शास्त्रस्य प्रवृत्तिनिवृत्तिविषयभूते द्वे बुद्धी भगवता निर्दिष्टे, साङ्ख्ये बुद्धिः योगे बुद्धिः इति च ।
பகவானால் பிரவிர்த்தி நிவிர்த்தி விஷயத்துடன் கூடிய இரண்டு புத்திகள் உபதேசிக்கப்பட்டது. அவை சாங்கிய புத்தி என்றும் யோகபுத்தி என்றும்
அங்கு ‘प्रजहाति यदा कामान्’ (ப்ரஜஹாதி யதா காமான்) என்று ஆரம்பித்து அத்தியாயம் முடியும் வரையிலும் சாங்கிய புத்தியை ஆச்ரயித்தவர்களுக்கு சந்நியாசம் அவசியம் செய்யவேண்டும் என்று एषा ब्राह्मी स्थितिः (ஏ ஷா ப்ராஹ்மீ ஸ்திதி:) என்று கிருதார்த்த தன்மை கூறப்பட்டுள்ளது.
அர்ச்சுனனுக்கு பகவான், கர்மத்திலே தான் உனக்கு அதிகாரம், கர்மத்தை செய்யாமையின் உனக்கு ப்ரியம் இருக்கக்கூடாது என் று (கர்ம) யோகபுத்தியை ஆச்ரயித்து கர்மம் தான் செய்யவேண்டும் என்று கூறினாரே அன்றி அதனாலேயே சிரேயஸ் (மோக்ஷம்) மானது கிடைக்கும் என்று கூறவில்லை.
तदेतदालक्ष्य पर्याकुलीकृतबुद्धिः अर्जुनः उवाच ।
அதையும்( முக்திக்கு சாக்ஷாத்சாதனமான ஞான நிஷ்ட்டை யையும்) இதையும் (அதற்கு விரோதமான கர்ம நிஷ்ட்டையை பற்றி) தனக்குக் கூறியதைக் கொண்டு குழம்பிய புத்தியுடைய வனாய் அர்ச்சுனன் கூறலானான்.
कथं भक्ताय श्रेयोर्थिने यत् साक्षात् श्रेयःप्राप्तिसाधनं साङ्ख्यबुद्धिनिष्ठां श्रावयित्वा मां कर्मणि दृष्टानेकानर्थयुक्ते पारम्पर्येणापि अनैकान्तिकश्रेयःप्राप्तिफले नियुञ्ज्यात् इति युक्तः पर्याकुलीभावः अर्जुनस्य ।
ச்ரேயஸ்ஸை விரும்புகிறவனாகிய பக்தனாகிய என் பொருட்டு நேர் ச்ரேயஸ் சாதனமான பிரஹ்மநிஷ்டையை உபதேசித்து விட்டு எவ்வாறு, என்னை, அநேக தீங்குகளோடு கூடியனவும், பரம்பரையாக வாவது மோக்ஷமொன்றைஅடையக் கூடிய பலம் என்று நிச்சய மில்லாத இந்த கர்மத்தில் பகவான் ஈடுபடுத்துவார்?. என்று அர்ஜுனனின் குழப்பம் பொருத்தமே.
அந்த வியாகுலத்தின் அடிப்படையில்தான் இந்த (ஜ்யாயஸீ சேத்) முதலிய கேள்விகள் கேட்கப்படுகிறது.
प्रश्नापाकरणवाक्यं च भगवतः युक्तं यथोक्तविभागविषये शास्त्रे ॥
இந்த கேள்வியை நிவிர்த்தி (நீக்க) செய்ய வேண்டிய வாக்கியங் கள் முன்பு கூறப்பட்ட விபாக விஷயமான சாஸ்திரத்தில் பகவானால் கூறப்பட்டுள்ளது.
केचित्तु — अर्जुनस्य प्रश्नार्थमन्यथा कल्पयित्वा तत्प्रतिकूलं भगवतः प्रतिवचनं वर्णयन्ति, यथा च आत्मना सम्बन्धग्रन्थे गीतार्थो निरूपितः तत्प्रतिकूलं च इह पुनः प्रश्नप्रतिवचनयोः अर्थं निरूपयन्ति ।
சிலர் அர்ச்சுனனுடைய கேள்வியின் அர்த்தத்தை வேறுவிதமாக கல்பனை செய்துகொண்டு அதற்கு விபரீதமாக கற்பித்துக் கூறுகிறார் கள். எவ்வாறு தன்னால் சம்பந்த கிரந்தத்தில் (பாஷ்யத்தின் முடிவுரை யில்) கீதார்த்தமானது நிரூபிக்கப்பட்டுள்ளதோ அதற்கு விபரீதமாக இங்கு மறுபடியும் கேள்வியையும் அதற்கான பதிலையும் விபரீத அர்த்தத்துடன் நிரூபிக்கின்றார்கள்.
कथम् ? तत्र सम्बन्धग्रन्थे तावत् — सर्वेषामाश्रमिणां ज्ञानकर्मणोः समुच्चयः गीताशास्त्रे निरूपितः अर्थः इत्युक्तम् ; पुनः विशेषितं च यावज्जीवश्रुतिचोदितानि कर्माणि परित्यज्य केवलादेव ज्ञानात् मोक्षः प्राप्यते इत्येतत् एकान्तेनैव प्रतिषिद्धमिति ।
எவ்வாறு எனில், அங்கு சம்பந்த கிரந்தத்தில் (முகவுரையில்) எல்லா ஆச்ரமத்தாருக்கும் ஞானகர்ம சமுச்சயம்தான் விதிக்கப்பட் டுள்ளது என்று கீதா சாஸ்திரத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விசேஷமாக ஜீவித காலம் முழுவதும் செய் யவேண்டிய சுருதியில் விதிக்கப்பட்ட கர்மங்களை விட்டு கேவலம் ஞானத்தினால் மட்டுமே மோக்ஷத்தின் அடைவு என்பது கீதா சாஸ்திரத்தில் நிச்சயமாக மறுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.
इह तु आश्रमविकल्पं दर्शयता यावज्जीवश्रुतिचोदितानामेव कर्मणां परित्याग उक्तः ।
இங்கு மூன்றாவது அத்தியாயத்தில் ஆச்ரம வேறுபாட்டை (ஞானம், கர்மம் இரண்டில் ஒன்றிற்கே ஒருவன் அதிகாரியாக முடியும் என்பதை) உணர்த்தவே (யாவத்ஜீவ) என்றல் முதலிய சுருதி விகித கர்மாவை எல்லாம் தியாகம் செய்ய கூறப்பட்டுள்ளது.
तत् कथम् ईदृशं विरुद्धमर्थम् अर्जुनाय ब्रूयात् भगवान् , श्रोता वा कथं विरुद्धमर्थमवधारयेत् ॥
இதில் இந்த சங்கை ஏற்படுகிறது. இந்த பிரகாரமாக விருத்த அர்த்தத்துடன் கூடிய வசனத்தை பகவான் அர்ச்சுனனிடம் எவ்வாறு கூறினார்? கேட்பவனான அர்ச்சுனன் எவ்வாறு விருத்தமான அர்த்தத்தை கிரஹித்துக்கொண்டான்?
तत्रैतत् स्यात् — गृहस्थानामेव श्रौतकर्मपरित्यागेन केवलादेव ज्ञानात् मोक्षः प्रतिषिध्यते, न तु आश्रमान्तराणामिति ।
அங்கு (முகவுரையில்) இவ்வாறு அர்த்தம் இருந்ததால் இல்லறத் தில் உள்ளவர்களுக்கே ஸ்ரௌத கர்ம தியாக பூர்வமான கேவல ஞானத்தினால் மோக்ஷத்தின் அடைவானது மறுக்கப்பட்டுள்ளது. மற்ற ஆச்ரமத்தாருக்கு அன்று எனில்.
एतदपि पूर्वोत्तरविरुद्धमेव । कथम् ? सर्वाश्रमिणां ज्ञानकर्मणोः समुच्चयो गीताशास्त्रे निश्चितः अर्थः इति प्रतिज्ञाय इह कथं तद्विरुद्धं केवलादेव ज्ञानात् मोक्षं ब्रूयात् आश्रमान्तराणाम् ॥
என்றஇதுவும் முன்னுக்குப் பின் முரணானது. ஏனெனில் எல்லா ஆச்ரமத்தாருக்கும் ஞானகர்ம சமுச்சயமே கீதாசாஸ்திரத்தின் நிச்சயம் செய்யப்பட்ட அபிப்பிராயம் (அர்த்தம்) என்று பிரதிக்ஞை செய்து அதற்கு மாறாக இங்கு மற்ற ஆச்ரமத்தாருக்கே கேவலம் ஞானத்தினால்தான் மோக்ஷம் என்று எவ்வாறு கூறுவது?
अथ मतं श्रौतकर्मापेक्षया एतद्वचनम् ‘केवलादेव ज्ञानात् श्रौतकर्मरहितात् गृहस्थानां मोक्षः प्रतिषिध्यते’ इति ; तत्र गृहस्थानां विद्यमानमपि स्मार्तं कर्म अविद्यमानवत् उपेक्ष्य ‘ज्ञानादेव केवलात्’ इत्युच्यते इति ।
இது கருத்தானால் ச்ரௌத கர்ம சேர்க்கையற்றகேவலம் ஞானத்தினாலேயே க்ருஹஸ்தர்களுக்கு மோக்ஷமானது மறுக்கப்பட் டுள்ளது என்பது (கொள்கை வாதம்) ச்ரௌதகர்மாவை அபேக்ஷித்து (குறித்து) இருப்பது. அங்கு க்ருஹஸ்தர்களுக்கு ஸ்மார்த்த கர்மம் இருந்தாலும் அது இல்லாதது போல் கொண்டு கேவலம் ஞானத் தினாலேயே மோக்ஷம் மறுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
एतदपि विरुद्धम् । कथम् ? गृहस्थस्यैव स्मार्तकर्मणा समुच्चितात् ज्ञानात् मोक्षः प्रतिषिध्यते न तु आश्रमान्तराणामिति कथं विवेकिभिः शक्यमवधारयितुम् ।
இதுவும் பொருந்தாது(மாறுபட்டது). எவ்வாறு எனில் க்ரஹஸ்தர் களுக்குத்தான் கேவல ஸ்மார்த்த கர்ம ஸமுச்சய ஞானத்தினால் மோக்ஷம் மறுக்கப்பட்டுள்ளதே தவிர மற்றஆச்ரமத்தார்களுக்கு அல்ல என்று எவ்வாறு விவேகிகளால் அறிந்துகொள்ள முடியும்?
किञ्च — यदि मोक्षसाधनत्वेन स्मार्तानि कर्माणि ऊर्ध्वरेतसां समुच्चीयन्ते तथा गृहस्थस्यापि इष्यतां स्मार्तैरेव समुच्चयो न श्रौतैः ॥
மேலும் இவ்வாறு சந்நியாசிகளுக்கு மோக்ஷப்பிராப்தியின் பொருட்டு ஞானத்துடன் கேவல ஸ்மார்த்த கர்மாவுடன் ஸமுச்சய மானது அவசியம் எனில் க்ரஹஸ்த்தார்களுக்கும் கேவல ஸ்மார்த்த கர்மா உடன் கூடி ஞான ஸமுச்சயமானது அவசியமாகிறது என் பது அறியவேண்டும். ச்ரௌதகர்மாவுடன் அன்று.
अथ श्रौतैः स्मार्तैश्च गृहस्थस्यैव समुच्चयः मोक्षाय, ऊर्ध्वरेतसां तु स्मार्तकर्ममात्रसमुच्चितात् ज्ञानात् मोक्ष इति ।
மேலும் ச்ரௌத, ஸ்மார்த்த கர்மங்களுடன் கூடிய ஞான ஸமுச்சய மானது க்ருஹஸ்த்தர்களின் மோக்ஷத்தின் பொருட்டாகும் என்றும் சந்நி யாசிகளுக்கு கேவலம் ஸ்மார்த்த கர்ம ஸமுச்சய ஞானத்தினால் எனில்.
तत्रैवं सति गृहस्थस्य आयासबाहुल्यात् , श्रौतं स्मार्तं च बहुदुःखरूपं कर्म शिरसि आरोपितं स्यात् ॥
இவ்வாறு இருக்கும்பொழுது க்ருஹஸ்தனுக்கு மிகுந்த சிரமத்துடன் கூடியதும் மிகுந்த துக்கத்துடன் கூடியதுமான கர்மங்கள் தலையில் ஏற்றி வைக்கப்பட்டதாகும்.
अथ गृहस्थस्यैव आयासबाहुल्यकारणात् मोक्षः स्यात् , न आश्रमान्तराणां श्रौतनित्यकर्मरहितत्वात् इति ।
ஆகையால் சிரமம் அதிகமாய் இருக்கும் காரணத்தினால் க்ரஹஸ்தனுக்கே மோக்ஷம் உண்டாகும். ச்ரௌத நித்திய கர்மா இல்லாததின் காரணத்தால் மற்ற ஆச்ரமத்தாருக்கு (ஸந்நியாசி களுக்கு) மோக்ஷம் உண்டாகாது எனில்.
तदप्यसत् , सर्वोपनिषत्सु इतिहासपुराणयोगशास्त्रेषु च ज्ञानाङ्गत्वेन मुमुक्षोः सर्वकर्मसंन्यासविधानात् , आश्रमविकल्पसमुच्चयविधानाच्च श्रुतिस्मृत्योः ॥
அதுவும் சரியல்ல. ஏனெனில் எல்லா உபநிஷத்துக்களிலும், இதிகாசங்களிலும் புராணங்களிலும், யோகசாஸ்திரங்களிலும் முமூக்ஷுக்களுக்கு ஞானத்தின் அங்கமாக எல்லாக் கர்மங்களையும் ஸந்நியாசம்(துறத்தல்) என்ற விதானம் இருப்பதால். அவ்வாறே ஸ்ருதி ஸ்மிருதிகளில் ஆஸ்ரமங்களுக்கு விகல்பம் ஸமுச்சயம் என்று விதானம் உள்ளது. (பிரஹ்மச்சரியத்திலிருந்து க்ரஹஸ்தம், க்ரஹஸ் தத்திலிருந்து வானப்ரஸ்தம், வானப்ரஸ்தத்திலிருந்து ஸந்நியாஸம் மேற்கொள்ளுதல் என்பது ஸமுச்சய விதானமாகும். பிரஹ்மச்சரியத்தி லிருந்தோ, அல்லது க்ரஹஸ்தாச்ரமத்திலிருந்தோ அல்லது வானப்ரஸ்தத்திலிருந்தோ ஸந்நியாசம் மேற்கொள்ளுதல் விகல்ப விதானம் எனப்படும்)
सिद्धस्तर्हि सर्वाश्रमिणां ज्ञानकर्मणोः समुच्चयः ।
அப்பொழுது எல்லா ஆச்ரமத்தாருக்கும் ஞானகர்ம ஸமுச்சய மானது சித்திக்கிறது.
न, मुमुक्षोः सर्वकर्मसंन्यासविधानात् ।
அவ்வாறு அல்ல. ஏனெனில் முமூக்ஷக்களுக்கு ஸர்வகர்ம ஸந்நியாஸம் விதிக்கப்பட்டிருப்பதால்
(व्युत्थायाथभिक्षाचर्यं चरन्ति । வியுத்தாயாத பிக்ஷாசர்யம் சரந்தி) पुत्रैषणायाश्च वित्तैषणायाश्च लोकैषणायाश्च மக்களாசை, பொருளாசை, உலகஆசை என்ற மூவயைான ஆசைகளை விட்டு பிச்சை எடுத்த லைக் கைக்கொள்கிறார்கள். तस्मान्न्यासमेषां तपसामतिरिक्तमाहुः (தஸ்மாத் நியாஸமே ஷாம் தபசாமதிரிக்தமாஹு:) ஆகையால் இந்த எல்லா தபஸைக் காட்டிலும் ஸந்நியாஸம் தான் சிரேஷ்ட்டமானது (மேலானது) என்று கூறப்படுகிறது.
न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशुः (ந கர்மணா, ந ப்ரஜயா, தனேன, த்யாகேனைகே அம்ருதத்வமானசு:) கர்மத்தினாலோ, பிரஜையினாலோ, தனத்தினாலோ அடையமுடியாது, மேலான தியாகத்தினால் மாத்திரமே ஏதோ ஒரு மஹா புருஷன் அம்ருதத்வத்தை அடைகிறான்.
ब्रह्मचर्यादेव प्रव्रजेत्’ इत्याद्याः श्रुतयः (ப்ரஹ்மச்சர்யாதேவ ப்ரவ்ர ஜேத்) ப்ரஹ்மச்சரியாச்ரமத்திலிருந்தே ஸந்நியாசம் கொள் முதலிய வாக்கியங்கள் சுருதி வசனமாகும்.
‘त्यज धर्ममधर्मं च उभे सत्यानृते त्यज ।
उभे सत्यानृते त्यक्त्वा येन त्यजसि तत्त्यज ।’
(मो. ध. ३२९ । ४०) ‘संसारमेव निःसारं दृष्ट्वा सारदिदृक्षया ।
प्रव्रजन्त्यकृतोद्वाहाः परं वैराग्यमाश्रिताः’ ( ? )
1. த்யஜ தர்மமதர்மம் ச உபே ஸத்யான்ருதே த்யஜ
உபே சத்யாந்ருதே த்யக்த்வா யேன த்யஜஸி தத் த்யஜ
ஸம்சாரமேவ நிஸ்சாரம் த்ருஷ்ட்வா ஸாரதித்ருக்ஷயா
ப்ரவ்ரஜன்த்யக்ருதோத்வாஹா: பரம் வைராக்யமாச்ரிதா
इति बृहस्पतिः । अपि कचं प्रति ।
1. பிரஹஸ்பதி கசனுக்கு இவ்வாறு கூறினார்- தர்மம், அதர்மம் என்ற இரண்டையும் விட்டுவிடு மேலும் சத்தியம் பொய் என்ற இரண்டினையும் விட்டுவிடுப் பின்பு இவைகளை எதைக் கொண்டு தியாகம் செய்தாயோ அதையும் (அஹங்காரத்தையும்) தியாகம் செய்யவேண்டும். சம்சாரமானது சாரமற்றிருப்பதை அறிந்து பரவைராக்கியம் அடைந்த விவாகம் செய்து கொள்ளாத புருஷர்கள் சாரம் உள்ள வஸ்து எது என்று அறியத் தியாகம் செய்கிறார்கள்.
‘कर्मणा बध्यते जन्तुर्विद्यया च विमुच्यते ।
तस्मात्कर्म न कुर्वन्ति यतयः पारदर्शिनः’
(मो. ध. २४१ । ७) इति शुकानुशासनम् ।
2. கர்மணா பத்யதே ஜந்துர்வித்யயா ச விமுச்யதே தஸ்மாத்கர்ம ந குர்வந்தி யதய: பாரதர்சின: - என்று சுகருடைய அனுசாசனம்.
வியாசர் சுகருக்கு உபதேசம் செய்யும் சமயத்தில் கூறியது. கர்மத்தி னால் ஜீவன் கட்டுப்படுகின்றான். ஞானத்தினால் விடுபடுகிறான். ஆகையால் முடிவைக் கண்ட (ஆதமதத்வத்தையறிந்த சந்நியாசிகள் கர்மத்தை செய்வதில்லை.
இந்த கீதா சாஸ்திரத்திலும் எல்லாக் கர்மங்களையும் மனதினால் சந்நியாசம் செய்து என்றல் முதலிய சுலோகங்களில் கூறப்பட்டுள்ளது.
मोक्षस्य च अकार्यत्वात् मुमुक्षोः कर्मानर्थक्यम् ।
முமுக்ஷுவிற்மு மோக்ஷமானது அகாரியமாய் இருப்பதால் மோக்ஷத்திற்கு கர்மமானது அர்த்தமற்றதாகிவிடுகிறது.
नित्यानि प्रत्यवायपरिहारार्थानि इति चेत् ।
நித்திய கர்மங்கள் ப்ரத்திய வாயத்தை நீக்கும் பொருட்டு அனுஷ்டிக்கவேண்டியதே எனில்
न ; असंन्यासिविषयत्वात् प्रत्यवायप्राप्तेः । न हि अग्निकार्याद्यकरणात् संन्यासिनः प्रत्यवायः कल्पयितुं शक्यः, यथा ब्रह्मचारिणामसंन्यासिनामपि कर्मिणाम् ।
அவ்வாறு அல்ல. ஏனெனில் (அது) ப்ரத்தியவாயத்தின் அடைவு சந்நியாசி அல்லாதவர்களுடைய விஷயமாய் இருப்பதால். அக்கினி காரியங்கள் செய்யாததினால் சந்நியாசிகளுக்கு, சந்நியாசி அற்றவர்க ளான ப்ரஹ்மச்சாரிகளுக்கும், கிரஹஸ்தர்களாகிய கர்மிகளுக்கும் கர்மம் செய்யாததினால், பிரத்தியவாயம் ஏற்படுவதுபோல் ஏற்படுவது இல்லை.
அவ்வாறு நித்யகர்மாவின் அபாவத்தினின்றும் பாவரூபமான பிரத்தியவாயத்தின் உத்பத்தியை கல்பிக்கமுடியாது. ஏனெனில் அசத்திலிருந்து சத்தானது எவ்வாறு உண்டாகும்? இவ்வாறு அபாவத் திலிருந்து பாவத்தின் உத்பத்தியின் அசம்பவத்தை (உண்டாகாமையை) கூறுகின்றசுருதியின் வசனமாகும்.
यदि विहिताकरणात् असम्भाव्यमपि प्रत्यवायं ब्रूयात् वेदः, तदा अनर्थकरः वेदः अप्रमाणमित्युक्तं स्यात् ।
விகித கர்மத்தை செய்யாததினால் (அபாவத்திலிருந்து) பாவமானது உண்டாகாது என்று இருந்தாலும் (அபாவத்திலிருந்து பாவமான) பிரத்தியவாயம் ஏற்படும் என்று வேதமானது கூறுமானால் அப்பொழுது வேதம் அனர்த்தத்தை உண்டுபண்ணும். மேலும் அப்பிரமாணம் (பிரமாணமற்றது) என்று கூறப்பட்டதாகும்.
विहितस्य करणाकरणयोः दुःखमात्रफलत्वात् ।
ஏனெனில் விகித கர்மத்தை செய்வதாலும், செய்யாவிடினும் இரண்டிலிருந்தும் துக்கமாகிய பலனே ஏற்படும்.
तथा च कारकं शास्त्रं न ज्ञापकम् इत्यनुपपन्नार्थं कल्पितं स्यात् । न चैतदिष्टम् ।
அவ்வாறேசாஸ்த்திரமானது ஞாபகம் (தெரிவிப்பது) அல்ல, காரகமே எனில் இல்லாத சக்தியை உண்டாக்குவதாகும். அவ்வாறெ னில் சூன்ய அர்த்தமே ஏற்படும். ஆகையால் அது ஏற்றுக்கொள்ள முடியாது.
तस्मात् न संन्यासिनां कर्माणि । अतो ज्ञानकर्मणोः समुच्चयानुपपत्तिः ।
ஆகையால் சந்நியாசிகளுக்கு கர்மம் விதிக்கப்படாததினால் ஞான கர்ம சமுச்சயமானது பொருந்தாது.
ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धि: (ஜ்யாயஸீ சேத் கர்மணஸ்தே மதா புத்தி:) ஞானமானது கர்மத்தைக் காட்டிலும் சிறந்தது என்பது உமது கொள்கையானால் என்று அர்ச்சுனன் கேட்ட வினா பொருத்த முடையதாகாது.
ஏனெனில் பகவானால் இரண்டாவது அத்யாயத்தில் ஞானகர்ம சமுச்சயமே உன்னால் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று கூறிஇருந்தால், கர்மத்தைக் காட்டிலும் ஞானமே சிறந்தது என்பது உமது கருத்தானால் ஹே ஜனார்த்தனா என்ற அர்ச்சுனனது வினா பொருத்தமற்றதாகும்.
பகவான் அர்ச்சுனனை நோக்கி ஞானத்தையும், கர்மத்தையும் சேர்ந்தே அனுஷ்டானம் செய்யவேண்டும் என்று கூறியிருந்தால் கர்மத்தைக் காட்டிலும் ஞானம் மேலானது என்பதும் கூறப் பட்டதா கும். ஆகையால் ஹே கேசவ! என்னை ஏன் கோரமான கர்மத்தில் ஏவுகிறீர் என்றவினா ஒரு விதத்திலாவது பொருந்தாது.
न च अर्जुनस्यैव ज्यायसी बुद्धिः न अनुष्ठेया इति भगवता उक्तं पूर्वम् इति कल्पयितुं युक्तम् , येन ‘ज्यायसी चेत्’ इति विवेकतः प्रश्नः स्यात् ॥
நீ கர்மத்தைக் காட்டிலும் மேலான ஞானத்தை அனுஷ்ட்டிக்கக் கூடாது என்று அர்ஜுனனுக்கு மாத்திரம் பகவான் முன்பு கூறப்பட வில்லை என்று சொல்லுவதும் சரியில்லை. ஏனெனில் (ஜ்யாயஸீ சேத்) எது மேலானது என்பது முதலிய வினா எழுவதால்.
यदि पुनः एकस्य पुरुषस्य ज्ञानकर्मणोर्विरोधात् युगपदनुष्ठानं न सम्भवतीति भिन्नपुरुषानुष्ठेयत्वं भगवता पूर्वमुक्तं स्यात् , ततोऽयं प्रश्न उपपन्नः ‘ज्यायसी चेत्’ इत्यादिः ।
மேலும் கர்மம், ஞானம் இரண்டும் விரோதமாய் இருப்பதால் ஒரே அதிகாரியால் ஒரே சமயத்தில் அனுஷ்ட்டிக்கமுடியாது என்பதால், முன்பு வெவ்வேறு அதிகாரியால் அனுஷ்டிக்க வேண்டும் என்று பக வானால் கூறப்பட்டிருக்கவேண்டும். ஆகையால் தான் இந்த ஜ்யா யஸீ சேத் என்பது முதலான வினாக்கள் எழுகிறது.
अविवेकतः प्रश्नकल्पनायामपि भिन्नपुरुषानुष्ठेयत्वेन ज्ञानकर्मनिष्ठयोः भगवतः प्रतिवचनं नोपपद्यते ।
அர்ச்சுனன் அவிவேகத்தினால் இந்த வினா எழுப்பினான் என்றகல்பனைக்கு, ஞான நிஷ்ட்டையும் கர்மநிஷ்ட்டையும் வெவ்வேறு அதிகாரிகளால் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்ற பகவானது பதில் பொருத்தமில்லாமல் ஆகிவிடும்.
न च अज्ञाननिमित्तं भगवत्प्रतिवचनं कल्पनीयम् ।
பகவானுடைய பதிலை அக்ஞானநிமித்தம் கூறப்பட்டது என்று (கல்பிப்பதும்) கூறுவதும் பொருந்தாது.
अस्माच्च भिन्नपुरुषानुष्ठेयत्वेन ज्ञानकर्मनिष्ठयोः भगवतः प्रतिवचनदर्शनात् ज्ञानकर्मणोः समुच्चयानुपपत्तिः ।
ஆகையால் ஞானநிஷ்ட்டைக்கும், கர்மநிஷ்ட்டைக்கும் அதிகாரி வெவ்வேறு ஆகும் என்று பகவானுடைய பதிலினால் (உத்தரத்தி னால்) ஞான கர்ம சமுச்சயமானது பொருந்தாது (என்று சித்தமாகிறது)
तस्मात् केवलादेव ज्ञानात् मोक्ष इत्येषोऽर्थो निश्चितो गीतासु सर्वोपनिषत्सु च ॥
ஆகையால் கேவலம் ஞானத்தினாலேயே மோக்ஷம் என்ற அபிப்பிராயமானது, கீதையிலும், எல்லா உபநிஷத்துக்களிலும் நிச்சயம் (நிர்ணயம்) செய்யப்பட்டுள்ளது.
ஞான கர்ம சமுச்சயமானது ஏற்படுமானால், ஞான கர்மங்களில் ஏதாவது ஒன்றைநிச்சயம் செய்து கூறு என்று ஒரே விஷயத்தை பிரார்த்தனை (கேட்டது) செய்வது பொருந்தாது.
कुरु कर्मैव तस्मात्त्वम्’ (குரு கர்மைவ தஸ்மாத்துவம்) ஆகையால் நீ கர்மாவையே செய், என்று ஞானநிஷ்ட்டையை (கூடாமையை) தவிர்த்து அர்ச்சுனனுக்கு (ஏகாரத்தினால்) காட்டுகிறார்.
अर्जुन उवाच —
அர்ஜுன உவாச
ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन ।
तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव ॥ १ ॥
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜநார்த்தன ।
தற்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேசவ ॥ 1 ॥
ज्यायसी श्रेयसी चेत् यदि कर्मणः सकाशात् ते तव मता अभिप्रेता बुद्धिर्ज्ञानं हे जनार्दन ।
ஹே ஜனார்த்தன! கர்மத்தை அபேக்ஷி த்து ஞானம் மேன்மை யானது எனில் என்னை ஏன் ஹிம்சை ரூபமான இந்த கர்மத்தில் ஈடுபடுத்துகிறீர்கள்
यदि बुद्धिकर्मणी समुच्चिते इष्टे तदा एकं श्रेयःसाधनमिति कर्मणो ज्यायसी बुद्धिः इति कर्मणः अतिरिक्तकरणं बुद्धेरनुपपन्नम् अर्जुनेन कृतं स्यात् ।
ஞான கர்ம சமுச்சயமே பகவானுடைய அபிப்ராயம் எனில் ச்ரேயஸ்ஸை அடைவதற்கு வேண்டிய ஒரு சாதனத்தைக் கூறுங்கள் என்றும், கர்மத்தை காட்டிலும் ஞானம் மேலானது என்றும் வினாவானது அர்ஜுனனால் எழுப்ப(கேட்க) முடியாது.
न हि तदेव तस्मात् फलतोऽतिरिक्तं स्यात् ।
ஏனெனில் (சமுச்சயபக்ஷத்தில்) கர்மபலத்தைக் காட்டிலும் ஞானத்தினுடைய பலத்திற்கு மேன்மை (ச்ரேயஸ்) யும் காணமுடியாது.
तथा च, कर्मणः श्रेयस्करी भगवतोक्ता बुद्धिः, अश्रेयस्करं च कर्म कुर्विति मां प्रतिपादयति, तत् किं नु कारणमिति भगवत उपालम्भमिव कुर्वन् तत् किं कस्मात् कर्मणि घोरे क्रूरे हिंसालक्षणे मां नियोजयसि केशव इति च यदाह, तच्च नोपपद्यते ।
அவ்வாறேகர்மத்தைக் காட்டிலும் ஞானமானது மேன்மையா னது என்று பகவான் கூறிவிட்டு மேன்மையல்லாத கர்மத்தை நீ செய்யக் கடவாய் என்று உபதேசிக்கிறார். பகவானைப் பழிக்கிறவர் போல என்ன காரணத்தினாலோ ஹே கேசவ என்னை இந்த ஹிம்சா ரூபமான இந்த கோர கர்மத்தில் என்னை ஏவுகிறாய்? என்று கேட்பதுவும் பொருத்தமற்றதாகிவிடும்.
மேலும் (ஸ்மார்த்த கர்மத்துடன்) ஞான சமுச்சயம்தான் பகவா னால் எல்லோருக்கும் கூறப்பட்டது. அர்ஜுனனும் அதையை கிரஹித்துக்கொண்டானாகில் எதற்காக இந்த கோரமான கர்மத்தில் என்னை ஏவுகிறாய் என்பது முதலான வார்த்தை எப்படி பொருந்தும்.
किञ्च—
மேலும்
व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे ।
तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम् ॥ २ ॥
வ்யாமிச்ரேணேவ வாக்யேன புத்திம் மோஹயஸீவ மே ।
ததேகம் வத நிச்சித்ய யேன ச்ரேயோஅஹமாப்நுயாம் ॥ 2 ॥
व्यामिश्रेणेव, यद्यपि विविक्ताभिधायी भगवान् , तथापि मम मन्दबुद्धेः व्यामिश्रमिव भगवद्वाक्यं प्रतिभाति । तेन मम बुद्धिं मोहयसि इव ।
பகவான் ஸ்பஷ்டமாக எடுத்து விளக்கினாலும் என்னுடைய மந்த புத்தியினால் பகவானுடைய வாக்கியம் மலைக்கச் செய்வது போல் இருக்கிறது. ஆகையால் என்னுடைய புத்தியை மயக்கம் அடைவது போல் செய்கிறீர்கள்.
मम बुद्धिव्यामोहापनयाय हि प्रवृत्तः त्वं तु कथं मोहयसि ? अतः ब्रवीमि बुद्धिं मोहयसि इव मे मम इति ।
என்னுடைய புத்தியின் வியாமோஹத்தைப் போக்குவதற்காக ஈடுபட்ட தாங்கள் எப்படி என்னை மோஹிக்கச் செய்வீர்கள். ஆகை யால் தான் நான் என்னுடைய புத்தியை மோஹம் அடைவது போல் செய்கிறீர்கள் என்று கூறுகிறேன்.
त्वं तु भिन्नकर्तृकयोः ज्ञानकर्मणोः एकपुरुषानुष्ठानासम्भवं यदि मन्यसे, तत्रैवं सति तत् तयोः एकं बुद्धिं कर्म वा इदमेव अर्जुनस्य योग्यं बुद्धिशक्त्यवस्थानुरूपमिति निश्चित्य वद ब्रूहि, येन ज्ञानेन कर्मणा वा अन्यतरेण श्रेयः अहम् आप्नुयां प्राप्नुयाम् । इति यदुक्तं तदपि नोपपद्यते ॥
வெவ்வேறு அதிகாரிகளால் அனுஷ்ட்டானம் (கடைபிடிக்க வேண்டிய) செய்யப்படும் ஞான கர்மங்கள் ஒரே அதிகாரியால் கடை பிடிக்கமுடியாது என்று நினைத்தாயாகில் அவைகளில் ஏதாவது ஒன்றைகர்மத்தை அல்லது ஞானத்தை அர்ஜுனனாகிய என்னு டைய புத்தி வல்லமைக்கும், என்னுடைய இப்போதைய நிலைமைக் கும் எந்த ஒன்று ஏற்றது என்று நிச்சயம் செய்து கூறுவாயாக. ஞானத் தினாலா, கர்மத்தினாலா அல்லது வேறு ஏதாவது ஒன்றினாலா நான் எதனால் நன்மை அடைவேன்? (அதனைக் கூறி அருள்வீர்)
यदि हि कर्मनिष्ठायां गुणभूतमपि ज्ञानं भगवता उक्तं स्यात् , तत् कथं तयोः ‘एकं वद’ इति एकविषयैव अर्जुनस्य शुश्रूषा स्यात् ।
கர்மாநுஷ்டானத்தில் கௌணமான ஞானத்தை பகவான் கூறியி ருந்தால் அவ்விரண்டினுள் ஒன்றைக்கூறு என்று ஒரே விஷயத்தைப் பற்றி அர்ஜுனனால் எவ்வாறு கேட்டிருக்க முடியும்?
न हि भगवता पूर्वमुक्तम् ‘अन्यतरदेव ज्ञानकर्मणोः वक्ष्यामि, नैव द्वयम्’ इति, येन उभयप्राप्त्यसम्भवम् आत्मनो मन्यमानः एकमेव प्रार्थयेत् ॥ २ ॥
ஏன்எனில் ஞானம், கர்மம் இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் கூறுவேன் இரண்டையும் அல்ல என்று பகவான் கூறவில்லை. எதனால் இரண்டும் (ஒரே சமயத்தில் ஒருவரால்) அடைய முடியாது என்று அறிந்து தனக்கு ஒன்றையே (பகவானிடம்) வேண்டுகிறான்.
प्रश्नानुरूपमेव प्रतिवचनं —
வினாவிற்கு தக்கவாறேபதில் (மறுமொழி)
श्रीभगवानुवाच —
பகவான் கூறுகிறார்.
लोकेऽस्मिन्द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मयानघ ।
ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनाम् ॥ ३ ॥
லோகேஅஸ்மின்த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக ।
ஞானயோகேன ஸாங்க்யானாம் கர்மயோகேன யோகினாம் ॥ 3 ॥
लोके अस्मिन् शास्त्रार्थानुष्ठानाधिकृतानां त्रैवर्णिकानां द्विविधा द्विप्रकारा निष्ठा स्थितिः अनुष्ठेयतात्पर्यं पुरा पूर्वं सर्गादौ प्रजाः सृष्ट्वा तासाम् अभ्युदयनिःश्रेयसप्राप्तिसाधनं वेदार्थसम्प्रदायमाविष्कुर्वता प्रोक्ता मया सर्वज्ञेन ईश्वरेण हे अनघ अपाप ।
பாபமற்றவனே (ஹே அர்ஜுனா) இந்த மனித உலகத்தில் சாஸ்த் ரோக்தமான (சாஸ்திரத்தில் கூறப்பட்ட) ஞான கர்மங்களுக்கு, அதிகாரிகள் எவர்களோ அந்த மூன்று வர்ணத்தாரின் (பிராஹ்மண, க்ஷத்ரிய, வைசியர்களின் பொருட்டு) இவ்விரு ப்ரகாரமான நிஷ்ட்டையை அவசியம் கடைபிடிக்கவேண்டிய நிஷ்ட்டையை ஸ்ருஷ்ட்டியின் ஆதிகாலத்தில் பிரஜைகளை சிருஷ்டித்து அவர்களின் பொருட்டு இக, பரலோக சுகங்களும், முக்தியும் அடையக் கூடிய வைதிக சம்பிர தாயமானது சர்வக்ஞனான ஈஸ்வரனாகிய என்னால் கூறப்பட்டது.
तत्र का सा द्विविधा निष्ठा इत्याह —
அந்த இருவிதமான நிஷ்ட்டை எது என்று கூறுகின்றார்.
ज्ञानयोगेन ज्ञानमेव योगः तेन साङ्ख्यानाम् आत्मानात्मविषयविवेकविज्ञानवतां ब्रह्मचर्याश्रमादेव कृतसंन्यासानां वेदान्तविज्ञानसुनिश्चितार्थानां परमहंसपरिव्राजकानां ब्रह्मण्येव अवस्थितानां निष्ठा प्रोक्ता ।
ஞானமே யோகம் ஞானயோகம் அவைகளில் ஞானமாகிய யோகத்தால் ஆத்மா அநாத்மா விஷயத்தில் விவேகஞான முடைய வர்களாய், பிரஹ்மச்சர்யாச்ரமத்திலேயே சந்யாசம் பெற்றவர்களாய், வேதாந்த ஞானத்தினால் நன்றாக தத்வார்தத்தை நிர்ணயம் செய்தவர் களாய், பரமஹம்ச சந்நியாசிகளாய் பிரஹ்மத்திலேயே நிலைபெற்றி ருப்பவர்களுக்கு ஞானநிஷ்ட்டையானது கூறப்பட்டது.
कर्मयोगेन कर्मैव योगः कर्मयोगः तेन कर्मयोगेन योगिनां कर्मिणां निष्ठा प्रोक्ता इत्यर्थः ।
கர்மமே யோகம் - கர்மயோகம் ஆகையால் கர்மயோகத்தினால் கர்மயோகத்தை கடைப்பிடிப் பவர்களுக்கு கர்மநிஷ்ட்டை கூறப்பட்டது.
यदि च एकेन पुरुषेण एकस्मै पुरुषार्थाय ज्ञानं कर्म च समुच्चित्य अनुष्ठेयं भगवता इष्टम् उक्तं वक्ष्यमाणं वा गीतासु वेदेषु चोक्तम् , कथमिह अर्जुनाय उपसन्नाय प्रियाय विशिष्टभिन्नपुरुषकर्तृके एव ज्ञानकर्मनिष्ठे ब्रूयात् ।
ஒரே அதிகாரியால் ஒரே புருஷார்தத்தின் பொருட்டு ஞான, கர்மசமுச்சயத்தை கடைபிடிக்கவேண்டும் என்பது பகவானது இஷ்டமாக கீதையில் கூறப்பட்டும், கூறப்படுவதாயும், வேதங்களிலும் கூறப்பட்டிருந்ததால் எவ்வாறு தன்னை சரணாகதி அடைந்த தனக்கு பிரிய அர்ஜுனனின் பொருட்டு பகவான் இங்கே ஞானநிஷ்ட்டை வேறு, கர்மநிஷ்ட்டை வேறு என்றும் அதற்கு அதிகாரிபேதம் வேறு என்றும் எவ்வாறு கூறுவார்.
यदि पुनः ‘अर्जुनः ज्ञानं कर्म च द्वयं श्रुत्वा स्वयमेवानुष्ठास्यति अन्येषां तु भिन्नपुरुषानुष्ठेयतां वक्ष्यामि इति’ मतं भगवतः कल्प्येत, तदा रागद्वेषवान् अप्रमाणभूतो भगवान् कल्पितः स्यात् । तच्चायुक्तम् ।
மேலும் அர்ஜுனன் ஞானநிஷ்ட்டை, கர்மநிஷ்ட்டை இரண்டை யும் கேட்டு ஞான கர்ம சமுச்சயத்தை தானாகவே அனுஷ்டிக்கட்டும். நான் மற்றவர்களுக்கு வேறு வேறு அதிகாரிகளால் அநுஷ்டிக்கத்தக் கவை என்று கூறுவேன் என்று பகவானது கருத்து என்றால் அவர் ராகத்வேஷம் உடையவராகவும் அப்பிரமாணிகராகவும் கல்பிக்கப் பட்டவர் ஆவார். ஆகவே அது பொருந்தாது.
तस्मात् कयापि युक्त्या न समुच्चयो ज्ञानकर्मणोः ॥
ஆகையால் எந்த யுக்தியினாலும் ஞானகர்மங்களுக்கு சமுச்சயமே பொருந்தாது
यत् अर्जुनेन उक्तं कर्मणो ज्यायस्त्वं बुद्धेः, तच्च स्थितम् , अनिराकरणात् ।
அர்ஜுனனால் கர்மத்தைக் காட்டிலும் ஞானமானது மேலானது என்று எது கூறப்பட்டதோ அது (பகவானால்) நிராகரிக்கப்படாததால் அதுவே சித்தமாகிறது.
तस्याश्च ज्ञाननिष्ठायाः संन्यासिनामेवानुष्ठेयत्वम् , भिन्नपुरुषानुष्ठेयत्ववचनात् । भगवतः एवमेव अनुमतमिति गम्यते ॥ ३ ॥
அந்த ஞான நிஷ்ட்டையானது சந்நியாசிகளால் மாத்திரமே அநுஷ்டிக்கதக்கதென்றும், ஞான கர்மங்களுக்கு வெவ்வேறு அதிகாரிகளால் அநுஷ்டிக்க தக்கது என்று கூறிய வசனத்தால் பகவானுடைய கருத்து இதுதான் என்று தெரியவருகிறது.
‘मां च बन्धकारणे कर्मण्येव नियोजयसि’ इति विषण्णमनसमर्जुनम् ‘कर्म नारभे’ इत्येवं मन्वानमालक्ष्य आह भगवान् —
பந்தத்திற்கு காரணமான கர்மத்திலேயே என்னை ஈடுபடுத்துகி றாய் என்று வருந்திய மனமுடைய அர்ஜுனன் கர்மத்தை ஆரம்பிக்க வில்லை என்று புரிந்துகொண்டு பகவான் இவ்வாறு கூறினார்.
न कर्मणामनारम्भात् इति ।
“न कर्मणामनारम्भात् ।” என்று. (ந கர்மணாமனாரம்பாத்)
अथवा — ज्ञानकर्मनिष्ठयोः परस्परविरोधात् एकेन पुरुषेण युगपत् अनुष्ठातुमशक्त्यत्वे सति इतरेतरानपेक्षयोरेव पुरुषार्थहेतुत्वे प्राप्ते
அல்லது ஞானகர்மநிஷ்ட்டையானது பரஸ்பரம் விரோதமாத லால் ஒரே புருஷனால் இரண்டையும் ஒரே சமயத்தில் அநுஷ்டிக்க முடியாததால் ஒன்றைஒன்று அபேக்ஷிக்காமல் புருஷார்த்தத்திற்கு ஹேது என்று சங்கை ஏற்பட்டால்
कर्मनिष्ठाया ज्ञाननिष्ठाप्राप्तिहेतुत्वेन पुरुषार्थहेतुत्वम् , न स्वातन्त्र्येण ; ज्ञाननिष्ठा तु कर्मनिष्ठोपायलब्धात्मिका सती स्वातन्त्र्येण पुरुषार्थहेतुः अन्यानपेक्षा, इत्येतमर्थं प्रदर्शयिष्यन् आह भगवान् —
கர்மநிஷ்ட்டையினால் ஞானநிஷ்ட்டை அடைவதற்கு ஹேது ஆனதினாலே புருஷார்த்தத்திற்கு (கர்மநிஷ்ட்டையானது) ஹேதுவா கிறது. ஸ்வதந்திரமாக அல்ல. ஞான நிஷ்ட்டையானது, கர்மநிஷ்ட் டையினால் அடையப்பட்டதாய் இருப்பதால் ஸ்வதந்திரமாகவே ஒன்றைஅபேக்ஷி க்காமல் புருஷார்த்தத்திற்கு ஹேதுவாகிறது என்று இந்த கருத்தை எடுத்துக் காட்டி பகவான் கூறினார்.
न कर्मणामनारम्भान्नैष्कर्म्यं पुरुषोऽश्नुते ।
न च संन्यसनादेव सिद्धिं समधिगच्छति ॥ ४ ॥
ந கர்மணாமனாரம்பாந்நைஷ்கர்ம்யம் புருஷோ அச்னுதே ।
ந ச ஸந்யஸனாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி ॥ 4 ॥
न कर्मणां क्रियाणां यज्ञादीनाम् इह जन्मनि जन्मान्तरे वा अनुष्ठितानाम् उपात्तदुरितक्षयहेतुत्वेन सत्त्वशुद्धिकारणानां तत्कारणत्वेन च ज्ञानोत्पत्तिद्वारेण ज्ञाननिष्ठाहेतूनाम् , ‘ज्ञानमुत्पद्यते पुंसां क्षयात्पापस्य कर्मणः । यथादर्शतलप्रख्ये पश्यत्यात्मानमात्मनि’ (मो. ध. २०४ । ८) इत्यादिस्मरणात् , अनारम्भात् अननुष्ठानात् -
கர்மங்களை (யக்ஞாதிகளை) ஆரம்பிக்காமல் என்பதன் பொருள்- இந்த ஜன்மத்திலாவது, ஜன்மந்திரத்திலாவது செய்த யக்ஞாதி கர்மங்களை அனுஷ்டித்தவர்களுடைய சஞ்சித பாபங்கள் நாசமடைவதால் சித்த சுத்தி ஏற்பட்டு அதனால் ஞானம் அடைந்து ஞானநிஷ்ட்டைக்கு காரணமாகிறது. பாபகர்மங்கள் அழிவதால் மனிதர்களுக்கு ஞானம் ஏற்படுகிறது. என்றஸ்மிருதிவசனம் (ஜ்ஞான முத்பத்யதே பும்ஸாம் க்ஷயாத்பாபஸ்ய கர்மண:) முதலிய காரணங் களால் யக்ஞாதி கர்மங்களை ஆரம்பிக்காமல் (செய்யாமல்)
नैष्कर्म्यं निष्कर्मभावं कर्मशून्यतां ज्ञानयोगेन निष्ठां निष्क्रियात्मस्वरूपेणैव अवस्थानमिति यावत् । पुरुषः न अश्नुते न प्राप्नोतीत्यर्थः ॥
நைஷ்கர்ம்ய பாவத்தை அல்லது கர்மசூன்யஸ்திதியை என்றால் ஞானயோகத்தினால் அடைந்த நிஷ்க்ரியமான ஆத்மஸ்வரூபத்தில் நிலைத்திருத்தல் என்றநிஷ்ட்டையை, (யக்ஞாதி கர்மங்கள் செய்யாமல்) புருஷனுக்கு ஏற்படாது என்பது கருத்து.
कर्मणामनारम्भान्नैष्कर्म्यं नाश्नुते इति वचनात् तद्विपर्ययात् तेषामारम्भात् नैष्कर्म्यमश्नुते इति गम्यते । कस्मात् पुनः कारणात् कर्मणामनारम्भान्नैष्कर्म्यं नाश्नुते इति ।
கர்மத்தை செய்யாமல் (ஆரம்பிக்காமல்) நைஷ்கர்ம்யத்தை அடையமுடியாது என்றவசனத்தினால் அதற்கு மாறுபாடாக கர்மத்தைச் செய்வதால் அவர்களுக்கு நைஷ்கர்மியம் ஏற்படுகிறது என்று அறியப்படுகிறது. மேலும் எக்காரணத்தினால் கர்மம் அநுஷ்டிக்காமல் நைஷ்கர்ம்யத்தை அடையமுடியாது எனில்-
उच्यते, कर्मारम्भस्यैव नैष्कर्म्योपायत्वात् । न ह्युपायमन्तरेण उपेयप्राप्तिरस्ति ।
கர்மத்தை அநுஷ்டித்தலே நைஷ்கர்மத்தை அடைவதற்கு உபாயமாகும். உபாயம் இல்லாமல் உபேயத்தை அடையமுடியாது.
कर्मयोगोपायत्वं च नैष्कर्म्यलक्षणस्य ज्ञानयोगस्य, श्रुतौ इह च, प्रतिपादनात् ।
நைஷ்கர்ம்ய லக்ஷணமாகிய ஞானயோகத்திற்கு கர்மயோகமே உபாயம் என்று சுருதியிலும், இங்கும் கூறப்பட்டிருப்பதால். (உணர்த்து வதினால்)
சுருதியில் இங்கு பிரஸ்தாபிக்கப்பட்ட ஞேய ரூபமாகிய ஆத்ம லோகத்தை அறிவதற்கு உபாயமாக, பிராமணர்கள் வேதம் ஓதுவதினா லும், யக்ஞாதிகளாலும் இதை அறிய ஆசைப்படுகிறார்கள், என்று கர்மயோகமானது ஞானயோகத்திற்கு உபாயம் என்று கூறப்பட்டது.
इहापि च —
இங்கு (கீதையிலும்) மேலும்
ஸன்யாஸஸ்து மஹாபாஹோ துக்கமாப்துமயோகத:
யோகின: கர்மகுர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்மசுத்தயே
யக்ஞோ தானம் தபச்சைவ பாவனானி மனீஷிணாம்
इत्यादि प्रतिपादयिष्यति ॥
ஹே நீண்ட தோள் உடையவனே! ஸந்நியாஸமானது கர்மயோக மின்றி அடைவது மிகக்கடினம்.
யோகிகள் ஆத்மசுத்தியின் பொருட்டு, அந்தக்கரண சுத்தியின் பொருட்டு (உலக) பற்றற்று கர்மத்தைச் செய்கிறார்கள்.
யக்ஞம், தானம், தவம் இவைகள் புத்திமான்களுக்கு தூய்மை செய்பவனவாம்.
இவ்வாறு மேலே எடுத்துரைக்கப்போகிறார்.
ननु च
அப்படியானால் (இங்கு ஒரு சங்கை உண்டாகிறது)
‘अभयं सर्वभूतेभ्यो दत्त्वा नैष्कर्म्यमाचरेत्’ (अश्व. ४६ । १८) इत्यादौ कर्तव्यकर्मसंन्यासादपि नैष्कर्म्यप्राप्तिं दर्शयति । लोके च कर्मणामनारम्भान्नैष्कर्म्यमिति प्रसिद्धतरम् । अतश्च नैष्कर्म्यार्थिनः किं कर्मारम्भेण ? इति प्राप्तम् । अत आह —
அபயம் ஸர்வபூதேப்யோ தத்வா நைஷ்கர்மயமாசரேத் (இ.பொருள்) சகல பிராணிகளுக்கும் அபயமளித்துவிட்டு நைஷ்கர்ம்யத்தை மேற்கொள்ளவேண்டும் என்பது முதலிய வசனங்களால் செய்ய வேண்டிய கர்மங்களைவிட்டு விடுவதினாலேயே நைஷ்கர்ம்யத்தை பெறலாம் என்று காட்டப்படுகிறது.
மேலும் உலக வாழ்க்கையிலும் கர்மங்களை விட்டதினால் நைஷ்கர்ம்யம் என்பது பிரசித்தம். ஆகையால் நைஷ்கர்ம்யத்தை அடைய தீவிரமுடையவன் கர்மத்தை ஆரம்பிப்பதால் என்ன பயன் என்ற சங்கை ஏற்படுகிறது. ஆகையால் கூறுகிறார்-
न च संन्यसनादेवेति । नापि संन्यसनादेव केवलात् कर्मपरित्यागमात्रादेव ज्ञानरहितात् सिद्धिं नैष्कर्म्यलक्षणां ज्ञानयोगेन निष्ठां समधिगच्छति न प्राप्नोति ॥ ४ ॥
சந்நியாசத்தினால் மட்டும் அல்ல என்று. கேவல சந்நியா சத்தினால் என்றால், ஞானமற்றகர்மபரித்யாகத்தினால் மாத்திரம் ஞானயோகத்தினால் ஏற்படும் நைஷ்கர்ம்ய லக்ஷணமான நிஷ்ட்டை யானது அடையமுடியாது.
कस्मात् पुनः कारणात् कर्मसंन्यासमात्रादेव केवलात् ज्ञानरहितात् सिद्धिं नैष्कर्म्यलक्षणां पुरुषो नाधिगच्छति इति हेत्वाकाङ्क्षायामाह —
மேலும் ஒருவன் எந்த காரணத்தினால் ஞானமற்றகர்ம ஸந்நியா சத்தினால் நைஷ்கர்ம்ய சித்தியை அடையமாட்டான் என்றகார ணத்தை அறிவதில் இச்சைக் கொண்டவனாகி இவ்வாறு கூறுகிறான்.
न हि कश्चित्क्षणमपि जातु तिष्ठत्यकर्मकृत् ।
कार्यते ह्यवशः कर्म सर्वः प्रकृतिजैर्गुणैः ॥ ५ ॥
ந ஹி கச்சித்க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத் ।
கார்யதே ஹ்யவச: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை: ॥ 5 ॥
न हि यस्मात् क्षणमपि कालं जातु कदाचित् कश्चित् तिष्ठति अकर्मकृत् सन् । कस्मात् ? कार्यते प्रवर्त्यते हि यस्मात् अवश एव अस्वतन्त्र एव कर्म सर्वः प्राणी प्रकृतिजैः प्रकृतितो जातैः सत्त्वरजस्तमोभिः गुणैः ।
ஒருவன், ஒருபொழுதும் ஒருக்ஷணமாத்திரமும் ஒரு காரியமும் செய்யாமல் இருப்பதில்லை. ஏனெனில் எல்லா பிராணிகளும் பிரகிரு தியிலிருந்து உண்டான சத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களினால் சுவாதீனமற்று கர்மங்களினால் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இங்கு எல்லாப்பிராணிகள் என்றஇடத்தில் அக்ஞானி என்று சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்போகிறார். (எல்லா அக்ஞா னிகள் என்று அர்த்தம் கொள்ளவேண்டும்) ஏன்எனில் குணைர்யோந விசால்யதே, என்று சாங்கியர்களைப் பிரித்து தனியாகக் கூறியதனால் அக்ஞானிகளுக்கே கர்மயோகம். கர்மயோகம் ஞானிகளுக்கு அல்ல.
ज्ञानिनां तु गुणैरचाल्यमानानां स्वतश्चलनाभावात् कर्मयोगो नोपपद्यते ।
ஏனெனில் குணங்களால் அசைக்கப்படாத ஞானிகளுக்கு ஸ்வ பாவமாகவே சலிக்கும் தன்மை அற்றதால் கர்மயோகம் அவர்களுக் குப் பொருந்தாது.
இவ்வாறு வேதாவிநாசினம், என்றசுலோகத்தின் வியாக்யானத் தில் விஸ்தாரமாக விளக்கப்பட்டுள்ளது.
यत्त्वनात्मज्ञः चोदितं कर्म नारभते इति तदसदेवेत्याह —
அந்த ஒரு ஆத்மக்ஞானி அல்லாதவன் விதிக்கப்பட்ட கர்மாவை செய்யவில்லை எனில் அது சரியன்று என்று கூறுகிறார்.
कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन् ।
इन्द्रियार्थान्विमूढात्मा मिथ्याचारः स उच्यते ॥ ६ ॥
கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மனஸா ஸ்மரன் ।
இந்த்ரியார்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே ॥ 6 ॥
कर्मेन्द्रियाणि हस्तादीनि संयम्य संहृत्य यः आस्ते तिष्ठति मनसा स्मरन् चिन्तयन् इन्द्रियार्थान् विषयान् विमूढात्मा विमूढान्तःकरणः मिथ्याचारो मृषाचारः पापाचारः सः उच्यते ॥ ६ ॥
எந்த ஒரு மனிதன் கை, கால் முதலிய கர்மேந்திரியங்களை அடக்கி மனதினால் இந்திரிய போக விஷயங்களை சிந்தித்துக் கொண்டிருக்கிறானோ அவன் மோஹமடைந்த அந்தக்கரணத்தை உடையவன்(மூடாத்மா) ஆசாரம் உள்ளவன் போல் இருப்பவன், பொய்யான நடவடிக்கை உள்ளவன், பாபாசாரம் உள்ளவன் என்று கருதப்படுகிறது.
यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन ।
कर्मेन्द्रियैः कर्मयोगमसक्तः स विशिष्यते ॥ ७ ॥
யஸ்த்விந்த்ரியாணி மனஸா நியம்யாரபதேஅர்ஜுன ।
கர்மேந்த்ரியை: கர்மயோகமஸக்த: ஸ விசிஷ்யதே ॥ 7 ॥
यस्तु पुनः कर्मण्यधिकृतः अज्ञः बुद्धीन्द्रियाणि मनसा नियम्य आरभते अर्जुन कर्मेन्द्रियैः वाक्पाण्यादिभिः ।
ஹே அர்ஜுன! கர்மத்தில் அதிகாரமுடைய எந்த ஒரு அக்ஞானி புத்தி இந்திரியங்களை மனதினால் அடக்கி கர்மேந்திரி யங்களான வாக்கு, பாணி முதலியவைகளைக் கொண்டு அனுஷ்டிக்கிறானோ
किमारभते इत्याह —
அவன் என்ன அனுஷ்டிக்கிறான் எனில்? கூறுகிறார்-
कर्मयोगम् असक्तः सन् फलाभिसन्धिवर्जितः सः विशिष्यते इतरस्मात् मिथ्याचारात् ॥ ७ ॥
ஆசக்தி (பற்று) அற்றவனாய் இருந்துகொண்டு கர்மயோகத் தைக் கடைப்பிடிக்கிறான். அந்த பற்றற்றகர்மயோகி மற்றமித்யாசார முடைய கர்மயோகியை விட மேலானவன்.
यतः एवम् अतः —
எதனால் இவ்வாறோ அதனால்.
नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मणः ।
शरीरयात्रापि च ते न प्रसिध्येदकर्मणः ॥ ८ ॥
நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண: ।
சரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண: ॥ 8 ॥
नियतं नित्यं शास्त्रोपदिष्टम् , यो यस्मिन् कर्मणि अधिकृतः फलाय च अश्रुतं तत् नियतं कर्म, तत् कुरु त्वं हे अर्जुन, यतः कर्म ज्यायः अधिकतरं फलतः, हि यस्मात् अकर्मणः अकरणात् अनारम्भात् ।
எந்த கர்மத்தில் சுருதியின் பலன் கூறவில்லையோ அந்த நித்திய கர்மத்தின் அதிகாரிக்கு அந்த நித்திய கர்மம் அவசியம் செய்யப்பட வேண்டிய கர்மம். ஹே அர்ஜுனா! அதனால் நீ அவசியம் செய்ய வேண்டும். இந்த கர்மத்தை செய்யாததைக் காட்டிலும் செய்ததற்கு அதிகபலன் ஏற்படும்.
कथम् शरीरयात्रा शरीरस्थितिः अपि च ते तव न प्रसिध्येत् प्रसिद्धिं न गच्छेत् अकर्मणः अकरणात् । अतः दृष्टः कर्माकर्मणोर्विशेषो लोके ॥ ८ ॥
எப்படி ஒரு கர்மமும் செய்யாமல் சரீரம் நிலைத்திருக்காது என்பது பிரசித்தம். கர்மம் செய்வதற்கும், செய்யாததற்கும் உலகில் வேறுபாடு காணப்படுகிறது.
यच्च मन्यसे बन्धार्थत्वात् कर्म न कर्तव्यमिति तदप्यसत् । कथम् —
பந்தத்திற்கு காரணமாய் இருப்பதால் கர்மம் செய்யவேண்டிய தில்லை என்று நீ நினைத்தால் அது சரியல்ல. எவ்வாறு எனில்.
यज्ञार्थात्कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः ।
तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर ॥ ९ ॥
யக்ஞார்தாத்கர்மணோலின்யத்ர லோகோலியம் கர்மபந்தன: ।
ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர ॥ 9 ॥
‘यज्ञो वै विष्णुः’ (तै. स. १ । ७ । ४) इति श्रुतेः यज्ञः ईश्वरः, तदर्थं यत् क्रियते तत् यज्ञार्थं कर्म । तस्मात् कर्मणः अन्यत्र अन्येन कर्मणा लोकः अयम् अधिकृतः कर्मकृत् कर्मबन्धनः कर्म बन्धनं यस्य सोऽयं कर्मबन्धनः लोकः, न तु यज्ञार्थात् । अतः तदर्थं यज्ञार्थं कर्म कौन्तेय, मुक्तसङ्गः कर्मफलसङ्गवर्जितः सन् समाचर निर्वर्तय ॥ ९ ॥
யக்ஞோவை விஷ்ணு: என்று சுருதி வசனம் இருப்பதால் சுருதி யில் யக்ஞம் ஈஸ்வரன் என்று அறிகிறோம். அந்த ஈஸ்வரனின் பொருட்டு செய்யப்படும் யக்ஞத்திற்கான கர்மம். ஆகையால் மற்றகர் மங்களை செய்யும் அதிகாரி கர்மமாகிறபந்தத்தை அடைகிறான். ஈஸ்வரனுக்காக செய்யப்பட்ட கர்மத்தால் கர்மபந்தம் ஏற்படுவதில்லை. ஆகையால் ஹே கௌந்தேய! கர்மத்தின் பயனில் பற்றற்றவனாய் ஈஸ்வரார்ப்பணமாக கர்மத்தைச் செய்து வர வேண்டும்.
इतश्च अधिकृतेन कर्म कर्तव्यम् —
இக்காரணத்தால் கர்மத்தில் அதிகாரமுடையவன் அவசியம் செய்யவேணடும்.
सहयज्ञाः प्रजाः सृष्ट्वा पुरोवाच प्रजापतिः ।
अनेन प्रसविष्यध्वमेष वोऽस्त्विष्टकामधुक् ॥ १० ॥
ஸஹயக்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி: ।
அநேன ப்ரஸவிஷ்யத்வமே ஷ வோSஸ்த்விஷ்டகாமதுக் ॥ 10 ॥
सहयज्ञाः यज्ञसहिताः प्रजाः त्रयो वर्णाः ताः सृष्ट्वा उत्पाद्य पुरा पूर्वं सर्गादौ उवाच उक्तवान् प्रजापतिः प्रजानां स्रष्टा अनेन यज्ञेन प्रसविष्यध्वं प्रसवः वृद्धिः उत्पत्तिः तं कुरुध्वम् । एष यज्ञः वः युष्माकम् अस्तु भवतु इष्टकामधुक् इष्टान् अभिप्रेतान् कामान् फलविशेषान् दोग्धीति इष्टकामधुक् ॥ १० ॥
ஸ்ருஷ்ட்டியின் ஆதிகாலத்தில் யக்ஞத்துடன் பிரஜைகளை என்றால் மூவர்ணத்தால் (பிராஹ்மண, க்ஷத்ரிய, வைசியர்கள்) ஸ்ருஷ்ட்டி செய்து ஜகத்தை உண்டாக்கிய ப்ரஜாபதியானவர் கூறினார், நீங்கள் யக்ஞத்தினால் அபிவிருத்தி செய்யுங்கள். இந்த யக்ஞம் உங்களுக்கு விரும்பிய காமனைகளைச் சுரக்கும் என்றால் நீங்கள் விரும்பிய பல ரூபமான போகங்களைத் தரக்கூடியது.
कथम् —
எவ்வாறு
देवान्भावयतानेन ते देवा भावयन्तु वः ।
परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ ॥ ११ ॥
தேவாந் பாவயதானேன தே தேவா பாவயந்து வ: ।
பரஸ்பரம் பாவயந்த: ச்ரேய: பரமவாப்ஸ்யத ॥ 11 ॥
देवान् इन्द्रादीन् भावयत वर्धयत अनेन यज्ञेन । ते देवा भावयन्तु आप्याययन्तु वृष्ट्यादिना वः युष्मान् । एवं परस्परम् अन्योन्यं भावयन्तः श्रेयः परं मोक्षलक्षणं ज्ञानप्राप्तिक्रमेण अवाप्स्यथ । स्वर्गं वा परं श्रेयः अवाप्स्यथ ॥ ११ ॥
இந்திராதி தேவர்களை (யக்ஞத்தினால்) விருத்தியடையச் செய்யுங்கள் என்றால் அவர்களை போஷியுங்கள். சந்தோஷப்படுத் துங்கள். அதனால் (திருப்தி அடைந்த தேவர்கள்) அவர்கள் மழை முதலியவைகளால் உங்களை மேன்மைப்படுத்துவார்கள். இவ்வாறு பரஸ்பரம் போஷிப்பதால் நீங்கள் ஞானம் அடைவதின் மூலமாக மோக்ஷமாகிய பரமஸ்ரேயஸ்ஸை அடைவீர்கள். அல்லது ஸ்வர்க்க ரூபமான ஸ்ரேயஸ்ஸை அடைகிறவர்களாவீர்கள்
किञ्च—
மேலும்
इष्टान्भोगान्हि वो देवा दास्यन्ते यज्ञभाविताः ।
तैर्दत्तानप्रदायैभ्यो यो भुङ्क्ते स्तेन एव सः ॥ १२ ॥
இஷ்டாந் போகான்ஹி வோ தேவா தாஸ்யந்தே யக்ஞபாவிதா: ।
தைர்தத்தானப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேன ஏவ ஸ: ॥ 12 ॥
इष्टान् अभिप्रेतान् भोगान् हि वः युष्मभ्यं देवाः दास्यन्ते वितरिष्यन्ति स्त्रीपशुपुत्रादीन् यज्ञभाविताः यज्ञैः वर्धिताः तोषिताः इत्यर्थः ।
யக்ஞத்தினால் திருப்தி (விருத்தி) அடைந்த தேவர்கள் உங்களுக்கு ஸ்த்ரீகள், பசுக்கள், புத்திரர்கள் முதலிய இஷ்ட்ட போகங்களை அளிப்பார்கள்.
तैः देवैः दत्तान् भोगान् अप्रदाय अदत्त्वा, आनृण्यमकृत्वा इत्यर्थः, एभ्यः देवेभ्यः, यः भुङ्क्ते स्वदेहेन्द्रियाण्येव तर्पयति स्तेन एव तस्कर एव सः देवादिस्वापहारी ॥ १२ ॥
அந்த தேவர்களால் அளிக்கப்பட்ட போகங்களை அவர்களுக்கு அளிக்காமல் அதாவது கடனைத் தீர்க்காமல் எவன் தன் தேஹத்தை யும் இந்திரியங்களையும் திருப்தி செய்கிறானோ அவன் தேவர் முதலானோர்களுடைய சொத்தைப் பறித்துகொண்ட திருடனே.
ये पुनः —
ஆனால் எவர்கள் :
यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः ।
भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात् ॥ १३ ॥
யக்ஞசிஷ்டாசிந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை: ।
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத் ॥ 13 ॥
देवयज्ञादीन् निर्वर्त्य तच्छिष्टम् अशनम् अमृताख्यम् अशितुं शीलं येषां ते यज्ञशिष्टाशिनः सन्तः मुच्यन्ते सर्वकिल्बिषैः सर्वपापैः चुल्ल्यादिपञ्चसूनाकृतैः प्रमादकृतहिंसादिजनितैश्च अन्यैः ।
தேவயக்ஞாதிகளை செய்தபின் அதில் மீதமான (சேஷமான) அமிர்தமாகிய அன்னத்தை போஜனம் செய்யும் யக்ஞசிரேஷ்டர்கள் (மேலானோர்) அடுப்பு முதலிய இடங்களில் பிராணிகளுக்கு நம்மை அறியாமலே உண்டாகும் எல்லா பாபங்களில் (5 விதமான) பாபங்களி லிருந்தும் மற்றும் பிரமாதத்தினால் மற்றவர்களுக்கு ஏற்படும் ஹிம்சை முதலான பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான்.
ये तु आत्मम्भरयः, भुञ्जते ते तु अघं पापं स्वयमपि पापाः — ये पचन्ति पाकं निर्वर्तयन्ति आत्मकारणात् आत्महेतोः ॥ १३ ॥
எவர்கள் தங்களின் உடலைப் பேணுவதின் பொருட்டு தங்களுக் காகவே சமையல் செய்து கொள்கிறார்களோ அவர்கள் பாபிகளாகி பாபத்தையே புஜிக்கிறார்கள்.
इतश्च अधिकृतेन कर्म कर्तव्यम् जगच्चक्रप्रवृत्तिहेतुर्हि कर्म । कथमिति उच्यते —
ஆகையால் விதிதகர்மாவை அவசியம் செய்யவேண்டும் ஜகத்தாகிய சக்கரத்தை பிரவிருத்திப்பதற்குக் காரணம் கர்மா, அது எவ்வாறு என்று கூறப்படுகிறது:
अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भवः ।
यज्ञाद्भवति पर्जन्यो यज्ञः कर्मसमुद्भवः ॥ १४ ॥
அன்னாத்பவந்தி பூதானி பர்ஜந்யாதன்னஸம்பவ: ।
யக்ஞாத்பவதி பர்ஜன்யோ யக்ஞ: கர்மஸமுத்பவ: ॥ 14 ॥
अन्नात् भुक्तात् लोहितरेतःपरिणतात् प्रत्यक्षं भवन्ति जायन्ते भूतानि । पर्जन्यात् वृष्टेः अन्नस्य सम्भवः अन्नसम्भवः । यज्ञात् भवति पर्जन्यः ।
பிராணிகளின் உணவிலிருந்து ரக்தம், வீரிய ரூபமாக பரிணமித்து அதிலிருந்து பிராணிகள் பிரத்யக்ஷமாக உற்பத்தியாகிறது. மழையி னால் அன்னம் உற்பத்தியாகிறது. யக்ஞத்தினால் மழை உண்டாகிறது.
अग्नौ प्रास्ताहुतिः सम्यगादित्यमुपतिष्ठते ।
அக்னௌ ப்ராஸ்தாஹுதி: ஸம்யக் ஆதித்யமுபதிஷ்டதே
आदित्याज्जायते वृष्टिर्वृष्टेरन्नं ततः प्रजाः ॥-
ஆதித்யாஜ்ஜாயதே வ்ருஷ்டிர்வ்ருஷ்டேரன்னம் தத: ப்ரஜா:
(मनु. ३ । ७६) इति स्मृतेः ।
அக்னியில் விதிபூர்வகமாக போடப்பட்ட ஆகுதியானது சூரியனை அடைந்து அதிலிருந்து மழை உண்டாகிறது. மேலும் அன்னத்திலிருந்து பிரஜைகள் உண்டாகிறார்கள் என்பது ஸ்மிருதி வசனம்.
यज्ञः अपूर्वम् । स च यज्ञः कर्मसमुद्भवः ऋत्विग्यजमानयोश्च व्यापारः कर्म, तत् समुद्भवः यस्य यज्ञस्य अपूर्वस्य स यज्ञः कर्मसमुद्भवः ॥ १४ ॥
ரித்விக், யஜமானன் இவர்களுடைய வியாபாரம் கர்மமாகும். மேலும் கர்மத்திலிருந்து எது உண்டாகிறதோ அது அபூர்வ ரூபமாகிய யக்ஞம் என்னவெனில், அந்த அபூர்வரூப யக்ஞமானது கர்மத்திலி ருந்து உண்டானது.
तत् च-
மேலும்
कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षरसमुद्भवम् ।
तस्मात्सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम् ॥ १५ ॥
கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம் ।
தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யக்ஞே ப்ரதிஷ்டிதம் ॥ 15 ॥
कर्म ब्रह्मोद्भवं ब्रह्म वेदः सः उद्भवः कारणं प्रकाशको यस्य तत् कर्म ब्रह्मोद्भवं विद्धि विजानीहि । ब्रह्म पुनः वेदाख्यम् अक्षरसमुद्भवम् अक्षरं ब्रह्म परमात्मा समुद्भवो यस्य तत् अक्षरसमुद्भवम् । ब्रह्म वेद इत्यर्थः ।
கர்மமானது வேதரூபமான பிரஹ்மத்திலிருந்து உண்டானது என்றால் இதன் பொருள் கர்மத்தின் உற்பத்திக்குக் காரணம் வேதமாகும் என்று அறி. இவ்வாறு அறிந்த வேத ரூபமான பிரஹ்ம மானது அக்ஷரத்திலிருந்து உண்டானது. இதன் பொருள் என்னவெனில் அவிநாசியாயும், பரப்ரஹ்மாமாயுமுள்ள பரமாத்மா வேதத்தின் உற்பத்திக்குக் காரணமாகிறது.
यस्मात् साक्षात् परमात्माख्यात् अक्षरात् पुरुषनिःश्वासवत् समुद्भूतं ब्रह्म तस्मात् सर्वार्थप्रकाशकत्वात् सर्वगतम् ।
எதனால் வேதரூப பிரஹ்மமானது சாக்ஷாத் பரமாத்மா எனப்படும் அக்ஷர புருஷனிடத்தில் மூச்சுக்காற்று போல் உத்பன் னமாகிறதோ அதனால் எல்லா அர்த்தங்களையும் பிரகாசிக்கச் செய்வதால் சர்வகதம் எனப்படுகிறது.
सर्वगतमपि सत् नित्यं सदा यज्ञविधिप्रधानत्वात् यज्ञे प्रतिष्ठितम् ॥ १५ ॥
யக்ஞவிதிகளுக்கு வேதமானது பிரதானமாய் இருப்பதால் அது சர்வகதமாய் எப்பொழுதும் யக்ஞத்தில் நிலைபெற்றிருக்கிறது.
एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयतीह यः ।
अघायुरिन्द्रियारामो मोघं पार्थ स जीवति ॥ १६ ॥
ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நானுவர்தயதீஹ ய: ।
அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி ॥ 16 ॥
एवम् इत्थम् ईश्वरेण वेदयज्ञपूर्वकं जगच्चक्रं प्रवर्तितं न अनुवर्तयति इह लोके यः कर्मणि अधिकृतः सन् अघायुः अघं पापम् आयुः जीवनं यस्य सः अघायुः, पापजीवनः इति यावत् । इन्द्रियारामः इन्द्रियैः आरामः आरमणम् आक्रीडा विषयेषु यस्य सः इन्द्रियारामः मोघं वृथा हे पार्थ, स जीवति ॥
இவ்வாறு ஈஸ்வரனால் வேதம் யக்ஞமூலமாக இந்த ஜகத்சக்தி பிரவிர்த்திக்கப்பட்டதை கர்மத்தில் அதிகாரியாய் இருந்தும் அனுரிக் கவில்லையோ அவர்கள் பாப ஜீவனத்தை உடையவர்களாகிறார்கள். மேலும் இந்திரியாராம என்றால் இந்திரியங்கள் மூலமாக விஷயங்க ளிலேயே ரமித்துக்கொண்டிருப்பவர்கள் ஆகிய பாபிகள் ஜீவனம் வீணாகிறது.
तस्मात् अज्ञेन अधिकृतेन कर्तव्यमेव कर्मेति प्रकरणार्थः ।
ஆகையால் அக்ஞானியாகி கர்மத்தில் அதிகாரமுடையவ னுக்கே கர்மம் அவசியம் செய்யவேண்டும் என்பது இந்த பிரகரணத் தின் (சந்தர்ப்பத்தின்) பொருள்.
கர்மத்தில் அதிகாரமுடைய அநாத்ம புருஷனால் ஆத்மஞானத் திற்கான யோக்யதை அடைவதற்குமுன் அதை அடைவதின் பொருட்டு கர்மயோகம் அவசியம் கடைபிடிக்கவேண்டும். இதையே, न कर्मणामनारम्भात्, என்று தொடங்கி शरीरयात्रापि च ते न प्रसिध्येदकर्मणः என்று இவ்வாறு முடியக் கூறி-
यज्ञार्थात्कर्मणोऽन्यत्र என்று ஆரம்பித்து मोघं पार्थ स जीवति என்று இவ்வாறு கிரந்தத்தில் கர்மத்தில் அதிகாரமுடைய அநாத்ம வித்திற்கு கர்மானுஷ்ட்டானம் அவசியம் என்பதில் அநேககாரணங்கள் கூறப்பட்டுள்ளது. அவ்வாறேகர்மாநுஷ்டானம் செய்யாவிடில் அதனால் ஏற்படும் தோஷமும் கூறப்பட்டுள்ளது.
एवं स्थिते किमेवं प्रवर्तितं चक्रं सर्वेणानुवर्तनीयम् , आहोस्वित् पूर्वोक्तकर्मयोगानुष्ठानोपायप्राप्याम् अनात्मविदः ज्ञानयोगेनैव निष्ठाम् आत्मविद्भिः साङ्ख्यैः अनुष्ठेयामप्राप्तेनैव, इत्येवमर्थम् अर्जुनस्य प्रश्नमाशङ्क्य ।
இவ்வாறு இருக்கும்பொழுது இவ்வாறு பிரவிர்த்திக்கின்றஸம் ஸார சக்கிரமானது எல்லோராலும் அநுஷ்டிக்கவேண்டியதா? அல்லது ஆத்மாவை அறியாதவன் முன் கூறப்பட்ட கர்மானுஷ்ட்டான ரூப உபாயத்தினால் அடையக்கூடியதும், ஆத்மக்ஞானிகளால் சாங்கியர்க ளால் அனுஷ்ட்டிக்கத்தக்கதுமான ஞான யோக நிஷ்ட்டையை பெறுவ தால் மாத்திரமே அநுஷ்டிக்க வேண்டியதா? என்று இவ்வாறு இந்த கிரந்தத்தின் பொருள் நன்றாக விளங்கும்படி அர்ஜுனனுடைய வினாவாக பகவான் ஸ்வயமாகவே சங்கித்துக் கூறுகிறார்.
எந்த அந்த பிரஸித்த ஆத்மா உள்ளதோ அதை அறிந்து தன்னு டைய மித்யா ஞானத்தை நீக்கிய மஹாத்மாக்களாகிய பிராமணர்கள் யக்ஞத்தை அனுஷ்டிப்பதற்கு அவசியமான புத்திராதிகளில் ஆசை அற்றவர்களாகி சரீர யாத்திரைக்குத் தேவையான பிக்ஷை முதலான கர்மங்களைச் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஆத்மஞானிகளுக்கு ஆத்ம ஞான நிஷ்ட்டை தவிர வேறு செய்யவேண்டிய கர்மாக்கள் ஒன்றுமில்லை. (பிருஹதாரண்யக சுருதி) இந்த சுருதி தாத்பரியத்தை இந்த கீதா சாஸ்திரத்தில் பிரதிபாதிப்பதற்கு (எடுத்து விளக்குவதற்கு) இச்சித்தவராகி பகவான் இவ்வாறு கூறலானார்.
यस्त्वात्मरतिरेव स्यादात्मतृप्तश्च मानवः ।
आत्मन्येव च सन्तुष्टस्तस्य कार्यं न विद्यते ॥ १७ ॥
யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதாத்மத்ருப்தச்ச மானவ: ।
ஆத்மன்யேவ ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்யதே ॥ 17 ॥
यः तु सांख्य आत्मज्ञाननिष्ठः आत्मरतिः आत्मन्येव रतिः न विषयेषु यस्य सः आत्मरतिरेव स्यात् भवेत् आत्मतृप्तश्च आत्मनैव तृप्तः न अन्नरसादिना सः मानवः मनुष्यः संन्यासी आत्मन्येव च सन्तुष्टः । सन्तोषो हि बाह्यार्थलाभे सर्वस्य भवति, तमनपेक्ष्य आत्मन्येव च सन्तुष्टः सर्वतो वीततृष्ण इत्येतत् । यः ईदृशः आत्मवित् तस्य कार्यं करणीयं न विद्यते नास्ति इत्यर्थः ॥ १७ ॥
எந்த ஆத்மஞானநிஷ்ட்ட சாங்கிய யோகி கேவலம் ஆத்மாவி டத்திலேயே ரமிக்கின்றானோ அவன் ஆத்மரதி: அவன் மற்றவிஷ யங்களில் ரமிக்கமாட்டான். அந்த சந்நியாசி ஆத்மாவிடத்திலேயே திருப்தி அடைகிறான் அன்னாதிகளில் அல்ல. மற்றஎல்லோருக்கும் வெளிவிஷயங்களின் அடைவால் சந்தோஷம் அடைகிறார்கள். ஆனால் சந்நியாசி அதை விரும்பாமல் தன் ஆத்மாவிடத்திலேயே சந்தோஷமடைந்து எல்லாவற்றிலும் ஆசை அற்றவனாய் இருக்கி றான் என்பது. இவ்வாறு எந்த ஒரு ஆத்மக்ஞானி இருக்கிறானோ அவனுக்கு செய்ய வேண்டிய கர்மா ஒன்றும் இல்லை என்பது பொருள்.
किं च —
மேலும்
नैव तस्य कृतेनार्थो नाकृतेनेह कश्चन ।
न चास्य सर्वभूतेषु कश्चिदर्थव्यपाश्रयः ॥ १८ ॥
நைவ தஸ்ய க்ருதேநார்தோ நாக்ருதேனேஹ கச்சன ।
ந சாஸ்ய ஸர்வபூதேஷு கச்சிதர்தவ்யபாச்ரய: ॥ 18 ॥
नैव तस्य परमात्मरतेः कृतेन कर्मणा अर्थः प्रयोजनमस्ति ।
எப்பொழுதும் பரமாத்மாவினிடத்திலேயே ரமித்திருப்பவனுக்கு செய்யும் கர்மங்களினால் பிரயோஜனமில்லை.
अस्तु तर्हि अकृतेन अकरणेन प्रत्यवायाख्यः अनर्थः ।
சரி, அவ்வாறாகில் செய்யவேண்டிய கர்மாவை செய்யாததினால் உண்டாகும் அநர்த்தம் (பாபம்) ஏற்படும் எனில்.
न अकृतेन इह लोके कश्चन कश्चिदपि प्रत्यवायप्राप्तिरूपः आत्महानिलक्षणो वा नैव अस्ति । न च अस्य सर्वभूतेषु ब्रह्मादिस्थावरान्तेषु भूतेषु कश्चित् अर्थव्यपाश्रयः ।
அவனுக்கு இந்த உலகில் செய்யவேண்டிய கர்மாவை செய்யாத தினால் குற்றம் (பாபம்) வாயிலாக ஏற்படும் ஆத்மஹானி (ஆத்மாவை அறியாமை) ரூபமான அநர்த்தமானது அவனுக்கு ஏற்படாது. பிரஹ்ம்மா முதல் ஸ்தாவரம் வரை உள்ள விஷயங்களிடத்து ஒரு பிரயோஜனத்திற்காக சார்ந்து இருக்க வேண்டியதில்லை.
प्रयोजननिमित्तक्रियासाध्यः व्यपाश्रयः व्यपाश्रयणम् आलम्बनं कञ्चित् भूतविशेषमाश्रित्य न साध्यः कश्चिदर्थः अस्ति, येन तदर्था क्रिया अनुष्ठेया स्यात् ।
பிரயோஜனத்துடன் கூடிய கிரியா சாத்திய ஆஸ்ரயமானது வ்ய பாஸ்ரய: எனப்படும். ஆனால் இந்த ஞானிக்கு ஆச்ரயித்து (சார்ந்து) பிரயோஜனம் ஏற்படுவதில்லை. எந்த பிரயோஜனத்தின் பொருட்டு அவன் கர்மத்தை அனுஷ்டிக்கவேண்டும்?.
न त्वम् एतस्मिन् सर्वतःसम्प्लुतोदकस्थानीये सम्यग्दर्शने वर्तसे ॥ १८ ॥
நீ இங்கு எங்கும் பரிபூர்ணமாக நிறைந்த நீர்பெருக்கத்திற்கு ஒப் பான சம்யக்தர்சனத்தில் (ஆத்ம ஸ்வரூபத்திலேயே) நிலை பெற்றவ னாக இல்லை.
यतः एवम् —
எதனால் இவ்வாறு (இருக்கிறாயோ)
तस्मादसक्तः सततं कार्यं कर्म समाचर ।
असक्तो ह्याचरन्कर्म परमाप्नोति पूरुषः ॥ १९ ॥
தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர ।
அஸக்தோ ஹ்யாசரன்கர்ம பரமாப்நோதி பூருஷ: ॥ 19 ॥
तस्मात् असक्तः सङ्गवर्जितः सततं सर्वदा कार्यं कर्तव्यं नित्यं कर्म समाचर निर्वर्तय । असक्तो हि यस्मात् समाचरन् ईश्वरार्थं कर्म कुर्वन् परं मोक्षम् आप्नोति पूरुषः सत्त्वशुद्धिद्वारेण इत्यर्थः ॥ १९ ॥
ஆகையால் பற்றற்று எப்பொழுதும் நீ செய்யவேண்டிய நித்ய கர்மாவை நன்றாகச் செய்து வரவேண்டும். பற்றற்று கர்மாக்களை செய்பவன் என்றால் ஈஸ்வரார்ப்பணமாக நித்யகர்மாவை செய்யும் புருஷன் அந்தக்கரணசுத்தி வாயிலாக மோக்ஷரூபமான பரமபதத்தை அடைகிறான்.
यस्मात् च —
எதனால் எனில்
कर्मणैव हि संसिद्धिमास्थिता जनकादयः ।
लोकसङ्ग्रहमेवापि सम्पश्यन्कर्तुमर्हसि ॥ २० ॥
கர்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜநகாதய: ।
லோகஸங்க்ரஹமேவாபி ஸம்பச்யந் கர்துமர்ஹஸி ॥ 20 ॥
कर्मणैव हि यस्मात् पूर्वे क्षत्रियाः विद्वांसः संसिद्धिं मोक्षं गन्तुम् आस्थिताः प्रवृत्ताः । के ? जनकादयः जनकाश्वपतिप्रभृतयः ।
முன்பு ஜனகர், அச்வபதி முதலிய க்ஷத்திரிய வித்வான்கள் கர்மத்தின் வாயிலாக மோக்ஷத்தை அடைவதின் பொருட்டு அதில் ஈடுபட்டார்கள்.
यदि ते प्राप्तसम्यग्दर्शनाः, ततः लोकसङ्ग्रहार्थं प्रारब्धकर्मत्वात् कर्मणा सहैव असंन्यस्यैव कर्म संसिद्धिमास्थिता इत्यर्थः । अथ अप्राप्तसम्यग्दर्शनाः जनकादयः, तदा कर्मणा सत्त्वशुद्धिसाधनभूतेन क्रमेण संसिद्धिमास्थिता इति व्याख्येयः श्लोकः ।
அவர்கள் யதார்த்த ஞானத்தை அடைந்தவர்களாய் இருந்தால் அவர்கள் உலக சங்கிரஹத்தின் பொருட்டு கர்மத்துடன் கூடிய சந்நி யாசம் மேற்கொள்ளாமலே மோக்ஷத்தை அடைகிறார்கள். அவர்கள் யதார்த்த ஞானத்தை அடையாதவர்களாய் இருந்தார்களெனில் அப்பொழுது அவர்கள் கர்மத்தின் மூலமாக சித்த சுத்தியை அடைந்து கிரமமாக மோக்ஷத்தை அடைவார்கள் என்பது இந்த ஸ்லோகத்தின் வ்யாக்யானம்.
अथ मन्यसे पूर्वैरपि जनकादिभिः अजानद्भिरेव कर्तव्यं कर्म कृतम् ; तावता नावश्यमन्येन कर्तव्यं सम्यग्दर्शनवता कृतार्थेनेति ।
ஜனகாதி முன்னோர்களும் ஆத்மதத்துவத்தை அறியாத பொழுதுதான் செய்யவேண்டிய கர்மத்தை செய்தார்கள். ஆகையால் ஆத்மஞானத்தை அடைந்த கிருதார்த்தன் அவசியம் நித்யகர்மாவை செய்யவேண்டியதில்லை என்று நீ நினைத்தாலும்.
तथापि प्रारब्धकर्मायत्तः त्वं लोकसङ्ग्रहम् एव अपि लोकस्य उन्मार्गप्रवृत्तिनिवारणं लोकसङ्ग्रहः तमेवापि प्रयोजनं सम्पश्यन् कर्तुम् अर्हसि ॥ २० ॥
பிராரப்த கர்மத்திற்கு அதீனமாய் உள்ள நீ உலகம் தீயவழியில் செல்லுதலை தடுத்தல் என்கிறலோக சங்க்ரஹார்த்தம் என்றபிரயோ ஜனத்தை நன்றாக சிந்தித்து கர்மத்தைச் செய்யவேண்டும்.
लोकसङ्ग्रहः किमर्थं कर्तव्य इत्युच्यते —
லோக சங்கிரஹத்தை எவர் செய்வதற்கு தகுதி உடையவர்? எவ்வாறு செய்யவேண்டும்? என்பதைக் கூறுவோம்.
यद्यदाचरति श्रेष्ठस्तत्तदेवेतरो जनः ।
स यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते ॥ २१ ॥
யத்யதாசரதி ச்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜன: ।
ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே ॥ 21 ॥
यद्यत् कर्म आचरति करोति श्रेष्ठः प्रधानः तत्तदेव कर्म आचरति इतरः अन्यः जनः तदनुगतः ।
பெரியோர்கள் (ச்ரேஷ்ட்டர்கள்) எந்த எந்த கர்மத்தைச் செய்கி றார்களோ அல்லது எந்த எந்த கர்மாவிலே நிலை பெற்றிருக்கிறார் களோ அந்த கர்மத்தையே மற்றஜனங்கள் பின்பற்றுகிறார்கள்.
किं च स श्रेष्ठः यत् प्रमाणं कुरुते लौकिकं वैदिकं वा लोकः तत् अनुवर्तते तदेव प्रमाणीकरोति इत्यर्थः ॥ २१ ॥
அந்த சிறந்த மனிதன் லௌகிக விஷயத்திலாயினும், வைதிக விஷயத்திலாயினும் எதைப் பிரமாணமாக கொள்கிறானோ அதையே உலகம் பின்பற்றுகிறது. அதையே பிரமாணமாகக் கொள்கிறது என்று பொருள்.
यदि अत्र ते लोकसङ्ग्रहकर्तव्यतायां विप्रतिपत्तिः तर्हि मां किं न पश्यसि ? —
உனக்கு இந்த லோக சங்க்ரஹார்த்த விஷயத்தில் சந்தேஹம் இருந்தால் என்னை ஏன் பார்க்கவில்லை?
न मे पार्थास्ति कर्तव्यं त्रिषु लोकेषु किञ्चन ।
नानवाप्तमवाप्तव्यं वर्त एव च कर्मणि ॥ २२ ॥
ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சன ।
நாநாவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி ॥ 22 ॥
न मे मम पार्थ न अस्ति न विद्यते कर्तव्यं त्रिषु अपि लोकेषु किञ्चन किञ्चिदपि । कस्मात् ? न अनवाप्तम् अप्राप्तम् अवाप्तव्यं प्रापणीयम् , तथापि वर्ते एव च कर्मणि अहम् ॥ २२ ॥
ஹே பார்த்த! மூன்று உலகிலும் எனக்கு செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை. ஏனெனில் எனக்கு அடையாதது ஒன்றும் அடைய வேண்டியதாய் இல்லை. இவ்வாறு இருப்பினும் நான் கர்மத்தில் நிலைபெற்றிருக்கிறேன்.
यदि ह्यहं न वर्तेय जातु कर्मण्यतन्द्रितः ।
मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः ॥ २३ ॥
யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்யதந்த்ரித: ।
மம வர்த்மானுவர்தந்தே மனுஷ்யா: பார்த ஸர்வச: ॥ 23 ॥
यदि हि पुनः अहं न वर्तेय जातु कदाचित् कर्मणि अतन्द्रितः अनलसः सन् मम श्रेष्ठस्य सतः वर्त्म मार्गम् अनुवर्तन्ते मनुष्याः हे पार्थ, सर्वशः सर्वप्रकारैः ॥ २३ ॥
ஏன் எனில் நான் எப்பொழுதாவது நான் சோம்பல் அற்றவனாய் கர்மத்தில் ஈடுபடாவிட்டால் மேலோனாகிறஎன்னுடைய மார்க்கத்தை எவ்வகையிலாவது பின்பற்றுவார்கள்
तथा च को दोष इति आह -
அவ்வாறு இருந்தால் என்ன தோஷம் ஏற்படும் என்று கூறுகிறார்-
उत्सीदेयुरिमे लोका न कुर्यां कर्म चेदहम् ।
सङ्करस्य च कर्ता स्यामुपहन्यामिमाः प्रजाः ॥ २४ ॥
உத்ஸீதேயுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம் ।
ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா: ப்ரஜா: ॥ 24 ॥
उत्सीदेयुः विनश्येयुः इमे सर्वे लोकाः लोकस्थितिनिमित्तस्य कर्मणः अभावात् न कुर्यां कर्म चेत् अहम् । किञ्च, सङ्करस्य च कर्ता स्याम् । तेन कारणेन उपहन्याम् इमाः प्रजाः । प्रजानामनुग्रहाय प्रवृत्तः उपहतिम् उपहननं कुर्याम् इत्यर्थः । मम ईश्वरस्य अननुरूपमापद्येत ॥ २४ ॥
நான் கர்மத்தை அனுஷ்ட்டிக்காவிடில் இந்த எல்லாலோகங் களும் நிலை பெற்றிருத்தலுக்கு காரணமாகிய கர்மம் இல்லாமையால் (எல்லா லோகங்களும்) நசித்துவிடும். மேலும் நான் ஜாதிக் கலப்பை செய்தவனுமாவேன். இந்த காரணத்தினாலே நான் பிராணிகளை கெடுத்தவனாவேன், பிராணிகளை அனுக்கிரஹிப்பதற்கு பிரவிர்த்தித்த நான் அவர்களுக்கு கெடுதல் செய்தவனுமாவேன், ஈஸ்வரனாகிய எனக்கு அது பொருந்தாது.
यदि पुनः अहमिव त्वं कृतार्थबुद्धिः, आत्मवित् अन्यो वा, तस्यापि आत्मनः कर्तव्याभावेऽपि परानुग्रह एव कर्तव्य इत्याह —
நீயாவாது அல்லது வேறு ஒருவனாவது என்னைப்போல் ஆத் மாவை அறிந்ததாலும், க்ருதார்த்த புத்தியை அடைந்திருந்தாலும், அவனுக்கு செய்யவேண்டியது ஒன்றும் இல்லாவிடினும் மற்றவர்களை அனுகிரஹிப்பதின் பொருட்டு கர்மம் அவசியம் செய்யவேண்டும்.
सक्ताः कर्मण्यविद्वांसो यथा कुर्वन्ति भारत ।
कुर्याद्विद्वांस्तथासक्तश्चिकीर्षुर्लोकसङ्ग्रहम् ॥ २५ ॥
ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத ।
குர்யாத்வித்வாம்ஸ்ததாஸக்தச்சிகீர்ஷுஷுர்லோகஸங்க்ரஹம் ॥ 25 ॥
सक्ताः कर्मणि ‘अस्य कर्मणः फलं मम भविष्यति’ इति केचित् अविद्वांसः यथा कुर्वन्ति भारत, कुर्यात् विद्वान् आत्मवित् तथा असक्तः सन् ।
ஹே பாரத! எந்த சில அவித்வான்கள் எனக்கு இந்த கர்மத்தினு டைய பலன் கிடைக்கவேண்டும் என்றபற்றுடன் கர்மத்தை செய்வார் களோ அவ்வாறேவித்வானாகிய ஆத்மவித் (ஆத்மாவை அறிந்தவன்) பற்றற்றவனாய் கர்மத்தை செய்ய வேண்டும்.
तद्वत् किमर्थं करोति ? तत् शृणु — चिकीर्षुः कर्तुमिच्छुः लोकसङ्ग्रहम् ॥ २५ ॥
எதன் பொருட்டு அவ்வாறு செய்கிறான் எனில், உலக நன்மையின் பொருட்டு. (லோகசங்கிரஹார்த்தம்.
एवं लोकसङ्ग्रहं चिकीर्षोः न मम आत्मविदः कर्तव्यमस्ति अन्यस्य वा लोकसङ्ग्रहं मुक्त्वा । ततः तस्य आत्मविदः इदमुपदिश्यते —
உலகத்தின் நன்மையில் இச்சை உடைய ஆத்மவித்தான (பரமாத்மாவாகிய) எனக்கோ அல்லது மற்றஆத்மஞானிக்கோ உலக நன்மையின் பொருட்டு செய்யவேண்டியது இல்லை. ஆகையால் ஆத்மவேத்தாவின் பொருட்டு இந்த உபதேசமானது செய்யப்படுகிறது.
न बुद्धिभेदं जनयेदज्ञानां कर्मसङ्गिनाम् ।
जोषयेत्सर्वकर्माणि विद्वान्युक्तः समाचरन् ॥ २६ ॥
ந புத்திபேதம் ஜனயேதக்ஞானாம் கர்மஸங்கிநாம் ।
ஜோஷயேத்ஸர்வகர்மாணி வித்வான்யுக்த: ஸமாசரன் ॥ 26 ॥
बुद्धेर्भेदः बुद्धिभेदः ‘मया इदं कर्तव्यं भोक्तव्यं चास्य कर्मणः फलम्’ इति निश्चयरूपाया बुद्धेः भेदनं चालनं बुद्धिभेदः तं न जनयेत् न उत्पादयेत् अज्ञानाम् अविवेकिनां कर्मसङ्गिनां कर्मणि आसक्तानां आसङ्गवताम् ।
புத்தியை பேதலிக்கச்செய்வது (கலங்கச்செய்வது) புத்திபேதம் எனப்படும். ஞானியானவன் கர்மத்தில் பற்றுடைய விவேகமற்ற அக்ஞானியினுடைய புத்தியை பேதலிக்கச் செய்யக்கூடாது. எவ்வாறு எனில் நான் அவசியம் செய்யவேண்டிய கர்மா, இந்த கர்மா வினால் ஏற்படும் பலனை நான் அவசியம் அனுபவிக்கவேண்டும் என்ற இந்த அக்ஞானியினுடைய நிச்சயரூபமான புத்தியை பேதலிக்கச் செய்யலாகாது.
किं नु कुर्यात् ? जोषयेत् कारयेत् सर्वकर्माणि विद्वान् स्वयं तदेव अविदुषां कर्म युक्तः अभियुक्तः समाचरन् ॥ २६ ॥
பின் என்ன செய்ய வேண்டும்? சமாஹித சித்தமுடைய வித்வான் அக்ஞானிகளைப் போல அவர்களுடைய கர்மத்தை (சாஸ்திர அனுகூலமான கர்மத்தை) ஊக்கத்தோடு நன்றாக அனுஷ்டித்துக் கொண்டு அவர்களையும் அனுஷ்ட்டிக்கச் செய்யவேண்டும்.
अविद्वानज्ञः कथं कर्मसु सज्जते इत्याह —
அவித்துவானாகிய அக்ஞானி எவ்வாறு கர்மத்தில் பற்றுடைய வனாகின்றான்? என்பதைக் கூறுகிறார்.
प्रकृतेः क्रियमाणानि गुणैः कर्माणि सर्वशः ।
अहङ्कारविमूढात्मा कर्ताहमिति मन्यते ॥ २७ ॥
ப்ரக்ருதே: க்ரியமாணானி குணை: கர்மாணி ஸர்வச: ।
அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே ॥ 27 ॥
प्रकृतेः प्रकृतिः प्रधानं सत्त्वरजस्तमसां गुणानां साम्यावस्था तस्याः प्रकृतेः गुणैः विकारैः कार्यकरणरूपैः क्रियमाणानि कर्माणि लौकिकानि शास्त्रीयाणि च सर्वशः सर्वप्रकारैः ।
ப்ரக்ருதி என்றால் பிரதானம், சத்வ ரஜஸ் தமஸ் ஆகிய முக்கு ணங்களின் ஸாம்யாவஸ்தை. அந்த பிரகிருதியாக முக்குணங்களின் காரிய காரண ரூபமான விகாரங்களிலிருந்து லௌகிகமான சாஸ்த்ரீயமான எல்லா கர்மாக்களும் செய்யப்படுகின்றன.
अहङ्कारविमूढात्मा कार्यकरणसङ्घातात्मप्रत्ययः अहङ्कारः तेन विविधं नानाविधं मूढः आत्मा अन्तःकरणं यस्य सः अयं कार्यकरणधर्मा कार्यकरणाभिमानी अविद्यया कर्माणि आत्मनि मन्यमानः तत्तत्कर्मणाम् अहं कर्ता इति मन्यते ॥ २७ ॥
அஹங்கார விமூடாத்மா என்றால் காரிய காரண சங்காத ரூப சரீரத்தில் ஆத்மபாவனை செய்தலே அஹங்காரமாகும். அந்த அஹங்காரத்தினால் பலவிதமாக மோஹமடைந்த அந்தக்கரணம் எவனுக்குள்ளதோ அவன் (விமூடாத்மா) காரிய கரண (சரீர) தர்மங்களை தன்னுடைய தர்மங்களாக நினைத்த தேஹத்தில் அபிமானமுள்ள புருடன் அவித்யாவசத்தால் ஏற்பட்ட கர்மங்களை தன்னுடையதாக நினைத்து நான் இந்த கர்மங்களுக்கு கர்த்தா என்று நினைத்துக் கொள்கிறான்.
यः पुनः विद्वान् —
மேலும் எந்த வித்வான்
तत्त्ववित्तु महाबाहो गुणकर्मविभागयोः ।
गुणा गुणेषु वर्तन्त इति मत्वा न सज्जते ॥ २८ ॥
தத்வவித்து மஹாபாஹோ குணகர்மவிபாகயோ: ।
குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே ॥ 28 ॥
तत्त्ववित् तु महाबाहो । कस्य तत्त्ववित् ? गुणकर्मविभागयोः गुणविभागस्य कर्मविभागस्य च तत्त्ववित् इत्यर्थः । गुणाः करणात्मकाः गुणेषु विषयात्मकेषु वर्तन्ते न आत्मा इति मत्वा न सज्जते सक्तिं न करोति ॥ २८ ॥
ஹே மஹாபாஹோ! தத்வவித் து எவரெனில்? குணங்களினு டைய பிரிவுகளையும் கர்மங்களினுடைய பிரிவுகளையும் அறிந்த வனே தத்வவித். இந்திரியாதி ரூப குணங்கள் விஷயரூப குணங்களில் செயல்படுகின்றன. ஆனால் ஆத்மா செயல்படுவதில்லை என்று அறிந்து கர்மத்தில் பற்று அற்றவனாய் இருப்பான்.
(பின்குறிப்பு- த்ரிகுணாத்மிகமான மாயையினுடைய காரியமே பஞ்சபூதங்கள், மனம், புத்தி, அகங்காரம் அவ்வாறேபஞ்சகர்மேந்திரி யங்கள், சப்த முதலிய பஞ்ச விஷயங்கள் இவைகளுடைய சமுதாயமே குணவிபாகம், எனப்படுகிறது. மேலும் இவைகளுடைய பரஸ்பர செயல்கள் கர்மவிபாகம் எனப்படுகிறது.)
ये पुनः —
மேலும் எவர்கள்-
प्रकृतेर्गुणसंमूढाः सज्जन्ते गुणकर्मसु ।
तानकृत्स्नविदो मन्दान्कृत्स्नविन्न विचालयेत् ॥ २९ ॥
ப்ரக்ருதேர்குணஸம்மூடா: ஸஜ்ஜந்தே குணகர்மஸு ।
தானக்ருத்ஸ்னவிதோ மந்தான்க்ருத்ஸ்னவின்ன விசாலயேத் ॥ 29 ॥
प्रकृतेः गुणैः सम्यक् मूढाः संमोहिताः सन्तः सज्जन्ते गुणानां कर्मसु गुणकर्मसु ‘वयं कर्म कुर्मः फलाय’ इति | तान् कर्मसङ्गिनः अकृत्स्नविदः कर्मफलमात्रदर्शिनः मन्दान् मन्दप्रज्ञान् कृत्स्नवित् आत्मवित् स्वयं न विचालयेत् ।
பிரக்ருதியின் குணங்களால் நன்றாக மோஹமடைந்தவர்கள் பலத்தின் பொருட்டு நாங்கள் கர்மங்கள் செய்கின்றோம் என்று இவ்வாறு குணகர்மங்களில் பற்றுடையவர்களாகிறார்கள். அந்த கர் மத்தில் பற்றுடைய முழுமையை (பூர்ணத்தை) அறியாத கர்ம பலத்தில் மாத்திரம் இச்சை உடைய மந்த பிரக்ஞை (புத்தி) உடையவர்களை, எல்லாவற்றையும் (பூர்ணத்தை) அறிந்தவர்களாகிய ஆத்மவித் பேதலிக்கச் செய்யலாகாது. (கலங்கச் செய்யலாகாது)
बुद्धिभेदकरणमेव चालनं तत् न कुर्यात् इत्यर्थः ॥ २९ ॥
புத்தியை பேதலிக்கச் செய்வதே கலங்கும்படி செய்தல் அவ்வாறு செய்யக்கூடாது என்பதே இதன் பொருள்.
कथं पुनः कर्मण्यधिकृतेन अज्ञेन मुमुक्षुणा कर्म कर्तव्यमिति, उच्यते —
மேலும் கர்மத்தில் அதிகாரமுடைய அக்ஞானியாகிய முமுக்ஷு எவ்வாறு கர்மம் செய்யவேண்டும்? என்று கூறுகிறார்.
मयि सर्वाणि कर्माणि संन्यस्याध्यात्मचेतसा ।
निराशीर्निर्ममो भूत्वा युध्यस्व विगतज्वरः ॥ ३० ॥
மயி ஸர்வாணி கர்மாணி ஸந்த்யஸ்யாத்யாத்மசேதஸா ।
நிராசீர்னிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர: ॥ 30 ॥
मयि वासुदेवे परमेश्वरे सर्वज्ञे सर्वात्मनि सर्वाणि कर्माणि संन्यस्य निक्षिप्य अध्यात्मचेतसा विवेकबुद्ध्या ‘अहं कर्ता ईश्वराय भृत्यवत् करोमि’ इत्यनया बुद्ध्या ।
சர்வாத்மாவாயும், பரமேச்வரனாயும், ஸர்வக்ஞனாயும் உள்ள வாஸுதேவனாகிய என்னிடத்தில் அர்ப்பணித்து நன்கு பண்படுத்தப் பட்ட விவேக புத்தியால் கர்த்தாவாகிய நான் ஈஸ்வரனுடைய பணியாள் போல் (கர்மங்களை) செய்கிறேன் என்றபுத்தியால்
किं च, निराशीः त्यक्ताशीः निर्ममः ममभावश्च निर्गतः यस्य तव स त्वं निर्ममो भूत्वा युध्यस्व विगतज्वरः विगतसन्तापः विगतशोकः सन्नित्यर्थः ॥ ३० ॥
மேலும் ஆசையை துறந்தவனாகி மமகாரத்தை விட்டவ னுமாகி மனங்கலங்கி துயரமுறாமல் யுத்தத்தைச் செய்.
यदेतन्मम मतं कर्म कर्तव्यम् इति सप्रमाणमुक्तं तत् तथा —
அக்ஞானியாகிய முமுக்ஷ கர்மத்தை அவசியம் செய்ய வேண்டும் என்றஎனது அபிப்பிராயத்தை பிரமாணத்துடன் சொல்லப் பட்டது என்றகொள்கையை அவ்வாறு-
ये मे मतमिदं नित्यमनुतिष्ठन्ति मानवाः ।
श्रद्धावन्तोऽनसूयन्तो मुच्यन्ते तेऽपि कर्मभिः ॥ ३१ ॥
யே மே மதமிதம் நித்யமனுதிஷ்டந்தி மானவா: ।
ச்ரத்தாவந்தோஅனஸூயந்தோ முச்யந்தே தேஅபி கர்மபி: ॥ 31 ॥
ये मे मदीयम् इदं मतं नित्यम् अनुतिष्ठन्ति अनुवर्तन्ते मानवाः मनुष्याः श्रद्धावन्तः श्रद्धधानाः अनसूयन्तः असूयां च मयि परमगुरौ वासुदेवे अकुर्वन्तः, मुच्यन्ते तेऽपि एवं भूताः कर्मभिः धर्माधर्माख्यैः ॥ ३१ ॥
எவர்கள் என்னுடைய கொள்கைகளை அனுஷ்ட்டிக்கிறார் களோ அந்த சிரத்தையுடன் கூடிய மனிதர்கள் குரு ரூபமான வாசுதே வனாகிய என்னிடத்தில் தோஷத்தைக் கல்பிக்கவில்லையோ (பார்க்க வில்லையோ) அப்படிப்பட்டவர்கள் புண்யபாப ரூபமான கர்மங்களிலி ருந்து விடுபடுகிறார்கள்.
ये त्वेतदभ्यसूयन्तो नानुतिष्ठन्ति मे मतम् ।
सर्वज्ञानविमूढांस्तान्विद्धि नष्टानचेतसः ॥ ३२ ॥
யே த்வேததப்யஸூயந்தோ நானுதிஷ்டந்தி மே மதம் ।
ஸர்வக்ஞானவிமூடாம்ஸ்தாந்வித்தி நஷ்டானசேதஸ: ॥ 32 ॥
ये तु तद्विपरीताः एतत् मम मतम् अभ्यसूयन्तः निन्दन्तः न अनुतिष्ठन्ति नानुवर्तन्ते मे मतम् , सर्वेषु ज्ञानेषु विविधं मूढाः ते । सर्वज्ञानविमूढान् तान् विद्धि जानीहि नष्टान् नाशं गतान् अचेतसः अविवेकिनः ॥ ३२ ॥
எவர்கள் இதற்கு விபரீதமானவர்களோ என்னுடைய கொள்கை யில் தோஷத்தைக் கல்பித்து அதனால் (என்னுடைய கொள்கைக ளின்படி) அதை அனுஷ்ட்டிக்காதவர்கள் எல்லா ஞானங்களிலும் எல்லாவிதத்திலும் மூடர்கள் (அவிவேகிகள்). எல்லா ஞானங்க ளிலும் மோஹத்தை அடைந்த அவிவேகிகள் நாசத்தை அடைவார்கள்.
कस्मात् पुनः कारणात् त्वदीयं मतं नानुतिष्ठन्ति, परधर्मान् अनुतिष्ठन्ति, स्वधर्मं च नानुवर्तन्ते, त्वत्प्रतिकूलाः कथं न बिभ्यति त्वच्छासनातिक्रमदोषात् ? तत्राह —
மேலும் எந்த காரணத்தினால் தங்களுடைய கொள்கையை அனுஷ்ட்டிப்பதில்லை? வேறு தர்மத்தை அனுஷ்ட்டிக்கிறார்கள். மேலும் ஸ்வதர்மத்தை ஏன் அனுஷ்ட்டிப்பதில்லை? உங்களுக்கு பிரதிகூலமாக இருந்துகொண்டு உங்களுடைய கட்டளைகளை உதாசீனப்படுத்துவதால் உண்டாகும் தோஷங்களுக்கு ஏன் பயப்படுவதில்லை? அதற்குக் கூறுகிறார்.
सदृशं चेष्टते स्वस्याः प्रकृतेर्ज्ञानवानपि ।
प्रकृतिं यान्ति भूतानि निग्रहः किं करिष्यति ॥ ३३ ॥
ஸத்ருசம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர்க்ஞானவானபி ।
ப்ரக்ருதிம் யாந்தி பூதானி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி ॥ 33 ॥
सदृशम् अनुरूपं चेष्टते चेष्टां करोति | कस्य ? स्वस्याः स्वकीयायाः प्रकृतेः । प्रकृतिर्नाम पूर्वकृतधर्माधर्मादिसंस्कारः वर्तमानजन्मादौ अभिव्यक्तः ; सा प्रकृतिः । तस्याः सदृशमेव सर्वो जन्तुः ज्ञानवानपि चेष्टते, किं पुनर्मूर्खः ।
எல்லாப் பிராணிகளும் அவ்வாறேஞானியும் செய்கையை செய் கிறான். எவர்களுடையது? எவ்வாறு? தங்களுடைய சுவபாவத்திற்கு ஏற்ப செயல்படுகிறான். சுபாவம் என்றால் பிறப்பின் தொடக்கத்தில் வெளிப்பட்டதும் முந்திய ஜன்மங்களில் செய்யப்பட்ட புண்ணிய பாபங்கள் முதலியவற்றின் வாசனை. அதுவே பிரகிருதி அதற்கேற்ப எல்லோரும் என்றால் ஞானிகளும் கூடபிரவிர்த்திக்கிறார்கள். மூடர்களைப் பற்றி என்ன கூறுவது.
तस्मात् प्रकृतिं यान्ति अनुगच्छन्ति भूतानि प्राणिनः । निग्रहः निषेधरूपः किं करिष्यति मम वा अन्यस्य वा ॥ ३३ ॥
ஆகையால் எல்லாப்பிராணிகளும் ஸ்வபாவத்தை (புண்ய பாபங் களை) பின்பற்றுகிறார்கள். ஆகையால் நானோ, மற்றவர்களோ எவ் வாறு அதை தடுத்து நிறுத்த முடியும்.
यदि सर्वो जन्तुः आत्मनः प्रकृतिसदृशमेव चेष्टते, न च प्रकृतिशून्यः कश्चित् अस्ति, ततः पुरुषकारस्य विषयानुपपत्तेः शास्त्रानर्थक्यप्राप्तौ इदमुच्यते —
எல்லாப்பிராணிகளும் தங்களுடைய சுவபாவத்திற்கு ஏற்றவாறு பிரவிர்த்திக்கின்றார்கள். சுபாவமற்று ஒருவரும் இல்லை எனில் அதனால் புருஷ ப்ரயத்னத்திற்கு இடமில்லாமையால் சாஸ்திரம் வீண் என்றஅர்த்தம் பிராப்தமாகும் என்றவிடத்து இதைக் கூறுகிறார்.
इन्द्रियस्येन्द्रियस्यार्थे रागद्वेषौ व्यवस्थितौ ।
तयोर्न वशमागच्छेत्तौ ह्यस्य परिपन्थिनौ ॥ ३४ ॥
இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்தே ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ ।
தயோர்ந வசமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்தினௌ ॥ 34 ॥
इन्द्रियस्येन्द्रियस्य अर्थे सर्वेन्द्रियाणामर्थे शब्दादिविषये इष्टे रागः अनिष्टे द्वेषः इत्येवं प्रतीन्द्रियार्थं रागद्वेषौ अवश्यंभाविनौ ।
எல்லா இந்திரியங்களுக்கும் சப்தாதி விஷயங்களில் இஷ்ட்டமான விஷயத்தில் ராகமும், அநிஷ்ட்டமான விஷயத்தில் துவேஷமும் ஏற்படுவதினால் ஒவ்வொரு இந்திரிய விஷயத்திலும் ராக, த்வேஷமானது அவசியம் ஏற்படும்.
तत्र अयं पुरुषकारस्य शास्त्रार्थस्य च विषय उच्यते ।
அங்கு புருஷப் பிரயத்தினத்தையும், சாஸ்திரத்தினுடைய அவசியத்தைப் பற்றிய விஷயத்தையும் கூறுகிறார்.
शास्त्रार्थे प्रवृत्तः पूर्वमेव रागद्वेषयोर्वशं नागच्छेत् ।
சாஸ்திர விஷயத்தில் பிரவிர்த்தித்தவன் முதலிலேயே (முன்பே) ராகதுவேஷங்களின் வசம் ஆகக்கூடாது.
या हि पुरुषस्य प्रकृतिः सा रागद्वेषपुरःसरैव स्वकार्ये पुरुषं प्रवर्तयति । तदा स्वधर्मपरित्यागः परधर्मानुष्ठानं च भवति ।
எந்த ஒரு புருஷனுடைய சுபாவமானது (பிரகிருதியானது) ராகத்வேஷ பூர்வகமாக மனுஷ்யனை தன்னுடைய காரியத்தில் ஈடுபடுத்துகிறதோ அப்பொழுது சுவ தர்மத்தை விட்டு பரதர்ம அனுஷ்ட்டானத்தில் ஈடுபடுத்துகிறது.
यदा पुनः रागद्वेषौ तत्प्रतिपक्षेण नियमयति तदा शास्त्रदृष्टिरेव पुरुषः भवति, न प्रकृतिवशः ।
மேலும் எப்பொழுது ராகத்வேஷத்தை தடுத்து நிறுத்துகிறானோ அப்பொழுது அந்த புருஷனுக்கு சாஸ்த்திர த்ருஷ்ட்டி ஏற்படுகிறது. அவன் பிரகிருதி வசமாகிறதில்லை.
तस्मात् तयोः रागद्वेषयोः वशं न आगच्छेत् , यतः तौ हि अस्य पुरुषस्य परिपन्थिनौ श्रेयोमार्गस्य विघ्नकर्तारौ तस्करौ इव पथीत्यर्थः ॥ ३४ ॥
ஆகையால் அந்த ராகதுவேஷங்கள் வசம் ஆகக்கூடாது. ஏன்எனில் அந்த புருஷனுடைய மேலான மார்க்கத்தில் தடையை உண்டாக்குகின்றதிருடர்களைப் போல், அவை (ராகத்துவேஷம்) உள்ளன என்பது பொருள்.
तत्र रागद्वेषप्रयुक्तो मन्यते शास्त्रार्थमप्यन्यथा ‘परधर्मोऽपि धर्मत्वात् अनुष्ठेय एव’ इति, तदसत् —
ராகதுவேஷமுடைய புருஷன் பரதர்மமும் சாஸ்திரத்தில் கூறிய தர்மம்தான். ஆகையால் தன்னால் அனுஷ்டிக்க வேண்டியதுதான் என்று சாஸ்திரத்தின் அர்த்தத்தை மாறாக புரிந்துகொள்கிறான். அது சரியன்று–
श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्ठितात् ।
स्वधर्मे निधनं श्रेयः परधर्मो भयावहः ॥ ३५ ॥
ச்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத் ।
ஸ்வதர்மே நிதனம் ச்ரேய: பரதர்மோ பயாவஹ: ॥ 35 ॥
श्रेयान् प्रशस्यतरः स्वो धर्मः स्वधर्मः विगुणः अपि विगतगुणोऽपि अनुष्ठीयमानः परधर्मात् स्वनुष्ठितात् साद्गुण्येन सम्पादितादपि ।
பரதர்மத்தை முறைப்படி நன்றாக அனுஷ்ட்டிப்பதைக் காட்டிலும் சுவதர்மத்தை குறைவாக அனுஷ்ட்டிப்பதாலும், சுவதர்மமே மேலானது.
स्वधर्मे स्थितस्य निधनं मरणमपि श्रेयः परधर्मे स्थितस्य जीवितात् । कस्मात् ? परधर्मः भयावहः नरकादिलक्षणं भयमावहति यतः ॥
பரதர்மத்தில் ஈடுபட்டு அனுஷ்ட்டானம் செய்கின்றவனுடைய ஜீவனத்தைக் (வாழ்வினைக்) காட்டிலும், தன் தர்மத்தை அனுஷ்ட்டிக் கின்றவனுடைய மரணம் மேலானது. ஏன் எனில் பரதர்மமானது நரகாதிரூப பயத்தை அளிக்கக்கூடியது.
த்யாயதோ விஷயான் பும்ஸ: ராகத்வேஷௌ ஹ்யஸ்ய பரிபந்தி நௌ, முதலிய பிரகரணத்தால் அனர்த்தத்தினுடைய மூலகாரணம் கூறப்பட்டது. மேலும் அது வெவ்வேறு பிரகரணங் களில் சிதறிக்கிடப் பதாயும், நிச்சயமற்றதாயும் கூறிய (விஷயத்தை) தை சுருக்கமாகவும், நிச்சயமாகவும் (உறுதியாகவும்) இதுதான் என்று அறிந்து கொள்ள விரும்பி அதை நன்றாக தெரிந்து கொண்டால் அல்லவா அதில் முயற்சியை மேற்கொள்ள முடியும் என்று அர்ஜுனன் கூறினான்.
अर्जुन उवाच —
அர்ஜுனன் சொல்கிறார்.
अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पूरुषः ।
अनिच्छन्नपि वार्ष्णेय बलादिव नियोजितः ॥ ३६ ॥
அத கேன ப்ரயுக்தோஅயம் பாபம் சரதி பூருஷ: ।
அநிச்சன்னபி வார்ஷ்ணேய பலாதிவ நியோர்ஜித: ॥ 36 ॥
अथ केन हेतुभूतेन प्रयुक्तः सन् राज्ञेव भृत्यः अयं पापं कर्म चरति आचरति पूरुषः स्वयम् अनिच्छन् अपि हे वार्ष्णेय वृष्णिकुलप्रसूत, बलात् इव नियोजितः राज्ञेव इत्युक्तो दृष्टान्तः ॥ ३६ ॥
ஹே வார்ஷ்ணேய! (கிருஷ்ணா) எந்த பிரதான காரணத்தினால் தூண்டப்பட்ட புருஷன் அவன் விரும்பாவிடினும், ராஜாவினால் ஏவப்பட்ட சேவகனைப் போல் என்ற திருஷ்ட்டாந்தத்தின்படி பலவந்தமாக பாபகர்மத்தைச் செய்கிறான்?
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச
काम एष क्रोध एष रजोगुणसमुद्भवः ।
महाशनो महापाप्मा विद्ध्येनमिह वैरिणम् ॥ ३७ ॥
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ: ।
மஹாசனோ மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம் ॥ 37 ॥
शृणु त्वं तं वैरिणं सर्वानर्थकरं यं त्वं पृच्छसि इति — ‘ऐश्वर्यस्य समग्रस्य धर्मस्य यशसः श्रियः । वैराग्यस्याथ मोक्षस्य षण्णां भग इतीङ्गना’ (वि. पु. ६ । ५ । ७४) ऐश्वर्यादिषट्कं यस्मिन् वासुदेवे नित्यमप्रतिबद्धत्वेन सामस्त्येन च वर्तते, ‘उत्पत्तिं प्रलयं चैव भूतानामागतिं गतिम् । वेत्ति विद्यामविद्यां च स वाच्यो भगवानिति’ (वि. पु. ६ । ५ । ७८) उत्पत्त्यादिविषयं च विज्ञानं यस्य स वासुदेवः वाच्यः भगवान् इति ॥
நீ எந்த எல்லா அனர்த்தங்களைச் செய்யும் விரோதியைப் பற்றி கேட்டாயோ அதைக் கேள் என்று பகவான் கூறுகிறார்-
ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய தர்மஸ்ய யசஸ: ச்ரிய: வைராக்யஸ்யாத மோக்ஷஸ்ய ஷண்ணாம் பக இதீரணா
சம்பூர்ணமான ஐஸ்வர்யம், தர்மம், புகழ், செல்வம், வைராக்கியம், மோக்ஷம் ஆகிய இந்த ஆறும் பகம் எனப்படும். இந்த அறுவகை குணங்களும் பிரதிபந்தமற்று, சம்பூர்ணமாக எப்பொழுதும் இந்த வாசுதேவனிடத்தில் நிலைபெற்றிருக்கிறது என்று விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
உத்பத்திம் ப்ரலயம் சைவ பூதானாமாகதிம் கதிம் வேத்தி வித்யாமவித்யாம் ச ஸ வாச்யோ பகவானிதி
உற்பத்தி, பிரளயம், பிராணிகளுடைய போக்குவரத்து அவ்வாறேஅவித்யை மற்றும் வித்யை ஆகிய இவைகளை எவர் அறிந்திருக்கிறாரோ அவர் பகவான் என்று விஷ்ணுபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் உற்பத்தி முதலிய விஷயங்க ளைப் பற்றிய ஞானம் எந்த வாசுதேவனிடத்தில் உள்ளதோ அவர் பகவான் என்றநாமத்திற்கு உரியவர்.
काम एषः सर्वलोकशत्रुः यन्निमित्ता सर्वानर्थप्राप्तिः प्राणिनाम् । स एष कामः प्रतिहतः केनचित् क्रोधत्वेन परिणमते । अतः क्रोधः अपि एष एव ।
எல்லா உலகங்களுக்கும் சத்துருவாகிய காமத்தின் நிமித்தத்தால் எல்லா பிராணிகளுக்கும் எல்லா அனர்த்தங்களும் ஏற்படுகிறது. அந்த காமமானது ஏதாவது ஒரு காரணத்தினால் தடைப்பட்டு நாசமடைந்தால் அதுவே க்ரோதமாக பரிணமிக்கிறது. ஆகையால் க்ரோதமும் காமம்தான்.
रजोगुणसमुद्भवः रजश्च तत् गुणश्च रजोगुणः सः समुद्भवः यस्य सः कामः रजोगुणसमुद्भवः, रजोगुणस्य वा समुद्भवः । कामो हि उद्भूतः रजः प्रवर्तयन् पुरुषं प्रवर्तयति ।
அந்தக் காமமானது ரஜோகுணத்திலிருந்து உண்டாகிறது. அல் லது அந்த காமமே ரஜோகுணத்தை உற்பத்தி செய்யக்கூடியதாய் இருக்கிறது. ஏன் எனில் உத்பன்னமான காமம்தான் ரஜோகுணத்தை வெளிப்படுத்தி புருஷனை கர்மங்களில் பிரவிர்த்திக்கச் செய்கிறது.
‘तृष्णया हि अहं कारितः’ इति दुःखिनां रजःकार्ये सेवादौ प्रवृत्तानां प्रलापः श्रूयते ।
அவ்வாறேரஜோகுணத்தினுடைய காரியமாகிய சேவை முதலிய கர்மங்களினால் துக்கத்தை அடைந்த மனிதர்கள், ஆசையினால் அல்லவா நான் அடிமையாகி இந்த காரியங்களை செய்து கொண்டி ருக்கிறேன் என்று வருந்துகிறார்கள்.
महाशनः महत् अशनं अस्येति महाशनः ; अत एव महापाप्मा ; कामेन हि प्रेरितः जन्तुः पापं करोति । अतः विद्धि एनं कामम् इह संसारे वैरिणम् ॥ ३७ ॥
(காமமானது) மிகுந்த பசி உடையதால் அதிகமாக சாப்பிடக்கூடி யது. ஆகையால் மஹாபாபி காமத்தினால் தூண்டப்பட்டல்லவா ஜீவன் பாபத்தைச் செய்கிறது. ஆகையால் இந்த காமம் தான் இந்த சம்சாரத்தின் விரோதி என்று அறி.
कथं वैरी इति दृष्टान्तैः प्रत्याययति —
எவ்வாறு அது விரோதி என்று திருஷ்ட்டாந்தங்களினால் தெளிவுபடுத்துகிறார்.
धूमेनाव्रियते वह्निर्यथादर्शो मलेन च ।
यथोल्बेनावृतो गर्भस्तथा तेनेदमावृतम् ॥ ३८ ॥
தூமேநாவ்ரியதே வஹ்நிர்யதாதர்சோ மலேன ச ।
யதோல்பேநாவ்ருதோ கர்பஸ்ததா தேனேதமாவ்ருதம் ॥ 38 ॥
धूमेन सहजेन आव्रियते वह्निः प्रकाशात्मकः अप्रकाशात्मकेन, यथा वा आदर्शो मलेन च, यथा उल्बेन च जरायुणा गर्भवेष्टनेन आवृतः आच्छादितः गर्भः तथा तेन इदम् आवृतम् ॥ ३८ ॥
பிரகாசரூபமான அக்னியை தன்னிடத்தில் சுவபாவமாகவே உண்டான பிரகாசமற்றபுகையானது எவ்வாறு மறைக்கிறதோ, மேலும் கண்ணாடியானது அழுக்காலும், கர்ப்பமானது தோல்பையாலும் எவ்வாறு மறைக்கப்படுகிறதோ அவ்வாறு கர்மத்தினால் இது (ஞானமானது) மறைக்கப்படுகிறது.
किं पुनस्तत् इदंशब्दवाच्यं यत् कामेनावृतमित्युच्यते —
மேலும் அந்த, இதம், (இது) சப்த வாக்கியமானது எந்த காமத்தினால் மறைக்கப்பட்டுள்ளது என்பதைக் கூறுகிறார்.
आवृतं ज्ञानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा ।
कामरूपेण कौन्तेय दुष्पूरेणानलेन च ॥ ३९ ॥
ஆவ்ருதம் க்ஞானமேதேந க்ஞாநினோ நித்யவைரிணா ।
காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணாநலேன ச ॥ 39 ॥
आवृतम् एतेन ज्ञानं ज्ञानिनः नित्यवैरिणा, ज्ञानी हि जानाति ‘अनेन अहमनर्थे प्रयुक्तः’ इति पूर्वमेव । दुःखी च भवति नित्यमेव । अतः असौ ज्ञानिनो नित्यवैरी, न तु मूर्खस्य । स हि कामं तृष्णाकाले मित्रमिव पश्यन् तत्कार्ये दुःखे प्राप्ते जानाति ‘तृष्णया अहं दुःखित्वमापादितः’ इति, न पूर्वमेव । अतः ज्ञानिन एव नित्यवैरी ।
ஞானியினுடைய நித்திய விரோதியான இதனால் (இந்த காமத்தினால்) ஞானமானது மறைக்கப்பட்டிருக்கிறது. ஞானிக்கு (முன்பே) முதலிலேயே நான் இந்த காமத்தினால் அநர்த்தத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளேன் என்று தெரிகிறது. ஆகையால் எப்பொழுதும் துக்கம் உடையவனாகின்றான். ஆகையால் இந்தக் காமமானது ஞானிக்கு நித்திய விரோதி. மூடனுக்கு (விரோதி) அல்ல. அந்த மூடன் (விஷயத்தில்) இச்சை ஏற்படும் சமயத்தில் காமத்தை நண்பனைப் போல் பாவிக்கின்றான். அந்த காரியத்தினால் துக்கம் ஏற்படும் பொழுது நான் விஷய இச்சையினால் அல்லவா துக்கத்தை அடைந்தேன் என்று உணர்கின்றான் இதை அவன் முதலிலேயே உணர்வதில்லை. ஆகையால் ஞானிக்குத்தான் காமம் நித்யவிரோதி.
किंरूपेण ? कामरूपेण कामः इच्छैव रूपमस्य इति कामरूपः तेन दुष्पूरेण दुःखेन पूरणमस्य इति दुष्पूरः तेन अनलेन न अस्य अलं पर्याप्तिः विद्यते इत्यनलः तेन च ॥ ३९ ॥
எவ்வாறு எனில் காமத்தினால் (ஞானமானது மறைக்கப் பட்டுள்ளது) காமனை என்றால் இச்சை. இச்சைதான் அதனுடைய ஸ்வரூபம். இந்த காமனையை பூர்த்தி செய்வது மிகக்கடினம். ஆகை யால் இதை அலம் என்கிறோம். விஷய போகங்களினால் இதை ஒரு போதும் திருப்தி படுத்தமுடியாது. இவ்வாறு காமரூமான விரோதியால் (ஞானமானது மறைக்கப்பட்டுள்ளது)
(அலம் என்றால் திருப்தி. எதற்கு திருப்தி இல்லையோ அது அநலம்)
किमधिष्ठानः पुनः कामः ज्ञानस्य आवरणत्वेन वैरी सर्वस्य लोकस्य ? इत्यपेक्षायामाह, ज्ञाते हि शत्रोरधिष्ठाने सुखेन निबर्हणं कर्तुं शक्यत इति —
மேலும் காமமானது ஞானத்தை மறைப்பதால் எல்லோருக்கும் விரோதி. அந்தக் காமம் எதில் நிலைபெற்றுள்ளது? என்று கவனிக் கும் இடத்துக் கூறுகின்றார். விரோதியின் இருப்பிடத்தை அறிந்தால் அல்லவா விரோதியை நாசம் செய்யமுடியும். இதைப்பற்றி கூறுகிறார்.
इन्द्रियाणि मनो बुद्धिरस्याधिष्ठानमुच्यते ।
एतैर्विमोहयत्येष ज्ञानमावृत्य देहिनम् ॥ ४० ॥
இந்த்ரியாணி மநோ புத்திரஸ்யாதிஷ்டானமுச்யதே ।
ஏதைர்விமோஹயத்யேஷ க்ஞானமாவ்ருத்ய தேஹிநம் ॥ 40 ॥
इन्द्रियाणि मनः बुद्धिश्च अस्य कामस्य अधिष्ठानम् आश्रयः उच्यते । एतैः इन्द्रियादिभिः आश्रयैः विमोहयति विविधं मोहयति एष कामः ज्ञानम् आवृत्य आच्छाद्य देहिनं शरीरिणम् ॥ ४० ॥
இந்திரியங்கள், மனம், புத்தி இவைகள் அந்த காமத்தின் இருப்பிடம் என்று கூறப்படுகிறது. இந்த காமமானது இந்த ஆச்ரியபூதமான இந்திரியங்கள் வழியாக ஞானத்தை மறைத்து இந்த ஜீவாத்மாவை அநேக விதமாக மோஹிக்கச் செய்கிறது.
यतः एवम् —
எதனால் இவ்வாறோ-
तस्मात्त्वमिन्द्रियाण्यादौ नियम्य भरतर्षभ ।
पाप्मानं प्रजहिह्येनं ज्ञानविज्ञाननाशनम् ॥ ४१ ॥
தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப ।
பாப்மானம் ப்ரஜஹி ஹ்யேனம் க்ஞானவிக்ஞானநாசனம் ॥ 41 ॥
तस्मात् त्वम् इन्द्रियाणि आदौ पूर्वमेव नियम्य वशीकृत्य भरतर्षभ पाप्मानं पापाचारं कामं प्रजहिहि परित्यज एनं प्रकृतं वैरिणं ज्ञानविज्ञाननाशनं ।
ஆகையால் ஹே பரதரிஷப! நீ முதலில் இந்திரியங்களை வசப்படுத்தி ஞான விக்ஞானங்களை நாசம் செய்கின்றஇந்த எதிரியாகிய பாபத்தைச் செய்கிறகாமத்தை விட்டுவிடு.
ज्ञानं शास्त्रतः आचार्यतश्च आत्मादीनाम् अवबोधः, विज्ञानं विशेषतः तदनुभवः, तयोः ज्ञानविज्ञानयोः श्रेयःप्राप्तिहेत्वोः नाशनं नाशकरं प्रजहिहि आत्मनः परित्यजेत्यर्थः ॥ ४१ ॥
ஞானம் என்றால் சாஸ்திரத்தாலும், ஆச்சாரிய உபதேசத்தாலும் ஏற்படும் ஆத்மா முதலியவற்றின் அறிவு. விக்ஞானம் என்றால் அவற்றின் சிறப்பான அனுபவம். அந்த ச்ரேயஸ்ஸை அடைவதற்குக் காரணமான ஞான விக்ஞானங்களை கெடுக்கின்ற(காமத்தை)தை உன்னிடத்திலிருந்து நீக்கிவிடு என்பது பொருள்.
इन्द्रियाण्यादौ नियम्य कामं शत्रुं जहिहि इत्युक्तम् ; तत्र किमाश्रयः कामं जह्यात् इत्युच्यते —
முதலில் இந்திரியங்களை அடக்கி காமமாகிய சத்ருவை நீக்கு என்று முன்பு கூறப்பட்டது. அங்கு எதை ஆச்ரயித்து காமத்தை நீக்க வேண்டும் என்று கூறுகிறார்.
इन्द्रियाणि पराण्याहुरिन्द्रियेभ्यः परं मनः ।
मनसस्तु परा बुद्धिर्यो बुद्धेः परतस्तु सः ॥ ४२ ॥
இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய: பரம் மன: ।
மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்து ஸ: ॥ 42 ॥
इन्द्रियाणि श्रोत्रादीनि पञ्च देहं स्थूलं बाह्यं परिच्छिन्नं च अपेक्ष्य सौक्ष्म्यान्तरत्वव्यापित्वाद्यपेक्षया पराणि प्रकृष्टानि आहुः पण्डिताः ।
பண்டிதர்கள் பரிச்சின்னமாயும் பாஹ்யமாயும் உள்ள ஸ்தூல சரீரத்தைக் காட்டிலும், சூக்ஷ்மதன்மையும், உள்ளே இருக்கும் தன்மை யும், வியாபகத் தன்மையும் இருப்பதால் சுரோத்ராதி பஞ்ச இந்திரியங் கள் மேலானது என்று கூறுகிறார்கள்.
तथा इन्द्रियेभ्यः परं मनः सङ्कल्पविकल्पात्मकम् । तथा मनसः तु परा बुद्धिः निश्चयात्मिका ।
அவ்வாறேஇந்திரியங்களைக் காட்டிலும் சங்கல்பவிகல்பக ஆத்மகமான மனது மேலானது. அவ்வாறேமனதைக் காட்டிலும் நிச்சயாத்மகமான புத்தி மேலானது.
तथा यः सर्वदृश्येभ्यः बुद्ध्यन्तेभ्यः आभ्यन्तरः, यं देहिनम् इन्द्रियादिभिः आश्रयैः युक्तः कामः ज्ञानावरणद्वारेण मोहयति इत्युक्तम् । बुद्धेः परतस्तु सः, सः बुद्धेः द्रष्टा पर आत्मा ॥ ४२ ॥
இவ்வாறு எவர் (தேஹம் முதல் புத்தி ஈறாக உள்ள பதார்த்தங்களில் அந்தர்யாமியாய் இருக்கிறதோ, எந்த காமமானது இந்திரியாதிகளை ஆசிரயித்து ஞானத்தை மறைப்பதால் தேஹியை மோஹமடையச் செய்கின்றது என கூறப்பட்டதோ அது புத்தியின் த்ருஷ்ட்டா பரமாத்மா.
एवं बुद्धेः परं बुद्ध्वा संस्तभ्यात्मानमात्मना ।
जहि शत्रुं महाबाहो कामरूपं दुरासदम् ॥ ४३ ॥
ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மானமாத்மனா ।
ஜஹி சத்ரும் மஹாபாஹோ காமரூபம் துராஸதம். ॥ 43 ॥
एवं बुद्धेः परम् आत्मानं बुद्ध्वा ज्ञात्वा संस्तभ्य सम्यक् स्तम्भनं कृत्वा आत्मानं स्वेनैव आत्मना संस्कृतेन मनसा सम्यक् समाधायेत्यर्थः ।
இவ்வாறு புத்தியைக் காட்டிலும் ஆத்மா மேலானது என்று அறிந்து ஆத்மாவை(மனதை) ஆத்மாவினால் (மனதினால்) என்றால் நல்ல பண்படுத்தப்பட்ட சுத்த மனதினால் நன்றாக சாந்தப்படுத்துதல் என்பது பொருள்.
जहि एनं शत्रुं हे महाबाहो कामरूपं दुरासदं दुःखेन आसदः आसादनं प्राप्तिः यस्य तं दुरासदं दुर्विज्ञेयानेकविशेषमिति ॥ ४३ ॥
ஹே மஹாபாஹோ! ஜெயிப்பதற்கரிய காமரூபமான சத்துருவை தியாகம் செய்து என்றால் மிகவும் கஷ்ட்டப்பட்டு, அறிவதற்கு கடினமான விசேஷணங்களுடன் கூடிய காமத்தை நாசம் செய்ய வேண்டும் என்பது.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये तृतीयोऽध्यायः ॥
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யா யாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜூன ஸம்வாதே கர்மயோகோ நாம த்ருதீயோ அத்யாய: