द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

श्रीमद्भगवद्गीताभाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

ஶ்ரீமத்பகவத்கீதாபாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

दैवी आसुरी राक्षसी इति प्राणिनां प्रकृतयः नवमे अध्याये सूचिताः । तासां विस्तरेण प्रदर्शनाय ‘अभयं सत्त्वसंशुद्धिः’ इत्यादिः अध्यायः आरभ्यते ।
தைவீ, ஆஸுரீ, ராக்ஷஸீ என்று பிராணிகளின் பிரக்ருதிகள் ஒன்பதாவது அத்யாயத்தில் காண்பிக்கப்பட்டது. அவைகளை விஸ்தாரமாக தெரிவிக்கும்பொருட்டு (அபயம் சத்துவஸம் சுத்தி: முதலிய ஸ்லோகங்களால் இந்த அத்யாயத்தை ஆரம்பிக்கிறார்.
तत्र संसारमोक्षाय दैवी प्रकृतिः, निबन्धाय आसुरी राक्षसी च इति दैव्याः आदानाय प्रदर्शनं क्रियते, इतरयोः परिवर्जनाय च ॥
இவை மூன்றினுள் தைவீ, ப்ரக்ருதி சம்சாரத்திலிருந்து விடுப டச்செய்கிறது. ஆஸுரீ, ராக்ஷசீ என்ற இவ்விரண்டு பிரக்ருதிகளும் பந்தப்படுத்துவதால் தைவீ பிரக்ருதியை சம்பாதிப்பதற்காகவும் மற்ற இரண்டையும் விடுவதின் பொருட்டும் அவைகளை எடுத்துக காட்டுகிறார்.
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவான் கூறுகிறார்
अभयं सत्त्वसंशुद्धिर्ज्ञानयोगव्यवस्थितिः ।
दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् ॥ १ ॥
அபயம் ஸத்வஸம்சுத்திர்க்ஞானயோகவ்யவஸ்திதி: ।
தானம் தமச்ச யஜ்ஞச்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம் ॥ 1 ॥
अभयम् अभीरुता । सत्त्वसंशुद्धिः सत्त्वस्य अन्तःकरणस्य संशुद्धिः संव्यवहारेषु परवञ्चनामायानृतादिपरिवर्जनं शुद्धसत्त्वभावेन व्यवहारः इत्यर्थः ।
அபயம் - பயமிற்றிருத்தல், சத்வசம்சுத்தி- அந்தக்கரண சுத்தி, வியவஹாரங்களில் மற்றவர்களை வஞ்சித்தல், கள்ளம் பொய் முதலிய தீய குணங்களை விட்டு சுத்த பாவனையுடன் வியவஹா ரம் செய்தலாகும்.
ज्ञानयोगव्यवस्थितिः ज्ञानं शास्त्रतः आचार्यतश्च आत्मादिपदार्थानाम् अवगमः, अवगतानाम् इन्द्रियाद्युपसंहारेण एकाग्रतया स्वात्मसंवेद्यतापादनं योगः, तयोः ज्ञानयोगयोः व्यवस्थितिः व्यवस्थानं तन्निष्ठता । एषा प्रधाना दैवी सात्त्विकी सम्पत् ।
ஞானத்திலும் யோகத்திலும் எப்பொழுதும் நிலைத்து நிற்றல். சாஸ்திரம், ஆச்சாரியார் இவர்களிடமிருந்து ஆத்மா முதலிய பதார்த்தங்களை அறிவது ஞானம். அந்த அறிந்த பதார்த்தங்களை இந்திரியம் முதலியவைகளை அடக்கி ஏகாக்கிரத்துடன் (ஒரே சிந் தனையுடன்) தன்னுடைய ஆத்மாவை பிரத்யக்ஷ அனுபவமாக்கு தல் யோகம் எனப்படும். அந்த ஞானம் யோகம் இவற்றில் ஸ்திர மாக இருந்து அதே மயமாக ஆகுதல் முக்கியமான தைவீ சாத்விகீ சம்பத் ஆகும்.
यत्र येषाम् अधिकृतानां या प्रकृतिः सम्भवति, सात्त्विकी सा उच्यते —
எங்கு எந்த அதிகாரிகளுக்கு எந்த விஷயத்தில் எந்த சாத்விகீ ப்ரக்ருதி உண்டாகிறதோ அதைக் கூறுகிறார்.
दानं यथाशक्ति संविभागः अन्नादीनाम् । दमश्च बाह्यकरणानाम् उपशमः ; अन्तःकरणस्य उपशमं शान्तिं वक्ष्यति ।
தானம் என்பது தனது சக்திக்கு ஏற்றவாறு அன்னம் முதலியவைகளை பிறருக்குக் கொடுத்தல். வெளி இந்திரியங் களின் அடக்கம் தமம். அந்தக்கரணத்தின் அடக்கம் உபசமம், என்றும் சாந்தி என்றும் கூறப்போகிறார்.
यज्ञश्च श्रौतः अग्निहोत्रादिः । स्मार्तश्च देवयज्ञादिः ।
யக்ஞம் என்பது சுருதிகளில் கூறப்பட்டுள்ள அக்னிஹோத்ரா திகள், தேவயக்ஞம் முதலியவைகள் ஸ்மிருதியில் கூறப்பட்டவை.
स्वाध्यायः ऋग्वेदाद्यध्ययनम् अदृष्टार्थम् ।
ரிக் முதலிய வேதங்களை ஓதுதல் மறுமையின் பொருட்டா கும், அது ஸ்வாத்யாயம் எனப்படும்.
तपः वक्ष्यमाणं शारीरादि । आर्जवम् ऋजुत्वं सर्वदा ॥ १ ॥
தபஸ் என்பது சரீரத்தைப் பற்றியது முதலாக கூறப்படுகிறது. ஆர்ஜவம் என்பது எப்பொழுதும் நேர்மையுடன் இருத்தலாகும்.
किञ्च —
மேலும்-
अहिंसा सत्यमक्रोधस्त्यागः शान्तिरपैशुनम् ।
दया भूतेष्वलोलुप्त्वं मार्दवं ह्रीरचापलम् ॥ २ ॥
அஹிம்ஸா ஸத்யமக்ரோதஸ்த்யாக: சாந்திரபைசுனம் ।
தயா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம் ॥ 2 ॥
अहिंसा अहिंसनं प्राणिनां पीडावर्जनम् । सत्यम् अप्रियानृतवर्जितं यथाभूतार्थवचनम् ।
அஹிம்சை- பிராணிகளை இம்சை படுத்தாதிருத்தல் அஹிம் சையாகும்.
ஸத்யம் - பிரியமற்றதையும், பொய்யையும் நீக்கி உள்ளதை உள்ளபடி கூறுதல் சத்யமாகும்.
अक्रोधः परैः आक्रुष्टस्य अभिहतस्य वा प्राप्तस्य क्रोधस्य उपशमनम् । त्यागः संन्यासः, पूर्वं दानस्य उक्तत्वात् ।
அக்ரோத:- பிறர் வைதலாலும், அடித்தலாலும் ஏற்பட்ட கோபத்தை அடக்குதல் கோபமின்மையாகும்.
த்யாக:- முன்பு தானமாகக் கூறப்பட்டதால், இங்கு சந்நியா சமே தியாகம் என்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
शान्तिः अन्तःकरणस्य उपशमः । अपैशुनं अपिशुनता ; परस्मै पररन्ध्रप्रकटीकरणं पैशुनम् , तदभावः अपैशुनम् ।
சாந்தி-அந்தக்கரண அடக்கம் சாந்தி எனப்படும்.
அபைசுனம்- மற்றவர்களிடம் மற்றவர்களைக் குறித்து குறைகூறுதல் புறங்கூறுதலாகும். அது அற்றது.
दया कृपा भूतेषु दुःखितेषु । अलोलुप्त्वम् इन्द्रियाणां विषयसंनिधौ अविक्रिया । मार्दवं मृदुता अक्रौर्यम् ।
தயா- கிருபை (தயா) எல்லா துக்கமுடைய ஜீவர்களிடத்தும் கருணை. அலோலுப்த்வம்- விஷயங்களிடத்து இந்திரியங்க ளுக்கு சம்பந்தம் இருந்தாலும் விகாரமற்றிருத்தல் அவா இன்மை. மார்தவம் - மென்மையாய் இருத்தல் அதாவது கோபமற்றிருத்தல்.
ह्रीः लज्जा । अचापलम् असति प्रयोजने वाक्पाणिपादादीनाम् अव्यापारयितृत्वम् ॥ २ ॥
லஜ்ஜை, வெட்கம்.
அசாபலம் - பிரயோஜனமற்றவைகளில் வாக்கு, பாணி பாதம் முதலிய இந்திரியங்கள் செயல்படுத்தாமலிருப்பது, செயலற்றிருப்பது.
किञ्च —
மேலும்-
तेजः क्षमा धृतिः शौचमद्रोहो नातिमानिता ।
भवन्ति सम्पदं दैवीमभिजातस्य भारत ॥ ३ ॥
தேஜ: க்ஷமா த்ருதி: சௌசமத்ரோஹோ நாதிமானிதா ।
பவந்தி ஸம்பதம் தைவீமபிஜாதஸ்ய பாரத ॥ 3 ॥
तेजः प्रागल्भ्यं न त्वग्गता दीप्तिः । क्षमा आक्रुष्टस्य ताडितस्य वा अन्तर्विक्रियानुत्पत्तिः, उत्पन्नायां विक्रियायाम् उपशमनम् अक्रोधः इति अवोचाम । इत्थं क्षमायाः अक्रोधस्य च विशेषः ।
க்ஷமா - பொறுமை, பிறர் வைதாலும், அடித்தாலும் அந்தக்க ரண விகாரமற்றிருத்தல், விகாரம் ஏற்பட்டால் அதை அடக்குதல் கோபம் அற்றது - அக்ரோத: என்று கூறினோம், இவ்வாறு பொறு மைக்கும், அக்ரோதத்திற்கும் (கோபமற்றதன்மைக்கும்) வித்தியா சம் (பேதம்) உள்ளது.
धृतिः देहेन्द्रियेषु अवसादं प्राप्तेषु तस्य प्रतिषेधकः अन्तःकरणवृत्तिविशेषः, येन उत्तम्भितानि करणानि देहश्च न अवसीदन्ति ।
த்ருதி – தைரியம், தேஹம் இந்திரியங்கள் தளர்வடையும்பொ ழுது அதை தடுத்தல். எந்த அந்தக்கரண விருத்தி விசேஷத்தி னால் இந்திரியங்களும், தேஹமும் உற்சாகமடைந்து தளர்வு அடைவதில்லையோ அது த்ருதிதைரியம்)
शौचं द्विविधं मृज्जलकृतं बाह्यम् आभ्यन्तरं च मनोबुद्ध्योः नैर्मल्यं मायारागादिकालुष्याभावः ; एवं द्विविधं शौचम् ।
சௌசம் - பரிசுத்தம் என்பது இருவகை. ஒன்று மண், ஜலம் இவைகளைக் கொண்டு வெளியில் உள்ள சுத்தம். மற்றொன்று மாயா, ராகம் முதலியவைகளால் கலங்கப்படாத மனம், புத்திகளுடைய ஆந்திர சௌசமாகும். இவ்வாறு பரிசுத்தம் இருவகையாகும்.
अद्रोहः परजिघांसाभावः अहिंसनम् ।
அத்ரோஹ:- துரோகம் அற்றிருத்தல்- மற்றவர்களை துன்பு றுத்துவதில் இச்சை அற்றிருத்தல், ஹிம்சை செய்யாதிருத்தல்.
नातिमानिता अत्यर्थं मानः अतिमानः, सः यस्य विद्यते सः अतिमानी, तद्भावः अतिमानिता, तदभावः नातिमानिता आत्मनः पूज्यतातिशयभावनाभाव इत्यर्थः ।
செருக்கின்மை - பிறர் தன்னை மிகவும் மதிக்க வேண்டும் என்று எவனுக்கிறதோ அவன் அதிமானி, அதனுடைய பாவம் அதிமானிதா. அது இல்லாதது ஞாதிமானிதா- தன்னைப் பிறர் போற்றவேண்டும் என்ற நினைப்பு அற்றிருத்தல் என்பது பொருள்.
भवन्ति अभयादीनि एतदन्तानि सम्पदं अभिजातस्य । किंविशिष्टां सम्पदम् ? दैवीं देवानां या सम्पत् ताम् अभिलक्ष्य जातस्य देवविभूत्यर्हस्य भाविकल्याणस्य इत्यर्थः, हे भारत ॥ ३ ॥
ஹே! பாரத! அபயம் முதல் இதுவரையிலும் கூறப்பட்ட எல்லா லக்ஷணங்களும் சம்பத்துடன் கூடிய புருஷனுக்கு உண்டா கும். எப்படிப்பட்ட சம்பத் உடையவனுக்கு ஏற்படும் எனில் எவன் தேவதைகளின் விபூதிகளை அடைவதற்கு யோக்கியனாகவும், இனி வரும் காலத்தில் எவனுக்கு கல்யாணம் (மங்களம்) நன்மை உண்டாவதில் நிச்சயம் ஏற்பட்டுள்ளதோ அந்த புருஷனுக்கு அந்த லக்ஷணங்கள் உண்டாகும் என்பது பொருள்.
अथ इदानीं आसुरी सम्पत् उच्यते —
இனி இப்பொழுது ஆஸுரி சம்பத் கூறப்போகிறார்-
दम्भो दर्पोऽतिमानश्च क्रोधः पारुष्यमेव च ।
अज्ञानं चाभिजातस्य पार्थ सम्पदमासुरीम् ॥ ४ ॥
தம்போ தர்போஅதிமானச்ச க்ரோத: பாருஷ்யமேவ ச ।
அஜ்ஞானம் சாபிஜாதஸ்ய பார்த ஸம்பதமாஸுரீம் ॥ 4 ॥
दम्भः धर्मध्वजित्वम् । दर्पः विद्याधनस्वजनादिनिमित्तः उत्सेकः । अतिमानः पूर्वोक्तः । क्रोधश्च । पारुष्यमेव च परुषवचनम् — यथा काणम् ‘चक्षुष्मान्’ विरूपम् ‘रूपवान्’ हीनाभिजनम् ‘उत्तमाभिजनः’ इत्यादि ।
தம்பம்-நல்ல குணங்கள், நற்செயல்கள் உள்ளவன் போல் நடித்தல்.
தர்ப்பம்- செருக்கு- செல்வத்தினாலும் சொந்த பந்தங்கள் முத லியவற்றினால் ஏற்படும் கர்வம் அதிமானிதா, க்ரோதம் (முன்பே கூறப்பட்டது)
கடும் சொற்கள்- எவ்வாறு கண் இல்லாதவனை கண்கள் உள் ளவன் என்றும், அழகற்றவனை அழகானவன் என்றும், கீழான வரை மேன்மையானவர்கள் என்று கூறும் கடும் சொற்கள். (கேலி யாக பேசுதல்)
अज्ञानं च अविवेकज्ञानं कर्तव्याकर्तव्यादिविषयमिथ्याप्रत्ययः । अभिजातस्य पार्थ । किम् अभिजातस्येति, आह — सम्पदम् आसुरीम् असुराणां सम्पत् आसुरी ताम् अभिजातस्य इत्यर्थः ॥ ४ ॥
அக்ஞானம் செய்ய வேண்டிய, செய்யக்கூடாத முதலிய விஷயங்களில் உள்ள மித்யா ஞானமே அவிவேகஞானம், அதுவே அக்ஞானமாகும்.
ஹே பார்த்த, இவைகளுடன் பிறந்தவனுக்கு என்றால் என்ன வெனில் கூறுகிறார்- ஆஸுரீ சம்பத்துடன் பிறந்தவனுக்கு முற் கூறிய லக்ஷணங்கள் அடையாளங்கள் ஆகும் என்பது பொருள்.
अनयोः सम्पदोः कार्यम् उच्यते —
இவ்விரு சம்பத்துக்களுடைய காரியம் கூறுகிறார்-
दैवी सम्पद्विमोक्षाय निबन्धायासुरी मता ।
मा शुचः सम्पदं दैवीमभिजातोऽसि पाण्डव ॥ ५ ॥
தைவீஸம்பத்விமோக்ஷாய நிபந்தாயாஸுரீ மதா ।
மா சுச: ஸம்பதம் தைவீமபிஜாதோஅஸி பாண்டவ ॥ 5 ॥
दैवी सम्पत् या, सा विमोक्षाय संसारबन्धनात् । निबन्धाय नियतः बन्धः निबन्धः तदर्थम् आसुरी सम्पत् मता अभिप्रेता । तथा राक्षसी च ।
எந்த தைவீ சம்பத் உள்ளதோ அது சம்சாரபந்தத்திலிருந்து விடுபடுவதற்காகவாகும். அவ்வாறேஆஸுரீ சம்பத்தும் ராக்ஷசீ சம்பத்தும் சந்தேஹமில்லாமல் பந்தத்திற்கு ஹேதுவாகிறது. நிச்சய மாக பந்தப்படுத்தும் என்பதற்காக நிபந்த: எனப்படுகிறது.
तत्र एवम् उक्ते सति अर्जुनस्य अन्तर्गतं भावम् ‘किम् अहम् आसुरसम्पद्युक्तः ? किं वा दैवसम्पद्युक्तः ? ’ इत्येवम् आलोचनारूपम् आलक्ष्य आह भगवान् —
இவ்வாறு கூறப்பட்டபொழுது அர்ஜுனனுடைய அந்தக்கர ணத்தில் உள்ள பாவம் என்ன? நான் ஆஸுர சம்பத் உடைய வனா? அல்லது தெய்வ சம்பத்துடையவனா என்று ஆலோசிப் பதை அறிந்து பகவான் கூறலானார்.
मा शुचः शोकं मा कार्षीः । सम्पदं दैवीम् अभिजातः असि अभिलक्ष्य जातोऽसि, भाविकल्याणः त्वम् असि इत्यर्थः, हे पाण्डव ॥ ५ ॥
ஹே பாண்டவ! சோகத்தை அடையாதே. நீ தைவீக சம்பத்து டன் பிறந்திருக்கிறாய் அவ்வாறே நீ வரும் காலத்தில் மங்களங் களை அடைவாய் என்பது பொருள்.
द्वौ भूतसर्गौ लोकेऽस्मिन्दैव आसुर एव च ।
दैवो विस्तरशः प्रोक्त आसुरं पार्थ मे शृणु ॥ ६ ॥
த்வௌ பூதஸர்கௌ லோகேஅஸ்மின்தைவ ஆஸுர ஏவ ச ।
தைவோ விஸ்தரச: ப்ரோக்த ஆஸுரம் பார்த மே ச்ருணு ॥ 6 ॥
द्वौ द्विसङ्ख्याकौ भूतसर्गौ भूतानां मनुष्याणां सर्गौ सृष्टी भूतसर्गौ सृज्येतेति सर्गौ भूतान्येव सृज्यमानानि दैवासुरसम्पद्द्वययुक्तानि इति द्वौ भूतसर्गौ इति उच्यते ।
இந்த சம்சாரத்தில் மனிதர்களுடைய சிருஷ்ட்டி இருவகையா கும். எது உண்டாக்கப்பட்டதோ அது சிருஷ்ட்டி, ஆகையால் தைவசம்பத்துடன், அசுர சம்பத்துடன் எவை உண்டாக்கப் பட்டதோ அந்த பிராணிகள் இங்கு இரண்டு பூத ஸ்ருஷ்ட்டிகள் எனப்படுகிறது.
‘द्वया ह वै प्राजापत्या देवाश्चासुराश्च’ (बृ. उ. १ । ३ । १) इति श्रुतेः । लोके अस्मिन् , संसारे इत्यर्थः, सर्वेषां द्वैविध्योपपत्तेः ।
(த்வயா ஹ ப்ரஜாபத்யா தேவாச்சாசுராச்ச = பிரஜாபதியால் இருவகையாக தேவர்கள், அசுரர்கள் என்று) இவ்வாறு சுருதியி லும் இவ்விஷயம் கூறப்பட்டுள்ளது. இந்த சம்சாரத்தில் எல்லா பிராணிகளும் இருவகையேயாகும்.
कौ तौ भूतसर्गौ इति, उच्यते — प्रकृतावेव दैव आसुर एव च ।
பூத ஸ்ருஷ்ட்டியில் எந்த இருவர் எனில் ப்ரகரணத்தில் கூறப் பட்ட தைவ, ஆசுரமுமே.
उक्तयोरेव पुनः अनुवादे प्रयोजनम् आह —
கூறப்பட்ட இவ்விரண்டையும் மறுபடியும் கூறியதின் பிரயோ ஜனம் என்ன என்பதைக் கூறுகிறார்-
दैवः भूतसर्गः ‘अभयं सत्त्वसंशुद्धिः’ (भ. गी. १६ । १) इत्यादिना विस्तरशः विस्तरप्रकारैः प्रोक्तः कथितः, न तु आसुरः विस्तरशः ; अतः तत्परिवर्जनार्थम् आसुरं पार्थ, मे मम वचनात् उच्यमानं विस्तरशः शृणु अवधारय ॥ ६ ॥
தைவ பூத சிருஷ்ட்டியானது அபயம் சத்துவசுத்தி: முதலிய ஸ்லோகங்களால் விஸ்தாரமாகக் கூறப்பட்டது. ஆனால் ஆஸுர பூத சிருஷ்ட்டியை விஸ்தாரமாக கூறப்படவில்லை. ஆகையால் அந்த ஆஸுர சம்பத்தை நிவர்த்திப்பதற்காக விஸ்தாரமாகக் கூறப்படுவதை ஹே பார்த்த! கேள். (நன்றாக புரிந்துகொள்)
आ अध्यायपरिसमाप्तेः आसुरी सम्पत् प्राणिविशेषणत्वेन प्रदर्श्यते, प्रत्यक्षीकरणेन च शक्यते तस्याः परिवर्जनं कर्तुमिति —
இந்த அத்யாயம் முடியும் வரையிலும் சில பிராணிகளுடைய விசேஷணவாயிலாக ஆஸுரீ சம்பத்தானது காட்டப்படுகிறது. ஏனெனில் அதை நன்றாக அறிந்தால் அல்லவா அதை நீக்க முடியும் என்று -
प्रवृत्तिं च निवृत्तिं च जना न विदुरासुराः ।
न शौचं नापि चाचारो न सत्यं तेषु विद्यते ॥ ७ ॥
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜனா ந விதுராஸுரா: ।
ந சௌசம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்யதே ॥ 7 ॥
प्रवृत्तिं च प्रवर्तनं यस्मिन् पुरुषार्थसाधने कर्तव्ये प्रवृत्तिः ताम् , निवृत्तिं च एतद्विपरीतां यस्मात् अनर्थहेतोः निवर्तितव्यं सा निवृत्तिः तां च, जनाः आसुराः न विदुः न जानन्ति ।
ஆஸுரத்தன்மையுடைய புருஷர்கள் எந்த புருஷார்த்த சாத னத்தின் பிரவிருத்திக்க வேண்டுமோ அதையும் அதற்கு மாறான அனர்த்தத்திற்குக் காரணமான கர்மங்களிலிருந்து எவர்களுக்கு விடுபட வேண்டுமோ அதையும் அறியமாட்டார்கள்.
न केवलं प्रवृत्तिनिवृत्ती एव ते न विदुः, न शौचं नापि च आचारः न सत्यं तेषु विद्यते ; अशौचाः अनाचाराः मायाविनः अनृतवादिनो हि आसुराः ॥ ७ ॥
அவர்கள் அசுர பிரவிருத்தியிலிருந்து விலகுவதற்கு அறியா தவர்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு பரிசுத்தமோ, நல்ல நடத்தை யோ, உண்மையோ அவர்களிடத்தில் கிடையாது. அந்த ஆஸுர ஜனங்கள் பரிசுத்தமற்றவர்கள், ஒழுக்கமற்றவர்கள், கபடமுடைய வர்கள், பொய் பேசுபவர்கள்.
किञ्च —
மேலும்
असत्यमप्रतिष्ठं ते जगदाहुरनीश्वरम् ।
अपरस्परसम्भूतं किमन्यत्कामहैतुकम् ॥ ८ ॥
அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுரநீச்வரம் ।
அபரஸ்பரஸம்பூதம் கிமன்யத் காமஹைதுகம் ॥ 8 ॥
असत्यं यथा वयम् अनृतप्रायाः तथा इदं जगत् सर्वम् असत्यम् , अप्रतिष्ठं च न अस्य धर्माधर्मौ प्रतिष्ठा अतः अप्रतिष्ठं च, इति ते आसुराः जनाः जगत् आहुः, अनीश्वरम् न च धर्माधर्मसव्यपेक्षकः अस्य शासिता ईश्वरः विद्यते इति अतः अनीश्वरं जगत् आहुः ।
எவ்வாறு நாம் பொய்யாக உள்ளோமோ அவ்வாறேஇந்த ஜகத் முழுவதும் பொய்யானது. இதற்கு தர்மம், அதர்மம் என்ப வைகள் ஆதாரமல்ல. ஆகையால் இது ஆதாரமற்றது. அப்பிர திஷ்ட்டம்.என்று அந்த அசுரஸ்வபாவமுடைய ஜனங்கள் கூறுகி றார்கள். அவ்வாறே அநீச்வரன். புண்ய, பாபங்களை அபேக்ஷித்து அதற்கேற்றவாறு கட்டளையிடும் தலைவன் ஒருவனும் இல்லை ஆகையால் ஜகத்திற்கு ஈச்வரன் இல்லை என்று கூறுவர்.
किञ्च, अपरस्परसम्भूतं कामप्रयुक्तयोः स्त्रीपुरुषयोः अन्योन्यसंयोगात् जगत् सर्वं सम्भूतम् । किमन्यत् कामहैतुकं कामहेतुकमेव कामहैतुकम् । किमन्यत् जगतः कारणम् ? न किञ्चित् अदृष्टं धर्माधर्मादि कारणान्तरं विद्यते जगतः ‘काम एव प्राणिनां कारणम्’ इति लोकायतिकदृष्टिः इयम् ॥ ८ ॥
காமத்தினால் ஏவப்பட்டு ஸ்த்ரீ, புருஷர்களின் பரஸ்பர சேர்க் கையினால் இந்த ஜகத் முழுவதும் உண்டாயிற்று.
(காமஹேதுகம் ஏவ காமஹைதுகம்)- ஜகத் உற்பத்திக்கு காமமே காரணம். அதைத் தவிறவேறு ஒரு காரணமாகிய புண்ணிய பாபங்கள் அல்ல. ஜகத்திற்குக் காமமே (ஜீவர்களுக்கு) காரணம் என்று லோகாயதர்களின் மதமாகும். (கருத்தாகும், திருஷ்ட்டியாகும்)
एतां दृष्टिमवष्टभ्य नष्टात्मानोऽल्पबुद्धयः ।
प्रभवन्त्युग्रकर्माणः क्षयाय जगतोऽहिताः ॥ ९ ॥
ஏதாம் த்ருஷ்டிமவஷ்டப்ய நஷ்டாத்மானோஅல்பபுத்தய: ।
ப்ரபவந்த்யுக்ரகர்மாண: க்ஷயாய ஜகதோஅஹிதா ॥ 9 ॥
एतां दृष्टिम् अवष्टभ्य आश्रित्य नष्टात्मानः नष्टस्वभावाः विभ्रष्टपरलोकसाधनाः अल्पबुद्धयः विषयविषया अल्पैव बुद्धिः येषां ते अल्पबुद्धयः प्रभवन्ति उद्भवन्ति उग्रकर्माणः क्रूरकर्माणः हिंसात्मकाः । क्षयाय जगतः प्रभवन्ति इति सम्बन्धः । जगतः अहिताः, शत्रवः इत्यर्थः ॥ ९ ॥
இந்த திருஷ்டியை அவலம்பித்தவர்கள் தன்னிலையிலிருந்து நழுவியர்கள் (நஷ்ட்ட ஸ்வபாவம் உடையவர்கள்) பரலோகத்திற் கான சாதனைகளை கைவிட்டவர்கள். அல்பமான போக விஷயங்களில் புத்தியை செலுத்தும் அல்ப புத்தி உடையவர்கள். உலகத்தை அழிக்கும் ஹிம்சையுடன் கூடிய குரூர கர்மங்களில் ஈடுபடுவார்கள் என்பது சம்பந்தப்படுத்த வேண்டும். அவர்கள் உலகத்தின் (ஜகத்தின்) சத்ருக்கள் என்பது பொருள்.
ते च —
அவ்வாறே அவர்கள்
काममाश्रित्य दुष्पूरं दम्भमानमदान्विताः ।
मोहाद्गृहीत्वासद्ग्राहान्प्रवर्तन्तेऽशुचिव्रताः ॥ १० ॥
காமமாச்ரித்ய துஷ்பூரம் தம்பமானமதாந்விதா: ।
மோஹாத்க்ருஹீத்வாஸத்க்ராஹாந்ப்ரவர்தந்தே அசுசிவ்ரதா: ॥ 10 ॥
कामम् इच्छाविशेषम् आश्रित्य अवष्टभ्य दुष्पूरम् अशक्यपूरणं दम्भमानमदान्विताः दम्भश्च मानश्च मदश्च दम्भमानमदाः तैः अन्विताः दम्भमानमदान्विताः मोहात् अविवेकतः गृहीत्वा उपादाय असद्ग्राहान् अशुभनिश्चयान् प्रवर्तन्ते लोके अशुचिव्रताः अशुचीनि व्रतानि येषां ते अशुचिव्रताः ॥ १० ॥
நிரப்பமுடியாத இச்சையின் விசேஷமே காமம். அதை ஆச்ரயித்து தம்பம், (செருக்கு) மானம், மதம் இவைகளை உடையவராய் மோஹத்தினால் சுபமற்றதீய கொள்கைகளை ஆச்ரயித்து சுபமற்ற(தீய) வழிகளையே விரதமாகக் கொண்டு சம்சாரத்தில் பிரவிர்த்திக்கிறார்கள். (உழலுகிறார்கள்).
किञ्च —
மேலும்
चिन्तामपरिमेयां च प्रलयान्तामुपाश्रिताः ।
कामोपभोगपरमा एतावदिति निश्चिताः ॥ ११ ॥
சிந்தாமபரிமேயாம் ச ப்ரலயாந்தாமுபாச்ரிதா: ।
காமோப்போகபரமா ஏதாவதிதி நிச்சிதா: ॥ 11 ॥
चिन्ताम् अपरिमेयां च, न परिमातुं शक्यते यस्याः चिन्तायाः इयत्ता सा अपरिमेया, ताम् अपरिमेयाम् , प्रलयान्तां मरणान्ताम् उपाश्रिताः, सदा चिन्तापराः इत्यर्थः । कामोपभोगपरमाः, काम्यन्ते इति कामाः विषयाः शब्दादयः तदुपभोगपरमाः ‘अयमेव परमः पुरुषार्थः यः कामोपभोगः’ इत्येवं निश्चितात्मानः, एतावत् इति निश्चिताः ॥ ११ ॥
மரணத்தையே எல்லையாகக் கொண்ட அளவிடமுடியாத கவலையைக் கொண்டவர்கள் அதாவது எப்பொழுதும் கவலையு டன் இருப்பவர்கள் என்பது பொருள். காமனைகளாகிய சப்தாதி விஷயங்களிலேயே போகித்துக்கொண்டு (அவலம்பித்துக் கொண்டு) இருப்பார்கள். அந்த காமபோகங்களையே பரம புருஷார்த்தம் என்று நிச்சயித்தவர்கள்.
आशापाशशतैर्बद्धाः कामक्रोधपरायणाः ।
ईहन्ते कामभोगार्थमन्यायेनार्थसञ्चयान् ॥ १२ ॥
ஆசாபாசசதைர்பத்தா: காமக்ரோதபராயணா: ।
ஈஹந்தே காமபோகார்தமந்யாயேனார்தஸஞ்சயான் ॥ 12 ॥
आशापाशशतैः आशा एव पाशाः तच्छतैः बद्धाः नियन्त्रिताः सन्तः सर्वतः आकृष्यमाणाः, कामक्रोधपरायणाः कामक्रोधौ परम् अयनम् आश्रयः येषां ते कामक्रोधपरायणाः, ईहन्ते चेष्टन्ते कामभोगार्थं कामभोगप्रयोजनाय न धर्मार्थम् , अन्यायेन परस्वापहरणादिना इत्यर्थः ; किम् ? अर्थसञ्चयान् अर्थप्रचयान् ॥ १२ ॥
நூற்றுக்கணக்கான ஆசை எனப்படும் பாசக்கயிற்றினால் கட் டப்பட்டவர்களாகி நாலாபக்கமும் இழுக்கப்பட்டவர்களாகி காம, க்ரோதமே மேலான மார்க்கம் என்று நினைக்கிறார்களோ அவர் கள் காமக்ரோதம் உடைய புருஷர்கள். அவர்கள் தர்மத்தின் பொருட்டல்லாமல் காமனை வஸ்துக்களை அனுபவிப்பதில் நியா யமற்று பிறருடைய பொருள்களை அபஹரித்தல் முதலிய பாப செயல்களால் செல்வத்தைப் பெருக்குகின்றார்கள் என்பது பொருள்.
ईदृशश्च तेषाम् अभिप्रायः —
அவர்களுடைய அபிப்பிராயம் இவ்வாறானது-
इदमद्य मया लब्धमिदं प्राप्स्ये मनोरथम् ।
इदमस्तीदमपि मे भविष्यति पुनर्धनम् ॥ १३ ॥
இதமத்ய மயா லப்தமிதம் ப்ராப்ஸ்யே மநோரதம் ।
இதமஸ்தீதமபி மே பவிஷ்யதி புனர்தனம் ॥ 13 ॥
इदं द्रव्यं अद्य इदानीं मया लब्धम् । इदं च अन्यत् प्राप्स्ये मनोरथं मनस्तुष्टिकरम् । इदं च अस्ति इदमपि मे भविष्यति आगामिनि संवत्सरे पुनः धनं तेन अहं धनी विख्यातः भविष्यामि इति ॥ १३ ॥
இந்த செல்வம் இப்பொழுது என்னால் பெறப்பட்டது. மன திற்கு இன்பம் தரும் பொருளைப் பெறுவேன். இது எனக்கு இருக் கிறது. வரும் வருடத்தில் மேலும் செல்வம் எனக்கு கிடைக்கும். அதனால் நான் செல்வந்தன் என்று புகழ்பெறுவேன்.
असौ मया हतः शत्रुर्हनिष्ये चापरानपि ।
ईश्वरोऽहमहं भोगी सिद्धोऽहं बलवान्सुखी ॥ १४ ॥
அஸௌ மயா ஹத: சத்ருர்ஹநிஷ்யே சாபராநபி ।
ஈச்வரோஅஹமஹம் போகீ ஸித்தோஅஹம் பலவான் ஸுகீ ॥ 14 ॥
असौ देवदत्तनामा मया हतः दुर्जयः शत्रुः । हनिष्ये च अपरान् अन्यान् वराकान् अपि । किम् एते करिष्यन्ति तपस्विनः ; सर्वथापि नास्ति मत्तुल्यः । कथम् ? ईश्वरः अहम् , अहं भोगी । सर्वप्रकारेण च सिद्धः अहं सम्पन्नः पुत्रैः नप्तृभिः, न केवलं मानुषः, बलवान् सुखी च अहमेव ; अन्ये तु भूमिभारायावतीर्णाः ॥ १४ ॥
இந்த தேவதத்தன் என்றபெயருடையவன் என்னால் கொல்லப்பட்டான். வெல்லுவதற்கு அரிய விரோதியை நான் கொல்லுவேன். அவ்வாறே மற்றபகைவரையும் வெல்வேன். மிக்க பலம் குறைந்தவர்களாகிய தபஸ்விகளால் என்ன செய்ய முடியும்? எவ்வகையாலும் எனக்கு சமானமாக எவரும் இல்லை. நான்தான் ஈச்வரன், நான் போகி. எல்லாப் பிரகாரமாகவும் புத்திரர்கள், பேரன்மார்கள், சொந்தக்காரர்கள் என்று எல்லோரையும் அடையப் பெற்றவனாக இருக்கிறேன். நான் மனிதன். அது மட் டுமல்ல, பலவானாகவும் சுகியாகவும் இருக்கிறேன். மற்றவர்கள் பூமியின் பாரத்தின் பொருட்டு பிறந்தவர்கள்.
आढ्योऽभिजनवानस्मि कोऽन्योऽस्ति सदृशो मया ।
यक्ष्ये दास्यामि मोदिष्य इत्यज्ञानविमोहिताः ॥ १५ ॥
ஆட்யோஅபிஜநவானஸ்மி கோஅன்யோஅஸ்தி ஸத் ருசோ மயா ।
யக்ஷ்யே தாஸ்யாமி மோதிஷ்ய இத்யஞானவிமோஹிதா: ॥ 15 ॥
आढ्यः धनेन, अभिजनवान् सप्तपुरुषं श्रोत्रियत्वादिसम्पन्नः — तेनापि न मम तुल्यः अस्ति कश्चित् । कः अन्यः अस्ति सदृशः तुल्यः मया ? किञ्च, यक्ष्ये यागेनापि अन्यान् अभिभविष्यामि, दास्यामि नटादिभ्यः, मोदिष्ये हर्षं च अतिशयं प्राप्स्यामि, इति एवम् अज्ञानविमोहिताः अज्ञानेन विमोहिताः विविधम् अविवेकभावम् आपन्नाः ॥ १५ ॥
நான் மிகுந்த தனம் உடையவன். உயர்ந்த குலத்தினன். ஏழு தலைமுறையாக வேதங்களைக் கற்றவன். அதாவது ஸ்ரோத்திரி யன். ஆகையாலும் எனக்கு ஒப்பானவன் ஒருவரும் இல்லை. எவன் இருக்கிறான். எனக்கு சமானமானவன் ஒருவரும் இல்லை.யக்ஞம் செய்து மற்றவர்களை அவமானப்படுத்துவேன். நடனம் செய்பவர்கள் முதலியோருக்கு செல்வம் அளித்து சந்தோஷப்ப டுத்துவேன். அதனால் நானும் அளவில்லாத சந்தோஷம் அடை வேன் என்று இவ்வாறு அக்ஞானத்தினால் மோஹமடைந்து பல விதமான அவிவேகத்தன்மையை அடைவார்கள்.
अनेकचित्तविभ्रान्ता मोहजालसमावृताः ।
प्रसक्ताः कामभोगेषु पतन्ति नरकेऽशुचौ ॥ १६ ॥
அநேகசித்தவிப்ராந்தா மோஹஜாலஸமாவ்ருதா: ।
ப்ரஸக்தா: காமபோகேஷு பதந்தி நரகேஅசுசௌ ॥ 16 ॥
अनेकचित्तविभ्रान्ताः उक्तप्रकारैः अनेकैः चित्तैः विविधं भ्रान्ताः अनेकचित्तविभ्रान्ताः, मोहजालसमावृताः मोहः अविवेकः अज्ञानं तदेव जालमिव आवरणात्मकत्वात् , तेन समावृताः । प्रसक्ताः कामभोगेषु तत्रैव निषण्णाः सन्तः तेन उपचितकल्मषाः पतन्ति नरके अशुचौ वैतरण्यादौ ॥ १६ ॥
மேலே கூறப்பட்ட அநேக விசாரங்களினால் சித்த பிராந்தி உடையவர்களாகி மோஹ ரூப ஜாலம் என்றால் அவிவேகம் உடையவர்கள். அவிவேகமே மோஹமாகும். அந்த மோஹம், ஜாலம் போல் ஆவரணாத்மகமாய் இருப்பதால் அதனால் நன்றாக மறைக்கப்பட்டு காமபோகங்களில் ஆசக்தர்களாய் இருந்து கொண்டு அதனால் பாபங்களை சம்பாதித்து வைதரணி முதலிய அசுத்தமான நரகங்களில் விழுகிறார்கள்.
आत्मसम्भाविताः स्तब्धा धनमानमदान्विताः ।
यजन्ते नामयज्ञैस्ते दम्भेनाविधिपूर्वकम् ॥ १७ ॥
ஆத்மஸம்பாவிதா: ஸ்தப்தா தனமானமதாந்விதா ।
யஜந்தே நாமயக்ஞைஸ்தே தம்பேநாவிதிபூர்வகம் ॥ 17 ॥
आत्मसम्भाविताः सर्वगुणविशिष्टतया आत्मनैव सम्भाविताः आत्मसम्भाविताः, न साधुभिः । स्तब्धाः अप्रणतात्मानः । धनमानमदान्विताः धननिमित्तः मानः मदश्च, ताभ्यां धनमानमदाभ्याम् अन्विताः । यजन्ते नामयज्ञैः नाममात्रैः यज्ञैः ते दम्भेन धर्मध्वजितया अविधिपूर्वकं विधिविहिताङ्गेतिकर्तव्यतारहितम् ॥ १७ ॥
எவர்கள் தனக்குத்தானே எல்லா நற்குணங்களும் பொருந்தி யதாக நினைத்துக்கொண்டு தன்னைப் பெருமையாக நினைத்துக் கொள்கிறார்களோ சாது புருஷர்கள் அவர்களை மேன்மையான வர்களாக (சிரேஷ்டர்களாக) கருதுவதில்லை, விநயம் அற்றவர் கள், தனத்தினாலும் அதனால் ஏற்படும் மதத்தினாலும் கூடியவர்க ளாகி அதர்ம மார்க்கத்தில், அவிதி பூர்வகமாக விகித அங்கத்தின் செய்யப்படவேண்டிய ஞானம் அற்று பெயருக்காக மாத்திரமே யக்ஞம் செய்கிறார்கள்.
अहङ्कारं बलं दर्पं कामं क्रोधं च संश्रिताः ।
मामात्मपरदेहेषु प्रद्विषन्तोऽभ्यसूयकाः ॥ १८ ॥
அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் ச ஸம்ச்ரிதா: ।
மாமாத்மபரதேஹேஷு ப்ரத்விஷந்தோஅப்யஸூயகா: ॥ 18 ॥
अहङ्कारं अहङ्करणम् अहङ्कारः, विद्यमानैः अविद्यमानैश्च गुणैः आत्मनि अध्यारोपितैः ‘विशिष्टमात्मानमहम्’ इति मन्यते, सः अहङ्कारः अविद्याख्यः कष्टतमः, सर्वदोषाणां मूलं सर्वानर्थप्रवृत्तीनां च, तम् । तथा बलं पराभिभवनिमित्तं कामरागान्वितम् । दर्पं दर्पो नाम यस्य उद्भवे धर्मम् अतिक्रामति सः अयम् अन्तःकरणाश्रयः दोषविशेषः ।
அஹம் கரணம் அஹங்கார:
நான், நான் என்று ஏற்றிக்கூறுதலே அஹங்காரம். தன்னிடம் உள்ளதும், இல்லாததுமான நற்குணங்களை தன்னிடத்தில் ஆரோ பித்து அந்த குணங்களுடன் கூடியவனாய் இருக்கின்றேன் என்று அவன் கருதுகிறான். அஹங்காரம் என்பது மிகக்கடினமான அவித்யா தோஷமாகும். எல்லா தோஷங்களுக்கும், அவ் வாறேஎல்லா அனர்த்தங்களுக்கும் மூலகாரணமாகும். தனது பலத் தினால் மற்றவர்களை தோற்கடித்ததால் ஏற்பட்ட காம, ராகத்துடன் கூடியது தர்பம். தர்பம் என்றால் எது உண்டானதால் மனித தர்மமா னது மீறப்படுகிறதோ அந்தக்கரணத்தை ஆச்ரயித்த அந்த தோஷ விசேஷமானது தர்ப்பமாகும்.
कामं स्त्र्यादिविषयम् । क्रोधम् अनिष्टविषयम् । एतान् अन्यांश्च महतो दोषान् संश्रिताः ।
காமம் - பெண் முதலிய விஷயங்களில் ஏற்படுவது, க்ரோதம் தனக்கு பிடிக்காவிடில் ஏற்படுவது இந்த பெரும் குற்றங்களை யும் மேலும் வேறு பெரிய குற்றங்களையும் உடையவர்கள்.
किञ्च ते माम् ईश्वरम् आत्मपरदेहेषु स्वदेहे परदेहेषु च तद्बुद्धिकर्मसाक्षिभूतं मां प्रद्विषन्तः, मच्छासनातिवर्तित्वं प्रद्वेषः, तं कुर्वन्तः अभ्यसूयकाः सन्मार्गस्थानां गुणेषु असहमानाः ॥ १८ ॥
இதைத் தவிர அவர்கள் தங்களுடைய, பிறருடைய சரீரத்தில் இருந்துகொண்டு அவர்களுடைய புத்திக்கும் கர்மத்திற்கும் சாக்ஷி யான என்னிடத்தில் துவேஷம் உள்ளவர்களாய் சன்மார்க்கத்திற்கு மாறாக நடப்பவர்களாகிய அவ்வாறே சாது புருஷர்களிடத்தும், என்னிடத்தும் துவேஷிப்பவர்களாகிய (வெறுப்பவர்களாகிய) என் னுடைய கட்டளையை மீறி அந்த எல்லா தீய கர்மங்களை செய்ப வர்களாகிய அவர்கள் சன்மார்க்கத்தில் உள்ளவர்களுடைய நல்ல குணங்களை மதிக்காமல் அவர்களை நிந்தை செய்கிறார்கள்.
तानहं द्विषतः क्रूरान्संसारेषु नराधमान् ।
क्षिपाम्यजस्रमशुभानासुरीष्वेव योनिषु ॥ १९ ॥
தாநஹம் த்விஷத: க்ரூராந்ஸம்ஸாரேஷு நராதமான் ।
க்ஷி பாம்யஜஸ்ரமசுபானாஸுரீஷ்வேவ யோனிஷு ॥ 19 ॥
तान् अहं सन्मार्गप्रतिपक्षभूतान् साधुद्वेषिणः द्विषतश्च मां क्रूरान् संसारेषु एव अनेकनरकसंसरणमार्गेषु नराधमान् अधर्मदोषवत्त्वात् क्षिपामि प्रक्षिपामि अजस्रं सन्ततम् अशुभान् अशुभकर्मकारिणः आसुरीष्वेव क्रूरकर्मप्रायासु व्याघ्रसिंहादियोनिषु ‘क्षिपामि’ इत्यनेन सम्बन्धः ॥ १९ ॥
நான் சாதுக்களிடத்தில் துவேஷமுள்ள சன்மார்க்கத்தில் பிர விர்த்திக்காத மனிதர்களில் கீழான அவர்கள் எல்லோரையும் நரக மாகிய சம்சார மார்க்கத்தில் அதர்மதோஷமுடையவர்களாய் இருப்பதால் அதாவது க்ரூர கர்மங்கள் செய்யும் புலி, சிங்கம் முத லிய யோனிகளில் எப்பொழுதும் சுழலச்செய்வேன். (தள்ளுவேன்) என்ற பதத்திற்கு(யோனிகளில்)என்ற பதத்துடன் சம்பந்தமுள்ளது.
आसुरीं योनिमापन्ना मूढा जन्मनि जन्मनि ।
मामप्राप्यैव कौन्तेय ततो यान्त्यधमां गतिम् ॥ २० ॥
ஆஸுரீம் யோநிமாபந்நா மூடா ஜன்மனி ஜன்மனி ।
மாமப்ராப்யைவ கெளந்தேயத்தோ யான்த்யதமாம் கதிம் ॥ 20 ॥
आसुरीं योनिम् आपन्नाः प्रतिपन्नाः मूढाः अविवेकिनः जन्मनि जन्मनि प्रतिजन्म तमोबहुलास्वेव योनिषु जायमानाः अधो गच्छन्तो मूढाः माम् ईश्वरम् अप्राप्य अनासाद्य एव हे कौन्तेय, ततः तस्मादपि यान्ति अधमां गतिं निकृष्टतमां गतिम् ।
ஹே கௌந்தேய! ஆஸுரீம் யோனியை அடைந்த அவிவே கிகள் ஒவ்வொரு பிறப்பிலும் தமஸானது பிரதானமாயுள்ள யோனிகளில் பிறந்து கீழ் ஜென்மங்களில் செல்லும் மூடர்கள் ஈஸ் வரனாகிய என்னை அடையாமல் அதைவிட கீழான கதியை அடைகிறார்கள்.
‘माम् अप्राप्यैव’ इति न मत्प्राप्तौ काचिदपि आशङ्का अस्ति, अतः मच्छिष्टसाधुमार्गम् अप्राप्य इत्यर्थः ॥ २० ॥
என்னையே அடையாமல் என்று கூறியதில் என்னை அடை யாமல் இருப்பதில் ஏதோ ஒரு சங்கை இருக்கிறது, ஆகையால் அதை (என்னால் உபதேசம் செய்யப்பட்ட) எனக்கு இஷ்ட்டமான நல்ல மார்க்கத்தை அடையாமல் என்பதாக பொருள் கொள்ள வேண்டும்.
सर्वस्या आसुर्याः सम्पदः सङ्क्षेपः अयम् उच्यते, यस्मिन् त्रिविधे सर्वः आसुरीसम्पद्भेदः अनन्तोऽपि अन्तर्भवति । यत्परिहारेण परिहृतश्च भवति, यत् मूलं सर्वस्य अनर्थस्य, तत् एतत् उच्यते —
இந்த ஆஸுர சம்பத்தின் தன்மைகளை இப்பொழுது சுருக்க மாகக் கூறுகிறார். இந்த மூன்று விதமாக உள்ள (காமாதி) தோஷங்க ளில் அசுர சம்பத் பேதங்கள் முடிவில்லாமல் இருந்தாலும் உள் அடங்குகிறது. அந்த மூன்று தோஷங்களை நீக்குவதால் மற்றவை களும் நீங்கிவிடும். இந்த அனர்த்தங்களுக்கு எது காரணமோ அதைக் கூறுகிறார்-
त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मनः ।
कामः क्रोधस्तथा लोभस्तस्मादेतत्त्रयं त्यजेत् ॥ २१ ॥
த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசநமாத்மன: ।
காம: க்ரோதஸ்ததா லோபஸ்தஸ்மாதேதத்த்ரயம் த்யஜேத் ॥ 21 ॥
त्रिविधं त्रिप्रकारं नरकस्य प्राप्तौ इदं द्वारं नाशनम् आत्मनः, यत् द्वारं प्रविशन्नेव नश्यति आत्मा ; कस्मैचित् पुरुषार्थाय योग्यो न भवति इत्येतत् , अतः उच्यते ‘द्वारं नाशनमात्मनः’ इति ।
இந்த மூன்று (ஜீவா) ஆத்மாவின் நாசத்திற்குக் காரணமாகும். அவை மூன்றும் நரகத்தை அடைவதற்கான வாயிலாகும். இதில் நுழைந்த மாத்திரத்திலேயே ஆத்மா நசிந்து விடுகிறது. இவை எந்த ஒரு புருஷார்த்தத்திற்கும் யோக்கியமற்றது. ஆகையால் இவை மூன்றும் (ஜீவா) ஆத்மாவை நாசம் செய்யும் வாயிலாகும் என்று கூறப்படுகிறது.
किं तत् ? कामः क्रोधः तथा लोभः । तस्मात् एतत् त्रयं त्यजेत् । यतः एतत् द्वारं नाशनम् आत्मनः तस्मात् कामादित्रयमेतत् त्यजेत् त्यागस्तुतिरियम् ॥ २१ ॥
அவை எவையெனில் காமம், க்ரோதம், லோபமாகும். ஆகை யால் இவை மூன்றையும் விட்டுவிடு. எந்த இந்த வாயிலானது ஆத்மாவை நாசம் செய்வதாய் இருக்கிறதோ அதனால் இந்த காமம் முதலிய இந்த மூன்றையும் விடவேண்டும். இது த்யாகத் தின் ஸ்துதியாகும்.
एतैर्विमुक्तः कौन्तेय तमोद्वारैस्त्रिभिर्नरः ।
आचरत्यात्मनः श्रेयस्ततो याति परां गतिम् ॥ २२ ॥
ஏதைர்விமுக்த: கெளந்தேய தமோத்வாரைஸ்த்ரிபிர்நர: ।
ஆசரத்யாத்மன: ச்ரேயஸ்ததோ யாதி பராம் கதிம் ॥ 22 ॥
एतैः विमुक्तः कौन्तेय तमोद्वारैः तमसः नरकस्य दुःखमोहात्मकस्य द्वाराणि कामादयः तैः, एतैः त्रिभिः विमुक्तः नरः आचरति अनुतिष्ठति । किम् ? आत्मनः श्रेयः । यत्प्रतिबद्धः पूर्वं न आचचार, तदपगमात् आचरति । ततः तदाचरणात् याति परां गतिं मोक्षमपि इति ॥ २२ ॥
ஹே கௌந்தேய! எந்த காமம் முதலிய துக்கம் மற்றும் மோஹரூபமானது இருள்மயமான நரகத்திற்கு வாயிலாக இருக்கி றதோ இந்த மூன்று தீயகுணங்களை விட்ட மனிதன் சாதனை செய் கின்றான். எந்த சாதனத்தைச் செய்கிறான்? ஆத்மாவிற்கு நன்மை யைச் செய்யும் சாதனத்தைச் செய்கிறான். முன்பு எந்த காமாதிவசத்தால் எந்த நல்ல சாதனத்தைச் செய்யவில்லையோ, அதை நாசம் செய்வதின் பொருட்டு நல்ல சாதனத்தைக் கடைப்பி டிக்கின்றான். அதனால் மேலான மோக்ஷத்தை அடைகின்றான்.
सर्वस्य एतस्य आसुरीसम्पत्परिवर्जनस्य श्रेयआचरणस्य च शास्त्रं कारणम् । शास्त्रप्रमाणात् उभयं शक्यं कर्तुम् , न अन्यथा । अतः —
இந்த எல்லா அசுர சம்பத்துக்களை விடுவதற்கும், மோக்ஷ மார்க்கத்தைக் கடைப்பிடிப்பதற்கும் சாஸ்திரம் காரணமாகும், சாஸ்திர ப்ரமாணத்தால் மாத்திரமே இவ்விரண்டையும் செய்யமுடி யும். சாஸ்திரத்தைத் தவிர வேறு பிரமாணம் ஒன்றுமில்லை-
यः शास्त्रविधिमुत्सृज्य वर्तते कामकारतः ।
न स सिद्धिमवाप्नोति न सुखं न परां गतिम् ॥ २३ ॥
ய: சாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத: ।
ந ஸ ஸித்திமவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம் ॥ 23 ॥
यः शास्त्रविधिं शास्त्रं वेदः तस्य विधिं कर्तव्याकर्तव्यज्ञानकारणं विधिप्रतिषेधाख्यम् उत्सृज्य त्यक्त्वा वर्तते कामकारतः कामप्रयुक्तः सन् , न सः सिद्धिं पुरुषार्थयोग्यताम् अवाप्नोति, न अपि अस्मिन् लोके सुखं न अपि परां प्रकृष्टां गतिं स्वर्गं मोक्षं वा ॥ २३ ॥
செய்யவேண்டியது, செய்யக்கூடாதது என்பதின் ஞானத்திற் குக் காரணமான விதி நிஷேதங்களை உடைய சாஸ்திரத்தை விட்டு காயத்தினால் தூண்டப்பட்டு புருஷார்த்தத்திற்கு யோக்ய தையை அடையமாட்டான். இவ்வுலகத்தில் சுகத்தையோ அல்லது மேலான கதியாகிய ஸ்வர்க்கத்தையோ, மோக்ஷத்தையோ அடையமாட்டான்.
तस्माच्छास्त्रं प्रमाणं ते कार्याकार्यव्यवस्थितौ ।
ज्ञात्वा शास्त्रविधानोक्तं कर्म कर्तुमिहार्हसि ॥ २४ ॥
தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்யவ்யவஸ்திதௌ ।
ஞாத்வா சாஸ்த்ரவிதானோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி ॥ 24 ॥
तस्मात् शास्त्रं प्रमाणं ज्ञानसाधनं ते तव कार्याकार्यव्यवस्थितौ कर्तव्याकर्तव्यव्यवस्थायाम् । अतः ज्ञात्वा बुद्ध्वा शास्त्रविधानोक्तं विधिः विधानं शास्त्रमेव विधानं शास्त्रविधानम् ‘कुर्यात् , न कुर्यात्’ इत्येवंलक्षणम् , तेन उक्तं स्वकर्म यत् तत् कर्तुम् इह अर्हसि, इह इति कर्माधिकारभूमिप्रदर्शनार्थम् इति ॥ २४ ॥
எவ்வகையானாலும் செய்யவேண்டியது, செய்யக்கூடாதது என்பதில் சாஸ்திரமே பிரமாணம். அதுவே ஞானத்தை அடைவ தற்கான சாதனமாகும். ஆகையால் சாஸ்திர விதானத்தில் கூறியபடி எது செய்யலாம், எது செய்யக்கூடாது என்ற லக்ஷ ணத்தை அறிந்து செய்யவேண்டும். அந்த லக்ஷணத்தில் கூறியபடி உன்னுடைய சுயகர்மா எதுவோ அதைச் செய்வதற்கு இங்கு அரு கதை உள்ளவனாய் இருக்கிறாய். இஹ- இங்கு என்றது பூமியில் தான் கர்மத்தில் அதிகாரம் உள்ளது என்பதைக் காட்டுவதற்காகக் கூறப்பட்டது.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये षोडशोऽध्यायः ॥
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே தைவாஸுரஸம்பத்விபாகயோகோ நாம் ஷோடசோத்யாய: