द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

श्रीमद्भगवद्गीताभाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

ஶ்ரீமத்பகவத்கீதாபாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

योऽयं योगः अध्यायद्वयेनोक्तः ज्ञाननिष्ठालक्षणः , ससंन्यासः कर्मयोगोपायः, यस्मिन् वेदार्थः परिसमाप्तः, प्रवृत्तिलक्षणः निवृत्तिलक्षणश्च, गीतासु च सर्वासु अयमेव योगो विवक्षितो भगवता । अतः परिसमाप्तं वेदार्थं मन्वानः तं वंशकथनेन स्तौति श्रीभगवान् —
கர்மயோகத்தை உபாயமாக உடைய சந்நியாசத்துடன் கூடிய ஞானநிஷ்ட்டை லக்ஷணமான ஞான யோகமானது முன் இரண்டு அத்தியாயங்களில் விளக்கப்பட்டது. பிரவிருத்தி லக்ஷண, நிவிர்த்தி லக்ஷணமாகிய வேதத்தின் தாத்பர்யம் எதில் முடிவடைகிறதோ அந்த யோகத்தைப் பற்றி கீதை முழுவதும் விளக்கமாக பகவானால் கூறப்பட்டது. ஆகையால் வேதார்த்தம் பூர்ணமாக முடியப்பெற்ற தாகக் கொண்டு பகவான் வம்ச பரம்பரையைக் கூறி அதை (ஞான நிஷ்ட்டாரூபத்தை) ஸ்துதி (போற்றுகிறார்) செய்கிறார்.
श्रीभगवानुवाच —
பகவான் கூறினார்.
इमं विवस्वते योगं प्रोक्तवानहमव्ययम् ।
विवस्वान्मनवे प्राह मनुरिक्ष्वाकवेऽब्रवीत् ॥ १ ॥
இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாநஹமவ்யயம் ।
விவஸ்வான்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவேஅப்ரவீத் ॥ 1 ॥
इमम् अध्यायद्वयेनोक्तं योगं विवस्वते आदित्याय सर्गादौ प्रोक्तवान् अहं जगत्परिपालयितॄणां क्षत्रियाणां बलाधानाय तेन योगबलेन युक्ताः समर्था भवन्ति ब्रह्म परिरक्षितुम् । ब्रह्मक्षत्रे परिपालिते जगत् परिपालयितुमलम् ।
ஜகத்தைப் பரிபாலனம் செய்கின்ற க்ஷத்ரியர்களின் பலத்தை உண்டாக்குவதற்கு நான் ஸ்ருஷ்ட்டியின் ஆரம்பகாலத்தில் சூரியனுக்கு உபதேசித்ததை இவ்விரு அத்தியாயங்களில் கூறப் பட்டுள்ளது. அந்த யோகபலத்தினால் பிராமணர்களை ரக்ஷிப்பதால் சாமர்த்தியம் உடையவர்களாகிறார்கள். ஜகத்தை ரக்ஷிப்பதற்கு பிராஹ்மண, க்ஷத்ரியர்களை ரக்ஷித்தாலே போதும்.
अव्ययम् अव्ययफलत्वात् । न ह्यस्य योगस्य सम्यग्दर्शननिष्ठालक्षणस्य मोक्षाख्यं फलं व्येति ।
அழிவில்லாத பலனாய் இருப்பதால் சம்யக் தர்சன நிஷ்ட்டாயோ கத்தினுடைய மோக்ஷ ரூபமான பலன் ஒருபோதும் நஷ்ட்டமாகாது.
स च विवस्वान् मनवे प्राह । मनुः इक्ष्वाकवे स्वपुत्राय आदिराजाय अब्रवीत् ॥ १ ॥
அந்த சூரிய பகவான் மனுவிற்கு கூறினார். மனுவானவர் தன்னு டைய புத்திரனான ஆதிராஜாவாகிய இக்ஷ்வாகுவிற்குக் கூறினார்.
एवं परम्पराप्राप्तमिमं राजर्षयो विदुः ।
स कालेनेह महता योगो नष्टः परन्तप ॥ २ ॥
ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது: ।
ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட: பரந்தப ॥ 2 ॥
एवं क्षत्रियपरम्पराप्राप्तम् इमं राजर्षयः राजानश्च ते ऋषयश्च राजर्षयः विदुः इमं योगम् ।
இவ்வாறு பரம்பரையாக அடைந்த இந்த யோகத்தை ராஜ ரிஷிகள் அறிந்திருந்தார்கள், ராஜரிஷிகள் என்றால் அரசர்களாயும் ரிஷிகளாயும் இருப்பவர்கள்.
स योगः कालेन इह महता दीर्घेण नष्टः विच्छिन्नसम्प्रदायः संवृत्तः । हे परन्तप, आत्मनः विपक्षभूताः परा इति उच्यन्ते, तान् शौर्यतेजोगभस्तिभिः भानुरिव तापयतीति परन्तपः शत्रुतापन इत्यर्थः ॥ २ ॥
அந்த யோகமானது அதிக காலமானதினாலே சம்பிரதாய பரம்ப ரையானது விடுபட்டுவிட்டது ஹே பரந்தப! தன்னுடைய எதிரிகள் பரர்கள் எனப்படுவர். அவர்களை தன்னுடைய பராக்கிரம தேஜோமயமான கிரணங்களால் சுட்டுஎரிப்பவன் என்பதால் பரந்தப. இதன் பொருள் சத்துருக்களை தபிக்கச் செய்பவன்.
दुर्बलानजितेन्द्रियान् प्राप्य नष्टं योगमिममुपलभ्य लोकं च अपुरुषार्थसम्बन्धिनम् —
இந்த யோகம் மனதில் திடம் இல்லாதவரையும், இந்திரியங்களை ஜெயிக்காதவரையும் சார்ந்து நசித்திருப்பதையும், உலகமானது குறிக்கோளற்று இருப்பதையும் கண்டு.
स एवायं मया तेऽद्य योगः प्रोक्तः पुरातनः ।
भक्तोऽसि मे सखा चेति रहस्यं ह्येतदुत्तमम् ॥ ३ ॥
ஸ ஏவாயம் மயா தேஅத்ய யோக: ப்ரோக்த: புராதன: ।
பக்தோஅஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம் ॥ 3 ॥
स एव अयं मया ते तुभ्यम् अद्य इदानीं योगः प्रोक्तः पुरातनः भक्तः असि मे सखा च असि इति । रहस्यं हि यस्मात् एतत् उत्तमं योगः ज्ञानम् इत्यर्थः ॥ ३ ॥
நீ என்னுடைய பக்தனாயும், நண்பணாயும் இருப்பதால் அந்த இந்த புராதனமான யோகத்தை இப்பொழுது உன்பொருட்டு என்னால் கூறப்பட்டது, எதனால் எனில் இந்த ஞானயோகமானது மேலானதும், ரகஸ்யமானதும் ஆகும் என்பது பொருள்.
भगवता विप्रतिषिद्धमुक्तमिति मा भूत् कस्यचित् बुद्धिः इति परिहारार्थं चोद्यमिव कुर्वन् —
பகவானாலே ஒன்றுக்கொன்று முரணாக கூறப்பட்டுள்ளது என்று ஒருவரும் எண்ணிவிடக் கூடாது என்று அதை (அந்த விரோத மான எண்ணத்தை) நீக்குவதின் பொருட்டு சங்கை செய்வதுபோல் (அர்ச்சுனன்) கூறலானான்.
अर्जुन उवाच —
அர்ச்சுனன் கூறினான்.
अपरं भवतो जन्म परं जन्म विवस्वतः ।
कथमेतद्विजानीयां त्वमादौ प्रोक्तवानिति ॥ ४ ॥
அபரம் பவதோ ஜன்ம பரம் ஜந்ம விவஸ்வத: ।
கதமேதத்விஜாநீயாம் த்வமாதௌ ப்ரோக்தவாநிதி ॥ 4 ॥
अपरम् अर्वाक् वसुदेवगृहे भवतो जन्म । परं पूर्वं सर्गादौ जन्म उत्पत्तिः विवस्वतः आदित्यस्य ।
உங்களுடைய ஜன்மமானது வசுதேவருடைய க்ருஹத்தில் பின்னால் உண்டானது, ஆனால் சூரியனுடைய ஜன்மமோ சிருஷ்ட்டியின் ஆதிகாலத்திலேயே உண்டானது.
तत् कथम् एतत् विजानीयाम् अविरुद्धार्थतया, यः त्वमेव आदौ प्रोक्तवान् इमं योगं स एव इदानीं मह्यं प्रोक्तवानसि इति ॥ ४ ॥
நீங்களே முதலில் இந்த ஞானயோகத்தை கூறினீர்கள் அதையே நீங்கள் என் பொருட்டு கூறிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை விருத்த மற்றதாக மாறுபாடு அற்றதாக எவ்வாறு அறிவேன்? என்று.
या वासुदेवे अनीश्वरासर्वज्ञाशङ्का मूर्खाणाम् , तां परिहरन् श्रीभगवानुवाच, यदर्थो ह्यर्जुनस्य प्रश्नः —
பகவானாகிய வாசுதேவருடைய விஷயத்தில் மூடர்களுக்கு ஏற் படும் கடவுள் இல்லை, அவர் சர்வக்ஞர் இல்லை என்று ஏற்படும் சங் கையை நீக்குவதற்காக அர்ஜுனனுடைய வினா அமைந்தது. அந்த சந்தேஹத்தை நீக்குவதற்காக பகவான் கூறுகிறார்.
बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन ।
तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप ॥ ५ ॥
பஹூG மே வ்யதீதானி ஜன்மாநி தவ சார்ஜுன ।
தான்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப ॥ 5 ॥
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச
बहूनि मे मम व्यतीतानि अतिक्रान्तानि जन्मानि तव च हे अर्जुन । तानि अहं वेद जाने सर्वाणि न त्वं वेत्थ न जानीषे, धर्माधर्मादिप्रतिबद्धज्ञानशक्तित्वात् ।
ஹே! அர்ஜுன! உனக்கும் எனக்கும் இதற்குமுன் அநேக ஜன் மங்கள் எடுத்து தாண்டி வந்துள்ளோம். அவைகளை எல்லாம் நான் அறிவேன். ஆனால் புண்ய, பாப முதலிய சம்சார பந்தத்தினால் உன்னுடைய ஞான சக்தியானது மறைக்கப்பட்டுள்ளது. ஆதலால் நீ அறியமாட்டாய்.
अहं पुनः नित्यशुद्धबुद्धमुक्तस्वभावत्वात् अनावरणज्ञानशक्तिरिति वेद अहं हे परन्तप ॥ ५ ॥
ஹே! பரந்தப! மேலும் நான் நித்ய சுத்த புக்த முக்த ஸ்வபாவ முடையவராய் இருப்பதால் மறைக்கப்படாத சக்தி உடையவன் என்று அறி.
कथं तर्हि तव नित्येश्वरस्य धर्माधर्माभावेऽपि जन्म इति, उच्यते —
நித்யமான ஈஸ்வரனிடத்தில் புண்யபாபம் இல்லாமையால் எவ் வாறு ஜன்மம் உண்டாகிறது என்று கூறுகிறார்.
अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन् ।
प्रकृतिं स्वामधिष्ठाय सम्भवाम्यात्ममायया ॥ ६ ॥
அஜோஅபி ஸந்நவ்யயாத்மா பூதானாமீச்வரோஅபி ஸன் ।
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா ॥ 6 ॥
अजोऽपि जन्मरहितोऽपि सन् , तथा अव्ययात्मा अक्षीणज्ञानशक्तिस्वभावोऽपि सन् , तथा भूतानां ब्रह्मादिस्तम्बपर्यन्तानाम् ईश्वरः ईशनशीलोऽपि सन् , प्रकृतिं स्वां मम वैष्णवीं मायां त्रिगुणात्मिकाम् , यस्या वशे सर्वं जगत् वर्तते, यया मोहितं सत् स्वमात्मानं वासुदेवं न जानाति, तां प्रकृतिं स्वाम् अधिष्ठाय वशीकृत्य सम्भवामि देहवानिव भवामि जात इव आत्ममायया आत्मनः मायया, न परमार्थतो लोकवत् ॥ ६ ॥
ஜென்மமற்றவனாயும், குறைவற்றஞானசக்தி சுவபாவமுடைய வனாயும், பிரஹ்மா முதல் ஸ்தாவரம் வரையிலும் உள்ள எல்லா பிராணிகளையும் ஆள்வதில் சாமர்த்தியமுடையவனாயும் உள்ள நான் இந்த உலகமெல்லாம் என்னுடைய பிரகிருதியாகிய விஷ்ணுமா யையினால் வசப்பட்டு மோஹமடைந்து வாசுதேவனே தன் ஆத்மாவாக பார்க்கவில்லையோ, அந்த என்னுடைய மாயையை வசப்படுத்தி தேஹம் எடுத்தவன் போல் இருக்கிறேன். ஜன்மம் எடுத்தது போல் ஆத்ம மாயையால் தோன்றுகிறேன். உலகத்தாரைப் போல உண்மையில் அல்ல.
तच्च जन्म कदा किमर्थं च इत्युच्यते —
அந்த ஜன்மம் எப்பொழுது? எதன் பொருட்டு? என்று கூறுகிறார்.
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत ।
अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् ॥ ७ ॥
யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத ।
அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் ॥ 7 ॥
यदा यदा हि धर्मस्य ग्लानिः हानिः वर्णाश्रमादिलक्षणस्य प्राणिनामभ्युदयनिःश्रेयससाधनस्य भवति भारत, अभ्युत्थानम् उद्भवः अधर्मस्य, तदा तदा आत्मानं सृजामि अहं मायया ॥ ७ ॥
ஹே பாரத! எப்பொழுது எப்பொழுது வர்ணாச்ரமாதி லக்ஷணங்க ளோடு கூடிய பிராணிகளுக்கு இஹ பரலோக நன்மைக்கும், முக்திக்கும் சாதனமாகிய தர்மத்திற்கு ஹானியும் அதர்மத்திற்கு ஏற்றமும் ஏற்படும்பொழுது நான் என் மாயையினால் தர்மத்தை ரக்ஷிக்கும் பொருட்டு என்னை சிருஷ்ட்டித்துக் கொள்கிறேன்.
किमर्थम् ? —
எதன் பொருட்டு எனில்
परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् ।
धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे ॥ ८ ॥
பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் ।
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே ॥ 8 ॥
परित्राणाय परिरक्षणाय साधूनां सन्मार्गस्थानाम् , विनाशाय च दुष्कृतां पापकारिणाम् , किञ्च धर्मसंस्थापनार्थाय धर्मस्य सम्यक् स्थापनं तदर्थं सम्भवामि युगे युगे प्रतियुगम् ॥ ८ ॥
சன்மார்க்கத்தில் உள்ள சாதுக்களை ரக்ஷி ப்பதன் பொருட்டும், பாபசெயல்களை உடைய துஷ்டர்களை நாசம் செய்வதின் பொருட்டும் மேலும் தர்மத்தை நன்றாக நிலைநாட்டுவதன் பொருட்டும் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கிறேன்.
तत् —
அது
जन्म कर्म च मे दिव्यमेवं यो वेत्ति तत्त्वतः ।
त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन ॥ ९ ॥
ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்வத: ।
த்யக்த்வா தேஹம் புநர்ஜன்ம நைதி மாமேதி ஸோஅர்ஜுன ॥ 9 ॥
जन्म मायारूपं कर्म च साधूनां परित्राणादि मे मम दिव्यम् अप्राकृतम् ऐश्वरम् एवं यथोक्तं यः वेत्ति तत्त्वतः तत्त्वेन यथावत्  ।
என்னுடைய ஜன்மமானது மாயாரூபம். கர்மமானது சாதுக்களை ரக்ஷி த்தல் முதலியவை என்னுடைய அலௌகிகமான திவ்ய ஈஸ்வரசக்தியாகும் என்று சொல்லப்பட்டதை எவன் உள்ளபடி அறிகிறானோ அவன் தத்துவத்தை அறிந்தவனாவான்.
त्यक्त्वा देहम् इमं पुनर्जन्म पुनरुत्पत्तिं न एति न प्राप्नोति । माम् एति आगच्छति सः मुच्यते हे अर्जुन ॥ ९ ॥
ஹே அர்ஜுனா! அவன் இந்த சரீரத்தை விட்டபின் வேறு ஜன்மத்தை அடையமாட்டான். அவன் என்னையே அடைவான். அவனே முக்தன் (முக்தியை அடைந்தவன்)
नैष मोक्षमार्ग इदानीं प्रवृत्तः ; किं तर्हि ? पूर्वमपि —
இந்த மோக்ஷமார்க்கமானது இப்பொழுது ஏற்பட்டதல்ல. முன்பே இருந்தது-
वीतरागभयक्रोधा मन्मया मामुपाश्रिताः ।
बहवो ज्ञानतपसा पूता मद्भावमागताः ॥ १० ॥
வீதராகபயக்ரோதா: மந்மயா மாமுபாச்ரிதா: ।
பஹவோ க்ஞானதபஸா பூதா மத்பாவமாகதா: ॥ 10 ॥
वीतरागभयक्रोधाः रागश्च भयं च क्रोधश्च वीताः विगताः येभ्यः ते वीतरागभयक्रोधाः मन्मयाः ब्रह्मविदः ईश्वराभेददर्शिनः मामेव च परमेश्वरम् उपाश्रिताः केवलज्ञाननिष्ठा इत्यर्थः । बहवः अनेके ज्ञानतपसा ज्ञानमेव च परमात्मविषयं तपः तेन ज्ञानतपसा पूताः परां शुद्धिं गताः सन्तः मद्भावम् ईश्वरभावं मोक्षम् आगताः समनुप्राप्ताः।
எவர்களுக்கு ராகம், பயம், க்ரோதம் இவைகள் நீங்கியதோ அவர்கள் ராகாதி தோஷங்கள் அற்றவர்கள். ஈஸ்வர மயமானவர்கள் என்றால் பிரஹ்மத்தை அறிந்தவராய் ஈச்வரன் வேறு, தான் வேறு என்று அறிந்தவர்களாய் பரமேச்வரனாகிய என்னையே ஆச்ரயித்த வர்களாய் எப்பொழுதும் ஞானநிஷ்ட்டையில் இருப்பவர்கள் என்பது பொருள். அநேக புருஷர்கள் பரமாத்மாவைப் பற்றிய ஞானம் என்னும் தபசினால் மேலான சுத்தியைப் பெற்று என்னுடைய பாவமாகிய ஈஸ்வரபாவத்தைப் பெற்று மோக்ஷத்தை அடைந்தார்கள்.
इतरतपोनिरपेक्षज्ञाननिष्ठा इत्यस्य लिङ्गम् ‘ज्ञानतपसा’ इति विशेषणम् ॥ १० ॥
ஞான நிஷ்ட்டையானது (மோக்ஷத்தை அளிக்கும் விஷயத்தில்) மற்றதவங்களை ஆச்ரயிக்காது என்பதற்காக ஞானதபஸினால் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது.
तव तर्हि रागद्वेषौ स्तः, येन केभ्यश्चिदेव आत्मभावं प्रयच्छसि न सर्वेभ्यः इत्युच्यते —
ஆகையால் உங்களுக்கு ராக, த்வேஷம் இருக்கிறது, ஏனெனில் ஒரு சிலருக்கு மாத்திரம் மோக்ஷத்தை அருளுகிறீர்கள். எல்லோ ருக்கும் அல்ல என்றசங்கைக்கு (பகவான்) பதில் அளிக்கிறார்.
ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् ।
मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः ॥ ११ ॥
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் ।
மம வர்த்மானுவர்தந்தே மனுஷ்யா: பார்த ஸர்வச: ॥ 11 ॥
ये यथा येन प्रकारेण येन प्रयोजनेन यत्फलार्थितया मां प्रपद्यन्ते तान् तथैव तत्फलदानेन भजामि अनुगृह्णामि अहम् इत्येतत् । तेषां मोक्षं प्रति अनर्थित्वात् ।
எவர்கள் எவ்வாறு எந்தவிதமாக எந்த பிரயோஜனத்தில் இச்சை உள்ளவர்களாகி என்னை அடைகிறார்களோ அவர்களுக்கு அவ்வாறே பலத்தைக் கொடுத்து நான் அனுக்ரஹம் செய்கிறேன். அவர்களுக்கு மோக்ஷத்தில் விருப்பம் இல்லை.
न हि एकस्य मुमुक्षुत्वं फलार्थित्वं च युगपत् सम्भवति ।
ஒரே சமயத்தில் முமுக்ஷத்துவமும், பலத்தில் இச்சையும் ஏற்படுவதில்லை.
अतः ये फलार्थिनः तान् फलप्रदानेन, ये यथोक्तकारिणस्तु अफलार्थिनः मुमुक्षवश्च तान् ज्ञानप्रदानेन, ये ज्ञानिनः संन्यासिनः मुमुक्षवश्च तान् मोक्षप्रदानेन, तथा आर्तान् आर्तिहरणेन इत्येवं यथा प्रपद्यन्ते ये तान् तथैव भजामि इत्यर्थः ।
ஆகையால் எவர்கள் பயனை இச்சிக்கிறார்களோ அவர்களுக்கு பயனையும், எவர்கள் சாஸ்திரத்தில் கூறியபடி கர்மங் களை செய்துகொண்டு பலத்தில் இச்சை அற்றவர்களாய் இருக்கிறார் களோ அவர்களுக்கு ஞானத்தையும், எவர்கள் ஞானியாகவும், சந்நி யாசியாகவும், முமுக்ஷக்களாயும் இருக்கிறார்களோ அவர்களுக்கு மோக்ஷத்தையும், எவர்கள் துக்கத்தினின்றும் விடுதலை அடைய விரும்புகிறார்களோ அவர்களுக்கு துக்கநிவிர்த்தியையும் அடையச் செய்கிறேன். எவர்கள் எவ்வாறு என்னை அடைகிறார்களோ அவ்வாறே அவர்களை அனுக்ரஹிக்கிறேன் என்பது பொருள்.
न पुनः रागद्वेषनिमित्तं मोहनिमित्तं वा कञ्चित् भजामि ।
மேலும் ராகதுவேஷ நிமித்தமாகவோ, மோஹ நிமித்தமாகவோ (நான்) ஒருவருக்கும் அனுக்ரஹம் செய்யமாட்டேன்.
सर्वथापि सर्वावस्थस्य मम ईश्वरस्य वर्त्म मार्गम् अनुवर्तन्ते मनुष्याः — यत्फलार्थितया यस्मिन् कर्मणि अधिकृताः ये प्रयतन्ते ते मनुष्या अत्र उच्यन्ते — हे पार्थ सर्वशः सर्वप्रकारैः ॥ ११ ॥
எவ்வகையிலாவது மனிதர்கள் ஈஸ்வரானாகிய என்னுடைய மார்க்கத்தை அனுசரிக்கின்றார்கள். எந்த பலத்தில் இச்சை உள்ளவர் களாகி எந்த கர்மத்திற்கு அதிகாரிகளாகி எல்லா வகையிலும் பிரயத்னம் செய்கிறார்களோ அவர்களே மனிதர்கள் என்று கூறப்படுகிறார்கள்.
यदि तव ईश्वरस्य रागादिदोषाभावात् सर्वप्राणिषु अनुजिघृक्षायां तुल्यायां सर्वफलप्रदानसमर्थे च त्वयि सति ‘वासुदेवः सर्वम्’ इति ज्ञानेनैव मुमुक्षवः सन्तः कस्मात् त्वामेव सर्वे न प्रतिपद्यन्ते इति ? शृणु तत्र कारणम् —
எதனால் ஈஸ்வரனாகிய நீங்கள் ராக துவேஷமற்றவராய், எல்லா பிராணிகளுக்கும் சமமாய் அனுக்ரஹிப்பதில் இச்சை உடையவராய் எல்லா பலன்களையும் கொடுப்பதில் சாமர்த்தியம் உடையவராய் இருந்தபோதிலும், வாசுதேவனே எல்லாம் என்றஞானத்தினால் மோக்ஷமடைய விரும்பியவராய் எல்லோரும் ஏன் உன்னையே சரணமடைவதில்லை, என்றால் அதன் காரணத்தைக் கேள்.
काङ्क्षन्तः कर्मणां सिद्धिं यजन्त इह देवताः ।
क्षिप्रं हि मानुषे लोके सिद्धिर्भवति कर्मजा ॥ १२ ॥
காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா: ।
க்ஷி ப்ரம் ஹி மானுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா ॥ 12 ॥
काङ्क्षन्तः अभीप्सन्तः कर्मणां सिद्धिं फलनिष्पत्तिं प्रार्थयन्तः यजन्ते इह अस्मिन् लोके देवताः इन्द्राग्न्याद्याः -
கர்மபலத்தில் இச்சை உடைய மனிதர்கள் இந்த லோகத்தில் இந்திரன், அக்நி முதலிய தேவதைகளுக்கு பூஜை செய்கிறார்கள்.
அத யோ அன்யாம் தேவதாமுபாஸ்தே அன்யோ அஸாவான்யோ அஹமஸ்மீதி ந ஸ வேதயதா பசுரேவம் ஸ தேவா னாம், சுருதியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த பாவனையுடன் எவர்கள் மற்றதேவதைகளை பூஜை செய்கிறார்களோ அவர்கள்.

அந்த தேவதை வேறு நான் வேறு என்று கொஞ்சமும் அறியாத தால் மனிதர்களுக்கு ஆடு, மாடு முதலியவை எவ்வாறோ அவ்வாறே தேவதைகளுக்கு ஆகிறார்கள்.
तेषां हि भिन्नदेवतायाजिनां फलाकाङ्क्षिणां क्षिप्रं शीघ्रं हि यस्मात् मानुषे लोके, मनुष्यलोके हि शास्त्राधिकारः ।
வேறுபலத்தில் இச்சை உடையவர்களாகி வேறு தேவதைகஞக்கு பூஜை செய்கிறமனிதர்களுக்கு இந்த மனித உலகத்தில் விரை வாகவே பலன் கிடைக்கிறது. ஏனெனில் மனித லோகத்தில் தான் சாஸ்திரத்திற்கு அதிகாரம் உள்ளது.
‘क्षिप्रं हि मानुषे लोके’ इति विशेषणात् अन्येष्वपि कर्मफलसिद्धिं दर्शयति भगवान् ।
மனிதலோகத்தில் எங்கு விரைவாக என்றவிசேஷணத்தினால் மற்றலோகங்களிலும் கூட கர்மபலன்கள் ஏற்படும் என்பதை பகவான் காண்பிக்கிறார்.
मानुषे लोके वर्णाश्रमादिकर्माणि इति विशेषः, तेषां च वर्णाश्रमाद्यधिकारिकर्मणां फलसिद्धिः क्षिप्रं भवति । कर्मजा कर्मणो जाता ॥ १२ ॥
மனிதலோகத்தில் வர்ணாச்ரம முதலியவைக்கு தகுந்தவாறு கர்மத்தில் அதிகாரம் இருத்தலே அந்த விசேஷணம், அந்த வர்ணாச்ரம முதலியவற்றில் அதிகாரமுடையவனுடைய கர்மத்திற்கு ஏற்ப கர்மத்தினால் ஏற்படும் பலன் விரைவாகவே சித்திக்கிறது.
मानुषे एव लोके वर्णाश्रमादिकर्माधिकारः, न अन्येषु लोकेषु इति नियमः किंनिमित्त इति ।
மனிதலோகத்தில் மாத்திரமே வர்ணாச்ரம கர்மங்களுக்கு அதிகாரி. ஆனால் மற்றலோகங்களில் இல்லை என் பது நியமம். இந்த நியமம் எந்த நிமித்தத்தால்-
अथवा वर्णाश्रमादिप्रविभागोपेताः मनुष्याः मम वर्त्म अनुवर्तन्ते सर्वशः इत्युक्तम् । कस्मात्पुनः कारणात् नियमेन तवैव वर्त्म अनुवर्तन्ते न अन्यस्य इति ? उच्यते —
அல்லது வர்ணாச்ரமாதி விபாகங்களுடைய மனிதன் எப்பொழு தும் என் மார்க்கத்தையே அனுசரிக்கின்றான் என்று கூறினீர்கள். மறு படியும் நியமமாக என்னுடைய மார்க்கத்தை அனுசரிக்காமல் மற்றமார்க்கத்தில் ஈடுபடுகின்றனர் என்று எந்த காரணத்தைக் கொண்டு கூறி அருளினீர்கள் என்றால் கூறுகிறேன்-
चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागशः ।
तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम् ॥ १३ ॥
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகச: ।
தஸ்ய கர்தாரமபி மாம் வித்தயகர்தாரமவ்யயம் ॥ 13 ॥
चत्वार एव वर्णाः चातुर्वर्ण्यं मया ईश्वरेण सृष्टम् उत्पादितम् , ‘ब्राह्मणोऽस्य मुखमासीत्’ (ऋ. १० । ८ । ९१) इत्यादिश्रुतेः । गुणकर्मविभागशः गुणविभागशः कर्मविभागशश्च । गुणाः सत्त्वरजस्तमांसि ।
ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்றநான்கு வர்ணங்களும் என்னால் சிருஷ்டிக்கப்பட்டது. பிராஹ்மணன் இதன் முகமானான், என்றசுருதி வாக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. சத்வ ரஜஸ்தமஸ் ஆகிய முக்குணங்களின் ஏற்றதாழ்வுக்கும், கர்மத்தின் ஏற்றதாழ்வுக்கும் ஏற்றவாறு நான்கு வர்ணங்கள் என்னால் சிருஷ்டிக்கப்பட்டது.
तत्र सात्त्विकस्य सत्त्वप्रधानस्य ब्राह्मणस्य ‘शमो दमस्तपः’ (भ. गी. १८ । ४२) इत्यादीनि कर्माणि ।
சாத்விகனான சத்வகுணத்தைப் பிரதானமாக உடைய பிராம்ம ணனுக்கு சமம், தமம், தபஸ் முதலிய கர்மங்கள்
सत्त्वोपसर्जनरजःप्रधानस्य क्षत्रियस्य शौर्यतेजःप्रभृतीनि कर्माणि ।
சத்வகுணத்துடன் ரஜோகுணம் பிரதானமாக உடைய க்ஷத்ரிய னுக்கு சூர வீரத்தன்மை, தேஜஸ் கூடியவை முதலிய கர்மங்கள்
तमउपसर्जनरजःप्रधानस्य वैश्यस्य कृष्यादीनि कर्माणि ।
தமசுடன் ரஜோகுணம் பிரதானமாக உடைய வைசியனுக்கு உழவு முதலிய கர்மங்கள்
रजउपसर्जनतमःप्रधानस्य शूद्रस्य शुश्रूषैव कर्म इत्येवं गुणकर्मविभागशः चातुर्वर्ण्यं मया सृष्टम् इत्यर्थः ।
ரஜோகுணத்துடன் தமஸ் பிரதானமாக உடைய சூத்திரனுக்கு மற்றவர்களுக்கு சேவை செய்தல் முதலிய கர்மங்கள் என இவ்வாறு குணம் கர்மம் என்பனவற்றின் ஏற்றதாழ்வுக்கேற்ப நான்கு வர்ணங்கள் என்னால் சிருஷ்ட்டிக்கப்பட்டது என்பது பொருள்.
तच्च इदं चातुर्वर्ण्यं न अन्येषु लोकेषु, अतः मानुषे लोके इति विशेषणम् ।
இந்த நான்கு வர்ணங்களும் மற்றலோகங்களில் இல்லை. என்பதை காண்பிப்பதற்காக மானுடலோகம் என்று விசேஷணம் கூறப்பட்டுள்ளது.
हन्त तर्हि चातुर्वर्ण्यस्य सर्गादेः कर्मणः कर्तृत्वात् तत्फलेन युज्यसे, अतः न त्वं नित्यमुक्तः नित्येश्वरश्च इति ? उच्यते —
நீங்கள் சதுர்வர்ணங்களை சிருஷ்ட்டித்தல் முதலிய கர்மங்க ளுக்கு கர்த்தாவானால், அப்பொழுது தங்களுக்கு அந்த பலத்தில் சம்பந்தம் ஏற்படும். ஆகையால் தாங்கள் நித்ய முக்தன், நித்ய ஈஸ்வரன் ஆக முடியாதே எனில் இதைக் குறித்து கூறப்படுகிறது.
यद्यपि मायासंव्यवहारेण तस्य कर्मणः कर्तारमपि सन्तं मां परमार्थतः विद्धि अकर्तारम् । अत एव अव्ययम् असंसारिणं च मां विद्धि ॥ १३ ॥
மாயையின் வியவஹாரத்தால் அந்த கர்மங்களின் கர்த்தாவாக இருக்கிறேன் என்றாலும் உண்மையில் நான் அகர்த்தா என்று அறி. ஆகையினாலேயே நான் அவ்வியயம் அதாவது நான் அசம்சாரி என்று அறி.
येषां तु कर्मणां कर्तारं मां मन्यसे परमार्थतः तेषाम् अकर्ता एवाहम् , यतः —
எந்த கர்மங்களுக்கு என்னை கர்த்தாவாக நினைக்கிறார்களோ உண்மையில் நான் அவைகளுக்கு அகர்த்தா. ஏனெனில்-
न मां कर्माणि लिम्पन्ति न मे कर्मफले स्पृहा ।
इति मां योऽभिजानाति कर्मभिर्न स बध्यते ॥ १४ ॥
ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா ।
இதி மாம் யோஅபிஜாநாதி கர்மபிர்ன ஸ பத்யதே ॥ 14 ॥
न मां तानि कर्माणि लिम्पन्ति देहाद्यारम्भकत्वेन, अहङ्काराभावात् । न च तेषां कर्मणां फलेषु मे मम स्पृहा तृष्णा ।
எனக்கு அஹங்காரம் இல்லாததினால் அந்த கர்மமானது தேஹம் முதலியவற்றின் உத்பத்திக்கு காரணமாகி என்னை ஒருபொழுதும் பற்றாது. மேலும் அந்த கர்ம பலனில் எனக்கு ஆசையும் இல்லை.
येषां तु संसारिणाम् ‘अहं कर्ता’ इत्यभिमानः कर्मसु, स्पृहा तत्फलेषु च, तान् कर्माणि लिम्पन्ति इति युक्तम् , तदभावात् न मां कर्माणि लिम्पन्ति ।
எந்த சம்சாரிகளுக்கு நான் கர்த்தா என்றஅபிமானமும், கர்மங்க ளிலும், அதன் பலன்களிலும் ஆசையும் உள்ளதோ அவர்களை கர்மங்கள் பற்றுகின்றன. அந்த அகங்காரம் இல்லாததால் என்னை அந்த கர்மங்கள் பற்றுவதில்லை.
इति एवं यः अन्योऽपि माम् आत्मत्वेन अभिजानाति ‘नाहं कर्ता न मे कर्मफले स्पृहा’ इति सः कर्मभिः न बध्यते, तस्यापि न देहाद्यारम्भकाणि कर्माणि भवन्ति इत्यर्थः ॥ १४ ॥
என்று இவ்வாறு எவன் ஒருவன் என்னை ஆத்மரூபமாக அறிகி றானோ என்றால் நான் கர்த்தா அல்ல, கர்ம பலத்தில் எனக்கு ஆசை இல்லை என்று எவன் அறிகிறானோ அவனை கர்மங்கள் பற்றுவது இல்லை. அவர்களுக்கும் தேஹத்தை ஆரம்பிக்கக்கூடிய கர்மங்கள் இல்லை என்பது பொருள்.
‘नाहं कर्ता न मे कर्मफले स्पृहा’ इति —
நான் கர்த்தா அல்ல. அவ்வாறேஎனக்கு கர்ம பலத்தில் ஆசை இல்லை.
एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः ।
कुरु कर्मैव तस्मात्त्वं पूर्वैः पूर्वतरं कृतम् ॥ १५ ॥
ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷபி: ।
குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம் ॥ 15 ॥
एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैः अपि अतिक्रान्तैः मुमुक्षुभिः । कुरु तेन कर्मैव त्वम् , न तूष्णीमासनं नापि संन्यासः कर्तव्यः ।
இவ்வாறு அறிந்த முன்னோர்களாகிய முமுக்ஷக்களும் கர்மம் செய்தார்கள். ஆகையால் கர்மம் செய். ஒன்றும் செய்யாமல் அமர்ந்தி ருக்கக்கூடாது. சந்நியாசமும் செய்யக்கூடாது.
तस्मात् त्वं पूर्वैरपि अनुष्ठितत्वात् , यदि अनात्मज्ञः त्वं तदा आत्मशुद्ध्यर्थम् , तत्त्वविच्चेत् लोकसङ्ग्रहार्थं पूर्वैः जनकादिभिः पूर्वतरं कृतं न अधुनातनं कृतं निर्वर्तितम् ॥ १५ ॥
ஆகையால் முன்னோர்கள் அனுஷ்ட்டித்ததினால் நீ அக்ஞானி யாய் இருந்தால் சித்த சுத்தியின் பொருட்டும், நீ ஞானியாய் இருந்தால் லோகசங்க்ரஹத்தின் பொருட்டும் ஜனகர் முதலிய முன்னோர்கள் அனுஷ்ட்டித்ததுபோல் அனுஷ்டிக்கவேண்டும். (இதற்கு மாறாக உள்ள) இப்பொழுது உள்ளவர்கள் அனுஷ்ட் டிப்பது போல் கூடாது.
तत्र कर्म चेत् कर्तव्यं त्वद्वचनादेव करोम्यहम् , किं विशेषितेन ‘पूर्वैः पूर्वतरं कृतम्’ इत्युच्यते ; यस्मात् महत् वैषम्यं कर्मणि । कथम् ? —
கர்மம் அவசியம் செய்யவேண்டியது என்று உங்களுடைய ஆக் ஞையின்படி நான் செய்கிறேன். எதன் பொருட்டு விசே ஷமாக முன் னோர்கள் போல் என்று குறிப்பிடவேண்டும் எனில், கர்ம விஷயத்தில் மிகுந்த விஷமத்தன்மை (விரோதத்தன்மை) உள்ளதால். அது எவ் வாறு என்று கூறுகிறேன்.
किं कर्म किमकर्मेति कवयोऽप्यत्र मोहिताः ।
तत्ते कर्म प्रवक्ष्यामि यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात् ॥ १६ ॥
கிம் கர்ம கிமகர்மேதி கவயோஅப்யத்ர மோஹிதா: ।
தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேஅசுபாத் ॥ 16 ॥
किं कर्म किं च अकर्म इति कवयः मेधाविनः अपि अत्र अस्मिन् कर्मादिविषये मोहिताः मोहं गताः । तत् अतः ते तुभ्यम् अहं कर्म अकर्म च प्रवक्ष्यामि, यत् ज्ञात्वा विदित्वा कर्मादि मोक्ष्यसे अशुभात् संसारात् ॥ १६ ॥
எது கர்மம்? எது அகர்மம்? என்று மேதாவிகளும் கர்மவிஷயத் தில் மோஹமடைந்திருக்கிறார்கள். ஆகையால் எந்த கர்மாதிகளை அறிந்து சம்சாரத்திலிருந்து விடுபடுவாயோ அந்த கர்மம், அகர்மம் இவைகளைப் பற்றி உனக்கு நான் கூறுகிறேன்.
न चैतत्त्वया मन्तव्यम् — कर्म नाम देहादिचेष्टा लोकप्रसिद्धम् , अकर्म नाम तदक्रिया तूष्णीमासनम् ; किं तत्र बोद्धव्यम् ? इति । कस्मात् , उच्यते —
கர்மம் என்றால் தேஹாதிகளின் வியவஹாரம், அகர்மம் என்றால் அதைச் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருத்தல் என்பது உலகத்தில் எல்லோரும் அறிந்ததே. இதில் அறிய வேண்டியது என்ன உள்ளது என்று நினைத்து விடக்கூடாது. ஏன்எனில், கூறுகிறார்-
कर्मणो ह्यपि बोद्धव्यं बोद्धव्यं च विकर्मणः ।
अकर्मणश्च बोद्धव्यं गहना कर्मणो गतिः ॥ १७ ॥
கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண: ।
அகர்மணச்ச போத்தவ்யம் கஹனா கர்மணோ கதி: ॥ 17 ॥
कर्मणः शास्त्रविहितस्य हि यस्मात् अपि अस्ति बोद्धव्यम् , बोद्धव्यं च अस्त्येव विकर्मणः प्रतिषिद्धस्य, तथा अकर्मणश्च तूष्णीम्भावस्य बोद्धव्यम् अस्ति इति त्रिष्वप्यध्याहारः कर्तव्यः ।
சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட கர்மாவை அறியவேண்டும். சாஸ்தி ரத்தில் நிஷேதிக்கப்பட்ட விகர்மாவையும் அறியவேண்டும். அவ்வாறே சும்மா இருத்தல் என்றஅகர்மத்தைப் பற்றியும் அறிய வேண்டும். ஆக மூன்றிலும் அறியப்படவேண்டியது உள்ளது என சேர்த்துக்கொள்ளவேண்டும்.
यस्मात् गहना विषमा दुर्ज्ञेया, कर्मणः इति उपलक्षणार्थं कर्मादीनाम् — कर्माकर्मविकर्मणां गतिः याथात्म्यं तत्त्वम् इत्यर्थः ॥ १७ ॥
ஏனெனில் கர்ம, அகர்ம, விகர்ம இவைகளினுடைய யதார்த்த ஸ்வரூபமானதின் தத்துவமானது மிகுந்த ரகசியமானது. இதை அறிவது மிகக் கடினமானது.
किं पुनस्तत्त्वं कर्मादेः यत् बोद्धव्यं वक्ष्यामि इति प्रतिज्ञातम् ? उच्यते —
மேலும் கர்மங்களைப் பற்றி தெரியவேண்டியதைக் கூறுகிறேன் என்று பிரதிக்ஞை செய்து அக்கர்ம முதலியவற்றின் உண்மையான தத்துவம் என்ன? என்பதைக் கூறுகிறார்.
कर्मण्यकर्म यः पश्येदकर्मणि च कर्म यः ।
स बुद्धिमान्मनुष्येषु स युक्तः कृत्स्नकर्मकृत् ॥ १८ ॥
கர்மண்யகர்ம ய: பச்யேதகர்மணி ச கர்ம ய: ।
ஸ புத்திமான் மனுஷ்யேஷு ஸு யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத் ॥ 18 ॥
कर्मणि, क्रियते इति कर्म व्यापारमात्रम् , तस्मिन् कर्मणि अकर्म कर्माभावं यः पश्येत् , अकर्मणि च कर्माभावे कर्तृतन्त्रत्वात् प्रवृत्तिनिवृत्त्योः — वस्तु अप्राप्यैव हि सर्व एव क्रियाकारकादिव्यवहारः अविद्याभूमौ एव — कर्म यः पश्येत् पश्यति ।
செய்யப்படுகிறது என்பது செயல் அல்லது கர்மம் (தொழில்) எனப் படும். அந்த கர்மத்தில் எவன் கர்ம அபாவத்தை அதாவது அகர்மத் தைப் பார்க்கிறானோ. அவ்வாறேஅகர்மத்தில் சரீராதி சேஷ்ட்டைகள் அற்றதில் கர்மாவைப் பார்க்கிறானோ. இதன் பொருள் என்னவெனில் கர்மத்தைச் செய்தல், கர்மத்தைச் செய்யாமல் இருத்தல் இவை இரண் டும் கர்த்தாவினுடைய அதீனமாகிறது. அவ்வாறேஆத்மதத்துவத்தை அறிவதற்கு முன் அக்ஞான அவஸ்தையில் எல்லா கிரியா காரகங்க ளாகிய வியவஹாரங்கள் இருக்கும். இவ்வாறு அவித்தியா அவஸ்தையில் அகர்மாவில் கர்மத்தைப் பார்க்கிறான்.
