सर्वम् उत्पद्यमानं क्षेत्रक्षेत्रज्ञसंयोगात् उत्पद्यते इति उक्तम् । तत् कथमिति, तत्प्रदर्शनार्थम् ‘परं भूयः’ इत्यादिः अध्यायः आरभ्यते ।
உற்பத்தியான எல்லா பொருள்களும் க்ஷேத்திரம், க்ஷேத்ரக் ஞன் இவர்களுடைய சேர்க்கையால் உண்டாயின (உற்பத்தி யாயின) என்று கூறப்பட்டது எவ்வாறு என்று காண்பிப்பதற்காக (பரம் பூய:) என்பது முதலிய ஸ்லோகங்களால் இந்த அத்தியாயம் ஆரம்பிக்கப்படுகிறது.
अथवा, ईश्वरपरतन्त्रयोः क्षेत्रक्षेत्रज्ञयोः जगत्कारणत्वं न तु साङ्ख्यानामिव स्वतन्त्रयोः इत्येवमर्थम् ।
அல்லது ஈஸ்வரனின் ஆதீனமாகவே க்ஷேத்திரம், க்ஷேத்தி ரக்ஞன் இவர்கள் ஜகத்திற்கு காரணமாகிறார்கள். சாங்கிய மதத் தின் படி ஸ்வதந்திரமாக அல்ல என்பதைக் காண்பிக்கிறார்.
प्रकृतिस्थत्वं गुणेषु च सङ्गः संसारकारणम् इति उक्तम् । कस्मिन् गुणे कथं सङ्गः ? के वा गुणाः ? कथं वा ते बध्नन्ति इति ? गुणेभ्यश्च मोक्षणं कथं स्यात् ? मुक्तस्य च लक्षणं वक्तव्यम् , इत्येवमर्थं च
பிரக்ருதியில் உள்ள குணங்களில் உள்ள சம்பந்தம் (ஆசக்தி யே) சம்சாரத்திற்குக் காரணம் என்று கூறப்பட்டது. எந்த குணத் தில்? எவ்வாறு ஆசக்தி ஏற்பட்டது? குணங்கள் எவைகள்? எவ் வாறு அவைகள் பந்தப்படுத்துகிறது? அந்த குணங்களிலிருந்து எவ்வாறு விடுதலை பெறுவது? அவ்வாறே மோக்ஷத்தின் லக்ஷ ணம் கூறவேண்டும் என்பதால் ஆரம்பிக்கப்படுகிறது-
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவான் கூறினார்—
परं भूयः प्रवक्ष्यामि ज्ञानानां ज्ञानमुत्तमम् ।
यज्ज्ञात्वा मुनयः सर्वे परां सिद्धिमितो गताः ॥ १ ॥
பரம் பூய: ப்ரவக்ஷ்யாமி ஞானானாம் ஞானமுத்தமம் ।
யஜ்ஞாத்வா முநய: ஸர்வே பராம் ஸித்திமிதோ கதா: ॥ 1 ॥
परं ज्ञानम् इति व्यवहितेन सम्बन्धः ।
பரம் என்ற பதத்திற்கும் தூரத்தில் உள்ள ஞானம் என்ற பதத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
भूयः पुनः पूर्वेषु सर्वेष्वध्यायेषु असकृत् उक्तमपि प्रवक्ष्यामि । तच्च परं परवस्तुविषयत्वात् । किं तत् ? ज्ञानं सर्वेषां ज्ञानानाम् उत्तमम् , उत्तमफलत्वात् ।
முந்திய எல்லா அத்தியாயங்களிலும் அநேக தடவை கூறி இருந்தாலும் மறுபடியும் கூறுகிறேன். ஏன் எனில் அது மேலான வஸ்து விஷயமாய் இருப்பதால் அது எது? எனில் ஞானம் மேலான (உத்தமமான) பலத்தைக் கொடுப்பதால் அந்த ஞானமா னது எல்லா(விஷய) ஞானத்தைக் காட்டிலும் மேலானது.
ज्ञानानाम् इति न अमानित्वादीनाम् ; किं तर्हि ? यज्ञादिज्ञेयवस्तुविषयाणाम् इति ।
(ஞானங்களுக்கெல்லாம் மேலானது என்ற இடத்தில்) ஞானங்களுக்கெல்லாம் என்றது அமானித்துவாதிகளைக் குறித்து அல்ல யக்ஞ முதலிய அறியப்படும் வஸ்துக்களைக் குறித்துக் கூறப்பட்டது.
तानि न मोक्षाय, इदं तु मोक्षाय इति परोत्तमशब्दाभ्यां स्तौति श्रोतृबुद्धिरुच्युत्पादनार्थम् ।
யக்ஞாதி விஷயக்ஞானம் மோக்ஷத்தின் பொருட்டல்ல. ஆனால் இதுவோ மோக்ஷத்தின் பொருட்டாகும். ஆகையால் இதை மேலானது, உத்தமமானது என்ற பதங்களால் கேட்பவனுக்கு ருசி உண்டாவதற்காக துதிக்கின்றார்.
यत् ज्ञात्वा यत् ज्ञानं ज्ञात्वा प्राप्य मुनयः संन्यासिनः मननशीलाः सर्वे परां सिद्धिं मोक्षाख्याम् इतः अस्मात् देहबन्धनात् ऊर्ध्वं गताः प्राप्ताः ॥ १ ॥
எந்த ஞானத்தை அறிந்து முனிவர்கள் அதாவது சந்நியாசி கள் ஆகிய மனனசீலர்கள் எல்லோரும் மேலான மோக்ஷம் எனப் படும் சித்தியை அடைகின்றார்கள். இந்த தேஹ பந்தத்திலிருந்து (தாண்டுதலை அடைகிறார்கள்) விடுபடுகிறார்கள்.
अस्याश्च सिद्धेः ऐकान्तिकत्वं दर्शयति —
இந்த சித்தியின் மாறுதல் இல்லாத தன்மையை அதாவது நித் யத்தன்மையை காண்பிக்கிறார்—
इदं ज्ञानमुपाश्रित्य मम साधर्म्यमागताः ।
सर्गेऽपि नोपजायन्ते प्रलये न व्यथन्ति च ॥ २ ॥
இதம் ஞானமுபாச்ரித்ய மம ஸாதர்ம்யமாகதா: ।
ஸர்கேஅபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச ॥ 2 ॥
इदं ज्ञानं यथोक्तमुपाश्रित्य, ज्ञानसाधनम् अनुष्ठाय इत्येतत् , मम परमेश्वरस्य साधर्म्यं मत्स्वरूपताम् आगताः प्राप्ताः इत्यर्थः । न तु समानधर्मता साधर्म्यम् , क्षेत्रज्ञेश्वरयोः भेदानभ्युपगमात् गीताशास्त्रे । फलवादश्च अयं स्तुत्यर्थम् उच्यते । सर्गेऽपि सृष्टिकालेऽपि न उपजायन्ते । न उत्पद्यन्ते । प्रलये ब्रह्मणोऽपि विनाशकाले न व्यथन्ति च व्यथां न आपद्यन्ते, न च्यवन्ति इत्यर्थः ॥ २ ॥
கூறப்பட்டவாறு இந்த ஞானத்தை ஆச்ரயித்து என்றால் ஞானத்தை அனுஷ்ட்டானம் செய்து பரமேச்வரனான என்னு டைய ஸ்வரூபத்தை அடைந்தவர்கள் என்பது பொருள். ஆனால் க்ஷேத்திரம், க்ஷேஷத்ரக்ஞன் என்றபேதம் இல்லை என்று கீதா சாஸ் திரத்தில் உள்ளதால் சமானதர்மம் என்பது கிடையாது. (பேதம் இருந்தால் அல்லவா இரண்டிற்கும் சமதர்மம் உள்ளது என்று கூற முடியும்) பலவந்தமாவது (மோக்ஷத்தைப் பலனாக கூறும் வாதமா னது) ஞானத்தை துதிக்கும் பொருட்டு கூறப்பட்டதாகும். ப்ரஹ்மம் சிருஷ்ட்டி காலத்தில் உற்பத்தி ஆவதில்லை. பிரளயகாலத்தில் அழிவதும் இல்லை. நழுவுவதும் இல்லை என்பது பொருள்.
क्षेत्रक्षेत्रज्ञसंयोगः ईदृशः भूतकारणम् इत्याह —
க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன் இவர்களது சம்யோகமானது (சேர்க்கையானது)இவ்வாறு பூதங்கள் (பொருள்கள்) உண்டாவதற் குக் காரணமாகிறது
मम योनिर्महद्ब्रह्म तस्मिन्गर्भं दधाम्यहम् ।
सम्भवः सर्वभूतानां ततो भवति भारत ॥ ३ ॥
மம யோநிர்மஹத்ப்ரஹ்ம தஸ்மிந்கர்பம் ததாம்யஹம் ।
ஸம்பவ: ஸர்வபூதானாம் ததோ பவதி பார்த ॥ 3 ॥
मम स्वभूता मदीया माया त्रिगुणात्मिका प्रकृतिः योनिः सर्वभूतानां कारणम् । सर्वकार्येभ्यो महत्त्वात् भरणाच्च स्वविकाराणां महत् ब्रह्म इति योनिरेव विशिष्यते ।
ஈஸ்வரனாகிய என்னுடைய மாயையானது முக்குணஸ்வரூப மான ப்ரக்ருதி. அதுவே எல்லா பூதங்களுக்கும் காரணம்(கர்பம்). எல்லா வஸ்துக்களாகிய காரியங்களைக் காட்டிலும் மிகப்பெரியதா யும், தன்னுடைய விகாரங்கள் எல்லாவற்றையும் தாங்குவதால் மஹத் ப்ரஹ்மம் காரணம்(கர்பம்) என்று விசேஷித்துக்கூறப்படுகிறது.
तस्मिन् महति ब्रह्मणि योनौ गर्भं हिरण्यगर्भस्य जन्मनः बीजं सर्वभूतजन्मकारणं बीजं दधामि निक्षिपामि क्षेत्रक्षेत्रज्ञप्रकृतिद्वयशक्तिमान् ईश्वरः अहम् , अविद्याकामकर्मोपाधिस्वरूपानुविधायिनं क्षेत्रज्ञं क्षेत्रेण संयोजयामि इत्यर्थः ।
க்ஷேத்திரம், க்ஷேத்ரக்ஞன் ஆகிய இருவித ப்ரகிருதி சக்திக ளுடைய ஈஸ்வரனாகிய நான் அந்த மஹத்தான ப்ரஹ்மரூப கர்ப் பத்தில் ஹிரண்யகர்பனுடைய ஜன்மத்தின் காரணமாகிய பீஜத்தை யும், எல்லாப் பிராணிகளின் ஜன்மகாரணமாகிய பீஜத்தையும் வைத்திருக்கிறேன். அவித்யா, காம, கர்ம, உபாதிரூபங்களைப் பற்றியுள்ள க்ஷேத்திரம் க்ஷேத்ரக்ஞன் இவர்களைச் சேர்த்து வைக் கிறேன் என்று பொருள்.
सम्भवः उत्पत्तिः सर्वभूतानां हिरण्यगर्भोत्पत्तिद्वारेण ततः तस्मात् गर्भाधानात् भवति हे भारत ॥ ३ ॥
ஹே! பாரத! அந்த கர்ப்ப ஸ்தானத்திலிருந்து ஹிரண்ய கர்ப்ப உற்பத்தியின் வாயிலாக எல்லா பூதங்களின் உற்பத்தியும் உண்டாகிறது.
सर्वयोनिषु कौन्तेय मूर्तयः सम्भवन्ति याः ।
तासां ब्रह्म महद्योनिरहं बीजप्रदः पिता ॥ ४ ॥
ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்பவந்தி யா: ।
தாஸாம் ப்ரஹ்ம மஹத்யோநிரஹம் பீஜப்ரத: பிதா ॥ 4 ॥
देवपितृमनुष्यपशुमृगादिसर्वयोनिषु कौन्तेय, मूर्तयः देहसंस्थानलक्षणाः मूर्छिताङ्गावयवाः मूर्तयः सम्भवन्ति याः, तासां मूर्तीनां ब्रह्म महत् सर्वावस्थं योनिः कारणम् अहम् ईश्वरः बीजप्रदः गर्भाधानस्य कर्ता पिता ॥ ४ ॥
ஹே கௌந்தேய! தேவ, பித்ரு, மனிதன், ஆடுமாடுகள் மான் முதலிய விலங்குகள் எல்லா யோனிகளிலிருந்து சரீர காரணமான அந்த அந்த லக்ஷணங்களோடு கூடிய அங்கங்களும், அவயவங் களும் உற்பத்தியாகின்றன. அந்த எல்லா மூர்த்திகளுக்கும் எல்லா வகையிலும் மஹத் ப்ரஹ்மம் காரணமாகும். ஈஸ்வரனாகிய நான் பீஜத்தை (விதையை)க் கொடுப்பவன். கர்ப்பம் ஏற்படுத்துவதற்கு கர்த்தாவாகையால் தந்தை(பிதா)
के गुणाः कथं बध्नन्तीति, उच्यते —
எந்த எந்த குணங்கள் எவ்வாறு பந்தப்படுத்துகிறது என்று கூறுகிறார்-
सत्त्वं रजस्तम इति गुणाः प्रकृतिसम्भवाः ।
निबध्नन्ति महाबाहो देहे देहिनमव्ययम् ॥ ५ ॥
ஸத்வம் ரஜஸ்தம இதி குணா: ப்ரக்ருதிஸம்பவா: ।
நிபத்நந்தி மஹாபாஹோ தேஹே தேஹிநமவ்யயம் ॥ 5 ॥
सत्त्वं रजः तमः इति एवंनामानः । गुणाः इति पारिभाषिकः शब्दः, न रूपादिवत् द्रव्याश्रिताः गुणाः । न च गुणगुणिनोः अन्यत्वमत्र विवक्षितम् ।
சத்வம், ரஜஸ், தமஸ் என்ற பெயர்களுடைய மூன்று குணங்கள் குணம் என்று பரிபாஷையினால் வந்தது ரூபம் முத லியவைகள் போல் ஒரு பொருளை (திரவ்யத்தை-விஷயத்தை) ஆச்ரயிக்கவில்லை.அவ்வாறே குணம், குணத்தை உடையவன் என்ற பேதத்தை இங்கு விளக்கவில்லை.
तस्मात् गुणा इव नित्यपरतन्त्राः क्षेत्रज्ञं प्रति अविद्यात्मकत्वात् क्षेत्रज्ञं निबध्नन्तीव । तम् आस्पदीकृत्य आत्मानं प्रतिलभन्ते इति निबध्नन्ति इति उच्यते ।
குணங்கள் திரவ்யங்களுக்கு அதீனமாய் இருப்பது போல குணங்களும் அவித்யாத்மகமாய் இருப்பதால் க்ஷேத்ரக்ஞன் அதற்கு அதீனமாய் இருப்பதால் பந்தப்பட்டது போல் இருக்கிறது. க்ஷேத்திரக்ஞனை ஆதாரமாகக் கொண்ட (குணமானது) தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அதை பந்தப்படுத்துகிறது என்று கூறப் படுகிறது.
ते च प्रकृतिसम्भवाः भगवन्मायासम्भवाः निबध्नन्ति इव हे महाबाहो, महान्तौ समर्थतरौ आजानुप्रलम्बौ बाहू यस्य सः महाबाहुः, हे महाबाहो देहे शरीरे देहिनं देहवन्तम् अव्ययम् , अव्ययत्वं च उक्तम्
‘अनादित्वात्’ (भ. गी. १३ । ३१) इत्यादिश्लोकेन ।
எவருடைய கைகள் மிகவும் சாமர்த்தியம் உடையதாயும், முழங்கால் வரையும் நீண்டுள்ளதோ அவர் மஹாபாஹு (பெரிய கைகள் உடையவர்) ஹே மஹாபாஹோ! அவைகள் (குணங்கள்) பகவானுடைய மாயையினால் உண்டானவைகளாய் பந்தப்படுத்து வது போல் இருக்கிறது. தேஹத்தில் உள்ள தேஹியானவர் (தே ஹத்தை உடையவர்) நாசமற்றவர் என்று அநாதித்வாத் முதலிய ஸ்லோகங்களால் கூறப்பட்டது.
தேஹி ஒட்டுவதில்லை என்று கூறப்பட்டது. அப்படி இருக் கும்பொழுது எவ்வாறு பந்தப்படுகிறது என்று வேறுவிதமாக கூறப் பட்டதே எனில்,
परिहृतम् अस्माभिः इवशब्देन निबध्नन्ति इव इति ॥ ५ ॥
இவ என்ற பதத்தை சேர்த்ததால் இந்த சங்கையானது நிவர்த்தி யாகிறது.
तत्र सत्त्वादीनां सत्त्वस्यैव तावत् लक्षणम् उच्यते —
அங்கு சத்துவ முதலிய குணங்களில் முதலில் சத்துவத்தின் லக்ஷணம் கூறப்படுகிறது.
तत्र सत्त्वं निर्मलत्वात्प्रकाशकमनामयम् ।
सुखसङ्गेन बध्नाति ज्ञानसङ्गेन चानघ ॥ ६ ॥
தத்ர ஸத்வம் நிர்மலத்வாத்ப்ரகாசகமநாமயம் ।
ஸுகஸுங்கேந பத்நாதி ஞானஸங்கேன சாநக ॥ 6 ॥
निर्मलत्वात् स्फटिकमणिरिव प्रकाशकम् अनामयं निरुपद्रवं सत्त्वं तन्निबध्नाति ।
சத்துவகுணம் ஸ்படிகமணிபோல் நிர்மலமாய் இருப்பதால் ப்ர காசம் செய்வதாயும், உபத்திரவம் (தொந்தரவு) அற்றதாயும் இருக் கும் அது (ஆத்மாவை) பந்தப்படுத்துகிறது.
कथम् ? सुखसङ्गेन ‘सुखी अहम्’ इति विषयभूतस्य सुखस्य विषयिणि आत्मनि संश्लेषापादनं मृषैव सुखे सञ्जनम् इति । सैषा अविद्या ।
எவ்வாறு எனில் சுகம் ஏற்படும்பொழுது நான் சுகியாயிருக்கி றேன் என்று விஷய சுகத்தை விஷயீ ஆகிய ஆத்மாவிடத்தில் சம்பந்தப்படுத்தி சுகத்தில் பற்று அடைதல் மித்யையே. அது இந்த அவித்யை.
न हि विषयधर्मः विषयिणः भवति । इच्छादि च धृत्यन्तं क्षेत्रस्यैव विषयस्य धर्मः इति उक्तं भगवता ।
விஷய தர்மமானது விஷயீனிடத்தில் ஏற்படாது. இச்சை முதல் த்ருதிவரையிலும் விஷயமாகிய க்ஷேத்திரனுடையதே இந்த தர்மம் என்று பகவானால் கூறப்பட்டது.
अतः अविद्ययैव स्वकीयधर्मभूतया विषयविषय्यविवेकलक्षणया अस्वात्मभूते सुखे सञ्जयति इव, आसक्तमिव करोति, असङ्गं सक्तमिव करोति, असुखिनं सुखिनमिव । तथा ज्ञानसङ्गेन च ।
ஆகையால் தன்னுடைய தர்மத்தைப் போன்றதாய் (ஆத்மா வின் தர்மத்தைப் போன்றதாய் விஷயம், விஷயீ இவைகளைப் பகுத்தறியும் தன்மை (விவேகம்) அற்றதான அவித்யையினால் அநாத்மரூபமான சுகத்தில் (ஆத்மாவை) பற்றச் செய்கிறது போல் இருக்கிறது. சுகம் அல்லாததில் சுகம் இருப்பது போல் செய்கிறது. அவ்வாறே(விஷய) ஞானத்திலும் பந்தத்தைச் செய்கிறது.
ज्ञानमिति सुखसाहचर्यात् क्षेत्रस्यैव विषयस्य अन्तःकरणस्य धर्मः, न आत्मनः ; आत्मधर्मत्वे सङ्गानुपपत्तेः, बन्धानुपपत्तेश्च । सुखे इव ज्ञानादौ सङ्गः मन्तव्यः । हे अनघ अव्यसन ॥ ६ ॥
ஞானமானது சுகத்துடன் சேர்ந்தே இருப்பதால் க்ஷேத்திரத்தி னுடைய அந்தக்கரண தர்மமேயாகும். ஆத்மாவின் தர்மமல்ல. ஆத்மாவிற்கு தர்மத்தன்மையை இருப்பதாகக் கொண்டு அதில் பற்றும், பந்தமும் இருப்பதாகக் கூறுவது பொருந்தாது. ஹே! குற்ற மற்றவனே! சுகத்தில் உள்ளது போல் ஞான முதலியவைகளிலும் பற்று இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
रजो रागात्मकं विद्धि तृष्णासङ्गसमुद्भवम् ।
तन्निबध्नाति कौन्तेय कर्मसङ्गेन देहिनम् ॥ ७ ॥
ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணாஸங்கஸமுத்பவம் ।
தந்நிபத்நாதி கௌந்தேய கர்மஸங்கேன தேஹினம் ॥ 7 ॥
रजः रागात्मकं रञ्जनात् रागः गैरिकादिवद्रागात्मकं विद्धि जानीहि । तृष्णासङ्गसमुद्भवं तृष्णा अप्राप्ताभिलाषः, आसङ्गः प्राप्ते विषये मनसः प्रीतिलक्षणः संश्लेषः, तृष्णासङ्गयोः समुद्भवं तृष्णासङ्गसमुद्भवम् ।
ரஜோகுணமானது ராகாத்மகமாகும். எவ்வாறு எனில் காவி முதலிய நிறங்கள் போல் புருஷர்களை விஷயங்களில் பற்றடை யச் செய்து அந்த ரூபமாகவே ஆவதால் அதை ராகரூபம் என்று அறி. கிடைக்காத வஸ்துக்களில் உள்ள ஆசை திருஷ்ணா என வும், கிடைத்த விஷயங்களில் ஆசை ரூபமற்று ஆசக்தி எனப்ப டும். இந்த திருஷ்ணை, ஆசக்தி இவைகளுக்குக் காரணம் ரஜோ குணத்தினுடைய ராகரூபம் என்று அறி.
तन्निबध्नाति तत् रजः निबध्नाति कौन्तेय कर्मसङ्गेन, दृष्टादृष्टार्थेषु कर्मसु सञ्जनं तत्परता कर्मसङ्गः, तेन निबध्नाति रजः देहिनम् ॥ ७ ॥
ஹே கௌந்தேய! அந்த ரஜோகுணமானது சரீரத்தை உடைய க்ஷேத்திரக்ஞனை கர்மத்தில் பற்றுடையதாய் பந்தப்படுத்துகிறது. திருஷ்ட்ட, அதிருஷ்ட்ட (இகலோக, பரலோக) பலன்களைக் கொடுக்கும் கர்மங்களில் ஆசக்தி ஏற்பட்டு அந்தர்மயமாக ஆவதே கர்மசங்கம். அதனால் ரஜோகுணம் தேஹியைப் பந்தப் படுத்துகிறது.
तमस्त्वज्ञानजं विद्धि मोहनं सर्वदेहिनाम् ।
प्रमादालस्यनिद्राभिस्तन्निबध्नाति भारत ॥ ८ ॥
தமஸ்த்வஞானஜம் வித்தி மோஹனம் ஸர்வதேஹினாம் ।
ப்ரமாதாலஸ்யநித்ராபிஸ்தந்நிபத்நாதி பாரத ॥ 8 ॥
तमः तृतीयः गुणः अज्ञानजम् अज्ञानात् जातम् अज्ञानजं विद्धि मोहनं मोहकरम् अविवेककरं सर्वदेहिनां सर्वेषां देहवताम् । प्रमादालस्यनिद्राभिः प्रमादश्च आलस्यं च निद्रा च प्रमादालस्यनिद्राः ताभिः प्रमादालस्यनिद्राभिः तत् तमः निबध्नाति भारत ॥ ८ ॥
ஹே பாரத! மூன்றாவது குணமாகிய தமஸானது அக்ஞானத்தி னால் உண்டானது என்று அறி. அது மோஹத்தையும், அவிவேகத் தையும் உண்டாக்கவல்லது. தேஹம் உடையவர்கள் எல்லோரை யும் மயக்கத்திலும், சோம்பலிலும் அந்த தமோகுணமானது பந்தப் படுத்துகிறது.
पुनः गुणानां व्यापारः सङ्क्षेपतः उच्यते —
மேலும் குணங்களுடைய செயல்களை (வியாபாரங்களை) சுருக்கமாகக் கூறுகிறார்-
सत्त्वं सुखे सञ्जयति रजः कर्मणि भारत ।
ज्ञानमावृत्य तु तमः प्रमादे सञ्जयत्युत ॥ ९ ॥
ஸத்வம் ஸுகே ஸஞ்ஜயதி ரஜ: கர்மணி பாரத ।
ஞானமாவ்ருத்ய து தம: ப்ரமாதே ஸஞ்ஜயத்யுத ॥ 9 ॥
सत्त्वं सुखे सञ्जयति संश्लेषयति, रजः कर्मणि हे भारत सञ्जयति इति अनुवर्तते । ज्ञानं सत्त्वकृतं विवेकम् आवृत्य आच्छाद्य तु तमः स्वेन आवरणात्मना प्रमादे सञ्जयति उत प्रमादः नाम प्राप्तकर्तव्याकरणम् ॥ ९ ॥
ஹே பாரத ! சத்வகுணமானது சுகத்தைப் பற்றச்செய்கிறது. ரஜோகுணம் கர்மத்தைப் பற்றச் செய்கிறது. சத்வ குணத்தினால் உண்டான விவேக ஞானத்தை தமோகுணமானது தனது மறைப்பு சுவபாவத்தினால் மறைத்து பிரமாதத்தை உண்டு பண்ணுகிறது. பிர மாதம் என்றால் தான் செய்ய வேண்டியதை செய்யாமல் இருத்தல்.
उक्तं कार्यं कदा कुर्वन्ति गुणा इति उच्यते —
முக்குணங்களும் எப்பொழுது கூறப்பட்ட காரியங்களைச் செய்கின்றன என்று கூறுகிறார்-
रजस्तमश्चाभिभूय सत्त्वं भवति भारत ।
रजः सत्त्वं तमश्चैव तमः सत्त्वं रजस्तथा ॥ १० ॥
ரஜஸ்தமச்சாபிபூய ஸத்வம் பவதி பாரத ।
ரஜ: ஸத்வம் தமச்சைவ தம: ஸத்வம் ரஜஸ்ததா ॥ 10 ॥
रजः तमश्च उभावपि अभिभूय सत्त्वं भवति उद्भवति वर्धते यदा, तदा लब्धात्मकं सत्त्वं स्वकार्यं ज्ञानसुखादि आरभते हे भारत ।
ஹே பாரத! எப்பொழுது ரஜோகுணமும், தமோகுணமும் அமுங்கி சத்துவகுணம் மேல் எழும்புகிறதோ(கிளம்புகிறதோ) அப்பொழுது தன் ஸ்வரூபத்தை அடைந்த சத்வகுணம் தன்னு டைய காரியங்களாகிய சுகம், ஞானம் முதலியவைகளை செய்கின் றது. (ஆரம்பிக்கின்றது)
तथा रजोगुणः सत्त्वं तमश्च एव उभावपि अभिभूय वर्धते यदा, तदा कर्म कृष्यादि स्वकार्यम् आरभते ।
அவ்வாறே ரஜோகுணமும் சத்வம், தமஸ் இரண்டும் அமுங்கி வளர்கின்றபொழுது கர்மங்களில், திருஷ்ணா (ஆசை) முதலிவை களை ஆரம்பிக்கின்றது.
तम आख्यो गुणः सत्त्वं रजश्च उभावपि अभिभूय तथैव वर्धते यदा, तदा ज्ञानावरणादि स्वकार्यम् आरभते ॥ १० ॥
சத்வ, ரஜஸ், இரண்டும் அமுங்கும்பொழுது தமோகுணமா னது வளரும்பொழுது ஞானத்தை மறைத்தல் முதலிய தன்னு டைய காரியங்களை ஆரம்பிக்கிறது.
यदा यो गुणः उद्भूतः भवति, तदा तस्य किं लिङ्गमिति उच्यते —
எப்பொழுது எந்த குணம் மேல் எழுகிறதோ அப்பொழுது அதன் லிங்கம் (அடையாளம்) என்ன? என்பதைக் கூறுகிறார்-
सर्वद्वारेषु देहेऽस्मिन्प्रकाश उपजायते ।
ज्ञानं यदा तदा विद्याद्विवृद्धं सत्त्वमित्युत ॥ ११ ॥
ஸர்வத்வாரேஷு தேஹேஅஸ்மின்ப்ரகாச உபஜாயதே ।
ஞானம் யதா ததா வித்யாத்விவ்ருத்தம் ஸத்வமித்யுத ॥ 11 ॥
सर्वद्वारेषु, आत्मनः उपलब्धिद्वाराणि श्रोत्रादीनि सर्वाणि करणानि, तेषु सर्वद्वारेषु अन्तःकरणस्य बुद्धेः वृत्तिः प्रकाशः देहे अस्मिन् उपजायते । तदेव ज्ञानम् । यदा एवं प्रकाशो ज्ञानाख्यः उपजायते, तदा ज्ञानप्रकाशेन लिङ्गेन विद्यात् विवृद्धम् उद्भूतं सत्त्वम् इति उत अपि ॥ ११ ॥
செவி முதலியவைகள் எல்லாம் ஆத்மாவிற்கு அறியும் வழி களாகும். அந்த வழிகளில் எல்லாம் அந்தக்கரணத்தினுடைய புத்தி விருத்தி வியாபித்திருக்கின்றது. அந்த புத்தி விருத்தியே பிர காசம் எனப்படும். அதுவே ஞானம். இவ்வாறு ஞானமானது இந்த சரீரத்தில் எல்லா இந்திரியங்களிலும் தோன்றும் பொழுது அந்த ஞானமாகிய லிங்கத்தினால் சத்துவ குணமானது ஓங்கி உள்ளது என்று அறியவேண்டும்.
रजसः उद्भूतस्य इदं चिह्नम् —
ரஜோகுணம் உண்டானதற்கான அறிகுறி. (லிங்கம்)
लोभः प्रवृत्तिरारम्भः कर्मणामशमः स्पृहा ।
रजस्येतानि जायन्ते विवृद्धे भरतर्षभ ॥ १२ ॥
லோப: ப்ரவ்ருத்திராரம்ப: கர்மணாமசம: ஸ்ப்ருஹா ।
ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே பரதர்ஷப ॥ 12 ॥
लोभः परद्रव्यादित्सा, प्रवृत्तिः प्रवर्तनं सामान्यचेष्टा, आरम्भः ; कस्य ? कर्मणाम् । अशमः अनुपशमः, हर्षरागादिप्रवृत्तिः, स्पृहा सर्वसामान्यवस्तुविषया तृष्णा — रजसि गुणे विवृद्धे एतानि लिङ्गानि जायन्ते हे भरतर्षभ ॥ १२ ॥
ஹே பரதர்ஷப! லோபம் என்றால் பிறர் பொருள்களைக் கவர் வதில் இச்சை. பிரவர்த்தனம் என்றால் சாதாரண சம்சாரத்திற்குள்ள செயல்களும், கர்மங்களில் பிரவிருத்தியும், ஓய்வில்லாமல் இருத் தலும், மகிழ்ச்சி, ஆசை முதலியவைகளில் பிரவிருத்தியும் சாமான்யமாக உள்ள எல்லா விஷயங்களிலும் ஆசை இவைகள் எல்லாம் ரஜோகுணத்தின் ஓங்கி உண்டாகி இருப்பதின் லிங்கங்க ளாகும். (சின்னங்களாகும்)
अप्रकाशोऽप्रवृत्तिश्च प्रमादो मोह एव च ।
तमस्येतानि जायन्ते विवृद्धे कुरुनन्दन ॥ १३ ॥
அப்ரகாசோஅப்ரவ்ருத்திச்ச ப்ரமாதோ மோஹ ஏவ ச ।
தமஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே குருநந்தன ॥ 13 ॥
अप्रकाशः अविवेकः, अत्यन्तम् अप्रवृत्तिश्च प्रवृत्त्यभावः तत्कार्यं प्रमादो मोह एव च अविवेकः मूढता इत्यर्थः । तमसि गुणे विवृद्धे एतानि लिङ्गानि जायन्ते हे कुरुनन्दन ॥ १३ ॥
ஹே குருநந்தன! அப்பிரகாச என்றால் மிகுந்த அவிவேகத்தி னால் பிரவிர்த்திக்காமல் இருப்பது. அதனுடைய காரியங்கள் பிர மாதமும், மோஹமும் ஆகும். அதுவே அவிவேகமும், மூடத்தன் மையுமாகும். தமோகுணமானது விருத்தி அடையும்பொழுது இந்த லிங்கங்கள் உண்டாகும்.
मरणद्वारेणापि यत् फलं प्राप्यते, तदपि सङ्गरागहेतुकं सर्वं गौणमेव इति दर्शयन् आह —
மரணத்தின் வாயிலாக எந்தப் பலன் அடையப்படுகின்றதோ அதுவும் ஆசக்தியினாலும், ராகத்தினாலும் உண்டான குணங்களி னால் ஏற்பட்டதே என்று உணர்த்தும் பொருட்டுக் கூறுகிறார்-
यदा सत्त्वे प्रवृद्धे तु प्रलयं याति देहभृत् ।
तदोत्तमविदां लोकानमलान्प्रतिपद्यते ॥ १४ ॥
யதா ஸத்த்வே ப்ரவ்ருத்தேது ப்ரலயம் யாதி தேஹப்ருத் ।
ததோத்தமவிதாம் லோகானமலாந்ப்ரதிபத்யதே ॥ 14 ॥
यदा सत्त्वे प्रवृद्धे उद्भूते तु प्रलयं मरणं याति प्रतिपद्यते देहभृत् आत्मा, तदा उत्तमविदां महदादितत्त्वविदाम् इत्येतत् , लोकान् अमलान् मलरहितान् प्रतिपद्यते प्राप्नोति इत्येतत् ॥ १४ ॥
எப்பொழுது சரீரத்தை உடைய ஜீவன் சத்வகுணத்துடன் கூடிய புத்தியுடன் மரணத்தை அடைகின்றானோ அப்பொழுது மஹத் முதலிய தத்வம் அறிந்தவர்களுடைய மலமற்றலோகங் களை அடைகிறார்கள்.
रजसि प्रलयं गत्वा कर्मसङ्गिषु जायते ।
तथा प्रलीनस्तमसि मूढयोनिषु जायते ॥ १५ ॥
ரஜஸி ப்ரலயம் கத்வா கர்மங்கிஷு ஜாயதே ।
ததா ப்ரலீனஸ்தமஸி மூடயோனிஷு ஜாயதே ॥ 15 ॥
रजसि गुणे विवृद्धे प्रलयं मरणं गत्वा प्राप्य कर्मसङ्गिषु कर्मासक्तियुक्तेषु मनुष्येषु जायते । तथा तद्वदेव प्रलीनः मृतः तमसि विवृद्धे मूढयोनिषु पश्वादियोनिषु जायते ॥ १५ ॥
ரஜோகுணம் மேல் எழும்பி இருக்கும்பொழுது மரணமடைந் தவன் கர்மத்தில் மிகுந்த பற்று உடைய மனித குலத்தில் பிறப்பான். அவ்வாறே தமசானது மேல் ஓங்கி இருக்கும்பொழுது மரணம் டைந்தவன் மூடஜன்மங்களான பசு முதலியவைகளில் பிறப்பான்.
अतीतश्लोकार्थस्यैव सङ्क्षेपः उच्यते —
கடந்த ஸ்லோகங்களில் கூறப்பட்ட அர்த்தத்தையே சுருக்க மாகக் கூறுகிறார்-
कर्मणः सुकृतस्याहुः सात्त्विकं निर्मलं फलम् ।
रजसस्तु फलं दुःखमज्ञानं तमसः फलम् ॥ १६ ॥
கர்மண: ஸுக்ருதஸ்யாஹு: ஸாத்விகம் நிர்மலம் பலம் ।
ரஜஸஸ்து பலம் து:கமஞானம் தமஸ: பலம் ॥ 16 ॥
कर्मणः सुकृतस्य सात्त्विकस्य इत्यर्थः, आहुः शिष्टाः सात्त्विकम् एव निर्मलं फलम् इति । रजसस्तु फलं दुःखं राजसस्य कर्मणः इत्यर्थः, कर्माधिकारात् फलम् अपि दुःखम् एव, कारणानुरूप्यात् राजसमेव । तथा अज्ञानं तमसः तामसस्य कर्मणः अधर्मस्य पूर्ववत् ॥ १६ ॥
சாத்வீகமான கர்மத்திற்கு சாத்வீகமான, நிர்மலமான பலன் என்று ஆன்றோர்கள் கூறுகின்றார்கள். ராஜச கர்மத்திற்கு துக்கம் பலனாகும் என்பது பொருள். கர்மத்திற்குக் காரணம் ரஜோகுண மாய் இருப்பதால் அந்த ராஜச கர்மத்தின் பலன் துக்கமேயாகும். அவ்வாறேதாமச ரூபமான அதர்மமாகிய பாபகர்மத்தின் பலன் அக்ஞானமாகும்.
किञ्च गुणेभ्यो भवति —
குணங்களினால் என்ன உண்டாகும்?
सत्त्वात्सञ्जायते ज्ञानं रजसो लोभ एव च ।
प्रमादमोहौ तमसो भवतोऽज्ञानमेव च ॥ १७ ॥
ஸத்வாத்ஸஞ்ஜாயதே ஞானம் ரஜஸோ லோப் ஏவ ச ।
ப்ரமாதமோஹெள் தமஸோ பவதோஅக்ஞானமேவ ச ॥ 17 ॥
सत्त्वात् लब्धात्मकात् सञ्जायते समुत्पद्यते ज्ञानम् , रजसो लोभ एव च, प्रमादमोहौ च उभौ तमसो भवतः, अज्ञानमेव च भवति ॥ १७ ॥
சத்துவகுணம் ஓங்குதலால் ஞானம் உண்டாகிறது. ரஜோகு ணத்தின் ஓங்குதலால் லோபமும், ஆசக்தி, மோஹம் இவைகள் உண்டாகின்றன. தமஸினால் அக்ஞானம் ஏற்படுகிறது.
किञ्च —
அவ்வாறே
ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्था मध्ये तिष्ठन्ति राजसाः ।
जघन्यगुणवृत्तस्था अधो गच्छन्ति तामसाः ॥ १८ ॥
ஊர்த்த்வம் கச்சந்தி ஸத்வஸ்தா மத்யே திஷ்டந்தி ராஜஸா: ।
ஜகந்யகுணவ்ருத்தஸ்தா அதோ கச்சந்தி தாமஸா: ॥ 18 ॥
ऊर्ध्वं गच्छन्ति देवलोकादिषु उत्पद्यन्ते सत्त्वस्थाः सत्त्वगुणवृत्तस्थाः । मध्ये तिष्ठन्ति मनुष्येषु उत्पद्यन्ते राजसाः ।
சத்வகுணம் விருத்தி அடைந்தவர்கள் தேவலோகம் முதலி வைகளை அடைகிறார்கள். ரஜோகுணம் விருத்தி அடைந்தவர் கள் மத்தியலோக மனிதர்களிடத்தில் பிறக்கிறார்கள்.
जघन्यगुणवृत्तस्थाः जघन्यश्च असौ गुणश्च जघन्यगुणः तमः, तस्य वृत्तं निद्रालस्यादि, तस्मिन् स्थिताः जघन्यगुणवृत्तस्थाः मूढाः अधः गच्छन्ति पश्वादिषु उत्पद्यन्ते तामसाः ॥ १८ ॥
நிந்தைக்குரிய குணமாகிய தமஸில் விருத்தி அடைந்தவர்கள் தூக்கம், சோம்பல் முதலியவைகளில் ஆசக்தி உடையவர் களாயும் உள்ள மூடர்களாகிய தாமசர்கள் பசு முதலிய கீழ் பிறப்பை அடைகிறார்கள்.
पुरुषस्य प्रकृतिस्थत्वरूपेण मिथ्याज्ञानेन युक्तस्य भोग्येषु गुणेषु सुखदुःखमोहात्मकेषु ‘सुखी दुःखी मूढः अहम् अस्मि’ इत्येवंरूपः यः सङ्गः तत्कारणं पुरुषस्य सदसद्योनिजन्मप्राप्तिलक्षणस्य संसारस्य इति समासेन पूर्वाध्याये यत् उक्तम् , तत् इह
‘सत्त्वं रजस्तम इति गुणाः प्रकृतिसम्भवाः’ (भ. गी. १४ । ५) इति आरभ्य गुणस्वरूपम् , गुणवृत्तम् , स्ववृत्तेन च गुणानां बन्धकत्वम् , गुणवृत्तनिबद्धस्य च पुरुषस्य या गतिः, इत्येतत् सर्वं मिथ्याज्ञानमूलं बन्धकारणं विस्तरेण उक्त्वा, अधुना सम्यग्दर्शनान्मोक्षो वक्तव्यः इत्यत आह भगवान् —
ப்ரக்ருதியில் நிலைபெற்றதான (ப்ரகிருதியை ஆத்மாவாக எண்ணிய) மித்யா ஞானமுடையவனுக்கு சுக, துக்க, மோஹாத்மக மான போக ரூப் குணங்களினால் நான் சுகி, துக்கி, மூடன் ஆக இருக்கிறேன் என்று இவ்வாறு பற்று எவனுக்கு உள்ளதோ அந்தப் பற்றுதான் புருஷன் நல்லதாயும், தீமையாயும் உள்ள பிறப்புகளை எடுக்கும் புருஷனுடைய சம்சாரத்திற்குக் காரணமாகிறது என்று சுருக்கமாக முன் அத்யாயத்தில் எது கூறப்பட்டதோ அது இங்கு (சத்வம் ரஜஸ் தம இதி குணா:ப்ரக்ருதி சம்பவா:) என்று ஆரம்பித்து, குணத்தின் ஸ்வரூபம், குணங்களின் விருத்தியும், (செய்கையும்) குணங்கள் தமது விருத்தியினால் பந்தப்படுவதும், குணவிருத்தி யில் பந்தப்பட்ட புருஷனுடைய கதி என்று கூறப்பட்ட இவை யெல்லாம் மித்யாஞானம், அக்ஞானமூலம் பந்தகாரணம் என் பதை விரிவாகக் கூறி இப்பொழுது சம்யக்தர்சனத்தினால் மோக்ஷம் கூறவேண்டும் என்று பகவான் கூறுகிறார்-
नान्यं गुणेभ्यः कर्तारं यदा द्रष्टानुपश्यति ।
गुणेभ्यश्च परं वेत्ति मद्भावं सोऽधिगच्छति ॥ १९ ॥
நான்யம் குணேப்ய: கர்தாரம் யதா த்ரஷ்டானுபச்யதி ।
குணேப்யச்ச பரம் வேத்தி மத்பாவம் ஸோஅதிகச்சதி ॥ 19 ॥
न अन्यं कार्यकरणविषयाकारपरिणतेभ्यः गुणेभ्यः कर्तारम् अन्यं यदा द्रष्टा विद्वान् सन् न अनुपश्यति, गुणा एव सर्वावस्थाः सर्वकर्मणां कर्तारः इत्येवं पश्यति, गुणेभ्यश्च परं गुणव्यापारसाक्षिभूतं वेत्ति, मद्भावं मम भावं सः द्रष्टा अधिगच्छति ॥ १९ ॥
எப்பொழுது திருஷ்ட்டா ஞானியாக இருந்துகொண்டு இந்த காரிய, கரண, விஷயங்களின் (சரீர, இந்திரிய, இந்திரியவிஷயங் கள்) ஆகாரமாக பரிணாமம் அடைந்த குணங்களைக் காட்டிலும் வேறான கர்த்தாவைப் பார்ப்பதில்லை. குணங்களே எல்லா அவஸ் தைகளுக்கும், எல்லா கர்மங்களுக்கும் கர்த்தா என்று அறிகிறான். எவன் இந்த குணங்களைக் காட்டிலும் குணவியாபகங்களுக்கு சாக்ஷியாய் இருப்பதை அறிகிறானோ அந்த த்ரஷ்டா எனது பாவத்தை அடைகிறான்.
कथम् अधिगच्छति इति, उच्यते —
எவ்வாறு அடைகிறான் என்பதைக் கூறுகிறார்-
गुणानेतानतीत्य त्रीन्देही देहसमुद्भवान् ।
जन्ममृत्युजरादुःखैर्विमुक्तोऽमृतमश्नुते ॥ २० ॥
குணானேதாநதீத்ய த்ரீந்தேஹீ தேஹஸமுத்பவான் ।
ஜன்மம்ருத்யுஜராது:கைர் விமுக்தோஅம்ருதமச்னுதே ॥ 20 ॥
गुणान् एतान् यथोक्तान् अतीत्य जीवन्नेव अतिक्रम्य मायोपाधिभूतान् त्रीन् देही देहसमुद्भवान् देहोत्पत्तिबीजभूतान् जन्ममृत्युजरादुःखैः जन्म च मृत्युश्च जरा च दुःखानि च जन्ममृत्युजरादुःखानि तैः जीवन्नेव विमुक्तः सन् विद्वान् अमृतम् अश्नुते, एवं मद्भावम् अधिगच्छति इत्यर्थः ॥ २० ॥
முன்பு கூறப்பட்ட இந்த மாயாஉபாதிகளாகிய முக்குணங்க ளைக் கடக்கிறான். முக்குணங்களாகிய தேஹம் உண்டாவதற்குக் காரணமானவைகளைக் கடந்து ஜீவித்துக்கொண்டிருக்கும் பொழுதே ஜனனம், மரண, துக்கங்களிலிருந்து விடுபட்டவனாய் இருந்து கொண்டு ஞானியானவன் அம்ருதத்தை அடைகின்றான். இவ்வாறு எனது பாவத்தை அடைகின்றான் என்பது பொருள்.
जीवन्नेव गुणान् अतीत्य अमृतम् अश्नुते इति प्रश्नबीजं प्रतिलभ्य, अर्जुन उवाच —
ஜீவித்துக்கொண்டிருக்கும்பொழுதே குணங்களைக் கடந்து அம்ருதத்தை அடைகின்றான் என்று கூறியவற்றிலிருந்து கேள் விக்கான பீஜத்தை அடைந்து—
अर्जुन उवाच —
அர்ஜுனன் கூறினான்
कैर्लिङ्गैस्त्रीन्गुणानेतानतीतो भवति प्रभो ।
किमाचारः कथं चैतांस्त्रीन्गुणानतिवर्तते ॥ २१ ॥
கைர்லிங்கைஸ்த்ரீந்குணாநேதானதீதோ பவதி ப்ரபோ ।
கிமாசார: கதம் சைதாம்ஸ்த்ரீன்குணாநதிவர்ததே ॥ 21 ॥
कैः लिङ्गैः चिह्नैः त्रीन् एतान् व्याख्यातान् गुणान् अतीतः अतिक्रान्तः भवति प्रभो, किमाचारः कः अस्य आचारः इति किमाचारः कथं केन च प्रकारेण एतान् त्रीन् गुणान् अतिवर्तते अतीत्य वर्तते ॥ २१ ॥
ஹே பிரபோ! முன்பு வியாக்யானம் செய்யப்பட்ட குணங்க ளைக் கடந்தவன் எந்த லக்ஷணங்களுடன் (அடையாளங்களு டன்) இருப்பான்? அவன் எவ்வகை நடத்தை உள்ளவனாய் இருப்பான்? எவ்வாறு இந்த குணங்களைக் கடந்து நிற்கிறான்.
गुणातीतस्य लक्षणं गुणातीतत्वोपायं च अर्जुनेन पृष्टः अस्मिन् श्लोके प्रश्नद्वयार्थं प्रतिवचनं भगवान् उवाच ।
இந்த ஸ்லோகத்தில் அர்ஜுனனால் குணாதீதத்தை குறித்தும் குணாதீதத்தை அடையும் உபாயத்தைப் பற்றியும் கேட்கப்பட்ட இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் கூறுவதற்காக பகவான் கூறுகிறார்-
यत् तावत् ‘कैः लिङ्गैः युक्तो गुणातीतो भवति’ इति, तत् शृणु —
குணாதீதன் அதாவது குணங்களை கடந்தவன் எந்த லக்ஷ ணங்களோடு (அடையாளங்களோடு) இருப்பான் என்பதைக் கேட் பாயாக
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச
प्रकाशं च प्रवृत्तिं च मोहमेव च पाण्डव ।
न द्वेष्टि सम्प्रवृत्तानि न निवृत्तानि काङ्क्षति ॥ २२ ॥
ப்ரகாசம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹமேவ ச பாண்டவ ।
நத்வேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தானி ந நிவ்ருத்தானி காங்க்ஷதி ॥ 22 ॥
प्रकाशं च सत्त्वकार्यं प्रवृत्तिं च रजःकार्यं मोहमेव च तमःकार्यम् इत्येतानि न द्वेष्टि सम्प्रवृत्तानि सम्यग्विषयभावेन उद्भूतानि —
சத்துவகுணத்தின் காரியம் விளக்கமாகும், (பிரகாசம்) ரஜோகுணத்தின் காரியம் பிரவிருத்தியாகும். தமோகுணத்தின் காரியம் மயக்கமாகும். இவைகள் எல்லாம் நன்றாக விஷய பாவங் களாக உண்டானதினால் அதை வெறுக்கவேண்டியதில்லை.
‘मम तामसः प्रत्ययो जातः, तेन अहं मूढः ; तथा राजसी प्रवृत्तिः मम उत्पन्ना दुःखात्मिका, तेन अहं रजसा प्रवर्तितः प्रचलितः स्वरूपात् ; कष्टं मम वर्तते यः अयं मत्स्वरूपावस्थानात् भ्रंशः ; तथा सात्त्विको गुणः प्रकाशात्मा मां विवेकित्वम् आपादयन् सुखे च सञ्जयन् बध्नाति’ इति तानि द्वेष्टि असम्यग्दर्शित्वेन । तत् एवं गुणातीतो न द्वेष्टि सम्प्रवृत्तानि ।
எனக்கு தாமஸமான எண்ணங்கள் உண்டானதால் நான் மூட னாய் இருக்கிறேன்.அவ்வாறே துக்கரூபமான ராஜச ப்ரவிருத்தி என்னிடத்தில் உண்டாயிருக்கிறது. அந்த ராஜச பாவனையினால் பிரவிருத்திக்கச் செய்து என் ஸ்வரூபத்திலிருந்து நழுவச் செய்கிற து. தன்னுடைய ஸ்வரூப ஸ்திதியிலிருந்து நழுவியதால் எனக்கு மிகவும் துக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவ்வாறே விளக்க ஸ்வரூப மான சாத்வீக குணமானது எனக்கு விவேகத்தை உண்டு பண்ணி சுகத்தை அளித்து பந்தப்படுத்துகிறது என்று அசம்யக்தர்சீ (சாதா ரண மனிதன்) குணங்களை வெறுக்கிறான். ஆனால் குணங்க ளைக் கடந்தவன் இவ்வாறு துவேஷிப்பதில்லை.
यथा च सात्त्विकादिपुरुषः सत्त्वादिकार्याणि आत्मानं प्रति प्रकाश्य निवृत्तानि काङ्क्षति, न तथा गुणातीतो निवृत्तानि काङ्क्षति इत्यर्थः ।
எவ்வாறு சாத்விகாதி புருஷன் சாத்விகாதிகளின் காரியங்கள் தன்னைக் குறித்து பிரகாசித்து, நிவிருத்தி அடைந்ததை விரும்பிகி றானோ அவ்வாறு குணங்களைக் கடந்தவன் நிவிர்த்தி அடைந்த வைகளை விரும்பமாட்டான்.
एतत् न परप्रत्यक्षं लिङ्गम् । किं तर्हि ? स्वात्मप्रत्यक्षत्वात् आत्मार्थमेव एतत् लक्षणम् । न हि स्वात्मविषयं द्वेषमाकाङ्क्षां वा परः पश्यति ॥ २२ ॥
இந்த எல்லா லக்ஷணங்களும் (அடையாளங்களும்) மற்றவர்க ளுக்குப் பிரத்யக்ஷமாகாது. யாருக்கு ஆகும்? எனில் தனக்குத் தானே பிரத்யக்ஷமாவதால் ஸ்வசம்வேதியமாகும். ஏனெனில் தன்னுடைய சொந்த விஷயமாகிய துவேஷமோ, விருப்போ மற்றவர்களால் அறிய முடியாது.
अथ इदानीम् ‘गुणातीतः किमाचारः ? ’ इति प्रश्नस्य प्रतिवचनम् आह —
இப்பொழுது குணங்களைக் கடந்தவனுடைய நடத்தை என்ன? என்ற கேள்விக்கு பதில் கூறுகிறார்-
उदासीनवदासीनो गुणैर्यो न विचाल्यते ।
गुणा वर्तन्त इत्येव योऽवतिष्ठति नेङ्गते ॥ २३ ॥
உதாஸீன்வதாஸீநோ குணைர்யோ ந விசால்யதே ।
குணா வர்தந்த இத்யேவ யோஅவதிஷ்டதி நேங்கதே ॥ 23 ॥
उदासीनवत् यथा उदासीनः न कस्यचित् पक्षं भजते, तथा अयं गुणातीतत्वोपायमार्गेऽवस्थितः आसीनः आत्मवित् गुणैः यः संन्यासी न विचाल्यते विवेकदर्शनावस्थातः ।
உதாசீனனாய் இருப்பவன் எந்த ஒரு பக்கமும் சாயாதவனாய் இருப்பது போல் ஆத்மஞானியாகிய சந்நியாசி குணாதீதனாவதற்கான உபாய மார்க்கத்தில் இருந்து கொண்டு விவேக விக்ஞானத்திலிருந்து குணங்களால் நழுவுவது இல்லை. (அசைக்கப்படுவது இல்லை)
तदेतत् स्फुटीकरोति — गुणाः कार्यकरणविषयाकारपरिणताः अन्योऽन्यस्मिन् वर्तन्ते इति यः अवतिष्ठति । छन्दोभङ्गभयात् परस्मैपदप्रयोगः । योऽनुतिष्ठतीति वा पाठान्तरम् । न इङ्गते न चलति, स्वरूपावस्थ एव भवति इत्यर्थः ॥ २३ ॥
இதை ஸ்பஷ்ட்டமாக விளக்குகிறார். காரிய, கரண மற்றும் விஷயாகாரமாக பரிணாமம் அடைந்த குணங்கள் ஒன்றில் ஒன்று இருக்கின்றன என்று அறிந்து நிலைத்திருக்கிறார். சந்தஸுக்கு பங் கம் ஏற்படும் என்று அவதிஷ்டதி என்று பரஸ்மைபதி பிரயோகம் செய்யப்பட்டுள்ளது,வேறு விதமாக அனுதிஷ்டதி என்ற பாடமும் உள்ளது. அசைவதில்லை என்பது பொருள்.
किञ्च —
மேலும்-
समदुःखसुखः स्वस्थः समलोष्टाश्मकाञ्चनः ।
तुल्यप्रियाप्रियो धीरस्तुल्यनिन्दात्मसंस्तुतिः ॥ २४ ॥
ஸமது:கஸுக: ஸ்வஸ்த: ஸமலோஷ்டாஸ்மகாஞ்சன: ।
துல்யப்ரியாப்ரியோ தீரஸ்துல்யநிந்தாத்மஸம்ஸ்துதி: ॥ 24 ॥
समदुःखसुखः समे दुःखसुखे यस्य सः समदुःखसुखः, स्वस्थः स्वे आत्मनि स्थितः प्रसन्नः, समलोष्टाश्मकाञ्चनः लोष्टं च अश्मा च काञ्चनं च लोष्टाश्मकाञ्चनानि समानि यस्य सः समलोष्टाश्मकाञ्चनः ।
இன்ப துன்பங்களைச் சமமாய் பார்ப்பவன். தன் ஆத்மஸ்வரூ பத்திலேயே இருந்து கொண்டு பிரசன்னமாய் இருப்பவன். மண், கல், தங்கம் எல்லாவற்றையும் சமமாய் பார்ப்பவன்.
तुल्यप्रियाप्रियः प्रियं च अप्रियं च प्रियाप्रिये तुल्ये समे यस्य सोऽयं तुल्यप्रियाप्रियः, धीरः धीमान् , तुल्यनिन्दात्मसंस्तुतिः निन्दा च आत्मसंस्तुतिश्च निन्दात्मसंस्तुती, तुल्ये निन्दात्मसंस्तुती यस्य यतेः सः तुल्यनिन्दात्मसंस्तुतिः ॥ २४ ॥
பிரியமான வஸ்துக்களிலும் பிரியமில்லாதவைகளிலும் சம மாய் இருப்பவன். புத்திமான். தன்னை நிந்தை செய்தாலும், தன்னை ஸ்துதி செய்தாலும் சமமாகப் பார்ப்பவன் யதியாவான். (சந்நியாசி ஆவான்)
किञ्च —
மேலும்
मानापमानयोस्तुल्यस्तुल्यो मित्रारिपक्षयोः ।
सर्वारम्भपरित्यागी गुणातीतः स उच्यते ॥ २५ ॥
மானாபமானயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ: ।
ஸர்வாரம்பபரித்யாகீ குணாதீத: ஸ உச்யதே ॥ 25 ॥
मानापमानयोः तुल्यः समः निर्विकारः ; तुल्यः मित्रारिपक्षयोः, यद्यपि उदासीना भवन्ति केचित् स्वाभिप्रायेण, तथापि पराभिप्रायेण मित्रारिपक्षयोरिव भवन्ति इति तुल्यो मित्रारिपक्षयोः इत्याह ।
மான அவமானங்களை சமமாய் பார்ப்பவன். மாறுபாடு அற்ற வன்.அவ்வாறே நண்பனிடத்திலும் எதிரியினிடத்திலும் சமமாய் பார்ப்பவன். ஒருவன் தன்னுடைய அபிப்பிராயத்தில் உதாசீன னாய் இருந்தாலும் பிறருக்கு அவன் நண்பன் அல்லது விரோதி பக்கம் இருக்கிறான் என்று கருதுவதால் இங்கு நண்பன் அல்லது விரோதியின் பக்கம் இருப்பது போல் என்று கூறுகிறார்.
सर्वारम्भपरित्यागी, दृष्टादृष्टार्थानि कर्माणि आरभ्यन्ते इति आरम्भाः, सर्वान् आरम्भान् परित्यक्तुं शीलम् अस्य इति सर्वारम्भपरित्यागी, देहधारणमात्रनिमित्तव्यतिरेकेण सर्वकर्मपरित्यागी इत्यर्थः । गुणातीतः सः उच्यते ।
திருஷ்ட்ட பலன், அதிருஷ்ட்ட பலன்களைத் தரக்கூடிய கர்மாக்களை விட்டொழித்தவன், சர்வாரம்பம் என்றால் இகபர லோக பலன்களைக் கொடுக்கும் கர்மாக்களைக் குறிக்கிறது. அதை விட்டொழித்தவன். தேஹத்தை தாங்குவதற்காக மட்டுமே உள்ள கர்மங்களைக் காட்டிலும் மற்ற கர்மங்களை விட்டொழித்த வன் சர்வகர்மபரித்யாகி. அவன் குணாதீதன் எனப்படுகிறான்.
உதாசீனவத் என்ற ஸ்லோகம் முதல் குணாதீத உச்யதே என்று இறுதி வரையிலும்(எது) கூறப்பட்டதோ அது பிரயத்னத்தால் சம்பாதிக்கத்தக்கது. முமூக்ஷவாகிய சந்நியாசியினால் அனுஷ்ட் டானம் செய்வது குணாதீதத்துவத்தை அடைவதற்கான சாதனமா கும். மேலும் முமூக்ஷவிற்கு ஸ்திரமாக நிலைத்து தானே உணரக் கூடிய என்றால் அனுபவத்தின் முதிர்ச்சியாய் முயற்சி இல்லாமல் இயல்பாகவே அமையும்பொழுது குணாதீதனுக்கு அவைகள் லக்ஷணங்களாகின்றன.
இனி முக்குணங்களையும் எப்படி கடந்தவராகிறான்? என்னும் வினாவிற்கு மறுமொழி அருளிச் சொல்கிறார்-
मां च योऽव्यभिचारेण भक्तियोगेन सेवते ।
स गुणान्समतीत्यैतान्ब्रह्मभूयाय कल्पते ॥ २६ ॥
மாம் ச யோஅவ்யபிசாரேண பக்தியோகேன ஸேவதே ।
ஸ குணான்ஸமதீத்யைதாந்ப்ரஹ்மபூயாய கல்பதே ॥ 26 ॥
मां च ईश्वरं नारायणं सर्वभूतहृदयाश्रितं यो यतिः कर्मी वा अव्यभिचारेण न कदाचित् यो व्यभिचरति भक्तियोगेन भजनं भक्तिः सैव योगः तेन भक्तियोगेन सेवते, सः गुणान् समतीत्य एतान् यथोक्तान् ब्रह्मभूयाय, भवनं भूयः, ब्रह्मभूयाय ब्रह्मभवनाय मोक्षाय कल्पते समर्थो भवति इत्यर्थः ॥ २६ ॥
சந்நியாசியோ அல்லது கர்மயோகியோ எல்லா ஜீவர்களின் ஹிருதயத்தில் இருக்கும் நாராயணனும், ஈஸ்வரனுமாகிய என்னை ஒருபொழுதும் மாறாமல் என்றால் இடைவிடாமல் பக்தியோகத்தி னால் சேவிக்கிறானோ அவன் குணங்களைக் கடந்தவனாகி பிரஹ்மலோகத்தை அதாவது மோக்ஷத்தை அடைவதற்குத் தகுதி உடையவனாகிறான் என்பது பொருள். பஜனம்(ஸேவனம்) என் றால் பக்தி. அதுவே யோகம் எனப்படுகிறது.
कुत एतदिति उच्यते —
இது எதனால் என்பதைக் கூறுகிறார்.
ब्रह्मणो हि प्रतिष्ठाहममृतस्याव्ययस्य च ।
शाश्वतस्य च धर्मस्य सुखस्यैकान्तिकस्य च ॥ २७ ॥
ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹமம்ருதஸ்யாவ்யயஸ்ய ச ।
சாச்வதஸ்ய ச தர்மஸ்ய ஸுகஸ்யைகாந்திகஸ்ய ச ॥ 27 ॥
ब्रह्मणः परमात्मनः हि यस्मात् प्रतिष्ठा अहं प्रतितिष्ठति अस्मिन् इति प्रतिष्ठा अहं प्रत्यगात्मा ।
ஆத்மாவாகிய நான் பிரஹ்மத்திற்கு இருப்பிடம். (ஏன் எனில் பிரஹ்மம் வேறு ஆத்மா வேறு அல்ல. ஒன்றே என்பதால்) இருப்பிடமாகிய நான் பிரத்யக் ஆத்மா.
कीदृशस्य ब्रह्मणः ।
எப்படிப்பட்ட பிரஹ்மத்திற்கு?
अमृतस्य अविनाशिनः अव्ययस्य अविकारिणः शाश्वतस्य च नित्यस्य धर्मस्य धर्मज्ञानस्य ज्ञानयोगधर्मप्राप्यस्य सुखस्य आनन्दरूपस्य ऐकान्तिकस्य अव्यभिचारिणः ।
நாசமற்றதாயும் விகாரமற்றதாயும் நித்யமாயும் ஞானயோகம் என்னும் தர்மத்தால் அடையத்தக்கதாயும், ஆனந்த ரூபமாயும், மாறுபாடு அற்றதாயும் பிரஹ்மம் இருக்கிறது.
நாசமற்றதன்மை முதலிய ஸ்வபாவமுடைய பரமாத்மாவிற்கு இருப்பிடம் பிரத்யக் ஆத்மா ஏனெனில் யதார்த்த ஞானத்தினால் பிரத்யக் ஆத்மா பரமாத்மாவாகிய பிரஹ்மமே என்று நிச்சயிக்கப் படுகிறது. இதையே (பிரஹ்மபூயாய கல்பதே)என்ற வாக்கியத்தால் கூறப்பட்டது.
यया च ईश्वरशक्त्या भक्तानुग्रहादिप्रयोजनाय ब्रह्म प्रतिष्ठते प्रवर्तते, सा शक्तिः ब्रह्मैव अहम् , शक्तिशक्तिमतोः अनन्यत्वात् इत्यभिप्रायः ।
பக்தர்களுக்கு அனுகிரஹித்தல் முதலிய பிரயோஜனத்தின் பொருட்டு எந்த ஈஸ்வரசக்தியினால் பிரஹ்மம் பிரவிருத்திக்கி றதோ அந்த சக்தி பிரஹ்மமே நான். சக்தி, சக்தி உடையதைக் காட் டிலும் வேறு அல்ல என்பது அபிப்பிராயம்.
अथवा, ब्रह्मशब्दवाच्यत्वात् सविकल्पकं ब्रह्म । तस्य ब्रह्मणो निर्विकल्पकः अहमेव नान्यः प्रतिष्ठा आश्रयः ।
அல்லது பிரஹ்ம சப்தம் வாச்சியமாய் இருப்பதால் சவிகல்ப பிரஹ்மம் என்றும் அந்த பிரஹ்மத்தினுடைய நிர்விகல்பம் நானே. மற்றொரு இருப்பிடம் இல்லை.
किंविशिष्टस्य ?
எந்த விசேஷணங்களுடன் கூடியது?
अमृतस्य अमरणधर्मकस्य अव्ययस्य व्ययरहितस्य ।
மரணதர்மம் அற்றதன்மையும், மாறுதல் (நாசம்) அடையும் தன்மையும் அற்றது.
किञ्च, शाश्वतस्य च नित्यस्य धर्मस्य ज्ञाननिष्ठालक्षणस्य सुखस्य तज्जनितस्य ऐकान्तिकस्य एकान्तनियतस्य च, ‘प्रतिष्ठा अहम्’ इति वर्तते ॥ २७ ॥
மேலும் ஞானநிஷ்ட்டா ரூப சாஸ்வத-நித்திய தர்மத்திற்கும் அதனால் உண்டாகும் மாறுபடாத, ஒன்றே என்று நிச்சயம் செய்யப் பட்ட ஆனந்தத்திற்கும் நானே இருப்பிடம். (அஹம் பிரதிஷ்ட்டா) என்ற பதம் தொடர்கின்றது.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये चतुर्दशोऽध्यायः ॥
ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே குணத்ரயவிபாகயோகோ நாம் சதுர்தசோத்யாய: