द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

श्रीमद्भगवद्गीताभाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

ஶ்ரீமத்பகவத்கீதாபாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

‘ते ब्रह्म तद्विदुः कृत्स्नम्’ (भ. गी. ७ । २९) इत्यादिना भगवता अर्जुनस्य प्रश्नबीजानि उपदिष्टानि । अतः तत्प्रश्नार्थम् —
(தே பிரஹ்ம தத்விது: கிருத்ஸ்னம்) என்பன முதலிய வாக்கியங்களால் அர்ஜுனனுக்கு கேள்விக்கு வேண் காரணத்தை உபதேசித்தருளினார். ஆகையால் அந்த கேள்வியை கேட்பதற்காக-
अर्जुन उवाच —
அர்ஜுன உவாச —
किं तद्ब्रह्म किमध्यात्मं किं कर्म पुरुषोत्तम ।
अधिभूतं च किं प्रोक्तमधिदैवं किमुच्यते ॥ १ ॥
கிம் தத்ப்ரஹ்ம கிமத்யாத்மம் கிம் கர்ம புருஷோத்தம ।
அதிபூதம் ச கிம் ப்ரோக்தமதிதைவம் கிமுச்யதே ॥ 1 ॥
अधियज्ञः कथं कोऽत्र देहेऽस्मिन्मधुसूदन ।
प्रयाणकाले च कथं ज्ञेयोऽसि नियतात्मभिः ॥ २ ॥
அதியக்ஞ: கதம் கோஅத்ர தேஹேஅஸ்மின்மதுஸூதன ।
ப்ரயாணகாலே ச கதம் க்ஞேயோஅஸி நியதாத்மபி: ॥ 2 ॥
एषां प्रश्नानां यथाक्रमं निर्णयाय श्रीभगवानुवाच —
இந்த வினாக்களின் பதிலை கிரமமாக நிர்ணயிக்கும் பொருட்டு -
श्रीभगवानुवाच —
अक्षरं ब्रह्म परमं स्वभावोऽध्यात्ममुच्यते ।
भूतभावोद्भवकरो विसर्गः कर्मसंज्ञितः ॥ ३ ॥
அக்ஷரம் ப்ரஹ்ம பரமம் ஸ்வபாவோ அத்யாத்மமுச்யதே ।
பூதபாவோத்பவகரோ விஸர்க: கர்மஸம்க்ஞித: ॥ 3 ॥
अक्षरं न क्षरतीति अक्षरं परमात्मा, ‘एतस्य वा अक्षरस्य प्रशासने गार्गि’ (बृ. उ. ३ । ८ । ९) इति श्रुतेः ।
(அழியாதது பரமாத்மா)
அழிவற்றது பரமாத்மா. சுருதியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. (தஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரசாசனே கார்க்கி) என்று.
ओङ्कारस्य च ‘ओमित्येकाक्षरं ब्रह्म’ (भ. गी. ८ । १३) इति परेण विशेषणात् अग्रहणम् । परमम् इति च निरतिशये ब्रह्मणि अक्षरे उपपन्नतरम् विशेषणम् ।
பரமம் என்ற விசேஷணத்துடன் கூடி இருப்பதால் இங்கு அக்ஷர சப்தத்தினால் (ஓமித்யேகாக்ஷரம் பிரஹ்ம) என்ற வாக்கியத்தினால் வர்ணிக்கப்பட்ட ஓம்காரமானது கூறப்படவில்லை. ஏன்எனில் பரமம் என்ற விசேஷணம் நிரதிசய அக்ஷர பிரஹ்மத்திலேயே பொருந்துகிறது.
तस्यैव परस्य ब्रह्मणः प्रतिदेहं प्रत्यगात्मभावः स्वभावः, स्वो भावः स्वभावः अध्यात्मम् उच्यते ।
அந்த பரப்பிரஹ்மம் ஒவ்வொரு தேஹத்திலும் (பிரத்யக்) அந்த ராத்மாவாய் இருக்கிறது. அதனை ஸ்வபாவம் என்பர். ஸ்வபாவம் என் றால் அத்யாத்மம். எனப்படும்.
आत्मानं देहम् अधिकृत्य प्रत्यगात्मतया प्रवृत्तं परमार्थब्रह्मावसानं वस्तु स्वभावः अध्यात्मम् उच्यते अध्यात्मशब्देन अभिधीयते ।
ஆத்மா தேஹத்தை ஆச்ரயமாகக் கொண்டு அந்தராத்மாவாக அதில் பிரவிர்த்தித்து முடிவிலே பரமார்த்த பிரஹ்மமாகவே உள்ள வஸ்து ஸ்வபாவ: எனப்படும். அதுவே அத்யாத்மம் என்ற சொல்லால் கூறப்பட்டுள்ளது.
भूतभावोद्भवकरः भूतानां भावः भूतभावः तस्य उद्भवः भूतभावोद्भवः तं करोतीति भूतभावोद्भवकरः, भूतवस्तूत्पत्तिकर इत्यर्थः । विसर्गः विसर्जनं देवतोद्देशेन चरुपुरोडाशादेः द्रव्यस्य परित्यागः ; स एष विसर्गलक्षणो यज्ञः कर्मसंज्ञितः कर्मशब्दित इत्येतत् । एतस्मात् हि बीजभूतात् वृष्ट्यादिक्रमेण स्थावरजङ्गमानि भूतानि उद्भवन्ति ॥ ३ ॥
ஸ்தாவர ஜங்கமங்களை உண்டாக்குவது (பூத பாவோத்பவகர:) எது எனில் தேவதைகளை உத்தேசித்து ச்சரு, புரோடாசம் முதலிய ஹோமம் செய்ய யோக்கியமான திரவ்யங்களை தியாகம் செய்வது. அந்த தியாக ரூப யக்ஞம் கர்மம் எனப்படுகிறது. இந்த பீஜ ரூப (காரண ரூப) யக்ஞத்தினாலேயே மழை முதயலிவைகள் கிரமமாக ஸ்தாவர ஜங்கமங்களை உற்பத்தி செய்கிறது.
अधिभूतं क्षरो भावः पुरुषश्चाधिदैवतम् ।
अधियज्ञोऽहमेवात्र देहे देहभृतां वर ॥ ४ ॥
அதிபூதம் க்ஷரோ பாவ: புருஷச்சாதிதைவதம் ।
அதியக்ஞோஅஹமேவாத்ர தேஹே தேஹப்ருதாம் வர ॥ 4 ॥
अधिभूतं प्राणिजातम् अधिकृत्य भवतीति । कोऽसौ ? क्षरः क्षरतीति क्षरः विनाशी, भावः यत्किञ्चित् जनिमत् वस्तु इत्यर्थः ।
பிராணிகளை ஆச்ரயித்து இருப்பது. அது எது? எது நாசம் அடைகிறதோ அது. எதற்கெல்லாம் பிறப்புள்ளதோ அது எல்லாம் நாசமுடையது. அவை எல்லாம் அதிபூதம்.
पुरुषः पूर्णम् अनेन सर्वमिति, पुरि शयनात् वा, पुरुषः आदित्यान्तर्गतो हिरण्यगर्भः, सर्वप्राणिकरणानाम् अनुग्राहकः, सः अधिदैवतम् ।
இதனால் எல்லாம் பூரிக்கப்பட்டுள்ளதால் (நிறைந்துள்ளதால்) அல்லது இந்த சரீரத்தில் இருப்பதாலும் புருஷன் எனப்படுகிறான். அது எல்லா பிராணிகளின் இந்திரியாதி கரணங்களையும் அனுக்கிரஹிக்கின்ற (அருள் புரிகின்ற) சூரிய லோகத்தில் இருக்கும் ஹிரண்யகர்ப்பன் அதி தெய்வம் எனப்படுகிறான்.
अधियज्ञः सर्वयज्ञाभिमानिनी विष्ण्वाख्या देवता, ‘यज्ञो वै विष्णुः’ (तै. सं. १ । ७ । ४) इति श्रुतेः । स हि विष्णुः अहमेव ; अत्र अस्मिन् देहे यो यज्ञः तस्य अहम् अधियज्ञः ; यज्ञो हि देहनिर्वर्त्यत्वेन देहसमवायी इति देहाधिकरणो भवति, देहभृतां वर ॥ ४ ॥
யக்ஞோ வை விஷ்ணு, என்ற சுருதியின் படி யக்ஞங்களுக்கெல் லாம் அதிஷ்ட்டான தேவதை விஷ்ணு எனப்படும் தேவதை. ஹே! தேஹத்தை உடையவர்களில் மேலானவனான அர்ஜுனா! இந்த தேஹத்தில் எந்த யக்ஞம் உள்ளதோ அதனுடைய அதிஷ்ட்டா தாவாகிய அந்த விஷ்ணுரூப அதியக்ஞம் நானே. யக்ஞமானது சரீரத்தினாலேயே செய்யப்படுகிறது. ஆகையால் யக்ஞத்திற்கு சரீரத் துடன் நித்ய சம்பந்தமிருக்கிறது. ஆகையால் அது சரீரத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेबरम् ।
यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः ॥ ५ ॥
அந்தகாலே ச மாமேவ ஸ்மரன்முக்த்வா கலேவரம் ।
ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்சய: ॥ 5 ॥
अन्तकाले मरणकाले च मामेव परमेश्वरं विष्णुं स्मरन् मुक्त्वा परित्यज्य कलेबरं शरीरं यः प्रयाति गच्छति, सः मद्भावं वैष्णवं तत्त्वं याति । नास्ति न विद्यते अत्र अस्मिन् अर्थे संशयः — याति वा न वा इति ॥ ५ ॥
மரணகாலத்தில் பரமேச்வரனாகிய விஷ்ணுவாகிய என்னையே நினைத்துக்கொண்டு இந்த சரீரத்தை விட்டுச் செல்கிறார்களோ அவர்கள் என்னுடைய பாவமாகிய விஷ்ணுவினுடைய பரமதத்து வத்தை அடைகிறார்கள். இதை அடைவார்களா? அடையமாட்டார் களா? என்பதில் சந்தேஹமே இல்லை.
न मद्विषय एव अयं नियमः । किं तर्हि ? —
என்னுடைய விஷயத்தில் மட்டும் இந்த நியமம் இல்லை. ஆனால் என்ன எனில்-
यं यं वापि स्मरन्भावं त्यजत्यन्ते कलेबरम् ।
तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः ॥ ६ ॥
யம் யம் வாபி ஸ்மரன்பாவம் த்யஜத்யந்தே கலேவரம் ।
தம் தமேவைதி கௌந்தேய ஸதா தத்பாவபாவித: ॥ 6 ॥
यं यं वापि यं यं भावं देवताविशेषं स्मरन् चिन्तयन् त्यजति परित्यजति अन्ते अन्तकाले प्राणवियोगकाले कलेबरं शरीरं तं तमेव स्मृतं भावमेव एति नान्यं कौन्तेय, सदा सर्वदा तद्भावभावितः तस्मिन् भावः तद्भावः स भावितः स्मर्यमाणतया अभ्यस्तः येन सः तद्भावभावितः सन् ॥ ६ ॥
ஹே கௌந்தேய! மரணகாலத்தில் எந்த எந்த தேவதாஸ்வரூ பத்தை நினைத்துக்கொண்டு இந்த சரீரத்தை விடுகிறார்களோ அந்த அந்த நினைத்த பாவத்தை அடைகிறார்கள். மற்ற பாவத்தை அல்ல. உபாசனை விஷயமாக உள்ள பாவம் (தத்பாவம்) எனப்படுகிறது. அந்த பாவத்தை எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டு அப்பியாசம் செய் பவர்கள் (தத்பாவபாவித:)
यस्मात् एवम् अन्त्या भावना देहान्तरप्राप्तौ कारणम् —
இவ்வாறு இருப்பதால் மரணகாலத்தில் நினைத்த பாவனையை வேறு தேஹம் அடைவதற்கு காரணம்-
तस्मात्सर्वेषु कालेषु मामनुस्मर युध्य च ।
मय्यर्पितमनोबुद्धिर्मामेवैष्यस्यसंशयः ॥ ७ ॥
தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு மாமனுஸ்மர யுத்ய ச ।
மய்யர்பிதமநோபுத்திர்மாமேவைஷ்யஸ்யஸம்சய: ॥ 7 ॥
तस्मात् सर्वेषु कालेषु माम् अनुस्मर यथाशास्त्रम् । युध्य च युद्धं च स्वधर्मं कुरु । मयि वासुदेवे अर्पिते मनोबुद्धी यस्य तव स त्वं मयि अर्पितमनोबुद्धिः सन् मामेव यथास्मृतम् एष्यसि आगमिष्यसि ; असंशयः न संशयः अत्र विद्यते ॥ ७ ॥
ஆகையால் எப்பொழுதும் என்னையே நினை. சாஸ்திரத்தில் விதித்தபடி ஸ்வதர்மமாகிய யுத்தத்தைச் செய். வாசுதேவனாகிய என்னிடத்திலேயே மனதையும், புத்தியையும் செலுத்தியவனாய் நீசிந்தித்தவாறு அதையே அடைவாய். இதில் சந்தேஹமில்லை.
किञ्च—
மேலும்
अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगामिना ।
परमं पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तयन् ॥ ८ ॥
அப்யாஸயோகயுக்தேன சேதஸா நான்யகாமினா ।
பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்தானுசிந்தயன் ॥ 8 ॥
अभ्यासयोगयुक्तेन मयि चित्तसमर्पणविषयभूते एकस्मिन् तुल्यप्रत्ययावृत्तिलक्षणः विलक्षणप्रत्ययानन्तरितः अभ्यासः स चाभ्यासो योगः तेन युक्तं तत्रैव व्यापृतं योगिनः चेतः तेन, चेतसा नान्यगामिना न अन्यत्र विषयान्तरे गन्तुं शीलम् अस्येति नान्यगामि तेन नान्यगामिना, परमं निरतिशयं पुरुषं दिव्यं दिवि सूर्यमण्डले भवं याति गच्छति हे पार्थ अनुचिन्तयन् शास्त्राचार्योपदेशम् अनुध्यायन् इत्येतत् ॥ ८ ॥
சித்தத்தை நிலைநிறுத்துவதற்கு விஷயமாகிய என் ஒருவனிடத் திலேயே சஜாதீய பிரத்தியத்தை (விருத்தியை) இடைவிடாமல் எண்ணி விஜாதீய பிரத்தியத்தை (விருத்தியை) தடை செய்தலே அப்பியாசமாகும். அந்த அப்பியாசமே யோகம். ஹே பார்த்த! அந்த யோகத்துடன் கூடி அதிலேயே நிலைபெற்ற யோகியினுடைய சித்த மானது மற்ற விஷயங்களில் செல்லுவதற்கு சாமர்த்தியம் அற்றது. அம்மனது வெளியில் செல்லாததினால் சாஸ்த்திர ஆச்சார்ய உபதே சங்களை மறுபடியும் மறுபடியும் (தொடர்ந்து) சிந்தித்து ஆகாய மண்ட லத்திருக்கும் சூரிய மண்டலத்தில் உள்ள அந்த மேலான நிரதிசய திவ்ய புருஷனை அடைகிறான்.
किंविशिष्टं च पुरुषं याति इति उच्यते —
எந்த லக்ஷணங்களுடன் கூடிய மேலான புருஷனை (யோகி) அடைகிறான்?
कविं पुराणमनुशासितारमणोरणीयांसमनुस्मरेद्यः ।
सर्वस्य धातारमचिन्त्यरूपमादित्यवर्णं तमसः परस्तात् ॥ ९ ॥
கவிம் புராணமனுசாஸிதாரமணோரணீயாம்ஸமனுஸ்மரேத்ய: ।
ஸர்வஸ்ய தாதாரமசிந்த்யரூபமாதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் ॥ 9 ॥
कविं क्रान्तदर्शिनं सर्वज्ञं पुराणं चिरन्तनम् अनुशासितारं सर्वस्य जगतः प्रशासितारम् अणोः सूक्ष्मादपि अणीयांसं सूक्ष्मतरम् अनुस्मरेत् अनुचिन्तयेत् यः कश्चित् , सर्वस्य कर्मफलजातस्य धातारं विधातारं विचित्रतया प्राणिभ्यो विभक्तारम् , अचिन्त्यरूपं न अस्य रूपं नियतं विद्यमानमपि केनचित् चिन्तयितुं शक्यते इति अचिन्त्यरूपः तम् , आदित्यवर्णम् आदित्यस्येव नित्यचैतन्यप्रकाशो वर्णो यस्य तम् आदित्यवर्णम् , तमसः परस्तात् अज्ञानलक्षणात् मोहान्धकारात् परं ।
சென்றதையும், இருப்பவைகளையும் இனி வரப்போகின்றவைக ளையும் அறிந்த சர்வக்ஞன், பழமையானவன், சகல ஜகத்தையும் கட் டளையிடுபவன். (ஆட்சி செய்பவன்) சூக்ஷ்மத்தைக் காட்டிலும் சூக்ஷ் மமானவன். பலவிதமான ஜீவர்களுக்கும் அவர்களுடைய கர்மத் திற்கு தகுந்தவாறு பலத்தைப் பிரித்துக் கொடுப்பவன். அவருடைய ஸ்வரூபம் உள்ளதாயினும் இப்படித்தான் இருப்பார் என்று ஒருவரா லும் சிந்திக்க முடியாதவர். ஆகையால் அசிந்தியர். சூரியனைப் போல நித்திய சைதன்ய பிரகாசம் போன்ற நிறமுடையவர். அக்ஞான மெனும் மோஹமாகிய இருட்டைக் கடந்து நிற்பவர்.
तम् अनुचिन्तयन् याति इति पूर्वेण सम्बन्धः ॥ ९ ॥
அதைத் தொடர்ந்து நினைத்து (தியானித்து) அதை அடைகிறான் என்பது முன் ஸ்லோகத்துடன் சம்பந்தம் ஏற்படுகிறது.
किञ्च —
மேலும்
प्रयाणकाले मनसाಽचलेन भक्त्या युक्तो योगबलेन चैव ।
भ्रुवोर्मध्ये प्राणमावेश्य सम्य क्स तं परं पुरुषमुपैति दिव्यम् ॥ १० ॥
ப்ரயாணகாலே மனஸாஅசலேன பக்த்யா யுக்தோ யோகபலேன சைவ ।
ப்ருவோர்மத்யே ப்ராணமாவேச்ய ஸம்யக் ஸ தம் பரம் புருஷ முபைதி திவ்யம் ॥ 10 ॥
प्रयाणकाले मरणकाले मनसा अचलेन चलनवर्जितेन भक्त्या युक्तः भजनं भक्तिः तया युक्तः योगबलेन चैव योगस्य बलं योगबलं समाधिजसंस्कारप्रचयजनितचित्तस्थैर्यलक्षणं योगबलं तेन च युक्तः इत्यर्थः, पूर्वं हृदयपुण्डरीके वशीकृत्य चित्तं ततः ऊर्ध्वगामिन्या नाड्या भूमिजयक्रमेण भ्रुवोः मध्ये प्राणम् आवेश्य स्थापयित्वा सम्यक् अप्रमत्तः सन् , सः एवं विद्वान् योगी ‘कविं पुराणम्’ (भ. गी. ८ । ९) इत्यादिलक्षणं तं परं परतरं पुरुषम् उपैति प्रतिपद्यते दिव्यं द्योतनात्मकम् ॥ १० ॥
மரணகாலத்தில் சலனமற்ற மனதினால் பக்தியுடன் கூடிய யோக பலம் என்றால் சமாதியினால் உண்டான சம்ஸ்காரத்தினால் ஏற்பட்ட சித்தத்தின் ஸ்திரத்தன்மையானது யோகபலமாகும். முதலில் சித்தத்தை ஹ்ருதய புண்டரீகத்தில் வசப்படுத்தி மேலே செல்லும் ஸுஷும்னா நாடியினால் சித்தத்தின் ஒவ்வொரு பூமிகையையும் கிரமமாக ஜெயித்து புருவத்தின் மத்தியில் பிராணனை நிலைநிறுத்தி நன்றாக சாவதானம் செய்துகொண்டு அப்படிப்பட்ட புத்திமானாகிய யோகி கவிம் புராணம் முதலிய லக்ஷணங்களுடன் கூடிய அந்த சேதனாத்மகமான மேலான புருஷனை அடைகிறான். அந்த புருஷன் பிரகாச வடிவினன்.
पुनरपि वक्ष्यमाणेन उपायेन प्रतिपित्सितस्य ब्रह्मणो वेदविद्वदनादिविशेषणविशेष्यस्य अभिधानं करोति भगवान् —
மேலும் பகவானானவர் இனி கூறப்போகும் உபாயங்களால் அடைவதற்கு யோக்கியமான பிரஹ்மத்தைப் பற்றி (வேதவித் வதந்த்தி) முதலிய விசேஷண, விசேஷ்யங்களால் பிரதிபாதனம் செய்யப்போகிறார். (விளக்கி கூறப்போகிறார்)
यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यद्यतयो वीतरागाः ।
यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं सङ्ग्रहेण प्रवक्ष्ये ॥ ११ ॥
யதக்ஷரம் வேதவிதோ வதந்தி விசந்தி யத்யதயோ வீதராகா: ।
யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பதம் ஸங்க்ரஹேண ப்ரவக்ஷ்யே ॥ 11 ॥
यत् अक्षरं न क्षरतीति अक्षरम् अविनाशि वेदविदः वेदार्थज्ञाः वदन्ति, ‘तद्वा एतदक्षरं गार्गि ब्राह्मणा अभिवदन्ति’ (बृ. उ. ३ । ८ । ८) इति श्रुतेः, सर्वविशेषनिवर्तकत्वेन अभिवदन्ति ‘अस्थूलमनणु’ इत्यादि ।
ஹே கார்க்கீ! அந்த அக்ஷரம் இதுதான் என்று பிராமணர்கள்வர் ணித்திருக்கிறார்கள் என்ற சுருதிவாக்கியத்தின் படி, வேதத்தை நன்கு உணர்ந்தவர்கள் நாசமற்ற பரமாத்மாவை அது ஸ்தூலமல்ல, சூக்ஷ்மம் அல்ல என்பது முதலிய விசேஷணங்களால் நிராகரித்துக் கூறுகிறார்.
किञ्च — विशन्ति प्रविशन्ति सम्यग्दर्शनप्राप्तौ सत्यां यत् यतयः यतनशीलाः संन्यासिनः वीतरागाः वीतः विगतः रागः येभ्यः ते वीतरागाः ।
மேலும் எவருக்கு ஆசை நீங்கியதோ அந்த முயற்சி உடைய சந்நியாசி யதார்த்த ஞானத்தை அடைந்தவுடன் எதில் பிரவேசிக் கிறார்களோ?
यच्च अक्षरमिच्छन्तः — ज्ञातुम् इति वाक्यशेषः — ब्रह्मचर्यं गुरौ चरन्ति ।
மேலும் அக்ஷரத்தை அறிய விரும்புகிறவர்கள் குருகுலத்தில் பிரஹ்ம்மச்சரியத்தை அனுஷ்ட்டிக்கின்றார்கள். அறிய என்ற பதம் வாக்கியத்தில் தொக்கி நிற்கின்றது.
तत् ते पदं तत् अक्षराख्यं पदं पदनीयं ते तव सङ्ग्रहेण सङ्ग्रहः सङ्क्षेपः तेन सङ्क्षेपेण प्रवक्ष्ये कथयिष्यामि ॥ ११ ॥
அந்த அக்ஷரம் எனப்படும் அடையவேண்டிய பதத்தை உனக்கு சுருக்கமாகச் சொல்லுகிறேன்.
ஹே பகவானே! மனிதர்களுள் எவன் அதிகாரியோ அவன் மரணகாலம் வரையிலும் ஓம்காரத்தை தியானம் செய்கிறானோ அதனால் அந்த சாதகன் எந்த உலகத்தை அடைகிறான் என்று கேட் பவனிடம் இவ்வாறு பிப்பலாதர் கூறுகிறார். ஹே சத்தியகாம! பரப் பிரஹ்மமாயும் அபரப்ரஹ்மமாயும் உள்ளது ஓம்காரமே என்று ஆரம்பித்து எவன் மறுபடியும் அந்த மூன்று மாத்திரைகளை உடைய ஓம்காரமாகிய அக்ஷரத்தால் மேலான புருஷனைத் தியானம் செய்கிறானோ என்பது முதலிய (ப்ரச்னோபநிஷத்) வசனங்களினால்
தர்மத்தைக் காட்டிலும் வேறு, அதர்மத்தைக் காட்டிலும் வேறு என்று ஆரம்பித்து எல்லா வேதங்களும் எந்த பரமபதத்தைக் குறித்து வர்ணனை செய்கிறதோ எல்லா தவங்களும் எதைச் சொல்லுகிறதோ எதை இச்சித்து பிரஹ்ம்மச்சரியத்தைக் கடைபிடிக்கிறார்களோ அந்த பதம் சுருக்கமாக ஓம் என்பதாகும் என்பது முதலிய (கடோபநிஷத்) வசனங்களால்
परस्य ब्रह्मणो वाचकरूपेण, प्रतिमावत् प्रतीकरूपेण वा, परब्रह्मप्रतिपत्तिसाधनत्वेन मन्दमध्यमबुद्धीनां विवक्षितस्य ओङ्कारस्य उपासनं कालान्तरे मुक्तिफलम् उक्तं यत् ,
பரப்ரஹ்மத்தைக் குறிக்கும் சொல்லானது பிரிதிமாபோல (விக்கிரஹம் போல) பிரதீக (சின்னமாக) இருப்பதால் பரப்ரஹ்மத்தை அறிவ தற்கு மந்த, மத்யம புத்தி உடையவர்களுக்கு சாதனமாகக் கூறப்பட்ட ஓம்கார உபாசனையினால் காலாந்தரத்தில் (பிற்காலத்தில்) முக்தி யைக் கொடுப்பதாக எது கூறப்பட்டதோ
तदेव इहापि ‘कविं पुराणमनुशासितारम्’ (भ. गी. ८ । ९) ‘यदक्षरं वेदविदो वदन्ति’ (भ. गी. ८ । ११) इति च उपन्यस्तस्य परस्य ब्रह्मणः पूर्वोक्तरूपेण प्रतिपत्त्युपायभूतस्य ओङ्कारस्य कालान्तरमुक्तिफलम् उपासनं योगधारणासहितं वक्तव्यम् , प्रसक्तानुप्रसक्तं च यत्किञ्चित् , इत्येवमर्थः उत्तरो ग्रन्थ आरभ्यते —
அதுவே இங்கும் (கவிம் புராணமனுசாசிதாரம், யதக்ஷரம் வேத விதோ வதந்தி) என்று எடுத்துக் கூறப்பட்டபடி அறிவதற்கு உபாய மான காலாந்தரத்தில் பலத்தைக் கொடுக்கக்கூடிய ஓம்கார உபா சனை யோகதாரணையுடன் (உறுதியாக நிற்றலுடன்) கூடிய தியான மானது உபதேசிக்கவேண்டியது என்று கருதி முக்கியமானது, மற்றும் அதனைச் சார்ந்த விஷயங்களை எடுத்துக் கூறுவதற்காக மேல்வரும் கிரந்தமானது ஆரம்பிக்கப்படுகிறது.
सर्वद्वाराणि संयम्य मनो हृदि निरुध्य च ।
मूर्ध्न्याधायात्मनः प्राणमास्थितो योगधारणाम् ॥ १२ ॥
ஸர்வத்வாராணி ஸம்யம்ய மனோ ஹ்ருதி நிருத்ய ச ।
மூர்த்ந்யாதாயாத்மன: ப்ராணமாஸ்திதோ யோகதாரணாம் ॥ 12 ॥
सर्वद्वाराणि सर्वाणि च तानि द्वाराणि च सर्वद्वाराणि उपलब्धौ, तानि सर्वाणि संयम्य संयमनं कृत्वा मनः हृदि हृदयपुण्डरीके निरुध्य निरोधं कृत्वा निष्प्रचारमापाद्य, तत्र वशीकृतेन मनसा हृदयात् ऊर्ध्वगामिन्या नाड्या ऊर्ध्वमारुह्य मूर्ध्नि आधाय आत्मनः प्राणम् आस्थितः प्रवृत्तः योगधारणां धारयितुम् ॥ १२ ॥
விஷயங்களை அறியக்கூடிய வாயில்களாக உள்ள எல்லா இந் திரியங்களையும் அடக்கி மனதை ஹிருதய கமலங்களில் ஒடுக்கி என் றால் சங்கல்ப விகல்பமற்று, அதன் பின் வசம் செய்யப்பட்ட மனதோடு ஹிருதயத்திருந்து மேல் நோக்கி செல்லும் நாடியினால் மேலே ஏறி சிர சில் பிராணனை நிறுத்தி யோகதாரணையை செய்வதற்கு பிரவிர்த் தித்தவனாய் (தலைப்பட்டவனாய்) (பரமகதியை அடைவான் என்பது அடுத்த ஸ்லோகத்துடன் சம்பந்தம் ஏற்படுகிறது.)
तत्रैव च धारयन् —
அங்கேயே நிறுத்தினவனாய்
ओमित्येकाक्षरं ब्रह्म व्याहरन्मामनुस्मरन् ।
यः प्रयाति त्यजन्देहं स याति परमां गतिम् ॥ १३ ॥
ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரன்மாமனுஸ்மரன் ।
ய: ப்ரயாதி த்யஜன்தேஹம் ஸ யாதி பரமாம் கதிம் ॥ 13 ॥
ओमिति एकाक्षरं ब्रह्म ब्रह्मणः अभिधानभूतम् ओङ्कारं व्याहरन् उच्चारयन् , तदर्थभूतं माम् ईश्वरम् अनुस्मरन् अनुचिन्तयन् यः प्रयाति म्रियते,
ஓம் என்ற ஏகாக்ஷரம் (ஒரே எழுத்து உடைய ) பிரஹ்ம்மத்தின் பெயராகிய ஓம்காரத்தை உச்சரித்துக் கொண்டு அதன் அர்த்தமாகிய ஈஸ்வரனாகிய என்னைத் தொடர்ந்து சிந்தித்து எவன் ஒருவன் மரண மடைகிறானோ
सः त्यजन् परित्यजन् देहं शरीरम् — ‘त्यजन् देहम्’ इति प्रयाणविशेषणार्थम् देहत्यागेन प्रयाणम् आत्मनः, न स्वरूपनाशेनेत्यर्थः — सः एवं याति गच्छति परमां प्रकृष्टां गतिम् ॥ १३ ॥
இவ்வாறு தேஹத்தை விட்டுப் போகிறவன் மேலான கதியை அடைகிறான். இங்கு போகுதல் என்ற விசேஷணம் தேஹத்தை விடு தலே தவிர ஆத்மஸ்வரூபத்திற்கு நாசம் இல்லை என்பதை காண்பிக்கிறது என்பது பொருள்.
किञ्च —
மேலும்
अनन्यचेताः सततं यो मां स्मरति नित्यशः ।
तस्याहं सुलभः पार्थ नित्ययुक्तस्य योगिनः ॥ १४ ॥
அனன்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யச: ।
தஸ்யாஹம் ஸுலப: பார்த நித்யயுக்தஸ்ய யோகின: ॥ 14 ॥
अनन्यचेताः न अन्यविषये चेतः यस्य सोऽयम् अनन्यचेताः, योगी सततं सर्वदा यः मां परमेश्वरं स्मरति नित्यशः ।
மற்ற விஷயங்களில் மனதை செலுத்தாமல் எவன் பரமேச்வரனா கிய என்னையே எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டு
सततम् इति नैरन्तर्यम् उच्यते, नित्यशः इति दीर्घकालत्वम् उच्यते । न षण्मासं संवत्सरं वा ; किं तर्हि ? यावज्जीवं नैरन्तर्येण यः मां स्मरतीत्यर्थः ।
இங்கு (ஸததம்) என்ற சொல்லால் எப்பொழுதும் என்றும் (நித்யச:) என்ற சொல்லால் வெகுகாலம் என்றும் கூறப்படுகிறது. ஆறுமாதங்க ளோ, ஒருவருடமோ அல்ல. பின் என்னவெனில் உயிர் உள்ளவரை இடைவிடாமல் எப்பொழுதும் பரமேச்வரனாகிய என்னை எவன் நினைக்கிறானோ என்பது பொருள்.
तस्य योगिनः अहं सुलभः सुखेन लभ्यः हे पार्थ, नित्ययुक्तस्य सदा समाहितचित्तस्य योगिनः । यतः एवम् , अतः अनन्यचेताः सन् मयि सदा समाहितः भवेत् ॥ १४ ॥
ஹே பார்த்த! அந்த எப்பொழுதும் சமாஹிதமாய் உள்ள யோகிக்கு நான் சுலபமாக அடையப்படுவேன். இவ்வாறு இருப்பதால் மற்றவைகளில் மனதைச் செலுத்தாமல் எப்பொழுதும் பரமேச்வரனா கிய என்னிடத்திலேயே சமாஹித சித்தமுள்ளவனாய் இரு.
तव सौलभ्येन किं स्यात् इत्युच्यते ; शृणु तत् मम सौलभ्येन यत् भवति —
தங்களை சுலபமாக அடைவதால் என்ன ஏற்படும்? என்றால் கூறுகிறேன் என்னை சுலபமாய் அடைவதினால் என்ன ஏற்ப டுகின்றதோ அதைக்கேள். கேள்-
मामुपेत्य पुनर्जन्म दुःखालयमशाश्वतम् ।
नाप्नुवन्ति महात्मानः संसिद्धिं परमां गताः ॥ १५ ॥
மாமுபேத்ய புனர்ஜன்ம து:காலயமசாச்வதம் ।
நாப்னுவந்தி மஹாத்மான: ஸம்ஸித்திம் பரமாம் கதா: ॥ 15 ॥
माम् उपेत्य माम् ईश्वरम् उपेत्य मद्भावमापद्य पुनर्जन्म पुनरुत्पत्तिं न प्राप्नुवन्ति ।
ஈஸ்வரனாகிய என்னை அடைந்து என்னுடைய பாவமாகவே ஆகி மறுஜன்மத்தை (மறுபிறப்பை) அடையமாட்டார்கள்.
किंविशिष्टं पुनर्जन्म न प्राप्नुवन्ति इति, तद्विशेषणमाह —
எப்படிப்பட்ட புனர்ஜன்மத்தை அடையமாட்டார்கள் என்பதன் விசேஷணத்தைக் கூறுகிறார்-
दुःखालयं दुःखानाम् आध्यात्मिकादीनां आलयम् आश्रयम् आलीयन्ते यस्मिन् दुःखानि इति दुःखालयं जन्म । न केवलं दुःखालयम् , अशाश्वतम् अनवस्थितस्वरूपं च । नाप्नुवन्ति ईदृशं पुनर्जन्म महात्मानः यतयः संसिद्धिं मोक्षाख्यां परमां प्रकृष्टां गताः प्राप्ताः । ये पुनः मां न प्राप्नुवन्ति ते पुनः आवर्तन्ते ॥ १५ ॥
துக்காலயத்தை அடையமாட்டார்கள். துக்காலயம் என்றால் ஆத்யாத்மிகம் முதலான துக்கங்களின் இருப்பிடம். அதுவே ஜன்மா (பிறப்பு) துக்காலயம் மட்டுமல்ல. நிலையற்றதும் கூட. மேலான மோக்ஷப் பிராப்தியை அடைந்த மஹாத்மாக்களாகிய சந்நியாசிகள் துக்காலயமாகவும் நிலையற்றதாயும் உள்ள புனர்ஜன்மாவை அடைய மாட்டார்கள். மறுபடியும் எவர்கள் என்னை அடையவில்லையோ அவர்கள் மீண்டும், மீண்டும் பிறப்பார்கள்.
किं पुनः त्वत्तः अन्यत् प्राप्ताः पुनरावर्तन्ते इति, उच्यते —
மேலும் உன்னைத் தவிர மற்றதை அடைந்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பார்களா? என்று?
आब्रह्मभुवनाल्लोकाः पुनरावर्तिनोऽर्जुन ।
मामुपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते ॥ १६ ॥
ஆப்ரஹ்மபுவனால்லோகா: புனராவர்தினோஅர்ஜுன ।
மாமுபேத்ய து கௌந்தேய புனர்ஜன்ம ந வித்யதே ॥ 16 ॥
आब्रह्मभुवनात् भवन्ति अस्मिन् भूतानि इति भुवनम् ब्रह्मभुवनम् ब्रह्मलोक इत्यर्थः ।
எதில் பிராணிகள் உற்பத்தி ஆகின்றனவோ, எதில் வசிக்கின் றதோ அதனுடைய பெயர் புவனம். பிரஹ்ம புவனம், பிரஹ்மலோகம் என்பது பொருள்.
आब्रह्मभुवनात् सह ब्रह्मभुवनेन लोकाः सर्वे पुनरावर्तिनः पुनरावर्तनस्वभावाः हे अर्जुन । माम् एकम् उपेत्य तु कौन्तेय पुनर्जन्म पुनरुत्पत्तिः न विद्यते ॥ १६ ॥
ஹே அர்ஜுனா! பிரஹ்ம்மலோகம் முதல் எல்லா லோகங்களும் புனராவிர்த்தி (மறுபடியும், மறுபடியும் பிறந்து இறத்தல்) உடையது. ஆகையால் என் ஒருவனையே அடைந்ததால் ஹே கௌந்தேய! புனர்ஜன்மம் (மறுபடியும், மறுபடியும் பிறத்தல்) என்பது கிடையாது.
ब्रह्मलोकसहिताः लोकाः कस्मात् पुनरावर्तिनः ? कालपरिच्छिन्नत्वात् । कथम् ? —
பிரஹ்ம்ம லோகத்துடன் எல்லா லோகங்களும் ஏன் புனராவி ருத்தி உடையனவாய் இருக்கின்றன. காலப்பரிச்சின்னமாய்‌ இருப் பதால், அது எவ்வாறு-
सहस्रयुगपर्यन्तमहर्यद्ब्रह्मणो विदुः ।
रात्रिं युगसहस्रान्तां तेऽहोरात्रविदो जनाः ॥ १७ ॥
ஸஹஸ்ரயுகபர்யந்தமஹர்யத்ப்ரஹ்மணோ விது: ।
ராத்ரிம் யுகஸஹஸ்ராந்தாம் தேஅஹோராத்ரவிதோ ஜனா: ॥ 17 ॥
सहस्रयुगपर्यन्तं सहस्राणि युगानि पर्यन्तः पर्यवसानं यस्य अह्नः तत् अहः सहस्रयुगपर्यन्तम् , ब्रह्मणः प्रजापतेः विराजः विदुः ।
பிரஹ்ம்மா, பிரஜாபதி என்ற விராட்டிற்கு ஆயிரம் யுகங்களின் முடிவு (சேர்ந்தது) ஒரு பகலாகும் என்று அறிவார்கள்.
रात्रिम् अपि युगसहस्रान्तां अहःपरिमाणामेव ।
அவ்வாறே ஆயிரம் யுகங்களின் முடிவு ஒரு இரவாகும்.
के विदुरित्याह —
அவர்கள் அறிந்தவர்கள் என்று கூறுகிறார்.
ते अहोरात्रविदः कालसङ्ख्याविदो जनाः इत्यर्थः । यतः एवं कालपरिच्छिन्नाः ते, अतः पुनरावर्तिनो लोकाः ॥ १७ ॥
அவர்கள் பகல் இரவு இவைகளை அறிந்தவர்கள் என்றால் காலத்தின் அளவை (தத்துவத்தை) அறிந்தவர்கள். (அறிந்த ஜனங் கள்) எதனால் அவர்கள் காலத்தினால் வரையறுக்கப்பட்டோர்களோ ஆதலால் அவர்கள் புனராவிர்த்தி உடையவர்கள். (லோகங்களை மாறி மாறி அடைகிறார்கள்)
प्रजापतेः अहनि यत् भवति रात्रौ च, तत् उच्यते —
பிரஜாபதியினுடைய பகலும், இரவிலும் எது நிகழ்கிறதோ அதைக் கூறுகிறார்.
अव्यक्ताद्व्यक्तयः सर्वाः प्रभवन्त्यहरागमे ।
रात्र्यागमे प्रलीयन्ते तत्रैवाव्यक्तसंज्ञके ॥ १८ ॥
அவ்யக்தாத்வ்யக்தய: ஸர்வா: ப்ரபவந்த்யஹராகமே ।
ராத்ர்யாகமே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்தஸம்க்ஞகே ॥ 18 ॥
अव्यक्तात् अव्यक्तं प्रजापतेः स्वापावस्था तस्मात् अव्यक्तात् व्यक्तयः व्यज्यन्त इति व्यक्तयः स्थावरजङ्गमलक्षणाः सर्वाः प्रजाः प्रभवन्ति अभिव्यज्यन्ते, अह्नः आगमः अहरागमः तस्मिन् अहरागमे काले ब्रह्मणः प्रबोधकाले ।
அவ்யக்தம் என்பது பிரஜாபதியினுடைய தூங்கும் காலம். அதிலிருந்து வியக்தம் ஆகும்பொழுது (வெளிப்படும்பொழுது) ஸ்தாவர ஜங்கம லக்ஷணங்களோடு கூடிய எல்லா பிரஜைகளும் உண்டாகின்றார்கள். அதுவே பகலாகும். அந்த பகல்காலமே பிரஹ்ம்மாவினுடைய விழிப்பு நிலையாகும்.
तथा रात्र्यागमे ब्रह्मणः स्वापकाले प्रलीयन्ते सर्वाः व्यक्तयः तत्रैव पूर्वोक्ते अव्यक्तसंज्ञके ॥ १८ ॥
அவ்வாறே இரவு வரும்பொழுது பிரம்மாவினுடைய தூங்கும் காலத்தில் வெளிப்பட்டவைகள் எல்லாம் முன்பு கூறப்பட்ட அவ்யக்தத்தில் லயமாகின்றன.
अकृताभ्यागमकृतविप्रणाशदोषपरिहारार्थम् , बन्धमोक्षशास्त्रप्रवृत्तिसाफल्यप्रदर्शनार्थम् अविद्यादिक्लेशमूलकर्माशयवशाच्च अवशः भूतग्रामः भूत्वा भूत्वा प्रलीयते इत्यतः संसारे वैराग्यप्रदर्शनार्थं च इदमाह —
செய்யாத கர்மங்களுக்கு பலனை அடைதலும், செய்த கர்மங்களுக்கு பலனை அடையாததுமாகிய தோஷங்கள் நிவிர்த்தி ஆவதின் பொருட்டும், பந்த, மோக்ஷ சாஸ்திரத்திற்கு பலன் உடைய தலை காண்பிக்கும் பொருட்டும் அவித்தை முதய பஞ்சக்லேசங்கள் காரணமாக உடைய கர்ம ஸம்ஸ்காரங்களின் வசப்பட்டு சுதந்திரமற்ற பிராணிக்கூட்டம் தோன்றி, தோன்றி மறைகின்றன. ஆகையால் சம்சாரத்தில் வைராக்கியத்தை காண்பிப்பதற்காக (உண்டாக்கு வதற்காக) இவ்வாறு கூறுகிறார்-
भूतग्रामः स एवायं भूत्वा भूत्वा प्रलीयते ।
रात्र्यागमेऽवशः पार्थ प्रभवत्यहरागमे ॥ १९ ॥
பூதக்ராம: ஸ ஏவாயம் பூத்வா பூத்வா ப்ரலீயதே ।
ராத்ர்யாகமே அவச: பார்த ப்ரபவத்யஹராகமே ॥ 19 ॥
भूतग्रामः भूतसमुदायः स्थावरजङ्गमलक्षणः यः पूर्वस्मिन् कल्पे आसीत् स एव अयं नान्यः भूत्वा भूत्वा अहरागमे, प्रलीयते पुनः पुनः रात्र्यागमे अह्नः क्षये अवशः अस्वतन्त्र एव, हे पार्थ, प्रभवति जायते अवश एव अहरागमे ॥ १९ ॥
எது முதல் கல்பத்தில் இருந்ததோ அதுவே இது. வேறு ஒன்றல்ல. அந்த ஸ்தாவர ஜங்கமங்களாகிய பிராணி கூட்டம் பிரஹ்ம்மா வினுடைய பகல் ஆரம்பத்தில் மறுபடியும் மறுபடியும் தோன்றி இரவு ஏற்பட்டு பகல் முடியும்பொழுது மீண்டும், மீண்டும் மறைகிறது. ஹே பார்த்த! தன்வசமற்று (சுதந்திரமற்று) மீண்டும் அவ்வாறே பகல் தோன்றும்பொழுது மறுபடியும் உண்டாகிறது.
यत् उपन्यस्तम् अक्षरम् , तस्य प्राप्त्युपायो निर्दिष्टः ‘ओमित्येकाक्षरं ब्रह्म’ (भ. गी. ८ । १३) इत्यादिना । अथ इदानीम् अक्षरस्यैव स्वरूपनिर्दिदिक्षया इदम् उच्यते, अनेन योगमार्गेण इदं गन्तव्यमिति —
முன்பு எந்த அக்ஷர பிரம்மத்தைப் பற்றி விவரித்துக் கூறப்பட்டதோ அதை அடைவதற்காக உபாயத்தை (ஓமிதி ஏகாக்ஷரம் பிரஹ்ம) என்பது முதலிய வசனங்களால் கூறப்பட்டது. இப்பொழுது அந்த அக்ஷரத்தின் ஸ்வரூபத்தை இப்படிப்பட்டது என்று உணர்த்துவதில் இச்சை உடையவராய் இந்த யோக மார்க்கத்தால் இது அடையப்பட வேண்டியது என்று கூறுகிறார்-
परस्तस्मात्तु भावोऽन्योऽव्यक्तोऽव्यक्तात्सनातनः ।
यः स सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति ॥ २० ॥
பரஸ்தஸ்மாத்து பாவோஅந்யோஅவ்யக்தோ அவ்யக்தாத்ஸ னாதன: ।
ய: ஸ ஸர்வேஷு பூதேஷு நச்யத்ஸு ந விநச்யதி ॥ 20 ॥
परः व्यतिरिक्तः भिन्नः । कुतः ? तस्मात् पूर्वोक्तात् । तु शब्दः अक्षरस्य विवक्षितस्य अव्यक्तात् वैलक्षण्यविशेषणार्थः । भावः अक्षराख्यं परं ब्रह्म ।
மேலானது என்றால் (அவ்யக்தத்தைக் காட்டிலும் ) வேறானது. ஏனெனில் முன்னால் கூறபட்டுள்ளதால் (து) என்ற சப்தமானது விளக் கப்பட்ட அக்ஷரமானது அவ்யக்தத்தைக் காட்டிலும் வேறானது என்ற வேற்றுமைத் தன்மையை விளக்குவதற்காக கூறப்பட்டது. (பாவ:) என்றால் அக்ஷரம் எனப்படும் பரப்ரஹ்மம்.
व्यतिरिक्तत्वे सत्यपि सालक्षण्यप्रसङ्गोऽस्तीति तद्विनिवृत्त्यर्थम् आह — अन्यः इति । अन्यः विलक्षणः स च अव्यक्तः अनिन्द्रियगोचरः ।
வேறாய் இருந்தாலும் ஒரே லக்ஷணமுடையது என ஏற்படலாம் என்பதால் அதை நிவிர்த்தி செய்வதற்காக (அன்ய) என்று கூறப்பட்டது. அந்த வேறான அவ்யக்தமானது இந்திரியங்களுக்கு எட்டாதது.
‘परस्तस्मात्’ इत्युक्तम् ; कस्मात् पुनः परः ?
அதைக்காட்டிலும் மேலானது என்று கூறப்பட்டது. அது எதைவிட மேலானது?
पूर्वोक्तात् भूतग्रामबीजभूतात् अविद्यालक्षणात् अव्यक्तात् । अन्यः विलक्षणः भावः इत्यभिप्रायः । सनातनः चिरन्तनः यः सः भावः सर्वेषु भूतेषु ब्रह्मादिषु नश्यत्सु न विनश्यति ॥ २० ॥
முன்பு கூறப்பட்ட பிராணிக்கூட்டங்களின் காரணமான அவித்தியா லக்ஷணமான அவ்யக்தத்தைக் காட்டிலும் (பிரஹ்ம் மானது மேலானது) எப்பொழுதும் இருப்பதோ அது பிரஹ்மம். அழியக்கூடிய பிரஹ்ம்மா முதலிய எல்லா பூதங்கள் அழிந்தாலும் அது அழிவில்லாதது.
अव्यक्तोऽक्षर इत्युक्तस्तमाहुः परमां गतिम् ।
यं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम ॥ २१ ॥
அவ்யக்தோஅக்ஷர இத்யுக்தஸ்தமாஹு: பரமாம் கதிம் ।
யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம ॥ 21 ॥
योऽसौ अव्यक्तः अक्षरः इत्युक्तः, तमेव अक्षरसंज्ञकम् अव्यक्तं भावम् आहुः परमां प्रकृष्टां गतिम् । यं परं भावं प्राप्य गत्वा न निवर्तन्ते संसाराय, तत् धाम स्थानं परमं प्रकृष्टं मम, विष्णोः परमं पदमित्यर्थः ॥ २१ ॥
எதை, அந்த அவ்யக்தம், அக்ஷரம் என்று கூறப்பட்டதோ அதுவே அக்ஷரம் எனப்படும் அவ்யக்த பிரஹ்மத்தை மேலான கதி (அடையப்பட வேண்டிய புருஷார்த்தம்) என்று கூறுவர். எந்த பாவத்தை (பிரஹ்மத்தை) அடைந்த பின் சம்சாரத்தின் பொருட்டு திரும்பி வருவதில்லையோ அந்த ஸ்தானம் விஷ்ணுவாகிய என்னு டைய மேலான பதம். (பரம பதம்) என்பது பொருள்.
तल्लब्धेः उपायः उच्यते —
அந்த பரமபதத்தை அடைவதற்கான உபாயத்தைக் கூறுகிறார்-
पुरुषः स परः पार्थ भक्त्या लभ्यस्त्वनन्यया ।
यस्यान्तःस्थानि भूतानि येन सर्वमिदं ततम् ॥ २२ ॥
புருஷ: ஸ பர: பார்த பக்த்யா லப்யஸ்த்வனன்யயா ।
யஸ்யாந்த: ஸ்தானி பூதானி யேன ஸர்வமிதம் ததம் ॥ 22 ॥
पुरुषः पुरि शयनात् पूर्णत्वाद्वा, स परः पार्थ, परः निरतिशयः, यस्मात् पुरुषात् न परं किञ्चित् । सः भक्त्या लभ्यस्तु ज्ञानलक्षणया अनन्यया आत्मविषयया । यस्य पुरुषस्य अन्तःस्थानि मध्यस्थानि भूतानि कार्यभूतानि ; कार्यं हि कारणस्य अन्तर्वर्ति भवति । येन पुरुषेण सर्वं इदं जगत् ततं व्याप्तम् आकाशेनेव घटादि ॥ २२ ॥
ஹே பார்த்தா! சரீர ரூபமாய் உள்ள புரத்தில் தங்கி இருப்பதால் அல்லது எங்கும் பரிபூரணமாய் இருப்பதாலும் பரமாத்மா புருஷன் எனப்படுகிறார். எதனால் அந்த புருஷனைக் காட்டிலும் மேலானது சிறிதும் இல்லையோ அந்த புருஷன் ஞானலக்ஷணத்துடன் கூடிய ஆத்ம விஷயமான அநன்னிய பக்தியால் அடையக்கூடியவர். அந்த புருஷனிடத்தில் உள்ளே எல்லாக் காரியபூதங்களும் இருக்கின்றன. ஏனெனில் காரியமானது காரணத்துள் இருக்கிறது. கடம் முதலியவைகளுள் ஆகாசம் வியாபித்து இருப்பதுபோல் இந்த புருஷனால் ஜகத் முழுவதும் வ்யாபிக்கப்பட்டு இருக்கிறது.
प्रकृतानां योगिनां प्रणवावेशितब्रह्मबुद्धीनां कालान्तरमुक्तिभाजां ब्रह्मप्रतिपत्तये उत्तरो मार्गो वक्तव्य इति ‘यत्र काले’ इत्यादि विवक्षितार्थसमर्पणार्थम् उच्यते, आवृत्तिमार्गोपन्यासः इतरमार्गस्तुत्यर्थः —
எவர்கள் பிரணவத்தில் பிரஹ்ம புத்தியை வைத்தவர்களோ அவர்கள் காலாந்தரத்தில் முக்தி அடைபவர்கள். பிரஹ்மத்தை அடைவதற்கு உத்தரமார்க்கத்தை அவசியம் கூறவேண்டும் என்பதால் (யத்ர காலே) முதலியவைகள் சொல்லக் கருதிய விஷயத்தை தெளிவாக்குவதற் பொருட்டு கூறப்பட்டது. இங்கு புனராவிர்த்தி மார்க்கத்தை பற்றி வர்ணிப்பது மற்ற மார்க்கத்தை ஸ்துதி செய்வதற்காக-
यत्र काले त्वनावृत्तिमावृत्तिं चैव योगिनः ।
प्रयाता यान्ति तं कालं वक्ष्यामि भरतर्षभ ॥ २३ ॥
யத்ர காலே த்வநாவ்ருத்திமாவ்ருத்திம் சைவ யோகின: ।
ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி பரதர்ஷப ॥ 23 ॥
यत्र काले प्रयाताः इति व्यवहितेन सम्बन्धः ।
(யத்ர காலே) என்ற பதத்துடன் (ப்ரயாதா:) என்ற பதத்துடன் சம்பந்தத்தைக் கூட்டுக.
यत्र यस्मिन् काले तु अनावृत्तिम् अपुनर्जन्म आवृत्तिं तद्विपरीतां चैव । योगिनः इति योगिनः कर्मिणश्च उच्यन्ते । कर्मिणस्तु गुणतः — ‘कर्मयोगेन योगिनाम्’ (भ. गी. ३ । ३) इति विशेषणात् — योगिनः ।
எக்காலத்தில் சரீரத்தைத் துறந்த யோகிகள் புனராவிருத்தியை (திரும்பிவராதிருத்தலை) பெறுகின்றார்களோ, எந்த காலத்தில் அதற்கு விபரீதமான அபுனராவிருத்தியை அடைகின்றார்களோ அக்காலத்தைக் கூறுவேன். இங்கு யோகி என்ற பதம் (சொல்) கர்மயோகியைக் குறிக்கிறது. (கர்மயோகேன யோகினாம்) என்ற விசேஷணத்தால் கூறப்பட்டதால் யோகிகள் எனப்படுகிறார்கள்.
यत्र काले प्रयाताः मृताः योगिनः अनावृत्तिं यान्ति, यत्र काले च प्रयाताः आवृत्तिं यान्ति, तं कालं वक्ष्यामि भरतर्षभ ॥ २३ ॥
எந்த காலத்தில் மரணமடைந்த யோகிகள் அநாவிருத்தியை (அபுனராவிருத்தியை) அடைகிறார்களோ அவ்வாறே எக்காலத்தில் ஆவிர்த்தியை (புனராவிர்த்தியை) அடைகிறார்களோ ஹே பரதரிஷப! அந்த காலத்தைப் பற்றி கூறுகிறேன்.
अग्निर्ज्योतिरहः शुक्लः षण्मासा उत्तरायणम् ।
तत्र प्रयाता गच्छन्ति ब्रह्म ब्रह्मविदो जनाः ॥ २४ ॥
அக்னிர்ஜ்யோதிரஹ: சுக்ல: ஷண்மாஸா உத்தராயணம் ।
தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜனா: ॥ 24 ॥
अग्निः कालाभिमानिनी देवता । तथा ज्योतिरपि देवतैव कालाभिमानिनी । अथवा अग्निज्योतिषी यथाश्रुते एव देवते ।
அக்னி கால அபிமானினி தேவதை. அவ்வாறே ஜோதியும் காலா பிமானினீ தேவதையே. அல்லது அக்னியும்,ஜோதியும் பிரசித்தமான வைதிக தேவதைகளாகும்.
भूयसा तु निर्देशो ‘यत्र काले’ ‘तं कालम्’ इति आम्रवणवत् ।
வனத்தில்(காட்டில்) மாமரங்கள் அதிகமாக இருந்தால் அதை மாமரக்காடு என்பதுபோல் இங்கும் காலாபிமானினி தேவதைகளின் வர்ணனை அதிகமாக இருப்பதால் (யத்ரகாலே, தம்காலம்) என்று காலவாசகமானது பிரயோகம் செய்யப்பட்டது.
तथा अहः देवता अहरभिमानिनी ; शुक्लः शुक्लपक्षदेवता ; षण्मासा उत्तरायणम् , तत्रापि देवतैव मार्गभूता इति स्थितः अन्यत्र अयं न्यायः तत्र तस्मिन् मार्गे प्रयाताः मृताः गच्छन्ति ब्रह्म ब्रह्मविदो ब्रह्मोपासकाः ब्रह्मोपासनपरा जनाः । ‘क्रमेण’ इति वाक्यशेषः ।
அவ்வாறே பகல்தேவதை, சுக்லபக்ஷதேவதை என்றும் உத்தராய ணத்தின் ஆறுமாதங்களின் தேவதை. அதுவே மார்க்கமாகிறது (வழியாகிறது) இந்த நியாயம் வேறு இடத்திலும் (பிரஹ்ம்ம சூத்திரத்திலும்) காணப்படுகிறது. பிரஹ்மோபாசனையில் ஈடுபட்ட பிரஹ்ம்ம வித்துக்கள் மரித்தவுடன் அந்த மார்க்கத்தில் செல்லு கிறார்கள், (காலக்) கிரமமாக என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
न हि सद्योमुक्तिभाजां सम्यग्दर्शननिष्ठानां गतिः आगतिर्वा क्वचित् अस्ति, ‘न तस्य प्राणा उत्क्रामन्ति’ (बृ. उ. ४ । ४ । ६) इति श्रुतेः । ब्रह्मसंलीनप्राणा एव ते ब्रह्ममया ब्रह्मभूता एव ते ॥ २४ ॥
ஏனெனில் யதார்த்த ஞானநிஷ்ட்டையினால் உடனே முக்தியை அடைபவர்களுக்கு போவதும், வருவதும் என்பது கிடையாது. (நதஸ்ய ப்ராணா உத்கிராமந்தி) என்று சுருதி கூறுகிறது. பிரஹ்ம்மத் திலேயே லயமடைந்த பிராணனை உடையவர்கள் பிரஹ்மமாகவே ஆகிறார்கள்.
धूमो रात्रिस्तथा कृष्णः षण्मासा दक्षिणायनम् ।
तत्र चान्द्रमसं ज्योतिर्योगी प्राप्य निवर्तते ॥ २५ ॥
தூமோ ராத்ரிஸ்ததா க்ருஷ்ண: ஷண்மாஸா தக்ஷிணாயனம் ।
தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதிர்யோகீ ப்ராப்ய நிவர்ததே ॥ 25 ॥
धूमो रात्रिः धूमाभिमानिनी रात्र्यभिमानिनी च देवता । तथा कृष्णः कृष्णपक्षदेवता । षण्मासा दक्षिणायनम् इति च पूर्ववत् देवतैव । तत्र चन्द्रमसि भवं चान्द्रमसं ज्योतिः फलम् इष्टादिकारी योगी कर्मी प्राप्य भुक्त्वा तत्क्षयात् इह पुनः निवर्तते ॥ २५ ॥
புகையை அபிமானிக்கும் தேவதை, ராத்திரியை அபிமானிக்கும் தேவதை அவ்வாறே கிருஷ்ணபக்ஷ தேவதை, தக்ஷிணாயணத்தின் ஆறுமாதங்களின் தேவதை இவைகள் முன் போலவே தேவதைகளே மார்க்கதேவதை ஆகிறது. இந்த மார்க்கத்தில் செல்லும் யோகி என்றால் இஷ்ட்டம் பூர்த்தம் முதலிய கர்மங்களைச் செய்யும் கர்மி சந்திரனின் ஒளியை பயனாக அடைந்து அனுபவித்த பின் பயனானது தீர்ந்த பின் திரும்பி வருகிறான்.
शुक्लकृष्णे गती ह्येते जगतः शाश्वते मते ।
एकया यात्यनावृत्तिमन्ययावर्तते पुनः ॥ २६ ॥
சுக்லக்ருஷ்ணே கதி ஹ்யேதே ஜகத: சாச்வதே மதே ।
ஏகயா யாத்யனாவ்ருத்திமன்யயாவர்ததே புன: ॥ 26 ॥
शुक्लकृष्णे शुक्ला च कृष्णा च शुक्लकृष्णे । ज्ञानप्रकाशकत्वात् शुक्ला तदभावात् कृष्णा । एते शुक्लकृष्णे हि गती जगतः इति अधिकृतानां ज्ञानकर्मणोः न जगतः सर्वस्यैव एते गती सम्भवतः । शाश्वते नित्ये संसारस्य नित्यत्वात् मते अभिप्रेते ।
சுக்லம் என்றும், கிருஷ்ணம் என்றும் இரண்டு மார்க்கங்கள், ஞானத்தை விளக்குவதால் சுக்லம் (வெளிச்சம்) என்ற தேவயான மார்க்கம். ஞானத்தை விளக்காததால் கிருஷ்ணம் (இருட்டு) என்ற பித்ருயான மார்க்கம். இந்த சுக்ல கிருஷ்ண மார்க்கங்கள் ஜகத்திற்கு என்று கூறியது ஞானி, கர்மி என்ற அதிகாரிகளைக் குறித்தே அன்றி எல்லா ஜகத்திற்கும் (ஜனங்களுக்கும்) அல்ல என்று அறிந்து கொள்ள வேண்டும். சம்சாரம் நித்தியம் (அநாதி) என்று கருதுபவர்கள் அபிப்பிராயப்படி இவ்விரு கதிகளும் சம்பவிக்கும்.
तत्र एकया शुक्लया याति अनावृत्तिम् अन्यया इतरया आवर्तते पुनः भूयः ॥ २६ ॥
இங்கு சுக்ல மார்க்கத்தில் செல்பவன் திரும்பிவருதலை அடை யமாட்டான். கிருஷ்ணமார்க்கத்தில் செல்பவன் மீண்டும், மீண்டும் திரும்பி வருகிறான்.
नैते सृती पार्थ जानन्योगी मुह्यति कश्चन ।
तस्मात्सर्वेषु कालेषु योगयुक्तो भवार्जुन ॥ २७ ॥
நைதே ஸ்ருதி பார்த ஜானன்யோகீ முஹ்யதி கச்சன ।
தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு யோகயுக்தோ பவார்ஜுன ॥ 27 ॥
न एते यथोक्ते सृती मार्गौ पार्थ जानन् संसाराय एका अन्या मोक्षाय इति योगी न मुह्यति कश्चन कश्चिदपि । तस्मात् सर्वेषु कालेषु योगयुक्तः समाहितो भव अर्जुन ॥ २७ ॥
ஹே பார்த்தா! இவ்விரு மார்க்கங்களில் ஒருமார்க்கம் சம்சாரத் திற்கென்றும் மற்றொரு மார்க்கம் மோக்ஷத்திற்கு என்றும் அறிந்த எந்த ஒரு யோகியும் மோஹம் அடையமாட்டான். ஆகையால் எப்பொழுதும் யோகத்துடன் கூடியிரு. என்றால் சமாஹித மனது டையனாக இரு.
शृणु तस्य योगस्य माहात्म्यम् —
அந்த யோகத்தினுடைய மஹிமையைக் கேள்.
वेदेषु यज्ञेषु तपःसु चैव दानेषु यत्पुण्यफलं प्रदिष्टम् ।
अत्येति तत्सर्वमिदं विदित्वा योगी परं स्थानमुपैति चाद्यम् ॥ २८ ॥
வேதேஷு யக்ஞேஷு தப:ஸு சைவ தானேஷு யத்புண்யபலம்‌ ப்ரதிஷ்டம்‌ ।
அத்யேதி தத்ஸர்வமிதம்‌ விதித்வா யோகீ பரம்‌ ஸ்தானமுபைதி சாத்யம்‌ ॥ 28 ॥
वेदेषु सम्यगधीतेषु यज्ञेषु च साद्गुण्येन अनुष्ठितेषु तपःसु च सुतप्तेषु दानेषु च सम्यग्दत्तेषु एतेषु यत् पुण्यफलं प्रदिष्टं शास्त्रेण अत्येति अतीत्य गच्छति तत् सर्वं फलजातम् इदं विदित्वा सप्तप्रश्ननिर्णयद्वारेण उक्तम् अर्थं सम्यक् अवधार्य अनुष्ठाय योगी, परम् उत्कृष्टम् ऐश्वरं स्थानम् उपैति च प्रतिपद्यत, आद्यम् आदौ भवम् कारणं ब्रह्म इत्यर्थः ॥ २८ ॥
இந்த ஏழு வினாக்களை நிர்ணயம் செய்வதன் மூலமாக கூறப்பட்ட யதார்த்த விஷயத்தை நன்றாக அறிந்து அனுஷ்ட்டித்து வரும் யோகி- நன்றாக ஓதிய வேதங்கள், சாத்வீக குணங்களுடன் அனுஷ்ட்டிக்கப்பட்ட யக்ஞங்கள், நன்றாக செய்யப்பட்ட தவங்கள் நன்றாக பாத்திரமறிந்து செய்யப்பட்ட தானங்கள் இவைகளினால் சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி உண்டாகும் புண்யபலத்தை எல்லாம் கடந்து நிற்கிறான். மேலும் மேலான ஈஸ்வரனுடைய ஸ்தானத்தை அடைகிறான், அதாவது ஆதியில் உண்டான காரண பிரஹ்மம் என்பது பொருள்.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये अष्टमोऽध्यायः ॥
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம் வாதே தாரகப்ரஹ்மயோகோ நாம அஷ்டமோத்யாய: