द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

श्रीमद्भगवद्गीताभाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

ஶ்ரீமத்பகவத்கீதாபாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

‘योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना । श्रद्धावान्भजते यो मां स मे युक्ततमो मतः’ (भ. गी. ६ । ४७) इति प्रश्नबीजम् उपन्यस्य, स्वयमेव ‘ईदृशं मदीयं तत्त्वम् , एवं मद्गतान्तरात्मा स्यात्’ इत्येतत् विवक्षुः —
என்று இந்த ஸ்லோகத்தின் மூலமாக ஆறாவது அத்தியா யத்தின் முடிவில் வினாக்களுக்கான காரண பீஜத்தை உபதேசித்து பின்தானே என்னுடைய தத்துவம் இவ்வாறானது, இவ்வாறு என்னிடத்தில் நிலைத்த அந்தராத்மாவாக இரு என்பது முதலிய விஷயங்களை விளக்குவதற்கு இச்சை உள்ளவராய்ப் பகவான் கூறலானார்.
श्रीभगवानुवाच —
பகவான் கூறியது.
मय्यासक्तमनाः पार्थ योगं युञ्जन्मदाश्रयः ।
असंशयं समग्रं मां यथा ज्ञास्यसि तच्छृणु ॥ १ ॥
மய்யாஸக்தமனா: பார்த்த யோகம் யுஞ்ஜந் மதாச்ரய: ।
அஸம்சயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தச்ச்ருணு ॥ 1 ॥
मयि वक्ष्यमाणविशेषणे परमेश्वरे आसक्तं मनः यस्य सः मय्यासक्तमनाः, हे पार्थ योगं युञ्जन् मनःसमाधानं कुर्वन् , मदाश्रयः अहमेव परमेश्वरः आश्रयो यस्य सः मदाश्रयः ।
இனி கூறப்போகும் விசேஷணங்களுடன் கூடிய பரமேஸ்வர னாகிய என்னிடத்திலேயே எவனுடைய மனமானது லயித்திருக்கி றதோ அவன் மய்யாசக்தமனா: மேலும் என்னையே எவன் ஒருவன் ஆச்ரயித்திருக்கிறானோ அவன் மதாச்ரய: ஹே! பார்த்த! இவ்வாறு என்னிடத்திலேயே மனதுடையவனும், என்னையே ஆச்ரயிப்பவ னுமாகி யோகசாதனம் செய்கிறானோ என்றால் என்னையே த்யானம் செய்து கொண்டிருக்கிறான்
यो हि कश्चित् पुरुषार्थेन केनचित् अर्थी भवति स तत्साधनं कर्म अग्निहोत्रादि तपः दानं वा किञ्चित् आश्रयं प्रतिपद्यते। अयं तु योगी मामेव आश्रयं प्रतिपद्यते हित्वा अन्यत् साधनान्तरं मय्येव आसक्तमनाः भवति ।
புருஷார்த்தங்களுள் ஏதோ ஒரு புருஷார்த்தத்தை விரும்பின வன் அதை அடைவதற்காக சாதனரூபமான அக்னிஹோத்ராதி கர்மங்கள், தபஸ், தானம் இவைகளில் ஒன்றை ஆச்ரயிக்கின்றான். ஆனால் இந்த யோகி மற்ற சாதனங்களை விட்டு கேவலம் என் ஒருவனையே ஆச்ரயித்து என்னிடத்திலேயே ஆஸக்த மனது உடையவனாகிறான்.
यः त्वं एवंभूतः सन् असंशयं समग्रं समस्तं विभूतिबलशक्त्यैश्वर्यादिगुणसम्पन्नं मां यथा येन प्रकारेण ज्ञास्यसि संशयमन्तरेण ‘एवमेव भगवान्’ इति, तत् शृणु उच्यमानं मया ॥ १ ॥
எந்த நீ முற்கூறியபடி இருந்துகொண்டு எல்லா விபூதி, பலம், சக்தி, ஐஸ்வர்யம் முதலியவைகளை உடைய பரமேச்வரனாகிய என்னை, பகவான் இப்படித்தான் இருக்கிறார் என்று எவ்வித சந்தேஹமுமில்லாமல் அறிவாயோ அதனைக் கூறுகிறேன் கேள்.
तच्च मद्विषयम् —
அது என்னைப் பற்றிய விஷயம் (ஞானம்)
ज्ञानं तेऽहं सविज्ञानमिदं वक्ष्याम्यशेषतः ।
यज्ज्ञात्वा नेह भूयोऽन्यज्ज्ञातव्यमवशिष्यते ॥ २ ॥
ஞானம் தேஅஹம் ஸவிக்ஞானமிதம் வக்ஷ்யாம்யசேஷத: ।
யஜ்ஞாத்வா நேஹ பூயோ அந்யஜ்ஞாதவ்யமவசிஷ்யதே ॥ 2 ॥
ज्ञानं ते तुभ्यम् अहं सविज्ञानं विज्ञानसहितं स्वानुभवयुक्तम् इदं वक्ष्यामि कथयिष्यामि अशेषतः कार्‌त्स्न्येन ।
விக்ஞானத்துடன் கூடிய அதாவது ஸ்வாநுபவத்துடன் கூடிய ஞானத்தை மிச்சமில்லாமல் முழுமையாக உனக்கு நான் கூறுகிறேன்.
तत् ज्ञानं विवक्षितं स्तौति श्रोतुः अभिमुखीकरणाय ।
கேட்பவன் (சிரவணம் செய்பவனை) அதில் ஞானத்தில் நன்றாக ஈடுபடுத்துவதற்காக விளக்கப்பட்ட (உபதேசிக்கப்பட்ட) ஞானத்தைப் புகழ்கிறார்.
यत् ज्ञात्वा यत् ज्ञानं ज्ञात्वा न इह भूयः पुनः अन्यत् ज्ञातव्यं पुरुषार्थसाधनम् अवशिष्यते नावशिष्टं भवति । इति मत्तत्त्वज्ञो यः, सः सर्वज्ञो भवतीत्यर्थः । अतो विशिष्टफलत्वात् दुर्लभं ज्ञानम् ॥ २ ॥
எந்த ஞானத்தை அறிந்ததால் மறுபடியும் இங்கு அறிய வேண்டிய புருஷார்த்த சாதனம் மிச்சமாய் இல்லையோ என்று புகழ்கிறார். எவன் என்னுடைய தத்துவத்தை முழுமையாக அறிந்த வனோ அவன் சர்வக்ஞன் என்று பொருள். ஆகையால் ஞானமானது உத்தமபலனை உடையதால் அடைவது மிக்க கடினம்.
कथमित्युच्यते —
எப்படி என்பதைக் கூறுகிறார்.
मनुष्याणां सहस्रेषु कश्चिद्यतति सिद्धये ।
यततामपि सिद्धानां कश्चिन्मां वेत्ति तत्त्वतः ॥ ३ ॥
மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கச்சித் யததி ஸித்தயே ।
யததாமபி ஸித்தானாம் கச்சின்-மாம் -வேத்தி தத்வத: ॥ 3 ॥
मनुष्याणां मध्ये सहस्रेषु अनेकेषु कश्चित् यतति प्रयत्नं करोति सिद्धये सिद्ध्यर्थम् । तेषां यततामपि सिद्धानाम् , सिद्धा एव हि ते ये मोक्षाय यतन्ते, तेषां कश्चित् एव हि मां वेत्ति तत्त्वतः यथावत् ॥ ३ ॥
ஆயிரக்கணக்கான அநேக மனிதர்களுள் ஒருவன் மோக்ஷம் அடைவதற்காக பிரயத்னம் செய்கிறான். எவர்கள் மோக்ஷத்திற்காக பிரயத்னம் செய்கிறார்களோ அவர்கள் சித்தர்கள், (என்றால் அடைந் தவர்களைஅடைந்தவர்கள் என்று கூறுவதின் கருத்து அடையப்போ கிறவர்களை அடைந்தவர்கள் என்று உபசாரமாகக் கூறுதல்). பிரயத் னம் செய்த சித்தர்களுள் எவனோ ஒருவன்தான் என்னை உள்ளபடி அறிகிறான்.
श्रोतारं प्ररोचनेन अभिमुखीकृत्याह —
கேட்பவனை உற்சாகப்படுத்தப்பட்டதால் கேட்பதிலேயே மனதை ஒருமுகப்படுத்தி கூறுகின்றார்-
भूमिरापोऽनलो वायुः खं मनो बुद्धिरेव च ।
अहङ्कार इतीयं मे भिन्ना प्रकृतिरष्टधा ॥ ४ ॥
பூமிராபோஅநலோ வாயு: கம் மநோ புத்திரேவ ச ।
அஹங்கார இதீயம் மே பின்னா ப்ரக்ருதிரஷ்டதா ॥ 4 ॥
भूमिः इति पृथिवीतन्मात्रमुच्यते, न स्थूला, ‘भिन्ना प्रकृतिरष्टधा’ इति वचनात् । तथा अबादयोऽपि तन्मात्राण्येव उच्यन्ते ।
(பின்னா பிரகிருதி அஷ்டதா) என்று கூறியதால் இங்கு பூமி என்றால் பிருத்வீ தன் மாத்திரை ஸ்தூல பிருதிவீ அல்ல. அவ்வாறே ஜலம் முதலிய மற்ற பூதங்களும் தன்மாத்திரைகள் என்று கூறப்படுகிறது.
आपः अनलः वायुः खम् । मनः इति मनसः कारणमहङ्कारो गृह्यते । बुद्धिः इति अहङ्कारकारणं महत्तत्त्वम् । अहङ्कारः इति अविद्यासंयुक्तमव्यक्तम् ।
ஜலம், அக்னி, வாயு, ஆகாயம் என்ற தன்மாத்திரைகள் (சூக்ஷ்ம பூதங்கள் மனம் என்பதை அஹங்காரம் என்று கிரஹிக்க வேண்டும். புத்தி என்பது அஹங்காரத்தின் காரணமாகிய மஹத் தத்துவம். அஹங்காரம் என்பது அவித்யையுடன் கூடிய அவ்யக்தம் எனப்படும் மூலப்பிரகிருதி.
यथा विषसंयुक्तमन्नं विषमित्युच्यते, एवमहङ्कारवासनावत् अव्यक्तं मूलकारणमहङ्कार इत्युच्यते, प्रवर्तकत्वात् अहङ्कारस्य । अहङ्कार एव हि सर्वस्य प्रवृत्तिबीजं दृष्टं लोके ।
எவ்வாறு விஷத்துடன் கூடிய அன்னத்தை விஷம் என்கிறோ மோ, அவ்வாறே அஹங்காரத்தின் வாசனைகளுடன் கூடிய அவ்யக் தத்தை அதாவது மூலப்பிரகிருதியையும் அஹங்காரம் என்ற பெயரால் குறிப்பிடுகிறோம். ஏனெனில் அஹங்காரமே எல்லாவற்றையும் பிரவிருத்திக்கச் செய்கிறது. சம்சாரத்தில் அஹங்காரமே எல்லா பிரவி ருத்திக்கும் காரணமாக (பீஜமாக) காணப்படுகிறது.
इतीयं यथोक्ता प्रकृतिः मे मम ऐश्वरी मायाशक्तिः अष्टधा भिन्ना भेदमागता ॥ ४ ॥
இவ்விதமாக முன்பு கூறப்பட்ட பிரகிருதியானது என்னுடைய ஈஸ்வரீ என்றால் மாயசக்தி எட்டுவிதமாக வேறுபாட்டை அடைந் துள்ளது. (விபாகம் செய்யப்பட்டுள்ளது.)
अपरेयमितस्त्वन्यां प्रकृतिं विद्धि मे पराम् ।
जीवभूतां महाबाहो ययेदं धार्यते जगत् ॥ ५ ॥
அபரேயமிதஸ்த்வன்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம் ।
ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் ॥ 5 ॥
अपरा न परा निकृष्टा अशुद्धा अनर्थकरी संसारबन्धनात्मिका इयम् ।
கூறப்பட்ட இந்த பிரகிருதியானது மேலானதன்று, மிகவும் கீழான து, அசுத்தமானது மேலும் அநர்த்தத்திற்கு காரணமாகிறது. இவ்வாறு சம்சார பந்தத்தை ஏற்படுத்துகிறது.
इतः अस्याः यथोक्तायाः तु अन्यां विशुद्धां प्रकृतिं मम आत्मभूतां विद्धि मे परां प्रकृष्टां जीवभूतां क्षेत्रज्ञलक्षणां प्राणधारणनिमित्तभूतां हे महाबाहो, यया प्रकृत्या इदं धार्यते जगत् अन्तः प्रविष्टया ॥ ५ ॥
ஹே! மஹா பாஹோ! முன்பு கூறப்பட்ட பிரகிருதியைக் காட்டி லும் வேறான பரிசுத்தமான பிரகிருதி என்னுடைய ஆத்மாவாக உள் ளது என்று அறி. ஜீவரூபம் என்றால் பிராணனை தரிப்பதற்கு நிமித்த மாயுள்ள க்ஷேத்ரக்ஞரூபமாயுள்ள பரா பிரகிருதி எல்லாவற்றின் உள் ளும் பிரவேசித்து அந்த பிரகிருதியினால் இந்த எல்லா ஜகத்தும் தாங் கப்பட்டுள்ளது. இந்த (மேலான) பரா பிரகிருதியை என்னுடைய ஆத்ம ரூப மேலான பரிசுத்தமான பிரகிருதி என்று அறி.
एतद्योनीनि भूतानि सर्वाणीत्युपधारय ।
अहं कृत्स्नस्य जगतः प्रभवः प्रलयस्तथा ॥ ६ ॥
ஏதத்யோநீனி பூதானி ஸர்வாணீத்யுபதாரய ।
அஹம் க்ருத்ஸ்னஸ்ய ஜகத: ப்ரபவ: ப்ரலயஸ்ததா ॥ 6 ॥
एतद्योनीनि एते परापरे क्षेत्रक्षेत्रज्ञलक्षणे प्रकृती योनिः येषां भूतानां तानि एतद्योनीनि, भूतानि सर्वाणि इति एवम् उपधारय जानीहि ।
இந்த க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞன் என்ற பரா, அபரா என்ற இந்த இரண்டு பிரகிருதிகளும் பூதங்களுக்கெல்லாம் பிறப்பிடமாக இருக்கிறது என்று அறி.
यस्मात् मम प्रकृती योनिः कारणं सर्वभूतानाम् अतः अहं कृत्स्नस्य समस्तस्य जगतः प्रभवः उत्पत्तिः प्रलयः विनाशः तथा, प्रकृतिद्वयद्वारेण अहं सर्वज्ञः ईश्वरः जगतः कारणमित्यर्थः ॥ ६ ॥
ஏனெனில் என்னுடைய இரண்டு பிரகிருதிகளும் எல்லா பூதங்க ளுக்கும் காரணம். ஆகையால் நான் ஜகத் எல்லாவற்றினுடைய உத்பத்தி, நாசமாயும் இருக்கிறேன். அவ்வாறே இந்த இரண்டு பிரகிருதி யின் மூலமாக நான் சர்வக்ஞன், ஜகத்திற்கு காரணமானவன் என்று பொருள்.
यतः तस्मात् —
எதனாலோ அதனால்-
मत्तः परतरं नान्यत्किञ्चिदस्ति धनञ्जय ।
मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव ॥ ७ ॥
மத்த: பரதரம் நான்யத்கிஞ்சிதஸ்தி தனஞ்ஜய ।
மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ ॥ 7 ॥
मत्तः परमेश्वरात् परतरम् अन्यत् कारणान्तरं किञ्चित् नास्ति न विद्यते, अहमेव जगत्कारणमित्यर्थः।
பரமேச்வரனாகிய என்னைக் காட்டிலும் மேலான காரணம் சிறி தும் இல்லை. நானே ஜகத்திற்கு காரணம் என்பது பொருள்.
हे धनञ्जय । यस्मादेवं तस्मात् मयि परमेश्वरे सर्वाणि भूतानि सर्वमिदं जगत् प्रोतं अनुस्यूतम् अनुगतम् अनुविद्धं ग्रथितमित्यर्थ । दीर्घतन्तुषु पटवत् सूत्रे च मणिगणा इव ॥ ७ ॥
ஹே தனஞ்ஜய! எதனால் இவ்வாறோ அதனால் எல்லாப் பிராணிகளும், இந்த ஜகத் முழுவதும் பரமேச்வரனாகிய என்னிடத் தில் நீண்ட நூல்களில் ஆடைகள் உள்ளது போலவும் நூலில் ரத்தினங்கள் கோர்க்கப்பட்டது போலவும் பிணைத்து, ஊடுருவி, கோர்க்கப்பட்டுள்ளது.
केन केन धर्मेण विशिष्टे त्वयि सर्वमिदं प्रोतमित्युच्यते —
எந்த, எந்த விசேஷதர்மங்களுடைய உங்களிடத்தில் இவை எல்லாம் கோர்க்கப்பட்டிருக்கிறது என்பதை குறித்துக் கூறுகிறார்-
रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशिसूर्ययोः ।
प्रणवः सर्ववेदेषु शब्दः खे पौरुषं नृषु ॥ ८ ॥
ரஸோ அஹமப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி சசிஸூர்யயோ: ।
ப்ரணவ: ஸர்வவேதேஷு சப்த: கே பௌருஷம் ந்ருஷு ॥ 8 ॥
रसः अहम् , अपां यः सारः स रसः, तस्मिन् रसभूते मयि आपः प्रोता इत्यर्थः। एवं सर्वत्र ।
நீரினுள் எது சாரமோ அது ரசம் (அவை) அந்த ரச பூதமான என்னிடத்தில் நீரானது கோர்க்கப்பட்டுள்ளது. என்பது பொருள். இவ்வாறு எல்லா இடங்களிலும் அறிந்து கொள்ள வேண்டும்.
यथा अहम् अप्सु रसः, एवं प्रभा अस्मि शशिसूर्ययोः । प्रणवः ओङ्कारः सर्ववेदेषु, तस्मिन् प्रणवभूते मयि सर्वे वेदाः प्रोताः ।
எவ்வாறு நான் நீரில் ரசமாய் (சுவையாய்) இருப்பது போல் சந்தி ரன், சூரியன் இவர்களிடம் உள்ள ஒளியாக இருக்கிறேன். எல்லா வேதங்களின் உள்ளும் ஓங்காரமாக இருக்கிறேன். அந்த ஓங்காரமாய் உள்ள என்னிடத்து எல்லா வேதங்களும் கோர்க்கப்பட்டிருக்கின்றன.
तथा खे आकाशे शब्दः सारभूतः, तस्मिन् मयि खं प्रोतम् ।
அவ்வாறே ஆகாசத்தில் சப்தமானது சாரபூதமாக இருக்கிறது. அந்த சப்தரூபமான என்னிடத்தில் ஆகாயம் கோர்க்கப்பட்டுள்ளது.
तथा पौरुषं पुरुषस्य भावः पौरुषं यतः पुम्बुद्धिः नृषु, तस्मिन् मयि पुरुषाः प्रोताः ॥ ८ ॥
அவ்வாறே மனிதர்களுள் மனிதத்தன்மை உள்ளவனாய் இருக்கிறேன். எந்த தன்மையை வைத்து மனிதனை மனிதன் என்று அறிகிறோமோ அந்த தன்மை நானே. அந்த மனிதத்தன்மை ரூபமான என்னிடத்தில் (பரமேச்வரனிடத்தில்) மனிதர்கள் கோர்க்கப் பட்டிருக்கிறார்கள்.
पुण्यो गन्धः पृथिव्यां च तेजश्चास्मि विभावसौ ।
जीवनं सर्वभूतेषु तपश्चास्मि तपस्विषु ॥ ९ ॥
புண்யோ கந்த: ப்ருதிவ்யாம் ச தேஜச்சாஸ்மி விபாவஸௌ ।
ஜீவனம் ஸர்வபூதேஷு தபச்சாஸ்மி தபஸ்விஷு ॥ 9 ॥
पुण्यः सुरभिः गन्धः पृथिव्यां च अहम् तस्मिन् मयि गन्धभूते पृथिवी प्रोता ।
பூமியில் (நிலத்தில்) நான் நறுமணமாக இருக்கிறேன். அந்த மணமாக உள்ள என்னிடத்தில் பூமி கோர்க்கப்பட்டுள்ளது.
पुण्यत्वं गन्धस्य स्वभावत एव पृथिव्यां दर्शितम् अबादिषु रसादेः पुण्यत्वोपलक्षणार्थम् ।
நீர் முதலியவைகளில் உள்ள சுவை முதலியவைகளின் (பவித்திர) நல்ல தன்மையை உணர்த்துவதற்காக மனத்தினுடைய ஸ்வபாவமான நல்ல தன்மையை நிலத்தில் எடுத்துக் காட்டப்பட்டது.
अपुण्यत्वं तु गन्धादीनाम् अविद्याधर्माद्यपेक्षं संसारिणां भूतविशेषसंसर्गनिमित्तं भवति ।
மனம், சுவை முதலியவைகளில் தீயத்தன்மை ஏற்படும். எவ்வாறெனில் சம்சாரத்தில் உள்ள மனிதர்களுக்கு (புருஷர் களுக்கு) அக்ஞானம், பாபம் முதலியவைகளை அபேக்ஷித்தும் (அனு சரித்தும்) அவ்வாறே பூத விசேஷங்களின் சேர்க்கை களினாலும் ஏற்படுகிறது.
तेजश्च दीप्तिश्च अस्मि विभावसौ अग्नौ । तथा जीवनं सर्वभूतेषु, येन जीवन्ति सर्वाणि भूतानि तत् जीवनम् । तपश्च अस्मि तपस्विषु, तस्मिन् तपसि मयि तपस्विनः प्रोताः ॥ ९ ॥
நான் அக்னியில் ஒளியாக இருக்கிறேன். அவ்வாறே எல்லாப்பி ராணிகளும் எதனால் ஜீவிக்கின்றனவோ அந்த ஜீவனமாகவும் நான் இருக்கின்றேன். தபஸ்விகளுள் நான் தபஸாக இருக்கிறேன். தபஸ்வரூபமான பரமாத்மாவாகிய என்னிடத்தில் தபஸ்விகள் கோர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
बीजं मां सर्वभूतानां विद्धि पार्थ सनातनम् ।
बुद्धिर्बुद्धिमतामस्मि तेजस्तेजस्विनामहम् ॥ १० ॥
பீஜம் மாம் ஸர்வபூதானாம் வித்தி பார்த்த ஸனாதனம் ।
புத்திர்புத்திமதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம் ॥ 10 ॥
बीजं प्ररोहकारणं मां विद्धि सर्वभूतानां हे पार्थ सनातनं चिरन्तनम् । किञ्च, बुद्धिः विवेकशक्तिः अन्तःकरणस्य बुद्धिमतां विवेकशक्तिमताम् अस्मि, तेजः प्रागल्भ्यं तद्वतां तेजस्विनाम् अहम् ॥ १० ॥
பீஜம்- (வித்து) என்றால் முளைப்பதற்குக் காரணமாயிருக்கிறது. ஹே! பார்த்தா! என்னை எல்லா பூதங்களுக்கும் சாஸ்வதமான பீஜமாக என்றால் மூலகாரணமாக அறி. புத்திசாலிகளுள் புத்திசாலியாக இருக்கிறேன் என்றால் விவேக சக்தியாக இருக்கிறேன் என்று பொருள். தேஜஸ்விகளுள் என்றால் வீரம் நிறைந்தவர்களுள் வீரமாக இருக்கிறேன்.
बलं बलवतां चाहं कामरागविवर्जितम् ।
धर्माविरुद्धो भूतेषु कामोऽस्मि भरतर्षभ ॥ ११ ॥
பலம் பலவதாம் சாஹம் காமராகவிவர்ஜிதம் ।
தர்மாவிருத்தோ பூதேஷு காமோ அஸ்மி பரதர்ஷப ॥ 11 ॥
बलं सामर्थ्यम् ओजो बलवताम् अहम् । तच्च बलं कामरागविवर्जितम् ।
சாமர்த்தியம் உள்ளவர்களுள் சாமர்த்தியமாக இருக்கிறேன் அந்த சாமர்த்தியம் காமமும், ராகமுமற்றது.
कामश्च रागश्च कामरागौ — कामः तृष्णा असंनिकृष्टेषु विषयेषु, रागो रञ्जना प्राप्तेषु विषयेषु — ताभ्यां कामरागाभ्यां विवर्जितं देहादिधारणमात्रार्थं बलं सत्त्वमहमस्मि ; न तु यत्संसारिणां तृष्णारागकारणम् ।
கிடைக்காத விஷயங்களில் உள்ள ஆசை காமமாகும். கிடைத்த விஷயங்களில் உள்ள ருசி ராகமாகும். இவை இரண்டும் அற்றுதேஹாதிகளை தாங்குவதற்கு மாத்திரம் உள்ள சாமர்த்தியமாக இருக் கிறேன். ஆனால் சம்சாரிகளுடைய ஆசைக்கும், பற்றுக்கும் (ராகத் திற்கும்) காரணமான சாமர்த்தியம் எதுவோ அது அல்ல.
किञ्च — धर्माविरुद्धः धर्मेण शास्त्रार्थेन अविरुद्धो यः प्राणिषु भूतेषु कामः, यथा देहधारणमात्राद्यर्थः अशनपानादिविषयः, स कामः अस्मि हे भरतर्षभ ॥ ११ ॥
ஹே பரதர்ஷப ! மேலும் பிராணிகளிடத்து உள்ள தர்மத்திற்கு விரோதமில்லாத சாஸ்திரத்திற்கு அனுகூலமான காமம் (ஆசை) எதுவோ அது தேஹத்தை தாங்குவதற்காக உள்ள சாப்பிடுதல், நீர் குடித்தல் முதலிய விஷயங்களில் உள்ள காமமாகும். அந்த காமமாக நான் இருக்கிறேன்.
किञ्च —
மேலும்
ये चैव सात्त्विका भावा राजसास्तमसाश्च ये ।
मत्त एवेति तान्विद्धि न त्वहं तेषु ते मयि ॥ १२ ॥
யே சைவ சாத்விகா பாவா ராஜஸாஸ்தாமஸாச்ச யே ।
மத்த ஏவேதி தான்வித்தி ந த்வஹம் தேஷு தே மயி ॥ 12 ॥
ये चैव सात्त्विकाः सत्त्वनिर्वृत्ताः भावाः पदार्थाः, राजसाः रजोनिर्वृत्ताः, तामसाः तमोनिर्वृत्ताश्च, ये केचित् प्राणिनां स्वकर्मवशात् जायन्ते भावाः, तान् मत्त एव जायमानान् इति एवं विद्धि सर्वान् समस्तानेव ।
எவை சாத்வீகமோ அவை சத்வகுணத்தினாலுண்டான பாவபதார்த்தங்கள். ராஜஸம் என்பது ரஜோகுணத்தினால் ஆனது. தாமசம் என்பது தமோகுணத்தினாலானது. இந்த எல்லாப் பிராணிகளும் தன்னுடைய கர்மானுசாரத்தின்படி எந்த எந்த பாவபதார்த்தமாக உண்டாகின்றவோ அவைகள் எல்லாம் என்னிடத் திலிருந்தே உண்டாகின்றன என்று இவ்வாறு அறிந்துகொள்.
यद्यपि ते मत्तः जायन्ते, तथापि न तु अहं तेषु तदधीनः तद्वशः, यथा संसारिणः । ते पुनः मयि मद्वशाः मदधीनाः ॥ १२ ॥
அவைகள் என்னிடத்திலிருந்து உண்டானாலும் சம்சாரிகளைப் போல் நான் அவைகளின் வசமாவதில்லை. ஆனால் அவைகள் எனது வசத்தில் இருக்கின்றன.
एवंभूतमपि परमेश्वरं नित्यशुद्धबुद्धमुक्तस्वभावं सर्वभूतात्मानं निर्गुणं संसारदोषबीजप्रदाहकारणं मां नाभिजानाति जगत् इति अनुक्रोशं दर्शयति भगवान् । तच्च किंनिमित्तं जगतः अज्ञानमित्युच्यते —
நித்ய சுத்த புத்த முக்த ஸ்வரூபமாயும், எல்லா பூதங்களுக்கும் ஆத்மாவாயும், நிர்குணமாயும், சம்சார ரூப தோஷத்தின் காரணத்தை நிர்மூலமாக்குவதற்கு காரணமாய் உள்ள பரமேச்வரனாகிய என்னை இந்த ஜகத்தானது அறிகிறதில்லை. ஆகையால் ஸ்ரீபகவான் இரக்கப்பட்டு உபதேசிக்கிறார். எதனால் அந்த ஜகத்திற்கு அக்ஞானம் ஏற்பட்டது ? என்று-
त्रिभिर्गुणमयैर्भावैरेभिः सर्वमिदं जगत् ।
मोहितं नाभिजानाति मामेभ्यः परमव्ययम् ॥ १३ ॥
த்ரிபிர்குணமயைர்பாவைரேபி: ஸர்வமிதம் ஜகத் ।
மோஹிதம் நாபிஜாநாதி மாமேப்ய: பரமவ்யயம் ॥ 13 ॥
त्रिभिः गुणमयैः गुणविकारैः रागद्वेषमोहादिप्रकारैः भावैः पदार्थैः एभिः यथोक्तैः सर्वम् इदं प्राणिजातं जगत् मोहितम् अविवेकितामापादितं सत् न अभिजानाति माम् , एभ्यः यथोक्तेभ्यः गुणेभ्यः परं व्यतिरिक्तं विलक्षणं च अव्ययं व्ययरहितं जन्मादिसर्वभावविकारवर्जितम् इत्यर्थः ॥ १३ ॥
சத்வ ரஜஸ் தமஸ் என்ற முக்குணங்களின் விகாரங்களான ராக, துவேஷ, மோஹ முதலிய பாவ பதார்த்தங்களில் இந்த ஜகத்தில் உள்ள பிராணி வர்க்கங்கள் மோஹிக்கப்பட்டு விவேகமற்று இருக்கின்றன. ஆகையால் இவ்வாறு கூறப்பட்ட குணங்களைக் காட்டிலும் மேலானவனாகவும் வேறானவனாகவும் நாசமற்ற வனாகவும் ஜன்மாதி பாவவிகாரமற்றவனாகவும் உள்ள என்னை அவர்கள் அறிவதில்லை என்பது பொருள்.
कथं पुनः दैवीम् एतां त्रिगुणात्मिकां वैष्णवीं मायामतिक्रामति इत्युच्यते —
மேலும் ஈஸ்வரனாகிய எனக்கு சொந்தமானதும், முக்குணாத் மகமான வைஷ்ணவீ எனப்படும் மாயையை எவ்வாறு மனிதர்கள் கடப்பது என்பதைக் கூறுகிறார்.
दैवी ह्येषा गुणमयी मम माया दुरत्यया ।
मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते ॥ १४ ॥
தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா ।
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே ॥ 14 ॥
दैवी देवस्य मम ईश्वरस्य विष्णोः स्वभावभूता हि यस्मात् एषा यथोक्ता गुणमयी मम माया दुरत्यया दुःखेन अत्ययः अतिक्रमणं यस्याः सा दुरत्यया । तत्र एवं सति सर्वधर्मान् परित्यज्य मामेव मायाविनं स्वात्मभूतं सर्वात्मना ये प्रपद्यन्ते ते मायाम् एतां सर्वभूतमोहिनीं तरन्ति अतिक्रामन्ति ; ते संसारबन्धनात् मुच्यन्ते इत्यर्थः ॥ १४ ॥
வியாபக ஈஸ்வரனாகிய எனக்கு சொந்தமான என்னுடைய முக் குணாத்மகமான மாயையை கடப்பது மிகக்கடினமானது. இவ்வாறு இருப்பதால் எல்லா தர்மங்களையும் (கர்மங்களையும்) துறந்து மாயையின் தலைவனாயும், எல்லா பிராணிகளுக்கும் ஆத்மாவாய் உள்ள என்னையே எவ்வகையிலாவது அடைகிறார்களோ அவர்க ளுடைய எல்லா பிராணி ஜாதங்களையும் மோஹிக்கச் செய்யும் மாயையை கடந்து நிற்கிறார்கள். சம்சார பந்தத்திருந்து விடுபடுகிறார் கள் என்பது பொருள்.
यदि त्वां प्रपन्नाः मायामेतां तरन्ति, कस्मात् त्वामेव सर्वे न प्रपद्यन्ते इत्युच्यते —
உங்களை சரணமடைந்தவர்கள் மாயையை கடந்து நிற்கிறார்கள். இவ்வாறு இருக்கும்பொழுது உங்களை ஏன் எல்லோரும் சரணடைவதில்லை? என்றால் கூறுகிறார்-
न मां दुष्कृतिनो मूढाः प्रपद्यन्ते नराधमाः ।
माययापहृतज्ञाना आसुरं भावमाश्रिताः ॥ १५ ॥
ந மாம் துஷ்க்ருதிநோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா: ।
மாயயாபஹ்ருதக்ஞானா ஆஸுரம் பாவமாச்ரிதா: ॥ 15 ॥
न मां परमेश्वरं नारायणं दुष्कृतिनः पापकारिणः मूढाः प्रपद्यन्ते नराधमाः नराणां मध्ये अधमाः निकृष्टाः । ते च मायया अपहृतज्ञानाः संमुषितज्ञानाः आसुरं भावं हिंसानृतादिलक्षणम् आश्रिताः ॥ १५ ॥
பாபகர்மங்களை செய்த மூடர்கள் பரமேச்வரனாகிய என்னை அடையமாட்டார்கள். அவர்கள் மனிதர்களுள் மிகவும் கீழானவர்கள். எவர்களுடைய ஞானம் மாயையினால் அபஹரிக்கப்பட்டதோ அவர்கள் ஹிம்சை, பொய் கூறுதல் முதலிய அசுர சுவபாவங்களை ஆச்ரியத்த வர்கள். அவர்கள் பரமேச்வரனாகிய என்னை சரணடைவதில்லை.
ये पुनर्नरोत्तमाः पुण्यकर्माणः —
மற்றும் எவர்கள் புண்யகர்மாக்களை செய்தார்களோ அவர்கள் மனிதருள் மிகவும் மேலானவர்-
चतुर्विधा भजन्ते मां जनाः सुकृतिनोऽर्जुन ।
आर्तो जिज्ञासुरर्थार्थी ज्ञानी च भरतर्षभ ॥ १६ ॥
சதுர்விதா பஜந்தே மாம் ஜனா: ஸுக்ருதிநோஅர்ஜுன ।
ஆர்தோ ஜிக்ஞாஸுரர்தார்தீ க்ஞானீ ச பரதர்ஷப ॥ 16 ॥
चतुर्विधाः चतुःप्रकाराः भजन्ते सेवंते मां जनाः सुकृतिनः पुण्यकर्माणः हे अर्जुन । आर्तः आर्तिपरिगृहीतः तस्करव्याघ्ररोगादिना अभिभूतः आपन्नः, जिज्ञासुः भगवत्तत्त्वं ज्ञातुमिच्छति यः, अर्थार्थी धनकामः, ज्ञानी विष्णोः तत्त्वविच्च हे भरतर्षभ ॥ १६ ॥
ஹே! அர்ஜுனா! பரதரிஷப! ஆர்த்தி என்றால் துன்பத்தை அடைந்தவன். திருடன், புலி முதலியவைகளால் ஆபத்தை அடைந் தவன். எவன் பகவானுடைய தத்துவத்தை அறிய விரும்புபவன் ஜிக்ஞாசு. தனத்தில் (செல்வத்தில்) இச்சை உடையவன் அர்த்தார்த்தீ. விஷ்ணுவினுடைய தத்துவத்தை அறிந்தவன் ஞானி. இவ்வாறாக புண்யகர்மாக்களைச் செய்யும் நான்கு விதமான பக்தர்கள் என்னையே தொழுகிறார்கள்.
तेषां ज्ञानी नित्ययुक्त एकभक्तिर्विशिष्यते ।
प्रियो हि ज्ञानिनोऽत्यर्थमहं स च मम प्रियः ॥ १७ ॥
தேஷாம் க்ஞானீ நித்யயுக்த ஏகபக்திர்விசிஷ்யதே ।
ப்ரியோ ஹி க்ஞானினோஅத்யர்த்தமஹம் ஸ ச மம ப்ரிய: ॥ 17 ॥
तेषां चतुर्णां मध्ये ज्ञानी तत्त्ववित् तत्ववित्त्वात् नित्ययुक्तः भवति एकभक्तिश्च, अन्यस्य भजनीयस्य अदर्शनात् ; अतः स एकभक्तिः विशिष्यते, विशेषम् आधिक्यम् आपद्यते, अतिरिच्यते इत्यर्थः ।
இந்த நான்கு வகை பக்தர்களுள் தத்துவத்தை அறிந்த ஞானி தத்துவத்தை அறிந்தவராய் இருக்கும் காரணத்தினால் எப்பொழுதும் என்னிடத்திலேயே நிலைபெற்றிருப்பவராய் அவர்களுடைய திருஷ்ட்டியில் மற்றொரு தொழுவதற்குரிய வஸ்து இல்லை என்ப தால் ஒன்றிலேயே (ஆத்மாவிலேயே) பக்தி உடையவனாய் இருக்கி றான். ஆகையால் அந்த அனன்யபக்தன் (ஞானி) (மற்ற மூவர்களை அபேக்ஷி த்து) மேலானவனாகிறான் என்பது பொருள்.
प्रियो हि यस्मात् अहम् आत्मा ज्ञानिनः, अतः तस्य अहम् अत्यर्थं प्रियः ।
எதனால் நான் ஞானிகளினுடைய ஆத்மாவாய் இருக்கிறேனோ அதனால் அவனுக்கு நான் மிகவும் பிரியமானவனாக இருக்கிறேன்.
प्रसिद्धं हि लोके ‘आत्मा प्रियो भवति’ इति । तस्मात् ज्ञानिनः आत्मत्वात् वासुदेवः प्रियो भवतीत्यर्थः ।
உலகத்தில் ஆத்மாவே பிரியமாய் இருக்கிறது என்பது பிரசித்தம். ஆகையால் வாசுதேவன் ஞானிகளுடைய ஆத்மாவாதலால் பிரிய மாய் இருக்கிறான் என்பது பொருள்.
स च ज्ञानी मम वासुदेवस्य आत्मैवेति मम अत्यर्थं प्रियः ॥ १७ ॥
அந்த ஞானி வாசுதேவனாகிய என்னுடைய ஆத்மாவாக இருப் பதால் எனக்கு மிகவும் பிரியமானவன்.
न तर्हि आर्तादयः त्रयः वासुदेवस्य प्रियाः ? न ; किं तर्हि ? —
அவ்வாறாகில் ஆர்த்தி முதலிய மூன்று பக்தர்களும் வாசுதேவ னுக்குரிய பிரியம் இல்லாதவர்களா? எனில், அவ்வாறு அல்ல. மற்று எவ்வாறெனில்-
उदाराः सर्व एवैते ज्ञानी त्वात्मैव मे मतम् ।
आस्थितः स हि युक्तात्मा मामेवानुत्तमां गतिम् ॥ १८ ॥
உதாரா: ஸர்வ ஏவைதே க்ஞானீ த்வாத்மைவ மே மதம் ।
ஆஸ்தித: ஸ ஹியுக்தாத்மா மாமேவானுத்தமாம் கதிம் ॥ 18 ॥
उदाराः उत्कृष्टाः सर्व एव एते, त्रयोऽपि मम प्रिया एवेत्यर्थः । न हि कश्चित् मद्भक्तः मम वासुदेवस्य अप्रियः भवति । ज्ञानी तु अत्यर्थं प्रियो भवतीति विशेषः ।
அந்த மூன்று வகை பக்தர்களும் உயர்ந்தவர்களே, எனக்கு பிரிய மானவர்களே என்பது பொருள். எந்த ஒரு பக்தனும் வாசுதேவனாகிய எனக்கு பிரியமற்றவனாக ஆகமாட்டான். ஆனால் ஞானி எனக்கு அத்யந்த பிரியனாகிறான். இதுவே ஞானியின் விசேஷம்.
तत् कस्मात् इत्यत आह —
அது எதனால் என்று கூறுகிறார்-
ज्ञानी तु आत्मैव न अन्यो मत्तः इति मे मम मतं निश्चयः । आस्थितः आरोढुं प्रवृत्तः सः ज्ञानी हि यस्मात् ‘अहमेव भगवान् वासुदेवः न अन्योऽस्मि’ इत्येवं युक्तात्मा समाहितचित्तः सन् मामेव परं ब्रह्म गन्तव्यम् अनुत्तमां गन्तुं प्रवृत्त इत्यर्थः ॥ १८ ॥
ஞானியோ ஆத்மாவேதான். என்னைக் காட்டிலும் வேறானவன் அல்லன், என்பது எனது நிச்சயம். ஏனெனில் ஆரூடன் ஆவதற்கு பிரயத்தினம் செய்யும் ஞானி நான் பகவான் வாசுதேவனாக இருக்கிறேன், என்னைத் தவிர வேறு இரண்டாவது இல்லை என்று சமாஹித சித்தத்தை உடையவனாய் இருந்து கொண்டு மிக உத்தம மான கதியாகவும் பரப்பிரஹ்மமாகவும் உள்ள என்னையே அடைய வேண்டும் என்று பிரயத்தினம் செய்யத் தலைப்பட்டான் என்பது பொருள்.
ज्ञानी पुनरपि स्तूयते —
மீண்டும் ஞானியைப் புகழ்கிறார்-
बहूनां जन्मनामन्ते ज्ञानवान्मां प्रपद्यते ।
वासुदेवः सर्वमिति स महात्मा सुदुर्लभः ॥ १९ ॥
பஹூனாம் ஜன்மனாமந்தே க்ஞானவான்மாம் ப்ரபத்யதே ।
வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப: ॥ 19 ॥
बहूनां जन्मनां ज्ञानार्थसंस्काराश्रयाणाम् अन्ते समाप्तौ ज्ञानवान् प्राप्तपरिपाकज्ञानः मां वासुदेवं प्रत्यगात्मानं प्रत्यक्षतः प्रपद्यते । कथम् ? वासुदेवः सर्वम् इति ।
ஞானத்திற்கான நல்ல வாசனைகளை சம்பாதிப்பதற்கு இடமாய் உள்ள பலஜன்மங்களின் முடிவில் பரிபக்குவமடைந்த ஞானி பிரத்யக் ஆத்மாவாகிய வாசுதேவனாகிய என்னை பிரத்யக்ஷமாக அடைகின் றான். எவ்வாறெனில் எல்லாம் வாசுதேவனே என்று.
यः एवं सर्वात्मानं मां नारायणं प्रतिपद्यते, सः महात्मा ; न तत्समः अन्यः अस्ति, अधिको वा । अतः सुदुर्लभः, ‘मनुष्याणां सहस्रेषु’ (भ. गी. ७ । ३) इति हि उक्तम् ॥ १९ ॥
எவர்கள் இவ்வாறு பரமாத்மாவாகிய என்னை அடைகிறார் களோ அவர்கள் மஹாத்மாக்கள். அவருக்கு சமமாகவோ, அதிகமா கவோ ஒருவரும் இல்லை. ஆகையால் ஆயிரக்கணக்கான மனிதர்களுள் இவ்வாறான ஒருவர் கிடைப்பது மிகவும் அரிது என்று கூறப்பட்டது.
आत्मैव सर्वो वासुदेव इत्येवमप्रतिपत्तौ कारणमुच्यते —
இந்த எல்லா ஜகத்தும் ஆத்மஸ்வரூபமான வாசுதேவனாகவே இருக்கிறது என்ற ஞானம் உண்டாகாதற்கான காரணத்தைக் கூறுகிறார்-
कामैस्तैस्तैर्हृतज्ञानाः प्रपद्यन्तेऽन्यदेवताः ।
तं तं नियममास्थाय प्रकृत्या नियताः स्वया ॥ २० ॥
காமைச்தைஸ்தைர்ஹ்ருதக்ஞானா: ப்ரபத்யந்தே அன்யதேவதா: ।
தம் தம் நியமமாஸ்தாய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா ॥ 20 ॥
कामैः तैस्तैः पुत्रपशुस्वर्गादिविषयैः हृतज्ञानाः अपहृतविवेकविज्ञानाः प्रपद्यन्ते अन्यदेवताः प्राप्नुवन्ति वासुदेवात् आत्मनः अन्याः देवताः ; तं तं नियमं देवताराधने प्रसिद्धो यो यो नियमः तं तम् आस्थाय आश्रित्य प्रकृत्या स्वभावेन जन्मान्तरार्जितसंस्कारविशेषेण नियताः नियमिताः स्वया आत्मीयया ॥ २० ॥
புத்திரன், பசு, ஸ்வர்க்கம் முதலிய விஷயங்களில் உள்ள ஆசையி னால் (காமத்தினால்) விவேக ஞானத்தை இழந்தவர்கள் தங்களுடைய ஜன்மாந்தரங்களில் சேகரித்த சம்ஸ்கார விசேஷத்தால் (ஸ்வபாவத்தால்)பிரேரிக்கப்பட்டு மற்ற தேவதைகளை என்றால் வாசுதேவனாகிய என்னை விட வேறான தேவதைகளை ஆராதனை செய்வதற்கான எந்த எந்த நியமம் உள்ளதோ அதை அவலம்பித்து தொழுகிறார்கள். (அவர் களை சரணம் அடைகிறார்கள்)
तेषां च कामीनाम् —
அந்த காமபுருஷர்களுள்-
यो यो यां यां तनुं भक्तः श्रद्धयार्चितुमिच्छति ।
तस्य तस्याचलां श्रद्धां तामेव विदधाम्यहम् ॥ २१ ॥
யோ யோ யாம் யாம் தனும் பக்த: ச்ரத்தயார்சிதுமிச்சதி ।
தஸ்ய தஸ்யாசலாம் ச்ரத்தாம் தாமேவ விததாம்யஹம் ॥ 21 ॥
यः यः कामी यां यां देवतातनुं श्रद्धया संयुक्तः भक्तश्च सन् अर्चितुं पूजयितुम् इच्छति, तस्य तस्य कामिनः अचलां स्थिरां श्रद्धां तामेव विदधामि स्थिरीकरोमि ॥ २१ ॥
எந்த எந்த காமியானவன் எந்த எந்த தேவதா மூர்த்தியை சிரத் தையுடனும், பக்தியுடனும் பூஜிக்க விரும்புகிறானோ அந்த அந்த காமியினுடைய சிரத்தையை அசைக்க முடியாதவாறு ஸ்திரமாக நிலைக்கச் செய்வேன்.
ययैव पूर्वं प्रवृत्तः स्वभावतो यः यां देवतातनुं श्रद्धया अर्चितुम् इच्छति —
எவன் இவ்வாறு முன்பு ஸ்வபாவமாகவே பிரவிர்த்தித்தானோ அவன் சிரத்தையுடன் அந்த தேவதா ஸ்வரூபத்தை பூஜை செய்ய விரும்புகிறான் என்று-
स तया श्रद्धया युक्तस्तस्या राधनमीहते ।
लभते च ततः कामान्मयैव विहितान्हि तान् ॥ २२ ॥
ஸ தயா ச்ரத்தயா யுக்தஸ்தஸ்யா ராதனமீஹதே ।
லபதே ச தத: காமான்மயைவ விஹிதான்ஹி தான் ॥ 22 ॥
स तया मद्विहितया श्रद्धया युक्तः सन् तस्याः देवतातन्वाः राधनम् आराधनम् ईहते चेष्टते ।
என்னால் ஸ்திரம் செய்யப்பட்ட சிரத்தையுடன் அவன் அந்த தேவதையின் ஸ்வரூபத்திற்கு பூஜை (ஆராதனை) செய்கிறான்.
लभते च ततः तस्याः आराधितायाः देवतातन्वाः कामान् ईप्सितान् मयैव परमेश्वरेण सर्वज्ञेन कर्मफलविभागज्ञतया विहितान् निर्मितान् तान् , हि यस्मात् ते भगवता विहिताः कामाः तस्मात् तान् अवश्यं लभते इत्यर्थः ।
அந்த ஆராதிக்கப்பட்ட மூர்த்தியிடம் இருந்து, கர்ம பல விபா கத்தை அறிந்த சர்வக்ஞனும் ஈஸ்வரனுமாகிய என்னால் நியமிக்கப் பட்ட இஷ்ட்ட போகங்களை பெறுகிறான். அந்த போகங்கள் பரமேச் வரனால் நியமிக்கப்பட்டவனவாதலால் அவற்றை அவசியம் அடை கிறான் என்பது பொருள்.
‘हितान्’ इति पदच्छेदे हितत्वं कामानामुपचरितं कल्प्यम् ; न हि कामा हिताः कस्यचित् ॥ २२ ॥
இங்கு (ஹிதான்) என்று பதச்சேதம் செய்தால் போகங்கள் ஹிதமானது என்று பொருள் ஏற்படும். ஆகையால் இங்கு ஹிதத்துவம் உபசாரமாக கூறப்பட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும். ஏன்எனில் உண்மையில் போகங்களுக்கு ஒருபோதும் ஹிதத்தன்மை கிடையாது.
यस्मात् अन्तवत्साधनव्यापारा अविवेकिनः कामिनश्च ते, अतः —
ஏன்எனில் விவேகமற்ற காமபுருஷர்கள் விநாசத்துடன் கூடிய பலனை உடைய சாதனத்தைக் கடைபிடிக்கிறார்கள். ஆகையால்-
अन्तवत्तु फलं तेषां तद्भवत्यल्पमेधसाम् ।
देवान्देवयजो यान्ति मद्भक्ता यान्ति मामपि ॥ २३ ॥
அந்தவத்து பலம் தேஷாம் தத்பவத்யல்பமேதஸாம் ।
தேவாந்தேவயஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாமபி ॥ 23 ॥
अन्तवत् विनाशि तु फलं तेषां तत् भवति अल्पमेधसां अल्पप्रज्ञानाम् । देवान्देवयजो यान्ति देवान् यजन्त इति देवयजः, ते देवान् यान्ति, मद्भक्ता यान्ति मामपि ।
அந்த அல்ப புத்தி உடையவர்களுடைய பலம் நாசமுடைய தாகிறது. வேறு தேவதைகளை பூஜை செய்பவர்கள் அந்த அந்த தேவதைகளை அடைகிறார்கள். என்னுடைய பக்தர்கள் என்னையே அடைகிறார்கள்.
एवं समाने अपि आयासे मामेव न प्रपद्यन्ते अनन्तफलाय, अहो खलु कष्टं वर्तन्ते, इत्यनुक्रोशं दर्शयति भगवान् ॥ २३ ॥
இவ்வாறு பூஜை செய்வதில் சமமான ஆயாசம் இருந்தாலும், (வேறு தேவதைகளை பூஜை செய்பவர்கள்) நாசமடையாத பலத்தை அடைவதற்கு என்னை சரணமடைவதில்லை. இவ்வாறாக பகவான் இரக்கத்தைக் காட்டுகிறார்.
किंनिमित्तं मामेव न प्रपद्यन्ते इत्युच्यते —
எதன் பொருட்டு அவர்கள் என்னையே சரணம் அடைவதில் லை? என்பதைக் கூறுகிறார்
अव्यक्तं व्यक्तिमापन्नं मन्यन्ते मामबुद्धयः ।
परं भावमजानन्तो ममाव्ययमनुत्तमम् ॥ २४ ॥
அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மன்யந்தே மாமபுத்தய: ।
பரம் பாவமஜானந்தோ மமாவ்யயமனுத்தமம் ॥ 24 ॥
अव्यक्तम् अप्रकाशं व्यक्तिम् आपन्नं प्रकाशं गतम् इदानीं मन्यन्ते मां नित्यप्रसिद्धमीश्वरमपि सन्तम् अबुद्धयः अविवेकिनः परं भावं परमात्मस्वरूपम् अजानन्तः अविवेकिनः मम अव्ययं व्ययरहितम् अनुत्तमं निरतिशयं मदीयं भावमजानन्तः मन्यन्ते इत्यर्थः ॥ २४ ॥
எப்பொழுதும் பிரசித்தமாக உள்ள என்னை அவிவேகிகள் என் னுடைய நிர்விகார, நிரதிசய பரமாத்ம ஸ்வரூபத்தை அறியாதவர்கள், இந்திரியங்களால் அறியப்படாமல் இருந்த நான் இப்பொழுது அறியப் பட்டவனாய் (கிருஷ்ணனாய்) இருக்கிறேன் என்று நினைக்கிறார்கள்.
तदज्ञानं किंनिमित्तमित्युच्यते —
அவர்களுடைய அக்ஞானம் எந்த காரணத்தால் உண்டானது என்று கூறுகிறார்-
नाहं प्रकाशः सर्वस्य योगमायासमावृतः ।
मूढोऽयं नाभिजानाति लोको मामजमव्ययम् ॥ २५ ॥
நாஹம் ப்ரகாச: ஸர்வஸ்ய யோகமாயாஸமாவ்ருத: ।
மூடோஅயம் நாபிஜானாதி லோகோ மாமஜமவ்யயம் ॥ 25 ॥
न अहं प्रकाशः सर्वस्य लोकस्य, केषाञ्चिदेव मद्भक्तानां प्रकाशः अहमित्यभिप्रायः । योगमायासमावृतः योगः गुणानां युक्तिः घटनं सैव माया योगमाया, तया योगमायया समावृतः, सञ्छन्नः इत्यर्थः । अत एव मूढो लोकः अयं न अभिजानाति माम् अजम् अव्ययम् ॥
எல்லா உலகத்தாருக்கும் வெளிப்படையாக காணப்படுவதில் லை. நான் என்பக்தர்களாகிய சிலருக்கு மட்டுமே வெளிப்படையாக காணப்படுகிறேன் என்பது அபிப்பிராயம். மூன்று குணங்களின் சேர்க்கையே மாயை என்ற யோகமாயா. அந்த யோகமாயையினால் மறைக்கப்பட்ட மூடர்கள் பிறப்பற்றவன், நாசமற்றவனாகிய என்னை அறிவதில்லை.
यया योगमायया समावृतं मां लोकः नाभिजानाति, नासौ योगमाया मदीया सती मम ईश्वरस्य मायाविनो ज्ञानं प्रतिबध्नाति, यथा अन्यस्यापि मायाविनः मायाज्ञानं तद्वत् । यतः एवम् , अतः —
எந்த யோகமாயையினால் மறைக்கப்பட்ட என்னை உலகத்தோர் அறியமாட்டார்களோ அந்த யோகமாயை ஈஸ்வரனாகிய என்னுடை யதாய் இருப்பதால் என்னைப் பந்தப்படுத்துவதில்லை. எவ்வாறு உலகில் அன்யமாயாவியினுடைய (மாயாஜாலக்காரனுடைய) மாயையானது அவனுடைய ஞானத்தைத் தடுப்பதில்லையோ அவ் வாறு என்க. இவ்வாறிருத்தலால்-
वेदाहं समतीतानि वर्तमानानि चार्जुन ।
भविष्याणि च भूतानि मां तु वेद न कश्चन ॥ २६ ॥
வேதாஹம் ஸமதீதானி வர்தமானானி சார்ஜுன ।
பவிஷ்யாணி ச பூதானி மாம் து வேத ந கச்சன ॥ 26 ॥
अहं तु वेद जाने समतीतानि समतिक्रान्तानि भूतानि, वर्तमानानि च अर्जुन, भविष्याणि च भूतानि वेद अहम् । मां तु वेद न कश्चन मद्भक्तं मच्छरणम् एकं मुक्त्वा ; मत्तत्त्ववेदनाभावादेव न मां भजते ॥ २६ ॥
ஹே! அர்ஜுனா! (பிராணிகளின்) முன்பு சென்ற அடைந்தவைக ளையும், இப்பொழுது உள்ளவைகளையும் இனி வரப்போகிறவைக ளையும் ஆகிய எல்லா பிராணிகளையும் நான் அறிகிறேன். ஆனால் என் பக்தர்களைத் தவிர மற்றவர்கள் ஒருவரும் என்னை அறியார். ஏனெனில் என்னுடைய தத்துவத்தை அறியாததினால் என்னை அவர்கள் சரணடைவதில்லை.
केन पुनः मत्तत्त्ववेदनप्रतिबन्धेन प्रतिबद्धानि सन्ति जायमानानि सर्वभूतानि मां न विदन्ति इत्यपेक्षायामिदमाह —
தங்களுடைய தத்துவத்தை அறிவதில் என்ன பிரதிபந்தமுள் ளது? ஜன்மத்தை உடைய எல்லா பிராணிகளும் எதனால் மோஹிக் கப்பட்டு உங்களை அறிய முற்படுவதில்லை? என்று விசாரிக்கும் இடத்து இதைக் கூறுகிறார் -
इच्छाद्वेषसमुत्थेन द्वन्द्वमोहेन भारत ।
सर्वभूतानि संमोहं सर्गे यान्ति परन्तप ॥ २७ ॥
இச்சாத்வேஷஸமுத்தேன த்வந்த்வமோஹேந் பார்த் ।
ஸர்வபூதானி ஸம்மோஹம் ஸர்கே யாந்தி பரந்தப ॥ 27 ॥
इच्छाद्वेषसमुत्थेन इच्छा च द्वेषश्च इच्छाद्वेषौ ताभ्यां समुत्तिष्ठतीति इच्छाद्वेषसमुत्थः तेन इच्छाद्वेषसमुत्थेन ।
விருப்பு வெறுப்பு இவ்விரண்டும் ஏற்படுகிறது.
केनेति विशेषापेक्षायामिदमाह —
எந்த வி சேஷத்தால் என்பதைக் கூறுகிறார்-
द्वन्द्वमोहेन द्वन्द्वनिमित्तः मोहः द्वन्द्वमोहः तेन । तावेव इच्छाद्वेषौ शीतोष्णवत् परस्परविरुद्धौ सुखदुःखतद्धेतुविषयौ यथाकालं सर्वभूतैः सम्बध्यमानौ द्वन्द्वशब्देन अभिधीयेते । यत्र यदा इच्छाद्वेषौ सुखदुःखतद्धेतुसम्प्राप्त्या लब्धात्मकौ भवतः, तदा तौ सर्वभूतानां प्रज्ञायाः स्ववशापादनद्वारेण परमार्थात्मतत्त्वविषयज्ञानोत्पत्तिप्रतिबन्धकारणं मोहं जनयतः ।
துவந்துவங்களால் ஏற்படும் மோஹத்தினால் இச்சை, துவேஷம் இரண்டும், குளிர்ச்சி, வெப்பம் இவைகள் போல் ஒன்றுக்கொன்று விருத்தமாயும், சுக துக்கத்திற்கு காரணமான விஷயங்கள் காலத்திற் கேற்ப எல்லா பூதங்களுடன் (பிராணிகளுடன்) சம்பந்தம் அடையும் போது அவை துவந்துவங்கள் எனப்படுகிறது. எப்பொழுது இச்சை, துவேஷங்களும் அவ்வாறே சுக, துக்கங்களும் அவற்றின் காரணங்க ளும் வந்து அடையப்பட்டதோ அப்பொழுது அவை இரண்டும் எல்லா பூதங்களுடைய அறிவையும் தன் வசப்படுத்திக் கொண்டு பரமார்த்தத்தத்துவ விஷய ஞானத்தின் உற்பத்திக்கு தடையாய் உள்ள மோஹத்தை உண்டாக்குகிறது.
न हि इच्छाद्वेषदोषवशीकृतचित्तस्य यथाभूतार्थविषयज्ञानमुत्पद्यते बहिरपि ; किमु वक्तव्यं ताभ्यामाविष्टबुद्धेः संमूढस्य प्रत्यगात्मनि बहुप्रतिबन्धे ज्ञानं नोत्पद्यत इति ।
எவருடைய சித்தம் இச்சை, துவேஷங்களுக்கு வசப்பட்டதோ அவருக்கு வெளிவிஷயங்களில் யதார்த்த ஞானம் ஏற்படுவதில்லை. அவ்வாறு இருக்கையில் இச்சா துவேஷங்களால் மறைக்கப்பட்ட புத்தியுடைய மூடர்களுக்கு மிகுந்த பிரதிபந்தமுள்ளதால் பிரத்யக் ஆத்மாவிடத்தில் ஞானம் உண்டாவதில்லை என்பதில் என்ன கூறுவது?
अतः तेन इच्छाद्वेषसमुत्थेन द्वन्द्वमोहेन, भारत भरतान्वयज, सर्वभूतानि संमोहितानि सन्ति संमोहं संमूढतां सर्गे जन्मनि, उत्पत्तिकाले इत्येतत् , यान्ति गच्छन्ति हे परन्तप ।
ஆகையால் ஹே! பாரத! என்றால் பரத குலத்தில் பிறந்த அர்ஜுனா! பரந்தப அந்த இச்சா துவேஷத்தினால் உண்டான துவந்துவங் களின் நிமித்தத்தால் உண்டான மோஹத்தினால் எல்லாப்பிராணிக ளும் மோஹிக்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால் பிறக்கும்பொழுதே எல்லாப்பிராணிகளும் மோஹத்தினால் மோஹிக்கப்பட்டு மூடர்களாக பிறக்கிறார்கள்.
मोहवशान्येव सर्वभूतानि जायमानानि जायन्ते इत्यभिप्रायः ।
பிறக்கின்ற எல்லா ஜீவராசிகளும் மோஹத்தினாலேயே பிறப்பெ டுக்கின்றனர் என்பது அபிப்பிராயம்.
यतः एवम् , अतः तेन द्वन्द्वमोहेन प्रतिबद्धप्रज्ञानानि सर्वभूतानि संमोहितानि मामात्मभूतं न जानन्ति ; अत एव आत्मभावे मां न भजन्ते ॥ २७ ॥
இவ்வாறு இருப்பதால் அந்த துவந்துவ மோஹத்தினால் பிரதிபந் தப்படுத்தப்பட்ட ஞானமுடைய எல்லாப் பிராணிகளும் நன்றாக மோஹம் அடைந்துள்ளதால் ஆத்மாவான என்னை அறிவதில்லை. ஆகையால் தான் ஆத்மாவான என்னைத் தொழுவதில்லை.
के पुनः अनेन द्वन्द्वमोहेन निर्मुक्ताः सन्तः त्वां विदित्वा यथाशास्त्रमात्मभावेन भजन्ते इत्यपेक्षितमर्थं दर्शितुम् उच्यते —
மேலும் எவர்கள் இந்த துவந்துவ மோஹத்திருந்து விடுபட்டு உன்னை சாஸ்திரத்தில் உள்ளபடி அறிந்து ஆத்மாவாக தொழுகிறார் களோ என்ற அர்த்தத்தை அபேக்ஷி த்து (சார்ந்து) விஷயத்தை உணர்த்தும் பொருட்டு கூறுகிறார்-
येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणाम् ।
ते द्वन्द्वमोहनिर्मुक्ता भजन्ते मां दृढव्रताः ॥ २८ ॥
யேஷாம் த்வந்தகதம் பாபம் ஜனானாம் புண்யகர்மணாம் ।
தே த்வந்த்வமோஹநிர்முக்தா பஜந்தே மாம் த்ருடவ்ரதா: ॥ 28 ॥
येषां तु पुनः अन्तगतं समाप्तप्रायं क्षीणं पापं जनानां पुण्यकर्मणां पुण्यं कर्म येषां सत्त्वशुद्धिकारणं विद्यते ते पुण्यकर्माणः तेषां पुण्यकर्मणाम् , ते द्वन्द्वमोहनिर्मुक्ताः यथोक्तेन द्वन्द्वमोहेन निर्मुक्ताः भजन्ते मां परमात्मानं दृढव्रताः । ‘एवमेव परमार्थतत्त्वं नान्यथा’ इत्येवं सर्वपरित्यागव्रतेन निश्चितविज्ञानाः दृढव्रताः उच्यन्ते ॥ २८ ॥
மேலும் எந்த புண்யகர்மாக்களால் புருஷர்களுடைய பாபங்கள் முடிவடைந்ததோ (நாசம் அடைந்ததோ) அந்த புண்ய கர்மாக்கள் புண்யம் செய்தவர்களின் அந்தக்கரண சுத்திக்கு ஏதுவாகிறது. அவர் கள் முன்பு கூறப்பட்ட துவந்துவ மோஹத்திலிருந்து விடுபட்டு அந்த திடவிரதர்கள் பரமாத்மாவாகிய என்னையே தொழுகிறார்கள். இவ்வாறு பரமார்த்த தத்துவத்தைத் தவிர வேறு இல்லை என்ற தீர்மானம் உடையவர்கள் திடவிர தர்கள் எனப்படுகிறார்கள்.
ते किमर्थं भजन्ते इत्युच्यते —
அவர்கள் எதன் பொருட்டு தொழுகிறார்கள் என்று கூறுகிறார்-
जरामरणमोक्षाय मामाश्रित्य यतन्ति ये ।
ते ब्रह्म तद्विदुः कृत्स्नमध्यात्मं कर्म चाखिलम् ॥ २९ ॥
ஜராமரணமோக்ஷாய மாமாச்ரித்ய யதந்தி யே ।
தே ப்ரஹ்ம தத்விது: க்ருத்ஸ்னமத்யாத்மம் கர்ம சாகிலம் ॥ 29 ॥
जरामरणमोक्षाय जरामरणयोः मोक्षार्थं मां परमेश्वरम् आश्रित्य मत्समाहितचित्ताः सन्तः यतन्ति प्रयतन्ते ये, ते यत् ब्रह्म परं तत् विदुः कृत्स्नं समस्तम् अध्यात्मं प्रत्यगात्मविषयं वस्तु तत् विदुः, कर्म च अखिलं समस्तं विदुः ॥ २९ ॥
எவர்கள் மூப்பு மரணம் இவைகளிலிருந்து விடுபடுவதின் பொருட்டு பரமேச்வரனாகிய என்னை ஆச்ரயித்து (சார்ந்து) என்னிடத்திலேயே நிலைத்த சித்தமுடையவர்களாய் இருந்து கொண்டு பிரயத்தனம் செய்கிறார்களோ அவர்கள் பரபிரஹ்மத்தை அறிந்தவர்களாகிறார்கள். அவர்கள் எல்லா அந்தராத்ம விஷயமான வஸ்துவை அறிந்தவர்கள். அவ்வாறே எல்லா கர்மங்களையும் அறிந்தவர்களாகிறார்கள்.
साधिभूताधिदैवं मां साधियज्ञं च ये विदुः ।
प्रयाणकालेऽपि च मां ते विदुर्युक्तचेतसः ॥ ३० ॥
ஸாதிபூதாதிதைவம் மாம் ஸாதியக்ஞம் ச யே விது: ।
ப்ரயாணகாலே அபி ச மாம் தே விதுர்யுக்தசேதஸ: ॥ 30 ॥
साधिभूताधिदैवम् अधिभूतं च अधिदैवं च अधिभूताधिदैवम् , सह अधिभूताधिदैवेन वर्तते इति साधिभूताधिदैवं च मां ये विदुः, साधियज्ञं च सह अधियज्ञेन साधियज्ञं ये विदुः, प्रयाणकाले मरणकाले अपि च मां ते विदुः युक्तचेतसः समाहितचित्ता इति ॥ ३० ॥
இவ்வாறு எவர்கள் பரமேச்வரனான என்னை, அதிபூதம், அதி தெய்வம் அவ்வாறே அதியக்ஞம் இவைகளுடன் கூடியவனாக அறிகிறார்களோ அவர்கள் ஒருநிலைப்படுத்தப்பட்ட சித்தமுடையவர்க ளாகி மரணகாலத்தில் என்னை அறிகிறார்கள்.
इति श्रीमत्परमहंसपरिवारजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूजयपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये सप्तमोऽध्यायः ॥
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே க்ஞானவிக் ஞானயோகோ நாம சப்தமோத்யாய: