்ரோஹே ச பாதகம் ॥ 38 ॥
कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुम् ।
कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन ॥ ३९ ॥
கதம் ந ஜ்ஞேயமஸ்மாபி: பாபாதஸ்மாந்நிவர்திதும் ।
குலக்ஷயக்ருதம் தோஷம் ப்ரபச்யத்பிர் ஜனார்த்தன ॥ 39 ॥
कुलक्षये प्रणश्यन्ति कुलधर्माः सनातनाः ।
धर्मे नष्टे कुलं कृत्स्नमधर्मोऽभिभवत्युत ॥ ४० ॥
குலக்ஷயே ப்ரணஸ்யந்தி குலதர்மா: ஸநாதனா: ।
தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்னமதர்மோ அபிபவத்யுத ॥ 40 ॥
अधर्माभिभवात्कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः ।
स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायते वर्णसङ्करः ॥ ४१ ॥
அதர்மாபிபவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய: ।
ஸ்த்ரீஷு துஷ்டாஷுவார்ஷ்ணேய ஜாயதே வர்ணசங்கர ॥ 41 ॥
सङ्करो नरकायैव कुलघ्नानां कुलस्य च ।
पतन्ति पितरो ह्येषां लुप्तपिण्डोदकक्रियाः ॥ ४२ ॥
ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச ।
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா: ॥ 42 ॥
दोषैरेतैः कुलघ्नानां वर्णसङ्करकारकैः ।
उत्साद्यन्ते जातिधर्माः कुलधर्माश्च शाश्वताः ॥ ४३ ॥
தோஷைரேதை: குலக்நாநாம் வர்ணஸங்கரகாரகை: ।
உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா: குலதர்மாச்ச சாச்வதா: ॥ 43 ॥
उत्सन्नकुलधर्माणां मनुष्याणां जनार्दन ।
नरके नियतं वासो भवतीत्यनुशुश्रुम ॥ ४४ ॥
உத்ஸந்நகுலதர்மாணாம் மனுஷ்யானாம் ஜநார்தன ।
நரகே நியதம் வாஸோ பவதீத்யனுசுஷ்ரும ॥ 44 ॥
अहो बत महत्पापं कर्तुं व्यवसिता वयम् ।
यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यताः ॥ ४५ ॥
அஹோ பத மஹத்பாபம் கர்த்தும் வ்யவஸிதா வயம் ।
யத்ராஜ்யஸுகலோபேன ஹந்தும் ஸ்வஜனமுத்யதா: ॥ 45 ॥
यदि मामप्रतीकारमशस्त्रं शस्त्रपाणयः ।
धार्तराष्ट्रा रणे हन्युस्तन्मे क्षेमतरं भवेत् ॥ ४६ ॥
யதி மாமப்ரதீகாரமசஸ்த்ரம் சஸ்த்ரபாணய: ।
தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே க்ஷேமதரம் பவேத் ॥ 46 ॥
सञ्जय उवाच —
ஸஞ்ஜய உவாச-
एवमुक्त्वार्जुनः सं‍ख्ये रथोपस्थ उपाविशत् ।
विसृज्य सशरं चापं शोकसंविग्नमानसः ॥ ४७ ॥
ஏவமுக்த்வார்ஜுன: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிசத் ।
விஸ்ருஜ்ய ஸசரம் சாபம் சோகஸம்விக்னமாநஸ: ॥ 47 ॥
इति श्रीमहाभारते शतसाहस्र्यां संहितायां वैयासिक्यां भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे अर्जुनविषादयोगो नाम प्रथमोऽध्यायः ॥
सञ्जय उवाच —
ஸஞ்ஜய உவாச-
तं तथा कृपयाविष्टमश्रुपूर्णाकुलेक्षणम् ।
विषीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदनः ॥ १ ॥
தம் ததா க்ருபயாவிஷ்டமச்ருபூர்ணாகுலேக்ஷணம் ।
விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதன: ॥ 1 ॥
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச
कुतस्त्वा कश्मलमिदं विषमे समुपस्थितम् ।
अनार्यजुष्टमस्वर्ग्यमकीर्तिकरमर्जुन ॥ २ ॥
குதஸ்த்வா கச்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம் ।
அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந ॥ 2 ॥
क्लैब्यं मा स्म गमः पार्थ नैतत्त्वय्युपपद्यते ।
क्षुद्रं हृदयदौर्बल्यं त्यक्त्वोत्तिष्ठ परन्तप ॥ ३ ॥
க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த நைதத்த்வய்யுபபத்யதே ।
க்ஷுத்ரம் ஹ்ருதயதௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப ॥ 3 ॥
अर्जुन उवाच —
அர்ஜுன உவாச
कथं भीष्ममहं सं‍ख्ये द्रोणं च मधुसूदन ।
इषुभिः प्रतियोत्स्यामि पूजार्हावरिसूदन ॥ ४ ॥
கதம் பீஷ்மமஹம் ஸங்க்யே த்ரோணம் ச மதுஸூதந ।
இஷுபி: ப்ரதி யோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதன ॥ 4 ॥
गुरूनहत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं भैक्षमपीह लोके ।
हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान्रुधिरप्रदिग्धान् ॥ ५ ॥
குரூநஹத்வா ஹி மஹாநுபாவாஞ்ச்ரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே ।
ஹத்வார்தகாமாம்ஸ்து குரூநிஹைவ புஞ்ஜீய போகான்ருதிரப்ரதிக்தான் ॥ 5 ॥
न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः ।
यानेव हत्वा न जिजीविषामस्तेऽवस्थिताः प्रमुखे धार्तराष्ट्राः ॥ ६ ॥
ந சைதத்வித்ம: கதரந்நோ கரீயோ யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு: ।
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ்தேஅவஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா: ॥ 6 ॥
कार्पण्यदोषोपहतस्वभावः पृच्छामि त्वां धर्मसंमूढचेताः ।
यच्छ्रेयः स्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम् ॥ ७ ॥
கார்பண்யதோஷோபஹதஸ்வபாவ: ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா: ।
யச்ச்ரேய: ஸ்யாந்நிச்சிதம் ப்ரூஹி தந்மே சிஷ்யஸ்தேஅஹம் சாதி மாம் த்வாம் ப்ரபந்நம் ॥ 7 ॥
न हि प्रपश्यामि ममापनुद्याद्यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् ।
अवाप्य भूमावसपत्नमृद्धं राज्यं सुराणामपि चाधिपत्यम् ॥ ८ ॥
ந ஹி ப்ரபச்யாமி மமாபனுத்யாத்யச்சோகமுச்சோஷண மிந்த்ரியாணாம் ।
அவாப்ய பூமாவஸபத்னம்ருத்தம் ராஜ்யம் ஸுராணமபி சாதிபத்யம் ॥ 8 ॥
सञ्जय उवाच —
ஸஞ்ஜய உவாச
एवमुक्त्वा हृषीकेशं गुडाकेशः परन्तपः ।
न योत्स्य इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभूव ह ॥ ९ ॥
ஏவமுக்த்வா ஹ்ருஷீகேசம் குடாகேச: பரந்தப ।
ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ ॥ 9 ॥
तमुवाच हृषीकेशः प्रहसन्निव भारत ।
सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः ॥ १० ॥
தமுவாச ஹ்ருஷீகேச: ப்ரஹஸந்நிவ பாரத: ।
ஸேநயோருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வச: ॥ 10 ॥
अत्र ‘दृष्ट्वा तु पाण्डवानीकम्’ (भ. गी. १ । २) इत्यारभ्य यावत् ‘न योत्स्य इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभूव ह’ (भ. गी. २ । ९) इत्येतदन्तः प्राणिनां शोकमोहादिसंसारबीजभूतदोषोद्भवकारणप्रदर्शनार्थत्वेन व्याख्येयो ग्रन्थः ।
இங்கு மேலும் - ‘दृष्ट्वा तु पाण्डवानीकम्’ (த்ருஷ்ட்வாது பாண்டவானீகம்) என்று ஆரம்பித்து ‘न योत्स्य इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभुव ह’ (நயோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபுவ ஹ) என்பது முடிய ஜீவர்களுக்கு ஸம்ஸாரம் உண்டாவதற்க்கான காரணம் சோகம், மோஹம் முதலியவைகள். அவைகள் எந்த காரணத்தினால் உண்டா கிறது என்பதைக் காட்டுவதற்காக இந்த கிரந்தம் ஆரம்பிக்கப்படுகிறது.
तथाहि — अर्जुनेन राज्यगुरुपुत्रमित्रसुहृत्स्वजनसम्बन्धिबान्धवेषु ‘अहमेतेषाम्’ ‘ममैते’ इत्येवंप्रत्ययनिमित्तस्नेहविच्छेदादिनिमित्तौ आत्मनः शोकमोहौ प्रदर्शितौ ‘कथं भीष्ममहं सङ्‍ख्ये’ (भ. गी. २ । ४) इत्यादिना ।
அவ்வாறே அல்லவா, அர்ஜுனனால் ராஜ்யம் குரு புத்திரன், மித்திரன் சுஹ்ருத் முதலிய தனக்கு சொந்தமான பந்துக்களிடத்தில் ‘अहम् एषां मम एते’ (அஹம் ஏ ஷாம் மம ஏதே நான் அவர்களுடையவன் அவர்கள் என்னுடையவர்கள்.) என்று இவ்வாறு (பிராந்தி) தவறான ஞானத்தினால் ஸ்நேகத்தின் நாசம் முதலியவைகளின் நிமித்தமாக தன்னுடைய சோகமோகமானது ‘कथं भीष्ममहं संख्य’ (கதம் பீஷ்மமஹம் ஸங்க்யே நான் எவ்வாறு பீஷ்மரை யுத்தத்தில்) என்பன முதலியவைக ளால் காட்டப்பட்டது.
शोकमोहाभ्यां ह्यभिभूतविवेकविज्ञानः स्वत एव क्षत्रधर्मे युद्धे प्रवृत्तोऽपि तस्माद्युद्धादुपरराम ; परधर्मं च भिक्षाजीवनादिकं कर्तुं प्रववृते ।
தானாகவே க்ஷத்திரிய தர்ம யுத்தத்தில் ஈடுபட்டாலும்கூட சோகமோகத்தால் நலிவுற்றவிவேக விக்ஞானத்தால் அந்த யுத்தத்தை தவிர்த்தான். பரதர்மமான பிக்ஷை எடுத்தல் முதலான ஜீவனத்தை செய்வதில் பிரவர்த்தித்தான் (ஈடுபட்டான்)
तथा च सर्वप्राणिनां शोकमोहादिदोषाविष्टचेतसां स्वभावत एव स्वधर्मपरित्यागः प्रतिषिद्धसेवा च स्यात् ।
அவ்வாறே எல்லா ஜீவர்களும் சோகமோகம் முதலிய தோஷத் தினால் கலங்கமடைந்த மனம் உடையவர்களாகி ஸ்வபாவமாகவே ஸ்வதர்மத்தை விட்டு நிஷித்த தர்மத்தை (தள்ளப்பட்ட தர்மத்தை) கடைபிடிக்கிறார்கள்.
स्वधर्मे प्रवृत्तानामपि तेषां वाङ्मनःकायादीनां प्रवृत्तिः फलाभिसन्धिपूर्विकैव साहङ्कारा च भवति ।
ஸ்வதர்மத்தில் ப்ரவ்ருத்தித்தாலும் (ஈடுபட்டாலும்) அவருடைய மனோ வாக்கு காயங்களுடைய ப்ரவ்ருத்தியானது பலத்தில் இச்சையு டன் கூடியதாயும் அஹங்காரத்துடன் கூடியதாயும் இருக்கிறது.
तत्रैवं सति धर्माधर्मोपचयात् इष्टानिष्टजन्मसुखदुःख़ादिप्राप्तिलक्षणः संसारः अनुपरतो भवति । इत्यतः संसारबीजभूतौ शोकमोहौ ।
அங்கு இவ்வாறு இருக்கும் பொழுது தர்மாதர்மங்களுடைய (புண்யபாவங்களுடைய) ஆதிக்யத்தினால் இஷ்டாநிஷ்ட ஜன்ம, ஸுக துக்கம் இவைகள் நிச்சயமாக அடைவிப் பதான ஸம்ஸா ரமானது விடாமல் தொடர்கிறது. ஆகையால், சோகமோகமானது ஸம்ஸாரத்திற்கு பீஜம் (காரணம்) ஆகிறது.
तयोश्च सर्वकर्मसंन्यासपूर्वकादात्मज्ञानात् नान्यतो निवृत्तिरिति तदुपदिदिक्षुः सर्वलोकानुग्रहार्थम् अर्जुनं निमित्तीकृत्य आह भगवान्वासुदेवः — ‘अशोच्यान्’ (भ. गी. २ । ११) इत्यादि ॥
அவைகளுக்கு (சோகமோகங்களுக்கு) ஸர்வகர்ம ஸந்யாஸ பூர்வமான ஆத்மக்ஞானத்தினால் நிவிர்த்தி ஏற்படுமேயன்றி மற்ற வைகளால் அல்ல என்று உபதேசிக்கும் இச்சை உடையவராகி எல்லா லோகங்களையும் அனுக்ரஹம் செய்யும் பொருட்டு அர்ஜுனனை வ்யாஜமாகக் கொண்டு பகவான் வாஸுதேவரானவர் கூறினார். ‘अशोच्यान्’ அசோச்யான் - என்பது முதலியவைகளால்
अत्र केचिदाहुः — सर्वकर्मसंन्यासपूर्वकादात्मज्ञाननिष्ठामात्रादेव केवलात् कैवल्यं न प्राप्यत एव । किं तर्हि ? अग्निहोत्रादिश्रौतस्मार्तकर्मसहितात् ज्ञानात् कैवल्यप्राप्तिरिति सर्वासु गीतासु निश्चितोऽर्थ इति ।
அங்கு ஸர்வகர்ம ஸந்யாஸ பூர்வகமாக ஆத்மஞான நிஷ்டையி னால் மாத்திரம் முக்தி அடையவே முடியாது, வேறு எவ்வாறு எனில் அக்னிஹோத்ராதி ச்ரௌத்த ஸ்மார்த்த கர்மங்களுடன் கூடிய ஞானத்தினால் தான் முக்தி என்பது கீதைகளின் முழுவதிலும் தீர்மானிக் கப்பட்ட அர்த்தம் என்று சிலர் இவ்வாறு கூறுகின்றனர்.
இந்த அர்த்தத்திற்கு அவர்கள்‌ अथ चेत्त्वमिमं धर्म्यं सङग्रामं न करिष्यसि (அத சேத்வமிமம்‌ தர்ம்யம்‌ ஸங்க்ராமம்‌ நகரிஷ்யஸி - இனி இந்த ந்யாயமான யுத்தத்தை செய்யாவிடில்‌) कर्मण्येवाधिकारस्ते (கர்மண்யேவாதிகாரஸ்தே - உனக்கு கர்மத்தில் தான் அதிகாரம்.) कुरु कर्मैव तस्मात्त्वम् (குரு கர்மைவ தஸ்மாத்வம்‌ - ஆகையால்‌ நீ கர்மத்தையே செய்யவேண்டும்) என்பன முதலிய ப்ரமாணங்களை ப்ரமாணமாகக் கூறுகின்றனர்.
हिंसादियुक्तत्वात् वैदिकं कर्म अधर्माय इतीयमप्याशङ्का न कार्या । कथम् ? क्षात्रं कर्म युद्धलक्षणं गुरुभ्रातृपुत्रादिहिंसालक्षणमत्यन्तं क्रूरमपि स्वधर्म इति कृत्वा न अधर्माय ; तदकरणे च ‘ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि’ (भ. गी. २ । ३३) इति ब्रुवता यावज्जीवादिश्रुतिचोदितानां पश्वादिहिंसालक्षणानां च कर्मणां प्रागेव नाधर्मत्वमिति सुनिश्चितमुक्तं भवति — इति ॥
ஹிம்சாதிகளுடன் கூடி இருப்பதினால் வைதிக கர்மமானது அதர்மத்தின் பொருட்டு என்று ஸந்தேஹம் செய்தல் கூடாது, ஏனெனில் க்ஷத்திரிய தர்மமான குரு சகோதார புத்திரன் முதலனாவர் களின் ஹிம்சையுடன் கூடிய யுத்த லக்ஷணமானது மிக குரூரமாய் இருந்தாலும் ஸ்வதர்மமாக இருப்பதால் அது அதர்மம் அல்ல, மேலும் அதை செய்யாவிடில் ‘ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि’ (ததஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி ஸ்வதர்மத்தையும் கீர்த்தியையும் இழந்து பாபத்தை அடைவாய்) என்று கூறியது, (எவ்வளவு காலம் ஜீவித்திருக்கின்றாயோ அதுவரை கர்மம் செய்ய வேண்டும் என்பன போன்ற ஸ்ருதிகளால் பசுவாதி ஹிம்ஸா லக்ஷணங்களோடு கூடிய வைதிக கர்மங்களுக்கு அதர்மத்வம் கிடையாது என்று நிச்சயமாகக் கூறப்பட்டதாகும்
तदसत् ; ज्ञानकर्मनिष्ठयोर्विभागवचनाद्बुद्धिद्वयाश्रययोः ।
அது உண்மையல்ல, இருவித புத்திகளை ஆச்ரயித்துள்ள ஞான, கர்மநிஷ்டைகளை பிரித்துகூறிய பகவத் வாக்கியங்களினால்.
‘अशोच्यान्’ (भ. गी. २ । ११) इत्यादिना भगवता यावत् ‘स्वधर्ममपि चावेक्ष्य’ (भ. गी. २ । ३१) इत्येतदन्तेन ग्रन्थेन यत्परमार्थात्मतत्त्वनिरूपणं कृतम् , तत्साङ्ख्यम् । तद्विषया बुद्धिः आत्मनो जन्मादिषड्विक्रियाभावादकर्ता आत्मेति प्रकरणार्थनिरूपणात् या जायते, सा साङ्ख्या बुद्धिः । सा येषां ज्ञानिनामुचिता भवति, ते साङ्ख्याः ।
अशोच्यान् (அசோச்யான்) என்ற சுலோகம் முதல் स्वधर्ममपि चावेक्ष्य (ஸ்வதர்மபி சாவேஷ்ய) ஸ்லோகம் முடிய பகவானால் எந்த பரமார்த்த ஆத்மதத்துவம் நிரூபணம் செய்யப்பட்டதோ அது சாங்கி யம். அந்த சாங்கிய விஷயமான புத்தி (ஜன்மாதி ஷட்பாவ விகாரம் அற்றதினால் ஆத்மா அகர்த்தா என்று பிரகரணார்த்த நிரூபணத்தினால் எந்த புத்தி) உண்டாகிறதோ அது சாங்கிய புத்தி. அந்த புத்தியானது எந்த ஞானிகளுக்கு உரித்தாயுள்ளதோ அவர்கள் சாங்கியர்கள்.
एतस्या बुद्धेः जन्मनः प्राक् आत्मनो देहादिव्यतिरिक्तत्वकर्तृत्वभोक्तृत्वाद्यपेक्षो धर्माधर्मविवेकपूर्वको मोक्षसाधनानुष्ठानलक्षणो योगः । तद्विषया बुद्धिः योगबुद्धिः । सा येषां कर्मिणामुचिता भवति ते योगिनः ।
இந்த (சாங்க்கிய) புத்தி உண்டாவதற்கு முன் ஆத்மாவிற்கு தேஹத்தைக்காட்டிலும் வேறான தன்மை, கர்த்திருத்வ, போக்த்தி ருத்வ முதலியவைகளை அபேக்ஷித்து தர்மாதர்ம விவேகத்துடன் கூடி மோக்ஷ ஸாதன அனுஷ்டான நிரூபணமானது யோகமாகும். அதை அறியும் புத்தி யோகபுத்தியாகும். அந்த யோகபுத்தியானது எந்த கர்மநிஷ்ட்டர்களுக்கு உரித்தாகிறதோ அவர்கள் யோகிகள்.
तथा च भगवता विभक्ते द्वे बुद्धी निर्दिष्टे ‘एषा तेऽभिहिता साङ्‍ख्ये बुद्धिर्योगे त्विमां शृणु’ (भ. गी. २ । ३९) इति ।
இவ்வாறு பகவானால் இருவித புத்தியானாது பிரித்துக்காண்பிக் கப்பட்டது. ‘एषा तेऽभिहिता सांख्ये बुद्धिर्योगे त्विमां शृणु’ (ஏஷா தேஅபி ஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ச்ருணு சாங்கிய விஷயத் திலே உனக்கு இந்த புத்தியானது சொல்லப்பட்டது. இனி நீ யோக விஷயத்தில் இந்த புத்தியைக் கேள்.)
तयोश्च साङ्‍ख्यबुद्ध्याश्रयां ज्ञानयोगेन निष्ठां साङ्‍ख्यानां विभक्तां वक्ष्यति ‘पुरा वेदात्मना मया प्रोक्ता’ (भ. गी. ३ । ३) इति ।
அவ்விரு புத்திகளுள் சாங்க்ய புத்தியை ஆச்ரயித்த சாங்கியர்க ளுக்கு ஞான யோகத்தினாலே உண்டாகும் நிஷ்டையானது ‘पुरा वेदात्मना मया प्रोक्ता’ (புராவேதாத்மனா மயாப்ரோக்தா வேதாத்மாவான என்னால்‌ முன்பு கூறப்பட்டது) என்பனமுதலிய வசனங்களினாலே பிரித்துக் கூறப்போகிறார்.
तथा च योगबुद्ध्याश्रयां कर्मयोगेन निष्ठां विभक्तां वक्ष्यति — ‘कर्मयोगेन योगिनाम्’ इति ।
அவ்வாறே யோக புத்தியை ஆச்ரயித்தவர்களுக்கு கர்மயோகத் தினால் உண்டாகும் நிஷ்டையை பிரித்துக்கூறப்போகிறார். ‘कर्मयोगेन योगिनाम्’ (கர்மயோகேன யோகினாம்‌ என்ற வசனங்களினால்‌)
एवं साङ्‍ख्यबुद्धिं योगबुद्धिं च आश्रित्य द्वे निष्ठे विभक्ते भगवतैव उक्ते ज्ञानकर्मणोः कर्तृत्वाकर्तृत्वैकत्वानेकत्वबुद्ध्याश्रययोः युगपदेकपुरुषाश्रयत्वासम्भवं पश्यता ।
இவ்வாறு சாங்க்ய புத்தியையும், யோக புத்தியையும் ஆச்ரயித்து இரண்டு நிஷ்டைகள் பகவானாலேயே வேறு வேறாக பிரித்துக்கூறப் பட்டது. கர்த்ருத்வ அகர்த்ருத்வ, ஏகத்துவ, அநேகத்வ முதலியவைகளை ஆச்ரயித்த புத்திகளை உடைய ஞானகர்ம நிஷ்டைகளுக்கு ஒரே புருஷனால் அனுஷ்டிக்க முடியாத தன்மையை உணர்ந்தவரால்
यथा एतद्विभागवचनम् , तथैव दर्शितं शातपथीये ब्राह्मणे — ‘एतमेव प्रव्राजिनो लोकमिच्छन्तो ब्राह्मणाः प्रव्रजन्ति’ इति सर्वकर्मसंन्यासं विधाय तच्छेषेण ‘किं प्रजया करिष्यामो येषां नोऽयमात्मायं लोकः’ (बृ. उ. ४ । ४ । २२) इति ।
எவ்வாறு இந்த விபாக வசனம் உள்ளதோ அவ்வாறே சாத பதீய ப்ராஹ்மணத்திலும் இந்த இரு நிஷ்டைகளும் அவ்வாறே தனித்தனி யாக பிரித்துக்கூறப்பட்டுள்ளது ‘एतमेव प्रव्राजिनः लोकमिच्छन्तो ब्राह्मणाः प्रव्रजन्ति’ (बृ ४/४/२२) (ஏதமேவ ப்ரவ்ராஜினோ லோகமிச்சந்தோ ப்ராஹ்மணா ப்ரவ்ரஜந்தி - இந்த ஆத்மலோகத்தை இச்சிப்பவர்கள்‌ வைராக்யமடைந்து சந்நியாசத்தை கைகொள்கிறார்கள்‌) என்று ஸர்வகர்‌ மஸந்நியாசத்தை கூறி மீதமுள்ள வாக்கியத்தினால்‌ ‘किं प्रजया करिष्यामः येषां नोऽयंमात्मायं लोकः’ (बृ ४/४/२२) (கிம்‌ ப்ரஜயா கரிஷ்யாமோ யேஷாம்‌ நோஅயமாத்மா அயம்‌ லோக - இந்த ஆத்மாவே உலகமாக உள்ள எங்களுக்கு மக்களால்‌ ஆவது என்ன) என்று காட்டப்பட்டுள்ளது.
तत्र च प्राक् दारपरिग्रहात् पुरुषः आत्मा प्राकृतो धर्मजिज्ञासोत्तरकालं लोकत्रयसाधनम् — पुत्रम् , द्विप्रकारं च वित्तं मानुषं दैवं च ; तत्र मानुषं कर्मरूपं पितृलोकप्राप्तिसाधनं विद्यां च दैवं वित्तं देवलोकप्राप्तिसाधनम् — ‘सोऽकामयत’ (बृ. उ. १ । ४ । १७) ।
ப்ராக்ருத ஆத்மா என்றால் அக்ஞானியான மனிதன். அந்த அக்ஞானி விவாஹம் செய்வதற்கு முன் தர்ம ஜிக்ஞாஸையின் பின் மூவுலகங்களையும் அடைவதற்கு ஸாதனமான புத்திரனையும் ஏன் அவ்வாறே மானுஷ வித்தம், தைவவித்தம் என்னும் இருவகை தனத் தை யும் விரும்புகின்றான். இவைகளில் மானுஷ வித்தமானது கர்மரூ பமானது (மேலும் பித்ருலோகத்திற்கு சாதனமாகிறது. அவ் வாறேதைவவித்தமானது உபாசனை (வித்யா) ரூபமானது, அது தேவ லோக ஸாதனமாகிறது என்று ப்ருஹதாரணியத்தில் கூறப்பட்டுள்ளது.
इति अविद्याकामवत एव सर्वाणि कर्माणि श्रौतादीनि दर्शितानि ।
அவித்யையும், காமமும் உடையவனுக்கே ச்ரௌத முதலிய எல்லா கர்மங்களும் என்று காண்பிக்கப்பட்டது.
तेभ्यः ‘व्युत्थाय, प्रव्रजन्ति’ इति व्युत्थानमात्मानमेव लोकमिच्छतोऽकामस्य विहितम् ।
எல்லாவற்றிலிருந்தும் (எல்லா கர்மங்களிலிருந்தும்) நிவர்த்தி அடைந்து ஸந்நியாசத்தைக் கைகொள்கிறார்கள் என்று கூறுவதி னால் காமனையற்றகேவலம் ஆத்மலோகத்தை இச்சிப்பவர்களுக்கே (ஸந்நியாசம்) விதிக்கப்பட்டுள்ளது.
तदेतद्विभागवचनमनुपपन्नं स्याद्यदि श्रौतकर्मज्ञानयोः समुच्चयोऽभिप्रेतः स्याद्भगवतः ॥
ச்ரௌத கர்மஞான ஸமுச்சயமே பகவானுடைய அபிப்பிராய மாக இருந்தால் மேற்கூறிய இந்த விபாக (ஞானகர்மத்தை பிரித்துக் கூற) பகவத் வசனம் பொருத்தமில்லாததாக ஆகும்.
न च अर्जुनस्य प्रश्न उपपन्नो भवति ‘ज्यायसी चेत्कर्मणस्ते’ (भ. गी. ३ । १) इत्यादिः ।
மேலும் அர்ச்சுனனுடைய வினாவானது பொருத்தமில்லாததா கும் ‘ज्यायसी चेत्कर्मणस्ते’ (ஜ்யாயசீ சேத்‌ கர்மணஸ்‌ சே ஞானமானது கர்‌ மத்தைக்காட்டிலும்‌ மேலானதால்‌) என்பது அர்ச்சுனனது வினா
एकपुरुषानुष्ठेयत्वासम्भवं बुद्धिकर्मणोः भगवता पूर्वमनुक्तं कथमर्जुनः अश्रुतं बुद्धेश्च कर्मणो ज्यायस्त्वं भगवत्यध्यारोपयेन्मृषैव ‘ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धिः’ (भ. गी. ३ । १) इति ॥
ஞானத்தையும், கர்மத்தையும் ஒரே புருஷனால் அனுஷ் டானம் செய்ய முடியாது என்பதும் கர்மத்தை அபேக்ஷித்து ஞானம் தான் மேலானது என்பதும் பகவானால் முன்பே கூறப்படவில்லை எனில் இவ்வாறு அர்ச்சுனன் கேட்கப்படாத விஷயத்தை பொய்யாக எவ்வாறு பகவானிடத்தில் ஆரோபம் செய்வான் ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धिः (ஜ்யாயசீ சேத்‌கர்மணஸ்‌தே) கர்மத்தைக்காட்டிலும்‌ ஞானம்‌ மேலானது என்று உமது எண்ணமானால்‌ என்று
किञ्च — यदि बुद्धिकर्मणोः सर्वेषां समुच्चय उक्तः स्यात् अर्जुनस्यापि स उक्त एवेति, ‘यच्छ्रेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्’ (भ. गी. ५ । १) इति कथमुभयोरुपदेशे सति अन्यतरविषय एव प्रश्नः स्यात् ।
மேலும் ஞான கர்ம ஸமுச்சயத்தை எல்லோருக்கும் கூறியிருந் தால் அர்ச்சுனன் பொருட்டும் கூறியதாகும். (இவ்வாறு இருக்கும் பொழுது) இரண்டையும் உபதேசம் செய்திருந்தால் எவ்வாறு ஒன்றின் விஷயமாக यच्छ्रेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम् (யச்ச்ரேய ஏதயோ ரேகம்‌ தன்மே புரூஹி சுநிச்சிதம்‌) கர்மம்‌, ஞானம்‌ இவ்விரண்டிலும்‌ எது மேலானதோ அந்த ஒன்றைநிச்சயமாக கூறுவீர்‌ என்று எவ்வாறு வினா எழும்.
न हि पित्तप्रशमनार्थिनः वैद्येन मधुरं शीतलं च भोक्तव्यम् इत्युपदिष्टे तयोरन्यतरत्पित्तप्रशमनकारणं ब्रूहि इति प्रश्नः सम्भवति ॥
பித்தத்தை தணிக்க இச்சை உள்ளவனுக்கு வைத்தியரால் இனிப் பாயும், குளிர்ச்சியாயும் உள்ள பதார்த்தத்தையே புசிக்க வேண்டும் என்று கூறி இருந்தால் அவ்விரண்டினுள் எந்த ஒன்று பித்தத்தைத் தணிப்பதற்கான காரணமான ஒன்றைக் கூறும் என்றகேள்வியே எழாது.
अथ अर्जुनस्य भगवदुक्तवचनार्थविवेकानवधारणनिमित्तः प्रश्नः कल्प्येत, तथापि भगवता प्रश्नानुरूपं प्रतिवचनं देयम् — मया बुद्धिकर्मणोः समुच्चय उक्तः, किमर्थमित्थं त्वं भ्रान्तोऽसि — इति ।
மேலும் அர்ஜுனனுக்கு பகவானால் கூறப்பட்ட வசனத்தின் அர்த்தவிவேகத்தை புரிந்து கொள்ளாததின் காரணமாக இந்த வினா வானது (கர்மம்,ஞானம் இரண்டில் எது மேலானது) கல்பிக்கப்பட்டிருக் கலாம். அவ்வாறு இருந்தாலும் பகவானால் வினாவிற்குத் தகுந்த பதில் அளித்திருக்க வேண்டும். என்னால் ஞானகர்ம சமுச்சயம் கூறப்பட்டது எதற்காக நீ இவ்வாறு பிராந்தி அடைகிறாய் என்று.
न तु पुनः प्रतिवचनमननुरूपं पृष्टादन्यदेव ‘द्वे निष्ठे मया पुरा प्रोक्ते’ (भ. गी. ३ । ३) इति वक्तुं युक्तम् ॥
மேலும் வினாவிற்குப்‌ பொருந்தாத பதிலையே द्वे निष्ठे मया पुरा प्रोक्ते (த்வே நிஷ்ட்டே மயா புரா ப்ரோக்தே) இரண்டு விதமான நிஷ்ட்டைகள் என்னால் முன்னால் கூறப்பட்டது என்று கூறியது பொருந்தாததாகும்.
नापि स्मार्तेनैव कर्मणा बुद्धेः समुच्चये अभिप्रेते विभागवचनादि सर्वमुपपन्नम् ।
மேலும் ஸ்மார்த்த கர்மத்துடன் தான் ஞான ஸமுச்சயம் என்ற அபிப்பிராயத்திலும் விபாக வசனங்கள் எல்லாம் பொருந்தாதாகும்.
किञ्च — क्षत्रियस्य युद्धं स्मार्तं कर्म स्वधर्म इति जानतः ‘तत्किं कर्मणि घोरे मां नियोजयसि’ (भ. गी. ३ । १) इति उपालम्भोऽनुपपन्नः ॥
மேலும் க்ஷத்திரியனுக்கு யுத்தரூபமான ஸ்மார்த்த கர்மாதான் ஸ்வதர்மம் என்நு तत्किं कर्मणि घोरे मां नियोजयसि (தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயசி) என்னை இந்த கோரமான கர்மத்தில் ஏன் ஈடுபடுத்துகிறாய்) என்ற நிந்தையானது பொருந்தாது.
तस्माद्गीताशास्त्रे ईषन्मात्रेणापि श्रौतेन स्मार्तेन वा कर्मणा आत्मज्ञानस्य समुच्चयो न केनचिद्दर्शयितुं शक्यः ।
ஆகையினால் கீதாசாஸ்த்திரத்தில் சிறிது மாத்திரமும் ஸ்ரௌத, ஸ்மார்த்த கர்மாக்களுக்கு ஆத்ம ஞானத்துடன் சமுச்சயம் என்பது எவராலும் எடுத்துக்காட்ட முடியாது.
यस्य तु अज्ञानात् रागादिदोषतो वा कर्मणि प्रवृत्तस्य यज्ञेन दानेन तपसा वा विशुद्धसत्त्वस्य ज्ञानमुत्पन्नम्परमार्थतत्त्वविषयम् ‘एकमेवेदं सर्वं ब्रह्म अकर्तृ च’ इति ।
எவனுக்கு ராகத்வேஷத்துடன் கூடின அக்ஞானத்தினால் கர்மத்தில் பிரவிருத்தி ஏற்படுகிறதோ அவனுக்கு யக்ஞம், தானம், தபஸ் இவைகளை செய்வதினால் சித்தசுத்தி ஏற்பட்டு இவை எல்லாம் ஒன்றே பிரஹ்மம் அகர்த்தா என்றபரமார்த்த தத்துவ விஷய ஞானம் உண்டாகிறதோ.
तस्य कर्मणि कर्मप्रयोजने च निवृत्तेऽपि लोकसङ्ग्रहार्थं यत्नपूर्वं यथा प्रवृत्तिः, तथैव प्रवृत्तस्य यत्प्रवृत्तिरूपं दृश्यते न तत्कर्म येन बुद्धेः समुच्चयः स्यात् ।
அவனுக்கு கர்மத்தில் கர்மபல இச்சை இல்லாமல் இருந்தாலும், லோக சங்கிரஹத்தின் பொருட்டு முயற்சியுடன் பிரவிர்த்தித்தாலும் அவ்வாறு கர்மத்தில் பிரவிர்த்தித்தவனுக்கு காணப்படும் பிரவிர்த்தி யானது கர்மம் அல்ல, கர்மாவானால்தானே சமுச்சயம் வரும்.
यथा भगवतो वासुदेवस्य क्षत्रधर्मचेष्टितं न ज्ञानेन समुच्चीयते पुरुषार्थसिद्धये, तद्वत् तत्फलाभिसन्ध्यहङ्काराभावस्य तुल्यत्वाद्विदुषः ।
எவ்வாறு பகவான் வாஸுதேவன் க்ஷத்திரிய தர்மமான கர்மத்தை அனுஷ்ட்டித்தல் புருஷார்த்தத்தின் பொருட்டு ஞானத்துடன் சேர்க்கப்படுவது இல்லை. அவ்வாறே பயனில் இச்சை அற்றதாலும் அகங்காரம் அற்றதாலும் சமானத்தன்மை உள்ள ஞானிக்கு (ஞானத்துடன் கர்ம சமுச்சயம் செய்யப்பட முடியாது)
तत्त्वविन्नाहं करोमीति मन्यते, न च तत्फलमभिसन्धत्ते ।
தத்துவத்தை அறிந்தவன் நான் கர்மம் செய்கின்றேன் என்று எண்ணுவதில்லை, கர்ம பலத்தையும் எதிர்பார்ப்பதில்லை.
यथा च स्वर्गादिकामार्थिनः अग्निहोत्रादिकर्मलक्षणधर्मानुष्ठानाय आहिताग्नेः काम्ये एव अग्निहोत्रादौ प्रवृत्तस्य सामि कृते विनष्टेऽपि कामे तदेव अग्निहोत्राद्यनुतिष्ठतोऽपि न तत्काम्यमग्निहोत्रादि भवति ।
எவ்வாறு ஸ்வர்காதிகளில் காமனை உள்ளவன் அக்னிஹோத்தி ராதிகளை மேற்கொண்டு அக்னிஹோத்திராதிகளில் பிரவிர்த்தித்த வன் பாதியில் நஷ்டமாகி மறுபடியும் அதே காமனை அக்கினிஹோத் திராதிகளை அனுஷ்ட்டித்தாலும் அந்த அக்னி ஹோத்திராதிகள் காமிய கர்மமாகாது (அது போல் ஞானியினுடைய கர்மமும் காமியகர் மமாகாது)
அவ்வாறேபகவானும் कुर्वन्नपि (குர்வன்னபி) (கர்மம்) செய்து (கொண்டிருந்தாலும்‌) न करोति न लिप्यते (ந கரோதி, ந லிப்யதே) செய்வதில்லை, ஒட்டுவதில்லை) என்று ஆங்காங்கு காண்பிக்கிறார்.
இதைத்தவிர पूर्वे: पूर्वतरं कृतम् कर्मणैव हि संसिद्धिमास्थिता जनकादय: (பூர்வைஹி பூர்வதரம்க்ருதம், கர்மணைவ ஹி சம்சித்திமாஸ்திதா ஜன காதய) முன்னோர்களால் (கர்மங்கள்) அதற்கு முன் காலத்தில் செய் யப்பட்டது போல் செய்யப்பட்டது என்றும், ஜனகாதிகள் கர்மங்களி னாலேயே ச்ரேயஸை அடைந்தார்கள்) என்றும் கூறப்பட்டதை பகுத்து அறிந்து கொள்ள வேண்டும்.
तत्कथम् ? यदि तावत् पूर्वे जनकादयः तत्त्वविदोऽपि प्रवृत्तकर्माणः स्युः, ते लोकसङ्ग्रहार्थम् ‘गुणा गुणेषु वर्तन्ते’ (भ. गी. ३ । २८) इति ज्ञानेनैव संसिद्धिमास्थिताः, कर्मसंन्यासे प्राप्तेऽपि कर्मणा सहैव संसिद्धिमास्थिताः, न कर्मसंन्यासं कृतवन्त इत्यर्थः ।
அது எவ்வாறு (புரிந்துகொள்வது) முன்பு ஜனகாதிகள் தத்துவம் அறிந்தவர்களாயிருந்தாலும் அவர்கள் லோக ஸங்க்ரஹார்த்தம் கர்மத்தில் பிரவ்ருத்தித்து இரந்தாலும் ‘गुणा गुणेषु वर्तन्ते’ குணா குணேசு வர்த்தந்தே இந்திரியங்கள் விஷயங்களில் ஈடுபடுகின்றன (நானல்ல) என்றஞானத்தினாலே சம்சித்தி அடைந்தவர்களாகிறார் கள். கர்ம சந்நியாசம் அடைந்திருந்தாலும் கர்மத்துடனேயே சம் சித்தி அடைந்தார்களே தவிர கர்மசந்நியாசம் செய்தவர்கள் அல்ல என்பது இதன் பொருள்.
अथ न ते तत्त्वविदः ; ईश्वरसमर्पितेन कर्मणा साधनभूतेन संसिद्धिं सत्त्वशुद्धिम् , ज्ञानोत्पत्तिलक्षणां वा संसिद्धिम् , आस्थिता जनकादय इति व्याख्येयम् ।
ஜனகாதிகள் தத்துவம் அறிந்தவர்களாக இல்லாவிடின் ஈச்வரார்ப்பணமாக செய்யப்பட்ட கர்மஸாதனத்தினால் சித்த சுத்தி அடைந்து அல்லது ஞான உத்பத்தி ஆகிய ஸித்தியை அடைந்தார்கள் என்று வியாக்கியானம் செய்யப்பட வேண்டும்.
एवमेवार्थं वक्ष्यति भगवान् ‘सत्त्वशुद्धये कर्म कुर्वन्ति’ (भ. गी. ५ । ११) इति ।
இதே அர்த்தத்தையே பகவான் ‘सत्त्वशुद्धये कर्म कुर्वन्ति’ ஸத்ய சுத்தயே கர்மம் குர்வந்தி சித்த சுத்தியின் பொருட்டு கர்மம் செய்கின் றார்கள் என்று மேலே கூறப்போகிறார்.
‘स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः’ (भ. गी. १८ । ४६) इत्युक्त्वा सिद्धिं प्राप्तस्य पुनर्ज्ञाननिष्ठां वक्ष्यति — ‘सिद्धिं प्राप्तो यथा ब्रह्म’ (भ. गी. १८ । ५०) इत्यादिना ॥
स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानव (ஸ்வகர்மணா தமப்யர்ச்சய ஸித்திம் விந்தந்தி மானவ:) மனிதன் ஸ்வகர்மத்தினால் அவனை (ஈஸ்வரன்) பூஜித்து ஸித்தியை அடைகிறான் என்று கூறி ஸித் தியை அடைந்தவனுக்கு மறுபடியும் ஞானநிஷ்டையைக் கூறப்போகி றார். (सिद्धिं प्राप्तो यथा ब्रह्म ஸித்திம் ப்ராப்தோயதா பிரஹ்ம) ஸித்தி பெற் றவன் எவ்வாறு பிரஹ்மத்தை (அடைகிறான் என்பதை என்னிடம் தெரிந்துகொள்) என்பன முதலிய வசனங்களால்
तस्माद्गीताशास्त्रे केवलादेव तत्त्वज्ञानान्मोक्षप्राप्तिः न कर्मसमुच्चितात् , इति निश्चितोऽर्थः ।
ஆகையால் கீதையில் தத்வ ஞானத்தினால் மாத்திரமே மோக்ஷ ப்ராப்தி, கர்ம சமுச்சயித்தானால் அல்ல என்பது நிச்சயமான கருத்தாகும்.
यथा चायमर्थः, तथा प्रकरणशो विभज्य तत्र तत्र दर्शयिष्यामः ॥
எவ்வாறு இந்தக் கருத்தோ அவ்வாறு பிரகரணத்தை அனுஸரித்து பிரித்து அங்கங்கே காண்பிக்கப்போகிறோம்.
तत्रैवं धर्मसंमूढचेतसो मिथ्याज्ञानवतो महति शोकसागरे निमग्नस्य अर्जुनस्य अन्यत्रात्मज्ञानादुद्धरणमपश्यन् भगवान्वासुदेवः ततः कृपया अर्जुनमुद्दिधारयिषुः आत्मज्ञानायावतारयन्नाह —
இந்த தர்மவிஷயத்தில் இவ்வாறு மோகமடைந்து அதிகமான சோக கடலில் மூழ்கினவனான அர்ச்சுனன் உத்தாரணம் செய்வதற்கு ஞானத்தைத் தவிர மற்றதை (மார்க்கத்தைக் காணாமல்) பகவான் வாஸுதேவனானவர் அதிலிருந்து உத்தாரணம் செய்வதில் (காப்பாற் றுவதில்) இச்சை உடையவராய் ஆத்மஞானத்தைப் போதிப்பதின் பொருட்டு கூறுகிறார்.
श्रीभगवानुवाच —
अशोच्यानन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे ।
गतासूनगतासूंश्च नानुशोचन्ति पण्डिताः ॥ ११ ॥
அசோச்யானன்வசோசஸ்த்வம் ப்ரக்ஞாவாதாம்ச்ச பாஷஸே ।
கதாஸூநகதாம்ஸூம்ச்ச நானுசோசந்தி பண்டிதா: ॥ 11 ॥
अशोच्यान् इत्यादि । न शोच्या अशोच्याः भीष्मद्रोणादयः, सद्वृत्तत्वात् परमार्थस्वरूपेण च नित्यत्वात् , तान् अशोच्यान् अन्वशोचः अनुशोचितवानसि ‘ते म्रियन्ते मन्निमित्तम् , अहं तैर्विनाभूतः किं करिष्यामि राज्यसुखादिना’ इति ।
எதைக் குறித்து சோகப்படத்தகுதி அற்றதோ அது அசோச்சியம் எனப்படும் பீஷ்மத்ரோணாதிகள் ஸதாச்ஸாரத்தை உடையவர் களாயும் பரமார்த்தரூபமாக நித்தியமாயும் உள்ளவர்கள் ஆனதினால் அவர்கள் சோகிக்கத்தகுந்தவர்கள் அல்லர். சோகிக்கத்தகாதவர் களை குறித்து அவர்கள் என்பொருட்டு இறந்து விடுவார்கள். அவர்கள் இல்லாமல் நான் ராஜ்ய ஸுகாதிகளை வைத்துக்கொண்டு என்ன செய்வேன் என்று சோகத்தை அடைகிறாய்.
त्वं प्रज्ञावादान् प्रज्ञावतां बुद्धिमतां वादांश्च वचनानि च भाषसे | तदेतत् मौढ्यं पाण्डित्यं च विरुद्धम् आत्मनि दर्शयसि उन्मत्त इव इत्यभिप्रायः ।
நீ மிகுந்த புத்திசாலிகளின் (ஞானிகளின்) வசனங்களை பேசுகிறாய். உன்மத்தன் போல் விருத்தமான மூடத்தன்மையையும், பாண்டித்யத்தையும் உன்னிடத்தில் (அர்ஜுனனிடத்தில்) காட்டுகிறாய் என்பது கருத்து.
यस्मात् गतासून् गतप्राणान् मृतान् , अगतासून् अगतप्राणान् जीवतश्च न अनुशोचन्ति पण्डिताः आत्मज्ञाः ।
ஏனெனில் பண்டிதர்கள் (ஆத்மாவை அறிந்தவர்கள்) பிராணணை விட்டவர்களைக்குறித்தும் உயிருடன் ஜீவித்துக்கொண்டி ருப்பவர்களைக் குறித்தும் சோகத்தை அடைய மாட்டார்கள்.
पण्डा आत्मविषया बुद्धिः येषां ते हि पण्डिताः, ‘पाण्डित्यं निर्विद्य’ (बृ. उ. ३ । ५ । १) इति श्रुतेः ।
(பண்டா) என்றால் ஆத்ம விஷயமான புத்தி. அது எவர்களி டத்தில் இருக்கிறதோ அவர்கள் பண்டிதர்கள். (पाण्डित्यं निविद्य பாண்டித்தியம் நிர்வித்ய) என்ற சுருதி வாக்கியத்தால் அறியப்படுகிறது.
परमार्थतस्तु तान् नित्यान् अशोच्यान् अनुशोचसि, अतो मूढोऽसि इत्यभिप्रायः ॥ ११ ॥
உண்மையில் நித்யமாயும், சோகிக்ககூடாதவர்களாயும் இருப்ப வர்களைக் குறித்து நீ சோகிக்கிறாய். அதனால் நீ மூடன் என்பது அபிப்பிராயம்.
कुतः ते अशोच्याः, यतो नित्याः ।
எதனால் அவர்கள் சோகிக்கத்தகாதவர்கள் ஏனெனில் அவர் கள் நித்தியர்களாய் இருப்பதால்
कथम् ? —
எவ்வாறெனில்
न त्वेवाहं जातु नासं न त्वं नेमे जनाधिपाः ।
न चैव न भविष्यामः सर्वे वयमतः परम् ॥ १२ ॥
ந த்வேவாஹம் ஜாது நாசம் ந த்வம் நேமே ஜநாதிபா: ।
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம் ॥ 12 ॥
न तु एव जातु कदाचित् अहं नासम् , किं तु आसमेव । अतीतेषु देहोत्पत्तिविनाशेषु घटादिषु वियदिव नित्य एव अहमासमित्यभिप्रायः ।
நான் ஒரு பொழுதும் நிச்சயமாக இல்லாமல் இருந்ததில்லை. ஆனால் இருந்தவனாகவே இருந்தேன். கடந்த தேஹோத்பத்தி விநாசங்களில் நான் நித்தியமாகவே இருந்தேன் என்பது அபிப்பிராயம்.
तथा न त्वं न आसीः, किं तु आसीरेव । तथा न इमे जनाधिपाः न आसन् , किं तु आसन्नेव ।
அவ்வாறே நீயும் இல்லாமல் இருந்ததில்லை. இருந்தவனாகவே இருந்தாய். அவ்வாறே இந்த ராஜாக்களும் இல்லாமல் இருந்ததில் லை, இருந்தவர்களாகவே இருந்தார்கள்.
तथा न च एव न भविष्यामः, किं तु भविष्याम एव, सर्वे वयम् अतः अस्मात् देहविनाशात् परम् उत्तरकाले अपि । त्रिष्वपि कालेषु नित्या आत्मस्वरूपेण इत्यर्थः ।
அவ்வாறேநாம், எல்லோரும் இனிமேல் இல்லாமல் போவதும் இல்லை. ஆனால் எப்பொழுதுமே இருப்போம். ஆகையால் இந்த தேஹவிநாசத்தின் பின்னும், மூன்று காலத்திலும் ஆத்மஸ்வ ரூபத்தால் நித்தியர்கள் என்று பொருள்
देहभेदानुवृत्त्या बहुवचनम् , नात्मभेदाभिप्रायेण ॥ १२ ॥
பஹுவசனமானது (பன்மை) தேஹபேதத்தைக் கொண்டு கூறப்பட்டதேயன்றி ஆத்மபேத அபிப்பிராயத்தினால் அன்று.
तत्र कथमिव नित्य आत्मेति दृष्टान्तमाह —
இனி ஆத்மாவானது எவ்வாறு நித்தியம் என்பதற்கு திருஷ்டாந்தம் கூறுகிறார்.
देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा ।
तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति ॥ १३ ॥
தேஹினோஅஸ்மின்யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா ।
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி ॥ 13 ॥
देहः अस्य अस्तीति देही, तस्य देहिनो देहवतः आत्मनः अस्मिन् वर्तमाने देहे यथा येन प्रकारेण कौमारं कुमारभावो बाल्यावस्था, यौवनं यूनो भावो मध्यमावस्था, जरा वयोहानिः जीर्णावस्था, इत्येताः तिस्रः अवस्थाः अन्योन्यविलक्षणाः ।
தேகமானது எவனுக்கு இருக்கிறதோ அவன் தேஹி. அந்த தேஹியினுடைய என்றால் தேஹத்தை உடைய ஆத்மாவிற்கு இந்த சரீரத்தில் எவ்வாறு பால்யாவஸ்த்தை,யௌவனாவஸ்த்தை, ஜீர்ணா வஸ்த்தையான மூப்பு என்ற அன்யோன்ய விலக்ஷண ஸ்வபாவ முடைய மூன்று அவஸ்தைகள் உடையதாகின்றன.
तासां प्रथमावस्थानाशे न नाशः, द्वितीयावस्थोपजने न उपजन आत्मनः । किं तर्हि ? अविक्रियस्यैव द्वितीयतृतीयावस्थाप्राप्तिः आत्मनो दृष्टा ।
அந்த அவஸ்த்தைகளுள் முதல் அவஸ்தை நாசம் ஆகும் பொழுது (ஆத்மா) நாசமாவதில்லை. இரண்டாவது அவஸ்தை உண்டாகும் பொழுது ஆத்மா உண்டாவதில்லை. ஆனால், கிரியை அற்ற ஆத்மாவிற்கே இரண்டாவது மூன்றாவது அவஸ்தைகளின் ப்ராப்த்தியானது காணப்படுகிறது.
तथा तद्वदेव देहात् अन्यो देहो देहान्तरम् , तस्य प्राप्तिः देहान्तरप्राप्तिः अविक्रियस्यैव आत्मनः इत्यर्थः ।
அவ்வாறே (இந்த) தேஹத்தைக்காட்டிலும் வேறு தேஹத்தின் அடைவு என்பது கிரியை அற்றஆத்மாவிற்கே என்பது பொருள்.
धीरो धीमान् , तत्र एवं सति न मुह्यति न मोहमापद्यते ॥ १३ ॥
தீரன் என்றால் புத்திமான் (ஞானி) ஞானி ஒருபொழுதும் மோஹத்தை அடைய மாட்டான்.
यद्यपि आत्मविनाशनिमित्तो मोहो न सम्भवति नित्य आत्मा इति विजानतः, तथापि शीतोष्णसुखदुःखप्राप्तिनिमित्तो मोहो लौकिको दृश्यते, सुखवियोगनिमित्तो मोहः दुःखसंयोगनिमित्तश्च शोकः । इत्येतदर्जुनस्य वचनमाशङ्क्य भगवानाह —
ஆத்மா நித்தியம் என்று ஞானிக்கு ஆத்மா விநாசம் உண்டு என்றவிஷயத்தில் மோஹம் ஏற்படாவிட்டாலும் சீதோஷ்ண, ஸுக துக்கத்தினால் ஏற்படுவதன் காரணமாக ஏற்படும் லௌகிக மோஹ மும், அவ்வாறேஸுகமானது நஷ்டமாகும் போதும் துக்கமானது ஏற்ப டும் போது உண்டாகும் சோகமும் காணப்படுகிறதே என்று அர்ச்சுன னுடைய வசனமாக சங்கை செய்து பகவான் மேலே கூறுகிறார்.
मात्रास्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदुःखदाः ।
आगमापायिनोऽनित्यास्तांस्तितिक्षस्व भारत ॥ १४ ॥
மாத்ராஸ்பர்சாஸ்து கௌந்தேய சீதோஷ்ணஸுகது:கதா: ।
ஆகமாபாயினோ அநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத ॥ 14 ॥
मात्राः आभिः मीयन्ते शब्दादय इति श्रोत्रादीनि इन्द्रियाणि । मात्राणां स्पर्शाः शब्दादिभिः संयोगाः । ते शीतोष्णसुखदुःखदाः शीतम् उष्णं सुखं दुःखं च प्रयच्छन्तीति ।
(மாத்திரா) என்றால் சப்தாதி விஷயங்களை அறிகின்ற காது முத லிய இந்திரியங்கள். (மாத்ராணாம் ஸ்பர்சா) என்றால் சப்தாதி விஷயங்களுடன் அந்த இந்திரியங்களின் சம்பந்தமே குளிர்ச்சி, உஷ்ணம், சுகம், மேலும் துக்கம் இவைகளை தருகின்றன என்பது (பொருள்)
अथवा स्पृश्यन्त इति स्पर्शाः विषयाः शब्दादयः । मात्राश्च स्पर्शाश्च शीतोष्णसुखदुःखदाः ।
அல்லது ஸ்பர்சங்களை என்றால் (இந்திரியங்களால்) ஸ்பரிசிக் கப்படுகின்றசப்தாதி விஷயங்கள். இந்திரியங்களும், விஷயங்களும் சீதோஷ்ண ஸுகதுக்கங்களை தருகின்றன. (கொடுக்கின்றன)
शीतं कदाचित् सुखं कदाचित् दुःखम् । तथा उष्णमपि अनियतस्वरूपम् । सुखदुःखे पुनः नियतरूपे यतो न व्यभिचरतः । अतः ताभ्यां पृथक् शीतोष्णयोः ग्रहणम् ।
குளிர்ச்சியானது சில ஸமயம் சுகமாயும், சில ஸமயம் துக்கமாக வும் இருக்கும். அவ்வாறேஉஷ்ணமும். ஆகையால் அவை இரண்டும் அநித்தியமானவை. மேலும் சுகமும், துக்கமும் எப்பொழுதும் மாறாதது எனவே ஒரே ஸாதனமானவை. ஆகையால் அவ் விரண்டினும் சீதோஷ்ணங்கள் தனியாக கூறியுள்ளது.
यस्मात् ते मात्रास्पर्शादयः आगमापायिनः आगमापायशीलाः तस्मात् अनित्याः । अतः तान् शीतोष्णादीन् तितिक्षस्व प्रसहस्व । तेषु हर्षं विषादं वा मा कार्षीः इत्यर्थः ॥ १४ ॥
எதனால் அந்த இந்திரிய விஷயங்கள் முதலியவை வந்து போகக்கூடியவைகளோ அதனால் அநித்தியங்கள். ஆகையால் அந்த சீதோஷ்ணாதிகளைப் பொறுத்துக்கொள். அவைகளில் ஸந்தோஷமோ, வருத்தமோ கொள்ளாதே என்பது பொருள்.
शीतोष्णादीन् सहतः किं स्यादिति शृणु —
சீதோஷ்ணாதிகளை சகித்திருப்பவனுக்கு என்ன உண்டாகு மெனின் கேள்-
यं हि न व्यथयन्त्येते पुरुषं पुरुषर्षभ ।
समदुःखसुखं धीरं सोऽमृतत्वाय कल्पते ॥ १५ ॥
யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப ।
ஸமதுக்கஸுகம் தீரம் ஸோஅம்ருதத்வாய கல்பதே ॥ 15 ॥
यं हि पुरुषं समे दुःखसुखे यस्य तं समदुःखसुखं सुखदुःखप्राप्तौ हर्षविषादरहितं धीरं धीमन्तं न व्यथयन्ति न चालयन्ति नित्यात्मदर्शनात् एते यथोक्ताः शीतोष्णादयः ।
ஸுக துக்கங்களை சமமாக பார்ப்பதினால் சுகம் துக்கம் அடை யும் பொழுது மகிழ்ச்சியோ, துயரமோ அடையாத ஞானியை நித்திய ஆத்ம தர்சனத்தினாலே சீதோஷ்ணம் முதலியவைகள் சிறிதும் அசைக்கச்செய்கிறதில்லை.
सः नित्यात्मस्वरूपदर्शननिष्ठो द्वन्द्वसहिष्णुः अमृतत्वाय अमृतभावाय मोक्षायेत्यर्थः, कल्पते समर्थो भवति ॥ १५ ॥
அந்த நித்யாத்மதர்சன நிஷ்ட்டை உடையர்களும், த்வந்துவங்களை சகிப்பவர்களும் மரணமற்றமோக்ஷத்திற்கு சமர்த்தர்களாகிறார்கள்.
इतश्च शोकमोहौ अकृत्वा शीतोष्णादिसहनं युक्तम् , यस्मात् —
இந்த காரணத்தினாலும் சோகம், மோகம் கொள்ளாமல் சீதோஷ்ணாதிகளை பொறுத்தல் எதனால் எனின்-
नासतो विद्यते भावो नाभावो विद्यते सतः ।
उभयोरपि दृष्टोऽन्तस्त्वनयोस्तत्त्वदर्शिभिः ॥ १६ ॥
நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத: ।
உபயோரபி த்ருஷ்டோ அந்தஸ்த்வனயோஸ்தத்த்வதர்சிபி: ॥ 16 ॥
न असतः अविद्यमानस्य शीतोष्णादेः सकारणस्य न विद्यते नास्ति भावो भवनम् अस्तिता ॥ न हि शीतोष्णादि सकारणं प्रमाणैर्निरूप्यमाणं वस्तुसद्भवति ।
இல்லாத சீதோஷ்ணதிகளுக்கும், அவைகளின் காரணத்திற்கும் இருப்பு என்பதும் தோன்றுதல் என்பதும் கிடையாது. சீதோஷ்ணாதிக ளும், அதன் காரணமும் பிரமாணங்களினால் நிருபிக்கப்படும் போது வஸ்துவாக இல்லை.
विकारो हि सः, विकारश्च व्यभिचरति । यथा घटादिसंस्थानं चक्षुषा निरूप्यमाणं मृद्व्यतिरेकेणानुपलब्धेरसत् , तथा सर्वो विकारः कारणव्यतिरेकेणानुपलब्धेरसन् ।
அந்த சீதோஷ்ணாதிகள் விகாரமாகும், விகாரமானது எப்பொழு தும் மாறிக்கொண்டிருக்கும். எவ்வாறு கடாதிரூபங்கள் கண்களால் நிரூபிக்கும்பொழுது (ஆராயும்) மண்ணை காட்டிலும் வேறாக காணப் படாமையால் அஸத்தோ அவ்வாறேஎல்லா விகாரங்களும் காரணத் திற்கு அன்னியில் வேறாகக் காணப்படாமையால் அஸத் ஆகும்.
जन्मप्रध्वंसाभ्यां प्रागूर्ध्वं च अनुपलब्धेः ।
ஏனெனில் உற்பத்திக்கு முன்னும், நாசத்திற்கு பின்னும் காணப்ப டாமையால் (பொய்யாகும்).
कार्यस्य घटादेः मृदादिकारणस्य च तत्कारणव्यतिरेकेणानुपलब्धेरसत्त्वम् । तदसत्त्वे सर्वाभावप्रसङ्ग इति चेत् ।
மேலும் மண் முதலான காரணங்களும், அதற்குக்காரணமான வை களைக் (நிலம்) காட்டிலும் வேறாகத் தோன்றா ததினால் அதற்கு பொய்மையானது ஏற்படுகிறது. அதுவும் பொய்யாய் இருந்துவிட்டால் எல்லாமே இருப்பு அற்றதன்மை உடையதாகி விடுமே எனில்.
न ; सर्वत्र बुद्धिद्वयोपलब्धेः, सद्बुद्धिरसद्बुद्धिरिति ।
அவ்வாறு அல்ல. எல்லா வியவகார இடங்களில் ஸத்புத்தி, அஸத் புத்தி (உண்டு, இல்லை) என்ற இருவகை புத்தி காணப்படுவதால்
यद्विषया बुद्धिर्न व्यभिचरति, तत् सत् ; यद्विषया व्यभिचरति, तदसत् ; इति सदसद्विभागे बुद्धितन्त्रे स्थिते ।
எந்த விஷயம் பற்றிய புத்தியானது மாறுபாடு அற்றதோ அது ஸத் எனப்படும். எந்த புத்தியானது மாறுபாடு உடையதோ அது அஸத் புத்தியாகும் என்று இந்த பிரகாரமாக ஸத் என்றும் அஸத் என்னும் பிரிவு புத்தியினுடைய அதீனமாகும்.
सर्वत्र द्वे बुद्धी सर्वैरुपलभ्येते समानाधिकरणे ।
எங்கும் எல்லோராலும் ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு புத் திகள் உணரப்படுகின்றன.
सन् घटः, सन् पटः, सन् हस्ती इति । एवं सर्वत्र न नीलोत्पलवत् ।
நீலமான உத்பலம் என்பது போல் சமானமன்று. ஆனால் கடம் இருக்கிறது, வஸ்திரம் இருக்கிறது, யானை இருக்கிறது என்று ஒரே விதமாக ஸத் புத்தியானது எங்கும் காணப்படுகிறது.
तयोर्बुद्ध्योः घटादिबुद्धिः व्यभिचरति । तथा च दर्शितम् । न तु सद्बुद्धिः ।
அவ்விரு புத்திகளில் கடம் முதலிய (அஸத்) புத்தியானது மாறுப டுகிறது. (இருக்கிறது, இருக்கிறது என்ற) ஸத்புத்தியானது மாறுபாடு அற்றது என்று காண்பிக்கப்பட்டது.
तस्मात् घटादिबुद्धिविषयः असन् , व्यभिचारात् ; न तु सद्बुद्धिविषयः, अव्यभिचारात् ॥
ஆகையால் கடாதி புத்தி விஷயமானது மாறுபடுவதினால் அஸத், ஸத்புத்தி விஷயமானது அஸத் அல்ல. ஏன் எனில் மாறுபாடு அற்றதால்.
घटे विनष्टे घटबुद्दौ व्यभिचरन्त्यां सद्बुद्धिरपि व्यभिचरतीति चेत् ।
கடமானது நஷ்டமாகும் பொழுது கடபுத்தியானது மாறுபடும் பொழுது ஸத்புத்தியும் மாறுதல் அடைகிறதே என்று கூறினால்
न ; पटादावपि सद्बुद्धिदर्शनात् । विशेषणविषयैव सा सद्बुद्धिः ॥
அவ்வாறு அல்ல, ஏன் எனில் வஸ்திரம் முதலியவைகளிலும் ஸத்புத்தியானது தோன்றுகிறது. அந்த ஸத்புத்தியானது கேவலம் விசேஷணத்தைத்தான் குறிப்பதாக உள்ளது.
सद्बुद्धिवत् घटबुद्धिरपि घटान्तरे दृश्यत इति चेत् ।
ஸத்புத்தியைப் போல் கடபுத்தியும் வேறு கடத்தில் காணப்படுகி றதே எனில்
न ; पटादौ अदर्शनात् ॥
சரியல்ல, ஏன் எனில் வஸ்திரம் முதலியவைகளில் காணப் படாததினால்,
सद्बुद्धिरपि नष्टे घटे न दृश्यत इति चेत् ।
ஸத்புத்தியும் நஷ்டமான கடத்தில் காணப்படவில்லையே எனில்
न ; विशेष्याभावात् सद्बुद्धिः विशेषणविषया सती विशेष्याभावे विशेषणानुपपत्तौ किंविषया स्यात् ? न तु पुनः सद्बुद्धेः विषयाभावात् ॥
அப்படி இல்லை. ஸத்புத்தி விசே ஷணமாக இருப்பதால். தனது விசேஷ்யமானது (கடம் போன்றது) இல்லாதபோது எதைப் பற்றிக் கொண்டு இந்த ஸத் புத்தி அமையும்? ஸத் புத்திக்கு விஷயம் (பொ ருள்) இல்லை என்பது கிடையாது. (ஸத்புத்திக்கு மாறுபாடு இல்லா மை) கிடையவே கிடையாது.
एकाधिकरणत्वं घटादिविशेष्याभावे न युक्तमिति चेत् ।
கடம் போன்றவிசேஷ்யங்கௗ் இல்லாவிடில் (सन् घट: இடம் உள் ளது) என்றவாறு ஒரே விபக்தியில் ப்ரயோகிக்கும் ஸமாநாதிகரண்யம் எப்படி பொருந்தும் என்றால்
न ; ‘इदमुदकम्’ इति मरीच्यादौ अन्यतराभावेऽपि सामानाधिकरण्यदर्शनात् ॥
இது ஸரியல்ல. ஏனெனில் கானல் நீர் முதலியவைகளில் அதிஷ்ட்டானத்தைக்காட்டிலும் அன்யவஸ்து (ஜலமுதலியவை) காணப்படாவிட்டாலும் கூட இது ஜலம் என்றபுத்தியானது உண்டா வதினால் ஸாமானாதி கரண்யமானது காணப்படுகிறது
तस्माद्देहादेः द्वन्द्वस्य च सकारणस्य असतो न विद्यते भाव इति ।
ஆகையால் (அஸத்தான) தேஹாதிகளுக்கும், சீதோஷ்ண முத லிய துவந்துவங்களுக்கும், அதன் காரணத்திற்கும் ஒரு விதத்தாலும் இருப்புத்தன்மையானது (பாவம்) கிடையவே கிடையாது.
तथा सतश्च आत्मनः अभावः अविद्यमानता न विद्यते, सर्वत्र अव्यभिचारात् इति अवोचाम ॥
இவ்வாறு ஸத்தானது ஆத்மதத்துவம், அதற்கு அபாவம் அதா வது இல்லாமை என்பது கிடையாது. ஏனெனில் அது எங்கும் மாறுப டாமல் (பிறழ்ச்சி அடையாமல்) இருப்பதால் முன்பே கூறியுள்ளோம்.
एवम् आत्मानात्मनोः सदसतोः उभयोरपि दृष्टः उपलब्धः अन्तो निर्णयः सत् सदेव असत् असदेवेति, तु अनयोः यथोक्तयोः तत्त्वदर्शिभिः ।
இந்த பிரகாரம் ஸத்ஆத்மா, அஸத்து அநாத்மா என்று இவ்வி ரண்டின் நிர்ணயமும், தத்வதரிசிகளால் காண்பிக்கப்பட்டுள்ளது. எவ் வாறெனில் ஸத், ஸத்தே, அஸத், அஸத்தே (என்று பிரத்தியக்ஷமாக அறிந்துள்ளார்கள்) தத்வதரிசிகள்.
तदिति सर्वनाम, सर्वं च ब्रह्म, तस्य नाम तदिति, तद्भावः तत्त्वम् , ब्रह्मणो याथात्म्यम् । तत् द्रष्टुं शीलं येषां ते तत्त्वदर्शिनः, तैः तत्त्वदर्शिभिः ।
தத் என்பது சர்வநாம சப்தம், பிரஹ்மம் எல்லாமாக இருப்பதால் அதற்கு பெயர் தத் என்பது தத்பாவம், தத்வம் என்றால் பிரஹ்மத்தினு டைய உண்மை நிலை. அதை காண்பதற்கு எவர்களுக்கு சாமர்த் தியம் இருக்கிறதோ அவர்கள் தத்வதர்சிகள், அந்த தத்வதர்சிகளால் (மேலே கூறப்பட்டது நிர்ணயம் செய்யப்பட்டது)
त्वमपि तत्त्वदर्शिनां दृष्टिमाश्रित्य शोकं मोहं च हित्वा शीतोष्णादीनि नियतानियतरूपाणि द्वन्द्वानि ‘विकारोऽयमसन्नेव मरीचिजलवन्मिथ्यावभासते’ इति मनसि निश्चित्य तितिक्षस्व इत्यभिप्रायः ॥ १६ ॥
நீயும் தத்வதர்சிகளுடைய நிலையை ஆச்ரயித்து சோகம், மோஹத்தை நீக்கி நியத அநியதமான சீதோஷ்ணாதிகளான துவந்து வங்கள் விகாரமே. அவை அஸத் கானல் நீர் போல் மித்யையாக தோன்றுகிறது என்று மனதில் நிச்சயம் செய்து பொறுத்துக்கொள் என்பது அபிப்பிராயம்.
किं पुनस्तत् , यत् सदेव सर्वदा इति ; उच्यते —
மேலும், எந்த ஸத்தோ எப்பொழுதுமே இருக்கிறதோ அது என்ன? என்று கூறப்போகிறார்.
अविनाशि तु तद्विद्धि येन सर्वमिदं ततम् ।
विनाशमव्ययस्यास्य न कश्चित्कर्तुमर्हति ॥ १७ ॥
அவிநாசி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம் ।
விநாசமவ்யயஸ்யாஸ்ய ந கச்சித்கர்துமர்ஹதி ॥ 17 ॥
अविनाशि न विनष्टुं शीलं यस्येति । तुशब्दः असतो विशेषणार्थः ।
அவிநாசி என்றால் நஷ்ட்டம் அடைவதற்கு யோக்கியதை அற்றது என்று பொருள் து என்றசப்தமானது அசத்தைக்காட்டிலும் சத்திற்கு விசேஷணத்தைக்காட்டும் பொருட்டாகும்.
तत् विद्धि विजानीहि । किम् ? येन सर्वम् इदं जगत् ततं व्याप्तं सदाख्येन ब्रह्मणा साकाशम् , आकाशेनेव घटादयः ।
அதை அறி எதை எனில் ஆகாசத்தால் இந்த கடாதிகள் வியா பிக்கப்பட்டது போல் அந்த ஸத் எனப்படும் ப்ரஹ்மத்தினால் ஆகாசமும் இந்த எல்லா ஜகத்தும் வியாபிக்கப்பட்டது.
विनाशम् अदर्शनम् अभावम् । अव्ययस्य न व्येति उपचयापचयौ न याति इति अव्ययं तस्य अव्ययस्य ।
அவ்யயம் என்றால் வ்யயம் (மாறுபாடு) அடையாது (என்று பொருள்) அதற்கு வளர்தலோ குறைதலோ அடையாது அதனால் அவ்யயம். அந்த அவ்யயத்திற்கு விநாசமோ அல்லது அபாவமோ ஏற்படாது.
नैतत् सदाख्यं ब्रह्म स्वेन रूपेण व्येति व्यभिचरति, निरवयवत्वात् , देहादिवत् ।
இந்த ஸத் எனப்படும் பிரஹ்மமானது நிரவயவமாய் இருப்பதால் தன்னுடைய நிலையிலிருந்து தேஹாதிகளைப் போல் நழுவாது.
नाप्यात्मीयेन , आत्मीयाभावात् । यथा देवदत्तो धनहान्या व्येति, न तु एवं ब्रह्म व्येति ।
தன்னைச் சேர்ந்ததின் மறைவாலும் ஏனெனில் தன்னுடையது என்று ஒன்று இல்லாததால், எவ்வாறெனில் தேவதத்தனானவன் பணநஷ்டத்தினால் அவன் நஷ்டம் அடைவது போல பிரஹ்ம் மமானது மாறுபடுவதில்லை (நஷ்டமடைவதில்லை)
अतः अव्ययस्य अस्य ब्रह्मणः विनाशं न कश्चित् कर्तुमर्हति, न कश्चित् आत्मानं विनाशयितुं शक्नोति ईश्वरोऽपि ।
ஆகையால் அவ்யயமான பிரஹ்ம்மத்தை விநாசம் செய்வதற்கு ஒருவராலும் முடியாது. கடவுளாக இருந்தாலும்
आत्मा हि ब्रह्म, स्वात्मनि च क्रियाविरोधात् ॥ १७ ॥
ஆத்மாதானல்லவா ப்ரஹ்மம் தன்னிடம் தனக்கு கிரியை ஏற்படாது.
किं पुनस्तदसत् , यत्स्वात्मसत्तां व्यभिचरतीति, उच्यते —
எது தன் இருத்தலை விட்டு மாறுமோ அது என்ன என்றால் கூறப்படுகிறது -
अन्तवन्त इमे देहा नित्यस्योक्ताः शरीरिणः ।
अनाशिनोऽप्रमेयस्य तस्माद्युध्यस्व भारत ॥ १८ ॥
அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: சரீரிண: ।
அநாசிநோஅப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத ॥ 18 ॥
अन्तः विनाशः विद्यते येषां ते अन्तवन्तः । यथा मृगतृष्णिकादौ सद्बुद्धिः अनुवृत्ता प्रमाणनिरूपणान्ते विच्छिद्यते, स तस्य अन्तः ; तथा इमे देहाः स्वप्नमायादेहादिवच्च अन्तवन्तः ।
(அந்த வந்த) என்றால் எவைகளுக்கு நாசமானது (முடிவானது) இருக்கிறதோ அவை. எவ்வாறு கானல் நீர் முதலியவைகளில் உள்ள (ஜலவிஷயமான) ஸத்புத்தியானது தொடர்ந்து இருந்தாலும் பிரமா ணங்களினால் நிரூபணம் செய்யும் பொழுது நீங்கி விடுகிறது. அது அதன் முடிவு. அவ்வாறேஇந்த தேகங்கள் ஸ்வப்னமாயாதேகாதிகள் போல் முடிவுடன் கூடியவைகள் ஆகும்.
नित्यस्य शरीरिणः शरीरवतः अनाशिनः अप्रमेयस्य आत्मनः अन्तवन्त इति उक्ताः विवेकिभिरित्यर्थः ।
நித்தியமாயும், சரீரியாயும் நாசமற்றதாயும் அப்ரமேயமுமான ஆத்மாவினுடைய (சரீரங்கள்) நாசத்துடன் (முடிவுடன்) கூடியது என்று விவேகி புருஷர்களால் கூறப்பட்டது என்பது பொருள்.
‘नित्यस्य’ ‘अनाशिनः’ इति न पुनरुक्तम् ; नित्यत्वस्य द्विविधत्वात् लोके, नाशस्य च ।
உலகத்தில் நித்யத்திற்கும் நாசத்திற்கும் இருவித பேதங்கள் இருப்பதால், நித்யம், அநாசி (நாசமற்றது) என்று கூறுதல் புனருக்தி தோஷமாகாது.
यथा देहो भस्मीभूतः अदर्शनं गतो नष्ट उच्यते । विद्यमानोऽपि यथा अन्यथा परिणतो व्याध्यादियुक्तो जातो नष्ट उच्यते ।
எவ்வாறு தேஹமானது சாம்பலாகி பார்க்க முடியாத போது நஷ்டமாகி விட்டது என்று கூறப்படுகிறது. அவ்வாறேசரீரம் இருக்கும் பொழுதே வியாதியினால் உடல் மாறுதல் அடையும் பொழுதும் நஷ்ட மாகி விட்டது என்று கூறப்படுகிறது.
तत्र ‘अनाशिनः’ ‘नित्यस्य’ इति द्विविधेनापि नाशेन असम्बन्धः अस्येत्यर्थः ।
(நாசமற்றது, நித்தியம்) என்றஇந்த இரண்டு விசேஷணத்தினு டைய அபிப்பிராயமானது இந்த ஆத்மாவிற்கு இவ்விரு வித நாசத்து டன் ஸம்பந்தம் கிடையாது என்பது பொருள்.
अन्यथा पृथिव्यादिवदपि नित्यत्वं स्यात् आत्मनः ; तत् मा भूदिति ‘नित्यस्य’ ‘अनाशिनः’ इत्याह ।
இவ்வாறு (நித்தியமாய், அவிநாசி) என்று கூறாவிட்டால் ஆத்மா விற்கு பிருதிவீ முதலியவைகள் போல் நித்தியத்தும் ஸம்பவிக்கும் அவ்வாறு ஸம்பவிக்கக்கூடாது என்பதால் நித்யம் என்றும் நாசமற்றது என்றும் கூறினார்.
अप्रमेयस्य न प्रमेयस्य प्रत्यक्षादिप्रमाणैः अपरिच्छेद्यस्येत्यर्थः ॥
பிரத்யக்ஷாதி பிரமாணங்களினால் எதனுடைய ஸ்வரூபத்தை நிச்சயிக்க முடியாதோ அது அப்ரமேயம் என்பது பொருள்.
ननु आगमेन आत्मा परिच्छिद्यते, प्रत्यक्षादिना च पूर्वम् ।
ஆத்மா சாஸ்த்திரத்தினாலும் (அதற்கு முன்) பிரத்யக்ஷாதி பிர மாணங்களினாலும் சித்தமாகி இருக்கிறதன்றோ (இவ்வாறு இருக் கும் பொழுது அது) எவ்வாறு அப்ரமேயமாகும்
न ; आत्मनः स्वतः सिद्धत्वात् । सिद्धे हि आत्मनि प्रमातरि प्रमित्सोः प्रमाणान्वेषणा भवति ।
அவ்வாறு அல்ல. ஆத்மா ஸ்வதஸித்தமாயிருப்பதால், ப்ரமாதா ரூபமான ஆத்மாவானது நிச்சயிக்ககப்பட்டபின் அல்லவா ஜிக்ஞாசு வானவன் (ஆத்மாவை அதை அறிய பிரமாணங்களைத் தேட முற்ப டுவான்)
न हि पूर्वम् ‘इत्थमहम्’ इति आत्मानमप्रमाय पश्चात् प्रमेयपरिच्छेदाय प्रवर्तते । न हि आत्मा नाम कस्यचित् अप्रसिद्धो भवति ।
முதலில் தன்னை (ஆத்மாவை) இருக்கிறேன் என்று அறியாமல் மற்றபதார்த்தங்களை அறிவதற்கு முற்படுவதில்லை. மேலும் ஆத்மா ன்றால் ஏதோ ஒரு அப்பிரஸித்தமான பொருளல்ல. (எல்லோரும் ஸாமானியமாக அறிந்ததே)
शास्त्रं तु अन्त्यं प्रमाणम् अतद्धर्माध्यारोपणमात्रनिवर्तकत्वेन प्रमाणत्वम् आत्मनः प्रतिपद्यते, न तु अज्ञातार्थज्ञापकत्वेन ।
சாஸ்திரமானது முடிவான பிரமாணமாகும். அந்த சாஸ்த்திரபிர மாணமானது தன்தர்மமற்றஅநாத்ம பதார்த்தங்களை நிவிர்த்தி செய் வதில் மாத்திரம் ஆத்மாவிடத்தில் பிரமாணத்துவம் பெறுகிறது, முற்றி லும் அறியாதபொருளை அறிவித்தலில் காரணமாக (ப்ரமாணத்வம் இல்லை)
இவ்வாறு ச்ருதியும் கூறுகிறது. எது சாக்ஷாத் அபரோக்ஷமோ அது ப்ரஹ்மம். எந்த ஆத்மா எல்லோருடைய இருதயத்திலும் வியாபித்திருக்கிறதோ என்பன முதலியவைகளால்.
यस्मादेवं नित्यः अविक्रियश्च आत्मा तस्मात् युध्यस्व, युद्धात् उपरमं मा कार्षीः इत्यर्थः ॥
எதனால் இந்த ஆத்மாவானது நித்யமாயும், நிர்விகாரியாயும் இருக்கிறதோ அதனால் யுத்தம் செய். யுத்தத்திலிருந்து உபரமத்தை (நிவிர்த்தியை) செய்யாதே என்பது பொருள்
न हि अत्र युद्धकर्तव्यता विधीयते, युद्धे प्रवृत्त एव हि असौ शोकमोहप्रतिबद्धः तूष्णीमास्ते । अतः तस्य प्रतिबन्धापनयनमात्रं भगवता क्रियते । तस्मात् ‘युध्यस्व’ इति अनुवादमात्रम्, न विधिः ॥ १८ ॥
இங்கு யுத்தத்தை அவசியம் செய்ய வேண்டும் என்று விதிக்கப் படவில்லை. ஆனால் யுத்தத்தில் பிரவிர்த்தித்து விட்டு சோக மோஹ பிரதிபந்தத்தால் சும்மா (ஒன்றும் செய்யாமல்) இருப்பவனுக்கு அவனுடைய பிரதிபந்தத்தை நீக்குதல் மாத்திரமே பகவானால் செய்யப்பட்டது. ஆகையால் யுத்தம் செய் என்றது அனுவாத மாத்திரமே அன்றி விதியல்ல.
शोकमोहादिसंसारकारणनिवृत्त्यर्थः गीताशास्त्रम् , न प्रवर्तकम् इत्येतस्यार्थस्य साक्षिभूते ऋचौ आनीनाय भगवान् ।
கீதா சாஸ்த்திரமானது சோக மோஹாதி ஸம்ஸாரகாரணத்தை நிவிர்த்தி செய்வதற்கே அன்றி விதிக்கவில்லை என்றஇந்த அர்த்தத் திற்கு ஸாக்ஷி பூதமாக இரண்டு (கடோபநிஷத்) ரிக்குகளை பகவான் எடுத்துக்காட்டுகிறார்.
यत्तु मन्यसे ‘युद्धे भीष्मादयो मया हन्यन्ते’ ‘अहमेव तेषां हन्ता’ इति, एषा बुद्धिः मृषैव ते । कथम् ? —
(அவ) யுத்தத்தில் பீஷ்மர் முதலியோர் என்னால் கொல்லப்படு கின் றனர். நானே அவர்களைக் கொல்கிறவன் என்று நீ நினைத்தால் அந்த புத்தி பொய்யே எவ்வாறு எனில்
य एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम् ।
उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते ॥ १९ ॥
ய ஏனம் வேத்தி ஹந்தாரம் யச்சைநம் மன்யதே ஹதம் ।
உபௌ தௌந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே ॥ 19 ॥
य एनं प्रकृतं देहिनं वेत्ति विजानाति हन्तारं हननक्रियायाः कर्तारं यश्च एनम् अन्यो मन्यते हतं देहहननेन ‘हतः अहम्’ इति हननक्रियायाः कर्मभूतम् ।
எவன் இப்பொழுது வர்ணணம் செய்யப்பட்ட தேகியை கொலை செய்தவனாக அறிகிறானோ, அவ்வாறேமற்றவன் தேஹத்தை அழிப் பதால் நான் கொல்லப்பட்டவனாக ஆகிறேன் என்று நினைக்கி றானோ ஹனனகிரியைக்கு (கொல்லப்படும் செயல்) கர்மாவாகிறது.
तौ उभौ न विजानीतः न ज्ञातवन्तौ अविवेकेन आत्मानम् ।
அஹம் பிரத்யய விஷயமான ஆத்மாவை அவிவேகத்தினால் அவ்விருவரும் அறிந்தவர்கள் அல்லர்.
‘हन्ता अहम्’ ‘हतः अस्मि अहम्’ इति देहहननेन आत्मानमहं प्रत्ययविषयं यौ विजानीतः तौ आत्मस्वरूपानभिज्ञौ इत्यर्थः ।
நான் கொல்கிறவன், நான் கொல்லப்பட்டவன் என்று தேஹத்தை கொல்லுதலினால் (உண்டாவதை) ஆத்மாவினுடை யதாக எவர்கள் அறிகிறார்களோ அவர்கள் ஆத்ம ஸ்வரூபத்தை அறியாதவர்களா கின்றனர்.
यस्मात् न अयम् आत्मा हन्ति न हननक्रियायाः कर्ता भवति, न च हन्यते न च कर्म भवतीत्यर्थः, अविक्रियत्वात् ॥ १९ ॥
ஏனெனில் இந்த ஆத்மாவானது கொல்லுவதும் இல்லை. கொல்லும் செயலுக்கு கர்தாவாக ஆகாது. அவ்வாறே கொல்லப் படுவதும் இல்லை. ஆகையால் கர்மாவும் ஆகாது. ஏன்எனில் கிரியை அற்றவராக இருப்பதால்.
कथमविक्रय आत्मेति द्वितीयो मन्त्रः —
(அ.கை) எவ்வாறு ஆத்மா கிரியை அற்றதாய் இருக்கிறது என்பதை இரண்டாவது மந்திரம் (காண்பிக்கிறது)
न जायते म्रियते वा कदाचिन्नायं भूत्वाभविता वा न भूयः ।
अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे ॥ २० ॥
ந ஜாயதே மரியதே வா கதாசித் நாயம் பூத்வா பவிதா வா ந பூய: ।
அஜோ நித்ய: சாச்வதோஅயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமானே சரீரே ॥ 20 ॥
न जायते न उत्पद्यते, जनिलक्षणा वस्तुविक्रिया न आत्मनो विद्यते इत्यर्थः । न म्रियते वा । वाशब्दः चार्थे ।
இந்த ஆத்மாவிற்கு உற்பத்தி கிடையாது என்பது என்னவென் றால் உற்பத்திரூப (ஜன்மரூப) வஸ்து விகாரமானது ஆத்மாவிற்கு கிடையாது. மேலும் மரணமும் கிடையாது. வா என்ற சப்தமானது இங்கு உம் என்றஅர்த்தத்தில் வருகிறது.
न म्रियते च इति अन्त्या विनाशलक्षणा विक्रिया प्रतिषिध्यते ।
மரணம் கிடையாது என்பதால் கடைசியான விநாச லக்ஷண மான விகாரமும் நிராகரிக்கப்படுகிறது.
कदाचिच्छब्दः सर्वविक्रियाप्रतिषेधैः सम्बध्यते — न कदाचित् जायते, न कदाचित् म्रियते, इत्येवम् ।
கதாசித் ஒருபொழும் என்றசப்தமானது எல்லா விகாரங்களையும் நிஷேதம் செய்வதில் சம்பந்திக்கிறது. எவ்வாறு எனில் ஒருபோதும் பிறப்பதில்லை, ஒருபோதும் மரணமடைவதில்லை என்று இவ்வாறு
यस्मात् अयम् आत्मा भूत्वा भवनक्रियामनुभूय पश्चात् अभविता अभावं गन्ता न भूयः पुनः, तस्मात् न म्रियते । योहि भूत्वा न भविता स म्रियत इत्युच्यते लोके ।
எதனால் இந்த ஆத்மாவானது உண்டாகி என்றால் உற்பத்தி ரூப விகாரத்தை அனுபவித்து அதன்பின் இல்லாமல் போவதாக இல்லையோ அதனால் அதற்கு மரணமானது கிடையாது. ஏனெனில் உண்டாகி இல்லாமல் போவதைத்தான் மரணம் என்று உலகத்தில் கூறப்படுகிறது.
वाशब्दात् नशब्दाच्च अयमात्मा अभूत्वा वा भविता देहवत् न भूयः । तस्मात् न जायते । यो हि अभूत्वा भविता स जायत इत्युच्यते । नैवमात्मा । अतो न जायते ।
வா என்றசப்தத்தினாலும் ந என்றசப்தத்தினாலும் இந்த ஆத்மா தேஹத்தைப் போல் முதலில் இல்லாமல் இருந்து பின்பு இருத் தலை அடையவில்லை. ஆகையால் அதற்கு ஜன்மமானது இல்லை. உலகில் எது இல்லாமல் இருந்து உண்டாகிறதோ அதைப் பிறப்பு என்று சொல்லுவர். அவ்வாறு ஆத்மா இல்லா ததினால் அதற்கு பிறப்பு கிடையாது.
यस्मादेवं तस्मात् अजः, यस्मात् न म्रियते तस्मात् नित्यश्च ।
எதனால் இவ்வாறு (பிறப்பற்றதாய்) இருக்கிறதோ அதனால் அஜ:, எதனால் மரணம் இல்லையோ அதனால் நித்தியம்
यद्यपि आद्यन्तयोर्विक्रिययोः प्रतिषेधे सर्वा विक्रियाः प्रतिषिद्धा भवन्ति, तथापि मध्यभाविनीनां विक्रियाणां स्वशब्दैरेव प्रतिषेधः कर्तव्यः अनुक्तानामपि यौवनादिसमस्तविक्रियाणां प्रतिषेधो यथा स्यात् इत्याह — शाश्वत इत्यादिना ।
ஆதியிலும் முடிவிலும் உள்ள விகாரங்களை (ஜன்ம, மரணங்களை) நீக்கிவிட்டால் நடுவில் உள்ள மற்றவிகாரங்களும் (கௌமார முதலியவை) நீக்கிவிட்டதாக ஆகும். ஆனாலும் கூறப்படாத அந்த நடுவில் உள்ள விகாரங்களைப் போக்குவதற்கு அதனுடைய சப்தத்தினாலும், அதன் அர்த்ததினாலும் யௌவன முதலிய எல்லா விகாரங்களையும் எவ்வாறு பிரதிஷேதம் (நீக்கம்) செய்ய முடியுமோ அவ்வாறே(அசைதல் முதலிய) மற்றவிகாரங் களையும் (சாஸ்வத) முதலிய சப்தங்களால் கூறுகிறார்.
शाश्वत इति अपक्षयलक्षणा विक्रिया प्रतिषिध्यते । शश्वद्भवः शाश्वतः । न अपक्षीयते स्वरूपेण, निरवयवत्वात् । निर्गुणत्वात् च नापि गुणक्षयेण अपक्षयः ।
எப்பொழுதும் (ஒரே படித்தாய்) இருப்பதை சாச்வதம் என்கி றோம். (சாச்வத) என்றசப்தத்தினால் க்ஷயமாகக்கூடிய விகாரமானது மறுக்கப்படுகிறது. ஏன் எனில் ஆத்மாவானது அவயவம் அற்றதின் காரணத்தினாலே அதனுடைய ஸ்வரூபத்திற்கு நாசமானது (க்ஷயமா னது) ஏற்படாது. மேலும் நிர்குணமாய் இருப்பதினால் குணத்தினாலும் அதற்கு க்ஷயமானது (குறைவானது) ஏற்படாது.
अपक्षयविपरीतापि वृद्धिलक्षणा विक्रिया प्रतिषिध्यते — पुराण इति । यो हि अवयवागमेन उपचीयते स वर्धते अभिनव इति च उच्यते । अयं तु आत्मा निरवयवत्वात् पुरापि नव एवेति पुराणः ; न वर्धते इत्यर्थः ।
தேய்தலுக்கு விபரீதமான விருத்தி (வளர்தல்) என்ற லக்ஷணத்தை உடைய விகாரத்தை (புராண) என்ற சப்தமானது விளக்குகிறது. எந்தபதார்த்தத்தினது அவயவமானது உத்பத்தியாகி, பெரிதாகி வளர்கிறதோ அதை (அபிநவ) என்று கூறப்படுகிறது. இந்த ஆத்மாவானது நிரவயமாய் இருப்பதால் முன்னாலும் புதிதாகவே இருந்தது என்பதால் அது (புராண) எனப்படுகிறது. ஆகையால் அதற்கு வளர்ச்சி என்பதில்லை.
तथा न हन्यते । हन्यमाने विपरिणम्यमानेऽपि शरीरे ।
சரீரம் நாசமும் (விகாரமும்) மாறுபாடும் அடைந்தாலும் ஆத்மா நாசமும், விகாரமும் அடையாது.
हन्ति ; अत्र विपरिणामार्थे द्रष्टव्यः अपुनरुक्ततायै । न विपरिणम्यते इत्यर्थः ।
இங்கு (ஹன்தி) கொல்லுதல் என்றகிரியையைக் கூறும் சொல்லா னது புனருக்தி (சொல்லுதலை சொல்லுதல்) தோஷம் உண்டாகவண் ணம் பரிணாமத்தை குறிக்கிறது என்று அறிய வேண்டும். ஆத்மா ஒருபோதும் தன்நிலையிலிருந்து மாறுபடுவதில்லை என்று பொருள்.
अस्मिन् मन्त्रे षड् भावविकारा लौकिकवस्तुविक्रिया आत्मनि प्रतिषिध्यन्ते । सर्वप्रकारविक्रियारहित आत्मा इति वाक्यार्थः ।
இந்த மந்திரத்தில் லௌகிக விஷயங்களில் தோன்றும் ஷட்பாவ விகாரங்களும் ஆத்மாவிடத்தில் மறுக்கப்பட்டுள்ளன. எல்லா விதமாகவும் இந்த ஆத்மா விகாரங்கள் அற்றது என்பது இம் மந்திரத்தின் வாக்கியார்த்தமாகும்.
यस्मादेवं तस्मात् ‘उभौ तौ न विजानीतः’ इति पूर्वेण मन्त्रेण अस्य सम्बन्धः ॥ २० ॥
எதனால் இவ்வாறோ அதனால் அந்த இருவரும் (ஆத்ம ஸ்வரூபத்தை) சரியாக அறிந்தவர் ஆகார் என்று இதற்கு முந்திய மந்திரத்துடன் இந்த மந்திரத்தை ஸம்பந்தம் செய்ய வேண்டும்.
‘य एनं वेत्ति हन्तारम्’ (भ. गी. २ । १९) इत्यनेन मन्त्रेण हननक्रियायाः कर्ता कर्म च न भवति इति प्रतिज्ञाय, ‘न जायते’ इत्यनेन अविक्रियत्वं हेतुमुक्त्वा प्रतिज्ञातार्थमुपसंहरति —
(அ.கை) (ய ஏனம் வேத்தி ஹந்தாரம்) என்ற மந்திரத்தினால் கொல்லுதல் என்றசெயலுக்கு கர்த்தாவும், கர்மமும் (கர்த்தாவும், செயப்படுபொருளும்) ஆகா என்றபிரதிக்ஞை செய்து ந ஜாயதே என்ற ச்லோகத்தினால் (ஆத்மாவிற்கு) நிர்விகார தன்மையின் காரணத்தைக் கூறியும் பிரிதிக்ஞை செய்த விஷயத்தைக் கூறியும் முடிவு செய்கிறார்.
वेदाविनाशिनं नित्यं य एनमजमव्ययम् ।
कथं स पुरुषः पार्थ कं घातयति हन्ति कम् ॥ २१ ॥
வேதாவிநாசினம் நித்யம் ய ஏனமஜமவ்யயம் ।
கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம் ॥ 21 ॥
वेद विजानाति अविनाशिनम् अन्त्यभावविकाररहितं नित्यं विपरिणामरहितं यो वेद इति सम्बन्धः । एनं पूर्वेण मन्त्रेणोक्तलक्षणम् अजं जन्मरहितम् अव्ययम् अपक्षयरहितं ।
முன் மந்திரத்தில் கூறிய லக்ஷணங்களோடு கூடிய ஆத்மா விற்கு அவிநாசி என்றதால் அந்திம பாவ விகாரமான மரணமற்றதும் நித்தியம் என்றதால் (நோய் முதலிய வைகளால் உண்டாகும் பலஹீனம் மற்றும்) உடல் மெலிதல் முதலிய மாறுபாடு (விகாரம்) அற்றது. அஜம் ஜன்மமற்றது என்றும் அவ்யயம் குறைதல் ஆன விகாரம் அற்றது என்று அறிய வேண்டும்.
कथं केन प्रकारेण सः विद्वान् पुरुषः अधिकृतः हन्ति हननक्रियां करोति, कथं वा घातयति हन्तारं प्रयोजयति ।
ஆத்ம தத்துவத்தை அறிந்த அதிகாரி புருஷன் எவ்வாறு கொல் லுதல் என்ற செயலை செய்வான். மற்றும் எவ்வாறு ஒருவனை கொல்லத் தூண்டுவான்
न कथञ्चित् कञ्चित् हन्ति, न कथञ्चित् कञ्चित् घातयति इति उभयत्र आक्षेप एवार्थः, प्रश्नार्थासम्भवात् ।
எந்த முறையிலாவது, எவனொருவனையாவது கொல்லுவதில் லை. அவ்வாறேஎவ்விதமாகவாவது, எவனொருவனை யாவது கொல் லச்செய்வதுமில்லை (எவ்விதம், எவனை) (கதம் சித், கம்சித்) இந்த இரண்டு சப்தங்களும் அல்ல என்ற அர்த்தத்தில் வந்துள்ளதே அன்றி கேள்வி அர்த்தத்தில் அல்ல ஆக்ஷேபார்த்தமாகும்.
हेत्वर्थस्य च अविक्रियत्वस्य तुल्यत्वात् विदुषः सर्वकर्मप्रतिषेध एव प्रकरणार्थः अभिप्रेतो भगवता ।
(கொல்லுதல் என்ற செயலை மறுத்தற்குரிய) காரணமானது (ஆத்மா நிர்விகாரி என்பதால்) மற்றஎல்லா செயல்களையும் (கிரியை களையும்) மறுப்பதற்கு ஒப்பாகும். ஏனெனில் கர்மங்கள் நிஷேதிக்கப்ப டுதலே பகவானுக்கு இந்தப்பிரகரணத்தின் அபிப்பிராயமாகும்.
हन्तेस्तु आक्षेपः उदाहरणार्थत्वेन कथितः ॥
ஹனன கிரியையின் (கொல்லுதல் என்னும் செயலின்) நிஷேதமானது மற்றகிரியைகளின் உதாரணமாக கூறப்பட்டது.
विदुषः कं कर्मासम्भवहेतुविशेषं पश्यन् कर्माण्याक्षिपति भगवान् ‘कथं स पुरुषः’ इति ।
ஞானிக்கு கர்மா என்பது ஸம்பவிக்காமல் இருப்பதற்கு பகவான் எந்தக்காரணத்தைக் கொண்டு (கதம் சபுருஷ) எப்படிக்கொல்வான் என்று கர்மங்களை மறுக்கிறார்.
ननु उक्त एवात्मनः अविक्रियत्वं सर्वकर्मासम्भवकारणविशेषः ।
ஆத்மா நிர்விகாரியாய் இருத்தலே எல்லாகர்மங்களும் நீக்கப்பட் டதற்கு முக்கிய காரணம் என்று முன்பே கூறப்பட்டுள்ளதே.
सत्यमुक्तः । न तु सः कारणविशेषः, अन्यत्वात् विदुषः अविक्रियादात्मनः । न हि अविक्रियं स्थाणुं विदितवतः कर्म न सम्भवति इति चेत् ।
கூறப்பட்டது உண்மைதான். ஆனால் அது விசேஷமான கார ணமாகாது. நிர்விகார ஆத்மாவைகக் காட்டிலும் ஞானி வேறானவன் என்பதால். ஏன் எனில் ஒரு தூணை அசைதல் முதலிய விகாரமற்ற தாய் அறிந்தவன் கர்மங்களில் இருந்து விடுபடுவதில்லையே!.
न ; विदुषः आत्मत्वात् । न देहादिसङ्घातस्य विद्वत्ता । अतः पारिशेष्यात् असंहतः आत्मा विद्वान् अविक्रियः इति तस्य विदुषः कर्मासम्भवात् आक्षेपो युक्तः ‘कथं स पुरुषः’ इति ।
அவ்வாறு அல்ல. ஞானி (விகாரமற்ற) ஆத்மாவாய் இருப்பதால், ஞானியாய் இருத்தல் தேஹம் முதலியவைகளின் சேர்க்கை அன்று. ஆகையால் பாரிசேஷ நியாயத்தால் ஞானியானவன் சேர்க்கை அற்றநிர்விகாரியான ஆத்மா என்றதால் அந்த ஞானிக்கு கர்மங்கள் துளியும் அற்றதால் (कथं स पुरुषः கதம் ச புருஷ:) அவன் எப்படிக் கொல்வான் என்ற ஆக்ஷேபணையானது பொருந்துகிறது.
यथा बुद्ध्याद्याहृतस्य शब्दाद्यर्थस्य अविक्रिय एव सन् बुद्धिवृत्त्यविवेकविज्ञानेन अविद्यया उपलब्धा आत्मा कल्प्यते ।
எவ்வாறு ஆத்மா, நிர்விகாராயிருந்ததும் புத்திவிருத்தியை பிரித்து அறியாத அக்ஞானத்தினால் அவித்தையை அடைந்து புத்தி விருத்தியினால் கொண்டு வரப்பட்ட சப்தமுதலிய விஷயங்களை அறிகிறான் என்று கல்பிக்கப்படுகிறது.
एवमेव आत्मानात्मविवेकज्ञानेन बुद्धिवृत्त्या विद्यया असत्यरूपयैव परमार्थतः अविक्रिय एव आत्मा विद्वानुच्यते ।
அவ்வாறே, ஆத்மா, அநாத்மாவைப் பிரித்து அறியும் ஞானரூபமானது புத்திவிருத்தியாகிய வித்யையினால் அது அப்படிப் பொய்யாக இருந்தாலும் அந்த வித்தையினால் (அந்த ஞானத்தி னால்) உண்மையில் ஆத்மா நிர்விகாரியாதலால் வித்வான் என்று கூறப்படுகிறார்.
विदुषः कर्मासम्भववचनात् यानि कर्माणि शास्त्रेण विधीयन्ते तानि अविदुषो विहितानि इति भगवतो निश्चयोऽवगम्यते ॥
ஞானிக்கு கர்மங்கள் நிஷேதிக்கப்பட்டதால் சாஸ்திரத்தில் எந்த கர்மங்கள் விதிக்கப்பட்டுள்ளனவோ அவைகள் அக்ஞானிக்கு விதிக் கபட்டவைகள் எதுவானது நிர்ணயம் என்று அறியப்படுகிறது.
ननु विद्यापि अविदुष एव विधीयते, विदितविद्यस्य पिष्टपेषणवत् विद्याविधानानर्थक्यात् । तत्र अविदुषः कर्माणि विधीयन्ते न विदुषः इति विशेषो नोपपद्यते इति चेत् ।
அப்படியானால், வித்யை (ஞானமானது) யானது அக்ஞானிக ளுக்கே விதிக்கப்பட்டுள்ளது. அறிந்த ஞானிகளுக்கு பிசைந்த மாவை பிசைவது போல் வித்யை அர்த்தமற்றதாகிவிடும். ஆகையால் இங்கு அக்ஞானிக்குத்தான் கர்மமானது விதிக்கப் பட்டது. ஞானிக்கு அல்ல என்பது பொருத்தமுடையது அன்று.
न ; अनुष्ठेयस्य भावाभावविशेषोपपत्तेः । अग्निहोत्रादिविध्यर्थज्ञानोत्तरकालम् अग्निहोत्रादिकर्म अनेकसाधनोपसंहारपूर्वकमनुष्ठेयम् ‘कर्ता अहम् , मम कर्तव्यम्’ इत्येवंप्रकारविज्ञानवतः अविदुषः यथा अनुष्ठेयं भवति, न तु तथा ‘न जायते’ इत्याद्यात्मस्वरूपविध्यर्थज्ञानोत्तरकालभावि किञ्चिदनुष्ठेयं भवति।
அவ்வாறு கூறுவது சரியல்ல, ஏன் எனில் (செய்யவேண்டியதற்கு) செய்யவேண்டும், செய்யவேண்டியதில்லை என்பதில் வேறுபாடு இருக்கிறது. நான் கர்த்தா, என்னால் செய்யப்பட வேண்டும் என்று இவ்வாறு அறிந்தவனான அக்ஞானி அக்னி ஹோத்திராதி விதி வாக் கியத்தின் அர்த்தத்தைத் தெரிந்து கொண்டபின் அநேக ஸாதனங் களை சேகரித்து அக்னி ஹோத்திராதி கர்மங்களை அனுஷ்டிக்கி றானோ அவ்வாறு ஞானி அனுஷ்டிக்க வேண்டியதில்லை. ஏனெ னில், (ந ஜாயதே = பிறப்பதில்லை) முதலிய ஆத்மஸ்வரூப வாக்கியத் தின் அர்த்த ஞானத்திற்குப் பின் அனுஷ்டிக்கவேண்டியது ஒன்றும் இல்லை (என்று தெளிவுபடுத்துகிறது.)
किं तु ‘नाहं कर्ता, नाहं भोक्ता’ इत्याद्यात्मैकत्वाकर्तृत्वादिविषयज्ञानात् नान्यदुत्पद्यते इति एष विशेष उपपद्यते ।
ஏனெனில் நான் கர்த்தா அல்ல, போக்தா அல்ல, என்பன முதலியவைகளால் ஆத்மா ஏகத்துவ அகர்த்திருத்துவ முதலிய ஞானத்தைத் தவிர மற்றவேறுவிதமான எதுவும் ஏற்படாது. இந்தப்பிர காரமாக (ஞானி, அக்ஞானிகளுடைய) விபாகமானது (பிரிவானது) ஏற்படுகிறது.
यः पुनः ‘कर्ता अहम्’ इति वेत्ति आत्मानम् , तस्य ‘मम इदं कर्तव्यम्’ इति अवश्यंभाविनी बुद्धिः स्यात् ; तदपेक्षया सः अधिक्रियते इति तं प्रति कर्माणि सम्भवन्ति । स च अविद्वान् , ‘उभौ तौ न विजानीतः’ (भ. गी. २ । १९) इति वचनात् ।
மேலும் எவனொருவன், (கர்த்தா அஹம் = நான் கர்த்தா) என்று தன்னை அறிகிறானோ அவனுக்கு (மம இதம் கர்த்தவ்யம் = என்னால் இது செய்யப்படவேண்டும்) என்றபுத்தியானது அவசியம் ஏற்படும். அந்த புத்தியை அபேக்ஷித்து அவன் கர்மத்திற்கு அதிகாரியாகிறான். (உபௌ தௌந விஜானீத: அவ் இருவரும் சரியாக அறிபவராகார்) என்றவசனத்தினால் அவன்தான் அக்ஞானி (அவித்வான்).
विशेषितस्य च विदुषः कर्माक्षेपवचनाच्च ‘कथं स पुरुषः’ इति ।
(கதம் ஸ புருஷ: அவன் எப்படி செய்கிறான்) என்று பார்த்து கூறப்பட்ட ஞானிக்கு கர்மமானது ஆக்ஷேபிக்கப்படுகிறது.
तस्मात् विशेषितस्य अविक्रियात्मदर्शिनः विदुषः मुमुक्षोश्च सर्वकर्मसंन्यासे एव अधिकारः ।
ஆகையால் ஆத்மாவைக் காண்கின்றஞானிக்கும், மோக்ஷத் தை அடைய விரும்புவோனுக்கும் ஸர்வகர்ம ஸந்நியாஸத்தில்தான் அதிகாரம்.
अत एव भगवान् नारायणः साङ्ख्यान् विदुषः अविदुषश्च कर्मिणः प्रविभज्य द्वे निष्ठे ग्राहयति — ‘ज्ञानयोगेन साङ्‍ख्यानां कर्मयोगेन योगिनाम्’ (भ. गी. ३ । ३) इति ।
ஆகையால்தான் பகவான் நாராயணன் ஞானிகளுக்கு (சாங்கி யர்களுக்கு) சாங்கிய யோகம் என்றும், அக்ஞானிகளுக்கு (கர்மயோ கி) கர்ம யோகம் என்றும் இருவகை நிஷ்ட்டைகளை பிரித்து கிரஹிக் கும் படி செய்தார் என்று ज्ञानोयोगेन सांख्यानां कर्मयोगेन योगिनाम् इति (ஞான யோகேன சாங்கியானாம் கர்மயோகேன யோகினாம்) ஞான யோகத்தால் ஸாங்க்யர்களுக்கும் கர்மயோகத்தால் யோகிகளுக்கும் என்று
तथा च पुत्राय आह भगवान् व्यासः — ‘द्वाविमावथ पन्थानौ’ (शां. २४१ । ६) इत्यादि । तथा च क्रियापथश्चैव पुरस्तात् पश्चात्संन्यासश्चेति ।
அவ்வாறேவ்யாஸபகவான் தன்னுடைய புத்திரரின் பொருட்டு இவ்வாறு ௯றினாா் ( द्वाविमावथ पन्थानौ த்வாவிமாவத பந்தானெள = இரு வித மார்க்கங்கள்) என்ற முதலியவைகளால் மேலும்,
क्रियापथश्चैव पुरस्तात् पश्चात्संन्यासश्चेति ।
க்ரியாபதச்சைவ புரஸ்தாத் பச்சாத் சந்நியாசச்ச) முதலில் கர்ம மார்க்கமும் பின் ஸந்நியாச மார்க்கம் என்று.
एतमेव विभागं पुनः पुनर्दर्शयिष्यति भगवान् — अतत्त्ववित् ‘अहङ्कारविमूढात्मा कर्ताहमिति मन्यते’ (भ. गी. ३ । २७), तत्त्ववित्तु नाहं करोमि इति । तथा च ‘सर्वकर्माणि मनसा संन्यस्यास्ते’ (भ. गी. ५ । १३) इत्यादि ॥
இவ்வாறு பகவான் விபாகத்தை மறுபடியும் மறுபடியும் காண்பிக் கப்போகிறார். அதத்வ வித்து அஹங்கார விமூடாத்மா கர்த்தா அஹம் இதி மன்யதே, தத்துவவித்து ந அஹம் கரோமி இதி) அதத்வவித்து நான் அஹங்காரத்தினால் மோஹமடைந்து மூடனாய் இருப்பவன் நான் கர்த்தா என்று எண்ணுகிறான். தத்துவவித்தான வன் நான் ஒன்றும் செய்யவில்லை என்று நினைக்கிறான். அவ் வாறே(ஸர்வகர்மாணி மனஸா ஸந்நியஸ்யாஸ்தே = எல்லா கர்மங்க ளையும் மனதினால் தியாகம் செய்து இருக்கிறான்) என்பன முதலிய வைகளால்.
तत्र केचित्पण्डितंमन्या वदन्ति — ‘जन्मादिषड्भावविक्रियारहितः अविक्रियः अकर्ता एकः अहमात्मा’ इति न कस्यचित् ज्ञानम् उत्पद्यते, यस्मिन् सति सर्वकर्मसंन्यासः उपदिश्यते इति ।
இனி தங்களை பண்டிதர்கள் என்று நினைக்கின்ற சிலர் ஜன் மாதி ஷட்பாவ விகாரமற்றதாய், கிரியை அற்றதாய், அகர்த் தாவாய், ஒன்றேயாய் உள்ள ஆத்மா நான் என்றஞானம் ஒருவருக்கும் உண் டாவதில்லை. இவ்வாறு இருக்கும்பொழுது யாருக்காக ஸர்வகர்ம ஸந்நியாசமானது உபதேசிக்கப்படுகிறது.
तन्न ; ‘न जायते’ (भ. गी. २ । २०) इत्यादिशास्त्रोपदेशानर्थक्यप्रसङ्गात् ।
அவ்வாறு அல்ல. ஏனெனில் (ந ஜாயதே=பிறக்கவில்லை) என் பது முதலிய சாஸ்திர உபதேசமானது அர்த்தமற்றதாகிவிடும்.
यथा च शास्त्रोपदेशसामर्थ्यात् धर्माधर्मास्तित्वविज्ञानं कर्तुश्च देहान्तरसम्बन्धविज्ञानमुत्पद्यते, तथा शास्त्रात् तस्यैव आत्मनः अविक्रियत्वाकर्तृत्वैकत्वादिविज्ञानं कस्मात् नोत्पद्यते इति प्रष्टव्याः ते ।
மேலும் எவ்வாறு சாஸ்திர உபதேச சாமர்த்தியத்தால் தர்மம் என் பதும், அதர்மம் என்பதும் உண்டு என்றஞானமும், கர்த்தாவிற்கு (கர்மானுசாரமாக) வேறு தேஹ சம்மந்த ஞானமும் உண்டாகின்றதோ அவ்வாறேசாஸ்திரத்தினால் அந்த புருஷனுக்கு ஆத்மாவினுடைய நிர்விகாரித்துவம், அகர்த்திருத்துவம், ஏகத்துவம் முதலிய ஞானம் ஏன் உண்டாகாது என்று (அவர்கள்) கேட்கப்படவேண்டும்.
करणागोचरत्वात् इति चेत् ।
(மன, புத்தியாதி) கரணங்களுக்கு ஆத்மா அகோசரமாய் (புலப்ப டாதவராக) இருப்பதால் ( ஆத்மஞானம் ஏற்படாது எனில்)
न ; ‘मनसैवानुद्रष्टव्यम्’ (बृ. उ. ४ । ४ । १९) इति श्रुतेः । शास्त्राचार्योपदेशशमदमादिसंस्कृतं मनः आत्मदर्शने करणम् ।
(மனசை வானுத்ரஷ்ட்டவ்யம் = மனதினால் அறியப்படவேண் டும்) என்றசுருதி இருப்பதினால் சாஸ்திர, குரு உபதேசத்தாலும், சமத மாதிகளாலும் நன்றாக பண்படுத்தப்பட்ட மனமே ஆத்மதரிசனத்திற் குக் காரணம்.
तथा च तदधिगमाय अनुमाने आगमे च सति ज्ञानं नोत्पद्यत इति साहसमात्रमेतत् ।
இவ்வாறு அந்த ஞானத்தை அடைவதற்கு அனுமானம், ஆகமப்ரமாணம் இருந்தும் ஞானம் உண்டாவதில்லை என்பது துணிச்சலான பேச்சு.
ज्ञानं च उत्पद्यमानं तद्विपरीतमज्ञानम् अवश्यं बाधते इत्यभ्युपगन्तव्यम् ।
ஞானம் உண்டான உடன் அதற்கு விபரீதமான அக்ஞானத்தை அவசியம் பாதிக்கும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
तच्च अज्ञानं दर्शितम् ‘हन्ता अहम् , हतः अस्मि’ इति ‘उभौ तौ न विजानीतः’ इति । अत्र च आत्मनः हननक्रियायाः कर्तृत्वं कर्मत्वं हेतुकर्तृत्वं च अज्ञानकृतं दर्शितम् ।
நான் கொல்லுகிறேன், நான் கொல்லப்பட்டேன் என்று அந்த அக்ஞானமானது காட்டப்பட்டது. (उभौ तौ न विजानित: உலொ தெள ந விஜாநீத:) என்று இங்கு ஆத்மாவினுடைய ஹனனகிரியையினுடைய கர்த்திருத்துவம், கர்மத்துவமும், ஹேது கர்த்திருத்துவமும் (ஏவுதல் என்ற கர்த்திருத்துவமும்) அக்ஞானத்தினால் என்று காண்பிக்கப்பட்டது.
तच्च सर्वक्रियास्वपि समानं कर्तृत्वादेः अविद्याकृतत्वम् , अविक्रियत्वात् आत्मनः । विक्रियावान् हि कर्ता आत्मनः कर्मभूतमन्यं प्रयोजयति ‘कुरु’ इति ।
ஆத்மா நிர்விகாரி ஆதலால் கர்த்திருத்துவாதிகளுக்கு அவித்யையால் ஏற்பட்டது என்பது எல்லா கிரியைகளுக்கும் ஸமமாம். ஏனெனில் விகாரியானவன் தன்னை கர்த்தாவாக்கி தன்னுடைய கர்மரூபமான மற்றவனை கர்மத்தைச் செய் என்று கூறி ஈடுபடுத்துகிறான்
तदेतत् अविशेषेण विदुषः सर्वक्रियासु कर्तृत्वं हेतुकर्तृत्वं च प्रतिषेधति भगवान्वासुदेवः विदुषः कर्माधिकाराभावप्रदर्शनार्थम् ‘वेदाविनाशिनं कथं स पुरुषः’ इत्यादिना ।
ஆகையால் ஞானிக்கு ஒருபோதும் கர்மத்தில் அதிகாரம் இல்லை என்பதைக் காண்பிப்பதன் பொருட்டு (वेदाविनाशिनम् வேதா விநாசினம்) (कथं स पुरुष: கதம் ஸ புருஷ:) முதலிய வாக்கியங்க ளினால் எல்லாக் கிரியைகளையும் சம பாவனையினால் ஞானிக்கு கர்த்தாதன்மையையும், மற்றொருவரைத் தூண்டும் கர்த்தா தன்மை யையும் பகவான் நிஷேதம் செய்கிறார்.
क्व पुनः विदुषः अधिकार इति एतदुक्तं पूर्वमेव ‘ज्ञानयोगेन साङ्ख्यानाम्’ (भ. गी. ३ । ३) इति । तथा च सर्वकर्मसंन्यासं वक्ष्यति ‘सर्वकर्माणि मनसा’ (भ. गी. ५ । १३) इत्यादिना ॥
ஞானிக்கு எதில் அதிகாரம்? எனில் முன்பெ (ज्ञानयोगेन सांख्यानाम् ஞான யோகேன ஸாங்க்யானாம்) என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறேஸர்வகாம் ஸந்நியாசத்தைக் கூறப்போகிறார். (सर्वकर्माणि मनसा சர்வ கர்மாணி மனஸா) என்பன முதலிய வைகளால்.
ननु मनसा इति वचनात् न वाचिकानां कायिकानां च संन्यासः इति चेत् ।
மனதினால் என்றதால் மானசிக கர்மங்களுக்கே ஸந்நியாசம். வாக்கு, காயத்தினால் செய்யப்பட்ட கர்மாக்களுக்கு ஸந்நியாசம் கிடையாது என்றால்
न ; सर्वकर्माणि इति विशेषितत्वात् ।
அவ்வாறு கூறுதல் சரியல்ல. ஏனெனில் எல்லாகர்மங்களையும் விட்டு என்றதால் எல்லாக் கர்மங்களையும் கொள்ளவேண்டும்.
मानसानामेव सर्वकर्मणामिति चेत् ।
எல்லா கர்மங்களையும் என்றதால் மானஸீகமான எல்லா கர்மங் களையே குறிக்கிறது என்றால்
न ; मनोव्यापारपूर्वकत्वाद्वाक्कायव्यापाराणां मनोव्यापाराभावे तदनुपपत्तेः ।
அவ்வாறு அல்ல. ஏனெனில் மனோவியாபாரத்தைக் கொண்டு தான் வாக்கு, காயங்களுக்கு செயல் ஏற்படுகிறது. மனோவியாபாரம் இல்லையெனில் வாக்கு, காய செயல் ஸம்பவிக்காது.
शास्त्रीयाणां वाक्कायकर्मणां कारणानि मानसानि कर्माणि वर्जयित्वा अन्यानि सर्वकर्माणि मनसा संन्यस्येदिति चेत् ।
சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட வாக், காய கர்மங்களின் காரண மான மானஸ வியாபாரங்களைத் தவிர மற்றஎல்லா கர்மங்களையும் மனதால் ஸந்நியாசம் செய் என்றால்
அது பொருந்தாது. ஏனெனில் (எதையும்) செய்வதில்லை, செய் விப்பதும் இல்லை என்று கூறியிருப்பதால்.
सर्वकर्मसंन्यासः अयं भगवता उक्तः मरिष्यतः न जीवतः इति चेत् ।
பகவான் கூறியதான இந்த ஸர்வகர்ம ஸந்நியாசமானது மரணம டையப்போகும் தருணத்தில் உள்ளவர்களுக்குத்தான் ஜீவித்துக் கொண்டிருப்பவர்களுக்கல்ல என்றால்
न ; ‘नवद्वारे पुरे देही आस्ते’ (भ. गी. ५ । १३) इति विशेषणानुपपत्तेः ।
அவ்வாறு கூறுவது சரியல்ல, நவத்துவாரம் உள்ள சரீரத்தில் இருக்கும் பொழுது என்றவிசேஷணத்தால் முன் கூறியது பொருந்தாது.
न हि सर्वकर्मसंन्यासेन मृतस्य तद्देहे आसनं सम्भवति । अकुर्वतः अकारयतश्च ।
இறந்தவன் ஸன்யாஸத்தைப் பெற்று ஸர்வகர்மங்களையும் துறந்து சரீரத்தில் தங்கி இருத்தல் ஸம்பவிக்காது. அவ்வாறேசெய்த லும், செய்வித்தலும் இறந்த சரீரத்தில் பொருந்தாது.
देहे संन्यस्य इति सम्बन्धः न देहे आस्ते इति चेत् ।
(ஸர்வகர்மங்களையும்) தேஹத்தில் ஸந்நியசித்து ஸம்பந்தம் செய்யவேண்டுமேயன்றி தேஹத்திலே தங்கி இருக்கிறான் என்று ஸம்பந்தம் செய்யக்கூடாது எனில்
न ; सर्वत्र आत्मनः अविक्रियत्वावधारणात् , आसनक्रियायाश्च अधिकरणापेक्षत्वात् , तदनपेक्षत्वाच्च संन्यासस्य । सम्पूर्वस्तु न्यासशब्दः अत्र त्यागार्थः, न निक्षेपार्थः ।
அவ்வாறு அல்ல. எங்கும் (சாஸ்திரங்களில்) ஆத்மா நிர்விகாரி என்று அவதாரணம் செய்யப்பட்டுள்ளது. தங்கி இருத்தல் என்றகிரி யைக்கு அதிகரணம் எங்கு தங்கி என்று இருப்பிடம் அபேக்ஷி க்கப்ப டுகிறது. (தேவைப்படுவதால்) ஆனால் ஸந்நியாசமானது அதிகரண அபேக்ஷையற்றது. ஸம்மை (सं) முன்னுடைய நியாஸ சப்தத்திற்கு இங்கு தியாக அர்த்தமே தவிர வைத்தல் என்ற அர்த்தம் அல்ல.
तस्मात् गीताशास्त्रे आत्मज्ञानवतः संन्यासे एव अधिकारः, न कर्मणि इति तत्र तत्र उपरिष्टात् आत्मज्ञानप्रकरणे दर्शयिष्यामः ॥ २१ ॥
ஆகையால் கீதா சாஸ்திரத்தில் ஆத்மஞானமுடையவனுக்கு ஸந்நியாசத்தில்தான் அதிகாரம், கர்மத்தில் அல்ல என்று மேலே ஆத் மக்ஞான பிரகரணத்தில் அங்கங்கே எடுத்துக் காட்டுவோம்.
प्रकृतं तु वक्ष्यामः । तत्र आत्मनः अविनाशित्वं प्रतिज्ञातम् । तत् किमिवेति , उच्यते —
இப்பொழுது எடுத்துக்கொண்ட விஷயத்தைப் பற்றி கூறுவோம். இப்படியிருக்க ஆத்மாவிற்கு அவிநாசித்துவமானது பிரதிக்ஞை செய்யப்பட்டது. அது எதைப்போல எனில் கூறுகிறோம்.
वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोऽपराणि ।
तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देही ॥ २२ ॥
வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய நவானி க்ருஹ்ணாதி நரோஅபராணி ।
ததா சரீராணி விஹாய ஜீர்ணா ந்யன்யானி ஸம்யாதி நவானி தேஹீ ॥ 22 ॥
वासांसि वस्त्राणि जीर्णानि दुर्बलतां गतानि यथा लोके विहाय परित्यज्य नवानि अभिनवानि गृह्णाति उपादत्ते नरः पुरुषः अपराणि अन्यानि, तथा तद्वदेव शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति सङ्गच्छति नवानि देही आत्मा पुरुषवत् अविक्रिय एवेत्यर्थः ॥ २२ ॥
எவ்வாறு உலகில் மனிதன் நைந்த பழைய வஸ்திரங்களை நீக்கி விட்டு புதியவைகளை ஸ்வீகரிக்கின்றானோ அவ்வாறே பழைய சரீ ரங்களை விட்டுவிட்டு புதிய சரீரங்களை எடுக்கிறான். இதன் அபிப்பி ராயம் என்னவெனில் (பழைய வஸ்திரங்களை விட்டு புதியதை தரித்த) மனிதன் போல் (தேஹி)யான ஆத்மா எப்பொழுதும் நிர்விகார மாய் இருக்கிறான்.
कस्मात् अविक्रिय एवेति, आह —
எதனால் நிர்விகாரியாய் ஆத்மா இருக்கிறது என்பதற்கு (பகவான்) கூறுகிறார்.
नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः ।
न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुतः ॥ २३ ॥
நைனம் சிந்தந்தி சஸ்த்ராணி நைனம் தஹதி பாவக: ।
ந சைனம் க்லேதயந்த்யாபோ ந சோஷயதி மாருத: ॥ 23 ॥
एनं प्रकृतं देहिनं न च्छिन्दन्ति शस्त्राणि, निरवयवत्वात् न अवयवविभागं कुर्वन्ति । शस्त्राणि अस्यादीनि ।
இவ்வாறு முன்பு கூறப்பட்ட ஆத்மாவை நிரவயவமாய் இருப்ப தால் சஸ்திரங்களினால் (கத்தி முதலியவைகளால்) வெட்ட முடியாது. கத்தி முதலிய சஸ்திரங்கள் (ஆத்மா நிரவயவமாய் இருப்பதால்) அங் கங்களை தனித்தனியாக பிரிக்கமுடியாது.
तथा न एनं दहति पावकः, अग्निरपि न भस्मीकरोति ।
அவ்வாறே அக்னியானது இதை (ஆத்மாவை) எரிக்காது. சாம்ப லாக்காது.
तथा न एनं क्लेदयन्ति आपः । अपां हि सावयवस्य वस्तुनः आर्द्रीभावकरणेन अवयवविश्लेषापादने सामर्थ्यम् । तत् न निरवयवे आत्मनि सम्भवति ।
அவ்வாறேநீரானது இதை அழுகவைக்காது. நீரானது அவய வமுடையவைகளையே திரவமாக்கி அவயவயங்களைப் பிரிப்பதில் சாமர்த்தியமுடையது. எனவே நிரவயவமான ஆத்மாவில் இது முடியாது.
तथा स्नेहवत् द्रव्यं स्नेहशोषणेन नाशयति वायुः । एनं तु आत्मानं न शोषयति मारुतोऽपि ॥ २३ ॥
அவ்வாறே ஈரமுடைய பொருளை காற்றானது உலர்த்தும். இந்த ஸ்வஸ்வரூபத்தை காற்றானது உலர்த்த முடியாது.
यतः एवं तस्मात् —
இவ்வாறு இருப்பதினால்
अच्छेद्योऽयमदाह्योऽयमक्लेद्योऽशोष्य एव च ।
नित्यः सर्वगतः स्थाणुरचलोऽयं सनातनः ॥ २४ ॥
அச்சேத்யோ அயமதாஹ்யோஅயமக்லேத்யோ அசோஷ்ய ஏவ ச ।
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோஅயம் ஸநாதன: ॥ 24 ॥
यस्मात् अन्योन्यनाशहेतुभूतानि एनमात्मानं नाशयितुं नोत्सहन्ते अस्यादीनि तस्मात् नित्यः ।
எதனால் ஒன்றைஒன்று அழிக்கக்கூடிய இந்த பூதங்கள் (வாள் முதலியவைகள் ) இந்த ஆத்மாவை நாசம் செய்யமுடியாதோ, ஆகை யால் இந்த ஆத்மா நித்தியம்.
नित्यत्वात् सर्वगतः । सर्वगतत्वात् स्थाणुः इव, स्थिर इत्येतत् । स्थिरत्वात् अचलः अयम् आत्मा । अतः सनातनः चिरन्तनः, न कारणात्कुतश्चित् निष्पन्नः, अभिनव इत्यर्थः ॥
நித்தியமாய் இருப்பதால் ஸர்வகதமாய் இருக்கிறது. ஸர்வகதமாய் இருப்பதால் ஸ்தாணு: ஸ்தாணு(தூண்) போல் ஸ்திரமாய் (ஆத்மாவா னது) இருக்கிறது. ஸ்திரமாய் இருப்பதால் அசல: (சலனமற்றது) இந்த ஆத்மா. ஆகையால் ஸனாதன: ( எப்பொழுதும் உள்ளது). காரணத்தி லிருந்து புதிதாக உண்டானதில்லை. ஆகையால் பழமையானது.
नैतेषां श्लोकानां पौनरुक्त्यं चोदनीयम् , यतः एकेनैव श्लोकेन आत्मनः नित्यत्वमविक्रियत्वं चोक्तम् ‘न जायते म्रियते वा’ (भ. गी. २ । २०) इत्यादिना । तत्र यदेव आत्मविषयं किञ्चिदुच्यते, तत् एतस्मात् श्लोकार्थात् न अतिरिच्यते ; किञ्चिच्छब्दतः पुनरुक्तम् , किञ्चिदर्थतः इति ।
இந்த ஸ்லோகங்களில் புனருக்தி தோஷத்தை (கூறியது கூறல் என்றதோஷத்தை) ஆரோபம் செய்தல் கூடாது. ஏனெனில் (ந ஜா யதே ம்ரியதே வா) என்று ஒரு சுலோகத்தினால் ஆத்மாவின் நித்திய தன்மையும், நிர்விகாரத்தன்மையும் கூறப்பட்டுள்ளது. ஆகையால் இந்த ஸ்லோக அர்த்தத்தைக் காட்டிலும் விசேஷ அர்த்தமானது கிடையாது. சிறிது சப்தத்தினாலும், சிறிது அர்த்தத்தினாலும் புனருக்தி உள்ளது (எனில்)
दुर्बोधत्वात् आत्मवस्तुनः पुनः पुनः प्रसङ्गमापाद्य शब्दान्तरेण तदेव वस्तु निरूपयति भगवान् वासुदेवः कथं नु नाम संसारिणामसंसारित्वबुद्धिगोचरतामापन्नं सत् अव्यक्तं तत्त्वं संसारनिवृत्तये स्यात् इति ॥ २४ ॥
ஆத்ம தத்துவமானது அறிவதற்கு மிகவும் கடினமானதால் மறுபடியும் மறுபடியும் ஸந்தர்ப்பத்தை வருவித்துக் கொண்டு அனேக வேறு சொற்களால் அந்த வஸ்துவையே பகவான் வாஸுதேவர் நிரூபணம் செய்கிறார். எவ்விதத்திலாவது ஸம்சாரிகளுக்கு அவ்யக்த தத்துவத்வம் (பண்படுத்தப்பட்ட) புத்திக்கு விஷயமாகி ஸம்சாரம் நிவிர்த்தி ஆகவேண்டுமே, என்றகாரணத்தினால் (மறுபடியும் மறுபடியும் விளக்குகிறார்)
किं च —
மேலும்
अव्यक्तोऽयमचिन्त्योऽयमविकार्योऽयमुच्यते ।
तस्मादेवं विदित्वैनं नानुशोचितुमर्हसि ॥ २५ ॥
அவ்யக்தோஅயமசிந்த்யோ அயமவிகார்யோ அயமுச்யதே ।
தஸ்மாதேவம் விதித்வைனம் நானுசோசிதுமர்ஹஸி ॥ 25 ॥
अव्यक्तः सर्वकरणाविषयत्वात् न व्यज्यत इति अव्यक्तः अयम् आत्मा ।
இந்த ஆத்மாவானது புத்தி முதலிய எல்லா கரணங்களுக்கும் விஷயம் ஆகாததினால் அது வ்யக்தம் அல்ல. அவ்யக்தமே.
अत एव अचिन्त्यः अयम् । यद्धि इन्द्रियगोचरः तत् चिन्ताविषयत्वमापद्यते । अयं त्वात्मा अनिन्द्रियगोचरत्वात् अचिन्त्यः ।
ஆகையினாலேயே சிந்திக்கமுடியாதது. எது இந்திரியங்களுக்கு கோசரமாகிறதோ (விஷயமாகிறதோ) அந்த வஸ்துவே சிந்திக்கக்கூ டிய வஸ்துவாகிறது. ஆத்மா இந்திரியங்களுக்கு விஷயமாகாததால் சிந்திக்கமுடியாதது.
अविकार्यः अयम् ।
இந்த ஆத்மாவானது (மாறுபாடு அற்றது)
यथा क्षीरं दध्यातञ्चनादिना विकारि न तथा अयमात्मा ।
எவ்வாறு தோய்ப்பதினால் (மோர் சேர்ப்பதால்) பாலானது தயிராக மாறுகிறதோ அவ்வாறு இந்த ஆத்மாவானது மாறுதல் அடையாது.
निरवयवत्वाच्च अविक्रियः । न हि निरवयवं किञ्चित् विक्रियात्मकं दृष्टम् । अविक्रियत्वात् अविकार्यः अयम् आत्मा उच्यते ।
நிரவயவமாய் இருப்பதால் விகாரம் அற்றது. (மாறுபாடு அற்றது) ஒருகாலும் நிரவயவத்திற்கு விகாரமானது ஏற்படுவது காணப்படவில்லை. விகாரம் அற்றதினால் இந்த ஆத்மா அவிகாரி எனப்படுகிறது.
तस्मात् एवं यथोक्तप्रकारेण एनम् आत्मानं विदित्वा त्वं न अनुशोचितुमर्हसि हन्ताहमेषाम् , मयैते हन्यन्त इति ॥ २५ ॥
ஆகையால் இந்தப் பிரகாரமாக இந்த ஆத்மாவை அறிந்த உனக்கு, நான் அவர்களைக் கொல்கிறேன். அவர்கள் என்னால் கொல்லப்படுவார்கள் என்று வருத்தப்படுவதற்கு தகுதி கிடையாது.
आत्मनः अनित्यत्वमभ्युपगम्य इदमुच्यते —
ஆத்மாவிற்கு அநித்தியத்துவத்தை ஏற்றுக்கொண்டு (ஒப்புக் கொண்டு) இவ்வாறு கூறுகிறார்.
अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतम् ।
तथापि त्वं महाबाहो नैवं शोचितुमर्हसि ॥ २६ ॥
அத சைனம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம் ।
ததாபி த்வம் மஹாபாஹோ நைவம் சோசிதுமர்ஹஸி ॥ 26 ॥
अथ च इति अभ्युपगमार्थः ।
(அத) (ச) என்ற இரண்டு அவ்வியயங்களும், ஒப்புக்கொண்டு உணர்த்தும் பொருட்டாகும்.
एनं प्रकृतमात्मानं नित्यजातं लोकप्रसिद्ध्या प्रत्यनेकशरीरोत्पत्ति जातो जात इति मन्यसे । तथा प्रतितत्तद्विनाशं नित्यं वा मन्यसे मृतं मृतो मृत इति ।
இவ்வாறு கூறப்படுகின்ற ஆத்மாவானது எப்பொழுதும் ஜன் மத்தை உடையது உலகப்பிரஸித்தியை அனுஸரித்து அநேக சரீரங்க ளுடைய (ஜீவ ஆத்மாவிற்கு) தோற்றம் ஏற்படும்போதும் பிறக்கிறான் என்றும் நிச்சலமாக மரித்தான் என்றும் நினைப் பாயானால்
तथापि तथाभावेऽपि आत्मनि त्वं महाबाहो, न एवं शोचितुमर्हसि, जन्मवतो जन्म नाशवतो नाशश्चेत्येताववश्यम्भाविनाविति ॥ २६ ॥
அவ்வாறு (ஜனன மரணங்கள் நிச்சயமாய் உண்டு என்று வைத் துக்கொண்டாலும்) இருப்பதால் ஹே! மஹா பாஹோ! இவ்வாறு சோகித்தல் கூடாது. ஏனெனில் ஜன்மம் எடுத்தால் மரணமும், மரணம டைந்தால் ஜன்மமும் நிச்சயமாக உண்டாகும் அல்லவா!
तथा च सति —
இவ்வாறு இருக்கும்பொழூது
जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च ।
तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि ॥ २७ ॥
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுத்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச ।
தஸ்மாதபரிஹார்யேஅர்தே ந த்வம் சோசிதுமர்ஹஸி ॥ 27 ॥
जातस्य हि लब्धजन्मनः ध्रुवः अव्यभिचारी मृत्युः मरणं ध्रुवं जन्म मृतस्य च । तस्मादपरिहार्योऽयं जन्ममरणलक्षणोऽर्थः । तस्मिन्नपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि ॥ २७ ॥
எவன் ஜன்மம் எடுக்கிறானோ அவனுக்கு மரணம் நிச்சயம். மேலும் மரணமடைந்தவனுக்கு ஜன்மம் நிச்சயம். ஆகையால் நீக்க முடியாத இந்த, ஜன்ம, மரண விஷயத்தைக் குறித்து நீ சோகிப்பது சரியல்ல.
कार्यकरणसङ्घातात्मकान्यपि भूतान्युद्दिश्य शोको न युक्तः कर्तुम् , यतः —
காரிய கரண ஸங்காதங்களுடன் கூடிய பிராணிகளைக் குறித்தும் சோகத்தை அடையக்கூடாது. ஏனெனில்.
अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत ।
अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना ॥ २८ ॥
அவ்யக்தாதீனி பூதானி வ்யக்தமத்யானி பாரத ।
அவ்யக்தநிதநான்யேவ தத்ர கா பரிதேவனா ॥ 28 ॥
अव्यक्तादीनि अव्यक्तम् अदर्शनम् अनुपलब्धिः आदिः येषां भूतानां पुत्रमित्रादिकार्यकरणसङ्घातात्मकानां तानि अव्यक्तादीनि भूतानि प्रागुत्पत्तेः ।
அவ்யக்தம் என்றாலும் காணப்படாமை என்றாலும், அபாவம் என்றாலும் ஒன்றே. கார்யகரண ஸங்காதமான புத்திரமித் திராதியான பூதங்கள் தோன்றுவதற்கு முன் இல்லை. ஏனெனில் உத்பத்திக்கு முன் எல்லாம் (அதிருஷ்டமாகவே) இருந்தது.
उत्पन्नानि च प्राङ्मरणात् व्यक्तमध्यानि । अव्यक्तनिधनान्येव पुनः अव्यक्तम् अदर्शनं निधनं मरणं येषां तानि अव्यक्तनिधनानि । मरणादूर्ध्वमप्यव्यक्ततामेव प्रतिपद्यन्ते इत्यर्थः ।
உத்பத்தி ஆகிய பின்பும் மரணத்திற்கு முன்பும் இவை களின் மத் தியில் வியக்தமாக அதாவது த்ருச்யமாக இருந்தது. மேலும் அவ்யக் தம் என்றால் அதர்சனம், நிதனம் என்றால் மரணம், இவைகள் இரண் டும் எவைகளுக்கு இருக்கிறதோ அவைகள் அவ்யக்தநிதனானி. மரணத்திற்குப் பின்னும் (வ்யக்த மான பூதாதிகள்) காணப்படாத தன் மையை அடைகிறது.
तथा चोक्तम् — ‘अदर्शनादापतितः पुनश्चादर्शनं गतः । नासौ तव न तस्य त्वं वृथा का परिदेवना’ (मो. ध. १७४ । १७) इति ।
எந்த பூத ஸங்காதமானது காணாமலிருந்து (அதர்சனத்திலிருந் து) வந்ததோ, மறுபடியும் காணாத்தன்மையையே (அவ்யக்தத்தையே) அடைகிறது. அது உன்னுடையது அல்ல. மேலும் நீ அதனுடையதும் அல்ல. எதைக் குறித்து வருந்துகிறாய். அது வியர்த்தம் அல்லவா, என்று மேலும் கூறப்படுகிறது.
तत्र का परिदेवना को वा प्रलापः अदृष्टदृष्टप्रनष्टभ्रान्तिभूतेषु भूतेष्वित्यर्थः ॥ २८ ॥
முதலில் காணாமலிருந்து பின்பு தோன்றி மறுபடியும் காணப் படாமல் போகின்றபொய்யான பூதங்களைக் குறித்து எதற்காகப் புலம்புகிறாய்? என்பது பொருள்.
दुर्विज्ञेयोऽयं प्रकृत आत्मा ; किं त्वामेवैकमुपालभे साधारणे भ्रान्तिनिमित्ते । कथं दुर्विज्ञेयोऽयमात्मा इत्यत आह —
எதைப் பற்றி இந்தப் பிரகரணத்தில் கூறப்படுகிறதோ அந்த ஆத்மா அறிவதற்கு மிக்க கடினமானது. (அறிவதற்கு கடினமாயிருப்ப தற்கு) காரணமான தவறான அறிவு (எல்லோருக்கும்) ஸமமாய் இருக்க நான் உன்னையே ஏன் பழிக்கவேண்டும்? இந்த ஆத்மா அறிவதற்கு கடினமானது எப்படி? என்பதைக் கூறுகிறார்.
आश्चर्यवत्पश्यति कश्चिदेनमाश्चर्यवद्वदति तथैव चान्यः ।
आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित् ॥ २९ ॥
ஆச்சர்யவத்பச்யதி கச்சிதேநமாச்சர்யவத்வததி ததைவ சாந்ய: ।
ஆச்சர்யவச்சைநமந்ய: ச்ருணோதி ச்ருத்வாப்யேனம் வேத ந சைவ கச்சித் ॥ 29 ॥
आश्चर्यवत् आश्चर्यम् अदृष्टपूर्वम् अद्भुतम् अकस्माद्दृश्यमानं तेन तुल्यं आश्चर्यवत् आश्चर्यमिति एनम् आत्मानं पश्यति कश्चित् ।
முன்பே பார்க்காததும், அத்புதமானதும், எதேச்சையாக பார்க்கப் பட்டதும் ஆச்சரியம் எனப்படும். அவ்வாறு இந்த ஆத்மாவை ஆச்ச ரியம் போல ஒருவன் பார்க்கிறான்.
आश्चर्यवत् एनं वदति तथैव च अन्यः । आश्चर्यवच्च एनमन्यः शृणोति । श्रुत्वा दृष्ट्वा उक्त्वापि एनमात्मानं वेद न चैव कश्चित् ।
மற்றொருவன் அதை ஆச்சரியம் போல கூறுகிறான். மற்றொரு வன் அதை ஆச்சரியம் போல கேட்கிறான். பார்த்தாலும், கேட்டாலும், அதைப்பற்றி கூறினாலும் ஒருவரும் அறிவதில்லை.
अथवा योऽयमात्मानं पश्यति स आश्चर्यतुल्यः, यो वदति यश्च शृणोति सः अनेकसहस्रेषु कश्चिदेव भवति । अतो दुर्बोध आत्मा इत्यभिप्रायः ॥ २९ ॥
அல்லது எவன் ஒருவன் ஆத்மாவைப் பார்க்கிறானோ அவன் அரிது போல் இருக்கிறான், பேசுபவனும் கேட்பவனும் ஆச்சர்யம் போலாகிறார். ஏனெனில் அப்படிப்பட்டவர் ஆயிரத்தில் ஒருவராவர். ஆதலால் ஆத்மாவை அறிதல் மிக்ககடினமே என்பது அபிப்பிராயம்.
अथेदानीं प्रकरणार्थमुपसंहरन्ब्रूते —
இனி இந்த பிரகரணார்த்தத்தை பூர்த்தி செய்து கூறுகிறார்.
देही नित्यमवध्योऽयं देहे सर्वस्य भारत ।
तस्मात्सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि ॥ ३० ॥
தேஹி நித்யமவத்யோஅயம் தேஹே ஸர்வஸ்ய பாரத ।
தஸ்மாத்ஸர்வாணி பூதாநி ந த்வம் சோசிதுமர்ஹஸி ॥ 30 ॥
देही शरीरी नित्यं सर्वदा सर्वावस्थासु अवध्यः निरवयवत्वान्नित्यत्वाच्च तत्र अवध्योऽयं देहे शरीरे सर्वस्य सर्वगतत्वात्स्थावरादिषु स्थितोऽपि ।
இந்த சரீரத்தை உடைய ஆத்மா எப்போதும் எந்நிலையிலும் நிர வயவனாய் கொல்லமுடியாதவனாய் இருக்கிறார். ஸ்தாவர ஜங்கம முதலிய எல்லா சரீரங்களிலும் இருந்தும்.
सर्वस्य प्राणिजातस्य देहे वध्यमानेऽपि अयं देही न वध्यः यस्मात् , तस्मात् भीष्मादीनि सर्वाणि भूतानि उद्दिश्य न त्वं शोचितुमर्हसि ॥ ३० ॥
எல்லாப் பிராணிகளுடைய தேஹமானது கொல்லப்பட்டபோதி லும் இந்த தேஹியானவன் கொல்லமுடியாதவன் எதனாலோ அத னால் பீஷ்மர் முதலிய எல்லா ஜீவராசிகளைக் குறித்தும் நீ வருத்தப்ப டுவதற்கு தகுதியற்றவன். (என்று)
इह परमार्थतत्त्वापेक्षायां शोको मोहो वा न सम्भवतीत्युक्तम् । न केवलं परमार्थतत्त्वापेक्षायामेव । किं तु —
இங்கு பரமார்த்த தத்துவத்தை அபேக்ஷித்து (யோசிக்கும்போது) சோக, மோஹமானது, ஏற்கத்தக்கதல்ல என்று கூறப்பட்டது. பரமார்த்த தத்துவத்தை அபேக்ஷித்து மட்டும் அல்லாமல்
स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि ।
धर्म्याद्धि युद्धाच्छ्रेयोऽन्यत्क्षत्त्रियस्य न विद्यते ॥ ३१ ॥
ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி ।
தர்ம்யாத்தியுத்தாச்ச்ரேயோ அந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே ॥ 31 ॥
स्वधर्ममपि स्वो धर्मः क्षत्रियस्य युद्धं तमपि अवेक्ष्य त्वं न विकम्पितुं प्रचलितुम् नार्हसि क्षत्रियस्य स्वाभाविकाद्धर्मात् आत्मस्वाभाव्यादित्यभिप्रायः ।
க்ஷத்திரியர்களுக்கு யுத்தமானது ஸ்வதர்மமாகும். இதை அறிந் தும் நீ சலனப்படுவது(கலங்குவது) உசிதம் அல்ல. இதன் அபிப்ராயம் என்னவெனில் (க்ஷத்திரியர்களுடைய) உன்னுடைய ஸ்வபாவமான தர்மத்திலிருந்து நழுவுதல் உனக்கு உசிதமல்ல என்பது.
तच्च युद्धं पृथिवीजयद्वारेण धर्मार्थं प्रजारक्षणार्थं चेति धर्मादनपेतं परं धर्म्यम् । तस्मात् धर्म्यात् युद्धात् श्रेयः अन्यत् क्षत्रियस्य न विद्यते हि यस्मात् ॥ ३१ ॥
இந்த யுத்தத்தினால் பூமியை ஜெயிப்பதின் வாயிலாக தர்மமும், பிரஜைகளும் ரக்ஷிக்கப்படுவார்கள். ஆகையால் இது நியாயத்துடன் கூடிய மேலான தர்மமாகும். அதனால் இந்த தர்மமயமான யுத்தத் தைக் காட்டிலும் வேறு ஒன்றும் க்ஷத்திரியனுக்கு ச்ரேயஸ்ஸை(நன் மையை) கொடுக்கமாட்டாது.
कुतश्च तत् युद्धं कर्तव्यमिति, उच्यते —
மேலும் ஏன் இந்த யுத்தத்தை செய்யவேண்டும் என்று கூறுகிறார்.
यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमपावृतम् ।
सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धमीदृशम् ॥ ३२ ॥
யத்ருச்சயா சோபபன்னம் ஸ்வர்கத்வாரமபாவ்ருதம் ।
ஸுகிந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தமீத்ருசம் ॥ 32 ॥
यदृच्छया च अप्रार्थिततया उपपन्नम् आगतं स्वर्गद्वारम् अपावृतम् उद्धाटितं ये एतत् ईदृशं युद्धं लभन्ते क्षत्रियाः हे पार्थ, किं न सुखिनः ते ? ॥ ३२ ॥
ஹே பார்த்த! தற்செயலாய் கிடைத்த திறந்துள்ள ஸ்வர்க்க வாயி லாக உள்ள இந்த யுத்தத்தை எந்த க்ஷத்திரியர்கள் மேற்கொள்ளுகி றார்களோ அவர்கள் சுகிகள்(இன்பமுடையவர்கள்) அல்லவா?
एवं कर्तव्यताप्राप्तमपि —
இவ்வாறு (யுத்தமானது உன்னுடைய) கடமையாயிருந்தாலும்
अथ चेत्त्वमिमं धर्म्यं सङ्ग्रामं न करिष्यसि ।
ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि ॥ ३३ ॥
அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி ।
தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி ॥ 33 ॥
अथ चेत् त्वम् इमं धर्म्यं धर्मादनपेतं विहितं सङ्ग्रामं युद्धं न करिष्यसि चेत् , ततः तदकरणात् स्वधर्मं कीर्तिं च महादेवादिसमागमनिमित्तां हित्वा केवलं पापम् अवाप्स्यसि ॥ ३३ ॥
இந்த தர்மத்துடன் கூடிய உன் ஸ்வதர்மமாகிய தர்மயுத்தத்தை செய்யாவிடில், யுத்தம் செய்யாததினால் உன்னுடைய ஸ்வதர்மத்தை யும் விட்டு, நீ மஹாதேவன் முதலியவர்களுடன் யுத்தம் செய்து அடைந்த கீர்த்தியையும் விட்டு கேவலம் பாபத்தையே அடைவாய்.
न केवलं स्वधर्मकीर्तिपरित्यागः —
கேவலம் ஸ்வதர்மம், கீர்த்தியை விடுவது மட்டுமல்ல-
अकीर्तिं चापि भूतानि कथयिष्यन्ति तेऽव्ययाम् ।
सम्भावितस्य चाकीर्तिर्मरणादतिरिच्यते ॥ ३४ ॥
அகீர்திஞ் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தேஅவ்யயாம் ।
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே ॥ 34 ॥
अकीर्तिं चापि युद्धे भूतानि कथयिष्यन्ति ते तव अव्ययां दीर्घकालाम् । धर्मात्मा शूर इत्येवमादिभिः गुणैः सम्भावितस्य च अकीर्तिः मरणात् अतिरिच्यते, सम्भावितस्य च अकीर्तेः वरं मरणमित्यर्थः ॥ ३४ ॥
உலகத்தில் உள்ள எல்லோரும் உன்னுடைய அபகீர்த்தியை (பழியை ) வெகுகாலம் கூறுவார்கள். தர்மாத்மா, சூரன் முதலிய நற்கு ணங்களைப் பெற்றவனுக்கு அபகீர்த்தியானது மரணத்தைக் காட்டி லும் அதிகமானதாகும், எனவே அபகீர்த்தியைக் காட்டிலும் மரணமா னது மேல் என்பது பொருள்.
किञ्च —
மேலும்
भयाद्रणादुपरतं मंस्यन्ते त्वां महारथाः ।
येषां च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम् ॥ ३५ ॥
பயாத்ராணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா: ।
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம் ॥ 35 ॥
भयात् कर्णादिभ्यः रणात् युद्धात् उपरतं निवृत्तं मंस्यन्ते चिन्तयिष्यन्ति न कृपयेति त्वां महारथाः दुर्योधनप्रभृतयः । येषां च त्वं दुर्योधनादीनां बहुमतो बहुभिः गुणैः युक्तः इत्येवं मतः बहुमतः भूत्वा पुनः यास्यसि लाघवं लघुभावम् ॥ ३५ ॥
மஹாரதர்களான துரியோதனன் முதலியவர்கள் நீ கர்ணன் முதலியவர்களிடத்திலுள்ள பயத்தினால் தான் யுத்தத் திலிருந்து வில குகிறாய், கருணையினால் அல்ல என்று நினைப்பார்கள். எந்த துர் யோதனன் முதலியவர்களால் நீ அநேக நற்குணங்கள் பெற்றவன் என்று போற்றப்பெற்றாயோ அவர்களே உன்னை சிறுமை அடைந்தவன் என்று கூறுவார்கள்.
किञ्च—
மேலும்
अवाच्यवादांश्च बहून्वदिष्यन्ति तवाहिताः ।
निन्दन्तस्तव सामर्थ्यं ततो दुःखतरं नु किम् ॥ ३६ ॥
அவாச்யவாதாம்ச்ச பஹூன்வதிஷ்யந்தி தவாஹிதா: ।
நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ துக்கதரம் நு கிம் ॥ 36 ॥
अवाच्यवादान् अवक्तव्यवादांश्च बहून् अनेकप्रकारान् वदिष्यन्ति तव अहिताः शत्रवः निन्दन्तः कुत्सयन्तः तव त्वदीयं सामर्थ्यं निवातकवचादियुद्धनिमित्तम् ।
உன்னிடம் ஹிதம் அற்றஎதிரிகள் சொல்லக்கூடாத வார்த்தை களை அனேகவிதமாக கூறுவார்கள்.மேலும் உன்னுடைய சத்ருக்கள் நிவாத கவசங்களுடன் செய்த உன்னுடைய யுத்த ஸாமர்த்தியத்தையும் கீழாக மதித்து இகழ்வார்கள்.
ततः तस्मात् निन्दाप्राप्तेर्दुःखात् दुःखतरं नु किम् , ततः कष्टतरं दुःखं नास्तीत्यर्थः ॥ ३६ ॥
ஆகையால் இகழ்ச்சியினால் ஏற்படும் துக்கத்தைக் காட்டிலும் மேலான துக்கம் எது. மிகக் கடினமான துக்கமானது இல்லை என்பது பொருள்.
युद्धे पुनः क्रियमाणे कर्णादिभिः —
இனி கர்ணன் முதலானவர்களுடன் யுத்தம் செய்தால்-
हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महीम् ।
तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयः ॥ ३७ ॥
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம் ।
தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருதநிச்சய: ॥ 37 ॥
हतो वा प्राप्स्यसि स्वर्गम् , हतः सन् स्वर्गं प्राप्स्यसि । जित्वा वा कर्णादीन् शूरान् भोक्ष्यसे महीम् । उभयथापि तव लाभ एवेत्यभिप्रायः ।
(நீ யுத்தத்தில்) கொல்லப்பட்டால் சுவர்க்கத்தை அடைவாய் அல்லது கர்ணன் முதலியோர்களை ஜெயித்து ராஜ்ஜியத்தை அனுபவிப்பாய். இவ்வாறு இருவிதமாகவும் உனக்கு லாபமே என்பது அபிப்பிராயம்.
यत एवं तस्मात् उत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयः ‘जेष्यामि शत्रून् , मरिष्यामि वा’ इति निश्चयं कृत्वेत्यर्थः ॥ ३७ ॥
ஹே கௌந்தேய இவ்வாறு இருத்தலின் நீ யுத்தம் செய்ய உறுதி கொண்டு யுத்தத்தில் சத்ருக்களை வெற்றி கொள்வேன் அல்லது செத்துமடி வேன் என்று உறுதியுடன் போர்புரிய எழுந்திரு என்பது பொருள்.
तत्र युद्धं स्वधर्मं इत्येवं युध्यमानस्योपदेशमिमं शृणु —
யுத்தமானது ஸ்வதர்மம் என்று கருதி யுத்தம் செய்கின்ற உன் பொருட்டு (நான்) செய்யும் இந்த உபதேசத்தைக் கேள்.
सुखदुःखे समे कृत्वा लाभालाभौ जयाजयौ ।
ततो युद्धाय युज्यस्व नैवं पापमवाप्स्यसि ॥ ३८ ॥
ஸுகதுக்கே ஸுமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ ।
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்யஸி ॥ 38 ॥
सुखदुःखे समे तुल्ये कृत्वा, रागद्वेषावप्यकृत्वेत्येतत् । तथा लाभालाभौ जयाजयौ च समौ कृत्वा ततो युद्धाय युज्यस्व घटस्व । न एवं युद्धं कुर्वन् पापम् अवाप्स्यसि । इत्येष उपदेशः प्रासङ्गिकः ॥ ३८ ॥
சுகத்தையும், துக்கத்தையும் ஸமமாகப் பாவித்து என்றால் ராக, துவேஷம் இன்றி இருப்பதாம். அவ்வாறேலாப நஷ்ட்டங்களையும், வெற்றி தோல்விகளையும் ஸமமாக பாவித்து யுத்தத்தை தொடங்குவா யாக. இவ்வாறு ஸமத்தன்மையுடன் யுத்தம் செய்தால் உன்னைப் பாவ மானது பற்றாது, இந்த உபதேசம் எனது இந்த சந்தர்பத்தில் பொருந்தக் கூடியது.
शोकमोहापनयनाय लौकिको न्यायः ‘स्वधर्ममपि चावेक्ष्य’ (भ. गी. २ । ३१) इत्याद्यैः श्लोकैरुक्तः, न तु तात्पर्येण ।
स्वधर्ममपि चावेक्ष्य (ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய), என்பன முதலிய ச்லோகங்களால் சோக மோஹத்தை நீக்குவதற்காக லௌகிக ந்யா யத்தால் கூறப்பட்டதேயன்றி பாரமார்த்திக திருஷ்டியால் அல்ல.
परमार्थदर्शनमिह प्रकृतम् । तच्चोक्तमुपसंह्रियते —
இந்த பிரகரணத்தில் ஆரம்பமுதல் (30வது சுலோகம் வரையி லும்) பரமார்த்த தர்சனத்தை பூர்த்தி செய்கிறார்.
‘एषा तेऽभिहिता’ (भ. गी. २ । ३९) इति शास्त्रविषयविभागप्रदर्शनाय ।
இப்பொழுது சாஸ்த்திர விஷயத்தின் பிரிவுகளை (விபாகங்களை) காண்பிப்பதன் பொருட்டு ( ஏஷா தேஅபிஹிதா), என்றஇந்த சுலோகத்தின் வாயிலாக அதை (பரமார்த்த தரிசனத்தை) உபஸம்ஹாரம் (முடிவு) செய்கின்றார்.
इह हि प्रदर्शिते पुनः शास्त्रविषयविभागे उपरिष्टात् ‘ज्ञानयोगेन साङ्‍ख्यानां कर्मयोगेन योगिनाम्’ (भ. गी. ३ । ३) इति निष्ठाद्वयविषयं शास्त्रं सुखं प्रवर्तिष्यते, श्रोतारश्च विषयविभागेन सुखं ग्रहीष्यन्ति इत्यत आह —
ஏனெனில் இங்கு சாஸ்திரத்தில் காண்பிக்கப்பட்ட விபாகத்தை அறிவதினால், பிறகு 3ம் அத்யாயத்தில் (ஞானயோகேன ஸாங்க்யா னாம் கர்மயோகேன யோகினாம்,) என்று அந்த இரண்டு நிஷ்ட்டைக ளும் காண்பிக்கப்பட்டதாக சொல்வதை சுலபமாக கிரஹிக்கும் பொருட்டும், ச்ரோத்தாக்களும் விபாகத்துடன் கூடிய விஷயத்தை அநாயாசமாக கிரஹிக்கும் பொருட்டும் இவ்வாறு கூறுகிறார்.
एषा तेऽभिहिता साङ्‍ख्ये बुद्धिर्योगे त्विमां शृणु ।
बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि ॥ ३९ ॥
ஏ ஷா தேஅபிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம்ச்ருணு ।
புத்த்யா யுக்தோ யயா பார்த கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி ॥ 39 ॥
एषा ते तुभ्यम् अभिहिता उक्ता साङ्‍ख्ये परमार्थवस्तुविवेकविषये बुद्धिः ज्ञानं साक्षात् शोकमोहादिसंसारहेतुदोषनिवृत्तिकारणम् ।
நான் உன் பொருட்டு கூறிய சாங்கிய யோகமானது அதாவது பரமார்த்த வஸ்துவின் விவேகபுத்தியான ஞானமானது ஸாக்ஷாத் (நேரே) சோக, மோஹாதி ஸம்சார காரணத்தை நிவிர்த்தி செய்வதற்கு காரணமாகிறது.
योगे तु तत्प्राप्त्युपाये निःसङ्गतया द्वन्द्वप्रहाणपूर्वकम् ईश्वराराधनार्थे कर्मयोगे कर्मानुष्ठाने समाधियोगे च इमाम् अनन्तरमेवोच्यमानां बुद्धिं शृणु ।
இதை (ஞானத்தை) அடைவதற்கு உபாய ரூபமான யோக விஷயத்தில் என்றால் ஆஸக்தி (காமம்) அற்று ஸுக, துக்க முதலிய துவந்துவங்களை தியாகம் செய்து, ஈஸ்வர ஆராதனத்தின் பொருட்டு செய்யும் கர்ம அனுஷ்டான கர்மயோகத்தைப் பற்றியும், ஸமாதி யோகத்தைப் பற்றியதுமான விஷயத்தில் உள்ள புத்தியைப் பற்றி மேலே கூறப்போவதைக் கேள்.
तां च बुद्धिं स्तौति प्ररोचनार्थम् —
அந்த (கர்ம) புத்தியை உற்காசம் அடைந்து ஏற்றுக்கொள்வதற்காக அதை ஸ்துதி செய்கிறார்.
बुद्ध्या यया योगविषयया युक्तः हे पार्थ, कर्मबन्धं कर्मैव धर्माधर्माख्यो बन्धः कर्मबन्धः तं प्रहास्यसि ईश्वरप्रसादनिमित्तज्ञानप्राप्त्यैव इत्यभिप्रायः ॥ ३९ ॥
ஹே! பார்த்த! இந்த யோகவிஷய புத்தியுடன் கூடிய தர்மாதர்ம மெனப்படும் கர்ம பந்தத்தை, ஈஸ்வர கிருபையினால் ஏற்படும் ஞானப் பிராப்தியின் வாயிலாக நாசம் செய் என்பது அபிப்பிராயம்.
किञ्च अन्यत् —
மேலும் மற்றதைக் கேள்
नेहाभिक्रमनाशोऽस्ति प्रत्यवायो न विद्यते ।
स्वल्पमप्यस्य धर्मस्य त्रायते महतो भयात् ॥ ४० ॥
நேஹாபிக்ரமநாசோஅஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே ।
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் ॥ 40 ॥
न इह मोक्षमार्गे कर्मयोगे अभिक्रमनाशः अभिक्रमणमभिक्रमः प्रारम्भः तस्य नाशः नास्ति यथा कृष्यादेः । योगविषये प्रारम्भस्य न अनैकान्तिकफलत्वमित्यर्थः ।
மோக்ஷமார்க்கமான நிஷ்காம கர்மமார்க்கத்தில் உழவுத்தொழில் முதலியவைகள் போல் (முயற்சி) ஆரம்பத்தின் நாசமானது ஏற்படாது. இதனுடைய அபிப்பிராயம் என்னவெனில் நிஷ்காமயோக விஷயத்தின் ஆரம்ப பலன் நிச்சயமற்றது அல்ல. (நிச்சயமாக அடையப்படும்)
किञ्च — नापि चिकित्सावत् प्रत्यवायः विद्यते ।
மேலும் வைத்தியம் செய்வதினால் (செய்ய ஆரம்பித்து விட்டதால்) உண்டாகும் விபரீத பலமும் கிடையாது.
किं तु भवति स्वल्पमपि अस्य धर्मस्य योगधर्मस्य अनुष्ठितं त्रायते रक्षति महतः भयात् संसारभयात् जन्ममरणादिलक्षणात् ॥ ४० ॥
மேலும் என்ன ஆகிறது என்றால், இந்த யோகத்தை சிறிது அனுஷ்டித்தாலும் அவனை ஜன்ம மரண முதலியதான ஸம்சாரத்தி லிருந்து காப்பாற்றுகிறது.
येयं साङ्‍ख्ये बुद्धिरुक्ता योगे च, वक्ष्यमाणलक्षणा सा —
எந்த இந்த புத்தியானது சாங்கிய விஷயத்தில் கூறப்பட்டதோ இப்பொழுது கர்மயோக விஷயத்தில் கூறப்படபோகிறதோ அந்த புத்தியானது-
व्यवसायात्मिका बुद्धिरेकेह कुरुनन्दन ।
बहुशाखा ह्यनन्ताश्च बुद्धयोऽव्यवसायिनाम् ॥ ४१ ॥
வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தன ।
பஹுசாகா ஹ்யநந்தாச்ச புத்தயோஅவ்யவஸாயினாம் ॥ 41 ॥
व्यवसायात्मिका निश्चयस्वभावा एका एव बुद्धिः इतरविपरीतबुद्धिशाखाभेदस्य बाधिका, सम्यक्प्रमाणजनितत्वात् , इह श्रेयोमार्गे हे कुरुनन्दन ।
ஹே! குரு நந்தன! இந்த ச்ரேயோமார்க்கமான வ்யவஸாத்மிகா, என்றால் நிச்சய ஸ்வபாவமுடைய புத்தி அது ஒன்றே. எந்த இந்த புத்தியானது பிரமாணத்தினால் உண்டானதால் மற்றவிபரீத புத்தியில் உள்ள சாகா பேதங்களை (பல கிளைகளாக பிரிந்து நிற்கும் சம்சா ரத்தில் உள்ள பேதங்களை) பாதிக்கிறது. (நீக்குகிறது)
याः पुनः इतरा विपरीतबुद्धयः, यासां शाखाभेदप्रचारवशात् अनन्तः अपारः अनुपरतः संसारो नित्यप्रततो विस्तीर्णो भवति, प्रमाणजनितविवेकबुद्धिनिमित्तवशाच्च उपरतास्वनन्तभेदबुद्धिषु संसारोऽप्युपरमते
மேலும் எந்த மற்றபுத்திகளுண்டோ அதனுடைய சாகா (கிளை) பேதங்களின் பிரச்சாரத்தினால் ஸம்ஸாரமானது அநந்தமாயும் கடக்க முடியாததாயும், அனுபரதமாயும் (தள்ளத்தகாததாயும்) நிரந்தரமாக மிகவும் விரிந்ததாயும் இருக்கின்றன. இந்த அனந்த புத்தி பேதங் கள் பிரமாணத்தினால் உண்டான விவேக புத்தியினால் முடிவு அடை யும் பொழுது ஸம்ஸாரமும் முடிவடைகிறது.
ता बुद्धयः बहुशाखाः बह्वयः शाखाः यासां ताः बहुशाखाः, बहुभेदा इत्येतत् । प्रतिशाखाभेदेन हि अनन्ताश्च बुद्धयः । केषाम् ? अव्यवसायिनां प्रमाणजनितविवेकबुद्धिरहितानामित्यर्थः ॥ ४१ ॥
ஆனால் எவர்கள் அவ்வியவசாயிகளாய் (நிச்சயபுத்தி அற்றவர் களாய் இருக்கிறார்களோ அவர்கள் பிரமாணத்தினால் உண்டான விவேக புத்தி அற்றவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுடைய புத்தியில் பேதங்கள் (சாகா) உள்ளன. ஒவ்வொரு சாகையிலும் முடிவற்ற பேதங்கள் உள்ளன.
येषां व्यवसायात्मिका बुद्धिर्नास्ति ते —
எவர்களுக்கு வியவசாயாத்மிகா (தீர்மானம் ஏற்படுத்தப்பட்ட) புத்தி இல்லையோ அவர்கள்-
यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्चितः ।
वेदवादरताः पार्थ नान्यदस्तीति वादिनः ॥ ४२ ॥
யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபச்சித: ।
வேதவாதரதா: பார்த நாந்யதஸ்தீதி வாதின: ॥ 42 ॥
याम् इमां वक्ष्यमाणां पुष्पितां पुष्पित इव वृक्षः शोभमानां श्रूयमाणरमणीयां वाचं वाक्यलक्षणां प्रवदन्ति ।
இந்த பூத்துக் குலுங்குகின்றமரங்களைப் போல அழகிய கேட்பதற்கு ரமணீயமாய் இருப்பதுபோல் உள்ள வாக்கியங்களை கூறுகிறார்கள்.
के ? अविपश्चितः अमेधसः अविवेकिन इत्यर्थः । वेदवादरताः बह्वर्थवादफलसाधनप्रकाशकेषु वेदवाक्येषु रताः ।
எவர்கள் (எனில்) (अविपश्चितः அவிபச்சத:) என்றால் அல்பமேதை உடையவன். அவிவேகி என்பது பொருள். (वेदवादरता வேதவாதரதா:) என்றால் அநேக அர்த்த வாதங்களையும், பல ஸாதனங்களையும் பிரகாசப்படுத்தும் வேத வாக்கியங்களில் ரமிக்கின்றவர்கள்.
हे पार्थ, न अन्यत् स्वर्गपश्वादिफलसाधनेभ्यः कर्मभ्यः अस्ति इति एवं वादिनः वदनशीलाः ॥ ४२ ॥
ஹே! பார்த்த! சுவர்க்க பிராப்தி முதலிய பலன்களைக் கொடுக் கும் பலசாதன ரூபமான கர்மத்தைக் காட்டிலும் வேறு ஒன்று கிடை யாது என்று கூறும் இயல்புடையவர்கள் வாதிகள்.
ते च —
மேலும் அவர்கள்
कामात्मानः स्वर्गपरा जन्मकर्मफलप्रदाम् ।
क्रियाविशेषबहुलां भोगैश्वर्यगतिं प्रति ॥ ४३ ॥
காமாத்மான: ஸ்வர்கபரா ஜன்மகர்மபலப்ரதாம் ।
க்ரியாவிசேஷபஹுலாம் போகைச்வர்யகதிம் ப்ரதி ॥ 43 ॥
कामात्मानः कामस्वभावाः, कामपरा इत्यर्थः । स्वर्गपराः स्वर्गः परः पुरुषार्थः येषां ते स्वर्गपराः स्वर्गप्रधानाः । जन्मकर्मफलप्रदां कर्मणः फलं कर्मफलं जन्मैव कर्मफलं जन्मकर्मफलं तत् प्रददातीति जन्मकर्मफलप्रदा, तां वाचम् । प्रवदन्ति इत्यनुषज्यते ।
காமாத்மன: என்றால் காமஸ்வபாவமுள்ளவர்கள், காமபரர்கள் (स्वर्गपरा: ஸ்வர்கபரர்கள்) என்றால் ஸ்வர்க்கமே மேலான புருஷார்த்தம் என்றும் சுவர்க்கத்தையே பிரதானமாக நினைப் பார்கள். (जन्मकर्मफलप्रदां ஜன்ம கர்ம பலப்ரதாம்) என்றால் கர்மத்தி னுடைய பலம் கர்மபலம் எனப்படும். கர்மபலமானது ஜன்மம். கர்மபல மான ஜன்மத்தைத் தருவதால் ஜன்மகர்மபலப்ரதம் எனப்படுகிறது. அவ்வியவஸாயிகள் இந்த வார்த்தைகளைக் கூகிறார்கள் என்றவார்த்தை முன்பகுதியிலிருந்து தொடர்கிறது.
क्रियाविशेषबहुलां क्रियाणां विशेषाः क्रियाविशेषाः ते बहुला यस्यां वाचि तां स्वर्गपशुपुत्राद्यर्थाः यया वाचा बाहुल्येन प्रकाश्यन्ते । भोगैश्वर्यगतिं प्रति भोगश्च ऐश्वर्यं च भोगैश्वर्ये, तयोर्गतिः प्राप्तिः भोगैश्वर्यगतिः, तां प्रति साधनभूताः ये क्रियाविशेषाः तद्बहुलां तां वाचं प्रवदन्तः मूढाः संसारे परिवर्तन्ते इत्यभिप्रायः ॥ ४३ ॥
(क्रियाविशेषबहुलां கிரியாவிசே ஷபஹுலாம்) என்றால் அநேக கர்ம விசேஷங்கள் சுவர்க்கம், பசு, புத்திரன் முதலிய அர்த்தங்கள் (பொருள்கள்) அந்த வாக்கினால் அதிகமாக பிரகாசிக்கப்படுகின்றன. (அவர்கள் அதைப் பற்றியே கூறுகிறார்கள்) (भोगैश्वर्यगतिं प्रति போகைச்வர்ய கதிம் பிரிதி) என்றால் போகத்தையும் ஐஸ்வர்யத்தையும் அடைதல், போக ஐஸ்வர் யத்தை அடைவதற்கு ஸாதனங்களுடன் கூடிய அநேக கர்மவிசேஷங்களை அநேக வார்த் தைகளால் கூறுகின்றமூடர்கள் ஸம்சார சக்கரத்தில் உழண்டு கொண் டிருப்பார்கள் என்பது அபிப்பிராயம்.
भोगैश्वर्यप्रसक्तानां तयापहृतचेतसाम् ।
व्यवसायात्मिका बुद्धिः समाधौ न विधीयते ॥ ४४ ॥
போகைச்வர்யப்ரசக்தானம் தயாபஹ்ருதசேதஸாம் ।
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே ॥ 44 ॥
तेषां च —भोगैश्वर्यप्रसक्तानां भोगः कर्तव्यः ऐश्वर्यं च इति भोगैश्वर्ययोरेव प्रणयवतां तदात्मभूतानाम् । तया क्रियाविशेषबहुलया वाचा अपहृतचेतसाम् आच्छादितविवेकप्रज्ञानां व्यवसायात्मिका साङ्‍ख्ये योगे वा बुद्धिः समाधौ समाधीयते अस्मिन् पुरुषोपभोगाय सर्वमिति समाधिः अन्तःकरणं बुद्धिः तस्मिन् समाधौ, न विधीयते न भवति इत्यर्थः ॥ ४४ ॥
போக, ஐஸ்வர்யத்திலேயே மிகுந்த ஆசக்தி உள்ளவர்கள் போகமும், ஐஸ்வர்யமும் தான் மேலான புருஷார்த்தம் என்று நினைத்து அதிலேயே பிரேமை உடையவர்களாகி அந்த மயமாகவே ஆகிவிடுகிறார்கள். அநேக கர்மவிசேஷங்களுடன் கூடிய வார்த்தை களினால் மறைக்கப்பட்ட விவேகபுத்தி உடையவர்களுக்கு ஸாங்கிய விஷயத்திலாவது, யோக விஷயத்லாவது நிச்சயபுத்தி உண்டாக மாட்டாது. புருஷனின் போகத்தின் பொருட்டு ஸகல யோக விஷயங்க ளும் எங்கு நன்றாக படிந்திருக்கிறதோ அந்த மனம் சமாதி எனப்படும். இவ்வாறு சமாதிக்கு அர்த்தம் செய்யும்போது சமாதி என்றால் அந்தக் கரணம் எனப்படும். இவ்வாறுள்ள அந்தக்கரணத்தில் சாங்கியத்திலும் யோகத்திலும் நிச்சயதன்மை ஏற்படுத்தும் புத்தியானது உண்டாக மாட்டாது.
ये एवं विवेकबुद्धिरहिताः तेषां कामात्मनां यत् फलं तदाह —
எவர்கள் இவ்வாறு விவேக புத்தி அற்று இருக்கின்ற அந்த காம புருஷர்களுக்கு
त्रैगुण्यविषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन ।
निर्द्वन्द्वो नित्यसत्त्वस्थो निर्योगक्षेम आत्मवान् ॥ ४५ ॥
த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுன ।
நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்தோ நிர்யோகக்ஷேம ஆத்மவான் ॥ 45 ॥
त्रैगुण्यविषयाः त्रैगुण्यं संसारो विषयः प्रकाशयितव्यः येषां ते वेदाः त्रैगुण्यविषयाः । त्वं तु निस्त्रैगुण्यो भव अर्जुन, निष्कामो भव इत्यर्थः ।
வேதமானது த்ரைகுண்யவிஷயமாய் இருக்கிறது, ஏனென்றால் முக்குணங்களின் காரிய ரூபமான ஸம்ஸாரத்தைப் பிரகாசம் செய்வதாய் இருப்பதால், (கர்மகாண்டம்) ஹே ! அர்ஜுனா! (நீ நிஸ்த் ரைகுண்யோ அஸம்சாரி) ஆவாய். மேலும் காமமற்றவனாய் ஆவாய்.
निर्द्वन्द्वः सुखदुःखहेतू सप्रतिपक्षौ पदार्थौ द्वन्द्वशब्दवाच्यौ, ततः निर्गतः निर्द्वन्द्वो भव । नित्यसत्त्वस्थः सदा सत्त्वगुणाश्रितो भव ।
(நிர்துவந்த:) என்றால் சுக துக்கங்களுக்கு காரணமாயும், பரஸ்பர விரோதியான இரட்டைப் பதார்த்தங்களை த்வந்த்வம் என்கிறோம். துவந்துவம் அற்றது (நிர்துவந்தக: ) நீ துவந்துவம் அற்றவனாயும், எப்பொழுதும் ஸத்வகுணத்தை ஆச்ரியத்தவனாயும் இரு.
तथा निर्योगक्षेमः अनुपात्तस्य उपादानं योगः, उपात्तस्य रक्षणं क्षेमः, योगक्षेमप्रधानस्य श्रेयसि प्रवृत्तिर्दुष्करा इत्यतः निर्योगक्षेमो भव ।
அவ்வாறேயோகக்ஷேமம் அற்றவனாயிரு. அடையப்படாத வஸ்துவை அடைவதே யோகம். அடைந்த வஸ்துவைக் காப்பாற்று தல் க்ஷேமம். யோகக்ஷேமத்தை பிரதானமாய் நினைப்பவர்களுக்கு ச்ரேயஸ் மார்க்கத்தில் பிரவிர்த்தித்தல் மிகக்கடினமாகும். ஆகையால் யோகக்ஷேமம் அற்றவனாய் இரு.
आत्मवान् अप्रमत्तश्च भव । एष तव उपदेशः स्वधर्ममनुतिष्ठतः ॥ ४५ ॥
(ஆத்மாவான் பவ) எனில் ஏமாற்றம் அற்றவனாய் இரு. நீ ஸ்வதர் மத்தை அனுஷ்டிக்கும்பொழுது (உன்னுடைய நிலை எவ்வாறு இருக்கவேண்டும் என்ற) உபதேசம் இதுவாகும்.
सर्वेषु वेदोक्तेषु कर्मसु यान्युक्तान्यनन्तानि फलानि तानि नापेक्ष्यन्ते चेत् , किमर्थं तानि ईश्वरायेत्यनुष्ठीयन्ते इत्युच्यते ; शृणु —
சம்பூர்ண (எல்லா) வேதங்களிலும் கூறிய கர்மங்களுடைய அளவற்ற பலன்களை விரும்பாதவனால் எதற்காக அந்த கர்மங்கள் ஈஸ்வரரின் பொருட்டு அனுஷ்டிக்கப்படவேண்டும் எனில்- கூறுகிறேன் கேள்.
यावानर्थ उदपाने सर्वतःसम्प्लुतोदके ।
तावान् सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः ॥ ४६ ॥
யாவாநர்த உதபானே ஸர்வத: ஸம்ப்லுதோதகே ।
தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜானத: ॥ 46 ॥
यथा लोके कूपतडागाद्यनेकस्मिन् उदपाने परिच्छिन्नोदके यावान् यावत्परिमाणः स्नानपानादिः अर्थः फलं प्रयोजनं स सर्वः अर्थः सर्वतः सम्प्लुतोदकेऽपि यः अर्थः तावानेव सम्पद्यते, तत्र अन्तर्भवतीत्यर्थः ।
எவ்வாறு உலகில் கிணறு, குளம் முதலிய அநேக சிறிய, சிறிய தண்ணீர் உள்ள நிலைகளில் எவ்வளவு குளிப்பதற்கு, குடிப்பதற்கு பிரயோஜனம் ஏற்படுகிறதோ, அந்த எல்லா பிரயோஜனங்களும் பெரும் ஊற்றெடுக்கும் நீர் நிறைந்த பெரிய ஏரிகளில் சுலபமாக கிடைக்கிறது. அங்கு எல்லா பிரயோஜனங்களும் அடங்கி இருக்கின்றன என்பது இதன் பொருள்.
एवं तावान् तावत्परिमाण एव सम्पद्यते सर्वेषु वेदेषु वेदोक्तेषु कर्मसु यः अर्थः यत्कर्मफलं सः अर्थः ब्राह्मणस्य संन्यासिनः परमार्थतत्त्वं विजानतः यः अर्थः यत् विज्ञानफलं सर्वतःसम्प्लुतोदकस्थानीयं तस्मिन् तावानेव सम्पद्यते तत्रैवान्तर्भवतीत्यर्थः ।
இவ்வாறு ஸம்பூர்ண வேதத்தில் கூறப்பட்ட கர்மங்களின் யாது பிரயோஜனம் உள்ளதோ அதாவது கர்மபலன் உண்டாகிறதோ அந்த கர்மபலன்கள் எல்லாம் பரமார்த்த தத்துவத்தை அறிந்த ஸந்நியாசிக ளுக்கு மஹா ஊற்றுப் பெருக்குள்ள ஏரிக்கு ஒப்பான விக்ஞான ஆனந்த ரூப பலத்தில் அநாயாசமாக கிடைக்கிறது. இதன் பொருள் என்னவென்றால் எல்லாப் பலன்களும் ஞானரூப ஆனந்த பலத்தில் அடங்குகிறது.
ஜனங்கள் செய்த நல்ல கார்யங்களால் அந்த (ரைக்கவர்) அறிந்ததை ( அந்த பரப்ரஹ்மத்தை ) எவர்கள் அறிகிறார்களோ அவர்களுக்கு அந்த எல்லா பலன்களும் போய் சேரும். மேலும் கீதை யிலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. (ஸர்வம் கர்மாகிலம்) ஸம்பூர்ண கர்மங்களும் ஞானத்தில் முடிவடைகிறது என்று.
तस्मात् प्राक् ज्ञाननिष्ठाधिकारप्राप्तेः कर्मण्यधिकृतेन कूपतडागाद्यर्थस्थानीयमपि कर्म कर्तव्यम् ॥ ४६ ॥
ஆகையால் ஞான நிஷ்ட்டைக்கு தகுதி அடைவதற்கு முன் கர் மாதிகாரியானவன் கிணறு, தடாகம் முதலியது போல அல்ப பலனே இருந்தாலும் அவசியம் கர்மம் செய்யவேண்டும்.
कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन ।
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि ॥ ४७ ॥
கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன ।
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோ அஸ்த்வகர்மணி ॥ 47 ॥
कर्मण्येव अधिकारः न ज्ञाननिष्ठायां ते तव । तत्र च कर्म कुर्वतः मा फलेषु अधिकारः अस्तु, कर्मफलतृष्णा मा भूत् कदाचन कस्याञ्चिदप्यवस्थायामित्यर्थः ।
(अन्वयः) உனக்கு கர்மத்தில் தான் அதிகாரமே தவிர ஞானநிஷ்ட் டையில் அல்ல. இங்கு (கர்மயோகத்தில்) கர்மம் செய்கின்றஉனக்கு பலத்தில் ஸ்வாதந்த்ர்யம் (स्वातन्त्र) கிடையாது. உனக்கு ஒரு அவஸ் தையிலும் கர்மபலத்தில் இச்சையே ஏற்படக்கூடாது என்பது பொருள்.
यदा कर्मफले तृष्णा ते स्यात् तदा कर्मफलप्राप्तेः हेतुः स्याः, एवं मा कर्मफलहेतुः भूः ।
ஜன்மத்திற்கு காரணமான நீ கர்மபலத்தில் ஆசை வைத்து கர்மத்தில் ஈடுபட்டால் அப்பொழுது கர்மபலமாகிய ஜன்மத்திற்கு காரணமாகிவிடும். ஆகையால் கர்மபல ஹேதுவினிடத்தில் ஆசை வைக்காதே.
यदा हि कर्मफलतृष्णाप्रयुक्तः कर्मणि प्रवर्तते तदा कर्मफलस्यैव जन्मनो हेतुर्भवेत् ।
எப்பொழுது நீ கர்மபலத்தில் ஆசக்தி உடையவனாய் கர்மத்தில் பிர விர்த்திக்கிறாயோ அப்பொழுது கர்மபலமாகிய ஜன்மத்திற்கு ஹேதுவாகும்.
यदि कर्मफलं नेष्यते, किं कर्मणा दुःखरूपेण ? इति मा ते तव सङ्गः अस्तु अकर्मणि अकरणे प्रीतिर्मा भूत् ॥ ४७ ॥
கர்மபலத்தில் இச்சையற்று கடினமான (துக்கரூபமான) கர்மத்தி னால் என்ன பிரயோஜனம் என்று கருதி அதில் ஈடுபடாமல் கர்மம் செய்யாமல் இருந்துவிடாதே.
यदि कर्मफलप्रयुक्तेन न कर्तव्यं कर्म, कथं तर्हि कर्तव्यमिति ; उच्यते —
கர்மபலத்தில் உள்ள இச்சையினால் ஏவப்பட்டு கர்மம் செய்யக் கூடாது எனில், பின் எவ்வாறு கர்மம் செய்யவேண்டுமெனில்? இதைப் பற்றி கூறுகிறேன்.
योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय ।
सिद्ध्यसिद्ध्योः समो भूत्वा समत्वं योग उच्यते ॥ ४८ ॥
யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தனஞ்ஜய ।
ஸித்த்யஸித்த்யோ: ஸமோபூத்வா ஸமத்வம் யோக உச்யதே ॥ 48 ॥
योगस्थः सन् कुरु कर्माणि केवलमीश्वरार्थम् ; तत्रापि ‘ईश्वरो मे तुष्यतु’ इति सङ्गं त्यक्त्वा धनञ्जय ।
யோகத்திலேயே நிலைபெற்று (என்றால் சுக, துக்கங்களில் சமநிஷ்ட்டையுடன்) ஈஸ்வரனின் பொருட்டே கர்மம் செய். அதிலும் எனக்கு ஈஸ்வரன் பிரசன்னமாகி என்னை சந்தோஷப் படுதட்டும் என்ற பற்றையும் விட்டுவிட்டு செய்.
फलतृष्णाशून्येन क्रियमाणे कर्मणि सत्त्वशुद्धिजा ज्ञानप्राप्तिलक्षणा सिद्धिः, तद्विपर्ययजा असिद्धिः, तयोः सिद्ध्यसिद्ध्योः अपि समः तुल्यः भूत्वा कुरु कर्माणि ।
பலத்தில் இச்சையை விட்டு செய்யும் கர்மத்தினால் சித்த சுத்தி அடைந்து அதனால் (ஞானம்) பெறுதல் ஏற்பட்டாலும், அதற்கு மாறாக ஞானம் ஏற்படாவிட்டாலும் அவைகளிடத்தில் சித்தி, அசித்தி இரண்டிலும் ஸமபுத்தி வைத்து உன் கர்மத்தை செய்.
कोऽसौ योगः यत्रस्थः कुरु इति उक्तम् ? इदमेव तत् — सिद्ध्यसिद्ध्योः समत्वं योगः उच्यते ॥ ४८ ॥
எதில் நிலை பெற்று கர்மம் செய்யவேண்டும் என்று கூறப்பட்டதோ அந்த யோகம் யாது? எனில், இதுதான் அது. அது பலன் ஏற்படுவதிலும் ஏற்படாததிலும் உள்ள ஸமத்துவ பாவனை யோகம் எனப்படும்.
यत्पुनः समत्वबुद्धियुक्तमीश्वराराधनार्थं कर्मोक्तम् , एतस्मात्कर्मणः —
மேலும் எந்த ஸமத்துவ புத்தியுடன் ஈஸ்வரனுடைய ஆராதனத் தின் பொருட்டு செய்யப்படும்(நிஷ்காம) கர்மத்தைக் காட்டிலும்-
दूरेण ह्यवरं कर्म बुद्धियोगाद्धनञ्जय ।
बुद्धौ शरणमन्विच्छ कृपणाः फलहेतवः ॥ ४९ ॥
தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத் தனஞ்ஜய ।
புத்தௌ சரணமன்விச்ச க்ருபணா: பலஹேதவ: ॥ 49 ॥
दूरेण अतिविप्रकर्षेण अत्यन्तमेव हि अवरम् अधमं निकृष्टं कर्म फलार्थिना क्रियमाणं बुद्धियोगात् समत्वबुद्धियुक्तात् कर्मणः, जन्ममरणादिहेतुत्वात् हे धनञ्जय ।
ஹே! தனஞ்ஜய புத்தியோகத்தின் அபேக்ஷை என்றஸமத்துவ புத்தியுடன் கூடிய கர்மத்தைக் காட்டிலும் பல இச்சையுடன் காமியால் செய்யப்படும் கர்மமானது ஜன்மமரணங்களுக்குக் காரணமாய் இருப்பதால் மிகத்தாழ்ந்தது.
यत एवं ततः योगविषयायां बुद्धौ तत्परिपाकजायां वा साङ्‍ख्यबुद्धौ शरणम् आश्रयमभयप्राप्तिकारणम् अन्विच्छ प्रार्थयस्व, परमार्थज्ञानशरणो भवेत्यर्थः ।
ஆகையால் இவ்வாறு யோகபுத்தியிலும், அதன் பரிபாகத்தினா லும் உண்டாகும் சாங்கிய புத்தியை ஆச்ரயித்து அபயப்பிராப்தியின் (பயமற்றதன்மையின்) காரணத்தை அடைவதற்கு இச்சை கொள். பரமார்த்த ஞானத்தை சரணடை என்பதே இதன் அபிப்பிராயம் என்பது பொருள்.
यतः अवरं कर्म कुर्वाणाः कृपणाः दीनाः फलहेतवः फलतृष्णाप्रयुक्ताः सन्तः, ‘यो वा एतदक्षरं गार्ग्यविदित्वास्माल्लोकात्प्रैति स कृपणः’ (बृ. उ. ३ । ८ । १०) इति श्रुतेः ॥ ४९ ॥
ஏனெனில் பலத்தில் உள்ள இச்சையினால் தூண்டப்பட்டு தாழ்ந்த சகாமகர்மம் செய்பவன் க்ருபணன், தீனன் எனப்படுகிறான். ஹே! கார்கீ! எவனொருவன் அக்ஷர பிரஹ்மத்தை அறியாமல் இந்த லோகத்தை விட்டு செல்கிறானோ அவன் க்ருபணன், என்று சுருதியில் கூறப்படுகிறது.
समत्वबुद्धियुक्तः सन् स्वधर्ममनुतिष्ठन् यत्फलं प्राप्नोति तच्छृणु —
சமத்துவ புத்தியுடன் கூடி சுவதர்மத்தை அனுஷ்ட்டிப்பவன் எந்த பலத்தை அடைகிறான் என்பதைக் கேள்.
बुद्धियुक्तो जहातीह उभे सुकृतदुष्कृते ।
तस्माद्योगाय युज्यस्व योगः कर्मसु कौशलम् ॥ ५० ॥
புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருததுஷ்க்ருதே ।
தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌசலம் ॥ 50 ॥
बुद्धियुक्तः कर्मसमत्वविषयया बुद्ध्या युक्तः बुद्धियुक्तः सः जहाति परित्यजति इह अस्मिन् लोके उभे सुकृतदुष्कृते पुण्यपापे सत्त्वशुद्धिज्ञानप्राप्तिद्वारेण यतः, तस्मात् समत्वबुद्धियोगाय युज्यस्व घटस्व ।
(बुद्धियुक्त: புத்தியுக்த:) என்றால் ஸமத்துவபுத்தியுடன் கூடியிருப்பவன் ஸமத்துவ புத்தியுடன் இருப்பவன் இந்த உலகில் புண்ய, பாபம் இரண்டையும் சித்த சுத்தியினால் ஏற்படும் ஞானப்பிராப்தி யினால் விடுகிறான். ஆகையால் சித்த சுத்தி அடைவதன் பொருட்டு (ஸமத்துவ புத்தியுடன்) யுத்தம் செய்.
योगो हि कर्मसु कौशलम् , स्वधर्माख्येषु कर्मसु वर्तमानस्य या सिद्ध्यासिद्ध्योः समत्वबुद्धिः ईश्वरार्पितचेतस्तया तत् कौशलं कुशलभावः ।
யோக: என்றால் கர்மம் செய்வதில் ஸாமர்த்தியமாகும் (குசலத் தன்மையாகும்) அந்த குசலத்தன்மை என்றால் ஸ்வதர்மரூப கர்மத்தை செய்யும் புருஷனுக்கு ஈஸ்வரார்ப்பண புத்தியினால் ஏற்படும் சித்த அசித்தி ரூப விஷயத்தில் (அடைவது அடையப் படாததில்) ஸமத்துவ பாவனையாகும்.
तद्धि कौशलं यत् बन्धनस्वभावान्यपि कर्माणि समत्वबुद्ध्या स्वभावात् निवर्तन्ते । तस्मात्समत्वबुद्धियुक्तो भव त्वम् ॥ ५० ॥
அதல்லவா ஸாமர்த்தியம், எதனால் ஸ்வாபாவமாகவே பந்தப் படுத்தும் கர்மமாய் இருந்தாலும், ஸமத்துவபுத்தியின் பிரபாவத்தால் னது ஸ்வபாவத்தை விடுகிறது. ஆகையால் நீ ஸமத்துவ புத்தியுடன் கூடியவனாய் இரு.
यस्मात् —
ஏனெனில்
कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा मनीषिणः ।
जन्मबन्धविनिर्मुक्ताः पदं गच्छन्त्यनामयम् ॥ ५१ ॥
கர்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மனீஷிண: ।
ஜந்மபந்தவிநிர்முக்தா: பதம் கச்சந்த்யநாமயம் ॥ 51 ॥
कर्मजं फलं त्यक्त्वा इति व्यवहितेन सम्बन्धः ।
கர்மஜம் பலம் த்யக்த்வா) என்று இடையில் உள்ள (புத்தியுக்தா) என்ற பதத்தை தள்ளி தொடர்பு கொள்ள வேண்டும்.
इष्टानिष्टदेहप्राप्तिः कर्मजं फलं कर्मभ्यो जातं बुद्धियुक्ताः समत्वबुद्धियुक्ताः सन्तः हि यस्मात् फलं त्यक्त्वा परित्यज्य मनीषिणः ज्ञानिनो भूत्वा, जन्मबन्धविनिर्मुक्ताः जन्मैव बन्धः जन्मबन्धः तेन विनिर्मुक्ताः जीवन्त एव जन्मबन्धात् विनिर्मुक्ताः सन्तः, पदं परमं विष्णोः मोक्षाख्यं गच्छन्ति अनामयं सर्वोपद्रवरहितमित्यर्थः ।
கர்மத்தினால் விரும்பிய, விரும்பாத தேஹத்தின் அடைவு ஆகிய பலன் உண்டாகும், ஸமத்துவ புத்தியினால் பலனை விட்டு ஜன்மபந்தங்களிலிருந்து விடுபட்டவராய் மேலான மோக்ஷம் எனப்ப டும் அநாமயமாகிய விஷ்ணுபதத்தை ஜீவித்திருக்கும்பொழுதே ஞானிகள் அடைகின்றனர். அநாமயம் என்றால் எல்லா உபத்திர வங்களும் அற்றது என்பது பொருள்.
अथवा ‘बुद्धियोगाद्धनञ्जय’ (भ. गी. २ । ४९) इत्यारभ्य परमार्थदर्शनलक्षणैव सर्वतःसम्प्लुतोदकस्थानीया कर्मयोगजसत्त्वशुद्धिजनिता बुद्धिर्दर्शिता, साक्षात्सुकृतदुष्कृतप्रहाणादिहेतुत्वश्रवणात् ॥ ५१ ॥
அல்லது (बुद्धियोगाद्धनञ्जय புத்தியோகாத் தனஞ்ஜய) என்று ஆரம்பித்து எல்லா பக்கங்களிலும் நிறைந்த நீர்பெருக்கை உடைய ஏரியை ஒத்ததாகிய பரமார்த்த தர்சனமாகிய ஞானமானது (எது) கர்ம யோகத்தினால் சித்த சுத்தி அடைந்த புத்தியினால் உண்டாவதோ அது காண்பிக்கப்பட்டது. இந்த புத்தியானது புண்ணிய, பாபநாசத் திற்கு ஸாக்ஷாத்(நேரே) காரணமாக இருப்பது வர்ணிக்கப்பட்டதாக சொல்லியிருக்கிறது.
योगानुष्ठानजनितसत्त्वशुद्धिजा बुद्धिः कदा प्राप्स्यते इत्युच्यते —
யோகானுஷ்டானத்தினால் உண்டான சித்தசுத்தியால் அடையப்படும் புத்தி எப்போது என்று கூறப்படுகிறது.
यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति ।
तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च ॥ ५२ ॥
யதா தே மோஹகலிலம் புத்திவ்யர்திதரிஷ்யதி ।
ததா கந்தாஸி நிர்வேதம் ச்ரோதவ்யஸ்ய ச்ருதஸ்ய ச ॥ 52 ॥
यदा यस्मिन्काले ते तव मोहकलिलं मोहात्मकमविवेकरूपं कालुष्यं येन आत्मानात्मविवेकबोधं कलुषीकृत्य विषयं प्रत्यन्तःकरणं प्रवर्तते, तत् तव बुद्धिः व्यतितरिष्यति व्यतिक्रमिष्यति, अतिशुद्धभावमापत्स्यते इत्यर्थः ।
எப்பொழுது உன்னுடைய மோஹாத்மரூபமான அவிவேகத்தால் ஆத்மாஅநாத்மா விவேக ஞானமானது கலங்கப்பட்ட பொழுது அந்தக் கரணமானது விவேக ஞானத்தால் விஷயங்களைக் குறித்து பிரவிர்த் தியைத் தடை செய்யுமோ அப்பொழுது (கடந்தபின்) உன்னுடைய புத்தியானது மிகுந்த சுத்த பாவத்தை அடைகிறது என்று அர்த்தம்.
तदा तस्मिन् काले गन्तासि प्राप्स्यसि निर्वेदं वैराग्यं श्रोतव्यस्य श्रुतस्य च, तदा श्रोतव्यं श्रुतं च ते निष्फलं प्रतिभातीत्यभिप्रायः ॥ ५२ ॥
அப்பொழுது நீ கேட்கவேண்டியதிலும், கேட்டதிலும் வைராக் கியத்தை அடைவாய். மேலும் வேதாந்த சாஸ்திரத்தைத் தவிர மற்ற வைகளில் கேட்கவேண்டியது, கேட்டதும் பிரயோஜனமற்றதாகும் என்பது அபிப்பிராயம்.
मोहकलिलात्ययद्वारेण लब्धात्मविवेकजप्रज्ञः कदा कर्मयोगजं फलं परमार्थयोगमवाप्स्यामीति चेत् , तत् शृणु —
மோஹாத்ரூபமான அவித்தியா மலினமற்றதாகி ஆத்ம விவேகத்தினால் உண்டான விவேகத்தை அடைந்தவன் கர்ம யோகத்தின் பலரூபமான பரமார்த்த யோகத்தை (ஞான யோகத்தை) எப்பொழுது அடைவேன்? என்றால் அதைக்கேள்.
श्रुतिविप्रतिपन्ना ते यदा स्थास्यति निश्चला ।
समाधावचला बुद्धिस्तदा योगमवाप्स्यसि ॥ ५३ ॥
ச்ருதிவிப்ரதிபன்னா தே யதா ஸ்தாஸ்யதி நிச்சலா ।
ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி ॥ 53 ॥
श्रुतिविप्रतिपन्ना अनेकसाध्यसाधनसम्बन्धप्रकाशनश्रुतिभिः श्रवणैः प्रवृत्तिनिवृत्तिलक्षणैः विप्रतिपन्ना नानाप्रतिपन्ना विक्षिप्ता सती ते तव बुद्धिः यदि यस्मिन् काले स्थास्यति स्थिरीभूता भविष्यति निश्चला विक्षेपचलनवर्जिता सती समाधौ, समाधीयते चित्तमस्मिन्निति समाधिः आत्मा, तस्मिन् आत्मनि इत्येतत् । अचला तत्रापि विकल्पवर्जिता इत्येतत् । बुद्धिः अन्तःकरणम् ।
அநேக சாத்திய, சாதன மேலும் அவற்றின் சம்பந்தம் இவை களைப் பிரகாசப்படுத்துகின்ற (தெரியப்படுத்துகின்ற) சுருதிகளின் சிரவணங்களினால், பலவகையாய் விக்ஷி ப்தமடைந்த (கலங்கிய) உன் புத்தியானது எப்பொழுது ஸ்திரமாய் நிச்சலமாய் (விக்ஷேபமற்று) சித்தத்தை எதில் நிலைநிறுத்துகிறோமோ அது சமாதி. அதுவே ஆத்மா. (நிச்சலா) அந்த ஆத்மாவில் நிலைபெறுமோ அப்போது என்று அறியவேண்டும். (அசலா) என்றால் இந்த ஸ்திரநிலையி லிருந்து விகல்பம் அற்றது என்று பொருள்.
तदा तस्मिन्काले योगम् अवाप्स्यसि विवेकप्रज्ञां समाधिं प्राप्स्यसि ॥ ५३ ॥
அப்பொழுது யோகத்தை அடைவாய் என்றால் விவேகத்தினால் உண்டான சமாதி நிஷ்ட்டையை அடைவாய் என்று பொருள்.
प्रश्नबीजं प्रतिलभ्य अर्जुन उवाच लब्धसमाधिप्रज्ञस्य लक्षणबुभुत्सया —
பிரஸ்னத்தின் காரணத்தை அறிந்த அர்ச்சுனன் ஸமாதிபி ரக்ஞை அடைந்தவனுடைய லக்ஷணத்தை அறிவதற்கு இச்சை உடையவனாய் கேட்கிறான்.
अर्जुन उवाच —
அர்ஜூன் உவாச
स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव ।
स्थितधीः किं पृभाषेत किमासीत व्रजेत किम् ॥ ५४ ॥
ஸ்திதப்ரக்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேசவ ।
ஸ்திததீ:கிம்ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜே கிம் ॥ 54 ॥
स्थिता प्रतिष्ठिता ‘अहमस्मि परं ब्रह्म’ इति प्रज्ञा यस्य सः स्थितप्रज्ञः तस्य स्थितप्रज्ञस्य का भाषा किं भाषणं वचनं कथमसौ परैर्भाष्यते समाधिस्थस्य समाधौ स्थितस्य हे केशव ।
எவருடைய புத்தியானது நான் பரப்ரஹ்மமாகிய பரமாத்மா வாகவே இருக்கிறேன் என்று (சமாதியில்) ஸ்திரமாக நிலைபெற்றி ருக்கிறதோ அவன் ஸ்திதபிரக்ஞன். கேசவா. இவ்வாறு சமாதியில் நிலைத்துள்ள ஸ்திதப்ரக்ஞன் எவ்வாறு பேசப்படுகிறான்? எவ்வாறு இவன் பிறரால் பேசப்படுகிறான்.?
स्थितधीः स्थितप्रज्ञः स्वयं वा किं प्रभाषेत । किम् आसीत व्रजेत किम् आसनं व्रजनं वा तस्य कथमित्यर्थः ।
ஸ்திததீ:) என்றால் ஸ்திதப்ரக்ஞன். அவன் தானாக எவ்வாறு பேசுகி றான். எவ்வாறு உட்காருவான்? எவ்வாறு செல்வான்? என்றால் அவனு டைய உட்காருதல், செல்லுதல் எவ்வாறு ஏற்படுகிறது என்பது பொருள்.
स्थितप्रज्ञस्य लक्षणमनेन श्लोकेन पृच्छ्यते ॥ ५४ ॥
இந்த ஸ்லோகத்தின் மூலமாக ஸ்திதப்பிரக்ஞனுடைய லக்ஷணத்தைக் கேட்கிறான்.
यो ह्यादित एव संन्यस्य कर्माणि ज्ञानयोगनिष्ठायां प्रवृत्तः, यश्च कर्मयोगेन, तयोः ‘प्रजहाति’ इत्यारभ्य आ अध्यायपरिसमाप्तेः स्थितप्रज्ञलक्षणं साधनं चोपदिश्यते ।
எவனொருவன் ஆரம்பத்திலேயே கர்மங்களை தியாகம் செய்து ஞானநிஷ்ட்டையில் பிரவிருத்திருக்கின்றானோ, கர்மத்தினால் ஞான நிஷ்டையை அடைய விரும்புகிறா எவன் இந்த இருவிதமாயுள்ளவர்க ளுக்கும் முறையே ஸ்திதப்ரக்ஞனுடைய லக்ஷணத்தையும், ஸாதனத்தை யும் (பிரஜாஹாதி) என்பது முதலிய சுலோகத்தில் ஆரம்பித்து இந்த அத்தி யாயம் முடியும் வரை உபதேசம் செய்யப்படுகிறது. (இங்கு கூறப்போகும் விஷயங்கள் ஞானிக்கு லக்ஷணம் ஞானியாக விரும்பும் ஸாதகனுக்கு இவை ப்ரயத்னத்தினால் பெறவேண்டிய லக்ஷக்ஷ்யங்கள் என்பது கருத்து.)
सर्वत्रैव हि अध्यात्मशास्त्रे कृतार्थलक्षणानि यानि तान्येव साधनानि उपदिश्यन्ते, यत्नसाध्यत्वात् । यानि यत्नसाध्यानि साधनानि लक्षणानि च भवन्ति तानि ।
அத்யாத்ம சாஸ்திரத்தில் எங்கும் கிருதார்த்தனுக்கு (ஸ்திதப்ரக் ஞனுக்கு) எந்த லக்ஷணங்கள் கூறப்பட்டதோ அவை அது முயற்சியி னால் சாத்தியமாவதால் (மற்றவர்களுக்கு) ஸாதகர்களுக்கு ஸாதனரூ பமாக உபதேசிக்கப்படுகின்றன. எவைகள் முயற்சியினால் சாதிக்கக் கூடிய சாதனங்கள் ஆகிறதோ அவைகள் (சித்தபுருஷர்களுக்கு ஸ்வாபாவிக) லக்ஷணங்களாகின்றன.
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச
प्रजहाति यदा कामान्सर्वान्पार्थ मनोगतान् ।
आत्मन्येवात्मना तुष्टः स्थितप्रज्ञस्तदोच्यते ॥ ५५ ॥
ப்ரஜஹாதி யதா காமான் ஸர்வான்பார்த மனோகதான் ।
ஆத்மன்யேவாத்மனா துஷ்ட: ஸ்திதப்ரக்ஞஸ்ததோச்யதே ॥ 55 ॥
प्रजहाति प्रकर्षेण जहाति परित्यजति यदा यस्मिन्काले सर्वान् समस्तान् कामान् इच्छाभेदान् हे पार्थ, मनोगतान् मनसि प्रविष्टान् हृदि प्रविष्टान् ।
ஹே! பார்த்த எப்பொழுது மனிதன் மனதில் இருக்கின்ற, இருதயத்தில் புகுந்துள்ள எல்லா காமனைகளான இச்சாபேதங் களையும் பூர்ணமாக விட்டொழிக்கின்றானோ
सर्वकामपरित्यागे तुष्टिकारणाभावात् शरीरधारणनिमित्तशेषे च सति उन्मत्तप्रमत्तस्येव प्रवृत्तिः प्राप्ता, इत्यत उच्यते —
எல்லாக்காமனைகளையும் தியாகம் செய்வதால் ஸந்தோஷத் திற்கு காரணம் இல்லாமல் இருப்பதாலும் சரீரதாரணத்திற்கு ஹேதுவான பிராப்தத்தின் அபாவமானது ஏற்படாததாலும் உன்மத்த பிரமத்தனுடைய (புத்தி ஸ்வாதீனமற்றவனுடைய) (நடவடிக்கைகள்) செயல்கள் போல் ஏற்படுமே எனில் இவ்வாறு கூறப்படுகிறது.
आत्मन्येव प्रत्यगात्मस्वरूपे एव आत्मना स्वेनैव बाह्यलाभनिरपेक्षः तुष्टः परमार्थदर्शनामृतरसलाभेन अन्यस्मादलंप्रत्ययवान् स्थितप्रज्ञः स्थिता प्रतिष्ठिता आत्मानात्मविवेकजा प्रज्ञा यस्य सः स्थितप्रज्ञः विद्वान् तदा उच्यते ।
ப்ரத்யக் ஆத்மஸ்வரூபத்திலேயே மற்றபாஹ்ய லாபங் களை இச்சிக்காமல் தனக்குத்தானே ஸந்துஷ்டனாய் பரமார்த்த தர்சன அம்ருதரஸ லாபத்தினாலே மற்றஅநாத்ம விஷயங்களில் போதும் என்றபாவனை உடையவன் ஸ்திதப்பிரக்ஞன் எனப்படுகிறான். ஆத்மாநாத்மா விவேகதத்தினால் உண்டான புத்தியானது ஸ்திரமாக எவனுக்கு இருக்கிறதோ அவன் ஸ்திதப்ரக்ஞன். அந்த ஸ்திதப்ரக் ஞன் ஞானி எனப்படுகிறான்.
त्यक्तपुत्रवित्तलोकैषणः संन्यासी आत्माराम आत्मक्रीडः स्थितप्रज्ञ इत्यर्थः ॥ ५५ ॥
புத்திரன், தனம், லோகம் என்றஈஷணத்திரயங்களை (பற்றுதல்கள் மூன்றையும்) விட்ட ஸந்நியாசி ஆத்மாராமன், ஆத்மக்ரீடன், ஸ்திதப்பிரக்ஞன் எனப்படுகிறான்.
किञ्च —
மேலும்
दुःखेष्वनुद्विग्नमनाः सुखेषु विगतस्पृहः ।
वीतरागभयक्रोधः स्थितधीर्मुनिरुच्यते ॥ ५६ ॥
து:கேஷ்வனுத்விக்னமனா: ஸுகேஷூ விகதஸ்ப்ருஹ: ।
வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முநிருச்யதே ॥ 56 ॥
दुःखेषु आध्यात्मिकादिषु प्राप्तेषु न उद्विग्नं न प्रक्षुभितं दुःखप्राप्तौ मनो यस्य सोऽयम् अनुद्विग्नमनाः ।
ஆத்யாத்மிக முதலான மூன்று விதமான துக்கம் அடையப்பட்ட பொழுது எவனது மனமானது கலங்காமல் இருக்கிறதோ அவன் (அனுத்விக்னமனா:) எனப்படுகிறான்.
तथा सुखेषु प्राप्तेषु विगता स्पृहा तृष्णा यस्य, न अग्निरिव इन्धनाद्याधाने सुखान्यनु विवर्धते स विगतस्पृहः ।
அவ்வாறேவிறகு முதலியவைகள் சேர்க்கும்பொழுது அக்கினியா னது மேலும், மேலும் வளர்வது போல சுகங்கள் அடைந்தபொழுது ஆசை யானது மேலும் மேலும் வளரச் செய்யாமல் இருப்பவனே விகதஸ்ப்ருஹ:
वीतरागभयक्रोधः रागश्च भयं च क्रोधश्च वीता विगता यस्मात् स वीतरागभयक्रोधः । स्थितधीः स्थितप्रज्ञो मुनिः संन्यासी तदा उच्यते ॥ ५६ ॥
ராகம் (ஆசை), பயம், க்ரோதம் இவைகளின் நீக்கம் எவனுக்கு இருக்கிறதோ அவன் (வீதராகபயக்ரோத:) ராகம், பயம், க்ரோதம் அற்றஸ்திரமான புத்தியுடையவன் ஸ்திதப்ரக்ஞன். அப்பொழுது அவன் (முனி:)என்றும் (ஸந்நியாஸி) என்றும் கூறப்படுகிறான்.
किञ्च —
மேலும்
यः सर्वत्रानभिस्नेहस्तत्तत्प्राप्य शुभाशुभम् ।
नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता ॥ ५७ ॥
ய: ஸர்வத்ராநபிஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய சுபாசுபம் ।
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா ॥ 57 ॥
यः मुनिः सर्वत्र देहजीवितादिष्वपि अनभिस्नेहः अभिस्नेहवर्जितः तत्तत् प्राप्य शुभाशुभं तत्तत् शुभं अशुभं वा लब्ध्वा न अभिनन्दति न द्वेष्टि शुभं प्राप्य न तुष्यति न हृष्यति, अशुभं च प्राप्य न द्वेष्टि इत्यर्थः ।
முனிவனானவன் எங்கும் தேஹ, ஜீவிதங்களிலும் பற்றற்று சுபாசுபங்கள் அடைந்தபொழுது சந்தோஷமோ, துவேஷமோ கொள்ளுவதில்லை. சுபத்தை அடைந்ததால் ஸந்தோஷப் படுவதில்லை. மேலும் அசுபத்தை அடைந்தால் துவேஷம் கொள்வதில்லை என்பது பொருள்.
तस्य एवं हर्षविषादवर्जितस्य विवेकजा प्रज्ञा प्रतिष्ठिता भवति ॥ ५७ ॥
அவனுக்கு (ஸ்திதப்பிரக்ஞனுக்கு) இவ்வாறு சந்தோஷம், துவேஷம் அற்ற விவேகத்தினால் உண்டான பிரக்ஞையானது ஸ்திரமாகிறது.
किञ्च—
மேலும்
यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वशः ।
इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता ॥ ५८ ॥
யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோஅங்காநீவ ஸர்வச: ।
இந்த்ரியாணீந்திரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா ॥ 58 ॥
यदा संहरते सम्यगुपसंहरते च अयं ज्ञाननिष्ठायां प्रवृत्तो यतिः कूर्मः अङ्गानि इव यथा कूर्मः भयात् स्वान्यङ्गानि उपसंहरति सर्वशः सर्वतः, एवं ज्ञाननिष्ठः इन्द्रियाणि इन्द्रियार्थेभ्यः सर्वविषयेभ्यः उपसंहरते । तस्य प्रज्ञा प्रतिष्ठिता इत्युक्तार्थं वाक्यम् ॥ ५८ ॥
ஆமையானது எவ்வாறு பயத்தினால் எல்லாப்பக்கங்களிலும் தன் அங்கங்களை எல்லாம் உள் இழுத்துக்கொள்கிறதோ, அவ்வாறு ஞானநிஷ்ட்டையில் ஈடுபட்ட ஸந்நியாசியான ஞானநிஷ்ட்டன் இந்திரியங்களை எல்லா விஷயங்களிலிருந்தும் உள்ளே இழுத்துக் கொள்கிறான். அப்படிப்பட்டவனுடைய பிரக்ஞையானது (ஞானமானது) ஸ்திரமாக இருக்கிறது.
तत्र विषयाननाहरतः आतुरस्यापि इन्द्रियाणि कूर्माङ्गानीव संह्रियन्ते न तु तद्विषयो रागः स कथं संह्रियते इति उच्यते —
விஷயங்களில் ஈடுபாடு அற்றநோயாளிக்கும் இந்திரியங்கள் ஆமையின் அங்கங்கள்போல் ஒடுங்குகின்றன. ஆனாலும் ராகமானது நீங்கவில்லை. அந்த ஆசை எவ்வாறு ஒடுங்கும் என்று கூறப் படுகிறது
विषया विनिवर्तन्ते निराहारस्य देहिनः ।
रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते ॥ ५९ ॥
விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹின: ।
ரஸவர்ஜம் ரஸோஅப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே ॥ 59 ॥
यद्यपि विषयाः विषयोपलक्षितानि विषयशब्दवाच्यानि इन्द्रियाणि निराहारस्य अनाह्रियमाणविषयस्य कष्टे तपसि स्थितस्य मूर्खस्यापि विनिवर्तन्ते देहिनो देहवतः रसवर्जं रसो रागो विषयेषु यः तं वर्जयित्वा ।
விஷயங்களைக் கவராமல் மிகக்கடினமான தபஸில் இருக்கும் தேஹாபிமானியான அக்ஞானிக்கு விஷயம் என்ற சப்தவாச்யமான இந்திரியங்கள் அல்லது சப்தாதி விஷயங்கள் நிவர்த்தி ஆகின்றன. ஆனால் விஷயங்களில் உள்ள ஆசக்தியைத் தவிர (ஆனால் அந்த விஷயங்களில் உள்ள ரசம் அதாவது ஆசக்தியானது நிவர்த்தி ஆவதில்லை)
रसशब्दो रागे प्रसिद्धः, स्वरसेन प्रवृत्तः रसिकः रसज्ञः, इत्यादिदर्शनात् ।
ரச சப்தமானது ராகம் ஆஸக்தி என்றஅர்த்தத்தில் பிரஸித்தமா (கும். ஏனெனில்) स्वरसेन प्रवृत्तो रसिको रसज्ञ: (ஸ்வரகேன ப்ரவிர்த்தோ ரசிகோ ரசக்ஞ:) ஸ்வரசமாக பிரவிர்த்தித்தவன் ரசிகன், ரசக்ஞன் என்று கூறப்படும் ப்ரயோக வாக்கியங்களின் (காணப்படுவதால்)
सोऽपि रसो रञ्जनारूपः सूक्ष्मः अस्य यतेः परं परमार्थतत्त्वं ब्रह्म दृष्ट्वा उपलभ्य ‘अहमेव तत्’ इति वर्तमानस्य निवर्तते निर्बीजं विषयविज्ञानं सम्पद्यते इत्यर्थः ।
அந்த ராகாத்மகமான சூக்ஷ்ம ஆஸக்தியும் அந்த யதிக்கு பரமார்த்த தத்துவரூபமான பிரஹ்மமானது பிரத்யக்ஷம் ஆகும் பொழுது நிவர்த்தியாகிறது. நானே அதுவாக இருக்கிறேன் என்ற திடக் ஞானம் (திடபாவம்) ஏற்படும்பொழுது விஷய விக்ஞானமானது நிர்பீஜ மா கிறது. (காரணமற்றுப்போகிறது)
न असति सम्यग्दर्शने रसस्य उच्छेदः । तस्मात् सम्यग्दर्शनात्मिकायाः प्रज्ञायाः स्थैर्यं कर्तव्यमित्यभिप्रायः ॥ ५९ ॥
ஸம்யக் தர்சனம் இல்லாதவனுக்கு ராகத்துவேஷத்தினுடைய மூல மானது நாசம் அடைவது இல்லை. ஆகையால் ஸம்யக்தர் சனமாகிய பிரக்ஞையை (யதார்த்த புத்தியை) ஸ்திரப்படுத்தவேண்டும் என்பது அபிப்பிராயம்.
सम्यग्दर्शनलक्षणप्रज्ञास्थैर्यं चिकीर्षता आदौ इन्द्रियाणि स्ववशे स्थापयितव्यानि, यस्मात्तदनवस्थापने दोषमाह —
யதார்த்த ஞானரூப புத்தியை ஸ்திரப்படுத்துவதில் இச்சை உள்ள வன் முதலில் இந்திரியங்களைத் தன்வசப்படுத்த வேண்டும். ஏனெனில் அதை வசப்படுத்தாவிட்டால் ஏற்படும் தோஷத்தைக் கூறுகிறார்.
यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः ।
इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः ॥ ६० ॥
யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபச்சித: ।
இந்த்ரியாணி ப்ரமாதீனி ஹரந்தி ப்ரஸபம் மன: ॥ 60 ॥
यततः प्रयत्नं कुर्वतः हि यस्मात् कौन्तेय पुरुषस्य विपश्चितः मेधाविनः अपि इति व्यवहितेन सम्बन्धः । इन्द्रियाणि प्रमाथीनि प्रमथनशीलानि विषयाभिमुखं हि पुरुषं विक्षोभयन्ति आकुलीकुर्वन्ति, आकुलीकृत्य च हरन्ति प्रसभं प्रसह्य प्रकाशमेव पश्यतो विवेकविज्ञानयुक्तं मनः ॥ ६० ॥
ஹே கௌந்தேய! முயற்சியுடன் கூடிய விசாரசீலர்களான, புத்திமான்களான மேதாவிகளையும் மயங்கச்செய்யும் தன்மையுடைய இந்திரியங்கள் அந்த விஷயத்தில் ஈடுபடும் புருஷர்களை குழம்பச் செய்கின்றன. மேலும் வ்யாகுலம் செய்த பின்னும் (விஷயங்களின் கெடுதிகளைப்) பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே வித்வான்களின் விவேக ஞானமுடைய மனதை கவர்ந்து இழுத்து விடுகிறது.
यतः तस्मात् —
இவ்வாறு இருப்பதால்
तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्परः ।
वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता ॥ ६१ ॥
தானி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர: ।
வசே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா ॥ 61 ॥
तानि सर्वाणि संयम्य संयमनं वशीकरणं कृत्वा युक्तः समाहितः सन् आसीत मत्परः अहं वासुदेवः सर्वप्रत्यगात्मा परो यस्य सः मत्परः, ‘न अन्योऽहं तस्मात्’ इति आसीत इत्यर्थः ।
அந்த எல்லா இந்திரியங்களையும் வசப்படுத்தி மனதை (ஸமநி லையில் வைத்து என்னிலேயே) ஈடுபட்டு இருக்கவேண்டும் என்றால் எல்லாவற்றிற்கும் அந்தராத்மாவாகிய வாசுதேவனாகிய நான் நான் அந்த பரமாத்மாவைக் காட்டிலும் வேறல்ல. இந்த பிரகார மாக நான் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் அபின்னமானவன் என்பது பொருள்.
एवमासीनस्य यतेः वशे हि यस्य इन्द्रियाणि वर्तन्ते अभ्यासबलात् तस्य प्रज्ञा प्रतिष्ठिता ॥ ६१ ॥
இவ்வாறு இருக்கும் யதிக்கு(சந்நியாசிக்கு) அப்பியாச பலத்தால் இந்திரியங்கள் வசப்பட்டிருப்பதால் அவனுடைய பிரக்ஞையானது (ஞானமானது) ஸ்திரமாய் இருக்கும்.
अथेदानीं पराभविष्यतः सर्वानर्थमूलमिदमुच्यते —
பிறகு இப்பொழுது (இந்திரியங்களை வசப்படுத்தமுடியாத) அழிவை அடைகின்றவனுடைய எல்லா அனர்த்தங்களின் காரணத்தைக் கூறுகிறார்.
ध्यायतो विषयान्पुंसः सङ्गस्तेषूपजायते ।
सङ्गात्सञ्जायते कामः कामात्क्रोधोऽभिजायते ॥ ६२ ॥
த்யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே ।
ஸங்காத்ஸம்ஜாயதே காம: காமாத்க்ரோதோஅபிஜாயதே ॥ 62 ॥
ध्यायतः चिन्तयतः विषयान् शब्दादीन् विषयविशेषान् आलोचयतः पुंसः पुरुषस्य सङ्गः आसक्तिः प्रीतिः तेषु विषयेषु उपजायते उत्पद्यते । सङ्गात् प्रीतेः सञ्जायते समुत्पद्यते कामः तृष्णा । कामात् कुतश्चित् प्रतिहतात् क्रोधः अभिजायते ॥ ६२ ॥
எப்பொழுதும் சப்தாதி விஷயங்களிலேயே சிந்தனை செலுத்துபவ னுக்கு அந்த விஷயங்களில் ஆஸக்தி அதாவது பிரீதி உண்டாகிறது. அந்த பிரீதியினால் காமமானது உண்டாகிறது. அந்த காமத்திற்கு ஏதாவது ஒரு காரணத்தால் தடை ஏற்பட்டால் அதிலிருந்து கோபமானது ஏற்படுகிறது.
क्रोधाद्भवति संमोहः संमोहात्स्मृतिविभ्रमः ।
स्मृतिभ्रंशाद्बुद्धिनाशो बुद्धिनाशात्प्रणश्यति ॥ ६३ ॥
க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம: ।
ஸ்ம்ருதிப்ரம்ஸாத்புத்திநாசோ புத்திநாசாத்ப்ரணச்யதி ॥ 63 ॥
क्रोधात् भवति संमोहः अविवेकः कार्याकार्यविषयः । क्रुद्धो हि संमूढः सन् गुरुमप्याक्रोशति ।
க்ரோதத்திலிருந்து ஸம்மோஹமானது உண்டாகிறது. ஸம்மோ ஹம் என்றால் செய்யவேண்டியது செய்யக்கூடாதது என்பதில் அவிவேகம். க்ரோதத்தினால் மூடன் குருவையும் பழிக்கின்றான்.
संमोहात् स्मृतिविभ्रमः शास्त्राचार्योपदेशाहितसंस्कारजनितायाः स्मृतेः स्यात् विभ्रमो भ्रंशः स्मृत्युत्पत्तिनिमित्तप्राप्तौ अनुत्पत्तिः ।
ஸ்மமோஹத்திலிருந்து (மயக்கத்திலிருந்து) (स्मृतिविभ्रमः ஸ்மிருதி விப்ரம:) ஏற்படுகிறது. ஸ்மிருதி விப்ரம: என்றால் சாஸ்திர குரு உபதே சத்தினால் ஏற்படும் ஸம்ஸ்காரத்தினால் தர்மங்களின் நினைவுக்கு ஏற்படும் மயக்கம் உண்டாகிறது. ஸ்மிருதியின் உத்பத்திக்கு காரணம் இருந்தாலும் அது (நினைவு) உண்டாகாத நிலை.
ततः स्मृतिभ्रंशात् बुद्धिनाशः बुद्धेर्नाशः । कार्याकार्यविषयविवेकायोग्यता अन्तःकरणस्य बुद्धेर्नाश उच्यते ।
அந்த நினைவு தவறுவதால் புத்தியின் நாசம் ஏற்படுகிறது. அந் தக்கரணத்தில் செய்யவேண்டியது, செய்யக்கூடாதது என்ற விஷயத் தில் விவேக யோக்யதை இன்மையே புத்திநாசம் எனப்படுகிறது.
बुद्धिनाशात् प्रणश्यति । तावदेव हि पुरुषः यावदन्तःकरणं तदीयं कार्याकार्यविषयविवेकयोग्यम् । तदयोग्यत्वे नष्ट एव पुरुषो भवति ।
புத்திநாசத்தினால் அழிந்து விடுகிறான். அந்தக்கரணத்திற்கு எவ்வளவு காலம் மனிதனுடைய அந்தக்கரணம் செய்யவேண்டியது செய்யக்கூடாதது என்றவிஷயத்தில் பிரித்து அறியக்கூடிய சாமர்த்தி யம் உள்ளதோ அவ்வளவு காலம் மட்டுமே மனிதன். இந்த விவேக புத்தியானது இல்லாவிடில் அவன் அழிந்தவனாகின்றான்.
अतः तस्यान्तःकरणस्य बुद्धेर्नाशात् प्रणश्यति पुरुषार्थायोग्यो भवतीत्यर्थः ॥ ६३ ॥
ஆகையால் அவனுடைய அந்தக்கரண புத்திநாசத்தினால் புருஷார்த்தத்தில் யோக்கியதை அற்றுப் போகிறான்.
सर्वानर्थस्य मूलमुक्तं विषयाभिध्यानम् । अथ इदानीं मोक्षकारणमिदमुच्यते —
எல்லா அனர்த்தத்திற்கும் காரணம் விஷய சிந்தனையே. பின் இப்பொழுது மோக்ஷத்தின் காரணத்தை கூறுகிறார்.
रागद्वेषवियुक्तैस्तु विषयानिन्द्रियैश्चरन् ।
आत्मवश्यैर्विधेयात्मा प्रसादमधिगच्छति ॥ ६४ ॥
ராகத்வேஷவியுக்தைஸ்து விஷயானிந்த்ரியைச்சரன் ।
ஆத்மவச்யைர்விதேயாத்மா ப்ரஸாதமதிகச்சதி ॥ 64 ॥
रागद्वेषवियुक्तैः रागश्च द्वेषश्च रागद्वेषौ, तत्पुरःसरा हि इन्द्रियाणां प्रवृत्तिः स्वाभाविकी, तत्र यो मुमुक्षुः भवति सः ताभ्यां वियुक्तैः श्रोत्रादिभिः इन्द्रियैः विषयान् अवर्जनीयान् चरन् उपलभमानः आत्मवश्यैः आत्मनः वश्यानि वशीभूतानि इन्द्रियाणि तैः आत्मवश्यैः विधेयात्मा इच्छातः विधेयः आत्मा अन्तःकरणं यस्य सः अयं प्रसादम् अधिगच्छति । प्रसादः प्रसन्नता स्वास्थ्यम् ॥ ६४ ॥
ராகத்தையும், துவேஷத்தையும் ராகதுவேஷம் என்கிறோம். ராகதுவேஷத்தை முன்னிட்டுத்தான் ஸ்வபாவமாக இந்திரியங்களின் பிரவிர்த்தி ஏற்படுகிறது. ஆனால் முமூக்ஷுவானவன் அந்தக் கரணத்தை ஸ்வாதீனப்படுத்தி அந்தகரணத்தின் விருப்பத்திற்குத் தகுந்தவாறு வசப்படுத்துகிறானோ அவனுக்கு ராகதுவேஷம் அற்று தன்னுடைய வசப்பட்ட சுரோத்திரம் முதலிய இந்திரியங்களால் தானாகவே வரும் விஷயங்களை கிரஹித்து அதைப் பிரஸாதமாக அடைகிறான். பிரசன்ன தன்மையும், (தெளிவு பெற்றதன்மையும்) தன்னிலையிலேயே நிலைபெற்றதன்மையும் பிரசாதமாகும்.
प्रसादे सति किं स्यात् इत्युच्यते —
பிரசாதத்தன்மை அடைந்ததால் என்ன உண்டாகும்? என்று கூறப்படுகிறது.
प्रसादे सर्वदुःखानां हानिरस्योपजायते ।
प्रसन्नचेतसो ह्याशु बुद्धिः पर्यवतिष्ठते ॥ ६५ ॥
ப்ரஸாதே ஸர்வது:கானாம் ஹானிரஸ்யோபஜாயதே ।
ப்ரஸந்நசேதஸோ ஹ்யாசு புத்தி: பர்யவதிஷ்டதே ॥ 65 ॥
प्रसादे सर्वदुःखानाम् आध्यात्मिकादीनां हानिः विनाशः अस्य यतेः उपजायते ।
யதிக்கு பிரசாதத்தினால் ஆத்யாத்மிக முதலிய துக்கங்கள் நாசம் அடைகின்றன.
किञ्च — प्रसन्नचेतसः स्वस्थान्तःकरणस्य हि यस्मात् आशु शीघ्रं बुद्धिः पर्यवतिष्ठते आकाशमिव परि समन्तात् अवतिष्ठते, आत्मस्वरूपेणैव निश्चलीभवतीत्यर्थः ॥
பிரசன்ன சேதச:) என்றால் தெளிவடைந்த அந்தக்கரணமுடைய புருஷனுடைய புத்தியானது சீக்கிரமாகவே ஆகாயம்போல் எங்கும் நிலைபெற்றிருக்கின்றது. கேவலம் ஆத்மஸ்வரூபமாகவே நிச்சலமாக (சலனமற்று) இருக்கிறது என்று பொருள்.
एवं प्रसन्नचेतसः अवस्थितबुद्धेः कृतकृत्यता यतः, तस्मात् रागद्वेषवियुक्तैः इन्द्रियैः शास्त्राविरुद्धेषु अवर्जनीयेषु युक्तः समाचरेत् इति वाक्यार्थः ॥ ६५ ॥
இவ்வாறு தெளிவும், ஸ்திர புத்தியும் உள்ளவனுக்கு கிருதகிருத் தியத் தன்மை உண்டாகிறது. ஆகையால் ஸாதகன் ராகதுவேஷம் அற்று இந்திரியங்களால் சாஸ்திரத்திற்கு விருத்தமாகாத தவிர்க்க முடியாத விஷயங்களை (கைக்கொள்ளவேண்டும்) அனுஸரிக்கவேண்டும்.
सेयं प्रसन्नता स्तूयते —
இப்பேற்பட்ட பிரஸன்ன தன்மை அதாவது மனத்தெளிவு போற்றப்படுகிறது.
नास्ति बुद्धिरयुक्तस्य न चायुक्तस्य भावना ।
न चाभावयतः शान्तिरशान्तस्य कुतः सुखम् ॥ ६६ ॥
நாஸ்தி புத்திரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவனா ।
ந சாபாவயத: சாந்திரசாந்தஸ்ய குத: ஸுகம் ॥ 66 ॥
नास्ति न विद्यते न भवतीत्यर्थः, बुद्धिः आत्मस्वरूपविषया अयुक्तस्य असमाहितान्तःकरणस्य । न च अस्ति अयुक्तस्य भावना आत्मज्ञानाभिनिवेशः ।
(அயுக்தஸ்ய) என்றால் எவனுக்கு அந்தக்கரணமானது அமைதி அடையவில்லையோ அப்படிப்பட்ட அயுக்தபுருஷனுக்கு அதாவது ஆத்மாவை அறியவேண்டும் என்ற அபினிவேசமும் (अयुक्तस्य ஆவேசமும்) உண்டாகாது.
तथा — न च अस्ति अभावयतः आत्मज्ञानाभिनिवेशमकुर्वतः शान्तिः उपशमः ।
அவ்வாறு பாவனை செய்யாதவன் என்றால் ஆத்மஞானத்திற்கான ஸாதனையில் பிரீதியுடன் கூடிய முயற்சியானது இல்லாவிடில் சாந்தி ஏற் படுவதில்லை. அதாவது உபரமமும் (ஒழிவும்) உண்டாவதில்லை.
अशान्तस्य कुतः सुखम् ? इन्द्रियाणां हि विषयसेवातृष्णातः निवृत्तिर्या तत्सुखम् , न विषयविषया तृष्णा । दुःखमेव हि सा ।
சாந்தி அற்றவனுக்கு ஸுகம் ஏது? ஏனெனில் விஷயத்திலேயே ஈடுபடுவதில் மிகுந்த ஆசையிலிருந்து இந்திரியங்களுக்கு நிவிர்த்தி ஏற்படுவதே ஸுகம். விஷயத்துடன் கூடிய ஆசையானது ஒருபொழுதும் ஸுகத்தை தராது, அது எப்பொழுதும் துக்கமே.
न तृष्णायां सत्यां सुखस्य गन्धमात्रमप्युपपद्यते इत्यर्थः ॥ ६६ ॥
பேராசை இருக்கும்பொழுது வாசனைக்கு கூட(சிறிதளவு கூட) ஸுகமானது உண்டாகாது என்பது பொருள்.
अयुक्तस्य कस्माद्बुद्धिर्नास्ति इत्युच्यते —
அமைதியும் அடக்கமும் இல்லாதவனுக்கு ஏன் ஞானம் உண்டா வதில்லை எனில் கூறப்படுகிறது.
इन्द्रियाणां हि चरतां यन्मनोऽनुविधीयते ।
तदस्य हरति प्रज्ञां वायुर्नावमिवाम्भसि ॥ ६७ ॥
இந்த்ரியாணாம் ஹி சரதாம் யன்மனோஅனு விதீயதே ।
ததஸ்ய ஹரதி ப்ரக்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி ॥ 67 ॥
इन्द्रियाणां हि यस्मात् चरतां स्वस्वविषयेषु प्रवर्तमानानां यत् मनः अनुविधीयते अनुप्रवर्तते तत् इन्द्रियविषयविकल्पनेन प्रवृत्तं मनः अस्य यतेः हरति प्रज्ञाम् आत्मानात्मविवेकजां नाशयति ।
ஏனெனில் தன்தன் விஷயங்களில் பிரவிர்த்திக்கின்ற இந்திரி யங்களை மனமானது பின்தொடர்ந்து செல்லுகின்றது. அந்த விஷயங்களை விபாகபூர்வகமாக கிரஹிக்கின்றமனமானது அந்த யதியினுடைய ஆத்மானாத்ம விவேகத்தால் உண்டான ஞானத்தை (பிரக்ஞையை) நாசம் செய்கிறது.
कथम् ? वायुः नावमिव अम्भसि उदके जिगमिषतां मार्गादुद्धृत्य उन्मार्गे यथा वायुः नावं प्रवर्तयति, एवमात्मविषयां प्रज्ञां हृत्वा मनो विषयविषयां करोति ॥ ६७ ॥
எவ்வாறெனில், காற்றானது தண்ணீரில் செல்லும் படகை சென்று அடையவேண்டிய மார்க்கத்திலிருந்து எதிர்மார்க்கத்தில் செலுத்துகிறதோ அவ்வாறு ஆத்மவிஷயத்தில் உள்ள பிரக்ஞையை நாசம் செய்து மனமானது விஷயங்களைக் கவரும்படி செய்கிறது.
‘यततो हि’ (भ. गी. २ । ६०) इत्युपन्यस्तस्यार्थस्य अनेकधा उपपत्तिमुक्त्वा तं चार्थमुपपाद्य उपसंहरति —
60வது ச்லோகம் யததோஹ்யபி ஆரம்பித்து சொல்லிய (இந்திரியங்களின் வலிமை) விஷயத்தில் அநேகவிதமான பொருத்தத்தைக் கூறி விளக்கி, அதனை நிரூபித்து இப்பொழுது முடிவு செய்கிறார்.
तस्माद्यस्य महाबाहो निगृहीतानि सर्वशः ।
इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता ॥ ६८ ॥
தஸ்மாத்யஸ்ய மஹாபாஹோ நிக்ருஹீதானி ஸர்வச: ।
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா ॥ 68 ॥
इन्द्रियाणां प्रवृत्तौ दोष उपपादितो यस्मात् , तस्मात् यस्य यतेः हे महाबाहो, निगृहीतानि सर्वशः सर्वप्रकारैः मानसादिभेदैः इन्द्रियाणि इन्द्रियार्थेभ्यः शब्दादिभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिता ॥ ६८ ॥
இந்திரியங்களின் பிரவிர்த்தியினால் தோஷமானது உணர்த்தப் பட்டதோ, அதனால் ஹே! மஹாபாஹோ! எந்த யதியினுடைய (சாதகனுடைய) இந்திரியங்கள் தம், தம் சப்தாதி விஷயங்களிலிருந்து எல்லாவிதமாயும் மானஸம், வாசிகம், காயிகம் ஆகிய மூன்றையும் அடக்கினவனுக்கு (நிக்ரஹம்) வசம் செய்தவனுக்கு புத்தி நன்றாக ஸ்திரப்படுகிறது.
योऽयं लौकिको वैदिकश्च व्यवहारः स उत्पन्नविवेकज्ञानस्य स्थितप्रज्ञस्य अविद्याकार्यत्वात् अविद्यानिवृत्तौ निवर्तते, अविद्यायाश्च विद्याविरोधात् निवृत्तिः, इत्येतमर्थं स्फुटीकुर्वन् आह —
எந்த இந்த லௌகிக வைதிக வியவகாரங்கள் உண்டோ அவை அவித்யையால் ஏற்பட்டவையானதால் விவேகஞானம் உண்டான ஸ்திதபிரக்ஞனுக்கு அவித்யா நிவிர்த்தி (நீக்கம்) ஏற்படும் பொழுது (வியவகாரங்களும்) நிவர்த்தி ஆகின்றன. (நீங்கி விடுகிறது) அக்ஞானம் ஞானத்தின் விரோதத்தினால் நீங்குகிறது என்ற இவ்விஷயத்தை ஸ்பஷ்டமாக (பகவான்) அருளிச் செய்கிறார்.
या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी ।
यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुनेः ॥ ६९ ॥
யா நிசா ஸர்வபூதானாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமி ।
யஸ்யாம்ஜாக்ரதி பூதானி ஸா நிசாபச்யதோ முனே: ॥ 69 ॥
या निशा रात्रिः सर्वपदार्थानामविवेककरी तमःस्वभावत्वात् सर्वभूतानां सर्वेषां भूतानाम् ।
தாமச ஸ்வபாவத்தினால் எல்லா பதார்த்தங்களையும் விவேக மற்றவைகளாய் செய்யும் ராத்திரி (இரவு) எனப்படும் நிஷா எல்லா பூதங்களுக்கும் (நிஷா என்ற) இரவாகும்.
किं तत् परमार्थतत्त्वं स्थितप्रज्ञस्य विषयः । यथा नक्तञ्चराणाम् अहरेव सदन्येषां निशा भवति, तद्वत् नक्तञ्चरस्थानीयानामज्ञानां सर्वभूतानां निशेव निशा परमार्थतत्त्वम् , अगोचरत्वादतद्बुद्धीनाम् ।
அது எது எனில் ஸ்திதப்ரக்ஞனுடைய விஷயமான பரமார்த்த தத்துவமாகும். எவ்வாறு இரவில் ஸஞ்சரிக்கும் (ஆந்தை முதலிய வைகளுக்கு) பகலே இரவாகுமோ அவ்வாறே இரவில் சஞ்சரிப்பவைக ளுக்கு ஒப்பானவர்கள் எல்லா அக்ஞான புருஷர்களும். அவர்க ளுக்கு பரமார்த்த தத்துவ விஷயத்தை புத்தியானது அறியா ததினாலே எல்லா பிராணிகளும் அக்ஞானம் ஏற்படுவதினால் அந்த பரமார்த்த தத்துவமானது அவர்களுக்கு இரவு போல் இருக்கிறது.
तस्यां परमार्थतत्त्वलक्षणायामज्ञाननिद्रायाः प्रबुद्धो जागर्ति संयमी संयमवान् , जितेन्द्रियो योगीत्यर्थः ।
அந்த பரமார்த்த தத்துவரூபமான இரவாகிய அக்ஞான நித்தி ரையிலிருந்து விழிப்படைந்தவன் (ஸம்யமி) அதாவது ஜிதேந்திரியன் (இந்திரியங்களை ஜெயித்தவன்) யோகி எனப்படுவான் என்பது பொருள்.
यस्यां ग्राह्यग्राहकभेदलक्षणायामविद्यानिशायां प्रसुप्तान्येव भूतानि जाग्रति इति उच्यन्ते, यस्यां निशायां प्रसुप्ता इव स्वप्नदृशः, सा निशा अविद्यारूपत्वात् परमार्थतत्त्वं पश्यतो मुनेः ॥
எந்த ग्राह्यग्राहकभेदलक्षणायाम् (க்ராஹ்ய கிராஹகபேத லக்ஷணா யாம்) உணர்வதும், உணரப்படுவதுமான பேதமாகிய அவித்தியா என்றஇரவில் உறங்குகின்றபிராணிகள் விழித்திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. எந்த இரவில் தூங்கினவைபோல் ஸொப்னம் காண்கின்றனவோ அவை அக்ஞானமாதலால், பரமார்த்த தத்து வத்தை அறிந்த ஞானிக்கு அது இரவாகும்.
अतः कर्माणि अविद्यावस्थायामेव चोद्यन्ते, न विद्यावस्थायाम् । विद्यायां हि सत्याम् उदिते सवितरि शार्वरमिव तमः प्रणाशमुपगच्छति अविद्या ।
ஆகையால் கர்மங்கள் அவித்தியா அவஸ்தையில்தான் விதிக்கப்படுகின்றன. வித்தியா அவஸ்தையில் (ஞான காலத்தில்) அல்ல. சூரியன் உதித்தபொழுது இரவின் இருளானது எவ்வாறு நீங்கு கிறதோ அவ்வாறு ஞானம் உண்டான உடன் அக்ஞானம் முழுவதும் நாசமாகிறது.
प्राक् विद्योत्पत्तेः अविद्या प्रमाणबुद्ध्या गृह्यमाणा क्रियाकारकफलभेदरूपा सती सर्वकर्महेतुत्वं प्रतिपद्यते । न अप्रमाणबुद्ध्या गृह्यमाणायाः कर्महेतुत्वोपपत्तिः ।
ஞான உற்பத்திக்கு முன் பிரமாண புத்தியினால் கிரஹிக்கப்பட்ட அக்ஞானமானது செய்கை, செய்பவன், பலம் முதலிய பேதரூபத்தை அடைந்து எல்லாக் கர்மங்களுக்கும் காரணத் தன்மையை அடைகின்றது. ப்ரமாணமல்ல என்ற புத்தியினால் கிரஹிக்கப்பட்ட (அறிவிற்கு) கர்மாவின் காரணமாகும் தன்மை கிடையாது.
‘प्रमाणभूतेन वेदेन मम चोदितं कर्तव्यं कर्म’ इति हि कर्मणि कर्ता प्रवर्तते, न ‘अविद्यामात्रमिदं सर्वं निशेव’ इति ।
பிரமாணமாக உள்ள வேதத்தில் எனக்கு விதிக்கப்பட்டது கர்மமா னது என்னால் செய்யப்படவேண்டும் என்று எண்ணியல்லவோ கர்த்தாவானவன் கர்மத்தில் பிரவிர்த்திக்கின்றான். ஆனால் இவை எல்லாம் அவித்யைதான். இரவைப் போல என்று நினைத்தவனுக்கு கர்மா எப்படி வரும்?
यस्य पुनः ‘निशेव अविद्यामात्रमिदं सर्वं भेदजातम्’ इति ज्ञानं तस्य आत्मज्ञस्य सर्वकर्मसंन्यासे एव अधिकारो न प्रवृत्तौ ।
எனவே எவனுக்கு இந்த எல்லா பேத கூட்டங்களும் இரவு போல் (அக்ஞானமே) அவித்யா மாத்திரமாய் தோன்றுகிறஞானம் உண்டாகிறதோ (அவனுக்கு) அந்த ஆத்ம ஞானிக்கு எல்லா கர்மங்க ளையும் தியாகம் (ஸந்நியாசம்) செய்வதிலேயே அதிகாரமே அன்றி பிரவிர்த்தியிலில்லை.
तथा च दर्शयिष्यति —
அவ்வாறேகாண்பிக்கப் போகிறார் -
‘तद्बुद्धयस्तदात्मानः’ (भ. गी. ५ । १७) इत्यादिना ज्ञाननिष्ठायामेव तस्य अधिकारम् ॥
அதிலே (பிரஹ்மத்திலே) புத்தியை உடையவராய் என்ற முதலிய சுலோகங்களால் அவனுக்கு ஞான நிஷ்ட்டையில் தான் அதிகாரம் என்பதைக் காட்டுகிறார்.
तत्रापि प्रवर्तकप्रमाणाभावे प्रवृत्त्यनुपपत्तिः इति चेत् ।
அந்த ஞான நிஷ்ட்டையில் (தத்துவ வேத்தாவிற்கு) பிரவிர்த்தி இல்லாதபோது அந்த ஞான நிஷ்ட்டையிலும் பிரவிர்த்தி மேற்கொள்ள முடியாது என்றால்
न ; स्वात्मविषयत्वादात्मविज्ञानस्य । न हि आत्मनः स्वात्मनि प्रवर्तकप्रमाणापेक्षता, आत्मत्वादेव । तदन्तत्वाच्च सर्वप्रमाणानां प्रमाणत्वस्य । न हि आत्मस्वरूपाधिगमे सति पुनः प्रमाणप्रमेयव्यवहारः सम्भवति ।
அவ்வாறு அல்ல, ஏனெனில் ஆத்மஞானமானது தன் விஷயமாக ஸ்வாத்ம (சொந்த) விஷயமாய் இருப்பதால். தன்னுடைய ஸ்வஸ்வரூப விஷயத்தில் பிரவிர்த்தி செய்வதற்கு பிரமாணத்தின் அபேக்ஷை வேண்டியதில்லை அல்லவா. (விதிக்கப்படுவதில்லை). அந்த ஆத்மஞானம் தானே ஆத்மாவாக இருப்பதால் ஸ்வதஸ்ஸித் தமாய் இருக்கிறது. மேலும் அதில் எல்லா பிரமாணங்களுடைய பிரமாணத்துத்வத்திற்கு முடிவானது ஏற்படுகிறது. ஆத்மஞானம் ஏற் படும்வரை பிரமாணங்களுக்கு பிரமாணத்துவம் இருக்கிறது. ஆகையால் ஆத்ம ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரித்தபொழுது மீண்டும் பிரமாண, பிரமேய வியவஹாரமானது ஏற்படவே முடியாது.
प्रमातृत्वं हि आत्मनः निवर्तयति अन्त्यं प्रमाणम् ; निवर्तयदेव च अप्रमाणीभवति, स्वप्नकालप्रमाणमिव प्रबोधे ।
(ஆத்மஞானரூப) அந்திமப் பிரமாணமான ஞானம் ஆத்மா விற்கு பிரமாதாவாக இருக்கும் தன்மையையே நீக்குகிறது. (ஆத்ம ஞான ரூப அந்திமப் பிரமாணமானது) (பிரமாதா தன்மையை) நீக்கி ஞானம் (பிரபோதம்) ஏற்பட்டவுடன் ஸ்வப்னகால ப்ரமாணம் போல அப்ரமாணமாகிறது.
लोके च वस्त्वधिगमे प्रवृत्तिहेतुत्त्वादर्शनात् प्रमाणस्य ।
ப்ரமாணமானது எங்கேயுமே உலகில் ப்ரவிருத்தியைத் தூண்டுவதில்லை.
तस्मात् न आत्मविदः कर्मण्यधिकार इति सिद्धम् ॥ ६९ ॥
ஆகையால் ஆத்மாவை அறிந்தவர்களுக்கு கர்மத்தில் அதிகாரம் இல்லை என்று தீர்மானமாகிறது.
विदुषः त्यक्तैषणस्य स्थितप्रज्ञस्य यतेरेव मोक्षप्राप्तिः, न तु असंन्यासिनः कामकामिनः इत्येतमर्थं दृष्टान्तेन प्रतिपादयिष्यन् आह —
ஏ ஷணாத்ரயங்களை தியாகம் செய்த ஸ்திதப்பிரக் ஞனாயும், வித்வானாயும் உள்ள ஸந்நியாசிதான் மோக்ஷத்தை அடைவான். காமத்தை விரும்புகிறஸந்நியாசமற்றவன் அடையமாட்டான் என்றபொருளை திருஷ்டாந்த மூலமாக எடுத்துக் காட்டி கூறுகிறார்.-
आपूर्यमाणमचलप्रतिष्ठं समुद्रमापः प्रविशन्ति यद्वत् ।
तद्वत्कामा यं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न कामकामी ॥ ७० ॥
ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம் ஸமுத்ரமாப: ப்ரவிசந்தி யத்வத் ।
தத்வத்காமா யம் ப்ரவிசந்தி ஸர்வே ஸ சாந்திமாப்நோதி ந காமகாமீ ॥ 70 ॥
आपूर्यमाणम् अद्भिः अचलप्रतिष्ठम् अचलतया प्रतिष्ठा अवस्थितिः यस्य तम् अचलप्रतिष्ठं समुद्रम् आपः सर्वतो गताः प्रविशन्ति स्वात्मस्थमविक्रियमेव सन्तं यद्वत्
எவ்வாறு ஜலமானது பூரணமாக நிறைந்து சலனமற்று ஸ்திரமாக நிலைபெற்றிருக்கிறசமுத்திரத்தை எல்லா பக்கங்களிலிருந்தும் வருகின்ற ஜலமானது அடைகின்ற போதிலும் சமுத்திரமானது தன் நிலையிலிருந்து ஒருவிதத்தாலும் விகாரம் அடையாமல் எல்லையை (கரையை) தாண்டாமல் இருக்கிறதோ?
तद्वत् कामाः विषयसंनिधावपि सर्वतः इच्छाविशेषाः यं पुरुषम् — समुद्रमिव आपः — अविकुर्वन्तः प्रविशन्ति सर्वे आत्मन्येव प्रलीयन्ते न स्वात्मवशं कुर्वन्ति ।
அவ்வாறு விஷய ஸம்பந்தமுள்ள காமனைகளும் உண்டானா லும் எந்த புருஷன் அந்த எல்லா இச்சா விஷேசங்களை எவ்வாறு சமுத்திரத்தை ஜலமடைகிறதோ அவ்வாறு ஆத்மாவினிடத்தில் லீனம் செய்கின்றான். அவைகள் இவனை தன் வசப்படுத்தமுடியாது.
सः शान्तिं मोक्षम् आप्नोति, न इतरः कामकामी, काम्यन्त इति कामाः विषयाः तान् कामयितुं शीलं यस्य सः कामकामी, नैव प्राप्नोति इत्यर्थः ॥ ७० ॥
அவன் மோக்ஷத்தை அடைகிறான். விஷயங்களை விரும்புவ தில் ஸாமர்த்தியமுடைய காமகாமி மோக்ஷத்தை அடையமாட்டான்.
यस्मादेवं तस्मात्—
ஏனெனின் இவ்வாறு இருப்பதால்
विहाय कामान्यः सर्वान्पुमांश्चरति निःस्पृहः ।
निर्ममो निरहङ्कारः स शान्तिमधिगच्छति ॥ ७१ ॥
விஹாய காமான்ய: ஸர்வான்புமாம்ச்சரதி நி:ஸ்ப்ருஹ: ।
நிர்மமோ நிரஹங்கார: ஸ சாந்திமதிகச்சதி ॥ 71 ॥
विहाय परित्यज्य कामान् यः संन्यासी पुमान् सर्वान् अशेषतः कार्‌त्स्न्येन चरति, जीवनमात्रचेष्टाशेषः पर्यटतीत्यर्थः ।
எல்லாக் காமனைகளையும் மிச்சமில்லாமல் எல்லா போகங்க ளையும் தியாகம் செய்து ஜீவிப்பதற்கு மட்டும் வேண்டிய செயல் களை மிச்சம் வைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறான் என்பது பொருள்.
निःस्पृहः शरीरजीवनमात्रेऽपि निर्गता स्पृहा यस्य सः निःस्पृहः सन् ।
அவ்வாறேஎவன் பற்றற்றவன் எனப்படுகிறானோ அவன் சரீர ஜீவனத்தின் பொருட்டும் பற்று இல்லாது இருப்பான்.
निर्ममः शरीरजीवनमात्राक्षिप्तपरिग्रहेऽपि ममेदम् इत्यपभिनिवेशवर्जितः ।
நிர்மம என்றால் சரீர ஜீவனத்திற்கு மிக அவசியமான பதார்த்தங்களில் என்னுடையது இது என்றும் அபிநிவேசம் அற்று இருப்பவன்
निरहङ्कारः विद्यावत्त्वादिनिमित्तात्मसम्भावनारहितः इत्येतत् ।
நிரஹங்காரம் என்றால் வித்யா(கல்வியுடமை)வத் ஸம்பந்தத்தினால் ஏற்படும் ஆத்மாபிமானம் அற்றிருப்பவன்.
सः एवंभूतः स्थितप्रज्ञः ब्रह्मवित् शान्तिं सर्वसंसारदुःखोपरमलक्षणां निर्वाणाख्याम् अधिगच्छति प्राप्नोति ब्रह्मभूतो भवति इत्यर्थः ॥ ७१ ॥
இவ்வாறு இருக்கின்றஸ்திதப்ரக்ஞனுடைய பிரஹ்ம வித்தான ஞானி ஸம்ஸாரத்தில் உள்ள எல்லா துக்க நிவிர்த்தி ரூபமான மோக்ஷம் எனப்படும் பரம சாந்தியை அடைகின்றான் என்றால் பிரஹ்மமாகவே ஆகின்றான் என்பது பொருள்.
सैषा ज्ञाननिष्ठा स्तूयते —
அந்த இந்த ஞான நிஷ்ட்டையானது போற்றப்படுகிறது (துதிக்கப்படுகிறது).
एषा ब्राह्मी स्थितिः पार्थ नैनां प्राप्य विमुह्यति ।
स्थित्वास्यामन्तकालेऽपि ब्रह्मनिर्वाणमृच्छति ॥ ७२ ॥
ஏ ஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த்தநைநாம் ப்ராப்ய விமுஹ்யதி ।
ஸ்தித்வாஸ்யாமந்தகாலேஅபி ப்ரஹ்மநிர்வாணம்ருச்சதி ॥ 72 ॥
एषा यथोक्ता ब्राह्मी ब्रह्मणि भवा इयं स्थितिः सर्वं कर्म संन्यस्य ब्रह्मरूपेणैव अवस्थानम् इत्येतत् ।
அந்த முன் கூறப்பட்ட பிராஹ்மீ என்றஇந்த பிரஹ்ம பாவ ஸ்திதி யானது எல்லா கர்மங்களையும் துறந்து பிரஹ்மரூபமாக நிலைபெறு தல் தான்.
हे पार्थ, न एनां स्थितिं प्राप्य लब्ध्वा न विमुह्यति न मोहं प्राप्नोति ।
ஹே பார்த்த! இந்த ஸ்திதியை அடைந்தவன் மோஹத்தை அடையமாட்டான்.
स्थित्वा अस्यां स्थितौ ब्राह्म्यां यथोक्तायां अन्तकालेऽपि अन्त्ये वयस्यपि ब्रह्मनिर्वाणं ब्रह्मनिर्वृतिं मोक्षम् ऋच्छति गच्छति । किमु वक्तव्यं ब्रह्मचर्यादेव संन्यस्य यावज्जीवं यो ब्रह्मण्येव अवतिष्ठते स ब्रह्मनिर्वाणमृच्छति इति ॥ ७२ ॥
கடைசி காலத்தில் கடைசி வயதில் மேலே கூறப்பட்ட ப்ராஹ்மீ ஸ்திதியில் நிலைபெற்றமனிதன் கூட பிரஹ்மத்தில் லீனமாதலாகிய மோக்ஷத்தை அடைகிறான். என்றால் எவன் பிரஹ்மச்சர்ய ஆச்ரமத் திலிருந்தே ஸந்நியாஸ ஆச்ரமத்தை ஏற்றுக்கொண்டு ஜீவனம் முழுவ தும் பிரஹ்மத்திலேயே நிலைபெற்றிருக்கின்றானோ அவன் அந்த பிரஹ்ம்ம நிர்வாணத்தை அடைகின்றான். என்று கூறுவதற்கு என்ன உள்ளது.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमत्भगवद्गीताभाष्ये द्वितीयोऽध्यायः ॥
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே ஸாங்க்ய யோகோ நாம த்விதீயோஅத்யாய:
शास्त्रस्य प्रवृत्तिनिवृत्तिविषयभूते द्वे बुद्धी भगवता निर्दिष्टे, साङ्‍ख्ये बुद्धिः योगे बुद्धिः इति च ।
பகவானால் பிரவிர்த்தி நிவிர்த்தி விஷயத்துடன் கூடிய இரண்டு புத்திகள் உபதேசிக்கப்பட்டது. அவை சாங்கிய புத்தி என்றும் யோகபுத்தி என்றும்
तत्र ‘प्रजहाति यदा कामान्’ (भ. गी. २ । ५५) इत्यारभ्य आ अध्यायपरिसमाप्तेः साङ्‍ख्यबुद्ध्याश्रितानां संन्यासं कर्तव्यमुक्त्वा तेषां तन्निष्ठतयैव च कृतार्थता उक्ता — ‘एषा ब्राह्मी स्थितिः’ (भ. गी. २ । ७२) इति ।
அங்கு ‘प्रजहाति यदा कामान्’ (ப்ரஜஹாதி யதா காமான்) என்று ஆரம்பித்து அத்தியாயம் முடியும் வரையிலும் சாங்கிய புத்தியை ஆச்ரயித்தவர்களுக்கு சந்நியாசம் அவசியம் செய்யவேண்டும் என்று एषा ब्राह्मी स्थितिः (ஏ ஷா ப்ராஹ்மீ ஸ்திதி:) என்று கிருதார்த்த தன்மை கூறப்பட்டுள்ளது.
अर्जुनाय च ‘कर्मण्येवाधिकारस्ते . . . मा ते सङ्गोऽस्त्वकर्मणि’ (भ. गी. २ । ४७) इति कर्मैव कर्तव्यमुक्तवान् योगबुद्धिमाश्रित्य, न तत एव श्रेयःप्राप्तिम् उक्तवान् ।
அர்ச்சுனனுக்கு பகவான், கர்மத்திலே தான் உனக்கு அதிகாரம், கர்மத்தை செய்யாமையின் உனக்கு ப்ரியம் இருக்கக்கூடாது என் று (கர்ம) யோகபுத்தியை ஆச்ரயித்து கர்மம் தான் செய்யவேண்டும் என்று கூறினாரே அன்றி அதனாலேயே சிரேயஸ் (மோக்ஷம்) மானது கிடைக்கும் என்று கூறவில்லை.
तदेतदालक्ष्य पर्याकुलीकृतबुद्धिः अर्जुनः उवाच ।
அதையும்( முக்திக்கு சாக்ஷாத்சாதனமான ஞான நிஷ்ட்டை யையும்) இதையும் (அதற்கு விரோதமான கர்ம நிஷ்ட்டையை பற்றி) தனக்குக் கூறியதைக் கொண்டு குழம்பிய புத்தியுடைய வனாய் அர்ச்சுனன் கூறலானான்.
कथं भक्ताय श्रेयोर्थिने यत् साक्षात् श्रेयःप्राप्तिसाधनं साङ्‍ख्यबुद्धिनिष्ठां श्रावयित्वा मां कर्मणि दृष्टानेकानर्थयुक्ते पारम्पर्येणापि अनैकान्तिकश्रेयःप्राप्तिफले नियुञ्ज्यात् इति युक्तः पर्याकुलीभावः अर्जुनस्य ।
ச்ரேயஸ்ஸை விரும்புகிறவனாகிய பக்தனாகிய என் பொருட்டு நேர் ச்ரேயஸ் சாதனமான பிரஹ்மநிஷ்டையை உபதேசித்து விட்டு எவ்வாறு, என்னை, அநேக தீங்குகளோடு கூடியனவும், பரம்பரையாக வாவது மோக்ஷமொன்றைஅடையக் கூடிய பலம் என்று நிச்சய மில்லாத இந்த கர்மத்தில் பகவான் ஈடுபடுத்துவார்?. என்று அர்ஜுனனின் குழப்பம் பொருத்தமே.
तदनुरूपश्च प्रश्नः ‘ज्यायसी चेत्’ (भ. गी. ३ । १) इत्यादिः ।
அந்த வியாகுலத்தின் அடிப்படையில்தான் இந்த (ஜ்யாயஸீ சேத்) முதலிய கேள்விகள் கேட்கப்படுகிறது.
प्रश्नापाकरणवाक्यं च भगवतः युक्तं यथोक्तविभागविषये शास्त्रे ॥
இந்த கேள்வியை நிவிர்த்தி (நீக்க) செய்ய வேண்டிய வாக்கியங் கள் முன்பு கூறப்பட்ட விபாக விஷயமான சாஸ்திரத்தில் பகவானால் கூறப்பட்டுள்ளது.
केचित्तु — अर्जुनस्य प्रश्नार्थमन्यथा कल्पयित्वा तत्प्रतिकूलं भगवतः प्रतिवचनं वर्णयन्ति, यथा च आत्मना सम्बन्धग्रन्थे गीतार्थो निरूपितः तत्प्रतिकूलं च इह पुनः प्रश्नप्रतिवचनयोः अर्थं निरूपयन्ति ।
சிலர் அர்ச்சுனனுடைய கேள்வியின் அர்த்தத்தை வேறுவிதமாக கல்பனை செய்துகொண்டு அதற்கு விபரீதமாக கற்பித்துக் கூறுகிறார் கள். எவ்வாறு தன்னால் சம்பந்த கிரந்தத்தில் (பாஷ்யத்தின் முடிவுரை யில்) கீதார்த்தமானது நிரூபிக்கப்பட்டுள்ளதோ அதற்கு விபரீதமாக இங்கு மறுபடியும் கேள்வியையும் அதற்கான பதிலையும் விபரீத அர்த்தத்துடன் நிரூபிக்கின்றார்கள்.
कथम् ? तत्र सम्बन्धग्रन्थे तावत् — सर्वेषामाश्रमिणां ज्ञानकर्मणोः समुच्चयः गीताशास्त्रे निरूपितः अर्थः इत्युक्तम् ; पुनः विशेषितं च यावज्जीवश्रुतिचोदितानि कर्माणि परित्यज्य केवलादेव ज्ञानात् मोक्षः प्राप्यते इत्येतत् एकान्तेनैव प्रतिषिद्धमिति ।
எவ்வாறு எனில், அங்கு சம்பந்த கிரந்தத்தில் (முகவுரையில்) எல்லா ஆச்ரமத்தாருக்கும் ஞானகர்ம சமுச்சயம்தான் விதிக்கப்பட் டுள்ளது என்று கீதா சாஸ்திரத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விசேஷமாக ஜீவித காலம் முழுவதும் செய் யவேண்டிய சுருதியில் விதிக்கப்பட்ட கர்மங்களை விட்டு கேவலம் ஞானத்தினால் மட்டுமே மோக்ஷத்தின் அடைவு என்பது கீதா சாஸ்திரத்தில் நிச்சயமாக மறுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.
इह तु आश्रमविकल्पं दर्शयता यावज्जीवश्रुतिचोदितानामेव कर्मणां परित्याग उक्तः ।
இங்கு மூன்றாவது அத்தியாயத்தில் ஆச்ரம வேறுபாட்டை (ஞானம், கர்மம் இரண்டில் ஒன்றிற்கே ஒருவன் அதிகாரியாக முடியும் என்பதை) உணர்த்தவே (யாவத்ஜீவ) என்றல் முதலிய சுருதி விகித கர்மாவை எல்லாம் தியாகம் செய்ய கூறப்பட்டுள்ளது.
तत् कथम् ईदृशं विरुद्धमर्थम् अर्जुनाय ब्रूयात् भगवान् , श्रोता वा कथं विरुद्धमर्थमवधारयेत् ॥
இதில் இந்த சங்கை ஏற்படுகிறது. இந்த பிரகாரமாக விருத்த அர்த்தத்துடன் கூடிய வசனத்தை பகவான் அர்ச்சுனனிடம் எவ்வாறு கூறினார்? கேட்பவனான அர்ச்சுனன் எவ்வாறு விருத்தமான அர்த்தத்தை கிரஹித்துக்கொண்டான்?
तत्रैतत् स्यात् — गृहस्थानामेव श्रौतकर्मपरित्यागेन केवलादेव ज्ञानात् मोक्षः प्रतिषिध्यते, न तु आश्रमान्तराणामिति ।
அங்கு (முகவுரையில்) இவ்வாறு அர்த்தம் இருந்ததால் இல்லறத் தில் உள்ளவர்களுக்கே ஸ்ரௌத கர்ம தியாக பூர்வமான கேவல ஞானத்தினால் மோக்ஷத்தின் அடைவானது மறுக்கப்பட்டுள்ளது. மற்ற ஆச்ரமத்தாருக்கு அன்று எனில்.
एतदपि पूर्वोत्तरविरुद्धमेव । कथम् ? सर्वाश्रमिणां ज्ञानकर्मणोः समुच्चयो गीताशास्त्रे निश्चितः अर्थः इति प्रतिज्ञाय इह कथं तद्विरुद्धं केवलादेव ज्ञानात् मोक्षं ब्रूयात् आश्रमान्तराणाम् ॥
என்றஇதுவும் முன்னுக்குப் பின் முரணானது. ஏனெனில் எல்லா ஆச்ரமத்தாருக்கும் ஞானகர்ம சமுச்சயமே கீதாசாஸ்திரத்தின் நிச்சயம் செய்யப்பட்ட அபிப்பிராயம் (அர்த்தம்) என்று பிரதிக்ஞை செய்து அதற்கு மாறாக இங்கு மற்ற ஆச்ரமத்தாருக்கே கேவலம் ஞானத்தினால்தான் மோக்ஷம் என்று எவ்வாறு கூறுவது?
अथ मतं श्रौतकर्मापेक्षया एतद्वचनम् ‘केवलादेव ज्ञानात् श्रौतकर्मरहितात् गृहस्थानां मोक्षः प्रतिषिध्यते’ इति ; तत्र गृहस्थानां विद्यमानमपि स्मार्तं कर्म अविद्यमानवत् उपेक्ष्य ‘ज्ञानादेव केवलात्’ इत्युच्यते इति ।
இது கருத்தானால் ச்ரௌத கர்ம சேர்க்கையற்றகேவலம் ஞானத்தினாலேயே க்ருஹஸ்தர்களுக்கு மோக்ஷமானது மறுக்கப்பட் டுள்ளது என்பது (கொள்கை வாதம்) ச்ரௌதகர்மாவை அபேக்ஷித்து (குறித்து) இருப்பது. அங்கு க்ருஹஸ்தர்களுக்கு ஸ்மார்த்த கர்மம் இருந்தாலும் அது இல்லாதது போல் கொண்டு கேவலம் ஞானத் தினாலேயே மோக்ஷம் மறுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
एतदपि विरुद्धम् । कथम् ? गृहस्थस्यैव स्मार्तकर्मणा समुच्चितात् ज्ञानात् मोक्षः प्रतिषिध्यते न तु आश्रमान्तराणामिति कथं विवेकिभिः शक्यमवधारयितुम् ।
இதுவும் பொருந்தாது(மாறுபட்டது). எவ்வாறு எனில் க்ரஹஸ்தர் களுக்குத்தான் கேவல ஸ்மார்த்த கர்ம ஸமுச்சய ஞானத்தினால் மோக்ஷம் மறுக்கப்பட்டுள்ளதே தவிர மற்றஆச்ரமத்தார்களுக்கு அல்ல என்று எவ்வாறு விவேகிகளால் அறிந்துகொள்ள முடியும்?
किञ्च — यदि मोक्षसाधनत्वेन स्मार्तानि कर्माणि ऊर्ध्वरेतसां समुच्चीयन्ते तथा गृहस्थस्यापि इष्यतां स्मार्तैरेव समुच्चयो न श्रौतैः ॥
மேலும் இவ்வாறு சந்நியாசிகளுக்கு மோக்ஷப்பிராப்தியின் பொருட்டு ஞானத்துடன் கேவல ஸ்மார்த்த கர்மாவுடன் ஸமுச்சய மானது அவசியம் எனில் க்ரஹஸ்த்தார்களுக்கும் கேவல ஸ்மார்த்த கர்மா உடன் கூடி ஞான ஸமுச்சயமானது அவசியமாகிறது என் பது அறியவேண்டும். ச்ரௌதகர்மாவுடன் அன்று.
अथ श्रौतैः स्मार्तैश्च गृहस्थस्यैव समुच्चयः मोक्षाय, ऊर्ध्वरेतसां तु स्मार्तकर्ममात्रसमुच्चितात् ज्ञानात् मोक्ष इति ।
மேலும் ச்ரௌத, ஸ்மார்த்த கர்மங்களுடன் கூடிய ஞான ஸமுச்சய மானது க்ருஹஸ்த்தர்களின் மோக்ஷத்தின் பொருட்டாகும் என்றும் சந்நி யாசிகளுக்கு கேவலம் ஸ்மார்த்த கர்ம ஸமுச்சய ஞானத்தினால் எனில்.
तत्रैवं सति गृहस्थस्य आयासबाहुल्यात् , श्रौतं स्मार्तं च बहुदुःखरूपं कर्म शिरसि आरोपितं स्यात् ॥
இவ்வாறு இருக்கும்பொழுது க்ருஹஸ்தனுக்கு மிகுந்த சிரமத்துடன் கூடியதும் மிகுந்த துக்கத்துடன் கூடியதுமான கர்மங்கள் தலையில் ஏற்றி வைக்கப்பட்டதாகும்.
अथ गृहस्थस्यैव आयासबाहुल्यकारणात् मोक्षः स्यात् , न आश्रमान्तराणां श्रौतनित्यकर्मरहितत्वात् इति ।
ஆகையால் சிரமம் அதிகமாய் இருக்கும் காரணத்தினால் க்ரஹஸ்தனுக்கே மோக்ஷம் உண்டாகும். ச்ரௌத நித்திய கர்மா இல்லாததின் காரணத்தால் மற்ற ஆச்ரமத்தாருக்கு (ஸந்நியாசி களுக்கு) மோக்ஷம் உண்டாகாது எனில்.
तदप्यसत् , सर्वोपनिषत्सु इतिहासपुराणयोगशास्त्रेषु च ज्ञानाङ्गत्वेन मुमुक्षोः सर्वकर्मसंन्यासविधानात् , आश्रमविकल्पसमुच्चयविधानाच्च श्रुतिस्मृत्योः ॥
அதுவும் சரியல்ல. ஏனெனில் எல்லா உபநிஷத்துக்களிலும், இதிகாசங்களிலும் புராணங்களிலும், யோகசாஸ்திரங்களிலும் முமூக்ஷுக்களுக்கு ஞானத்தின் அங்கமாக எல்லாக் கர்மங்களையும் ஸந்நியாசம்(துறத்தல்) என்ற விதானம் இருப்பதால். அவ்வாறே ஸ்ருதி ஸ்மிருதிகளில் ஆஸ்ரமங்களுக்கு விகல்பம் ஸமுச்சயம் என்று விதானம் உள்ளது. (பிரஹ்மச்சரியத்திலிருந்து க்ரஹஸ்தம், க்ரஹஸ் தத்திலிருந்து வானப்ரஸ்தம், வானப்ரஸ்தத்திலிருந்து ஸந்நியாஸம் மேற்கொள்ளுதல் என்பது ஸமுச்சய விதானமாகும். பிரஹ்மச்சரியத்தி லிருந்தோ, அல்லது க்ரஹஸ்தாச்ரமத்திலிருந்தோ அல்லது வானப்ரஸ்தத்திலிருந்தோ ஸந்நியாசம் மேற்கொள்ளுதல் விகல்ப விதானம் எனப்படும்)
सिद्धस्तर्हि सर्वाश्रमिणां ज्ञानकर्मणोः समुच्चयः ।
அப்பொழுது எல்லா ஆச்ரமத்தாருக்கும் ஞானகர்ம ஸமுச்சய மானது சித்திக்கிறது.
न, मुमुक्षोः सर्वकर्मसंन्यासविधानात् ।
அவ்வாறு அல்ல. ஏனெனில் முமூக்ஷக்களுக்கு ஸர்வகர்ம ஸந்நியாஸம் விதிக்கப்பட்டிருப்பதால்
‘पुत्रैषणाया वित्तैषणायाश्च लोकैषणायाश्च व्युत्थायाथ भिक्षाचर्यं चरन्ति’ (बृ. उ. ३ । ५ । १) ‘तस्मात् न्यासमेषां तपसामतिरिक्तमाहुः’ (तै. ना. ७९) ‘न्यास एवात्यरेचयत्’ (तै. ना. ७८) इति, ‘न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशुः’ (तै. ना. १२) इति च । ‘ब्रह्मचर्यादेव प्रव्रजेत्’ (जा. उ. ४) इत्याद्याः श्रुतयः ।
(व्युत्थायाथभिक्षाचर्यं चरन्ति । வியுத்தாயாத பிக்ஷாசர்யம் சரந்தி) पुत्रैषणायाश्च वित्तैषणायाश्च लोकैषणायाश्च மக்களாசை, பொருளாசை, உலகஆசை என்ற மூவயைான ஆசைகளை விட்டு பிச்சை எடுத்த லைக் கைக்கொள்கிறார்கள். तस्मान्न्यासमेषां तपसामतिरिक्तमाहुः (தஸ்மாத் நியாஸமே ஷாம் தபசாமதிரிக்தமாஹு:) ஆகையால் இந்த எல்லா தபஸைக் காட்டிலும் ஸந்நியாஸம் தான் சிரேஷ்ட்டமானது (மேலானது) என்று கூறப்படுகிறது.

न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशुः (ந கர்மணா, ந ப்ரஜயா, தனேன, த்யாகேனைகே அம்ருதத்வமானசு:) கர்மத்தினாலோ, பிரஜையினாலோ, தனத்தினாலோ அடையமுடியாது, மேலான தியாகத்தினால் மாத்திரமே ஏதோ ஒரு மஹா புருஷன் அம்ருதத்வத்தை அடைகிறான்.

ब्रह्मचर्यादेव प्रव्रजेत्’ इत्याद्याः श्रुतयः (ப்ரஹ்மச்சர்யாதேவ ப்ரவ்ர ஜேத்) ப்ரஹ்மச்சரியாச்ரமத்திலிருந்தே ஸந்நியாசம் கொள் முதலிய வாக்கியங்கள் சுருதி வசனமாகும்.
‘त्यज धर्ममधर्मं च उभे सत्यानृते त्यज ।
उभे सत्यानृते त्यक्त्वा येन त्यजसि तत्त्यज ।’
(मो. ध. ३२९ । ४०)
‘संसारमेव निःसारं दृष्ट्वा सारदिदृक्षया ।
प्रव्रजन्त्यकृतोद्वाहाः परं वैराग्यमाश्रिताः’ ( ? )
1. த்யஜ தர்மமதர்மம் ச உபே ஸத்யான்ருதே த்யஜ
உபே சத்யாந்ருதே த்யக்த்வா யேன த்யஜஸி தத் த்யஜ
ஸம்சாரமேவ நிஸ்சாரம் த்ருஷ்ட்வா ஸாரதித்ருக்ஷயா
ப்ரவ்ரஜன்த்யக்ருதோத்வாஹா: பரம் வைராக்யமாச்ரிதா
इति बृहस्पतिः । अपि कचं प्रति ।
1. பிரஹஸ்பதி கசனுக்கு இவ்வாறு கூறினார்- தர்மம், அதர்மம் என்ற இரண்டையும் விட்டுவிடு மேலும் சத்தியம் பொய் என்ற இரண்டினையும் விட்டுவிடுப் பின்பு இவைகளை எதைக் கொண்டு தியாகம் செய்தாயோ அதையும் (அஹங்காரத்தையும்) தியாகம் செய்யவேண்டும். சம்சாரமானது சாரமற்றிருப்பதை அறிந்து பரவைராக்கியம் அடைந்த விவாகம் செய்து கொள்ளாத புருஷர்கள் சாரம் உள்ள வஸ்து எது என்று அறியத் தியாகம் செய்கிறார்கள்.
‘कर्मणा बध्यते जन्तुर्विद्यया च विमुच्यते ।
तस्मात्कर्म न कुर्वन्ति यतयः पारदर्शिनः’
(मो. ध. २४१ । ७)
इति शुकानुशासनम् ।
2. கர்மணா பத்யதே ஜந்துர்வித்யயா ச விமுச்யதே தஸ்மாத்கர்ம ந குர்வந்தி யதய: பாரதர்சின: - என்று சுகருடைய அனுசாசனம்.

வியாசர் சுகருக்கு உபதேசம் செய்யும் சமயத்தில் கூறியது. கர்மத்தி னால் ஜீவன் கட்டுப்படுகின்றான். ஞானத்தினால் விடுபடுகிறான். ஆகையால் முடிவைக் கண்ட (ஆதமதத்வத்தையறிந்த சந்நியாசிகள் கர்மத்தை செய்வதில்லை.
இந்த கீதா சாஸ்திரத்திலும் எல்லாக் கர்மங்களையும் மனதினால் சந்நியாசம் செய்து என்றல் முதலிய சுலோகங்களில் கூறப்பட்டுள்ளது.
मोक्षस्य च अकार्यत्वात् मुमुक्षोः कर्मानर्थक्यम् ।
முமுக்ஷுவிற்மு மோக்ஷமானது அகாரியமாய் இருப்பதால் மோக்ஷத்திற்கு கர்மமானது அர்த்தமற்றதாகிவிடுகிறது.
नित्यानि प्रत्यवायपरिहारार्थानि इति चेत् ।
நித்திய கர்மங்கள் ப்ரத்திய வாயத்தை நீக்கும் பொருட்டு அனுஷ்டிக்கவேண்டியதே எனில்
न ; असंन्यासिविषयत्वात् प्रत्यवायप्राप्तेः । न हि अग्निकार्याद्यकरणात् संन्यासिनः प्रत्यवायः कल्पयितुं शक्यः, यथा ब्रह्मचारिणामसंन्यासिनामपि कर्मिणाम् ।
அவ்வாறு அல்ல. ஏனெனில் (அது) ப்ரத்தியவாயத்தின் அடைவு சந்நியாசி அல்லாதவர்களுடைய விஷயமாய் இருப்பதால். அக்கினி காரியங்கள் செய்யாததினால் சந்நியாசிகளுக்கு, சந்நியாசி அற்றவர்க ளான ப்ரஹ்மச்சாரிகளுக்கும், கிரஹஸ்தர்களாகிய கர்மிகளுக்கும் கர்மம் செய்யாததினால், பிரத்தியவாயம் ஏற்படுவதுபோல் ஏற்படுவது இல்லை.
न तावत् नित्यानां कर्मणामभावादेव भावरूपस्य प्रत्यवायस्य उत्पत्तिः कल्पयितुं शक्या, ‘कथमसतः सज्जायेत’ (छा. उ. ६ । २ । २) इति असतः सज्जन्मासम्भवश्रुतेः ।
அவ்வாறு நித்யகர்மாவின் அபாவத்தினின்றும் பாவரூபமான பிரத்தியவாயத்தின் உத்பத்தியை கல்பிக்கமுடியாது. ஏனெனில் அசத்திலிருந்து சத்தானது எவ்வாறு உண்டாகும்? இவ்வாறு அபாவத் திலிருந்து பாவத்தின் உத்பத்தியின் அசம்பவத்தை (உண்டாகாமையை) கூறுகின்றசுருதியின் வசனமாகும்.
यदि विहिताकरणात् असम्भाव्यमपि प्रत्यवायं ब्रूयात् वेदः, तदा अनर्थकरः वेदः अप्रमाणमित्युक्तं स्यात् ।
விகித கர்மத்தை செய்யாததினால் (அபாவத்திலிருந்து) பாவமானது உண்டாகாது என்று இருந்தாலும் (அபாவத்திலிருந்து பாவமான) பிரத்தியவாயம் ஏற்படும் என்று வேதமானது கூறுமானால் அப்பொழுது வேதம் அனர்த்தத்தை உண்டுபண்ணும். மேலும் அப்பிரமாணம் (பிரமாணமற்றது) என்று கூறப்பட்டதாகும்.
विहितस्य करणाकरणयोः दुःखमात्रफलत्वात् ।
ஏனெனில் விகித கர்மத்தை செய்வதாலும், செய்யாவிடினும் இரண்டிலிருந்தும் துக்கமாகிய பலனே ஏற்படும்.
तथा च कारकं शास्त्रं न ज्ञापकम् इत्यनुपपन्नार्थं कल्पितं स्यात् । न चैतदिष्टम् ।
அவ்வாறேசாஸ்த்திரமானது ஞாபகம் (தெரிவிப்பது) அல்ல, காரகமே எனில் இல்லாத சக்தியை உண்டாக்குவதாகும். அவ்வாறெ னில் சூன்ய அர்த்தமே ஏற்படும். ஆகையால் அது ஏற்றுக்கொள்ள முடியாது.
तस्मात् न संन्यासिनां कर्माणि । अतो ज्ञानकर्मणोः समुच्चयानुपपत्तिः ।
ஆகையால் சந்நியாசிகளுக்கு கர்மம் விதிக்கப்படாததினால் ஞான கர்ம சமுச்சயமானது பொருந்தாது.
‘ज्यायसी चेत् कर्मणस्ते मता बुद्धिः’ (भ. गी. ३ । १) इति अर्जुनस्य प्रश्नानुपपत्तेश्च ॥
ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धि: (ஜ்யாயஸீ சேத் கர்மணஸ்தே மதா புத்தி:) ஞானமானது கர்மத்தைக் காட்டிலும் சிறந்தது என்பது உமது கொள்கையானால் என்று அர்ச்சுனன் கேட்ட வினா பொருத்த முடையதாகாது.
यदि हि भगवता द्वितीयेऽध्याये ज्ञानं कर्म च समुच्चित्य त्वया अनुष्ठेयम् इत्युक्तं स्यात् , ततः अर्जुनस्य प्रश्नः अनुपपन्नः ‘ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धिः’ (भ. गी. ३ । १) इति ।
ஏனெனில் பகவானால் இரண்டாவது அத்யாயத்தில் ஞானகர்ம சமுச்சயமே உன்னால் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று கூறிஇருந்தால், கர்மத்தைக் காட்டிலும் ஞானமே சிறந்தது என்பது உமது கருத்தானால் ஹே ஜனார்த்தனா என்ற அர்ச்சுனனது வினா பொருத்தமற்றதாகும்.
अर्जुनाय चेत् बुद्धिकर्मणी त्वया अनुष्ठेये इत्युक्ते, या कर्मणो ज्यायसी बुद्धिः सापि उक्तैव इति ‘तत् किं कर्मणि घोरे मां नियोजयसि केशव’ (भ. गी. ३ । १) इति उपालम्भः प्रश्नो वा न कथञ्चन उपपद्यते ।
பகவான் அர்ச்சுனனை நோக்கி ஞானத்தையும், கர்மத்தையும் சேர்ந்தே அனுஷ்டானம் செய்யவேண்டும் என்று கூறியிருந்தால் கர்மத்தைக் காட்டிலும் ஞானம் மேலானது என்பதும் கூறப் பட்டதா கும். ஆகையால் ஹே கேசவ! என்னை ஏன் கோரமான கர்மத்தில் ஏவுகிறீர் என்றவினா ஒரு விதத்திலாவது பொருந்தாது.
न च अर्जुनस्यैव ज्यायसी बुद्धिः न अनुष्ठेया इति भगवता उक्तं पूर्वम् इति कल्पयितुं युक्तम् , येन ‘ज्यायसी चेत्’ इति विवेकतः प्रश्नः स्यात् ॥
நீ கர்மத்தைக் காட்டிலும் மேலான ஞானத்தை அனுஷ்ட்டிக்கக் கூடாது என்று அர்ஜுனனுக்கு மாத்திரம் பகவான் முன்பு கூறப்பட வில்லை என்று சொல்லுவதும் சரியில்லை. ஏனெனில் (ஜ்யாயஸீ சேத்) எது மேலானது என்பது முதலிய வினா எழுவதால்.
यदि पुनः एकस्य पुरुषस्य ज्ञानकर्मणोर्विरोधात् युगपदनुष्ठानं न सम्भवतीति भिन्नपुरुषानुष्ठेयत्वं भगवता पूर्वमुक्तं स्यात् , ततोऽयं प्रश्न उपपन्नः ‘ज्यायसी चेत्’ इत्यादिः ।
மேலும் கர்மம், ஞானம் இரண்டும் விரோதமாய் இருப்பதால் ஒரே அதிகாரியால் ஒரே சமயத்தில் அனுஷ்ட்டிக்கமுடியாது என்பதால், முன்பு வெவ்வேறு அதிகாரியால் அனுஷ்டிக்க வேண்டும் என்று பக வானால் கூறப்பட்டிருக்கவேண்டும். ஆகையால் தான் இந்த ஜ்யா யஸீ சேத் என்பது முதலான வினாக்கள் எழுகிறது.
अविवेकतः प्रश्नकल्पनायामपि भिन्नपुरुषानुष्ठेयत्वेन ज्ञानकर्मनिष्ठयोः भगवतः प्रतिवचनं नोपपद्यते ।
அர்ச்சுனன் அவிவேகத்தினால் இந்த வினா எழுப்பினான் என்றகல்பனைக்கு, ஞான நிஷ்ட்டையும் கர்மநிஷ்ட்டையும் வெவ்வேறு அதிகாரிகளால் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்ற பகவானது பதில் பொருத்தமில்லாமல் ஆகிவிடும்.
न च अज्ञाननिमित्तं भगवत्प्रतिवचनं कल्पनीयम् ।
பகவானுடைய பதிலை அக்ஞானநிமித்தம் கூறப்பட்டது என்று (கல்பிப்பதும்) கூறுவதும் பொருந்தாது.
अस्माच्च भिन्नपुरुषानुष्ठेयत्वेन ज्ञानकर्मनिष्ठयोः भगवतः प्रतिवचनदर्शनात् ज्ञानकर्मणोः समुच्चयानुपपत्तिः ।
ஆகையால் ஞானநிஷ்ட்டைக்கும், கர்மநிஷ்ட்டைக்கும் அதிகாரி வெவ்வேறு ஆகும் என்று பகவானுடைய பதிலினால் (உத்தரத்தி னால்) ஞான கர்ம சமுச்சயமானது பொருந்தாது (என்று சித்தமாகிறது)
तस्मात् केवलादेव ज्ञानात् मोक्ष इत्येषोऽर्थो निश्चितो गीतासु सर्वोपनिषत्सु च ॥
ஆகையால் கேவலம் ஞானத்தினாலேயே மோக்ஷம் என்ற அபிப்பிராயமானது, கீதையிலும், எல்லா உபநிஷத்துக்களிலும் நிச்சயம் (நிர்ணயம்) செய்யப்பட்டுள்ளது.
ज्ञानकर्मणोः ‘एकं वद निश्चित्य’ (भ. गी. ३ । २) इति च एकविषयैव प्रार्थना अनुपपन्ना, उभयोः समुच्चयसम्भवे ।
ஞான கர்ம சமுச்சயமானது ஏற்படுமானால், ஞான கர்மங்களில் ஏதாவது ஒன்றைநிச்சயம் செய்து கூறு என்று ஒரே விஷயத்தை பிரார்த்தனை (கேட்டது) செய்வது பொருந்தாது.
‘कुरु कर्मैव तस्मात्त्वम्’ (भ. गी. ४ । १५) इति च ज्ञाननिष्ठासम्भवम् अर्जुनस्य अवधारणेन दर्शयिष्यति ॥
कुरु कर्मैव तस्मात्त्वम्’ (குரு கர்மைவ தஸ்மாத்துவம்) ஆகையால் நீ கர்மாவையே செய், என்று ஞானநிஷ்ட்டையை (கூடாமையை) தவிர்த்து அர்ச்சுனனுக்கு (ஏகாரத்தினால்) காட்டுகிறார்.
अर्जुन उवाच —
அர்ஜுன உவாச
ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन ।
तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव ॥ १ ॥
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜநார்த்தன ।
தற்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேசவ ॥ 1 ॥
ज्यायसी श्रेयसी चेत् यदि कर्मणः सकाशात् ते तव मता अभिप्रेता बुद्धिर्ज्ञानं हे जनार्दन ।
ஹே ஜனார்த்தன! கர்மத்தை அபேக்ஷி த்து ஞானம் மேன்மை யானது எனில் என்னை ஏன் ஹிம்சை ரூபமான இந்த கர்மத்தில் ஈடுபடுத்துகிறீர்கள்
यदि बुद्धिकर्मणी समुच्चिते इष्टे तदा एकं श्रेयःसाधनमिति कर्मणो ज्यायसी बुद्धिः इति कर्मणः अतिरिक्तकरणं बुद्धेरनुपपन्नम् अर्जुनेन कृतं स्यात् ।
ஞான கர்ம சமுச்சயமே பகவானுடைய அபிப்ராயம் எனில் ச்ரேயஸ்ஸை அடைவதற்கு வேண்டிய ஒரு சாதனத்தைக் கூறுங்கள் என்றும், கர்மத்தை காட்டிலும் ஞானம் மேலானது என்றும் வினாவானது அர்ஜுனனால் எழுப்ப(கேட்க) முடியாது.
न हि तदेव तस्मात् फलतोऽतिरिक्तं स्यात् ।
ஏனெனில் (சமுச்சயபக்ஷத்தில்) கர்மபலத்தைக் காட்டிலும் ஞானத்தினுடைய பலத்திற்கு மேன்மை (ச்ரேயஸ்) யும் காணமுடியாது.
तथा च, कर्मणः श्रेयस्करी भगवतोक्ता बुद्धिः, अश्रेयस्करं च कर्म कुर्विति मां प्रतिपादयति, तत् किं नु कारणमिति भगवत उपालम्भमिव कुर्वन् तत् किं कस्मात् कर्मणि घोरे क्रूरे हिंसालक्षणे मां नियोजयसि केशव इति च यदाह, तच्च नोपपद्यते ।
அவ்வாறேகர்மத்தைக் காட்டிலும் ஞானமானது மேன்மையா னது என்று பகவான் கூறிவிட்டு மேன்மையல்லாத கர்மத்தை நீ செய்யக் கடவாய் என்று உபதேசிக்கிறார். பகவானைப் பழிக்கிறவர் போல என்ன காரணத்தினாலோ ஹே கேசவ என்னை இந்த ஹிம்சா ரூபமான இந்த கோர கர்மத்தில் என்னை ஏவுகிறாய்? என்று கேட்பதுவும் பொருத்தமற்றதாகிவிடும்.
अथ स्मार्तेनैव कर्मणा समुच्चयः सर्वेषां भगवता उक्तः अर्जुनेन च अवधारितश्चेत् , ‘तत्किं कर्मणि घोरे मां नियोजयसि’ (भ. गी. ३ । १) इत्यादि कथं युक्तं वचनम् ॥ १ ॥
மேலும் (ஸ்மார்த்த கர்மத்துடன்) ஞான சமுச்சயம்தான் பகவா னால் எல்லோருக்கும் கூறப்பட்டது. அர்ஜுனனும் அதையை கிரஹித்துக்கொண்டானாகில் எதற்காக இந்த கோரமான கர்மத்தில் என்னை ஏவுகிறாய் என்பது முதலான வார்த்தை எப்படி பொருந்தும்.
किञ्च—
மேலும்
व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे ।
तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम् ॥ २ ॥
வ்யாமிச்ரேணேவ வாக்யேன புத்திம் மோஹயஸீவ மே ।
ததேகம் வத நிச்சித்ய யேன ச்ரேயோஅஹமாப்நுயாம் ॥ 2 ॥
व्यामिश्रेणेव, यद्यपि विविक्ताभिधायी भगवान् , तथापि मम मन्दबुद्धेः व्यामिश्रमिव भगवद्वाक्यं प्रतिभाति । तेन मम बुद्धिं मोहयसि इव ।
பகவான் ஸ்பஷ்டமாக எடுத்து விளக்கினாலும் என்னுடைய மந்த புத்தியினால் பகவானுடைய வாக்கியம் மலைக்கச் செய்வது போல் இருக்கிறது. ஆகையால் என்னுடைய புத்தியை மயக்கம் அடைவது போல் செய்கிறீர்கள்.
मम बुद्धिव्यामोहापनयाय हि प्रवृत्तः त्वं तु कथं मोहयसि ? अतः ब्रवीमि बुद्धिं मोहयसि इव मे मम इति ।
என்னுடைய புத்தியின் வியாமோஹத்தைப் போக்குவதற்காக ஈடுபட்ட தாங்கள் எப்படி என்னை மோஹிக்கச் செய்வீர்கள். ஆகை யால் தான் நான் என்னுடைய புத்தியை மோஹம் அடைவது போல் செய்கிறீர்கள் என்று கூறுகிறேன்.
त्वं तु भिन्नकर्तृकयोः ज्ञानकर्मणोः एकपुरुषानुष्ठानासम्भवं यदि मन्यसे, तत्रैवं सति तत् तयोः एकं बुद्धिं कर्म वा इदमेव अर्जुनस्य योग्यं बुद्धिशक्त्यवस्थानुरूपमिति निश्चित्य वद ब्रूहि, येन ज्ञानेन कर्मणा वा अन्यतरेण श्रेयः अहम् आप्नुयां प्राप्नुयाम् । इति यदुक्तं तदपि नोपपद्यते ॥
வெவ்வேறு அதிகாரிகளால் அனுஷ்ட்டானம் (கடைபிடிக்க வேண்டிய) செய்யப்படும் ஞான கர்மங்கள் ஒரே அதிகாரியால் கடை பிடிக்கமுடியாது என்று நினைத்தாயாகில் அவைகளில் ஏதாவது ஒன்றைகர்மத்தை அல்லது ஞானத்தை அர்ஜுனனாகிய என்னு டைய புத்தி வல்லமைக்கும், என்னுடைய இப்போதைய நிலைமைக் கும் எந்த ஒன்று ஏற்றது என்று நிச்சயம் செய்து கூறுவாயாக. ஞானத் தினாலா, கர்மத்தினாலா அல்லது வேறு ஏதாவது ஒன்றினாலா நான் எதனால் நன்மை அடைவேன்? (அதனைக் கூறி அருள்வீர்)
यदि हि कर्मनिष्ठायां गुणभूतमपि ज्ञानं भगवता उक्तं स्यात् , तत् कथं तयोः ‘एकं वद’ इति एकविषयैव अर्जुनस्य शुश्रूषा स्यात् ।
கர்மாநுஷ்டானத்தில் கௌணமான ஞானத்தை பகவான் கூறியி ருந்தால் அவ்விரண்டினுள் ஒன்றைக்கூறு என்று ஒரே விஷயத்தைப் பற்றி அர்ஜுனனால் எவ்வாறு கேட்டிருக்க முடியும்?
न हि भगवता पूर्वमुक्तम् ‘अन्यतरदेव ज्ञानकर्मणोः वक्ष्यामि, नैव द्वयम्’ इति, येन उभयप्राप्त्यसम्भवम् आत्मनो मन्यमानः एकमेव प्रार्थयेत् ॥ २ ॥
ஏன்எனில் ஞானம், கர்மம் இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் கூறுவேன் இரண்டையும் அல்ல என்று பகவான் கூறவில்லை. எதனால் இரண்டும் (ஒரே சமயத்தில் ஒருவரால்) அடைய முடியாது என்று அறிந்து தனக்கு ஒன்றையே (பகவானிடம்) வேண்டுகிறான்.
प्रश्नानुरूपमेव प्रतिवचनं —
வினாவிற்கு தக்கவாறேபதில் (மறுமொழி)
श्रीभगवानुवाच —
பகவான் கூறுகிறார்.
लोकेऽस्मिन्द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मयानघ ।
ज्ञानयोगेन साङ्‍ख्यानां कर्मयोगेन योगिनाम् ॥ ३ ॥
லோகேஅஸ்மின்த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக ।
ஞானயோகேன ஸாங்க்யானாம் கர்மயோகேன யோகினாம் ॥ 3 ॥
लोके अस्मिन् शास्त्रार्थानुष्ठानाधिकृतानां त्रैवर्णिकानां द्विविधा द्विप्रकारा निष्ठा स्थितिः अनुष्ठेयतात्पर्यं पुरा पूर्वं सर्गादौ प्रजाः सृष्ट्वा तासाम् अभ्युदयनिःश्रेयसप्राप्तिसाधनं वेदार्थसम्प्रदायमाविष्कुर्वता प्रोक्ता मया सर्वज्ञेन ईश्वरेण हे अनघ अपाप ।
பாபமற்றவனே (ஹே அர்ஜுனா) இந்த மனித உலகத்தில் சாஸ்த் ரோக்தமான (சாஸ்திரத்தில் கூறப்பட்ட) ஞான கர்மங்களுக்கு, அதிகாரிகள் எவர்களோ அந்த மூன்று வர்ணத்தாரின் (பிராஹ்மண, க்ஷத்ரிய, வைசியர்களின் பொருட்டு) இவ்விரு ப்ரகாரமான நிஷ்ட்டையை அவசியம் கடைபிடிக்கவேண்டிய நிஷ்ட்டையை ஸ்ருஷ்ட்டியின் ஆதிகாலத்தில் பிரஜைகளை சிருஷ்டித்து அவர்களின் பொருட்டு இக, பரலோக சுகங்களும், முக்தியும் அடையக் கூடிய வைதிக சம்பிர தாயமானது சர்வக்ஞனான ஈஸ்வரனாகிய என்னால் கூறப்பட்டது.
तत्र का सा द्विविधा निष्ठा इत्याह —
அந்த இருவிதமான நிஷ்ட்டை எது என்று கூறுகின்றார்.
ज्ञानयोगेन ज्ञानमेव योगः तेन साङ्ख्यानाम् आत्मानात्मविषयविवेकविज्ञानवतां ब्रह्मचर्याश्रमादेव कृतसंन्यासानां वेदान्तविज्ञानसुनिश्चितार्थानां परमहंसपरिव्राजकानां ब्रह्मण्येव अवस्थितानां निष्ठा प्रोक्ता ।
ஞானமே யோகம் ஞானயோகம் அவைகளில் ஞானமாகிய யோகத்தால் ஆத்மா அநாத்மா விஷயத்தில் விவேகஞான முடைய வர்களாய், பிரஹ்மச்சர்யாச்ரமத்திலேயே சந்யாசம் பெற்றவர்களாய், வேதாந்த ஞானத்தினால் நன்றாக தத்வார்தத்தை நிர்ணயம் செய்தவர் களாய், பரமஹம்ச சந்நியாசிகளாய் பிரஹ்மத்திலேயே நிலைபெற்றி ருப்பவர்களுக்கு ஞானநிஷ்ட்டையானது கூறப்பட்டது.
कर्मयोगेन कर्मैव योगः कर्मयोगः तेन कर्मयोगेन योगिनां कर्मिणां निष्ठा प्रोक्ता इत्यर्थः ।
கர்மமே யோகம் - கர்மயோகம் ஆகையால் கர்மயோகத்தினால் கர்மயோகத்தை கடைப்பிடிப் பவர்களுக்கு கர்மநிஷ்ட்டை கூறப்பட்டது.
यदि च एकेन पुरुषेण एकस्मै पुरुषार्थाय ज्ञानं कर्म च समुच्चित्य अनुष्ठेयं भगवता इष्टम् उक्तं वक्ष्यमाणं वा गीतासु वेदेषु चोक्तम् , कथमिह अर्जुनाय उपसन्नाय प्रियाय विशिष्टभिन्नपुरुषकर्तृके एव ज्ञानकर्मनिष्ठे ब्रूयात् ।
ஒரே அதிகாரியால் ஒரே புருஷார்தத்தின் பொருட்டு ஞான, கர்மசமுச்சயத்தை கடைபிடிக்கவேண்டும் என்பது பகவானது இஷ்டமாக கீதையில் கூறப்பட்டும், கூறப்படுவதாயும், வேதங்களிலும் கூறப்பட்டிருந்ததால் எவ்வாறு தன்னை சரணாகதி அடைந்த தனக்கு பிரிய அர்ஜுனனின் பொருட்டு பகவான் இங்கே ஞானநிஷ்ட்டை வேறு, கர்மநிஷ்ட்டை வேறு என்றும் அதற்கு அதிகாரிபேதம் வேறு என்றும் எவ்வாறு கூறுவார்.
यदि पुनः ‘अर्जुनः ज्ञानं कर्म च द्वयं श्रुत्वा स्वयमेवानुष्ठास्यति अन्येषां तु भिन्नपुरुषानुष्ठेयतां वक्ष्यामि इति’ मतं भगवतः कल्प्येत, तदा रागद्वेषवान् अप्रमाणभूतो भगवान् कल्पितः स्यात् । तच्चायुक्तम् ।
மேலும் அர்ஜுனன் ஞானநிஷ்ட்டை, கர்மநிஷ்ட்டை இரண்டை யும் கேட்டு ஞான கர்ம சமுச்சயத்தை தானாகவே அனுஷ்டிக்கட்டும். நான் மற்றவர்களுக்கு வேறு வேறு அதிகாரிகளால் அநுஷ்டிக்கத்தக் கவை என்று கூறுவேன் என்று பகவானது கருத்து என்றால் அவர் ராகத்வேஷம் உடையவராகவும் அப்பிரமாணிகராகவும் கல்பிக்கப் பட்டவர் ஆவார். ஆகவே அது பொருந்தாது.
तस्मात् कयापि युक्त्या न समुच्चयो ज्ञानकर्मणोः ॥
ஆகையால் எந்த யுக்தியினாலும் ஞானகர்மங்களுக்கு சமுச்சயமே பொருந்தாது
यत् अर्जुनेन उक्तं कर्मणो ज्यायस्त्वं बुद्धेः, तच्च स्थितम् , अनिराकरणात् ।
அர்ஜுனனால் கர்மத்தைக் காட்டிலும் ஞானமானது மேலானது என்று எது கூறப்பட்டதோ அது (பகவானால்) நிராகரிக்கப்படாததால் அதுவே சித்தமாகிறது.
तस्याश्च ज्ञाननिष्ठायाः संन्यासिनामेवानुष्ठेयत्वम् , भिन्नपुरुषानुष्ठेयत्ववचनात् । भगवतः एवमेव अनुमतमिति गम्यते ॥ ३ ॥
அந்த ஞான நிஷ்ட்டையானது சந்நியாசிகளால் மாத்திரமே அநுஷ்டிக்கதக்கதென்றும், ஞான கர்மங்களுக்கு வெவ்வேறு அதிகாரிகளால் அநுஷ்டிக்க தக்கது என்று கூறிய வசனத்தால் பகவானுடைய கருத்து இதுதான் என்று தெரியவருகிறது.
‘मां च बन्धकारणे कर्मण्येव नियोजयसि’ इति विषण्णमनसमर्जुनम् ‘कर्म नारभे’ इत्येवं मन्वानमालक्ष्य आह भगवान् —
பந்தத்திற்கு காரணமான கர்மத்திலேயே என்னை ஈடுபடுத்துகி றாய் என்று வருந்திய மனமுடைய அர்ஜுனன் கர்மத்தை ஆரம்பிக்க வில்லை என்று புரிந்துகொண்டு பகவான் இவ்வாறு கூறினார்.
न कर्मणामनारम्भात् इति ।
“न कर्मणामनारम्भात् ।” என்று. (ந கர்மணாமனாரம்பாத்)
अथवा — ज्ञानकर्मनिष्ठयोः परस्परविरोधात् एकेन पुरुषेण युगपत् अनुष्ठातुमशक्त्यत्वे सति इतरेतरानपेक्षयोरेव पुरुषार्थहेतुत्वे प्राप्ते
அல்லது ஞானகர்மநிஷ்ட்டையானது பரஸ்பரம் விரோதமாத லால் ஒரே புருஷனால் இரண்டையும் ஒரே சமயத்தில் அநுஷ்டிக்க முடியாததால் ஒன்றைஒன்று அபேக்ஷிக்காமல் புருஷார்த்தத்திற்கு ஹேது என்று சங்கை ஏற்பட்டால்
कर्मनिष्ठाया ज्ञाननिष्ठाप्राप्तिहेतुत्वेन पुरुषार्थहेतुत्वम् , न स्वातन्त्र्येण ; ज्ञाननिष्ठा तु कर्मनिष्ठोपायलब्धात्मिका सती स्वातन्त्र्येण पुरुषार्थहेतुः अन्यानपेक्षा, इत्येतमर्थं प्रदर्शयिष्यन् आह भगवान् —
கர்மநிஷ்ட்டையினால் ஞானநிஷ்ட்டை அடைவதற்கு ஹேது ஆனதினாலே புருஷார்த்தத்திற்கு (கர்மநிஷ்ட்டையானது) ஹேதுவா கிறது. ஸ்வதந்திரமாக அல்ல. ஞான நிஷ்ட்டையானது, கர்மநிஷ்ட் டையினால் அடையப்பட்டதாய் இருப்பதால் ஸ்வதந்திரமாகவே ஒன்றைஅபேக்ஷி க்காமல் புருஷார்த்தத்திற்கு ஹேதுவாகிறது என்று இந்த கருத்தை எடுத்துக் காட்டி பகவான் கூறினார்.
न कर्मणामनारम्भान्नैष्कर्म्यं पुरुषोऽश्नुते ।
न च संन्यसनादेव सिद्धिं समधिगच्छति ॥ ४ ॥
ந கர்மணாமனாரம்பாந்நைஷ்கர்ம்யம் புருஷோ அச்னுதே ।
ந ச ஸந்யஸனாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி ॥ 4 ॥
न कर्मणां क्रियाणां यज्ञादीनाम् इह जन्मनि जन्मान्तरे वा अनुष्ठितानाम् उपात्तदुरितक्षयहेतुत्वेन सत्त्वशुद्धिकारणानां तत्कारणत्वेन च ज्ञानोत्पत्तिद्वारेण ज्ञाननिष्ठाहेतूनाम् , ‘ज्ञानमुत्पद्यते पुंसां क्षयात्पापस्य कर्मणः । यथादर्शतलप्रख्ये पश्यत्यात्मानमात्मनि’ (मो. ध. २०४ । ८) इत्यादिस्मरणात् , अनारम्भात् अननुष्ठानात् -
கர்மங்களை (யக்ஞாதிகளை) ஆரம்பிக்காமல் என்பதன் பொருள்- இந்த ஜன்மத்திலாவது, ஜன்மந்திரத்திலாவது செய்த யக்ஞாதி கர்மங்களை அனுஷ்டித்தவர்களுடைய சஞ்சித பாபங்கள் நாசமடைவதால் சித்த சுத்தி ஏற்பட்டு அதனால் ஞானம் அடைந்து ஞானநிஷ்ட்டைக்கு காரணமாகிறது. பாபகர்மங்கள் அழிவதால் மனிதர்களுக்கு ஞானம் ஏற்படுகிறது. என்றஸ்மிருதிவசனம் (ஜ்ஞான முத்பத்யதே பும்ஸாம் க்ஷயாத்பாபஸ்ய கர்மண:) முதலிய காரணங் களால் யக்ஞாதி கர்மங்களை ஆரம்பிக்காமல் (செய்யாமல்)
नैष्कर्म्यं निष्कर्मभावं कर्मशून्यतां ज्ञानयोगेन निष्ठां निष्क्रियात्मस्वरूपेणैव अवस्थानमिति यावत् । पुरुषः न अश्नुते न प्राप्नोतीत्यर्थः ॥
நைஷ்கர்ம்ய பாவத்தை அல்லது கர்மசூன்யஸ்திதியை என்றால் ஞானயோகத்தினால் அடைந்த நிஷ்க்ரியமான ஆத்மஸ்வரூபத்தில் நிலைத்திருத்தல் என்றநிஷ்ட்டையை, (யக்ஞாதி கர்மங்கள் செய்யாமல்) புருஷனுக்கு ஏற்படாது என்பது கருத்து.
कर्मणामनारम्भान्नैष्कर्म्यं नाश्नुते इति वचनात् तद्विपर्ययात् तेषामारम्भात् नैष्कर्म्यमश्नुते इति गम्यते । कस्मात् पुनः कारणात् कर्मणामनारम्भान्नैष्कर्म्यं नाश्नुते इति ।
கர்மத்தை செய்யாமல் (ஆரம்பிக்காமல்) நைஷ்கர்ம்யத்தை அடையமுடியாது என்றவசனத்தினால் அதற்கு மாறுபாடாக கர்மத்தைச் செய்வதால் அவர்களுக்கு நைஷ்கர்மியம் ஏற்படுகிறது என்று அறியப்படுகிறது. மேலும் எக்காரணத்தினால் கர்மம் அநுஷ்டிக்காமல் நைஷ்கர்ம்யத்தை அடையமுடியாது எனில்-
उच्यते, कर्मारम्भस्यैव नैष्कर्म्योपायत्वात् । न ह्युपायमन्तरेण उपेयप्राप्तिरस्ति ।
கர்மத்தை அநுஷ்டித்தலே நைஷ்கர்மத்தை அடைவதற்கு உபாயமாகும். உபாயம் இல்லாமல் உபேயத்தை அடையமுடியாது.
कर्मयोगोपायत्वं च नैष्कर्म्यलक्षणस्य ज्ञानयोगस्य, श्रुतौ इह च, प्रतिपादनात् ।
நைஷ்கர்ம்ய லக்ஷணமாகிய ஞானயோகத்திற்கு கர்மயோகமே உபாயம் என்று சுருதியிலும், இங்கும் கூறப்பட்டிருப்பதால். (உணர்த்து வதினால்)
श्रुतौ तावत् प्रकृतस्य आत्मलोकस्य वेद्यस्य वेदनोपायत्वेन ‘तमेतं वेदानुवचनेन ब्राह्मणा विविदिषन्ति यज्ञेन’ (बृ. उ. ४ । ४ । २२) इत्यादिना कर्मयोगस्य ज्ञानयोगोपायत्वं प्रतिपादितम् ।
சுருதியில் இங்கு பிரஸ்தாபிக்கப்பட்ட ஞேய ரூபமாகிய ஆத்ம லோகத்தை அறிவதற்கு உபாயமாக, பிராமணர்கள் வேதம் ஓதுவதினா லும், யக்ஞாதிகளாலும் இதை அறிய ஆசைப்படுகிறார்கள், என்று கர்மயோகமானது ஞானயோகத்திற்கு உபாயம் என்று கூறப்பட்டது.
इहापि च —
இங்கு (கீதையிலும்) மேலும்
ஸன்யாஸஸ்து மஹாபாஹோ துக்கமாப்துமயோகத:
யோகின: கர்மகுர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்மசுத்தயே
யக்ஞோ தானம் தபச்சைவ பாவனானி மனீஷிணாம்
इत्यादि प्रतिपादयिष्यति ॥
ஹே நீண்ட தோள் உடையவனே! ஸந்நியாஸமானது கர்மயோக மின்றி அடைவது மிகக்கடினம்.
யோகிகள் ஆத்மசுத்தியின் பொருட்டு, அந்தக்கரண சுத்தியின் பொருட்டு (உலக) பற்றற்று கர்மத்தைச் செய்கிறார்கள்.
யக்ஞம், தானம், தவம் இவைகள் புத்திமான்களுக்கு தூய்மை செய்பவனவாம்.
இவ்வாறு மேலே எடுத்துரைக்கப்போகிறார்.
ननु च
அப்படியானால் (இங்கு ஒரு சங்கை உண்டாகிறது)
‘अभयं सर्वभूतेभ्यो दत्त्वा नैष्कर्म्यमाचरेत्’ (अश्व. ४६ । १८) इत्यादौ कर्तव्यकर्मसंन्यासादपि नैष्कर्म्यप्राप्तिं दर्शयति । लोके च कर्मणामनारम्भान्नैष्कर्म्यमिति प्रसिद्धतरम् । अतश्च नैष्कर्म्यार्थिनः किं कर्मारम्भेण ? इति प्राप्तम् । अत आह —
அபயம் ஸர்வபூதேப்யோ தத்வா நைஷ்கர்மயமாசரேத் (இ.பொருள்) சகல பிராணிகளுக்கும் அபயமளித்துவிட்டு நைஷ்கர்ம்யத்தை மேற்கொள்ளவேண்டும் என்பது முதலிய வசனங்களால் செய்ய வேண்டிய கர்மங்களைவிட்டு விடுவதினாலேயே நைஷ்கர்ம்யத்தை பெறலாம் என்று காட்டப்படுகிறது.

மேலும் உலக வாழ்க்கையிலும் கர்மங்களை விட்டதினால் நைஷ்கர்ம்யம் என்பது பிரசித்தம். ஆகையால் நைஷ்கர்ம்யத்தை அடைய தீவிரமுடையவன் கர்மத்தை ஆரம்பிப்பதால் என்ன பயன் என்ற சங்கை ஏற்படுகிறது. ஆகையால் கூறுகிறார்-
न च संन्यसनादेवेति । नापि संन्यसनादेव केवलात् कर्मपरित्यागमात्रादेव ज्ञानरहितात् सिद्धिं नैष्कर्म्यलक्षणां ज्ञानयोगेन निष्ठां समधिगच्छति न प्राप्नोति ॥ ४ ॥
சந்நியாசத்தினால் மட்டும் அல்ல என்று. கேவல சந்நியா சத்தினால் என்றால், ஞானமற்றகர்மபரித்யாகத்தினால் மாத்திரம் ஞானயோகத்தினால் ஏற்படும் நைஷ்கர்ம்ய லக்ஷணமான நிஷ்ட்டை யானது அடையமுடியாது.
कस्मात् पुनः कारणात् कर्मसंन्यासमात्रादेव केवलात् ज्ञानरहितात् सिद्धिं नैष्कर्म्यलक्षणां पुरुषो नाधिगच्छति इति हेत्वाकाङ्क्षायामाह —
மேலும் ஒருவன் எந்த காரணத்தினால் ஞானமற்றகர்ம ஸந்நியா சத்தினால் நைஷ்கர்ம்ய சித்தியை அடையமாட்டான் என்றகார ணத்தை அறிவதில் இச்சைக் கொண்டவனாகி இவ்வாறு கூறுகிறான்.
न हि कश्चित्क्षणमपि जातु तिष्ठत्यकर्मकृत् ।
कार्यते ह्यवशः कर्म सर्वः प्रकृतिजैर्गुणैः ॥ ५ ॥
ந ஹி கச்சித்க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத் ।
கார்யதே ஹ்யவச: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை: ॥ 5 ॥
न हि यस्मात् क्षणमपि कालं जातु कदाचित् कश्चित् तिष्ठति अकर्मकृत् सन् । कस्मात् ? कार्यते प्रवर्त्यते हि यस्मात् अवश एव अस्वतन्त्र एव कर्म सर्वः प्राणी प्रकृतिजैः प्रकृतितो जातैः सत्त्वरजस्तमोभिः गुणैः ।
ஒருவன், ஒருபொழுதும் ஒருக்ஷணமாத்திரமும் ஒரு காரியமும் செய்யாமல் இருப்பதில்லை. ஏனெனில் எல்லா பிராணிகளும் பிரகிரு தியிலிருந்து உண்டான சத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களினால் சுவாதீனமற்று கர்மங்களினால் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
अज्ञ इति वाक्यशेषः, यतो वक्ष्यति ‘गुणैर्यो न विचाल्यते’ (भ. गी. १४ । २३) इति । साङ्‍ख्यानां पृथक्करणात् अज्ञानामेव हि कर्मयोगः, न ज्ञानिनाम् ।
இங்கு எல்லாப்பிராணிகள் என்றஇடத்தில் அக்ஞானி என்று சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்போகிறார். (எல்லா அக்ஞா னிகள் என்று அர்த்தம் கொள்ளவேண்டும்) ஏன்எனில் குணைர்யோந விசால்யதே, என்று சாங்கியர்களைப் பிரித்து தனியாகக் கூறியதனால் அக்ஞானிகளுக்கே கர்மயோகம். கர்மயோகம் ஞானிகளுக்கு அல்ல.
ज्ञानिनां तु गुणैरचाल्यमानानां स्वतश्चलनाभावात् कर्मयोगो नोपपद्यते ।
ஏனெனில் குணங்களால் அசைக்கப்படாத ஞானிகளுக்கு ஸ்வ பாவமாகவே சலிக்கும் தன்மை அற்றதால் கர்மயோகம் அவர்களுக் குப் பொருந்தாது.
तथा च व्याख्यातम् ‘वेदाविनाशिनम्’ (भ. गी. २ । २१) इत्यत्र ॥ ५ ॥
இவ்வாறு வேதாவிநாசினம், என்றசுலோகத்தின் வியாக்யானத் தில் விஸ்தாரமாக விளக்கப்பட்டுள்ளது.
यत्त्वनात्मज्ञः चोदितं कर्म नारभते इति तदसदेवेत्याह —
அந்த ஒரு ஆத்மக்ஞானி அல்லாதவன் விதிக்கப்பட்ட கர்மாவை செய்யவில்லை எனில் அது சரியன்று என்று கூறுகிறார்.
कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन् ।
इन्द्रियार्थान्विमूढात्मा मिथ्याचारः स उच्यते ॥ ६ ॥
கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மனஸா ஸ்மரன் ।
இந்த்ரியார்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே ॥ 6 ॥
कर्मेन्द्रियाणि हस्तादीनि संयम्य संहृत्य यः आस्ते तिष्ठति मनसा स्मरन् चिन्तयन् इन्द्रियार्थान् विषयान् विमूढात्मा विमूढान्तःकरणः मिथ्याचारो मृषाचारः पापाचारः सः उच्यते ॥ ६ ॥
எந்த ஒரு மனிதன் கை, கால் முதலிய கர்மேந்திரியங்களை அடக்கி மனதினால் இந்திரிய போக விஷயங்களை சிந்தித்துக் கொண்டிருக்கிறானோ அவன் மோஹமடைந்த அந்தக்கரணத்தை உடையவன்(மூடாத்மா) ஆசாரம் உள்ளவன் போல் இருப்பவன், பொய்யான நடவடிக்கை உள்ளவன், பாபாசாரம் உள்ளவன் என்று கருதப்படுகிறது.
यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन ।
कर्मेन्द्रियैः कर्मयोगमसक्तः स विशिष्यते ॥ ७ ॥
யஸ்த்விந்த்ரியாணி மனஸா நியம்யாரபதேஅர்ஜுன ।
கர்மேந்த்ரியை: கர்மயோகமஸக்த: ஸ விசிஷ்யதே ॥ 7 ॥
यस्तु पुनः कर्मण्यधिकृतः अज्ञः बुद्धीन्द्रियाणि मनसा नियम्य आरभते अर्जुन कर्मेन्द्रियैः वाक्पाण्यादिभिः ।
ஹே அர்ஜுன! கர்மத்தில் அதிகாரமுடைய எந்த ஒரு அக்ஞானி புத்தி இந்திரியங்களை மனதினால் அடக்கி கர்மேந்திரி யங்களான வாக்கு, பாணி முதலியவைகளைக் கொண்டு அனுஷ்டிக்கிறானோ
किमारभते इत्याह —
அவன் என்ன அனுஷ்டிக்கிறான் எனில்? கூறுகிறார்-
कर्मयोगम् असक्तः सन् फलाभिसन्धिवर्जितः सः विशिष्यते इतरस्मात् मिथ्याचारात् ॥ ७ ॥
ஆசக்தி (பற்று) அற்றவனாய் இருந்துகொண்டு கர்மயோகத் தைக் கடைப்பிடிக்கிறான். அந்த பற்றற்றகர்மயோகி மற்றமித்யாசார முடைய கர்மயோகியை விட மேலானவன்.
यतः एवम् अतः —
எதனால் இவ்வாறோ அதனால்.
नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मणः ।
शरीरयात्रापि च ते न प्रसिध्येदकर्मणः ॥ ८ ॥
நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண: ।
சரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண: ॥ 8 ॥
नियतं नित्यं शास्त्रोपदिष्टम् , यो यस्मिन् कर्मणि अधिकृतः फलाय च अश्रुतं तत् नियतं कर्म, तत् कुरु त्वं हे अर्जुन, यतः कर्म ज्यायः अधिकतरं फलतः, हि यस्मात् अकर्मणः अकरणात् अनारम्भात् ।
எந்த கர்மத்தில் சுருதியின் பலன் கூறவில்லையோ அந்த நித்திய கர்மத்தின் அதிகாரிக்கு அந்த நித்திய கர்மம் அவசியம் செய்யப்பட வேண்டிய கர்மம். ஹே அர்ஜுனா! அதனால் நீ அவசியம் செய்ய வேண்டும். இந்த கர்மத்தை செய்யாததைக் காட்டிலும் செய்ததற்கு அதிகபலன் ஏற்படும்.
कथम् शरीरयात्रा शरीरस्थितिः अपि च ते तव न प्रसिध्येत् प्रसिद्धिं न गच्छेत् अकर्मणः अकरणात् । अतः दृष्टः कर्माकर्मणोर्विशेषो लोके ॥ ८ ॥
எப்படி ஒரு கர்மமும் செய்யாமல் சரீரம் நிலைத்திருக்காது என்பது பிரசித்தம். கர்மம் செய்வதற்கும், செய்யாததற்கும் உலகில் வேறுபாடு காணப்படுகிறது.
यच्च मन्यसे बन्धार्थत्वात् कर्म न कर्तव्यमिति तदप्यसत् । कथम् —
பந்தத்திற்கு காரணமாய்‌ இருப்பதால்‌ கர்மம்‌ செய்யவேண்டிய தில்லை என்று நீ நினைத்தால்‌ அது சரியல்ல. எவ்வாறு எனில்‌.
यज्ञार्थात्कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः ।
तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर ॥ ९ ॥
யக்ஞார்தாத்கர்மணோலின்யத்ர லோகோலியம் கர்மபந்தன: ।
ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர ॥ 9 ॥
‘यज्ञो वै विष्णुः’ (तै. स. १ । ७ । ४) इति श्रुतेः यज्ञः ईश्वरः, तदर्थं यत् क्रियते तत् यज्ञार्थं कर्म । तस्मात् कर्मणः अन्यत्र अन्येन कर्मणा लोकः अयम् अधिकृतः कर्मकृत् कर्मबन्धनः कर्म बन्धनं यस्य सोऽयं कर्मबन्धनः लोकः, न तु यज्ञार्थात् । अतः तदर्थं यज्ञार्थं कर्म कौन्तेय, मुक्तसङ्गः कर्मफलसङ्गवर्जितः सन् समाचर निर्वर्तय ॥ ९ ॥
யக்ஞோவை விஷ்ணு: என்று சுருதி வசனம் இருப்பதால் சுருதி யில் யக்ஞம் ஈஸ்வரன் என்று அறிகிறோம். அந்த ஈஸ்வரனின் பொருட்டு செய்யப்படும் யக்ஞத்திற்கான கர்மம். ஆகையால் மற்றகர் மங்களை செய்யும் அதிகாரி கர்மமாகிறபந்தத்தை அடைகிறான். ஈஸ்வரனுக்காக செய்யப்பட்ட கர்மத்தால் கர்மபந்தம் ஏற்படுவதில்லை. ஆகையால் ஹே கௌந்தேய! கர்மத்தின் பயனில் பற்றற்றவனாய் ஈஸ்வரார்ப்பணமாக கர்மத்தைச் செய்து வர வேண்டும்.
इतश्च अधिकृतेन कर्म कर्तव्यम् —
இக்காரணத்தால் கர்மத்தில் அதிகாரமுடையவன் அவசியம் செய்யவேணடும்.
सहयज्ञाः प्रजाः सृष्ट्वा पुरोवाच प्रजापतिः ।
अनेन प्रसविष्यध्वमेष वोऽस्त्विष्टकामधुक् ॥ १० ॥
ஸஹயக்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி: ।
அநேன ப்ரஸவிஷ்யத்வமே ஷ வோSஸ்த்விஷ்டகாமதுக் ॥ 10 ॥
सहयज्ञाः यज्ञसहिताः प्रजाः त्रयो वर्णाः ताः सृष्ट्वा उत्पाद्य पुरा पूर्वं सर्गादौ उवाच उक्तवान् प्रजापतिः प्रजानां स्रष्टा अनेन यज्ञेन प्रसविष्यध्वं प्रसवः वृद्धिः उत्पत्तिः तं कुरुध्वम् । एष यज्ञः वः युष्माकम् अस्तु भवतु इष्टकामधुक् इष्टान् अभिप्रेतान् कामान् फलविशेषान् दोग्धीति इष्टकामधुक् ॥ १० ॥
ஸ்ருஷ்ட்டியின் ஆதிகாலத்தில் யக்ஞத்துடன் பிரஜைகளை என்றால் மூவர்ணத்தால் (பிராஹ்மண, க்ஷத்ரிய, வைசியர்கள்) ஸ்ருஷ்ட்டி செய்து ஜகத்தை உண்டாக்கிய ப்ரஜாபதியானவர் கூறினார், நீங்கள் யக்ஞத்தினால் அபிவிருத்தி செய்யுங்கள். இந்த யக்ஞம் உங்களுக்கு விரும்பிய காமனைகளைச் சுரக்கும் என்றால் நீங்கள் விரும்பிய பல ரூபமான போகங்களைத் தரக்கூடியது.
कथम् —
எவ்வாறு
देवान्भावयतानेन ते देवा भावयन्तु वः ।
परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ ॥ ११ ॥
தேவாந் பாவயதானேன தே தேவா பாவயந்து வ: ।
பரஸ்பரம் பாவயந்த: ச்ரேய: பரமவாப்ஸ்யத ॥ 11 ॥
देवान् इन्द्रादीन् भावयत वर्धयत अनेन यज्ञेन । ते देवा भावयन्तु आप्याययन्तु वृष्ट्यादिना वः युष्मान् । एवं परस्परम् अन्योन्यं भावयन्तः श्रेयः परं मोक्षलक्षणं ज्ञानप्राप्तिक्रमेण अवाप्स्यथ । स्वर्गं वा परं श्रेयः अवाप्स्यथ ॥ ११ ॥
இந்திராதி தேவர்களை (யக்ஞத்தினால்) விருத்தியடையச் செய்யுங்கள் என்றால் அவர்களை போஷியுங்கள். சந்தோஷப்படுத் துங்கள். அதனால் (திருப்தி அடைந்த தேவர்கள்) அவர்கள் மழை முதலியவைகளால் உங்களை மேன்மைப்படுத்துவார்கள். இவ்வாறு பரஸ்பரம் போஷிப்பதால் நீங்கள் ஞானம் அடைவதின் மூலமாக மோக்ஷமாகிய பரமஸ்ரேயஸ்ஸை அடைவீர்கள். அல்லது ஸ்வர்க்க ரூபமான ஸ்ரேயஸ்ஸை அடைகிறவர்களாவீர்கள்
किञ्च—
மேலும்
इष्टान्भोगान्हि वो देवा दास्यन्ते यज्ञभाविताः ।
तैर्दत्तानप्रदायैभ्यो यो भुङ्क्ते स्तेन एव सः ॥ १२ ॥
இஷ்டாந் போகான்ஹி வோ தேவா தாஸ்யந்தே யக்ஞபாவிதா: ।
தைர்தத்தானப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேன ஏவ ஸ: ॥ 12 ॥
इष्टान् अभिप्रेतान् भोगान् हि वः युष्मभ्यं देवाः दास्यन्ते वितरिष्यन्ति स्त्रीपशुपुत्रादीन् यज्ञभाविताः यज्ञैः वर्धिताः तोषिताः इत्यर्थः ।
யக்ஞத்தினால் திருப்தி (விருத்தி) அடைந்த தேவர்கள் உங்களுக்கு ஸ்த்ரீகள், பசுக்கள், புத்திரர்கள் முதலிய இஷ்ட்ட போகங்களை அளிப்பார்கள்.
तैः देवैः दत्तान् भोगान् अप्रदाय अदत्त्वा, आनृण्यमकृत्वा इत्यर्थः, एभ्यः देवेभ्यः, यः भुङ्क्ते स्वदेहेन्द्रियाण्येव तर्पयति स्तेन एव तस्कर एव सः देवादिस्वापहारी ॥ १२ ॥
அந்த தேவர்களால் அளிக்கப்பட்ட போகங்களை அவர்களுக்கு அளிக்காமல் அதாவது கடனைத் தீர்க்காமல் எவன் தன் தேஹத்தை யும் இந்திரியங்களையும் திருப்தி செய்கிறானோ அவன் தேவர் முதலானோர்களுடைய சொத்தைப் பறித்துகொண்ட திருடனே.
ये पुनः —
ஆனால் எவர்கள் :
यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः ।
भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात् ॥ १३ ॥
யக்ஞசிஷ்டாசிந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை: ।
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத் ॥ 13 ॥
देवयज्ञादीन् निर्वर्त्य तच्छिष्टम् अशनम् अमृताख्यम् अशितुं शीलं येषां ते यज्ञशिष्टाशिनः सन्तः मुच्यन्ते सर्वकिल्बिषैः सर्वपापैः चुल्ल्यादिपञ्चसूनाकृतैः प्रमादकृतहिंसादिजनितैश्च अन्यैः ।
தேவயக்ஞாதிகளை செய்தபின் அதில் மீதமான (சேஷமான) அமிர்தமாகிய அன்னத்தை போஜனம் செய்யும் யக்ஞசிரேஷ்டர்கள் (மேலானோர்) அடுப்பு முதலிய இடங்களில் பிராணிகளுக்கு நம்மை அறியாமலே உண்டாகும் எல்லா பாபங்களில் (5 விதமான) பாபங்களி லிருந்தும் மற்றும் பிரமாதத்தினால் மற்றவர்களுக்கு ஏற்படும் ஹிம்சை முதலான பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான்.
ये तु आत्मम्भरयः, भुञ्जते ते तु अघं पापं स्वयमपि पापाः — ये पचन्ति पाकं निर्वर्तयन्ति आत्मकारणात् आत्महेतोः ॥ १३ ॥
எவர்கள் தங்களின் உடலைப் பேணுவதின் பொருட்டு தங்களுக் காகவே சமையல் செய்து கொள்கிறார்களோ அவர்கள் பாபிகளாகி பாபத்தையே புஜிக்கிறார்கள்.
इतश्च अधिकृतेन कर्म कर्तव्यम् जगच्चक्रप्रवृत्तिहेतुर्हि कर्म । कथमिति उच्यते —
ஆகையால் விதிதகர்மாவை அவசியம் செய்யவேண்டும் ஜகத்தாகிய சக்கரத்தை பிரவிருத்திப்பதற்குக் காரணம் கர்மா, அது எவ்வாறு என்று கூறப்படுகிறது:
अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भवः ।
यज्ञाद्भवति पर्जन्यो यज्ञः कर्मसमुद्भवः ॥ १४ ॥
அன்னாத்பவந்தி பூதானி பர்ஜந்யாதன்னஸம்பவ: ।
யக்ஞாத்பவதி பர்ஜன்யோ யக்ஞ: கர்மஸமுத்பவ: ॥ 14 ॥
अन्नात् भुक्तात् लोहितरेतःपरिणतात् प्रत्यक्षं भवन्ति जायन्ते भूतानि । पर्जन्यात् वृष्टेः अन्नस्य सम्भवः अन्नसम्भवः । यज्ञात् भवति पर्जन्यः ।
பிராணிகளின் உணவிலிருந்து ரக்தம், வீரிய ரூபமாக பரிணமித்து அதிலிருந்து பிராணிகள் பிரத்யக்ஷமாக உற்பத்தியாகிறது. மழையி னால் அன்னம் உற்பத்தியாகிறது. யக்ஞத்தினால் மழை உண்டாகிறது.
अग्नौ प्रास्ताहुतिः सम्यगादित्यमुपतिष्ठते ।
அக்னௌ ப்ராஸ்தாஹுதி: ஸம்யக் ஆதித்யமுபதிஷ்டதே
आदित्याज्जायते वृष्टिर्वृष्टेरन्नं ततः प्रजाः ॥-
ஆதித்யாஜ்ஜாயதே வ்ருஷ்டிர்வ்ருஷ்டேரன்னம் தத: ப்ரஜா:
(मनु. ३ । ७६) इति स्मृतेः ।
அக்னியில் விதிபூர்வகமாக போடப்பட்ட ஆகுதியானது சூரியனை அடைந்து அதிலிருந்து மழை உண்டாகிறது. மேலும் அன்னத்திலிருந்து பிரஜைகள் உண்டாகிறார்கள் என்பது ஸ்மிருதி வசனம்.
यज्ञः अपूर्वम् । स च यज्ञः कर्मसमुद्भवः ऋत्विग्यजमानयोश्च व्यापारः कर्म, तत् समुद्भवः यस्य यज्ञस्य अपूर्वस्य स यज्ञः कर्मसमुद्भवः ॥ १४ ॥
ரித்விக், யஜமானன் இவர்களுடைய வியாபாரம் கர்மமாகும். மேலும் கர்மத்திலிருந்து எது உண்டாகிறதோ அது அபூர்வ ரூபமாகிய யக்ஞம் என்னவெனில், அந்த அபூர்வரூப யக்ஞமானது கர்மத்திலி ருந்து உண்டானது.
तत् च-
மேலும்
कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षरसमुद्भवम् ।
तस्मात्सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम् ॥ १५ ॥
கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம் ।
தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யக்ஞே ப்ரதிஷ்டிதம் ॥ 15 ॥
कर्म ब्रह्मोद्भवं ब्रह्म वेदः सः उद्भवः कारणं प्रकाशको यस्य तत् कर्म ब्रह्मोद्भवं विद्धि विजानीहि । ब्रह्म पुनः वेदाख्यम् अक्षरसमुद्भवम् अक्षरं ब्रह्म परमात्मा समुद्भवो यस्य तत् अक्षरसमुद्भवम् । ब्रह्म वेद इत्यर्थः ।
கர்மமானது வேதரூபமான பிரஹ்மத்திலிருந்து உண்டானது என்றால் இதன் பொருள் கர்மத்தின் உற்பத்திக்குக் காரணம் வேதமாகும் என்று அறி. இவ்வாறு அறிந்த வேத ரூபமான பிரஹ்ம மானது அக்ஷரத்திலிருந்து உண்டானது. இதன் பொருள் என்னவெனில் அவிநாசியாயும், பரப்ரஹ்மாமாயுமுள்ள பரமாத்மா வேதத்தின் உற்பத்திக்குக் காரணமாகிறது.
यस्मात् साक्षात् परमात्माख्यात् अक्षरात् पुरुषनिःश्वासवत् समुद्भूतं ब्रह्म तस्मात् सर्वार्थप्रकाशकत्वात् सर्वगतम् ।
எதனால் வேதரூப பிரஹ்மமானது சாக்ஷாத் பரமாத்மா எனப்படும் அக்ஷர புருஷனிடத்தில் மூச்சுக்காற்று போல் உத்பன் னமாகிறதோ அதனால் எல்லா அர்த்தங்களையும் பிரகாசிக்கச் செய்வதால் சர்வகதம் எனப்படுகிறது.
सर्वगतमपि सत् नित्यं सदा यज्ञविधिप्रधानत्वात् यज्ञे प्रतिष्ठितम् ॥ १५ ॥
யக்ஞவிதிகளுக்கு வேதமானது பிரதானமாய் இருப்பதால் அது சர்வகதமாய் எப்பொழுதும் யக்ஞத்தில் நிலைபெற்றிருக்கிறது.
एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयतीह यः ।
अघायुरिन्द्रियारामो मोघं पार्थ स जीवति ॥ १६ ॥
ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நானுவர்தயதீஹ ய: ।
அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி ॥ 16 ॥
एवम् इत्थम् ईश्वरेण वेदयज्ञपूर्वकं जगच्चक्रं प्रवर्तितं न अनुवर्तयति इह लोके यः कर्मणि अधिकृतः सन् अघायुः अघं पापम् आयुः जीवनं यस्य सः अघायुः, पापजीवनः इति यावत् । इन्द्रियारामः इन्द्रियैः आरामः आरमणम् आक्रीडा विषयेषु यस्य सः इन्द्रियारामः मोघं वृथा हे पार्थ, स जीवति ॥
இவ்வாறு ஈஸ்வரனால் வேதம் யக்ஞமூலமாக இந்த ஜகத்சக்தி பிரவிர்த்திக்கப்பட்டதை கர்மத்தில் அதிகாரியாய் இருந்தும் அனுரிக் கவில்லையோ அவர்கள் பாப ஜீவனத்தை உடையவர்களாகிறார்கள். மேலும் இந்திரியாராம என்றால் இந்திரியங்கள் மூலமாக விஷயங்க ளிலேயே ரமித்துக்கொண்டிருப்பவர்கள் ஆகிய பாபிகள் ஜீவனம் வீணாகிறது.
तस्मात् अज्ञेन अधिकृतेन कर्तव्यमेव कर्मेति प्रकरणार्थः ।
ஆகையால் அக்ஞானியாகி கர்மத்தில் அதிகாரமுடையவ னுக்கே கர்மம் அவசியம் செய்யவேண்டும் என்பது இந்த பிரகரணத் தின் (சந்தர்ப்பத்தின்) பொருள்.
प्राक् आत्मज्ञाननिष्ठायोग्यताप्राप्तेः तादर्थ्येन कर्मयोगानुष्ठानम् अधिकृतेन अनात्मज्ञेन कर्तव्यमेवेत्येतत् ‘न कर्मणामनारम्भात्’ (भ. गी. ३ । ४) इत्यत आरभ्य ‘शरीरयात्रापि च ते न प्रसिध्येदकर्मणः’ (भ. गी. ३ । ८) इत्येवमन्तेन प्रतिपाद्य -
கர்மத்தில் அதிகாரமுடைய அநாத்ம புருஷனால் ஆத்மஞானத் திற்கான யோக்யதை அடைவதற்குமுன் அதை அடைவதின் பொருட்டு கர்மயோகம் அவசியம் கடைபிடிக்கவேண்டும். இதையே, न कर्मणामनारम्भात्, என்று தொடங்கி शरीरयात्रापि च ते न प्रसिध्येदकर्मणः என்று இவ்வாறு முடியக் கூறி-
‘यज्ञार्थात् कर्मणोऽन्यत्र’ (भ. गी. ३ । ९) इत्यादिना ‘मोघं पार्थ स जीवति’ (भ. गी. ३ । १६) इत्येवमन्तेनापि ग्रन्थेन प्रासङ्गिकम् अधिकृतस्य अनात्मविदः कर्मानुष्ठाने बहु कारणमुक्तम् । तदकरणे च दोषसङ्कीर्तनं कृतम् ॥ १६ ॥
यज्ञार्थात्कर्मणोऽन्यत्र என்று ஆரம்பித்து मोघं पार्थ स जीवति என்று இவ்வாறு கிரந்தத்தில் கர்மத்தில் அதிகாரமுடைய அநாத்ம வித்திற்கு கர்மானுஷ்ட்டானம் அவசியம் என்பதில் அநேககாரணங்கள் கூறப்பட்டுள்ளது. அவ்வாறேகர்மாநுஷ்டானம் செய்யாவிடில் அதனால் ஏற்படும் தோஷமும் கூறப்பட்டுள்ளது.
एवं स्थिते किमेवं प्रवर्तितं चक्रं सर्वेणानुवर्तनीयम् , आहोस्वित् पूर्वोक्तकर्मयोगानुष्ठानोपायप्राप्याम् अनात्मविदः ज्ञानयोगेनैव निष्ठाम् आत्मविद्भिः साङ्ख्यैः अनुष्ठेयामप्राप्तेनैव, इत्येवमर्थम् अर्जुनस्य प्रश्नमाशङ्क्य ।
இவ்வாறு இருக்கும்பொழுது இவ்வாறு பிரவிர்த்திக்கின்றஸம் ஸார சக்கிரமானது எல்லோராலும் அநுஷ்டிக்கவேண்டியதா? அல்லது ஆத்மாவை அறியாதவன் முன் கூறப்பட்ட கர்மானுஷ்ட்டான ரூப உபாயத்தினால் அடையக்கூடியதும், ஆத்மக்ஞானிகளால் சாங்கியர்க ளால் அனுஷ்ட்டிக்கத்தக்கதுமான ஞான யோக நிஷ்ட்டையை பெறுவ தால் மாத்திரமே அநுஷ்டிக்க வேண்டியதா? என்று இவ்வாறு இந்த கிரந்தத்தின் பொருள் நன்றாக விளங்கும்படி அர்ஜுனனுடைய வினாவாக பகவான் ஸ்வயமாகவே சங்கித்துக் கூறுகிறார்.
எந்த அந்த பிரஸித்த ஆத்மா உள்ளதோ அதை அறிந்து தன்னு டைய மித்யா ஞானத்தை நீக்கிய மஹாத்மாக்களாகிய பிராமணர்கள் யக்ஞத்தை அனுஷ்டிப்பதற்கு அவசியமான புத்திராதிகளில் ஆசை அற்றவர்களாகி சரீர யாத்திரைக்குத் தேவையான பிக்ஷை முதலான கர்மங்களைச் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஆத்மஞானிகளுக்கு ஆத்ம ஞான நிஷ்ட்டை தவிர வேறு செய்யவேண்டிய கர்மாக்கள் ஒன்றுமில்லை. (பிருஹதாரண்யக சுருதி) இந்த சுருதி தாத்பரியத்தை இந்த கீதா சாஸ்திரத்தில் பிரதிபாதிப்பதற்கு (எடுத்து விளக்குவதற்கு) இச்சித்தவராகி பகவான் இவ்வாறு கூறலானார்.
यस्त्वात्मरतिरेव स्यादात्मतृप्तश्च मानवः ।
आत्मन्येव च सन्तुष्टस्तस्य कार्यं न विद्यते ॥ १७ ॥
யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதாத்மத்ருப்தச்ச மானவ: ।
ஆத்மன்யேவ ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்யதே ॥ 17 ॥
यः तु सांख्य आत्मज्ञाननिष्ठः आत्मरतिः आत्मन्येव रतिः न विषयेषु यस्य सः आत्मरतिरेव स्यात् भवेत् आत्मतृप्तश्च आत्मनैव तृप्तः न अन्नरसादिना सः मानवः मनुष्यः संन्यासी आत्मन्येव च सन्तुष्टः । सन्तोषो हि बाह्यार्थलाभे सर्वस्य भवति, तमनपेक्ष्य आत्मन्येव च सन्तुष्टः सर्वतो वीततृष्ण इत्येतत् । यः ईदृशः आत्मवित् तस्य कार्यं करणीयं न विद्यते नास्ति इत्यर्थः ॥ १७ ॥
எந்த ஆத்மஞானநிஷ்ட்ட சாங்கிய யோகி கேவலம் ஆத்மாவி டத்திலேயே ரமிக்கின்றானோ அவன் ஆத்மரதி: அவன் மற்றவிஷ யங்களில் ரமிக்கமாட்டான். அந்த சந்நியாசி ஆத்மாவிடத்திலேயே திருப்தி அடைகிறான் அன்னாதிகளில் அல்ல. மற்றஎல்லோருக்கும் வெளிவிஷயங்களின் அடைவால் சந்தோஷம் அடைகிறார்கள். ஆனால் சந்நியாசி அதை விரும்பாமல் தன் ஆத்மாவிடத்திலேயே சந்தோஷமடைந்து எல்லாவற்றிலும் ஆசை அற்றவனாய் இருக்கி றான் என்பது. இவ்வாறு எந்த ஒரு ஆத்மக்ஞானி இருக்கிறானோ அவனுக்கு செய்ய வேண்டிய கர்மா ஒன்றும் இல்லை என்பது பொருள்.
किं च —
மேலும்
नैव तस्य कृतेनार्थो नाकृतेनेह कश्चन ।
न चास्य सर्वभूतेषु कश्चिदर्थव्यपाश्रयः ॥ १८ ॥
நைவ தஸ்ய க்ருதேநார்தோ நாக்ருதேனேஹ கச்சன ।
ந சாஸ்ய ஸர்வபூதேஷு கச்சிதர்தவ்யபாச்ரய: ॥ 18 ॥
नैव तस्य परमात्मरतेः कृतेन कर्मणा अर्थः प्रयोजनमस्ति ।
எப்பொழுதும் பரமாத்மாவினிடத்திலேயே ரமித்திருப்பவனுக்கு செய்யும் கர்மங்களினால் பிரயோஜனமில்லை.
अस्तु तर्हि अकृतेन अकरणेन प्रत्यवायाख्यः अनर्थः ।
சரி, அவ்வாறாகில் செய்யவேண்டிய கர்மாவை செய்யாததினால் உண்டாகும் அநர்த்தம் (பாபம்) ஏற்படும் எனில்.
न अकृतेन इह लोके कश्चन कश्चिदपि प्रत्यवायप्राप्तिरूपः आत्महानिलक्षणो वा नैव अस्ति । न च अस्य सर्वभूतेषु ब्रह्मादिस्थावरान्तेषु भूतेषु कश्चित् अर्थव्यपाश्रयः ।
அவனுக்கு இந்த உலகில் செய்யவேண்டிய கர்மாவை செய்யாத தினால் குற்றம் (பாபம்) வாயிலாக ஏற்படும் ஆத்மஹானி (ஆத்மாவை அறியாமை) ரூபமான அநர்த்தமானது அவனுக்கு ஏற்படாது. பிரஹ்ம்மா முதல் ஸ்தாவரம் வரை உள்ள விஷயங்களிடத்து ஒரு பிரயோஜனத்திற்காக சார்ந்து இருக்க வேண்டியதில்லை.
प्रयोजननिमित्तक्रियासाध्यः व्यपाश्रयः व्यपाश्रयणम् आलम्बनं कञ्चित् भूतविशेषमाश्रित्य न साध्यः कश्चिदर्थः अस्ति, येन तदर्था क्रिया अनुष्ठेया स्यात् ।
பிரயோஜனத்துடன் கூடிய கிரியா சாத்திய ஆஸ்ரயமானது வ்ய பாஸ்ரய: எனப்படும். ஆனால் இந்த ஞானிக்கு ஆச்ரயித்து (சார்ந்து) பிரயோஜனம் ஏற்படுவதில்லை. எந்த பிரயோஜனத்தின் பொருட்டு அவன் கர்மத்தை அனுஷ்டிக்கவேண்டும்?.
न त्वम् एतस्मिन् सर्वतःसम्प्लुतोदकस्थानीये सम्यग्दर्शने वर्तसे ॥ १८ ॥
நீ இங்கு எங்கும் பரிபூர்ணமாக நிறைந்த நீர்பெருக்கத்திற்கு ஒப் பான சம்யக்தர்சனத்தில் (ஆத்ம ஸ்வரூபத்திலேயே) நிலை பெற்றவ னாக இல்லை.
यतः एवम् —
எதனால் இவ்வாறு (இருக்கிறாயோ)
तस्मादसक्तः सततं कार्यं कर्म समाचर ।
असक्तो ह्याचरन्कर्म परमाप्नोति पूरुषः ॥ १९ ॥
தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர ।
அஸக்தோ ஹ்யாசரன்கர்ம பரமாப்நோதி பூருஷ: ॥ 19 ॥
तस्मात् असक्तः सङ्गवर्जितः सततं सर्वदा कार्यं कर्तव्यं नित्यं कर्म समाचर निर्वर्तय । असक्तो हि यस्मात् समाचरन् ईश्वरार्थं कर्म कुर्वन् परं मोक्षम् आप्नोति पूरुषः सत्त्वशुद्धिद्वारेण इत्यर्थः ॥ १९ ॥
ஆகையால் பற்றற்று எப்பொழுதும் நீ செய்யவேண்டிய நித்ய கர்மாவை நன்றாகச் செய்து வரவேண்டும். பற்றற்று கர்மாக்களை செய்பவன் என்றால் ஈஸ்வரார்ப்பணமாக நித்யகர்மாவை செய்யும் புருஷன் அந்தக்கரணசுத்தி வாயிலாக மோக்ஷரூபமான பரமபதத்தை அடைகிறான்.
यस्मात् च —
எதனால் எனில்
कर्मणैव हि संसिद्धिमास्थिता जनकादयः ।
लोकसङ्ग्रहमेवापि सम्पश्यन्कर्तुमर्हसि ॥ २० ॥
கர்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜநகாதய: ।
லோகஸங்க்ரஹமேவாபி ஸம்பச்யந் கர்துமர்ஹஸி ॥ 20 ॥
कर्मणैव हि यस्मात् पूर्वे क्षत्रियाः विद्वांसः संसिद्धिं मोक्षं गन्तुम् आस्थिताः प्रवृत्ताः । के ? जनकादयः जनकाश्वपतिप्रभृतयः ।
முன்பு ஜனகர், அச்வபதி முதலிய க்ஷத்திரிய வித்வான்கள் கர்மத்தின் வாயிலாக மோக்ஷத்தை அடைவதின் பொருட்டு அதில் ஈடுபட்டார்கள்.
यदि ते प्राप्तसम्यग्दर्शनाः, ततः लोकसङ्ग्रहार्थं प्रारब्धकर्मत्वात् कर्मणा सहैव असंन्यस्यैव कर्म संसिद्धिमास्थिता इत्यर्थः । अथ अप्राप्तसम्यग्दर्शनाः जनकादयः, तदा कर्मणा सत्त्वशुद्धिसाधनभूतेन क्रमेण संसिद्धिमास्थिता इति व्याख्येयः श्लोकः ।
அவர்கள் யதார்த்த ஞானத்தை அடைந்தவர்களாய் இருந்தால் அவர்கள் உலக சங்கிரஹத்தின் பொருட்டு கர்மத்துடன் கூடிய சந்நி யாசம் மேற்கொள்ளாமலே மோக்ஷத்தை அடைகிறார்கள். அவர்கள் யதார்த்த ஞானத்தை அடையாதவர்களாய் இருந்தார்களெனில் அப்பொழுது அவர்கள் கர்மத்தின் மூலமாக சித்த சுத்தியை அடைந்து கிரமமாக மோக்ஷத்தை அடைவார்கள் என்பது இந்த ஸ்லோகத்தின் வ்யாக்யானம்.
अथ मन्यसे पूर्वैरपि जनकादिभिः अजानद्भिरेव कर्तव्यं कर्म कृतम् ; तावता नावश्यमन्येन कर्तव्यं सम्यग्दर्शनवता कृतार्थेनेति ।
ஜனகாதி முன்னோர்களும் ஆத்மதத்துவத்தை அறியாத பொழுதுதான் செய்யவேண்டிய கர்மத்தை செய்தார்கள். ஆகையால் ஆத்மஞானத்தை அடைந்த கிருதார்த்தன் அவசியம் நித்யகர்மாவை செய்யவேண்டியதில்லை என்று நீ நினைத்தாலும்.
तथापि प्रारब्धकर्मायत्तः त्वं लोकसङ्ग्रहम् एव अपि लोकस्य उन्मार्गप्रवृत्तिनिवारणं लोकसङ्ग्रहः तमेवापि प्रयोजनं सम्पश्यन् कर्तुम् अर्हसि ॥ २० ॥
பிராரப்த கர்மத்திற்கு அதீனமாய் உள்ள நீ உலகம் தீயவழியில் செல்லுதலை தடுத்தல் என்கிறலோக சங்க்ரஹார்த்தம் என்றபிரயோ ஜனத்தை நன்றாக சிந்தித்து கர்மத்தைச் செய்யவேண்டும்.
लोकसङ्ग्रहः किमर्थं कर्तव्य इत्युच्यते —
லோக சங்கிரஹத்தை எவர் செய்வதற்கு தகுதி உடையவர்? எவ்வாறு செய்யவேண்டும்? என்பதைக் கூறுவோம்.
यद्यदाचरति श्रेष्ठस्तत्तदेवेतरो जनः ।
स यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते ॥ २१ ॥
யத்யதாசரதி ச்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜன: ।
ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே ॥ 21 ॥
यद्यत् कर्म आचरति करोति श्रेष्ठः प्रधानः तत्तदेव कर्म आचरति इतरः अन्यः जनः तदनुगतः ।
பெரியோர்கள் (ச்ரேஷ்ட்டர்கள்) எந்த எந்த கர்மத்தைச் செய்கி றார்களோ அல்லது எந்த எந்த கர்மாவிலே நிலை பெற்றிருக்கிறார் களோ அந்த கர்மத்தையே மற்றஜனங்கள் பின்பற்றுகிறார்கள்.
किं च स श्रेष्ठः यत् प्रमाणं कुरुते लौकिकं वैदिकं वा लोकः तत् अनुवर्तते तदेव प्रमाणीकरोति इत्यर्थः ॥ २१ ॥
அந்த சிறந்த மனிதன் லௌகிக விஷயத்திலாயினும், வைதிக விஷயத்திலாயினும் எதைப் பிரமாணமாக கொள்கிறானோ அதையே உலகம் பின்பற்றுகிறது. அதையே பிரமாணமாகக் கொள்கிறது என்று பொருள்.
यदि अत्र ते लोकसङ्ग्रहकर्तव्यतायां विप्रतिपत्तिः तर्हि मां किं न पश्यसि ? —
உனக்கு இந்த லோக சங்க்ரஹார்த்த விஷயத்தில் சந்தேஹம் இருந்தால் என்னை ஏன் பார்க்கவில்லை?
न मे पार्थास्ति कर्तव्यं त्रिषु लोकेषु किञ्चन ।
नानवाप्तमवाप्तव्यं वर्त एव च कर्मणि ॥ २२ ॥
ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சன ।
நாநாவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி ॥ 22 ॥
न मे मम पार्थ न अस्ति न विद्यते कर्तव्यं त्रिषु अपि लोकेषु किञ्चन किञ्चिदपि । कस्मात् ? न अनवाप्तम् अप्राप्तम् अवाप्तव्यं प्रापणीयम् , तथापि वर्ते एव च कर्मणि अहम् ॥ २२ ॥
ஹே பார்த்த! மூன்று உலகிலும் எனக்கு செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை. ஏனெனில் எனக்கு அடையாதது ஒன்றும் அடைய வேண்டியதாய் இல்லை. இவ்வாறு இருப்பினும் நான் கர்மத்தில் நிலைபெற்றிருக்கிறேன்.
यदि ह्यहं न वर्तेय जातु कर्मण्यतन्द्रितः ।
मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः ॥ २३ ॥
யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்யதந்த்ரித: ।
மம வர்த்மானுவர்தந்தே மனுஷ்யா: பார்த ஸர்வச: ॥ 23 ॥
यदि हि पुनः अहं न वर्तेय जातु कदाचित् कर्मणि अतन्द्रितः अनलसः सन् मम श्रेष्ठस्य सतः वर्त्म मार्गम् अनुवर्तन्ते मनुष्याः हे पार्थ, सर्वशः सर्वप्रकारैः ॥ २३ ॥
ஏன் எனில் நான் எப்பொழுதாவது நான் சோம்பல் அற்றவனாய் கர்மத்தில் ஈடுபடாவிட்டால் மேலோனாகிறஎன்னுடைய மார்க்கத்தை எவ்வகையிலாவது பின்பற்றுவார்கள்
तथा च को दोष इति आह -
அவ்வாறு இருந்தால் என்ன தோஷம் ஏற்படும் என்று கூறுகிறார்-
उत्सीदेयुरिमे लोका न कुर्यां कर्म चेदहम् ।
सङ्करस्य च कर्ता स्यामुपहन्यामिमाः प्रजाः ॥ २४ ॥
உத்ஸீதேயுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம் ।
ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா: ப்ரஜா: ॥ 24 ॥
उत्सीदेयुः विनश्येयुः इमे सर्वे लोकाः लोकस्थितिनिमित्तस्य कर्मणः अभावात् न कुर्यां कर्म चेत् अहम् । किञ्च, सङ्करस्य च कर्ता स्याम् । तेन कारणेन उपहन्याम् इमाः प्रजाः । प्रजानामनुग्रहाय प्रवृत्तः उपहतिम् उपहननं कुर्याम् इत्यर्थः । मम ईश्वरस्य अननुरूपमापद्येत ॥ २४ ॥
நான் கர்மத்தை அனுஷ்ட்டிக்காவிடில் இந்த எல்லாலோகங் களும் நிலை பெற்றிருத்தலுக்கு காரணமாகிய கர்மம் இல்லாமையால் (எல்லா லோகங்களும்) நசித்துவிடும். மேலும் நான் ஜாதிக் கலப்பை செய்தவனுமாவேன். இந்த காரணத்தினாலே நான் பிராணிகளை கெடுத்தவனாவேன், பிராணிகளை அனுக்கிரஹிப்பதற்கு பிரவிர்த்தித்த நான் அவர்களுக்கு கெடுதல் செய்தவனுமாவேன், ஈஸ்வரனாகிய எனக்கு அது பொருந்தாது.
यदि पुनः अहमिव त्वं कृतार्थबुद्धिः, आत्मवित् अन्यो वा, तस्यापि आत्मनः कर्तव्याभावेऽपि परानुग्रह एव कर्तव्य इत्याह —
நீயாவாது அல்லது வேறு ஒருவனாவது என்னைப்போல் ஆத் மாவை அறிந்ததாலும், க்ருதார்த்த புத்தியை அடைந்திருந்தாலும், அவனுக்கு செய்யவேண்டியது ஒன்றும் இல்லாவிடினும் மற்றவர்களை அனுகிரஹிப்பதின் பொருட்டு கர்மம் அவசியம் செய்யவேண்டும்.
सक्ताः कर्मण्यविद्वांसो यथा कुर्वन्ति भारत ।
कुर्याद्विद्वांस्तथासक्तश्चिकीर्षुर्लोकसङ्ग्रहम् ॥ २५ ॥
ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத ।
குர்யாத்வித்வாம்ஸ்ததாஸக்தச்சிகீர்ஷுஷுர்லோகஸங்க்ரஹம் ॥ 25 ॥
सक्ताः कर्मणि ‘अस्य कर्मणः फलं मम भविष्यति’ इति केचित् अविद्वांसः यथा कुर्वन्ति भारत, कुर्यात् विद्वान् आत्मवित् तथा असक्तः सन् ।
ஹே பாரத! எந்த சில அவித்வான்கள் எனக்கு இந்த கர்மத்தினு டைய பலன் கிடைக்கவேண்டும் என்றபற்றுடன் கர்மத்தை செய்வார் களோ அவ்வாறேவித்வானாகிய ஆத்மவித் (ஆத்மாவை அறிந்தவன்) பற்றற்றவனாய் கர்மத்தை செய்ய வேண்டும்.
तद्वत् किमर्थं करोति ? तत् शृणु — चिकीर्षुः कर्तुमिच्छुः लोकसङ्ग्रहम् ॥ २५ ॥
எதன் பொருட்டு அவ்வாறு செய்கிறான் எனில், உலக நன்மையின் பொருட்டு. (லோகசங்கிரஹார்த்தம்.
एवं लोकसङ्ग्रहं चिकीर्षोः न मम आत्मविदः कर्तव्यमस्ति अन्यस्य वा लोकसङ्ग्रहं मुक्त्वा । ततः तस्य आत्मविदः इदमुपदिश्यते —
உலகத்தின் நன்மையில் இச்சை உடைய ஆத்மவித்தான (பரமாத்மாவாகிய) எனக்கோ அல்லது மற்றஆத்மஞானிக்கோ உலக நன்மையின் பொருட்டு செய்யவேண்டியது இல்லை. ஆகையால் ஆத்மவேத்தாவின் பொருட்டு இந்த உபதேசமானது செய்யப்படுகிறது.
न बुद्धिभेदं जनयेदज्ञानां कर्मसङ्गिनाम् ।
जोषयेत्सर्वकर्माणि विद्वान्युक्तः समाचरन् ॥ २६ ॥
ந புத்திபேதம் ஜனயேதக்ஞானாம் கர்மஸங்கிநாம் ।
ஜோஷயேத்ஸர்வகர்மாணி வித்வான்யுக்த: ஸமாசரன் ॥ 26 ॥
बुद्धेर्भेदः बुद्धिभेदः ‘मया इदं कर्तव्यं भोक्तव्यं चास्य कर्मणः फलम्’ इति निश्चयरूपाया बुद्धेः भेदनं चालनं बुद्धिभेदः तं न जनयेत् न उत्पादयेत् अज्ञानाम् अविवेकिनां कर्मसङ्गिनां कर्मणि आसक्तानां आसङ्गवताम् ।
புத்தியை பேதலிக்கச்செய்வது (கலங்கச்செய்வது) புத்திபேதம் எனப்படும். ஞானியானவன் கர்மத்தில் பற்றுடைய விவேகமற்ற அக்ஞானியினுடைய புத்தியை பேதலிக்கச் செய்யக்கூடாது. எவ்வாறு எனில் நான் அவசியம் செய்யவேண்டிய கர்மா, இந்த கர்மா வினால் ஏற்படும் பலனை நான் அவசியம் அனுபவிக்கவேண்டும் என்ற இந்த அக்ஞானியினுடைய நிச்சயரூபமான புத்தியை பேதலிக்கச் செய்யலாகாது.
किं नु कुर्यात् ? जोषयेत् कारयेत् सर्वकर्माणि विद्वान् स्वयं तदेव अविदुषां कर्म युक्तः अभियुक्तः समाचरन् ॥ २६ ॥
பின் என்ன செய்ய வேண்டும்? சமாஹித சித்தமுடைய வித்வான் அக்ஞானிகளைப் போல அவர்களுடைய கர்மத்தை (சாஸ்திர அனுகூலமான கர்மத்தை) ஊக்கத்தோடு நன்றாக அனுஷ்டித்துக் கொண்டு அவர்களையும் அனுஷ்ட்டிக்கச் செய்யவேண்டும்.
अविद्वानज्ञः कथं कर्मसु सज्जते इत्याह —
அவித்துவானாகிய அக்ஞானி எவ்வாறு கர்மத்தில் பற்றுடைய வனாகின்றான்? என்பதைக் கூறுகிறார்.
प्रकृतेः क्रियमाणानि गुणैः कर्माणि सर्वशः ।
अहङ्कारविमूढात्मा कर्ताहमिति मन्यते ॥ २७ ॥
ப்ரக்ருதே: க்ரியமாணானி குணை: கர்மாணி ஸர்வச: ।
அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே ॥ 27 ॥
प्रकृतेः प्रकृतिः प्रधानं सत्त्वरजस्तमसां गुणानां साम्यावस्था तस्याः प्रकृतेः गुणैः विकारैः कार्यकरणरूपैः क्रियमाणानि कर्माणि लौकिकानि शास्त्रीयाणि च सर्वशः सर्वप्रकारैः ।
ப்ரக்ருதி என்றால் பிரதானம், சத்வ ரஜஸ் தமஸ் ஆகிய முக்கு ணங்களின் ஸாம்யாவஸ்தை. அந்த பிரகிருதியாக முக்குணங்களின் காரிய காரண ரூபமான விகாரங்களிலிருந்து லௌகிகமான சாஸ்த்ரீயமான எல்லா கர்மாக்களும் செய்யப்படுகின்றன.
अहङ्कारविमूढात्मा कार्यकरणसङ्घातात्मप्रत्ययः अहङ्कारः तेन विविधं नानाविधं मूढः आत्मा अन्तःकरणं यस्य सः अयं कार्यकरणधर्मा कार्यकरणाभिमानी अविद्यया कर्माणि आत्मनि मन्यमानः तत्तत्कर्मणाम् अहं कर्ता इति मन्यते ॥ २७ ॥
அஹங்கார விமூடாத்மா என்றால் காரிய காரண சங்காத ரூப சரீரத்தில் ஆத்மபாவனை செய்தலே அஹங்காரமாகும். அந்த அஹங்காரத்தினால் பலவிதமாக மோஹமடைந்த அந்தக்கரணம் எவனுக்குள்ளதோ அவன் (விமூடாத்மா) காரிய கரண (சரீர) தர்மங்களை தன்னுடைய தர்மங்களாக நினைத்த தேஹத்தில் அபிமானமுள்ள புருடன் அவித்யாவசத்தால் ஏற்பட்ட கர்மங்களை தன்னுடையதாக நினைத்து நான் இந்த கர்மங்களுக்கு கர்த்தா என்று நினைத்துக் கொள்கிறான்.
यः पुनः विद्वान् —
மேலும் எந்த வித்வான்
तत्त्ववित्तु महाबाहो गुणकर्मविभागयोः ।
गुणा गुणेषु वर्तन्त इति मत्वा न सज्जते ॥ २८ ॥
தத்வவித்து மஹாபாஹோ குணகர்மவிபாகயோ: ।
குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே ॥ 28 ॥
तत्त्ववित् तु महाबाहो । कस्य तत्त्ववित् ? गुणकर्मविभागयोः गुणविभागस्य कर्मविभागस्य च तत्त्ववित् इत्यर्थः । गुणाः करणात्मकाः गुणेषु विषयात्मकेषु वर्तन्ते न आत्मा इति मत्वा न सज्जते सक्तिं न करोति ॥ २८ ॥
ஹே மஹாபாஹோ! தத்வவித் து எவரெனில்? குணங்களினு டைய பிரிவுகளையும் கர்மங்களினுடைய பிரிவுகளையும் அறிந்த வனே தத்வவித். இந்திரியாதி ரூப குணங்கள் விஷயரூப குணங்களில் செயல்படுகின்றன. ஆனால் ஆத்மா செயல்படுவதில்லை என்று அறிந்து கர்மத்தில் பற்று அற்றவனாய் இருப்பான்.

(பின்குறிப்பு- த்ரிகுணாத்மிகமான மாயையினுடைய காரியமே பஞ்சபூதங்கள், மனம், புத்தி, அகங்காரம் அவ்வாறேபஞ்சகர்மேந்திரி யங்கள், சப்த முதலிய பஞ்ச விஷயங்கள் இவைகளுடைய சமுதாயமே குணவிபாகம், எனப்படுகிறது. மேலும் இவைகளுடைய பரஸ்பர செயல்கள் கர்மவிபாகம் எனப்படுகிறது.)
ये पुनः —
மேலும் எவர்கள்-
प्रकृतेर्गुणसंमूढाः सज्जन्ते गुणकर्मसु ।
तानकृत्स्नविदो मन्दान्कृत्स्नविन्न विचालयेत् ॥ २९ ॥
ப்ரக்ருதேர்குணஸம்மூடா: ஸஜ்ஜந்தே குணகர்மஸு ।
தானக்ருத்ஸ்னவிதோ மந்தான்க்ருத்ஸ்னவின்ன விசாலயேத் ॥ 29 ॥
प्रकृतेः गुणैः सम्यक् मूढाः संमोहिताः सन्तः सज्जन्ते गुणानां कर्मसु गुणकर्मसु ‘वयं कर्म कुर्मः फलाय’ इति | तान् कर्मसङ्गिनः अकृत्स्नविदः कर्मफलमात्रदर्शिनः मन्दान् मन्दप्रज्ञान् कृत्स्नवित् आत्मवित् स्वयं न विचालयेत् ।
பிரக்ருதியின் குணங்களால் நன்றாக மோஹமடைந்தவர்கள் பலத்தின் பொருட்டு நாங்கள் கர்மங்கள் செய்கின்றோம் என்று இவ்வாறு குணகர்மங்களில் பற்றுடையவர்களாகிறார்கள். அந்த கர் மத்தில் பற்றுடைய முழுமையை (பூர்ணத்தை) அறியாத கர்ம பலத்தில் மாத்திரம் இச்சை உடைய மந்த பிரக்ஞை (புத்தி) உடையவர்களை, எல்லாவற்றையும் (பூர்ணத்தை) அறிந்தவர்களாகிய ஆத்மவித் பேதலிக்கச் செய்யலாகாது. (கலங்கச் செய்யலாகாது)
बुद्धिभेदकरणमेव चालनं तत् न कुर्यात् इत्यर्थः ॥ २९ ॥
புத்தியை பேதலிக்கச் செய்வதே கலங்கும்படி செய்தல் அவ்வாறு செய்யக்கூடாது என்பதே இதன் பொருள்.
कथं पुनः कर्मण्यधिकृतेन अज्ञेन मुमुक्षुणा कर्म कर्तव्यमिति, उच्यते —
மேலும் கர்மத்தில் அதிகாரமுடைய அக்ஞானியாகிய முமுக்ஷு எவ்வாறு கர்மம் செய்யவேண்டும்? என்று கூறுகிறார்.
मयि सर्वाणि कर्माणि संन्यस्याध्यात्मचेतसा ।
निराशीर्निर्ममो भूत्वा युध्यस्व विगतज्वरः ॥ ३० ॥
மயி ஸர்வாணி கர்மாணி ஸந்த்யஸ்யாத்யாத்மசேதஸா ।
நிராசீர்னிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர: ॥ 30 ॥
मयि वासुदेवे परमेश्वरे सर्वज्ञे सर्वात्मनि सर्वाणि कर्माणि संन्यस्य निक्षिप्य अध्यात्मचेतसा विवेकबुद्ध्या ‘अहं कर्ता ईश्वराय भृत्यवत् करोमि’ इत्यनया बुद्ध्या ।
சர்வாத்மாவாயும், பரமேச்வரனாயும், ஸர்வக்ஞனாயும் உள்ள வாஸுதேவனாகிய என்னிடத்தில் அர்ப்பணித்து நன்கு பண்படுத்தப் பட்ட விவேக புத்தியால் கர்த்தாவாகிய நான் ஈஸ்வரனுடைய பணியாள் போல் (கர்மங்களை) செய்கிறேன் என்றபுத்தியால்
किं च, निराशीः त्यक्ताशीः निर्ममः ममभावश्च निर्गतः यस्य तव स त्वं निर्ममो भूत्वा युध्यस्व विगतज्वरः विगतसन्तापः विगतशोकः सन्नित्यर्थः ॥ ३० ॥
மேலும் ஆசையை துறந்தவனாகி மமகாரத்தை விட்டவ னுமாகி மனங்கலங்கி துயரமுறாமல் யுத்தத்தைச் செய்.
यदेतन्मम मतं कर्म कर्तव्यम् इति सप्रमाणमुक्तं तत् तथा —
அக்ஞானியாகிய முமுக்ஷ கர்மத்தை அவசியம் செய்ய வேண்டும் என்றஎனது அபிப்பிராயத்தை பிரமாணத்துடன் சொல்லப் பட்டது என்றகொள்கையை அவ்வாறு-
ये मे मतमिदं नित्यमनुतिष्ठन्ति मानवाः ।
श्रद्धावन्तोऽनसूयन्तो मुच्यन्ते तेऽपि कर्मभिः ॥ ३१ ॥
யே மே மதமிதம் நித்யமனுதிஷ்டந்தி மானவா: ।
ச்ரத்தாவந்தோஅனஸூயந்தோ முச்யந்தே தேஅபி கர்மபி: ॥ 31 ॥
ये मे मदीयम् इदं मतं नित्यम् अनुतिष्ठन्ति अनुवर्तन्ते मानवाः मनुष्याः श्रद्धावन्तः श्रद्धधानाः अनसूयन्तः असूयां च मयि परमगुरौ वासुदेवे अकुर्वन्तः, मुच्यन्ते तेऽपि एवं भूताः कर्मभिः धर्माधर्माख्यैः ॥ ३१ ॥
எவர்கள் என்னுடைய கொள்கைகளை அனுஷ்ட்டிக்கிறார் களோ அந்த சிரத்தையுடன் கூடிய மனிதர்கள் குரு ரூபமான வாசுதே வனாகிய என்னிடத்தில் தோஷத்தைக் கல்பிக்கவில்லையோ (பார்க்க வில்லையோ) அப்படிப்பட்டவர்கள் புண்யபாப ரூபமான கர்மங்களிலி ருந்து விடுபடுகிறார்கள்.
ये त्वेतदभ्यसूयन्तो नानुतिष्ठन्ति मे मतम् ।
सर्वज्ञानविमूढांस्तान्विद्धि नष्टानचेतसः ॥ ३२ ॥
யே த்வேததப்யஸூயந்தோ நானுதிஷ்டந்தி மே மதம் ।
ஸர்வக்ஞானவிமூடாம்ஸ்தாந்வித்தி நஷ்டானசேதஸ: ॥ 32 ॥
ये तु तद्विपरीताः एतत् मम मतम् अभ्यसूयन्तः निन्दन्तः न अनुतिष्ठन्ति नानुवर्तन्ते मे मतम् , सर्वेषु ज्ञानेषु विविधं मूढाः ते । सर्वज्ञानविमूढान् तान् विद्धि जानीहि नष्टान् नाशं गतान् अचेतसः अविवेकिनः ॥ ३२ ॥
எவர்கள் இதற்கு விபரீதமானவர்களோ என்னுடைய கொள்கை யில் தோஷத்தைக் கல்பித்து அதனால் (என்னுடைய கொள்கைக ளின்படி) அதை அனுஷ்ட்டிக்காதவர்கள் எல்லா ஞானங்களிலும் எல்லாவிதத்திலும் மூடர்கள் (அவிவேகிகள்). எல்லா ஞானங்க ளிலும் மோஹத்தை அடைந்த அவிவேகிகள் நாசத்தை அடைவார்கள்.
कस्मात् पुनः कारणात् त्वदीयं मतं नानुतिष्ठन्ति, परधर्मान् अनुतिष्ठन्ति, स्वधर्मं च नानुवर्तन्ते, त्वत्प्रतिकूलाः कथं न बिभ्यति त्वच्छासनातिक्रमदोषात् ? तत्राह —
மேலும் எந்த காரணத்தினால் தங்களுடைய கொள்கையை அனுஷ்ட்டிப்பதில்லை? வேறு தர்மத்தை அனுஷ்ட்டிக்கிறார்கள். மேலும் ஸ்வதர்மத்தை ஏன் அனுஷ்ட்டிப்பதில்லை? உங்களுக்கு பிரதிகூலமாக இருந்துகொண்டு உங்களுடைய கட்டளைகளை உதாசீனப்படுத்துவதால் உண்டாகும் தோஷங்களுக்கு ஏன் பயப்படுவதில்லை? அதற்குக் கூறுகிறார்.
सदृशं चेष्टते स्वस्याः प्रकृतेर्ज्ञानवानपि ।
प्रकृतिं यान्ति भूतानि निग्रहः किं करिष्यति ॥ ३३ ॥
ஸத்ருசம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர்க்ஞானவானபி ।
ப்ரக்ருதிம் யாந்தி பூதானி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி ॥ 33 ॥
सदृशम् अनुरूपं चेष्टते चेष्टां करोति | कस्य ? स्वस्याः स्वकीयायाः प्रकृतेः । प्रकृतिर्नाम पूर्वकृतधर्माधर्मादिसंस्कारः वर्तमानजन्मादौ अभिव्यक्तः ; सा प्रकृतिः । तस्याः सदृशमेव सर्वो जन्तुः ज्ञानवानपि चेष्टते, किं पुनर्मूर्खः ।
எல்லாப் பிராணிகளும் அவ்வாறேஞானியும் செய்கையை செய் கிறான். எவர்களுடையது? எவ்வாறு? தங்களுடைய சுவபாவத்திற்கு ஏற்ப செயல்படுகிறான். சுபாவம் என்றால் பிறப்பின் தொடக்கத்தில் வெளிப்பட்டதும் முந்திய ஜன்மங்களில் செய்யப்பட்ட புண்ணிய பாபங்கள் முதலியவற்றின் வாசனை. அதுவே பிரகிருதி அதற்கேற்ப எல்லோரும் என்றால் ஞானிகளும் கூடபிரவிர்த்திக்கிறார்கள். மூடர்களைப் பற்றி என்ன கூறுவது.
तस्मात् प्रकृतिं यान्ति अनुगच्छन्ति भूतानि प्राणिनः । निग्रहः निषेधरूपः किं करिष्यति मम वा अन्यस्य वा ॥ ३३ ॥
ஆகையால் எல்லாப்பிராணிகளும் ஸ்வபாவத்தை (புண்ய பாபங் களை) பின்பற்றுகிறார்கள். ஆகையால் நானோ, மற்றவர்களோ எவ் வாறு அதை தடுத்து நிறுத்த முடியும்.
यदि सर्वो जन्तुः आत्मनः प्रकृतिसदृशमेव चेष्टते, न च प्रकृतिशून्यः कश्चित् अस्ति, ततः पुरुषकारस्य विषयानुपपत्तेः शास्त्रानर्थक्यप्राप्तौ इदमुच्यते —
எல்லாப்பிராணிகளும் தங்களுடைய சுவபாவத்திற்கு ஏற்றவாறு பிரவிர்த்திக்கின்றார்கள். சுபாவமற்று ஒருவரும் இல்லை எனில் அதனால் புருஷ ப்ரயத்னத்திற்கு இடமில்லாமையால் சாஸ்திரம் வீண் என்றஅர்த்தம் பிராப்தமாகும் என்றவிடத்து இதைக் கூறுகிறார்.
इन्द्रियस्येन्द्रियस्यार्थे रागद्वेषौ व्यवस्थितौ ।
तयोर्न वशमागच्छेत्तौ ह्यस्य परिपन्थिनौ ॥ ३४ ॥
இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்தே ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ ।
தயோர்ந வசமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்தினௌ ॥ 34 ॥
इन्द्रियस्येन्द्रियस्य अर्थे सर्वेन्द्रियाणामर्थे शब्दादिविषये इष्टे रागः अनिष्टे द्वेषः इत्येवं प्रतीन्द्रियार्थं रागद्वेषौ अवश्यंभाविनौ ।
எல்லா இந்திரியங்களுக்கும் சப்தாதி விஷயங்களில் இஷ்ட்டமான விஷயத்தில் ராகமும், அநிஷ்ட்டமான விஷயத்தில் துவேஷமும் ஏற்படுவதினால் ஒவ்வொரு இந்திரிய விஷயத்திலும் ராக, த்வேஷமானது அவசியம் ஏற்படும்.
तत्र अयं पुरुषकारस्य शास्त्रार्थस्य च विषय उच्यते ।
அங்கு புருஷப் பிரயத்தினத்தையும், சாஸ்திரத்தினுடைய அவசியத்தைப் பற்றிய விஷயத்தையும் கூறுகிறார்.
शास्त्रार्थे प्रवृत्तः पूर्वमेव रागद्वेषयोर्वशं नागच्छेत् ।
சாஸ்திர விஷயத்தில் பிரவிர்த்தித்தவன் முதலிலேயே (முன்பே) ராகதுவேஷங்களின் வசம் ஆகக்கூடாது.
या हि पुरुषस्य प्रकृतिः सा रागद्वेषपुरःसरैव स्वकार्ये पुरुषं प्रवर्तयति । तदा स्वधर्मपरित्यागः परधर्मानुष्ठानं च भवति ।
எந்த ஒரு புருஷனுடைய சுபாவமானது (பிரகிருதியானது) ராகத்வேஷ பூர்வகமாக மனுஷ்யனை தன்னுடைய காரியத்தில் ஈடுபடுத்துகிறதோ அப்பொழுது சுவ தர்மத்தை விட்டு பரதர்ம அனுஷ்ட்டானத்தில் ஈடுபடுத்துகிறது.
यदा पुनः रागद्वेषौ तत्प्रतिपक्षेण नियमयति तदा शास्त्रदृष्टिरेव पुरुषः भवति, न प्रकृतिवशः ।
மேலும் எப்பொழுது ராகத்வேஷத்தை தடுத்து நிறுத்துகிறானோ அப்பொழுது அந்த புருஷனுக்கு சாஸ்த்திர த்ருஷ்ட்டி ஏற்படுகிறது. அவன் பிரகிருதி வசமாகிறதில்லை.
तस्मात् तयोः रागद्वेषयोः वशं न आगच्छेत् , यतः तौ हि अस्य पुरुषस्य परिपन्थिनौ श्रेयोमार्गस्य विघ्नकर्तारौ तस्करौ इव पथीत्यर्थः ॥ ३४ ॥
ஆகையால் அந்த ராகதுவேஷங்கள் வசம் ஆகக்கூடாது. ஏன்எனில் அந்த புருஷனுடைய மேலான மார்க்கத்தில் தடையை உண்டாக்குகின்றதிருடர்களைப் போல், அவை (ராகத்துவேஷம்) உள்ளன என்பது பொருள்.
तत्र रागद्वेषप्रयुक्तो मन्यते शास्त्रार्थमप्यन्यथा ‘परधर्मोऽपि धर्मत्वात् अनुष्ठेय एव’ इति, तदसत् —
ராகதுவேஷமுடைய புருஷன் பரதர்மமும் சாஸ்திரத்தில் கூறிய தர்மம்தான். ஆகையால் தன்னால் அனுஷ்டிக்க வேண்டியதுதான் என்று சாஸ்திரத்தின் அர்த்தத்தை மாறாக புரிந்துகொள்கிறான். அது சரியன்று–
श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्ठितात् ।
स्वधर्मे निधनं श्रेयः परधर्मो भयावहः ॥ ३५ ॥
ச்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத் ।
ஸ்வதர்மே நிதனம் ச்ரேய: பரதர்மோ பயாவஹ: ॥ 35 ॥
श्रेयान् प्रशस्यतरः स्वो धर्मः स्वधर्मः विगुणः अपि विगतगुणोऽपि अनुष्ठीयमानः परधर्मात् स्वनुष्ठितात् साद्गुण्येन सम्पादितादपि ।
பரதர்மத்தை முறைப்படி நன்றாக அனுஷ்ட்டிப்பதைக் காட்டிலும் சுவதர்மத்தை குறைவாக அனுஷ்ட்டிப்பதாலும், சுவதர்மமே மேலானது.
स्वधर्मे स्थितस्य निधनं मरणमपि श्रेयः परधर्मे स्थितस्य जीवितात् । कस्मात् ? परधर्मः भयावहः नरकादिलक्षणं भयमावहति यतः ॥
பரதர்மத்தில் ஈடுபட்டு அனுஷ்ட்டானம் செய்கின்றவனுடைய ஜீவனத்தைக் (வாழ்வினைக்) காட்டிலும், தன் தர்மத்தை அனுஷ்ட்டிக் கின்றவனுடைய மரணம் மேலானது. ஏன் எனில் பரதர்மமானது நரகாதிரூப பயத்தை அளிக்கக்கூடியது.
यद्यपि अनर्थमूलम् ‘ध्यायतो विषयान्पुंसः’ (भ. गी. २ । ६२) इति ‘रागद्वेषौ ह्यस्य परिपन्थिनौ’ (भ. गी. ३ । ३४) इति च उक्तम् , विक्षिप्तम् अनवधारितं च तदुक्तम् । तत् सङ्क्षिप्तं निश्चितं च इदमेवेति ज्ञातुमिच्छन् अर्जुनः उवाच ‘ज्ञाते हि तस्मिन् तदुच्छेदाय यत्नं कुर्याम्’ इति ॥ ३५ ॥
த்யாயதோ விஷயான் பும்ஸ: ராகத்வேஷௌ ஹ்யஸ்ய பரிபந்தி நௌ, முதலிய பிரகரணத்தால் அனர்த்தத்தினுடைய மூலகாரணம் கூறப்பட்டது. மேலும் அது வெவ்வேறு பிரகரணங் களில் சிதறிக்கிடப் பதாயும், நிச்சயமற்றதாயும் கூறிய (விஷயத்தை) தை சுருக்கமாகவும், நிச்சயமாகவும் (உறுதியாகவும்) இதுதான் என்று அறிந்து கொள்ள விரும்பி அதை நன்றாக தெரிந்து கொண்டால் அல்லவா அதில் முயற்சியை மேற்கொள்ள முடியும் என்று அர்ஜுனன் கூறினான்.
अर्जुन उवाच —
அர்ஜுனன் சொல்கிறார்.
अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पूरुषः ।
अनिच्छन्नपि वार्ष्णेय बलादिव नियोजितः ॥ ३६ ॥
அத கேன ப்ரயுக்தோஅயம் பாபம் சரதி பூருஷ: ।
அநிச்சன்னபி வார்ஷ்ணேய பலாதிவ நியோர்ஜித: ॥ 36 ॥
अथ केन हेतुभूतेन प्रयुक्तः सन् राज्ञेव भृत्यः अयं पापं कर्म चरति आचरति पूरुषः स्वयम् अनिच्छन् अपि हे वार्ष्णेय वृष्णिकुलप्रसूत, बलात् इव नियोजितः राज्ञेव इत्युक्तो दृष्टान्तः ॥ ३६ ॥
ஹே வார்ஷ்ணேய! (கிருஷ்ணா) எந்த பிரதான காரணத்தினால் தூண்டப்பட்ட புருஷன் அவன் விரும்பாவிடினும், ராஜாவினால் ஏவப்பட்ட சேவகனைப் போல் என்ற திருஷ்ட்டாந்தத்தின்படி பலவந்தமாக பாபகர்மத்தைச் செய்கிறான்?
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச
काम एष क्रोध एष रजोगुणसमुद्भवः ।
महाशनो महापाप्मा विद्ध्येनमिह वैरिणम् ॥ ३७ ॥
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ: ।
மஹாசனோ மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம் ॥ 37 ॥
शृणु त्वं तं वैरिणं सर्वानर्थकरं यं त्वं पृच्छसि इति — ‘ऐश्वर्यस्य समग्रस्य धर्मस्य यशसः श्रियः । वैराग्यस्याथ मोक्षस्य षण्णां भग इतीङ्गना’ (वि. पु. ६ । ५ । ७४) ऐश्वर्यादिषट्कं यस्मिन् वासुदेवे नित्यमप्रतिबद्धत्वेन सामस्त्येन च वर्तते, ‘उत्पत्तिं प्रलयं चैव भूतानामागतिं गतिम् । वेत्ति विद्यामविद्यां च स वाच्यो भगवानिति’ (वि. पु. ६ । ५ । ७८) उत्पत्त्यादिविषयं च विज्ञानं यस्य स वासुदेवः वाच्यः भगवान् इति ॥
நீ எந்த எல்லா அனர்த்தங்களைச் செய்யும் விரோதியைப் பற்றி கேட்டாயோ அதைக் கேள் என்று பகவான் கூறுகிறார்-
ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய தர்மஸ்ய யசஸ: ச்ரிய: வைராக்யஸ்யாத மோக்ஷஸ்ய ஷண்ணாம் பக இதீரணா
சம்பூர்ணமான ஐஸ்வர்யம், தர்மம், புகழ், செல்வம், வைராக்கியம், மோக்ஷம் ஆகிய இந்த ஆறும் பகம் எனப்படும். இந்த அறுவகை குணங்களும் பிரதிபந்தமற்று, சம்பூர்ணமாக எப்பொழுதும் இந்த வாசுதேவனிடத்தில் நிலைபெற்றிருக்கிறது என்று விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
உத்பத்திம் ப்ரலயம் சைவ பூதானாமாகதிம் கதிம் வேத்தி வித்யாமவித்யாம் ச ஸ வாச்யோ பகவானிதி
உற்பத்தி, பிரளயம், பிராணிகளுடைய போக்குவரத்து அவ்வாறேஅவித்யை மற்றும் வித்யை ஆகிய இவைகளை எவர் அறிந்திருக்கிறாரோ அவர் பகவான் என்று விஷ்ணுபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் உற்பத்தி முதலிய விஷயங்க ளைப் பற்றிய ஞானம் எந்த வாசுதேவனிடத்தில் உள்ளதோ அவர் பகவான் என்றநாமத்திற்கு உரியவர்.
काम एषः सर्वलोकशत्रुः यन्निमित्ता सर्वानर्थप्राप्तिः प्राणिनाम् । स एष कामः प्रतिहतः केनचित् क्रोधत्वेन परिणमते । अतः क्रोधः अपि एष एव ।
எல்லா உலகங்களுக்கும் சத்துருவாகிய காமத்தின் நிமித்தத்தால் எல்லா பிராணிகளுக்கும் எல்லா அனர்த்தங்களும் ஏற்படுகிறது. அந்த காமமானது ஏதாவது ஒரு காரணத்தினால் தடைப்பட்டு நாசமடைந்தால் அதுவே க்ரோதமாக பரிணமிக்கிறது. ஆகையால் க்ரோதமும் காமம்தான்.
रजोगुणसमुद्भवः रजश्च तत् गुणश्च रजोगुणः सः समुद्भवः यस्य सः कामः रजोगुणसमुद्भवः, रजोगुणस्य वा समुद्भवः । कामो हि उद्भूतः रजः प्रवर्तयन् पुरुषं प्रवर्तयति ।
அந்தக் காமமானது ரஜோகுணத்திலிருந்து உண்டாகிறது. அல் லது அந்த காமமே ரஜோகுணத்தை உற்பத்தி செய்யக்கூடியதாய் இருக்கிறது. ஏன் எனில் உத்பன்னமான காமம்தான் ரஜோகுணத்தை வெளிப்படுத்தி புருஷனை கர்மங்களில் பிரவிர்த்திக்கச் செய்கிறது.
‘तृष्णया हि अहं कारितः’ इति दुःखिनां रजःकार्ये सेवादौ प्रवृत्तानां प्रलापः श्रूयते ।
அவ்வாறேரஜோகுணத்தினுடைய காரியமாகிய சேவை முதலிய கர்மங்களினால் துக்கத்தை அடைந்த மனிதர்கள், ஆசையினால் அல்லவா நான் அடிமையாகி இந்த காரியங்களை செய்து கொண்டி ருக்கிறேன் என்று வருந்துகிறார்கள்.
महाशनः महत् अशनं अस्येति महाशनः ; अत एव महापाप्मा ; कामेन हि प्रेरितः जन्तुः पापं करोति । अतः विद्धि एनं कामम् इह संसारे वैरिणम् ॥ ३७ ॥
(காமமானது) மிகுந்த பசி உடையதால் அதிகமாக சாப்பிடக்கூடி யது. ஆகையால் மஹாபாபி காமத்தினால் தூண்டப்பட்டல்லவா ஜீவன் பாபத்தைச் செய்கிறது. ஆகையால் இந்த காமம் தான் இந்த சம்சாரத்தின் விரோதி என்று அறி.
कथं वैरी इति दृष्टान्तैः प्रत्याययति —
எவ்வாறு அது விரோதி என்று திருஷ்ட்டாந்தங்களினால் தெளிவுபடுத்துகிறார்.
धूमेनाव्रियते वह्निर्यथादर्शो मलेन च ।
यथोल्बेनावृतो गर्भस्तथा तेनेदमावृतम् ॥ ३८ ॥
தூமேநாவ்ரியதே வஹ்நிர்யதாதர்சோ மலேன ச ।
யதோல்பேநாவ்ருதோ கர்பஸ்ததா தேனேதமாவ்ருதம் ॥ 38 ॥
धूमेन सहजेन आव्रियते वह्निः प्रकाशात्मकः अप्रकाशात्मकेन, यथा वा आदर्शो मलेन च, यथा उल्बेन च जरायुणा गर्भवेष्टनेन आवृतः आच्छादितः गर्भः तथा तेन इदम् आवृतम् ॥ ३८ ॥
பிரகாசரூபமான அக்னியை தன்னிடத்தில் சுவபாவமாகவே உண்டான பிரகாசமற்றபுகையானது எவ்வாறு மறைக்கிறதோ, மேலும் கண்ணாடியானது அழுக்காலும், கர்ப்பமானது தோல்பையாலும் எவ்வாறு மறைக்கப்படுகிறதோ அவ்வாறு கர்மத்தினால் இது (ஞானமானது) மறைக்கப்படுகிறது.
किं पुनस्तत् इदंशब्दवाच्यं यत् कामेनावृतमित्युच्यते —
மேலும் அந்த, இதம், (இது) சப்த வாக்கியமானது எந்த காமத்தினால் மறைக்கப்பட்டுள்ளது என்பதைக் கூறுகிறார்.
आवृतं ज्ञानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा ।
कामरूपेण कौन्तेय दुष्पूरेणानलेन च ॥ ३९ ॥
ஆவ்ருதம் க்ஞானமேதேந க்ஞாநினோ நித்யவைரிணா ।
காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணாநலேன ச ॥ 39 ॥
आवृतम् एतेन ज्ञानं ज्ञानिनः नित्यवैरिणा, ज्ञानी हि जानाति ‘अनेन अहमनर्थे प्रयुक्तः’ इति पूर्वमेव । दुःखी च भवति नित्यमेव । अतः असौ ज्ञानिनो नित्यवैरी, न तु मूर्खस्य । स हि कामं तृष्णाकाले मित्रमिव पश्यन् तत्कार्ये दुःखे प्राप्ते जानाति ‘तृष्णया अहं दुःखित्वमापादितः’ इति, न पूर्वमेव । अतः ज्ञानिन एव नित्यवैरी ।
ஞானியினுடைய நித்திய விரோதியான இதனால் (இந்த காமத்தினால்) ஞானமானது மறைக்கப்பட்டிருக்கிறது. ஞானிக்கு (முன்பே) முதலிலேயே நான் இந்த காமத்தினால் அநர்த்தத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளேன் என்று தெரிகிறது. ஆகையால் எப்பொழுதும் துக்கம் உடையவனாகின்றான். ஆகையால் இந்தக் காமமானது ஞானிக்கு நித்திய விரோதி. மூடனுக்கு (விரோதி) அல்ல. அந்த மூடன் (விஷயத்தில்) இச்சை ஏற்படும் சமயத்தில் காமத்தை நண்பனைப் போல் பாவிக்கின்றான். அந்த காரியத்தினால் துக்கம் ஏற்படும் பொழுது நான் விஷய இச்சையினால் அல்லவா துக்கத்தை அடைந்தேன் என்று உணர்கின்றான் இதை அவன் முதலிலேயே உணர்வதில்லை. ஆகையால் ஞானிக்குத்தான் காமம் நித்யவிரோதி.
किंरूपेण ? कामरूपेण कामः इच्छैव रूपमस्य इति कामरूपः तेन दुष्पूरेण दुःखेन पूरणमस्य इति दुष्पूरः तेन अनलेन न अस्य अलं पर्याप्तिः विद्यते इत्यनलः तेन च ॥ ३९ ॥
எவ்வாறு எனில் காமத்தினால் (ஞானமானது மறைக்கப் பட்டுள்ளது) காமனை என்றால் இச்சை. இச்சைதான் அதனுடைய ஸ்வரூபம். இந்த காமனையை பூர்த்தி செய்வது மிகக்கடினம். ஆகை யால் இதை அலம் என்கிறோம். விஷய போகங்களினால் இதை ஒரு போதும் திருப்தி படுத்தமுடியாது. இவ்வாறு காமரூமான விரோதியால் (ஞானமானது மறைக்கப்பட்டுள்ளது)
(அலம் என்றால் திருப்தி. எதற்கு திருப்தி இல்லையோ அது அநலம்)
किमधिष्ठानः पुनः कामः ज्ञानस्य आवरणत्वेन वैरी सर्वस्य लोकस्य ? इत्यपेक्षायामाह, ज्ञाते हि शत्रोरधिष्ठाने सुखेन निबर्हणं कर्तुं शक्यत इति —
மேலும் காமமானது ஞானத்தை மறைப்பதால் எல்லோருக்கும் விரோதி. அந்தக் காமம் எதில் நிலைபெற்றுள்ளது? என்று கவனிக் கும் இடத்துக் கூறுகின்றார். விரோதியின் இருப்பிடத்தை அறிந்தால் அல்லவா விரோதியை நாசம் செய்யமுடியும். இதைப்பற்றி கூறுகிறார்.
इन्द्रियाणि मनो बुद्धिरस्याधिष्ठानमुच्यते ।
एतैर्विमोहयत्येष ज्ञानमावृत्य देहिनम् ॥ ४० ॥
இந்த்ரியாணி மநோ புத்திரஸ்யாதிஷ்டானமுச்யதே ।
ஏதைர்விமோஹயத்யேஷ க்ஞானமாவ்ருத்ய தேஹிநம் ॥ 40 ॥
इन्द्रियाणि मनः बुद्धिश्च अस्य कामस्य अधिष्ठानम् आश्रयः उच्यते । एतैः इन्द्रियादिभिः आश्रयैः विमोहयति विविधं मोहयति एष कामः ज्ञानम् आवृत्य आच्छाद्य देहिनं शरीरिणम् ॥ ४० ॥
இந்திரியங்கள், மனம், புத்தி இவைகள் அந்த காமத்தின் இருப்பிடம் என்று கூறப்படுகிறது. இந்த காமமானது இந்த ஆச்ரியபூதமான இந்திரியங்கள் வழியாக ஞானத்தை மறைத்து இந்த ஜீவாத்மாவை அநேக விதமாக மோஹிக்கச் செய்கிறது.
यतः एवम् —
எதனால் இவ்வாறோ-
तस्मात्त्वमिन्द्रियाण्यादौ नियम्य भरतर्षभ ।
पाप्मानं प्रजहिह्येनं ज्ञानविज्ञाननाशनम् ॥ ४१ ॥
தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப ।
பாப்மானம் ப்ரஜஹி ஹ்யேனம் க்ஞானவிக்ஞானநாசனம் ॥ 41 ॥
तस्मात् त्वम् इन्द्रियाणि आदौ पूर्वमेव नियम्य वशीकृत्य भरतर्षभ पाप्मानं पापाचारं कामं प्रजहिहि परित्यज एनं प्रकृतं वैरिणं ज्ञानविज्ञाननाशनं ।
ஆகையால் ஹே பரதரிஷப! நீ முதலில் இந்திரியங்களை வசப்படுத்தி ஞான விக்ஞானங்களை நாசம் செய்கின்றஇந்த எதிரியாகிய பாபத்தைச் செய்கிறகாமத்தை விட்டுவிடு.
ज्ञानं शास्त्रतः आचार्यतश्च आत्मादीनाम् अवबोधः, विज्ञानं विशेषतः तदनुभवः, तयोः ज्ञानविज्ञानयोः श्रेयःप्राप्तिहेत्वोः नाशनं नाशकरं प्रजहिहि आत्मनः परित्यजेत्यर्थः ॥ ४१ ॥
ஞானம் என்றால் சாஸ்திரத்தாலும், ஆச்சாரிய உபதேசத்தாலும் ஏற்படும் ஆத்மா முதலியவற்றின் அறிவு. விக்ஞானம் என்றால் அவற்றின் சிறப்பான அனுபவம். அந்த ச்ரேயஸ்ஸை அடைவதற்குக் காரணமான ஞான விக்ஞானங்களை கெடுக்கின்ற(காமத்தை)தை உன்னிடத்திலிருந்து நீக்கிவிடு என்பது பொருள்.
इन्द्रियाण्यादौ नियम्य कामं शत्रुं जहिहि इत्युक्तम् ; तत्र किमाश्रयः कामं जह्यात् इत्युच्यते —
முதலில் இந்திரியங்களை அடக்கி காமமாகிய சத்ருவை நீக்கு என்று முன்பு கூறப்பட்டது. அங்கு எதை ஆச்ரயித்து காமத்தை நீக்க வேண்டும் என்று கூறுகிறார்.
इन्द्रियाणि पराण्याहुरिन्द्रियेभ्यः परं मनः ।
मनसस्तु परा बुद्धिर्यो बुद्धेः परतस्तु सः ॥ ४२ ॥
இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய: பரம் மன: ।
மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்து ஸ: ॥ 42 ॥
इन्द्रियाणि श्रोत्रादीनि पञ्च देहं स्थूलं बाह्यं परिच्छिन्नं च अपेक्ष्य सौक्ष्म्यान्तरत्वव्यापित्वाद्यपेक्षया पराणि प्रकृष्टानि आहुः पण्डिताः ।
பண்டிதர்கள் பரிச்சின்னமாயும் பாஹ்யமாயும் உள்ள ஸ்தூல சரீரத்தைக் காட்டிலும், சூக்ஷ்மதன்மையும், உள்ளே இருக்கும் தன்மை யும், வியாபகத் தன்மையும் இருப்பதால் சுரோத்ராதி பஞ்ச இந்திரியங் கள் மேலானது என்று கூறுகிறார்கள்.
तथा इन्द्रियेभ्यः परं मनः सङ्कल्पविकल्पात्मकम् । तथा मनसः तु परा बुद्धिः निश्चयात्मिका ।
அவ்வாறேஇந்திரியங்களைக் காட்டிலும் சங்கல்பவிகல்பக ஆத்மகமான மனது மேலானது. அவ்வாறேமனதைக் காட்டிலும் நிச்சயாத்மகமான புத்தி மேலானது.
तथा यः सर्वदृश्येभ्यः बुद्ध्यन्तेभ्यः आभ्यन्तरः, यं देहिनम् इन्द्रियादिभिः आश्रयैः युक्तः कामः ज्ञानावरणद्वारेण मोहयति इत्युक्तम् । बुद्धेः परतस्तु सः, सः बुद्धेः द्रष्टा पर आत्मा ॥ ४२ ॥
இவ்வாறு எவர் (தேஹம் முதல் புத்தி ஈறாக உள்ள பதார்த்தங்களில் அந்தர்யாமியாய் இருக்கிறதோ, எந்த காமமானது இந்திரியாதிகளை ஆசிரயித்து ஞானத்தை மறைப்பதால் தேஹியை மோஹமடையச் செய்கின்றது என கூறப்பட்டதோ அது புத்தியின் த்ருஷ்ட்டா பரமாத்மா.
एवं बुद्धेः परं बुद्ध्वा संस्तभ्यात्मानमात्मना ।
जहि शत्रुं महाबाहो कामरूपं दुरासदम् ॥ ४३ ॥
ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மானமாத்மனா ।
ஜஹி சத்ரும் மஹாபாஹோ காமரூபம் துராஸதம். ॥ 43 ॥
एवं बुद्धेः परम् आत्मानं बुद्ध्वा ज्ञात्वा संस्तभ्य सम्यक् स्तम्भनं कृत्वा आत्मानं स्वेनैव आत्मना संस्कृतेन मनसा सम्यक् समाधायेत्यर्थः ।
இவ்வாறு புத்தியைக் காட்டிலும் ஆத்மா மேலானது என்று அறிந்து ஆத்மாவை(மனதை) ஆத்மாவினால் (மனதினால்) என்றால் நல்ல பண்படுத்தப்பட்ட சுத்த மனதினால் நன்றாக சாந்தப்படுத்துதல் என்பது பொருள்.
जहि एनं शत्रुं हे महाबाहो कामरूपं दुरासदं दुःखेन आसदः आसादनं प्राप्तिः यस्य तं दुरासदं दुर्विज्ञेयानेकविशेषमिति ॥ ४३ ॥
ஹே மஹாபாஹோ! ஜெயிப்பதற்கரிய காமரூபமான சத்துருவை தியாகம் செய்து என்றால் மிகவும் கஷ்ட்டப்பட்டு, அறிவதற்கு கடினமான விசேஷணங்களுடன் கூடிய காமத்தை நாசம் செய்ய வேண்டும் என்பது.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये तृतीयोऽध्यायः ॥
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யா யாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜூன ஸம்வாதே கர்மயோகோ நாம த்ருதீயோ அத்யாய:
योऽयं योगः अध्यायद्वयेनोक्तः ज्ञाननिष्ठालक्षणः , ससंन्यासः कर्मयोगोपायः, यस्मिन् वेदार्थः परिसमाप्तः, प्रवृत्तिलक्षणः निवृत्तिलक्षणश्च, गीतासु च सर्वासु अयमेव योगो विवक्षितो भगवता । अतः परिसमाप्तं वेदार्थं मन्वानः तं वंशकथनेन स्तौति श्रीभगवान् —
கர்மயோகத்தை உபாயமாக உடைய சந்நியாசத்துடன் கூடிய ஞானநிஷ்ட்டை லக்ஷணமான ஞான யோகமானது முன் இரண்டு அத்தியாயங்களில் விளக்கப்பட்டது. பிரவிருத்தி லக்ஷண, நிவிர்த்தி லக்ஷணமாகிய வேதத்தின் தாத்பர்யம் எதில் முடிவடைகிறதோ அந்த யோகத்தைப் பற்றி கீதை முழுவதும் விளக்கமாக பகவானால் கூறப்பட்டது. ஆகையால் வேதார்த்தம் பூர்ணமாக முடியப்பெற்ற தாகக் கொண்டு பகவான் வம்ச பரம்பரையைக் கூறி அதை (ஞான நிஷ்ட்டாரூபத்தை) ஸ்துதி (போற்றுகிறார்) செய்கிறார்.
श्रीभगवानुवाच —
பகவான் கூறினார்.
इमं विवस्वते योगं प्रोक्तवानहमव्ययम् ।
विवस्वान्मनवे प्राह मनुरिक्ष्वाकवेऽब्रवीत् ॥ १ ॥
இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாநஹமவ்யயம் ।
விவஸ்வான்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவேஅப்ரவீத் ॥ 1 ॥
इमम् अध्यायद्वयेनोक्तं योगं विवस्वते आदित्याय सर्गादौ प्रोक्तवान् अहं जगत्परिपालयितॄणां क्षत्रियाणां बलाधानाय तेन योगबलेन युक्ताः समर्था भवन्ति ब्रह्म परिरक्षितुम् । ब्रह्मक्षत्रे परिपालिते जगत् परिपालयितुमलम् ।
ஜகத்தைப் பரிபாலனம் செய்கின்ற க்ஷத்ரியர்களின் பலத்தை உண்டாக்குவதற்கு நான் ஸ்ருஷ்ட்டியின் ஆரம்பகாலத்தில் சூரியனுக்கு உபதேசித்ததை இவ்விரு அத்தியாயங்களில் கூறப் பட்டுள்ளது. அந்த யோகபலத்தினால் பிராமணர்களை ரக்ஷிப்பதால் சாமர்த்தியம் உடையவர்களாகிறார்கள். ஜகத்தை ரக்ஷிப்பதற்கு பிராஹ்மண, க்ஷத்ரியர்களை ரக்ஷித்தாலே போதும்.
अव्ययम् अव्ययफलत्वात् । न ह्यस्य योगस्य सम्यग्दर्शननिष्ठालक्षणस्य मोक्षाख्यं फलं व्येति ।
அழிவில்லாத பலனாய் இருப்பதால் சம்யக் தர்சன நிஷ்ட்டாயோ கத்தினுடைய மோக்ஷ ரூபமான பலன் ஒருபோதும் நஷ்ட்டமாகாது.
स च विवस्वान् मनवे प्राह । मनुः इक्ष्वाकवे स्वपुत्राय आदिराजाय अब्रवीत् ॥ १ ॥
அந்த சூரிய பகவான் மனுவிற்கு கூறினார். மனுவானவர் தன்னு டைய புத்திரனான ஆதிராஜாவாகிய இக்ஷ்வாகுவிற்குக் கூறினார்.
एवं परम्पराप्राप्तमिमं राजर्षयो विदुः ।
स कालेनेह महता योगो नष्टः परन्तप ॥ २ ॥
ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது: ।
ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட: பரந்தப ॥ 2 ॥
एवं क्षत्रियपरम्पराप्राप्तम् इमं राजर्षयः राजानश्च ते ऋषयश्च राजर्षयः विदुः इमं योगम् ।
இவ்வாறு பரம்பரையாக அடைந்த இந்த யோகத்தை ராஜ ரிஷிகள் அறிந்திருந்தார்கள், ராஜரிஷிகள் என்றால் அரசர்களாயும் ரிஷிகளாயும் இருப்பவர்கள்.
स योगः कालेन इह महता दीर्घेण नष्टः विच्छिन्नसम्प्रदायः संवृत्तः । हे परन्तप, आत्मनः विपक्षभूताः परा इति उच्यन्ते, तान् शौर्यतेजोगभस्तिभिः भानुरिव तापयतीति परन्तपः शत्रुतापन इत्यर्थः ॥ २ ॥
அந்த யோகமானது அதிக காலமானதினாலே சம்பிரதாய பரம்ப ரையானது விடுபட்டுவிட்டது ஹே பரந்தப! தன்னுடைய எதிரிகள் பரர்கள் எனப்படுவர். அவர்களை தன்னுடைய பராக்கிரம தேஜோமயமான கிரணங்களால் சுட்டுஎரிப்பவன் என்பதால் பரந்தப. இதன் பொருள் சத்துருக்களை தபிக்கச் செய்பவன்.
दुर्बलानजितेन्द्रियान् प्राप्य नष्टं योगमिममुपलभ्य लोकं च अपुरुषार्थसम्बन्धिनम् —
இந்த யோகம் மனதில் திடம் இல்லாதவரையும், இந்திரியங்களை ஜெயிக்காதவரையும் சார்ந்து நசித்திருப்பதையும், உலகமானது குறிக்கோளற்று இருப்பதையும் கண்டு.
स एवायं मया तेऽद्य योगः प्रोक्तः पुरातनः ।
भक्तोऽसि मे सखा चेति रहस्यं ह्येतदुत्तमम् ॥ ३ ॥
ஸ ஏவாயம் மயா தேஅத்ய யோக: ப்ரோக்த: புராதன: ।
பக்தோஅஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம் ॥ 3 ॥
स एव अयं मया ते तुभ्यम् अद्य इदानीं योगः प्रोक्तः पुरातनः भक्तः असि मे सखा च असि इति । रहस्यं हि यस्मात् एतत् उत्तमं योगः ज्ञानम् इत्यर्थः ॥ ३ ॥
நீ என்னுடைய பக்தனாயும், நண்பணாயும் இருப்பதால் அந்த இந்த புராதனமான யோகத்தை இப்பொழுது உன்பொருட்டு என்னால் கூறப்பட்டது, எதனால் எனில் இந்த ஞானயோகமானது மேலானதும், ரகஸ்யமானதும் ஆகும் என்பது பொருள்.
भगवता विप्रतिषिद्धमुक्तमिति मा भूत् कस्यचित् बुद्धिः इति परिहारार्थं चोद्यमिव कुर्वन् —
பகவானாலே ஒன்றுக்கொன்று முரணாக கூறப்பட்டுள்ளது என்று ஒருவரும் எண்ணிவிடக் கூடாது என்று அதை (அந்த விரோத மான எண்ணத்தை) நீக்குவதின் பொருட்டு சங்கை செய்வதுபோல் (அர்ச்சுனன்) கூறலானான்.
अर्जुन उवाच —
அர்ச்சுனன் கூறினான்.
अपरं भवतो जन्म परं जन्म विवस्वतः ।
कथमेतद्विजानीयां त्वमादौ प्रोक्तवानिति ॥ ४ ॥
அபரம் பவதோ ஜன்ம பரம் ஜந்ம விவஸ்வத: ।
கதமேதத்விஜாநீயாம் த்வமாதௌ ப்ரோக்தவாநிதி ॥ 4 ॥
अपरम् अर्वाक् वसुदेवगृहे भवतो जन्म । परं पूर्वं सर्गादौ जन्म उत्पत्तिः विवस्वतः आदित्यस्य ।
உங்களுடைய ஜன்மமானது வசுதேவருடைய க்ருஹத்தில் பின்னால் உண்டானது, ஆனால் சூரியனுடைய ஜன்மமோ சிருஷ்ட்டியின் ஆதிகாலத்திலேயே உண்டானது.
तत् कथम् एतत् विजानीयाम् अविरुद्धार्थतया, यः त्वमेव आदौ प्रोक्तवान् इमं योगं स एव इदानीं मह्यं प्रोक्तवानसि इति ॥ ४ ॥
நீங்களே முதலில் இந்த ஞானயோகத்தை கூறினீர்கள் அதையே நீங்கள் என் பொருட்டு கூறிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை விருத்த மற்றதாக மாறுபாடு அற்றதாக எவ்வாறு அறிவேன்? என்று.
या वासुदेवे अनीश्वरासर्वज्ञाशङ्का मूर्खाणाम् , तां परिहरन् श्रीभगवानुवाच, यदर्थो ह्यर्जुनस्य प्रश्नः —
பகவானாகிய வாசுதேவருடைய விஷயத்தில் மூடர்களுக்கு ஏற் படும் கடவுள் இல்லை, அவர் சர்வக்ஞர் இல்லை என்று ஏற்படும் சங் கையை நீக்குவதற்காக அர்ஜுனனுடைய வினா அமைந்தது. அந்த சந்தேஹத்தை நீக்குவதற்காக பகவான் கூறுகிறார்.
बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन ।
तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप ॥ ५ ॥
பஹூG மே வ்யதீதானி ஜன்மாநி தவ சார்ஜுன ।
தான்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப ॥ 5 ॥
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச
बहूनि मे मम व्यतीतानि अतिक्रान्तानि जन्मानि तव च हे अर्जुन । तानि अहं वेद जाने सर्वाणि न त्वं वेत्थ न जानीषे, धर्माधर्मादिप्रतिबद्धज्ञानशक्तित्वात् ।
ஹே! அர்ஜுன! உனக்கும் எனக்கும் இதற்குமுன் அநேக ஜன் மங்கள் எடுத்து தாண்டி வந்துள்ளோம். அவைகளை எல்லாம் நான் அறிவேன். ஆனால் புண்ய, பாப முதலிய சம்சார பந்தத்தினால் உன்னுடைய ஞான சக்தியானது மறைக்கப்பட்டுள்ளது. ஆதலால் நீ அறியமாட்டாய்.
अहं पुनः नित्यशुद्धबुद्धमुक्तस्वभावत्वात् अनावरणज्ञानशक्तिरिति वेद अहं हे परन्तप ॥ ५ ॥
ஹே! பரந்தப! மேலும் நான் நித்ய சுத்த புக்த முக்த ஸ்வபாவ முடையவராய் இருப்பதால் மறைக்கப்படாத சக்தி உடையவன் என்று அறி.
कथं तर्हि तव नित्येश्वरस्य धर्माधर्माभावेऽपि जन्म इति, उच्यते —
நித்யமான ஈஸ்வரனிடத்தில் புண்யபாபம் இல்லாமையால் எவ் வாறு ஜன்மம் உண்டாகிறது என்று கூறுகிறார்.
अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन् ।
प्रकृतिं स्वामधिष्ठाय सम्भवाम्यात्ममायया ॥ ६ ॥
அஜோஅபி ஸந்நவ்யயாத்மா பூதானாமீச்வரோஅபி ஸன் ।
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா ॥ 6 ॥
अजोऽपि जन्मरहितोऽपि सन् , तथा अव्ययात्मा अक्षीणज्ञानशक्तिस्वभावोऽपि सन् , तथा भूतानां ब्रह्मादिस्तम्बपर्यन्तानाम् ईश्वरः ईशनशीलोऽपि सन् , प्रकृतिं स्वां मम वैष्णवीं मायां त्रिगुणात्मिकाम् , यस्या वशे सर्वं जगत् वर्तते, यया मोहितं सत् स्वमात्मानं वासुदेवं न जानाति, तां प्रकृतिं स्वाम् अधिष्ठाय वशीकृत्य सम्भवामि देहवानिव भवामि जात इव आत्ममायया आत्मनः मायया, न परमार्थतो लोकवत् ॥ ६ ॥
ஜென்மமற்றவனாயும், குறைவற்றஞானசக்தி சுவபாவமுடைய வனாயும், பிரஹ்மா முதல் ஸ்தாவரம் வரையிலும் உள்ள எல்லா பிராணிகளையும் ஆள்வதில் சாமர்த்தியமுடையவனாயும் உள்ள நான் இந்த உலகமெல்லாம் என்னுடைய பிரகிருதியாகிய விஷ்ணுமா யையினால் வசப்பட்டு மோஹமடைந்து வாசுதேவனே தன் ஆத்மாவாக பார்க்கவில்லையோ, அந்த என்னுடைய மாயையை வசப்படுத்தி தேஹம் எடுத்தவன் போல் இருக்கிறேன். ஜன்மம் எடுத்தது போல் ஆத்ம மாயையால் தோன்றுகிறேன். உலகத்தாரைப் போல உண்மையில் அல்ல.
तच्च जन्म कदा किमर्थं च इत्युच्यते —
அந்த ஜன்மம் எப்பொழுது? எதன் பொருட்டு? என்று கூறுகிறார்.
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत ।
अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् ॥ ७ ॥
யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத ।
அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் ॥ 7 ॥
यदा यदा हि धर्मस्य ग्लानिः हानिः वर्णाश्रमादिलक्षणस्य प्राणिनामभ्युदयनिःश्रेयससाधनस्य भवति भारत, अभ्युत्थानम् उद्भवः अधर्मस्य, तदा तदा आत्मानं सृजामि अहं मायया ॥ ७ ॥
ஹே பாரத! எப்பொழுது எப்பொழுது வர்ணாச்ரமாதி லக்ஷணங்க ளோடு கூடிய பிராணிகளுக்கு இஹ பரலோக நன்மைக்கும், முக்திக்கும் சாதனமாகிய தர்மத்திற்கு ஹானியும் அதர்மத்திற்கு ஏற்றமும் ஏற்படும்பொழுது நான் என் மாயையினால் தர்மத்தை ரக்ஷிக்கும் பொருட்டு என்னை சிருஷ்ட்டித்துக் கொள்கிறேன்.
किमर्थम् ? —
எதன் பொருட்டு எனில்
परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् ।
धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे ॥ ८ ॥
பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் ।
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே ॥ 8 ॥
परित्राणाय परिरक्षणाय साधूनां सन्मार्गस्थानाम् , विनाशाय च दुष्कृतां पापकारिणाम् , किञ्च धर्मसंस्थापनार्थाय धर्मस्य सम्यक् स्थापनं तदर्थं सम्भवामि युगे युगे प्रतियुगम् ॥ ८ ॥
சன்மார்க்கத்தில் உள்ள சாதுக்களை ரக்ஷி ப்பதன் பொருட்டும், பாபசெயல்களை உடைய துஷ்டர்களை நாசம் செய்வதின் பொருட்டும் மேலும் தர்மத்தை நன்றாக நிலைநாட்டுவதன் பொருட்டும் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கிறேன்.
तत् —
அது
जन्म कर्म च मे दिव्यमेवं यो वेत्ति तत्त्वतः ।
त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन ॥ ९ ॥
ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்வத: ।
த்யக்த்வா தேஹம் புநர்ஜன்ம நைதி மாமேதி ஸோஅர்ஜுன ॥ 9 ॥
जन्म मायारूपं कर्म च साधूनां परित्राणादि मे मम दिव्यम् अप्राकृतम् ऐश्वरम् एवं यथोक्तं यः वेत्ति तत्त्वतः तत्त्वेन यथावत्  ।
என்னுடைய ஜன்மமானது மாயாரூபம். கர்மமானது சாதுக்களை ரக்ஷி த்தல் முதலியவை என்னுடைய அலௌகிகமான திவ்ய ஈஸ்வரசக்தியாகும் என்று சொல்லப்பட்டதை எவன் உள்ளபடி அறிகிறானோ அவன் தத்துவத்தை அறிந்தவனாவான்.
त्यक्त्वा देहम् इमं पुनर्जन्म पुनरुत्पत्तिं न एति न प्राप्नोति । माम् एति आगच्छति सः मुच्यते हे अर्जुन ॥ ९ ॥
ஹே அர்ஜுனா! அவன் இந்த சரீரத்தை விட்டபின் வேறு ஜன்மத்தை அடையமாட்டான். அவன் என்னையே அடைவான். அவனே முக்தன் (முக்தியை அடைந்தவன்)
नैष मोक्षमार्ग इदानीं प्रवृत्तः ; किं तर्हि ? पूर्वमपि —
இந்த மோக்ஷமார்க்கமானது இப்பொழுது ஏற்பட்டதல்ல. முன்பே இருந்தது-
वीतरागभयक्रोधा मन्मया मामुपाश्रिताः ।
बहवो ज्ञानतपसा पूता मद्भावमागताः ॥ १० ॥
வீதராகபயக்ரோதா: மந்மயா மாமுபாச்ரிதா: ।
பஹவோ க்ஞானதபஸா பூதா மத்பாவமாகதா: ॥ 10 ॥
वीतरागभयक्रोधाः रागश्च भयं च क्रोधश्च वीताः विगताः येभ्यः ते वीतरागभयक्रोधाः मन्मयाः ब्रह्मविदः ईश्वराभेददर्शिनः मामेव च परमेश्वरम् उपाश्रिताः केवलज्ञाननिष्ठा इत्यर्थः । बहवः अनेके ज्ञानतपसा ज्ञानमेव च परमात्मविषयं तपः तेन ज्ञानतपसा पूताः परां शुद्धिं गताः सन्तः मद्भावम् ईश्वरभावं मोक्षम् आगताः समनुप्राप्ताः।
எவர்களுக்கு ராகம், பயம், க்ரோதம் இவைகள் நீங்கியதோ அவர்கள் ராகாதி தோஷங்கள் அற்றவர்கள். ஈஸ்வர மயமானவர்கள் என்றால் பிரஹ்மத்தை அறிந்தவராய் ஈச்வரன் வேறு, தான் வேறு என்று அறிந்தவர்களாய் பரமேச்வரனாகிய என்னையே ஆச்ரயித்த வர்களாய் எப்பொழுதும் ஞானநிஷ்ட்டையில் இருப்பவர்கள் என்பது பொருள். அநேக புருஷர்கள் பரமாத்மாவைப் பற்றிய ஞானம் என்னும் தபசினால் மேலான சுத்தியைப் பெற்று என்னுடைய பாவமாகிய ஈஸ்வரபாவத்தைப் பெற்று மோக்ஷத்தை அடைந்தார்கள்.
इतरतपोनिरपेक्षज्ञाननिष्ठा इत्यस्य लिङ्गम् ‘ज्ञानतपसा’ इति विशेषणम् ॥ १० ॥
ஞான நிஷ்ட்டையானது (மோக்ஷத்தை அளிக்கும் விஷயத்தில்) மற்றதவங்களை ஆச்ரயிக்காது என்பதற்காக ஞானதபஸினால் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது.
तव तर्हि रागद्वेषौ स्तः, येन केभ्यश्चिदेव आत्मभावं प्रयच्छसि न सर्वेभ्यः इत्युच्यते —
ஆகையால் உங்களுக்கு ராக, த்வேஷம் இருக்கிறது, ஏனெனில் ஒரு சிலருக்கு மாத்திரம் மோக்ஷத்தை அருளுகிறீர்கள். எல்லோ ருக்கும் அல்ல என்றசங்கைக்கு (பகவான்) பதில் அளிக்கிறார்.
ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् ।
मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः ॥ ११ ॥
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் ।
மம வர்த்மானுவர்தந்தே மனுஷ்யா: பார்த ஸர்வச: ॥ 11 ॥
ये यथा येन प्रकारेण येन प्रयोजनेन यत्फलार्थितया मां प्रपद्यन्ते तान् तथैव तत्फलदानेन भजामि अनुगृह्णामि अहम् इत्येतत् । तेषां मोक्षं प्रति अनर्थित्वात् ।
எவர்கள் எவ்வாறு எந்தவிதமாக எந்த பிரயோஜனத்தில் இச்சை உள்ளவர்களாகி என்னை அடைகிறார்களோ அவர்களுக்கு அவ்வாறே பலத்தைக் கொடுத்து நான் அனுக்ரஹம் செய்கிறேன். அவர்களுக்கு மோக்ஷத்தில் விருப்பம் இல்லை.
न हि एकस्य मुमुक्षुत्वं फलार्थित्वं च युगपत् सम्भवति ।
ஒரே சமயத்தில் முமுக்ஷத்துவமும், பலத்தில் இச்சையும் ஏற்படுவதில்லை.
अतः ये फलार्थिनः तान् फलप्रदानेन, ये यथोक्तकारिणस्तु अफलार्थिनः मुमुक्षवश्च तान् ज्ञानप्रदानेन, ये ज्ञानिनः संन्यासिनः मुमुक्षवश्च तान् मोक्षप्रदानेन, तथा आर्तान् आर्तिहरणेन इत्येवं यथा प्रपद्यन्ते ये तान् तथैव भजामि इत्यर्थः ।
ஆகையால் எவர்கள் பயனை இச்சிக்கிறார்களோ அவர்களுக்கு பயனையும், எவர்கள் சாஸ்திரத்தில் கூறியபடி கர்மங் களை செய்துகொண்டு பலத்தில் இச்சை அற்றவர்களாய் இருக்கிறார் களோ அவர்களுக்கு ஞானத்தையும், எவர்கள் ஞானியாகவும், சந்நி யாசியாகவும், முமுக்ஷக்களாயும் இருக்கிறார்களோ அவர்களுக்கு மோக்ஷத்தையும், எவர்கள் துக்கத்தினின்றும் விடுதலை அடைய விரும்புகிறார்களோ அவர்களுக்கு துக்கநிவிர்த்தியையும் அடையச் செய்கிறேன். எவர்கள் எவ்வாறு என்னை அடைகிறார்களோ அவ்வாறே அவர்களை அனுக்ரஹிக்கிறேன் என்பது பொருள்.
न पुनः रागद्वेषनिमित्तं मोहनिमित्तं वा कञ्चित् भजामि ।
மேலும் ராகதுவேஷ நிமித்தமாகவோ, மோஹ நிமித்தமாகவோ (நான்) ஒருவருக்கும் அனுக்ரஹம் செய்யமாட்டேன்.
सर्वथापि सर्वावस्थस्य मम ईश्वरस्य वर्त्म मार्गम् अनुवर्तन्ते मनुष्याः — यत्फलार्थितया यस्मिन् कर्मणि अधिकृताः ये प्रयतन्ते ते मनुष्या अत्र उच्यन्ते — हे पार्थ सर्वशः सर्वप्रकारैः ॥ ११ ॥
எவ்வகையிலாவது மனிதர்கள் ஈஸ்வரானாகிய என்னுடைய மார்க்கத்தை அனுசரிக்கின்றார்கள். எந்த பலத்தில் இச்சை உள்ளவர் களாகி எந்த கர்மத்திற்கு அதிகாரிகளாகி எல்லா வகையிலும் பிரயத்னம் செய்கிறார்களோ அவர்களே மனிதர்கள் என்று கூறப்படுகிறார்கள்.
यदि तव ईश्वरस्य रागादिदोषाभावात् सर्वप्राणिषु अनुजिघृक्षायां तुल्यायां सर्वफलप्रदानसमर्थे च त्वयि सति ‘वासुदेवः सर्वम्’ इति ज्ञानेनैव मुमुक्षवः सन्तः कस्मात् त्वामेव सर्वे न प्रतिपद्यन्ते इति ? शृणु तत्र कारणम् —
எதனால் ஈஸ்வரனாகிய நீங்கள் ராக துவேஷமற்றவராய், எல்லா பிராணிகளுக்கும் சமமாய் அனுக்ரஹிப்பதில் இச்சை உடையவராய் எல்லா பலன்களையும் கொடுப்பதில் சாமர்த்தியம் உடையவராய் இருந்தபோதிலும், வாசுதேவனே எல்லாம் என்றஞானத்தினால் மோக்ஷமடைய விரும்பியவராய் எல்லோரும் ஏன் உன்னையே சரணமடைவதில்லை, என்றால் அதன் காரணத்தைக் கேள்.
काङ्क्षन्तः कर्मणां सिद्धिं यजन्त इह देवताः ।
क्षिप्रं हि मानुषे लोके सिद्धिर्भवति कर्मजा ॥ १२ ॥
காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா: ।
க்ஷி ப்ரம் ஹி மானுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா ॥ 12 ॥
काङ्क्षन्तः अभीप्सन्तः कर्मणां सिद्धिं फलनिष्पत्तिं प्रार्थयन्तः यजन्ते इह अस्मिन् लोके देवताः इन्द्राग्न्याद्याः -
கர்மபலத்தில் இச்சை உடைய மனிதர்கள் இந்த லோகத்தில் இந்திரன், அக்நி முதலிய தேவதைகளுக்கு பூஜை செய்கிறார்கள்.
அத யோ அன்யாம் தேவதாமுபாஸ்தே அன்யோ அஸாவான்யோ அஹமஸ்மீதி ந ஸ வேதயதா பசுரேவம் ஸ தேவா னாம், சுருதியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த பாவனையுடன் எவர்கள் மற்றதேவதைகளை பூஜை செய்கிறார்களோ அவர்கள்.

அந்த தேவதை வேறு நான் வேறு என்று கொஞ்சமும் அறியாத தால் மனிதர்களுக்கு ஆடு, மாடு முதலியவை எவ்வாறோ அவ்வாறே தேவதைகளுக்கு ஆகிறார்கள்.
तेषां हि भिन्नदेवतायाजिनां फलाकाङ्क्षिणां क्षिप्रं शीघ्रं हि यस्मात् मानुषे लोके, मनुष्यलोके हि शास्त्राधिकारः ।
வேறுபலத்தில் இச்சை உடையவர்களாகி வேறு தேவதைகஞக்கு பூஜை செய்கிறமனிதர்களுக்கு இந்த மனித உலகத்தில் விரை வாகவே பலன் கிடைக்கிறது. ஏனெனில் மனித லோகத்தில் தான் சாஸ்திரத்திற்கு அதிகாரம் உள்ளது.
‘क्षिप्रं हि मानुषे लोके’ इति विशेषणात् अन्येष्वपि कर्मफलसिद्धिं दर्शयति भगवान् ।
மனிதலோகத்தில் எங்கு விரைவாக என்றவிசேஷணத்தினால் மற்றலோகங்களிலும் கூட கர்மபலன்கள் ஏற்படும் என்பதை பகவான் காண்பிக்கிறார்.
मानुषे लोके वर्णाश्रमादिकर्माणि इति विशेषः, तेषां च वर्णाश्रमाद्यधिकारिकर्मणां फलसिद्धिः क्षिप्रं भवति । कर्मजा कर्मणो जाता ॥ १२ ॥
மனிதலோகத்தில் வர்ணாச்ரம முதலியவைக்கு தகுந்தவாறு கர்மத்தில் அதிகாரம் இருத்தலே அந்த விசேஷணம், அந்த வர்ணாச்ரம முதலியவற்றில் அதிகாரமுடையவனுடைய கர்மத்திற்கு ஏற்ப கர்மத்தினால் ஏற்படும் பலன் விரைவாகவே சித்திக்கிறது.
मानुषे एव लोके वर्णाश्रमादिकर्माधिकारः, न अन्येषु लोकेषु इति नियमः किंनिमित्त इति ।
மனிதலோகத்தில் மாத்திரமே வர்ணாச்ரம கர்மங்களுக்கு அதிகாரி. ஆனால் மற்றலோகங்களில் இல்லை என் பது நியமம். இந்த நியமம் எந்த நிமித்தத்தால்-
अथवा वर्णाश्रमादिप्रविभागोपेताः मनुष्याः मम वर्त्म अनुवर्तन्ते सर्वशः इत्युक्तम् । कस्मात्पुनः कारणात् नियमेन तवैव वर्त्म अनुवर्तन्ते न अन्यस्य इति ? उच्यते —
அல்லது வர்ணாச்ரமாதி விபாகங்களுடைய மனிதன் எப்பொழு தும் என் மார்க்கத்தையே அனுசரிக்கின்றான் என்று கூறினீர்கள். மறு படியும் நியமமாக என்னுடைய மார்க்கத்தை அனுசரிக்காமல் மற்றமார்க்கத்தில் ஈடுபடுகின்றனர் என்று எந்த காரணத்தைக் கொண்டு கூறி அருளினீர்கள் என்றால் கூறுகிறேன்-
चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागशः ।
तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम् ॥ १३ ॥
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகச: ।
தஸ்ய கர்தாரமபி மாம் வித்தயகர்தாரமவ்யயம் ॥ 13 ॥
चत्वार एव वर्णाः चातुर्वर्ण्यं मया ईश्वरेण सृष्टम् उत्पादितम् , ‘ब्राह्मणोऽस्य मुखमासीत्’ (ऋ. १० । ८ । ९१) इत्यादिश्रुतेः । गुणकर्मविभागशः गुणविभागशः कर्मविभागशश्च । गुणाः सत्त्वरजस्तमांसि ।
ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்றநான்கு வர்ணங்களும் என்னால் சிருஷ்டிக்கப்பட்டது. பிராஹ்மணன் இதன் முகமானான், என்றசுருதி வாக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. சத்வ ரஜஸ்தமஸ் ஆகிய முக்குணங்களின் ஏற்றதாழ்வுக்கும், கர்மத்தின் ஏற்றதாழ்வுக்கும் ஏற்றவாறு நான்கு வர்ணங்கள் என்னால் சிருஷ்டிக்கப்பட்டது.
तत्र सात्त्विकस्य सत्त्वप्रधानस्य ब्राह्मणस्य ‘शमो दमस्तपः’ (भ. गी. १८ । ४२) इत्यादीनि कर्माणि ।
சாத்விகனான சத்வகுணத்தைப் பிரதானமாக உடைய பிராம்ம ணனுக்கு சமம், தமம், தபஸ் முதலிய கர்மங்கள்
सत्त्वोपसर्जनरजःप्रधानस्य क्षत्रियस्य शौर्यतेजःप्रभृतीनि कर्माणि ।
சத்வகுணத்துடன் ரஜோகுணம் பிரதானமாக உடைய க்ஷத்ரிய னுக்கு சூர வீரத்தன்மை, தேஜஸ் கூடியவை முதலிய கர்மங்கள்
तमउपसर्जनरजःप्रधानस्य वैश्यस्य कृष्यादीनि कर्माणि ।
தமசுடன் ரஜோகுணம் பிரதானமாக உடைய வைசியனுக்கு உழவு முதலிய கர்மங்கள்
रजउपसर्जनतमःप्रधानस्य शूद्रस्य शुश्रूषैव कर्म इत्येवं गुणकर्मविभागशः चातुर्वर्ण्यं मया सृष्टम् इत्यर्थः ।
ரஜோகுணத்துடன் தமஸ் பிரதானமாக உடைய சூத்திரனுக்கு மற்றவர்களுக்கு சேவை செய்தல் முதலிய கர்மங்கள் என இவ்வாறு குணம் கர்மம் என்பனவற்றின் ஏற்றதாழ்வுக்கேற்ப நான்கு வர்ணங்கள் என்னால் சிருஷ்ட்டிக்கப்பட்டது என்பது பொருள்.
तच्च इदं चातुर्वर्ण्यं न अन्येषु लोकेषु, अतः मानुषे लोके इति विशेषणम् ।
இந்த நான்கு வர்ணங்களும் மற்றலோகங்களில் இல்லை. என்பதை காண்பிப்பதற்காக மானுடலோகம் என்று விசேஷணம் கூறப்பட்டுள்ளது.
हन्त तर्हि चातुर्वर्ण्यस्य सर्गादेः कर्मणः कर्तृत्वात् तत्फलेन युज्यसे, अतः न त्वं नित्यमुक्तः नित्येश्वरश्च इति ? उच्यते —
நீங்கள் சதுர்வர்ணங்களை சிருஷ்ட்டித்தல் முதலிய கர்மங்க ளுக்கு கர்த்தாவானால், அப்பொழுது தங்களுக்கு அந்த பலத்தில் சம்பந்தம் ஏற்படும். ஆகையால் தாங்கள் நித்ய முக்தன், நித்ய ஈஸ்வரன் ஆக முடியாதே எனில் இதைக் குறித்து கூறப்படுகிறது.
यद्यपि मायासंव्यवहारेण तस्य कर्मणः कर्तारमपि सन्तं मां परमार्थतः विद्धि अकर्तारम् । अत एव अव्ययम् असंसारिणं च मां विद्धि ॥ १३ ॥
மாயையின் வியவஹாரத்தால் அந்த கர்மங்களின் கர்த்தாவாக இருக்கிறேன் என்றாலும் உண்மையில் நான் அகர்த்தா என்று அறி. ஆகையினாலேயே நான் அவ்வியயம் அதாவது நான் அசம்சாரி என்று அறி.
येषां तु कर्मणां कर्तारं मां मन्यसे परमार्थतः तेषाम् अकर्ता एवाहम् , यतः —
எந்த கர்மங்களுக்கு என்னை கர்த்தாவாக நினைக்கிறார்களோ உண்மையில் நான் அவைகளுக்கு அகர்த்தா. ஏனெனில்-
न मां कर्माणि लिम्पन्ति न मे कर्मफले स्पृहा ।
इति मां योऽभिजानाति कर्मभिर्न स बध्यते ॥ १४ ॥
ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா ।
இதி மாம் யோஅபிஜாநாதி கர்மபிர்ன ஸ பத்யதே ॥ 14 ॥
न मां तानि कर्माणि लिम्पन्ति देहाद्यारम्भकत्वेन, अहङ्काराभावात् । न च तेषां कर्मणां फलेषु मे मम स्पृहा तृष्णा ।
எனக்கு அஹங்காரம் இல்லாததினால் அந்த கர்மமானது தேஹம் முதலியவற்றின் உத்பத்திக்கு காரணமாகி என்னை ஒருபொழுதும் பற்றாது. மேலும் அந்த கர்ம பலனில் எனக்கு ஆசையும் இல்லை.
येषां तु संसारिणाम् ‘अहं कर्ता’ इत्यभिमानः कर्मसु, स्पृहा तत्फलेषु च, तान् कर्माणि लिम्पन्ति इति युक्तम् , तदभावात् न मां कर्माणि लिम्पन्ति ।
எந்த சம்சாரிகளுக்கு நான் கர்த்தா என்றஅபிமானமும், கர்மங்க ளிலும், அதன் பலன்களிலும் ஆசையும் உள்ளதோ அவர்களை கர்மங்கள் பற்றுகின்றன. அந்த அகங்காரம் இல்லாததால் என்னை அந்த கர்மங்கள் பற்றுவதில்லை.
इति एवं यः अन्योऽपि माम् आत्मत्वेन अभिजानाति ‘नाहं कर्ता न मे कर्मफले स्पृहा’ इति सः कर्मभिः न बध्यते, तस्यापि न देहाद्यारम्भकाणि कर्माणि भवन्ति इत्यर्थः ॥ १४ ॥
என்று இவ்வாறு எவன் ஒருவன் என்னை ஆத்மரூபமாக அறிகி றானோ என்றால் நான் கர்த்தா அல்ல, கர்ம பலத்தில் எனக்கு ஆசை இல்லை என்று எவன் அறிகிறானோ அவனை கர்மங்கள் பற்றுவது இல்லை. அவர்களுக்கும் தேஹத்தை ஆரம்பிக்கக்கூடிய கர்மங்கள் இல்லை என்பது பொருள்.
‘नाहं कर्ता न मे कर्मफले स्पृहा’ इति —
நான் கர்த்தா அல்ல. அவ்வாறேஎனக்கு கர்ம பலத்தில் ஆசை இல்லை.
एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः ।
कुरु कर्मैव तस्मात्त्वं पूर्वैः पूर्वतरं कृतम् ॥ १५ ॥
ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷபி: ।
குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம் ॥ 15 ॥
एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैः अपि अतिक्रान्तैः मुमुक्षुभिः । कुरु तेन कर्मैव त्वम् , न तूष्णीमासनं नापि संन्यासः कर्तव्यः ।
இவ்வாறு அறிந்த முன்னோர்களாகிய முமுக்ஷக்களும் கர்மம் செய்தார்கள். ஆகையால் கர்மம் செய். ஒன்றும் செய்யாமல் அமர்ந்தி ருக்கக்கூடாது. சந்நியாசமும் செய்யக்கூடாது.
तस्मात् त्वं पूर्वैरपि अनुष्ठितत्वात् , यदि अनात्मज्ञः त्वं तदा आत्मशुद्ध्यर्थम् , तत्त्वविच्चेत् लोकसङ्ग्रहार्थं पूर्वैः जनकादिभिः पूर्वतरं कृतं न अधुनातनं कृतं निर्वर्तितम् ॥ १५ ॥
ஆகையால் முன்னோர்கள் அனுஷ்ட்டித்ததினால் நீ அக்ஞானி யாய் இருந்தால் சித்த சுத்தியின் பொருட்டும், நீ ஞானியாய் இருந்தால் லோகசங்க்ரஹத்தின் பொருட்டும் ஜனகர் முதலிய முன்னோர்கள் அனுஷ்ட்டித்ததுபோல் அனுஷ்டிக்கவேண்டும். (இதற்கு மாறாக உள்ள) இப்பொழுது உள்ளவர்கள் அனுஷ்ட் டிப்பது போல் கூடாது.
तत्र कर्म चेत् कर्तव्यं त्वद्वचनादेव करोम्यहम् , किं विशेषितेन ‘पूर्वैः पूर्वतरं कृतम्’ इत्युच्यते ; यस्मात् महत् वैषम्यं कर्मणि । कथम् ? —
கர்மம் அவசியம் செய்யவேண்டியது என்று உங்களுடைய ஆக் ஞையின்படி நான் செய்கிறேன். எதன் பொருட்டு விசே ஷமாக முன் னோர்கள் போல் என்று குறிப்பிடவேண்டும் எனில், கர்ம விஷயத்தில் மிகுந்த விஷமத்தன்மை (விரோதத்தன்மை) உள்ளதால். அது எவ் வாறு என்று கூறுகிறேன்.
किं कर्म किमकर्मेति कवयोऽप्यत्र मोहिताः ।
तत्ते कर्म प्रवक्ष्यामि यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात् ॥ १६ ॥
கிம் கர்ம கிமகர்மேதி கவயோஅப்யத்ர மோஹிதா: ।
தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேஅசுபாத் ॥ 16 ॥
किं कर्म किं च अकर्म इति कवयः मेधाविनः अपि अत्र अस्मिन् कर्मादिविषये मोहिताः मोहं गताः । तत् अतः ते तुभ्यम् अहं कर्म अकर्म च प्रवक्ष्यामि, यत् ज्ञात्वा विदित्वा कर्मादि मोक्ष्यसे अशुभात् संसारात् ॥ १६ ॥
எது கர்மம்? எது அகர்மம்? என்று மேதாவிகளும் கர்மவிஷயத் தில் மோஹமடைந்திருக்கிறார்கள். ஆகையால் எந்த கர்மாதிகளை அறிந்து சம்சாரத்திலிருந்து விடுபடுவாயோ அந்த கர்மம், அகர்மம் இவைகளைப் பற்றி உனக்கு நான் கூறுகிறேன்.
न चैतत्त्वया मन्तव्यम् — कर्म नाम देहादिचेष्टा लोकप्रसिद्धम् , अकर्म नाम तदक्रिया तूष्णीमासनम् ; किं तत्र बोद्धव्यम् ? इति । कस्मात् , उच्यते —
கர்மம் என்றால் தேஹாதிகளின் வியவஹாரம், அகர்மம் என்றால் அதைச் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருத்தல் என்பது உலகத்தில் எல்லோரும் அறிந்ததே. இதில் அறிய வேண்டியது என்ன உள்ளது என்று நினைத்து விடக்கூடாது. ஏன்எனில், கூறுகிறார்-
कर्मणो ह्यपि बोद्धव्यं बोद्धव्यं च विकर्मणः ।
अकर्मणश्च बोद्धव्यं गहना कर्मणो गतिः ॥ १७ ॥
கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண: ।
அகர்மணச்ச போத்தவ்யம் கஹனா கர்மணோ கதி: ॥ 17 ॥
कर्मणः शास्त्रविहितस्य हि यस्मात् अपि अस्ति बोद्धव्यम् , बोद्धव्यं च अस्त्येव विकर्मणः प्रतिषिद्धस्य, तथा अकर्मणश्च तूष्णीम्भावस्य बोद्धव्यम् अस्ति इति त्रिष्वप्यध्याहारः कर्तव्यः ।
சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட கர்மாவை அறியவேண்டும். சாஸ்தி ரத்தில் நிஷேதிக்கப்பட்ட விகர்மாவையும் அறியவேண்டும். அவ்வாறே சும்மா இருத்தல் என்றஅகர்மத்தைப் பற்றியும் அறிய வேண்டும். ஆக மூன்றிலும் அறியப்படவேண்டியது உள்ளது என சேர்த்துக்கொள்ளவேண்டும்.
यस्मात् गहना विषमा दुर्ज्ञेया, कर्मणः इति उपलक्षणार्थं कर्मादीनाम् — कर्माकर्मविकर्मणां गतिः याथात्म्यं तत्त्वम् इत्यर्थः ॥ १७ ॥
ஏனெனில் கர்ம, அகர்ம, விகர்ம இவைகளினுடைய யதார்த்த ஸ்வரூபமானதின் தத்துவமானது மிகுந்த ரகசியமானது. இதை அறிவது மிகக் கடினமானது.
किं पुनस्तत्त्वं कर्मादेः यत् बोद्धव्यं वक्ष्यामि इति प्रतिज्ञातम् ? उच्यते —
மேலும் கர்மங்களைப் பற்றி தெரியவேண்டியதைக் கூறுகிறேன் என்று பிரதிக்ஞை செய்து அக்கர்ம முதலியவற்றின் உண்மையான தத்துவம் என்ன? என்பதைக் கூறுகிறார்.
कर्मण्यकर्म यः पश्येदकर्मणि च कर्म यः ।
स बुद्धिमान्मनुष्येषु स युक्तः कृत्स्नकर्मकृत् ॥ १८ ॥
கர்மண்யகர்ம ய: பச்யேதகர்மணி ச கர்ம ய: ।
ஸ புத்திமான் மனுஷ்யேஷு ஸு யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத் ॥ 18 ॥
कर्मणि, क्रियते इति कर्म व्यापारमात्रम् , तस्मिन् कर्मणि अकर्म कर्माभावं यः पश्येत् , अकर्मणि च कर्माभावे कर्तृतन्त्रत्वात् प्रवृत्तिनिवृत्त्योः — वस्तु अप्राप्यैव हि सर्व एव क्रियाकारकादिव्यवहारः अविद्याभूमौ एव — कर्म यः पश्येत् पश्यति ।
செய்யப்படுகிறது என்பது செயல் அல்லது கர்மம் (தொழில்) எனப் படும். அந்த கர்மத்தில் எவன் கர்ம அபாவத்தை அதாவது அகர்மத் தைப் பார்க்கிறானோ. அவ்வாறேஅகர்மத்தில் சரீராதி சேஷ்ட்டைகள் அற்றதில் கர்மாவைப் பார்க்கிறானோ. இதன் பொருள் என்னவெனில் கர்மத்தைச் செய்தல், கர்மத்தைச் செய்யாமல் இருத்தல் இவை இரண் டும் கர்த்தாவினுடைய அதீனமாகிறது. அவ்வாறேஆத்மதத்துவத்தை அறிவதற்கு முன் அக்ஞான அவஸ்தையில் எல்லா கிரியா காரகங்க ளாகிய வியவஹாரங்கள் இருக்கும். இவ்வாறு அவித்தியா அவஸ்தையில் அகர்மாவில் கர்மத்தைப் பார்க்கிறான்.
सः बुद्धिमान् मनुष्येषु, सः युक्तः योगी च, कृत्स्नकर्मकृत् समस्तकर्मकृच्च सः, इति स्तूयते कर्माकर्मणोरितरेतरदर्शी ॥
எவன் கர்மத்தில் அகர்மத்தைப் பார்க்கிறானோ அகர்மத்தில் கர்மத்தைப் பார்க்கிறானோ அவன் மனிதர்களுல் புத்திமான், யோகி, எல்லா கர்மங்களையும் செய்து முடித்தவன் என்று துதிக்கப்படுகி றான்.
ननु किमिदं विरुद्धमुच्यते ‘कर्मणि अकर्म यः पश्येत्’ इति ‘अकर्मणि च कर्म’ इति ; न हि कर्म अकर्म स्यात् , अकर्म वा कर्म । तत्र विरुद्धं कथं पश्येत् द्रष्टा ।
கர்மத்தில் அகர்மத்தைப் பார்க்கிறான், அகர்மத்தில் கர்மத்தைப் பார்க்கிறான் என்று எதனால் இந்த விருத்தமான பாவத்தைக் கூறுகி றீர்கள்? ஒரு பொழுதும் கர்மம் அகர்மமாகாது அகர்மமும் கர்மமா காது, என்றவிடத்து எவ்வாறு த்ரஷ்டாவானவன் விருத்தத்தைப் (பொருந்தாததைப்) பார்ப்பான்?
न, अकर्म एव परमार्थतः सत् कर्मवत् अवभासते मूढदृष्टेः लोकस्य, तथा कर्मैव अकर्मवत् । तत्र यथाभूतदर्शनार्थमाह भगवान् — ‘कर्मण्यकर्म यः पश्येत्’ इत्यादि । अतो न विरुद्धम् । बुद्धिमत्त्वाद्युपपत्तेश्च । ‘बोद्धव्यम्’ (भ. गी. ४ । १७) इति च यथाभूतदर्शनमुच्यते ।
அப்படியன்று உண்மையில் அகர்மமே உள்ளது. ஆனால் லோகத்தில் உள்ள மூடபுத்தி உடையவர்களுக்கு கர்மம் போல் தோன் றுகிறது. அவ்வாறு கர்மம் அகர்மம் போல் தோன்றுகிறது. அங்கு அவர்களுக்கு யதார்த்த தத்துவத்தைக் காண்பிப்பதற்காக பகவான் (கர்மணி அகர்ம ய: பச்யேத்) என்பது முதலிய கீதா ஸ்லோகங்களால் கூறினார். ஆகையால் அது விருத்தமாகாது. அறிவுடமை முதலி யவை அமைவதால், யதார்த்த ஞானத்தைத்தான் அறிவதற்கு யோக்கிய முடையது என்று கூறப்படுகிறது.
न च विपरीतज्ञानात् अशुभात् मोक्षणं स्यात् ; ‘यत् ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात्’ (भ. गी. ४ । १६) इति च उक्तम् ।
அசுபமாகிய விபரீதஞானத்தினால் மோக்ஷம் உண்டாகாது என் பதை यत् ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात् (யக்ஞாத்வா மோக்ஷயஸே அசுபாத்) என்று கூறப்பட்டது.
तस्मात् कर्माकर्मणी विपर्ययेण गृहीते प्राणिभिः तद्विपर्ययग्रहणनिवृत्त्यर्थं भगवतो वचनम् ‘कर्मण्यकर्म यः’ इत्यादि ।
கர்ம அகர்மங்களைப் பற்றி பிராணிகள் விபரீதமாக புரிந்து கொண்டிருப்பதால் அந்த விபரீதமாக புரிந்து கொண்டதை நிவிர்த்தி कर्मणि अकर्म यः (கர்மணி அகர்ம ய) என்பது முதலிய பகவானுடைய வசனங்கள்.
न च अत्र कर्माधिकरणमकर्म अस्ति, कुण्डे बदराणीव । नापि अकर्माधिकरणं कर्मास्ति, कर्माभावत्वादकर्मणः ।
இலந்தபலத்திற்கு இடம் (ஒரு பாண்டம்) ஆதாரமாக இருப்பது போல் கர்மத்திற்கு அகர்மம் ஆதாரமாக இல்லை. அவ்வாறே அகர்மத்திற்கு கர்மம் ஆதாரமல்ல. ஏனெனில் அகர்மம் என்பது கர்மம் இல்லாதிருத்தலே.
अतः विपरीतगृहीते एव कर्माकर्मणी लौकिकैः, यथा मृगतृष्णिकायामुदकं शुक्तिकायां वा रजतम् ।
ஆகையால் உலகோர்கள் (ஸாமான்ய ஜனங்களால்) விபரீதமாக கானலில் நீர் கற்பிக்கப்பட்டது போலும், சிப்பியில் வெள்ளியை கற்பித் ததுபோல் கர்மத்தில் அகர்மமானது விபரீதமாக கல்பிக்கப்பட்டுள்ளது.
ननु कर्म कर्मैव सर्वेषां न क्वचित् व्यभिचरति ।
ஆனால் எல்லோருக்கும் கர்மம் கர்மம்தான். ஒருபோதும் மாறுபடாது.
तत् न, नौस्थस्य नावि गच्छन्त्यां तटस्थेषु अगतिषु नगेषु प्रतिकूलगतिदर्शनात् , दूरेषु चक्षुषा असंनिकृष्टेषु गच्छत्सु गत्यभावदर्शनात् ।
அவ்வாறு அல்ல. ஓடத்தில் செல்பவனுக்கு கரையில் செல்லுதல் அற்றமரங்கள் செல்லுதல் போன்றவிபரீத தோற்றம் காணப்படுகிறது. அவ்வாறேதூரத்தில் சென்று கொண்டிருப்பவனின் செல்லுதல் என்பது காணப்படாது.
एवम् इहापि अकर्मणि कर्मदर्शनं कर्मणि च अकर्मदर्शनं विपरीतदर्शनं येन तन्निराकरणार्थमुच्यते ‘कर्मण्यकर्म यः पश्येत्’ इत्यादि ।
இவ்வாறு இங்கும் அகர்மத்தில் நான் கர்மம் செய்கிறேன் என்றகர்மதர்சனமும், கர்மத்தில் அகர்மத்தைப் பார்க்கின்றேன் என்ற விபரீத தர்சனம் எதனாலோ அதை நிராகரிப்பதற்காக (கர்மணி அகர்ம ய: பச்யேத்) இவை முதலியவைகளால் கூறப்பட்டது.
तदेतत् उक्तप्रतिवचनमपि असकृत् अत्यन्तविपरीतदर्शनभाविततया मोमुह्यमानो लोकः श्रुतमपि असकृत् तत्त्वं विस्मृत्य विस्मृत्य मिथ्याप्रसङ्गम् अवतार्यावतार्य चोदयति इति पुनः पुनः उत्तरमाह भगवान् , दुर्विज्ञेयत्वं च आलक्ष्य वस्तुनः ।
இந்த விஷயத்தைக் குறித்த (அநேக சங்கைகளுக்கு) மறுபடியும் மறுபடியும் மறுமொழி அளித்தாலும் மிகுந்த விபரீத தர்சன பாவனையினால் மோஹமடைந்ததினால் அநேகதடவை கேட்டாலும் உலகோர்கள் தத்துவத்தை மறந்து மித்திய விஷயத்தில் அடிக்கடி புகுந்து சங்கை செய்கிறார்கள் என்பதாலும், வஸ்துவை அறிவது மிக கடினமானது என்பதாலும் பகவான் மறுபடியும் மறுபடியும் உத்தரம் (பதில்) அளிக்கிறார்.
‘अव्यक्तोऽयमचिन्त्योऽयम्’ (भ. गी. २ । २५) ‘न जायते म्रियते’ (भ. गी. २ । २०) इत्यादिना आत्मनि कर्माभावः श्रुतिस्मृतिन्यायप्रसिद्धः उक्तः वक्ष्यमाणश्च ।
சுருதி, ஸ்மிருதி, யுக்திகளில் பிரசித்தமான ஆத்மாவிடத்தில் கர்ம அபாவத்தை अव्यक्तोऽयमचिन्त्योऽयम्’ (அவ்யக்தோயமசிந்த்யோயம்) न जायते म्रियते (ந ஜாயதே மரியதே) முதலிய ஸ்லோகங்களில் கூறி இருக்கிறார். இனி மேல் ஸ்லோகங்களில் கூறப்போகிறார்.
तस्मिन् आत्मनि कर्माभावे अकर्मणि कर्मविपरीतदर्शनम् अत्यन्तनिरूढम् ।
அந்த கிரியை அற்றஆத்மாவினிடத்தில் (அகர்மத்தில்) கர்மமாகிய விபரீதத்தைப் பார்த்தல் என்பது உலகத்தில் ஸ்வபா வமாகவே வேரூன்றி இருக்கிறது.
ஏனெனில் கர்மம் எது? அகர்மம் எது? என்றவிஷயத்தில் புத்திமான்களும் மோஹமடைந்திருக்கிறார்கள்.
देहाद्याश्रयं कर्म आत्मन्यध्यारोप्य ‘अहं कर्ता, मम एतत् कर्म, मया अस्य कर्मणः फलं भोक्तव्यम्’ इति च ।
தேஹாதிகளை ஆசிரயித்த கர்மாவை ஆத்மாவினிடத்தில் ஆரோபித்து நான் கர்த்தா, என்னுடைய கர்மம், என்னால் பலமானது அனுபவிக்கப்பட வேண்டும் என்று (நினைக்கிறார்கள்)
तथा ‘अहं तूष्णीं भवामि, येन अहं निरायासः अकर्मा सुखी स्याम्’ इति कार्यकरणाश्रयं व्यापारोपरमं तत्कृतं च सुखित्वम् आत्मनि अध्यारोप्य ‘न करोमि किञ्चित् , तूष्णीं सुखमासे’ इति अभिमन्यते लोकः ।
அவ்வாறேநான் சும்மா இருக்கிறேன். எதனால் நான் ஆசை அற்று அகர்மாவாயும் சுகியாகவும் இருப்பேன் என்று காரிய கரண ஆசிரிய வியாபாரமற்று அதனால் ஏற்படும் சுகத்தை ஆத்மாவில் ஏற்றி நான் ஒன்றும் செய்யவில்லை. சும்மா சுகமாக இருந்தேன் என்று உலகத்தோர் நினைக்கிறார்கள்.
तत्रेदं लोकस्य विपररीतदर्शनापनयाय आह भगवान् — ‘कर्मण्यकर्म यः पश्येत्’ इत्यादि ॥
உலகத்தில் உள்ள இந்த விபரீத தரிசனத்தைப் போக்குவதற்காக பகவான் (கர்மணி அகர்ம ய: பச்யேத்) முதலிய சுலோகங்களில் கூறுகிறார்.
अत्र च कर्म कर्मैव सत् कार्यकरणाश्रयं कर्मरहिते अविक्रिये आत्मनि सर्वैः अध्यस्तम् , यतः पण्डितोऽपि ‘अहं करोमि’ इति मन्यते ।
இங்கு தேஹேந்திரியாதிகளை ஆச்ரயித்திருக்கும் கர்மம் கர்மமாகவே இருந்துகொண்டு கர்மமில்லாத நிர்விகாரியாகிய ஆத்மாவிடத்தில் அத்யாரோபம் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் புத்திமானும் கூட நான் செய்கிறேன் என்று நினைக்கிறான்.
अतः आत्मसमवेततया सर्वलोकप्रसिद्धे कर्मणि नदीकूलस्थेष्विव वृक्षेषु गतिप्रातिलोम्येन अकर्म कर्माभावं यथाभूतं गत्यभावमिव वृक्षेषु यः पश्येत् ,
(ஓடத்தில் செல்பவனுக்கு) நதிதீரத்தில் உள்ள மரத்தில் செல்லுதலை பிராந்தியினாலே தோன்றுவது போல அக்ஞானத்தினால் எவன் ஆத்மாவோடு ஒத்திருப்பதாக சகல ஜனங்களும் விபரீதமாக அறிந்துள்ள கர்மத்திலே உண்மையில் நதிக்கரையில் உள்ளவனுக்கு மரம் செல்லுதலான விபரீதஞானம் இல்லையோ அவ்வாறேகர்மத்தில் அகர்மத்தைப் பார்க்கிறான். அதாவது கர்ம அபாவத்தைப் பார்க்கிறான்.
अकर्मणि च कार्यकरणव्यापारोपरमे कर्मवत् आत्मनि अध्यारोपिते, ‘तूष्णीं अकुर्वन् सुखं आसे’ इत्यहङ्काराभिसन्धिहेतुत्वात् , तस्मिन् अकर्मणि च कर्म यः पश्येत् ।
தேஹ இந்திரியாதிகள் உபசாந்தி அடைந்த அகர்மமாகிய ஆத்மாவிடத்தில் நான் சும்மா இருந்தேன், ஒன்றும் செய்யவில்லை சுகமாய் இருந்தேன் என்று கர்மத்தைப் போல ஆரோபம் செய்யப்பட்ட பொழுது அஹங்காரத்தின் சம்பந்தம் ஏற்படுவ தினால் அகர்மத்தில் கர்மத்தை எவன் பார்க்கிறானோ (அவன் ஒன்றும் செய்யவில்லை என்றாலும் கர்மம் தான்)
यः एवं कर्माकर्मविभागज्ञः सः बुद्धिमान् पण्डितः मनुष्येषु, सः युक्तः योगी कृत्स्नकर्मकृच्च सः अशुभात् मोक्षितः कृतकृत्यो भवति इत्यर्थः ॥
எவன் இவ்வாறு கர்ம அகர்ம விகாரங்களை அறிந்தானோ அவன் மனிதர்களுள் புத்திமான். அவனே யோகி. எல்லா கர்மங்க ளையும் செய்து முடித்தவன். அவன் அசுபத்திலிருந்து விடுபட்டவனா வான் அவனே கிருதகிருத்தியன் என்பது பொருள்.
अयं श्लोकः अन्यथा व्याख्यातः कैश्चित् । कथम् ? नित्यानां किल कर्मणाम् ईश्वरार्थे अनुष्ठीयमानानां तत्फलाभावात् अकर्माणि तानि उच्यन्ते गौण्या वृत्त्या । तेषां च अकरणम् अकर्म ; तच्च प्रत्यवायफलत्वात् कर्म उच्यते गौण्यैव वृत्त्या ।
இந்த ஸ்லோகத்தைக் குறித்து ஏதோ ஒரு வியாக்கியானகாரர் வேறு விதமாக வியாக்யானம் செய்துள்ளார். எவ்வாறு எனில்? நித்ய கர்மாக்களை ஈஸ்வரார்ப்பணமாக செய்பவர்களுக்கு பலப்ராப்தி இல்லாததால் அதையே அகர்மம் என்று கௌணவிருத்தியினால் கூறுகிறார்கள். அவர்களுக்கு கர்மம் செய்யாமல் இருப்பதே அகர்ம. அது நரக முதலிய பலத்தைக் கொடுப்பதால் கௌண விருத்தியால் அது கர்மம் ஆகும்.
तत्र नित्ये कर्मणि अकर्म यः पश्येत् फलाभावात् ; यथा धेनुरपि गौः अगौः इत्युच्यते क्षीराख्यं फलं न प्रयच्छति इति, तद्वत् । तथा नित्याकरणे तु अकर्मणि च कर्म यः पश्येत् नरकादिप्रत्यवायफलं प्रयच्छति इति ॥
எவ்வாறு பசுவானது பால் என்றபலனைக் கொடுக்காவிடில் பசுவல்ல (அபசு) என்கிறோமோ அவ்வாறேநித்திய கர்மாவில் எவன் அகர்மத்தைப் பார்க்கிறானோ அவ்வாறேநித்திய கர்மாவைச் செய்யாத அகர்மத்தில் கர்மத்தைப் பார்க்கிறானோ அவன் நரக முதலிய பலத்தை அடைவான்.
नैतत् युक्तं व्याख्यानम् । एवं ज्ञानात् अशुभात् मोक्षानुपपत्तेः ‘यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात्’ (भ. गी. ४ । १६) इति भगवता उक्तं वचनं बाध्येत ।
இந்த வியாக்கியானம் பொருந்தாது. ஏனெனில் அசுபத்திலி ருந்து மோக்ஷமானது கிடைக்காது. யத் ஞாத்வா மோக்ஷயஸே அசுபாத் என்று பகவத் வசனம் உள்ளது அவ்வசனம் பாதிக்கப்பட்டுவிடும். ஆதலால் ஞானத்தினால் அசுபத்திலிருந்து மோக்ஷமானது ஏற்படும் என்று அறியவேண்டும்.
कथम् ? नित्यानामनुष्ठानात् अशुभात् स्यात् नाम मोक्षणम् , न तु तेषां फलाभावज्ञानात् । न हि नित्यानां फलाभावज्ञानम् अशुभमुक्तिफलत्वेन चोदितम् , नित्यकर्मज्ञानं वा । न च भगवतैवेहोक्तम् ।
எவ்வாறு எனில், நித்திய கர்மாக்களை அனுஷ்ட்டானம் செய்வதால் அசுபங்களிலிருந்து விடுபடலாம். ஆனால் அந்த நித்திய கர்மாக்களினால் பலன் ஏற்படாது. என்றஇந்த ஞானத்தினால் மோக்ஷம் ஏற்படாது. ஏனெனில் நித்திய கர்மாக்களினால் பலன் கிடைக்காது என்றஞானத்தினாலோ, நித்ய கர்ம ஞானத்தினாலோ அசுபத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்பது எந்த சாஸ்திரத் திலும் கூறப்படவில்லை. அவ்வாறேபகவானாலும் இந்த கீதா சாஸ்திரத்திலும் கூறப்படவில்லை.
एतेन अकर्मणि कर्मदर्शनं प्रत्युक्तम् । न हि अकर्मणि ‘कर्म’ इति दर्शनं कर्तव्यतया इह चोद्यते, नित्यस्य तु कर्तव्यतामात्रम् ।
இந்த யுக்தியினாலும் (அவர்கள் கூறியபடி உள்ள) அகர்மத்தில் கர்மத்தைப் பார்த்தல் கண்டனத்திற்கு உரியதாகிறது. ஏனெனில் இங்கு (கீதா சாஸ்திரத்தில்) நித்யகர்மாக்களைச் செய்யாமல் இருத்தலே அகர்மா (என்றஇடத்தில்) கர்மத்தைப் பார்த்தல் என்பதை செய்யப்பட வேண்டியதாக கூறவில்லை. மற்றும் நித்ய கர்மாவை செய்யவேண்டும் என்று விதிக்கிறார்.
न च ‘अकरणात् नित्यस्य प्रत्यवायो भवति’ इति विज्ञानात् किञ्चित् फलं स्यात् । नापि नित्याकरणं ज्ञेयत्वेन चोदितम् ।
நித்ய கர்மாவை செய்யாததினால் பாபம் ஏற்படும் என்றஞானத்தி னால் ஒருபலனும் ஏற்படாது. அந்த நித்திய கர்மாவை செய்யா திருத்தலே அகர்மம் என்றசாஸ்திரத்தில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் சிறிதளவும் இல்லை.
नापि ‘कर्म अकर्म’ इति मिथ्यादर्शनात् अशुभात् मोक्षणं बुद्धिमत्त्वं युक्तता कृत्स्नकर्मकृत्त्वादि च फलम् उपपद्यते, स्तुतिर्वा ।
இவ்வாறு மற்றவியாக்கியானக்காரர்களுடைய கொள்கையா கிய கர்மத்தில் அகர்மத்தைப் பார்த்தல், அகர்மத்தில் கர்மத்தைப் பார்த்தல் ரூப மித்யா தர்சனத்தினால் அசுபத்திலிருந்து விடுபடுதல், புத்திமானாய் இருத்தல், யுக்தி உடையவராய் இருத்தல் எல்லாக் கருமங்களையும் செய்த தன்மை ஆகிய பலன்கள் ஏற்படாது. மேலும் மித்யா ஞானமானது போற்றுதலுக்கு உரியதாகாது.
मिथ्याज्ञानमेव हि साक्षात् अशुभरूपम् । कुतः अन्यस्मादशुभात् मोक्षणम् ? न हि तमः तमसो निवर्तकं भवति ॥
மித்தியா ஞானமானது சுயமாகவே அசுபம். அந்த அசுபமானது மற்றொரு அசுபத்தை எவ்வாறு நீக்கும்? இருளை இருள் போக்காது.
ननु कर्मणि यत् अकर्मदर्शनम् अकर्मणि वा कर्मदर्शनं न तत् मिथ्याज्ञानम् ; किं तर्हि ? गौणं फलभावाभावनिमित्तम् ।
கர்மத்தில் அகர்மத்தைப் பார்த்தல், அகர்மத்தில் கர்மத்தைப் பார்த் தல் என்பது மித்தியா ஞானம் அல்ல. ஆனால் பலன் ஏற்படுதல், பலன் ஏற்படாதது என்றகாரணத்தினால் கௌண ரூபமாக பார்க்கப்படுகிறது.
न, कर्माकर्मविज्ञानादपि गौणात् फलस्य अश्रवणात् । नापि श्रुतहान्यश्रुतपरिकल्पनायां कश्चित् विशेष उपलभ्यते ।
இவ்வாறு கூறுவது சரியல்ல. ஏனெனில் கர்மத்தில் அகர்மத்தைப் பார்த்தல், அகர்மத்தில் கர்மத்தைப் பார்த்தல் என்பதை கௌணமாக எடுத்துக் கொண்டாலும் அதற்கு பலன் உண்டு என்பது (சுருதியில்) கேட்கப்படவில்லை. (இதை விடுத்து) சுருதியில் சித்தமானதை விட்டு சுருதிக்கு விரோதமானதை கல்பனை செய்வதால் ஒரு விசேஷமும்காணப்படவில்லை.
स्वशब्देनापि शक्यं वक्तुम् ‘नित्यकर्मणां फलं नास्ति, अकरणाच्च तेषां नरकपातः स्यात्’ इति ; तत्र व्याजेन परव्यामोहरूपेण ‘कर्मण्यकर्म यः पस्येत्’ इत्यादिना किम् ।
(பகவானுடைய அபிப்பிராயம் இவ்வாறு இருந்தால்) நித்திய கர் மாவிற்கு பலன் இல்லை. அதை செய்யாததினால் நரக ப்ராப்தி ஏற்ப டும் என்று கூறி இருக்கலாம். மற்றோ வியாமோஹம் செய்யக்கூடிய கர்மத்தில் அகர்மத்தைப் பார்த்தல், அகர்மத்தில் கர்மத்தைப் பார்த்தல் என்றமித்யா வசனத்தைக் கூறுதலினால் என்ன பயன்?
तत्र एवं व्याचक्षाणेन भगवतोक्तं वाक्यं लोकव्यामोहार्थमिति व्यक्तं कल्पितं स्यात् ।
இவ்வாறு மேலே கூறியவாறு அர்த்தம் செய்தவர்கள் இந்த பக வானுடைய வாக்கியத்தை உலகத்தோர் மோஹம் அடைவதற்காக கூறப்பட்ட வசனம் என்று கல்பிப்பார்கள்.
न च एतत् छद्मरूपेण वाक्येन रक्षणीयं वस्तु ; नापि शब्दान्तरेण पुनः पुनः उच्यमानं सुबोधं स्यात् इत्येवं वक्तुं युक्तम् ।
மேலும் இந்த (நித்ய கர்மானுஷ்ட்டமான) விஷயமானது ரஹஸ்ய ரூபமான வாக்கியத்தால் காப்பாற்றபட வேண்டியதில்லை. மேலும் மறுபடியும், மறுபடியும் வேறு வேறு சொல்களால் கூறப் பட்டாலும் நன்றாக அறியமுடியும் என்று சொல்லமுடியாது.
‘कर्मण्येवाधिकारस्ते’ (भ. गी. २ । ४७) इत्यत्र हि स्फुटतर उक्तः अर्थः, न पुनर्वक्तव्यो भवति ।
(கர்மண்யேவாதிகாரஸ்தே) என்று என்னால் நன்றாக விளக்கமாகக் கூறப்பட்ட அர்த்தமானது மறுபடியும் கூறத்தேவையில்லை.
सर्वत्र च प्रशस्तं बोद्धव्यं च कर्तव्यमेव । न निष्प्रयोजनं बोद्धव्यमित्युच्यते ॥
எங்கு பிரசித்தமாயும் அவசியம் செய்யப்படவேண்டியதாயும் உள் ளதை தெரிந்து கொள்ளவேண்டியதே தவிர பலன் அற்றதை (நிஷ்பிர யோஜனத்தை) தெரிய வேண்டியதில்லை என்று கூறப்பட்டது.
न च मिथ्याज्ञानं बोद्धव्यं भवति, तत्प्रत्युपस्थापितं वा वस्त्वाभासम् ।
மித்யா ஞானமோ அல்லது அதன் வாயிலாக அறியப்பட்ட ஆபாச மாத்திர வஸ்துவோ அறிவதற்கு யோக்கியமானதல்ல.
नापि नित्यानाम् अकरणात् अभावात् प्रत्यवायभावोत्पत्तिः, ‘नासतो विद्यते भावः’ (भ. गी. २ । १६) इति वचनात् ‘कथं असतः सज्जायेत’ (छा. उ. ६ । २ । २) इति च दर्शितम् ।
நித்ய கர்மாவை செய்யாததினால் அபாவத்திலிருந்து பாவத்தின் உற்பத்தியானது உண்டாகாது. नासतो विद्यते भावः (நாஸதோ வித்யதே பாவ:) பொய்ப்பொருளுக்கு இருப்பு இல்லை என்ற கீதா வசனத்திலும் कथं असतः सज्जायेत (கதமஸத: சஜ்ஜாயேத) அஸத்திலிருந்து சத்து எப்படி உண்டாகும்? என்று சாந்தோக்கிய உபநிஷத்திலும் காட்டப்பட்டுள்ளது.
असतः सज्जन्मप्रतिषेधात् । असतः सदुत्पत्तिं ब्रुवता असदेव सद्भवेत् , सच्चापि असत् भवेत् इत्युक्तं स्यात् । तच्च अयुक्तम् , सर्वप्रमाणविरोधात् ।
அஸத்திலிருந்து ஸத் உற்பத்தியாதல் ஸம்பவிக்காததால் அஸத் திலிருந்து ஸத் உற்பத்தியை கூறுபவரால் அஸத்திலிருந்து ஸத்தும், ஸத்திலிருந்து அஸத்தும் உண்டாகும் என்று கூறப்பட்டதாகும். இது எல்லா பிரமாணங்களுக்கும் விரோதமாய் இருப்பதால் அது பொருந்தாது.
न च निष्फलं विदध्यात् कर्म शास्त्रम् , दुःखस्वरूपत्वात् , दुःखस्य च बुद्धिपूर्वकतया कार्यत्वानुपपत्तेः ।
அவ்வாறே சாஸ்திரமும் நிஷ்பலத்துடன் கூடிய நித்ய கர்மத்தை ஒருநாளும் விதிக்காது. ஏன் எனில் எல்லாக்கர்மங்களும் துக்கத்து டன் கூடியது. மேலும் பிரயோஜனம் இல்லை என்று அறிந்து ஒருவ ரும் துக்கரூபமான காரியத்தில் பிரவிர்த்திப்பதில்லை.
तदकरणे च नरकपाताभ्युपगमात् अनर्थायैव उभयथापि करणे च अकरणे च शास्त्रं निष्फलं कल्पितं स्यात् ।
அவ்வாறே நித்ய கர்மத்தை செய்யாததினால் நரகப் பிராப்தி ஏற் படுவதினால் அநர்த்தமேயாகும். ஆகையால் நித்தியகர்மா அனுஷ்ட் டித்தல், அனுஷ்ட்டிக்காமல் இருத்தல் ஆகிய இரு வகையாலும் அநர்த்தத்தின் பொருட்டாகிய சாஸ்திரமானது வீண் என்று கொள்ளப்பட்டதாகிவிடும்.
स्वाभ्युपगमविरोधश्च ‘नित्यं निष्फलं कर्म’ इति अभ्युपगम्य ‘मोक्षफलाय’ इति ब्रुवतः ।
இதைத்தவிர நித்யகர்மாவை அனுஷ்ட்டிப்பதால் பலனில்லை என்று விளக்கிவிட்டு அவர்களே பின் நித்யகர்மா மோக்ஷரூப பலத்தை அளிக்கவல்லது என்று சொல்லுவதால் அந்த வியாக்கியா னகாரர்களுக்கு தங்களுடைய கொள்கையில் விரோதம் உண்டாகும்.
तस्मात् यथाश्रुत एवार्थः ‘कर्मण्यकर्म यः’ इत्यादेः । तथा च व्याख्यातः अस्माभिः श्लोकः ॥ १८ ॥
ஆகையால் (கர்மணி அகர்ம: ய: பச்யேத்) முதலிய ஸ்லோகங்க ளின் அர்த்தத்தை குரு பரம்பரை மூலமாக கேட்டதை அனுசரித்து இந்த ஸ்லோகத்திற்கு வியாக்கியானம் செய்யப்பட்டது.
तदेतत् कर्मणि अकर्मदर्शनं स्तूयते —
அந்த இந்த கர்மத்தில் அகர்மத்தைக் காண்பதையும், அகர்மத் தில் கர்மத்தை காண்பதையும் புகழ்ந்து கூறுகிறார்.
यस्य सर्वे समारम्भाः कामसङ्कल्पवर्जिताः ।
ज्ञानाग्निदग्धकर्माणं तमाहुः पण्डितं बुधाः ॥ १९ ॥
யஸ்ய ஸர்வே ஸமாரம்பா: காமஸங்கல்பவர்ஜிதா: ।
ஜ்ஞானாக்நிதக்தகர்மாணம் தமாஹு: பண்டிதம் புதா: ॥ 19 ॥
यस्य यथोक्तदर्शिनः सर्वे यावन्तः समारम्भाः सर्वाणि कर्माणि, समारभ्यन्ते इति समारम्भाः, कामसङ्कल्पवर्जिताः कामैः तत्कारणैश्च सङ्कल्पैः वर्जिताः मुधैव चेष्टामात्रा अनुष्ठीयन्ते ; प्रवृत्तेन चेत् लोकसङ्ग्रहार्थम् , निवृत्तेन चेत् जीवनमात्रार्थम् ।
இவ்வாறு உள்ள யதார்த்த தர்சிகள் (கர்ம, அகர்மத்தின் தத்து வத்தை உள்ளபடி அறிந்தவர்கள்) செய்யும் எல்லா கர்மங்களும் காம னைகள் அற்று, அதற்கு காரணமான சங்கல்பங்கள் அற்று ஆனந்த மாக பற்று அற்று சேஷ்டா மாத்திரமாக அனுஷ்ட்டிக்கிறார்கள். பிரவி ருத்தி மார்க்கத்தில் செயல்பட்டால் அது உலகோரை நல்வழிப்படுத்து வதற்காக நிவிர்த்தி மார்க்கத்தில் ஜீவிப்பதற்காக மட்டுமே.
तं ज्ञानाग्निदग्धकर्माणं कर्मादौ अकर्मादिदर्शनं ज्ञानं तदेव अग्निः तेन ज्ञानाग्निना दग्धानि शुभाशुभलक्षणानि कर्माणि यस्य तम् आहुः परमार्थतः पण्डितं बुधाः ब्रह्मविदः ॥ १९ ॥
அவ்வாறேகர்மத்தில் அகர்மத்தையும், அகர்மத்தில் கர்மத்தை யும் பார்த்தலாகிய கர்மதர்சனரூப ஞானாக்கினியால் புண்ய, பாபங்க ளாகிய எல்லா கர்மங்களும் எரிந்துவிடும். இவ்வாறு ஞானத்தினால் தகிக்கப்பட்ட கர்மத்தை உடைய புருஷர்களை உண்மையான பண்டி தர்கள் என்று பிரஹ்மத்தை அறிந்தவர்கள் கூறுவார்கள்.
यस्तु अकर्मादिदर्शी, सः अकर्मादिदर्शनादेव निष्कर्मा संन्यासी जीवनमात्रार्थचेष्टः सन् कर्मणि न प्रवर्तते, यद्यपि प्राक् विवेकतः प्रवृत्तः ।
எவன் கர்மத்தில் அகர்மத்தையும், அகர்மத்தில் கர்மத்தையும் காண்கிறானோ அந்த அகர்ம தர்சீ இந்த (கர்ம அகர்மத்தில்) விவேகம் ஏற்படுவதற்கு முன் கர்மத்தில் பிரவிருத்திருந்தாலும் அகர்மாதி தர்சனத்தால் அந்த நிஷ்கர்ம சந்நியாசி ஜீவனத் திற்காக உள்ள செயல்கள் உடையவனாய் கர்மத்தை மேற்கொள்ளுவதில்லை.
यस्तु प्रारब्धकर्मा सन् उत्तरकालमुत्पन्नात्मसम्यग्दर्शनः स्यात् , सः सर्वकर्मणि प्रयोजनमपश्यन् ससाधनं कर्म परित्यजत्येव ।
எவன் பிராரப்த வசத்தால் கர்மங்கள் செய்து கொண்டி ருப்பதின் பிற்காலத்தில் உண்டான ஆத்ம சாக்ஷாத்காரம் உண்டா கலாம். அந்த ஆத்ம தர்சீ கர்மங்களில் பிரயோஜனம் இல்லை என்று அறிந்து கர்மம் அதற்குத் தேவையான சாதனங்கள் எல்லாவற்றையும் விட்டு விடுகிறான்.
सः कुतश्चित् निमित्तात् कर्मपरित्यागासम्भवे सति कर्मणि तत्फले च सङ्गरहिततया स्वप्रयोजनाभावात् लोकसङ्ग्रहार्थं पूर्ववत् कर्मणि प्रवृत्तोऽपि नैव किञ्चित् करोति ।
ஏதாவது ஒரு காரணத்தினால் கர்மபரித்யாகம் ஏற்படாத பொழு து, கர்மத்திலோ அதன் பலத்திலோ அவனுக்கு ஆசக்தி இல்லாததி னால் தனக்கு பிரயோஜனம் இல்லாதபோதும் உலக நன்மைக்காக முன்போல் கர்மத்தில் பிரவிருத்திருந்தாலும் அவன் கொஞ்சமும் கர்மம் செய்தவன் ஆகமாட்டான்.
ज्ञानाग्निदग्धकर्मत्वात् तदीयं कर्म अकर्मैव सम्पद्यते इत्येतमर्थं दर्शयिष्यन् आह —
ஞானாக்கினியால் தஹிக்கப்பட்ட காரணத்தினால் கர்மமானது அகர்மமாகிறது என்றஇந்த அர்த்தத்தைக் காண்பிப்பதில் இச்சை உடையவராகி காண்பிக்கிறார்-
त्यक्त्वा कर्मफलासङ्गं नित्यतृप्तो निराश्रयः ।
कर्मण्यभिप्रवृत्तोऽपि नैव किञ्चित्करोति सः ॥ २० ॥
த்யக்த்வா கர்மபலாஸங்கம் நித்யத்ருப்தோ நிராச்ரய: ।
கர்மண்யபிப்ரவ்ருத்தோஅபி நைவ கிஞ்சித்கரோதி ஸ: ॥ 20 ॥
त्यक्त्वा कर्मसु अभिमानं फलासङ्गं च यथोक्तेन ज्ञानेन नित्यतृप्तः निराकाङ्क्षो विषयेषु इत्यर्थः ।
முன்பு கூறப்பட்ட ஞானத்தின் பிரபாவத்தால் கர்மங்களில் அபிமானத்தையும் பலத்தில் ஆசக்தியையும் விட்டு நித்ய திருப்தனாய்இரு. என்றால் விஷயங்களில் ஆசையற்று இரு என்பது பொருள்.
निराश्रयः आश्रयरहितः, आश्रयो नाम यत् आश्रित्य पुरुषार्थं सिसाधयिषति, दृष्टादृष्टेष्टफलसाधनाश्रयरहित इत्यर्थः ।
அவ்வாறு ஆச்ரயமற்றது. எந்த பலத்தை ஆசிரயித்து மனிதன் புருஷார்த்தத்தை அடைய இச்சை கொள்கிறானோ அதுஆச்ரயமாகும். இவ்வாறு இந்த லோக, பரலோக பலத்திற்கான சாதனங்களை ஆசிரயிக்காதவன் என்பது பொருள்.
विदुषा क्रियमाणं कर्म परमार्थतोऽकर्मैव, तस्य निष्क्रियात्मदर्शनसम्पन्नत्वात् ।
பண்டிதர்களால் (ஞான வாயிலாக) செய்யப்படும் கர்மம் உண்மையில் அகர்மமே. ஏன்எனில் அது (அகர்ம) நிஷ்கிரிய ஆத்ம ஞானத்துடன் கூடியது.
तेन एवंभूतेन स्वप्रयोजनाभावात् ससाधनं कर्म परित्यक्तव्यमेव इति प्राप्ते ।
ஆகையால் இவ்வாறு பிரயோஜனமற்றதாய் இருப்பதால் சாதனத்துடன் கூடிய கர்மத்தை தியாகம் அவசியம் செய்ய வேண்டும் என்று ஏற்படும்பொழுது-
ततः निर्गमासम्भवात् लोकसङ्ग्रहचिकीर्षया शिष्टविगर्हणापरिजिहीर्षया वा पूर्ववत् कर्मणि अभिप्रवृत्तोऽपि निष्क्रियात्मदर्शनसम्पन्नत्वात् नैव किञ्चित् करोति सः ॥ २० ॥
இந்த கர்மங்களிலிருந்து நிவிர்த்தி அடையாததின் காரணத்தி னால் உலக நன்மையில் இச்சை உடையவராகியும், பெரியோர்களை நிந்தை செய்யும் செயலை நீக்குவதில் இச்சை உடையவராகிய ஞானி முன்பு போல் கர்மம் செய்தாலும் அந்த நிஷ்கிரிய ஆத்ம ஞானத்தை அடைந்த காரணத்தினால் உண்மையில் ஒன்றும் செய்யாதவராகிறார்.
यः पुनः पूर्वोक्तविपरीतः प्रागेव कर्मारम्भात् ब्रह्मणि सर्वान्तरे प्रत्यगात्मनि निष्क्रिये सञ्जातात्मदर्शनः ।
எவன் ஒருவன் முன்பு கூறப்பட்டதிற்கு மாறாக, கர்மம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பே (கிரஹஸ்தாஸ்ரமத்தினின்றும் பிரஹ்மச்சர்ய ஆச்ரமத்திலேயே) எல்லாவற்றிலும் ஊடுருவியுள்ள அந்தராத் மாவான நிஷ்க்ரிய ரூபமான பிரஹ்மத்தினிடத்தில் ஆத்ம பாவத்தை அடைந்தவனாய்
स दृष्टादृष्टेष्टविषयाशीर्विवर्जिततया दृष्टादृष्टार्थे कर्मणि प्रयोजनमपश्यन् ससाधनं कर्म संन्यस्य शरीरयात्रामात्रचेष्टः यतिः ज्ञाननिष्ठो मुच्यते इत्येतमर्थं दर्शयितुमाह —
அந்த கேவல சரீர யாத்திரைக்கு வேண்டிய (கர்மங்களை) செயல் களை மட்டும் செய்து கொண்டு இருக்கும் ஞான நிஷ்ட்டராகிய யதி (சந்நியாசி) இகலோக பரலோக விஷயத்தில் ஆசை அற்றதினால் இகலோக, பரலோகத்தின் பொருட்டு செய்யும் கர்மத்தில் பலன் காணாமையால் கர்மங்களையும், கர்மங்களுடைய சாதனங்களையும் தியாகம் செய்து முக்தி அடைகிறார்கள் என்பதை தெரிவிப்பதற்காக கூறுகிறார்.
निराशीर्यतचित्तात्मा त्यक्तसर्वपरिग्रहः ।
शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् ॥ २१ ॥
நிராசீர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்ரஹ: ।
சாரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம் ॥ 21 ॥
निराशीः निर्गताः आशिषः यस्मात् सः निराशीः, यतचित्तात्मा चित्तम् अन्तःकरणम् आत्मा बाह्यः कार्यकरणसङ्घातः तौ उभावपि यतौ संयतौ येन सः यतचित्तात्मा, त्यक्तसर्वपरिग्रहः त्यक्तः सर्वः परिग्रहः येन सः त्यक्तसर्वपरिग्रहः ।
எவர்கள் எல்லா ஆசைகளையும் விட்டொழித்தார்களோ (நிராசீ) ஆசை அற்றவர்கள். (சித்தம், அந்தக்கரணம், ஆத்மா-(வெளி யில் உள்ள காரிய காரண சங்காதம்) அந்தக்கரணமும், பாஹிய காரிய கரண சங்காதமாகிய இரண்டும் எவர் வசம் இருக்கிறதோ அவர் யத சித்தாத்மா. தனது எல்லா உடைமை களையும் தியாகம் செய்தவர் (த்யக்த்த சர்வ பரிக்ரஹ:)
शारीरं शरीरस्थितिमात्रप्रयोजनम् , केवलं तत्रापि अभिमानवर्जितम् , कर्म कुर्वन् न आप्नोति न प्राप्नोति किल्बिषम् अनिष्टरूपं पापं धर्मं च । धर्मोऽपि मुमुक्षोः किल्बिषमेव बन्धापादकत्वात् ।
சரீர ஸ்திதி மாத்திரமே பிரயோஜனமாகிய கர்மத்தை அபிமான மற்று கர்மம் செய்து அநிஷ்டரூபமான பாபத்தையோ, புண்யத்தையோ அடையமாட்டான். முமுக்ஷுவிற்கு புண்யமும் பந்தத்திற்கு காரணமாவதால் பாபத்திற்கு ஒப்பானதே.
तस्मात् ताभ्यां मुक्तः भवति, संसारात् मुक्तो भवति इत्यर्थः ॥

‘शारीरं केवलं कर्म’ इत्यत्र किं शरीरनिर्वर्त्यं शारीरं कर्म अभिप्रेतम् , आहोस्वित् शरीरस्थितिमात्रप्रयोजनं शारीरं कर्म इति ।
இங்கு சாரீரம் கேவலம் கர்ம என்றபதங்களினால் சரீரத்தினால் செய்யப்படும் கர்மம் சாரீரக கர்மம் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது சரீர ஸ்திதி மாத்திரம் பிரயோஜனமாக உடைய கர்மத்தை சாரீரக கர்மம் என்று எடுத்துக்கொள்வதா?
किं च अतः यदि शरीरनिर्वर्त्यं शारीरं कर्म यदि वा शरीरस्थितिमात्रप्रयोजनं शारीरम् इति ? उच्यते —
ஆகையால் மேலும் சரீர கர்மா அல்லது சரீரஸ்திதி மாத்திர பிரயோஜனமாக உடையகர்மம் சாரீரமா என்று கூறுகிறார்.
यदा शरीरनिर्वर्त्यं कर्म शारीरम् अभिप्रेतं स्यात् , तदा दृष्टादृष्टप्रयोजनं कर्म प्रतिषिद्धमपि शरीरेण कुर्वन् नाप्नोति किल्बिषम् इति ब्रुवतो विरुद्धाभिधानं प्रसज्येत । शास्त्रीयं च कर्म दृष्टादृष्टप्रयोजनं शरीरेण कुर्वन् नाप्नोति किल्बिषम् इत्यपि ब्रुवतः अप्राप्तप्रतिषेधप्रसङ्गः ।
மேலும் சரீரத்தினால் செய்யப்படும் கர்மம் சாரீரக கர்மம் என்றால் அப்பொழுது சரீரத்தினால் இகலோக பரலோக பலனுடைய கர்மா, நிஷித்த கர்மாவாக இருந்தாலும் அவன் பாபத்தை அடைய மாட்டான் என்று கூறினால் (சாஸ்திரத்திற்கு) விருத்தமாகும். (மாறுபட்டதாகும்). இகலோக பரலோக பலத்தைத் தரும் சாஸ்திரத்தினால் விதிக்கப்பட்ட கர்மாவை செய்வதினால் பாபத்தை அடையமாட்டான் என்று கூறினால் அடையாததை நீக்குதல் என்னும் குற்றமாகும்.
(சாரீரக கர்மம் என்றால் சரீரம் நிலைத்திருத்தலுக்காகவே செய்யப்படும் கர்மா).
‘शारीरं कर्म कुर्वन्’ इति विशेषणात् केवलशब्दप्रयोगाच्च वाङ्मनसनिर्वर्त्यं कर्म विधिप्रतिषेधविषयं धर्माधर्मशब्दवाच्यं कुर्वन् प्राप्नोति किल्बिषम् इत्युक्तं स्यात् ।
(சாரீரக கர்மத்தைச் செய்பவன்) என்னும் விசேஷணத்தாலும் மாத்திரம் என்றும் சொல்லின் பிரயோகத்தாலும் (சரீரத்தை விட்டு) மனோ வாக்கினால் செய்யப்படும் விதி நிஷேதங்களுக்கு விஷயங்க ளாகிய தர்மாதர்மம் எனப்படும் கர்மத்தை செய்து பாபத்தை அடைகிறான் என்று (பகவானால்) சொல்லப்பட்டது என்று ஆகிவிடும்.
तत्रापि वाङ्मनसाभ्यां विहितानुष्ठानपक्षे किल्बिषप्राप्तिवचनं विरुद्धम् आपद्येत । प्रतिषिद्धसेवापक्षेऽपि भूतार्थानुवादमात्रम् अनर्थकं स्यात् ।
அங்கும் மனோ வாக்கால் விஹிதகர்மாவை அனுஷ்ட்டிப்பதால் பாபம் ஏற்படும் என்னும் பக்ஷம் விருத்தமாகும். (ப்ரதிஷித்த) நிஷேத கர்மாவை செய்யும் பக்ஷத்திலும் முன்பு கூறியதையே மறுபடியும், மறுபடியும் கூறுதல் என்ற அநர்த்தம் உண்டாகிவிடும்.
यदा तु शरीरस्थितिमात्रप्रयोजनं शारीरं कर्म अभिप्रेतं भवेत् , तदा दृष्टादृष्टप्रयोजनं कर्म विधिप्रतिषेधगम्यं शरीरवाङ्मनसनिर्वर्त्यम् अन्यत् अकुर्वन् तैरेव शरीरादिभिः शरीरस्थितिमात्रप्रयोजनं केवलशब्दप्रयोगात् ‘अहं करोमि’ इत्यभिमानवर्जितः शरीरादिचेष्टामात्रं लोकदृष्ट्या कुर्वन् नाप्नोति किल्बिषं ।
எப்பொழுது சரீரத்தின் ஸ்திதியின் மாத்திரம் பிரயோஜனமாக உடையது சாரீர்க கர்மா என்று அபிப்பிராயம் ஏற்பட்டபோது மனோவாக்கு காயங்களால் செய்யப்படும் இஹலோக, பரலோக பயனையுடைய விதி, நிஷேத கர்மங்களையும், மற்றகர்மங்களையும் செய்யாமல் அவர்கள் மனோ வாக்கு காயங்களால் சரீர ஸ்திதி மாத்திரமே பிரயோஜனமாக உடையதாயும், மாத்திரம் என்றசொல் பிர யோகத்தினாலும் நான் செய்கின்றேன் என்றஅபிமானம் அற்று லோக திருஷ்டியினால் சரீராதிகளில் சேஷ்ட்டிப்பவன் போல் (செயல்கள் செய்பவன் போல்) இருந்து கொண்டு பாபத்தை அடைய மாட்டான்.
एवंभूतस्य पापशब्दवाच्यकिल्बिषप्राप्त्यसम्भवात् किल्बिषं संसारं न आप्नोति ।
அப்படிப்பட்டவன் பாபம் என்று சொல்லக்கூடிய கில்பிஷம் அடைதல் என்பது சம்பவிக்கக்கூடியதல்ல. ஆகையால் அவன் கில்பிஷம் என்கிறசம்சாரத்தை அடைவதில்லை.
ज्ञानाग्निदग्धसर्वकर्मत्वात् अप्रतिबन्धेन मुच्यत एव इति ।
ஞானாக்கினியினால் எல்லாக்கர்மங்களும் தஹிக்கப்பட்டதால் தடையற்றவனாய் விடுபடுகிறான்.
पूर्वोक्तसम्यग्दर्शनफलानुवाद एव एषः । एवम् ‘शारीरं केवलं कर्म’ इत्यस्य अर्थस्य परिग्रहे निरवद्यं भवति ॥ २१ ॥
இது முன்பு கூறப்பட்ட சம்யக் தர்சனபலத்தின் (ஆத்மஞானத் தின்) அநுவாதமே. அவ்வாறே(சாரீரம் கேவலம் கர்ம) என்று இவ்வாறு அர்த்தம் செய்தால் அந்த அர்த்தமானது தோஷமற்றதாகிவிடுகிறது.
त्यक्तसर्वपरिग्रहस्य यतेः अन्नादेः शरीरस्थितिहेतोः परिग्रहस्य अभावात् याचनादिना शरीरस्थितौ कर्तव्यतायां प्राप्तायाम् ‘अयाचितमसङ्क्लृप्तमुपपन्नं यदृच्छया’ (अश्व. ४६ । १९) इत्यादिना वचनेन अनुज्ञातं यतेः शरीरस्थितिहेतोः अन्नादेः प्राप्तिद्वारम् आविष्कुर्वन् आह —
எல்லாவற்றையும் தியாகம் செய்த சந்நியாசிக்கு சரீர ஸ்திதிக்கு காரணரூபமான அன்னாதிகளை எடுத்துக்கொள்ளாததினால் சரீராதி களின் ஸ்திதியின் பொருட்டு யாசகம் முதலியவை செய்யவேண்டியது அவசியமாகிறது. (அயாசிதம் அசம்க்லுப்தமுப்பன்னம் யத்ருச்சயா) என்று முதலிய ஸ்மிருதி வசனங்களால் சந்நியாசியினுடைய சரீரஸ்திதிக்கு காரணமான அன்னாதிகளை அடைவதற்கான வழிகள் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அதை விளக்கமாகக் கூறுகிறார்.
यदृच्छालाभसन्तुष्टो द्वन्द्वातीतो विमत्सरः ।
समः सिद्धावसिद्धौ च कृत्वापि न निबध्यते ॥ २२ ॥
யத்ருச்சாலாபஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர: ।
ஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ருத்வாபி ந நிபத்யதே ॥ 22 ॥
यदृच्छालाभसन्तुष्टः अप्रार्थितोपनतो लाभो यदृच्छालाभः तेन सन्तुष्टः सञ्जातालंप्रत्ययः ।
நாம் கேட்காமலேயே அடையப்படுவது யத்ருச்சாலாபம். அதனால் (கிடைத்ததைக்கொண்டு) சந்தோஷம் அடைதல் அதாவது திருப்த்தி அடைதல். போதும் என்கிறஎண்ணம் உடையவன்.
द्वन्द्वातीतः द्वन्द्वैः शीतोष्णादिभिः हन्यमानोऽपि अविषण्णचित्तः द्वन्द्वातीतः उच्यते ।
சீதோஷ்ணாதி துவந்தங்களினால் ஹிம்சிக்கப்பட்டாலும் எவன் துன்பப்படவில்லையோ அவன் த்வந்த்வாதீதன் (துவந்துவங்களைக் கடந்தவன்)
विमत्सरः विगतमत्सरः निर्वैरबुद्दिः समः तुल्यः यदृच्छालाभस्य सिद्धौ असिद्धौ च ।
விமத்ஸர: என்றால் பொறாமை அற்றிருத்தல் அல்லது வைரமற் றிருத்தல். சம: என்றால் எதிர்பார்க்காமல் கிடைப்பது. அது கிடைத் தாலும் கிடைக்காவிட்டாலும் சம பாவனையுடன் இருத்தல்.
यः एवंभूतो यतिः अन्नादेः शरीरस्थितिहेतोः लाभालाभयोः समः हर्षविषादवर्जितः कर्मादौ अकर्मादिदर्शी यथाभूतात्मदर्शननिष्ठः सन् शरीरस्थितिमात्रप्रयोजने भिक्षाटनादिकर्मणि शरीरादिनिर्वर्त्ये ‘नैव किञ्चित् करोम्यहम्’ (भ. गी. ५ । ८), ‘गुणा गुणेषु वर्तन्ते’ (भ. गी. ३ । २८) इत्येवं सदा सम्परिचक्षाणः आत्मनः कर्तृत्वाभावं पश्यन्नैव किञ्चित् भिक्षाटनादिकं कर्म करोति ।
இவ்வாறு சரீர ஸ்திதிக்கு காரணரூபமான அன்னாதிகள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அதற்காக சந்தோஷமோ வருத் தமோ கொள்ளாமல் சமமாகப் பார்ப்பவனும், கர்மத்தில் அகர்மத்தைப் பார்ப்பவனும், யதார்த்த ஆத்ம தர்சன நிஷ்டனும் ஆகிய சந்நியாசி சரீரமான பிச்சை எடுத்தல் முதலிய கர்மங்கள், சரீரங்கள் முதலியவை களின் மூலமாக செய்யப்பட்டாலும் நான் ஒன்றும் செய்யவில்லை என்றும் இந்திரியங்கள் விஷயங்களில் செல்லுகிறது என்று இவ்வாறு எப்பொழுதும் விசாரணை செய்து கொண்டு தனக்கு கர்த்ருபாவம் இல்லை என்பதை அறிந்ததினால் உண்மையில் பிச்சை எடுத்தல் முதலிய கர்மங்களை செய்தாலும் செய்ததாக ஆகாது.
लोकव्यवहारसामान्यदर्शनेन तु लौकिकैः आरोपितकर्तृत्वे भिक्षाटनादौ कर्मणि कर्ता भवति । स्वानुभवेन तु शास्त्रप्रमाणादिजनितेन अकर्तैव ।
லோகவியவஹார சாமான்ய திருஷ்ட்டியினால் லௌகிகர்க ளால் பிச்சை எடுத்தல் முதலிய கர்மங்களில் கர்த்திருத்துவத்தை அப் படிப்பட்ட புருஷர்களிடத்தில் ஆரோபித்து அவர்களை கர்த்தா எனப் படுகிறார். ஆனால் அந்த புருஷர்கள் சாஸ்திர பிரமாண முதலியவை களால் உண்டான சுவானுபவத்தினால் அகர்த்தாவே.
स एवं पराध्यारोपितकर्तृत्वः शरीरस्थितिमात्रप्रयोजनं भिक्षाटनादिकं कर्म कृत्वापि न निबध्यते बन्धहेतोः कर्मणः सहेतुकस्य ज्ञानाग्निना दग्धत्वात् इति उक्तानुवाद एव एषः ॥ २२ ॥
இவ்வாறு பிறரால் அத்யாரோபம் செய்யப்பட்ட கர்த்திருத்துவமு டையவன் சரீரஸ்திதி மாத்திரம் பிரயோஜனமாக உடைய பிச்சை எடுத்தல் முதலிய கர்மத்தைச் செய்தாலும் அவனைக் கட்டுப்படுத் தாது. ஏன்எனில் பந்தத்திற்கு ஹேதுவான கர்மமும், அதன் காரணமும் ஞானாக்கினியினால் தஹிக்கப்பட்டதினால் என்று முன் கூறிய அனுவாதமே இது.
‘त्यक्त्वा कर्मफलासङ्गम्’ (भ. गी. ४ । २०) इत्यनेन श्लोकेन यः प्रारब्धकर्मा सन् यदा निष्क्रियब्रह्मात्मदर्शनसम्पन्नः स्यात् तदा तस्य आत्मनः कर्तृकर्मप्रयोजनाभावदर्शिनः कर्मपरित्यागे प्राप्ते कुतश्चिन्निमित्तात् तदसम्भवे सति पूर्ववत् तस्मिन् कर्मणि अभिप्रवृत्तस्य अपि ‘नैव किञ्चित् करोति सः’ (भ. गी. ४ । २०) इति कर्माभावः प्रदर्शितः । यस्य एवं कर्माभावो दर्शितः तस्यैव —
எவன் கர்மத்தை ஆரம்பித்து செய்து வரும்பொழுது நிஷ்கிரிய மாகிய ப்ரஹ்மாத்ம தர்சனத்தை அடைகிறானோ அப்பொழுது தனக்கு கர்த்தா, கர்ம அதனால் ஏற்படும் பிரயோஜனம் இவைகள் இல்லாததைக் காண்கிறவனுக்கு கர்மத்தியாகம் ஏற்பட்ட சமயத்தில் ஏதோ ஒரு காரணத்தினால் அது ஏற்படாதபொழுது முன் போல் அந்த கர்மத்தில் பிரவிர்த்தாலும் அவன் கொஞ்சமும் கர்மம் செய்தவனாக மாட்டான் என்று கர்ம அபாவமானது காண்பிக்கப்பட்டது. இவ்வாறு எவனுக்கு கர்ம அபாவம் உணர்த்தப்பட்டதோ அவனுக்காகவே-
गतसङ्गस्य मुक्तस्य ज्ञानावस्थितचेतसः ।
यज्ञायाचरतः कर्म समग्रं प्रविलीयते ॥ २३ ॥
கதஸங்கஸ்ய முக்தஸ்ய க்ஞானாவஸ்திதசேதஸ; ।
யக்ஞாயாசரத: கர்ம ஸமக்ரம் ப்ரவிலீயதே ॥ 23 ॥
गतसङ्गस्य सर्वतोनिवृत्तासक्तेः, मुक्तस्य निवृत्तधर्माधर्मादिबन्धनस्य, ज्ञानावस्थितचेतसः ज्ञाने एव अवस्थितं चेतः यस्य सोऽयं ज्ञानावस्थितचेताः तस्य, यज्ञाय यज्ञनिर्वृत्त्यर्थम् आचरतः निर्वर्तयतः कर्म समग्रं सह अग्रेण फलेन वर्तते इति समग्रं कर्म तत् समग्रं प्रविलीयते विनश्यति इत्यर्थः ॥ २३ ॥
எல்லாவற்றிலும் ஆசக்தி (பற்று) அற்று, புண்ய, பாபங்கள் முதலியவைகளிலிருந்து விடுபட்டு, சித்தம் எப்பொழுதும் ஞானத்தி லேயே நிலை பெற்று யக்ஞத்தின் பொருட்டு (பகவானின் பொருட்டு செய்யப்படும் (அனுஷ்ட்டிக்கப்படும்) கர்மமானது பலத்து டன் லீனமாகிறது. (அக்ர) என்றால் பலன் என்று பொருள். அதனுடன் கூடிய கர்மத்தை (சமக்ரகர்ம) எனப்படும். இதன் அபிப்பிராயம் என்ன வெனில் பலத்துடன் கூடிய எல்லா கர்மங்களும் நசித்துவிடும் என்பதாகும்.
कस्मात् पुनः कारणात् क्रियमाणं कर्म स्वकार्यारम्भम् अकुर्वत् समग्रं प्रविलीयते इत्युच्यते यतः —
மேலும் எந்த காரணத்தினால் செய்யப்பட்ட கர்மமானது பலனைக் கொடுக்காமல் பலத்துடன் கர்மம் முழுவதும் இல்லாமல் போகிறது என்பது கூறப்படுகிறது.
ब्रह्मार्पणं ब्रह्म हविर्ब्रह्माग्नौ ब्रह्मणा हुतम् ।
ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्मसमाधिना ॥ २४ ॥
ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவிர்ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணாஹுதம் ।
ப்ரஹ்மைவ தேந கந்தவ்யம் ப்ரஹ்மகர்மஸமாதினா ॥ 24 ॥
ब्रह्म अर्पणं येन करणेन ब्रह्मवित् हविः अग्नौ अर्पयति तत् ब्रह्मैव इति पश्यति, तस्य आत्मव्यतिरेकेण अभावं पश्यति ।
பிரஹ்மவித் எந்த சாதனத்தின் வாயிலாக ஹவிசை அக்னியில் அர்ப்பணிக்கிறானோ அந்த சாதனத்தை பிரஹ்ம ரூபமாகவே பார்க்கி றான். அவன் ஆத்மாவைத் தவிர வேறு இல்லை என்று காண்கிறான்.
यथा शुक्तिकायां रजताभावं पश्यति ; तदुच्यते ब्रह्मैव अर्पणमिति, यथा यद्रजतं तत् शुक्तिकैवेति । ‘ब्रह्म अर्पणम्’ इति असमस्ते पदे ।
எவ்வாறு சிப்பியில் வெள்ளியின் அபாவத்தைக் காண்கிறானோ அதுபோல பிரஹ்மமே அர்ப்பணமாகும் என்பது (ப்ரஹ்மார்ப்பணம்) என்றும் பதத்தால் சொல்லப்பட்டது. எவ்வாறு எனில் எதை வெள்ளி என்றரூபத்தில் பார்த்தோமோ அது சிப்பியே என்று தோன்றுதல் என்க. பிரஹ்மம், அர்ப்பணம் என்பது தனித் தனியான பதங்களாகும்.
यत् अर्पणबुद्ध्या गृह्यते लोके तत् अस्य ब्रह्मविदः ब्रह्मैव इत्यर्थः ।
உலகத்தில் எது எல்லாம் அர்ப்பண புத்தியால் கிரஹிக்கப் படுகிறதோ அவை எல்லாம் அந்த பிரஹ்மத்தை அறிந்தவனுக்கு பிரஹ்மமே என்பது பொருள். (பிரஹ்மவித்திற்கு)
ब्रह्म हविः तथा यत् हविर्बुद्ध्या गृह्यमाणं तत् ब्रह्मैव अस्य ।
எவ்வாறு ஹவி: என்பது பிரஹ்மபுத்தியால் கிரஹிக்கப்பட்டதோ அவ்வாறு ஹவிர்புத்தியால் எது கிரஹிக்கப்படுகிறதோ அதுவும் பிரஹ்மமே. எவ்வாறு அர்ப்பணபுத்தியால் கிரஹிக்கப்பட்டது ப்ரஹ் மமோ அவ்வாறு ஹவிர்புத்தியால் கிரஹிக்கப்படுவதும் ப்ரஹ்மமே.
तथा ‘ब्रह्माग्नौ’ इति समस्तं पदम् ।
அவ்வாறேபிரஹ்மாக்னௌ என்பது சமஸ்தபதம்.(பிரஹ்ம மாகிற அக்னியில்)
अग्निरपि ब्रह्मैव यत्र हूयते ब्रह्मणा कर्त्रा, ब्रह्मैव कर्तेत्यर्थः । यत् तेन हुतं हवनक्रिया तत् ब्रह्मैव ।
அக்னியும் பிரஹ்மமே. எங்கு பிரஹ்மமாகிய கர்த்தாவால் ஹவனம் செய்யப்படுகிறதோ என்றவிடத்தில் அக்னியும் பிரஹ்மமே. ஹவனத்திற் குரிய கர்த்தாவும் பிரஹ்மமே. எது கர்தாவால் ஆகுதி செய்யப்பட்டதோ அந்த கொடுத்தல் என்னும் செயல் அதுவும் பிரஹ்மமே.
यत् तेन गन्तव्यं फलं तदपि ब्रह्मैव ।
அதனால் அடையப்படும் பலமோ அதுவும் பிரஹ்மமே.
ब्रह्मकर्मसमाधिना ब्रह्मैव कर्म ब्रह्मकर्म तस्मिन् समाधिः यस्य सः ब्रह्मकर्मसमाधिः तेन ब्रह्मकर्मसमाधिना ब्रह्मैव गन्तव्यम् ॥
பிரஹ்மமே கர்மம், அதுவே அதில்சமாதி எதற்கோ அது பிரஹ்மகர்மசமாதி, அந்த பிரஹ்ம்ம கர்ம சமாதியினால் பிரஹ்ம்மத் தையே அடைய வேண்டும். ப்ரஹ்மமே கர்மம் அந்த ப்ரஹ்மமாகிய கர்மத்தில் ஒன்றுதல் என்பது பிரஹ்மகர்மசமாதி, அதனால் அடையப் படுவது ப்ரஹ்மமே.
एवं लोकसङ्ग्रहं चिकीर्षुणापि क्रियमाणं कर्म परमार्थतः अकर्म, ब्रह्मबुद्ध्युपमृदितत्वात् ।
இவ்வாறு லோக நன்மையின் பொருட்டு இச்சை உடையவர்க ளால் செய்யப்படும் கர்மம் பிரஹ்ம்ம புத்தி பாவத்தால் பலத்தை உண்டுபண்ணும் சத்தியற்றதால் உண்மையில் அது அகர்மமே.
एवं सति निवृत्तकर्मणोऽपि सर्वकर्मसंन्यासिनः सम्यग्दर्शनस्तुत्यर्थं यज्ञत्वसम्पादनं ज्ञानस्य सुतरामुपपद्यते ; यत् अर्पणादि अधियज्ञे प्रसिद्धं तत् अस्य अध्यात्मं ब्रह्मैव परमार्थदर्शिन इति ।
இவ்வாறு இருக்கையில் எல்லாகர்மங்களையும் தியாகம் செய்த கர்மசந்நியாசியின் யதார்த்த ஞனத்தை புகழ்வதின் பொருட்டு ஞானத்திலே யக்ஞத்தை ஏற்றிக்கூறுதல் பொருந்தும், அதியக்ஞத்தில் ஹவிஸ்சை அர்பணிப்பதற்கான கருவி முதலியவைகள் எவையோ அவைகள் பரமார்த்ததரிசிக்கு தன் ஆத்மாவான பிரஹ்மமேதான்.
अन्यथा सर्वस्य ब्रह्मत्वे अर्पणादीनामेव विशेषतो ब्रह्मत्वाभिधानम् अनर्थकं स्यात् ।
மேலே கூறப்பட்டவாறு எடுத்துக்கொள்ளவில்லை எனில் உண்மையில் எல்லாம் பிரஹ்ம ரூபமாய் இருக்கின்றபோதிலும் அர்ப்பணாதிகளுக்கு மட்டும் பிரஹ்மமாக விசேஷித்துக் கூறுவது வியர்த்தமாகும். (பயனில்லாததாகும்)
तस्मात् ब्रह्मैव इदं सर्वमिति अभिजानतः विदुषः कर्माभावः ।
ஆகையால் இவை எல்லாம் பிரஹ்மமே என்று அறிந்த ஞானிக்கு உண்மையில் எல்லாக் கர்மங்களும் அபாவமாய் இருக்கிறது.
कारकबुद्ध्यभावाच्च । न हि कारकबुद्धिरहितं यज्ञाख्यं कर्म दृष्टम् ।
காரக புத்தியில்லை. (அவனுடைய அந்தக்கரணத்தில் செய்பவன், செய்கை முதலிய பேத புத்தி இல்லாததினால் அது சாத்தியமாகிறது) காரக புத்தியில்லாமல் யக்ஞம் எனப்படும் கர்மம் எங்கும் காணப்படவில்லை.
सर्वमेव अग्निहोत्रादिकं कर्म शब्दसमर्पितदेवताविशेषसम्प्रदानादिकारकबुद्धिमत् कर्त्रभिमानफलाभिसन्धिमच्च दृष्टम् ।
எல்லா அக்கினிஹோத்திராதி கர்மங்களும் இந்திரனின் பொருட்டு, திரவியங்கள் அந்த அந்த தேவதைகளுக்கு விசேஷமாக அர்ப்பணிக்கிறேன் என்ற சம்பிரதான காரக புத்தி உடையவனாகவும் அவ்வாறேநான் கர்த்தா என்ற அபிமானமுடையவனாகவும், மேலும் பலத்தில் இச்சை உடையவனாகவும் காணப்படுகிறான்.
न उपमृदितक्रियाकारकफलभेदबुद्धिमत् कर्तृत्वाभिमानफलाभिसन्धिरहितं वा ।
கிரியா, காரகம் மேலும் பலம் ஆகிய பேத புத்தி நஷ்ட்டமடைந் தாலும் அவ்வாறேநான் கர்த்தா என்றஅபிமானமும், பலத்தில் இச்சை ஆசை (இச்சை) இல்லாத ஒரு கர்மமும் (யக்ஞமும்) காணப்படவில்லை.
इदं तु ब्रह्मबुद्ध्युपमृदितार्पणादिकारकक्रियाफलभेदबुद्धि कर्म । अतः अकर्मैव तत् ।
இதுவோ (இந்த ஞான யக்ஞமோ) (ஹவிஸ்ஸை) அர்ப்பணம் செய்யும் கருவி முதலான காரகம், கிரியா, பலம் எனப்படும் பேதபுத்தி யானது எல்லாம் பிரஹ்மமே என்றபுத்தியினால் அழிந்து போகிறது. ஆகையால் அது அகர்மமே.
அவ்வாறே கர்மண்யகர்ம ய: பச்யேத், கர்மண்யபி ப்ரவ்ருத்தோபி நைவ கிஞ்சித் கரோதி ஸ:, குணா குணேஷு வர்தந்தே, நைவ கிஞ்சித் கரோமீதி யுக்தோ மன்யேத தத்துவவித் முதலிய ஸ்லோகங்களில் காட்டப்பட்டுள்ளது.
तथा च दर्शयन् तत्र तत्र क्रियाकारकफलभेदबुद्ध्युपमर्दं करोति ।
அவ்வாறேஅங்கு அங்கு எடுத்துக்காட்டி கிரியா, காரக பலபேதபுத்தியை நிஷேதம் செய்கிறார்.
दृष्टा च काम्याग्निहोत्रादौ कामोपमर्देन काम्याग्निहोत्रादिहानिः ।
காமனையினால் செய்யப்படும் அக்னிஹோத்ராதிகளில் காமத்தை விட்டொழித்தலால் அக்னி ஹோத்ராதிகள் சகாமனை (காமத்துடன்) கூடியது ஆகாது.
तथा मतिपूर्वकामतिपूर्वकादीनां कर्मणां कार्यविशेषस्य आरम्भकत्वं दृष्टम् ।
அவ்வாறேபுத்தி பூர்வமாகவோ அபுத்தி பூர்வமாகவோ செய்யப் படும் கர்மங்களினால் வெவ்வேறு காரியங்கள் ஆரம்பம் ஆகிறது. அதாவது அவற்றின் பலன்கள் வெவ்வேறாகும்.
तथा इहापि ब्रह्मबुद्ध्युपमृदितार्पणादिकारकक्रियाफलभेदबुद्धेः बाह्यचेष्टामात्रेण कर्मापि विदुषः अकर्म सम्पद्यते । अतः उक्तम् ‘समग्रं प्रविलीयते’ (भ. गी. ४ । २०) इति ॥
அவ்வாறே இங்கும் எந்த புருஷனுக்கு எங்கும் பிரஹ்ம்ம புத்தி உண்டானதினால் (ஹவிஸ் முதலியவைகளில்) கிரியா, காரக, பலம் முதலிய பேதபுத்தி நஷ்ட்டமாயிற்றோ அந்த ஞானியின் பாஹிய (வெளிச்) செயல்களாகிய கர்மங்கள் அகர்மமேயாகும். ஆகையால் எல்லா பலத்துடன் (கர்மங்கள்) லீனமாய் விட்டது என்று. (கரைந்து விட்டதென்று)
अत्र केचिदाहुः — यत् ब्रह्म तत् अर्पणादीनि ; ब्रह्मैव किल अर्पणादिना पञ्चविधेन कारकात्मना व्यवस्थितं सत् तदेव कर्म करोति । तत्र न अर्पणादिबुद्धिः निवर्त्यते, किं तु अर्पणादिषु ब्रह्मबुद्धिः आधीयते ; यथा प्रतिमादौ विष्ण्वादिबुद्धिः, यथा वा नामादौ ब्रह्मबुद्धिरिति ॥
இந்த விஷயத்தில் வேறு சிலர் கூறுவர். எது பிரஹ்மமோ அது அர்ப்பணத்திற்குரிய கருவி முதலியவனவாம். ப்ரஹ்மம்தான் அல்லவா அர்ப்பணிக்கும் கருவி முதலான ஐந்து விதமான காரகங்க ளாக இருந்து கொண்டு அதுவே கர்மங்களைச் செய்கிறது எனக் கூறுவர். முன்பு கூறப்பட்ட யக்ஞாதிகளில் (கர்மங்களில்) அர்ப்பணிக்கும் கருவி முதலிய புத்தி நீக்கப்படுவதில்லை. ஆனால் அதில் பிரஹ்ம புத்தியானது ஸ்தாபிக்கப் படுகிறது. எவ்வாறு எனில் விக்கிரகங்களில் விஷ்ணு முதலிய தேவதாதி புத்தி போலவும், அவ்வாறே நாமங்களில் பிரஹ்ம்ம புத்தி போலவும் என்று அறிந்து கொள்ளவேண்டும்.
सत्यम् , एवमपि स्यात् यदि ज्ञानयज्ञस्तुत्यर्थं प्रकरणं न स्यात् ।
உண்மைதான், எந்த பிரகரணமானது ஞானயக்ஞத்தைப் புகழ்வதற்காக இல்லையோ அப்பொழுது இப்படியும் இருக்கலாம்.
अत्र तु सम्यग्दर्शनं ज्ञानयज्ञशब्दितम् अनेकान् यज्ञशब्दितान् क्रियाविशेषान् उपन्यस्य ‘श्रेयान् द्रव्यमयाद्यज्ञात् ज्ञानयज्ञः’ (भ. गी. ४ । ३३) इति ज्ञानं स्तौति ।
ஆனால் இந்தப் பிரகரணத்தில் யக்ஞம் என்று சொல்லப்பட்ட அநேக கிரியா விஷேசங்களைக் கூறி திரவியமய யக்ஞத்தைக் காட்டிலும் ஞானயக்ஞம் மேலானது என்று கூறுவதன் வாயிலாக ஞானயக்ஞம் என்றசப்தத்தினால் சொல்லப்பட்ட சம்யக் தர்சனத்தை ஸ்துதி செய்கிறார் (புகழ்கிறார்)
अत्र च समर्थमिदं वचनम् ‘ब्रह्मार्पणम्’ इत्यादि ज्ञानस्य यज्ञत्वसम्पादने ; अन्यथा सर्वस्य ब्रह्मत्वे अर्पणादीनामेव विशेषतो ब्रह्मत्वाभिधानमनर्थकं स्यात् ।
அவ்வாறேஇந்தப் பிரகரணத்தில் ப்ரஹ்ம்மார்ப்பணம் முதலிய வசனங்கள் இருக்கிறதோ, அது ஞானத்தை யக்ஞரூபமாக கல்பித்துக் கூறுவதிலே கருத்துடையது. அவ்வாறு இல்லையெனில் எல்லாம் பிரஹ்ம்மமாய் இருக்க அர்ப்பணாதிகளுக்கு மாத்திரம் பிரம்மத்து வத்தை விசேஷித்துக் கூறுதல் வியர்த்தமாகும்.
ये तु अर्पणादिषु प्रतिमायां विष्णुदृष्टिवत् ब्रह्मदृष्टिः क्षिप्यते नामादिष्विव चेति ब्रुवते न तेषां ब्रह्मविद्या उक्ता इह विवक्षिता स्यात् , अर्पणादिविषयत्वात् ज्ञानस्य ।
எவர்கள் அர்ப்பணாதிகளை விக்ரஹங்களில் விஷ்ணு முதலிய திருஷ்ட்டியைப் போலும் அவ்வாறேநாமாதிகளில் பிரஹ்ம்ம திருஷ்ட்டிவைப்பதுபோல் அர்ப்பணாதிகளான யக்ஞத்தினுடைய சாமக்ரியைகளில் பிரஹ்ம்ம புத்தியை வைக்கிறார்களோ அவர்களு டைய கருத்துப்படி கூற விரும்பியது பிரஹ்ம்ம வித்தையல்ல. ஏனெ னில் அவர்கள் மதப்படி ஞானத்தினுடைய விஷயம் அர்ப்பணாதி யக்ஞ சாமக்கிரிய விஷயமாகும். பிரஹ்மத்தைப் பற்றிய விஷயமல்ல.
न च दृष्टिसम्पादनज्ञानेन मोक्षफलं प्राप्यते । ‘ब्रह्मैव तेन गन्तव्यम्’ इति चोच्यते । विरुद्धं च सम्यग्दर्शनम् अन्तरेण मोक्षफलं प्राप्यते इति ।
இந்த பிரகாரம் பிரஹ்ம்மதிருஷ்ட்டி ஏற்படுவதற்கு ஹேதுவாகி ஞானத்தால் மோக்ஷ ரூபமான பலனானது கிடைக்காது. மேலும் சம்யக் தர்சனத்தை (யதார்த்த ஞானத்தை) தவிர மற்றஞானத்தால் மோக்ஷ பலம் கிடைக்கும் என்று கூறுவது எந்த விதத்திலும் விரோதமே.
प्रकृतविरोधश्च ; सम्यग्दर्शनम् च प्रकृतम् ‘कर्मण्यकर्म यः पश्येत्’ (भ. गी. ४ । १८) इत्यत्र, अन्ते च सम्यग्दर्शनम् , तस्यैव उपसंहारात् ।
(இவ்வாறு எடுத்துக்கொண்டால்) இந்தப் பிரகரணத்தில் விரோதம் உண்டாகும். (இதன் அபிப்பிராயம் என்னவெனில்) பிரகரணத்தின் ஆரம்பத்தில் கர்மண்யகர்ம ய: பச்யேத் என்று சம்யக் தர்சனத்தை (சம்யக் ஞானத்தை) பற்றி உள்ளதால் அவ்வாறே முடிய வேண்டிய காரணத்தினால் சம்யக் தர்சன விஷயமே இந்த பிரகரணத்தின் முடிவாகும்.
ச்ரேயான்திரவ்ய மயாத்யக்ஞாத் ஞானயக்ஞ: ஞானம் லப்த்வா பராம் சாந்திம் முதலியவைகளால் சம்யக் தர்சனத்தை ஸ்துதி செய்து இந்த அத்தியாயம் முடிகிறது.
तत्र अकस्मात् अर्पणादौ ब्रह्मदृष्टिः अप्रकरणे प्रतिमायामिव विष्णुदृष्टिः उच्यते इति अनुपपन्नम् ।
இவ்வாறு இருக்கையில் விக்ரஹத்தில் விஷ்ணுவைப் பார்ப்பது போல் அர்ப்பணாதிகளில் பிரஹ்ம்மத்தைப் பார்த்தல் பொருத்த மில்லாத இடத்தில் காரணம் ஏதுமின்றி கூறுதல் பொருந்தாது.
तस्मात् यथाव्याख्यातार्थ एव अयं श्लोकः ॥ २४ ॥
ஆகையால் யதார்த்தமான வாக்யார்த்தத்தைக் கூறுவதுதான் இந்த ஸ்லோகம்.
तत्र अधुना सम्यग्दर्शनस्य यज्ञत्वं सम्पाद्य तत्स्तुत्यर्थम् अन्येऽपि यज्ञा उपक्षिप्यन्ते —
அங்கு இப்பொழுது சம்யக்தர்சனத்திற்கு யக்ஞ ரூபத்தை ஏற்றி கூறி அதை புகழ்வதின் பொருட்டு தைவம் ஏவ, முதலிய ஸ்லோகங் களால் மற்றயக்ஞங்களையும் எடுத்துக் கூறுகிறார்.
दैवमेवापरे यज्ञं योगिनः पर्युपासते ।
ब्रह्माग्नावपरे यज्ञं यज्ञेनैवोपजुह्वति ॥ २५ ॥
தைவமேவாபரே யக்ஞம் யோகின: பர்யுபாஸதே ।
ப்ரஹ்மாக்நாவபரே யக்ஞம் யக்ஞேநைவோபஜுஹ்வதி ॥ 25 ॥
दैवमेव देवा इज्यन्ते येन यज्ञेन असौ दैवो यज्ञः तमेव अपरे यज्ञं योगिनः कर्मिणः पर्युपासते कुर्वन्तीत्यर्थः ।
எந்த யக்ஞத்தின் மூலமாக தேவர்கள் (இந்திரன் முதலியவர்கள்) உபாசிக்கப்படுகிறார்களோ அது தேவ சம்பந்தமான யக்ஞமாகும். மற்ற யோகிகளாகிய கர்மம் செய்பவர்கள் அந்த தேவ யக்ஞத்தைச் செய்கிறார்கள். (அனுஷ்ட்டிக்கிறார்கள்)
ब्रह्माग्नौ ‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ (तै. उ. २ । १ । १) ‘विज्ञानमानन्दं ब्रह्म’ ‘यत् साक्षादपरोक्षात् ब्रह्म य आत्मा सर्वान्तरः’ (बृ. उ. ३ । ४ । १) इत्यादिवचनोक्तम् अशनायादिसर्वसंसारधर्मवर्जितम् ‘नेति नेति’ (बृ. उ. ४ । ४ । २२) इति निरस्ताशेषविशेषं ब्रह्मशब्देन उच्यते ।
சத்யம் ஞானம் அனந்தம் பிரஹ்ம்ம, விக்ஞானமானந்தம் பிரஹ்ம்ம, யத் சாக்ஷாத் அபரோக்ஷாத் பிரஹ்ம ய ஆத்மா சர்வாந்தர: முதலிய வசனங்களால் வர்ணிக்கப்பட்டதோ பசி, தாகம் முதலிய சம்சார தர்மமற்றதோ நேதி நேதி என்றவேத வாக்கியத்தினால் எல்லா விசேஷணங்களும் தள்ளப்பட்ட பின் எது மிச்சமாயிற்றோ அது பிரஹ்மம் என்ற சப்தத்தினால் கூறப்படுகிறது.
ब्रह्म च तत् अग्निश्च सः होमाधिकरणत्वविवक्षया ब्रह्माग्निः । तस्मिन् ब्रह्माग्नौ अपरे अन्ये ब्रह्मविदः यज्ञम् — यज्ञशब्दवाच्य आत्मा, आत्मनामसु यज्ञशब्दस्य पाठात् — तम् आत्मानं यज्ञं परमार्थतः परमेव ब्रह्म सन्तं बुद्ध्याद्युपाधिसंयुक्तम् अध्यस्तसर्वोपाधिधर्मकम् आहुतिरूपं यज्ञेनैव आत्मनैव उक्तलक्षणेन उपजुह्वति प्रक्षिपन्ति ।
ஹோமத்திற்கு அதிகரணம் கூறுவதற்காக அந்த பிரஹ்மம் இங்கு அக்னி என்று சொல்லப்படுகிறது. அந்த பிரஹ்ம ரூப அக்னியில் மற்றொரு பிரஹ்ம வேதாவானவர் யக்ஞ மூலமாக யக்ஞமாகிய ஹோமம் செய்யப்படுகிறது. இங்கு யக்ஞம் என்றால் யக்ஞ சப்த வாக்கி யம் ஆத்மா. ஆத்மாவினுடைய நாமங்களில் யக்ஞ சப்த பாடமும் இருப்பதால் யக்ஞம் எனப்படும் ஆத்மா உண்மையில் மேலான பிரஹ்மமே. ஆனால் புத்தி முதலிய உபாதிகளுடன் கூடி அத்யாசம் செய்யப்பட்ட உபாதிகளுனுடைய தர்மங்களுடன் (தன்மைகளை) கூடிய ஆகுதி ரூபமான யக்ஞம் எனப்படும் ஆத்மாவை மேலும் கூறப்பட்ட ஆத்மா வாயிலாக ஹோமம் செய்யப்படுகிறது.
सोपाधिकस्य आत्मनः निरुपाधिकेन परब्रह्मस्वरूपेणैव यद्दर्शनं स तस्मिन् होमः तं कुर्वन्ति ब्रह्मात्मैकत्वदर्शननिष्ठाः संन्यासिनः इत्यर्थः ॥ २५ ॥
இதனுடைய சாராம்சம் - உபாதியுடன் கூடிய ஆத்மா, உபாதி அற்ற பரப்ரஹ்ம ரூபமாக சாக்ஷாத்கரித்தலே அது அதில் ஹோமம் செய்யப்பட்டதாகிறது. ப்ரஹ்மாத்மைக தத்வ தர்சன நிஷ்ட்டர்களா கிய சந்நியாசிகள் அதைச் செய்கிறார்கள்.
सोऽयं सम्यग्दर्शनलक्षणः यज्ञः दैवयज्ञादिषु यज्ञेषु उपक्षिप्यते ‘ब्रह्मार्पणम्’ इत्यादिश्लोकैः प्रस्तुतः ‘श्रेयान् द्रव्यमयाद्यज्ञात् ज्ञानयज्ञः परन्तप’ (भ. गी. ४ । ३३) इत्यादिना स्तुत्यर्थम् —
ப்ரஹ்மார்ப்பணம் என்று தொடங்கும் ஸ்லோகத்தில் எடுத்துக் காட்டப்பட்ட சம்யக்தர்சனம் என்ற இந்த யக்ஞத்தை ச்ரேயான் திரவ்யமயாத்யக்ஞாஜ் ஞானயக்ஞ: பரந்தப, முதலிய ஸ்லோகங் களால் புகழும் பொருட்டு தைவ யக்ஞம் முதலிய யக்ஞங்களின் (மத்தியில்) வைத்திருக்கிறார்.
श्रोत्रादीनीन्द्रियाण्यन्ये संयमाग्निषु जुह्वति ।
शब्दादीन्विषयानन्य इन्द्रियाग्निषु जुह्वति ॥ २६ ॥
ச்ரோத்ராதீநீந்த்ரியாண்யந்யே ஸந்யமாக்நிஷு ஜுஹ்வதி ।
சப்தாதீந்விஷயாநன்ய இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி ॥ 26 ॥
श्रोत्रादीनि इन्द्रियाणि अन्ये योगिनः संयमाग्निषु । प्रतीन्द्रियं संयमो भिद्यते इति बहुवचनम् । संयमा एव अग्नयः तेषु जुह्वति इन्द्रियसंयममेव कुर्वन्ति इत्यर्थः ।
மற்றயோகிகள் செவி முதலிய இந்திரியங்களை அடக்குதல் என்னும் அக்னிகளில் ஹோமம் செய்கிறார்கள். அடக்குதல் என்பது ஒவ்வொரு இந்திரியத்திற்கும் உள்ளதால் அக்னிசு (அக்னிகளில்) என்று பன்மையில் கூறப்பட்டுள்ளது. அடக்குதல் என்பதே அக்கினிகள். அதில் ஹோமம் செய்கிறார்கள். என்றால் இந்திரியங்களை அடக்குகிறார்கள் என்பது பொருள்.
शब्दादीन् विषयान् अन्ये इन्द्रियाग्निषु इन्द्रियाण्येव अग्नयः तेषु इन्द्रियाग्निषु जुह्वति श्रोत्रादिभिरविरुद्धविषयग्रहणं होमं मन्यन्ते ॥ २६ ॥
சப்தம் முதலிய விஷயங்களை வேறு சில யோகிகள் இந்திரியங் களில் ஹோமம் செய்கிறார்கள். இந்திரியங்கள் தான் அக்னிகள். அந்த இந்திரிய அக்னிகளில் ஹோமம் செய்கிறார்கள். (என்பதன் கருத்து என்னவெனில்) அந்த சுரோத்திராதி இந்திரியங்கள் மூலமாக சாஸ்திரத்திற்கு சம்மதமான விஷயங்களை கிரஹித்தலே ஹோமம் எனப்படுகிறது.
किञ्च —
மேலும்
सर्वाणीन्द्रियकर्माणि प्राणकर्माणि चापरे ।
आत्मसंयमयोगाग्नौ जुह्वति ज्ञानदीपिते ॥ २७ ॥
ஸர்வாணீந்த்ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே ।
ஆத்மஸம்யமயோகாக்நௌ ஜுஹ்வதி க்ஞானதீபிதே ॥ 27 ॥
सर्वाणि इन्द्रियकर्माणि इन्द्रियाणां कर्माणि इन्द्रियकर्माणि, तथा प्राणकर्माणि प्राणो वायुः आध्यात्मिकः तत्कर्माणि आकुञ्चनप्रसारणादीनि तानि च अपरे आत्मसंयमयोगाग्नौ आत्मनि संयमः आत्मसंयमः स एव योगाग्निः तस्मिन् आत्मसंयमयोगाग्नौ जुह्वति प्रक्षिपन्ति ज्ञानदीपिते स्नेहेनेव प्रदीपे विवेकविज्ञानेन उज्ज्वलभावम् आपादिते जुह्वति प्रविलापयन्ति इत्यर्थः ॥ २७ ॥
எல்லா இந்திரியங்களினுடைய தொழில்களையும், ஒவ்வொரு சரீரத்தினுள் உள்ள பிராணனுடைய கர்மங்களாகிய குறைதல், நிமிர்தல் முதலியவைகளையும் ஞானத்தினால் பிரகாசப்படுத்தப்பட்ட ஆத்ம சம்யம ரூப யோகாக்கினியில் ஹோமம் செய்கிறார்கள். ஆத்ம அடக்கமாவது ஆத்மாவினிடத்தில் (மனதை அலையாது) நிறுத்துதலே யோகாக்னி. நெய் முதலியவைகளாய் பிரகாசிக்கும் அக்னி போல விவேக ஞானத்தினால் பிரகாசிக்கப் பெற்றஅந்த ஆத் மாவில் அடக்கிய யோகாக்னியில் அர்ப்பணிக்கிறார்கள். (இதன் பொருள் என்னவெனில் இந்திரியங்கள் பிராணன் இவைகளின் தொழில்களை தடுத்து மனதை ஆத்மாவிடத்தில் நிலைக்கச் செய்கின்றனர்
द्रव्ययज्ञास्तपोयज्ञा योगयज्ञास्तथापरे ।
स्वाध्यायज्ञानयज्ञाश्च यतयः संशितव्रताः ॥ २८ ॥
த்ரவ்யயக்ஞாஸ்தபோயக்ஞா யோகயக்ஞாஸ்ததாபரே ।
ஸ்வாத்யாயக்ஞானயக்ஞாச்ச யதய: ஸஞ்சிதவ்ரதா: ॥ 28 ॥
द्रव्ययज्ञाः तीर्थेषु द्रव्यविनियोगं यज्ञबुद्ध्या कुर्वन्ति ये ते द्रव्ययज्ञाः ।
யக்ஞ புத்தியுடன் தீர்த்தாதி திவ்ய ஸ்தலங்களில் பொருள்களை தானம் செய்பவர்கள் எவர்களோ அவர்கள் திரவ்ய யக்ஞர்கள்.
तपोयज्ञाः तपः यज्ञः येषां तपस्विनां ते तपोयज्ञाः । योगयज्ञाः प्राणायामप्रत्याहारादिलक्षणो योगो यज्ञो येषां ते योगयज्ञाः ।
எவர்கள் தபஸ்விகளோ அவர்கள் தபோ யக்ஞர்கள். பிராணாயாம, பிரத்தியாஹாராதி லக்ஷணங்களுடன் யோகம் என்னும் யக்ஞத்தை உடையவர்கள் யோக யக்ஞர்கள்.
तथा अपरे स्वाध्यायज्ञानयज्ञाश्च स्वाध्यायः यथाविधि ऋगाद्यभ्यासः यज्ञः येषां ते स्वाध्याययज्ञाः । ज्ञानयज्ञाः ज्ञानं शास्त्रार्थपरिज्ञानं यज्ञः येषां ते ज्ञानयज्ञाश्च ।
விதிப்படி ரிக்காதிகளில் அப்பியாசமே யக்ஞமாக உடைய வேறு சிலர் சுவாத்யாய யக்ஞர்கள். சாஸ்திரத்தில் உள்ள அர்த்தத்தை நன்றாக விசாரித்து அறிந்த ஞானமுடையவர்கள் ஞானயக்ஞர்கள்.
यतयः यतनशीलाः संशितव्रताः सम्यक् शितानि तनूकृतानि तीक्ष्णीकृतानि व्रतानि येषां ते संशितव्रताः ॥ २८ ॥
சிலர் தீவிர முயற்சி உடையவர்களாய் தீவிரமாக விரதங்களைக் கடைப்பிடித்து சூக்ஷமமாயும், சுத்தமாயும் உள்ள புத்தி எவர்களுக்குள் ளதோ அவர்கள் சம்சித விரதர்கள்.
किञ्च —
மேலும்
अपाने जुह्वति प्राणं प्राणेऽपानं तथापरे ।
प्राणापानगती रुद्ध्वा प्राणायामपरायणाः ॥ २९ ॥
அபாநே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணேஅபானம் ததாபரே ।
ப்ராணாபானகதீ ருத்த்வா ப்ராணாயாம்பராயண: ॥ 29 ॥
अपाने अपानवृत्तौ जुह्वति प्रक्षिपन्ति प्राणं प्राणवृत्तिम् , पूरकाख्यं प्राणायामं कुर्वन्तीत्यर्थः ।
அபான விருத்தியில் பிராணனை ஹோமம் செய்கிறார்கள் என்றால் பிராணவிருத்தியை பூரகம் எனப்படும் பிராணாயாமம் செய்கிறான் என்பது பொருள்.
प्राणे अपानं तथा अपरे जुह्वति, रेचकाख्यं च प्राणायामं कुर्वन्तीत्येतत् ।
அவ்வாறேவேறு சிலர் பிராணனிடத்தில் அபானனை ஹோமம் செய்கிறார்கள் என்றால் ரேசகம் என்றபிராணாயாமம் செய்கிறார்கள் என்பது பொருள்.
प्राणापानगती मुखनासिकाभ्यां वायोः निर्गमनं प्राणस्य गतिः, तद्विपर्ययेण अधोगमनम् अपानस्य गतिः, ते प्राणापानगती एते रुद्ध्वा निरुध्य प्राणायामपरायणाः प्राणायामतत्पराः ; कुम्भकाख्यं प्राणायामं कुर्वन्तीत्यर्थः ॥ २९ ॥
(முகம்)வாய், மூக்கின் வழியாக வாயுவானது வெளியில் செல்லு வது பிராணனுடைய கதி (வழி) யாகும். அவ்வாறே அதற்கு மாறாக கீழ்நோக்கிச் செல்லுதல் அபானத்தினுடைய கதி. இந்த இரு பிராணா பான கதிகளை அவர்கள் தடுத்து பிராணாயாமத்திலேயே கருத்துள்ள வர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் கும்பகம் என்னும் பிராணாயா மத்தைச் செய்கிறார்கள்.
किञ्च —
மேலும்
अपरे नियताहाराः प्राणान्प्राणेषु जुह्वति ।
सर्वेऽप्येते यज्ञविदो यज्ञक्षपितकल्मषाः ॥ ३० ॥
அபரே நியதாஹாரா; ப்ராணான்ப்ராணேஷு ஜுஹ்வதி ।
ஸர்வேஅப்யேதே யக்ஞவிதோ யக்ஞக்ஷபிதகல்மஷா: ॥ 30 ॥
अपरे नियताहाराः नियतः परिमितः आहारः येषां ते नियताहाराः सन्तः प्राणान् वायुभेदान् प्राणेषु एव जुह्वति ।
வேறு சிலர் நியமமாக அளவான ஜீவனத்திற்கு தேவையான ஆகாரமுடையவர்களாய் வாயு பேதங்களை பிராணன்களில் ஹோமம் செய்கிறார்கள்.
यस्य यस्य वायोः जयः क्रियते इतरान् वायुभेदान् तस्मिन् तस्मिन् जुह्वति, ते तत्र प्रविष्टा इव भवन्ति ।
எந்த எந்த வாயுக்கள் ஜெயிக்கப்படுகிறதோ அதில் மற்றவாயு பேதங்கள் ஹோமம் செய்யப்படுகிறது. அந்த எல்லா வாயு பேதங்க ளும் அதில் புகுந்து விட்டது போல் ஆகிறது.
सर्वेऽपि एते यज्ञविदः यज्ञक्षपितकल्मषाः यज्ञैः यथोक्तैः क्षपितः नाशितः कल्मषो येषां ते यज्ञक्षपितकल्मषाः ॥ ३० ॥
இவர்கள் எல்லோரும் யக்ஞத்தை அறிந்தவர்கள். யக்ஞத்தி னால் பாபமற்றவர்களாய் இருக்கிறார்கள். இதன் பொருள்- மேலே கூறப்பட்ட யக்ஞ மூலமாக எவர்களது பாபம் நசித்து விட்டதோ அவர்கள் யக்ஞக்ஷபித கல்மஷா: எனப்படுகின்றனர்.
एवं यथोक्तान् यज्ञान् निर्वर्त्य —
இவ்வாறு முற்கூறிய யக்ஞங்களை சம்பாதித்து.
यज्ञशिष्टामृतभुजो यान्ति ब्रह्म सनातनम् ।
नायं लोकोऽस्त्ययज्ञस्य कुतोऽन्यः कुरुसत्तम ॥ ३१ ॥
யக்ஞசிஷ்டாம்ருதபுஜோ யாந்தி ப்ரஹ்ம ஸநாதனம் ।
நாயம் லோகோஅஸ்த்யயக்ஞஸ்ய குதோஅந்ய: குருஸத்தம ॥ 31 ॥
यज्ञशिष्टामृतभुजः यज्ञानां शिष्टं यज्ञशिष्टं यज्ञशिष्टं च तत् अमृतं च यज्ञशिष्टामृतं तत् भुञ्जते इति यज्ञशिष्टामृतभुजः । यथोक्तान् यज्ञान् कृत्वा तच्छिष्टेन कालेन यथाविधिचोदितम् अन्नम् अमृताख्यं भुञ्जते इति यज्ञशिष्टामृतभुजः यान्ति गच्छन्ति ब्रह्म सनातनं चिरन्तनं ।
யக்ஞத்தினுடைய மிச்சம் யக்ஞ சிஷ்ட்டமாகும். அதுவே அம்ருதம். அதை எவர்கள் போஜனம் செய்கிறார்களோ அவர்கள் யக்ஞ சிஷ்ட்ட அம்ருத போஜீ. முன்பு கூறிய யக்ஞம் செய்த காலம் போக மீதம் உள்ள காலத்தில் தமக்கு விதிக்கப்பட்ட அம்ருதம் என்னும் யக்ஞ சிஷ்ட்டத்தை விதிப்படி புஜிக்கிறார்களோ அந்த யக்ஞ சிஷ்ட்ட போஜீயானவன் ஸனாதனமான (எப்பொழுதும் உள்ள) பிரஹ்ம்மத்தை அடைகிறான்.
मुमुक्षवश्चेत् कालातिक्रमापेक्षया इति सामर्थ्यात् गम्यते ।
முமூக்ஷுக்களாய் இருந்தால் காலக்கிரமப்படி (ஸனாதனமான பிரஹ்ம்மத்தை) அதை அடைகிறார்கள்.
न अयं लोकः सर्वप्राणिसाधारणोऽपि अस्ति यथोक्तानां यज्ञानां एकोऽपि यज्ञः यस्य नास्ति सः अयज्ञः तस्य । कुतः अन्यो विशिष्टसाधनसाध्यः कुरुसत्तम ॥ ३१ ॥
ஹே குருச்ரேஷ்ட்டரே! எந்த ஒருவரும் முன்பு கூறிய கர்மங்களில் ஏதாவது ஒன்றையேனும் செய்யவில்லை எனில், அந்த யக்ஞம் அற்றஅந்த புருஷனுக்கு சகலபிராணிகளுக்கும் பொதுவான இவ்வுலகம் இல்லையென்றால் விசேஷமான சாதனங்களினால் (ஜ்யோதிஷ்டோமம்) முதலியவைகளினால் அடையக்கூடிய மற்றைய உலகம் எவ்வாறு கிடைக்கும்?
एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मणो मुखे ।
कर्मजान्विद्धि तान्सर्वानेवं ज्ञात्वा विमोक्ष्यसे ॥ ३२ ॥
ஏவம் பஹுவிதா யக்ஞா விததா ப்ரஹ்மணோ முகே ।
கர்மஜாந்வித்தி தான்ஸர்வாநேவம் க்ஞாத்வா விமோக்ஷ்யஸே ॥ 32 ॥
एवं यथोक्ता बहुविधा बहुप्रकारा यज्ञाः वितताः विस्तीर्णाः ब्रह्मणो वेदस्य मुखे द्वारे ।
இவ்வாறு முன்பு அநேக பிரகாரமாக யக்ஞங்கள் பிரஹ்மத்தைப் பற்றி கூறப்பட்டிருக்கின்றன. அவை வேதத்தின் மூலமாக அறியப் படுகிறது. (வெளிப்படுகிறது)
वेदद्वारेण अवगम्यमानाः ब्रह्मणो मुखे वितता उच्यन्ते ; तद्यथा ‘वाचि हि प्राणं जुहुमः’ (ऐ. आ. ३ । २ । ६) इत्यादयः ।
வேதத்தின் மூலமாகவே எல்லா யக்ஞங்களும் அறியப்படுகிறது என்பது எவ்வாறு எனில் 'வாச்சிஹி பிராணம் ஜூஹும; முதலிய வைகளால் (வாக்கினால் அன்றோ ஹோமம் செய்கின்றோம்)
कर्मजान् कायिकवाचिकमानसकर्मोद्भावान् विद्धि तान् सर्वान् अनात्मजान् , निर्व्यापारो हि आत्मा ।
இந்த எல்லா யக்ஞங்களும் கர்மங்களினால் உண்டானவை தேஹம், வாக்கு, மனது இவைகளின் செயல்களினால் எல்லாம் அநாத்மாவிலிருந்து தோன்றுகின்றன. ஆத்மா கிரியை (வியாபாரம்) அற்றது.
अत एवं ज्ञात्वा विमोक्ष्यसे अशुभात् । न मद्व्यापारा इमे, निर्व्यापारोऽहम् उदासीन इत्येवं ज्ञात्वा अस्मात् सम्यग्दर्शनात् मोक्ष्यसे संसारबन्धनात् इत्यर्थः ॥ ३२ ॥
ஆகையால் இவ்வாறு அறிந்து அசுபங்களிலிருந்து விடுபடு. இவைகள் என்னுடைய கிரியைகள் அல்ல. நான் கிரியை அற்றவன், உதாசினன் (விருப்பு வெறுப்பு அற்றவன்) என்று இவ்வாறு அறிந்து இந்த யதார்த்த ஞானத்தினால் (சம்யக் தர்சனத்தினால்) சம்சார பந்தத்திலிருந்து விடுபடு என்பது பொருள்.
‘ब्रह्मार्पणम्’ (भ. गी. ४ । २४) इत्यादिश्लोकेन सम्यग्दर्शनस्य यज्ञत्वं सम्पादितम् । यज्ञाश्च अनेके उपदिष्टाः । तैः सिद्धपुरुषार्थप्रयोजनैः ज्ञानं स्तूयते । कथम् ? —
பிரஹ்மார்ப்பணம் முதலிய ஸ்லோகங்களில் யதார்த்த ஞானத்தை யக்ஞரூபமாக கூறி மேலும் அநேக பிரகாரமாக யக்ஞங் கள் வர்ணிக்கப்பட்டது. (உபதேசம் செய்யப்பட்டது) அவைகளால் புருஷன் இச்சித்த பிரயோஜனம் எந்த யக்ஞத்தினால் அடையப் படுமோ, முன்பு கூறியுள்ள மற்றயக்ஞங்களைக் காட்டிலும் ஞானயக் ஞத்தை ஸ்துதி (புகழ்கிறார்) செய்கிறார், எவ்வாறு?
श्रेयान्द्रव्यमयाद्यज्ञाज्ज्ञानयज्ञः परन्तप ।
सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते ॥ ३३ ॥
ச்ரேயாந்த்ரவ்யமயாத்யக்ஞாத்க்ஞாநயக்ஞ: பரந்தப ।
ஸர்வம் கர்மாகிலம் பார்த்த க்ஞாநே பரிஸமாப்யதே ॥ 33 ॥
श्रेयान् द्रव्यमयात् द्रव्यसाधनसाध्यात् यज्ञात् ज्ञानयज्ञः हे परन्तप ।
ஹே பரந்தப! திரவியங்களாகிய சாதனங்களால் பெறப்படும் (சாத்யமாகும்) யக்ஞத்தைக் காட்டிலும் ஞானயக்ஞம் மேலானது.
द्रव्यमयो हि यज्ञः फलस्यारम्भकः, ज्ञानयज्ञः न फलारम्भकः, अतः श्रेयान् प्रशस्यतरः ।
திரவ்யயங்களை சாதனங்களாக உடைய யக்ஞம் பலத்துடன் கூடியது. ஞான யக்ஞத்திற்கு பலன் கிடையாது. ஆகையால் திரவ்யயக்ஞத்தைக் காட்டிலும் ஞானயக்ஞம் மேலானது.
कथम् ? यतः सर्वं कर्म समस्तम् अखिलम् अप्रतिबद्धं पार्थ ज्ञाने मोक्षसाधने सर्वतःसम्प्लुतोदकस्थानीये परिसमाप्यते अन्तर्भवतीत्यर्थः
அது எவ்வாறு எனில் பரிபூர்ணமாக நிறைந்த பெரிய குளத்திற்கு ஒப்பாக எல்லா கர்மங்களும் மோக்ஷசாதன ரூபஞானத்தில் அடங்கி இருக்கிறது என்பது பொருள்.
ஆகவே எவ்வாறு சூதாட்டத்திலே (கிருத யுகம், த்ரேதா யுகம், த்வாபர, கலியுகம் என்று நான்கு வித சம்பாத்தியம் இருக்கிறது) அதில் கிருதயுகம் எனப்படும் வருமானத்தை ஜெயித்ததால் அதற்குக் கீழான எல்லா யுகங்களாகிய வருமானங்களும் சேர்வது போல ஜனங்கள் செய்யும் நற்செயல் எல்லாம் அந்த ஞானியை அடைகிறது. எவன் அதை அறிந்தானோ அவன் அதை அடைகிறான் என்று சுருதியின் வாக்கியம்.
तदेतत् विशिष्टं ज्ञानं तर्हि केन प्राप्यते इत्युच्यते —
அந்த இந்த ஞானம் மிகவும் மேலானது என்றால் எதனால் அடையமுடியும் என்று கூறுகிறார்
तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया ।
उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः ॥ ३४ ॥
தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரச்னேன ஸேவயா ।
உபதேயந்தி தே க்ஞானம் க்ஞாநினஸ்தத்த்வதர்சின: ॥ 34 ॥
तत् विद्धि विजानीहि येन विधिना प्राप्यते इति । आचार्यान् अभिगम्य, प्रणिपातेन प्रकर्षेण नीचैः पतनं प्रणिपातः दीर्घनमस्कारः तेन, ‘कथं बन्धः ? कथं मोक्षः ? का विद्या ? का चाविद्या ? ’ इति परिप्रश्नेन, सेवया गुरुशुश्रूषया ।
அதை எவ்விதத்தால் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள். ஆச்சாரியரின் அருகில் சென்று சாஷ்ட்டாங்க நமஸ்காரம் செய்து எவ்வாறு பந்தம் ஏற்பட்டது? மோக்ஷம் எவ்வாறு ஏற்படும்? வித்யா என்றால் என்ன? அவித்யா என்றால் என்ன? என்று இவ்வாறு மறுப டியும், மறுபடியும் கேள்விகள் கேட்பதாலும் அவருக்கு பணிவிடை செய்வதாலும்.
एवमादिना । प्रश्रयेण आवर्जिता आचार्या उपदेक्ष्यन्ति कथयिष्यन्ति ते ज्ञानं यथोक्तविशेषणं ज्ञानिनः ।
இவை முதலிய வழிபாட்டிலா பிரசன்னமடைந்த ஆச்சாரியர் (தத்வதர்சீ) உனக்கு முன்பு கூறப்பட்ட விசேஷணங்களுடன் கூடிய ஞானத்தை உபதேசம் செய்வார்கள்.
ज्ञानवन्तोऽपि केचित् यथावत् तत्त्वदर्शनशीलाः, अपरे न ; अतो विशिनष्टि तत्त्वदर्शिनः इति ।
ஞானவான்களாய் இருந்தாலும் சிலரே யதார்த்த தத்துவத்தை அறிந்தவர்களாய் இருக்கிறார்கள். எல்லோரும் அவ்வாறு அல்ல. ஆகையால் ஞானத்துடன் தத்வதர்சீ என்றவிசே ஷணம் கூறப்பட்டுள்ளது.
ये सम्यग्दर्शिनः तैः उपदिष्टं ज्ञानं कार्यक्षमं भवति नेतरत् इति भगवतो मतम् ॥ ३४ ॥
இதனால் பகவானுடைய அபிப்பிராயம் என்னவெனில்? யதார்த்த தத் துவத்தை அறிந்தவர்களால் உபதேசம் செய்யப்பட்ட ஞானமானது தன்னுடைய காரிய சித்தியை செய்வதில் சாமர்த்தியம் உடைய தாகிறது. மற்றவை அல்ல.
तथा च सति इदमपि समर्थं वचनम् —
அவ்வாறு இருப்பதினால் (பகவானுடைய) திருவாக்கும் பொருத்தமுடையதே.
यज्ज्ञात्वा न पुनर्मोहमेवं यास्यसि पाण्डव ।
येन भूतान्यशेषेण द्रक्ष्यस्यात्मन्यथो मयि ॥ ३५ ॥
யஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவ ।
யேன பூதான்யசேஷேண த்ரஷ்யஸ்யாத்மன்யதோ மயி ॥ 35 ॥
यत् ज्ञात्वा यत् ज्ञानं तैः उपदिष्टं अधिगम्य प्राप्य पुनः भूयः मोहम् एवं यथा इदानीं मोहं गतोऽसि पुनः एवं न यास्यसि हे पाण्डव ।
ஹே! பாண்டவ! எந்த ஞானமானது அவர்களால் உபதேசிக்கப் பட்டதோ அதை அடைந்து எவ்வாறு இப்பொழுது நீ மோஹமடைந்தி ருக்கிறாயோ அவ்வாறு மறுபடியும் நீ மோஹத்தை அடையமாட்டாய்
किञ्च — येन ज्ञानेन भूतानि अशेषेण ब्रह्मादीनि स्तम्बपर्यन्तानि द्रक्ष्यसि साक्षात् आत्मनि प्रत्यगात्मनि ‘मत्संस्थानि इमानि भूतानि’ इति अथो अपि मयि वासुदेवे ‘परमेश्वरे च इमानि’ इति ; क्षेत्रज्ञेश्वरैकत्वं सर्वोपनिषत्प्रसिद्धं द्रक्ष्यसि इत्यर्थः ॥ ३५ ॥
மேலும் எந்த ஞானத்தினால் எல்லா பூதங்களும் என்றால் பிரஹ்மா முதல் ஸ்தம்பம் வரைக்கும் உள்ள எல்லா பிராணிகளும் என்னிடத்தில் நிலைபெற்றிருக்கின்றன என்று இவ்வாறு சாக்ஷாத்தாக தன்னுடைய அந்தராத்மாவினாலும் அவ்வாறேபரமேச் வரனாகிய வாசுதேவனாகிய என்னிடத்திலும் இவ்வெல்லா வற்றையும் பார் என்று எல்லா உபநிஷத்துக்களிலும் பிரசித்தமான க்ஷேத்ரக்ஞன் மற்றும் ஈஸ்வரன் இவர்களின் ஏகத்துவத்தை பிரத்யக்ஷமாக அனுபவிப்பாயாக.
किञ्च एतस्य ज्ञानस्य माहात्म्यम् —
இந்த ஞானத்தின் மாஹாத்மியத்தைக் கூறுகிறார்
अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः ।
सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि ॥ ३६ ॥
அபி சேதஸி பாபேப்ய: ஸர்வேப்ய: பாபக்ருத்தம: ।
ஸர்வம் க்ஞானப்லவேனைவ வ்ருஜினம் ஸந்தரிஷ்யஸி ॥ 36 ॥
अपि चेत् असि पापेभ्यः पापकृद्भ्यः सर्वेभ्यः अतिशयेन पापकृत् पापकृत्तमः सर्वं ज्ञानप्लवेनैव ज्ञानमेव प्लवं कृत्वा वृजिनं वृजिनार्णवं पापसमुद्रं सन्तरिष्यसि । धर्मोऽपि इह मुमुक्षोः पापम् उच्यते ॥ ३६ ॥
எல்லா பாபிக்களைக் காட்டிலும் அதிக பாபம் செய்தவர் அதிபாபி. அவ்வாறு அதிபாபியாக இருந்தாலும் ஞான ஓடத்தினால் என்றால் ஞானத்தையே ஓடமாக்கி பாபரூப சமுத்திரத்தை சுலபமாக நன்றாக கடந்துவிடுவாய். இங்கு முமூக்ஷவிற்கு புண்யமும் பாபம் என்றே கருதப்படுகிறது.
ज्ञानं कथं नाशयति पापमिति दृष्टान्त उच्यते —
ஞானம் எவ்வாறு பாபத்தைப் போக்குகிறது என்பதை திருஷ்டாந்தம் மூலமாகக் கூறுகிறார்.
यथैधांसि समिद्धोऽग्निर्भस्मसात्कुरुतेऽर्जुन ।
ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात्कुरुते तथा ॥ ३७ ॥
யதைதாம்ஸி ஸமித்தோ அக்நிர்பஸ்மஸாத்குருதேஅர்ஜுன ।
க்ஞானாக்நி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத்குருதே ததா ॥ 37 ॥
यथा एधांसि काष्ठानि समिद्धः सम्यक् इद्धः दीप्तः अग्निः भस्मसात् भस्मीभावं कुरुते हे अर्जुन, ज्ञानमेव अग्निः ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा निर्बीजीकरोतीत्यर्थः ।
ஹே அர்ஜுன! எவ்வாறு நன்றாக எரியும் நெருப்பு விறகுகளை சாம்பலாக்குகிறதோ அவ்வாறே ஞானம் என்கிற அக்னி எல்லா கர்மங்களையும் சாம்பலாக்குகிறது. அதாவது நிர்பீஜமாக்குகிறது.
न हि साक्षादेव ज्ञानाग्निः कर्माणि इन्धनवत् भस्मीकर्तुं शक्नोति । तस्मात् सम्यग्दर्शनं सर्वकर्मणां निर्बीजत्वे कारणम् इत्यभिप्रायः ।
ஏனெனில் விறகைப் போல் ஞானரூப அக்கினியானது கர்மங்களை சாம்பலாக்கமுடியாது. ஆகையால் இதனுடைய அபிப்பிராயம் என்னவெனில் யதார்த்த ஞானம் எல்லா கர்மங்களையும் நிர்பீஜமாக்குவதற்கு காரணமாய் இருக்கிறது.
सामर्थ्यात् येन कर्मणा शरीरम् आरब्धं तत् प्रवृत्तफलत्वात् उपभोगेनैव क्षीयते ।
எந்த கர்மத்தின் சாமர்த்தியத்தினால் இந்த சரீரம் உண்டானதோ அது பலனைக் கொடுப்பதற்கு தலைப்பட்டுள்ளதால் அது அனுபவித்தலால் அழிந்து போகிறது.
अतो यानि अप्रवृत्तफलानि ज्ञानोत्पत्तेः प्राक् कृतानि ज्ञानसहभावीनि च अतीतानेकजन्मकृतानि च तान्येव सर्वाणि भस्मसात् कुरुते ॥ ३७ ॥

ஆகையால் இந்த ஜன்மத்தில் ஞானம் உண்டாவதற்கு முன் செய்த கர்மங்கள், ஞானத்துடன் (தேவதா ஞானத்துடன்) செய்த கர்மங்கள், இதற்கு முன் அநேக ஜன்மங்களில் செய்த கர்மங்கள் எல்லாவற்றையும் சாம்பலாக்கிவிடும்.
यतः एवम् अतः —
எதனால் இவ்வாறு இருக்கிறதோ அதனால்
न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते ।
तत्स्वयं योगसंसिद्धः कालेनात्मनि विन्दति ॥ ३८ ॥
ந ஹி க்ஞானேன ஸத்ருசம் பவித்ரமிஹ வித்யதே ।
தத்ஸ்வயம் யோகஸம்ஸித்த: காலேநாத்மநி விந்ததி ॥ 38 ॥
न हि ज्ञानेन सदृशं तुल्यं पवित्रं पावनं शुद्धिकरम् इह विद्यते ।
ஞானத்திற்கு ஒப்பாக சுத்தம் (பவித்ரம்) செய்யக்கூடிய வேறு ஒன்றும் உலகில் கிடையாது.
तत् ज्ञानं स्वयमेव योगसंसिद्धः योगेन कर्मयोगेन समाधियोगेन च संसिद्धः संस्कृतः योग्यताम् आपन्नः सन् मुमुक्षुः कालेन महता आत्मनि विन्दति लभते इत्यर्थः ॥ ३८ ॥
கர்மயோகம், மற்றும் தியான யோகங்களினால் வெகுகாலம் அப்பியாசம் செய்ய ஏற்பட்ட அந்தக்கரண சுத்தியினால் யோக்கியதையை அடைந்த முமூக்ஷ ஆத்மாவை அடைகிறான். (சாக்ஷாத்கரிக்கிறான்)
येन एकान्तेन ज्ञानप्राप्तिः भवति स उपायः उपदिश्यते —
எந்த அந்தரங்க சாதனத்தால் நிச்சயமாக ஞானத்தை அடையக் கூடிய உபாயத்தைக் கூறுகிறார்.
श्रद्धावांल्लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ।
ज्ञानं लब्ध्वा परां शान्तिमचिरेणाधिगच्छति ॥ ३९ ॥
ச்ரத்தாவான்லபதே க்ஞானம் தத்பர: ஸம்யதேந்த்ரிய: ।
க்ஞானம்லப்த்வா பராம் சாந்திமசிரேணாதிகச்சதி ॥ 39 ॥
श्रद्धावान् श्रद्धालुः लभते ज्ञानम् ।
சிரத்தையுடன் கூடியவன் மோக்ஷத்தை அடைகிறான்.
श्रद्धालुत्वेऽपि भवति कश्चित् मन्दप्रस्थानः, अत आह — तत्परः, गुरूपसदनादौ अभियुक्तः ज्ञानलब्ध्युपाये ।
சிரத்தையுடன் கூடினவனாயினும் மந்தமாக பிரயத்னம் செய்பவ னாகவும் இருப்பான். ஆகையால் அவன் சேவை முதலிய உபாயங்க ளால் ஞானத்தை அடையவேண்டும். குருசேவை முதலிய உபாயங்கள் (தத்பர:) என்பதாகும்.
श्रद्धावान् तत्परः अपि अजितेन्द्रियः स्यात् इत्यतः आह — संयतेन्द्रियः, संयतानि विषयेभ्यो निवर्तितानि यस्य इन्द्रियाणि स संयतेन्द्रियः ।
சிரத்தாவானாயும், தத்பரனாயும் இருந்தாலும் இந்திரிய கட்டுப்பாடு அற்றவனாய் இருக்கலாம். ஆகையால் சம்யதேந் திரயனாக வேண்டும் (இந்திரியங்களை தன் வசப்படுத்த வேண்டும்) விஷயங்களில் இந்திரியங்கள் செல்லவிடாமல் தடுக்க வேண்டும்.
य एवंभूतः श्रद्धावान् तत्परः संयतेन्द्रियश्च सः अवश्यं ज्ञानं लभते ।
இவ்வாறு சிரத்தை உள்ளவனாயும், தத்பரனாயும், இந்திரி யங்களை தன்வசம் செய்தவனாயும் உள்ளவன் ஞானத்தை அடைகிறான்.
प्रणिपातादिस्तु बाह्योऽनैकान्तिकोऽपि भवति, मायावित्वादिसम्भवात् ; न तु तत् श्रद्धावत्त्वादौ इत्येकान्ततः ज्ञानलब्ध्युपायः ।
சாஷ்ட்டாங்க நம்ஸ்கார முதலிய உபாயங்கள் பாஹ்யமாயும், கள்ளத்தனமுள்ளவனாலும் செய்ய முடியும். ஆகையால் இது நிச்சய மற்றது. ஆனால் சிரத்தை முதலிய உபாயங்கள் கபடங்களாக முடியாது. ஆகையால் அவர்கள் நிச்சயமாக ஞானத்தை அடைவார்கள்.
किं पुनः ज्ञानलाभात् स्यात् इत्युच्यते —
மேலும் ஞானத்தை அடைவதினால் என்ன ஆகும்?
ज्ञानं लब्ध्वा परां मोक्षाख्यां शान्तिम् उपरतिम् अचिरेण क्षिप्रमेव अधिगच्छति ।
ஞானம் அடைந்த பின்னர் மோக்ஷமென்று மேலான சாந்தியையும் உபக்ரமத்தையும் வெகு சீக்ரம் அடைகிறான்.
सम्यग्दर्शनात् क्षिप्रमेव मोक्षो भवतीति सर्वशास्त्रन्यायप्रसिद्धः सुनिश्चितः अर्थः ॥ ३९ ॥
யதார்த்த ஞானத்தினால் சீக்கிரம் மோக்ஷம் ஏற்படுகிறது என்பது எல்லா சாஸ்திரங்களாலும் யுக்திகளாலும் சித்தம் செய்யப்பட்ட நிச்சயமான பொருளாகும்.
अत्र संशयः न कर्तव्यः, पापिष्ठो हि संशयः ; कथम् इति उच्यते —
பாபிஷ்ட்டனுக்கல்லவா சந்தேஹம் வரும். இங்கு சந்தேஹம் கொள்ளவேண்டியதில்லை. எவ்வாறு? என்று கூறுகிறார்.
अज्ञश्चाश्रद्दधानश्च संशयात्मा विनश्यति ।
नायं लोकोऽस्ति न परो न सुखं संशयात्मनः ॥ ४० ॥
அக்ஞச்சாச்ரத்தாதானச்ச ஸம்சயாத்மா விநச்யதி ।
நாயம் லோகோஅஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்சயாத்மந: ॥ 40 ॥
अज्ञश्च अनात्मज्ञश्च अश्रद्दधानश्च गुरुवाक्यशास्त्रेषु अविश्वासवांश्च संशयात्मा च संशयचित्तश्च विनश्यति ।
ஆத்மக்ஞானம் அற்றவன் அக்ஞானி. அக்ஞானியும் குரு, சாஸ்திரத்தில் சிரத்தை இல்லாதவனும், சந்தேஹமுள்ள மனமுடைய வனும் கெட்டுப் போகிறார்கள்.
अज्ञाश्रद्दधानौ यद्यपि विनश्यतः, न तथा यथा संशयात्मा । संशयात्मा तु पापिष्ठः सर्वेषाम् ।
அக்ஞானியும் சிரத்தை அற்றவனும் நாசம் அடைவார்கள். ஆனாலும் சந்தேஹமுடையவன் போல் நசிப்பதில்லை. ஏனெனில் எல்லோரைக் காட்டிலும் சந்தேஹமுடையவன் அதிகமான பாபத்தை உடையவன்.
कथम् ?
எவ்வாறு ?
नायं साधारणोऽपि लोकोऽस्ति । तथा न परः लोकः । न सुखम् , तत्रापि संशयोत्पत्तेः संशयात्मनः संशयचित्तस्य । तस्मात् संशयो न कर्तव्यः ॥ ४० ॥
சாதாரணமாக இவ்வுலகில் எல்லோருக்கும் உள்ள சுகம் சம்சய ஆத்மாவிற்குக் கிடையாது. அவ்வாறேபரலோக சுகமும் கிடைக்காது. ஏனெனில் அங்கும் அவனுக்கு சம்சயம் (சந்தேஹம்) ஏற்படும். ஆகையால் எப்பொழுதும் சம்சயப்படக்கூடாது.
कस्मात् ? —
எவ்வாறு-
योगसंन्यस्तकर्माणं ज्ञानसञ्छिन्नसंशयम् ।
आत्मवन्तं न कर्माणि निबध्नन्ति धनञ्जय ॥ ४१ ॥
யோகஸம்ந்யஸ்தகர்மாணம் க்ஞானஸம்சிந்நஸம்சயம் ।
ஆத்மபந்தம் ந கர்மாணி நிபத்நந்தி தனஞ்ஜய ॥ 41 ॥
योगसंन्यस्तकर्माणं परमार्थदर्शनलक्षणेन योगेन संन्यस्तानि कर्माणि येन परमार्थदर्शिना धर्माधर्माख्यानि तं योगसंन्यस्तकर्माणम् ।
பரமார்த்த தர்ஷீ பரமார்த்த யோகத்தினால் புண்ய, பாபங் களுடன் கூடிய எல்லா கர்மங்களையும் தியாகம் செய்கிறான். அந்த கர்மங்களின் தியாகமே யோக சந்யஸ்த்த கர்மம்
कथं योगसंन्यस्तकर्मेत्याह —
அந்த யோக சந்யஸ்த்த கர்மா எவ்வாறு ஏற்படுகிறது என்று கூறுகிறார்.
ज्ञानसञ्छिन्नसंशयं ज्ञानेन आत्मेश्वरैकत्वदर्शनलक्षणेन सञ्छिन्नः संशयो यस्य सः ज्ञानसञ्छिन्नसंशयः ।
ஆத்மாவும், ஈஸ்வரனும் ஒன்றே என்ற ஞானத்தினால்(சம்சயம்) சந்தேஹம் நீங்கப் பெற்றவன்.
य एवं योगसंन्यस्तकर्मा तम् आत्मवन्तम् अप्रमत्तं गुणचेष्टारूपेण दृष्टानि कर्माणि न निबध्नन्ति अनिष्टादिरूपं फलं नारभन्ते हे धनञ्जय ॥ ४१ ॥
ஹே தனஞ்ஜய! எவன் இவ்வாறு யோகத்தினால் கர்மாக்களைத் துறந்து ஆத்மபலத்தால் பிரமாதமற்றவனோ அவைகளை முக்குணங் களின் சேஷ்டையினால் (செயல்களினால்) காணப்பட்ட கர்மங்கள் அவனைக் கட்டுப்படுத்தாது. இஷ்ட்ட, அநிஷ்ட்ட, மிச்ரம் ஆகிய மூன்று வித பலன்களையும் அனுபவிக்கமாட்டான்.
यस्मात् कर्मयोगानुष्ठानात् अशुद्धिक्षयहेतुकज्ञानसञ्छिन्नसंशयः न निबध्यते कर्मभिः ज्ञानाग्निदग्धकर्मत्वादेव, यस्माच्च ज्ञानकर्मानुष्ठानविषये संशयवान् विनश्यति —
எதனால் எனில், கர்மயோகத்தை அனுஷ்ட்டானம் செய்த தினால் அந்தக்கரண அசுத்தி நாசமடைந்ததால் உண்டான ஆத்ம ஞானத்தினால் எவனுடைய சம்சயம் நாசமடைந்ததோ அந்த புருஷனை ஞானத்தினால் எரிக்கப்பட்ட கர்மங்கள் பந்தப்படுத்து வது இல்லை. ஆனால் ஞானயோகம், கர்மயோகம் அனுஷ்ட்டானம் செய்வதில் சம்சயம் உள்ளவன் நாசம் அடைகின்றான்.
तस्मादज्ञानसम्भूतं हृत्स्थं ज्ञानासिनात्मनः ।
छित्त्वैनं संशयं योगमातिष्ठोत्तिष्ठ भारत ॥ ४२ ॥
தஸ்மாதக்ஞானஸம்பூதம் ஹ்ருத்ஸ்தம் க்ஞானாஸிநாத்மன: ।
சித்த்வைநம் சம்சயம் யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத ॥ 42 ॥
तस्मात् पापिष्ठम् अज्ञानसम्भूतम् अज्ञानात् अविवेकात् जातं हृत्स्थं हृदि बुद्धौ स्थितं ज्ञानासिना शोकमोहादिदोषहरं सम्यग्दर्शनं ज्ञानं तदेव असिः खङ्गः तेन ज्ञानासिना आत्मनः स्वस्य ।
ஆகையால் அவிவேகத்தால் உண்டானதும், அந்தக் கரணத்தில் உள்ளதுமான இந்த பாபியாகிய சம்சயத்தை ஞானம் என்கிறகத்தியி னால் என்றால் சோக, மோஹம் முதலிய தோஷங்களை நாசம் செய்யும் யதார்த்த தர்சன ரூபமான ஞானமே கத்தியாகும். அதனால் (சம்சயத்தை) நாசம் செய்.
आत्मविषयत्वात् संशयस्य ।
இந்த சம்சயமானது ஆத்ம விஷயத்தைப் பற்றியது.
न हि परस्य संशयः परेण च्छेत्तव्यतां प्राप्तः, येन स्वस्येति विशेष्येत । अतः आत्मविषयोऽपि स्वस्यैव भवति ।
இங்கு மற்றொருவருடைய சம்சயத்தை வேறு ஒருவர் நாசம் செய்ய முடியாது. அதனால் (சம்சயம்) தன்னுடைய என்று விசேஷமாக கூறப்பட்டது. ஆத்ம விஷயமும் தன்னுடையதாகவே இருக்கிறது.
छित्त्वा एनं संशयं स्वविनाशहेतुभूतम् , योगं सम्यग्दर्शनोपायं कर्मानुष्ठानम् आतिष्ठ कुर्वित्यर्थः । उत्तिष्ठ च इदानीं युद्धाय भारत इति ॥ ४२ ॥
ஆகையால் தன்னுடைய நாசத்திற்குக் காரணமான சம்சயத்தை வெட்டி வீழ்த்தி பூர்ணஞானத்தை அடைவதற்கு உபாயமாகிய கர்மா னுஷ்ட்டானத்தை செய் என்பது பொருள். இப்பொழுது யுத்தத்தின் பொருட்டு ஹே! பாரத! எழு (என்று பகவான் கூறி அருளினார்).
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये चतुर्थोऽध्यायः ॥
ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே ஞானகர் மஸந்யாஸயோகோ நாம சதுர்த்தோத்யாய:
कर्मण्यकर्म यः पश्येत् (கர்மண்யகர்ம ய: பச்யேத்‌) என்று ஆரம்பித்து स युक्तः कृत्स्नकर्मकृत्, (ச: யுக்த: க்ருத்ஸ்னகா்மக்ருத்‌) ज्ञानाग्निदग्धकर्माणम् (ஞானாக்னிதக்தகர்மாணம்‌) शारीरं केवलं कर्म कुर्वन् (சாரீரம்‌ கேவலம்‌ கர்ம குர்வன்) यदृच्छालाभसंतुष्टः (யத்ருச்சாலாபஸந்துஷ்ட:) ब्रह्मार्पणं ब्रह्महविः (ப்ரஹ்மார்பணம்‌ ப்ரஹ்மஹவி:) कर्मजान्विद्धि तान्सर्वान्, (கர்ம ஜான்வித்தி தான்ஸர்வான்‌) सर्वं कर्माखिलं पार्थ, (ஸர்வம்‌ கர்மாகிலம்‌ பார்த்த) ज्ञानाग्निः सर्वकर्माणि (ஞானாக்னி: ஸர்வகர்மாணி), योगसन्यस्तकर्माणम्‌ (யோகஸந்யஸ்தகர்மாணம்‌) என்பது வரையில்‌ உள்ள வசனங்களால்‌ பகவான்‌ சர்வ கர்ம ஸந்நியாஸத்தைப்‌ பற்றி கூறி அருளினார்‌.
‘छित्त्वैनं संशयं योगमातिष्ठ’ (भ. गी. ४ । ४२) इत्यनेन वचनेन योगं च कर्मानुष्ठानलक्षणम् अनुतिष्ठ इत्युक्तवान् ।
छित्त्वैनं संशयं योगमातिष्ठ (சித்த்வைனம்‌ ஸம்சயம்‌ யோகமாதிஷ்ட்ட) என்ற இந்த வசனத்தால் கர்மயோகத்தைச் செய் என்று கூறினார்.
तयोरुभयोश्च कर्मानुष्ठानकर्मसंन्यासयोः स्थितिगतिवत् परस्परविरोधात् एकेन सह कर्तुमशक्यत्वात् , कालभेदेन च अनुष्ठानविधानाभावात् , अर्थात् एतयोः अन्यतरकर्तव्यताप्राप्तौ सत्यां यत् प्रशस्यतरम् एतयोः कर्मानुष्ठानकर्मसंन्यासयोः तत् कर्तव्यं न इतरत् इत्येवं मन्यमानः प्रशस्यतरबुभुत्सया अर्जुन उवाच — ‘संन्यासं कर्मणां कृष्ण’ (भ. गी. ५ । १) इत्यादिना ॥
கர்மயோகம், கர்மஸந்நியாஸம் ஆகிய இவ்விரண்டும் நிற்றல், நடத்தல் போல் பரஸ்பரம் விரோதமாய் இருப்பதால் இரண்டும் சேர்ந்து ஒருவனால் அனுஷ்ட்டிக்கமுடியாததாலும் வெவ்வேறு காலத்தில் அனுஷ்ட்டித்தல் விதிக்கப்படாததாலும், ஸ்வபாவமாகவே இவ்விரண்டினுள் ஏதாவது ஒன்றை (அனுஷ்ட்டிக்க) செய்யவேண் டும் என்று ஏற்படுகிறது. ஆகையால் தான் கர்மயோகம் அல்லது கர்ம சந்நியாசயோகம் இவ்விரண்டில் எது மேலானதோ அதை அனுஷ்ட் டிக்கவேண்டும். மற்றது அல்ல என்று கருதிய அர்ஜுனன் இரண்டில் எது மேலானது என்று கேட்க விரும்பியவனாய்‌ संन्यासं कर्मणां कृष्ण, (சந்நியாசம் கர்மணாம் க்ருஷ்ண) முதலிய வசனங்களால் கேட்டார்.
ननु च आत्मविदः ज्ञानयोगेन निष्ठां प्रतिपिपादयिषन् पूर्वोदाहृतैः वचनैः भगवान् सर्वकर्मसंन्यासम् अवोचत् , न तु अनात्मज्ञस्य । अतश्च कर्मानुष्ठानकर्मसंन्यासयोः भिन्नपुरुषविषयत्वात् अन्यतरस्य प्रशस्यतरत्वबुभुत्सया अयं प्रश्नः अनुपपन्नः ।
ஆனால் முன்பு கூறிய வசனங்களினால் பகவான் ஞானயோகத் தினால் ஆத்ம ஞானியினுடைய நிஷ்ட்டையை பிரதிபாதனம் செய்ய (கூற) இச்சித்தவராய் கேவல ஆத்மஞானிக்காகவே எல்லாக் கர்மங்களின் ஸந்நியாஸத்தைக் கூறினார். ஆத்மத்தத்துவத்தை அறியாதவனுக்கு அல்ல. ஆகையால் கர்மானுஷ்ட் டானம், கர்ம ஸந் நியாஸம் இவ்விரண்டும் வெவ்வேறு அதிகாரி களின் சம்பந்தப்பட்ட விஷயமாய் இருப்பதால், எவ்வாறெனில் கர்மத்தை அனுஷ்ட்டித்த லும், துறத்தலும் காரணமாய் இருப்பதால் இரண்டு சாதனங்களில் ஒன்றின் மேன்மையை அறிந்து கொள்ளும் வேட்கையினால் இந்த கேள்வி என்பது பொருந்தாது.
सत्यमेव त्वदभिप्रायेण प्रश्नो न उपपद्यते ; प्रष्टुः स्वाभिप्रायेण पुनः प्रश्नः युज्यत एवेति वदामः ।
சரியே, உன் அபிப்பிராயப்படி என்றால் இந்த கேள்வியே பொருந் தாது. ஆனால் கேட்பவனுடைய சொந்த அபிப்பிராயத்தின்படி இந்த கேள்வி பொருந்தவே செய்கிறது என்று கூறுவோம்.
कथम् ?
எவ்வாறு
पूर्वोदाहृतैः वचनैः भगवता कर्मसंन्यासस्य कर्तव्यतया विवक्षितत्वात् , प्राधान्यमन्तरेण च कर्तारं तस्य कर्तव्यत्वासम्भवात् अनात्मविदपि कर्ता पक्षे प्राप्तः अनूद्यत एव ; न पुनः आत्मवित्कर्तृकत्वमेव संन्यासस्य विवक्षितम् इति ।
பகவான் முன்பு கூறப்பட்ட வசனங்களால் கர்ம ஸந்நியாஸத்தை அவசியம் செய்யவேண்டும் என்று கூறியிருக்கிறார். இதிலிருந்து அதன் முக்கியத்துவம் தெரிகிறது. ஆனால் கர்த்தா இல்லாமல் கர்மஸந்நியாஸம் செய்தல் என்றகர்த்தவ்யதா ஏற்படாது. (ஆகையால் அக்ஞானியானாலும் தீவிர வைராக்கியம் இருந்தால் அதிகாரியாவான்) ஆனால் கேவல ஆத்மக்ஞானி சந்நியாசத்திற்கு கர்த்தா ஆகிறான் என்பது பொருந்தாது. (ஆத்மவித்திற்கு சந்நியாசத்தில் கர்த்திருத்துவம் கூறவில்லை)
एवं मन्वानस्य अर्जुनस्य कर्मानुष्ठानकर्मसंन्यासयोः अविद्वत्पुरुषकर्तृकत्वमपि अस्तीति पूर्वोक्तेन प्रकारेण तयोः परस्परविरोधात् अन्यतरस्य कर्तव्यत्वे प्राप्ते प्रशस्यतरं च कर्तव्यम् न इतरत् इति प्रशस्यतरविविदिषया प्रश्नः न अनुपपन्नः ॥
இவ்வாறு கருதிய அர்ஜுனனால் கர்மானுஷ்ட்டான, கர்ம ஸந்நியாஸம் இவ்விரண்டிற்கும் அக்ஞான புருஷனே அதிகாரி என்று முன்பு கூறிய பிரகாரம் அவை இரண்டிற்கும் பரஸ்பரவிரோதமாய் இருப்பதால் இதில் ஏதாவது ஒன்றைசெய்யவேண் டும் என்று ஏற்படும்பொழுது அவற்றில் மேலானதைச் செய்யவேண் டும், மற்றதை அல்ல என்று மேலானதை தெரிந்து கொள்வதற்காக கேட்ட வினா பொருத்தமற்றது என்பது இல்லை. (கேட்ட வினா பொருந்தும்)
प्रतिवचनवाक्यार्थनिरूपणेनापि प्रष्टुः अभिप्रायः एवमेवेति गम्यते ।
பகவானுடைய மறுமொழி வாக்கியத்தின் பொருளை ஆராய்ந்து நிருபணம் செய்வதனாலும் கேட்பவனுடைய அபிப்பிராயம் இதுதான் என்று தெரிகிறது.
कथम् -
எவ்வாறு?
சந்நியாச யோகம், கர்மயோகம் இவ்விரண்டும் மேலானதே. ஆனால் இவ்விரண்டினுள் கர்மயோகம் மேலானது என்பது பகவானுடைய பதில்.
एतत् निरूप्यम् — किं अनेन आत्मवित्कर्तृकयोः संन्यासकर्मयोगयोः निःश्रेयसकरत्वं प्रयोजनम् उक्त्वा तयोरेव कुतश्चित् विशेषात् कर्मसंन्यासात् कर्मयोगस्य विशिष्टत्वम् उच्यते ? आहोस्वित् अनात्मवित्कर्तृकयोः संन्यासकर्मयोगयोः तदुभयम् उच्यते इति ।
இதில் விசாரிக்கப்பட்டது என்ன? இந்த ஆத்மவித்தை கர்த்தா வாக உடைய சந்நியாசமும், கர்மயோகமும் நன்மையைத் தரக்கூடிய பலனைக் கூறி அவை இரண்டினுள் எந்த விசேஷத்தை கருதி சந்நி யாசியைக் காட்டிலும் கர்மயோகியின் மேன்மை கூறப்பட்டுள் ளதாகிறது? அல்லது அக்ஞானியை கர்த்தாவாக உடைய சந்நியாசம், கர்மயோகம் இவ்விரண்டும் ஏதோ ஒரு விசேஷத்தால் மேலானது என்று கூறப்படுகிறதா?
किञ्चातः — यदि आत्मवित्कर्तृकयोः कर्मसंन्यासकर्मयोगयोः निःश्रेयसकरत्वम् , तयोस्तु कर्मसंन्यासात् कर्मयोगस्य विशिष्टत्वम् उच्यते ; यदि वा अनात्मवित्कर्तृकयोः संन्यासकर्मयोगयोः तदुभयम् उच्यते इति ।
ஆத்மவேத்தா செய்யும் கர்மசந்நியாசமும், கர்மயோகமும் மேலான நன்மையைச் செய்பவை. ஆனால் அவைகளுள் கர்மசந்நி யாசத்தைக் காட்டிலும் கர்மயோகம் மேலானது என்று கூறப்பட்டதா?அல்லது அக்ஞானியினால் செய்யப்பட்ட சந்நியாசம் கர்மயோகம் இவ்விரண்டிற்குமே விசேஷத்துவம் கூறப்பட்டதா?
अत्र उच्यते — आत्मवित्कर्तृकयोः संन्यासकर्मयोगयोः असम्भवात् तयोः निःश्रेयसकरत्ववचनं तदीयाच्च कर्मसंन्यासात् कर्मयोगस्य विशिष्टत्वाभिधानम् इत्येतत् उभयम् अनुपपन्नम् ।
ஆத்மவித்தை கர்த்தாவாக உடைய ஸந்நியாஸமும், கர்மயோக மும் ஏற்படாது. ஆகையால் இவ்விரண்டும் நன்மை அளிக்கும் என்பதும், அவ்வாறேகர்ம ஸந்நியாஸத்தைக் காட்டிலும் கர்மயோகம் மேலானது என்பதுமாகிய இவ்விரண்டும் பொருந்தாது.
यदि अनात्मविदः कर्मसंन्यासः तत्प्रतिकूलश्च कर्मानुष्ठानलक्षणः कर्मयोगः सम्भवेताम् , तदा तयोः निःश्रेयसकरत्वोक्तिः कर्मयोगस्य च कर्मसंन्यासात् विशिष्टत्वाभिधानम् इत्येतत् उभयम् उपपद्येत ।
அநாத்மாவித்திற்கு கர்மஸந்நியாஸமும் அதற்கு பிரதிகூலமான கர்மானுஷ்ட்டானத்துடன் கூடிய கர்மயோகமும் ஏற்படலாம். அப்பொழுது அவை இரண்டிற்கும் நன்மை செய்தல் என்பதும், கர்மஸந்நியாஸியைக் காட்டிலும் கர்மயோகத்திற்கு மேன்மையை கூறுதலும் பொருந்தும்.
आत्मविदस्तु संन्यासकर्मयोगयोः असम्भवात् तयोः निःश्रेयसकरत्वाभिधानं कर्मसंन्यासाच्च कर्मयोगः विशिष्यते इति च अनुपपन्नम् ॥
ஆனால் ஆத்ம வித்திற்கு கர்மஸந்நியாஸமும், கர்மயோகமும் ஏற்படுவது இல்லை. ஆகையால் அவைகளுக்கு நன்மை செய்தலும் அவ்வாறே கர்மஸந்நியாஸத்தைக் காட்டிலும் கர்மயோகம் மேலானது என்கின்ற இரண்டும் பொருந்தாது.
अत्र आह — किम् आत्मविदः संन्यासकर्मयोगयोः उभयोरपि असम्भवः ? आहोस्वित् अन्यतरस्य असम्भवः ? यदा च अन्यतरस्य असम्भवः, तदा किं कर्मसंन्यासस्य, उत कर्मयोगस्य इति असम्भवे कारणं च वक्तव्यम् इति ।
ஆத்மஞானிக்கு கர்மஸந்நியாஸமும், கர்மயோகமும் ஏற்ப டாதா? அல்லது இரண்டில் ஏதாவது ஒன்று ஏற்படாதா? இரண்டில் ஏதாவது ஒன்று ஏற்படாது எனில் கர்மஸந்நியாஸமா? அல்லது கர்மயோகமா? எதன் பொருட்டு இரண்டும் அல்லது என்றும் நிகழாதெனில் அதன் காரணம் என்ன என்று சொல்லவேண்டும்.
अत्र उच्यते — आत्मविदः निवृत्तमिथ्याज्ञानत्वात् विपर्ययज्ञानमूलस्य कर्मयोगस्य असम्भवः स्यात् ।
இங்கு கூறப்படுகிறது. ஆத்மஞானிக்கு மித்தியா ஞானம் நீங்கியதால் விபரியய ஞானத்தை மூலமாக உடைய கர்மயோகம் சம்பவிக்காது. (ஏற்படாது)
जन्मादिसर्वविक्रियारहितत्वेन निष्क्रियम् आत्मानम् आत्मत्वेन यो वेत्ति तस्य आत्मविदः सम्यग्दर्शनेन अपास्तमिथ्याज्ञानस्य निष्क्रियात्मस्वरूपावस्थानलक्षणं सर्वकर्मसंन्यासम् उक्त्वा तद्विपरीतस्य मिथ्याज्ञानमूलकर्तृत्वाभिमानपुरःसरस्य सक्रियात्मस्वरूपावस्थानरूपस्य कर्मयोगस्य इह गीताशास्त्रे तत्र तत्र आत्मस्वरूपनिरूपणप्रदेशेषु सम्यग्ज्ञानमिथ्याज्ञानतत्कार्यविरधात् अभावः प्रतिपाद्यते यस्मात् , तस्मात् आत्मविदः निवृत्तमिथ्याज्ञानस्य विपर्ययज्ञानमूलः कर्मयोगो न सम्भवतीति युक्तम् उक्तं स्यात् ॥
ஜன்மாதி சர்வ விகாரங்களும் அற்றநிஷ்க்ரியமாகிய ஆத்மாவை தன்னுடைய ஸ்வரூபமாகவே எவன் அறிகிறானோ அந்த ஆத்மவித்திற்கு ஸம்யக்தர்சனத்தினாலே மித்யாஞானம் விலகி கிரியை அற்றஆத்மஸ்வரூப அவஸ்தாரூப லக்ஷணமாகிய சர்வகர்ம ஸந்நியாஸத்தைப் பற்றியும், அதற்கு விபரீதமான ஸ்வபாவ முடைய மித்யா ஞானத்தை மூலமாக உடைய கர்த்திருத்துவ அபிமானத்துடன் கூடிய கிரியையுடன் கூடிய ஆத்ம ஸ்வரூப அவஸ்தான ரூபமான கர்மயோகத்தையும் இந்த சாஸ்த்திரத்தில் அங்கு, அங்கு ஆத்மஸ்வரூபத்தை நிரூபிக்கும் சந்தர்ப்பத்தில் ஸம்யக் ஞானமானது மித்யா ஞானத்திற்கும் அதன் காரியத்திற்கும் விரோதி யாய் இருப்பதால் கர்மயோகத்திற்கு அபாவம் கூறப்பட்டுள்ளது. அத னால் ஆத்மவித்துக்களுக்கு மித்தியா ஞானம் நீங்கியதால் விபரியய ஞானத்தை மூலமாக உடைய கர்மயோகமானது சம்பவிப்பதில்லை என்று கூறிய யுக்தி பொருத்தமுடையதே.
केषु केषु पुनः आत्मस्वरूपनिरूपणप्रदेशेषु आत्मविदः कर्माभावः प्रतिपाद्यते इति ।
மேலும் ஆத்மஸ்வரூபத்தை நிரூபிக்கின்றஎந்த எந்த இடத்தில் ஆத்மவித்திற்கு கர்ம அபாவம் கூறப்படுகிறது.
अत्र उच्यते — ‘अविनाशि तु तत्’ (भ. गी. २ । १७) इति प्रकृत्य ‘य एनं वेत्ति हन्तारम्’ (भ. गी. २ । १९) ‘वेदाविनाशिनं नित्यम्’ (भ. गी. २ । २१) इत्यादौ तत्र तत्र आत्मविदः कर्माभावः उच्यते ॥
அவிநாசி து தத்வித்தி என்று ஆரம்பித்து ய ஏனம் வேத்தி ஹந் தாரம், வேதாவினாசினம் நித்யம் முதலியவை அங்கு அங்கு ஆத்ம வித்திற்கு ஆத்ம அபாவமானது கூறப்பட்டுள்ளது.
ननु च कर्मयोगोऽपि आत्मस्वरूपनिरूपणप्रदेशेषु तत्र तत्र प्रतिपाद्यते एव ; तद्यथा — ‘तस्माद्युध्यस्व भारत’ (भ. गी. २ । १८) ‘स्वधर्ममपि चावेक्ष्य’ (भ. गी. २ । ३१) ‘कर्मण्येवाधिकारस्ते’ (भ. गी. २ । ४७) इत्यादौ । अतश्च कथम् आत्मविदः कर्मयोगस्य असम्भवः स्यादिति ?
இவ்வாறேகர்மயோகமும், ஆத்மஸ்வரூபத்தை நிர்ணயம் செய்யும் இடங்களிலும் அங்கங்கு तस्माद्युध्यस्व भारत (தஸ்மாத்யுத் யஸ்வ பாரத) स्वधर्ममपि चावेक्ष्य (ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய) कर्मण्येवाधिकारस्ते (கர்மண்யேவாதிகாரஸ்தே) முதலிய வசனங்களால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஆகையால் எவ்வாறு ஆத்மவித்திற்கு கர்மயோகமானது இல்லாமல் இருக்கும்.
अत्र उच्यते — सम्यग्ज्ञानमिथ्याज्ञानतत्कार्यविरोधात् ।
ஏனெனில் ஸம்யக்ஞானமானது மித்யாஞானத்திற்கும் அதன் கார்யத்திற்கும் விரோதியாய் உள்ளது.
‘ज्ञानयोगेन साङ्ख्यानाम्’ (भ. गी. ३ । ३) इत्यनेन साङ्ख्यानाम् आत्मतत्त्वविदाम् अनात्मवित्कर्तृककर्मयोगनिष्ठातः निष्क्रियात्मस्वरूपावस्थानलक्षणायाः ज्ञानयोगनिष्ठायाः पृथक्करणात् ।
ஆத்மதத்துவத்துத்தை அறிந்த சாங்கிய யோகிகள் கிரியை அற்ற ஆத்மஸ்வரூபத்திலேயே நிலைத்தலாகிய ஞானயோக நிஷ்ட்டையை ज्ञानयोगेन साङ्ख्यानाम्, (ஞானயோகேன ஸாங்கியானாம்) என்றவசனத்தினால் அக்ஞானிகளாகிய கர்மயோக நிஷ்ட்டர்களை வேறுபடுத்தி காட்டியுள்ளதால்.
कृतकृत्यत्वेन आत्मविदः प्रयोजनान्तराभावात् ।
ஆத்மாவை அறிந்தவர்கள் கிருதகிருத்தியர்களானதினால் அவர்களுக்கு வேறு பிரயோஜனம் அற்றுப் போகிறது.
‘तस्य कार्यं न विद्यते’ (भ. गी. ३ । १७) इति कर्तव्यान्तराभाववचनाच्च ।
तस्य कार्यं न विद्यते (தஸ்ய காரியம்‌ ந வித்யதே) என்ற வசனத் தினால் செய்யவேண்டிய கார்யம் வேறு ஒன்றும் இல்லை.
(ந கர்மணாமரம்பாத். ஸந்யாஸஸ்து மஹாபாஹோ துக்கமாப்தும யோகத:,) முதலியவைகளால் ஆத்மஞானத்திற்கு கர்மயோகமானது அங்கத்துவமாக கூறப்பட்டுள்ளதால்
‘योगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते’ (भ. गी. ६ । ३) इत्यनेन च उत्पन्नसम्यग्दर्शनस्य कर्मयोगाभाववचनात् ।
योगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते (யோகாரூடச்ய தஸ்யைவ சம: காரணமுச்யதே), இந்த வசனத்தால் ஸம்யக் தர்சனம் உடையவனுக்கு கர்ம அபாவம் தெரிய வருகிறது.
‘शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम्’ (भ. गी. ४ । २१) इति च शरीरस्थितिकारणातिरिक्तस्य कर्मणो निवारणात् ।
शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् (சாரீரம்‌ கேவலம்‌ கர்ம குர்வன்னாப்நோதி கில்பிஷம்) என்றவசனம் சரீர ஸ்திதியின் பொருட்டு செய்யவேண்டிய கர்மத்தைத் தவிர மற்றவை நிராகரிக்கப்பட்டுள்ளது.
‘नैव किञ्चित्करोमीति युक्तो मन्येत तत्त्ववित्’ (भ. गी. ५ । ८) इत्यनेन च शरीरस्थितिमात्रप्रयुक्तेष्वपि दर्शनश्रवणादिकर्मसु आत्मयाथात्म्यविदः ‘करोमि’ इति प्रत्ययस्य समाहितचेतस्तया सदा अकर्तव्यत्वोपदेशात् ।
नैव किञ्चित्करोमीति युक्तो मन्येत तत्त्ववित् (நைவ கிஞ்சித்கரேரமிஇதி யுக்தோ மன்யேத தத்வவித்) என்றதினால், இதனால் சரீரஸ்திதிக்கு வேண்டிய கர்மமாகிய பார்த்தல், கேட்டல் முதலிய கர்மங்களிலும் ஆத்மாவை யதார்த்தமாக அறிந்தவர்கள் செய்கிறேன் என்ற எண்ணத்தை ஏகாக்ர சித்தத்துடன் எப்பொழுதும் இல்லாமல் செய்ய வேண்டும். ஏனெனில் ஞானிக்கு அகர்த்ருத்துவம் இருப்பதால்.
आत्मतत्त्वविदः सम्यग्दर्शनविरुद्धो मिथ्याज्ञानहेतुकः कर्मयोगः स्वप्नेऽपि न सम्भावयितुं शक्यते यस्मात् ।
ஏனெனில் ஆத்மதத்துவத்தை அறிந்தவர்களும் ஸம்யக்ஞானத் திற்கு விருத்தமான மித்யா ஞானத்தை காரணமாக உடைய கர்மயோ கத்தை கனவிலும் நினைக்கமுடியாது.
तस्मात् अनात्मवित्कर्तृकयोरेव संन्यासकर्मयोगयोः निःश्रेयसकरत्ववचनम् , तदीयाच्च कर्मसंन्यासात् पूर्वोक्तात्मवित्कर्तृकसर्वकर्मसंन्यासविलक्षणात् सत्येव कर्तृत्वविज्ञाने कर्मैकदेशविषयात् यमनियमादिसहितत्वेन च दुरनुष्ठेयात् सुकरत्वेन च कर्मयोगस्य विशिष्टत्वाभिधानम् इति ।
ஆகையால் அக்ஞானிக்கே ஸந்நியாஸமும், கர்மயோகமும் மேலான நன்மையைத் தரக்கூடியது என்று கூறப்பட்டது. மேலும் அந்த அக்ஞானிக்கே ஸந்நியாஸத்தைக் காட்டிலும் கர்மயோகம் மேலானது என்று கூறப்பட்டது. இதன் பொருள் என்னவெனில் முன்பு கூறப்பட்ட ஆத்மக்ஞானியினுடைய ஸந்நியாஸத்தைக் காட்டிலும் வேறானதாக இருக்கும்பொழுது கர்த்தா தன்மை ஞானத்தினால் சில கர்மங்களைப் பற்றியதும் (சிரவண, மனன, நிதித்யாஸனம்) யமநியமாதிகளோடு கூடி அனுஷ்ட்டிக்கப்படவேண்டியதால் மிகக் கடினமான அவனுடைய கர்மஸந்நியாஸத்தைக் காட்டிலும் கர்மயோ கமானது சுலபமானது என்று அதற்கு மேன்மையைக் கூறினார்.
एवं प्रतिवचनवाक्यार्थनिरूपणेनापि पूर्वोक्तः प्रष्टुरभिप्रायः निश्चीयते इति स्थितम् ॥
இவ்வாறு பகவானுடைய மறுமொழியின் வாக்யார்த்த நிருபணம் செய்யப்பட்டாலும் முன்பு கூறப்பட்ட கேட்ப்பவனின் (அர்ஜுனனின்) அபிப்பிராயம் நிச்சயம் செய்யப்பட்டது, என்றாகிறது.
‘ज्यायसी चेत्कर्मणस्ते’ (भ. गी. ३ । १) इत्यत्र ज्ञानकर्मणोः सह असम्भवे ‘यच्छ्रेय एतयोः तद्ब्रूहि’ (भ. गी. ३ । २) इत्येवं पृष्टोऽर्जुनेन भगवान् साङ्‍ख्यानां संन्यासिनां ज्ञानयोगेन निष्ठा पुनः कर्मयोगेन योगिनां निष्ठा प्रोक्तेति निर्णयं चकार ।
ज्यायसी चेत्कर्मणस्ते (ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே) என்றஸ்லோகத்தில் ஞானகர்மம் இரண்டும் ஒரே சமயத்தில் ஏற்பட முடியாததால் அவை இரண்டில் எது மேலானது அதை எனக்குக் கூறுங்கள் என்று கேட்ட அர்ஜுனனுக்கு பகவான் ஸாங்கியயோகிகளுக்கு என்றால் ஸந்நியாஸிகளுக்கு ஞானயோக நிஷ்ட்டையும் யோகிகளுக்கு கர்மயோக நிஷ்ட்டையும் சிறந்தது என்று நிர்ணயித்து கூறுகிறார்.
‘न च संन्यसनादेव केवलात् सिद्धिं समधिगच्छति’ (भ. गी. ३ । ४) इति वचनात् ज्ञानसहितस्य सिद्धिसाधनत्वम् इष्टम्’ कर्मयोगस्य च, विधानात् । ज्ञानरहितस्य संन्यासः श्रेयान् , किं वा कर्मयोगः श्रेयान् ? ’ इति एतयोः विशेषबुभुत्सया —
ஸந்நியாஸத்தினால் மாத்திரம் ஸித்தியை அடையமுடியாது என்றவசனத்தினால் ஞானத்துடன் கூடிய ஸந்நியாஸமே ஸித்தி ஏற்படுவதற்கு சாதனமாகும், மற்றும் கர்மயோகமும் விதிக்கப் பட்டுள்ளது. ஆகையால் ஞானமற்றஸந்நியாஸம் மேலானதா அல்லது கர்மயோகம் மேலானதா என்று இவ்விரண்டின் விசேஷத்தை அறிய விருப்பமுள்ளவனாக அர்ஜுனன் கூறலானார்.
अर्जुन उवाच —
அர்ஜுனன் கூறியது.
संन्यासं कर्मणां कृष्ण पुनर्योगं च शंससि ।
यच्छ्रेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम् ॥ १ ॥
ஸந்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புனர்யோகம்ச சம்ஸஸி ।
யச்ச்ரேய ஏதயோரேகம் தந்மே ப்ரூஹி ஸுநிச்சிதம் ॥ 1 ॥
संन्यासं परित्यागं कर्मणां शास्त्रीयाणाम् अनुष्ठेयविशेषाणां शंससि प्रशंससि कथयसि इत्येतत् । पुनः योगं च तेषामेव अनुष्ठानम् अवश्यकर्तव्यं शंससि ।
தாங்கள் முதலில் சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட அநேக பிரகாரமாக அனுஷ்ட்டிக்கவேண்டிய கர்மங்களை தியாகம் செய்வதை மேல் என்று புகழ்கிறீர்கள். மேலும் அவைகளை அவசியம் அனுஷ்ட்டிக்கவேண்டும் என்பதையும் கூறி புகழ்கிறீர்கள்.
अतो मे कतरत् श्रेयः इति संशयः — किं कर्मानुष्ठानं श्रेयः, किं वा तद्धानम् इति ।
ஆகையால் எனக்கு இவைகளில் எது மேலானது என்று ஸம்சயம் உண்டாகிறது. கர்மத்தை அனுஷ்ட்டானம் செய்வது மேலா? அல்லது அதை தியாகம் செய்வது மேலா?
प्रशस्यतरं च अनुष्ठेयम् । अतश्च यत् श्रेयः प्रशस्यतरम् एतयोः कर्मसंन्यासकर्मयोगयोः यदनुष्ठानात् श्रेयोवाप्तिः मम स्यादिति मन्यसे, तत् एकम् अन्यतरम् सह एकपुरुषानुष्ठेयत्वासम्भवात् मे ब्रूहि सुनिश्चितम् अभिप्रेतं तवेति ॥ १ ॥
மேலானதை அனுஷ்ட்டிக்கவேண்டும், ஆகையால் எது மேலானது கர்மஸந்நியாஸம், கர்மானுஷ்ட்டானம் (கர்மயோகம்) இவைகளில் எதை அனுஷ்ட்டானம் செய்வதால் மேலான நன்மை எனக்கு உண்டாகும் என்று நினைக்கிறீர்களோ அந்த நிச்சயமானதை எனக்குக் கூறுவீர்களாக. ஏனெனில் ஒரே புருஷனால் ஒரே சமயத்தில் இரண்டும் சேர்த்து அனுஷ்ட்டிப்பது என்பது முடியாத காரியம்.
स्वाभिप्रायम् आचक्षाणो निर्णयाय —
அர்ஜுனனுடைய கேள்விக்கான பதிலை நன்றாக நிர்ணயம் செய்யும் பொருட்டு பகவான் தன்னுடைய அபிப்பிராயத்தை கூறலானார்-
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச
संन्यासः कर्मयोगश्च निःश्रेयसकरावुभौ ।
तयोस्तु कर्मसंन्यासात्कर्मयोगो विशिष्यते ॥ २ ॥
ஸந்ந்யாஸ: கர்மயோகஸ்ச நிஸ்ரேயஸகராவுபௌ ।
தயோஸ்து கர்மஸந்யாஸாத் கர்மயோகோ விசிஷ்யதே ॥ 2 ॥
संन्यासः कर्मणां परित्यागः कर्मयोगश्च तेषामनुष्ठानं तौ उभौ अपि निःश्रेयसकरौ मोक्षं कुर्वाते ।
ஸந்நியாஸம் என்றால் கர்மங்களை பரித்தியாகம் செய்தல். கர்மயோகம் என்றால் அவைகளை அனுஷ்ட்டானம் செய்தல். இவை இரண்டும் மோக்ஷத்தை தரக்கூடியதே.
ज्ञानोत्पत्तिहेतुत्वेन उभौ यद्यपि निःश्रेयसकरौ, तथापि तयोस्तु निःश्रेयसहेत्वोः कर्मसंन्यासात् केवलात् कर्मयोगो विशिष्यते इति कर्मयोगं स्तौति ॥ २ ॥
ஞானம் ஏற்படுவதற்கு இரண்டுமே காரணமாயிருந்தாலும் அவைகளில் கேவல (விவேகமற்ற) கர்மஸந்நியாஸத்தைக் காட்டிலுமம் கர்மயோகமே மேலானது என்று கர்மயோகத்தைப் புகழ்கிறார்.
कस्मात् इति आह —
எதனால் இதைப் பற்றிக் கூறுகிறார்-
ज्ञेयः स नित्यसंन्यासी यो न द्वेष्टि न काङ्क्षति ।
निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धात्प्रमुच्यते ॥ ३ ॥
ஜ்ஞேய: ஸ நித்யஸந்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி ।
நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத் ப்ரமுச்யதே ॥ 3 ॥
ज्ञेयः ज्ञातव्यः स कर्मयोगी नित्यसंन्यासी इति यो न द्वेष्टि किञ्चित् न काङ्क्षति दुःखसुखे तत्साधने च । एवंविधो यः, कर्मणि वर्तमानोऽपि स नित्यसंन्यासी इति ज्ञातव्यः इत्यर्थः ।
கர்மயோகீ நித்ய ஸந்நியாஸீ என்று அறியவேண்டும். சுகதுக்கத்திலும், அதன் சாதனத்திலும் எவன் த்வேஷமோ, ஆசையோ கொள்வதில்லையோ அப்படிப்பட்டவன் கர்மத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவன் நித்திய ஸந்நியாஸீ என்றே அறியவேண்டும் என்பது கருத்து.
निर्द्वन्द्वः द्वन्द्ववर्जितः हि यस्मात् महाबाहो सुखं बन्धात् अनायासेन प्रमुच्यते ॥ ३ ॥
ஏன் எனில் ஹே! மஹாபாஹோ! ராகத்வேஷாதி துவந்து வங்களி லிருந்து விடுபட்டவன் சுலபமாக பந்தத்திலிருந்து விடுபடுகிறான்.
संन्यासकर्मयोगयोः भिन्नपुरुषानुष्ठेययोः विरुद्धयोः फलेऽपि विरोधो युक्तः, न तु उभयोः निःश्रेयसकरत्वमेव इति प्राप्ते इदम् उच्यते —
வெவ்வேறு அதிகாரிகளால் அனுஷ்ட்டானம் செய்வதற்கு யோக்கியமான ஒன்றிற்கொன்று விருத்தமான கர்மஸந்நியாஸம், கர்ம யோகம் அவற்றின் பலத்திலும் விருத்தம் ஏற்படும். அவ்வாறு இருக்கை யில் அவை இரண்டிற்கும் மேலான நன்மைத் தரக்கூடிய (நிச்ச்ரேயஸ்) ஒரே பலம் என்று கூறுதல் பொருந்தாது எனில், இந்த சங்கை ஏற்படும்பொழுது இவ்வாறு கூறுகிறார்.
साङ्‍ख्ययोगौ पृथग्बालाः प्रवदन्ति न पण्डिताः ।
एकमप्यास्थितः सम्यगुभयोर्विन्दते फलम् ॥ ४ ॥
ஸாங்க்யயோகௌ ப்ருதக் பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா: ।
ஏகமப்யாஸ்தித: ஸம்யகுபயோர் விந்ததே பலம் ॥ 4 ॥
साङ्‍ख्ययोगौ पृथक् विरुद्धभिन्नफलौ बालाः प्रवदन्ति न पण्डिताः ।
சிற்றறிவு உடையவர்கள் ஸாங்கியம் (ஸந்நியாஸ) யோகம், கர்ம யோகம் இவ்விரண்டிற்கும் வெவ்வேறு பலன் கொடுப்பவை என்று கூறுவார்கள். ஆனால் பண்டிதர்கள் அவ்வாறு கூறமாட்டார்கள்.
पण्डितास्तु ज्ञानिन एकं फलम् अविरुद्धम् इच्छन्ति ।
பண்டிதர்களாகிய ஞானிகள் அவ்விரண்டிற்கும் மாறுபாடு அற்ற ஒரே பலத்தைக் கொள்கிறார்கள்.
कथम् एकमपि साङ्ख्ययोगयोः सम्यक् आस्थितः सम्यगनुष्ठितवान् इत्यर्थः, उभयोः विन्दते फलम् ।
எவ்வாறு எனில் ஸாங்கியயோகம், கர்மயோகம் இவ் விரண்டில் ஏதாவது ஒன்றைநன்றாக அனுஷ்ட்டிப்பவனாகில் இரண்டினுடைய பயனையும் அடைகிறான்.
उभयोः तदेव हि निःश्रेयसं फलम् ; अतः न फले विरोधः अस्ति ॥
ஸந்நியாஸ யோகம், கர்மயோகம் இரண்டிற்கும் நிச்ரேயஸ் (ஸாங்கிய) பலம் அதாவது மோக்ஷ பலம். ஆகையால் பலத்தில் விரோதம் கிடையாது.
ननु संन्यासकर्मयोगशब्देन प्रस्तुत्य साङ्‍ख्ययोगयोः फलैकत्वं कथम् इह अप्रकृतं ब्रवीति ।
ஸந்நியாஸ யோகம், கர்மயோகம் என்று இரண்டு வித சப்தங்க ளால் இந்தப் பிரகரணங்களில் எடுத்துக்கூறி பின் ஸாங்கியத்திற்கும், கர்மயோகத்திற்கும் இந்த இடத்தில் பொருத்தமில் லாமல் ஒரே பலத்தை எவ்வாறு கூறுகிறீர்கள்.
नैष दोषः — यद्यपि अर्जुनेन संन्यासं कर्मयोगं च केवलम् अभिप्रेत्य प्रश्नः कृतः, भगवांस्तु तदपरित्यागेनैव स्वाभिप्रेतं च विशेषं संयोज्य शब्दान्तरवाच्यतया प्रतिवचनं ददौ ‘साङ्‍ख्ययोगौ’ इति ।
இது தோஷமல்ல. அர்ஜுனன் கேவலம் சந்நியாச யோகம், கேவலம் கர்ம யோகத்தைப் பற்றி கேள்வி கேட்டான் என்றாலும், சாங்கியம், யோகம் இரண்டும் வேறு சொற்களால் கூறப்படுவதால் பகவான் அவற்றைவிடாமலே தன்னுடைய அபிப்பிராயமாகிய விசேஷத்தை யும் சேர்த்து மறுமொழி தந்தருளினார் சாங்கியம், யோகம் என்று
तौ एव संन्यासकर्मयोगौ ज्ञानतदुपायसमबुद्धित्वादिसंयुक्तौ साङ्‍ख्ययोगशब्दवाच्यौ इति भगवतो मतम् । अतः न अप्रकृतप्रक्रियेति ॥ ४ ॥
ஏனெனில் சந்நியாச யோகம், கர்மயோகம் இவ்விரண்டிற்கும் ஞானமும் அதற்கு உபாய ரூப சமபுத்தி முதலிய பாவங்களுடன் கூடி உள்ளதை அறிந்து, சாங்கிய யோகம், கர்மயோகம் என்றபெயர்களால் கூறப்பட்டது. இது பகவானுடைய கருத்து. ஆகையால் இவ்வாறு வர்ணிக்கப்பட்டது, பிரகரணத்தின் விருத்தமாகாது.
एकस्यापि सम्यगनुष्ठानात् कथम् उभयोः फलं विन्दते इति उच्यते —
ஒன்றையேனும் நன்றாக அனுஷ்ட்டித்தலினால் எவ்வாறு இரண்டில் பலத்தை அடைவான்? இதைக் குறித்து கூறுகிறார்.
यत्साङ्‍ख्यैः प्राप्यते स्थानं तद्योगैरपि गम्यते ।
एकं साङ्‍ख्यं च योगं च यः पश्यति स पश्यति ॥ ५ ॥
யத்ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தானம் தத்-யோகைரபி கம்யதே ।
ஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச ய: பச்யதி ஸ பச்யதி ॥ 5 ॥
यत् साङ्ख्यैः ज्ञाननिष्ठैः संन्यासिभिः प्राप्यते स्थानं मोक्षाख्यम् , तत् योगैरपि ।
ஸாங்கியர்களாகிய ஞானநிஷ்ட்டையுடன் கூடிய ஸந்நியாஸி கள் மோக்ஷம் எனப்படும் எந்த ஸ்தானத்தை அடைகிறார்களோ அந்த ஸ்தானத்தை யோகிகளும் அடைகிறார்கள்.
ज्ञानप्राप्त्युपायत्वेन ईश्वरे समर्प्य कर्माणि आत्मनः फलम् अनभिसन्धाय अनुतिष्ठन्ति ये ते योगाः योगिनः तैरपि परमार्थज्ञानसंन्यासप्राप्तिद्वारेण गम्यते इत्यभिप्रायः ।
எந்த யோகிகள் தனக்காக கர்மபலத்தை விரும்பாமல் எல்லாக் கர்மங்களையும் ஈஸ்வரார்ப்பணமாக செய்து அவ்வாறேகர்மயோ கத்தை ஞானப்பிராப்திக்கு உபாயமாகக் கருதி கர்மங்களை நன்றாக அனுஷ்ட்டிக்கிறார்களோ அவர்களுக்கும் பரமார்த்த ஞான ஸந்நி யாஸப் பிராப்தி வாயிலாக அதே மோக்ஷத்தை அடைகிறார்கள் என்பது அபிப்பிராயம்.
अतः एकं साङ्‍ख्यं च योगं च यः पश्यति फलैकत्वात् स पश्यति सम्यक् पश्यतीत्यर्थः — ॥ ५ ॥
ஆகையால் ஸாங்கிய யோகம், கர்ம யோகம் இரண்டிற்கும் பயன் ஒன்றாகவே இருப்பதால் இரண்டும் ஒன்றேஎன்று பார்க்கிறானோ அவன் நன்றாக அறிந்தவனாகிறான் என்பது கருத்து.
एवं तर्हि योगात् संन्यास एव विशिष्यते ; कथं तर्हि इदमुक्तम् ‘तयोस्तु कर्मसंन्यासात् कर्मयोगो विशिष्यते’ (भ. गी. ५ । २) इति ।
இவ்வாறு கர்மயோகத்தைக் காட்டிலும் ஞானயோகமே மேலானதாய்‌ இருப்பதால்‌ எதனால்‌ இவ்வாறு குறிப்பிட்டார்‌. तयोस्तु कर्मसंन्यासात् कर्मयोगो विशिष्यते (தயோஸ்‌து கர்ம ஸந்நியாஸாத்‌ கர்ம யோகா விசிஷ்யதே) ஞான யோகத்தைக் காட்டிலும் கர்மயோகமே மேல் என்று.
शृणु तत्र कारणम् — त्वया पृष्टं केवलं कर्मसंन्यासं कर्मयोगं च अभिप्रेत्य तयोः अन्यतरः कः श्रेयान् इति । तदनुरूपं प्रतिवचनं मया उक्तं कर्मसंन्यासात् कर्मयोगः विशिष्यते इति ज्ञानम् अनपेक्ष्य ।
அதில் காரணத்தைக் கேள். கேவலம் கர்ம ஸந்நியாஸம் கேவலம் கர்மயோகத்தை அபிப்பிராயமாகக் கொண்டு அவை இரண்டினுள் எது மேலானது என்று உன்னால் கேட்கப்பட்டது. அதை வைத்து அதற்கு தகுந்தவாறு ஞானமற்றகர்ம ஸந்நியாஸத்தைக் காட்டிலும் கர்மயோகம் மேல் என்று அதற்குப் பதில் கூறப்பட்டது.
ज्ञानापेक्षस्तु संन्यासः साङ्‍ख्यमिति मया अभिप्रेतः । परमार्थयोगश्च स एव ।
ஏனெனில் ஞானத்துடன் கூடிய ஸந்நியாஸமே ஸாங்கியம் என் பது எனது அபிப்பிராயம். அதுதான் உண்மையான யோகம், அது பரமார்த்த யோகம் எனப்படும்.
यस्तु कर्मयोगः वैदिकः स च तादर्थ्यात् योगः संन्यास इति च उपचर्यते । कथं तादर्थ्यम् इति उच्यते
எந்த வைதிக (நிஷ்காம) கர்மயோகமோ அது ஞானயோகத்திற்கு ஸாதனமாய் இருப்பதால் உபசாரமாக யோகம் என்றும் ஸந்நியாஸம் என்றும் கூறப்படுகிறது எவ்வாறு அதற்கு ஸாதனமாகும் என்பதைக் கூறுகிறார்.
संन्यासस्तु महाबाहो दुःखमाप्तुमयोगतः ।
योगयुक्तो मुनिर्ब्रह्म नचिरेणाधिगच्छति ॥ ६ ॥
ஸந்ந்யாஸஸ்து மஹா பாஹோ துக்கமாப்துமயோகத: ।
யோகயுக்தோ முனிர் ப்ரஹ்ம நசிரேணாதி கச்சதி ॥ 6 ॥
संन्यासस्तु पारमार्थिकः हे महाबाहो दुःखम् आप्तुं प्राप्तुम् अयोगतः योगेन विना ।
கர்மயோகம் இல்லாமல் பாரமார்த்திக சந்நியாசத்தை அடைவது மிகக்கடினமானது.
योगयुक्तः वैदिकेन कर्मयोगेन ईश्वरसमर्पितरूपेण फलनिरपेक्षेण युक्तः, मुनिः मननात् ईश्वरस्वरूपस्य मुनिः, ब्रह्म — परमात्मज्ञाननिष्ठालक्षणत्वात् प्रकृतः संन्यासः ब्रह्म उच्यते, ‘न्यास इति ब्रह्मा ब्रह्मा हि परः’ (तै. ना. ७८) इति श्रुतेः — ब्रह्म परमार्थसंन्यासं परमार्थज्ञाननिष्ठालक्षणं नचिरेण क्षिप्रमेव अधिगच्छति प्राप्नोति । अतः मया उक्तम् ‘कर्मयोगो विशिष्यते’ (भ. गी. ५ । २) इति ॥ ६ ॥
பலத்தில் இச்சையற்று ஈஸ்வரார்ப்பணரூபமாக வைதிக கர்மயோ கத்தை உடைய மனனத்தினால் ஈஸ்வர ரூபமான முனி பிரஹ்மம் எனப் படுவர். ஏன் எனில் பரமாத்ம ஞான லக்ஷணத்தோடு கூடிய ஸந்நியா ஸம்‌ பிரஹ்மம்‌ என்று கூறப்படுகிறது. न्यास इति ब्रह्मा ब्रह्मा हि परः (நியாஸ இதி பிரஹ்ம, பிரஹ்ம்ம ஹி பர: என்று சுருதியில்‌ கூறப்பட்டுள்ளதால்‌, பிரஹ்மம் என்று வர்ணிக்கப்பட்ட பரமாத்ம் ஞானநிஷ்ட்டா லக்ஷணத்தோடு கூடிய பரமார்த்த ஸந்நியாஸத்தை அதி விரைவாக அடைகிறான், ஆகையால் कर्मयोगो विशिष्यते (கர்மயோகோ விசிஷ்யதே) என்று கர்மயோகம்‌ மேலானது என்று கூறப்பட்டது.
यदा पुनः अयं सम्यग्ज्ञानप्राप्त्युपायत्वेन —
மறுபடியும் எப்பொழுது இவன் ஸம்யக்தரிசனம் பெறுவதற்கு உபாயமாக-
योगयुक्तो विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः ।
सर्वभूतात्मभूतात्मा कुर्वन्नपि न लिप्यते ॥ ७ ॥
யோகயுக்தோ விசுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்திரிய: ।
ஸர்வபூதாத்ம பூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே ॥ 7 ॥
योगेन युक्तः योगयुक्तः, विशुद्धात्मा विशुद्धसत्त्वः, विजितात्मा विजितदेहः, जितेन्द्रियश्च, सर्वभूतात्मभूतात्मा सर्वेषां ब्रह्मादीनां स्तम्बपर्यन्तानां भूतानाम् आत्मभूतः आत्मा प्रत्यक्चेतनो यस्य सः सर्वभूतात्मभूतात्मा सम्यग्दर्शीत्यर्थः
கர்மயோகத்துடன் கூடியவன், சுத்த அந்தக்கரணமுடையவன், சரீரத்தை ஜெயித்தவன், இந்திரியங்களை ஜெயித்தவன், சர்வ பூதாத் மாவாயும் என்றால் பிரஹ்ம்மா முதல் ஸ்தம்பம் ஈறாக உள்ள எல்லாப் பிராணிகளுக்கும் பிரத்யக்சேதன ஆத்மாவாக எவனுக்குள்ளதோ அவன் ஸம்யக்தர்சீ எனப்படுவான். (யதார்த்த ஞானியாவான்)
स तत्रैवं वर्तमानः लोकसङ्ग्रहाय कर्म कुर्वन्नपि न लिप्यते न कर्मभिः बध्यते इत्यर्थः ॥ ७ ॥
இந்த ஸ்திதியில் (நிலையில்) இருக்கின்றஅந்த புருஷன் லோக ஸங்கிரஹார்த்தம் கர்மம் செய்தாலும் அவனை ஒட்டுவதில்லை. அவன் கர்மங்களால் கட்டுப்படுத்தப்படமாட்டான் என்பது பொருள்.
न च असौ परमार्थतः करोतीत्यतः —
அவன் உண்மையில் ஒன்றும் செய்யவில்லை. அதனால்-
नैव किञ्चित्करोमीति युक्तो मन्येत तत्त्ववित् ।
पश्यञ्शृण्वन्स्पृशञ्जिघ्रन्नश्नन्गच्छन्स्वपञ्श्वसन् ॥ ८ ॥
நைவகிஞ்சித் கரோமீதி யுக்தோமன்யேத தத்த்வவித் ।
பச்யன் ச்ருண்வன் ஸ்ப்ருசன் ஜிக்ரந்அச்னன் கச்சன் ஸ்வபன் சவஸன் ॥ 8 ॥
प्रलपन् विसृजन्गृह्णन्नुन्मिषन्निमिषन्नपि ।
इन्द्रियाणीन्द्रियार्थेषु वर्तन्त इति धारयन् ॥ ९ ॥
ப்ரலபன் விஸ்ருஜன் க்ருஹணன் உன்மிஷன் நிமிஷன்னபி ।
இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்த இதி தாரயன் ॥ 9 ॥
नैव किञ्चित् करोमीति युक्तः समाहितः सन् मन्येत चिन्तयेत् , तत्त्ववित् आत्मनो याथात्म्यं तत्त्वं वेत्तीति तत्त्ववित् परमार्थदर्शीत्यर्थः ॥
ஆத்மாவின் யதார்த்த தத்துவத்தை அறிந்த தத்வவித் மனதை ஒருநிலைப்படுத்திக்கொண்டு நான் ஒன்றும் செய்வதில்லை என்று நினைக்கிறான், தத்வவித் என்றால் பரம்பொருளைப் பார்ப்பவர் (பரமார்த்ததர்சீ) என்று பொருள்.
कदा कथं वा तत्त्वमवधारयन् मन्येत इति, उच्यते — पश्यन्निति । मन्येत इति पूर्वेण सम्बन्धः ।
தத்துவத்தை நன்றாக அறிந்தவன் என்று எப்பொழுது எவ்வாறு கொள்ளவேண்டும்? என்று கூறுவோம்.
यस्य एवं तत्त्वविदः सर्वकार्यकरणचेष्टासु कर्मसु अकर्मैव, पश्यतः सम्यग्दर्शिनः तस्य सर्वकर्मसंन्यासे एव अधिकारः, कर्मणः अभावदर्शनात् ।
இவ்வாறு தத்துவவித் எல்லா காரியகரண சேஷ்ட்டைகளான கர் மங்களில் அகர்மத்தைப் பார்க்கிறானோ அந்த ஸம்யக்தர்சியே ஸர்வ கர்ம ஸந்நியாஸத்திற்கு அதிகாரி. ஏனெனில் கர்மத்தில் அபாவதர்ச னம் காண்பதால்.
न हि मृगतृष्णिकायाम् उदकबुद्ध्या पानाय प्रवृत्तः उदकाभावज्ञानेऽपि तत्रैव पानप्रयोजनाय प्रवर्तते ॥ ९ ॥
ஏன் எனில், கானல் நீரைப் பார்த்து ஜலம் என்று நினைத்து அதைக் குடிப்பதற்கு முயல்பவன் அது அங்கு உண்மையில் ஜலம் இல்லை என்று அறிந்ததும் அங்கு தண்ணீர் அருந்துவதற்காக பிர விர்த்திப்பது இல்லை.
यस्तु पुनः अतत्त्ववित् प्रवृत्तश्च कर्मयोगे —
மேலும் அவன் தத்துவஞானியல்ல. அவன் கர்மயோகத்தை மேற் கொள்ளுகிறான்.
ब्रह्मण्याधाय कर्माणि सङ्गं त्यक्त्वा करोति यः ।
लिप्यते न स पापेन पद्मपत्रमिवाम्भसा ॥ १० ॥
ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய: ।
லிப்யதே ந ஸ பாபேன பத்மபத்ரமிவாம்பஸா ॥ 10 ॥
ब्रह्मणि ईश्वरे आधाय निक्षिप्य ‘तदर्थं कर्म करोमि’ इति भृत्य इव स्वाम्यर्थं सर्वाणि कर्माणि मोक्षेऽपि फले सङ्गं त्यक्त्वा करोति यः सर्वकर्माणि, लिप्यते न स पापेन न सम्बध्यते पद्मपत्रमिव अम्भसा उदकेन ॥ १० ॥
வேலைக்காரன் தன்னுடைய முதலாளிக்குச் செய்வது போல ஈஸ்வரனுக்காக கர்மங்கள் செய்கிறேன் என்று எல்லாக் கர்மங்களையும் ஈஸ்வரனிடம் அர்ப்பணித்து, மோக்ஷ பலமானாலும் அதில் பற்றற்று எவன் ஒருவன் எல்லாக் கர்மங்களையும் செய்கிறானோ அவனைப் பாபமானது தாமரை இலை தண்ணீரைப் போல பற்றாது.
केवलं सत्त्वशुद्धिमात्रमेव फलं तस्य कर्मणः स्यात्- यस्मात् —
அந்த கர்மத்திற்கு சித்த சுத்தி மாத்திரமே பலமாக இருக்கலாம் - ஏனெனில்
कायेन मनसा बुद्ध्या केवलैरिन्द्रियैरपि ।
योगिनः कर्म कुर्वन्ति सङ्गं त्यक्त्वात्मशुद्धये ॥ ११ ॥
காயேன மனஸா புத்த்யா கேவலை ரிந்த்ரியை ரபி ।
யோகின: கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்ம சுத்தயே ॥ 11 ॥
कायेन देहेन मनसा बुद्ध्या च केवलैः ममत्ववर्जितैः ‘ईश्वरायैव कर्म करोमि, न मम फलाय’ इति ममत्वबुद्धिशून्यैः इन्द्रियैरपि — केवलशब्दः कायादिभिरपि प्रत्येकं सम्बध्यते — सर्वव्यापारेषु ममतावर्जनाय । योगिनः कर्मिणः कर्म कुर्वन्ति सङ्गं त्यक्त्वा फलविषयम् आत्मशुद्धये सत्त्वशुद्धये इत्यर्थः ।
கேவலம் என்றால் எல்லாக் கர்மங்களும் ஈஸ்வரனுக்காகவே எனக்கு அல்ல என்பது. யோகிகள் கேவலம் என்று குறிப்பிடப்படும் எல்லாக் கர்மங்களும் ஈஸ்வரனின் பொருட்டே அன்று எனக்கு அல்ல என்ற பாவனையுடன் மமத்துவ புத்தி அற்றவர்களாய், அவ்வாறேசரீரம், மனது, புத்தி மற்றும் இந்திரியங்கள் மூலமாக ஏற்படும் பலத்தில் உள்ள பற்றுதல்களை விட்டு அந்தக் கரண சுத்திக்காக கர் மம் செய்கிறார்கள். எல்லாக் கிரியைகளிலும் மமதை நிஷேதிக்கப்படு வதால் கேவல, சப்தமானது சரீரம் முதலிய எல்லாவற்றுடனும் சம்மந்திக்கிறது.
तस्मात् तत्रैव तव अधिकारः इति कुरु कर्मैव ॥ ११ ॥
ஆதலால் உனக்கு கர்மத்திலேயே அதிகாரம் என்பதால் கர்மத்தையே செய்யவேண்டும்.
यस्माच्च —
- ஏனெனில்
युक्तः कर्मफलं त्यक्त्वा शान्तिमाप्नोति नैष्ठिकीम् ।
अयुक्तः कामकारेण फले सक्तो निबध्यते ॥ १२ ॥
யுக்த: கர்மபலம் த்யக்த்வா சாந்திமாப்னோதி நைஷ்டிகீம் ।
அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே ॥ 12 ॥
युक्तः ‘ईश्वराय कर्माणि करोमि न मम फलाय’ इत्येवं समाहितः सन् कर्मफलं त्यक्त्वा परित्यज्य शान्तिं मोक्षाख्याम् आप्नोति नैष्ठिकीं निष्ठायां भवां ।
எல்லாக்கர்மங்களும் ஈஸ்வரனுக்கே. என்னுடைய பலத்தின் பொருட்டு அன்று என்று மனதை நிலைநிறுத்திக்கொண்டு கர்மபலத்தை தியாகம் செய்து ஞானநிஷ்ட்டையால் மோக்ஷம் எனப்படும் சாந்தியை அடைகிறான்.
सत्त्वशुद्धिज्ञानप्राप्तिसर्वकर्मसंन्यासज्ञाननिष्ठाक्रमेणेति वाक्यशेषः ।
இங்கு முதலில் அந்தக்கரண சுத்தி, பின் ஞானப்ராப்தி அதன்பின் கர்ம சந்நியாச ரூப ஞானநிஷ்ட்டையின் பிராப்த்தி இந்த பிரகாரம் க்ரமமாக சாந்தியை அடைகிறான் என்பது வாக்கியத்தில் தொக்கி நிற்கிறது.
यस्तु पुनः अयुक्तः असमाहितः कामकारेण करणं कारः कामस्य कारः कामकारः तेन कामकारेण, कामप्रेरिततयेत्यर्थः, ‘मम फलाय इदं करोमि कर्म’ इत्येवं फले सक्तः निबध्यते । अतः त्वं युक्तो भव इत्यर्थः ॥ १२ ॥
மேலும் எவனது மனம் ஒருநிலைப்படவில்லையோ அவன் காமத்தினால் பிரேரிக்கப்பட்டு என்னுடைய பலத்தின் பொருட்டு இந்த கர்மத்தைச் செய்கிறேன் என்று இவ்வாறு பலத்தில் ஆசை உள் ளவனாகி பந்தப்படுகிறான். ஆகையால் நீ கர்மயோகத்தில் ஒரு நிலைப்பட்ட மனத்தினை உடையவனாகி இரு என்பது பொருள்.
यस्तु परमार्थदर्शी सः —
எவன் பரமார்த்த தர்சியோ (யதார்த்த ஞானியோ) அவன் -
सर्वकर्माणि मनसा संन्यस्यास्ते सुखं वशी ।
नवद्वारे पुरे देही नैव कुर्वन्न कारयन् ॥ १३ ॥
ஸர்வகர்மாணி மனஸா ஸன்யஸ்யாஸ்தே ஸுகம் வசீ ।
நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந் ந காரயன் ॥ 13 ॥
सर्वाणि कर्माणि सर्वकर्माणि संन्यस्य परित्यज्य नित्यं नैमित्तिकं काम्यं प्रतिषिद्धं च तानि सर्वाणि कर्माणि मनसा विवेकबुद्ध्या, कर्मादौ अकर्मसन्दर्शनेन सन्त्यज्येत्यर्थः, आस्ते तिष्ठति सुखम् ।
எல்லாக் கர்மங்களும் என்றால் நித்ய, நைமித்திக, காம்ய, பிரதிஷித்தம் முதலிய கர்மாக்கள். அந்த எல்லாக் கர்மங்களையும் விவேக புத்தியால் கர்மங்களில் அகர்மத்தைப் பார்ப்பதின் வாயிலாக திடமாக தியாகம் செய்து சுகமாக (ஆனந்தமாக) இருக்கிறான்.
त्यक्तवाङ्मनःकायचेष्टः निरायासः प्रसन्नचित्तः आत्मनः अन्यत्र निवृत्तसर्वबाह्यप्रयोजनः इति ‘सुखम् आस्ते’ इत्युच्यते ।
மனம், வாக்கு, காயங்களின் செயல்களைத் துறந்தவன் ஆயாசம் அற்றவன் தெளிந்த மனதுடையவன் மற்றவெளியில் தோன்றும் பிரயோஜனங்களில் இருந்து விடுபட்டு சுகமாக இருக்கிறான் என்று கூறப்பட்டது.
वशी जितेन्द्रिय इत्यर्थः । क्व कथम् आस्ते इति, आह —
வசி என்றால் இந்திரியங்களை ஜெயித்தவன் என்று பொருள். எங்கு எப்படி இருப்பானென்று கூறுகிறார்.
नवद्वारे पुरे । सप्त शीर्षण्यानि आत्मन उपलब्धिद्वाराणि, अवाक् द्वे मूत्रपुरीषविसर्गार्थे, तैः द्वारैः नवद्वारं पुरम् उच्यते शरीरम् , पुरमिव पुरम् , आत्मैकस्वामिकम् , तदर्थप्रयोजनैश्च इन्द्रियमनोबुद्धिविषयैः अनेकफलविज्ञानस्य उत्पादकैः पौरैरिव अधिष्ठितम् । तस्मिन् नवद्वारे पुरे देही सर्वं कर्म संन्यस्य आस्ते ।
ஒன்பது வாயில்கள் உள்ள நகரத்தில் வசிக்கிறான். இதன் அபிப் பிராயம் இரண்டு கண்கள், இரண்டு காதுகள், மூக்குத்துவாரங்கள் இரண்டு, ஒருவாய் ஆகிய இந்த ஏழுவாயில்னகளும் ஆத்மா சப்தாதி விஷயங்களை உணர்வதற்கான வாயில்களாய் இருப்பதால் சிரஸில் இருக்கிறது. மல, மூத்திராதிகளை விடுவதற்கான வழிகள் சரீரத்தின் கீழ்பாகத்தில் உள்ளன. இவ்வாறு ஒன்பது துவாரங்களை உடையதாக இருப்பதால் சரீரம் புரம் என்று கூறப்படுகிறது. சரீரமும் ஒரு புரம் போல் காணப்படுகிறது. அதனுடைய எஜமானன் ஆத்மா. இந்த ஆத்மாவிற் குத்தான் எல்லா பலன்களும் அவ்வாறேஅநேக பலன்களையும், விக்ஞானத்தையும் உற்பத்தி செய்கிறதாய் இருக்கிறது. இந்த இந்திரிய, மன, புத்தி மேலும் விஷய ரூப புரவாசிகளுடன் கூடி இருக்கிறது. அந்த ஒன்பது வாயில்களுடைய புரமாகிய தேஹத்தில் தேஹியானவன் எல்லாக் கர்மங்களையும் தியாகம் செய்து தங்கி இருக்கிறான்.
किं विशेषणेन ? सर्वो हि देही संन्यासी असंन्यासी वा देहे एव आस्ते ; तत्र अनर्थकं विशेषणमिति ।
இந்த விசேஷணத்தால் ஆவதென்ன? எல்லா தேஹியும் ஸந்நி யாஸியானாலும், ஸந்நியாஸி அற்றவனானாலும் தேஹத்தில் தான் தங்கி இருக்கிறார்கள். இந்த இடத்தில் விசேஷணம் பிரயோஜனம் அற்றதாகும். (வியர்த்தமாகும்)
उच्यते — यस्तु अज्ञः देही देहेन्द्रियसङ्घातमात्रात्मदर्शी स सर्वोऽपि ‘गेहे भूमौ आसने वा आसे’ इति मन्यते । न हि देहमात्रात्मदर्शिनः गेहे इव देहे आसे इति प्रत्ययः सम्भवति ।
இவ்வாறு கூறப்படுகிறது. ஜீவன், தேஹம் இந்திரியம் இவைக ளையுடைய சேர்க்கையை மாத்திரமே ஆத்மாவாக அறியும் அக்ஞானி அவை எல்லாம் சேர்ந்து வீட்டில், பூமியில் அல்லது இருக் கையில் தங்கி இருக்கிறேன் என்று நினைக்கின்றான், ஏனெனில் தேஹ மாத்திரத்தில் ஆத்மபுத்தியுடைய அக்ஞானி களுக்கு வீட்டில் இருப்பதுபோல் சரீரத்தில் இருக்கின்றேன் என்ற ஞானம் ஏற்படாது.
देहादिसङ्घातव्यतिरिक्तात्मदर्शिनस्तु ‘देहे आसे’ इति प्रत्ययः उपपद्यते ।
ஆனால் தேஹாதி சங்காதத்தைக் காட்டிலும் ஆத்மா வேறு என்று அறிந்தவனுக்கு நான் சரீரத்தில் இருக்கிறேன் என்ற ஞானம் ஏற்படும்.
परकर्मणां च परस्मिन् आत्मनि अविद्यया अध्यारोपितानां विद्यया विवेकज्ञानेन मनसा संन्यास उपपद्यते ।
அவ்வாறே அசங்க ஆத்மாவிடத்தில் அவித்தையினால் ஆரோபிக்கப்பட்ட மற்றொன்றின் (தேஹேந்திரியங்களின்) கர்மாக் களுக்கு விவேக ஞானத்தினால் மனதளவில் சந்நியாசம் கூடும்.
उत्पन्नविवेकज्ञानस्य सर्वकर्मसंन्यासिनोऽपि गेहे इव देहे एव नवद्वारे पुरे आसनम् प्रारब्धफलकर्मसंस्कारशेषानुवृत्त्या देह एव विशेषविज्ञानोत्पत्तेः ।
விவேக ஞானம் பெற்றசர்வகர்ம சந்நியாசி ஆயினும் வீட்டில் போல் இந்த நவத்துவாரத்துடன் கூடிய புரமாகிய சரீரத்தில் இருக்கி றேன் என்ற எண்ணம் பிராரப்த கர்ம சம்ஸ்காரத்தின் மிச்சத்தின் தொடர்ச்சியால் ஏற்படுகிறது. ஏனெனில் தேஹத்தில் அல்லவா விசேஷ விக்ஞானம் ஏற்படுகிறது.
देहे एव आस्ते इति अस्त्येव विशेषणफलम् , विद्वदविद्वत्प्रत्ययभेदापेक्षत्वात् ॥
ஆகையால் ஞானி, அக்ஞானி இவர்களுடைய எண்ணங்களின் பேதத்தை அபேக்ஷித்து தேஹத்திலேயே தங்கி இருக்கிறான் என்ற விசேஷணத்திற்கு அவசியம் பலன் இருக்கிறது.
यद्यपि कार्यकरणकर्माणि अविद्यया आत्मनि अध्यारोपितानि ‘संन्यस्यास्ते’ इत्युक्तम् , तथापि आत्मसमवायि तु कर्तृत्वं कारयितृत्वं च स्यात् इति आशङ्क्य आह —
காரிய அவித்யையினால் ஆத்மாவினிடத்தில் ஏற்றப்பட்ட காரிய, கரணங்களின் கர்மங்களை (செயல்களை) தியாகம் செய்தவனாய் இருந்தாலும், ஆத்மாவுடன் நித்ய சம்பந்தமுடைய நான் செயல்படு பவன், செயல்படுத்துபவன் என்றதன்மை இருக்கலாமே என்று சங்கித் துக் கூறுகிறார்.
नैव कुर्वन् स्वयम् , न च कार्यकरणानि कारयन् क्रियासु प्रवर्तयन् ।
நான் கிரியைகளில் பிரவிர்த்தித்துக் கொண்டு செயல்படு பவனும் இல்லை. காரிய காரணங்களை (சரீர இந்திரியங்களை) செயல்படுத்துபவனும் இல்லை.
किं यत् तत् कर्तृत्वं कारयितृत्वं च देहिनः स्वात्मसमवायि सत् संन्यासात् न सम्भवति, यथा गच्छतो गतिः गमनव्यापारपरित्यागे न स्यात् तद्वत् ? किं वा स्वत एव आत्मनः न अस्ति इति ।
நடப்பவனுடைய நடத்தல் செயலானது நடத்தல் என்ற வியாபா ரத்தை (செயலை) விட்டதினால் இல்லாமல் போகிறது. அவ்வாறே தேஹியானவன் செய்பவன், செய்விப்பவன் என்ற சமவாயித்தன்மை (நித்யசம்பந்தத் தன்மை)யின் ஸந்நியாஸத்தினால் ஆத்மாவிடத்தில் ஒன்றியிருத்தல் ஏற்படவில்லையா அல்லது சுயமாகவே ஆத்மா விற்கு (அந்த சம்பந்தம்) இல்லையா? என்பது
अत्र उच्यते — न अस्ति आत्मनः स्वतः कर्तृत्वं कारयितृत्वं च । उक्तं हि ‘अविकार्योऽयमुच्यते’ (भ. गी. २ । २५) ‘शरीरस्थोऽपि न करोति न लिप्यते’ (भ. गी. १३ । ३१) इति । ‘ध्यायतीव लेलायतीव’ (बृ. उ. ४ । ३ । ७) इति श्रुतेः ॥ १३ ॥
இங்கு கூறப்படுகிறஆத்மாவிற்கு சுயமாகவே செய்பவன்‌, செய்‌ விப்பவன்‌ என்றதன்மை கிடையாது. சுருதியிலும்‌ ஸ்மிருதியிலும்‌ கூறப்பட்டுள்ளது. अविकार्योऽयमुच्यते (அவிகார்யோ அயமுச்யதே) शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते (சரீரஸ்தோபி கெள்ந்தேய ந கரோதி ந லிப்யதே) ध्यायतीव लेलायतीव (த்யாயதீவ லேலாயதீவ) என்று.
किञ्च—
மேலும்
न कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभुः ।
न कर्मफलसंयोगं स्वभावस्तु प्रवर्तते ॥ १४ ॥
ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு: ।
ந கர்ம பல ஸம்யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே ॥ 14 ॥
न कर्तृत्वं स्वतः कुरु इति नापि कर्माणि रथघटप्रासादादीनि ईप्सिततमानि लोकस्य सृजति उत्पादयति प्रभुः आत्मा । नापि रथादि कृतवतः तत्फलेन संयोगं न कर्मफलसंयोगम् ।
ஆத்மாவானது கர்த்தா தன்மையை அடை (செய்பவனுடைய தன்மையை அடை) என்று கூறவில்லை. அவ்வாறே கர்மம்செய் என்றும் விதிக்கவில்லை. ஒருவன் விரும்பும் வண்டிகள், பானைகள், வீடுகள் முதலியவற்றையும் உலகத்தோருக்காக உண்டு பண்ணுவ தில்லை. அவ்வாறேவண்டி முதலியவைகளை செய்பவனை அதன் பலன்களோடு இணைப்பதும் இல்லை.
यदि किञ्चिदपि स्वतः न करोति न कारयति च देही, कः तर्हि कुर्वन् कारयंश्च प्रवर्तते इति, उच्यते ।
தேஹியானவன் தானாக கொஞ்சமும் செய்யவில்லை, செய்விப் பதும் இல்லையெனில் எவர்தான் செய்துகொண்டும், செய்வித்துக் கொண்டும் பிரவிர்த்திக்கிறார் என்பதைக் கூறுகிறார்.
स्वभावस्तु स्वो भावः स्वभावः अविद्यालक्षणा प्रकृतिः माया प्रवर्तते ‘दैवी हि’ (भ. गी. ७ । १४) इत्यादिना वक्ष्यमाणा ॥ १४ ॥
சுவபாவ: என்றால் இயற்கை. தன்னுடைய பாவம் அதனுடைய ஸ்வரூபம் அவித்யா. அவித்யா லக்ஷணம் மாயா, ப்ரக்ருதி. இதுவே பிரவிருத்திக்கிறது. தைவீ ஹி, முதலிய ஸ்லோகங்களால் மேலே கூறப்போகிறார்.
परमार्थतस्तु —
உண்மையில்
नादत्ते कस्यचित्पापं न चैव सुकृतं विभुः ।
अज्ञानेनावृतं ज्ञानं तेन मुह्यन्ति जन्तवः ॥ १५ ॥
நாதத்தே கஸ்ய சித்பாபம் நசைவ ஸுக்ருதம் விபு: ।
அஜ்ஞானேநாவ்ருதம் ஜ்ஞானம் தேன முஹ்யந்தி ஜந்தவ: ॥ 15 ॥
न आदत्ते न च गृह्णाति भक्तस्यापि कस्यचित् पापम् । न चैव आदत्ते सुकृतं भक्तैः प्रयुक्तं विभुः ।
விபுவானவர் (சர்வவ்யாபி) எந்த ஒரு பக்தனுடைய பாபத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டார். அவ்வாறேபக்தர்களால் அர்ப்பணிக்கப் பட்ட புண்ணியத்தையும் ஏற்பதில்லை.
किमर्थं तर्हि भक्तैः पूजादिलक्षणं यागदानहोमादिकं च सुकृतं प्रयुज्यते इत्याह —
அவ்வாறாகில் எதன் பொருட்டு பூஜை முதலிய நற்கர்மங்களை யும் யாகம், தானம், ஹோமம் முதலிய புண்ய கர்மாக்களையும் ஏன் அர்ப்பணிக்கிறார்கள் (செய்கிறார்கள்) இதைக் குறித்துக் கூறுகிறார்.
अज्ञानेन आवृतं ज्ञानं विवेकविज्ञानम् , तेन मुह्यन्ति ‘करोमि कारयामि भोक्ष्ये भोजयामि’ इत्येवं मोहं गच्छन्ति अविवेकिनः संसारिणो जन्तवः ॥ १५ ॥
அக்ஞானத்தினால் மறைக்கப்பட்ட விவேக ஞானத்தினால் நான் செய்கிறேன், செய்விக்கிறேன் என்றும் அனுபவக்கிறேன், அனுபவிக்கச் செய்கிறேன் என்று இவ்வாறாக அவிவேகிகளான சம்சாரி ஜீவர்கள் மோஹமடைகிறார்கள்.
ज्ञानेन तु तदज्ञानं येषां नाशितमात्मनः ।
तेषामादित्यवज्ज्ञानं प्रकाशयति तत्परम् ॥ १६ ॥
ஜ்ஞானேந்து ததஜ்ஞானம் யேஷாம் நாசித மாத்மன: ।
தேஷாமாதித்யவ ஜ்ஞானம் ப்ரகாசயதி தத்பரம் ॥ 16 ॥
ज्ञानेन तु येन अज्ञानेन आवृताः मुह्यन्ति जन्तवः तत् अज्ञानं येषां जन्तूनां विवेकज्ञानेन आत्मविषयेण नाशितम् आत्मनः भवति, तेषां जन्तूनाम् आदित्यवत् यथा आदित्यः समस्तं रूपजातम् अवभासयति तद्वत् ज्ञानं ज्ञेयं वस्तु सर्वं प्रकाशयति तत् परं परमार्थतत्त्वम् ॥ १६ ॥
எந்த அக்ஞானத்தால் மறைக்கப்பட்டு பிராணிகள் மோஹம் டைந்துள்ளார்களோ, அந்த அக்ஞானமானது ஆத்மவிஷயமான விவேக விக்ஞானத்தினால் நசிக்கப்பட்ட பொழுது எவ்வாறு சூரியன் உலகில் உள்ள எல்லா பொருள்களையும் விளங்கச் செய்கிறதோ அவ்வாறு அந்த ஞானமானது ஞேய வஸ்துவாகிய (ஆத்ம ஸ்வரூபத்தை) பரமார்த்த தத்துவத்தை முழுவதையும் விளங்கச் செய்கிறது.
यत् परं ज्ञानं प्रकाशितम् —
மேலான ஞானத்தால் பிரகாசிக்கப்பட்டது எதுவோ
तद्बुद्धयस्तदात्मानस्तन्निष्ठास्तत्परायणाः ।
गच्छन्त्यपुनरावृत्तिं ज्ञाननिर्धूतकल्मषाः ॥ १७ ॥
தத்புத்தயஸ்ததாத்மானஸ்தந்நிஷ்டாஸ்தத்பராயணா: ।
கச்சந்த்ய புனராவ்ருத்திம் ஜ்ஞான நிர்தூத கல்மஷா: ॥ 17 ॥
तस्मिन् ब्रह्मणि गता बुद्धिः येषां ते तद्बुद्धयः, तदात्मानः तदेव परं ब्रह्म आत्मा येषां ते तदात्मानः, तन्निष्ठाः निष्ठा अभिनिवेशः तात्पर्यं सर्वाणि कर्माणि संन्यस्य तस्मिन् ब्रह्मण्येव अवस्थानं येषां ते तन्निष्ठाः ।
அதிலேயே புத்தியை செலுத்தியவர்கள் எவர்களோ அவர்கள் அந்த புத்தி உடையவர்கள். அவர்களே தத்புத்தய: அதுவே அந்த பரப்ரஹ்மமே ஆத்மா எவர்களுக்கோ அவர்கள் ததாத்மான: அந்த பரப்பிரஹ்மமே எவர்களுக்கு திடமான நிஷ்ட்டையோ அவர்கள் தந்நிஷ்டா: இதன் தாத்பர்யம் என்னவெனில் எல்லாக் கர்மங்க ளையும் தியாகம் செய்துவிட்டு பிரஹ்ம்மத்திலேயே நிலைத்திருத்தல் எவர்களோ அவர்கள் தந்நிஷ்ட்டா:
तत्परायणाश्च तदेव परम् अयनं परा गतिः येषां भवति ते तत्परायणाः केवलात्मरतय इत्यर्थः । येषां ज्ञानेन नाशितम् आत्मनः अज्ञानं ते गच्छन्ति एवंविधाः अपुनरावृत्तिम् अपुनर्देहसम्बन्धं ज्ञाननिर्धूतकल्मषाः यथोक्तेन ज्ञानेन निर्धूतः नाशितः कल्मषः पापादिसंसारकारणदोषः येषां ते ज्ञाननिर्धूतकल्मषाः यतयः इत्यर्थः ॥ १७ ॥
எவர்களுக்கு அதுவே மேலான கதியாம் (புகலிடமாய்) இருக்கி றதோ அவர்கள் தத்பராயணா: ஆத்மா ஒன்றிலேயே ரமிப்பவர்கள். எவர்களுக்கு அந்தக்கரணத்தில் உள்ள அக்ஞானம் ஞானத்தால் நாசம் செய்யப்பட்டதோ அதனால் அவர்களுடைய சம்சாரமும், அதனுடைய காரண ரூபமான பாபம் முதலிய தோஷங்களும் ஞானத்தினால் நஷ்ட்டமானதால் அவர்கள் ஞானநிர்தூத கல்மஷா:, அவர்கள் சந்நியாசிகள். அவர்கள் புனராவிர்த்தி அற்றவர்கள். புனராவ்ருத்தி என்றால் மறுஜென்மம் எடுத்தல். மறு ஜன்மம் எடுத்தற்குரிய காரணம் (அக்ஞானம்) அற்றதால் அபுனாராவ்ருத்தி உடையவர்கள். (திருப்புதல் இல்லாதவர்கள்)
येषां ज्ञानेन नाशितम् आत्मनः अज्ञानं ते पण्डिताः कथं तत्त्वं पश्यन्ति इत्युच्यते —
எவர்களுக்கு ஞானத்தினால் அந்தக்கரணத்தில் உள்ள அக்ஞானம் நாசம் ஆகிவிட்டதோ அவர்கள் பண்டிதர்கள். அவர்கள் எவ்வாறு தத்துவத்தைக் காண்கிறார்கள் என்று கூறுகிறார்-
विद्याविनयसम्पन्ने ब्राह्मणे गवि हस्तिनि ।
शुनि चैव श्वपाके च पण्डिताः समदर्शिनः ॥ १८ ॥
வித்யா வினய ஸம்பன்னே ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி ।
சுனி சைவ ச்வபாகேச பண்டிதா: ஸமதர்சின: ॥ 18 ॥
विद्याविनयसम्पन्ने विद्या च विनयश्च विद्याविनयौ, विनयः उपशमः, ताभ्यां विद्याविनयाभ्यां सम्पन्नः विद्याविनयसम्पन्नः विद्वान् विनीतश्च यो ब्राह्मणः तस्मिन् ब्राह्मणे गवि हस्तिनि शुनि चैव श्वपाके च पण्डिताः समदर्शिनः ।
வித்தையும், வினயமும் எவனுக்குள்ளதோ அவன் வித்யாவின யசம்பன்னன். வித்யா என்றால் ஆத்ம அறிவு. வினயம் என்றால் உபரமம் (சாந்தி). வித்யா, வினயம் இவைகளுடன் கூடிய வித்வானா கிய சாந்த புருஷனாகிய பிராஹ்மணன், வைதிக பிராஹ்மணன், பசு, யானை, நாய் மற்றும் சண்டாளன் முதலிய எல்லோரிடத்திலும் பண்டிதர்கள் சமபாவனை உடையவர்களாய் இருப்பார்கள்.
विद्याविनयसम्पन्ने उत्तमसंस्कारवति ब्राह्मणे सात्त्विके, मध्यमायां च राजस्यां गवि, संस्कारहीनायां अत्यन्तमेव केवलतामसे हस्त्यादौ च, सत्त्वादिगुणैः तज्जैश्च संस्कारैः तथा राजसैः तथा तामसैश्च संस्कारैः अत्यन्तमेव अस्पृष्टं समम् एकम् अविक्रियं तत् ब्रह्म द्रष्टुं शीलं येषां ते पण्डिताः समदर्शिनः ॥ १८ ॥
உத்தம ஸம்ஸ்காரத்துடன் கூடிய வித்யாவினய சம்பன்னன், சாத்வீக குணமுடைய உத்தமமான வைதிக பிராஹ்மணன், ரஜோ குணமுடைய வைதிக சம்ஸ்காரமற்றமத்யமமான ஆவினிடத்தும் (பசுவினிடத்தும்), அதமமாயுள்ள தாமஸ குணமுடைய யானை முதலியவற்றினிடத்தும் சத்துவாதி குணங்களும் அவற்றால் உண்டாகும் சம்ஸ்காரங்களும் அவ்வாறேராஜசம், தாமஸம் குணங்க ளினால் உண்டாகும் ஸம்ஸ்காரங்கள் இவைகளினால் சிறிதும் ஒட்டாமல் எல்லாவற்றையும் சமமாகவும் ஏகமாயும் நிர்விகார மாயுள்ள பிரஹ்மமாக காண்பது எவர்களுக்கு சுபாவமாக உள்ளதோ அவர்கள் பண்டிதர்களாகிய ஸமதர்சிகள்.
ननु अभोज्यान्नाः ते दोषवन्तः, ‘समासमाभ्यां विषमसमे पूजातः’ (गौ. ध. २ । ८ । २० ; १७ । १८) इति स्मृतेः ।
அப்படியானால் (சாத்வீக, ராஜஸ, தாமஸ ஸம்ஸ்காரமுடையவர் களிடத்து ஸமதர்சீயாக உள்ளவர்கள்) புஜிக்கக்கூடாத அன்னத்தைப் புஜிப்பதால் தோஷமுடையவர்கள் ஆவார்கள். இதற்கு ஸ்மிருதியில் பிரமாணம் உள்ளது. என்னவெனில் சமானமானவனுக்கு சமமில்லாமலும், சமம் இல்லாதவனுக்கு சமமாயும் மரியாதை செய்ததினால் தோஷம் ஏற்படும். (தோஷம் ஏற்பட்ட அன்னத்தைப் புஜிக்கக்கூடாது)
न ते दोषवन्तः । कथम् ? —
(சமதர்சிகளாகிய பண்டிதர்களுக்கு) அவர்களுக்கு தோஷ மில்லை. எவ்வாறு.
इहैव तैर्जितः सर्गो येषां साम्ये स्थितं मनः ।
निर्दोषं हि समं ब्रह्म तस्माद्ब्रह्मणि ते स्थिताः ॥ १९ ॥
இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மன: ।
நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மாணி தே ஸ்திதா: ॥ 19 ॥
इह एव जीवद्भिरेव तैः समदर्शिभिः पण्डितैः जितः वशीकृतः सर्गः जन्म, येषां साम्ये सर्वभूतेषु ब्रह्मणि समभावे स्थितं निश्चलीभूतं मनः अन्तःकरणम् ।
எவர்களுடைய மனமானது சலனமற்று எல்லா பூதங்களிடத்தும் பிரஹ்ம ரூபமாக சமபாவனையுடன் நிலைத்ததோ அந்த சமதர்சியாகிய பண்டிதன் ஜீவித்திருக்கும் பொழுதே ஜென்மாவை ஜெயிக்கிறான். (அப்படியென்றால் மறு ஜென்மம் கிடையாது என்பது பொருள்)
निर्दोषं यद्यपि दोषवत्सु श्वपाकादिषु मूढैः तद्दोषैः दोषवत् इव विभाव्यते, तथापि तद्दोषैः अस्पृष्टम् इति निर्दोषं दोषवर्जितं हि यस्मात् ।
(பிரஹ்மம்) தோஷமற்றதாய் இருந்தாலும், மூடர்கள் தோஷத்துடன் கூடியதாக நாய் முதலியவைகளில் தோஷம் இருப்பதுபோல் பாவிக்கி றார்கள். (நினைக்கிறார்கள்) அப்படி இருந்தாலும் தோஷம் அவர்களை அண்டுவது இல்லை. ஏனெனில் தோஷமற்றதாய் இருப்பதால்.
नापि स्वगुणभेदभिन्नम् , निर्गुणत्वात् चैतन्यस्य । वक्ष्यति च भगवान् इच्छादीनां क्षेत्रधर्मत्वम् , ‘अनादित्वान्निर्गुणत्वात्’ (भ. गी. १३ । ३१) इति च । नापि अन्त्या विशेषाः आत्मनो भेदकाः सन्ति, प्रतिशरीरं तेषां सत्त्वे प्रमाणानुपपत्तेः ।
சைதன்யத்திற்கு குணத்தினால் ஏற்படும் பேதத்தால் அது வெவ்வேறாக இல்லை. இச்சை முதலியவைகள் க்ஷேத்திரத்தின் (சரீரங்களின்) தர்மம் என்று பகவான் கூறப்போகிறார். (அநாதித்வாத், நிர்குணத்வாத்) என்று வைசேஷிகர் கூற்றுப்படி ஆத்மாவை வெவ்வே றாக பிரிக்கும் (அந்திய விசேஷம் = கடைசியான விசேஷம்) அந்தியவிசேஷமும் இல்லை. ஏனெனில் ஒவ்வொரு சரீரத்திலும் அந்த அந்நிய விஷேசங்கள் இருப்பதற்கான பிரமாணம் ஒன்றுமில்லை.
अतः समं ब्रह्म एकं च । तस्मात् ब्रह्मणि एव ते स्थिताः । तस्मात् न दोषगन्धमात्रमपि तान् स्पृशति, देहादिसङ्घातात्मदर्शनाभिमानाभावात् ।
சமமாயும், ஏகமாயும் பிரஹ்ம்மம் இருப்பதால் பிரஹ்மத்திலேயே அவர்கள் நிலைத்திருப்பதால் அவர்களை தோஷமானது கந்தமாத்திரமும் (வாசனைக்குக் கூட) பற்றாது. ஏனெனில் தேஹாதி சங்கா தத்தை ஆத்மாவாக அறிவதில் அவர்களுக்கு அபிமானம் கிடையாது.
देहादिसङ्घातात्मदर्शनाभिमानवद्विषयं तु तत् सूत्रम् ‘समासमाभ्यां विषमसमे पूजातः’ (गौ. ध. २ । ८ । २०) इति, पूजाविषयत्वेन विशेषणात् ।
(ஸமாஸமாப்யாம் விஷமஸமேபூஜாத:) என்ற சூத்திரத்தின்படி தேஹாதி சங்காதத்தில் ஆத்ம தர்சன அபிமானம் உடையவனைப் பற்றியது பூஜாதி விஷய விசேஷணங்கள். (பூஜை = மரியாதை)
दृश्यते हि ब्रह्मवित् षडङ्गवित् चतुर्वेदवित् इति पूजादानादौ गुणविशेषसम्बन्धः कारणम् ।
மரியாதை, தானம் முதலியவைகளில் பிரஹ்ம்ம வித், ஷடங்கவித், சதுர்வேத வித் என்று குணவிசேஷங்களுடைய சம்பந்தம் காரணமாகிறது என்று காணப்படுகிறது.
ब्रह्म तु सर्वगुणदोषसम्बन्धवर्जितमित्यतः ‘ब्रह्मणि ते स्थिताः’ इति युक्तम् ।
பிரஹ்மமானது எல்லா குணங்களின் தோஷ சம்பந்தமற்றது. ஆகையால் பிரஹ்ம்மத்தில் அவர்கள் நிலைபெற்றிருக்கிறார்கள் என்பது பொருத்தமுடையதே.
कर्मविषयं च ‘समासमाभ्याम्’ (गौ. ध. २ । ८ । २०) इत्यादि । इदं तु सर्वकर्मसंन्यासविषयं प्रस्तुतम् , ‘सर्वकर्माणि मनसा’ (भ. गी. ५ । १३) इत्यारभ्य अध्यायपरिसमाप्तेः ॥ १९ ॥
கர்மிகளுடைய விஷயம் (ஸமா ஸமாப்யாம்) என்பது முதலியவை. ஸர்வ கர்ம ஸந்நியாஸத்தை விஷயமாக உடையது. (ஸர்வகர்மாணி மனசா) என்று ஆரம்பித்து இந்த அத்தியாயம் முடியும் வரை கூறப்பட்டுள்ளது.
यस्मात् निर्दोषं समं ब्रह्म आत्मा, तस्मात् —
ஏனெனில் நிர்தோஷமாயும், சமமாயும் உள்ள பிரஹ்மமே ஆத்மா ஆகையால்-
न प्रहृष्येत्प्रियं प्राप्य नोद्विजेत्प्राप्य चाप्रियम् ।
स्थिरबुद्धिरसंमूढो ब्रह्मविद्ब्रह्मणि स्थितः ॥ २० ॥
ந ப்ரஹ்ருஷ்யேத் ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்ய சாப்ரியம் ।
ஸ்திரபுத்தி ரஸம்மூடோ ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித: ॥ 20 ॥
न प्रहृष्येत् प्रहर्षं न कुर्यात् प्रियम् इष्टं प्राप्य लब्ध्वा । न उद्विजेत् प्राप्य च अप्रियम् अनिष्टं लब्ध्वा ।
பிரியமான பொருள் கிடைத்தால் சந்தோஷமோ பிரியமில்லாத பொருள் கிடைத்தால் துக்கமோ படக்கூடாது.
देहमात्रात्मदर्शिनां हि प्रियाप्रियप्राप्ती हर्षविषादौ कुर्वाते, न केवलात्मदर्शिनः, तस्य प्रियाप्रियप्राप्त्यसम्भवात् ।
தேஹமே ஆத்மா என்று காண்பவர்களுக்கே பிரியமானது கிடைப்பதிலும் பிரியமில்லாதது கிடைப்பதிலும் சந்தோஷமும், வருத்தமும் ஏற்படுகிறது. ஆனால் கேவல ஆத்மாவையே தர்சிப்பவர் களுக்கு பிரியாபிரியம் என்பது ஏற்படாததினால் சந்தோஷம், வருத்தம் இரண்டும் ஏற்படாது.
किञ्च — ‘सर्वभूतेषु एकः समः निर्दोषः आत्मा’ इति स्थिरा निर्विचिकित्सा बुद्धिः यस्य सः स्थिरबुद्धिः असंमूढः संमोहवर्जितश्च स्यात् यथोक्तब्रह्मवित् ब्रह्मणि स्थितः, अकर्मकृत् सर्वकर्मसंन्यासी इत्यर्थः ॥ २० ॥
எல்லா பூதங்களிடத்தும் (பிராணிகளிடத்தும்) ஆத்மா ஏகமாய், சமமாய், தோஷமற்றதாய் இருக்கிறது என்று சந்தேஹமற்றபுத்தி எவர்களுக்கு உள்ளதோ அவர்கள் ஸ்திர புத்தி உடையவர்களாயும் மோஹமற்றிருப்பதால் மூடமற்றவராகவும் முன்பு இவ்வாறு கூறப்பட்ட பிரஹ்ம்ம வித் பிரஹ்ம்மத்திலேயே நிலைபெற்றிருக்கிறார். அவரே அகர்மக்ருத் (கர்மமற்றவர்) சர்வ கர்ம ஸந்நியாஸி ஆவார் என்பது பொருள்.
किञ्च, ब्रह्मणि स्थितः —
மேலும் பிரஹ்ம்மத்திலேயே நிலைத்தவன்-
बाह्यस्पर्शेष्वसक्तात्मा विन्दत्यात्मनि यत्सुखम् ।
स ब्रह्मयोगयुक्तात्मा सुखमक्षयमश्नुते ॥ २१ ॥
பாஹ்யஸ்பர்சேஷ்வஸக்தாத்மா விந்தத்யாத்மனி யத்ஸுகம் ।
ஸ ப்ரஹ்மயோக யுக்தாத்மா ஸுகமக்ஷய மச்னுதே ॥ 21 ॥
बाह्यस्पर्शेषु बाह्याश्च ते स्पर्शाश्च बाह्यस्पर्शाः स्पृश्यन्ते इति स्पर्शाः शब्दादयो विषयाः तेषु बाह्यस्पर्शेषु, असक्तः आत्मा अन्तःकरणं यस्य सः अयम् असक्तात्मा विषयेषु प्रीतिवर्जितः सन् विन्दति लभते आत्मनि यत् सुखं तत् विन्दति इत्येतत् ।
இந்திரியங்களின் வழியாக ஸ்பர்சம் (ஞானம்) ஏற்படுகிறதோ அது ஸ்பர்சம் எனப்படும் வியுத்பத்தியினால் சப்தாதி வெளி விஷயங்கள் ஸ்பர்சம் எனப்படும். அந்த வெளி விஷயங்களில் பற்றில்லாத அந்தக்கரணம் எவனுக்கு உள்ளதோ அவன் அசக்தாத்மா (பற்றற்ற ஆத்மா) அந்த அசக்தாத்மா விஷயங்களில் ஆசை அற்று ஆத்மாவாகிய தன்னிடத்தில் சுகத்தை அடைகிறான்.
स ब्रह्मयोगयुक्तात्मा ब्रह्मणि योगः समाधिः ब्रह्मयोगः तेन ब्रह्मयोगेन युक्तः समाहितः तस्मिन् व्यापृतः आत्मा अन्तःकरणं यस्य सः ब्रह्मयोगयुक्तात्मा, सुखम् अक्षयम् अश्नुते व्याप्नोति ।
பிரஹ்ம்மத்தில் எவனுக்கு சமாதியோ அவன் பிரஹ்மயோகீ. அந்த பிரஹ்மயோகத்துடன் கூடி அந்தக்கரணமானது அதிலேயே நன்றாக சமாதானம் அடைந்த அந்த பிரஹ்மயோக யுக்தாத்மா அழிவற்ற சுகத்தை அடைகிறான்.
तस्मात् बाह्यविषयप्रीतेः क्षणिकायाः इन्द्रियाणि निवर्तयेत् आत्मनि अक्षयसुखार्थी इत्यर्थः ॥ २१ ॥
ஆகையால் அக்ஷயசுகத்தில் ப்ரீதி உடையவர்கள் க்ஷணிக விஷயங்களிலிருந்து இந்திரியங்களைக் கட்டுப்படுத்தவேண்டும் என்பது பொருள்.
इतश्च निवर्तयेत् —
ஆகையால் (இந்திரிய விஷயங்களிலிருந்து) நிவிர்த்தி ஆகவேண்டும் (விடுபட வேண்டும்)
ये हि संस्पर्शजा भोगा दुःखयोनय एव ते ।
आद्यन्तवन्तः कौन्तेय न तेषु रमते बुधः ॥ २२ ॥
யே ஹி ஸம்ஸ்பர்சஜா போகா: துக்கயோனய ஏவ தே ।
ஆத்யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே புத: ॥ 22 ॥
ये हि यस्मात् संस्पर्शजाः विषयेन्द्रियसंस्पर्शेभ्यो जाताः भोगा भुक्तयः दुःखयोनय एव ते, अविद्याकृतत्वात् । दृश्यन्ते हि आध्यात्मिकादीनि दुःखानि तन्निमित्तान्येव ।
ஏனெனில் விஷய இந்திரிய சம்பந்தத்தினால் உண்டான போகங் கள் எல்லாம் அவித்தையினால் ஏற்ப்பட்டதால் அவை துக்கத்திற்கு காரணமாகிறது. ஆத்யாத்மிகம் முதலிய துக்கங்கள் அதன் நிமித்தமே என்று காணப்படுகிறது.
यथा इहलोके तथा परलोकेऽपि इति गम्यते एवशब्दात् ।
எவ்வாறு இவ்வுலகிலோ அவ்வாறே அவ்வுலகிலும் என்று ஏவ கார சப்தத்தினால் அறியமுடிகிறது.
न संसारे सुखस्य गन्धमात्रमपि अस्ति इति बुद्ध्वा विषयमृगतृष्णिकाया इन्द्रियाणि निवर्तयेत् ।
சம்சாரத்தில் வாசனைக்குக் கூட சுகம் இல்லை என்று அறிந்து கானல் நீருக்கு ஒப்பான விஷயங்களிலிருந்து இந்திரியங்களை அடக்கவேண்டும்.
न केवलं दुःखयोनय एव, आद्यन्तवन्तश्च, आदिः विषयेन्द्रियसंयोगो भोगानाम् अन्तश्च तद्वियोग एव ।
விஷய போகங்கள் துக்கத்திற்கு மட்டும் காரணமல்ல. விஷய இந்திரியங்கள் சம்பந்தமே போகங்களுக்கு ஆதியும், அவைகளின் பிரிவே முடிவுமாகும்.
अतः आद्यन्तवन्तः अनित्याः, मध्यक्षणभावित्वात् इत्यर्थः ।
ஆகையால் ஆதியும், முடிவும் உடையதாலும் நடுவில் க்ஷண மாத்திரமாய் இருப்பதாலும் (போகங்கள்) அநித்தியமே.
कौन्तेय, न तेषु भोगेषु रमते बुधः विवेकी अवगतपरमार्थतत्त्वः ; अत्यन्तमूढानामेव हि विषयेषु रतिः दृश्यते, यथा पशुप्रभृतीनाम् ॥ २२ ॥
ஹே! கௌந்தேய! பரமார்த்த தத்துவத்தை அறிந்த விவேகிகள் போகங்களில் ரமிக்கமாட்டார்கள். எவ்வாறு பசு முதலியவைகளோ அவ்வாறு அத்தியந்த மூடர்கள் விஷயங்களில் ரமிப்பது காணப்படுகிறது.
अयं च श्रेयोमार्गप्रतिपक्षी कष्टतमो दोषः सर्वानर्थप्राप्तिहेतुः दुर्निवारश्च इति तत्परिहारे यत्नाधिक्यं कर्तव्यम् इत्याह भगवान् —
இந்த ச்ரேயோ மார்க்கத்தின் தடையானது (காம, க்ரோத முதலியவை) மிக்க தோஷமுடையது. துக்கத்தைக் கொடுக்கக் கூடியது. எல்லா அனர்த்தங்களுக்கும் காரணமாகிறது. அதை நிவிர்த்தி செய்வதும் மிக்க கடினம். ஆகையால் அதை நீக்குவதற்கு அதிகப் பிரயத்னம் செய்யவேண்டும் என்று பகவான் கூறுகிறார்-
शक्नोतीहैव यः सोढुं प्राक्छरीरविमोक्षणात् ।
कामक्रोधोद्भवं वेगं स युक्तः स सुखी नरः ॥ २३ ॥
சக்னோதீஹைவ ய: ஸோடும் ப்ராக் சரீர விமோக்ஷணாத் ।‌
காமக்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த: ஸு ஸுகீ நர: ॥ 23 ॥
शक्नोति उत्सहते इहैव जीवन्नेव यः सोढुं प्रसहितुं प्राक् पूर्वं शरीरविमोक्षणात् आ मरणात् इत्यर्थः ।
எந்த மனிதன் இந்த ஜன்மத்திலேயே சரீரம் விடுவதற்கு முன் அதாவது மரணத்திற்கு முன்பு வரையிலும் அதாவது ஜீவித்துக் கொண்டு இருக்கும்பொழுதே (காமக்ரோதாதிகளை) சஹித்துக் கொள்கிறான்.
मरणसीमाकरणं जीवतोऽवश्यम्भावि हि कामक्रोधोद्भवो वेगः, अनन्तनिमित्तवान् हि सः इति यावत् मरणं तावत् न विस्रम्भणीय इत्यर्थः ।
மரணத்தை எல்லையாகக் கூறியது ஏனெனில் ஜீவித்துக் கொண்டிருப்பவனுக்கு அவசியம் ஏற்படக்கூடிய காமக்ரோதம் அதனால் ஏற்படும் வேகம். ஆகையால் மரணம் வரையிலும் அதில் நம்பிக்கை வைத்தல் கூடாது என்பது பொருள்.
कामः इन्द्रियगोचरप्राप्ते इष्टे विषये श्रूयमाणे स्मर्यमाणे वा अनुभूते सुखहेतौ या गर्धिः तृष्णा स कामः ।
இந்திரியங்களுக்கு கோச்சரமாகிய (விஷயமாகிய) இஷ்ட்ட விஷயத்தைக் கேட்பதோ, நினைப்பதோ அல்லது அனுபவித்தலோ சுகத்திற்கு காரணம் என்று அதில் ஆசை வைப்பதே காமம்.
क्रोधश्च आत्मनः प्रतिकूलेषु दुःखहेतुषु दृश्यमानेषु श्रूयमाणेषु स्मर्यमाणेषु वा यो द्वेषः सः क्रोधः ।
தனக்கு பிரதிகூலமாக துக்கத்திற்கு காரணமானவைகளை பார்த்தாலோ, கேட்டாலோ, நினைத்தாலோ அதனால் ஏற்படும்த்வேஷம் க்ரோதம் எனப்படும்.
तौ कामक्रोधौ उद्भवो यस्य वेगस्य सः कामक्रोधोद्भवः वेगः । रोमाञ्चनप्रहृष्टनेत्रवदनादिलिङ्गः अन्तःकरणप्रक्षोभरूपः कामोद्भवो वेगः ।
காமத்தினாலும், க்ரோதத்தினாலும் வேகம் உண்டாகிறது. மயிர்சிலிர்த்தல், மலர்ந்த கண்கள், மலர்ந்த முகம் முதலானதை அறிகுறி யாக வைத்து அந்தக்கரணத்தின் கலக்க ரூபமாகிய காமக்ரோதத்தி னால் உண்டான வேகம்.
गात्रप्रकम्पप्रस्वेदसन्दष्टोष्ठपुटरक्तनेत्रादिलिङ्गः क्रोधोद्भवो वेगः ।
உடம்பு படபடப்பு அடைதல், வேர்த்தல், உதட்டைக் கடித்தல், சிவந்த கண்கள் முதலிய லிங்கங்கள் குரோதத்தினால் உண்டான வேகம்.
तं कामक्रोधोद्भवं वेगं यः उत्सहते प्रसहते सोढुं प्रसहितुम् , सः युक्तः योगी सुखी च इह लोके नरः ॥ २३ ॥
எந்த மனிதன் காமக்ரோதங்களினால் உண்டான வேகத்தை சஹித்துக் கொள்கிறானோ அவனே யோகீ. அவன் இவ்வுலகத்தில் சுகியும் ஆவான்.
कथम्भूतश्च ब्रह्मणि स्थितः ब्रह्म प्राप्नोति इति आह भगवान् —
எப்படிப்பட்டவன் பிரஹ்ம்மத்தில் நிலைத்து பிரஹ்ம்மத்தை அடைகிறான் என்று கூறுகிறார்.
योऽन्तःसुखोऽन्तरारामस्तथान्तर्ज्योतिरेव यः ।
स योगी ब्रह्मनिर्वाणं ब्रह्मभूतोऽधिगच्छति ॥ २४ ॥
யோந்த: ஸுகோஅந்தரா ராம ஸ்ததாந்தர் ஜ்யோதி ரேவ ய: ।
ஸயோகீ ப்ரஹ்மநிர்வாணம் ப்ரஹ்மபூதோஅதிகச்சதி ॥ 24 ॥
यः अन्तःसुखः अन्तः आत्मनि सुखं यस्य सः अन्तःसुखः, तथा अन्तरेव आत्मनि आरामः आरमणं क्रीडा यस्य सः अन्तरारामः, तथा एव अन्तः एव आत्मन्येव ज्योतिः प्रकाशो यस्य सः अन्तर्ज्योतिरेव ।
எவருக்கு அந்தராத்மாவில் சுகமோ அவர் அந்த: சுகர் (உள்ளே சுகமுடையவர்) அவ்வாறே எவர் அந்தராத்மாவில் ரமிக்கிறாரோ அவர் அந்தராராமர், அவ்வாறேஅந்தராத்மாவே ஜ்யோதியோ (பிரகாசமோ) அவர் அந்தர்ஜ்யோதி.
यः ईदृशः सः योगी ब्रह्मनिर्वाणं ब्रह्मणि निर्वृतिं मोक्षम् इह जीवन्नेव ब्रह्मभूतः सन् अधिगच्छति प्राप्नोति ॥ २४ ॥
இப்படிப்பட்ட யோகீ ஜீவித்துக் கொண்டிருக்கும்பொழுதே மோக்ஷம் என்று சொல்லக்கூடிய பிரஹ்ம்மத்தில் நிலைத்து பிரஹ்ம்மமே ஆகின்றான்.
किञ्च —
மேலும்
लभन्ते ब्रह्मनिर्वाणमृषयः क्षीणकल्मषाः ।
छिन्नद्वैधा यतात्मानः सर्वभूतहिते रताः ॥ २५ ॥
லபந்தே ப்ரஹ்மநிர்வாணம் ருஷய: க்ஷண கல்மஷா: ।
சின்னத்வைதா யதாத்மான: ஸர்வபூத ஹிதே ரதா: ॥ 25 ॥
लभन्ते ब्रह्मनिर्वाणं मोक्षम् ऋषयः सम्यग्दर्शिनः संन्यासिनः क्षीणकल्मषाः क्षीणपापाः निर्दोषाः छिन्नद्वैधाः छिन्नसंशयाः यतात्मानः संयतेन्द्रियाः सर्वभूतहिते रताः सर्वेषां भूतानां हिते आनुकूल्ये रताः अहिंसका इत्यर्थः ॥ २५ ॥
பாபம் முதலிய தோஷங்கள் அற்றவராயும், சந்தேகங்கள் அற்றவராயும், இந்திரியங்களை வசப்படுத்தியவரும், எல்லா பிராணிகளிடத்தும் அஹிம்சையினால் அவர்களுக்கு அனுகூலமாய் இருத்தலில் பிரியமுடையவராயும் உள்ள சம்யக் தர்சிகளாகிய சந்நியாசிகள் பிரஹ்ம நிர்வாணம் என்ற மோக்ஷத்தை அடைகி றார்கள் என்பது பொருள்.
किञ्च —
மேலும்
कामक्रोधवियुक्तानां यतीनां यतचेतसाम् ।
अभितो ब्रह्मनिर्वाणं वर्तते विदितात्मनाम् ॥ २६ ॥
காமக்ரோதவியுக்தானாம் யதீனாம் யதசேதஸாம் ।
அபிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே விதிதாத்மனாம் ॥ 26 ॥
कामक्रोधवियुक्तानां कामश्च क्रोधश्च कामक्रोधौ ताभ्यां वियुक्तानां यतीनां संन्यासिनां यतचेतसां संयतान्तःकरणानाम् अभितः उभयतः जीवतां मृतानां च ब्रह्मनिर्वाणं मोक्षो वर्तते विदितात्मनां विदितः ज्ञातः आत्मा येषां ते विदितात्मानः तेषां विदितात्मनां सम्यग्दर्शिनामित्यर्थः ॥ २६ ॥
காமக்ரோதம் இரண்டும் நீங்கினவராயும், வசம் செய்யப்பட்ட அந்தக்கரணம் உடையவராகவும், உள்ள எவர்களுக்கு ஆத்மஞானம் ஏற்ப்பட்டதோ அந்த சம்யக் தர்சியாகிய ஸந்நியாஸிக்கு இரண்டு விதமாகவும் என்றால் ஜீவித்துக் கொண்டிருக்கும் பொழுதும், மரணத்திற்கு பின்னும் இரண்டு அவஸ்தைகளிலும் பிரஹ்ம்ம நிர்வாணம் என்ற மோக்ஷமானது உண்டு.
सम्यग्दर्शननिष्ठानां संन्यासिनां सद्यः मुक्तिः उक्ता । कर्मयोगश्च ईश्वरार्पितसर्वभावेन ईश्वरे ब्रह्मणि आधाय क्रियमाणः सत्त्वशुद्धिज्ञानप्राप्तिसर्वकर्मसंन्यासक्रमेण मोक्षाय इति भगवान् पदे पदे अब्रवीत् वक्ष्यति च ।
சம்யக் தர்சன நிஷ்ட்டர்களாகிய சந்நியாசிகளுக்கு சத்யோ முக்தி: (சத்யோ முக்தி என்றால் உடனே மோக்ஷம்) கூறப்பட்டது. ஈஸ்வரார்ப்பண பாவத்தினால் பூர்ண பிரஹ்ம்மாகிய பரமாத்மா வினிடத்தில் எல்லாக் கர்மங்களையும் தியாகம் செய்த கர்மயோகியும் அந்தக் கரண சுத்தி வாயிலாக ஞானத்தை அடைந்து கர்ம ஸந்நியாஸ மூலமாக கிரமமாக மோக்ஷத்தை அடைகிறான் என்று அங்கங்கு பகவான் கூறியுள்ளார், மேலும் கூறப்போகிறார்.
अथ इदानीं ध्यानयोगं सम्यग्दर्शनस्य अन्तरङ्गं विस्तरेण वक्ष्यामि इति तस्य सूत्रस्थानीयान् श्लोकान् उपदिशति स्म —
அதன் பிறகு இப்பொழுது சம்யக் தர்சனத்திற்கு அந்தரங்க சாதனமாகிய தியானயோகத்தை விஸ்தாரமாக கூறுகிறேன் என்றுகூறி அதைச் சுருக்கமாக வரும் ஸ்லோகங்களில் உபதேசிக்கிறார்.
स्पर्शान्कृत्वा बहिर्बाह्यांश्चक्षुश्चैवान्तरे भ्रुवोः ।
प्राणापानौ समौ कृत्वा नासाभ्यन्तरचारिणौ ॥ २७ ॥
ஸ்பர்சான் க்ருத்வா பஹிர்பாஹ்யாம்ச் சக்ஷச்சை வாந்தரே ப்ருவோ: ।
ப்ராணாபானௌ ஸமௌ க்ருத்வா நாஸாப்யந்தர சாரிணௌ ॥ 27 ॥
यतेन्द्रियमनोबुद्धिर्मुनिर्मोक्षपरायणः ।
विगतेच्छाभयक्रोधो यः सदा मुक्त एव सः ॥ २८ ॥
யதேந்த்ரியமநோபுத்திர்முனிர்மோக்ஷபராயண: ।
விகதேச்சா-பய-க்ரோதோ ய: ஸதா முக்த ஏவ ஸ: ॥ 28 ॥
स्पर्शान् शब्दादीन् कृत्वा बहिः बाह्यान् — श्रोत्रादिद्वारेण अन्तः बुद्धौ प्रवेशिताः शब्दादयः विषयाः तान् अचिन्तयतः शब्दादयो बाह्या बहिरेव कृताः भवन्ति — तान् एवं बहिः कृत्वा चक्षुश्चैव अन्तरे भ्रुवोः ‘कृत्वा’ इति अनुषज्यते । तथा प्राणापानौ नासाभ्यन्तरचारिणौ समौ कृत्वा ॥ २७ ॥
சப்தாதி வெளிவிஷயங்களை வெளியேற்றி என்றால் சப்தம் முதலிய வெளி விஷயங்கள் இந்திரியங்களின் வழியாக உள்ளே அந்தக்கரணத்தில் பிரவேசித்துள்ளது. அதை சிந்திக்காமல் இருப்பதே அவைகளை வெளியேற்றுவதாகும். இவ்வாறு அவற்றை வெளியேற்றி இரண்டு கண்களின் பார்வையே புருவத்தின் மத்தியில் நிறுத்தி அவ்வாறே மூக்கின் உள்ளேயும் வெளியேயும் செல்லுகின்ற பிராண அபானனை சமானமாகச் செய்து.
यतेन्द्रियमनोबुद्धिः यतानि संयतानि इन्द्रियाणि मनः बुद्धिश्च यस्य सः यतेन्द्रियमनोबुद्धिः, मननात् मुनिः संन्यासी, मोक्षपरायणः एवं देहसंस्थानात् मोक्षपरायणः मोक्ष एव परम् अयनं परा गतिः यस्य सः अयं मोक्षपरायणो मुनिः भवेत् । विगतेच्छाभयक्रोधः इच्छा च भयं च क्रोधश्च इच्छाभयक्रोधाः ते विगताः यस्मात् सः विगतेच्छाभयक्रोधः, यः एवं वर्तते सदा संन्यासी, मुक्त एव सः न तस्य मोक्षायान्यः कर्तव्योऽस्ति ॥ २८ ॥
எவருடைய இந்திரியம், மனம் புத்தி வசம் செய்யப்பட்டதோ, ஈஸ்வரனையே மனனம் செய்கின்றமுனி எனப்படும் சந்நியாசி சரீரத்தில் இருந்தாலும் மோக்ஷமே மேலான கதியென்று இருப்பதால் முனி. அவ்வாறே அவருக்கு இச்சை, பயம், க்ரோதம் என்பவை நீங்கிவிட்டது. இவ்வாறு உள்ள சந்நியாசி எப்பொழுதும் முக்தரே. அவருக்கு வேறு செய்ய வேண்டியது ஒன்றுமில்லை.
एवं समाहितचित्तेन किं विज्ञेयम् इति, उच्यते —
இவ்வாறு சமாஹித (ஒருநிலைப்பட்ட மனதினால்) சித்தத்தினால் என்ன அறியவேண்டும் என்று கூறுவோம்.
भोक्तारं यज्ञतपसां सर्वलोकमहेश्वरम् ।
सुहृदं सर्वभूतानां ज्ञात्वा मां शान्तिमृच्छति ॥ २९ ॥
போக்தாரம் யக்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஸ்வரம் ।
ஸுஹ்ருதம் ஸர்வபூதானாம் க்ஞாத்வா மாம் சாந்திம் ருச்சதி ॥ 29 ॥
भोक्तारं यज्ञतपसां यज्ञानां तपसां च कर्तृरूपेण देवतारूपेण च, सर्वलोकमहेश्वरं सर्वेषां लोकानां महान्तम् ईश्वरं सुहृदं सर्वभूतानां सर्वप्राणिनां प्रत्युपकारनिरपेक्षतया उपकारिणं सर्वभूतानां हृदयेशयं सर्वकर्मफलाध्यक्षं सर्वप्रत्ययसाक्षिणं मां नारायणं ज्ञात्वा शान्तिं सर्वसंसारोपरतिम् ऋच्छति प्राप्नोति ॥ २९ ॥
(மனிதன்) நாராயணனான என்னைக் கர்த்தா ரூபமாகவும் தேவதா ரூபமாகவும் இருந்து எல்லா யக்ஞம், தபசுகளுக்கும் போக்தா வாகவும், எல்லா லோகங்களுக்கும் மேலான ஈஸ்வரனாகவும், எல்லாப் பிராணிகளுக்கும் அவர்கள் கேட்காமலே நன்மை (உபகாரம்) செய்பவராகவும், எல்லாப் பிராணிகளுடைய இருதயத்தில் இருப்ப வராயும், மேலும் எல்லா சங்கல்பங்களுக்கும் சாக்ஷி யாய் இருப்பதாக அறிந்து சாந்தியை அடைகிறான் என்றால் சம்சாரத்திலிருந்து விடுபடுகின்றான் என்பது பொருள்.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूजयपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये पञ्चमोऽध्यायः ॥
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே கர்மஸந் யாஸயோகோ நாம பஞ்சமோத்யாய:
अतीतानन्तराध्यायान्ते ध्यानयोगस्य सम्यग्दर्शनं प्रति अन्तरङ्गस्य सूत्रभूताः श्लोकाः ‘स्पर्शान् कृत्वा बहिः’ (भ. गी. ५ । २७) इत्यादयः उपदिष्टाः । तेषां वृत्तिस्थानीयः अयं षष्ठोऽध्यायः आरभ्यते ।
இதற்கு முந்திய அத்தியாயத்தில் சம்யக் தர்சனத்திற்கு (யதார்த்த ஞானத்திற்கு) தியான யோகம் அந்தரங்க சாதனம் என்பதை (ஸ்பர்ஷான் கிருத்வா) என்றல் முதலிய ஸ்லோகங்களால் சுருக்கமாக உபதேசித்ததை விஸ்தாரமாக விளக்க இந்த ஆறாவது அத்தியாயம் ஆரம்பிக்கப்படுகிறது.
तत्र ध्यानयोगस्य बहिरङ्गं कर्म इति, यावत् ध्यानयोगारोहणसमर्थः तावत् गृहस्थेन अधिकृतेन कर्तव्यं कर्म इत्यतः तत् स्तौति — अनाश्रित इति ॥
அங்கு த்யான யோகத்திற்கு பஹிரங்க சாதனம் கர்மமாகும். ஆகையால் த்யான யோகத்தை அடைய சாமர்த்தியம் இல்லாத க்ரு ஹஸ்த்தனாகிய அதிகாரி அவசியம் கர்மம் செய்யவேண்டும். ஆகை யால் கர்மத்தைப் புகழ்கிறார்.
ननु किमर्थं ध्यानयोगारोहणसीमाकरणम् , यावता अनुष्ठेयमेव विहितं कर्म यावज्जीवम् ।
விஹித கர்மாவை நாம் ஜீவித்துக் கொண்டு இருக்கும் வகையில் அவசியம் செய்யவேண்டும் என்று இருக்கையில் எதனால் த்யான யோகத்தை அடையும் வரையில் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
न, ‘आरुरुक्षोर्मुनेर्योगं कर्म कारणमुच्यते’ (भ. गी. ६ । ३) इति विशेषणात् , आरूढस्य च शमेनैव सम्बन्धकरणात् ।
அவ்வாறு அல்ல. ஏனெனில் (ஆருருக்ஷோ: முனேர்யோகம் கர்ம காரணமுச்யதே) என்ற விசேஷணத்தால் த்யான யோகத்தை அடைந்த ஆருடனுக்கு உபசமத்தில் சம்பந்தம் இருப்பதால். (எல்லா பாஹிய விஷயங்களிலிருந்து விடுபட்டிருப்பது)
आरुरुक्षोः आरूढस्य च शमः कर्म च उभयं कर्तव्यत्वेन अभिप्रेतं चेत्स्यात् , तदा
த்யான யோகத்தை அடைய இச்சை உள்ளவன் ஆருருக்ஷோ: ஆருருக்ஷோவான முனிக்கு கர்மம் காரணம் என்று கூறப்படுகிறது.
‘आरुरुक्षोः’ ‘आरूढस्य च’ इति शमकर्मविषयभेदेन विशेषणं विभागकरणं च अनर्थकं स्यात् ॥
த்யான யோகத்தை அடைந்தவன் ஆரூடன்.ஆருருக்ஷோவிற்கும் ஆரூடனக்கும் சமம், கர்ம இரண்டும் இருவரும் அவசியம் செய்ய வேண்டும் என்றால் ஆருருக்ஷோக்கு காமமும்,ஆரூடனுக்கு சமமும் என்று விசேஷணத்தை பிரித்துக்கூறியது வியர்த்தமாகும்.
तत्र आश्रमिणां कश्चित् योगमारुरुक्षुः भवति, आरूढश्च कश्चित् , अन्ये न आरुरुक्षवः न च आरूढाः ; तानपेक्ष्य ‘आरुरुक्षोः’ ‘आरूढस्य च’ इति विशेषणं विभागकरणं च उपपद्यत एवेति चेत् ।
கிருஹஸ்தாஸ்ரமத்தில் உள்ளவர்களில் சிலர் யோகத்தை அடைய இச்சை உள்ளவர்களாயும், யோகத்தை அடைந்தவர்களாயும் இருக்கிறார்கள். மற்றவர்களில் சிலர் யோகத்தில் இச்சை அற்றவர் களாயும், யோகத்தை அடையாதவர்களாயும் இருக்கிறார்கள். அவர்களைக் குறித்து இந்த விசேஷணத்தில் (கர்ம, சமம்) விபாகம் (பிரிவு) ஏற்படலாமே என்றால்
न ; ‘तस्यैव’ इति वचनात् , पुनः योगग्रहणाच्च ‘योगारूढस्य’ इति ; य आसीत् पूर्वं योगमारुरुक्षुः, तस्यैव आरूढस्य शम एव कर्तव्यः कारणं योगफलं प्रति उच्यते इति । अतो न यावज्जीवं कर्तव्यत्वप्राप्तिः कस्यचिदपि कर्मणः ।
அவ்வாறு அல்ல. ஏனெனில் तस्यैव (அவனுக்கே) என்ற வசனம் இருப்பதால், மேலும் योगारूढस्य (யோகாரூடஸ்ய - யோகத்தை அடைந்தவனுக்கு) என்றஇடத்தில் யோகம் என்ற விசேஷணமும் எடுத்துக் கொள்ளப்பட்டது. எவன் முன்பு (ஆருருக்ஷ) - யோகத்தை அடைய விரும்பினானோ எவன் யோகத்தை அடைந்தானோ (யோகாரூடனோ) அந்த யோகா ரூடனுக்கே யோகபலத்தை அடைவ தற்கு சமம், காரணமாய் இருப்பதால் அவனுக்கு (யோகாரூடனுக்கு) அது அவசியம் செய்யவேண்டியதாக, கூறப்பட்டதாக உள்ளது. ஆகையால் (யோகா ரூடன்) ஜீவிக்கும்காலம் முழுவதும் கர்மம் செய்யவேண்டும் என்பது இல்லை.
योगविभ्रष्टवचनाच्च — गृहस्थस्य चेत् कर्मिणो योगो विहितः षष्ठे अध्याये, सः योगविभ्रष्टोऽपि कर्मगतिं कर्मफलं प्राप्नोति इति तस्य नाशाशङ्का अनुपपन्ना स्यात् ।
யோகத்தினின்றும் தவறியவனைப் பற்றிய பகவானது வசனத்தி னாலும் இது பொருந்தவில்லை. ஆறாவது அத்தியாயத்தில் கூறப் பட்ட கர்மம் செய்கின்றகிரஹஸ்தனின் பொருட்டு யோகம் விதிக்கப் பட்டிருந்தாலும், அவன் யோகத்தினின்று நழுவினாலும் கர்மம் செய் வதால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலத்தை அடைகிறான். ஆகையால் இதில் நாசம் அடைவான் என்று சங்கை செய்வது பொருந்தாது.
अवश्यं हि कृतं कर्म काम्यं नित्यं वा — मोक्षस्य नित्यत्वात् अनारभ्यत्वे — स्वं फलं आरभत एव ।
ஏனெனில் மோக்ஷமானது நித்தியமாய் இருப்பதால் கர்மத்தி னால் அடையக்கூடியது அல்ல. ஆகையால் செய்யப்பட்ட நித்திய காமிய கர்மங்கள் அவசியம் பலன்களைக் கொடுக்கவே செய்யும்.
नित्यस्य च कर्मणः वेदप्रमाणावबुद्धत्वात् फलेन भवितव्यम् इति अवोचाम, अन्यथा वेदस्य आनर्थक्यप्रसङ्गात् इति । न च कर्मणि सति उभयविभ्रष्टवचनम् , अर्थवत् कर्मणो विभ्रंशकारणानुपपत्तेः ॥
நித்தியகர்மாவானது வேதப் பிரமாணத்தினால் அறியப்பட்டதாய் இருப்பதால் அவசியம் பலம் ஏற்ப்பட்டே ஆகவேண்டும் என்று முன்பே கூறப்பட்டது. அவ்வாறு இல்லையெனில் வேதத்திற்கு அனர்த்தப் பிராப்தி ஏற்படும். மேலும் கர்மம் உள்ளவனிடத்து இரண்டினின்றும் தவறியவனைப் பற்றிக் கூறுதல் கர்மத்தினின்றும் நழுவுதலில் காரணம் பொருந்தாமையால். கர்மத்தின் பயன் அவசியம் ஏற்படும், ஆகையால் கிருஹஸ்த்தன் யோகத்தினின்று விடுபட்டவன் என்று கூறுதல் பொருந்தாது. (யோகத்தினின்று விடுபடல் என்றால் யோகப்பிரஷ்ட்டன்)
कर्म कृतम् ईश्वरे संन्यस्य इत्यतः कर्तुः कर्म फलं नारभत इति चेत् ।
இவ்வாறு எடுத்துக்கொண்டால் ஈஸ்வரார்ப்பணமாக செய்யப் பட்ட கர்மத்திற்கு பலன் ஏற்படாதே எனில்.
न ; ईश्वरे संन्यासस्य अधिकतरफलहेतुत्वोपपत्तेः ॥
இந்தக் கூற்று சரியல்ல. ஏனெனில் ஈஸ்வரனிடத்தில் அர்ப்பணம் செய்யப்பட்ட கர்மத்திற்கு அதிக பலம் ஏற்படுவது என்பது யுக்திக்குப் பொருத்தமானதாகும்.
मोक्षायैव इति चेत् , स्वकर्मणां कृतानां ईश्वरे संन्यासो मोक्षायैव, न फलान्तराय योगसहितः ; योगाच्च विभ्रष्टः ; इत्यतः तं प्रति नाशाशङ्का युक्तैव इति चेत् ,
ஆனால் மோக்ஷத்தின் பொருட்டே எனில் தியாகத்தோடு கூடி ஈஸ்வரார்ப்பணமாகச் செய்யப்பட்ட கர்மங்கள் மோக்ஷத்திற்கே அன்றி வேறு பலனுக்காக அன்று என்று இவ்வாறு இருக்கும் பொழுது யோகப்ருஷ்ட்டன் (யோகத்திலிருந்து நழுவியவன்) விஷயத்தில் நாசம் ஏற்படுவதில் சங்கை செய்யவேண்டியது இல்லை.
இவ்வாறு கூறியது சரியல்ல. एकाकी यतचित्तात्मा निराशीरपरिग्रहः (ஏகாகீ யதசித்தாத்மா நிராசீரபரிக்ரஹ:) ब्रह्मचारिव्रते स्थितः (பிரஹ்ம்மச்‌ சாரிவ்ரதே ஸ்தித:) என்று கர்ம சந்நியாசம்‌ விதிக்கப்பட்டுள்ளதால்
न च अत्र ध्यानकाले स्त्रीसहायत्वाशङ्का, येन एकाकित्वं विधीयते । न च गृहस्थस्य ‘निराशीरपरिग्रहः’ इत्यादिवचनम् अनुकूलम् । उभयविभ्रष्टप्रश्नानुपपत्तेश्च ॥
மேலும் தியான காலத்தில் ஸ்திரீயின் சஹாயம் தேவையில் சங்கை செய்தலும் பொருந்தாது. ஏனெனில் இந்த கிரஹஸ்தனுக்கு (ஏகாகீ) தனிமையாக இருத்தலே விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் निराशीरपरिग्रह-: (நிராசீர பரிக்ரஹ) முதலிய வசனங்களும்‌ கிருஹஸ்த னுக்கு பொருத்தமாய் இல்லை. ஆகையால் ஞானம் கர்மம் இரண்டையும் தவறவிட்டவனை குறித்து சங்கை செய்தல் பொருந்தாது.
अनाश्रित इत्यनेन कर्मिण एव संन्यासित्वं योगित्वं च उक्तम् , प्रतिषिद्धं च निरग्नेः अक्रियस्य च संन्यासित्वं योगित्वं चेति चेत् ।
अनाश्रितः (அநாச்ரித) என்பதன்‌ மூலம்‌ கர்மம்‌ செய்பவனுக்கே சந்நியாசித்துவமும், யோகித்துவமும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அக்னி அற்றவனுக்கும், கிரியை அற்றவனுக்கும் சந்நியாசித் துவமும், யோகித் துவமும் அவர்களுக்கு நிஷேதம் செய்யப் பட்டுள்ளதே எனில்.
न ; ध्यानयोगं प्रति बहिरङ्गस्य यतः कर्मणः फलाकाङ्क्षासंन्यासस्तुतिपरत्वात् ।
இவ்வாறு கூறுவதும் சரியல்ல. ஏனெனில் தியான யோகத்திற்கு பஹிரங்க சாதனமாகிய கர்மத்தின் பலனில் உள்ள விருப்பத்தை விட்டுவிடுதலை ஸ்துதி செய்வதற்கான நிமித்தமே.
न केवलं निरग्निः अक्रियः एव संन्यासी योगी च । किं तर्हि ? कर्म्यपि, कर्मफलासङ्गं संन्यस्य कर्मयोगम् अनुतिष्ठन् सत्त्वशुद्ध्यर्थम् , ‘स संन्यासी च योगी च भवति’ इति स्तूयते ।
அக்னி அற்ற, கிரியை அற்றவனே சந்நியாசி, யோகீ என்பதல்ல. கர்மம் செய்பவனும் கர்மபலம் மற்றும் அதில் பற்று இவைகளை துறந்து சித்தசுத்தியின் பொருட்டு எவன் கர்மயோகத்தை கடைபிடிக்கிறானோ அவனே சந்நியாசி. அவனே யோகீ என்று ஸ்துதிக்கப்படுகிறது.
न च एकेन वाक्येन कर्मफलासङ्गसंन्यासस्तुतिः चतुर्थाश्रमप्रतिषेधश्च उपपद्यते ।
ஒரே வாக்கியத்தினால் கர்மபலத்தில் உள்ள விருப்பத்தையும், பற்றையும் துறந்த சந்நியாசியையும், நான்காவது ஆச்ரமமான ஸந்நியாஸத்தை நிஷேதித்தலும் முடியாது. (இயலாது)
न च प्रसिद्धं निरग्नेः अक्रियस्य परमार्थसंन्यासिनः श्रुतिस्मृतिपुराणेतिहासयोगशास्त्रेषु विहितं संन्यासित्वं योगित्वं च प्रतिषेधति भगवान् । स्ववचनविरोधाच्च ।
அக்னி அற்றஅவ்வாறேகிரியை அற்றவாஸ்தவ சந்நியாசிக்கு விதிக்கப்பட்ட சந்நியாசித்துவமும், யோகித்துவமும் ஸ்ருதி, ஸ்ம்ருதி, புராண, இதிகாசம் மற்றும் யோகசாஸ்திரம் அவ்வாறே எங்கும் பிரசித்தமாய் உள்ளதை பகவான் மறுக்கவில்லை. அவ்வாறு மறுத்தால் தன்னுடைய வசனத்தில் மாறுபாடு ஏற்படும்.
‘सर्वकर्माणि मनसा संन्सस्य (சர்வகர்மாணி மனசா சந்நியஸ்ய) नैव कुर्वन्न कारयन् आस्ते (நைவ குர்வன்ன காரயன்‌ ஆஸ்தே) मौनी सन्तुष्टो येन केनचित् மெளனி சம்துஷ்ட்டோ யேன கேனசித்‌) अनिकेतः स्थिरमतिः (அநிகேத: ஸ்திரமதி) विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः (விஹாய காமான்ய: சர்வான்‌ புமாம்ச்சரதி நிஸ்ஸ்புருஹ:) सर्वारम्भपरित्यागी (ஸர்வாரம்ப பரித்வாகி) என்று பகவான்‌ அங்கு அங்கு தன்னுடைய கருத்துக்களை உபதேசித்துள்ளார்‌. அந்த உபதேசங்களுக்கு, நான்காவது ஆச்ரமமாகிய சந்நியாசத்தை மறுத்தால்‌ பொருந்தாமல்‌ போகும்‌. (பொருந்தாது)
तस्मात् मुनेः योगम् आरुरुक्षोः प्रतिपन्नगार्हस्थ्यस्य अग्निहोत्रादिकर्म फलनिरपेक्षम् अनुष्ठीयमानं ध्यानयोगारोहणसाधनत्वं सत्त्वशुद्धिद्वारेण प्रतिपद्यते ।
ஆகையால் க்ருஹ்ஸ்த்தாஸ்ரமத்தில் உள்ள புருஷன் யோகாரூடன் ஆவதில் இச்சை உடையவனாகவும், மனன சீலனாகவும் இருந்து பலத்தில் இச்சை அற்று செய்யும் அக்னி ஹோத்ராதி கர்மங்கள் அந்தக்கரண சுத்தி வாயிலாக தியான யோகத்தில் ஆரூடன் ஆவதற்கு சாதனமாகிறது.
इति ‘स संन्यासी च योगी च’ इति स्तूयते ॥
இவ்வாறு அவனை சந்நியாசி, யோகீ என்று புகழ்கிறார்.
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச
अनाश्रितः कर्मफलं कार्यं कर्म करोति यः ।
स संन्यासी च योगी च न निरग्निर्न चाक्रियः ॥ १ ॥
அநாச்ரித: கர்மபலம் கார்யம் கர்ம கரோதி ய: ।
ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ ச ந நிரக்நிர்ன சாக்ரிய: ॥ 1 ॥
अनाश्रितः न आश्रितः अनाश्रितः । किम् ? कर्मफलं कर्मणां फलं कर्मफलं यत् तदनाश्रितः, कर्मफलतृष्णारहित इत्यर्थः ।
ஆச்ரயிக்காதவன்‌ - (அநாச்ரித:) - எதனை? - கர்மத்தின்‌ பயனை- கர்மங்களின்‌ பயன்‌ எதுவோ, அதனை ஆச்ரயிக்காதவன்‌ அதாவது - கர்மபலத்தில்‌ ஆசையற்றிருந்தல்‌ என்பது பொருள்‌.
यो हि कर्मफले तृष्णावान् सः कर्मफलमाश्रितो भवति, अयं तु तद्विपरीतः, अतः अनाश्रितः कर्मफलम् ।
எவன் கர்மபலத்தில் இச்சைகள் உள்ளவனோ அவன் கர்மபலத்தை ஆசிரயித்தவன். பலத்தில் இச்சை அற்றவன் அநாச்ரித கர்மபலத்தை உடையவன் (பலனை ஆச்ரயிக்காதவன்)
एवंभूतः सन् कार्यं कर्तव्यं नित्यं काम्यविपरीतम् अग्निहोत्रादिकं कर्म करोति निर्वर्तयति यः कश्चित् ईदृशः कर्मी स कर्म्यन्तरेभ्यो विशिष्यते इत्येवमर्थमाह — ‘स संन्यासी च योगी च’ इति ।
இவ்வாறு உள்ளவன் அக்னிஹோத்திராதி நித்திய கர்மாக்களை காமனை இல்லாமல் செய்கின்றஇப்படிப்பட்ட கர்மி மற்றகாம்ய கர்மிகளைக் காட்டிலும் விசேஷமானவன் (மேலானவன்) என்று காண்பிப்பதற்காக அவனை சந்நியாசி, யோகீ என்று கூறினார்.
संन्यासः परित्यागः स यस्यास्ति स संन्यासी च, योगी च योगः चित्तसमाधानं स यस्यास्ति स योगी च इति एवंगुणसम्पन्नः अयं मन्तव्यः।
பரித்தியாகம் எவனுக்கு இருக்கிறதோ அவன் சந்நியாசி. யோகம் என்றால் சித்தசமாதானம். அந்த சித்த சமாதானம் எவனுக்கு இருக்கிறதோ அவன் யோகீ. இவ்வாறு இந்த குணங்களை உடை யவன் என்று அறிந்துகொள்ளவேண்டும்.
न केवलं निरग्निः अक्रिय एव संन्यासी योगी च इति मन्तव्यः ।
அக்னி அற்றவன், கிரியை அற்றவன் என்பதினாலேயே அவனை சந்நியாசி என்றும், யோகீ என்றும் கருதக்கூடாது.
निर्गताः अग्नयः कर्माङ्गभूताः यस्मात् स निरग्निः, अक्रियश्च अनग्निसाधना अपि अविद्यमानाः क्रियाः तपोदानादिकाः यस्य असौ अक्रियः ॥ १ ॥
கர்மங்களுக்கு அங்கபூதமாக உள்ள அக்னி எவனுக்கு இல்லையோ அவன், அக்னி அற்றவனாகிறான். அவனுக்கு அக்னி முதலியவைகள் இல்லாத தபஸ், தானாதிகிரியைகளும் இல்லாத தினால் (அக்கிரிய:) கிரியை அற்றவன் எனப்படுகிறான்.
ननु च निरग्नेः अक्रियस्यैव श्रुतिस्मृतियोगशास्त्रेषु संन्यासित्वं योगित्वं च प्रसिद्धम् । कथम् इह साग्नेः सक्रियस्य च संन्यासित्वं योगित्वं च अप्रसिद्धमुच्यते इति ।
அவ்வாறானால் அக்கினி அற்றவனும், கிரியை அற்றவனும் ஸந்நியாஸியாகவும், யோகியாகவும் இருக்கிறான் என்பது ஸ்ருதி, ஸ்ம்ருதி, யோகசாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும்பொழுது அக்னி உடையவனும், கிரியை உடை யவனும் சந்நியாசியாகவும் யோகியாகவும் இருக்கிறான் என்று அப்ர சித்தமானதை பகவான் எக்காரணத்தின் பொருட்டு உபதேசிக்கிறார் என்பது எப்படி?
नैष दोषः, कयाचित् गुणवृत्त्या उभयस्य सम्पिपादयिषितत्वात् ।
இந்த தோஷம் ஏற்படாது. ஏனெனில் இந்த கௌணவிருத்தியி னால் ஸந்நியாஸித்துவம் யோகத்துவம் ஆகிய இவ்விருபாவங்கள் கிருஹஸ்தனால் சம்மதிக்கவேண்டும் (ஏற்றுக்கொள்ள வேண்டும்)
तत् कथम् ?
அது எவ்வாறு?
कर्मफलसङ्कल्पसंन्यासात् संन्यासित्वम् , योगाङ्गत्वेन च कर्मानुष्ठानात् कर्मफलसङ्कल्पस्य च चित्तविक्षेपहेतोः परित्यागात् योगित्वं च इति गौणमुभयम् ।
கர்மபலத்தில் சங்கல்பத்தை த்யாகம் செய்தல் ஸந்நியா ஸித்துவமும் யோகத்தின் அங்கரூபமான கர்மத்தை அனுஷ்ட்டானம் செய்யும்பொழுது சித்த விக்ஷேபத்திற்கு காரணமான கர்மபலத்தின் சங்கல்பத்தை பரித்யாகம் செய்வதால் யோகித்துவமும் ஏற்படுகிறது. இவ்வாறு இவ்விரண்டு பாவங்களும் கௌண ரூபமாக எடுக்கப் பட்டுள்ளது.
न पुनः मुख्यं संन्यासित्वं योगित्वं च अभिप्रेतमित्येतमर्थं दर्शयितुमाह —
ஆகையால் முக்கிய ஸந்நியாஸித்துவமும், யோகித்துவமும் அவருக்கு விருப்பமானது அல்ல. ஆகையால் இந்த கருத்தைத் தெரிவிக்கும் பொருட்டு கூறுகிறார்.
यं संन्यासमिति प्राहुर्योगं तं विद्धि पाण्डव ।
न ह्यसंन्यस्तसङ्कल्पो योगी भवति कश्चन ॥ २ ॥
யம் ஸந்ந்யாஸமிதி ப்ராஹுர் யோகம் தம் வித்தி பாண்டவ ।
ந ஹ்யஸந்ந்யஸ்த-ஸங்கல்போ யோகீ பவதி கச்சன ॥ 2 ॥
यं सर्वकर्मतत्फलपरित्यागलक्षणं परमार्थसंन्यासं संन्यासम् इति प्राहुः श्रुतिस्मृतिविदः, योगं कर्मानुष्ठानलक्षणं तं परमार्थसंन्यासं विद्धि जानीहि हे पाण्डव ।
ஹே! பாண்டவ! ஸ்ருதி ஸ்மிருதிகளை அறிந்த வித்வான்கள் கர்மங்களையும், அதன் பலன்களையும் தியாகம் செய்தல் ஆகிய லக்ஷணங்கள் உடையவனே வாஸ்தவ ஸந்நியாஸ என்று கூறுகிறார்கள், அந்த உண்மையான ஸந்நியாஸத்தை நிஷ்காம கர்மங்களை அனுஷ்ட்டித்தல் யோகம் என்று அறிந்து கொள்
कर्मयोगस्य प्रवृत्तिलक्षणस्य तद्विपरीतेन निवृत्तिलक्षणेन परमार्थसंन्यासेन कीदृशं सामान्यमङ्गीकृत्य तद्भाव उच्यते इत्यपेक्षायाम् इदमुच्यते —
கர்மயோகத்தோடு கூடிய பிரவிர்த்தி லக்ஷணத்திற்கும் அதற்கு விபரீதமான நிவிர்த்தி லக்ஷணத்திற்கும் ஒரே மாதிரியான (சமானமான) பரமார்த்த ஸந்நியாஸத்தை அங்கீகரித்தல் எவ்வாறு என்று சங்கை எழும்பொழுது கூறுகிறார்.
अस्ति हि परमार्थसंन्यासेन सादृश्यं कर्तृद्वारकं कर्मयोगस्य । यो हि परमार्थसंन्यासी स त्यक्तसर्वकर्मसाधनतया सर्वकर्मतत्फलविषयं सङ्कल्पं प्रवृत्तिहेतुकामकारणं संन्यस्यति । अयमपि कर्मयोगी कर्म कुर्वाण एव फलविषयं सङ्कल्पं संन्यस्यति इत्येतमर्थं दर्शयिष्यन् आह —
பரமார்த்த ஸந்நியாஸத்திற்கு ஒப்பாக கர்மயோகத்திற்கும் கர்த்துரு விஷயத்தில் சமானத்தன்மை உள்ளது. எந்த பரமார்த்த ஸந்நியாஸி இருக்கிறானோ அவன் ஸர்வகர்ம சாதனங்கள், ஸர்வகர்மங்கள் அதன் பலன்கள் விஷயமான பிரவிருத்திக்கு காரணமாகிய காமம், அதன் சங்கல்பங்களையும் ஸந்நியாஸம் செய்கின்றான். அதே போல் கர்மயோகியும் கர்மங்களை செய்து கொண்டே பல விஷயமான சங்கல்பத்தை ஸந்நியஸிக்கிறான் என்று இந்த கருத்தைக் காண்பித்துக் கூறுகிறார்.
न हि यस्मात् असंन्यस्तसङ्कल्पः असंन्यस्तः अपरित्यक्तः फलविषयः सङ्कल्पः अभिसन्धिः येन सः असंन्यस्तसङ्कल्पः कश्चन कश्चिदपि कर्मी योगी समाधानवान् भवति न सम्भवतीत्यर्थः, फलसङ्कल्पस्य चित्तविक्षेपहेतुत्वात् ।
எப்படியெனில் பலவிஷயமான சங்கல்பத்தை விட்டொழிக்காத கர்மி ஒரு பொழுதும் சித்தத்தில் சமாதானத்தை அடையமாட்டான், ஏனெனில் பல சங்கல்பமானது சித்த விக்ஷேபத்தினால் உண்டாவ தால் யோகியாக நிலைபெறுவது சம்பவிக்காது என்பது கருத்து.
तस्मात् यः कश्चन कर्मी संन्यस्तफलसङ्कल्पो भवेत् स योगी समाधानवान् अविक्षिप्तचित्तो भवेत् , चित्तविक्षेपहेतोः फलसङ्कल्पस्य संन्यस्तत्वादित्यभिप्रायः ॥ २ ॥
ஆகையால் எந்த ஒரு கர்மியானவன் பல சங்கல்பத்தை சந்நியாசம் செய்தானோ (விட்டானோ)அவனே யோகி. அவனே சித்த சமாதானம் அடைந்தவன். அவனே விக்ஷிப்த சித்தம் அற்றவன் ஆவான். ஏனெனில் சித்த விக்ஷேபத்திற்கு காரணமான பல சங்கல்பத்தை ஸந்நியாஸம் செய்தால் என்பது அபிப்பிராயம்.
एवं परमार्थसंन्यासकर्मयोगयोः कर्तृद्वारकं संन्याससामान्यमपेक्ष्य ‘यं संन्यासमिति प्राहुर्योगं तं विद्धि पाण्डव’ इति कर्मयोगस्य स्तुत्यर्थं संन्यासत्वम् उक्तम् ।
இவ்வாறு பரமார்த்த ஸந்நியாஸ, கர்மங்களுக்கு கர்த்திரு பாவரூப சம்பந்தத்தினால் இருவருக்கும் ஸந்நியாஸத்தில் சமத்து வத்தை அனுசரித்து यं संन्यासमिति प्राहुर्योगं तं विद्धि पाण्डव - (யம் ஸந்நி யாஸமிதி ப்ராஹுர்யோகம் தம் வித்தி பாண்டவ) என்று கர்மயோ கத்தை புகழ்வதின் பொருட்டு ஸந்நியாஸத்துவமானது கூறப்பட்டது.
ध्यानयोगस्य फलनिरपेक्षः कर्मयोगो बहिरङ्गं साधनमिति तं संन्यासत्वेन स्तुत्वा अधुना कर्मयोगस्य ध्यानयोगसाधनत्वं दर्शयति —
த்யானயோகத்திற்கு பலத்தில் இச்சையற்றகர்மயோகம் பஹிரங்க சாதனம் என்பதால் ஸந்நியாஸ யோகமென்று ஸ்துதி செய்து இப்பொழுது கர்மயோகம் தியான யோகத்திற்கு எவ்வாறு சாதனம் ஆகிறது என்பதைக் காண்பிக்கிறார்.
आरुरुक्षोर्मुनेर्योगं कर्म कारणमुच्यते ।
योगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते ॥ ३ ॥
ஆருருக்ஷோர்முனேர்யோகம் கர்ம காரணமுச்யதே ।
யோகாரூடஸ்ய தஸ்யைவ சம: காரணமுச்யதே ॥ 3 ॥
आरुरुक्षोः आरोढुमिच्छतः, अनारूढस्य, ध्यानयोगे अवस्थातुमशक्तस्यैवेत्यर्थः । कस्य तस्य आरुरुक्षोः ? मुनेः, कर्मफलसंन्यासिन इत्यर्थः । किमारुरुक्षोः ? योगम् । कर्म कारणं साधनम् उच्यते ।
தியானயோகத்தில் நிலைத்திருப்பதற்கு இச்சித்தவனாய் த்யான யோகத்தில் நிலைபெறமுடியாதவன். அப்படிப்பட்டவன் ஆருருக்ஷோ: முனி கர்மபல ஸந்நியாஸி என்பது கருத்து. அப்படிப் பட்ட முனிக்கு (ஆருருக்ஷோவிற்கு) தியானத்தில் நிலைப்பதற்கு கர்மயோக சாதனம் என்ன என்பது சொல்லப்படுகிறது.
योगारूढस्य पुनः तस्यैव शमः उपशमः सर्वकर्मभ्यो निवृत्तिः कारणं योगारूढस्य साधनम् उच्यते इत्यर्थः ।
தியானயோகத்தில் நிலைத்திருப்பவனுக்கே உபசமம். உபசமம் என்றால் ஸர்வகர்மங்களிலிருந்து நிவர்த்தி. அதுவே யோகாரூட னுக்கு சாதனம் என்று கூறப்படுகிறது.
यावद्यावत् कर्मभ्यः उपरमते, तावत्तावत् निरायासस्य जितेन्द्रियस्य चित्तं समाधीयते । तथा सति स झटिति योगारूढो भवति ।
எவ்வளவிற்கு எவ்வளவு கர்மங்களிலிருந்து உபரமம் ஆகிறதோ அவ்வளவிற்கு அவ்வளவு ஆசைகளற்றஇந்திரியங்களை ஜெயித்த வனுடைய மனமானது ஒருநிலைப்படுகிறது. அவ்வாறு இருக்கும் பொழுது அவனுக்கு விரைவிலேயே யோகாரூடம் ஏற்படுகிறது. (யோகாரூடம் என்றால் யோகத்தில் நன்றாக நிலைத்திருத்தல்.)
तथा चोक्तं व्यासेन —
அவ்வாறேவியாச பகவானால் கூறப்பட்டுள்ளது.
‘नैतादृशं ब्राह्मणस्यास्ति वित्तं यथैकता समता सत्यता च । शीलं स्थितिर्दण्डनिधानमार्जवं ततस्ततश्चोपरमः क्रियाभ्यः’ (मो. ध. १७५ । ३७) इति ॥ ३ ॥
பிரஹ்ம பதத்தை அறிந்த பிராஹ்மணனுக்கு இதைத் தவிர வேறு செல்வமேது. தனம் எவை எனில் ஒன்றாகவே இருத்தல், சமமாய் இருத்தல், சத்தியமாய் இருத்தல் நன்நடத்தையுடன் இருத்தல், நல்வழியில் உறுதி, அஹிம்சை, நேர்மை, மேலும் அந்த அந்த கிரியைகளிலிருந்து விடுபடுதல்.
अथेदानीं कदा योगारूढो भवति इत्युच्यते —
பிறகு இப்பொழுது அந்த சாதகன் எப்பொழுது யோகாரூடன் ஆவான் என்று கூறப்போகிறார்.
यदा हि नेन्द्रियार्थेषु न कर्मस्वनुषज्जते ।
सर्वसङ्कल्पसंन्यासी योगारूढस्तदोच्यते ॥ ४ ॥
யதா ஹி நேந்த்ரியார்தேஷு ந கர்மஸ்வநுஷஜ்ஜதே ।
ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ யோகாரூடஸ்-ததோச்யதே ॥ 4 ॥
यदा समाधीयमानचित्तो योगी हि इन्द्रियार्थेषु इन्द्रियाणामर्थाः शब्दादयः तेषु इन्द्रियार्थेषु कर्मसु च नित्यनैमित्तिककाम्यप्रतिषिद्धेषु प्रयोजनाभावबुद्ध्या न अनुषज्जते अनुषङ्गं कर्तव्यताबुद्धिं न करोतीत्यर्थः ।
எப்பொழுது சித்தமானது சமாதானம் அடைந்த யோகி இந்திரிய விஷயங்களின் விஷயங்களாகிய சப்தம் முதலிய விஷயங்களோடு கூடிய நித்திய, நைமித்திக, காம்ய, பிரதிஷித்த கர்மங்களில் பிரயோஜ னம் இல்லை என்று அறிந்து அதில் புத்தியை செலுத்துவதில்லை. செய்கிறேன் என்ற(கர்த்தவ்யதா) புத்தி அவர்களுக்கு இல்லை என்பது பொருள்.
सर्वसङ्कल्पसंन्यासी सर्वान् सङ्कल्पान् इहामुत्रार्थकामहेतून् संन्यसितुं शीलम् अस्य इति सर्वसङ्कल्पसंन्यासी, योगारूढः प्राप्तयोग इत्येतत् , तदा तस्मिन् काले उच्यते ।
இஹலோக பரலோக கர்மங்களுக்கு காரணமான எல்லா சங்கல் பங்களையும் துறப்பது எவனுடைய ஸ்வபாவமாகிறதோ அப்பொழுது அவன் ஸர்வ ஸங்கல்ப ஸிந்நியாஸி. அவனே யோகாரூடன். யோகத்தை அடைந்தவன் என்று கூறப்படுகிறது.
‘सर्वसङ्कल्पसंन्यासी’ इति वचनात् सर्वांश्च कामान् सर्वाणि च कर्माणि संन्यस्येदित्यर्थः ।
ஸர்வசங்கல்ப ஸந்நியாஸி என்று கூறப்பட்டதால், எல்லாக் காமங்க ளையும் மற்றும் எல்லாக் கர்மங்களையும் துறந்து விடு என்பது கருத்து.
सङ्कल्पमूला हि सर्वे कामाः —
ஏனெனில் எல்லாக்காமனைகளுக்கும் சங்கல்பமே காரணம். இவை ஸ்மிருதிகளில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
‘सङ्कल्पमूलः कामो वै यज्ञाः सङ्कल्पसम्भवाः । ’ (मनु. २ । ३) ‘काम जानामि ते मूलं सङ्कल्पात्किल जायसे । न त्वां सङ्कल्पयिष्यामि तेन मे न भविष्यसि’ (मो. ध. १७७ । २५) इत्यादिस्मृतेः ।
காமத்திற்கு மூலகாரணம் சங்கல்பமே, எல்லா யக்ஞங்களும் சங்கல்பத்திலிருந்து உண்டாகின்றன. ஹே! காம! நான் உன்னுடைய மூல காரணத்தை அறிவேன். நீ சந்தேஹமில்லாமல் சங்கல்பத்திலிருந்து தான் தோன்றினாய். ஆகையால் உன்னை சங்கல்பிக்கமாட்டேன். ஆகையால்தான் உன்னை அடைய மாட்டேன் என்று.
सर्वकामपरित्यागे च सर्वकर्मसंन्यासः सिद्धो भवति, ‘स यथाकामो भवति तत्क्रतुर्भवति यत्क्रतुर्भवति तत्कर्म कुरुते’ (बृ. उ. ४ । ४ । ५) इत्यादिश्रुतिभ्यः ; ‘यद्यद्धि कुरुते जन्तुः तत्तत् कामस्य चेष्टितम्’ (मनु. २ । ४) इत्यादिस्मृतिभ्यश्च ।
அவன் எப்பொழுது காமனை உடையவனாகிறானோ அப்பொழுது அதனை செய்யவேண்டியவனாகிறான். எதனை செய்ய வேண்டுபவனாகிறானோ அப்பொழுது கர்மங்களை செய்கின்றான் என்பது முதலிய சுருதியினாலும், ஜீவன் (பிராணி) எந்த எந்த கர்மங்களை செய்கிறானோ அவை எல்லாம் காமனையின் செய்கை என்றல் முதலிய ஸ்மிருதியினாலும் ஸர்வ காமபரித்தியாகத்தினால் சர்வகர்ம சந்நியாசம் சித்திக்கிறது என்று அறிகிறோம்.
न्यायाच्च — न हि सर्वसङ्कल्पसंन्यासे कश्चित् स्पन्दितुमपि शक्तः ।
யுக்தியினாலும் அறிகிறோம். ஏனெனில் எல்லா சங்கல்பங்களை யும் துறந்துவிட்டால் ஒருவரும் அசையக்கூட சக்தி அற்றவர் ஆவர் என்பதால்
तस्मात् ‘सर्वसङ्कल्पसंन्यासी’ इति वचनात् सर्वान् कामान् सर्वाणि कर्माणि च त्याजयति भगवान् ॥ ४ ॥
ஆகையால் எல்லா சங்கல்பங்களையும் துறந்து விடு என்ற பகவானது திருவாக்கினால் எல்லாக் காமனைகளையும் எல்லாக் கர்மங்களையும் துறந்துவிடும் படி உபதேசிக்கிறார் என்பது.
यदा एवं योगारूढः, तदा तेन आत्मा उद्धृतो भवति संसारादनर्थजातात् । अतः —
எப்பொழுது யோகாரூடனாகிறானோ அப்பொழுது அதனால் சகல அனர்த்தங்களுக்கும் காரணமாகிய சம்சாரத்தினின்றும் தான் தன்னாலே (சுத்த அந்தக்கரணத்தினாலே) கடந்தவனாகிறான் ஆகையால்-
उद्धरेदात्मनात्मानं नात्मानमवसादयेत् ।
आत्मैव ह्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मनः ॥ ५ ॥
உத்தரேதாத்மநாத்மானம் நாத்மானமவஸாதயேத் ।
ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத்மைவ ரிபுராத்மன: ॥ 5 ॥
उद्धरेत् संसारसागरे निमग्नम् आत्मना आत्मानं ततः उत् ऊर्ध्वं हरेत् उद्धरेत् , योगारूढतामापादयेदित्यर्थः ।
சம்சாரக்கடலில் மூழ்கின தன்னைத்தானாகவே மேலே தூக்கி யோகாரூட அவஸ்தானத்தை அடையவேண்டும் என்பது பொருள்.
न आत्मानम् अवसादयेत् न अधः नयेत् , न अधः गमयेत् ।
தன்னைக் கீழே மூழ்கிப் போகும்படி செய்யக்கூடாது.
आत्मैव हि यस्मात् आत्मनः बन्धुः । न हि अन्यः कश्चित् बन्धुः, यः संसारमुक्तये भवति । बन्धुरपि तावत् मोक्षं प्रति प्रतिकूल एव, स्नेहादिबन्धनायतनत्वात् । तस्मात् युक्तमवधारणम् ‘आत्मैव ह्यात्मनो बन्धुः’ इति ।
ஏனெனில் ஆத்மா தனக்குத்தானே பந்து. சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்கு தன்னைத்தவிர வேறு பந்து இல்லை. தன்னைத் தவிர மற்றவர்கள் பந்துக்களாய் இருந்தால் ப்ரேமை முதலியவை பந்தத் திற்கு காரணமாவதால் மோக்ஷத்திற்கு பிரதிகூலமாகும். ஆகையால் தனக்குத்தானே பந்து என்று நிச்சயித்துக் கூறப் பட்டது பொருத்தமே.
आत्मैव रिपुः शत्रुः । यः अन्यः अपकारी बाह्यः शत्रुः सोऽपि आत्मप्रयुक्त एवेति युक्तमेव अवधारणम् ‘आत्मैव रिपुरात्मनः’ इति ॥ ५ ॥
அவ்வாறே தனக்குத்தானே விரோதி.தீமைகளைச் செய்பவனால் தன்னைக்காட்டிலும் வெளியில் உள்ள விரோதி எவனோ அவனையும் தனக்குத்தானே பகைவனாய் செய்துகொள்கிறான் என்பதால் தனக்குத்தானே விரோதியாவான் என்று நிச்சயித்துக் கூறப்பட்டதும் பொருத்தமே.
आत्मैव बन्धुः आत्मैव रिपुः आत्मनः इत्युक्तम् । तत्र किंलक्षण आत्मा आत्मनो बन्धुः, किंलक्षणो वा आत्मा आत्मनो रिपुः इत्युच्यते —
தனக்குத்தானே பந்து அவ்வாறே தனக்குத்தானேவிரோதி என்று கூறப்பட்டது. அங்கு தனக்குத்தானே பந்து என்பதின் லக்ஷணம் என்ன? தனக்குத்தானே விரோதி என்பதன் லக்ஷணம் என்ன? என்பதைப் பற்றி கூறுகிறார்.
बन्धुरात्मात्मनस्तस्य येनात्मैवात्मना जितः ।
अनात्मनस्तु शत्रुत्वे वर्तेतात्मैव शत्रुवत् ॥ ६ ॥
பந்துராத்மாத்மநஸ்தஸ்ய யேனாத்மைவாத்மனா ஜித: ।
அநாத்மநஸ்து சத்ருத்வே வர்தேதாத்மைவ சத்ருவத் ॥ 6 ॥
बन्धुः आत्मा आत्मनः तस्य, तस्य आत्मनः स आत्मा बन्धुः येन आत्मना आत्मैव जितः, आत्मा कार्यकरणसङ्घातो येन वशीकृतः, जितेन्द्रिय इत्यर्थः । अनात्मनस्तु अजितात्मनस्तु शत्रुत्वे शत्रुभावे वर्तेत आत्मैव शत्रुवत् , यथा अनात्मा शत्रुः आत्मनः अपकारी, तथा आत्मा आत्मन अपकारे वर्तेत इत्यर्थः ॥ ६ ॥
அந்த ஜீவாத்மா தனக்குத்தானே பந்து. எதனால் எனில் காரியகாரண சங்காதம் (தேஹம், இந்திரியங்களின் சேர்க்கை) என்பனவற்றை ஜெயித்து ஜிதேந்திரியனாய் இருப்பதால் (இந்திரி யங்களை வசம் செய்தவன்) ஆகையால் தனக்குத் தானே பந்து. எவன் ஒருவன் (காரிய, கரண சங்காத) சரீர ரூப ஆத்மாவை வசப்படுத்தவில் லையோ அவனுக்கு தானே (சத்துரு) விரோதி ஆகிறான். ஏன் எனில் பிறர் செய்த தீமைகளை கண்டு விரோத பாவம் இருப்பதால். ஆகையால் தனக்குத்தானே தீமையை செய்து கொள்கிறான்.
जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहितः ।
शीतोष्णसुखदुःखेषु तथा मानापमानयोः ॥ ७ ॥
ஜிதாத்மன: ப்ரசாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித: ।
சீதோஷ்ண-ஸுகதுக்கேஷு ததா மானாபமானயோ: ॥ 7 ॥
जितात्मनः कार्यकरणसङ्घात आत्मा जितो येन सः जितात्मा तस्य जितात्मनः, प्रशान्तस्य प्रसन्नान्तःकरणस्य सतः संन्यासिनः परमात्मा समाहितः साक्षादात्मभावेन वर्तते इत्यर्थः ।
காரியகரணாதி சங்காத ரூப ஆத்மாவை ஜெயித்தவனாயும் அவன் ஜிதாத்மாவாயும், மனதை வென்றவனாயும், தெளிந்த மனது உடையவனாயும் உள்ள சந்நியாசிக்கு பரமாத்ம ஸ்வரூபமானது நிலைத்து நிற்கிறது. அவன் சாக்ஷாத் ஆத்மா பாவத்துடன் இருக்கிறான் என்பது கருத்து.
किञ्च शीतोष्णसुखदुःखेषु तथा माने अपमाने च मानापमानयोः पूजापरिभवयोः समः स्यात् ॥ ७ ॥
அவ்வாறே அவன் சீத, உஷ்ணங்களையும் சுக, துக்கங்களையும் அவ்வாறே மான, அவமானங்களையும் (புகழ்ச்சி இகழ்ச்சிகளையும்) சமமாகப் பார்ப்பான். ( ஆத்மஸ்வரூபமாகவே பார்ப்பான்)
ज्ञानविज्ञानतृप्तात्मा कूटस्थो विजितेन्द्रियः ।
युक्त इत्युच्यते योगी समलोष्टाश्मकाञ्चनः ॥ ८ ॥
ஜ்ஞானவிஞ்ஞானத்ருப்த்தாத்மா கூடஸ்தோ விஜிதேந்த்ரிய: ।
யுக்த இத்யுச்யதே யோகீ ஸமலோஷ்டாச்மகாஞ்சன: ॥ 8 ॥
ज्ञानविज्ञानतृप्तात्मा ज्ञानं शास्त्रोक्तपदार्थानां परिज्ञानम् , विज्ञानं तु शास्त्रतो ज्ञातानां तथैव स्वानुभवकरणम् , ताभ्यां ज्ञानविज्ञानाभ्यां तृप्तः सञ्जातालंप्रत्ययः आत्मा अन्तःकरणं यस्य सः ज्ञानविज्ञानतृप्तात्मा, कूटस्थः अप्रकम्प्यः, भवति इत्यर्थः ; विजितेन्द्रियश्च । य ईदृशः, युक्तः समाहितः इति स उच्यते कथ्यते ।
சாஸ்திரத்தில் கூறப்பட்ட பதத்தின் அர்த்தங்களை அறிந்து கொள்ளுதல் ஞானம் எனப்படும். மேலும் சாஸ்திரத்தில் அறிந்ததை தன்னுடைய அந்தக்கரணத்தில் பிரத்யக்ஷமாக அனுபவித்தல் விக்ஞானம் எனப்படும். இவ்வாறு ஞான, விக்ஞானங்களினால் எவனுடைய அந்தக்கரணம் திருப்தி அடைகிறதோ என்றால் சாஸ்திர அறிவினாலும் அனுபவ அறிவினாலும் திருப்தி பெற்று அந்த ஞான விக்ஞானங்கள் போதும் என்றஎண்ணம் வந்ததோ அந்த மனத்தினன் கூடஸ்த்தன் (சலனம்-அசைவு அற்றவன்) ஆகிறான் என்பது கருத்து.
स योगी समलोष्टाश्मकाञ्चनः लोष्टाश्मकाञ्चनानि समानि यस्य सः समलोष्टाश्मकाञ्चनः ॥ ८ ॥
அவனே மனதை ஜயித்தவன். எவன் இவ்வாறு இருக்கிறானோ அவன் சமாஹிதன் (சமாதியில் இருப்பவன்) என்று கூறப்படுகிறான்.
किञ्च —
மேலும்
सुहृन्मित्रार्युदासीनमध्यस्थद्वेष्यबन्धुषु ।
साधुष्वपि च पापेषु समबुद्धिर्विशिष्यते ॥ ९ ॥
ஸுஹ்ருந்மித்ரார்யுதாஸீனமத்யஸ்தத்வேஷ்யபந்துஷு ।
ஸாதுஸ்வபி ச பாபேஷு ஸமபுத்திர் விசிஷ்யதே ॥ 9 ॥
‘सुहृत्’ इत्यादिश्लोकार्धम् एकं पदम् ।
सुहृद् (சுஹ்ருத்) முதலிய சப்த பதங்கள் பாதி சுலோகத்தின் ஒரு பதமாகும்.
सुहृत् इति प्रत्युपकारमनपेक्ष्य उपकर्ता, मित्रं स्नेहवान् , अरिः शत्रुः, उदासीनः न कस्यचित् पक्षं भजते, मध्यस्थः यो विरुद्धयोः उभयोः हितैषी, द्वेष्यः आत्मनः अप्रियः, बन्धुः सम्बन्धी इत्येतेषु साधुषु शास्त्रानुवर्तिषु अपि च पापेषु प्रतिषिद्धकारिषु सर्वेषु एतेषु समबुद्धिः ‘कः किङ्कर्मा’ इत्यव्यापृतबुद्धिरित्यर्थः । विशिष्यते, ‘विमुच्यते’ इति वा पाठान्तरम् । योगारूढानां सर्वेषाम् अयम् उत्तम इत्यर्थः ॥ ९ ॥
ஸுஹ்ருத் என்றால் பிரதி உபகாரம் எதிர்பாராமல் உதவி செய்பவன். மித்திரன் என்றால் நண்பன். அரி என்றால் விரோதி. உதாசீனன் என்றால் எந்தப்பக்கமும் சேராதவன். மத்யஸ்தன் என்றால் பரஸ்பரம் விரோதிகளாய் இருப்பவர்களின், இருவரிடத் திலும் ஹிதத்தை (நன்மையை) செய்ய விரும்புபவர். த்வேஷ்ய: என்றால் தனக்கு விருப்பம் இல்லாதவன். பந்து என்றால் தன்னுடைய குடும்பத்தினன் என்ற இவர்களும்,சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டதை பின்பற்றுவரர்களிடத்தும், அவ்வாறே சாஸ்திரத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களிடத்தும் சமபுத்தி உடையவன். இவர் யார்? என்ன செய்கிறார்கள்? என்ற விசார புத்தி. இவனுக்கு ஏற்படுவது இல்லை. ஆகையால் அவனே ஸ்ரேஷ்ட்டமானவன் என்பது பொருள். அவன் மோக்ஷமடைகிறான் என்பது மறுபொருள். யோகாரூடர்கள் யாவருள்ளும் இவனே ச்ரேஷ்ட்டன்.
अत एवमुत्तमफलप्राप्तये —
இதன்பின் உத்தமபல பிராப்தியின் பொருட்டு என்ன செய்ய வேண்டும்-
योगी युञ्जीत सततमात्मानं रहसि स्थितः ।
एकाकी यतचित्तात्मा निराशीरपरिग्रहः ॥ १० ॥
யோகீ யுஞ்ஜீத ஸததமாத்மானம் ரஹஸி ஸ்தித: ।
ஏகாகீ யதசித்தாத்மா நிராசீரபரிக்ரஹ: ॥ 10 ॥
योगी ध्यायी युञ्जीत समादध्यात् सततं सर्वदा आत्मानम् अन्तःकरणं रहसि एकान्ते गिरिगुहादौ स्थितः सन् एकाकी असहायः ।
தியானம் செய்பவன் ஒருவருடைய துணையும் இல்லாமல் தனிமையாய் மலையின் குகை முதலியவைகளில் ஏகாந்தமான இடத்தில் இருந்துகொண்டு எப்பொழுதும் தன்னுடைய அந்தக் கரணத்தை தியானத்தில் ஈடுபடுத்தவேண்டும்.
‘रहसि स्थितः एकाकी च’ इति विशेषणात् संन्यासं कृत्वा इत्यर्थः ।
ஏகாந்தத்தில் தனிமையாக இருந்துகொண்டு என்ற விசேஷணங் களால் ஸந்நியாஸம் செய்து (யோகத்தை செய்) என்பது கருத்து.
यतचित्तात्मा चित्तम् अन्तःकरणम् आत्मा देहश्च संयतौ यस्य सः यतचित्तात्मा, निराशीः वीततृष्णः अपरिग्रहः परिग्रहरहितश्चेत्यर्थः । संन्यासित्वेऽपि त्यक्तसर्वपरिग्रहः सन् युञ्जीत इत्यर्थः ॥ १० ॥
சித்தம் என்றால் அந்தக்கரணம் ஆத்மா என்றால் சரீரம், இவ்வி ரண்டையும் வசம் செய்தவன் யதசித்தாத்மா, ஆசையற்றவன். நிராசீ ஒன்றையும் தனக்கென்று ஏற்றுக்கொள்ளாதவன். அபரிக்ரஹ: என்றால் சந்நியாசியாய் இருந்தாலும் உடமைகள் எல்லாவற்றையும் துறந்து யோகத்தை அப்பியாசம் செய்ய வேண்டும் என்பது பொருள்.
अथेदानीं योगं युञ्जतः आसनाहारविहारादीनां योगसाधनत्वेन नियमो वक्तव्यः, प्राप्तयोगस्य लक्षणं तत्फलादि च, इत्यत आरभ्यते । तत्र आसनमेव तावत् प्रथममुच्यते —
பிறகு, இப்பொழுது யோகாப்பியாசம் செய்வதற்கு வேண்டிய யோகத்தின் சாதனங்களான ஆசனம், ஆகாரம், அவர்களுடைய நடவடிக்கை முதலியவற்றின் நியமத்தைக் கூறுதல் வேண்டும். அவ்வாறே யோகத்தை அடைந்த யோகத்தின் லக்ஷணம் அதன் பலன் முதலியவற்றை கூறமுற்படுகையில் முதன்மையான ஆசனத்தை முதலில் கூறுகிறார்.
शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरमासनमात्मनः ।
नात्युच्छ्रितं नातिनीचं चैलाजिनकुशोत्तरम् ॥ ११ ॥
சுசௌ தேசே ப்ரதிஷ்டாப்ய ஸ்திரமாஸனமாத்மன: ।
நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜினகுசோத்தரம் ॥ 11 ॥
शुचौ शुद्धे विविक्ते स्वभावतः संस्कारतो वा, देशे स्थाने प्रतिष्ठाप्य स्थिरम् अचलम् आत्मनः आसनं नात्युच्छ्रितं नातीव उच्छ्रितं न अपि अतिनीचम् , तच्च चैलाजिनकुशोत्तरं चैलम् अजिनं कुशाश्च उत्तरे यस्मिन् आसने तत् आसनं चैलाजिनकुशोत्तरम् । पाठक्रमाद्विपरीतः अत्र क्रमः चैलादीनाम् ॥ ११ ॥
இயற்கையாகவே ஆனாலும், ஸம்ஸ்காரம் முதலியவற்றாலேனும் சுத்தப்படுத்தப்பட்டு, பவித்திரமான ஜனங்களில்லாத ஏகாந்தமான இடத்தில் தன்னுடைய ஆசனத்தை மிகவும் உயரமில்லாமலும் மிகவும் தாழ்வாகவும் இல்லாமல் அதன்மேல் கிரமமாக வஸ்திரம், மான்தோல் மற்றும் தர்ப்பை இவைகளைப் பரப்பி அசைக்க முடியாதபடி அமைக்கவேண்டும். இங்குள்ள பாடக்ரமத்தின்படி மாற்றி அமைக்கவேண்டும். எவ்வாறெனில் முதலில் தர்பை, அதன் மேல் மான்தோல், அதன்மேல் வஸ்திரத்தைப் பரப்பவேண்டும்.
प्रतिष्ठाप्य, किम् ? —
ஆசனத்தை ஸ்திரமாக அமைத்துக்கொண்டு பின்
तत्रैकाग्रं मनः कृत्वा यतचित्तेन्द्रियक्रियः ।
उपविश्यासने युञ्ज्याद्योगमात्मविशुद्धये ॥ १२ ॥
தத்ரைகாக்ரம் மன: க்ருத்வா யதசித்தேந்த்ரியக்ரிய: ।
உபவிச்யாஸநே யுஞ்ஜ்யாத் யோகமாத்மவிசுத்தயே ॥ 12 ॥
तत्र तस्मिन् आसने उपविश्य योगं युञ्ज्यात् ।
அங்கு அந்த ஆசனத்தில் அமர்ந்து யோகாப்பியாசம் செய்யவேண்டும்.
कथम् ? सर्वविषयेभ्यः उपसंहृत्य एकाग्रं मनः कृत्वा यतचित्तेन्द्रियक्रियः चित्तं च इन्द्रियाणि च चित्तेन्द्रियाणि तेषां क्रियाः संयता यस्य सः यतचित्तेन्द्रियक्रियः ।
எவ்வாறு எனில் மனதை எல்லா விஷயங்களிலிருந்தும் இழுத்து ஒருமைப்படுத்தி அவ்வாறேசித்தம் மற்றும் இந்திரியங்களின் கிரியைகளை வென்று யோகாப்பியாசம் (யோகசாதனம்) செய்யவேண் டும். எவருடைய மனம், இந்திரியங்களின் கிரியைகள் அடங்கி விட்டதோ அவன் யதசித்தேந்திரியன் என்று கூறப்படுகிறான்.
स किमर्थं योगं युञ्ज्यात् इत्याह —
அவன் எதன் பொருட்டு யோகாப்பியாசம் செய்கிறான் என்று கூறுகிறார்.
आत्मविशुद्धये अन्तःकरणस्य विशुद्ध्यर्थमित्येतत् ॥ १२ ॥
அந்தக்கரணத்தின் சுத்தியின் பொருட்டு செய்கிறான்.
बाह्यमासनमुक्तम् ; अधुना शरीरधारणं कथम् इत्युच्यते —
வெளியில் ஆசனத்தைப் பற்றி கூறப்பட்டது. இப்பொழுது சரீரத்தை எவ்வாறு வைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறப் போகிறார்.
समं कायशिरोग्रीवं धारयन्नचलं स्थिरः ।
सम्प्रेक्ष्य नासिकाग्रं स्वं दिशश्चानवलोकयन् ॥ १३ ॥
ஸமம் காயசிரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர: ।
ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திசச்சானவலோகயன் ॥ 13 ॥
समं कायशिरोग्रीवं कायश्च शिरश्च ग्रीवा च कायशिरोग्रीवं तत् समं धारयन् अचलं च । समं धारयतः चलनं सम्भवति ; अतः विशिनष्टि — अचलमिति । स्थिरः स्थिरो भूत्वा इत्यर्थः ।
உடம்பு தலை கழுத்து இவைகளை நேராக வைத்துக்கொண்டு அசையாமல் ஸ்திரமாக இருக்கவேண்டும் என்பது பொருள். நேராக இருந்தால் அசைவு ஏற்படும் என்பதால் அசையாமல் என்று விசேஷணம் கூறப்பட்டுள்ளது.
स्वं नासिकाग्रं सम्प्रेक्ष्य सम्यक् प्रेक्षणं दर्शनं कृत्वेव ।
அவ்வாறே தன் மூக்கின் நுனியை அவன் நன்றாகப் பார்ப்பது போல் செய்து
इति इवशब्दो लुप्तो द्रष्टव्यः । न हि स्वनासिकाग्रसम्प्रेक्षणमिह विधित्सितम् ।
இங்கு இவ என்ற சப்தமானது இருந்தும் இல்லாததாக கண்டு கொள்ளவேண்டும். ஏனெனில் தன்னுடைய மூக்கின் நுனி பாகத்தைப் பார்த்தல் என்பது இங்கு அபிப்பிராயம் அல்ல.
किं तर्हि ? चक्षुषो दृष्टिसंनिपातः ।
அப்பொழுது என்னவென்றால் கண்களால் பார்க்கப்படு கின்ற வெளிவிஷயங்களிலிருந்து திருப்புதல்.
स च अन्तःकरणसमाधानापेक्षो विवक्षितः । स्वनासिकाग्रसम्प्रेक्षणमेव चेत् विवक्षितम् , मनः तत्रैव समाधीयेत, नात्मनि ।
அது அந்தக்கரணத்தினுடைய அமைதியைச் சார்ந்து உபதேசிக்கப்பட்டது. தன்னுடைய மூக்கின் நுனியையே பார்க்க வேண்டும் என்று உபதேசித்திருந்ததால் மனதானது அதிலேயே நிலைத்திருக்கும் ஆத்மாவில் அல்ல.
आत्मनि हि मनसः समाधानं वक्ष्यति ‘आत्मसंस्थं मनः कृत्वा’ (भ. गी. ६ । २५) इति । तस्मात् इवशब्दलोपेन अक्ष्णोः दृष्टिसंनिपात एव ‘सम्प्रेक्ष्य’ इत्युच्यते ।
ஆத்மாவினிடத்தில் மனதை நிலைநிறுத்தவேண்டும் என்று கூறப்போகிறார் (ஆத்ம ஸம்ஸ்தம் மன: க்ருத்வா) என்று காண்பிக்கப் போகிறார். ஆகையால் இவ, சப்தமானது இல்லாது இருந்தால் மூக்கின் நுனியைப் பார்த்தல் என்று ஏற்பட்டுவிடும்.
दिशश्च अनवलोकयन् दिशां च अवलोकनमन्तराकुर्वन् इत्येतत् ॥ १३ ॥
இவ்வாறு திருஷ்ட்டியை (பார்த்தல்) மூக்கின் நுனியில் வைத்து அவ்வாறேமற்றதிசைகளில் பார்வையைத் திருப்பாமல் இருக்க வேண்டும் என்று
किञ्च —
மேலும்
प्रशान्तात्मा विगतभीर्ब्रह्मचारिव्रते स्थितः ।
मनः संयम्य मच्चित्तो युक्त आसीत मत्परः ॥ १४ ॥
ப்ரசாந்தாத்மா விகதபீர்ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித: ।
மந: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர: ॥ 14 ॥
प्रशान्तात्मा प्रकर्षेण शान्तः आत्मा अन्तःकरणं यस्य सोऽयं प्रशान्तात्मा, विगतभीः विगतभयः, ब्रह्मचारिव्रते स्थितः ब्रह्मचारिणो व्रतं ब्रह्मचर्यं गुरुशुश्रूषाभिक्षान्नभुक्त्यादि तस्मिन् स्थितः, तदनुष्ठाता भवेदित्यर्थः । किञ्च, मनः संयम्य मनसः वृत्तीः उपसंहृत्य इत्येतत् , मच्चित्तः मयि परमेश्वरे चित्तं यस्य सोऽयं मच्चित्तः, युक्तः समाहितः सन् आसीत उपविशेत् । मत्परः अहं परो यस्य सोऽयं मत्परो ।
நன்றாக சாந்தமடைந்த அந்தக்கரணம் உடையவன் எவனோ அவன் பிரசாந்தாத்மா. பயம் அற்றவன் விகதபீ: பிரஹ்ம்மச்சரிய விரதம் என்றால் குருவிற்கு பணிவிடை, பிக்ஷான்னம் புஜித்தல் முதலியவை. அதிலேயே நிலைத்து அனுஷ்ட்டானம் செய்பவன் (கடைப்பிடிப்பவன்) பிரஹ்ம்மச்சாரி விரதன் என்பது பொருள். மேலும் மனதினுடைய விருத்திகளை அடக்கி பரமேஸ்வரனாகிய என்னிடத் தினே சித்தத்தை வைத்து உள்ளவன் மத்சித்த: அப்படிப்பட்டவன் சமாஹித சித்தத்தை அடைந்து இருக்க வேண்டும். ஆனால் அவன் அவனையே மேலாகக் கருதாமல் என்னையே மேலாக (ஸ்ரேஷ்ட்டமாக) கருதுகிறான். எவன் என்னை தனக்கு மேலாக கருதுகிறானோ அவன் மத்பர:
भवति कश्चित् रागी स्त्रीचित्तः, न तु स्त्रियमेव परत्वेन गृह्णाति ; किं तर्हि ? राजानं महादेवं वा । अयं तु मच्चित्तो मत्परश्च ॥ १४ ॥
காமவிகாரமுடையவன் ஸ்திரீயினிடத்திலேயே சித்தத்தை செலுத்தி இருந்தாலும் அவளை எல்லோரிலும் மேலானவளாக கருதுவதில்லை. ஆனால் அரசனையாவது அல்லது மஹாதேவனை யாவது மேலானவனாகக் கொள்கிறான். ஆனால் இவனோ என்னிடத்திலேயே மனதைச் செலுத்தி என்னையே மேலானவனாகக் கொள்கிறான்.
अथेदानीं योगफलमुच्यते —
பிறகு இப்பொழுது யோகத்தின் பலன் கூறப்படுகிறது.
युञ्जन्नेवं सदात्मानं योगी नियतमानसः ।
शान्तिं निर्वाणपरमां मत्संस्थामधिगच्छति ॥ १५ ॥
யுஞ்ஜந்நேவம் ஸதாத்மானம் யோகீ நியதமானஸ: ।
சாந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தாமதிகச்சதி ॥ 15 ॥
युञ्जन् समाधानं कुर्वन् एवं यतोक्तेन विधानेन सदा आत्मानं सर्वदा योगी नियतमानसः नियतं संयतं मानसं मनो यस्य सोऽयं नियतमानसः, शान्तिम् उपरतिं निर्वाणपरमां निर्वाणं मोक्षः तत् परमा निष्ठा यस्याः शान्तेः सा निर्वाणपरमा तां निर्वाणपरमाम् , मत्संस्थां मदधीनाम् अधिगच्छति प्राप्नोति ॥ १५ ॥
மனதை இவ்வாறு ஒருநிலைப்படுத்தி இதுவரை கூறப்பட்டபடி எப்பொழுதும் மனதை அடக்கி ஆத்மாவினிடத்தில் ஸ்திரமாக வைத்து மோக்ஷமாகிய என் ஸ்தானத்தை அடைந்து சாந்தியை பெறுகிறான்.
इदानीं योगिनः आहारादिनियम उच्यते —
இப்பொழுது யோகிகளின் ஆகாராதி நியமங்கள் கூறப்போகிறார்.
नात्यश्नतस्तु योगोऽस्ति न चैकान्तमनश्नतः ।
न चातिस्वप्नशीलस्य जाग्रतो नैव चार्जुन ॥ १६ ॥
நாத்யச்நதஸ்து யோகோஅஸ்தி ந சைகாந்தமநச்நத: ।
ந சாதி ஸ்வப்னசீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுன ॥ 16 ॥
न अत्यश्नतः आत्मसंमितमन्नपरिमाणमतीत्याश्नतः अत्यश्नतः न योगः अस्ति । न च एकान्तम् अनश्नतः योगः अस्ति । ‘यदु ह वा आत्मसंमितमन्नं तदवति तन्न हिनस्ति यद्भूयो हिनस्ति तद्यत् कनीयोऽन्नं न तदवति’ (श. ब्रा. ? ) इति श्रुतेः ।
ஆகாரத்தை தனக்குத் தேவையான அளவைத் தவிர அதிகமாக உண்பவன் அத்யச்னன், அவ்வாறு தேவையான உணவை உண்ணாமல் அதிகமாகவோ, குறைவாகவோ உண்ணுபவனுக்கு யோகம் கூடுவதில்லை. மேலும்
यदु ह वा आत्मसंमितमन्नं तदवति तन्न हिनस्ति यत्भूयो हिनस्ति तद्यत्कनीयो न तदवति (शतपथ)
(யது ஹ வா ஆத்மஸம்மிதமன்னம் ததவதி தன்ன ஹினஸ்தி தத்யத்கநீயோ ந ததவதி) என்ற சுருதியினால் அறிகிறோம். இதன் பொருள் எவன் அவனுடைய சரீரத்திற்கு ஏற்ற அன்னத்தை உண்கிறானோ அவனை அந்த அன்னம் அவனைக் காப்பாற்றுகிறது. அவனைக் கஷ்ட்டப்படுத்துவதில்லை, எவன் அதிகம் புசிக்கிறானோ அவனையும், குறைவாக புசிப்பவனையும் கஷ்ட்டம் செய்கின்றது என்று கூறப்பட்டுள்ளது.
तस्मात् योगी न आत्मसंमितात् अन्नात् अधिकं न्यूनं वा अश्नीयात् ।
ஆகையால் யோகி தனக்கு தேவையான அளவு அன்னத்தைத் தவிர அதிகமாகவோ, குறைவாகவோ அன்னத்தை உண்ணக்கூடாது.
अथवा, योगिनः योगशास्त्रे परिपठीतात् अन्नपरिमाणात् अतिमात्रमश्नतः योगो नास्ति ।
அல்லாது யோகியானவன் யோக சாஸ்த்திரத்தில் எவ்வளவு அன்னம் புசிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதோ அதைக் காட்டிலும் அதிகமாக உண்பவனுக்கு யோகம் சித்திப்பதில்லை.
उक्तं हि — ‘अर्धं सव्यञ्जनान्नस्य तृतीयमुदकस्य च । वायोः सञ्चरणार्थं तु चतुर्थमवशेषयेत्’ ( ? ) इत्यादिपरिमाणम् ।
அளவு இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அன்னம், காய்கறி முதலா னவை வயிற்றில் பாதிபாகமும், தண்ணீர் கால்பாகமும், மீதமுள்ள கால் பாகத்தை காற்று சஞ்சரிப்பதற்காக காலியாக வைத்திருக்கவேண்டும்.
तथा — न च अतिस्वप्नशीलस्य योगो भवति नैव च अतिमात्रं जाग्रतो भवति च अर्जुन ॥ १६ ॥
ஹே அர்ஜுனா! எவன் அதிகம் தூங்குகின்றானோ அவனுக்கும், எவன் குறைவாக தூங்குகின்றானோ அவனுக்கும் யோகம் சித்திக்காது.
कथं पुनः योगो भवति इत्युच्यते —
மேலும் எவ்வாறு யோகம் சித்திக்கிறது என்பதைக் கூறுகிறார்
युक्ताहारविहारस्य युक्तचेष्टस्य कर्मसु ।
युक्तस्वप्नावबोधस्य योगो भवति दुःखहा ॥ १७ ॥
யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு ।
யுக்த ஸ்வப்னாவபோதஸ்ய யோகோ பவதி து:க்கஹா ॥ 17 ॥
युक्ताहारविहारस्य आह्रियते इति आहारः अन्नम् , विहरणं विहारः पादक्रमः, तौ युक्तौ नियतपरिमाणौ यस्य सः युक्ताहारविहारः तस्य, तथा युक्तचेष्टस्य युक्ता नियता चेष्टा यस्य कर्मसु तस्य, तथा युक्तस्वप्नावबोधस्य युक्तौ स्वप्नश्च अवबोधश्च तौ नियतकालौ यस्य तस्य, युक्ताहारविहारस्य युक्तचेष्टस्य कर्मसु युक्तस्वप्नावबोधस्य योगिनो योगो भवति दुःखहा ।
யோகசாஸ்திரத்தில் கூறப்பட்டபடி அளவான ஆஹாரம், உலாவுதல் இவைகளுடன் கூடினவனாகவும், கர்மங்களையும் (செயல் களையும்) விதிக்கப்பட்ட காலத்தில் நியமமாக செய்பவனும் அவ்வாறே விதிக்கப்பட்ட காலம் வரை தூங்குவதும், விழித்திருப்பதும் கூடியவனோ அப்படிப்பட்ட யோகிக்கு துக்கத்தைப் போக்கக்கூடிய யோகம் சித்திக்கிறது.
दुःखानि सर्वाणि हन्तीति दुःखहा, सर्वसंसारदुःखक्षयकृत् योगः भवतीत्यर्थः ॥ १७ ॥
துக்கங்கள் எல்லாவற்றையும் அழிப்பதால் दुःखहा (துக்கஹா) எல்லா துக்கங்களும் நசிப்பதால் யோகம் ஆகிறது என்பது பொருள்.
अथ अधुना कदा युक्तो भवति इत्युच्यते —
இனி, இப்பொழுது (அவன்) எப்பொழுது யோகத்தை கூடின வனாவான் என்பதை கூறப்போகிறார்.
यदा विनियतं चित्तमात्मन्येवावतिष्ठते ।
निःस्पृहः सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तदा ॥ १८ ॥
யதா விநியதம் சித்தமாத்மன்யேவாவதிஷ்டதே ।
நி:ஸ்ப்ருஹ: ஸர்வகாமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா ॥ 18 ॥
यदा विनियतं विशेषेण नियतं संयतम् एकाग्रतामापन्नं चित्तं हित्वा बाह्यार्थचिन्ताम् आत्मन्येव केवले अवतिष्ठते, स्वात्मनि स्थितिं लभते इत्यर्थः ।
எப்பொழுது சித்தமானது நன்றாக வசப்படுத்தப்பட்டு ஏகாக்ரம் ஆகிற தோ அப்பொழுது பாஹ்ய (வெளி) எண்ணங்களை தொலைத்து தன் ஆத்மாவினிடத்திலேயே சித்தம் நிலைத்திருத்தல் சித்திக்கிறது. தன்னுடைய ஸ்வரூபத்தில் நிலைத்திருத்தலை அடைகிறான்.
निःस्पृहः सर्वकामेभ्यः निर्गता दृष्टादृष्टविषयेभ्यः स्पृहा तृष्णा यस्य योगिनः सः युक्तः समाहितः इत्युच्यते तदा तस्मिन्काले ॥ १८ ॥
எல்லா திருஷ்ட்ட அதிருஷ்ட்ட விஷயங்களில் உள்ள காமனைகளில் ஆசை அற்றயோகிக்கு சமாதி ஏற்படுகிறது (பரமாத் மாவிடத்தில் நிலைத்து இருத்தல் ஏற்படுகிறது)
तस्य योगिनः समाहितं यत् चित्तं तस्योपमा उच्यते —
எந்த யோகிக்கு சமாதியில் நிலைத்த சித்தம் உள்ளதோ அதற்கு உவமை கூறப்படுகிறது.
यदा दीपो निवातस्थो नेङ्गते सोपमा स्मृता ।
योगिनो यतचित्तस्य युञ्जतो योगमात्मनः ॥ १९ ॥
யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா ।
யோகினோ யத-சித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மந: ॥ 19 ॥
यथा दीपः प्रदीपः निवातस्थः निवाते वातवर्जिते देशे स्थितः न इङ्गते न चलति, सा उपमा उपमीयते अनया इत्युपमा योगज्ञैः चित्तप्रचारदर्शिभिः स्मृता चिन्तिता योगिनो यतचित्तस्य संयतान्तःकरणस्य युञ्जतो योगम् अनुतिष्ठतः आत्मनः समाधिमनुतिष्ठत इत्यर्थः ॥ १९ ॥
எவ்வாறு காற்று இல்லாத இடத்தில் வைக்கப்பட்ட தீபமானது அசைவற்று இருக்கிறதோ என்றஉவமை அந்தக்கரணத்தை வசப்படுத்தி சமாதியை அடைந்த யோகி, யோகத்தை அறிபவராய் சித்தத்தின் போக்குகளை பிரத்யக்ஷமாய் காணும் தன்மையுள்ள யோகியின் சித்தத்தைக் குறித்து கூறப்பட்டது.
एवं योगाभ्यासबलादेकाग्रीभूतं निवातप्रदीपकल्पं सत् —
இவ்வாறு யோகாப்பியாச பலத்தால் காற்று அற்ற இடத்தில் வைக்கப்பட்ட தீபம் போல் ஏகாக்ரம் (ஒருமைப்படுத்தப்பட்ட) செய்யப் பட்டதாய்-
यत्रोपरमते चित्तं निरुद्धं योगसेवया ।
यत्र चैवात्मनात्मानं पश्यन्नात्मनि तुष्यति ॥ २० ॥
யத்ரோபரமதே சித்தம் நிருத்தம் யோக ஸேவயா ।
யத்ர சைவாத்ம னாத்மானம் பச்யன்னாத்மனி துஷ்யதி ॥ 20 ॥
यत्र यस्मिन् काले उपरमते चित्तम् उपरतिं गच्छति निरुद्धं सर्वतो निवारितप्रचारं योगसेवया योगानुष्ठानेन, यत्र चैव यस्मिंश्च काले आत्मना समाधिपरिशुद्धेन अन्तःकरणेन आत्मानं परं चैतन्यं ज्योतिःस्वरूपं पश्यन् उपलभमानः स्वे एव आत्मनि तुष्यति तुष्टिं भजते ॥ २० ॥
யோகாப்பியாசத்தால் வசம் செய்யப்பட்டு ஒரு பக்கமும் அசையாத (சஞ்சலமற்ற) சித்தம் எப்பொழுது உபரமம் அடைகிறதோ, எந்த சமயத்தில் சமாதியினால் அந்தக்கரணம் நிர்மலமாகிறதோ அப்பொழுது அந்த அந்தக்கரணத்தினால் பரம சைதன்ய ஜ்யோதி ஸ்வரூபமான ஆத்மாவை சாக்ஷாத்காரம் செய்து தனக்குத்தானே ஆனந்தத்தை அடைகிறான்.
किञ्च —
மேலும்
सुखमात्यन्तिकं यत्तद्बुद्धिग्राह्यमतीन्द्रियम् ।
वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वतः ॥ २१ ॥
ஸுகமாத்யந்திகம் யத்தத் புத்திக்ராஹ்யமதீந்த்ரியம் ।
வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதச்சலதி தத்வத: ॥ 21 ॥
सुखम् आत्यन्तिकं अत्यन्तमेव भवति इत्यात्यन्तिकम् अनन्तमित्यर्थः, यत् तत् बुद्धिग्राह्यं बुद्ध्यैव इन्द्रियनिरपेक्षया गृह्यते इति बुद्धिग्राह्यम् अतीन्द्रियम् इन्द्रियगोचरातीतम् अविषयजनितमित्यर्थः, वेत्ति तत् ईदृशं सुखमनुभवति यत्र यस्मिन् काले, न च एव अयं विद्वान् आत्मस्वरूपे स्थितः तस्मात् नैव चलति तत्त्वतः तत्त्वस्वरूपात् न प्रच्यवते इत्यर्थः ॥ २१ ॥
எந்த சுகத்திற்கு அழிவில்லையோ அது அநந்தசுகம், எந்த சுகமா னது இந்திரியங்களுக்குக் கோச்சரமாகாமல் புத்தியினால் கிரஹிக்கப் பட்ட ஞானத்திற்கு யோக்கியமானதோ, எது இந்திரியங்களுக்கு எப்பொழுது தன் ஸ்வரூபத்திலேயே நிலைத்திருக்கிறானோ அந்த ஞானி பரமார்த்த தத்துவ ஸ்வரூபத்திலிருந்து நழுவமாட்டான்.
किञ्च —
மேலும்
यं लब्ध्वा चापरं लाभं मन्यते नाधिकं ततः ।
यस्मिन्स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते ॥ २२ ॥
யம் லப்த்வா சாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத: ।
யஸ்மின் ஸ்திதோ ந து:கேன குருணாபி விசால்யதே ॥ 22 ॥
यं लब्ध्वा यम् आत्मलाभं लब्ध्वा प्राप्य च अपरम् अन्यत् लाभं लाभान्तरं ततः अधिकम् अस्तीति न मन्यते न चिन्तयति । किञ्च, यस्मिन् आत्मतत्त्वे स्थितः दुःखेन शस्त्रनिपातादिलक्षणेन गुरुणा महता अपि न विचाल्यते ॥ २२ ॥
எந்த ஆத்மலாபத்தை அடைந்தபின் அதைத்தவிர மேலான லாபம் இல்லை என்று அறிந்து வேறு லாபத்தை சிந்திப்பது இல்லையோ, அவ்வாறேஆத்ம தத்துவத்திலேயே நிலைத்த அந்த யோகியை சஸ்திர நிபாதாதி லக்ஷணங்களோடு கூடிய மிகப்பெரிய துக்கங்களானாலும் அசைக்கமுடியாது.
‘यत्रोपरमते’ (भ. गी. ६ । २०) इत्याद्यारभ्य यावद्भिः विशेषणैः विशिष्ट आत्मावस्थाविशेषः योगः उक्तः —
யத்ரோபரமதே, என்று ஆரம்பித்து இதுவரையிலும் கூறப்பட்ட எல்லா விசேஷணங்களுடன் கூடிய ஆத்மாவின் அவஸ்தா விசேஷ ரூப யோகமானது கூறப்பட்டது-
तं विद्याद्दुःखसंयोगवियोगं योगसंज्ञितम् ।
स निश्चयेन योक्तव्यो योगोऽनिर्विण्णचेतसा ॥ २३ ॥
தம் வித்யாத் து:க ஸம்யோகவியோகம் யோகஸம்க்ஞிதம் ।
ஸ நிச்சயேந யோக்தவ்யோ யோகோsநிர்விண்ண சேதஸா ॥ 23 ॥
तं विद्यात् विजानीयात् दुःखसंयोगवियोगं दुःखैः संयोगः दुःखसंयोगः, तेन वियोगः दुःखसंयोगवियोगः, तं दुःखसंयोगवियोगं योग इत्येव संज्ञितं विपरीतलक्षणेन विद्यात् विजानीयादित्यर्थः ।
துக்கத்தை அடைவது துக்க சம்யோகம். அந்த துக்க சம்யோகத் திலிருந்து விடுபடுதல் வியோகம். அந்த துக்க சம்யோகத்தில் வியோகத்தை யோகம் என்று மூடனை புத்திசாலி என்று கூறுவது போல் விபரீத லக்ஷணையினால் அறியவேண்டும் என்பது பொருள்.
योगफलमुपसंहृत्य पुनरन्वारम्भेण योगस्य कर्तव्यता उच्यते निश्चयानिर्वेदयोः योगसाधनत्वविधानार्थम् ।
இதுவரை கூறிய யோகபலத்தை முடித்துவிட்டு இப்பொழுது திடமா கவும் நிச்சயமாகவும் யோகவிஷயத்தில் ருசி உண்டாவதற்காக யோக சாதனத்தைப் பற்றி கூறுவதற்காக மேலும் வேறு ஒரு பிரகாரமாக யோகத்தை அவசியம் அப்பியாசம் செய்யவேண்டும் என்று கூறுகிறார்.
स यथोक्तफलो योगः निश्चयेन अध्यवसायेन योक्तव्यः अनिर्विण्णचेतसा ।
அந்த முன்பு கூறப்பட்ட பலனுடைய யோகி கலங்கிய துக்கம் அற்றமனதினால் உறுதியாக யோகத்தை அனுஷ்ட்டிக்கவேண்டும்.
न निर्विण्णम् अनिर्विण्णम् किं तत् ? चेतः तेन निर्वेदरहितेन चेतसा चित्तेनेत्यर्थः ॥ २३ ॥
எந்த சித்தமானது (மனமானது) கலங்காமல் இருக்கிறதோ அது அநிர்விண்ணசேதஸ், அப்படிப்பட்ட கலங்காத மனத்தினால் திடமாக யோகாப்பியாசம் செய்யவேண்டும் என்பது அபிப்பிராயம்.
किञ्च —
மேலும்
सङ्कल्पप्रभवान्कामांस्त्यक्त्वा सर्वानशेषतः ।
मनसैवेन्द्रियग्रामं विनियम्य समन्ततः ॥ २४ ॥
ஸங்கல்ப ப்ரபாவாந் காமாம்ஸ்த்யக்த்வா ஸர்வானசேஷத: ।
மநஸைவேந்த்ரியக்ராமம் விநியம்ய ஸமந்தத: ॥ 24 ॥
सङ्कल्पप्रभवान् सङ्कल्पः प्रभवः येषां कामानां ते सङ्कल्पप्रभवाः कामाः तान् त्यक्त्वा परित्यज्य सर्वान् अशेषतः निर्लेपेन । किञ्च, मनसैव विवेकयुक्तेन इन्द्रियग्रामम् इन्द्रियसमुदायं विनियम्य नियमनं कृत्वा समन्ततः समन्तात् ॥ २४ ॥
சங்கல்பத்தினால் உண்டான எல்லா காமனைகளையும் மீதம் இல்லாமல் துறந்து, அதில் சிறிதும் பற்றாமல், மேலும் விவேகத்துடன் கூடிய மனதால் இந்திரியக் கூட்டங்களை எல்லா வகையிலும் அடக்கி.
शनैः शनैरुपरमेद्बुद्ध्या धृतिगृहीतया ।
आत्मसंस्थं मनः कृत्वा न किञ्चिदपि चिन्तयेत् ॥ २५ ॥
சனை: சனைருபரமேத் புத்த்யா த்ருதிக்ருஹீதயா ।
ஆத்மஸம்ஸ்தம் மன: க்ருத்வா ந கிஞ்சிதபி சிந்தயேத் ॥ 25 ॥
शनैः शनैः न सहसा उपरमेत् उपरतिं कुर्यात् ।
மெல்ல மெல்ல கிரமமாக உபரதி (அடக்குதல்) செய்யவேண்டும். உடனே அல்ல.
कया, बुद्ध्या । किंविशिष्टया ? धृतिगृहीतया धृत्या धैर्येण गृहीतया धृतिगृहीतया धैर्येण युक्तया इत्यर्थः ।
எதனால்? புத்தியால் எப்படிப்பட்ட புத்தியால்? தைரியத்துடன் கூடிய புத்தியால் என்பது பொருள்.
आत्मसंस्थम् आत्मनि संस्थितम् ‘आत्मैव सर्वं न ततोऽन्यत् किञ्चिदस्ति’ इत्येवमात्मसंस्थं मनः कृत्वा न किञ्चिदपि चिन्तयेत् । एष योगस्य परमो विधिः ॥ २५ ॥
அவ்வாறு மனதை ஆத்மாவில் நிலைபெறச்செய்து என்றால் எல்லாம் ஆத்மாவே, அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை என்று இவ்வாறு ஆத்மாவில் மனதை அசையாமல் செய்து வேறு ஒரு பொருளையும் நினைக்காதே. இதுவே யோகத்தின் மேலான (பரம) விதியாகும்.
तत्र एवमात्मसंस्थं मनः कर्तुं प्रवृत्तो योगी —
இவ்வாறு மனதை ஆத்மாவில் நிலைக்கச் செய்ய பிரவிர்த்திக்கும் யோகி-
यतो यतो निश्चरति मनश्चञ्चलमस्थिरम् ।
ततस्ततो नियम्यैतदात्मन्येव वशं नयेत् ॥ २६ ॥
யதோ யதோ நிச்சரதி மநச்சஞ்சல மஸ்திரம் ।
ததஸ் ததோ நியம்யைததாத்மந்யேவ வசம் நயேத் ॥ 26 ॥
यतो यतः यस्माद्यस्मात् निमित्तात् शब्दादेः निश्चरति निर्गच्छति स्वभावदोषात् मनः चञ्चलम् अत्यर्थं चलम् , अत एव अस्थिरम् , ततस्ततः तस्मात्तस्मात् शब्दादेः निमित्तात् नियम्य तत्तन्निमित्तं याथात्म्यनिरूपणेन आभासीकृत्य वैराग्यभावनया च एतत् मनः आत्मन्येव वशं नयेत् आत्मवश्यतामापादयेत् । एवं योगाभ्यासबलात् योगिनः आत्मन्येव प्रशाम्यति मनः ॥ २६ ॥
எந்த எந்த சப்தாதிகளின் சுவபாவதோஷம் என்றநிமித்தத்தால் மனமானது சஞ்சலிக்கிறது (அலைகிறது). அதனால் ஸ்திரமற்று இருக்கிறது. ஆகையால் அந்த அந்த சப்தாதி கரணங்களின் உண்மையான தத்துவத்தை அறிந்து அதை வைராக்கியத்துடன் அதை ஆபாசமாக (மித்யையாக) பார்த்து அந்த மனதை ஆத்மாவி டத்தில் வசம் ஆக்கவேண்டும். இவ்வாறு யோகாப்யாச பலத்தால் யோகிகள் ஆத்மாவிடத்திலேயே சாந்தி அடைகிறார்கள்.
प्रशान्तमनसं ह्येनं योगिनं सुखमुत्तमम् ।
उपैति शान्तरजसं ब्रह्मभूतमकल्मषम् ॥ २७ ॥
ப்ரசாந்த-மநஸம் ஹ்யேனம் யோகினம் ஸுகமுத்தமம் ।
உபைதி சாந்தரஜஸம் ப்ரஹ்மபூத-மகல்மஷம் ॥ 27 ॥
प्रशान्तमनसं प्रकर्षेण शान्तं मनः यस्य सः प्रशान्तमनाः तं प्रशान्तमनसं हि एनं योगिनं सुखम् उत्तमं निरतिशयम् उपैति उपगच्छति शान्तरजसं प्रक्षीणमोहादिक्लेशरजसमित्यर्थः, ब्रह्मभूतं जीवन्मुक्तम् , ‘ब्रह्मैव सर्वम्’ इत्येवं निश्चयवन्तं ब्रह्मभूतम् अकल्मषं धर्माधर्मादिवर्जितम् ॥ २७ ॥
இவ்வாறு பிரசாந்தமடைந்த மனதுடைய யோகியை நிரதிசய உத்தமமான சுகம் பிராப்தமாகிறது. அவர்களுக்கு மோஹாதி க்லேசங்க ளுக்கு காரணமாகிய ரஜோகுணம் க்ஷணமாகிறது (நீங்குகிறது) பிரஹ்ம்ம பூதம் என்றால் ஜீவன்முக்தன். பிரஹ்மமே எல்லாம் என்று நிச்சயம் செய்தவன் பிரஹ்ம்ம பூதம். கல்மஷங்கள் (அதர்மம்) அற்றவன்.
युञ्जन्नेवं सदात्मानं योगी विगतकल्मषः ।
सुखेन ब्रह्मसंस्पर्शमत्यन्तं सुखमश्नुते ॥ २८ ॥
யுஞ்ஜந்நைவம் ஸதாத்மானம் யோகீ விகதகல்மஷ: ।
ஸுகேன ப்ரஹ்மஸம்ஸ்பர்சமத்யந்தம் ஸுகமச்னுதே ॥ 28 ॥
युञ्जन् एवं यथोक्तेन क्रमेण योगी योगान्तरायवर्जितः सदा सर्वदा आत्मानं विगतकल्मषः विगतपापः, सुखेन अनायासेन ब्रह्मसंस्पर्शं ब्रह्मणा परेण संस्पर्शो यस्य तत् ब्रह्मसंस्पर्शं सुखम् अत्यन्तम् अन्तमतीत्य वर्तत इत्यत्यन्तम् उत्कृष्टं निरतिशयम् अश्नुते व्याप्नोति ॥ २८ ॥
யோகவிஷயத்தில் உள்ள தடைகளற்ற, பாபங்களற்றயோகி முன்பு கூறப்பட்ட கிரமப்படி எப்பொழுதும் சித்தத்தை நிலைநிறுத்தி எளிதாக பிரஹ்ம்ம பிராப்தி ரூப நிரதிசய எல்லாவற்றிலும் மேலான சுகத்தை அனுபவிக்கிறான். பிரஹ்ம்ம பிராப்தியால் எல்லாவற்றிலும் மேலான, முடிவில்லாத (ஆனந்த) சுகத்தை அடைகிறான்.
इदानीं योगस्य यत् फलं ब्रह्मैकत्वदर्शनं सर्वसंसारविच्छेदकारणं तत् प्रदर्श्यते —
இப்பொழுது யோகத்தின் பலனாகிய சம்சாரம் அனைத்தும் நசித்துப் போவதற்கு காரணமாகிய பிரஹ்மாத்ம தர்சனத்தை உபதேசம் செய்கிறார்.
सर्वभूतस्थमात्मानं सर्वभूतानि चात्मनि ।
ईक्षते योगयुक्तात्मा सर्वत्र समदर्शनः ॥ २९ ॥
ஸர்வபூதஸ்தமாத்மானம் ஸர்வபூதானி சாத்மனி ।
ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்சன: ॥ 29 ॥
सर्वभूतस्थं सर्वेषु भूतेषु स्थितं स्वम् आत्मानं सर्वभूतानि च आत्मनि ब्रह्मादीनि स्तम्बपर्यन्तानि च सर्वभूतानि आत्मनि एकतां गतानि ईक्षते पश्यति योगयुक्तात्मा समाहितान्तःकरणः सर्वत्र समदर्शनः सर्वेषु ब्रह्मादिस्थावरान्तेषु विषमेषु सर्वभूतेषु समं निर्विशेषं ब्रह्मात्मैकत्वविषयं दर्शनं ज्ञानं यस्य स सर्वत्र समदर्शनः ॥ २९ ॥
தன் ஆத்மாவை எல்லா பூதங்களிலும் இருப்பதாக காண்கிறான். பிரஹ்ம்மா முதல் ஸ்தம்ப வரையில் உள்ள எல்லாவற்றையும் ஆத்மா வினிடத்தில் ஒன்றாகவே சமாஹித அந்தக்கரணம் உடைய யோகி பார்க்கிறான். அவ்வாறேபிரஹ்ம்மா முதல் ஸ்தாவரம் வரையிலும் வெவ்வேறாக உள்ள எல்லா பூதங்களிடத்தும் வேற்றுமை அற்று சமமான பிரஹ்ம்மாத்மைக்ய விஷயத்தை அறியும் ஞானம் எவனுக்கு இருக்கிறதோ அவன் எங்கும் சமதர்சனமுடையவன்.
एतस्य आत्मैकत्वदर्शनस्य फलम् उच्यते —
இந்த ஆத்ம ஏகத்துவ தர்சனத்தின் பலனைக் கூறுகிறார்-
यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति ।
तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति ॥ ३० ॥
யோ மாம் பச்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பச்யதி ।
தஸ்யாஹம் ந ப்ரணச்யாமி ஸ ச மே ந ப்ரணச்யதி ॥ 30 ॥
यो मां पश्यति वासुदेवं सर्वस्य आत्मानं सर्वत्र सर्वेषु भूतेषु सर्वं च ब्रह्मादिभूतजातं मयि सर्वात्मनि पश्यति, तस्य एवं आत्मैकत्वदर्शिनः अहम् ईश्वरो न प्रणश्यामि न परोक्षतां गमिष्यामि । स च मे न प्रणश्यति स च विद्वान् मम वासुदेवस्य न प्रणश्यति न परोक्षो भवति, तस्य च मम च एकात्मकत्वात् ।
எல்லாவற்றிற்கும் ஆத்மாவாகிய வாசுதேவனாகிய என்னை எங்கும் எல்லா பூதங்களிலும் பார்க்கிறானோ, அவ்வாறேசர்வாத்மா வாகிய என்னிடத்தில் பிரஹ்ம்மா முதலிய பூத வர்க்கங்களை காண்கி றானோ அப்படிப்பட்ட ஆத்ம ஏகத்துவ தர்சனமுடையவனை ஈஸ்வர னாகிய நான் நாசம் செய்யமாட்டேன் என்றால் நான் ப்ரத்யக்ஷம் ஆகாமல் இருக்கமாட்டேன். அவ்வாறே அந்த ஆத்மதர்சீ எனக்கு பரோக்ஷமாக இருக்கமாட்டான். அப்படிப்பட்ட ஆத்மதர்சியினுடைய ஆத்மாவும், என்னுடைய ஆத்மாவும் ஒன்றாக இருப்பதால்
स्वात्मा हि नाम आत्मनः प्रिय एव भवति, यस्माच्च अहमेव सर्वात्मैकत्वदर्शी ॥ ३० ॥
தன்னுடைய ஆத்மாவே தனக்கு பிரியமாகிறது. ஏனெனில் சர்வாத்ம பாவத்தினால் எவன் நன்றாக பார்க்கிறானோ அவனும் நானாகவே ஆகிறேன்.
सर्वभूतस्थितं यो मां भजत्येकत्वमास्थितः ।
सर्वथा वर्तमानोऽपि स योगी मयि वर्तते ॥ ३१ ॥
ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித: ।
ஸர்வதா வர்தமானோஅபி ஸ யோகீ மயி வர்ததே ॥ 31 ॥
इत्येतत् पूर्वश्लोकार्थं सम्यग्दर्शनमनूद्य तत्फलं मोक्षः अभिधीयते । सर्वथा सर्वप्रकारैः वर्तमानोऽपि सम्यग्दर्शी योगी मयि वैष्णवे परमे पदे वर्तते, नित्यमुक्त एव सः, न मोक्षं प्रति केनचित् प्रतिबध्यते इत्यर्थः ॥ ३१ ॥
என்று இவ்வாறு முன் சுலோகார்த்தமாகிய சம்யக்தர்சனத்தை அனுவாதம் செய்து அதன் பலமாகிய மோக்ஷத்தைப் பற்றி விவரிக் கிறார். சம்யக் தர்சியாகிய யோகி எந்தப் பிரகாரமாக இருந்தாலும் எப்பொழுதும் வைஷ்ணவ பரம பதமாகிய என்னிடத்திலேயே இருப்பதால் அவர் நித்யமுக்தரே. மோக்ஷத்தைக் குறித்து எந்த ஒரு பிரதிபந்தமும் ஏற்படாது என்பது பொருள்.
किञ्च अन्यत् —
மேலும் வேறு கூற்று -
आत्मौपम्येन सर्वत्र समं पश्यति योऽर्जुन ।
शुखं वा यदि वा दुःखं स योगी परमो मतः ॥ ३२ ॥
ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பச்யதி யோஅர்ஜுன ।
ஸுகம் வா யதி வா து: கம்ஸ யோகீ பரமோ மத: ॥ 32 ॥
आत्मौपम्येन आत्मा स्वयमेव उपमीयते अनया इत्युपमा तस्या उपमाया भावः औपम्यं ।
தனக்குத்தானே உபமானமாய் இருக்கிறார். உபமானத்தினுடைய பாவம் ஔபம்யம்.
तेन आत्मौपम्येन, सर्वत्र सर्वभूतेषु समं तुल्यं पश्यति यः अर्जुन ।
ஹே! அர்ஜுனா! தனக்குத்தானே ஒப்பாய் இருப்பதால் எங்கும் எல்லா பூதங்களிடத்தும் எவன் சமமாகப் பார்க்கிறானோ
स च किं समं पश्यति इत्युच्यते —
அவன் எவ்வாறு சமமாக பார்க்கிறான் என்று கூறுகிறார்-
यथा मम सुखम् इष्टं तथा सर्वप्राणिनां सुखम् अनुकूलम् । वाशब्दः चार्थे । यदि वा यच्च दुःखं मम प्रतिकूलम् अनिष्टं यथा तथा सर्वप्राणिनां दुःखम् अनिष्टं प्रतिकूलं इत्येवम् आत्मौपम्येन सुखदुःखे अनुकूलप्रतिकूले तुल्यतया सर्वभूतेषु समं पश्यति, न कस्यचित् प्रतिकूलमाचरति, अहिंसक इत्यर्थः ।
தனக்கு சுகம் இஷ்ட்டமோ அவ்வாறு மற்றஎல்லா பிராணிகளுக் கும் சுகத்தில் அநுகூலமாயிருத்தல். துக்கமானது தனக்கு இஷ்ட்ட மில்லையோ அவ்வாறேமற்றபிராணிகளுக்கும் இஷ்டமில்லை பிரதி கூலமாய் இருக்கிறது என்று இவ்வாறு தனக்கு ஒப்பாக சுக துக்கங்க ளில் உள்ள அனுகூல பிரதிகூலங்களை எல்லா பிராணிகளிடத்தும் சமமாகப் பார்க்கிறான். ஒருவருக்கும் பிரதிகூலத்தைச் செய்வ தில்லை. அதனால் அஹிம்சையுடன் கூடியவன் என்பது பொருள்.
यः एवमहिंसकः सम्यग्दर्शननिष्ठः स योगी परमः उत्कृष्टः मतः अभिप्रेतः सर्वयोगिनां मध्ये ॥ ३२ ॥
எவன் இவ்வாறு அஹிம்சையுடன் கூடினவனாயும், சம்யக் தர்சன நிஷ்ட்டனாகவும் இருக்கிறானோ அந்த யோகி எல்லா யோகிகளின் மத்தியில் மிகவும் மேலானவனாக கருதப்படுகிறான்.
एतस्य यथोक्तस्य सम्यग्दर्शनलक्षणस्य योगस्य दुःखसम्पाद्यतामालक्ष्य शुश्रूषुः ध्रुवं तत्प्राप्त्युपायमर्जुन उवाच —
இவ்வாறு கூறப்பட்ட சம்யக் தர்சன லக்ஷணமான யோகத்தை அடைவது மிகக்கடினமானது என்று அறிந்து, அந்த யோகத்தை நிச்சயமாக அடையவேண்டிய உபாயத்தை கேட்க விரும்பிய-
अर्जुन उवाच —
அர்ஜுனன் கேட்டான்.
योऽयं योगस्त्वया प्रोक्तः साम्येन मधुसूदन ।
एतस्याहं न पश्यामि चञ्चलत्वात्स्थितिं स्थिराम् ॥ ३३ ॥
யோஅயம் யோகஸ்-த்வயா ப்ரோக்த: ஸாம்யேன மதுஸூதன ।
ஏதஸ்யாஹம் ந பச்யாமி சஞ்சலத்வாத்ஸ்திதிம் ஸ்திராம் ॥ 33 ॥
यः अयं योगः त्वया प्रोक्तः साम्येन समत्वेन हे मधुसूदन एतस्य योगस्य अहं न पश्यामि नोपलभे, चञ्चलत्वात् मनसः । किम् ? स्थिराम् अचलां स्थितिम् प्रसिद्धमेतत् ॥ ३३ ॥
ஹே மதுசூதனா! சமமாகப் பார்த்தலாகிய எந்த ஒரு யோகமானது உன்னால் கூறப்பட்டதோ மனம் சஞ்சலமாய் இருப்பதால் என்னால் சஞ்சலமற்றஸ்திதியை காணமுடியவில்லை.
चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवद्दृढम् ।
तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम् ॥ ३४ ॥
சஞ்சலம் ஹி மன: க்ருஷ்ண ப்ரமாதி பலவத்த்ருடம் ।
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம் ॥ 34 ॥
चञ्चलं हि मनः । कृष्ण इति कृषतेः विलेखनार्थस्य रूपम् । भक्तजनपापादिदोषाकर्षणात् कृष्णः ।
கிருஷ்ண என்றபதம் க்ருஷ் தாதுவில் இருந்து தோன்றியது. க்ருஷ் என்றதாதுவிற்கு சுரண்டுதல் என்று பொருள். பக்தர்களுடைய பாபம் முதலிய தோஷங்களை நிவிர்த்தி செய்வதால் பகவானுடைய பெயர் கிருஷ்ண எனப்படுகிறது. இங்கு ஹே கிருஷ்ண! என்னுடைய மனமானது சஞ்சலமாயிருக்கிறது. (என்று அர்ஜுனன் கிருஷ்ண என்ற பதத்தை உபயோகிக்கிறார்)
न केवलमत्यर्थं चञ्चलम् , प्रमाथि च प्रमथनशीलम् , प्रमथ्नाति शरीरम् इन्द्रियाणि च विक्षिपत् सत् परवशीकरोति ।
என்னுடைய மனமானது அதிகமான சஞ்சலத்துடன் கூடியதாக மட்டுமல்ல சரீரத்தையும், இந்திரியங்களையும் தடுமாறச்செய்து கலக்குகின்றது. தடுமாற்றமடைந்த இந்திரியங்களைப் பிறவற்றின் வசமாக்குகிறது.
किञ्च बलवत् प्रबलम् , न केनचित् नियन्तुं शक्यम् , दुर्निवारत्वात् । किञ्च — दृढं तन्तुनागवत् अच्छेद्यम् ।
மேலும் அது மிகவும் பலத்துடன் கூடியது. அதை வசப்படுத்த முடியாது. மேலும் மிகத்திடமான தந்துநாகம் எனப்படும் ஜலத்தில் வாழும் ஜீவன்போல் இருக்கும் அதை வெட்டி வீழ்த்த முடியாது.
तस्य एवंभूतस्य मनसः अहं निग्रहं निरोधं मन्ये वायोरिव यथा वायोः दुष्करो निग्रहः ततोऽपि दुष्करं मन्ये इत्यभिप्रायः ॥ ३४ ॥
இவ்வாறுள்ள அந்த மனதை அடக்குதல் என்பது வாயுவை அடக்குதலுக்கு ஒப்பாகும் என்று கருதுகிறேன். எவ்வாறு வாயுவை அடக்குவது கடினமானதோ அதைவிட மனதை அடக்குவது மிகக் கடினமானது என்பது அபிப்பிராயம்.
श्रीभगवानुवाच, एवम् एतत् यथा ब्रवीषि —
எவ்வாறு நீ கூறினாயோ அது இவ்வாறே
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச - கிருஷ்ணபகவான் சொல்வது
असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् ।
अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते ॥ ३५ ॥
அஸம்சயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம் ।
அப்யாஸேன து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே ॥ 35 ॥
असंशयं नास्ति संशयः ‘मनो दुर्निग्रहं चलम्’ इत्यत्र हे महाबाहो । किन्तु अभ्यासेन तु अभ्यासो नाम चित्तभूमौ कस्याञ्चित् समानप्रत्ययावृत्तिः चित्तस्य । वैराग्येण वैराग्यं नाम दृष्टादृष्टेष्टभोगेषु दोषदर्शनाभ्यासात् वैतृष्ण्यम् । तेन च वैराग्येण गृह्यते विक्षेपरूपः प्रचारः चित्तस्य । एवं तत् मनः गृह्यते निगृह्यते निरुध्यते इत्यर्थः ॥ ३५ ॥
ஹே மஹாபாஹோ! மனமானது சஞ்சலத்தன்மை உடையதும், அதை நீக்குவது மிக்க கடினமானது என்பதில் சந்தேஹமில்லை. ஆனால் அப்பியாசத்தினாலும், வைராக்கியத்தினாலும் வசப்படுத்த முடியும். அப்யாசம் என்றால் சித்தத்தில் (மனதில்) ஒரே விதமான எண்ணத்தை திருப்பி திருப்பி செய்து மனதை ஏகாக்ரப் படுத்துதல். வைராக்கியம் என்றால் இஹலோக பரலோக போகங்களில் தோஷதிருஷ்டியை பழகுவதால் அதில் ஆசை அற்று போதல். இவ்வாறு மனமானது வசப்படுத்தப்படுகிறது.
यः पुनः असंयतात्मा, तेन —
மேலும் எவன் மனதை வசப்படுத்தவில்லையோ அதனால்-
असंयतात्मना योगो दुष्प्राप इति मे मतिः ।
वश्यात्मना तु यतता शक्योऽवाप्तुमुपायतः ॥ ३६ ॥
அஸம்யதாத்மனா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி: ।
வச்யாத்மனா து யததா சக்யோஅவாப்துமுபாயத: ॥ 36 ॥
असंयतात्मना अभ्यासवैराग्याभ्यामसंयतः आत्मा अन्तःकरणं यस्य सोऽयम् असंयतात्मा तेन असंयतात्मना योगो दुष्प्रापः दुःखेन प्राप्यत इति मे मतिः ।
அப்பியாசம், வைராக்கியம் இவைகளினால் வசப்படுத்தப்படாத அந்தக்கரணம் எவனுக்கு உள்ளதோ அந்த (அசம்யதா ஆத்மா) அவன் மனம் வசப்படாததினால் மிகவும் கஷ்டப்பட்டு யோகத்தை அடைவான் என்பது என்னுடைய எண்ணம்.
यस्तु पुनः वश्यात्मा अभ्यासवैराग्याभ्यां वश्यत्वमापादितः आत्मा मनः यस्य सोऽयं वश्यात्मा तेन वश्यात्मना तु यतता भूयोऽपि प्रयत्नं कुर्वता शक्यः अवाप्तुं योगः उपायतः यथोक्तादुपायात् ॥ ३६ ॥
மேலும் எவன் அப்பியாச வைராக்கியத்தினால் வசம் செய்யப் பட்ட மனதை உடையவனோ அந்த வச்யாத்மா மறுபடியும் பிரயத்த னம் செய்து யோகத்தை முன்பு கூறப்பட்ட உபாயத்தின் மூலமாக அடையமுடியும்.
तत्र योगाभ्यासाङ्गीकरणेन इहलोकपरलोकप्राप्तिनिमित्तानि कर्माणि संन्यस्तानि, योगसिद्धिफलं च मोक्षसाधनं सम्यग्दर्शनं न प्राप्तमिति, योगी योगमार्गात् मरणकाले चलितचित्तः इति तस्य नाशमशङ्क्य ।
யோகமார்க்கத்தில் பிரவேசித்தவன் இஹலோக, பரலோக பிராப்திக்கு ஸாதனமான கர்மயோகத்தை த்யாகம் செய்துவிட்டான். மேலும் யோகசித்தியின் பலனும், மோக்ஷ பிராப்திக்கு ஏதுவான ஞானமும் பூர்ணமாக ஏற்படவில்லை, அந்த யோகியின் மனம் மரணகாலத்தில் யோகத்தினின்றும் நழுவி, நாசம் ஏற்படுமே என்ற சங்கை செய்து-
अर्जुन उवाच —
அர்ஜுனன் உவாச - அர்ஜுனன் சொல்வது
अयतिः श्रद्धयोपेतो योगाच्चलितमानसः ।
अप्राप्य योगसंसिद्धिं कां गतिं कृष्ण गच्छति ॥ ३७ ॥
அயதி: ச்ரத்தயோபேதோ யோகாச்-சலிதமானஸ: ।
அப்ராப்ய யோக-ஸம்ஸித்திம் காம் கதிம் க்ருஷ்ண கச்சதி॥ 37 ॥
अयतिः अप्रयत्नवान् योगमार्गे श्रद्धया आस्तिक्यबुद्ध्या च उपेतः योगात् अन्तकाले च चलितं मानसं मनो यस्य सः चलितमानसः भ्रष्टस्मृतिः सः अप्राप्य योगसंसिद्धिं योगफलं सम्यग्दर्शनं कां गतिं हे कृष्ण गच्छति ॥ ३७ ॥
ஹே! கிருஷ்ணா! எந்த சாதகன் யோகமார்க்கத்தில் பிரயத்தனம் செய்யவில்லையோ ஆனால் ஆஸ்திக புத்தியுடன் உள்ளானோ, மேலும் மரணகாலத்தில் எவனுடைய மனமானது யோகத்திலிருந்து நழுவிவிட்டதோ அந்த நழுவிய (சஞ்சல) சித்தமுடைய யோகி யோகசித்தியை அதாவது யோகபலமாகிய சம்யக்தர்சனத்தை அடையாமல் எந்த கதிக்கு செல்வான்.
कच्चिन्नोभयविभ्रष्टश्छिन्नाभ्रमिव नश्यति ।
अप्रतिष्ठो महाबाहो विमूढो ब्रह्मणः पथि ॥ ३८ ॥
கச்சிந்நோபய-விப்ரஷ்டச் சிந்நாப்ரமிவ நச்யதி ।
அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண: பதி ॥ 38 ॥
कच्चित् किं न उभयविभ्रष्टः कर्ममार्गात् योगमार्गाच्च विभ्रष्टः सन् छिन्नाभ्रमिव नश्यति, किं वा न नश्यति अप्रतिष्ठो निराश्रयः हे महाबाहो विमूढः सन् ब्रह्मणः पथि ब्रह्मप्राप्तिमार्गे ॥ ३८ ॥
ஹே மஹாபாஹோ! அந்த ஆஸ்ரயமில்லாத - தங்கும் இடம் இல்லாமல் பிரஹ்ம்மத்தை அடையும் மார்க்கத்தில் மோஹமடைந்த புருஷன் கர்மமார்க்கம், யோகமார்க்கம் இவ்விரண்டினின்றும் நழுவி சிதறிய மேகம் போல் நஷ்ட்டமடைவானோ? அல்லது நஷ்ட்டம் அடைவதில்லையா?
एतन्मे संशयं कृष्ण च्छेत्तुमर्हस्यशेषतः ।
त्वदन्यः संशयस्यास्य च्छेत्ता न ह्युपपद्यते ॥ ३९ ॥
ஏதந்மே ஸம்சயம் க்ருஷ்ண சேத்து-மர்ஹஸ்ய சேஷத: ।
த்வதன்ய: ஸம்சயஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே ॥ 39 ॥
एतत् मे मम संशयं कृष्ण च्छेत्तुम् अपनेतुम् अर्हसि अशेषतः । त्वदन्यः त्वत्तः अन्यः ऋषिः देवो वा च्छेत्ता नाशयिता संशयस्य अस्य न हि यस्मात् उपपद्यते न सम्भवति । अतः त्वमेव च्छेत्तुमर्हसि इत्यर्थः ॥ ३९ ॥
என்னுடைய சந்தேஹத்தை அடியோடு போக்குவதற்கு உமக்குத் தான் சாமர்த்தியம் இருக்கிறது. ஏன் எனில் உம்மைத் தவிர ஒரு ரிஷியாவது, தேவனாவது இந்த சந்தேஹத்தைப் போக்க இயலாது. ஆகையால் நீங்கள்தான் இந்த சந்தேஹத்தைப் போக்கவேண்டும் என்பது பொருள்.
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச - பகவான் சொல்வது
पार्थ नैवेह नामुत्र विनाशस्तस्य विद्यते ।
न हि कल्याणकृत्कश्चिद्दुर्गतिं तात गच्छति ॥ ४० ॥
பார்த்த நைவேஹ நாமுத்ர விநாசஸ்-தஸ்ய வித்யதே ।
ந ஹி கல்யாண க்ருத் கச்சித் துர்கதிம் தாத கச்சதி ॥ 40 ॥
हे पार्थ नैव इह लोके नामुत्र परस्मिन् वा लोके विनाशः तस्य विद्यते नास्ति । नाशो नाम पूर्वस्मात् हीनजन्मप्राप्तिः स योगभ्रष्टस्य नास्ति ।
ஹே! பார்த்த! இந்த யோகபிரஷ்டனுக்கு (யோகத்திலிருந்து நழுவியவனுக்கு) இந்த லோகத்திலோ, பரலோகத்திலோ நாசம் என்பது கிடையாது. முந்தின ஜன்மாவைக் காட்டிலும் கீழான ஜன்மத்தின் அடைவே நாசம் எனப்படுகிறது. அந்த நாசம் யோகபிரஷ்ட்டனுக்கு ஏற்படுவதில்லை.
न हि यस्मात् कल्याणकृत् शुभकृत् कश्चित् दुर्गतिं कुत्सितां गतिं हे तात, तनोति आत्मानं पुत्ररूपेणेति पिता तात उच्यते । पितैव पुत्र इति पुत्रोऽपि तात उच्यते । शिष्योऽपि पुत्र उच्यते । यतो न गच्छति ॥ ४० ॥
ஏன் எனில் ஹே! தாத! சுப காரியங்களை செய்பவன் ஒருநாளும் கீழான கதிக்குச் செல்லமாட்டான். தாத, என்று விழித்ததின் காரணம் என்னவெனில் பிதா ஆனவன் புத்திர ரூபமாக விருத்தி அடைகி றான். ஆகையால் பிதா தாத எனப்படுகிறார். அவ்வாறேபிதாவும் புத்திரரூபமாக தோன்றுகிறார். ஆகையால் புத்திரனையும் தாத என்கிறோம். சிஷ்யனும் புத்திரனுக்கு ஒப்பானவன். ஆகையால் அவனையும் தாத என்று கூறுகிறார்.
किं तु अस्य भवति ? —
ஆனால் இவனுக்கு என்ன ஏற்படுகிறது -
प्राप्य पुण्यकृतां लोकानुषित्वा शाश्वतीः समाः ।
शुचीनां श्रीमतां गेहे योगभ्रष्टोऽभिजायते ॥ ४१ ॥
ப்ராப்ய புண்யக்ருதாம் லோகானுஷித்வா சாச்வதீ: ஸமா: ।
சுசீனாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோஅபிஜாயதே ॥ 41 ॥
योगमार्गे प्रवृत्तः संन्यासी सामर्थ्यात् प्राप्य गत्वा पुण्यकृताम् अश्वमेधादियाजिनां लोकान् , तत्र च उषित्वा वासमनुभूय शाश्वतीः नित्याः समाः संवत्सरान् , तद्भोगक्षये शुचीनां यथोक्तकारिणां श्रीमतां विभूतिमतां गेहे गृहे योगभ्रष्टः अभिजायते ॥ ४१ ॥
யோகமார்க்கத்தில் பிரவிர்த்தித்த யோகபிரஷ்ட்ட ஸந்நியாஸி அச்வமேதம் முதலிய யாகங்களைசச் செய்த புண்யவான்களுடைய லோகத்தை அடைந்து அவர்களுடன் வாசம் செய்து அங்கு வெகுகாலம் இருந்து அனுபவித்து பின் போகங்கள் நசித்ததும் சாஸ்திரத்தில் கூறி உள்ளபடி கர்மங்களைச் செய்யும் நன்னடத்தை உடையவர்களாயும், ஸ்ரீமானாயும் உள்ளவர்களுடைய வீட்டில் பிறப்பான். இந்த இடத்தில் யோகபிரஷ்ட்டனை சந்நியாசி என்று கூறப்பட்டுள்ளது.
अथवा योगिनामेव कुले भवति धीमताम् ।
एतद्धि दुर्लभतरं लोके जन्म यदीदृशम् ॥ ४२ ॥
அதவா யோகிநாமேவ குலே பவதி தீமதாம் ।
ஏதத்தி துர்லபதரம் லோகே ஜன்ம யதீத்ருசம் ॥ 42 ॥
अथवा श्रीमतां कुलात् अन्यस्मिन् योगिनामेव दरिद्राणां कुले भवति जायते धीमतां बुद्धिमताम् ।
ஸ்ரீமான்களுடைய குலத்தைத் தவிர வேறான புத்திமான்களாயும், தரித்திரர்களாயும் உள்ள யோகிகளின் குலத்தில் பிறப்பார்கள்.
एतत् हि जन्म, यत् दरिद्राणां योगिनां कुले, दुर्लभतरं दुःखलभ्यतरं पूर्वमपेक्ष्य लोके जन्म यत् ईदृशं यथोक्तविशेषणे कुले ॥ ४२ ॥
எப்பொழுது கூறப்பட்ட விசேஷணங்களுடன் கூடிய குலத்தில் பிறப்பது மிகவும் துர்லபம். முன்பு கூறப்பட்ட ஸ்ரீமான்களுடைய குலத்தில் பிறப்பதைக் காட்டிலும் இந்த தரித்திரர்களான யோகிகளின் குலத்தில் பிறப்பது மிக துர்லபம். (கிடைப்பது அரிது)
यस्मात् —
ஏனெனில்
तत्र तं बुद्धिसंयोगं लभते पौर्वदेहिकम् ।
यतते च ततो भूयः संसिद्धौ कुरुनन्दन ॥ ४३ ॥
தத்ர தம் புத்திஸம்யோகம் லபதே பௌர்வதேஹிகம் ।
யததே ச ததோ பூய: ஸம்ஸித்தௌ குருநந்தன ॥ 43 ॥
तत्र योगिनां कुले तं बुद्धिसंयोगं बुद्ध्या संयोगं बुद्धिसंयोगं लभते पौर्वदेहिकं पूर्वस्मिन् देहे भवं पौर्वदेहिकम् । यतते च प्रयत्नं च करोति ततः तस्मात् पूर्वकृतात् संस्कारात् भूयः बहुतरं संसिद्धौ संसिद्धिनिमित्तं हे कुरुनन्दन ॥ ४३ ॥
யோகிகளுடைய குலத்தில் (பிறந்திருக்கும்பொழுது) பூர்வஜன்ம சரீரத்தில் இருந்த புத்தியின் சம்யோகம் (சேர்க்கை) ஏற்படுகிறது. அதனால் பூர்வ ஜன்மத்தில் செய்த ஸம்ஸ்கார பலத்தால் பூர்ணபலன் ஏற்படுவதற்கு மேலும் அதிகமாக பிரயத்னம் செய்வான்.
कथं पूर्वदेहबुद्धिसंयोग इति तदुच्यते —
முன் சரீரத்தின் புத்தியினுடைய ஸம்யோகம் எவ்வாறு ஏற்படுகிறது? என்பதைக் கூறுகிறார்.
पूर्वाभ्यासेन तेनैव ह्रियते ह्यवशोऽपि सः ।
जिज्ञासुरपि योगस्य शब्दब्रह्मातिवर्तते ॥ ४४ ॥
பூர்வாப்யாஸேன தேனைவ ஹ்ரியதே ஹ்யவசோஅபி ச: ।
ஜிக்ஞாஸுரபி யோகஸ்ய சப்தப்ரஹ்மாதிவர்ததே ॥ 44 ॥
यः पूर्वजन्मनि कृतः अभ्यासः सः पूर्वाभ्यासः, तेनैव बलवता ह्रियते संसिद्धौ हि यस्मात् अवशोऽपि सः योगभ्रष्टः ।
பூர்வஜன்மத்தில் செய்த அப்யாசம் பூர்வாப்யாசம். அந்த அப்யா சத்தின் பலத்தால் யோகப்ரஷ்ட்டனானவன் யோகத்தில் விருப்பம் இல்லாவிட்டாலும் அதில் இழுக்கப்படுகின்றான்.
न कृतं चेत् योगाभ्यासजात् संस्कारात् बलवत्तरमधर्मादिलक्षणं कर्म, तदा योगाभ्यासजनितेन संस्कारेण ह्रियते ; अधर्मश्चेत् बलवत्तरः कृतः, तेन योगजोऽपि संस्कारः अभिभूयत एव ।
யோகாப்யாசத்தால் உண்டான சம்ஸ்காரத்தைக் காட்டிலும் பலமான அதர்மாதி லக்ஷணங்களுடன் கூடிய கர்மத்தைச் செய்யவில்லை எனில் யோகாப்பியாசத்தினால் உண்டான சம்ஸ்கா ரத்தால் இழுக்கப்படுகின்றான். ஆனால் அதர்மம் பலமாக இருந்தால் யோகத்தினாலுண்டான (சம்ஸ்காரம்) அப்பியாசமும் (குறைந்து) மறைந்து போகிறது.
तत्क्षये तु योगजः संस्कारः स्वयमेव कार्यमारभते, न दीर्घकालस्थस्यापि विनाशः तस्य अस्ति इत्यर्थः ।
ஆனால் யோகாப்பியாசத்தால் உண்டான சம்ஸ்காரத்தால் பாபகர் மமானது க்ஷயம் அடைந்தாலும் தன் கார்யத்தை ஆரம்பிக்கவே செய்கி றது. எவ்வளவு காலமானாலும் அதற்கு நாசம் என்பது கிடையாது.
अतः जिज्ञासुरपि योगस्य स्वरूपं ज्ञातुमिच्छन् अपि योगमार्गे प्रवृत्तः संन्यासी योगभ्रष्टः, सामर्थ्यात् सोऽपि शब्दब्रह्म वेदोक्तकर्मानुष्ठानफलम् अतिवर्तते अतिक्रामति अपाकरिष्यति ; किमुत बुद्ध्वा यः योगं तन्निष्ठः अभ्यासं कुर्यात् ॥ ४४ ॥
யோகத்தினுடைய ஜிக்ஞாசு என்றால் எவன் ஒருவன் யோகத்தி னுடைய ஸ்வரூபத்தை அறிவதற்காக யோகமார்க்கத்தில் இருக்கின்ற யோகப்ரஷ்ட்ட சந்நியாசி யோகபலத்தினுடைய சாமர்த்தியத்தால் சப்த பிரஹ்ம்மத்தையும் கடந்துவிடுகிறான். (சப்தப்ரஹ்மம் என்றால் வேதத்தில் கூறப்பட்ட கர்மானுஷ்ட்டானத்தினால் உண்டான பலனைக் கடந்துவிடுகிறான் என்றால் துறந்துவிடுகின்றான்) எவன் யோகத்தை அறிந்து அதில் நிலைத்து அப்பியாசம் செய்கிறானோ அவனைப் பற்றி கூறவும் வேண்டுமோ?
कुतश्च योगित्वं श्रेयः इति —
எந்தக்காரணத்தினால் யோகத்திற்கு மேலான தன்மை கூறப்பட்டுள்ளது.
प्रयत्नाद्यतमानस्तु योगी संशुद्धकिल्बिषः ।
अनेकजन्मसंसिद्धस्ततो याति परां गतिम् ॥ ४५ ॥
ப்ரயத்நாத்யதமானஸ்து யோகீ ஸம்சுத்தகில்பிஷ: ।
அநேகஜன்மஸம்ஸித்தஸ்ததோ யாதி பராம்கதிம் ॥ 45 ॥
प्रयत्नात् यतमानः, अधिकं यतमान इत्यर्थः । तत्र योगी विद्वान् संशुद्धकिल्बिषः विशुद्धकिल्बिषः संशुद्धपापः अनेकजन्मसंसिद्धः अनेकेषु जन्मसु किञ्चित्किञ्चित् संस्कारजातम् उपचित्य तेन उपचितेन अनेकजन्मकृतेन संसिद्धः अनेकजन्मसंसिद्धः ततः लब्धसम्यग्दर्शनः सन् याति परां प्रकृष्टां गतिम् ॥ ४५ ॥
மிகவும் கடினமாக பிரயத்தனத்துடன் சாதனங்களை செய்த வித்வானாகிய யோகி அநேக ஜன்மங்களில் (யோக) சம்ஸ்காரத்தை சிறிது சிறிதாகச் சேர்த்து, அவ்வாறு அநேக ஜன்மங்களில் சேர்த்த யோகசம்ஸ்காரத்தால் பாபமற்று பக்குவமடைந்து சம்யக்தர்சனத்தை (மெய்யறிவை) அடைந்து மேலான கதியை அடைகிறான்.
यस्मादेवं तस्मात् —
எதனால் இவ்வாறோ அதனால்-
तपस्विभ्योऽधिको योगी ज्ञानिभ्योऽपि मतोऽधिकः ।
कर्मिभ्यश्चाधिको योगी तस्माद्योगी भवार्जुन ॥ ४६ ॥
தபஸ்விப்யோஅதிகோ யோகீ ஜ்ஞானிப்யோஅபி மதோஅதிக: ।
கர்மிப்யச்-சாதிகோ யோகீ தஸ்மாத் யோகீ பவார்ஜுன ॥ 46 ॥
तपस्विभ्यः अधिकः योगी, ज्ञानिभ्योऽपि ज्ञानमत्र शास्त्रार्थपाण्डित्यम् , तद्वद्भ्योऽपि मतः ज्ञातः अधिकः श्रेष्ठः इति । कर्मिभ्यः, अग्निहोत्रादि कर्म, तद्वद्भ्यः अधिकः योगी विशिष्टः यस्मात् तस्मात् योगी भव अर्जुन ॥ ४६ ॥
தபஸ்விகளைக் காட்டிலும் யோகி மேலானவன். சாஸ்திரத்தில் பாண்டித்யம் மட்டும் உள்ள ஞானிகளைக் காட்டிலும் மேலானவன். மேலும் அக்னிஹோத்திராதி கர்மங்களைச் செய்பவர்களைக் காட்டிலும் யோகி மேலானவன். ஆகையால் நீ யோகியாகக்கடவாய்.
योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना ।
श्रद्धावान्भजते यो मां स मे युक्ततमो मतः ॥ ४७ ॥
யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மனா ।
ச்ரத்தாவான் பஜதே யோ மாம் ஸ மே யுக்த தமோ மத: ॥ 47 ॥
योगिनामपि सर्वेषां रुद्रादित्यादिध्यानपराणां मध्ये मद्गतेन मयि वासुदेवे समाहितेन अन्तरात्मना अन्तःकरणेन श्रद्धावान् श्रद्दधानः सन् भजते सेवते यो माम् , स मे मम युक्ततमः अतिशयेन युक्तः मतः अभिप्रेतः इति ॥ ४७ ॥
ருத்ரன் ஆதித்யன் முதலிய தேவர்களிடத்தில் தியானத்தோடு இருக்கும் யோகிகளுள் வாசுதேவனாகிய என்னிடத்திலேயே அதிக சிரத்தையுடன் மனதை செலுத்தி என்னையே தொழுகின்றவனே உத் தமமானவன் என்பது என் அபிப்பிராயம்.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये षष्ठोऽध्यायः ॥
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யா யாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே த்யானயோகோ நாம ஷஷ்டோத்யாய:
‘योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना । श्रद्धावान्भजते यो मां स मे युक्ततमो मतः’ (भ. गी. ६ । ४७) इति प्रश्नबीजम् उपन्यस्य, स्वयमेव ‘ईदृशं मदीयं तत्त्वम् , एवं मद्गतान्तरात्मा स्यात्’ इत्येतत् विवक्षुः —
என்று இந்த ஸ்லோகத்தின் மூலமாக ஆறாவது அத்தியா யத்தின் முடிவில் வினாக்களுக்கான காரண பீஜத்தை உபதேசித்து பின்தானே என்னுடைய தத்துவம் இவ்வாறானது, இவ்வாறு என்னிடத்தில் நிலைத்த அந்தராத்மாவாக இரு என்பது முதலிய விஷயங்களை விளக்குவதற்கு இச்சை உள்ளவராய்ப் பகவான் கூறலானார்.
श्रीभगवानुवाच —
பகவான் கூறியது.
मय्यासक्तमनाः पार्थ योगं युञ्जन्मदाश्रयः ।
असंशयं समग्रं मां यथा ज्ञास्यसि तच्छृणु ॥ १ ॥
மய்யாஸக்தமனா: பார்த்த யோகம் யுஞ்ஜந் மதாச்ரய: ।
அஸம்சயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தச்ச்ருணு ॥ 1 ॥
मयि वक्ष्यमाणविशेषणे परमेश्वरे आसक्तं मनः यस्य सः मय्यासक्तमनाः, हे पार्थ योगं युञ्जन् मनःसमाधानं कुर्वन् , मदाश्रयः अहमेव परमेश्वरः आश्रयो यस्य सः मदाश्रयः ।
இனி கூறப்போகும் விசேஷணங்களுடன் கூடிய பரமேஸ்வர னாகிய என்னிடத்திலேயே எவனுடைய மனமானது லயித்திருக்கி றதோ அவன் மய்யாசக்தமனா: மேலும் என்னையே எவன் ஒருவன் ஆச்ரயித்திருக்கிறானோ அவன் மதாச்ரய: ஹே! பார்த்த! இவ்வாறு என்னிடத்திலேயே மனதுடையவனும், என்னையே ஆச்ரயிப்பவ னுமாகி யோகசாதனம் செய்கிறானோ என்றால் என்னையே த்யானம் செய்து கொண்டிருக்கிறான்
यो हि कश्चित् पुरुषार्थेन केनचित् अर्थी भवति स तत्साधनं कर्म अग्निहोत्रादि तपः दानं वा किञ्चित् आश्रयं प्रतिपद्यते। अयं तु योगी मामेव आश्रयं प्रतिपद्यते हित्वा अन्यत् साधनान्तरं मय्येव आसक्तमनाः भवति ।
புருஷார்த்தங்களுள் ஏதோ ஒரு புருஷார்த்தத்தை விரும்பின வன் அதை அடைவதற்காக சாதனரூபமான அக்னிஹோத்ராதி கர்மங்கள், தபஸ், தானம் இவைகளில் ஒன்றை ஆச்ரயிக்கின்றான். ஆனால் இந்த யோகி மற்ற சாதனங்களை விட்டு கேவலம் என் ஒருவனையே ஆச்ரயித்து என்னிடத்திலேயே ஆஸக்த மனது உடையவனாகிறான்.
यः त्वं एवंभूतः सन् असंशयं समग्रं समस्तं विभूतिबलशक्त्यैश्वर्यादिगुणसम्पन्नं मां यथा येन प्रकारेण ज्ञास्यसि संशयमन्तरेण ‘एवमेव भगवान्’ इति, तत् शृणु उच्यमानं मया ॥ १ ॥
எந்த நீ முற்கூறியபடி இருந்துகொண்டு எல்லா விபூதி, பலம், சக்தி, ஐஸ்வர்யம் முதலியவைகளை உடைய பரமேச்வரனாகிய என்னை, பகவான் இப்படித்தான் இருக்கிறார் என்று எவ்வித சந்தேஹமுமில்லாமல் அறிவாயோ அதனைக் கூறுகிறேன் கேள்.
तच्च मद्विषयम् —
அது என்னைப் பற்றிய விஷயம் (ஞானம்)
ज्ञानं तेऽहं सविज्ञानमिदं वक्ष्याम्यशेषतः ।
यज्ज्ञात्वा नेह भूयोऽन्यज्ज्ञातव्यमवशिष्यते ॥ २ ॥
ஞானம் தேஅஹம் ஸவிக்ஞானமிதம் வக்ஷ்யாம்யசேஷத: ।
யஜ்ஞாத்வா நேஹ பூயோ அந்யஜ்ஞாதவ்யமவசிஷ்யதே ॥ 2 ॥
ज्ञानं ते तुभ्यम् अहं सविज्ञानं विज्ञानसहितं स्वानुभवयुक्तम् इदं वक्ष्यामि कथयिष्यामि अशेषतः कार्‌त्स्न्येन ।
விக்ஞானத்துடன் கூடிய அதாவது ஸ்வாநுபவத்துடன் கூடிய ஞானத்தை மிச்சமில்லாமல் முழுமையாக உனக்கு நான் கூறுகிறேன்.
तत् ज्ञानं विवक्षितं स्तौति श्रोतुः अभिमुखीकरणाय ।
கேட்பவன் (சிரவணம் செய்பவனை) அதில் ஞானத்தில் நன்றாக ஈடுபடுத்துவதற்காக விளக்கப்பட்ட (உபதேசிக்கப்பட்ட) ஞானத்தைப் புகழ்கிறார்.
यत् ज्ञात्वा यत् ज्ञानं ज्ञात्वा न इह भूयः पुनः अन्यत् ज्ञातव्यं पुरुषार्थसाधनम् अवशिष्यते नावशिष्टं भवति । इति मत्तत्त्वज्ञो यः, सः सर्वज्ञो भवतीत्यर्थः । अतो विशिष्टफलत्वात् दुर्लभं ज्ञानम् ॥ २ ॥
எந்த ஞானத்தை அறிந்ததால் மறுபடியும் இங்கு அறிய வேண்டிய புருஷார்த்த சாதனம் மிச்சமாய் இல்லையோ என்று புகழ்கிறார். எவன் என்னுடைய தத்துவத்தை முழுமையாக அறிந்த வனோ அவன் சர்வக்ஞன் என்று பொருள். ஆகையால் ஞானமானது உத்தமபலனை உடையதால் அடைவது மிக்க கடினம்.
कथमित्युच्यते —
எப்படி என்பதைக் கூறுகிறார்.
मनुष्याणां सहस्रेषु कश्चिद्यतति सिद्धये ।
यततामपि सिद्धानां कश्चिन्मां वेत्ति तत्त्वतः ॥ ३ ॥
மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கச்சித் யததி ஸித்தயே ।
யததாமபி ஸித்தானாம் கச்சின்-மாம் -வேத்தி தத்வத: ॥ 3 ॥
मनुष्याणां मध्ये सहस्रेषु अनेकेषु कश्चित् यतति प्रयत्नं करोति सिद्धये सिद्ध्यर्थम् । तेषां यततामपि सिद्धानाम् , सिद्धा एव हि ते ये मोक्षाय यतन्ते, तेषां कश्चित् एव हि मां वेत्ति तत्त्वतः यथावत् ॥ ३ ॥
ஆயிரக்கணக்கான அநேக மனிதர்களுள் ஒருவன் மோக்ஷம் அடைவதற்காக பிரயத்னம் செய்கிறான். எவர்கள் மோக்ஷத்திற்காக பிரயத்னம் செய்கிறார்களோ அவர்கள் சித்தர்கள், (என்றால் அடைந் தவர்களைஅடைந்தவர்கள் என்று கூறுவதின் கருத்து அடையப்போ கிறவர்களை அடைந்தவர்கள் என்று உபசாரமாகக் கூறுதல்). பிரயத் னம் செய்த சித்தர்களுள் எவனோ ஒருவன்தான் என்னை உள்ளபடி அறிகிறான்.
श्रोतारं प्ररोचनेन अभिमुखीकृत्याह —
கேட்பவனை உற்சாகப்படுத்தப்பட்டதால் கேட்பதிலேயே மனதை ஒருமுகப்படுத்தி கூறுகின்றார்-
भूमिरापोऽनलो वायुः खं मनो बुद्धिरेव च ।
अहङ्कार इतीयं मे भिन्ना प्रकृतिरष्टधा ॥ ४ ॥
பூமிராபோஅநலோ வாயு: கம் மநோ புத்திரேவ ச ।
அஹங்கார இதீயம் மே பின்னா ப்ரக்ருதிரஷ்டதா ॥ 4 ॥
भूमिः इति पृथिवीतन्मात्रमुच्यते, न स्थूला, ‘भिन्ना प्रकृतिरष्टधा’ इति वचनात् । तथा अबादयोऽपि तन्मात्राण्येव उच्यन्ते ।
(பின்னா பிரகிருதி அஷ்டதா) என்று கூறியதால் இங்கு பூமி என்றால் பிருத்வீ தன் மாத்திரை ஸ்தூல பிருதிவீ அல்ல. அவ்வாறே ஜலம் முதலிய மற்ற பூதங்களும் தன்மாத்திரைகள் என்று கூறப்படுகிறது.
आपः अनलः वायुः खम् । मनः इति मनसः कारणमहङ्कारो गृह्यते । बुद्धिः इति अहङ्कारकारणं महत्तत्त्वम् । अहङ्कारः इति अविद्यासंयुक्तमव्यक्तम् ।
ஜலம், அக்னி, வாயு, ஆகாயம் என்ற தன்மாத்திரைகள் (சூக்ஷ்ம பூதங்கள் மனம் என்பதை அஹங்காரம் என்று கிரஹிக்க வேண்டும். புத்தி என்பது அஹங்காரத்தின் காரணமாகிய மஹத் தத்துவம். அஹங்காரம் என்பது அவித்யையுடன் கூடிய அவ்யக்தம் எனப்படும் மூலப்பிரகிருதி.
यथा विषसंयुक्तमन्नं विषमित्युच्यते, एवमहङ्कारवासनावत् अव्यक्तं मूलकारणमहङ्कार इत्युच्यते, प्रवर्तकत्वात् अहङ्कारस्य । अहङ्कार एव हि सर्वस्य प्रवृत्तिबीजं दृष्टं लोके ।
எவ்வாறு விஷத்துடன் கூடிய அன்னத்தை விஷம் என்கிறோ மோ, அவ்வாறே அஹங்காரத்தின் வாசனைகளுடன் கூடிய அவ்யக் தத்தை அதாவது மூலப்பிரகிருதியையும் அஹங்காரம் என்ற பெயரால் குறிப்பிடுகிறோம். ஏனெனில் அஹங்காரமே எல்லாவற்றையும் பிரவிருத்திக்கச் செய்கிறது. சம்சாரத்தில் அஹங்காரமே எல்லா பிரவி ருத்திக்கும் காரணமாக (பீஜமாக) காணப்படுகிறது.
इतीयं यथोक्ता प्रकृतिः मे मम ऐश्वरी मायाशक्तिः अष्टधा भिन्ना भेदमागता ॥ ४ ॥
இவ்விதமாக முன்பு கூறப்பட்ட பிரகிருதியானது என்னுடைய ஈஸ்வரீ என்றால் மாயசக்தி எட்டுவிதமாக வேறுபாட்டை அடைந் துள்ளது. (விபாகம் செய்யப்பட்டுள்ளது.)
अपरेयमितस्त्वन्यां प्रकृतिं विद्धि मे पराम् ।
जीवभूतां महाबाहो ययेदं धार्यते जगत् ॥ ५ ॥
அபரேயமிதஸ்த்வன்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம் ।
ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் ॥ 5 ॥
अपरा न परा निकृष्टा अशुद्धा अनर्थकरी संसारबन्धनात्मिका इयम् ।
கூறப்பட்ட இந்த பிரகிருதியானது மேலானதன்று, மிகவும் கீழான து, அசுத்தமானது மேலும் அநர்த்தத்திற்கு காரணமாகிறது. இவ்வாறு சம்சார பந்தத்தை ஏற்படுத்துகிறது.
इतः अस्याः यथोक्तायाः तु अन्यां विशुद्धां प्रकृतिं मम आत्मभूतां विद्धि मे परां प्रकृष्टां जीवभूतां क्षेत्रज्ञलक्षणां प्राणधारणनिमित्तभूतां हे महाबाहो, यया प्रकृत्या इदं धार्यते जगत् अन्तः प्रविष्टया ॥ ५ ॥
ஹே! மஹா பாஹோ! முன்பு கூறப்பட்ட பிரகிருதியைக் காட்டி லும் வேறான பரிசுத்தமான பிரகிருதி என்னுடைய ஆத்மாவாக உள் ளது என்று அறி. ஜீவரூபம் என்றால் பிராணனை தரிப்பதற்கு நிமித்த மாயுள்ள க்ஷேத்ரக்ஞரூபமாயுள்ள பரா பிரகிருதி எல்லாவற்றின் உள் ளும் பிரவேசித்து அந்த பிரகிருதியினால் இந்த எல்லா ஜகத்தும் தாங் கப்பட்டுள்ளது. இந்த (மேலான) பரா பிரகிருதியை என்னுடைய ஆத்ம ரூப மேலான பரிசுத்தமான பிரகிருதி என்று அறி.
एतद्योनीनि भूतानि सर्वाणीत्युपधारय ।
अहं कृत्स्नस्य जगतः प्रभवः प्रलयस्तथा ॥ ६ ॥
ஏதத்யோநீனி பூதானி ஸர்வாணீத்யுபதாரய ।
அஹம் க்ருத்ஸ்னஸ்ய ஜகத: ப்ரபவ: ப்ரலயஸ்ததா ॥ 6 ॥
एतद्योनीनि एते परापरे क्षेत्रक्षेत्रज्ञलक्षणे प्रकृती योनिः येषां भूतानां तानि एतद्योनीनि, भूतानि सर्वाणि इति एवम् उपधारय जानीहि ।
இந்த க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞன் என்ற பரா, அபரா என்ற இந்த இரண்டு பிரகிருதிகளும் பூதங்களுக்கெல்லாம் பிறப்பிடமாக இருக்கிறது என்று அறி.
यस्मात् मम प्रकृती योनिः कारणं सर्वभूतानाम् अतः अहं कृत्स्नस्य समस्तस्य जगतः प्रभवः उत्पत्तिः प्रलयः विनाशः तथा, प्रकृतिद्वयद्वारेण अहं सर्वज्ञः ईश्वरः जगतः कारणमित्यर्थः ॥ ६ ॥
ஏனெனில் என்னுடைய இரண்டு பிரகிருதிகளும் எல்லா பூதங்க ளுக்கும் காரணம். ஆகையால் நான் ஜகத் எல்லாவற்றினுடைய உத்பத்தி, நாசமாயும் இருக்கிறேன். அவ்வாறே இந்த இரண்டு பிரகிருதி யின் மூலமாக நான் சர்வக்ஞன், ஜகத்திற்கு காரணமானவன் என்று பொருள்.
यतः तस्मात् —
எதனாலோ அதனால்-
मत्तः परतरं नान्यत्किञ्चिदस्ति धनञ्जय ।
मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव ॥ ७ ॥
மத்த: பரதரம் நான்யத்கிஞ்சிதஸ்தி தனஞ்ஜய ।
மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ ॥ 7 ॥
मत्तः परमेश्वरात् परतरम् अन्यत् कारणान्तरं किञ्चित् नास्ति न विद्यते, अहमेव जगत्कारणमित्यर्थः।
பரமேச்வரனாகிய என்னைக் காட்டிலும் மேலான காரணம் சிறி தும் இல்லை. நானே ஜகத்திற்கு காரணம் என்பது பொருள்.
हे धनञ्जय । यस्मादेवं तस्मात् मयि परमेश्वरे सर्वाणि भूतानि सर्वमिदं जगत् प्रोतं अनुस्यूतम् अनुगतम् अनुविद्धं ग्रथितमित्यर्थ । दीर्घतन्तुषु पटवत् सूत्रे च मणिगणा इव ॥ ७ ॥
ஹே தனஞ்ஜய! எதனால் இவ்வாறோ அதனால் எல்லாப் பிராணிகளும், இந்த ஜகத் முழுவதும் பரமேச்வரனாகிய என்னிடத் தில் நீண்ட நூல்களில் ஆடைகள் உள்ளது போலவும் நூலில் ரத்தினங்கள் கோர்க்கப்பட்டது போலவும் பிணைத்து, ஊடுருவி, கோர்க்கப்பட்டுள்ளது.
केन केन धर्मेण विशिष्टे त्वयि सर्वमिदं प्रोतमित्युच्यते —
எந்த, எந்த விசேஷதர்மங்களுடைய உங்களிடத்தில் இவை எல்லாம் கோர்க்கப்பட்டிருக்கிறது என்பதை குறித்துக் கூறுகிறார்-
रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशिसूर्ययोः ।
प्रणवः सर्ववेदेषु शब्दः खे पौरुषं नृषु ॥ ८ ॥
ரஸோ அஹமப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி சசிஸூர்யயோ: ।
ப்ரணவ: ஸர்வவேதேஷு சப்த: கே பௌருஷம் ந்ருஷு ॥ 8 ॥
रसः अहम् , अपां यः सारः स रसः, तस्मिन् रसभूते मयि आपः प्रोता इत्यर्थः। एवं सर्वत्र ।
நீரினுள் எது சாரமோ அது ரசம் (அவை) அந்த ரச பூதமான என்னிடத்தில் நீரானது கோர்க்கப்பட்டுள்ளது. என்பது பொருள். இவ்வாறு எல்லா இடங்களிலும் அறிந்து கொள்ள வேண்டும்.
यथा अहम् अप्सु रसः, एवं प्रभा अस्मि शशिसूर्ययोः । प्रणवः ओङ्कारः सर्ववेदेषु, तस्मिन् प्रणवभूते मयि सर्वे वेदाः प्रोताः ।
எவ்வாறு நான் நீரில் ரசமாய் (சுவையாய்) இருப்பது போல் சந்தி ரன், சூரியன் இவர்களிடம் உள்ள ஒளியாக இருக்கிறேன். எல்லா வேதங்களின் உள்ளும் ஓங்காரமாக இருக்கிறேன். அந்த ஓங்காரமாய் உள்ள என்னிடத்து எல்லா வேதங்களும் கோர்க்கப்பட்டிருக்கின்றன.
तथा खे आकाशे शब्दः सारभूतः, तस्मिन् मयि खं प्रोतम् ।
அவ்வாறே ஆகாசத்தில் சப்தமானது சாரபூதமாக இருக்கிறது. அந்த சப்தரூபமான என்னிடத்தில் ஆகாயம் கோர்க்கப்பட்டுள்ளது.
तथा पौरुषं पुरुषस्य भावः पौरुषं यतः पुम्बुद्धिः नृषु, तस्मिन् मयि पुरुषाः प्रोताः ॥ ८ ॥
அவ்வாறே மனிதர்களுள் மனிதத்தன்மை உள்ளவனாய் இருக்கிறேன். எந்த தன்மையை வைத்து மனிதனை மனிதன் என்று அறிகிறோமோ அந்த தன்மை நானே. அந்த மனிதத்தன்மை ரூபமான என்னிடத்தில் (பரமேச்வரனிடத்தில்) மனிதர்கள் கோர்க்கப் பட்டிருக்கிறார்கள்.
पुण्यो गन्धः पृथिव्यां च तेजश्चास्मि विभावसौ ।
जीवनं सर्वभूतेषु तपश्चास्मि तपस्विषु ॥ ९ ॥
புண்யோ கந்த: ப்ருதிவ்யாம் ச தேஜச்சாஸ்மி விபாவஸௌ ।
ஜீவனம் ஸர்வபூதேஷு தபச்சாஸ்மி தபஸ்விஷு ॥ 9 ॥
पुण्यः सुरभिः गन्धः पृथिव्यां च अहम् तस्मिन् मयि गन्धभूते पृथिवी प्रोता ।
பூமியில் (நிலத்தில்) நான் நறுமணமாக இருக்கிறேன். அந்த மணமாக உள்ள என்னிடத்தில் பூமி கோர்க்கப்பட்டுள்ளது.
पुण्यत्वं गन्धस्य स्वभावत एव पृथिव्यां दर्शितम् अबादिषु रसादेः पुण्यत्वोपलक्षणार्थम् ।
நீர் முதலியவைகளில் உள்ள சுவை முதலியவைகளின் (பவித்திர) நல்ல தன்மையை உணர்த்துவதற்காக மனத்தினுடைய ஸ்வபாவமான நல்ல தன்மையை நிலத்தில் எடுத்துக் காட்டப்பட்டது.
अपुण्यत्वं तु गन्धादीनाम् अविद्याधर्माद्यपेक्षं संसारिणां भूतविशेषसंसर्गनिमित्तं भवति ।
மனம், சுவை முதலியவைகளில் தீயத்தன்மை ஏற்படும். எவ்வாறெனில் சம்சாரத்தில் உள்ள மனிதர்களுக்கு (புருஷர் களுக்கு) அக்ஞானம், பாபம் முதலியவைகளை அபேக்ஷித்தும் (அனு சரித்தும்) அவ்வாறே பூத விசேஷங்களின் சேர்க்கை களினாலும் ஏற்படுகிறது.
तेजश्च दीप्तिश्च अस्मि विभावसौ अग्नौ । तथा जीवनं सर्वभूतेषु, येन जीवन्ति सर्वाणि भूतानि तत् जीवनम् । तपश्च अस्मि तपस्विषु, तस्मिन् तपसि मयि तपस्विनः प्रोताः ॥ ९ ॥
நான் அக்னியில் ஒளியாக இருக்கிறேன். அவ்வாறே எல்லாப்பி ராணிகளும் எதனால் ஜீவிக்கின்றனவோ அந்த ஜீவனமாகவும் நான் இருக்கின்றேன். தபஸ்விகளுள் நான் தபஸாக இருக்கிறேன். தபஸ்வரூபமான பரமாத்மாவாகிய என்னிடத்தில் தபஸ்விகள் கோர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
बीजं मां सर्वभूतानां विद्धि पार्थ सनातनम् ।
बुद्धिर्बुद्धिमतामस्मि तेजस्तेजस्विनामहम् ॥ १० ॥
பீஜம் மாம் ஸர்வபூதானாம் வித்தி பார்த்த ஸனாதனம் ।
புத்திர்புத்திமதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம் ॥ 10 ॥
बीजं प्ररोहकारणं मां विद्धि सर्वभूतानां हे पार्थ सनातनं चिरन्तनम् । किञ्च, बुद्धिः विवेकशक्तिः अन्तःकरणस्य बुद्धिमतां विवेकशक्तिमताम् अस्मि, तेजः प्रागल्भ्यं तद्वतां तेजस्विनाम् अहम् ॥ १० ॥
பீஜம்- (வித்து) என்றால் முளைப்பதற்குக் காரணமாயிருக்கிறது. ஹே! பார்த்தா! என்னை எல்லா பூதங்களுக்கும் சாஸ்வதமான பீஜமாக என்றால் மூலகாரணமாக அறி. புத்திசாலிகளுள் புத்திசாலியாக இருக்கிறேன் என்றால் விவேக சக்தியாக இருக்கிறேன் என்று பொருள். தேஜஸ்விகளுள் என்றால் வீரம் நிறைந்தவர்களுள் வீரமாக இருக்கிறேன்.
बलं बलवतां चाहं कामरागविवर्जितम् ।
धर्माविरुद्धो भूतेषु कामोऽस्मि भरतर्षभ ॥ ११ ॥
பலம் பலவதாம் சாஹம் காமராகவிவர்ஜிதம் ।
தர்மாவிருத்தோ பூதேஷு காமோ அஸ்மி பரதர்ஷப ॥ 11 ॥
बलं सामर्थ्यम् ओजो बलवताम् अहम् । तच्च बलं कामरागविवर्जितम् ।
சாமர்த்தியம் உள்ளவர்களுள் சாமர்த்தியமாக இருக்கிறேன் அந்த சாமர்த்தியம் காமமும், ராகமுமற்றது.
कामश्च रागश्च कामरागौ — कामः तृष्णा असंनिकृष्टेषु विषयेषु, रागो रञ्जना प्राप्तेषु विषयेषु — ताभ्यां कामरागाभ्यां विवर्जितं देहादिधारणमात्रार्थं बलं सत्त्वमहमस्मि ; न तु यत्संसारिणां तृष्णारागकारणम् ।
கிடைக்காத விஷயங்களில் உள்ள ஆசை காமமாகும். கிடைத்த விஷயங்களில் உள்ள ருசி ராகமாகும். இவை இரண்டும் அற்றுதேஹாதிகளை தாங்குவதற்கு மாத்திரம் உள்ள சாமர்த்தியமாக இருக் கிறேன். ஆனால் சம்சாரிகளுடைய ஆசைக்கும், பற்றுக்கும் (ராகத் திற்கும்) காரணமான சாமர்த்தியம் எதுவோ அது அல்ல.
किञ्च — धर्माविरुद्धः धर्मेण शास्त्रार्थेन अविरुद्धो यः प्राणिषु भूतेषु कामः, यथा देहधारणमात्राद्यर्थः अशनपानादिविषयः, स कामः अस्मि हे भरतर्षभ ॥ ११ ॥
ஹே பரதர்ஷப ! மேலும் பிராணிகளிடத்து உள்ள தர்மத்திற்கு விரோதமில்லாத சாஸ்திரத்திற்கு அனுகூலமான காமம் (ஆசை) எதுவோ அது தேஹத்தை தாங்குவதற்காக உள்ள சாப்பிடுதல், நீர் குடித்தல் முதலிய விஷயங்களில் உள்ள காமமாகும். அந்த காமமாக நான் இருக்கிறேன்.
किञ्च —
மேலும்
ये चैव सात्त्विका भावा राजसास्तमसाश्च ये ।
मत्त एवेति तान्विद्धि न त्वहं तेषु ते मयि ॥ १२ ॥
யே சைவ சாத்விகா பாவா ராஜஸாஸ்தாமஸாச்ச யே ।
மத்த ஏவேதி தான்வித்தி ந த்வஹம் தேஷு தே மயி ॥ 12 ॥
ये चैव सात्त्विकाः सत्त्वनिर्वृत्ताः भावाः पदार्थाः, राजसाः रजोनिर्वृत्ताः, तामसाः तमोनिर्वृत्ताश्च, ये केचित् प्राणिनां स्वकर्मवशात् जायन्ते भावाः, तान् मत्त एव जायमानान् इति एवं विद्धि सर्वान् समस्तानेव ।
எவை சாத்வீகமோ அவை சத்வகுணத்தினாலுண்டான பாவபதார்த்தங்கள். ராஜஸம் என்பது ரஜோகுணத்தினால் ஆனது. தாமசம் என்பது தமோகுணத்தினாலானது. இந்த எல்லாப் பிராணிகளும் தன்னுடைய கர்மானுசாரத்தின்படி எந்த எந்த பாவபதார்த்தமாக உண்டாகின்றவோ அவைகள் எல்லாம் என்னிடத் திலிருந்தே உண்டாகின்றன என்று இவ்வாறு அறிந்துகொள்.
यद्यपि ते मत्तः जायन्ते, तथापि न तु अहं तेषु तदधीनः तद्वशः, यथा संसारिणः । ते पुनः मयि मद्वशाः मदधीनाः ॥ १२ ॥
அவைகள் என்னிடத்திலிருந்து உண்டானாலும் சம்சாரிகளைப் போல் நான் அவைகளின் வசமாவதில்லை. ஆனால் அவைகள் எனது வசத்தில் இருக்கின்றன.
एवंभूतमपि परमेश्वरं नित्यशुद्धबुद्धमुक्तस्वभावं सर्वभूतात्मानं निर्गुणं संसारदोषबीजप्रदाहकारणं मां नाभिजानाति जगत् इति अनुक्रोशं दर्शयति भगवान् । तच्च किंनिमित्तं जगतः अज्ञानमित्युच्यते —
நித்ய சுத்த புத்த முக்த ஸ்வரூபமாயும், எல்லா பூதங்களுக்கும் ஆத்மாவாயும், நிர்குணமாயும், சம்சார ரூப தோஷத்தின் காரணத்தை நிர்மூலமாக்குவதற்கு காரணமாய் உள்ள பரமேச்வரனாகிய என்னை இந்த ஜகத்தானது அறிகிறதில்லை. ஆகையால் ஸ்ரீபகவான் இரக்கப்பட்டு உபதேசிக்கிறார். எதனால் அந்த ஜகத்திற்கு அக்ஞானம் ஏற்பட்டது ? என்று-
त्रिभिर्गुणमयैर्भावैरेभिः सर्वमिदं जगत् ।
मोहितं नाभिजानाति मामेभ्यः परमव्ययम् ॥ १३ ॥
த்ரிபிர்குணமயைர்பாவைரேபி: ஸர்வமிதம் ஜகத் ।
மோஹிதம் நாபிஜாநாதி மாமேப்ய: பரமவ்யயம் ॥ 13 ॥
त्रिभिः गुणमयैः गुणविकारैः रागद्वेषमोहादिप्रकारैः भावैः पदार्थैः एभिः यथोक्तैः सर्वम् इदं प्राणिजातं जगत् मोहितम् अविवेकितामापादितं सत् न अभिजानाति माम् , एभ्यः यथोक्तेभ्यः गुणेभ्यः परं व्यतिरिक्तं विलक्षणं च अव्ययं व्ययरहितं जन्मादिसर्वभावविकारवर्जितम् इत्यर्थः ॥ १३ ॥
சத்வ ரஜஸ் தமஸ் என்ற முக்குணங்களின் விகாரங்களான ராக, துவேஷ, மோஹ முதலிய பாவ பதார்த்தங்களில் இந்த ஜகத்தில் உள்ள பிராணி வர்க்கங்கள் மோஹிக்கப்பட்டு விவேகமற்று இருக்கின்றன. ஆகையால் இவ்வாறு கூறப்பட்ட குணங்களைக் காட்டிலும் மேலானவனாகவும் வேறானவனாகவும் நாசமற்ற வனாகவும் ஜன்மாதி பாவவிகாரமற்றவனாகவும் உள்ள என்னை அவர்கள் அறிவதில்லை என்பது பொருள்.
कथं पुनः दैवीम् एतां त्रिगुणात्मिकां वैष्णवीं मायामतिक्रामति इत्युच्यते —
மேலும் ஈஸ்வரனாகிய எனக்கு சொந்தமானதும், முக்குணாத் மகமான வைஷ்ணவீ எனப்படும் மாயையை எவ்வாறு மனிதர்கள் கடப்பது என்பதைக் கூறுகிறார்.
दैवी ह्येषा गुणमयी मम माया दुरत्यया ।
मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते ॥ १४ ॥
தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா ।
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே ॥ 14 ॥
दैवी देवस्य मम ईश्वरस्य विष्णोः स्वभावभूता हि यस्मात् एषा यथोक्ता गुणमयी मम माया दुरत्यया दुःखेन अत्ययः अतिक्रमणं यस्याः सा दुरत्यया । तत्र एवं सति सर्वधर्मान् परित्यज्य मामेव मायाविनं स्वात्मभूतं सर्वात्मना ये प्रपद्यन्ते ते मायाम् एतां सर्वभूतमोहिनीं तरन्ति अतिक्रामन्ति ; ते संसारबन्धनात् मुच्यन्ते इत्यर्थः ॥ १४ ॥
வியாபக ஈஸ்வரனாகிய எனக்கு சொந்தமான என்னுடைய முக் குணாத்மகமான மாயையை கடப்பது மிகக்கடினமானது. இவ்வாறு இருப்பதால் எல்லா தர்மங்களையும் (கர்மங்களையும்) துறந்து மாயையின் தலைவனாயும், எல்லா பிராணிகளுக்கும் ஆத்மாவாய் உள்ள என்னையே எவ்வகையிலாவது அடைகிறார்களோ அவர்க ளுடைய எல்லா பிராணி ஜாதங்களையும் மோஹிக்கச் செய்யும் மாயையை கடந்து நிற்கிறார்கள். சம்சார பந்தத்திருந்து விடுபடுகிறார் கள் என்பது பொருள்.
यदि त्वां प्रपन्नाः मायामेतां तरन्ति, कस्मात् त्वामेव सर्वे न प्रपद्यन्ते इत्युच्यते —
உங்களை சரணமடைந்தவர்கள் மாயையை கடந்து நிற்கிறார்கள். இவ்வாறு இருக்கும்பொழுது உங்களை ஏன் எல்லோரும் சரணடைவதில்லை? என்றால் கூறுகிறார்-
न मां दुष्कृतिनो मूढाः प्रपद्यन्ते नराधमाः ।
माययापहृतज्ञाना आसुरं भावमाश्रिताः ॥ १५ ॥
ந மாம் துஷ்க்ருதிநோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா: ।
மாயயாபஹ்ருதக்ஞானா ஆஸுரம் பாவமாச்ரிதா: ॥ 15 ॥
न मां परमेश्वरं नारायणं दुष्कृतिनः पापकारिणः मूढाः प्रपद्यन्ते नराधमाः नराणां मध्ये अधमाः निकृष्टाः । ते च मायया अपहृतज्ञानाः संमुषितज्ञानाः आसुरं भावं हिंसानृतादिलक्षणम् आश्रिताः ॥ १५ ॥
பாபகர்மங்களை செய்த மூடர்கள் பரமேச்வரனாகிய என்னை அடையமாட்டார்கள். அவர்கள் மனிதர்களுள் மிகவும் கீழானவர்கள். எவர்களுடைய ஞானம் மாயையினால் அபஹரிக்கப்பட்டதோ அவர்கள் ஹிம்சை, பொய் கூறுதல் முதலிய அசுர சுவபாவங்களை ஆச்ரியத்த வர்கள். அவர்கள் பரமேச்வரனாகிய என்னை சரணடைவதில்லை.
ये पुनर्नरोत्तमाः पुण्यकर्माणः —
மற்றும் எவர்கள் புண்யகர்மாக்களை செய்தார்களோ அவர்கள் மனிதருள் மிகவும் மேலானவர்-
चतुर्विधा भजन्ते मां जनाः सुकृतिनोऽर्जुन ।
आर्तो जिज्ञासुरर्थार्थी ज्ञानी च भरतर्षभ ॥ १६ ॥
சதுர்விதா பஜந்தே மாம் ஜனா: ஸுக்ருதிநோஅர்ஜுன ।
ஆர்தோ ஜிக்ஞாஸுரர்தார்தீ க்ஞானீ ச பரதர்ஷப ॥ 16 ॥
चतुर्विधाः चतुःप्रकाराः भजन्ते सेवंते मां जनाः सुकृतिनः पुण्यकर्माणः हे अर्जुन । आर्तः आर्तिपरिगृहीतः तस्करव्याघ्ररोगादिना अभिभूतः आपन्नः, जिज्ञासुः भगवत्तत्त्वं ज्ञातुमिच्छति यः, अर्थार्थी धनकामः, ज्ञानी विष्णोः तत्त्वविच्च हे भरतर्षभ ॥ १६ ॥
ஹே! அர்ஜுனா! பரதரிஷப! ஆர்த்தி என்றால் துன்பத்தை அடைந்தவன். திருடன், புலி முதலியவைகளால் ஆபத்தை அடைந் தவன். எவன் பகவானுடைய தத்துவத்தை அறிய விரும்புபவன் ஜிக்ஞாசு. தனத்தில் (செல்வத்தில்) இச்சை உடையவன் அர்த்தார்த்தீ. விஷ்ணுவினுடைய தத்துவத்தை அறிந்தவன் ஞானி. இவ்வாறாக புண்யகர்மாக்களைச் செய்யும் நான்கு விதமான பக்தர்கள் என்னையே தொழுகிறார்கள்.
तेषां ज्ञानी नित्ययुक्त एकभक्तिर्विशिष्यते ।
प्रियो हि ज्ञानिनोऽत्यर्थमहं स च मम प्रियः ॥ १७ ॥
தேஷாம் க்ஞானீ நித்யயுக்த ஏகபக்திர்விசிஷ்யதே ।
ப்ரியோ ஹி க்ஞானினோஅத்யர்த்தமஹம் ஸ ச மம ப்ரிய: ॥ 17 ॥
तेषां चतुर्णां मध्ये ज्ञानी तत्त्ववित् तत्ववित्त्वात् नित्ययुक्तः भवति एकभक्तिश्च, अन्यस्य भजनीयस्य अदर्शनात् ; अतः स एकभक्तिः विशिष्यते, विशेषम् आधिक्यम् आपद्यते, अतिरिच्यते इत्यर्थः ।
இந்த நான்கு வகை பக்தர்களுள் தத்துவத்தை அறிந்த ஞானி தத்துவத்தை அறிந்தவராய் இருக்கும் காரணத்தினால் எப்பொழுதும் என்னிடத்திலேயே நிலைபெற்றிருப்பவராய் அவர்களுடைய திருஷ்ட்டியில் மற்றொரு தொழுவதற்குரிய வஸ்து இல்லை என்ப தால் ஒன்றிலேயே (ஆத்மாவிலேயே) பக்தி உடையவனாய் இருக்கி றான். ஆகையால் அந்த அனன்யபக்தன் (ஞானி) (மற்ற மூவர்களை அபேக்ஷி த்து) மேலானவனாகிறான் என்பது பொருள்.
प्रियो हि यस्मात् अहम् आत्मा ज्ञानिनः, अतः तस्य अहम् अत्यर्थं प्रियः ।
எதனால் நான் ஞானிகளினுடைய ஆத்மாவாய் இருக்கிறேனோ அதனால் அவனுக்கு நான் மிகவும் பிரியமானவனாக இருக்கிறேன்.
प्रसिद्धं हि लोके ‘आत्मा प्रियो भवति’ इति । तस्मात् ज्ञानिनः आत्मत्वात् वासुदेवः प्रियो भवतीत्यर्थः ।
உலகத்தில் ஆத்மாவே பிரியமாய் இருக்கிறது என்பது பிரசித்தம். ஆகையால் வாசுதேவன் ஞானிகளுடைய ஆத்மாவாதலால் பிரிய மாய் இருக்கிறான் என்பது பொருள்.
स च ज्ञानी मम वासुदेवस्य आत्मैवेति मम अत्यर्थं प्रियः ॥ १७ ॥
அந்த ஞானி வாசுதேவனாகிய என்னுடைய ஆத்மாவாக இருப் பதால் எனக்கு மிகவும் பிரியமானவன்.
न तर्हि आर्तादयः त्रयः वासुदेवस्य प्रियाः ? न ; किं तर्हि ? —
அவ்வாறாகில் ஆர்த்தி முதலிய மூன்று பக்தர்களும் வாசுதேவ னுக்குரிய பிரியம் இல்லாதவர்களா? எனில், அவ்வாறு அல்ல. மற்று எவ்வாறெனில்-
उदाराः सर्व एवैते ज्ञानी त्वात्मैव मे मतम् ।
आस्थितः स हि युक्तात्मा मामेवानुत्तमां गतिम् ॥ १८ ॥
உதாரா: ஸர்வ ஏவைதே க்ஞானீ த்வாத்மைவ மே மதம் ।
ஆஸ்தித: ஸ ஹியுக்தாத்மா மாமேவானுத்தமாம் கதிம் ॥ 18 ॥
उदाराः उत्कृष्टाः सर्व एव एते, त्रयोऽपि मम प्रिया एवेत्यर्थः । न हि कश्चित् मद्भक्तः मम वासुदेवस्य अप्रियः भवति । ज्ञानी तु अत्यर्थं प्रियो भवतीति विशेषः ।
அந்த மூன்று வகை பக்தர்களும் உயர்ந்தவர்களே, எனக்கு பிரிய மானவர்களே என்பது பொருள். எந்த ஒரு பக்தனும் வாசுதேவனாகிய எனக்கு பிரியமற்றவனாக ஆகமாட்டான். ஆனால் ஞானி எனக்கு அத்யந்த பிரியனாகிறான். இதுவே ஞானியின் விசேஷம்.
तत् कस्मात् इत्यत आह —
அது எதனால் என்று கூறுகிறார்-
ज्ञानी तु आत्मैव न अन्यो मत्तः इति मे मम मतं निश्चयः । आस्थितः आरोढुं प्रवृत्तः सः ज्ञानी हि यस्मात् ‘अहमेव भगवान् वासुदेवः न अन्योऽस्मि’ इत्येवं युक्तात्मा समाहितचित्तः सन् मामेव परं ब्रह्म गन्तव्यम् अनुत्तमां गन्तुं प्रवृत्त इत्यर्थः ॥ १८ ॥
ஞானியோ ஆத்மாவேதான். என்னைக் காட்டிலும் வேறானவன் அல்லன், என்பது எனது நிச்சயம். ஏனெனில் ஆரூடன் ஆவதற்கு பிரயத்தினம் செய்யும் ஞானி நான் பகவான் வாசுதேவனாக இருக்கிறேன், என்னைத் தவிர வேறு இரண்டாவது இல்லை என்று சமாஹித சித்தத்தை உடையவனாய் இருந்து கொண்டு மிக உத்தம மான கதியாகவும் பரப்பிரஹ்மமாகவும் உள்ள என்னையே அடைய வேண்டும் என்று பிரயத்தினம் செய்யத் தலைப்பட்டான் என்பது பொருள்.
ज्ञानी पुनरपि स्तूयते —
மீண்டும் ஞானியைப் புகழ்கிறார்-
बहूनां जन्मनामन्ते ज्ञानवान्मां प्रपद्यते ।
वासुदेवः सर्वमिति स महात्मा सुदुर्लभः ॥ १९ ॥
பஹூனாம் ஜன்மனாமந்தே க்ஞானவான்மாம் ப்ரபத்யதே ।
வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப: ॥ 19 ॥
बहूनां जन्मनां ज्ञानार्थसंस्काराश्रयाणाम् अन्ते समाप्तौ ज्ञानवान् प्राप्तपरिपाकज्ञानः मां वासुदेवं प्रत्यगात्मानं प्रत्यक्षतः प्रपद्यते । कथम् ? वासुदेवः सर्वम् इति ।
ஞானத்திற்கான நல்ல வாசனைகளை சம்பாதிப்பதற்கு இடமாய் உள்ள பலஜன்மங்களின் முடிவில் பரிபக்குவமடைந்த ஞானி பிரத்யக் ஆத்மாவாகிய வாசுதேவனாகிய என்னை பிரத்யக்ஷமாக அடைகின் றான். எவ்வாறெனில் எல்லாம் வாசுதேவனே என்று.
यः एवं सर्वात्मानं मां नारायणं प्रतिपद्यते, सः महात्मा ; न तत्समः अन्यः अस्ति, अधिको वा । अतः सुदुर्लभः, ‘मनुष्याणां सहस्रेषु’ (भ. गी. ७ । ३) इति हि उक्तम् ॥ १९ ॥
எவர்கள் இவ்வாறு பரமாத்மாவாகிய என்னை அடைகிறார் களோ அவர்கள் மஹாத்மாக்கள். அவருக்கு சமமாகவோ, அதிகமா கவோ ஒருவரும் இல்லை. ஆகையால் ஆயிரக்கணக்கான மனிதர்களுள் இவ்வாறான ஒருவர் கிடைப்பது மிகவும் அரிது என்று கூறப்பட்டது.
आत्मैव सर्वो वासुदेव इत्येवमप्रतिपत्तौ कारणमुच्यते —
இந்த எல்லா ஜகத்தும் ஆத்மஸ்வரூபமான வாசுதேவனாகவே இருக்கிறது என்ற ஞானம் உண்டாகாதற்கான காரணத்தைக் கூறுகிறார்-
कामैस्तैस्तैर्हृतज्ञानाः प्रपद्यन्तेऽन्यदेवताः ।
तं तं नियममास्थाय प्रकृत्या नियताः स्वया ॥ २० ॥
காமைச்தைஸ்தைர்ஹ்ருதக்ஞானா: ப்ரபத்யந்தே அன்யதேவதா: ।
தம் தம் நியமமாஸ்தாய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா ॥ 20 ॥
कामैः तैस्तैः पुत्रपशुस्वर्गादिविषयैः हृतज्ञानाः अपहृतविवेकविज्ञानाः प्रपद्यन्ते अन्यदेवताः प्राप्नुवन्ति वासुदेवात् आत्मनः अन्याः देवताः ; तं तं नियमं देवताराधने प्रसिद्धो यो यो नियमः तं तम् आस्थाय आश्रित्य प्रकृत्या स्वभावेन जन्मान्तरार्जितसंस्कारविशेषेण नियताः नियमिताः स्वया आत्मीयया ॥ २० ॥
புத்திரன், பசு, ஸ்வர்க்கம் முதலிய விஷயங்களில் உள்ள ஆசையி னால் (காமத்தினால்) விவேக ஞானத்தை இழந்தவர்கள் தங்களுடைய ஜன்மாந்தரங்களில் சேகரித்த சம்ஸ்கார விசேஷத்தால் (ஸ்வபாவத்தால்)பிரேரிக்கப்பட்டு மற்ற தேவதைகளை என்றால் வாசுதேவனாகிய என்னை விட வேறான தேவதைகளை ஆராதனை செய்வதற்கான எந்த எந்த நியமம் உள்ளதோ அதை அவலம்பித்து தொழுகிறார்கள். (அவர் களை சரணம் அடைகிறார்கள்)
तेषां च कामीनाम् —
அந்த காமபுருஷர்களுள்-
यो यो यां यां तनुं भक्तः श्रद्धयार्चितुमिच्छति ।
तस्य तस्याचलां श्रद्धां तामेव विदधाम्यहम् ॥ २१ ॥
யோ யோ யாம் யாம் தனும் பக்த: ச்ரத்தயார்சிதுமிச்சதி ।
தஸ்ய தஸ்யாசலாம் ச்ரத்தாம் தாமேவ விததாம்யஹம் ॥ 21 ॥
यः यः कामी यां यां देवतातनुं श्रद्धया संयुक्तः भक्तश्च सन् अर्चितुं पूजयितुम् इच्छति, तस्य तस्य कामिनः अचलां स्थिरां श्रद्धां तामेव विदधामि स्थिरीकरोमि ॥ २१ ॥
எந்த எந்த காமியானவன் எந்த எந்த தேவதா மூர்த்தியை சிரத் தையுடனும், பக்தியுடனும் பூஜிக்க விரும்புகிறானோ அந்த அந்த காமியினுடைய சிரத்தையை அசைக்க முடியாதவாறு ஸ்திரமாக நிலைக்கச் செய்வேன்.
ययैव पूर्वं प्रवृत्तः स्वभावतो यः यां देवतातनुं श्रद्धया अर्चितुम् इच्छति —
எவன் இவ்வாறு முன்பு ஸ்வபாவமாகவே பிரவிர்த்தித்தானோ அவன் சிரத்தையுடன் அந்த தேவதா ஸ்வரூபத்தை பூஜை செய்ய விரும்புகிறான் என்று-
स तया श्रद्धया युक्तस्तस्या राधनमीहते ।
लभते च ततः कामान्मयैव विहितान्हि तान् ॥ २२ ॥
ஸ தயா ச்ரத்தயா யுக்தஸ்தஸ்யா ராதனமீஹதே ।
லபதே ச தத: காமான்மயைவ விஹிதான்ஹி தான் ॥ 22 ॥
स तया मद्विहितया श्रद्धया युक्तः सन् तस्याः देवतातन्वाः राधनम् आराधनम् ईहते चेष्टते ।
என்னால் ஸ்திரம் செய்யப்பட்ட சிரத்தையுடன் அவன் அந்த தேவதையின் ஸ்வரூபத்திற்கு பூஜை (ஆராதனை) செய்கிறான்.
लभते च ततः तस्याः आराधितायाः देवतातन्वाः कामान् ईप्सितान् मयैव परमेश्वरेण सर्वज्ञेन कर्मफलविभागज्ञतया विहितान् निर्मितान् तान् , हि यस्मात् ते भगवता विहिताः कामाः तस्मात् तान् अवश्यं लभते इत्यर्थः ।
அந்த ஆராதிக்கப்பட்ட மூர்த்தியிடம் இருந்து, கர்ம பல விபா கத்தை அறிந்த சர்வக்ஞனும் ஈஸ்வரனுமாகிய என்னால் நியமிக்கப் பட்ட இஷ்ட்ட போகங்களை பெறுகிறான். அந்த போகங்கள் பரமேச் வரனால் நியமிக்கப்பட்டவனவாதலால் அவற்றை அவசியம் அடை கிறான் என்பது பொருள்.
‘हितान्’ इति पदच्छेदे हितत्वं कामानामुपचरितं कल्प्यम् ; न हि कामा हिताः कस्यचित् ॥ २२ ॥
இங்கு (ஹிதான்) என்று பதச்சேதம் செய்தால் போகங்கள் ஹிதமானது என்று பொருள் ஏற்படும். ஆகையால் இங்கு ஹிதத்துவம் உபசாரமாக கூறப்பட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும். ஏன்எனில் உண்மையில் போகங்களுக்கு ஒருபோதும் ஹிதத்தன்மை கிடையாது.
यस्मात् अन्तवत्साधनव्यापारा अविवेकिनः कामिनश्च ते, अतः —
ஏன்எனில் விவேகமற்ற காமபுருஷர்கள் விநாசத்துடன் கூடிய பலனை உடைய சாதனத்தைக் கடைபிடிக்கிறார்கள். ஆகையால்-
अन्तवत्तु फलं तेषां तद्भवत्यल्पमेधसाम् ।
देवान्देवयजो यान्ति मद्भक्ता यान्ति मामपि ॥ २३ ॥
அந்தவத்து பலம் தேஷாம் தத்பவத்யல்பமேதஸாம் ।
தேவாந்தேவயஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாமபி ॥ 23 ॥
अन्तवत् विनाशि तु फलं तेषां तत् भवति अल्पमेधसां अल्पप्रज्ञानाम् । देवान्देवयजो यान्ति देवान् यजन्त इति देवयजः, ते देवान् यान्ति, मद्भक्ता यान्ति मामपि ।
அந்த அல்ப புத்தி உடையவர்களுடைய பலம் நாசமுடைய தாகிறது. வேறு தேவதைகளை பூஜை செய்பவர்கள் அந்த அந்த தேவதைகளை அடைகிறார்கள். என்னுடைய பக்தர்கள் என்னையே அடைகிறார்கள்.
एवं समाने अपि आयासे मामेव न प्रपद्यन्ते अनन्तफलाय, अहो खलु कष्टं वर्तन्ते, इत्यनुक्रोशं दर्शयति भगवान् ॥ २३ ॥
இவ்வாறு பூஜை செய்வதில் சமமான ஆயாசம் இருந்தாலும், (வேறு தேவதைகளை பூஜை செய்பவர்கள்) நாசமடையாத பலத்தை அடைவதற்கு என்னை சரணமடைவதில்லை. இவ்வாறாக பகவான் இரக்கத்தைக் காட்டுகிறார்.
किंनिमित्तं मामेव न प्रपद्यन्ते इत्युच्यते —
எதன் பொருட்டு அவர்கள் என்னையே சரணம் அடைவதில் லை? என்பதைக் கூறுகிறார்
अव्यक्तं व्यक्तिमापन्नं मन्यन्ते मामबुद्धयः ।
परं भावमजानन्तो ममाव्ययमनुत्तमम् ॥ २४ ॥
அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மன்யந்தே மாமபுத்தய: ।
பரம் பாவமஜானந்தோ மமாவ்யயமனுத்தமம் ॥ 24 ॥
अव्यक्तम् अप्रकाशं व्यक्तिम् आपन्नं प्रकाशं गतम् इदानीं मन्यन्ते मां नित्यप्रसिद्धमीश्वरमपि सन्तम् अबुद्धयः अविवेकिनः परं भावं परमात्मस्वरूपम् अजानन्तः अविवेकिनः मम अव्ययं व्ययरहितम् अनुत्तमं निरतिशयं मदीयं भावमजानन्तः मन्यन्ते इत्यर्थः ॥ २४ ॥
எப்பொழுதும் பிரசித்தமாக உள்ள என்னை அவிவேகிகள் என் னுடைய நிர்விகார, நிரதிசய பரமாத்ம ஸ்வரூபத்தை அறியாதவர்கள், இந்திரியங்களால் அறியப்படாமல் இருந்த நான் இப்பொழுது அறியப் பட்டவனாய் (கிருஷ்ணனாய்) இருக்கிறேன் என்று நினைக்கிறார்கள்.
तदज्ञानं किंनिमित्तमित्युच्यते —
அவர்களுடைய அக்ஞானம் எந்த காரணத்தால் உண்டானது என்று கூறுகிறார்-
नाहं प्रकाशः सर्वस्य योगमायासमावृतः ।
मूढोऽयं नाभिजानाति लोको मामजमव्ययम् ॥ २५ ॥
நாஹம் ப்ரகாச: ஸர்வஸ்ய யோகமாயாஸமாவ்ருத: ।
மூடோஅயம் நாபிஜானாதி லோகோ மாமஜமவ்யயம் ॥ 25 ॥
न अहं प्रकाशः सर्वस्य लोकस्य, केषाञ्चिदेव मद्भक्तानां प्रकाशः अहमित्यभिप्रायः । योगमायासमावृतः योगः गुणानां युक्तिः घटनं सैव माया योगमाया, तया योगमायया समावृतः, सञ्छन्नः इत्यर्थः । अत एव मूढो लोकः अयं न अभिजानाति माम् अजम् अव्ययम् ॥
எல்லா உலகத்தாருக்கும் வெளிப்படையாக காணப்படுவதில் லை. நான் என்பக்தர்களாகிய சிலருக்கு மட்டுமே வெளிப்படையாக காணப்படுகிறேன் என்பது அபிப்பிராயம். மூன்று குணங்களின் சேர்க்கையே மாயை என்ற யோகமாயா. அந்த யோகமாயையினால் மறைக்கப்பட்ட மூடர்கள் பிறப்பற்றவன், நாசமற்றவனாகிய என்னை அறிவதில்லை.
यया योगमायया समावृतं मां लोकः नाभिजानाति, नासौ योगमाया मदीया सती मम ईश्वरस्य मायाविनो ज्ञानं प्रतिबध्नाति, यथा अन्यस्यापि मायाविनः मायाज्ञानं तद्वत् । यतः एवम् , अतः —
எந்த யோகமாயையினால் மறைக்கப்பட்ட என்னை உலகத்தோர் அறியமாட்டார்களோ அந்த யோகமாயை ஈஸ்வரனாகிய என்னுடை யதாய் இருப்பதால் என்னைப் பந்தப்படுத்துவதில்லை. எவ்வாறு உலகில் அன்யமாயாவியினுடைய (மாயாஜாலக்காரனுடைய) மாயையானது அவனுடைய ஞானத்தைத் தடுப்பதில்லையோ அவ் வாறு என்க. இவ்வாறிருத்தலால்-
वेदाहं समतीतानि वर्तमानानि चार्जुन ।
भविष्याणि च भूतानि मां तु वेद न कश्चन ॥ २६ ॥
வேதாஹம் ஸமதீதானி வர்தமானானி சார்ஜுன ।
பவிஷ்யாணி ச பூதானி மாம் து வேத ந கச்சன ॥ 26 ॥
अहं तु वेद जाने समतीतानि समतिक्रान्तानि भूतानि, वर्तमानानि च अर्जुन, भविष्याणि च भूतानि वेद अहम् । मां तु वेद न कश्चन मद्भक्तं मच्छरणम् एकं मुक्त्वा ; मत्तत्त्ववेदनाभावादेव न मां भजते ॥ २६ ॥
ஹே! அர்ஜுனா! (பிராணிகளின்) முன்பு சென்ற அடைந்தவைக ளையும், இப்பொழுது உள்ளவைகளையும் இனி வரப்போகிறவைக ளையும் ஆகிய எல்லா பிராணிகளையும் நான் அறிகிறேன். ஆனால் என் பக்தர்களைத் தவிர மற்றவர்கள் ஒருவரும் என்னை அறியார். ஏனெனில் என்னுடைய தத்துவத்தை அறியாததினால் என்னை அவர்கள் சரணடைவதில்லை.
केन पुनः मत्तत्त्ववेदनप्रतिबन्धेन प्रतिबद्धानि सन्ति जायमानानि सर्वभूतानि मां न विदन्ति इत्यपेक्षायामिदमाह —
தங்களுடைய தத்துவத்தை அறிவதில் என்ன பிரதிபந்தமுள் ளது? ஜன்மத்தை உடைய எல்லா பிராணிகளும் எதனால் மோஹிக் கப்பட்டு உங்களை அறிய முற்படுவதில்லை? என்று விசாரிக்கும் இடத்து இதைக் கூறுகிறார் -
इच्छाद्वेषसमुत्थेन द्वन्द्वमोहेन भारत ।
सर्वभूतानि संमोहं सर्गे यान्ति परन्तप ॥ २७ ॥
இச்சாத்வேஷஸமுத்தேன த்வந்த்வமோஹேந் பார்த் ।
ஸர்வபூதானி ஸம்மோஹம் ஸர்கே யாந்தி பரந்தப ॥ 27 ॥
इच्छाद्वेषसमुत्थेन इच्छा च द्वेषश्च इच्छाद्वेषौ ताभ्यां समुत्तिष्ठतीति इच्छाद्वेषसमुत्थः तेन इच्छाद्वेषसमुत्थेन ।
விருப்பு வெறுப்பு இவ்விரண்டும் ஏற்படுகிறது.
केनेति विशेषापेक्षायामिदमाह —
எந்த வி சேஷத்தால் என்பதைக் கூறுகிறார்-
द्वन्द्वमोहेन द्वन्द्वनिमित्तः मोहः द्वन्द्वमोहः तेन । तावेव इच्छाद्वेषौ शीतोष्णवत् परस्परविरुद्धौ सुखदुःखतद्धेतुविषयौ यथाकालं सर्वभूतैः सम्बध्यमानौ द्वन्द्वशब्देन अभिधीयेते । यत्र यदा इच्छाद्वेषौ सुखदुःखतद्धेतुसम्प्राप्त्या लब्धात्मकौ भवतः, तदा तौ सर्वभूतानां प्रज्ञायाः स्ववशापादनद्वारेण परमार्थात्मतत्त्वविषयज्ञानोत्पत्तिप्रतिबन्धकारणं मोहं जनयतः ।
துவந்துவங்களால் ஏற்படும் மோஹத்தினால் இச்சை, துவேஷம் இரண்டும், குளிர்ச்சி, வெப்பம் இவைகள் போல் ஒன்றுக்கொன்று விருத்தமாயும், சுக துக்கத்திற்கு காரணமான விஷயங்கள் காலத்திற் கேற்ப எல்லா பூதங்களுடன் (பிராணிகளுடன்) சம்பந்தம் அடையும் போது அவை துவந்துவங்கள் எனப்படுகிறது. எப்பொழுது இச்சை, துவேஷங்களும் அவ்வாறே சுக, துக்கங்களும் அவற்றின் காரணங்க ளும் வந்து அடையப்பட்டதோ அப்பொழுது அவை இரண்டும் எல்லா பூதங்களுடைய அறிவையும் தன் வசப்படுத்திக் கொண்டு பரமார்த்தத்தத்துவ விஷய ஞானத்தின் உற்பத்திக்கு தடையாய் உள்ள மோஹத்தை உண்டாக்குகிறது.
न हि इच्छाद्वेषदोषवशीकृतचित्तस्य यथाभूतार्थविषयज्ञानमुत्पद्यते बहिरपि ; किमु वक्तव्यं ताभ्यामाविष्टबुद्धेः संमूढस्य प्रत्यगात्मनि बहुप्रतिबन्धे ज्ञानं नोत्पद्यत इति ।
எவருடைய சித்தம் இச்சை, துவேஷங்களுக்கு வசப்பட்டதோ அவருக்கு வெளிவிஷயங்களில் யதார்த்த ஞானம் ஏற்படுவதில்லை. அவ்வாறு இருக்கையில் இச்சா துவேஷங்களால் மறைக்கப்பட்ட புத்தியுடைய மூடர்களுக்கு மிகுந்த பிரதிபந்தமுள்ளதால் பிரத்யக் ஆத்மாவிடத்தில் ஞானம் உண்டாவதில்லை என்பதில் என்ன கூறுவது?
अतः तेन इच्छाद्वेषसमुत्थेन द्वन्द्वमोहेन, भारत भरतान्वयज, सर्वभूतानि संमोहितानि सन्ति संमोहं संमूढतां सर्गे जन्मनि, उत्पत्तिकाले इत्येतत् , यान्ति गच्छन्ति हे परन्तप ।
ஆகையால் ஹே! பாரத! என்றால் பரத குலத்தில் பிறந்த அர்ஜுனா! பரந்தப அந்த இச்சா துவேஷத்தினால் உண்டான துவந்துவங் களின் நிமித்தத்தால் உண்டான மோஹத்தினால் எல்லாப்பிராணிக ளும் மோஹிக்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால் பிறக்கும்பொழுதே எல்லாப்பிராணிகளும் மோஹத்தினால் மோஹிக்கப்பட்டு மூடர்களாக பிறக்கிறார்கள்.
मोहवशान्येव सर्वभूतानि जायमानानि जायन्ते इत्यभिप्रायः ।
பிறக்கின்ற எல்லா ஜீவராசிகளும் மோஹத்தினாலேயே பிறப்பெ டுக்கின்றனர் என்பது அபிப்பிராயம்.
यतः एवम् , अतः तेन द्वन्द्वमोहेन प्रतिबद्धप्रज्ञानानि सर्वभूतानि संमोहितानि मामात्मभूतं न जानन्ति ; अत एव आत्मभावे मां न भजन्ते ॥ २७ ॥
இவ்வாறு இருப்பதால் அந்த துவந்துவ மோஹத்தினால் பிரதிபந் தப்படுத்தப்பட்ட ஞானமுடைய எல்லாப் பிராணிகளும் நன்றாக மோஹம் அடைந்துள்ளதால் ஆத்மாவான என்னை அறிவதில்லை. ஆகையால் தான் ஆத்மாவான என்னைத் தொழுவதில்லை.
के पुनः अनेन द्वन्द्वमोहेन निर्मुक्ताः सन्तः त्वां विदित्वा यथाशास्त्रमात्मभावेन भजन्ते इत्यपेक्षितमर्थं दर्शितुम् उच्यते —
மேலும் எவர்கள் இந்த துவந்துவ மோஹத்திருந்து விடுபட்டு உன்னை சாஸ்திரத்தில் உள்ளபடி அறிந்து ஆத்மாவாக தொழுகிறார் களோ என்ற அர்த்தத்தை அபேக்ஷி த்து (சார்ந்து) விஷயத்தை உணர்த்தும் பொருட்டு கூறுகிறார்-
येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणाम् ।
ते द्वन्द्वमोहनिर्मुक्ता भजन्ते मां दृढव्रताः ॥ २८ ॥
யேஷாம் த்வந்தகதம் பாபம் ஜனானாம் புண்யகர்மணாம் ।
தே த்வந்த்வமோஹநிர்முக்தா பஜந்தே மாம் த்ருடவ்ரதா: ॥ 28 ॥
येषां तु पुनः अन्तगतं समाप्तप्रायं क्षीणं पापं जनानां पुण्यकर्मणां पुण्यं कर्म येषां सत्त्वशुद्धिकारणं विद्यते ते पुण्यकर्माणः तेषां पुण्यकर्मणाम् , ते द्वन्द्वमोहनिर्मुक्ताः यथोक्तेन द्वन्द्वमोहेन निर्मुक्ताः भजन्ते मां परमात्मानं दृढव्रताः । ‘एवमेव परमार्थतत्त्वं नान्यथा’ इत्येवं सर्वपरित्यागव्रतेन निश्चितविज्ञानाः दृढव्रताः उच्यन्ते ॥ २८ ॥
மேலும் எந்த புண்யகர்மாக்களால் புருஷர்களுடைய பாபங்கள் முடிவடைந்ததோ (நாசம் அடைந்ததோ) அந்த புண்ய கர்மாக்கள் புண்யம் செய்தவர்களின் அந்தக்கரண சுத்திக்கு ஏதுவாகிறது. அவர் கள் முன்பு கூறப்பட்ட துவந்துவ மோஹத்திலிருந்து விடுபட்டு அந்த திடவிரதர்கள் பரமாத்மாவாகிய என்னையே தொழுகிறார்கள். இவ்வாறு பரமார்த்த தத்துவத்தைத் தவிர வேறு இல்லை என்ற தீர்மானம் உடையவர்கள் திடவிர தர்கள் எனப்படுகிறார்கள்.
ते किमर्थं भजन्ते इत्युच्यते —
அவர்கள் எதன் பொருட்டு தொழுகிறார்கள் என்று கூறுகிறார்-
जरामरणमोक्षाय मामाश्रित्य यतन्ति ये ।
ते ब्रह्म तद्विदुः कृत्स्नमध्यात्मं कर्म चाखिलम् ॥ २९ ॥
ஜராமரணமோக்ஷாய மாமாச்ரித்ய யதந்தி யே ।
தே ப்ரஹ்ம தத்விது: க்ருத்ஸ்னமத்யாத்மம் கர்ம சாகிலம் ॥ 29 ॥
जरामरणमोक्षाय जरामरणयोः मोक्षार्थं मां परमेश्वरम् आश्रित्य मत्समाहितचित्ताः सन्तः यतन्ति प्रयतन्ते ये, ते यत् ब्रह्म परं तत् विदुः कृत्स्नं समस्तम् अध्यात्मं प्रत्यगात्मविषयं वस्तु तत् विदुः, कर्म च अखिलं समस्तं विदुः ॥ २९ ॥
எவர்கள் மூப்பு மரணம் இவைகளிலிருந்து விடுபடுவதின் பொருட்டு பரமேச்வரனாகிய என்னை ஆச்ரயித்து (சார்ந்து) என்னிடத்திலேயே நிலைத்த சித்தமுடையவர்களாய் இருந்து கொண்டு பிரயத்தனம் செய்கிறார்களோ அவர்கள் பரபிரஹ்மத்தை அறிந்தவர்களாகிறார்கள். அவர்கள் எல்லா அந்தராத்ம விஷயமான வஸ்துவை அறிந்தவர்கள். அவ்வாறே எல்லா கர்மங்களையும் அறிந்தவர்களாகிறார்கள்.
साधिभूताधिदैवं मां साधियज्ञं च ये विदुः ।
प्रयाणकालेऽपि च मां ते विदुर्युक्तचेतसः ॥ ३० ॥
ஸாதிபூதாதிதைவம் மாம் ஸாதியக்ஞம் ச யே விது: ।
ப்ரயாணகாலே அபி ச மாம் தே விதுர்யுக்தசேதஸ: ॥ 30 ॥
साधिभूताधिदैवम् अधिभूतं च अधिदैवं च अधिभूताधिदैवम् , सह अधिभूताधिदैवेन वर्तते इति साधिभूताधिदैवं च मां ये विदुः, साधियज्ञं च सह अधियज्ञेन साधियज्ञं ये विदुः, प्रयाणकाले मरणकाले अपि च मां ते विदुः युक्तचेतसः समाहितचित्ता इति ॥ ३० ॥
இவ்வாறு எவர்கள் பரமேச்வரனான என்னை, அதிபூதம், அதி தெய்வம் அவ்வாறே அதியக்ஞம் இவைகளுடன் கூடியவனாக அறிகிறார்களோ அவர்கள் ஒருநிலைப்படுத்தப்பட்ட சித்தமுடையவர்க ளாகி மரணகாலத்தில் என்னை அறிகிறார்கள்.
इति श्रीमत्परमहंसपरिवारजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूजयपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये सप्तमोऽध्यायः ॥
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே க்ஞானவிக் ஞானயோகோ நாம சப்தமோத்யாய:
‘ते ब्रह्म तद्विदुः कृत्स्नम्’ (भ. गी. ७ । २९) इत्यादिना भगवता अर्जुनस्य प्रश्नबीजानि उपदिष्टानि । अतः तत्प्रश्नार्थम् —
(தே பிரஹ்ம தத்விது: கிருத்ஸ்னம்) என்பன முதலிய வாக்கியங்களால் அர்ஜுனனுக்கு கேள்விக்கு வேண் காரணத்தை உபதேசித்தருளினார். ஆகையால் அந்த கேள்வியை கேட்பதற்காக-
अर्जुन उवाच —
அர்ஜுன உவாச —
किं तद्ब्रह्म किमध्यात्मं किं कर्म पुरुषोत्तम ।
अधिभूतं च किं प्रोक्तमधिदैवं किमुच्यते ॥ १ ॥
கிம் தத்ப்ரஹ்ம கிமத்யாத்மம் கிம் கர்ம புருஷோத்தம ।
அதிபூதம் ச கிம் ப்ரோக்தமதிதைவம் கிமுச்யதே ॥ 1 ॥
अधियज्ञः कथं कोऽत्र देहेऽस्मिन्मधुसूदन ।
प्रयाणकाले च कथं ज्ञेयोऽसि नियतात्मभिः ॥ २ ॥
அதியக்ஞ: கதம் கோஅத்ர தேஹேஅஸ்மின்மதுஸூதன ।
ப்ரயாணகாலே ச கதம் க்ஞேயோஅஸி நியதாத்மபி: ॥ 2 ॥
एषां प्रश्नानां यथाक्रमं निर्णयाय श्रीभगवानुवाच —
இந்த வினாக்களின் பதிலை கிரமமாக நிர்ணயிக்கும் பொருட்டு -
श्रीभगवानुवाच —
अक्षरं ब्रह्म परमं स्वभावोऽध्यात्ममुच्यते ।
भूतभावोद्भवकरो विसर्गः कर्मसंज्ञितः ॥ ३ ॥
அக்ஷரம் ப்ரஹ்ம பரமம் ஸ்வபாவோ அத்யாத்மமுச்யதே ।
பூதபாவோத்பவகரோ விஸர்க: கர்மஸம்க்ஞித: ॥ 3 ॥
अक्षरं न क्षरतीति अक्षरं परमात्मा, ‘एतस्य वा अक्षरस्य प्रशासने गार्गि’ (बृ. उ. ३ । ८ । ९) इति श्रुतेः ।
(அழியாதது பரமாத்மா)
அழிவற்றது பரமாத்மா. சுருதியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. (தஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரசாசனே கார்க்கி) என்று.
ओङ्कारस्य च ‘ओमित्येकाक्षरं ब्रह्म’ (भ. गी. ८ । १३) इति परेण विशेषणात् अग्रहणम् । परमम् इति च निरतिशये ब्रह्मणि अक्षरे उपपन्नतरम् विशेषणम् ।
பரமம் என்ற விசேஷணத்துடன் கூடி இருப்பதால் இங்கு அக்ஷர சப்தத்தினால் (ஓமித்யேகாக்ஷரம் பிரஹ்ம) என்ற வாக்கியத்தினால் வர்ணிக்கப்பட்ட ஓம்காரமானது கூறப்படவில்லை. ஏன்எனில் பரமம் என்ற விசேஷணம் நிரதிசய அக்ஷர பிரஹ்மத்திலேயே பொருந்துகிறது.
तस्यैव परस्य ब्रह्मणः प्रतिदेहं प्रत्यगात्मभावः स्वभावः, स्वो भावः स्वभावः अध्यात्मम् उच्यते ।
அந்த பரப்பிரஹ்மம் ஒவ்வொரு தேஹத்திலும் (பிரத்யக்) அந்த ராத்மாவாய் இருக்கிறது. அதனை ஸ்வபாவம் என்பர். ஸ்வபாவம் என் றால் அத்யாத்மம். எனப்படும்.
आत्मानं देहम् अधिकृत्य प्रत्यगात्मतया प्रवृत्तं परमार्थब्रह्मावसानं वस्तु स्वभावः अध्यात्मम् उच्यते अध्यात्मशब्देन अभिधीयते ।
ஆத்மா தேஹத்தை ஆச்ரயமாகக் கொண்டு அந்தராத்மாவாக அதில் பிரவிர்த்தித்து முடிவிலே பரமார்த்த பிரஹ்மமாகவே உள்ள வஸ்து ஸ்வபாவ: எனப்படும். அதுவே அத்யாத்மம் என்ற சொல்லால் கூறப்பட்டுள்ளது.
भूतभावोद्भवकरः भूतानां भावः भूतभावः तस्य उद्भवः भूतभावोद्भवः तं करोतीति भूतभावोद्भवकरः, भूतवस्तूत्पत्तिकर इत्यर्थः । विसर्गः विसर्जनं देवतोद्देशेन चरुपुरोडाशादेः द्रव्यस्य परित्यागः ; स एष विसर्गलक्षणो यज्ञः कर्मसंज्ञितः कर्मशब्दित इत्येतत् । एतस्मात् हि बीजभूतात् वृष्ट्यादिक्रमेण स्थावरजङ्गमानि भूतानि उद्भवन्ति ॥ ३ ॥
ஸ்தாவர ஜங்கமங்களை உண்டாக்குவது (பூத பாவோத்பவகர:) எது எனில் தேவதைகளை உத்தேசித்து ச்சரு, புரோடாசம் முதலிய ஹோமம் செய்ய யோக்கியமான திரவ்யங்களை தியாகம் செய்வது. அந்த தியாக ரூப யக்ஞம் கர்மம் எனப்படுகிறது. இந்த பீஜ ரூப (காரண ரூப) யக்ஞத்தினாலேயே மழை முதயலிவைகள் கிரமமாக ஸ்தாவர ஜங்கமங்களை உற்பத்தி செய்கிறது.
अधिभूतं क्षरो भावः पुरुषश्चाधिदैवतम् ।
अधियज्ञोऽहमेवात्र देहे देहभृतां वर ॥ ४ ॥
அதிபூதம் க்ஷரோ பாவ: புருஷச்சாதிதைவதம் ।
அதியக்ஞோஅஹமேவாத்ர தேஹே தேஹப்ருதாம் வர ॥ 4 ॥
अधिभूतं प्राणिजातम् अधिकृत्य भवतीति । कोऽसौ ? क्षरः क्षरतीति क्षरः विनाशी, भावः यत्किञ्चित् जनिमत् वस्तु इत्यर्थः ।
பிராணிகளை ஆச்ரயித்து இருப்பது. அது எது? எது நாசம் அடைகிறதோ அது. எதற்கெல்லாம் பிறப்புள்ளதோ அது எல்லாம் நாசமுடையது. அவை எல்லாம் அதிபூதம்.
पुरुषः पूर्णम् अनेन सर्वमिति, पुरि शयनात् वा, पुरुषः आदित्यान्तर्गतो हिरण्यगर्भः, सर्वप्राणिकरणानाम् अनुग्राहकः, सः अधिदैवतम् ।
இதனால் எல்லாம் பூரிக்கப்பட்டுள்ளதால் (நிறைந்துள்ளதால்) அல்லது இந்த சரீரத்தில் இருப்பதாலும் புருஷன் எனப்படுகிறான். அது எல்லா பிராணிகளின் இந்திரியாதி கரணங்களையும் அனுக்கிரஹிக்கின்ற (அருள் புரிகின்ற) சூரிய லோகத்தில் இருக்கும் ஹிரண்யகர்ப்பன் அதி தெய்வம் எனப்படுகிறான்.
अधियज्ञः सर्वयज्ञाभिमानिनी विष्ण्वाख्या देवता, ‘यज्ञो वै विष्णुः’ (तै. सं. १ । ७ । ४) इति श्रुतेः । स हि विष्णुः अहमेव ; अत्र अस्मिन् देहे यो यज्ञः तस्य अहम् अधियज्ञः ; यज्ञो हि देहनिर्वर्त्यत्वेन देहसमवायी इति देहाधिकरणो भवति, देहभृतां वर ॥ ४ ॥
யக்ஞோ வை விஷ்ணு, என்ற சுருதியின் படி யக்ஞங்களுக்கெல் லாம் அதிஷ்ட்டான தேவதை விஷ்ணு எனப்படும் தேவதை. ஹே! தேஹத்தை உடையவர்களில் மேலானவனான அர்ஜுனா! இந்த தேஹத்தில் எந்த யக்ஞம் உள்ளதோ அதனுடைய அதிஷ்ட்டா தாவாகிய அந்த விஷ்ணுரூப அதியக்ஞம் நானே. யக்ஞமானது சரீரத்தினாலேயே செய்யப்படுகிறது. ஆகையால் யக்ஞத்திற்கு சரீரத் துடன் நித்ய சம்பந்தமிருக்கிறது. ஆகையால் அது சரீரத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेबरम् ।
यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः ॥ ५ ॥
அந்தகாலே ச மாமேவ ஸ்மரன்முக்த்வா கலேவரம் ।
ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்சய: ॥ 5 ॥
अन्तकाले मरणकाले च मामेव परमेश्वरं विष्णुं स्मरन् मुक्त्वा परित्यज्य कलेबरं शरीरं यः प्रयाति गच्छति, सः मद्भावं वैष्णवं तत्त्वं याति । नास्ति न विद्यते अत्र अस्मिन् अर्थे संशयः — याति वा न वा इति ॥ ५ ॥
மரணகாலத்தில் பரமேச்வரனாகிய விஷ்ணுவாகிய என்னையே நினைத்துக்கொண்டு இந்த சரீரத்தை விட்டுச் செல்கிறார்களோ அவர்கள் என்னுடைய பாவமாகிய விஷ்ணுவினுடைய பரமதத்து வத்தை அடைகிறார்கள். இதை அடைவார்களா? அடையமாட்டார் களா? என்பதில் சந்தேஹமே இல்லை.
न मद्विषय एव अयं नियमः । किं तर्हि ? —
என்னுடைய விஷயத்தில் மட்டும் இந்த நியமம் இல்லை. ஆனால் என்ன எனில்-
यं यं वापि स्मरन्भावं त्यजत्यन्ते कलेबरम् ।
तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः ॥ ६ ॥
யம் யம் வாபி ஸ்மரன்பாவம் த்யஜத்யந்தே கலேவரம் ।
தம் தமேவைதி கௌந்தேய ஸதா தத்பாவபாவித: ॥ 6 ॥
यं यं वापि यं यं भावं देवताविशेषं स्मरन् चिन्तयन् त्यजति परित्यजति अन्ते अन्तकाले प्राणवियोगकाले कलेबरं शरीरं तं तमेव स्मृतं भावमेव एति नान्यं कौन्तेय, सदा सर्वदा तद्भावभावितः तस्मिन् भावः तद्भावः स भावितः स्मर्यमाणतया अभ्यस्तः येन सः तद्भावभावितः सन् ॥ ६ ॥
ஹே கௌந்தேய! மரணகாலத்தில் எந்த எந்த தேவதாஸ்வரூ பத்தை நினைத்துக்கொண்டு இந்த சரீரத்தை விடுகிறார்களோ அந்த அந்த நினைத்த பாவத்தை அடைகிறார்கள். மற்ற பாவத்தை அல்ல. உபாசனை விஷயமாக உள்ள பாவம் (தத்பாவம்) எனப்படுகிறது. அந்த பாவத்தை எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டு அப்பியாசம் செய் பவர்கள் (தத்பாவபாவித:)
यस्मात् एवम् अन्त्या भावना देहान्तरप्राप्तौ कारणम् —
இவ்வாறு இருப்பதால் மரணகாலத்தில் நினைத்த பாவனையை வேறு தேஹம் அடைவதற்கு காரணம்-
तस्मात्सर्वेषु कालेषु मामनुस्मर युध्य च ।
मय्यर्पितमनोबुद्धिर्मामेवैष्यस्यसंशयः ॥ ७ ॥
தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு மாமனுஸ்மர யுத்ய ச ।
மய்யர்பிதமநோபுத்திர்மாமேவைஷ்யஸ்யஸம்சய: ॥ 7 ॥
तस्मात् सर्वेषु कालेषु माम् अनुस्मर यथाशास्त्रम् । युध्य च युद्धं च स्वधर्मं कुरु । मयि वासुदेवे अर्पिते मनोबुद्धी यस्य तव स त्वं मयि अर्पितमनोबुद्धिः सन् मामेव यथास्मृतम् एष्यसि आगमिष्यसि ; असंशयः न संशयः अत्र विद्यते ॥ ७ ॥
ஆகையால் எப்பொழுதும் என்னையே நினை. சாஸ்திரத்தில் விதித்தபடி ஸ்வதர்மமாகிய யுத்தத்தைச் செய். வாசுதேவனாகிய என்னிடத்திலேயே மனதையும், புத்தியையும் செலுத்தியவனாய் நீசிந்தித்தவாறு அதையே அடைவாய். இதில் சந்தேஹமில்லை.
किञ्च—
மேலும்
अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगामिना ।
परमं पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तयन् ॥ ८ ॥
அப்யாஸயோகயுக்தேன சேதஸா நான்யகாமினா ।
பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்தானுசிந்தயன் ॥ 8 ॥
अभ्यासयोगयुक्तेन मयि चित्तसमर्पणविषयभूते एकस्मिन् तुल्यप्रत्ययावृत्तिलक्षणः विलक्षणप्रत्ययानन्तरितः अभ्यासः स चाभ्यासो योगः तेन युक्तं तत्रैव व्यापृतं योगिनः चेतः तेन, चेतसा नान्यगामिना न अन्यत्र विषयान्तरे गन्तुं शीलम् अस्येति नान्यगामि तेन नान्यगामिना, परमं निरतिशयं पुरुषं दिव्यं दिवि सूर्यमण्डले भवं याति गच्छति हे पार्थ अनुचिन्तयन् शास्त्राचार्योपदेशम् अनुध्यायन् इत्येतत् ॥ ८ ॥
சித்தத்தை நிலைநிறுத்துவதற்கு விஷயமாகிய என் ஒருவனிடத் திலேயே சஜாதீய பிரத்தியத்தை (விருத்தியை) இடைவிடாமல் எண்ணி விஜாதீய பிரத்தியத்தை (விருத்தியை) தடை செய்தலே அப்பியாசமாகும். அந்த அப்பியாசமே யோகம். ஹே பார்த்த! அந்த யோகத்துடன் கூடி அதிலேயே நிலைபெற்ற யோகியினுடைய சித்த மானது மற்ற விஷயங்களில் செல்லுவதற்கு சாமர்த்தியம் அற்றது. அம்மனது வெளியில் செல்லாததினால் சாஸ்த்திர ஆச்சார்ய உபதே சங்களை மறுபடியும் மறுபடியும் (தொடர்ந்து) சிந்தித்து ஆகாய மண்ட லத்திருக்கும் சூரிய மண்டலத்தில் உள்ள அந்த மேலான நிரதிசய திவ்ய புருஷனை அடைகிறான்.
किंविशिष्टं च पुरुषं याति इति उच्यते —
எந்த லக்ஷணங்களுடன் கூடிய மேலான புருஷனை (யோகி) அடைகிறான்?
कविं पुराणमनुशासितारमणोरणीयांसमनुस्मरेद्यः ।
सर्वस्य धातारमचिन्त्यरूपमादित्यवर्णं तमसः परस्तात् ॥ ९ ॥
கவிம் புராணமனுசாஸிதாரமணோரணீயாம்ஸமனுஸ்மரேத்ய: ।
ஸர்வஸ்ய தாதாரமசிந்த்யரூபமாதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் ॥ 9 ॥
कविं क्रान्तदर्शिनं सर्वज्ञं पुराणं चिरन्तनम् अनुशासितारं सर्वस्य जगतः प्रशासितारम् अणोः सूक्ष्मादपि अणीयांसं सूक्ष्मतरम् अनुस्मरेत् अनुचिन्तयेत् यः कश्चित् , सर्वस्य कर्मफलजातस्य धातारं विधातारं विचित्रतया प्राणिभ्यो विभक्तारम् , अचिन्त्यरूपं न अस्य रूपं नियतं विद्यमानमपि केनचित् चिन्तयितुं शक्यते इति अचिन्त्यरूपः तम् , आदित्यवर्णम् आदित्यस्येव नित्यचैतन्यप्रकाशो वर्णो यस्य तम् आदित्यवर्णम् , तमसः परस्तात् अज्ञानलक्षणात् मोहान्धकारात् परं ।
சென்றதையும், இருப்பவைகளையும் இனி வரப்போகின்றவைக ளையும் அறிந்த சர்வக்ஞன், பழமையானவன், சகல ஜகத்தையும் கட் டளையிடுபவன். (ஆட்சி செய்பவன்) சூக்ஷ்மத்தைக் காட்டிலும் சூக்ஷ் மமானவன். பலவிதமான ஜீவர்களுக்கும் அவர்களுடைய கர்மத் திற்கு தகுந்தவாறு பலத்தைப் பிரித்துக் கொடுப்பவன். அவருடைய ஸ்வரூபம் உள்ளதாயினும் இப்படித்தான் இருப்பார் என்று ஒருவரா லும் சிந்திக்க முடியாதவர். ஆகையால் அசிந்தியர். சூரியனைப் போல நித்திய சைதன்ய பிரகாசம் போன்ற நிறமுடையவர். அக்ஞான மெனும் மோஹமாகிய இருட்டைக் கடந்து நிற்பவர்.
तम् अनुचिन्तयन् याति इति पूर्वेण सम्बन्धः ॥ ९ ॥
அதைத் தொடர்ந்து நினைத்து (தியானித்து) அதை அடைகிறான் என்பது முன் ஸ்லோகத்துடன் சம்பந்தம் ஏற்படுகிறது.
किञ्च —
மேலும்
प्रयाणकाले मनसाಽचलेन भक्त्या युक्तो योगबलेन चैव ।
भ्रुवोर्मध्ये प्राणमावेश्य सम्य क्स तं परं पुरुषमुपैति दिव्यम् ॥ १० ॥
ப்ரயாணகாலே மனஸாஅசலேன பக்த்யா யுக்தோ யோகபலேன சைவ ।
ப்ருவோர்மத்யே ப்ராணமாவேச்ய ஸம்யக் ஸ தம் பரம் புருஷ முபைதி திவ்யம் ॥ 10 ॥
प्रयाणकाले मरणकाले मनसा अचलेन चलनवर्जितेन भक्त्या युक्तः भजनं भक्तिः तया युक्तः योगबलेन चैव योगस्य बलं योगबलं समाधिजसंस्कारप्रचयजनितचित्तस्थैर्यलक्षणं योगबलं तेन च युक्तः इत्यर्थः, पूर्वं हृदयपुण्डरीके वशीकृत्य चित्तं ततः ऊर्ध्वगामिन्या नाड्या भूमिजयक्रमेण भ्रुवोः मध्ये प्राणम् आवेश्य स्थापयित्वा सम्यक् अप्रमत्तः सन् , सः एवं विद्वान् योगी ‘कविं पुराणम्’ (भ. गी. ८ । ९) इत्यादिलक्षणं तं परं परतरं पुरुषम् उपैति प्रतिपद्यते दिव्यं द्योतनात्मकम् ॥ १० ॥
மரணகாலத்தில் சலனமற்ற மனதினால் பக்தியுடன் கூடிய யோக பலம் என்றால் சமாதியினால் உண்டான சம்ஸ்காரத்தினால் ஏற்பட்ட சித்தத்தின் ஸ்திரத்தன்மையானது யோகபலமாகும். முதலில் சித்தத்தை ஹ்ருதய புண்டரீகத்தில் வசப்படுத்தி மேலே செல்லும் ஸுஷும்னா நாடியினால் சித்தத்தின் ஒவ்வொரு பூமிகையையும் கிரமமாக ஜெயித்து புருவத்தின் மத்தியில் பிராணனை நிலைநிறுத்தி நன்றாக சாவதானம் செய்துகொண்டு அப்படிப்பட்ட புத்திமானாகிய யோகி கவிம் புராணம் முதலிய லக்ஷணங்களுடன் கூடிய அந்த சேதனாத்மகமான மேலான புருஷனை அடைகிறான். அந்த புருஷன் பிரகாச வடிவினன்.
पुनरपि वक्ष्यमाणेन उपायेन प्रतिपित्सितस्य ब्रह्मणो वेदविद्वदनादिविशेषणविशेष्यस्य अभिधानं करोति भगवान् —
மேலும் பகவானானவர் இனி கூறப்போகும் உபாயங்களால் அடைவதற்கு யோக்கியமான பிரஹ்மத்தைப் பற்றி (வேதவித் வதந்த்தி) முதலிய விசேஷண, விசேஷ்யங்களால் பிரதிபாதனம் செய்யப்போகிறார். (விளக்கி கூறப்போகிறார்)
यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यद्यतयो वीतरागाः ।
यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं सङ्ग्रहेण प्रवक्ष्ये ॥ ११ ॥
யதக்ஷரம் வேதவிதோ வதந்தி விசந்தி யத்யதயோ வீதராகா: ।
யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பதம் ஸங்க்ரஹேண ப்ரவக்ஷ்யே ॥ 11 ॥
यत् अक्षरं न क्षरतीति अक्षरम् अविनाशि वेदविदः वेदार्थज्ञाः वदन्ति, ‘तद्वा एतदक्षरं गार्गि ब्राह्मणा अभिवदन्ति’ (बृ. उ. ३ । ८ । ८) इति श्रुतेः, सर्वविशेषनिवर्तकत्वेन अभिवदन्ति ‘अस्थूलमनणु’ इत्यादि ।
ஹே கார்க்கீ! அந்த அக்ஷரம் இதுதான் என்று பிராமணர்கள்வர் ணித்திருக்கிறார்கள் என்ற சுருதிவாக்கியத்தின் படி, வேதத்தை நன்கு உணர்ந்தவர்கள் நாசமற்ற பரமாத்மாவை அது ஸ்தூலமல்ல, சூக்ஷ்மம் அல்ல என்பது முதலிய விசேஷணங்களால் நிராகரித்துக் கூறுகிறார்.
किञ्च — विशन्ति प्रविशन्ति सम्यग्दर्शनप्राप्तौ सत्यां यत् यतयः यतनशीलाः संन्यासिनः वीतरागाः वीतः विगतः रागः येभ्यः ते वीतरागाः ।
மேலும் எவருக்கு ஆசை நீங்கியதோ அந்த முயற்சி உடைய சந்நியாசி யதார்த்த ஞானத்தை அடைந்தவுடன் எதில் பிரவேசிக் கிறார்களோ?
यच्च अक्षरमिच्छन्तः — ज्ञातुम् इति वाक्यशेषः — ब्रह्मचर्यं गुरौ चरन्ति ।
மேலும் அக்ஷரத்தை அறிய விரும்புகிறவர்கள் குருகுலத்தில் பிரஹ்ம்மச்சரியத்தை அனுஷ்ட்டிக்கின்றார்கள். அறிய என்ற பதம் வாக்கியத்தில் தொக்கி நிற்கின்றது.
तत् ते पदं तत् अक्षराख्यं पदं पदनीयं ते तव सङ्ग्रहेण सङ्ग्रहः सङ्क्षेपः तेन सङ्क्षेपेण प्रवक्ष्ये कथयिष्यामि ॥ ११ ॥
அந்த அக்ஷரம் எனப்படும் அடையவேண்டிய பதத்தை உனக்கு சுருக்கமாகச் சொல்லுகிறேன்.
ஹே பகவானே! மனிதர்களுள் எவன் அதிகாரியோ அவன் மரணகாலம் வரையிலும் ஓம்காரத்தை தியானம் செய்கிறானோ அதனால் அந்த சாதகன் எந்த உலகத்தை அடைகிறான் என்று கேட் பவனிடம் இவ்வாறு பிப்பலாதர் கூறுகிறார். ஹே சத்தியகாம! பரப் பிரஹ்மமாயும் அபரப்ரஹ்மமாயும் உள்ளது ஓம்காரமே என்று ஆரம்பித்து எவன் மறுபடியும் அந்த மூன்று மாத்திரைகளை உடைய ஓம்காரமாகிய அக்ஷரத்தால் மேலான புருஷனைத் தியானம் செய்கிறானோ என்பது முதலிய (ப்ரச்னோபநிஷத்) வசனங்களினால்
தர்மத்தைக் காட்டிலும் வேறு, அதர்மத்தைக் காட்டிலும் வேறு என்று ஆரம்பித்து எல்லா வேதங்களும் எந்த பரமபதத்தைக் குறித்து வர்ணனை செய்கிறதோ எல்லா தவங்களும் எதைச் சொல்லுகிறதோ எதை இச்சித்து பிரஹ்ம்மச்சரியத்தைக் கடைபிடிக்கிறார்களோ அந்த பதம் சுருக்கமாக ஓம் என்பதாகும் என்பது முதலிய (கடோபநிஷத்) வசனங்களால்
परस्य ब्रह्मणो वाचकरूपेण, प्रतिमावत् प्रतीकरूपेण वा, परब्रह्मप्रतिपत्तिसाधनत्वेन मन्दमध्यमबुद्धीनां विवक्षितस्य ओङ्कारस्य उपासनं कालान्तरे मुक्तिफलम् उक्तं यत् ,
பரப்ரஹ்மத்தைக் குறிக்கும் சொல்லானது பிரிதிமாபோல (விக்கிரஹம் போல) பிரதீக (சின்னமாக) இருப்பதால் பரப்ரஹ்மத்தை அறிவ தற்கு மந்த, மத்யம புத்தி உடையவர்களுக்கு சாதனமாகக் கூறப்பட்ட ஓம்கார உபாசனையினால் காலாந்தரத்தில் (பிற்காலத்தில்) முக்தி யைக் கொடுப்பதாக எது கூறப்பட்டதோ
तदेव इहापि ‘कविं पुराणमनुशासितारम्’ (भ. गी. ८ । ९) ‘यदक्षरं वेदविदो वदन्ति’ (भ. गी. ८ । ११) इति च उपन्यस्तस्य परस्य ब्रह्मणः पूर्वोक्तरूपेण प्रतिपत्त्युपायभूतस्य ओङ्कारस्य कालान्तरमुक्तिफलम् उपासनं योगधारणासहितं वक्तव्यम् , प्रसक्तानुप्रसक्तं च यत्किञ्चित् , इत्येवमर्थः उत्तरो ग्रन्थ आरभ्यते —
அதுவே இங்கும் (கவிம் புராணமனுசாசிதாரம், யதக்ஷரம் வேத விதோ வதந்தி) என்று எடுத்துக் கூறப்பட்டபடி அறிவதற்கு உபாய மான காலாந்தரத்தில் பலத்தைக் கொடுக்கக்கூடிய ஓம்கார உபா சனை யோகதாரணையுடன் (உறுதியாக நிற்றலுடன்) கூடிய தியான மானது உபதேசிக்கவேண்டியது என்று கருதி முக்கியமானது, மற்றும் அதனைச் சார்ந்த விஷயங்களை எடுத்துக் கூறுவதற்காக மேல்வரும் கிரந்தமானது ஆரம்பிக்கப்படுகிறது.
सर्वद्वाराणि संयम्य मनो हृदि निरुध्य च ।
मूर्ध्न्याधायात्मनः प्राणमास्थितो योगधारणाम् ॥ १२ ॥
ஸர்வத்வாராணி ஸம்யம்ய மனோ ஹ்ருதி நிருத்ய ச ।
மூர்த்ந்யாதாயாத்மன: ப்ராணமாஸ்திதோ யோகதாரணாம் ॥ 12 ॥
सर्वद्वाराणि सर्वाणि च तानि द्वाराणि च सर्वद्वाराणि उपलब्धौ, तानि सर्वाणि संयम्य संयमनं कृत्वा मनः हृदि हृदयपुण्डरीके निरुध्य निरोधं कृत्वा निष्प्रचारमापाद्य, तत्र वशीकृतेन मनसा हृदयात् ऊर्ध्वगामिन्या नाड्या ऊर्ध्वमारुह्य मूर्ध्नि आधाय आत्मनः प्राणम् आस्थितः प्रवृत्तः योगधारणां धारयितुम् ॥ १२ ॥
விஷயங்களை அறியக்கூடிய வாயில்களாக உள்ள எல்லா இந் திரியங்களையும் அடக்கி மனதை ஹிருதய கமலங்களில் ஒடுக்கி என் றால் சங்கல்ப விகல்பமற்று, அதன் பின் வசம் செய்யப்பட்ட மனதோடு ஹிருதயத்திருந்து மேல் நோக்கி செல்லும் நாடியினால் மேலே ஏறி சிர சில் பிராணனை நிறுத்தி யோகதாரணையை செய்வதற்கு பிரவிர்த் தித்தவனாய் (தலைப்பட்டவனாய்) (பரமகதியை அடைவான் என்பது அடுத்த ஸ்லோகத்துடன் சம்பந்தம் ஏற்படுகிறது.)
तत्रैव च धारयन् —
அங்கேயே நிறுத்தினவனாய்
ओमित्येकाक्षरं ब्रह्म व्याहरन्मामनुस्मरन् ।
यः प्रयाति त्यजन्देहं स याति परमां गतिम् ॥ १३ ॥
ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரன்மாமனுஸ்மரன் ।
ய: ப்ரயாதி த்யஜன்தேஹம் ஸ யாதி பரமாம் கதிம் ॥ 13 ॥
ओमिति एकाक्षरं ब्रह्म ब्रह्मणः अभिधानभूतम् ओङ्कारं व्याहरन् उच्चारयन् , तदर्थभूतं माम् ईश्वरम् अनुस्मरन् अनुचिन्तयन् यः प्रयाति म्रियते,
ஓம் என்ற ஏகாக்ஷரம் (ஒரே எழுத்து உடைய ) பிரஹ்ம்மத்தின் பெயராகிய ஓம்காரத்தை உச்சரித்துக் கொண்டு அதன் அர்த்தமாகிய ஈஸ்வரனாகிய என்னைத் தொடர்ந்து சிந்தித்து எவன் ஒருவன் மரண மடைகிறானோ
सः त्यजन् परित्यजन् देहं शरीरम् — ‘त्यजन् देहम्’ इति प्रयाणविशेषणार्थम् देहत्यागेन प्रयाणम् आत्मनः, न स्वरूपनाशेनेत्यर्थः — सः एवं याति गच्छति परमां प्रकृष्टां गतिम् ॥ १३ ॥
இவ்வாறு தேஹத்தை விட்டுப் போகிறவன் மேலான கதியை அடைகிறான். இங்கு போகுதல் என்ற விசேஷணம் தேஹத்தை விடு தலே தவிர ஆத்மஸ்வரூபத்திற்கு நாசம் இல்லை என்பதை காண்பிக்கிறது என்பது பொருள்.
किञ्च —
மேலும்
अनन्यचेताः सततं यो मां स्मरति नित्यशः ।
तस्याहं सुलभः पार्थ नित्ययुक्तस्य योगिनः ॥ १४ ॥
அனன்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யச: ।
தஸ்யாஹம் ஸுலப: பார்த நித்யயுக்தஸ்ய யோகின: ॥ 14 ॥
अनन्यचेताः न अन्यविषये चेतः यस्य सोऽयम् अनन्यचेताः, योगी सततं सर्वदा यः मां परमेश्वरं स्मरति नित्यशः ।
மற்ற விஷயங்களில் மனதை செலுத்தாமல் எவன் பரமேச்வரனா கிய என்னையே எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டு
सततम् इति नैरन्तर्यम् उच्यते, नित्यशः इति दीर्घकालत्वम् उच्यते । न षण्मासं संवत्सरं वा ; किं तर्हि ? यावज्जीवं नैरन्तर्येण यः मां स्मरतीत्यर्थः ।
இங்கு (ஸததம்) என்ற சொல்லால் எப்பொழுதும் என்றும் (நித்யச:) என்ற சொல்லால் வெகுகாலம் என்றும் கூறப்படுகிறது. ஆறுமாதங்க ளோ, ஒருவருடமோ அல்ல. பின் என்னவெனில் உயிர் உள்ளவரை இடைவிடாமல் எப்பொழுதும் பரமேச்வரனாகிய என்னை எவன் நினைக்கிறானோ என்பது பொருள்.
तस्य योगिनः अहं सुलभः सुखेन लभ्यः हे पार्थ, नित्ययुक्तस्य सदा समाहितचित्तस्य योगिनः । यतः एवम् , अतः अनन्यचेताः सन् मयि सदा समाहितः भवेत् ॥ १४ ॥
ஹே பார்த்த! அந்த எப்பொழுதும் சமாஹிதமாய் உள்ள யோகிக்கு நான் சுலபமாக அடையப்படுவேன். இவ்வாறு இருப்பதால் மற்றவைகளில் மனதைச் செலுத்தாமல் எப்பொழுதும் பரமேச்வரனா கிய என்னிடத்திலேயே சமாஹித சித்தமுள்ளவனாய் இரு.
तव सौलभ्येन किं स्यात् इत्युच्यते ; शृणु तत् मम सौलभ्येन यत् भवति —
தங்களை சுலபமாக அடைவதால் என்ன ஏற்படும்? என்றால் கூறுகிறேன் என்னை சுலபமாய் அடைவதினால் என்ன ஏற்ப டுகின்றதோ அதைக்கேள். கேள்-
मामुपेत्य पुनर्जन्म दुःखालयमशाश्वतम् ।
नाप्नुवन्ति महात्मानः संसिद्धिं परमां गताः ॥ १५ ॥
மாமுபேத்ய புனர்ஜன்ம து:காலயமசாச்வதம் ।
நாப்னுவந்தி மஹாத்மான: ஸம்ஸித்திம் பரமாம் கதா: ॥ 15 ॥
माम् उपेत्य माम् ईश्वरम् उपेत्य मद्भावमापद्य पुनर्जन्म पुनरुत्पत्तिं न प्राप्नुवन्ति ।
ஈஸ்வரனாகிய என்னை அடைந்து என்னுடைய பாவமாகவே ஆகி மறுஜன்மத்தை (மறுபிறப்பை) அடையமாட்டார்கள்.
किंविशिष्टं पुनर्जन्म न प्राप्नुवन्ति इति, तद्विशेषणमाह —
எப்படிப்பட்ட புனர்ஜன்மத்தை அடையமாட்டார்கள் என்பதன் விசேஷணத்தைக் கூறுகிறார்-
दुःखालयं दुःखानाम् आध्यात्मिकादीनां आलयम् आश्रयम् आलीयन्ते यस्मिन् दुःखानि इति दुःखालयं जन्म । न केवलं दुःखालयम् , अशाश्वतम् अनवस्थितस्वरूपं च । नाप्नुवन्ति ईदृशं पुनर्जन्म महात्मानः यतयः संसिद्धिं मोक्षाख्यां परमां प्रकृष्टां गताः प्राप्ताः । ये पुनः मां न प्राप्नुवन्ति ते पुनः आवर्तन्ते ॥ १५ ॥
துக்காலயத்தை அடையமாட்டார்கள். துக்காலயம் என்றால் ஆத்யாத்மிகம் முதலான துக்கங்களின் இருப்பிடம். அதுவே ஜன்மா (பிறப்பு) துக்காலயம் மட்டுமல்ல. நிலையற்றதும் கூட. மேலான மோக்ஷப் பிராப்தியை அடைந்த மஹாத்மாக்களாகிய சந்நியாசிகள் துக்காலயமாகவும் நிலையற்றதாயும் உள்ள புனர்ஜன்மாவை அடைய மாட்டார்கள். மறுபடியும் எவர்கள் என்னை அடையவில்லையோ அவர்கள் மீண்டும், மீண்டும் பிறப்பார்கள்.
किं पुनः त्वत्तः अन्यत् प्राप्ताः पुनरावर्तन्ते इति, उच्यते —
மேலும் உன்னைத் தவிர மற்றதை அடைந்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பார்களா? என்று?
आब्रह्मभुवनाल्लोकाः पुनरावर्तिनोऽर्जुन ।
मामुपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते ॥ १६ ॥
ஆப்ரஹ்மபுவனால்லோகா: புனராவர்தினோஅர்ஜுன ।
மாமுபேத்ய து கௌந்தேய புனர்ஜன்ம ந வித்யதே ॥ 16 ॥
आब्रह्मभुवनात् भवन्ति अस्मिन् भूतानि इति भुवनम् ब्रह्मभुवनम् ब्रह्मलोक इत्यर्थः ।
எதில் பிராணிகள் உற்பத்தி ஆகின்றனவோ, எதில் வசிக்கின் றதோ அதனுடைய பெயர் புவனம். பிரஹ்ம புவனம், பிரஹ்மலோகம் என்பது பொருள்.
आब्रह्मभुवनात् सह ब्रह्मभुवनेन लोकाः सर्वे पुनरावर्तिनः पुनरावर्तनस्वभावाः हे अर्जुन । माम् एकम् उपेत्य तु कौन्तेय पुनर्जन्म पुनरुत्पत्तिः न विद्यते ॥ १६ ॥
ஹே அர்ஜுனா! பிரஹ்ம்மலோகம் முதல் எல்லா லோகங்களும் புனராவிர்த்தி (மறுபடியும், மறுபடியும் பிறந்து இறத்தல்) உடையது. ஆகையால் என் ஒருவனையே அடைந்ததால் ஹே கௌந்தேய! புனர்ஜன்மம் (மறுபடியும், மறுபடியும் பிறத்தல்) என்பது கிடையாது.
ब्रह्मलोकसहिताः लोकाः कस्मात् पुनरावर्तिनः ? कालपरिच्छिन्नत्वात् । कथम् ? —
பிரஹ்ம்ம லோகத்துடன் எல்லா லோகங்களும் ஏன் புனராவி ருத்தி உடையனவாய் இருக்கின்றன. காலப்பரிச்சின்னமாய்‌ இருப் பதால், அது எவ்வாறு-
सहस्रयुगपर्यन्तमहर्यद्ब्रह्मणो विदुः ।
रात्रिं युगसहस्रान्तां तेऽहोरात्रविदो जनाः ॥ १७ ॥
ஸஹஸ்ரயுகபர்யந்தமஹர்யத்ப்ரஹ்மணோ விது: ।
ராத்ரிம் யுகஸஹஸ்ராந்தாம் தேஅஹோராத்ரவிதோ ஜனா: ॥ 17 ॥
सहस्रयुगपर्यन्तं सहस्राणि युगानि पर्यन्तः पर्यवसानं यस्य अह्नः तत् अहः सहस्रयुगपर्यन्तम् , ब्रह्मणः प्रजापतेः विराजः विदुः ।
பிரஹ்ம்மா, பிரஜாபதி என்ற விராட்டிற்கு ஆயிரம் யுகங்களின் முடிவு (சேர்ந்தது) ஒரு பகலாகும் என்று அறிவார்கள்.
रात्रिम् अपि युगसहस्रान्तां अहःपरिमाणामेव ।
அவ்வாறே ஆயிரம் யுகங்களின் முடிவு ஒரு இரவாகும்.
के विदुरित्याह —
அவர்கள் அறிந்தவர்கள் என்று கூறுகிறார்.
ते अहोरात्रविदः कालसङ्ख्याविदो जनाः इत्यर्थः । यतः एवं कालपरिच्छिन्नाः ते, अतः पुनरावर्तिनो लोकाः ॥ १७ ॥
அவர்கள் பகல் இரவு இவைகளை அறிந்தவர்கள் என்றால் காலத்தின் அளவை (தத்துவத்தை) அறிந்தவர்கள். (அறிந்த ஜனங் கள்) எதனால் அவர்கள் காலத்தினால் வரையறுக்கப்பட்டோர்களோ ஆதலால் அவர்கள் புனராவிர்த்தி உடையவர்கள். (லோகங்களை மாறி மாறி அடைகிறார்கள்)
प्रजापतेः अहनि यत् भवति रात्रौ च, तत् उच्यते —
பிரஜாபதியினுடைய பகலும், இரவிலும் எது நிகழ்கிறதோ அதைக் கூறுகிறார்.
अव्यक्ताद्व्यक्तयः सर्वाः प्रभवन्त्यहरागमे ।
रात्र्यागमे प्रलीयन्ते तत्रैवाव्यक्तसंज्ञके ॥ १८ ॥
அவ்யக்தாத்வ்யக்தய: ஸர்வா: ப்ரபவந்த்யஹராகமே ।
ராத்ர்யாகமே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்தஸம்க்ஞகே ॥ 18 ॥
अव्यक्तात् अव्यक्तं प्रजापतेः स्वापावस्था तस्मात् अव्यक्तात् व्यक्तयः व्यज्यन्त इति व्यक्तयः स्थावरजङ्गमलक्षणाः सर्वाः प्रजाः प्रभवन्ति अभिव्यज्यन्ते, अह्नः आगमः अहरागमः तस्मिन् अहरागमे काले ब्रह्मणः प्रबोधकाले ।
அவ்யக்தம் என்பது பிரஜாபதியினுடைய தூங்கும் காலம். அதிலிருந்து வியக்தம் ஆகும்பொழுது (வெளிப்படும்பொழுது) ஸ்தாவர ஜங்கம லக்ஷணங்களோடு கூடிய எல்லா பிரஜைகளும் உண்டாகின்றார்கள். அதுவே பகலாகும். அந்த பகல்காலமே பிரஹ்ம்மாவினுடைய விழிப்பு நிலையாகும்.
तथा रात्र्यागमे ब्रह्मणः स्वापकाले प्रलीयन्ते सर्वाः व्यक्तयः तत्रैव पूर्वोक्ते अव्यक्तसंज्ञके ॥ १८ ॥
அவ்வாறே இரவு வரும்பொழுது பிரம்மாவினுடைய தூங்கும் காலத்தில் வெளிப்பட்டவைகள் எல்லாம் முன்பு கூறப்பட்ட அவ்யக்தத்தில் லயமாகின்றன.
अकृताभ्यागमकृतविप्रणाशदोषपरिहारार्थम् , बन्धमोक्षशास्त्रप्रवृत्तिसाफल्यप्रदर्शनार्थम् अविद्यादिक्लेशमूलकर्माशयवशाच्च अवशः भूतग्रामः भूत्वा भूत्वा प्रलीयते इत्यतः संसारे वैराग्यप्रदर्शनार्थं च इदमाह —
செய்யாத கர்மங்களுக்கு பலனை அடைதலும், செய்த கர்மங்களுக்கு பலனை அடையாததுமாகிய தோஷங்கள் நிவிர்த்தி ஆவதின் பொருட்டும், பந்த, மோக்ஷ சாஸ்திரத்திற்கு பலன் உடைய தலை காண்பிக்கும் பொருட்டும் அவித்தை முதய பஞ்சக்லேசங்கள் காரணமாக உடைய கர்ம ஸம்ஸ்காரங்களின் வசப்பட்டு சுதந்திரமற்ற பிராணிக்கூட்டம் தோன்றி, தோன்றி மறைகின்றன. ஆகையால் சம்சாரத்தில் வைராக்கியத்தை காண்பிப்பதற்காக (உண்டாக்கு வதற்காக) இவ்வாறு கூறுகிறார்-
भूतग्रामः स एवायं भूत्वा भूत्वा प्रलीयते ।
रात्र्यागमेऽवशः पार्थ प्रभवत्यहरागमे ॥ १९ ॥
பூதக்ராம: ஸ ஏவாயம் பூத்வா பூத்வா ப்ரலீயதே ।
ராத்ர்யாகமே அவச: பார்த ப்ரபவத்யஹராகமே ॥ 19 ॥
भूतग्रामः भूतसमुदायः स्थावरजङ्गमलक्षणः यः पूर्वस्मिन् कल्पे आसीत् स एव अयं नान्यः भूत्वा भूत्वा अहरागमे, प्रलीयते पुनः पुनः रात्र्यागमे अह्नः क्षये अवशः अस्वतन्त्र एव, हे पार्थ, प्रभवति जायते अवश एव अहरागमे ॥ १९ ॥
எது முதல் கல்பத்தில் இருந்ததோ அதுவே இது. வேறு ஒன்றல்ல. அந்த ஸ்தாவர ஜங்கமங்களாகிய பிராணி கூட்டம் பிரஹ்ம்மா வினுடைய பகல் ஆரம்பத்தில் மறுபடியும் மறுபடியும் தோன்றி இரவு ஏற்பட்டு பகல் முடியும்பொழுது மீண்டும், மீண்டும் மறைகிறது. ஹே பார்த்த! தன்வசமற்று (சுதந்திரமற்று) மீண்டும் அவ்வாறே பகல் தோன்றும்பொழுது மறுபடியும் உண்டாகிறது.
यत् उपन्यस्तम् अक्षरम् , तस्य प्राप्त्युपायो निर्दिष्टः ‘ओमित्येकाक्षरं ब्रह्म’ (भ. गी. ८ । १३) इत्यादिना । अथ इदानीम् अक्षरस्यैव स्वरूपनिर्दिदिक्षया इदम् उच्यते, अनेन योगमार्गेण इदं गन्तव्यमिति —
முன்பு எந்த அக்ஷர பிரம்மத்தைப் பற்றி விவரித்துக் கூறப்பட்டதோ அதை அடைவதற்காக உபாயத்தை (ஓமிதி ஏகாக்ஷரம் பிரஹ்ம) என்பது முதலிய வசனங்களால் கூறப்பட்டது. இப்பொழுது அந்த அக்ஷரத்தின் ஸ்வரூபத்தை இப்படிப்பட்டது என்று உணர்த்துவதில் இச்சை உடையவராய் இந்த யோக மார்க்கத்தால் இது அடையப்பட வேண்டியது என்று கூறுகிறார்-
परस्तस्मात्तु भावोऽन्योऽव्यक्तोऽव्यक्तात्सनातनः ।
यः स सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति ॥ २० ॥
பரஸ்தஸ்மாத்து பாவோஅந்யோஅவ்யக்தோ அவ்யக்தாத்ஸ னாதன: ।
ய: ஸ ஸர்வேஷு பூதேஷு நச்யத்ஸு ந விநச்யதி ॥ 20 ॥
परः व्यतिरिक्तः भिन्नः । कुतः ? तस्मात् पूर्वोक्तात् । तु शब्दः अक्षरस्य विवक्षितस्य अव्यक्तात् वैलक्षण्यविशेषणार्थः । भावः अक्षराख्यं परं ब्रह्म ।
மேலானது என்றால் (அவ்யக்தத்தைக் காட்டிலும் ) வேறானது. ஏனெனில் முன்னால் கூறபட்டுள்ளதால் (து) என்ற சப்தமானது விளக் கப்பட்ட அக்ஷரமானது அவ்யக்தத்தைக் காட்டிலும் வேறானது என்ற வேற்றுமைத் தன்மையை விளக்குவதற்காக கூறப்பட்டது. (பாவ:) என்றால் அக்ஷரம் எனப்படும் பரப்ரஹ்மம்.
व्यतिरिक्तत्वे सत्यपि सालक्षण्यप्रसङ्गोऽस्तीति तद्विनिवृत्त्यर्थम् आह — अन्यः इति । अन्यः विलक्षणः स च अव्यक्तः अनिन्द्रियगोचरः ।
வேறாய் இருந்தாலும் ஒரே லக்ஷணமுடையது என ஏற்படலாம் என்பதால் அதை நிவிர்த்தி செய்வதற்காக (அன்ய) என்று கூறப்பட்டது. அந்த வேறான அவ்யக்தமானது இந்திரியங்களுக்கு எட்டாதது.
‘परस्तस्मात्’ इत्युक्तम् ; कस्मात् पुनः परः ?
அதைக்காட்டிலும் மேலானது என்று கூறப்பட்டது. அது எதைவிட மேலானது?
पूर्वोक्तात् भूतग्रामबीजभूतात् अविद्यालक्षणात् अव्यक्तात् । अन्यः विलक्षणः भावः इत्यभिप्रायः । सनातनः चिरन्तनः यः सः भावः सर्वेषु भूतेषु ब्रह्मादिषु नश्यत्सु न विनश्यति ॥ २० ॥
முன்பு கூறப்பட்ட பிராணிக்கூட்டங்களின் காரணமான அவித்தியா லக்ஷணமான அவ்யக்தத்தைக் காட்டிலும் (பிரஹ்ம் மானது மேலானது) எப்பொழுதும் இருப்பதோ அது பிரஹ்மம். அழியக்கூடிய பிரஹ்ம்மா முதலிய எல்லா பூதங்கள் அழிந்தாலும் அது அழிவில்லாதது.
अव्यक्तोऽक्षर इत्युक्तस्तमाहुः परमां गतिम् ।
यं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम ॥ २१ ॥
அவ்யக்தோஅக்ஷர இத்யுக்தஸ்தமாஹு: பரமாம் கதிம் ।
யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம ॥ 21 ॥
योऽसौ अव्यक्तः अक्षरः इत्युक्तः, तमेव अक्षरसंज्ञकम् अव्यक्तं भावम् आहुः परमां प्रकृष्टां गतिम् । यं परं भावं प्राप्य गत्वा न निवर्तन्ते संसाराय, तत् धाम स्थानं परमं प्रकृष्टं मम, विष्णोः परमं पदमित्यर्थः ॥ २१ ॥
எதை, அந்த அவ்யக்தம், அக்ஷரம் என்று கூறப்பட்டதோ அதுவே அக்ஷரம் எனப்படும் அவ்யக்த பிரஹ்மத்தை மேலான கதி (அடையப்பட வேண்டிய புருஷார்த்தம்) என்று கூறுவர். எந்த பாவத்தை (பிரஹ்மத்தை) அடைந்த பின் சம்சாரத்தின் பொருட்டு திரும்பி வருவதில்லையோ அந்த ஸ்தானம் விஷ்ணுவாகிய என்னு டைய மேலான பதம். (பரம பதம்) என்பது பொருள்.
तल्लब्धेः उपायः उच्यते —
அந்த பரமபதத்தை அடைவதற்கான உபாயத்தைக் கூறுகிறார்-
पुरुषः स परः पार्थ भक्त्या लभ्यस्त्वनन्यया ।
यस्यान्तःस्थानि भूतानि येन सर्वमिदं ततम् ॥ २२ ॥
புருஷ: ஸ பர: பார்த பக்த்யா லப்யஸ்த்வனன்யயா ।
யஸ்யாந்த: ஸ்தானி பூதானி யேன ஸர்வமிதம் ததம் ॥ 22 ॥
पुरुषः पुरि शयनात् पूर्णत्वाद्वा, स परः पार्थ, परः निरतिशयः, यस्मात् पुरुषात् न परं किञ्चित् । सः भक्त्या लभ्यस्तु ज्ञानलक्षणया अनन्यया आत्मविषयया । यस्य पुरुषस्य अन्तःस्थानि मध्यस्थानि भूतानि कार्यभूतानि ; कार्यं हि कारणस्य अन्तर्वर्ति भवति । येन पुरुषेण सर्वं इदं जगत् ततं व्याप्तम् आकाशेनेव घटादि ॥ २२ ॥
ஹே பார்த்தா! சரீர ரூபமாய் உள்ள புரத்தில் தங்கி இருப்பதால் அல்லது எங்கும் பரிபூரணமாய் இருப்பதாலும் பரமாத்மா புருஷன் எனப்படுகிறார். எதனால் அந்த புருஷனைக் காட்டிலும் மேலானது சிறிதும் இல்லையோ அந்த புருஷன் ஞானலக்ஷணத்துடன் கூடிய ஆத்ம விஷயமான அநன்னிய பக்தியால் அடையக்கூடியவர். அந்த புருஷனிடத்தில் உள்ளே எல்லாக் காரியபூதங்களும் இருக்கின்றன. ஏனெனில் காரியமானது காரணத்துள் இருக்கிறது. கடம் முதலியவைகளுள் ஆகாசம் வியாபித்து இருப்பதுபோல் இந்த புருஷனால் ஜகத் முழுவதும் வ்யாபிக்கப்பட்டு இருக்கிறது.
प्रकृतानां योगिनां प्रणवावेशितब्रह्मबुद्धीनां कालान्तरमुक्तिभाजां ब्रह्मप्रतिपत्तये उत्तरो मार्गो वक्तव्य इति ‘यत्र काले’ इत्यादि विवक्षितार्थसमर्पणार्थम् उच्यते, आवृत्तिमार्गोपन्यासः इतरमार्गस्तुत्यर्थः —
எவர்கள் பிரணவத்தில் பிரஹ்ம புத்தியை வைத்தவர்களோ அவர்கள் காலாந்தரத்தில் முக்தி அடைபவர்கள். பிரஹ்மத்தை அடைவதற்கு உத்தரமார்க்கத்தை அவசியம் கூறவேண்டும் என்பதால் (யத்ர காலே) முதலியவைகள் சொல்லக் கருதிய விஷயத்தை தெளிவாக்குவதற் பொருட்டு கூறப்பட்டது. இங்கு புனராவிர்த்தி மார்க்கத்தை பற்றி வர்ணிப்பது மற்ற மார்க்கத்தை ஸ்துதி செய்வதற்காக-
यत्र काले त्वनावृत्तिमावृत्तिं चैव योगिनः ।
प्रयाता यान्ति तं कालं वक्ष्यामि भरतर्षभ ॥ २३ ॥
யத்ர காலே த்வநாவ்ருத்திமாவ்ருத்திம் சைவ யோகின: ।
ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி பரதர்ஷப ॥ 23 ॥
यत्र काले प्रयाताः इति व्यवहितेन सम्बन्धः ।
(யத்ர காலே) என்ற பதத்துடன் (ப்ரயாதா:) என்ற பதத்துடன் சம்பந்தத்தைக் கூட்டுக.
यत्र यस्मिन् काले तु अनावृत्तिम् अपुनर्जन्म आवृत्तिं तद्विपरीतां चैव । योगिनः इति योगिनः कर्मिणश्च उच्यन्ते । कर्मिणस्तु गुणतः — ‘कर्मयोगेन योगिनाम्’ (भ. गी. ३ । ३) इति विशेषणात् — योगिनः ।
எக்காலத்தில் சரீரத்தைத் துறந்த யோகிகள் புனராவிருத்தியை (திரும்பிவராதிருத்தலை) பெறுகின்றார்களோ, எந்த காலத்தில் அதற்கு விபரீதமான அபுனராவிருத்தியை அடைகின்றார்களோ அக்காலத்தைக் கூறுவேன். இங்கு யோகி என்ற பதம் (சொல்) கர்மயோகியைக் குறிக்கிறது. (கர்மயோகேன யோகினாம்) என்ற விசேஷணத்தால் கூறப்பட்டதால் யோகிகள் எனப்படுகிறார்கள்.
यत्र काले प्रयाताः मृताः योगिनः अनावृत्तिं यान्ति, यत्र काले च प्रयाताः आवृत्तिं यान्ति, तं कालं वक्ष्यामि भरतर्षभ ॥ २३ ॥
எந்த காலத்தில் மரணமடைந்த யோகிகள் அநாவிருத்தியை (அபுனராவிருத்தியை) அடைகிறார்களோ அவ்வாறே எக்காலத்தில் ஆவிர்த்தியை (புனராவிர்த்தியை) அடைகிறார்களோ ஹே பரதரிஷப! அந்த காலத்தைப் பற்றி கூறுகிறேன்.
अग्निर्ज्योतिरहः शुक्लः षण्मासा उत्तरायणम् ।
तत्र प्रयाता गच्छन्ति ब्रह्म ब्रह्मविदो जनाः ॥ २४ ॥
அக்னிர்ஜ்யோதிரஹ: சுக்ல: ஷண்மாஸா உத்தராயணம் ।
தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜனா: ॥ 24 ॥
अग्निः कालाभिमानिनी देवता । तथा ज्योतिरपि देवतैव कालाभिमानिनी । अथवा अग्निज्योतिषी यथाश्रुते एव देवते ।
அக்னி கால அபிமானினி தேவதை. அவ்வாறே ஜோதியும் காலா பிமானினீ தேவதையே. அல்லது அக்னியும்,ஜோதியும் பிரசித்தமான வைதிக தேவதைகளாகும்.
भूयसा तु निर्देशो ‘यत्र काले’ ‘तं कालम्’ इति आम्रवणवत् ।
வனத்தில்(காட்டில்) மாமரங்கள் அதிகமாக இருந்தால் அதை மாமரக்காடு என்பதுபோல் இங்கும் காலாபிமானினி தேவதைகளின் வர்ணனை அதிகமாக இருப்பதால் (யத்ரகாலே, தம்காலம்) என்று காலவாசகமானது பிரயோகம் செய்யப்பட்டது.
तथा अहः देवता अहरभिमानिनी ; शुक्लः शुक्लपक्षदेवता ; षण्मासा उत्तरायणम् , तत्रापि देवतैव मार्गभूता इति स्थितः अन्यत्र अयं न्यायः तत्र तस्मिन् मार्गे प्रयाताः मृताः गच्छन्ति ब्रह्म ब्रह्मविदो ब्रह्मोपासकाः ब्रह्मोपासनपरा जनाः । ‘क्रमेण’ इति वाक्यशेषः ।
அவ்வாறே பகல்தேவதை, சுக்லபக்ஷதேவதை என்றும் உத்தராய ணத்தின் ஆறுமாதங்களின் தேவதை. அதுவே மார்க்கமாகிறது (வழியாகிறது) இந்த நியாயம் வேறு இடத்திலும் (பிரஹ்ம்ம சூத்திரத்திலும்) காணப்படுகிறது. பிரஹ்மோபாசனையில் ஈடுபட்ட பிரஹ்ம்ம வித்துக்கள் மரித்தவுடன் அந்த மார்க்கத்தில் செல்லு கிறார்கள், (காலக்) கிரமமாக என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
न हि सद्योमुक्तिभाजां सम्यग्दर्शननिष्ठानां गतिः आगतिर्वा क्वचित् अस्ति, ‘न तस्य प्राणा उत्क्रामन्ति’ (बृ. उ. ४ । ४ । ६) इति श्रुतेः । ब्रह्मसंलीनप्राणा एव ते ब्रह्ममया ब्रह्मभूता एव ते ॥ २४ ॥
ஏனெனில் யதார்த்த ஞானநிஷ்ட்டையினால் உடனே முக்தியை அடைபவர்களுக்கு போவதும், வருவதும் என்பது கிடையாது. (நதஸ்ய ப்ராணா உத்கிராமந்தி) என்று சுருதி கூறுகிறது. பிரஹ்ம்மத் திலேயே லயமடைந்த பிராணனை உடையவர்கள் பிரஹ்மமாகவே ஆகிறார்கள்.
धूमो रात्रिस्तथा कृष्णः षण्मासा दक्षिणायनम् ।
तत्र चान्द्रमसं ज्योतिर्योगी प्राप्य निवर्तते ॥ २५ ॥
தூமோ ராத்ரிஸ்ததா க்ருஷ்ண: ஷண்மாஸா தக்ஷிணாயனம் ।
தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதிர்யோகீ ப்ராப்ய நிவர்ததே ॥ 25 ॥
धूमो रात्रिः धूमाभिमानिनी रात्र्यभिमानिनी च देवता । तथा कृष्णः कृष्णपक्षदेवता । षण्मासा दक्षिणायनम् इति च पूर्ववत् देवतैव । तत्र चन्द्रमसि भवं चान्द्रमसं ज्योतिः फलम् इष्टादिकारी योगी कर्मी प्राप्य भुक्त्वा तत्क्षयात् इह पुनः निवर्तते ॥ २५ ॥
புகையை அபிமானிக்கும் தேவதை, ராத்திரியை அபிமானிக்கும் தேவதை அவ்வாறே கிருஷ்ணபக்ஷ தேவதை, தக்ஷிணாயணத்தின் ஆறுமாதங்களின் தேவதை இவைகள் முன் போலவே தேவதைகளே மார்க்கதேவதை ஆகிறது. இந்த மார்க்கத்தில் செல்லும் யோகி என்றால் இஷ்ட்டம் பூர்த்தம் முதலிய கர்மங்களைச் செய்யும் கர்மி சந்திரனின் ஒளியை பயனாக அடைந்து அனுபவித்த பின் பயனானது தீர்ந்த பின் திரும்பி வருகிறான்.
शुक्लकृष्णे गती ह्येते जगतः शाश्वते मते ।
एकया यात्यनावृत्तिमन्ययावर्तते पुनः ॥ २६ ॥
சுக்லக்ருஷ்ணே கதி ஹ்யேதே ஜகத: சாச்வதே மதே ।
ஏகயா யாத்யனாவ்ருத்திமன்யயாவர்ததே புன: ॥ 26 ॥
शुक्लकृष्णे शुक्ला च कृष्णा च शुक्लकृष्णे । ज्ञानप्रकाशकत्वात् शुक्ला तदभावात् कृष्णा । एते शुक्लकृष्णे हि गती जगतः इति अधिकृतानां ज्ञानकर्मणोः न जगतः सर्वस्यैव एते गती सम्भवतः । शाश्वते नित्ये संसारस्य नित्यत्वात् मते अभिप्रेते ।
சுக்லம் என்றும், கிருஷ்ணம் என்றும் இரண்டு மார்க்கங்கள், ஞானத்தை விளக்குவதால் சுக்லம் (வெளிச்சம்) என்ற தேவயான மார்க்கம். ஞானத்தை விளக்காததால் கிருஷ்ணம் (இருட்டு) என்ற பித்ருயான மார்க்கம். இந்த சுக்ல கிருஷ்ண மார்க்கங்கள் ஜகத்திற்கு என்று கூறியது ஞானி, கர்மி என்ற அதிகாரிகளைக் குறித்தே அன்றி எல்லா ஜகத்திற்கும் (ஜனங்களுக்கும்) அல்ல என்று அறிந்து கொள்ள வேண்டும். சம்சாரம் நித்தியம் (அநாதி) என்று கருதுபவர்கள் அபிப்பிராயப்படி இவ்விரு கதிகளும் சம்பவிக்கும்.
तत्र एकया शुक्लया याति अनावृत्तिम् अन्यया इतरया आवर्तते पुनः भूयः ॥ २६ ॥
இங்கு சுக்ல மார்க்கத்தில் செல்பவன் திரும்பிவருதலை அடை யமாட்டான். கிருஷ்ணமார்க்கத்தில் செல்பவன் மீண்டும், மீண்டும் திரும்பி வருகிறான்.
नैते सृती पार्थ जानन्योगी मुह्यति कश्चन ।
तस्मात्सर्वेषु कालेषु योगयुक्तो भवार्जुन ॥ २७ ॥
நைதே ஸ்ருதி பார்த ஜானன்யோகீ முஹ்யதி கச்சன ।
தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு யோகயுக்தோ பவார்ஜுன ॥ 27 ॥
न एते यथोक्ते सृती मार्गौ पार्थ जानन् संसाराय एका अन्या मोक्षाय इति योगी न मुह्यति कश्चन कश्चिदपि । तस्मात् सर्वेषु कालेषु योगयुक्तः समाहितो भव अर्जुन ॥ २७ ॥
ஹே பார்த்தா! இவ்விரு மார்க்கங்களில் ஒருமார்க்கம் சம்சாரத் திற்கென்றும் மற்றொரு மார்க்கம் மோக்ஷத்திற்கு என்றும் அறிந்த எந்த ஒரு யோகியும் மோஹம் அடையமாட்டான். ஆகையால் எப்பொழுதும் யோகத்துடன் கூடியிரு. என்றால் சமாஹித மனது டையனாக இரு.
शृणु तस्य योगस्य माहात्म्यम् —
அந்த யோகத்தினுடைய மஹிமையைக் கேள்.
वेदेषु यज्ञेषु तपःसु चैव दानेषु यत्पुण्यफलं प्रदिष्टम् ।
अत्येति तत्सर्वमिदं विदित्वा योगी परं स्थानमुपैति चाद्यम् ॥ २८ ॥
வேதேஷு யக்ஞேஷு தப:ஸு சைவ தானேஷு யத்புண்யபலம்‌ ப்ரதிஷ்டம்‌ ।
அத்யேதி தத்ஸர்வமிதம்‌ விதித்வா யோகீ பரம்‌ ஸ்தானமுபைதி சாத்யம்‌ ॥ 28 ॥
वेदेषु सम्यगधीतेषु यज्ञेषु च साद्गुण्येन अनुष्ठितेषु तपःसु च सुतप्तेषु दानेषु च सम्यग्दत्तेषु एतेषु यत् पुण्यफलं प्रदिष्टं शास्त्रेण अत्येति अतीत्य गच्छति तत् सर्वं फलजातम् इदं विदित्वा सप्तप्रश्ननिर्णयद्वारेण उक्तम् अर्थं सम्यक् अवधार्य अनुष्ठाय योगी, परम् उत्कृष्टम् ऐश्वरं स्थानम् उपैति च प्रतिपद्यत, आद्यम् आदौ भवम् कारणं ब्रह्म इत्यर्थः ॥ २८ ॥
இந்த ஏழு வினாக்களை நிர்ணயம் செய்வதன் மூலமாக கூறப்பட்ட யதார்த்த விஷயத்தை நன்றாக அறிந்து அனுஷ்ட்டித்து வரும் யோகி- நன்றாக ஓதிய வேதங்கள், சாத்வீக குணங்களுடன் அனுஷ்ட்டிக்கப்பட்ட யக்ஞங்கள், நன்றாக செய்யப்பட்ட தவங்கள் நன்றாக பாத்திரமறிந்து செய்யப்பட்ட தானங்கள் இவைகளினால் சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி உண்டாகும் புண்யபலத்தை எல்லாம் கடந்து நிற்கிறான். மேலும் மேலான ஈஸ்வரனுடைய ஸ்தானத்தை அடைகிறான், அதாவது ஆதியில் உண்டான காரண பிரஹ்மம் என்பது பொருள்.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये अष्टमोऽध्यायः ॥
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம் வாதே தாரகப்ரஹ்மயோகோ நாம அஷ்டமோத்யாய:
अष्टमे नाडीद्वारेण धारणायोगः सगुणः उक्तः । तस्य च फलम् अग्न्यर्चिरादिक्रमेण कालान्तरे ब्रह्मप्राप्तिलक्षणमेव अनावृत्तिरूपं निर्दिष्टम् ।
எட்டாவது அத்யாயத்தில் ஸுஷும்னா நாடி மூலமாக தாரணா யோகமானது முறைப்படி விளக்கப்பட்டது. அக்னி அர்ச்சிராதி கிரம மாக காலாந்தரத்தில் அநாவிர்த்தி ரூபமான பிரஹ்ம பிராப்தி அதனு டைய பலமாக குறிப்பிட்டு காட்டப்பட்டது.
तत्र ‘अनेनैव प्रकारेण मोक्षप्राप्तिफलम् अधिगम्यते, न अन्यथा’ इति तदाशङ्काव्याविवर्तयिषया —
அங்கு இவ்வாறுதான் மோக்ஷபலத்தை அடையமுடியும், வேறு பிரகாரத்தால் அல்ல என்றால் அந்த சங்கையை நிவிர்த்தி செய்வதில் இச்சை உடையவராகி
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச
इदं तु ते गुह्यतमं प्रवक्ष्याम्यनसूयवे ।
ज्ञानं विज्ञानसहितं यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात् ॥ १ ॥
இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே ।
ஞானம் விக்ஞானஸஹிதம் யக்ஞ்ஞாத்வா மோக்ஷ்யஸேஅசுபாத் ॥ 1 ॥
इदं ब्रह्मज्ञानं वक्ष्यमाणम् उक्तं च पूर्वेषु अध्यायेषु तत् बुद्धौ संनिधीकृत्य इदम् इत्याह । तु शब्दो विशेषनिर्धारणार्थः ।
இனிக் கூறப்போவதும் இதற்கு முந்தின அத்தியாயங்களில் கூறப்பட்டதுமான இந்த பிரஹ்ம ஞானத்தை புத்தியில் முன் நிறுத்தி (இதம்-இந்த)என்று கூறினார். து, (இனி) என்ற விசேஷண சப்தமானது மற்றஞானங்களிலிருந்து வேறுபட்டது என்னும் பொருளில் வந்தது.
इदमेव तु सम्यग्ज्ञानं साक्षात् मोक्षप्राप्तिसाधनम् ‘वासुदेवः सर्वमिति’ (भ. गी. ७ । १९) ‘आत्मैवेदं सर्वम्’ (छा. उ. ७ । २५ । २) ‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) इत्यादिश्रुतिस्मृतिभ्यः । नान्यत् ।
இந்த யதார்த்த ஞானமே மோக்ஷத்திற்கு சாதனமாகும் என்பது (வாசுதேவ: சர்வமிதி) (ஆத்மைவேதம் ஸர்வம்) முதலிய ச்ருதி ஸ்ம்ருதிகளால் (அறியத்தக்கது) வேறு சாதனமல்ல.
அதயே அந்யத்ததோ விதுரன்யராஜானஸ்தே க்ஷய்யலோகா பவந்தி) என்பது முதலிய சுருதிகளாலும்
ते तुभ्यं गुह्यतमं गोप्यतमं प्रवक्ष्यामि कथयिष्यामि अनसूयवे असूयारहिताय ।
அசூயை அற்றஉனக்கு மிகவும் ரஹஸ்யமான விஷயத்தைக் கூறுகிறேன்
किं तत् ,ज्ञानम् ,किंविशिष्टम् विज्ञानसहितम् अनुभवयुक्तम् ।
அது என்ன? ஞானம். அது எப்படிப்பட்டது? (அது எதனுடன் கூடியது) விக்ஞானத்துடன் கூடியது என்றால் அனுபவத்துடன் கூடியது.
यत् ज्ञात्वा प्राप्य मोक्ष्यसे अशुभात् संसारबन्धनात् ॥ १ ॥
எந்த ஞானத்தை அறிந்து (அடைந்து) அசுபமாகிய சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவாயோ?
तच्च —
அந்த ஞானம்
राजविद्या राजगुह्यं पवित्रमिदमुत्तमम् ।
प्रत्यक्षावगमं धर्म्यं सुसुखं कर्तुमव्ययम् ॥ २ ॥
ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரமிதமுத்தமம் ।
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸுஸுகம் கர்துமவ்யயம் ॥ 2 ॥
राजविद्या विद्यानां राजा दीप्त्यतिशयवत्त्वात् । दीप्यते हि इयम् अतिशयेन ब्रह्मविद्या सर्वविद्यानाम् ।
மிகுந்த பிரகாசத்தை உடையதால் எல்லா வித்தைகளுக்கும் ராஜா. இந்த பிரஹ்ம வித்யா எல்லா வித்யைகளைக் காட்டிலும் மிகுந்த பிரகாசம் உடையதாய் இருக்கிறது.
तथा राजगुह्यं गुह्यानां राजा । पवित्रं पावनं इदम् उत्तमं सर्वेषां पावनानां शुद्धिकारणं ब्रह्मज्ञानम् उत्कृष्टतमम् । अनेकजन्मसहस्रसञ्चितमपि धर्माधर्मादि समूलं कर्म क्षणमात्रादेव भस्मीकरोति इत्यतः किं तस्य पावनत्वं वक्तव्यम् ।
அவ்வாறேரஹஸ்யமானவைகளுக்கெல்லாம் ராஜா. மேலும் இது பவித்திரமானது, எல்லாவற்றிலும் உத்தமமானது, எல்லா சுத்தி செய்ப வைகளுள் இந்த பிரஹ்ம வித்யா மிகவும் மேலானது. ஆயிரக்கணக் கான அநேக ஜன்மங்களில் சேர்த்த புண்ய பாப முதலிய கர்மங்களை மூலத்துடன் (காரணத்துடன்) க்ஷணமாத்திரத்தில் சாம்பலாக்குகிறது என்றால் அதன் பவித்திரத்தன்மையை பற்றி என்ன கூறுவது?
किञ्च प्रत्यक्षावगमं प्रत्यक्षेण सुखादेरिव अवगमो यस्य तत् प्रत्यक्षावगमम् ।
மேலும் பிரத்யக்ஷமாய் அனுபவிக்கப்படுகிறது. சுகாதிகளைப் பிரத்யக்ஷமாய் அறிவது போல் பிரஹ்ம்ம வித்யையும் (பிரஹ்ம ஞானமும்) பிரத்யக்ஷமாய் அறியப்படுகிறது.
अनेकगुणवतोऽपि धर्मविरुद्धत्वं दृष्टम् न तथा आत्मज्ञानं धर्मविरोधि किन्तु धर्म्यं धर्मादनपेतम् ।
அநேக குணங்களுடன் கூடிய வஸ்துவிற்கு தர்மத்தில் விரோதம் காணப்படுகிறது. ஆனால் ஆத்மக்ஞானம் அவ்வாறு தர்மத்திற்கு விரோதி அல்ல. ஆனால் தர்மமாகவே இருக்கிறது.
एवमपि स्याद्दुःखसम्पाद्यमित्यत आह सुसुखं कर्तुम् यथा रत्नविवेकविज्ञानम् ।
இவ்வாறு இருந்தாலும் அதை அடைவது மிகக்கடினம். ஆகை யால் கூறுகிறார், எவ்வாறு ரத்தினங்களை பிரித்து அறிகிறோமோ அவ்வாறு விவேக ஞானத்தால் எளிதாய் அறியமுடியும்.
तत्र अल्पायासानामन्येषां कर्मणां सुखसम्पाद्यानाम् अल्पफलत्वं दुष्कराणां च महाफलत्वं दृष्टमिति इदं तु सुखसम्पाद्यत्वात् फलक्षयात् व्येति इति प्राप्ते आह —
அங்கு குறைந்த பிரயாசை உள்ள சுகத்தைத் தரக்கூடிய கர்மங்களுக்கு சிறிதுபலனும், மிக்கப் பிரயாசை உடையவர்களுக்கு மிகுந்த பலமும் காணப்படுகிறது என்பதால் இதுவும் (ஆத்மக்ஞான மும்) சுகத்தைத் தரக்கூடியதால் பலத்திற்கு அழிவு ஏற்படும் என்று ஆகிவிடும் ஆகையால் கூறுகிறார்-
अव्ययम् न अस्य फलतः कर्मवत् व्ययः अस्तीति अव्ययम् अतः श्रद्धेयम् आत्मज्ञानम् ॥ २ ॥
இந்த ஆத்மஞானத்தின் பலனானது அவ்யயம். கர்மபலன் போல் வியயம் (நாசம்) அடையாததினால் அவ்வியயம். ஆகையால் ஆத்மக்ஞானத்தை சிரத்தையுடன் நாடவேண்டும்.
ये पुनः —
மேலும் எவர்கள்
अश्रद्दधानाः पुरुषा धर्मस्यास्य परन्तप ।
अप्राप्य मां निवर्तन्ते मृत्युसंसारवर्त्मनि ॥ ३ ॥
அச்ரத்ததானா: புருஷா தர்மஸ்யாஸ்ய பரந்தப ।
அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யுஸம்ஸாரவர்த்மனி ॥ 3 ॥
अश्रद्दधानाः श्रद्धाविरहिताः आत्मज्ञानस्य धर्मस्य अस्य स्वरूपे तत्फले च नास्तिकाः पापकारिणः, असुराणाम् उपनिषदं देहमात्रात्मदर्शनमेव प्रतिपन्नाः असुतृपः पापाः पुरुषाः अश्रद्दधानाः, परन्तप, अप्राप्य मां परमेश्वरम् , मत्प्राप्तौ नैव आशङ्का इति मत्प्राप्तिमार्गभेदभक्तिमात्रमपि अप्राप्य इत्यर्थः । निवर्तन्ते निश्चयेन वर्तन्ते ।
ஆத்மஞானத்தில் சிரத்தை அற்றவர்கள். ஸ்வஸ்வரூபத்திலும், பலத்திலும் ஆஸ்திக புத்தி (இருக்கிறது என்றபுத்தி) அற்றவர்கள், பாபகர்மங்கள் செய்தவர்கள். அந்த நாஸ்திக புருஷர்கள் அசுரர் களின் உபநிஷத்தை (சித்தாந்தத்தை) கடைபிடித்து தேஹத்தை மாத்திரமே ஆத்மாவாக அறிகிறார்கள். அவர்கள் இந்திரியங்களை திருப்தி செய்வதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஹே பார்த்த! அந்த புருஷர்கள் பரமேஸ்வரனாகிய என்னை அடையவே மாட்டார் கள். என்னை அடைவதில் அவர்களுக்கு ஆசங்கை கூட கிடையாது. என்றால் என்னை அடைவதற்கான மார்க்க சாதன பேத பக்தியைக் கூட அடையமாட்டார்கள் என்பது பொருள். அவர்கள் நிச்சயமாக பவசக்கரத்தில் (பிறப்பு, இறப்பு என்றசக்கரத்தில்) உழல்வார்கள்.
क्व मृत्युसंसारवर्त्मनि मृत्युयुक्तः संसारः मृत्युसंसारः तस्य वर्त्म नरकतिर्यगादिप्राप्तिमार्गः तस्मिन्नेव वर्तन्ते इत्यर्थः ॥ ३ ॥
எங்கே என்றால்? மரணதர்மத்துடன் கூடிய சம்சார மார்க்கத்தில் சுழல்கிறார்கள். அந்த மார்க்கமானது நரகம், பசு, பக்ஷி முதலிய யோனிகளை அடைவிக்கும் மார்க்கம். அதிலேயே மறுபடியும் மறுபடி யும் பிறந்து பிறந்து இறக்கிறார்கள்.
स्तुत्या अर्जुनमभिमुखीकृत्य आह —
இவ்வாறு ஞானத்தைப் புகழ்வதின் மூலமாக அர்ச்சுனனை ஒரு முகப்படுத்தி கூறலானார்.
मया ततमिदं सर्वं जगतदव्यक्तमूर्तिना ।
मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्ववस्थितः ॥ ४ ॥
மயா ததமிதம் ஸர்வம் ஜகதவ்யக்தமூர்த்தினா ।
மத்ஸ்தானி ஸர்வபூதானி ந சாஹம் தேஷ்வவஸ்தித: ॥ 4 ॥
मया मम यः परो भावः तेन ततं व्याप्तं सर्वम् इदं जगत् अव्यक्तमूर्तिना न व्यक्ता मूर्तिः स्वरूपं यस्य मम सोऽहमव्यक्तमूर्तिः तेन मया अव्यक्तमूर्तिना करणागोचरस्वरूपेण इत्यर्थः ।
என்னுடைய மேலான பாவமாகிய இந்திரியங்களுக்குப் புலப்ப டாத அவ்யக்த மூர்த்தியாகிய என்னால் (வியக்த மூர்த்தியினால் அல் ல) இந்த ஜகத் முழுவதும் வியாபிக்கப்பட்டிருக்கிறது.
तस्मिन् मयि अव्यक्तमूर्तौ स्थितानि मत्स्थानि सर्वभूतानि ब्रह्मादीनि स्तम्बपर्यन्तानि ।
அந்த அவ்யக்த ரூபமான பரமாத்மாவாகிய என்னிடத்தில் பிரஹ்மா முதல் ஸ்தம்பம் வரையிலும் உள்ள எல்லா பிராணிகளும் என்னிடத்திலேயே நிலைபெற்றிருக்கின்றன.
न हि निरात्मकं किञ्चित् भूतं व्यवहाराय अवकल्पते । अतः मत्स्थानि मया आत्मना आत्मवत्त्वेन स्थितानि अतः मयि स्थितानि इति उच्यन्ते ।
ஆத்மாவன்றி எந்த ஒரு பிராணிக்கும் வியவகாரம் இருப்பதாக கல்பிக்கமுடியாது. ஆகையால் எல்லாம் என்னிலேயே நிலைபெற்றி ருக்கின்றன. ஆகையால் (மத்ஸ்தானி) எனப்பட்டது. பரமாத்மாவாகிய என்னால் எல்லாப்பிராணிகளும் ஆத்மத்துவத்துடன் இருக்கின்றன. ஆகையால் என்னிடத்தில் நிலைபெற்றிருக்கின்றன கூறப்படுகிறது.
तेषां भूतानाम् अहमेव आत्मा इत्यतः तेषु स्थितः इति मूढबुद्धीनां अवभासते । अतः ब्रवीमि न च अहं तेषु भूतेषु अवस्थितः मूर्तवत् संश्लेषाभावेन आकाशस्यापि अन्तरतमो हि अहम् । न हि असंसर्गि वस्तु क्वचित् आधेयभावेन अवस्थितं भवति ॥ ४ ॥
அந்த பிராணிகளுக்கு நானே ஆத்மாவாக இருப்பதால் மூடபுத்தி உள்ளவர்களுக்கு நான் அவைகளில் இருக்கிறேன் என்று தோன்றுகிறது. ஆகையால் நான் கூறுகிறேன் அந்த பிராணிக ளிடத்தில் நான் உருவம் உள்ளவை போல் சேர்க்கை பாவத்தில் நிலைபெறவில்லை. ஏனெனில் நான் ஆகாசத்தை விட மிகவும் சூட்சுமமாக இருப்பவன். சேர்க்கை அற்றஎந்த வஸ்துவும் ஆதேய பாவத்தில் (ஒன்றை ஆதாரமுடையதாக) இருக்காது.
अत एव असंसर्गित्वात् मम —
ஆகையால் தான் எனக்கு ஒன்றுடனும் சேர்க்கை இல்லை-
न च मत्स्थानि भूतानि पश्य मे योगमैश्वरम् ।
भूतभृन्न च भूतस्थो ममात्मा भूतभावनः ॥ ५ ॥
ந ச மத்ஸ்தானி பூதானி பச்ய மே யோகமைச்வரம் ।
பூதப்ருன்ன ச பூதஸ்தோ மமாத்மா பூதபாவன: ॥ 5 ॥
न च मत्स्थानि भूतानि ब्रह्मादीनि पश्य मे योगं युक्तिं घटनं मे मम ऐश्वरम् ईश्वरस्य इमम् ऐश्वरम् योगम् आत्मनो याथात्म्यमित्यर्थः ।
(உண்மையில்) பிரஹ்ம்மா முதல் எல்லாப் பிராணிகளும் என்னி டத்தில் சேர்க்கை அற்று இருக்கிறது. ஈஸ்வரனாகிய என்னுடைய (ஆத்மாவினுடைய) ஈஸ்வரத்தன்மை பொருந்திய திவ்யமான யதார்த்த தன்மையைப் பார் என்பது பொருள்.
तथा च श्रुतिः असंसर्गित्वात् असङ्गतां दर्शयति — ‘ असङ्गो न हि सज्जते’ (बृ. उ. ३ । ९ । २६) इति ।
அவ்வாறே சுருதியும் சேர்க்கை தன்மை அற்ற ஆத்மா அசங்கம் என்று காண்பிக்கிறது. (அஸங்கோ ந ஹி ஸஜ்ஜதே) என்று.
इदं च आश्चर्यम् अन्यत् पश्य भूतभृत् असङ्गोऽपि सन् भूतानि बिभर्ति न च भूतस्थः यथोक्तेन न्यायेन दर्शितत्वात् भूतस्थत्वानुपपत्तेः ।
இன்னும் ஒரு ஆச்சரியத்தைப் பார். (பரமாத்மா) அஸங்கனாய் இருந்தாலும் எல்லாப் பிராணிகளையும் ரக்ஷி க்கிறார். ஆனால் பிரா ணிகளில் இருந்துகொண்டு அல்ல. ஏனெனில் பரமாத்மாவிற்கு பிரா ணிகளிடத்தில் நிலைபெறுதல் என்பது சம்பவிக்காது. இந்த விஷயம் முன்பு கூறப்பட்ட நியாயத்தால் காண்பிக்கப்பட்டுள்ளது.
कथं पुनरुच्यते ‘असौ मम आत्मा’ इति ,
இவ்வாறு இருக்கும்பொழுது எவ்வாறு இது என்னுடைய ஆத்மா என்று கூறப்படுகிறது.
विभज्य देहादिसङ्घातं तस्मिन् अहङ्कारम् अध्यारोप्य लोकबुद्धिम् अनुसरन् व्यपदिशति ‘मम आत्मा’ इति, न पुनः आत्मनः आत्मा अन्यः इति लोकवत् अजानन् ।
லௌகிக புத்தியை அனுசரித்து தேஹாதி சங்காதம் ஆத்மாவை விட வேறு என்று பிரித்து அதில் அகங்காரத்தை ஆரோபம் செய்து என்னுடைய ஆத்மா என்று கூறுகின்றான். ஆனால் உலகத்தார் போல் தன்னைக் காட்டிலும் ஆத்மாவேறு என்று அறியாமல் கூறவில்லை.
तथा भूतभावनः भूतानि भावयति उत्पादयति वर्धयतीति वा भूतभावनः ॥ ५ ॥
அவ்வாறே பிராணிகளை உண்டாக்குகிறான், வளர்க்கிறான், ஆகையால் (பூதபாவன:)
यथोक्तेन श्लोकद्वयेन उक्तम् अर्थं दृष्टान्तेन उपपादयन् आह —
இரண்டு ஸ்லோகங்களால் கூறப்பட்ட அர்த்தத்தை திருஷ்ட்டாந் தத்துடன் விளக்குவதற்காக கூறுகிறார்.
यथाकाशस्थितो नित्यं वायुः सर्वत्रगो महान् ।
तथा सर्वाणि भूतानि मत्स्थानीत्युपधारय ॥ ६ ॥
யதாகாசஸ்திதோ நித்யம் வாயு: ஸர்வத்ரகோ மஹான் ।
ததா ஸர்வாணி பூதானி மத்ஸ்தானீத்யுபதாரய ॥ 6 ॥
यथा लोके आकाशस्थितः आकाशे स्थितः नित्यं सदा वायुः सर्वत्र गच्छतीति सर्वत्रगः महान् परिमाणतः, तथा आकाशवत् सर्वगते मयि असंश्लेषेणैव स्थितानि इत्येवम् उपधारय विजानीहि ॥ ६ ॥
எவ்வாறு உலகில் ஆகாசத்தில் இருக்கும் மிகப் பெரிய வாயுவா னது எங்கும் எப்பொழுதும் நிறைந்திருக்கிறதோ அவ்வாறு ஆகாசம் போல் எங்கும் நிறைந்திருக்கும் என்னிடத்தில் எல்லா பூதங்களும் ஒட் டாமல் நிலைபெற்றிருக்கின்றன என்று அறி.
एवं वायुः आकाशे इव मयि स्थितानि सर्वभूतानि स्थितिकाले तानि —
இவ்வாறு, ஆகாசத்தில் வாயு ஒட்டாமல் இருப்பது போல் என்னி டத்தில் எல்லாப்பிராணிகளும் ஸ்திதி காலத்தில் நிலைபெற்றிருக்கும்.
सर्वभूतानि कौन्तेय प्रकृतिं यान्ति मामिकाम् ।
कल्पक्षये पुनस्तानि कल्पादौ विसृजाम्यहम् ॥ ७ ॥
ஸர்வபூதானி கெளந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகாம் ।
கல்பக்ஷயே புநஸ்தானி கல்பாதெள விஸ்ருஜாம்யஹம் ॥ 7 ॥
सर्वभूतानि कौन्तेय प्रकृतिं त्रिगुणात्मिकाम् अपरां निकृष्टां यान्ति मामिकां मदीयां कल्पक्षये प्रलयकाले । पुनः भूयः तानि भूतानि उत्पत्तिकाले कल्पादौ विसृजामि उत्पादयामि अहं पूर्ववत् ॥ ७ ॥
ஹே கௌந்தேய! எல்லாப் பிராணிகளும் பிரளயகாலத்தில் என்னுடைய முக்குணங்களுடன் கூடிய அபரமான பிரகிருதியை அடைகின்றன. மறுபடியும் ஸ்ருஷ்ட்டி காலத்தில் எல்லாப் பிராணிகளையும் உண்டாக்குகிறேன். (முன் கல்பத்தைப் போலவே)
एवम् अविद्यालक्षणाम् —
இவ்வாறு அவித்யையாநது
प्रकृतिं स्वामवष्टभ्य विसृजामि पुनः पुनः ।
भूतग्राममिमं कृत्स्नमवशं प्रकृतेर्वशात् ॥ ८ ॥
ப்ரக்ருதிம் ஸ்வாமவஷ்டப்ய விஸ்ருஜாமி புன: புன: ।
பூதக்ராமமிமம் க்ருத்ஸ்னமவசம் ப்ரக்ருதேர்வசாத் ॥ 8 ॥
प्रकृतिं स्वां स्वीयाम् अवष्टभ्य वशीकृत्य विसृजामि पुनः पुनः प्रकृतितो जातं भूतग्रामं भूतसमुदायम् इमं वर्तमानं कृत्स्नं समग्रम् अवशम् अस्वतन्त्रम् , अविद्यादिदोषैः परवशीकृतम् , प्रकृतेः वशात् स्वभाववशात् ॥ ८ ॥
பிரகிருதியின் சுவபாவ வசத்தால் சுவதந்திரமற்று அவித்யாதோ ஷத்தால் பரவசப்பட்டுள்ள பிரகிருதியிலிருந்து உண்டான ஸ்வபாவ வசத்தால் பிராணி சமுதாயத்தை என்னால் வசம் செய்யப்பட்ட மாயையால் மறுபடியும், மறுபடியும் சிருஷ்ட்டி செய்கிறேன்.
तर्हि तस्य ते परमेश्वरस्य भूतग्रामम् इमं विषमं विदधतः तन्निमित्ताभ्यां धर्माधर्माभ्यां सम्बन्धः स्यादिति इदम् आह भगवान् —
அவ்வாறானால் பிராணி வர்க்கங்களை ஏற்றதாழ்வு உள்ளவர்க ளாக சிருஷ்ட்டித்த அந்த பரமேச்வரனாகிய தங்களுக்கு அதனால் புண்ய பாபங்களின் சம்பந்தம் உண்டாகலாமே (என்று அர்ஜுன னுக்கு சங்கை உண்டாகுமேயானால்) அதற்கு இவ்வாறு பகவான் கூறுகிறார்-
न च मां तानि कर्माणि निबध्नन्ति धनञ्जय ।
उदासीनवदासीनमसक्तं तेषु कर्मसु ॥ ९ ॥
ந ச மாம் தானி கர்மாணி நிபத்நந்தி தனஞ்ஜய ।
உதாஸீனவ-தாஸீன-மஸக்தம் தேஷு கர்மஸு ॥ 9 ॥
न च माम् ईश्वरं तानि भूतग्रामस्य विषमसर्गनिमित्तानि कर्माणि निबध्नन्ति धनञ्जय ।
அந்த பிராணி வர்க்கத்தின் ஏற்றதாழ்வுள்ளவர்களாக சிருஷ்ட்டிப்பதற்கு காரணமாக உள்ள கர்மங்கள் ஈச்வரனாகிய என் னைக் கட்டுப்படுத்துவது இல்லை. ஹே! தனஞ்ஜய!
तत्र कर्मणां असम्बन्धित्वे कारणमाह —
அங்கு கர்மாக்களின் சம்பந்தமற்றிருப்பதற்கான காரணத்தைக் கூறுகிறார்-
उदासीनवत् आसीनं यथा उदासीनः उपेक्षकः कश्चित् तद्वत् आसीनम् आत्मनः अविक्रियत्वात् , असक्तं फलासङ्गरहितम् अभिमानवर्जितम् ‘अहं करोमि’ इति तेषु कर्मसु ।
எவ்வாறு உதாசீனனான (ஒன்றிலும் சம்பந்தம் இல்லாமல்) ஒருவன் இருப்பவனாக இருப்பானோ அவ்வாறு உதாசீனனாய் இருக்கிறேன். ஏனெனில் ஆத்மா கிரியை அற்றதினால் பலத்தில் சங்கமற்றவனாயும், அந்தக் கர்மங்களில் நான் செய்கிறேன் என்ற அபிமானம் அற்றவனாயும் இருக்கிறேன்.
अतः अन्यस्यापि कर्तृत्वाभिमानाभावः फलासङ्गाभावश्च असम्बन्धकारणम् अन्यथा कर्मभिः बध्यते मूढः कोशकारवत् इत्यभिप्रायः ॥ ९ ॥
ஆகையால் மற்ற அதிகாரி கூட கர்த்ருத்வ அபிமானம் அற்ற வராயும், பலத்தில் பற்று அற்றவராயும் இருப்பதால் அவருக்கு பந்தத்தின் காரணம் ஏற்படாது. (அற்று விடும்) இவர்களை விட விபரீதமான மற்றமூடர்கள் கோசாரப்புழுக்கள் போல் கர்மங்களின் பிணைக்கப்படுகிறார்கள் என்பது அபிப்பிராயம்.
तत्र ‘भूतग्राममिमं विसृजामि’ (भ. गी. ९ । ८) ‘उदासीनवदासीनम्’ (भ. गी. ९ । ९) इति च विरुद्धम् उच्यते, इति तत्परिहारार्थम् आह —
அங்கு உதாசீனன் போல் இருந்து கொண்டு இந்த பிராணி வர்க்கத்தை சிருஷ்ட்டிக்கிறேன் என்று பொருத்தமற்றது கூறப்பட்டதே எனில் அதனை (அந்த சங்கையை) நீக்குவதின் பொருட்டு கூறுகிறார்-
मयाध्यक्षेण प्रकृतिः सूयते सचराचरम् ।
हेतुनानेन कौन्तेय जगद्विपरिवर्तते ॥ १० ॥
மயாத்யக்ஷேணப்ரக்ருதி: ஸூயதே ஸசராசரம் ।
ஹேதுநானேன கௌந்தேய ஜகத் விபரி வர்ததே ॥ 10 ॥
मया अध्यक्षेण सर्वतो दृशिमात्रस्वरूपेण अविक्रियात्मना अध्यक्षेण मया, मम माया त्रिगुणात्मिका अविद्यालक्षणा प्रकृतिः सूयते उत्पादयति सचराचरं जगत् ।
எங்கும் சாட்சி மாத்திரமாயும் (திருக் ஸ்வரூபமாகவும்) கிரியை அற்றவனாயும் உள்ள என்னால் பிரேரணை செய்யப்பட்டு அவித்யா ரூபமான என்னுடைய முக்குண வடிவமான மாயையானது சராசரங்க ளுடன் இந்த ஜகத்தை உண்டாக்குகிறது. (அவ்வாறே ச்வேதாச்வதர உபநிஷத் மந்திரத்திலும் கூறப்பட்டுள்ளது.)
(ஏகோதேவ: சர்வபூதேஷு கூட: சர்வவ்யாபீ சர்வபூதாந்தராத்மா, கர்மாத்யக்ஷ: சர்வபூதாதி வாஸ: சாக்ஷ, சேதா கேவலோ நிர்குணச்ச) ஒரே தேவன், எல்லா பூதங்களிலும் மறைந்துள்ளது. எங்கும் வியாபித் திருக்கிறது, எல்லா பூதங்களுள்ளும் அந்தராத்மாவாய் இருக்கிறது, கர்மங்களுக்கெல்லாம் தலைவன், எல்லா பூதங்களுக்கும் ஆதாரம், சா, சேதனன், முக்கியமானவன், நிர்குணன் என்று.
हेतुना निमित्तेन अनेन अध्यक्षत्वेन कौन्तेय जगत् सचराचरं व्यक्ताव्यक्तात्मकं विपरिवर्तते सर्वावस्थासु ।
ஹே கௌந்தேய! அவருடைய தலைமையின் (பிரேரணையின்) காரணத்தினால் வியக்த்தா வியக்தமாயுள்ள (வெளிப்பட்டும், வெளிப் படாமலும் உள்ள) சராசரமாகிய ஜகத் எல்லா அவஸ்தைகளிலும் மாறி மாறி வருகின்றன.
दृशिकर्मत्वापत्तिनिमित्ता हि जगतः सर्वा प्रवृत्तिः — अहम् इदं भोक्ष्ये, पश्यामि इदम् , शृणोमि इदम् , सुखमनुभवामि, दुःखमनुभवामि, तदर्थमिदं करिष्ये, इदं ज्ञास्यामि, इत्याद्या अवगतिनिष्ठा अवगत्यवसानैव ।
சாக்ஷி யானது எல்லா கர்மங்களுக்கும் நிமித்தமாக இருப்பதி னால் ஜகத்தினுடைய எல்லா பிரவர்த்திகளும் (செயல்களும்) நிகழ் கின்றன. எவ்வாறெனில் நான் இதைச் சாப்பிடுகிறேன், பார்க்கிறேன், இதைக் கேட்கிறேன், இந்த சுகத்தை அனுபவிக்கிறேன், இந்த துக்கத்தை அனுபவிக்கிறேன். அதன் பொருட்டு இதை செய்விப்பேன் இதன் பொருட்டு இதைச் செய்வேன், இதை அறியச்செய்வேன் இவை முதலியவைகள் எல்லாம் ஞானத்தில் அடங்குகின்றன. (ஞானத்தில் முடிவடைகிறது)
‘यो अस्याध्यक्षः परमे व्योमन्’ (ऋ. १० । १२९ । ७), (तै. ब्रा. २ । ८ । ९) इत्यादयश्च मन्त्राः एतमर्थं दर्शयन्ति ।
(யோ அஸ்யாத்யக்ஷ: பரமே வ்யோமன்) எது (இந்த ஜகத்திற்கு) சாக்ஷி யாய் மேலான ஆகாயமாய் இருக்கிறதோ) என்று தைத்திரீய மந்திரத்தினால் அறியப்படுகிறது.
ततश्च एकस्य देवस्य सर्वाध्यक्षभूतचैतन्यमात्रस्य परमार्थतः सर्वभोगानभिसम्बन्धिनः अन्यस्य चेतनान्तरस्य अभावे भोक्तुः अन्यस्य अभावात् । किंनिमित्ता इयं सृष्टिः इत्यत्र प्रश्नप्रतिवचने अनुपपन्ने ।
ஆகையால் ஒரே தேவனாயும், எல்லாவற்றிற்கும் அத்யக்ஷ பூதமாயும், சைதன்ய மாத்திரமாயும் உண்மையில் எல்லா போகங்களிலும் சம்பந்தமற்றவனாயும் இருப்பவருக்கு அவனைத் தவிர வேறு ஒரு சேதனமும் இல்லாததால் வேறு ஒரு போக்தா இல்லாததினால் எதன் பொருட்டு இந்த சிருஷ்ட்டி? என்று இங்கு தோன்றும் வினாவும் அதற்கு பதிலும் பொருந்தாது. (ஏனெனில் அந்த விஷயம் அநிர்வசநீயம்)
‘को अद्धा वेद क इह प्रवोचत् कुत आजाता कुत इयं विसृष्टिः’ (ऋ. १० । १२९ । ६), (तै. ब्रा. २ । ८ । ९) इत्यादिमन्त्रवर्णेभ्यः ।
(கோ அத்தா வேத க இஹ ப்ரவோசத் குத ஆஜாதா குத: இயம் விசிருஷ்டி:)
எவன் நேரே அறிகிறான்? எவனால் சொல்லமுடியும்? இந்த ஜகத் எங்கிருந்து வந்தது? எதனால் இந்த சிருஷ்டி? என்று மந்திரங்களினால் (கூறப்பட்டுள்ளது)
பகவானால் இவ்வாறு உபதேசம் செய்யப்பட்டுள்ளது. (அக்ஞா னேனாவ்ருதம் ஞானம் தேன முஹ்யந்தி ஜந்தவ:) அக்ஞானத்தினால் ஞானம் மறைக்கப்பட்டுள்ளதால் எல்லாப் பிராணிகளும் மோஹிக்கப் பட்டுள்ளார்கள்.
एवं मां नित्यशुद्धबुद्धमुक्तस्वभावं सर्वज्ञं सर्वजन्तूनाम् आत्मानमपि सन्तम् —
நித்திய சுத்த புத்த முக்த ஸ்வபாவமாயும் அவ்வாறேஎல்லாப்பிரா ணிகளும் ஆத்மாவாய் இருந்தாலும் என்னை-
अवजानन्ति मां मूढा मानुषीं तनुमाश्रितम् ।
परं भावमजानन्तो मम भूतमहेश्वरम् ॥ ११ ॥
அவஜனாந்தி மாம் மூடா மானுஷீம் தனு-மாச்ரிதம் ।
பரம் பாவ-மஜானந்தோ மம பூதமஹேச்வரம் ॥ 11 ॥
अवजानन्ति अवज्ञां परिभवं कुर्वन्ति मां मूढाः अविवेकिनः मानुषीं मनुष्यसम्बन्धिनीं तनुं देहम् आश्रितम् , मनुष्यदेहेन व्यवहरन्तमित्येतत् , परं प्रकृष्टं भावं परमात्मतत्त्वम् आकाशकल्पम् आकाशादपि अन्तरतमम् अजानन्तो मम भूतमहेश्वरं सर्वभूतानां महान्तम् ईश्वरं स्वात्मानम् ।
விவேகமற்றவர்கள் என்னுடைய மேலான பரமாத்மாவாயும் ஆகாசத்தைக் காட்டிலும் சூக்ஷ்மமாயும் எல்லாப் பிராணிகளுக்கும் பெரிய ஈஸ்வரன் பிராணிகளுக்கு அவர்களுடைய ஆத்மாவாக இருக்கும் என்னுடைய யதார்த்தத்தை அறியாமல் என்னை மனித தேஹத்தை தரித்து (எடுத்து) வியவஹாரம் செய்கிறேன் என்று என்னை ஏளனம் செய்கிறார்கள்.
ततश्च तस्य मम अवज्ञानभावनेन आहताः ते वराकाः ॥ ११ ॥
ஆகையால் என்னை அலட்சியப்படுத்துவதினால் அந்த அவி வேகிகள் அழிந்து போகிறார்கள்.
कथम् ? —
எவ்வாறு
मोघाशा मोघकर्माणो मोघज्ञाना विचेतसः ।
राक्षसीमासुरीं चैव प्रकृतिं मोहिनीं श्रिताः ॥ १२ ॥
மோகாசா மோககர்மாணோ மோகஜ்ஞானா விசேதஸ: ।
ராக்ஷஸீ-மாஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹினீம் ச்ரிதா: ॥ 12 ॥
मोघाशाः वृथा आशाः आशिषः येषां ते मोघाशाः, तथा मोघकर्माणः यानि च अग्निहोत्रादीनि तैः अनुष्ठीयमानानि कर्माणि तानि च, तेषां भगवत्परिभवात् , स्वात्मभूतस्य अवज्ञानात् , मोघान्येव निष्फलानि कर्माणि भवन्तीति मोघकर्माणः ।
வீணான ஆசை உடையவர்கள் வீணான கர்மங்களைச் செய்கி றார்கள். ஏனெனில் தங்களுடைய அந்தராத்மாவாக இருக்கும் பகவானை அலட்சியம் செய்து செய்யும் அக்கினி ஹோத்திராதி கர்மங்கள் பலன் அற்றவைகளாகின்றன. ஆகையால் அவைகள் மோக கர்மா எனப்படுகிறது.
तथा मोघज्ञानाः मोघं निष्फलं ज्ञानं येषां ते मोघज्ञानाः, ज्ञानमपि तेषां निष्फलमेव स्यात् । विचेतसः विगतविवेकाश्च ते भवन्ति इत्यभिप्रायः ।
ஆகையால் அவர்களுடைய அறிவும் பலனற்றதாகவே ஆகும். அவர்கள் விவேகமற்றவர்களாகவே இருக்கிறார்கள் என்பது அபிப்பிராயம்.
किञ्च ते भवन्ति राक्षसीं रक्षसां प्रकृतिं स्वभावम् आसुरीम् असुराणां च प्रकृतिं मोहिनीं मोहकरीं देहात्मवादिनीं श्रिताः आश्रिताः, छिन्द्धि, भिन्द्धि, पिब, खाद, परस्वमपहर, इत्येवं वदनशीलाः क्रूरकर्माणो भवन्ति इत्यर्थः ।‘असुर्या नाम ते लोकाः’ (ई. उ. ३) इति श्रुतेः ॥ १२ ॥
மேலும் அவர்கள் மோஹத்தைச் செய்வதாகிய அசுர சுபாவத்தை அடைந்து தேஹமே ஆத்மாவென்று அதை ஆசிரயித்த அசுரர்கள் வெட்டு, பிள, குடி, சாப்பிடு, பிறருடைய பொருளை அப ஹரி என்று இவ்வாறு கூறுவதில் வல்லவர்களாயும் கொடூரமான செயல்களை உடையவர்களாயும் ஆகிறார்கள் என்பது பொருள். (அ சுர்யா நாம தே லோகா அசுரியா என்றஅந்த லோகங்களை அடைகி றார்கள் என்று சுருதியில் கூறப்பட்டுள்ளது.
ये पुनः श्रद्दधानाः भगवद्भक्तिलक्षणे मोक्षमार्गे प्रवृत्ताः —
மேலும் எவர்கள் சிரத்தையுடன் பகவத்பக்தியுடன் மோக்ஷமார்க் கத்தில் பிரவேசிக்கின்றார்களோ அவர்கள்-
महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिताः ।
भजन्त्यनन्यमनसो ज्ञात्वा भूतादिमव्ययम् ॥ १३ ॥
மஹாத்மானஸ்து மாம் பார்த்த தைவீம் ப்ரக்ருதி-மாச்ரிதா: ।
பஜந்த்- யனன்யமனஸோ ஜ்ஞாத்வா பூதாதி-மவ்யயம் ॥ 13 ॥
महात्मानस्तु अक्षुद्रचित्ताः माम् ईश्वरं पार्थ दैवीं देवानां प्रकृतिं शमदमदयाश्रद्धादिलक्षणाम् आश्रिताः सन्तः भजन्ति सेवंते अनन्यमनसः अनन्यचित्ताः ज्ञात्वा भूतादिं भूतानां वियदादीनां प्राणिनां च आदिं कारणम् अव्ययम् ॥ १३ ॥
ஹே பார்த்த! தேவர்களுடைய ஸ்வபாவங்களான சமதமாதி களை ஆச்ரயித்தவர்களாயும் சித்த சுத்தி உள்ளவர்களாயும் உள்ள மஹாத்மாக்கள் மற்றவைகளில் மனதை செலுத்தாமல் (அநன்ய சித்தத்துடன்) ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்கள் மற்றும் பிராணிகளின் காரணமாயும் அவ்யயமாயும் உள்ள ஈஸ்வரனாகிய என்னைத் தொழுகிறார்கள்.
कथम् ? —
எவ்வாறு
सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रताः ।
नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते ॥ १४ ॥
ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தச்ச த்ருடவ்ரதா: ।
நமஸ்யந்தச்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே ॥ 14 ॥
सततं सर्वदा भगवन्तं ब्रह्मस्वरूपं मां कीर्तयन्तः, यतन्तश्च इन्द्रियोपसंहारशमदमदयाहिंसादिलक्षणैः धर्मैः प्रयतन्तश्च, दृढव्रताः दृढं स्थिरम् अचाल्यं व्रतं येषां ते दृढव्रताः नमस्यन्तश्च मां हृदयेशयम् आत्मानं भक्त्या नित्ययुक्ताः सन्तः उपासते सेवंते ॥ १४ ॥
எப்பொழுதும் பிரஹ்மஸ்வரூபமான பகவானான என்னை ஸ்துதி செய்பவர்களாயும் இந்திரியங்களை அடக்கி சமதமாதி அஹிம்சை முதலிய தர்மங்களுடன் தீவிரமாக முயற்சி செய்பவர்கள். திடவிரதர் கள். அவர்கள் ஹிருதயத்தில் இருக்கும் ஆத்மாவாகிய என்னை எப்பொழுதும் பக்தியுடன் உபாசிக்கின்றார்கள்.
ते केन केन प्रकारेण उपासते इत्युच्यते —
அவர்கள் எந்த எந்த பிரகாரமாக உபாசிக்கின்றார்கள் என்று கூறுகிறார்-
ज्ञानयज्ञेन चाप्यन्ये यजन्तो मामुपासते ।
एकत्वेन पृथक्त्वेन बहुधा विश्वतोमुखम् ॥ १५ ॥
ஜ்ஞானயக்ஞேன சாப்யன்யே யஜந்தோ மாமுபாஸதே ।
ஏகத்வேன ப்ருதக்த்வேன பஹுதா விச்வதோமுகம் ॥ 15 ॥
ज्ञानयज्ञेन ज्ञानमेव भगवद्विषयं यज्ञः तेन ज्ञानयज्ञेन, यजन्तः पूजयन्तः माम् ईश्वरं च अपि अन्ये अन्याम् उपासनां परित्यज्य उपासते । तच्च ज्ञानम् एकत्वेन ‘एकमेव परं ब्रह्म’ इति परमार्थदर्शनेन यजन्तः उपासते ।
மற்ற உபாசனைகளை ட்டு விட்டு பகவத்விஷயமாந ஞானரூப யக்ஞத்தினால் ஈஸ்வரனாகிய என்னை பூஜிக்கிறார்கள். பரமாத்மா ஒருவனே என்றஏகத்துவரூப பரமார்த்த ஞானத்தினால் பூஜை செய்பவர்கள் என்னையே உபாசிக்கிறார்கள்.
केचिच्च पृथक्त्वेन ‘आदित्यचन्द्रादिभेदेन स एव भगवान् विष्णुः अवस्थितः’ इति उपासते ।
சிலர் சூரியன் வேறு சந்திரன் வேறு என்றபேதரூபமாக அந்த பகவான் விஷ்ணுவே அந்த சூரியன் முதலிய ரூபமாக இருக்கிறார் என்று உபாசிக்கின்றனர்.
केचित् ‘बहुधा अवस्थितः स एव भगवान् सर्वतोमुखः विश्वरूपः’ इति तं विश्वरूपं सर्वतोमुखं बहुधा बहुप्रकारेण उपासते ॥ १५ ॥
சிலர் அநேக விதமாக இருக்கின்றஅவரே பகவான் (சர்வதோ முக) எங்கும் முகம் உள்ளவர் விஸ்வரூபர் என்று அந்த சர்வதோமுக மாயுள்ள விஸ்வரூபரை அநேக பிரகாரமாக உபாசிக்கிறார்கள்.
यदि बहुभिः प्रकारैः उपासते, कथं त्वामेव उपासते इति अत आह —
அநேக விதமாக உபாசிப்பவர்கள் உம்மையே உபாசிக்கின்றார் கள் என்பது எவ்வாறு? அதை கூறுகின்றார்.
अहं क्रतुरहं यज्ञः स्वधाहमहमौषधम् ।
मन्त्रोऽहमहमेवाज्यमहमग्निरहं हुतम् ॥ १६ ॥
அஹம் க்ரதுரஹம் யக்ஞ: ஸ்வதாஹமஹமௌஷதம் ।
மந்த்ரோஅஹமஹமேவாஜ்யமஹமக்னிரஹம் ஹுதம் ॥ 16 ॥
अहं क्रतुः श्रौतकर्मभेदः अहमेव अहं यज्ञः स्मार्तः । किञ्च स्वधा अन्नम् अहम् पितृभ्यो यत् दीयते । अहम् औषधं सर्वप्राणिभिः यत् अद्यते तत् औषधशब्दशब्दितं व्रीहियवादिसाधारणम् ।
ஸ்ருதியில் உள்ள கர்மபேதமாகிய க்ருது நானே. அவ்வாறேஸ்மி ருதியில் கூறப்பட்ட யக்ஞமும் நானே. மேலும் பித்ருக்களுக்கு ஸ்வதா என்று சொல்லி கொடுக்கப்படும் அன்னம் நான். எல்லாப்பிராணிக ளாலும் எது சாப்பிடப்படுகிறதோ அது ஔஷதம், அந்த ஔஷதமும் நானே.
अथवा स्वधा इति सर्वप्राणिसाधारणम् अन्नम् , औषधम् इति व्याध्युपशमनार्थं भेषजम् ।
அல்லது ஸ்வதா என்பது எல்லா பிராணிகளுக்கும் உள்ள சாதா ரண அன்னம். வியாதிகளைப் போக்குவதான மருந்து ஔஷதம் எனப்படுகிறது.
मन्त्रः अहम् , येन पितृभ्यो देवताभ्यश्च हविः दीयते । अहमेव आज्यं हविश्च । अहम् अग्निः, यस्मिन् हूयते हविः सः अग्निः अहम् । अहं हुतं हवनकर्म च ॥ १६ ॥
எந்த மந்திரங்களால் பித்ருக்களுக்கும், தேவதைகளுக்கும் ஹவி ஸானது அளிக்கப்படுகிறதோ அந்த மந்திரம் நானே. நானே ஆஜ்யம் (நெய்) நானே ஹோமம் செய்யப்படும் அந்த அக்னியும் நானே. ஹவன ரூப (ஹோமரூப) கர்மமும் நானே.
किञ्च —
மேலும்
पिताहमस्य जगतो माता धाता पितामहः ।
वेद्यं पवित्रमोङ्कार ऋक्साम यजुरेव च ॥ १७ ॥
பிதாஹமஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ: ।
வேத்யம் பவித்ரமோங்கார ருக்ஸாமயஜுரேவ ச ॥ 17 ॥
पिता जनयिता अहम् अस्य जगतः, माता जनयित्री, धाता कर्मफलस्य प्राणिभ्यो विधाता, पितामहः पितुः पिता, वेद्यं वेदितव्यम् , पवित्रं पावनम् ओङ्कारः, ऋक् साम यजुः एव च ॥ १७ ॥
இந்த ஜகத்தின் தந்தையும் நானே. தாயும் நானே. பிராணிக ளுக்கு (அவர்களின் கர்மங்களுக்கு ஏற்றவாறு) கர்மபலன்களைப் பிரித்துக் கொடுப்பவனும் நானே. தந்தையின் தந்தையும் அறியப்பட வேண்டியதும் புனிதமானதும், ஓம்காரமும், ரிக்,யஜுர், சாம வேதங்களும் நானே.
किञ्च—
மேலும்
गतिर्भर्ता प्रभुः साक्षी निवासः शरणं सुहृत् ।
प्रभवः प्रलयः स्थानं निधानं बीजमव्ययम् ॥ १८ ॥
கதிர்பர்தா ப்ரபு: ஸா நிவாஸ: சரணம் ஸுஹ்ருத் ।
ப்ரபவ: ப்ரலய: ஸ்தானம் நிதானம் பீஜ-மவ்யயம் ॥ 18 ॥
गतिः कर्मफलम् , भर्ता पोष्टा, प्रभुः स्वामी, साक्षी प्राणिनां कृताकृतस्य, निवासः यस्मिन् प्राणिनो निवसन्ति, शरणम् आर्तानाम् , प्रपन्नानामार्तिहरः । सुहृत् प्रत्युपकारानपेक्षः सन् उपकारी, प्रभवः उत्पत्तिः जगतः, प्रलयः प्रलीयते अस्मिन् इति ।
கர்மபலன், எல்லோரையும் போஷிக்கிறவனும், எல்லோருக்கும் தலைவனும்,பிராணிகள்கர்மம் செய்தல் செய்யாமலிருத்தலுக்கு சா எதில் பிராணிகள் வசிக்கின்றனவோ, சரணமடைந்த துக்கமடைந்த வர்களின் துக்கத்தைப் போக்குகிறவனும், பிரதி உபகாரத்தை எதிர் பாராமல் உதவி செய்பவனும், ஜகத்தின் உற்பத்திக்குக் காரணமான வனும், எதில் எல்லாம் லயம் அடைகிறதோ அந்த பிரளயமும் நானே.
तथा स्थानं तिष्ठति अस्मिन् इति, निधानं निक्षेपः कालान्तरोपभोग्यं प्राणिनाम् , बीजं प्ररोहकारणं प्ररोहधर्मिणाम् , अव्ययं ।
அவ்வாறேஎல்லாம் அதில் நிலைபெற்றுள்ளது. பிராணிகளுக்கு காலாந்திரத்தில் அனுபவிக்கப்படும் பொருள்கள் வைக்கப்பட்ட இடமாய் இருக்கிறேன் முளைப்பதற்குள்ள சக்தி உள்ளவைகளுக்கு முளைக்கும் காரணமாய் (விதையாய்) இருக்கிறேன். அவைகளுக் கெல்லாம் அழிவில்லாத காரணமாய் இருக்கிறேன்.
यावत्संसारभावित्वात् अव्ययम् , न हि अबीजं किञ्चित् प्ररोहति ; नित्यं च प्ररोहदर्शनात् बीजसन्ततिः न व्येति इति गम्यते ॥ १८ ॥
எதுவரையில் சம்சாரம் உள்ளதோ அதுவரையில் உள்ளதால் அந்த வித்யையானது அழியாதது. விதை (காரணம்) இல்லாதது ஒரு போதும் முளைக்காது. எப்பொழுதும் முளைத்துக் கொண்டிருப்பதால் விதையின் தொடர்ச்சி ஏற்படுகிறது. ஒருபொழுதும் நாசம் அடையாது என்பது அறியப்படுகிறது.
किञ्च —
மேலும்
तपाम्यहमहं वर्षं निगृह्णाम्युत्सृजामि च ।
अमृतं चैव मृत्युश्च सदसच्चाहमर्जुन ॥ १९ ॥
தபாம்யஹ-மஹம் வர்ஷம் நிக்ருஹ்ணாம்-யுத்ஸ்ருஜாமி ச ।
அம்ருதம் சைவ ம்ருத்யுச்ச ஸதஸச்சாஹு-மர்ஜுன ॥ 19 ॥
तपामि अहम् आदित्यो भूत्वा कैश्चित् रश्मिभिः उल्बणैः । अहं वर्षं कैश्चित् रश्मिभिः उत्सृजामि । उत्सृज्य पुनः निगृह्णामि कैश्चित् रश्मिभिः अष्टभिः मासैः पुनः उत्सृजामि प्रावृषि ।
நான் சூரியனாக இருந்துகொண்டு சில கடுமையான கிரணங்க ளால் வெப்பத்தை உண்டாக்குகிறேன். நான் சில கிரணங்களால் மழை பொழியச் செய்கிறேன். மறுபடியும் எட்டு மாதங்கள் நிறுத்தி பின் மழை காலத்தில் மழையை பொழிவிக்கிறேன்.
अमृतं चैव देवानाम् , मृत्युश्च मर्त्यानाम् । सत् यस्य यत् सम्बन्धितया विद्यमानं तत् , तद्विपरीतम् असच्च एव अहम् अर्जुन ।
ஹே அர்ஜுன! தேவர்களது மரணமற்றதன்மையாகவும் மனிதர்க ளின் மரணத்தன்மையாகவும் நான் இருக்கிறேன். எதனது சம்பந்தத்தி னால் இருக்கிறதோ (வெளிப்படுகிறதோ) அது சத். அதற்கு விபரீதமா னது (நேர் எதிர்மறையானது) அசத். அந்த சத்தாகவும், அசத்தாகவும் இருக்கிறேன்.
न पुनः अत्यन्तमेव असत् भगवान् , स्वयं कार्यकारणे वा सदसती ।
மேலும் பகவான் முற்றிலும் அசத்தாக ஆகமாட்டார். காரியம்- சத் என்றும், காரணம் அசத் என்றும் காரணமாகிய பரம்பொருள் அறி யவேண்டும். (சத் என்றால் நாமரூபம் வெளிப்பட்டது-வ்யக்தம்) அசத் என்றால் வெளிப்படாதது-அவ்யக்தம்)
ये पूर्वोक्तैः निवृत्तिप्रकारैः एकत्वपृथक्त्वादिविज्ञानैः यज्ञैः मां पूजयन्तः उपासते ज्ञानविदः, ते यथाविज्ञानं मामेव प्राप्नुवन्ति ॥ १९ ॥
எவர்கள் முன்பு கூறிய கிரமத்தை அனுசரித்து ஏகத்துவம் (ஒன்று என்னும் தன்மை) பிருதக்துவம் (வேறு என்றதன்மை) முதலிய ஞானத் துடன் கூடிய யக்ஞத்தினால் பூஜை செய்கிறார்களோ அவர்கள் என்னை உபாசனை செய்கிறார்கள். ஞானத்தை அறிந்தவர்கள், அவர்களின் விக்ஞானம் எவ்வாறு உள்ளதோ அதற்கேற்ப என் னையே அடைகிறார்கள்.
ये पुनः अज्ञाः कामकामाः —
மேலும் எந்த அக்ஞானிகள் காம விஷயங்களில் ஆசை உள்ள வர்களாய் இருக்கிறார்களோ-
त्रैविद्या मां सोमपाः पूतपापा यज्ञैरिष्ट्वा स्वर्गतिं प्रार्थयन्ते ।
ते पुण्यमासाद्य सुरेन्द्रलोकमश्नन्ति दिव्यान्दिवि देवभोगान् ॥ २० ॥
த்ரைவித்யா மாம் ஸோமபா: பூதபாபா யக்ஞைரிஷ்ட்வா ஸ்வர்கதிம் ப்ரார்தயந்தே ।
தே புண்யமாஸாத்ய ஸுரேந்த்ரலோகமச்னந்தி திவ்யாந்திவி தேவபோகான் ॥ 20 ॥
त्रैविद्याः ऋग्यजुःसामविदः मां वस्वादिदेवरूपिणं सोमपाः सोमं पिबन्तीति सोमपाः, तेनैव सोमपानेन पूतपापाः शुद्धकिल्बिषाः, यज्ञैः अग्निष्टोमादिभिः इष्ट्वा पूजयित्वा स्वर्गतिं स्वर्गगमनं स्वरेव गतिः स्वर्गतिः ताम् , प्रार्थयन्ते । ते च पुण्यं पुण्यफलम् आसाद्य सम्प्राप्य सुरेन्द्रलोकं शतक्रतोः स्थानम् अश्नन्ति भुञ्जते दिव्यान् दिवि भवान् अप्राकृतान् देवभोगान् देवानां भोगान् ॥ २० ॥
ரிக், யஜுர், சாமம் எனப்படும் மூன்று வேதங்களையும் அறிந்த வர்களாயும் சோமபானத்தைப் பருகியவர்களாயும் சோமபானத்தைப் பருகியதால் பாபமற்றவர்களாயும் உள்ள சகாமபுருஷர்கள் வசு முத லிய தேவர்களுடைய ரூபத்தில் இருக்கும் பரமாத்மாவாகிய என்னை அக்னிஷ்டோமாதி யக்ஞங்கள் மூலமாக பூஜை செய்து சுவர்கத்தை அடைவதற்கு பிரார்த்திக்கிறார்கள். அவர்கள் நூறுயாகமுடைய இந் திரனது உலகை புண்யத்தின் பயனாக அடைந்து அங்குள்ள திவ்ய மான தேவர்களுடைய போகங்களை அனுபவிக்கிறார்கள்.
ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालं क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति ।
एवं त्रयीधर्ममनुप्रपन्ना गतागतं कामकामा लभन्ते ॥ २१ ॥
தே தம் புக்த்வா ஸ்வர்க லோகம் விசாலம் க்ஷணே புண்யே மர்த்யலோகம் விசந்தி ।
ஏவம் த்ரயீதர்மமனுப்ரபன்ன கதாகதம் காமகாமா லபந்தே ॥ 21 ॥
ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालं विस्तीर्णं क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति आविशन्ति ।
அவர்கள் விசாலமான ஸ்வர்க்கலோகத்தை அனுபவித்து விட்டு புண்யபலம் தீர்ந்தவுடன் மனுஷ்யலோகத்தில் புகுகிறார்கள். (அடைகிறார்கள்)
एवं यथोक्तेन प्रकारेण त्रयीधर्मं केवलं वैदिकं कर्म अनुप्रपन्नाः गतागतं गतं च आगतं च गतागतं गमनागमनं कामकामाः कामान् कामयन्ते इति कामकामाः लभन्ते गतागतमेव, न तु स्वातन्त्र्यं क्वचित् लभन्ते इत्यर्थः ॥ २१ ॥
கூறப்பட்ட பிரகாரம் மூன்று வேதங்களில் விதிக்கப்பட்ட வைதிக கர்மங்களை மாத்திரம் ஆச்ரயிப்பவர்களாய் விஷயங்களை (காம னைகளை) விரும்புபவர்களாய் போக்குவரத்தை அடைகிறார்கள். ஆனால் ஓரிடத்தும் சுதந்திரத்தை அடைவதில்லை என்பது பொருள்.
ये पुनः निष्कामाः सम्यग्दर्शिनः —
மேலும், எவர்கள் ஆசை நீங்கினவராய் யதார்த்த தர்சன முடையவர்களோ
अनन्याश्चिन्तयन्तो मां ये जनाः पर्युपासते ।
तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् ॥ २२ ॥
அனன்யாச்சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே ।
தேஷாம் நித்யாபி யுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் ॥ 22 ॥
अनन्याः अपृथग्भूताः परं देवं नारायणम् आत्मत्वेन गताः सन्तः चिन्तयन्तः मां ये जनाः संन्यासिनः पर्युपासते, तेषां परमार्थदर्शिनां नित्याभियुक्तानां सतताभियोगिनां योगक्षेमं योगः अप्राप्तस्य प्रापणं क्षेमः तद्रक्षणं तदुभयं वहामि प्रापयामि अहम् ।
எந்த சந்நியாசி அனன்ய பாவத்துடன் பரமதேவ ஸ்வரூபமாகிய நாராயணனாகிய என்னை ஆத்மஸ்வரூபமாக அறிந்து என்னையே எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் என்னுடைய மேலான நிஷ்காம உபாசனையை செய்கிறாரோ எப்பொழுதும் என்னையே நினைத்துக் கொண்டிருக்கும் அந்த பரமார்த்த ஞானயோகியினு டைய யோகக்ஷேமத்தை நான் வஹிக்கிறேன். (கவனித்துக் கொள்கிறேன்)
‘ज्ञानी त्वात्मैव मे मतम्’ (भ. गी. ७ । १८) ‘स च मम प्रियः’ (भ. गी. ७ । १७) यस्मात् , तस्मात् ते मम आत्मभूताः प्रियाश्च इति ।
ஞானியோ ஆத்மாதான் என்பது என் கொள்கை. (ஸ ச மமப்ரிய:) அவன் எனக்குப் பிரியமானவன். எதனாலோ அதனால் அவர்கள் என்னுடைய ஆத்மாவாகவும் பிரியர்களாயும் இருக்கிறார்கள் என்று.
ननु अन्येषामपि भक्तानां योगक्षेमं वहत्येव भगवान् ।
அதனால் மற்றபக்தர்களுடைய யோகக்ஷேமங்களையும் பகவான் தானே வஹிக்கிறார்?
सत्यं वहत्येव ; किन्तु अयं विशेषः — अन्ये ये भक्ताः ते आत्मार्थं स्वयमपि योगक्षेमम् ईहन्ते ; अनन्यदर्शिनस्तु न आत्मार्थं योगक्षेमम् ईहन्ते ; न हि ते जीविते मरणे वा आत्मनः गृद्धिं कुर्वन्ति ; केवलमेव भगवच्छरणाः ते ; अतः भगवानेव तेषां योगक्षेमं वहतीति ॥ २२ ॥
உண்மையே அவ்வாறு வஹிக்கவே செய்கிறார். ஆனால் இந்த வித்தியாசம் இருக்கிறது. அந்நிய (மற்ற) பக்தர்கள் எவர்களோ அவர்கள் தங்களுக்காக தாங்களும் யோகக்ஷேமத்திற்காக முயல்கிறார்கள். (முயற்சிசெய்கிறார்கள்) ஆனால் அனன்ய தர்சிகள் (என்னை மட்டும் தரிசிப்பவர்கள்) தங்களுக்காக யோகக்ஷேமத்திற்கான செயல்களில் ஈடுபடமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு ஜீவிக்கும்பொழுதா வது மரணத்தின் போதாவது தங்களுக்கான ஆசை அற்று கேவலம் பகவானிடத்திலேயே அடைக்கலம் அடைந்தவர்கள். ஆகையால் பகவான் அவர்களுடைய யோகக்ஷேமத்தை வஹிக்கிறார்.
ननु अन्या अपि देवताः त्वमेव चेत् , तद्भक्ताश्च त्वामेव यजन्ते । सत्यमेवम् —
மேலும் மற்றதேவதைகளும் தாங்களே எனில் அந்த பக்தர்கள் உங்களையல்லவா பஜிக்கின்றார்கள் என்றால் உண்மையே இவ்வாறு
येऽप्यन्यदेवताभक्ता यजन्ते श्रद्धयान्विताः ।
तेऽपि मामेव कौन्तेय यजन्त्यविधिपूर्वकम् ॥ २३ ॥
யே அப்யன்யதேவதா-பக்தா யஜந்தே ச்ரத்தயாந்விதா: ।
தே அபி மாமேவ கௌந்தேய யஜந்த்-யவிதி-பூர்வகம் ॥ 23 ॥
येऽपि अन्यदेवताभक्ताः अन्यासु देवतासु भक्ताः अन्यदेवताभक्ताः सन्तः यजन्ते पूजयन्ति श्रद्धया आस्तिक्यबुद्ध्या अन्विताः अनुगताः, तेऽपि मामेव कौन्तेय यजन्ति अविधिपूर्वकम् अविधिः अज्ञानं तत्पूर्वकं यजन्ते इत्यर्थः ॥ २३ ॥
எந்த மற்ற தேவதைகளிடத்தில் பக்தியுள்ளவர்கள் மற்றதேவதை களிடத்தில் பக்தி உடையவர்களாய் இருந்துகொண்டு சிரத்தையுடன் கூடி என்னை பூஜை செய்கிறார்களோ ஹே கௌந்தேய! அவர்கள் என்னையே விதி இல்லாமல் பூஜிக்கிறார்கள். அக்ஞானத்தோடு என்னையே பூஜிக்கிறார்கள் என்பது பொருள்.
कस्मात् ते अविधिपूर्वकं यजन्ते इत्युच्यते ; यस्मात् —
எதனால் அவர்கள் அக்ஞானத்தோடு பூஜை செய்கிறார்கள்? என்று கூறுகிறார். ஆகையால்-
अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च ।
न तु मामभिजानन्ति तत्त्वेनातश्च्यवन्ति ते ॥ २४ ॥
அஹம் ஹி ஸர்வயஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவ ச ।
ந து மாமபிஜானந்தி தத்த்வேநாதஸ்- ச்யவந்தி தே ॥ 24 ॥
अहं हि सर्वयज्ञानां श्रौतानां स्मार्तानां च सर्वेषां यज्ञानां देवतात्मत्वेन भोक्ता च प्रभुः एव च । मत्स्वामिको हि यज्ञः, ‘अधियज्ञोऽहमेवात्र’ (भ. गी. ८ । ४) इति हि उक्तम् । तथा न तु माम् अभिजानन्ति तत्त्वेन यथावत् । अतश्च अविधिपूर्वकम् इष्ट्वा यागफलात् च्यवन्ति प्रच्यवन्ते ते ॥ २४ ॥
ஸ்ரௌத, ஸ்மார்த்த என்ற(சுருதியிலும், ஸ்ம்ருதியிலும் விதிக்கப்பட்ட) எல்லா யக்ஞங்களுக்கும் தேவதா ரூபமாக இருந்து கொண்டு போக்தாவாகவும், சுவாமியாகவும் இருக்கின்றேன். நானே எல்லா யக்ஞங்களுக்கும் ஸ்வாமியாக இருப்பது अधियज्ञोऽहमेवात्र (அதியக்ஞோ அஹமேவாத்ர) என்று ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த அக்ஞானிகள் என்னுடைய யதார்த்த ஸ்வரூபத்தை அறிவதில்லை. ஆகையால் அவித்யா பூர்வமாக (விதிக்கு மாறாக) பூஜை, யாகம் செய்து யாகத்தின் பலனை நழுவ விடுகிறார்கள்.
येऽपि अन्यदेवताभक्तिमत्त्वेन अविधिपूर्वकं यजन्ते, तेषामपि यागफलं अवश्यंभावि । कथम् ? —
எவர்கள் மற்றதேவதைகளிடம் பக்தியுடன் அவித்யா பூர்வகமாக (பூஜை) யக்ஞம் செய்கின்றார்களோ அவர்களுக்கும் யாகபலன் அவசியம் உண்டாகும். எவ்வாறு?
यान्ति देवव्रता देवान्पितॄन्यान्ति पितृव्रताः ।
भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम् ॥ २५ ॥
யாந்தி தேவவ்ரதா தேவான் பித்ரூன் யாந்தி பித்ருவ்ரதா: ।
பூதானி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்யாஜிநோ அபி மாம் ॥ 25 ॥
यान्ति गच्छन्ति देवव्रताः देवेषु व्रतं नियमो भक्तिश्च येषां ते देवव्रताः देवान् यान्ति । पितॄन् अग्निष्वात्तादीन् यान्ति पितृव्रताः श्राद्धादिक्रियापराः पितृभक्ताः । भूतानि विनायकमातृगणचतुर्भगिन्यादीनि यान्ति भूतेज्याः भूतानां पूजकाः । यान्ति मद्याजिनः मद्यजनशीलाः वैष्णवाः मामेव यान्ति । समाने अपि आयासे मामेव न भजन्ते अज्ञानात् , तेन ते अल्पफलभाजः भवन्ति इत्यर्थः ॥ २५ ॥
எவர்களுக்கு நியமமும், பக்தியும் தேவர்களிடத்திலிருக்கிறதோ அப்படிப்பட்ட தேவவிரதர்கள் தேவர்களை அடைகிறார்கள். (தேவ லோகத்தை அடைகிறார்கள்) சிரார்த்தம் முதலிய கிரியைகளில் சிரத்தை உடைய பித்ரு பக்தர்கள் அக்னிஷ்வாத்தர் முதலிய பித்ருக் களை அடைகிறார்கள். (பித்ரு லோகத்தை அடைவார்கள்) பூதங் களை பூஜிப்பவர்கள் விநாயகர், மாத்ருக்களின் கூட்டம், நான்கு பகினிகள் முதலான பூதங்களை (அவர்களுடைய உலகங்களை) அடைகிறார்கள். என்னையே பூஜிக்கும் வைஷ்ணவ பக்தர்கள் என் னையே அடைவார்கள். அக்ஞானிகள் சிரமம் ஒன்றாகவே இருந்தா லும் என்னையே பூஜிப்பதில்லை. ஆதலால் அவர்கள் அல்ப பிரயோ னமுடையவர்கள் என்பது பொருள். (அல்ப பிரயோஜனம் என்றால் திரும்பி வருதலை உடைய பிரயோஜனம்)
न केवलं मद्भक्तानाम् अनावृत्तिलक्षणम् अनन्तफलम् , सुखाराधनश्च अहम् । कथम् ? —
என்னுடைய பக்தர்களுக்கு திரும்பவருதல் இல்லாத முடிவில் லாத பலன் மாத்திரமன்று. என்னை பூஜிப்பது மிகவும் எளிது- அது எப்படி எனில்?
पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति ।
तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मनः ॥ २६ ॥
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி ।
ததஹம் பக்த்யுபஹ்ருத-மச்னாமி ப்ரயதாத்மன: ॥ 26 ॥
पत्रं पुष्पं फलं तोयम् उदकं यः मे मह्यं भक्त्या प्रयच्छति, तत् अहं पत्रादि भक्त्या उपहृतं भक्तिपूर्वकं प्रापितं भक्त्युपहृतम् अश्नामि गृह्णामि प्रयतात्मनः शुद्धबुद्धेः ॥ २६ ॥
எவன் இலை, பூ, பழம், நீர் இவைகளை எனக்கு பக்தியுடன் சமர்ப்பணம் செய்கிறானோ அந்த சுத்தாந்தக்கரணமுடையவன் பக்தியுடன் சமர்ப்பிப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். (சாப்பிடுகிறேன்)
यतः एवम् , अतः —
இவ்வாறு இருப்பதனால்
यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् ।
यत्तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् ॥ २७ ॥
யத் கரோஷி யதச்னாஸி யஜ்ஜு ஹோஷி ததாஸி யத் ।
யத் தபஸ்யஸி கௌந்தேய தத் குருஷ்வ மதர்பணம் ॥ 27 ॥
यत् करोषि स्वतः प्राप्तम् , यत् अश्नासि, यच्च जुहोषि हवनं निर्वर्तयसि श्रौतं स्मार्तं वा, यत् ददासि प्रयच्छसि ब्राह्मणादिभ्यः हिरण्यान्नाज्यादि, यत् तपस्यसि तपः चरसि कौन्तेय, तत् कुरुष्व मदर्पणं मत्समर्पणम् ॥ २७ ॥
ஹே கௌந்தேய! தானாகவே அமைந்து எதைச்செய்கிறாயோ, எதைச் சாப்பிடுகிறாயோ, ஸ்ருதியிலாவது, ஸ்ம்ருதியிலாவது விதிக் கப்பட்ட எந்த ஹோமத்தைச் செய்து முடிக்கிறாயோ எந்த தங்கம், அன்னம், நெய் முதலிய வஸ்துக்களை பிராமணர் முதலிய நல்ல பாத் திரம் அறிந்து தானம் செய்கிறாயோ, மேலும் எந்த தபசைச் செய்கி றாயோ அவைகளை எல்லாம் என்னிடத்தில் சமர்ப்பணம் செய்.
एवं कुर्वतः तव यत् भवति, तत् शृणु —
அவ்வாறு செய்வதினால் உனக்கு என்ன லாபம் ஏற்படும் என்ப தைக் கேள்-
शुभाशुभफलैरेवं मोक्ष्यसे कर्मबन्धनैः ।
संन्यासयोगयुक्तात्मा विमुक्तो मामुपैष्यसि ॥ २८ ॥
சுபாசுப்பலை-ரேவம் மோக்ஷ்யஸே கர்மபந்தநை: ।
ஸந்ந்யாஸயோகயுக்தாத்மா விமுக்தோ மாமுபைஷ்யஸி ॥ 28 ॥
शुभाशुभफलैः शुभाशुभे इष्टानिष्टे फले येषां तानि शुभाशुभफलानि कर्माणि तैः शुभाशुभफलैः कर्मबन्धनैः कर्माण्येव बन्धनानि कर्मबन्धनानि तैः कर्मबन्धनैः एवं मदर्पणं कुर्वन् मोक्ष्यसे । सोऽयं संन्यासयोगो नाम, संन्यासश्च असौ मत्समर्पणतया कर्मत्वात् योगश्च असौ इति, तेन संन्यासयोगेन युक्तः आत्मा अन्तःकरणं यस्य तव सः त्वं संन्यासयोगयुक्तात्मा सन् विमुक्तः कर्मबन्धनैः जीवन्नेव पतिते चास्मिन् शरीरे माम् उपैष्यसि आगमिष्यसि ॥ २८ ॥
இவ்வாறு கர்மங்களை என்னிடத்தில் அர்ப்பணித்து சுபம், அசுபம் (புண்யம், பாபம்) ஆகிய பலன்களுடன் கூடிய கர்மபந்தத்திலி ருந்து விடுபடுவாய். இவ்வாறு சந்நியாச யோகத்தை அடைந்து என் றால் என்னிடத்தில் கர்மங்களை அர்ப்பணம் செய்தல் சந்நியாசமா கும். அர்பணித்தல் கர்மமாய் இருப்பதால் யோகம். அதுவே சந்நியாச யோகம். அந்த சந்நியாச யோகத்துடன் கூடிய மனதினாய் இந்த சரீரத் தில் ஜீவித்துக்கொண்டிருக்கும் பொழுதும், கர்மபந்தத்திலிருந்து விடுபட்டு, சரீரம் விழுந்தவுடன் என்னையே அடைவாய்.
रागद्वेषवान् तर्हि भगवान् , यतो भक्तान् अनुगृह्णाति, न इतरान् इति । तत् न —
எதனால் பகவான் பக்தர்களை அனுக்ரஹிக்கிறார். மற்றவர் களை அனுகிரஹிப்பதில்லை. ஆகையால் அவர் ராகத்வேஷத்துடன் கூடியவர் என்றால், அவ்வாறு அல்ல-
समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रियः ।
ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम् ॥ २९ ॥
ஸமோஅஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோ அஸ்தி ந ப்ரிய: ।
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் ॥ 29 ॥
समः तुल्यः अहं सर्वभूतेषु । न मे द्वेष्यः अस्ति न प्रियः । अग्निवत् अहम् — दूरस्थानां यथा अग्निः शीतं न अपनयति, समीपम् उपसर्पतां अपनयति ; तथा अहं भक्तान् अनुगृह्णामि, न इतरान् ।
நான் எல்லாபிராணிகளிடத்தும் சமமாய் இருக்கிறேன். எனக்கு வெறுப்போ, பிரியமோ அக்னியைப் போல் கிடையாது. எவ்வாறு அக்னியானது தூரத்தில் இருப்பவர்களுடைய குளிரைப் போக்குவ தில்லையோ, அருகில் இருப்பவர்களின் குளிரைப் போக்குகிறதோ அவ்வாறே நான் பக்தர்களை அனுக்ரஹம் செய்கிறேன். மற்றவர்களை அல்ல.
ये भजन्ति तु माम् ईश्वरं भक्त्या मयि ते — स्वभावत एव, न मम रागनिमित्तम् — वर्तन्ते । तेषु च अपि अहं स्वभावत एव वर्ते, न इतरेषु । न एतावता तेषु द्वेषो मम ॥ २९ ॥
எவர்கள் என்னை பக்தியுடன் தொழுகிறார்களோ அவர்கள் என் னிடத்தில் ஸ்வபாவமாகவே (இயற்கையாகவே) இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடத்திலுள்ள ராகத்தினால் (பற்றினால்) அல்ல. நானும் அவர்களிடத்தில் ஸ்வபாவமாகவே இருக்கிறேன். மற்றவர்க ளிடத்தில் அல்ல. இவ்வாறு இருப்பதால் எனக்கு அவர்களிடத்தில் வெறுப்பு இல்லை.
शृणु मद्भक्तेर्माहात्म्यम् —
என் பக்தனுடைய மேன்மையைக் கேள்-
अपि चेत्सुदुराचारो भजते मामनन्यभाक् ।
साधुरेव स मन्तव्यः सम्यग्व्यवसितो हि सः ॥ ३० ॥
அபி சேத்ஸுதுராசாரோ பஜதே மாமநன்யபாக் ।
ஸாதுரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ: ॥ 30 ॥
अपि चेत् यद्यपि सुदुराचारः सुष्ठु दुराचारः अतीव कुत्सिताचारोऽपि भजते माम् अनन्यभाक् अनन्यभक्तिः सन् , साधुरेव सम्यग्वृत्त एव सः मन्तव्यः ज्ञातव्यः ; सम्यक् यथावत् व्यवसितो हि सः, यस्मात् साधुनिश्चयः सः ॥ ३० ॥
எவனொருவன் மிகுந்த கீழான ஆசாரமுடையவனாய் இருந்தாலும் என்னிடத்தில் அனன்ய பக்தி உடையவனாய் (வேறு ஒன்றில் பக்தியில்லாமல் என்னிடத்திலேயே பக்தி உடையவனாய்) என்னையே தொழுகின்றானோ அப்படிப்பட்ட சாதுவே நல்ல ஆசாரம் உடையவன் என்று அறியவேண்டும். ஏனெனில் அவன் யதார்த்தத்தில் திட நிச்சயமுள்ளவன்.
उत्सृज्य च बाह्यां दुराचारतां अन्तः सम्यग्व्यवसायसामर्थ्यात् —
அந்தக்கரணத்தில் நன்றாக பண்படுத்தப்பட்ட யதார்த்த நிச்சயத் தின் பலத்தினால் வெளியில் உள்ள கீழான ஆசாரத்தை விட்டு-
क्षिप्रं भवति धर्मात्मा शश्वच्छान्तिं निगच्छति ।
कौन्तेय प्रतिजानीहि न मे भक्तः प्रणश्यति ॥ ३१ ॥
க்ஷி ப்ரம் பவதி தர்மாத்மா சஸ்வச்-சாந்திம் நிகச்சதி ।
கௌந்தேய ப்ரதிஜானீஹி ந மே பக்த: ப்ரணச்யதி ॥ 31 ॥
क्षिप्रं शीघ्रं भवति धर्मात्मा धर्मचित्तः एव । शश्वत् नित्यं शान्तिं च उपशमं निगच्छति प्राप्नोति ।
அந்த தர்மாத்மா சீக்கிரமே நித்தியமான சாந்தியை அடைகிறான்.
शृणु परमार्थम् , कौन्तेय प्रतिजानीहि निश्चितां प्रतिज्ञां कुरु, न मे मम भक्तः मयि समर्पितान्तरात्मा मद्भक्तः न प्रणश्यति इति ॥ ३१ ॥
ஹே கௌந்தேய! பரமார்த்த தத்துவத்தைக் கேள். திட நிச்சயத்து டன் அந்தக்கரணத்தை பரமாத்மாவாகிய என்னிடத்தில் சமர்ப்பித்து- என்னுடைய பக்தன் ஒரு நாளும் நாசத்தை அடையமாட்டான்.
किञ्च —
மேலும்
मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्युः पापयोनयः ।
स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम् ॥ ३२ ॥
மாம் ஹி பார்த வ்யபாச்ரித்ய யே அபி ஸ்யு: பாபயோனய: ।
ஸ்த்ரியோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்தேஅபி யாந்தி பராம்கதிம் ॥ 32 ॥
मां हि यस्मात् पार्थ व्यपाश्रित्य माम् आश्रयत्वेन गृहीत्वा येऽपि स्युः भवेयुः पापयोनयः पापा योनिः येषां ते पापयोनयः पापजन्मानः । के ते इति, आह — स्त्रियः वैश्याः तथा शूद्राः तेऽपि यान्ति गच्छन्ति परां प्रकृष्टां गतिम् ॥ ३२ ॥
ஹே பார்த்த! தாழ்ந்த பிறவிகள் எடுத்த ஸ்த்ரீ, வைச்யன் அவ் வாறேசூத்திரர்கள் எல்லோரும் என்னையே சரணடைந்து உத்தம மான கதியை அடைகின்றார்கள்.
किं पुनर्ब्राह्मणाः पुण्या भक्ता राजर्षयस्तथा ।
अनित्यमसुखं लोकमिमं प्राप्य भजस्व माम् ॥ ३३ ॥
கிம் புனர்-ப்ராஹ்மணா: புண்யா பக்தா ராஜர்ஷயஸ்-ததா ।
அநித்ய-மஸுகம் லோக-மிமம் ப்ராப்ய பஜஸ்வ மாம் ॥ 33 ॥
किं पुनः ब्राह्मणाः पुण्याः पुण्ययोनयः भक्ताः राजर्षयः तथा । राजानश्च ते ऋषयश्च राजर्षयः ।
மேலான புண்ய பிறவிகள் எடுத்த பிராமணர்களும், ராஜரிஷிக ளுமாகிய பக்தர்களைக் குறித்துச் சொல்லவும் வேண்டுமா?
यतः एवम् , अतः अनित्यं क्षणभङ्गुरम् असुखं च सुखवर्जितम् इमं लोकं मनुष्यलोकं प्राप्य पुरुषार्थसाधनं दुर्लभं मनुष्यत्वं लब्ध्वा भजस्व सेवस्व माम् ॥ ३३ ॥
(ஆகையால்) இவ்வாறு உள்ளதால் சுகமற்றஇந்த மனிதலோ கத்தை அடைந்து புருஷார்த்தத்திற்கு காரணமான அரிதான மனிதஜன்மத்தை அடைந்து என்னைத் தொழவேண்டும்.
कथम् —
எவ்வாறு-
मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु ।
मामेवैष्यसि युक्त्वैवमात्मानं मत्परायणः ॥ ३४ ॥
மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு ।
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ-மாத்மானம் மத்பராயண: ॥ 34 ॥
मयि वासुदेवे मनः यस्य तव स त्वं मन्मनाः भव । तथा मद्भक्तः भव मद्याजी मद्यजनशीलः भव । माम् एव च नमस्कुरु । माम् एव ईश्वरम् एष्यसि आगमिष्यसि युक्त्वा समाधाय चित्तम् । एवम् आत्मानम् , अहं हि सर्वेषां भूतानाम् आत्मा, परा च गतिः, परम् अयनम् , तं माम् एवंभूतम् , एष्यसि इति अतीतेन सम्बन्धः, मत्परायणः सन् इत्यर्थः ॥ ३४ ॥
என்னிடத்திலேயே மனமுடையவனாகவும், என்னிடத்தில் பக்தி உள்ளவனாகவும், என்னையே பூஜை செய்பவனாகவும், இரு. என்னையே வணங்கு, சித்தத்தைச் சமாதானம் செய்து என்னையே மேலான ஸ்தானமாக நினைத்து ஈஸ்வரனாகிய என்னையே அடைவாய். இவ்வாறு நானே எல்லாப் பிராணிகளுக்கும் ஆத்மா, நானே மேலான அடையும் இடம். இவ்வாறு என்னையே அடைவாய். இவ்வாறு என்னை என்றசப்தம் ஆத்மானம் என்றசப்தத்துடன் சம்பந்தமிருக்கிறது.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये नवमोऽध्यायः ॥
ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூஉபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே ராஜவித்யாராஜகுஹ்யயோகோ நாம நவமோத்யாய:
सप्तमे अध्याये भगवतस्तत्त्वं विभूतयश्च प्रकाशिताः । नवमे च । अथ इदानीं येषु येषु भावेषु चिन्त्यो भगवान् , ते ते भावा वक्तव्याः, तत्त्वं च भगवतो वक्तव्यम् उक्तमपि, दुर्विज्ञेयत्वात् , इत्यतः ।
ஏழாவது அத்யாயத்திலும், ஒன்பதாவது அத்யாயத்திலும் பகவானுடைய தத்துவமும் விபூதிகளும் எடுத்துக்கூறப்பட்டன. இப்பொழுது எந்த, எந்த பொருள்களில் பகவானை தியானிக்க யோக்கியமோ அந்த, அந்த பொருள்கள் கூறப்பட வேண்டும். முன்பே பகவானுடைய தத்துவத்தை விளக்கியுள்ளபோதிலும் அதைப் புரிந்து கொள்வது மிகக்கடினமானதால் மறுபடியும் அதை பகவான் கூறலானார்.
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச—
भूय एव महाबाहो शृणु मे परमं वचः ।
यत्तेऽहं प्रीयमाणाय वक्ष्यामि हितकाम्यया ॥ १ ॥
பூய ஏவ மஹாபாஹோ ச்ருணு மே பரமம் வச: ।
யத்தே அஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹித-காம்யயா ॥ 1 ॥
भूयः एव भूयः पुनः हे महाबाहो शृणु मे मदीयं परमं प्रकृष्टं निरतिशयवस्तुनः प्रकाशकं वचः वाक्यं यत् परमं ते तुभ्यं प्रीयमाणाय — मद्वचनात् प्रीयसे त्वम् अतीव अमृतमिव पिबन् , ततः — वक्ष्यामि हितकाम्यया हितेच्छया ॥ १ ॥
ஹே மஹாபாஹோ! மேலும் நீ என்னுடைய பரம (உத்தமமான) நிரதிசய பொருளை வெளிப்படுத்தும் வாக்கியத்தைக் கேள், பிரியமானவனான உன்பொருட்டு கூறிய என்னுடைய வசனங்களை பிரியத்துடன் அமிருதம் குடித்தது போல், மிகுந்த மகிழ்ச்சி அடைகிறாய். அதனால் உனக்கு நலம் ஏற்பட விரும்பி மேலான வாக்கியத்தைக் கூறுகிறேன்.
किमर्थम् अहं वक्ष्यामि इत्यत आह –
நான் எதனால் இவ்வாறு கூறுகிறேன்? அதைக் கூறுகிறார்-
न मे विदुः सुरगणाः प्रभवं न महर्षयः ।
अहमादिर्हि देवानां महर्षीणां च सर्वशः ॥ २ ॥
ந மே விது: ஸுரகணா: ப்ரபவம் ந மஹர்ஷய: ।
அஹமாதிர்ஹி தேவானாம் மஹர்ஷீணாம் ச ஸர்வச: ॥ 2 ॥
न मे विदुः न जानन्ति सुरगणाः ब्रह्मादयः । किं ते न विदुः ? मम प्रभवं प्रभावं प्रभुशक्त्यतिशयम् , अथवा प्रभवं प्रभवनम् उत्पत्तिम् । नापि महर्षयः भृग्वादयः विदुः ।
பிரஹ்ம்மா முதலிய தேவர்கள் அறியவில்லை. எதை அறியவில்லை யெனில் என்னுடைய அதிகமான பிரபுசக்தி தன்மையை அல்லது உற்பத்தியை, பிருகு முதலிய மஹரிஷிகளும் அறியவில்லை.
कस्मात् ते न विदुरित्युच्यते —
எதனால் அவர்கள் அறியவில்லை என்பதைக் கூறுகிறார்.
अहम् आदिः कारणं हि यस्मात् देवानां महर्षीणां च सर्वशः सर्वप्रकारैः ॥ २ ॥
ஏனெனில் நான் எல்லா தேவதைகளுக்கும், மஹர்ஷிகளுக்கும் ஆதியாக என்றால் மூலகாரணமாக இருக்கிறேன்.
किञ्च —
மேலும்
यो मामजमनादिं च वेत्ति लोकमहेश्वरम् ।
असंमूढः स मर्त्येषु सर्वपापैः प्रमुच्यते ॥ ३ ॥
யோ மாமஜமனாதிம் ச வேத்தி லோகமஹேச்வரம் ।
அஸம்மூட: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே ॥ 3 ॥
यः माम् अजम् अनादिं च, यस्मात् अहम् आदिः देवानां महर्षीणां च, न मम अन्यः आदिः विद्यते ; अतः अहम् अजः अनादिश्च ; अनादित्वम् अजत्वे हेतुः, तं माम् अजम् अनादिं च यः वेत्ति विजानाति लोकमहेश्वरं लोकानां महान्तम् ईश्वरं तुरीयम् अज्ञानतत्कार्यवर्जितम् असंमूढः संमोहवर्जितः सः मर्त्येषु मनुष्येषु, सर्वपापैः सर्वैः पापैः मतिपूर्वामतिपूर्वकृतैः प्रमुच्यते प्रमोक्ष्यते ॥ ३ ॥
நான் தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் ஆதிகாரணமாய் இருக்கிறேன். ஆனால் எனக்கு வேறு ஒரு ஆதிகாரணம் இல்லை. ஆகையால் நான் அநாதி, பிறப்பற்றவன். அநாதித்துவமானது பிறப் பற்றதன்மைக்கு ஹேதுவாகிறது. அந்த என்னை பிறப்பற்றவன் என்றும், அநாதி என்றும், உலகிற்கெல்லாம் மேலான ஈஸ்வரன் என்றும், துரீயம் என்றும், அக்ஞானம் அதன் காரியம் அற்றவன் என்றும் எவன் அறிகிறானோ அவன் மனிதர்களுள் மூடத்தன்மை அற்றவன், மோஹமற்றவன், அறிந்தோ அறியாமலோ செய்த எல்லா பாபங்களில் இருந்தும் விடுபட்டவனாகிறான்.
इतश्चाहं महेश्वरो लोकानाम् —
இவ்வாறு நான் உலகிற்கெல்லாம் மேலான ஈஸ்வரன்-
बुद्धिर्ज्ञानमसंमोहः क्षमा सत्यं दमः शमः ।
सुखं दुःखं भवोऽभावो भयं चाभयमेव च ॥ ४ ॥
புத்திர்-ஜ்ஞான-மஸம்மோஹ: க்ஷமா ஸத்யம் தம: சம: ।
ஸுகம் துக்கம் பவோ அபாவோ பயம் சாபயமேவ ச ॥ 4 ॥
बुद्धिः अन्तःकरणस्य सूक्ष्माद्यर्थावबोधनसामर्थ्यम् , तद्वन्तं बुद्धिमानिति हि वदन्ति ।
நுட்பமான, அதி நுட்பமான பொருள்களை அறிந்துகொள்ளும் சாமர்த்தியமுள்ள அந்தகரணத்தை உடையவனை புத்திமான் என்று கூறுகிறார்கள்.
ज्ञानम् आत्मादिपदार्थानामवबोधः । असंमोहः प्रत्युत्पन्नेषु बोद्धव्येषु विवेकपूर्विका प्रवृत्तिः । क्षमा आक्रुष्टस्य ताडितस्य वा अविकृतचित्तता । सत्यं यथादृष्टस्य यथाश्रुतस्य च आत्मानुभवस्य परबुद्धिसङ्क्रान्तये तथैव उच्चार्यमाणा वाक् सत्यम् उच्यते । दमः बाह्येन्द्रियोपशमः । शमः अन्तःकरणस्य उपशमः । सुखम् आह्लादः । दुःखं सन्तापः । भवः उद्भवः । अभावः तद्विपर्ययः । भयं च त्रासः, अभयमेव च तद्विपरीतम् ॥ ४ ॥
ஆத்மா முதலிய பதார்த்தங்களை அறிந்து கொள்வது ஞானம். அறிவதற்கு யோக்கியமுள்ளவைகளை அடைந்தபொழுது விவேகத் துடன் செயல்படுவது. எவன் ஒருவன் நிந்தித்தாலும் அடித்தாலும் அவனிடத்தில் மாறாத சித்தத்துடன் (மனதுடன்) இருத்தல், க்ஷமை. பார்த்தவாறு, கேட்டவாறு, அனுபவித்தவாறு மற்றவர்களுடைய மன தில் பதியுமாறு கூறும் வாக்கியம் சத்யம் எனப்படும். வெளி இந்திரியங் களின் கட்டுப்பாடு தமம். அந்தக்கரணக் கட்டுப்பாடு சமம். ஆனந்தம் அடைதல் சுகம். மனது கஷ்ட்டப்படுதல் துக்கம். தோன்றுதல் பாவம். தோன்றாதது அபாவம். பயம், பயமற்றது அபயம்.
अहिंसा समता तुष्टिस्तपो दानं यशोऽयशः ।
भवन्ति भावा भूतानां मत्त एव पृथग्विधाः ॥ ५ ॥
அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ்-தபோதானம் யசோஅயச: ।
பவந்தி பாவா பூதானாம் மத்த ஏவ ப்ருதக்விதா: ॥ 5 ॥
अहिंसा अपीडा प्राणिनाम् । समता समचित्तता । तुष्टिः सन्तोषः पर्याप्तबुद्धिर्लाभेषु । तपः इन्द्रियसंयमपूर्वकं शरीरपीडनम् । दानं यथाशक्ति संविभागः । यशः धर्मनिमित्ता कीर्तिः । अयशस्तु अधर्मनिमित्ता अकीर्तिः ।
பிராணிகளை துன்புறுத்தாமல் இருப்பது அஹிம்சை. மனம் ஒரே நிலையில் இருப்பது சமத்தன்மை (சமதா). துஷ்டி,ஸந்தோஷம், தேடியபொருள்களின் மேல்போதுமென்னும் எண்ணம் இந்திரி யங்களை அடக்கி சரீரத்தை வருத்திக்கொள்வது தபஸ். தன்னால் முடியுமளவு பகிர் ந்து அளித்தல். தர்மத்தின் மூலமாக கிடைக்கும் புகழ். அதர்மத்தினால் ஏற்படும் அவமானம் புகழ் அற்றது (அயஸ்)
भवन्ति भावाः यथोक्ताः बुद्ध्यादयः भूतानां प्राणिनां मत्तः एव ईश्वरात् पृथग्विधाः नानाविधाः स्वकर्मानुरूपेण ॥ ५ ॥
இவ்வாறு பிராணிகளுக்கு தங்களுடைய கர்மானுசாரமாக (கர்மத்திற்கு ஏற்றவாறு) ஏற்படும் புத்தி முதலிய பலவிதமான தன்மை கள் யாவும் ஈச்வரனாகிய என்னிடமிருந்தே ஏற்படுகின்றன.
किञ्च —
மேலும்
महर्षयः सप्त पूर्वे चत्वारो मनवस्तथा ।
मद्भावा मानसा जाता येषां लोक इमाः प्रजाः ॥ ६ ॥
மஹர்ஷய: ஸப்த பூர்வே சத்வாரோ மனவஸ்-ததா ।
மத்பாவா மானஸா ஜாதா யேஷாம் லோக இமா: ப்ரஜா: ॥ 6 ॥
महर्षयः सप्त भृग्वादयः पूर्वे अतीतकालसम्बन्धिनः, चत्वारः मनवः तथा सावर्णा इति प्रसिद्धाः, ते च मद्भावाः मद्गतभावनाः वैष्णवेन सामर्थ्येन उपेताः, मानसाः मनसैव उत्पादिताः मया जाताः उत्पन्नाः, येषां मनूनां महर्षीणां च सृष्टिः लोके इमाः स्थावरजङ्गमलक्षणाः प्रजाः ॥ ६ ॥
பிருகு முதலிய ஏழு ரிஷிகள், சென்றமுன் காலத்தை சேர்ந்த நான்கு மனுக்கள். அவர்கள் சாவர்ணா என்று புராணங்களில் பிரசித்தி பெற்றவர்கள். அவர்கள் எல்லோரும் என்னிடத்திலேயே நிலைத்த மனதுடையவர்கள். விஷ்ணுவாகிய என்னுடைய சாமர்த்தி யத்தை உடையவர்கள். என் மனதினால் உண்டாக்கப்பட்டவர்கள். இந்த சராசரமான ஜகத்தானது (உலகமானது) மனுக்கள், மகரிஷிக ளால் உற்பத்தி செய்யப்பட்டது.
एतां विभूतिं योगं च मम यो वेत्ति तत्त्वतः ।
सोऽविकम्पेन योगेन युज्यते नात्र संशयः ॥ ७ ॥
ஏதாம் விபூதிம் யோகம் ச மம யோ வேத்தி தத்வத: ।
ஸோ அவிகம்பேன் யோகேன யுஜ்யதே நாத்ர ஸம்சய: ॥ 7 ॥
एतां यथोक्तां विभूतिं विस्तारं योगं च युक्तिं च आत्मनः घटनम् , अथवा योगैश्वर्यसामर्थ्यं सर्वज्ञत्वं योगजं योगः उच्यते, मम मदीयं योगं यः वेत्ति तत्त्वतः तत्त्वेन यथावदित्येतत् ।
மேலே கூறப்பட்ட என்னுடைய விபூதியானது விஸ்தாரமானது. யோகத்துடனும் யுக்தியுடனும் கூடியது என்றால் தன்னுடைய மாயையின் செயல் அல்லது யோகத்தினால் உண்டான சர்வக்ஞ தன்மையா கிய சாமர்த்தியத்தை (வல்லமை) யோகம் என்று கூறப்படுகிறது. எவன் என்னுடைய யதார்த்த தத்துவத்தை அறிகிறானோ
सः अविकम्पेन अप्रचलितेन योगेन सम्यग्दर्शनस्थैर्यलक्षणेन युज्यते सम्बध्यते । न अत्र संशयः न अस्मिन् अर्थे संशयः अस्ति ॥ ७ ॥
அவன் சலனமற்றயோகத்தினால் யதார்த்த ஞானத்தை ஸ்திரமா க(திடமாக) அடைகிறான். இந்த விஷயத்தில் ஸந்தேஹமே இல்லை.
कीदृशेन अविकम्पेन योगेन युज्यते इत्युच्यते —
எப்படிப்பட்ட சலனமற்றயோகத்தை அடைகிறான் என்று கூறுகிறார்.
अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते ।
इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विताः ॥ ८ ॥
அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே ।
இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமன்விதா: ॥ 8 ॥
अहं परं ब्रह्म वासुदेवाख्यं सर्वस्य जगतः प्रभवः उत्पत्तिः । मत्तः एव स्थितिनाशक्रियाफलोपभोगलक्षणं विक्रियारूपं सर्वं जगत् प्रवर्तते । इति एवं मत्वा भजन्ते सेवंते मां बुधाः अवगतपरमार्थतत्त्वाः, भावसमन्विताः भावः भावना परमार्थतत्त्वाभिनिवेशः तेन समन्विताः संयुक्ताः इत्यर्थः ॥ ८ ॥
வாசுதேவன் எனப்படும் பரப்ரஹ்ம்மாகிய நான் இந்த ஜகத்திற் கெல்லாம் காரணம். என்னிடத்தில் தான் இருப்பு, நாசம் முதலிய கர் மத்தின் பலன்களாகிய போகங்களுடன் கூடிய எல்லா செயல்களுடன் விகாரங்களுடன் கூடிய உலகமானது இருக்கிறது என்று இவ்வாறு அறிந்து பரமார்த்த தத்துவத்தை அறிந்ததினால் அதிலேயே சிந்த னையுடன் அதுவாகவே ஆகிவிட்ட தத்துவஞானி என்னைத் தொழு கிறான் என்பது பொருள்.
किञ्च —
மேலும்
मच्चित्ता मद्गतप्राणा बोधयन्तः परस्परम् ।
कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च ॥ ९ ॥
மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த: பரஸ்பரம் ।
கதயந்த்தச்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச ॥ 9 ॥
मच्चित्ताः, मयि चित्तं येषां ते मच्चित्ताः, मद्गतप्राणाः मां गताः प्राप्ताः चक्षुरादयः प्राणाः येषां ते मद्गतप्राणाः, मयि उपसंहृतकरणाः इत्यर्थः । अथवा, मद्गतप्राणाः मद्गतजीवनाः इत्येतत् ।
என்னிடத்திலேயே மனதை வைத்தவர்கள், அவ்வாறேகண்கள் முதலான இந்திரியங்களாகிய பிராணனை என்னிடத்திலேயே செலுத்தியவர்கள் என்றால் என்னிடத்தில் எல்லா இந்திரியங் களையும் ஒடுக்கியவர்கள் அல்லது என் பொருட்டு ஜீவனத்தை அர்ப்பணித்தவர்கள் என்று பொருள்.
बोधयन्तः अवगमयन्तः परस्परम् अन्योन्यम् , कथयन्तश्च ज्ञानबलवीर्यादिधर्मैः विशिष्टं माम् , तुष्यन्ति च परितोषम् उपयान्ति च रमन्ति च रतिं च प्राप्नुवन्ति प्रियसङ्गत्येव ॥ ९ ॥
என்னுடைய பக்தன் தனக்கு ஒப்பான மற்றவர்களிடம் (என்னுடைய தத்துவத்தை) தான் அறிந்ததையும் அவ்வாறேஞானம், பலம், சாமர்த்தியம் முதலியவைகளுடன் கூடிய என்னை வர்ணனை செய்து எப்பொழுதும் சந்தோஷத்தை அடைகிறார்கள். மேலும் பிரியப்பட்ட பொருளை அடைந்தது போல் ரமிக்கின்றார்கள்.
ये यथोक्तैः प्रकारैः भजन्ते मां भक्ताः सन्तः —
எவர்கள் இவ்வாறு கூறப்பட்ட பக்தர்களாக இருந்து கொண்டு தொழுகிறார்களோ-
तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकम् ।
ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते ॥ १० ॥
தேஷாம் ஸததயுக்தானாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம் ।
ததாமி புத்தியோகம் தம் யேன மாமுபயாந்தி தே ॥ 10 ॥
तेषां सततयुक्तानां नित्याभियुक्तानां निवृत्तसर्वबाह्यैषणानां भजतां सेवमानानाम् । किम् अर्थित्वादिना कारणेन ? नेत्याह — प्रीतिपूर्वकं प्रीतिः स्नेहः तत्पूर्वकं मां भजतामित्यर्थः । ददामि प्रयच्छामि बुद्धियोगं बुद्धिः सम्यग्दर्शनं मत्तत्त्वविषयं तेन योगः बुद्धियोगः तं बुद्धियोगम् , येन बुद्धियोगेन सम्यग्दर्शनलक्षणेन मां परमेश्वरम् आत्मभूतम् आत्मत्वेन उपयान्ति प्रतिपद्यन्ते ।
என்னை வெளிவிஷயங்களில் ஆசையற்றும், விரும்பிய ஒன்றை அடைவதற்கான காரணத்திற்காக அல்லாமல் பிரியத்துடன் என்னை எப்பொழுதும் இடைவிடாமல் தொழுகிறார்களோ என்பது பொருள். அப்படிப்பட்டவர்களுக்கு புத்தியோகத்தைக் கொடுக்கி றேன். என்னுடைய தத்துவத்தை உள்ளவாறு அறிதல் புத்தியாகும். அந்த புத்தியுடன் கூடியிருத்தல் புத்தியோகமாகும். அந்த யதார்த்த ஞானமாகிய புத்தியோகத்தினால் பரமேஸ்வரனாகிய என்னை ஆத்ரூபமாகவே அறிகிறார்கள்.
के ? ते ये मच्चित्तत्वादिप्रकारैः मां भजन्ते ॥ १० ॥
அவர்கள் யார் எனில்? எவர்கள் என்னிடத்திலேயே சித்தத்தை செலுத்துதல் முதலியவைகளால் என்னைத் தொழுகிறார்களோ அவர்கள்.
किमर्थम् , कस्य वा, त्वत्प्राप्तिप्रतिबन्धहेतोः नाशकं बुद्धियोगं तेषां त्वद्भक्तानां ददासि इत्यपेक्षायामाह —
உங்களுடைய பக்தர்களுக்கு எதனால் புத்தியோகத்தை அளிக் கிறீர்கள்? உங்களை அடைவதற்கு எந்த காரணம் தடையாக உள் ளது? என்றவினாவிற்கு கூறுகிறார்-
तेषामेवानुकम्पार्थमहमज्ञानजं तमः ।
नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता ॥ ११ ॥
தேஷா-மேவானுகம்பார்த-மஹ-மக்ஞானஜம் தம: ।
நாசயாம்-யாத்மபாவஸ்தோ ஜ்ஞானதீபேன பாஸ்வதா ॥ 11 ॥
तेषामेव कथं नु नाम श्रेयः स्यात् इति अनुकम्पार्थं दयाहेतोः अहम् अज्ञानजम् अविवेकतः जातं मिथ्याप्रत्ययलक्षणं मोहान्धकारं तमः नाशयामि, आत्मभावस्थः आत्मनः भावः अन्तःकरणाशयः तस्मिन्नेव स्थितः सन् । ज्ञानदीपेन विवेकप्रत्ययरूपेण ।
அவர்களுக்கு எவ்வாறு ச்ரேயஸ் (நன்மை) உண்டாகுமோ அவ்வாறு கருணையினால், அவிவேகத்தினால் உண்டான மித்தியா ஞானரூப மோஹாந்தகாரமாகிய தமஸ்ஸை, எப்பொழுதும் அவர்களி டத்தில் உள்ள ஆத்மபாவனையினால் அவர்களின் அந்தக்கர ணத்தில் இருந்துகொண்டு விவேகபுத்தி ரூப ஞானம் என்னும் விளக்கினால் நான் நாசம் செய்கிறேன்.
भक्तिप्रसादस्नेहाभिषिक्तेन मद्भावनाभिनिवेशवातेरितेन ब्रह्मचर्यादिसाधनसंस्कारवत्प्रज्ञावर्तिना विरक्तान्तःकरणाधारेण विषयव्यावृत्तचित्तरागद्वेषाकलुषितनिवातापवरकस्थेन नित्यप्रवृत्तैकाग्र्यध्यानजनितसम्यग्दर्शनभास्वता ज्ञानदीपेनेत्यर्थः ॥ ११ ॥
பக்தியினால் உண்டான அனுக்கிரஹம் என்றஎண்ணையினால் நிரப்பப்பட்டது. என்னுடைய பாவனையாகவே இருக்கும் அபினிவே சம்(விடாமுயற்சி) என்னும் காற்றினால் எரிந்து கொண்டிருக்கிறது. பிரஹ்மச்சர்யம் முதலிய சாதனங்களால் உண்டான சம்ஸ்காரத்துடன் கூடிய புத்திரூப பக்தி. அசக்தி(விரக்தி) உடைய அந்தக்கரணத்தினு டைய ஆதரவினால் விஷயங்களில் விருப்பமற்று, ராகத்துவேஷங்க ளினால் கலங்கப்படாத சித்தம் என்னும் காற்று அற்று, மேலும் இடைவிடாமல் எப்பொழுதும் அப்பியாசம் செய். ஏகாக்கிர த்யானத் தால் உண்டான சம்யக்தர்சனம் (யதார்த்த ஞானம்) என்னும் ஒளி உடையது ஞானதீபம் (ஞான விளக்கு) என்பது பொருள்.
यथोक्तां भगवतः विभूतिं योगं च श्रुत्वा अर्जुन उवाच —
இவ்வாறு கூறப்பட்ட பகவானுடைய விபூதியையும் யோகத்தையும் கேட்டு அர்ஜுனன் கூறினான்.
अर्जुन उवाच —
அர்ஜுன உவாச —
परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् ।
पुरुषं शाश्वतं दिव्यमादिदेवमजं विभुम् ॥ १२ ॥
பரம் ப்ரஹ்ம பரம்தாம பவித்ரம் பரமம் பவான் ।
புருஷம் சாச்வதம் திவ்யமாதிதேவமஜம் விபும் ॥ 12 ॥
परं ब्रह्म परमात्मा परं धाम परं तेजः पवित्रं पावनं परमं प्रकृष्टं भवान् । पुुुरुषं शाश्वतं नित्यं दिव्यं दिवि भवम् आदिदेवं सर्वदेवानाम् आदौ भवम् आदिदेवम् अजं विभुं विभवनशीलम् ॥ १२ ॥
தாங்கள் பரம்பிரஹ்ம- பரமாத்மா, பரமதேஜஸ், பரமபுனிதமான வர். மேலும் தாங்கள் மேலான புருஷர், எப்பொழுதும் உள்ள திவ்ய புருஷர் என்றால் தேவலோகத்தில் வஸிப்பவர். எல்லா தேவர்களுக் கும் முன்னாலேயே இருப்பவர். பிறப்பற்றவர் வியாபகர்.
ईदृशम् —
இவ்வாறு
आहुस्त्वामृषयः सर्वे देवर्षिर्नारदस्तथा ।
असितो देवलो व्यासः स्वयं चैव ब्रवीषि मे ॥ १३ ॥
ஆஹுஸ்த்வாம்ருஷய: ஸர்வே தேவர்ஷிர் நாரதஸ்ததா ।
அஸிதோ தேவலோ வ்யாஸ: ஸ்வயம் சைவ ப்ரவீஷிமே ॥ 13 ॥
आहुः कथयन्ति त्वाम् ऋषयः वसिष्ठादयः सर्वे देवर्षिः नारदः तथा । असितः देवलोऽपि एवमेवाह, व्यासश्च, स्वयं चैव त्वं च ब्रवीषि मे ॥ १३ ॥
தங்களை வசிஷ்டர் முதலிய எல்லா ரிஷிகளும் தங்களை வர் ணிக்கிறார்கள். தேவரிஷியான நாரதரும், அசிதரும், தேவலரும், வியாசரும் அவ்வாறேகூறுகிறார்கள். தாங்களும் அவ்வாறேஎன்னி டம் கூறுகிறீர்கள்.
सर्वमेतदृतं मन्ये यन्मां वदसि केशव ।
न हि ते भगवन्व्यक्तिं विदुर्देवा न दानवाः ॥ १४ ॥
ஸர்வபூதத்ருதம் மன்யே யன்மாம் வதஸி கேசவ ।
நஹிதே பகவன் வ்யக்திம் விதுர்-தேவா ந தானவா: ॥ 14 ॥
सर्वमेतत् यथोक्तम् ऋषिभिः त्वया च एतत् ऋतं सत्यमेव मन्ये, यत् मां प्रति वदसि भाषसे हे केशव । न हि ते तव भगवन् व्यक्तिं प्रभवं विदुः न देवाः, न दानवाः ॥ १४ ॥
ஹே கேசவ! ரிஷிகளாலும், தங்களாலும் கூறப்பட்டவை எல்லாம் எனக்காக நீங்கள் கூறுவதனால் அதை சத்தியம் (உண்மை) என்று கருதுகிறேன். ஏன் எனில், ஹே பகவானே தங்களுடைய உற்பத்தியை தேவர்களும், அசுரர்களும் அறியமாட்டார்கள்.
यतः त्वं देवादीनाम् आदिः, अतः —
எதனால் நீங்கள் தேவர்களுக்கெல்லாம் ஆதியாக இருக்கி றீர்களோ அதனால்-
स्वयमेवात्मनात्मानं वेत्थ त्वं पुरुषोत्तम ।
भूतभावन भूतेश देवदेव जगत्पते ॥ १५ ॥
ஸ்வயமே-வாத்ம-னாத்மானம் வேத்த த்வம் புருஷோத்தம ।
பூதபாவன பூதேச தேவதேவ ஜகத்பதே ॥ 15 ॥
स्वयमेव आत्मना आत्मानं वेत्थ जानासि त्वं निरतिशयज्ञानैश्वर्यबलादिशक्तिमन्तम् ईश्वरं पुरुषोत्तम । भूतानि भावयतीति भूतभावनः, हे भूतभावन । भूतेश भूतानाम् ईशितः । हे देवदेव जगत्पते ॥ १५ ॥
ஹே புருஷோத்தம! ஹே பூத பிராணிகளை உற்பத்தி செய்யும் பூதபாவன! ஹே பூதேச பூதங்களுக்கெல்லாம் ஈஸ்வரனே! ஹே தேவர்களுக்கெல்லாம் தேவனே! ஜகத்திற்கெல்லாம் தலைவனே! நிரதிசய ஞான, ஐஸ்வர்யம், சாமர்த்தியம் முதலிய சக்திகளுடன் கூடிய ஈஸ்வரராகிய தாங்கள் தன்னைத் தானே அறிகிறீர்கள்.
वक्तुमर्हस्यशेषेण दिव्या ह्यात्मविभूतयः ।
याभिर्विभूतिभिर्लोकानिमांस्त्वं व्याप्य तिष्ठसि ॥ १६ ॥
வக்துமர்ஹஸ்யசேஷேண திவ்யா ஹ்யாத்மவிபூதய: ।
யாபிர்விபூதிபிர்லோகாநிமாம்ஸ்த்வம் வ்யாப்ய திஷ்டஸி ॥ 16 ॥
वक्तुं कथयितुम् अर्हसि अशेषेण । दिव्याः हि आत्मविभूतयः । आत्मनो विभूतयो याः ताः वक्तुम् अर्हसि । याभिः विभूतिभिः आत्मनो माहात्म्यविस्तरैः इमान् लोकान् त्वं व्याप्य तिष्ठसि ॥ १६ ॥
தங்களுடைய விபூதிகளை முழுவதுமாக கூறுவதில் சாமர்த்தியம் உடையவர்(தாங்களே). எந்த தங்களுடைய விபூதிகள் என்னும் மாஹாத்மியத்தின் விஸ்தாரத்தால் இந்த உலகம் முழுவதும் வியாபித் திருக்கிறீரோ அதைக் கூறுவதிலும் தாங்களே சாமர்த்தியசாலி.
कथं विद्यामहं योगिंस्त्वां सदा परिचिन्तयन् ।
केषु केषु च भावेषु चिन्त्योऽसि भगवन्मया ॥ १७ ॥
கதம் வித்யா-மஹம் யோகிம்ஸ்-த்வாம் ஸதா பரிசிந்தயன் ।
கேஷுகேஷு ச பாவேஷு சிந்த்யோஅஸி பகவன் மயா ॥ 17 ॥
कथं विद्यां विजानीयाम् अहं हे योगिन् त्वां सदा परिचिन्तयन् । केषु केषु च भावेषु वस्तुषु चिन्त्यः असि ध्येयः असि भगवन् मया ॥ १७ ॥
ஹே யோகியே ! தங்களை எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டு (த்யானம் செய்து) எவ்விதமாக தங்களை அறிவேன்? ஹே பகவானே! எந்த எந்த வஸ்துக்களில் என்னால் த்யானிக்கத்தக்கவராகிறீர்?
विस्तरेणात्मनो योगं विभूतिं च जनार्दन ।
भूयः कथय तृप्तिर्हि शृण्वतो नास्ति मेऽमृतम् ॥ १८ ॥
விஸ்தரேணாத்மனோ யோகம் விபூதிம் ச ஜனார்தன ।
பூய: கதய த்ருப்திர்-ஹி ச்ருண்வதோ நாஸ்தி மேஅம்ருதம் ॥ 18 ॥
विस्तरेण आत्मनः योगं योगैश्वर्यशक्तिविशेषं विभूतिं च विस्तरं ध्येयपदार्थानां हे जनार्दन ।
ஹே ஜனார்த்தனா! தங்களுடைய யோகத்தை அதாவது தங்களு டைய யோக ஐஸ்வர்ய சக்தி ரூப விசேஷங்களையும், தங்களுடைய விபூதிகளையும்(மாஹாத்மியத்தையும்), மேலும் தியானத்திற்கு யோக்கியமான பதார்த்தங்களையும் விரிவாக கூறவேண்டுகிறேன்.
अर्दतेः गतिकर्मणः रूपम् , असुराणां देवप्रतिपक्षभूतानां जनानां नरकादिगमयितृत्वात् जनार्दनः अभ्युदयनिःश्रेयसपुरुषार्थप्रयोजनं सर्वैः जनैः याच्यते इति वा ।
செல்லுதல் என்னும் தொழில் (அர்த்த) என்னும் தாதுவிலிருந்து தோன்றியது. (அவ்வாறேவேண்டுதல் என்னும் பொருள் உள்ளது,) தேவர்களின் எதிரிகளாகிய அசுரர்களை நரகம் முதலியவற்றுள் செலுத்துவதால் ஜனார்த்தனன். அல்லது இகலோக பரலோக போகங் கள் மற்றும் மோக்ஷமாகிய புருஷார்த்தங்களை அவரிடம் எல்லாஜ னங்களாலும் வேண்டப்படுவதால் ஜனார்த்தனன்.
भूयः पूर्वम् उक्तमपि कथय ; तृप्तिः परितोषः हि यस्मात् नास्ति मे मम शृण्वतः त्वन्मुखनिःसृतवाक्यामृतम् ॥ १८ ॥
நீங்கள் முன்பே கூறியிருந்தாலும் மறுபடியும் கூறி அருள வேண்டும். ஏனெனில் தங்களுடைய முகக்கமலத்திலிருந்து வெளிப்பட்ட திரு வாக்கிய ரூப அம்ருதத்தை கேட்டும் எனக்கு திருப்தி ஏற்படவில்லை.
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச—
हन्त ते कथयिष्यामि दिव्या ह्यात्मविभूतयः ।
प्राधान्यतः कुरुश्रेष्ठ नास्त्यन्तो विस्तरस्य मे ॥ १९ ॥
ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யா ஹ்யாத்ம-விபூதய: ।
ப்ராதான்யத: குருச்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே ॥ 19 ॥
हन्त इदानीं ते तव दिव्याः दिवि भवाः आत्मविभूतयः आत्मनः मम विभूतयः याः ताः कथयिष्यामि इत्येतत् । प्राधान्यतः यत्र यत्र प्रधाना या या विभूतिः तां तां प्रधानां प्राधान्यतः कथयिष्यामि अहं कुरुश्रेष्ठ । अशेषतस्तु वर्षशतेनापि न शक्या वक्तुम् , यतः नास्ति अन्तः विस्तरस्य मे मम विभूतीनाम् इत्यर्थः ॥ १९ ॥
ஹே குருவம்சத்தில் சிறந்தவனே! நான் இப்பொழுதும் என்னு டைய திவ்யமான விபூதிகள் (வைபவங்கள்) எவைகளோ அவை களை உனக்கு கூறுகிறேன். எங்கு எங்கு பிரதானமாக என்னுடைய எந்த எந்த விபூதிகள் பிரதானமாக (முதன்மையாக) உள்ளதோ அந்த அந்த முதன்மையானதைக் கூறுகிறேன். முழுமையாக சொல்லுவ தற்கு நூறு வருடங்கள் ஆனாலும் முடியாது. ஏனெனில் என்னுடைய விஸ்தாரமான விபூதிகள் முடிவற்றது என்பது பொருள்.
तत्र प्रथममेव तावत् शृणु —
அவைகளில் முதலில் இதனைக் கேள்-
अहमात्मा गुडाकेश सर्वभूताशयस्थितः ।
अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च ॥ २० ॥
அஹமாத்மா குடாகேச ஸர்வபூதாசயஸ்தித: ।
அஹமாதிச்ச மத்யம் ச பூதானா-மந்த ஏவ ச ॥ 20 ॥
अहम् आत्मा प्रत्यगात्मा गुडाकेश, गुडाका निद्रा तस्याः ईशः गुडाकेशः, जितनिद्रः इत्यर्थः ; घनकेश इति वा । सर्वभूताशयस्थितः सर्वेषां भूतानाम् आशये अन्तर्हृदि स्थितः अहम् आत्मा प्रत्यगात्मा नित्यं ध्येयः ।
குடா என்றால் நித்திரை. அதற்கு ஈசன் குடாகேசன். என்றால் நித்திரையை ஜெயித்தவன் என்பது பொருள் அல்லது அடர்த்தியான கேசம் உடையவன் என்பது பொருள். ஆகையால் அர்ஜுனன் குடா கேசன் எனக் கூறப்படுகிறான். ஹே குடாகேசனே! பிரத்யக் ஆத்மா வாக உள்ள நான் எல்லாப் பிராணிகளுடைய ஹ்ருதயத்தின் உள்ளும் இருப்பவனாக தியானம் செய்யத்தக்கவன்.
तदशक्तेन च उत्तरेषु भावेषु चिन्त्यः अहम् ; यस्मात् अहम् एव आदिः भूतानां कारणं तथा मध्यं च स्थितिः अन्तः प्रलयश्च ॥ २० ॥
அவ்வாறு தியானம் செய்ய முடியாதவர்கள் மேலே கூறிய பாவனைகளில் என்னை தியானம் செய்யவேண்டும். ஏனெனில் நான் எல்லாப் பிராணிகளுக்கும் ஆதியாயும் (காரணமாயும்) இருப்பாயும் (ஸ்திதியாயும்) முடிவாகவும் (பிரளயமாகவும்) இருக்கிறேன்.
एवं च ध्येयोऽहम् —
இவ்வாறு தியானம் செய்யத் தக்கவன்.
आदित्यानामहं विष्णुर्ज्योतिषां रविरंशुमान् ।
मरीचिर्मरुतामस्मि नक्षत्राणामहं शशी ॥ २१ ॥
ஆதித்யானாமஹம் விஷ்ணூர்ஜ்யோதிஷாம் ரவிரம்சுமான் ।
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் சசீ ॥ 21 ॥
आदित्यानां द्वादशानां विष्णुः नाम आदित्यः अहम् । ज्योतिषां रविः प्रकाशयितॄणाम् अंशुमान् रश्मिमान् । मरीचिः नाम मरुतां मरुद्देवताभेदानाम् अस्मि । नक्षत्राणाम् अहं शशी चन्द्रमाः ॥ २१ ॥
நான் பன்னிரெண்டு ஆதித்யர்களுள் விஷ்ணு என்றபெயருள்ள ஆதித்யன். பிரகாசிக்கின்றஜோதிகளுள் நான் ஒளிக்கதிருள்ள சூரியனாக இருக்கிறேன். மருத்துக்களுள் நான் மரீசியாக இருக்கிறேன். நட்சத்திரங்களுள் சந்திரனாக இருக்கிறேன்.
वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः ।
इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना ॥ २२ ॥
வேதானாம் ஸாமவேதோஅஸ்மி தேவானா-மஸ்மி வாஸவ: ।
இந்த்ரியாணாம் மனச்சாஸ்மி பூதானாமஸ்மி சேதனா ॥ 22 ॥
वेदानां मध्ये सामवेदः अस्मि । देवानां रुद्रादित्यादीनां वासवः इन्द्रः अस्मि । इन्द्रियाणां एकादशानां चक्षुरादीनां मनश्च अस्मि सङ्कल्पविकल्पात्मकं मनश्चास्मि । भूतानाम् अस्मि चेतना कार्यकरणसङ्घाते नित्याभिव्यक्ता बुद्धिवृत्तिः चेतना ॥ २२ ॥
வேதங்களுள் நான் சாமவேதமாக இருக்கிறேன். ருத்ர ஆதித்யர் முதலிய தேவர்களுள் நான் இந்திரனாக இருக்கிறேன். கண்கள் முதலிய பதினோரு இந்திரியங்களுள் நான் சங்கல்ப விகல்பங்களோடு கூடிய மனமாக இருக்கிறேன். எல்லாபிராணிகளுக்கும் நான் சேதன மாக இருக்கிறேன். காரிய கரண சங்காதமாகிய சரீரத்தினால் எப்பொ ழுதும் பிரகாசித்துக் கொண்டிருப்பது புத்தி விருத்தியாகும். அதுவே சேதனம்.
रुद्राणां शङ्करश्चास्मि वित्तेशो यक्षरक्षसाम् ।
वसूनां पावकश्चास्मि मेरुः शिखरिणामहम् ॥ २३ ॥
ருத்ராணாம் சங்கரச்-சாஸ்மி வித்தேசோ யக்ஷரக்ஷஸாம் ।
வஸூனாம் பாவகச்-சாஸ்மி மேரு: சிகரிணா-மஹம் ॥ 23 ॥
रुद्राणाम् एकादशानां शङ्करश्च अस्मि । वित्तेशः कुबेरः यक्षरक्षसां यक्षाणां रक्षसां च । वसूनाम् अष्टानां पावकश्च अस्मि अग्निः । मेरुः शिखरिणां शिखरवताम् अहम् ॥ २३ ॥
பதினோரு ருத்திரர்களுள் நான் சங்கரனாக இருக்கிறேன். யக்ஷர்கள் ராக்ஷசர்களுள் தனேஸ்வரனாகிய குபேரனாக இருக்கி றேன். எட்டு வசுக்களில் அக்னியாக இருக்கிறேன். மலைகளுக்குள் (சிகரம் உடையவைகளுள்) மேருமலையாக இருக்கிறேன்.
पुरोधसां च मुख्यं मां विद्धि पार्थ बृहस्पतिम् ।
सेनानीनामहं स्कन्दः सरसामस्मि सागरः ॥ २४ ॥
புரோதஸாம் ச முக்யம் மாம் வித்தி பார்த்த ப்ருஹஸ்பதிம் ।
ஸேனானீனா-மஹம் ஸ்கந்த: ஸரஸா-மஸ்மி ஸாகர: ॥ 24 ॥
पुरोधसां च राजपुरोहितानां च मुख्यं प्रधानं मां विद्धि हे पार्थ बृहस्पतिम् । स हि इन्द्रस्येति मुख्यः स्यात् पुरोधाः । सेनानीनां सेनापतीनाम् अहं स्कन्दः देवसेनापतिः । सरसां यानि देवखातानि सरांसि तेषां सरसां सागरः अस्मि भवामि ॥ २४ ॥
ஹே பார்த்த! ராஜ புரோஹிதர்களுள் நான் முக்கியமான புரோ ஹிதராகிய பிருஹஸ்பதியாக இருக்கிறேன். ஏனெனில் இந்திரனுக் கும் பிரதான(முக்கிய) புரோஹிதர். சேனாதிபதிகளில் தேவர்களின் சேனாதிபதியாகிய ஸ்கந்தனாக இருக்கிறேன். தேவர்களால் ஏற்படுத் தப்பட்ட ஏரிகளுள் நான் சமுத்திரமாக இருக்கிறேன்.
महर्षीणां भृगुरहं गिरामस्म्येकमक्षरम् ।
यज्ञानां जपयज्ञोऽस्मि स्थावराणां हिमालयः ॥ २५ ॥
மஹர்ஷீணாம் ப்ருகு-ரஹம் கிரா-மஸ்ம்யேக-மக்ஷரம் ।
யக்ஞானாம் ஜபயஜ்ஞோ அஸ்மி ஸ்தாவராணாம் ஹிமாலய: ॥ 25 ॥
महर्षीणां भृगुः अहम् । गिरां वाचां पदलक्षणानाम् एकम् अक्षरम् ओङ्कारः अस्मि । यज्ञानां जपयज्ञः अस्मि, स्थावराणां स्थितिमतां हिमालयः ॥ २५ ॥
மகரிஷிகளுள் பிருகுவாய் இருக்கிறேன். சொற்களாகிய பதங்க ளுள் ஒரே அக்ஷரமாகிய ஓம்காரமாக இருக்கிறேன். யக்ஞங்களுள் ஜபயக்குமாக இருக்கிறேன். அசையாப் பொருள்களுள் இமயமலை யாக இருக்கிறேன்.
अश्वत्थः सर्ववृक्षाणां देवर्षीणां च नारदः ।
गन्धर्वाणां चित्ररथः सिद्धानां कपिलो मुनिः ॥ २६ ॥
அச்வத்த: ஸர்வவ்ருக்ஷாணாம் தேவர் ஷீணாம் ச நாரத:।
கந்தர்வாணாம் சித்ரரத: ஸித்தானாம் கபிலோ முனி: ॥ 26 ॥
अश्वत्थः सर्ववृक्षाणाम् , देवर्षीणां च नारदः देवाः एव सन्तः ऋषित्वं प्राप्ताः मन्त्रदर्शित्वात्ते देवर्षयः, तेषां नारदः अस्मि । गन्धर्वाणां चित्ररथः नाम गन्धर्वः अस्मि । सिद्धानां जन्मनैव धर्मज्ञानवैराग्यैश्वर्यातिशयं प्राप्तानां कपिलो मुनिः ॥ २६ ॥
எல்லாமரங்களுள்ளும் அச்வத்தமாகவும், தேவரிஷிகளுள் நார தராகவும், கந்தர்வர்களுள் சித்ரரதனாகவும், பிறக்கும்பொழுதே தர்மம், ஞானம், வைராக்கியம் ஐச்வர்யம் இவைகளை அதிகமாக பெற்றவர்களுள் கபில முனியாக இருக்கிறேன்.
उच्चैःश्रवसमश्वानां विद्धि माममृतोद्भवम् ।
ऐरावतं गजेन्द्राणां नराणां च नराधिपम् ॥ २७ ॥
உச்சை:ச்ரவஸ-மச்வானாம் வித்தி மாமம்ருதோத்பவம் ।
ஐராவதம் கஜேந்த்ராணாம் நராணாம் ச நராதிபம் ॥ 27 ॥
उच्चैःश्रवसम् अश्वानां उच्चैःश्रवाः नाम अश्वराजः तं मां विद्धि विजानीहि अमृतोद्भवम् अमृतनिमित्तमथनोद्भवम् । ऐरावतम् इरावत्याः अपत्यं गजेन्द्राणां हस्तीश्वराणाम् , तम् ‘मां विद्धि’ इति अनुवर्तते । नराणां च मनुष्याणां नराधिपं राजानं मां विद्धि जानीहि ॥ २७ ॥
குதிரைகளுள் அமிர்தம் பாற்கடலைக் கடைந்ததிலிருந்து உண்டான உச்சைச்ரவஸ் என்றபெயருள்ள குதிரை என்று என்னை அறி. யானைத் தலைவர்களுள் இராவதியின் புத்திரனான ஐராவத னாக என்னை அறி. மனிதர்களுள் என்னை அரசனாக அறி.
आयुधानामहं वज्रं धेनूनामस्मि कामधुक् ।
प्रजनश्चास्मि कन्दर्पः सर्पाणामस्मि वासुकिः ॥ २८ ॥
ஆயுதானா-மஹம் வஜ்ரம் தேனூனா-மஸ்மி காமதுக் ।
ப்ரஜனச்-சாஸ்மி கந்தர்ப: ஸர்பாணா-மஸ்மி வாஸுகி: ॥ 28 ॥
आयुधानाम् अहं वज्रं दधीच्यस्थिसम्भवम् । धेनूनां दोग्ध्रीणाम् अस्मि कामधुक् वसिष्ठस्य सर्वकामानां दोग्ध्री, सामान्या वा कामधुक् । प्रजनः प्रजनयिता अस्मि कन्दर्पः कामः सर्पाणां सर्पभेदानाम् अस्मि वासुकिः सर्पराजः ॥ २८ ॥
ஆயுதங்களுள் ததீசீ மஹரிஷியின் எலும்பினால் ஆன வஜ்ராயு தமாக இருக்கிறேன். பால் கறக்கும் பசுக்களில் நான் காமதேனுவாக இருக்கிறேன் வசிஷ்டர் விரும்பியதெல்லாம் கொடுக்கின்றது, அல்லது சாதாரண பசுக்களுள் அதிக பால் சுரக்கும் பசுவாக இருக்கி றேன். பிரஜைகளை உற்பத்தி செய்கின்றகாமதேவனாக இருக் கின்றேன். அநேக வித சர்ப்பங்களுள் வாசுகி என்றசர்ப்ப ராஜாவாக இருக்கிறேன்.
अनन्तश्चास्मि नागानां वरुणो यादसामहम् ।
पितॄणामर्यमा चास्मि यमः संयमतामहम् ॥ २९ ॥
அநந்தச்-சாஸ்மி நாகானாம் வருணோ யாதஸா-மஹம் ।
பித்ருணா-மர்யமா சாஸ்மி யம: ஸம்யமதா-மஹம் ॥ 29 ॥
अनन्तश्च अस्मि नागानां नागविशेषाणां नागराजश्च अस्मि । वरुणो यादसाम् अहम् अब्देवतानां राजा अहम् । पितॄणाम् अर्यमा नाम पितृराजश्च अस्मि । यमः संयमतां संयमनं कुर्वताम् अहम् ॥ २९ ॥
அநேக வித நாகங்களுள் அனந்தன் என்றநாகராஜாவாக இருக்கிறேன். ஜலதேவதைகளுள் வருணனாக இருக்கிறேன். பித்ரு தேவதைகளுள் அர்யமா என்றபித்ருராஜாவாக இருக்கிறேன். தண்டனை கொடுப்பவர்களுள் (கட்டளை இடுபவர்களுள்) நான் யமனாக இருக்கிறேன்.
प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कलयतामहम् ।
मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम् ॥ ३० ॥
ப்ரஹ்லாதச்சாஸ்மி தைத்யானாம் கால: கலயதாமஹம் ।
ம்ருகாணாம் ச ம்ருகேந்த்ரோஅஹம் வைனதேயச்ச பக்ஷிணாம் ॥ 30 ॥
प्रह्लादो नाम च अस्मि दैत्यानां दितिवंश्यानाम् । कालः कलयतां कलनं गणनं कुर्वताम् अहम् । मृगाणां च मृगेन्द्रः सिंहो व्याघ्रो वा अहम् । वैनतेयश्च गरुत्मान् विनतासुतः पक्षिणां पतत्रिणाम् ॥ ३० ॥
திதி வம்சத்தில் பிறந்த அசுரர்களுள் பிரஹ்லாதனாக இருக்கி றேன். எண்ணுபவர்களுள் (கணக்கிடுபவர்களுள்) காலனாக இருக்கி றேன். மிருகங்களுள் மிருகங்களின் ராஜாவான சிம்மமாகவோ, புலியாகவோ இருக்கிறேன். பக்ஷி களுள் வினதாவினுடைய புத்திரன் கருடனாக இருக்கிறேன்.
पवनः पवतामस्मि रामः शस्त्रभृतामहम् ।
झषाणां मकरश्चास्मि स्रोतसामस्मि जाह्नवी ॥ ३१ ॥
பவன: பவதாமஸ்மி ராம: சஸ்த்ரப்ருதாமஹம் ।
ஜ ஷாணாம் மகரச்சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ ॥ 31 ॥
पवनः वायुः पवतां पावयितॄणाम् अस्मि । रामः शस्त्रभृताम् अहं शस्त्राणां धारयितॄणां दाशरथिः रामः अहम् । झषाणां मत्स्यादीनां मकरः नाम जातिविशेषः अहम् । स्रोतसां स्रवन्तीनाम् अस्मि जाह्नवी गङ्गा ॥ ३१ ॥
நான் சுத்தம் செய்பவைகளுள் காற்றாக இருக்கிறேன். ஆயுதங்கள் வைத்திருப்பவர்களில் ஸ்ரீராமனாக இருக்கிறேன். மீன் வகைக ளுள் நான் மகரம் என்றஜாதி விசேஷமாக இருக்கிறேன். நீரோட்டங்க ளுள் அதாவது நதிகளுள் கங்கையாக இருக்கின்றேன்.
सर्गाणामादिरन्तश्च मध्यं चैवाहमर्जुन ।
अध्यात्मविद्या विद्यानां वादः प्रवदतामहम् ॥ ३२ ॥
ஸர்காணா-மாதி-ரந்தச்ச மத்யம் சைவாஹு-மர்ஜுன ।
அத்யாத்மவித்யா வித்யானாம் வாத: ப்ரவததா-மஹம் ॥ 32 ॥
सर्गाणां सृष्टीनाम् आदिः अन्तश्च मध्यं चैव अहम् उत्पत्तिस्थितिलयाः अहम् अर्जुन । भूतानां जीवाधिष्ठितानामेव आदिः अन्तश्च इत्याद्युक्तम् उपक्रमे, इह तु सर्वस्यैव सर्गमात्रस्य इति विशेषः ।
ஹே அர்ஜுனா! சிருஷ்ட்டியின் ஆதியும், முடிவும், மத்தியில் இருப்பதும் நானே. உற்பத்தி, ஸ்திதி, லயம் ஆகியவை நானே. ஆரம்பத்தில் பகவான் தன்னை சேதனத்தை அதிஷ்ட்டானம் உடைய ஜீவர்களுக்குத்தான் ஆதி, அந்தம் முதலியவைகளை கூறி னார். ஆனால் இங்கு ஜகத் அதாவது சிருஷ்ட்டிக்கப்பட்ட எல்லாவற் றிற்கும் முழுவதற்கும் ஆதி, அந்தம்(முடிவு), மத்தியில் இருப்பது என்ப வைகளைக் கூறுகிறார் என்பது விசே ஷம்.
अध्यात्मविद्या विद्यानां मोक्षार्थत्वात् प्रधानमस्मि । वादः अर्थनिर्णयहेतुत्वात् प्रवदतां प्रधानम् , अतः सः अहम् अस्मि । प्रवत्त्कृद्वारेण वदनभेदानामेव वादजल्पवितण्डानाम् इह ग्रहणं प्रवदताम् इति ॥ ३२ ॥
வித்யைகளில் மோக்ஷத்தை கொடுப்பதால் ஆத்மவித்யை முக் யமானதாக இருக்கிறது. அந்த ஆத்மவித்யையாக இருக்கிறேன். தர்க்கம் செய்பவர்களில் அர்த்தம் செய்வதில் உபயோகமான வாதம் முக்கியமாக இருக்கிறது. அந்த வாதரூபமான வாக்காகவும் நான் இருக்கிறேன். இங்கு பிரவததாம் என்றபதத்திற்கு ஒரு வகைப் பேச்சுக் களாகிய வாதம், ஜல்பம், விதண்டாவாதம் இவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவைகளுள் உண்மையான பொருளை அறிந்து கொள்வதற்கு சாதகமாக இருப்பதால் வாதத்தை முக்கியமானதாக கருதவேண்டும்.
अक्षराणामकारोऽस्मि द्वन्द्वः सामासिकस्य च ।
अहमेवाक्षयः कालो धाताहं विश्वतोमुखः ॥ ३३ ॥
அக்ஷராணாமகாரோஅஸ்மி த்வந்த்வ: ஸாமாஸிகஸ்ய ச ।
அஹமேவாக்ஷய: காலோ தாதாஹம் விச்வதோமுக: ॥ 33 ॥
अक्षराणां वर्णानाम् अकारः वर्णः अस्मि । द्वन्द्वः समासः अस्मि सामासिकस्य च समाससमूहस्य । किञ्च अहमेव अक्षयः अक्षीणः कालः प्रसिद्धः क्षणाद्याख्यः, अथवा परमेश्वरः कालस्यापि कालः अस्मि । धाता अहं कर्मफलस्य विधाता सर्वजगतः विश्वतोमुखः सर्वतोमुखः ॥ ३३ ॥
எழுத்துக்களுள் அகார எழுத்தாக இருக்கிறேன். சமாசங்களுள் துவந்துவ சமாசமாக இருக்கிறேன். மேலும் நான் நாசமற்றகாலமாக இருக்கிறேன் என்றால் க்ஷணம், மணி என்பனவாக கூறப்படும் கால மாகும். அல்லது காலத்திற்கெல்லாம் காலமாகிய பரமேச்வரனாக இருக்கிறேன். எல்லா உலகத்தோருக்கும் அவர்களுடைய கர்மங்க ளுக்கு ஏற்றவாறு பலனை பிரித்து அளிப்பவன். எங்கும் முகம் உள்ள வனாக இருக்கிறேன்
मृत्युः सर्वहरश्चाहमुद्भवश्च भविष्यताम् ।
कीर्तिः श्रीर्वाक्च नारीणां स्मृतिर्मेधा धृतिः क्षमा ॥ ३४ ॥
ம்ருத்யு: ஸர்வஹரஸ்-சாஹமுத்பவச்ச பவிஷ்யதாம் ।
கீர்தி: ச்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்ம்ருதிர்மேதா த்ருதி: க்ஷமா ॥ 34 ॥
मृत्युः द्विविधः धनादिहरः प्राणहरश्च ; तत्र यः प्राणहरः, स सर्वहरः उच्यते ; सः अहम् इत्यर्थः । अथवा, परः ईश्वरः प्रलये सर्वहरणात् सर्वहरः, सः अहम् ।
ம்ருத்யு என்பது செல்வத்தின் நாசமாகவும், பிராண நாசமாகவும் இருவிதமாக இருக்கிறது. அதுவே சர்வநாசமாகும். அந்த சர்வநாசமே நான் என்பது பொருள். அல்லது பரமேச்வரன் பிரளய காலத்தில் எல் லாவற்றையும் நாசம் செய்வதால் சர்வஹரன் எனப்படுகிறான். அந்த சர்வஹரனே நான்.
उद्भवः उत्कर्षः अभ्युदयः तत्प्राप्तिहेतुश्च अहम् । केषाम् ? भविष्यतां भाविकल्याणानाम् , उत्कर्षप्राप्तियोग्यानाम् इत्यर्थः ।
இனிவரும் காலத்தில் பெரும் செல்வத்தை அடைபவர்களுக்கு அதாவது செல்வத்தை அடைய தகுதி உடையவர்களுக்கு அவர்க ளின் மிகுந்த செல்வமாகவும், அதை அடைவதற்கு காரணமாகவும் இருக்கிறேன்.
कीर्तिः श्रीः वाक् च नारीणां स्मृतिः मेधा धृतिः क्षमा इत्येताः उत्तमाः स्त्रीणाम् अहम् अस्मि, यासाम् आभासमात्रसम्बन्धेनापि लोकः कृतार्थमात्मानं मन्यते ॥ ३४ ॥
ஸ்த்ரீகளுள் எவருக்கு கீர்த்தி, செல்வம், கல்வி, ஸ்மிருதி, புத்தி, தைர்யம், பொறுமை இவைகள் எல்லாம் உள்ள உத்தம ஸ்த்ரீயை போலியாக சம்பந்தம் ஏற்பட்டாலும் தாங்கள் பேறு பெற்றதாக நினைக் கிறார்களோ அந்த உத்தமஸ்த்ரீயாகவும் நான் இருக்கிறேன்.
बृहत्साम तथा साम्नां गायत्री च्छन्दसामहम् ।
मासानां मार्गशीर्षोऽहमृतूनां कुसुमाकरः ॥ ३५ ॥
ப்ருஹத்ஸாம ததா ஸாம்னாம் காயத்ரீ சந்தஸாமஹம் ।
மாஸானாம் மார்கசீர்ஷோஅஹம்ருதூனாம் குஸுமாகர: ॥ 35 ॥
बृहत्साम तथा साम्नां प्रधानमस्मि । गायत्री च्छन्दसाम् अहं गायत्र्यादिच्छन्दोविशिष्टानामृचां गायत्री ऋक् अहम् अस्मि इत्यर्थः । मासानां मार्गशीर्षः अहम् , ऋतूनां कुसुमाकरः वसन्तः ॥ ३५ ॥
அவ்வாறேசாமவேதத்தில் முக்கியமான சாமமாக இருக்கிறேன். சந்தஸ்களுள் காயத்ரீ ரிக்காக இருக்கிறேன். மாதங்களுள் மார்கழி மாதமாக இருக்கிறேன். ருதுக்களுள் வசந்த ருதுவாக இருக்கிறேன்.
द्यूतं छलयतामस्मि तेजस्तेजस्विनामहम् ।
जयोऽस्मि व्यवसायोऽस्मि सत्त्वं सत्त्ववतामहम् ॥ ३६ ॥
த்யூதம் சலயதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்வினாமஹம் ।
ஜயோஅஸ்மி வ்யவஸாயோ அஸ்மி ஸத்வம் ஸத்த்வவதாமஹம் ॥ 36 ॥
द्यूतम् अक्षदेवनादिलक्षणं छलयतां छलस्य कर्तॄणाम् अस्मि । तेजस्विनां तेजः अहम् । जयः अस्मि जेतॄणाम् , व्यवसायः अस्मि व्यवसायिनाम् , सत्त्वं सत्त्ववतां सात्त्विकानाम् अहम् ॥ ३६ ॥
வஞ்சனை செய்பவர்களுள் சூதாகவும் இருக்கிறேன். தேஜஸ் உள்ளவர்களிடம் உள்ள தேஜஸாகவும் நான் இருக்கிறேன். வெற்றி அடைபவர்களுள் வெற்றியாக இருக்கிறேன். முயற்சி செய்பவர்களி டம் உள்ள முயற்சியாக இருக்கிறேன். சாத்வீக புருஷர்களிடம் உள்ள சத்வ குணமாக இருக்கிறேன்.
वृष्णीनां वासुदेवोऽस्मि पाण्डवानां धनञ्जयः ।
मुनीनामप्यहं व्यासः कवीनामुशना कविः ॥ ३७ ॥
வ்ருஷ்ணீனாம் வாஸுதேவோ அஸ்மி பாண்டவானாம் தனஞ்ஜய: ।
முனீனாமப்-யஹம் வ்யாஸ: கவீனா-முசனா கவி: ॥ 37 ॥
वृष्णीनां यादवानां वासुदेवः अस्मि अयमेव अहं त्वत्सखः । पाण्डवानां धनञ्जयः त्वमेव । मुनीनां मननशीलानां सर्वपदार्थज्ञानिनाम् अपि अहं व्यासः, कवीनां क्रान्तदर्शिनाम् उशना कविः अस्मि ॥ ३७ ॥
விருஷ்ணிகளுள் உன்னுடைய நண்பனாகிய வாசுதேவனாக நான் இருக்கிறேன். பாண்டவர்களுள் அர்ச்சுனனாகிய நீயும் நானா கவே இருக்கிறேன். மனனசீலர்களாகிய எல்லாப் பொருள்களையும் அறிந்த முனிவர்களுள் நான் வியாசமுனிவராக இருக்கிறேன். கவிகளுள் என்றால் முக்காலும் அறிந்தவர்களுள் சுக்ராச்சாரியாராக இருக்கிறேன்.
दण्डो दमयतामस्मि नीतिरस्मि जिगीषताम् ।
मौनं चैवास्मि गुह्यानां ज्ञानं ज्ञानवतामहम् ॥ ३८ ॥
தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம் ।
மௌனம் சைவாஸ்மி குஹ்யானாம் ஞானம் ஞானவதாமஹம் ॥ 38 ॥
दण्डः दमयतां दमयितॄणाम् अस्मि अदान्तानां दमनकारणम् । नीतिः अस्मि जिगीषतां जेतुमिच्छताम् । मौनं चैव अस्मि गुह्यानां गोप्यानाम् । ज्ञानं ज्ञानवताम् अहम् ॥ ३८ ॥
தண்டனை கொடுப்பவர்களுள் கீழான வழிகளில் செல்பவர் களை தண்டிக்கும் சக்தியாக (காரணமாக) இருக்கிறேன். வெற்றி அடைவதில் விருப்பம் உள்ளவர்களிடத்தில் நீதியாக இருக்கிறேன். ரஹஸ்யமாக இருக்கவேண்டியவற்றில் மௌனமாக இருக்கிறேன். ஞானம் உடையவர்களுள் ஞானமாக இருக்கிறேன்.
यच्चापि सर्वभूतानां बीजं तदहमर्जुन ।
न तदस्ति विना यत्स्यान्मया भूतं चराचरम् ॥ ३९ ॥
யச்சாபி ஸர்வபூதானாம் பீஜம் ததஹ-மர்ஜுன ।
ந ததஸ்தி வினா யத்ஸ்யான்-மயா பூதம் சராசரம் ॥ 39 ॥
यच्चापि सर्वभूतानां बीजं प्ररोहकारणम् , तत् अहम् अर्जुन ।
ஹே அர்ச்சுனா! எல்லா பூதங்களையும் முளைக்கச் செய்யும் காரணமும் நானே.
प्रकरणोपसंहारार्थं विभूतिसङ्क्षेपमाह —
இந்தப் பிரகரணத்தை முடிப்பதற்காக விபூதியை(மஹிமையை) சுருக்கமாகக் கூறுகிறார்.
न तत् अस्ति भूतं चराचरं चरम् अचरं वा, मया विना यत् स्यात् भवेत् । मया अपकृष्टं परित्यक्तं निरात्मकं शून्यं हि तत् स्यात् । अतः मदात्मकं सर्वमित्यर्थः ॥ ३९ ॥
இந்த சராசரமான ஸ்தாவர ஜங்கமங்கள் எல்லாம் என்னை அன்றி இல்லை. ஏனெனில் என்னால் நிரப்பப்படாவிடில் இருப்பு இல் லாமல் நிராத்மகமாக சூன்யமாகிவிடும். ஆகையால் எல்லாம் என் ஸ்வரூபமாகவே இருக்கிறது என்று பொருள்.
नान्तोऽस्ति मम दिव्यानां विभूतीनां परन्तप ।
एष तूद्देशतः प्रोक्तो विभूतेर्विस्तरो मया ॥ ४० ॥
நாந்தோஅஸ்தி மம திவ்யானாம் விபூதீனாம் பரந்தப ।
ஏ ஷதூத்தேசத: ப்ரோக்தோ விபூதேர்-விஸ்தரோ மயா ॥ 40 ॥
न अन्तः अस्ति मम दिव्यानां विभूतीनां विस्तराणां परन्तप । न हि ईश्वरस्य सर्वात्मनः दिव्यानां विभूतीनाम् इयत्ता शक्या वक्तुं ज्ञातुं वा केनचित् । एष तु उद्देशतः एकदेशेन प्रोक्तः विभूतेः विस्तरः मया ॥ ४० ॥
ஹே பரந்தப! என்னுடைய தெய்வீகமான, விஸ்தாரமான மஹிமை களுக்கு முடிவே கிடையாது. சர்வாத்மாவாக உள்ள ஈஸ்வரனுடைய தெய்வீகமான விபூதிகளை (மஹிமைகளை) இவ்வளவுதான் என்று ஒருவராலும் கூறவோ, அறியவோ முடியாது. என்னுடைய விஸ்தார மான விபூதிகளில் ஓர் அளவு என்னால் எடுத்துரைக்கப்பட்டது.
यद्यद्विभूतिमत्सत्त्वं श्रीमदूर्जितमेव वा ।
तत्तदेवावगच्छ त्वं मम तेजोंशसम्भवम् ॥ ४१ ॥
யத்யத் விபூதிமத் ஸத்வம் ஸ்ரீமதூர்ஜித-மேவ வா ।
தத்ததேவாவகச்ச த்வம் மம தேஜோம்ச-ஸம்பவம் ॥ 41 ॥
यद्यत् लोके विभूतिमत् विभूतियुक्तं सत्त्वं वस्तु श्रीमत् ऊर्जितमेव वा श्रीर्लक्ष्मीः तया सहितम् उत्साहोपेतं वा, तत्तदेव अवगच्छ त्वं जानीहि मम ईश्वरस्य तेजोंशसम्भवं तेजसः अंशः एकदेशः सम्भवः यस्य तत् तेजोंशसम्भवमिति अवगच्छ त्वम् ॥ ४१ ॥
உலகத்தில் எந்த எந்த வஸ்துக்கள் விபூதியுடன் கூடியுள்ள வையோ அவ்வாறேலஷ்மீயுடனும்(செல்வத்துடனும்) உத்ஸாஹத்து டனும் உள்ளதோ அந்த அந்த வஸ்துக்கள் ஈஸ்வரனாகிய என்னுடைய தேஜோமய அம்சத்திலிருந்து உண்டானவை என்று அறிந்து கொள்.
अथवा बहुनैतेन किं ज्ञातेन तवार्जुन
विष्टभ्याहमिदं कृत्स्नमेकांशेन स्थितो जगत् ॥ ४२ ॥
அதவா பஹுனைதேன கிம் ஜ்ஞாதேன தவார்ஜுன ।
விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்னமேகாம்சேன ஸ்திதோஜகத் ॥ 42 ॥
अथवा बहुना एतेन एवमादिना किं ज्ञातेन तव अर्जुन स्यात् सावशेषेण । अशेषतः त्वम् उच्यमानम् अर्थं शृणु ।
அல்லது ஹே அர்ச்சுனா! இவ்வாறு முன்பு கூறியபடி முழுமை யற்றவிபூதிகளை விஸ்தாரமாக அறிவதனால் என்ன பயன்? நீ இந்த முழுமையாக கூறப்போகும் அர்த்தத்தைக் கேள்.
विष्टभ्य विशेषतः स्तम्भनं दृढं कृत्वा इदं कृत्स्नं जगत् एकांशेन एकावयवेन एकपादेन, सर्वभूतस्वरूपेण इत्येतत् ; तथा च मन्त्रवर्णः — ‘पादोऽस्य विश्वा भूतानि’ (ऋ. १० । ८ । ९० । ३) इति ; स्थितः अहम् इति ॥ ४२ ॥
இந்த ஜகத் முழுவதையும் ஒரு அம்சத்தினால் என்றால் ஒரு அவயவத்தினால், அதாவது இந்த ஜகத் எல்லாவற்றையும் விசே ஷரூபமாக திடமாக தாங்கிக்கொண்டிருக்கிறேன். அவ்வாறே எல்லா பூதங்களும் இந்த பரமேச்வரனுடைய ஒரு பாதம், பாதோஸ்ய விச்வா பூதானி என்பது முதலியவைகளால் வேதமந்திரமும் கூறுகிறது.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये दशमोऽध्यायः ॥
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யா யாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே விபூதியோகோ நாம தசமோத்யாய:
भगवतो विभूतय उक्ताः । तत्र च ‘विष्टभ्याहमिदं कृत्स्नमेकांशेन स्थितो जगत्’ (भ. गी. १० । ४२) इति भगवता अभिहितं श्रुत्वा, यत् जगदात्मरूपम् आद्यमैश्वरं तत् साक्षात्कर्तुमिच्छन् ,
முன் அத்தியாயத்தில் பகவானுடைய விபூதிகள் கூறப்பட்டன. அப்பொழுது நான் இந்த ஜகத் முழுவதையும் என் ஒரு அம்சமாக வியாபித்து இருக்கிறேன் என்று பகவானால் கூறப்பட்ட வசனத்தைக் கேட்டு எந்த ஜகத் ஆத்மஸ்வரூபமாயும், ஆதியாயும், ஈஸ்வரத்தன் மையாயும் உள்ளதோ அதை சாக்ஷாத்காரம் செய்ய விரும்பிய அர்ஜுனன் கூறினார்.
अर्जुन उवाच —
அர்ஜுன உவாச —
मदनुग्रहाय परमं गुह्यमध्यात्मसंज्ञितम् ।
यत्त्वयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम ॥ १ ॥
மதனுக்ரஹாய பரமம் குஹ்யமத்யாத்மஸம்ஜ்ஞிதம் ।
யத் வயோக்தம் வசஸ்தேந மோஹோஅயம் விகதோ மம ॥ 1 ॥
मदनुग्रहाय ममानुग्रहार्थं परमं निरतिशयं गुह्यं गोप्यम् अध्यात्मसंज्ञितम् आत्मानात्मविवेकविषयं यत् त्वया उक्तं वचः वाक्यं तेन ते वचसा मोहः अयं विगतः मम, अविवेकबुद्धिः अपगता इत्यर्थः ॥ १ ॥
என்னை அனுக்கிரஹம் செய்வதற்காக எது மிகவும் சிரேஷ்ட்ட மானதும் (மேலானதும்), ரஹஸ்யமானதுமான ஆத்மாவை தெரிவிக் கின்ற எந்த ஆத்ம அநாத்ம விவேக ஞான விஷயமானது தங்களால் கூறப்பட்டதோ அந்த வார்த்தைகளால் என்னுடைய மோஹமானது அதாவது அவிவேக புத்தியானது நீங்கிவிட்டது என்பது பொருள்.
किञ्च —
மேலும்
भवाप्ययौ हि भूतानां श्रुतौ विस्तरशो मया ।
त्वत्तः कमलपत्राक्ष माहात्म्यमपि चाव्ययम् ॥ २ ॥
பவாப்யயௌ ஹி பூதானாம் ச்ருதெள விஸ்தரசோ மயா ।
த்வத்த: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம் ॥ 2 ॥
भवः उत्पत्तिः अप्ययः प्रलयः तौ भवाप्ययौ हि भूतानां श्रुतौ विस्तरशः मया, न सङ्क्षेपतः, त्वत्तः त्वत्सकाशात् , कमलपत्राक्ष कमलस्य पत्रं कमलपत्रं तद्वत् अक्षिणी यस्य तव स त्वं कमलपत्राक्षः हे कमलपत्राक्ष, महात्मनः भावः माहात्म्यमपि च अव्ययम् अक्षयम् ‘श्रुतम्’ इति अनुवर्तते ॥ २ ॥
நான் தங்களிடமிருந்து பிராணிகளின் (பூதங்களின்) உற்பத்தி, நாசம் என்றஇரண்டையும் சுருக்கமாக அல்ல விரிவாகக் கேட்கப் பட்டது. ஹே கமலபத்ராக்ஷ! என்றால் தாமரை இலை போன்ற கண்களை உடையவனே! மேலும் தங்களுடைய அழிவற்றமாஹத்மி யமும் என்னால் கேட்கப்பட்டது. கேட்கப்பட்டது என்ற வினைச்சொல் தொடர்கிறது.
एवमेतद्यथात्थ त्वमात्मानं परमेश्वर ।
द्रष्टुमिच्छामि ते रूपमैश्वरं पुरुषोत्तम ॥ ३ ॥
ஏவமேதத்யதாத்த த்வமாத்மானம் பரமேச்வர ।
த்ரஷ்டு-மிச்சாமி தே ரூப-மைச்வரம் புருஷோத்தம ॥ 3 ॥
एवमेतत् नान्यथा यथा येन प्रकारेण आत्थ कथयसि त्वम् आत्मानं परमेश्वर । तथापि द्रष्टुमिच्छामि ते तव ज्ञानैश्वर्यशक्तिबलवीर्यतेजोभिः सम्पन्नम् ऐश्वरं वैष्णवं रूपं पुरुषोत्तम ॥ ३ ॥
ஹே பரமேஸ்வர! தாங்கள் தங்களைக் குறித்து எவ்வாறு கூறினீரோ அதைத்தவிர வேறு இல்லை. இவ்வாறு இருந்தபோதிலும் ஹே புருஷோத்தம! தங்களுடைய ஞான ஐஸ்வர்ய, சக்தி, பலம், வீர் யம், தேஜஸ் இவைகளுடன் கூடிய தங்களுடைய ஈஸ்வரத்தன் மையை என்றால் வைஷ்ணவரூபத்தைப் பார்க்க விரும்புகிறேன்.
मन्यसे यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो ।
योगेश्वर ततो मे त्वं दर्शयात्मानमव्ययम् ॥ ४ ॥
மன்யஸே யதிதச்-சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ ।
யோகேச்வர ததோ மே த்வம் தர்சயாத்மான மவ்யயம் ॥ 4 ॥
मन्यसे चिन्तयसि यदि मया अर्जुनेन तत् शक्यं द्रष्टुम् इति प्रभो, स्वामिन् , योगेश्वर योगिनो योगाः, तेषां ईश्वरः योगेश्वरः, हे योगेश्वर । यस्मात् अहम् अतीव अर्थी द्रष्टुम् , ततः तस्मात् मे मदर्थं दर्शय त्वम् आत्मानम् अव्ययम् ॥ ४ ॥
ஹே பிரபோ! தாங்கள் தங்களுடைய அந்த ரூபத்தை அர்ஜுன னாகிய என்னால் பார்க்கமுடியும் என்று கருதினீர்களானால் ஹே யோகேஸ்வர! என்றால் யோகிகளுக்கெல்லாம் ஈஸ்வரரே! எதனால் நான் தங்களுடைய அந்த ரூபத்தைப் பார்ப்பதற்கு மிகுந்த விருப்ப முள்ளவனாக இருக்கிறேனோ அதனால் என் பொருட்டு தாங்கள் தங் களுடைய நாசமற்றரூபத்தைக் காட்டி அருள்வீராக.
एवं चोदितः अर्जुनेन भगवान् उवाच —
இவ்வாறு அர்ஜுனனால் தூண்டப்பட்டதினால் பகவான் கூறுகிறார்
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச
पश्य मे पार्थ रूपाणि शतशोऽथ सहस्रशः ।
नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च ॥ ५ ॥
பச்ய மே பார்த்த ரூபாணி சதசோஅத ஸஹஸ்ரச: ।
நானாவிதானி திவ்யானி நானாவர்ணாக்ருதீனி ச ॥ 5 ॥
पश्य मे पार्थ, रूपाणि शतशः अथ सहस्रशः, अनेकशः इत्यर्थः । तानि च नानाविधानि अनेकप्रकाराणि दिवि भवानि दिव्यानि अप्राकृतानि नानावर्णाकृतीनि च नाना विलक्षणाः नीलपीतादिप्रकाराः वर्णाः तथा आकृतयश्च अवयवसंस्थानविशेषाः येषां रूपाणां तानि नानावर्णाकृतीनि च ॥ ५ ॥
ஹே பார்த்த! என்னுடைய நூற்றுக்கணக்காக, ஆயிரக் கணக்காக என்றால் அநேகவித ரூபங்களைப் பார் என்பது பொருள். அநேகவிதமான அலௌகிகமான தெய்வீகமான கருப்பு, மஞ்சள் முதலிய அநேகவிதமான வர்ணங்களுடனும் அவ்வாறே அவயவ விசேஷணங்களுடன் கூடிய வடிவங்கள்(ரூபங்கள்) ஆகும்.
पश्यादित्यान्वसून्रुद्रानश्विनौ मरुतस्तथा ।
बहून्यदृष्टपूर्वाणि पश्याश्चर्याणि भारत ॥ ६ ॥
பச்யாதித்யான் வசூன் ருத்ரானச்வினெள மருதஸ்-ததா ।
பஹூன்-யத்ருஷ்ட-பூர்வாணி பச்யாச்சர்யாணி பாரத ॥ 6 ॥
पश्य आदित्यान् द्वादश, वसून् अष्टौ, रुद्रान् एकादश, अश्विनौ द्वौ, मरुतः सप्त सप्त गणाः ये तान् । तथा च बहूनि अन्यान्यपि अदृष्टपूर्वाणि मनुष्यलोके त्वया, त्वत्तः अन्येन वा केनचित् , पश्य आश्चर्याणि अद्भुतानि भारत ॥ ६ ॥
ஹே பாரத! பன்னிரெண்டு ஆதித்தியர்களையும், அஷ்ட்ட வசுக் களையும், பதினோரு ஆதித்யர்களையும், இரு அச்வினி குமாரர்க ளையும், ஏழு எண்ணிக்கை உள்ள ஏழு கூட்டங்களாகிய 49 மருத்துக் களையும் அவ்வாறே அநேகமற்ற மனித உலகத்தில் உன்னைத் தவிர யாராலும் பார்க்க முடியாத ஆச்சிரியமானவைகளைப் பார்.
न केवलम् एतावदेव —
இது மாத்திரமன்று —
इहैकस्थं जगत्कृत्स्नं पश्याद्य सचराचरम् ।
मम देहे गुडाकेश यच्चान्यद्द्रष्टुमिच्छसि ॥ ७ ॥
இஹைகஸ்தம் ஜகத் க்ருத்ஸ்னம் பச்யாத்ய ஸ-சராசரம் ।
மம தேஹே குடாகேச யச்சான்யத்த்ரடுமிச்சஸி ॥ 7 ॥
इह एकस्थम् एकस्मिन्नेव स्थितं जगत् कृत्स्नं समस्तं पश्य अद्य इदानीं सचराचरं सह चरेण अचरेण च वर्तते मम देहे गुडाकेश । यच्च अन्यत् जयपराजयादि, यत् शङ्कसे, ‘यद्वा जयेम यदि वा नो जयेयुः’ (भ. गी. २ । ६) इति यत् अवोचः, तदपि द्रष्टुं यदि इच्छसि ॥ ७ ॥
ஹே குடாகேச! இப்பொழுது இந்த என்னுடைய சரீரத்தில், ஒரு டத்தில் இருக்கும் இந்த அசையும் பொருள், அசையா பொருள்க ளுடன் கூடிய இந்த ஜகத்தைப் பார். மேலும் வெற்றி, தோல்வி முதலிய வைகளில் உனக்கு ஏற்பட்ட சந்தேஹத்தை "நாம் ஜெயிப்போமோ அல்லது ஜயிக்கப்படுவோமோ? என்று கூறினாயோ அதையும் பார்க்க விரும்புகிறாய்.
किं तु —
ஆனால்
न तु मां शक्यसे द्रष्टुमनेनैव स्वचक्षुषा ।
दिव्यं ददामि ते चक्षुः पश्य मे योगमैश्वरम् ॥ ८ ॥
ந து மாம் சக்யஸே த்ரஷ்டு-மனேனைவ ஸ்வசக்ஷஷா ।
திவ்யம் ததாமி தே சக்ஷ: பச்ய மே யோகமைச்வரம் ॥ 8 ॥
न तु मां विश्वरूपधरं शक्यसे द्रष्टुम् अनेनैव प्राकृतेन स्वचक्षुषा स्वकीयेन चक्षुषा । येन तु शक्यसे द्रष्टुं दिव्येन, तत् दिव्यं ददामि ते तुभ्यं चक्षुः । तेन पश्य मे योगम् ऐश्वरम् ईश्वरस्य मम ऐश्वरं योगं योगशक्त्यतिशयम् इत्यर्थः ॥ ८ ॥
உன்னுடைய இந்த இயற்கையான கண்களால் என்னுடைய விச்வரூபத்தை உன்னால் பார்க்க முடியாது. எதனால் உன்னால் பார்க்க முடியுமோ அந்த திவ்யமான கண்களை உனக்குத் தருகிறேன். அதனால் ஈச்வரனாகிய என்னுடைய ஐஸ்வர்யத்தையும், யோகத்தையும் பார் என்றால் அதிசயமான யோக சாமர்த்தியத்தைப் பார் என்று பொருள்.
सञ्जय उवाच —
ஸஞ்ஜய உவாச
एवमुक्त्वा ततो राजन्महायोगेश्वरो हरिः ।
दर्शयामास पार्थाय परमं रूपमैश्वरम् ॥ ९ ॥
ஏவமுக்த்வா ததோ ராஜன் மஹாயோகேச்வரோ ஹரி: ।
தர்சயாமாஸ பார்த்தாய பரமம் ரூபமைச்வரம் ॥ 9 ॥
एवं यथोक्तप्रकारेण उक्त्वा ततः अनन्तरं राजन् धृतराष्ट्र, महायोगेश्वरः महांश्च असौ योगेश्वरश्च हरिः नारायणः दर्शयामास दर्शितवान् पार्थाय पृथासुताय परमं रूपं विश्वरूपम् ऐश्वरम् ॥ ९ ॥
ஹே ராஜன்! திருதராஷ்டரே! இவ்வாறு உரைத்தபின் மஹாயோ கேஷ்வரராகிய ஹரியானவர் (நாராயணன்) ப்ருதா புத்திரனுக்கு மேலான ரூபமாகிய விஷ்வரூபம் என்றஐஸ்வர்யத்தைக் காட்டினார்.
अनेकवक्त्रनयनमनेकाद्भुतदर्शनम् ।
अनेकदिव्याभरणं दिव्यानेकोद्यतायुधम् ॥ १० ॥
அநேகவக்த்ரநயனமநேகாத்புததர்சனம் ।
அநேக திவ் யாபரணம் திவ்யாநேகோத்யதாயுதம் ॥ 10 ॥
अनेकवक्त्रनयनम् अनेकानि वक्त्राणि नयनानि च यस्मिन् रूपे तत् अनेकवक्त्रनयनम् , अनेकाद्भुतदर्शनम् अनेकानि अद्भुतानि विस्मापकानि दर्शनानि यस्मिन् रूपे तत् अनेकाद्भुतदर्शनं रूपम् , तथा अनेकदिव्याभरणम् अनेकानि दिव्यानि आभरणानि यस्मिन् तत् अनेकदिव्याभरणम् , तथा दिव्यानेकोद्यतायुधं दिव्यानि अनेकानि अस्यादीनि उद्यतानि आयुधानि यस्मिन् तत् दिव्यानेकोद्यतायुधम् , ‘दर्शयामास’ इति पूर्वेण सम्बन्धः ॥ १० ॥
அநேக முகங்களும், கண்களும் எவரிடத்திலிருக்கிறதோ அவர் அநேக முக கண்களுடையவராயும், அநேக அற்புத தர்சனங்களும், ஆச்சரியப்படக்கூடிய தர்சனம் எவருக்கோ அவர் அநேக அத்புதமு டையவராயும், அநேக திவ்ய ஆபரணங்கள் எவரிடமுள்ளதோ அவர் அநேக திவ்ய ஆபரணமுள்ளவராயும், அவ்வாறேதிவ்யமான ஆயுதம் எவருக்குள்ளதோ அவர் திவ்ய ஆயுதம் உடையவராயும் உள்ளதைக் காட்டினார் என்று முன் சுலோகத்துடன் சம்பந்தம்.
किञ्च —
மேலும்
दिव्यमाल्याम्बरधरं दिव्यगन्धानुलेपनम् ।
सर्वाश्चर्यमयं देवमनन्तं विश्वतोमुखम् ॥ ११ ॥
திவ்யமால்யாம்பரதரம் திவ்யகந்தானுலேபனம் ।
ஸர்வாச்சர்யமயம் தேவம் அனந்தம் விச்வதோ முகம் ॥ 11 ॥
दिव्यमाल्याम्बरधरं दिव्यानि माल्यानि पुष्पाणि अम्बराणि वस्त्राणि च ध्रियन्ते येन ईश्वरेण तं दिव्यमाल्याम्बरधरम् , दिव्यगन्धानुलेपनं दिव्यं गन्धानुलेपनं यस्य तं दिव्यगन्धानुलेपनम् , सर्वाश्चर्यमयं सर्वाश्चर्यप्रायं देवम् अनन्तं न अस्य अन्तः अस्ति इति अनन्तः तम् , विश्वतोमुखं सर्वतोमुखं सर्वभूतात्मभूतत्वात् , तं दर्शयामास । ‘अर्जुनः ददर्श’ इति वा अध्याह्रियते ॥ ११ ॥
பரமேச்வரனால் திவ்யமான புஷ்பமாலைகளும், திவ்யமான வஸ்த்ரங்களும் அணியப்பட்டதால் திவ்யாம்பரதரணாயும் திவ்யமான சந்தனத்தை பூசி உள்ளதால் திவ்ய கந்தானுலேபனனாயும், எவருக்கு முடிவு என்பது இல்லையோ அவர் அனந்தன் எனப்படுகிறார். அந்த அனந்தமாகியவனாயும், எல்லா பிராணிகளுக்கும் அந்தராத்மாவாய் இருப்பதால் எங்கும் முகம் உள்ள அந்த விராட் ஸ்வரூபத்தை அர்ஜுனனுக்குக் காண்பித்தார் என்று அத்யாஹாரம் செய்து (வருவித்துக்) கொள்ளவேண்டும்.
या पुनर्भगवतः विश्वरूपस्य भाः, तस्या उपमा उच्यते —
பகவானுடைய விராட் ரூபத்தின் எந்த பிரகாசம் உள்ளதோ அதற்கு உபமானம் கூறுகிறார்
दिवि सूर्यसहस्रस्य भवेद्युगपदुत्थिता ।
यदि भाः सदृशी सा स्याद्भासस्तस्य महात्मनः ॥ १२ ॥
திவி ஸூர்யஸஹஸ்ரஸ்ய பவேத்யுகபதுத்திதா ।
யதி பா: ஸத்ருசீ ஸா ஸ்யாத் பாஸஸ்தஸ்ய மஹாத்மன: ॥ 12 ॥
दिवि अन्तरिक्षे तृतीयस्यां वा दिवि सूर्याणां सहस्रं सूर्यसहस्रं तस्य युगपदुत्थितस्य सूर्यसहस्रस्य या युगपदुत्थिता भाः, सा यदि, सदृशी स्यात् तस्य महात्मनः विश्वरूपस्यैव भासः । यदि वा न स्यात् , ततः विश्वरूपस्यैव भाः अतिरिच्यते इत्यभिप्रायः ॥ १२ ॥
நடுவானிலாவது, மூன்றாவது உலகமாகிய ஸ்வர்க்கத்திலாவது ஆயிரம் சூரியன்கள் ஒரே சமயத்தில் உதித்தால் எவ்வளவு பிரகாச முள்ளதோ அதற்கு, விஷ்வரூபத்தினுடைய பிரகாசம் ஒப்பாகாது என்றால் அந்த சூரியன்களுடைய பிரகாசத்தைக் காட்டிலும் மிக அதிகமானது என்பது அபிப்பிராயம்.
किञ्च —
மேலும்
तत्रैकस्थं जगत्कृत्स्नं प्रविभक्तमनेकधा ।
अपश्यद्देवदेवस्य शरीरे पाण्डवस्तदा ॥ १३ ॥
தத்ரைகஸ்தம் ஜகத் க்ருத்ஸ்னம் ப்ரவிபக்தமனேகதா ।
அபச்யத்தேவதேவஸ்ய சரீரே பாண்டவஸ்ததா ॥ 13 ॥
तत्र तस्मिन् विश्वरूपे एकस्मिन् स्थितम् एकस्थं जगत् कृत्स्नं प्रविभक्तम् अनेकधा देवपितृमनुष्यादिभेदैः अपश्यत् दृष्टवान् देवदेवस्य हरेः शरीरे पाण्डवः अर्जुनः तदा ॥ १३ ॥
அந்த சமயத்தில் அர்ஜுனன் தேவ, பித்ரு, மனிதர்கள் முதலிய அநேக பேதங்களுடன் கூடிய இந்த ஜகத் முழுவதும் இந்த தேவர்க ளுக்கெல்லாம் தேவனாகிய ஹரியினுடைய விஷ்வரூப சரீரத்தில் ஒர் இடத்தில் இருப்பதை அர்ஜுனன் பார்த்தான்.
ततः स विस्मयाविष्टो हृष्टरोमा धनञ्जयः ।
प्रणम्य शिरसा देवं कृताञ्जलिरभाषत ॥ १४ ॥
தத: ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்ருஷ்டரோமா தனஞ்ஜய: ।
ப்ரணம்ய சிரஸா தேவம் க்ருதாஞ்ஜலி ரபாஷத ॥ 14 ॥
ततः तं दृष्ट्वा सः विस्मयेन आविष्टः विस्मयाविष्टः हृष्टानि रोमाणि यस्य सः अयं हृष्टरोमा च अभवत् धनञ्जयः । प्रणम्य प्रकर्षेण नमनं कृत्वा प्रह्वीभूतः सन् शिरसा देवं विश्वरूपधरं कृताञ्जलिः नमस्कारार्थं सम्पुटीकृतहस्तः सन् अभाषत उक्तवान् ॥ १४ ॥
தனஞ்ஜயன் அந்த விச்வரூபத்தைப் பார்த்து ஆச்சரியத்தையும், மயிர்சிலிர்த்தலையும் அடைந்தான். விச்வரூபத்துடன் இருப்பவரை தாழ்மையுடன் நன்றாக தலைவணங்கி பின் வணங்குவதற்காக இரு கைகளையும் கூப்பிக்கொண்டு இவ்வாறு கூறினான்.
कथम् ? यत् त्वया दर्शितं विश्वरूपम् , तत् अहं पश्यामीति स्वानुभवमाविष्कुर्वन् —
உங்களால் காண்பிக்கப்பட்ட எந்த விச்வரூபமுள்ளதோ அதை நான் எவ்வாறு காண்கிறேன் என்று தன்னுடைய அனுபவத்தை வெளிப்படுத்தி-
अर्जुन उवाच —
அர்ஜுன உவாச —
पश्यामि देवांस्तव देव देहे सर्वांस्तथा भूतविशेषसङ्घान् ।
ब्रह्माणमीशं कमलासनस्थमृषींश्च सर्वानुरगांश्च दिव्यान् ॥ १५ ॥
பச்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவி சே ஷஸங்கான் ।
ப்ரஹ்மாணமீசம் கமலாஸநஸ்தம் ருஷீம்ச்ச ஸர்வானுர காம்ச்ச திவ்யான்‌ ॥ 15 ॥
पश्यामि उपलभे हे देव, तव देहे देवान् सर्वान् , तथा भूतविशेषसङ्घान् भूतविशेषाणां स्थावरजङ्गमानां नानासंस्थानविशेषाणां सङ्घाः भूतविशेषसङ्घाः तान् , किञ्च — ब्रह्माणं चतुर्मुखम् ईशम् ईशितारं प्रजानां कमलासनस्थं पृथिवीपद्ममध्ये मेरुकर्णिकासनस्थमित्यर्थः, ऋषींश्च वसिष्ठादीन् सर्वान् , उरगांश्च वासुकिप्रभृतीन् दिव्यान् दिवि भवान् ॥ १५ ॥
ஹே தேவனே! நான் தங்களுடைய சரீரத்தில் எல்லா தேவர்க ளையும், அவ்வாறேஸ்தாவர ஜங்கமரூபமான அநேகவித வடிவங் களை உடைய எல்லா பூத விசேஷங்களில் சமூஹத்தையும், மேலும் பிருதிவி ரூபமான தாமரையில், தாமரைக்கனியாகிய சுமேருவில் வீற்றிருப்பவரும், பிரஜைகளை ஆளுபவருமாகிய நான்முகப் பிரஹ்ம் மாவையும், வஸிஷ்டர் முதலிய ரிஷிகளையும் தேவலோகத்தில் இருக்கும் வாசுகி முதல் எல்லா சர்ப்பங்களையும் பார்க்கிறேன்.
अनेकबाहूदरवक्त्रनेत्रं पश्यामि त्वा सर्वतोऽनन्तरूपम् ।
नान्तं न मध्यं न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वर विश्वरूप ॥ १६ ॥
அனேகபாஹூதரவக்த்ரநேத்ரம் பச்யாமி த்வா ஸர்வதோ அநந்தரூபம் ।
நாந்தம் ந மத்யம் ந புனஸ்தவாதிம் பச்யாமி விச்வேச்வர விச்வரூப ॥ 16 ॥
अनेकबाहूदरवक्त्रनेत्रम् अनेके बाहवः उदराणि वक्त्राणि नेत्राणि च यस्य तव सः त्वम् अनेकबाहूदरवक्त्रनेत्रः तम् अनेकबाहूदरवक्त्रनेत्रम् । पश्यामि त्वा त्वां सर्वतः सर्वत्र अनन्तरूपम् अनन्तानि रूपाणि अस्य इति अनन्तरूपः तम् अनन्तरूपम् । न अन्तम् , अन्तः अवसानम् , न मध्यम् , मध्यं नाम द्वयोः कोट्योः अन्तरम् , न पुनः तव आदिम् — न देवस्य अन्तं पश्यामि, न मध्यं पश्यामि, न पुनः आदिं पश्यामि, हे विश्वेश्वर विश्वरूप ॥ १६ ॥
அநேக கைகள், வயிறு, முகம் மற்றும் கண்கள் இவைகளை உடையவராக பார்க்கிறேன். முடிவற்றரூபங்களை உடைய தங்களை அநந்த ரூபமாகவும், பார்க்கிறேன். ஹே விச்வேச்வரனே! ஹே விச்வ ரூபனே! தங்களுக்கு முடிவு என்பதையும் அவ்வாறே மத்தியம் என்ப தையும் என்றால் இரு பக்கங்களின் மத்தியத்தையும், ஆதியையும் தேவராகிய தங்களிடத்தில் நான் காணவில்லை.
किञ्च —
மேலும்
किरीटिनं गदिनं चक्रिणं च तेजोराशिं सर्वतोदीप्तिमन्तम् ।
पश्यामि त्वां दुर्निरीक्ष्यं समन्ताद्दीप्तानलार्कद्युतिमप्रमेयम् ॥ १७ ॥
கிரீடினம் கதினம் சக்ரிணம் ச தேஜோ ராசிம் ஸர்வதோ தீப்தி மந்தம் ।
பச்யாமி த்வாம் துர்நிரீக்ஷ்யம் ஸமந்தாத் தீப்தாநலார்கத்யுதி மப்ரமேயம் ॥ 17 ॥
किरीटिनं किरीटं नाम शिरोभूषणविशेषः तत् यस्य अस्ति सः किरीटी तं किरीटिनम् , तथा गदिनं गदा अस्य विद्यते इति गदी तं गदिनम् , तथा चक्रिणं चक्रम् अस्य अस्तीति चक्री तं चक्रिणं च, तेजोराशिं तेजःपुञ्जं सर्वतोदीप्तिमन्तं सर्वतोदीप्तिः अस्य अस्तीति सर्वतोदीप्तिमान् , तं सर्वतोदीप्तिमन्तं पश्यामि त्वां दुर्निरीक्ष्यं दुःखेन निरीक्ष्यः दुर्निरीक्ष्यः तं दुर्निरीक्ष्यं समन्तात् समन्ततः सर्वत्र दीप्तानलार्कद्युतिम् अनलश्च अर्कश्च अनलार्कौ दीप्तौ अनलार्कौ दीप्तानलार्कौ तयोः दीप्तानलार्कयोः द्युतिरिव द्युतिः तेजः यस्य तव स त्वं दीप्तानलार्कद्युतिः तं त्वां दीप्तानलार्कद्युतिम् , अप्रमेयं न प्रमेयम् अशक्यपरिच्छेदम् इत्येतत् ॥ १७ ॥
தலையில் அணியும் ஆபரணத்தின் பெயர் கிரீடம், அதை தலை யில் அணிந்திருப்பவர் கிரீடீ. அவரையும் எவரிடத்தில் கதை இருக் கிறதோ அவர் கதி. அவரையும், சக்கிரத்தை உடையவராகவும், ஒளிக் கூட்டமாய் உள்ளவராயும், அவ்வாறே எங்கும் எப்பொழுதும் ஜொலிக்கின்றஅக்னி சூரியனுக்கு சமானமான பிரகாசமுடையவரையும் அறிவதற்கு மிகக் கடினமானவனாயும் புத்தி முதலிய பிரமாணங் களுக்கு எட்டாததினால் அப்ரமேயமாயும், பரிச்சேதம் அற்றவராயும் உள்ளவரை எவ்விடத்திலும் நான் பார்க்கிறேன்.
इत एव ते योगशक्तिदर्शनात् अनुमिनोमि —
இதனால் தங்களுடைய யோக சக்தியைப் பார்த்து நான் இவ்வாறு அனுமானம் செய்கிறேன்-
त्वमक्षरं परमं वेदितव्यं त्वमस्य विश्वस्य परं निधानम् ।
त्वमव्ययः शाश्वतधर्मगोप्ता सनातनस्त्वं पुरुषो मतो मे ॥ १८ ॥
த்வமக்ஷரம் பரம் வேதிதவ்யம் த்வமஸ்ய விச்வஸ்ய பரம் நிதானம் ।
த்வமவ்யய: சாச்வததர்மகோப்தா ஸனாதனஸ்த்வம் புருஷோ மதோ மே ॥ 18 ॥
त्वम् अक्षरं न क्षरतीति, परमं ब्रह्म वेदितव्यं ज्ञातव्यं मुमुक्षुभिः । त्वम् अस्य विश्वस्य समस्तस्य जगतः परं प्रकृष्टं निधानं निधीयते अस्मिन्निति निधानं परः आश्रयः इत्यर्थः ।
நீங்கள் முமூக்ஷக்களால் அறியப்படவேண்டிய அழிவற்றபரம் பொருள். இந்த எல்லா ஜகத்தும் எதில் நிலைபெற்றுள்ளதோ அது நிதானம். நிதானம் என்றால் மேலான ஆச்ரயம் என்பது பொருள் நீங்கள் அந்த நிதானம்.
किञ्च, त्वम् अव्ययः न तव व्ययो विद्यते इति अव्ययः, शाश्वतधर्मगोप्ता शश्वद्भवः शाश्वतः नित्यः धर्मः तस्य गोप्ता शाश्वतधर्मगोप्ता । सनातनः चिरन्तनः त्वं पुरुषः परमः मतः अभिप्रेतः मे मम ॥ १८ ॥
மேலும் தாங்கள் அழிவற்றவர், சாஸ்வதமான அதாவது நித்திய மான தர்மத்தை ரக்ஷிப்பவர். நீங்கள் என்றும் உள்ள பரமபுருஷர் என் பது என் அபிப்பிராயம்.
किञ्च —
மேலும்
अनादिमध्यान्तमनन्तवीर्यमनन्तबाहुं शशिसूर्यनेत्रम् ।
पश्यामि त्वां दीप्तहुताशवक्त्रं स्वतेजसा विश्वमिदं तपन्तम् ॥ १९ ॥
அனாதிமத்யாந்தமனந்தவீர்ய மநந்தபாஹும் சசிஸூர்ய நேத்ரம் ।
பச்யாமி த்வாம் தீப்தஹுதாச வக்த்ரம் ஸ்வதேஜஸா விச்வமி தம் தபந்தம் ॥ 19 ॥
अनादिमध्यान्तम् आदिश्च मध्यं च अन्तश्च न विद्यते यस्य सः अयम् अनादिमध्यान्तः तं त्वां अनादिमध्यान्तम् , अनन्तवीर्यं न तव वीर्यस्य अन्तः अस्ति इति अनन्तवीर्यः तं त्वाम् अनन्तवीर्यम् , तथा अनन्तबाहुम् अनन्ताः बाहवः यस्य तव सः त्वम् , अनन्तबाहुः तं त्वाम् अनन्तबाहुम् , शशिसूर्यनेत्रं शशिशूर्यौ नेत्रे यस्य तव सः त्वं शशिसूर्यनेत्रः तं त्वां शशिसूर्यनेत्रं चन्द्रादित्यनयनम् , पश्यामि त्वां दीप्तहुताशवक्त्रं दीप्तश्च असौ हुताशश्च वक्त्रं यस्य तव सः त्वं दीप्तहुताशवक्त्रः तं त्वां दीप्तहुताशवक्त्रम् , स्वतेजसा विश्वम् इदं समस्तं तपन्तम् ॥ १९ ॥
எவருக்கு ஆதியும், மத்தியில் இருப்பதும், முடிவும் கிடையாதோ அவர் அநாதிமத்யாந்தர். அந்த அநாதி மத்யாந்தராகவும், தங்களுக்கு வீரத்தினுடைய முடிவு கிடையாது. ஆகையால் அநந்த வீர்யம். நீங்கள் அந்த அநந்தவீர்யராகவும், எவருக்கு முடிவில்லாத கைகள் இருக்கிறதோ அவர் அநந்த பாஹு, அந்த அநந்த பாஹுவா கவும் எவருக்கு சூரியனும் சந்திரனும் கண்களோ அவர் சசிசூர்ய நேத்ரன். அந்த சசிசூர்ய நேத்திரராகவும், ஜ்வலிக்கின்றஅக்னியை முகமாக உடையவராய் இந்த பிரபஞ்சத்தைத் தபிக்கச் செய்கிறவராய் தங்களைப் பார்க்கிறேன்.
द्यावापृथिव्योरिदमन्तरं हि व्याप्तं त्वयैकेन दिशश्च सर्वाः ।
दृष्ट्वाद्भुतं रूपमिदं तवोग्रं लोकत्रयं प्रव्यथितं महात्मन् ॥ २० ॥
த்யாவா-ப்ருதிவ்யோரிதமந்தரம் ஹி வ்யாப்தம் த்வயைகேன திசச்ச ஸர்வா: ।
த்ருஷ்ட்வாத்புதம் ரூபமுக்ரம் தவேதம் லோகத்ரயம் ப்ரவ்யதிதம் மஹாத்மன் ॥ 20 ॥
द्यावापृथिव्योः इदम् अन्तरं हि अन्तरिक्षं व्याप्तं त्वया एकेन विश्वरूपधरेण दिशश्च सर्वाः व्याप्ताः ।
விண் உலகிற்கும், இந்த பிருதிவி உலகத்திற்கும் இடையில் உள்ள இடமும் எல்லா திக்குகளும் ஆகிய எல்லாம் விச்வரூபராகிய தங்கள் ஒருவராலேயே வியாபிக்கப்பட்டுள்ளது.
दृष्ट्वा उपलभ्य अद्भुतं विस्मापकं रूपम् इदं तव उग्रं क्रूरं लोकानां त्रयं लोकत्रयं प्रव्यथितं भीतं प्रचलितं वा हे महात्मन् अक्षुद्रस्वभाव ॥ २० ॥
ஹே மஹாத்மன்! என்றால் ஈனத்தன்மை அற்றவனே! தங்களு டைய ஆச்சரியத்தை உண்டாக்கக்கூடிய தங்களது கோரரூபமானது இந்த மூவுலகத்தையும் பயமுறச் செய்கிறது.
अथ अधुना पुरा ‘यद्वा जयेम यदि वा नो जयेयुः’ (भ. गी. २ । ६) इति अर्जुनस्य यः संशयः आसीत् , तन्निर्णयाय पाण्डवजयम् ऐकान्तिकं दर्शयामि इति प्रवृत्तो भगवान् । तं पश्यन् आह —
இனி இப்பொழுது நாங்கள் அவர்களை வெற்றி கொள்வோமோ? அல்லது அவர்கள் எங்களை வெற்றி கொள்வார்களோ? என்றசந்தே ஹம் முன்பு அர்ஜுனனுக்கு இருந்தது. அதை தீர்த்து வைப்பதற்காக பாண்டவர்களுடைய வெற்றி நிச்சயம் என்பதை காட்டுகிறேன் என்று முற்பட்ட பொழுது அந்த பகவானைப் பார்த்து கூறினார்.
किञ्च —
மேலும்
अमी हि त्वा सुरसङ्घा विशन्ति केचिद्भीताः प्राञ्जलयो गृणन्ति ।
स्वस्तीत्युक्त्वा महर्षिसिद्धसङ्घाः स्तुवन्ति त्वां स्तुतिभिः पुष्कलाभिः ॥ २१ ॥
அமீஹித்வா ஸுரஸுங்கா விசந்தி கேசித்பீதா: ப்ராஞ்ஜலயோ க்ருணந்தி ।
ஸ்வஸ்தீத்-யுக்த்வா மஹர்ஷி ஸித்த ஸங்கா: ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி: புஷ்கலாபி: ॥ 21 ॥
अमी हि युध्यमाना योद्धारः त्वा त्वां सुरसङ्घाः ये अत्र भूभारावताराय अवतीर्णाः वस्वादिदेवसङ्घाः मनुष्यसंस्थानाः त्वां विशन्ति प्रविशन्तः दृश्यन्ते । तत्र केचित् भीताः प्राञ्जलयः सन्तो गृणन्ति स्तुवन्ति त्वाम् अन्ये पलायनेऽपि अशक्ताः सन्तः ।
போர் செய்வோர் வீரர்களாய் பூமியின் பாரத்தை இறக்குவதற் காக வசுக்கள் முதலிய தேவர்கூட்டங்கள் மனிதர்களாய் அவதாரம் செய்தவர்கள் உன்னிடம் நுழைவதாய் காணப்படுகிறார்கள். அவர்க ளுள் மற்றசிலர் ஓட முடியாதவர்களாய் பயத்துடன் கை கூப்பியவர்க ளாய் தங்களை துதிசெய்கிறார்கள்.
युद्धे प्रत्युपस्थिते उत्पातादिनिमित्तानि उपलक्ष्य स्वस्ति अस्तु जगतः इति उक्त्वा महर्षिसिद्धसङ्घाः महर्षीणां सिद्धानां च सङ्घाः स्तुवन्ति त्वां स्तुतिभिः पुष्कलाभिः सम्पूर्णाभिः ॥ २१ ॥
யுத்தத்தில் தோன்றின உத்பாதம் முதலிய கெட்ட சகுணங்களை பார்த்து பிரபஞ்சத்திற்கு மங்களம் உண்டாகட்டும் என்று மஹரிஷி கூட்டங்களும் சித்தர் கூட்டங்களும் ஸ்தோத்ரங்களினால் சம்பூர்ண மாக துதிசெய்கிறார்கள்.
किञ्चान्यत् —
மேலும் மற்றவை-
रुद्रादित्या वसवो ये च साध्या विश्वेऽश्विनौ मरुतश्चोष्मपाश्च ।
गन्धर्वयक्षासुरसिद्धसङ्घा वीक्षन्ते त्वां विस्मिताश्चैव सर्वे ॥ २२ ॥
ருத்ராதித்யா வஸவோ யே ச ஸாத்யா விச்வே அச்வினௌ மருதச்சோஷ்மபாச்ச ।
கந்தர்வயக்ஷாஸுரஸித்தஸங்கா வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாச்சைவ ஸர்வே ॥ 22 ॥
रुद्रादित्याः वसवो ये च साध्याः रुद्रादयः गणाः विश्वेदेवाः अश्विनौ च देवौ मरुतश्च ऊष्मपाश्च पितरः, गन्धर्वयक्षासुरसिद्धसङ्घाः गन्धर्वाः हाहाहूहूप्रभृतयः यक्षाः कुबेरप्रभृतयः असुराः विरोचनप्रभृतयः सिद्धाः कपिलादयः तेषां सङ्घाः गन्धर्वयक्षासुरसिद्धसङ्घाः, ते वीक्षन्ते पश्यन्ति त्वां विस्मिताः विस्मयमापन्नाः सन्तः ते एव सर्वे ॥ २२ ॥
ருத்ர, ஆதித்ய, வசு, சாத்தியர் முதலிய தேவகணங்களும் அவ்வாறேவிச்வதேவர், இரு அச்வினிகுமாரர்கள், வாயுதேவன், ஊஷ்மா என்றபித்ருகணங்கள் அவ்வாறேகந்தர்வ யக்ஷ, அசுர, சித்தர் கூட்டங்கள் ஹா ஹா, ஹு, ஹூ முதலிய கந்தர்வர்கள், குபேர முதலிய யக்ஷர்கள், விரோச்சனன் முதலிய அசுரர்கள், கபிலர் முதலிய சித்தர்கள் இவர்கள் எல்லோரும் ஆச்சரியத்துடன் உங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
यस्मात् —
௪ஞ்சயன் கூறுனார்
रूपं महत्ते बहुवक्त्रनेत्रं महाबाहो बहुबाहूरुपादम् ।
बहूदरं बहुदंष्ट्राकरालं दृष्ट्वा लोकाः प्रव्यथितास्तथाहम् ॥ २३ ॥
ரூபம் மஹத்தே பஹுவக்த்ர-நேத்ரம் மஹாபாஹோ பஹு பாஹூருபாதம் ।
பஹூதரம் பஹு-தம்ஷ்ட்ராகராலம் த்ருஷ்ட்வா லோகா:ப்ரவ்யதிதாஸ்‌-ததாஹம்‌ ॥ 23 ॥
रूपं महत् अतिप्रमाणं ते तव बहुवक्त्रनेत्रं बहूनि वक्त्राणि मुखानि नेत्राणि चक्षूंषि च यस्मिन् तत् रूपं बहुवक्त्रनेत्रम् , हे महाबाहो, बहुबाहूरुपादं बहवो बाहवः ऊरवः पादाश्च यस्मिन् रूपे तत् बहुबाहूरुपादम् , किञ्च, बहूदरं बहूनि उदराणि यस्मिन्निति बहूदरम् , बहुदंष्ट्राकरालं बह्वीभिः दंष्ट्राभिः करालं विकृतं तत् बहुदंष्ट्राकरालम् , दृष्ट्वा रूपम् ईदृशं लोकाः लौकिकाः प्राणिनः प्रव्यथिताः प्रचलिताः भयेन ; तथा अहमपि ॥ २३ ॥
ஹே மஹாபாஹோ! உங்களுடைய உருவம் மிகப்பெரியது. அநேக முகங்களையும் அநேக கண்களையும் அநேக கைகளையும் துடைகளையும் அநேக பாதங்களையும் மேலும் பலவயிறுகளையும், பல விகாரமான பற்களை உடையவராய் இவ்வாறு பயங்கரமாக உள்ள உங்களது தோற்றத்தைப் பார்த்து உலகில் உள்ளவர்களும், நானும் பயத்தினால் நடுங்குகிறோம்.
तत्रेदं कारणम् —
அதில் இதுவே காரணமாய் இருக்கிறது-
नभःस्पृशं दीप्तमनेकवर्णं व्यात्ताननं दीप्तविशालनेत्रम् ।
दृष्ट्वा हि त्वां प्रव्यथितान्तरात्मा धृतिं न विन्दामि शमं च विष्णो ॥ २४ ॥
நப: ஸ்ப்ருசம் தீப்தமனேகவர்ணம் வ்யாத்தனனம் தீப்தவிசாலநேத்ரம் ।
த்ருஷ்ட்வா ஹி த்வாம் ப்ரவ்யதிதாந்தராத்மா த்ருதிம் ந விந்தாமி சமம் ச விஷ்ணோ ॥ 24 ॥
नभःस्पृशं द्युस्पर्शम् इत्यर्थः, दीप्तं प्रज्वलितम् , अनेकवर्णम् अनेके वर्णाः भयङ्कराः नानासंस्थानाः यस्मिन् त्वयि तं त्वाम् अनेकवर्णम् , व्यात्ताननं व्यात्तानि विवृतानि आननानि मुखानि यस्मिन् त्वयि तं त्वां व्यात्ताननम् , दीप्तविशालनेत्रं दीप्तानि प्रज्वलितानि विशालानि विस्तीर्णानि नेत्राणि यस्मिन् त्वयि तं त्वां दीप्तविशालनेत्रं दृष्ट्वा हि त्वां प्रव्यथितान्तरात्मा प्रव्यथितः प्रभीतः अन्तरात्मा मनः यस्य मम सः अहं प्रव्यथितान्तरात्मा सन् धृतिं धैर्यं न विन्दामि न लभे शमं च उपशमनं मनस्तुष्टिं हे विष्णो ॥ २४ ॥
தாங்கள் ஆகாசம் தொட்டீர்கள் என்றால் ஆகாசம் வரையிலும் வியாபித்துப் பிரகாசிக்கின்றீர்கள், அநேகவிதமான வர்ணங்களுடன் கூடிய பயங்கர தோற்றத்தை உடையவராகவும், அநேக முகங்கள் வியாபித்ததாயும், ஜ்வலிக்கின்றவிசாலமான அநேக கண்களுடையவ ராகவும், உள்ள ரூபத்தைப் பார்த்து ஹே விஷ்ணு! நான் மிகவும் பயத் தினால் வியாகூலமான மனத்தினனாய் இருந்துகொண்டு தைரியத் தையோ ஆனந்தமாகிய சாந்தியையோ அடையாதாவனாய் இருக்கிறேன்.
कस्मात् —
ஏன் எனில்-
दंष्ट्राकरालानि च ते मुखानि दृष्ट्वैव कालानलसंनिभानि ।
दिशो न जाने न लभे च शर्म प्रसीद देवेश जगन्निवास ॥ २५ ॥
தம்ஷ்ட்ராகராலானி ச தே முகானி த்ருஷ்ட்வைவ காலானல -ஸந்நிபானி ।
திசோ ந ஜானே ந லபே ச சர்ம ப்ரஸீத தேவேச ஜகந்நிவாஸ ॥ 25 ॥
दंष्ट्राकरालानि दंष्ट्राभिः करालानि विकृतानि ते तव मुखानि दृष्ट्वैव उपलभ्य कालानलसंनिभानि प्रलयकाले लोकानां दाहकः अग्निः कालानलः तत्सदृशानि कालानलसंनिभानि मुखानि दृष्ट्वेत्येतत् । दिशः पूर्वापरविवेकेन न जाने दिङ्मूढो जातः अस्मि । अतः न लभे च न उपलभे च शर्म सुखम् । अतः प्रसीद प्रसन्नो भव हे देवेश, जगन्निवास ॥ २५ ॥
வக்ரமான பற்களினால் விகாரமானதும் பிரளயகாலத்தில் உலகங்களை தஹிக்கும் காலாக்கினிக்கு ஒப்பானதுமான முகங்களைப் பார்த்ததும் எது கிழக்கு, மேற்கு என்றவிவேகமற்றதிசைகளை அறிவ தில் மூடனாக உள்ளேன். நான் சுகத்தையும் அடையவில்லை. ஹே! தேவேச! ஜகந்நிவாஸ! ஆகையால் என்னை ரக்ஷி த்து பிரசன்னமாக வேண்டுகிறேன்.
येभ्यो मम पराजयाशङ्का या आसीत् सा च अपगता । यतः —
எவர்களிடம் இருந்து எனக்கு தோல்வி வருமோ என்ற சந்தேகம் இருந்ததோ அது நீங்கிவிட்டது. ஆகையால் -
अमी च त्वां धृतराष्ट्रस्य पुत्राः सर्वे सहैवावनिपालसङ्घैः ।
भीष्मो द्रोणः सूतपुत्रस्तथासौ सहास्मदीयैरपि योधमुख्यैः ॥ २६ ॥
அமீ ச த்வாம் த்ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா: ஸர்வே ஸஹைவாவனிபாலஸங்கை: ।
பீஷ்மோ த்ரோண: ஸூதபுத்ரஸ்ததாஸௌ ஸஹாஸ்மதீயை ரபி யோதமுக்யை: ॥ 26 ॥
अमी च त्वां धृतराष्ट्रस्य पुत्राः दुर्योधनप्रभृतयः — ‘त्वरमाणाः विशन्ति’ इति व्यवहितेन सम्बन्धः — सर्वे सहैव सहिताः अवनिपालसङ्घैः अवनिं पृथ्वीं पालयन्तीति अवनिपालाः तेषां सङ्घैः, किञ्च भीष्मो द्रोणः सूतपुत्रः कर्णः तथा असौ सह अस्मदीयैरपि धृष्टद्युम्नप्रभृतिभिः योधमुख्यैः योधानां मुख्यैः प्रधानैः सह ॥ २६ ॥
திருதராஷ்ட்ரரின் புத்திரர்களாகிய துரியோதனன் முதலியோர் கள் மற்றஉலகை ஆளுகின்றவர்கள் கூட்டத்துடன் வேகமாக உன் னுள் நுழைகிறார்கள் என்பது அடுத்து வரும் சுலோகத்துடன் சம்பந் தம் ஏற்படுகிறது. மேலும், பீஷ்மர், துரோணர், சூதபுத்திரராகிய கர் ணன், அவ்வாறேத்ருஷ்டத்யும்னன் முதலியோரும் யுத்தம் செய்பவர் களுள் முக்கியமானவர்களுடன் -26-
किञ्च —
மேலும்
वक्त्राणि ते त्वरमाणा विशन्ति दंष्ट्राकरालानि भयानकानि ।
केचिद्विलग्ना दशनान्तरेषु सन्दृश्यन्ते चूर्णितैरुत्तमाङ्गैः ॥ २७ ॥
வக்த்ராணி தே த்வரமாணா விசந்தி தம்ஷ்ட்ராகராலானி பயானகாநி ।
கேசித் விலக்னா தசநாந்தரே ஷு ஸம்த்ருச்யந்தே சூர்ணிதைருத்தமாங்கை: ॥ 27 ॥
वक्त्राणि मुखानि ते तव त्वरमाणाः त्वरायुक्ताः सन्तः विशन्ति, किंविशिष्टानि मुखानि ? दंष्ट्राकरालानि भयानकानि भयङ्कराणि ।
உம்முடைய வக்கிரமான மற்றும் பயங்கரமானதுமான வாய்களில் பயத்துடன் வேகமாக புகுகிறார்கள்.
किञ्च, केचित् मुखानि प्रविष्टानां मध्ये विलग्नाः दशनान्तरेषु मांसमिव भक्षितं सन्दृश्यन्ते उपलभ्यन्ते चूर्णितैः चूर्णीकृतैः उत्तमाङ्गैः शिरोभिः ॥ २७ ॥
மேலும் வாயினுள் நுழைந்தவர்களில் சிலர் பற்களின் இடைகளில் அகப்பட்டு நன்றாக மாமிசம் போல் மெல்லப்பட்டு பொடிப்பொடியாக தலைகளுடன் சிதைந்த உடல்களைப் பார்க்கிறேன். - 27
कथं प्रविशन्ति मुखानि इत्याह —
எவ்வாறு முகங்களில் பிரவேசிக்கின்றார்கள் என்பது கூறுகிறார் —
यथा नदीनां बहवोऽम्बुवेगाः समुद्रमेवाभिमुखा द्रवन्ति ।
तथा तवामी नरलोकवीरा विशन्ति वक्त्राण्यभिविज्वलन्ति ॥ २८ ॥
யதா நதீனாம் பஹவோஅம்புவேகா: ஸமுத்ரமேவாபிமுகா த்ரவந்தி ।
ததா தவாமீ நரலோக வீரா விசந்தி வக்த்ராண்யபிவிஜ்வலந்தி ॥ 28 ॥
यथा नदीनां स्रवन्तीनां बहवः अनेके अम्बूनां वेगाः अम्बुवेगाः त्वराविशेषाः समुद्रमेव अभिमुखाः प्रतिमुखाः द्रवन्ति प्रविशन्ति, तथा तद्वत् तव अमी भीष्मादयः नरलोकवीराः मनुष्यलोके शूराः विशन्ति वक्त्राणि अभिविज्वलन्ति प्रकाशमानानि ॥ २८ ॥
எவ்வாறு ஓடுகின்றநதிகள் ஜலப்பிரவாஹத்துடன் வெகு வேகமாக சமுத்திரத்தையே நோக்கி ஓடுகின்றனவோ (செல்கின்றன வோ) அவ்வாறு இந்த மனிதகுலத்தின் வீரர்களாகிய பீஷ்மர் முதலி யோர் தங்களுடைய வாயினுள் பிரவேசிக்கின்றார்கள்.
ते किमर्थं प्रविशन्ति कथं च इत्याह —
எதன் பொருட்டு எவ்வாறு மேல் கூறினவர்கள் பிரவேசிக்கின் றார்கள் என்று கூறுகிறார்-
यथा प्रदीप्तं ज्वलनं पतङ्गा विशन्ति नाशाय समृद्धवेगाः ।
तथैव नाशाय विशन्ति लोकास्तवापि वक्त्राणि समृद्धवेगाः ॥ २९ ॥
யதா ப்ரதீப்தம் ஜ்வலனம் பதங்கா விசந்தி நாசாய ஸம்ருத்தவேகா: ।
ததைவ நாசாய விசந்தி லோகாஸ் தவாபி வக்த்ராணி ஸம்ருத்த வேகா: ॥ 29 ॥
यथा प्रदीप्तं ज्वलनम् अग्निं पतङ्गाः पक्षिणः विशन्ति नाशाय विनाशाय समृद्धवेगाः समृद्धः उद्भूतः वेगः गतिः येषां ते समृद्धवेगाः, तथैव नाशाय विशन्ति लोकाः प्राणिनः तवापि वक्त्राणि समृद्धवेगाः ॥ २९ ॥
எவ்வாறு விட்டில் பூச்சிகள் தன் நாசத்தின் பொருட்டு ஜொலிக்கின்ற நெருப்பில் வேகமாக பிரவேசிக்கின்றனவோ அவ்வாறே பிராணிகள் தங்கள் நாசத்தின் பொருட்டு தங்களின் வாயினுள் நுழைகிறார்கள்.
त्वं पुनः —
மேலும் தாங்கள்
लेलिह्यसे ग्रसमानः समन्ताल्लोकान्समग्रान्वदनैर्ज्वलद्भिः ।
तेजोभिरापूर्य जगत्समग्रं भासस्तवोग्राः प्रतपन्ति विष्णो ॥ ३० ॥
லேலிஹ்யஸே க்ரஸமான: ஸமந்தால்லோகாந்ஸமக்ராந்வதனைர்ஜ்வலத்பி: ।
தேஜோபிராபூர்ய ஜகத்ஸமக்ரம் பாஸஸ்தவோக்ரா: ப்ரதபந்தி விஷ்ணோ ॥ 30 ॥
लेलिह्यसे आस्वादयसि ग्रसमानः अन्तः प्रवेशयन् समन्तात् समन्ततः लोकान् समग्रान् समस्तान् वदनैः वक्त्रैः ज्वलद्भिः दीप्यमानैः तेजोभिः आपूर्य संव्याप्य जगत् समग्रं सह अग्रेण समस्तम् इत्येतत् । किञ्च, भासः दीप्तयः तव उग्राः क्रूराः प्रतपन्ति प्रतापं कुर्वन्ति हे विष्णो व्यापनशील ॥ ३० ॥
ஒளிர்விட்டு எரிகின்றவாய்களால் இந்த உலகம் முழுவதையும் விழுங்கி ருசி பார்க்கின்றீர்கள். அந்த ஒளிர்கின்றநெருப்பால் உலகம் முழுவதும் வியாபித்து இருக்கிறீர்கள். ஹே! விஷ்ணு! எங்கும் வியா பித்திருப்பவரே, மேலும் அந்த ஒளிக்கதிர் மிகவும் கொடுமையாக தபிக்கச் செய்கிறது.
यतः एवमुग्रस्वभावः, अतः —
ஏன் எனில் தாங்கள் கடுமையான சுபாவமுள்ளவராய் இருக்கிறீர் ஆகையால்-
आख्याहि मे को भवानुग्ररूपो नमोऽस्तु ते देववर प्रसीद ।
विज्ञातुमिच्छामि भवन्तमाद्यं न हि प्रजानामि तव प्रवृत्तिम् ॥ ३१ ॥
ஆக்யாஹி-மே கோ பவானுக்ரரூபோ நமோஅஸ்து தே தேவவர ப்ரஸீத ।
விக்ஞாது மிச்சாமி பவந்த-மாத்யம் ந ஹி ப்ரஜானாமி தவ ப்ரவ்ருத்திம் ॥ 31 ॥
आख्याहि कथय मे मह्यं कः भवान् उग्ररूपः क्रूराकारः, नमः अस्तु ते तुभ्यं हे देववर देवानां प्रधान, प्रसीद प्रसादं कुरु । विज्ञातुं विशेषेण ज्ञातुम् इच्छामि भवन्तम् आद्यम् आदौ भवम् आद्यम् , न हि यस्मात् प्रजानामि तव त्वदीयां प्रवृत्तिं चेष्टाम् ॥ ३१ ॥
உக்ரமான ரூபமாய் உள்ள தாங்கள் யார் என்பதை எனக்கு கூறுங்கள். ஹே! தேவர்களுள் சிறந்தவனே! தங்களுக்கு வணக்கம். தாங்கள் கிருபை செய்யுங்கள். சிருஷ்டிக்கு எல்லாம் ஆதியாய் இருக் கும் தங்களை விசேஷமாக அறிய விரும்புகிறேன். ஏனெனில் தங்களு டைய செயல்களை நான் அறியவில்லை.
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவான் கூறினார்—
कालोऽस्मि लोकक्षयकृत्प्रवृद्धो लोकान्समाहर्तुमिह प्रवृत्तः ।
ऋतेऽपि त्वा न भविष्यन्ति सर्वे येऽवस्थिताः प्रत्यनीकेषु योधाः ॥ ३२ ॥
காலோ அஸ்மி லோக க்ஷயக்ருத் ப்ரவ்ருத்தோ லோகான்ஸமாஹர்துமிஹ ப்ரவ்ருத்த: ।
ருதேஅபி த்வா ந பவிஷ்யந்தி ஸர்வே யேஅவஸ்திதா: ப்ரத்யநீகேஷு யோதா: ॥ 32 ॥
कालः अस्मि लोकक्षयकृत् लोकानां क्षयं करोतीति लोकक्षयकृत् प्रवृद्धः वृद्धिं गतः । यदर्थं प्रवृद्धः तत् शृणु — लोकान् समाहर्तुं संहर्तुम् इह अस्मिन् काले प्रवृत्तः । ऋतेऽपि विनापि त्वा त्वां न भविष्यन्ति भीष्मद्रोणकर्णप्रभृतयः सर्वे, येभ्यः तव आशङ्का, ये अवस्थिताः प्रत्यनीकेषु अनीकमनीकं प्रति प्रत्यनीकेषु प्रतिपक्षभूतेषु अनीकेषु योधाः योद्धारः ॥ ३२ ॥
உலகங்களை அழிப்பதற்காக பெரிதாக விருத்தி அடைந்த கால னாக இருக்கிறேன். எதன் பொருட்டு நான் பெருகி விருத்தி அடைந்து உள்ளேன் என்பதைக் கேள். நான் இந்த சமயத்தில் உலகங்களை சம்ஹாரம் செய்வதற்காக ஈடுபட்டுள்ளேன். ஆகையால் எந்த பீஷ் மர், த்ரோணர், கர்ணன் முதலிய சூர வீரர்களாய் எவர்களிடத்தில் உனக்கு சந்தேஹமுள்ளதோ அந்த எதிரி சேனையில் உள்ளோர் அனைவரையும் உன் சகாயம் இல்லாமலே நாசம் செய்து விடுவேன்.
यस्मात् एवम् —
எதனால் இவ்வாறு
तस्मात्त्वमुत्तिष्ठ यशो लभस्व जित्वा शत्रून्भुङ्क्ष्व राज्यं समृद्धम् ।
मयैवैते निहताः पूर्वमेव निमित्तमात्रं भव सव्यसाचिन् ॥ ३३ ॥
தஸ்மாத்வமுத்திஷ்ட யசோ லபஸ்வ ஜித்வா சத்ரூன்புங்க்ஷக்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்தம் ।
மயைவைதே நிஹதா: பூர்வமேவ நிமித்தமாத்ரம் பவ ஸவ்யஸாசின் ॥ 33 ॥
तस्मात् त्वम् उत्तिष्ठ ‘भीष्मप्रभृतयः अतिरथाः अजेयाः देवैरपि, अर्जुनेन जिताः’ इति यशः लभस्व ; केवलं पुण्यैः हि तत् प्राप्यते । जित्वा शत्रून् दुर्योधनप्रभृतीन् भुङ्क्ष्व राज्यं समृद्धम् असपत्नम् अकण्टकम् ।
ஆகையால் நீ எழுந்திருப்பாயாக. தேவர்களாலும் வெல்லமுடி யாத பீஷ்மர், த்ரோணர் முதலிய அதிரதர்களை அர்ஜுனன் வென் றான் என்றபுண்யங்களினால் மட்டுமே கிடைக்கும் புகழ் உனக்கு கிடைக்கும். துரியோதனன் முதலிய சத்ருக்களை வென்று எதிரிக ளற்றராஜ்ஜியம் முழுவதையும் அனுபவிப்பாயாக.
मया एव एते निहताः निश्चयेन हताः प्राणैः वियोजिताः पूर्वमेव । निमित्तमात्रं भव त्वं हे सव्यसाचिन् , सव्येन वामेनापि हस्तेन शराणां क्षेप्ता सव्यसाची इति उच्यते अर्जुनः ॥ ३३ ॥
என்னால் முன்பே அவர்களுடைய பிராணன்கள் நிச்சயமாக இல்லாமல் செய்யப்பட்டது. இடது கைகளாலும் பாணங்களை விடுவ தில் சாமர்த்தியம் உள்ளவனே! நீ நிமித்தமாத்திரமாய் இரு.
द्रोणं च भीष्मं च जयद्रथं च कर्णं तथान्यानपि योधवीरान् ।
मया हतांस्त्वं जहि मा व्यथिष्ठा युध्यस्व जेतासि रणे सपत्नान् ॥ ३४ ॥
த்ரோணம் ச பீஷ்மம் ச ஜயத்ரதம் ச கர்ணம் ததாந்யானபி யோதவீரான் ।
மயா ஹதாம்ஸ்த்வம் ஜஹி மா வ்யதிஷ்டா யுத்யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்னான் ॥ 34 ॥
द्रोणं च, येषु येषु योधेषु अर्जुनस्य आशङ्का तांस्तान् व्यपदिशति भगवान् , मया हतानिति ।
த்ரோணர் முதலிய எந்த எந்த யுத்த வீரர்களிடத்தில் சந்தேஹம் இருந்ததோ அந்த அந்த வீரர்களுடைய பெயரைக் குறிப்பிட்டு பகவான் அவர்களை நான் கொன்றுவிட்டேன் என்று குறிப்பிடுகிறார்.
तत्र द्रोणभीष्मयोः तावत् प्रसिद्धम् आशङ्काकारणम् । द्रोणस्तु धनुर्वेदाचार्यः दिव्यास्त्रसम्पन्नः, आत्मनश्च विशेषतः गुरुः गरिष्ठः । भीष्मश्च स्वच्छन्दमृत्युः दिव्यास्त्रसम्पन्नश्च परशुरामेण द्वन्द्वयुद्धम् अगमत् , न च पराजितः ।
அங்கு பீஷ்மதுரோணாதிகளிடம் உள்ள விசேஷமான பயத்தின் காரணம் என்னவெனில், த்ரோணாச்சாரியார் திவ்யமான ஆயுதங் களை உடையவர். தன்னுடைய பிரியமான பிரதான குரு. பீஷ்மரோ வனில் மிகவும் பெரியவர். தன்னிச்சைப்படி தன்னுடைய மரணத்தை எதிர்கொள்பவர். திவ்யமான ஆயுதங்களை உடையவர். மேலும் பரசுராமருடன் துவந்துவ யுத்தம் செய்து அவரிடம் தோல்வி அடையாதவர்.
तथा जयद्रथः, यस्य पिता तपः चरति ‘मम पुत्रस्य शिरः भूमौ निपातयिष्यति यः, तस्यापि शिरः पतिष्यति’ इति ।
அவ்வாறேஜயத்ரதனுடைய தந்தையும் தன் மகனுடைய தலையை எவர் பூமியில் விழச் செய்பவரோ அவருடைய தலையும் கீழே விழவேண்டும் என்று தபஸ் செய்கிறார்.
कर्णोऽपि वासवदत्तया शक्त्या त्वमोघया सम्पन्नः सूर्यपुत्रः कानीनः यतः, अतः तन्नाम्नैव निर्देशः ।
கர்ணனும் இந்திரனிடமிருந்து பெற்றஅமோக (மிகுந்த) சக்தியுடையவனாய் இருக்கிறான். அவ்வாறேசூரியனுடைய மகன். இவன் கன்னிகைக்குப் பிறந்தவனாதலால் அந்தப் பெயராலேயே குறிப்பிடுகிறார்.
मया हतान् त्वं जहि निमित्तमात्रेण । मा व्यथिष्ठाः तेभ्यः भयं मा कार्षीः । युध्यस्व जेतासि दुर्योधनप्रभृतीन् रणे युद्धे सपत्नान् शत्रून् ॥ ३४ ॥
என்னால் கொல்லப்பட்டவர்களை நிமித்த மாத்திரமாகக் கொல். பயப்படாதே. யுத்தஞ்செய். யுத்தத்தில் துரியோதனன் முதலிய சத்ருக் களை வெல்வாய்.
सञ्जय उवाच —
சஞ்சயன் கூறுகிறார்-
एतच्छ्रुत्वा वचनं केशवस्य कृताञ्जलिर्वेपमानः किरीटी ।
नमस्कृत्वा भूय एवाह कृष्णं सगद्गदं भीतभीतः प्रणम्य ॥ ३५ ॥
ஏதச்ச்ருத்வா வசனம் கேசவஸ்ய க்ருதாஞ்ஜலிர்வேபமான: கிரீடீ ।
நமஸ்க்ருத்வா பூய ஏவாஹ க்ருஷ்ணம் ஸகத்கதம் பீத பீத: ப்ரணம்ய ॥ 35 ॥
एतत् श्रुत्वा वचनं केशवस्य पूर्वोक्तं कृताञ्जलिः सन् वेपमानः कम्पमानः किरीटी नमस्कृत्वा, भूयः पुनः एव आह उक्तवान् कृष्णं सगद्गदं ।
கேசவனுடைய முன்பு கூறப்பட்ட இந்த வசனத்தைக் கேட்டு க்ரீ டத்தை அணிந்த அர்ஜுனன் நடுங்கினவனாய் கைகூப்பி வணங்கி மறுபடியும் கிருஷ்ணரைப் பார்த்து விக்கித்து விக்கித்து பேசலானான்.
भयाविष्टस्य दुःखाभिघातात् स्नेहाविष्टस्य च हर्षोद्भवात् , अश्रुपूर्णनेत्रत्वे सति श्लेष्मणा कण्ठावरोधः ; ततश्च वाचः अपाटवं मन्दशब्दत्वं यत् स गद्गदः तेन सह वर्तत इति सगद्गदं वचनम् आह इति वचनक्रियाविशेषणम् एतत् । भीतभीतः पुनः पुनः भयाविष्टचेताः सन् प्रणम्य प्रह्वः भूत्वा, ‘आह’ इति व्यवहितेन सम्बन्धः ।
பயத்துடன் கூடினவனும் துக்கத்தினால் தாக்கப்பட்டாலும், சிநேஹத்தினால் சந்தோஷம் உண்டாவதாலும் கண்களில் கண்ணீர் நிரம்பி தொண்டையில் கபம் அடைப்பதால் குரல் மந்தப்படும். அந்த மந்தக் குரலுடன் பேசுவது சகத்கதம் (விக்கித்து விக்கித்து பேசுவது) எனப்படும். பயத்தினால் வியாபிக்கப்பட்ட மனதினனாய் மறுபடியும் மறுபடியும்‌ வணங்கிப்‌ பேசலா னான்‌. (आह--ஆஹ) என்பது பேசுத லென்னும் வினைக்கு விசேஷணம் என்க. (வணங்கி என்பதனோடு சம்பந்தம்)
अत्र अवसरे सञ्जयवचनं साभिप्रायम् । कथम् ? द्रोणादिषु अर्जुनेन निहतेषु अजेयेषु चतुर्षु, निराश्रयः दुर्योधनः निहतः एव इति मत्वा धृतराष्ट्रः जयं प्रति निराशः सन् सन्धिं करिष्यति, ततः शान्तिः उभयेषां भविष्यति इति । तदपि न अश्रौषीत् धृतराष्ट्रः भवितव्यवशात् ॥ ३५ ॥
இந்த சமயத்தில் சஞ்சயனுடைய கூற்றில் உள்கருத்து உள்ளது. எவ்வாறெனில், துரோணர் முதலிய நால்வரையும் அர்ஜுனனால் மர ணம் ஏற்பட்டு தோல்வி அடைந்ததால் துரியோதனன் ஆசிரயமற்று கொல்லப்படுவான் என்று திருதராஷ்ட்ரன் வெற்றி அடைவதில் ஆசையற்று சமாதானம் செய்துகொள்வான். அதனால் இருபக்கத்தா ருக்கும் சாந்தி ஏற்படும் என்று. ஆனால் விதிவசத்தால் திருதராஷ்ட் ரன் அதனையும் கேட்கவில்லை.
अर्जुन उवाच —
அர்ஜுனன் பே௪லானான்.
स्थाने हृषीकेश तव प्रकीर्त्या जगत्प्रहृष्यत्यनुरज्यते च ।
रक्षांसि भीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्यन्ति च सिद्धसङ्घाः ॥ ३६ ॥
ஸ்தானே ஹ்ருஷீகேச தவ ப்ரகீர்த்யா ஜகத் ப்ரஹ்ருஷ்யத்யனுரஜ்யதே ச ।
ரக்ஷாம்ஸி பீதானி திசோ த்ரவந்தி ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்தஸங்கா: ॥ 36 ॥
स्थाने युक्तम् । किं तत् ? तव प्रकीर्त्या त्वन्माहात्म्यकीर्तनेन श्रुतेन, हे हृषीकेश, यत् जगत् प्रहृष्यति प्रहर्षम् उपैति, तत् स्थाने युक्तम् , इत्यर्थः ।
பொருத்தமானது? அது எது? ஹே! ஹ்ருஷீகேசனே! தங்களுடைய மஹிமைகளை கீர்த்தனம், சிரவணம் (கேட்டல்) செய்வ தால் ஜகத்தானது மகிழ்ச்சியை அடைகிறது. அது பொருத்தமானது என்பது பொருள்.
अथवा विषयविशेषणं स्थाने इति । युक्तः हर्षादिविषयः भगवान् , यतः ईश्वरः सर्वात्मा सर्वभूतसुहृच्च इति ।
இந்த இடத்தில் ஸ்தானம் (பொருத்தம்) என்றபதத்தை விஷயத் தினுடைய விசேஷணமாகவும் எடுத்துக்கொள்ளலாம். பகவான் மகிழ்ச்சி முதலிய விஷயங்களுக்கும் பொருத்தமானவர் என்று எடுத் துக்கொள்வதும் சரியே. ஏன் எனில் ஈஸ்வரன் எல்லா பூதங்களுக்கும் ஆத்மாவாகவும் எல்லா பூதங்களுக்கும் சுஹிருதமாக இருக்கிறார்.
तथा अनुरज्यते अनुरागं च उपैति ; तच्च विषये इति व्याख्येयम् । किञ्च, रक्षांसि भीतानि भयाविष्टानि दिशः द्रवन्ति गच्छन्ति ; तच्च स्थाने विषये । सर्वे नमस्यन्ति नमस्कुर्वन्ति च सिद्धसङ्घाः सिद्धानां समुदायाः कपिलादीनाम् , तच्च स्थाने ॥ ३६ ॥
அவ்வாறே பகவானாகிய தங்களிடத்தில் உலகமானது பிரேமை யைச் செய்கிறது. அந்த பொருத்தமான விஷயத்திலேயே (தங்களை யே) அடைகிறது. மேலும் ராக்ஷசர்கள் பயத்தினால் வியாபிக்கப்பட்ட வர்களாகி திசைகளை நோக்கி ஓடுகிறார்கள். அதுவும் அந்த பொருத் தமான விஷயத்தை நோக்கியே. சித்தர்களாகிய கபிலர் முதலியோர் அடங்கிய கூட்டமெல்லாம் பொருத்தமான விஷயமாகிய தங்களை நோக்கியே வணங்குகிறார்கள்.
भगवतो हर्षादिविषयत्वे हेतुं दर्शयति —
பகவான் மகிழ்ச்சி முதலியவற்றிற்கு பொருத்தமான விஷயம் என்பதின் காரணத்தைக் கூறுகிறார்.
कस्माच्च ते न नमेरन्महात्मन्गरीयसे ब्रह्मणोऽप्यादिकर्त्रे ।
अनन्त देवेश जगन्निवास त्वमक्षरं सदसत्तत्परं यत् ॥ ३७ ॥
கஸ்மாச்ச தே ந நமேரன் மஹாத்மன் கரீயஸே ப்ரஹ்மணோ அப்யாதிகர்த்ரே ।
அநந்த தேவேச ஜகந்நிவாஸ த்வமக்ஷரம் ஸதஸத்தத்பரம் யத் ॥ 37 ॥
कस्माच्च हेतोः ते तुभ्यं न नमेरन् नमस्कुर्युः हे महात्मन् , गरीयसे गुरुतराय ; यतः ब्रह्मणः हिरण्यगर्भस्य अपि आदिकर्ता कारणम् अतः तस्मात् आदिकर्त्रे । कथम् एते न नमस्कुर्युः ? अतः हर्षादीनां नमस्कारस्य च स्थानं त्वं अर्हः विषयः इत्यर्थः ।
ஹே பகவானே! நீங்கள் மிகப்பெரியவர். ஏன் எனில் ஹிரண்யகர் பருக்கும் ஆதிகர்த்தாவாகிய காரணமாய் இருப்பதால் நீங்கள் ஆதி கர்த்தா. உங்களை எதனால் நமஸ்காரம் செய்யாமலிருப்பார்கள்? ஆகையால் மகிழ்ச்சி முதலியவைகளுக்கும், நமஸ்காரத்திற்கும் தாங்கள் உரியவரே (பொருத்தமானவரே) என்பது பொருள்.
हे अनन्त देवेश हे जगन्निवास त्वम् अक्षरं तत् परम् , यत् वेदान्तेषु श्रूयते ।
ஹே அனந்தனே! தேவர்களுக்கெல்லாம் ஈசனே! ஜகன்னிவா சனே! தாங்கள் அழியாதவர். வேதாந்தங்களில் எது கேட்கப்படுகி றதோ அந்தப் பரம்பொருள் நீரே.
किं तत् ? सदसत् इति । सत् विद्यमानम् , असत् च यत्र नास्ति इति बुद्धिः ; ते उपधानभूते सदसती यस्य अक्षरस्य, यद्द्वारेण सदसती इति उपचर्यते । परमार्थतस्तु सदसतोः परं तत् अक्षरं यत् अक्षरं वेदविदः वदन्ति । तत् त्वमेव, न अन्यत् इति अभिप्रायः ॥ ३७ ॥
அது என்ன? அது சத், அசத். எது இருக்கிறதோ அது சத். எதில் இல்லை என்றபுத்தி ஏற்படுகிறதோ அது அசத். இந்த சத்தும், அசத் தும் அக்ஷரத்தின் உபாதியான காரணத்தினால் அந்த பிரஹ்மம் உபசாரமாக சத் அசத் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த சத், அசத்திற்கும் மேலானது. எதை வேதத்தை அறிந்தவர்கள் அக்ஷரம் என்று கூறுகிறார்களோ அந்த அக்ஷரம் தாங்களே. மற்றவை அல்ல என்று கூறுகிறார்கள் என்பது அபிப்பிராயம்.
पुनरपि स्तौति —
மறுபடியும்‌ துதிசெய்கிறார்‌.
त्वमादिदेवः पुरुषः पुराणस्त्वमस्य विश्वस्य परं निधानम् ।
वेत्तासि वेद्यं च परं च धाम त्वया ततं विश्वमनन्तरूप ॥ ३८ ॥
த்வமாதிதேவ: புருஷ: புராணஸ்-த்வமஸ்ய விச்வஸ்ய பரம் நிதானம் ।
வேத்தாஸி வேத்யம் ச பரம் ச தாம த்வயா ததம் விச்வமநந்தரூப ॥ 38 ॥
त्वम् आदिदेवः, जगतः स्रष्टृत्वात् । पुरुषः, पुरि शयनात् पुराणः चिरन्तनः त्वम् एव अस्य विश्वस्य परं प्रकृष्टं निधानं निधीयते अस्मिन् जगत् सर्वं महाप्रलयादौ इति ।
உலகை சிருஷ்டி செய்ததால் தாங்களே ஆதிதேவன். சரீரமாகிய புரத்தில் வசிப்பதால் புருஷன். தாங்கள் எப்பொழுதும் இருப்பதால் புராதனர். தாங்களே இந்த விச்வத்திற்கெல்லாம் (உலகிற்கெல்லாம்) உத்தம ஸ்தானம் ஆகும். எவ்வாறெனில் மஹா பிரளய காலத்தில் இந்த உலகம் முழுவதும் தங்குமிடம்.
किञ्च, वेत्ता असि, वेदिता असि सर्वस्यैव वेद्यजातस्य । यत् च वेद्यं वेदनार्हं तच्च असि परं च धाम परमं पदं वैष्णवम् । त्वया ततं व्याप्तं विश्वं समस्तम् , हे अनन्तरूप अन्तो न विद्यते तव रूपाणाम् ॥ ३८ ॥
மேலும் அவ்வாறே அறியப்பட வேண்டிய பொருள்களை யெல்லாம் தாங்கள் அறிபவராய் இருக்கிறீர். அறியப்படவேண்டிய பொருள் எதுவோ அதுவும் தாங்களாகவே இருக்கின்றீர். மேலான வைஷ்ணவ பதமாக இருக்கின்றீர். தங்களால் இந்த உலகம் முழுவதும் வியாபிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய ரூபங்களுக்கு முடிவே கிடையாது.
किञ्च —
மேலும்
वायुर्यमोऽग्निर्वरुणः शशाङ्कः प्रजापतिस्त्वं प्रपितामहश्च ।
नमो नमस्तेऽस्तु सहस्रकृत्वः पुनश्च भूयोऽपि नमो नमस्ते ॥ ३९ ॥
வாயுர்யமோஅக்னிர்வருண: சசாங்க: ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹச்ச ।
நமோ நமஸ்தேஅஸ்து ஸஹஸ்ரக்ருத்வ: புனச்ச பூயோ அபி நமோ நமஸ்தே ॥ 39 ॥
वायुः त्वं यमश्च अग्निः वरुणः अपां पतिः शशाङ्कः चन्द्रमाः प्रजापतिः त्वं कश्यपादिः प्रपितामहश्च पितामहस्यापि पिता प्रपितामहः, ब्रह्मणोऽपि पिता इत्यर्थः । नमो नमः ते तुभ्यम् अस्तु सहस्रकृत्वः । पुनश्च भूयोऽपि नमो नमः ते ।
தாங்கள் வாயு, யமன், அக்னி, ஜலத்திற்கெல்லாம் ஈசனாகிய வருணன், சந்திரன். தங்கள் கச்யபாதி பிரஜாபதி, பாட்டனுக்கும் தகப்பன் அதாவது பிரம்மாவிற்கும் தகப்பன். உங்களுக்கு ஆயிரம் தடவை நமஸ்காரம், மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
बहुशो नमस्कारक्रियाभ्यासावृत्तिगणनं कृत्वसुचा उच्यते । ‘पुनश्च’ ‘भूयोऽपि’ इति श्रद्धाभक्त्यतिशयात् अपरितोषम् आत्मनः दर्शयति ॥ ३९ ॥
ஆயிரம் தடவை நமஸ்காரம் என்பதை அநேக தடவை நமஸ்கா ரம் என்று கொள்ளவேண்டும். மீண்டும், மீண்டும் என்று கூறி தனக்கு இன்னும் திருப்தி ஏற்படவில்லை என்பதைக் காண்பிக்கிறார்.
तथा —
அவ்வாறே-
नमः पुरस्तादथ पृष्ठतस्ते नमोऽस्तु ते सर्वत एव सर्व ।
अनन्तवीर्यामितविक्रमस्त्वं सर्वं समाप्नोषि ततोऽसि सर्वः ॥ ४० ॥
நம: புரஸ்தாதத ப்ருஷ்டதஸ்தே நமோஅஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ ।
அனந்தவீர்யாமிதவிக்ரமஸ்த்வம் ஸர்வம் ஸமாப்நோஷி ததோஅஸி ஸர்வ: ॥ 40 ॥
नमः पुरस्तात् पूर्वस्यां दिशि तुभ्यम् , अथ पृष्ठतः ते पृष्ठतः अपि च ते नमोऽस्तु, ते सर्वत एव सर्वासु दिक्षु सर्वत्र स्थिताय हे सर्व । अनन्तवीर्यामितविक्रमः अनन्तं वीर्यम् अस्य, अमितः विक्रमः अस्य ।
தங்களுக்கு கிழக்கு திசை நோக்கி நமஸ்காரம். அவ்வாறே பின் னாலிருந்து நமஸ்காரம். எல்லா திக்குகளிலும் இருக்கின்றதங்க ளுக்கு நமஸ்காரம். அளவிடமுடியாத வல்லமையை உடையவராக வும், மிகுந்த பராக்கிரமசாலியாயும் தாங்கள் இருக்கிறீர்கள்.
वीर्यं सामर्थ्यं विक्रमः पराक्रमः । वीर्यवानपि कश्चित् शत्रुवधादिविषये न पराक्रमते, मन्दपराक्रमो वा । त्वं तु अनन्तवीर्यः अमितविक्रमश्च इति अनन्तवीर्यामितविक्रमः ।
வீர்யம் என்றால் வல்லமை, பராக்கிரமம் என்றால் துணிவு, ஒருவ னுக்கு வல்லமை இருந்தாலும் சஸ்திர முதலியவைகளில் மிகுந்த துணிவு இருக்காது. துணிவானது மந்தமாக இருக்கும். ஆனால் நீங் கள் அளவற்றவல்லமையுடனும், அளவற்ற துணிவுடனும் இருக்கிறீர்கள். ஆகையால் தாங்கள் அநந்தவீர்ய, அமிதவிக்ரமர் எனப்படுகிறீர்.
सर्वं समस्तं जगत् समाप्तोषि सम्यक् एकेन आत्मना व्याप्नोषि यतः, ततः तस्मात् असि भवसि सर्वः त्वम् , त्वया विनाभूतं न किञ्चित् अस्ति इति अभिप्रायः ॥ ४० ॥
எவ்வாறு ஆத்மாவாகிய ஒன்றினால் ஜகத்து முழுவதையும் வியாபித்துள்ளதனால் நீங்கள் ஸகலமுமாக இருக்கிறீர்கள் நீங்களில்லாத ஒன்றும் இல்லை என்பது கருத்து.
यतः अहं त्वन्माहात्म्यापरिज्ञानात् अपराद्धः, अतः —
எதனால் தங்களுடைய மஹிமையை அறியாததினால் குற்றமுள் ளவனாக இருக்கிறேனோ அதனால்
सखेति मत्वा प्रसभं यदुक्तं हे कृष्ण हे यादव हे सखेति ।
अजानता महिमानं तवेदं मया प्रमादात्प्रणयेन वापि ॥ ४१ ॥
ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம் ஹே க்ருஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி ।
அஜாந்தா மஹிமானம் தவேதம் மயா ப்ரமாதாத்ப்ரணயேன வாபி ॥ 41 ॥
सखा समानवयाः इति मत्वा ज्ञात्वा विपरीतबुद्ध्या प्रसभम् अभिभूय प्रसह्य यत् उक्तं हे कृष्ण हे यादव हे सखेति च अजानता अज्ञानिना मूढेन ; किम् अजानता इति आह — महिमानं महात्म्यं तव इदम् ईश्वरस्य विश्वरूपम् ।
தங்களுடைய இந்த ஈஸ்வரராகிய உங்களுடைய விச்வரூபத் தின் மஹிமையை அறியாமையால் சமான வயதுடைய நண்ப னாய் நினைத்து என்னுடைய மூடத்தன்மையினாலும், விபரீதபுத்தியி னாலும் அசட்டையாக ஹே கிருஷ்ணா! ஹே யாதவா! ஹே நண்பா! என்று கூறப்பட்டதோ
‘तव इदं महिमानम् अजानता’ इति वैयधिकरण्येन सम्बन्धः । ‘तवेमम्’ इति पाठः यदि अस्ति, तदा सामानाधिकरण्यमेव ।
(தவ இதம் மஹிமானம் அஜானதா) என்னுமிடத்தில் இதம் என்றபதம் நபும்ஸகலிங்கம் (அஃறிணை) ஆகையால் இதற்கு வியாக ரணத்தில் விசேஷ்ய, விசேஷண பாவ சம்பந்தமிருக்கிறது. (இதம்) என்றபதத்திற்கு பதிலாக (இமம்) என்றபாடம் இருந்தால் அது சமா னாதி கரண சம்மந்தம் ஆகும்.
मया प्रमादात् विक्षिप्तचित्ततया, प्रणयेन वापि, प्रणयो नाम स्नेहनिमित्तः विस्रम्भः तेनापि कारणेन यत् उक्तवान् अस्मि ॥ ४१ ॥
அல்லது அறியாமையினால் ஏற்பட்ட சித்தகலக்கத்தினாலும் சிநேகத்தினால் உண்டான அன்பின் (விச்வாசத்தின்) காரணத்தினா லும் நான் கூறினவனாக உள்ளேன்.
यच्चावहासार्थमसत्कृतोऽसि विहारशय्यासनभोजनेषु ।
एकोऽथवाप्यच्युत तत्समक्षं तत्क्षामये त्वामहमप्रमेयम् ॥ ४२ ॥
யச்சாவஹாஸார்தமஸத்க்ருதோ அஸி விஹாரசய்யாஸனபோஜனே ஷு ।
ஏகோஅதவாப்யச்யுத தத்ஸமக்ஷம் தத்க்ஷாமயே த்வாமஹ மப்ரமேயம் ॥ 42 ॥
यच्च अवहासार्थं परिहासप्रयोजनाय असत्कृतः परिभूतः असि भवसि ; क्व ? विहारशय्यासनभोजनेषु, विहरणं विहारः पादव्यायामः, शयनं शय्या, आसनम् आस्थायिका, भोजनम् अदनम् , इति एतेषु विहारशय्यासनभोजनेषु, एकः परोक्षः सन् असत्कृतः असि परिभूतः असि ; अथवापि हे अच्युत, तत् समक्षम् , तच्छब्दः क्रियाविशेषणार्थः, प्रत्यक्षं वा असत्कृतः असि तत् सर्वम् अपराधजातं क्षामये क्षमां कारये त्वाम् अहम् अप्रमेयं प्रमाणातीतम् ॥ ४२ ॥
அவ்வாறேஎன்னால் நீங்கள் அநேகதடவை பரிகாசம் செய்யப் பட்டு அவமானப்படுத்தப் பட்டுள்ளீர்கள். எவ்வாறு எனில் விளையா டும் பொழுதும், படுக்கும்பொழுதும், உட்கார்ந்திருக்கும்பொழுதும், சாப்பிடும்பொழுதும், தனியாக இருக்கும்பொழுதும் மற்றவர்கள் முன்னிலையிலும் பரிஹாசத்தின் பொருட்டு என்னால் அவமானப்ப டுத்தப்பட்டுள்ளீர்கள். ஹே அச்சுதனே! அளவிடமுடியாத பிரமாணங் களுக்கெல்லாம் அப்பாற்பட்ட நீர் நான் செய்த எல்லா அபராதங்க ளையும் பொறுத்து மன்னிக்கும்படி வேண்டுகிறேன். தத் என்னும் சொல்வினையை விசேஷிக்கும் பொருளின் மேல் நிற்பது.
यतः त्वम् —
ஏன் எனில் தாங்கள்-
पितासि लोकस्य चराचरस्य त्वमस्य पूज्यश्च गुरुर्गरीयान् ।
न त्वत्समोऽस्त्यभ्यधिकः कुतोऽन्यो लोकत्रयेऽप्यप्रतिमप्रभाव ॥ ४३ ॥
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யச்ச குருர்கரீயான் ।
ந த்வத்-ஸமோஅஸ்த்யப்யதிக: குதோ அந்யோ லோகத்ரயேஅப்யப்ரதிமப்ரபாவ ॥ 43 ॥
पिता असि जनयिता असि लोकस्य प्राणिजातस्य चराचरस्य स्थावरजङ्गमस्य । न केवलं त्वम् अस्य जगतः पिता, पूज्यश्च पूजार्हः, यतः गुरुः गरीयान् गुरुतरः ।
நீ இந்த ஸ்தாவர ஜங்கமங்களாகிய பிராணிவர்க்கத்திற்கு பிதாவாக இருக்கிறீர். பிதா மட்டுமல்ல. பூஜிக்கத்தக்கவராய் இருக்கிறீர். ஏன் எனில் நீங்கள் மிகப்பெரிய குரு.
कस्मात् गुरुतरः त्वम् इति आह —
தாங்கள் எவ்வாறு மிகப்பெரிய குரு என்பதை (அர்ஜுனன்) கூறுகிறார்-
न त्वत्समः त्वत्तुल्यः अस्ति । न हि ईश्वरद्वयं सम्भवति, अनेकेश्वरत्वे व्यवहारानुपपत्तेः । त्वत्सम एव तावत् अन्यः न सम्भवति ; कुतः एव अन्यः अभ्यधिकः स्यात् लोकत्रयेऽपि सर्वस्मिन् ? अप्रतिमप्रभाव ।
ஹே ஒப்பற்றபிரபாவமுடையவரே! உங்களுக்கொப்பான வேறு ஒருவரில்லை. எங்கும் இரண்டு ஈஸ்வரர்கள் இல்லை. ஏன் எனில் அநேக ஈஸ்வரர்கள் இருந்தால் வியவஹாரம் நடக்காது. எப்பொழுது மூவுலகத்திலும் உங்களுக்கு சமானமாக வேறு ஒருவர் இல்லையோ அவ்வாறு இருக்கும்பொழுது உங்களைக் காட்டிலும் மேலானவர் எவ் வாறு இருக்கமுடியும்? என்பது பொருள்.
प्रतिमीयते यया सा प्रतिमा, न विद्यते प्रतिमा यस्य तव प्रभावस्य सः त्वम् अप्रतिमप्रभावः, हे अप्रतिमप्रभाव निरतिशयप्रभाव इत्यर्थः ॥ ४३ ॥
எதனால் அனுமானிக்கப்படுகிறதோ அது ப்ரதிமா. எதனால் பிர திமா இல்லையோ அதனால் அப்ரதிமாபாவம் எனப்படும். அப்பிரதி மாபாவம் என்றால் நிரதிசய பாவம்.
यतः एवम् —
எதனால் இவ்வாறு
तस्मात्प्रणम्य प्रणिधाय कायं प्रसादये त्वामहमीशमीड्यम् ।
पितेव पुत्रस्य सखेव सख्युः प्रियः प्रियायार्हसि देव सोढुम् ॥ ४४ ॥
தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதாய காயம்‌ ப்ரஸாதயே த்வாமஹமீச மீட்யம்‌ ।
பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யு: ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும்‌ ॥ 44 ॥
तस्मात् प्रणम्य नमस्कृत्य, प्रणिधाय प्रकर्षेण नीचैः धृत्वा कायं शरीरम् , प्रसादये प्रसादं कारये त्वाम् अहम् ईशम् ईशितारम् , ईड्यं स्तुत्यम् । त्वं पुनः पुत्रस्य अपराधं पिता यथा क्षमते, सर्वं सखा इव सख्युः अपराधम् , यथा वा प्रियः प्रियायाः अपराधं क्षमते, एवम् अर्हसि हे देव सोढुं प्रसहितुम् क्षन्तुम् इत्यर्थः ॥ ४४ ॥
ஆகையால் வணக்கத்திற்குரிய தங்களை என் சரீரத்தை கீழே கிடத்தி வணங்கி என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தாங்கள் பிதாவானவர் புத்திரனை மன்னிப்பது போலவும், சிநேகிதன் தன்னுடைய சிநேகிதனை மன்னிப்பது போலவும் அன்புடையவர் அன்புடையவரை மன்னிப்பது போலவும் ஹே தேவ! மன்னிக்க வேண் டுகிறேன் என்பது பொருள்.
अदृष्टपूर्वं हृषितोऽस्मि दृष्ट्वा भयेन च प्रव्यथितं मनो मे ।
तदेव मे दर्शय देव रूपं प्रसीद देवेश जगन्निवास ॥ ४५ ॥
அத்ருஷ்டபூர்வம் ஹ்ருஷிதோ அஸ்மி த்ருஷ்ட்வா பயேன ச ப்ரவ்யதிதம் மனோ மே ।
ததேவ மே தர்சய தேவ ரூபம் ப்ரஸீத தேவேச ஜகந்நிவாச ॥ 45 ॥
अदृष्टपूर्वं न कदाचिदपि दृष्टपूर्वम् इदं विश्वरूपं तव मया अन्यैर्वा, तत् अहं दृष्ट्वा हृषितः अस्मि । भयेन च प्रव्यथितं मनः मे ।
இதற்கு முன் ஒருபொழுதும் உங்களுடைய இந்த விச்வரூபத்தை என்னாலோ, மற்றவர்களாலோ பார்க்கப்படவில்லை. அவ்வாறே பயத் தினால் என் மனது வியாகூலமடைகிறது.
अतः तदेव मे मम दर्शय हे देव रूपं यत् मत्सखम् । प्रसीद देवेश, जगन्निवास जगतो निवासो जगन्निवासः, हे जगन्निवास ॥ ४५ ॥
ஆகையால் ஹே தேவனே! ஹே தேவேசனே! ஹே ஜகந்நிவா சனே! என்னுடைய நண்பனாகிய எந்த வடிவமுள்ளதோ அந்த வடி வத்தை எனக்குக் காட்டும்படி வேண்டுகிறேன்.
किरीटिनं गदिनं चक्रहस्तमिच्छामि त्वां द्रष्टुमहं तथैव ।
तेनैव रूपेण चतुर्भुजेन सहस्रबाहो भव विश्वमूर्ते ॥ ४६ ॥
கிரீடினம் கதினம் சக்ரஹஸ்தமிச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் த்தைவ ।
தேனைவ ரூபேண சதுர்புஜேன ஸஹஸ்ரபாஹோ பவ விச்வமூர்தே ॥ 46 ॥
किरीटिनं किरीटवन्तं तथा गदिनं गदावन्तं चक्रहस्तम् इच्छामि त्वां प्रार्थये त्वां द्रष्टुम् अहं तथैव, पूर्ववत् इत्यर्थः ।
முன்பு போல் கிரீடத்தை உடையவராகவும், கதையை உடையவ ராகவும், சக்கிரத்தை உடையவராகவும் பார்க்க விரும்பி உங்களை பிரார்த்திக்கிறேன் என்பது பொருள்.
यतः एवम् , तस्मात् तेनैव रूपेण वसुदेवपुत्ररूपेण चतुर्भुजेन, सहस्रबाहो वार्तमानिकेन विश्वरूपेण, भव विश्वमूर्ते ; उपसंहृत्य विश्वरूपम् , तेनैव रूपेण भव इत्यर्थः ॥ ४६ ॥
எதனால் இவ்வாறோ அதனால் ஹே ஆயிரம் கைகளை உடை யவரே! விஷ்வமூர்த்தியே! தாங்கள் இப்பொழுது இருக்கும் விச்வரூப வடிவத்தைத் திரும்ப பெற்றுக்கொண்டு நான்கு கைகளையுடைய வசு தேவருடைய மகன் ரூபத்தில் இருப்பீராக. என்பது பொருள்.
अर्जुनं भीतम् उपलभ्य, उपसंहृत्य विश्वरूपम् , प्रियवचनेन आश्वासयन् —
பயந்த அர்ஜுனனைப் பார்த்து விஷ்வரூபத்தை திரும்ப பெற் றுக்கொண்டு பிரியமான வார்த்தைகளால் தேற்றுகிறவராய்-
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவான் கூறினார்-
मया प्रसन्नेन तवार्जुनेदं रूपं परं दर्शितमात्मयोगात् ।
तेजोमयं विश्वमनन्तमाद्यं यन्मे त्वदन्येन न दृष्टपूर्वम् ॥ ४७ ॥
மயா ப்ரஸந்நேன தவார்ஜுநேதம் ரூபம் பரம் தர்சிதமாத்மயோகாத் ।
தேஜோமயம் விச்வமனந்தமாத்யம் யன்மே த்வதந்ன்யேன ந த்ருஷ்டபூர்வம் ॥ 47 ॥
मया प्रसन्नेन, प्रसादो नाम त्वयि अनुग्रहबुद्धिः, तद्वता प्रसन्नेन मया तव हे अर्जुन, इदं परं रूपं विश्वरूपं दर्शितम् आत्मयोगात् आत्मनः ऐश्वर्यस्य सामर्थ्यात् । तेजोमयं तेजःप्रायं विश्वं समस्तम् अनन्तम् अन्तरहितं आदौ भवम् आद्यं यत् रूपं मे मम त्वदन्येन त्वत्तः अन्येन केनचित् न दृष्टपूर्वम् ॥ ४७ ॥
ஹே அர்ஜுனனே! உன்னிடம் எனக்கு உள்ள அனுக்கிரஹ புத் தியினால் பிரசன்னமடைந்த என்னால் என்னுடைய ஐஸ்வர்யத்தி னால் தேஜோமயமான விஷ்வமாயும், முடிவற்றதாயும், ஆதி அற்றதா யும் உள்ள எந்த ரூபம் உள்ளதோ அது என்னுடையது. உன்னைத் தவிர மற்றொருவராலும் பார்க்கப்படவில்லை.
आत्मनः मम रूपदर्शनेन कृतार्थ एव त्वं संवृत्तः इति तत् स्तौति —
என்னுடைய (விஷ்வ) ரூப தர்சனத்தால் நீ கிருதார்த்தனாகி விட்டாய் என்று அதை துதி செய்கிறார்.
न वेदयज्ञाध्ययनैर्न दानैर्न च क्रियाभिर्न तपोभिरुग्रैः ।
एवंरूपः शक्य अहं नृलोके द्रष्टुं त्वदन्येन कुरुप्रवीर ॥ ४८ ॥
ந வேத-யக்ஞாத்யயனைர் ந தானைர் ந ச க்ரியாபிர் ந தபோபிருக்ரை: ।
ஏவம்ரூப: சக்ய அஹம் ந்ருலோகே த்ரஷ்டும் த்வதன்யேன குருப்ரவீர ॥ 48 ॥
न वेदयज्ञाध्ययनैः चतुर्णामपि वेदानाम् अध्ययनैः यथावत् यज्ञाध्ययनैश्च ।
நான்கு வேதங்களைப் படிப்பதினாலேயோ யக்ஞங்களைப் படிப்ப தினாலேயோ தானங்களைச் செய்வதினாலோ
वेदाध्ययनैरेव यज्ञाध्ययनस्य सिद्धत्वात् पृथक् यज्ञाध्ययनग्रहणं यज्ञविज्ञानोपलक्षणार्थम् ।
வேதம் அத்யயனம் (படிப்பதினாலேயோ) யக்ஞத்தின் படிப்பும் படித்ததாகும். அப்படி இருக்கும்பொழுது தனியாக யக்ஞத்தின் படிப்பைக் கூறி இருப்பது யக்ஞங்களுடைய அர்த்தத்தை அறிதலாகும் என்பது யக்ஞ அறிவின் உபலக்ஷணமாகும்.
तथा न दानैः तुलापुरुषादिभिः, न च क्रियाभिः अग्निहोत्रादिभिः श्रौतादिभिः, न अपि तपोभिः उग्रैः चान्द्रायणादिभिः उग्रैः घोरैः, एवंरूपः यथादर्शितं विश्वरूपं यस्य सोऽहम् एवंरूपः न शक्यः अहं नृलोके मनुष्यलोके द्रष्टुं त्वदन्येन त्वत्तः अन्येन कुरुप्रवीर ॥ ४८ ॥
அவ்வாறேஒருவன் நிறைக்கு நிறைதங்கம் முதலியவைகளை தானம் கொடுத்தலாலோ சுருதிகளில் கூறப்பட்ட அக்னி ஹோத்திரம் முதலிய கர்மங்களாலும் சாந்திராயனம் முதலிய கோர தபங்களாலும் முன்னால் உனக்கு காட்டப்பட்ட இவ்வாறான விச்வ ரூபமுடைய நான் காணமுடியாதவன். ஹே குருப்ரவீரனே! நான் இந்த மனித உல கத்தில் உன்னைத் தவிறவேறு யாராலும் காணமுடியாதவன்.
मा ते व्यथा मा च विमूढभावो दृष्ट्वा रूपं घोरमीदृङ्ममेदम् ।
व्यपेतभीः प्रीतमनाः पुनस्त्वं तदेव मे रूपमिदं प्रपश्य ॥ ४९ ॥
மா தே வ்யதா மா ச விமூடபாவோ த்ருஷ்ட்வா ரூபம் கோரமீத்ருங்மமேதம் ।
வ்யபேதபீ: ப்ரீதமனா: புனஸ்த்வம் ததேவ மே ரூபமிதம் ப்ரபச்ய ॥ 49 ॥
मा ते व्यथा मा भूत् ते भयम् , मा च विमूढभावः विमूढचित्तता, दृष्ट्वा उपलभ्य रूपं घोरम् ईदृक् यथादर्शितं मम इदम् । व्यपेतभीः विगतभयः, प्रीतमनाश्च सन् पुनः भूयः त्वं तदेव चतुर्भुजं रूपं शङ्खचक्रगदाधरं तव इष्टं रूपम् इदं प्रपश्य ॥ ४९ ॥
என்னால் காண்பிக்கப்பட்ட இந்த கோரரூபமான என் விச்வரூ பத்தைப் பார்த்து பயத்தை அடையாதே. அவ்வாறேமூடத்தன்மையையும் அடையாதே. மறுபடியும் உனக்குப்பிடித்த நான்கு கைகளும், சங் கு, சக்கிரம், கதையுடன் கூடிய என் இந்த ரூபத்தைப்பார்.
सञ्जय उवाच —
சஞ்சயன் கூறுகிறார்-
इत्यर्जुनं वासुदेवस्तथोक्त्वा स्वकं रूपं दर्शयामास भूयः ।
आश्वासयामास च भीतमेनं भूत्वा पुनःसौम्यवपुर्महात्मा ॥ ५० ॥
இத்யர்ஜுனம் வாஸுதேவஸ் ததோக்த்வா ஸ்வகம் ரூபம் தர்சயாமாஸ பூய: ।
ஆச்வாஸயாமாஸ ச பீதமேனம் பூத்வா புன: ஸௌம்யவபுர்மஹாத்மா ॥ 50 ॥
इति एवम् अर्जुनं वासुदेवः तथाभूतं वचनम् उक्त्वा, स्वकं वसुदेवस्य गृहे जातं रूपं दर्शयामास दर्शितवान् भूयः पुनः । आश्वासयामास च आश्वासितवान् भीतम् एनम् , भूत्वा पुनः सौम्यवपुः प्रसन्नदेहः महात्मा ॥ ५० ॥
வாசுதேவன் இவ்வாறு அர்ஜுனனுக்கு வார்த்தைகளைக் கூறி வசுதேவர் இல்லத்தில் பிறந்த தன்னுடைய ரூபத்தை காண்பித்தார். மஹாத்மாவானவர் மறுபடியும் தன்னுடைய சௌமியமான ரூபத்தை அடைந்து மறுபடியும் (அர்ஜுனனை) தேற்றினார்.
अर्जुन उवाच —
அர்ஜுனன் கூறினார்.
दृष्ट्वेदं मानुषं रूपं तव सौम्यं जनार्दन ।
इदानीमस्मि संवृत्तः सचेताः प्रकृतिं गतः ॥ ५१ ॥
த்ருஷ்ட்வேதம் மானுஷம் ரூபம் தவ ஸௌம்யம் ஜனார்தன ।
இதானீ-மஸ்மி ஸம்வ்ருத்த: ஸ சேதா: ப்ரக்ருதிம் கத: ॥ 51 ॥
दृष्ट्वा इदं मानुषं रूपं मत्सखं प्रसन्नं तव सौम्यं जनार्दन, इदानीम् अधुना अस्मि संवृत्तः सञ्जातः । किम् ? सचेताः प्रसन्नचित्तः प्रकृतिं स्वभावं गतश्च अस्मि ॥ ५१ ॥
ஹே ஜனார்த்தனா! இப்பொழுது நான் தங்களுடைய பிரசன்ன மான முகத்தையும் இனிய நண்பனாகிய மனித வடிவத்தையும் பார்த்து தெளிந்த மனதை உடையவனாகவும், எனது இயற்கையான சுபாவத்தை உடையவனாகவும் இருக்கிறேன்.
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவான் கூறினார்-
सुदुर्दर्शमिदं रूपं दृष्टवानसि यन्मम ।
देवा अप्यस्य रूपस्य नित्यं दर्शनकाङ्क्षिणः ॥ ५२ ॥
ஸுதுர்தர்சமிதம் ரூபம் த்ருஷ்டவாநஸி யன்மம ।
தேவா அப்யஸ்ய ரூபஸ்ய நித்யம் தர்சனகாங்க்ஷிண: ॥ 52 ॥
सुदुर्दर्शं सुष्ठु दुःखेन दर्शनम् अस्य इति सुदुर्दर्शम् , इदं रूपं दृष्टवान् असि यत् मम, देवादयः अपि अस्य मम रूपस्य नित्यं सर्वदा दर्शनकाङ्क्षिणः ; दर्शनेप्सवोऽपि न त्वमिव दृष्टवन्तः, न द्रक्ष्यन्ति च इति अभिप्रायः ॥ ५२ ॥
எந்த என் ரூபத்தை பார்ப்பதற்கு மிகக்கடினமோ அதை நீ பார்த் திருக்கிறாய். தேவர்களும் கூட அதை என்னுடைய இந்த ரூபத்தை எப்பொழுதும் பார்ப்பதற்கு இச்சிக்கிறார்கள். அவர்கள் பார்ப்பதற்கு இச்சிப்பவர்களாய் இருந்தாலும் உன்னைப் போல் அவர்கள் பார்த்த தில்லை. இனி பார்க்கப் போவதும் இல்லை என்பது அபிப்பிராயம்.
कस्मात् ? —
எதனால்?
नाहं वेदैर्न तपसा न दानेन न चेज्यया ।
शक्य एवंविधो द्रष्टुं दृष्टवानसि मां यथा ॥ ५३ ॥
நாஹம் வேதைர் ந தபஸா ந தானேன ந சேஜ்யயா ।
சக்ய ஏவம் விதோ த்ரஷ்டும் த்ரஷ்டவானஸி மாம் யதா ॥ 53 ॥
न अहं वेदैः ऋग्यजुःसामाथर्ववेदैः चतुर्भिरपि, न तपसा उग्रेण चान्द्रायणादिना, न दानेन गोभूहिरण्यादिना, न च इज्यया यज्ञेन पूजया वा शक्यः एवंविधः यथादर्शितप्रकारः द्रष्टुं दृष्टावान् असि मां यथा त्वम् ॥ ५३ ॥
நீ எவ்வாறு என்னைப் பார்த்தாயோ அந்த என்னுடைய ரூபத்தை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களாலும், சாந்திராயனம் முதலிய கடினமான தபசாலும், பசு, நிலம், தங்கம் இவைகளை தானம் செய்வதாலும் யக்ஞத்தினாலோ, (பூஜையாலோ) அறியமுடியாது. பார்க்கமுடியாது.
कथं पुनः शक्यः इति उच्यते —
மேலும் எவ்வாறு முடியும் என்பதைக் கூறுகிறார்-
भक्त्या त्वनन्यया शक्य अहमेवंविधोऽर्जुन ।
ज्ञातुं द्रष्टुं च तत्त्वेन प्रवेष्टुं च परन्तप ॥ ५४ ॥
பக்த்யா த்வநன்யயா சக்ய அஹ-மேவம் விதோஅர்ஜுன ।
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேன ப்ரவேஷ்டும் ச பரந்தப ॥ 54 ॥
भक्त्या तु किंविशिष्टया इति आह —
பக்தியினால் காணப்படுவீர்களெனில் எவ்வித பக்தியினால் காணத்தக்கவர் எனில்-
अनन्यया अपृथग्भूतया, भगवतः अन्यत्र पृथक् न कदाचिदपि या भवति सा त्वनन्या भक्तिः । सर्वैरपि करणैः वासुदेवादन्यत् न उपलभ्यते यया, सा अनन्या भक्तिः, तया भक्त्या शक्यः अहम् एवंविधः विश्वरूपप्रकारः हे अर्जुन, ज्ञातुं शास्त्रतः । न केवलं ज्ञातुं शास्त्रतः, द्रष्टुं च साक्षात्कर्तुं तत्त्वेन तत्त्वतः, प्रवेष्टुं च मोक्षं च गन्तुं परन्तप ॥ ५४ ॥
ஹே அர்ஜுன! பகவானைத் தவிர வேறு ஒரு வஸ்துவில் எப்பொ ழுதும் பக்தி ஏற்படாதோ அது அநந்ய பக்தி. அவ்வாறேஎந்த பக்தியி னால் இந்திரியங்கள் எல்லாம் வாசுதேவனைத் தவிர வேறு ஒன்றை யும் அறிவதில்லையோ அதுவே அனன்ய பக்தி. இந்த விதமான பக்தி விச்வரூபத்துடன் உள்ள நான் சாஸ்திர மூலமாகவே அறியப்படுகி றேன். ஹே பரந்தப! சாஸ்திரங்களால் என் விச்வரூபத்தை அறிவது மாத்திரமல்ல உள்ளபடி சாக்ஷாத்காரம் அடையவும் மோக்ஷத்தை அடையவும் முடியும்.
अधुना सर्वस्य गीताशास्त्रस्य सारभूतः अर्थः निःश्रेयसार्थः अनुष्ठेयत्वेन समुच्चित्य उच्यते —
இப்பொழுது கீதாசாஸ்திரத்தின் முழுவதின் சாரமான மோக்ஷத்தை அடைவதற்கான அனுஷ்ட்டிக்கப்படவேண்டியவை களை திரட்டிக் கூறுகிறார்-
मत्कर्मकृन्मत्परमो मद्भक्तः सङ्गवर्जितः ।
निर्वैरः सर्वभूतेषु यः स मामेति पाण्डव ॥ ५५ ॥
மத்கர்மக்ருன் மத்பரமோ மத்பக்த: ஸங்கவர்ஜித: ।
நிர்வைர: ஸர்வபூதே ஷு ய: ஸு மாமேதி பாண்டவ ॥ 55 ॥
मत्कर्मकृत् मदर्थं कर्म मत्कर्म, तत् करोतीति मत्कर्मकृत् । मत्परमः — करोति भृत्यः स्वामिकर्म, न तु आत्मनः परमा प्रेत्य गन्तव्या गतिरिति स्वामिनं प्रतिपद्यते ; अयं तु मत्कर्मकृत् मामेव परमां गतिं प्रतिपद्यते इति मत्परमः, अहं परमः परा गतिः यस्य सोऽयं मत्परमः ।
என் பொருட்டு கர்மம் செய்பவர் மத்கர்மக்ருத். வேலைக்காரன் தன் எஜமானுக்காகவே வேலை செய்கிறான். ஆனால் இறந்தபின் எஜமானனை அடைவதில்லை. ஆனால் என் பொருட்டு வேலை செய்பவன் மேலான கதியாகிய என்னையே அடைகிறான் என்பதால் (மத்பரம:) நான் மேலானவன், மேலான கதி ஆகையால்.
तथा मद्भक्तः मामेव सर्वप्रकारैः सर्वात्मना सर्वोत्साहेन भजते इति मद्भक्तः ।
அவ்வாறு என்னையே எல்லாவிதமாகவும், எல்லா இந்திரியமூல மாகவும் மிகவும் உற்காசமாக தொழுகிறான் என்பதால் மத்பக்த: (என் னுடைய பக்தன்)
सङ्गवर्जितः धनपुत्रमित्रकलत्रबन्धुवर्गेषु सङ्गवर्जितः सङ्गः प्रीतिः स्नेहः तद्वर्जितः ।
செல்வம் புத்திரன், நண்பன், மனைவி, பந்துக்கள் இவர்களிடத் தில் ஆசை (பற்று) அற்று இருத்தல் சங்கவர்ஜித: (பற்றில்லாதவன்)
निर्वैरः निर्गतवैरः सर्वभूतेषु शत्रुभावरहितः आत्मनः अत्यन्तापकारप्रवृत्तेष्वपि ।
எல்லாப் பிராணிகளிடத்தும் அவ்வாறேதன்னை மிகவும் கொடுமை செய்பவனாய் இருப்பினும் அவனிடத்தும் விரோதபாவம் இல்லாமல் இருப்பவன். நிர்வைர: (விரோதத்தன்மை இல்லாமல் இருப்பவன்)
यः ईदृशः मद्भक्तः सः माम् एति, अहमेव तस्य परा गतिः, न अन्या गतिः काचित् भवति । अयं तव उपदेशः इष्टः मया उपदिष्टः हे पाण्डव इति ॥ ५५ ॥
எவன் இவ்விதமான பக்தனோ அதனால் அவன் என்னையே அடைகிறான். நானே அவர்களுடைய மேலான கதி (அடையும் இடம்) வேறு ஒரு கதி கிடையாது. ஹே பாண்டவ! உன்பொருட்டு இந்த பிரியமான உபதேசமானது என்னால் உபதேசம் செய்யப்பட்டது.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये एकादशोऽध्यायः ॥
ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே விச்வரூபதர் சனம் நாம ஏகாதசோத்யாய:
द्वितीयाध्यायप्रभृतिषु विभूत्यन्तेषु अध्यायेषु परमात्मनः ब्रह्मणः अक्षरस्य विध्वस्तसर्वोपाधिविशेषस्य उपासनम् उक्तम् ।
இரண்டாவது அத்தியாயத்திலிருந்து விபூதி அத்யாயம் (10வது அத்யாயம் வரையிலும்) எல்லா விசேஷணங்களும் அற்ற அக்ஷரபி ரஹ்மமாகிய பரமாத்மாவின் உபாசனை கூறப்பட்டது.
सर्वयोगैश्वर्यसर्वज्ञानशक्तिमत्सत्त्वोपाधेः ईश्वरस्य तव च उपासनं तत्र तत्र उक्तम् ।
எல்லா யோகம், ஐஸ்வர்யம், எல்லா ஞானசக்தி சத்வ உபாதியை உடைய ஈஸ்வரராகிய உங்களின் உபாசனையானது அங்கு, அங்கு சொல்லப்பட்டது.
विश्वरूपाध्याये तु ऐश्वरम् आद्यं समस्तजगदात्मरूपं विश्वरूपं त्वदीयं दर्शितम् उपासनार्थमेव त्वया । तच्च दर्शयित्वा उक्तवानसि ‘मत्कर्मकृत्’ (भ. गी. ११ । ५५) इत्यादि । अतः अहम् अनयोः उभयोः पक्षयोः विशिष्टतरबुभुत्सया त्वां पृच्छामि इति —
விச்வரூப அத்யாயத்தில் (11வது அத்தியாயத்தில்) உபாசனை யின் பொருட்டு ஐஸ்வரியத்துடன் கூடிய எல்லா ஜகத்திற்கும் ஆதியாய் உள்ள உங்களது விச்வரூபத்தைக் காட்டினீர்கள். அதைக்காண்பித்து இவ்வாறு ”மத்கர்மக்ருத்” முதலியவைகளால் கூறினீர்கள். ஆகையால் இவ்விரண்டு பக்ஷங்களுள் (கோடிகளுள்) எது சிறந்தது என்று அறிவதில் இச்சை உடையவனாகி உங்களைக் கேட்கிறேன் என்று
अर्जुन उवाच —
அர்ஜுனன் கூறலானான்
एवं सततयुक्ता ये भक्तास्त्वां पर्युपासते ।
ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमाः ॥ १ ॥
ஏவம் ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாம் பர்யுபாஸதே ।
யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோகவித்தமா: ॥ 1 ॥
एवम् इति अतीतानन्तरश्लोकेन उक्तम् अर्थं परामृशति ‘मत्कर्मकृत्’ (भ. गी. ११ । ५५) इत्यादिना ।
இவ்வாறு என்று கூறிய பதத்தால் மத்கர்மக்ருத் என்று தொடங் கிய முன் சுலோகத்தின் அர்த்தமானது குறிப்பிடப்படுகிறது.
एवं सततयुक्ताः, नैरन्तर्येण भगवत्कर्मादौ यथोक्ते अर्थे समाहिताः सन्तः प्रवृत्ता इत्यर्थः । ये भक्ताः अनन्यशरणाः सन्तः त्वां यथादर्शितं विश्वरूपं पर्युपासते ध्यायन्ति ।
இவ்வாறு எப்பொழுதும் இடைவிடாமல் முன்பு கூறிய சாதனங் களை அதாவது பகவானின் பொருட்டு செயல்களை செய்வது முதலியவைகளில் மனதை செலுத்தியவர்கள் என்பது பொருள். எந்த பக்தர்கள் மற்றவைகளில் சரணடையாமல் என்னிடத்திலேயே சரணமடைந்தவர்களாய் இருந்துகொண்டு எவ்வாறு காட்டப் பட்டதோ அந்த விச்வரூபத்தைத் தியானிக்கிறார்கள்.
ये चान्येऽपि त्यक्तसर्वैषणाः संन्यस्तसर्वकर्माणः यथाविशेषितं ब्रह्म अक्षरं निरस्तसर्वोपाधित्वात् अव्यक्तम् अकरणगोचरम् । यत् हि करणगोचरं तत् व्यक्तम् उच्यते, अञ्जेः धातोः तत्कर्मकत्वात् ; इदं तु अक्षरं तद्विपरीतम् , शिष्टैश्च उच्यमानैः विशेषणैः विशिष्टम् , तत् ये चापि पर्युपासते,।
அவ்வாறே மூவாசைகளையும் விட்டவர்களும், எல்லா கர்மங்க ளையும் தியாகம் செய்தவர்களுமாகிய மற்றவர்கள் முன்பு சிறப்பித் துக் கூறப்பட்ட எல்லா உபாதிகளற்ற, இந்திரியங்களுக்கெட்டாத (இந் திரியங்களால் அறியமுடியாத) பரபிரஹ்மமாகிய அக்ஷரத்தை மற்ற வர்கள் உபாசிக்கிறார்கள். இந்திரியங்களுக்கு புலப்படுவது வியக்தம். புலப்படாதது அவ்யக்தம். அவ்வாறு இந்த அக்ஷர பிரஹ்மம் அவ்யக்தம். இவ்வாறு மஹாபுருஷர்களால் கூறப்பட்ட சிறப்புகளுடைய அக்ஷரபிரஹ்ம்மத்தை உபாசனை செய்கிறார்கள்.
तेषाम् उभयेषां मध्ये के योगवित्तमाः ? के अतिशयेन योगविदः इत्यर्थः ॥ १ ॥
இவ்விரு உபாசனை செய்பவர்கள் இடையே எவர்கள் யோகத்தை அறிந்தவர்கள்? எவர்கள் யோகத்தை நன்றாக அறிந்தவர்கள் என்பது பொருள்.
श्रीभगवान् उवाच —
ஸ்ரீபகவான் கூறினார்-
ये तु अक्षरोपासकाः सम्यग्दर्शिनः निवृत्तैषणाः, ते तावत् तिष्ठन्तु ; तान् प्रति यत् वक्तव्यम् , तत् उपरिष्टात् वक्ष्यामः । ये तु इतरे —
எவர்கள் அக்ஷரபிரஹ்மத்தை உபாசிக்கின்றமூவாசைகளற்றவர் களைக் குறித்து நிற்க. அதைக் குறித்து எது சொல்ல வேண்டுமோ அதை மேலே கூறுகிறேன். மற்றவர்களைக் குறித்து.
मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते ।
श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मताः ॥ २ ॥
மய்யாவேச்ய மனோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே ।
ச்ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா: ॥ 2 ॥
मयि विश्वरूपे परमेश्वरे आवेश्य समाधाय मनः, ये भक्ताः सन्तः, मां सर्वयोगेश्वराणाम् अधीश्वरं सर्वज्ञं विमुक्तरागादिक्लेशतिमिरदृष्टिम् , नित्ययुक्ताः अतीतानन्तराध्यायान्तोक्तश्लोकार्थन्यायेन सततयुक्ताः सन्तः उपासते श्रद्धया परया प्रकृष्टया उपेताः, ते मे मम मताः अभिप्रेताः युक्ततमाः इति ।
எந்த பக்தர்கள் விச்வரூப பரமேச்வரனாகிய என்னிடத்தில் மனதை செலுத்தி யோகிகளுக்கெல்லாம் அதீச்வரனாகவும், ராகதுவேஷ முதலிய க்லேசங்களாகிய அக்ஞான திருஷ்ட்டி அற்றவ னாயுமுள்ள என்னுடைய சர்வக்ஞ ரூப பரமேச்வரனைக் குறித்து முன் அத்யாயத்தின் கடைசி ஸ்லோகத்தில் கூறியவாறு எப்பொழுதும் அந்த பரமாகவே இருந்து உத்தமமான சிரத்தை உடையவனாகி உபா சனை செய்கிறாரோ அவன் மிகவும் உத்தமமான யோகி என்று நான் கருதுகிறேன்.
नैरन्तर्येण हि ते मच्चित्ततया अहोरात्रम् अतिवाहयन्ति । अतः युक्तं तान् प्रति युक्ततमाः इति वक्तुम् ॥ २ ॥
இடைவிடாமல் என்னிடத்திலேயே சித்தத்தை செலுத்தியவர்க ளாய் இரவையும், பகலையும் கழிக்கிறார்கள். ஆகையால் அவர் களை மேலான யோகிகள் என்று கூறுதல் பொருத்தமாகும்.
किमितरे युक्ततमाः न भवन्ति ? न ; किन्तु तान् प्रति यत् वक्तव्यम् , तत् शृणु —
அவ்வாறு எனில் மற்றவர்கள் மேலான யோகிகள் ஆகமாட்டார் களா? அவ்வாறு அல்ல. ஆனால் அவர்கள் விஷயத்தில் என்ன கூறவேண்டியதோ அதைக் கூறுகிறேன். அதைக் கேள்-
ये त्वक्षरमनिर्देश्यमव्यक्तं पर्युपासते ।
सर्वत्रगमचिन्त्यं च कूटस्थमचलं ध्रुवम् ॥ ३ ॥
யே த்வக்ஷரமநிர்தேச்யமவ்யக்தம் பர்யுபாஸதே ।
ஸர்வத்ரகமசிந்த்யம் ச கூடஸ்தமசலம் த்ருவம் ॥ 3 ॥
ये तु अक्षरम् अनिर्देश्यम् , अव्यक्तत्वात् अशब्दगोचर इति न निर्देष्टुं शक्यते, अतः अनिर्देश्यम् , अव्यक्तं न केनापि प्रमाणेन व्यज्यत इत्यव्यक्तं पर्युपासते परि समन्तात् उपासते ।
அக்ஷரமானது அவ்யக்தமாய் இருப்பதால் சப்தத்திற்கு விஷய மாகததால் இவ்வாறுதான் இருக்கின்றது என்று நிச்சயித்துக் கூறமுடி யாது. ஆகையால் அது (அநிர்தேச்யம்) எந்த ஒரு பிரமாணத்தாலும் பிரத்யக்ஷமாக்க முடியாததால் (அவ்யக்தம்) ஆக இருக்கிறது. அதை எல்லா விதமாகவும் உபாசிக்கிறார்கள்.
उपासनं नाम यथाशास्त्रम् उपास्यस्य अर्थस्य विषयीकरणेन सामीप्यम् उपगम्य तैलधारावत् समानप्रत्ययप्रवाहेण दीर्घकालं यत् आसनम् , तत् उपासनमाचक्षते ।
உபாசனம் என்றால் சாஸ்திரத்தில் உள்ளவாறு உபாசிக்கவேண் டிய பொருளை விஷயம் செய்வதால் அதன் சமீபத்தை அடைந்து தைலதாரைபோல் ஒரே எண்ணத்தின் பிரவாஹத்துடன் நீண்டகாலம் இருத்தல் எதுவோ அது உபாசனம் எனக் கூறப்படுகிறது.
अक्षरस्य विशेषणमाह उपास्यस्य —
அந்த அக்ஷரத்தினுடைய சிறப்பைக் கூறுகிறார்-
सर्वत्रगं व्योमवत् व्यापि अचिन्त्यं च अव्यक्तत्वादचिन्त्यम् । यद्धि करणगोचरम् , तत् मनसापि चिन्त्यम् , तद्विपरीतत्वात् अचिन्त्यम् अक्षरम् , कूटस्थं ।
ஆகாயம் போல் அது எங்கும் வியாபித்திருக்கிறது. அவ்யக்த மாய் இருப்பதால் அசிந்த்யம் (சிந்திக்க முடியாதது) எது இந்திரியங்க ளுக்கு அறிய முடிவதாய் இருக்கிறதோ அது மனதினாலும் சிந்திக்க முடியும். அதற்கு மாறுபாடாய் அக்ஷரம் இருப்பதால் அசிந்த்யம் என்றால் சிந்திக்கமுடியாதது. அதுவே கூடஸ்த்தம் ஆனது.
दृश्यमानगुणम् अन्तर्दोषं वस्तु कूटम् । ‘कूटरूपम्’ ’ कूटसाक्ष्यम्’ इत्यादौ कूटशब्दः प्रसिद्धः लोके । तथा च अविद्याद्यनेकसंसारबीजम् अन्तर्दोषवत् मायाव्याकृतादिशब्दवाच्यतया ‘मायां तु प्रकृतिं विद्यान्मायिनं तु महेश्वरम्’ (श्वे. उ. ४ । १०)
கூடம் என்பது பார்வைக்கு நல்ல குணமுடையதாகவும் உள்ளே தோஷமுள்ள வஸ்து கூடரூபம், கூடசாக்ஷியம் என்று உலகத்தில் உள்ளோர் கூறுவது பிரசித்தம். அவ்வாறே அவித்யை முதலிய அநேக சம்சாரத்தின் பீஜமாகிய உள்ளே உள்ள தோஷத்துடன் கூடிய பிரகிருதியை மாயா, அவ்யாகிருதம் முதலிய சப்தங்களினால் கூறப்படுகிறது. அவ்வாறேமாயையை பிரகிருதி என்று அறி, மாயை உடையவரை மஹேச்வரன் என்று அறி.
‘मम माया दुरत्यया’ (भ. गी. ७ । १४) इत्यादौ प्रसिद्धं यत् तत् कूटम् , तस्मिन् कूटे स्थितं कूटस्थं तदध्यक्षतया ।
என்னுடைய மாயை தாண்டுவதற்கு அரியது என்பது முதலான வைகளில் பிரசித்தம் எதுவோ அது (கூடம்). அந்த கூடத்தில் நிலைபெற்றிருத்தலால் கூடஸ்தன். அது அதிஷ்ட்டான ரூபமாய் இருக்கிறதால் கூடஸ்த்தன்.
अथवा, राशिरिव स्थितं कूटस्थम् । अत एव अचलम् । यस्मात् अचलम् , तस्मात् ध्रुवम् , नित्यमित्यर्थः ॥ ३ ॥
அல்லது குவியல் போல் இருப்பதால் கூடஸ்த்தம். ஆகையால் தான் அசையாதது. எதனால் அசைவற்றிருக்கிறதோ அதனால் நித்தியம் என்று பொருள்.
संनियम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ।
ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः ॥ ४ ॥
ஸந்நியம்யேந்தரியக்ராமம் ஸர்வத்ர ஸமபுத்தய: ।
தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூதஹிதே ரதா: ॥ 4 ॥
सन्नियम्य सम्यक् नियम्य उपसंहृत्य इन्द्रियग्रामम् इन्द्रियसमुदायं सर्वत्र सर्वस्मिन् काले समबुद्धयः समा तुल्या बुद्धिः येषाम् इष्टानिष्टप्राप्तौ ते समबुद्धयः । ते ये एवंविधाः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः ।
இந்திரியக் கூட்டத்தை நன்றாக அடக்கி, எப்பொழுதும் பிரியமா னது, பிரியமற்றது அடையுங்கால் சமமான புத்தியுடன் இருப்பவர்கள் எவர்களோ அவர்கள் எல்லா பூதங்களுக்கும் நன்மை செய்வதில் ஈடு பாடு உடைய என்னை அடைகிறார்கள்.
न तु तेषां वक्तव्यं किञ्चित् ‘मां ते प्राप्नुवन्ति’ इति ।
அவர்கள் என்னை வந்து அடைகிறார்கள் என்பதைக் கூறவும் வேண்டுமோ?
‘ज्ञानी त्वात्मैव मे मतम्’ (भ. गी. ७ । १८) इति हि उक्तम् । न हि भगवत्स्वरूपाणां सतां युक्ततमत्वमयुक्ततमत्वं वा वाच्यम् ॥ ४ ॥
(ஞானியானவன் எனது ஆத்மாவே என்பது என் அபிப்பிராயம்) என்று கூறப்பட்டது. பகவத் ஸ்வரூபமாகவே உள்ளவர்களை மேலான யோகத்துடன் கூடியவர்கள். மேலான யோகத்தை அடையாதவர்கள் என்று கூறமுடியாது.
किं तु —
ஆனால்
क्लेशोऽधिकतरस्तेषामव्यक्तासक्तचेतसाम् ।
अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिरवाप्यते ॥ ५ ॥
க்லேசோஅதிகதரஸ்தேஷாமவ்யக்தாஸக்த-சேதஸாம் ।
அவ்யக்தா ஹி கதிர்துக்கம் தேஹவத்பிரவாப்யதே ॥ 5 ॥
क्लेशः अधिकतरः, यद्यपि मत्कर्मादिपराणां क्लेशः अधिक एव क्लेशः अधिकतरस्तु अक्षरात्मनां परमात्मदर्शिनां देहाभिमानपरित्यागनिमित्तः । अव्यक्तासक्तचेतसाम् अव्यक्ते आसक्तं चेतः येषां ते अव्यक्तासक्तचेतसः तेषाम् अव्यक्तासक्तचेतसाम् ।
என் பொருட்டு செய்யும் யக்ஞாதி கர்மங்கள் பிரயாசை(கடின) யானதாயினும் எவர்களுடைய சித்தமானது அவ்யக்தமாகிய பரமாத் மாவினிடத்தில் மிகவும் ஈடுபட்டு உள்ளதோ அவர்களுக்கு அக்ஷர பிரஹ்ம்மத்தையே சிந்திக்கும் பரமார்த்த தர்சிகளுக்கு தேஹ அபிமா னத்தை விடவேண்டியதால் அப்படிப்பட்ட அவ்யக்த ஆசக்த்த மனது டையவர்களுக்கு பிரயாசை அதிகமானதாகும்.
अव्यक्ता हि यस्मात् या गतिः अक्षरात्मिका दुःखं सा देहवद्भिः देहाभिमानवद्भिः अवाप्यते, अतः क्लेशः अधिकतरः । अक्षरोपासकानां यत् वर्तनम् , तत् उपरिष्टाद्वक्ष्यामः ॥ ५ ॥
எதனால் அக்ஷராத்மாவானது வெளிப்படையாக இல்லாததி னால் தேஹாபிமானம் உடையவர்களுக்கு மிக்க பிரயாசை செய்ய வேண்டியதாகிறது. அக்ஷரத்தை உபாசிப்பவர்கள் வாழ்க்கையில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை மேலே கூறுகிறோம்.
ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्पराः ।
अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते ॥ ६ ॥
யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா: ।
அனன்யேநைவ யோகேன மாம் த்யாயந்த உபாஸதே ॥ 6 ॥
ये तु सर्वाणि कर्माणि मयि ईश्वरे संन्यस्य मत्पराः अहं परः येषां ते मत्पराः सन्तः अनन्येनैव अविद्यमानम् अन्यत् आलम्बनं विश्वरूपं देवम् आत्मानं मुक्त्वा यस्य सः अनन्यः तेन अनन्येनैव ; केन ? योगेन समाधिना मां ध्यायन्तः चिन्तयन्तः उपासते ॥ ६ ॥
எவர்கள் எல்லா கர்மங்களையும் என்னிடத்தில் அர்ப்பணித்து என்னையே மேலான கதியாய் அநன்ய யோகத்தை மேற்கொண்டு அதாவது விச்வரூபராகிய ஆத்ம தேவரைத் தவிர வேறு ஓர் இடத் தும் ஆலம்பனம் (பற்றுக்கோடு) இல்லாமல் உள்ள அப்படிப்பட்ட அநந்ய சமாதி யோகத்தால் என்னையே உபாசனை செய்கிறார்கள்.
तेषां किम् ? —
அவர்களுக்கு என்ன ஏற்படும்‌?
तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् ।
भवामि न चिरात्पार्थ मय्यावेशितचेतसाम् ॥ ७ ॥
தே ஷா-மஹம் ஸமுத்தர்தா ம்ருத்யு-ஸம்ஸார-ஸாகராத் ।
பவாமி ந சிராத் பார்த மய்யாவேசிதசேதஸாம் ॥ 7 ॥
तेषां मदुपासनैकपराणाम् अहम् ईश्वरः समुद्धर्ता । कुतः इति आह — मृत्युसंसारसागरात् मृत्युयुक्तः संसारः मृत्युसंसारः, स एव सागर इव सागरः, दुस्तरत्वात् , तस्मात् मृत्युसंसारसागरात् अहं तेषां समुद्धर्ता भवामि न चिरात् । किं तर्हि ? क्षिप्रमेव हे पार्थ, मयि आवेशितचेतसां मयि विश्वरूपे आवेशितं समाहितं चेतः येषां ते मय्यावेशितचेतसः तेषाम् ॥ ७ ॥
ஹே பார்த்த! அந்த என்னையே உபாசனை செய்வதிலேயே சிரத்தை உடையவர்களை நான் கரையேற்றுவேன். எதனால் என்று கூறுகிறார். மரணத்துடன் கூடிய சம்சாரக் கடலிருந்து என்றால் மர ணத்துடன் கூடிய சம்சாரம். அது கடல் போல் உள்ளதால் கரையேற முடியாத மரணத்துடன் கூடிய சம்சாரக் கடலிருந்து அவர்களை நான் அதிக காலம் எடுக்காமல் வெகு சீக்கிரமாகவே அவர்களைக் கரை யேற்றுவேன். அவர்கள் விச்வரூப பரமாத்வாகிய என்னிடத்திலேயே சித்தத்தை வைத்தவர்கள்.
यतः एवम् , तस्मात् —
எதனால் இவ்வாறோ அதனால்-
मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय ।
निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः ॥ ८ ॥
மய்யேவ மன ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேசய ।
நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்சய: ॥ 8 ॥
मयि एव विश्वरूपे ईश्वरे मनः सङ्कल्पविकल्पात्मकं आधत्स्व स्थापय । मयि एव अध्यवसायं कुर्वतीं बुद्धिम् आधत्स्व निवेशय ।
விச்வரூப ஈஸ்வரராகிய என்னிடத்தில் சங்கல்ப விகல்பக ஆத்மகமான மனதை என்னிடத்தில் வை. அவ்வாறேநிச்சயம் செய்கின்ற புத்தியையும் என்னிடத்தில் வைத்து விடு.
ततः ते किं स्यात् इति शृणु —
அதனால் உனக்கு என்ன ஏற்படும் என்பதைக் கேள்-
निवसिष्यसि निवत्स्यसि निश्चयेन मदात्मना मयि निवासं करिष्यसि एव अतः शरीरपातात् ऊर्ध्वम् । न संशयः संशयः अत्र न कर्तव्यः ॥ ८ ॥
இந்த சரீரம் வீழ்ந்தபின் நீ என்னுடைய ஆத்மாவாகவே என்னி டத்தில் நிச்சயமாக வாசம் செய்வாய். அதாவது மேலான கதியை அடைவாய். இதில் சந்தேஹமில்லை.
अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् ।
अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय ॥ ९ ॥
அத சித்தம் ஸமாதாதும் ந சக்னோஷி மயி ஸ்திரம் ।
அப்யாஸயோகேன ததோ மாமிச்சாப்தும் தனஞ்ஜய ॥ 9 ॥
अथ एवं यथा अवोचं तथा मयि चित्तं समाधातुं स्थापयितुं स्थिरम् अचलं न शक्नोषि चेत् , ततः पश्चात् अभ्यासयोगेन, चित्तस्य एकस्मिन् आलम्बने सर्वतः समाहृत्य पुनः पुनः स्थापनम् अभ्यासः, तत्पूर्वको योगः समाधानलक्षणः तेन अभ्यासयोगेन मां विश्वरूपम् इच्छ प्रार्थयस्व आप्तुं प्राप्तुं हे धनञ्जय ॥ ९ ॥
நான் எவ்வாறு கூறினேனோ அவ்வாறு என்னிடத்தில் சித்தத்தை ஸ்திரமாக நிலைக்கச் செய்ய உன்னால் முடியவில்லை எனில் அதன் பிறகு ஹே தனஞ்ஜய! அப்பியாச யோகத்தால் அதாவது சித்தத்தை ஏதாவது ஒரு பற்றுக்கோட்டில் நிறுத்தி மறுபடியும், மறுபடியும் நிறுத்தி அப்யாசத்துடன் கூடிய சமாதான லக்ஷணமான யோகமாகிய அப்பியாசத்தால் விச்வரூபராகிய என்னை அடைவதற்குப் பிரார்த்தனை செய்.
अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्मपरमो भव ।
मदर्थमपि कर्माणि कुर्वन्सिद्धिमवाप्स्यसि ॥ १० ॥
அப்யாஸேஅப்-யஸமர்தோஅஸி மத்கர்ம-பரமோ பவ ।
மதர்தமபி கர்மாணி குர்வன் ஸித்தி மவாப்ஸ்யஸி ॥ 10 ॥
अभ्यासे अपि असमर्थः असि अशक्तः असि, तर्हि मत्कर्मपरमः भव मदर्थं कर्म मत्कर्म तत्परमः मत्कर्मपरमः, मत्कर्मप्रधानः इत्यर्थः । अभ्यासेन विना मदर्थमपि कर्माणि केवलं कुर्वन् सिद्धिं सत्त्वशुद्धियोगज्ञानप्राप्तिद्वारेण अवाप्स्यसि ॥ १० ॥
அப்யாஸம் செய்வதற்கு சாமர்த்தியம் இல்லையெனில் என்பொருட்டு உள்ள கர்மங்களையே முக்கியமானதாகச் செய். என்பொருட்டு கர்மம் என்றால் மத்கர்ம. மத்கர்ம பரமோ என்றால் என்பொருட்டு செய்யும் கர்மமே முக்கியமானது. அப்பியாசம் இல்லா விடினும் என் பொருட்டு செய்யும் கர்மங்களை மட்டும் செய்து சித்தசுத்தி யோக ஞானம் அடைவதின் வாயிலாக மேலான சித்தியை அடைவாய்.
अथैतदप्यशक्तोऽसि कर्तुं मद्योगमाश्रितः ।
सर्वकर्मफलत्यागं ततः कुरु यतात्मवान् ॥ ११ ॥
அதைததப்-யசக்தோ அஸி கர்தும் மத்யோக-மாச்ரித: ।
ஸர்வகர்மபலத்யாகம் தத: குரு யதாத்மவான் ॥ 11 ॥
अथ पुनः एतदपि यत् उक्तं मत्कर्मपरमत्वम् , तत् कर्तुम् अशक्तः असि, मद्योगम् आश्रितः मयि क्रियमाणानि कर्माणि संन्यस्य यत् करणं तेषाम् अनुष्ठानं सः मद्योगः, तम् आश्रितः सन् , सर्वकर्मफलत्यागं सर्वेषां कर्मणां फलसंन्यासं सर्वकर्मफलत्यागं ततः अनन्तरं कुरु यतात्मवान् संयतचित्तः सन् इत्यर्थः ॥ ११ ॥
மேலும் இப்பொழுது கூறப்பட்ட என் பொருட்டு கர்மம் செய்வதற் கும் உன்னால் முடியவில்லையெனில், செய்யப்பட்ட கர்மங்களை யெல்லாம் என்னிடத்தில் அர்ப்பணித்து அதை அனுஷ்ட்டானம் செய்யவேண்டும். அதுவே மத்யோகம். அதை ஆச்ரயித்தவனாகவும், மனதை வசம்செய்தவனாகவும் இருந்து எல்லா கர்மங்களின் பலன்க ளையும் தியாகம் செய்வாய் என்பது பொருள்.
इदानीं सर्वकर्मफलत्यागं स्तौति —
இப்பொழுது எல்லாக் கர்மங்களின் பலத்தியாகத்தைப் புகழ்கிறார் -
श्रेयो हि ज्ञानमभ्यासाज्ज्ञानाद्ध्यानं विशिष्यते ।
ध्यानात्कर्मफलत्यागस्त्यागाच्छान्तिरनन्तरम् ॥ १२ ॥
ச்ரேயோ ஹிக்ஞானமப்யாஸாத் ஜ்ஞானாத் த்யானம் விசிஷ்யதே ।
த்யானாத் கர்மபலத்யாகஸ்த்யாகாச்சாந்திரனந்தரம் ॥ 12 ॥
श्रेयः हि प्रशस्यतरं ज्ञानम् । कस्मात् ? विवेकपूर्वकात् अभ्यासात् । तस्मादपि ज्ञानात् ज्ञानपूर्वकं ध्यानं विशिष्यते । ज्ञानवतो ध्यानात् अपि कर्मफलत्यागः, ‘विशिष्यते’ इति अनुषज्यते ।
ஞானமானது சந்தேஹமில்லாமல் மிகவும் மேன்மையானது. எதைவிட என்றால் விவேகமில்லாமல் செய்யும் அப்யாசத்தைக் காட்டிலும் மேலானாது. அதைக் காட்டிலும் ஞானத்துடன் செய்யும் தியா னம் மேலானது. ஞானத்துடன் கூடிய தியானத்தைக் காட்டிலும் கர்மப லத்தியாகமானது மேலானது.
एवं कर्मफलत्यागात् पूर्वविशेषणवतः शान्तिः उपशमः सहेतुकस्य संसारस्य अनन्तरमेव स्यात् , न तु कालान्तरम् अपेक्षते ॥
இவ்வாறு கர்மபலதியாகத்தினால் முன் கூறப்பட்ட சிறப்புகள் (மேன்மை) உடையவனுக்கு காரணத்துடன் சம்சாரமானது உடனேயே ஒழிந்துவிடும். அது காலாந்தரத்தை அபேக்ஷி ப்பதில்லை. (வேண்டுவது இல்லை.)
अज्ञस्य कर्मणि प्रवृत्तस्य पूर्वोपदिष्टोपायानुष्ठानाशक्तौ सर्वकर्मणां फलत्यागः श्रेयःसाधनम् उपदिष्टम् , न प्रथममेव । अतश्च ‘श्रेयो हि ज्ञानमभ्यासात्’ इत्युत्तरोत्तरविशिष्टत्वोपदेशेन सर्वकर्मफलत्यागः स्तूयते, सम्पन्नसाधनानुष्ठानाशक्तौ अनुष्ठेयत्वेन श्रुतत्वात् ।
கர்மத்திலேயே ஈடுபட்டுள்ள அக்ஞானியின் பொருட்டு முன்பு கூறப்பட்ட உபாயங்களை அனுஷ்டானம் செய்வதில் சாமர்த்தியம் இல்லாதவர்களுக்கு எல்லா கர்மபலன்களின் தியாக ரூப மேன்மை தரக்கூடிய ஸாதனமானது உபதேசம் செய்யப்பட்டது. ஆனால் ஆரம்பத்திலேயே அன்று, ஆகையால் ச்ரேயோ ஹி ஞானமப்யாசாத் என்பது முதலியவைகளால் பின்னால் வருவது ஒன்றைக் காட்டிலும் ஒன்று மேலானது என்று கூறி கர்மபல த்யாகத்தைப் புகழ்கிறார். ஏன் எனில் உத்தமமான சாதனங்களை அனுஷ்ட்டானம் செய்வதில் சாமர்த்தியம் இல்லாமையால் இந்த சாதனத்தை அனுஷ்டானம் செய்வதில் ஈடுபாடு ஏற்படுத்துவதற்காக கர்மபலத்யாகத்தைச் சிறப்பித்துக் கூறினார்.
केन साधर्म्येण स्तुतित्वम् ?
எதற்கு சமமாக ஸ்துதிக்கப்படுகிறது.
‘यदा सर्वे प्रमुच्यन्ते’ (क. उ. २ । ३ । १४) इति सर्वकामप्रहाणात् अमृतत्वम् उक्तम् ; तत् प्रसिद्धम् । कामाश्च सर्वे श्रौतस्मार्तकर्मणां फलानि । तत्त्यागे च विदुषः ध्याननिष्ठस्य अनन्तरैव शान्तिः इति ।
“யதா ஸர்வே ப்ரமுச்யந்தே” என்று எல்லா காமனைகளையும் ஒழிப்பதால் அம்ருதத்வம் என்று கூறப்பட்டுள்ளது என்பது பிரசித்தம். காமனைகள் என்றால் சுருதியிலும், ஸ்மிருதியிலும் கூறப்பட்டுள்ள எல்லா கர்மங்களின் பலன்களாகும். ஞான நிஷ்ட்டை உடைய வித்வானுக்கு அதைத் தியாகம் செய்வதினால் உடனேயே சாந்தி ஏற்படும்.
सर्वकामत्यागसामान्यम् अज्ञकर्मफलत्यागस्य अस्ति इति तत्सामान्यात् सर्वकर्मफलत्यागस्तुतिः इयं प्ररोचनार्था ।
(ஞானியினுடைய) சர்வ காம த்யாகமானது அக்ஞானியினு டைய சர்வகர்ம பலத்தியாகத்திற்கு சமானமாக இருக்கிறது என்பது சர்வகர்ம பலத்தியாகத்தில் ருசி ஏற்படுத்துவதற்காக சிறப்பித்துக் கூறப்படுகிறது.
यथा अगस्त्येन ब्राह्मणेन समुद्रः पीतः इति इदानीन्तनाः अपि ब्राह्मणाः ब्राह्मणत्वसामान्यात् स्तूयन्ते,।
எவ்வாறு முன்பு அகஸ்தியர் என்றபிராஹ்மணரால் சமுத்திரமா னது குடிக்கப்பட்டது என்பதை இப்பொழுதுள்ள பிராஹ்மணர்களை யும் பிராஹ்மணத்துவத்தால் சமானமாக புகழ்வதைப் போல் என்க.
एवं कर्मफलत्यागात् कर्मयोगस्य श्रेयःसाधनत्वमभिहितम् ॥ १२ ॥
இவ்வாறு கர்மபலத் தியாகத்தினால் கர்மயோகத்தின் சிறப்பானது முக்திக்கு ஸாதனமாம் என்று உபதேசிக்கப்பட்டது
अत्र च आत्मेश्वरभेदमाश्रित्य विश्वरूपे ईश्वरे चेतःसमाधानलक्षणः योगः उक्तः, ईश्वरार्थं कर्मानुष्ठानादि च ।
இங்கு ஆத்மா ஈஸ்வர பேதத்தை வைத்துக்கொண்டு விச்வரூபத் துடன் கூடிய ஈஸ்வரரிடத்தில் சித்தத்தை ஒருநிலைப் படுத்தும் யோகமானது கூறப்பட்டது. மேலும் ஈஸ்வரன் பொருட்டு கர்மானுஷ்ட் டானம் முதலியவை உபதேசிக்கப்பட்டது.
‘अथैतदप्यशक्तोऽसि’ (भ. गी. १२ । ११) इति अज्ञानकार्यसूचनात् न अभेददर्शिनः अक्षरोपासकस्य कर्मयोगः उपपद्यते इति दर्शयति ; तथा कर्मयोगिनः अक्षरोपासनानुपपत्तिम् ।
(அதைததப்யசக்தோஅஸி) என்று அக்ஞான காரியத்தை சூசக மாக குறிப்பிட்டுள்ளதால் இது அபேத தர்சிகளாகிய அக்ஷர பிரஹ் மத்தை உபதேசிப்பவர்களுக்கு கர்மயோகமானது பொருந்தாது என்று காண்பிக்கிறார். அவ்வாறேபகவான் கர்மயோகிகளுக்கு அக்ஷர பிரஹ்ம்மோபாசனை பொருந்தாது என்பதையும் காண்பிக்கிறார்.
‘ते प्राप्नुवन्ति मामेव’ (भ. गी. १२ । ४) इति अक्षरोपासकानां कैवल्यप्राप्तौ स्वातन्त्र्यम् उक्त्वा, इतरेषां पारतन्त्र्यात् ईश्वराधीनतां दर्शितवान् ‘तेषामहं समुद्धर्ता’ (भ. गी. १२ । ७) इति ।
(தே பிராப்நுவந்தி மாமேவ) என்று அக்ஷர பிரஹ்மத்தை உபாசிப் பவர்களுக்கு கைவல்யம் அடைவதில் சுதந்திரத் தன்மையைக் கூறி மற்றவர்களுக்கு உள்ள பரதந்திரத்தை ஈஸ்வராதீனமாக உள்ள தன் மையை (தே ஷாம் அஹம் சமுத்தர்த்தா) அவர்களை நான் கரையேற் றுவேன் என்று காண்பிக்கிறார்.
यदि हि ईश्वरस्य आत्मभूताः ते मताः अभेददर्शित्वात् , अक्षरस्वरूपाः एव ते इति समुद्धरणकर्मवचनं तान् प्रति अपेशलं स्यात् ।
அந்த கர்மயோகிகள் அவர்கள் ஈஸ்வர ஸ்வரூபமாகவே ஆகிவி டுவதால் அவர்களும் அபேத தர்சிகளாக ஆகிவிடுவதால் அவர்கள் அக்ஷரஸ்வரூபமாகவே ஆகிவிடுகிறார்கள். ஆகையால் அவர்களை நான் கரையேற்றுகிறேன் என்பது பொருந்தாததாகலாம்.
यस्माच्च अर्जुनस्य अत्यन्तमेव हितैषी भगवान् तस्य सम्यग्दर्शनानन्वितं कर्मयोगं भेददृष्टिमन्तमेव उपदिशति ।
எதனால் பகவான் அர்ஜுனனிடத்தில் மிகுந்த நலத்தை விரும்பினாரோ அதனால் அவனுக்கு சம்யக் ஞானத்துடன் கலக்கப்படாத பேத திருஷ்ட்டியுடன் கூடிய கர்மயோகத்தைத் தான் உபதேசித்தார்.
न च आत्मानम् ईश्वरं प्रमाणतः बुद्ध्वा कस्यचित् गुणभावं जिगमिषति कश्चित् , विरोधात् ।
பிரமாணத்தால் ஆத்மாவை ஈஸ்வரன் என்று அறிந்தபின் ஒருவ ருக்கும் கீழ் உள்ளவனாக ஆகமாட்டான். ஏனெனில் சேவகன், தலை வன் என்றவிரோதம் வருவதால்.
तस्मात् अक्षरोपासकानां सम्यग्दर्शननिष्ठानां संन्यासिनां त्यक्तसर्वैषणानाम् ‘अद्वेष्टा सर्वभूतानाम्’ इत्यादिधर्मपूगं साक्षात् अमृतत्वकारणं वक्ष्यामीति प्रवर्तते —
ஆகையால் அக்ஷர பிரஹ்மத்தை உபாசிக்கிறவர்களாயும், சம்யக்தர்சன நிஷ்ட்டர்களாகவும் சந்நியாசிகளாகவும் ஈக்ஷணாதிர யங்களை விட்டவர்களாகவும் உள்ளவர்களுக்கு (அத்வேஷ்ட்டா சர்வ பூதானாம்) முதலிய தர்மங்கள் சாக்ஷாத்தாக அம்ருதத்துவத் திற்கு காரணம் என்பதைக் கூறுகிறேன் என்று ஆரம்பிக்கிறார்-
अद्वेष्टा सर्वभूतानां मैत्रः करुण एव च ।
निर्ममो निरहङ्कारः समदुःखसुखः क्षमी ॥ १३ ॥
அத்வேஷ்டாஸர்வபூதானாம் மைத்ர: கருண ஏவ ச ।
நிர்மமோ நிரஹங்கார: ஸமதுக்கஸுக: க்ஷe ॥ 13 ॥
अद्वेष्टा सर्वभूतानां न द्वेष्टा, आत्मनः दुःखहेतुमपि न किञ्चित् द्वेष्टि, सर्वाणि भूतानि आत्मत्वेन हि पश्यति ।
எல்லாபிராணிகளிடத்தும் அவ்வாறேதனக்கு துக்கம் கொடுப்பவ ரிடத்தும் சிறிதும் துவேஷிக்க மாட்டான். எல்லா பூதங்களையும் ஆத்ம ஸ்வரூபமாகவே காண்பான்.
मैत्रः मित्रभावः मैत्री मित्रतया वर्तते इति मैत्रः । करुणः एव च, करुणा कृपा दुःखितेषु दया, तद्वान् करुणः, सर्वभूताभयप्रदः, संन्यासी इत्यर्थः ।
எல்லோரிடத்தும் மித்ர பாவத்துடன் இருப்பதால் மைத்ரி (நண்பன்). துக்கத்துடன் இருப்பவர்களிடத்தில் கருணை உள்ளவன். அவ்வாறு உள்ளவன் எல்லா பூதங்களுக்கும் அபயம் அளிக்கும் சந்நியாசி என்று பொருள்.
निर्ममः ममप्रत्ययवर्जितः । निरहङ्कारः निर्गताहंप्रत्ययः । समदुःखसुखः समे दुःखसुखे द्वेषरागयोः अप्रवर्तके यस्य सः समदुःखसुखः ।
மமகாரம் அஹங்காரம் என்னும் எண்ணங்களை விட்டவன். சுகதுக்கங்களைச் சமபாவனை கொண்டவன். என்றால் சுகமோ, துக்கமோ அவனுடைய அந்தக்கரணத்தில் ராகதுவே ஷத்தை உண்டாக்காது.
क्षमी क्षमावान् , आक्रुष्टः अभिहतो वा अविक्रियः एव आस्ते ॥ १३ ॥
ஒருவர் ஏசினாலும் அடித்தாலும் மாறுபடாமல் பொறுமையாக உள்ளவன்.
सन्तुष्टः सततं योगी यतात्मा दृढनिश्चयः ।
मय्यर्पितमनोबुद्धिर्यो मद्भक्तः स मे प्रियः ॥ १४ ॥
ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருடநிச்சய: ।
மய்யர்பிதமனோபுத்திர் யோ மத்பக்த: ஸ மே ப்ரிய: ॥ 14 ॥
सन्तुष्टः सततं नित्यं देहस्थितिकारणस्य लाभे अलाभे च उत्पन्नालंप्रत्ययः । तथा गुणवल्लाभे विपर्यये च सन्तुष्टः । सततं योगी समाहितचित्तः । यतात्मा संयतस्वभावः । दृढनिश्चयः दृढः स्थिरः निश्चयः अध्यवसायः यस्य आत्मतत्त्वविषये स दृढनिश्चयः ।
தேஹம் நிலைத்தன் பொருட்டு கிடைத்தாலும், கிடைக்காவிட் டாலும் எப்பொழுதும் போதும் என்றமனப்பான்மையால் சந்தோஷம் உள்ளவன். அவ்வாறேநல்லது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருப்பவன். சமநிலையில் உள்ள சித் தத்தை உடைய யோகி, வசம் செய்யப்பட்ட (மனது) ஸ்வபாவம் உடை யவன் யதாத்மா. ஆத்மதத்துவ விஷயத்தில் திட நிச்சயமுள்ளவன்.
मय्यर्पितमनोबुद्धिः सङ्कल्पविकल्पात्मकं मनः, अध्यवसायलक्षणा बुद्धिः, ते मय्येव अर्पिते स्थापिते यस्य संन्यासिनः सः मय्यर्पितमनोबुद्धिः । यः ईदृशः मद्भक्तः सः मे प्रियः ।
சங்கல்பாத்மகமான மனதையும் நிச்சயாத்மகமான புத்தியையும் என்னிடத்திலேயே நிலைபெறச் செய்த சந்நியாசியே (மயி அர்ப்பித மனோபுத்தி:) எவன் இவ்வாறான பக்தனோ அவன் எனக்குப் பிரியமானவன்.
‘प्रियो हि ज्ञानिनोऽत्यर्थमहं स च मम प्रियः’ (भ. गी. ७ । १७) इति सप्तमे अध्याये सूचितम् , तत् इह प्रपञ्च्यते ॥ १४ ॥
“ப்ரியோ ஹி ஞானினோ அத்யர்த்தமஹம் ஸ ச மம ப்ரிய:” என்று ஏழாவது அத்யாயத்தில் சூசிக்கப்பட்டது, அது இங்கே வர்ணனை செய்யப்பட்டுள்ளது.
यस्मान्नोद्विजते लोको लोकान्नोद्विजते च यः ।
हर्षामर्षभयोद्वेगैर्मुक्तो यः स च मे प्रियः ॥ १५ ॥
யஸ்மான்னோத்விஜதே லோகோ லோகான்னோத்விஜதே ச ய: ।
ஹர்ஷாமர்ஷபயோத்வேகைர்முக்தோ ய: ஸ ச மே ப்ரிய: ॥ 15 ॥
यस्मात् संन्यासिनः न उद्विजते न उद्वेगं गच्छति न सन्तप्यते न सङ्क्षुभ्यति लोकः, तथा लोकात् न उद्विजते च यः,
எந்த சந்நியாசியால் உலகமானது கஷ்டப்படுவதில்லையோ வருத்தப்படுவதில்லையோ தபிக்கப்படுவதில்லையோ அவ்வாறே சந்நியாசியும் இந்த உலகத்தினின்று வருந்துவது (துக்கப்படுவது) இல்லையோ.
हर्षामर्षभयोद्वेगैः हर्षश्च अमर्षश्च भयं च उद्वेगश्च तैः हर्षामर्षभयोद्वेगैः मुक्तः ; हर्षः प्रियलाभे अन्तःकरणस्य उत्कर्षः रोमाञ्चनाश्रुपातादिलिङ्गः, अमर्षः असहिष्णुता, भयं त्रासः, उद्वेगः उद्विग्नता, तैः मुक्तः यः स च मे प्रियः ॥ १५ ॥
மகிழ்ச்சி, பொறாமை, பயம் மேலும் கலக்கம் இவை இல்லாதவ னும் பிரியமானது கிடைத்தலால் அந்தக்கரணத்தில் உத்சாஹம் மயிர் சிர்த்தல், கண்ணீர் விடுதல் முதலியவை சந்தோஷத்தின் அறிகுறி. சஹிப்புத்தன்மை இல்லாமை அமர்ஷ: பயம், உத்வேகம் இவைகளி ருந்து எவன் விடுபடுகிறானோ அவன் எனக்குப் பிரியமானவன்.
अनपेक्षः शुचिर्दक्ष उदासीनो गतव्यथः ।
सर्वारम्भपरित्यागी यो मद्भक्तः स मे प्रियः ॥ १६ ॥
அனபேக்ஷ: சுசிர்தக்ஷ உதாஸீனோ கதவ்யத: ।
ஸர்வாரம்பபரித்யாகீ யோ மத்பக்த: ஸ மே ப்ரிய: ॥ 16 ॥
देहेन्द्रियविषयसम्बन्धादिषु अपेक्षाविषयेषु अनपेक्षः निःस्पृहः । शुचिः बाह्येन आभ्यन्तरेण च शौचेन सम्पन्नः । दक्षः प्रत्युत्पन्नेषु कार्येषु सद्यः यथावत् प्रतिपत्तुं समर्थः ।
தேஹம், இந்திரியம், விஷயம் மேலும் சம்பந்தம் முதலிய அவா உள்ள விஷயங்களில் அவா அற்றிருப்பவர். வெளியிலும், உள்ளே யும் சுத்தமாக இருப்பவர். செய்யவேண்டிய அநேக காரியங்களில் அதில் எது யதார்த்தமாக செய்யவேண்டுமோ அதை நிச்சயம் செய்வ தில் சாமர்த்தியம். (தக்ஷ:)
उदासीनः न कस्यचित् मित्रादेः पक्षं भजते यः, सः उदासीनः यतिः । गतव्यथः गतभयः ।
உதாசீன: என்றால் சிநேகிதன் முதலியவர்களிடத்து பக்ஷபாதம் இல்லாத சந்நியாசி. கதவ்யத: என்றால் பயம் அற்றவன்.
सर्वारम्भपरित्यागी आरभ्यन्त इति आरम्भाः इहामुत्रफलभोगार्थानि कामहेतूनि कर्माणि सर्वारम्भाः, तान् परित्यक्तुं शीलम् अस्येति सर्वारम्भपरित्यागी यः मद्भक्तः सः मे प्रियः ॥ १६ ॥
இகலோக, பரலோக போகம் வேண்டுபவர்கள் காமனைகளை அடைவதற்கு காரணமாகிய கர்மங்களை ஆரம்பிக்காமல் இருப்பதே (சர்வாரம்ப பரித்யாகி) இவ்வாறுள்ளவன் எவனோ அந்த பக்தன் எனக்கு பிரியமானவன்.
किञ्च —
மேலும்
यो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति ।
शुभाशुभपरित्यागी भक्तिमान्यः स मे प्रियः ॥ १७ ॥
யோ ந ஹ்ருஷ்யதி ந த்வேஷ்டி ந சோசதி ந காங்க்ஷதி ।
சுபாசுப-பரித்யாகீ பக்திமான் ய: ஸ மே ப்ரிய: ॥ 17 ॥
यः न हृष्यति इष्टप्राप्तौ, न द्वेष्टि अनिष्टप्राप्तौ, न शोचति प्रियवियोगे, न च अप्राप्तं काङ्क्षति, शुभाशुभे कर्मणी परित्यक्तुं शीलम् अस्य इति शुभाशुभपरित्यागी भक्तिमान् यः सः मे प्रियः ॥ १७ ॥
எவன் ஒருவன் தான் விரும்பியதை அடைந்தால் மிகவும் சந்தோஷப்படமாட்டானோ, அவ்வாறேதான் விரும்பாததை அடைந் தாலும் த்வேஷிக்கமாட்டான். தனக்குப் பிரியமானது நாசம் அடைந் தாலும் வருத்தப்படமாட்டானோ மேலும் கிடைக்காததின் இடத்தில் விருப்பம் கொள்ளமாட்டானோ நல்வினைகள், தீவினைகள் இவை களை முற்றும் துறத்தல் எவன் சாமர்த்தியம் உள்ளவனோ அப்படிப் பட்ட பக்தி உடையவன் எனக்குப் பிரியமானவன்.
समः शत्रौ च मित्रे च तथा मानापमानयोः ।
शीतोष्णसुखदुःखेषु समः सङ्गविवर्जितः ॥ १८ ॥
ஸம: சத்ரௌ ச மித்ரே ச ததா மானாபமானயோ: ।
சீதோஷ்ண ஸுகது:கேஷு ஸம: ஸங்கவிவர்ஜித: ॥ 18 ॥
समः शत्रौ च मित्रे च, तथा मानापमानयोः पूजापरिभवयोः, शीतोष्णसुखदुःखेषु समः, सर्वत्र च सङ्गविवर्जितः ॥ १८ ॥
சத்ருக்களிடத்தும், மித்திரர்களிடத்தும் (நண்பர்களிடத்தும்) அவ்வாறே மதிப்பதிலும், அவமதிப்பிலும், குளிரிலும் வெப்பத்திலும், சுகத்திலும் துக்கத்திலும் சமபாவனையுடன் எதிலும் பற்றற்றவன்.
किञ्च —
மேலும்
तुल्यनिन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् ।
अनिकेतः स्थिरमतिर्भक्तिमान्मे प्रियो नरः ॥ १९ ॥
துல்யநிந்தா ஸ்துதிர்-மௌனீ ஸந்துஷ்டோ யேன கேனசித் ।
அனிகேத: ஸ்திரமதிர்-பக்திமான்மே ப்ரியோ நர: ॥ 19 ॥
तुल्यनिन्दास्तुतिः निन्दा च स्तुतिश्च निन्दास्तुती ते तुल्ये यस्य सः तुल्यनिन्दास्तुतिः । मौनी मौनवान् संयतवाक् । सन्तुष्टः येन केनचित् शरीरस्थितिहेतुमात्रेण ।
ஒருவர் நிந்தை செய்தாலும், துதி செய்தாலும் இரண்டையும் சம மாக பார்ப்பவன். மௌநீ. அதாவது வாக்கை அடக்கியவன். எவ்வகை யாயிலும் சரீரத்தின் இருப்பு மாத்திரத்தில் சந்தோஷமடைபவன்.
तथा च उक्तम् —
அவ்வாறேகூறப்பட்டுள்ளது.
‘येन केनचिदाच्छन्नो येन केनचिदाशितः । यत्र क्वचन शायी स्यात्तं देवा ब्राह्मणं विदुः’ (मो. ध. २४५ । १२) इति ।
எதையாவது உடுத்திக் கொள்வான். எதையாயினும் சாப்பிடு வான். எங்காவது படுப்பான். அப்படிப்பட்டவனை தேவர்கள் பிராஹ்ம ணர்கள் என்று அறிகிறார்கள். (மஹாபாரதம்- சாந்தி) என்று.
किञ्च, अनिकेतः निकेतः आश्रयः निवासः नियतः न विद्यते यस्य सः अनिकेतः, ‘नागारे’ ( ? ) इत्यादिस्मृत्यन्तरात् । स्थिरमतिः स्थिरा परमार्थविषया यस्य मतिः सः स्थिरमतिः । भक्तिमान् मे प्रियः नरः ॥ १९ ॥
அவ்வாறேஎவனுக்கு இங்கு தான் வசிக்கவேண்டும் என்றநியதி இல்லையோ அவன் “(அநிகேத:)” ஸ்மிருதியிலும் “(அநாகார:)” என்று கூறப்பட்டுள்ளது. பரமார்த்த வஸ்து விஷயத்தில் ஸ்திரமான புத்தி எவ னுக்குள்ளதோ அவன் “(ஸ்திரமதி:)” இவ்வாறுள்ள எனக்கு பிரியமானவன்.
‘अद्वेष्टा सर्वभूतानाम्’ (भ. गी. १२ । १३), इत्यादिना अक्षरोपासकानां निवृत्तसर्वैषणानां सन्यासिनां परमार्थज्ञाननिष्ठानां धर्मजातं प्रक्रान्तम् उपसंह्रियते —
எல்லா ஈ ஷணைகளையும் அற்றவராயும், பரமார்த்த ஞான நிஷ்டை உடையவராயும், அக்ஷரத்தை உபாசிக்கின்றவராயும் உள்ள சந்நியாசிகளுடைய ஒழுக்கத்தை (அத்வேஷ்டா ஸர்வபூதானாம்) என்ற ஸ்லோகத்திலிருந்து ஆரம்பித்து இப்பொழுது முடிக்கின்றார்.
ये तु धर्म्यामृतमिदं यथोक्तं पर्युपासते ।
श्रद्दधाना मत्परमा भक्तास्तेऽतीव मे प्रियाः ॥ २० ॥
யே து தர்ம்யாம்ருத-மிதம் யதோக்தம் பர்யுபாஸதே ।
ச்ரத்ததானா மத்பரமா பக்தாஸ்தே அதீவ மே ப்ரியா: ॥ 20 ॥
ये तु संन्यासिनः धर्म्यामृतं धर्मादनपेतं धर्म्यं च तत् अमृतं च तत् , अमृतत्वहेतुत्वात् , इदं यथोक्तम् ‘अद्वेष्टा सर्वभूतानाम्’ (भ. गी. १२ । १३) इत्यादिना पर्युपासते अनुतिष्ठन्ति श्रद्दधानाः सन्तः मत्परमाः यथोक्तः अहं अक्षरात्मा परमः निरतिशया गतिः येषां ते मत्परमाः, मद्भक्ताः च उत्तमां परमार्थज्ञानलक्षणां भक्तिमाश्रिताः, ते अतीव मे प्रियाः ।
எந்த சந்நியாசியானவர் தர்மத்திலிருந்து நழுவாதவராகவும், மரணமற்றதன்மைக்கு ஹேதுவான அம்ருதம் என்னும் தர்மத்தை (அத்வேஷ்டா சர்வபூதானாம்) என்று கூறியபடி சிரத்தையுடன் அனுஷ்ட்டானம் செய்பவர்கள். கூறப்பட்டவாறு நான் அக்ஷர ஆத்மா, நானே மேலான கதி என்று இருப்பவர்கள் எவர்களோ அவர்கள் மத்பரமா.
உத்தமமான பரமார்த்த ஞான லக்ஷணத்துடன் கூடிய பக்தியை ஆச்ரயித்தவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.
‘प्रियो हि ज्ञानिनोऽत्यर्थम्’ (भ. गी. ७ । १७) इति यत् सूचितं तत् व्याख्याय इह उपसंहृतम् ‘भक्तास्तेऽतीव मे प्रियाः’ इति ।
“(ப்ரியோ ஹி ஞானினோ அத்யர்த்தம்)” என்று எது குறிப்பிடப் பட்டதோ அது இங்கு வியாக்யானம் செய்து “(பக்தாஸ்தே அதீவ மே ப்ரியா:)” என்றவாக்கியத்தினால் அதை முடிக்கிறார்.
यस्मात् धर्म्यामृतमिदं यथोक्तमनुतिष्ठन् भगवतः विष्णोः परमेश्वरस्य अतीव प्रियः भवति, तस्मात् इदं धर्म्यामृतं मुमुक्षुणा यत्नतः अनुष्ठेयं विष्णोः प्रियं परं धाम जिगमिषुणा इति वाक्यार्थः ॥ २० ॥
எதனால் இந்த தர்மத்துடன் கூடிய அம்ருதத்தை உபதேசம் செய் தபடி அநுஷ்டிப்பதால் பகவானாகிய விஷ்ணு எனப்படும் பரமேச்வர னாகிய எனக்கு மிகவும் பிரியமேற்படுகிறதோ அதனால் விஷ்ணுவிற் குப் பிரியமான பரமபதத்தை அடைவதற்கு இச்சை உள்ள முமூக்ஷ வானவன் இந்த தர்மத்துடன் கூடிய அம்ருதத்தை முயற்சியுடன் அநுஷ்ட்டானம் செய்யவேண்டும்.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये द्वादशोऽध्यायः ॥
ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே பக்தியோகோ நாம த்வாதசோத்யாய:
सप्तमे अध्याये सूचिते द्वे प्रकृती ईश्वरस्य — त्रिगुणात्मिका अष्टधा भिन्ना अपरा, संसारहेतुत्वात् ; परा च अन्या जीवभूता क्षेत्रज्ञलक्षणा ईश्वरात्मिका
ஏழாவது அத்யாயத்தில் ஈஸ்வரனுக்கு இருவித ப்ரகிருதி காண்பிக்கப்பட்டது. முதலில் எட்டுவிதமாக பிரிக்கப்பட்ட முக்குண ஸ்வரூபமான பிரகிருதியானது சம்சாரத்திற்குக் காரணமாய் இருப்பதால் அபரா (தாழ்மையானது). மேலும் மற்ற பரா(மேலான) பிரகிருதி ஜீவஸ்வரூபமானது மற்றும் ஈஸ்வர ஸ்வரூபமாகிய க்ஷேத்ரக்ஞ ஸ்வரூபன்.
याभ्यां प्रकृतिभ्यामीश्वरः जगदुत्पत्तिस्थितिलयहेतुत्वं प्रतिपद्यते । तत्र क्षेत्रक्षेत्रज्ञलक्षणप्रकृतिद्वयनिरूपणद्वारेण तद्वतः ईश्वरस्य तत्त्वनिर्धारणार्थं क्षेत्राध्यायः आरभ्यते ।
இவ்விருவித பிரகிருதியினால் ஈஸ்வரன் உலகின் உற்பத்தி, ஸ்திதி, லயத்திற்குக் காரணத் தன்மையை அடைகிறான். இனி க்ஷேத்ரம்,க்ஷேத்ரக்ஞன் என்ற லக்ஷணங்களுடன் கூடிய இரு பிர கிருதி நிருபணத்தின் மூலமாக ஈஸ்வரனுடைய தத்துவத்தை நிச்ச யமாக நிர்ணயம் செய்யும் பொருட்டு க்ஷேத்ரக்ஷேத்ரக்ஞ அத்தி யாயமானது ஆரம்பிக்கப்படுகிறது.
अतीतानन्तराध्याये च ‘अद्वेष्टा सर्वभूतानाम्’ (भ. गी. १२ । १३) इत्यादिना यावत् अध्यायपरिसमाप्तिः तावत् तत्त्वज्ञानिनां संन्यासिनां निष्ठा यथा ते वर्तन्ते इत्येतत् उक्तम् । केन पुनः ते तत्त्वज्ञानेन युक्ताः यथोक्तधर्माचरणात् भगवतः प्रिया भवन्तीति एवमर्थश्च अयमध्यायः आरभ्यते ।
சென்ற அத்தியாயத்தில் அத்வேஷ்ட்டா சர்வ பூதானாம், என் பது முதலியவைகளால் அத்யாயம் முடியும் வரையிலும் தத்துவ ஞானிகளாகிய சந்நியாசிகளின் நிஷ்ட்டை எவ்வாறு உள்ளன என் பது கூறப்பட்டது. மறுபடியும் எந்த தத்துவ ஞானத்தை உடையவர் களாகி கூறப்பட்ட தர்மத்தை கடைப்பிடிப்பதனால் பகவானுக்கு பிரியமுடையவர்களாக ஆவார்கள் என்பதின் பொருட்டு இந்த அத்யாயமானது ஆரம்பிக்கப்படுகிறது.
प्रकृतिश्च त्रिगुणात्मिका सर्वकार्यकरणविषयाकारेण परिणता पुरुषस्य भोगापवर्गार्थकर्तव्यतया देहेन्द्रियाद्याकारेण संहन्यते । सोऽयं सङ्घातः इदं शरीरम् । तदेतत् भगवान् उवाच —
முக்குணாத்மகமான பிரக்ருதி எல்லாக் காரிய, கரண விஷயா காரமாக பரிணாமம் அடைந்த புருஷனுக்கு போகத்தை அடைவதற்கும், மோக்ஷத்தை அடைவதற்கும் வேண்டியவை களை செய்ய வேண்டியதிருப்பதால் தேஹ, இந்திரியம் முதலிய ஆகாரமாக ஒன்று சேர்க்கப்படுகிறது. இந்த சேர்க்கைதான் இந்த சரீரம் அதை வர்ணனை செய்வதற்காக-
श्रीभगवानुवाच —
ஸ்ரீ பகவான் கூறுகிறார்
इदं शरीरं कौन्तेय क्षेत्रमित्यभिधीयते ।
एतद्यो वेत्ति तं प्राहुः क्षेत्रज्ञ इति तद्विदः ॥ १ ॥
இதம் சரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபிதீயதே ।
ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு க்ஷேத்ரக்ஞ இதி தத்வித: ॥ 1 ॥
इदम् इति सर्वनाम्ना उक्तं विशिनष्टि शरीरम् इति ।
இதம்=இந்த, என்று சர்வநாம சப்தத்தால் கூறப்பட்டதை சரீரம் என்று விசேஷமாகக் கூறுகிறார்.
हे कौन्तेय, क्षतत्राणात् , क्षयात् , क्षरणात् , क्षेत्रवद्वा अस्मिन् कर्मफलनिष्पत्तेः क्षेत्रम् इति — इतिशब्दः एवंशब्दपदार्थकः — क्षेत्रम् इत्येवम् अभिधीयते कथ्यते ।
ஹே கௌந்தேய! கெடுதியினின்றும் பாதுகாக்கப்படுவதா லும், க்ஷணத்தில் அழிவதாலும், தேய்வதாலும் மேலும் வயல்க ளில் விவசாயம் செய்வதால் ஏற்படும் நெல் போன்ற தானியங்க ளின் பலன் ஏற்படுவது போல் இந்த சரீரத்திலும் கர்மபலன்கள் ஏற் படுவதால் க்ஷேத்ரம் என்று கூறப்படுகிறது. இதி என்ற சப்தமான தின் பொருள் க்ஷேத்ரம் என்று கூறப்படுகிறது.
एतत् शरीरं क्षेत्रं यः वेत्ति विजानाति, आपादतलमस्तकं ज्ञानेन विषयीकरोति, स्वाभाविकेन औपदेशिकेन वा वेदनेन विषयीकरोति विभागशः, तं वेदितारं प्राहुः कथयन्ति क्षेत्रज्ञः इति ।
இந்த சரீரம் க்ஷேத்ரம் என்று எவன் அறிகிறானோ, பாத முதல் தலைவரை எவன் ஞானத்தினால் அறிகிறானோ, ஸ்வாபாவிகமாக வோ, உபதேசத்தினாலோ அல்லது அனுபவத்தினாலோ (க்ஷேத் ரக்ஞனை விட வேறு என்று) பிரித்து அறிகின்றானோ அவனை க்ஷேத்ரக்ஞ: என்று கூறுகிறார்கள்.
इतिशब्दः एवंशब्दपदार्थकः एव पूर्ववत् — क्षेत्रज्ञः इत्येवम् आहुः । के ? तद्विदः तौ क्षेत्रक्षेत्रज्ञौ ये विदन्ति ते तद्विदः ॥ १ ॥
இதி என்ற சப்தமானது (பதமானது) முன்பு போல் ஏவம், இவ் வாறு என்ற அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகையால் க்ஷேத்ரக் ஞன் என்று கூறுவார்கள். எவர்கள்? எனில், க்ஷேத்ரம், க்ஷேத்ரக் ஞன் என்ற இரண்டின் தத்துவத்தை அறிந்தவர்கள்.(தத்துவவித:)
एवं क्षेत्रक्षेत्रज्ञौ उक्तौ । किम् एतावन्मात्रेण ज्ञानेन ज्ञातव्यौ इति ? न इति उच्यते —
இவ்வாறு க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞர்களைப் பற்றி விவரித்தவாறு அறிந் த்தினாலேயே அறியத்தக்கவரா? எனில் இல்லை என்று கூறுகிறார்.
क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत ।
क्षेत्रक्षेत्रज्ञयोर्ज्ञानं यत्तज्ज्ञानं मतं मम ॥ २ ॥
க்ஷேத்ரக்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வக்ஷேத்ரேஷு பார்த ।
க்ஷேத்ரக்ஷேத்ரக்ஞயோர்ஞானம் யத்தஜ்ஞானம் மதம் மம ॥ 2 ॥
क्षेत्रज्ञं यथोक्तलक्षणं चापि मां परमेश्वरम् असंसारिणं विद्धि जानीहि । सर्वक्षेत्रेषु यः क्षेत्रज्ञः ब्रह्मादिस्तम्बपर्यन्तानेकक्षेत्रोपाधिप्रविभक्तः, तं निरस्तसर्वोपाधिभेदं सदसदादिशब्दप्रत्ययागोचरं विद्धि इति अभिप्रायः ।
முன்பு கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய க்ஷேத்ரக்ஞனா கிய என்னை சம்சாரமற்ற பரமேச்வரனாக அறி. எந்த க்ஷேத்திரக் ஞன் பிரஹ்மா முதல் ஸ்தம்பம் வரையிலும் உள்ள எல்லா சரீரங்க ளிலும் (க்ஷேத்திரங்களிலும்) உபாதிகளால் வேறுபட்டு இருக்கும் அந்த புருஷன் (க்ஷேத்திரக்ஞன்) உபாதிபேத மற்றவன், ஸத், அஸத் முதலிய சப்தங்களுக்கும் மனதில் உள்ள எண்ணங்களுக் கும் எட்டாதவன் என்பது அபிப்பிராயம்.
हे भारत, यस्मात् क्षेत्रक्षेत्रज्ञेश्वरयाथात्म्यव्यतिरेकेण न ज्ञानगोचरम् अन्यत् अवशिष्टम् अस्ति, तस्मात् क्षेत्रक्षेत्रज्ञयोः ज्ञेयभूतयोः यत् ज्ञानं क्षेत्रक्षेत्रज्ञौ येन ज्ञानेन विषयीक्रियेते, तत् ज्ञानं सम्यग्ज्ञानम् इति मतम् अभिप्रायः मम ईश्वरस्य विष्णोः ॥
ஹே பாரத! எதனால் க்ஷேத்திரம், க்ஷேத்ரக்ஞன், ஈஸ்வரன் இவர் களுடைய யதார்த்த ஸ்வரூபத்தைக் காட்டிலும் அறியப்படவேண்டி யது வேறு ஒன்றும் மிஞ்சி இருப்பதில்லையோ ஆனால் ஞேய ஸ்வ ரூபமாகிய க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞன் இவைகளின் எந்த ஞானம் உள் ளதோ எந்த ஞானத்தினால் க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞன் இவர்கள் அறி யப்படுகிறார்களோ அந்த ஞானமே சம்யக் ஞானம் என்பது விஷ்ணு வாகிய ஈஸ்வரனாகிய என்னுடைய அபிப்பிராயம்.
ननु सर्वक्षेत्रेषु एक एव ईश्वरः, न अन्यः तद्व्यतिरिक्तः भोक्ता विद्यते चेत् , ततः ईस्वरस्य संसारित्वं प्राप्तम् ; ईश्वरव्यतिरेकेण वा संसारिणः अन्यस्य अभावात् संसाराभावप्रसङ्गः । तच्च उभयमनिष्टम् , बन्धमोक्षतद्धेतुशास्त्रानर्थक्यप्रसङ्गात् , प्रत्यक्षादिप्रमाणविरोधाच्च ।
எல்லா சரீரங்களிலும் ஒரே ஈஸ்வரன்தான். அவரைத் தவிர வேறு ஒரு போக்தா இல்லை எனில் ஈஸ்வரனுக்கு சம்சாரித்வம் ஏற்ப டும். ஈஸ்வரனைக் காட்டிலும் வேறு ஒரு சம்சாரி இல்லாததால் சம்சா ரம் இல்லையென்று ஆகிவிடும். அவை இரண்டும் ஏற்கத்தக்கதல்ல. பந்த மோக்ஷத்திற்கு ஹேதுவான சாஸ்திரம் அர்த்தமற்றதாகி விடும், பிரத்யக்ஷம் முதலிய ப்ரமாணங்களுக்கு விரோதமாகும்.
प्रत्यक्षेण तावत् सुखदुःखतद्धेतुलक्षणः संसारः उपलभ्यते ; जगद्वैचित्र्योपलब्धेश्च धर्माधर्मनिमित्तः संसारः अनुमीयते । सर्वमेतत् अनुपपन्नमात्मेश्वरैकत्वे ॥
பிரத்யக்ஷமாக சுகம், துக்கம் அவைகளின் காரண ரூபமான சம்சாரமும் காணப்படுகிறது. ஜகத்தினுடைய விசித்ரங்களைப் பார்த்து புண்ய பாபங்களின் காரணம் சம்சாரம் என்று அனுமானிக் கப்படுகிறது. ஆனால் ஆத்மாவும், ஈஸ்வரனும் ஒன்றே என்பதால் இவை எல்லாம் பொருந்தாமல் போய்விடுகிறது.
न ; ज्ञानाज्ञानयोः अन्यत्वेनोपपत्तेः —
கூறுவது சரியல்ல. ஏனெனில் ஞானம், அக்ஞானம் என்ற பேதம் இருப்பதால் இவையெல்லாம் பொருந்தும்.
‘दूरमेते विपरीते विषूची अविद्या या च विद्येति ज्ञाता’ (क. उ. १ । २ । ४) । तथा तयोः विद्याविद्याविषययोः फलभेदोऽपि विरुद्धः निर्दिष्टः — ‘श्रेयश्च प्रेयश्च’ (क. उ. १ । २ । २) इति ; विद्याविषयः श्रेयः, प्रेयस्तु अविद्याकार्यम् इति ।
"தூரமேதே விபரீதே விஷூசீ அவித்யா யா ச வித்யேதி ஞாதா" வித்யையும், அவித்யையும் மிகவும் மாறுபட்டவை, விரோத பலன்களைத் தருபவை. அவ்வாறே வித்யா, அவித்யா இவை இரண்டின் விருத்தமான ச்ரேயஸ், ப்ரேயஸ் என்றபல பேதமும் காண்பிக்கப்பட்டுள்ளது. வித்யா விஷயம் ச்ரேயஸ், அவித்யா கார்யம் ப்ரேயஸ் என்று.
तथा च व्यासः — ‘द्वाविमावथ पन्थानौ’ (मो. ध. २४१ । ६) इत्यादि, ‘इमौ द्वावेव पन्थानौ’ इत्यादि च । इह च द्वे निष्ठे उक्ते ।
அவ்வாறே வியாசரும் "த்வாவிமாவத பந்தாநௌ" = இரண்டு மார்க்கங்கள் என்பவை முதலியவைகளால் கூறி இருக்கின்றார். "இமௌ த்வாவேவ பந்தாநௌ") முதலியவைகளாலும் இங்கு இரண்டு நிஷ்டைகள் கூறப்பட்டது.
अविद्या च सह कार्येण हातव्या इति श्रुतिस्मृतिन्यायेभ्यः अवगम्यते ।
வித்யையினால் காரியத்துடன் அவித்யையானது நாசம் செய்யப்படவேண்டும் என்று ஸ்ருதி, ஸ்ம்ருதி நியாயங்களினால் அறியப்படுகிறது.
श्रुतयः तावत् —
(சுருதிகள் வருமாறு)
("இஹ சேதவேதீதத ஸத்யமஸ்தி ந சேதிஹாவேதீந்மஹதீ விநஷ்டி.”) இங்கேயே அறிந்து கொண்டால் நன்மை ஏற்படும். அவ்வாறு அறியவில்லை எனில் மிகவும் நஷ்ட்டமேற்படும்.
‘तमेवं विद्वानमृत इह भवति ।
(தமேவம் வித்வாநம்ருத இஹ பவதி) அந்த வித்வானே அம் ருதத்தை அடைகிறான்.
नान्यः पन्था विद्यतेऽयनाय’ (तै. आ. ३ । १३)
(நான்ய: பந்தா வித்யதே அயனாய) மோக்ஷத்தின் பொருட்டு வேறு வழியில்லை.
(வித்வான்ன பிபேதி குதச்சன) வித்வான் ஒன்றிற்கும் பயப்ப டமாட்டான்.
(அவிதுஷஸ்து- அத தஸ்ய பயம் பவதி) அக்ஞானியோவெ னில்- அவனுக்குப் பயம் உண்டாகிறது.
(அவித்யாயாமந்தரே வர்தமானா:) அவித்யையில் இருப்பவர்கள்
‘ब्रह्म वेद ब्रह्मैव भवति’
(ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி) பிரஹ்மத்தை அறிந்தவன் பிரஹ்மமாகவே அறிகிறான்.
(அன்யோஅஸாவன்யோஅஹமஸ்மீதி ந ஸ வேத யதா பசுரேவம் ஸ தேவானாம்) இந்த தேவன் வேறு, நான் வேறு என்று எவன் அறிகிறானோ அவன் ஆத்ம தத்துவத்தை அறிந்தவன் அல்ல. அவன் (மனிதர்களுக்கு) எவ்வாறு பசுவோ அவ்வாறு அவன் தேவர்களுக்கு பசுவாகிறான். ஆனால் आत्मविद्या ஆத்மவித்யாவோ எனில்.
(ஸ இதம் ஸர்வம் பவதி) அவன் இதெல்லாம் ஆகிறான்.
‘यदा चर्मवत्’ (श्वे. उ. ६ । २०) इत्याद्याः सहस्रशः ।
(யதா சர்மவத்) எப்பொழுது ஆகாயமானது தோல் போல் சுருட்டப்படுமோ- இவ்வாறு சுருதியில் ஆயிரக்கணக்கான வாக்கி யங்கள் உள்ளன.
स्मृतयश्च —
ஸ்ம்ருதியிலும் இவ்வாறு
(அக்ஞானேனாவ்ருதம் ஞானம் தேன முஹ்யந்தி ஜந்தவ:) அக்ஞானத்தினால் ஞானம் மறைக்கப்பட்டுள்ளதால் ஜீவர்கள் மோஹத்தை அடைகிறார்கள்.
(இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந:) எவர்களது மனது வசப்படுத்தப்பட்டதோ (சமநிலைப்படுத்தப்பட் டதோ) அவர்கள் பிறப்பை (சம்சாரத்தை) இங்கேயே ஜெயித்தவர் களாகிறார்கள்.
(ஸமம் பச்யந்ஹி ஸர்வத்ர இத்யாத்யா:) எங்கும் சமபாவனை யுடன் பார்க்கிறார்கள் என்பது முதலியவைகள்.
न्यायतश्च —
இனி யுக்தியினாலும்
‘सर्पान्कुशाग्राणि तथोदपानं ज्ञात्वा मनुष्याः परिवर्जयन्ति । अज्ञानतस्तत्र पतन्ति केचिज्ज्ञाने फलं पश्य यथाविशिष्टम्’ (मो. ध. २०१ । १७)
(ஸர்பான்குசாக்ராணி ததோதபானம் ஞாத்வா மனுஷ்யா: பரி வர்ஜயந்தி, அக்ஞானதஸ்தத்ர பதந்தி கேசிஜ்க்ஞானே பலம் பச்யததா விசிஷ்டம்) பாம்பு முட்கள், கிணறு இவைகளை அறிந்து மனிதர்கள் விலகி செல்கிறார்கள். ஆனால் அறியாமையில் அதில் சிலர் விழுகிறார்கள். இந்த யுக்தியினால் ஞானத்தினுடைய விசேஷமான (சிறப்பான) பலத்தை அறிந்து கொள்.
तथा च — देहादिषु आत्मबुद्धिः अविद्वान् रागद्वेषादिप्रयुक्तः धर्माधर्मानुष्ठानकृत् जायते म्रियते च इति अवगम्यते ; देहादिव्यतिरिक्तात्मदर्शिनः रागद्वेषादिप्रहाणापेक्षधर्माधर्मप्रवृत्त्युपशमात् मुच्यन्ते इति न केनचित् प्रत्याख्यातुं शक्यं न्यायतः ।
அவ்வாறே தேஹம் முதலியவைகளில் ஆத்ம புத்தி உடைய அக்ஞானிகள் ராகம், துவேஷம் முதலியவைகளால் தூண்டப் பட்டு தர்மம், அதர்மம் ஆகிய கர்மாக்களை செய்தவர்களாய் பிறப்பிறப்பை அடைகிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் தேஹம் முதலியவைகளைக் காட்டிலும் ஆத்மா வேறு என்று அறிந்த ஆத்மதர்சிகளுக்கு ராகம், துவேஷம் இவைகள் நீங்கிவி டுகின்றன. ஆகையால் தர்ம, அதர்ம ரூப கர்மங்களில் நிவர்த்தி ஏற்படுவதால் முக்தியை அடைகிறார்கள். ஆகையால் எந்த ஒரு யுக்தியினாலும் இந்த விஷயத்தை மறுக்கமுடியாது.
तत्र एवं सति, क्षेत्रज्ञस्य ईश्वरस्यैव सतः अविद्याकृतोपाधिभेदतः संसारित्वमिव भवति, यथा देहाद्यात्मत्वमात्मनः । सर्वजन्तूनां हि प्रसिद्धः देहादिषु अनात्मसु आत्मभावः निश्चितः अविद्याकृतः
அங்கு இவ்வாறு உள்ளபொழுது க்ஷேத்ரக்ஞனாகிய ஈஸ்வர னுக்கே அவித்யையினால் உண்டான உபாதி பேதங்களால் சம்சாரித் துவம் போல் தோன்றுகிறது. அதனால் ஆத்மாவிற்கு (ஜீவனுக்கு) தேஹம் முதலியவைகளில் ஆத்ம புத்தி ஏற்படுகிறது. ஏன் எனில் எல்லா ஜீவர்களுக்கும் தேஹம் முதலிய அனாத்ம பதார்த்தங்களிடத் தில் ஆத்மபாவம் (புத்தி) பிரசித்தமாய் இருக்கிறது. சந்தேஹமில்லா மல் (நிச்சயமாக) இது அவித்யையினால் உண்டானதே.
यथा स्थाणौ पुरुषनिश्चयः ; न च एतावता पुरुषधर्मः स्थाणोः भवति, स्थाणुधर्मो वा पुरुषस्य, तथा न चैतन्यधर्मो देहस्य, देहधर्मो वा चेतनस्य
எவ்வாறு கம்பத்தில் (ஸ்தாணுவில்) மனிதன் என்ற புத்தி ஏற் பட்டாலும் மனிதத்தன்மையானது கம்பத்திலும் கம்பத்தின் தன்மை மனிதனிடத்தும் ஏற்படாதோ அவ்வாறு சைதன்யத்தின் தன்மையானது தேஹத்திலும், தேஹத்தின் தன்மையானது சைதன் யத்திலும் ஏற்படாது.
सुखदुःखमोहात्मकत्वादिः आत्मनः न युक्तः ; अविद्याकृतत्वाविशेषात् , जरामृत्युवत् ॥
சுகம், துக்கம், மோஹம் முதலிய தேஹத்தன்மைகள் ஆத்மா விற்குப் பொருந்தாது. ஏன் எனில் அவித்யையினால் உண்டான மூப்பு, மரணம் போல் (இதுவும் அவித்யையினால் ஆனதினால்).
न, अतुल्यत्वात् ; इति चेत् — स्थाणुपुरुषौ ज्ञेयावेव सन्तौ ज्ञात्रा अन्योन्यस्मिन् अध्यस्तौ अविद्यया ; देहात्मनोस्तु ज्ञेयज्ञात्रोरेव इतरेतराध्यासः, इति न समः दृष्टान्तः । अतः देहधर्मः ज्ञेयोऽपि ज्ञातुरात्मनः भवतीति चेत् ।
இவ்வாறு எடுத்துக்கொண்டால் இரண்டும் விரோதமாய் இருப் பதால் பொருந்தாது எனில், கட்டை, மனிதன் இருவரும் அறியப்ப டும் பொருள்(ஞேய வஸ்து) ஆகும். அவித்யையினால் ஏற்படும் ஒன்றில் ஒன்றன் அத்தியாசம் ஏற்படும். ஆனால் தேஹம், அறிப டும் பொருள் ஆத்மாவோ, அறிபவன்(ஞாதா). என்று ஒன்றில் மற் றொன்றின் அத்யாசம் ஏற்படுகிறது. ஆகையால் இந்த திருஷ்ட்டாந் தம் ஒப்பக்கூடியது அல்ல. ஆகையால் அறிபடும் பொருளின் (ஞே யத்தின்) தர்மங்கள் (சுக துக்க முதலியவைகள்) அறிபவனிடத்தில் ஞாதாவில் அதாவது ஆத்மாவில் ஏற்படும் என்றால்.
न ; अचैतन्यादिप्रसङ्गात् । यदि हि ज्ञेयस्य देहादेः क्षेत्रस्य धर्माः सुखदुःखमोहेच्छादयः ज्ञातुः भवन्ति, तर्हि, ‘ज्ञेयस्य क्षेत्रस्य धर्माः केचित् आत्मनः भवन्ति अविद्याध्यारोपिताः, जरामरणादयस्तु न भवन्ति’ इति विशेषहेतुः वक्तव्यः ।
அவ்வாறு ஏற்படாது. ஏன் எனில் (ஆத்மாவிற்கு) ஜடத் தன்மை முதலியவை ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். அறியப்ப டும் பொருளாகிய தேஹம் முதலிய க்ஷேத்திரத்தின் சுகம், துக்கம், மோஹம், இச்சை முதலிய தர்மங்கள் அறிபவனுக்கு இருந்தால் அப்பொழுது அறியப்படும் பொருளாகிய க்ஷேத்திரத்தினுடைய சில தர்மங்கள் தான் அவித்யையினால் ஆத்மாவில் ஏற்றப்பட் டுள்ளன. ஆனால் மூப்பு மரணம் முதலியவைகள் இல்லை என்ற இந்த விரோதமான விஷயத்திற்கு காரணம் கூறவேண்டும்.
‘न भवन्ति’ इति अस्ति अनुमानम् — अविद्याध्यारोपितत्वात् जरामरणादिवत् इति, हेयत्वात् , उपादेयत्वाच्च इत्यादि ।
க்ஷேத்திரத்தின் தர்மங்கள் ஆத்மாவிற்கு இல்லை என்பதின் அனுமானம் என்னவெனில் அவித்யையினால் மூப்பு, மரணம் இவைகளைப் போல ஆரோபம் செய்யப்பட்டதாலும் விடுவதா யும், ஏற்றுக்கொள்வதாயும், மற்றும் இவை போன்றவையாயும் இருக்கின்றன.
तत्र एवं सति, कर्तृत्वभोक्तृत्वलक्षणः संसारः ज्ञेयस्थः ज्ञातरि अविद्यया अध्यारोपितः इति, न तेन ज्ञातुः किञ्चित् दुष्यति, यथा बालैः अध्यारोपितेन आकाशस्य तलमलिनत्वादिना ॥
இவ்வாறு இருக்கும்பொழுது அறிபடும்பொருளிலிருக்கும் (ஞேய வஸ்துவில் இருக்கும்) கர்த்ருத்துவ, போக்த்திருத்துவ லக்ஷ ணமாகிய சம்சாரமானது அவித்யையினால் அறிபவனிடத்தில் (ஞாதாவில்) ஆரோபிக்கப்பட்டது என்பதால் அறிபவனுக்கு (ஞா தாவிற்கு) கொஞ்சமும் கேடு உண்டாகாது. எவ்வாறு எனில் அறி வில்லாதவர்கள் ஆகாயத்தில் அசுத்தம் முதலியவைகளை ஆரோபம் செய்வதனால் (ஆகாயத்திற்கு ஒட்டாதது போல்).
एवं च सति, सर्वक्षेत्रेष्वपि सतः भगवतः क्षेत्रज्ञस्य ईश्वरस्य संसारित्वगन्धमात्रमपि नाशङ्क्यम् । न हि क्वचिदपि लोके अविद्याध्यस्तेन धर्मेण कस्यचित् उपकारः अपकारो वा दृष्टः ॥
இவ்வாறு இருப்பதால் எல்லா க்ஷேத்திரங்களிலும் க்ஷேத்திரக் ஞனாயும் ஈஸ்வரனாயும் உள்ள பகவானிடத்தில் சம்சார தர்மமானது (சம்சாரத் தன்மையானது) வாசனைக்குக் கூட சந்தே ஹம் கொள்ளவேண்டாம். அவ்வாறே உலகத்தில் அவித்யையி னால் ஆரோபம் செய்யப்பட்ட தர்மத்தினால் (தன்மையினால்) ஒருவருக்கும் நன்மையோ தீமையோ கண்டதில்லை.
यत्तु उक्तम् — न समः दृष्टान्तः इति, तत् असत् ।
(ஸ்தானுவில் புருஷன் என்ற) எந்த திருஷ்டாந்தம், தாஷ்ட்டாந் தத்திற்கு பொருத்தமில்லை என்று கூறப்பட்டதோ அது சரியன்று.
कथम् ?
எவ்வாறு
अविद्याध्यासमात्रं हि दृष्टान्तदार्ष्टान्तिकयोः साधर्म्यं विवक्षितम् । तत् न व्यभिचरति । यत्तु ज्ञातरि व्यभिचरति इति मन्यसे, तस्यापि अनैकान्तिकत्वं दर्शितं जरादिभिः ॥
அவித்யையினால் உண்டான அத்தியாசத்திற்கு மாத்திரமே திருஷ்ட்டாந்தம், தாஷ்ட்டாந்தத்தில் பொருந்துமென (இவைக ளின் பொதுவான தன்மை) கூறப்பட்டது, அது மாறுபடாது. ஆனால் நீ அறிபவனிடத்தில் (ஞாதாவினிடத்தில்) மாறுபடுகிறது என்று நீ கருதினால் அதற்கும் மூப்பு, மரணம் முதலியவையும் மாறக்கூடியது என்று காட்டப்பட்டது.
अविद्यावत्त्वात् क्षेत्रज्ञस्य संसारित्वम् इति चेत् ,
க்ஷேத்திரக்ஞன் அவித்யையுடன் கூடியிருப்பதால் (க்ஷேத்தி ரக்ஞனுக்கு அவித்யை இருப்பதால்) க்ஷேத்திரக்ஞனுக்கு சம்சாரித் துவம் இருக்கிறது என்றால்?
न ; अविद्यायाः तामसत्वात् । तामसो हि प्रत्ययः, आवरणात्मकत्वात् अविद्या विपरीतग्राहकः, संशयोपस्थापको वा, अग्रहणात्मको वा ; विवेकप्रकाशभावे तदभावात् , तामसे च आवरणात्मके तिमिरादिदोषे सति अग्रहणादेः अविद्यात्रयस्य उपलब्धेः ॥
(சம்சாரித்துவம்) இல்லை. ஏன் எனில் அவித்யையானது தாம் ஸமானதாதலின் தாமசமாகிய பிரத்யயமானது(எண்ணமானது) மறைக்கும் தன்மை உடைமையால் அவித்யா எனப்படுகிறது. அதுவே விபரீதமாக கிரஹிப்பது(உணர்கிறது). சந்தேஹத்தை உண்டாக்குவது, அல்லது ஒன்றையும் கிரஹிக்காது (உணராது) விவேகரூபமான பிரகாசம் இருக்கும்பொழுது தாமசமானது இருக்காது. ஆவரண ரூப தாமச மயமான திமிரம் முதலிய தோஷங்கள் இருக்கும்பொழுது உணராமல் இருத்தல் முதலிய மூன்று அவித்யா தோஷங்கள் காணப்படுகின்றன.
अत्र आह — एवं तर्हि ज्ञातृधर्मः अविद्या ।
இங்கு கூறுகிறான்- இவ்வாறானால் அவித்யைக்கு அறிபவனின் தன்மை (ஞாதாவின் தன்மை) யாம் எனில்.
न ; करणे चक्षुषि तैमिरिकत्वादिदोषोपलब्धेः । यत्तु मन्यसे — ज्ञातृधर्मः अविद्या, तदेव च अविद्याधर्मवत्त्वं क्षेत्रज्ञस्य संसारित्वम् ; तत्र यदुक्तम् ‘ईश्वर एव क्षेत्रज्ञः, न संसारी’ इत्येतत् अयुक्तमिति — तत् न ; यथा करणे चक्षुषि विपरीतग्राहकादिदोषस्य दर्शनात् । न विपरीतादिग्रहणं तन्निमित्तं वा तैमिरिकत्वादिदोषः ग्रहीतुः
அவ்வாறு கூறுதல் சரியல்ல, ஏன் எனில் திமிர முதலியவைக ளால் உண்டாகும் தோஷங்கள் கரணங்களாகிய கண் முதலியவைக ளில் பார்க்கப்படுகிறது.(ஞாதா ஆத்மாவில் இல்லை) என்று இவ் வாறு கருதினாய் ஆகில் க்ஷேத்திரக்ஞனுக்கு (ஞாதாவிற்கு) அவித் யையாகிய தர்மத்துவம் இருப்பதால் அதற்கு சம்சாரித்துவம் ஏற்படு கிறது. ஆகையால் அவ்வாறு கூறுவது சரியல்ல. இவ்வாறு இருந் தால் ஈஸ்வரனே க்ஷேத்ரக்ஞன். சம்சாரி அல்ல என்று கூறினது பொருந்தாததாகும். அவ்வாறு அல்ல ஏனெனில் கரணமாகிய கண்க ளினால் விபரீதமாகக் கிரஹிக்கப்படுதல் முதலிய தோஷங்களைப் பார்க்கிறோம். ஆனாலும் விபரீதமாக கிரஹித்தல் முதலிய தோஷங்களுக்குக் காரணமாகிய திமிரம் முதலிய தோஷங்கள் கிர ஹிப்பவனிடத்தில் காண்பதில்லை. (அவ்வாறேதேஹத்தினுடைய தர்மமும் ஆத்மாவினிடத்தில் காணப்படுவதில்லை)
चक्षुषः संस्कारेण तिमिरे अपनीते ग्रहीतुः अदर्शनात् न ग्रहीतुर्धर्मः यथा ; तथा सर्वत्रैव अग्रहणविपरीतसंशयप्रत्ययास्तन्निमित्ताः करणस्यैव कस्यचित् भवितुमर्हन्ति, न ज्ञातुः क्षेत्रज्ञस्य ।
எவ்வாறு கண்களை சரிசெய்வதினால் தோஷமானது நீங்கு வது கிரஹிப்பவனிடத்தில் இல்லாததினால் கிரஹிப்பவனுடைய தர் மமல்ல (தன்மை அல்ல) வா அவ்வாறே எங்கும் கிரஹிக்காததும் விபரீதம், சந்தேஹங்கள் முதலியவை ஒருவனுக்கு பிரத்தியயங்கள் (எண்ணங்கள்) அதன் நிமித்தமாகிய கரணத்தினுடையதாகும். ஆனால் ஞாதாவாகிய க்ஷேத்ரக்ஞனுடைய தர்மங்கள் ஆகாது.
संवेद्यत्वाच्च तेषां प्रदीपप्रकाशवत् न ज्ञातृधर्मत्वम् — संवेद्यत्वादेव स्वात्मव्यतिरिक्तसंवेद्यत्वम्
(ஞான விஷயங்கள்) நன்றாக அறியப்படுவதால் அவைக ளுக்கு விளக்கின் பிரகாசம் (மற்றவிஷயங்களை விளக்குவது) போல் அதற்கு அறிபவனின் தர்மம் இல்லை. அறியப்படுவதினா லேயே ஸ்வ (தன்) ஆத்மாவைத் தவிர அறியப்படும் பொருள் வேறாகிறது.
सर्वकरणवियोगे च कैवल्ये सर्ववादिभिः अविद्यादिदोषवत्त्वानभ्युपगमात् । आत्मनः यदि क्षेत्रज्ञस्य अग्न्युष्णवत् स्वः धर्मः, ततः न कदाचिदपि तेन वियोगः स्यात् ।
எல்லா ஆத்மவாதிகளும் எல்லா இந்திரியங்களும் (கரணங்க ளும்) அடங்கிய (நீங்கிய) கைவல்யத்தில் அவித்யா தோஷமானது நாசம் அடைந்து விட்டது என்று கூறுகிறார்கள். ஆத்மாவிற்கு அதா வது க்ஷேத்ரக்ஞனுக்கு அக்னியில் சூடு போல தன்னுடைய சொந்த தர்மமாக இருந்தால் ஒரு பொழுதும் அதற்கு நாசம் உண்டாகாது.
अविक्रियस्य च व्योमवत् सर्वगतस्य अमूर्तस्य आत्मनः केनचित् संयोगवियोगानुपपत्तेः, सिद्धं क्षेत्रज्ञस्य नित्यमेव ईश्वरत्वम्
மேலும் ஆகாயத்தைப் போல் எங்கும் வியாபித்து, ரூபமற் றும் நிர்விகாரமாயும் உள்ள ஆத்மாவிற்கு எதனுடனும் சேர்க்கை யோ, சேர்க்கை இன்மையோ சம்பவிக்காது. இதனாலும் க்ஷேத்தி ரக்ஞனுக்கு ஈஸ்வரத்துவமானது நித்தியம் என்று சித்திக்கிறது.
"(அனாதித்வாந்நிர்குணத்வாத் = அநாதியாயும், நிர்குணமாயுமி ருப்பதால்)” என்பது முதலிய ஈஸ்வரருடைய வசனங்களினாலும்
ननु एवं सति संसारसंसारित्वाभावे शास्त्रानर्थक्यादिदोषः स्यादिति चेत्
அவ்வாறானால் சம்சாரமும், சம்சாரித்துவமும் இல்லாவிடில் சாஸ்திரத்திற்கு அர்த்தமற்றது என்பது முதலிய தோஷங்கள் ஏற்படுமே எனில்
न ; सर्वैरभ्युपगतत्वात् । सर्वैः आत्मवादिभिः अभ्युपगतः दोषः न एकेन परिहर्तव्यः भवति ।
ஏற்படாது, ஏன் எனில் எல்லோரும் அந்த தோஷத்தை ஒப்புக் கொள்கிறார்கள். எல்லா ஆத்மவாதிகளாலும் ஒப்புக்கொள்ளப் பட்ட தோஷமானது ஒருவரால் நீக்கமுடியாததாகும்.
कथम् अभ्युपगतः इति ।
இதை எவ்வாறு (எல்லோரும்) ஒப்புக்கொண்டார்கள்?
मुक्तात्मनां हि संसारसंसारित्वव्यवहाराभावः सर्वैरेव आत्मवादिभिः इष्यते । न च तेषां शास्त्रानर्थक्यादिदोषप्राप्तिः अभ्युपगता ।
எல்லா ஆத்மவாதிகளால் முக்தாத்மாக்களுக்கு சம்சாரத்தின தும், சம்சாரத்துவத்தினதும் ஆகிய வியவஹாரங்கள் இல்லை என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சாஸ்திரங்களுக்கு அர்த்தமற்றது என்பது முதலிய தோஷங்கள் அவர்களுக்கு ஏற்படாது.
तथा नः क्षेत्रज्ञानाम् ईश्वरैकत्वे सति, शास्त्रानर्थक्यं भवतु ; अविद्याविषये च अर्थवत्त्वम् — यथा द्वैतिनां सर्वेषां बन्धावस्थायामेव शास्त्राद्यर्थवत्त्वम् , न मुक्तावस्थायाम् , एवम् ॥
அவ்வாறு க்ஷேத்திரக்ஞர்களாகிய எங்களுக்கு ஈஸ்வர ஐக்யத்தில் சாஸ்திரத்தின் விஷயத்தில் அர்த்தமற்ற தன்மை ஏற்ப டலாம். ஆனால் அவித்யா விஷயத்தில் அர்த்தமுடையதாகிறது. எவ்வாறு எல்லா துவைதிகளுக்கும் பந்த அவஸ்தையினால் தான் சாஸ்திரத்தின் பயன் (அர்த்வத்துவம்) உடையதாகிறது. முக்தாவஸ் தையில் அவ்வாறு அல்ல.
ननु आत्मनः बन्धमुक्तावस्थे परमार्थत एव वस्तुभूते द्वैतिनां सर्वेषाम् । अतः हेयोपादेयतत्साधनसद्भावे शास्त्राद्यर्थवत्त्वं स्यात् । अद्वैतिनां पुनः, द्वैतस्य अपरमार्थत्वात् , अविद्याकृतत्वात् बन्धावस्थायाश्च आत्मनः अपरमार्थत्वे निर्विषयत्वात् , शास्त्राद्यानर्थक्यम् इति चेत् ।
எல்லா துவைதிகளுடைய சித்தாந்தத்திலும் ஆத்மாவினு டைய பந்தம், முக்தியாகிய அவஸ்தைகள் உண்மையே. ஆகை யால் தள்ளப்படவேண்டிய, மற்றும் கடைபிடிக்கவேண்டிய சாத னங்கள் உண்மையாக இருப்பதால் சாஸ்திரமானது அர்த்தமுள்ள வைகளாகின்றன. ஆனால் அத்வைதிகளுக்கு துவைதிகளுடைய அவித்தையினால் உண்டான பந்தா அவஸ்தையானது உண்மை அல்லாததினால் ஆத்மாவினிடத்தில் அவைகளுக்கு உண்மையற் றதாயும், விஷயமற்றதாயும் இருப்பதால் சாஸ்திரமானது வீண் எனில்.
न ; आत्मनः अवस्थाभेदानुपपत्तेः । यदि तावत् आत्मनः बन्धमुक्तावस्थे, युगपत् स्याताम् , क्रमेण वा ।
அவ்வாறு கூறுதல் சரியல்ல. ஏன் எனில் ஆத்மாவிற்கு அவஸ்தா பேதம் கிடையாது. ஆத்மாவிற்கு பந்த, முக்தா அவஸ் தையானது சேர்ந்தோ அல்லது கிரமமாகவோ இருந்தால்-
युगपत् तावत् विरोधात् न सम्भवतः स्थितिगती इव एकस्मिन् । क्रमभावित्वे च, निर्निमित्तत्वे अनिर्मोक्षप्रसङ्गः । अन्यनिमित्तत्वे च स्वतः अभावात् अपरमार्थत्वप्रसङ्गः । तथा च सति अभ्युपगमहानिः ।
இருப்பதும் செல்வதும் போல விரோதமாக இருப்பதால் பந்த மும் முக்தியும் ஒரே சமயத்தில் (நிகழாது) இருக்க முடியாது. கிரம மாக நிகழும் எனில் காரணம் இன்றி நிகழ்ந்தால் அது மோக்ஷமில் லையென்றாகும். காரணத்தோடாயின் தானாக இல்லாததால் உண்மை இல்லை என்று ஆகிவிடும். இவ்வாறானால் சித்தாந்தமா னது விரோதமாகிவிடும்.
किञ्च, बन्धमुक्तावस्थयोः पौर्वापर्यनिरूपणायां बन्धावस्था पूर्वं प्रकल्प्या, अनादिमती अन्तवती च ; तच्च प्रमाणविरुद्धम् । तथा मोक्षावस्था आदिमती अनन्ता च प्रमाणविरुद्धैव अभ्युपगम्यते ।
மேலும் பந்தாவஸ்தை, முக்தாவஸ்தை முன்னும் பின்னுமாக ஆராய்ந்தோமேயானால் பந்தா அவஸ்தையானது அநாதியாயும் அந்தத்துடன் (முடிவுடையதாகவும்) கூடியதாகவும், முக்தா அவஸ்த்தையானது ஆதியாயும், அநந்தமாயும் (முடிவு அற்றதா யும்) ஆகும். அதானது பிரமாணத்திற்கு விருத்தமாகும்.
न च अवस्थावतः अवस्थान्तरं गच्छतः नित्यत्वम् उपपादयितुं शक्यम् ।
அவ்வாறே (ஆத்மா) அவஸ்தை உடையது. ஒரு அவஸ்தையி லிருந்து மற்றொரு அவஸ்தையை அடைகிறது என்றால் அதற்கு நித்யத்துவம் கூறமுடியாது.
अथ अनित्यत्वदोषपरिहाराय बन्धमुक्तावस्थाभेदो न कल्प्यते, अतः द्वैतिनामपि शास्त्रानर्थक्यादिदोषः अपरिहार्य एव ; इति समानत्वात् न अद्वैतवादिना परिहर्तव्यः दोषः ॥
இப்பொழுது(ஆத்மாவிற்கு) அநித்தியம் என்னும் தோஷம் நிவர்த்தி செய்வதற்காக பந்தம், முக்தி என்ற அவஸ்தா பேதமானது கல்பிக்கப்படவில்லை ஆகையால் அத்வைதிகளுடைய கொள் கையிலும் சாஸ்திரத்தில் பிரயோஜனமற்றதன்மை(வீண் என்றதன் மை) என்பது முதலிய தோஷங்கள் நீக்க முடியாது தான். ஆகை யால் குற்றமானது (த்வைத, அத்வைத கொள்கைகளில்) சமமாக இருப்பதால் அத்வைதிகளாலும் நீக்கப்படவேண்டியதாகாது.
न च शास्त्रानर्थक्यम् , यथाप्रसिद्धाविद्वत्पुरुषविषयत्वात् शास्त्रस्य । अविदुषां हि फलहेत्वोः अनात्मनोः आत्मदर्शनम् , न विदुषाम्
(அத்வைதிகளுடைய கொள்கைப்படியும் உண்மையில்) சாஸ் திரமானது வீண் ஆகாது ஏன் எனில் சாஸ்திரமானது அக்ஞானிக ளுக்குத்தான் என்பது உலகப் பிரசித்தமாகும். அக்ஞானிகளுக் கென்றோ பலமும், அதற்குக் காரணமாகிய அநாத்மாக்களிடத்தில் ஆத்மாவைப் பார்க்கிறார்கள். ஞானிகள் அவ்வாறல்ல.
विदुषां हि फलहेतुभ्याम् आत्मनः अन्यत्वदर्शने सति, तयोः अहमिति आत्मदर्शनानुपपत्तेः ।
ஞானிகளுக்கல்லவா பலத்திலும், அந்தக்கரணத்திலும் ஆத் மாவிற்கு வேறானது என்ற ஞானம் இருப்பதினால் அவைகளில் நான் என்ற ஆத்ம ஞானமானது ஏற்படாது.
न हि अत्यन्तमूढः उन्मत्तादिरपि जलाग्न्योः छायाप्रकाशयोर्वा ऐकात्म्यं पश्यति ; किमुत विवेकी ।
மிகுந்த மூடத்தன்மை உடையவன், பித்து பிடித்தவன் முதலி யோரும் கூட நீரும், நெருப்பும் அவ்வாறே நிழல், வெளிச்சம் இவைகளை ஒன்றென்று பார்க்கமாட்டார்கள். அவ்வாறு எனில் விவேகிகளைப் பற்றி கேட்கவும் வேண்டுமோ?
तस्मात् न विधिप्रतिषेधशास्त्रं तावत् फलहेतुभ्याम् आत्मनः अन्यत्वदर्शिनः भवति ।
ஆகையால் பலம், அதன் காரணம் இவை இரண்டும் ஆத்மா வைத் தவிரவேறு என்று அறிந்த ஞானிக்கு விதி, நிஷேதங்களை விஷயமாக உடைய சாஸ்திரங்கள் தேவையில்லை.
न हि ‘देवदत्त, त्वम् इदं कुरु’ इति कस्मिंश्चित् कर्मणि नियुक्ते, विष्णुमित्रः ‘अहं नियुक्तः’ इति तत्रस्थः नियोगं शृण्वन्नपि प्रतिपद्यते । वियोगविषयविवेकाग्रहणात् तु उपपद्यते प्रतिपत्तिः ; तथा फलहेत्वोरपि ॥
தேவதத்தனைக் குறித்து ஹே தேவதத்தனே! நீ இந்த காரியத் தைச் செய் என்று கர்மத்தில் ஈடுபடுத்தினாலும் அதைக் கேட்டுக் கொண்டிருந்த விஷ்ணுமித்திரன் நானும் இதில் ஈடுபடத்தக்கவன் என்று அதில் ஈடுபடுவதில்லை. ஆனால் கட்டளை இடப்பட்ட வன் வேறு என்று பிரித்து அறியாதவனாயின் கர்மத்தில் ஈடுபடு வான். அவ்வாறே பலத்திலும் காரணத்திலும் கொள்ளவேண்டும்.
ननु प्राकृतसम्बन्धापेक्षया युक्तैव प्रतिपत्तिः शास्त्रार्थविषया — फलहेतुभ्याम् अन्यात्मविषयदर्शनेऽपि सति — इष्टफलहेतौ प्रवर्तितः अस्मि, अनिष्टफलहेतोश्च निवर्तितः अस्मीति ; यथा पितृपुत्रादीनाम् इतरेतरात्मान्यत्वदर्शने सत्यपि अन्योन्यनियोगप्रतिषेधार्थप्रतिपत्तिः ।
பலன், அதன் காரணம் இவைகளைக் காட்டிலும் ஆத்மா வேறு என்ற ஞானம்(அறிவு) இருந்தபோதிலும்,ஸ்வாபிகமான அக் ஞானத்தின் சேர்க்கையால் வேண்டப்பட்ட பலன் கிடைப்பதற்காக கர்மத்தில் ஈடுபடுகிறேன், வேண்டாத பலனுக்காக கர்மத்திலிருந்து விலகுகிறேன் என்ற சாஸ்த்திரத்தின் விஷயத்தில் ஈடுபடுகிறான் என்பது பொருத்தமே. எவ்வாறு தந்தை, மகன் முதலியவைகளில் வெவ்வேறாக அறிந்தபோதிலும் கூட ஒருவருக்குள்ள விதி, நிஷே தங்களை மற்றொருவர் கொள்ளுவது போல் அறியவேண்டும்.
न ; व्यतिरिक्तात्मदर्शनप्रतिपत्तेः प्रागेव फलहेत्वोः आत्माभिमानस्य सिद्धत्वात् । प्रतिपन्ननियोगप्रतिषेधार्थो हि फलहेतुभ्याम् आत्मनः अन्यत्वं प्रतिपद्यते, न पूर्वम् । तस्मात् विधिप्रतिषेधशास्त्रम् अविद्वद्विषयम् इति सिद्धम् ॥
அவ்வாறு அல்ல. பலன், காரணம் இவைகள் ஆத்மாவை விட வேறு என்ற ஞானம் ஏற்படுவதற்கு முன்பல்லவா பலன், அதன் காரணத்திடத்தில் அபிமானம் இருந்தது. விதி, நிஷேதங்க ளை நன்றாக அனுஷ்ட்டித்து அதன் அபிப்பிராயங்களை நன்கு அறிந்தவன் அல்லவா பலன், அதன் அதன் காரணத்தைக் காட்டி லும் ஆத்மா வேறு என்று அறிகிறான். அதற்கு முன்பல்ல. ஆகை யால் விதி, நிஷேத சாஸ்திரமானது அக்ஞானிகளுக்கு என்றே சித்திக்கிறது.
ननु ‘स्वर्गकामो यजेत’ ( ? ) ‘न कलञ्जं भक्षयेत्’ ( ? ) इत्यादौ आत्मव्यतिरेकदर्शिनाम् अप्रवृत्तौ, केवलदेहाद्यात्मदृष्टीनां च ; अतः कर्तुः अभावात् शास्त्रानर्थक्यमिति चेत् ।
ஆனால் "(ஸ்வர்க்காமோ யஜேத”=ஸ்வர்க்கத்தில் இச்சை உள்ளவன் யாகம் செய்க, "கலஞ்ஜம் ந பக்ஷயேத்"= மாமிசம் சாப்பிடாதே) என்பது முதலிய விதி நிஷேதங்களைத் தெரிவிக் கும் சுருதி வசனங்களில் ஆத்மா வேறு என்று அறிந்த ஞானிக ளும் சரீரமே ஆத்மா என்பவர்களும், ஈடுபடாததினால் கர்த்தா இல்லை. ஆகையால் சாஸ்த்திரமானது வீணாகிவிடும் என்றால்.
न ; यथाप्रसिद्धित एव प्रवृत्तिनिवृत्त्युपपत्तेः ।
(நீர் கூறுவது) சரியல்ல. ஏன் எனில் உலகத்தில் பிரவிர்த் தித்தலும் நிவர்த்தித்தலும் பிரசித்தமாக இருக்கிறது.
ईश्वरक्षेत्रज्ञैकत्वदर्शी ब्रह्मवित् तावत् न प्रवर्तते । तथा नैरात्म्यवाद्यपि नास्ति परलोकः इति न प्रवर्तते । यथाप्रसिद्धितस्तु विधिप्रतिषेधशास्त्रश्रवणान्यथानुपपत्त्या अनुमितात्मास्तित्वः आत्मविशेषानभिज्ञः कर्मफलसञ्जाततृष्णः श्रद्दधानतया च प्रवर्तते । इति सर्वेषां नः प्रत्यक्षम् । अतः न शास्त्रानर्थक्यम् ॥
ஈஸ்வரனையும் க்ஷேத்ரக்ஞனையும் ஒன்றாகவே பார்க்கும் பிரஹ்மவித் (பிரஹ்மத்தை அறிந்தவன்) அவ்வாறு பிரவிர்த்திப் பது இல்லை. அவ்வாறே ஆத்மா இல்லை என்கின்ற வாதியும் பரலோகம் இல்லை என்று கருதி பிரவிர்த்திப்பது இல்லை பிரசித்தமான சாஸ்திரத்தில் உள்ளபடி விதி, நிஷேதங்களை அனுஷ்ட்டிப்பவன் சாஸ்திரத்தில் கூறப்பட்டது வேறு வகையாய் பொருந்தாமையால் ஆத்மா உள்ளது என்று அனுமானித்து சிரத்தையுடன் பிரவிர்த்திக்கிறான் என்பது நாம் எல்லோருக்கும் பிரத்யக்ஷமாக அறிகிறோம்.
विवेकिनाम् अप्रवृत्तिदर्शनात् तदनुगामिनाम् अप्रवृत्तौ शास्त्रानर्थक्यम् इति चेत् ।
விவேகிகளிடத்தில் பிரவிருத்தி இல்லாததினால், அவர்களை அனுசரிப்பவர்கள் அதில் பிரவர்த்திக்காததினால் சாஸ்திரமானது வீணாகுமே எனில்.
न, कस्यचिदेव विवेकोपपत्तेः अनेकेषु हि प्राणिषु कश्चिदेव विवेकी स्यात् , यथेदानीम् ।
இவ்வாறு கூறுவது சரியல்ல. ஏதோ ஒருவனுக்குத் தான் விவேகம் உண்டாகும். அநேக ஜீவர்களுள் ஏதோ ஒருவன் தான் இப்பொழுது உள்ளது போல் விவேகியாய் இருப்பான்.
न च विवेकिनम् अनुवर्तन्ते मूढाः, रागादिदोषतन्त्रत्वात् प्रवृत्तेः, अभिचरणादौ च प्रवृत्तिदर्शनात् , स्वाभाव्याच्च प्रवृत्तेः —
மேலும் ராகம் முதலிய தோஷங்களினால் கட்டுப்பட்டு பிரவிர்த்திக்கும் மூடர்கள் விவேகிகளை அனுசரித்து நடப்ப தில்லை. அபிசாராதிகளிலும் (சூன்யம் முதலியவைகளிலும்) அவர்கள் பிரவிர்த்திப்பது காணப்படுகிறது. இயற்கையாகவே பிரவிருத்தி எனப்படுகிறது.
"ஸ்வபாவ: து ப்ரவர்ததே"-ஸ்வபாவமாகவே பிரவிர்த்திக்கி றார்கள்) என்று கூறப்பட்டுள்ளது.
तस्मात् अविद्यामात्रं संसारः यथादृष्टविषयः एव । न क्षेत्रज्ञस्य केवलस्य अविद्या तत्कार्यं च ।
ஆகையால் சம்சாரமானது அவித்யா மாத்திரமே என்பது எவ் வாறு பார்க்கப்பட்ட விஷயமோ அவ்வாறே, தனிப்பொருளாகிய க்ஷேத்திரக்ஞனுக்கு அவித்யையும் அதன் காரியமும் கிடையாது.
न च मिथ्याज्ञानं परमार्थवस्तु दूषयितुं समर्थम् । न हि ऊषरदेशं स्नेहेन पङ्कीकर्तुं शक्नोति मरीच्युदकम् । तथा अविद्या क्षेत्रज्ञस्य न किञ्चित् कर्तुं शक्नोति । अतश्चेदमुक्तम् — ‘क्षेत्रज्ञं चापि मां विद्धि’ (भ. गी. १३ । २), ‘अज्ञानेनावृतं ज्ञानम्’ (भ. गी. ५ । १५) इति च ॥
பரமார்த்த வஸ்துவை மித்யா ஞானமானது தூற்றமுடியாது. ஊஷர பூமியை கானல் நீரானது எவ்வாறு கலங்கப்படுத்த முடியாதோ அவ்வாறே அவித்யையானது க்ஷேத்ரக்ஞனை ஒன்றும் செய்ய முடியாது. ஆகையால் இவ்வாறு கூறப்பட்டது. ("க்ஷேத்ரக்ஞம் சாபி மாம் வித்தி” = க்ஷேத்திரக்ஞன் என்று என்னை அறி, “அக்ஞானேன ஆவ்ருதம் ஞானம்” = அக்ஞானத்தி னால் ஞானம் மறைக்கப்பட்டுள்ளது.)
अथ किमिदं संसारिणामिव ‘अहमेवं’ ‘ममैवेदम्’ इति पण्डितानामपि ।
ஆனால் எதற்காக இவ்வாறு சம்சாரிகளைப் போல நான் இவ் வாறு என்றும் இது எனது என்றும் பண்டிதர்களிடத்திலும் தோன்றுகிறதே எனில்.
शृणु ; इदं तत् पाण्डित्यम् , यत् क्षेत्रे एव आत्मदर्शनम् । यदि पुनः क्षेत्रज्ञम् अविक्रियं पश्येयुः, ततः न भोगं कर्म वा आकाङ्क्षेयुः ‘मम स्यात्’ इति । विक्रियैव भोगकर्मणी ।
கேள். இந்த பாண்டித்தியம் எதுவோ அது க்ஷேத்திரத்தில் (சரீ ரத்தில்) ஆத்மாவைப் பார்ப்பதாலே ஆகும். எப்பொழுது மறுபடி. யும் கிரியை அற்றக்ஷேத்திரக்ஞனை பார்க்கிறானோ அப்பொழுது போகத்தையோ கர்மத்தையோ எனக்கு வேண்டும் என்று விரும்ப மாட்டான். போகம், கர்மங்கள் விகாரம் கொண்டவைகளே.
अथ एवं सति, फलार्थित्वात् अविद्वान् प्रवर्तते । विदुषः पुनः अविक्रियात्मदर्शिनः फलार्थित्वाभावात् प्रवृत्त्यनुपपत्तौ कार्यकरणसङ्घातव्यापारोपरमे निवृत्तिः उपचर्यते ॥
இவ்வாறு இருப்பதால் அக்ஞானி பலத்தை விரும்பி பிரவிர்த் திக்கிறான்.மேலும் கிரியை அற்ற ஆத்மதர்சியான ஞானி பலத்தில் விருப்பம் இன்மையால் பிரவிருத்தி ஏற்படாததினால் காரிய கரண சங்காதத்தின் வியாபாரமானது (தொழிலானது) ஓய்ந்த நிலையை நிவிர்த்தி என்று உபசாரமாக கூறப்படுகிறது.
इदं च अन्यत् पाण्डित्यं केषाञ्चित् अस्तु — क्षेत्रज्ञः ईश्वर एव । क्षेत्रं च अन्यत् क्षेत्रज्ञस्यैव विषयः । अहं तु संसारी सुखी दुःखी च । संसारोपरमश्च मम कर्तव्यः क्षेत्रक्षेत्रज्ञविज्ञानेन, ध्यानेन च ईश्वरं क्षेत्रज्ञं साक्षात्कृत्वा तत्स्वरूपावस्थानेनेति ।
இது மற்றபாண்டித்தியம் உடையவர்களுக்கு இருக்கட்டும். க்ஷேத்திரக்ஞனாகிய ஈஸ்வரன் வேறு க்ஷேத்திரம் வேறு என்றும் க்ஷேத்திரமானது க்ஷேத்திரக்ஞனுடைய விஷயம் என்று. நான் சம் சாரி, சுகி, துக்கி. க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞனை அறிந்து தியானத்தினால் ஈஸ்வரனாகிய க்ஷேத்திரக்ஞனை சாக்ஷாத்காரம் செய்து அந்த ஸ்வரூபத்தில் நிலைத்தலினால் சம்சாரத்தைப் போக்குவது (நீக்கு வது) எனது கர்த்தவ்யமாகும். (கடமையாகும்)
यश्च एवं बुध्यते, यश्च बोधयति, नासौ क्षेत्रज्ञः इति । एवं मन्वानः यः सः पण्डितापशदः, संसारमोक्षयोः शास्त्रस्य च अर्थवत्त्वं करोमीति ।
எவன் இவ்வாறு அறிகிறானோ, அவன் க்ஷேத்திரக்ஞன் அல் லன். இவ்வாறு கருதுகின்றவனாய் எவன் சம்சாரம், மோக்ஷம், சாஸ்திரம், இவைகளுக்கு பயனுடையதாய் ஆக்குகிறேன் என்று கூறுகிறவன் கீழான (அதமமான) பண்டிதனாவான்.
आत्महा स्वयं मूढः अन्यांश्च व्यामोहयति शास्त्रार्थसम्प्रदायरहितत्वात् , श्रुतहानिम् अश्रुतकल्पनां च कुर्वन् ।
ஆத்மாவைக் கொன்ற மூடன், சாஸ்திரத்தின் பொருளில் சம்பிரதாய பரம்பரை இல்லாததினால் வேதத்தில் உள்ள அர்த் தத்தை விட்டும், வேதத்திற்கு மாறான அர்த்தத்தை கல்பனை செய்து கொண்டு தான்(மயக்கமடைந்து) மோஹமடைந்து மற்றவர் களையும் (மயக்கமடைய) மோஹிக்கச் செய்கிறான்.
तस्मात् असम्प्रदायवित् सर्वशास्त्रविदपि मूर्खवदेव उपेक्षणीयः ॥
ஆகையால் சம்பிரதாயத்தை அறியாதவன் எல்லா சாஸ்திரங் களையும் அறிந்தவனாய் இருந்தாலும் மூர்க்கன் போல் அசட்டை செய்யவேண்டும்.
यत्तूक्तम् ‘ईश्वरस्य क्षेत्रज्ञैकत्वे संसारित्वं प्राप्नोति, क्षेत्रज्ञानां च ईश्वरैकत्वे संसारिणः अभावात् संसाराभावप्रसङ्गः’ इति, एतौ दोषौ प्रत्युक्तौ ‘विद्याविद्ययोः वैलक्षण्याभ्युपगमात्’ इति ।
ஈஸ்வரனும் க்ஷேத்திரக்ஞனும் ஒன்றாயிருக்குபோழுது (ஈஸ்வரன்) ஸம்ஸாரி என்றாகும். க்ஷேத்திரக்ஞனும் ஈஸ்வரனும் ஒன்று என்று ஆகும்பொழுது சம்சாரி இல்லாததினால் சம்சாரம் இல்லை என்றாகும். வித்யா, அவித்யா இவைகளின் வேற்றுமை களை ஒத்துக்கொள்வதால் இவ்விரு தோஷங்களும் நீங்கிவிடும்.
कथम् ?
எவ்வாறு? (எப்படி)
अविद्यापरिकल्पितदोषेण तद्विषयं वस्तु पारमार्थिकं न दुष्यतीति । तथा च दृष्टान्तः दर्शितः — मरीच्यम्भसा ऊषरदेशो न पङ्कीक्रियते इति । संसारिणः अभावात् संसाराभावप्रसङ्गदोषोऽपि संसारसंसारिणोः अविद्याकल्पितत्वोपपत्त्या प्रत्युक्तः ॥
அவித்யையினால் கல்பிக்கப்பட்ட தோஷத்தினால் அதனு டைய ஆதாரமான உண்மையான வஸ்து நீங்கமாட்டாது. அவ் வாறே கானல் நீர் உஷர பூமியை கலங்கப்படுத்தாது என்ற திருஷ் டாந்தமானது காண்பிக்கப்பட்டது. சம்சாரி இல்லாததினால் சம்சா ரம் இல்லை என்ற தோஷமானது சம்சாரம், சம்சாரி என்பது அவித் யையினால் கல்பிக்கப்பட்டது என்ற நியாயத்தினால் நிராகரிக்கப் பட்டது.
ननु अविद्यावत्त्वमेव क्षेत्रज्ञस्य संसारित्वदोषः । तत्कृतं च सुखित्वदुःखित्वादि प्रत्यक्षम् उपलभ्यते इति चेत् ।
ஆனால் க்ஷேத்திரக்ஞனுடைய சம்சாரித்துவ தோஷமானது அவித்யையினால் ஏற்பட்டதே. அதனால் உண்டான துக்கம் முத லியவைகள் பிரத்யக்ஷமாக காணப்படுகிறது.
न ; ज्ञेयस्य क्षेत्रधर्मत्वात् , ज्ञातुः क्षेत्रज्ञस्य तत्कृतदोषानुपपत्तेः ।
அவ்வாறு கூறுவது சரியல்ல. அறியப்படும் பொருளானது க்ஷேத்திர தர்மத்துடன் கூடியது. ஆகையால் அறியும் பொருளாகிய க்ஷேத்திரக்ஞனுக்கு அதனால் செய்யப்பட்ட தோஷம் ஏற்படாது.
यावत् किञ्चित् क्षेत्रज्ञस्य दोषजातम् अविद्यमानम् आसञ्जयसि, तस्य ज्ञेयत्वोपपत्तेः क्षेत्रधर्मत्वमेव, न क्षेत्रज्ञधर्मत्वम् । न च तेन क्षेत्रज्ञः दुष्यति, ज्ञेयेन ज्ञातुः संसर्गानुपपत्तेः । यदि हि संसर्गः स्यात् , ज्ञेयत्वमेव नोपपद्येत ।
க்ஷேத்திரக்ஞனிடத்தில் (ஞாதாவின்) உண்மையில் இல்லாத குற்றங்களை சிறிது அளவாவது க்ஷேத்திரக்ஞனுடையதில் ஏற்றிப் பார்த்தால் அதற்கு ஞேயத்துவம் (அறிபடும் தன்மை) ஏற்படும். அது க்ஷேத்திரத்தினுடைய தர்மமே அன்றி க்ஷேத்திரக்ஞனுடை யது அன்று. ஞேயத்துடன் ஞாதாவிற்கு ஒருபோதும் சேர்க்கையா னது பொருந்தாது. ஆகையால் ஞேயத்தினால் ஞாதாவிற்கு கேடு உண்டாக்கமுடியாது. சேர்க்கை (சம்சர்க்கம்) ஏற்பட்டால் ஞேயத்து வமே ஸித்திக்காது.
यदि आत्मनः धर्मः अविद्यावत्त्वं दुःखित्वादि च कथं भोः प्रत्यक्षम् उपलभ्यते, कथं वा क्षेत्रज्ञधर्मः । ‘ज्ञेयं च सर्वं क्षेत्रं ज्ञातैव क्षेत्रज्ञः’ इति अवधारिते, ‘अविद्यादुःखित्वादेः क्षेत्रज्ञविशेषणत्वं क्षेत्रज्ञधर्मत्वं तस्य च प्रत्यक्षोपलभ्यत्वम्’ इति विरुद्धम् उच्यते अविद्यामात्रावष्टम्भात् केवलम् ॥
அவித்யாத்துவம், துக்கித்துவம் முதலிய தர்மங்கள் ஆத்மா வினுடையதாய் இருந்தால் எவ்வாறு பிரத்யக்ஷமாக தோன்றும்? எவ்வாறு க்ஷேத்திரக்கு தர்மமாகும்?. ஞேயம்(அறியப்படும் பொருள்) எல்லாம் க்ஷேத்திரம், ஞாதா (அறிபவன்) க்ஷேத்ரக்ஜன் என்றசித்தாந்தம் ஸ்தாபிக்கப்பட்டபின் அவித்யாத்துவம், துக்கித் துவம் முதலிய தோஷங்கள் க்ஷேத்திரக்ஞனுடைய தர்மங்கள் என்று கூறுவதும், அவைகள் பிரத்யக்ஷமாய் காணப்படுகிறது என்பது கேவலம் அக்ஞானத்தை மாத்திரம் ஆச்ரயித்து விரோதமாகக் கூறப்பட்டவைகளாகும்.
अत्र आह — सा अविद्या कस्य इति ।
இங்கு அந்த அவித்யை யாருக்கு என்று கேட்கப்பட்டது.
यस्य दृश्यते तस्य एव ।
எவருக்குக் காணப்படுகின்றதோ அவருக்குத்தான்
कस्य दृश्यते इति ।
யாருக்குக் காணப்படுகின்றது?
अत्र उच्यते — ‘अविद्या कस्य दृश्यते ? ’ इति प्रश्नः निरर्थकः ।
அவித்யை யாருக்கு காணப்படுகிறது என்ற கேள்வியே அர்த்தமற்றது.
कथम् ?
எவ்வாறு?
दृश्यते चेत् अविद्या, तद्वन्तमपि पश्यसि । न च तद्वति उपलभ्यमाने ‘सा कस्य ? ’ इति प्रश्नो युक्तः । न हि गोमति उपलभ्यमाने ‘गावः कस्य इति प्रश्नः अर्थवान् भवति ।
அவித்யையானது காணப்படின் அதை உடையவனையும் நீ காண்கிறாய். அவ்வாறு அதனை உடையவன் அறியும் பொழுது அந்த “அவித்யா") யாருக்கு என்ற கேள்வியே பொருந்தாது. பசுவை உடையவன் என்று அறியும்பொழுது பசு யாருடையது என்று கேள்வியானது அர்த்தமில்லாததாகும்.
ननु विषमो दृष्टान्तः । गवां तद्वतश्च प्रत्यक्षत्वात् तत्सम्बन्धोऽपि प्रत्यक्ष इति प्रश्नो निरर्थकः । न तथा अविद्या तद्वांश्च प्रत्यक्षौ, यतः प्रश्नः निरर्थकः स्यात् ।
இந்த திருஷ்டாந்தமானது பொருந்தாது. ஏனெனில் பசுவும் அதை உடையவனும் பிரத்யக்ஷமாக இருப்பதால் அவர்களு டைய சம்பந்தமும் பிரத்யக்ஷமாக காணப்படுகிறது. ஆகையால் (அதன் சம்பந்தமுடைய) கேள்வியும் அர்த்தமற்றதாகும். ஆனால் இவைகளைப் போல அவித்யையை உடையவன், அவித்யை ஆகிய இரண்டும் பிரத்யக்ஷமாக இல்லை. ஆகையால் இந்த கேள் வியானது அர்த்தமற்றதாகிறது.
अप्रत्यक्षेण अविद्यावता अविद्यासम्बन्धे ज्ञाते, किं तव स्यात् ।
பிரத்யக்ஷமற்ற அவித்யையை உடையவனிடமுள்ள அவித்யையின் சம்பந்தத்தை அறிவதினால் உனக்கு என்ன கிடைக்கும்?
अविद्यायाः अनर्थहेतुत्वात् परिहर्तव्या स्यात् ।
அவித்யையானது அநர்த்தங்களுக்கு காரணமாய் இருப்ப தால் அது நீக்கப்படவேண்டியதாகும்.
यस्य अविद्या, सः तां परिहरिष्यति ।
எவரிடத்தில் அவித்யா உள்ளதோ அவர்தான் அதை நீக்க வேண்டும்.
ननु ममैव अविद्या ।
எனக்குத்தான் அவித்யை உள்ளது.
जानासि तर्हि अविद्यां तद्वन्तं च आत्मानम् ।
அவ்வாறு இருக்கும்பொழுது அவித்யை அவ்வாறே அதனுடன் கூடிய தங்களையும் தாங்களே அறிகிறீர்கள்.
जानामि, न तु प्रत्यक्षेण ।
ஆனால் பிரத்யக்ஷமாக அறியவில்லை.
अनुमानेन चेत् जानासि, कथं सम्बन्धग्रहणम् ? न हि तव ज्ञातुः ज्ञेयभूतया अविद्यया तत्काले सम्बन्धः ग्रहीतुं शक्यते, अविद्याया विषयत्वेनैव ज्ञातुः उपयुक्तत्वात् ।
அனுமானத்தினால் அறிந்துகொண்டாய் என்றால் அதன் (ஞாதா ஞேயத்தின்) சம்பந்தத்தை எவ்வாறு அறிந்து கொண்டாய்? (கிரஹித்துக் கொண்டாய்). ஏன் எனில் (அவித்யை அனுமானத்தி னால் அறியும்) சமயத்தில் உன்னுடைய ஞாதாவானது ஞேயரூப் அவித்யாவுடனான சம்பந்தத்தை கிரஹிக்கமுடியாது. ஏன் எனில் ஞாதா(அறியும் பொருள்) அவித்யையை ஞேய வஸ்துவாகிறது(அ றியப்படும் பொருளாகிறது)
न च ज्ञातुः अविद्यायाश्च सम्बन्धस्य यः ग्रहीता, ज्ञानं च अन्यत् तद्विषयं सम्भवति ; अनवस्थाप्राप्तेः । यदि ज्ञात्रापि ज्ञेयसम्बन्धो ज्ञायते, अन्यः ज्ञाता कल्प्यः स्यात् , तस्यापि अन्यः, तस्यापि अन्यः इति अनवस्था अपरिहार्या ।
ஞாதாவிற்கும் அவித்யைக்கும் உள்ள சம்பந்தத்தை கிரஹித் தால் அது மற்றொன்றின் ஞானமாகும். அந்த ஞானத்திற்கு ஞாதா, அவித்யை இவற்றினுடன் சம்பந்தம் இல்லை. ஏன் எனில் அவ்வாறு ஏற்பட்டால் அநவஸ்தாதோஷம் ஏற்படும். ஞாதாவும், ஞேய சம்பந்தமும் அறியப்பட்டால் அதற்கு மற்றொரு ஞாதா கல்பிக்க வேண்டிவரும்.அவ்வாறே அதற்கு ஒரு ஞாதா கல்பிக்க வேண்டும், அதற்கும் இன்னொன்று கல்பிக்க வேண்டி வரும் ஆகையால் இந்த அநவஸ்த்தா தோஷத்தை எவ்வாறாவது நீக்க வேண்டும்.
यदि पुनः अविद्या ज्ञेया, अन्यद्वा ज्ञेयं ज्ञेयमेव । तथा ज्ञातापि ज्ञातैव, न ज्ञेयं भवति । यदा च एवम् , अविद्यादुःखित्वाद्यैः न ज्ञातुः क्षेत्रज्ञस्य किञ्चित् दुष्यति ॥
மேலும் அவித்யா ஞேயா (அறியப்படும் பொருளா) ஆகட்டும் அல்லது வேறு ஒரு பொருள் அறியப்படும் பொருளாகட்டும். ஆனால் அறியப்படும் பொருள்-ஞேயம்) அறியப்படும் பொருளே. அவ்வாறேஅறியும் பொருள் "ஞாதா”) அறியும் பொருளே அறியப்படும் பொருளாக மாட்டாது. இவ்வாறு இருக்கும்பொழுது அவித்யை, துக்கித்துவம் முதலியவைகள் ஞாதாவாகிய க்ஷேத்திரக் ஞனை ஒருபோதும் கேடு உண்டாக்குவதில்லை.
ननु अयमेव दोषः, यत् दोषवत्क्षेत्रविज्ञातृत्वम् ।
அவ்வாறாகில் க்ஷேத்திரத்தை (ஞேயத்தை) அறிவதே ஞாதா விற்கு அறியும் பொருளுக்கு) தோஷமாகும் எனில்-
न च विज्ञानस्वरूपस्यैव अविक्रियस्य विज्ञातृत्वोपचारात् ; यथा उष्णतामात्रेण अग्नेः तप्तिक्रियोपचारः तद्वत् ।
அவ்வாறு அல்ல. ஏன் எனில் நிர்விகாரமான ஞானஸ்வரூப மாகிய ஆத்மாவிற்கு அறியும் தன்மையானது (விக்ஞாத்துருத்துவ மானது) உபசாரமாக கூறப்பட்டதாகும். எவ்வாறு நெருப்பிற்கு உஷ்ணம்(சூடு) உள்ள தன்மையினாலேயே எரிக்கும் செயலாக எவ்வாறு உபசாரமாக கூறப்பட்டதோ அவ்வாறு.
यथा अत्र भगवता क्रियाकारकफलात्मत्वाभावः आत्मनि स्वत एव दर्शितः — अविद्याध्यारोपितः एव क्रियाकारकादिः आत्मनि उपचर्यते ; तथा तत्र तत्र ‘य एवं वेत्ति हन्तारम्’ (भ. गी. २ । १९), ‘प्रकृतेः क्रियमाणानि गुणैः कर्माणि सर्वशः’ (भ. गी. ३ । २७), ‘नादत्ते कस्यचित्पापम्’ (भ. गी. ५ । १५) इत्यादिप्रकरणेषु दर्शितः । तथैव च व्याख्यातम् अस्माभिः । उत्तरेषु च प्रकरणेषु दर्शयिष्यामः ॥
எவ்வாறு இங்கு கிரியாகாரக அதனுடைய பலன் முதலான வைகள் இயற்கையாகவே இல்லாத ஆத்மாவினிடத்தில் தான் அவித்யையினால் கிரியா காரகம் முதலியவைகள் ஆத்மாவிடத் தில் ஆரோபிக்கப்பட்டு உபசாரமாகக் கொள்ளப்பட்டது. அவ் வாறே பகவானால் ஆங்காங்கு (ய ஏனம் வேத்தி ஹந்தாரம்)எவன் இதை கொல்லுபவனாக அறிகிறானோ, (ப்ரக்ருதே: க்ரியமாணானி குணை: கர்மாணி ஸர்வச:) ப்ரக்ருதியின் குணங்களினால் அல் லவா எல்லா கர்மங்களும் செய்யப்படுகின்றன. (நாதத்தே கஸ்ய சித்பாபம்) என்பது முதலிய பிரகரணங்களில் காண்பிக்கப்பட்டுள் ளது. அவ்வாறே நம்மால் வியாக்யானம் செய்யப்பட்டது, இனி வரும் பிரகரணங்களிலும் நம்மால் காட்டப்படப் போகிறது.
हन्त । तर्हि आत्मनि क्रियाकारकफलात्मतायाः स्वतः अभावे, अविद्यया च अध्यारोपितत्वे, कर्माणि अविद्वत्कर्तव्यान्येव, न विदुषाम् इति प्राप्तम् ।
நல்லது. ஆனால் ஆத்மாவினிடத்தில் கிரியாகாரக பலம் ஆகியவைகள் சுயமாக (இயற்கையாக) இல்லாவிடினும் அவித் யையினால் ரோபிக்கப்பட்ட கர்மங்கள் அவித்வான்களுடைய கர்த்தவ்யமே அன்றி வித்வான்களுடையது அல்ல என்று ஆகிறது.
सत्यम् एवं प्राप्तम् , एतदेव च ‘न हि देहभृता शक्यम्’ (भ. गी. १८ । ११) इत्यत्र दर्शयिष्यामः । सर्वशास्त्रार्थोपसंहारप्रकरणे च ‘समासेनैव कौन्तेय निष्ठा ज्ञानस्य या परा’ (भ. गी. १८ । ५०) इत्यत्र विशेषतः दर्शयिष्यामः । अलम् इह बहुप्रपञ्चनेन, इति उपसंह्रियते ॥ २ ॥
உண்மை தான். இவ்வாறு சித்திக்கிறது இதையே "ந ஹி தேஹப்ருதா சக்யம்”) என்ற இடத்தில் காண்பிக்கப்போகிறோம். மேலும் இந்த (கீதா) சாஸ்திரம் முழுவதிலும் உபதேசித்தது முடிக் கும் பிரகரணத்தில் "சமாஸேனைவ கௌந்தேய நிஷ்டா ஞானஸ்ய யா பரா”) என்ற இடத்தில் விசேஷமாக(விளக்கமாக) தெரிவிக்கிறேன். இங்கு விஸ்தாரமாக விளக்கியது போதும் என்று முடிக்கிறார்.
‘इदं शरीरम्’ इत्यादिश्लोकोपदिष्टस्य क्षेत्राध्यायार्थस्य सङ्ग्रहश्लोकः अयम् उपन्यस्यते ‘तत्क्षेत्रं यच्च’ इत्यादि, व्याचिख्यासितस्य हि अर्थस्य सङ्ग्रहोपन्यासः न्याय्यः इति —
(“இதம் சரீரம்”) முதலிய சுலோகங்களில் உபதேசிக்கப்பட்ட க்ஷேத்திர அத்யாய அர்த்தத்தினுடைய சுருக்கமாக"தத் க்ஷேத்ரம் யத்ச”) என்பது முதலிய ஸ்லோகங்களில் எடுத்துரைக்கப்பட்டது. ஏன் எனில் எந்த அர்த்தத்தை விஸ்தாரமாக விளக்க வேண்டுமோ அதை முதலில் சுருக்கமாகக் கூறவேண்டும் என்ற நியாயத்தினால் என்று -
तत्क्षेत्रं यच्च यादृक्च यद्विकारि यतश्च यत् ।
स च यो यत्प्रभावश्च तत्समासेन मे शृणु ॥ ३ ॥
தத்க்ஷேத்ரம் யச்ச யாத்ருக்ச யத்விகாரி யதச்ச யத் ।
ஸ ச யோ யத்ப்ரபாவச்ச தத்ஸமாஸேந மே ச்ருணு ॥ 3 ॥
यत् निर्दिष्टम् ‘इदं शरीरम्’ इति तत् तच्छब्देन परामृशति ।
இது சரீரம் என்று எது குறிப்பிடப்பட்டதோ அதை அந்த (தத்) என்ற சப்தத்தால் குறிப்பிடுகிறார்.
यच्च इदं निर्दिष्टं क्षेत्रं तत् यादृक् यादृशं स्वकीयैः धर्मैः । च - शब्दः समुच्चयार्थः । यद्विकारि यः विकारः यस्य तत् यद्विकारि, यतः यस्मात् च यत् , कार्यम् उत्पद्यते इति वाक्यशेषः ।
“இது (அதாவது) சரீரம் (13-1) என எது குறிப்பிட்டுக் காட்டப் பட்டதோ அதனை 'அந்த' என்னும் சொல்லினால் குறிப்பிடுகிறார். எந்த இந்த க்ஷேத்திரமானது எவ்வாறான தன்னுடைய தர்மத்தையு டையது என்பதையும், எப்படிப்பட்ட தன்மைகளையுடையது என் பதையும், அவ்வாறே எந்தக் காரணத்தினால் எந்த காரியம் உண்டாகின்றது என்பதையும் (தெரிந்துகொள்)" காரியம் உண்டா கின்றது” என்பது வாக்கியத்தில் தொக்கி நிற்கின்றது. 'ச' என்ற சப்தமானது சமுச்சயார்த்தத்துடன் கூடியது.
स च यः क्षेत्रज्ञः निर्दिष्टः सः यत्प्रभावः ये प्रभावाः उपाधिकृताः शक्तयः यस्य सः यत्प्रभावश्च । तत् क्षेत्रक्षेत्रज्ञयोः याथात्म्यं यथाविशेषितं समासेन सङ्क्षेपेण मे मम वाक्यतः शृणु, श्रुत्वा अवधारय इत्यर्थः ॥ ३ ॥
எவன் அந்த க்ஷேத்திரக்ஞன் என்று குறிப்பிடப்பட்டான் என் பதையும், அவனுடைய பிரபாவங்களாகிய உபாதியினால் உண் டான சக்திகள் உடையவன் எவன் என்பதையும் தெரிந்து கொள். க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன் இவைகளினுடைய கூறப்பட்ட விசே ஷணங்களுடன் கூடிய உண்மை ஸ்வரூபத்தை என்னுடைய சுருக்கமான வாக்கியங்களை (விளக்கத்தை) சிரத்தையுடன் கேட்டு நன் றாக புரிந்து கொள்வாயாக என்பது பொருள்.
तत् क्षेत्रक्षेत्रज्ञयाथात्म्यं विवक्षितं स्तौति श्रोतृबुद्धिप्ररोचनार्थम् —
அந்த க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன் இவைகளின் யதார்த்த ஸ்வரூப விளக்கத்தினால் கேட்பவனுடைய புத்தியில் சிரத்தை உண்டாகும் பொருட்டு ஸ்துதி செய்கின்றார்.
ऋषिभिर्बहुधा गीतं छन्दोभिर्विविधैः पृथक् ।
ब्रह्मसूत्रपदैश्चैव हेतुमद्भिर्विनिश्चितैः ॥ ४ ॥
ரிஷிபிர்பஹுதா கீதம் சந்தோபிர்விவிதை: ப்ருதக் ।
ப்ரஹ்மஸூத்ரபதைச்சைவ ஹேதுமத்பிர்விநிச்சிதை: ॥ 4 ॥
ऋषिभिः वसिष्ठादिभिः बहुधा बहुप्रकारं गीतं कथितम् । छन्दोभिः छन्दांसि ऋगादीनि तैः छन्दोभिः विविधैः नानाभावैः नानाप्रकारैः पृथक् विवेकतः गीतम् ।
வசிஷ்டர் முதலிய ரிஷிகளினால் ரிக் முதலிய வேதங்களின் வாக்கியங்களால் அநேகவிமாக தனித்தனியாக பிரித்துக் கூறப்பட்டது.
किञ्च, ब्रह्मसूत्रपदैश्च एव ब्रह्मणः सूचकानि वाक्यानि ब्रह्मसूत्राणि तैः पद्यते गम्यते ज्ञायते इति तानि पदानि उच्यन्ते तैरेव च क्षेत्रक्षेत्रज्ञयाथात्म्यम् ‘गीतम्’ इति अनुवर्तते । ‘आत्मेत्येवोपासीत’ (बृ. उ. १ । ४ । ७) इत्येवमादिभिः ब्रह्मसूत्रपदैः आत्मा ज्ञायते, हेतुमद्भिः युक्तियुक्तैः विनिश्चितैः निःसंशयरूपैः निश्चितप्रत्ययोत्पादकैः इत्यर्थः ॥ ४ ॥
மேலும் பிரஹ்மத்தைப் பற்றி குறிப்பிடுவதான சூத்திர வாக்கி யங்களாகிய பிரஹ்ம சூத்திரங்களால் பிரஹ்மமானது அறியப்படு வதால் அதைப் பதங்கள் என்று கூறப்படுகின்றன. அவைகளால் தான் க்ஷேத்திர, க்ஷேத்திரக்ஞனுடைய யதார்த்த சொரூபமானது கூறப்படுகிறது என்பது பெறப்படுகிறது. (ஆத்மேத்யேவோபாஸீ த) என்பது முதலிய பிரஹ்மசூத்ர பதங்களினால் ஆத்மா அறியப் படுகிறது. எவ்வாறெனில் யுக்திகளுடனும், சந்தேஹமற்றநிச்சய மான ஞானத்தினால் ஏற்படுகிறது என்பது பொருள்.
स्तुत्या अभिमुखीभूताय अर्जुनाय आह भगवान् —
ஸ்துதிகளைக் கேட்டதினால் ஒருமுகப்படுத்தப்பட்ட அர்ஜுனனுக்கு கூறுகிறார்.
महाभूतान्यहङ्कारो बुद्धिरव्यक्तमेव च ।
इन्द्रियाणि दशैकं च पञ्च चेन्द्रियगोचराः ॥ ५ ॥
மஹாபூதாந்யஹங்காரோ புத்திரவ்யக்தமேவ ச ।
இந்த்ரியாணி தசைகம் ச பஞ்ச சேந்த்ரியகோசர: ॥ 5 ॥
महाभूतानि महान्ति च तानि सर्वविकारव्यापकत्वात् भूतानि च सूक्ष्माणि । स्थूलानि तु इन्द्रियगोचरशब्देन अभिधायिष्यन्ते ।
எல்லா விகாரங்களிலும் வியாபித்திருப்பதால் அந்த பஞ்ச பூதங்கள் மிகப்பெரியதாகவும் சூக்ஷ்ம பூதங்களாயும் இருக்கின்ற ன. ஸ்தூல பூதங்கள் என்பது இந்திரிய விஷயங்கள் என்ற சொல்லினால் குறிப்பிடப்படும்.
अहङ्कारः महाभूतकारणम् अहंप्रत्ययलक्षणः । अहङ्कारकारणं बुद्धिः अध्यवसायलक्षणा । तत्कारणम् अव्यक्तमेव च, न व्यक्तम् अव्यक्तम् अव्याकृतम् ईश्वरशक्तिः ‘मम माया दुरत्यया’ (भ. गी. ७ । १४) इत्युक्तम् ।
நான் என்று விளங்கக்கூடிய லக்ஷணமான அஹங்காரம் மஹாபூதங்களுக்கு காரணம். அத்யவசாய (நிச்சயாத்மக) மானலக்ஷணத்துடன் கூடிய புத்தி அஹங்காரத்திற்கு காரணம். அதற்கு காரணம் அவ்யக்தமே தவிர வியக்தமல்ல. அவ்யாகிருத மானது ஈஸ்வர சக்தி. ("மம மாயா துரத்யயா”) மாயையானது தாண்டுவதற்கு அரியது என்று கூறப்பட்டுள்ளது.
एवशब्दः प्रकृत्यवधारणार्थः एतावत्येव अष्टधा भिन्ना प्रकृतिः । च - शब्दः भेदसमुच्चयार्थः ।
ஏவ என்ற பதமானது பிரகிருதியை எட்டுவித பேதமாக நன்றாக புரிந்து கொள்வதற்காக கூறப்பட்டது ச என்ற சப்தமானது எல்லா பிரகிருதி பேதங்களின் சமுச்சயார்த்தத்திற்காக கூறப்பட்டது.
इन्द्रियाणि दश, श्रोत्रादीनि पञ्च बुद्ध्युत्पादकत्वात् बुद्धीन्द्रियाणि, वाक्पाण्यादीनि पञ्च कर्मनिवर्तकत्वात् कर्मेन्द्रियाणि ; तानि दश । एकं च ; किं तत् ? मनः एकादशं सङ्कल्पाद्यात्मकम् । पञ्च च इन्द्रियगोचराः शब्दादयो विषयाः । तानि एतानि साङ्ख्याः चतुर्विंशतितत्त्वानि आचक्षते ॥ ५ ॥
இந்திரியங்கள் பத்து. அவை ச்ரோத்திரம் (காது) முதலிய ஐந்து விஷயங்களின் ஞானத்தை உண்டுபண்ணும் ஞானேந்திரி யங்களும், வாக், பாணி முதலிய ஐந்து கர்மேந்திரியங்களும் சேர்ந்து பத்தாகும். சங்கல்ப விகல்பக ஆத்மகமான மனது ஒன்று. அது பதினோராவது இந்திரியமாகிறது. இந்திரியங்களால் அறியப்படும் சப்தாதி விஷயங்கள் ஐந்து. இவைகளை சாங்கியர்கள் இருபத்தி நான்கு தத்துவங்களாக கூறுகிறார்கள்.
अथ इदानीम् आत्मगुणा इति यानाचक्षते वैशेषिकाः तेपि क्षेत्रधर्मा एव न तु क्षेत्रज्ञस्य इत्याह भगवान् -
பின் இப்பொழுது வைசேஷிகர்கள் ஆத்மகுணங்கள் என்று எதைக் கூறுகிறார்களோ அவைகள் க்ஷேத்திரத்தின் தர்மங்களே அன்றி க்ஷேத்திரக்ஞனுடைய தர்மங்கள் அல்ல என்று பகவான் கூறுகின்றார்.
इच्छा द्वेषः सुखं दुःखं सङ्घातश्चेतना धृतिः ।
एतत्क्षेत्रं समासेन सविकारमुदाहृतम् ॥ ६ ॥
இச்சா த்வேஷ: சுகம் து:கம் ஸங்காதச்சேதநா த்ருதி: ।
ஏதத்க்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரமுதாஹ்ருதம் ॥ 6 ॥
इच्छा, यज्जातीयं सुखहेतुमर्थम् उपलब्धवान् पूर्वम् , पुनः तज्जातीयमुपलभमानः तमादातुमिच्छति सुखहेतुरिति ; सा इयं इच्छा अन्तःकरणधर्मः ज्ञेयत्वात् क्षेत्रम् ।
முன்பு சுகத்தைக் கொடுக்கும் எந்த வகையான விஷயத்தை அடைந்தானோ, (அனுபவித்தானோ) மறுபடியும் அதே மாதிரியான விஷயத்தை அடைந்தால் சுகம் கிடைக்கும் என்று அறிந்து அதை அடைய விரும்புதலே இச்சை எனப்படும். அந்த இச்சை அந்தக்க ரண தர்மமாகும். அது அறியப்படுவதால் க்ஷேத்திரமாகும்.
तथा द्वेषः, यज्जातीयमर्थं दुःखहेतुत्वेन अनुभूतवान् , पुनः तज्जातीयमर्थमुपलभमानः तं द्वेष्टि ; सोऽयं द्वेषः ज्ञेयत्वात् क्षेत्रमेव ।
அவ்வாறே விருப்பமில்லாத பொருள் துக்கத்திற்கு காரண மாக அனுபவித்தவன் மறுபடியும் அவ்வாறான விஷயத்தை அடைந்தால் அதை வெறுக்கிறான். அந்த வெறுப்பானது அறியப் படுவதால் க்ஷேத்திரமாகும்.
तथा सुखम् अनुकूलं प्रसन्नसत्त्वात्मकं ज्ञेयत्वात् क्षेत्रमेव । दुःखं प्रतिकूलात्मकम् ; ज्ञेयत्वात् तदपि क्षेत्रम् ।
அவ்வாறே விருப்பமில்லாத பொருள் துக்கத்திற்கு காரண மாக அனுபவித்தவன் மறுபடியும் அவ்வாறான விஷயத்தை அடைந்தால் அதை வெறுக்கிறான். அந்த வெறுப்பானது அறியப் படுவதால் க்ஷேத்திரமே. அவ்வாறு சுகமானது அனுகூலமாயும், சாந்தமாயும், சத்வஸ்வரூபமாய் இருந்தாலும் அறியப்படுவதினால் க்ஷேத்திரமே. பிரதிகூலமாய் இருக்கும் துக்கமும் அறியப்படுவ தால் அதுவும் க்ஷேத்திரமாகும்.
सङ्घातः देहेन्द्रियाणां संहतिः । तस्यामभिव्यक्तान्तःकरणवृत्तिः, तप्त इव लोहपिण्डे अग्निः आत्मचैतन्याभासरसविद्धा चेतना ; सा च क्षेत्रं ज्ञेयत्वात् ।
சரீரம் இந்திரியங்களின் சேர்க்கை சங்காதம் எனப்படும். அதில் அபிவியக்தமாகும் (வெளிப்படும்) அந்தக்கரண விருத்தியானது எவ்வாறு எரிகின்ற இரும்பு உருண்டையில் அக்னி இருப்பதாக தோன்றுகின்றதோ அவ்வாறே ஆத்ம சைதன்யத்தினுடைய ஆபாச ரசத்தில் வியாபித்திருக்கிறது. அந்த சேதனமும் அறியப்ப டும் பொருளாவதால் க்ஷேத்திரமாகும்.
धृतिः यया अवसादप्राप्तानि देहेन्द्रियाणि ध्रियन्ते ; सा च ज्ञेयत्वात् क्षेत्रम् ।
வியாகூலமுடைய சரீரமும், இந்திரியங்களும் எதனால் (தரிக் கும்படி) கொள்ளும்படி செய்கின்றதோ அந்த கொள்வதும் (திருத் தியும்) அறியப்படுவதால் அதுவும் க்ஷேத்திரம்.
सर्वान्तःकरणधर्मोपलक्षणार्थम् इच्छादिग्रहणम् । यत उक्तमुपसंहरति ।
அந்தக்கரணத்தினுடைய எல்லா தர்மங்களுக்கும் உபலக்ஷ ணமாக இச்சை முதலியவைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இது வரை எது கூறப்பட்டதோ அதை முடிக்கிறார்.
एतत् क्षेत्रं समासेन सविकारं सह विकारेण महदादिना उदाहृतम् उक्तम् यस्य क्षेत्रभेदजातस्य संहतिः ‘इदं शरीरं क्षेत्रम्’ (भ. गी. १३ । १) इति उक्तम् , तत् क्षेत्रं व्याख्यातं महाभूतादिभेदभिन्नं धृत्यन्तम् । ॥ ६ ॥
இதை மகத்தத்துவாதி விகாரங்களுடன் கூடிய க்ஷேத்திரக்ஞனு டைய எந்த ஸ்வரூபமுள்ளதோ அது சுருக்கமாக கூறப்பட்டது. எல்லா க்ஷேத்திரக்ஞங்களுடைய பேதக்கூட்டம் இந்த சரீரமாகிய க்ஷேத்ரம் என்று எது கூறப்பட்டதோ அது மஹாபூதங்கள் முதலிய வைகள் முதல் திருதி வரையிலும் உள்ள நானாவித பேதங்கள் இந்த க்ஷேத்திரக்ஞனுடையது என்று வியாக்யானம் செய்யப்பட்டது.
क्षेत्रज्ञः वक्ष्यमाणविशेषणः — यस्य सप्रभावस्य क्षेत्रज्ञस्य परिज्ञानात् अमृतत्वं भवति, तम् ‘ज्ञेयं यत्तत्प्रवक्ष्यामि’ (भ. गी. १३ । १२) इत्यादिना सविशेषणं स्वयमेव वक्ष्यति भगवान् ।
இனி கூறப்போகிற விசேஷணங்களுடன் கூடிய எந்த க்ஷேத்திரக்ஞன் இருக்கிறானோ அந்த க்ஷேத்திரக்ஞனுடைய பிரபாவத்தை அறிவதினால்(மனிதன்)அம்ருதத்துவத்தை அடைகிறான். அதை (ஞேயம் யத்தத் பிரவக்ஷ்யாமி என்பது முதலிய வசனங்களினால் பகவானே சுயமாக விசேஷணங் களுடன் கூடியதை கூறப்போகிறார்.
अधुना तु तज्ज्ञानसाधनगणममानित्वादिलक्षणम् , यस्मिन् सति तज्ज्ञेयविज्ञाने योग्यः अधिकृतः भवति, यत्परः संन्यासी ज्ञाननिष्ठः उच्यते, तम् अमानित्वादिगणं ज्ञानसाधनत्वात् ज्ञानशब्दवाच्यं विदधाति भगवान् —
இப்பொழுது அதை அறிவதற்கான சாதனக் கூட்டமாகிய அமானித்துவாதி லக்ஷணங்கள் எவர்களிடத்தில் இருக்கிறதோ அந்த அதிகாரி அந்த ஞேயத்தை அறிவதற்கு யோக்கியனாகின் றான். எந்த மேலான சந்நியாசியாகிய ஞான நிஷ்ட்டன் என்று கூறப் படுகிறான். அந்த அமானித்துவாதி கூட்டம் ஞானசாதனமாவதால் அதற்கு ஞானம் என்னும் சொல்லால் பகவான் குறிப்பிடுகிறார்.
अमानित्वमदम्भित्वमहिंसा क्षान्तिरार्जवम् ।
आचार्योपासनं शौचं स्थैर्यमात्मविनिग्रहः ॥ ७ ॥
அமாநித்வமதம்பித்வமஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் ।
ஆசார்யோபாஸநம் சௌசம் ஸ்தைர்யமாத்மவிநிக்ரஹ: ॥ 7 ॥
अमानित्वं मानिनः भावः मानित्वमात्मनः श्लाघनम् , तदभावः अमानित्वम् ।
மானி என்றால் தற்புகழ்ச்சி அது இல்லாமை அமானித்துவம்.
अदम्भित्वं स्वधर्मप्रकटीकरणं दम्भित्वम् , तदभावः अदम्भित्वम् ।
தன்னுடைய ஒழுக்கத்தைப் பற்றி பெருமைக்காக எல்லோ ருக்கும் பிரஸித்தப்படுத்துதல் டம்பத் தன்மையாகும். அது இல்லாமை அதம்பித்துவம்.
अहिंसा अहिंसनं प्राणिनामपीडनम् ।
அஹிம்சா பிராணிகளை இம்சை படுத்தாமல் இருப்பது.
क्षान्तिः परापराधप्राप्तौ अविक्रिया ।
க்ஷாந்தி - மற்றொருவர் தனக்கு தீங்கு செய்யுமிடத்து பொறுமை காத்தல்.
आर्जवम् ऋजुभावः अवक्रत्वम् ।
ஆர்ஜவம் - நேர்மையாக இருத்தல், நேர்மையற்றவழியில் (குறுக்கு வழியில்) செல்லாதிருத்தல்
आचार्योपासनं मोक्षसाधनोपदेष्टुः आचार्यस्य शुश्रूषादिप्रयोगेण सेवनम् ।
ஆச்சாரிய உபாசனம் மோக்ஷ சாதனத்தை உபதேசிக்கும் ஆசாரியருக்கு சிசுருஷை முதலியவைகளால் சேவை செய்தல்.
शौचं कायमलानां मृज्जलाभ्यां प्रक्षालनम् ; अन्तश्च मनसः प्रतिपक्षभावनया रागादिमलानामपनयनं शौचम् ।
சௌசம்- சரீரத்தில் உள்ள அழுக்குகளை மண், நீர் முதலிய வைகளைக் கொண்டு சுத்தம் செய்தல். உள்ளே மனதின் அழுக்கு களை ராகத்துவேஷாதிகளை அதற்கு மாறான நல்ல குணங்களின் பாவனையால் அவைகளை நீக்குவது சௌசமாகும்.
स्थैर्यं स्थिरभावः, मोक्षमार्गे एव कृताध्यवसायत्वम् ।
ஸ்தைரியம்- ஸ்திரபாவம். மோக்ஷ மார்க்கத்தில் உறுதியாக பற்றி நிற்றல்.
आत्मविनिग्रहः आत्मनः अपकारकस्य आत्मशब्दवाच्यस्य कार्यकरणसङ्घातस्य विनिग्रहः स्वभावेन सर्वतः प्रवृत्तस्य सन्मार्गे एव निरोधः आत्मविनिग्रहः ॥ ७ ॥
ஆத்மவிநிக்ரஹ: (தன்னடக்கம்) ஆத்மாவிற்கு அபஹா ரம்/இடைஞ்சல் செய்கின்றதும், ஆத்ம சப்தத்தினால் குறிப்பிடப்ப டுகின்ற காரியகரண சங்காதமாகிய எந்த சரீரம் உண்டோ அது ஸ்வபாவமாகவே எல்லா வழிகளிலும் செல்வதை ஸன்மார்க்கத் தில் ஈடுபடுத்துவதே ஆத்மவிநிக்ரஹமாகும்.
किञ्च —
மேலும்.
इन्द्रियार्थेषु वैराग्यमनहङ्कार एव च ।
जन्ममृत्युजराव्याधिदुःखदोषानुदर्शनम् ॥ ८ ॥
இந்த்ரியார்தே ஷு வைராக்யமநஹங்கார ஏவ ச ।
ஜந்மம்ருத்யுஜராவ்யாதிது:காதோஷாநுதர்சனம் ॥ 8 ॥
इन्द्रियार्थेषु शब्दादिषु दृष्टादृष्टेषु भोगेषु विरागभावो वैराग्यम् अनहङ्कारः अहङ्काराभावः एव च ।
இந்திரியங்களின் விஷயங்களாகிய சப்தம் முதலிய இவ்வு லக அவ்வுலக போகங்களில் ஆசை இன்மை வைராக்கியமாகும். அஹங்கார பாவம் அற்றிருப்பதே அநஹங்காரம்.
जन्ममृत्युजराव्याधिदुःखदोषानुदर्शनं जन्म च मृत्युश्च जरा च व्याधयश्च दुःखानि च तेषु जन्मादिदुःखान्तेषु प्रत्येकं दोषानुदर्शनम् ।
ஜன்ம மிருத்யு ஜராவ்யாதி துக்கதோஷானுதர்சனம்- பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி, துக்கம் இவைகளில் தனித்தனியாக அதில் குற்றம் காணுதல் தோஷானுதர்சனம் எனப்படும்.
जन्मनि गर्भवासयोनिद्वारनिःसरणं दोषः, तस्य अनुदर्शनमालोचनम् । तथा मृत्यौ दोषानुदर्शनम् । तथा जरायां प्रज्ञाशक्तितेजोनिरोधदोषानुदर्शनं परिभूतता चेति । तथा व्याधिषु शिरोरोगादिषु दोषानुदर्शनम् । तथा दुःखेषु अध्यात्माधिभूताधिदैवनिमित्तेषु ।
கர்ப்பவாசம், துவாரம் வழியாக வெளிப்படுதல் ஆகிய தோஷம் பிறப்பில் உள்ள தோஷம் என்று அறிய வேண்டும். அவ்வாறே மரணத்தில் தோஷத்தை உணரவேண்டும்.அவ்வாறே முதுமையில் அறிவு குறைதலும், வலிமை குறைதலும், ஒளிமங்குதலுமாகிய தோஷங்களையும் அவ்வாறே ஏளனத்திற்கு உரியதாய் இருத்தலையும் அறிய வேண்டும் . அவ்வாறே வியாதிகளில் தலை முதலியவைகளில் உள்ள வியாதியையும் அவ்வாறே அத்யாத்மம், அதி பூதம், அதி தெய்வம் முதலியவை களால் வரும் துக்கத்திலும் குற்றம் காணல் வேண்டும்.
अथवा दुःखान्येव दोषः दुःखदोषः तस्य जन्मादिषु पूर्ववत् अनुदर्शनम् — दुःखं जन्म, दुःखं मृत्युः, दुःखं जरा, दुःखं व्याधयः । दुःखनिमित्तत्वात् जन्मादयः दुःखम् , न पुनः स्वरूपेणैव दुःखमिति ।
அல்லது துக்கங்களே தோஷமாகும். அதை பிறப்பு முதலிய வைகளில் முன்புபோல் குற்றம் காணல் வேண்டும். பிறப்பு, துக்கம், மரணம் துக்கம், முதுமைதுக்கம், வியாதிகள் துக்கம். துக்கத்திற்கு காரணமாய் இருப்பதால் பிறப்பு முதலியவைகள் துக்கம். ஸ்வரூப மாய் துக்கம் அல்ல.
एवं जन्मादिषु दुःखदोषानुदर्शनात् देहेन्द्रियादिविषयभोगेषु वैराग्यमुपजायते । ततः प्रत्यगात्मनि प्रवृत्तिः करणानामात्मदर्शनाय । एवं ज्ञानहेतुत्वात् ज्ञानमुच्यते जन्मादिदुःखदोषानुदर्शनम् ॥ ८ ॥
இவ்வாறு பிறப்பு முதலியவைகளில் குற்றம் காண்பதால் தேஹ, இந்திரிய விஷயங்களாகிய போகங்களில் வைராக்கியம் உண்டாகும். அதனால் ஆத்ம சாக்ஷாத்காரத்தின் பொருட்டு மனம், இந்திரியங்கள் முதலிய கரணங்கள் பிரத்யக் ஆத்மாவிடத்தில் செல்லுகிறது. இவ்வாறு ஞானத்திற்கு ஹேதுவாய் இருப்பதால் பிறப்பு முதலியவைகளில் துக்கமாகிய குற்றத்தைக் காணுதல் ஞானம் எனப்படுகிறது.
किञ्च —
மேலும்
असक्तिरनभिष्वङ्गः पुत्रदारगृहादिषु ।
नित्यं च समचित्तत्वमिष्टानिष्टोपपत्तिषु ॥ ९ ॥
அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு ।
நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு ॥ 9 ॥
असक्तिः सक्तिः सङ्गनिमित्तेषु विषयेषु प्रीतिमात्रम् , तदभावः असक्तिः ।
அஸக்தி- பற்றுக்கு நிமித்தமாக உள்ள விஷயங்களில் உள்ள ப்ரீதி (பிரியம்) மாத்திரம் பற்றாகும். அது இன்மை அஸக்தி எனப்ப டும்(பற்றின்மை எனப்படும்)
अनभिष्वङ्गः अभिष्वङ्गाभावः ।
அநபிஷ்வங்கம் - என்றால் பற்றின்மையின் இன்னுமொரு விசேஷமாகும்.
अभिष्वङ्गो नाम आसक्तिविशेष एव अनन्यात्मभावनालक्षणः ; यथा अन्यस्मिन् सुखिनि दुःखिनि वा ‘अहमेव सुखी, दुःखी च, जीवति मृते वा ‘अहमेव जीवामि मरिष्यामि च’ इति ।
அபிஷ்வங்கம்- என்றால் மோஹத்தினால் ஏற்படும் பற்று, தன்னைத் தவிர வேறு ஒன்றையும் பாவிக்காமல் தானும் பொருளும் ஒன்றென பாவிக்கும் பற்றாகும். எவ்வாறு மற்றவர் களிடத்தில் சுகமோ, துக்கமோ ஏற்பட்டால் நான் சுகி, துக்கி என்றும் அவ்வாறே ஜீவித்திருக்கும் மற்றவர்கள் ஜீவித்திருந் தாலும், மரணமடைந்தாலும் நான் ஜீவித்திருக்கிறேன், மரண மடைவேன் என்று கருதுகிறான்.
क्व इति आह — पुत्रदारगृहादिषु, पुत्रेषु दारेषु गृहेषु आदिग्रहणात् अन्येष्वपि अत्यन्तेष्टेषु दासवर्गादिषु । तच्च उभयं ज्ञानार्थत्वात् ज्ञानमुच्यते ।
இவ்வாறான அபிஷ்வங்கம் எங்கு ஏற்படுகிறது? எனில், புத்தி ரர்களிடத்திலும் மனைவியினிடத்தும், வீடுகளிடத்தும் முதலிய வைகள் என்று கூறியதால் மற்றமிகவும் பிரியமான வேலைக்காரர் களிடத்தும் ஏற்படுகிறது. ஆகையால் இந்த அஸக்தி, அநபிஷ்வங் கம் இரண்டும் ஞானத்திற்கு ஹேதுவாய் இருப்பதால் ஞானம் என்று கூறப்பட்டது.
नित्यं च समचित्तत्वं तुल्यचित्तता । क्व ? इष्टानिष्टोपपत्तिषु इष्टानामनिष्टानां च उपपत्तयः सम्प्राप्तयः तासु इष्टानिष्टोपपत्तिषु नित्यमेव तुल्यचित्तता । इष्टोपपत्तिषु न हृष्यति, न कुप्यति च अनिष्टोपपत्तिषु । तच्च एतत् नित्यं समचित्तत्वं ज्ञानम् ॥ ९ ॥
எப்பொழுதும் மனம் சமநிலையில் இருப்பது. எவைகளில் எனில் பிரியமானவைகளிலும், பிரியமற்றவைகளிலும் எப்பொ ழுது மனமானது ஒரே படித்தாய் இருத்தல். இஷ்ட வஸ்து கிடைப்ப தினால் சந்தோஷமோ, இஷ்ட்டமில்லாத வஸ்து அடைவதினால் கோபமோ ஏற்படாமல் சமசித்தத்துடன் இருப்பது. அந்த இந்த எப் பொழுதும் உள்ள சமசித்தத்வம் (ஞானத்திற்கு ஹேதுவாய் இருப்ப தால்) ஞானம் எனப்படுகிறது.
किञ्च —
மேலும்
मयि चानन्ययोगेन भक्तिरव्यभिचारिणी ।
विविक्तदेशसेवित्वमरतिर्जनसंसदि ॥ १० ॥
மயி சாநன்யயோகேன பக்திரவ்யபிசாரிணீ ।
விவிக்ததேசஸேவித்வமரதிர்ஜனஸம்ஸதி ॥ 10 ॥
मयि च ईश्वरे अनन्ययोगेन अपृथक्समाधिना ‘न अन्यो भगवतो वासुदेवात् परः अस्ति, अतः स एव नः गतिः’ इत्येवं निश्चिता अव्यभिचारिणी बुद्धिः अनन्ययोगः, तेन भजनं भक्तिः न व्यभिचरणशीला अव्यभिचारिणी । सा च ज्ञानम् ।
அநன்ய யோகம் என்றால் ஏகத்துவ ரூப சமாதி. பகவான் வாசுதேவனைக் காட்டிலும் வேறான மேலானது ஒன்றுமில்லை. ஆகையால் அவர்தான் எங்களுடைய கதி என்று இவ்வாறு நிச்சயம் செய்த பிறழாத புத்தியானது அநன்ய யோகமாகும். அந்த பிறழாத புத்தியுடன் பக்தி செய்வது எப்பொழுதும் பிறழாது. அந்த பிறழாத பக்தியே (ஞானத்திற்கு சாதனமாய் இருப்பதால்) ஞானம் எனப்படும்.
विविक्तदेशसेवित्वम् , विविक्तः स्वभावतः संस्कारेण वा अशुच्यादिभिः सर्पव्याघ्रादिभिश्च रहितः अरण्यनदीपुलिनदेवगृहादिभिर्विविक्तो देशः, तं सेवितुं शीलमस्य इति विविक्तदेशसेवी, तद्भावः विविक्तदेशसेवित्वम् ।
விவிக்ததேச ஸேவித்துவம்- இயற்கையாகவே சுத்தமானதும் அல்லது சம்ஸ்காரத்தினால் (ஜலம் தெளித்தல் முதலியவைகளால்) சுத்தம் செய்யப்பட்டதாயும், அல்லது பாம்பு, புலி முதலியவைகள் அற்றதாயும் உள்ள காடு, நதிக்கரை, கோவில் இவைகள் தனிமை யான இடம் விவிக்ததேசமாகும். அதை எவன் சார்ந்திருக்கி றானோ அவன் விவிக்ததேசசேவீ.
அதை சார்ந்திருத்தல் விவிக்ததேச சேவித்துவம்.
विविक्तेषु हि देशेषु चित्तं प्रसीदति यतः ततः आत्मादिभावना विविक्ते उपजायते । अतः विविक्तदेशसेवित्वं ज्ञानमुच्यते ।
தனிமையான (விவிக்த) இடத்தில் மனம் சமாதானம் அடைகி றது. ஆகையால் ஆத்மா முதலிய பாவனை தனிமையான இடத் தில் உண்டாகிறது. ஆகையால் தனிமையான இடத்தை சார்தல் (வி விக்ததேச சேவித்துவம்) ஞானத்திற்கு ஹேதுவாய் இருப்பதால் ஞானம் எனப்படுகிறது.
अरतिः अरमणं जनसंसदि, जनानां प्राकृतानां संस्कारशून्यानाम् अविनीतानां संसत् समवायः जनसंसत् ; न संस्कारवतां विनीतानां संसत् ; तस्याः ज्ञानोपकारकत्वात् । अतः प्राकृतजनसंसदि अरतिः ज्ञानार्थत्वात् ज्ञानम् ॥ १० ॥
அரதி: (ரமித்தல் அற்றதன்மை) - சாதாரணமான நல்ல சம்ஸ் காரங்கள் (ஒழுக்கங்கள்) அற்றவர்களாயும், பணிவு அற்றவர்களா யும் உள்ள ஜனக்கூட்டமாகும். நல் ஒழுக்கமுடைய பணிவு உள்ள வர்களின் கூட்டமன்று. ஆதலால் அதில் பிரியமற்றிருப்பது அரதி யாகும். அது ஞானத்திற்கு உபகாரமாய் இருக்கிறது. ஆகையால் சாதாரண ஜனக்கூட்டத்தில் உள்ள அரதி: (அருவருப்பது) ஞானத் திற்காக ஆவதால் ஞானம் எனப்படும்.
किञ्च —
மேலும்
अध्यात्मज्ञाननित्यत्वं तत्त्वज्ञानार्थदर्शनम् ।
एतज्ज्ञानमिति प्रोक्तमज्ञानं यदतोऽन्यथा ॥ ११ ॥
அத்யாத்மஞானநித்யத்வம் தத்வஞானார்த்தர்சனம் ।
ஏதஜ்ஞானமிதி ப்ரோக்தஞானம் யததோஅந்யதா ॥ 11 ॥
अध्यात्मज्ञाननित्यत्वम् आत्मादिविषयं ज्ञानम् अध्यात्मज्ञानम् , तस्मिन् नित्यभावः नित्यत्वम् ।
அத்யாத்ம ஞான நித்யத்வம் - ஆத்மா முதலியவைகளின் விஷயத்தில் உள்ள ஞானம் அத்யாத்ம ஞானமாகும். அதில் எப் பொழுதும் நிலைபெற்றிருத்தல்.
अमानित्वादीनां ज्ञानसाधनानां भावनापरिपाकनिमित्तं तत्त्वज्ञानम् , तस्य अर्थः मोक्षः संसारोपरमः ; तस्य आलोचनं तत्त्वज्ञानार्थदर्शनम् ; तत्त्वज्ञानफलालोचने हि तत्साधनानुष्ठाने प्रवृत्तिः स्यादिति ।
ஞான சாதனங்களாகிய அமானித்துவ முதலியவைகளின் பரி பாகா அவஸ்தையின் காரணமாக தத்வஞானம் உண்டாகிறது. அத னுடைய பலன் சம்சாரத்தின் நிவர்த்தியாகிய மோக்ஷமாகும். அதை விசாரிப்பதே (ஆலோசிப்பதே) தத்வஞான தர்சனம். தத்வ ஞானத்தின் பலனை விசாரிப்பதால் அல்லவா அந்த ஞானத்தை அனுஷ்ட்டித்தலில் பிரவிர்த்தி ஏற்படும் என்று
एतत् अमानित्वादितत्त्वज्ञानार्थदर्शनान्तमुक्तं ज्ञानम् इति प्रोक्तं ज्ञानार्थत्वात्  ।
அமானித்துவத்திலிருந்து தத்வஞான தர்சனம் வரையிலும் கூறப்பட்டது. ஞானத்தின் பொருட்டாதலால் அவைகள் ஞானம் என்று கூறப்பட்டது.
अज्ञानं यत् अतः अस्मात् यथोक्तात् अन्यथा विपर्ययेण । मानित्वं दम्भित्वं हिंसा अक्षान्तिः अनार्जवम् इत्यादि अज्ञानं विज्ञेयं परिहरणाय, संसारप्रवृत्तिकारणत्वात् इति ॥ ११ ॥
இவ்வாறு கூறப்பட்ட இந்த ஞான சாதனங்களைக் காட்டிலும் மாறான (விரோதமான) மானித்வம், தம்பித்வம், ஹிம்சை, பொறுமை அற்றதன்மை, அநார்ஜவம் இவைகள் சம்சார பிரவிர்த் திக்கு காரணமாய் இருப்பதால் இவைகளை நீக்கவேண்டி அக்ஞா னம் என்று நன்றாக அறியவேண்டும்.
यथोक्तेन ज्ञानेन ज्ञातव्यं किम् इत्याकाङ्क्षायामाह — ‘ज्ञेयं यत्तत्’ इत्यादि ।
இவ்வாறு கூறப்பட்ட ஞானத்தினால் அறியவேண்டியது என்ன? என்ற கேள்விக்கு(ஞேயம் யத் தத் என்பது முதலிய சுலோ கங்களால் கூறுகிறார்.
ननु यमाः नियमाश्च अमानित्वादयः । न तैः ज्ञेयं ज्ञायते । न हि अमानित्वादि कस्यचित् वस्तुनः परिच्छेदकं दृष्टम् । सर्वत्रैव च यद्विषयं ज्ञानं तदेव तस्य ज्ञेयस्य परिच्छेदकं दृश्यते । न हि अन्यविषयेण ज्ञानेन अन्यत् उपलभ्यते, यथा घटविषयेण ज्ञानेन अग्निः ।
ஆனால் அமானித்துவாதி குணங்கள் யம, நியமங்களாகும். அவைகளால் ஞேய வஸ்துவானது அறியமுடியாது. மேலும் அமானித்துவாதிகள் ஒரு பொருளையும் அறிவதாகக் காணப்பட வில்லை. எங்கும் ஞானமானது எந்த அறிபடும் வஸ்துவை விஷயம் செய்கிறதோ அந்த ஞேய வஸ்துவே அறிவதாகக் காணப்படுகிறது. ஒரு விஷயமானது மற்றொரு விஷய ஞானத்தி னால் அறிய முடியாது. எவ்வாறு கட விஷயமான ஞானத்தினால் அக்கினியானது அறியப்படாதோ அவ்வாறு (என்று அறிந்து கொள்ளவேண்டும்)
नैष दोषः, ज्ञाननिमित्तत्वात् ज्ञानमुच्यते इति हि अवोचाम ; ज्ञानसहकारिकारणत्वाच्च —
ஞானத்தின் நிமித்தமாகவே ஞானம் ஏற்படுகிறது என்று அல் லவா கூறப்பட்டது. ஆகையால் இந்த தோஷம் ஏற்படாது. (அமா னித்து வாதிகள்) ஞானத்திற்கு சஹகாரி காரணமாய் இருப்பதால் (ஞானம் எனப்பட்டது)
ज्ञेयं यत्तत्प्रवक्ष्यामि यज्ज्ञात्वामृतमश्नुते ।
अनादिमत्परं ब्रह्म न सत्तन्नासदुच्यते ॥ १२ ॥
ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஞாத்வாம்ருதமச்நுதே ।
அநாதிமத்பரம் ப்ரஹ்ம ந ஸத்தந்நாஸதுச்யதே ॥ 12 ॥
ज्ञेयं ज्ञातव्यं यत् तत् प्रवक्ष्यामि प्रकर्षेण यथावत् वक्ष्यामि ।
அறியப்படவேண்டிய ஞேய வஸ்து எதுவோ அதை உள்ள வாறு தெளிவாகக் கூறுகிறேன்.
किम्फलं तत् इति प्ररोचनेन श्रोतुः अभिमुखीकरणाय आह —
கேட்பவனை அதில் ருசி உண்டாக்கி ஒருமுகப்படுத்துவதற் காக அதற்கு என்ன பலன் என்று கூறுகிறார்-
यत् ज्ञेयं ज्ञात्वा अमृतम् अमृतत्वम् अश्नुते, न पुनः म्रियते इत्यर्थः ।
எந்த அறியப்படவேண்டிய வஸ்துவை அதாவது ஞேயத்தை அறிந்து அம்ருதத்துவத்தை அடைகின்றான். மறுபடியும் இறப்பது இல்லை என்பது பொருள்.
अनादिमत् आदिः अस्य अस्तीति आदिमत् , न आदिमत् अनादिमत् ; किं तत् ? परं निरतिशयं ब्रह्म, ‘ज्ञेयम्’ इति प्रकृतम् ॥
அநாதிமத்- ஆதி எதற்கு உள்ளதோ அது ஆதி உடையது (ஆதிமத்) அதற்கு ஆதி உடைமை இல்லையாதலால் அது அநாதி உடையது. அது எது எனில் நிரதிசய பிரஹ்மமாகும். அதையே இந்தப் பிரகரணத்தில் ஞேய ரூபமாக வர்ணிக்கப்பட்டது.
अत्र केचित् ‘अनादि मत्परम्’ इति पदं छिन्दन्ति, बहुव्रीहिणा उक्ते अर्थे मतुपः आनर्थक्यम् अनिष्टं स्यात् इति ।
இங்கு ஒரு சிலர் அநாதி, மத்பரம் என்று பதச்சேதம் செய்து (ப தத்தைப் பிரித்து) கூறுவர். இவ்வாறு செய்வதால் பஹுவ்ரிஹி சமாசத்தினால் கூறும் அர்த்தத்திற்கும் (மதுப்) பிரத்யயம் உபயோகித்தலால் அர்த்தமற்றதாகிவிடும். ஆகையால் அது தேவையற்றதாகும்.
अर्थविशेषं च दर्शयन्ति — अहं वासुदेवाख्या परा शक्तिः यस्य तत् मत्परम् इति ।
அவ்வாறு கூறுகின்றசில டீக்காகாரர்கள் அதற்கு வேறு அர்தத்தைக் கூறுகிறார்கள். அது எது எனில் நான் வாசுதேவன் என்ற பராசக்தியானது எதற்கோ அது மத்பரம் என்று கூறுகிறார்கள்.
सत्यमेवमपुनरुक्तं स्यात् , अर्थः चेत् सम्भवति । न तु अर्थः सम्भवति, ब्रह्मणः सर्वविशेषप्रतिषेधेनैव विजिज्ञापयिषितत्वात् ‘न सत्तन्नासदुच्यते’ इति ।
சரிதான் ஆனால் கூறப்பட்ட அர்த்தமானது ஏற்பட்டாலும் அவ்வாறு பதச்சேதம் செய்வதால் புனருக்தி (மறுபடியும் கூறுதல்) என்றதோஷமானது நீங்கும் என்றாலும் அர்த்தம் ஏற்படாது. பிரஹ்மத்திற்கு எல்லா விசேஷணங்களும் நீங்குவதினால் தான் அறியமுடியும் என்பதால், ந ஸத் தத் ந அஸத் (சத் அல்ல, அஸத் அல்ல) என்று கூறப்பட்டுள்ளது.
विशिष्टशक्तिमत्त्वप्रदर्शनं विशेषप्रतिषेधश्च इति विप्रतिषिद्धम् । तस्मात् मतुपः बहुव्रीहिणा समानार्थत्वेऽपि प्रयोगः श्लोकपूरणार्थः ॥
விசேஷசக்தி உடையதாக பிரஹ்மத்தைக் காட்டுவதும், விசேஷ குணங்களை மறுப்பதும் என்பது பரஸ்பரம் விரோதமாக இருக்கிறது. ஆகையால் மதுப் பிரத்யயத்தை உடையவும், பஹுவிரீஹி சமாசத்தினுடைய அர்த்தம் சமானமாக இருந்தாலும் இங்கு ஸ்லோகத்தை முடிப்பதற்காக இந்த பிரயோகம் செய்யப் பட்டுள்ளது.
अमृतत्वफलं ज्ञेयं मया उच्यते इति प्ररोचनेन अभिमुखीकृत्य आह —
மரணமற்றபயனை உடைய ஞேய வஸ்துவை (அறிய வேண்டிய பொருளை) கூறுகிறேன் என்றது ருசி உண்டாக்கி அதில் ஒருமுகப்படுத்திக் கூறுகிறார்-
न सत् तत् ज्ञेयमुच्यते इति न अपि असत् तत् उच्यते ॥
அது சத்து அல்லவென்றும் அசத்தும் அல்ல என்றும் கூறப்பட்டது.
ननु महता परिकरबन्धेन कण्ठरवेण उद्घुष्य ‘ज्ञेयं प्रवक्ष्यामि’ इति, अननुरूपमुक्तं ‘न सत्तन्नासदुच्यते’ इति ।
நான் அறியவேண்டிய பொருளை நான் நன்றாக கூறுகிறேன் என்று தொண்டை கிழிய உரக்கக் கத்தி அதன்பின் இது (ஞேய வஸ்து) சத் அல்ல, அசத் அல்ல என்று கூறுவது பொருத்தமானது அன்று.
न, अनुरूपमेव उक्तम् । कथम् ? सर्वासु हि उपनिषत्सु ज्ञेयं ब्रह्म ‘नेति नेति’ (बृ. उ. २ । ३ । ६) ‘अस्थूलमनणु’ (बृ. उ. ३ । ८ । ८) इत्यादिविशेषप्रतिषेधेनैव निर्दिश्यते, न ‘इदं तत्’ इति, वाचः अगोचरत्वात् ॥
அவ்வாறு அல்ல. பொருத்தமானதே கூறப்பட்டுள்ளது. எவ் வாறு எல்லா உபநிஷத்துகளிலும் ஞேயம் பிரஹ்மத்தை நேதி, நேதி, அஸ்தூலமனணு என்பது முதலிய விசேஷணங்களை நீக்கி விட்டுத்தான் (நிஷேதம் செய்துவிட்டுதான்) உணர்த்துகிறது. ஞேய வஸ்து வாக்கிற்கு எட்டாததினால் (வாக்கினால் கூறமுடியாததால்) ந இதம் தத் = இது அதுவல்ல, என்று உணர்த்தப்பட்டது.
ननु न तदस्ति, यद्वस्तु अस्तिशब्देन नोच्यते । अथ अस्तिशब्देन नोच्यते, नास्ति तत् ज्ञेयम् । विप्रतिषिद्धं च — ‘ज्ञेयं तत्,’ ‘अस्तिशब्देन नोच्यते’ इति च ।
ஆனால் அது இல்லை என்று எந்த வஸ்து உள்ளதோ அதை இருக்கிறது என்ற சொல்லினால் கூறப்படுவது இல்லை. ஆகை யால் இருக்கின்றது என்றசொல்லினால் கூறப்படாததால் அந்த ஞேயவஸ்து இல்லை என்று ஆகிறது. இல்லாத ஞேய வஸ்துவை அது இருக்கிறது என்ற சொல்லினாலும் கூறமுடியாது.
न तावन्नास्ति, नास्तिबुद्ध्यविषयत्वात् ॥
அவ்வாறு அல்ல, எது இல்லையோ அது இல்லை என்ற புத்திக்கு அவிஷயமாதலால்
ननु सर्वाः बुद्धयः अस्तिनास्तिबुद्ध्यनुगताः एव । तत्र एवं सति ज्ञेयमपि अस्तिबुद्ध्यनुगतप्रत्ययविषयं वा स्यात् , नास्तिबुद्ध्यनुगतप्रत्ययविषयं वा स्यात् ।
அவ்வாறாயின் எல்லா ஞானமும் இருக்கிறது, இல்லை என்ற புத்திகளில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும். ஆகையால் ஞேய வஸ்துவானது இருக்கிறது என்ற ஞான விஷயமாகவோ அல்லது இல்லை என்ற ஞானவிஷயமாகவோ தான் இருக்க வேண்டும்.
न, अतीन्द्रियत्वेन उभयबुद्ध्यनुगतप्रत्ययाविषयत्वात् ।
இவ்வாறு கூறமுடியாது. ஏன் எனில் இந்த ஞேய பிரஹ்மமா னது இந்திரியங்களால் அறியமுடியாததினால் (இருக்கிறது, இல் லை) என்ற இவ்விரு ஞானங்களுக்கு விஷயமாகாது.
यद्धि इन्द्रियगम्यं वस्तु घटादिकम् , तत् अस्तिबुद्ध्यनुगतप्रत्ययविषयं वा स्यात् , नास्तिबुद्ध्यनुगतप्रत्ययविषयं वा स्यात् ।
இந்திரியங்களுக்கு விஷயமாகும் எந்த கடம் முதலிய பதார்த் தங்கள் உள்ளனவோ அவை இருக்கிறது என்ற ஞான விஷயமாக வோ, அல்லது இல்லை என்ற ஞான விஷயமாகவோ இருக்கும்.
इदं तु ज्ञेयम् अतीन्द्रियत्वेन शब्दैकप्रमाणगम्यत्वात् न घटादिवत् उभयबुद्ध्यनुगतप्रत्ययविषयम् इत्यतः ‘न सत्तन्नासत्’ इति उच्यते ॥
இந்த ஞேய வஸ்துவானது இந்திரியங்களுக்கு அகோசரமாயும் (இந்திரியங்களால் அறியமுடியாததாயும்) சப்தப் பிரமாணத்தினால் அறியப்படுவதாயும் இருப்பதால் கடம் முதலியவைகளைப் போல் இருக்கிறது, இல்லை என்றஇவ்விரு புத்திகளைத் தழுவிய விஷய மல்லாததால் அது சத் அல்ல, அசத்தல்ல என்று கூறப்பட்டது.
यत्तु उक्तम् — विरुद्धमुच्यते, ‘ज्ञेयं तत्’ ‘न सत्तन्नासदुच्यते’ इति — न विरुद्धम् , ‘अन्यदेव तद्विदितादथो अविदितादधि’ (के. उ. १ । ४) इति श्रुतेः ।
ஞேயவஸ்து சத் அல்ல, அசத் அல்ல என்று எது விருத்தமா கக் கூறப்பட்டதோ அது விருத்தமல்ல என்பது “அந்யதேவ தத்வி திதாததோ ஆவிதிதாததி” (ஞேய வஸ்து அறிபடும் பொருள், அறி படாபொருளைக் காட்டிலும் வேறு) என்று சுருதியில் உள்ள வசனங்களால் அறியப்படுகிறது.
श्रुतिरपि विरुद्धार्था इति चेत् — यथा यज्ञाय शालामारभ्य ‘यद्यमुष्मिंल्लोकेऽस्ति वा न वेति’ (तै. सं. ६ । १ । १ । १) इत्येवमिति चेत् ।
சுருதியும் விருத்தமான அர்த்தமுடையது என்றால் எவ்வாறு சுருதியில் யாகத்தின் பொருட்டு யக்ஞசாலையை அமைக்கும் முறையை கூறி ஆரம்பித்து பின்பு " (கோ ஹி தத் வேத யத்யமுஷ் மின் லோகேஅஸ்தி வா ந வேதி)” எவன் தான் அறிவான் பரலோ கம் இருக்கிறதா? இல்லையா? என்று இவ்வாறு கூறப்பட்டுள்ளதே என்றால்
न ; विदिताविदिताभ्यामन्यत्वश्रुतेः अवश्यविज्ञेयार्थप्रतिपादनपरत्वात् ‘यद्यमुष्मिन्’ इत्यादि तु विधिशेषः अर्थवादः ।
அவ்வாறு அல்ல. ஏன் எனில் அறிந்ததைக் காட்டிலும், அறியாததைக் காட்டிலும் விலக்ஷணமாக (வேறாக) இருக்கிறது என்று சுருதியில் கூறியது அவசியம் ஞேய வஸ்துவை அறிய வேண்டும் என்பதற்காக பிரதிபாதனம் செய்யப்பட்டது. (கூறப்பட் டது) “யத்யமுஷ்மின்” முதலிய ஸ்ருதி வாக்கியங்கள் விதியின் சேஷமாகிய அர்த்தவாதமாகும்.
उपपत्तेश्च सदसदादिशब्दैः ब्रह्म नोच्यते इति । सर्वो हि शब्दः अर्थप्रकाशनाय प्रयुक्तः, श्रूयमाणश्च श्रोतृभिः, जातिक्रियागुणसम्बन्धद्वारेण सङ्केतग्रहणसव्यपेक्षः अर्थं प्रत्याययति ; न अन्यथा, अदृष्टत्वात् ।
யுக்தியினாலும் பிரஹ்மத்தை சத்,அசத் என்ற சொற்களினால் கூறப்படவில்லை. ஏனெனில் எல்லா சப்தங்களும் பொருளைத் தெரிவிப்பதற்காக உபயோகப்பட்டதைக் கேட்ட ஸ்ரோதாவினால் ஜாதி, கிரியா, குணம், சம்பந்தம் இவைகளின் வாயிலாக குறிப்பி டப்படும் பொருள் கிரஹிக்கப்பட்டு அறியமுடிகிறது. வேறு விதமாக அன்று.
तत् यथा — ‘गौः’ ‘अश्वः’ इति वा जातितः, ‘पचति’ ‘पठति’ इति वा क्रियातः, ‘शुक्लः’ ‘कृष्णः’ इति वा गुणतः, ‘धनी’ ‘गोमान्’ इति वा सम्बन्धतः ।
அது எவ்வாறெனில் பசு, குதிரை என்பது ஜாதி வைத்துக் கூறப்படுகிறது. அவ்வாறே சமைக்கிறான், படிக்கிறான் என்பது கிரியை (செயலை) வைத்தும் பார்க்கப்படுகிறது. வெள்ளை, கருப்பு என்பன குணத்தை வைத்தும், தனமுடையவன், பசு உடையவன் என்பன சம்பந்தத்தை வைத்து அறிகிறோம்.
न तु ब्रह्म जातिमत् , अतः न सदादिशब्दवाच्यम् । नापि गुणवत् , येन गुणशब्देन उच्येत, निर्गुणत्वात् । नापि क्रियाशब्दवाच्यं निष्क्रियत्वात् ‘निष्कलं निष्क्रियं शान्तम्’ (श्वे. उ. ६ । १९) इति श्रुतेः ।
பிரஹ்மமானது ஜாதித்தன்மை உடையதல்ல. ஆகையால் சொல்லினால் குறிப்பிடமுடியாது. நிர்குணமாய் இருப்பதால் குண சம்பந்தத்தினாலும் கூறமுடியாது. அது நிஷ்க்ரியையாய் இருப்ப தால் (கிரியை அற்றிருப்பதால்) கிரியா சப்தத்தினாலும் கூறமுடியா து. (நிஷ்கலம், நிஷ்க்ரியம், சாந்தம்) என்பது போன்றசுருதிகளாலும் கூறப்பட்டுள்ளது.
न च सम्बन्धी, एकत्वात् । अद्वयत्वात् अविषयत्वात् आत्मत्वाच्च न केनचित् शब्देन उच्यते इति युक्तम् ; ‘यतो वाचो निवर्तन्ते’ (तै. उ. २ । ९ । १) इत्यादिश्रुतिभिश्च ॥ १२ ॥
பிரஹ்மம் ஏகமாயும், அத்வைதமாயும் விஷயமற்றதாயும் ஆத்மாவாயும் இருப்பதால் சம்பந்தமும் பொருந்தாது. ஆகை யால் எந்த சப்தத்தாலும் கூறமுடியாது, அதையே "(யதோ வாசோ நிவர்த்தந்தே”) = எதில் வாக்கானது செல்ல வில்லையோ) என்பது முதலிய சுருதிகளில் கூறப்பட்டுள்ளது.
सच्छब्दप्रत्ययाविषयत्वात् असत्त्वाशङ्कायां ज्ञेयस्य सर्वप्राणिकरणोपाधिद्वारेण तदस्तित्वं प्रतिपादयन् तदाशङ्कानिवृत्त्यर्थमाह —
ஞேய ஸ்வரூபமானது சத் என்ற சொல்லால் அறியப்படும் விஷயமானது எனில் அசத் ஆகுமோ என்றும் சங்கைக்கு எல்லா ஜீவர்களுடையவும் இந்திரியங்கள் முதலிய உபாதியினால் அதனு டைய இருப்பை விளக்கி அந்த சங்கையை நிவிர்த்திப்பதற்காக கூறுகிறார்.
सर्वतःपाणिपादं तत्सर्वतोक्षिशिरोमुखम् ।
सर्वतःश्रुतिमल्लोके सर्वमावृत्य तिष्ठति ॥ १३ ॥
ஸர்வத: பாணிபாதம் தத்ஸர்வதோஅக்ஷி சிரோமுகம் ।
ஸர்வத: ச்ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்டதி ॥ 13 ॥
सर्वतःपाणिपादं सर्वतः पाणयः पादाश्च अस्य इति सर्वतःपाणिपादं तत् ज्ञेयम् ।
எங்கும் வியாபித்திருக்கும் கைகள், பாதங்கள் எவருக்கு இருக்கிறதோ அவர் சர்வபாணிபாதம். அதுவே ஞேயம். (ஞேய வஸ்து)
सर्वप्राणिकरणोपाधिभिः क्षेत्रज्ञस्य अस्तित्वं विभाव्यते । क्षेत्रज्ञश्च क्षेत्रोपाधितः उच्यते । क्षेत्रं च पाणिपादादिभिः अनेकधा भिन्नम् ।
எல்லா பிராணிகளுடைய இந்திரியங்களாகிய உபாதி மூல மாக க்ஷேத்திரக்ஞனுடைய இருப்புத்தன்மை வெளிப்படுகிறது. க்ஷேத்ரக்ஞனுக்கு க்ஷேத்திரம் உபாதியாய் இருக்கிறது. க்ஷேத்திர மான கை, கால்கள் முதலியவைகளால் அநேகவித வேறுபாடு உடையதாய் இருக்கிறது.
क्षेत्रोपाधिभेदकृतं विशेषजातं मिथ्यैव क्षेत्रज्ञस्य, इति तदपनयनेन ज्ञेयत्वमुक्तम् ‘न सत्तन्नासदुच्यते’ इति ।
க்ஷேத்திரமாகிய உபாதி பேதங்களினால் ஏற்பட்ட எல்லா பேதங் களும் க்ஷேத்திரக்ஞனிடத்தில் மித்தையாகவே ஏற்பட்டது ஆகையால் அதை நீக்குவதே ஞேயத்துவம் (அறியப்படுவது) என்பதால் (“ந சத்தந்நாதுச்யதே” = அது சத் என்று சொல்ல முடியாது, அது அசத் என்று சொல்லமுடியாது) என்று கூறப்பட்டது.
उपाधिकृतं मिथ्यारूपमपि अस्तित्वाधिगमाय ज्ञेयधर्मवत् परिकल्प्य उच्यते ‘सर्वतःपाणिपादम्’ इत्यादि ।
உபாதிகளாலானது பொய் வடிவமுள்ளதாயிலும் (ப்ரஹ்மத் தின்) இருப்பை தெரிவிப்பதற்காக, அறியவேண்டிய பொருளா ன(அதன்) தன்மை போலக் கற்பனை செய்து எங்கும் கை, கால்க ளையுடையது என்பது முதலானது கூறப்படுகின்றது.
तथा हि सम्प्रदायविदां वचनम् — ‘अध्यारोपापवादाभ्यां निष्प्रपञ्चं प्रपञ्च्यते’ ( ? ) इति ।
அவ்வாறே சம்பிரதாயம் அறிந்தவர்களால் கூறப்பட்ட வாக்கு ("அத்யாரோபாபவாதாப்யாம் நிஷ்பிரபஞ்சம் ப்ரபஞ்சயதே”) அத்யாரோப அபவாதங்களால் நிஷ்பிரபஞ்சமான பிரஹ்மமா னது வியாக்யானம் செய்யப்பட்டது ஆகும்.
सर्वत्र सर्वदेहावयवत्वेन गम्यमानाः पाणिपादादयः ज्ञेयशक्तिसद्भावनिमित्तस्वकार्याः इति ज्ञेयसद्भावे लिङ्गानि ‘ज्ञेयस्य’ इति उपचारतः उच्यन्ते । तथा व्याख्येयम् अन्यत् ।
எங்கும் எல்லா கால் கைகள் முதலிய தேஹத்தின் அவயவங் களாக இருந்துகொண்டு ஞேய சக்தியின் இருப்பினால் அவைகள் தங்களுடைய காரியங்களில் சாமர்த்தியம் உடையவைகளாகின்ற ன. ஆகையால் எல்லாம் ஞேயத்தின் இருப்பிற்கு லிங்கங்களா கின்றன என்று உபசாரமாகக் கூறப்பட்டது. அவ்வாறே மற்றவை களையும் வியாக்யானம் செய்யவேண்டும்.
सर्वतःपाणिपादं तत् ज्ञेयम् । सर्वतोक्षिशिरोमुखं सर्वतः अक्षीणि शिरांसि मुखानि च यस्य तत् सर्वतोक्षिशिरोमुखम् ; सर्वतःश्रुतिमत् श्रुतिः श्रवणेन्द्रियम् , तत् यस्य तत् श्रुतिमत् , लोके प्राणिनिकाये, सर्वम् आवृत्य संव्याप्य तिष्ठति स्थितिं लभते ॥ १३ ॥
எங்கும் கைகள் கால்கள் உடையது ஞேயவஸ்து. எங்கும் கண்கள், தலைகள், முகங்கள் உடையது. எங்கும் கேட்கும் இந்திரி யமாகிய காதுகள் உள்ளது. உலகத்தில் உள்ள எல்லா பிராணிகளி டத்தும் வியாபித்து நிற்றலை அடைகின்றது.
उपाधिभूतपाणिपादादीन्द्रियाध्यारोपणात् ज्ञेयस्य तद्वत्ताशङ्का मा भूत् इत्येवमर्थः श्लोकारम्भः —
கை, கால்கள் முதலிய உபாதிகள் ஞேயத்தினிடத்தில் ஆரோபிக்கப்பட்டதால் ஞேயத்திற்கு உண்மையாகவே உபாதி இருக்கிறது என்று சந்தேஹம் வரலாம் என்பதால் இந்த ச்லோகம் ஆரம்பிக்கப்படுகிறது.
सर्वेन्द्रियगुणाभासं सर्वेन्द्रियविवर्जितम् ।
असक्तं सर्वभृच्चैव निर्गुणं गुणभोक्तृ च ॥ १४ ॥
ஸர்வேந்த்ரியகுணாபாஸம் ஸர்வைந்த்ரியவிவர்ஜிதம் ।
அஸக்தம் ஸர்வப்ருச்சைவ நிர்குணம் குணபோக்த்ரு ச ॥ 14 ॥
सर्वेन्द्रियगुणाभासं सर्वाणि च तानि इन्द्रियाणि श्रोत्रादीनि बुद्धीन्द्रियकर्मेन्द्रियाख्यानि, अन्तःकरणे च बुद्धिमनसी, ज्ञेयोपाधित्वस्य तुल्यत्वात् , सर्वेन्द्रियग्रहणेन गृह्यन्ते । अपि च, अन्तःकरणोपाधिद्वारेणैव श्रोत्रादीनामपि उपाधित्वम् इति ।
எல்லா இந்திரியங்களுடைய செய்கைகளினால் விளங்குவது. (அந்த ஞேய வஸ்துவானது) காது முதலிய ஞானேந்திரியங்கள், வாக் முதலிய கர்மேந்திரியங்கள் எனப்படுகின்றஎல்லா இந்திரிய ங்கள் என்றதனால் புத்தி மனம் என்று அந்தக்கரணத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். காது முதலியவற்றோடு சமமாயிருத் தலால் ஞேயத்திற்கு உபாதியாக கொள்ளவேண்டும். மேலும் அந் தக்கரணம் இருப்பதால்தான் காது முதலியவைகளுக்கும் உபாதித் துவம் இருக்கிறது.
अतः अन्तःकरणबहिष्करणोपाधिभूतैः सर्वेन्द्रियगुणैः अध्यवसायसङ्कल्पश्रवणवचनादिभिः अवभासते इति सर्वेन्द्रियगुणाभासं सर्वेन्द्रियव्यापारैः व्यापृतमिव तत् ज्ञेयम् इत्यर्थः ।
ஆகையால் அகக்கரண, புறக்கரண உபாதிகளாகிய எல்லா இந்திரியங்களின் குணங்களாகிய நிச்சயித்தல், சங்கல்பங்கள், கேட்டல், உறைத்தல் ஆகிய செயல்கள் மூலமாக ஞேயவஸ்துவா னது வெளிப்படுகிறது. அந்த ஞேயவஸ்துவானது எல்லா இந்திரி யங்களின் செயல்பாட்டுகளினால் எல்லா இந்திரியங்களாலும் செயல்படுபவன் போல் தோன்றுகிறது என்பது அறியத்தக்கதாகும் என்பது பொருள்.
"த்யாயதீவ லேலாயதீவி" தியானிப்பது போல், லீலை செய்வதுபோல்) என்று சுருதி வாக்கியத்தில் உள்ளவாறு.
कस्मात् पुनः कारणात् न व्यापृतमेवेति गृह्यते इत्यतः आह —
மறுபடியும் எதனால் ஞேயவஸ்துவானது செயல்படுவது இல்லை என்று அறியப்படுகிறது எனில் கூறுகிறார்-
सर्वेन्द्रियविवर्जितम् , सर्वकरणरहितमित्यर्थः । अतः न करणव्यापारैः व्यापृतं तत् ज्ञेयम् ।
எல்லா கரணங்களும் (இந்திரியங்களும்) இல்லாததினால் அந்த ஞேயவஸ்துவானது செயல்படுவதில்லை.
यस्तु अयं मन्त्रः — ‘अपाणिपादो जवनो ग्रहीता पश्यत्यचक्षुः स शृणोत्यकर्णः’ (श्वे. उ. ३ । १९) इत्यादिः, स सर्वेन्द्रियोपाधिगुणानुगुण्यभजनशक्तिमत् तत् ज्ञेयम् इत्येवं प्रदर्शनार्थः, न तु साक्षादेव जवनादिक्रियावत्त्वप्रदर्शनार्थः ।
எந்த இந்த மந்திரம் உள்ளதோ அந்த மந்திரமாவது- "அபாணிபாதோ ஜவனோ க்ரஹீதா பச்யத்யசக்ஷ: ஸ ச்ருணோத்யகர்ண?" = அந்த (பிரஹ்மம்) கைகள் கால்கள் இல்லா மல் செல்கிறது, பிடித்துக் கொள்கிறது. கண்கள் இல்லாமல் பார்க்கி றது. காதுகள் இல்லாமல் கேட்கிறது) என்பது முதலிய சுருதியி னால் எது தெரிவிக்கப்படுகிறதோ அது அந்த ஞேய வஸ்துவா னது இந்திரியங்களாகிய உபாதிகளின் செய்கைகளுக்கு உடந்தை யாய் இருப்பதில் சாமர்த்தியமுடையது என்பதைக் காட்டுகிறது என்று காட்டுவதற்காக அல்ல.
‘अन्धो मणिमविन्दत्’ (तै. आ. १ । ११) इत्यादिमन्त्रार्थवत् तस्य मन्त्रस्य अर्थः ।
"அந்தோ மணிமவிந்தத்" = குருடன் மணியை அடைந்தான்) என்பது முதலான மந்திரத்திற்கு உள்ள அர்த்தம் போல் இந்த மந்தி ரத்திற்கும் அர்த்தம் கொள்ளவேண்டும்.
यस्मात् सर्वकरणवर्जितं ज्ञेयम् , तस्मात् असक्तं सर्वसंश्लेषवर्जितम् ।
எதனால் ஞேயவஸ்துவானது எல்லா இந்திரியங்கள் அற்றிருக் கிறதோ அதனால் எல்லாவற்றினுடனும் சம்பந்தமற்றிருக்கிறது.
यद्यपि एवम् , तथापि सर्वभृच्च एव । सदास्पदं हि सर्वं सर्वत्र सद्बुद्ध्यनुगमात् । न हि मृगतृष्णिकादयोऽपि निरास्पदाः भवन्ति । अतः सर्वभृत् सर्वं बिभर्ति इति ।
எதனால் இவ்வாறோ அதனால் எல்லாவற்றையும் அந்த ஞேய வஸ்துவே தாங்குகிறது. சத்புத்தியானது எங்கும் வியாபித்தி ருக்கிறது. ஆகையால் சத்தான எல்லாவற்றிற்கும் அதிஷ்டான மாய் இருக்கிறது. கானல் நீர் முதலிய மித்யா வஸ்துக்களும் அதிஷ்ட்டானம் இல்லாமல் அதற்கு இருப்பில்லை. ஆகையால் சத்வஸ்துவாகி ஞேயமே எல்லாவற்றையும் தாங்குகிறது.
स्यात् इदं च अन्यत् ज्ञेयस्य सत्त्वाधिगमद्वारम् — निर्गुणं सत्त्वरजस्तमांसि गुणाः तैः वर्जितं तत् ज्ञेयम् , तथापि गुणभोक्तृ च गुणानां सत्त्वरजस्तमसां शब्दादिद्वारेण सुखदुःखमोहाकारपरिणतानां भोक्तृ च उपलब्धृ च तत् ज्ञेयम् इत्यर्थः ॥ १४ ॥
ஞேயவஸ்துவின் இருப்பை தெரிவிப்பதான வேறு ஒரு சாத னமும் இருக்கிறது. அந்த ஞேய வஸ்து சத்துவ, ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களைக் கடந்து நிற்கிறது. அவ்வாறு இருந்தாலும் ஞேய வஸ்துவானது குணங்களின் போக்தாவாக சப்தம் முதலிய விஷயங்கள் மூலமாக சுக, துக்க, மோஹம் முதலியவைகளாக பரிணமித்த (மாறிய) முக்குணங்களை அனுபவிப்பது அந்த ஞேயவஸ்து. இதற்கு உணர்வது என்பது பொருள்.
किञ्च —
மேலும்
बहिरन्तश्च भूतानामचरं चरमेव च ।
सूक्ष्मत्वात्तदविज्ञेयं दूरस्थं चान्तिके च तत् ॥ १५ ॥
பஹிரந்தச்ச பூதாநாமசரம் சரமேவ ச ।
சூக்ஷ்மத்வாத்ததவிஜ்ஞேயம் தூரஸ்தம் சாந்திகே ச தத் ॥ 15 ॥
बहिः त्वक्पर्यन्तं देहम् आत्मत्वेन अविद्याकल्पितम् अपेक्ष्य तमेव अवधिं कृत्वा बहिः उच्यते । तथा प्रत्यगात्मानमपेक्ष्य देहमेव अवधिं कृत्वा अन्तः उच्यते ।
அவித்யையினால் ஆத்மாவாக கல்பிக்கப்பட்ட சரீரத்தின் தோல்வரை எல்லையாகக் கொண்டு வெளியில் (ஞேய வஸ்து வியாபித்துள்ளது) என்று கூறப்பட்டது. அவ்வாறே பிரத்யக் ஆத் மாவை அபேக்ஷி த்து தேஹத்தை எல்லையாகக் கொண்டு உள்ளே (ஞேயவஸ்து வியாபித்துள்ளது) என்று கூறப்பட்டது.
‘बहिरन्तश्च’ इत्युक्ते मध्ये अभावे प्राप्ते, इदमुच्यते —
வெளியிலும் உள்ளும் வியாபித்திருக்கிறது என்று கூறுவதால் மத்தியில் இல்லையென்று ஆகிவிடும் ஆதலால் இவ்வாறு கூறப் படுகிறது.
अचरं चरमेव च, यत् चराचरं देहाभासमपि तदेव ज्ञेयं यथा रज्जुसर्पाभासः ।
கயிற்றில் பாம்பின் ஆபாசம் போல் விளங்குகின்ற எந்த சர, அசர ரூபமான சரீரத்தின் ஆபாசம் ஆகுமோ. அதுவும் அந்த ஞேயவஸ்துவின் சொரூபமே.
यदि अचरं चरमेव च स्यात् व्यवहारविषयं सर्वं ज्ञेयम् , किमर्थम् ‘इदम्’ इति सर्वैः न विज्ञेयम् इति उच्यते
வியவஹார விஷயமாகிய சரம், அசரம் (ஸ்தாவர, ஜங்கமம்) எல்லாம் ஞேய வஸ்துவே. அவ்வாறு இருக்கும்பொழுது எதனால் எல்லோராலும் இது (ஞேய வஸ்து) என்று சுட்டி அறியப்படுவ தில்லை என்று கூறுகிறார்-
सत्यं सर्वाभासं तत् ; तथापि व्योमवत् सूक्ष्मम् । अतः सूक्ष्मत्वात् स्वेन रूपेण तत् ज्ञेयमपि अविज्ञेयम् अविदुषाम् ।
உண்மைதான் அது (ஞேய வஸ்து): எல்லா ஆபாச வஸ்துக்க ளும் (த்ருச்ய வஸ்துக்களும்) அதனுடைய ஸ்வரூபமே ஆனாலும் ஆகாயம் போல் மிகவும் சூக்ஷ்மமானது. ஆகையால் அது தன் ஸ்வரூபத்தால் அறியத்தக்கதாயினும் அக்ஞானிகளால் அறிய முடியாது.
विदुषां तु, ‘आत्मैवेदं सर्वम्’ (छा. उ. ७ । २५ । २) ‘ब्रह्मैवेदं सर्वम्’ इत्यादिप्रमाणतः नित्यं विज्ञातम् ।
ஞானிகளுக்கோவெனில் “ஆத்மைவேதம் சர்வம்” = இவை எல்லாம் ஆத்மாவே) ("ப்ரஹ்மைவேதம் சர்வம்" = இவை எல்லாம் பிரஹ்மமே) என்பது முதலிய பிரமாணங்களால் எப்பொழுதும் அறியப்பட்டதாக இருக்கிறது.
अविज्ञाततया दूरस्थं वर्षसहस्रकोट्यापि अविदुषाम् अप्राप्यत्वात् । अन्तिके च तत् , आत्मत्वात् विदुषाम् ॥ १५ ॥
அறியப்படாததினால் தூரமாக இருக்கிறது. ஆகையால் ஆயி ரம் கோடி வருஷங்களானாலும் அக்ஞானிகளுக்கு அடையமுடி யாததாய் இருக்கிறது. ஆனால் ஞானிகளுக்கோவெனில் அவர்க ளுடைய ஆத்மாவாகவே இருப்பதால் அருகில் இருக்கிறது.
किञ्च —
மேலும்
अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितम् ।
भूतभर्तृ च तज्ज्ञेयं ग्रसिष्णु प्रभविष्णु च ॥ १६ ॥
அவிபக்தம் ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம் ।
பூதபர்த்ரு ச தஜ்ஞேயம் க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச ॥ 16 ॥
अविभक्तं च प्रतिदेहं व्योमवत् तदेकम् । भूतेषु सर्वप्राणिषु विभक्तमिव च स्थितं देहेष्वेव विभाव्यमानत्वात् ।
ஆகாயம் போல் ஒவ்வொரு தேஹத்திலும் ஞேயவஸ்துவா னது பிரிக்கப்படாமல் ஒன்றாகவே இருக்கிறது. ஆனாலும் எல் லாப் பிராணிகளிடத்தும் பிரிக்கப்பட்டது போல் இருக்கிறது. ஏன் எனில் அதனுடைய இருப்பானது தேஹங்களில் வெளிப்படையா கக் காணப்படுவதால்.
भूतभर्तृ च भूतानि बिभर्तीति तत् ज्ञेयं भूतभर्तृ च स्थितिकाले । प्रलयकाले गृसिष्णु ग्रसनशीलम् । उत्पत्तिकाले प्रभविष्णु च प्रभवनशीलं यथा रज्ज्वादिः सर्पादेः मिथ्याकल्पितस्य ॥ १६ ॥
பூதங்களை ஸ்திதிகாலத்தில் தாங்குவதால் பூதப்ருத் பிரளய காலத்தில் எல்லாப் பிராணிகளையும் விழுங்குவதால் க்ரசிஷ்ணு: உத்பத்தி காலத்தில் உற்பத்தி செய்யும் இயல்பினதாயும் உள்ளது. எவ்வாறு கயிறு முதலியவைகளில் பாம்பு முதலியவைகள் மித் தையாக கல்பிக்கப்படுகிறதோ அவ்வாறு கல்பிக்கப்படுகிறது.
किञ्च, सर्वत्र विद्यमानमपि सत् न उपलभ्यते चेत् , ज्ञेयं तमः तर्हि । न किं तर्हि ? —
மேலும் எங்கும் சத்வஸ்துவானது இருந்தாலும் நமக்குப் புலப் படாததால் (விளங்காததால்) அந்த ஞேயவஸ்து இருள்(தமஸ்) தான் என்றால் அவ்வாறு அல்ல.
ज्योतिषामपि तज्ज्योतिस्तमसः परमुच्यते ।
ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितम् ॥ १७ ॥
ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுச்யதே ।
ஞானம் ஞேயம் ஞானகம்யம் ஹ்ருதி ஸர்வஸ்ய விஷ்டிதம் ॥ 17 ॥
ज्योतिषाम् आदित्यादीनामपि तत् ज्ञेयं ज्योतिः । आत्मचैतन्यज्योतिषा इद्धानि हि आदित्यादीनि ज्योतींषि दीप्यन्ते ।
அந்த ஞேயவஸ்து(பரமாத்மா) சூரியன் முதலிய எல்லா ஜோதிகளுக்கெல்லாம் ஜ்யோதி. ஏன் எனில் ஆத்மசைதன்ய பிர காசத்தினால் பிரகாசத்தை அடைந்து சூரியன் முதலிய ஜோதிகள் எல்லாம் பிரகாசிக்கின்றன.
‘येन सूर्यस्तपति तेजसेद्धः’ (तै. ब्रा. ३ । १२ । ९) ‘तस्य भासा सर्वमिदं विभाति’ (मु. उ. २ । २ । ११) इत्यादिश्रुतिभ्यः ; स्मृतेश्च इहैव — ‘यदादित्यगतं तेजः’ (भ. गी. १५ । १२) इत्यादेः ।
யேன சூரியஸ்தபதி தேஜசேத்த: = எந்த தேஜஸினால் ஒளி பெற்று சூரியன் பிரகாசிக்கிறதோ, தஸ்ய பாசா சர்வமிதம் விபாதி = அதனுடைய பிரகாசத்தால் இவைகள் எல்லாம் பிரகாசிக்கின்றது என்பது முதலிய சுருதிகளாலும்,அவ்வாறே இங்கு ஸ்மிருதியிலும் (.யதாதித்யகதம் தேஜ:) முதலிய ஸ்லோகங்களால் சித்தியாகிறது.
तमसः अज्ञानात् परम् अस्पृष्टम् उच्यते ।
இருளுக்கும் அப்பால் உள்ளது. அக்ஞானத்தினால் அடைய முடியாதது.
ज्ञानादेः दुःसम्पादनबुद्ध्या प्राप्तावसादस्य उत्तम्भनार्थमाह —
ஞான முதலியவைகளை சம்பாதிப்பது மிகக் கடினமாய் இருக்கிறது. அந்த எண்ணத்தினால் உத்சாஹம் குறைந்து மந்த புத்தி உடைய சாதகனை உத்சாஹப்படுத்துவதற்காக கூறுகிறார்.
ज्ञानम् अमानित्वादि ; ज्ञेयम् ‘ज्ञेयं यत् तत् प्रवक्ष्यामि’ (भ. गी. १३ । १२) इत्यादिना उक्तम् ; ज्ञानगम्यम् ज्ञेयमेव ज्ञातं सत् ज्ञानफलमिति ज्ञानगम्यमुच्यते ; ज्ञायमानं तु ज्ञेयम् ।
அமானித்துவாதி ஞேய வஸ்து "ஞேயம் யத்தத்பிரவக்ஷ் யாமி") முதலியவைகளால் கூறப்பட்டது. ஞானத்தினால் அறியக் கூடியது ஞேயவஸ்துவே. சத், ஆனது ஞானபலம் என்று ஞானத்தி னால் அடையக்கூடியது என்று கூறப்பட்டது. அறியப்படவேண்டி யது ஞேயவஸ்து.
तत् एतत् त्रयमपि हृदि बुद्धौ सर्वस्य प्राणिजातस्य विष्ठितं विशेषेण स्थितम् । तत्रैव हि त्रयं विभाव्यते ॥ १७ ॥
அந்த இந்த மூன்றும் ஞானம், ஞேயம், ஞானகம்யம் (க்ஷேத் ரம்) எல்லாப்பிராணிகளுடைய புத்தியில் விசேஷமாக விளங்குகி றது. அங்குதான் இந்த மூன்றும் விளங்குகிறது.
यथोक्तार्थोपसंहारार्थः अयं श्लोकः आरभ्यते —
இவ்வாறு கூறப்பட்ட அர்த்தத்தை முடிப்பதற்காக இந்த ஸ்லோகம் ஆரம்பிக்கப்படுகிறது.
इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासतः ।
मद्भक्त एतद्विज्ञाय मद्भावायोपपद्यते ॥ १८ ॥
இதி க்ஷேத்ரம் ததா ஞானம் ஞேயம் சோக்தம் ஸமாஸத: ।
மத்பக்த ஏதத்விக்ஞாய மத்பாவாயோப்பத்யதே ॥ 18 ॥
इति एवं क्षेत्रं महाभूतादि धृत्यन्तं तथा ज्ञानम् अमानित्वादि तत्त्वज्ञानार्थदर्शनपर्यन्तं ज्ञेयं च ‘ज्ञेयं यत् तत्’ (भ. गी. १३ । १२) इत्यादि ‘तमसः परमुच्यते’ (भ. गी. १३ । १७) इत्येवमन्तम् उक्तं समासतः सङ्क्षेपतः ।
இவ்வாறு மஹாபூத முதல் த்ருதி(தைரியம்) வரையிலும் க்ஷேத்திரம் என்றும் அவ்வாறே அமானித்துவாதி முதல் தத்துவ ஞானம் வரையிலும் ஞானம் என்றும், ஞேய வஸ்து என்பது ஞேயம் யத்தத் முதல் ஆரம்பித்து தமஸ: பரமுச்யதே வரையிலும் சுருக்கமாக கூறப்பட்டது.
एतावान् सर्वः हि वेदार्थः गीतार्थश्च उपसंहृत्य उक्तः । अस्मिन् सम्यग्दर्शने कः अधिक्रियते इति उच्यते —
எல்லா வேதங்களின் அர்த்தங்களும், கீதையின் அர்த்தங்க ளும் இவ்வளவுதான் என்று கூறப்பட்டது. இந்த சம்யக் தர்சனத் தில் (யதார்த்த ஞானத்தில்) எவர் அதிகாரி என்று கூறப்படுகிறது.
मद्भक्तः मयि ईश्वरे सर्वज्ञे परमगुरौ वासुदेवे समर्पितसर्वात्मभावः, यत् पश्यति शृणोति स्पृशति वा ‘सर्वमेव भगवान् वासुदेवः’ इत्येवंग्रहाविष्टबुद्धिः मद्भक्तः
என்னுடைய பக்தன் ஈஸ்வரனான, சர்வக்ஞனான, பரம் குரு வான வாசுதேவனான என்னிடத்தில் வைத்த சர்வாத்ம பாவனை யினால் எதைப் பார்க்கிறானோ, கேட்கிறானோ, தொடுகிறானோ அவை எல்லாம் பகவான் வாசுதேவனே என்ற நிச்சயமான புத்தி எவனுக்கு உள்ளதோ அவன் என்னுடைய பக்தன்.
स एतत् यथोक्तं सम्यग्दर्शनं विज्ञाय, मद्भावाय मम भावः मद्भावः परमात्मभावः तस्मै मद्भावाय उपपद्यते मोक्षं गच्छति ॥ १८ ॥
எவன் சம்யக்தர்சனத்தைக் கூறப்பட்டவாறு அறிந்து என்னு டைய பரமாத்ம பாவத்தை அடைகிறானோ அவன் மோக்ஷத்தை அடைகிறான்.
तत्र सप्तमे ईश्वरस्य द्वे प्रकृती उपन्यस्ते, परापरे क्षेत्रक्षेत्रज्ञलक्षणे ; ‘एतद्योनीनि भूतानि’ (भ. गी. ७ । ६) इति च उक्तम् । क्षेत्रक्षेत्रज्ञप्रकृतिद्वययोनित्वं कथं भूतानामिति अयमर्थः अधुना उच्यते —
அங்கு ஏழாவது அத்தியாயத்தில் ஈஸ்வரனுடைய க்ஷேத்ர, க்ஷேத்ரக்ஞ ரூபமான பரம், அபரம் ஆகிய இரண்டு பிரகிருதிகள் உபதேசிக்கப்பட்டது. (இந்த இரண்டு பிரகிருதிகளும்) எல்லா பூதங் களுக்கும் காரணமாய் இருக்கின்றன என்று கூறப்பட்டது. எல்லா பூதங்களுக்கு எவ்வாறு க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ ரூபமான இரண்டு ப்ரக்ருதிகளும் காரணமாகிறது என்ற இந்த அர்த்தத்தை இப்பொ ழுது கூறுகிறார்.
प्रकृतिं पुरुषं चैव विद्ध्यनादी उभावपि ।
विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसम्भवान् ॥ १९ ॥
ப்ரக்ருதிம் புருஷம் சைவ வித்த்யநாதீ உபாவபி ।
விகாராம்ச்ச குணாம்ச்சைவ வித்தி ப்ரக்ருதிஸம்பவான் ॥ 19 ॥
प्रकृतिं पुरुषं चैव ईश्वरस्य प्रकृती तौ प्रकृतिपुरुषौ उभावपि अनादी विद्धि, न विद्यते आदिः ययोः तौ अनादी ।
ப்ரகிருதியும், புருஷனும் ஈஸ்வரனுடைய இரு ப்ரக்ருதிகள். அவ்விரு ப்ரக்ருதி, புருஷர்களும் அநாதி என்று அறி. அவைக ளுக்கு ஆதி இல்லாததினால் அவ்விரண்டும் அநாதி.
नित्येश्वरत्वात् ईश्वरस्य तत्प्रकृत्योरपि युक्तं नित्यत्वेन भवितुम् । प्रकृतिद्वयवत्त्वमेव हि ईश्वरस्य ईश्वरत्वम् ।
ஈஸ்வரனுடைய ஈஸ்வரத்துவம் நித்யமானதினால் ஈஸ்வரனு டைய அவ்விரு ப்ரக்ருதிகளும் நித்யமாய் இருத்தல் பொருத்தமு டையதாகும். இந்த இரண்டு ப்ரக்ருதிகளை உடையவன் ஆதலால் தான் அன்றோ ஈஸ்வரனுடைய ஈஸ்வரத்துவம்.
याभ्यां प्रकृतिभ्याम् ईश्वरः जगदुत्पत्तिस्थितिप्रलयहेतुः, ते द्वे अनादी सत्यौ संसारस्य कारणम् ॥
அவ்விரு ப்ரக்ருதியினால் ஈஸ்வரன் ஜகத்தின் உற்பத்தி, ஸ்தி தி, லயத்திற்கு காரணமாகிறான். அவ்விரு அநாதியின் இருப்பு சம் சாரத்திற்கு காரணமாகிறது.
न आदी अनादी इति तत्पुरुषसमासं केचित् वर्णयन्ति । तेन हि किल ईश्वरस्य कारणत्वं सिध्यति । यदि पुनः प्रकृतिपुरुषावेव नित्यौ स्यातां तत्कृतमेव जगत् न ईश्वरस्य जगतः कर्तृत्वम् ।
ஆதி இல்லை என்பது அநாதி என்று தத்புருஷ சமாசத்தால் சிலர் வர்ணிக்கிறார்கள். அதனால் அல்லவா ஈஸ்வரனுக்கு கார ணத்துவம் சித்திக்கிறது. ப்ரக்ருதி, புருஷன் இவர்களை நித்யம் எனக்கொண்டால் சம்சாரமானது அவைகளால் ஏற்பட்டது என ஆகும். ஈஸ்வரன் ஜகத்திற்கு கர்த்தா என்பது சித்திக்காது.
तत् असत् ; प्राक् प्रकृतिपुरुषयोः उत्पत्तेः ईशितव्याभावात् ईश्वरस्य अनीश्वरत्वप्रसङ्गात् ।
அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன் எனில் ப்ரக்ருதி, புருஷன், உத்பத்திக்கு முன் ஈஸ்வரனுக்கு ஈஸ்வரத்துவம் இல்லாததால் ஈஸ் வரத்தன்மை அற்றதாகிவிடும் தோஷம் ஏற்படும்.
संसारस्य निर्निमित्तत्वे अनिर्मोक्षप्रसङ्गात् शास्त्रानर्थक्यप्रसङ्गात् बन्धमोक्षाभावप्रसङ्गाच्च । नित्यत्वे पुनः ईश्वरस्य प्रकृत्योः सर्वमेतत् उपपन्नं भवेत् ।
அவ்வாறானால் சம்சாரத்திற்கு நிமித்தம் இல்லாததினால் மோக்ஷம் இல்லை என்றாகிவிடும். ஆதலால் பந்தமோக்ஷம் இல்லாததினால் சாஸ்திரம் வீண் என்று ஆகிவிடும்.
कथम् ?
எவ்வாறு
विकारांश्च गुणांश्चैव वक्ष्यमाणान्विकारान् बुद्ध्यादिदेहेन्द्रियान्तान् गुणांश्च सुखदुःखमोहप्रत्ययाकारपरिणतान् विद्धि जानीहि प्रकृतिसम्भवान् ।
இனி கூறப்போகிறபுத்தி முதலிய தேஹேந்திரிய விகாரங்க ளாகிய அந்த குணங்களை சுக, துக்க, மோஹ, விருத்திகளாக பரிணாமம் அடைந்தவைகள் ப்ரக்ருதியினால் உண்டானவை என்று அறி.
प्रकृतिः ईश्वरस्य विकारकारणशक्तिः त्रिगुणात्मिका माया, सा सम्भवो येषां विकाराणां गुणानां च तान् विकारान् गुणांश्च विद्धि प्रकृतिसम्भवान् प्रकृतिपरिणामान् ॥ १९ ॥
விகாரங்களின் காரணரூபமான எந்த த்ரிகுணாத்மக மாயா சக்தி இருக்கிறதோ அதனுடைய பெயர் ப்ரக்ருதி. எந்த விகாரங்க ளும், குணங்களும் உண்டாகின்றனவோ அந்த விகாரங்களும், குணங்களும் ப்ரக்ருதியினால் உண்டானவை. ப்ரக்ருதியின் பரி ணாமம் என்று அறி.
के पुनः ते विकाराः गुणाश्च प्रकृतिसम्भवाः —
பிரக்ருதியினால் உண்டான அந்த விகாரங்களும், குணங்க ளும் எவை?
कार्यकरणकर्तृत्वे हेतुः प्रकृतिरुच्यते ।
पुरुषः सुखदुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते ॥ २० ॥
கார்யகரணகர்த்ருத்வே ஹேது: ப்ரக்ருதிருச்யதே ।
புருஷ: ஸுகது:கானாம் போக்த்ருத்வே ஹேதுருச்யதே ॥ 20 ॥
कार्यकरणकर्तृत्वे — कार्यं शरीरं करणानि तत्स्थानि त्रयोदश ।
காரியம் என்பது சரீரம். கரணங்கள் என்பது ஞானேந்திரியங் கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, மனம், புத்தி, அஹங்காரம் ஆகிய பதிமூன்றுமாகும்.
देहस्यारम्भकाणि भूतानि पञ्च विषयाश्च प्रकृतिसम्भवाः विकाराः पूर्वोक्ताः इह कार्यग्रहणेन गृह्यन्ते । गुणाश्च प्रकृतिसम्भवाः सुखदुःखमोहात्मकाः करणाश्रयत्वात् करणग्रहणेन गृह्यन्ते ।
தேஹத்தை உண்டாக்குகின்ற பஞ்சபூதங்களும், சப்த முதலிய பஞ்சவிஷயங்களும் முன்னால் கூறப்பட்ட ப்ரக்ருதியைப் பிறப்பி டமாக விகாரங்கள் காரியங்களாதலால் காரியம் எனப்படுகிறது. ப்ரக்ருதியை பிறப்பிடமாக உடைய சுக, துக்க, மோஹ முதலிய மயக்கவடிவாயுள்ள குணங்கள் கரணத்தை ஆஸ்ரயிப்பதால் கரணம் என்று கொள்ளப்படுகிறது.
तेषां कार्यकरणानां कर्तृत्वम् उत्पादकत्वं यत् तत् कार्यकरणकर्तृत्वं तस्मिन् कार्यकरणकर्तृत्वे हेतुः कारणम् आरम्भकत्वेन प्रकृतिः उच्यते । एवं कार्यकरणकर्तृत्वेन संसारस्य कारणं प्रकृतिः ।
அந்த காரிய கரணங்களுக்கு கர்த்திருத்துவம், உற்பத்தி செய்யும் தன்மை எது உள்ளதோ அது காரியகரண கர்த்திருத்துவ மாகும். அந்த காரிய கரண கர்த்திருவத்தை ஆரம்பிப்பதாலே ப்ரக்ருதியானது காரணம் எனப்படுகிறது. இவ்வாறாக காரிய கரணகர்த்திருத்துவமாய் இருப்பதால் ப்ரக்ருதியானது சம்சாரத் திற்கு காரணமாகிறது.
कार्यकारणकर्तृत्वे इत्यस्मिन्नपि पाठे, कार्यं यत् यस्य परिणामः तत् तस्य कार्यं विकारः विकारि कारणं तयोः विकारविकारिणोः कार्यकारणयोः कर्तृत्वे इति ।
காரிய காரண கர்த்திருத்துவம் என்ற பாடத்திலும் காரியமா னது எதுவோ அதனுடைய பரிணாமமாகும். அது அதனுடைய காரியம் என்றால் விகாரமாகும். மேலும் காரணம் விகாரியாகும். அந்த விகார விகாரியாகிய, காரிய காரணங்களை உற்பத்தி செய்வதில் (ப்ரக்ருதி ஏதுவாகிறது) என்று
अथवा, षोडश विकाराः कार्यं सप्त प्रकृतिविकृतयः कारणम् तान्येव कार्यकारणान्युच्यन्ते तेषां कर्तृत्वे हेतुः प्रकृतिः उच्यते, आरम्भकत्वेनैव ।
அல்லது இந்திரியங்கள் பத்து, மனம் ஒன்று, இந்திரிய விஷ யங்கள் ஆகிய பதினாறு விகாரங்கள் காரியம். மஹத், அஹங்கா ரம், ஐந்து தன்மாத்திரைகளாகிய ஏழும் ப்ரக்ருதி, விக்ருதிகள் காரணம் எனப்படும். அவைகளையே காரிய காரணங்கள் என்று கூறப்படுகிறது. இவைகளின் கர்த்ருத்துவத்தை ஆரம்பிப்பதற்கு (உண்டாக்குவதற்கு) காரணம் (ஹேது) ப்ரக்ருதி ஆகும்.
पुरुषश्च संसारस्य कारणं यथा स्यात् तत् उच्यते —
புருஷனும் எவ்வாறு சம்சாரத்திற்கு காரணமாகிறான் என்பது கூறப்படுகிறது.
पुरुषः जीवः क्षेत्रज्ञः भोक्ता इति पर्यायः, सुखदुःखानां भोग्यानां भोक्तृत्वे उपलब्धृत्वे हेतुः उच्यते ॥
புருஷன் என்பதற்கு ஜீவன், க்ஷேத்திரக்ஞன், போக்தா என்ற சொற்கள் ஒரே பொருளுடைய சொற்களாகும். சுக துக்கங்களாகிய போகங்களை அனுபவிப்பதற்கு புருஷன் காரணம் (ஹேது) என்று கூறப்படுகிறது.
कथं पुनः अनेन कार्यकरणकर्तृत्वेन सुखदुःखभोक्तृत्वेन च प्रकृतिपुरुषयोः संसारकारणत्वमुच्यते इति ।
மேலும் இந்த காரிய, கரணங்களை உண்டாக்குவது சுக, துக்கங்களை அனுபவிப்பதுமாகிய இவற்றால் ப்ரக்ருதி புருஷர் கள் சம்சாரத்திற்குக் காரணம் என்று எவ்வாறு கூறப்படுகிறது?
अत्र उच्यते — कार्यकरणसुखदुःखरूपेण हेतुफलात्मना प्रकृतेः परिणामाभावे, पुरुषस्य च चेतनस्य असति तदुपलब्धृत्वे, कुतः संसारः स्यात् ? यदा पुनः कार्यकरणसुखदुःखस्वरूपेण हेतुफलात्मना परिणतया प्रकृत्या भोग्यया पुरुषस्य तद्विपरीतस्य भोक्तृत्वेन अविद्यारूपः संयोगः स्यात् , तदा संसारः स्यात् इति ।
(காரிய கரணம்) தேஹேந்திரியங்கள், சுகதுக்கங்கள், காரிய கரணங்கள் (ஹேது பலன்கள்) பிரகிருதியைக் காட்டிலும் வேறு அல்லாததால் சேதனமாகிய புருஷனுக்கு சேதனத்தன்மை இல்லா விடில் எவ்வாறு சம்சாரம் ஏற்படும். (எதனால் சம்சாரம் உண்டா கும்) மேலும் எப்பொழுது காரிய கரணரூபமான ஹேதுவே பல னாக பரிணாமம் அடைந்த போக்கிய ரூபப்ரக்ருதியுடன் அதைக் காட்டிலும் விபரீதமான தர்மமுடைய புருஷனுக்கு அனுபவிக்கும் தன்மையினால் (போக்த்ருத்வத்தினால்) அவித்யாரூபமாக சம்மந் தமானது ஏற்படுமோ அப்பொழுது சம்சாரம் ஏற்படும்.
अतः यत् प्रकृतिपुरुषयोः कार्यकरणकर्तृत्वेन सुखदुःखभोक्तृत्वेन च संसारकारणत्वमुक्तम् , तत् युक्तम् ।
ஆகையால் எதனால் ப்ரக்ருதி புருஷர்களுக்கு காரிய கரண (தேஹ இந்திரியங்கள்) உண்டாக்குவதினாலும், சுக துக்கங்களை அனுபவிப்பதினாலும் சம்சாரம் உண்டாவதற்குக் காரணத்துவம் கூறப்பட்டதோ அது பொருத்தமுடையது.
कः पुनः अयं संसारो नाम ?
மேலும் இந்த சம்சாரம் என்றால் என்ன?
सुखदुःखसम्भोगः संसारः । पुरुषस्य च सुखदुःखानां सम्भोक्तृत्वं संसारित्वमिति ॥ २० ॥
சுக துக்கங்களை அனுபவிப்பதே சம்சாரமாகும். சுகதுக்கங் கள் நன்றாக அனுபவித்தல் சம்சாரித்துவமாகும்.
यत् पुरुषस्य सुखदुःखानां भोक्तृत्वं संसारित्वम् इति उक्तं तस्य तत् किंनिमित्तमिति उच्यते —
எதனால் புருஷனுக்கு சுகதுக்கங்களை அனுபவித்தல் சம்சா ரித்துவம் என்று கூறப்பட்டதோ அது எந்த காரணத்தினால் கூறப் பட்டது என்பதை கூறுகிறார்.
पुरुषः प्रकृतिस्थो हि भुङ्क्ते प्रकृतिजान्गुणान् ।
कारणं गुणसङ्गोऽस्य सदसद्योनिजन्मसु ॥ २१ ॥
புருஷ: ப்ரக்ருதிஸ்தோ ஹி புங்க்தே ப்ரக்ருதிஜாந்குணான் ।
காரணம் குணஸங்கோஅஸ்ய ஸதஸத்யோநிஜன்மஸு॥ 21 ॥
पुरुषः भोक्ता प्रकृतिस्थः प्रकृतौ अविद्यालक्षणायां कार्यकरणरूपेण परिणतायां स्थितः प्रकृतिस्थः, प्रकृतिमात्मत्वेन गतः इत्येतत् , हि यस्मात् , तस्मात् भुङ्क्ते उपलभते इत्यर्थः । प्रकृतिजान् प्रकृतितः जातान् सुखदुःखमोहाकाराभिव्यक्तान् गुणान् ‘सुखी, दुःखी, मूढः, पण्डितः अहम्’ इत्येवम् ।
ஏன் எனில் புருஷன் (ஜீவாத்மா) போக்த்தா. பிரக்ருதியில் இருக்கிறது என்றால் புருஷன் காரிய, கரண (தேஹேந்திரிய) ரூபமாக பரிணமித்த அவித்யாரூபமான பிரக்ருதியில் இருந்து கொண்டு அதை தன் சொரூபமாக நினைக்கிறான். ஆகையால் அனுபவிக்கின்றான் என்பது பொருள். ப்ரக்ருதியினால் உண்டான சுக, துக்க மோஹங்களாக வெளிப்பட்ட குணங்களை வைத்து நான் சுகி, நான் துக்கி, நான் மூடன், நான் பண்டிதன் என்று நினைக்கிறான்.
सत्यामपि अविद्यायां सुखदुःखमोहेषु गुणेषु भुज्यमानेषु यः सङ्गः आत्मभावः संसारस्य सः प्रधानं कारणं जन्मनः, ‘सः यथाकामो भवति तत्क्रतुर्भवति’ (बृ. उ. ४ । ४ । ५) इत्यादिश्रुतेः ।
ஐன்மத்திற்கு (பிறப்பிற்கு)க் காரணம் அவித்யையாய் இருந் தாலும் சுகம், துக்கம், மோஹம் முதலிய குணங்களாகிய போக்ய வஸ்துக்களை ஆத்மபாவத்துடன் சம்பந்தம் கொள்வதே சம்சாரத் திற்கு முக்கிய காரணம் (“ஸ யதாகாமோ பவதி தத்க்ருதுர்பவதி” = எப்பொழுது ஆசை ஏற்படுகிறதோ அப்பொழுது அதற்காக கர்மத்தை செய்பவனாகிறான்) என்பது முதலிய சுருதிகளால் அறியப்படுகிறது.
तदेतत् आह — कारणं हेतुः गुणसङ्गः गुणेषु सङ्गः अस्य पुरुषस्य भोक्तुः सदसद्योनिजन्मसु ।
அந்த இதைக் குறித்துக் கூறுகிறார். போக்தாவாகிய புருஷ னுக்கு குணங்களின் மீதுள்ள அபிமானமே உன்னதமான பிறவிக ளோ, கீழ்தரமான பிறவிகளோ எடுப்பதற்குக் காரணமாகும்.
सत्यश्च असत्यश्च योनयः सदसद्योनयः तासु सदसद्योनिषु जन्मानि सदसद्योनिजन्मानि, तेषु सदसद्योनिजन्मसु विषयभूतेषु कारणं गुणसङ्गः ।
உன்னதமான, அல்லது கீழ்த்தரமான பிறவிகளை சதசத் யோனி என்கிறோம். (சதசத் பிறவிகள்) இந்த போகரூபமான சத் அசத் பிறப்புகளுக்கு குணங்களுடன் (சுக, துக்க, மோஹ முதலிய வைகளுடன்) புருஷனுடைய சம்பந்தமே காரணம்.
अथवा, सदसद्योनिजन्मसु अस्य संसारस्य कारणं गुणसङ्गः इति संसारपदमध्याहार्यम् ।
அல்லது நல்ல பிறவிகள், தீய பிறவிகள் எடுக்கும் விஷயத் தில் குணங்களிடத்தில் உள்ள சம்பந்தமானது சம்சாரத்திற்குக் கார ணமாகும்.
सद्योनयः देवादियोनयः ; असद्योनयः पश्वादियोनयः । सामर्थ्यात् सदसद्योनयः मनुष्ययोनयोऽपि अविरुद्धाः द्रष्टव्याः ॥
நல்ல பிறவிகள் தேவாதி பிறப்புகள், தீய பிறவிகள் பசு முத லிய பிறப்புகள் ஆகும். இந்த பிரகரணத்தின் சாமர்த்தியத்தால் மனிதப் பிறப்புகளிலும், தீய, நல்ல பிறப்புகள் இருக்கின்றன என்று எடுத்துக்கொள்வதில் விரோதமில்லை என்று அறிந்துகொள்ள வேண்டும்.
एतत् उक्तं भवति — प्रकृतिस्थत्वाख्या अविद्या, गुणेषु च सङ्गः कामः, संसारस्य कारणमिति । तच्च परिवर्जनाय उच्यते ।
ப்ரக்ருதியில் இருப்பது அவித்யா. மேலும் குணங்களில் உள்ள சம்பந்தம் (பற்று) ஆனது. காமமாகும். இந்த அவித்யையும் காமமும் சம்சாரத்திற்குக் காரணமாகும். அவை இரண்டையும் நீக் குவதற்காகக் கூறப்பட்டது.
अस्य च निवृत्तिकारणं ज्ञानवैराग्ये ससंन्यासे गीताशास्त्रे प्रसिद्धम् ।
கீதா சாஸ்திரத்தில் ஞானவைராக்கியத்தினுடன் கூடிய சந்நியா சமே இவை இரண்டின் (அவித்யை, காமம்) நீக்கத்திற்கு காரணம் என்பது பிரசித்தமாகும்.
तच्च ज्ञानं पुरस्तात् उपन्यस्तं क्षेत्रक्षेत्रज्ञविषयम् ‘यज्ज्ञात्वामृतमश्नुते’ (भ. गी. १३ । १२) इति । उक्तं च अन्यापोहेन अतद्धर्माध्यारोपेण च ॥ २१ ॥
அந்த க்ஷேத்திர க்ஷேத்திரக்ஞ விஷய ஞானமானது முன்பே உபதேசிக்கப்பட்டது. மற்ற தர்மங்களை விலக்கியும் அநாத்ம தர் மங்களை அதனிடத்தில் ஆரோபித்தும் எவ்வாறெனில் எங்கும் கால்களும் கைகளும் என்று, "யத்ஞாத்துவா அம்ருதமச்னுதே” = எதை அறிந்து அம்ருதத்தை அடைவான் என்று கூறப்பட்டது.
तस्यैव पुनः साक्षात् निर्देशः क्रियते —
அதையே மறுபடியும் குறிப்பிட்டு உணர்த்துகிறார்-
उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वरः ।
परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन्पुरुषः परः ॥ २२ ॥
உபத்ரஷ்டாநுமந்தா ச பர்தா போக்தா மஹேச்வர: ।
பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹேஅஸ்மின்புருஷ: பர: ॥ 22 ॥
उपद्रष्टा समीपस्थः सन् द्रष्टा स्वयम् अव्यापृतः । यथा ऋत्विग्यजमानेषु यज्ञकर्मव्यापृतेषु तटस्थः अन्यः अव्यापृतः यज्ञविद्याकुशलः ऋत्विग्यजमानव्यापारगुणदोषाणाम् ईक्षिता, तद्वच्च कार्यकरणव्यापारेषु अव्यापृतः अन्यः तद्विलक्षणः तेषां कार्यकरणानां सव्यापाराणां सामीप्येन द्रष्टा उपद्रष्टा ।
உபதிருஷ்ட்டா என்றால் சமீபத்தில் இருந்துகொண்டு தான் ஒரு செயலிலும் ஈடுபடாதவனாய் பார்த்துக்கொண்டிருப்பவன். யக்ஞம் முதலிய கர்மங்களில் ரித்விக், யஜமானன் இவர்கள் செய்யும் கர்மங்களை, இவர்களைக் காட்டிலும் வேறாக இருந்து கொண்டு யக்ஞ வித்யைகளை நன்கு கற்றறிந்தவன் சாட்சியாக இருந்துகொண்டு அவற்றில் உள்ள நல்லவைகளையும் குற்றங்க ளையும் பார்த்துக்கொண்டிருப்பது போல் காரிய கரண வியாபாரங் களில் தான் அதில் ஈடுபடாமல் அவைகளைக் காட்டிலும் ஆத்மா வேறாக இருந்து கொண்டு அந்த வியாபகத்துடன் கூடிய காரிய, கரணங்களின் சமீபத்தில் இருப்பது போன்றபாவனையினால் பார்க்கிறீர்.
अथवा, देहचक्षुर्मनोबुद्ध्यात्मानः द्रष्टारः, तेषां बाह्यः द्रष्टा देहः, ततः आरभ्य अन्तरतमश्च प्रत्यक् समीपे आत्मा द्रष्टा, यतः परः अन्तरतमः नास्ति द्रष्टा ; सः अतिशयसामीप्येन द्रष्टृत्वात् उपद्रष्टा स्यात् ।
தேஹம், கண், மனம், புத்தி, பார்ப்பவைகள் (த்ருஷ்ட்டார:) அவைகளின் வெளியில் இருந்து பார்ப்பது சரீரம். அதிலிருந்து ஆரம்பித்து மிகவும் உள்ளே உள்ளதும், மிக சமீபத்திலிருந்து பார்க்கும் பொருள் இல்லாததினால் அது மிகவும் சமீபத்திலிருந்து பார்ப்பதால் உபதிருஷ்ட்டா (சமீபத்திலிருந்து பார்க்கும் பொருள்) எனப்படுகிறது.
यज्ञोपद्रष्टृवद्वा सर्वविषयीकरणात् उपद्रष्टा ।
அல்லது யக்ஞத்தை சமீபத்திலிருந்து எல்லாவற்றையும் மேல் பார்வை இடுவது போல் எல்லாவற்றையும் மேல் பார்வை இடுவ தால் உபதிருஷ்ட்டா.
अनुमन्ता च, अनुमोदनम् अनुमननं कुर्वत्सु तत्क्रियासु परितोषः, तत्कर्ता अनुमन्ता च ।
அனுமதித்தல். (தேஹேந்திரியங்கள்) செயல்களில் செயல்ப டும்பொழுது அதை சந்தோஷமாக அனுமதிப்பவன்.
अथवा, अनुमन्ता, कार्यकरणप्रवृत्तिषु स्वयम् अप्रवृत्तोऽपि प्रवृत्त इव तदनुकूलः विभाव्यते, तेन अनुमन्ता ।
அல்லது தேஹம், இந்திரியங்கள் செயல்பட்டாலும் தான் செயல்படாமல் இருந்துகொண்டு செயல்படுபவன் போல் அதற்கு அனுகூலமாக இருப்பதால் அனுமந்தா.
अथवा, प्रवृत्तान् स्वव्यापारेषु तत्साक्षिभूतः कदाचिदपि न निवारयति इति अनुमन्ता ।
அல்லது தன்னுடைய வியாபாரங்களில் செயல்படும் பொழுது சாக்ஷியாய் இருந்துகொண்டு ஒருபொழுதும் அதை தடுப்பதில்லை. ஆகையால் அனுமந்தா.
भर्ता, भरणं नाम देहेन्द्रियमनोबुद्धीनां संहतानां चैतन्यात्मपारार्थ्येन निमित्तभूतेन चैतन्याभासानां यत् स्वरूपधारणम् , तत् चैतन्यात्मकृतमेव इति भर्ता आत्मा इति उच्यते ।
பர்த்தா தாங்குகின்றவன், என்றால் சைதன்யத்தின் ஆபாசங் களாய் ஒன்று சேர்ந்துள்ள தேஹ இந்திரியமனோ புத்தி முதலிய ஸ்வரூபங்களை எது பரமார்த்தமான சைதன்யாத்ம நிமித்தத்தால் தாங்கப்படுகிறதோ அது ஆத்மசைதன்யத்தால் தான். ஆகையால் ஆத்மா பர்த்தா (தாங்குபவன்) என்று கூறப்படுகிறது.
भोक्ता, अग्न्युष्णवत् नित्यचैतन्यस्वरूपेण बुद्धेः सुखदुःखमोहात्मकाः प्रत्ययाः सर्वविषयविषयाः चैतन्यात्मग्रस्ता इव जायमानाः विभक्ताः विभाव्यन्ते इति भोक्ता आत्मा उच्यते ।
சுக, துக்க, மோஹ வடிவங்களாய் உள்ள எல்லா விஷயங்க ளைக் குறித்துமுள்ள புத்தியின் உணர்ச்சிகள் ஏற்படும்பொழுது ஆத்ம சைதன்யத்தால் விழுங்கப்பட்டது போல் தோன்றுகிறது. அக்னியில் சூடு போல எப்பொழுதும் அறிவு சொரூபமாய் உள்ள ஆத்ம சைதன்யத்தால் வெவ்வேறாக நன்றாகப் பார்க்கப்படுகின்ற ன. ஆகையால் ஆத்மா போக்தா எனப்படுகிறது.
महेश्वरः, सर्वात्मत्वात् स्वतन्त्रत्वाच्च महान् ईश्वरश्च इति महेश्वरः ।
மகேச்வரன். சர்வான்மாவாக இருப்பதாலும், ஸ்வதந்திரமாய் இருப்பதாலும் மஹா ஈஸ்வரன். ஆகையால் மகேச்வரன்.
परमात्मा, देहादीनां बुद्ध्यन्तानां प्रत्यगात्मत्वेन कल्पितानाम् अविद्यया परमः उपद्रष्टृत्वादिलक्षणः आत्मा इति परमात्मा ।
பரமாத்மா. தேஹம் முதல் புத்தி வரையிலும் பிரத்யக் ஆத்மா வாக அவித்யையினால் கல்பிக்கப்பட்டவைகளுக்கெல்லாம் மேலானவன். ஆகையால் உபத்ருஷ்டா முதலிய லக்ஷணமான ஆத்மா பரமாத்மா எனப்பட்டது.
सः अतः ‘परमात्मा’ इत्यनेन शब्देन च अपि उक्तः कथितः श्रुतौ ।
("ஸோ அந்த: பரமாத்மா ” = அது உள் இருக்கும் பரமாத்மா) என்ற வசனத்தினால் ஸ்ருதியிலும் கூறப்பட்டுள்ளது.
क्व असौ ? अस्मिन् देहे पुरुषः परः अव्यक्तात् , ‘उत्तमः पुरुषस्त्वन्यः परमात्मेत्युदाहृतः’ (भ. गी. १५ । १७) इति यः वक्ष्यमाणः‘क्षेत्रज्ञं चापि मां विद्धि’ (भ. गी. १३ । २) इति उपन्यस्तः व्याख्याय उपसंहृतश्च ॥ २२ ॥
அந்த ஆத்மா எங்குள்ளது? அவ்யக்தத்தைக் காட்டிலும் மேலான புருஷன் இந்த சரீரத்தில் இருக்கிறான். "உத்தம: புரு ஷஸ்த்வதன்ய; பரமாத்மேத்யுதாஹ்ருத?") என்று கூறப்போகிறதும், "க்ஷேத்திரக்ஞம் சாபி மாம் வித்தி”) என்றும் வியாக்யானம் செய்து முடிக்கிறார்.
तमेतं यथोक्तलक्षणम् आत्मानम् —
அந்த இவ்வாறு கூறப்பட்ட லக்ஷணத்தோடு கூடிய ஆத்மாவை.
य एवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैः सह ।
सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽभिजायते ॥ २३ ॥
ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ருதிம் ச குணை: ஸஹ ।
ஸர்வதா வர்தமானோஅபி ந ஸ பூயோஅபிஜாயதே ॥ 23 ॥
यः एवं यथोक्तप्रकारेण वेत्ति पुरुषं साक्षात् अहमिति प्रकृतिं च यथोक्ताम् अविद्यालक्षणां गुणैः स्वविकारैः सह निवर्तिताम् अभावम् आपादितां विद्यया ।
எவன் ஒருவன் முன்பு கூறப்பட்டவாறு அந்த ஆத்மாவை (புருஷனை)சாக்ஷாத் நான் என்று அறிகிறானோ, அவ்வாறே முன்பு கூறப்பட்ட அவித்யா ரூபமான ப்ரக்ருதியும், தன்னு டைய விகாரரூபமான குணங்களுடன் வித்யையினால் (ஞானத்தி னால்) நிவர்த்தி செய்து அதை இல்லாததாக அறிகிறானோ.
सर्वथा सर्वप्रकारेण वर्तमानोऽपि सः भूयः पुनः पतिते अस्मिन् विद्वच्छरीरे देहान्तराय न अभिजायते न उत्पद्यते, देहान्तरं न गृह्णाति इत्यर्थः ।
எவ்வாறு இருந்தாலும் அந்த ஞானி(வித்வான்) மறுபடியும் பிறப்பதில்லை. ஞானியினுடைய சரீரம் வீழ்ந்தபின் வேறு தேஹத்தை அடைவதில்லை. வேறு தேஹத்தை எடுப்பதில்லை.
अपिशब्दात् किमु वक्तव्यं स्ववृत्तस्थो न जायते इति अभिप्रायः ॥
உம் என்று சொன்னதால் நல்நடத்தை உள்ளவன் பிறப்பெடுப்பதில்லை என்று சொல்லவும் வேண்டுமோ?
ननु, यद्यपि ज्ञानोत्पत्त्यनन्तरं पुनर्जन्माभाव उक्तः, तथापि प्राक् ज्ञानोत्पत्तेः कृतानां कर्मणाम् उत्तरकालभाविनां च, यानि च अतिक्रान्तानेकजन्मकृतानि तेषां च, फलमदत्त्वा नाशो न युक्त इति, स्युः त्रीणि जन्मानि ।
ஞானமுண்டானபின் ஜன்மம் இல்லை என்று கூறப்பட்டாலும் ஞானம் உண்டாவதற்கு செய்த கர்மங்களும் இனி வரும் காலத் தில் செய்யப்போகின்ற கர்மங்களும் எவை இருக்கின்றனவோ அவ்வாறே இதற்குமுன் அநேக ஜன்மங்களில் செய்த கர்மங்க ளும் அதனுடைய பலன்களை அனுபவிக்காமல் நாசமாகும் என் பது பொருந்தாதாகையால் மூன்று வித கர்மங்களால் மூன்று ஜன் மங்கள் எடுக்கவேண்டியது வரும்.
कृतविप्रणाशो हि न युक्त इति, यथा फले प्रवृत्तानाम् आरब्धजन्मनां कर्मणाम् । न च कर्मणां विशेषः अवगम्यते । तस्मात् त्रिप्रकाराण्यपि कर्माणि त्रीणि जन्मानि आरभेरन् ; संहतानि वा सर्वाणि एकं जन्म आरभेरन् ।
செய்யப்பட்ட கர்மத்திற்கு (அனுபவியாமல்) நாசம் இல்லை என்பதால் எல்லா கர்மங்களும் சமமே. அதில் பேதம் இல்லை. ஆகையால் பலத்தைக் கொடுப்பதற்காக பிறப்பை உண்டு பண் ணிய பிராரப்த கர்மத்திற்கு சமமானதே மற்றகர்மங்களும் (சஞ்சி தம், ஆகாமியம் முதலியவைகளும்) பலனைக் கொடுக்காமல் நாச மடையாது. ஆகையால் மூன்று வகையான கர்மங்கள் மூன்று ஜன்மாக்களைக் கொடுக்கின்றன. அல்லது மூன்று கர்மாக்களும் சேர்ந்து ஒரு ஜன்மாவைக் கொடுக்கிறது.
अन्यथा कृतविनाशे सति सर्वत्र अनाश्वासप्रसङ्गः, शास्त्रानर्थक्यं च स्यात् । इत्यतः इदमयुक्तमुक्तम् ‘न स भूयोऽभिजायते’ इति ।
(பலனைக் கொடுக்காமல்) செய்த கர்மாவிற்கு நாசம் ஏற்பட்டால் எங்கும் விசுவாசம் இருக்காது.அவ்வாறே சாஸ்த்திர மும் வீணாகிவிடும். ஆகையால் மறுபிறப்பு இல்லை என்று கூறுவது பொருந்தாது.
(ந, க்ஷயந்தே சாஸ்ய கர்மாணி= இந்த கர்மாக்கள் நசித்து விடும்) (“பிரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி = பிரஹ்மத்தை அறிந்த வன் பிரஹ்மமே ஆகிறான்.) ("தஸ்யதாவதேவ சிரம்" = அவனுக்கு அவ்வளவே இருப்பு) ("ஈஷிகாதூலவத் ஸர்வாணி கர்மாணி ப்ரதூயந்தே”= கர்மங்கள் எல்லாம் நாணல் பூக்கள் போல் எரிக்கப் படுகின்றன) என்பது முதலிய சுருதி வாக்கியங்களால் வித்வான் களுக்கு எல்லா கர்மங்களும் எரிக்கப்படுகின்றன என்பதை அறிகிறோம்.
इहापि च उक्तः ‘यथैधांसि’ (भ. गी. ४ । ३७) इत्यादिना सर्वकर्मदाहः, वक्ष्यति च ।
இங்கும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது.யதைதாம்ஸி முதலிய வைகளால் எல்லா கர்மங்களும் எரிக்கப்படுவதைக் கூறப் போகிறார்.
उपपत्तेश्च — अविद्याकामक्लेशबीजनिमित्तानि हि कर्माणि जन्मान्तराङ्कुरम् आरभन्ते ।
யுக்தியினாலும் அவித்யை, காம க்லேசங்களுக்கு பீஜ காரணமாகிய கர்மங்களினால் தான் மறுபிறப்பிற்கான முளை கிளம்புகிறது என்று அறிகிறோம்.
इहापि च ‘साहङ्काराभिसन्धीनि कर्माणि फलारम्भकाणि, न इतराणि’ इति तत्र तत्र भगवता उक्तम् ।
இங்கும் அஹங்காரத்துடன் கூடிய கர்மங்களால்தான் பலன் கள் ஏற்படுகின்றன. மற்ற கர்மங்களினால் அன்று என்று அங்கு அங்கு பகவானால் கூறப்பட்டுள்ளது.
‘बीजान्यग्न्युपदग्धानि न रोहन्ति यथा पुनः । ज्ञानदग्धैस्तथा क्लेशैर्नात्मा सम्पद्यते पुनः’ (मो. २११ । १७) इति च ।
("பீஜான்யக்ன்யுபதுக்தானி ந ரோஹந்தி யதா புந: ஞானதக் தைஸ்ததா க்லேசைர் நாத்மா சம்பத்யதே புன?" = நெருப்பினால் வறுபட்ட விதை எவ்வாறு மறுபடியும் முளைக்காதோ அவ்வாறே ஞானாக்னியினால் சுடப்பட்ட க்லேசங்களால் (கர்மங்களால்) மறுபடியும் பிறப்பெடுப்பதில்லை. என்று கூறப்பட்டது.
अस्तु तावत् ज्ञानोत्पत्त्युत्तरकालकृतानां कर्मणां ज्ञानेन दाहः ज्ञानसहभावित्वात् । न तु इह जन्मनि ज्ञानोत्पत्तेः प्राक् कृतानां कर्मणां अतीतजन्मकृतानां च दाहः युक्तः ।
அவ்வாறு இருக்கட்டும். ஞானம் ஏற்பட்டபின் செய்த கர்மங் கள் வேண்டுமானால் ஞானத்தினால் தஹிக்கப்படலாம். ஏன் எனில் ஞானத்துடன் சேர்ந்து உண்டாவதால் ஏற்படலாம். ஆனால் இந்த ஜன்மத்தில் ஞானம் ஏற்படுவதற்கு முன்னால் கடந்த அநேக ஜன்மங்களில் செய்த கர்மங்களின் நாசம் ஏற்படும் என்பது பொருந்தாது என்றால்
न ; ‘सर्वकर्माणि’ (भ. गी. ४ । ३७) इति विशेषणात् ।
நீ கூறுவது சரியல்ல. ஏன் எனில் எல்லா கர்மங்களும் என்ற விசேஷணம் கிடைப்பதால்
ज्ञानोत्तरकालभाविनामेव सर्वकर्मणाम् इति चेत् ।
ஞானம் ஏற்பட்டபின் உண்டாகும் எல்லா கர்மங்களும் என்றால்
न ; सङ्कोचे कारणानुपपत्तेः । यत्तु उक्तम् ‘यथा वर्तमानजन्मारम्भकाणि कर्माणि न क्षीयन्ते फलदानाय प्रवृत्तान्येव सत्यपि ज्ञाने, तथा अनारब्धफलानामपि कर्मणां क्षयो न युक्तः’ इति, तत् असत् ।
அவ்வாறு அல்ல. ஏன் எனில் இவ்வளவுதான் என்று வரைய றுப்பதற்காக காரணம் இல்லாததினால். மேலும் எவ்வாறு இப்பொ ழுது உள்ள பிறப்பு ஆரம்பிப்பதற்குக் காரணமான கர்மங்கள் ஞானம் ஏற்பட்ட பலனைக் கொடுக்காமல் நாசமாகதோ அவ்வாறே ஆரம்பமாகாத சஞ்சித கர்மங்களும் நாசம் ஆகாது என்று கூறினால் அது சரியல்ல.
कथम् ? तेषां मुक्तेषुवत् प्रवृत्तफलत्वात् । यथा पूर्वं लक्ष्यवेधाय मुक्तः इषुः धनुषः लक्ष्यवेधोत्तरकालमपि आरब्धवेगक्षयात् पतनेनैव निवर्तते, एवं शरीरारम्भकं कर्म शरीरस्थितिप्रयोजने निवृत्तेऽपि, आ संस्कारवेगक्षयात् पूर्ववत् वर्तते एव ।
எவ்வாறெனில், ஏவப்பட்ட அம்பு போல் பலனைக் கொடுப்ப தில் செயல்பட்டுள்ளதால். எவ்வாறு முதலில் லக்ஷியத்தைக் குறித்து துளைக்க ஏவப்பட்ட அம்பானது வில்லில்-இருந்து விடு பட்டு லக்ஷ்யத்தை துளைத்த பின்பும் ஆரம்பித்த வேகமானது கீழே விழுந்தபின் ஓய்கிறது. அவ்வாறேசரீரத்தை ஆரம்பித்த கர்மமானது சரீரத்தின் இருப்பின் பயன் நீங்கினாலும் சம்சார வேகத்தின் நாசம் வரையிலும் முன்புபோல் இருக்கும்.
स एव इषुः प्रवृत्तिनिमित्तानारब्धवेगस्तु अमुक्तो धनुषि प्रयुक्तोऽपि उपसंह्रियते, तथा अनारब्धफलानि कर्माणि स्वाश्रयस्थान्येव ज्ञानेन निर्बीजीक्रियन्ते ।
அந்த அம்பே பிரவிர்த்தியின் பொருட்டு வில்லில் தொடுக் கப்பட்டாலும் செலுத்துவதற்கு தேவையான வேகம் இல்லாவிடில் லக்ஷியத்தை நோக்கிச் செல்லாமல் திரும்பி விடுகின்றதோ அவ்வாறே ஆரம்பிக்கப்படாத கர்மங்கள் தன் ஆச்ரயத்தில் இருந்து கொண்டே ஞானத்தினால் முளைக்கும் சக்தியற்றவிதை (பீஜம்)போல் ஆகின்றன.
इति, पतिते अस्मिन् विद्वच्छरीरे ‘न स भूयोऽभिजायते’ इति युक्तमेव उक्तमिति सिद्धम् ॥ २३ ॥
என்பதால் இந்த ஞானியின் சரீரம் வீழ்ந்தபின் "ந ஸ பூயோ அபி ஜாயதே "= அவன் மறுபடியும் பிறப்பதில்லை) என்று கூறி யது பொருத்தம் என்பது சித்தமாகிறது.
अत्र आत्मदर्शने उपायविकल्पाः इमे ध्यानादयः उच्यन्ते —
இங்கு ஆத்மதர்சனத்தின் பொருட்டு அநேகவித தியானம் முதலிய சாதனங்களைக் கூறுகிறார்-
ध्यानेनात्मनि पश्यन्ति केचिदात्मानमात्मना ।
अन्ये साङ्ख्येन योगेन कर्मयोगेन चापरे ॥ २४ ॥
த்யானேநாத்மனி பச்யந்தி கேசிதாத்மானமாத்மனா ।
அந்யே ஸாங்க்யேன யோகேன கர்மயோகேன சாபரே ॥ 24 ॥
ध्यानेन, ध्यानं नाम शब्दादिभ्यो विषयेभ्यः श्रोत्रादीनि करणानि मनसि उपसंहृत्य, मनश्च प्रत्यक्चेतयितरि, एकाग्रतया यत् चिन्तनं तत् ध्यानम् ; तथा, ध्यायतीव बकः, ध्यायतीव पृथिवी, ध्यायन्तीव पर्वताः इति उपमोपादानात् । तैलधारावत् सन्ततः अविच्छिन्नप्रत्ययो ध्यानम् ; तेन ध्यानेन आत्मनि बुद्धौ पश्यन्ति आत्मानं प्रत्यक्चेतनम् आत्मना स्वेनैव प्रत्यक्चेतनेन ध्यानसंस्कृतेन अन्तःकरणेन केचित् योगिनः ।
த்யானம் என்றால் சப்தம் முதலிய வெளிவிஷயங்களிலி ருந்து காது முதலிய இந்திரியங்களை மனதில் அடக்கி மனதை அந்தராத்மாவிடத்தில் ஒடுக்கி அதையே ஒரு மனதுடன் இடைய றாது சிந்திப்பது ஆகும். அவ்வாறே"த்யாயதீவ பக?" = கொக்கு தியானிப்பது போல்) ("த்யாயதீவ ப்ருத்வீ த்யாயந்தீவ பர்வதா?' = ப்ருத்வீ த்யானிப்பது போலும், மலைகள் தியானிப்பது போலும்) என்று உதாரணங்களால் கூறப்பட்டதால் தைலதாரை போல் தொடர்ச்சியாக இடைவிடாமல் எண்ணுதல் தியானம். அந்த தியா னத்தினால் பிரத்யக் ஆத்மாவை புத்தியில் தியானத்தினால் பண்ப டுத்தப்பட்ட அந்தக்கரணத்தினால் சிலயோகிகள் பார்க்கிறார்கள்.
अन्ये साङ्ख्येन योगेन, साङ्ख्यं नाम ‘इमे सत्त्वरजस्तमांसि गुणाः मया दृश्या अहं तेभ्योऽन्यः तद्व्यापारसाक्षिभूतः नित्यः गुणविलक्षणः आत्मा’ इति चिन्तनम् एषः साङ्ख्यो योगः, तेन ‘पश्यन्ति आत्मानमात्मना’ इति वर्तते ।
வேறு சிலர் சாங்கிய யோகத்தினால் பார்க்கிறார்கள். சாங்கி யம் என்றால் சத்துவ, ரஜ. தமோ குணங்கள் என்னால் அறியப்படு கிறது. ஆகையால் அவைகளைக் காட்டிலும் வேறானவன். அதனு டைய செயல்களுக்கெல்லாம் சா. நித்யன், குணங்களைக் காட்டிலும் வேறானவன் என்று எண்ணுதல் ஆகும். இந்த சாங் கிய யோகத்தினால் ஆத்மாவில் ஆத்மாவைப் பார்க்கிறார்கள்.
कर्मयोगेन, कर्मैव योगः, ईश्वरार्पणबुद्ध्या अनुष्ठीयमानं घटनरूपं योगार्थत्वात् योगः उच्यते गुणतः ; तेन सत्त्वशुद्धिज्ञानोत्पत्तिद्वारेण च अपरे ॥ २४ ॥
கர்மமே யோகம் கர்மயோகம், ஈஸ்வரார்ப்பண புத்தியினால் செய்யப்படும் கர்மம் யோகத்திற்கு சாதனமாவதால் கௌணமாக யோகம் எனப்படுகிறது. அந்த கர்மயோகத்தினால் சித்தசுத்தி ஏற் பட்டு அதனால் ஞானம் உண்டாகி கிரமமாக ஆத்மாவை ஆத்மா வாகவே சிலர் பார்க்கிறார்கள்.
अन्ये त्वेवमजानन्तः श्रुत्वान्येभ्य उपासते ।
तेऽपि चातितरन्त्येव मृत्युं श्रुतिपरायणाः ॥ २५ ॥
அந்யே த்வேவமஜாநந்த: ச்ருத்வான்யேப்ய உபாஸதே ।
தேஅபி சாதிதரந்த்யேவ ம்ருத்யும் ச்ருதிபராயணா: ॥ 25 ॥
अन्ये तु एषु विकल्पेषु अन्यतमेनापि एवं यथोक्तम् आत्मानम् अजानन्तः अन्येभ्यः आचार्येभ्यः श्रुत्वा ‘इदमेव चिन्तयत’ इति उक्ताः उपासते श्रद्दधानाः सन्तः चिन्तयन्ति ।
வேறு சிலர் இந்த சாதன முறைகளில் ஒரு சாதனத்திலாவது முன்பு கூறப்பட்ட ஆத்ம தத்துவத்தை அறியமுடியாதவர்கள் வேறு ஆச்சாரியாரிடம் சிரவணம் செய்து (கேட்டு) அதையே நினைத்து சிரத்தையுடன் உபாசனை செய்கிறார்கள்.
तेऽपि च अतितरन्त्येव अतिक्रामन्त्येव मृत्युम् , मृत्युयुक्तं संसारम् इत्येतत् । श्रुतिपरायणाः श्रुतिः श्रवणं परम् अयनं गमनं मोक्षमार्गप्रवृत्तौ परं साधनं येषां ते श्रुतिपरायणाः ; केवलपरोपदेशप्रमाणाः स्वयं विवेकरहिताः इत्यभिप्रायः ।
அவர்களும் மரணதர்மத்துடன் கூடிய சம்சாரத்தைத் தாண்டு கிறார்கள். பிறர் உபதேசத்தைக் கேட்பதுவே மேலான கதி. மோக்ஷ மார்க்கத்தில் பிரவிருத்திப்பவர்களுக்கு அதுவே மேலான சாதனம். அவர்கள் சுருதி பாராயணர்கள். மேலும் மற்றவர் உபதேசம் செய்ததைக் கேட்டல் மாத்திரமே சாதனம் என்பது அவிவேகி புரு ஷர்களது அபிப்பிராயம்.
किमु वक्तव्यम् प्रमाणं प्रति स्वतन्त्राः विवेकिनः मृत्युम् अतितरन्ति इति अभिप्रायः ॥ २५ ॥
பிரமாண விஷயத்தில் ஸ்வதந்திரமாக பிரித்து அறிவதற்கு சாமர்த்தியம் (விவேகம்) உடையவர்களுக்கு மரணத்தைக் கடப் பது என்பதில் என்ன கூறுவது.
क्षेत्रज्ञेश्वरैकत्वविषयं ज्ञानं मोक्षसाधनम् ‘यज्ज्ञात्वामृतमश्नुते’ (भ. गी. १३ । १२) इत्युक्तम् , तत् कस्मात् हेतोरिति, तद्धेतुप्रदर्शनार्थं श्लोकः आरभ्यते —
க்ஷேத்திரக்ஞனும், ஈஸ்வரனும் ஒன்றே என்ற ஞானம் மோக்ஷ சாதனம் "யஞ்ஞாத்வாம்ருதமச்னுதே” என்னும் வாக்கியத்தால் கூறப் பட்டது. அது எந்த காரணத்தினால் என்பதை அந்த காரணத்தை விளக்குவதன் பொருட்டு இந்த ஸ்லோகம் ஆரம்பிக்கப்படுகிறது.
यावत्सञ्जायते किञ्चित्सत्त्वं स्थावरजङ्गमम् ।
क्षेत्रक्षेत्रज्ञसंयोगात्तद्विद्धि भरतर्षभ ॥ २६ ॥
யாவத்ஸஞ்ஜாயதே கிஞ்சித்ஸத்த்வம் ஸ்தாவரஜங்கமம் ।
க்ஷேத்ரக்ஷேத்ரக்ஞஸம்யோகாத்தத்வித்தி பரதர்ஷப ॥ 26 ॥
यावत् यत् किञ्चित् सञ्जायते समुत्पद्यते सत्त्वं वस्तु ; किम् अविशेषेण ? नेत्याह — स्थावरजङ्गमं स्थावरं जङ्गमं च क्षेत्रक्षेत्रज्ञसंयोगात् तत् जायते इत्येवं विद्धि जानीहि भरतर्षभ ॥
ஹே பரதர்ஷப! எவை எல்லாம் உண்டாயிற்றோ அவை எல் லாம் வஸ்து என்று கூறப்பட்டது எதனால் எனில் ஸ்தாவரம் (அசையா பொருள்) ஜங்கமம் (அசையும் பொருள்) இவைகள் எல்லாம் க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன் இவைகளின் சம்பந்தத்தால் ஏற்பட்டது என்று அறி.
कः पुनः अयं क्षेत्रक्षेत्रज्ञयोः संयोगः अभिप्रेतः ? न तावत् रज्ज्वेव घटस्य अवयवसंश्लेषद्वारकः सम्बन्धविशेषः संयोगः क्षेत्रेण क्षेत्रज्ञस्य सम्भवति, आकाशवत् निरवयवत्वात् । नापि समवायलक्षणः तन्तुपटयोरिव क्षेत्रक्षेत्रज्ञयोः इतरेतरकार्यकारणभावानभ्युपगमात् इति ।
மேலும் இந்த க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன் இவைகளின் சம் மந்தத்தின் அபிப்பிராயம் என்ன? கயறு, குடம் இவைகளுக்குள் அவயவங்களுடன் ஒன்றோடு ஒன்று சம்மந்தம் உள்ளது போல் க்ஷேத்திரத்திற்கு க்ஷேத்திரக்ஞனோடு ஆகாயம் போல் அவயவம் அற்று இருப்பதால் (சம்யோக) சம்பந்தமானது ஏற்படா து. க்ஷேத்திர க்ஷேத்திரக்ஞனுக்கு நூல், துணி போல் ஒன்றுடன் ஒன்று காரிய காரண சம்பந்தமானது இல்லாததினால் சமவாய சம்பந்தமும் கிடையாது எனில்-
उच्यते — क्षेत्रक्षेत्रज्ञयोः विषयविषयिणोः भिन्नस्वभावयोः इतरेतरतद्धर्माध्यासलक्षणः संयोगः क्षेत्रक्षेत्रज्ञस्वरूपविवेकाभावनिबन्धनः, रज्जुशुक्तिकादीनां तद्विवेकज्ञानाभावात् अध्यारोपितसर्परजतादिसंयोगवत् ।
கயிறு, சுக்தி இவைகளினிடத்தில் விவேகஞானம் இல்லாத தினால் அத்யாரோபம் செய்யப்பட்ட பாம்பு, வெள்ளி இவைகளின் சம்யோகம் போல் வெவ்வேறு சுபாவங்களுடைய விஷய விஷயிகளான க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ ஸ்வரூப விவேகம் இல்லாத காரணத்தினால் ஒன்றில் மற்றொன்றின் அத்யாச லக்ஷணம் சம்யோகம் எனப்படுகிறது.
सः अयं अध्यासस्वरूपः क्षेत्रक्षेत्रज्ञसंयोगः मिथ्याज्ञानलक्षणः ।
அந்த இந்த க்ஷேத்திர க்ஷேத்திரக்ஞ சம்யோகமானது அத்யாச ரூபமித்யா ஞான லக்ஷணமாகும்.
यथाशास्त्रं क्षेत्रक्षेत्रज्ञलक्षणभेदपरिज्ञानपूर्वकं प्राक् दर्शितरूपात् क्षेत्रात् मुञ्जादिव इषीकां यथोक्तलक्षणं क्षेत्रज्ञं प्रविभज्य ‘न सत्तन्नासदुच्यते’ (भ. गी. १३ । १२) इत्यनेन निरस्तसर्वोपाधिविशेषं ज्ञेयं ब्रह्मस्वरूपेण यः पश्यति ।
சாஸ்திரத்தில் உள்ளபடி க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன் இவைக ளின் லக்ஷண பேதங்களையும், அதன் பேதங்களை நன்றாக ஆராய்ந்து அறிந்து முதலில் கூறப்பட்ட லக்ஷணங்களோடு கூடிய க்ஷேத்திரத்தை முன்பு கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய க்ஷேத்திரக்ஞனிடமிருந்து மூங்கில் புல்லை நடுவில் பிரிப்பது போல் பிரித்து ("ந ஸத்தந்நா ஸதுச்யதே” = அது சத் அல்ல அசத் தல்ல எனப்படுகின்றது) என்றஇதனால் எல்லா உபாதிகளும் அற்றஞேய வஸ்துவை பிரஹ்ம ஸ்வரூபமாக எவன் பார்க்கி றானோ
क्षेत्रं च मायानिर्मितहस्तिस्वप्नदृष्टवस्तुगन्धर्वनगरादिवत् ‘असदेव सदिव अवभासते’ इति एवं निश्चितविज्ञानः यः, तस्य यथोक्तसम्यग्दर्शनविरोधात् अपगच्छति मिथ्याज्ञानम् ।
மாயாஜாலத்தால் உண்டாக்கப்பட்ட யானை போலும், சொப் னத்தில் காணப்பட்ட வஸ்துக்கள் போலவும், கந்தர்வ நகரம் போல வும் க்ஷேத்திரத்தை அசத்தே. அது சத் போலே விளங்குகிறது என்று இவ்வாறு எவனுக்கு நிச்சயமான (திடமான) ஞானம் உடைய வனோ அவனுடைய மித்யா ஞானமானது மேலே கூறப்பட்ட யதார்த்த ஞானத்திற்கு விரோதமாய் இருப்பதால் அந்த மித்யா ஞானமானது நாசமாய் விடுகிறது.
तस्य जन्महेतोः अपगमात् ‘य एवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैः सह’ (भ. गी. १३ । २३) इत्यनेन ‘विद्वान् भूयः न अभिजायते’ इति यत् उक्तम् , तत् उपपन्नमुक्तम् ॥ २६ ॥
அவனுக்கு பிறப்பிற்கான காரணம் விலகிவிடுகிறது. ("ய ஏவம் வேத்தி புருஷம் பிரக்ருதிம் ச குணை; ஸஹு”) எவன் இவ் வாறு ப்ரகிருதியையும் புருஷனையும் அவைகளின் லக்ஷணங்க ளுடன் அறிகிறானோ என்ற இந்த ஸ்லோகத்தால் ஞானியானவன் மறுபடியும் பிறப்பதில்லை என்று எது கூறப்பட்டதோ அது யுக் திக்கு பொருத்தமாகவே கூறப்பட்டது.
‘न स भूयोऽभिजायते’ (भ. गी. १३ । २३) इति सम्यग्दर्शनफलम् अविद्यादिसंसारबीजनिवृत्तिद्वारेण जन्माभावः उक्तः । जन्मकारणं च अविद्यानिमित्तकः क्षेत्रक्षेत्रज्ञसंयोगः उक्तः ; अतः तस्याः अविद्यायाः निवर्तकं सम्यग्दर्शनम् उक्तमपि पुनः शब्दान्तरेण उच्यते —
(ந ச பூயோ அபிஜாயதே) என்று சம்யக் தர்சனத்தின் பலமான அவித்யை முதலிய சம்சார பீஜத்தின் நிவிர்த்தி வாயிலாகவே பிறப்பின்மை கூறப்பட்டது. பிறப்பிற்கு காரணம் அவித்யையி னால் உண்டான க்ஷேத்திர, க்ஷேஷத்திரக்ஞ சம்யோகம் என்று கூறப் பட்டது. ஆகையால் அந்த அவித்யையைப் போக்கும் சம்யக்தர்ச னம் (யதார்த்த ஞானம்) கூறப்பட்ட போதிலும் மறுபடியும் வேறு வாக்கியங்களால் (சப்தங்களால்) கூறப்படுகிறது.
समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरम् ।
विनश्यत्स्वविनश्यन्तं यः पश्यति स पश्यति ॥ २७ ॥
ஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேச்வரம் ।
விநச்யத்ஸ்வவிநச்யந்தம் ய: பச்யதி ஸ பச்யதி ॥ 27 ॥
समं निर्विशेषं तिष्ठन्तं स्थितिं कुर्वन्तम् ; क्व ? सर्वेषु समस्तेषु भूतेषु ब्रह्मादिस्थावरान्तेषु प्राणिषु ; कम् ? परमेश्वरं देहेन्द्रियमनोबुद्ध्यव्यक्तात्मनः अपेक्ष्य परमेश्वरः, तं सर्वेषु भूतेषु समं तिष्ठन्तम् ।
சமமாக வேற்றுமை இல்லாமல் நிலைபெற்றுள்ளான். எதில்? எல்லா பிரஹ்மா முதல் ஸ்தாவரம் வரையிலும் உள்ள பிரா ணிகளிடத்தில் எவர் நிலைபெற்றுள்ளார் எனில் பரமேச்வரன். தேஹம் இந்திரியம் மனம் புத்தி அவ்யக்தம் ஜீவாத்மா இவர்க ளைக் காட்டிலும் பரமேச்வரன். (மேலான ஈஸ்வரன்) அந்த எல்லா பூதங்களிலும் (பிராணிகளிலும்) சமமாக இருப்பவன்.
तानि विशिनष्टि विनश्यत्सु इति, तं च परमेश्वरम् अविनश्यन्तम् इति, भूतानां परमेश्वरस्य च अत्यन्तवैलक्षण्यप्रदर्शनार्थम् ।
இங்கு பிராணிகளைக் காட்டிலும் பரமேச்வரனுடைய விலக்ஷ ணத்தன்மையை (வேற்றுமையை) காட்டுவதற்காக பிராணிகள் நாசத்தன்மை உடையவை என்றும், பரமேச்வரன் அவிநாசி நாச மற்றத் தன்மையன் என்றும் விசேஷணம் கூறப்பட்டது.
कथम् ?
எவ்வாறு
सर्वेषां हि भावविकाराणां जनिलक्षणः भावविकारो मूलम् ; जन्मोत्तरकालभाविनः अन्ये सर्वे भावविकाराः विनाशान्ताः ; विनाशात् परो न कश्चित् अस्ति भावविकारः, भावाभावात् । सति हि धर्मिणि धर्माः भवन्ति ।
எல்லா பாவவிகாரங்களுடைய பிறப்பானது பாவ விகாரத் தின் மூல காரணமாகும். பிறப்பிற்கு பிறகு உண்டாகும் மற்ற எல்லா பாவ விகாரங்களும் நாசத்தை முடிவாக உடையவை. பாவ விகாரங்கள் உண்மையில் பாவம் இல்லாததால் விநாசத்திற்குப் பின் ஒன்றும் இருப்பதில்லை. ஏன் எனில் தர்மி இருந்தால் அல்லவா தர்மம் இருக்கும்.
अतः अन्त्यभावविकाराभावानुवादेन पूर्वभाविनः सर्वे भावविकाराः प्रतिषिद्धाः भवन्ति सह कार्यैः ।
ஆகவே விநாசம் என்ற இறுதியான பாவவிகாரமானது இல்லை என்று அனுவாதித்தலால் அதற்கு முன் உண்டான எல்லா பாவவிகாரங்களும் காரியங்களுடன் இல்லாமல் போகிறது.
तस्मात् सर्वभूतैः वैलक्षण्यम् अत्यन्तमेव परमेश्वरस्य सिद्धम् , निर्विशेषत्वम् एकत्वं च । यः एवं यथोक्तं परमेश्वरं पश्यति, सः पश्यति ॥
ஆகையால் எல்லா பூதங்களைக் காட்டிலும் பரமேச்வரன் முற்றிலும் வேறுபட்டவன் ஆகையால் நிர்விசேஷத்துவமும், ஏகத்துவமும் சித்திக்கிறது. எவன் ஒருவன் இவ்வாறு கூறப்பட்ட படி பரமேச்வரனைப் பார்க்கிறானோ அவனே பார்க்கிறான்.
ननु सर्वोऽपि लोकः पश्यति, किं विशेषणेन इति ।
அப்படியென்றால் உலகத்தோர் எல்லோருமே காண்கிறார் கள் ஆனால் அவன் காண்கிறான் என்று விசேஷித்துக் கூறியது எதனால்? என்று.
सत्यं पश्यति ; किं तु विपरीतं पश्यति । अतः विशिनष्टि — स एव पश्यतीति ।
(அவன்-ஞானி) சத்யத்தைப் பார்க்கிறான். ஆனால் (உலகத்தோர்) அதற்கு விபரீதமாகப் பார்க்கிறார்கள். ஆகையால் ஸ ஏவ பச்யதி' = அவன் தான் பார்க்கிறான்) என்று விசேஷித்து கூறுகிறார்.
यथा तिमिरदृष्टिः अनेकं चन्द्रं पश्यति, तमपेक्ष्य एकचन्द्रदर्शी विशिष्यते — स एव पश्यतीति ; तथा इहापि एकम् अविभक्तं यथोक्तं आत्मानं यः पश्यति, सः विभक्तानेकात्मविपरीतदर्शिभ्यः विशिष्यते — स एव पश्यतीति ।
எவ்வாறு கண்களில் திமிர தோஷமுடையவர்கள் அநேக சந் திரன்களைப் பார்க்கின்றார்களோ அவர்களை நோக்க ஒரே சந்திரனைப் பார்ப்பவன் விசேஷமாகப் பார்க்கிறவன். அவனே பார்ப்பவன். அவ்வாறே கூறப்பட்ட ஏகமாயும், பிரிக்கப்படாத தாயும் உள்ள ஆத்மாவை எவன் பார்க்கிறானோ அவன் வெவ் வேறாக பிரிக்கப்பட்ட அநேக ஆத்மாக்களாக விபரீதமாகப் பார்க் கப்பட்டவனைக் காட்டிலும் விசேஷித்திருக்கிறான். அவனே பார்ப்பவன்.
इतरे पश्यन्तोऽपि न पश्यन्ति, विपरीतदर्शित्वात् अनेकचन्द्रदर्शिवत् इत्यर्थः ॥ २७ ॥
மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்களாக இருந்தாலும் பார்ப்பவர்கள் அல்ல. ஏன் எனில் அநேக சந்திரனைப் பார்ப்பவர் கள் போல் விபரீத தர்சனமுடையவர்களாதலால்.
यथोक्तस्य सम्यग्दर्शनस्य फलवचनेन स्तुतिः कर्तव्या इति श्लोकः आरभ्यते —
கூறப்பட்ட சம்யக்தர்சனத்தினுடைய பலனைக் கூறுவதன் வாயிலாக ஸ்துதி செய்ய வேண்டும் என்று இந்த ஸ்லோகத்தை ஆரம்பிக்கிறார்.
समं पश्यन्हि सर्वत्र समवस्थितमीश्वरम् ।
न हिनस्त्यात्मनात्मानं ततो याति परां गतिम् ॥ २८ ॥
ஸமம் பச்யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்திதமீச்வரம் ।
ந ஹிநஸ்த்யாத்மநாத்மானம் ததோ யாதி பராம் கதிம் ॥ 28 ॥
समं पश्यन् उपलभमानः हि यस्मात् सर्वत्र सर्वभूतेषु समवस्थितं तुल्यतया अवस्थितम् ईश्वरम् अतीतानन्तरश्लोकोक्तलक्षणमित्यर्थः । समं पश्यन् किम् ? न हिनस्ति हिंसां न करोति आत्मना स्वेनैव स्वमात्मानम् । ततः तदहिंसनात् याति परां प्रकृष्टां गतिं मोक्षाख्याम् ॥
எல்லாப் பிராணிகளிடத்து சமபாவனையில் இருக்கின்ற ஈஸ்வரனை அதாவது முந்திய ஸ்லோகத்தில் கூறிய லக்ஷணங்களு டையவனை ஸமமாக காண்பவன் தன்னைத் தானே ஹிம்சிப்ப தில்லை என்பது பொருள். சமமாகப் பார்ப்பவன் தன்னைத் தானே ஹிம்சிப்பதில்லை. ஏன் எனில் ஒருவனும் தன்னைத் தானே ஹிம் சிப்பதில்லை. அதனால் அஹிம்சை உடையவன் மேலான கதியை அதாவது மோக்ஷத்தை அடைகிறான்.
ननु नैव कश्चित् प्राणी स्वयं स्वम् आत्मानं हिनस्ति । कथम् उच्यते अप्राप्तम् ‘न हिनस्ति’ इति ? यथा ‘न पृथिव्यामग्निश्चेतव्यो नान्तरिक्षे’ (तै. सं. ५ । २ । ७) इत्यादि ।
அப்படியானால் ஒருபிராணியும் தன்னைத் தானே ஹிம்சை செய்வதில்லை. இவ்வாறு இருக்கும்பொழுது நடைபெறமுடியா ததை இவ்வாறு நிஷேதிக்கமுடியும். (தள்ளமுடியும்). எவ்வாறு பிரு திவியிலும், ஆகாயத்திலும் யாககுண்டத்தை அமைக்க முடியாது என்று கூறி இருப்பதால். இதன் கருத்து என்னவெனில் பிருதிவி யில் அக்னிகுண்டம் அமைக்கக்கூடாது என்று கூறுதல் பொருத்த மாகாது. ஏன் எனில் அக்னிகுண்டம் பிருதிவியில் அல்லாமல் எங்கு அமைக்க முடியும். ஆனால் ஆகாயத்தில் அக்னிகுண்டம் அமைத்தலை நிஷேதித்தல் என்பது சொல் மாத்திரமே அன்றி உண்மையில் அக்னி குண்டத்தை ஆகாயத்தில் அமைத்தல் என் பது நடக்காத, நடக்கமுடியாத காரியம். ஆகையால் ஆகாயத்தில் குண்டம் அமைத்தலை நிஷேதம் செய்தல் சொல் மாத்திரமே ஆவது போல் தன்னைத் தானே ஹிம்சை செய்வதில்லை என்பது சொல் மாத்திரமேயாகும்.
नैष दोषः, अज्ञानाम् आत्मतिरस्करणोपपत्तेः । सर्वो हि अज्ञः अत्यन्तप्रसिद्धं साक्षात् अपरोक्षात् आत्मानं तिरस्कृत्य अनात्मानम् आत्मत्वेन परिगृह्य, तमपि धर्माधर्मौ कृत्वा उपात्तम् आत्मानं हत्वा अन्यम् आत्मानम् उपादत्ते नवं तं चैवं हत्वा अन्यमेवं तमपि हत्वा अन्यम् इत्येवम् उपात्तमुपात्तम् आत्मानं हन्ति, इति आत्महा सर्वः अज्ञः ।
அக்ஞானிகள் தன் ஆத்மாவைத் திரஸ்கரித்தல் (அலட்சியம்) செய்தல் கூடுமாதலால் இது தோஷமல்ல. ஏன் எனில் எல்லா அக்ஞானிகளும் மிகவும் பிரசித்தமாகவும், சாக்ஷாத்தாகவும், அப ரோக்ஷமாகவும் இருக்கும் ஆத்மாவை விட்டு விட்டு அநாத்மாவை ஆத்மாபோல் ஏற்றுக்கொண்டு புண்ய பாபங்களை செய்து அதனால் அடைந்த ஆத்மாவை (சரீரத்தை)க் கொன்று, மற்றொரு புதிய சரீரத்தை அடைகிறார்கள். அவ்வாறே அந்த சரீரத்தைக் கொன்று மற்றொரு சரீரத்தை எடுக்கிறான். அதையும் கொன்று இன்னொரு சரீரத்தை எடுக்கிறான். இவ்வாறு அடைந்த, அடைந்த சரீரத்தை எடுக்கிறான் என்பதால் அவன் ஆத்மஹத்தி செய்தவன் ஆகிறான். அவனே அக்ஞானி.
यस्तु परमार्थात्मा, असावपि सर्वदा अविद्यया हत इव, विद्यमानफलाभावात् , इति सर्वे आत्महनः एव अविद्वांसः ।
எந்த உண்மையான ஆத்மாவாக இருந்தாலும், அவித்யையி னால் எப்பொழுதும் கொல்லப்ப்பட்டது போல் இருக்கின்றது. ஏன் எனில் அவனுக்கு உள்ள பலனும் இல்லாமையினால் ஆக அவித்வான்கள் எவ்வகையாலும் ஆத்மஹனனர்களே. (ஆத்மா வைக் கொன்றவர்கள்)
यस्तु इतरः यथोक्तात्मदर्शी, सः उभयथापि आत्मना आत्मानं न हिनस्ति न हन्ति । ततः याति परां गतिम् यथोक्तं फलं तस्य भवति इत्यर्थः ॥ २८ ॥
ஆனால் முன்பு கூறியவாறு ஆத்மாவை காண்கின்றமற்றவன் எவனோ அவன் இவ்விருவிதமாகவும் தன்னைத்தானே கொல்வ தில்லை. ஆகையால் அவன் மேலான கதியை அடைகிறான். கூறப்பட்ட பலனும் அவனுக்கு உண்டாகிறது என்பது பொருள்.
सर्वभूतस्थम् ईश्वरं समं पश्यन् ‘न हिनस्ति आत्मना आत्मानम्’ इति उक्तम् । तत् अनुपपन्नं स्वगुणकर्मवैलक्षण्यभेदभिन्नेषु आत्मसु, इत्येतत् आशङ्क्य आह —
எல்லாப் பிராணிகளின் உள்ளும் சமமாக ஈஸ்வரனைப் பார்ப் பவன் தன்னைத்தானே ஹிம்சிப்பதில்லை என்று கூறப்பட்டது குணம், கர்மம் இவைகளின் பேதங்களால் அநேக ஆத்மாக்கள் இருக்கிறது என்று ஆகிவிடும் என்பதால் அது பொருந்தாது என்று சங்கை செய்து கூறுகிறார்.
प्रकृत्यैव च कर्माणि क्रियमाणानि सर्वशः ।
यः पश्यति तथात्मानमकर्तारं स पश्यति ॥ २९ ॥
ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வச: ।
ய: பச்யதி ததாத்மானமகர்தாரம் ஸ பச்யதி ॥ 29 ॥
प्रकृत्या प्रकृतिः भगवतः माया त्रिगुणात्मिका, ‘मायां तु प्रकृतिं विद्यात्’ (श्वे. उ. ४ । १०) इति मन्त्रवर्णात् , तया प्रकृत्यैव च न अन्येन महदादिकार्यकारणाकारपरिणतया कर्माणि वाङ्मनःकायारभ्याणि क्रियमाणानि निर्वर्त्यमानानि सर्वशः सर्वप्रकारैः यः पश्यति उपलभते ।
("மாயாம் து ப்ரக்ருதிம் வித்யாத்") என்பது முதலிய மந்திரங்களால் பகவானுடைய முக்குண வடிவமான மாயை ப்ரக் ருதி எனப்படுகிறது. அது மஹத் தத்துவம் முதலியவை காரிய, கரண வடிவங்களாக பரிணமிக்கிறது. அந்த ப்ரக்ருதியின் வாயிலாகவே மனோ வாக்கு காயங்களால் செய்யப்படும் எல்லாக் கர்மங்களும் எல்லா விதமாகவும் சம்பாதிக்கப்படுகிறது (செய்து முடிக்கப்படுகிறது) வேறு ஒன்றால் அன்று. இவ்விதமாகப் பார்க்க வேண்டும்.
तथा आत्मानं क्षेत्रज्ञम् अकर्तारं सर्वोपाधिविवर्जितं सः पश्यति, सः परमार्थदर्शी इत्यभिप्रायः ; निर्गुणस्य अकर्तुः निर्विशेषस्य आकाशस्येव भेदे प्रमाणानुपपत्तिः इत्यर्थः ॥ २९ ॥
அவ்வாறு க்ஷேத்திரக்ஞனாகியும் அகர்த்தாவாகியும் உபாதி களற்றதாயும் பரமார்த்த தர்சி பார்க்கிறான் என்பது அபிப்பிராயம். ஆகாயம் போல் நிர்குணமாயும், அகர்த்தாவாயும் நிர்விசேஷமா யுள்ள ஆத்மாவிடத்தில் பேதம் உண்டு என்பதற்கு பிரமாணம் இல்லை என்பது அபிப்பிராயம்.
पुनरपि तदेव सम्यग्दर्शनं शब्दान्तरेण प्रपञ्चयति —
மறுபடியும் சம்யக் தர்சனத்தைப் பற்றியும் யதார்த்த ஞானத் தைப் பற்றியும் வேறு விதமாக விளக்குகிறார்.
यदा भूतपृथग्भावमेकस्थमनुपश्यति ।
तत एव च विस्तारं ब्रह्म सम्पद्यते तदा ॥ ३० ॥
யதா பூதப்ருதக்பாவமேகஸ்தமநுபச்யதி ।
தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா ॥ 30 ॥
यदा यस्मिन् काले भूतपृथग्भावं भूतानां पृथग्भावं पृथक्त्वम् एकस्मिन् आत्मनि स्थितं एकस्थम् अनुपश्यति शास्त्राचार्योपदेशम् , अनु आत्मानं प्रत्यक्षत्वेन पश्यति ‘आत्मैव इदं सर्वम्’ (छा. उ. ७ । २५ । २) इति ।
எப்பொழுது வெவ்வேறாக இருக்கும், தனித்தன்மையுடன் இருக்கும் பிராணிகளை ஒரே ஆத்மாவிடத்தில் இருப்பதாக சாஸ் திரத்தினாலும், ஆச்சாரியாரது உபதேசத்தினாலும் அறிகிறானோ அப்பொழுது ஆத்மாவைப் பிரத்யக்ஷமாகப் பார்க்கிறான். "ஆத்மை வேதம் சர்வம்” ஆத்மாவே எல்லாம் என்று பார்க்கிறான்.
तत एव च तस्मादेव च विस्तारं उत्पत्तिं विकासम् ‘आत्मतः प्राण आत्मत आशा आत्मतः स्मर आत्मत आकाश आत्मतस्तेज आत्मत आप आत्मत आविर्भावतिरोभावावात्मतोऽन्नम्’ (छा. उ. ७ । २६ । १) इत्येवमादिप्रकारैः विस्तारं यदा पश्यति, ब्रह्म सम्पद्यते ब्रह्मैव भवति तदा तस्मिन् काले इत्यर्थः ॥ ३० ॥
அவ்வாறே இந்த ஆத்மாவில் இருந்துதான் எல்லாம் விரிவ டைகிறது என்றால் உத்பத்தி ஆகிறது. எப்பொழுது (“ஆத்மத: பிராண ஆத்மத ஆசாத்மத: ஸ்மர ஆத்மத ஆகாச ஆத்மதஸ் தேஜ ஆத்மத ஆப ஆத்மத ஆவிர்பாவதிரோபாவாத்மதோ அன்னம்" ஆத்மாவிலிருந்து பிராணன், ஆத்மாவிலிருந்து ஆசை, ஆத்மாவிலிருந்து ஸங்கல்ப்பம், ஆத்மாவிலிருந்து ஆகாசம், ஆத்மாவிலிருந்து தேஜஸ், ஆத்மாவிலிருந்து தண்ணீர், ஆத்மாவிலிருந்து அன்னம், ஆத்மாவிலிருந்து தான் எல்லாம் தோன்றி மறைகிறது.) என்பது முதலிய பிரகாரமாக எல்லா ஜகத் தும் ஆத்மாவிலிருந்து விகாசமடைவது (தோன்றுவது) என்பதாக எப்பொழுது காண்பானோ அந்த சமயத்தில் பிரஹ்மத்தை அடை கிறான். அதாவது பிரஹ்மமாகவே ஆகிறான் என்பது பொருள்.
एकस्य आत्मानः सर्वदेहात्मत्वे तद्दोषसम्बन्धे प्राप्ते, इदम् उच्यते —
ஒரே ஆத்மா எல்லா சரீரங்களுக்கும் ஆத்மாவானால், அந்த ஆத்மாவிற்கு எல்லா சரீரங்களுடைய தோஷங்களும் ஏற்படும் என்கின்ற சங்கை உண்டாகுமிடத்து இவ்வாறு கூறுகிறார்.
अनादित्वान्निर्गुणत्वात्परमात्मायमव्ययः ।
शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते ॥ ३१ ॥
அநாதித்வாந்நிர்குணத்வாத்பரமாத்மாயமவ்யய: ।
சரீரஸ்தோஅபி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே ॥ 31 ॥
अनादित्वात् अनादेः भावः अनादित्वम् , आदिः कारणम् , तत् यस्य नास्ति तत् आनादि । यद्धि आदिमत् तत् स्वेन आत्मना व्येति ; अयं तु अनादित्वात् निरवयव इति कृत्वा न व्येति ।
அநாதியினுடைய பாவம் அநாதித்துவம். எதற்கு ஒரு காரண மும் இல்லையோ அது அநாதி. எதற்கு ஆதித்துவம் உள்ளதோ அதற்கு தன்னுடைய ஸ்வரூபத்தின் அழிவு உண்டாகிறது. ஆனால் ஆத்மா அநாதியாய் இருப்பதால் அதற்கு அவயவங்கள் இல்லாததினால் அதற்கு ஒருநாளும் நாசம் உண்டாகாது.
तथा निर्गुणत्वात् । सगुणो हि गुणव्ययात् व्येति अयं तु निर्गुणत्वाच्च न व्येति ; इति परमात्मा अयम् अव्ययः । न अस्य व्ययो विद्यते इति अव्ययः ।
ஸகுணம் உள்ளதே குணம், குணத்துடன் உடையது ஸகுணம், குணம் நாசமடைந்தால் அதுவும் நாசமடையும். இது (ஆத்மா) நிர் குணமாய் இருப்பதால் நாசமடையாது. இந்த பரமாத்மா அவ்யயம். அதற்கு நாசம் இல்லாததால் அவ்யயமாகும்.
यत एवमतः शरीरस्थोऽपि, शरीरेषु आत्मनः उपलब्धिः भवतीति शरीरस्थः उच्यते ; तथापि न करोति । तदकरणादेव तत्फलेन न लिप्यते ।
எதனால் இவ்வாறோ அதனால் சரீரத்தில் இருந்தாலும் என் பது சரீரத்தில் ஆத்மா புலப்படுகிறதால் சரீரத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு இருந்தாலும் கர்மம் ஒன்றும் செய்வதில் லை. ஆகையால் அதன் பலன் அதை ஒட்டாது.
यो हि कर्ता, सः कर्मफलेन लिप्यते । अयं तु अकर्ता, अतः न फलेन लिप्यते इत्यर्थः ॥
எவன் கர்மம் (கர்த்தாவோ) செய்கிறானோ அவனை கர்மப லன் சேரும். ஆனால் இந்த ஆத்மா அகர்த்தா ஆகையால் பலன் இவனை ஒட்டாது.
कः पुनः देहेषु करोति लिप्यते च ? यदि तावत् अन्यः परमात्मनो देही करोति लिप्यते च, ततः इदम् अनुपपन्नम् उक्तं क्षेत्रज्ञेश्वरैकत्वम् ‘क्षेत्रज्ञं चापि मां विद्धि’ (भ. गी. १३ । २) इत्यादि ।
ஆனால் யார் கர்மத்தை செய்கிறார்கள்? யார் பலனை அடை கிறார்கள்? இவ்வாறு எடுத்துக்கொண்டால் பரமாத்மாவைத் தவிர வேறு எந்த சரீரி கர்மத்தை செய்து பலத்தை அடைகிறான். அப் பொழுது (“க்ஷேத்ரக்ஞம் சாபி மாம் வித்தி”) என்பது முதலியவை களால் க்ஷேத்திரக்ஞன், ஈஸ்வரன் ஒன்றேஒன்று என்று கூறியது பொருத்தமற்றதாகும்.
अथ नास्ति ईश्वरादन्यो देही, कः करोति लिप्यते च ? इति वाच्यम् ; परो वा नास्ति इति ।
ஈஸ்வரனைக் காட்டிலும் வேறு தேஹி இல்லையெனில் யார் கர்மத்தைச் செய்கிறான்? பலனையும் அடைகிறான் என்பதையும் கூறவேண்டும். அல்லது பரமாத்மா இல்லை என்று சொல்ல வேண்டும்.
सर्वथा दुर्विज्ञेयं दुर्वाच्यं च इति भगवत्प्रोक्तम् औपनिषदं दर्शनं परित्यक्तं वैशेषिकैः साङ्ख्यार्हतबौद्धैश्च ।
பகவானால் உரைக்கப்பட்ட உபநிஷத்ரூபமான தர்சனம் (கருத்து) எவ்வகையாலும் அறிவதற்கு மிக்க கடுமையானதும், கூற முடியாததுமாகும் என்று வைசேஷிகர்களாலும், சாங்கியர்களா லும், ஆர்ஹதர்களாலும், பௌத்தர்களாலும் தள்ளப்பட்டதாகும்.
तत्र अयं परिहारो भगवता स्वेनैव उक्तः ‘स्वभावस्तु प्रवर्तते’ (भ. गी. ५ । १४) इति । अविद्यामात्रस्वभावो हि करोति लिप्यते इति व्यवहारो भवति, न तु परमार्थत एकस्मिन् परमात्मनि तत् अस्ति ।
அங்கு பகவான் சுயமாகவே "ஸ்வபாவஸ்து பிரவர்த்ததே" = ஸ்வபாவமாகவே கர்மம் செய்கிறார்கள்) என்று கூறி இருக்கிறார். அவித்யை மாத்திர ஸ்வபாவத்தினாலேயே செய்கிறான் பற்றுகிறது என்ற வியவஹாரங்கள் ஏற்படுகின்றன. ஆனால் உண்மையில் அத்விதீயமான பரமாத்மாவினிடத்தில் இல்லை.
अतः एतस्मिन् परमार्थसाङ्ख्यदर्शने स्थितानां ज्ञाननिष्ठानां परमहंसपरिव्राजकानां तिरस्कृताविद्याव्यवहाराणां कर्माधिकारो नास्ति इति तत्र तत्र दर्शितं भगवता ॥ ३१ ॥
ஆகையால் அத்விதீயமான உண்மையான சாங்கிய தர்சனத் தில் நிலைத்திருக்கும் ஞானநிஷ்ட்டர்களாகிய பரமஹம்ச பரிவ்ரா ஜகர்களுக்கு (சந்நியாசிகளுக்கு) அவித்யையினால் உண்டான வியவஹாரங்களை திரஸ்காரம் (தியாகம்) செய்ததினால் அவர்க ளுக்கு கர்மத்தில் அதிகாரம் இல்லை என்பதை பகவானால் அங்கு அங்கு எடுத்து காட்டப்பட்டது.
किमिव न करोति न लिप्यते इति अत्र दृष्टान्तमाह —
எதைப் போல் செய்வதில்லை, பற்றுவது இல்லை என்பதை இங்கு திருஷ்டாந்தத்துடன் கூறுகிறார்-
यथा सर्वगतं सौक्ष्म्यादाकाशं नोपलिप्यते ।
सर्वत्रावस्थितो देहे तथात्मा नोपलिप्यते ॥ ३२ ॥
யதா ஸர்வகதம் ஸௌக்ஷ்ம்யாதாகாசம் நோபலிப்யதே ।
ஸர்வத்ராவஸ்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே ॥ 32 ॥
यथा सर्वगतं व्यापि अपि सत् सौक्ष्म्यात् सूक्ष्मभावात् आकाशं खं न उपलिप्यते न सम्बध्यते, सर्वत्र अवस्थितः देहे तथा आत्मा न उपलिप्यते ॥ ३२ ॥
ஆகாசமானது எங்கும் வியாபித்திருப்பதாலும் சூக்ஷ்மமாய் இருப்பதால் ஒன்றையும் பற்றுவதில்லை. அவ்வாறே சரீரமுழுவ தும் ஆத்மா இருந்தாலும் (அதனுடைய குண, தோஷங்களுடன்) பற்றுவதில்லை.
किञ्च —
மேலும்
यथा प्रकाशयत्येकः कृत्स्नं लोकमिमं रविः ।
क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत ॥ ३३ ॥
யதா ப்ரகாசயத்யேக: க்ருத்ஸ்னம் லோகமிமம் ரவி: ।
க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா க்ருத்ஸ்நம் ப்ரகாசயதி பாரத ॥ 33 ॥
यथा प्रकाशयति अवभासयति एकः कृत्स्नं लोकम् इमं रविः सविता आदित्यः, तथा तद्वत् महाभूतादि धृत्यन्तं क्षेत्रम् एकः सन् प्रकाशयति । कः ? क्षेत्री परमात्मा इत्यर्थः ।
எவ்வாறு சூரியன் ஒருவனாக இருந்துகொண்டு உலகம் முழு வதையும் ப்ரகாசம் செய்கிறதோ அவ்வாறே மஹாபூதங்களிலி ருந்து த்ருதி வரையிலும் உள்ள க்ஷேத்திரத்தை ஒருவனாகவே இருந்து கொண்டு பிரகாசிக்கச் செய்கின்றான் (வணங்கச் செய்கின் றான்). அவன் யார் எனில்? க்ஷேத்ரி எனப்படும் பரமாத்மா என்பது பொருள்.
रविदृष्टान्तः अत्र आत्मनः उभयार्थोऽपि भवति — रविवत् सर्वक्षेत्रेषु एक एव आत्मा, अलेपकश्च इति ॥ ३३ ॥
இங்கு சூரியதிருஷ்டாந்தமானது ஆத்மாவிற்கு இரண்டு பிர காரங்களுக்கும் பொருந்துகிறது. சூரியனைப் போல் எல்லா க்ஷேத் திரங்களிலும் அத்விதீய ஆத்மா, பற்றாமல் இருக்கிறது.
समस्ताध्यायार्थोपसंहारार्थः अयं श्लोकः —
அத்யாயத்தின் எல்லா அர்த்தங்களையும் முடிவிற்கு கொண்டு வருவதற்காக இந்த ஸ்லோகம் (கூறப்படுகிறது).
क्षेत्रक्षेत्रज्ञयोरेवमन्तरं ज्ञानचक्षुषा ।
भूतप्रकृतिमोक्षं च ये विदुर्यान्ति ते परम् ॥ ३४ ॥
க்ஷேத்ரக்ஷேத்ரக்ஞயோரேவமந்தரம் ஞானச ஷா ।
பூதப்ரக்ருதிமோக்ஷம் ச யே விதுர்யாந்தி தே பரம் ॥ 34 ॥
क्षेत्रक्षेत्रज्ञयोः यथाव्याख्यातयोः एवं यथाप्रदर्शितप्रकारेण अन्तरम् इतरेतरवैलक्षण्यविशेषं ज्ञानचक्षुषा शास्त्राचार्यप्रसादोपदेशजनितम् आत्मप्रत्ययिकं ज्ञानं चक्षुः, तेन ज्ञानचक्षुषा, भूतप्रकृतिमोक्षं च, भूतानां प्रकृतिः अविद्यालक्षणा अव्यक्ताख्या, तस्याः भूतप्रकृतेः मोक्षणम् अभावगमनं च ये विदुः विजानन्ति, यान्ति गच्छन्ति ते परं परमात्मतत्त्वं ब्रह्म, न पुनः देहं आददते इत्यर्थः ॥ ३४ ॥
எவர்கள் சாஸ்திரத்தினாலும், குரு உபதேசத்தால் உண்டான ஆத்மசாக்ஷாத்கார ரூப ஞானக் கண்களின் வழியாக முன்பு கூறப் பட்ட க்ஷேத்திர, க்ஷேத்திரக்ஞங்களுடைய வேற்றுமையை அவைகளின் பரஸ்பர விலக்ஷணத்தன்மையை முன்பு காண்பிக் கப்பட்டவாறு அறிகிறானோ, மேலும் அவ்வாறே அவ்யக்தம் எனப்படும் அவித்யாரூப பிராணிகளது ப்ரக்ருதியின் இல்லாமல் போவதை அறிகிறார்களோ அவர்கள் பரமார்த்த தத்துவமாகிய பிரஹ்மத்தை அறிகிறார்கள் (அடைகிறார்கள்). அவர்கள் மறுபடி யும் சரீரத்தை எடுப்பதில்லை.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये त्रयोदशोऽध्यायः ॥
ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே க்ஷேத்ரக்ஷேத்ரக்ஞயோகோ நாம த்ரயோதசோத்யாய:
सर्वम् उत्पद्यमानं क्षेत्रक्षेत्रज्ञसंयोगात् उत्पद्यते इति उक्तम् । तत् कथमिति, तत्प्रदर्शनार्थम् ‘परं भूयः’ इत्यादिः अध्यायः आरभ्यते ।
உற்பத்தியான எல்லா பொருள்களும் க்ஷேத்திரம், க்ஷேத்ரக் ஞன் இவர்களுடைய சேர்க்கையால் உண்டாயின (உற்பத்தி யாயின) என்று கூறப்பட்டது எவ்வாறு என்று காண்பிப்பதற்காக (பரம் பூய:) என்பது முதலிய ஸ்லோகங்களால் இந்த அத்தியாயம் ஆரம்பிக்கப்படுகிறது.
अथवा, ईश्वरपरतन्त्रयोः क्षेत्रक्षेत्रज्ञयोः जगत्कारणत्वं न तु साङ्ख्यानामिव स्वतन्त्रयोः इत्येवमर्थम् ।
அல்லது ஈஸ்வரனின் ஆதீனமாகவே க்ஷேத்திரம், க்ஷேத்தி ரக்ஞன் இவர்கள் ஜகத்திற்கு காரணமாகிறார்கள். சாங்கிய மதத் தின் படி ஸ்வதந்திரமாக அல்ல என்பதைக் காண்பிக்கிறார்.
प्रकृतिस्थत्वं गुणेषु च सङ्गः संसारकारणम् इति उक्तम् । कस्मिन् गुणे कथं सङ्गः ? के वा गुणाः ? कथं वा ते बध्नन्ति इति ? गुणेभ्यश्च मोक्षणं कथं स्यात् ? मुक्तस्य च लक्षणं वक्तव्यम् , इत्येवमर्थं च
பிரக்ருதியில் உள்ள குணங்களில் உள்ள சம்பந்தம் (ஆசக்தி யே) சம்சாரத்திற்குக் காரணம் என்று கூறப்பட்டது. எந்த குணத் தில்? எவ்வாறு ஆசக்தி ஏற்பட்டது? குணங்கள் எவைகள்? எவ் வாறு அவைகள் பந்தப்படுத்துகிறது? அந்த குணங்களிலிருந்து எவ்வாறு விடுதலை பெறுவது? அவ்வாறே மோக்ஷத்தின் லக்ஷ ணம் கூறவேண்டும் என்பதால் ஆரம்பிக்கப்படுகிறது-
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவான் கூறினார்—
परं भूयः प्रवक्ष्यामि ज्ञानानां ज्ञानमुत्तमम् ।
यज्ज्ञात्वा मुनयः सर्वे परां सिद्धिमितो गताः ॥ १ ॥
பரம் பூய: ப்ரவக்ஷ்யாமி ஞானானாம் ஞானமுத்தமம் ।
யஜ்ஞாத்வா முநய: ஸர்வே பராம் ஸித்திமிதோ கதா: ॥ 1 ॥
परं ज्ञानम् इति व्यवहितेन सम्बन्धः ।
பரம் என்ற பதத்திற்கும் தூரத்தில் உள்ள ஞானம் என்ற பதத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
भूयः पुनः पूर्वेषु सर्वेष्वध्यायेषु असकृत् उक्तमपि प्रवक्ष्यामि । तच्च परं परवस्तुविषयत्वात् । किं तत् ? ज्ञानं सर्वेषां ज्ञानानाम् उत्तमम् , उत्तमफलत्वात् ।
முந்திய எல்லா அத்தியாயங்களிலும் அநேக தடவை கூறி இருந்தாலும் மறுபடியும் கூறுகிறேன். ஏன் எனில் அது மேலான வஸ்து விஷயமாய் இருப்பதால் அது எது? எனில் ஞானம் மேலான (உத்தமமான) பலத்தைக் கொடுப்பதால் அந்த ஞானமா னது எல்லா(விஷய) ஞானத்தைக் காட்டிலும் மேலானது.
ज्ञानानाम् इति न अमानित्वादीनाम् ; किं तर्हि ? यज्ञादिज्ञेयवस्तुविषयाणाम् इति ।
(ஞானங்களுக்கெல்லாம் மேலானது என்ற இடத்தில்) ஞானங்களுக்கெல்லாம் என்றது அமானித்துவாதிகளைக் குறித்து அல்ல யக்ஞ முதலிய அறியப்படும் வஸ்துக்களைக் குறித்துக் கூறப்பட்டது.
तानि न मोक्षाय, इदं तु मोक्षाय इति परोत्तमशब्दाभ्यां स्तौति श्रोतृबुद्धिरुच्युत्पादनार्थम् ।
யக்ஞாதி விஷயக்ஞானம் மோக்ஷத்தின் பொருட்டல்ல. ஆனால் இதுவோ மோக்ஷத்தின் பொருட்டாகும். ஆகையால் இதை மேலானது, உத்தமமானது என்ற பதங்களால் கேட்பவனுக்கு ருசி உண்டாவதற்காக துதிக்கின்றார்.
यत् ज्ञात्वा यत् ज्ञानं ज्ञात्वा प्राप्य मुनयः संन्यासिनः मननशीलाः सर्वे परां सिद्धिं मोक्षाख्याम् इतः अस्मात् देहबन्धनात् ऊर्ध्वं गताः प्राप्ताः ॥ १ ॥
எந்த ஞானத்தை அறிந்து முனிவர்கள் அதாவது சந்நியாசி கள் ஆகிய மனனசீலர்கள் எல்லோரும் மேலான மோக்ஷம் எனப் படும் சித்தியை அடைகின்றார்கள். இந்த தேஹ பந்தத்திலிருந்து (தாண்டுதலை அடைகிறார்கள்) விடுபடுகிறார்கள்.
अस्याश्च सिद्धेः ऐकान्तिकत्वं दर्शयति —
இந்த சித்தியின் மாறுதல் இல்லாத தன்மையை அதாவது நித் யத்தன்மையை காண்பிக்கிறார்—
इदं ज्ञानमुपाश्रित्य मम साधर्म्यमागताः ।
सर्गेऽपि नोपजायन्ते प्रलये न व्यथन्ति च ॥ २ ॥
இதம் ஞானமுபாச்ரித்ய மம ஸாதர்ம்யமாகதா: ।
ஸர்கேஅபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச ॥ 2 ॥
इदं ज्ञानं यथोक्तमुपाश्रित्य, ज्ञानसाधनम् अनुष्ठाय इत्येतत् , मम परमेश्वरस्य साधर्म्यं मत्स्वरूपताम् आगताः प्राप्ताः इत्यर्थः । न तु समानधर्मता साधर्म्यम् , क्षेत्रज्ञेश्वरयोः भेदानभ्युपगमात् गीताशास्त्रे । फलवादश्च अयं स्तुत्यर्थम् उच्यते । सर्गेऽपि सृष्टिकालेऽपि न उपजायन्ते । न उत्पद्यन्ते । प्रलये ब्रह्मणोऽपि विनाशकाले न व्यथन्ति च व्यथां न आपद्यन्ते, न च्यवन्ति इत्यर्थः ॥ २ ॥
கூறப்பட்டவாறு இந்த ஞானத்தை ஆச்ரயித்து என்றால் ஞானத்தை அனுஷ்ட்டானம் செய்து பரமேச்வரனான என்னு டைய ஸ்வரூபத்தை அடைந்தவர்கள் என்பது பொருள். ஆனால் க்ஷேத்திரம், க்ஷேஷத்ரக்ஞன் என்றபேதம் இல்லை என்று கீதா சாஸ் திரத்தில் உள்ளதால் சமானதர்மம் என்பது கிடையாது. (பேதம் இருந்தால் அல்லவா இரண்டிற்கும் சமதர்மம் உள்ளது என்று கூற முடியும்) பலவந்தமாவது (மோக்ஷத்தைப் பலனாக கூறும் வாதமா னது) ஞானத்தை துதிக்கும் பொருட்டு கூறப்பட்டதாகும். ப்ரஹ்மம் சிருஷ்ட்டி காலத்தில் உற்பத்தி ஆவதில்லை. பிரளயகாலத்தில் அழிவதும் இல்லை. நழுவுவதும் இல்லை என்பது பொருள்.
क्षेत्रक्षेत्रज्ञसंयोगः ईदृशः भूतकारणम् इत्याह —
க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன் இவர்களது சம்யோகமானது (சேர்க்கையானது)இவ்வாறு பூதங்கள் (பொருள்கள்) உண்டாவதற் குக் காரணமாகிறது
मम योनिर्महद्ब्रह्म तस्मिन्गर्भं दधाम्यहम् ।
सम्भवः सर्वभूतानां ततो भवति भारत ॥ ३ ॥
மம யோநிர்மஹத்ப்ரஹ்ம தஸ்மிந்கர்பம் ததாம்யஹம் ।
ஸம்பவ: ஸர்வபூதானாம் ததோ பவதி பார்த ॥ 3 ॥
मम स्वभूता मदीया माया त्रिगुणात्मिका प्रकृतिः योनिः सर्वभूतानां कारणम् । सर्वकार्येभ्यो महत्त्वात् भरणाच्च स्वविकाराणां महत् ब्रह्म इति योनिरेव विशिष्यते ।
ஈஸ்வரனாகிய என்னுடைய மாயையானது முக்குணஸ்வரூப மான ப்ரக்ருதி. அதுவே எல்லா பூதங்களுக்கும் காரணம்(கர்பம்). எல்லா வஸ்துக்களாகிய காரியங்களைக் காட்டிலும் மிகப்பெரியதா யும், தன்னுடைய விகாரங்கள் எல்லாவற்றையும் தாங்குவதால் மஹத் ப்ரஹ்மம் காரணம்(கர்பம்) என்று விசேஷித்துக்கூறப்படுகிறது.
तस्मिन् महति ब्रह्मणि योनौ गर्भं हिरण्यगर्भस्य जन्मनः बीजं सर्वभूतजन्मकारणं बीजं दधामि निक्षिपामि क्षेत्रक्षेत्रज्ञप्रकृतिद्वयशक्तिमान् ईश्वरः अहम् , अविद्याकामकर्मोपाधिस्वरूपानुविधायिनं क्षेत्रज्ञं क्षेत्रेण संयोजयामि इत्यर्थः ।
க்ஷேத்திரம், க்ஷேத்ரக்ஞன் ஆகிய இருவித ப்ரகிருதி சக்திக ளுடைய ஈஸ்வரனாகிய நான் அந்த மஹத்தான ப்ரஹ்மரூப கர்ப் பத்தில் ஹிரண்யகர்பனுடைய ஜன்மத்தின் காரணமாகிய பீஜத்தை யும், எல்லாப் பிராணிகளின் ஜன்மகாரணமாகிய பீஜத்தையும் வைத்திருக்கிறேன். அவித்யா, காம, கர்ம, உபாதிரூபங்களைப் பற்றியுள்ள க்ஷேத்திரம் க்ஷேத்ரக்ஞன் இவர்களைச் சேர்த்து வைக் கிறேன் என்று பொருள்.
सम्भवः उत्पत्तिः सर्वभूतानां हिरण्यगर्भोत्पत्तिद्वारेण ततः तस्मात् गर्भाधानात् भवति हे भारत ॥ ३ ॥
ஹே! பாரத! அந்த கர்ப்ப ஸ்தானத்திலிருந்து ஹிரண்ய கர்ப்ப உற்பத்தியின் வாயிலாக எல்லா பூதங்களின் உற்பத்தியும் உண்டாகிறது.
सर्वयोनिषु कौन्तेय मूर्तयः सम्भवन्ति याः ।
तासां ब्रह्म महद्योनिरहं बीजप्रदः पिता ॥ ४ ॥
ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்பவந்தி யா: ।
தாஸாம் ப்ரஹ்ம மஹத்யோநிரஹம் பீஜப்ரத: பிதா ॥ 4 ॥
देवपितृमनुष्यपशुमृगादिसर्वयोनिषु कौन्तेय, मूर्तयः देहसंस्थानलक्षणाः मूर्छिताङ्गावयवाः मूर्तयः सम्भवन्ति याः, तासां मूर्तीनां ब्रह्म महत् सर्वावस्थं योनिः कारणम् अहम् ईश्वरः बीजप्रदः गर्भाधानस्य कर्ता पिता ॥ ४ ॥
ஹே கௌந்தேய! தேவ, பித்ரு, மனிதன், ஆடுமாடுகள் மான் முதலிய விலங்குகள் எல்லா யோனிகளிலிருந்து சரீர காரணமான அந்த அந்த லக்ஷணங்களோடு கூடிய அங்கங்களும், அவயவங் களும் உற்பத்தியாகின்றன. அந்த எல்லா மூர்த்திகளுக்கும் எல்லா வகையிலும் மஹத் ப்ரஹ்மம் காரணமாகும். ஈஸ்வரனாகிய நான் பீஜத்தை (விதையை)க் கொடுப்பவன். கர்ப்பம் ஏற்படுத்துவதற்கு கர்த்தாவாகையால் தந்தை(பிதா)
के गुणाः कथं बध्नन्तीति, उच्यते —
எந்த எந்த குணங்கள் எவ்வாறு பந்தப்படுத்துகிறது என்று கூறுகிறார்-
सत्त्वं रजस्तम इति गुणाः प्रकृतिसम्भवाः ।
निबध्नन्ति महाबाहो देहे देहिनमव्ययम् ॥ ५ ॥
ஸத்வம் ரஜஸ்தம இதி குணா: ப்ரக்ருதிஸம்பவா: ।
நிபத்நந்தி மஹாபாஹோ தேஹே தேஹிநமவ்யயம் ॥ 5 ॥
सत्त्वं रजः तमः इति एवंनामानः । गुणाः इति पारिभाषिकः शब्दः, न रूपादिवत् द्रव्याश्रिताः गुणाः । न च गुणगुणिनोः अन्यत्वमत्र विवक्षितम् ।
சத்வம், ரஜஸ், தமஸ் என்ற பெயர்களுடைய மூன்று குணங்கள் குணம் என்று பரிபாஷையினால் வந்தது ரூபம் முத லியவைகள் போல் ஒரு பொருளை (திரவ்யத்தை-விஷயத்தை) ஆச்ரயிக்கவில்லை.அவ்வாறே குணம், குணத்தை உடையவன் என்ற பேதத்தை இங்கு விளக்கவில்லை.
तस्मात् गुणा इव नित्यपरतन्त्राः क्षेत्रज्ञं प्रति अविद्यात्मकत्वात् क्षेत्रज्ञं निबध्नन्तीव । तम् आस्पदीकृत्य आत्मानं प्रतिलभन्ते इति निबध्नन्ति इति उच्यते ।
குணங்கள் திரவ்யங்களுக்கு அதீனமாய் இருப்பது போல குணங்களும் அவித்யாத்மகமாய் இருப்பதால் க்ஷேத்ரக்ஞன் அதற்கு அதீனமாய் இருப்பதால் பந்தப்பட்டது போல் இருக்கிறது. க்ஷேத்திரக்ஞனை ஆதாரமாகக் கொண்ட (குணமானது) தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அதை பந்தப்படுத்துகிறது என்று கூறப் படுகிறது.
ते च प्रकृतिसम्भवाः भगवन्मायासम्भवाः निबध्नन्ति इव हे महाबाहो, महान्तौ समर्थतरौ आजानुप्रलम्बौ बाहू यस्य सः महाबाहुः, हे महाबाहो देहे शरीरे देहिनं देहवन्तम् अव्ययम् , अव्ययत्वं च उक्तम् ‘अनादित्वात्’ (भ. गी. १३ । ३१) इत्यादिश्लोकेन ।
எவருடைய கைகள் மிகவும் சாமர்த்தியம் உடையதாயும், முழங்கால் வரையும் நீண்டுள்ளதோ அவர் மஹாபாஹு (பெரிய கைகள் உடையவர்) ஹே மஹாபாஹோ! அவைகள் (குணங்கள்) பகவானுடைய மாயையினால் உண்டானவைகளாய் பந்தப்படுத்து வது போல் இருக்கிறது. தேஹத்தில் உள்ள தேஹியானவர் (தே ஹத்தை உடையவர்) நாசமற்றவர் என்று அநாதித்வாத் முதலிய ஸ்லோகங்களால் கூறப்பட்டது.
ननु ‘देही न लिप्यते’ (भ. गी. १३ । ३१) इत्युक्तम् । तत् कथम् इह निबध्नन्ति इति अन्यथा उच्यते ।
தேஹி ஒட்டுவதில்லை என்று கூறப்பட்டது. அப்படி இருக் கும்பொழுது எவ்வாறு பந்தப்படுகிறது என்று வேறுவிதமாக கூறப் பட்டதே எனில்,
परिहृतम् अस्माभिः इवशब्देन निबध्नन्ति इव इति ॥ ५ ॥
இவ என்ற பதத்தை சேர்த்ததால் இந்த சங்கையானது நிவர்த்தி யாகிறது.
तत्र सत्त्वादीनां सत्त्वस्यैव तावत् लक्षणम् उच्यते —
அங்கு சத்துவ முதலிய குணங்களில் முதலில் சத்துவத்தின் லக்ஷணம் கூறப்படுகிறது.
तत्र सत्त्वं निर्मलत्वात्प्रकाशकमनामयम् ।
सुखसङ्गेन बध्नाति ज्ञानसङ्गेन चानघ ॥ ६ ॥
தத்ர ஸத்வம் நிர்மலத்வாத்ப்ரகாசகமநாமயம் ।
ஸுகஸுங்கேந பத்நாதி ஞானஸங்கேன சாநக ॥ 6 ॥
निर्मलत्वात् स्फटिकमणिरिव प्रकाशकम् अनामयं निरुपद्रवं सत्त्वं तन्निबध्नाति ।
சத்துவகுணம் ஸ்படிகமணிபோல் நிர்மலமாய் இருப்பதால் ப்ர காசம் செய்வதாயும், உபத்திரவம் (தொந்தரவு) அற்றதாயும் இருக் கும் அது (ஆத்மாவை) பந்தப்படுத்துகிறது.
कथम् ? सुखसङ्गेन ‘सुखी अहम्’ इति विषयभूतस्य सुखस्य विषयिणि आत्मनि संश्लेषापादनं मृषैव सुखे सञ्जनम् इति । सैषा अविद्या ।
எவ்வாறு எனில் சுகம் ஏற்படும்பொழுது நான் சுகியாயிருக்கி றேன் என்று விஷய சுகத்தை விஷயீ ஆகிய ஆத்மாவிடத்தில் சம்பந்தப்படுத்தி சுகத்தில் பற்று அடைதல் மித்யையே. அது இந்த அவித்யை.
न हि विषयधर्मः विषयिणः भवति । इच्छादि च धृत्यन्तं क्षेत्रस्यैव विषयस्य धर्मः इति उक्तं भगवता ।
விஷய தர்மமானது விஷயீனிடத்தில் ஏற்படாது. இச்சை முதல் த்ருதிவரையிலும் விஷயமாகிய க்ஷேத்திரனுடையதே இந்த தர்மம் என்று பகவானால் கூறப்பட்டது.
अतः अविद्ययैव स्वकीयधर्मभूतया विषयविषय्यविवेकलक्षणया अस्वात्मभूते सुखे सञ्जयति इव, आसक्तमिव करोति, असङ्गं सक्तमिव करोति, असुखिनं सुखिनमिव । तथा ज्ञानसङ्गेन च ।
ஆகையால் தன்னுடைய தர்மத்தைப் போன்றதாய் (ஆத்மா வின் தர்மத்தைப் போன்றதாய் விஷயம், விஷயீ இவைகளைப் பகுத்தறியும் தன்மை (விவேகம்) அற்றதான அவித்யையினால் அநாத்மரூபமான சுகத்தில் (ஆத்மாவை) பற்றச் செய்கிறது போல் இருக்கிறது. சுகம் அல்லாததில் சுகம் இருப்பது போல் செய்கிறது. அவ்வாறே(விஷய) ஞானத்திலும் பந்தத்தைச் செய்கிறது.
ज्ञानमिति सुखसाहचर्यात् क्षेत्रस्यैव विषयस्य अन्तःकरणस्य धर्मः, न आत्मनः ; आत्मधर्मत्वे सङ्गानुपपत्तेः, बन्धानुपपत्तेश्च । सुखे इव ज्ञानादौ सङ्गः मन्तव्यः । हे अनघ अव्यसन ॥ ६ ॥
ஞானமானது சுகத்துடன் சேர்ந்தே இருப்பதால் க்ஷேத்திரத்தி னுடைய அந்தக்கரண தர்மமேயாகும். ஆத்மாவின் தர்மமல்ல. ஆத்மாவிற்கு தர்மத்தன்மையை இருப்பதாகக் கொண்டு அதில் பற்றும், பந்தமும் இருப்பதாகக் கூறுவது பொருந்தாது. ஹே! குற்ற மற்றவனே! சுகத்தில் உள்ளது போல் ஞான முதலியவைகளிலும் பற்று இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
रजो रागात्मकं विद्धि तृष्णासङ्गसमुद्भवम् ।
तन्निबध्नाति कौन्तेय कर्मसङ्गेन देहिनम् ॥ ७ ॥
ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணாஸங்கஸமுத்பவம் ।
தந்நிபத்நாதி கௌந்தேய கர்மஸங்கேன தேஹினம் ॥ 7 ॥
रजः रागात्मकं रञ्जनात् रागः गैरिकादिवद्रागात्मकं विद्धि जानीहि । तृष्णासङ्गसमुद्भवं तृष्णा अप्राप्ताभिलाषः, आसङ्गः प्राप्ते विषये मनसः प्रीतिलक्षणः संश्लेषः, तृष्णासङ्गयोः समुद्भवं तृष्णासङ्गसमुद्भवम् ।
ரஜோகுணமானது ராகாத்மகமாகும். எவ்வாறு எனில் காவி முதலிய நிறங்கள் போல் புருஷர்களை விஷயங்களில் பற்றடை யச் செய்து அந்த ரூபமாகவே ஆவதால் அதை ராகரூபம் என்று அறி. கிடைக்காத வஸ்துக்களில் உள்ள ஆசை திருஷ்ணா என வும், கிடைத்த விஷயங்களில் ஆசை ரூபமற்று ஆசக்தி எனப்ப டும். இந்த திருஷ்ணை, ஆசக்தி இவைகளுக்குக் காரணம் ரஜோ குணத்தினுடைய ராகரூபம் என்று அறி.
तन्निबध्नाति तत् रजः निबध्नाति कौन्तेय कर्मसङ्गेन, दृष्टादृष्टार्थेषु कर्मसु सञ्जनं तत्परता कर्मसङ्गः, तेन निबध्नाति रजः देहिनम् ॥ ७ ॥
ஹே கௌந்தேய! அந்த ரஜோகுணமானது சரீரத்தை உடைய க்ஷேத்திரக்ஞனை கர்மத்தில் பற்றுடையதாய் பந்தப்படுத்துகிறது. திருஷ்ட்ட, அதிருஷ்ட்ட (இகலோக, பரலோக) பலன்களைக் கொடுக்கும் கர்மங்களில் ஆசக்தி ஏற்பட்டு அந்தர்மயமாக ஆவதே கர்மசங்கம். அதனால் ரஜோகுணம் தேஹியைப் பந்தப் படுத்துகிறது.
तमस्त्वज्ञानजं विद्धि मोहनं सर्वदेहिनाम् ।
प्रमादालस्यनिद्राभिस्तन्निबध्नाति भारत ॥ ८ ॥
தமஸ்த்வஞானஜம் வித்தி மோஹனம் ஸர்வதேஹினாம் ।
ப்ரமாதாலஸ்யநித்ராபிஸ்தந்நிபத்நாதி பாரத ॥ 8 ॥
तमः तृतीयः गुणः अज्ञानजम् अज्ञानात् जातम् अज्ञानजं विद्धि मोहनं मोहकरम् अविवेककरं सर्वदेहिनां सर्वेषां देहवताम् । प्रमादालस्यनिद्राभिः प्रमादश्च आलस्यं च निद्रा च प्रमादालस्यनिद्राः ताभिः प्रमादालस्यनिद्राभिः तत् तमः निबध्नाति भारत ॥ ८ ॥
ஹே பாரத! மூன்றாவது குணமாகிய தமஸானது அக்ஞானத்தி னால் உண்டானது என்று அறி. அது மோஹத்தையும், அவிவேகத் தையும் உண்டாக்கவல்லது. தேஹம் உடையவர்கள் எல்லோரை யும் மயக்கத்திலும், சோம்பலிலும் அந்த தமோகுணமானது பந்தப் படுத்துகிறது.
पुनः गुणानां व्यापारः सङ्क्षेपतः उच्यते —
மேலும் குணங்களுடைய செயல்களை (வியாபாரங்களை) சுருக்கமாகக் கூறுகிறார்-
सत्त्वं सुखे सञ्जयति रजः कर्मणि भारत ।
ज्ञानमावृत्य तु तमः प्रमादे सञ्जयत्युत ॥ ९ ॥
ஸத்வம் ஸுகே ஸஞ்ஜயதி ரஜ: கர்மணி பாரத ।
ஞானமாவ்ருத்ய து தம: ப்ரமாதே ஸஞ்ஜயத்யுத ॥ 9 ॥
सत्त्वं सुखे सञ्जयति संश्लेषयति, रजः कर्मणि हे भारत सञ्जयति इति अनुवर्तते । ज्ञानं सत्त्वकृतं विवेकम् आवृत्य आच्छाद्य तु तमः स्वेन आवरणात्मना प्रमादे सञ्जयति उत प्रमादः नाम प्राप्तकर्तव्याकरणम् ॥ ९ ॥
ஹே பாரத ! சத்வகுணமானது சுகத்தைப் பற்றச்செய்கிறது. ரஜோகுணம் கர்மத்தைப் பற்றச் செய்கிறது. சத்வ குணத்தினால் உண்டான விவேக ஞானத்தை தமோகுணமானது தனது மறைப்பு சுவபாவத்தினால் மறைத்து பிரமாதத்தை உண்டு பண்ணுகிறது. பிர மாதம் என்றால் தான் செய்ய வேண்டியதை செய்யாமல் இருத்தல்.
उक्तं कार्यं कदा कुर्वन्ति गुणा इति उच्यते —
முக்குணங்களும் எப்பொழுது கூறப்பட்ட காரியங்களைச் செய்கின்றன என்று கூறுகிறார்-
रजस्तमश्चाभिभूय सत्त्वं भवति भारत ।
रजः सत्त्वं तमश्चैव तमः सत्त्वं रजस्तथा ॥ १० ॥
ரஜஸ்தமச்சாபிபூய ஸத்வம் பவதி பாரத ।
ரஜ: ஸத்வம் தமச்சைவ தம: ஸத்வம் ரஜஸ்ததா ॥ 10 ॥
रजः तमश्च उभावपि अभिभूय सत्त्‌वं भवति उद्भवति वर्धते यदा, तदा लब्धात्मकं सत्त्वं स्वकार्यं ज्ञानसुखादि आरभते हे भारत ।
ஹே பாரத! எப்பொழுது ரஜோகுணமும், தமோகுணமும் அமுங்கி சத்துவகுணம் மேல் எழும்புகிறதோ(கிளம்புகிறதோ) அப்பொழுது தன் ஸ்வரூபத்தை அடைந்த சத்வகுணம் தன்னு டைய காரியங்களாகிய சுகம், ஞானம் முதலியவைகளை செய்கின் றது. (ஆரம்பிக்கின்றது)
तथा रजोगुणः सत्त्वं तमश्च एव उभावपि अभिभूय वर्धते यदा, तदा कर्म कृष्यादि स्वकार्यम् आरभते ।
அவ்வாறே ரஜோகுணமும் சத்வம், தமஸ் இரண்டும் அமுங்கி வளர்கின்றபொழுது கர்மங்களில், திருஷ்ணா (ஆசை) முதலிவை களை ஆரம்பிக்கின்றது.
तम आख्यो गुणः सत्त्वं रजश्च उभावपि अभिभूय तथैव वर्धते यदा, तदा ज्ञानावरणादि स्वकार्यम् आरभते ॥ १० ॥
சத்வ, ரஜஸ், இரண்டும் அமுங்கும்பொழுது தமோகுணமா னது வளரும்பொழுது ஞானத்தை மறைத்தல் முதலிய தன்னு டைய காரியங்களை ஆரம்பிக்கிறது.
यदा यो गुणः उद्भूतः भवति, तदा तस्य किं लिङ्गमिति उच्यते —
எப்பொழுது எந்த குணம் மேல் எழுகிறதோ அப்பொழுது அதன் லிங்கம் (அடையாளம்) என்ன? என்பதைக் கூறுகிறார்-
सर्वद्वारेषु देहेऽस्मिन्प्रकाश उपजायते ।
ज्ञानं यदा तदा विद्याद्विवृद्धं सत्त्वमित्युत ॥ ११ ॥
ஸர்வத்வாரேஷு தேஹேஅஸ்மின்ப்ரகாச உபஜாயதே ।
ஞானம் யதா ததா வித்யாத்விவ்ருத்தம் ஸத்வமித்யுத ॥ 11 ॥
सर्वद्वारेषु, आत्मनः उपलब्धिद्वाराणि श्रोत्रादीनि सर्वाणि करणानि, तेषु सर्वद्वारेषु अन्तःकरणस्य बुद्धेः वृत्तिः प्रकाशः देहे अस्मिन् उपजायते । तदेव ज्ञानम् । यदा एवं प्रकाशो ज्ञानाख्यः उपजायते, तदा ज्ञानप्रकाशेन लिङ्गेन विद्यात् विवृद्धम् उद्भूतं सत्त्वम् इति उत अपि ॥ ११ ॥
செவி முதலியவைகள் எல்லாம் ஆத்மாவிற்கு அறியும் வழி களாகும். அந்த வழிகளில் எல்லாம் அந்தக்கரணத்தினுடைய புத்தி விருத்தி வியாபித்திருக்கின்றது. அந்த புத்தி விருத்தியே பிர காசம் எனப்படும். அதுவே ஞானம். இவ்வாறு ஞானமானது இந்த சரீரத்தில் எல்லா இந்திரியங்களிலும் தோன்றும் பொழுது அந்த ஞானமாகிய லிங்கத்தினால் சத்துவ குணமானது ஓங்கி உள்ளது என்று அறியவேண்டும்.
रजसः उद्भूतस्य इदं चिह्नम् —
ரஜோகுணம் உண்டானதற்கான அறிகுறி. (லிங்கம்)
लोभः प्रवृत्तिरारम्भः कर्मणामशमः स्पृहा ।
रजस्येतानि जायन्ते विवृद्धे भरतर्षभ ॥ १२ ॥
லோப: ப்ரவ்ருத்திராரம்ப: கர்மணாமசம: ஸ்ப்ருஹா ।
ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே பரதர்ஷப ॥ 12 ॥
लोभः परद्रव्यादित्सा, प्रवृत्तिः प्रवर्तनं सामान्यचेष्टा, आरम्भः ; कस्य ? कर्मणाम् । अशमः अनुपशमः, हर्षरागादिप्रवृत्तिः, स्पृहा सर्वसामान्यवस्तुविषया तृष्णा — रजसि गुणे विवृद्धे एतानि लिङ्गानि जायन्ते हे भरतर्षभ ॥ १२ ॥
ஹே பரதர்ஷப! லோபம் என்றால் பிறர் பொருள்களைக் கவர் வதில் இச்சை. பிரவர்த்தனம் என்றால் சாதாரண சம்சாரத்திற்குள்ள செயல்களும், கர்மங்களில் பிரவிருத்தியும், ஓய்வில்லாமல் இருத் தலும், மகிழ்ச்சி, ஆசை முதலியவைகளில் பிரவிருத்தியும் சாமான்யமாக உள்ள எல்லா விஷயங்களிலும் ஆசை இவைகள் எல்லாம் ரஜோகுணத்தின் ஓங்கி உண்டாகி இருப்பதின் லிங்கங்க ளாகும். (சின்னங்களாகும்)
अप्रकाशोऽप्रवृत्तिश्च प्रमादो मोह एव च ।
तमस्येतानि जायन्ते विवृद्धे कुरुनन्दन ॥ १३ ॥
அப்ரகாசோஅப்ரவ்ருத்திச்ச ப்ரமாதோ மோஹ ஏவ ச ।
தமஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே குருநந்தன ॥ 13 ॥
अप्रकाशः अविवेकः, अत्यन्तम् अप्रवृत्तिश्च प्रवृत्त्यभावः तत्कार्यं प्रमादो मोह एव च अविवेकः मूढता इत्यर्थः । तमसि गुणे विवृद्धे एतानि लिङ्गानि जायन्ते हे कुरुनन्दन ॥ १३ ॥
ஹே குருநந்தன! அப்பிரகாச என்றால் மிகுந்த அவிவேகத்தி னால் பிரவிர்த்திக்காமல் இருப்பது. அதனுடைய காரியங்கள் பிர மாதமும், மோஹமும் ஆகும். அதுவே அவிவேகமும், மூடத்தன் மையுமாகும். தமோகுணமானது விருத்தி அடையும்பொழுது இந்த லிங்கங்கள் உண்டாகும்.
मरणद्वारेणापि यत् फलं प्राप्यते, तदपि सङ्गरागहेतुकं सर्वं गौणमेव इति दर्शयन् आह —
மரணத்தின் வாயிலாக எந்தப் பலன் அடையப்படுகின்றதோ அதுவும் ஆசக்தியினாலும், ராகத்தினாலும் உண்டான குணங்களி னால் ஏற்பட்டதே என்று உணர்த்தும் பொருட்டுக் கூறுகிறார்-
यदा सत्त्वे प्रवृद्धे तु प्रलयं याति देहभृत् ।
तदोत्तमविदां लोकानमलान्प्रतिपद्यते ॥ १४ ॥
யதா ஸத்த்வே ப்ரவ்ருத்தேது ப்ரலயம் யாதி தேஹப்ருத் ।
ததோத்தமவிதாம் லோகானமலாந்ப்ரதிபத்யதே ॥ 14 ॥
यदा सत्त्वे प्रवृद्धे उद्भूते तु प्रलयं मरणं याति प्रतिपद्यते देहभृत् आत्मा, तदा उत्तमविदां महदादितत्त्वविदाम् इत्येतत् , लोकान् अमलान् मलरहितान् प्रतिपद्यते प्राप्नोति इत्येतत् ॥ १४ ॥
எப்பொழுது சரீரத்தை உடைய ஜீவன் சத்வகுணத்துடன் கூடிய புத்தியுடன் மரணத்தை அடைகின்றானோ அப்பொழுது மஹத் முதலிய தத்வம் அறிந்தவர்களுடைய மலமற்றலோகங் களை அடைகிறார்கள்.
रजसि प्रलयं गत्वा कर्मसङ्गिषु जायते ।
तथा प्रलीनस्तमसि मूढयोनिषु जायते ॥ १५ ॥
ரஜஸி ப்ரலயம் கத்வா கர்மங்கிஷு ஜாயதே ।
ததா ப்ரலீனஸ்தமஸி மூடயோனிஷு ஜாயதே ॥ 15 ॥
रजसि गुणे विवृद्धे प्रलयं मरणं गत्वा प्राप्य कर्मसङ्गिषु कर्मासक्तियुक्तेषु मनुष्येषु जायते । तथा तद्वदेव प्रलीनः मृतः तमसि विवृद्धे मूढयोनिषु पश्वादियोनिषु जायते ॥ १५ ॥
ரஜோகுணம் மேல் எழும்பி இருக்கும்பொழுது மரணமடைந் தவன் கர்மத்தில் மிகுந்த பற்று உடைய மனித குலத்தில் பிறப்பான். அவ்வாறே தமசானது மேல் ஓங்கி இருக்கும்பொழுது மரணம் டைந்தவன் மூடஜன்மங்களான பசு முதலியவைகளில் பிறப்பான்.
अतीतश्लोकार्थस्यैव सङ्क्षेपः उच्यते —
கடந்த ஸ்லோகங்களில் கூறப்பட்ட அர்த்தத்தையே சுருக்க மாகக் கூறுகிறார்-
कर्मणः सुकृतस्याहुः सात्त्विकं निर्मलं फलम् ।
रजसस्तु फलं दुःखमज्ञानं तमसः फलम् ॥ १६ ॥
கர்மண: ஸுக்ருதஸ்யாஹு: ஸாத்விகம் நிர்மலம் பலம் ।
ரஜஸஸ்து பலம் து:கமஞானம் தமஸ: பலம் ॥ 16 ॥
कर्मणः सुकृतस्य सात्त्विकस्य इत्यर्थः, आहुः शिष्टाः सात्त्विकम् एव निर्मलं फलम् इति । रजसस्तु फलं दुःखं राजसस्य कर्मणः इत्यर्थः, कर्माधिकारात् फलम् अपि दुःखम् एव, कारणानुरूप्यात् राजसमेव । तथा अज्ञानं तमसः तामसस्य कर्मणः अधर्मस्य पूर्ववत् ॥ १६ ॥
சாத்வீகமான கர்மத்திற்கு சாத்வீகமான, நிர்மலமான பலன் என்று ஆன்றோர்கள் கூறுகின்றார்கள். ராஜச கர்மத்திற்கு துக்கம் பலனாகும் என்பது பொருள். கர்மத்திற்குக் காரணம் ரஜோகுண மாய் இருப்பதால் அந்த ராஜச கர்மத்தின் பலன் துக்கமேயாகும். அவ்வாறேதாமச ரூபமான அதர்மமாகிய பாபகர்மத்தின் பலன் அக்ஞானமாகும்.
किञ्च गुणेभ्यो भवति —
குணங்களினால் என்ன உண்டாகும்?
सत्त्वात्सञ्जायते ज्ञानं रजसो लोभ एव च ।
प्रमादमोहौ तमसो भवतोऽज्ञानमेव च ॥ १७ ॥
ஸத்வாத்ஸஞ்ஜாயதே ஞானம் ரஜஸோ லோப் ஏவ ச ।
ப்ரமாதமோஹெள் தமஸோ பவதோஅக்ஞானமேவ ச ॥ 17 ॥
सत्त्वात् लब्धात्मकात् सञ्जायते समुत्पद्यते ज्ञानम् , रजसो लोभ एव च, प्रमादमोहौ च उभौ तमसो भवतः, अज्ञानमेव च भवति ॥ १७ ॥
சத்துவகுணம் ஓங்குதலால் ஞானம் உண்டாகிறது. ரஜோகு ணத்தின் ஓங்குதலால் லோபமும், ஆசக்தி, மோஹம் இவைகள் உண்டாகின்றன. தமஸினால் அக்ஞானம் ஏற்படுகிறது.
किञ्च —
அவ்வாறே
ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्था मध्ये तिष्ठन्ति राजसाः ।
जघन्यगुणवृत्तस्था अधो गच्छन्ति तामसाः ॥ १८ ॥
ஊர்த்த்வம் கச்சந்தி ஸத்வஸ்தா மத்யே திஷ்டந்தி ராஜஸா: ।
ஜகந்யகுணவ்ருத்தஸ்தா அதோ கச்சந்தி தாமஸா: ॥ 18 ॥
ऊर्ध्वं गच्छन्ति देवलोकादिषु उत्पद्यन्ते सत्त्वस्थाः सत्त्वगुणवृत्तस्थाः । मध्ये तिष्ठन्ति मनुष्येषु उत्पद्यन्ते राजसाः ।
சத்வகுணம் விருத்தி அடைந்தவர்கள் தேவலோகம் முதலி வைகளை அடைகிறார்கள். ரஜோகுணம் விருத்தி அடைந்தவர் கள் மத்தியலோக மனிதர்களிடத்தில் பிறக்கிறார்கள்.
जघन्यगुणवृत्तस्थाः जघन्यश्च असौ गुणश्च जघन्यगुणः तमः, तस्य वृत्तं निद्रालस्यादि, तस्मिन् स्थिताः जघन्यगुणवृत्तस्थाः मूढाः अधः गच्छन्ति पश्वादिषु उत्पद्यन्ते तामसाः ॥ १८ ॥
நிந்தைக்குரிய குணமாகிய தமஸில் விருத்தி அடைந்தவர்கள் தூக்கம், சோம்பல் முதலியவைகளில் ஆசக்தி உடையவர் களாயும் உள்ள மூடர்களாகிய தாமசர்கள் பசு முதலிய கீழ் பிறப்பை அடைகிறார்கள்.
पुरुषस्य प्रकृतिस्थत्वरूपेण मिथ्याज्ञानेन युक्तस्य भोग्येषु गुणेषु सुखदुःखमोहात्मकेषु ‘सुखी दुःखी मूढः अहम् अस्मि’ इत्येवंरूपः यः सङ्गः तत्कारणं पुरुषस्य सदसद्योनिजन्मप्राप्तिलक्षणस्य संसारस्य इति समासेन पूर्वाध्याये यत् उक्तम् , तत् इह ‘सत्त्वं रजस्तम इति गुणाः प्रकृतिसम्भवाः’ (भ. गी. १४ । ५) इति आरभ्य गुणस्वरूपम् , गुणवृत्तम् , स्ववृत्तेन च गुणानां बन्धकत्वम् , गुणवृत्तनिबद्धस्य च पुरुषस्य या गतिः, इत्येतत् सर्वं मिथ्याज्ञानमूलं बन्धकारणं विस्तरेण उक्त्वा, अधुना सम्यग्दर्शनान्मोक्षो वक्तव्यः इत्यत आह भगवान् —
ப்ரக்ருதியில் நிலைபெற்றதான (ப்ரகிருதியை ஆத்மாவாக எண்ணிய) மித்யா ஞானமுடையவனுக்கு சுக, துக்க, மோஹாத்மக மான போக ரூப் குணங்களினால் நான் சுகி, துக்கி, மூடன் ஆக இருக்கிறேன் என்று இவ்வாறு பற்று எவனுக்கு உள்ளதோ அந்தப் பற்றுதான் புருஷன் நல்லதாயும், தீமையாயும் உள்ள பிறப்புகளை எடுக்கும் புருஷனுடைய சம்சாரத்திற்குக் காரணமாகிறது என்று சுருக்கமாக முன் அத்யாயத்தில் எது கூறப்பட்டதோ அது இங்கு (சத்வம் ரஜஸ் தம இதி குணா:ப்ரக்ருதி சம்பவா:) என்று ஆரம்பித்து, குணத்தின் ஸ்வரூபம், குணங்களின் விருத்தியும், (செய்கையும்) குணங்கள் தமது விருத்தியினால் பந்தப்படுவதும், குணவிருத்தி யில் பந்தப்பட்ட புருஷனுடைய கதி என்று கூறப்பட்ட இவை யெல்லாம் மித்யாஞானம், அக்ஞானமூலம் பந்தகாரணம் என் பதை விரிவாகக் கூறி இப்பொழுது சம்யக்தர்சனத்தினால் மோக்ஷம் கூறவேண்டும் என்று பகவான் கூறுகிறார்-
नान्यं गुणेभ्यः कर्तारं यदा द्रष्टानुपश्यति ।
गुणेभ्यश्च परं वेत्ति मद्भावं सोऽधिगच्छति ॥ १९ ॥
நான்யம் குணேப்ய: கர்தாரம் யதா த்ரஷ்டானுபச்யதி ।
குணேப்யச்ச பரம் வேத்தி மத்பாவம் ஸோஅதிகச்சதி ॥ 19 ॥
न अन्यं कार्यकरणविषयाकारपरिणतेभ्यः गुणेभ्यः कर्तारम् अन्यं यदा द्रष्टा विद्वान् सन् न अनुपश्यति, गुणा एव सर्वावस्थाः सर्वकर्मणां कर्तारः इत्येवं पश्यति, गुणेभ्यश्च परं गुणव्यापारसाक्षिभूतं वेत्ति, मद्भावं मम भावं सः द्रष्टा अधिगच्छति ॥ १९ ॥
எப்பொழுது திருஷ்ட்டா ஞானியாக இருந்துகொண்டு இந்த காரிய, கரண, விஷயங்களின் (சரீர, இந்திரிய, இந்திரியவிஷயங் கள்) ஆகாரமாக பரிணாமம் அடைந்த குணங்களைக் காட்டிலும் வேறான கர்த்தாவைப் பார்ப்பதில்லை. குணங்களே எல்லா அவஸ் தைகளுக்கும், எல்லா கர்மங்களுக்கும் கர்த்தா என்று அறிகிறான். எவன் இந்த குணங்களைக் காட்டிலும் குணவியாபகங்களுக்கு சாக்ஷியாய் இருப்பதை அறிகிறானோ அந்த த்ரஷ்டா எனது பாவத்தை அடைகிறான்.
कथम् अधिगच्छति इति, उच्यते —
எவ்வாறு அடைகிறான் என்பதைக் கூறுகிறார்-
गुणानेतानतीत्य त्रीन्देही देहसमुद्भवान् ।
जन्ममृत्युजरादुःखैर्विमुक्तोऽमृतमश्नुते ॥ २० ॥
குணானேதாநதீத்ய த்ரீந்தேஹீ தேஹஸமுத்பவான் ।
ஜன்மம்ருத்யுஜராது:கைர் விமுக்தோஅம்ருதமச்னுதே ॥ 20 ॥
गुणान् एतान् यथोक्तान् अतीत्य जीवन्नेव अतिक्रम्य मायोपाधिभूतान् त्रीन् देही देहसमुद्भवान् देहोत्पत्तिबीजभूतान् जन्ममृत्युजरादुःखैः जन्म च मृत्युश्च जरा च दुःखानि च जन्ममृत्युजरादुःखानि तैः जीवन्नेव विमुक्तः सन् विद्वान् अमृतम् अश्नुते, एवं मद्भावम् अधिगच्छति इत्यर्थः ॥ २० ॥
முன்பு கூறப்பட்ட இந்த மாயாஉபாதிகளாகிய முக்குணங்க ளைக் கடக்கிறான். முக்குணங்களாகிய தேஹம் உண்டாவதற்குக் காரணமானவைகளைக் கடந்து ஜீவித்துக்கொண்டிருக்கும் பொழுதே ஜனனம், மரண, துக்கங்களிலிருந்து விடுபட்டவனாய் இருந்து கொண்டு ஞானியானவன் அம்ருதத்தை அடைகின்றான். இவ்வாறு எனது பாவத்தை அடைகின்றான் என்பது பொருள்.
जीवन्नेव गुणान् अतीत्य अमृतम् अश्नुते इति प्रश्नबीजं प्रतिलभ्य, अर्जुन उवाच —
ஜீவித்துக்கொண்டிருக்கும்பொழுதே குணங்களைக் கடந்து அம்ருதத்தை அடைகின்றான் என்று கூறியவற்றிலிருந்து கேள் விக்கான பீஜத்தை அடைந்து—
अर्जुन उवाच —
அர்ஜுனன் கூறினான்
कैर्लिङ्गैस्त्रीन्गुणानेतानतीतो भवति प्रभो ।
किमाचारः कथं चैतांस्त्रीन्गुणानतिवर्तते ॥ २१ ॥
கைர்லிங்கைஸ்த்ரீந்குணாநேதானதீதோ பவதி ப்ரபோ ।
கிமாசார: கதம் சைதாம்ஸ்த்ரீன்குணாநதிவர்ததே ॥ 21 ॥
कैः लिङ्गैः चिह्नैः त्रीन् एतान् व्याख्यातान् गुणान् अतीतः अतिक्रान्तः भवति प्रभो, किमाचारः कः अस्य आचारः इति किमाचारः कथं केन च प्रकारेण एतान् त्रीन् गुणान् अतिवर्तते अतीत्य वर्तते ॥ २१ ॥
ஹே பிரபோ! முன்பு வியாக்யானம் செய்யப்பட்ட குணங்க ளைக் கடந்தவன் எந்த லக்ஷணங்களுடன் (அடையாளங்களு டன்) இருப்பான்? அவன் எவ்வகை நடத்தை உள்ளவனாய் இருப்பான்? எவ்வாறு இந்த குணங்களைக் கடந்து நிற்கிறான்.
गुणातीतस्य लक्षणं गुणातीतत्वोपायं च अर्जुनेन पृष्टः अस्मिन् श्लोके प्रश्नद्वयार्थं प्रतिवचनं भगवान् उवाच ।
இந்த ஸ்லோகத்தில் அர்ஜுனனால் குணாதீதத்தை குறித்தும் குணாதீதத்தை அடையும் உபாயத்தைப் பற்றியும் கேட்கப்பட்ட இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் கூறுவதற்காக பகவான் கூறுகிறார்-
यत् तावत् ‘कैः लिङ्गैः युक्तो गुणातीतो भवति’ इति, तत् शृणु —
குணாதீதன் அதாவது குணங்களை கடந்தவன் எந்த லக்ஷ ணங்களோடு (அடையாளங்களோடு) இருப்பான் என்பதைக் கேட் பாயாக
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச
प्रकाशं च प्रवृत्तिं च मोहमेव च पाण्डव ।
न द्वेष्टि सम्प्रवृत्तानि न निवृत्तानि काङ्क्षति ॥ २२ ॥
ப்ரகாசம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹமேவ ச பாண்டவ ।
நத்வேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தானி ந நிவ்ருத்தானி காங்க்ஷதி ॥ 22 ॥
प्रकाशं च सत्त्वकार्यं प्रवृत्तिं च रजःकार्यं मोहमेव च तमःकार्यम् इत्येतानि न द्वेष्टि सम्प्रवृत्तानि सम्यग्विषयभावेन उद्भूतानि —
சத்துவகுணத்தின் காரியம் விளக்கமாகும், (பிரகாசம்) ரஜோகுணத்தின் காரியம் பிரவிருத்தியாகும். தமோகுணத்தின் காரியம் மயக்கமாகும். இவைகள் எல்லாம் நன்றாக விஷய பாவங் களாக உண்டானதினால் அதை வெறுக்கவேண்டியதில்லை.
‘मम तामसः प्रत्ययो जातः, तेन अहं मूढः ; तथा राजसी प्रवृत्तिः मम उत्पन्ना दुःखात्मिका, तेन अहं रजसा प्रवर्तितः प्रचलितः स्वरूपात् ; कष्टं मम वर्तते यः अयं मत्स्वरूपावस्थानात् भ्रंशः ; तथा सात्त्विको गुणः प्रकाशात्मा मां विवेकित्वम् आपादयन् सुखे च सञ्जयन् बध्नाति’ इति तानि द्वेष्टि असम्यग्दर्शित्वेन । तत् एवं गुणातीतो न द्वेष्टि सम्प्रवृत्तानि ।
எனக்கு தாமஸமான எண்ணங்கள் உண்டானதால் நான் மூட னாய் இருக்கிறேன்.அவ்வாறே துக்கரூபமான ராஜச ப்ரவிருத்தி என்னிடத்தில் உண்டாயிருக்கிறது. அந்த ராஜச பாவனையினால் பிரவிருத்திக்கச் செய்து என் ஸ்வரூபத்திலிருந்து நழுவச் செய்கிற து. தன்னுடைய ஸ்வரூப ஸ்திதியிலிருந்து நழுவியதால் எனக்கு மிகவும் துக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவ்வாறே விளக்க ஸ்வரூப மான சாத்வீக குணமானது எனக்கு விவேகத்தை உண்டு பண்ணி சுகத்தை அளித்து பந்தப்படுத்துகிறது என்று அசம்யக்தர்சீ (சாதா ரண மனிதன்) குணங்களை வெறுக்கிறான். ஆனால் குணங்க ளைக் கடந்தவன் இவ்வாறு துவேஷிப்பதில்லை.
यथा च सात्त्विकादिपुरुषः सत्त्वादिकार्याणि आत्मानं प्रति प्रकाश्य निवृत्तानि काङ्क्षति, न तथा गुणातीतो निवृत्तानि काङ्क्षति इत्यर्थः ।
எவ்வாறு சாத்விகாதி புருஷன் சாத்விகாதிகளின் காரியங்கள் தன்னைக் குறித்து பிரகாசித்து, நிவிருத்தி அடைந்ததை விரும்பிகி றானோ அவ்வாறு குணங்களைக் கடந்தவன் நிவிர்த்தி அடைந்த வைகளை விரும்பமாட்டான்.
एतत् न परप्रत्यक्षं लिङ्गम् । किं तर्हि ? स्वात्मप्रत्यक्षत्वात् आत्मार्थमेव एतत् लक्षणम् । न हि स्वात्मविषयं द्वेषमाकाङ्क्षां वा परः पश्यति ॥ २२ ॥
இந்த எல்லா லக்ஷணங்களும் (அடையாளங்களும்) மற்றவர்க ளுக்குப் பிரத்யக்ஷமாகாது. யாருக்கு ஆகும்? எனில் தனக்குத் தானே பிரத்யக்ஷமாவதால் ஸ்வசம்வேதியமாகும். ஏனெனில் தன்னுடைய சொந்த விஷயமாகிய துவேஷமோ, விருப்போ மற்றவர்களால் அறிய முடியாது.
अथ इदानीम् ‘गुणातीतः किमाचारः ? ’ इति प्रश्नस्य प्रतिवचनम् आह —
இப்பொழுது குணங்களைக் கடந்தவனுடைய நடத்தை என்ன? என்ற கேள்விக்கு பதில் கூறுகிறார்-
उदासीनवदासीनो गुणैर्यो न विचाल्यते ।
गुणा वर्तन्त इत्येव योऽवतिष्ठति नेङ्गते ॥ २३ ॥
உதாஸீன்வதாஸீநோ குணைர்யோ ந விசால்யதே ।
குணா வர்தந்த இத்யேவ யோஅவதிஷ்டதி நேங்கதே ॥ 23 ॥
उदासीनवत् यथा उदासीनः न कस्यचित् पक्षं भजते, तथा अयं गुणातीतत्वोपायमार्गेऽवस्थितः आसीनः आत्मवित् गुणैः यः संन्यासी न विचाल्यते विवेकदर्शनावस्थातः ।
உதாசீனனாய் இருப்பவன் எந்த ஒரு பக்கமும் சாயாதவனாய் இருப்பது போல் ஆத்மஞானியாகிய சந்நியாசி குணாதீதனாவதற்கான உபாய மார்க்கத்தில் இருந்து கொண்டு விவேக விக்ஞானத்திலிருந்து குணங்களால் நழுவுவது இல்லை. (அசைக்கப்படுவது இல்லை)
तदेतत् स्फुटीकरोति — गुणाः कार्यकरणविषयाकारपरिणताः अन्योऽन्यस्मिन् वर्तन्ते इति यः अवतिष्ठति । छन्दोभङ्गभयात् परस्मैपदप्रयोगः । योऽनुतिष्ठतीति वा पाठान्तरम् । न इङ्गते न चलति, स्वरूपावस्थ एव भवति इत्यर्थः ॥ २३ ॥
இதை ஸ்பஷ்ட்டமாக விளக்குகிறார். காரிய, கரண மற்றும் விஷயாகாரமாக பரிணாமம் அடைந்த குணங்கள் ஒன்றில் ஒன்று இருக்கின்றன என்று அறிந்து நிலைத்திருக்கிறார். சந்தஸுக்கு பங் கம் ஏற்படும் என்று அவதிஷ்டதி என்று பரஸ்மைபதி பிரயோகம் செய்யப்பட்டுள்ளது,வேறு விதமாக அனுதிஷ்டதி என்ற பாடமும் உள்ளது. அசைவதில்லை என்பது பொருள்.
किञ्च —
மேலும்-
समदुःखसुखः स्वस्थः समलोष्टाश्मकाञ्चनः ।
तुल्यप्रियाप्रियो धीरस्तुल्यनिन्दात्मसंस्तुतिः ॥ २४ ॥
ஸமது:கஸுக: ஸ்வஸ்த: ஸமலோஷ்டாஸ்மகாஞ்சன: ।
துல்யப்ரியாப்ரியோ தீரஸ்துல்யநிந்தாத்மஸம்ஸ்துதி: ॥ 24 ॥
समदुःखसुखः समे दुःखसुखे यस्य सः समदुःखसुखः, स्वस्थः स्वे आत्मनि स्थितः प्रसन्नः, समलोष्टाश्मकाञ्चनः लोष्टं च अश्मा च काञ्चनं च लोष्टाश्मकाञ्चनानि समानि यस्य सः समलोष्टाश्मकाञ्चनः ।
இன்ப துன்பங்களைச் சமமாய் பார்ப்பவன். தன் ஆத்மஸ்வரூ பத்திலேயே இருந்து கொண்டு பிரசன்னமாய் இருப்பவன். மண், கல், தங்கம் எல்லாவற்றையும் சமமாய் பார்ப்பவன்.
तुल्यप्रियाप्रियः प्रियं च अप्रियं च प्रियाप्रिये तुल्ये समे यस्य सोऽयं तुल्यप्रियाप्रियः, धीरः धीमान् , तुल्यनिन्दात्मसंस्तुतिः निन्दा च आत्मसंस्तुतिश्च निन्दात्मसंस्तुती, तुल्ये निन्दात्मसंस्तुती यस्य यतेः सः तुल्यनिन्दात्मसंस्तुतिः ॥ २४ ॥
பிரியமான வஸ்துக்களிலும் பிரியமில்லாதவைகளிலும் சம மாய் இருப்பவன். புத்திமான். தன்னை நிந்தை செய்தாலும், தன்னை ஸ்துதி செய்தாலும் சமமாகப் பார்ப்பவன் யதியாவான். (சந்நியாசி ஆவான்)
किञ्च —
மேலும்
मानापमानयोस्तुल्यस्तुल्यो मित्रारिपक्षयोः ।
सर्वारम्भपरित्यागी गुणातीतः स उच्यते ॥ २५ ॥
மானாபமானயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ: ।
ஸர்வாரம்பபரித்யாகீ குணாதீத: ஸ உச்யதே ॥ 25 ॥
मानापमानयोः तुल्यः समः निर्विकारः ; तुल्यः मित्रारिपक्षयोः, यद्यपि उदासीना भवन्ति केचित् स्वाभिप्रायेण, तथापि पराभिप्रायेण मित्रारिपक्षयोरिव भवन्ति इति तुल्यो मित्रारिपक्षयोः इत्याह ।
மான அவமானங்களை சமமாய் பார்ப்பவன். மாறுபாடு அற்ற வன்.அவ்வாறே நண்பனிடத்திலும் எதிரியினிடத்திலும் சமமாய் பார்ப்பவன். ஒருவன் தன்னுடைய அபிப்பிராயத்தில் உதாசீன னாய் இருந்தாலும் பிறருக்கு அவன் நண்பன் அல்லது விரோதி பக்கம் இருக்கிறான் என்று கருதுவதால் இங்கு நண்பன் அல்லது விரோதியின் பக்கம் இருப்பது போல் என்று கூறுகிறார்.
सर्वारम्भपरित्यागी, दृष्टादृष्टार्थानि कर्माणि आरभ्यन्ते इति आरम्भाः, सर्वान् आरम्भान् परित्यक्तुं शीलम् अस्य इति सर्वारम्भपरित्यागी, देहधारणमात्रनिमित्तव्यतिरेकेण सर्वकर्मपरित्यागी इत्यर्थः । गुणातीतः सः उच्यते ।
திருஷ்ட்ட பலன், அதிருஷ்ட்ட பலன்களைத் தரக்கூடிய கர்மாக்களை விட்டொழித்தவன், சர்வாரம்பம் என்றால் இகபர லோக பலன்களைக் கொடுக்கும் கர்மாக்களைக் குறிக்கிறது. அதை விட்டொழித்தவன். தேஹத்தை தாங்குவதற்காக மட்டுமே உள்ள கர்மங்களைக் காட்டிலும் மற்ற கர்மங்களை விட்டொழித்த வன் சர்வகர்மபரித்யாகி. அவன் குணாதீதன் எனப்படுகிறான்.
‘उदासीनवत्’ (भ. गी. १४ । २३) इत्यादि ‘गुणातीतः स उच्यते’ (भ. गी. १४ । २५) इत्येतदन्तम् उक्तं यावत् यत्नसाध्यं तावत् संन्यासिनः अनुष्ठेयं गुणातीतत्वसाधनं मुमुक्षोः ; स्थिरीभूतं तु स्वसंवेद्यं सत् गुणातीतस्य यतेः लक्षणं भवति इति । ॥ २५ ॥
உதாசீனவத் என்ற ஸ்லோகம் முதல் குணாதீத உச்யதே என்று இறுதி வரையிலும்(எது) கூறப்பட்டதோ அது பிரயத்னத்தால் சம்பாதிக்கத்தக்கது. முமூக்ஷவாகிய சந்நியாசியினால் அனுஷ்ட் டானம் செய்வது குணாதீதத்துவத்தை அடைவதற்கான சாதனமா கும். மேலும் முமூக்ஷவிற்கு ஸ்திரமாக நிலைத்து தானே உணரக் கூடிய என்றால் அனுபவத்தின் முதிர்ச்சியாய் முயற்சி இல்லாமல் இயல்பாகவே அமையும்பொழுது குணாதீதனுக்கு அவைகள் லக்ஷணங்களாகின்றன.
अधुना ‘कथं च त्रीन्गुणानतिवर्तते ? ’ (भ. गी. १४ । २१) इत्यस्य प्रश्नस्य प्रतिवचनम् आह —
இனி முக்குணங்களையும் எப்படி கடந்தவராகிறான்? என்னும் வினாவிற்கு மறுமொழி அருளிச் சொல்கிறார்-
मां च योऽव्यभिचारेण भक्तियोगेन सेवते ।
स गुणान्समतीत्यैतान्ब्रह्मभूयाय कल्पते ॥ २६ ॥
மாம் ச யோஅவ்யபிசாரேண பக்தியோகேன ஸேவதே ।
ஸ குணான்ஸமதீத்யைதாந்ப்ரஹ்மபூயாய கல்பதே ॥ 26 ॥
मां च ईश्वरं नारायणं सर्वभूतहृदयाश्रितं यो यतिः कर्मी वा अव्यभिचारेण न कदाचित् यो व्यभिचरति भक्तियोगेन भजनं भक्तिः सैव योगः तेन भक्तियोगेन सेवते, सः गुणान् समतीत्य एतान् यथोक्तान् ब्रह्मभूयाय, भवनं भूयः, ब्रह्मभूयाय ब्रह्मभवनाय मोक्षाय कल्पते समर्थो भवति इत्यर्थः ॥ २६ ॥
சந்நியாசியோ அல்லது கர்மயோகியோ எல்லா ஜீவர்களின் ஹிருதயத்தில் இருக்கும் நாராயணனும், ஈஸ்வரனுமாகிய என்னை ஒருபொழுதும் மாறாமல் என்றால் இடைவிடாமல் பக்தியோகத்தி னால் சேவிக்கிறானோ அவன் குணங்களைக் கடந்தவனாகி பிரஹ்மலோகத்தை அதாவது மோக்ஷத்தை அடைவதற்குத் தகுதி உடையவனாகிறான் என்பது பொருள். பஜனம்(ஸேவனம்) என் றால் பக்தி. அதுவே யோகம் எனப்படுகிறது.
कुत एतदिति उच्यते —
இது எதனால் என்பதைக் கூறுகிறார்.
ब्रह्मणो हि प्रतिष्ठाहममृतस्याव्ययस्य च ।
शाश्वतस्य च धर्मस्य सुखस्यैकान्तिकस्य च ॥ २७ ॥
ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹமம்ருதஸ்யாவ்யயஸ்ய ச ।
சாச்வதஸ்ய ச தர்மஸ்ய ஸுகஸ்யைகாந்திகஸ்ய ச ॥ 27 ॥
ब्रह्मणः परमात्मनः हि यस्मात् प्रतिष्ठा अहं प्रतितिष्ठति अस्मिन् इति प्रतिष्ठा अहं प्रत्यगात्मा ।
ஆத்மாவாகிய நான் பிரஹ்மத்திற்கு இருப்பிடம். (ஏன் எனில் பிரஹ்மம் வேறு ஆத்மா வேறு அல்ல. ஒன்றே என்பதால்) இருப்பிடமாகிய நான் பிரத்யக் ஆத்மா.
कीदृशस्य ब्रह्मणः ।
எப்படிப்பட்ட பிரஹ்மத்திற்கு?
अमृतस्य अविनाशिनः अव्ययस्य अविकारिणः शाश्वतस्य च नित्यस्य धर्मस्य धर्मज्ञानस्य ज्ञानयोगधर्मप्राप्यस्य सुखस्य आनन्दरूपस्य ऐकान्तिकस्य अव्यभिचारिणः ।
நாசமற்றதாயும் விகாரமற்றதாயும் நித்யமாயும் ஞானயோகம் என்னும் தர்மத்தால் அடையத்தக்கதாயும், ஆனந்த ரூபமாயும், மாறுபாடு அற்றதாயும் பிரஹ்மம் இருக்கிறது.
अमृतादिस्वभावस्य परमानन्दरूपस्य परमात्मनः प्रत्यगात्मा प्रतिष्ठा, सम्यग्ज्ञानेन परमात्मतया निश्चीयते । तदेतत् ‘ब्रह्मभूयाय कल्पते’ (भ. गी. १४ । २६) इति उक्तम् ।
நாசமற்றதன்மை முதலிய ஸ்வபாவமுடைய பரமாத்மாவிற்கு இருப்பிடம் பிரத்யக் ஆத்மா ஏனெனில் யதார்த்த ஞானத்தினால் பிரத்யக் ஆத்மா பரமாத்மாவாகிய பிரஹ்மமே என்று நிச்சயிக்கப் படுகிறது. இதையே (பிரஹ்மபூயாய கல்பதே)என்ற வாக்கியத்தால் கூறப்பட்டது.
यया च ईश्वरशक्त्या भक्तानुग्रहादिप्रयोजनाय ब्रह्म प्रतिष्ठते प्रवर्तते, सा शक्तिः ब्रह्मैव अहम् , शक्तिशक्तिमतोः अनन्यत्वात् इत्यभिप्रायः ।
பக்தர்களுக்கு அனுகிரஹித்தல் முதலிய பிரயோஜனத்தின் பொருட்டு எந்த ஈஸ்வரசக்தியினால் பிரஹ்மம் பிரவிருத்திக்கி றதோ அந்த சக்தி பிரஹ்மமே நான். சக்தி, சக்தி உடையதைக் காட் டிலும் வேறு அல்ல என்பது அபிப்பிராயம்.
अथवा, ब्रह्मशब्दवाच्यत्वात् सविकल्पकं ब्रह्म । तस्य ब्रह्मणो निर्विकल्पकः अहमेव नान्यः प्रतिष्ठा आश्रयः ।
அல்லது பிரஹ்ம சப்தம் வாச்சியமாய் இருப்பதால் சவிகல்ப பிரஹ்மம் என்றும் அந்த பிரஹ்மத்தினுடைய நிர்விகல்பம் நானே. மற்றொரு இருப்பிடம் இல்லை.
किंविशिष्टस्य ?
எந்த விசேஷணங்களுடன் கூடியது?
अमृतस्य अमरणधर्मकस्य अव्ययस्य व्ययरहितस्य ।
மரணதர்மம் அற்றதன்மையும், மாறுதல் (நாசம்) அடையும் தன்மையும் அற்றது.
किञ्च, शाश्वतस्य च नित्यस्य धर्मस्य ज्ञाननिष्ठालक्षणस्य सुखस्य तज्जनितस्य ऐकान्तिकस्य एकान्तनियतस्य च, ‘प्रतिष्ठा अहम्’ इति वर्तते ॥ २७ ॥
மேலும் ஞானநிஷ்ட்டா ரூப சாஸ்வத-நித்திய தர்மத்திற்கும் அதனால் உண்டாகும் மாறுபடாத, ஒன்றே என்று நிச்சயம் செய்யப் பட்ட ஆனந்தத்திற்கும் நானே இருப்பிடம். (அஹம் பிரதிஷ்ட்டா) என்ற பதம் தொடர்கின்றது.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये चतुर्दशोऽध्यायः ॥
ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே குணத்ரயவிபாகயோகோ நாம் சதுர்தசோத்யாய:
यस्मात् मदधीनं कर्मिणां कर्मफलं ज्ञानिनां च ज्ञानफलम् , अतः भक्तियोगेन मां ये सेवंते ते मम प्रसादात् ज्ञानप्राप्तिक्रमेण गुणातीताः मोक्षं गच्छन्ति । किमु वक्तव्यम् आत्मनः तत्त्वमेव सम्यक् विजानन्तः इति अतः भगवान् अर्जुनेन अपृष्टोऽपि आत्मनः तत्त्वं विवक्षुः उवाच ‘ऊर्ध्वमूलम्’ इत्यादिना ।
எதனால் கர்மம் செய்பவர்களுக்கு கர்மபலனும், ஞானிகளுக்கு ஞானபலனும் என்னுடைய அதீனமாக இருக்கிறதோ அதனால் என்னை பக்தியோகத்தால் எவர்கள் சேவிக்கின்றார்களோ அவர்கள் என்னுடைய பிரசாதத்தால் கிரமமாக ஞானம் அடைவதின் வாயிலாக குணங்களைக் கடந்து மோக்ஷத்தை அடைகின்றனர். அவ்வாறு இருக்கையில் ஆத்மதத் துவத்தை நன்றாக அறிந்தவர்களைப் பற்றி கூறவும் வேண்டுமோ? ஆகையால் அர்ஜுனனால் ஆத்மதத்துவத்தைப் பற்றி கேட்கா விட்டாலும் அதைப்பற்றி விளக்குவதற்கு இச்சை உள்ளவராகிக் கூறுகிறார். ஊர்த்வமூலம் முதலிய சுலோகங்களால்.
तत्र तावत् वृक्षरूपककल्पनया वैराग्यहेतोः संसारस्वरूपं वर्णयति विरक्तस्य हि संसारात् भगवत्तत्त्वज्ञाने अधिकारः, न अन्यस्येति —
சம்சாரத்தில் விரக்தி உள்ளவனுக்கே பகவானுடைய தத்வஞா னத்தில் அதிகாரம் மற்றவர்களுக்கு அல்ல என்பதால் மரரூபமாக கல்பனை செய்து வைராக்கியம் ஏற்படுவதற்காக சம்சாரத்தின் ஸ்வரூபத்தை விளக்குகிறார்.
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவான் கூறுகிறார்
ऊर्ध्वमूलमधःशाखमश्वत्थं प्राहुरव्ययम् ।
छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित् ॥ १ ॥
ஊர்த்வ மூலமத:சாகமச்வத்தம் ப்ராஹுரவ்யயம் ।
சந்தாம்ஸி யஸ்ய பர்ணானி யஸ்தம் வேத ஸ வேதவித் ॥ 1 ॥
ऊर्ध्वमूलं कालतः सूक्ष्मत्वात् कारणत्वात् नित्यत्वात् महत्त्वाच्च ऊर्ध्वम् ; उच्यते ब्रह्म अव्यक्तं मायाशक्तिमत् , तत् मूलं अस्येति सोऽयं संसारवृक्षः ऊर्ध्वमूलः । श्रुतेश्च — ‘ऊर्ध्वमूलोऽवाक्शाख एषोऽश्वत्थः सनातनः’ (क. उ. २ । ३ । १) इति ।
(இந்த சம்சாரரூப விருக்ஷம் = மரம்) அது வேரை மேலே உடை யதாய் இருக்கிறது. காலத்தைக் காட்டிலும் சூட்சுமமாயும், காரணமா யும், நித்யமாயும், மஹத்தாயும், அவ்யக்தமான மாயாசக்தியுடன் கூடிய பிரஹ்மம் வேராய் இருக்கிறது. அந்த சம்சார விருக்ஷத்தின் வேர் மேலே இருக்கிறது. ஆகையால் அது ஊர்த்வமூலம் எனப்படு கிறது. சுருதியிலும் "ஊர்த்வமூல: அவாக்சாக.' = மேலே வேர், கீழே கிளைகளை உடையது என்று கூறப்பட்டுள்ளது.
पुराणे च —
புராணங்களிலும்-
‘अव्यक्तमूलप्रभवस्तस्यैवानुग्रहोच्छ्रितः ।
बुद्धिस्कन्धमयश्चैव इन्द्रियान्तरकोटरः ॥
महाभूतविशाखश्च विषयैः पत्रवांस्तथा ।
धर्माधर्मसुपुष्पश्च सुखदुःखफलोदयः ॥
आजीव्यः सर्वभूतानां ब्रह्मवृक्षः सनातनः ।
एतद्ब्रह्मवनं चैव ब्रह्माचरति नित्यशः ॥
एतच्छित्त्वा च भित्त्वा च ज्ञानेन परमासिना ।
ततश्चात्मरतिं प्राप्य तस्मान्नावर्तते पुनः ॥
’इत्यादि ।
பிரஹ்ம விருக்ஷமானது அவ்யக்த ரூப மூலத்திலிருந்து உண் டாகி, அதனுடைய அனுக்கிரஹத்தினால் பெரிதாகி, வளர்ந்து புத்தி ரூபமான பிரதானமாகிய அடிமரமாய் உள்ளது. இந்திரிய துவாரங்களாகிய பொந்துகளையும், மஹாபூதங்களாகிய கிளைக ளையும், விஷயங்களாகிய இலைகளையும், அவ்வாறே புண்ய பாபங்கள் என்கின்ற புஷ்பங்களையும்,சுக துக்கங்களையும் உடை து எல்லா ஜீவர்களும் ஜீவிப்பதற்கு ஆச்ரயமாகிய சனாதன மான ப்ரஹ்மவிருக்ஷமாகும். அதுவே ப்ரஹ்மவனம். இதில் பிரஹ் மம் எப்பொழுதும் இருக்கிறது. இவ்வாறு உள்ள பிரஹ்ம விரு க்ஷத்தை ஞானமென்கிற(வலிமையான) உத்தமமான கத்தியினால் வெட்டிப்பிளந்து அதனால் ஆத்மானந்தத்தைப் பெற்றவன் மறுப டியும் திரும்புவதில்லை என்று விளக்கப்பட்டுள்ளது.
तम् ऊर्ध्वमूलं संसारं मायामयं वृक्षम् अधःशाखं महदहङ्कारतन्मात्रादयः शाखा इव अस्य अधः भवन्तीति सोऽयं अधःशाखः, तम् अधःशाखम् न श्वोऽपि स्थाता इति अश्वत्थः तं क्षणप्रध्वंसिनम् अश्वत्थं प्राहुः कथयन्ति अव्ययं।
அந்த மாயாமயமான சம்சாரத்தை மேலே வேர் உடைய விருக்ஷமாகவும், மஹத், அஹங்காரம், தன்மாத்திரைகள் முதலிய வைகள் கிளைகளைப் போல கீழே இருக்கின்றன. கீழே கிளை களை உடையது அத: சாக: எனப்படுவது, நாளை வரைக்கும் கூட இருக்காதது. மேலும் உடனே நாசம் அடைவது. ஆகையால் அதை அச்வத்தம் எனவும், அவ்யயம் எனவும் கூறுகிறார்கள்.
संसारमायायाः अनादिकालप्रवृत्तत्वात् सोऽयं संसारवृक्षः अव्ययः, अनाद्यन्तदेहादिसन्तानाश्रयः हि सुप्रसिद्धः, तम् अव्ययम् ।
இந்த மாயாமயமான சம்சாரம் அநாதிகாலமாக பிரவிர்த்தித் துக்கொண்டு இருப்பதால் இந்த சம்சார விருக்ஷம் அவ்யயம் எனப்படுகிறது.
तस्यैव संसारवृक्षस्य इदम् अन्यत् विशेषणम् ।
அவ்வாறே ஆதியும், முடிவும் இல்லாத இந்த சரீரம் முதலிய வைகளின் பரம்பரையை (தொடர்ச்சியை) சார்ந்து இருப்பது பிரசித்தமாகும். ஆகையால் இதை அவ்யயம் என்கிறோம்.
छन्दांसि यस्य पर्णानि, छन्दांसि च्छादनात् ऋग्यजुःसामलक्षणानि यस्य संसारवृक्षस्य पर्णानीव पर्णानि । यथा वृक्षस्य परिरक्षणार्थानि पर्णानि, तथा वेदाः संसारवृक्षपरिरक्षणार्थाः, धर्माधर्मतद्धेतुफलप्रदर्शनार्थत्वात् ।
சந்தஸ்கள் எதற்கு இலைகள் போலவோ, ரிக், யஜுர், சாமவே தங்கள் சம்சார விருக்ஷத்தை இலைகள் போல் பாதுகாப்பதினால் அவைகள் சம்சாரவிருக்ஷத்திற்கு இலைகள் எவ்வாறு விரு க்ஷத்தை இலைகள் ரக்ஷி க்கிறதோ அவ்வாறு வேதங்கள் புண்ய பாப பலன்களின் காரணமாகிய கர்மங்கள் அதன் பலன்கள் இவை களைக் குறித்து விளக்குவதால் (பிரகாசப்படுத்துவதால்) சம்சார ரூப விருக்ஷத்தை ரக்ஷிக்கின்றன.
यथाव्याख्यातं संसारवृक्षं समूलं यः तं वेद सः वेदवित् , वेदार्थवित् इत्यर्थः ।
வேருடன் சம்சார விருக்ஷத்தை வியாக்யானம் செய்யப்பட்ட வாறு எவன் அறிகிறானோ அவன் வேதத்தின் அர்த்தத்தை அறிந் தவன் என்பது பொருள்.
न हि समूलात् संसारवृक्षात् अस्मात् ज्ञेयः अन्यः अणुमात्रोऽपि अवशिष्टः अस्ति इत्यतः सर्वज्ञः सर्ववेदार्थविदिति समूलसंसारवृक्षज्ञानं स्तौति ॥ १ ॥
இந்த மூலத்துடன் கூடிய சம்சாரத்தைக் காட்டிலும் அறிய வேண்டிய பொருள் அணுமாத்திரமும் இல்லை. ஆதலால் எவன் வேதார்தத்தை அறிந்தவனோ அவன் சர்வக்ஞன் என்று மூலத்து டன் கூடிய விருக்ஷத்தின் ஞானத்தை புகழ்கிறார்.
तस्य एतस्य संसारवृक्षस्य अपरा अवयवकल्पना उच्यते —
அந்த சம்சார விருக்ஷத்திற்கே வேறு அவயவங்களைக் கற்பனை செய்து கூறுகிறார்.
अधश्चोर्ध्वं प्रसृतास्तस्य शाखा गुणप्रवृद्धा विषयप्रवालाः ।
अधश्च मूलान्यनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके ॥ २ ॥
அதஸ் சோர்த்வம் ப்ரஸ்ருதாஸ்தஸ்ய சாகா குணப்ரவ்ருத்தா விஷயப்ரவாலா: ।
அதஸ்ச மூலான்யனு சந்ததானி கர்மானுபந்தீனி மனுஷ்ய லோகே ॥ 2 ॥
अधः मनुष्यादिभ्यो यावत् स्थावरम् ऊर्ध्वं च यावत् ब्रह्मणः विश्वसृजो धाम इत्येतदन्तं यथाकर्म यथाश्रुतं ज्ञानकर्मफलानि, तस्य वृक्षस्य शाखा इव शाखाः प्रसृताः प्रगताः, गुणप्रवृद्धाः गुणैः सत्त्वरजस्तमोभिः प्रवृद्धाः स्थूलीकृताः उपादानभूतैः, विषयप्रवालाः विषयाः शब्दादयः प्रवालाः इव देहादिकर्मफलेभ्यः शाखाभ्यः अङ्कुरीभवन्तीव, तेन विषयप्रवालाः शाखाः ।
கீழே என்பது மனிதர்கள் ஆரம்பித்து ஸ்தாவரம் வரையிலும் ஆகும். மேலே என்பது மனிதனில் ஆரம்பித்து பிரபஞ்சத்தை யும், தர்மத்தையும் படைத்த பிரஹ்மா வரையிலும் கர்மத்திற்குத் தக்கவாறு, ஞானத்திற்குத் தக்கவாறு உண்டான ஞானகர்ம பலன் கள் அந்த விருக்ஷத்திற்கு கிளைபோல் விரிந்து நிற்கின்றன. சத்து வ, ரஜஸ், தமோ குணங்களால் ஸ்தூலமாக்கப்பட்ட உபாதான (பூ தங்களால்) காரணத்தால் சப்தம் முதலிய விஷயங்கள் துளிர்கள் போல் தங்களுடைய கர்மபலன்களாகிய தேஹாதி கிளைகளில் தோன்றுகின்றன. ஆகையால் விஷயங்கள் என்கின்ற துளிர்கள் உள்ளவைகளாக கிளைகள் இருக்கின்றன.
संसारवृक्षस्य परममूलं उपादानकारणं पूर्वम् उक्तम् । अथ इदानीं कर्मफलजनितरागद्वेषादिवासनाः मूलानीव धर्माधर्मप्रवृत्तिकारणानि अवान्तरभावीनि तानि अधश्च देवाद्यपेक्षया मूलानि अनुसन्ततानि अनुप्रविष्टानि कर्मानुबन्धीनि कर्म धर्माधर्मलक्षणम् अनुबन्धः पश्चाद्भावि, येषाम् उद्भूतिम् अनु उद्भवति, तानि कर्मानुबन्धीनि मनुष्यलोके विशेषतः । अत्र हि मनुष्याणां कर्माधिकारः प्रसिद्धः ॥ २ ॥
சம்சார விருக்ஷத்திற்கு முதல் (உபாதன) காரணம் ஆணிவேர் என்று முன்பு கூறப்பட்டது. இப்பொழுது கர்மபலத்தினால் உண்டா கின்றராக, த்வேஷ வாசனைகள் புண்ய, பாபங்களில் பிரவிர்த்திப் பதற்குக் காரணமாக இடையில் தோன்றும் வேர்கள் போல் கூறப்ப டுகிறது. தேவர்கள் முதலானோரைக் காட்டிலும், கீழே உள்ள மனித உலகத்தில் அந்த வேர்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பி ணைந்து தர்மாதர்ம லக்ஷணங்களுடைய கர்மத்தில் பந்தப்படுத்து கிறது. பின்னால் தோன்றும் கர்மபலன் வெளிப்படும்பொழுது அனுபவத்தால் கர்மானுபந்தம் எனப்படுகிறது. (கர்மத்தில் பந்தப்ப டுகிறான் என்பது) விசேஷமாக உலகில் மனிதர்களுக்கு கர்மத்தில் அதிகாரம் என்பது பிரசித்தம்.
यस्तु अयं वर्णितः संसारवृक्षः —
எந்த இந்த சம்சாரவிருக்ஷம் வர்ணிக்கப்பட்டதோ அந்த-
न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादिर्न च सम्प्रतिष्ठा ।
अश्वत्थमेनं सुविरूढमूलमसङ्गशस्त्रेण दृढेन छित्त्वा ॥ ३ ॥
ந ரூபமஸ் யேஹ ததோபலப்யதே நாந்தோந சாதிர்ன ச ஸம்ப் ரதிஷ்டா ।
அச்வத்தமேனம் ஸுவிரூடமூலம ஸங்கசஸ்த்ரேண த்ரு டேன சித்வா ॥ 3 ॥
न रूपम् अस्य इह यथा उपवर्णितं तथा नैव उपलभ्यते, स्वप्नमरीच्युदकमायागन्धर्वनगरसमत्वात् ; दृष्टनष्टस्वरूपो हि स इति अत एव न अन्तः न पर्यन्तः निष्ठा परिसमाप्तिर्वा विद्यते ।
அதனுடைய ஸ்வரூபம் எவ்வாறு வர்ணிக்கப்பட்டதோ அவ் வாறு காணப்படவில்லை. ஏன் எனில் ஸ்வப்னவஸ்து போலும், கானல் நீர் போலும், மாயையினால் உண்டாக்கப்பட்ட கந்தர்வ பட் டணம் போலும் பார்த்துகொண்டிருக்கும் பொழுதே இல்லாமல் போய்விடும். (நாசம் அடையும்) ஸ்வபாவமுடையது. (சம்சார விரு க்ஷம் அநாதியாய் இருப்பதால்) அதற்கு எல்லையும், முடிவும் கிடையாது. (ஞானத்தினால் மட்டுமே முடிவு).
तथा न च आदिः, ‘इतः आरभ्य अयं प्रवृत्तः’ इति न केनचित् गम्यते । न च सम्प्रतिष्ठा स्थितिः मध्यम् अस्य न केनचित् उपलभ्यते ।
அவ்வாறே அதற்கு ஆதியும் கிடையாது. ஏன் எனில் இந்த சம்சாரம் எப்பொழுது ஆரம்பமானது என்று ஒருவராலும் அறிய முடியாது. அவ்வாறே அது நடுவில் இருப்பதாக ஒருவராலும் அறியமுடியாது.
अश्वत्थम् एनं यथोक्तं सुविरूढमूलं सुष्ठु विरूढानि विरोहं गतानि सुदृढानि मूलानि यस्य तम् एनं सुविरूढमूलम् , असङ्गशस्त्रेण असङ्गः पुत्रवित्तलोकैषणाभ्यः व्युत्थानं तेन असङ्गशस्त्रेण दृढेन परमात्माभिमुख्यनिश्चयदृढीकृतेन पुनः पुनः विवेकाभ्यासाश्मनिशितेन च्छित्वा संसारवृक्षं सबीजम् उद्धृत्य ॥ ३ ॥
திடமாக நன்றாக வேரூன்றிய இந்த அச்வத்தமரத்தை புத்ர, செல்வம், லோகம் என்ற மூன்று ஆசைகள் நீங்கிய அசங்க சஸ்தி ரத்தினாலும் பரமாத்மாவிடத்தில் திரும்பிய நிச்சயமாக திடமாக் கப்பட்ட திருப்பி திருப்பி திடமாக்கப்பட்ட விவேக அப்யாசத்தால் கூர்மையாக்கப்பட்ட கத்தியால் வெட்டப்பட்டு அடியோடு எடுத்து
ततः पदं तत्परिमार्गितव्यं यस्मिन्गता न निवर्तन्ति भूयः ।
तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसृता पुराणी ॥ ४ ॥
தத: பதம் தத்பரிமார்கிதவ்யம் யஸ்மின்கதா ந நிவர்தந்தி பூய: ।
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ ॥ 4 ॥
ततः पश्चात् यत् पदं वैष्णवं तत् परिमार्गितव्यम् , परिमार्गणम् अन्वेषणं ज्ञातव्यमित्यर्थः । यस्मिन् पदे गताः प्रविष्टाः न निवर्तन्ति न आवर्तन्ते भूयः पुनः संसाराय ।
அதன்பிறகு வைஷ்ணவ பதத்தை (மோக்ஷத்தை) தேட வேண்டும். அதாவது அறியவேண்டும் என்பது பொருள். எந்த பதத்தை அடைந்து திரும்பவும் (மறுபடியும்) சம்சார சக்கிரத்தில் சுழலமாட்டார்களோ அதை அடைவார்கள். அதாவது மறுபடியும் பிறக்கமாட்டார்கள்.
कथं परिमार्गितव्यमिति आह —
எவ்வாறு அதைத் தேடவேண்டும் என்பதைக் கூறுகிறார்.
तमेव च यः पदशब्देन उक्तः आद्यम् आदौ भवम् आद्यं पुरुषं प्रपद्ये इत्येवं परिमार्गितव्यं तच्छरणतया इत्यर्थः ।
அவனையே என்று தம் ஏவ ச என்ற பதத்தினால் கூறப்பட்டது. அந்த ஆதி புருஷனை சரணமடைந்து தேடவேண்டும் என்பது பொருள்.
कः असौ पुरुषः इति, उच्यते —
அந்த புருஷன் யார் என்பதைக் கூறுகிறேன்-
यतः यस्मात् पुरुषात् संसारमायावृक्षप्रवृत्तिः प्रसृता निःसृता, ऐन्द्रजालिकादिव माया, पुराणी चिरन्तनी ॥ ४ ॥
எந்த புருஷனிடமிருந்து மாயாஜாலக்காரனுடைய மாயை போல மாயையினால் சம்சார விருக்ஷமானது சனாதனமாக பிரவி ருத்தியானது வெளிப்பட்டதோ அவனே அந்த புருஷன்.
कथम्भूताः तत् पदं गच्छन्तीति, उच्यते —
எப்படிப்பட்டவர்கள் அந்த பதத்தை அடைகிறார்கள் என்ப தைக் கூறுகிறார்-
निर्मानमोहा जितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामाः ।
द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसंज्ञैर्गच्छन्त्यमूढाः पदमव्ययं तत् ॥ ५ ॥
நிர்மானமோஹா ஜிதஸங்கதோஷா அத்யாத்மநித்யா விநிவ் ருத்தக்காமா: ।
த்வந்த்வைர்விமுக்தா: ஸுகதுக்கஸம்ஞைர்கச்சந்த்யமூடா: பதமவ்யயம் தத் ॥ 5 ॥
निर्मानमोहाः मानश्च मोहश्च मानमोहौ, तौ निर्गतौ येभ्यः ते निर्मानमोहाः मानमोहवर्जिताः । जितसङ्गदोषाः सङ्ग एव दोषः सङ्गदोषः, जितः सङ्गदोषः यैः ते जितसङ्गदोषाः । अध्यात्मनित्याः परमात्मस्वरूपालोचननित्याः तत्पराः । विनिवृत्तकामाः विशेषतो निर्लेपेन निवृत्ताः कामाः येषां ते विनिवृत्तकामाः यतयः संन्यासिनः द्वन्द्वैः प्रियाप्रियादिभिः विमुक्ताः सुखदुःखसंज्ञैः परित्यक्ताः गच्छन्ति अमूढाः मोहवर्जिताः पदम् अव्ययं तत् यथोक्तम् ॥ ५ ॥
மானம், மோஹத்திலிருந்து விடுபட்டவர்கள் என்றால் அபிமானமும் அக்ஞானமும் எவர்களுக்கு நஷ்டமாகிவிட்டதோ அவர்கள். = நிர்மானமோஹா: எவர்கள் பற்று அற்று இருக்கிறார் களோ அவர்கள் பற்றைஜெயித்தவர்கள் = ஜிதசங்கதோஷா:, பர மாத்ம ஸ்வரூபத்தைப் பற்றியே எப்பொழுதும் அந்த பரமாகவே இருப்பவர்கள் அத்யாத்மநித்யா:, எவர்களுக்கு எல்லாக்காமனைக ளும் மூலத்துடன் நிவிர்த்தி ஆகிவிட்டதோ அவர்கள் நிவிர்த்த காமா:, சந்நியாசிகள் பிரியம், அப்ரியம் இவைகளிலிருந்து விடு பட்டவர்கள். சுகதுக்கம் என்பவைகளிலிருந்தும் விடுபட்டு மோஹ மற்றவர்களாகி நாசமற்றபதத்தை முன்பு கூறியவாறு அடைகிறார்கள்.
तदेव पदं पुनः विशेष्यते —
மறுபடியும் அந்தப் பதத்தைச் சிறப்பித்துக் கூறுகிறார்.
न तद्भासयते सूर्यो न शशाङ्को न पावकः ।
यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम ॥ ६ ॥
ந தத் பாஸயதே ஸூர்யோ ந சசாங்கோ ந பாவக: ।
யத்கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம ॥ 6 ॥
तत् धाम इति व्यवहितेन धाम्ना सम्बध्यते ।
தத் சப்தத்திற்கு பின் வரும் தாம என்ற சப்தம் வியவதானத்து டன் கூடி தாம என்றசப்தத்துடன் கூடி சம்பந்தமாகும்.
तत् धाम तेजोरूपं पदं न भासयते सूर्यः आदित्यः सर्वावभासनशक्तिमत्त्वेऽपि सति । तथा न शशाङ्कः चन्द्रः, न पावकः न अग्निरपि ।
சூரியன் எல்லாவற்றையும் விளக்கும் (பிரகாசிக்கும்) சக்தி படைத்ததாய் இருந்தாலும், தேஜோஸ்வரூபமான பதத்தை (தாமத்தை) விளக்கமுடியாது(பிரகாசிக்கச் செய்யமுடியாது) அவ்வாறே சந்திரனாலும், அக்கினியினாலும் முடியாது.
यत् धाम वैष्णवं पदं गत्वा प्राप्य न निवर्तन्ते, यच्च सूर्यादिः न भासयते, तत् धाम पदं परमं विष्णोः मम पदम् , ॥ ६ ॥
எந்த பரமபதமாகிய வைஷ்ணவ பதத்தை அடைந்து மறுபடி யும் திரும்புவதில்லையோ, எந்த பதத்தை சூரியன் முதலியவைக ளாலும் பிரகாசிக்கச் செய்ய முடியவில்லையோ அந்தபதம் விஷ் ணுவாகிய என்னுடையது.
यत् गत्वा न निवर्तन्ते इत्युक्तम्ननु सर्वा हि गतिः आगत्यन्ता, ‘संयोगाः विप्रयोगान्ताः’ इति प्रसिद्धम् । कथम् उच्यते ‘तत् धाम गतानां नास्ति निवृत्तिः’ इति ।
"யத் கத்வா ந நிவர்தந்தே” = எதை அடைந்து திரும்புவதில் லையோ, ) என்று கூறப்பட்டது. ஆனால் எல்லா செல்லுதலும் திரும்புதலை உடையதாய் இருக்கிறது. அவ்வாறே ஒன்று சேர்ந்த தெல்லாம் பிரிதலை உடையதாய் இருக்கிறது என்பது பிரசித்தம். அப்படி இருக்கும்பொழுது அந்த பதத்தை அடைந்தவர்கள் திரும்புவதில்லை என்று எவ்வாறு கூறப்படுகிறது என்பதற்கு
शृणु तत्र कारणम् —
அதன் காரணத்தைக் கேள்
ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः ।
मनःषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति ॥ ७ ॥
மமைவாம்சோ ஜீவலோகே ஜீவபூத: ஸநாதன: ।
மன: ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதிஸ்தானி கர்ஷதி ॥ 7 ॥
ममैव परमात्मनः नारायणस्य, अंशः भागः अवयवः एकदेशः इति अनर्थान्तरं जिवलोके जीवानां लोके संसारे जीवभूतः कर्ता भोक्ता इति प्रसिद्धः सनातनः ।
ஜீவ லோகம் என்னும் சம்சாரத்தில் ஜீவனாக இருந்து கொண்டு கர்த்தா போக்தா என்று பிரசித்தமாய் இருக்கிறது. அது என்னுடைய பரமார்த்த ஸ்வரூபத்தில் சனாதன அம்சமாக இருக்கி றது. அதை பாகம், அவயவம், ஏகதேசம் (ஓர் இடத்தில் எப்பொழு தாவது இருத்தல்) இவை எல்லாம் ஒரு பொருளைக் குறிப்பதாகும்.
चिरन्तनः ; यथा जलसूर्यकः सूर्यांशः जलनिमित्तापाये सूर्यमेव गत्वा न निवर्तते च तेनैव आत्मना गच्छति, एवमेव ।
எவ்வாறு ஜலத்தில் பிரதிபிம்பித்த சூரியன் சூரியனின் அம்ச மாக இருந்துகொண்டு ஜலரூபமான நிமித்தம் நாசமானபொழுது சூரியனை அடைந்து மறுபடியும் திரும்புவதில்லையோ அவ் வாறே இந்த (ஜீவனாகிய அம்சமும் அந்த பரமாத்மாவையே சென்றடைகிறது.
यथा घटाद्युपाधिपरिच्छिन्नो घटाद्याकाशः आकाशांशः सन् घटादिनिमित्तापाये आकाशं प्राप्य न निवर्तते । अतः उपपन्नम् उक्तम् ‘यद्गत्वा न निवर्तन्ते’ (भ. गी. १५ । ६) इति ।
அல்லது எவ்வாறு கடம் முதலியவைகளால் பரிச்சின்னமான கடம் முதலிய ஆகாசங்கள் ஆகாச அம்சமாக இருந்துகொண்டு கடம் முதலிய நிமித்தங்கள் நாசமடைந்தபொழுது ஆகாசத்தை அடைந்து திரும்புவதில்லையோ, அவ்வாறே ஜீவனும் பரமாத் மாவை அடைந்து மீண்டும் திரும்புவதில்லை என்றால் பரப்ரஹ்ம ஸ்வரூபமாகவே இருக்கிறது என்பது யத்கத்வா ந நிவர்த்தந்தே என்று கூறப்பட்டுள்ளது.
ननु निरवयवस्य परमात्मनः कुतः अवयवः एकदेशः अंशः इति ? सावयवत्वे च विनाशप्रसङ्गः अवयवविभागात् ।
அவயவமற்றபரமாத்மாவிற்கு அவயவம், ஏகதேசம், அம்சம் என்று எவ்வாறு ஏற்படும்? இவ்வாறு பரமாத்மாவிற்கு அவய வத்தை ஒப்புக்கொண்டால் அதற்கு விபாகங்கள் இருப்பதால் அதற்கு நாசத்தை ஒப்புக்கொள்ள வேண்டுமெனில்,
नैष दोषः, अविद्याकृतोपाधिपरिच्छिन्नः एकदेशः अंश इव कल्पितो यतः । दर्शितश्च अयमर्थः क्षेत्राध्याये विस्तरशः ।
இந்த தோஷமே கிடையாது. ஏன் எனில் அவித்யையினால் உண்டான உபாதிகளால் பரிச்சின்னமான ஏகதேச அம்சம் போல கல்பிக்கப்படுவதால் இந்த தோஷமே கிடையாது. இங்கு விளக்கப் பட்ட இந்த அர்த்தமானது க்ஷேத்ர அத்தியாயத்தில் விரிவாக விளக்கப்படும்.
स च जीवो मदंशत्वेन कल्पितः कथं संसरति उत्क्रामति च इति, उच्यते —
அந்த ஜீவன் என்னுடைய அம்சமாக கல்பிக்கப்பட்டு எவ் வாறு வாழ்கிறான்? எவ்வாறு சரீரத்தை விட்டு செல்கிறான்? என்ப தைக் கூறுகிறேன்.
मनःषष्ठानि इन्द्रियाणि श्रोत्रादीनि प्रकृतिस्थानि स्वस्थाने कर्णशष्कुल्यादौ प्रकृतौ स्थितानि कर्षति आकर्षति ॥ ७ ॥
மனதை ஆறாவது இந்திரியமாகக்கொண்டு செவி முதலிய இந்திரியங்களை தன், தன் ஸ்தானங்களில் அதாவது தனது கோல கரூப பிரக்ருதியில் இருந்து (ஜீவன்) இழுத்துச் செல்கின்றது.
कस्मिन् काले ? —
எப்பொழுது (இழுத்துச்செல்கிறது)
शरीरं यदवाप्नोति यच्चाप्युत्क्रामतीश्वरः ।
गृहीत्वैतानि संयाति वायुर्गन्धानिवाशयात् ॥ ८ ॥
சரீரம் யதவாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீச்வர: ।
க்ருஹீத்வைதானி ஸம்யாதி வாயுர் கந்தாநிவாசயாத் ॥ 8 ॥
यच्चापि यदा चापि उत्क्रामति ईश्वरः देहादिसङ्घातस्वामी जीवः, तदा ‘कर्षति’ इति श्लोकस्य द्वितीयपादः अर्थवशात् प्राथम्येन सम्बध्यते ।
எப்பொழுது தேஹாதிகளுடன் கூடிய சுவாமியாகிய ஜீவன் எப்பொழுது சரீரத்தை விட்டு கிளம்புகிறானோ அப்பொழுது கவர்ந்து இழுத்துச் செல்கிறான் என்பதை ஸ்லோகத்தின் இரண்டாம் பாதத்தின் அர்த்தத்தின் வசத்தால் முதலில் சேர்க்கப் படுகிறது.
यदा च पूर्वस्मात् शरीरात् शरीरान्तरम् अवाप्नोति तदा गृहीत्वा एतानि मनःषष्ठानि इन्द्रियाणि संयाति सम्यक् याति गच्छति ।
எப்பொழுது ஜீவாத்மா முதல் சரீரத்திலிருந்து மற்றொரு சரீரத்தை அடைகிறதோ அப்பொழுது மனதுடன் கூடிய ஆறு இந்திரியங்களையும் உடன் எடுத்து செல்கிறது.
किमिव इति, आह — वायुः पवनः गन्धानिव आशयात् पुष्पादेः ॥ ८ ॥
எவ்வாறு எடுத்துச் செல்கிறது எனில் கூறுகிறார். எவ்வாறு காற்றானது வாசனையுள்ள பூக்களிலிருந்து வாசனையை எடுத்துச் செல்கிறதோ அவ்வாறு எடுத்துச் செல்கிறது.
कानि पुनः तानि —
மேலும் அவைகள் எவை?
श्रोत्रं चक्षुः स्पर्शनं च रसनं घ्राणमेव च ।
अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते ॥ ९ ॥
ச்ரோத்ரம் சக்ஷ: ஸ்பர்சனம் ச ரஸனம் க்ராணமேவ ச ।
அதிஷ்டாய மநச் சாயம் விஷயாநுப ஸே வதே ॥ 9 ॥
श्रोत्रं चक्षुः स्पर्शनं च त्वगिन्द्रियं रसनं घ्राणमेव च मनश्च षष्ठं प्रत्येकम् इन्द्रियेण सह, अधिष्ठाय देहस्थः विषयान् शब्दादीन् उपसेवते ॥ ९ ॥
செவி, கண், ஸ்பர்சனம் செய்யும் தோல் இந்திரியம், ருசிக்கும் நாக்கு, மூக்கு, மனம் ஆகிய ஆறு இந்திரியங்களும் தேஹத்தில் இருந்துகொண்டு தன், தன் இந்திரியத்துடன் சேர்ந்து சப்தாதி விஷ யங்களைக் கிரஹிக்கிறது.
एवं देहगतं देहात् —
இவ்வாறு சரீரம் உள்ளவன் சரீரத்திலிருந்து—
उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितम् ।
विमूढा नानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषः ॥ १० ॥
உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி புஞ்ஞானம் வா குணான்விதம் ।
விமூடா நானு பச்யந்தி பச்யந்தி ஞான சக்ஷு ஷ: ॥ 10 ॥
उत्क्रामन्तं देहं पूर्वोपात्तं परित्यजन्तं स्थितं वापि देहे तिष्ठन्तं भुञ्जानं वा शब्दादींश्च उपलभमानं गुणान्वितं सुखदुःखमोहाद्यैः गुणैः अन्वितम् अनुगतं संयुक्तमित्यर्थः । एवंभूतमपि एनम् अत्यन्तदर्शनगोचरप्राप्तं विमूढाः दृष्टादृष्टविषयभोगबलाकृष्टचेतस्तया अनेकधा मूढाः न अनुपश्यन्ति — अहो कष्टं वर्तते इति अनुक्रोशति च भगवान् ।
முன்பு எடுத்த சரீரத்தை விடுபவனாயும், இச்சரீரத்தில் இருப்ப வனாயும், சப்த முதலிய விஷயங்களை அறிபவனாயும், சுகம், துக்கம், மோஹம் எனப்படுகின்றகுணங்களுடன் கூடியவனாயும் இருக்கிறான் என்பது பொருள். இவ்வாறு நன்றாக அறியப்பட்ட தாய் இருந்தாலும், திருஷ்டாதிருஷ்டவிஷய போகங்களின் பலத் தினால் இழுக்கப்பட்ட மனத்தினனாய் பலவாறாக மயங்கிய மூடர் கள் அதை அறிவதில்லை. ஆகையால் பகவான் என்ன கஷ்ட்டம் என்று கருணை காட்டுகிறார்.
ये तु पुनः प्रमाणजनितज्ञानचक्षुषः ते एनं पश्यन्ति ज्ञानचक्षुषः विविक्तदृष्टयः इत्यर्थः ॥ १० ॥
மேலும் எவர் பிரமாணத்தினால் உண்டான ஞானக்கண் உடையவர்களோ அதை விவேகதிருஷ்ட்டியினால் அறிவார்கள்.
केचित्तु —
மேலும் சிலர்
यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितम् ।
यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतसः ॥ ११ ॥
யதந்தோ யோகினஸ்சைநம் பச்யந்த்யாத்ம ந்யவஸ்திதம் ।
யதந்தோ(அ)ப்யக்ருதாத்மானோ நைநம் பச்யந்த்ய சேதஸ்: ॥ 11 ॥
यतन्तः प्रयत्नं कुर्वन्तः योगिनश्च समाहितचित्ताः एनं प्रकृतम् आत्मानं पश्यन्ति ‘अयम् अहम् अस्मि’ इति उपलभन्ते आत्मनि स्वस्यां बुद्धौ अवस्थितम् ।
பிரயத்னம் செய்பவர்களாய் ஒருநிலைப்படுத்திய சித்தம் உடைய யோகிகள் இப்பொழுது விளக்கப்பட்ட ஆத்மாவை தன்னுடைய அந்தக்கரணத்தில் அதுவாய் இருக்கிறேன் என்று சா க்ஷாத்காரம் செய்கிறார்கள்.
यतन्तोऽपि शास्त्रादिप्रमाणैः, अकृतात्मानः असंस्कृतात्मानः तपसा इन्द्रियजयेन च, दुश्चरितात् अनुपरताः, अशान्तदर्पाः, प्रयत्नं कुर्वन्तोऽपि न एवं पश्यन्ति अचेतसः अविवेकिनः ॥ ११ ॥
ஆனால் எவன் ஒருவனுக்கு தவம், இந்திரிய கட்டுப்பாடு முதலிய சாதனங்கள் மூலமாக தன்னுடைய அந்தக்கரண சுத்தி ஏற்படவில்லையோ,அவ்வாறே தீயவழிகளில் செல்லுவதிலிருந்து விடுபடவில்லையோ, சாந்தமற்றவராயும், செருக்கு உள்ளவராயும் உள்ளவரோ அந்த அவிவேகி புருஷன் சாஸ்திர ப்ரமாணங்களில் பிரயத்னம் உடையவனாய் இருந்தாலும் அவன் ஆத்மாவை அறிவதில்லை.
यत् पदं सर्वस्य अवभासकमपि अग्न्यादित्यादिकं ज्योतिः न अवभासयते, यत् प्राप्ताश्च मुमुक्षवः पुनः संसाराभिमुखाः न निवर्तन्ते, यस्य च पदस्य उपाधिभेदम् अनुविधीयमानाः जीवाः घटाकाशादयः इव आकाशस्य — अंशाः, तस्य पदस्य सर्वात्मत्वं सर्वव्यवहारास्पदत्वं च विवक्षुः चतुर्भिः श्लोकैः विभूतिसङ्क्षेपमाह भगवान् —
எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்யும் அக்னி, சூரியன் முத லிய ஜ்யோதிகள் பரமாத்மாவை பிரகாசிக்கச் செய்யமுடியாது. எதை அடைந்து முமூக்ஷக்கள் மறுபடியும் சம்சாரத்தை நோக்கி திரும்புவதில்லையோ அந்த பதத்தினுடைய உபாதி பேதத்தினால் கடாகாசம் முதலியவைகள் ஆகாசத்தின் அம்சமாக இருப்பது போல் ஜீவன் (அம்சமாக) பின்னமாக இருக்கிறது. அந்த பதத்தினு டைய சர்வாத்மத்வத்தையும், எல்லா வியவஹாரங்களின் ஆதரத் துவத்தையும் விளக்குவதற்கு இச்சித்தவராகி பகவான் வரும் நான்கு ஸ்லோகங்களில் விபூதிகளை சுருக்கமாகக் கூறுகிறார்.
यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलम् ।
यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम् ॥ १२ ॥
யதாதித்யகதம் தேஜோ ஜகத் பாஸயதே(அ)கிலம் ।
யச்சந்த்ரமஸியச்சாக்னௌ தத்தேஜோ வித்தி மாமகம் ॥ 12 ॥
यत् आदित्यगतम् आदित्याश्रयम् । किं तत् ? तेजः दीप्तिः प्रकाशः जगत् भासयते प्रकाशयति अखिलं समस्तम् ; यत् चन्द्रमसि शशभृति तेजः अवभासकं वर्तते, यच्च अग्नौ हुतवहे, तत् तेजः विद्धि विजानीहि मामकं मदीयं मम विष्णोः तत् ज्योतिः ।
சூரியன் எதை ஆசிரயித்து இந்த ஜகத் முழுவதையும் பிரகா சிக்கச் செய்கின்றது. எது சந்திரன் முதலியைைவகளிலும் அக் கினியிலும் இருக்கிறதோ அது தேஜஸ் ஆகும். அந்த தேஜஸ் விஷ்ணுவாகிய என்னுடைய ஜ்யோதி என்று அறி.
अथवा, आदित्यगतं तेजः चैतन्यात्मकं ज्योतिः, यच्चन्द्रमसि, यच्च अग्नौ वर्तते तत् तेजः विद्धि मामकं मदीयं मम विष्णोः तत् ज्योतिः ।
அல்லது சூரியனிடத்தில் இருக்கும் தேஜஸ் எனப்படும் சைதன்யாத்மகமான ஜ்யோதியானது எதுவோ அது சந்திரனிடத் திலும், அக்னியிலும் இருக்கிறது. அந்த தேஜஸ் விஷ்ணுவாகிய என்னுடைய ஜ்யோதி என்று அறி.
ननु स्थावरेषु जङ्गमेषु च तत् समानं चैतन्यात्मकं ज्योतिः । तत्र कथम् इदं विशेषणम् — ‘यदादित्यगतम्’ इत्यादि ।
ஆனால் இந்த சைதன்ய மயமான ஜ்யோதி சராசரமான எல்லா பொருள்களிலும் சமானமாக இருக்கிறது எனில் எதற்காக விசேஷமாக சூரியனிடத்தில் இருக்கும் ஜ்யோதி என்பது முதலிய வைகளால் கூறப்படுகிறது.
नैष दोषः, सत्त्वाधिक्यात् आविस्तरत्वोपपत्तेः । आदित्यादिषु हि सत्त्वं अत्यन्तप्रकाशम् अत्यन्तभास्वरम् ; अतः तत्रैव आविस्तरं ज्योतिः इति तत् विशिष्यते, न तु तत्रैव तत् अधिकमिति ।
இது தோஷம் இல்லை. ஏனெனில் சத்துவகுணம் அதிகமாக இருக்குமிடத்தில் (ஜ்யோதி) அதிகமாகப் புலப்படுகிறது. சூரியன் முதலியவைகளிடத்தில் சத்துவகுணம் அதிகமாக இருப்பதால் அதிகமாக வெளிப்படுகிறது. அதிகமாக ஸ்வச்சமாயிருக்கிறது. அவைகளிடத்தில் (பிரஹ்ம்ம) ஜோதி மிகவும் பிரத்யக்ஷமாக புலப்படுகிறதினால் அதற்கு விசேஷத் தன்மை கூறப்படுகிறது. ஆதித்யாதிகளிடத்தில் ஜ்யோதி அதிகமாக இருக்கிறது என்பது அல்ல. (சமானமாகவே எங்கும் இருக்கிறது)
यथा हि श्लोके तुल्येऽपि मुखसंस्थाने न काष्ठकुड्यादौ मुखम् आविर्भवति, आदर्शादौ तु स्वच्छे स्वच्छतरे च तारतम्येन आविर्भवति ; तद्वत् ॥ १२ ॥
எவ்வாறு உலகில் முகமானது சமானமாக இருந்தபோதிலும் கட்டை, சுவர் முதலியவைகளில் தோன்றாது. ஆனால் ஸ்வச்சமாக வும், அதிக ஸ்வச்சமாகவும் உள்ள கண்ணாடிகளில் (முகமானது) அதற்கேற்றவாறு தெளிவாகவோ, மிகத்தெளிவாகவோ தோன்றுகி றது போல் ஆகும்.
किञ्च —
மேலும்
गामाविश्य च भूतानि धारयाम्यहमोजसा ।
पुष्णामि चौषधीः सर्वाः सोमो भूत्वा रसात्मकः ॥ १३ ॥
காமாவிச்ய ச பூதானி தாரயாம் யஹ மோஜஸா ।
புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக: ॥ 13 ॥
गां पृथिवीम् आविश्य प्रविश्य धारयामि भूतानि जगत् अहम् ओजसा बलेन ; यत् बलं कामरागविवर्जितम् ऐश्वरं रूपं जगद्विधारणाय पृथिव्याम् आविष्टं येन पृथिवी गुर्वी न अधः पतति न विदीर्यते च ।
நான் பூமியில் பிரவேசித்து எனது வலிமையினால் இந்த பிர பஞ்சத்தைத் தாங்குகிறேன். அந்த பலமானது காமம், ராகம் அற்றஐஸ்வர்யம் அது ஜகத்தைத் தாங்குவதற்காக பூமியில் நுழைந்து உள்ளதால் பூமியானது கீழே விழுவதோ, உதிர்வதோ இல்லை.
तथा च मन्त्रवर्णः — ‘येन द्यौरुग्रा पृथिवी च दृढा’ (तै. सं. ४ । १ । ८) इति, ‘स दाधार पृथिवीम्’ (तै. सं. ४ । १ । ८) इत्यादिश्च । अतः गामाविश्य च भूतानि चराचराणि धारयामि इति युक्तमुक्तम् ।
அவ்வாறே வேதமந்திரமும் கூறுகிறது. (“யேன த்யௌருக்ரா ப்ரதிவீ ச த்ருடா" எதனால் மேல் உலகமும் பாரமுள்ள பூலோகமும் திடமாக இருக்கிறதோ), என்றும் “ச தாதார ப்ருதிவீம்” = அது பூமியைத் தாங்குகிறது, என்பவை முதலியவைகளாலும், ஆகையால் பூமியில் நுழைந்து சராசரமான பூதங்களைத் திடமாகத் தாங்குகிறேன் என்று கூறியது பொருந்தும்.
किञ्च, पृथिव्यां जाताः ओषधीः सर्वाः व्रीहियवाद्याः पुष्णामि पुष्टिमतीः रसस्वादुमतीश्च करोमि सोमो भूत्वा रसात्मकः सोमः सन् रसात्मकः रसस्वभावः । सर्वरसानाम् आकरः सोमः । स हि सर्वरसात्मकः सर्वाः ओषधीः स्वात्मरसान् अनुप्रवेशयन् पुष्णाति ॥ १३ ॥
மேலும் பூமியில் விளையும் நெல் முதலிய தாவரங்களை எல்லாம் ரசத்தோடு கூடியுள்ள சந்திரன் வடிவமாகி வளமை உடையதாகவும் சுவை உள்ளதாகவும் செய்கிறேன். எது எல்லா ரசங்களுக்கும் ஆத்மாவாய் இருக்கிறதோ அதற்கு ரசமே ஸ்வபா வம். எல்லா ரசங்களுடைய இருப்பிடமாக சந்திரன் இருக்கிறது. அதுவே எல்லா ஸ்தாவரங்களிலும் தன்னுடைய ரச ரூபமாக பிரவேசித்து (நுழைந்து) அதை போஷிக்கிறது (வளரச்செய்கிறது).
किञ्च —
மேலும்
अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः ।
प्राणापानसमायुक्तः पचाम्यन्नं चतुर्विधम् ॥ १४ ॥
அஹம் வைச்வானரோ பூத்வா ப்ராணினாம் தேஹமாச்ரித: ।
ப்ராணாபான ஸமாயுக்த: பசாம்யன்னம் சதுர்விதம் ॥ 14 ॥
अहमेव वैश्वानरः उदरस्थः अग्निः भूत्वा — ‘अयमग्निर्वैश्वानरो योऽयमन्तः पुरुषे येनेदमन्नं पच्यते’ (बृ. उ. ५ । ९ । १) इत्यादिश्रुतेः ; वैश्वानरः सन् प्राणिनां प्राणवतां देहम् आश्रितः प्रविष्टः प्राणापानसमायुक्तः प्राणापानाभ्यां समायुक्तः संयुक्तः पचामि पक्तिं करोमि अन्नम् अशनं चतुर्विधं चतुष्प्रकारं भोज्यं भक्ष्यं चोष्यं लेह्यं च ।
நானே வைச்வாநரன் என்னும் வயிற்றில் உள்ள அக்னியாக இருக்கிறேன். (““அயம் அக்னி வைச்வானரோ யோஅயமந்த: பருஷேயேன இதமன்னம் பக்யதே’’ = எந்த அக்னி வைச்வான ரனோ அந்த புருஷனின் உள்ளே இருந்துகொண்டு அன்னத்தைச் செரிக்கச் செய்கிறது) என்று ஸ்ருதிகளில் வர்ணனை செய்யபப்பட் டுள்ளது. வைச்வானரனாக இருந்துகொண்டு ஜீவர்களுடைய தேஹத்தில் இருந்துகொண்டு பிராண அபான வாயுக்களுடன் சேர்ந்து உண்ணுதல், கடித்து சாப்பிடுதல், பருகுதல், நக்குதல் என நான்கு விதமான அன்னத்தை செரிமானம் செய்கிறேன்.
‘भोक्ता वैश्वानरः अग्निः, अग्नेः भोज्यम् अन्नं सोमः, तदेतत् उभयम् अग्नीषोमौ सर्वम्’ इति पश्यतः अन्नदोषलेपः न भवति ॥ १४ ॥
போக்தா வைச்வானரன் என்னும் அக்னி. போஜ்யம் அன்னம் எனப்படும் சோமன். எவன் இந்த ஜகத்தை எல்லாம் அக்னி சோம ரூபமாகப் பார்க்கிறானோ அவனை அன்னதோஷமானது அண் டாது. (ஒட்டாது)
किञ्च —
மேலும்
सर्वस्य चाहं हृदि संनिविष्टो मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च ।
वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम् ॥ १५ ॥
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்த:ஸ்ம்ரு திர்ஜ்ஞானம்போஹனம் ச ।
வேதைஸ்ச ஸர்வைர்ரஹமேவ வேத்யோ வேதாந்தக்ருத் வே தவிதேவ சாஹம் ॥ 15 ॥
सर्वस्य च प्राणिजातस्य अहम् आत्मा सन् हृदि बुद्धौ संनिविष्टः । अतः मत्तः आत्मनः सर्वप्राणिनां स्मृतिः ज्ञानं तदपोहनं च अपगमनं च ; येषां यथा पुण्यकर्मणां पुण्यकर्मानुरोधेन ज्ञानस्मृती भवतः, तथा पापकर्मणां पापकर्मानुरूपेण स्मृतिज्ञानयोः अपोहनं च अपायनम् अपगमनं च ।
நான் எல்லா ஜீவராசிகளின் அந்தக்கரணத்தில் ஆத்மாவாக இருக்கிறேன். ஆகையால் எல்லா பிராணிகளுடைய ஸ்மிருதி, ஞானம் அவைகளுடைய மறைவுகள், என்னுடைய ஆத்மாவி னால் உண்டாகின்றன. எவர்கள் புண்யகர்மா செய்தார்களோ அவர்களுடைய புண்யத்திற்கு தகுந்தவாறு ஞானமும், ஸ்மிருதியும் உண்டாகிறது. அவ்வாறே பாபகர்மங்கள் செய்தவர் களுக்கு பாபகர்மா அனுசரணையாக ஸ்மிருதியும், ஞானமும் லோபமடைகிறது. (மறைகிறது).
वेदैश्च सर्वैः अहमेव परमात्मा वेद्यः वेदितव्यः । वेदान्तकृत् वेदान्तार्थसम्प्रदायकृत् इत्यर्थः, वेदवित् वेदार्थवित् एव च अहम् ॥ १५ ॥
எல்லா வேதங்களாலும் பரமாத்மாவாகிய நானே அறியப்பட வேண்டியவன். நானே வேதாந்தத்திற்கு கர்த்தா என்றால் வேதாந்த அர்த்தத்துக்கு சம்பிரதாய கர்த்தா என்பது பொருள். நானே வேதாந்தத்தின் அர்த்தத்தை அறிந்தவன்.
भगवतः ईश्वरस्य नारायणाख्यस्य विभूतिसङ्क्षेपः उक्तः विशिष्टोपाधिकृतः ‘यदादित्यगतं तेजः’ (भ. गी. १५ । १२) इत्यादिना ।
பகவானாகிய நாராயணன் எனப்படும் ஈஸ்வரனுடைய உத்தம மான உபாதியினால் உண்டாகும் விபூதிகள் சுருக்கமாக "யதா ஆதித்ய கதம் தேஜ" என்பது முதலிய ஸ்லோகங்களால் கூறப்பட்டது.
अथ अधुना तस्यैव क्षराक्षरोपाधिप्रविभक्ततया निरुपाधिकस्य केवलस्य स्वरूपनिर्दिधारयिषया उत्तरे श्लोकाः आरभ्यन्ते । तत्र सर्वमेव अतीतानागताध्यायार्थजातं त्रिधा राशीकृत्य आह —
இப்பொழுது க்ஷரம் அக்ஷரம் என்ற இந்த உபாதிகளையும் தனித்தனியாகக் கூறி அந்த உபாதிகளற்ற அந்த சுத்த பரமார்த்த ஸ்வரூபத்தை இதுதான் என்று நிச்சயம் செய்வதற்காக இனிவரும் ஸ்லோகங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. அவைகளில் முன்பு கூறப் பட்டனவும் இனி வரும் அத்தியாயங்களில் கூறப்போகிற எல்லா அர்த்தங்களையும் மூன்று விதமாகப் பிரித்துக் கூறுகிறார்.
द्वाविमौ पुरुषौ लोके क्षरश्चाक्षर एव च ।
क्षरः सर्वाणि भूतानि कूटस्थोऽक्षर उच्यते ॥ १६ ॥
த் வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ் சாக்ஷர ஏவ ச ।
க்ஷர: ஸர்வாணி பூதானி கூடஸ்தோ(அ)க்ஷர உச்யதே ॥ 16 ॥
द्वौ इमौ पृथग्राशीकृतौ पुरुषौ इति उच्येते लोके संसारे — क्षरश्च क्षरतीति क्षरः विनाशी इति एको राशिः ; अपरः पुरुषः अक्षरः तद्विपरीतः, भगवतः मायाशक्तिः, क्षराख्यस्य पुरुषस्य उत्पत्तिबीजम् अनेकसंसारिजन्तुकामकर्मादिसंस्काराश्रयः, अक्षरः पुरुषः उच्यते ।
இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ள இவ்விரண்டும் சம்சாரத் தில் இருபுருஷர்கள் எனப்படுகின்றன. ஒன்று க்ஷரம், அது நாசமு டைய புருஷன். அதற்கு மாறான மற்றொரு புருஷன் நாசமற்ற வன், அக்ஷரபுருஷன் எனப்படுவான். அந்த அக்ஷர புருஷன் பக வானுடைய மாயாசக்தியாகிய க்ஷரம் எனப்படும் புருஷனுடைய உற்பத்திக்கு (பீஜம்) காரணமாகிய சம்சாரத்தில் உள்ள அநேக ஜீவர்களுடைய ஆசை, காமம் இவைகள் தங்குமிடம் அக்ஷர புரு ஷன் எனப்படுகிறான்.
कौ तौ पुरुषौ इति आह स्वयमेव भगवान् — क्षरः सर्वाणि भूतानि, समस्तं विकारजातम् इत्यर्थः । कूटस्थः कूटः राशी राशिरिव स्थितः । अथवा, कूटः माया वञ्चना जिह्मता कुटिलता इति पर्यायाः, अनेकमायावञ्चनादिप्रकारेण स्थितः कूटस्थः, संसारबीजानन्त्यात् न क्षरति इति अक्षरः उच्यते ॥ १६ ॥
அவ்விருபுருஷர்கள் யார் என்று பகவானே சுயமாகக் கூறுகிறார்- எல்லா விகார பொருள்களும் க்ஷரம் எனப்படும் புருஷன் கூடம் என்றால் குவியல் போல் இருப்பதால். அல்லது கூடம் என்றால் மாயை, வஞ்சனை, கோணல், வக்கிரம் என்பன ஒரு பொருள் சொற்கள். மாயை அநேகவிகாரமாக இருப்பதால் இவ்வாறு கூறப்பட்டது. இவ்வாறான கூடத்தில் இருப்பதால் கூடஸ்தன். சம்சாரத்தின் பீஜம் முடிவற்றிருப்பதால் அது நாசமடை வதில்லை. என்று அக்ஷரம் எனப்படுகிறது. (ஞானத்தால் மட்டுமே அழிவு உடையது)
आभ्यां क्षराक्षराभ्यां अन्यः विलक्षणः क्षराक्षरोपाधिद्वयदोषेण अस्पृष्टः नित्यशुद्धबुद्धमुक्तस्वभावः —
க்ஷரம் அக்ஷரம் இவை இரண்டைக் காட்டிலும் வேறானதா யும் க்ஷரம்,அக்ஷரம் என்ற உபாதிகளுடைய தோஷங்கள் அற்ற தாய் நித்ய சுத்த புத்த முக்த ஸ்வபாவமுடையது-
उत्तमः पुरुषस्त्वन्यः परमात्मेत्युदाहृतः ।
यो लोकत्रयमाविश्य बिभर्त्यव्यय ईश्वरः ॥ १७ ॥
உத்தம: புருஷஸ்த் வந்ய: பரமாத் மேத் யுதா ஹ்ருத: ।
யோ லோகத்ரய மாவிச்ய பிபர்த்ய வ்யய ஈச்வர: ॥ 17 ॥
उत्तमः उत्कृष्टतमः पुरुषस्तु अन्यः अत्यन्तविलक्षणः आभ्यां परमात्मा इति परमश्च असौ देहाद्यविद्याकृतात्मभ्यः, आत्मा च सर्वभूतानां प्रत्यक्चेतनः, इत्यतः परमात्मा इति उदाहृतः उक्तः वेदान्तेषु ।
மிகவும் மேலான புருஷன் க்ஷரம், அக்ஷரம் எனப்படும் புரு ஷனைக் காட்டிலும் வேறானவன். அவனே பரமாத்மா. அந்த பர மாத்மா அவித்யையினால் உண்டான சரீராதிகளைக் காட்டிலும் மேலானது. மேலும் எல்லா ஜீவர்களுடைய அந்தராத்மாவாகவும் இருக்கிறது. ஆகையால் வேதாந்த வாக்கியங்களில் பரமாத்மா எனப்படுகிறான்.
स एव विशिष्यते
அதுவே சிறப்பாக கூறப்படுகிறது
यः लोकत्रयं भूर्भुवःस्वराख्यं स्वकीयया चैतन्यबलशक्त्या आविश्य प्रविश्य बिभर्ति स्वरूपसद्भावमात्रेण बिभर्ति धारयति ; अव्ययः न अस्य व्ययः विद्यते इति अव्ययः । कः ? ईश्वरः सर्वज्ञः नारायणाख्यः ईशनशीलः ॥ १७ ॥
நாசமற்றவரும் சர்வக்ஞருமாகிய நாராயணன் எனப்படும் எல்லோரையும் ஆக்ஞைக்கு உட்படுத்துபவர் தன்னுடைய சைதன்ய பல சாமர்த்தியத்தால் பூ: புவ, ஸ்வ: எனப்படும் மூவுலகி லும் பிரவேசித்து தன்னுடைய ஸ்வஸ்வரூப சத்பாவ மாத்திரத்தா லேயே தாங்குகிறார்.
यथाव्याख्यातस्य ईश्वरस्य ‘पुरुषोत्तमः’ इत्येतत् नाम प्रसिद्धम् । तस्य नामनिर्वचनप्रसिद्ध्या अर्थवत्त्वं नाम्नो दर्शयन् ‘निरतिशयः अहम् ईश्वरः’ इति आत्मानं दर्शयति भगवान् —
முன்பு வர்ணிக்கப்பட்ட ஈஸ்வரனுக்கு புருஷோத்தமன் என்றபெயர் பிரசித்தமாகும். அந்த பெயரை நன்றாக யுக்தியுடன் விளக்கி, அந்த பெயரின் அர்த்தமுள்ள தன்மையைக் காட்டி நான் மேலான ஈஸ்வரன் என்று பகவான் தன்னை உணர்த்துகிறார்.
यस्मात्क्षरमतीतोऽहमक्षरादपि चोत्तमः ।
अतोऽस्मि लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः ॥ १८ ॥
யஸ்மாத்க்ஷரமத்தோஅஹமக்ஷராதபி சோத்தம: ।
அதோஅஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புருஷோத்தம: ॥ 18 ॥
यस्मात् क्षरम् अतीतः अहं संसारमायावृक्षम् अश्वत्थाख्यम् अतिक्रान्तः अहम् अक्षरादपि संसारमायारूपवृक्षबीजभूतादपि च उत्तमः उत्कृष्टतमः ऊर्ध्वतमो वा, अतः ताभ्यां क्षराक्षराभ्याम् उत्तमत्वात् अस्मि लोके वेदे च प्रथितः प्रख्यातः । पुरुषोत्तमः इत्येवं मां भक्तजनाः विदुः । कवयः काव्यादिषु च इदं नाम निबध्नन्ति । पुरुषोत्तम इत्यनेनाभिधानेनाभिगृणन्ति ॥ १८ ॥
எதனால் க்ஷரம் ஆகிய அச்வத்தம் எனப்படும் சம்சார விரு க்ஷத்தை நான் கடந்தவன். அவ்வாறேஅக்ஷரமாகிய சம்சார விருக்ஷ பீஜ ஸ்வரூபத்தைக் காட்டிலும் மிகவும் மேலானவன் அல்லது அதற்கு மேலே உள்ளவன். ஆகையால் க்ஷரம், அக்ஷரத் தைக் காட்டிலும் மேலானவனாக இருக்கிறேன். ஆகையால் உல கத்திலும் வேதத்திலும் புருஷோத்தமன் என்ற நாமத்தில் கூறப்பட் டுள்ளது. பக்தர்கள் என்னை இவ்வாறு அறிகிறார்கள். கவிகள் காவியங்களில் இந்த புருஷோத்தமன் என்ற பெயரை உபயோகிக் கிறார்கள். இந்தப் பெயரால் என்னை வர்ணனை செய்கிறார்கள்.
अथ इदानीं यथानिरुक्तम् आत्मानं यो वेद, तस्य इदं फलम् उच्यते —
இனி இப்பொழுது முன்பு வர்ணிக்கப்பட்ட ஆத்மாவை எவன் அறிகிறானோ அவனுடைய பலத்தைக் கூறுகிறார்-
यो मामेवमसंमूढो जानाति पुरुषोत्तमम् ।
स सर्वविद्भजति मां सर्वभावेन भारत ॥ १९ ॥
யோ மாமேவமஸம்மூடோ ஜானாதி புருஷோத்தமம் ।
ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாவேன் பாரத ॥ 19 ॥
यः माम् ईश्वरं यथोक्तविशेषणम् एवं यथोक्तेन प्रकारेण असंमूढः संमोहवर्जितः सन् जानाति ‘अयम् अहम् अस्मि’ इति पुरुषोत्तमं सः सर्ववित् सर्वात्मना सर्वं वेत्तीति सर्वज्ञः सर्वभूतस्थं भजति मां सर्वभावेन सर्वात्मतया हे भारत ॥ १९ ॥
எவன் முன்பு கூறப்பட்ட விசேஷங்களுடைய ஈச்வரனாகிய என்னை முன்பு கூறியவாறு மோஹமற்றவனாய் இருந்துகொண்டு எல்லாம் அறிந்த சர்வக்ஞனாகிய புருஷோத்தமன் என்றும், எல்லா ஜீவர்களிடத்தும் உள்ளவன் என்றும் சர்வாத்ம பாவனை யால் என்னைத் தொழுகிறானோ. புருஷோத்தமனாகிய என்னை எவன் நான் என்று அறிகிறானோ அவன் ஸர்வவித், ஸர்வான்ம ரூபமாய் எவன் அறிகிறானோ அவன் ஸர்வக்ஞன்.
अस्मिन् अध्याये भगवत्तत्त्वज्ञानं मोक्षफलम् उक्त्वा,अथ इदानीं तत् स्तौति —
இந்த அத்யாயத்தில் பகவானுடைய தத்துவ ஞானத்தையும் மோக்ஷபலத்தையும் கூறி அதன் பின் இப்பொழுது அதை ஸ்துதி செய்கிறார்-
इति गुह्यतमं शास्त्रमिदमुक्तं मयानघ ।
एतद्बुद्ध्वा बुद्धिमान्स्यात्कृतकृत्यश्च भारत ॥ २० ॥
இதி குஹ்யதமம் சாஸ்த்ரமிதமுக்தம் மயாநக ।
ஏதத்புத்த்வா புத்திமான்ஸ்யாத்க்ருதக்ருத்யச்ச பாரத ॥ 20 ॥
इति एतत् गुह्यतमं गोप्यतमम् , अत्यन्तरहस्यं इत्येतत् । किं तत् ? शास्त्रम् ।
இது எல்லாவற்றையும் விட மிகவும் ரஹஸ்யமானது. அது யாது? அது சாஸ்திரம்.
यद्यपि गीताख्यं समस्तम् ‘शास्त्रम्’ उच्यते, तथापि अयमेव अध्यायः इह ‘शास्त्रम्’ इति उच्यते स्तुत्यर्थं प्रकरणात् । सर्वो हि गीताशास्त्रार्थः अस्मिन् अध्याये समासेन उक्तः । न केवलं गीताशास्त्रार्थ एव, किन्तु सर्वश्च वेदार्थः इह परिसमाप्तः । ‘यस्तं वेद स वेदवित्’ (भ. गी. १५ । १) ‘वेदैश्च सर्वैरहमेव वेद्यः’ (भ. गी. १५ । १५) इति च उक्तम् ।
அது சாஸ்திரம். கீதை எனப்படுவது முழுவதும் சாஸ்திரம் என்று கூறப்பட்டாலும் இந்த அத்யாயத்தை ஸ்துதி செய்வதன் பொருட்டு அந்த அத்யாயத்தை சாஸ்திரம் என்று கூறப்பட்டது. இக்கீதா சாஸ்திர விஷயமனைத்தும் இவ்வத்தியாயத்தில் சுருக்க மாகக் கூறப்பட்டுள்ளது. மற்றும் எல்லா கீதா சாஸ்திரத்தின் அர்த் தம் மட்டும் கூறப்படவில்லை. எல்லா வேதார்த்தத்தின் முடிவும் கூறப்பட்டுள்ளது. யஸ்தம் வேத ஸ வேதவித், வேதைச்ச ஸர்வை ரஹமேவ வேத்ய: எவன் அதை அறிந்தானோ அவன் வேதவித், எல்லா வேதங்களினாலும் அறியவேண்டியது நானே.
इदम् उक्तं कथितं मया हे अनघ अपाप । एतत् शास्त्रं यथादर्शितार्थं बुद्ध्वा बुद्धिमान् स्यात् भवेत् न अन्यथा कृतकृत्यश्च भारत ।
ஹே பாபமற்ற அர்ஜுனனே! என்னால் இது கூறப்பட்டுள்ளது. இந்த சாஸ்திரத்தில் எவ்வாறு உணர்த்தப்பட்டதோ அவ்வாறு அறிந்து புத்திமான் (ஞானி) ஆவாய். ஹே பாரத! இதை விட வேறு செய்யப்பட வேண்டியது ஒன்றுமில்லை. (கிருதகிருத்யத்துவம் இல்லை)
कृतं कृत्यं कर्तव्यं येन सः कृतकृत्यः ; विशिष्टजन्मप्रसूतेन ब्राह्मणेन यत् कर्तव्यं तत् सर्वं भगवत्तत्त्वे विदिते कृतं भवेत् इत्यर्थः ; न च अन्यथा कर्तव्यं परिसमाप्यते कस्यचित् इत्यभिप्रायः ।
செய்யப்படவேண்டியது எல்லாவற்றையும் செய்து முடித்தல் கிருதக்ருத்யமாகும். மேன்மையான ஜன்மத்தில் பிறந்தவனான பிராஹ்மணன் எது செய்யப்படவேண்டியதோ அது எல்லாம் பகவானது தத்துவத்தை அறிந்து செய்யப்பட்டதாகும் என்பது பொருள். வேறு விதமாக செய்யப்பட்ட கர்த்திருத்துவம் முடிவுடையதாகாது.
"சர்வம் கர்மாகிலம் பார்த்த ஞானே பரிஸமாப்யதே" = ஹே பார்த்த, எல்லா கர்மங்களும் ஞானத்தில் முடிவடைகிறது என்று கூறப்பட்டது.
‘एतद्धि जन्मसामग्र्यं ब्राह्मणस्य विशेषतः ।
प्राप्यैतत्कृतकृत्यो हि द्विजो भवति नान्यथा’
(मनु. १२ । ९३)
इति च मानवं वचनम् ।
(ஏதத்தி ஜன்மஸாமக்ரயம் ப்ராஹ்மணஸ்ய விசேஷத: ப்ராப்யைதத்க்ருத க்ருத்யோ ஹித்விஜோ பவதி நாந்யதா)
அர்த்தம்- சிறப்பான (மேலான) ப்ராஹ்மண ஜன்மமானது பூர் ணமானது. ஏனெனில் இதை அடைந்து பிராஹ்ம்மணன் க்ருதக் ருத்யன் ஆகிறான். மற்றப்ரகாரமாக அல்ல. என்பது மனுவினு டைய வசனம்.
यतः एतत् परमार्थतत्त्वं मत्तः श्रुतवान् असि, अतः कृतार्थः त्वं भारत इति ॥ २० ॥
ஹே பாரத! எந்த இந்த பரமார்த்த தத்துவமானது என்னிடமி ருந்து கேட்டவனாய் இருக்கிறாயோ அதனால் நீ க்ருதார்த்தனாய் இருக்கிறாய்.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये पञ्चदशोऽध्यायः ॥
ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே புருஷார்த்தம யோகோ நாம பஞ்சதசோத்யாய:
दैवी आसुरी राक्षसी इति प्राणिनां प्रकृतयः नवमे अध्याये सूचिताः । तासां विस्तरेण प्रदर्शनाय ‘अभयं सत्त्वसंशुद्धिः’ इत्यादिः अध्यायः आरभ्यते ।
தைவீ, ஆஸுரீ, ராக்ஷஸீ என்று பிராணிகளின் பிரக்ருதிகள் ஒன்பதாவது அத்யாயத்தில் காண்பிக்கப்பட்டது. அவைகளை விஸ்தாரமாக தெரிவிக்கும்பொருட்டு (அபயம் சத்துவஸம் சுத்தி: முதலிய ஸ்லோகங்களால் இந்த அத்யாயத்தை ஆரம்பிக்கிறார்.
तत्र संसारमोक्षाय दैवी प्रकृतिः, निबन्धाय आसुरी राक्षसी च इति दैव्याः आदानाय प्रदर्शनं क्रियते, इतरयोः परिवर्जनाय च ॥
இவை மூன்றினுள் தைவீ, ப்ரக்ருதி சம்சாரத்திலிருந்து விடுப டச்செய்கிறது. ஆஸுரீ, ராக்ஷசீ என்ற இவ்விரண்டு பிரக்ருதிகளும் பந்தப்படுத்துவதால் தைவீ பிரக்ருதியை சம்பாதிப்பதற்காகவும் மற்ற இரண்டையும் விடுவதின் பொருட்டும் அவைகளை எடுத்துக காட்டுகிறார்.
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவான் கூறுகிறார்
अभयं सत्त्वसंशुद्धिर्ज्ञानयोगव्यवस्थितिः ।
दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् ॥ १ ॥
அபயம் ஸத்வஸம்சுத்திர்க்ஞானயோகவ்யவஸ்திதி: ।
தானம் தமச்ச யஜ்ஞச்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம் ॥ 1 ॥
अभयम् अभीरुता । सत्त्वसंशुद्धिः सत्त्वस्य अन्तःकरणस्य संशुद्धिः संव्यवहारेषु परवञ्चनामायानृतादिपरिवर्जनं शुद्धसत्त्वभावेन व्यवहारः इत्यर्थः ।
அபயம் - பயமிற்றிருத்தல், சத்வசம்சுத்தி- அந்தக்கரண சுத்தி, வியவஹாரங்களில் மற்றவர்களை வஞ்சித்தல், கள்ளம் பொய் முதலிய தீய குணங்களை விட்டு சுத்த பாவனையுடன் வியவஹா ரம் செய்தலாகும்.
ज्ञानयोगव्यवस्थितिः ज्ञानं शास्त्रतः आचार्यतश्च आत्मादिपदार्थानाम् अवगमः, अवगतानाम् इन्द्रियाद्युपसंहारेण एकाग्रतया स्वात्मसंवेद्यतापादनं योगः, तयोः ज्ञानयोगयोः व्यवस्थितिः व्यवस्थानं तन्निष्ठता । एषा प्रधाना दैवी सात्त्विकी सम्पत् ।
ஞானத்திலும் யோகத்திலும் எப்பொழுதும் நிலைத்து நிற்றல். சாஸ்திரம், ஆச்சாரியார் இவர்களிடமிருந்து ஆத்மா முதலிய பதார்த்தங்களை அறிவது ஞானம். அந்த அறிந்த பதார்த்தங்களை இந்திரியம் முதலியவைகளை அடக்கி ஏகாக்கிரத்துடன் (ஒரே சிந் தனையுடன்) தன்னுடைய ஆத்மாவை பிரத்யக்ஷ அனுபவமாக்கு தல் யோகம் எனப்படும். அந்த ஞானம் யோகம் இவற்றில் ஸ்திர மாக இருந்து அதே மயமாக ஆகுதல் முக்கியமான தைவீ சாத்விகீ சம்பத் ஆகும்.
यत्र येषाम् अधिकृतानां या प्रकृतिः सम्भवति, सात्त्विकी सा उच्यते —
எங்கு எந்த அதிகாரிகளுக்கு எந்த விஷயத்தில் எந்த சாத்விகீ ப்ரக்ருதி உண்டாகிறதோ அதைக் கூறுகிறார்.
दानं यथाशक्ति संविभागः अन्नादीनाम् । दमश्च बाह्यकरणानाम् उपशमः ; अन्तःकरणस्य उपशमं शान्तिं वक्ष्यति ।
தானம் என்பது தனது சக்திக்கு ஏற்றவாறு அன்னம் முதலியவைகளை பிறருக்குக் கொடுத்தல். வெளி இந்திரியங் களின் அடக்கம் தமம். அந்தக்கரணத்தின் அடக்கம் உபசமம், என்றும் சாந்தி என்றும் கூறப்போகிறார்.
यज्ञश्च श्रौतः अग्निहोत्रादिः । स्मार्तश्च देवयज्ञादिः ।
யக்ஞம் என்பது சுருதிகளில் கூறப்பட்டுள்ள அக்னிஹோத்ரா திகள், தேவயக்ஞம் முதலியவைகள் ஸ்மிருதியில் கூறப்பட்டவை.
स्वाध्यायः ऋग्वेदाद्यध्ययनम् अदृष्टार्थम् ।
ரிக் முதலிய வேதங்களை ஓதுதல் மறுமையின் பொருட்டா கும், அது ஸ்வாத்யாயம் எனப்படும்.
तपः वक्ष्यमाणं शारीरादि । आर्जवम् ऋजुत्वं सर्वदा ॥ १ ॥
தபஸ் என்பது சரீரத்தைப் பற்றியது முதலாக கூறப்படுகிறது. ஆர்ஜவம் என்பது எப்பொழுதும் நேர்மையுடன் இருத்தலாகும்.
किञ्च —
மேலும்-
अहिंसा सत्यमक्रोधस्त्यागः शान्तिरपैशुनम् ।
दया भूतेष्वलोलुप्त्वं मार्दवं ह्रीरचापलम् ॥ २ ॥
அஹிம்ஸா ஸத்யமக்ரோதஸ்த்யாக: சாந்திரபைசுனம் ।
தயா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம் ॥ 2 ॥
अहिंसा अहिंसनं प्राणिनां पीडावर्जनम् । सत्यम् अप्रियानृतवर्जितं यथाभूतार्थवचनम् ।
அஹிம்சை- பிராணிகளை இம்சை படுத்தாதிருத்தல் அஹிம் சையாகும்.
ஸத்யம் - பிரியமற்றதையும், பொய்யையும் நீக்கி உள்ளதை உள்ளபடி கூறுதல் சத்யமாகும்.
अक्रोधः परैः आक्रुष्टस्य अभिहतस्य वा प्राप्तस्य क्रोधस्य उपशमनम् । त्यागः संन्यासः, पूर्वं दानस्य उक्तत्वात् ।
அக்ரோத:- பிறர் வைதலாலும், அடித்தலாலும் ஏற்பட்ட கோபத்தை அடக்குதல் கோபமின்மையாகும்.
த்யாக:- முன்பு தானமாகக் கூறப்பட்டதால், இங்கு சந்நியா சமே தியாகம் என்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
शान्तिः अन्तःकरणस्य उपशमः । अपैशुनं अपिशुनता ; परस्मै पररन्ध्रप्रकटीकरणं पैशुनम् , तदभावः अपैशुनम् ।
சாந்தி-அந்தக்கரண அடக்கம் சாந்தி எனப்படும்.
அபைசுனம்- மற்றவர்களிடம் மற்றவர்களைக் குறித்து குறைகூறுதல் புறங்கூறுதலாகும். அது அற்றது.
दया कृपा भूतेषु दुःखितेषु । अलोलुप्त्वम् इन्द्रियाणां विषयसंनिधौ अविक्रिया । मार्दवं मृदुता अक्रौर्यम् ।
தயா- கிருபை (தயா) எல்லா துக்கமுடைய ஜீவர்களிடத்தும் கருணை. அலோலுப்த்வம்- விஷயங்களிடத்து இந்திரியங்க ளுக்கு சம்பந்தம் இருந்தாலும் விகாரமற்றிருத்தல் அவா இன்மை. மார்தவம் - மென்மையாய் இருத்தல் அதாவது கோபமற்றிருத்தல்.
ह्रीः लज्जा । अचापलम् असति प्रयोजने वाक्पाणिपादादीनाम् अव्यापारयितृत्वम् ॥ २ ॥
லஜ்ஜை, வெட்கம்.
அசாபலம் - பிரயோஜனமற்றவைகளில் வாக்கு, பாணி பாதம் முதலிய இந்திரியங்கள் செயல்படுத்தாமலிருப்பது, செயலற்றிருப்பது.
किञ्च —
மேலும்-
तेजः क्षमा धृतिः शौचमद्रोहो नातिमानिता ।
भवन्ति सम्पदं दैवीमभिजातस्य भारत ॥ ३ ॥
தேஜ: க்ஷமா த்ருதி: சௌசமத்ரோஹோ நாதிமானிதா ।
பவந்தி ஸம்பதம் தைவீமபிஜாதஸ்ய பாரத ॥ 3 ॥
तेजः प्रागल्भ्यं न त्वग्गता दीप्तिः । क्षमा आक्रुष्टस्य ताडितस्य वा अन्तर्विक्रियानुत्पत्तिः, उत्पन्नायां विक्रियायाम् उपशमनम् अक्रोधः इति अवोचाम । इत्थं क्षमायाः अक्रोधस्य च विशेषः ।
க்ஷமா - பொறுமை, பிறர் வைதாலும், அடித்தாலும் அந்தக்க ரண விகாரமற்றிருத்தல், விகாரம் ஏற்பட்டால் அதை அடக்குதல் கோபம் அற்றது - அக்ரோத: என்று கூறினோம், இவ்வாறு பொறு மைக்கும், அக்ரோதத்திற்கும் (கோபமற்றதன்மைக்கும்) வித்தியா சம் (பேதம்) உள்ளது.
धृतिः देहेन्द्रियेषु अवसादं प्राप्तेषु तस्य प्रतिषेधकः अन्तःकरणवृत्तिविशेषः, येन उत्तम्भितानि करणानि देहश्च न अवसीदन्ति ।
த்ருதி – தைரியம், தேஹம் இந்திரியங்கள் தளர்வடையும்பொ ழுது அதை தடுத்தல். எந்த அந்தக்கரண விருத்தி விசேஷத்தி னால் இந்திரியங்களும், தேஹமும் உற்சாகமடைந்து தளர்வு அடைவதில்லையோ அது த்ருதிதைரியம்)
शौचं द्विविधं मृज्जलकृतं बाह्यम् आभ्यन्तरं च मनोबुद्ध्योः नैर्मल्यं मायारागादिकालुष्याभावः ; एवं द्विविधं शौचम् ।
சௌசம் - பரிசுத்தம் என்பது இருவகை. ஒன்று மண், ஜலம் இவைகளைக் கொண்டு வெளியில் உள்ள சுத்தம். மற்றொன்று மாயா, ராகம் முதலியவைகளால் கலங்கப்படாத மனம், புத்திகளுடைய ஆந்திர சௌசமாகும். இவ்வாறு பரிசுத்தம் இருவகையாகும்.
अद्रोहः परजिघांसाभावः अहिंसनम् ।
அத்ரோஹ:- துரோகம் அற்றிருத்தல்- மற்றவர்களை துன்பு றுத்துவதில் இச்சை அற்றிருத்தல், ஹிம்சை செய்யாதிருத்தல்.
नातिमानिता अत्यर्थं मानः अतिमानः, सः यस्य विद्यते सः अतिमानी, तद्भावः अतिमानिता, तदभावः नातिमानिता आत्मनः पूज्यतातिशयभावनाभाव इत्यर्थः ।
செருக்கின்மை - பிறர் தன்னை மிகவும் மதிக்க வேண்டும் என்று எவனுக்கிறதோ அவன் அதிமானி, அதனுடைய பாவம் அதிமானிதா. அது இல்லாதது ஞாதிமானிதா- தன்னைப் பிறர் போற்றவேண்டும் என்ற நினைப்பு அற்றிருத்தல் என்பது பொருள்.
भवन्ति अभयादीनि एतदन्तानि सम्पदं अभिजातस्य । किंविशिष्टां सम्पदम् ? दैवीं देवानां या सम्पत् ताम् अभिलक्ष्य जातस्य देवविभूत्यर्हस्य भाविकल्याणस्य इत्यर्थः, हे भारत ॥ ३ ॥
ஹே! பாரத! அபயம் முதல் இதுவரையிலும் கூறப்பட்ட எல்லா லக்ஷணங்களும் சம்பத்துடன் கூடிய புருஷனுக்கு உண்டா கும். எப்படிப்பட்ட சம்பத் உடையவனுக்கு ஏற்படும் எனில் எவன் தேவதைகளின் விபூதிகளை அடைவதற்கு யோக்கியனாகவும், இனி வரும் காலத்தில் எவனுக்கு கல்யாணம் (மங்களம்) நன்மை உண்டாவதில் நிச்சயம் ஏற்பட்டுள்ளதோ அந்த புருஷனுக்கு அந்த லக்ஷணங்கள் உண்டாகும் என்பது பொருள்.
अथ इदानीं आसुरी सम्पत् उच्यते —
இனி இப்பொழுது ஆஸுரி சம்பத் கூறப்போகிறார்-
दम्भो दर्पोऽतिमानश्च क्रोधः पारुष्यमेव च ।
अज्ञानं चाभिजातस्य पार्थ सम्पदमासुरीम् ॥ ४ ॥
தம்போ தர்போஅதிமானச்ச க்ரோத: பாருஷ்யமேவ ச ।
அஜ்ஞானம் சாபிஜாதஸ்ய பார்த ஸம்பதமாஸுரீம் ॥ 4 ॥
दम्भः धर्मध्वजित्वम् । दर्पः विद्याधनस्वजनादिनिमित्तः उत्सेकः । अतिमानः पूर्वोक्तः । क्रोधश्च । पारुष्यमेव च परुषवचनम् — यथा काणम् ‘चक्षुष्मान्’ विरूपम् ‘रूपवान्’ हीनाभिजनम् ‘उत्तमाभिजनः’ इत्यादि ।
தம்பம்-நல்ல குணங்கள், நற்செயல்கள் உள்ளவன் போல் நடித்தல்.
தர்ப்பம்- செருக்கு- செல்வத்தினாலும் சொந்த பந்தங்கள் முத லியவற்றினால் ஏற்படும் கர்வம் அதிமானிதா, க்ரோதம் (முன்பே கூறப்பட்டது)
கடும் சொற்கள்- எவ்வாறு கண் இல்லாதவனை கண்கள் உள் ளவன் என்றும், அழகற்றவனை அழகானவன் என்றும், கீழான வரை மேன்மையானவர்கள் என்று கூறும் கடும் சொற்கள். (கேலி யாக பேசுதல்)
अज्ञानं च अविवेकज्ञानं कर्तव्याकर्तव्यादिविषयमिथ्याप्रत्ययः । अभिजातस्य पार्थ । किम् अभिजातस्येति, आह — सम्पदम् आसुरीम् असुराणां सम्पत् आसुरी ताम् अभिजातस्य इत्यर्थः ॥ ४ ॥
அக்ஞானம் செய்ய வேண்டிய, செய்யக்கூடாத முதலிய விஷயங்களில் உள்ள மித்யா ஞானமே அவிவேகஞானம், அதுவே அக்ஞானமாகும்.
ஹே பார்த்த, இவைகளுடன் பிறந்தவனுக்கு என்றால் என்ன வெனில் கூறுகிறார்- ஆஸுரீ சம்பத்துடன் பிறந்தவனுக்கு முற் கூறிய லக்ஷணங்கள் அடையாளங்கள் ஆகும் என்பது பொருள்.
अनयोः सम्पदोः कार्यम् उच्यते —
இவ்விரு சம்பத்துக்களுடைய காரியம் கூறுகிறார்-
दैवी सम्पद्विमोक्षाय निबन्धायासुरी मता ।
मा शुचः सम्पदं दैवीमभिजातोऽसि पाण्डव ॥ ५ ॥
தைவீஸம்பத்விமோக்ஷாய நிபந்தாயாஸுரீ மதா ।
மா சுச: ஸம்பதம் தைவீமபிஜாதோஅஸி பாண்டவ ॥ 5 ॥
दैवी सम्पत् या, सा विमोक्षाय संसारबन्धनात् । निबन्धाय नियतः बन्धः निबन्धः तदर्थम् आसुरी सम्पत् मता अभिप्रेता । तथा राक्षसी च ।
எந்த தைவீ சம்பத் உள்ளதோ அது சம்சாரபந்தத்திலிருந்து விடுபடுவதற்காகவாகும். அவ்வாறேஆஸுரீ சம்பத்தும் ராக்ஷசீ சம்பத்தும் சந்தேஹமில்லாமல் பந்தத்திற்கு ஹேதுவாகிறது. நிச்சய மாக பந்தப்படுத்தும் என்பதற்காக நிபந்த: எனப்படுகிறது.
तत्र एवम् उक्ते सति अर्जुनस्य अन्तर्गतं भावम् ‘किम् अहम् आसुरसम्पद्युक्तः ? किं वा दैवसम्पद्युक्तः ? ’ इत्येवम् आलोचनारूपम् आलक्ष्य आह भगवान् —
இவ்வாறு கூறப்பட்டபொழுது அர்ஜுனனுடைய அந்தக்கர ணத்தில் உள்ள பாவம் என்ன? நான் ஆஸுர சம்பத் உடைய வனா? அல்லது தெய்வ சம்பத்துடையவனா என்று ஆலோசிப் பதை அறிந்து பகவான் கூறலானார்.
मा शुचः शोकं मा कार्षीः । सम्पदं दैवीम् अभिजातः असि अभिलक्ष्य जातोऽसि, भाविकल्याणः त्वम् असि इत्यर्थः, हे पाण्डव ॥ ५ ॥
ஹே பாண்டவ! சோகத்தை அடையாதே. நீ தைவீக சம்பத்து டன் பிறந்திருக்கிறாய் அவ்வாறே நீ வரும் காலத்தில் மங்களங் களை அடைவாய் என்பது பொருள்.
द्वौ भूतसर्गौ लोकेऽस्मिन्दैव आसुर एव च ।
दैवो विस्तरशः प्रोक्त आसुरं पार्थ मे शृणु ॥ ६ ॥
த்வௌ பூதஸர்கௌ லோகேஅஸ்மின்தைவ ஆஸுர ஏவ ச ।
தைவோ விஸ்தரச: ப்ரோக்த ஆஸுரம் பார்த மே ச்ருணு ॥ 6 ॥
द्वौ द्विसङ्ख्याकौ भूतसर्गौ भूतानां मनुष्याणां सर्गौ सृष्टी भूतसर्गौ सृज्येतेति सर्गौ भूतान्येव सृज्यमानानि दैवासुरसम्पद्द्वययुक्तानि इति द्वौ भूतसर्गौ इति उच्यते ।
இந்த சம்சாரத்தில் மனிதர்களுடைய சிருஷ்ட்டி இருவகையா கும். எது உண்டாக்கப்பட்டதோ அது சிருஷ்ட்டி, ஆகையால் தைவசம்பத்துடன், அசுர சம்பத்துடன் எவை உண்டாக்கப் பட்டதோ அந்த பிராணிகள் இங்கு இரண்டு பூத ஸ்ருஷ்ட்டிகள் எனப்படுகிறது.
‘द्वया ह वै प्राजापत्या देवाश्चासुराश्च’ (बृ. उ. १ । ३ । १) इति श्रुतेः । लोके अस्मिन् , संसारे इत्यर्थः, सर्वेषां द्वैविध्योपपत्तेः ।
(த்வயா ஹ ப்ரஜாபத்யா தேவாச்சாசுராச்ச = பிரஜாபதியால் இருவகையாக தேவர்கள், அசுரர்கள் என்று) இவ்வாறு சுருதியி லும் இவ்விஷயம் கூறப்பட்டுள்ளது. இந்த சம்சாரத்தில் எல்லா பிராணிகளும் இருவகையேயாகும்.
कौ तौ भूतसर्गौ इति, उच्यते — प्रकृतावेव दैव आसुर एव च ।
பூத ஸ்ருஷ்ட்டியில் எந்த இருவர் எனில் ப்ரகரணத்தில் கூறப் பட்ட தைவ, ஆசுரமுமே.
उक्तयोरेव पुनः अनुवादे प्रयोजनम् आह —
கூறப்பட்ட இவ்விரண்டையும் மறுபடியும் கூறியதின் பிரயோ ஜனம் என்ன என்பதைக் கூறுகிறார்-
दैवः भूतसर्गः ‘अभयं सत्त्वसंशुद्धिः’ (भ. गी. १६ । १) इत्यादिना विस्तरशः विस्तरप्रकारैः प्रोक्तः कथितः, न तु आसुरः विस्तरशः ; अतः तत्परिवर्जनार्थम् आसुरं पार्थ, मे मम वचनात् उच्यमानं विस्तरशः शृणु अवधारय ॥ ६ ॥
தைவ பூத சிருஷ்ட்டியானது அபயம் சத்துவசுத்தி: முதலிய ஸ்லோகங்களால் விஸ்தாரமாகக் கூறப்பட்டது. ஆனால் ஆஸுர பூத சிருஷ்ட்டியை விஸ்தாரமாக கூறப்படவில்லை. ஆகையால் அந்த ஆஸுர சம்பத்தை நிவர்த்திப்பதற்காக விஸ்தாரமாகக் கூறப்படுவதை ஹே பார்த்த! கேள். (நன்றாக புரிந்துகொள்)
आ अध्यायपरिसमाप्तेः आसुरी सम्पत् प्राणिविशेषणत्वेन प्रदर्श्यते, प्रत्यक्षीकरणेन च शक्यते तस्याः परिवर्जनं कर्तुमिति —
இந்த அத்யாயம் முடியும் வரையிலும் சில பிராணிகளுடைய விசேஷணவாயிலாக ஆஸுரீ சம்பத்தானது காட்டப்படுகிறது. ஏனெனில் அதை நன்றாக அறிந்தால் அல்லவா அதை நீக்க முடியும் என்று -
प्रवृत्तिं च निवृत्तिं च जना न विदुरासुराः ।
न शौचं नापि चाचारो न सत्यं तेषु विद्यते ॥ ७ ॥
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜனா ந விதுராஸுரா: ।
ந சௌசம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்யதே ॥ 7 ॥
प्रवृत्तिं च प्रवर्तनं यस्मिन् पुरुषार्थसाधने कर्तव्ये प्रवृत्तिः ताम् , निवृत्तिं च एतद्विपरीतां यस्मात् अनर्थहेतोः निवर्तितव्यं सा निवृत्तिः तां च, जनाः आसुराः न विदुः न जानन्ति ।
ஆஸுரத்தன்மையுடைய புருஷர்கள் எந்த புருஷார்த்த சாத னத்தின் பிரவிருத்திக்க வேண்டுமோ அதையும் அதற்கு மாறான அனர்த்தத்திற்குக் காரணமான கர்மங்களிலிருந்து எவர்களுக்கு விடுபட வேண்டுமோ அதையும் அறியமாட்டார்கள்.
न केवलं प्रवृत्तिनिवृत्ती एव ते न विदुः, न शौचं नापि च आचारः न सत्यं तेषु विद्यते ; अशौचाः अनाचाराः मायाविनः अनृतवादिनो हि आसुराः ॥ ७ ॥
அவர்கள் அசுர பிரவிருத்தியிலிருந்து விலகுவதற்கு அறியா தவர்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு பரிசுத்தமோ, நல்ல நடத்தை யோ, உண்மையோ அவர்களிடத்தில் கிடையாது. அந்த ஆஸுர ஜனங்கள் பரிசுத்தமற்றவர்கள், ஒழுக்கமற்றவர்கள், கபடமுடைய வர்கள், பொய் பேசுபவர்கள்.
किञ्च —
மேலும்
असत्यमप्रतिष्ठं ते जगदाहुरनीश्वरम् ।
अपरस्परसम्भूतं किमन्यत्कामहैतुकम् ॥ ८ ॥
அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுரநீச்வரம் ।
அபரஸ்பரஸம்பூதம் கிமன்யத் காமஹைதுகம் ॥ 8 ॥
असत्यं यथा वयम् अनृतप्रायाः तथा इदं जगत् सर्वम् असत्यम् , अप्रतिष्ठं च न अस्य धर्माधर्मौ प्रतिष्ठा अतः अप्रतिष्ठं च, इति ते आसुराः जनाः जगत् आहुः, अनीश्वरम् न च धर्माधर्मसव्यपेक्षकः अस्य शासिता ईश्वरः विद्यते इति अतः अनीश्वरं जगत् आहुः ।
எவ்வாறு நாம் பொய்யாக உள்ளோமோ அவ்வாறேஇந்த ஜகத் முழுவதும் பொய்யானது. இதற்கு தர்மம், அதர்மம் என்ப வைகள் ஆதாரமல்ல. ஆகையால் இது ஆதாரமற்றது. அப்பிர திஷ்ட்டம்.என்று அந்த அசுரஸ்வபாவமுடைய ஜனங்கள் கூறுகி றார்கள். அவ்வாறே அநீச்வரன். புண்ய, பாபங்களை அபேக்ஷித்து அதற்கேற்றவாறு கட்டளையிடும் தலைவன் ஒருவனும் இல்லை ஆகையால் ஜகத்திற்கு ஈச்வரன் இல்லை என்று கூறுவர்.
किञ्च, अपरस्परसम्भूतं कामप्रयुक्तयोः स्त्रीपुरुषयोः अन्योन्यसंयोगात् जगत् सर्वं सम्भूतम् । किमन्यत् कामहैतुकं कामहेतुकमेव कामहैतुकम् । किमन्यत् जगतः कारणम् ? न किञ्चित् अदृष्टं धर्माधर्मादि कारणान्तरं विद्यते जगतः ‘काम एव प्राणिनां कारणम्’ इति लोकायतिकदृष्टिः इयम् ॥ ८ ॥
காமத்தினால் ஏவப்பட்டு ஸ்த்ரீ, புருஷர்களின் பரஸ்பர சேர்க் கையினால் இந்த ஜகத் முழுவதும் உண்டாயிற்று.
(காமஹேதுகம் ஏவ காமஹைதுகம்)- ஜகத் உற்பத்திக்கு காமமே காரணம். அதைத் தவிறவேறு ஒரு காரணமாகிய புண்ணிய பாபங்கள் அல்ல. ஜகத்திற்குக் காமமே (ஜீவர்களுக்கு) காரணம் என்று லோகாயதர்களின் மதமாகும். (கருத்தாகும், திருஷ்ட்டியாகும்)
एतां दृष्टिमवष्टभ्य नष्टात्मानोऽल्पबुद्धयः ।
प्रभवन्त्युग्रकर्माणः क्षयाय जगतोऽहिताः ॥ ९ ॥
ஏதாம் த்ருஷ்டிமவஷ்டப்ய நஷ்டாத்மானோஅல்பபுத்தய: ।
ப்ரபவந்த்யுக்ரகர்மாண: க்ஷயாய ஜகதோஅஹிதா ॥ 9 ॥
एतां दृष्टिम् अवष्टभ्य आश्रित्य नष्टात्मानः नष्टस्वभावाः विभ्रष्टपरलोकसाधनाः अल्पबुद्धयः विषयविषया अल्पैव बुद्धिः येषां ते अल्पबुद्धयः प्रभवन्ति उद्भवन्ति उग्रकर्माणः क्रूरकर्माणः हिंसात्मकाः । क्षयाय जगतः प्रभवन्ति इति सम्बन्धः । जगतः अहिताः, शत्रवः इत्यर्थः ॥ ९ ॥
இந்த திருஷ்டியை அவலம்பித்தவர்கள் தன்னிலையிலிருந்து நழுவியர்கள் (நஷ்ட்ட ஸ்வபாவம் உடையவர்கள்) பரலோகத்திற் கான சாதனைகளை கைவிட்டவர்கள். அல்பமான போக விஷயங்களில் புத்தியை செலுத்தும் அல்ப புத்தி உடையவர்கள். உலகத்தை அழிக்கும் ஹிம்சையுடன் கூடிய குரூர கர்மங்களில் ஈடுபடுவார்கள் என்பது சம்பந்தப்படுத்த வேண்டும். அவர்கள் உலகத்தின் (ஜகத்தின்) சத்ருக்கள் என்பது பொருள்.
ते च —
அவ்வாறே அவர்கள்
काममाश्रित्य दुष्पूरं दम्भमानमदान्विताः ।
मोहाद्गृहीत्वासद्ग्राहान्प्रवर्तन्तेऽशुचिव्रताः ॥ १० ॥
காமமாச்ரித்ய துஷ்பூரம் தம்பமானமதாந்விதா: ।
மோஹாத்க்ருஹீத்வாஸத்க்ராஹாந்ப்ரவர்தந்தே அசுசிவ்ரதா: ॥ 10 ॥
कामम् इच्छाविशेषम् आश्रित्य अवष्टभ्य दुष्पूरम् अशक्यपूरणं दम्भमानमदान्विताः दम्भश्च मानश्च मदश्च दम्भमानमदाः तैः अन्विताः दम्भमानमदान्विताः मोहात् अविवेकतः गृहीत्वा उपादाय असद्ग्राहान् अशुभनिश्चयान् प्रवर्तन्ते लोके अशुचिव्रताः अशुचीनि व्रतानि येषां ते अशुचिव्रताः ॥ १० ॥
நிரப்பமுடியாத இச்சையின் விசேஷமே காமம். அதை ஆச்ரயித்து தம்பம், (செருக்கு) மானம், மதம் இவைகளை உடையவராய் மோஹத்தினால் சுபமற்றதீய கொள்கைகளை ஆச்ரயித்து சுபமற்ற(தீய) வழிகளையே விரதமாகக் கொண்டு சம்சாரத்தில் பிரவிர்த்திக்கிறார்கள். (உழலுகிறார்கள்).
किञ्च —
மேலும்
चिन्तामपरिमेयां च प्रलयान्तामुपाश्रिताः ।
कामोपभोगपरमा एतावदिति निश्चिताः ॥ ११ ॥
சிந்தாமபரிமேயாம் ச ப்ரலயாந்தாமுபாச்ரிதா: ।
காமோப்போகபரமா ஏதாவதிதி நிச்சிதா: ॥ 11 ॥
चिन्ताम् अपरिमेयां च, न परिमातुं शक्यते यस्याः चिन्तायाः इयत्ता सा अपरिमेया, ताम् अपरिमेयाम् , प्रलयान्तां मरणान्ताम् उपाश्रिताः, सदा चिन्तापराः इत्यर्थः । कामोपभोगपरमाः, काम्यन्ते इति कामाः विषयाः शब्दादयः तदुपभोगपरमाः ‘अयमेव परमः पुरुषार्थः यः कामोपभोगः’ इत्येवं निश्चितात्मानः, एतावत् इति निश्चिताः ॥ ११ ॥
மரணத்தையே எல்லையாகக் கொண்ட அளவிடமுடியாத கவலையைக் கொண்டவர்கள் அதாவது எப்பொழுதும் கவலையு டன் இருப்பவர்கள் என்பது பொருள். காமனைகளாகிய சப்தாதி விஷயங்களிலேயே போகித்துக்கொண்டு (அவலம்பித்துக் கொண்டு) இருப்பார்கள். அந்த காமபோகங்களையே பரம புருஷார்த்தம் என்று நிச்சயித்தவர்கள்.
आशापाशशतैर्बद्धाः कामक्रोधपरायणाः ।
ईहन्ते कामभोगार्थमन्यायेनार्थसञ्चयान् ॥ १२ ॥
ஆசாபாசசதைர்பத்தா: காமக்ரோதபராயணா: ।
ஈஹந்தே காமபோகார்தமந்யாயேனார்தஸஞ்சயான் ॥ 12 ॥
आशापाशशतैः आशा एव पाशाः तच्छतैः बद्धाः नियन्त्रिताः सन्तः सर्वतः आकृष्यमाणाः, कामक्रोधपरायणाः कामक्रोधौ परम् अयनम् आश्रयः येषां ते कामक्रोधपरायणाः, ईहन्ते चेष्टन्ते कामभोगार्थं कामभोगप्रयोजनाय न धर्मार्थम् , अन्यायेन परस्वापहरणादिना इत्यर्थः ; किम् ? अर्थसञ्चयान् अर्थप्रचयान् ॥ १२ ॥
நூற்றுக்கணக்கான ஆசை எனப்படும் பாசக்கயிற்றினால் கட் டப்பட்டவர்களாகி நாலாபக்கமும் இழுக்கப்பட்டவர்களாகி காம, க்ரோதமே மேலான மார்க்கம் என்று நினைக்கிறார்களோ அவர் கள் காமக்ரோதம் உடைய புருஷர்கள். அவர்கள் தர்மத்தின் பொருட்டல்லாமல் காமனை வஸ்துக்களை அனுபவிப்பதில் நியா யமற்று பிறருடைய பொருள்களை அபஹரித்தல் முதலிய பாப செயல்களால் செல்வத்தைப் பெருக்குகின்றார்கள் என்பது பொருள்.
ईदृशश्च तेषाम् अभिप्रायः —
அவர்களுடைய அபிப்பிராயம் இவ்வாறானது-
इदमद्य मया लब्धमिदं प्राप्स्ये मनोरथम् ।
इदमस्तीदमपि मे भविष्यति पुनर्धनम् ॥ १३ ॥
இதமத்ய மயா லப்தமிதம் ப்ராப்ஸ்யே மநோரதம் ।
இதமஸ்தீதமபி மே பவிஷ்யதி புனர்தனம் ॥ 13 ॥
इदं द्रव्यं अद्य इदानीं मया लब्धम् । इदं च अन्यत् प्राप्स्ये मनोरथं मनस्तुष्टिकरम् । इदं च अस्ति इदमपि मे भविष्यति आगामिनि संवत्सरे पुनः धनं तेन अहं धनी विख्यातः भविष्यामि इति ॥ १३ ॥
இந்த செல்வம் இப்பொழுது என்னால் பெறப்பட்டது. மன திற்கு இன்பம் தரும் பொருளைப் பெறுவேன். இது எனக்கு இருக் கிறது. வரும் வருடத்தில் மேலும் செல்வம் எனக்கு கிடைக்கும். அதனால் நான் செல்வந்தன் என்று புகழ்பெறுவேன்.
असौ मया हतः शत्रुर्हनिष्ये चापरानपि ।
ईश्वरोऽहमहं भोगी सिद्धोऽहं बलवान्सुखी ॥ १४ ॥
அஸௌ மயா ஹத: சத்ருர்ஹநிஷ்யே சாபராநபி ।
ஈச்வரோஅஹமஹம் போகீ ஸித்தோஅஹம் பலவான் ஸுகீ ॥ 14 ॥
असौ देवदत्तनामा मया हतः दुर्जयः शत्रुः । हनिष्ये च अपरान् अन्यान् वराकान् अपि । किम् एते करिष्यन्ति तपस्विनः ; सर्वथापि नास्ति मत्तुल्यः । कथम् ? ईश्वरः अहम् , अहं भोगी । सर्वप्रकारेण च सिद्धः अहं सम्पन्नः पुत्रैः नप्तृभिः, न केवलं मानुषः, बलवान् सुखी च अहमेव ; अन्ये तु भूमिभारायावतीर्णाः ॥ १४ ॥
இந்த தேவதத்தன் என்றபெயருடையவன் என்னால் கொல்லப்பட்டான். வெல்லுவதற்கு அரிய விரோதியை நான் கொல்லுவேன். அவ்வாறே மற்றபகைவரையும் வெல்வேன். மிக்க பலம் குறைந்தவர்களாகிய தபஸ்விகளால் என்ன செய்ய முடியும்? எவ்வகையாலும் எனக்கு சமானமாக எவரும் இல்லை. நான்தான் ஈச்வரன், நான் போகி. எல்லாப் பிரகாரமாகவும் புத்திரர்கள், பேரன்மார்கள், சொந்தக்காரர்கள் என்று எல்லோரையும் அடையப் பெற்றவனாக இருக்கிறேன். நான் மனிதன். அது மட் டுமல்ல, பலவானாகவும் சுகியாகவும் இருக்கிறேன். மற்றவர்கள் பூமியின் பாரத்தின் பொருட்டு பிறந்தவர்கள்.
आढ्योऽभिजनवानस्मि कोऽन्योऽस्ति सदृशो मया ।
यक्ष्ये दास्यामि मोदिष्य इत्यज्ञानविमोहिताः ॥ १५ ॥
ஆட்யோஅபிஜநவானஸ்மி கோஅன்யோஅஸ்தி ஸத் ருசோ மயா ।
யக்ஷ்யே தாஸ்யாமி மோதிஷ்ய இத்யஞானவிமோஹிதா: ॥ 15 ॥
आढ्यः धनेन, अभिजनवान् सप्तपुरुषं श्रोत्रियत्वादिसम्पन्नः — तेनापि न मम तुल्यः अस्ति कश्चित् । कः अन्यः अस्ति सदृशः तुल्यः मया ? किञ्च, यक्ष्ये यागेनापि अन्यान् अभिभविष्यामि, दास्यामि नटादिभ्यः, मोदिष्ये हर्षं च अतिशयं प्राप्स्यामि, इति एवम् अज्ञानविमोहिताः अज्ञानेन विमोहिताः विविधम् अविवेकभावम् आपन्नाः ॥ १५ ॥
நான் மிகுந்த தனம் உடையவன். உயர்ந்த குலத்தினன். ஏழு தலைமுறையாக வேதங்களைக் கற்றவன். அதாவது ஸ்ரோத்திரி யன். ஆகையாலும் எனக்கு ஒப்பானவன் ஒருவரும் இல்லை. எவன் இருக்கிறான். எனக்கு சமானமானவன் ஒருவரும் இல்லை.யக்ஞம் செய்து மற்றவர்களை அவமானப்படுத்துவேன். நடனம் செய்பவர்கள் முதலியோருக்கு செல்வம் அளித்து சந்தோஷப்ப டுத்துவேன். அதனால் நானும் அளவில்லாத சந்தோஷம் அடை வேன் என்று இவ்வாறு அக்ஞானத்தினால் மோஹமடைந்து பல விதமான அவிவேகத்தன்மையை அடைவார்கள்.
अनेकचित्तविभ्रान्ता मोहजालसमावृताः ।
प्रसक्ताः कामभोगेषु पतन्ति नरकेऽशुचौ ॥ १६ ॥
அநேகசித்தவிப்ராந்தா மோஹஜாலஸமாவ்ருதா: ।
ப்ரஸக்தா: காமபோகேஷு பதந்தி நரகேஅசுசௌ ॥ 16 ॥
अनेकचित्तविभ्रान्ताः उक्तप्रकारैः अनेकैः चित्तैः विविधं भ्रान्ताः अनेकचित्तविभ्रान्ताः, मोहजालसमावृताः मोहः अविवेकः अज्ञानं तदेव जालमिव आवरणात्मकत्वात् , तेन समावृताः । प्रसक्ताः कामभोगेषु तत्रैव निषण्णाः सन्तः तेन उपचितकल्मषाः पतन्ति नरके अशुचौ वैतरण्यादौ ॥ १६ ॥
மேலே கூறப்பட்ட அநேக விசாரங்களினால் சித்த பிராந்தி உடையவர்களாகி மோஹ ரூப ஜாலம் என்றால் அவிவேகம் உடையவர்கள். அவிவேகமே மோஹமாகும். அந்த மோஹம், ஜாலம் போல் ஆவரணாத்மகமாய் இருப்பதால் அதனால் நன்றாக மறைக்கப்பட்டு காமபோகங்களில் ஆசக்தர்களாய் இருந்து கொண்டு அதனால் பாபங்களை சம்பாதித்து வைதரணி முதலிய அசுத்தமான நரகங்களில் விழுகிறார்கள்.
आत्मसम्भाविताः स्तब्धा धनमानमदान्विताः ।
यजन्ते नामयज्ञैस्ते दम्भेनाविधिपूर्वकम् ॥ १७ ॥
ஆத்மஸம்பாவிதா: ஸ்தப்தா தனமானமதாந்விதா ।
யஜந்தே நாமயக்ஞைஸ்தே தம்பேநாவிதிபூர்வகம் ॥ 17 ॥
आत्मसम्भाविताः सर्वगुणविशिष्टतया आत्मनैव सम्भाविताः आत्मसम्भाविताः, न साधुभिः । स्तब्धाः अप्रणतात्मानः । धनमानमदान्विताः धननिमित्तः मानः मदश्च, ताभ्यां धनमानमदाभ्याम् अन्विताः । यजन्ते नामयज्ञैः नाममात्रैः यज्ञैः ते दम्भेन धर्मध्वजितया अविधिपूर्वकं विधिविहिताङ्गेतिकर्तव्यतारहितम् ॥ १७ ॥
எவர்கள் தனக்குத்தானே எல்லா நற்குணங்களும் பொருந்தி யதாக நினைத்துக்கொண்டு தன்னைப் பெருமையாக நினைத்துக் கொள்கிறார்களோ சாது புருஷர்கள் அவர்களை மேன்மையான வர்களாக (சிரேஷ்டர்களாக) கருதுவதில்லை, விநயம் அற்றவர் கள், தனத்தினாலும் அதனால் ஏற்படும் மதத்தினாலும் கூடியவர்க ளாகி அதர்ம மார்க்கத்தில், அவிதி பூர்வகமாக விகித அங்கத்தின் செய்யப்படவேண்டிய ஞானம் அற்று பெயருக்காக மாத்திரமே யக்ஞம் செய்கிறார்கள்.
अहङ्कारं बलं दर्पं कामं क्रोधं च संश्रिताः ।
मामात्मपरदेहेषु प्रद्विषन्तोऽभ्यसूयकाः ॥ १८ ॥
அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் ச ஸம்ச்ரிதா: ।
மாமாத்மபரதேஹேஷு ப்ரத்விஷந்தோஅப்யஸூயகா: ॥ 18 ॥
अहङ्कारं अहङ्करणम् अहङ्कारः, विद्यमानैः अविद्यमानैश्च गुणैः आत्मनि अध्यारोपितैः ‘विशिष्टमात्मानमहम्’ इति मन्यते, सः अहङ्कारः अविद्याख्यः कष्टतमः, सर्वदोषाणां मूलं सर्वानर्थप्रवृत्तीनां च, तम् । तथा बलं पराभिभवनिमित्तं कामरागान्वितम् । दर्पं दर्पो नाम यस्य उद्भवे धर्मम् अतिक्रामति सः अयम् अन्तःकरणाश्रयः दोषविशेषः ।
அஹம் கரணம் அஹங்கார:
நான், நான் என்று ஏற்றிக்கூறுதலே அஹங்காரம். தன்னிடம் உள்ளதும், இல்லாததுமான நற்குணங்களை தன்னிடத்தில் ஆரோ பித்து அந்த குணங்களுடன் கூடியவனாய் இருக்கின்றேன் என்று அவன் கருதுகிறான். அஹங்காரம் என்பது மிகக்கடினமான அவித்யா தோஷமாகும். எல்லா தோஷங்களுக்கும், அவ் வாறேஎல்லா அனர்த்தங்களுக்கும் மூலகாரணமாகும். தனது பலத் தினால் மற்றவர்களை தோற்கடித்ததால் ஏற்பட்ட காம, ராகத்துடன் கூடியது தர்பம். தர்பம் என்றால் எது உண்டானதால் மனித தர்மமா னது மீறப்படுகிறதோ அந்தக்கரணத்தை ஆச்ரயித்த அந்த தோஷ விசேஷமானது தர்ப்பமாகும்.
कामं स्त्र्यादिविषयम् । क्रोधम् अनिष्टविषयम् । एतान् अन्यांश्च महतो दोषान् संश्रिताः ।
காமம் - பெண் முதலிய விஷயங்களில் ஏற்படுவது, க்ரோதம் தனக்கு பிடிக்காவிடில் ஏற்படுவது இந்த பெரும் குற்றங்களை யும் மேலும் வேறு பெரிய குற்றங்களையும் உடையவர்கள்.
किञ्च ते माम् ईश्वरम् आत्मपरदेहेषु स्वदेहे परदेहेषु च तद्बुद्धिकर्मसाक्षिभूतं मां प्रद्विषन्तः, मच्छासनातिवर्तित्वं प्रद्वेषः, तं कुर्वन्तः अभ्यसूयकाः सन्मार्गस्थानां गुणेषु असहमानाः ॥ १८ ॥
இதைத் தவிர அவர்கள் தங்களுடைய, பிறருடைய சரீரத்தில் இருந்துகொண்டு அவர்களுடைய புத்திக்கும் கர்மத்திற்கும் சாக்ஷி யான என்னிடத்தில் துவேஷம் உள்ளவர்களாய் சன்மார்க்கத்திற்கு மாறாக நடப்பவர்களாகிய அவ்வாறே சாது புருஷர்களிடத்தும், என்னிடத்தும் துவேஷிப்பவர்களாகிய (வெறுப்பவர்களாகிய) என் னுடைய கட்டளையை மீறி அந்த எல்லா தீய கர்மங்களை செய்ப வர்களாகிய அவர்கள் சன்மார்க்கத்தில் உள்ளவர்களுடைய நல்ல குணங்களை மதிக்காமல் அவர்களை நிந்தை செய்கிறார்கள்.
तानहं द्विषतः क्रूरान्संसारेषु नराधमान् ।
क्षिपाम्यजस्रमशुभानासुरीष्वेव योनिषु ॥ १९ ॥
தாநஹம் த்விஷத: க்ரூராந்ஸம்ஸாரேஷு நராதமான் ।
க்ஷி பாம்யஜஸ்ரமசுபானாஸுரீஷ்வேவ யோனிஷு ॥ 19 ॥
तान् अहं सन्मार्गप्रतिपक्षभूतान् साधुद्वेषिणः द्विषतश्च मां क्रूरान् संसारेषु एव अनेकनरकसंसरणमार्गेषु नराधमान् अधर्मदोषवत्त्वात् क्षिपामि प्रक्षिपामि अजस्रं सन्ततम् अशुभान् अशुभकर्मकारिणः आसुरीष्वेव क्रूरकर्मप्रायासु व्याघ्रसिंहादियोनिषु ‘क्षिपामि’ इत्यनेन सम्बन्धः ॥ १९ ॥
நான் சாதுக்களிடத்தில் துவேஷமுள்ள சன்மார்க்கத்தில் பிர விர்த்திக்காத மனிதர்களில் கீழான அவர்கள் எல்லோரையும் நரக மாகிய சம்சார மார்க்கத்தில் அதர்மதோஷமுடையவர்களாய் இருப்பதால் அதாவது க்ரூர கர்மங்கள் செய்யும் புலி, சிங்கம் முத லிய யோனிகளில் எப்பொழுதும் சுழலச்செய்வேன். (தள்ளுவேன்) என்ற பதத்திற்கு(யோனிகளில்)என்ற பதத்துடன் சம்பந்தமுள்ளது.
आसुरीं योनिमापन्ना मूढा जन्मनि जन्मनि ।
मामप्राप्यैव कौन्तेय ततो यान्त्यधमां गतिम् ॥ २० ॥
ஆஸுரீம் யோநிமாபந்நா மூடா ஜன்மனி ஜன்மனி ।
மாமப்ராப்யைவ கெளந்தேயத்தோ யான்த்யதமாம் கதிம் ॥ 20 ॥
आसुरीं योनिम् आपन्नाः प्रतिपन्नाः मूढाः अविवेकिनः जन्मनि जन्मनि प्रतिजन्म तमोबहुलास्वेव योनिषु जायमानाः अधो गच्छन्तो मूढाः माम् ईश्वरम् अप्राप्य अनासाद्य एव हे कौन्तेय, ततः तस्मादपि यान्ति अधमां गतिं निकृष्टतमां गतिम् ।
ஹே கௌந்தேய! ஆஸுரீம் யோனியை அடைந்த அவிவே கிகள் ஒவ்வொரு பிறப்பிலும் தமஸானது பிரதானமாயுள்ள யோனிகளில் பிறந்து கீழ் ஜென்மங்களில் செல்லும் மூடர்கள் ஈஸ் வரனாகிய என்னை அடையாமல் அதைவிட கீழான கதியை அடைகிறார்கள்.
‘माम् अप्राप्यैव’ इति न मत्प्राप्तौ काचिदपि आशङ्का अस्ति, अतः मच्छिष्टसाधुमार्गम् अप्राप्य इत्यर्थः ॥ २० ॥
என்னையே அடையாமல் என்று கூறியதில் என்னை அடை யாமல் இருப்பதில் ஏதோ ஒரு சங்கை இருக்கிறது, ஆகையால் அதை (என்னால் உபதேசம் செய்யப்பட்ட) எனக்கு இஷ்ட்டமான நல்ல மார்க்கத்தை அடையாமல் என்பதாக பொருள் கொள்ள வேண்டும்.
सर्वस्या आसुर्याः सम्पदः सङ्क्षेपः अयम् उच्यते, यस्मिन् त्रिविधे सर्वः आसुरीसम्पद्भेदः अनन्तोऽपि अन्तर्भवति । यत्परिहारेण परिहृतश्च भवति, यत् मूलं सर्वस्य अनर्थस्य, तत् एतत् उच्यते —
இந்த ஆஸுர சம்பத்தின் தன்மைகளை இப்பொழுது சுருக்க மாகக் கூறுகிறார். இந்த மூன்று விதமாக உள்ள (காமாதி) தோஷங்க ளில் அசுர சம்பத் பேதங்கள் முடிவில்லாமல் இருந்தாலும் உள் அடங்குகிறது. அந்த மூன்று தோஷங்களை நீக்குவதால் மற்றவை களும் நீங்கிவிடும். இந்த அனர்த்தங்களுக்கு எது காரணமோ அதைக் கூறுகிறார்-
त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मनः ।
कामः क्रोधस्तथा लोभस्तस्मादेतत्त्रयं त्यजेत् ॥ २१ ॥
த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசநமாத்மன: ।
காம: க்ரோதஸ்ததா லோபஸ்தஸ்மாதேதத்த்ரயம் த்யஜேத் ॥ 21 ॥
त्रिविधं त्रिप्रकारं नरकस्य प्राप्तौ इदं द्वारं नाशनम् आत्मनः, यत् द्वारं प्रविशन्नेव नश्यति आत्मा ; कस्मैचित् पुरुषार्थाय योग्यो न भवति इत्येतत् , अतः उच्यते ‘द्वारं नाशनमात्मनः’ इति ।
இந்த மூன்று (ஜீவா) ஆத்மாவின் நாசத்திற்குக் காரணமாகும். அவை மூன்றும் நரகத்தை அடைவதற்கான வாயிலாகும். இதில் நுழைந்த மாத்திரத்திலேயே ஆத்மா நசிந்து விடுகிறது. இவை எந்த ஒரு புருஷார்த்தத்திற்கும் யோக்கியமற்றது. ஆகையால் இவை மூன்றும் (ஜீவா) ஆத்மாவை நாசம் செய்யும் வாயிலாகும் என்று கூறப்படுகிறது.
किं तत् ? कामः क्रोधः तथा लोभः । तस्मात् एतत् त्रयं त्यजेत् । यतः एतत् द्वारं नाशनम् आत्मनः तस्मात् कामादित्रयमेतत् त्यजेत् त्यागस्तुतिरियम् ॥ २१ ॥
அவை எவையெனில் காமம், க்ரோதம், லோபமாகும். ஆகை யால் இவை மூன்றையும் விட்டுவிடு. எந்த இந்த வாயிலானது ஆத்மாவை நாசம் செய்வதாய் இருக்கிறதோ அதனால் இந்த காமம் முதலிய இந்த மூன்றையும் விடவேண்டும். இது த்யாகத் தின் ஸ்துதியாகும்.
एतैर्विमुक्तः कौन्तेय तमोद्वारैस्त्रिभिर्नरः ।
आचरत्यात्मनः श्रेयस्ततो याति परां गतिम् ॥ २२ ॥
ஏதைர்விமுக்த: கெளந்தேய தமோத்வாரைஸ்த்ரிபிர்நர: ।
ஆசரத்யாத்மன: ச்ரேயஸ்ததோ யாதி பராம் கதிம் ॥ 22 ॥
एतैः विमुक्तः कौन्तेय तमोद्वारैः तमसः नरकस्य दुःखमोहात्मकस्य द्वाराणि कामादयः तैः, एतैः त्रिभिः विमुक्तः नरः आचरति अनुतिष्ठति । किम् ? आत्मनः श्रेयः । यत्प्रतिबद्धः पूर्वं न आचचार, तदपगमात् आचरति । ततः तदाचरणात् याति परां गतिं मोक्षमपि इति ॥ २२ ॥
ஹே கௌந்தேய! எந்த காமம் முதலிய துக்கம் மற்றும் மோஹரூபமானது இருள்மயமான நரகத்திற்கு வாயிலாக இருக்கி றதோ இந்த மூன்று தீயகுணங்களை விட்ட மனிதன் சாதனை செய் கின்றான். எந்த சாதனத்தைச் செய்கிறான்? ஆத்மாவிற்கு நன்மை யைச் செய்யும் சாதனத்தைச் செய்கிறான். முன்பு எந்த காமாதிவசத்தால் எந்த நல்ல சாதனத்தைச் செய்யவில்லையோ, அதை நாசம் செய்வதின் பொருட்டு நல்ல சாதனத்தைக் கடைப்பி டிக்கின்றான். அதனால் மேலான மோக்ஷத்தை அடைகின்றான்.
सर्वस्य एतस्य आसुरीसम्पत्परिवर्जनस्य श्रेयआचरणस्य च शास्त्रं कारणम् । शास्त्रप्रमाणात् उभयं शक्यं कर्तुम् , न अन्यथा । अतः —
இந்த எல்லா அசுர சம்பத்துக்களை விடுவதற்கும், மோக்ஷ மார்க்கத்தைக் கடைப்பிடிப்பதற்கும் சாஸ்திரம் காரணமாகும், சாஸ்திர ப்ரமாணத்தால் மாத்திரமே இவ்விரண்டையும் செய்யமுடி யும். சாஸ்திரத்தைத் தவிர வேறு பிரமாணம் ஒன்றுமில்லை-
यः शास्त्रविधिमुत्सृज्य वर्तते कामकारतः ।
न स सिद्धिमवाप्नोति न सुखं न परां गतिम् ॥ २३ ॥
ய: சாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத: ।
ந ஸ ஸித்திமவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம் ॥ 23 ॥
यः शास्त्रविधिं शास्त्रं वेदः तस्य विधिं कर्तव्याकर्तव्यज्ञानकारणं विधिप्रतिषेधाख्यम् उत्सृज्य त्यक्त्वा वर्तते कामकारतः कामप्रयुक्तः सन् , न सः सिद्धिं पुरुषार्थयोग्यताम् अवाप्नोति, न अपि अस्मिन् लोके सुखं न अपि परां प्रकृष्टां गतिं स्वर्गं मोक्षं वा ॥ २३ ॥
செய்யவேண்டியது, செய்யக்கூடாதது என்பதின் ஞானத்திற் குக் காரணமான விதி நிஷேதங்களை உடைய சாஸ்திரத்தை விட்டு காயத்தினால் தூண்டப்பட்டு புருஷார்த்தத்திற்கு யோக்ய தையை அடையமாட்டான். இவ்வுலகத்தில் சுகத்தையோ அல்லது மேலான கதியாகிய ஸ்வர்க்கத்தையோ, மோக்ஷத்தையோ அடையமாட்டான்.
तस्माच्छास्त्रं प्रमाणं ते कार्याकार्यव्यवस्थितौ ।
ज्ञात्वा शास्त्रविधानोक्तं कर्म कर्तुमिहार्हसि ॥ २४ ॥
தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்யவ்யவஸ்திதௌ ।
ஞாத்வா சாஸ்த்ரவிதானோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி ॥ 24 ॥
तस्मात् शास्त्रं प्रमाणं ज्ञानसाधनं ते तव कार्याकार्यव्यवस्थितौ कर्तव्याकर्तव्यव्यवस्थायाम् । अतः ज्ञात्वा बुद्ध्वा शास्त्रविधानोक्तं विधिः विधानं शास्त्रमेव विधानं शास्त्रविधानम् ‘कुर्यात् , न कुर्यात्’ इत्येवंलक्षणम् , तेन उक्तं स्वकर्म यत् तत् कर्तुम् इह अर्हसि, इह इति कर्माधिकारभूमिप्रदर्शनार्थम् इति ॥ २४ ॥
எவ்வகையானாலும் செய்யவேண்டியது, செய்யக்கூடாதது என்பதில் சாஸ்திரமே பிரமாணம். அதுவே ஞானத்தை அடைவ தற்கான சாதனமாகும். ஆகையால் சாஸ்திர விதானத்தில் கூறியபடி எது செய்யலாம், எது செய்யக்கூடாது என்ற லக்ஷ ணத்தை அறிந்து செய்யவேண்டும். அந்த லக்ஷணத்தில் கூறியபடி உன்னுடைய சுயகர்மா எதுவோ அதைச் செய்வதற்கு இங்கு அரு கதை உள்ளவனாய் இருக்கிறாய். இஹ- இங்கு என்றது பூமியில் தான் கர்மத்தில் அதிகாரம் உள்ளது என்பதைக் காட்டுவதற்காகக் கூறப்பட்டது.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये षोडशोऽध्यायः ॥
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே தைவாஸுரஸம்பத்விபாகயோகோ நாம் ஷோடசோத்யாய:
‘तस्माच्छास्त्रं प्रमाणं ते’ (भ. गी. १६ । २४) इति भगवद्वाक्यात् लब्धप्रश्नबीजः अर्जुन उवाच —
(தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே) என்றபகவானுடைய வச னத்தால் வினாவிற்கான பீஜம் (காரணம்) கிடைத்த -
अर्जुन उवाच —
அர்ஜுனன் வினவினான்.
ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विताः ।
तेषां निष्ठा तु का कृष्ण सत्त्वमाहो रजस्तमः ॥ १ ॥
யே சாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய யஜந்தே ச்ரத்தயான்விதா: ।
தேஷாம் நிஷ்டா து கா க்ருஷ்ண ஸத்வமாஹோ ரஜஸ்தம: ॥ 1 ॥
ये केचित् अविशेषिताः शास्त्रविधिं शास्त्रविधानं श्रुतिस्मृतिशास्त्रचोदनाम् उत्सृज्य परित्यज्य यजन्ते देवादीन् पूजयन्ति श्रद्धया अन्विताः श्रद्धया आस्तिक्यबुद्ध्या अन्विताः संयुक्ताः सन्तः।
ஏதோ ஒரு சிலர் சாதாரண மனிதர்கள் சாஸ்திர விதானம் அதாவது சுருதி, ஸ்மிருதி ஆகிய சாஸ்திரங்களில் உள்ள கட்ட ளைகளை விட்டுவிட்டு தேவாதிகளை ஆஸ்திக்ய புத்தியுடன் அதாவது சிரத்தையுடன் பூஜிக்கிறார்கள்.
श्रुतिलक्षणं स्मृतिलक्षणं वा कञ्चित् शास्त्रविधिम् अपश्यन्तः वृद्धव्यवहारदर्शनादेव श्रद्दधानतया ये देवादीन् पूजयन्ति, ते इह ‘ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विताः’ इत्येवं गृह्यन्ते । ये पुनः कञ्चित् शास्त्रविधिं उपलभमाना एव तम् उत्सृज्य अयथाविधि देवादीन् पूजयन्ति, ते इह ‘ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते’ इति न परिगृह्यन्ते ।
இங்கு (யே சாஸ்த்ர விதிமுத்ஸ்ருஜ்ய யஜந்தே ச்ரத்தயான்வி தா) என்று கூறி இருப்பதால் சுருதியில் கூறப்பட்ட லக்ஷணங்களை யோ, ஸ்ம்ருதியில் கூறப்பட்ட லக்ஷணங்களையோ அறியாமல் பெரியோர்களுடைய நல்ஒழுக்கத்தையே உதாரணமாகக் கொண்டு சிரத்தையுடன் தேவாதி பூஜை செய்கின்றார்களோ அவைகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் எந்த மனிதர்கள் கொஞ்சம் சாஸ்திர விதி அறிந்திருந்தாலும் அதை விட்டுவிட்டு விதியற்று தேவதாதிகளை பூஜை செய்கிறார்களோ அவர்களை இங்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
कस्मात् ?
எதனால்?
श्रद्धया अन्वितत्वविशेषणात् । देवादिपूजाविधिपरं किञ्चित् शास्त्रं पश्यन्त एव तत् उत्सृज्य अश्रद्दधानतया तद्विहितायां देवादिपूजायां श्रद्धया अन्विताः प्रवर्तन्ते इति न शक्यं कल्पयितुं यस्मात् , तस्मात् पूर्वोक्ता एव ‘ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विताः’ इत्यत्र गृह्यन्ते ।
சிரத்தையுடன் (பூஜை செய்கிறார்கள்) என்று விசேஷணம் சொல்லப்பட்டிருப்பதால். தேவர்கள் முதலியோரை எவ்வாறு பூஜிப்பது என்றவிதியுடன் கூடிய சாஸ்திரத்தை சிறிதேனும் அறிந்தே அதில் சிரத்தை அற்று சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட தேவாதி பூஜையை சிரத்தையுடன் செய்கிறார்கள் என்று கல்பிக்க முடியாது என்பது எதனாலோ அதனால் முன்பு கூறப்பட்டதை "யே சாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய யஜந்தே ச்ரத்தயான்விதா (எவர்கள் சாஸ்திர விதியை விட்டு சிரத்தையுடன் பூஜிக்கிறார் களோ) என்று இங்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
तेषाम् एवंभूतानां निष्ठा तु का कृष्ण सत्त्वम् आहो रजः तमः, किं सत्त्वं निष्ठा अवस्थानम् , आहोस्वित् रजः, अथवा तमः इति । एतत् उक्तं भवति — या तेषां देवादिविषया पूजा, सा किं सात्त्विकी, आहोस्वित् राजसी, उत तामसी इति ॥ १ ॥
ஹே கிருஷ்ண! இப்படிப்பட்டவர்களுடைய நிஷ்ட்டை என்ன? அந்த நிஷ்ட்டை சத்துவமா? ரஜஸா? அல்லது தமஸா? அவர்களுடைய தேவதாதி விஷயமான பூஜையானது ஸாத்வீகமா? ராஜஸமா? அல்லது தாமஸமா? என்று எது கூறப்பட்டதாகிறது.
सामान्यविषयः अयं प्रश्नः न अप्रविभज्यं प्रतिवचनम् अर्हतीति श्रीभगवानुवाच —
இந்த வினாவானது சாமான்ய (மனிதர்களுக்கான) விஷயமாகும். ஆகையால் இதைப் பிரிக்காமல் பதில் கூறுவது பொருத்தமல்ல என்று.
त्रिविधा भवति श्रद्धा देहिनां सा स्वभावजा ।
सात्त्विकी राजसी चैव तामसी चेति तां शृणु ॥ २ ॥
த்ரிவிதா பவதி ச்ரத்தா தேஹினாம் ஸா ஸ்வபாவஜா ।
ஸாத்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ச்ருணு ॥ 2 ॥
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச-
त्रिविधा त्रिप्रकारा भवति श्रद्धा, यस्यां निष्ठायां त्वं पृच्छसि, देहिनां शरीरिणां सा स्वभावजा ; जन्मान्तरकृतः धर्मादिसंस्कारः मरणकाले अभिव्यक्तः स्वभावः उच्यते, ततो जाता स्वभावजा । सात्त्विकी सत्त्वनिर्वृत्ता देवपूजादिविषया ; राजसी रजोनिर्वृत्ता यक्षरक्षःपूजादिविषया ; तामसी तमोनिर्वृत्ता प्रेतपिशाचादिपूजाविषया ; एवं त्रिविधां ताम् उच्यमानां श्रद्धां शृणु अवधारय ॥ २ ॥
சிரத்தையானது மூன்று விதமாகும். எந்த சிரத்தையைப் பற்றி (நிஷ்ட்டையைப் பற்றி) நீ கேட்டாயோ அது முன் ஜன்மத்தில் செய்த தர்மம் முதலியவற்றின் சம்ஸ்காரமானது (வாசனை) மரணகா லத்தில் வெளிப்படுவது ஸ்வபாவம் எனப்படுகிறது. அந்த ஸ்வபா வத்திலிருந்து உண்டாவது ஸ்வபாவஜா. சத்துவகுணத்தினால் உண் டான தேவதாதி விஷயங்களில் உண்டாகும் சிரத்தை சாத்விகீ எனப்படும். ரஜோ குணத்தினால் உண்டான யக்ஷர்கள், ராக்ஷஸர் கள் முதலியோருடைய பூஜா விஷயத்தில் ஏற்படும் சிரத்தை ராஜசீ எனப்படும். தமோ குணத்தினால் உண்டான ப்ரேதம், பிசாசு முத லிய பூஜைகளிடத்தில் உண்டாகும் சிரத்தை தாமசீ ஆகும். இனி சிரத்தையைப் பற்றி மூன்று விதமாகக் கூறப்போவதைக் கேள்.
सा इयं त्रिविधा भवति —
அந்த சிரத்தை மூன்று விதமாகும்.
सत्त्वानुरूपा सर्वस्य श्रद्धा भवति भारत ।
श्रद्धामयोऽयं पुरुषो यो यच्छ्रद्धः स एव सः ॥ ३ ॥
ஸத்வானுரூபா ஸர்வஸ்ய ச்ரத்தா பவதி பாரத ।
ச்ரத்தாமயோஅயம் புருஷோ யோ யச்ச்ரத்த: ஸ ஏவ ஸ: ॥ 3 ॥
सत्त्वानुरूपा विशिष्टसंस्कारोपेतान्तःकरणानुरूपा सर्वस्य प्राणिजातस्य श्रद्धा भवति भारत ।
ஹே பாரத! எல்லாப் பிராணிகளுடைய சிரத்தையும் வெவ் வேறு வாசனைகளுடன் கூடிய அந்தக்கரணத்திற்கு தக்கவாறு அமைகிறது.
यदि एवं ततः किं स्यादिति, उच्यते —
இவ்வாறு இருப்பதால் என்ன ஏற்படும் என்பதைக் கூறுகிறார்-
श्रद्धामयः अयं श्रद्धाप्रायः पुरुषः संसारी जीवः । कथम् ? यः यच्छ्रद्धः या श्रद्धा यस्य जीवस्य सः यच्छ्रद्धः स एव तच्छ्रद्धानुरूप एव सः जीवः ॥ ३ ॥
சம்சாரத்தில் உழலும் ஜீவன் சிரத்தாமயன். அதாவது சிரத்தை உள்ளவன். எவ்வாறு? எனில் எந்த சிரத்தை எந்த ஜீவனுக்கு உள் ளதோ அந்த சிரத்தை எவ்வாறு உள்ளதோ அவ்வாறே அந்த ஜீவன் இருக்கிறான்.
ततश्च कार्येण लिङ्गेन देवादिपूजया सत्त्वादिनिष्ठा अनुमेया इत्याह —
ஆகையால் தேவாதி பூஜையாகிய காரியமாகிய லிங்கத்தி னால் சாத்வீக முதலிய நிஷ்ட்டையை அதாவது சிரத்தையை அனுமானிக்க வேண்டும் என்று கூறுகிறார்.
यजन्ते सात्त्विका देवान्यक्षरक्षांसि राजसाः ।
प्रेतान्भूतगणांश्चान्ये यजन्ते तामसा जनाः ॥ ४ ॥
யஜந்தே ஸாத்விகா தேவான்யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா: ।
ப்ரேதான்பூதகணாம்ச்சான்யே யஜந்தே தாமஸா ஜனா: ॥ 4 ॥
यजन्ते पूजयन्ति सात्त्विकाः सत्त्वनिष्ठाः देवान् , यक्षरक्षांसि राजसाः, प्रेतान् भूतगणांश्च सप्तमातृकादींश्च अन्ये यजन्ते तामसाः जनाः ॥ ४ ॥
சாத்வீக நிஷ்ட்டை உடையவர்கள் தேவதாதி பூஜை செய்கி றார்கள். ராஜசீ புருஷர்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள் இவர்களை பூஜை செய்கிறார்கள். அவ்வாறேதாமசீ புருஷர்கள் பிரேதங்களை யும், சப்தமாத்ருக்களாகிய பூதகணங்களையும் பூஜை செய்கிறார்கள்.
एवं कार्यतो निर्णीताः सत्त्वादिनिष्ठाः शास्त्रविध्युत्सर्गे । तत्र कश्चिदेव सहस्रेषु देवपूजादिपरः सत्त्वनिष्ठो भवति, बाहुल्येन तु रजोनिष्ठाः तमोनिष्ठाश्चैव प्राणिनो भवन्ति । कथम् ? —
இவ்வாறு சத்துவாதி நிஷ்ட்டைகள் (சிரத்தைகள்) காரியத்தை வைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. ஆயிரம் மனிதர்களுள் ஒரு வன் சாஸ்த்ர விதியை விட்டாலும் தேவதாதி பூஜைகளை செய்தவ னாய் சாத்வீக சிரத்தை (நிஷ்ட்டை) உடையவனாய் இருக்கிறான். மனிதர்கள் அதிகமாக ராஜசீ, தாமசீ, நிஷ்ட்டை(சிரத்தை) உடைய வர்களாய் இருக்கிறார்கள்-
अशास्त्रविहितं घोरं तप्यन्ते ये तपो जनाः ।
दम्भाहङ्कारसंयुक्ताः कामरागबलान्विताः ॥ ५ ॥
அசாஸ்த்ரவிஹிதம் கோரம் தப்யந்தே யே தபோ ஜனா: ।
தம்பாஹங்காரஸம்யுக்தா: காமராகபலான்விதா: ॥ 5 ॥
अशास्त्रविहितं न शास्त्रविहितम् अशास्त्रविहितं घोरं पीडाकरं प्राणिनाम् आत्मनश्च तपः तप्यन्ते निर्वर्तयन्ति ये जनाः ते च दम्भाहङ्कारसंयुक्ताः, दम्भश्च अहङ्कारश्च दम्भाहङ्कारौ, ताभ्यां संयुक्ताः दम्भाहङ्कारसंयुक्ताः, कामरागबलान्विताः कामश्च रागश्च कामरागौ तत्कृतं बलं कामरागबलं तेन अन्विताः कामरागबलान्विताः ॥ ५ ॥
சாஸ்திரத்தில் விதிக்கப்படாதது அசாஸ்த்ர விஹிதம் எனப்படும்.அந்த அசாஸ்திரத்தில் மற்ற பிராணிகளையும், தன்னை யும் துன்புறுத்துகின்ற தபஸ் செய்கின்றவர்கள் தம்பம், அஹங்கா ரத்துடன் கூடியவர்களாயும், அவ்வாறே காமம், ராகம் இவைகளி னால் ஏற்பட்ட பலத்துடன் கூடியவர்களாயும் அல்லது காமம், ராகம் இவைகளுடன் கூடியவர்களாயும் இருக்கிறார்கள்.
कर्शयन्तः शरीरस्थं भूतग्राममचेतसः ।
मां चैवान्तःशरीरस्थं तान्विद्ध्यासुरनिश्चयान् ॥ ६ ॥
கர்சயந்த: சரீரஸ்தம் பூதக்ராமமசேதஸ: ।
மாம் சைவாந்த: சரீரஸ்தம் தான்வித்த்யாஸுரநிச்சயான் ॥ 6 ॥
कर्शयन्तः कृशीकुर्वन्तः शरीरस्थं भूतग्रामं करणसमुदायम् अचेतसः अविवेकिनः मां चैव तत्कर्मबुद्धिसाक्षिभूतम् अन्तःशरीरस्थं नारायणं कर्शयन्तः, मदनुशासनाकरणमेव मत्कर्शनम् , तान् विद्धि आसुरनिश्चयान् आसुरो निश्चयो येषां ते आसुरनिश्चयाः तान् परिहरणार्थं विद्धि इति उपदेशः ॥ ६ ॥
அவிவேகி புருஷர்கள் சரீரத்தில் உள்ள இந்திரிய முதலிய கர ணரூபமாக பரிணாமம் அடைந்த பூதக்கூட்டத்தையும், அவ்வாறே சரீரத்தினுள் கர்மங்களுக்கும் புத்திக்கும் சாக்ஷியாய் அந்த ராத்மரூபமாய் உள்ள ஈஸ்வரனாக உள்ள என்னையும் மெலிவ டையச் செய்கிறார்கள். என்னுடைய கட்டளையை மீறுதலே (செய் யாமல் இருத்தலே) என்னை மெலியச் செய்வதாகும். இவ்வாறு என்னை மெலிய செய்பவர்களாகிய அவர்களுக்கு ஆஸுரமா னது நிச்சயம் உண்டாகும். அதை பரிஹாரம் செய்வதற்காக அதை அறிவாய் என்பது உபதேசம்.
आहाराणां च रस्यस्निग्धादिवर्गत्रयरूपेण भिन्नानां यथाक्रमं सात्त्विकराजसतामसपुरुषप्रियत्वदर्शनम् इह क्रियते रस्यस्निग्धादिषु आहारविशेषेषु आत्मनः प्रीत्यतिरेकेण लिङ्गेन सात्त्विकत्वं राजसत्वं तामसत्वं च बुद्ध्वा रजस्तमोलिङ्गानाम् आहाराणां परिवर्जनार्थं सत्त्वलिङ्गानां च उपादानार्थम् । तथा यज्ञादीनामपि सत्त्वादिगुणभेदेन त्रिविधत्वप्रतिपादनम् इह ‘राजसतामसान् बुद्ध्वा कथं नु नाम परित्यजेत् , सात्त्विकानेव अनुतिष्ठेत्’ इत्येवमर्थम् । आह —
சுவை, நெய் முதலிய ஆஹாரங்களில் தனக்கு எதில் அதிக பிரியம் உள்ளதோ அதை லக்ஷணமாகக் (லிங்கமாகக்) கொண்டு தனக்கு சாத்வீகமா? ராஜசமா? தாமசமா? எது உள்ளது என்று அறிந்து ராஜச, தாமச லிங்கங்கள் உள்ள ஆஹாரத்தைத் தவிர்த்து சாத்வீக லிங்கமுள்ள ஆகாரத்தைக் கொள்ளுவதற்காகவும் இங்கு சுவை, நெய் முதலியவைகள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்ட ஆஹாரங்களில் முறையாக சாத்வீக, ராஜச மேலும் தாமஸ புருஷர்களுடைய தனித்தன்மையான விருப்பத்தைக் காண்பிக் கப்படுகிறது. அவ்வாறே சாத்வீக முதலிய குணங்களின் பேதங்களினால் யக்ஞம் முதலியவைகளின் பேதங்களும் கூறப்பட்டது. ஏன் எனில் ராஜச, தாமஸ யக்ஞாதிகளை அறிந்து எவ்வாறு அதை மனிதர்கள் தவிர்ப்பது என்று அறிந்து சாத்வீக யக்ஞாதிகளையே செய்யவேண்டும் என்பது இதன் பொருள்.
आहारस्त्वपि सर्वस्य त्रिविधो भवति प्रियः ।
यज्ञस्तपस्तथा दानं तेषां भेदमिमं शृणु ॥ ७ ॥
ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ பவதி ப்ரிய: ।
யக்ஞஸ்தபஸ்ததா தானம் தேஷாம் பேதமிமம் ச்ருணு ॥ 7 ॥
आहारस्त्वपि सर्वस्य भोक्तुः प्राणिनः त्रिविधो भवति प्रियः इष्टः, तथा यज्ञः, तथा तपः, तथा दानम् । तेषाम् आहारादीनां भेदम् इमं वक्ष्यमाणं शृणु ॥ ७ ॥
போஜனம் செய்யும் எல்லோருக்கும் மூன்று விதமான ஆஹாரம் பிரியமானதாயும், சுவை உள்ளதாயும் ஆகிறது. அவ் வாறே யக்ஞம், தபஸ், தானம். (மும்மூன்று விதமாக இருக்கிறது) இனி கூறப்போகும் இந்த ஆஹாராதிகளின் அறியவேண்டிய பேதங்களைக் கேள்.
आयुःसत्त्वबलारोग्यसुखप्रीतिविवर्धनाः ।
रस्याः स्निग्धाः स्थिरा हृद्या आहाराः सात्त्विकप्रियाः ॥ ८ ॥
ஆயு: ஸத்வபலாரோக்யஸுகப்ரீதிவிவர்தனா: ।
ரஸ்யா: ஸ்நிக்தா: ஸ்திரா ஹ்ருத்யா ஆஹாரா: ஸாத்விகப்ரியா: ॥ 8 ॥
आयुश्च सत्त्वं च बलं च आरोग्यं च सुखं च प्रीतिश्च आयुःसत्त्वबलारोग्यसुखप्रीतयः तासां विवर्धनाः आयुःसत्त्वबलारोग्यसुखप्रीतिविवर्धनाः, ते च रस्याः रसोपेताः, स्निग्धाः स्नेहवन्तः, स्थिराः चिरकालस्थायिनः देहे, हृद्याः हृदयप्रियाः आहाराः सात्त्विकप्रियाः सात्त्विकस्य इष्टाः ॥ ८ ॥
ஆயுள், புத்தி, பலம், ஆரோக்கியம், சுகம், பிரியமானது இவை எல்லாம் மேலும் மேலும் வளர்வதற்கானதும், அவ்வாறே சுவையும், நெய்யும் சரீரத்தில் அநேக காலம் இருக்கக்கூடியதும், மனதிற்கு பிடித்தமானதுமான ஆஹாரம் சாத்வீக புருஷர் களுக்குப் பிடித்தமானது.
कट्वम्ललवणात्युष्णतीक्ष्णरूक्षविदाहिनः ।
आहारा राजसस्येष्टा दुःखशोकामयप्रदाः ॥ ९ ॥
கட்வம்லலவணாத்யுஷ்ணbஷ்ணரூக்ஷவிதாஹின: ।
ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து:கசோகாமயப்ரதா: ॥ 9 ॥
कट्वम्ललवणात्युष्णतीक्ष्णरूक्षविदाहिनः इत्यत्र अतिशब्दः कट्वादिषु सर्वत्र योज्यः, अतिकटुः अतितीक्ष्णः इत्येवम् । कटुश्च अम्लश्च लवणश्च अत्युष्णश्च तीक्ष्णश्च रूक्षश्च विदाही च ते आहाराः राजसस्य इष्टाः, दुःखशोकामयप्रदाः दुःखं च शोकं च आमयं च प्रयच्छन्तीति दुःखशोकामयप्रदाः ॥ ९ ॥
கசப்பாய் உள்ளதும், புளிப்பாய் உள்ளதும், உப்பாய் உள்ளதும் மிகச்சூடாய் உள்ளதும், மிகவும் காரமாய் உள்ளதும் மேலும் வறட்சியாகவும் உஷ்ணத்தை அளிப்பதாயும் வருத்தம், கவலை, வியாதி இவைகளை உண்டாக்குவதாயும் உள்ள ஆஹாரம் ராஜசனுக்குப் பிரியமானது.
यातयामं गतरसं पूति पर्युषितं च यत् ।
उच्छिष्टमपि चामेध्यं भोजनं तामसप्रियम् ॥ १० ॥
யாதயாமம் கதரஸம் பூதி பர்யுஷிதம் சயத் ।
உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜனம் தாமஸப்ரியம் ॥ 10 ॥
यातयामं मन्दपक्वम् , निर्वीर्यस्य गतरसशब्देन उक्तत्वात् । गतरसं रसवियुक्तम् , पूति दुर्गन्धि, पर्युषितं च पक्वं सत् रात्र्यन्तरितं च यत् , उच्छिष्टमपि भुक्तशिष्टम् उच्छिष्टम् , अमेध्यम् अयज्ञार्हम् , भोजनम् ईदृशं तामसप्रियम् ॥ १० ॥
நன்றாக சமைக்கப்படாத, சுவையும் சத்தும் அற்றதாயும், ஒரு ராத்திரி சென்றதால் கெட்டுப்போய், கெட்ட வாசனை உடையதா யும், அவ்வாறேஎச்சில்பட்டதாயும், யக்ஞத்திற்கு உபயோகப்படா ததும் ஆன ஆஹாரம் தாமசர்களுக்கு பிரியமானது ஆகும்.
अथ इदानीं यज्ञः त्रिविधः उच्यते —
பிறகு இப்பொழுது மூன்று விதமான யக்ஞம் கூறப்படுகிறது.
अफलाकाङ्क्षिभिर्यज्ञो विधिदृष्टो य इज्यते ।
यष्टव्यमेवेति मनः समाधाय स सात्त्विकः ॥ ११ ॥
அபலாகாங்க்ஷி பிர்யக்ஞோ விதித்ருஷ்டோய இஜ்யதே ।
யஷ்டவ்யமேவேதி மன: ஸமாதாய ஸ ஸாத்விக: ॥ 11 ॥
अफलाकाङ्क्षिभिः अफलार्थिभिः यज्ञः विधिदृष्टः शास्त्रचोदनादृष्टो यः यज्ञः इज्यते निर्वर्त्यते, यष्टव्यमेवेति यज्ञस्वरूपनिर्वर्तनमेव कार्यम् इति मनः समाधाय, न अनेन पुरुषार्थो मम कर्तव्यः इत्येवं निश्चित्य, सः सात्त्विकः यज्ञः उच्यते ॥ ११ ॥
பலத்தில் ஆசையற்று சாஸ்த்ர விதிப்படி எவன் யக்ஞத்தைச் செய்கிறானோ அவன் யக்ஞஸ்வரூபத்தைக் கடைபிடிப்பதே என் னுடைய முக்கியமான காரியம் (கடமை) என்று மனதை ஒருநி லைப்படுத்தி புருஷார்த்தத்திற்காக நான் யக்ஞம் செய்யவேண்டிய தில்லை என்று நிச்சயம் செய்து யக்ஞம் செய்வது சாத்வீக யக்ஞமாகும்.
अभिसन्धाय तु फलं दम्भार्थमपि चैव यत् ।
इज्यते भरतश्रेष्ठ तं यज्ञं विद्धि राजसम् ॥ १२ ॥
அபிஸந்தாய து பலம் தம்பார்தமபி சைவ யத் ।
இஜ்யதே பரதச்ரேஷ்ட தம் யக்ஞம் வித்தி ராஜஸம் ॥ 12 ॥
अभिसन्धाय तु उद्दिश्य फलं दम्भार्थमपि चैव यत् इज्यते भरतश्रेष्ठ तं यज्ञं विद्धि राजसम् ॥ १२ ॥
பலனை எதிர்பார்த்து தற்பெருமையின் பொருட்டு எந்த யக்ஞம் செய்யப்படுகிறதோ அது ஹே பரதச்ரேஷ்ட! அது ராஜசயக்ஞமாகும்.
विधिहीनमसृष्टान्नं मन्त्रहीनमदक्षिणम् ।
श्रद्धाविरहितं यज्ञं तामसं परिचक्षते ॥ १३ ॥
விதிஹீனமஸ்ருஷ்டான்னம் மந்த்ரஹீனதக்ஷி ணம் ।
ச்ரத்தாவிரஹிதம் யக்ஞம் தாமஸம் பரிசக்ஷதே ॥ 13 ॥
विधिहीनं यथाचोदितविपरीतम् , असृष्टान्नं ब्राह्मणेभ्यो न सृष्टं न दत्तम् अन्नं यस्मिन् यज्ञे सः असृष्टान्नः तम् असृष्टान्नम् , मन्त्रहीनं मन्त्रतः स्वरतो वर्णतो वा वियुक्तं मन्त्रहीनम् , अदक्षिणम् उक्तदक्षिणारहितम् , श्रद्धाविरहितं यज्ञं तामसं परिचक्षते तमोनिर्वृत्तं कथयन्ति ॥ १३ ॥
எந்த யக்ஞமானது சாஸ்திரத்தில் விதிக்கப்படாத, அதற்கு விரோதமானதாயும் பிராஹ்மணர்களுக்கு போஜனம் அளிக்கப்படா மலும், மந்திரம், ஸ்வரம், எழுத்துக்கள் இவைகளின் குறைபாடுடைய தாகவும் கூறியபடி கொடுக்கவேண்டிய தக்ஷிணையைக் கொடுக்கா மல் செய்யப்பட்டதாயும் உள்ளதோ அது தாமச யக்ஞமாகும்.
अथ इदानीं तपः त्रिविधम् उच्यते —
இப்பொழுது தபஸ் மூன்று விதமாக கூறப்படுகிறது.
देवद्विजगुरुप्राज्ञपूजनं शौचमार्जवम् ।
ब्रह्मचर्यमहिंसा च शारीरं तप उच्यते ॥ १४ ॥
தேவத்விஜகுருப்ராக்ஞபூஜனம் சௌசமார்ஜவம் ।
ப்ரஹ்மசர்யமஹிம்ஸா ச சாரீரம் தப உச்யதே ॥ 14 ॥
देवाश्च द्विजाश्च गुरवश्च प्राज्ञाश्च देवद्विजगुरुप्राज्ञाः तेषां पूजनं देवद्विजगुरुप्राज्ञपूजनम् , शौचम् , आर्जवम् ऋजुत्वम् , ब्रह्मचर्यम् अहिंसा च शरीरनिर्वर्त्यं शारीरं शरीरप्रधानैः सर्वैरेव कार्यकरणैः कर्त्रादिभिः साध्यं शारीरं तपः उच्यते । ‘पञ्चैते तस्य हेतवः’ (भ. गी. १८ । १५) इति हि वक्ष्यति ॥ १४ ॥
தேவர்கள், பிராஹ்மணர்கள், ஆசார்யார்கள், ஞானிகள் இவர்களை பூஜித்தல், பரிசுத்தமாய் இருத்தல், நேர்மையாய் இருத்தல், பிரஹ்மச்சர்யத்தைக் கடைபிடித்தல், அஹிம்சை இவைகள் சரீரத்தால் செய்யப்பட வேண்டியவை. சரீரத்தால் முக்யமாக வைத்துச் செய்யப்படும் எல்லாக் காரியங்களும், காரிய கரணங்களுடன் கூடிய (சரீரம், இந்திரியங்கள் இவைகளுடன் கூடிய) கர்த்தாக்களினால் சாதிக்கத்தகுந்தது தபஸ் எனப்படும். (பஞ்சை தே தஸ்ய ஹே தவ:) அதற்கு இந்த ஐந்தும் காரணமாகும் என்று இனி கூறப்போகிறார்.
अनुद्वेगकरं वाक्यं सत्यं प्रियहितं च यत् ।
स्वाध्यायाभ्यसनं चैव वाङ्मयं तप उच्यते ॥ १५ ॥
அனுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத் ।
ஸ்வாத்யாயாப்யஸனம் சைவ வாங்மயம் தப உச்யதே ॥ 15 ॥
अनुद्वेगकरं प्राणिनाम् अदुःखकरं वाक्यं सत्यं प्रियहितं च यत् प्रियहिते दृष्टादृष्टार्थे । अनुद्वेगकरत्वादिभिः धर्मैः वाक्यं विशेष्यते । विशेषणधर्मसमुच्चयार्थः च—शब्दः । परप्रत्ययार्थं प्रयुक्तस्य वाक्यस्य सत्यप्रियहितानुद्वेगकरत्वानाम् अन्यतमेन द्वाभ्यां त्रिभिर्वा हीनता स्याद्यदि, न तद्वाङ्मयं तपः ।
வாக்கானது எந்த ஒரு பிராணியையும் (கலக்கம்) துக்கம் செய் யக்கூடாது. (அனுத்வேகம்) அவ்வாறேஎதிரிலும் மறைமுகமாக வும் கூறும் வாக்கியங்கள் உண்மையானதாயும், பிரியமானதாயும், ஒருவருக்கு ஹிதத்தை அளிப்பதாயும் இருக்கவேண்டும். இங்கு அனுத்வேகம் முதலிய தர்மங்கள் (லக்ஷணங்கள்) கூறப்பட்டது. சப்தமானது எல்லா லக்ஷணங்களையும் ஒன்றுபடுத்துவதற்காக என்று அறியவேண்டும். மற்றவர்களுக்கு அதில் உறுதி ஏற்படுத்து வதற்காக (அறியப்படுத்துவதற்காக) உண்மையானதாயும், பிரிய மானதாயும் ஹிதமானதாயும் ஒருவருக்கு கலக்கம் ஏற்படாத வார்த்தைகளில் ஒன்று, இரண்டு அல்லது மூன்றும் விட்டாலோ அது வாங்மய தபசாகாது.
तथा सत्यवाक्यस्य इतरेषाम् अन्यतमेन द्वाभ्यां त्रिभिर्वा विहीनतायां न वाङ्मयतपस्त्वम् । तथा प्रियवाक्यस्यापि इतरेषाम् अन्यतमेन द्वाभ्यां त्रिभिर्वा विहीनस्य न वाङ्मयतपस्त्वम् । तथा हितवाक्यस्यापि इतरेषाम् अन्यतमेन द्वाभ्यां त्रिभिर्वा विहीनस्य न वाङ्मयतपस्त्वम् ।
எவ்வாறு உண்மையான வாக்கானது எவ்வாறு மற்ற ஒன்றோ, இரண்டோ அல்லது மூன்றோ இல்லாமல் போனால் வாங்மய தபஸ் ஆகாதோ அவ்வாறேபிரிய வாக்கினாலும், மற்ற ஒன்றோ, இரண்டோ அல்லது மூன்றோ லக்ஷணங்கள் குறைந்தால் அது வாங்மய தபஸ் ஆகாது.அவ்வாறே ஹிதம் என்ற வார்த்தையிலும் மற்றஒன்றோ, இரண்டோ, அல்லது மூன்றோ இல்லாவிடில் வாங்மய தபஸ் ஆகாது.
किं पुनः तत् तपः ?
அவ்வாறு ஆனால் அந்த வாங்மய தபஸ் எது?
यत् सत्यं वाक्यम् अनुद्वेगकरं प्रियं हितं च, तत् तपः वाङ्मयम् ; यथा ‘शान्तो भव वत्स, स्वाध्यायं योगं च अनुतिष्ठ, तथा ते श्रेयो भविष्यति’ इति । स्वाध्यायाभ्यसनं चैव यथाविधि वाङ्मयं तपः उच्यते ॥ १५ ॥
எது சத்யமானதாயும், கலக்கத்தை உண்டுபண்ணாததாயும், ஒருவருக்கு ஹிதத்தைக் கொடுப்பதாயும் உள்ளதோ அந்த வாக்கே வாங்மய தபஸ் ஆகும். ஹே வத்ஸ! எவ்வாறு நீ சாந்த மாய் இரு. ஓதுதலையும், யோகத்தையும் உடையவனாய் இரு என்பது போல் அவைகள் நன்மையை உண்டாக்கும். எவ்வாறு சாஸ்தி ரத்தில் விதிக்கப்பட்டதோ அவ்வாறு ஓதுதலும், அப்யாசம் செய்த லும் வாங்மய தபஸ் ஆகும்.
मनःप्रसादः सौम्यत्वं मौनमात्मविनिग्रहः ।
भावसंशुद्धिरित्येतत्तपो मानसमुच्यते ॥ १६ ॥
மந: ப்ரஸாத: ஸெளம்யத்வம் மௌனமாத்மவிநிக்ரஹ: ।
பாவஸம்சுத்திரித்யேதத்தபோ மானஸமுச்யதே ॥ 16 ॥
मनःप्रसादः मनसः प्रशान्तिः, स्वच्छतापादनं प्रसादः, सौम्यत्वं यत् सौमनस्यम् आहुः — मुखादिप्रसादादिकार्योन्नेया अन्तःकरणस्य वृत्तिः । मौनं वाङ्‌नियमोऽपि मनःसंयमपूर्वको भवति इति कार्येण कारणम् उच्यते मनःसंयमो मौनमिति । आत्मविनिग्रहः मनोनिरोधः सर्वतः सामान्यरूपः आत्मविनिग्रहः, वाग्विषयस्यैव मनसः संयमः मौनम् इति विशेषः । भावसंशुद्धिः परैः व्यवहारकाले अमायावित्वं भावसंशुद्धिः । इत्येतत् तपः मानसम् उच्यते ॥ १६ ॥
மனசில் சாந்தியும் கலக்கமில்லாத சுத்தமான தன்மையை சம் பாதிப்பது மனபிரசாதமாகும். சௌமியத்துவம் உள்ளது நல்ல மனம் என்கிறோம். அந்த மனதின் ( அந்தக்கரணத்தின்) சுத்த விருத்தியானது முகத்தில் மலர்ச்சியை உண்டாக்கும். மௌனம் என்பது வாக்கை அடக்குவதாக இருந்தாலும் மனதை அடக்குவ தாலேயே ஏற்படுவதால் காரியம் கூறப்பட்டதால் காரணமும் கூறப் பட்டதாகிறது. மனம் அடக்குதலே மௌனம் என்று மனோ நிக்ர ஹம் என்பது சாதாரணமாக எப்பொழுதும் மனதை அடக்குதல் என்பதே. ஆனால் இங்கு வாக்கு விஷயத்தினுடைய மனதின் அடக்கமே மௌனம் என்று லக்ஷணம் கூறப்பட்டுள்ளது. பாவ சம் சுத்தி என்பது வியவஹார காலத்தில் கபடமில்லாமல் இருப்பது இவை மானச தபஸ் எனப்படுகிறது.
यथोक्तं कायिकं वाचिकं मानसं च तपः तप्तं नरैः सत्त्वादिगुणभेदेन कथं त्रिविधं भवतीति, उच्यते —
சரீரத்தாலும் வாக்காலும் மனதினாலும் செய்யப்ப டும் தபஸானது மனிதர்களால் கடைபிடிக்கப்பட்டபின் எவ்வாறு சத்துவ முதலிய குண பேதத்தால் மூன்று விதமாகிறது என்பதைக் கூறுகிறார்.
श्रद्धया परया तप्तं तपस्तत्त्रिविधं नरैः ।
अफलकाङ्क्षिभिर्युक्तैः सात्त्विकं परिचक्षते ॥ १७ ॥
ச்ரத்தயா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவிதம் நரை: ।
அபலாகாங்க்ஷி பிர்யுக்தை: ஸாத்விகம் பரிசக்ஷதே ॥ 17 ॥
श्रद्धया आस्तिक्यबुद्ध्या परया प्रकृष्टया तप्तम् अनुष्ठितं तपः तत् प्रकृतं त्रिविधं त्रिप्रकारं त्र्यधिष्ठानं नरैः अनुष्ठातृभिः अफलाकाङ्क्षिभिः फलाकाङ्क्षारहितैः युक्तैः समाहितैः — यत् ईदृशं तपः, तत् सात्त्विकं सत्त्वनिर्वृत्तं परिचक्षते कथयन्ति शिष्टाः ॥ १७ ॥
இந்த இடத்தில் எந்த விஷயமானது கூறப்படுகிறதோ அந்த மூன்று விதமான சரீரத்தாலும், வாக்கினாலும், மனதினாலும் செய் யப்பட்ட தபஸ் ஆனது பலத்தில் இச்சை அற்று மேலும் சமாஹித சித்தமுடைய புருஷர்களால் மிகுந்த சிரத்தையுடனும், ஆஸ்திக புத்தியுடனும் செய்யப்படுகிறதோ அது சாத்வீக தபஸ் என்று மேலான புருஷர்கள் கூறுகிறார்கள்.
सत्कारमानपूजार्थं तपो दम्भेन चैव यत् ।
क्रियते तदिह प्रोक्तं राजसं चलमध्रुवम् ॥ १८ ॥
ஸத்காரமானபூஜார்தம் தபோ தம்பேன சைவ யத் ।
க்ரியதே ததிஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்ருவம் ॥ 18 ॥
सत्कारः साधुकारः ‘साधुः अयं तपस्वी ब्राह्मणः’ इत्येवमर्थम् , मानो माननं प्रत्युत्थानाभिवादनादिः तदर्थम् , पूजा पादप्रक्षालनार्चनाशयितृत्वादिः तदर्थं च तपः सत्कारमानपूजार्थम् , दम्भेन चैव यत् क्रियते तपः तत् इह प्रोक्तं कथितं राजसं चलं कादाचित्कफलत्वेन अध्रुवम् ॥ १८ ॥
தன்னை உபசாரம் செய்வதற்காகவும், மதிப்புக்காகவும், தன்னை வணங்குதல் பொருட்டும் தபஸ் செய்தலாகும். உபசாரத் திற்காக செய்வது என்பது அவன் மிக நல்ல புருஷன், தபஸ்வீ, பிராஹ்மணன் என்று கூறுவதற்காக. அவ்வாறேமானத்திற்காக பூஜை செய்யப்படுவது, பிறர் தன்னைப் பார்த்தவுடன் இருக்கை யில் இருந்து எழுதல், வணங்குதல் முதலியவற்றிற்காகவும், பூஜைக்காக தபஸ் செய்வது என்பது பாதத்தை அலம்பி அர்ச் சனை செய்தல், விருந்து படைத்தல் என்பவைகளை எதிர்பார்த்த லாகும். இவ்வாறு இவைகளுக்காக செய்யப்படும் தவமாகும். அவ் வாறேதம்பத்தின் பொருட்டு (பெருமைக்காக) செய்யப்படும் தவ மும் ராஜசமாகும். அவ்வாறே நிச்சயமற்றபலனை உடையதாகை யால் நாசமுடையது என்றும் அநித்தியம் என்றும் கூறப்படுகிறது.
मूढग्राहेणात्मनो यत्पीडया क्रियते तपः ।
परस्योत्सादनार्थं वा तत्तामसमुदाहृतम् ॥ १९ ॥
மூடக்ராஹேணாத்மனோ யத்பீடயா க்ரியதே தப: ।
பரஸ்யோத்ஸாதநார்தம் வா தத்தாமஸமுதாஹ்ருதம் ॥ 19 ॥
मूढग्राहेण अविवेकनिश्चयेन आत्मनः पीडया यत् क्रियते तपः परस्य उत्सादनार्थं विनाशार्थं वा, तत् तामसं तपः उदाहृतम् ॥ १९ ॥
அவிவேகமான நிச்சயத்தால் தன்னை துன்புறுத்திக்கொண்டு செய்யப்படுகின்றதவமும், மற்றவர்களை நாசம் செய்வதற்காக செய்யும் தவமும் தாமஸ தவம் என்று கூறப்படுகிறது.
इदानीं दानत्रैविध्यम् उच्यते —
இப்பொழுது தானத்தின் பேதம் கூறப்படுகிறது.
दातव्यमिति यद्दानं दीयतेऽनुपकारिणे ।
देशे काले च पात्रे च तद्दानं सात्त्विकं स्मृतम् ॥ २० ॥
தாதவ்யமிதி யத்தானம் தீயதேஅனுபகாரிணே ।
தேசே காலே ச பாத்ரே ச தத்தானம் ஸாத்விகம் ஸ்ம்ருதம் ॥ 20 ॥
दातव्यमिति एवं मनः कृत्वा यत् दानं दीयते अनुपकारिणे प्रत्युपकारासमर्थाय, समर्थायापि निरपेक्षं दीयते, देशे पुण्ये कुरुक्षेत्रादौ, काले सङ्क्रान्त्यादौ, पात्रे च षडङ्गविद्वेदपारग इत्यादौ, तत् दानं सात्त्विकं स्मृतम् ॥ २० ॥
எவனுக்கு தானம் கொடுப்பது உசிதம் (பொருத்தம்) என்று மனதில் விசாரித்து திரும்பவும் கொடுப்பதற்கு சக்தியற்றவனுக்கு ஒன்றும் எதிர்பாராமல் புண்ய க்ஷேத்திரங்களாகிய குருக்ஷேத்தி ரம் முதலியதேசத்தில் சங்க்ராந்தி முதலிய காலத்தில் ஆறு அங் கங்களுடன் வேதத்தை அறிந்தவனிடத்தில் செய்யும் தானம் சாத் வீக தானம் எனப்படும்.
यत्तु प्रत्युपकारार्थं फलमुद्दिश्य वा पुनः ।
दीयते च परिक्लिष्टं तद्दानं राजसं स्मृतम् ॥ २१ ॥
யத்து ப்ரத்யுபகாரார்தம் பலமுத்திச்ய வா புன: ।
தீயதே ச பரிக்லிஷ்டம் தத்தானம் ராஜஸம் ஸ்ம்ருதம் ॥ 21 ॥
यत्तु दानं प्रत्युपकारार्थं काले तु अयं मां प्रत्युपकरिष्यति इत्येवमर्थम् , फलं वा अस्य दानस्य मे भविष्यति अदृष्टम् इति, तत् उद्दिश्य पुनः दीयते च परिक्लिष्टं खेदसंयुक्तम् , तत् दानं राजसं स्मृतम् ॥ २१ ॥
எனக்கு பிரதி உபகாரம் செய்வான் என்று செய்யும் தானமும் எனக்கு இந்த தானத்தினால் அதிக நஷ்ட்ட பலம் கிடைக்கும் என்று மனவர்த்தத்துடன் செய்யப்படும் தானமும் ராஜசம் எனப்படுகிறது.
अदेशकाले यद्दानमपात्रेभ्यश्च दीयते ।
असत्कृतमवज्ञातं तत्तामसमुदाहृतम् ॥ २२ ॥
அதேசகாலே யத்தானமபாத்ரேப்யச்ச தீயதே ।
அஸத்க்ருதமவக்ஞாதம் தத்தாமஸமுதாஹ்ருதம் ॥ 22 ॥
अदेशकाले अदेशे अपुण्यदेशे म्लेच्छाशुच्यादिसङ्कीर्णे अकाले पुण्यहेतुत्वेन अप्रख्याते सङ्क्रान्त्यादिविशेषरहिते अपात्रेभ्यश्च मूर्खतस्करादिभ्यः, देशादिसम्पत्तौ वा असत्कृतं प्रियवचनपादप्रक्षालनपूजादिरहितम् अवज्ञातं पात्रपरिभवयुक्तं च यत् दानम् , तत् तामसम् उदाहृतम् ॥ २२ ॥
மிலேச்சர்கள் முதலியோரால் கூடிய பாபமயமான சுத்த மற்ற தேசத்தில், அவ்வாறேபுண்யத்திற்கு ஏதுவான சங்க்ராந்தி முதலிய விசேஷமற்றகாலத்தில், அவ்வாறேமூர்க்கர்கள், திருடர்கள் முதலிய யோக்கியம் அற்றவர்களிடத்தில் அவ் வாறே பிரியமான வாக்கு, பாதத்தைக் கழுவுதல் முதலியவைகள் அற்ற யோக்கியமானவரை அவமானப்படுத்தி செய்யப்படும் தானம் தாமச தானம் எனப்படும்.
यज्ञदानतपःप्रभृतीनां साद्गुण्यकरणाय अयम् उपदेशः उच्यते —
யக்ஞம், தானம், தபஸ் முதலியவைகளை சத்குணத்துடன் கூடியவைகளாக ஆக்கும் பொருட்டு இந்த உபதேசம் செய்யப் படுகிறது.
ओं तत्सदिति निर्देशो ब्रह्मणस्त्रिविधः स्मृतः ।
ब्राह्मणास्तेन वेदाश्च यज्ञाश्च विहिताः पुरा ॥ २३ ॥
ஓம் தத்ஸதிதி நிர்தேசோ ப்ரஹ்மணஸ்த்ரிவித: ஸ்ம்ருத: ।
ப்ராஹ்மணாஸ்தேன வேதாச்ச யக்ஞாச்ச விஹிதா: புரா ॥ 23 ॥
ओं तत् सत् इति एवं निर्देशः, निर्दिश्यते अनेनेति निर्देशः, त्रिविधो नामनिर्देशः ब्रह्मणः स्मृतः चिन्तितः वेदान्तेषु ब्रह्मविद्भिः । ब्राह्मणाः तेन निर्देशेन त्रिविधेन वेदाश्च यज्ञाश्च विहिताः निर्मिताः पुरा पूर्वम् इति निर्देशस्तुत्यर्थम् उच्यते ॥ २३ ॥
(ஓம் தத் ஸத்) என்பது பிரஹ்மத்தைக் குறிப்பிடும் மூன்று வித மான பெயர்களாகும். இவ்வாறு மூன்று விதமான பெயர்கள் வேதாந்தங்களில் பிரஹ்மத்தை அறிந்தவர்கள் கூறி அருளி உள் ளார்கள். முன் காலத்தில் பிரஜாபதியினிடமிருந்தே இந்த பிராஹ்ம ண, வேத மற்றும் யக்ஞங்கள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுவது அந்தப் பெயரை புகழ்வதற்காக ஆகும்.
तस्मादोमित्युदाहृत्य यज्ञदानतपःक्रियाः ।
प्रवर्तन्ते विधानोक्ताः सततं ब्रह्मवादिनाम् ॥ २४ ॥
தஸ்மாதோமித்யுதாஹ்ருத்ய யக்ஞதானதப: க்ரியா: ।
ப்ரவர்தந்தே விதானோக்தா: ஸததம் ப்ரஹ்மவாதினாம் ॥ 24 ॥
तस्मात् ‘ओम् इति उदाहृत्य’ उच्चार्य यज्ञदानतपःक्रियाः यज्ञादिस्वरूपाः क्रियाः प्रवर्तन्ते विधानोक्ताः शास्त्रचोदिताः सततं सर्वदा ब्रह्मवादिनां ब्रह्मवदनशीलानाम् ॥ २४ ॥
வேதத்தைக் கூறுவதில் வல்லவர்கள் ஆகிய பிராஹ்மணர் கள் சாஸ்த்திர விதிப்படி கூறப்பட்ட யக்ஞம், தானம் அவ் வாறேதபஸ் என்னும் கர்மங்களை ஓம் என்றபிரஹ்மத்தின் பெயரை உச்சரித்தே எப்பொழுதும் ஆரம்பிக்கிறார்கள்.
तदित्यनभिसन्धाय फलं यज्ञतपःक्रियाः ।
दानक्रियाश्च विविधाः क्रियन्ते मोक्षकाङ्क्षिभिः ॥ २५ ॥
ததித்யநபிஸந்தாய பலம் யக்ஞதப:க்ரியா: ।
தானக்ரியாச்ச விவிதா: க்ரியந்தே மோகாங்க்ஷி பி: ॥ 25 ॥
तत् इति अनभिसन्धाय, ‘तत्’ इति ब्रह्माभिधानम् उच्चार्य अनभिसन्धाय च यज्ञादिकर्मणः फलं यज्ञतपःक्रियाः यज्ञक्रियाश्च तपःक्रियाश्च यज्ञतपःक्रियाः दानक्रियाश्च विविधाः क्षेत्रहिरण्यप्रदानादिलक्षणाः क्रियन्ते निर्वर्त्यन्ते मोक्षकाङ्क्षिभिः मोक्षार्थिभिः मुमुक्षुभिः ॥ २५ ॥
தத் என்றபிரஹ்மத்தினுடைய நாமத்தை உச்சரித்தும் பலத்தில் இச்சையற்றும், செய்யப்படும் நாநாவிதமான யக்ஞம் தபஸ் அவ்வாறே பூமி, சேனைகள் முதலியவைகளை தானம் செய்வது முதலிய கிரியைகள்(செயல்கள்) மோக்ஷத்தை அடைய விரும்பு பவர்களால் செய்யப்படுகிறது.
ओन्तच्छब्दयोः विनियोगः उक्तः । अथ इदानीं सच्छब्दस्य विनियोगः कथ्यते —
ஓம் தத் ஸப்தங்களின் பிரயோகம் சொல்லப்பட்டது. இப்பொ ழுது சத் சப்தத்தின் பிரயோகத்தைக் கூறுகிறார்.
सद्भावे साधुभावे च सदित्येतत्प्रयुज्यते ।
प्रशस्ते कर्मणि तथा सच्छब्दः पार्थ युज्यते ॥ २६ ॥
ஸத்பாவே ஸாதுபாவே ச ஸதித்யேதத்ப்ரயுஜ்யதே ।
ப்ரசஸ்தே கர்மணி ததா ஸச்சப்த: பார்த யுஜ்யதே ॥ 26 ॥
सद्भावे, असतः सद्भावे यथा अविद्यमानस्य पुत्रस्य जन्मनि, तथा साधुभावे च असद्वृत्तस्य असाधोः सद्वृत्तता साधुभावः तस्मिन् साधुभावे च सत् इत्येतत् अभिधानं ब्रह्मणः प्रयुज्यते अभिधीयते । प्रशस्ते कर्मणि विवाहादौ च तथा सच्छब्दः पार्थ, युज्यते प्रयुज्यते इत्येतत् ॥ २६ ॥
சத் என்பது இல்லாத மகன் பிறந்த பின் இருக்கிறான் என்று இல்லாதவற்றின் இருப்பிலும் அவ்வாறே தீய ஒழுக்கம் உடைய தீயவன் நல்ல ஒழுக்கம் உள்ளவனாய் இருக்கும்பொழுது சாது நல்லவன் என்று அதில் சாது (நல்ல) தன்மையில் பார்ப்பதும் சத் எனப்படும். இல்லாதது இருக்கும்பொழுது சத் என்பதும், நல் ஒழுக்கத்தை சத் என்பதும் பிரஹ்மத்தின் நாமமாகும். கல்யாணம் முதலிய மங்களகரமான கர்மங்களில் சத் என்ற சொல்லானது பிரயோகிக்கப்படுகிறது.
यज्ञे तपसि दाने च स्थितिः सदिति चोच्यते ।
कर्म चैव तदर्थीयं सदित्येवाभिधीयते ॥ २७ ॥
யக்ஞே தபஸி தானே ச ஸ்திதி: ஸதிதி சோச்யதே ।
கர்ம சைவ ததர்தீயம் ஸதித்யேவாபிதீயதே ॥ 27 ॥
यज्ञे यज्ञकर्मणि या स्थितिः, तपसि च या स्थितिः, दाने च या स्थितिः, सा सत् इति च उच्यते विद्वद्भिः । कर्म च एव तदर्थीयं यज्ञदानतपोर्थीयम् ; अथवा, यस्य अभिधानत्रयं प्रकृतं तदर्थीयं यज्ञदानतपोर्थीयम् ईश्वरार्थीयम् इत्येतत् ; सत् इत्येव अभिधीयते । तत् एतत् यज्ञदानतपआदि कर्म असात्त्विकं विगुणमपि श्रद्धापूर्वकं ब्रह्मणः अभिधानत्रयप्रयोगेण सगुणं सात्त्विकं सम्पादितं भवति ॥ २७ ॥
யக்ஞத்தில் நிலைத்தலும் தபஸில் நிலைத்தலும் தானத்தில் நிலைத்தலும் உள்ளதான எந்த நிலை உள்ளதோ அது சத் என்று வித்வான்களால் கூறப்படுகிறது. அவ்வாறு இந்த யக்ஞாதிகளுக் காக கர்மம் அல்லது பிரகிருதத்தில் கூறப்பட்ட பிரஹ்மத்தின் மூன்று பெயர்களைப் பற்றிய ஈஸ்வரார்ப்பணமாக செய்யப்படு வது சத் என்றேகூறப்படுகிறது. அந்த இந்த யக்ஞ தபஸ் முதலிய கர்மங்கள் சாத்வீகமற்றதாய் இருந்தாலும் சிரத்தையுடன் பிரஹ்மத் தினுடைய மூன்று பெயர்களின் பிரயோகத்தால் அதை நல்லகுண மான சாத்வீகமாக்கப்படுகிறது.
तत्र च सर्वत्र श्रद्धाप्रधानतया सर्वं सम्पाद्यते यस्मात् , तस्मात् —
எதனால் எல்லாவற்றிலும் சிரத்தையானது முக்கியமானதாய் இருக்கிறதோ அதனால்-
अश्रद्धया हुतं दत्तं तपस्तप्तं कृतं च यत् ।
असदित्युच्यते पार्थ न च तत्प्रेत्य नो इह ॥ २८ ॥
அச்ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்தம் க்ருதம் சயத் ।
அஸதித்யுச்யதே பார்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ ॥ 28 ॥
अश्रद्धया हुतं हवनं कृतम् , अश्रद्धया दत्तं ब्राह्मणेभ्यः, अश्रद्धया तपः तप्तम् अनुष्ठितम् , तथा अश्रद्धयैव कृतं यत् स्तुतिनमस्कारादि, तत् सर्वम् असत् इति उच्यते, मत्प्राप्तिसाधनमार्गबाह्यत्वात् पार्थ । न च तत् बहुलायासमपि प्रेत्य फलाय नो अपि इहार्थम् , साधुभिः निन्दितत्वात् इति ॥ २८ ॥
சிரத்தையில்லாமல் செய்யும் யக்ஞமும், சிரத்தையில்லாமல் பிராஹ்மணர்களுக்கு செய்யும் தானமும் சிரத்தையில்லாமல் அனுஷ்ட்டிக்கும் தபஸும் அவ்வாறேசிரத்தையற்று செய்யும் ஸ்துதி, நமஸ்காரங்கள் முதலியவைகளும் அசத் எனப்படும். ஹே பார்த்த! ஏனெனில் என்னை அடைவதற்கான மார்க்கத்தினின்றும் வெளியில் இருக்கிறது. ஏனெனில் மிகுந்த சிரமப்பட்டு அசிரத்தை யுடன் செய்வது நல்ல மனிதர்களால் நிந்திக்கப்படுவதால் மரணத் திற்கு பின்னும் பலனைக் கொடுக்காது. அவ்வாறே இந்த லோகத்தி லும் சுகத்தைத் தராது.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये सप्तदशोऽध्यायः ॥
ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே ச்ரத் தாத்ரயவிபாகயோகோ நாம் சப்ததசோத்யாய:
सर्वस्यैव गीताशास्त्रस्य अर्थः अस्मिन् अध्याये उपसंहृत्य सर्वश्च वेदार्थो वक्तव्यः इत्येवमर्थः अयम् अध्यायः आरभ्यते ।
இந்த அத்யாயத்தில் கீதா சாஸ்திரம் முழுவதின் அர்த்தத் தையும், எல்லா வேதங்களின் அர்த்தத்தையும் சுருக்கமாகக் கூறவேண்டும் என்று இந்த அத்தியாயம் ஆரம்பிக்கப்படுகிறது.
सर्वेषु हि अतीतेषु अध्यायेषु उक्तः अर्थः अस्मिन् अध्याये अवगम्यते । अर्जुनस्तु संन्यासत्यागशब्दार्थयोरेव विशेषबुभुत्सुः उवाच —
இதற்கு முன்னுள்ள அத்தியாயங்களில் கூறப்பட்ட அர்த்தமா னது இந்த அத்தியாயத்தில் அறியப்படுகிறது. அர்ஜுனன் சந்நியா சம், தியாகம் இவைகளின் அர்த்தத்தின் வேறுபாட்டை அறிவ தற்கு இச்சையுடன் கூறினான்.
अर्जुन उवाच —
அர்ஜுனன் கூறினான்
संन्यासस्य महाबाहो तत्त्वमिच्छामि वेदितुम् ।
त्यागस्य च हृषीकेश पृथक्केशिनिषूदन ॥ १ ॥
ஸந்ந்யாஸஸ்ய மஹாபாஹோ தத்வமிச்சாமி வேதிதும் ।
த்யாகஸ்ய ச ஹ்ருஷீகேச ப்ருதக்கேசிநிஷூதன ॥ 1 ॥
संन्यासस्य संन्यासशब्दार्थस्य इत्येतत् , हे महाबाहो, तत्त्वं तस्य भावः तत्त्वम् , याथात्म्यमित्येतत् , इच्छामि वेदितुं ज्ञातुम् , त्यागस्य च त्यागशब्दार्थस्येत्येतत् , हृषीकेश, पृथक् इतरेतरविभागतः केशिनिषूदन ।
ஹே மஹாபாஹோ! ஹே ஹ்ருஷிகேச! ஹே கேசினிஷூ தன! சந்நியாச அர்த்தத்தையும் அதனுடைய ஸ்வரூபத்தின் உண் மையான தத்துவத்தையும், அவ்வாறேதியாக சப்தத்தின் அர்த்தத் தையும் அதனுடைய உண்மையான தத்துவத்தையும் வெவ்வே றாக பிரித்து அறிய விரும்புகிறேன்.
केशिनामा हयच्छद्मा कश्चित् असुरः तं निषूदितवान् भगवान् वासुदेवः, तेन तन्नाम्ना सम्बोध्यते अर्जुनेन ॥ १ ॥
பகவான் வாசுதேவனானவர் குதிரை வடிவெடுத்த கேஷ என்ற பெயருடைய அசுரனை சம்ஹாரம் செய்தார். அதனால் அவர் கேசினிஷூதன என்று அர்ஜுனனால் விளிக்கப்படுகிறார்.
संन्यासत्यागशब्दौ तत्र तत्र निर्दिष्टौ, न निर्लुठितार्थौ पूर्वेषु अध्यायेषु । अतः अर्जुनाय पृष्टवते तन्निर्णयाय —
அங்கு முன் அத்யாயங்களில் சந்நியாசம், தியாகத்தைப் பற்றி கூறி இருந்தாலும் தெளிவாக இல்லாததினால் (அதனைக் குறித் துக்) கேட்ட அர்ஜுனனுக்கு தெளிவுபடுத்துவதற்காக:-
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவான் கூறினார்-
काम्यानां कर्मणां न्यासं संन्यासं कवयो विदुः ।
सर्वकर्मफलत्यागं प्राहुस्त्यागं विचक्षणाः ॥ २ ॥
காம்யானாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்ந்யாஸம் கவயோ விது: ।
ஸர்வகர்மபலத்யாகம் ப்ராஹுஸ்த்யாகம் விசக்ஷணா: ॥ 2 ॥
काम्यानाम् अश्वमेधादीनां कर्मणां न्यासं संन्यासशब्दार्थम् , अनुष्ठेयत्वेन प्राप्तस्य अनुष्ठानम् , कवयः पण्डिताः केचित् विदुः विजानन्ति ।
சில பண்டிதர்கள் (சாஸ்திரத்தால் விதிக்கப்பட்ட) அனுஷ்ட்டா னம் செய்யவேண்டிய அச்வமேதம் முதலிய காமிய கர்மங்களை அனுஷ்ட்டிக்காமல் இருப்பதே சந்நியாசம் என்றபதத்தின் அர்த்தம் என்று அறிகிறார்கள்.
नित्यनैमित्तिकानाम् अनुष्ठीयमानानां सर्वकर्मणाम् आत्मसम्बन्धितया प्राप्तस्य फलस्य परित्यागः सर्वकर्मफलत्यागः तं प्राहुः कथयन्ति त्यागं त्यागशब्दार्थं विचक्षणाः पण्डिताः ।
அனுஷ்டிக்கப்படுகின்ற நித்யநைமித்திக கர்மங்களெல் லா வற்றினுடைய (பலனும் செய்பவனைத் தொடருமாதலால் அவ்வாறு) தன்னைத் தொடர்ந்து வரும் பலனை பரித்யாகம் செய்வது ஸர்வ கர்ம பலத்தியாகமெனப்படுகிறது. அதவது விட்டுவிடுதலை த்யாகமென்னும் சப்ததத்தின் பொருளாக ஞானிகள் கூறுகிறார்கள்.
यदि काम्यकर्मपरित्यागः फलपरित्यागो वा अर्थः वक्तव्यः, सर्वथा परित्यागमात्रं संन्यासत्यागशब्दयोः एकः अर्थः स्यात् , न घटपटशब्दाविव जात्यन्तरभूतार्थौ ॥
காமிய கர்ம பரித்யாகத்தின் அர்த்தமோ, பலபரித்யாகத்தின் அர்த்தமோ கூறவேண்டிய இடத்தில் சந்நியாசம், தியாகம் இரண் டின் அர்த்தமும் எப்பொழுதும் தியாகம் என்றஒரே அர்த்தமாகும். குடம், வஸ்திரம் என்பது போல் வெவ்வேறு ஜாதியின் அர்த் தத்தை விளக்குவதல்ல.
ननु नित्यनैमित्तिकानां कर्मणां फलमेव नास्ति इति आहुः । कथम् उच्यते तेषां फलत्यागः, यथा वन्ध्यायाः पुत्रत्यागः ।
நித்திய நைமித்திய கர்மங்களுக்கு பலனே இல்லை. அவ்வாறு இருக்கும்பொழுது எவ்வாறு பலத்தியாகத்தைக் கூற லாம்? வந்தியா புத்திரனைத் த்யாகம் செய்வது போல் (அல்லவா இருக்கிறது)
नैष दोषः, नित्यानामपि कर्मणां भगवता फलवत्त्वस्य इष्टत्वात् । वक्ष्यति हि भगवान् ‘अनिष्टमिष्टं मिश्रं च’ (भ. गी. १८ । १२) इति ‘न तु संन्यासिनाम्’ (भ. गी. १८ । १२) इति च । संन्यासिनामेव हि केवलं कर्मफलासम्बन्धं दर्शयन् असंन्यासिनां नित्यकर्मफलप्राप्तिम् ‘भवत्यत्यागिनां प्रेत्य’ (भ. गी. १८ । १२) इति दर्शयति ॥ २ ॥
இந்த தோஷம் பொருந்தாது. நித்ய கர்மங்களுக்கு பலன் ஏற்படுகிறது என்பதில் பகவானுக்கு இஷ்டமானதினால், இனிபகவான் கூறப்போகிறார்.அநிஷ்ட்டம் என்றும் நது சந்நியா சினாம் என்றும். சந்நியாசிகளுக்கு கர்மபலத்தில் சம்பந்தம் இல்லாததையும் சந்நியாசி அல்லாதவர்களுக்கு நித்ய கர்மத்தினால் பலத்தின் அடைவையும் பவத்யத்யாகினாம் ப்ரேத்ய என்று இனி காண்பிக்கப்போகிறார்.
त्याज्यं दोषवदित्येके कर्म प्राहुर्मनीषिणः ।
यज्ञदानतपःकर्म न त्याज्यमिति चापरे ॥ ३ ॥
த்யாஜ்யம் தோஷவதித்யேகே கர்ம ப்ராஹுர்மநீஷிண: ।
யக்ஞதானதப:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே ॥ 3 ॥
त्याज्यं त्यक्तव्यं दोषवत् दोषः अस्य अस्तीति दोषवत् । किं तत् ? कर्म बन्धहेतुत्वात् सर्वमेव । अथवा, दोषः यथा रागादिः त्यज्यते, तथा त्याज्यम् इति एके कर्म प्राहुः मनीषिणः पण्डिताः साङ्ख्यादिदृष्टिम् आश्रिताः, अधिकृतानां कर्मिणामपि इति ।
அதற்கு தோஷம் இருக்கிறது இருப்பதால் தோஷத்தைப் போல் தள்ளத்தக்கது. அது எது? பந்தத்திற்கு ஹேதுவாய் இருக்கும் கர்மங் கள் எல்லாம் என்று சாங்கியம் முதலிய மதத்தைத் தழுவிய பண்டிதர் கள் கூறுகிறார்கள். ஆகையால் ராகத்வேஷத்தைத் தியாகம் செய்வது போல் கர்மத்தில் அதிகாரமுடைய கர்மிகளும் அந்தக் கர்மங்களை தியாகம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.
तत्रैव यज्ञदानतपःकर्म न त्याज्यम् इति च अपरे ॥
இதைக் குறித்து சிலர் யக்ஞம், தானம் தபஸ், கர்மம் இவைகளை தியாகம் செய்யக்கூடாது என்கிறார்கள்.
कर्मिणः एव अधिकृताः, तान् अपेक्ष्य एते विकल्पाः, न तु ज्ञाननिष्ठान् व्युत्थायिनः संन्यासिनः अपेक्ष्य ।
இந்த மாறுபட்ட கருத்துக்கள் எல்லாம் அதிகாரமுடையவர்க ளைக் குறித்தே அன்றி விரக்தனாகிய (வைராக்யபுருஷனாகிய) ஞானநிஷ்டை உடைய சந்நியாசினிடத்தில் அல்ல.
‘ज्ञानयोगेन साङ्ख्यानां निष्ठा मया पुरा प्रोक्ता’ (भ. गी. ३ । ३) इति कर्माधिकारात् अपोद्धृताः ये, न तान् प्रति चिन्ता ॥
சாங்கிய யோகியினுடைய நிஷ்ட்டை ஞானயோகத்தில் உண்டாகும் என்று என்னால் முன்பே கூறப்பட்டது.அவ்வாறே கர் மாதிகாரிகளை காட்டிலும் வேறு என்று பிரித்துக் காண்பிக்கப்பட் டது. இந்த விஷயத்தைக் குறித்து ஒரு விசாரமும் தேவை இல்லை.
ननु ‘कर्मयोगेन योगिनाम्’ (भ. गी. ३ । ३) इति अधिकृताः पूर्वं विभक्तनिष्ठाः अपि इह सर्वशास्त्रार्थोपसंहारप्रकरणे यथा विचार्यन्ते, तथा साङ्ख्या अपि ज्ञाननिष्ठाः विचार्यन्ताम् इति ।
கர்மயோகேன யோகினாம்' என்று முன்பு கர்மத்தில் அதிகார முடையவர்களினுடைய நிஷ்ட்டையானது வேறுபடுத்தப்பட்டிருந் தும் இங்கு எல்லா சாஸ்திரங்களையும் முடிக்கின்றஇந்த பிரகரணத் தில் எவ்வாறு விசாரிக்கப்படுகின்றதோ அவ்வாறேசாங்கியர்களின் அதாவது ஞானிகளின் ஞானநிஷ்ட்டையையும் விசாரிக்கலாம்.
न, तेषां मोहदुःखनिमित्तत्यागानुपपत्तेः ।
அவ்வாறு அல்ல. அவர்களின் தியாகமானது மோஹம், துக்கம் இவைகளினால் ஏற்பட்டதல்ல.
न कायक्लेशनिमित्तं दुःखं साङ्ख्याः आत्मनि पश्यन्ति, इच्छादीनां क्षेत्रधर्मत्वेनैव दर्शितत्वात् । अतः ते न कायक्लेशदुःखभयात् कर्म परित्यजन्ति ।
இச்சை முதலியவைகளை சரீரத்தின் தர்மமாக பார்ப்பதால் சரீரப்பீடையினால் ஏற்படும் துக்கங்களை ஞானிகள் (சாங்கியர்கள்) ஆத்மாவிடத்தில் பார்ப்பதில்லை. ஆகையால் அவர்கள் சரீர பீடையினால் ஏற்படும் துக்கத்திற்கு பயந்து கர்மத்தை விடுகிறார்கள் இல்லை.
नापि ते कर्माणि आत्मनि पश्यन्ति, येन नियतं कर्म मोहात् परित्यजेयुः ।
அவ்வாறே அவர்கள் ஆத்மாவிடத்தில் கர்மங்களை பார்ப்ப தில்லை. ஆகையால் மோஹத்தினால் செய்யப்படும் நித்திய கர்மங்களை விட்டுவிடக்கூடும்.
गुणानां कर्म ‘नैव किञ्चित्करोमि’ (भ. गी. ५ । ८) इति हि ते संन्यस्यन्ति । ‘सर्वकर्माणि मनसा संन्यस्य’ (भ. गी. ५ । १३) इत्यादिभिः तत्त्वविदः संन्यासप्रकारः उक्तः ।
கர்மமானது குணங்களினுடையதே என்னுடையது அன்று என்று விட்டுவிடுகிறார்கள். சர்வ கர்மானி மனசா சந்நியஸ்ய) என்பது முதலியவைகளால் தத்துவத்தை அறிந்தவர்களின் சந்நியாச முறையானது கூறப்பட்டது.
तस्मात् ये अन्ये अधिकृताः कर्मणि अनात्मविदः, येषां च मोहनिमित्तः त्यागः सम्भवति कायक्लेशभयाच्च, ते एव तामसाः त्यागिनः राजसाश्च इति निन्द्यन्ते कर्मिणाम् अनात्मज्ञानां कर्मफलत्यागस्तुत्यर्थम् ।
ஆகையால் எந்த மற்ற ஆத்மக்ஞானம் அற்ற அதிகாரிகள் மோஹத்தினாலும் சரீர சிரமத்தின் பயத்தினாலும் கர்மங்கள் செய்வதை விட்டுவிடுகிறார்கள். அவர்கள் ராஜச, தாமச தியாகிகள் என்று இகழப்படுவது ஆத்மஞானம் அற்ற கர்மிகளின் கர்மபலத்தியாகத்தைப் புகழ்வதற்காகக் கூறப்பட்டதாகும்.
‘सर्वारम्भपरित्यागी’ (भ. गी. १२ । १६) ‘मौनी सन्तुष्टो येन केनचित् । अनिकेतः स्थिरमतिः’ (भ. गी. १२ । १९) इति गुणातीतलक्षणे च परमार्थसंन्यासिनः विशेषितत्वात् । वक्ष्यति च ‘निष्ठा ज्ञानस्य या परा’ (भ. गी. १८ । ५८) इति । तस्मात् ज्ञाननिष्ठाः संन्यासिनः न इह विवक्षिताः ।
எல்லாக்கர்மங்களின் ஆரம்பத்தையும் விட்டவன் (சர்வாரம்ப பரித்யாகி) மௌனி, எது கிடைத்தாலும் சந்தோஷமாக இருப்பவன் (சந்நுஷ்ட்டோ யேன கேனசித்), தங்கும் இடம் இல்லா தவன் (அநிகேத: ஸ்திரமதி:) ஸ்திரமான புத்தியுடையவன் என்று பரமார்த்த சந்நியாசியின் குணாதீத (குணங்களைக் கடந்த) லக்ஷணங்களினால் அவர்களைச் சிறப்பித்துக் கூறுகிறார். ஆகை யால் இங்கு ஞானநிஷ்ட்டை உடைய சந்நியாசிகளை குறித்து இங்கு கூறப்படவில்லை.
कर्मफलत्यागः एव सात्त्विकत्वेन गुणेन तामसत्वाद्यपेक्षया संन्यासः उच्यते, न मुख्यः सर्वकर्मसंन्यासः ॥
கர்மபலத்தியாகமேதான் ராஜச த்யாகத்தை, தாமச த்யாகத்தை அபேக்ஷித்து சாத்விக குணமுடையதாய் இருப்பதால் சந்நியாசம் என்று கூறப்பட்டது. ஆகையால் அதுவே முக்கிய சர்வகர்ம சந்நியாசமாகாது.
सर्वकर्मसंन्यासासम्भवे च ‘न हि देहभृता’ (भ. गी. १८ । ११) इति हेतुवचनात् मुख्य एव इति चेत् ।
ந ஹி தேஹப்ருதா' உடம்பை உடையவனால் என்று பகவான் கூறிய காரணத்தால் எல்லாக்கர்மங்களையும் விட்டுவிட முடியாது என்பதால் இது முக்கியமான சந்நியாசமே எனில்-
न ; हेतुवचनस्य स्तुत्यर्थत्वात् । यथा ‘त्यागाच्छान्तिरनन्तरम्’ (भ. गी. १२ । १२) इति कर्मफलत्यागस्तुतिरेव यथोक्तानेकपक्षानुष्ठानाशक्तिमन्तम् अर्जुनम् अज्ञं प्रति विधानात् ; तथा इदमपि ‘न हि देहभृता शक्यम्’ (भ. गी. १८ । ११) इति कर्मफलत्यागस्तुत्यर्थम् ।
அவ்வாறு அல்ல. காரணத்தைக் கூறும் வசனமானது ஸ்துதி யின் பொருட்டாகும். (த்யாகாச்சாந்திரனந்தரம்-) தியாகத்திற்குப் பின் உடனே சாந்தி ஏற்படுகிறது என்று கர்மபலத்தியாகத்தை துதி செய்வதற்காகவே. கூறப்பட்ட அநேக விதமான சாதனங்களை அனுஷ்ட்டிக்க சக்தி அற்றஅக்ஞானியாகிய அர்ஜுனனைக் குறித்து விதிக்கப்பட்டதால். அவ்வாறேஇங்கும், ந ஹி தேஹப் ருதா சக்யம்- உடம்பை உடையவனால் முடியாது என்று கூறியது கர்மபலத்தியாகத்தைப் போற்றுவதற்காகக் கூறப்பட்டது.
‘सर्वकर्माणि मनसा संन्यस्य नैव कुर्वन्न कारयन्नास्ते’ (भ. गी. ५ । १३) इत्यस्य पक्षस्य अपवादः केनचित् दर्शयितुं शक्यः ।
எல்லாக் கர்மங்களையும் மனதினால் துறந்து நான் ஒன்றும் செய்யாமலும் ஒன்றையும் செய்விக்காமலும் இருப்பதில்லை என்ற இந்த நியாயத்தை ஒருவராலும் விளக்கிக்காட்ட முடியாது.
तस्मात् कर्मणि अधिकृतान् प्रत्येव एषः संन्यासत्यागविकल्पः । ये तु परमार्थदर्शिनः साङ्ख्याः, तेषां ज्ञाननिष्ठायामेव सर्वकर्मसंन्यासलक्षणायाम् अधिकारः, न अन्यत्र, इति न ते विकल्पार्हाः ।
ஆகையால் கர்மாதிகாரி விஷயத்தில்தான் சந்நியாசம் மற்றும் தியாக சம்பந்தமான விகல்பங்களும் (வேறுபாடுகளும்) ஆகும். எவர்கள் பரமார்த்த தர்சிகளாகவும், சாங்கியர்களாகவும் உள்ளார் களோ அவர்கள் எல்லாக் கர்மங்களையும் துறந்த லக்ஷணம் உடைய ஞான நிஷ்ட்டையில் அதிகாரம் உடையவர்கள். மற்றவை களில் அல்ல. ஆகையால் அவர்கள் விகல்பங்களுக்கு அதிகாரிகள் அல்ல.
तच्च उपपादितम् अस्माभिः ‘वेदाविनाशिनम्’ (भ. गी. २ । २१) इत्यस्मिन्प्रदेशे, तृतीयादौ च ॥ ३ ॥
இந்த சித்தாந்தத்தையே நம்மால் வேதாவினாசினம் என்ற ஸ்லோகத்தின் வியாக்யானத்திலும், மூன்றாவது அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
तत्र एतेषु विकल्पभेदेषु —
இனி இந்த விகல்ப பேதங்களில்.
निश्चयं शृणु मे तत्र त्यागे भरतसत्तम ।
त्यागो हि पुरुषव्याघ्र त्रिविधः सम्प्रकीर्तितः ॥ ४ ॥
நிச்சயம் ச்ருணு மே தத்ர த்யாகே பரதஸத்தம ।
த்யாகோ ஹி புருஷவ்யாக்ர த்ரிவித: ஸம்ப்ரகீர்தித: ॥ 4 ॥
निश्चयं शृणु अवधारय मे मम वचनात् ; तत्र त्यागे त्यागसंन्यासविकल्पे यथादर्शिते भरतसत्तम भरतानां साधुतम ।
பரதகுலத்தில் மிகச் சிறந்தவனே! தியாகம் மற்றும் சந்நியாச விகல்பங்களை என்னுடைய வசனத்தினால் எப்படி உணர்த்தப் பட்டதோ அவ்வாறு நிச்சயித்துக் கொள்.
त्यागो हि, त्यागसंन्यासशब्दवाच्यो हि यः अर्थः सः एक एवेति अभिप्रेत्य आह — त्यागो हि इति । पुरुषव्याघ्र, त्रिविधः त्रिप्रकारः तामसादिप्रकारैः सम्प्रकीर्तितः शास्त्रेषु सम्यक् कथितः ।
தியாகம், சந்நியாசம் என்ற சொற்களின் பொருள் ஒன்றே என்ற அபிப்பிராயத்தால் தியாகம் என்று கூறுகிறார். ஹே மனிதருள் சிம் மம் போன்றவனே அந்த தியாகமானது சாஸ்திரங்களில் தாமஸம் முதலிய மூன்றுவிதமாக (நன்றாக) திடமாகக் கூறப்பட்டுள்ளது.
यस्मात् तामसादिभेदेन त्यागसंन्यासशब्दवाच्यः अर्थः अधिकृतस्य कर्मिणः अनात्मज्ञस्य त्रिविधः सम्भवति, न परमार्थदर्शिनः, इत्ययमर्थः दुर्ज्ञानः, तस्मात् अत्र तत्त्वं न अन्यः वक्तुं समर्थः । तस्मात् निश्चयं परमार्थशास्त्रार्थविषयम् अध्यवसायम् ऐश्वरं मे मत्तः शृणु ॥ ४ ॥
எதனால் கர்மத்தில் அதிகாரமுடைய கர்மிகளாகிய அக்ஞா னிகளுக்கு தாமச முதலிய பேதங்களினால் தியாக, சந்நியாச சொற்களுடைய பொருள் மூன்றுவிதமாகக் கூறப்படுகிறதோ அவ்வாறு பரமார்த்த ஞானிக்கு கிடையாது என்பதால் இதை அறிவது மிகக் கடினம் ஆகையால் இந்த விஷயத்தில் இதன் தத்துவத்தை மற்றவர்களால் கூறமுடியாது. ஆகையால் நிச்சயமான உண்மையான சாஸ்திர விஷயத்தில் என்னால் நிர்ணயம் செய்யப்பட்ட அபிப்பிராயத்தைக் கேள்.
कः पुनः असौ निश्चयः इति, आह —
இனி அந்த நிச்சயமானது எது? என்பதைக் கூறுகிறார்–
यज्ञदानतपःकर्म न त्याज्यं कार्यमेव तत् ।
यज्ञो दानं तपश्चैव पावनानि मनीषिणाम् ॥ ५ ॥
யக்ஞதானதப: கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத் ।
யக்ஞோ தானம் தபச்சைவ பாவநானி மனீஷிணாம் ॥ 5 ॥
यज्ञः दानं तपः इत्येतत् त्रिविधं कर्म न त्याज्यं न त्यक्तव्यम् , कार्यं करणीयम् एव तत् । कस्मात् ? यज्ञः दानं तपश्चैव पावनानि विशुद्धिकराणि मनीषिणां फलानभिसन्धीनाम् इत्येतत् ॥ ५ ॥
யக்ஞம், தானம், தபஸ் என்றஇந்த மூன்று விதக் கர்மங்களை விடக்கூடாது. அது அவசியம் செய்யப்படவேண்டியதே. ஏனெனில் யக்ஞம், தானம், தபஸ் என்பவைகள் தூய்மைப்படுத்து வதே. மனீஷிணாம் என்றால் பலத்தில் இச்சை அற்றவர்களுக்கு இவைகள் தூய்மைப்படுத்துவன ஆகும்.
एतान्यपि तु कर्माणि सङ्गं त्यक्त्वा फलानि च ।
कर्तव्यानीति मे पार्थ निश्चितं मतमुत्तमम् ॥ ६ ॥
ஏதான்யபி து கர்மாணி ஸங்கம் த்யக்த்வா பலானி ச ।
கர்தவ்யாநீதி மே பார்த நிச்சிதம் மதமுத்தமம் ॥ 6 ॥
एतान्यपि तु कर्माणि यज्ञदानतपांसि पावनानि उक्तानि सङ्गम् आसक्तिं तेषु त्यक्त्वा फलानि च तेषां परित्यज्य कर्तव्यानि इति अनुष्ठेयानि इति मे मम निश्चितं मतम् उत्तमम् ॥
யக்ஞம், தானம், தபஸ் ஆகிய கர்மங்கள் தூய்மைப்படுத்துப வைகளானாலும் அதன் விஷயத்தில் ஆஸக்தி அற்று (பற்றற்று) அவ்வாறே பலத்தில் ஆசை அற்று அந்தக் கர்மங்களை அனுஷ்ட் டிக்க வேண்டும் என்பது எனது நிச்சயமான மேலான கருத்தாகும்.
‘निश्चयं शृणु मे तत्र’ (भ. गी. १८ । ४) इति प्रतिज्ञाय, पावनत्वं च हेतुम् उक्त्वा, ‘एतान्यपि कर्माणि कर्तव्यानि’ इत्येतत् ‘निश्चितं मतमुत्तमम्’ इति प्रतिज्ञातार्थोपसंहार एव, न अपूर्वार्थं वचनम् , ‘एतान्यपि’ इति प्रकृतसंनिकृष्टार्थत्वोपपत्तेः ।
நிச்சயம் ச்ருணு மே தத்ர = இந்த விஷயத்தில் என்னுடைய நிச்சயத்தைக் கேள். என்று பிரதிக்ஞை செய்து தூய்மைப்படுத்துவ தில் காரணத்தைக் (ஹேதுவைக் ) கூறி இந்தக் கர்மங்கள் எல்லாம் அவசியம் செய்யவேண்டியதே என்று இந்த நிச்சயமான மேலான கருத்து என்று பிரதிக்ஞை செய்ததை முடிப்பதற்காகவே அன்றி அபூர்வமான விஷயத்தின் விளக்கமல்ல. ஏனெனில் ஏ தானி=இவைகள் என்ற சொல் இந்த பிரகரணத்தில் மிகவும் பக்கத் தில் உள்ள விஷயத்தைக் குறிக்கிறது.
सासङ्गस्य फलार्थिनः बन्धहेतवः एतान्यपि कर्माणि मुमुक्षोः कर्तव्यानि इति अपिशब्दस्य अर्थः । न तु अन्यानि कर्माणि अपेक्ष्य ‘एतान्यपि’ इति उच्यते ॥
ஆசக்தியும் பலத்தில் இச்சை உள்ளவர்களால் செய்யப்படும் கர்மங்கள் பந்தத்திற்கு ஹேதுவாய் இருந்தாலும் பலத்தில் இச்சை யற்றமுமூக்ஷுக்களாலும் அவசியம் செய்யவேண்டும் என்பதைக் காட்டுவதற்காக வந்த (அபி= உம்) என்றசொல்லின் அர்த்தமாகும். இங்கு மற்றகாமிய கர்மங்களைக் குறித்து ஏதானி என்றசொல்லு டன் அபி என்றசொல்லின் பிரயோகம் அல்ல என்பதாகும்.
अन्ये तु वर्णयन्ति — नित्यानां कर्मणां फलाभावात् ‘सङ्गं त्यक्त्वा फलानि च’ इति न उपपद्यते । अतः ‘एतान्यपि’ इति यानि काम्यानि कर्मणि नित्येभ्यः अन्यानि, एतानि अपि कर्तव्यानि, किमुत यज्ञदानतपांसि नित्यानि इति ।
வேறு சிலர் நித்திய கர்மாக்களுக்கு பலன் இல்லாததினால் பலத்தை விடுவது என்பது பொருந்தாது என்று கூறுவர். ஆகை யால் ஏதானி என்ற பதத்தின் அபிப்பிராயம் என்னவெனில் நித்திய கர்மாக்களைக் காட்டிலும் காமியகர்மாக்கள் வேறு ஆனாலும் செய்யவேண்டியதே. இவ்வாறு இருக்கும்பொழுது யக்ஞ, தான, தபஸ் ஆகிய நித்யகர்மாக்களை குறித்துக் கூறவும் வேண்டுமோ?
तत् असत् , नित्यानामपि कर्मणाम् इह फलवत्त्वस्य उपपादितत्वात् ‘यज्ञो दानं तपश्चैव पावनानि’ (भ. गी. १८ । ५) इत्यादिना वचनेन ।
அது பொருந்தாது. ஏனெனில் நித்திய கர்மாக்களுக்கும் பலன் இருப்பது கூறப்பட்டிருப்பதால். (யக்ஞோ தானம் தபச்சைவ பாவ னானி) யக்ஞம் தானம், தபஸ் இவைகள் தூய்மைப்படுத்துபவை என்பது முதலிய வசனங்களால் கூறப்பட்டிருப்பதால்.
नित्यान्यपि कर्माणि बन्धहेतुत्वाशङ्कया जिहासोः मुमुक्षोः कुतः काम्येषु प्रसङ्गः ?
நித்திய கர்மங்களும் பந்தத்திற்கு ஹேது (காரணம்) என்று சங்கித்து அதை விடுவதற்கு இச்சை உள்ள முமூக்ஷக்கள் காமிய கர்மங்களில் எவ்வாறு பிரவிருத்திப்பார்கள்.
‘दूरेण ह्यवरं कर्म’ (भ. गी. २ । ४९) इति च निन्दितत्वात् , ‘यज्ञार्थात् कर्मणोऽन्यत्र’ (भ. गी. ३ । ९) इति च काम्यकर्मणां बन्धहेतुत्वस्य निश्चितत्वात् , ‘त्रैगुण्यविषया वेदाः’ (भ. गी. २ । ४५) ‘त्रैविद्या मां सोमपाः’ (भ. गी. ९ । २०) ‘क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति’ (भ. गी. ९ । २१) इति च, दूरव्यवहितत्वाच्च, न काम्येषु ‘एतान्यपि’ इति व्यपदेशः ॥ ६ ॥
தூரேண ஹ்யவரம் கர்ம) சகாம கர்மம் மிகவும் கீழானது என்று நிந்தித்தலாலும், (யக்ஞார்த்தாத்கர்மணோஅன்யத்ர) யக்ஞார்த்த கர்மங்களைக் காட்டிலும் மற்றகர்மங்கள் பந்தத்திற்கு காரணமாகிறது என்று நிச்சயித்தலாலும், (த்ரைகுண்யவிஷயா வேதா:) மூன்று குணங்களின் விஷயங்கள் வேதங்கள், த்ரைவித்யா மாம் ஸோமபா: = மூன்றுவேதங்களை அறிந்தவர்கள் சோமபானத்தை அருந்தியவர்கள் ஆவார்கள். க்ஷணே புண்யே மர்த்திய லோகம் விசந்தி = புண்யங்கள் தீர்ந்த உடன் மனுஷ்ய லோகத்தை அடைகிறார்கள் என்று காம்யகர்ம விஷயங்களை மிகவும் தூரமாக ஒதுக்கி உள்ளதாலும் ஏதான்யபி என்று கூறியது காமிய கர்ம விஷயங்களில் அல்ல என்பது ஆகும்.
तस्मात् अज्ञस्य अधिकृतस्य मुमुक्षोः —
ஆகையால் அக்ஞானியாகிய கர்மாதிகாரி முமூக்ஷவின் பொருட்டு -
नियतस्य तु संन्यासः कर्मणो नोपपद्यते ।
मोहात्तस्य परित्यागस्तामसः परिकीर्तितः ॥ ७ ॥
நியதஸ்ய து ஸந்ந்யாஸ: கர்மணோ நோபபத்யதே ।
மோஹாத்தஸ்ய பரித்யாகஸ்தாமஸ: பரிகீர்த்தித: ॥ 7 ॥
नियतस्य तु नित्यस्य संन्यासः परित्यागः कर्मणः न उपपद्यते, अज्ञस्य पावनत्वस्य इष्टत्वात् । मोहात् अज्ञानात् तस्य नियतस्य परित्यागः ।
விதிக்கப்பட்ட நித்திய கர்மாக்களை தியாகம் செய்தல் (விட்டு விடுதல்) கூடாது . ஏன் எனில் அக்ஞானிக்கு நித்ய கர்மா தூய்மைப் படுத்துவதற்கு காரணமாகிறது. ஆகையால் மோஹத்தினால் (அக்ஞானத்தினால்) நித்யகர்மாவைத் தியாகம் செய்யக்கூடாது.
नियतं च अवश्यं कर्तव्यम् , त्यज्यते च, इति विप्रतिषिद्धम् ; अतः मोहनिमित्तः परित्यागः तामसः परिकीर्तितः मोहश्च तमः इति ॥ ७ ॥
நித்யகர்மாவை அவசியம் செய்யவேண்டும். அதைத் தியா கம் செய்தல் கூடாது. ஆகையால் மோஹத்தின் நிமித்தத்தினா லேயே விடப்படுகிறது. மோஹமே தமஸ் ஆகும். ஆனால் இதைத் தாமஸ தியாகம் எனப்படுகிறது.
किंच
மேலும்-
दुःखमित्येव यत्कर्म कायक्लेशभयात्त्यजेत् ।
स कृत्वा राजसं त्यागं नैव त्यागफलं लभेत् ॥ ८ ॥
து:கமித்யேவ யத் கர்ம காயக்லேசபயாத் த்யஜேத் ।
ஸ க்ருத்வா ராஜஸம் த்யாகம் நைவ த்யாகபலம் லபேத் ॥ 8 ॥
दुःखम् इति एव यत् कर्म कायक्लेशभयात् शरीरदुःखभयात् त्यजेत् , सः कृत्वा राजसं रजोनिर्वर्त्यं त्यागं नैव त्यागफलं ज्ञानपूर्वकस्य सर्वकर्मत्यागस्य फलं मोक्षाख्यं न लभेत् नैव लभेत ॥ ८ ॥
எல்லாக் கர்மங்களும் துக்கரூபமானது என்று நினைத்தும், சரீ ரத்திற்கு கஷ்டம் ஏற்படும் என்ற பயத்தினால் கர்மங்களை தியாகம் செய்கிறான். அது ராஜஸ தியாகமாகும். இந்த த்யாகத்திற்கு ஞான பூர்வகமாக ஏற்படும் ஸர்வகர்ம தியாகத்தினால் ஏற்படும் மோஹம் என்கின்ற பலனை அடையமாட்டான்.
कः पुनः सात्त्विकः त्यागः इति, आह —
இனி சாத்விக த்யாகம் என்பது யாதெனில்?-
कार्यमित्येव यत्कर्म नियतं क्रियतेऽर्जुन ।
सङ्गं त्यक्त्वा फलं चैव स त्यागः सात्त्विको मतः ॥ ९ ॥
கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதேஅர்ஜுன ।
ஸங்கம் த்யக்த்வா பலம் சைவ ஸ த்யாக: ஸாத்த்விகோ மத: ॥ 9 ॥
कार्यं कर्तव्यम् इत्येव यत् कर्म नियतं नित्यं क्रियते निर्वर्त्यते हे अर्जुन, सङ्गं त्यक्त्वा फलं च एव ।
ஹே அர்ஜுன! அவசியம் நித்யகர்மாவைச் செய்ய வேண்டியதே என்று அறிந்து நித்யகர்மாவில் பற்றற்று பலனையும் துறந்து அனுஷ்ட்டிக்கிறான்.
नित्यानां कर्मणां फलवत्त्वे भगवद्वचनं प्रमाणम् अवोचाम । अथवा, यद्यपि फलं न श्रूयते नित्यस्य कर्मणः, तथापि नित्यं कर्म कृतम् आत्मसंस्कारं प्रत्यवायपरिहारं वा फलं करोति आत्मनः इति कल्पयत्येव अज्ञः । तत्र तामपि कल्पनां निवारयति ‘फलं त्यक्त्वा’ इत्यनेन । अतः साधु उक्तम् ‘सङ्गं त्यक्त्वा फलं च’ इति ।
நித்யகர்மங்களுக்கு பலன் இருக்கிறது என்பதற்கு பகவானு டைய வாக்கே பிரமாணம் என்று கூறினோம். அல்லது நித்யகர்மா விற்கு பலன் இருக்கிறது என்று கேட்கப்படாவிட்டாலும் நித்ய கர்மா செய்வதால் அந்தக்கரண சுத்தி, நரகத்திலிருந்து நிவிர்த்தி யாகிய பலன் தனக்கு உண்டாகும் என்று அக்ஞானி கல்பனை செய்கிறான். அங்கு அந்த கல்பனையையும் பலனைத் துறந்து என்று கூறிய வாக்கின் படி தள்ளத்தக்கதாகிறது. ஆகையால் சங் கம் த்யக்த்வா பலம் ச என்று கூறியது சரியே.
सः त्यागः नित्यकर्मसु सङ्गफलपरित्यागः सात्त्विकः सत्त्वनिर्वृत्तः मतः अभिप्रेतः ॥
அந்த தியாகமானது நித்யகர்மங்களில் சங்கபல தியாகமாய் இருப்பதால் சாத்விக குணத்தினால் ஆனது என்பது கருத்தாகும்.
ननु कर्मपरित्यागः त्रिविधः संन्यासः इति च प्रकृतः । तत्र तामसो राजसश्च उक्तः त्यागः । कथम् इह सङ्गफलत्यागः तृतीयत्वेन उच्यते ? यथा त्रयो ब्राह्मणाः आगताः, तत्र षडङ्गविदौ द्वौ, क्षत्रियः तृतीयः इति तद्वत् ।
இந்த சந்தர்ப்பத்தில் கர்மபரித்யாகமானது மூன்றுவிதமான சந்நியாசமாகக் கூறப்படுகிறது. அவைகளில் ராஜஸத்யாகம், தாமஸதியாகம் கூறப்பட்டு விட்டது. ஆனால் மூன்றாவதான சாத்வீக த்யாகத்தை கர்மதியாகத்தை விட்டு, ஆஸக்தி தியாகத் தையே ஏன் கூறி இருக்கிறீர்கள்? மூன்றாவதாக கூறப்பட்டுள்ள தால் மூன்று பிராஹ்மணர்கள் வந்தார்கள் அவர்களில் இருவர் ஆறு அங்கங்களையும் அறிந்தவர்கள். மற்றொருவர் க்ஷத்திரியன் என்று கூறுவது போல் அல்லவா இருக்கிறது.
नैष दोषः त्यागसामान्येन स्तुत्यर्थत्वात् । अस्ति हि कर्मसंन्यासस्य फलाभिसन्धित्यागस्य च त्यागत्वसामान्यम् । तत्र राजसतामसत्वेन कर्मत्यागनिन्दया कर्मफलाभिसन्धित्यागः सात्त्विकत्वेन स्तूयते ‘स त्यागः सात्त्विको मतः’ इति ॥ ९ ॥
இந்த தோஷம் இல்லை. ஏன் எனில் தியாகமானது சமமாய் இருப்பதால் துதிப்பதற்காகவே கூறப்பட்டது. கர்ம சந்நியாசிக்கும் பலனையும் ஆஸக்தியையும் தியாகம் செய்தவனுக்கும் தியாக மாத்திரத்தில் சமானத்தன்மை இருக்கிறது அவைகளில் கர்மதியா கத்தை ராஜஸம் தாமஸம் தியாகம் எனக்கூறி அதை நிந்தை செய் துவிட்டு கர்மபலம், ஆஸக்தி இவைகளை தியாகம் செய்தவன் சாத்வீக தியாகம் என்று அதைத் துதி செய்கிறான்.
यस्तु अधिकृतः सङ्गं त्यक्त्वा फलाभिसन्धिं च नित्यं कर्म करोति, तस्य फलरागादिना अकलुषीक्रियमाणम् अन्तःकरणं नित्यैश्च कर्मभिः संस्क्रियमाणं विशुध्यति ।
எந்த ஒரு கர்மத்தில் அதிகாரம் உள்ளவன் ஆஸக்தியையும், பலத்தில் இச்சையையும் தியாகம் செய்து நித்திய கர்மாவைச் செய் கிறானோ அவனுடைய பலம், ஆஸக்தி முதலிய தோஷங்க ளால் கலங்கப்படாத அந்தக்கரணம் நித்யகர்மாக்களின் அனுஷ்ட் டானத்தினால் சுத்தப்படுத்தப்பட்டு தூய்மை அடைகிறது.
विशुद्धं प्रसन्नम् आत्मालोचनक्षमं भवति । तस्यैव नित्यकर्मानुष्ठानेन विशुद्धान्तःकरणस्य आत्मज्ञानाभिमुखस्य क्रमेण यथा तन्निष्ठा स्यात् , तत् वक्तव्यमिति आह —
சுத்தமாயும், பிரசன்னமாயும் உள்ள அந்தக்கரணம் ஆத்மவி ஷயத்தில் விசாரிக்க ( ஆலோசிக்க) சாமர்த்தியமுடையதாகிறது. அவனுக்கே நித்திய கர்மானுஷ்ட்டானத்தால் சுத்தாந்தக்கரணமு டைய ஆத்மஞானத்திற்கு எதிர்முகப்பட்டவனுக்கு எவ்வாறு கிரம மாக அந்த நிஷ்ட்டை உண்டாகும் என்பதைக் கூறவேண்டும் என்று கூறுகிறார்-
न द्वेष्ट्यकुशलं कर्म कुशले नानुषज्जते ।
त्यागी सत्त्वसमाविष्टो मेधावी च्छिन्नसंशयः ॥ १० ॥
ந த்வேஷ்ட்யகுசலம் கர்ம குசலே நானுஷஜ்ஜதே ।
த்யாகீ ஸத்வஸமாவிஷ்டோ மேதாவீ சின்னஸம்சய: ॥ 10 ॥
न द्वेष्टि अकुशलम् अशोभनं काम्यं कर्म, शरीरारम्भद्वारेण संसारकारणम् , ‘किमनेन ? ’ इत्येवम् ।
நன்மையைத் தராத காமியகர்மங்களை துவேஷிக்கக்கூடாது. காம்யகர்மம் மறுபிறப்பை அளிக்கவல்லது. ஆகையால் சம்சாரத் திற்குக் காரணமாகிறது. இதனால் எனக்கு என்ன பிரயோஜனம் என்று அதை தூஷிக்கக்கூடாது.
कुशले शोभने नित्ये कर्मणि सत्त्वशुद्धिज्ञानोत्पत्तितन्निष्ठाहेतुत्वेन ‘मोक्षकारणम् इदम्’ इत्येवं न अनुषज्जते अनुषङ्गं प्रीतिं न करोति इत्येतत् ।
நன்மையைத் தரக்கூடிய நித்யகர்மங்கள் சித்த சுத்தி வாயி லாக ஞானம் உண்டாகி அதில் நிலைப்பதினால் மோக்ஷத்திற்கு காரணம் இது என்று இவ்வாறு அதில் ஆஸக்தியும் கொள்ளக் கூடாது. அங்கும் தனக்குப் பிரயோஜனம் இல்லை என்றால் அதிலும் பிரீதி வைப்பதில்லை.
कः पुनः असौ ? त्यागी पूर्वोक्तेन सङ्गफलत्यागेन तद्वान् त्यागी, यः कर्मणि सङ्गं त्यक्त्वा तत्फलं च नित्यकर्मानुष्ठायी सः त्यागी ।
அவன் யார்? தியாகீ. முன்பு கூறப்பட்ட ஆஸக்தியையும் பல னையும் தியாகம் செய்தவன் தியாகி. எவன் கர்மங்களில் ஆஸக்தி யையும், பலனையும் தியாகம் செய்து நித்திய கர்மங்களை அனுஷ்ட்டிக்கிறானோ அவனே தியாகி.
कदा पुनः असौ अकुशलं कर्म न द्वेष्टि, कुशले च न अनुषज्जते इति, उच्यते —
எப்பொழுது அவன் நன்மை தராத காமிய கர்மங்களில் துவே ஷமும், நன்மை தரும் நித்ய கர்மங்களில் ஆஸக்தி அற்றும் இருப் பான் என்பதைக் கூறுகிறார்-
सत्त्वसमाविष्टः यदा सत्त्वेन आत्मानात्मविवेकविज्ञानहेतुना समाविष्टः संव्याप्तः, संयुक्त इत्येतत् ।
எப்பொழுது ஆத்மா அநாத்மாக்களின் விவேக ஞானத்திற்கு காரணமான சத்துவகுணம் கூடுகிறதோ அப்பொழுது என்க.
अत एव च मेधावी मेधया आत्मज्ञानलक्षणया प्रज्ञया संयुक्तः तद्वान् मेधावी । मेधावित्वादेव च्छिन्नसंशयः छिन्नः अविद्याकृतः संशयः यस्य ‘आत्मस्वरूपावस्थानमेव परं निःश्रेयससाधनम् , न अन्यत् किञ्चित्’ इत्येवं निश्चयेन च्छिन्नसंशयः ।
ஆகையால் தான் தன்னுடைய மேதா விலாசத்தால் ஆத்ம ஞான லக்ஷணமாகிய பிரக்ஞையுடன் கூடியவன் மேதாவீ. அவனு டைய மேதா விலாசத்தால் அவித்யையினால் உண்டான சந்தே ஹங்கள் நீங்கி எவனுக்கு ஆத்மஸ்வரூபத்திலேயே நிலைத்தலே மேலான நிச்ரேயஸ் சாதனம் மற்றவைகள் சிறிதும் அல்ல என்ற நிச்சய புத்தியுடையவன் சந்தேஹம் அற்றவன்.
यः अधिकृतः पुरुषः पूर्वोक्तेन प्रकारेण कर्मयोगानुष्ठानेन क्रमेण संस्कृतात्मा सन् जन्मादिविक्रियारहितत्वेन निष्क्रियम् आत्मानम् आत्मत्वेन सम्बुद्धः, सः सर्वकर्माणि मनसा संन्यस्य नैव कुर्वन् न कारयन् आसीनः नैष्कर्म्यलक्षणां ज्ञाननिष्ठाम् अश्नुते ।
எந்த அதிகாரி புருஷன் முன்பு கூறியவாறு கர்மயோக அனுஷ்ட்டானத்தினால் கிரமமாக பண்படுத்தப்பட்ட அந்தக்கர ணம் உடையவனாய் இருந்துகொண்டு ஜன்மம் முதலிய விகாரங் கள் அற்று கிரியை (செயல்) அற்றஆத்மாவை ஆத்மாவாக அறிகி றானோ அவன் (சர்வ கர்மாணி மனசா சந்நியஸ்ய) எல்லாக் கர்மங் களையும் மனதினால் தியாகம் செய்து (நைவ குர்வந்ந காரயன் ஸீன:) ஒன்றும் செய்யாமலும், செய்விக்காமலும் இருப்பவன் நைஷ்கர்ம்ய லக்ஷணமாகிய (கிரியை அற்றதாகிய) ஞான நிஷ்ட் டையை அடைகிறான்.
इत्येतत् पूर्वोक्तस्य कर्मयोगस्य प्रयोजनम् अनेनैव श्लोकेन उक्तम् ॥ १० ॥
இவ்வாறு இந்த முன் கூறப்பட்ட கர்மயோகத்தினுடைய பிர யோஜனம் இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டது.
यः पुनः अधिकृतः सन् देहात्माभिमानित्वेन देहभृत् अज्ञः अबाधितात्मकर्तृत्वविज्ञानतया ‘अहं कर्ता’ इति निश्चितबुद्धिः तस्य अशेषकर्मपरित्यागस्य अशक्यत्वात् कर्मफलत्यागेन चोदितकर्मानुष्ठाने एव अधिकारः, न तत्त्यागे इति एतम् अर्थं दर्शयितुम् आह —
மேலும் எவன் கர்மாதிகாரியாய் இருந்துகொண்டு தேஹத்தில் ஆத்மா என்று அபிமானம் கொண்டதினால் தேஹத்தை உடைய அக்ஞானி ஆத்மாவினிடத்தில் கர்த்ருத்வ ஞானம் நீங்காததினால் நான் கர்த்தா என்றநிச்சயித்த புத்தி உடையவனாய் இருத்தலால் கர் மம் முழுவதையும் தியாகம் செய்ய முடியாததினால் கர்மபலத்தை தியாகம் செய்து விஹிதகர்மாவை அனுஷ்ட்டானம் செய்வதி லேயே அதிகாரம் இருக்கிறது. அதை தியாகம் செய்வதில் அல்ல என்பதை காண்பிப்பதற்காகக் கூறுகிறார்-
न हि देहभृता शक्यं त्यक्तुं कर्माण्यशेषतः ।
यस्तु कर्मफलत्यागी स त्यागीत्यभिधीयते ॥ ११ ॥
நஹி தேஹப்ருதா சக்யம் த்யக்தும் கர்மாண்யசேஷத: ।
யஸ்து கர்மபலத்யாகீ ஸ த்யாகீத்யபிதீயதே ॥ 11 ॥
न हि यस्मात् देहभृता, देहं बिभर्तीति देहभृत् , देहात्माभिमानवान् देहभृत् उच्यते, न विवेकी ; स हि ‘वेदाविनाशिनम्’ (भ. गी. २ । २१) इत्यादिना कर्तृत्वाधिकारात् निवर्तितः । अतः तेन देहभृता अज्ञेन न शक्यं त्यक्तुं संन्यसितुं कर्माणि अशेषतः निःशेषेण । तस्मात् यस्तु अज्ञः अधिकृतः नित्यानि कर्माणि कुर्वन् कर्मफलत्यागी कर्मफलाभिसन्धिमात्रसंन्यासी सः त्यागी इति अभिधीयते कर्मी अपि सन् इति स्तुत्यभिप्रायेण ।
தேஹப்ருத் என்றால் தேஹத்தைத் தாங்குபவன், தேஹத்தில் அபிமானம் உள்ளவன் தேஹப்ருத் எனப்படுகிறான். வேதாவினா சினம் முதலியவைகளால் உடம்பையும், ஆத்மாவையும் வேறாக அறிந்த அந்த விவேகி புருஷன் உடம்பை சுமப்பவன் அல்லன் என்பது தெரிகிறது. ஆகையால் அவன் கர்த்தா என்னும் அதிகாரம் அவனுக்கு நீங்கிவிட்டது என்பது தெரிகிறது. ஆகையால் அக்ஞானியாகிய தேஹத்தை உடையவன் கர்மங்கள் முழுவதையும் தியாகம் செய்யமுடியாது. ஆகையால் அக்ஞானி யாகிய அதிகாரி நித்யகர்மாக்களை செய்யும்பொழுது கர்மத்தின் பலனை மாத்திரம் எதிர்நோக்காமல் இருக்கும் சந்நியாசியே தியாகி. அவன் கர்மம் செய்பவனாய் இருந்தாலும் ஸ்துதியின் பொருட்டு தியாகி என்று கருதப்படுகிறான்.
तस्मात् परमार्थदर्शिनैव अदेहभृता देहात्मभावरहितेन अशेषकर्मसंन्यासः शक्यते कर्तुम् ॥ ११ ॥
ஆகையால் தேஹத்தைத் தாங்காதவன் அதாவது தேஹத்தில் அபிமானம் அற்றவனாயும் பரமார்த்த தர்சியாகவும் உள்ளவனா லேயே கர்மம் முழுவதையும் தியாகம் செய்யமுடியும்.
किं पुनः तत् प्रयोजनम् , यत् सर्वकर्मसंन्यासात् स्यादिति, उच्यते —
சர்வகர்ம பரித்தியாகத்தினால் என்ன பலன் உண்டாகும்? அது என்ன? என்பதைக் கூறுகிறார்-
अनिष्टमिष्टं मिश्रं च त्रिविधं कर्मणः फलम् ।
भवत्यत्यागिनां प्रेत्य न तु संन्यासिनां क्वचित् ॥ १२ ॥
அநிஷ்டமிஷ்டம் மிச்ரம் ச த்ரிவிதம் கர்மண: பலம் ।
பவத்யத்யாகினாம் ப்ரேத்ய ந து ஸந்ந்யாஸினாம் க்வசித் ॥ 12 ॥
अनिष्टं नरकतिर्यगादिलक्षणम् , इष्टं देवादिलक्षणम् , मिश्रम् इष्टानिष्टसंयुक्तं मनुष्यलक्षणं च, तत्र त्रिविधं त्रिप्रकारं कर्मणः धर्माधर्मलक्षणस्य फलं ।
அநிஷ்ட்டம் என்றால் நரகம் மற்றும் பசுபக்ஷி முதலிய பிறப்பு கள். இஷ்ட்டம் என்றால் தேவர்கள் முதலிய பிறப்பு, அவ்வாறே மிஸ்ரம் (கலப்பு) என்றால் இஸ்ட்டம், அநிஷ்ட்டம் ஆகியவை கலந்த மனிதப்பிறப்பு என்று இவ்வாறாக புண்ய, பாபங்களுடன் கூடிய கர்மபலன்கள் மூன்றுவிதமாக இருக்கின்றன.
बाह्यानेककारकव्यापारनिष्पन्नं सत् अविद्याकृतम् इन्द्रजालमायोपमं महामोहकरं प्रत्यगात्मोपसर्पि इव — फल्गुतया लयम् अदर्शनं गच्छतीति फलनिर्वचनम् ।
கர்மபலன் வெளியில் உள்ள பல கர்த்தா, கர்மம் முதலிய காரகங்களின் வியாபாரத்தோடு கூடிய பாவ பதார்த்தம் அவித் யையினால் உண்டானது. இந்திர ஜாலத்திற்கு ஒப்பானது. பிரத்யக் ஆத்மாவை அடைந்திருப்பது போல் மோஹத்தைச் செய்கிறது. சாரமற்றதால் இல்லாமற்போகிறது என்பதால் பலன் எனப்பட்டது. இவ்வாறு கர்மபலனானது வியாக்யானம் செய்யப்பட்டது.
तत् एतत् एवंलक्षणं फलं भवति अत्यागिनाम् अज्ञानां कर्मिणां अपरमार्थसंन्यासिनां प्रेत्य शरीरपातात् ऊर्ध्वम् । न तु संन्यासिनां परमार्थसंन्यासिनां परमहंसपरिव्राजकानां केवलज्ञाननिष्ठानां क्वचित् ।
உண்மையான சந்நியாசத்தைக் கொள்ளாத கர்மிகளாகிய அக் ஞானிகள் இந்த சரீரம் வீழ்ந்தபின் இவ்வாறு இந்த லக்ஷணங்க ளோடு கூடிய அநித்திய பலத்தை அடைகிறார்கள். கேவலம் ஞானநிஷ்ட்டையை மாத்திரம் உடைய பரமஹம்ஸ சந்நியாசிகள் ஒருநாளும் இந்த பலத்தை அடையமாட்டார்கள்.
न हि केवलसम्यग्दर्शननिष्ठा अविद्यादिसंसारबीजं न उन्मूलयति कदाचित् इत्यर्थः ॥ १२ ॥
கேவல சம்யக் தர்சன நிஷ்டையானது சம்சாரத்திற்கு காரணமான அவித்யையைப் போக்காமல் ஒருபொழுதும் இருக்காதன்றோ என்பது பொருள்.
अतः परमार्थदर्शिनः एव अशेषकर्मसंन्यासित्वं सम्भवति, अविद्याध्यारोपितत्वात् आत्मनि क्रियाकारकफलानाम् ; न तु अज्ञस्य अधिष्ठानादीनि क्रियाकर्तृकारकाणि आत्मत्वेनैव पश्यतः अशेषकर्मसंन्यासः सम्भवति तदेतत् उत्तरैः श्लोकैः दर्शयति —
ஆகையால் கிரியா, காரக மற்றும் பலன் முதலியவைகள் ஆத்மாவிடத்தில் ஆரோபம் செய்யப்பட்டிருப்பதால் பரமார்த்த தர்சீ (ஆத்மக்ஞானி) எல்லா கர்மங்களையும் மிச்சம் இல்லாமல் தியாகம் செய்ய முடியும். கர்மங்கள் செய்யும் அக்ஞானி சரீரம் முதலிய அதிஷ்ட்டானங்களால் செய்யப்படும் கிரியை, கர்த்தா முதலிய காரகங்களை ஆத்மாவாகவே பார்ப்பதால் கர்மங்கள் முழுவதையும் தியாகம் செய்தல் என்பது முடியாது. அந்த இந்த விஷயத்தை இனிவரும் ஸ்லோகங்களில் காண்பிக்கின்றார்.
पञ्चैतानि महाबाहो कारणानि निबोध मे ।
साङ्ख्ये कृतान्ते प्रोक्तानि सिद्धये सर्वकर्मणाम् ॥ १३ ॥
பஞ்சைதானி மஹாபாஹோ காரணானி நிபோத மே ।
ஸாங்க்யே க்ருதாந்தே ப்ரோக்தானி ஸித்தயே ஸர்வகர்ம ணாம் ॥ 13 ॥
पञ्च एतानि वक्ष्यमाणानि हे महाबाहो, कारणानि निर्वर्तकानि निबोध मे मम इति ।
ஹே மஹாபாஹோ! இனி கூறப்போகும் ஐந்து காரணங் களை அதாவது ஐந்துவிதமான கர்மசாதனங்களை நீ என்னிடமி ருந்து அறிந்து கொள்.
उत्तरत्र चेतःसमाधानार्थम् , वस्तुवैषम्यप्रदर्शनार्थं च । तानि च कारणानि ज्ञातव्यतया स्तौति ।
இனிமேல் வருபவைகளால் சித்த சமாதானத்திற்காகவும், (அதிஷ்ட்டானம்) சரீரம், காரகங்கள் பலன் முதலியவற்றின் வேற்று மைகளை காண்பிப்பதற்காகவும் அந்த ஐந்து காரணங்களை அறி யவேண்டியதின் அவசியத்தைக் கூறி அதை புகழ்கின்றார்.
साङ्ख्ये ज्ञातव्याः पदार्थाः सङ्ख्यायन्ते यस्मिन् शास्त्रे तत् साङ्ख्यं वेदान्तः । कृतान्ते इति तस्यैव विशेषणम् । कृतम् इति कर्म उच्यते, तस्य अन्तः परिसमाप्तिः यत्र सः कृतान्तः, कर्मान्तः इत्येतत् । ‘यावानर्थ उदपाने’ (भ. गी. २ । ४६) ‘सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते’ (भ. गी. ४ । ३३) इति आत्मज्ञाने सञ्जाते सर्वकर्मणां निवृत्तिं दर्शयति ।
அறியப்படவேண்டிய விஷயங்கள் எந்த சாஸ்திரத்தில் உணர்த்தப்படுகிறதோ அது சாங்கியம் எனப்படும் வேதாந்தம் ஆகும், அதற்கு கிருதாந்தம் என்பது விஷேசணமாகும். செயல் என்று கர்மத்தைக் கூறுகிறார்கள். எங்கு கர்மங்கள் செய்வது முடிவடைகிறதோ அது க்ருதாந்தம் எனப்படும். (கருமங்கள் செய்வதின் முடிவு) (யாவானர்த்த உதபானே) நீர் நிலையில் (ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஞானே பரிசமாப்யதே) ஹே பார்த்த எல்லாக் கர்மங்களும் ஞானத்தில் முடிகிறது என்று ஆத்மக் ஞானம் உண்டான உடன் எல்லாக் கர்மங்களும் நிவிர்த்தியாகிறது என்று காண்பிக்கிறார்.
अतः तस्मिन् आत्मज्ञानार्थे साङ्ख्ये कृतान्ते वेदान्ते प्रोक्तानि कथितानि सिद्धये निष्पत्त्यर्थं सर्वकर्मणाम् ॥ १३ ॥
ஆகையால் ஆத்மக்ஞானத்தை தரக்கூடிய க்ருதாந்தம், சாங் கியம் எனப்படும் வேதாந்த சாஸ்திரத்தில் கூறப்பட்டது அடைவ தற்கான இந்த ஐந்துவகை கர்மங்களையும் கேள்.
कानि तानीति, उच्यते —
அவைகள் எவை என்று கூறுகிறார்-
अधिष्ठानं तथा कर्ता करणं च पृथग्विधम् ।
विविधाश्च पृथक्चेष्टा दैवं चैवात्र पञ्चमम् ॥ १४ ॥
அதிஷ்டானம் ததா கர்தா கரணம் ச ப்ருதக்விதம் ।
விவிதாச்ச ப்ருதக்சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம் ॥ 14 ॥
अधिष्ठानम् इच्छाद्वेषसुखदुःखज्ञानादीनाम् अभिव्यक्तेराश्रयः अधिष्ठानं शरीरम् , तथा कर्ता उपाधिलक्षणः भोक्ता, करणं च श्रोत्रादि शब्दाद्युपलब्धये पृथग्विधं नानाप्रकारं तत् द्वादशसङ्ख्यं विविधाश्च पृथक्चेष्टाः वायवीयाः प्राणापानाद्याः दैवं चैव दैवमेव च अत्र एतेषु चतुर्षु पञ्चमं पञ्चानां पूरणम् आदित्यादि चक्षुराद्यनुग्राहकम् ॥ १४ ॥
அதிஷ்ட்டானம் என்பது விருப்பு, வெறுப்பு, சுகம், துக்கம், ஞானம் முதலியவைகள் வெளிப்படுவதற்கு ஆஸ்ரயமாக உள்ள இடம் சரீரமாகும். அவ்வாறேகர்த்தா என்பது உபாதிகளை உடைய போக்தா. கரணம் என்பது சப்தம் முதலியவைகளை அறியும் செவி முதலியவைகளாகிய அநேகவிதமான கருவிகள் பன்னி ரெண்டாகும். வெவ்வேறாக தனித்தன்மையுடன் செயல்படு கின்றபிராண அபான முதலியவாயுக்கள். இந்த நான்கும் ஐந்தா வதாகிய தேவதையின் உதவியினால் செயல்பட்டு பூரணமடைகிறது. அது எவ்வாறெனில் கண் முதலிய இந்திரியங்களை அனுக்ர ஹிக்கும் சூரியன் முதலியவைகள் தேவதைகள் போல் அனுக்கிர ஹித்து பூரணமாகிறது.
शरीरवाङ्मनोभिर्यत्कर्म प्रारभते नरः ।
न्याय्यं वा विपरीतं वा पञ्चैते तस्य हेतवः ॥ १५ ॥
சரீரவாங்மனோபிரியத்கர்ம ப்ராரபதே நர: ।
ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ: ॥ 15 ॥
शरीरवाङ्मनोभिः यत् कर्म त्रिभिः एतैः प्रारभते निर्वर्तयति नरः, न्याय्यं वा धर्म्यं शास्त्रीयम् , विपरीतं वा अशास्त्रीयम् अधर्म्यं यच्चापि निमिषितचेष्टितादि जीवनहेतुः तदपि पूर्वकृतधर्माधर्मयोरेव कार्यमिति न्याय्यविपरीतयोरेव ग्रहणेन गृहीतम् , पञ्च एते यथोक्ताः तस्य सर्वस्यैव कर्मणो हेतवः कारणानि ।
சரீரம், வாக்கு மனம் ஆகிய மூன்றினாலும் மனிதன் சாஸ்திரத் தில் உள்ள நியாயமான தர்மத்துடன் சாஸ்திரத்தில் கூறப்பெற்ற தும், அல்லது தர்மத்திற்கு விரோதமான சாஸ்திரத்தில் இல்லாத கர் மங்களைச் செய்கிறான். இவை எல்லாவற்றிற்கும் மேலே கூறிய ஐந்தும் கர்மத்திற்கு காரணமாகின்றன. இமை கொட்டுதல் முதலிய ஜீவிப்பதற்கு காரணம் எதுவோ அதுவும் முன்பு செய்யப்பட்ட தர்ம, அதர்மங்களின் காரியம் ஆதலால் நேர்மையானது, விரோதமா னது என்ற நியாயத்தினால்தான் கிரஹிக்கப்படுகிறது.
ननु एतानि अधिष्ठानादीनि सर्वकर्मणां निर्वर्तकानि । कथम् उच्यते ‘शरीरवाङ्मनोभिः यत् कर्म प्रारभते’ इति ।
அதிஷ்ட்டானம் முதலியவைகளே எல்லாக் கர்மங்களுக்கும் காரணமாய் இருக்கையில் எவ்வாறு மனம், வாக்கு, சரீரம் இவைகளால் கர்மம் செய்யப்படுகிறது என்று கூறமுடியும்?
नैष दोषः ; विधिप्रतिषेधलक्षणं सर्वं कर्म शरीरादित्रयप्रधानम् ; तदङ्गतया दर्शनश्रवणादि च जीवनलक्षणं त्रिधैव राशीकृतम् उच्यते शरीरादिभिः आरभ्यते इति । फलकालेऽपि तत्प्रधानैः साधनैः भुज्यते इति पञ्चानामेव हेतुत्वं न विरुध्यते इति ॥ १५ ॥
இந்த தோஷம் ஏற்படாது. விஹித கர்மங்களும், நிஷித்த கர்மங்களும் ஆகிய எல்லாக் கர்மங்களுக்கும் சரீரம், வாக்கு மனம் ஆகிய இம்மூன்றும் முக்யமானவை. அவ்வாறேபார்த்தல் கேட்டல் முதலிய ஜீவனத்திற்கு காரணமான செயல்களும் அந்த கர்மங்களுக்கு அங்க பூதமாகிறது. ஆகையால் எல்லாக்கர்மங்க ளும் மூன்றுவிதமாகப் பிரிக்கப்பட்டு சரீரம் முதலியவைகளால் செயல்படுகின்றன என்று கூறப்படுகின்றது. அவ்வாறேபலனை அனுபவிக்கும் சமயத்திலும் சரீரம் முதலிய பிரதான காரணங்க ளால் தான் பலபோகம் ஏற்படுகிறது. மேலே கூறப்பட்ட அதிஷ்ட் டானம் முதலிய ஐந்து காரணங்கள் ஏதுவானது சரியே. விரோதம் அல்ல.
तत्रैवं सति कर्तारमात्मानं केवलं तु यः ।
पश्यत्यकृतबुद्धित्वान्न स पश्यति दुर्मतिः ॥ १६ ॥
தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மானம் கேவலம் து ய: ।
பச்யத்யக்ருதபுத்தித்வான்ன ஸ பச்யதி துர்மதி: ॥ 16 ॥
तत्र इति प्रकृतेन सम्बध्यते । एवं सति एवं यथोक्तैः पञ्चभिः हेतुभिः निर्वर्त्ये सति कर्मणि । तत्रैवं सति इति दुर्मतित्वस्य हेतुत्वेन सम्बध्यते । तत्र एतेषु आत्मानन्यत्वेन अविद्यया परिकल्पितैः क्रियमाणस्य कर्मणः ‘अहमेव कर्ता’ इति कर्तारम् आत्मानं केवलं शुद्धं तु यः पश्यति अविद्वान् ; कस्मात् ? वेदान्ताचार्योपदेशन्यायैः अकृतबुद्धित्वात् असंस्कृतबुद्धित्वात् ।
தத்ர என்றபதம் (ப்ரகிருதத்தில்) இப்போது கூறிவரும் கர்மத் தோடு சம்பந்தப்படுகிறது. இவ்வாறு இருக்கும்பொழுது இவ்வாறு கூறப்பட்ட ஐந்து கரணங்களால் எல்லாக் கர்மங்களும் அனுஷ்ட் டிக்கப்படுகின்றன. அங்கு இவ்வாறு இருக்கும்பொழுது தீமை யான புத்திக்கு ஏதுவாகிறது. ஆகையால் அவைகளில் ஆத்மா விற்கு அன்னியமில்லை என்று அவித்யையினால் கல்பித்து அவர்களால் அனுஷ்ட்டிக்கப்படும் கர்மங்களுக்கு நானே கர்த்தா என்று சுத்தமான ஆத்மாவை கர்த்தாவாக அவித்வான் பார்க்கி றான். ஏன் எனில் வேதாந்த வாக்கியங்களினாலும் ஆசாரிய உபதேசங்களாலும், யுக்தியினாலும் சுத்தப்படுத்தப்படாத (பண்படுத்தப்படாத) புத்தி உடையவனாய் இருப்பதால்.
योऽपि देहादिव्यतिरिक्तात्मवादी आत्मानमेव केवलं कर्तारं पश्यति, असावपि अकृतबुद्धिः ; अतः अकृतबुद्धित्वात् न सः पश्यति आत्मनः तत्त्वं कर्मणो वा इत्यर्थः ।
அவ்வாறேஎவன் சரீரம் முதலியவைகளைக் காட்டிலும் ஆத் மாவை வேறாகப் பார்ப்பவன் சரீரம் முதலியவற்றைக் காட்டிலும் வேறாக ஆத்மாவைக் கர்த்தாவாக அறிகிறான். அதுவும் அக்ருத புத்தியாகும் (பண்படுத்தப்படாத புத்தியாகும்) ஆகையால் அந்த பண்படுத்தப்படாத புத்தி உடையவன் ஆத்மாவின் தத்துவத் தையோ கர்மங்களின் தத்துவத்தையோ அறிந்தவன் அல்ல என் பது அபிப்பிராயம்.
अतः दुर्मतिः, कुत्सिता विपरीता दुष्टा अजस्रं जननमरणप्रतिपत्तिहेतुभूता मतिः अस्य इति दुर्मतिः । सः पश्यन्नपि न पश्यति, यथा तैमिरिकः अनेकं चन्द्रम् , यथा वा अभ्रेषु धावत्सु चन्द्रं धावन्तम् , यथा वा वाहने उपविष्टः अन्येषु धावत्सु आत्मानं धावन्तम् ॥ १६ ॥
ஆகையால் அது தீயபுத்தியாகும். எவருடைய புத்தியானது குறுகியதாகவும், விபரீதமானதாயும், பொல்லாததாயும், எப்பொழு தும் ஜன்மம், மரணம் ஆகியவைகளை அடைவதற்கான காரண மாய் உள்ளதோ அவன் துர்மதியை உடையவன். அவன் பார்த்தா லும் உண்மையை அறிவதில்லை, எவ்வாறு கண்களில் திமிரநோய் உடையவன் சந்திரனை இரண்டாகக் காண்கிறானோ அவ் வாறேமேகங்கள் ஓடும்பொழுது சந்திரன் ஓடுவது போலும், வாஹ னத்தில் இருப்பவன்(வண்டியில் இருப்பவன்) மற்றஓடுகின்றவைக ளைப் பார்த்து தான் ஓடுவதுபோலும் பார்க்கிறான்.
कः पुनः सुमतिः यः सम्यक् पश्यतीति, उच्यते —
இனி எவன் நன்றாகப் (வாஸ்தவமாக) பார்க்கின்றானோ அந்த நல்ல புத்தி உடையவன் யார்?
यस्य नाहङ्कृतो भावो बुद्धिर्यस्य न लिप्यते ।
हत्वापि स इमांल्लोकान्न हन्ति न निबध्यते ॥ १७ ॥
யஸ்ய நாஹங்க்ருதோ பாவோ புத்திர்யஸ்ய ந லிப்யதே ।
ஹத்வாபி ஸ இமாம்லோகான்ன ஹந்தி ந நிபத்யதே ॥ 17 ॥
यस्य शास्त्राचार्योपदेशन्यायसंस्कृतात्मनः न भवति अहङ्कृतः ‘अहं कर्ता’ इत्येवंलक्षणः भावः भावना प्रत्ययः — एते एव पञ्च अधिष्ठानादयः अविद्यया आत्मनि कल्पिताः सर्वकर्मणां कर्तारः, न अहम् , अहं तु तद्व्यापाराणां साक्षिभूतः ‘अप्राणो ह्यमनाः शुभ्रो ह्यक्षरात्परतः परः’ (मु. उ. २ । १ । २) केवलः अविक्रियः इत्येवं पश्यतीति एतत् ।
சாஸ்திரம், ஆச்சார்ய உபதேசம் அவ்வாறேயுக்தி இவைக ளால் நன்கு பண்படுத்தப்பட்ட புத்தி உடையவனுக்கு நான் கர்த்தா என்றபாவனையானது தோன்றாது. ஏன் எனில் அவன் இவ்வாறு அறிந்திருக்கிறான். அது என்னவெனில் அவித்யையானது ஆத் மாவினிடத்தில் அத்யாரோபம் செய்யப்பட்டுள்ளது. சரீரம் முத லிய ஐந்து காரணங்களே எல்லாக் கர்மங்களுக்கும் கர்த்தா, நான் அல்ல. நான் அந்த வியாபாரங்களுக்கு சாக்ஷி மாத்திரமாக இருக் கிறேன் என்று அறிந்திருக்கிறான். அப்ராணோ ஹ்யமனா: சுப்ரோ அக்ஷராத்பரத: பர: = பிராணன் அற்றவன், மனம் அற்றவன், தூய் மையானவன், அக்ஷரத்தைக் காட்டிலும் மேலானவன் தனிமையா னவன், கிரியை (செயல்) அற்றவன் என்று இவ்வாறு பார்க்கிறான்.
बुद्धिः अन्तःकरणं यस्य आत्मनः उपाधिभूता न लिप्यते न अनुशयिनी भवति — ‘इदमहमकार्षम् , तेन अहं नरकं गमिष्यामि’ इत्येवं यस्य बुद्धिः न लिप्यते — सः सुमतिः, सः पश्यति ।
எவனை தன்னுடைய உபாதியாகிய அந்தக்கரணம் ஒட்டுவ தும் அவனைத் தபப்படுத்துவதும் இல்லையோ அவன் நல்ல புத் தியை உடையவன், அவனே அறிகிறான். எவ்வாறு எனில் நான் தீய செயல்கள் உடையவன். ஆகையால் நரகத்திற்கு செல்வேன் என்றபுத்தி எவனுக்கு இல்லையோ அவன் நல்ல புத்தி உடைய வன் ஸுமதி: அவனே உண்மையை அறிகிறான்.
हत्वा अपि सः इमान् लोकान् , सर्वान् इमान् प्राणिनः इत्यर्थः, न हन्ति हननक्रियां न करोति, न निबध्यते नापि तत्कार्येण अधर्मफलेन सम्बध्यते ॥
அவன் இந்த எல்லாம் பிராணிகளையும் கொன்றாலும் கொலைச்செயலைச் செய்கிறவனில்லை. மேலும் அதனால் விளையும் அதர்ம பலலனாலலும் சம்பந்தப்படுகிறவனு மில்லை என்பது அர்த்மாகும்.
ननु हत्वापि न हन्ति इति विप्रतिषिद्धम् उच्यते यद्यपि स्तुतिः ।
கொன்றாலும் கொல்லவில்லை என்று கூறுவது பொருந்தாது. (ஞானியின்) ஸ்துதியின் பொருட்டே ஆகுமெனில்-
नैष दोषः, लौकिकपारमार्थिकदृष्ट्यपेक्षया तदुपपत्तेः ।
இந்த தோஷமானது கிடையாது லௌகிக (வியாவகாரிக) பார மார்த்திக திருஷ்ட்டியை அனுசரித்து கூறப்பட்டதாகும்.
देहाद्यात्मबुद्ध्या ‘हन्ता अहम्’ इति लौकिकीं दृष्टिम् आश्रित्य ‘हत्वापि’ इति आह । यथादर्शितां पारमार्थिकीं दृष्टिम् आश्रित्य ‘न हन्ति न निबध्यते’ इति । एतत् उभयम् उपपद्यते एव ।
தேஹம் முதலியவைகளில் உள்ள ஆத்ம புத்தியினால் நான் கொல்வேன் என்பது லௌகிக திருஷ்ட்டியை சார்ந்து கொன்றா லும் என்று கூறப்பட்டது. முன்பு உபதேசிக்கப்பட்ட பாரமார்த்திக திருஷ்ட்டியை அனுசரித்து கொல்லுவதும் இல்லை. அதனுடன் பந்தப்படுவதும் இல்லை என்றஇந்த இரண்டும் கூறப்பட்டது.
ननु अधिष्ठानादिभिः सम्भूय करोत्येव आत्मा, ‘कर्तारमात्मानं केवलं तु’ (भ. गी. १८ । १६) इति केवलशब्दप्रयोगात् ।
கர்த்தாரமாத்மானம் கேவலம் து என்று கேவல சப்தத்தைப் பிரயோகம் செய்துள்ளதால் ஆத்மா அதிஷ்ட்டானம் (சரீரம்) முத லியவைகளுடன் சேர்ந்து கர்மம் செய்கின்றது எனில்-
नैष दोषः, आत्मनः अविक्रियस्वभावत्वे अधिष्ठानादिभिः, संहतत्वानुपपत्तेः ।
இந்த தோஷம் கிடையாது. ஏன் எனில் ஆத்மாவிற்கு கிரியை அற்றிருத்தல் என்பது ஸ்வபாவமாவதால் அதிஷ்ட்டானம் (சரீரம்) முதலியவற்றுடன் சேர்ந்திருத்தல் பொருந்தாது.
विक्रियावतो हि अन्यैः संहननं सम्भवति, संहत्य वा कर्तृत्वं स्यात् ।
கிரியை உடையவைகளுக்குத்தான் மற்றவைகளுடன் சம்பந் தம் உண்டாகிறது. சம்பந்தப்பட்டு கர்த்தாவாகிறது.
न तु अविक्रियस्य आत्मनः केनचित् संहननम् अस्ति इति न सम्भूय कर्तृत्वम् उपपद्यते । अतः केवलत्वम् आत्मनः स्वाभाविकमिति केवलशब्दः अनुवादमात्रम् ।
கிரியை அற்றஆத்மா ஒன்றுடனும் பந்தப்படாது. ஆகையால் அதற்கு கர்த்திருத்துவம் ஏற்படாது. ஆகையால் ஆத்மாவிற்குத் தனித்தன்மை (கேவலம்) என்பது ஸ்வபாவமானது என்று இங்கு கேவல சப்தமானது அதன் இயல்பினைக் குறிப்பதற்காக வந்தது.
अविक्रियत्वं च आत्मनः श्रुतिस्मृतिन्यायप्रसिद्धम् । ‘अविकार्योऽयमुच्यते’ (भ. गी. २ । २५) ‘गुणैरेव कर्माणि क्रियन्ते’ (भ. गी. ३ । २७) ‘शरीरस्थोऽपि न करोति’ (भ. गी. १३ । ३१) इत्यादि असकृत् उपपादितं गीतास्वेव तावत् । श्रुतिषु च ‘ध्यायतीव लेलायतीव’ (बृ. उ. ४ । ३ । ७) इत्येवमाद्यासु ।
ஆத்மாவின் அவிக்ரியத்தன்மையானது சுருதி, ஸ்மிருதி, நியாயங்களில் பிரசித்தமாக உள்ளது. அவிகார்யோயமுச்யதே = அது அவிகாரி எனப்படுகிறது. குணைரேவ கர்மாணி க்ரியந்தே எல்லாக் கர்மங்களும் குணங்களினாலேயே செய்யப்படுகின்றன. சரீரஸ்த்தோபி ந கரோதி = சரீரத்தில் இருந்தாலும் அது செய்வ தில்லை என்று அநேக தடவை கீதையில் கூறப்பட்டுள்ளது. மேலும் ச்ருதிகளிலும் த்யாயதீவ லேலாயதீவ தியானிப்பது போலும், செயல்படுவது போலும் என்பது முதலியவைகளினால் கூறப்பட்டுள்ளது.
न्यायतश्च — निरवयवम् अपरतन्त्रम् अविक्रियम् आत्मतत्त्वम् इति राजमार्गः ।
அவ்வாறேயுக்தி பூர்வகமாகவும், ஆத்ம தத்துவமானது அவ யவம் அற்றது, பர தந்திரமற்றது கிரியை அற்றது என்பது அறியப் பட்ட ராஜமார்க்கமாகும்.
विक्रियावत्त्वाभ्युपगमेऽपि आत्मनः स्वकीयैव विक्रिया स्वस्य भवितुम् अर्हति, न अधिष्ठानादीनां कर्माणि आत्मकर्तृकाणि स्युः । न हि परस्य कर्म परेण अकृतम् आगन्तुम् अर्हति । यत्तु अविद्यया गमितम् , न तत् तस्य ।
ஆத்மாவிற்கு கிரியாதன்மையை ஒப்புக்கொண்டாலும் தனக்கு தன்னுடைய செயலினாலேயே (கிரியையினாலேயே) விக் ரியையானது ஏற்படுவது பொருந்தும். அதிஷ்ட்டானம் முதலிய (ச ரீரம் முதலிய) வைகளின் கர்மங்கள் ஆத்மாவினுடைய கர்மங்க ளாகாது. ஒருவர் செய்த கர்மம், கர்மம் செய்யாத மற்றொருவருக்கு பலனைக் கொடுப்பது என்பது பொருந்தாது. அது அவித்யையி னால் ஆரோபம் செய்யப்பட்டது. உண்மையில் ஆத்மாவிற்குக் கிடையாது.
यथा रजतत्वं न शुक्तिकायाः ; यथा वा तलमलिनत्वं बालैः गमितम् अविद्यया, न आकाशस्य, तथा अधिष्ठानादिविक्रियापि तेषामेव, न आत्मनः ।
எவ்வாறு வெள்ளியினுடைய தத்துவம் சிப்பிக்கு (கிளிஞ்ச லுக்கு) ஆகாதோ, அவ்வாறு சிற்றறிவுடையவர்களுக்கு அவித் யையினால் ஆரோபிக்கப்பட்ட இருப்பிடமும் மலினத்தன்மை யும் ஆகாசத்திற்கில்லையோ அவ்வாறே அதிஷ்ட்டானம்(சரீரம்) முதலிய ஐந்து காரணங்களின் விகாரங்களும் அவைகளுக்கே அன்றி ஆத்மாவிற்கு அல்ல.
तस्मात् युक्तम् उक्तम् ‘अहङ्कृतत्वबुद्धिलेपाभावात् विद्वान् न हन्ति न निबध्यते’ इति ।
ஆகையால் நான் செய்கிறேன் என்ற புத்தி இல்லாத வித்வான் கொல்லுவதும் இல்லை, அந்தப் பலன்களில் பந்தப்படுவதும் இல்லை என்று யுக்தியானது கூறப்பட்டது
‘नायं हन्ति न हन्यते’ (भ. गी. २ । १९) इति प्रतिज्ञाय ‘न जायते’ (भ. गी. २ । २०) इत्यादिहेतुवचनेन अविक्रियत्वम् आत्मनः उक्त्वा, ‘वेदाविनाशिनम्’ (भ. गी. २ । २१) इति विदुषः कर्माधिकारनिवृत्तिं शास्त्रादौ सङ्क्षेपतः उक्त्वा, मध्ये प्रसारितां तत्र तत्र प्रसङ्गं कृत्वा इह उपसंहरति शास्त्रार्थपिण्डीकरणाय ‘विद्वान् न हन्ति न निबध्यते’ इति ।
நாயம் ஹந்தி ந ஹன்யதே = கொல்லுவதும் இல்லை, கொல் லப்படுவதும் இல்லை, என்பது முதலிய ஏது வசனங்களால் ஆத்மாவிற்கு கிரியை அற்றதன்மையைக் கூறி வேதாவினாசினம் என்ற ஸ்லோகத்தினால் வித்வானுக்கு கர்மத்தில் அதிகாரம் கிடையாது என்று சுருக்கமாகக் கூறி மத்தியில் அங்கு அங்கு அதைப் பற்றி விஸ்தரித்து இப்பொழுது இங்கு சாஸ்திரத்தில் உள்ள அர்த்தத் தைத் திரட்டி வித்வான் கொல்லுவது இல்லை என்றும், பந்தப்படுவ தில்லை என்று கூறி முடிவுக்குக் கொண்டு வருகிறார்.
एवं च सति देहभृत्त्वाभिमानानुपपत्तौ अविद्याकृताशेषकर्मसंन्यासोपपत्तेः संन्यासिनाम् अनिष्टादि त्रिविधं कर्मणः फलं न भवति इति उपपन्नम् ; तद्विपर्ययाच्च इतरेषां भवति इत्येतच्च अपरिहार्यम् इति एषः गीताशास्त्रार्थः उपसंहृतः ।
இவ்வாறு இருக்கும்பொழுது தேஹத்தை உடையவன் என்றஅபிமானம் இல்லாததினால் அவித்யையினால் உண்டான மீதமில்லாமல் எல்லாக்கர்மங்களிலும் சந்நியாசம் ஏற்பட்ட சந்நி யாசிகளுக்கு அநிஷ்ட்டம் முதலிய மூன்று விகர்ம பலன்கள் கிடையாது என்பது பொருந்தும். இதற்கு மாறாக மற்றவர்களுக்கு உண்டு அதை நீக்கமுடியாது என்று கூறி இந்த கீதா சாஸ்திரத்தின் அர்த்தம் முடிக்கப்பட்டது.
स एषः सर्ववेदार्थसारः निपुणमतिभिः पण्डितैः विचार्य प्रतिपत्तव्यः इति तत्र तत्र प्रकरणविभागेन दर्शितः अस्माभिः शास्त्रन्यायानुसारेण ॥ १७ ॥
நல்ல நிபுணபுத்தியுள்ளவர்களாகிய (திறமையான புத்தி உள்ள வர்களாகிய) பண்டிதர்களால் அந்த இந்த வேதார்த்த சாரத்தை விசாரித்து (யதார்த்த ஞானம்) அடையவேண்டும் என்று அங்கு அங்கு பிரகரணத்தை பிரித்து சாஸ்திரத்தின் படியும், யுக்தியின் படியும் எங்களால் காண்பிக்கப்பட்டது.
अथ इदानीं कर्मणां प्रवर्तकम् उच्यते —
இப்பொழுது கர்மங்களின் பிரவிருத்தியை (தூண்டுதலை) கூறுகிறார்-
ज्ञानं ज्ञेयं परिज्ञाता त्रिविधा कर्मचोदना ।
करणं कर्म कर्तेति त्रिविधः कर्मसङ्ग्रहः ॥ १८ ॥
ஞானம் ஞேயம் பரிக்ஞாதா த்ரிவிதா கர்மசோதனா ।
கரணம் கர்ம கர்தேதி த்ரிவித: கர்மஸங்க்ரஹ: ॥ 18 ॥
ज्ञानं ज्ञायते अनेन इति सर्वविषयम् अविशेषेण उच्यते । तथा ज्ञेयं ज्ञातव्यम् , तदपि सामान्येनैव सर्वम् उच्यते । तथा परिज्ञाता उपाधिलक्षणः अविद्याकल्पितः भोक्ता । इति एतत् त्रयम् अविशेषेण सर्वकर्मणां प्रवर्तिका त्रिविधा त्रिप्रकारा कर्मचोदना ।
ஞானம் என்பது எல்லாவிஷயங்களையும் மீதம் இல்லாமல் எதனால் உணர்த்தப்படுகிறதோ அதுவாகும். அவ்வாறேஞேயம் என்பது அறியப்படவேண்டியது, அது சாமான்யமாக எல்லா பதார்த்தங்களின் ஞானத்தையும் குறிக்கிறது. அவ்வாறேபரிக் ஞாதா என்பது அவித்யையினால் கல்பிக்கப்பட்ட உபாதியுடன் கூடிய போக்தா ஆகிய இம்மூன்றும் மிச்சம் இல்லாமல் எல்லாக் கர்மங்களையும் தூண்டக்கூடியது. கர்மங்களைத் தூண்டுவது மூன்று பிரகாரமாக இருக்கிறது.
ज्ञानादीनां हि त्रयाणां संनिपाते हानोपादानादिप्रयोजनः सर्वकर्मारम्भः स्यात् ।
இந்த ஞானம், ஞேயம், ஞாதா என இம்மூன்றும் ஒன்று சேரும் பொழுது எடுத்துக்கொள்ளுவதற்கும், விடுவதற்கும் ஆகிய பிர யோஜனத்திற்காகவும் கர்மங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன.
ततः पञ्चभिः अधिष्ठानादिभिः आरब्धं वाङ्मनःकायाश्रयभेदेन त्रिधा राशीभूतं त्रिषु करणादिषु सङ्गृह्यते इत्येतत् उच्यते —
சரீரம் (அதிஷ்ட்டானம்) முதலிய ஐந்து ஆச்ரயங்களால் செய் யப்பட்டு அவ்வாறே மனோ, வாக்கு, காயம் இவைகளின் ஆச்ரய பேதத்தால் எல்லாக் கர்மங்களும் கரணங்களில் மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. அதைக் குறிப்பிடுகிறார்-
करणं क्रियते अनेन इति बाह्यं श्रोत्रादि, अन्तःस्थं बुद्ध्यादि, कर्म ईप्सिततमं कर्तुः क्रियया व्याप्यमानम् , कर्ता करणानां व्यापारयिता उपाधिलक्षणः, इति त्रिविधः त्रिप्रकारः कर्मसङ्ग्रहः ।
எதனால் கர்மங்கள் செய்யப்படுகிறதோ அது கரணம். அது வெளியில் உள்ள செவி முதலியவைகளும், அந்தக்கரணத்தில் உள்ள புத்தி முதலியவைகள். கர்மம் என்பது கர்த்தாவிற்கு மிக வும் விருப்பமானதை அடைவதற்கான செயல்களில் ஈடுபடுவது. கர்த்தா என்பது இந்திரியங்களை அதன், அதன் செயல்களில் ஈடு படுத்தும் உபாதி உடைய ஜீவன். இவ்விதமாக கர்மத்திற்கு மூன்று விதமான சங்கிரஹமாகும்.
सङ्गृह्यते अस्मिन्निति सङ्ग्रहः, कर्मणः सङ्ग्रहः कर्मसङ्ग्रहः, कर्म एषु हि त्रिषु समवैति, तेन अयं त्रिविधः कर्मसङ्ग्रहः ॥ १८ ॥
எதில் நன்றாக தங்குகிறதோ (எதில் நன்றாக கிரஹிக்கப்பட்டி ருக்கிறதோ) அது சங்கிரஹமாகும். கர்மம் எதில் தங்குகிறதோ அது கர்ம சங்கிரஹமாகும். ஏன் எனில் இந்த மூன்று காரகங்களில் கர்மம் நிலைபெற்றிருக்கிறது. ஆகையால் கர்ம சங்கிரஹம் மூன்று விதமாக இருக்கிறது.
अथ इदानीं क्रियाकारकफलानां सर्वेषां गुणात्मकत्वात् सत्त्वरजस्तमोगुणभेदतः त्रिविधः भेदः वक्तव्य इति आरभ्यते —
இப்பொழுது செய்கை செய்யும் கருவிகள், அதன் பலன்கள் எல்லாம் குணவடிவமாக இருப்பதால் சத்வ, ரஜஸ், தமோ குணங்க ளின் பேதங்களினால் மூன்றுவித பேதங்கள் கூறுவதற்காக ஆரம் பிக்கப்படுகின்றன.
ज्ञानं कर्म च कर्ता च त्रिधैव गुणभेदतः ।
प्रोच्यते गुणसङ्ख्याने यथावच्छृणु तान्यपि ॥ १९ ॥
ஞானம் கர்ம ச கர்தா சத்ரிதைவ குணபேத்த: ।
ப்ரோச்யதே குணஸங்க்யானே யதாவச்ச்ருணு தான்யபி ॥ 19 ॥
ज्ञानं कर्म च, कर्म क्रिया, न कारकं पारिभाषिकम् ईप्सिततमं कर्म, कर्ता च निर्वर्तकः क्रियाणां त्रिधा एव, अवधारणं गुणव्यतिरिक्तजात्यन्तराभावप्रदर्शनार्थं गुणभेदतः सत्त्वादिभेदेन इत्यर्थः । प्रोच्यते कथ्यते गुणसङ्ख्याने कापिले शास्त्रे,
இங்கு கர்மம் என்றது கிரியை (செயல்) என்ற பொருளில் வந் துள்ளது. கர்த்தாவினுடைய மிகுந்த விருப்பத்திற்காக செய்யப்படு கின்றகர்மம் பாரிபாஷிகமாகக் கூறப்பட்ட காரகமன்று. கர்த்தா என் றால் காரியத்தைச் செய்து முடிப்பவன். ஞானம், கர்மம், கர்த்தா ஆகிய இவை மூன்றிற்கும் குணங்களால் வேற்றுமையைத் தவிர வேறு வகையாக இல்லை என்பதை விளக்குவதற்காக மூன்று வகை எனக்கூறப்பட்டது. செயல்கள் மூன்று விதமாகவே கூறப்பட் டது குணத்தை விடுத்து வேறு ஜாதி இல்லை என்பதைக் காட்டுவ தற்காக சத்துவாதிபேதம் காட்டப்பட்டது என்பது பொருள். குணங் களை ஆராய்ந்து கூறும் கபிலருடைய சாங்கிய சாஸ்திரத்திலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
तदपि गुणसङ्ख्यानशास्त्रं गुणभोक्तृविषये प्रमाणमेव । परमार्थब्रह्मैकत्वविषये यद्यपि विरुध्यते ।
அந்த குணஸாங்கிய சாஸ்திரமும் குணங்களுடைய போக்தா விதத்திற்கு பிரமாணமே அன்றி பரமார்த்த பிரஹ்ம ஐக்ய ஞான விஷயத்திற்கு மாறானதாகும்.
तथापि ते हि कापिलाः गुणगौणव्यापारनिरूपणे अभियुक्ताः इति तच्छास्त्रमपि वक्ष्यमाणार्थस्तुत्यर्थत्वेन उपादीयते इति न विरोधः ।
எவர்கள் கபில சாங்கியத்தைப் பற்றுகிறார்களோ அவர்கள் குணம், குணத்தின் வியாபாரத்தை (செயலை) நிரூபிப்பதில் வல்ல வர்கள். ஆகையால் அந்த சாஸ்திரமானது இனி கூறப்போ கிறவிஷயத்தை புகழுவதற்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆகையால் அந்த சாஸ்திரம் விரோதமல்ல.
यथावत् यथान्यायं यथाशास्त्रं शृणु तान्यपि ज्ञानादीनि तद्भेदजातानि गुणभेदकृतानि शृणु, वक्ष्यमाणे अर्थे मनःसमाधिं कुरु इत्यर्थः ॥ १९ ॥
ஞானம், கர்மம், கர்த்தா என்பனவற்றையும் குணங்களின் பேதத்தாலான அவைகளின் பேதத்தையும் யுக்திக்கும் சாஸ்த்திரத் திற்கும் பொருந்துமாறு (கூறுகிறேன்) கேள். இனிக்கூறப்போகும் விஷயத்தில் மனதை அலையவிடாமல் ஒருமுகப்படுத்து என்பது பொருள்.
ज्ञानस्य तु तावत् त्रिविधत्वम् उच्यते —
முதலில் ஞானத்திற்குள்ள மூன்றுவிதபேதம் கூறப்பட்டுள்ளது-
सर्वभूतेषु येनैकं भावमव्ययमीक्षते ।
अविभक्तं विभक्तेषु तज्ज्ञानं विद्धि सात्त्विकम् ॥ २० ॥
ஸர்வபூதேஷு யேனைகம் பாவமவ்யயமீக்ஷதே ।
அவிபக்தம் விபக்தேஷு தஜ்ஞானம் வித்தி ஸாத்த்விகம் ॥ 20 ॥
सर्वभूतेषु अव्यक्तादिस्थावरान्तेषु भूतेषु येन ज्ञानेन एकं भावं वस्तु — भावशब्दः वस्तुवाची, एकम् आत्मवस्तु इत्यर्थः ; अव्ययं न व्येति स्वात्मना स्वधर्मेण वा, कूटस्थम् इत्यर्थः ; ईक्षते पश्यति येन ज्ञानेन ।
அவ்யக்தம் முதல் ஸ்தாவரம் வரையிலும் உள்ள எல்லாப் பிராணிகளிடத்தும் ஒரே பாவவஸ்துதான் இருக்கிறது என்று ஞானத்தினால் அறியப்படும் ஒரே வஸ்து ஆத்மவஸ்து என்பது பொருள். பாவ சப்தமானது வஸ்து என்பதின் வாசகமாகும். அந்த ஆத்மவஸ்து அவ்யயம். அதாவது தன்னுடைய தர்மத்தினின்றும் (தனது நிலையினின்றும்) மாறுபடாதது. அல்லது நித்யமான கூடஸ்த்தன் என்பது பொருள். எந்த ஞானத்தினால் அறிகிறதோ என்பது ஆகும்.
तं च भावम् अविभक्तं प्रतिदेहं विभक्तेषु देहभेदेषु न विभक्तं तत् आत्मवस्तु, व्योमवत् निरन्तरमित्यर्थः ; तत् ज्ञानं साक्षात् सम्यग्दर्शनम् अद्वैतात्मविषयं सात्त्विकं विद्धि इति ।
எந்த பகுக்கப்படாத வஸ்துவானது (பாவமானது) ஒவ்வொரு தேஹ பேதத்திலும் பகுக்கப்படாமல் ஆகாயம் போல் எப்பொழுதும் இருக்கிறதோ அது ஆத்மவஸ்து என்பது பொருள். அந்த ஞானமா னது அதாவது அந்த சம்யக்தர்சனம் சாத்விகம் என்று அறி.
यानि द्वैतदर्शनानि तानि असम्यग्भूतानि राजसानि तामसानि च इति न साक्षात् संसारोच्छित्तये भवन्ति ॥ २० ॥
எந்த துவைத தர்சனங்கள் ஆகிய அசம்யக்ஞானம் (விபரீத ஞானம்) ராஜசமானதும் தாமஸமானதுமாகும். ஆகையால் அவை சம்சாரத்தைப் போக்குவதற்கான சாக்ஷாத் - (நேரான) காரணமாகாது.
पृथक्त्वेन तु यज्ज्ञानं नानाभावान्पृथग्विधान् ।
वेत्ति सर्वेषु भूतेषु तज्ज्ञानं विद्धि राजसम् ॥ २१ ॥
ப்ருதக்த்வேனது யஜ்ஞானம் நாநாபாவான்ப்ருதக்விதான் ।
வேத்தி ஸர்வேஷு பூதேஷு தஜ்ஞானம் வித்தி ராஜஸம் ॥ 21 ॥
पृथक्त्वेन तु भेदेन प्रतिशरीरम् अन्यत्वेन यत् ज्ञानं नानाभावान् भिन्नान् आत्मनः पृथग्विधान् पृथक्प्रकारान् भिन्नलक्षणान् इत्यर्थः, वेत्ति विजानाति यत् ज्ञानं सर्वेषु भूतेषु, ज्ञानस्य कर्तृत्वासम्भवात् येन ज्ञानेन वेत्ति इत्यर्थः, तत् ज्ञानं विद्धि राजसं रजोगुणनिर्वृत्तम् ॥ २१ ॥
ஒவ்வொரு சரீரத்திலும் பேதமாகவும், அந்நியமாகவும் ஆத்மாவைக் காட்டிலும் வேறாகவும் உள்ள லக்ஷணங்களுடன் கூடியதை எல்லா பிராணிகளிடத்திலும் உள்ள ஆத்மாவாக அறி யும் ஞானம் என்றதால் ஞானம் கர்த்தாவாக சொல்லப்படாமை யால் எந்த ஞானத்தினால் அறிகிறானோ என்று பொருள் கொள்ள வேண்டும் என்பது பொருள். அந்த ஞானம் ரஜோகுணத்தினால் ஆனதாகும்.
यत्तु कृत्स्नवदेकस्मिन्कार्ये सक्तमहैतुकम् ।
अतत्त्वार्थवदल्पं च तत्तामसमुदाहृतम् ॥ २२ ॥
யத்து க்ருத்ஸ்னவதேகஸ்மின்கார்யே ஸக்தமஹைதுகம் ।
அதத்வார்தவதல்பம் ச தத்தாமஸமுதாஹ்ருதம் ॥ 22 ॥
यत् ज्ञानं कृत्स्नवत् समस्तवत् सर्वविषयमिव एकस्मिन् कार्ये देहे बहिर्वा प्रतिमादौ सक्तम् ‘एतावानेव आत्मा ईश्वरो वा, न अतः परम् अस्ति’ इति, यथा नग्नक्षपणकादीनां शरीरान्तर्वर्ती देहपरिमाणो जीवः, ईश्वरो वा पाषाणदार्वादिमात्रम् , इत्येवम् एकस्मिन् कार्ये सक्तम्  ।
பூதவிகாரங்கள் பலவாயிருக்க ஒரே காரியமான தேஹத் திலோ அல்லது வெளியில் விக்ரஹங்களில் இவ்வளவுதான் ஆத்மா அல்லது ஈஸ்வரன் இதற்குமேல் இல்லை என்று கருதியதி னால் ஆத்மா பரம்(மேலானது அல்ல என்று எவ்வாறு திகம்பர ஜைனர்கள் ஆத்மா சரீரம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு பரிணாமம் அடைந்த ஜீவன் ஈஸ்வரன் என்றும் அல்லது கல், கட்டை முதலியைவகளால் எவ்வளவு அளவோ அவ்வ ளவே ஆத்மா அல்லது ஈஸ்வரன் என்று ஒரே காரியத்தில் பற்று கொள்கிறான்.
अहैतुकं हेतुवर्जितं निर्युक्तिकम् , अतत्त्वार्थवत् अयथाभूतार्थवत् , यथाभूतः अर्थः तत्त्वार्थः, सः अस्य ज्ञेयभूतः अस्तीति तत्त्वार्थवत् , न तत्त्वार्थवत् अतत्त्वार्थवत् ; अहैतुकत्वादेव अल्पं च, अल्पविषयत्वात् अल्पफलत्वाद्वा । तत् तामसम् उदाहृतम् । तामसानां हि प्राणिनाम् अविवेकिनाम् ईदृशं ज्ञानं दृश्यते ॥ २२ ॥
இது யுக்திக்குப் பொருந்தாது. எவ்வாறு உள்ளதோ அவ்வாறு அறிவது தத்துவார்த்தமாகும். அவ்வாறு அல்லாதது அதத்துவார்த் தமாகும். அவனுக்கு அது அறியப்படவேண்டியது. அது ஞேயமா கும், அதுவே தத்துவார்த்தமாகும். அந்த தத்துவார்த்தமில்லா விடில் அது அதத்துவார்த்தமாகும். அதற்கு ஹேது (காரணம்) இல்லாததால் அது அல்பமாகும். ஏன் எனில் அது அல்ப விஷயமும், அல்ப பலனும் உடையது. ஆகையால் அந்த ஞானம் தாமஸம் எனப்படும். தாமஸ குணமுடைய ஜீவர்களாகிய அவிவேகிகளுக்கு இவ்வாறான ஞானம் காணப்படுகிறது.
अथ इदानीं कर्मणः त्रैविध्यम् उच्यते —
இப்பொழுது கர்மத்தினுடைய மூன்றுவித பேதமானது கூறப் படுகிறது-
नियतं सङ्गरहितमरागद्वेषतःकृतम् ।
अफलप्रेप्सुना कर्म यत्तत्सात्त्विकमुच्यते ॥ २३ ॥
நியதம் ஸங்கரஹிதமராகத்வேஷத: க்ருதம் ।
அபலப்ரேப்ஸுனா கர்ம யத்தத்ஸாத்விகமுச்யதே ॥ 23 ॥
नियतं नित्यं सङ्गरहितम् आसक्तिवर्जितम् अरागद्वेषतःकृतं रागप्रयुक्तेन द्वेषप्रयुक्तेन च कृतं रागद्वेषतःकृतम् , तद्विपरीतम् अरागद्वेषतःकृतम् , अफलप्रेप्सुना फलं प्रेप्सतीति फलप्रेप्सुः फलतृष्णः तद्विपरीतेन अफलप्रेप्सुना कर्त्रा कृतं कर्म यत् , तत् सात्त्विकम् उच्यते ॥ २३ ॥
எந்த நித்ய கர்மமானது பற்று அற்றும், ராகத்வேஷமற்றும் பலத்தில் இச்சை அற்றும் உள்ள கர்த்தாவால் செய்யப்படுமோ அந்த கர்மம் சாத்வீக கர்மம் எனப்படும்.
यत्तु कामेप्सुना कर्म साहङ्कारेण वा पुनः ।
क्रियते बहुलायासं तद्राजसमुदाहृतम् ॥ २४ ॥
யத்து காமேப்ஸுனா கர்ம ஸாஹங்காரேன வா புன: ।
க்ரியதே பஹுலாயாஸம் தத்ராஜஸமுதாஹ்ருதம் ॥ 24 ॥
यत्तु कामेप्सुना कर्मफलप्रेप्सुना इत्यर्थः, कर्म साहङ्कारेण वा—
போகரூப பலத்தில் இச்சை உடையவனாய் அல்லது அஹங் காரத்துடன் கூடியவனாய் உள்ளவனால் செய்யப்படும் கர்மம்-
साहङ्कारेण इति न तत्त्वज्ञानापेक्षया । किं तर्हि ? लौकिकश्रोत्रियनिरहङ्कारापेक्षया । यो हि परमार्थनिरहङ्कारः आत्मवित् , न तस्य कामेप्सुत्वबहुलायासकर्तृत्वप्राप्तिः अस्ति ।
இந்த ஸ்லோகத்தில் கூறிய அஹங்காரத்துடன் என்று கூறி யது தத்துவ ஞானத்தை அபேக்ஷி த்துக் கூறவில்லை. ஏன் எனில் வேத சாஸ்திரத்தை அறிந்த லௌகிகர்களுடைய அஹங்கா ரத்தை அபேக்ஷித்துக் கூறப்பட்டதாகும். எவனொருவன் உண் மையான (பரமார்த்த)அஹங்காரம் அற்ற ஆத்மவித்தோ அந்த ஆத்மாவை அறிந்தவனுக்கு காமத்தில் உள்ள இச்சையால் மிகுந்த பிரயாசையுடன் கூடிய கர்த்திருத்துவமானது கிடையாது.
सात्त्विकस्यापि कर्मणः अनात्मवित् साहङ्कारः कर्ता, किमुत राजसतामसयोः ।
சாத்விக கர்மாவைச் செய்யும் அக்ஞானியாகிய கர்த்தா (ஆத்மதத்துவத்தை அறியாதவன்) அஹங்காரத்துடன் கூடியவ னாகிறான். அவ்வாறு இருக்கும்பொழுது ராஜஸ, தாமஸ கர்த்தாக்களைப் பற்றி கூறவும் வேண்டுமோ?
लोके अनात्मविदपि श्रोत्रियो निरहङ्कारः उच्यते ‘निरहङ्कारः अयं ब्राह्मणः’ इति । तस्मात् तदपेक्षयैव ‘साहङ्कारेण वा’ इति उक्तम् । पुनःशब्दः पादपूरणार्थः ।
உலகில் ஆத்மதத்துவத்தை அறியாதவனை இந்த பிராஹ்ம ணன் சாஸ்திரத்தை அறிந்தவன், அஹங்காரமற்றவன் என்று கூறு கிறார்கள். ஆகையால் அதை அபேக்ஷித்து அஹங்காரத்துடன் கூடிய கர்த்தா என்று கூறப்பட்டது. புன:என்ற சொல்லானது அந்த பாதத்தை முடிப்பதற்காக என்பது பொருள்.
क्रियते बहुलायासं कर्त्रा महता आयासेन निर्वर्त्यते, तत् कर्म राजसम् उदाहृतम् ॥ २४ ॥
கர்த்தாவால் மிகுந்த பிரயாசையுடன் எந்த கர்மமானது செய் யப்படுகிறதோ அது ராஜசம் எனப்படும்.
अनुबन्धं क्षयं हिंसामनपेक्ष्य च पौरुषम् ।
मोहादारभ्यते कर्म यत्तत्तामसमुच्यते ॥ २५ ॥
அநுபந்தம் க்ஷயம் ஹிம்ஸாமனபேக்ஷ்ய ச பௌருஷம் ।
மோஹாதாரப்யதே கர்ம யத்தத்தாமஸமுச்யதே ॥ 25 ॥
अनुबन्धं पश्चाद्भावि यत् वस्तु सः अनुबन्धः उच्यते तं च अनुबन्धम् , क्षयं यस्मिन् कर्मणि क्रियमाणे शक्तिक्षयः अर्थक्षयो वा स्यात् तं क्षयम् , हिंसां प्राणिबाधां च ; अनपेक्ष्य च पौरुषं पुरुषकारम् ‘शक्नोमि इदं कर्म समापयितुम्’ इत्येवम् आत्मसामर्थ्यम् , इत्येतानि अनुबन्धादीनि अनपेक्ष्य पौरुषान्तानि मोहात् अविवेकतः आरभ्यते कर्म यत् , तत् तामसं तमोनिर्वृत्तम् उच्यते ॥ २५ ॥
அனுபந்தம் என்பது பின்னால் உண்டாகும் வஸ்து எதுவோ அது அனுபந்தம் எனப்படுகிறது. க்ஷயம் என்பது கர்மம் செய்யும் பொழுது ஏற்படும் சக்தியின் நஷ்ட்டமும், செல்வத்தின் குறைவும் ஆகும். பிராணிகளை ஹிம்சித்தல், ஒன்றையும் அபேக்ஷிக்காமல் என்னுடைய புருஷ சாமர்த்தியத்தினாலேயே இந்த கர்மத்தைச் செய்யமுடியும் என்ற தன்னுடைய சாமர்த்தியம் ஆகிய அனுபந் தம் முதல் ஒன்றையும் அபேக்ஷிக்காத புருஷ சாமர்த்தியம் வரை யிலும் உள்ள இவைகள் எல்லாம் அவிவேகத்தினால் உண்டானது. அந்த அவிவேகத்தால் செய்யும் கர்மம் தமோகுணத்தால் ஆனது என்று கூறப்பட்டது.
इदानीं कर्तृभेदः उच्यते —
मुक्तसङ्गोऽनहंवादी धृत्युत्साहसमन्वितः ।
सिद्ध्यसिद्ध्योर्निर्विकारः कर्ता सात्त्विक उच्यते ॥ २६ ॥
முக்தஸங்கோஅநஹம்வாதீ த்ருத்யுத்ஸாஹஸமன்வித: ।
ஸித்த்யஸித்த்யோர்நிர்விகார: கர்தா ஸாத்விக உச்யதே ॥ 26 ॥
मुक्तसङ्गः मुक्तः परित्यक्तः सङ्गः येन सः मुक्तसङ्गः, अनहंवादी न अहंवदनशीलः, धृत्युत्साहसमन्वितः धृतिः धारणम् उत्साहः उद्यमः ताभ्यां समन्वितः संयुक्तः धृत्युत्साहसमन्वितः, सिद्ध्यसिद्ध्योः क्रियमाणस्य कर्मणः फलसिद्धौ असिद्धौ च सिद्ध्यसिद्ध्योः निर्विकारः, केवलं शास्त्रप्रमाणेन प्रयुक्तः न फलरागादिना यः सः निर्विकारः उच्यते । एवंभूतः कर्ता यः सः सात्त्विकः उच्यते ॥ २६ ॥
பற்றைத் துறந்தவன் எவனோ அவன் முக்தஸங்கன். (நான் செய்தேன்) என்று நான் நான் என்று கூறாதவன் அநஹம்வாதி. தாரண சக்தியும், முயற்சியும் ஆகிய இரண்டும் உள்ளவன் த்ருதி உத்ஸாஹ சமன்வித: செய்த கர்மத்திற்குப் பலன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் சாஸ்திரப்பிரமாணப்படி செய்யப்பட்டது. பலத்தில் உள்ள இச்சைக்காக அல்ல என்று எவன் கர்மத்தைச் செய்கிறானோ அவன் நிர்விகாரன் எனப்படுகிறான். இவ்வாறு உள்ள கர்த்தா எவனோ அவன் சாத்விகன் என்று கூறப்படுகிறான்.
रागी कर्मफलप्रेप्सुर्लुब्धो हिंसात्मकोऽशुचिः ।
हर्षशोकान्वितः कर्ता राजसः परिकीर्तितः ॥ २७ ॥
ராகீ கர்மபலப்ரேப்ஸுர்லுப்தோ ஹிம்ஸாத்மகோஅசுசி: ।
ஹர்ஷசோகான்வித: கர்தா ராஜஸ: பரிகீர்தித: ॥ 27 ॥
रागी रागः अस्य अस्तीति रागी, कर्मफलप्रेप्सुः कर्मफलार्थी इत्यर्थः, लुब्धः परद्रव्येषु सञ्जाततृष्णः, तीर्थादौ स्वद्रव्यापरित्यागी
ராகம் எவனுக்கு உள்ளதோ அவன் ராகி. பலத்தில் ஆசை உள்ளவனும், மற்றவர்களுடைய செல்வத்தில் ஆசை உள்ளவ னும் தீர்த்த முதலிய ஸ்தலங்களில் தன்னுடைய செல்வத்தை தானம் செய்யாதவன்.
हिंसात्मकः परपीडाकरस्वभावः, अशुचिः बाह्याभ्यन्तरशौचवर्जितः, हर्षशोकान्वितः इष्टप्राप्तौ हर्षः अनिष्टप्राप्तौ इष्टवियोगे च शोकः ताभ्यां हर्षशोकाभ्याम् अन्वितः संयुक्तः, तस्यैव च कर्मणः सम्पत्तिविपत्तिभ्यां हर्षशोकौ स्याताम् , ताभ्यां संयुक्तो यः कर्ता सः राजसः परिकीर्तितः ॥ २७ ॥
மற்றவர்களைத் துன்புறுத்தும் சுவபாவம் உள்ளவன், வெளியிலும், உள்ளும் சுத்தமற்றவன். பிரியமானது கிடைத்த உடன் சந்தோஷப்படுவதும், தனக்கு விருப்பமில்லாதது கிடைக்கும்போதும், தனக்கு விருப்பமானது நாசம் அடையும் போதும் துக்கப்படுவது. இந்த சந்தோஷம் துக்கத்துடன் கூடியவனுக்குத்தான் கர்மத்தினால் கிடைத்ததற்கும் கிடைக்காததற்கும் ஏற்படும் சந்தோஷமும் துக்கமும் ஆகும். அவைகள் எவனுக்கு இருக்கிறதோ அந்த கர்த்தா ராஜஸன் எனப்படுகிறான்.
अयुक्तः प्राकृतः स्तब्धः शठो नैकृतिकोऽलसः ।
विषादी दीर्घसूत्री च कर्ता तामस उच्यते ॥ २८ ॥
அயுக்த: ப்ராக்ருத: ஸ்தப்த: சடோ நைஷ்க்ருதிகோஅல்ஸ: ।
விஷாதீ தீர்கஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே ॥ 28 ॥
अयुक्तः न युक्तः असमाहितः, प्राकृतः अत्यन्तासंस्कृतबुद्धिः बालसमः, स्तब्धः दण्डवत् न नमति कस्मैचित् , शठः मायावी शक्तिगूहनकारी, नैकृतिकः परविभेदनपरः, अलसः अप्रवृत्तिशीलः कर्तव्येष्वपि, विषादी विषादवान् सर्वदा अवसन्नस्वभावः, दीर्घसूत्री च कर्तव्यानां दीर्घप्रसारणः, सर्वदा मन्दस्वभावः, यत् अद्य श्वो वा कर्तव्यं तत् मासेनापि न करोति, यश्च एवंभूतः, सः कर्ता तामसः उच्यते ॥ २८ ॥
மனதை ஒருநிலைப்படுத்தாதவன், மிகுந்த பண்படுத்தப் படாத புத்தி உடையவன் மூடனுக்கு ஒப்பானவன். கம்பு போல் ஒருவரையும் வணங்காதவன், தன்னுடைய சாமர்த்தியத்தை மறைத்து வைக்கும் கபடமுள்ளவன். மற்றவர்களுடைய பிரவிருத் தியை கெடுப்பவன். செய்யவேண்டியவைகளிலும் சோம்பேறி யாய் இருப்பவன். எப்பொழுதும் சோகமுடன் இருப்பவன். செய்ய வேண்டியவைகளை இன்று, நாளை என்று மாதமானாலும் செய்யா மல் நீண்டகாலம் இழுத்தடிப்பவன். இவ்வாறு எவன் உள்ளானோ அந்த கர்த்தா தாமஸன் என்று கூறப்படுகிறான்.
बुद्धेर्भेदं धृतेश्चैव गुणतस्त्रिविधं शृणु ।
प्रोच्यमानमशेषेण पृथक्त्वेन धनञ्जय ॥ २९ ॥
புத்தேர்பேதம் த்ருதேச்சைவ குணதஸ்த்ரிவிதம் ச்ருணு ।
ப்ரோச்யமானமசேஷேண ப்ருதக்த்வேன தனஞ்ஜய ॥ 29 ॥
बुद्धेः भेदं धृतेश्चैव भेदं गुणतः सत्त्वादिगुणतः त्रिविधं शृणु इति सूत्रोपन्यासः । प्रोच्यमानं कथ्यमानम् अशेषेण निरवशेषतः यथावत् पृथक्त्वेन विवेकतः धनञ्जय ।
ஹே தனஞ்ஜய! புத்திக்கும் திருதிக்கும் (உறுதிக்கும்) சத்து வாதி குணங்களின்படி மூன்றுவிதமான பேதங்களை தகுந்தவாறு பிரித்து மீதம் இல்லாமல் முழுமையாகக் கூறப்போவதைக் கேள் என்று சூத்ரரூபமாகக் கூறப்பட்டது.
दिग्विजये मानुषं दैवं च प्रभूतं धनं जितवान् , तेन असौ धनञ्जयः अर्जुनः ॥ २९ ॥
திக்விஜய சமயத்தில் அர்ஜுனனால் மனிதர்களுடையவும், தேவர்களுடையவுமான மிகுந்த செல்வமானது (தனமானது) ஜெயிக்கப்பட்டது. ஆகையால் அவனுக்கு தனஞ்ஜயன் என்ற பெயர் ஏற்பட்டது.
प्रवृत्तिं च निवृत्तिं च कार्याकार्ये भयाभये ।
बन्धं मोक्षं च या वेत्ति बुद्धिः सा पार्थ सात्त्विकी ॥ ३० ॥
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாபயே ।
பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்தி: ஸா பார்த ஸாத்விகீ ॥ 30 ॥
प्रवृत्तिं च प्रवृत्तिः प्रवर्तनं बन्धहेतुः कर्ममार्गः शास्त्रविहितविषयः, निवृत्तिं च निर्वृत्तिः मोक्षहेतुः संन्यासमार्गः — बन्धमोक्षसमानवाक्यत्वात् प्रवृत्तिनिवृत्ती कर्मसंन्यासमार्गौ इति अवगम्यते
பிரவிருத்தி என்பது பந்தத்திற்கு ஹேதுவாகிய கர்மமார்க்கமா கும். நிவிருத்தி என்பது மோக்ஷத்திற்கு ஹேதுவாகிய சந்நியாச மார்க் கமாகும். பந்தம், மோக்ஷங்களுடன் பிரவிருத்தி, நிவிருத்தியும் சம மான வாக்கியமாய் இருப்பதால் பிரவிருத்தியும் நிவிருத்தியும் கர்ம சந்நியாசம் என்கின்ற இரு யோகங்கள் என்று அறியப்படுகின்றது.
कार्याकार्ये विहितप्रतिषिद्धे लौकिके वैदिके वा शास्त्रबुद्धेः कर्तव्याकर्तव्ये करणाकरणे इत्येतत् ; कस्य ? देशकालाद्यपेक्षया दृष्टादृष्टार्थानां कर्मणाम् ।
விதிக்கப்பட்ட கர்மம், விலக்கப்பட்ட கர்மம், செய்யப்பட வேண்டியது, செய்யக்கூடாதது, செய்வதும் செய்யாததும் ஆகியவை யையும் அறிகிறான். அது எதனுடைய சம்பந்தத்தால் எனில் தேசம், காலம் இவைகளை அனுசரித்து எந்த திருஷ்ட்ட அதிருஷ்ட்ட பலன் ஏற்படுகிறதோ அந்த கர்ம சம்பந்தத்தால் ஆகும்.
भयाभये बिभेति अस्मादिति भयं चोरव्याघ्रादि, न भयं अभयम् , भयं च अभयं च भयाभये, दृष्टादृष्टविषययोः भयाभययोः कारणे इत्यर्थः । बन्धं सहेतुकं मोक्षं च सहेतुकं या वेत्ति विजानाति बुद्धिः, सा पार्थ सात्त्विकी ।
இதனால் பயப்படுதல் பயம் ஆகும். பயத்திற்கு மாறானது அபயம். இவ்விரண்டையும் அதாவது இம்மை மறுமை விஷயத் தில் பயம், அபயம் இவற்றின் காரணத்தையும் புத்தி அறிகிறது. ஹே பார்த்த அவ்வாறே காரணத்துடன் பந்தத்தையும் மோக்ஷத் தையும் எந்த புத்தி அறிகிறதோ அது சாத்வீக புத்தியாகும்.
तत्र ज्ञानं बुद्धेः वृत्तिः ; बुद्धिस्तु वृत्तिमती । धृतिरपि वृत्तिविशेषः एव बुद्धेः ॥ ३० ॥
ஞானம் புத்தியினுடைய விருத்தியாகும். புத்தி விருத்தியுடன் கூடியதாகும். உறுதியும் (த்ருதியும்) புத்தியினுடைய விருத்தி விசே ஷமேயாகும்.
यया धर्ममधर्मं च कार्यं चाकार्यमेव च ।
अयथावत्प्रजानाति बुद्धिः सा पार्थ राजसी ॥ ३१ ॥
யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச ।
அயதாவத்ப்ரஜானாதி புத்தி: ஸா பார்த ராஜஸீ ॥ 31 ॥
यया धर्मं शास्त्रचोदितम् अधर्मं च तत्प्रतिषिद्धं कार्यं च अकार्यमेव च पूर्वोक्ते एव कार्याकार्ये अयथावत् न यथावत् सर्वतः निर्णयेन न प्रजानाति, बुद्धिः सा पार्थ, राजसी ॥ ३१ ॥
ஹே பார்த்த! எந்த புத்தியானது சாஸ்திரத்தில் விதித்த தர்மத் தையும், சாஸ்திரத்தில் விலக்கப்பட்ட அதர்மத்தையும் அவ் வாறேமுன்பு கூறிய செய்யப்படவேண்டியதையும், செய்யக்கூடா ததையும் உள்ளவாறு அல்லாமல் நிச்சயமற்று அறிகிறதோ அது ராஜஸமாகும்.
अधर्मं धर्ममिति या मन्यते तमसावृता ।
सर्वार्थान्विपरीतांश्च बुद्धिः सा पार्थ तामसी ॥ ३२ ॥
அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸாவ்ருதா ।
ஸர்வார்தான் விபரீதாம்ச்ச புத்தி: ஸா பார்த தாமஸீ ॥ 32 ॥
अधर्मं प्रतिषिद्धं धर्मं विहितम् इति या मन्यते जानाति तमसा आवृता सती, सर्वार्थान् सर्वानेव ज्ञेयपदार्थान् विपरीतांश्च विपरीतानेव विजानाति, बुद्धिः सा पार्थ, तामसी ॥ ३२ ॥
விலக்கப்பட்டதையும் விதித்ததையும் தமஸினால் மறைக்கப் பட்டு எல்லா ஞேயவஸ்துக்களையும் விபரீதமாக எந்த புத்தி உணர்கிறதோ அது தாமஸீ புத்தியாகும்.
धृत्या यया धारयते मनःप्राणेन्द्रियक्रियाः ।
योगेनाव्यभिचारिण्या धृतिः सा पार्थ सात्त्विकी ॥ ३३ ॥
த்ருத்யா யயா தாரயதே மந:ப்ராணேந்த்ரியக்ரியா: ।
யோகேநாவ்யபிசாரிண்யா த்ருதி: ஸா பார்த ஸாத்விகீ ॥ 33 ॥
धृत्या यया — अव्यभिचारिण्या इति व्यवहितेन सम्बन्धः, धारयते ; किम् ? मनःप्राणेन्द्रियक्रियाः मनश्च प्राणाश्च इन्द्रियाणि च मनःप्राणेन्द्रियाणि, तेषां क्रियाः चेष्टाः, ताः उच्छास्त्रमार्गप्रवृत्तेः धारयते धारयति — धृत्या हि धार्यमाणाः उच्छास्त्रमार्गविषयाः न भवन्ति — योगेन समाधिना, अव्यभिचारिण्या, नित्यसमाध्यनुगतया इत्यर्थः ।
உறுதியாய் என்பதுடன் தள்ளி உள்ள அவ்யபிசாரிa = மாறு படாதது என்பதற்கு சம்பந்தம் இருக்கிறது. எதில் உறுதியாக (தாங் குகின்றது) இருக்கிறது எனில் மனம், பிராணன், இந்திரியங்கள் இவைகளின் செயல்கள் உறுதியாக சாஸ்திரத்தில் இல்லாதவைக ளில் பிரவிருத்திப்பது இல்லை. யோகத்தினால் என்றால் சமாதி யால் எப்பொழுதும் மாறுபடாமல் தொடர்வது என்பது பொருள்.
एतत् उक्तं भवति — अव्यभिचारिण्या धृत्या मनःप्राणेन्द्रियक्रियाः धार्यमाणाः योगेन धारयतीति । या एवंलक्षणा धृतिः, सा पार्थ, सात्त्विकी ॥ ३३ ॥
மாறுபடாத உறுதியினால் மன, பிராண இந்திரியங்களின் செயல்களை அடக்கியதால் ஒருமுகப்பட்டு அதிலிருந்து நீங்காத உறுதியுடன் யோகத்தில் இருந்து நீங்காமல் இருப்பதற்காக அவற்றை உறுதியாக அடக்கி இருத்தல் சாத்வீக த்ருதியாகும்.
यया तु धर्मकामार्थान्धृत्या धारयतेऽर्जुन ।
प्रसङ्गेन फलाकाङ्क्षी धृतिः सा पार्थ राजसी ॥ ३४ ॥
யயாது தர்மகாமார்தாந்த்ருத்யா தாரயதேஅர்ஜுன ।
ப்ரஸங்கேன பலாகாங் த்ருதி: ஸா பார்த ராஜஸீ ॥ 34 ॥
यया तु धर्मकामार्थान् धर्मश्च कामश्च अर्थश्च धर्मकामार्थाः तान् धर्मकामार्थान् धृत्या यया धारयते मनसि नित्यमेव कर्तव्यरूपान् अवधारयति हे अर्जुन ।
ஹே அர்ஜுனா! அந்த உறுதியின் வாயிலாக தர்மம், அர்த் தம், காமம் (அறம், பொருள், இன்பம்) ஆகிய புருஷார்த்தங்கள் அவசியம் நித்யம் செய்யவேண்டியவைகள் என்று மனதில் நிச்ச யம் செய்து கொள்கிறான்.
प्रसङ्गेन यस्य यस्य धर्मादेः धारणप्रसङ्गः तेन तेन प्रसङ्गेन फलाकाङ्क्षी च भवति यः पुरुषः, तस्य धृतिः या, सा पार्थ, राजसी ॥ ३४ ॥
அறம் பொருள் முதலியவற்றில் எது வேண்டுமோ என்று நினைக்கிறானோ அவ்வாறே அதன் பலனையும் எதிர்பார்ப்பவ னாகிறான். ஹே பார்த்த! அப்படிப்பட்ட மனிதனுடைய உறுதியா னது ராஜஸமாகும்.
यया स्वप्नं भयं शोकं विषादं मदमेव च ।
न विमुञ्चति दुर्मेधा धृतिः सा तामसी मता ॥ ३५ ॥
யயா ஸ்வப்னம் பயம் சோகம் விஷாதம் மதமேவ ச ।
ந விமுஞ்சதி துர்மேதா த்ருதி: ஸா தாமஸீ மதா ॥ 35 ॥
यया स्वप्नं निद्रां भयं त्रासं शोकं विषादं विषण्णतां मदं विषयसेवाम् आत्मनः बहुमन्यमानः मत्त इव मदम् एव च मनसि नित्यमेव कर्तव्यरूपतया कुर्वन् न विमुञ्चति धारयत्येव दुर्मेधाः कुत्सितमेधाः पुरुषः यः, तस्य धृतिः या, सा तामसी मता ॥ ३५ ॥
எந்த உறுதியினால் தூக்கம், பயம், துக்கம், மதம் அதாவது விஷயங்களை அனுபவிப்பதுவே மேலான புருஷார்த்தம் என்று அதிலேயே மதம் பிடித்தவன் போல் அதையே எப்பொழுதும் அவசியம் செய்து கொண்டு இருக்கவேண்டும் என்று நினைத்து குறுகிய புத்தி உடைய மனிதன் அதையே செய்து கொண்டு அதி லிருந்து விடுபடமாட்டான். அப்படிப்பட்டவனுடைய உறுதியா னது தாமஸமாகும்.
गुणभेदेन क्रियाणां कारकाणां च त्रिविधो भेदः उक्तः । अथ इदानीं फलस्य सुखस्य त्रिविधो भेदः उच्यते —
செயல்களுக்கும் செய்கைகளுக்கும் குணங்களினால் உள்ள மூன்று வித பேதம் கூறப்பட்டது . இப்பொழுது பலனாகிய சுகத் திற்கு உள்ள மூன்று வித பேதம் கூறப்படுகிறது.
सुखं त्विदानीं त्रिविधं शृणु मे भरतर्षभ ।
अभ्यासाद्रमते यत्र दुःखान्तं च निगच्छति ॥ ३६ ॥
ஸுகம் த்விதானீம் த்ரிவிதம் ச்ருணு மே பரதர்ஷப் ।
அப்யாஸாத்ரமதே யத்ர து:காந்தம் ச நிகச்சதி ॥ 36 ॥
सुखं तु इदानीं त्रिविधं शृणु, समाधानं कुरु इत्येतत् , मे मम भरतर्षभ ।
ஹே பரத ரிஷப! மனதை நிறுத்தி இப்பொழுது சுகத்தின் மூன்று வித பேதத்தைக் கேள்.
अभ्यासात् परिचयात् आवृत्तेः रमते रतिं प्रतिपद्यते यत्र यस्मिन् सुखानुभवे दुःखान्तं च दुःखावसानं दुःखोपशमं च निगच्छति निश्चयेन प्राप्नोति ॥ ३६ ॥
பழக்கத்தினாலும், அடிக்கடி அனுபவிப்பதாலும், அடிக்கடி அதையே திரும்ப திரும்ப செய்வதனாலும் அதில் பிரியமேற் பட்டு அதை ரமிக்கிறான். அங்கு மனிதன் துக்கத்தின் முடிவை அடைகிறான். சந்தேஹமற்ற துக்கம் சாந்தமாகிறது.
यत्तदग्रे विषमिव परिणामेऽमृतोपमम् ।
तत्सुखं सात्त्विकं प्रोक्तमात्मबुद्धिप्रसादजम् ॥ ३७ ॥
யத்ததக்ரே விஷமிவ பரிணாமேஅம்ருதோபமம் ।
தத்ஸுகம் ஸாத்விகம் ப்ரோக்தமாத்மபுத்திப்ரஸாதஜம் ॥ 37 ॥
यत् तत् सुखम् अग्रे पूर्वं प्रथमसंनिपाते ज्ञानवैराग्यध्यानसमाध्यारम्भे अत्यन्तायासपूर्वकत्वात् विषमिव दुःखात्मकं भवति, परिणामे ज्ञानवैराग्यादिपरिपाकजं सुखम् अमृतोपमम् ।
முதன்முதலில் சுகத்தை அடைவதற்கு ஞான வைராக்கிய தியான சமாதி இவைகளின் ஆரம்பிக்கும்பொழுது மிகவும் பிரயா சையுடனும் மிகுந்த உழைப்புடன் செய்யவேண்டியதாய் உள்ள தால் அந்த சுகம் விஷத்திற்கு ஒப்பாக துக்கமயமாய் இருக்கிறது. ஞான வைராக்யம் முதலியவைகளால் பரிபாகம் அடைந்தபொ ழுது அந்த சுகமே அம்ருதத்திற்கு ஒப்பாகிறது.
तत् सुखं सात्त्विकं प्रोक्तं विद्वद्भिः, आत्मनः बुद्धिः आत्मबुद्धिः, आत्मबुद्धेः प्रसादः नैर्मल्यं सलिलस्य इव स्वच्छता, ततः जातं आत्मबुद्धिप्रसादजम् । आत्मविषया वा आत्मावलम्बना वा बुद्धिः आत्मबुद्धिः, तत्प्रसादप्रकर्षाद्वा जातमित्येतत् । तस्मात् सात्त्विकं तत् ॥ ३७ ॥
ஆத்மபுத்தி பிரசாதத்தால் தெளிந்த நீர் போல் மலினமற்ற தன் னுடைய புத்தியின் பிரசாதத்தால் உண்டான ஆத்ம விஷய புத்தி அதாவது ஆத்மாவையே அவலம்பித்த புத்தியினால் உண்டான தால் அந்த சுகம் சாத்விகம் எனப்படும்.
विषयेन्द्रियसंयोगाद्यत्तदग्रेऽमृतोपमम् ।
परिणामे विषमिव तत्सुखं राजसं स्मृतम् ॥ ३८ ॥
விஷயேந்த்ரியஸம்யோகாத்ததக்ரேஅம்ருதோபமம் ।
பரிணாமோ விஷமிவ தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம் ॥ 38 ॥
विषयेन्द्रियसंयोगात् जायते यत् सुखम् तत् सुखम् अग्रे प्रथमक्षणे अमृतोपमम् अमृतसमम् , परिणामे विषमिव, बलवीर्यरूपप्रज्ञामेधाधनोत्साहहानिहेतुत्वात् अधर्मतज्जनितनरकादिहेतुत्वाच्च परिणामे तदुपभोगपरिणामान्ते विषमिव, तत् सुखं राजसं स्मृतम् ॥ ३८ ॥
விஷயம் இந்திரியம் இவைகளின் சேர்க்கையால் எந்த சுகம் உண்டாகிறதோ அது முதலில் அம்ருதத்திற்கு ஒப்பானதாய் இருக்கும். அதன் மாறுபாட்டால் விஷம் போல் ஆகிவிடும். பலம், வீர்யம், பிரக்ஞை, மேதை, தனம், உற்சாகம், இவைகளுக்கு ஹானி (கெடுதல்) ஏற்படுவதாலும், அதர்மத்தினால் உண்டாகும் ராகம் முதலியவற்றிற்குக் காரணமாய் இருப்பதால் அந்த மாறுபாடானது தன்னுடைய நுகர்ச்சி முடிவடைந்த பின் அது விஷத்திற்கு ஒப்பாகிறது. ஆகையால் அந்த சுகம் ராஜசம் எனப்படுகிறது.
यदग्रे चानुबन्धे च सुखं मोहनमात्मनः ।
निद्रालस्यप्रमादोत्थं तत्तामसमुदाहृतम् ॥ ३९ ॥
யதக்ரே சாநுபந்தே ச ஸுகம் மோஹநமாத்மன: ।
நித்ராலஸ்யப்ரமாதோத்தம் தத்தாமஸமுதாஹ்ருதம் ॥ 39 ॥
यत् अग्रे च अनुबन्धे च अवसानोत्तरकाले च सुखं मोहनं मोहकरम् आत्मनः निद्रालस्यप्रमादोत्थं निद्रा च आलस्यं च प्रमादश्च तेभ्यः समुत्तिष्ठतीति निद्रालस्यप्रमादोत्थम् , तत् तामसम् उदाहृतम् ॥ ३९ ॥
எந்த சுகமானது நுகர்ச்சியின் ஆரம்பத்திலும் முடிவிலும் தன்னை மோஹிக்க செய்கிறதாய் தூக்கம் சோம்பல், மயக்கம் இவை களால் உண்டாகிறதாய் இருக்கிறதோ அது தாமசம் எனப்படும்.
अथ इदानीं प्रकरणोपसंहारार्थः श्लोकः आरभ्यते —
இப்பொழுது பிரகரணத்தை முடிப்பதற்கான ஸ்லோகம் ஆரம்பிக்கப்படுகிறது.
न तदस्ति पृथिव्यां वा दिवि देवेषु वा पुनः ।
सत्त्वं प्रकृतिजैर्मुक्तं यदेभिः स्यात्त्रिभिर्गुणैः ॥ ४० ॥
ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வா திவி தேவேஷுவா புன: ।
ஸத்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதேபி: ஸ்யாத்த்ரிபிர்குணை: ॥ 40 ॥
न तत् अस्ति तत् नास्ति पृथिव्यां वा मनुष्यादिषु सत्त्वं प्राणिजातम् अन्यद्वा अप्राणि, दिवि देवेषु वा पुनः सत्त्वम् , प्रकृतिजैः प्रकृतितः जातैः एभिः त्रिभिः गुणैः सत्त्वादिभिः मुक्तं परित्यक्तं यत् स्यात् , न तत् अस्ति इति पूर्वेण सम्बन्धः ॥ ४० ॥
சத்வம் என்றால் மனிதர்கள் முதலிய பிராணன் உடையவைக ளும், பிராணன் இல்லாத பொருள்களும் இவ்வுலகிலோ, ஸ்வர்க் கத்திலோ, தேவதைகளிடமோ இந்த பிரகிருதியினாலான சத்வ, ரஜஸ்,தமஸாகிற மூன்று குணங்களை விட்டு ஒருபோதும் இல்லை.
सर्वः संसारः क्रियाकारकफललक्षणः सत्त्वरजस्तमोगुणात्मकः अविद्यापरिकल्पितः समूलः अनर्थः उक्तः, वृक्षरूपकल्पनया च ‘ऊर्ध्वमूलम्’ (भ. गी. १५ । १) इत्यादिना ।
எல்லா சம்சாரத்தையும் செயல், செயல்பாடுகள் பலன்கள் ஆகிய லக்ஷணங்களுடையவையாயும், சத்வ, ரஜஸ், தமோ குண மயமானதாயும், அவித்யையினால் கல்பிக்கப்பட்டதாயும், கார ணத்துடன் கூடியதாயும் அனர்த்தமாயும் விருக்ஷ (மர) ரூபமாக கல்பனை செய்து (ஊர்த்துவ மூலம்) என்பது முதலியவைகளால் கூறப்பட்டது.
அவ்வாறே அதை அசங்கசஸ்த்ரேண த்ருடேந சித்த்வா தத: பதம் தத் பரிமார்க்கி தவ்யம் = அதை திடமான பற்றின்மையாகிய கோடாலியால் வெட்டியபின் அந்த நிலையைத் தேடவேண்டும் என்று கூறப்பட்டது.
तत्र च सर्वस्य त्रिगुणात्मकत्वात् संसारकारणनिवृत्त्यनुपपत्तौ प्राप्तायाम् , यथा तन्निवृत्तिः स्यात् तथा वक्तव्यम् ।
அங்கு எல்லாம் முக்குணத்தின் காரியமாய் இருப்பதால் சம்சா ரத்தினுடைய காரணம் நிவிருத்தி (நாசம்) ஆகாததால் அதை எந்த உபாயத்தால் நாசம் செய்ய முடியுமோ அந்த உபாயத்தைக் கூற வேண்டும்.
सर्वश्च गीताशास्त्रार्थः उपसंहर्तव्यः, एतावानेव च सर्ववेदस्मृत्यर्थः पुरुषार्थम् इच्छद्भिः अनुष्ठेयः इत्येवमर्थम् ‘ब्राह्मणक्षत्रियविशाम्’ इत्यादिः आरभ्यते —
கீதா சாஸ்திரத்தின் பொருள் முழுவதையும் முடிப்பதற்காக எல்லா வேதங்களின் அர்த்தமும், ஸ்ம்ருதிகளின் அர்த்தமும், மோக்ஷமாகிய பரம புருஷார்த்தத்தை அடைய விரும்புவோரால் கடைபிடிக்கவேண்டியதும் இவ்வளவுதான் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக ப்ராஹ்மணக்ஷத்ரியவிசாம் என்பது முதலிய ஸ்லோகங்களை ஆரம்பிக்கின்றார்.
ब्राह्मणक्षत्रियविशां शूद्राणां च परन्तप ।
कर्माणि प्रविभक्तानि स्वभावप्रभवैर्गुणैः ॥ ४१ ॥
ப்ராஹ்மணக்ஷத்ரியவிசாம் சூத்ராணாம் ச பரந்தப் ।
கர்மாணி ப்ரவிபக்தானி ஸ்வபாவப்ரபவைர்குணை: ॥ 41 ॥
ब्राह्मणाश्च क्षत्रियाश्च विशश्च ब्राह्मणक्षत्रियविशः, तेषां ब्राह्मणक्षत्रियविशां शूद्राणां च — शूद्राणाम् असमासकरणम् एकजातित्वे सति वेदानधिकारात् — हे परन्तप, कर्माणि प्रविभक्तानि इतरेतरविभागेन व्यवस्थापितानि ।
ஹே பரந்தப்! பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் அவ்வாறே சூத்திரர்களும் அவர் அவர்களுடைய குணங்களுக் கேற்றவாறு கர்மங்கள் பிரித்து விதிக்கப்பட்டுள்ளன. பிராமணர் கள் முதலியவர்களுடன் சூத்திரர்களையும் சமப்படுத்திக் கூறப்ப டவில்லை. ஏன் எனில் அவர்கள் ஒரு பிறப்பாளர் என்றால் உபநய னம் அவர்களுக்கு கிடையாது. ஆகையால் அவர்களுக்கு வேதத்தை ஓதுவதில் அதிகாரம் கிடையாது.
केन, स्वभावप्रभवैः गुणैः, स्वभावः ईश्वरस्य प्रकृतिः त्रिगुणात्मिका माया सा प्रभवः येषां गुणानां ते स्वभावप्रभवाः, तैः, शमादीनि कर्माणि प्रविभक्तानि ब्राह्मणादीनाम् ।
எவ்வாறு எதனால் பகுக்கப்பட்டது? ஈஸ்வரருடைய ஸ்வபா வமாகிய ப்ரக்ருதி எனப்படும் முக்குணமாகிய மாயை அந்த மாயையைப் பிறப்பிடமாகக் கொண்டு வெளிப்பட்ட குணங்களா கிய சமம், தமம் முதலிய (அகக்கரண தண்டம், புறக்கரண தண்டம் முதலிய) கர்மங்களால் பிராமணர் முதலியவர்களுக்கு கர்மங்கள் பகுக்கப்பட்டது.
अथवा ब्राह्मणस्वभावस्य सत्त्वगुणः प्रभवः कारणम् , तथा क्षत्रियस्वभावस्य सत्त्वोपसर्जनं रजः प्रभवः, वैश्यस्वभावस्य तमउपसर्जनं रजः प्रभवः, शूद्रस्वभावस्य रजउपसर्जनं तमः प्रभवः, प्रशान्त्यैश्वर्येहामूढतास्वभावदर्शनात् चतुर्णाम् ।
அல்லது பிராமணர்களுடைய ஸ்வபாவத்திற்குக் காரணம் சத் துவகுணத்தின் ஆதிக்யம். க்ஷத்திரிய ஸ்வபாவத்திற்குக் காரணம் ரஜோகுணத்தின் ஆதிக்யம். வைச்யர்களின் ஸ்வபாவத்திற்குக் காரணம் தமோ குணம். தாழ்த்தப்பட்ட ரஜோகுணமாகும். சூத்திர ருடைய ரஜோகுணம் தாழ்த்தப்பட்டு தமோகுணத்தின் ஆதிக்ய மாகும். இவ்வாறு அந்த நான்கு வர்ணத்தாருடைய குணத்திற்கு ஏற்றவாறு உள்ள ஸ்வபாவம் வரிசையாக சாந்தி (அமைதி), ஐஸ்வர்யம் (ஆளும் தன்மை), முயற்சி, மூடத்தன்மை என்று காணப்படுகிறது.
अथवा, जन्मान्तरकृतसंस्कारः प्राणिनां वर्तमानजन्मनि स्वकार्याभिमुखत्वेन अभिव्यक्तः स्वभावः, सः प्रभवो येषां गुणानां ते स्वभावप्रभवाः गुणाः ;
அல்லது முன் ஜன்மங்களில் செய்த கர்மங்களின் சம்ஸ்காரத் தால் ஜீவர்களுக்கு இந்த ஜன்மத்தில் தன் பலனைக் கொடுக்க தலைப்படும் பொழுது அதனை ஸ்வபாவம் என்கிறோம். அந்த ஸ்வபாவத்தினாலேயே குணங்கள் உண்டாவதற்குக் காரண மாகிறது. அதுவே ஸ்வபாவமாக உண்டாகும் குணமாகும்.
गुणप्रादुर्भावस्य निष्कारणत्वानुपपत्तेः । ‘स्वभावः कारणम्’ इति च कारणविशेषोपादानम् ।
குணங்கள் வெளிப்படுவதற்கு காரணம் இல்லாதிருத்தல் பொருந்தாது. ஆகையால் ஸ்வபாவமே காரணம் என்று விசேஷமாக மற்றொரு காரணம் சொல்லப்பட்டது. (குணங்கள் வெளிப்படுவதற்கு பிரகிருதி முதல்காரணம், மற்றொரு காரணம் ஸ்வபாவமாகும்)
एवं स्वभावप्रभवैः प्रकृतिभवैः सत्त्वरजस्तमोभिः गुणैः स्वकार्यानुरूपेण शमादीनि कर्माणि प्रविभक्तानि ॥
இவ்வாறு ஸ்வபாவத்தையும் பிரகிருதியையும் காரணமாக உடைய சத்துவ ரஜோ தமோ குணங்களுக்கு ஏற்றவாறு அமைதி முதலிய கர்மங்கள் பகுக்கப்பட்டன.
ननु शास्त्रप्रविभक्तानि शास्त्रेण विहितानि ब्राह्मणादीनां शमादीनि कर्माणि ; कथम् उच्यते सत्त्वादिगुणप्रविभक्तानि इति ।
ஆனால் பிராமணர் முதலிய வர்ணத்தாருக்கு சமம் முதலிய கர்மாக்கள் சாஸ்திரத்தினால் பகுக்கப்பட்டு விதிக்கப்பட்டது. அவ் வாறு இருக்கையில் எதனால் சத்துவகுண முதலியவைகளால் பகுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது?
नैष दोषः ; शास्त्रेणापि ब्राह्मणादीनां सत्त्वादिगुणविशेषापेक्षयैव शमादीनि कर्माणि प्रविभक्तानि, न गुणानपेक्षया, इति शास्त्रप्रविभक्तान्यपि कर्माणि गुणप्रविभक्तानि इति उच्यते ॥ ४१ ॥
இது தோஷமல்ல ஏன் எனில் சாஸ்திரத்திலும் சத்துவ முதலிய குணங்களை வைத்தே பிராமணர் முதலியவர்களின் சமதமாதிகர் மங்கள் பகுக்கப்பட்டுள்ளது. குணங்களைத் தவிர்த்து பகுக்கப்பட வில்லை. ஆகையால் சாஸ்திரத்தில் பகுக்கப்பட்ட கர்மங்கள் குணங்களினாலேயே பகுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
कानि पुनः तानि कर्माणि इति, उच्यते —
மற்றும் அந்தக்கர்மாக்கள் எவை என்று கூறப்படுகிறது-அவதாரிகை:
शमो दमस्तपः शौचं क्षान्तिरार्जवमेव च ।
ज्ञानं विज्ञानमास्तिक्यं ब्रह्मकर्म स्वभावजम् ॥ ४२ ॥
சமோ தமஸ்தப: சௌசம் க்ஷாந்திரார்ஜவமேவ ச ।
ஞானம் விஞ்ஞானமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம் ॥ 42 ॥
शमः दमश्च यथाव्याख्यातार्थौ, तपः यथोक्तं शारीरादि, शौचं व्याख्यातम् , क्षान्तिः क्षमा, आर्जवम् ऋजुता एव च ज्ञानं विज्ञानम् , आस्तिक्यम् आस्तिकभावः श्रद्दधानता आगमार्थेषु, ब्रह्मकर्म ब्राह्मणजातेः कर्म स्वभावजम् ।
சமம், தமம் முன்பே வியாக்யானம் செய்யப்பட்டுள்ளது. அவ் வாறே தபஸானது சரீர முதலிய பேதத்தினால் முன்பே மூவகையா கக் கூறப்பட்டுள்ளது. சௌசமும் (சுத்தத்தன்மை) வியாக்யானம் செய்யப்பட்டது. பொறுமை, ஆர்ஜவம் என்றால் அந்தக்கரணத் தின் நேர்மை,அவ்வாறே ஞானம் விஞ்ஞானம் மேலும் ஆஸ்திகத் தன்மை என்றால் சாஸ்திர விஷயங்களில் சிரத்தை இவைகள் பிராஹ்மண ஜாதியினருக்கு உள்ள ஸ்வபாவமான கர்மமாகும்.
यत् उक्तं स्वभावप्रभवैर्गुणैः प्रविभक्तानि इति तदेवोक्तं स्वभावजम् इति ॥ ४२ ॥
எது கூறப்பட்டதோ அது ஸ்வபாவப்ரபவை: குணை: ப்ரவிபக் தானி = ஸ்வபாவத்தால் உண்டாகின்றவைகள் என்று கூறப்பட்டது.
शौर्यं तेजो धृतिर्दाक्ष्यं युद्धे चाप्यपलायनम् ।
दानमीश्वरभावश्च क्षात्रं कर्म स्वभावजम् ॥ ४३ ॥
சௌர்யம் தேஜோ த்ருதிர்தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயனம் ।
தானமீச்வர பாவச்ச க்ஷத்ரகர்ம ஸ்வபாவஜம் ॥ 43 ॥
शौर्यं शूरस्य भावः, तेजः प्रागल्भ्यम् , धृतिः धारणम् , सर्वावस्थासु अनवसादः भवति यया धृत्या उत्तम्भितस्य, दाक्ष्यं दक्षस्य भावः, सहसा प्रत्युत्पन्नेषु कार्येषु अव्यामोहेन प्रवृत्तिः, युद्धे चापि अपलायनम् अपराङ्मुखीभावः शत्रुभ्यः ।
சூரனுடைய தன்மை சௌரியம். தேஜஸ் என்பது துணிவு. த்ருதி என்றால் தாங்குகிறசக்தி. அதனால் எந்த நிலையிலும் அயர்ந்திடாமல் இருக்கும் தன்மை. தாக்ஷ்யம் என்றால் சாமர்த்தி யம், சுறுசுறுப்புத்தன்மை. நடுவில் தானாக வந்த காரியங்களில் மோஹமடையாமல் எடுத்த காரியத்தில் ஈடுபடுதல். யுத்தத்திலும் எதிரிகளைக் கண்டு புறமுதுகு காட்டி ஓடாமல் இருத்தல்.
दानं देयद्रव्येषु मुक्तहस्तता, ईश्वरभावश्च ईश्वरस्य भावः, प्रभुशक्तिप्रकटीकरणम् ईशितव्यान् प्रति ।
தானம் என்பது மற்றவர்களுக்குக் கொடுப்பதில் பற்று அற்றகைகள் உடையவனாய் இருத்தல். ஈஸ்வர பாவம் என்றால் எவர்கள் ஆளப்படவேண்டியவர்களோ அவர்களைக் குறித்து ஆளும்தன்மை.
क्षात्रं कर्म क्षत्रियजातेः विहितं कर्म क्षात्रं कर्म स्वभावजम् ॥ ४३ ॥
க்ஷத்திரிய கர்மம் என்றால் க்ஷத்திரிய ஜாதிக்கு விதிக்கப்பட்ட கர்மா. அது அவர்களுடைய ஸ்வபாவமான கர்மா.
कृषिगौरक्ष्यवाणिज्यं वैश्यकर्म स्वभावजम् ।
परिचर्यात्मकं कर्म शूद्रस्यापि स्वभावजम् ॥ ४४ ॥
க்ருஷீகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைச்யகர்ம ஸ்வபாவஜம் ।
பரிசர்யாத்மகம் கர்ம சூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம் ॥ 44 ॥
कृषिगौरक्ष्यवाणिज्यं कृषिश्च गौरक्ष्यं च वाणिज्यं च कृषिगौरक्ष्यवाणिज्यम् , कृषिः भूमेः विलेखनम् , गौरक्ष्यं गाः रक्षतीति गोरक्षः तस्य भावः गौरक्ष्यम् , पाशुपाल्यम् इत्यर्थः, वाणिज्यं वणिक्कर्म क्रयविक्रयादिलक्षणं वैश्यकर्म वैश्यजातेः कर्म वैश्यकर्म स्वभावजम् ।
உழுதல், பசுக்களை ரக்ஷிப்பது, வியாபாரம் செய்தல் இவை வைசியர்களுடைய ஸ்வபாவமாக ஏற்பட்ட கர்மா. உழுதல் என் பது நிலத்தை உழுதல், பசுக்களைக் காப்பாற்றும் தன்மை, விற்றல், வாங்குதல் ஆகிய தன்மை உடையது வியாபாரம்.
परिचर्यात्मकं शुश्रूषास्वभावं कर्म शूद्रस्यापि स्वभावजम् ॥ ४४ ॥
மற்ற மூன்று வருணதத்தாராலிடப்பட்ட பணி செய்வது (உழியம் செய்வது) சூத்திரனுக்கு இயல் பாயுண்டாகிய கருமம்.
एतेषां जातिविहितानां कर्मणां सम्यगनुष्ठितानां स्वर्गप्राप्तिः फलं स्वभावतः
இந்த ஜாதிகளுக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை நன்றாக அனுஷ்ட்டிப்பவர்களுக்கு (கடைபிடிப்பவர்களுக்கு) ஸ்வபாவமா கவே ஸ்வர்க்கத்தை அடையும் பலன் உண்டாகும்.
‘वर्णा आश्रमाश्च स्वकर्मनिष्ठाः प्रेत्य कर्मफलमनुभूय ततः शेषेण विशिष्टदेशजातिकुलधर्मायुःश्रुतवृत्तवित्तसुखमेधसो जन्म प्रतिपद्यन्ते’ (गौ. ध. २ । २ । २९), (मै. गौ. ध. ११ । ३१) इत्यादिस्मृतिभ्यः ; पुराणे च वर्णिनाम् आश्रमिणां च लोकफलभेदविशेषस्मरणात् ।
தங்களுடைய கர்மத்திலேயே நிலைத்த வர்ணாஸ்ரமத்தவர் கள் சரீரத்திலிருந்து கிளம்பி கர்மபலத்தை அனுபவித்துவிட்டு அதில் உள்ள மீதமுள்ள கர்மபலத்திற்கு ஏற்ற சிறந்த தேசம்,காலம், ஜாதி, குலம், தர்மம், ஆயுள், வித்யா(கல்வி), நடத்தை, செல்வம், சுகம், மேதை முதலியவைகளுடன் கூடிய ஜன்மாவை எடுக்கிறார் கள் என்பது முதலிய ஸ்ம்ருதிகளிலும், புராணங்களிலும் வர்ணாஸ்ரமிகளுக்கு ஏற்றவாறு லோகப் பிராப்தியாகிய பல பேதமானது கூறப்பட்டுள்ளது.
कारणान्तरात्तु इदं वक्ष्यमाणं फलम् —
இனி கூறப்போகிற இந்த பலமும் வேறு காரணத்தால் விளக்கப்படுகிறது.
स्वे स्वे कर्मण्यभिरतः संसिद्धिं लभते नरः ।
स्वकर्मनिरतः सिद्धिं यथा विन्दति तच्छृणु ॥ ४५ ॥
ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத: ஸம்ஸித்திம் லபதே நர: ।
ஸ்வகர்மநிரத: ஸித்திம் யதா விந்ததி தச்ச்ருணு ॥ 45 ॥
स्वे स्वे यथोक्तलक्षणभेदे कर्मणि अभिरतः तत्परः संसिद्धिं स्वकर्मानुष्ठानात् अशुद्धिक्षये सति कायेन्द्रियाणां ज्ञाननिष्ठायोग्यतालक्षणां संसिद्धिं लभते प्राप्नोति नरः अधिकृतः पुरुषः ।
கூறப்பட்ட லக்ஷண பேதங்களுடைய தங்கள் தங்கள் கர்மத் தில் ருசியுடன் கூடி அதிலேயே ஈடுபாடு உடையவர்களாகி நல்ல சித்தியை அடைகிறார்கள். எவ்வாறெனில் ஸ்வகர்ம அனுஷ்ட்டானத்தினால் அந்தக்கரணத்தில் உள்ள மலம் நீங்கிய தால் தேஹம் இந்திரியங்கள் ஞானநிஷ்ட்டைக்கு வேண்டிய யோக்யதையை அதிகாரி புருஷன் அடைகிறான்.
किं स्वकर्मानुष्ठानत एव साक्षात् संसिद्धिः ? न ; कथं तर्हि ? स्वकर्मनिरतः सिद्धिं यथा येन प्रकारेण विन्दति, तत् शृणु ॥ ४५ ॥
ஸ்வகர்மா அனுஷ்டானத்தினாலேயே நல்ல சித்தியை(மோக்ஷத் தை) அடைகிறானா? அல்ல எனில் எவ்வாறு ஸ்வகர்மாவிலேயே நிலைத்திருப்பவன் சித்தியை அடைகிறான் என்பதைக் கேள்.
यतः प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततम् ।
स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः ॥ ४६ ॥
யத: ப்ரவ்ருத்திர்பூதானாம் யேன ஸர்வமிதம் ததம் ।
ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மானவ: ॥ 46 ॥
यतः यस्मात् प्रवृत्तिः उत्पत्तिः चेष्टा वा यस्मात् अन्तर्यामिणः ईश्वरात् भूतानां प्राणिनां स्यात् , येन ईश्वरेण सर्वम् इदं ततं जगत् व्याप्तं स्वकर्मणा पूर्वोक्तेन प्रतिवर्णं तम् ईश्वरम् अभ्यर्च्य पूजयित्वा आराध्य केवलं ज्ञाननिष्ठायोग्यतालक्षणां सिद्धिं विन्दति मानवः मनुष्यः ॥ ४६ ॥
எந்த அந்தர்யாமியாகிய ஈஸ்வரனிடத்தினின்று எல்லாப் பிரா ணிகளுக்கும் பிரவிருத்தி அதாவது உத்பத்தி, செயல்கள் ஏற்படுகி றதோ மேலும் எந்த ஈஸ்வரனால் இந்த எல்லா ஜகத்தும் வியாபிக் கப்பட்டதோ அந்த ஈஸ்வரனை வர்ணங்களுக்கு (ஜாதிகளுக்கு) ஏற்றவாறு கூறிய தங்களுடைய கர்மங்கள் வாயிலாக பூஜை செய்து, ஆராதனை செய்து மனிதன் ஞானநிஷ்ட்டைக்கு வேண்டிய யோக்கியதையை அடைகிறான்.
यतः एवम् , अतः —
எதனால் இவ்வாறோ அதனால்-
श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्ठितात् ।
स्वभावनियतं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् ॥ ४७ ॥
ச்ரேயான்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத் ।
ஸ்வபாவநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம் ॥ 47 ॥
श्रेयान् प्रशस्यतरः स्वो धर्मः स्वधर्मः, विगुणोऽपि इति अपिशब्दो द्रष्टव्यः, परधर्मात् । स्वभावनियतं स्वभावेन नियतम् , यदुक्तं स्वभावजमिति, तदेवोक्तं स्वभावनियतम् इति ; यथा विषजातस्य कृमेः विषं न दोषकरम् , तथा स्वभावनियतं कर्म कुर्वन् न आप्नोति किल्बिषं पापम् ॥ ४७ ॥
தன்னுடைய தர்மம் மேன்மை உள்ளதாக இல்லாவிடினும் பரதர் மம் (பிறதர்மம்) மிகப் போற்றத்தக்கதாயினும் அதை அனுஷ்ட்டா னம் செய்வதைக் காட்டிலும் ஸ்வதர்மமே மிகவும் மேன்மையானது. எவ்வாறு விஷத்தில் உற்பத்தியான கிருமிக்கு விஷம் தோஷமா காதோ அவ்வாறே ஸ்வபாவமாக தனக்கு நியமிக்கப்பட்ட(அமைந்த) கர்மத்தை செய்வதினால் மனிதனுக்கு பாபம் உண்டாகாது.
स्वभावनियतं कर्म कुर्वाणो विषजः इव कृमिः किल्बिषं न आप्नोतीति उक्तम् ; परधर्मश्च भयावहः इति, अनात्मज्ञश्च ‘न हि कश्चित्क्षणमपि अकर्मकृत्तिष्ठति’ (भ. गी. ३ । ५) इति । अतः —
எது முன்பு ஸ்வபாவம் (ஸ்வபாவமாகவே உண்டானது) என்று கூறப்பட்டதோ அதுவே ஸ்வபாவநியதம் (ஸ்வபாவமாகவே அமைந்தது) என்ற பதத்தால் கூறப்படுகிறது. ஸ்வபாவமாகவே அமைந்த கர்மம் ஸ்வபாவநியத கர்மம் எனப்படுகிறது.
सहजं कर्म कौन्तेय सदोषमपि न त्यजेत् ।
सर्वारम्भा हि दोषेण धूमेनाग्निरिवावृताः ॥ ४८ ॥
ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி நத்யஜேத் ।
ஸர்வாரம்பா ஹி தோஷேண தூமேநாக்னிரிவாவ்ருதா: ॥ 48 ॥
सहजं सह जन्मनैव उत्पन्नम् । किं तत् ? कर्म कौन्तेय सदोषमपि त्रिगुणात्मकत्वात् न त्यजेत् ।
பிறவி எடுக்கும்போது இயற்கையாகவே உண்டாவது கர்மா. அது யாது? ஹே கௌந்தேய! அது முக்குணங்களால் ஆனதால் தோஷமுடையதாய் இருந்தாலும் அதை விடக்கூடாது
सर्वारम्भाः आरभ्यन्त इति आरम्भाः, सर्वकर्माणि इत्येतत् ; प्रकरणात् ये केचित् आरम्भाः स्वधर्माः परधर्माश्च, ते सर्वे हि यस्मात् — त्रिगुणात्मकत्वम् अत्र हेतुः — त्रिगुणात्मकत्वात् दोषेण धूमेन सहजेन अग्निरिव, आवृताः ।
எவை ஆரம்பிக்கின்றனவோ அவை ஆரம்பங்கள் எனப்படு கிறது. அது எது எனில் இந்தப் பிரகரணப்படி எல்லாக் கர்மங்களும் ஆகும். அவைகள் எவை எனில் தன்னுடைய தர்மங்கள், பிறரு டைய தர்மங்கள் இவை எல்லாம் முக்குணங்களின் வடிவமாய் இருப்பதால் தோஷமுடையதாய் இருக்கின்றன. எவ்வாறு இயற்கை யாகவே அக்னியை புகையானது மறைப்பது போல் ஆகும்.
सहजस्य कर्मणः स्वधर्माख्यस्य परित्यागेन परधर्मानुष्ठानेऽपि दोषात् नैव मुच्यते ; भयावहश्च परधर्मः । न च शक्यते अशेषतः त्यक्तुम् अज्ञेन कर्म यतः, तस्मात् न त्यजेत् इत्यर्थः ।
இயற்கையான தன்னுடைய தர்மத்தை விட்டு மற்றவர்களு டைய தர்மத்தை அனுஷ்ட்டானம் செய்தாலும் தோஷமானது வில காது. பரதர்மமானது பயத்தை அளிக்க வல்லது. அக்ஞானியினால் மிச்சமில்லாமல் கர்மம் முழுவதையும் விடமுடியாது, ஆகையால் இயற்கையான தன்னுடைய கர்மத்தை விட்டுவிடக்கூடாது.
किम् अशेषतः त्यक्तुम् अशक्यं कर्म इति न त्यजेत् ? किं वा सहजस्य कर्मणः त्यागे दोषो भवतीति इति ।
கர்மம் முழுவதையும் விடமுடியாததினால் கர்மத்தை விடாதே என்று கூறப்பட்டதா? அல்லது இயற்கையான தன்னு டைய தர்மத்தை விடுவதால் தோஷம் உண்டாகும் என்பதாலா?
किं च अतः ?
அதனால் என்ன உண்டாகும்?
यदि तावत् अशेषतः त्यक्तुम् अशक्यम् इति न त्याज्यं सहजं कर्म, एवं तर्हि अशेषतः त्यागे गुण एव स्यादिति सिद्धं भवति ।
கர்மம் முழுவதும் விடுதல் முடியாததால் தன்னுடைய இயற் கையான கர்மத்தை விட வேண்டியதில்லை என்று ஆவதால் கர் மம் முழுவதையும் விடுவதில் நன்மையே ஏற்படுகிறது என்று ஆகிறது.
सत्यम् एवम् ; अशेषतः त्याग एव न उपपद्यते इति चेत् ।
உண்மைதான். கர்மம் முழுவதையும் விடுவது இயலாது எனில்.
किं नित्यप्रचलितात्मकः पुरुषः, यथा साङ्ख्यानां गुणाः ? किं वा क्रियैव कारकम् , यथा बौद्धानां स्कन्धाः क्षणप्रध्वंसिनः, उभयथापि कर्मणः अशेषतः त्यागः न सम्भवति ।
சாங்கியவாதிகளினுடைய குணங்களைப் போல் ஆத்மாவா னது எப்பொழுதும் சலன ஸ்வபாவமுடையதாய் இருக்கிறதா? அல்லது பௌத்த மதத்தைப் பின்பற்றுவர்களுக்கு ஒவ்வொரு க்ஷணமும் அழிக்கின்ற ரூபம், வேதனை, விக்ஞானம், சம்க்ஞா மற்றும் சம்ஸ்காரம் ஆகிய ஐந்து ஸ்கந்தங்களைப் போல செய்கை யையே செய்யும் பொருளாக ஆத்மா இருக்கிறதா? இவ்விருவ கையாகவும் கர்மத்தை முழுவதுமாக விடமுடியாது.
अथ तृतीयोऽपि पक्षः — यदा करोति तदा सक्रियं वस्तु । यदा न करोति, तदा निष्क्रियं तदेव । तत्र एवं सति शक्यं कर्म अशेषतः त्यक्तुम् ।
மூன்றாவது பக்ஷத்தில் அந்த பொருள்(ஆத்மா) எப்பொழுது செயல்படுகிறதோ அப்பொழுது செயல் உடையதாகிறது. செயல் அற்றபொழுது செயல் அற்றதாகிறது. இவ்வாறு இருக்கும்பொழுது கர்மங்கள் முழுவதையும் விடமுடியும்.
अयं तु अस्मिन् तृतीये पक्षे विशेषः — न नित्यप्रचलितं वस्तु, नापि क्रियैव कारकम् । किं तर्हि ? व्यवस्थिते द्रव्ये अविद्यमाना क्रिया उत्पद्यते, विद्यमाना च विनश्यति । शुद्धं तत् द्रव्यं शक्तिमत् अवतिष्ठते । इति एवम् आहुः काणादाः । तदेव च कारकम् इति ।
இந்த மூன்றாவது பக்ஷத்தில் வித்தியாசம் என்னவெனில் இதில் ஆத்மவஸ்து எப்பொழுதும் சலிக்கிறதில்லை. லும் செய்கையே செய்யும் பொருளாகவும் இல்லை. பின் எவ்வாறு இருக்கிறது எனில் தன் ஸ்வரூபத்திலேயே நிலைத்திருக்கும் பொருளில் இல்லாத செயல் உண்டாகி, உண்டாவதால் அது நாசமா கிறது. சுத்தத் திரவியம் (சுத்தப் பொருளானது) செய்கைக்குக் காரணமான சக்தி உடையதாய் இருக்கிறது என்றும் அதுவே செய்யும் பொருளென்றும் காணாதர்கள் கூறுவர்.
अस्मिन् पक्षे को दोषः इति ।
இக்கோட்பாட்டில் (இந்தபக்ஷத்தில்) என்னதோஷம்? என்று
अयमेव तु दोषः — यतस्तु अभागवतं मतम् इदम् ।
பகவானுடைய கொள்கைக்கு மாறாய் இருப்பதால் இதுவே இந்த மதத்திற்கு தோஷமாகும்.
कथं ज्ञायते ?
அதை எவ்வாறு அறிவது?
यतः आह भगवान् ‘नासतो विद्यते भावः’ (भ. गी. २ । १६) इत्यादि । काणादानां हि असतः भावः, सतश्च अभावः, इति इदं मतम् अभागवतम् ।
எதனால் பகவான் நாசதோ வித்யதே பாவ: = அஸத்திலிருந்து பாவம் உண்டாகாது, இவை முதலியவைகளால் கூறியுள்ளாரோ அதனால். அஸத்திலிருந்து பாவமும், ஸத்திலிருந்து அபாவமும் தோன்றும் என்பது கணாதர்களுடைய கொள்கை. ஆகையால் இது அபாகவதம். (பகவானது உபதேசத்திற்கு மாறானது)
अभागवतमपि न्यायवच्चेत् को दोषः इति चेत् ।
பகவானுடைய கொள்கைக்கு மாறாய் இருந்தாலும் யுக்திக்குப் பொருத்தமாய் இருப்பதால் என்ன தோஷம்? எனில்
उच्यते — दोषवत्तु इदम् , सर्वप्रमाणविरोधात् ।
கூறுகிறேன். இது சுருதிப் பிரமாணத்திற்கு விரோதமாய் இருப் பதால் தோஷமுடையது.
कथम् ?
எவ்வாறு?
यदि तावत् द्व्यणुकादि द्रव्यं प्राक् उत्पत्तेः अत्यन्तमेव असत् , उत्पन्नं च स्थितं कञ्चित् कालं पुनः अत्यन्तमेव असत्त्वम् आपद्यते, तथा च सति असदेव सत् जायते, सदेव असत्त्वम् आपद्यते, अभावः भावो भवति, भावश्च अभावो भवति इति ।
அணுக்கள் முதலிய திரவியம் (பொருள்) உத்பத்திக்கு முன்பே முற்றிலும் அசத்தாய் இருந்தால் சிறிதுகாலம் இருந்து பின் முற்றிலும் அசத்தாகவே ஆகிறது. அவ்வாறு இருக்கும்பொழுது அசத்தே சத்தாகிறது. அபாவமானது பாவமாகிறது. பாவமானது அபாவமாகிறது என்றால்
तत्र अभावः जायमानः प्राक् उत्पत्तेः शशविषाणकल्पः समवाय्यसमवायिनिमित्ताख्यं कारणम् अपेक्ष्य जायते इति ।
அங்கு உத்பத்தியான அபாவம், உத்பத்தி ஆவதற்கு முன் முயல்கொம்பு போல் முற்றிலும் அசத்தாய் இருந்தது. சமவாயி, அசமவாயி, நிமித்தம் எனப்படும் மூன்று காரணங்களை அபேக்ஷித்து உத்பத்தி ஆகிறது என்று
न च एवम् अभावः उत्पद्यते, कारणं च अपेक्षते इति शक्यं वक्तुम् , असतां शशविषाणादीनाम् अदर्शनात् ।
ஆனால் அபாவம் இவ்வாறு உண்டானது அல்லது காரணத்தை அபேக்ஷிக்கிறது என்று கூறுவது பொருந்தாது. ஏன்எனில் முயல் கொம்பு முதலியவைகளில் அவ்வாறு காணப் படவில்லை.
भावात्मकाश्चेत् घटादयः उत्पद्यमानाः, किञ्चित् अभिव्यक्तिमात्रे कारणम् अपेक्ष्य उत्पद्यन्ते इति शक्यं प्रतिपत्तुम् ।
உத்பத்தியை உடைய கடம் முதலியவைகள் பாவரூபம் என்று எடுத்துக்கொண்டால் வெளிப்படுதல் ஏதாவது காரணத்தை அபேக்ஷித்து உத்பத்தி ஆகிறது என்று அறிந்துகொள்ள முடியும்.
किञ्च, असतश्च सतश्च सद्भावे असद्भावे न क्वचित् प्रमाणप्रमेयव्यवहारेषु विश्वासः कस्यचित् स्यात् , ‘सत् सदेव असत् असदेव’ इति निश्चयानुपपत्तेः ॥
மேலும் அசத்திலிருந்து சத்பாவமும், சத்திலிருந்து அசத் பாவமும் பிரமாண பிரமேய வியவஹாரத்தில் ஒருவருக்கும் நம்பிக்கை உண்டாகாது. இவ்வாறு புரிந்து கொண்டால் அசத் அசத்தே. சத் சத்தே என்ற நிச்சயம் உண்டாகாது.
किञ्च, उत्पद्यते इति द्व्यणुकादेः द्रव्यस्य स्वकारणसत्तासम्बन्धम् आहुः । प्राक् उत्पत्तेश्च असत् , पश्चात् कारणव्यापारम् अपेक्ष्य स्वकारणैः परमाणुभिः सत्तया च समवायलक्षणेन सम्बन्धेन सम्बध्यते । सम्बद्धं सत् कारणसमवेतं सत् भवति ।
மேலும் உற்பத்தியாகிறது என்பதால் இரு அணுக்கள் முதலிய திரவியம் தன்னுடைய காரணமும், சத்தா சம்பந்தமும் என்று கூறுவார்கள். உத்பத்திக்கு முன் அசத்தாய் இருந்து பிறகு தன்னுடைய காரணரூபமான பரமாணுவினாலும் சத்தையினாலும் சமவாயரூப சம்பந்தத்தினால் உண்டாகிறது. உண்டாகி காரணத்து டன் சேர்ந்து சத் ஆகிறது.
तत्र वक्तव्यं कथम् असतः स्वं कारणं भवेत् सम्बन्धो वा केनचित् स्यात् ? न हि वन्ध्यापुत्रस्य स्वं कारणं सम्बन्धो वा केनचित् प्रमाणतः कल्पयितुं शक्यते ॥
இங்கு எவ்வாறு அசத்திற்கு சத்காரணமோ, சம்பந்தமோ அல் லது வேறு ஒன்றாலே உண்டாகும் என்று கூறப்படவேண்டும். மலடி மகனிடத்தில் சத்தா சம்பந்தமோ, காரணமோ ஒருவராலும் பிரமாண மூலமாக கல்பிக்கமுடியாது.
ननु नैवं वैशेषिकैः अभावस्य सम्बन्धः कल्प्यते । द्व्यणुकादीनां हि द्रव्याणां स्वकारणसमवायलक्षणः सम्बन्धः सतामेव उच्यते इति ।
வைசேஷிக மதவாதிகளால் அபாவ (இல்லாத) பொருளுக்குச் சம்பந்தம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தம்காரணத்தோடு ஸமவாயமாகிய ஸம்பந்தானது இரு அணுக்கள் முதலிய திரவியப் பொருட்களான பாவ (உள்ள) பொருள்கட்கேயல்லவா கூறப்படு கின்றது என்பதாம்.
न, सम्बन्धात् प्राक् सत्त्वानभ्युपगमात् । न हि वैशेषिकैः कुलालदण्डचक्रादिव्यापारात् प्राक् घटादीनाम् अस्तित्वम् इष्यते । न च मृद एव घटाद्याकारप्राप्तिम् इच्छन्ति । ततश्च असत एव सम्बन्धः पारिशेष्यात् इष्टो भवति ।
அவ்வாறல்ல, சம்பந்தத்திற்கு முன்னர் உள்ளனவாகக் கொள்ளாததால், வைசேஷிகர்களால் குயவன், தடி, சக்கிரம் முதலியவற்றின் செய்கைக்கு முன் குடம் முதலியன உள்ளனவாக (அஸ்தித்வம்) ஏற்றுக்கொள்ளப்படவில்லை மேலும் மண்ணே குடம் முதலிய உருவத்தையடைதலையும் ஏற்கவில்லை. ஆகவே பாரிசேஷநியாயத்தால் இல்லாத பொருளுக்கேதான் ஸம்பந்தம் ஏற்படுகின்றது.
ननु असतोऽपि समवायलक्षणः सम्बन्धः न विरुद्धः ।
இவ்வாறாயின் இல்லாத பொருளுக்கும் ஸமவாயமாகிய ஸம்பந்தம் விரோதப்படாது.
न ; वन्ध्यापुत्रादीनाम् अदर्शनात् ।
அவ்வாறு கூறுவது சரியில்லை. ஏனென்றால் மலடிமகன் முத லியவைகளின் ஸம்பந்தம் வேறு எவரிடமும் காணப்படாததால்
घटादेरेव प्रागभावस्य स्वकारणसम्बन्धो भवति न वन्ध्यापुत्रादेः, अभावस्य तुल्यत्वेऽपि इति विशेषः अभावस्य वक्तव्यः ।
குடம் முதலியவற்றினது முன்னின்மைக்குத்தான் (ப்ரகபா வம்) தன் காரணத்தோடு ஸம்பந்தமாகின்றது. மலடிமகன் முதலிய வற்றிற்கு இல்லை ஆகவே அபாவமென்பது ஸமமாயிருந்தாலும் ஒரு அபாவதினின்றும் மற்றோர் அபாவத்திற்கு வேற்றுமை கூற வேண்டும்.
एकस्य अभावः, द्वयोः अभावः, सर्वस्य अभावः, प्रागभावः, प्रध्वंसाभावः, इतरेतराभावः, अत्यन्ताभावः इति लक्षणतो न केनचित् विशेषो दर्शयितुं शक्यः ।
ஒன்றின்மை, இரண்டின்மை, எல்லாமின்மை ,முன்னின்மை பின்னின்மை, ஒன்றிலொன்றின்மை,முற்றிலுமின்மை என்ற லக்ஷ ணங்களுக்கு வேற்றுமையைக் காட்ட ஒருவராலும் இயலாது.
असति च विशेषे घटस्य प्रागभावः एव कुलालादिभिः घटभावम् आपद्यते सम्बध्यते च भावेन कपालाख्येन, सम्बद्धश्च सर्वव्यवहारयोग्यश्च भवति, न तु घटस्यैव प्रध्वंसाभावः अभावत्वे सत्यपि, इति प्रध्वंसाद्यभावानां न क्वचित् व्यवहारयोग्यत्वम् , प्रागभावस्यैव द्व्यणुकादिद्रव्याख्यस्य उत्पत्त्यादिव्यवहारार्हत्वम् इत्येतत् असमञ्जसम् ; अभावत्वाविशेषात् अत्यन्तप्रध्वंसाभावयोरिव ।
மேலும் எவ்விதத்திலும் வேற்றுமை இல்லாததால், குடத்தினு டைய (முன் அபாவம்) முன்னின்மைதான் குயவன் முதலிய பொருள்களால் குடமுண்டாதலாகின்றது. கபாலமென்னும் பெயரு டைய தன் காரணமான பாவப் பொருளோடு சேர்ந்து (உற்பத்தி முதலிய) எல்லா வியவகாரங்களுக்கு யோக்யதையாகின்றது. ஆனால் குடத்தினுடைய எந்த ப்ரத்வம்ஸாபாவமோ அது அபா வத்துவத்தில் சமானமாயிருந்தாலும் சம்பந்தமாகாது. இதுபோல ப்ரத்வம்ஸாபாவ முதலிய அபாவங்கள் வியவகாரங்களுக்கு எவ்விடத்திலும் யோக்யதையில்லை.இரு அணுக்கள் முதலாக கூறப்படும் பொருள்களினுடைய ப்ராகபாவமேதான், உற்பத்தி முதலிய வியவகாரங்களுக்கு உரியது என்பது பொருந்தாதது. அபாவமாயிருத்தற்கு வேற்றுமையில்லாததால் அத்யந்தா பாவ மும் ப்ரத்வம்ஸாபாவமும் போல (ப்ராகபாவமானது ப்ரத்வம்ஸா பாவ முதலியவைகளைப் போல தானும் அபாவமாயுள்ளதால் உற்பத்தி முதலிய வியவகாரங்களுக்கு உரியதாகாது என்பதே.)
ननु नैव अस्माभिः प्रागभावस्य भावापत्तिः उच्यते ।
ஆனால் எங்களால் பிராகபாவத்திற்கு பாவம் உற்பத்தி ஆகிறது என்று கூறவில்லை.
भावस्यैव तर्हि भावापत्तिः ; यथा घटस्य घटापत्तिः, पटस्य वा पटापत्तिः । एतदपि अभावस्य भावापत्तिवदेव प्रमाणविरुद्धम् ।
அவ்வாறானால் பாவத்திற்கே பாவத்தின் உற்பத்தி. எவ்வாறு எனில் கடம் கடரூபமாவது போலும், வஸ்திரம் வஸ்திரரூபமாவது போலும், ஆனால் அபாவம் பாவரூபமாவது எவ்வாறு பிரமாணத் திற்கு விருத்தமோ அவ்வாறே இதுவும் விருத்தமாகும்.
साङ्ख्यस्यापि यः परिणामपक्षः सोऽपि अपूर्वधर्मोत्पत्तिविनाशाङ्गीकरणात् वैशेषिकपक्षात् न विशिष्यते  ।
சாங்கியர்களுடைய மதத்திலும் எந்த பரிணாமவாதமுள் ளதோ அதிலும் அபூர்வ தர்மத்தின் உற்பத்தியும் விநாசமும் அங் கீகரிக்கப்பட்டுள்ளதால் வைசேஷகர்களைக் காட்டிலும் வேறுபட வில்லை.
अभिव्यक्तितिरोभावाङ्गीकरणेऽपि अभिव्यक्तितिरोभावयोः विद्यमानत्वाविद्यमानत्वनिरूपणे पूर्ववदेव प्रमाणविरोधः ।
வெளிப்படுதல், மறைதல் என்பதை அங்கீகரித்தலிலும் வெளிப்படுதல், மறைதல் என்பவைக்கு இருத்தல், இல்லாமை என் பதை நிருபித்தலில் முன்பு போலவே பிரமாண விரோதமேற்படும்.
एतेन कारणस्यैव संस्थानम् उत्पत्त्यादि इत्येतदपि प्रत्युक्तम् ॥
உத்பத்தி முதலியவைகளின் இருப்பு காரணத்திற்குத்தான் என்றமதமும் இதனால் கண்டனம் செய்யப்படுகிறது.
पारिशेष्यात् सत् एकमेव वस्तु अविद्यया उत्पत्तिविनाशादिधर्मैः अनेकधा नटवत् विकल्प्यते इति । इदं भागवतं मतम् उक्तम् ‘नासतो विद्यते भावः’ (भ. गी. २ । १६) इत्यस्मिन् श्लोके, सत्प्रत्ययस्य अव्यभिचारात् , व्यभिचाराच्च इतरेषामिति ॥
ந அசதோ வித்யதே பாவ: என்ற இந்த ஸ்லோகத்தின் பாரி சேஷ பிரமாணத்தால் சத் ஒன்றே உண்மையான வஸ்து(பொருள்) அவித்யையினால் நாடகம் போல் உத்பத்தி, விநாசம் முதலிய தர் மங்கள் அநேகவிதமாக கல்பனை செய்யப்படுகிறது என்று பகவா னால் அருளிச் செய்யப்பட்டது. உள்ளது என்ற அறிவு ஒருநாளும் மாறாது. மற்ற ஞானமே மாறுதலுடையது.
कथं तर्हि आत्मनः अविक्रियत्वे अशेषतः कर्मणः त्यागः न उपपद्यते इति ।
ஆத்மா நிர்விகாரமாய் இருக்கையில் எவ்வாறு கர்மத்தை முற்றிலும் துறப்பது என்பது முடியாது என்று கூறப்பட்டது.
यदि वस्तुभूताः गुणाः, यदि वा अविद्याकल्पिताः, तद्धर्मः कर्म, तदा आत्मनि अविद्याध्यारोपितमेव इति अविद्वान् ‘न हि कश्चित् क्षणमपि अशेषतः त्यक्तुं शक्नोति’ (भ. गी. ३ । ५) इति उक्तम् ।
குணங்கள் உண்மையான வஸ்துவாய் இருந்தாலும் சரி, அவித்யையினால் கல்பிக்கப்பட்டிருந்தாலும் சரி. அந்த தர்மமா கிய கர்மம் அவித்யையினால் ஆத்மாவில் ஆரோபிக்கப்பட்டதே தான். ஆகவே அக்ஞானி ஒரு க்ஷணமும் கர்மம் முழுவதையும் விடுவதற்கு முடியாது என்று கூறப்பட்டது.
विद्वांस्तु पुनः विद्यया अविद्यायां निवृत्तायां शक्नोत्येव अशेषतः कर्म परित्यक्तुम् , अविद्याध्यारोपितस्य शेषानुपपत्तेः ।
ஞானிக்கு வித்யையினால் அவித்யாநாசம் ஆனபொழுது கர்மம் முழுவதையும் விட்டுவிட முடியும். ஏன் எனில் அவித்யை யினால் ஏற்பட்ட ஆரோபம் செய்யப்பட்ட வஸ்துவின் மிச்சம் இல்லாததால் ஆகும்.
न हि तैमिरिकदृष्ट्या अध्यारोपितस्य द्विचन्द्रादेः तिमिरापगमेऽपि शेषः अवतिष्ठते ।
திமிரதோஷமுள்ள கண்களின் பார்வையால் ஆரோபம் செய்யப்பட்ட இரு சந்திரர்கள் முதலியவைகள் கண்களின் திமிர தோஷம் நீங்கிய உடன் மிச்சமில்லாமல் நீங்கி விடுகிறது.
சர்வகர்மாணி மனசா என்பவை முதலியவைகளாலும் அவ்வாறே ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத: ஸம்ஸித்திம் லபதே நர: ஸ்வகர்மணா தமப்யச்ர்ய ஸித்திம் விந்ததி மானவ என்பவைகளாலும் கூறியவை பொருத்தமானதே
या कर्मजा सिद्धिः उक्ता ज्ञाननिष्ठायोग्यतालक्षणा, तस्याः फलभूता नैष्कर्म्यसिद्धिः ज्ञाननिष्ठालक्षणा च वक्तव्येति श्लोकः आरभ्यते —
கர்மத்தினால் ஸித்தியான ஞானநிஷ்ட்டைக்கான யோக்ய தைக் கூறப்பட்டதோ அதன் பலனாகிய ஞானநிஷ்ட்டை ரூபமான நைஷ்கர்ம்ய ஸித்தியை கூறுவதற்காக இந்த ச்லோகம் ஆரம்பிக் கப்படுகிறது.
असक्तबुद्धिः सर्वत्र जितात्मा विगतस्पृहः ।
नैष्कर्म्यसिद्धिं परमां संन्यासेनाधिगच्छति ॥ ४९ ॥
அஸக்தபுத்தி: ஸர்வத்ர ஜிதாத்மா விகதஸ்ப்ருஹ: ।
நைஷ்கர்ம்யஸித்திம் பரமாம் ஸந்ந்யாஸேனாதிகச்சதி ॥ 49 ॥
असक्तबुद्धिः असक्ता सङ्गरहिता बुद्धिः अन्तःकरणं यस्य सः असक्तबुद्धिः सर्वत्र पुत्रदारादिषु आसक्तिनिमित्तेषु,
பற்றுதல் ஏற்படக்காரணமான மகன், மனைவி முதலிய விஷ யங்களில் பற்று அற்ற அந்தக்கரணம் உடையவன் எவனோ அவன் பற்றற்றபுத்தி உடையவன்.
जितात्मा जितः वशीकृतः आत्मा अन्तःकरणं यस्य सः जितात्मा,
மனதை வென்றவன் (வசப்படுத்தியவன்) ஜிதாத்மா.
विगतस्पृहः विगता स्पृहा तृष्णा देहजीवितभोगेषु यस्मात् सः विगतस्पृहः,
சரீரம், ஜீவனம் மேலும் போகங்களில் உள்ள ஆசை அற்ற வன் விகதஸ்ப்ருஹ:
यः एवंभूतः आत्मज्ञः सः नैष्कर्म्यसिद्धिं निर्गतानि कर्माणि यस्मात् निष्क्रियब्रह्मात्मसम्बोधात् सः निष्कर्मा तस्य भावः नैष्कर्म्यम् , नैष्कर्म्यं च तत् सिद्धिश्च सा नैष्कर्म्यसिद्धिः, निष्कर्मत्वस्य वा निष्क्रियात्मरूपावस्थानलक्षणस्य सिद्धिः निष्पत्तिः, तां नैष्कर्म्यसिद्धिं परमां प्रकृष्टां कर्मजसिद्धिविलक्षणां सद्योमुक्त्यवस्थानरूपां संन्यासेन सम्यग्दर्शनेन तत्पूर्वकेण वा सर्वकर्मसंन्यासेन, अधिगच्छति प्राप्नोति । तथा च उक्तम् — ‘सर्वकर्माणि मनसा संन्यस्य नैव कुर्वन्न कारयन्नास्ते’ (भ. गी. ५ । १३) इति ॥ ४९ ॥
அவ்வாறான ஆத்மஞானி நைஷ்கர்ம்ய சித்தியை அடைகி றான்.கிரியை அற்ற பிரஹ்மமே ஆத்மா என்ற ஞானம் அடைந்த தால் அவனுடைய எல்லா கர்மாக்களும் நிவிர்த்தியாகி விடுகிறது. (நீங்கிவிடுகிறது). அதுவே நிஷ்கர்மா- கர்மங்கள் இல்லாதது, அதன் தன்மையே நைஷ்கர்ம்யம். நைஷ்கர்ம்யத்தை அடைதலே நைஷ்கர்மிய சித்தியாகும். இவ்வாறு கர்மத்தினால் அடையப்பட் டதைக் காட்டிலும் வேறானாதாயும் (விலக்ஷணமானதாயும்) உடனே முக்தியைக் கொடுப்பதான முடிவான சித்தி. சம்யக் தர்ச னத்தினாலாவது, எல்லாக் கர்மங்களையும் துறத்தலினாலாவது அதை அடைய முடியும். அவ்வாறே சர்வகர்மாணி மனசா சந்யஸ்ய நைவ குர்வன்ன காரயன்னாஸ்தே = எல்லாக் கர்மங்க ளையும் மனதினால் துறந்து செய்வதுமில்லை, செய்விப்பதும் இல்லை என்று கூறப்பட்டது.
पूर्वोक्तेन स्वकर्मानुष्ठानेन ईश्वराभ्यर्चनरूपेण जनितां प्रागुक्तलक्षणां सिद्धिं प्राप्तस्य उत्पन्नात्मविवेकज्ञानस्य केवलात्मज्ञाननिष्ठारूपा नैष्कर्म्यलक्षणा सिद्धिः येन क्रमेण भवति, तत् वक्तव्यमिति आह —
முன்பு கூறப்பட்ட ஸ்வதர்மானுஷ்ட்டானத்தினால் ஈஸ்வர ஆராதனை செய்ததினால் உண்டான ஞானநிஷ்ட்டையை அடை வதற்கான யோக்யதா ரூப சித்தியை அடைந்தவனுக்கு ஏற்பட்ட ஆத்ம விக்ஞானமாகிய கேவல ஆத்ம ஞானத்திலேயே நிலைத்தி ருப்பதாகிய நைஷ்கர்ம்ய சித்தியானது எவ்வாறு ஏற்படுகிறது என்று விளக்குவதற்காக கூறுகிறார்.
सिद्धिं प्राप्तो यथा ब्रह्म तथाप्नोति निबोध मे ।
समासेनैव कौन्तेय निष्ठा ज्ञानस्य या परा ॥ ५० ॥
ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம ததாப்நோதி நிபோத மே ।
ஸமாஸேநைவ கெளந்தேய நிஷ்டா ஞானஸ்ய யா பரா ॥ 50 ॥
सिद्धिं प्राप्तः स्वकर्मणा ईश्वरं समभ्यर्च्य तत्प्रसादजां कायेन्द्रियाणां ज्ञाननिष्ठायोग्यतालक्षणां सिद्धिं प्राप्तः — सिद्धिं प्राप्तः इति तदनुवादः उत्तरार्थः ।
தன்னுடைய கர்மத்தால் ஈஸ்வரனை நன்றாக பூஜித்து அந்த பிரகாசத்தால் காயம், இந்திரியங்களுக்கு ஞானநிஷ்ட்டை அடை வதற்கான யோக்யதை அடைந்த புருஷன் என்று கூறியது பின்வ ரும் விஷயத்தை குறிப்பிடுவதற்காக அனுவதிக்கப்பட்டது. (கூறப் பட்டது)
किं तत् उत्तरम् , यदर्थः अनुवादः इति, उच्यते ।
பின்னால் எதற்காக அனுவதிக்கப்பட்டதோ அந்த பின்னால் வரும் விஷயம் யாது? என்று கூறப்படுகிறது.
यथा येन प्रकारेण ज्ञाननिष्ठारूपेण ब्रह्म परमात्मानम् आप्नोति, तथा तं प्रकारं ज्ञाननिष्ठाप्राप्तिक्रमं मे मम वचनात् निबोध त्वं निश्चयेन अवधारय इत्येतत् ।
எவ்வாறு ஞானநிஷ்ட்டையாகிய பரமாத்மாவை அடைவா னோ அவ்வாறு ஞானநிஷ்ட்டையை அடைவதற்கான கிரமத்தை என்னுடைய வசனங்களால் நீ நிச்சயமாக அறிந்துகொள்.
किं विस्तरेण ? न इति आह — समासेनैव सङ्क्षेपेणैव हे कौन्तेय, यथा ब्रह्म प्राप्नोति तथा निबोधेति । अनेन या प्रतिज्ञाता ब्रह्मप्राप्तिः, ताम् इदन्तया दर्शयितुम् आह — ‘निष्ठा ज्ञानस्य या परा’ इति । निष्ठा पर्यवसानं परिसमाप्तिः इत्येतत् । कस्य ? ब्रह्मज्ञानस्य या परा ।
அந்த ஞான நிஷ்டையானது விஸ்தாரமாக கூறப்படுமா? எனில், இல்லை ஹே கௌந்தேய! சுருக்கமாக கூறுகிறேன். எவ் வாறு பிரஹ்மத்தை அடைய முடியுமோ அவ்வாறு அறிந்துகொள் என்று இந்த வாக்கியத்தால் பிரதிக்ஞை செய்கிறார். அதனால் இது தான் என்று ஸ்பஷ்ட்டமாக காண்பிப்பதற்காக ஞானத்தின் பரா நிஷ்ட்டா (மேலான நிஷ்ட்டை) என்று கூறுகிறார். அதைக் கேள். நிஷ்ட்டை என்பது பரிசமாப்தி அதாவது முடிவான நிலை. அது எது எனில் பிரஹ்ம ஞானமாகிய மேலான பரா பரிசமாப்தியாகும், அல்லது முடிவான நிலையாகும்.
कीदृशी सा, यादृशम् आत्मज्ञानम् । कीदृक् तत् ? यादृशः आत्मा । कीदृशः सः ? यादृशो भगवता उक्तः, उपनिषद्वाक्यैश्च न्यायतश्च ॥
அந்த ஆத்மஞான நிஷ்ட்டை) எப்படிப்பட்டது? ஆத்மக்ஞா னம் எவ்விதமோ அவ்விதம். அது எப்படிப்பட்டது? பகவானால் எவ்வாறு கூறப்பட்டதோ அவ்வாறே உபநிஷத் வாக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறே யுக்திகளாலும் ஸித்திக்கிறது.
ननु विषयाकारं ज्ञानम् । न ज्ञानविषयः, नापि आकारवान् आत्मा इष्यते क्वचित् ।
ஞானம் விஷயாகாரமாகும். ஆனால் ஆத்மா விஷயமோ, வடிவம் உடையதாகவோ எவ்வகையாலும் ஆகாது.
ஆனாலும் ஆதித்யவர்ணம், பாரூப:, ஸ்வயம்ஜ்யோதி: என்று வடிவம் ஆத்மாவிற்கு இருப்பது போல் ஸ்ருதியில் கூறப்பட்டுள் ளதே எனில்
न ; तमोरूपत्वप्रतिषेधार्थत्वात् तेषां वाक्यानाम् — द्रव्यगुणाद्याकारप्रतिषेधे आत्मनः तमोरूपत्वे प्राप्ते तत्प्रतिषेधार्थानि ‘आदित्यवर्णम्’ (श्वे. उ. ३ । ८) इत्यादीनि वाक्यानि । ‘अरूपम्’ (क. उ. १ । ३ । १५) इति च विशेषतः रूपप्रतिषेधात् । अविषयत्वाच्च — ‘न सन्दृशे तिष्ठति रूपमस्य न चक्षुषा पश्यति कश्चनैनम्’ (श्वे. उ. ४ । २०) ‘अशब्दमस्पर्शम्’ (क. उ. १ । ३ । १५) इत्यादेः ।
அவ்வாறு அல்ல. அந்த வாக்கியங்கள் தமோ குண வடிவ முள்ளவைகளை நிராகரிப்பதற்காக கூறப்பட்டவை. ஆத்மாவிற்கு திரவியம் குணம் முதலியவற்றின் ஆகாரங்களை நிஷேதிக்க இருள்வடிவத் தன்மை ஏற்படுமே என்ற சந்தேஹம் ஏற்படும். அதை நீக்குவதற்காக ஆதித்யவர்ணம் முதலிய வாக்கியங்கள் கூறப்பட்டன. விசேஷமாக அதற்கு ரூபம் இல்லை என்பதைக் காட்டுவதற்காக என்றும் கூறப்பட்டது. ஆத்மா ஒன்றுக்கும் விஷ யமல்ல என்பது: ந சம்த்ருசே திஷ்டதி ரூபமஸ்ய ந சக்ஷஷா பச்யதி கச்சனைனம், அசப்தமஸ்பர்ஷம் முதலிய வாக்கியங் களால் கூறப்பட்டுள்ளது.
तस्मात् आत्माकारं ज्ञानम् इति अनुपपन्नम् ॥
ஆகையால் ஆத்மாகாரம் ஞானம் என்று கூறுவது பொருந்தாது.
कथं तर्हि आत्मनः ज्ञानम् ? सर्वं हि यद्विषयं यत् ज्ञानम् , तत् तदाकारं भवति । निराकारश्च आत्मा इत्युक्तम् । ज्ञानात्मनोश्च उभयोः निराकारत्वे कथं तद्भावनानिष्ठा इति ।
எவ்வாறு ஆத்மாவினுடைய ஞானம் ஏற்படும்? எல்லா ஞானங்களும் எந்த விஷயத்தை அறிகிறதோ அந்த அந்த ஆகார மாகிறது. ஆத்மாவோ ஆகாரமற்றது. (நிர்விகாரமாகும்) என்று கூறப்பட்டுள்ளது. ஞானம், ஆத்மா இரண்டும் நிராகாரமாய் இருப் பதால் எவ்வாறு அந்த பாவனா (தியான) நிஷ்ட்டையாகும்.
न ; अत्यन्तनिर्मलत्वातिस्वच्छत्वातिसूक्ष्मत्वोपपत्तेः आत्मनः । बुद्धेश्च आत्मवत् नैर्मल्याद्युपपत्तेः आत्मचैतन्याकाराभासत्वोपपत्तिः ।
அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏனெனில் ஆத்மா முற்றிலும் நிர்மலமாயும், ஸ்வச்சமாயும், சூக்ஷ்மமாயும் இருக்கிறது. அவ் வாறே புத்திக்கும் ஆத்மாவிற்கு சமமான நிர்மலம் முதலியவை கள் இருக்கின்றன. ஆகையால் அதற்கு ஆத்ம சைதன்ய ஆகார மான ஆபாசம் ஏற்படுகிறது.
बुद्ध्याभासं मनः, तदाभासानि इन्द्रियाणि, इन्द्रियाभासश्च देहः । अतः लौकिकैः देहमात्रे एव आत्मदृष्टिः क्रियते ।
புத்தி ஆபாசம் மனம், மனதின் ஆபாசம் இந்திரியங்கள், இந் திரியங்களின் ஆபாசம் தேஹமாகும். ஆகையால் லௌகிகர்கள் தேஹமாத்திரத்திலேயே ஆத்ம திருஷ்ட்டியைச் செய்கிறார்கள்.
देहचैतन्यवादिनश्च लोकायतिकाः ‘चैतन्यविशिष्टः कायः पुरुषः’ इत्याहुः । तथा अन्ये इन्द्रियचैतन्यवादिनः, अन्ये मनश्चैतन्यवादिनः, अन्ये बुद्धिचैतन्यवादिनः ।
தேஹமே ஆத்மா என்கின்ற வாதிகள் லோகாயதர்கள் சைதன் யத்துடன் கூடிய தேஹமே ஆத்மா என்கிறார்கள். அவ்வாறே இந் திரிய சைதன்யவாதிகள், இந்திரியமே சைதன்யம் என்கிறார்கள். மனதை சைதன்யம் என்றும் வேறு சிலர் புத்தியை சைதன்யம் என்றும் கூறுகின்றனர்.
ततोऽपि आन्तरम् अव्यक्तम् अव्याकृताख्यम् अविद्यावस्थम् आत्मत्वेन प्रतिपन्नाः केचित् ।
அதைக் காட்டிலும் உள்ளே வியாபித்திருக்கின்ற அவ்யக்தம், அவ்யாகிருதம் எனப்படுகின்றஅவித்யையை ஆத்மாவாக சிலர் அறிகின்றார்கள்.
सर्वत्र बुद्ध्यादिदेहान्ते आत्मचैतन्याभासता आत्मभ्रान्तिकारणम् इत्यतश्च
புத்தி முதல் தேஹம் வரையிலும் எங்கும் உள்ள ஆத்ம சைதன்ய ஆபாசமானது ஏற்பட ஆத்மபிராந்தி காரணமாகும்.
आत्मविषयं ज्ञानं न विधातव्यम् । किं तर्हि ? नामरूपाद्यनात्माध्यारोपणनिवृत्तिरेव कार्या, नात्मचैतन्यविज्ञानं कार्यम् , अविद्याध्यारोपितसर्वपदार्थाकारैः अविशिष्टतया दृश्यमानत्वात् इति ।
ஆகையால் ஆத்மஞான விஷயம் விதிக்கப்பட்டது அல்ல. ஆனால் எது விதிக்கப்பட்டது எனில் நாம ரூப முதலிய அநாத்ம அத்யாரோபமே நிவிர்த்திக்க செயல்படவேண்டுமே தவிர ஆத்ம சைதன்ய ஞானத்தில் செயல்படவேண்டியது ஒன்றுமில்லை. ஏனெ னில் ஆத்மாவிடத்தில் அவித்யா அத்யாரோபத்தினாலேயே எல்லா பதார்த்தா காரத்துடன் கூடியதாக கிரஹிக்கப்பட்டதால் ஆகும்.
अत एव हि विज्ञानवादिनो बौद्धाः विज्ञानव्यतिरेकेण वस्त्वेव नास्तीति प्रतिपन्नाः, प्रमाणान्तरनिरपेक्षतां च स्वसंविदितत्वाभ्युपगमेन ।
ஆகையால் விக்ஞானவாதிகளாகிய பௌத்தர்கள் விக்ஞானத் தைக் காட்டிலும் வேறு ஒரு வஸ்து இல்லை என்ற முடிவிற்கு வந்த வர்கள் ஸ்வசம்வேதியத்தைப் (தனக்குத் தானே அறிவதை) பற்றிக் கொண்டு மற்றபிரமாணங்களை சரியெனக் கொள்வதில்லை.
तस्मात् अविद्याध्यारोपितनिराकरणमात्रं ब्रह्मणि कर्तव्यम् , न तु ब्रह्मविज्ञाने यत्नः, अत्यन्तप्रसिद्धत्वात् ।
ஆகையால் அவித்யா அத்யாரோபத்தை நீக்குவது மாத்திரமே பிரஹ்மத்திடத்தில் கர்த்தவ்யம் (அவசியம் செயல்படவேண்டியது). ஆனால் பிரஹ்மஞானத்தில் கர்த்தவ்யம் கிடையாது. ஏனெனில் பிரஹ்மமானது மிகப்பிரசித்தமாய் இருப்பதால்.
अविद्याकल्पितनामरूपविशेषाकारापहृतबुद्धीनाम् अत्यन्तप्रसिद्धं सुविज्ञेयम् आसन्नतरम् आत्मभूतमपि, अप्रसिद्धं दुर्विज्ञेयम् अतिदूरम् अन्यदिव च प्रतिभाति अविवेकिनाम् ।
பிரஹ்மமானது மிகவும் பிரசித்தமாயும், நன்கு அறியப்பட்ட தாயும், மிக அருகில் இருப்பதாயும் ஆத்ம ஸ்வரூபமாய் இருந்தா லும், விவேகமற்ற மனிதர்களுக்கு அவித்யையினால் கல்பிக்கப் பட்ட நாமரூப பேதத்தினால் அவர்களுடைய புத்தியானது கவரப் பட்டதால் அப்ரசித்தமாயும் அறிவதற்கு மிகக் கடினமாயும், மிக தூரத்தில் இருப்பதாயும், வேறாக இருப்பதாயும் தோன்றுகிறது.
बाह्याकारनिवृत्तबुद्धीनां तु लब्धगुर्वात्मप्रसादानां न अतः परं सुखं सुप्रसिद्धं सुविज्ञेयं स्वासन्नतरम् अस्ति । तथा चोक्तम् — ‘प्रत्यक्षावगमं धर्म्यम्’ (भ. गी. ९ । २) इत्यादि ॥
குரு, கிருபை உடைய வெளிவிஷயங்களில் இருந்தும் வில கிய புத்தியுடையவர்கள். ஆகையால் அதைக் காட்டிலும் மேலான சுகமானதாயும் மிகவும் பிரசித்தமானதாயும், நன்கு அறியப்பட்ட தாயும் மிகவும் அருகில் இருப்பதாயும் உள்ளது வேறு கிடையாது. அவ்வாறே பிரத்யக்ஷாவகமம் தர்ம்யம் என்பது முதலியவை களால் கூறப்பட்டுள்ளது.
केचित्तु पण्डितंमन्याः ‘निराकारत्वात् आत्मवस्तु न उपैति बुद्धिः । अतः दुःसाध्या सम्यग्ज्ञाननिष्ठा’ इत्याहुः।
தாங்கள் பண்டிதர்கள் என்று நினைத்துக் கொண்ட சிலர் ஆத்மா நிராகாரமானதால் (வடிவமற்றதால்) புத்தி அதை அடைய முடியாது. ஆகையால் சம்யக் ஞான நிஷ்ட்டையை அடைய முடியாது என்று கூறுவர்.
सत्यम् ; एवं गुरुसम्प्रदायरहितानाम् अश्रुतवेदान्तानाम् अत्यन्तबहिर्विषयासक्तबुद्धीनां सम्यक्प्रमाणेषु अकृतश्रमाणाम् । तद्विपरीतानां तु लौकिकग्राह्यग्राहकद्वैतवस्तुनि सद्बुद्धिः नितरां दुःसम्पादा, आत्मचैतन्यव्यतिरेकेण वस्त्वन्तरस्य अनुपलब्धेः ।
குரு கிருபை அற்றவர்களுக்கும் வேதாந்த சிரவணம், அற்ற வர்களாயும் விஷயத்தில் மிகுந்த பற்றுடைய புத்தி உடையவர்க ளாயும் நல்ல பிரமாணங்களில் முயற்சி இல்லாதவர்களுக்கு அடைவது கடினமாகும். ஆனால் அவர்களைக் காட்டிலும் மாறா னவர்களுக்கு லௌகிக அறிபடும், அறிபடாத துவைத வஸ்துக் களை சத்திய வஸ்துவாக அறிவது என்பது மிகவும் கடினமாகும். ஏனெனில் அவர்களுக்கு ஆத்ம சைதன்யத்தை தவிர வேறு வஸ்து இருப்பதாகக் காண்பதில்லை.
यथा च ‘एतत् एवमेव, न अन्यथा’ इति अवोचाम ; उक्तं च भगवता ‘यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुनेः’ (भ. गी. २ । ६९) इति ।
இது எவ்வாறு கூறப்பட்டதோ அவ்வாறுதான். வேறுவிதமாக இல்லை என்று கூறினோம். பகவானும் யஸ்யாம் ஜாக்ரதி பூதானி ஸா நிசா பச்யதே முனே: என்று கூறியுள்ளார்.
तस्मात् बाह्याकारभेदबुद्धिनिवृत्तिरेव आत्मस्वरूपावलम्बनकारणम् । न हि आत्मा नाम कस्यचित् कदाचित् अप्रसिद्धः प्राप्यः हेयः उपादेयो वा ।
ஆகையால் வெளித்தோற்றமுடைய நாநா பேதபுத்தியின் நீக் கமே ஆத்மஸ்வரூபத்தை அடைவதற்குக் காரணமாகிறது. ஆகை யால் ஆத்மா என்பது ஒருவருக்கும், ஒருபொழுதும் பிரசித்தம் அற்று இல்லை. அவ்வாறே கொள்ளக்கூடிய பொருளாகவோ தள் ளக்கூடிய பொருளாகவோ இல்லை.
अप्रसिद्धे हि तस्मिन् आत्मनि स्वार्थाः सर्वाः प्रवृत्तयः व्यर्थाः प्रसज्येरन् । न च देहाद्यचेतनार्थत्वं शक्यं कल्पयितुम् । न च सुखार्थं सुखम् , दुःखार्थं दुःखम् । आत्मावगत्यवसानार्थत्वाच्च सर्वव्यवहारस्य ।
ஆத்மா பிரசித்தமற்ற பொருளாயின் (தெரியாத பொருளா யின்) தனக்காகச் செய்யப்படும் எல்லா பிரவிருத்திகளும் பிரயோ ஜனமற்றதாய் விடும். ஏனெனில் தேஹாதிகளாகிய அசேதனத் திற்கு புருஷார்த்தத்தைக் (பலனை) கல்பிக்கமுடியாது. எல்லா விய வஹாரங்களும், சுகத்திற்காக சுகமும், துக்கத்திற்காக துக்கமும் கல் பிக்கப்படவில்லை. ஆனால் எல்லா வியவஹாரங்களும் ஆத் மாவை அறிவதில் (ஆத்மக்ஞானத்தில்) முடிவடைகிறது.
तस्मात् यथा स्वदेहस्य परिच्छेदाय न प्रमाणान्तरापेक्षा, ततोऽपि आत्मनः अन्तरतमत्वात् तदवगतिं प्रति न प्रमाणान्तरापेक्षा ; इति आत्मज्ञाननिष्ठा विवेकिनां सुप्रसिद्धा इति सिद्धम् ॥
ஆகையால் தன்னுடைய தேஹத்தை அறிவதற்கு வேறு பிர மாணம் வேண்டியதில்லையோ, அதைக் காட்டிலும் தனக்கு மிக வும் சமீபத்தில் இருக்கிறதால் ஆத்மாவை (தன்னை) அறிவதற்கு வேறு பிரமாணத்தை அபேக்ஷிக்கவில்லை. ஆகையால் விவேகி களுக்கு ஆத்மா மிகவும் பிரசித்தமானது என்பது சித்திக்கிறது. (நி ரூபிக்கப்பட்டது)
येषामपि निराकारं ज्ञानम् अप्रत्यक्षम् , तेषामपि ज्ञानवशेनैव ज्ञेयावगतिरिति ज्ञानम् अत्यन्तप्रसिद्धं सुखादिवदेव इति अभ्युपगन्तव्यम् ।
எவர்களுடைய மதத்தில் ஞானமானது ஒத்துக்கொள்ளப்படா ததாயும், பிரத்யக்ஷம் அற்றதாயும் இருக்கிறதோ அவர்களும் ஞானத்தினாலேயே ஞேயவஸ்துவை அறிந்து கொள்ள முடியும். ஆகையால் ஞானம் சுகம் முதலியவைகளைப் போல் மிகவும் பிர சித்தமானது என்று ஏற்றுக்கொள்ளவேண்டும்.
जिज्ञासानुपपत्तेश्च — अप्रसिद्धं चेत् ज्ञानम् , ज्ञेयवत् जिज्ञास्येत । यथा ज्ञेयं घटादिलक्षणं ज्ञानेन ज्ञाता व्याप्तुम् इच्छति, तथा ज्ञानमपि ज्ञानान्तरेण ज्ञातव्यम् आप्तुम् इच्छेत् । न एतत् अस्ति ।
ஞானத்தை அறிவதற்கு இச்சை ஏற்படுவதில்லை. ஞானம் பிர சித்தமற்றதாய் இருந்தால் அல்லவா அதை அறிய இச்சை கொள் ளவேண்டும். எவ்வாறு ஞேய வஸ்துக்களாகிய கடம் முதலிய ஞேய பதார்த்தங்களை ஞாதாவானவன் (அறிபவன்) ஞானத்தி னால் அறிய இச்சிக்கிறான். அவ்வாறே ஞானத்தையும் வேறு ஞானத்தினால் ஞாதாவானவன் அறிய விரும்பலாம். ஆனால் அவ்வாறு இயலாது.
अतः अत्यन्तप्रसिद्धं ज्ञानम् , ज्ञातापि अत एव प्रसिद्धः इति । तस्मात् ज्ञाने यत्नो न कर्तव्यः, किं तु अनात्मनि आत्मबुद्धिनिवृत्तावेव । तस्मात् ज्ञाननिष्ठा सुसम्पाद्या ॥ ५० ॥
ஆகையால் ஞானம் மிகவும் பிரசித்தமாய் இருக்கிறது. ஆகையால் ஞாதாவும் பிரசித்தமாகவே இருக்கிறது. ஆகையால் ஞானத்தை அடைவதற்கு செய்யவேண்டியது (கர்த்தவ்யம்) ஒன்று மில்லை. ஆனால் அநாத்மாவை நிவர்த்தியே செய்யத்தக்கது. (கர்த்தவ்யம்) ஆகையால் ஞானநிஷ்டை அவசியம் சம்பாதிக்கத் தக்கது.
सा इयं ज्ञानस्य परा निष्ठा उच्यते, कथं कार्या इति —
இந்த ஞானத்தினுடைய மேலான நிஷ்ட்டையை எவ்வாறு செய்யவேண்டும் என்று கூறுகிறார்-
बुद्ध्या विशुद्धया युक्तो धृत्यात्मानं नियम्य च ।
शब्दादीन्विषयांस्त्यक्त्वा रागद्वेषौ व्युदस्य च ॥ ५१ ॥
புத்த்யா விசுத்தயா யுக்தோ த்ருத்யாத்மானம் நியம்ய ச ।
சப்தாதீன்விஷயாம்ஸ்த்யக்த்வா ராகத்வேஷௌ வ்யுதஸ்ய ச ॥ 51 ॥
बुद्ध्या अध्यवसायलक्षणया विशुद्धया मायारहितया युक्तः सम्पन्नः, धृत्या धैर्येण आत्मानं कार्यकरणसङ्घातं नियम्य च नियमनं कृत्वा वशीकृत्य, शब्दादीन् शब्दः आदिः येषां तान् विषयान् त्यक्त्वा, सामर्थ्यात् शरीरस्थितिमात्रहेतुभूतान् केवलान् मुक्त्वा ततः अधिकान् सुखार्थान् त्यक्त्वा इत्यर्थः, शरीरस्थित्यर्थत्वेन प्राप्तेषु रागद्वेषौ व्युदस्य च परित्यज्य च ॥ ५१ ॥
கபடமற்றநன்கு பண்படுத்தப்பட்ட புத்தியை உடையவன் தைரியத்துடன் இந்த காரியகரண சங்காதமாகிய சரீரம் இந்திரியங் களை வசம் செய்து சப்தம் முதலிய வெளிவிஷயங்களை தியாகம் செய்து தன் சாமர்த்தியத்தால் சரீர நிலைத்தலுக்கு வேண்டியவைக ளைத் தவிர அதற்கு அதிகமான சுகபோகங்களை விடவேண்டும் என்பது பொருள். சரீர நிலைத்தலுக்கு தேவையானவை எது கிடைத் தாலும் அதில் விருப்பு, வெறுப்பற்று ஏற்றுக்கொள்ளவேண்டும்.
ततः —
அதன்பின்.
विविक्तसेवी लघ्वाशी यतवाक्कायमानसः ।
ध्यानयोगपरो नित्यं वैराग्यं समुपाश्रितः ॥ ५२ ॥
விவிக்தஸேவீ லக்வாசீ யதவாக்காயமானஸ: ।
த்யானயோகபரோ நித்யம் வைராக்யம் ஸமுபாச்ரித: ॥ 52 ॥
विविक्तसेवी अरण्यनदीपुलिनगिरिगुहादीन् विविक्तान् देशान् सेवितुं शीलम् अस्य इति विविक्तसेवी, लघ्वाशी लघ्वशनशीलः — विविक्तसेवालघ्वशनयोः निद्रादिदोषनिवर्तकत्वेन चित्तप्रसादहेतुत्वात् ग्रहणम् ।
விவிக்தசேவீ என்றால் காடு, நதி, நதிக்கரை, மலை, குகை முத லிய ஒருவரும் அற்ற தனிமையான இடத்தில் இருப்பதில் விருப்ப முள்ளவன். குறைந்த உணவை உண்ணுபவன். தனிமையில் இருப் பவனும், குறைந்த உணவை உட்கொள்பவனாகிய அவனுக்குத் தூக்கம் முதலிய தோஷங்கள் நீங்குவதால் சித்த சுத்திக்கு ஏதுவாகி றது. ஆகையால் அதை மேற்கொள்ளவேண்டும்.
यतवाक्कायमानसः वाक् च कायश्च मानसं च यतानि संयतानि यस्य ज्ञाननिष्ठस्य सः ज्ञाननिष्ठः यतिः यतवाक्कायमानसः स्यात् । एवम् उपरतसर्वकरणः सन् ।
வாக்கு காயம் மனம் இவைகளை வசப்படுத்திய ஞான நிஷ்ட்டை எவனுக்கோ அந்த ஞானநிஷ்ட்டை உடைய சந்நியாசி மனோ வாக்கு காயத்தை அடக்கியவனாகிறான். இவ்வாறு இந்திரி யங்களை அடக்கியவனாய் இருந்துகொண்டு.
ध्यानयोगपरः ध्यानम् आत्मस्वरूपचिन्तनम् , योगः आत्मविषये एकाग्रीकरणम् तौ परत्वेन कर्तव्यौ यस्य सः ध्यानयोगपरः नित्यं नित्यग्रहणं मन्त्रजपाद्यन्यकर्तव्याभावप्रदर्शनार्थम् ।
தியானம் என்பது ஆத்மஸ்வரூபத்தை சிந்தித்தலாகும். யோகம் என்பது ஆத்மவிஷயத்தில் ஏகாக்கிரம் செய்வது ஆகும். அந்த தியானயோகத்திலேயே ஈடுபட்டுள்ளானோ அவனே தியா னயோகபரன். நித்தியம் என்று கூறியது மந்திரஜபம் முதலியவை கள் செய்யவேண்டியதில்லை என்று தெரிவிப்பதற்காகவே ஆகும்.
वैराग्यं विरागस्य भावः दृष्टादृष्टेषु विषयेषु वैतृष्ण्यं समुपाश्रितः सम्यक् उपाश्रितः नित्यमेव इत्यर्थः ॥ ५२ ॥
வைராக்கியம் எனப்படும் விராகபாவம் ஆனது அறிபடும் பொருள்களிலேயும் அறிபடா பொருள்களிலேயும் (இவ்வுலக, மேலுலகங்களில் உள்ள போகங்களில்) உள்ள ஆசை அற்றிருக் கும் தன்மை உடையவன்.
किञ्च —
மேலும்
अहङ्कारं बलं दर्पं कामं क्रोधं परिग्रहम् ।
विमुच्य निर्ममः शान्तो ब्रह्मभूयाय कल्पते ॥ ५३ ॥
அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம் ।
விமுச்ய நிர்மம: சாந்தோ ப்ரஹ்மபூயாய கல்பதே ॥ 53 ॥
अहङ्कारम् अहङ्करणम् अहङ्कारः देहादिषु तम् , बलं सामर्थ्यं कामरागसंयुक्तम् — न इतरत् शरीरादिसामर्थ्यं स्वाभाविकत्वेन तत्त्यागस्य अशक्यत्वात् — दर्पं दर्पो नाम हर्षानन्तरभावी धर्मातिक्रमहेतुः ‘हृष्टो दृप्यति दृप्तो धर्ममतिक्रामति’ (आ. ध. सू. १ । १३ । ४) इति स्मरणात् ; तं च ।
தேஹம் இந்திரியங்களில் நான் என்கின்றபாவம் அஹங்கா ரம் ஆகும். பலம் என்பது காமம், ராகத்துடன் கூடியது ஆகும். ஸ்வாபிகமாக உள்ள சரீரம் முதலியவற்றின் பலத்தை விட முடியாது. தர்பம் என்பது களிப்பிற்குப் பின் தோன்றுவதும் தர்மத்தை மீறியதால் உண்டாகும் கர்வமாகும். ஏன் எனில் ஹ்ருஷ்டோ த்ருப்யதி த்ருப்தோ தர்மமதிக்ராமதி = களிப்பினால் தர்ப்பம் அடைகிறான். தர்ப்பத்தினால் தர்மத்தை மீறுகிறான் என்று ஸ்ம்ருதியிலும் கூறப்பட்டுள்ளது.
कामम् इच्छां क्रोधं द्वेषं परिग्रहम् इन्द्रियमनोगतदोषपरित्यागेऽपि शरीरधारणप्रसङ्गेन धर्मानुष्ठाननिमित्तेन वा बाह्यः परिग्रहः प्राप्तः, तं च विमुच्य परित्यज्य ।
இச்சை என்றால் காமம். துவேஷத்தின் மறுபெயர் க்ரோதம். பரிக்கிரஹம் என்றால் இந்திரியங்கள், மனம் இவைகளில் உள்ள தோஷங்களைத் தியாகம் செய்திருந்தாலும், சரீரம் நிலைத்தல் பொருட்டும், தர்மானுஷ்ட்டானத்திற்காகவும், மேற்கொண்டதற்கா கவும், வெளியில் உள்ளவை வந்து சேரும். அதையும் தியாகம் செய்து.
परमहंसपरिव्राजको भूत्वा, देहजीवनमात्रेऽपि निर्गतममभावः निर्ममः, अत एव शान्तः उपरतः, यः संहृतहर्षायासः यतिः ज्ञाननिष्ठः ब्रह्मभूयाय ब्रह्मभवनाय कल्पते समर्थो भवति ॥ ५३ ॥
பரமஹம்ஸ பரிவ்ராஜனாகி (சந்நியாசி ஆகி) தேஹம் நிலைத் தற்கு மாத்திரம் கூட என்னுடையது என்றபாவனை அற்றிருத்தல் நிர்மம. அதனால் சாந்தி அதாவது உபரதி உண்டாகிறது. அந்த ஞானநிஷ்ட்டனாகிய சந்நியாசியானவன் ப்ரஹ்மரூபமாவதற்கு தகுதி உடையவனாகிறான்.
अनेन क्रमेण —
இந்தக் கிரமமாக
ब्रह्मभूतः प्रसन्नात्मा न शोचति न काङ्क्षति ।
समः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते पराम् ॥ ५४ ॥
ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா ந சோசதி ந காங்க்ஷதி ।
ஸம: ஸர்வேஷு பூதேஷு மத்பக்திம் லபதே பராம் ॥ 54 ॥
ब्रह्मभूतः ब्रह्मप्राप्तः प्रसन्नात्मा लब्धाध्यात्मप्रसादस्वभावः न शोचति, किञ्चित् अर्थवैकल्यम् आत्मनः वैगुण्यं वा उद्दिश्य न शोचति न सन्तप्यते ; न काङ्क्षति ।
பிரஹ்மத்தை அடைந்தவன் அத்யாத்ம பிரசாதத்தை அடைந்து துக்கத்தை அடைவதில்லை. ஆசைப்படுவதும் இல்லை (இச்சிப்பதும் இல்லை). பதார்த்தம் நஷ்ட்டமானாலும், தனக்கு குறைவு இருந்தாலும் அதைக் குறித்து துக்கப்படுவது இல்லை. ஒரு பொருளையும் இச்சிப்பதும் இல்லை.
ब्रह्मभूतस्य अयं स्वभावः अनूद्यते — न शोचति न काङ्क्षति इति ।
"ந சோசதி ந காங்க்ஷதி” என்று கூறி பிரஹ்மத்தை அடைந்தவ னுடைய ஸ்வபாவமானது எடுத்துரைக்கப்பட்டது.
न हि अप्राप्तविषयाकाङ्क्षा ब्रह्मविदः उपपद्यते ; ‘न हृष्यति’ इति वा पाठान्तरम् ।
ஏனெனில் பிரஹ்மத்தை அறிந்தவன் அடையாத விஷயங்க ளில் ஆசை வைக்கமாட்டான். அல்லது நகாங்க்ஷதி என்பதற்கு பதிலாக நஹ்ருஷ்யதி என்றபாடமும் உள்ளது.
समः सर्वेषु भूतेषु, आत्मौपम्येन सर्वभूतेषु सुखं दुःखं वा सममेव पश्यति इत्यर्थः । न आत्मसमदर्शनम् इह, तस्य वक्ष्यमाणत्वात् ‘भक्त्या मामभिजानाति’ (भ. गी. १८ । ५५) इति ।
சமம் என்றால் எல்லா ஜீவர்களிடத்தும் உள்ள சுகம், துக்கம் தனக்கு உள்ளதுபோல் சமமாகப் பார்ப்பது ஆகும். இவ்விடத்தில் ஆத்மாவை சமபாவமாக காண்பது அல்ல. ஏனெனில் இனிவரும் ஸ்லோகத்தில் பக்த்யா மாமபிஜானாதி என்று கூறப்பட்டுள்ளது.
एवंभूतः ज्ञाननिष्ठः, मद्भक्तिं मयि परमेश्वरे भक्तिं भजनं पराम् उत्तमां ज्ञानलक्षणां चतुर्थीं लभते, ‘चतुर्विधा भजन्ते माम्’ (भ. गी. ७ । १६) इति हि उक्तम् ॥ ५४ ॥
இவ்வாறுள்ள ஞானநிஷ்ட்ட புருஷன் என்னுடைய பரமேஸ் வர ஸ்வரூபத்தினிடத்தில் ஞானரூபமான நான்காவதான மேலான பக்தியை அடைகிறான் என்று சதுர்விதா பஜந்தேமாம் என்று கூறப்பட்டது.
ततः ज्ञानलक्षणया —
இதன்பின் ஞானமாகிய-
भक्त्या मामभिजानाति यावान्यश्चास्मि तत्त्वतः ।
ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम् ॥ ५५ ॥
பக்த்யா மாமபிஜானாதி யாவான்யச்சாஸ்மி தத்வத: ।
ததோ மாம் தத்வதோ ஞாத்வா விசதே ததனந்தரம் ॥ 55 ॥
भक्त्या माम् अभिजानाति यावान् अहम् उपाधिकृतविस्तरभेदः, यश्च अहम् अस्मि विध्वस्तसर्वोपाधिभेदः उत्तमः पुरुषः आकाशकल्पः, तं माम् अद्वैतं चैतन्यमात्रैकरसम् अजरम् अभयम् अनिधनं तत्त्वतः अभिजानाति ।
உபாதிகளினால் நான் பலவித பேதங்கள் உடையவன் போல் இருப்பதாகவும், நான் உபாதி பேதங்களற்ற மேலான புருஷனாயும் ஆகாசத்திற்கு ஒப்பாக எங்கும் நிறைந்தவனாயும் இருக்கும் என்னை த்வைதமற்றவன், சைதன்ய ஏகரச ரூபன், பிறப்பற்றவன், மூப்பற்றவன், மரணமற்றவன், பயம் அற்றவன், முடிவு அற்றவன், என்னுடைய தத்துவத்தை (உண்மைஸ்வரூபத்தை) பக்தியினால் அறிகிறான்.
ततः माम् एवं तत्त्वतः ज्ञात्वा विशते तदनन्तरं मामेव ।
இவ்வாறு என்னை உள்ளவாறு அறிந்து அதன்பின் என்னையே அடைகின்றான்.
नात्र ज्ञानप्रवेशक्रिये भिन्ने विवक्षिते ‘ज्ञात्वा विशते तदनन्तरम्’ इति । किं तर्हि ? फलान्तराभावात् ज्ञानमात्रमेव, ‘क्षेत्रज्ञं चापि मां विद्धि’ (भ. गी. १३ । २) इति उक्तत्वात् ॥
இங்கு அதை அறிந்து, அதன் பின் அடைகிறான் என்று கூறியது ஞானம், அதன்பின் அதை அடைவது என்று வெவ்வே றாக விளக்கப்படவில்லை. எவ்வாறு எனில் ஞானமே தான் பலம் அதைக் காட்டிலும் வேறு பலன் கிடையாது. இதையே க்ஷேத்ரக்ஞம் சாபி மாம் வித்தி என்று கூறப்பட்டதால்.
ननु विरुद्धम् इदम् उक्तम् ‘ज्ञानस्य या परा निष्ठा तया माम् अभिजानाति’ इति । कथं विरुद्धम् इति चेत् , उच्यते — यदैव यस्मिन् विषये ज्ञानम् उत्पद्यते ज्ञातुः, तदैव तं विषयम् अभिजानाति ज्ञाता इति न ज्ञाननिष्ठां ज्ञानावृत्तिलक्षणाम् अपेक्षते इति ; अतश्च ज्ञानेन न अभिजानाति, ज्ञानावृत्त्या तु ज्ञाननिष्ठया अभिजानातीति ।
எந்த ஞானத்தின் மேலான (பரா) நிஷ்ட்டையோ அந்த ஞானத் தால் என்னை அறியமுடியும் என்று கூறியது பொருந்தாது. எதனால் பொருந்தாது எனில் கூறப்படுகிறது. எப்பொழுது எந்த விஷயத்தில் ஞாதாவிற்கு (அறிபவனுக்கு) அந்த விஷயத்தின் ஞானம் உண்டாகி றதோ அப்பொழுது ஞாதா அறிகிறான். அதற்கு அடிக்கடி ஆவர்த்தி செய்யவேண்டிய ஞானநிஷ்ட்டை தேவையில்லை. ஆகையால் ஞேயவஸ்துவை ஆத்மாவை (தன்னை) ஞானத்தினால் அவன் அறிவதில்லை. ஞானவிருத்திரூப ஞானநிஷ்ட்டையினால் அறிகிறான் என்று கூறுதல் பொருத்தமற்றதாக இருக்கிறது.
नैष दोषः ; ज्ञानस्य स्वात्मोत्पत्तिपरिपाकहेतुयुक्तस्य प्रतिपक्षविहीनस्य यत् आत्मानुभवनिश्चयावसानत्वं तस्य निष्ठाशब्दाभिलापात् ।
இந்த தோஷம் ஞானத்திற்கு இல்லை. ஏன் எனில் ஞானம் உண்டாவதற்கும் பரிபாகத்திற்கும் காரணமும், தடைகள் இல்லாத துமாய் ஆத்ம அனுபவத்தினால் நிச்சயமான முடிவு எதுவோ அதை நிஷ்ட்டை என்ற சப்தத்தினால் விளக்கப்படுகிறது.
शास्त्राचार्योपदेशेन ज्ञानोत्पत्तिहेतुं सहकारिकारणं बुद्धिविशुद्धत्वादि अमानित्वादिगुणं च अपेक्ष्य जनितस्य क्षेत्रज्ञपरमात्मैकत्वज्ञानस्य कर्तृत्वादिकारकभेदबुद्धिनिबन्धनसर्वकर्मसंन्याससहितस्य स्वात्मानुभवनिश्चयरूपेण यत् अवस्थानम् , सा परा ज्ञाननिष्ठा इति उच्यते ।
சாஸ்திரம் குரு உபதேசத்தினால் ஞானம் உண்டாவதற்கும் அது முதிர்ந்து பக்குவத்திற்கான காரணத்திற்கு உபயோகமாய் உள்ள அமானித்துவாதி அந்தக்கரண சுத்தி முதலியவைகளை அபேக்ஷித்து உண்டான க்ஷேத்திரக்ஞ பரமாத்மா ஒன்றே என்ற ஞானத்திற்கு கர்த்தா முதலிய காரகபேத புத்தியினால் பந்தப்பட்ட எல்லாக் கர்மங்களையும் விட்டு நீங்கியவனுடைய ஸ்வாத்ம அனுபவ நிச்சய ரூபமாக எந்த நிலைத்தல் உள்ளதோ அது மேலான ஞான நிஷ்ட்டை என்று கூறப்பட்டது.
सा इयं ज्ञाननिष्ठा आर्तादिभक्तित्रयापेक्षया परा चतुर्थी भक्तिरिति उक्ता । तया परया भक्त्या भगवन्तं तत्त्वतः अभिजानाति, यदनन्तरमेव ईश्वरक्षेत्रज्ञभेदबुद्धिः अशेषतः निवर्तते । अतः ज्ञाननिष्ठालक्षणया भक्त्या माम् अभिजानातीति वचनं न विरुध्यते ।
இந்த ஞானநிஷ்ட்டையானது ஆர்த்தன் முதலிய மூன்று பக் திகளைக் காட்டிலும் மேலானது. இது நான்காவதாகிய பக்தி என்று கூறப்பட்டது. அந்த மேலான பக்தியினால் பகவானை உள்ளபடி அறிந்துகொள்கிறான். அதன் பின்னரே ஈஸ்வரன் க்ஷேத்திரக்ஞன் என்றபேதபுத்தி அடியோடு நீங்குகிறது. ஆகையால் ஞான நிஷ்ட்டை ரூப பக்தியினால் என்னை அறிகிறான் என்று கூறிய வசனம் விருத்தமானது அல்ல.
अत्र च सर्वं निवृत्तिविधायि शास्त्रं वेदान्तेतिहासपुराणस्मृतिलक्षणं न्यायप्रसिद्धम् अर्थवत् भवति —
இவ்வாறு இருப்பதால் எல்லா நிவிர்த்தி மார்க்கத்தை விதிக் கின்ற வேதாந்தம், இதிஹாசங்கள் புராணங்கள் ஸ்மிருதிகள் எல்லாம் அர்த்தமுள்ளதாகினற்ன.
‘विदित्वा . . . व्युत्थायाथ भिक्षाचर्यं चरन्ति’ (बृ. उ. ३ । ५ । १) ‘तस्मान्न्यासमेषां तपसामतिरिक्तमाहुः’ (तै. ना. ७९) ‘न्यास एवात्यरेचयत्’ (तै. ना. ७८) इति । ‘संन्यासः कर्मणां न्यासः’ ( ? ) ‘वेदानिमं च लोकममुं च परित्यज्य’ (आ. ध. २ । ९ । १३) ‘त्यज धर्ममधर्मं च’ (मो. ध. ३२९ । ४०) इत्यादि । इह च प्रदर्शितानि वाक्यानि ।
விதித்வா வ்யுத்தாயாத பிக்ஷாசர்யம் சரந்தி = அறிந்து விரக்தி அடைந்தவனாகி பிக்ஷை எடுத்து சஞ்சரிக்கின்றார்கள்., தஸ்மான் ந் யாஸமேஷாம் தபஸாமதிரிக்தமாஹு: = இந்த ந்யாஸமானது தபஸ் ஸைக் காட்டிலும் மேலானது என்று கூறுவர். ந்யாஸ ஏவாத்யரேச்ச யத் = ஆகையால் சந்நியாசத்தையே மேற்கொள் என்பது சந்நியா சம் அதாவது கர்மாக்களை விடுதல் ஆகும். வேதாநிமம் ச லோகம மும் ச பரித்யஜ்ய = வேதங்களையும், இகலோகத்தையும் மேல் உல கத்தையும் தியாகம் செய்து, த்யஜ தர்மமதர்மம் ச = தர்மங்கள், அதர் மங்கள் (விதி, நிஷேதங்கள்) இரண்டையும் விட்டுவிடு, என்பது முதலிய வாக்கியங்களால் காண்பிக்கப்பட்டுள்ளது.
न च तेषां वाक्यानाम् आनर्थक्यं युक्तम् ; न च अर्थवादत्वम् , स्वप्रकरणस्थत्वात् ।
அந்த வாக்கியங்கள் அர்த்தமற்றதாகவோ, அர்த்தவாதமா கவோ (கௌணமாகவோ) கருதுதல் சரியல்ல. ஏன் எனில் தமது பிரகரணத்தில் உள்ளவைகளேயாகும்.
प्रत्यगात्माविक्रियस्वरूपनिष्ठत्वाच्च मोक्षस्य । न हि पूर्वसमुद्रं जिगमिषोः प्रातिलोम्येन प्रत्यक्समुद्रजिगमिषुणा समानमार्गत्वं सम्भवति ।
மோக்ஷம் என்பது கிரியை அற்றபிரத்யக் ஆத்ம ஸ்வரூ பத்தில் நிச்சய ரூபமாக நிலைத்திருத்தலே ஆகும். ஆகையால் கிழக்கு திசையில் உள்ள சமுத்திரத்திற்கு செல்ல இச்சிப்ப வனுடைய மார்க்கமும், மேற்கு திசையில் உள்ள சமுத்திரத்திற்கு செல்ல இச்சிப்பவனுடைய மார்க்கமும் ஒரே மார்க்கமாக (வழியாக) இருக்காது.
प्रत्यगात्मविषयप्रत्ययसन्तानकरणाभिनिवेशश्च ज्ञाननिष्ठा ; सा च प्रत्यक्समुद्रगमनवत् कर्मणा सहभावित्वेन विरुध्यते ।
பிரத்யக் ஆத்மவிஷயமான ப்ரதீதியின் (உணர்வின்) தொடர்ச்சியை மிகுந்த ஊக்கத்துடனும், ஆக்ரோஷத்துடன் மேற்கொள்ளுதலே ஞானநிஷ்ட்டையாகும். அந்த நிஷ்ட்டை யானது கிழக்குத் திசையில் உள்ள சமுத்திரத்திற்கு செல்லுவது போல் ஆகும். கர்ம மார்க்கமானது அதற்கு முற்றிலும் மாறான மேற்கு சமுத்திரத்திற்கு செல்லுவதுபோல் விருத்தமானதாகும்.
पर्वतसर्षपयोरिव अन्तरवान् विरोधः प्रमाणविदां निश्चितः । तस्मात् सर्वकर्मसंन्यासेनैव ज्ञाननिष्ठा कार्या इति सिद्धम् ॥ ५५ ॥
மலைக்கும், கடுகுக்கும் உள்ளது போல் வேறுபாடு உடையது என்று சாஸ்திர பிரமாணத்தை அறிந்தவர்களுடைய நிச்சயமாகும். ஆகையால் எல்லாக் கர்மங்களையும் விட்டு விட்டே ஞானநிஷ்ட் டையை கைகொள்ளவேண்டும் என்பது சித்தமாகிறது.
स्वकर्मणा भगवतः अभ्यर्चनभक्तियोगस्य सिद्धिप्राप्तिः फलं ज्ञाननिष्ठायोग्यता, यन्निमित्ता ज्ञाननिष्ठा मोक्षफलावसाना । सः भगवद्भक्तियोगः अधुना स्तूयते शास्त्रार्थोपासंहारप्रकरणे शास्त्रार्थनिश्चयदार्ढ्याय —
தன்னுடைய கர்மங்களினாலும் பகவானை பூஜை செய்தல் முதலிய பக்தியோகத்தினால் ஞானநிஷ்ட்டைக்கான யோக்யதை என்றபலன் அடையப்படுகிறது. ஞானநிஷ்ட்டையும் அதனால் முடிவான மோக்ஷமும் எதன் நிமித்தத்தால் ஏற்படுகிறதோ அந்த பகவத் பக்தி யோகத்தை இப்பொழுது சாஸ்திர அர்த்தத்தை முடிக் கின்ற இந்த பிரகரணத்தில் சாஸ்திரார்த்தத்தின் நிச்சயத்தை திட மாக்குவதற்காக ஸ்துதிக்கின்றார் (புகழுகின்றார்)
सर्वकर्माण्यपि सदा कुर्वाणो मद्व्यपाश्रयः ।
मत्प्रसादादवाप्नोति शाश्वतं पदमव्ययम् ॥ ५६ ॥
ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வணோ மத்வயபாச்ரய: ।
மத்ப்ரஸாதாதவாப்நோதி சாச்வதம் மதமவ்யயம் ॥ 56 ॥
सर्वकर्माण्यपि प्रतिषिद्धान्यपि सदा कुर्वाणः अनुतिष्ठन् मद्व्यपाश्रयः अहं वासुदेवः ईश्वरः व्यपाश्रयो व्यपाश्रयणं यस्य सः मद्व्यपाश्रयः मय्यर्पितसर्वभावः इत्यर्थः । सोऽपि मत्प्रसादात् मम ईश्वरस्य प्रसादात् अवाप्नोति शाश्वतं नित्यं वैष्णवं पदम् अव्ययम् ॥ ५६ ॥
எல்லாக்கர்மங்களையும் நிஷித்த கர்மங்களையும் எப்பொழு தும் செய்து கொண்டிருந்தாலும் வாசுதேவனாகிய என்னையே பூர் ணமாக ஆச்ரயித்துக் கொண்டிருக்கிறானோ அவன் என்னிடத்தி லேயே எல்லாவற்றையும் அர்ப்பணித்து சர்வாத்மபாவத்தை அடைந்தவனாவான் என்பது பொருள். அவனும் ஈஸ்வரனாகிய என்னுடைய கிருபையினால் (அனுக்ரஹத்தால்) நித்யமான, நாச மற்ற வைஷ்ணவ பதத்தை அடைவான்.
यस्मात् एवम् —
எதனால் இவ்வாறோ அதனால்
चेतसा सर्वकर्माणि मयि संन्यस्य मत्परः ।
बुद्धियोगमपाश्रित्य मच्चित्तः सततं भव ॥ ५७ ॥
சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர: ।
புத்தியோகமுபாச்ரித்ய மச்சித்த: ஸததம் பவ ॥ 57 ॥
चेतसा विवेकबुद्ध्या सर्वकर्माणि दृष्टादृष्टार्थानि मयि ईश्वरे संन्यस्य ‘यत् करोषि यदश्नासि’ (भ. गी. ९ । २७) इति उक्तन्यायेन, मत्परः अहं वासुदेवः परो यस्य तव सः त्वं मत्परः सन् मय्यर्पितसर्वात्मभावः बुद्धियोगं समाहितबुद्धित्वं बुद्धियोगः तं बुद्धियोगम् अपाश्रित्य अपाश्रयः अनन्यशरणत्वं मच्चित्तः मय्येव चित्तं यस्य तव सः त्वं मच्चित्तः सततं सर्वदा भव ॥ ५७ ॥
விவேகபுத்தியால் இகலோக பரலோக போகத்திற்கான எல் லாக்கர்மங்களையும் ஈஸ்வரனாகிய என்னில் சமர்ப்பணம் செய்து யத்கரோஷி யதச்னாசி என்று சொல்லப்பட்ட பாவனையால் வாசு தேவனாகிய என்பரமாகவே இருந்துகொண்டு என்னிடத்திலேயே நிலைநிறுத்திய புத்தியாகிய புத்தியோகத்தை தழுவி அனந்ய சரணாகதியை அடைந்து என்னிடத்திலேயே நிலைத்த சித்த முடையவனாகிய அந்த நீ எப்பொழுதும் என்னிடத்திலேயே சித்தமுடையவனாய் இருப்பாயாக.
मच्चित्तः सर्वदुर्गाणि मत्प्रसादात्तरिष्यसि ।
अथ चेत्त्वमहङ्कारान्न श्रोष्यसि विनङ्क्ष्यसि ॥ ५८ ॥
மச்சித்த: ஸர்வதுர்காணி மத்ப்ரஸாதாத்தரிஷ்யஸி ।
அத சேத்வமஹங்காரான்ன ச்ரோஷ்யஸி வினங்க்ஷ்யஸி ॥ 58 ॥
मच्चित्तः सर्वदुर्गाणि सर्वाणि दुस्तराणि संसारहेतुजातानि मत्प्रसादात् तरिष्यसि अतिक्रमिष्यसि । अथ चेत् यदि त्वं मदुक्तम् अहङ्कारात् ‘पण्डितः अहम्’ इति न श्रोष्यसि न ग्रहीष्यसि, ततः त्वं विनङ्क्ष्यसि विनाशं गमिष्यसि ॥ ५८ ॥
என்னிடத்திலேயே நிலைத்த சித்தமுள்ள நீ என்னுடைய அனுக்கிரஹத்தால் சம்சாரத்தில் உண்டாகும் எல்லா கஷ்ட நஷ்ட்டங்களையும் தாண்டிவிடுவாய். ஆனால் என்னால் உனக்கு செய்யப்பட்ட உபதேசத்தை அஹங்காரத்தால் நான் பண்டிதன் என்று நினைத்துக் கொண்டு நான் கேட்கமாட்டேன். நான் கிரஹிக் கமாட்டேன் என்றால் அதனால் நீ நாசத்தை அடைவாய்.
इदं च त्वया न मन्तव्यम् ‘स्वतन्त्रः अहम् , किमर्थं परोक्तं करिष्यामि ? ’ इति —
நான் ஸ்வதந்திரமானவன் எதன் பொருட்டு மற்றவர் கூறுவதை செய்யவேண்டும் என்று கருதக்கூடாது என்பதால்-
यद्यहङ्कारमाश्रित्य न योत्स्य इति मन्यसे ।
मिथ्यैष व्यवसायस्ते प्रकृतिस्त्वां नियोक्ष्यति ॥ ५९ ॥
யதஹங்காரமாச்ரித்ய ந யோத்ஸ்வ இதி மன்யஸே ।
மித்யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ருதிஸ்த்வாம் நியோஷ் யஸி ॥ 59 ॥
यदि चेत् त्वम् अहङ्कारम् आश्रित्य न योत्स्ये इति न युद्धं करिष्यामि इति मन्यसे चिन्तयसि निश्चयं करोषि, मिथ्या एषः व्यवसायः निश्चयः ते तव ; यस्मात् प्रकृतिः क्षत्रियस्वभावः त्वां नियोक्ष्यति ॥ ५९ ॥
எதனால் நீ இந்த அஹங்காரத்தை அடைந்து நான் யுத்தம் செய்யமாட்டேன் என்று நினைத்து நிச்சயம் செய்தாயாகில் அது மித்தையே. ஏன் எனில் உன்னுடைய இயற்கையான க்ஷத்திரிய ஸ்வபாவம் உன்னை அதில் ஈடுபடுத்திவிடும்.
यस्माच्च —
ஏன் எனில்-
स्वभावजेन कौन्तेय निबद्धः स्वेन कर्मणा ।
कर्तुं नेच्छसि यन्मोहात्करिष्यस्यवशोऽपि तत् ॥ ६० ॥
ஸ்வபாவஜேன கௌந்தேய நிபத்த: ஸ்வேந கர்மணா ।
கர்தும் நேச்சஸி யன்மோஹாத்கரிஷ்யஸ்யவசோஅபிதத் ॥ 60 ॥
स्वभावजेन शौर्यादिना यथोक्तेन कौन्तेय निबद्धः निश्चयेन बद्धः स्वेन आत्मीयेन कर्मणा कर्तुं न इच्छसि यत् कर्म, मोहात् अविवेकतः करिष्यसि अवशोऽपि परवश एव तत् कर्म ॥ ६० ॥
ஹே கௌந்தேய! ஸ்வபாவத்தால் உண்டான முற்கூறிய சூரத் தன்மை முதலியவைகளால் பந்தப்பட்டவனாய் உன்னுடைய ஸ்வதர்மத்தை நீசெய்ய விரும்பவில்லை என்றால் அது அவிவேகத்தின் வசப்பட்டு செய்வாய். அது உன் வசம் அல்ல. அந்த கர்மாபரவசமேயாகும்.
यस्मात् —
ஏனெனில்
ईश्वरः सर्वभूतानां हृद्देशेऽर्जुन तिष्ठति ।
भ्रामयन्सर्वभूतानि यन्त्रारूढानि मायया ॥ ६१ ॥
ஈச்வர: ஸர்வபூதானாம் ஹ்ருத்தேசேஅர்ஜுன திஷ்டதி ।
ப்ராமயந்ஸர்வபூதானி யந்த்ராரூடானி மாய்யா ॥ 61 ॥
ईश्वरः ईशनशीलः नारायणः सर्वभूतानां सर्वप्राणिनां हृद्देशे हृदयदेशे अर्जुन शुक्लान्तरात्मस्वभावः विशुद्धान्तःकरणः — ‘अहश्च कृष्णमहरर्जुनं च’ (ऋ. मं. ६ । १ । ९ । १) इति दर्शनात् — तिष्ठति स्थितिं लभते ।
ஹே அர்ஜுன! எல்லோரையும் ஆளும் திறமை உள்ள நாராயணன் எல்லோருடைய இருதய பிரதேசத்தில் அதாவது சுத்தாந்தக் கரணத்தில் விளங்குகிறார். இங்கு அர்ஜுனன் என்று கூறியது அர்ஜுன என்றால் வெள்ளை நிறமாகும். இங்கு சுத்தாந்த கரணத்தை குறிப்பிடுவதாக ஆகிறது. அஹச்ச க்ருஷ்ணமஹரர் ஜுனம் ச என்பதிலிருந்து அறிய முடிகிறது.
तेषु सः कथं तिष्ठतीति, आह —
அவர் (ஈஸ்வரன்) எவ்வாறு இருக்கிறார் என்று கூறுகிறார்-
भ्रामयन् भ्रमणं कारयन् सर्वभूतानि यन्त्रारूढानि यन्त्राणि आरूढानि अधिष्ठितानि इव — इति इवशब्दः अत्र द्रष्टव्यः — यथा दारुकृतपुरुषादीनि यन्त्रारूढानि । मायया च्छद्मना भ्रामयन् तिष्ठति इति सम्बन्धः ॥ ६१ ॥
எல்லாப் பிராணிகளையும் எந்திரத்தில் ஏற்றினவைபோல் ஆட்டுவிப்பது போல் ஆட்டுவிக்கின்றார். எவ்வாறு மரத்தால் செய்யப்பட்ட மனிதர்கள் முதலியவைகளை யந்திரத்தினால் ஏற் றப்பட்டு மாயையால் ஆட்டுவிப்பது போல் இருக்கிறதோ அவ் வாறு என்று சம்பந்தப்படுத்தவேண்டும்.
तमेव शरणं गच्छ सर्वभावेन भारत ।
तत्प्रसादात्परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् ॥ ६२ ॥
தமேவ சரணம் கச்ச ஸர்வபாவேன் பாரத ।
தத்ப்ரஸாதாத்பராம் சாந்திம் ஸ்தானம் ப்ராப்ஸயஸி சாச்வதம் ॥ 62 ॥
तमेव ईश्वरं शरणम् आश्रयं संसारार्तिहरणार्थं गच्छ आश्रय सर्वभावेन सर्वात्मना हे भारत । ततः तत्प्रसादात् ईश्वरानुग्रहात् परां प्रकृष्टां शान्तिम् उपरतिं स्थानं च मम विष्णोः परमं पदं प्राप्स्यसि शाश्वतं नित्यम् ॥ ६२ ॥
சம்சாரமாகிய கஷ்ட்டத்தை நீக்க அந்த ஈஸ்வரனைச் சரணம் அடைவாய். ஹே பாரத! சர்வாத்ம பாவனையினால் ஆச்ரயத்தை அடைந்து அதனால் ஈஸ்வர அனுக்ரஹத்தால் விஷ்ணுவாகிய என்னுடைய மேலான ஸ்தானத்தை அதாவது சாந்தி என்கின்ற உபரதியை எப்பொழுதும் அடைவாய்.
इति ते ज्ञानमाख्यातं गुह्याद्गुह्यतरं मया ।
विमृश्यैतदशेषेण यथेच्छसि तथा कुरु ॥ ६३ ॥
இதி தே ஞானமாக்யாதம் குஹ்யாத்குஹ்யதரம் மயா ।
விம்ருச்யைததசேஷேண யதேச்சஸி ததா குரு ॥ 63 ॥
इति एतत् ते तुभ्यं ज्ञानम् आख्यातं कथितं गुह्यात् गोप्यात् गुह्यतरम् अतिशयेन गुह्यं रहस्यम् इत्यर्थः, मया सर्वज्ञेन ईश्वरेण । विमृश्य विमर्शनम् आलोचनं कृत्वा एतत् यथोक्तं शास्त्रम् अशेषेण समस्तं यथोक्तं च अर्थजातं यथा इच्छसि तथा कुरु ॥ ६३ ॥
ஈஸ்வரனாகிய என்னால் ரஹஸ்யத்திலும் ரகஸ்யமான மிகவும் காப்பாற்றப்பட வேண்டிய மிகுந்த ரகஸ்யமான ஞானம் உன் பொருட்டு உபதேசிக்கப்பட்டது. சர்வக்ஞனாகிய ஈஸ்வரானாகிய என்னால் கூறப்பட்ட சாஸ்திரத்தின் அர்த்தத்தை பூர்ணமாக விசாரம் செய்து நன்றாக ஆலோசித்து நீ எவ்வாறு விரும்புகிறாயோ அவ்வாறு செய்.
भूयोऽपि मया उच्यमानं शृणु —
மறுபடியும் என்னால் கூறப்படுவதைக் கேள்.
सर्वगुह्यतमं भूयः शृणु मे परमं वचः ।
इष्टोऽसि मे दृढमिति ततो वक्ष्यामि ते हितम् ॥ ६४ ॥
ஸர்வகுஹ்யதமம் பூய: ச்ருணு மே பரமம் வச: ।
இஷ்டோஅஸி மே த்ருடமிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம் ॥ 64 ॥
सर्वगुह्यतमं सर्वेभ्यः गुह्येभ्यः अत्यन्तगुह्यतमम् अत्यन्तरहस्यम् , उक्तमपि असकृत् भूयः पुनः शृणु मे मम परमं प्रकृष्टं वचः वाक्यम् ।
எல்லா ரஹஸ்யங்களிலும் மிகவும் ரஹஸ்யமானது உனக்கு கூறி இருந்தாலும் மறுபடியும் கூறப்போகும் எனது மேலான வச னத்தைக் கேள்.
न भयात् नापि अर्थकारणाद्वा वक्ष्यामि ; किं तर्हि ? इष्टः प्रियः असि मे मम दृढम् अव्यभिचारेण इति कृत्वा ततः तेन कारणेन वक्ष्यामि कथयिष्यामि ते तव हितं परमं ज्ञानप्राप्तिसाधनम् , तद्धि सर्वहितानां हिततमम् ॥ ६४ ॥
நான் பயத்தினாலோ அல்லது பொருளுக்கு ஆசைப்பட்டோ சொல்லவில்லை ஆனால் நீ எனக்கு திடமான அதாவது மாறு பட்ட மிகவும் பிரியனாய் இருக்கிறாய். ஆகையால் உனக்கு ஹித மான ஞானப்பிராப்தி சாதனத்தைக் கூறுகிறேன். அதுவே எல்லா ஹிதத்திற்குள் மிகவும் ஹிதமானது. (நன்மை தருபவைகளுள் மிகவும் நன்மை தரக்கூடியது) ஆகும்.
किं तत् इति, आह —
அது எது என்று கூறுகிறார்
मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु ।
मामेवैष्यसि सत्यं ते प्रतिजाने प्रियोऽसि मे ॥ ६५ ॥
மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு ।
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோஅஸி மே ॥ 65 ॥
मन्मनाः भव मच्चित्तः भव । मद्भक्तः भव मद्भजनो भव । मद्याजी मद्यजनशीलो भव । मां नमस्कुरु नमस्कारम् अपि ममैव कुरु ।
என்னையே சிந்திப்பவனாக ஆகு. என்னுடைய பக்தனாக வும், என்னையே பஜிப்பவனாகவும் ஆகு. என்னையே பஜனை செய். என்னையே நமஸ்காரம் செய்.
तत्र एवं वर्तमानः वासुदेवे एव समर्पितसाध्यसाधनप्रयोजनः मामेव एष्यसि आगमिष्यसि । सत्यं ते तव प्रतिजाने, सत्यां प्रतिज्ञां करोमि एतस्मिन् वस्तुनि इत्यर्थः ; यतः प्रियः असि मे ।
இவ்வாறு இருந்துகொண்டு வாசுதேவனாகிய என்னிடத்தில் எல்லா சாதன சாத்தியங்களின் பிரயோஜனங்களை அர்ப்பித்ததன் பிரயோஜனமாகிய என்னையே அடைவாய். இந்த விஷயத்தில் உனக்கு சத்தியம் செய்கிறேன். ஏனெனில் எனக்கு நீ பிரியமானவ னாய் இருக்கிறாய்.
एवं भगवतः सत्यप्रतिज्ञत्वं बुद्ध्वा भगवद्भक्तेः अवश्यंभावि मोक्षफलम् अवधार्य भगवच्छरणैकपरायणः भवेत् इति वाक्यार्थः ॥ ६५ ॥
இவ்வாறு பகவானுடைய சத்ய பிரதிக்ஞையை அறிந்து பக வானை பக்தி செய்வதினால் அவசியம் மோக்ஷபலன் கிடைக்கும் என்று அறிந்து பகவானை சரணடைதலிலேயே ஈடுபாடு ஏற்பட வேண்டும் என்பது வாக்கியார்த்தமாகும்.
कर्मयोगनिष्ठायाः परमरहस्यम् ईश्वरशरणताम् उपसंहृत्य, अथ इदानीं कर्मयोगनिष्ठाफलं सम्यग्दर्शनं सर्ववेदान्तसारविहितं वक्तव्यमिति आह —
கர்மயோக நிஷ்ட்டையின் பரமரஹஸ்யமான ஈஸ்வர சரணா கதியை முடித்தபின் இப்பொழுது கர்மயோகநிஷ்டையின் பல ரூபமாகிய எல்லா வேதாந்தங்களிலும் உணர்த்தப்பட்ட சம்யக் தர் சனத்தை (யதார்த்த ஞானத்தை) விளக்கவேண்டும் என்பதற்காக பகவான் கூறுகிறார்-
सर्वधर्मान्परित्यज्य मामेकं शरणं व्रज ।
अहं त्वा सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः ॥ ६६ ॥
ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ ।
அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: ॥ 66 ॥
सर्वधर्मान् सर्वे च ते धर्माश्च सर्वधर्माः तान् — धर्मशब्देन अत्र अधर्मोऽपि गृह्यते, नैष्कर्म्यस्य विवक्षितत्वात् , ‘नाविरतो दुश्चरितात्’ (क. उ. १ । २ । २४) ‘त्यज धर्ममधर्मं च’ (मो. ध. ३२९ । ४०) इत्यादिश्रुतिस्मृतिभ्यः ।
எல்லா தர்மங்களையும் என்கின்றபொழுது அதர்மத்தையும் கொள்ளவேண்டும். ஏன் எனில் நைஷ்கர்ம்யம் = கர்மமற்ற தன்மை, விளக்கப்பட்டுள்ளதால் (நாவிரதோ துச்சரிதாத் = எவன் கெட்ட நடத்தைகளிலிருந்து விரக்தி அடையவில்லையோ, த்யஜ தர்மமதர்மம் ச = தர்மத்தையும் அதர்மத்தையும் விட்டுவிடு என்று சுருதி ஸ்மிருதிகளிலும் கூறப்பட்டுள்ளது.
सर्वधर्मान् परित्यज्य संन्यस्य सर्वकर्माणि इत्येतत् । माम् एकं सर्वात्मानं समं सर्वभूतस्थितम् ईश्वरम् अच्युतं गर्भजन्मजरामरणवर्जितम् ‘अहमेव’ इत्येवं शरणं व्रज, न मत्तः अन्यत् अस्ति इति अवधारय इत्यर्थः ।
எல்லா தர்மங்களையும் தியாகம் செய் என்றால் எல்லா கர்மங் களையும் தியாகம் செய் என்று அர்த்தம் செய்யவேண்டும். எல்லா வற்றிற்கும் ஆத்மாவாயும், சமமாயும், எல்லா பூதங்களிடத்தும் நிலை பெற்றிருக்கும் ஈஸ்வரனாயும், நழுவுதல் அற்றவனாயும், கர்ப்பத்தில் இருத்தல், பிறப்பு, மூப்பு, மரணம் ஆகியவைகள் அற்றநானே என்று இவ்வாறு என் ஒருவனையே சரணம் அடை. என்னைத் தவிறவேறு ஒன்றுமில்லை என்று அறிந்துகொள் என்று பொருள்.
अहं त्वा त्वाम् एवं निश्चितबुद्धिं सर्वपापेभ्यः सर्वधर्माधर्मबन्धनरूपेभ्यः मोक्षयिष्यामि स्वात्मभावप्रकाशीकरणेन । उक्तं च ‘नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता’ (भ. गी. १० । ११) इति । अतः मा शुचः शोकं मा कार्षीः इत्यर्थः ॥ ६६ ॥
நான் இவ்வாறு நிச்சய புத்தியுள்ள உன்னை எல்லா தர்மாதர் மங்களினால் பந்த ரூபமான எல்லா பாபங்களில் இருந்தும் ஸ்வாத்ம பாவத்தை பிரகாசிக்கச் செய்து விடுவிப்பேன். நாசயாம் யாத்மபாவஸ்தோ ஞானதீபேன பாஸ்வதா = நான் இதயத்தில் இருக்கின்றபிரகாச மயமான ஞான தீபத்தினால் நாசம் செய்வேன், என்று கூறப்பட்டது ஆகையால் சோகம் (வருத்தம்) கொள்ளாதே என்பது பொருள்.
“शास्त्रस्य उपसंहारप्रकरणम्”
இந்த BG_C18_V66_B04_TA முடிக்கின்றபிரகரணம்
अस्मिन्गीताशास्त्रे परमनिःश्रेयससाधनं निश्चितं किं ज्ञानम् , कर्म वा, आहोस्वित् उभयम् ? इति ।
இந்த கீதா சாஸ்திரத்தில் நிச்ரேயஸ்ஸிற்கான அதாவது மோக்ஷத்திற்கான சாதனம் ஞானமா? கர்மமா? அல்லது இரண்டுமா?
कुतः संशयः ?
எதற்காக ௪ந்தேகம் ?
‘यज्ज्ञात्वामृतमश्नुते’ (भ. गी. १३ । १२) ‘ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम्’ (भ. गी. १८ । ५५) इत्यादीनि वाक्यानि केवलाज्ज्ञानात् निःश्रेयसप्राप्तिं दर्शयन्ति । ‘कर्मण्येवाधिकारस्ते’ (भ. गी. २ । ४७) ‘कुरु कर्मैव’ (भ. गी. ४ । १५) इत्येवमादीनि कर्मणामवश्यकर्तव्यतां दर्शयन्ति ।
யஜ்ஞாத்வா அம்ருதமச்னுதே = எதை அறிந்து அமிருதத்தை அடைகிறான், ததோ மாம் தத்வதோ ஞாத்வா விசதே ததனந்தரம் = பிறகு என்னை உள்ளவாறு அறிந்து அதன்பின் அடைகிறான், என்பது முதலிய வாக்கியங்களால் ஞானத்தினால் மட்டுமே மோக்ஷத்தை அடைய முடியும் என்று காண்பிக்கிறார். அவ்வாறே கர்மண்யேவாதிகாரஸ்தே, குரு கர்மைவ, முதலிய வாக்கியங்க ளால் கர்மங்களை அவசியம் கடைபிடிக்கவேண்டியதை உபதே சிக்கிறார்.
एवं ज्ञानकर्मणोः कर्तव्यत्वोपदेशात् समुच्चितयोरपि निःश्रेयसहेतुत्वं स्यात् इति भवेत् संशयः।
இவ்வாறு ஞானம் கர்மம் இவைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தைப் போதிப்பதால் இரண்டையும் சேர்த்தே (சமுச்சயம் செய்து) கடைபிடிப்பதே மோக்ஷத்திற்கு சாதனம் ஆகலாம் என்ற சந்தேகம் உண்டாகலாம்.
कस्यचित् । किं पुनरत्र मीमांसाफलम् ।
இங்கு இந்த விசாரத்தின் (மீமாம்சையின்) பலன்தான் என்ன?
ननु एतदेव — एषामन्यतमस्य परमनिःश्रेयससाधनत्वावधारणम् ; अतः विस्तीर्णतरं मीमांस्यम् एतत् ॥
அதனால் இவைகள் மூன்றினுள் ஏதாவது ஒன்றே மோக்ஷத் திற்கு சாதனமாகும். ஆகையால் இதற்கு விஸ்தாரமாக விசாரம் செய்ய வேண்டியது ஆகும்.
“सिद्धान्तप्रतिपादनम्”
(சித்தாந்தத்தின் BG_C18_V66_B11_TA)
आत्मज्ञानस्य तु केवलस्य निःश्रेयसहेतुत्वम् , भेदप्रत्ययनिवर्तकत्वेन कैवल्यफलावसायित्वात् ।
ஆத்மக்ஞானமே மோக்ஷத்திற்கு பரம சாதனமாகும். ஏன்எனில் பேதக்ஞானத்தை நிவர்த்தி செய்து கைவல்ய பதத்தில் முடிவதாய் இருப்பதால்.
क्रियाकारकफलभेदबुद्धिः अविद्यया आत्मनि नित्यप्रवृत्ता — ‘मम कर्म, अहं कर्तामुष्मै फलायेदं कर्म करिष्यामि’ इति इयम् अविद्या अनादिकालप्रवृत्ता ।
கிரியா காரக பலபேத புத்தி அவித்யையினால் ஆத்மாவிடத் தில் எப்பொழுதும் பிரவிர்த்திக்கின்றது. ஏனெனில் இது என்னு டைய கர்மா அதற்கு நான் கர்த்தாவாக இருக்கிறேன். நான் இந்த பலனுக்காக கர்மம் செய்யப்போகிறேன் என்று அவித்யையினால் அநாதிகாலமாக பிரவிருத்திக்கிறது.
अस्या अविद्यायाः निवर्तकम् ‘अयमहमस्मि केवलोऽकर्ता अक्रियोऽफलः ; न मत्तोऽन्योऽस्ति कश्चित्’ इत्येवंरूपम् आत्मविषयं ज्ञानम् उत्पद्यमानम् , कर्मप्रवृत्तिहेतुभूतायाः भेदबुद्धेः निवर्तकत्वात् ।
நான் ஒன்றே, அகர்த்தா கிரியை அற்றவன், பலன் அற்றவன், என்னைக் காட்டிலும் வேறு ஒன்றுமில்லை என்ற ஆத்மவிஷய மான ஞானம் இந்த அவித்யையை நாசம் செய்யக் கூடியது. ஏனெ னில் இவ்வாறாக உண்டாகும் ஆத்மஞானம் கர்ம பிரவிர்த்திக்கு காரணமான பேதபுத்தியை நீக்குவதால் ஆகும்.
तु - शब्दः पक्षव्यावृत्त्यर्थः — न केवलेभ्यः कर्मभ्यः, न च ज्ञानकर्मभ्यां समुच्चिताभ्यां निःश्रेयसप्राप्तिः इति पक्षद्वयं निवर्तयति ।
து என்ற சொல்லானது கர்மத்தினாலோ அல்லது ஞானகர்ம சமுச்சயத்தினாலோ மோக்ஷப் பிராப்தி அடைய முடியாது என்ப தால் இந்த இரண்டு பக்ஷங்களும் தள்ளப்பட்டதாகிறது.
अकार्यत्वाच्च निःश्रेयसस्य कर्मसाधनत्वानुपपत्तिः । न हि नित्यं वस्तु कर्मणा ज्ञानेन वा क्रियते ।
மோக்ஷமானது காரியம் அல்ல. ஆகையால் கர்மம் அதற்கு சாதனமாகாது. மேலும் எந்த ஒரு நித்ய வஸ்துவும் (ஸ்வத: ஸித்தவஸ்துவும்) கர்மத்தினாலோ, ஞானத்தினாலோ உண்டாக்க முடியாது.
केवलं ज्ञानमपि अनर्थकं तर्हि ?
அவ்வாறானால் கேவலம் ஞானமும் அர்த்தமற்றதாகி விடுமே?
न, अविद्यानिवर्तकत्वे सति दृष्टकैवल्यफलावसानत्वात् । अविद्यातमोनिवर्तकस्य ज्ञानस्य दृष्टं कैवल्यफलावसानत्वम् , रज्ज्वादिविषये सर्पाद्यज्ञानतमोनिवर्तकप्रदीपप्रकाशफलवत् । विनिवृत्तसर्पादिविकल्परज्जुकैवल्यावसानं हि प्रकाशफलम् ; तथा ज्ञानम् ।
அவ்வாறு அல்ல ஏனெனில் அவித்யை ஞானத்தினால் நிவர்த்தி ஆவதினாலேயே மோக்ஷத்தின் அடைவு ஆகிய முடி வான பலன் காணப்படுகிறது. அவித்யை ஆகிய தமஸை நிவர்த்தி செய்கின்றஞானத்தினுடைய கைவல்ய பலத்தின் அடைவானது பிரத்யக்ஷமாய் இருக்கிறது. எவ்வாறு கயிறு முதலிய விஷயத்தில் சர்ப்பம் முதலிய அக்ஞானமாகிய தமசை போக்கடிக்கக் கூடிய தீப பிரகாசத்தின் பலனாகிய சர்ப்பத்தின் (ஞானத்தை) விகல் பத்தை நீக்குதலே ரஜ்ஜுவை (கயிற்றை) மாத்திரம் முடிவாகக் கொண்டதோ அவ்வாறே ஞானமாகும்.
दृष्टार्थानां च च्छिदिक्रियाग्निमन्थनादीनां व्यापृतकर्त्रादिकारकाणां द्वैधीभावाग्निदर्शनादिफलात् अन्यफले कर्मान्तरे वा व्यापारानुपपत्तिः यथा, तथा दृष्टार्थायां ज्ञाननिष्ठाक्रियायां व्यापृतस्य ज्ञात्रादिकारकस्य आत्मकैवल्यफलात् कर्मान्तरे प्रवृत्तिः अनुपपन्ना इति न ज्ञाननिष्ठा कर्मसहिता उपपद्यते ।
வெட்டுதல், நெருப்பை உண்டாக்குவதற்காக கடைதல் முத லிய செய்கைகளில் கர்த்தா முதலிய காரகங்கள் செயல்படும்பொ ழுது இரண்டாக்குதல் நெருப்பை அடைதல் முதலிய பலன்களைக் காட்டிலும் வேறு பலன்களுடைய வேறு கர்மங்களில் எடுபடமுடி யாதது போல் பயனுடன் கூடிய ஞானநிஷ்ட்டையாகிய ஞாதா முத லிய காரகங்களில் ஆத்ம கைவல்யபலத்தைக் காட்டிலும் வேறு பலனுடைய வேறு கர்மங்களில் பிரவர்த்திக்கமாட்டான். ஆகை யால் ஞான நிஷ்ட்டையானது கர்மத்துடன் கூடியது ஆகாது.
भुज्यग्निहोत्रादिक्रियावत्स्यात् इति चेत् , न ; कैवल्यफले ज्ञाने क्रियाफलार्थित्वानुपपत्तेः । कैवल्यफले हि ज्ञाने प्राप्ते, सर्वतःसम्प्लुतोदकफले कूपतटाकादिक्रियाफलार्थित्वाभाववत् , फलान्तरे तत्साधनभूतायां वा क्रियायाम् अर्थित्वानुपपत्तिः ।
சாப்பிடுதல், அக்னிஹோத்ரம் முதலிய கிரியைகளுக்கு சமா னமாகலாம் என்றால், கூறுவது சரியல்ல. ஏனெனில் கைவல்ய பலத்தை உடைய ஞானத்தில் கர்ம பலத்தில் இச்சை ஏற்படாது. எவ்வாறு பூர்ணமாக நீர் பெருகுகின்றபெரும் குளம் இருக்கையில் கிணறு, சிறு குளம் முதலியவைகளை ஏற்படுத்துவதற்கு விரும்பு வதில்லையோ அவ்வாறே வேறு பலனை அடைவதற்கான சாதனமாகிய வேறு கர்மங்களில் விருப்பமானது அமையாது.
न हि राज्यप्राप्तिफले कर्मणि व्यापृतस्य क्षेत्रमात्रप्राप्तिफले व्यापारः उपपद्यते, तद्विषयं वा अर्थित्वम् ।
ஒரே ராஜ்யத்தையே அடைய விருப்பமுற்று அதற்கான கர் மத்தில் ஈடுபட்டவன் சிறிய வயலை அடைவதற்காக முயற்சியும், விருப்பமும் கொள்ளமாட்டானோ அவ்வாறு ஆகும்.
तस्मात् न कर्मणोऽस्ति निःश्रेयससाधनत्वम् । न च ज्ञानकर्मणोः समुच्चितयोः । नापि ज्ञानस्य कैवल्यफलस्य कर्मसाहाय्यापेक्षा, अविद्यानिवर्तकत्वेन विरोधात् ।
ஆகையால் ஒருநாளுகமானது மோக்ஷத்திற்கு சாதன மாகாது. அவ்வாறேஞான கர்ம சமுச்சயமும் ஆகாது. மோக்ஷத் தைப் பலமாக உடைய ஞானத்திற்கு கர்மத்தினுடைய சஹாயத்தை யும் (உதவியையும்) அபேக்ஷிக்கவில்லை. ஏனெனில் ஞானம் அவித்யையை நாசம் செய்கிறது. ஆகையால் ஞானம் கர்மத்திற்கு விரோதியாகும்.
न हि तमः तमसः निवर्तकम् । अतः केवलमेव ज्ञानं निःश्रेयससाधनम् इति ।
இருளை இருள் போக்காது அல்லவா. ஆகையால் ஞானமாத் திரமே மோக்ஷத்திற்கு சாதனமாகும்.
न ; नित्याकरणे प्रत्यवायप्राप्तेः, कैवल्यस्य च नित्यत्वात् । यत् तावत् केवलाज्ज्ञानात् कैवल्यप्राप्तिः इत्येतत् , तत् असत् ; यतः नित्यानां कर्मणां श्रुत्युक्तानाम् अकरणे प्रत्यवायः नरकादिप्राप्तिलक्षणः स्यात् ।
இவ்வாறு கூறுவது சரியல்ல. நித்யகர்மாவை செய்யாததினால் தீங்கு விளையும். மோக்ஷமோ நித்யமானது. இவ்வாறு இருப்பதி னால் ஞானத்தினால் மாத்திரம் மோக்ஷத்தின் அடைவு உண்டா கும் எனில், அது பொருந்தாது. ஏனெனில் சுருதியில் விதிக்கப் பட்ட நித்யகர்மங்களை அனுஷ்ட்டிக்காவிடில் நரகம் முதலிய தீமைகள் உண்டாகும்.
ननु एवं तर्हि कर्मभ्यो मोक्षो नास्ति इति अनिर्मोक्ष एव । नैष दोषः ; नित्यत्वात् मोक्षस्य । नित्यानां कर्मणाम् अनुष्ठानात् प्रत्यवायस्य अप्राप्तिः, प्रतिषिद्धस्य च अकरणात् अनिष्टशरीरानुपपत्तिः, काम्यानां च वर्जनात् इष्टशरीरानुपपत्तिः, वर्तमानशरीरारम्भकस्य च कर्मणः फलोपभोगक्षये पतिते अस्मिन् शरीरे देहान्तरोत्पत्तौ च कारणाभावात् आत्मनः रागादीनां च अकरणे स्वरूपावस्थानमेव कैवल्यमिति अयत्नसिद्धं कैवल्यम् इति ।
இவ்வாறானால் கர்மங்களினால் மோக்ஷம் கிடையாது என்ப தால் மோக்ஷமே இல்லை என்றாகிவிடும். ஆனால் மோக்ஷம் நித்தியமாய் இருப்பதால் இந்த தோஷம் ஏற்படாது. நித்ய கர்மங் களை அனுஷ்ட்டானம் செய்வதால் தீமை உண்டாகாது. நிஷித்த (தடை செய்யப்பட்ட) கர்மங்களை அனுஷ்ட்டிக்காததினால் விரும்பத்தகாத சரீரத்தின் அடைவு உண்டாவதில்லை. காமிய கர் மங்களை அனுஷ்ட்டிக்காததால் விருப்பமுள்ள சரீரத்தின் அடைவும் ஏற்படாது. அவ்வாறே இப்பொழுது உள்ள சரீரம் எடுத்ததற்கு காரணமான பிராரப்த கர்மமும் அதன் பலன் அனுபவித்து தீர்ந்த பின் இந்த சரீரம் வீழ்ந்த பின் வேறு தேஹத்தை எடுப்பதற்கான காரணம் இல்லாமையால் சரீரத்தில் உள்ள பற்றினால் ஏற்படும் நரகம் முதலியவைகள் நீங்கி தன் சுவரூபத்திலேயே நிலைத்தல் தான் மோக்ஷம் என்பதினால் பிரயத்தனம் இல்லாமலேயே மோக்ஷம் அடைய முடியும் எனில்.
अतिक्रान्तानेकजन्मान्तरकृतस्य स्वर्गनरकादिप्राप्तिफलस्य अनारब्धकार्यस्य उपभोगानुपपत्तेः क्षयाभावः इति चेत् ,
கடந்த பல ஜன்மங்களில் செய்த ஸ்வர்க்கம் நரகம் முதலிய வற்றை பலனாக உடையதும் இதுவரை பயனைக் கொடுக்கத் தலைப்படாத சஞ்சித கர்மங்களை அனுபவிக்காததால் அந்த கர்மங்கள் அழிந்து போகவில்லை என்றால்?
न ; नित्यकर्मानुष्ठानायासदुःखोपभोगस्य तत्फलोपभोगत्वोपपत्तेः । प्रायश्चित्तवद्वा पूर्वोपात्तदुरितक्षयार्थं नित्यं कर्म । आरब्धानां च कर्मणाम् उपभोगेनैव क्षीणत्वात् अपूर्वाणां च कर्मणाम् अनारम्भे अयत्नसिद्धं कैवल्यमिति ।
இவ்வாறு கூறுவது சரியல்ல. ஏனெனில் நித்யகர்மானுஷ்ட்டா னம் செய்யும்பொழுது உண்டாகும் பரிசிரமாகிய துக்கானுபவமா னது, அந்த (பாப) கர்மத்தின் பலனை அனுபவித்தாகிறது. அல்லது பிராயச்சித்த கர்மா போல் நித்ய கர்மாவும் முன்பு செய்த பாபத்தை நாசம் செய்வதாய் இருக்கிறது. பிராரப்த கர்மமானது அனுபவிப்ப தாலேயே நாசம் அடைகிறது. அபூர்வ கர்மங்கள் (புதிய கர்மங்கள்) ஆரம்பம் ஆகாததினால் பிரயத்தனம் இல்லாமலேயே மோக்ஷம் மோஹம் அடையக்கூடியதாகிறது.
न ; ‘तमेव विदित्वातिमृत्युमेति नान्यः पन्था विद्यतेऽयनाय’ (श्वे. उ. ३ । ८) इति विद्याया अन्यः पन्थाः मोक्षाय न विद्यते इति श्रुतेः, चर्मवदाकाशवेष्टनासम्भववत् अविदुषः मोक्षासम्भवश्रुतेः, ‘ज्ञानात्कैवल्यमाप्नोति’ ( ? ) इति च पुराणस्मृतेः ;
நீர் கூறும் சித்தாந்தம் சரியல்ல. ஏனெனில் தமேவ விதித் துவாதிம்ருத்யுமேதி நான்ய: பந்தா வித்யதே அயனாய = அதை அறிந்து மிருத்யுவைக் கடக்கிறான். இதைத் தவிற வேறு மார்க்கம் இல்லை என்று மோக்ஷத்தை அடைவதற்கு வித்யையைத் தவிற (ஞானத்தை தவிற) வேறு வழியில்லை என்று சுருதியினாலும் உரைக்கப்பட்டுள்ளது. அவ்வாறே ஆகாசத்தை சுருட்டுவது எவ்வாறு அசாத்தியமோ அவ்வாறு மோக்ஷம் என்பது அக்ஞானிக்கு அசாத்தியம் என்று சுருதி கூறுகிறது. ஞானத்தி னாலேயே மோக்ஷத்தை அடைகிறான் என்று புராணங்களிலும் ஸ்மிருதிகளிலும் கூறப்பட்டுள்ளது.
अनारब्धफलानां पुण्यानां कर्मणां क्षयानुपपत्तेश्च । यथा पूर्वोपात्तानां दुरितानाम् अनारब्धफलानां सम्भवः, तथा पुण्यानाम् अनारब्धफलानां स्यात्सम्भवः । तेषां च देहान्तरम् अकृत्वा क्षयानुपपत्तौ मोक्षानुपपत्तिः ।
பலனைக் கொடுக்கத் தலைபடாத புண்யகர்மங்கள் நாசம் அடையாது. எவ்வாறு முன்பு செய்த பாபகர்மங்கள் பலனைக் கொடுக்க தலைப்படவில்லையோ அவ்வாறே புண்ய கர்மங்க ளும் பலனைக் கொடுக்கத் தலைப்படாததாகிறது. அவர்களுக்கு வேறு தேஹம் எடுக்காமல் அவைகளை நாசமாக்க முடியாததால் மோக்ஷமானது கிடைக்காது.
धर्माधर्महेतूनां च रागद्वेषमोहानाम् अन्यत्र आत्मज्ञानात् उच्छेदानुपपत्तेः धर्माधर्मोच्छेदानुपपत्तिः ।
இதைத் தவிர புண்யம் பாபங்களுக்கு காரணங்களாகிய ராகம், துவேஷம் மோஹம் இவைகளை ஆத்மக்ஞானம் இல்லா மல் வேருடன் போக்க முடியாததால் புண்ய, பாபங்களையும் போக்கமுடியாது.
नित्यानां च कर्मणां पुण्यफलत्वश्रुतेः, ‘वर्णा आश्रमाश्च स्वकर्मनिष्ठाः’ (गौ. ध. सू. २ । २ । २९) इत्यादिस्मृतेश्च कर्मक्षयानुपपत्तिः ॥
மேலும் நித்ய கர்மாக்களுக்கு புண்யலோகத்தின் அடைவு ஸ்ருதிகளில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறே வர்ணா:ஆச்ரமாச்ச ஸ்வகர்மநிஷ்ட்டா: = என்று ஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளது.
ये तु आहुः — नित्यानि कर्माणि दुःखरूपत्वात् पूर्वकृतदुरितकर्मणां फलमेव, न तु तेषां स्वरूपव्यतिरेकेण अन्यत् फलम् अस्ति, अश्रुतत्वात् , जीवनादिनिमित्ते च विधानात् इति । न अप्रवृत्तानां कर्मणां फलदानासम्भवात् ; दुःखफलविशेषानुपपत्तिश्च स्यात् ।
நித்யகர்மங்கள் துக்கரூபமாய் இருப்பதால் முன்பு செய்த பாப கர்மங்களின் பலனே ஆகும். அதைத் தவிர வேறான பலன் உண்டு என்று சுருதியில் கேட்கப்படாததாலும் ஜீவித்திருப்பதற்கா கவே விதிக்கப்பட்டுள்ளது என்று எவர்கள் கூறுகிறார்களோ அந்த கொள்கை சரியானது அல்ல. ஏனெனில் கர்மபலத்தைத் தரக்கூடிய கர்மங்கள் செயல்பட துவங்கவில்லை. ஆகையால் பலன் ஏற்படாது. அவ்வாறே நித்யகர்மா அனுஷ்ட்டிப்பதில் ஏற்படும் சிரமமும் வேறு கர்மத்தின் பலனேயாகும்.
यदुक्तं पूर्वजन्मकृतदुरितानां कर्मणां फलं नित्यकर्मानुष्ठानायासदुःखं भुज्यत इति, तदसत् । न हि मरणकाले फलदानाय अनङ्कुरीभूतस्य कर्मणः फलम् अन्यकर्मारब्धे जन्मनि उपभुज्यते इति उपपत्तिः ।
முன் ஜன்மங்களில் செய்த பாபகர்மங்களின் பலனால் தான் நித்யகர்மானுஷ்ட்டானத்தால் ஏற்படும் சிரமமாகிய துக்கத்தை அனுபவிக்கின்றான் என்று நீ கூறினாயாகில் அது சரியல்ல. அவ்வாறே மரணகாலத்தில் பலனைக் கொடுக்கக்கூடிய கர்மத்தின் முனையே கிளம்பாத கர்மத்தினால் வேறு கர்மத்தினால் ஆரம்பிக் கப்படும் ஜன்மத்தில் அனுபவிப்பது என்பது பொருந்தாது.
अन्यथा स्वर्गफलोपभोगाय अग्निहोत्रादिकर्मारब्धे जन्मनि नरकफलोपभोगानुपपत्तिः न स्यात् ।
அவ்வாறெனில் ஸ்வர்க்க பல போகத்தின் பொருட்டு அக்னிஹோத்ராதி கர்மங்களால் ஆரம்பிக்கப்பட்ட ஜன்மத்திலேயே நரகத்தைத் தோற்றுவிக்கக்கூடிய கர்மபலனை அனுபவித்தல் பொருந்தாமை ஆகாது (பொருந்தும்)
तस्य दुरितस्य दुःखविशेषफलत्वानुपपत्तेश्च — अनेकेषु हि दुरितेषु सम्भवत्सु भिन्नदुःखसाधनफलेषु नित्यकर्मानुष्ठानायासदुःखमात्रफलेषु कल्प्यमानेषु द्वन्द्वरोगादिबाधनं निर्निमित्तं न हि शक्यते कल्पयितुम् , नित्यकर्मानुष्ठानायासदुःखमेव पूर्वोपात्तदुरितफलं न शिरसा पाषाणवहनादिदुःखमिति ।
மேலும் நித்திய கர்மாநுஷ்ட்டானத்தினால் ஏற்படும் சிரம மாகிய துக்கம் பாபங்களின் பல ரூப துக்கமாக ஆகாததால் கூறுவது பொருந்தாது. ஏனெனில் மேலும் அநேக துக்க ரூப பலன்களை மாத்திரமே உண்டாக்கும் அநேக விதமாகக் கல்பிக் கப்படுகின்ற துக்க பலனைக் கொடுக்கக்கூடிய சாதனங்களில் த்வந்துவங்கள், வியாதி முதலியவைகளுக்கு காரணமாக கூற முடியாது. அவ்வாறே நித்ய கர்மானுஷ்ட்டானத்தினால் ஏற்படும் ஆயாச துக்கம் முன் செய்த பாபகர்மங்களின் பலன் இல்லை யென்றால் தலையில் கல்லை சுமத்தல் அதன் பலனாகாதா?
अप्रकृतं च इदम् उच्यते — नित्यकर्मानुष्ठानायासदुःखं पूर्वकृतदुरितकर्मफलम् इति ।
அன்றியும் நித்யகர்மங்களை அநுஷ்டிப்பதிலேயுள்ள சிரமமும், துக்கமும் முன்செய்த பாப கர்மத்தின் பயன் என்பது பிரகரணத்தின் கருத்தல்லாததாக இது கூறப்படுகின்றது.
कथम् ?
எவ்வாறு?
अप्रसूतफलस्य हि पूर्वकृतदुरितस्य क्षयः न उपपद्यत इति प्रकृतम् । तत्र प्रसूतफलस्य कर्मणः फलं नित्यकर्मानुष्ठानायासदुःखम् आह भवान् , न अप्रसूतफलस्येति ।
முன் செய்த பாப கர்மத்தின் பலன் கொடுக்கத் தலைப்படாத பொழுது அந்த பலத்திற்கு நாசம் ஏற்படாது என்பது பிரகரணத் தின் கருத்து. அந்த இடத்தில் வெளிப்பட்ட கர்மத்தின் பலன் நித்ய கர்மானுஷ்ட்டானத்தினால் உண்டாகும் ஆயாச துக்கம் என்று பக வான் கூறினார். ஆனால் அது வெளிப்படாத பாப கர்மத்தின் பல னைக் கூறவில்லை.
अथ सर्वमेव पूर्वकृतं दुरितं प्रसूतफलमेव इति मन्यते भवान् , ततः नित्यकर्मानुष्ठानायासदुःखमेव फलम् इति विशेषणम् अयुक्तम् । नित्यकर्मविध्यानर्थक्यप्रसङ्गश्च, उपभोगेनैव प्रसूतफलस्य दुरितकर्मणः क्षयोपपत्तेः ।
ஆகையால் முன்பு செய்த எல்லா பாபகர்மங்கள், பலனை கொடுக்கத் தலைப்பட்டது என்று நீங்கள் கருதினால் நித்யகர்மா னுஷ்டானத்தினால் ஏற்படும் ஆயாச துக்கமே பலம் என்பது பொருந்தாது. அவ்வாறே அனுபவித்துத்தான் பலனைக் கொடுக் கத் தலைப்பட்ட பாபகர்மங்களின் வினை தீரும் என்று நித்யகர் மங்களை விதிக்கும் சாஸ்திரம் வீண் ஆகிவிடும்.
किञ्च, श्रुतस्य नित्यस्य कर्मणः दुःखं चेत् फलम् , नित्यकर्मानुष्ठानायासादेव तत् दृश्यते व्यायामादिवत् ; तत् अन्यस्य इति कल्पनानुपपत्तिः ।
மேலும் வேதத்தில் விதிக்கப்பட்ட நித்யகர்மத்தை அனுஷ்ட் டானம் செய்வதால் உண்டாகும் ஆயாச துக்கமே தேஹ பயிற்சி செய்யும் பொழுது உண்டாகும் சிரமம் போல் கர்மத்தின் பலன் என்றால் அதை வேறு கர்மத்தின் பலன் என்று கொள்ளக்கூடாது.
जीवनादिनिमित्ते च विधानात् , नित्यानां कर्मणां प्रायश्चित्तवत् पूर्वकृतदुरितफलत्वानुपपत्तिः । यस्मिन् पापकर्मणि निमित्ते यत् विहितं प्रायश्चित्तम् न तु तस्य पापस्य तत् फलम् । अथ तस्यैव पापस्य निमित्तस्य प्रायश्चित्तदुःखं फलम् , जीवनादिनिमित्तेऽपि नित्यकर्मानुष्ठानायासदुःखं जीवनादिनिमित्तस्यैव फलं प्रसज्येत, नित्यप्रायश्चित्तयोः नैमित्तिकत्वाविशेषात् ।
ஜீவித்தல் முதலியவற்றிற்காக விதிக்கப்பட்ட நித்யகர்மங்கள் பிராயச்சித்த கர்மங்களைப் போல் முன்பு செய்த பாபகர்மங்களின் பலனாக ஏற்றுக்கொள்ள முடியாது. எப்பொழுது பாப கர்மங்க ளுக்கு பிராயச்சித்த கர்மம் விதிக்கப்பட்டதோ அப்பொழுது அது பாபத்தின் பலனாகாது. ஆகையால் அந்த பாப கர்மத்தின் கார ணத்திற்குத்தான் பிராயச்சித்த கர்மத்தை அனுஷ்ட்டிப்பதினால் ஏற்படும் ஆயாச துக்கம் பலன் எனில் ஜீவித்தல் முதலியவற்றின் காரணத்திற்கும் நித்யகர்மானுஷ்ட்டானத்தால் ஏற்படும் ஆயாச துக்கம் பலனாகும். ஆகையால் நித்ய கர்மமும், பிராயச் சித்தகர்ம மும் ஒரே வகைதான்.
किञ्च अन्यत् — नित्यस्य काम्यस्य च अग्निहोत्रादेः अनुष्ठानायासदुःखस्य तुल्यत्वात् नित्यानुष्ठानायासदुःखमेव पूर्वकृतदुरितस्य फलम् , न तु काम्यानुष्ठानायासदुःखम् इति विशेषो नास्तीति तदपि पूर्वकृतदुरितफलं प्रसज्येत ।
மேலும் வேறு ஒரு தோஷம் உள்ளது. அது என்னவெனில் நித்யகர்மாவை அனுஷ்ட்டிப்பதால் உண்டாகும் துக்கமும், காமியகர்மங்களாகிய அக்னி ஹோத்திராதிகள் செய்யும்பொழுது ஏற்படும் சிரமமும் ஒன்றேயாகும். ஆதலால் நித்யகர்மாவினால் உண்டாகும் சிரமம் முன்பு செய்த பாப கர்மத்தின் பலன் என்றும், காமிய கர்ம அனுஷ்ட்டானத்தினால் ஏற்படும் சிரமமாகிய துக்கம் அதன் பலனாகாது என்று இவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு விசேஷ காரணம் ஒன்றுமில்லை. ஆகையால் காமிய கர்மங்களை அனுஷ்ட்டித்தால் உண்டாகும் ஆயாச துக்கமும் முன்பு செய்த பாபகர்மத்தின் பலனே ஆகும் என்று ஆகிவிடும்.
तथा च सति नित्यानां फलाश्रवणात् तद्विधानान्यथानुपपत्तेश्च नित्यानुष्ठानायासदुःखं पूर्वकृतदुरितफलम् इति अर्थापत्तिकल्पना च अनुपपन्ना,
அவ்வாறு இருக்கையில் வேதத்தில் நித்யகர்மாக்களுக்கு பலன் கூறாமையால் அவற்றைவிதித்தல் என்பது பொருந்தாததாய் இருப்பதால் நித்ய அனுஷ்ட்டான ஆயாச துக்கம் முன்பு செய்த பாபத்தின் பலனே என்றஅர்த்தா பத்தி பிரமாணம் பொருந்தாது.
एवं विधानान्यथानुपपत्तेः अनुष्ठानायासदुःखव्यतिरिक्तफलत्वानुमानाच्च नित्यानाम् ।
இவ்வாறாக நித்ய கர்மவிதியானது பொருந்தாததால் நித்யகர் மங்களை அனுஷ்ட்டித்தலால் உண்டாகும் ஆயாச துக்கங்களைக் காட்டிலும் வேறு பயன் இருக்கிறது என்று அனுமானிக்க வேண்டிவரும்.
विरोधाच्च ; विरुद्धं च इदम् उच्यते — नित्यकर्मणा अनुष्टीयमानेन अन्यस्य कर्मणः फलं भुज्यते इति अभ्युपगम्यमाने स एव उपभोगः नित्यस्य कर्मणः फलम् इति, नित्यस्य कर्मणः फलाभाव इति च विरुद्धम् उच्यते ।
அது விரோதமாய் இருப்பதால் நித்ய கர்மாவை அனுஷ்ட்டித்த லால் வேறு கர்மாவின் பலனை அனுபவிக்கிறான் என்று கூறுதல் பொருத்தமாகாது. ஏனெனில் அவ்வாறு எடுத்துக்கொண்டால் அந்த அனுபவிக்கப்பட்ட பலனும் நித்ய கர்மாவின் பலனாகும் என்பதும் நித்யகர்மாவிற்கு பலனில்லை என்று கூறுவதும் விரோதமாகும்.
किञ्च, काम्याग्निहोत्रादौ अनुष्ठीयमाने नित्यमपि अग्निहोत्रादि तन्त्रेणैव अनुष्ठितं भवतीति तदायासदुःखेनैव काम्याग्निहोत्रादिफलम् उपक्षीणं स्यात् , तत्तन्त्रत्वात् ।
மேலும் காமிய அக்கினிஹோத்திரம் முதலியவைகள் அனுஷ்ட்டிக்கும்பொழுது நித்ய அக்னி ஹோத்திராதிகளும் ஒரே முறையிலேயே அனுஷ்ட்டிக்கப்படுகின்றன. ஆகையால் அந்த ஆயாச துக்கத்தை அனுபவிப்பதாலேயே காம்ய அக்னி ஹோத்திராதிகளின் பலனும் நாசமாகிவிடும். ஏனெனில் பலன் அதனுடைய அதீனமாய் இருப்பதால் ஆகும்.
अथ काम्याग्निहोत्रादिफलम् अन्यदेव स्वर्गादि, तदनुष्ठानायासदुःखमपि भिन्नं प्रसज्येत । न च तदस्ति, दृष्टविरोधात् ; न हि काम्यानुष्ठानायासदुःखात् केवलनित्यानुष्ठानायासदुःखं भिन्नं दृश्यते ।
இவ்வாறு கருதினால் காமிய அக்னிஹோத்திரம் முதலியவற் றின் பலனாகிய சுவர்க்கம் முதலியவைகள் வேறு அதை அனுஷ்ட்டிப்பதில் உள்ள ஆயாச துக்கபலன் வேறு என்று ஆகி விடும். இதில் விரோதம் காணப்படுவதால், அவ்வாறு அல்ல. காமிய கர்மாக்கள் அனுஷ்ட்டிக்கப்படும் ஆயாச துக்கத்தைக் காட்டிலும் கேவல நித்யகர்மாவை அனுஷ்ட்டித்தலால் ஏற்படும் ஆயாச துக்கம் வேறு அல்ல.
किञ्च अन्यत् — अविहितमप्रतिषिद्धं च कर्म तत्कालफलम् , न तु शास्त्रचोदितं प्रतिषिद्धं वा तत्कालफलं भवेत् । तदा स्वर्गादिष्वपि अदृष्टफलाशासनेन उद्यमो न स्यात् ।
மேலும் விதிக்கப்பட்ட, விலக்கப்பட்ட கர்மங்களைக் காட்டி லும் வேறு கர்மா அதை அனுஷ்ட்டிக்கும் சமயத்திலேயே பல னைக் கொடுப்பதாய் இருக்கிறது. சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட, விலக்கப்பட்ட கர்மமோ அந்த சமயத்திலேயே பலனைக் கொடுப் பதாய் இல்லை. அவ்வாறு கொடுப்பதாய் இருந்தால் அதிருஷ்ட்ட பலன்களாகிய ஸ்வர்க்கம் முதலிய பலன்களைக் குறித்து ஒருவ ரும் முயற்சி செய்யமாட்டார்கள்.
अग्निहोत्रादीनामेव कर्मस्वरूपाविशेषे अनुष्ठानायासदुःखमात्रेण उपक्षयः नित्यानाम् ; स्वर्गादिमहाफलत्वं काम्यानाम् , अङ्गेतिकर्तव्यताद्याधिक्ये तु असति, फलकामित्वमात्रेणेति ।
அக்னிஹோத்ரம் முதலிய இயல்பாகவே பேதம் இல்லாது இருந்தால் அந்த நித்யகர்மா அனுஷ்ட்டிக்கும்பொழுது ஏற்படும் ஆயாச துக்கத்தை அனுபவிப்பதாலேயே வேறு பலன் இல்லாமல் போவதும், காம்ய கர்மாவை அனுஷ்ட்டிப்பதற்கு நித்யகர்மாவை அனுஷ்ட்டிப்பதில் உள்ள சிரமமே இருக்கிறது. அதற்கு குறை வாக இல்லை. இருந்தபோதிலும் பலனை விரும்புவதாலேயே சுவர்க்கம் முதலிய பலன்கள் கிடைக்கும் என்று கல்பிக்கமுடியாது.
तस्माच्च न नित्यानां कर्मणाम् अदृष्टफलाभावः कदाचिदपि उपपद्यते । अतश्च अविद्यापूर्वकस्य कर्मणः विद्यैव शुभस्य अशुभस्य वा क्षयकारणम् अशेषतः, न नित्यकर्मानुष्ठानम् ।
ஆகையால் எப்பொழுதும் நித்ய கர்மாவிற்கு அதிருஷ்ட்ட பலனே ஏற்படாது என்பது ஒருபொழுதும் சித்திக்காது. ஆகை யால் எல்லா சுப, அசுப கர்மங்களுக்கும் அவித்யை காரணமாய் இருப்பதால் ஞானத்தினாலேயே அவை முற்றிலும் நாசத்தை அடையும், நித்ய கர்மானுஷ்ட்டானத்தினால் அல்ல என்பது சித் திக்கிறது.
अविद्याकामबीजं हि सर्वमेव कर्म । तथा च उपपादितमविद्वद्विषयं कर्म, विद्वद्विषया च सर्वकर्मसंन्यासपूर्विका ज्ञाननिष्ठा —
ஏனெனில் எல்லாக் கர்மங்களும் அவித்யை, காமம் இவை களை காரணமுடையதாய் இருக்கிறது. அவ்வாறேஉணர்த் தப்பட்டது. கர்மம் அவித்வான் (அக்ஞானி) விஷயமாகும். வித்வா னுடைய (ஞானியினுடைய) விஷயம் எல்லாக் கர்மங்களையும் தியாகம் செய்தலுடன் கூடிய ஞானநிஷ்ட்டையாகும்.
உபௌ தௌ ந விஜானித: = அவ்விருவரும் அறியவில்லை. வேதாவிநாசினம் நித்யம் = அழியாததாக நித்யம் அறிகிறான். ஞானயோகேன சாங்கியானாம், கர்மயோகேன யோகினாம் = ஞான யோகத்தால் சாங்கியர்களுக்கும் கர்ம யோகத்தால் கர்மயோ கிகளுக்கும், அக்ஞானாம் கர்மசங்கினாம் = கர்மத்தில் பற்றுள்ள அக்ஞானிகளுக்கு தத்வவித்து = தத்துவத்தை அறிந்தவன், குணா குணேஷு வர்தந்தே இதி மத்வா ந சஜ்ஜதே = குணங்கள் குணங்க ளிலேயே இருக்கின்றன என்று அதில் பந்தப்படுவதில்லை. சர்வ கர்மாணி மனஸா ஸந்யஸ்யாஸ்தே = எல்லாக் கர்மங்களையும் சய்து விட்டு இருக்கிறான். நைவ கிஞ்ச்சித் கரோமீதி யுக்தோ மன்யேத தத்வவித் = தத்துவத்தை அறிந்த ஞானி நான் செய்தேன் என்று சிறிதும் நினைப்பதில்லை, என்றால் அக்ஞானி தான் அவ்வாறு நினைப்பான்.
आरुरुक्षोः कर्म कारणम् , आरूढस्य योगस्थस्य शम एव कारणम् ; उदाराः त्रयोऽपि अज्ञाः, ‘ज्ञानी त्वात्मैव मे मतम्’ (भ. गी. ७ । १८)
சித்த சுத்தி அடைந்து மேல் நிலையை அடைய விரும்புபவ னுக்கு கர்மம் சாதனமாகும். சித்தி அடைந்தவனாய் ஞான யோகத் தில் நிற்பதற்கு சமமே, (அகக்கரண தண்டமே) காரணமாகும். அக் ஞானிகளாகிய மூன்று வகையான பக்தர்களும் மேலானவர்களே. ஆனாலும் ஞானியே ஆத்மாவாகிய எனது சொரூபமாகும் என் பது என் கருத்தாகும்.
‘अज्ञाः कर्मिणः गतागतं कामकामाः लभन्ते’ ; अनन्याश्चिन्तयन्तो मां नित्ययुक्ताः यथोक्तम् आत्मानम् आकाशकल्पम् उपासते ।
அக்ஞானிகளாகிய கர்மிகள் வந்து போகின்றகாமனைகளை அடைகிறார்கள். எப்பொழுதும் வேறு ஒன்றையும் நினைக்காமல் முன்பு கூறப்பட்ட லக்ஷணங்களோடு கூடிய ஆகாயத்திற்கு ஒப்பா யும், நிர்மலமாயும் உள்ள ஆத்மாவாகிய என்னையே சிந்தித்துக் கொண்டு உபாசிக்கிறார்கள்.
‘ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते’, अर्थात् न कर्मिणः अज्ञाः उपयान्ति ।
ததாமி புத்தியோகம் தம் தேன மாமுபயாந்தி தே = நான் அவர்களுக்கு புத்தியோகத்தைத் தருகிறேன் அதனால் அவர்கள் என்னை அடைகிறார்கள், என்பதால் கர்மிகளாகிய அக்ஞானிகள் என்னை அடையமாட்டார்கள் என்பதாகும்.
भगवत्कर्मकारिणः ये युक्ततमा अपि कर्मिणः अज्ञाः, ते उत्तरोत्तरहीनफलत्यागावसानसाधनाः ;
பகவானின் பொருட்டு கர்மத்தைச் செய்யும் உத்தமமான யோகிகளாயினும் கர்மிகளான அக்ஞானிகளே. அவர்கள் பலனை தியாகம் செய்கின்றவரையில் உள்ள எல்லா தாழ்ந்த சாதனங்களில் ஈடுபட்டவர்களாகிறார்கள்.
अनिर्देश्याक्षरोपासकास्तु ‘अद्वेष्टा सर्वभूतानाम्’ (भ. गी. १२ । १३) इति आध्यायपरिसमाप्ति उक्तसाधनाः क्षेत्राध्यायाद्यध्यायत्रयोक्तज्ञानसाधनाश्च ।
இவ்வாறுதான் இருக்கிறது என்று நிர்தேசம் செய்யமுடியாத அக்ஷரத்தை உபாசிப்பவர்கள், அத்வேஷ்ட்டா சர்வபூதானாம் = எல்லா பூதங்களிடத்தும் துவேஷம் இல்லாதவன், என்பது முதல் அத்தியாயம் முடியும் வரையிலும் கூறப்பட்ட சாதனங்களையும், பதிமூன்றாவது அத்யாயம் முதல் மூன்று அத்தியாயங்களிலும் கூறப்பட்ட சாதனங்களை உடையவர்கள்.
अधिष्ठानादिपञ्चकहेतुकसर्वकर्मसंन्यासिनां आत्मैकत्वाकर्तृत्वज्ञानवतां परस्यां ज्ञाननिष्ठायां वर्तमानानां भगवत्तत्त्वविदाम् अनिष्टादिकर्मफलत्रयं परमहंसपरिव्राजकानामेव लब्धभगवत्स्वरूपात्मैकत्वशरणानां न भवति ; भवत्येव अन्येषामज्ञानां कर्मिणामसंन्यासिनाम् इत्येषः गीताशास्त्रोक्तकर्तव्यार्थस्य विभागः ॥
அதிஷ்ட்டானம் (உடம்பு) முதலிய ஐந்து காரணங்களுடன் கூடிய எல்லா கர்மங்களையும் தியாகம் செய்த, ஆத்மா ஒன்றே என்றும் கிரியை அற்றவர் என்றும் அறிந்த, மேலான ஞான நிஷ்ட்டையில் நிலைத்திருக்கின்ற பகவானுடைய தத்துவத்தை அறிந்த, பகவானுடைய ஸ்வரூபமாகிய ஆத்ம ஏகத்வத்தை சர ணடைந்த பரமஹம்ஸ பரிவ்ராஜக சந்நியாசிகளுக்கு பாவம், புண் யம், மிச்ரம் ஆகிய கர்மபலன்கள் மூன்றும் கிடையாது. மற்றவர் கள் சந்நியாசம் அற்றவர்களாகிய கர்மிகளுக்கு இந்த மூன்று பலன் களும் உண்டு என்று இந்த கீதா சாஸ்திரத்தில் கர்த்தவ்யம் (செய்ய வேண்டியது) அகர்த்தவ்யம் (செய்யவேண்டியதில்லை) என்று இரண்டு விதமாக பிரித்துக் கூறப்பட்டது.
अविद्यापूर्वकत्वं सर्वस्य कर्मणः असिद्धमिति चेत् ,
எல்லாக் கர்மங்களும் அவித்யையை காரணமாக உடையது என்பது பொருந்தவில்லை என்றால்.
न ; ब्रह्महत्यादिवत् । यद्यपि शास्त्रावगतं नित्यं कर्म, तथापि अविद्यावत एव भवति ।
அவ்வாறு அல்ல. பிரஹ்ம்மஹத்தி முதலிய பாப கர்மங்களைப் போல் எல்லாக் கர்மங்களும் அவித்தையினால் ஏற்பட்டவையே. நித்ய கர்மா சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டிருந்தாலும் அது அவித்யை உடைய புருஷனுக்கே அந்த கர்மா விதிக்கப்பட்டிருக்கிறது.
यथा प्रतिषेधशास्त्रावगतमपि ब्रह्महत्यादिलक्षणं कर्म अनर्थकारणम् अविद्याकामादिदोषवतः भवति, अन्यथा प्रवृत्त्यनुपपत्तेः, तथा नित्यनैमित्तिककाम्यान्यपीति ।
எவ்வாறு விலக்கப்பட்ட சாஸ்திரத்தில் உள்ள பிரஹ்மஹத்தி முதலிய கர்மங்களை செய்வதற்கு அநர்த்தத்திற்கு காரணமாகிய அவித்யை முதலிய தோஷங்களே காரணமாகிறது. வேறு காரணமல்ல. அவ்வாறே நித்ய, நைமித்திக, காமிய கர்மங்களில் ப்ரவிர்த்திப்பதற்கும் அவித்யா, காமம் முதலிய தோஷங்களே காரணமாகும்.
देहव्यतिरिक्तात्मनि अज्ञाते प्रवृत्तिः नित्यादिकर्मसु अनुपपन्ना इति चेत् ।
ஆனால் ஆத்மாவை சரீரத்தைக் காட்டிலும் வேறு என்று அறியாமல் நித்ய நைமித்திக முதலிய கர்மங்களில் பிரவிர்த்தியா னது ஏற்படாது.
न ; चलनात्मकस्य कर्मणः अनात्मकर्तृकस्य ‘अहं करोमि’ इति प्रवृत्तिदर्शनात् ।
அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏனெனில் ஆத்மா எதற்கு கர்த்தா வாக இல்லையோ அவ்வாறே அசைதல் ரூபமான(அக்ஞானிகளின்) கர்மத்தில் நான் கர்த்தா என்றபிரவிர்த்தியானது காணப்படுகிறது.
देहादिसङ्घाते अहंप्रत्ययः गौणः, न मिथ्या इति चेत् , न ; तत्कार्येष्वपि गौणत्वोपपत्तेः ।
தேஹம் முதலியவற்றின் சேர்க்கையினாலேயே நான் என்றும் எண்ணம் உபசாரமாக விளங்குகிறது. மித்தை அல்ல என்று கூறுதல் சரியல்ல. ஏனெனில் அவ்வாறு எடுத்துக்கொண்டால் அவைகளின் காரியங்களும் உபசாரமாகவே இருக்கும்.
आत्मीये देहादिसङ्घाते अहंप्रत्ययः गौणः ; यथा आत्मीये पुत्रे ‘आत्मा वै पुत्रनामासि’ (तै. आ. एका. २ । ११) इति, लोके च ‘मम प्राण एव अयं गौः’ इति, तद्वत् । नैवायं मिथ्याप्रत्ययः । मिथ्याप्रत्ययस्तु स्थाणुपुरुषयोः अगृह्यमाणविशेषयोः ।
எவ்வாறு ஆத்மாவை புத்ர நாமாஸி = ஏ புத்திரனே! நீ என்னு டைய ஆத்மா, என்ற சுருதியில் கூறி உள்ளவாறு தன்னுடைய புத்திரன் நான் என்ற பாவத்தை அடைகிறான். அவ்வாறே சம்சாரத் தில் (உலகில்) இந்த பசு என்னுடைய பிராணன் என்று தனக்குப் பிரியமான வஸ்துக்களில் நான் என்ற பாவம் ஏற்படுகிறதோ அவ்வாறே தேஹம் முதலிய சேர்க்கையிலும் நான் என்ற பாவம் விளங்குகிறது. அது மித்தை அல்ல. மித்தையாகவே தோன்றினால் அது எவ்வாறு ஸ்தாணு (கட்டை) புருஷன் என்ற பேதம் அறியா மல் ஸ்தாணுவினிடத்தில் புருஷனுடைய தோற்றம் உண்டாகிறது.
न गौणप्रत्ययस्य मुख्यकार्यार्थता, अधिकरणस्तुत्यर्थत्वात् लुप्तोपमाशब्देन ।
அவ்வாறு உபசாரமாக வந்த எண்ணம் முக்கியமான காரியத் திற்கு பயன்படாது. உபமை உருபு தொக்கி நிற்றலால் இந்த பிரகர ணத்தை துதிப்பதற்காக வந்ததாகும்.
यथा ‘सिंहो देवदत्तः’ ‘अग्निर्माणवकः’ इति सिंह इव अग्निरिव क्रौर्यपैङ्गल्यादिसामान्यवत्त्वात् देवदत्तमाणवकाधिकरणस्तुत्यर्थमेव, न तु सिंहकार्यम् अग्निकार्यं वा गौणशब्दप्रत्ययनिमित्तं किञ्चित्साध्यते ; मिथ्याप्रत्ययकार्यं तु अनर्थमनुभवति इति ।
எவ்வாறு தேவதத்தன் சிங்கமாயிருக்கிறான், மாணவன் நெருப்பாயிருக்கிறான் என்று சிங்கம் போல் குரூரமாயும், நெருப்பு போல் பொன்னிறமாயிருக்கிறான் என்ற ஒப்புவமையால் மாணாக்கனைப் புகழும் பொருட்டேயாம். உபசார வாசகமானது சிஹ்மத்தினுடைய கார்யம் போன்றது, அக்னியின் கார்யம் போன் றது என்று குறிப்பிடுவதற்கு சிறிதும் காரணமாக ஆகாது. ஆனால் (ஜன்ம மரணரூபமான) மித்யா கார்யமாகிய அநர்த்தம் (புருஷனால்) அனுபவிக்கப்படுகிறது.
गौणप्रत्ययविषयं जानाति ‘नैष सिंहः देवदत्तः’, तथा ‘नायमग्निर्माणवकः’ इति । तथा गौणेन देहादिसङ्घातेन आत्मना कृतं कर्म न मुख्येन अहंप्रत्ययविषयेण आत्मना कृतं स्यात् । न हि गौणसिंहाग्निभ्यां कृतं कर्म मुख्यसिंहाग्निभ्यां कृतं स्यात् । न च क्रौर्येण पैङ्गल्येन वा मुख्यसिंहाग्न्योः कार्यं किञ्चित् क्रियते, स्तुत्यर्थत्वेन उपक्षीणत्वात् ।
மேலும் உபச்சார வார்த்தைகளாகும் எண்ணத்தினால் குறிக்கப்படும் (தேவதத்தனையும், மாணவணையும்) இவன் சிங்கமில்லை, இவன் நெருப்பில்லை எனன வேறு ஒருவன் அறிகிறான், அவ்வாறே உடம்பு முதலியவற்றின் சேர்க்கையாகிய கௌண (உபச்சார) ஆத்மாவினால் செய்யப்பட்ட செய்கை யானது, நான் என்னும் எண்ணத்தினால் குறிக்கப்படும் வாஸ்தவ ஆத்மாவினால் செய்யப்பட்டதாகாது. கௌண சிங்கத்தாலும் கௌண நெருப்பினாலும் செய்யப்பட்ட செய்கையானது வாஸ்தவ சிங்கத்தாலும் வாஸ்தவ நெருப்பினாலும் (மாணவனது) பொன்நிறத்தினாலும் வாஸ்தவ சிங்கத்திறற்கும், நெருப்பிற்கும் ஒரு கார்யமும் செய்யப்படுவதில்லை. ஸ்துதி செய்யும் பொருட்டாய்த் தீர்ந்து (உபக்ஷண) போனமையால்.
स्तूयमानौ च जानीतः ‘न अहं सिंहः’ ‘न अहम् अग्निः’ इति ; न हि ‘सिंहस्य कर्म मम अग्नेश्च’ इति । तथा ‘न सङ्घातस्य कर्म मम मुख्यस्य आत्मनः’ इति प्रत्ययः युक्ततरः स्यात् ; न पुनः ‘अहं कर्ता मम कर्म’ इति ।
உபச்சார வார்த்தைகளால் புகழும்பொழுது நான் இந்த சிம்ஹம் இல்லை, நான் இந்த நெருப்பு இல்லை என்று தேவதத்த னுக்கு (அந்த மாணாக்கனுக்கு) தெரியும். அவ்வாறேசரீரம் முதலிய சேர்க்கையினால் ஆன கௌண ஆத்மாவினால் செய்யப் பட்ட கர்மங்கள் அஹம் பாவமாகிய (நான் என்றபாவமாகிய) உண்மையான முக்கிய ஆத்மாவாகிய என்னுடையது அல்ல என்ற எண்ணமானது பொருந்தும். மறுபடியும் நான் கர்த்தா, என்னுடையது கர்மா என்பது பொருந்தாததாக ஆகும்.
यच्च आहुः ‘आत्मीयैः स्मृतीच्छाप्रयत्नैः कर्महेतुभिरात्मा कर्म करोति’ इति, न ; तेषां मिथ्याप्रत्ययपूर्वकत्वात् । मिथ्याप्रत्ययनिमित्तेष्टानिष्टानुभूतक्रियाफलजनितसंस्कारपूर्वकाः हि स्मृतीच्छाप्रयत्नादयः ।
தன்னுடைய ஸ்மிருதி (ஞாபகம்) இச்சை மேலும் பிரயத்தினம் முதலிய கர்மங்களின் ஹேதுவினாலேயே ஆத்மா கர்மங்களை செய்கிறது என்று கூறுவதும் சரியல்ல. ஏன் எனில் அவை எல்லாம் மித்யா ஞானத்தின் காரணத்தால் தோன்றுகின்றன. மித்யா ஞானத் தினால் இஷ்ட்ட அநிஷ்ட்ட ரூபமாக அனுபவித்த கர்மபலத்தி னால் உண்டான சம்ஸ்காரத்தால் ஸ்ம்ருதி (ஞாபகம்) இச்சை, பிரயத்தனம் முதலியவைகள் உண்டா கின்றன.
यथा अस्मिन् जन्मनि देहादिसङ्घाताभिमानरागद्वेषादिकृतौ धर्माधर्मौ तत्फलानुभवश्च, तथा अतीते अतीततरेऽपि जन्मनि इति अनादिरविद्याकृतः संसारः अतीतोऽनागतश्च अनुमेयः ।
எவ்வாறு இந்த ஜன்மத்தில் தேஹம் முதலியவைகளின் சேர்க் கையின் அபிமானத்தினால் ராகத்துவேஷத்தினால் செய்யப்பட்ட தர்மம், அதர்மம் கர்மாக்களின் பலனை அனுபவிக்கிறாமோ அவ்வாறே கடந்த அதற்கும் கடந்த ஜன்மங்களிலும் அவ்வாறே இருந்ததால் முன்பு அனுபவித்ததும் இனி வரப்போகிறதுமான சம்சாரமானது (ஜன்மமரணத்துடன் கூடியது) அவித்யையினால் க்கப்பட்டது என்று அனுமானம் செய்யவேண்டும்.
ततश्च सर्वकर्मसंन्याससहितज्ञाननिष्ठया आत्यन्तिकः संसारोपरम इति सिद्धम् । अविद्यात्मकत्वाच्च देहाभिमानस्य, तन्निवृत्तौ देहानुपपत्तेः संसारानुपपत्तिः ।
ஆகையால் எல்லாக் கர்மங்களையும் விடுதலாகிய ஞான நிஷ்ட்டையினால் சம்சாரமானது முற்றிலும் நிவர்த்தியாகிறது என்று சித்திக்கிறது. தேஹ அபிமானமானது அவித்யா ரூபமாய் அந்த அவித்யையை நிவர்த்தி செய்வதால் தேஹப் பிராப்தி (வேறு தேஹத்தை அடைதல்) இல்லாததால் சம்சாரத்தை அடைய மாட்டான்.
देहादिसङ्घाते आत्माभिमानः अविद्यात्मकः । न हि लोके ‘गवादिभ्योऽन्योऽहम् , मत्तश्चान्ये गवादयः’ इति जानन् तान् ‘अहम्’ इति मन्यते कश्चित् ।
தேஹம் முதலியவையின் சேர்க்கையில் உள்ள நான் என்ற அபிமானம் அவித்யையினால் ஆனது. உலகத்தில் பசு முத லியவைகளைக் காட்டிலும் நான் வேறு. என்னைக் காட்டிலும் பசு முதலியவைகள் வேறு என்று அறிந்தவன் அவைகளில் நான் என்று ஒருநாளும் எண்ணமாட்டான். (நினைக்கமாட்டான்) அறியா மையால் ஸ்தாணுவில் புருஷனை எவ்வாறு பார்க்கிறானோ அவ்வாறே விவேகமற்றவன் தேஹ முதலிய சேர்க்கையில் நான் என்று பாவிக்கலாம். ஆனால் விவேகத்துடன் கூடியவன் அவ்வாறு செய்யமாட்டான்.
अजानंस्तु स्थाणौ पुरुषविज्ञानवत् अविवेकतः देहादिसङ्घाते कुर्यात् ‘अहम्’ इति प्रत्ययम् , न विवेकतः जानन् । यस्तु ‘आत्मा वै पुत्र नामासि’ (तै. आ. एका. २ । ११) इति पुत्रे अहंप्रत्ययः, स तु जन्यजनकसम्बन्धनिमित्तः गौणः । गौणेन च आत्मना भोजनादिवत् परमार्थकार्यं न शक्यते कर्तुम् , गौणसिंहाग्निभ्यां मुख्यसिंहाग्निकार्यवत् ॥
எவன் ஒருவன் ஆத்மா வை புத்ர நாமாஸி = புத்திரனே! நீ என்னுடைய ஆத்மா, என்று புத்திரனிடத்தில் உள்ள (அகம்) உபசார (கௌண) மாகும். இவ்வாறு உபசாரமாக கூறப்பட்ட ஆத்மாவினால் சாப்பிடுதல் முதலியவற்றைப் போல் உண்மை யான காரியத்தைச் செய்ய முடியாது. எவ்வாறு எனில் உபசார வாக் யங்களாகிய சிம்ஹம் அக்னி முதலியவைகள் முக்ய சிம்ஹம், நெருப்பு முதலியவைகளின் காரியத்தை செய்யாதது போலாகும்.
अदृष्टविषयचोदनाप्रामाण्यात् आत्मकर्तव्यं गौणैः देहेन्द्रियात्मभिः क्रियत एव इति चेत् ,
சுவர்க்கம் முதலிய அதிருஷ்ட்ட பலனை அடைவதற்காக கர் மங்களை விதித்த சுருதி பிரமாணமாய் இருப்பதால், சரீரம் இந்தி ரிய முதலிய கௌண ஆத்மாவைக் கொண்டு முக்ய ஆத்மா காரி யம் செய்யலாம் என்று ஏற்படுகிறது.
न ; अविद्याकृतात्मत्वात्तेषाम् । न च गौणाः आत्मानः देहेन्द्रियादयः ;
இவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன் எனில் அதனுடைய ஆத்ம பாவம் (நான் என்னும் பாவம்) அவித்யையினால் உண்டானது. சரீ ரம் இந்திரியம் கௌண ஆத்மா அல்ல. (மித்தையே)
किं तर्हि ?
பின் எவ்வாறு?
मिथ्याप्रत्ययेनैव अनात्मानः सन्तः आत्मत्वमापाद्यन्ते, तद्भावे भावात् , तदभावे च अभावात् ।
மித்யா ஞானத்தினாலேயே அசங்கமாகிய ஆத்மாவிற்கு சங்க ஆத்மத்துவம் ஏற்படுகிறது. ஆகையால் மித்யா ஞானம் இருக்கும் வரை (உடம்பு முதலியவை) ஆத்மாவாகக் கொள்ளப்ப டுகின்றன. மித்யா ஞானம் அழிந்துவிடில் (உடம்பு முதலியவைக ளில் உள்ள) ஆத்மா என்ற புத்தி நீங்கிவிடுகிறது.
अविवेकिनां हि अज्ञानकाले बालानां दृश्यते ‘दीर्घोऽहम्’ ‘गौरोऽहम्’ इति देहादिसङ्घाते अहंप्रत्ययः । न तु विवेकिनाम् ‘अन्योऽहं देहादिसङ्घातात्’ इति जानतां तत्काले देहादिसङ्घाते अहंप्रत्ययः भवति ।
அக்ஞான காலத்தில் விவேகமற்றமந்த புத்தி உள்ளவர்க ளுக்கு நான் பெரியவன், நான் கௌரவமானவன் என்று தேஹம் முதலியவற்றின் சேர்க்கையில் நான் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் நான் சரீரம் முதலிய சங்காதத்தைக் காட்டிலும் வேறு என்ற அறிவு உடைய விவேகிகளுக்கு அந்த சமயத்தில் சரீரம் முதலிய சங்காதத்தில் நான் என்ற புத்தி தோன்றாது.
तस्मात् मिथ्याप्रत्ययाभावे अभावात् तत्कृत एव, न गौणः ।
ஆகையால் மித்யா புத்தி இன்மையால் தேஹாத்ம புத்தியும் நீங்கிவிடுவதால் சரீரத்தில் உள்ள நான் என்ற புத்தி அவித்யையி னால் ஏற்பட்டதே அன்றி கௌண விருத்தியினால் அல்ல என்று சித்திக்கிறது.
पृथग्गृह्यमाणविशेषसामान्ययोर्हि सिंहदेवदत्तयोः अग्निमाणवकयोर्वा गौणः प्रत्ययः शब्दप्रयोगो वा स्यात् , न अगृह्यमाणविशेषसामान्ययोः ।
எதனிடத்தில் விசேஷமாகவும், சாமான்யமாகவும் தனித்தனி யாக அறியப்படுகிறதோ அப்பொழுது தான் சிம்ஹ தேவதத்தன், அக்னி மாணாக்கன் என்ற கௌண புத்தியோ அல்லது கௌண சப்த பிரயோகமோ இருக்கும். சாமானியம் என்று விசேஷம் கிரஹிக்கப்படாத போது ஏற்படாது.
यत्तु उक्तम् ‘श्रुतिप्रामाण्यात्’ इति, तत् न ; तत्प्रामाण्यस्य अदृष्टविषयत्वात् । प्रत्यक्षादिप्रमाणानुपलब्धे हि विषये अग्निहोत्रादिसाध्यसाधनसम्बन्धे श्रुतेः प्रामाण्यम् , न प्रत्यक्षादिविषये, अदृष्टदर्शनार्थविषयत्वात् प्रामाण्यस्य ।
சுருதி பிரமாணத்தால் இந்த பக்ஷமானது சித்திக்கிறது என்று கூறியது சரியல்ல. ஏனெனில் அந்த பிரமாணம் அதிருஷ்ட்ட விஷயத்தைக் குறித்ததாகும். பிரத்யக்ஷாதி பிரமாணங்களுக்கு எட்டாத விஷயங்களாகிய அக்னி ஹோத்திராதி சாத்ய, சாதன சம் பந்த விஷயத்திலேயே சுருதி பிரமாணமாகும். ஏனெனில் அதிருஷ்ட்ட விஷயத்தை தெரிவிப்பதற்காகவே சுருதிப் பிரமாணம் ஆகும். பிரத்யக்ஷாதி பிரமானங்களால் அறியப்படும் விஷயத்தில் இல்லை.
तस्मात् न दृष्टमिथ्याज्ञाननिमित्तस्य अहंप्रत्ययस्य देहादिसङ्घाते गौणत्वं कल्पयितुं शक्यम् ।
ஆகையால் தேஹாதி சங்காதத்தில் பிரத்யக்ஷமாகவே மித்யா ஞானத்தினால் தோன்றும் அகம் (நான்)என்ற புத்தியை கௌணம் என்று கூறுவது பொருந்தாது.
न हि श्रुतिशतमपि ‘शीतोऽग्निरप्रकाशो वा’ इति ब्रुवत् प्रामाण्यमुपैति । यदि ब्रूयात् ‘शीतोऽग्निरप्रकाशो वा’ इति, तथापि अर्थान्तरं श्रुतेः विवक्षितं कल्प्यम् , प्रामाण्यान्यथानुपपत्तेः, न तु प्रमाणान्तरविरुद्धं स्ववचनविरुद्धं वा ।
அக்னியானது குளிர்ச்சியாகவும் பிரகாசமற்றதாயும் இருக்கிறது என்று நூற்றுக்கணக்கான சுருதிகள் கூறினாலும், அந்த சுருதிகள் பிரமாணமாக ஆகாது. சுருதியில் அக்னி குளிர்ச்சி யானது, பிரகாசமற்றது என்று கூறியிருந்தாலும் அந்த சுருதிக்கு வேறு ஒரு அர்த்தத்தைக் காட்டுவதற்காக என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் வேறு விதமாக அதனுடைய பிரமாணம் சித்திக்காது. பிரத்யக்ஷம் முதலிய வேறு பிரமாணத்திற்கு விரோத மாகவோ சுருதியினுடைய தனது வசனத்திற்கு விருத்தமாகவோ சுருதியினுடைய அர்த்தத்தைக் கல்பனை செய்வது உசிதமல்ல.
कर्मणः मिथ्याप्रत्ययवत्कर्तृकत्वात् कर्तुरभावे श्रुतेरप्रामाण्यमिति चेत् ,
கர்மமானது மித்யா ஞானமுடைய புருஷனால் அல்லவா செய்யப்படுகிறது. அவ்வாறாகில் உண்மையில் கர்த்தா இல்லை என்பதால் சுருதிக்கு பிரமாண்ய தன்மை இல்லாமல் போய்விடுமே என்றால்.
न ; ब्रह्मविद्यायामर्थवत्त्वोपपत्तेः ॥
அவ்வாறு அல்ல. ஏனெனில் பிரஹ்ம வித்யைக்கு பயன் படுவதால்.
कर्मविधिश्रुतिवत् ब्रह्मविद्याविधिश्रुतेरपि अप्रामाण्यप्रसङ्ग इति चेत् ,
கர்மத்தை விதிக்கின்ற சுருதிபோல் பிரஹ்மவித்யா சுருதியும் பிரமாணம் ஆகாமல் ஆகிவிடுமே எனில்
न ; बाधकप्रत्ययानुपपत्तेः । यथा ब्रह्मविद्याविधिश्रुत्या आत्मनि अवगते देहादिसङ्घाते अहंप्रत्ययः बाध्यते, तथा आत्मन्येव आत्मावगतिः न कदाचित् केनचित् कथञ्चिदपि बाधितुं शक्या, फलाव्यतिरेकादवगतेः, यथा अग्निः उष्णः प्रकाशश्च इति ।
இவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன் எனில் அதை பாதிக்கும் (நீக்கும்) புத்தி இல்லாததினால். எவ்வாறு பிரஹ்ம வித்யையை விதிக்கும் சுருதியினால் ஆத்மசாக்ஷாத்காரம் அடைந்தவனுக்கு தேஹம் முதலிய சங்காதத்தில் உள்ள ஆத்மபுத்தி பாதிக்கப் படுகிறதோ அவ்வாறு ஆத்மாவில் ஏற்பட்ட ஆத்ம (நான் என்ற) பாவனை எதனாலும், எப்பொழுதும் எவ்விதமாகவும் பாதிக்க (நீக்க) முடியாது. ஆத்மக்ஞானத்திற்கு ஆத்மாவே பலனாகும். அதற்கு வேறு பலன் கிடையாது. எவ்வாறு அக்னி உஷ்ணமாயும் பிரகாசமாயும் இருப்பது போல் ஆகும்.
न च एवं कर्मविधिश्रुतेरप्रामाण्यम् , पूर्वपूर्वप्रवृत्तिनिरोधेन उत्तरोत्तरापूर्वप्रवृत्तिजननस्य प्रत्यगात्माभिमुख्येन प्रवृत्त्युत्पादनार्थत्वात् । मिथ्यात्वेऽपि उपायस्य उपेयसत्यतया सत्यत्वमेव स्यात् , यथा अर्थवादानां विधिशेषाणाम् ;
கர்மவிதி சுருதியும் பிரமாணமற்றதாக ஆகாது. ஏனெனில் முந்திய. முந்திய (ஸ்வாபாவிகமான) பிரவிர்த்திகளைத் தடுத்து புதிய புதிய முயற்சிகளை உண்டாக்கி (அந்தக்கரண சுத்தி வாயிலா க) அந்தராத்மாவை எதிர்நோக்கி திருப்புவதற்கான முயற்சியை யும் ஊக்கத்தையும் கொடுக்க வல்லதாய் இருக்கிறது. உபாயங்கள் (கருவிகள்) மித்தையாய் இருந்தாலும் உபாயம் அதாவது பலன் சத் யமாய் இருக்கிறது. ஆகையால் உபாயமும் சத்யமே எனப்படுகிற து.அவ்வாறே விதி வாக்கியத்தின் முடிவில் கூறப்படும் அர்த்த வாக்கியங்களும் சத்யம் என்று ஆகிறது.
लोकेऽपि बालोन्मत्तादीनां पयआदौ पाययितव्ये चूडावर्धनादिवचनम् ।
உலகத்தில் சிறுவர்கள் உன்மத்தர்கள் முதலியோர்களைக் குடிக்கச் செய்வதற்கு பால் குடித்தால் முடி வளரும் போன்றவார்த் தைகள் கூறுவது போலாகும்.
प्रकारान्तरस्थानां च साक्षादेव वा प्रामाण्यं सिद्धम् , प्रागात्मज्ञानात् देहाभिमाननिमित्तप्रत्यक्षादिप्रामाण्यवत् ।
ஆத்மக்ஞானம் உண்டாவதற்கு முன் தேஹ அபிமானத்தால் பிரத்யக்ஷம் முதலிய பிரமாணங்களுக்கு வேறு வகையிலே உள்ள (கர்மத்தை விதிக்கும்) சுருதிக்கு பிரமாணத் தன்மை அமைந்துள்ளது.
यत्तु मन्यसे — स्वयमव्याप्रियमाणोऽपि आत्मा संनिधिमात्रेण करोति, तदेव मुख्यं कर्तृत्वमात्मनः ; यथा राजा युध्यमानेषु योधेषु युध्यत इति प्रसिद्धं स्वयमयुध्यमानोऽपि संनिधानादेव जितः पराजितश्चेति, तथा सेनापतिः वाचैव करोति ; क्रियाफलसम्बन्धश्च राज्ञः सेनापतेश्च दृष्टः । यथा च ऋत्विक्कर्म यजमानस्य, तथा देहादीनां कर्म आत्मकृतं स्यात् , फलस्य आत्मगामित्वात् ।
ஆத்மா சுயமாக கர்மா செய்யாமல் இருந்தாலும் அதன் சந்நிதி மாத்திரத்தாலேயே கர்மா செய்கிறது. ஆகையால் ஆத்மா விற்கு முக்கிய கர்த்திருத்துவம் உள்ளது என்று நீ நினைப்பது, எவ்வாறு ராஜா தான் சுயமாக யுத்தம் செய்யாவிடினும் மற்றயுத்த வீரர் யுத்தம் செய்வதை ராஜா யுத்தம் செய்கிறார் என்று உபசாரமாக கூறப்படுகிறதோ அவ்வாறே ராஜா ஜெயிக்கிறார், தோற்கிறார் என்று கூறப்படுகிறது. அவ்வாறே சேனைத்தலைவரும் வெறும் வார்த்தையினாலேயே கட்டளையிடுகிறார். அப்படி இருந்தாலும் ராஜாவும், சேனைத்தலைவரும் அந்த யுத்தத்தின் பலனில் சம்பந் தப்படுகிறார்கள். அவ்வாறே ரித்விக்குகள் செய்யும் கர்மம் எஜமா ன்னுடையதாகிறது. இதுபோல் தேஹாதி சங்காதங்களின் கர்மம் ஆத்மாவினால் செய்யப்பட்டதாக ஆகிறது. ஏனெனில் அதன் பலன் ஆத்மாவையே அடைகிறது என்பது உபசாரமாகும்.
यथा वा भ्रामकस्य लोहभ्रामयितृत्वात् अव्यापृतस्यैव मुख्यमेव कर्तृत्वम् , तथा च आत्मनः इति ।
இதற்கு மற்றுமொரு உதாரணம். காந்தக்கல்லானது தான் சுய மாக செய்கையற்று இருந்தாலும் இரும்பை ஆட்டி வைக்கிறது. ஆகையால் அது முக்கிய கர்த்தா ஆவது போல் ஆத்மாவும் முக்கிய கர்த்தாவாகிறது.
तत् असत् ; अकुर्वतः कारकत्वप्रसङ्गात् ।
அவ்வாறு கருதுவது சரியல்ல. ஏனெனில் அவ்வாறு கருதினால் கிரியை அற்றஆத்மாவிற்கு காரகத்தை (செய்தலை) ஒப்புக்கொண்டதாகும். ஆகையால் இது உபசாரமே (கௌணமே) ஆகும்.
कारकमनेकप्रकारमिति चेत् , न ; राजप्रभृतीनां मुख्यस्यापि कर्तृत्वस्य दर्शनात् । राजा तावत् स्वव्यापारेणापि युध्यते ; योधानां च योधयितृत्वे धनदाने च मुख्यमेव कर्तृत्वम् , तथा जयपराजयफलोपभोगे ।
செயல்கள் (காரகம்) அநேகவிதமாய் இருக்கின்றது என்றால் அவ்வாறு அல்ல. ஏனெனில் ராஜா முதலியோரிடத்தும் முக்கிய செயல்பாடுகள் காணப்படுகிறது. ராஜா சுயமாகவும் யுத்தம் செய்கி றார். யுத்தவீரர்களை வைத்தும் யுத்தம் செய்கிறார். அவ்வாறே அவர்களுக்கு செல்வத்தைக் கொடுத்தும் யுத்தத்தை செய்விக்கி றார். ஆகையால் சந்தேஹமில்லாமல் அவர் முக்கிய கர்த்தாவாக இருக்கிறார். அவ்வாறேவெற்றி, தோல்வி முதலிய பலன்களை அனுபவிப்பதும் முக்ய செயலாகும்.
यजमानस्यापि प्रधानत्यागे दक्षिणादाने च मुख्यमेव कर्तृत्वम् ।
அவ்வாறே (கர்மாவைச் செய்யும்) எஜமானனும் பிரதானமான ஆஹூதியை தானம் கொடுப்பதாலும், அவ்வாறே தக்ஷிணைக் கொடுப்பதாலும் முக்கிய செயலாகும் அதாவது முக்கிய கர்த்தா வாகிறான்.
तस्मात् अव्यापृतस्य कर्तृत्वोपचारो यः, सः गौणः इति अवगम्यते । यदि मुख्यं कर्तृत्वं स्वव्यापारलक्षणं नोपलभ्यते राजयजमानप्रभृतीनाम् , तदा संनिधिमात्रेणापि कर्तृत्वं मुख्यं परिकल्प्येत ; यथा भ्रामकस्य लोहभ्रमणेन, न तथा राजयजमानादीनां स्वव्यापारो नोपलभ्यते । तस्मात् संनिधिमात्रेण कर्तृत्वं गौणमेव ।
கிரியை அற்றவஸ்துவில் கர்த்திருத்வத்தை ஏற்றிக் கூறல் உபசாரமாகும். அதாவது கௌணம் என்று அறியப்படுகிறது. ராஜா, யஜமானன் முதலியோரிடத்து தனது சொந்த செயலாகிய முக்கிய கர்த்திருத்துவமானது காணப்படவில்லையாயின் காந்தத்தின் சந்நி தியில் இரும்பானது செயல்படுவது போல் கர்த்திருத்துவத்தை கௌணமாக எடுத்துக்கொள்ளலாம். ராஜா முதலியோரிடத்து அவ் வாறு காணப்படவில்லை ஆகையால் சந்நிதி மாத்திரத்தால் உள்ள கர்த்திருத்துவமும் கௌணமேயாகும்.
तथा च सति तत्फलसम्बन्धोऽपि गौण एव स्यात् । न गौणेन मुख्यं कार्यं निर्वर्त्यते । तस्मात् असदेव एतत् गीयते ‘देहादीनां व्यापारेण अव्यापृतः आत्मा कर्ता भोक्ता च स्यात्’ इति ।
அவ்வாறானால் அதனுடைய பலத்தின் சம்பந்தமும் கௌண மேயாகும். ஏனெனில் கௌண கர்த்தாவால் முக்கிய (உண்மையான) காரியத்தைச் செய்யமுடியாது. இதனால் இது மித்யை ஆகும். இந்த மித்யையால் நிஷ்க்ரியமான ஆத்மா (கிரியை அற்றஆத்மா) தேஹ முதலியவைகளின் கிரியையினால் கர்த்தா, போக்தாவாகிறது.
भ्रान्तिनिमित्तं तु सर्वम् उपपद्यते, यथा स्वप्ने ; मायायां च एवम् । न च देहाद्यात्मप्रत्ययभ्रान्तिसन्तानविच्छेदेषु सुषुप्तिसमाध्यादिषु कर्तृत्वभोक्तृत्वाद्यनर्थः उपलभ्यते ।
எவ்வாறு சொப்பனத்தில் மாயையால் எல்லாம் உண்டாகி றதோ அவ்வாறே எல்லாம் பிராந்தியினால் உண்டாகின்றன.சரீரம் முதலியவைகளில் நான் என்ற புத்தி ரூப அக்ஞானத்தின் தொடர்ச்சி தடைபடும் பொழுது சுழுத்தி, சமாதி ஆகிய அவஸ்தை களில் கர்த்திருத்துவ, போக்திருத்துவ முதலிய அநர்த்தங்கள் அறியமுடியாது.
तस्मात् भ्रान्तिप्रत्ययनिमित्तः एव अयं संसारभ्रमः, न तु परमार्थः ; इति सम्यग्दर्शनात् अत्यन्त एवोपरम इति सिद्धम् ॥ ६६ ॥
ஆகையால் பிராந்தி ஞானத்தினால்தான் இந்த சம்சார மயக் கம். உண்மையில் இல்லை. இந்த சம்சார பிரமமானது சம்யக் ஞானத்தால் முற்றிலும் சாந்தி அடைகிறது. (நீங்குகிறது)
सर्वं गीताशास्त्रार्थमुपसंहृत्य अस्मिन्नध्याये, विशेषतश्च अन्ते, इह शास्त्रार्थदार्ढ्याय सङ्क्षेपतः उपसंहारं कृत्वा, अथ इदानीं शास्त्रसम्प्रदायविधिमाह —
கீதா சாஸ்திரம் முழுவதையும் முடித்து இந்த அத்யாயத்தின் முடிவில் விசேஷமாக சாஸ்திரத்தின் அர்த்தத்தை திடமாக்குவதற் காக சுருக்கமாகக் கூறி முடித்தபின் இப்பொழுது சாஸ்திர சம்பிர தாய விதியைக் கூறுகிறார்.
इदं ते नातपस्काय नाभक्ताय कदाचन ।
न चाशुश्रूषवे वाच्यं न च मां योऽभ्यसूयति ॥ ६७ ॥
இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசன ।
ந சாசுச்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோஅப்யஸூயதி ॥ 67 ॥
इदं शास्त्रं ते तव हिताय मया उक्तं संसारविच्छित्तये अतपस्काय तपोरहिताय न वाच्यम् इति व्यवहितेन सम्बध्यते ।
என்னால் உன் இதத்தின் பொருட்டு சம்சாரத்தைப் போக்குவ தற்காக உபதேசித்த இந்த சாஸ்திரத்தை தபஸ் இல்லாத மனிதர்க ளுக்கு சொல்லக்கூடாது என்பதுடன் சம்பந்தப்படுத்தவேண்டும்.
तपस्विनेऽपि अभक्ताय गुरौ देवे च भक्तिरहिताय कदाचन कस्याञ्चिदपि अवस्थायां न वाच्यम् ।
தபஸ்வியாய் இருந்தாலும் குரு, தெய்வத்தினிடம் பக்தி இல்லாதவர்களுக்கு ஒருபொழுதும், எந்த ஒரு நிலையிலும் கூறக்கூடாது.
भक्तः तपस्वी अपि सन् अशुश्रूषुः यो भवति तस्मै अपि न वाच्यम् ।
பக்தனாயும், தபஸ்வியாய் இருந்தாலும் பணிவிடை செய்யாத வனுக்கும் சொல்லக்கூடாது.
न च यो मां वासुदेवं प्राकृतं मनुष्यं मत्वा अभ्यसूयति आत्मप्रशंसादिदोषाध्यारोपणेन ईश्वरत्वं मम अजानन् न सहते, असावपि अयोग्यः, तस्मै अपि न वाच्यम् ।
அவ்வாறே வாசுதேவனாகிய என்னை சாதாரண மனிதனாக நினைத்து தன்னையே போற்றுதல் முதலிய தோஷங்களை ஆரோபித்து, என்னுடைய ஈஸ்வரத்தன்மையை அறியாமல் அதை சகித்துக்கொள்ள முடியாத அயோக்கியனும் கேட்கத்தகாதவன்.
भगवति अनसूयायुक्ताय तपस्विने भक्ताय शुश्रूषवे वाच्यं शास्त्रम् इति सामर्थ्यात् गम्यते ।
இதிலிருந்து பகவானிடத்தில் பக்தி உள்ளவனாயும், தபஸ்வி யாயும் பணிவிடை செய்பவனாயும் அவ்வாறேதோஷ திருஷ்ட்டி இல்லாதவனாயும் உள்ள புருஷனாலேயே சாஸ்திரமானது கேட் கப்படவேண்டுமென்று தெரிகிறது.
तत्र ‘मेधाविने तपस्विने वा’ (यास्क. नि. २ । १ । ६) इति अनयोः विकल्पदर्शनात् शुश्रूषाभक्तियुक्ताय तपस्विने तद्युक्ताय मेधाविने वा वाच्यम् । शुश्रूषाभक्तिवियुक्ताय न तपस्विने नापि मेधाविने वाच्यम् ।
மற்ற ஸ்மிருதிகளிலும் மேதாவிற்கும், தபஸ்விற்கும் வித்தியா சம் காணப்படுகிறது. ஆகையால் பணிவிடை பக்தியுடன் கூடிய தபஸ்வி அல்லது இந்த மூன்றும் உடைய மேதாவி கேட்கலாம் என்று அறியவேண்டும். பணிவிடை பக்தி இல்லாத தபஸ்வியும், இவைகள் இல்லாத மேதாவியும் கேட்கக்கூடாது.
भगवति असूयायुक्ताय समस्तगुणवतेऽपि न वाच्यम् । गुरुशुश्रूषाभक्तिमते च वाच्यम् इत्येषः शास्त्रसम्प्रदायविधिः ॥ ६७ ॥
பகவானிடத்தில் தோஷ திருஷ்ட்டி உடையவன் எல்லா நல்ல குணங்கள் இருந்தாலும் அவன் கேட்கக்கூடாது. குருவிற்கு பணிவிடை செய்தும், பக்தியுடன் கூடிய புருஷனால் கேட்கப்பட வேண்டும். இவ்விதமாக சாஸ்திர சம்பிரதாய விதி கூறப்படுகிறது.
सम्प्रदायस्य कर्तुः फलम् इदानीम् आह —
சாஸ்திர சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பவர்கள் அடையும் பலன் கூறப்படுகிறது.
य इमं परमं गुह्यं मद्भक्तेष्वभिधास्यति ।
भक्तिं मयि परां कृत्वा मामेवैष्यत्यसंशयः ॥ ६८ ॥
ய இமம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வபிதா சாஸ்யதி ।
பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்சய: ॥ 68 ॥
यः इमं यथोक्तं परमं परमनिःश्रेयसार्थं केशवार्जुनयोः संवादरूपं ग्रन्थं गुह्यं गोप्यतमं मद्भक्तेषु मयि भक्तिमत्सु अभिधास्यति वक्ष्यति, ग्रन्थतः अर्थतश्च स्थापयिष्यतीत्यर्थः, यथा त्वयि मया ।
எவன் இந்த மேலான நிச்ச்ரேயஸ் பலனை முன்பு கூறப்பட்ட வாறு கிருஷ்ணார்ஜுன சம்வாத ரூபமான மிகவும் ரஹஸ்யமான இந்த கீதா சாஸ்திரத்தை என்னிடம் பக்தி உள்ள பக்தர்களையே கேட்கச்செய்வானாக. கிரந்த ரூபமாகவோ அல்லது அர்த்தத் துடன் தெரிவிப்பாயாக என்பது பொருள். நான் எப்படி உனக்கு உபதேசம் செய்தேனோ அவ்வாறே தெரிவிப்பாயாக.
भक्तेः पुनर्ग्रहणात् भक्तिमात्रेण केवलेन शास्त्रसम्प्रदाने पात्रं भवतीति गम्यते ।
மறுபடியும் பக்தியைக் குறிப்பிடுவதால் மனிதன் கேவல பக்தி யினாலேயே சாஸ்திரத்தை அறிவதற்கு பாத்திரனாகிறான் என்று அறியப்படுகிறது.
कथम् अभिधास्यति इति, उच्यते —
எவ்வாறு கேட்கச் செய்யவேண்டும் என்பதைக் கூறுகிறார்-
भक्तिं मयि परां कृत्वा ‘भगवतः परमगुरोः अच्युतस्य शुश्रूषा मया क्रियते’ इत्येवं कृत्वेत्यर्थः । तस्य इदं फलम् — मामेव एष्यति मुच्यते एव । असंशयः अत्र संशयः न कर्तव्यः ॥ ६८ ॥
என்னிடத்தில் பரமபக்தியை செய்து என்றால் பகவானுக்கும், குருவிற்கும் நான் பணிவிடை செய்யவேண்டும் என்று செய்ப வன் என்னை அடைந்து முக்தி அடைவான் என்பதில் சந்தே ஹமே கொள்ளவேண்டியதில்லை.
किञ्च —
மேலும்
न च तस्मान्मनुष्येषु कश्चिन्मे प्रियकृत्तमः ।
भविता न च मे तस्मादन्यः प्रियतरो भुवि ॥ ६९ ॥
ந ச தஸ்மான்மனுஷ்யேஷு கச்சின்மே ப்ரியக்ருத்தம: ।
பவிதா ந ச மே தஸ்மாதன்ய: ப்ரியதரோ புவி ॥ 69 ॥
न च तस्मात् शास्त्रसम्प्रदायकृतः मनुष्येषु मनुष्याणां मध्ये कश्चित् मे मम प्रियकृत्तमः अतिशयेन प्रियकरः, अन्यः प्रियकृत्तमः, नास्त्येव इत्यर्थः वर्तमानेषु । न च भविता भविष्यत्यपि काले तस्मात् द्वितीयः अन्यः प्रियतरः प्रियकृत्तरः भुवि लोकेऽस्मिन् न भविता ॥ ६९ ॥
இந்த கீதா சாஸ்திரத்தின் சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பவர் கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள். மனிதர்களுள் அந்த பக்தர்களைக் காட்டிலும் பிரியமானவர்கள் ஒருவரும் இல்லை. அவர்கள் எனக்கு அளவு கடந்த பிரியமானவர்கள். இக்காலத்தில் மனிதர்களுள் எனக்காக அவர்களைக் காட்டிலும் மிகுந்த பிரியமான காரியத்தைச் செய்பவர்கள் ஒருவரும் இல்லை. அவ்வாறே சென்றகாலத்திலும் இனி வரும் காலத்திலும் இதை விட மிகப் பிரியமான காரியம் மற்றொன்று இல்லை.
योऽपि —
மற்றும் எவன்-
अध्येष्यते च य इमं धर्म्यं संवादमावयोः ।
ज्ञानयज्ञेन तेनाहमिष्टः स्यामिति मे मतिः ॥ ७० ॥
அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாதமாவயோ: ।
ஞானயக்ஞேன தேனாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி: ॥ 70 ॥
अध्येष्यते च पठिष्यति यः इमं धर्म्यं धर्मादनपेतं संवादरूपं ग्रन्थं आवयोः, तेन इदं कृतं स्यात् । ज्ञानयज्ञेन — विधिजपोपांशुमानसानां यज्ञानां ज्ञानयज्ञः मानसत्वात् विशिष्टतमः इत्यतः तेन ज्ञानयज्ञेन गीताशास्त्रस्य अध्ययनं स्तूयते ।
எவன் ஒருவன் நம் இருவரின் சம்வாத ரூபமான இந்த கீதா சாஸ்திரத்தைப் படிக்கிறானோ அவன் ஞானயக்ஞத்தைச் செய்த வன் ஆகிறான். விதியக்ஞம், ஜப யக்ஞம், உபாம்சு யக்ஞம், மானச யக்ஞம் ஆகிய இந்த நான்கு யக்ஞத்தைக் காட்டிலும் ஞானயக்ஞ மானது சிறப்பானது. ஆகையால் அந்த ஞானயக்ஞத்திற்கு சம மான கீதா சாஸ்திரத்தைப் படிப்பது போற்றப்படுகிறது.
விதியக்ஞம்- சரீரத்தால் செய்யப்படும் ப்ரஹ்மயக்ஞாதிகள் ஜபயக்ஞம் - சப்தமிட்டு உச்சரிக்கப்படும் பாராயணாதிகள் உபாம்சுயக்ஞம் - பிறர்க்குக் கேளாதபடி வாய்க்குள்ளாகவே உச்சரித்தல்
மானஸயக்ஞம் - மனதினால் தியானித்தல்
फलविधिरेव वा, देवतादिविषयज्ञानयज्ञफलतुल्यम् अस्य फलं भवतीति ।
அல்லது பலனை விதிப்பதாகவே ஆகும் எனில், தேஹாதி விஷய ரூப ஞான யக்ஞத்தின் பலனிற்குச் சமமானது இந்த (கீதா சாஸ்திரத்தின்) பலனாகும்.
तेन अध्ययनेन अहम् इष्टः पूजितः स्यां भवेयम् इति मे मम मतिः निश्चयः ॥ ७० ॥
இதைப் படிப்பதால் (அத்யயனம் செய்வதால்) நான் (பகவான்) பூஜிக்கப்பட்டவனாக ஆவேன் என்பது என்னுடைய கருத்தாகும்.
अथ श्रोतुः इदं फलम् —
அவ்வாறே கேட்பவனுக்கும் பலன் கிடைக்கிறது.
श्रद्धावाननसूयश्च शृणुयादपि यो नरः ।
सोऽपि मुक्तः शुभांल्लोकान्प्राप्नुयात्पुण्यकर्मणाम् ॥ ७१ ॥
ச்ரத்தாவானனஸூயச்ச ச்ருணுயாதபி யோ நர: ।
ஸோஅபி முக்த: சுபாம்ல்லோகான்ப்ராப்நுயாத்புண்யகர்ம ணாம் ॥ 71 ॥
श्रद्धावान् श्रद्दधानः अनसूयश्च असूयावर्जितः सन् इमं ग्रन्थं शृणुयादपि यो नरः, अपिशब्दात् किमुत अर्थज्ञानवान् , सोऽपि पापात् मुक्तः शुभान् प्रशस्तान् लोकान् प्राप्नुयात् पुण्यकर्मणाम् अग्निहोत्रादिकर्मवताम् ॥ ७१ ॥
சிரத்தையுடனும் அசூசை அற்றும் இருந்துகொண்டு இந்த கீதா சாஸ்திரத்தைக் கேட்பவன் பாபத்திலிருந்து விடுபட்டு அக்னி ஹோத்திரம் முதலிய புண்ய கர்மாக்களைச் செய்பவர்கள் அடையும் சுபகரமானதும், போற்றத்தக்கதுமான லோகங்களை அடைவான்.
शिष्यस्य शास्त्रार्थग्रहणाग्रहणविवेकबुभुत्सया पृच्छति । तदग्रहणे ज्ञाते पुनः ग्राहयिष्यामि उपायान्तरेणापि इति प्रष्टुः अभिप्रायः ।
சிஷ்யன் சாஸ்திரத்தின் அர்த்தத்தை புரிந்துகொண்டானா இல் லையா என்று அறிவதற்கு இச்சித்தவராய் பகவான் இவ்வாறு கேட் கிறார். அவன் புரிந்துகொள்ளவில்லை என்று தெரிந்தால் வேறு விதமாக (உபாயத்தால்) புரியவைக்க வேண்டும் என்பது கேட்பவ ருடைய அபிப்பிராயம் ஆகும்.
यत्नान्तरं च आस्थाय शिष्यस्य कृतार्थता कर्तव्या इति आचार्यधर्मः प्रदर्शितो भवति —
வேறு வகை முயற்சியினாலாவது சிஷ்யனை புரிய வைத்து க்ருதார்த்தன் ஆக்கவேண்டியது குருவினுடைய (ஆசாரியருடை ய) தர்மம் என்று காண்பிக்கப்பட்டதாகிறது.
कच्चिदेतच्छ्रुतं पार्थ त्वयैकाग्रेण चेतसा ।
कच्चिदज्ञानसंमोहः प्रणष्टस्ते धनञ्जय ॥ ७२ ॥
கச்சிதேதச்ச்ருதம் பார்த த்வயைகாக்ரேண சேதஸா ।
கச்சிதக்ஞானஸம்மோஹ: ப்ரநஷ்டஸ்தே தனஞ்ஜய ॥ 72 ॥
कच्चित् किम् एतत् मया उक्तं श्रुतं श्रवणेन अवधारितं पार्थ, त्वया एकाग्रेण चेतसा चित्तेन ? किं वा अप्रमादतः ।
ஹே பார்த்த! என்னால் உபதேசிக்கப்பட்ட இந்த சாஸ்திரத்தை ஏகாக்கிர சித்தத்துடன் கேட்டாயா? கேட்டு புத்தியில் ஸ்திரப்படுத் தினாயா? அல்லது பிரமாதத்தை அடைந்தாயா?
कच्चित् अज्ञानसंमोहः अज्ञाननिमित्तः संमोहः अविविक्तभावः अविवेकः स्वाभाविकः किं प्रणष्टः ? यदर्थः अयं शास्त्रश्रवणायासः तव, मम च उपदेष्टृत्वायासः प्रवृत्तः, ते तुभ्यं हे धनञ्जय ॥ ७२ ॥
ஹே தனஞ்ஜய! உன்னுடைய அக்ஞானத்தினால் உண்டான மோஹம் அதாவது ஸ்வபாவிகமான மோஹம் அல்லது சித்தத் தின் மூடத்தன்மை முற்றிலும் நஷ்ட்டமாகிவிட்டதா? அதற்கா கவே இந்த சாஸ்திரத்தைக் கேட்பதினால் உண்டாகும் சிரமமும் எனக்கு உபதேசம் செய்ததால் ஏற்பட்ட சிரமமும் ஏற்பட்டது.
अर्जुन उवाच —
அர்ஜுனன் கூறினான்
नष्टो मोहः स्मृतिर्लब्धा त्वत्प्रसादान्मयाच्युत ।
स्थितोऽस्मि गतसन्देहः करिष्ये वचनं तव ॥ ७३ ॥
நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதான்மயாச்யுத ।
ஸ்திதோஅஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசனம் தவ ॥ 73 ॥
नष्टः मोहः अज्ञानजः समस्तसंसारानर्थहेतुः, सागर इव दुरुत्तरः । स्मृतिश्च आत्मतत्त्वविषया लब्धा, यस्याः लाभात् सर्वहृदयग्रन्थीनां विप्रमोक्षः ; त्वत्प्रसादात् तव प्रसादात् मया त्वत्प्रसादम् आश्रितेन अच्युत ।
ஹே அச்யுத! என்னுடைய அக்ஞானத்தினால் உண்டான மோஹமானது எல்லா சம்சார ரூப அநர்த்தங்களுக்கும் காரண மாய் இருந்தது. அதைக் கடப்பது கடலைத் தாண்டுவது போல் மிக வும் கடினமானது. அந்த அக்ஞான மோஹமானது நஷ்ட்டமாகி விட்டது. தங்களுடைய கருணையினால் ஆத்மதத்துவ விஷ யத்தை அடைந்தேன். அதை அடைந்ததால் எல்லா முடிச்சுகளிலி ருந்து (சந்தேஹங்கள் என்னும் முடிச்சிலிருந்து) விடுபட்டேன். உன்னுடைய பிரசாதத்தை ஆச்ரயித்தினாலேயே பெறப்பட்டேன்.
अनेन मोहनाशप्रश्नप्रतिवचनेन सर्वशास्त्रार्थज्ञानफलम् एतावदेवेति निश्चितं दर्शितं भवति, यतः ज्ञानात् मोहनाशः आत्मस्मृतिलाभश्चेति ।
மோஹ நாசத்தின் விஷயமாக உண்டான கேள்வி, பதில் மூல மாக அக்ஞானத்தினால் உண்டான மோஹத்தின் நாசமும், ஆத்ம விஷயத்தின் அடைவும் திடமான நிச்சயத்தால் காண்பிக்கப்பட்டது. இதுவே எல்லா சாஸ்திரங்களின் அர்த்த ஞானத்தின் பலனாகும்.
तथा च श्रुतौ ‘अनात्मवित् शोचामि’ (छा. उ. ७ । १ । ३) इति उपन्यस्य आत्मज्ञानेन सर्वग्रन्थीनां विप्रमोक्षः उक्तः ।
அவ்வாறே சுருதியிலும் அநாத்மவித் சோசாமி = நான் ஆத் மாவை அறியாததினால் சோகத்தை அடைகிறேன் என்று கூறி அதை ஆத்மக்ஞானத்தினால் எல்லா முடிச்சுகளையும் நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பித்யதே ஹ்ருதயக்ரந்தி: = ஹ்ருதய முடிச்சானது நஷ்ட்டமா கிறது என்றும், தத்ர கோ மோஹ: க: சோக ஏகத்வமநுபச்யத: : அங்கு எல்லாம் ஒன்றாகவே அனுபவிப்பவனுக்கு எவ்வாறு மோஹமோ, சோகமோ ஏற்படும்? என்று உபநிஷத் மந்திரங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது.
अथ इदानीं त्वच्छासने स्थितः अस्मि गतसन्देहः मुक्तसंशयः । करिष्ये वचनं तव । अहं त्वत्प्रसादात् कृतार्थः, न मे कर्तव्यम् अस्ति इत्यभिप्रायः ॥ ७३ ॥
இப்பொழுது உங்களுடைய ஆக்ஞைப்படி (கட்டளைப்படி) இருக்கின்றேன். எனக்கு சந்தேஹம் நீங்கிவிட்டது. நீங்கள் கூறிய படி செய்கிறேன். நான் உங்களுடைய பிரசாதத்தால் கிருதார்த்தன் ஆகிவிட்டேன். எனக்கு செய்யவேண்டியது ஒன்றும் இல்லை என் பது அபிப்பிராயம்.
परिसमाप्तः शास्त्रार्थः । अथ इदानीं कथासम्बन्धप्रदर्शनार्थं सञ्जयः उवाच —
சாஸ்திர அர்த்தமானது முடிவிற்கு வந்தது. ஆகையால் இப் பொழுது கதையின் சம்பந்தத்தை காண்பிக்கும் பொருட்டு சஞ்ச யன் கூறினார்-
सञ्जय उवाच —
சஞ்சயன் கூறுகிறார்-
इत्यहं वासुदेवस्य पार्थस्य च महात्मनः ।
संवादमिममश्रौषमद्भुतं रोमहर्षणम् ॥ ७४ ॥
இத்யஹம் வாஸுதேவஸ்ய பார்தஸ்ய ச மஹாத்மன: ।
ஸம்வாதமிமமச்ரௌஷமத்புதம் ரோமஹர்ஷணம் ॥ 74 ॥
इति एवम् अहं वासुदेवस्य पार्थस्य च महात्मनः संवादम् इमं यथोक्तम् अश्रौषं श्रुतवान् अस्मि अद्भुतम् अत्यन्तविस्मयकरं रोमहर्षणं रोमाञ्चकरम् ॥ ७४ ॥
இவ்வாறு மஹாத்மாக்களான வாசுதேவருடையதும், அர்ஜு னனுடையதும் ஆன சம்வாதத்தை எவ்வாறு உரைக்கப்பட்டதோ அவ்வாறு கேட்டு மிகவும் ஆச்சர்யப்பட்டு மயிர்கூச்சல் உடைய வனாக நான் இருக்கிறேன்.
तं च इमम् —
அதையே மேலும்
व्यासप्रसादाच्छ्रुतवानिमं गुह्यतमं परम् ।
योगं योगेश्वरात्कृष्णात्साक्षात्कथयतः स्वयम् ॥ ७५ ॥
வ்யாஸப்ரஸாதச்ச்ருதவானேகுஹ்யமஹம் பரம் ।
யோகம் யோகேச்வராத்க்ருஷ்ணாத்ஸாக்ஷாத்கதயத: ஸ்வயம் ॥ 75 ॥
व्यासप्रसादात् ततः दिव्यचक्षुर्लाभात् श्रुतवान् इमं संवादं गुह्यतमं परं योगम् , योगार्थत्वात् ग्रन्थोऽपि योगः, संवादम् इमं योगमेव वा योगेश्वरात् कृष्णात् साक्षात् कथयतः स्वयम् , न परम्परया ॥ ७५ ॥
வியாசருடைய கிருபையால் திவ்யமான கண்களைப் பெற்று இந்த சிறந்த ரஹஸ்யமான சம்வாதத்தையும் யோகத்தையும் கேட் டேன் அல்லது இந்த சம்வாதமே யோகமாகும். இந்த சம்வாத ரூப யோகத்தை யோகேச்வரராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து நான் தானே நேரே கூறக்கேட்டேன். பரம்பரையாக அல்ல.
राजन् संस्मृत्य संस्मृत्य संवादमिममद्भुतम् ।
केशवार्जुनयोः पुण्यं हृष्यामि च मुहुर्मुहुः ॥ ७६ ॥
ராஜன்ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ஸம்வாதமிமமத்புதம் ।
கேசவார்ஜுனயோ: புண்யம் ஹ்ருஷ்யாமி ச முஹுர்முஹு: ॥ 76 ॥
हे राजन् धृतराष्ट्र, संस्मृत्य संस्मृत्य प्रतिक्षणं संवादम् इमम् अद्भुतं केशवार्जुनयोः पुण्यम् इमं श्रवणेनापि पापहरं श्रुत्वा हृष्यामि च मुहुर्मुहुः प्रतिक्षणम् ॥ ७६ ॥
ஹே ராஜா த்ருதராஷ்ட்ரா! கேசவ அர்ஜுனர்களுடைய பவித்திரமான சம்வாதத்தைக் கேட்டதாலேயே (சிரவணம் செய்த தாலேயே) பாபங்களைப் போக்கக்கூடியது. அதை அடிக்கடி ஒவ்வொரு க்ஷணமும் நினைத்து ஆனந்தம் அடைகிறேன்.
तच्च संस्मृत्य संस्मृत्य रूपमत्यद्भुतं हरेः ।
विस्मयो मे महान्राजन् हृष्यामि च पुनः पुनः ॥ ७७ ॥
தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபமத்யத்புதம் ஹரே: ।
விஸ்மயோ மே மஹான்ராஜன்ஹ்ருஷ்யாமி ச புன: புன: ॥ 77 ॥
तच्च संस्मृत्य संस्मृत्य रूपम् अत्यद्भुतं हरेः विश्वरूपं विस्मयो मे महान् राजन् , हृष्यामि च पुनः पुनः ॥ ७७ ॥
அவ்வாறே ஹே ராஜன்!ஹரியினுடைய அத்புதமான விச்வ ரூபத்தை நினைத்து நினைத்து ஆச்சரியப்படுகிறேன். அவ்வாறே மறுபடியும் மறுபடியும் நினைத்து ஆனந்தத்தை அடைகிறேன்.
किं बहुना —
அதிகம் கூறுவதால் என்ன -
यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः ।
तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम ॥ ७८ ॥
யத்ர யோகேச்வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ தனுர்தர: ।
தத்ர ஸ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம ॥ 78 ॥
यत्र यस्मिन् पक्षे योगेश्वरः सर्वयोगानाम् ईश्वरः, तत्प्रभवत्वात् सर्वयोगबीजस्य, कृष्णः, यत्र पार्थः यस्मिन् पक्षे धनुर्धरः गाण्डीवधन्वा, तत्र श्रीः तस्मिन् पाण्डवानां पक्षे श्रीः विजयः, तत्रैव भूतिः श्रियो विशेषः विस्तारः भूतिः, ध्रुवा अव्यभिचारिणी नीतिः नयः, इत्येवं मतिः मम इति ॥ ७८ ॥
எந்த பக்கத்தில் யோகேச்வரரான கிருஷ்ணர் இருக்கிறாரோ, அவ்வாறே காண்டீபம் என்னும் வில்லைத் தாங்கிய அர்ஜுனன் (பார்த்தன்) இருக்கிறானோ அந்த பாண்டவர்களுடைய பக்ஷத்தில் ஜெயம் உண்டாகும் அவ்வாறே சிறப்பான விபூதிகளும் விஸ்தார மாக இருக்கும். அவ்வாறே மாறுபாடற்றநீதியும் நிலைத்திருக்கும்.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये अष्टादशोऽध्यायः ॥
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே மோக்ஷஸந்யாஸயோகோ நாம் அஷ்டாதசோத்யாய:

@2023-26 Sanatana Sampatti Foundation (Regd.)