सः बुद्धिमान् मनुष्येषु, सः युक्तः योगी च, कृत्स्नकर्मकृत् समस्तकर्मकृच्च सः, इति स्तूयते कर्माकर्मणोरितरेतरदर्शी ॥
எவன் கர்மத்தில் அகர்மத்தைப் பார்க்கிறானோ அகர்மத்தில் கர்மத்தைப் பார்க்கிறானோ அவன் மனிதர்களுல் புத்திமான், யோகி, எல்லா கர்மங்களையும் செய்து முடித்தவன் என்று துதிக்கப்படுகி றான்.
ननु किमिदं विरुद्धमुच्यते ‘कर्मणि अकर्म यः पश्येत्’ इति ‘अकर्मणि च कर्म’ इति ; न हि कर्म अकर्म स्यात् , अकर्म वा कर्म । तत्र विरुद्धं कथं पश्येत् द्रष्टा ।
கர்மத்தில் அகர்மத்தைப் பார்க்கிறான், அகர்மத்தில் கர்மத்தைப் பார்க்கிறான் என்று எதனால் இந்த விருத்தமான பாவத்தைக் கூறுகி றீர்கள்? ஒரு பொழுதும் கர்மம் அகர்மமாகாது அகர்மமும் கர்மமா காது, என்றவிடத்து எவ்வாறு த்ரஷ்டாவானவன் விருத்தத்தைப் (பொருந்தாததைப்) பார்ப்பான்?
न, अकर्म एव परमार्थतः सत् कर्मवत् अवभासते मूढदृष्टेः लोकस्य, तथा कर्मैव अकर्मवत् । तत्र यथाभूतदर्शनार्थमाह भगवान् — ‘कर्मण्यकर्म यः पश्येत्’ इत्यादि । अतो न विरुद्धम् । बुद्धिमत्त्वाद्युपपत्तेश्च । ‘बोद्धव्यम्’ (भ. गी. ४ । १७) इति च यथाभूतदर्शनमुच्यते ।
அப்படியன்று உண்மையில் அகர்மமே உள்ளது. ஆனால் லோகத்தில் உள்ள மூடபுத்தி உடையவர்களுக்கு கர்மம் போல் தோன் றுகிறது. அவ்வாறு கர்மம் அகர்மம் போல் தோன்றுகிறது. அங்கு அவர்களுக்கு யதார்த்த தத்துவத்தைக் காண்பிப்பதற்காக பகவான் (கர்மணி அகர்ம ய: பச்யேத்) என்பது முதலிய கீதா ஸ்லோகங்களால் கூறினார். ஆகையால் அது விருத்தமாகாது. அறிவுடமை முதலி யவை அமைவதால், யதார்த்த ஞானத்தைத்தான் அறிவதற்கு யோக்கிய முடையது என்று கூறப்படுகிறது.
न च विपरीतज्ञानात् अशुभात् मोक्षणं स्यात् ; ‘यत् ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात्’ (भ. गी. ४ । १६) इति च उक्तम् ।
அசுபமாகிய விபரீதஞானத்தினால் மோக்ஷம் உண்டாகாது என் பதை यत् ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात् (யக்ஞாத்வா மோக்ஷயஸே அசுபாத்) என்று கூறப்பட்டது.
तस्मात् कर्माकर्मणी विपर्ययेण गृहीते प्राणिभिः तद्विपर्ययग्रहणनिवृत्त्यर्थं भगवतो वचनम् ‘कर्मण्यकर्म यः’ इत्यादि ।
கர்ம அகர்மங்களைப் பற்றி பிராணிகள் விபரீதமாக புரிந்து கொண்டிருப்பதால் அந்த விபரீதமாக புரிந்து கொண்டதை நிவிர்த்தி कर्मणि अकर्म यः (கர்மணி அகர்ம ய) என்பது முதலிய பகவானுடைய வசனங்கள்.
न च अत्र कर्माधिकरणमकर्म अस्ति, कुण्डे बदराणीव । नापि अकर्माधिकरणं कर्मास्ति, कर्माभावत्वादकर्मणः ।
இலந்தபலத்திற்கு இடம் (ஒரு பாண்டம்) ஆதாரமாக இருப்பது போல் கர்மத்திற்கு அகர்மம் ஆதாரமாக இல்லை. அவ்வாறே அகர்மத்திற்கு கர்மம் ஆதாரமல்ல. ஏனெனில் அகர்மம் என்பது கர்மம் இல்லாதிருத்தலே.
अतः विपरीतगृहीते एव कर्माकर्मणी लौकिकैः, यथा मृगतृष्णिकायामुदकं शुक्तिकायां वा रजतम् ।
ஆகையால் உலகோர்கள் (ஸாமான்ய ஜனங்களால்) விபரீதமாக கானலில் நீர் கற்பிக்கப்பட்டது போலும், சிப்பியில் வெள்ளியை கற்பித் ததுபோல் கர்மத்தில் அகர்மமானது விபரீதமாக கல்பிக்கப்பட்டுள்ளது.
ननु कर्म कर्मैव सर्वेषां न क्वचित् व्यभिचरति ।
ஆனால் எல்லோருக்கும் கர்மம் கர்மம்தான். ஒருபோதும் மாறுபடாது.
तत् न, नौस्थस्य नावि गच्छन्त्यां तटस्थेषु अगतिषु नगेषु प्रतिकूलगतिदर्शनात् , दूरेषु चक्षुषा असंनिकृष्टेषु गच्छत्सु गत्यभावदर्शनात् ।
அவ்வாறு அல்ல. ஓடத்தில் செல்பவனுக்கு கரையில் செல்லுதல் அற்றமரங்கள் செல்லுதல் போன்றவிபரீத தோற்றம் காணப்படுகிறது. அவ்வாறேதூரத்தில் சென்று கொண்டிருப்பவனின் செல்லுதல் என்பது காணப்படாது.
एवम् इहापि अकर्मणि कर्मदर्शनं कर्मणि च अकर्मदर्शनं विपरीतदर्शनं येन तन्निराकरणार्थमुच्यते ‘कर्मण्यकर्म यः पश्येत्’ इत्यादि ।
இவ்வாறு இங்கும் அகர்மத்தில் நான் கர்மம் செய்கிறேன் என்றகர்மதர்சனமும், கர்மத்தில் அகர்மத்தைப் பார்க்கின்றேன் என்ற விபரீத தர்சனம் எதனாலோ அதை நிராகரிப்பதற்காக (கர்மணி அகர்ம ய: பச்யேத்) இவை முதலியவைகளால் கூறப்பட்டது.
तदेतत् उक्तप्रतिवचनमपि असकृत् अत्यन्तविपरीतदर्शनभाविततया मोमुह्यमानो लोकः श्रुतमपि असकृत् तत्त्वं विस्मृत्य विस्मृत्य मिथ्याप्रसङ्गम् अवतार्यावतार्य चोदयति इति पुनः पुनः उत्तरमाह भगवान् , दुर्विज्ञेयत्वं च आलक्ष्य वस्तुनः ।
இந்த விஷயத்தைக் குறித்த (அநேக சங்கைகளுக்கு) மறுபடியும் மறுபடியும் மறுமொழி அளித்தாலும் மிகுந்த விபரீத தர்சன பாவனையினால் மோஹமடைந்ததினால் அநேகதடவை கேட்டாலும் உலகோர்கள் தத்துவத்தை மறந்து மித்திய விஷயத்தில் அடிக்கடி புகுந்து சங்கை செய்கிறார்கள் என்பதாலும், வஸ்துவை அறிவது மிக கடினமானது என்பதாலும் பகவான் மறுபடியும் மறுபடியும் உத்தரம் (பதில்) அளிக்கிறார்.
‘अव्यक्तोऽयमचिन्त्योऽयम्’ (भ. गी. २ । २५) ‘न जायते म्रियते’ (भ. गी. २ । २०) इत्यादिना आत्मनि कर्माभावः श्रुतिस्मृतिन्यायप्रसिद्धः उक्तः वक्ष्यमाणश्च ।
சுருதி, ஸ்மிருதி, யுக்திகளில் பிரசித்தமான ஆத்மாவிடத்தில் கர்ம அபாவத்தை अव्यक्तोऽयमचिन्त्योऽयम्’ (அவ்யக்தோயமசிந்த்யோயம்) न जायते म्रियते (ந ஜாயதே மரியதே) முதலிய ஸ்லோகங்களில் கூறி இருக்கிறார். இனி மேல் ஸ்லோகங்களில் கூறப்போகிறார்.
तस्मिन् आत्मनि कर्माभावे अकर्मणि कर्मविपरीतदर्शनम् अत्यन्तनिरूढम् ।
அந்த கிரியை அற்றஆத்மாவினிடத்தில் (அகர்மத்தில்) கர்மமாகிய விபரீதத்தைப் பார்த்தல் என்பது உலகத்தில் ஸ்வபா வமாகவே வேரூன்றி இருக்கிறது.
ஏனெனில் கர்மம் எது? அகர்மம் எது? என்றவிஷயத்தில் புத்திமான்களும் மோஹமடைந்திருக்கிறார்கள்.
देहाद्याश्रयं कर्म आत्मन्यध्यारोप्य ‘अहं कर्ता, मम एतत् कर्म, मया अस्य कर्मणः फलं भोक्तव्यम्’ इति च ।
தேஹாதிகளை ஆசிரயித்த கர்மாவை ஆத்மாவினிடத்தில் ஆரோபித்து நான் கர்த்தா, என்னுடைய கர்மம், என்னால் பலமானது அனுபவிக்கப்பட வேண்டும் என்று (நினைக்கிறார்கள்)
तथा ‘अहं तूष्णीं भवामि, येन अहं निरायासः अकर्मा सुखी स्याम्’ इति कार्यकरणाश्रयं व्यापारोपरमं तत्कृतं च सुखित्वम् आत्मनि अध्यारोप्य ‘न करोमि किञ्चित् , तूष्णीं सुखमासे’ इति अभिमन्यते लोकः ।
அவ்வாறேநான் சும்மா இருக்கிறேன். எதனால் நான் ஆசை அற்று அகர்மாவாயும் சுகியாகவும் இருப்பேன் என்று காரிய கரண ஆசிரிய வியாபாரமற்று அதனால் ஏற்படும் சுகத்தை ஆத்மாவில் ஏற்றி நான் ஒன்றும் செய்யவில்லை. சும்மா சுகமாக இருந்தேன் என்று உலகத்தோர் நினைக்கிறார்கள்.
तत्रेदं लोकस्य विपररीतदर्शनापनयाय आह भगवान् — ‘कर्मण्यकर्म यः पश्येत्’ इत्यादि ॥
உலகத்தில் உள்ள இந்த விபரீத தரிசனத்தைப் போக்குவதற்காக பகவான் (கர்மணி அகர்ம ய: பச்யேத்) முதலிய சுலோகங்களில் கூறுகிறார்.
अत्र च कर्म कर्मैव सत् कार्यकरणाश्रयं कर्मरहिते अविक्रिये आत्मनि सर्वैः अध्यस्तम् , यतः पण्डितोऽपि ‘अहं करोमि’ इति मन्यते ।
இங்கு தேஹேந்திரியாதிகளை ஆச்ரயித்திருக்கும் கர்மம் கர்மமாகவே இருந்துகொண்டு கர்மமில்லாத நிர்விகாரியாகிய ஆத்மாவிடத்தில் அத்யாரோபம் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் புத்திமானும் கூட நான் செய்கிறேன் என்று நினைக்கிறான்.
अतः आत्मसमवेततया सर्वलोकप्रसिद्धे कर्मणि नदीकूलस्थेष्विव वृक्षेषु गतिप्रातिलोम्येन अकर्म कर्माभावं यथाभूतं गत्यभावमिव वृक्षेषु यः पश्येत् ,
(ஓடத்தில் செல்பவனுக்கு) நதிதீரத்தில் உள்ள மரத்தில் செல்லுதலை பிராந்தியினாலே தோன்றுவது போல அக்ஞானத்தினால் எவன் ஆத்மாவோடு ஒத்திருப்பதாக சகல ஜனங்களும் விபரீதமாக அறிந்துள்ள கர்மத்திலே உண்மையில் நதிக்கரையில் உள்ளவனுக்கு மரம் செல்லுதலான விபரீதஞானம் இல்லையோ அவ்வாறேகர்மத்தில் அகர்மத்தைப் பார்க்கிறான். அதாவது கர்ம அபாவத்தைப் பார்க்கிறான்.
अकर्मणि च कार्यकरणव्यापारोपरमे कर्मवत् आत्मनि अध्यारोपिते, ‘तूष्णीं अकुर्वन् सुखं आसे’ इत्यहङ्काराभिसन्धिहेतुत्वात् , तस्मिन् अकर्मणि च कर्म यः पश्येत् ।
தேஹ இந்திரியாதிகள் உபசாந்தி அடைந்த அகர்மமாகிய ஆத்மாவிடத்தில் நான் சும்மா இருந்தேன், ஒன்றும் செய்யவில்லை சுகமாய் இருந்தேன் என்று கர்மத்தைப் போல ஆரோபம் செய்யப்பட்ட பொழுது அஹங்காரத்தின் சம்பந்தம் ஏற்படுவ தினால் அகர்மத்தில் கர்மத்தை எவன் பார்க்கிறானோ (அவன் ஒன்றும் செய்யவில்லை என்றாலும் கர்மம் தான்)
यः एवं कर्माकर्मविभागज्ञः सः बुद्धिमान् पण्डितः मनुष्येषु, सः युक्तः योगी कृत्स्नकर्मकृच्च सः अशुभात् मोक्षितः कृतकृत्यो भवति इत्यर्थः ॥
எவன் இவ்வாறு கர்ம அகர்ம விகாரங்களை அறிந்தானோ அவன் மனிதர்களுள் புத்திமான். அவனே யோகி. எல்லா கர்மங்க ளையும் செய்து முடித்தவன். அவன் அசுபத்திலிருந்து விடுபட்டவனா வான் அவனே கிருதகிருத்தியன் என்பது பொருள்.
अयं श्लोकः अन्यथा व्याख्यातः कैश्चित् । कथम् ? नित्यानां किल कर्मणाम् ईश्वरार्थे अनुष्ठीयमानानां तत्फलाभावात् अकर्माणि तानि उच्यन्ते गौण्या वृत्त्या । तेषां च अकरणम् अकर्म ; तच्च प्रत्यवायफलत्वात् कर्म उच्यते गौण्यैव वृत्त्या ।
இந்த ஸ்லோகத்தைக் குறித்து ஏதோ ஒரு வியாக்கியானகாரர் வேறு விதமாக வியாக்யானம் செய்துள்ளார். எவ்வாறு எனில்? நித்ய கர்மாக்களை ஈஸ்வரார்ப்பணமாக செய்பவர்களுக்கு பலப்ராப்தி இல்லாததால் அதையே அகர்மம் என்று கௌணவிருத்தியினால் கூறுகிறார்கள். அவர்களுக்கு கர்மம் செய்யாமல் இருப்பதே அகர்ம. அது நரக முதலிய பலத்தைக் கொடுப்பதால் கௌண விருத்தியால் அது கர்மம் ஆகும்.
तत्र नित्ये कर्मणि अकर्म यः पश्येत् फलाभावात् ; यथा धेनुरपि गौः अगौः इत्युच्यते क्षीराख्यं फलं न प्रयच्छति इति, तद्वत् । तथा नित्याकरणे तु अकर्मणि च कर्म यः पश्येत् नरकादिप्रत्यवायफलं प्रयच्छति इति ॥
எவ்வாறு பசுவானது பால் என்றபலனைக் கொடுக்காவிடில் பசுவல்ல (அபசு) என்கிறோமோ அவ்வாறேநித்திய கர்மாவில் எவன் அகர்மத்தைப் பார்க்கிறானோ அவ்வாறேநித்திய கர்மாவைச் செய்யாத அகர்மத்தில் கர்மத்தைப் பார்க்கிறானோ அவன் நரக முதலிய பலத்தை அடைவான்.
नैतत् युक्तं व्याख्यानम् । एवं ज्ञानात् अशुभात् मोक्षानुपपत्तेः ‘यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात्’ (भ. गी. ४ । १६) इति भगवता उक्तं वचनं बाध्येत ।
இந்த வியாக்கியானம் பொருந்தாது. ஏனெனில் அசுபத்திலி ருந்து மோக்ஷமானது கிடைக்காது. யத் ஞாத்வா மோக்ஷயஸே அசுபாத் என்று பகவத் வசனம் உள்ளது அவ்வசனம் பாதிக்கப்பட்டுவிடும். ஆதலால் ஞானத்தினால் அசுபத்திலிருந்து மோக்ஷமானது ஏற்படும் என்று அறியவேண்டும்.
कथम् ? नित्यानामनुष्ठानात् अशुभात् स्यात् नाम मोक्षणम् , न तु तेषां फलाभावज्ञानात् । न हि नित्यानां फलाभावज्ञानम् अशुभमुक्तिफलत्वेन चोदितम् , नित्यकर्मज्ञानं वा । न च भगवतैवेहोक्तम् ।
எவ்வாறு எனில், நித்திய கர்மாக்களை அனுஷ்ட்டானம் செய்வதால் அசுபங்களிலிருந்து விடுபடலாம். ஆனால் அந்த நித்திய கர்மாக்களினால் பலன் ஏற்படாது. என்றஇந்த ஞானத்தினால் மோக்ஷம் ஏற்படாது. ஏனெனில் நித்திய கர்மாக்களினால் பலன் கிடைக்காது என்றஞானத்தினாலோ, நித்ய கர்ம ஞானத்தினாலோ அசுபத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்பது எந்த சாஸ்திரத் திலும் கூறப்படவில்லை. அவ்வாறேபகவானாலும் இந்த கீதா சாஸ்திரத்திலும் கூறப்படவில்லை.
एतेन अकर्मणि कर्मदर्शनं प्रत्युक्तम् । न हि अकर्मणि ‘कर्म’ इति दर्शनं कर्तव्यतया इह चोद्यते, नित्यस्य तु कर्तव्यतामात्रम् ।
இந்த யுக்தியினாலும் (அவர்கள் கூறியபடி உள்ள) அகர்மத்தில் கர்மத்தைப் பார்த்தல் கண்டனத்திற்கு உரியதாகிறது. ஏனெனில் இங்கு (கீதா சாஸ்திரத்தில்) நித்யகர்மாக்களைச் செய்யாமல் இருத்தலே அகர்மா (என்றஇடத்தில்) கர்மத்தைப் பார்த்தல் என்பதை செய்யப்பட வேண்டியதாக கூறவில்லை. மற்றும் நித்ய கர்மாவை செய்யவேண்டும் என்று விதிக்கிறார்.
न च ‘अकरणात् नित्यस्य प्रत्यवायो भवति’ इति विज्ञानात् किञ्चित् फलं स्यात् । नापि नित्याकरणं ज्ञेयत्वेन चोदितम् ।
நித்ய கர்மாவை செய்யாததினால் பாபம் ஏற்படும் என்றஞானத்தி னால் ஒருபலனும் ஏற்படாது. அந்த நித்திய கர்மாவை செய்யா திருத்தலே அகர்மம் என்றசாஸ்திரத்தில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் சிறிதளவும் இல்லை.
नापि ‘कर्म अकर्म’ इति मिथ्यादर्शनात् अशुभात् मोक्षणं बुद्धिमत्त्वं युक्तता कृत्स्नकर्मकृत्त्वादि च फलम् उपपद्यते, स्तुतिर्वा ।
இவ்வாறு மற்றவியாக்கியானக்காரர்களுடைய கொள்கையா கிய கர்மத்தில் அகர்மத்தைப் பார்த்தல், அகர்மத்தில் கர்மத்தைப் பார்த்தல் ரூப மித்யா தர்சனத்தினால் அசுபத்திலிருந்து விடுபடுதல், புத்திமானாய் இருத்தல், யுக்தி உடையவராய் இருத்தல் எல்லாக் கருமங்களையும் செய்த தன்மை ஆகிய பலன்கள் ஏற்படாது. மேலும் மித்யா ஞானமானது போற்றுதலுக்கு உரியதாகாது.
मिथ्याज्ञानमेव हि साक्षात् अशुभरूपम् । कुतः अन्यस्मादशुभात् मोक्षणम् ? न हि तमः तमसो निवर्तकं भवति ॥
மித்தியா ஞானமானது சுயமாகவே அசுபம். அந்த அசுபமானது மற்றொரு அசுபத்தை எவ்வாறு நீக்கும்? இருளை இருள் போக்காது.
ननु कर्मणि यत् अकर्मदर्शनम् अकर्मणि वा कर्मदर्शनं न तत् मिथ्याज्ञानम् ; किं तर्हि ? गौणं फलभावाभावनिमित्तम् ।
கர்மத்தில் அகர்மத்தைப் பார்த்தல், அகர்மத்தில் கர்மத்தைப் பார்த் தல் என்பது மித்தியா ஞானம் அல்ல. ஆனால் பலன் ஏற்படுதல், பலன் ஏற்படாதது என்றகாரணத்தினால் கௌண ரூபமாக பார்க்கப்படுகிறது.
न, कर्माकर्मविज्ञानादपि गौणात् फलस्य अश्रवणात् । नापि श्रुतहान्यश्रुतपरिकल्पनायां कश्चित् विशेष उपलभ्यते ।
இவ்வாறு கூறுவது சரியல்ல. ஏனெனில் கர்மத்தில் அகர்மத்தைப் பார்த்தல், அகர்மத்தில் கர்மத்தைப் பார்த்தல் என்பதை கௌணமாக எடுத்துக் கொண்டாலும் அதற்கு பலன் உண்டு என்பது (சுருதியில்) கேட்கப்படவில்லை. (இதை விடுத்து) சுருதியில் சித்தமானதை விட்டு சுருதிக்கு விரோதமானதை கல்பனை செய்வதால் ஒரு விசேஷமும்காணப்படவில்லை.
स्वशब्देनापि शक्यं वक्तुम् ‘नित्यकर्मणां फलं नास्ति, अकरणाच्च तेषां नरकपातः स्यात्’ इति ; तत्र व्याजेन परव्यामोहरूपेण ‘कर्मण्यकर्म यः पस्येत्’ इत्यादिना किम् ।
(பகவானுடைய அபிப்பிராயம் இவ்வாறு இருந்தால்) நித்திய கர் மாவிற்கு பலன் இல்லை. அதை செய்யாததினால் நரக ப்ராப்தி ஏற்ப டும் என்று கூறி இருக்கலாம். மற்றோ வியாமோஹம் செய்யக்கூடிய கர்மத்தில் அகர்மத்தைப் பார்த்தல், அகர்மத்தில் கர்மத்தைப் பார்த்தல் என்றமித்யா வசனத்தைக் கூறுதலினால் என்ன பயன்?
तत्र एवं व्याचक्षाणेन भगवतोक्तं वाक्यं लोकव्यामोहार्थमिति व्यक्तं कल्पितं स्यात् ।
இவ்வாறு மேலே கூறியவாறு அர்த்தம் செய்தவர்கள் இந்த பக வானுடைய வாக்கியத்தை உலகத்தோர் மோஹம் அடைவதற்காக கூறப்பட்ட வசனம் என்று கல்பிப்பார்கள்.
न च एतत् छद्मरूपेण वाक्येन रक्षणीयं वस्तु ; नापि शब्दान्तरेण पुनः पुनः उच्यमानं सुबोधं स्यात् इत्येवं वक्तुं युक्तम् ।
மேலும் இந்த (நித்ய கர்மானுஷ்ட்டமான) விஷயமானது ரஹஸ்ய ரூபமான வாக்கியத்தால் காப்பாற்றபட வேண்டியதில்லை. மேலும் மறுபடியும், மறுபடியும் வேறு வேறு சொல்களால் கூறப் பட்டாலும் நன்றாக அறியமுடியும் என்று சொல்லமுடியாது.
‘कर्मण्येवाधिकारस्ते’ (भ. गी. २ । ४७) इत्यत्र हि स्फुटतर उक्तः अर्थः, न पुनर्वक्तव्यो भवति ।
(கர்மண்யேவாதிகாரஸ்தே) என்று என்னால் நன்றாக விளக்கமாகக் கூறப்பட்ட அர்த்தமானது மறுபடியும் கூறத்தேவையில்லை.
सर्वत्र च प्रशस्तं बोद्धव्यं च कर्तव्यमेव । न निष्प्रयोजनं बोद्धव्यमित्युच्यते ॥
எங்கு பிரசித்தமாயும் அவசியம் செய்யப்படவேண்டியதாயும் உள் ளதை தெரிந்து கொள்ளவேண்டியதே தவிர பலன் அற்றதை (நிஷ்பிர யோஜனத்தை) தெரிய வேண்டியதில்லை என்று கூறப்பட்டது.
न च मिथ्याज्ञानं बोद्धव्यं भवति, तत्प्रत्युपस्थापितं वा वस्त्वाभासम् ।
மித்யா ஞானமோ அல்லது அதன் வாயிலாக அறியப்பட்ட ஆபாச மாத்திர வஸ்துவோ அறிவதற்கு யோக்கியமானதல்ல.
नापि नित्यानाम् अकरणात् अभावात् प्रत्यवायभावोत्पत्तिः, ‘नासतो विद्यते भावः’ (भ. गी. २ । १६) इति वचनात् ‘कथं असतः सज्जायेत’ (छा. उ. ६ । २ । २) इति च दर्शितम् ।
நித்ய கர்மாவை செய்யாததினால் அபாவத்திலிருந்து பாவத்தின் உற்பத்தியானது உண்டாகாது. नासतो विद्यते भावः (நாஸதோ வித்யதே பாவ:) பொய்ப்பொருளுக்கு இருப்பு இல்லை என்ற கீதா வசனத்திலும் कथं असतः सज्जायेत (கதமஸத: சஜ்ஜாயேத) அஸத்திலிருந்து சத்து எப்படி உண்டாகும்? என்று சாந்தோக்கிய உபநிஷத்திலும் காட்டப்பட்டுள்ளது.
असतः सज्जन्मप्रतिषेधात् । असतः सदुत्पत्तिं ब्रुवता असदेव सद्भवेत् , सच्चापि असत् भवेत् इत्युक्तं स्यात् । तच्च अयुक्तम् , सर्वप्रमाणविरोधात् ।
அஸத்திலிருந்து ஸத் உற்பத்தியாதல் ஸம்பவிக்காததால் அஸத் திலிருந்து ஸத் உற்பத்தியை கூறுபவரால் அஸத்திலிருந்து ஸத்தும், ஸத்திலிருந்து அஸத்தும் உண்டாகும் என்று கூறப்பட்டதாகும். இது எல்லா பிரமாணங்களுக்கும் விரோதமாய் இருப்பதால் அது பொருந்தாது.
न च निष्फलं विदध्यात् कर्म शास्त्रम् , दुःखस्वरूपत्वात् , दुःखस्य च बुद्धिपूर्वकतया कार्यत्वानुपपत्तेः ।
அவ்வாறே சாஸ்திரமும் நிஷ்பலத்துடன் கூடிய நித்ய கர்மத்தை ஒருநாளும் விதிக்காது. ஏன் எனில் எல்லாக்கர்மங்களும் துக்கத்து டன் கூடியது. மேலும் பிரயோஜனம் இல்லை என்று அறிந்து ஒருவ ரும் துக்கரூபமான காரியத்தில் பிரவிர்த்திப்பதில்லை.
तदकरणे च नरकपाताभ्युपगमात् अनर्थायैव उभयथापि करणे च अकरणे च शास्त्रं निष्फलं कल्पितं स्यात् ।
அவ்வாறே நித்ய கர்மத்தை செய்யாததினால் நரகப் பிராப்தி ஏற் படுவதினால் அநர்த்தமேயாகும். ஆகையால் நித்தியகர்மா அனுஷ்ட் டித்தல், அனுஷ்ட்டிக்காமல் இருத்தல் ஆகிய இரு வகையாலும் அநர்த்தத்தின் பொருட்டாகிய சாஸ்திரமானது வீண் என்று கொள்ளப்பட்டதாகிவிடும்.
स्वाभ्युपगमविरोधश्च ‘नित्यं निष्फलं कर्म’ इति अभ्युपगम्य ‘मोक्षफलाय’ इति ब्रुवतः ।
இதைத்தவிர நித்யகர்மாவை அனுஷ்ட்டிப்பதால் பலனில்லை என்று விளக்கிவிட்டு அவர்களே பின் நித்யகர்மா மோக்ஷரூப பலத்தை அளிக்கவல்லது என்று சொல்லுவதால் அந்த வியாக்கியா னகாரர்களுக்கு தங்களுடைய கொள்கையில் விரோதம் உண்டாகும்.
तस्मात् यथाश्रुत एवार्थः ‘कर्मण्यकर्म यः’ इत्यादेः । तथा च व्याख्यातः अस्माभिः श्लोकः ॥ १८ ॥
ஆகையால் (கர்மணி அகர்ம: ய: பச்யேத்) முதலிய ஸ்லோகங்க ளின் அர்த்தத்தை குரு பரம்பரை மூலமாக கேட்டதை அனுசரித்து இந்த ஸ்லோகத்திற்கு வியாக்கியானம் செய்யப்பட்டது.
तदेतत् कर्मणि अकर्मदर्शनं स्तूयते —
அந்த இந்த கர்மத்தில் அகர்மத்தைக் காண்பதையும், அகர்மத் தில் கர்மத்தை காண்பதையும் புகழ்ந்து கூறுகிறார்.
यस्य सर्वे समारम्भाः कामसङ्कल्पवर्जिताः ।
ज्ञानाग्निदग्धकर्माणं तमाहुः पण्डितं बुधाः ॥ १९ ॥
யஸ்ய ஸர்வே ஸமாரம்பா: காமஸங்கல்பவர்ஜிதா: ।
ஜ்ஞானாக்நிதக்தகர்மாணம் தமாஹு: பண்டிதம் புதா: ॥ 19 ॥
यस्य यथोक्तदर्शिनः सर्वे यावन्तः समारम्भाः सर्वाणि कर्माणि, समारभ्यन्ते इति समारम्भाः, कामसङ्कल्पवर्जिताः कामैः तत्कारणैश्च सङ्कल्पैः वर्जिताः मुधैव चेष्टामात्रा अनुष्ठीयन्ते ; प्रवृत्तेन चेत् लोकसङ्ग्रहार्थम् , निवृत्तेन चेत् जीवनमात्रार्थम् ।
இவ்வாறு உள்ள யதார்த்த தர்சிகள் (கர்ம, அகர்மத்தின் தத்து வத்தை உள்ளபடி அறிந்தவர்கள்) செய்யும் எல்லா கர்மங்களும் காம னைகள் அற்று, அதற்கு காரணமான சங்கல்பங்கள் அற்று ஆனந்த மாக பற்று அற்று சேஷ்டா மாத்திரமாக அனுஷ்ட்டிக்கிறார்கள். பிரவி ருத்தி மார்க்கத்தில் செயல்பட்டால் அது உலகோரை நல்வழிப்படுத்து வதற்காக நிவிர்த்தி மார்க்கத்தில் ஜீவிப்பதற்காக மட்டுமே.
तं ज्ञानाग्निदग्धकर्माणं कर्मादौ अकर्मादिदर्शनं ज्ञानं तदेव अग्निः तेन ज्ञानाग्निना दग्धानि शुभाशुभलक्षणानि कर्माणि यस्य तम् आहुः परमार्थतः पण्डितं बुधाः ब्रह्मविदः ॥ १९ ॥
அவ்வாறேகர்மத்தில் அகர்மத்தையும், அகர்மத்தில் கர்மத்தை யும் பார்த்தலாகிய கர்மதர்சனரூப ஞானாக்கினியால் புண்ய, பாபங்க ளாகிய எல்லா கர்மங்களும் எரிந்துவிடும். இவ்வாறு ஞானத்தினால் தகிக்கப்பட்ட கர்மத்தை உடைய புருஷர்களை உண்மையான பண்டி தர்கள் என்று பிரஹ்மத்தை அறிந்தவர்கள் கூறுவார்கள்.
यस्तु अकर्मादिदर्शी, सः अकर्मादिदर्शनादेव निष्कर्मा संन्यासी जीवनमात्रार्थचेष्टः सन् कर्मणि न प्रवर्तते, यद्यपि प्राक् विवेकतः प्रवृत्तः ।
எவன் கர்மத்தில் அகர்மத்தையும், அகர்மத்தில் கர்மத்தையும் காண்கிறானோ அந்த அகர்ம தர்சீ இந்த (கர்ம அகர்மத்தில்) விவேகம் ஏற்படுவதற்கு முன் கர்மத்தில் பிரவிருத்திருந்தாலும் அகர்மாதி தர்சனத்தால் அந்த நிஷ்கர்ம சந்நியாசி ஜீவனத் திற்காக உள்ள செயல்கள் உடையவனாய் கர்மத்தை மேற்கொள்ளுவதில்லை.
यस्तु प्रारब्धकर्मा सन् उत्तरकालमुत्पन्नात्मसम्यग्दर्शनः स्यात् , सः सर्वकर्मणि प्रयोजनमपश्यन् ससाधनं कर्म परित्यजत्येव ।
எவன் பிராரப்த வசத்தால் கர்மங்கள் செய்து கொண்டி ருப்பதின் பிற்காலத்தில் உண்டான ஆத்ம சாக்ஷாத்காரம் உண்டா கலாம். அந்த ஆத்ம தர்சீ கர்மங்களில் பிரயோஜனம் இல்லை என்று அறிந்து கர்மம் அதற்குத் தேவையான சாதனங்கள் எல்லாவற்றையும் விட்டு விடுகிறான்.
सः कुतश्चित् निमित्तात् कर्मपरित्यागासम्भवे सति कर्मणि तत्फले च सङ्गरहिततया स्वप्रयोजनाभावात् लोकसङ्ग्रहार्थं पूर्ववत् कर्मणि प्रवृत्तोऽपि नैव किञ्चित् करोति ।
ஏதாவது ஒரு காரணத்தினால் கர்மபரித்யாகம் ஏற்படாத பொழு து, கர்மத்திலோ அதன் பலத்திலோ அவனுக்கு ஆசக்தி இல்லாததி னால் தனக்கு பிரயோஜனம் இல்லாதபோதும் உலக நன்மைக்காக முன்போல் கர்மத்தில் பிரவிருத்திருந்தாலும் அவன் கொஞ்சமும் கர்மம் செய்தவன் ஆகமாட்டான்.
ज्ञानाग्निदग्धकर्मत्वात् तदीयं कर्म अकर्मैव सम्पद्यते इत्येतमर्थं दर्शयिष्यन् आह —
ஞானாக்கினியால் தஹிக்கப்பட்ட காரணத்தினால் கர்மமானது அகர்மமாகிறது என்றஇந்த அர்த்தத்தைக் காண்பிப்பதில் இச்சை உடையவராகி காண்பிக்கிறார்-
त्यक्त्वा कर्मफलासङ्गं नित्यतृप्तो निराश्रयः ।
कर्मण्यभिप्रवृत्तोऽपि नैव किञ्चित्करोति सः ॥ २० ॥
த்யக்த்வா கர்மபலாஸங்கம் நித்யத்ருப்தோ நிராச்ரய: ।
கர்மண்யபிப்ரவ்ருத்தோஅபி நைவ கிஞ்சித்கரோதி ஸ: ॥ 20 ॥
त्यक्त्वा कर्मसु अभिमानं फलासङ्गं च यथोक्तेन ज्ञानेन नित्यतृप्तः निराकाङ्क्षो विषयेषु इत्यर्थः ।
முன்பு கூறப்பட்ட ஞானத்தின் பிரபாவத்தால் கர்மங்களில் அபிமானத்தையும் பலத்தில் ஆசக்தியையும் விட்டு நித்ய திருப்தனாய்இரு. என்றால் விஷயங்களில் ஆசையற்று இரு என்பது பொருள்.
निराश्रयः आश्रयरहितः, आश्रयो नाम यत् आश्रित्य पुरुषार्थं सिसाधयिषति, दृष्टादृष्टेष्टफलसाधनाश्रयरहित इत्यर्थः ।
அவ்வாறு ஆச்ரயமற்றது. எந்த பலத்தை ஆசிரயித்து மனிதன் புருஷார்த்தத்தை அடைய இச்சை கொள்கிறானோ அதுஆச்ரயமாகும். இவ்வாறு இந்த லோக, பரலோக பலத்திற்கான சாதனங்களை ஆசிரயிக்காதவன் என்பது பொருள்.
विदुषा क्रियमाणं कर्म परमार्थतोऽकर्मैव, तस्य निष्क्रियात्मदर्शनसम्पन्नत्वात् ।
பண்டிதர்களால் (ஞான வாயிலாக) செய்யப்படும் கர்மம் உண்மையில் அகர்மமே. ஏன்எனில் அது (அகர்ம) நிஷ்கிரிய ஆத்ம ஞானத்துடன் கூடியது.
तेन एवंभूतेन स्वप्रयोजनाभावात् ससाधनं कर्म परित्यक्तव्यमेव इति प्राप्ते ।
ஆகையால் இவ்வாறு பிரயோஜனமற்றதாய் இருப்பதால் சாதனத்துடன் கூடிய கர்மத்தை தியாகம் அவசியம் செய்ய வேண்டும் என்று ஏற்படும்பொழுது-
ततः निर्गमासम्भवात् लोकसङ्ग्रहचिकीर्षया शिष्टविगर्हणापरिजिहीर्षया वा पूर्ववत् कर्मणि अभिप्रवृत्तोऽपि निष्क्रियात्मदर्शनसम्पन्नत्वात् नैव किञ्चित् करोति सः ॥ २० ॥
இந்த கர்மங்களிலிருந்து நிவிர்த்தி அடையாததின் காரணத்தி னால் உலக நன்மையில் இச்சை உடையவராகியும், பெரியோர்களை நிந்தை செய்யும் செயலை நீக்குவதில் இச்சை உடையவராகிய ஞானி முன்பு போல் கர்மம் செய்தாலும் அந்த நிஷ்கிரிய ஆத்ம ஞானத்தை அடைந்த காரணத்தினால் உண்மையில் ஒன்றும் செய்யாதவராகிறார்.
यः पुनः पूर्वोक्तविपरीतः प्रागेव कर्मारम्भात् ब्रह्मणि सर्वान्तरे प्रत्यगात्मनि निष्क्रिये सञ्जातात्मदर्शनः ।
எவன் ஒருவன் முன்பு கூறப்பட்டதிற்கு மாறாக, கர்மம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பே (கிரஹஸ்தாஸ்ரமத்தினின்றும் பிரஹ்மச்சர்ய ஆச்ரமத்திலேயே) எல்லாவற்றிலும் ஊடுருவியுள்ள அந்தராத் மாவான நிஷ்க்ரிய ரூபமான பிரஹ்மத்தினிடத்தில் ஆத்ம பாவத்தை அடைந்தவனாய்
स दृष्टादृष्टेष्टविषयाशीर्विवर्जिततया दृष्टादृष्टार्थे कर्मणि प्रयोजनमपश्यन् ससाधनं कर्म संन्यस्य शरीरयात्रामात्रचेष्टः यतिः ज्ञाननिष्ठो मुच्यते इत्येतमर्थं दर्शयितुमाह —
அந்த கேவல சரீர யாத்திரைக்கு வேண்டிய (கர்மங்களை) செயல் களை மட்டும் செய்து கொண்டு இருக்கும் ஞான நிஷ்ட்டராகிய யதி (சந்நியாசி) இகலோக பரலோக விஷயத்தில் ஆசை அற்றதினால் இகலோக, பரலோகத்தின் பொருட்டு செய்யும் கர்மத்தில் பலன் காணாமையால் கர்மங்களையும், கர்மங்களுடைய சாதனங்களையும் தியாகம் செய்து முக்தி அடைகிறார்கள் என்பதை தெரிவிப்பதற்காக கூறுகிறார்.
निराशीर्यतचित्तात्मा त्यक्तसर्वपरिग्रहः ।
शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् ॥ २१ ॥
நிராசீர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்ரஹ: ।
சாரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம் ॥ 21 ॥
निराशीः निर्गताः आशिषः यस्मात् सः निराशीः, यतचित्तात्मा चित्तम् अन्तःकरणम् आत्मा बाह्यः कार्यकरणसङ्घातः तौ उभावपि यतौ संयतौ येन सः यतचित्तात्मा, त्यक्तसर्वपरिग्रहः त्यक्तः सर्वः परिग्रहः येन सः त्यक्तसर्वपरिग्रहः ।
எவர்கள் எல்லா ஆசைகளையும் விட்டொழித்தார்களோ (நிராசீ) ஆசை அற்றவர்கள். (சித்தம், அந்தக்கரணம், ஆத்மா-(வெளி யில் உள்ள காரிய காரண சங்காதம்) அந்தக்கரணமும், பாஹிய காரிய கரண சங்காதமாகிய இரண்டும் எவர் வசம் இருக்கிறதோ அவர் யத சித்தாத்மா. தனது எல்லா உடைமை களையும் தியாகம் செய்தவர் (த்யக்த்த சர்வ பரிக்ரஹ:)
शारीरं शरीरस्थितिमात्रप्रयोजनम् , केवलं तत्रापि अभिमानवर्जितम् , कर्म कुर्वन् न आप्नोति न प्राप्नोति किल्बिषम् अनिष्टरूपं पापं धर्मं च । धर्मोऽपि मुमुक्षोः किल्बिषमेव बन्धापादकत्वात् ।
சரீர ஸ்திதி மாத்திரமே பிரயோஜனமாகிய கர்மத்தை அபிமான மற்று கர்மம் செய்து அநிஷ்டரூபமான பாபத்தையோ, புண்யத்தையோ அடையமாட்டான். முமுக்ஷுவிற்கு புண்யமும் பந்தத்திற்கு காரணமாவதால் பாபத்திற்கு ஒப்பானதே.
तस्मात् ताभ्यां मुक्तः भवति, संसारात् मुक्तो भवति इत्यर्थः ॥

‘शारीरं केवलं कर्म’ इत्यत्र किं शरीरनिर्वर्त्यं शारीरं कर्म अभिप्रेतम् , आहोस्वित् शरीरस्थितिमात्रप्रयोजनं शारीरं कर्म इति ।
இங்கு சாரீரம் கேவலம் கர்ம என்றபதங்களினால் சரீரத்தினால் செய்யப்படும் கர்மம் சாரீரக கர்மம் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது சரீர ஸ்திதி மாத்திரம் பிரயோஜனமாக உடைய கர்மத்தை சாரீரக கர்மம் என்று எடுத்துக்கொள்வதா?
किं च अतः यदि शरीरनिर्वर्त्यं शारीरं कर्म यदि वा शरीरस्थितिमात्रप्रयोजनं शारीरम् इति ? उच्यते —
ஆகையால் மேலும் சரீர கர்மா அல்லது சரீரஸ்திதி மாத்திர பிரயோஜனமாக உடையகர்மம் சாரீரமா என்று கூறுகிறார்.
यदा शरीरनिर्वर्त्यं कर्म शारीरम् अभिप्रेतं स्यात् , तदा दृष्टादृष्टप्रयोजनं कर्म प्रतिषिद्धमपि शरीरेण कुर्वन् नाप्नोति किल्बिषम् इति ब्रुवतो विरुद्धाभिधानं प्रसज्येत । शास्त्रीयं च कर्म दृष्टादृष्टप्रयोजनं शरीरेण कुर्वन् नाप्नोति किल्बिषम् इत्यपि ब्रुवतः अप्राप्तप्रतिषेधप्रसङ्गः ।
மேலும் சரீரத்தினால் செய்யப்படும் கர்மம் சாரீரக கர்மம் என்றால் அப்பொழுது சரீரத்தினால் இகலோக பரலோக பலனுடைய கர்மா, நிஷித்த கர்மாவாக இருந்தாலும் அவன் பாபத்தை அடைய மாட்டான் என்று கூறினால் (சாஸ்திரத்திற்கு) விருத்தமாகும். (மாறுபட்டதாகும்). இகலோக பரலோக பலத்தைத் தரும் சாஸ்திரத்தினால் விதிக்கப்பட்ட கர்மாவை செய்வதினால் பாபத்தை அடையமாட்டான் என்று கூறினால் அடையாததை நீக்குதல் என்னும் குற்றமாகும்.
(சாரீரக கர்மம் என்றால் சரீரம் நிலைத்திருத்தலுக்காகவே செய்யப்படும் கர்மா).
‘शारीरं कर्म कुर्वन्’ इति विशेषणात् केवलशब्दप्रयोगाच्च वाङ्मनसनिर्वर्त्यं कर्म विधिप्रतिषेधविषयं धर्माधर्मशब्दवाच्यं कुर्वन् प्राप्नोति किल्बिषम् इत्युक्तं स्यात् ।
(சாரீரக கர்மத்தைச் செய்பவன்) என்னும் விசேஷணத்தாலும் மாத்திரம் என்றும் சொல்லின் பிரயோகத்தாலும் (சரீரத்தை விட்டு) மனோ வாக்கினால் செய்யப்படும் விதி நிஷேதங்களுக்கு விஷயங்க ளாகிய தர்மாதர்மம் எனப்படும் கர்மத்தை செய்து பாபத்தை அடைகிறான் என்று (பகவானால்) சொல்லப்பட்டது என்று ஆகிவிடும்.
तत्रापि वाङ्मनसाभ्यां विहितानुष्ठानपक्षे किल्बिषप्राप्तिवचनं विरुद्धम् आपद्येत । प्रतिषिद्धसेवापक्षेऽपि भूतार्थानुवादमात्रम् अनर्थकं स्यात् ।
அங்கும் மனோ வாக்கால் விஹிதகர்மாவை அனுஷ்ட்டிப்பதால் பாபம் ஏற்படும் என்னும் பக்ஷம் விருத்தமாகும். (ப்ரதிஷித்த) நிஷேத கர்மாவை செய்யும் பக்ஷத்திலும் முன்பு கூறியதையே மறுபடியும், மறுபடியும் கூறுதல் என்ற அநர்த்தம் உண்டாகிவிடும்.
यदा तु शरीरस्थितिमात्रप्रयोजनं शारीरं कर्म अभिप्रेतं भवेत् , तदा दृष्टादृष्टप्रयोजनं कर्म विधिप्रतिषेधगम्यं शरीरवाङ्मनसनिर्वर्त्यम् अन्यत् अकुर्वन् तैरेव शरीरादिभिः शरीरस्थितिमात्रप्रयोजनं केवलशब्दप्रयोगात् ‘अहं करोमि’ इत्यभिमानवर्जितः शरीरादिचेष्टामात्रं लोकदृष्ट्या कुर्वन् नाप्नोति किल्बिषं ।
எப்பொழுது சரீரத்தின் ஸ்திதியின் மாத்திரம் பிரயோஜனமாக உடையது சாரீர்க கர்மா என்று அபிப்பிராயம் ஏற்பட்டபோது மனோவாக்கு காயங்களால் செய்யப்படும் இஹலோக, பரலோக பயனையுடைய விதி, நிஷேத கர்மங்களையும், மற்றகர்மங்களையும் செய்யாமல் அவர்கள் மனோ வாக்கு காயங்களால் சரீர ஸ்திதி மாத்திரமே பிரயோஜனமாக உடையதாயும், மாத்திரம் என்றசொல் பிர யோகத்தினாலும் நான் செய்கின்றேன் என்றஅபிமானம் அற்று லோக திருஷ்டியினால் சரீராதிகளில் சேஷ்ட்டிப்பவன் போல் (செயல்கள் செய்பவன் போல்) இருந்து கொண்டு பாபத்தை அடைய மாட்டான்.
एवंभूतस्य पापशब्दवाच्यकिल्बिषप्राप्त्यसम्भवात् किल्बिषं संसारं न आप्नोति ।
அப்படிப்பட்டவன் பாபம் என்று சொல்லக்கூடிய கில்பிஷம் அடைதல் என்பது சம்பவிக்கக்கூடியதல்ல. ஆகையால் அவன் கில்பிஷம் என்கிறசம்சாரத்தை அடைவதில்லை.
ज्ञानाग्निदग्धसर्वकर्मत्वात् अप्रतिबन्धेन मुच्यत एव इति ।
ஞானாக்கினியினால் எல்லாக்கர்மங்களும் தஹிக்கப்பட்டதால் தடையற்றவனாய் விடுபடுகிறான்.
पूर्वोक्तसम्यग्दर्शनफलानुवाद एव एषः । एवम् ‘शारीरं केवलं कर्म’ इत्यस्य अर्थस्य परिग्रहे निरवद्यं भवति ॥ २१ ॥
இது முன்பு கூறப்பட்ட சம்யக் தர்சனபலத்தின் (ஆத்மஞானத் தின்) அநுவாதமே. அவ்வாறே(சாரீரம் கேவலம் கர்ம) என்று இவ்வாறு அர்த்தம் செய்தால் அந்த அர்த்தமானது தோஷமற்றதாகிவிடுகிறது.
त्यक्तसर्वपरिग्रहस्य यतेः अन्नादेः शरीरस्थितिहेतोः परिग्रहस्य अभावात् याचनादिना शरीरस्थितौ कर्तव्यतायां प्राप्तायाम् ‘अयाचितमसङ्क्लृप्तमुपपन्नं यदृच्छया’ (अश्व. ४६ । १९) इत्यादिना वचनेन अनुज्ञातं यतेः शरीरस्थितिहेतोः अन्नादेः प्राप्तिद्वारम् आविष्कुर्वन् आह —
எல்லாவற்றையும் தியாகம் செய்த சந்நியாசிக்கு சரீர ஸ்திதிக்கு காரணரூபமான அன்னாதிகளை எடுத்துக்கொள்ளாததினால் சரீராதி களின் ஸ்திதியின் பொருட்டு யாசகம் முதலியவை செய்யவேண்டியது அவசியமாகிறது. (அயாசிதம் அசம்க்லுப்தமுப்பன்னம் யத்ருச்சயா) என்று முதலிய ஸ்மிருதி வசனங்களால் சந்நியாசியினுடைய சரீரஸ்திதிக்கு காரணமான அன்னாதிகளை அடைவதற்கான வழிகள் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அதை விளக்கமாகக் கூறுகிறார்.
यदृच्छालाभसन्तुष्टो द्वन्द्वातीतो विमत्सरः ।
समः सिद्धावसिद्धौ च कृत्वापि न निबध्यते ॥ २२ ॥
யத்ருச்சாலாபஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர: ।
ஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ருத்வாபி ந நிபத்யதே ॥ 22 ॥
यदृच्छालाभसन्तुष्टः अप्रार्थितोपनतो लाभो यदृच्छालाभः तेन सन्तुष्टः सञ्जातालंप्रत्ययः ।
நாம் கேட்காமலேயே அடையப்படுவது யத்ருச்சாலாபம். அதனால் (கிடைத்ததைக்கொண்டு) சந்தோஷம் அடைதல் அதாவது திருப்த்தி அடைதல். போதும் என்கிறஎண்ணம் உடையவன்.
द्वन्द्वातीतः द्वन्द्वैः शीतोष्णादिभिः हन्यमानोऽपि अविषण्णचित्तः द्वन्द्वातीतः उच्यते ।
சீதோஷ்ணாதி துவந்தங்களினால் ஹிம்சிக்கப்பட்டாலும் எவன் துன்பப்படவில்லையோ அவன் த்வந்த்வாதீதன் (துவந்துவங்களைக் கடந்தவன்)
विमत्सरः विगतमत्सरः निर्वैरबुद्दिः समः तुल्यः यदृच्छालाभस्य सिद्धौ असिद्धौ च ।
விமத்ஸர: என்றால் பொறாமை அற்றிருத்தல் அல்லது வைரமற் றிருத்தல். சம: என்றால் எதிர்பார்க்காமல் கிடைப்பது. அது கிடைத் தாலும் கிடைக்காவிட்டாலும் சம பாவனையுடன் இருத்தல்.
यः एवंभूतो यतिः अन्नादेः शरीरस्थितिहेतोः लाभालाभयोः समः हर्षविषादवर्जितः कर्मादौ अकर्मादिदर्शी यथाभूतात्मदर्शननिष्ठः सन् शरीरस्थितिमात्रप्रयोजने भिक्षाटनादिकर्मणि शरीरादिनिर्वर्त्ये ‘नैव किञ्चित् करोम्यहम्’ (भ. गी. ५ । ८), ‘गुणा गुणेषु वर्तन्ते’ (भ. गी. ३ । २८) इत्येवं सदा सम्परिचक्षाणः आत्मनः कर्तृत्वाभावं पश्यन्नैव किञ्चित् भिक्षाटनादिकं कर्म करोति ।
இவ்வாறு சரீர ஸ்திதிக்கு காரணரூபமான அன்னாதிகள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அதற்காக சந்தோஷமோ வருத் தமோ கொள்ளாமல் சமமாகப் பார்ப்பவனும், கர்மத்தில் அகர்மத்தைப் பார்ப்பவனும், யதார்த்த ஆத்ம தர்சன நிஷ்டனும் ஆகிய சந்நியாசி சரீரமான பிச்சை எடுத்தல் முதலிய கர்மங்கள், சரீரங்கள் முதலியவை களின் மூலமாக செய்யப்பட்டாலும் நான் ஒன்றும் செய்யவில்லை என்றும் இந்திரியங்கள் விஷயங்களில் செல்லுகிறது என்று இவ்வாறு எப்பொழுதும் விசாரணை செய்து கொண்டு தனக்கு கர்த்ருபாவம் இல்லை என்பதை அறிந்ததினால் உண்மையில் பிச்சை எடுத்தல் முதலிய கர்மங்களை செய்தாலும் செய்ததாக ஆகாது.
लोकव्यवहारसामान्यदर्शनेन तु लौकिकैः आरोपितकर्तृत्वे भिक्षाटनादौ कर्मणि कर्ता भवति । स्वानुभवेन तु शास्त्रप्रमाणादिजनितेन अकर्तैव ।
லோகவியவஹார சாமான்ய திருஷ்ட்டியினால் லௌகிகர்க ளால் பிச்சை எடுத்தல் முதலிய கர்மங்களில் கர்த்திருத்துவத்தை அப் படிப்பட்ட புருஷர்களிடத்தில் ஆரோபித்து அவர்களை கர்த்தா எனப் படுகிறார். ஆனால் அந்த புருஷர்கள் சாஸ்திர பிரமாண முதலியவை களால் உண்டான சுவானுபவத்தினால் அகர்த்தாவே.
स एवं पराध्यारोपितकर्तृत्वः शरीरस्थितिमात्रप्रयोजनं भिक्षाटनादिकं कर्म कृत्वापि न निबध्यते बन्धहेतोः कर्मणः सहेतुकस्य ज्ञानाग्निना दग्धत्वात् इति उक्तानुवाद एव एषः ॥ २२ ॥
இவ்வாறு பிறரால் அத்யாரோபம் செய்யப்பட்ட கர்த்திருத்துவமு டையவன் சரீரஸ்திதி மாத்திரம் பிரயோஜனமாக உடைய பிச்சை எடுத்தல் முதலிய கர்மத்தைச் செய்தாலும் அவனைக் கட்டுப்படுத் தாது. ஏன்எனில் பந்தத்திற்கு ஹேதுவான கர்மமும், அதன் காரணமும் ஞானாக்கினியினால் தஹிக்கப்பட்டதினால் என்று முன் கூறிய அனுவாதமே இது.
‘त्यक्त्वा कर्मफलासङ्गम्’ (भ. गी. ४ । २०) इत्यनेन श्लोकेन यः प्रारब्धकर्मा सन् यदा निष्क्रियब्रह्मात्मदर्शनसम्पन्नः स्यात् तदा तस्य आत्मनः कर्तृकर्मप्रयोजनाभावदर्शिनः कर्मपरित्यागे प्राप्ते कुतश्चिन्निमित्तात् तदसम्भवे सति पूर्ववत् तस्मिन् कर्मणि अभिप्रवृत्तस्य अपि ‘नैव किञ्चित् करोति सः’ (भ. गी. ४ । २०) इति कर्माभावः प्रदर्शितः । यस्य एवं कर्माभावो दर्शितः तस्यैव —
எவன் கர்மத்தை ஆரம்பித்து செய்து வரும்பொழுது நிஷ்கிரிய மாகிய ப்ரஹ்மாத்ம தர்சனத்தை அடைகிறானோ அப்பொழுது தனக்கு கர்த்தா, கர்ம அதனால் ஏற்படும் பிரயோஜனம் இவைகள் இல்லாததைக் காண்கிறவனுக்கு கர்மத்தியாகம் ஏற்பட்ட சமயத்தில் ஏதோ ஒரு காரணத்தினால் அது ஏற்படாதபொழுது முன் போல் அந்த கர்மத்தில் பிரவிர்த்தாலும் அவன் கொஞ்சமும் கர்மம் செய்தவனாக மாட்டான் என்று கர்ம அபாவமானது காண்பிக்கப்பட்டது. இவ்வாறு எவனுக்கு கர்ம அபாவம் உணர்த்தப்பட்டதோ அவனுக்காகவே-
गतसङ्गस्य मुक्तस्य ज्ञानावस्थितचेतसः ।
यज्ञायाचरतः कर्म समग्रं प्रविलीयते ॥ २३ ॥
கதஸங்கஸ்ய முக்தஸ்ய க்ஞானாவஸ்திதசேதஸ; ।
யக்ஞாயாசரத: கர்ம ஸமக்ரம் ப்ரவிலீயதே ॥ 23 ॥
गतसङ्गस्य सर्वतोनिवृत्तासक्तेः, मुक्तस्य निवृत्तधर्माधर्मादिबन्धनस्य, ज्ञानावस्थितचेतसः ज्ञाने एव अवस्थितं चेतः यस्य सोऽयं ज्ञानावस्थितचेताः तस्य, यज्ञाय यज्ञनिर्वृत्त्यर्थम् आचरतः निर्वर्तयतः कर्म समग्रं सह अग्रेण फलेन वर्तते इति समग्रं कर्म तत् समग्रं प्रविलीयते विनश्यति इत्यर्थः ॥ २३ ॥
எல்லாவற்றிலும் ஆசக்தி (பற்று) அற்று, புண்ய, பாபங்கள் முதலியவைகளிலிருந்து விடுபட்டு, சித்தம் எப்பொழுதும் ஞானத்தி லேயே நிலை பெற்று யக்ஞத்தின் பொருட்டு (பகவானின் பொருட்டு செய்யப்படும் (அனுஷ்ட்டிக்கப்படும்) கர்மமானது பலத்து டன் லீனமாகிறது. (அக்ர) என்றால் பலன் என்று பொருள். அதனுடன் கூடிய கர்மத்தை (சமக்ரகர்ம) எனப்படும். இதன் அபிப்பிராயம் என்ன வெனில் பலத்துடன் கூடிய எல்லா கர்மங்களும் நசித்துவிடும் என்பதாகும்.
कस्मात् पुनः कारणात् क्रियमाणं कर्म स्वकार्यारम्भम् अकुर्वत् समग्रं प्रविलीयते इत्युच्यते यतः —
மேலும் எந்த காரணத்தினால் செய்யப்பட்ட கர்மமானது பலனைக் கொடுக்காமல் பலத்துடன் கர்மம் முழுவதும் இல்லாமல் போகிறது என்பது கூறப்படுகிறது.
ब्रह्मार्पणं ब्रह्म हविर्ब्रह्माग्नौ ब्रह्मणा हुतम् ।
ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्मसमाधिना ॥ २४ ॥
ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவிர்ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணாஹுதம் ।
ப்ரஹ்மைவ தேந கந்தவ்யம் ப்ரஹ்மகர்மஸமாதினா ॥ 24 ॥
ब्रह्म अर्पणं येन करणेन ब्रह्मवित् हविः अग्नौ अर्पयति तत् ब्रह्मैव इति पश्यति, तस्य आत्मव्यतिरेकेण अभावं पश्यति ।
பிரஹ்மவித் எந்த சாதனத்தின் வாயிலாக ஹவிசை அக்னியில் அர்ப்பணிக்கிறானோ அந்த சாதனத்தை பிரஹ்ம ரூபமாகவே பார்க்கி றான். அவன் ஆத்மாவைத் தவிர வேறு இல்லை என்று காண்கிறான்.
यथा शुक्तिकायां रजताभावं पश्यति ; तदुच्यते ब्रह्मैव अर्पणमिति, यथा यद्रजतं तत् शुक्तिकैवेति । ‘ब्रह्म अर्पणम्’ इति असमस्ते पदे ।
எவ்வாறு சிப்பியில் வெள்ளியின் அபாவத்தைக் காண்கிறானோ அதுபோல பிரஹ்மமே அர்ப்பணமாகும் என்பது (ப்ரஹ்மார்ப்பணம்) என்றும் பதத்தால் சொல்லப்பட்டது. எவ்வாறு எனில் எதை வெள்ளி என்றரூபத்தில் பார்த்தோமோ அது சிப்பியே என்று தோன்றுதல் என்க. பிரஹ்மம், அர்ப்பணம் என்பது தனித் தனியான பதங்களாகும்.
यत् अर्पणबुद्ध्या गृह्यते लोके तत् अस्य ब्रह्मविदः ब्रह्मैव इत्यर्थः ।
உலகத்தில் எது எல்லாம் அர்ப்பண புத்தியால் கிரஹிக்கப் படுகிறதோ அவை எல்லாம் அந்த பிரஹ்மத்தை அறிந்தவனுக்கு பிரஹ்மமே என்பது பொருள். (பிரஹ்மவித்திற்கு)
ब्रह्म हविः तथा यत् हविर्बुद्ध्या गृह्यमाणं तत् ब्रह्मैव अस्य ।
எவ்வாறு ஹவி: என்பது பிரஹ்மபுத்தியால் கிரஹிக்கப்பட்டதோ அவ்வாறு ஹவிர்புத்தியால் எது கிரஹிக்கப்படுகிறதோ அதுவும் பிரஹ்மமே. எவ்வாறு அர்ப்பணபுத்தியால் கிரஹிக்கப்பட்டது ப்ரஹ் மமோ அவ்வாறு ஹவிர்புத்தியால் கிரஹிக்கப்படுவதும் ப்ரஹ்மமே.
तथा ‘ब्रह्माग्नौ’ इति समस्तं पदम् ।
அவ்வாறேபிரஹ்மாக்னௌ என்பது சமஸ்தபதம்.(பிரஹ்ம மாகிற அக்னியில்)
अग्निरपि ब्रह्मैव यत्र हूयते ब्रह्मणा कर्त्रा, ब्रह्मैव कर्तेत्यर्थः । यत् तेन हुतं हवनक्रिया तत् ब्रह्मैव ।
அக்னியும் பிரஹ்மமே. எங்கு பிரஹ்மமாகிய கர்த்தாவால் ஹவனம் செய்யப்படுகிறதோ என்றவிடத்தில் அக்னியும் பிரஹ்மமே. ஹவனத்திற் குரிய கர்த்தாவும் பிரஹ்மமே. எது கர்தாவால் ஆகுதி செய்யப்பட்டதோ அந்த கொடுத்தல் என்னும் செயல் அதுவும் பிரஹ்மமே.
यत् तेन गन्तव्यं फलं तदपि ब्रह्मैव ।
அதனால் அடையப்படும் பலமோ அதுவும் பிரஹ்மமே.
ब्रह्मकर्मसमाधिना ब्रह्मैव कर्म ब्रह्मकर्म तस्मिन् समाधिः यस्य सः ब्रह्मकर्मसमाधिः तेन ब्रह्मकर्मसमाधिना ब्रह्मैव गन्तव्यम् ॥
பிரஹ்மமே கர்மம், அதுவே அதில்சமாதி எதற்கோ அது பிரஹ்மகர்மசமாதி, அந்த பிரஹ்ம்ம கர்ம சமாதியினால் பிரஹ்ம்மத் தையே அடைய வேண்டும். ப்ரஹ்மமே கர்மம் அந்த ப்ரஹ்மமாகிய கர்மத்தில் ஒன்றுதல் என்பது பிரஹ்மகர்மசமாதி, அதனால் அடையப் படுவது ப்ரஹ்மமே.
एवं लोकसङ्ग्रहं चिकीर्षुणापि क्रियमाणं कर्म परमार्थतः अकर्म, ब्रह्मबुद्ध्युपमृदितत्वात् ।
இவ்வாறு லோக நன்மையின் பொருட்டு இச்சை உடையவர்க ளால் செய்யப்படும் கர்மம் பிரஹ்ம்ம புத்தி பாவத்தால் பலத்தை உண்டுபண்ணும் சத்தியற்றதால் உண்மையில் அது அகர்மமே.
एवं सति निवृत्तकर्मणोऽपि सर्वकर्मसंन्यासिनः सम्यग्दर्शनस्तुत्यर्थं यज्ञत्वसम्पादनं ज्ञानस्य सुतरामुपपद्यते ; यत् अर्पणादि अधियज्ञे प्रसिद्धं तत् अस्य अध्यात्मं ब्रह्मैव परमार्थदर्शिन इति ।
இவ்வாறு இருக்கையில் எல்லாகர்மங்களையும் தியாகம் செய்த கர்மசந்நியாசியின் யதார்த்த ஞனத்தை புகழ்வதின் பொருட்டு ஞானத்திலே யக்ஞத்தை ஏற்றிக்கூறுதல் பொருந்தும், அதியக்ஞத்தில் ஹவிஸ்சை அர்பணிப்பதற்கான கருவி முதலியவைகள் எவையோ அவைகள் பரமார்த்ததரிசிக்கு தன் ஆத்மாவான பிரஹ்மமேதான்.
अन्यथा सर्वस्य ब्रह्मत्वे अर्पणादीनामेव विशेषतो ब्रह्मत्वाभिधानम् अनर्थकं स्यात् ।
மேலே கூறப்பட்டவாறு எடுத்துக்கொள்ளவில்லை எனில் உண்மையில் எல்லாம் பிரஹ்ம ரூபமாய் இருக்கின்றபோதிலும் அர்ப்பணாதிகளுக்கு மட்டும் பிரஹ்மமாக விசேஷித்துக் கூறுவது வியர்த்தமாகும். (பயனில்லாததாகும்)
तस्मात् ब्रह्मैव इदं सर्वमिति अभिजानतः विदुषः कर्माभावः ।
ஆகையால் இவை எல்லாம் பிரஹ்மமே என்று அறிந்த ஞானிக்கு உண்மையில் எல்லாக் கர்மங்களும் அபாவமாய் இருக்கிறது.
कारकबुद्ध्यभावाच्च । न हि कारकबुद्धिरहितं यज्ञाख्यं कर्म दृष्टम् ।
காரக புத்தியில்லை. (அவனுடைய அந்தக்கரணத்தில் செய்பவன், செய்கை முதலிய பேத புத்தி இல்லாததினால் அது சாத்தியமாகிறது) காரக புத்தியில்லாமல் யக்ஞம் எனப்படும் கர்மம் எங்கும் காணப்படவில்லை.
सर्वमेव अग्निहोत्रादिकं कर्म शब्दसमर्पितदेवताविशेषसम्प्रदानादिकारकबुद्धिमत् कर्त्रभिमानफलाभिसन्धिमच्च दृष्टम् ।
எல்லா அக்கினிஹோத்திராதி கர்மங்களும் இந்திரனின் பொருட்டு, திரவியங்கள் அந்த அந்த தேவதைகளுக்கு விசேஷமாக அர்ப்பணிக்கிறேன் என்ற சம்பிரதான காரக புத்தி உடையவனாகவும் அவ்வாறேநான் கர்த்தா என்ற அபிமானமுடையவனாகவும், மேலும் பலத்தில் இச்சை உடையவனாகவும் காணப்படுகிறான்.
न उपमृदितक्रियाकारकफलभेदबुद्धिमत् कर्तृत्वाभिमानफलाभिसन्धिरहितं वा ।
கிரியா, காரகம் மேலும் பலம் ஆகிய பேத புத்தி நஷ்ட்டமடைந் தாலும் அவ்வாறேநான் கர்த்தா என்றஅபிமானமும், பலத்தில் இச்சை ஆசை (இச்சை) இல்லாத ஒரு கர்மமும் (யக்ஞமும்) காணப்படவில்லை.
इदं तु ब्रह्मबुद्ध्युपमृदितार्पणादिकारकक्रियाफलभेदबुद्धि कर्म । अतः अकर्मैव तत् ।
இதுவோ (இந்த ஞான யக்ஞமோ) (ஹவிஸ்ஸை) அர்ப்பணம் செய்யும் கருவி முதலான காரகம், கிரியா, பலம் எனப்படும் பேதபுத்தி யானது எல்லாம் பிரஹ்மமே என்றபுத்தியினால் அழிந்து போகிறது. ஆகையால் அது அகர்மமே.
அவ்வாறே கர்மண்யகர்ம ய: பச்யேத், கர்மண்யபி ப்ரவ்ருத்தோபி நைவ கிஞ்சித் கரோதி ஸ:, குணா குணேஷு வர்தந்தே, நைவ கிஞ்சித் கரோமீதி யுக்தோ மன்யேத தத்துவவித் முதலிய ஸ்லோகங்களில் காட்டப்பட்டுள்ளது.
तथा च दर्शयन् तत्र तत्र क्रियाकारकफलभेदबुद्ध्युपमर्दं करोति ।
அவ்வாறேஅங்கு அங்கு எடுத்துக்காட்டி கிரியா, காரக பலபேதபுத்தியை நிஷேதம் செய்கிறார்.
दृष्टा च काम्याग्निहोत्रादौ कामोपमर्देन काम्याग्निहोत्रादिहानिः ।
காமனையினால் செய்யப்படும் அக்னிஹோத்ராதிகளில் காமத்தை விட்டொழித்தலால் அக்னி ஹோத்ராதிகள் சகாமனை (காமத்துடன்) கூடியது ஆகாது.
तथा मतिपूर्वकामतिपूर्वकादीनां कर्मणां कार्यविशेषस्य आरम्भकत्वं दृष्टम् ।
அவ்வாறேபுத்தி பூர்வமாகவோ அபுத்தி பூர்வமாகவோ செய்யப் படும் கர்மங்களினால் வெவ்வேறு காரியங்கள் ஆரம்பம் ஆகிறது. அதாவது அவற்றின் பலன்கள் வெவ்வேறாகும்.
तथा इहापि ब्रह्मबुद्ध्युपमृदितार्पणादिकारकक्रियाफलभेदबुद्धेः बाह्यचेष्टामात्रेण कर्मापि विदुषः अकर्म सम्पद्यते । अतः उक्तम् ‘समग्रं प्रविलीयते’ (भ. गी. ४ । २०) इति ॥
அவ்வாறே இங்கும் எந்த புருஷனுக்கு எங்கும் பிரஹ்ம்ம புத்தி உண்டானதினால் (ஹவிஸ் முதலியவைகளில்) கிரியா, காரக, பலம் முதலிய பேதபுத்தி நஷ்ட்டமாயிற்றோ அந்த ஞானியின் பாஹிய (வெளிச்) செயல்களாகிய கர்மங்கள் அகர்மமேயாகும். ஆகையால் எல்லா பலத்துடன் (கர்மங்கள்) லீனமாய் விட்டது என்று. (கரைந்து விட்டதென்று)
अत्र केचिदाहुः — यत् ब्रह्म तत् अर्पणादीनि ; ब्रह्मैव किल अर्पणादिना पञ्चविधेन कारकात्मना व्यवस्थितं सत् तदेव कर्म करोति । तत्र न अर्पणादिबुद्धिः निवर्त्यते, किं तु अर्पणादिषु ब्रह्मबुद्धिः आधीयते ; यथा प्रतिमादौ विष्ण्वादिबुद्धिः, यथा वा नामादौ ब्रह्मबुद्धिरिति ॥
இந்த விஷயத்தில் வேறு சிலர் கூறுவர். எது பிரஹ்மமோ அது அர்ப்பணத்திற்குரிய கருவி முதலியவனவாம். ப்ரஹ்மம்தான் அல்லவா அர்ப்பணிக்கும் கருவி முதலான ஐந்து விதமான காரகங்க ளாக இருந்து கொண்டு அதுவே கர்மங்களைச் செய்கிறது எனக் கூறுவர். முன்பு கூறப்பட்ட யக்ஞாதிகளில் (கர்மங்களில்) அர்ப்பணிக்கும் கருவி முதலிய புத்தி நீக்கப்படுவதில்லை. ஆனால் அதில் பிரஹ்ம புத்தியானது ஸ்தாபிக்கப் படுகிறது. எவ்வாறு எனில் விக்கிரகங்களில் விஷ்ணு முதலிய தேவதாதி புத்தி போலவும், அவ்வாறே நாமங்களில் பிரஹ்ம்ம புத்தி போலவும் என்று அறிந்து கொள்ளவேண்டும்.
सत्यम् , एवमपि स्यात् यदि ज्ञानयज्ञस्तुत्यर्थं प्रकरणं न स्यात् ।
உண்மைதான், எந்த பிரகரணமானது ஞானயக்ஞத்தைப் புகழ்வதற்காக இல்லையோ அப்பொழுது இப்படியும் இருக்கலாம்.
अत्र तु सम्यग्दर्शनं ज्ञानयज्ञशब्दितम् अनेकान् यज्ञशब्दितान् क्रियाविशेषान् उपन्यस्य ‘श्रेयान् द्रव्यमयाद्यज्ञात् ज्ञानयज्ञः’ (भ. गी. ४ । ३३) इति ज्ञानं स्तौति ।
ஆனால் இந்தப் பிரகரணத்தில் யக்ஞம் என்று சொல்லப்பட்ட அநேக கிரியா விஷேசங்களைக் கூறி திரவியமய யக்ஞத்தைக் காட்டிலும் ஞானயக்ஞம் மேலானது என்று கூறுவதன் வாயிலாக ஞானயக்ஞம் என்றசப்தத்தினால் சொல்லப்பட்ட சம்யக் தர்சனத்தை ஸ்துதி செய்கிறார் (புகழ்கிறார்)
अत्र च समर्थमिदं वचनम् ‘ब्रह्मार्पणम्’ इत्यादि ज्ञानस्य यज्ञत्वसम्पादने ; अन्यथा सर्वस्य ब्रह्मत्वे अर्पणादीनामेव विशेषतो ब्रह्मत्वाभिधानमनर्थकं स्यात् ।
அவ்வாறேஇந்தப் பிரகரணத்தில் ப்ரஹ்ம்மார்ப்பணம் முதலிய வசனங்கள் இருக்கிறதோ, அது ஞானத்தை யக்ஞரூபமாக கல்பித்துக் கூறுவதிலே கருத்துடையது. அவ்வாறு இல்லையெனில் எல்லாம் பிரஹ்ம்மமாய் இருக்க அர்ப்பணாதிகளுக்கு மாத்திரம் பிரம்மத்து வத்தை விசேஷித்துக் கூறுதல் வியர்த்தமாகும்.
ये तु अर्पणादिषु प्रतिमायां विष्णुदृष्टिवत् ब्रह्मदृष्टिः क्षिप्यते नामादिष्विव चेति ब्रुवते न तेषां ब्रह्मविद्या उक्ता इह विवक्षिता स्यात् , अर्पणादिविषयत्वात् ज्ञानस्य ।
எவர்கள் அர்ப்பணாதிகளை விக்ரஹங்களில் விஷ்ணு முதலிய திருஷ்ட்டியைப் போலும் அவ்வாறேநாமாதிகளில் பிரஹ்ம்ம திருஷ்ட்டிவைப்பதுபோல் அர்ப்பணாதிகளான யக்ஞத்தினுடைய சாமக்ரியைகளில் பிரஹ்ம்ம புத்தியை வைக்கிறார்களோ அவர்களு டைய கருத்துப்படி கூற விரும்பியது பிரஹ்ம்ம வித்தையல்ல. ஏனெ னில் அவர்கள் மதப்படி ஞானத்தினுடைய விஷயம் அர்ப்பணாதி யக்ஞ சாமக்கிரிய விஷயமாகும். பிரஹ்மத்தைப் பற்றிய விஷயமல்ல.
न च दृष्टिसम्पादनज्ञानेन मोक्षफलं प्राप्यते । ‘ब्रह्मैव तेन गन्तव्यम्’ इति चोच्यते । विरुद्धं च सम्यग्दर्शनम् अन्तरेण मोक्षफलं प्राप्यते इति ।
இந்த பிரகாரம் பிரஹ்ம்மதிருஷ்ட்டி ஏற்படுவதற்கு ஹேதுவாகி ஞானத்தால் மோக்ஷ ரூபமான பலனானது கிடைக்காது. மேலும் சம்யக் தர்சனத்தை (யதார்த்த ஞானத்தை) தவிர மற்றஞானத்தால் மோக்ஷ பலம் கிடைக்கும் என்று கூறுவது எந்த விதத்திலும் விரோதமே.
प्रकृतविरोधश्च ; सम्यग्दर्शनम् च प्रकृतम् ‘कर्मण्यकर्म यः पश्येत्’ (भ. गी. ४ । १८) इत्यत्र, अन्ते च सम्यग्दर्शनम् , तस्यैव उपसंहारात् ।
(இவ்வாறு எடுத்துக்கொண்டால்) இந்தப் பிரகரணத்தில் விரோதம் உண்டாகும். (இதன் அபிப்பிராயம் என்னவெனில்) பிரகரணத்தின் ஆரம்பத்தில் கர்மண்யகர்ம ய: பச்யேத் என்று சம்யக் தர்சனத்தை (சம்யக் ஞானத்தை) பற்றி உள்ளதால் அவ்வாறே முடிய வேண்டிய காரணத்தினால் சம்யக் தர்சன விஷயமே இந்த பிரகரணத்தின் முடிவாகும்.
ச்ரேயான்திரவ்ய மயாத்யக்ஞாத் ஞானயக்ஞ: ஞானம் லப்த்வா பராம் சாந்திம் முதலியவைகளால் சம்யக் தர்சனத்தை ஸ்துதி செய்து இந்த அத்தியாயம் முடிகிறது.
तत्र अकस्मात् अर्पणादौ ब्रह्मदृष्टिः अप्रकरणे प्रतिमायामिव विष्णुदृष्टिः उच्यते इति अनुपपन्नम् ।
இவ்வாறு இருக்கையில் விக்ரஹத்தில் விஷ்ணுவைப் பார்ப்பது போல் அர்ப்பணாதிகளில் பிரஹ்ம்மத்தைப் பார்த்தல் பொருத்த மில்லாத இடத்தில் காரணம் ஏதுமின்றி கூறுதல் பொருந்தாது.
तस्मात् यथाव्याख्यातार्थ एव अयं श्लोकः ॥ २४ ॥
ஆகையால் யதார்த்தமான வாக்யார்த்தத்தைக் கூறுவதுதான் இந்த ஸ்லோகம்.
तत्र अधुना सम्यग्दर्शनस्य यज्ञत्वं सम्पाद्य तत्स्तुत्यर्थम् अन्येऽपि यज्ञा उपक्षिप्यन्ते —
அங்கு இப்பொழுது சம்யக்தர்சனத்திற்கு யக்ஞ ரூபத்தை ஏற்றி கூறி அதை புகழ்வதின் பொருட்டு தைவம் ஏவ, முதலிய ஸ்லோகங் களால் மற்றயக்ஞங்களையும் எடுத்துக் கூறுகிறார்.
दैवमेवापरे यज्ञं योगिनः पर्युपासते ।
ब्रह्माग्नावपरे यज्ञं यज्ञेनैवोपजुह्वति ॥ २५ ॥
தைவமேவாபரே யக்ஞம் யோகின: பர்யுபாஸதே ।
ப்ரஹ்மாக்நாவபரே யக்ஞம் யக்ஞேநைவோபஜுஹ்வதி ॥ 25 ॥
दैवमेव देवा इज्यन्ते येन यज्ञेन असौ दैवो यज्ञः तमेव अपरे यज्ञं योगिनः कर्मिणः पर्युपासते कुर्वन्तीत्यर्थः ।
எந்த யக்ஞத்தின் மூலமாக தேவர்கள் (இந்திரன் முதலியவர்கள்) உபாசிக்கப்படுகிறார்களோ அது தேவ சம்பந்தமான யக்ஞமாகும். மற்ற யோகிகளாகிய கர்மம் செய்பவர்கள் அந்த தேவ யக்ஞத்தைச் செய்கிறார்கள். (அனுஷ்ட்டிக்கிறார்கள்)
ब्रह्माग्नौ ‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ (तै. उ. २ । १ । १) ‘विज्ञानमानन्दं ब्रह्म’ ‘यत् साक्षादपरोक्षात् ब्रह्म य आत्मा सर्वान्तरः’ (बृ. उ. ३ । ४ । १) इत्यादिवचनोक्तम् अशनायादिसर्वसंसारधर्मवर्जितम् ‘नेति नेति’ (बृ. उ. ४ । ४ । २२) इति निरस्ताशेषविशेषं ब्रह्मशब्देन उच्यते ।
சத்யம் ஞானம் அனந்தம் பிரஹ்ம்ம, விக்ஞானமானந்தம் பிரஹ்ம்ம, யத் சாக்ஷாத் அபரோக்ஷாத் பிரஹ்ம ய ஆத்மா சர்வாந்தர: முதலிய வசனங்களால் வர்ணிக்கப்பட்டதோ பசி, தாகம் முதலிய சம்சார தர்மமற்றதோ நேதி நேதி என்றவேத வாக்கியத்தினால் எல்லா விசேஷணங்களும் தள்ளப்பட்ட பின் எது மிச்சமாயிற்றோ அது பிரஹ்மம் என்ற சப்தத்தினால் கூறப்படுகிறது.
ब्रह्म च तत् अग्निश्च सः होमाधिकरणत्वविवक्षया ब्रह्माग्निः । तस्मिन् ब्रह्माग्नौ अपरे अन्ये ब्रह्मविदः यज्ञम् — यज्ञशब्दवाच्य आत्मा, आत्मनामसु यज्ञशब्दस्य पाठात् — तम् आत्मानं यज्ञं परमार्थतः परमेव ब्रह्म सन्तं बुद्ध्याद्युपाधिसंयुक्तम् अध्यस्तसर्वोपाधिधर्मकम् आहुतिरूपं यज्ञेनैव आत्मनैव उक्तलक्षणेन उपजुह्वति प्रक्षिपन्ति ।
ஹோமத்திற்கு அதிகரணம் கூறுவதற்காக அந்த பிரஹ்மம் இங்கு அக்னி என்று சொல்லப்படுகிறது. அந்த பிரஹ்ம ரூப அக்னியில் மற்றொரு பிரஹ்ம வேதாவானவர் யக்ஞ மூலமாக யக்ஞமாகிய ஹோமம் செய்யப்படுகிறது. இங்கு யக்ஞம் என்றால் யக்ஞ சப்த வாக்கி யம் ஆத்மா. ஆத்மாவினுடைய நாமங்களில் யக்ஞ சப்த பாடமும் இருப்பதால் யக்ஞம் எனப்படும் ஆத்மா உண்மையில் மேலான பிரஹ்மமே. ஆனால் புத்தி முதலிய உபாதிகளுடன் கூடி அத்யாசம் செய்யப்பட்ட உபாதிகளுனுடைய தர்மங்களுடன் (தன்மைகளை) கூடிய ஆகுதி ரூபமான யக்ஞம் எனப்படும் ஆத்மாவை மேலும் கூறப்பட்ட ஆத்மா வாயிலாக ஹோமம் செய்யப்படுகிறது.
सोपाधिकस्य आत्मनः निरुपाधिकेन परब्रह्मस्वरूपेणैव यद्दर्शनं स तस्मिन् होमः तं कुर्वन्ति ब्रह्मात्मैकत्वदर्शननिष्ठाः संन्यासिनः इत्यर्थः ॥ २५ ॥
இதனுடைய சாராம்சம் - உபாதியுடன் கூடிய ஆத்மா, உபாதி அற்ற பரப்ரஹ்ம ரூபமாக சாக்ஷாத்கரித்தலே அது அதில் ஹோமம் செய்யப்பட்டதாகிறது. ப்ரஹ்மாத்மைக தத்வ தர்சன நிஷ்ட்டர்களா கிய சந்நியாசிகள் அதைச் செய்கிறார்கள்.
सोऽयं सम्यग्दर्शनलक्षणः यज्ञः दैवयज्ञादिषु यज्ञेषु उपक्षिप्यते ‘ब्रह्मार्पणम्’ इत्यादिश्लोकैः प्रस्तुतः ‘श्रेयान् द्रव्यमयाद्यज्ञात् ज्ञानयज्ञः परन्तप’ (भ. गी. ४ । ३३) इत्यादिना स्तुत्यर्थम् —
ப்ரஹ்மார்ப்பணம் என்று தொடங்கும் ஸ்லோகத்தில் எடுத்துக் காட்டப்பட்ட சம்யக்தர்சனம் என்ற இந்த யக்ஞத்தை ச்ரேயான் திரவ்யமயாத்யக்ஞாஜ் ஞானயக்ஞ: பரந்தப, முதலிய ஸ்லோகங் களால் புகழும் பொருட்டு தைவ யக்ஞம் முதலிய யக்ஞங்களின் (மத்தியில்) வைத்திருக்கிறார்.
श्रोत्रादीनीन्द्रियाण्यन्ये संयमाग्निषु जुह्वति ।
शब्दादीन्विषयानन्य इन्द्रियाग्निषु जुह्वति ॥ २६ ॥
ச்ரோத்ராதீநீந்த்ரியாண்யந்யே ஸந்யமாக்நிஷு ஜுஹ்வதி ।
சப்தாதீந்விஷயாநன்ய இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி ॥ 26 ॥
श्रोत्रादीनि इन्द्रियाणि अन्ये योगिनः संयमाग्निषु । प्रतीन्द्रियं संयमो भिद्यते इति बहुवचनम् । संयमा एव अग्नयः तेषु जुह्वति इन्द्रियसंयममेव कुर्वन्ति इत्यर्थः ।
மற்றயோகிகள் செவி முதலிய இந்திரியங்களை அடக்குதல் என்னும் அக்னிகளில் ஹோமம் செய்கிறார்கள். அடக்குதல் என்பது ஒவ்வொரு இந்திரியத்திற்கும் உள்ளதால் அக்னிசு (அக்னிகளில்) என்று பன்மையில் கூறப்பட்டுள்ளது. அடக்குதல் என்பதே அக்கினிகள். அதில் ஹோமம் செய்கிறார்கள். என்றால் இந்திரியங்களை அடக்குகிறார்கள் என்பது பொருள்.
शब्दादीन् विषयान् अन्ये इन्द्रियाग्निषु इन्द्रियाण्येव अग्नयः तेषु इन्द्रियाग्निषु जुह्वति श्रोत्रादिभिरविरुद्धविषयग्रहणं होमं मन्यन्ते ॥ २६ ॥
சப்தம் முதலிய விஷயங்களை வேறு சில யோகிகள் இந்திரியங் களில் ஹோமம் செய்கிறார்கள். இந்திரியங்கள் தான் அக்னிகள். அந்த இந்திரிய அக்னிகளில் ஹோமம் செய்கிறார்கள். (என்பதன் கருத்து என்னவெனில்) அந்த சுரோத்திராதி இந்திரியங்கள் மூலமாக சாஸ்திரத்திற்கு சம்மதமான விஷயங்களை கிரஹித்தலே ஹோமம் எனப்படுகிறது.
किञ्च —
மேலும்
सर्वाणीन्द्रियकर्माणि प्राणकर्माणि चापरे ।
आत्मसंयमयोगाग्नौ जुह्वति ज्ञानदीपिते ॥ २७ ॥
ஸர்வாணீந்த்ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே ।
ஆத்மஸம்யமயோகாக்நௌ ஜுஹ்வதி க்ஞானதீபிதே ॥ 27 ॥
सर्वाणि इन्द्रियकर्माणि इन्द्रियाणां कर्माणि इन्द्रियकर्माणि, तथा प्राणकर्माणि प्राणो वायुः आध्यात्मिकः तत्कर्माणि आकुञ्चनप्रसारणादीनि तानि च अपरे आत्मसंयमयोगाग्नौ आत्मनि संयमः आत्मसंयमः स एव योगाग्निः तस्मिन् आत्मसंयमयोगाग्नौ जुह्वति प्रक्षिपन्ति ज्ञानदीपिते स्नेहेनेव प्रदीपे विवेकविज्ञानेन उज्ज्वलभावम् आपादिते जुह्वति प्रविलापयन्ति इत्यर्थः ॥ २७ ॥
எல்லா இந்திரியங்களினுடைய தொழில்களையும், ஒவ்வொரு சரீரத்தினுள் உள்ள பிராணனுடைய கர்மங்களாகிய குறைதல், நிமிர்தல் முதலியவைகளையும் ஞானத்தினால் பிரகாசப்படுத்தப்பட்ட ஆத்ம சம்யம ரூப யோகாக்கினியில் ஹோமம் செய்கிறார்கள். ஆத்ம அடக்கமாவது ஆத்மாவினிடத்தில் (மனதை அலையாது) நிறுத்துதலே யோகாக்னி. நெய் முதலியவைகளாய் பிரகாசிக்கும் அக்னி போல விவேக ஞானத்தினால் பிரகாசிக்கப் பெற்றஅந்த ஆத் மாவில் அடக்கிய யோகாக்னியில் அர்ப்பணிக்கிறார்கள். (இதன் பொருள் என்னவெனில் இந்திரியங்கள் பிராணன் இவைகளின் தொழில்களை தடுத்து மனதை ஆத்மாவிடத்தில் நிலைக்கச் செய்கின்றனர்
द्रव्ययज्ञास्तपोयज्ञा योगयज्ञास्तथापरे ।
स्वाध्यायज्ञानयज्ञाश्च यतयः संशितव्रताः ॥ २८ ॥
த்ரவ்யயக்ஞாஸ்தபோயக்ஞா யோகயக்ஞாஸ்ததாபரே ।
ஸ்வாத்யாயக்ஞானயக்ஞாச்ச யதய: ஸஞ்சிதவ்ரதா: ॥ 28 ॥
द्रव्ययज्ञाः तीर्थेषु द्रव्यविनियोगं यज्ञबुद्ध्या कुर्वन्ति ये ते द्रव्ययज्ञाः ।
யக்ஞ புத்தியுடன் தீர்த்தாதி திவ்ய ஸ்தலங்களில் பொருள்களை தானம் செய்பவர்கள் எவர்களோ அவர்கள் திரவ்ய யக்ஞர்கள்.
तपोयज्ञाः तपः यज्ञः येषां तपस्विनां ते तपोयज्ञाः । योगयज्ञाः प्राणायामप्रत्याहारादिलक्षणो योगो यज्ञो येषां ते योगयज्ञाः ।
எவர்கள் தபஸ்விகளோ அவர்கள் தபோ யக்ஞர்கள். பிராணாயாம, பிரத்தியாஹாராதி லக்ஷணங்களுடன் யோகம் என்னும் யக்ஞத்தை உடையவர்கள் யோக யக்ஞர்கள்.
तथा अपरे स्वाध्यायज्ञानयज्ञाश्च स्वाध्यायः यथाविधि ऋगाद्यभ्यासः यज्ञः येषां ते स्वाध्याययज्ञाः । ज्ञानयज्ञाः ज्ञानं शास्त्रार्थपरिज्ञानं यज्ञः येषां ते ज्ञानयज्ञाश्च ।
விதிப்படி ரிக்காதிகளில் அப்பியாசமே யக்ஞமாக உடைய வேறு சிலர் சுவாத்யாய யக்ஞர்கள். சாஸ்திரத்தில் உள்ள அர்த்தத்தை நன்றாக விசாரித்து அறிந்த ஞானமுடையவர்கள் ஞானயக்ஞர்கள்.
यतयः यतनशीलाः संशितव्रताः सम्यक् शितानि तनूकृतानि तीक्ष्णीकृतानि व्रतानि येषां ते संशितव्रताः ॥ २८ ॥
சிலர் தீவிர முயற்சி உடையவர்களாய் தீவிரமாக விரதங்களைக் கடைப்பிடித்து சூக்ஷமமாயும், சுத்தமாயும் உள்ள புத்தி எவர்களுக்குள் ளதோ அவர்கள் சம்சித விரதர்கள்.
किञ्च —
மேலும்
अपाने जुह्वति प्राणं प्राणेऽपानं तथापरे ।
प्राणापानगती रुद्ध्वा प्राणायामपरायणाः ॥ २९ ॥
அபாநே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணேஅபானம் ததாபரே ।
ப்ராணாபானகதீ ருத்த்வா ப்ராணாயாம்பராயண: ॥ 29 ॥
अपाने अपानवृत्तौ जुह्वति प्रक्षिपन्ति प्राणं प्राणवृत्तिम् , पूरकाख्यं प्राणायामं कुर्वन्तीत्यर्थः ।
அபான விருத்தியில் பிராணனை ஹோமம் செய்கிறார்கள் என்றால் பிராணவிருத்தியை பூரகம் எனப்படும் பிராணாயாமம் செய்கிறான் என்பது பொருள்.
प्राणे अपानं तथा अपरे जुह्वति, रेचकाख्यं च प्राणायामं कुर्वन्तीत्येतत् ।
அவ்வாறேவேறு சிலர் பிராணனிடத்தில் அபானனை ஹோமம் செய்கிறார்கள் என்றால் ரேசகம் என்றபிராணாயாமம் செய்கிறார்கள் என்பது பொருள்.
प्राणापानगती मुखनासिकाभ्यां वायोः निर्गमनं प्राणस्य गतिः, तद्विपर्ययेण अधोगमनम् अपानस्य गतिः, ते प्राणापानगती एते रुद्ध्वा निरुध्य प्राणायामपरायणाः प्राणायामतत्पराः ; कुम्भकाख्यं प्राणायामं कुर्वन्तीत्यर्थः ॥ २९ ॥
(முகம்)வாய், மூக்கின் வழியாக வாயுவானது வெளியில் செல்லு வது பிராணனுடைய கதி (வழி) யாகும். அவ்வாறே அதற்கு மாறாக கீழ்நோக்கிச் செல்லுதல் அபானத்தினுடைய கதி. இந்த இரு பிராணா பான கதிகளை அவர்கள் தடுத்து பிராணாயாமத்திலேயே கருத்துள்ள வர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் கும்பகம் என்னும் பிராணாயா மத்தைச் செய்கிறார்கள்.
किञ्च —
மேலும்
अपरे नियताहाराः प्राणान्प्राणेषु जुह्वति ।
सर्वेऽप्येते यज्ञविदो यज्ञक्षपितकल्मषाः ॥ ३० ॥
அபரே நியதாஹாரா; ப்ராணான்ப்ராணேஷு ஜுஹ்வதி ।
ஸர்வேஅப்யேதே யக்ஞவிதோ யக்ஞக்ஷபிதகல்மஷா: ॥ 30 ॥
अपरे नियताहाराः नियतः परिमितः आहारः येषां ते नियताहाराः सन्तः प्राणान् वायुभेदान् प्राणेषु एव जुह्वति ।
வேறு சிலர் நியமமாக அளவான ஜீவனத்திற்கு தேவையான ஆகாரமுடையவர்களாய் வாயு பேதங்களை பிராணன்களில் ஹோமம் செய்கிறார்கள்.
यस्य यस्य वायोः जयः क्रियते इतरान् वायुभेदान् तस्मिन् तस्मिन् जुह्वति, ते तत्र प्रविष्टा इव भवन्ति ।
எந்த எந்த வாயுக்கள் ஜெயிக்கப்படுகிறதோ அதில் மற்றவாயு பேதங்கள் ஹோமம் செய்யப்படுகிறது. அந்த எல்லா வாயு பேதங்க ளும் அதில் புகுந்து விட்டது போல் ஆகிறது.
सर्वेऽपि एते यज्ञविदः यज्ञक्षपितकल्मषाः यज्ञैः यथोक्तैः क्षपितः नाशितः कल्मषो येषां ते यज्ञक्षपितकल्मषाः ॥ ३० ॥
இவர்கள் எல்லோரும் யக்ஞத்தை அறிந்தவர்கள். யக்ஞத்தி னால் பாபமற்றவர்களாய் இருக்கிறார்கள். இதன் பொருள்- மேலே கூறப்பட்ட யக்ஞ மூலமாக எவர்களது பாபம் நசித்து விட்டதோ அவர்கள் யக்ஞக்ஷபித கல்மஷா: எனப்படுகின்றனர்.
एवं यथोक्तान् यज्ञान् निर्वर्त्य —
இவ்வாறு முற்கூறிய யக்ஞங்களை சம்பாதித்து.
यज्ञशिष्टामृतभुजो यान्ति ब्रह्म सनातनम् ।
नायं लोकोऽस्त्ययज्ञस्य कुतोऽन्यः कुरुसत्तम ॥ ३१ ॥
யக்ஞசிஷ்டாம்ருதபுஜோ யாந்தி ப்ரஹ்ம ஸநாதனம் ।
நாயம் லோகோஅஸ்த்யயக்ஞஸ்ய குதோஅந்ய: குருஸத்தம ॥ 31 ॥
यज्ञशिष्टामृतभुजः यज्ञानां शिष्टं यज्ञशिष्टं यज्ञशिष्टं च तत् अमृतं च यज्ञशिष्टामृतं तत् भुञ्जते इति यज्ञशिष्टामृतभुजः । यथोक्तान् यज्ञान् कृत्वा तच्छिष्टेन कालेन यथाविधिचोदितम् अन्नम् अमृताख्यं भुञ्जते इति यज्ञशिष्टामृतभुजः यान्ति गच्छन्ति ब्रह्म सनातनं चिरन्तनं ।
யக்ஞத்தினுடைய மிச்சம் யக்ஞ சிஷ்ட்டமாகும். அதுவே அம்ருதம். அதை எவர்கள் போஜனம் செய்கிறார்களோ அவர்கள் யக்ஞ சிஷ்ட்ட அம்ருத போஜீ. முன்பு கூறிய யக்ஞம் செய்த காலம் போக மீதம் உள்ள காலத்தில் தமக்கு விதிக்கப்பட்ட அம்ருதம் என்னும் யக்ஞ சிஷ்ட்டத்தை விதிப்படி புஜிக்கிறார்களோ அந்த யக்ஞ சிஷ்ட்ட போஜீயானவன் ஸனாதனமான (எப்பொழுதும் உள்ள) பிரஹ்ம்மத்தை அடைகிறான்.
मुमुक्षवश्चेत् कालातिक्रमापेक्षया इति सामर्थ्यात् गम्यते ।
முமூக்ஷுக்களாய் இருந்தால் காலக்கிரமப்படி (ஸனாதனமான பிரஹ்ம்மத்தை) அதை அடைகிறார்கள்.
न अयं लोकः सर्वप्राणिसाधारणोऽपि अस्ति यथोक्तानां यज्ञानां एकोऽपि यज्ञः यस्य नास्ति सः अयज्ञः तस्य । कुतः अन्यो विशिष्टसाधनसाध्यः कुरुसत्तम ॥ ३१ ॥
ஹே குருச்ரேஷ்ட்டரே! எந்த ஒருவரும் முன்பு கூறிய கர்மங்களில் ஏதாவது ஒன்றையேனும் செய்யவில்லை எனில், அந்த யக்ஞம் அற்றஅந்த புருஷனுக்கு சகலபிராணிகளுக்கும் பொதுவான இவ்வுலகம் இல்லையென்றால் விசேஷமான சாதனங்களினால் (ஜ்யோதிஷ்டோமம்) முதலியவைகளினால் அடையக்கூடிய மற்றைய உலகம் எவ்வாறு கிடைக்கும்?
एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मणो मुखे ।
कर्मजान्विद्धि तान्सर्वानेवं ज्ञात्वा विमोक्ष्यसे ॥ ३२ ॥
ஏவம் பஹுவிதா யக்ஞா விததா ப்ரஹ்மணோ முகே ।
கர்மஜாந்வித்தி தான்ஸர்வாநேவம் க்ஞாத்வா விமோக்ஷ்யஸே ॥ 32 ॥
एवं यथोक्ता बहुविधा बहुप्रकारा यज्ञाः वितताः विस्तीर्णाः ब्रह्मणो वेदस्य मुखे द्वारे ।
இவ்வாறு முன்பு அநேக பிரகாரமாக யக்ஞங்கள் பிரஹ்மத்தைப் பற்றி கூறப்பட்டிருக்கின்றன. அவை வேதத்தின் மூலமாக அறியப் படுகிறது. (வெளிப்படுகிறது)
वेदद्वारेण अवगम्यमानाः ब्रह्मणो मुखे वितता उच्यन्ते ; तद्यथा ‘वाचि हि प्राणं जुहुमः’ (ऐ. आ. ३ । २ । ६) इत्यादयः ।
வேதத்தின் மூலமாகவே எல்லா யக்ஞங்களும் அறியப்படுகிறது என்பது எவ்வாறு எனில் 'வாச்சிஹி பிராணம் ஜூஹும; முதலிய வைகளால் (வாக்கினால் அன்றோ ஹோமம் செய்கின்றோம்)
कर्मजान् कायिकवाचिकमानसकर्मोद्भावान् विद्धि तान् सर्वान् अनात्मजान् , निर्व्यापारो हि आत्मा ।
இந்த எல்லா யக்ஞங்களும் கர்மங்களினால் உண்டானவை தேஹம், வாக்கு, மனது இவைகளின் செயல்களினால் எல்லாம் அநாத்மாவிலிருந்து தோன்றுகின்றன. ஆத்மா கிரியை (வியாபாரம்) அற்றது.
अत एवं ज्ञात्वा विमोक्ष्यसे अशुभात् । न मद्व्यापारा इमे, निर्व्यापारोऽहम् उदासीन इत्येवं ज्ञात्वा अस्मात् सम्यग्दर्शनात् मोक्ष्यसे संसारबन्धनात् इत्यर्थः ॥ ३२ ॥
ஆகையால் இவ்வாறு அறிந்து அசுபங்களிலிருந்து விடுபடு. இவைகள் என்னுடைய கிரியைகள் அல்ல. நான் கிரியை அற்றவன், உதாசினன் (விருப்பு வெறுப்பு அற்றவன்) என்று இவ்வாறு அறிந்து இந்த யதார்த்த ஞானத்தினால் (சம்யக் தர்சனத்தினால்) சம்சார பந்தத்திலிருந்து விடுபடு என்பது பொருள்.
‘ब्रह्मार्पणम्’ (भ. गी. ४ । २४) इत्यादिश्लोकेन सम्यग्दर्शनस्य यज्ञत्वं सम्पादितम् । यज्ञाश्च अनेके उपदिष्टाः । तैः सिद्धपुरुषार्थप्रयोजनैः ज्ञानं स्तूयते । कथम् ? —
பிரஹ்மார்ப்பணம் முதலிய ஸ்லோகங்களில் யதார்த்த ஞானத்தை யக்ஞரூபமாக கூறி மேலும் அநேக பிரகாரமாக யக்ஞங் கள் வர்ணிக்கப்பட்டது. (உபதேசம் செய்யப்பட்டது) அவைகளால் புருஷன் இச்சித்த பிரயோஜனம் எந்த யக்ஞத்தினால் அடையப் படுமோ, முன்பு கூறியுள்ள மற்றயக்ஞங்களைக் காட்டிலும் ஞானயக் ஞத்தை ஸ்துதி (புகழ்கிறார்) செய்கிறார், எவ்வாறு?
श्रेयान्द्रव्यमयाद्यज्ञाज्ज्ञानयज्ञः परन्तप ।
सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते ॥ ३३ ॥
ச்ரேயாந்த்ரவ்யமயாத்யக்ஞாத்க்ஞாநயக்ஞ: பரந்தப ।
ஸர்வம் கர்மாகிலம் பார்த்த க்ஞாநே பரிஸமாப்யதே ॥ 33 ॥
श्रेयान् द्रव्यमयात् द्रव्यसाधनसाध्यात् यज्ञात् ज्ञानयज्ञः हे परन्तप ।
ஹே பரந்தப! திரவியங்களாகிய சாதனங்களால் பெறப்படும் (சாத்யமாகும்) யக்ஞத்தைக் காட்டிலும் ஞானயக்ஞம் மேலானது.
द्रव्यमयो हि यज्ञः फलस्यारम्भकः, ज्ञानयज्ञः न फलारम्भकः, अतः श्रेयान् प्रशस्यतरः ।
திரவ்யயங்களை சாதனங்களாக உடைய யக்ஞம் பலத்துடன் கூடியது. ஞான யக்ஞத்திற்கு பலன் கிடையாது. ஆகையால் திரவ்யயக்ஞத்தைக் காட்டிலும் ஞானயக்ஞம் மேலானது.
कथम् ? यतः सर्वं कर्म समस्तम् अखिलम् अप्रतिबद्धं पार्थ ज्ञाने मोक्षसाधने सर्वतःसम्प्लुतोदकस्थानीये परिसमाप्यते अन्तर्भवतीत्यर्थः
அது எவ்வாறு எனில் பரிபூர்ணமாக நிறைந்த பெரிய குளத்திற்கு ஒப்பாக எல்லா கர்மங்களும் மோக்ஷசாதன ரூபஞானத்தில் அடங்கி இருக்கிறது என்பது பொருள்.
ஆகவே எவ்வாறு சூதாட்டத்திலே (கிருத யுகம், த்ரேதா யுகம், த்வாபர, கலியுகம் என்று நான்கு வித சம்பாத்தியம் இருக்கிறது) அதில் கிருதயுகம் எனப்படும் வருமானத்தை ஜெயித்ததால் அதற்குக் கீழான எல்லா யுகங்களாகிய வருமானங்களும் சேர்வது போல ஜனங்கள் செய்யும் நற்செயல் எல்லாம் அந்த ஞானியை அடைகிறது. எவன் அதை அறிந்தானோ அவன் அதை அடைகிறான் என்று சுருதியின் வாக்கியம்.
तदेतत् विशिष्टं ज्ञानं तर्हि केन प्राप्यते इत्युच्यते —
அந்த இந்த ஞானம் மிகவும் மேலானது என்றால் எதனால் அடையமுடியும் என்று கூறுகிறார்
तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया ।
उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः ॥ ३४ ॥
தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரச்னேன ஸேவயா ।
உபதேயந்தி தே க்ஞானம் க்ஞாநினஸ்தத்த்வதர்சின: ॥ 34 ॥
तत् विद्धि विजानीहि येन विधिना प्राप्यते इति । आचार्यान् अभिगम्य, प्रणिपातेन प्रकर्षेण नीचैः पतनं प्रणिपातः दीर्घनमस्कारः तेन, ‘कथं बन्धः ? कथं मोक्षः ? का विद्या ? का चाविद्या ? ’ इति परिप्रश्नेन, सेवया गुरुशुश्रूषया ।
அதை எவ்விதத்தால் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள். ஆச்சாரியரின் அருகில் சென்று சாஷ்ட்டாங்க நமஸ்காரம் செய்து எவ்வாறு பந்தம் ஏற்பட்டது? மோக்ஷம் எவ்வாறு ஏற்படும்? வித்யா என்றால் என்ன? அவித்யா என்றால் என்ன? என்று இவ்வாறு மறுப டியும், மறுபடியும் கேள்விகள் கேட்பதாலும் அவருக்கு பணிவிடை செய்வதாலும்.
एवमादिना । प्रश्रयेण आवर्जिता आचार्या उपदेक्ष्यन्ति कथयिष्यन्ति ते ज्ञानं यथोक्तविशेषणं ज्ञानिनः ।
இவை முதலிய வழிபாட்டிலா பிரசன்னமடைந்த ஆச்சாரியர் (தத்வதர்சீ) உனக்கு முன்பு கூறப்பட்ட விசேஷணங்களுடன் கூடிய ஞானத்தை உபதேசம் செய்வார்கள்.
ज्ञानवन्तोऽपि केचित् यथावत् तत्त्वदर्शनशीलाः, अपरे न ; अतो विशिनष्टि तत्त्वदर्शिनः इति ।
ஞானவான்களாய் இருந்தாலும் சிலரே யதார்த்த தத்துவத்தை அறிந்தவர்களாய் இருக்கிறார்கள். எல்லோரும் அவ்வாறு அல்ல. ஆகையால் ஞானத்துடன் தத்வதர்சீ என்றவிசே ஷணம் கூறப்பட்டுள்ளது.
ये सम्यग्दर्शिनः तैः उपदिष्टं ज्ञानं कार्यक्षमं भवति नेतरत् इति भगवतो मतम् ॥ ३४ ॥
இதனால் பகவானுடைய அபிப்பிராயம் என்னவெனில்? யதார்த்த தத் துவத்தை அறிந்தவர்களால் உபதேசம் செய்யப்பட்ட ஞானமானது தன்னுடைய காரிய சித்தியை செய்வதில் சாமர்த்தியம் உடைய தாகிறது. மற்றவை அல்ல.
तथा च सति इदमपि समर्थं वचनम् —
அவ்வாறு இருப்பதினால் (பகவானுடைய) திருவாக்கும் பொருத்தமுடையதே.
यज्ज्ञात्वा न पुनर्मोहमेवं यास्यसि पाण्डव ।
येन भूतान्यशेषेण द्रक्ष्यस्यात्मन्यथो मयि ॥ ३५ ॥
யஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவ ।
யேன பூதான்யசேஷேண த்ரஷ்யஸ்யாத்மன்யதோ மயி ॥ 35 ॥
यत् ज्ञात्वा यत् ज्ञानं तैः उपदिष्टं अधिगम्य प्राप्य पुनः भूयः मोहम् एवं यथा इदानीं मोहं गतोऽसि पुनः एवं न यास्यसि हे पाण्डव ।
ஹே! பாண்டவ! எந்த ஞானமானது அவர்களால் உபதேசிக்கப் பட்டதோ அதை அடைந்து எவ்வாறு இப்பொழுது நீ மோஹமடைந்தி ருக்கிறாயோ அவ்வாறு மறுபடியும் நீ மோஹத்தை அடையமாட்டாய்
किञ्च — येन ज्ञानेन भूतानि अशेषेण ब्रह्मादीनि स्तम्बपर्यन्तानि द्रक्ष्यसि साक्षात् आत्मनि प्रत्यगात्मनि ‘मत्संस्थानि इमानि भूतानि’ इति अथो अपि मयि वासुदेवे ‘परमेश्वरे च इमानि’ इति ; क्षेत्रज्ञेश्वरैकत्वं सर्वोपनिषत्प्रसिद्धं द्रक्ष्यसि इत्यर्थः ॥ ३५ ॥
மேலும் எந்த ஞானத்தினால் எல்லா பூதங்களும் என்றால் பிரஹ்மா முதல் ஸ்தம்பம் வரைக்கும் உள்ள எல்லா பிராணிகளும் என்னிடத்தில் நிலைபெற்றிருக்கின்றன என்று இவ்வாறு சாக்ஷாத்தாக தன்னுடைய அந்தராத்மாவினாலும் அவ்வாறேபரமேச் வரனாகிய வாசுதேவனாகிய என்னிடத்திலும் இவ்வெல்லா வற்றையும் பார் என்று எல்லா உபநிஷத்துக்களிலும் பிரசித்தமான க்ஷேத்ரக்ஞன் மற்றும் ஈஸ்வரன் இவர்களின் ஏகத்துவத்தை பிரத்யக்ஷமாக அனுபவிப்பாயாக.
किञ्च एतस्य ज्ञानस्य माहात्म्यम् —
இந்த ஞானத்தின் மாஹாத்மியத்தைக் கூறுகிறார்
अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः ।
सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि ॥ ३६ ॥
அபி சேதஸி பாபேப்ய: ஸர்வேப்ய: பாபக்ருத்தம: ।
ஸர்வம் க்ஞானப்லவேனைவ வ்ருஜினம் ஸந்தரிஷ்யஸி ॥ 36 ॥
अपि चेत् असि पापेभ्यः पापकृद्भ्यः सर्वेभ्यः अतिशयेन पापकृत् पापकृत्तमः सर्वं ज्ञानप्लवेनैव ज्ञानमेव प्लवं कृत्वा वृजिनं वृजिनार्णवं पापसमुद्रं सन्तरिष्यसि । धर्मोऽपि इह मुमुक्षोः पापम् उच्यते ॥ ३६ ॥
எல்லா பாபிக்களைக் காட்டிலும் அதிக பாபம் செய்தவர் அதிபாபி. அவ்வாறு அதிபாபியாக இருந்தாலும் ஞான ஓடத்தினால் என்றால் ஞானத்தையே ஓடமாக்கி பாபரூப சமுத்திரத்தை சுலபமாக நன்றாக கடந்துவிடுவாய். இங்கு முமூக்ஷவிற்கு புண்யமும் பாபம் என்றே கருதப்படுகிறது.
ज्ञानं कथं नाशयति पापमिति दृष्टान्त उच्यते —
ஞானம் எவ்வாறு பாபத்தைப் போக்குகிறது என்பதை திருஷ்டாந்தம் மூலமாகக் கூறுகிறார்.
यथैधांसि समिद्धोऽग्निर्भस्मसात्कुरुतेऽर्जुन ।
ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात्कुरुते तथा ॥ ३७ ॥
யதைதாம்ஸி ஸமித்தோ அக்நிர்பஸ்மஸாத்குருதேஅர்ஜுன ।
க்ஞானாக்நி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத்குருதே ததா ॥ 37 ॥
यथा एधांसि काष्ठानि समिद्धः सम्यक् इद्धः दीप्तः अग्निः भस्मसात् भस्मीभावं कुरुते हे अर्जुन, ज्ञानमेव अग्निः ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा निर्बीजीकरोतीत्यर्थः ।
ஹே அர்ஜுன! எவ்வாறு நன்றாக எரியும் நெருப்பு விறகுகளை சாம்பலாக்குகிறதோ அவ்வாறே ஞானம் என்கிற அக்னி எல்லா கர்மங்களையும் சாம்பலாக்குகிறது. அதாவது நிர்பீஜமாக்குகிறது.
न हि साक्षादेव ज्ञानाग्निः कर्माणि इन्धनवत् भस्मीकर्तुं शक्नोति । तस्मात् सम्यग्दर्शनं सर्वकर्मणां निर्बीजत्वे कारणम् इत्यभिप्रायः ।
ஏனெனில் விறகைப் போல் ஞானரூப அக்கினியானது கர்மங்களை சாம்பலாக்கமுடியாது. ஆகையால் இதனுடைய அபிப்பிராயம் என்னவெனில் யதார்த்த ஞானம் எல்லா கர்மங்களையும் நிர்பீஜமாக்குவதற்கு காரணமாய் இருக்கிறது.
सामर्थ्यात् येन कर्मणा शरीरम् आरब्धं तत् प्रवृत्तफलत्वात् उपभोगेनैव क्षीयते ।
எந்த கர்மத்தின் சாமர்த்தியத்தினால் இந்த சரீரம் உண்டானதோ அது பலனைக் கொடுப்பதற்கு தலைப்பட்டுள்ளதால் அது அனுபவித்தலால் அழிந்து போகிறது.
अतो यानि अप्रवृत्तफलानि ज्ञानोत्पत्तेः प्राक् कृतानि ज्ञानसहभावीनि च अतीतानेकजन्मकृतानि च तान्येव सर्वाणि भस्मसात् कुरुते ॥ ३७ ॥

ஆகையால் இந்த ஜன்மத்தில் ஞானம் உண்டாவதற்கு முன் செய்த கர்மங்கள், ஞானத்துடன் (தேவதா ஞானத்துடன்) செய்த கர்மங்கள், இதற்கு முன் அநேக ஜன்மங்களில் செய்த கர்மங்கள் எல்லாவற்றையும் சாம்பலாக்கிவிடும்.
यतः एवम् अतः —
எதனால் இவ்வாறு இருக்கிறதோ அதனால்
न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते ।
तत्स्वयं योगसंसिद्धः कालेनात्मनि विन्दति ॥ ३८ ॥
ந ஹி க்ஞானேன ஸத்ருசம் பவித்ரமிஹ வித்யதே ।
தத்ஸ்வயம் யோகஸம்ஸித்த: காலேநாத்மநி விந்ததி ॥ 38 ॥
न हि ज्ञानेन सदृशं तुल्यं पवित्रं पावनं शुद्धिकरम् इह विद्यते ।
ஞானத்திற்கு ஒப்பாக சுத்தம் (பவித்ரம்) செய்யக்கூடிய வேறு ஒன்றும் உலகில் கிடையாது.
तत् ज्ञानं स्वयमेव योगसंसिद्धः योगेन कर्मयोगेन समाधियोगेन च संसिद्धः संस्कृतः योग्यताम् आपन्नः सन् मुमुक्षुः कालेन महता आत्मनि विन्दति लभते इत्यर्थः ॥ ३८ ॥
கர்மயோகம், மற்றும் தியான யோகங்களினால் வெகுகாலம் அப்பியாசம் செய்ய ஏற்பட்ட அந்தக்கரண சுத்தியினால் யோக்கியதையை அடைந்த முமூக்ஷ ஆத்மாவை அடைகிறான். (சாக்ஷாத்கரிக்கிறான்)
येन एकान्तेन ज्ञानप्राप्तिः भवति स उपायः उपदिश्यते —
எந்த அந்தரங்க சாதனத்தால் நிச்சயமாக ஞானத்தை அடையக் கூடிய உபாயத்தைக் கூறுகிறார்.
श्रद्धावांल्लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ।
ज्ञानं लब्ध्वा परां शान्तिमचिरेणाधिगच्छति ॥ ३९ ॥
ச்ரத்தாவான்லபதே க்ஞானம் தத்பர: ஸம்யதேந்த்ரிய: ।
க்ஞானம்லப்த்வா பராம் சாந்திமசிரேணாதிகச்சதி ॥ 39 ॥
श्रद्धावान् श्रद्धालुः लभते ज्ञानम् ।
சிரத்தையுடன் கூடியவன் மோக்ஷத்தை அடைகிறான்.
श्रद्धालुत्वेऽपि भवति कश्चित् मन्दप्रस्थानः, अत आह — तत्परः, गुरूपसदनादौ अभियुक्तः ज्ञानलब्ध्युपाये ।
சிரத்தையுடன் கூடினவனாயினும் மந்தமாக பிரயத்னம் செய்பவ னாகவும் இருப்பான். ஆகையால் அவன் சேவை முதலிய உபாயங்க ளால் ஞானத்தை அடையவேண்டும். குருசேவை முதலிய உபாயங்கள் (தத்பர:) என்பதாகும்.
श्रद्धावान् तत्परः अपि अजितेन्द्रियः स्यात् इत्यतः आह — संयतेन्द्रियः, संयतानि विषयेभ्यो निवर्तितानि यस्य इन्द्रियाणि स संयतेन्द्रियः ।
சிரத்தாவானாயும், தத்பரனாயும் இருந்தாலும் இந்திரிய கட்டுப்பாடு அற்றவனாய் இருக்கலாம். ஆகையால் சம்யதேந் திரயனாக வேண்டும் (இந்திரியங்களை தன் வசப்படுத்த வேண்டும்) விஷயங்களில் இந்திரியங்கள் செல்லவிடாமல் தடுக்க வேண்டும்.
य एवंभूतः श्रद्धावान् तत्परः संयतेन्द्रियश्च सः अवश्यं ज्ञानं लभते ।
இவ்வாறு சிரத்தை உள்ளவனாயும், தத்பரனாயும், இந்திரி யங்களை தன்வசம் செய்தவனாயும் உள்ளவன் ஞானத்தை அடைகிறான்.
प्रणिपातादिस्तु बाह्योऽनैकान्तिकोऽपि भवति, मायावित्वादिसम्भवात् ; न तु तत् श्रद्धावत्त्वादौ इत्येकान्ततः ज्ञानलब्ध्युपायः ।
சாஷ்ட்டாங்க நம்ஸ்கார முதலிய உபாயங்கள் பாஹ்யமாயும், கள்ளத்தனமுள்ளவனாலும் செய்ய முடியும். ஆகையால் இது நிச்சய மற்றது. ஆனால் சிரத்தை முதலிய உபாயங்கள் கபடங்களாக முடியாது. ஆகையால் அவர்கள் நிச்சயமாக ஞானத்தை அடைவார்கள்.
किं पुनः ज्ञानलाभात् स्यात् इत्युच्यते —
மேலும் ஞானத்தை அடைவதினால் என்ன ஆகும்?
ज्ञानं लब्ध्वा परां मोक्षाख्यां शान्तिम् उपरतिम् अचिरेण क्षिप्रमेव अधिगच्छति ।
ஞானம் அடைந்த பின்னர் மோக்ஷமென்று மேலான சாந்தியையும் உபக்ரமத்தையும் வெகு சீக்ரம் அடைகிறான்.
सम्यग्दर्शनात् क्षिप्रमेव मोक्षो भवतीति सर्वशास्त्रन्यायप्रसिद्धः सुनिश्चितः अर्थः ॥ ३९ ॥
யதார்த்த ஞானத்தினால் சீக்கிரம் மோக்ஷம் ஏற்படுகிறது என்பது எல்லா சாஸ்திரங்களாலும் யுக்திகளாலும் சித்தம் செய்யப்பட்ட நிச்சயமான பொருளாகும்.
अत्र संशयः न कर्तव्यः, पापिष्ठो हि संशयः ; कथम् इति उच्यते —
பாபிஷ்ட்டனுக்கல்லவா சந்தேஹம் வரும். இங்கு சந்தேஹம் கொள்ளவேண்டியதில்லை. எவ்வாறு? என்று கூறுகிறார்.
अज्ञश्चाश्रद्दधानश्च संशयात्मा विनश्यति ।
नायं लोकोऽस्ति न परो न सुखं संशयात्मनः ॥ ४० ॥
அக்ஞச்சாச்ரத்தாதானச்ச ஸம்சயாத்மா விநச்யதி ।
நாயம் லோகோஅஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்சயாத்மந: ॥ 40 ॥
अज्ञश्च अनात्मज्ञश्च अश्रद्दधानश्च गुरुवाक्यशास्त्रेषु अविश्वासवांश्च संशयात्मा च संशयचित्तश्च विनश्यति ।
ஆத்மக்ஞானம் அற்றவன் அக்ஞானி. அக்ஞானியும் குரு, சாஸ்திரத்தில் சிரத்தை இல்லாதவனும், சந்தேஹமுள்ள மனமுடைய வனும் கெட்டுப் போகிறார்கள்.
अज्ञाश्रद्दधानौ यद्यपि विनश्यतः, न तथा यथा संशयात्मा । संशयात्मा तु पापिष्ठः सर्वेषाम् ।
அக்ஞானியும் சிரத்தை அற்றவனும் நாசம் அடைவார்கள். ஆனாலும் சந்தேஹமுடையவன் போல் நசிப்பதில்லை. ஏனெனில் எல்லோரைக் காட்டிலும் சந்தேஹமுடையவன் அதிகமான பாபத்தை உடையவன்.
कथम् ?
எவ்வாறு ?
नायं साधारणोऽपि लोकोऽस्ति । तथा न परः लोकः । न सुखम् , तत्रापि संशयोत्पत्तेः संशयात्मनः संशयचित्तस्य । तस्मात् संशयो न कर्तव्यः ॥ ४० ॥
சாதாரணமாக இவ்வுலகில் எல்லோருக்கும் உள்ள சுகம் சம்சய ஆத்மாவிற்குக் கிடையாது. அவ்வாறேபரலோக சுகமும் கிடைக்காது. ஏனெனில் அங்கும் அவனுக்கு சம்சயம் (சந்தேஹம்) ஏற்படும். ஆகையால் எப்பொழுதும் சம்சயப்படக்கூடாது.
कस्मात् ? —
எவ்வாறு-
योगसंन्यस्तकर्माणं ज्ञानसञ्छिन्नसंशयम् ।
आत्मवन्तं न कर्माणि निबध्नन्ति धनञ्जय ॥ ४१ ॥
யோகஸம்ந்யஸ்தகர்மாணம் க்ஞானஸம்சிந்நஸம்சயம் ।
ஆத்மபந்தம் ந கர்மாணி நிபத்நந்தி தனஞ்ஜய ॥ 41 ॥
योगसंन्यस्तकर्माणं परमार्थदर्शनलक्षणेन योगेन संन्यस्तानि कर्माणि येन परमार्थदर्शिना धर्माधर्माख्यानि तं योगसंन्यस्तकर्माणम् ।
பரமார்த்த தர்ஷீ பரமார்த்த யோகத்தினால் புண்ய, பாபங் களுடன் கூடிய எல்லா கர்மங்களையும் தியாகம் செய்கிறான். அந்த கர்மங்களின் தியாகமே யோக சந்யஸ்த்த கர்மம்
कथं योगसंन्यस्तकर्मेत्याह —
அந்த யோக சந்யஸ்த்த கர்மா எவ்வாறு ஏற்படுகிறது என்று கூறுகிறார்.
ज्ञानसञ्छिन्नसंशयं ज्ञानेन आत्मेश्वरैकत्वदर्शनलक्षणेन सञ्छिन्नः संशयो यस्य सः ज्ञानसञ्छिन्नसंशयः ।
ஆத்மாவும், ஈஸ்வரனும் ஒன்றே என்ற ஞானத்தினால்(சம்சயம்) சந்தேஹம் நீங்கப் பெற்றவன்.
य एवं योगसंन्यस्तकर्मा तम् आत्मवन्तम् अप्रमत्तं गुणचेष्टारूपेण दृष्टानि कर्माणि न निबध्नन्ति अनिष्टादिरूपं फलं नारभन्ते हे धनञ्जय ॥ ४१ ॥
ஹே தனஞ்ஜய! எவன் இவ்வாறு யோகத்தினால் கர்மாக்களைத் துறந்து ஆத்மபலத்தால் பிரமாதமற்றவனோ அவைகளை முக்குணங் களின் சேஷ்டையினால் (செயல்களினால்) காணப்பட்ட கர்மங்கள் அவனைக் கட்டுப்படுத்தாது. இஷ்ட்ட, அநிஷ்ட்ட, மிச்ரம் ஆகிய மூன்று வித பலன்களையும் அனுபவிக்கமாட்டான்.
यस्मात् कर्मयोगानुष्ठानात् अशुद्धिक्षयहेतुकज्ञानसञ्छिन्नसंशयः न निबध्यते कर्मभिः ज्ञानाग्निदग्धकर्मत्वादेव, यस्माच्च ज्ञानकर्मानुष्ठानविषये संशयवान् विनश्यति —
எதனால் எனில், கர்மயோகத்தை அனுஷ்ட்டானம் செய்த தினால் அந்தக்கரண அசுத்தி நாசமடைந்ததால் உண்டான ஆத்ம ஞானத்தினால் எவனுடைய சம்சயம் நாசமடைந்ததோ அந்த புருஷனை ஞானத்தினால் எரிக்கப்பட்ட கர்மங்கள் பந்தப்படுத்து வது இல்லை. ஆனால் ஞானயோகம், கர்மயோகம் அனுஷ்ட்டானம் செய்வதில் சம்சயம் உள்ளவன் நாசம் அடைகின்றான்.
तस्मादज्ञानसम्भूतं हृत्स्थं ज्ञानासिनात्मनः ।
छित्त्वैनं संशयं योगमातिष्ठोत्तिष्ठ भारत ॥ ४२ ॥
தஸ்மாதக்ஞானஸம்பூதம் ஹ்ருத்ஸ்தம் க்ஞானாஸிநாத்மன: ।
சித்த்வைநம் சம்சயம் யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத ॥ 42 ॥
तस्मात् पापिष्ठम् अज्ञानसम्भूतम् अज्ञानात् अविवेकात् जातं हृत्स्थं हृदि बुद्धौ स्थितं ज्ञानासिना शोकमोहादिदोषहरं सम्यग्दर्शनं ज्ञानं तदेव असिः खङ्गः तेन ज्ञानासिना आत्मनः स्वस्य ।
ஆகையால் அவிவேகத்தால் உண்டானதும், அந்தக் கரணத்தில் உள்ளதுமான இந்த பாபியாகிய சம்சயத்தை ஞானம் என்கிறகத்தியி னால் என்றால் சோக, மோஹம் முதலிய தோஷங்களை நாசம் செய்யும் யதார்த்த தர்சன ரூபமான ஞானமே கத்தியாகும். அதனால் (சம்சயத்தை) நாசம் செய்.
आत्मविषयत्वात् संशयस्य ।
இந்த சம்சயமானது ஆத்ம விஷயத்தைப் பற்றியது.
न हि परस्य संशयः परेण च्छेत्तव्यतां प्राप्तः, येन स्वस्येति विशेष्येत । अतः आत्मविषयोऽपि स्वस्यैव भवति ।
இங்கு மற்றொருவருடைய சம்சயத்தை வேறு ஒருவர் நாசம் செய்ய முடியாது. அதனால் (சம்சயம்) தன்னுடைய என்று விசேஷமாக கூறப்பட்டது. ஆத்ம விஷயமும் தன்னுடையதாகவே இருக்கிறது.
छित्त्वा एनं संशयं स्वविनाशहेतुभूतम् , योगं सम्यग्दर्शनोपायं कर्मानुष्ठानम् आतिष्ठ कुर्वित्यर्थः । उत्तिष्ठ च इदानीं युद्धाय भारत इति ॥ ४२ ॥
ஆகையால் தன்னுடைய நாசத்திற்குக் காரணமான சம்சயத்தை வெட்டி வீழ்த்தி பூர்ணஞானத்தை அடைவதற்கு உபாயமாகிய கர்மா னுஷ்ட்டானத்தை செய் என்பது பொருள். இப்பொழுது யுத்தத்தின் பொருட்டு ஹே! பாரத! எழு (என்று பகவான் கூறி அருளினார்).
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये चतुर्थोऽध्यायः ॥
ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே ஞானகர் மஸந்யாஸயோகோ நாம சதுர்த்தோத்யாய: