सप्तमे अध्याये भगवतस्तत्त्वं विभूतयश्च प्रकाशिताः । नवमे च । अथ इदानीं येषु येषु भावेषु चिन्त्यो भगवान् , ते ते भावा वक्तव्याः, तत्त्वं च भगवतो वक्तव्यम् उक्तमपि, दुर्विज्ञेयत्वात् , इत्यतः ।
ஏழாவது அத்யாயத்திலும், ஒன்பதாவது அத்யாயத்திலும் பகவானுடைய தத்துவமும் விபூதிகளும் எடுத்துக்கூறப்பட்டன. இப்பொழுது எந்த, எந்த பொருள்களில் பகவானை தியானிக்க யோக்கியமோ அந்த, அந்த பொருள்கள் கூறப்பட வேண்டும். முன்பே பகவானுடைய தத்துவத்தை விளக்கியுள்ளபோதிலும் அதைப் புரிந்து கொள்வது மிகக்கடினமானதால் மறுபடியும் அதை பகவான் கூறலானார்.
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச—
भूय एव महाबाहो शृणु मे परमं वचः ।
यत्तेऽहं प्रीयमाणाय वक्ष्यामि हितकाम्यया ॥ १ ॥
பூய ஏவ மஹாபாஹோ ச்ருணு மே பரமம் வச: ।
யத்தே அஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹித-காம்யயா ॥ 1 ॥
भूयः एव भूयः पुनः हे महाबाहो शृणु मे मदीयं परमं प्रकृष्टं निरतिशयवस्तुनः प्रकाशकं वचः वाक्यं यत् परमं ते तुभ्यं प्रीयमाणाय — मद्वचनात् प्रीयसे त्वम् अतीव अमृतमिव पिबन् , ततः — वक्ष्यामि हितकाम्यया हितेच्छया ॥ १ ॥
ஹே மஹாபாஹோ! மேலும் நீ என்னுடைய பரம (உத்தமமான) நிரதிசய பொருளை வெளிப்படுத்தும் வாக்கியத்தைக் கேள், பிரியமானவனான உன்பொருட்டு கூறிய என்னுடைய வசனங்களை பிரியத்துடன் அமிருதம் குடித்தது போல், மிகுந்த மகிழ்ச்சி அடைகிறாய். அதனால் உனக்கு நலம் ஏற்பட விரும்பி மேலான வாக்கியத்தைக் கூறுகிறேன்.
किमर्थम् अहं वक्ष्यामि इत्यत आह –
நான் எதனால் இவ்வாறு கூறுகிறேன்? அதைக் கூறுகிறார்-
न मे विदुः सुरगणाः प्रभवं न महर्षयः ।
अहमादिर्हि देवानां महर्षीणां च सर्वशः ॥ २ ॥
ந மே விது: ஸுரகணா: ப்ரபவம் ந மஹர்ஷய: ।
அஹமாதிர்ஹி தேவானாம் மஹர்ஷீணாம் ச ஸர்வச: ॥ 2 ॥
न मे विदुः न जानन्ति सुरगणाः ब्रह्मादयः । किं ते न विदुः ? मम प्रभवं प्रभावं प्रभुशक्त्यतिशयम् , अथवा प्रभवं प्रभवनम् उत्पत्तिम् । नापि महर्षयः भृग्वादयः विदुः ।
பிரஹ்ம்மா முதலிய தேவர்கள் அறியவில்லை. எதை அறியவில்லை யெனில் என்னுடைய அதிகமான பிரபுசக்தி தன்மையை அல்லது உற்பத்தியை, பிருகு முதலிய மஹரிஷிகளும் அறியவில்லை.
कस्मात् ते न विदुरित्युच्यते —
எதனால் அவர்கள் அறியவில்லை என்பதைக் கூறுகிறார்.
अहम् आदिः कारणं हि यस्मात् देवानां महर्षीणां च सर्वशः सर्वप्रकारैः ॥ २ ॥
ஏனெனில் நான் எல்லா தேவதைகளுக்கும், மஹர்ஷிகளுக்கும் ஆதியாக என்றால் மூலகாரணமாக இருக்கிறேன்.
किञ्च —
மேலும்
यो मामजमनादिं च वेत्ति लोकमहेश्वरम् ।
असंमूढः स मर्त्येषु सर्वपापैः प्रमुच्यते ॥ ३ ॥
யோ மாமஜமனாதிம் ச வேத்தி லோகமஹேச்வரம் ।
அஸம்மூட: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே ॥ 3 ॥
यः माम् अजम् अनादिं च, यस्मात् अहम् आदिः देवानां महर्षीणां च, न मम अन्यः आदिः विद्यते ; अतः अहम् अजः अनादिश्च ; अनादित्वम् अजत्वे हेतुः, तं माम् अजम् अनादिं च यः वेत्ति विजानाति लोकमहेश्वरं लोकानां महान्तम् ईश्वरं तुरीयम् अज्ञानतत्कार्यवर्जितम् असंमूढः संमोहवर्जितः सः मर्त्येषु मनुष्येषु, सर्वपापैः सर्वैः पापैः मतिपूर्वामतिपूर्वकृतैः प्रमुच्यते प्रमोक्ष्यते ॥ ३ ॥
நான் தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் ஆதிகாரணமாய் இருக்கிறேன். ஆனால் எனக்கு வேறு ஒரு ஆதிகாரணம் இல்லை. ஆகையால் நான் அநாதி, பிறப்பற்றவன். அநாதித்துவமானது பிறப் பற்றதன்மைக்கு ஹேதுவாகிறது. அந்த என்னை பிறப்பற்றவன் என்றும், அநாதி என்றும், உலகிற்கெல்லாம் மேலான ஈஸ்வரன் என்றும், துரீயம் என்றும், அக்ஞானம் அதன் காரியம் அற்றவன் என்றும் எவன் அறிகிறானோ அவன் மனிதர்களுள் மூடத்தன்மை அற்றவன், மோஹமற்றவன், அறிந்தோ அறியாமலோ செய்த எல்லா பாபங்களில் இருந்தும் விடுபட்டவனாகிறான்.
इतश्चाहं महेश्वरो लोकानाम् —
இவ்வாறு நான் உலகிற்கெல்லாம் மேலான ஈஸ்வரன்-
बुद्धिर्ज्ञानमसंमोहः क्षमा सत्यं दमः शमः ।
सुखं दुःखं भवोऽभावो भयं चाभयमेव च ॥ ४ ॥
புத்திர்-ஜ்ஞான-மஸம்மோஹ: க்ஷமா ஸத்யம் தம: சம: ।
ஸுகம் துக்கம் பவோ அபாவோ பயம் சாபயமேவ ச ॥ 4 ॥
बुद्धिः अन्तःकरणस्य सूक्ष्माद्यर्थावबोधनसामर्थ्यम् , तद्वन्तं बुद्धिमानिति हि वदन्ति ।
நுட்பமான, அதி நுட்பமான பொருள்களை அறிந்துகொள்ளும் சாமர்த்தியமுள்ள அந்தகரணத்தை உடையவனை புத்திமான் என்று கூறுகிறார்கள்.
ज्ञानम् आत्मादिपदार्थानामवबोधः । असंमोहः प्रत्युत्पन्नेषु बोद्धव्येषु विवेकपूर्विका प्रवृत्तिः । क्षमा आक्रुष्टस्य ताडितस्य वा अविकृतचित्तता । सत्यं यथादृष्टस्य यथाश्रुतस्य च आत्मानुभवस्य परबुद्धिसङ्क्रान्तये तथैव उच्चार्यमाणा वाक् सत्यम् उच्यते । दमः बाह्येन्द्रियोपशमः । शमः अन्तःकरणस्य उपशमः । सुखम् आह्लादः । दुःखं सन्तापः । भवः उद्भवः । अभावः तद्विपर्ययः । भयं च त्रासः, अभयमेव च तद्विपरीतम् ॥ ४ ॥
ஆத்மா முதலிய பதார்த்தங்களை அறிந்து கொள்வது ஞானம். அறிவதற்கு யோக்கியமுள்ளவைகளை அடைந்தபொழுது விவேகத் துடன் செயல்படுவது. எவன் ஒருவன் நிந்தித்தாலும் அடித்தாலும் அவனிடத்தில் மாறாத சித்தத்துடன் (மனதுடன்) இருத்தல், க்ஷமை. பார்த்தவாறு, கேட்டவாறு, அனுபவித்தவாறு மற்றவர்களுடைய மன தில் பதியுமாறு கூறும் வாக்கியம் சத்யம் எனப்படும். வெளி இந்திரியங் களின் கட்டுப்பாடு தமம். அந்தக்கரணக் கட்டுப்பாடு சமம். ஆனந்தம் அடைதல் சுகம். மனது கஷ்ட்டப்படுதல் துக்கம். தோன்றுதல் பாவம். தோன்றாதது அபாவம். பயம், பயமற்றது அபயம்.
अहिंसा समता तुष्टिस्तपो दानं यशोऽयशः ।
भवन्ति भावा भूतानां मत्त एव पृथग्विधाः ॥ ५ ॥
அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ்-தபோதானம் யசோஅயச: ।
பவந்தி பாவா பூதானாம் மத்த ஏவ ப்ருதக்விதா: ॥ 5 ॥
अहिंसा अपीडा प्राणिनाम् । समता समचित्तता । तुष्टिः सन्तोषः पर्याप्तबुद्धिर्लाभेषु । तपः इन्द्रियसंयमपूर्वकं शरीरपीडनम् । दानं यथाशक्ति संविभागः । यशः धर्मनिमित्ता कीर्तिः । अयशस्तु अधर्मनिमित्ता अकीर्तिः ।
பிராணிகளை துன்புறுத்தாமல் இருப்பது அஹிம்சை. மனம் ஒரே நிலையில் இருப்பது சமத்தன்மை (சமதா). துஷ்டி,ஸந்தோஷம், தேடியபொருள்களின் மேல்போதுமென்னும் எண்ணம் இந்திரி யங்களை அடக்கி சரீரத்தை வருத்திக்கொள்வது தபஸ். தன்னால் முடியுமளவு பகிர் ந்து அளித்தல். தர்மத்தின் மூலமாக கிடைக்கும் புகழ். அதர்மத்தினால் ஏற்படும் அவமானம் புகழ் அற்றது (அயஸ்)
भवन्ति भावाः यथोक्ताः बुद्ध्यादयः भूतानां प्राणिनां मत्तः एव ईश्वरात् पृथग्विधाः नानाविधाः स्वकर्मानुरूपेण ॥ ५ ॥
இவ்வாறு பிராணிகளுக்கு தங்களுடைய கர்மானுசாரமாக (கர்மத்திற்கு ஏற்றவாறு) ஏற்படும் புத்தி முதலிய பலவிதமான தன்மை கள் யாவும் ஈச்வரனாகிய என்னிடமிருந்தே ஏற்படுகின்றன.
किञ्च —
மேலும்
महर्षयः सप्त पूर्वे चत्वारो मनवस्तथा ।
मद्भावा मानसा जाता येषां लोक इमाः प्रजाः ॥ ६ ॥
மஹர்ஷய: ஸப்த பூர்வே சத்வாரோ மனவஸ்-ததா ।
மத்பாவா மானஸா ஜாதா யேஷாம் லோக இமா: ப்ரஜா: ॥ 6 ॥
महर्षयः सप्त भृग्वादयः पूर्वे अतीतकालसम्बन्धिनः, चत्वारः मनवः तथा सावर्णा इति प्रसिद्धाः, ते च मद्भावाः मद्गतभावनाः वैष्णवेन सामर्थ्येन उपेताः, मानसाः मनसैव उत्पादिताः मया जाताः उत्पन्नाः, येषां मनूनां महर्षीणां च सृष्टिः लोके इमाः स्थावरजङ्गमलक्षणाः प्रजाः ॥ ६ ॥
பிருகு முதலிய ஏழு ரிஷிகள், சென்றமுன் காலத்தை சேர்ந்த நான்கு மனுக்கள். அவர்கள் சாவர்ணா என்று புராணங்களில் பிரசித்தி பெற்றவர்கள். அவர்கள் எல்லோரும் என்னிடத்திலேயே நிலைத்த மனதுடையவர்கள். விஷ்ணுவாகிய என்னுடைய சாமர்த்தி யத்தை உடையவர்கள். என் மனதினால் உண்டாக்கப்பட்டவர்கள். இந்த சராசரமான ஜகத்தானது (உலகமானது) மனுக்கள், மகரிஷிக ளால் உற்பத்தி செய்யப்பட்டது.
एतां विभूतिं योगं च मम यो वेत्ति तत्त्वतः ।
सोऽविकम्पेन योगेन युज्यते नात्र संशयः ॥ ७ ॥
ஏதாம் விபூதிம் யோகம் ச மம யோ வேத்தி தத்வத: ।
ஸோ அவிகம்பேன் யோகேன யுஜ்யதே நாத்ர ஸம்சய: ॥ 7 ॥
एतां यथोक्तां विभूतिं विस्तारं योगं च युक्तिं च आत्मनः घटनम् , अथवा योगैश्वर्यसामर्थ्यं सर्वज्ञत्वं योगजं योगः उच्यते, मम मदीयं योगं यः वेत्ति तत्त्वतः तत्त्वेन यथावदित्येतत् ।
மேலே கூறப்பட்ட என்னுடைய விபூதியானது விஸ்தாரமானது. யோகத்துடனும் யுக்தியுடனும் கூடியது என்றால் தன்னுடைய மாயையின் செயல் அல்லது யோகத்தினால் உண்டான சர்வக்ஞ தன்மையா கிய சாமர்த்தியத்தை (வல்லமை) யோகம் என்று கூறப்படுகிறது. எவன் என்னுடைய யதார்த்த தத்துவத்தை அறிகிறானோ
सः अविकम्पेन अप्रचलितेन योगेन सम्यग्दर्शनस्थैर्यलक्षणेन युज्यते सम्बध्यते । न अत्र संशयः न अस्मिन् अर्थे संशयः अस्ति ॥ ७ ॥
அவன் சலனமற்றயோகத்தினால் யதார்த்த ஞானத்தை ஸ்திரமா க(திடமாக) அடைகிறான். இந்த விஷயத்தில் ஸந்தேஹமே இல்லை.
कीदृशेन अविकम्पेन योगेन युज्यते इत्युच्यते —
எப்படிப்பட்ட சலனமற்றயோகத்தை அடைகிறான் என்று கூறுகிறார்.
अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते ।
इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विताः ॥ ८ ॥
அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே ।
இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமன்விதா: ॥ 8 ॥
अहं परं ब्रह्म वासुदेवाख्यं सर्वस्य जगतः प्रभवः उत्पत्तिः । मत्तः एव स्थितिनाशक्रियाफलोपभोगलक्षणं विक्रियारूपं सर्वं जगत् प्रवर्तते । इति एवं मत्वा भजन्ते सेवंते मां बुधाः अवगतपरमार्थतत्त्वाः, भावसमन्विताः भावः भावना परमार्थतत्त्वाभिनिवेशः तेन समन्विताः संयुक्ताः इत्यर्थः ॥ ८ ॥
வாசுதேவன் எனப்படும் பரப்ரஹ்ம்மாகிய நான் இந்த ஜகத்திற் கெல்லாம் காரணம். என்னிடத்தில் தான் இருப்பு, நாசம் முதலிய கர் மத்தின் பலன்களாகிய போகங்களுடன் கூடிய எல்லா செயல்களுடன் விகாரங்களுடன் கூடிய உலகமானது இருக்கிறது என்று இவ்வாறு அறிந்து பரமார்த்த தத்துவத்தை அறிந்ததினால் அதிலேயே சிந்த னையுடன் அதுவாகவே ஆகிவிட்ட தத்துவஞானி என்னைத் தொழு கிறான் என்பது பொருள்.
किञ्च —
மேலும்
मच्चित्ता मद्गतप्राणा बोधयन्तः परस्परम् ।
कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च ॥ ९ ॥
மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த: பரஸ்பரம் ।
கதயந்த்தச்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச ॥ 9 ॥
मच्चित्ताः, मयि चित्तं येषां ते मच्चित्ताः, मद्गतप्राणाः मां गताः प्राप्ताः चक्षुरादयः प्राणाः येषां ते मद्गतप्राणाः, मयि उपसंहृतकरणाः इत्यर्थः । अथवा, मद्गतप्राणाः मद्गतजीवनाः इत्येतत् ।
என்னிடத்திலேயே மனதை வைத்தவர்கள், அவ்வாறேகண்கள் முதலான இந்திரியங்களாகிய பிராணனை என்னிடத்திலேயே செலுத்தியவர்கள் என்றால் என்னிடத்தில் எல்லா இந்திரியங் களையும் ஒடுக்கியவர்கள் அல்லது என் பொருட்டு ஜீவனத்தை அர்ப்பணித்தவர்கள் என்று பொருள்.
बोधयन्तः अवगमयन्तः परस्परम् अन्योन्यम् , कथयन्तश्च ज्ञानबलवीर्यादिधर्मैः विशिष्टं माम् , तुष्यन्ति च परितोषम् उपयान्ति च रमन्ति च रतिं च प्राप्नुवन्ति प्रियसङ्गत्येव ॥ ९ ॥
என்னுடைய பக்தன் தனக்கு ஒப்பான மற்றவர்களிடம் (என்னுடைய தத்துவத்தை) தான் அறிந்ததையும் அவ்வாறேஞானம், பலம், சாமர்த்தியம் முதலியவைகளுடன் கூடிய என்னை வர்ணனை செய்து எப்பொழுதும் சந்தோஷத்தை அடைகிறார்கள். மேலும் பிரியப்பட்ட பொருளை அடைந்தது போல் ரமிக்கின்றார்கள்.
ये यथोक्तैः प्रकारैः भजन्ते मां भक्ताः सन्तः —
எவர்கள் இவ்வாறு கூறப்பட்ட பக்தர்களாக இருந்து கொண்டு தொழுகிறார்களோ-
तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकम् ।
ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते ॥ १० ॥
தேஷாம் ஸததயுக்தானாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம் ।
ததாமி புத்தியோகம் தம் யேன மாமுபயாந்தி தே ॥ 10 ॥
तेषां सततयुक्तानां नित्याभियुक्तानां निवृत्तसर्वबाह्यैषणानां भजतां सेवमानानाम् । किम् अर्थित्वादिना कारणेन ? नेत्याह — प्रीतिपूर्वकं प्रीतिः स्नेहः तत्पूर्वकं मां भजतामित्यर्थः । ददामि प्रयच्छामि बुद्धियोगं बुद्धिः सम्यग्दर्शनं मत्तत्त्वविषयं तेन योगः बुद्धियोगः तं बुद्धियोगम् , येन बुद्धियोगेन सम्यग्दर्शनलक्षणेन मां परमेश्वरम् आत्मभूतम् आत्मत्वेन उपयान्ति प्रतिपद्यन्ते ।
என்னை வெளிவிஷயங்களில் ஆசையற்றும், விரும்பிய ஒன்றை அடைவதற்கான காரணத்திற்காக அல்லாமல் பிரியத்துடன் என்னை எப்பொழுதும் இடைவிடாமல் தொழுகிறார்களோ என்பது பொருள். அப்படிப்பட்டவர்களுக்கு புத்தியோகத்தைக் கொடுக்கி றேன். என்னுடைய தத்துவத்தை உள்ளவாறு அறிதல் புத்தியாகும். அந்த புத்தியுடன் கூடியிருத்தல் புத்தியோகமாகும். அந்த யதார்த்த ஞானமாகிய புத்தியோகத்தினால் பரமேஸ்வரனாகிய என்னை ஆத்ரூபமாகவே அறிகிறார்கள்.
के ? ते ये मच्चित्तत्वादिप्रकारैः मां भजन्ते ॥ १० ॥
அவர்கள் யார் எனில்? எவர்கள் என்னிடத்திலேயே சித்தத்தை செலுத்துதல் முதலியவைகளால் என்னைத் தொழுகிறார்களோ அவர்கள்.
किमर्थम् , कस्य वा, त्वत्प्राप्तिप्रतिबन्धहेतोः नाशकं बुद्धियोगं तेषां त्वद्भक्तानां ददासि इत्यपेक्षायामाह —
உங்களுடைய பக்தர்களுக்கு எதனால் புத்தியோகத்தை அளிக் கிறீர்கள்? உங்களை அடைவதற்கு எந்த காரணம் தடையாக உள் ளது? என்றவினாவிற்கு கூறுகிறார்-
तेषामेवानुकम्पार्थमहमज्ञानजं तमः ।
नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता ॥ ११ ॥
தேஷா-மேவானுகம்பார்த-மஹ-மக்ஞானஜம் தம: ।
நாசயாம்-யாத்மபாவஸ்தோ ஜ்ஞானதீபேன பாஸ்வதா ॥ 11 ॥
तेषामेव कथं नु नाम श्रेयः स्यात् इति अनुकम्पार्थं दयाहेतोः अहम् अज्ञानजम् अविवेकतः जातं मिथ्याप्रत्ययलक्षणं मोहान्धकारं तमः नाशयामि, आत्मभावस्थः आत्मनः भावः अन्तःकरणाशयः तस्मिन्नेव स्थितः सन् । ज्ञानदीपेन विवेकप्रत्ययरूपेण ।
அவர்களுக்கு எவ்வாறு ச்ரேயஸ் (நன்மை) உண்டாகுமோ அவ்வாறு கருணையினால், அவிவேகத்தினால் உண்டான மித்தியா ஞானரூப மோஹாந்தகாரமாகிய தமஸ்ஸை, எப்பொழுதும் அவர்களி டத்தில் உள்ள ஆத்மபாவனையினால் அவர்களின் அந்தக்கர ணத்தில் இருந்துகொண்டு விவேகபுத்தி ரூப ஞானம் என்னும் விளக்கினால் நான் நாசம் செய்கிறேன்.
भक्तिप्रसादस्नेहाभिषिक्तेन मद्भावनाभिनिवेशवातेरितेन ब्रह्मचर्यादिसाधनसंस्कारवत्प्रज्ञावर्तिना विरक्तान्तःकरणाधारेण विषयव्यावृत्तचित्तरागद्वेषाकलुषितनिवातापवरकस्थेन नित्यप्रवृत्तैकाग्र्यध्यानजनितसम्यग्दर्शनभास्वता ज्ञानदीपेनेत्यर्थः ॥ ११ ॥
பக்தியினால் உண்டான அனுக்கிரஹம் என்றஎண்ணையினால் நிரப்பப்பட்டது. என்னுடைய பாவனையாகவே இருக்கும் அபினிவே சம்(விடாமுயற்சி) என்னும் காற்றினால் எரிந்து கொண்டிருக்கிறது. பிரஹ்மச்சர்யம் முதலிய சாதனங்களால் உண்டான சம்ஸ்காரத்துடன் கூடிய புத்திரூப பக்தி. அசக்தி(விரக்தி) உடைய அந்தக்கரணத்தினு டைய ஆதரவினால் விஷயங்களில் விருப்பமற்று, ராகத்துவேஷங்க ளினால் கலங்கப்படாத சித்தம் என்னும் காற்று அற்று, மேலும் இடைவிடாமல் எப்பொழுதும் அப்பியாசம் செய். ஏகாக்கிர த்யானத் தால் உண்டான சம்யக்தர்சனம் (யதார்த்த ஞானம்) என்னும் ஒளி உடையது ஞானதீபம் (ஞான விளக்கு) என்பது பொருள்.
यथोक्तां भगवतः विभूतिं योगं च श्रुत्वा अर्जुन उवाच —
இவ்வாறு கூறப்பட்ட பகவானுடைய விபூதியையும் யோகத்தையும் கேட்டு அர்ஜுனன் கூறினான்.
अर्जुन उवाच —
அர்ஜுன உவாச —
परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् ।
पुरुषं शाश्वतं दिव्यमादिदेवमजं विभुम् ॥ १२ ॥
பரம் ப்ரஹ்ம பரம்தாம பவித்ரம் பரமம் பவான் ।
புருஷம் சாச்வதம் திவ்யமாதிதேவமஜம் விபும் ॥ 12 ॥
परं ब्रह्म परमात्मा परं धाम परं तेजः पवित्रं पावनं परमं प्रकृष्टं भवान् । पुुुरुषं शाश्वतं नित्यं दिव्यं दिवि भवम् आदिदेवं सर्वदेवानाम् आदौ भवम् आदिदेवम् अजं विभुं विभवनशीलम् ॥ १२ ॥
தாங்கள் பரம்பிரஹ்ம- பரமாத்மா, பரமதேஜஸ், பரமபுனிதமான வர். மேலும் தாங்கள் மேலான புருஷர், எப்பொழுதும் உள்ள திவ்ய புருஷர் என்றால் தேவலோகத்தில் வஸிப்பவர். எல்லா தேவர்களுக் கும் முன்னாலேயே இருப்பவர். பிறப்பற்றவர் வியாபகர்.
ईदृशम् —
இவ்வாறு
आहुस्त्वामृषयः सर्वे देवर्षिर्नारदस्तथा ।
असितो देवलो व्यासः स्वयं चैव ब्रवीषि मे ॥ १३ ॥
ஆஹுஸ்த்வாம்ருஷய: ஸர்வே தேவர்ஷிர் நாரதஸ்ததா ।
அஸிதோ தேவலோ வ்யாஸ: ஸ்வயம் சைவ ப்ரவீஷிமே ॥ 13 ॥
आहुः कथयन्ति त्वाम् ऋषयः वसिष्ठादयः सर्वे देवर्षिः नारदः तथा । असितः देवलोऽपि एवमेवाह, व्यासश्च, स्वयं चैव त्वं च ब्रवीषि मे ॥ १३ ॥
தங்களை வசிஷ்டர் முதலிய எல்லா ரிஷிகளும் தங்களை வர் ணிக்கிறார்கள். தேவரிஷியான நாரதரும், அசிதரும், தேவலரும், வியாசரும் அவ்வாறேகூறுகிறார்கள். தாங்களும் அவ்வாறேஎன்னி டம் கூறுகிறீர்கள்.
सर्वमेतदृतं मन्ये यन्मां वदसि केशव ।
न हि ते भगवन्व्यक्तिं विदुर्देवा न दानवाः ॥ १४ ॥
ஸர்வபூதத்ருதம் மன்யே யன்மாம் வதஸி கேசவ ।
நஹிதே பகவன் வ்யக்திம் விதுர்-தேவா ந தானவா: ॥ 14 ॥
सर्वमेतत् यथोक्तम् ऋषिभिः त्वया च एतत् ऋतं सत्यमेव मन्ये, यत् मां प्रति वदसि भाषसे हे केशव । न हि ते तव भगवन् व्यक्तिं प्रभवं विदुः न देवाः, न दानवाः ॥ १४ ॥
ஹே கேசவ! ரிஷிகளாலும், தங்களாலும் கூறப்பட்டவை எல்லாம் எனக்காக நீங்கள் கூறுவதனால் அதை சத்தியம் (உண்மை) என்று கருதுகிறேன். ஏன் எனில், ஹே பகவானே தங்களுடைய உற்பத்தியை தேவர்களும், அசுரர்களும் அறியமாட்டார்கள்.
यतः त्वं देवादीनाम् आदिः, अतः —
எதனால் நீங்கள் தேவர்களுக்கெல்லாம் ஆதியாக இருக்கி றீர்களோ அதனால்-
स्वयमेवात्मनात्मानं वेत्थ त्वं पुरुषोत्तम ।
भूतभावन भूतेश देवदेव जगत्पते ॥ १५ ॥
ஸ்வயமே-வாத்ம-னாத்மானம் வேத்த த்வம் புருஷோத்தம ।
பூதபாவன பூதேச தேவதேவ ஜகத்பதே ॥ 15 ॥
स्वयमेव आत्मना आत्मानं वेत्थ जानासि त्वं निरतिशयज्ञानैश्वर्यबलादिशक्तिमन्तम् ईश्वरं पुरुषोत्तम । भूतानि भावयतीति भूतभावनः, हे भूतभावन । भूतेश भूतानाम् ईशितः । हे देवदेव जगत्पते ॥ १५ ॥
ஹே புருஷோத்தம! ஹே பூத பிராணிகளை உற்பத்தி செய்யும் பூதபாவன! ஹே பூதேச பூதங்களுக்கெல்லாம் ஈஸ்வரனே! ஹே தேவர்களுக்கெல்லாம் தேவனே! ஜகத்திற்கெல்லாம் தலைவனே! நிரதிசய ஞான, ஐஸ்வர்யம், சாமர்த்தியம் முதலிய சக்திகளுடன் கூடிய ஈஸ்வரராகிய தாங்கள் தன்னைத் தானே அறிகிறீர்கள்.
वक्तुमर्हस्यशेषेण दिव्या ह्यात्मविभूतयः ।
याभिर्विभूतिभिर्लोकानिमांस्त्वं व्याप्य तिष्ठसि ॥ १६ ॥
வக்துமர்ஹஸ்யசேஷேண திவ்யா ஹ்யாத்மவிபூதய: ।
யாபிர்விபூதிபிர்லோகாநிமாம்ஸ்த்வம் வ்யாப்ய திஷ்டஸி ॥ 16 ॥
वक्तुं कथयितुम् अर्हसि अशेषेण । दिव्याः हि आत्मविभूतयः । आत्मनो विभूतयो याः ताः वक्तुम् अर्हसि । याभिः विभूतिभिः आत्मनो माहात्म्यविस्तरैः इमान् लोकान् त्वं व्याप्य तिष्ठसि ॥ १६ ॥
தங்களுடைய விபூதிகளை முழுவதுமாக கூறுவதில் சாமர்த்தியம் உடையவர்(தாங்களே). எந்த தங்களுடைய விபூதிகள் என்னும் மாஹாத்மியத்தின் விஸ்தாரத்தால் இந்த உலகம் முழுவதும் வியாபித் திருக்கிறீரோ அதைக் கூறுவதிலும் தாங்களே சாமர்த்தியசாலி.
कथं विद्यामहं योगिंस्त्वां सदा परिचिन्तयन् ।
केषु केषु च भावेषु चिन्त्योऽसि भगवन्मया ॥ १७ ॥
கதம் வித்யா-மஹம் யோகிம்ஸ்-த்வாம் ஸதா பரிசிந்தயன் ।
கேஷுகேஷு ச பாவேஷு சிந்த்யோஅஸி பகவன் மயா ॥ 17 ॥
कथं विद्यां विजानीयाम् अहं हे योगिन् त्वां सदा परिचिन्तयन् । केषु केषु च भावेषु वस्तुषु चिन्त्यः असि ध्येयः असि भगवन् मया ॥ १७ ॥
ஹே யோகியே ! தங்களை எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டு (த்யானம் செய்து) எவ்விதமாக தங்களை அறிவேன்? ஹே பகவானே! எந்த எந்த வஸ்துக்களில் என்னால் த்யானிக்கத்தக்கவராகிறீர்?
विस्तरेणात्मनो योगं विभूतिं च जनार्दन ।
भूयः कथय तृप्तिर्हि शृण्वतो नास्ति मेऽमृतम् ॥ १८ ॥
விஸ்தரேணாத்மனோ யோகம் விபூதிம் ச ஜனார்தன ।
பூய: கதய த்ருப்திர்-ஹி ச்ருண்வதோ நாஸ்தி மேஅம்ருதம் ॥ 18 ॥
विस्तरेण आत्मनः योगं योगैश्वर्यशक्तिविशेषं विभूतिं च विस्तरं ध्येयपदार्थानां हे जनार्दन ।
ஹே ஜனார்த்தனா! தங்களுடைய யோகத்தை அதாவது தங்களு டைய யோக ஐஸ்வர்ய சக்தி ரூப விசேஷங்களையும், தங்களுடைய விபூதிகளையும்(மாஹாத்மியத்தையும்), மேலும் தியானத்திற்கு யோக்கியமான பதார்த்தங்களையும் விரிவாக கூறவேண்டுகிறேன்.
अर्दतेः गतिकर्मणः रूपम् , असुराणां देवप्रतिपक्षभूतानां जनानां नरकादिगमयितृत्वात् जनार्दनः अभ्युदयनिःश्रेयसपुरुषार्थप्रयोजनं सर्वैः जनैः याच्यते इति वा ।
செல்லுதல் என்னும் தொழில் (அர்த்த) என்னும் தாதுவிலிருந்து தோன்றியது. (அவ்வாறேவேண்டுதல் என்னும் பொருள் உள்ளது,) தேவர்களின் எதிரிகளாகிய அசுரர்களை நரகம் முதலியவற்றுள் செலுத்துவதால் ஜனார்த்தனன். அல்லது இகலோக பரலோக போகங் கள் மற்றும் மோக்ஷமாகிய புருஷார்த்தங்களை அவரிடம் எல்லாஜ னங்களாலும் வேண்டப்படுவதால் ஜனார்த்தனன்.
भूयः पूर्वम् उक्तमपि कथय ; तृप्तिः परितोषः हि यस्मात् नास्ति मे मम शृण्वतः त्वन्मुखनिःसृतवाक्यामृतम् ॥ १८ ॥
நீங்கள் முன்பே கூறியிருந்தாலும் மறுபடியும் கூறி அருள வேண்டும். ஏனெனில் தங்களுடைய முகக்கமலத்திலிருந்து வெளிப்பட்ட திரு வாக்கிய ரூப அம்ருதத்தை கேட்டும் எனக்கு திருப்தி ஏற்படவில்லை.
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச—
हन्त ते कथयिष्यामि दिव्या ह्यात्मविभूतयः ।
प्राधान्यतः कुरुश्रेष्ठ नास्त्यन्तो विस्तरस्य मे ॥ १९ ॥
ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யா ஹ்யாத்ம-விபூதய: ।
ப்ராதான்யத: குருச்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே ॥ 19 ॥
हन्त इदानीं ते तव दिव्याः दिवि भवाः आत्मविभूतयः आत्मनः मम विभूतयः याः ताः कथयिष्यामि इत्येतत् । प्राधान्यतः यत्र यत्र प्रधाना या या विभूतिः तां तां प्रधानां प्राधान्यतः कथयिष्यामि अहं कुरुश्रेष्ठ । अशेषतस्तु वर्षशतेनापि न शक्या वक्तुम् , यतः नास्ति अन्तः विस्तरस्य मे मम विभूतीनाम् इत्यर्थः ॥ १९ ॥
ஹே குருவம்சத்தில் சிறந்தவனே! நான் இப்பொழுதும் என்னு டைய திவ்யமான விபூதிகள் (வைபவங்கள்) எவைகளோ அவை களை உனக்கு கூறுகிறேன். எங்கு எங்கு பிரதானமாக என்னுடைய எந்த எந்த விபூதிகள் பிரதானமாக (முதன்மையாக) உள்ளதோ அந்த அந்த முதன்மையானதைக் கூறுகிறேன். முழுமையாக சொல்லுவ தற்கு நூறு வருடங்கள் ஆனாலும் முடியாது. ஏனெனில் என்னுடைய விஸ்தாரமான விபூதிகள் முடிவற்றது என்பது பொருள்.
तत्र प्रथममेव तावत् शृणु —
அவைகளில் முதலில் இதனைக் கேள்-
अहमात्मा गुडाकेश सर्वभूताशयस्थितः ।
अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च ॥ २० ॥
அஹமாத்மா குடாகேச ஸர்வபூதாசயஸ்தித: ।
அஹமாதிச்ச மத்யம் ச பூதானா-மந்த ஏவ ச ॥ 20 ॥
अहम् आत्मा प्रत्यगात्मा गुडाकेश, गुडाका निद्रा तस्याः ईशः गुडाकेशः, जितनिद्रः इत्यर्थः ; घनकेश इति वा । सर्वभूताशयस्थितः सर्वेषां भूतानाम् आशये अन्तर्हृदि स्थितः अहम् आत्मा प्रत्यगात्मा नित्यं ध्येयः ।
குடா என்றால் நித்திரை. அதற்கு ஈசன் குடாகேசன். என்றால் நித்திரையை ஜெயித்தவன் என்பது பொருள் அல்லது அடர்த்தியான கேசம் உடையவன் என்பது பொருள். ஆகையால் அர்ஜுனன் குடா கேசன் எனக் கூறப்படுகிறான். ஹே குடாகேசனே! பிரத்யக் ஆத்மா வாக உள்ள நான் எல்லாப் பிராணிகளுடைய ஹ்ருதயத்தின் உள்ளும் இருப்பவனாக தியானம் செய்யத்தக்கவன்.
तदशक्तेन च उत्तरेषु भावेषु चिन्त्यः अहम् ; यस्मात् अहम् एव आदिः भूतानां कारणं तथा मध्यं च स्थितिः अन्तः प्रलयश्च ॥ २० ॥
அவ்வாறு தியானம் செய்ய முடியாதவர்கள் மேலே கூறிய பாவனைகளில் என்னை தியானம் செய்யவேண்டும். ஏனெனில் நான் எல்லாப் பிராணிகளுக்கும் ஆதியாயும் (காரணமாயும்) இருப்பாயும் (ஸ்திதியாயும்) முடிவாகவும் (பிரளயமாகவும்) இருக்கிறேன்.
एवं च ध्येयोऽहम् —
இவ்வாறு தியானம் செய்யத் தக்கவன்.
आदित्यानामहं विष्णुर्ज्योतिषां रविरंशुमान् ।
मरीचिर्मरुतामस्मि नक्षत्राणामहं शशी ॥ २१ ॥
ஆதித்யானாமஹம் விஷ்ணூர்ஜ்யோதிஷாம் ரவிரம்சுமான் ।
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் சசீ ॥ 21 ॥
आदित्यानां द्वादशानां विष्णुः नाम आदित्यः अहम् । ज्योतिषां रविः प्रकाशयितॄणाम् अंशुमान् रश्मिमान् । मरीचिः नाम मरुतां मरुद्देवताभेदानाम् अस्मि । नक्षत्राणाम् अहं शशी चन्द्रमाः ॥ २१ ॥
நான் பன்னிரெண்டு ஆதித்யர்களுள் விஷ்ணு என்றபெயருள்ள ஆதித்யன். பிரகாசிக்கின்றஜோதிகளுள் நான் ஒளிக்கதிருள்ள சூரியனாக இருக்கிறேன். மருத்துக்களுள் நான் மரீசியாக இருக்கிறேன். நட்சத்திரங்களுள் சந்திரனாக இருக்கிறேன்.
वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः ।
इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना ॥ २२ ॥
வேதானாம் ஸாமவேதோஅஸ்மி தேவானா-மஸ்மி வாஸவ: ।
இந்த்ரியாணாம் மனச்சாஸ்மி பூதானாமஸ்மி சேதனா ॥ 22 ॥
वेदानां मध्ये सामवेदः अस्मि । देवानां रुद्रादित्यादीनां वासवः इन्द्रः अस्मि । इन्द्रियाणां एकादशानां चक्षुरादीनां मनश्च अस्मि सङ्कल्पविकल्पात्मकं मनश्चास्मि । भूतानाम् अस्मि चेतना कार्यकरणसङ्घाते नित्याभिव्यक्ता बुद्धिवृत्तिः चेतना ॥ २२ ॥
வேதங்களுள் நான் சாமவேதமாக இருக்கிறேன். ருத்ர ஆதித்யர் முதலிய தேவர்களுள் நான் இந்திரனாக இருக்கிறேன். கண்கள் முதலிய பதினோரு இந்திரியங்களுள் நான் சங்கல்ப விகல்பங்களோடு கூடிய மனமாக இருக்கிறேன். எல்லாபிராணிகளுக்கும் நான் சேதன மாக இருக்கிறேன். காரிய கரண சங்காதமாகிய சரீரத்தினால் எப்பொ ழுதும் பிரகாசித்துக் கொண்டிருப்பது புத்தி விருத்தியாகும். அதுவே சேதனம்.
रुद्राणां शङ्करश्चास्मि वित्तेशो यक्षरक्षसाम् ।
वसूनां पावकश्चास्मि मेरुः शिखरिणामहम् ॥ २३ ॥
ருத்ராணாம் சங்கரச்-சாஸ்மி வித்தேசோ யக்ஷரக்ஷஸாம் ।
வஸூனாம் பாவகச்-சாஸ்மி மேரு: சிகரிணா-மஹம் ॥ 23 ॥
रुद्राणाम् एकादशानां शङ्करश्च अस्मि । वित्तेशः कुबेरः यक्षरक्षसां यक्षाणां रक्षसां च । वसूनाम् अष्टानां पावकश्च अस्मि अग्निः । मेरुः शिखरिणां शिखरवताम् अहम् ॥ २३ ॥
பதினோரு ருத்திரர்களுள் நான் சங்கரனாக இருக்கிறேன். யக்ஷர்கள் ராக்ஷசர்களுள் தனேஸ்வரனாகிய குபேரனாக இருக்கி றேன். எட்டு வசுக்களில் அக்னியாக இருக்கிறேன். மலைகளுக்குள் (சிகரம் உடையவைகளுள்) மேருமலையாக இருக்கிறேன்.
पुरोधसां च मुख्यं मां विद्धि पार्थ बृहस्पतिम् ।
सेनानीनामहं स्कन्दः सरसामस्मि सागरः ॥ २४ ॥
புரோதஸாம் ச முக்யம் மாம் வித்தி பார்த்த ப்ருஹஸ்பதிம் ।
ஸேனானீனா-மஹம் ஸ்கந்த: ஸரஸா-மஸ்மி ஸாகர: ॥ 24 ॥
पुरोधसां च राजपुरोहितानां च मुख्यं प्रधानं मां विद्धि हे पार्थ बृहस्पतिम् । स हि इन्द्रस्येति मुख्यः स्यात् पुरोधाः । सेनानीनां सेनापतीनाम् अहं स्कन्दः देवसेनापतिः । सरसां यानि देवखातानि सरांसि तेषां सरसां सागरः अस्मि भवामि ॥ २४ ॥
ஹே பார்த்த! ராஜ புரோஹிதர்களுள் நான் முக்கியமான புரோ ஹிதராகிய பிருஹஸ்பதியாக இருக்கிறேன். ஏனெனில் இந்திரனுக் கும் பிரதான(முக்கிய) புரோஹிதர். சேனாதிபதிகளில் தேவர்களின் சேனாதிபதியாகிய ஸ்கந்தனாக இருக்கிறேன். தேவர்களால் ஏற்படுத் தப்பட்ட ஏரிகளுள் நான் சமுத்திரமாக இருக்கிறேன்.
महर्षीणां भृगुरहं गिरामस्म्येकमक्षरम् ।
यज्ञानां जपयज्ञोऽस्मि स्थावराणां हिमालयः ॥ २५ ॥
மஹர்ஷீணாம் ப்ருகு-ரஹம் கிரா-மஸ்ம்யேக-மக்ஷரம் ।
யக்ஞானாம் ஜபயஜ்ஞோ அஸ்மி ஸ்தாவராணாம் ஹிமாலய: ॥ 25 ॥
महर्षीणां भृगुः अहम् । गिरां वाचां पदलक्षणानाम् एकम् अक्षरम् ओङ्कारः अस्मि । यज्ञानां जपयज्ञः अस्मि, स्थावराणां स्थितिमतां हिमालयः ॥ २५ ॥
மகரிஷிகளுள் பிருகுவாய் இருக்கிறேன். சொற்களாகிய பதங்க ளுள் ஒரே அக்ஷரமாகிய ஓம்காரமாக இருக்கிறேன். யக்ஞங்களுள் ஜபயக்குமாக இருக்கிறேன். அசையாப் பொருள்களுள் இமயமலை யாக இருக்கிறேன்.
अश्वत्थः सर्ववृक्षाणां देवर्षीणां च नारदः ।
गन्धर्वाणां चित्ररथः सिद्धानां कपिलो मुनिः ॥ २६ ॥
அச்வத்த: ஸர்வவ்ருக்ஷாணாம் தேவர் ஷீணாம் ச நாரத:।
கந்தர்வாணாம் சித்ரரத: ஸித்தானாம் கபிலோ முனி: ॥ 26 ॥
अश्वत्थः सर्ववृक्षाणाम् , देवर्षीणां च नारदः देवाः एव सन्तः ऋषित्वं प्राप्ताः मन्त्रदर्शित्वात्ते देवर्षयः, तेषां नारदः अस्मि । गन्धर्वाणां चित्ररथः नाम गन्धर्वः अस्मि । सिद्धानां जन्मनैव धर्मज्ञानवैराग्यैश्वर्यातिशयं प्राप्तानां कपिलो मुनिः ॥ २६ ॥
எல்லாமரங்களுள்ளும் அச்வத்தமாகவும், தேவரிஷிகளுள் நார தராகவும், கந்தர்வர்களுள் சித்ரரதனாகவும், பிறக்கும்பொழுதே தர்மம், ஞானம், வைராக்கியம் ஐச்வர்யம் இவைகளை அதிகமாக பெற்றவர்களுள் கபில முனியாக இருக்கிறேன்.
उच्चैःश्रवसमश्वानां विद्धि माममृतोद्भवम् ।
ऐरावतं गजेन्द्राणां नराणां च नराधिपम् ॥ २७ ॥
உச்சை:ச்ரவஸ-மச்வானாம் வித்தி மாமம்ருதோத்பவம் ।
ஐராவதம் கஜேந்த்ராணாம் நராணாம் ச நராதிபம் ॥ 27 ॥
उच्चैःश्रवसम् अश्वानां उच्चैःश्रवाः नाम अश्वराजः तं मां विद्धि विजानीहि अमृतोद्भवम् अमृतनिमित्तमथनोद्भवम् । ऐरावतम् इरावत्याः अपत्यं गजेन्द्राणां हस्तीश्वराणाम् , तम् ‘मां विद्धि’ इति अनुवर्तते । नराणां च मनुष्याणां नराधिपं राजानं मां विद्धि जानीहि ॥ २७ ॥
குதிரைகளுள் அமிர்தம் பாற்கடலைக் கடைந்ததிலிருந்து உண்டான உச்சைச்ரவஸ் என்றபெயருள்ள குதிரை என்று என்னை அறி. யானைத் தலைவர்களுள் இராவதியின் புத்திரனான ஐராவத னாக என்னை அறி. மனிதர்களுள் என்னை அரசனாக அறி.
आयुधानामहं वज्रं धेनूनामस्मि कामधुक् ।
प्रजनश्चास्मि कन्दर्पः सर्पाणामस्मि वासुकिः ॥ २८ ॥
ஆயுதானா-மஹம் வஜ்ரம் தேனூனா-மஸ்மி காமதுக் ।
ப்ரஜனச்-சாஸ்மி கந்தர்ப: ஸர்பாணா-மஸ்மி வாஸுகி: ॥ 28 ॥
आयुधानाम् अहं वज्रं दधीच्यस्थिसम्भवम् । धेनूनां दोग्ध्रीणाम् अस्मि कामधुक् वसिष्ठस्य सर्वकामानां दोग्ध्री, सामान्या वा कामधुक् । प्रजनः प्रजनयिता अस्मि कन्दर्पः कामः सर्पाणां सर्पभेदानाम् अस्मि वासुकिः सर्पराजः ॥ २८ ॥
ஆயுதங்களுள் ததீசீ மஹரிஷியின் எலும்பினால் ஆன வஜ்ராயு தமாக இருக்கிறேன். பால் கறக்கும் பசுக்களில் நான் காமதேனுவாக இருக்கிறேன் வசிஷ்டர் விரும்பியதெல்லாம் கொடுக்கின்றது, அல்லது சாதாரண பசுக்களுள் அதிக பால் சுரக்கும் பசுவாக இருக்கி றேன். பிரஜைகளை உற்பத்தி செய்கின்றகாமதேவனாக இருக் கின்றேன். அநேக வித சர்ப்பங்களுள் வாசுகி என்றசர்ப்ப ராஜாவாக இருக்கிறேன்.
अनन्तश्चास्मि नागानां वरुणो यादसामहम् ।
पितॄणामर्यमा चास्मि यमः संयमतामहम् ॥ २९ ॥
அநந்தச்-சாஸ்மி நாகானாம் வருணோ யாதஸா-மஹம் ।
பித்ருணா-மர்யமா சாஸ்மி யம: ஸம்யமதா-மஹம் ॥ 29 ॥
अनन्तश्च अस्मि नागानां नागविशेषाणां नागराजश्च अस्मि । वरुणो यादसाम् अहम् अब्देवतानां राजा अहम् । पितॄणाम् अर्यमा नाम पितृराजश्च अस्मि । यमः संयमतां संयमनं कुर्वताम् अहम् ॥ २९ ॥
அநேக வித நாகங்களுள் அனந்தன் என்றநாகராஜாவாக இருக்கிறேன். ஜலதேவதைகளுள் வருணனாக இருக்கிறேன். பித்ரு தேவதைகளுள் அர்யமா என்றபித்ருராஜாவாக இருக்கிறேன். தண்டனை கொடுப்பவர்களுள் (கட்டளை இடுபவர்களுள்) நான் யமனாக இருக்கிறேன்.
प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कलयतामहम् ।
मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम् ॥ ३० ॥
ப்ரஹ்லாதச்சாஸ்மி தைத்யானாம் கால: கலயதாமஹம் ।
ம்ருகாணாம் ச ம்ருகேந்த்ரோஅஹம் வைனதேயச்ச பக்ஷிணாம் ॥ 30 ॥
प्रह्लादो नाम च अस्मि दैत्यानां दितिवंश्यानाम् । कालः कलयतां कलनं गणनं कुर्वताम् अहम् । मृगाणां च मृगेन्द्रः सिंहो व्याघ्रो वा अहम् । वैनतेयश्च गरुत्मान् विनतासुतः पक्षिणां पतत्रिणाम् ॥ ३० ॥
திதி வம்சத்தில் பிறந்த அசுரர்களுள் பிரஹ்லாதனாக இருக்கி றேன். எண்ணுபவர்களுள் (கணக்கிடுபவர்களுள்) காலனாக இருக்கி றேன். மிருகங்களுள் மிருகங்களின் ராஜாவான சிம்மமாகவோ, புலியாகவோ இருக்கிறேன். பக்ஷி களுள் வினதாவினுடைய புத்திரன் கருடனாக இருக்கிறேன்.
पवनः पवतामस्मि रामः शस्त्रभृतामहम् ।
झषाणां मकरश्चास्मि स्रोतसामस्मि जाह्नवी ॥ ३१ ॥
பவன: பவதாமஸ்மி ராம: சஸ்த்ரப்ருதாமஹம் ।
ஜ ஷாணாம் மகரச்சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ ॥ 31 ॥
पवनः वायुः पवतां पावयितॄणाम् अस्मि । रामः शस्त्रभृताम् अहं शस्त्राणां धारयितॄणां दाशरथिः रामः अहम् । झषाणां मत्स्यादीनां मकरः नाम जातिविशेषः अहम् । स्रोतसां स्रवन्तीनाम् अस्मि जाह्नवी गङ्गा ॥ ३१ ॥
நான் சுத்தம் செய்பவைகளுள் காற்றாக இருக்கிறேன். ஆயுதங்கள் வைத்திருப்பவர்களில் ஸ்ரீராமனாக இருக்கிறேன். மீன் வகைக ளுள் நான் மகரம் என்றஜாதி விசேஷமாக இருக்கிறேன். நீரோட்டங்க ளுள் அதாவது நதிகளுள் கங்கையாக இருக்கின்றேன்.
सर्गाणामादिरन्तश्च मध्यं चैवाहमर्जुन ।
अध्यात्मविद्या विद्यानां वादः प्रवदतामहम् ॥ ३२ ॥
ஸர்காணா-மாதி-ரந்தச்ச மத்யம் சைவாஹு-மர்ஜுன ।
அத்யாத்மவித்யா வித்யானாம் வாத: ப்ரவததா-மஹம் ॥ 32 ॥
सर्गाणां सृष्टीनाम् आदिः अन्तश्च मध्यं चैव अहम् उत्पत्तिस्थितिलयाः अहम् अर्जुन । भूतानां जीवाधिष्ठितानामेव आदिः अन्तश्च इत्याद्युक्तम् उपक्रमे, इह तु सर्वस्यैव सर्गमात्रस्य इति विशेषः ।
ஹே அர்ஜுனா! சிருஷ்ட்டியின் ஆதியும், முடிவும், மத்தியில் இருப்பதும் நானே. உற்பத்தி, ஸ்திதி, லயம் ஆகியவை நானே. ஆரம்பத்தில் பகவான் தன்னை சேதனத்தை அதிஷ்ட்டானம் உடைய ஜீவர்களுக்குத்தான் ஆதி, அந்தம் முதலியவைகளை கூறி னார். ஆனால் இங்கு ஜகத் அதாவது சிருஷ்ட்டிக்கப்பட்ட எல்லாவற் றிற்கும் முழுவதற்கும் ஆதி, அந்தம்(முடிவு), மத்தியில் இருப்பது என்ப வைகளைக் கூறுகிறார் என்பது விசே ஷம்.
अध्यात्मविद्या विद्यानां मोक्षार्थत्वात् प्रधानमस्मि । वादः अर्थनिर्णयहेतुत्वात् प्रवदतां प्रधानम् , अतः सः अहम् अस्मि । प्रवत्त्कृद्वारेण वदनभेदानामेव वादजल्पवितण्डानाम् इह ग्रहणं प्रवदताम् इति ॥ ३२ ॥
வித்யைகளில் மோக்ஷத்தை கொடுப்பதால் ஆத்மவித்யை முக் யமானதாக இருக்கிறது. அந்த ஆத்மவித்யையாக இருக்கிறேன். தர்க்கம் செய்பவர்களில் அர்த்தம் செய்வதில் உபயோகமான வாதம் முக்கியமாக இருக்கிறது. அந்த வாதரூபமான வாக்காகவும் நான் இருக்கிறேன். இங்கு பிரவததாம் என்றபதத்திற்கு ஒரு வகைப் பேச்சுக் களாகிய வாதம், ஜல்பம், விதண்டாவாதம் இவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவைகளுள் உண்மையான பொருளை அறிந்து கொள்வதற்கு சாதகமாக இருப்பதால் வாதத்தை முக்கியமானதாக கருதவேண்டும்.
अक्षराणामकारोऽस्मि द्वन्द्वः सामासिकस्य च ।
अहमेवाक्षयः कालो धाताहं विश्वतोमुखः ॥ ३३ ॥
அக்ஷராணாமகாரோஅஸ்மி த்வந்த்வ: ஸாமாஸிகஸ்ய ச ।
அஹமேவாக்ஷய: காலோ தாதாஹம் விச்வதோமுக: ॥ 33 ॥
अक्षराणां वर्णानाम् अकारः वर्णः अस्मि । द्वन्द्वः समासः अस्मि सामासिकस्य च समाससमूहस्य । किञ्च अहमेव अक्षयः अक्षीणः कालः प्रसिद्धः क्षणाद्याख्यः, अथवा परमेश्वरः कालस्यापि कालः अस्मि । धाता अहं कर्मफलस्य विधाता सर्वजगतः विश्वतोमुखः सर्वतोमुखः ॥ ३३ ॥
எழுத்துக்களுள் அகார எழுத்தாக இருக்கிறேன். சமாசங்களுள் துவந்துவ சமாசமாக இருக்கிறேன். மேலும் நான் நாசமற்றகாலமாக இருக்கிறேன் என்றால் க்ஷணம், மணி என்பனவாக கூறப்படும் கால மாகும். அல்லது காலத்திற்கெல்லாம் காலமாகிய பரமேச்வரனாக இருக்கிறேன். எல்லா உலகத்தோருக்கும் அவர்களுடைய கர்மங்க ளுக்கு ஏற்றவாறு பலனை பிரித்து அளிப்பவன். எங்கும் முகம் உள்ள வனாக இருக்கிறேன்
मृत्युः सर्वहरश्चाहमुद्भवश्च भविष्यताम् ।
कीर्तिः श्रीर्वाक्च नारीणां स्मृतिर्मेधा धृतिः क्षमा ॥ ३४ ॥
ம்ருத்யு: ஸர்வஹரஸ்-சாஹமுத்பவச்ச பவிஷ்யதாம் ।
கீர்தி: ச்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்ம்ருதிர்மேதா த்ருதி: க்ஷமா ॥ 34 ॥
मृत्युः द्विविधः धनादिहरः प्राणहरश्च ; तत्र यः प्राणहरः, स सर्वहरः उच्यते ; सः अहम् इत्यर्थः । अथवा, परः ईश्वरः प्रलये सर्वहरणात् सर्वहरः, सः अहम् ।
ம்ருத்யு என்பது செல்வத்தின் நாசமாகவும், பிராண நாசமாகவும் இருவிதமாக இருக்கிறது. அதுவே சர்வநாசமாகும். அந்த சர்வநாசமே நான் என்பது பொருள். அல்லது பரமேச்வரன் பிரளய காலத்தில் எல் லாவற்றையும் நாசம் செய்வதால் சர்வஹரன் எனப்படுகிறான். அந்த சர்வஹரனே நான்.
उद्भवः उत्कर्षः अभ्युदयः तत्प्राप्तिहेतुश्च अहम् । केषाम् ? भविष्यतां भाविकल्याणानाम् , उत्कर्षप्राप्तियोग्यानाम् इत्यर्थः ।
இனிவரும் காலத்தில் பெரும் செல்வத்தை அடைபவர்களுக்கு அதாவது செல்வத்தை அடைய தகுதி உடையவர்களுக்கு அவர்க ளின் மிகுந்த செல்வமாகவும், அதை அடைவதற்கு காரணமாகவும் இருக்கிறேன்.
कीर्तिः श्रीः वाक् च नारीणां स्मृतिः मेधा धृतिः क्षमा इत्येताः उत्तमाः स्त्रीणाम् अहम् अस्मि, यासाम् आभासमात्रसम्बन्धेनापि लोकः कृतार्थमात्मानं मन्यते ॥ ३४ ॥
ஸ்த்ரீகளுள் எவருக்கு கீர்த்தி, செல்வம், கல்வி, ஸ்மிருதி, புத்தி, தைர்யம், பொறுமை இவைகள் எல்லாம் உள்ள உத்தம ஸ்த்ரீயை போலியாக சம்பந்தம் ஏற்பட்டாலும் தாங்கள் பேறு பெற்றதாக நினைக் கிறார்களோ அந்த உத்தமஸ்த்ரீயாகவும் நான் இருக்கிறேன்.
बृहत्साम तथा साम्नां गायत्री च्छन्दसामहम् ।
मासानां मार्गशीर्षोऽहमृतूनां कुसुमाकरः ॥ ३५ ॥
ப்ருஹத்ஸாம ததா ஸாம்னாம் காயத்ரீ சந்தஸாமஹம் ।
மாஸானாம் மார்கசீர்ஷோஅஹம்ருதூனாம் குஸுமாகர: ॥ 35 ॥
बृहत्साम तथा साम्नां प्रधानमस्मि । गायत्री च्छन्दसाम् अहं गायत्र्यादिच्छन्दोविशिष्टानामृचां गायत्री ऋक् अहम् अस्मि इत्यर्थः । मासानां मार्गशीर्षः अहम् , ऋतूनां कुसुमाकरः वसन्तः ॥ ३५ ॥
அவ்வாறேசாமவேதத்தில் முக்கியமான சாமமாக இருக்கிறேன். சந்தஸ்களுள் காயத்ரீ ரிக்காக இருக்கிறேன். மாதங்களுள் மார்கழி மாதமாக இருக்கிறேன். ருதுக்களுள் வசந்த ருதுவாக இருக்கிறேன்.
द्यूतं छलयतामस्मि तेजस्तेजस्विनामहम् ।
जयोऽस्मि व्यवसायोऽस्मि सत्त्वं सत्त्ववतामहम् ॥ ३६ ॥
த்யூதம் சலயதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்வினாமஹம் ।
ஜயோஅஸ்மி வ்யவஸாயோ அஸ்மி ஸத்வம் ஸத்த்வவதாமஹம் ॥ 36 ॥
द्यूतम् अक्षदेवनादिलक्षणं छलयतां छलस्य कर्तॄणाम् अस्मि । तेजस्विनां तेजः अहम् । जयः अस्मि जेतॄणाम् , व्यवसायः अस्मि व्यवसायिनाम् , सत्त्वं सत्त्ववतां सात्त्विकानाम् अहम् ॥ ३६ ॥
வஞ்சனை செய்பவர்களுள் சூதாகவும் இருக்கிறேன். தேஜஸ் உள்ளவர்களிடம் உள்ள தேஜஸாகவும் நான் இருக்கிறேன். வெற்றி அடைபவர்களுள் வெற்றியாக இருக்கிறேன். முயற்சி செய்பவர்களி டம் உள்ள முயற்சியாக இருக்கிறேன். சாத்வீக புருஷர்களிடம் உள்ள சத்வ குணமாக இருக்கிறேன்.
वृष्णीनां वासुदेवोऽस्मि पाण्डवानां धनञ्जयः ।
मुनीनामप्यहं व्यासः कवीनामुशना कविः ॥ ३७ ॥
வ்ருஷ்ணீனாம் வாஸுதேவோ அஸ்மி பாண்டவானாம் தனஞ்ஜய: ।
முனீனாமப்-யஹம் வ்யாஸ: கவீனா-முசனா கவி: ॥ 37 ॥
वृष्णीनां यादवानां वासुदेवः अस्मि अयमेव अहं त्वत्सखः । पाण्डवानां धनञ्जयः त्वमेव । मुनीनां मननशीलानां सर्वपदार्थज्ञानिनाम् अपि अहं व्यासः, कवीनां क्रान्तदर्शिनाम् उशना कविः अस्मि ॥ ३७ ॥
விருஷ்ணிகளுள் உன்னுடைய நண்பனாகிய வாசுதேவனாக நான் இருக்கிறேன். பாண்டவர்களுள் அர்ச்சுனனாகிய நீயும் நானா கவே இருக்கிறேன். மனனசீலர்களாகிய எல்லாப் பொருள்களையும் அறிந்த முனிவர்களுள் நான் வியாசமுனிவராக இருக்கிறேன். கவிகளுள் என்றால் முக்காலும் அறிந்தவர்களுள் சுக்ராச்சாரியாராக இருக்கிறேன்.
दण्डो दमयतामस्मि नीतिरस्मि जिगीषताम् ।
मौनं चैवास्मि गुह्यानां ज्ञानं ज्ञानवतामहम् ॥ ३८ ॥
தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம் ।
மௌனம் சைவாஸ்மி குஹ்யானாம் ஞானம் ஞானவதாமஹம் ॥ 38 ॥
दण्डः दमयतां दमयितॄणाम् अस्मि अदान्तानां दमनकारणम् । नीतिः अस्मि जिगीषतां जेतुमिच्छताम् । मौनं चैव अस्मि गुह्यानां गोप्यानाम् । ज्ञानं ज्ञानवताम् अहम् ॥ ३८ ॥
தண்டனை கொடுப்பவர்களுள் கீழான வழிகளில் செல்பவர் களை தண்டிக்கும் சக்தியாக (காரணமாக) இருக்கிறேன். வெற்றி அடைவதில் விருப்பம் உள்ளவர்களிடத்தில் நீதியாக இருக்கிறேன். ரஹஸ்யமாக இருக்கவேண்டியவற்றில் மௌனமாக இருக்கிறேன். ஞானம் உடையவர்களுள் ஞானமாக இருக்கிறேன்.
यच्चापि सर्वभूतानां बीजं तदहमर्जुन ।
न तदस्ति विना यत्स्यान्मया भूतं चराचरम् ॥ ३९ ॥
யச்சாபி ஸர்வபூதானாம் பீஜம் ததஹ-மர்ஜுன ।
ந ததஸ்தி வினா யத்ஸ்யான்-மயா பூதம் சராசரம் ॥ 39 ॥
यच्चापि सर्वभूतानां बीजं प्ररोहकारणम् , तत् अहम् अर्जुन ।
ஹே அர்ச்சுனா! எல்லா பூதங்களையும் முளைக்கச் செய்யும் காரணமும் நானே.
प्रकरणोपसंहारार्थं विभूतिसङ्क्षेपमाह —
இந்தப் பிரகரணத்தை முடிப்பதற்காக விபூதியை(மஹிமையை) சுருக்கமாகக் கூறுகிறார்.
न तत् अस्ति भूतं चराचरं चरम् अचरं वा, मया विना यत् स्यात् भवेत् । मया अपकृष्टं परित्यक्तं निरात्मकं शून्यं हि तत् स्यात् । अतः मदात्मकं सर्वमित्यर्थः ॥ ३९ ॥
இந்த சராசரமான ஸ்தாவர ஜங்கமங்கள் எல்லாம் என்னை அன்றி இல்லை. ஏனெனில் என்னால் நிரப்பப்படாவிடில் இருப்பு இல் லாமல் நிராத்மகமாக சூன்யமாகிவிடும். ஆகையால் எல்லாம் என் ஸ்வரூபமாகவே இருக்கிறது என்று பொருள்.
नान्तोऽस्ति मम दिव्यानां विभूतीनां परन्तप ।
एष तूद्देशतः प्रोक्तो विभूतेर्विस्तरो मया ॥ ४० ॥
நாந்தோஅஸ்தி மம திவ்யானாம் விபூதீனாம் பரந்தப ।
ஏ ஷதூத்தேசத: ப்ரோக்தோ விபூதேர்-விஸ்தரோ மயா ॥ 40 ॥
न अन्तः अस्ति मम दिव्यानां विभूतीनां विस्तराणां परन्तप । न हि ईश्वरस्य सर्वात्मनः दिव्यानां विभूतीनाम् इयत्ता शक्या वक्तुं ज्ञातुं वा केनचित् । एष तु उद्देशतः एकदेशेन प्रोक्तः विभूतेः विस्तरः मया ॥ ४० ॥
ஹே பரந்தப! என்னுடைய தெய்வீகமான, விஸ்தாரமான மஹிமை களுக்கு முடிவே கிடையாது. சர்வாத்மாவாக உள்ள ஈஸ்வரனுடைய தெய்வீகமான விபூதிகளை (மஹிமைகளை) இவ்வளவுதான் என்று ஒருவராலும் கூறவோ, அறியவோ முடியாது. என்னுடைய விஸ்தார மான விபூதிகளில் ஓர் அளவு என்னால் எடுத்துரைக்கப்பட்டது.
यद्यद्विभूतिमत्सत्त्वं श्रीमदूर्जितमेव वा ।
तत्तदेवावगच्छ त्वं मम तेजोंशसम्भवम् ॥ ४१ ॥
யத்யத் விபூதிமத் ஸத்வம் ஸ்ரீமதூர்ஜித-மேவ வா ।
தத்ததேவாவகச்ச த்வம் மம தேஜோம்ச-ஸம்பவம் ॥ 41 ॥
यद्यत् लोके विभूतिमत् विभूतियुक्तं सत्त्वं वस्तु श्रीमत् ऊर्जितमेव वा श्रीर्लक्ष्मीः तया सहितम् उत्साहोपेतं वा, तत्तदेव अवगच्छ त्वं जानीहि मम ईश्वरस्य तेजोंशसम्भवं तेजसः अंशः एकदेशः सम्भवः यस्य तत् तेजोंशसम्भवमिति अवगच्छ त्वम् ॥ ४१ ॥
உலகத்தில் எந்த எந்த வஸ்துக்கள் விபூதியுடன் கூடியுள்ள வையோ அவ்வாறேலஷ்மீயுடனும்(செல்வத்துடனும்) உத்ஸாஹத்து டனும் உள்ளதோ அந்த அந்த வஸ்துக்கள் ஈஸ்வரனாகிய என்னுடைய தேஜோமய அம்சத்திலிருந்து உண்டானவை என்று அறிந்து கொள்.
अथवा बहुनैतेन किं ज्ञातेन तवार्जुन
विष्टभ्याहमिदं कृत्स्नमेकांशेन स्थितो जगत् ॥ ४२ ॥
அதவா பஹுனைதேன கிம் ஜ்ஞாதேன தவார்ஜுன ।
விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்னமேகாம்சேன ஸ்திதோஜகத் ॥ 42 ॥
अथवा बहुना एतेन एवमादिना किं ज्ञातेन तव अर्जुन स्यात् सावशेषेण । अशेषतः त्वम् उच्यमानम् अर्थं शृणु ।
அல்லது ஹே அர்ச்சுனா! இவ்வாறு முன்பு கூறியபடி முழுமை யற்றவிபூதிகளை விஸ்தாரமாக அறிவதனால் என்ன பயன்? நீ இந்த முழுமையாக கூறப்போகும் அர்த்தத்தைக் கேள்.
विष्टभ्य विशेषतः स्तम्भनं दृढं कृत्वा इदं कृत्स्नं जगत् एकांशेन एकावयवेन एकपादेन, सर्वभूतस्वरूपेण इत्येतत् ; तथा च मन्त्रवर्णः — ‘पादोऽस्य विश्वा भूतानि’ (ऋ. १० । ८ । ९० । ३) इति ; स्थितः अहम् इति ॥ ४२ ॥
இந்த ஜகத் முழுவதையும் ஒரு அம்சத்தினால் என்றால் ஒரு அவயவத்தினால், அதாவது இந்த ஜகத் எல்லாவற்றையும் விசே ஷரூபமாக திடமாக தாங்கிக்கொண்டிருக்கிறேன். அவ்வாறே எல்லா பூதங்களும் இந்த பரமேச்வரனுடைய ஒரு பாதம், பாதோஸ்ய விச்வா பூதானி என்பது முதலியவைகளால் வேதமந்திரமும் கூறுகிறது.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये दशमोऽध्यायः ॥
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யா யாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே விபூதியோகோ நாம தசமோத்யாய: