द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

श्रीमद्भगवद्गीताभाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

ஶ்ரீமத்பகவத்கீதாபாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

द्वितीयाध्यायप्रभृतिषु विभूत्यन्तेषु अध्यायेषु परमात्मनः ब्रह्मणः अक्षरस्य विध्वस्तसर्वोपाधिविशेषस्य उपासनम् उक्तम् ।
இரண்டாவது அத்தியாயத்திலிருந்து விபூதி அத்யாயம் (10வது அத்யாயம் வரையிலும்) எல்லா விசேஷணங்களும் அற்ற அக்ஷரபி ரஹ்மமாகிய பரமாத்மாவின் உபாசனை கூறப்பட்டது.
सर्वयोगैश्वर्यसर्वज्ञानशक्तिमत्सत्त्वोपाधेः ईश्वरस्य तव च उपासनं तत्र तत्र उक्तम् ।
எல்லா யோகம், ஐஸ்வர்யம், எல்லா ஞானசக்தி சத்வ உபாதியை உடைய ஈஸ்வரராகிய உங்களின் உபாசனையானது அங்கு, அங்கு சொல்லப்பட்டது.
विश्वरूपाध्याये तु ऐश्वरम् आद्यं समस्तजगदात्मरूपं विश्वरूपं त्वदीयं दर्शितम् उपासनार्थमेव त्वया । तच्च दर्शयित्वा उक्तवानसि ‘मत्कर्मकृत्’ (भ. गी. ११ । ५५) इत्यादि । अतः अहम् अनयोः उभयोः पक्षयोः विशिष्टतरबुभुत्सया त्वां पृच्छामि इति —
விச்வரூப அத்யாயத்தில் (11வது அத்தியாயத்தில்) உபாசனை யின் பொருட்டு ஐஸ்வரியத்துடன் கூடிய எல்லா ஜகத்திற்கும் ஆதியாய் உள்ள உங்களது விச்வரூபத்தைக் காட்டினீர்கள். அதைக்காண்பித்து இவ்வாறு ”மத்கர்மக்ருத்” முதலியவைகளால் கூறினீர்கள். ஆகையால் இவ்விரண்டு பக்ஷங்களுள் (கோடிகளுள்) எது சிறந்தது என்று அறிவதில் இச்சை உடையவனாகி உங்களைக் கேட்கிறேன் என்று
अर्जुन उवाच —
அர்ஜுனன் கூறலானான்
एवं सततयुक्ता ये भक्तास्त्वां पर्युपासते ।
ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमाः ॥ १ ॥
ஏவம் ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாம் பர்யுபாஸதே ।
யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோகவித்தமா: ॥ 1 ॥
एवम् इति अतीतानन्तरश्लोकेन उक्तम् अर्थं परामृशति ‘मत्कर्मकृत्’ (भ. गी. ११ । ५५) इत्यादिना ।
இவ்வாறு என்று கூறிய பதத்தால் மத்கர்மக்ருத் என்று தொடங் கிய முன் சுலோகத்தின் அர்த்தமானது குறிப்பிடப்படுகிறது.
एवं सततयुक्ताः, नैरन्तर्येण भगवत्कर्मादौ यथोक्ते अर्थे समाहिताः सन्तः प्रवृत्ता इत्यर्थः । ये भक्ताः अनन्यशरणाः सन्तः त्वां यथादर्शितं विश्वरूपं पर्युपासते ध्यायन्ति ।
இவ்வாறு எப்பொழுதும் இடைவிடாமல் முன்பு கூறிய சாதனங் களை அதாவது பகவானின் பொருட்டு செயல்களை செய்வது முதலியவைகளில் மனதை செலுத்தியவர்கள் என்பது பொருள். எந்த பக்தர்கள் மற்றவைகளில் சரணடையாமல் என்னிடத்திலேயே சரணமடைந்தவர்களாய் இருந்துகொண்டு எவ்வாறு காட்டப் பட்டதோ அந்த விச்வரூபத்தைத் தியானிக்கிறார்கள்.
ये चान्येऽपि त्यक्तसर्वैषणाः संन्यस्तसर्वकर्माणः यथाविशेषितं ब्रह्म अक्षरं निरस्तसर्वोपाधित्वात् अव्यक्तम् अकरणगोचरम् । यत् हि करणगोचरं तत् व्यक्तम् उच्यते, अञ्जेः धातोः तत्कर्मकत्वात् ; इदं तु अक्षरं तद्विपरीतम् , शिष्टैश्च उच्यमानैः विशेषणैः विशिष्टम् , तत् ये चापि पर्युपासते,।
அவ்வாறே மூவாசைகளையும் விட்டவர்களும், எல்லா கர்மங்க ளையும் தியாகம் செய்தவர்களுமாகிய மற்றவர்கள் முன்பு சிறப்பித் துக் கூறப்பட்ட எல்லா உபாதிகளற்ற, இந்திரியங்களுக்கெட்டாத (இந் திரியங்களால் அறியமுடியாத) பரபிரஹ்மமாகிய அக்ஷரத்தை மற்ற வர்கள் உபாசிக்கிறார்கள். இந்திரியங்களுக்கு புலப்படுவது வியக்தம். புலப்படாதது அவ்யக்தம். அவ்வாறு இந்த அக்ஷர பிரஹ்மம் அவ்யக்தம். இவ்வாறு மஹாபுருஷர்களால் கூறப்பட்ட சிறப்புகளுடைய அக்ஷரபிரஹ்ம்மத்தை உபாசனை செய்கிறார்கள்.
तेषाम् उभयेषां मध्ये के योगवित्तमाः ? के अतिशयेन योगविदः इत्यर्थः ॥ १ ॥
இவ்விரு உபாசனை செய்பவர்கள் இடையே எவர்கள் யோகத்தை அறிந்தவர்கள்? எவர்கள் யோகத்தை நன்றாக அறிந்தவர்கள் என்பது பொருள்.
श्रीभगवान् उवाच —
ஸ்ரீபகவான் கூறினார்-
ये तु अक्षरोपासकाः सम्यग्दर्शिनः निवृत्तैषणाः, ते तावत् तिष्ठन्तु ; तान् प्रति यत् वक्तव्यम् , तत् उपरिष्टात् वक्ष्यामः । ये तु इतरे —
எவர்கள் அக்ஷரபிரஹ்மத்தை உபாசிக்கின்றமூவாசைகளற்றவர் களைக் குறித்து நிற்க. அதைக் குறித்து எது சொல்ல வேண்டுமோ அதை மேலே கூறுகிறேன். மற்றவர்களைக் குறித்து.
मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते ।
श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मताः ॥ २ ॥
மய்யாவேச்ய மனோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே ।
ச்ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா: ॥ 2 ॥
मयि विश्वरूपे परमेश्वरे आवेश्य समाधाय मनः, ये भक्ताः सन्तः, मां सर्वयोगेश्वराणाम् अधीश्वरं सर्वज्ञं विमुक्तरागादिक्लेशतिमिरदृष्टिम् , नित्ययुक्ताः अतीतानन्तराध्यायान्तोक्तश्लोकार्थन्यायेन सततयुक्ताः सन्तः उपासते श्रद्धया परया प्रकृष्टया उपेताः, ते मे मम मताः अभिप्रेताः युक्ततमाः इति ।
எந்த பக்தர்கள் விச்வரூப பரமேச்வரனாகிய என்னிடத்தில் மனதை செலுத்தி யோகிகளுக்கெல்லாம் அதீச்வரனாகவும், ராகதுவேஷ முதலிய க்லேசங்களாகிய அக்ஞான திருஷ்ட்டி அற்றவ னாயுமுள்ள என்னுடைய சர்வக்ஞ ரூப பரமேச்வரனைக் குறித்து முன் அத்யாயத்தின் கடைசி ஸ்லோகத்தில் கூறியவாறு எப்பொழுதும் அந்த பரமாகவே இருந்து உத்தமமான சிரத்தை உடையவனாகி உபா சனை செய்கிறாரோ அவன் மிகவும் உத்தமமான யோகி என்று நான் கருதுகிறேன்.
नैरन्तर्येण हि ते मच्चित्ततया अहोरात्रम् अतिवाहयन्ति । अतः युक्तं तान् प्रति युक्ततमाः इति वक्तुम् ॥ २ ॥
இடைவிடாமல் என்னிடத்திலேயே சித்தத்தை செலுத்தியவர்க ளாய் இரவையும், பகலையும் கழிக்கிறார்கள். ஆகையால் அவர் களை மேலான யோகிகள் என்று கூறுதல் பொருத்தமாகும்.
किमितरे युक्ततमाः न भवन्ति ? न ; किन्तु तान् प्रति यत् वक्तव्यम् , तत् शृणु —
அவ்வாறு எனில் மற்றவர்கள் மேலான யோகிகள் ஆகமாட்டார் களா? அவ்வாறு அல்ல. ஆனால் அவர்கள் விஷயத்தில் என்ன கூறவேண்டியதோ அதைக் கூறுகிறேன். அதைக் கேள்-
ये त्वक्षरमनिर्देश्यमव्यक्तं पर्युपासते ।
सर्वत्रगमचिन्त्यं च कूटस्थमचलं ध्रुवम् ॥ ३ ॥
யே த்வக்ஷரமநிர்தேச்யமவ்யக்தம் பர்யுபாஸதே ।
ஸர்வத்ரகமசிந்த்யம் ச கூடஸ்தமசலம் த்ருவம் ॥ 3 ॥
ये तु अक्षरम् अनिर्देश्यम् , अव्यक्तत्वात् अशब्दगोचर इति न निर्देष्टुं शक्यते, अतः अनिर्देश्यम् , अव्यक्तं न केनापि प्रमाणेन व्यज्यत इत्यव्यक्तं पर्युपासते परि समन्तात् उपासते ।
அக்ஷரமானது அவ்யக்தமாய் இருப்பதால் சப்தத்திற்கு விஷய மாகததால் இவ்வாறுதான் இருக்கின்றது என்று நிச்சயித்துக் கூறமுடி யாது. ஆகையால் அது (அநிர்தேச்யம்) எந்த ஒரு பிரமாணத்தாலும் பிரத்யக்ஷமாக்க முடியாததால் (அவ்யக்தம்) ஆக இருக்கிறது. அதை எல்லா விதமாகவும் உபாசிக்கிறார்கள்.
उपासनं नाम यथाशास्त्रम् उपास्यस्य अर्थस्य विषयीकरणेन सामीप्यम् उपगम्य तैलधारावत् समानप्रत्ययप्रवाहेण दीर्घकालं यत् आसनम् , तत् उपासनमाचक्षते ।
உபாசனம் என்றால் சாஸ்திரத்தில் உள்ளவாறு உபாசிக்கவேண் டிய பொருளை விஷயம் செய்வதால் அதன் சமீபத்தை அடைந்து தைலதாரைபோல் ஒரே எண்ணத்தின் பிரவாஹத்துடன் நீண்டகாலம் இருத்தல் எதுவோ அது உபாசனம் எனக் கூறப்படுகிறது.
अक्षरस्य विशेषणमाह उपास्यस्य —
அந்த அக்ஷரத்தினுடைய சிறப்பைக் கூறுகிறார்-
सर्वत्रगं व्योमवत् व्यापि अचिन्त्यं च अव्यक्तत्वादचिन्त्यम् । यद्धि करणगोचरम् , तत् मनसापि चिन्त्यम् , तद्विपरीतत्वात् अचिन्त्यम् अक्षरम् , कूटस्थं ।
ஆகாயம் போல் அது எங்கும் வியாபித்திருக்கிறது. அவ்யக்த மாய் இருப்பதால் அசிந்த்யம் (சிந்திக்க முடியாதது) எது இந்திரியங்க ளுக்கு அறிய முடிவதாய் இருக்கிறதோ அது மனதினாலும் சிந்திக்க முடியும். அதற்கு மாறுபாடாய் அக்ஷரம் இருப்பதால் அசிந்த்யம் என்றால் சிந்திக்கமுடியாதது. அதுவே கூடஸ்த்தம் ஆனது.
दृश्यमानगुणम् अन्तर्दोषं वस्तु कूटम् । ‘कूटरूपम्’ ’ कूटसाक्ष्यम्’ इत्यादौ कूटशब्दः प्रसिद्धः लोके । तथा च अविद्याद्यनेकसंसारबीजम् अन्तर्दोषवत् मायाव्याकृतादिशब्दवाच्यतया ‘मायां तु प्रकृतिं विद्यान्मायिनं तु महेश्वरम्’ (श्वे. उ. ४ । १०)
கூடம் என்பது பார்வைக்கு நல்ல குணமுடையதாகவும் உள்ளே தோஷமுள்ள வஸ்து கூடரூபம், கூடசாக்ஷியம் என்று உலகத்தில் உள்ளோர் கூறுவது பிரசித்தம். அவ்வாறே அவித்யை முதலிய அநேக சம்சாரத்தின் பீஜமாகிய உள்ளே உள்ள தோஷத்துடன் கூடிய பிரகிருதியை மாயா, அவ்யாகிருதம் முதலிய சப்தங்களினால் கூறப்படுகிறது. அவ்வாறேமாயையை பிரகிருதி என்று அறி, மாயை உடையவரை மஹேச்வரன் என்று அறி.
‘मम माया दुरत्यया’ (भ. गी. ७ । १४) इत्यादौ प्रसिद्धं यत् तत् कूटम् , तस्मिन् कूटे स्थितं कूटस्थं तदध्यक्षतया ।
என்னுடைய மாயை தாண்டுவதற்கு அரியது என்பது முதலான வைகளில் பிரசித்தம் எதுவோ அது (கூடம்). அந்த கூடத்தில் நிலைபெற்றிருத்தலால் கூடஸ்தன். அது அதிஷ்ட்டான ரூபமாய் இருக்கிறதால் கூடஸ்த்தன்.
अथवा, राशिरिव स्थितं कूटस्थम् । अत एव अचलम् । यस्मात् अचलम् , तस्मात् ध्रुवम् , नित्यमित्यर्थः ॥ ३ ॥
அல்லது குவியல் போல் இருப்பதால் கூடஸ்த்தம். ஆகையால் தான் அசையாதது. எதனால் அசைவற்றிருக்கிறதோ அதனால் நித்தியம் என்று பொருள்.
संनियम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ।
ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः ॥ ४ ॥
ஸந்நியம்யேந்தரியக்ராமம் ஸர்வத்ர ஸமபுத்தய: ।
தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூதஹிதே ரதா: ॥ 4 ॥
सन्नियम्य सम्यक् नियम्य उपसंहृत्य इन्द्रियग्रामम् इन्द्रियसमुदायं सर्वत्र सर्वस्मिन् काले समबुद्धयः समा तुल्या बुद्धिः येषाम् इष्टानिष्टप्राप्तौ ते समबुद्धयः । ते ये एवंविधाः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः ।
இந்திரியக் கூட்டத்தை நன்றாக அடக்கி, எப்பொழுதும் பிரியமா னது, பிரியமற்றது அடையுங்கால் சமமான புத்தியுடன் இருப்பவர்கள் எவர்களோ அவர்கள் எல்லா பூதங்களுக்கும் நன்மை செய்வதில் ஈடு பாடு உடைய என்னை அடைகிறார்கள்.
न तु तेषां वक्तव्यं किञ्चित् ‘मां ते प्राप्नुवन्ति’ इति ।
அவர்கள் என்னை வந்து அடைகிறார்கள் என்பதைக் கூறவும் வேண்டுமோ?
‘ज्ञानी त्वात्मैव मे मतम्’ (भ. गी. ७ । १८) इति हि उक्तम् । न हि भगवत्स्वरूपाणां सतां युक्ततमत्वमयुक्ततमत्वं वा वाच्यम् ॥ ४ ॥
(ஞானியானவன் எனது ஆத்மாவே என்பது என் அபிப்பிராயம்) என்று கூறப்பட்டது. பகவத் ஸ்வரூபமாகவே உள்ளவர்களை மேலான யோகத்துடன் கூடியவர்கள். மேலான யோகத்தை அடையாதவர்கள் என்று கூறமுடியாது.
किं तु —
ஆனால்
क्लेशोऽधिकतरस्तेषामव्यक्तासक्तचेतसाम् ।
अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिरवाप्यते ॥ ५ ॥
க்லேசோஅதிகதரஸ்தேஷாமவ்யக்தாஸக்த-சேதஸாம் ।
அவ்யக்தா ஹி கதிர்துக்கம் தேஹவத்பிரவாப்யதே ॥ 5 ॥
क्लेशः अधिकतरः, यद्यपि मत्कर्मादिपराणां क्लेशः अधिक एव क्लेशः अधिकतरस्तु अक्षरात्मनां परमात्मदर्शिनां देहाभिमानपरित्यागनिमित्तः । अव्यक्तासक्तचेतसाम् अव्यक्ते आसक्तं चेतः येषां ते अव्यक्तासक्तचेतसः तेषाम् अव्यक्तासक्तचेतसाम् ।
என் பொருட்டு செய்யும் யக்ஞாதி கர்மங்கள் பிரயாசை(கடின) யானதாயினும் எவர்களுடைய சித்தமானது அவ்யக்தமாகிய பரமாத் மாவினிடத்தில் மிகவும் ஈடுபட்டு உள்ளதோ அவர்களுக்கு அக்ஷர பிரஹ்ம்மத்தையே சிந்திக்கும் பரமார்த்த தர்சிகளுக்கு தேஹ அபிமா னத்தை விடவேண்டியதால் அப்படிப்பட்ட அவ்யக்த ஆசக்த்த மனது டையவர்களுக்கு பிரயாசை அதிகமானதாகும்.
अव्यक्ता हि यस्मात् या गतिः अक्षरात्मिका दुःखं सा देहवद्भिः देहाभिमानवद्भिः अवाप्यते, अतः क्लेशः अधिकतरः । अक्षरोपासकानां यत् वर्तनम् , तत् उपरिष्टाद्वक्ष्यामः ॥ ५ ॥
எதனால் அக்ஷராத்மாவானது வெளிப்படையாக இல்லாததி னால் தேஹாபிமானம் உடையவர்களுக்கு மிக்க பிரயாசை செய்ய வேண்டியதாகிறது. அக்ஷரத்தை உபாசிப்பவர்கள் வாழ்க்கையில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை மேலே கூறுகிறோம்.
ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्पराः ।
अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते ॥ ६ ॥
யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா: ।
அனன்யேநைவ யோகேன மாம் த்யாயந்த உபாஸதே ॥ 6 ॥
ये तु सर्वाणि कर्माणि मयि ईश्वरे संन्यस्य मत्पराः अहं परः येषां ते मत्पराः सन्तः अनन्येनैव अविद्यमानम् अन्यत् आलम्बनं विश्वरूपं देवम् आत्मानं मुक्त्वा यस्य सः अनन्यः तेन अनन्येनैव ; केन ? योगेन समाधिना मां ध्यायन्तः चिन्तयन्तः उपासते ॥ ६ ॥
எவர்கள் எல்லா கர்மங்களையும் என்னிடத்தில் அர்ப்பணித்து என்னையே மேலான கதியாய் அநன்ய யோகத்தை மேற்கொண்டு அதாவது விச்வரூபராகிய ஆத்ம தேவரைத் தவிர வேறு ஓர் இடத் தும் ஆலம்பனம் (பற்றுக்கோடு) இல்லாமல் உள்ள அப்படிப்பட்ட அநந்ய சமாதி யோகத்தால் என்னையே உபாசனை செய்கிறார்கள்.
तेषां किम् ? —
அவர்களுக்கு என்ன ஏற்படும்‌?
तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् ।
भवामि न चिरात्पार्थ मय्यावेशितचेतसाम् ॥ ७ ॥
தே ஷா-மஹம் ஸமுத்தர்தா ம்ருத்யு-ஸம்ஸார-ஸாகராத் ।
பவாமி ந சிராத் பார்த மய்யாவேசிதசேதஸாம் ॥ 7 ॥
तेषां मदुपासनैकपराणाम् अहम् ईश्वरः समुद्धर्ता । कुतः इति आह — मृत्युसंसारसागरात् मृत्युयुक्तः संसारः मृत्युसंसारः, स एव सागर इव सागरः, दुस्तरत्वात् , तस्मात् मृत्युसंसारसागरात् अहं तेषां समुद्धर्ता भवामि न चिरात् । किं तर्हि ? क्षिप्रमेव हे पार्थ, मयि आवेशितचेतसां मयि विश्वरूपे आवेशितं समाहितं चेतः येषां ते मय्यावेशितचेतसः तेषाम् ॥ ७ ॥
ஹே பார்த்த! அந்த என்னையே உபாசனை செய்வதிலேயே சிரத்தை உடையவர்களை நான் கரையேற்றுவேன். எதனால் என்று கூறுகிறார். மரணத்துடன் கூடிய சம்சாரக் கடலிருந்து என்றால் மர ணத்துடன் கூடிய சம்சாரம். அது கடல் போல் உள்ளதால் கரையேற முடியாத மரணத்துடன் கூடிய சம்சாரக் கடலிருந்து அவர்களை நான் அதிக காலம் எடுக்காமல் வெகு சீக்கிரமாகவே அவர்களைக் கரை யேற்றுவேன். அவர்கள் விச்வரூப பரமாத்வாகிய என்னிடத்திலேயே சித்தத்தை வைத்தவர்கள்.
यतः एवम् , तस्मात् —
எதனால் இவ்வாறோ அதனால்-
मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय ।
निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः ॥ ८ ॥
மய்யேவ மன ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேசய ।
நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்சய: ॥ 8 ॥
मयि एव विश्वरूपे ईश्वरे मनः सङ्कल्पविकल्पात्मकं आधत्स्व स्थापय । मयि एव अध्यवसायं कुर्वतीं बुद्धिम् आधत्स्व निवेशय ।
விச்வரூப ஈஸ்வரராகிய என்னிடத்தில் சங்கல்ப விகல்பக ஆத்மகமான மனதை என்னிடத்தில் வை. அவ்வாறேநிச்சயம் செய்கின்ற புத்தியையும் என்னிடத்தில் வைத்து விடு.
ततः ते किं स्यात् इति शृणु —
அதனால் உனக்கு என்ன ஏற்படும் என்பதைக் கேள்-
निवसिष्यसि निवत्स्यसि निश्चयेन मदात्मना मयि निवासं करिष्यसि एव अतः शरीरपातात् ऊर्ध्वम् । न संशयः संशयः अत्र न कर्तव्यः ॥ ८ ॥
இந்த சரீரம் வீழ்ந்தபின் நீ என்னுடைய ஆத்மாவாகவே என்னி டத்தில் நிச்சயமாக வாசம் செய்வாய். அதாவது மேலான கதியை அடைவாய். இதில் சந்தேஹமில்லை.
अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् ।
अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय ॥ ९ ॥
அத சித்தம் ஸமாதாதும் ந சக்னோஷி மயி ஸ்திரம் ।
அப்யாஸயோகேன ததோ மாமிச்சாப்தும் தனஞ்ஜய ॥ 9 ॥
अथ एवं यथा अवोचं तथा मयि चित्तं समाधातुं स्थापयितुं स्थिरम् अचलं न शक्नोषि चेत् , ततः पश्चात् अभ्यासयोगेन, चित्तस्य एकस्मिन् आलम्बने सर्वतः समाहृत्य पुनः पुनः स्थापनम् अभ्यासः, तत्पूर्वको योगः समाधानलक्षणः तेन अभ्यासयोगेन मां विश्वरूपम् इच्छ प्रार्थयस्व आप्तुं प्राप्तुं हे धनञ्जय ॥ ९ ॥
நான் எவ்வாறு கூறினேனோ அவ்வாறு என்னிடத்தில் சித்தத்தை ஸ்திரமாக நிலைக்கச் செய்ய உன்னால் முடியவில்லை எனில் அதன் பிறகு ஹே தனஞ்ஜய! அப்பியாச யோகத்தால் அதாவது சித்தத்தை ஏதாவது ஒரு பற்றுக்கோட்டில் நிறுத்தி மறுபடியும், மறுபடியும் நிறுத்தி அப்யாசத்துடன் கூடிய சமாதான லக்ஷணமான யோகமாகிய அப்பியாசத்தால் விச்வரூபராகிய என்னை அடைவதற்குப் பிரார்த்தனை செய்.
अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्मपरमो भव ।
मदर्थमपि कर्माणि कुर्वन्सिद्धिमवाप्स्यसि ॥ १० ॥
அப்யாஸேஅப்-யஸமர்தோஅஸி மத்கர்ம-பரமோ பவ ।
மதர்தமபி கர்மாணி குர்வன் ஸித்தி மவாப்ஸ்யஸி ॥ 10 ॥
अभ्यासे अपि असमर्थः असि अशक्तः असि, तर्हि मत्कर्मपरमः भव मदर्थं कर्म मत्कर्म तत्परमः मत्कर्मपरमः, मत्कर्मप्रधानः इत्यर्थः । अभ्यासेन विना मदर्थमपि कर्माणि केवलं कुर्वन् सिद्धिं सत्त्वशुद्धियोगज्ञानप्राप्तिद्वारेण अवाप्स्यसि ॥ १० ॥
அப்யாஸம் செய்வதற்கு சாமர்த்தியம் இல்லையெனில் என்பொருட்டு உள்ள கர்மங்களையே முக்கியமானதாகச் செய். என்பொருட்டு கர்மம் என்றால் மத்கர்ம. மத்கர்ம பரமோ என்றால் என்பொருட்டு செய்யும் கர்மமே முக்கியமானது. அப்பியாசம் இல்லா விடினும் என் பொருட்டு செய்யும் கர்மங்களை மட்டும் செய்து சித்தசுத்தி யோக ஞானம் அடைவதின் வாயிலாக மேலான சித்தியை அடைவாய்.
अथैतदप्यशक्तोऽसि कर्तुं मद्योगमाश्रितः ।
सर्वकर्मफलत्यागं ततः कुरु यतात्मवान् ॥ ११ ॥
அதைததப்-யசக்தோ அஸி கர்தும் மத்யோக-மாச்ரித: ।
ஸர்வகர்மபலத்யாகம் தத: குரு யதாத்மவான் ॥ 11 ॥
अथ पुनः एतदपि यत् उक्तं मत्कर्मपरमत्वम् , तत् कर्तुम् अशक्तः असि, मद्योगम् आश्रितः मयि क्रियमाणानि कर्माणि संन्यस्य यत् करणं तेषाम् अनुष्ठानं सः मद्योगः, तम् आश्रितः सन् , सर्वकर्मफलत्यागं सर्वेषां कर्मणां फलसंन्यासं सर्वकर्मफलत्यागं ततः अनन्तरं कुरु यतात्मवान् संयतचित्तः सन् इत्यर्थः ॥ ११ ॥
மேலும் இப்பொழுது கூறப்பட்ட என் பொருட்டு கர்மம் செய்வதற் கும் உன்னால் முடியவில்லையெனில், செய்யப்பட்ட கர்மங்களை யெல்லாம் என்னிடத்தில் அர்ப்பணித்து அதை அனுஷ்ட்டானம் செய்யவேண்டும். அதுவே மத்யோகம். அதை ஆச்ரயித்தவனாகவும், மனதை வசம்செய்தவனாகவும் இருந்து எல்லா கர்மங்களின் பலன்க ளையும் தியாகம் செய்வாய் என்பது பொருள்.
इदानीं सर्वकर्मफलत्यागं स्तौति —
இப்பொழுது எல்லாக் கர்மங்களின் பலத்தியாகத்தைப் புகழ்கிறார் -
श्रेयो हि ज्ञानमभ्यासाज्ज्ञानाद्ध्यानं विशिष्यते ।
ध्यानात्कर्मफलत्यागस्त्यागाच्छान्तिरनन्तरम् ॥ १२ ॥
ச்ரேயோ ஹிக்ஞானமப்யாஸாத் ஜ்ஞானாத் த்யானம் விசிஷ்யதே ।
த்யானாத் கர்மபலத்யாகஸ்த்யாகாச்சாந்திரனந்தரம் ॥ 12 ॥
श्रेयः हि प्रशस्यतरं ज्ञानम् । कस्मात् ? विवेकपूर्वकात् अभ्यासात् । तस्मादपि ज्ञानात् ज्ञानपूर्वकं ध्यानं विशिष्यते । ज्ञानवतो ध्यानात् अपि कर्मफलत्यागः, ‘विशिष्यते’ इति अनुषज्यते ।
ஞானமானது சந்தேஹமில்லாமல் மிகவும் மேன்மையானது. எதைவிட என்றால் விவேகமில்லாமல் செய்யும் அப்யாசத்தைக் காட்டிலும் மேலானாது. அதைக் காட்டிலும் ஞானத்துடன் செய்யும் தியா னம் மேலானது. ஞானத்துடன் கூடிய தியானத்தைக் காட்டிலும் கர்மப லத்தியாகமானது மேலானது.
एवं कर्मफलत्यागात् पूर्वविशेषणवतः शान्तिः उपशमः सहेतुकस्य संसारस्य अनन्तरमेव स्यात् , न तु कालान्तरम् अपेक्षते ॥
இவ்வாறு கர்மபலதியாகத்தினால் முன் கூறப்பட்ட சிறப்புகள் (மேன்மை) உடையவனுக்கு காரணத்துடன் சம்சாரமானது உடனேயே ஒழிந்துவிடும். அது காலாந்தரத்தை அபேக்ஷி ப்பதில்லை. (வேண்டுவது இல்லை.)
अज्ञस्य कर्मणि प्रवृत्तस्य पूर्वोपदिष्टोपायानुष्ठानाशक्तौ सर्वकर्मणां फलत्यागः श्रेयःसाधनम् उपदिष्टम् , न प्रथममेव । अतश्च ‘श्रेयो हि ज्ञानमभ्यासात्’ इत्युत्तरोत्तरविशिष्टत्वोपदेशेन सर्वकर्मफलत्यागः स्तूयते, सम्पन्नसाधनानुष्ठानाशक्तौ अनुष्ठेयत्वेन श्रुतत्वात् ।
கர்மத்திலேயே ஈடுபட்டுள்ள அக்ஞானியின் பொருட்டு முன்பு கூறப்பட்ட உபாயங்களை அனுஷ்டானம் செய்வதில் சாமர்த்தியம் இல்லாதவர்களுக்கு எல்லா கர்மபலன்களின் தியாக ரூப மேன்மை தரக்கூடிய ஸாதனமானது உபதேசம் செய்யப்பட்டது. ஆனால் ஆரம்பத்திலேயே அன்று, ஆகையால் ச்ரேயோ ஹி ஞானமப்யாசாத் என்பது முதலியவைகளால் பின்னால் வருவது ஒன்றைக் காட்டிலும் ஒன்று மேலானது என்று கூறி கர்மபல த்யாகத்தைப் புகழ்கிறார். ஏன் எனில் உத்தமமான சாதனங்களை அனுஷ்ட்டானம் செய்வதில் சாமர்த்தியம் இல்லாமையால் இந்த சாதனத்தை அனுஷ்டானம் செய்வதில் ஈடுபாடு ஏற்படுத்துவதற்காக கர்மபலத்யாகத்தைச் சிறப்பித்துக் கூறினார்.
केन साधर्म्येण स्तुतित्वम् ?
எதற்கு சமமாக ஸ்துதிக்கப்படுகிறது.
‘यदा सर्वे प्रमुच्यन्ते’ (क. उ. २ । ३ । १४) इति सर्वकामप्रहाणात् अमृतत्वम् उक्तम् ; तत् प्रसिद्धम् । कामाश्च सर्वे श्रौतस्मार्तकर्मणां फलानि । तत्त्यागे च विदुषः ध्याननिष्ठस्य अनन्तरैव शान्तिः इति ।
“யதா ஸர்வே ப்ரமுச்யந்தே” என்று எல்லா காமனைகளையும் ஒழிப்பதால் அம்ருதத்வம் என்று கூறப்பட்டுள்ளது என்பது பிரசித்தம். காமனைகள் என்றால் சுருதியிலும், ஸ்மிருதியிலும் கூறப்பட்டுள்ள எல்லா கர்மங்களின் பலன்களாகும். ஞான நிஷ்ட்டை உடைய வித்வானுக்கு அதைத் தியாகம் செய்வதினால் உடனேயே சாந்தி ஏற்படும்.
सर्वकामत्यागसामान्यम् अज्ञकर्मफलत्यागस्य अस्ति इति तत्सामान्यात् सर्वकर्मफलत्यागस्तुतिः इयं प्ररोचनार्था ।
(ஞானியினுடைய) சர்வ காம த்யாகமானது அக்ஞானியினு டைய சர்வகர்ம பலத்தியாகத்திற்கு சமானமாக இருக்கிறது என்பது சர்வகர்ம பலத்தியாகத்தில் ருசி ஏற்படுத்துவதற்காக சிறப்பித்துக் கூறப்படுகிறது.
यथा अगस्त्येन ब्राह्मणेन समुद्रः पीतः इति इदानीन्तनाः अपि ब्राह्मणाः ब्राह्मणत्वसामान्यात् स्तूयन्ते,।
எவ்வாறு முன்பு அகஸ்தியர் என்றபிராஹ்மணரால் சமுத்திரமா னது குடிக்கப்பட்டது என்பதை இப்பொழுதுள்ள பிராஹ்மணர்களை யும் பிராஹ்மணத்துவத்தால் சமானமாக புகழ்வதைப் போல் என்க.
एवं कर्मफलत्यागात् कर्मयोगस्य श्रेयःसाधनत्वमभिहितम् ॥ १२ ॥
இவ்வாறு கர்மபலத் தியாகத்தினால் கர்மயோகத்தின் சிறப்பானது முக்திக்கு ஸாதனமாம் என்று உபதேசிக்கப்பட்டது
अत्र च आत्मेश्वरभेदमाश्रित्य विश्वरूपे ईश्वरे चेतःसमाधानलक्षणः योगः उक्तः, ईश्वरार्थं कर्मानुष्ठानादि च ।
இங்கு ஆத்மா ஈஸ்வர பேதத்தை வைத்துக்கொண்டு விச்வரூபத் துடன் கூடிய ஈஸ்வரரிடத்தில் சித்தத்தை ஒருநிலைப் படுத்தும் யோகமானது கூறப்பட்டது. மேலும் ஈஸ்வரன் பொருட்டு கர்மானுஷ்ட் டானம் முதலியவை உபதேசிக்கப்பட்டது.
‘अथैतदप्यशक्तोऽसि’ (भ. गी. १२ । ११) इति अज्ञानकार्यसूचनात् न अभेददर्शिनः अक्षरोपासकस्य कर्मयोगः उपपद्यते इति दर्शयति ; तथा कर्मयोगिनः अक्षरोपासनानुपपत्तिम् ।
(அதைததப்யசக்தோஅஸி) என்று அக்ஞான காரியத்தை சூசக மாக குறிப்பிட்டுள்ளதால் இது அபேத தர்சிகளாகிய அக்ஷர பிரஹ் மத்தை உபதேசிப்பவர்களுக்கு கர்மயோகமானது பொருந்தாது என்று காண்பிக்கிறார். அவ்வாறேபகவான் கர்மயோகிகளுக்கு அக்ஷர பிரஹ்ம்மோபாசனை பொருந்தாது என்பதையும் காண்பிக்கிறார்.
‘ते प्राप्नुवन्ति मामेव’ (भ. गी. १२ । ४) इति अक्षरोपासकानां कैवल्यप्राप्तौ स्वातन्त्र्यम् उक्त्वा, इतरेषां पारतन्त्र्यात् ईश्वराधीनतां दर्शितवान् ‘तेषामहं समुद्धर्ता’ (भ. गी. १२ । ७) इति ।
(தே பிராப்நுவந்தி மாமேவ) என்று அக்ஷர பிரஹ்மத்தை உபாசிப் பவர்களுக்கு கைவல்யம் அடைவதில் சுதந்திரத் தன்மையைக் கூறி மற்றவர்களுக்கு உள்ள பரதந்திரத்தை ஈஸ்வராதீனமாக உள்ள தன் மையை (தே ஷாம் அஹம் சமுத்தர்த்தா) அவர்களை நான் கரையேற் றுவேன் என்று காண்பிக்கிறார்.
यदि हि ईश्वरस्य आत्मभूताः ते मताः अभेददर्शित्वात् , अक्षरस्वरूपाः एव ते इति समुद्धरणकर्मवचनं तान् प्रति अपेशलं स्यात् ।
அந்த கர்மயோகிகள் அவர்கள் ஈஸ்வர ஸ்வரூபமாகவே ஆகிவி டுவதால் அவர்களும் அபேத தர்சிகளாக ஆகிவிடுவதால் அவர்கள் அக்ஷரஸ்வரூபமாகவே ஆகிவிடுகிறார்கள். ஆகையால் அவர்களை நான் கரையேற்றுகிறேன் என்பது பொருந்தாததாகலாம்.
यस्माच्च अर्जुनस्य अत्यन्तमेव हितैषी भगवान् तस्य सम्यग्दर्शनानन्वितं कर्मयोगं भेददृष्टिमन्तमेव उपदिशति ।
எதனால் பகவான் அர்ஜுனனிடத்தில் மிகுந்த நலத்தை விரும்பினாரோ அதனால் அவனுக்கு சம்யக் ஞானத்துடன் கலக்கப்படாத பேத திருஷ்ட்டியுடன் கூடிய கர்மயோகத்தைத் தான் உபதேசித்தார்.
न च आत्मानम् ईश्वरं प्रमाणतः बुद्ध्वा कस्यचित् गुणभावं जिगमिषति कश्चित् , विरोधात् ।
பிரமாணத்தால் ஆத்மாவை ஈஸ்வரன் என்று அறிந்தபின் ஒருவ ருக்கும் கீழ் உள்ளவனாக ஆகமாட்டான். ஏனெனில் சேவகன், தலை வன் என்றவிரோதம் வருவதால்.
तस्मात् अक्षरोपासकानां सम्यग्दर्शननिष्ठानां संन्यासिनां त्यक्तसर्वैषणानाम् ‘अद्वेष्टा सर्वभूतानाम्’ इत्यादिधर्मपूगं साक्षात् अमृतत्वकारणं वक्ष्यामीति प्रवर्तते —
ஆகையால் அக்ஷர பிரஹ்மத்தை உபாசிக்கிறவர்களாயும், சம்யக்தர்சன நிஷ்ட்டர்களாகவும் சந்நியாசிகளாகவும் ஈக்ஷணாதிர யங்களை விட்டவர்களாகவும் உள்ளவர்களுக்கு (அத்வேஷ்ட்டா சர்வ பூதானாம்) முதலிய தர்மங்கள் சாக்ஷாத்தாக அம்ருதத்துவத் திற்கு காரணம் என்பதைக் கூறுகிறேன் என்று ஆரம்பிக்கிறார்-
अद्वेष्टा सर्वभूतानां मैत्रः करुण एव च ।
निर्ममो निरहङ्कारः समदुःखसुखः क्षमी ॥ १३ ॥
அத்வேஷ்டாஸர்வபூதானாம் மைத்ர: கருண ஏவ ச ।
நிர்மமோ நிரஹங்கார: ஸமதுக்கஸுக: க்ஷe ॥ 13 ॥
अद्वेष्टा सर्वभूतानां न द्वेष्टा, आत्मनः दुःखहेतुमपि न किञ्चित् द्वेष्टि, सर्वाणि भूतानि आत्मत्वेन हि पश्यति ।
எல்லாபிராணிகளிடத்தும் அவ்வாறேதனக்கு துக்கம் கொடுப்பவ ரிடத்தும் சிறிதும் துவேஷிக்க மாட்டான். எல்லா பூதங்களையும் ஆத்ம ஸ்வரூபமாகவே காண்பான்.
मैत्रः मित्रभावः मैत्री मित्रतया वर्तते इति मैत्रः । करुणः एव च, करुणा कृपा दुःखितेषु दया, तद्वान् करुणः, सर्वभूताभयप्रदः, संन्यासी इत्यर्थः ।
எல்லோரிடத்தும் மித்ர பாவத்துடன் இருப்பதால் மைத்ரி (நண்பன்). துக்கத்துடன் இருப்பவர்களிடத்தில் கருணை உள்ளவன். அவ்வாறு உள்ளவன் எல்லா பூதங்களுக்கும் அபயம் அளிக்கும் சந்நியாசி என்று பொருள்.
निर्ममः ममप्रत्ययवर्जितः । निरहङ्कारः निर्गताहंप्रत्ययः । समदुःखसुखः समे दुःखसुखे द्वेषरागयोः अप्रवर्तके यस्य सः समदुःखसुखः ।
மமகாரம் அஹங்காரம் என்னும் எண்ணங்களை விட்டவன். சுகதுக்கங்களைச் சமபாவனை கொண்டவன். என்றால் சுகமோ, துக்கமோ அவனுடைய அந்தக்கரணத்தில் ராகதுவே ஷத்தை உண்டாக்காது.
क्षमी क्षमावान् , आक्रुष्टः अभिहतो वा अविक्रियः एव आस्ते ॥ १३ ॥
ஒருவர் ஏசினாலும் அடித்தாலும் மாறுபடாமல் பொறுமையாக உள்ளவன்.
सन्तुष्टः सततं योगी यतात्मा दृढनिश्चयः ।
मय्यर्पितमनोबुद्धिर्यो मद्भक्तः स मे प्रियः ॥ १४ ॥
ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருடநிச்சய: ।
மய்யர்பிதமனோபுத்திர் யோ மத்பக்த: ஸ மே ப்ரிய: ॥ 14 ॥
सन्तुष्टः सततं नित्यं देहस्थितिकारणस्य लाभे अलाभे च उत्पन्नालंप्रत्ययः । तथा गुणवल्लाभे विपर्यये च सन्तुष्टः । सततं योगी समाहितचित्तः । यतात्मा संयतस्वभावः । दृढनिश्चयः दृढः स्थिरः निश्चयः अध्यवसायः यस्य आत्मतत्त्वविषये स दृढनिश्चयः ।
தேஹம் நிலைத்தன் பொருட்டு கிடைத்தாலும், கிடைக்காவிட் டாலும் எப்பொழுதும் போதும் என்றமனப்பான்மையால் சந்தோஷம் உள்ளவன். அவ்வாறேநல்லது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருப்பவன். சமநிலையில் உள்ள சித் தத்தை உடைய யோகி, வசம் செய்யப்பட்ட (மனது) ஸ்வபாவம் உடை யவன் யதாத்மா. ஆத்மதத்துவ விஷயத்தில் திட நிச்சயமுள்ளவன்.
मय्यर्पितमनोबुद्धिः सङ्कल्पविकल्पात्मकं मनः, अध्यवसायलक्षणा बुद्धिः, ते मय्येव अर्पिते स्थापिते यस्य संन्यासिनः सः मय्यर्पितमनोबुद्धिः । यः ईदृशः मद्भक्तः सः मे प्रियः ।
சங்கல்பாத்மகமான மனதையும் நிச்சயாத்மகமான புத்தியையும் என்னிடத்திலேயே நிலைபெறச் செய்த சந்நியாசியே (மயி அர்ப்பித மனோபுத்தி:) எவன் இவ்வாறான பக்தனோ அவன் எனக்குப் பிரியமானவன்.
‘प्रियो हि ज्ञानिनोऽत्यर्थमहं स च मम प्रियः’ (भ. गी. ७ । १७) इति सप्तमे अध्याये सूचितम् , तत् इह प्रपञ्च्यते ॥ १४ ॥
“ப்ரியோ ஹி ஞானினோ அத்யர்த்தமஹம் ஸ ச மம ப்ரிய:” என்று ஏழாவது அத்யாயத்தில் சூசிக்கப்பட்டது, அது இங்கே வர்ணனை செய்யப்பட்டுள்ளது.
यस्मान्नोद्विजते लोको लोकान्नोद्विजते च यः ।
हर्षामर्षभयोद्वेगैर्मुक्तो यः स च मे प्रियः ॥ १५ ॥
யஸ்மான்னோத்விஜதே லோகோ லோகான்னோத்விஜதே ச ய: ।
ஹர்ஷாமர்ஷபயோத்வேகைர்முக்தோ ய: ஸ ச மே ப்ரிய: ॥ 15 ॥
यस्मात् संन्यासिनः न उद्विजते न उद्वेगं गच्छति न सन्तप्यते न सङ्क्षुभ्यति लोकः, तथा लोकात् न उद्विजते च यः,
எந்த சந்நியாசியால் உலகமானது கஷ்டப்படுவதில்லையோ வருத்தப்படுவதில்லையோ தபிக்கப்படுவதில்லையோ அவ்வாறே சந்நியாசியும் இந்த உலகத்தினின்று வருந்துவது (துக்கப்படுவது) இல்லையோ.
हर्षामर्षभयोद्वेगैः हर्षश्च अमर्षश्च भयं च उद्वेगश्च तैः हर्षामर्षभयोद्वेगैः मुक्तः ; हर्षः प्रियलाभे अन्तःकरणस्य उत्कर्षः रोमाञ्चनाश्रुपातादिलिङ्गः, अमर्षः असहिष्णुता, भयं त्रासः, उद्वेगः उद्विग्नता, तैः मुक्तः यः स च मे प्रियः ॥ १५ ॥
மகிழ்ச்சி, பொறாமை, பயம் மேலும் கலக்கம் இவை இல்லாதவ னும் பிரியமானது கிடைத்தலால் அந்தக்கரணத்தில் உத்சாஹம் மயிர் சிர்த்தல், கண்ணீர் விடுதல் முதலியவை சந்தோஷத்தின் அறிகுறி. சஹிப்புத்தன்மை இல்லாமை அமர்ஷ: பயம், உத்வேகம் இவைகளி ருந்து எவன் விடுபடுகிறானோ அவன் எனக்குப் பிரியமானவன்.
अनपेक्षः शुचिर्दक्ष उदासीनो गतव्यथः ।
सर्वारम्भपरित्यागी यो मद्भक्तः स मे प्रियः ॥ १६ ॥
அனபேக்ஷ: சுசிர்தக்ஷ உதாஸீனோ கதவ்யத: ।
ஸர்வாரம்பபரித்யாகீ யோ மத்பக்த: ஸ மே ப்ரிய: ॥ 16 ॥
देहेन्द्रियविषयसम्बन्धादिषु अपेक्षाविषयेषु अनपेक्षः निःस्पृहः । शुचिः बाह्येन आभ्यन्तरेण च शौचेन सम्पन्नः । दक्षः प्रत्युत्पन्नेषु कार्येषु सद्यः यथावत् प्रतिपत्तुं समर्थः ।
தேஹம், இந்திரியம், விஷயம் மேலும் சம்பந்தம் முதலிய அவா உள்ள விஷயங்களில் அவா அற்றிருப்பவர். வெளியிலும், உள்ளே யும் சுத்தமாக இருப்பவர். செய்யவேண்டிய அநேக காரியங்களில் அதில் எது யதார்த்தமாக செய்யவேண்டுமோ அதை நிச்சயம் செய்வ தில் சாமர்த்தியம். (தக்ஷ:)
उदासीनः न कस्यचित् मित्रादेः पक्षं भजते यः, सः उदासीनः यतिः । गतव्यथः गतभयः ।
உதாசீன: என்றால் சிநேகிதன் முதலியவர்களிடத்து பக்ஷபாதம் இல்லாத சந்நியாசி. கதவ்யத: என்றால் பயம் அற்றவன்.
सर्वारम्भपरित्यागी आरभ्यन्त इति आरम्भाः इहामुत्रफलभोगार्थानि कामहेतूनि कर्माणि सर्वारम्भाः, तान् परित्यक्तुं शीलम् अस्येति सर्वारम्भपरित्यागी यः मद्भक्तः सः मे प्रियः ॥ १६ ॥
இகலோக, பரலோக போகம் வேண்டுபவர்கள் காமனைகளை அடைவதற்கு காரணமாகிய கர்மங்களை ஆரம்பிக்காமல் இருப்பதே (சர்வாரம்ப பரித்யாகி) இவ்வாறுள்ளவன் எவனோ அந்த பக்தன் எனக்கு பிரியமானவன்.
किञ्च —
மேலும்
यो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति ।
शुभाशुभपरित्यागी भक्तिमान्यः स मे प्रियः ॥ १७ ॥
யோ ந ஹ்ருஷ்யதி ந த்வேஷ்டி ந சோசதி ந காங்க்ஷதி ।
சுபாசுப-பரித்யாகீ பக்திமான் ய: ஸ மே ப்ரிய: ॥ 17 ॥
यः न हृष्यति इष्टप्राप्तौ, न द्वेष्टि अनिष्टप्राप्तौ, न शोचति प्रियवियोगे, न च अप्राप्तं काङ्क्षति, शुभाशुभे कर्मणी परित्यक्तुं शीलम् अस्य इति शुभाशुभपरित्यागी भक्तिमान् यः सः मे प्रियः ॥ १७ ॥
எவன் ஒருவன் தான் விரும்பியதை அடைந்தால் மிகவும் சந்தோஷப்படமாட்டானோ, அவ்வாறேதான் விரும்பாததை அடைந் தாலும் த்வேஷிக்கமாட்டான். தனக்குப் பிரியமானது நாசம் அடைந் தாலும் வருத்தப்படமாட்டானோ மேலும் கிடைக்காததின் இடத்தில் விருப்பம் கொள்ளமாட்டானோ நல்வினைகள், தீவினைகள் இவை களை முற்றும் துறத்தல் எவன் சாமர்த்தியம் உள்ளவனோ அப்படிப் பட்ட பக்தி உடையவன் எனக்குப் பிரியமானவன்.
समः शत्रौ च मित्रे च तथा मानापमानयोः ।
शीतोष्णसुखदुःखेषु समः सङ्गविवर्जितः ॥ १८ ॥
ஸம: சத்ரௌ ச மித்ரே ச ததா மானாபமானயோ: ।
சீதோஷ்ண ஸுகது:கேஷு ஸம: ஸங்கவிவர்ஜித: ॥ 18 ॥
समः शत्रौ च मित्रे च, तथा मानापमानयोः पूजापरिभवयोः, शीतोष्णसुखदुःखेषु समः, सर्वत्र च सङ्गविवर्जितः ॥ १८ ॥
சத்ருக்களிடத்தும், மித்திரர்களிடத்தும் (நண்பர்களிடத்தும்) அவ்வாறே மதிப்பதிலும், அவமதிப்பிலும், குளிரிலும் வெப்பத்திலும், சுகத்திலும் துக்கத்திலும் சமபாவனையுடன் எதிலும் பற்றற்றவன்.
किञ्च —
மேலும்
तुल्यनिन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् ।
अनिकेतः स्थिरमतिर्भक्तिमान्मे प्रियो नरः ॥ १९ ॥
துல்யநிந்தா ஸ்துதிர்-மௌனீ ஸந்துஷ்டோ யேன கேனசித் ।
அனிகேத: ஸ்திரமதிர்-பக்திமான்மே ப்ரியோ நர: ॥ 19 ॥
तुल्यनिन्दास्तुतिः निन्दा च स्तुतिश्च निन्दास्तुती ते तुल्ये यस्य सः तुल्यनिन्दास्तुतिः । मौनी मौनवान् संयतवाक् । सन्तुष्टः येन केनचित् शरीरस्थितिहेतुमात्रेण ।
ஒருவர் நிந்தை செய்தாலும், துதி செய்தாலும் இரண்டையும் சம மாக பார்ப்பவன். மௌநீ. அதாவது வாக்கை அடக்கியவன். எவ்வகை யாயிலும் சரீரத்தின் இருப்பு மாத்திரத்தில் சந்தோஷமடைபவன்.
तथा च उक्तम् —
அவ்வாறேகூறப்பட்டுள்ளது.
‘येन केनचिदाच्छन्नो येन केनचिदाशितः । यत्र क्वचन शायी स्यात्तं देवा ब्राह्मणं विदुः’ (मो. ध. २४५ । १२) इति ।
எதையாவது உடுத்திக் கொள்வான். எதையாயினும் சாப்பிடு வான். எங்காவது படுப்பான். அப்படிப்பட்டவனை தேவர்கள் பிராஹ்ம ணர்கள் என்று அறிகிறார்கள். (மஹாபாரதம்- சாந்தி) என்று.
किञ्च, अनिकेतः निकेतः आश्रयः निवासः नियतः न विद्यते यस्य सः अनिकेतः, ‘नागारे’ ( ? ) इत्यादिस्मृत्यन्तरात् । स्थिरमतिः स्थिरा परमार्थविषया यस्य मतिः सः स्थिरमतिः । भक्तिमान् मे प्रियः नरः ॥ १९ ॥
அவ்வாறேஎவனுக்கு இங்கு தான் வசிக்கவேண்டும் என்றநியதி இல்லையோ அவன் “(அநிகேத:)” ஸ்மிருதியிலும் “(அநாகார:)” என்று கூறப்பட்டுள்ளது. பரமார்த்த வஸ்து விஷயத்தில் ஸ்திரமான புத்தி எவ னுக்குள்ளதோ அவன் “(ஸ்திரமதி:)” இவ்வாறுள்ள எனக்கு பிரியமானவன்.
‘अद्वेष्टा सर्वभूतानाम्’ (भ. गी. १२ । १३), इत्यादिना अक्षरोपासकानां निवृत्तसर्वैषणानां सन्यासिनां परमार्थज्ञाननिष्ठानां धर्मजातं प्रक्रान्तम् उपसंह्रियते —
எல்லா ஈ ஷணைகளையும் அற்றவராயும், பரமார்த்த ஞான நிஷ்டை உடையவராயும், அக்ஷரத்தை உபாசிக்கின்றவராயும் உள்ள சந்நியாசிகளுடைய ஒழுக்கத்தை (அத்வேஷ்டா ஸர்வபூதானாம்) என்ற ஸ்லோகத்திலிருந்து ஆரம்பித்து இப்பொழுது முடிக்கின்றார்.
ये तु धर्म्यामृतमिदं यथोक्तं पर्युपासते ।
श्रद्दधाना मत्परमा भक्तास्तेऽतीव मे प्रियाः ॥ २० ॥
யே து தர்ம்யாம்ருத-மிதம் யதோக்தம் பர்யுபாஸதே ।
ச்ரத்ததானா மத்பரமா பக்தாஸ்தே அதீவ மே ப்ரியா: ॥ 20 ॥
ये तु संन्यासिनः धर्म्यामृतं धर्मादनपेतं धर्म्यं च तत् अमृतं च तत् , अमृतत्वहेतुत्वात् , इदं यथोक्तम् ‘अद्वेष्टा सर्वभूतानाम्’ (भ. गी. १२ । १३) इत्यादिना पर्युपासते अनुतिष्ठन्ति श्रद्दधानाः सन्तः मत्परमाः यथोक्तः अहं अक्षरात्मा परमः निरतिशया गतिः येषां ते मत्परमाः, मद्भक्ताः च उत्तमां परमार्थज्ञानलक्षणां भक्तिमाश्रिताः, ते अतीव मे प्रियाः ।
எந்த சந்நியாசியானவர் தர்மத்திலிருந்து நழுவாதவராகவும், மரணமற்றதன்மைக்கு ஹேதுவான அம்ருதம் என்னும் தர்மத்தை (அத்வேஷ்டா சர்வபூதானாம்) என்று கூறியபடி சிரத்தையுடன் அனுஷ்ட்டானம் செய்பவர்கள். கூறப்பட்டவாறு நான் அக்ஷர ஆத்மா, நானே மேலான கதி என்று இருப்பவர்கள் எவர்களோ அவர்கள் மத்பரமா.
உத்தமமான பரமார்த்த ஞான லக்ஷணத்துடன் கூடிய பக்தியை ஆச்ரயித்தவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.
‘प्रियो हि ज्ञानिनोऽत्यर्थम्’ (भ. गी. ७ । १७) इति यत् सूचितं तत् व्याख्याय इह उपसंहृतम् ‘भक्तास्तेऽतीव मे प्रियाः’ इति ।
“(ப்ரியோ ஹி ஞானினோ அத்யர்த்தம்)” என்று எது குறிப்பிடப் பட்டதோ அது இங்கு வியாக்யானம் செய்து “(பக்தாஸ்தே அதீவ மே ப்ரியா:)” என்றவாக்கியத்தினால் அதை முடிக்கிறார்.
यस्मात् धर्म्यामृतमिदं यथोक्तमनुतिष्ठन् भगवतः विष्णोः परमेश्वरस्य अतीव प्रियः भवति, तस्मात् इदं धर्म्यामृतं मुमुक्षुणा यत्नतः अनुष्ठेयं विष्णोः प्रियं परं धाम जिगमिषुणा इति वाक्यार्थः ॥ २० ॥
எதனால் இந்த தர்மத்துடன் கூடிய அம்ருதத்தை உபதேசம் செய் தபடி அநுஷ்டிப்பதால் பகவானாகிய விஷ்ணு எனப்படும் பரமேச்வர னாகிய எனக்கு மிகவும் பிரியமேற்படுகிறதோ அதனால் விஷ்ணுவிற் குப் பிரியமான பரமபதத்தை அடைவதற்கு இச்சை உள்ள முமூக்ஷ வானவன் இந்த தர்மத்துடன் கூடிய அம்ருதத்தை முயற்சியுடன் அநுஷ்ட்டானம் செய்யவேண்டும்.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये द्वादशोऽध्यायः ॥
ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே பக்தியோகோ நாம த்வாதசோத்யாய: