द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

श्रीमद्भगवद्गीताभाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

ஶ்ரீமத்பகவத்கீதாபாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

‘तस्माच्छास्त्रं प्रमाणं ते’ (भ. गी. १६ । २४) इति भगवद्वाक्यात् लब्धप्रश्नबीजः अर्जुन उवाच —
(தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே) என்றபகவானுடைய வச னத்தால் வினாவிற்கான பீஜம் (காரணம்) கிடைத்த -
अर्जुन उवाच —
அர்ஜுனன் வினவினான்.
ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विताः ।
तेषां निष्ठा तु का कृष्ण सत्त्वमाहो रजस्तमः ॥ १ ॥
யே சாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய யஜந்தே ச்ரத்தயான்விதா: ।
தேஷாம் நிஷ்டா து கா க்ருஷ்ண ஸத்வமாஹோ ரஜஸ்தம: ॥ 1 ॥
ये केचित् अविशेषिताः शास्त्रविधिं शास्त्रविधानं श्रुतिस्मृतिशास्त्रचोदनाम् उत्सृज्य परित्यज्य यजन्ते देवादीन् पूजयन्ति श्रद्धया अन्विताः श्रद्धया आस्तिक्यबुद्ध्या अन्विताः संयुक्ताः सन्तः।
ஏதோ ஒரு சிலர் சாதாரண மனிதர்கள் சாஸ்திர விதானம் அதாவது சுருதி, ஸ்மிருதி ஆகிய சாஸ்திரங்களில் உள்ள கட்ட ளைகளை விட்டுவிட்டு தேவாதிகளை ஆஸ்திக்ய புத்தியுடன் அதாவது சிரத்தையுடன் பூஜிக்கிறார்கள்.
श्रुतिलक्षणं स्मृतिलक्षणं वा कञ्चित् शास्त्रविधिम् अपश्यन्तः वृद्धव्यवहारदर्शनादेव श्रद्दधानतया ये देवादीन् पूजयन्ति, ते इह ‘ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विताः’ इत्येवं गृह्यन्ते । ये पुनः कञ्चित् शास्त्रविधिं उपलभमाना एव तम् उत्सृज्य अयथाविधि देवादीन् पूजयन्ति, ते इह ‘ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते’ इति न परिगृह्यन्ते ।
இங்கு (யே சாஸ்த்ர விதிமுத்ஸ்ருஜ்ய யஜந்தே ச்ரத்தயான்வி தா) என்று கூறி இருப்பதால் சுருதியில் கூறப்பட்ட லக்ஷணங்களை யோ, ஸ்ம்ருதியில் கூறப்பட்ட லக்ஷணங்களையோ அறியாமல் பெரியோர்களுடைய நல்ஒழுக்கத்தையே உதாரணமாகக் கொண்டு சிரத்தையுடன் தேவாதி பூஜை செய்கின்றார்களோ அவைகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் எந்த மனிதர்கள் கொஞ்சம் சாஸ்திர விதி அறிந்திருந்தாலும் அதை விட்டுவிட்டு விதியற்று தேவதாதிகளை பூஜை செய்கிறார்களோ அவர்களை இங்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
कस्मात् ?
எதனால்?
श्रद्धया अन्वितत्वविशेषणात् । देवादिपूजाविधिपरं किञ्चित् शास्त्रं पश्यन्त एव तत् उत्सृज्य अश्रद्दधानतया तद्विहितायां देवादिपूजायां श्रद्धया अन्विताः प्रवर्तन्ते इति न शक्यं कल्पयितुं यस्मात् , तस्मात् पूर्वोक्ता एव ‘ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विताः’ इत्यत्र गृह्यन्ते ।
சிரத்தையுடன் (பூஜை செய்கிறார்கள்) என்று விசேஷணம் சொல்லப்பட்டிருப்பதால். தேவர்கள் முதலியோரை எவ்வாறு பூஜிப்பது என்றவிதியுடன் கூடிய சாஸ்திரத்தை சிறிதேனும் அறிந்தே அதில் சிரத்தை அற்று சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட தேவாதி பூஜையை சிரத்தையுடன் செய்கிறார்கள் என்று கல்பிக்க முடியாது என்பது எதனாலோ அதனால் முன்பு கூறப்பட்டதை "யே சாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய யஜந்தே ச்ரத்தயான்விதா (எவர்கள் சாஸ்திர விதியை விட்டு சிரத்தையுடன் பூஜிக்கிறார் களோ) என்று இங்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
तेषाम् एवंभूतानां निष्ठा तु का कृष्ण सत्त्वम् आहो रजः तमः, किं सत्त्वं निष्ठा अवस्थानम् , आहोस्वित् रजः, अथवा तमः इति । एतत् उक्तं भवति — या तेषां देवादिविषया पूजा, सा किं सात्त्विकी, आहोस्वित् राजसी, उत तामसी इति ॥ १ ॥
ஹே கிருஷ்ண! இப்படிப்பட்டவர்களுடைய நிஷ்ட்டை என்ன? அந்த நிஷ்ட்டை சத்துவமா? ரஜஸா? அல்லது தமஸா? அவர்களுடைய தேவதாதி விஷயமான பூஜையானது ஸாத்வீகமா? ராஜஸமா? அல்லது தாமஸமா? என்று எது கூறப்பட்டதாகிறது.
सामान्यविषयः अयं प्रश्नः न अप्रविभज्यं प्रतिवचनम् अर्हतीति श्रीभगवानुवाच —
இந்த வினாவானது சாமான்ய (மனிதர்களுக்கான) விஷயமாகும். ஆகையால் இதைப் பிரிக்காமல் பதில் கூறுவது பொருத்தமல்ல என்று.
त्रिविधा भवति श्रद्धा देहिनां सा स्वभावजा ।
सात्त्विकी राजसी चैव तामसी चेति तां शृणु ॥ २ ॥
த்ரிவிதா பவதி ச்ரத்தா தேஹினாம் ஸா ஸ்வபாவஜா ।
ஸாத்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ச்ருணு ॥ 2 ॥
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச-
त्रिविधा त्रिप्रकारा भवति श्रद्धा, यस्यां निष्ठायां त्वं पृच्छसि, देहिनां शरीरिणां सा स्वभावजा ; जन्मान्तरकृतः धर्मादिसंस्कारः मरणकाले अभिव्यक्तः स्वभावः उच्यते, ततो जाता स्वभावजा । सात्त्विकी सत्त्वनिर्वृत्ता देवपूजादिविषया ; राजसी रजोनिर्वृत्ता यक्षरक्षःपूजादिविषया ; तामसी तमोनिर्वृत्ता प्रेतपिशाचादिपूजाविषया ; एवं त्रिविधां ताम् उच्यमानां श्रद्धां शृणु अवधारय ॥ २ ॥
சிரத்தையானது மூன்று விதமாகும். எந்த சிரத்தையைப் பற்றி (நிஷ்ட்டையைப் பற்றி) நீ கேட்டாயோ அது முன் ஜன்மத்தில் செய்த தர்மம் முதலியவற்றின் சம்ஸ்காரமானது (வாசனை) மரணகா லத்தில் வெளிப்படுவது ஸ்வபாவம் எனப்படுகிறது. அந்த ஸ்வபா வத்திலிருந்து உண்டாவது ஸ்வபாவஜா. சத்துவகுணத்தினால் உண் டான தேவதாதி விஷயங்களில் உண்டாகும் சிரத்தை சாத்விகீ எனப்படும். ரஜோ குணத்தினால் உண்டான யக்ஷர்கள், ராக்ஷஸர் கள் முதலியோருடைய பூஜா விஷயத்தில் ஏற்படும் சிரத்தை ராஜசீ எனப்படும். தமோ குணத்தினால் உண்டான ப்ரேதம், பிசாசு முத லிய பூஜைகளிடத்தில் உண்டாகும் சிரத்தை தாமசீ ஆகும். இனி சிரத்தையைப் பற்றி மூன்று விதமாகக் கூறப்போவதைக் கேள்.
सा इयं त्रिविधा भवति —
அந்த சிரத்தை மூன்று விதமாகும்.
सत्त्वानुरूपा सर्वस्य श्रद्धा भवति भारत ।
श्रद्धामयोऽयं पुरुषो यो यच्छ्रद्धः स एव सः ॥ ३ ॥
ஸத்வானுரூபா ஸர்வஸ்ய ச்ரத்தா பவதி பாரத ।
ச்ரத்தாமயோஅயம் புருஷோ யோ யச்ச்ரத்த: ஸ ஏவ ஸ: ॥ 3 ॥
सत्त्वानुरूपा विशिष्टसंस्कारोपेतान्तःकरणानुरूपा सर्वस्य प्राणिजातस्य श्रद्धा भवति भारत ।
ஹே பாரத! எல்லாப் பிராணிகளுடைய சிரத்தையும் வெவ் வேறு வாசனைகளுடன் கூடிய அந்தக்கரணத்திற்கு தக்கவாறு அமைகிறது.
यदि एवं ततः किं स्यादिति, उच्यते —
இவ்வாறு இருப்பதால் என்ன ஏற்படும் என்பதைக் கூறுகிறார்-
श्रद्धामयः अयं श्रद्धाप्रायः पुरुषः संसारी जीवः । कथम् ? यः यच्छ्रद्धः या श्रद्धा यस्य जीवस्य सः यच्छ्रद्धः स एव तच्छ्रद्धानुरूप एव सः जीवः ॥ ३ ॥
சம்சாரத்தில் உழலும் ஜீவன் சிரத்தாமயன். அதாவது சிரத்தை உள்ளவன். எவ்வாறு? எனில் எந்த சிரத்தை எந்த ஜீவனுக்கு உள் ளதோ அந்த சிரத்தை எவ்வாறு உள்ளதோ அவ்வாறே அந்த ஜீவன் இருக்கிறான்.
ततश्च कार्येण लिङ्गेन देवादिपूजया सत्त्वादिनिष्ठा अनुमेया इत्याह —
ஆகையால் தேவாதி பூஜையாகிய காரியமாகிய லிங்கத்தி னால் சாத்வீக முதலிய நிஷ்ட்டையை அதாவது சிரத்தையை அனுமானிக்க வேண்டும் என்று கூறுகிறார்.
यजन्ते सात्त्विका देवान्यक्षरक्षांसि राजसाः ।
प्रेतान्भूतगणांश्चान्ये यजन्ते तामसा जनाः ॥ ४ ॥
யஜந்தே ஸாத்விகா தேவான்யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா: ।
ப்ரேதான்பூதகணாம்ச்சான்யே யஜந்தே தாமஸா ஜனா: ॥ 4 ॥
यजन्ते पूजयन्ति सात्त्विकाः सत्त्वनिष्ठाः देवान् , यक्षरक्षांसि राजसाः, प्रेतान् भूतगणांश्च सप्तमातृकादींश्च अन्ये यजन्ते तामसाः जनाः ॥ ४ ॥
சாத்வீக நிஷ்ட்டை உடையவர்கள் தேவதாதி பூஜை செய்கி றார்கள். ராஜசீ புருஷர்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள் இவர்களை பூஜை செய்கிறார்கள். அவ்வாறேதாமசீ புருஷர்கள் பிரேதங்களை யும், சப்தமாத்ருக்களாகிய பூதகணங்களையும் பூஜை செய்கிறார்கள்.
एवं कार्यतो निर्णीताः सत्त्वादिनिष्ठाः शास्त्रविध्युत्सर्गे । तत्र कश्चिदेव सहस्रेषु देवपूजादिपरः सत्त्वनिष्ठो भवति, बाहुल्येन तु रजोनिष्ठाः तमोनिष्ठाश्चैव प्राणिनो भवन्ति । कथम् ? —
இவ்வாறு சத்துவாதி நிஷ்ட்டைகள் (சிரத்தைகள்) காரியத்தை வைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. ஆயிரம் மனிதர்களுள் ஒரு வன் சாஸ்த்ர விதியை விட்டாலும் தேவதாதி பூஜைகளை செய்தவ னாய் சாத்வீக சிரத்தை (நிஷ்ட்டை) உடையவனாய் இருக்கிறான். மனிதர்கள் அதிகமாக ராஜசீ, தாமசீ, நிஷ்ட்டை(சிரத்தை) உடைய வர்களாய் இருக்கிறார்கள்-
अशास्त्रविहितं घोरं तप्यन्ते ये तपो जनाः ।
दम्भाहङ्कारसंयुक्ताः कामरागबलान्विताः ॥ ५ ॥
அசாஸ்த்ரவிஹிதம் கோரம் தப்யந்தே யே தபோ ஜனா: ।
தம்பாஹங்காரஸம்யுக்தா: காமராகபலான்விதா: ॥ 5 ॥
अशास्त्रविहितं न शास्त्रविहितम् अशास्त्रविहितं घोरं पीडाकरं प्राणिनाम् आत्मनश्च तपः तप्यन्ते निर्वर्तयन्ति ये जनाः ते च दम्भाहङ्कारसंयुक्ताः, दम्भश्च अहङ्कारश्च दम्भाहङ्कारौ, ताभ्यां संयुक्ताः दम्भाहङ्कारसंयुक्ताः, कामरागबलान्विताः कामश्च रागश्च कामरागौ तत्कृतं बलं कामरागबलं तेन अन्विताः कामरागबलान्विताः ॥ ५ ॥
சாஸ்திரத்தில் விதிக்கப்படாதது அசாஸ்த்ர விஹிதம் எனப்படும்.அந்த அசாஸ்திரத்தில் மற்ற பிராணிகளையும், தன்னை யும் துன்புறுத்துகின்ற தபஸ் செய்கின்றவர்கள் தம்பம், அஹங்கா ரத்துடன் கூடியவர்களாயும், அவ்வாறே காமம், ராகம் இவைகளி னால் ஏற்பட்ட பலத்துடன் கூடியவர்களாயும் அல்லது காமம், ராகம் இவைகளுடன் கூடியவர்களாயும் இருக்கிறார்கள்.
कर्शयन्तः शरीरस्थं भूतग्राममचेतसः ।
मां चैवान्तःशरीरस्थं तान्विद्ध्यासुरनिश्चयान् ॥ ६ ॥
கர்சயந்த: சரீரஸ்தம் பூதக்ராமமசேதஸ: ।
மாம் சைவாந்த: சரீரஸ்தம் தான்வித்த்யாஸுரநிச்சயான் ॥ 6 ॥
कर्शयन्तः कृशीकुर्वन्तः शरीरस्थं भूतग्रामं करणसमुदायम् अचेतसः अविवेकिनः मां चैव तत्कर्मबुद्धिसाक्षिभूतम् अन्तःशरीरस्थं नारायणं कर्शयन्तः, मदनुशासनाकरणमेव मत्कर्शनम् , तान् विद्धि आसुरनिश्चयान् आसुरो निश्चयो येषां ते आसुरनिश्चयाः तान् परिहरणार्थं विद्धि इति उपदेशः ॥ ६ ॥
அவிவேகி புருஷர்கள் சரீரத்தில் உள்ள இந்திரிய முதலிய கர ணரூபமாக பரிணாமம் அடைந்த பூதக்கூட்டத்தையும், அவ்வாறே சரீரத்தினுள் கர்மங்களுக்கும் புத்திக்கும் சாக்ஷியாய் அந்த ராத்மரூபமாய் உள்ள ஈஸ்வரனாக உள்ள என்னையும் மெலிவ டையச் செய்கிறார்கள். என்னுடைய கட்டளையை மீறுதலே (செய் யாமல் இருத்தலே) என்னை மெலியச் செய்வதாகும். இவ்வாறு என்னை மெலிய செய்பவர்களாகிய அவர்களுக்கு ஆஸுரமா னது நிச்சயம் உண்டாகும். அதை பரிஹாரம் செய்வதற்காக அதை அறிவாய் என்பது உபதேசம்.
आहाराणां च रस्यस्निग्धादिवर्गत्रयरूपेण भिन्नानां यथाक्रमं सात्त्विकराजसतामसपुरुषप्रियत्वदर्शनम् इह क्रियते रस्यस्निग्धादिषु आहारविशेषेषु आत्मनः प्रीत्यतिरेकेण लिङ्गेन सात्त्विकत्वं राजसत्वं तामसत्वं च बुद्ध्वा रजस्तमोलिङ्गानाम् आहाराणां परिवर्जनार्थं सत्त्वलिङ्गानां च उपादानार्थम् । तथा यज्ञादीनामपि सत्त्वादिगुणभेदेन त्रिविधत्वप्रतिपादनम् इह ‘राजसतामसान् बुद्ध्वा कथं नु नाम परित्यजेत् , सात्त्विकानेव अनुतिष्ठेत्’ इत्येवमर्थम् । आह —
சுவை, நெய் முதலிய ஆஹாரங்களில் தனக்கு எதில் அதிக பிரியம் உள்ளதோ அதை லக்ஷணமாகக் (லிங்கமாகக்) கொண்டு தனக்கு சாத்வீகமா? ராஜசமா? தாமசமா? எது உள்ளது என்று அறிந்து ராஜச, தாமச லிங்கங்கள் உள்ள ஆஹாரத்தைத் தவிர்த்து சாத்வீக லிங்கமுள்ள ஆகாரத்தைக் கொள்ளுவதற்காகவும் இங்கு சுவை, நெய் முதலியவைகள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்ட ஆஹாரங்களில் முறையாக சாத்வீக, ராஜச மேலும் தாமஸ புருஷர்களுடைய தனித்தன்மையான விருப்பத்தைக் காண்பிக் கப்படுகிறது. அவ்வாறே சாத்வீக முதலிய குணங்களின் பேதங்களினால் யக்ஞம் முதலியவைகளின் பேதங்களும் கூறப்பட்டது. ஏன் எனில் ராஜச, தாமஸ யக்ஞாதிகளை அறிந்து எவ்வாறு அதை மனிதர்கள் தவிர்ப்பது என்று அறிந்து சாத்வீக யக்ஞாதிகளையே செய்யவேண்டும் என்பது இதன் பொருள்.
आहारस्त्वपि सर्वस्य त्रिविधो भवति प्रियः ।
यज्ञस्तपस्तथा दानं तेषां भेदमिमं शृणु ॥ ७ ॥
ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ பவதி ப்ரிய: ।
யக்ஞஸ்தபஸ்ததா தானம் தேஷாம் பேதமிமம் ச்ருணு ॥ 7 ॥
आहारस्त्वपि सर्वस्य भोक्तुः प्राणिनः त्रिविधो भवति प्रियः इष्टः, तथा यज्ञः, तथा तपः, तथा दानम् । तेषाम् आहारादीनां भेदम् इमं वक्ष्यमाणं शृणु ॥ ७ ॥
போஜனம் செய்யும் எல்லோருக்கும் மூன்று விதமான ஆஹாரம் பிரியமானதாயும், சுவை உள்ளதாயும் ஆகிறது. அவ் வாறே யக்ஞம், தபஸ், தானம். (மும்மூன்று விதமாக இருக்கிறது) இனி கூறப்போகும் இந்த ஆஹாராதிகளின் அறியவேண்டிய பேதங்களைக் கேள்.
आयुःसत्त्वबलारोग्यसुखप्रीतिविवर्धनाः ।
रस्याः स्निग्धाः स्थिरा हृद्या आहाराः सात्त्विकप्रियाः ॥ ८ ॥
ஆயு: ஸத்வபலாரோக்யஸுகப்ரீதிவிவர்தனா: ।
ரஸ்யா: ஸ்நிக்தா: ஸ்திரா ஹ்ருத்யா ஆஹாரா: ஸாத்விகப்ரியா: ॥ 8 ॥
आयुश्च सत्त्वं च बलं च आरोग्यं च सुखं च प्रीतिश्च आयुःसत्त्वबलारोग्यसुखप्रीतयः तासां विवर्धनाः आयुःसत्त्वबलारोग्यसुखप्रीतिविवर्धनाः, ते च रस्याः रसोपेताः, स्निग्धाः स्नेहवन्तः, स्थिराः चिरकालस्थायिनः देहे, हृद्याः हृदयप्रियाः आहाराः सात्त्विकप्रियाः सात्त्विकस्य इष्टाः ॥ ८ ॥
ஆயுள், புத்தி, பலம், ஆரோக்கியம், சுகம், பிரியமானது இவை எல்லாம் மேலும் மேலும் வளர்வதற்கானதும், அவ்வாறே சுவையும், நெய்யும் சரீரத்தில் அநேக காலம் இருக்கக்கூடியதும், மனதிற்கு பிடித்தமானதுமான ஆஹாரம் சாத்வீக புருஷர் களுக்குப் பிடித்தமானது.
कट्वम्ललवणात्युष्णतीक्ष्णरूक्षविदाहिनः ।
आहारा राजसस्येष्टा दुःखशोकामयप्रदाः ॥ ९ ॥
கட்வம்லலவணாத்யுஷ்ணbஷ்ணரூக்ஷவிதாஹின: ।
ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து:கசோகாமயப்ரதா: ॥ 9 ॥
कट्वम्ललवणात्युष्णतीक्ष्णरूक्षविदाहिनः इत्यत्र अतिशब्दः कट्वादिषु सर्वत्र योज्यः, अतिकटुः अतितीक्ष्णः इत्येवम् । कटुश्च अम्लश्च लवणश्च अत्युष्णश्च तीक्ष्णश्च रूक्षश्च विदाही च ते आहाराः राजसस्य इष्टाः, दुःखशोकामयप्रदाः दुःखं च शोकं च आमयं च प्रयच्छन्तीति दुःखशोकामयप्रदाः ॥ ९ ॥
கசப்பாய் உள்ளதும், புளிப்பாய் உள்ளதும், உப்பாய் உள்ளதும் மிகச்சூடாய் உள்ளதும், மிகவும் காரமாய் உள்ளதும் மேலும் வறட்சியாகவும் உஷ்ணத்தை அளிப்பதாயும் வருத்தம், கவலை, வியாதி இவைகளை உண்டாக்குவதாயும் உள்ள ஆஹாரம் ராஜசனுக்குப் பிரியமானது.
यातयामं गतरसं पूति पर्युषितं च यत् ।
उच्छिष्टमपि चामेध्यं भोजनं तामसप्रियम् ॥ १० ॥
யாதயாமம் கதரஸம் பூதி பர்யுஷிதம் சயத் ।
உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜனம் தாமஸப்ரியம் ॥ 10 ॥
यातयामं मन्दपक्वम् , निर्वीर्यस्य गतरसशब्देन उक्तत्वात् । गतरसं रसवियुक्तम् , पूति दुर्गन्धि, पर्युषितं च पक्वं सत् रात्र्यन्तरितं च यत् , उच्छिष्टमपि भुक्तशिष्टम् उच्छिष्टम् , अमेध्यम् अयज्ञार्हम् , भोजनम् ईदृशं तामसप्रियम् ॥ १० ॥
நன்றாக சமைக்கப்படாத, சுவையும் சத்தும் அற்றதாயும், ஒரு ராத்திரி சென்றதால் கெட்டுப்போய், கெட்ட வாசனை உடையதா யும், அவ்வாறேஎச்சில்பட்டதாயும், யக்ஞத்திற்கு உபயோகப்படா ததும் ஆன ஆஹாரம் தாமசர்களுக்கு பிரியமானது ஆகும்.
अथ इदानीं यज्ञः त्रिविधः उच्यते —
பிறகு இப்பொழுது மூன்று விதமான யக்ஞம் கூறப்படுகிறது.
अफलाकाङ्क्षिभिर्यज्ञो विधिदृष्टो य इज्यते ।
यष्टव्यमेवेति मनः समाधाय स सात्त्विकः ॥ ११ ॥
அபலாகாங்க்ஷி பிர்யக்ஞோ விதித்ருஷ்டோய இஜ்யதே ।
யஷ்டவ்யமேவேதி மன: ஸமாதாய ஸ ஸாத்விக: ॥ 11 ॥
अफलाकाङ्क्षिभिः अफलार्थिभिः यज्ञः विधिदृष्टः शास्त्रचोदनादृष्टो यः यज्ञः इज्यते निर्वर्त्यते, यष्टव्यमेवेति यज्ञस्वरूपनिर्वर्तनमेव कार्यम् इति मनः समाधाय, न अनेन पुरुषार्थो मम कर्तव्यः इत्येवं निश्चित्य, सः सात्त्विकः यज्ञः उच्यते ॥ ११ ॥
பலத்தில் ஆசையற்று சாஸ்த்ர விதிப்படி எவன் யக்ஞத்தைச் செய்கிறானோ அவன் யக்ஞஸ்வரூபத்தைக் கடைபிடிப்பதே என் னுடைய முக்கியமான காரியம் (கடமை) என்று மனதை ஒருநி லைப்படுத்தி புருஷார்த்தத்திற்காக நான் யக்ஞம் செய்யவேண்டிய தில்லை என்று நிச்சயம் செய்து யக்ஞம் செய்வது சாத்வீக யக்ஞமாகும்.
अभिसन्धाय तु फलं दम्भार्थमपि चैव यत् ।
इज्यते भरतश्रेष्ठ तं यज्ञं विद्धि राजसम् ॥ १२ ॥
அபிஸந்தாய து பலம் தம்பார்தமபி சைவ யத் ।
இஜ்யதே பரதச்ரேஷ்ட தம் யக்ஞம் வித்தி ராஜஸம் ॥ 12 ॥
अभिसन्धाय तु उद्दिश्य फलं दम्भार्थमपि चैव यत् इज्यते भरतश्रेष्ठ तं यज्ञं विद्धि राजसम् ॥ १२ ॥
பலனை எதிர்பார்த்து தற்பெருமையின் பொருட்டு எந்த யக்ஞம் செய்யப்படுகிறதோ அது ஹே பரதச்ரேஷ்ட! அது ராஜசயக்ஞமாகும்.
विधिहीनमसृष्टान्नं मन्त्रहीनमदक्षिणम् ।
श्रद्धाविरहितं यज्ञं तामसं परिचक्षते ॥ १३ ॥
விதிஹீனமஸ்ருஷ்டான்னம் மந்த்ரஹீனதக்ஷி ணம் ।
ச்ரத்தாவிரஹிதம் யக்ஞம் தாமஸம் பரிசக்ஷதே ॥ 13 ॥
विधिहीनं यथाचोदितविपरीतम् , असृष्टान्नं ब्राह्मणेभ्यो न सृष्टं न दत्तम् अन्नं यस्मिन् यज्ञे सः असृष्टान्नः तम् असृष्टान्नम् , मन्त्रहीनं मन्त्रतः स्वरतो वर्णतो वा वियुक्तं मन्त्रहीनम् , अदक्षिणम् उक्तदक्षिणारहितम् , श्रद्धाविरहितं यज्ञं तामसं परिचक्षते तमोनिर्वृत्तं कथयन्ति ॥ १३ ॥
எந்த யக்ஞமானது சாஸ்திரத்தில் விதிக்கப்படாத, அதற்கு விரோதமானதாயும் பிராஹ்மணர்களுக்கு போஜனம் அளிக்கப்படா மலும், மந்திரம், ஸ்வரம், எழுத்துக்கள் இவைகளின் குறைபாடுடைய தாகவும் கூறியபடி கொடுக்கவேண்டிய தக்ஷிணையைக் கொடுக்கா மல் செய்யப்பட்டதாயும் உள்ளதோ அது தாமச யக்ஞமாகும்.
अथ इदानीं तपः त्रिविधम् उच्यते —
இப்பொழுது தபஸ் மூன்று விதமாக கூறப்படுகிறது.
देवद्विजगुरुप्राज्ञपूजनं शौचमार्जवम् ।
ब्रह्मचर्यमहिंसा च शारीरं तप उच्यते ॥ १४ ॥
தேவத்விஜகுருப்ராக்ஞபூஜனம் சௌசமார்ஜவம் ।
ப்ரஹ்மசர்யமஹிம்ஸா ச சாரீரம் தப உச்யதே ॥ 14 ॥
देवाश्च द्विजाश्च गुरवश्च प्राज्ञाश्च देवद्विजगुरुप्राज्ञाः तेषां पूजनं देवद्विजगुरुप्राज्ञपूजनम् , शौचम् , आर्जवम् ऋजुत्वम् , ब्रह्मचर्यम् अहिंसा च शरीरनिर्वर्त्यं शारीरं शरीरप्रधानैः सर्वैरेव कार्यकरणैः कर्त्रादिभिः साध्यं शारीरं तपः उच्यते । ‘पञ्चैते तस्य हेतवः’ (भ. गी. १८ । १५) इति हि वक्ष्यति ॥ १४ ॥
தேவர்கள், பிராஹ்மணர்கள், ஆசார்யார்கள், ஞானிகள் இவர்களை பூஜித்தல், பரிசுத்தமாய் இருத்தல், நேர்மையாய் இருத்தல், பிரஹ்மச்சர்யத்தைக் கடைபிடித்தல், அஹிம்சை இவைகள் சரீரத்தால் செய்யப்பட வேண்டியவை. சரீரத்தால் முக்யமாக வைத்துச் செய்யப்படும் எல்லாக் காரியங்களும், காரிய கரணங்களுடன் கூடிய (சரீரம், இந்திரியங்கள் இவைகளுடன் கூடிய) கர்த்தாக்களினால் சாதிக்கத்தகுந்தது தபஸ் எனப்படும். (பஞ்சை தே தஸ்ய ஹே தவ:) அதற்கு இந்த ஐந்தும் காரணமாகும் என்று இனி கூறப்போகிறார்.
अनुद्वेगकरं वाक्यं सत्यं प्रियहितं च यत् ।
स्वाध्यायाभ्यसनं चैव वाङ्मयं तप उच्यते ॥ १५ ॥
அனுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத் ।
ஸ்வாத்யாயாப்யஸனம் சைவ வாங்மயம் தப உச்யதே ॥ 15 ॥
अनुद्वेगकरं प्राणिनाम् अदुःखकरं वाक्यं सत्यं प्रियहितं च यत् प्रियहिते दृष्टादृष्टार्थे । अनुद्वेगकरत्वादिभिः धर्मैः वाक्यं विशेष्यते । विशेषणधर्मसमुच्चयार्थः च—शब्दः । परप्रत्ययार्थं प्रयुक्तस्य वाक्यस्य सत्यप्रियहितानुद्वेगकरत्वानाम् अन्यतमेन द्वाभ्यां त्रिभिर्वा हीनता स्याद्यदि, न तद्वाङ्मयं तपः ।
வாக்கானது எந்த ஒரு பிராணியையும் (கலக்கம்) துக்கம் செய் யக்கூடாது. (அனுத்வேகம்) அவ்வாறேஎதிரிலும் மறைமுகமாக வும் கூறும் வாக்கியங்கள் உண்மையானதாயும், பிரியமானதாயும், ஒருவருக்கு ஹிதத்தை அளிப்பதாயும் இருக்கவேண்டும். இங்கு அனுத்வேகம் முதலிய தர்மங்கள் (லக்ஷணங்கள்) கூறப்பட்டது. சப்தமானது எல்லா லக்ஷணங்களையும் ஒன்றுபடுத்துவதற்காக என்று அறியவேண்டும். மற்றவர்களுக்கு அதில் உறுதி ஏற்படுத்து வதற்காக (அறியப்படுத்துவதற்காக) உண்மையானதாயும், பிரிய மானதாயும் ஹிதமானதாயும் ஒருவருக்கு கலக்கம் ஏற்படாத வார்த்தைகளில் ஒன்று, இரண்டு அல்லது மூன்றும் விட்டாலோ அது வாங்மய தபசாகாது.
तथा सत्यवाक्यस्य इतरेषाम् अन्यतमेन द्वाभ्यां त्रिभिर्वा विहीनतायां न वाङ्मयतपस्त्वम् । तथा प्रियवाक्यस्यापि इतरेषाम् अन्यतमेन द्वाभ्यां त्रिभिर्वा विहीनस्य न वाङ्मयतपस्त्वम् । तथा हितवाक्यस्यापि इतरेषाम् अन्यतमेन द्वाभ्यां त्रिभिर्वा विहीनस्य न वाङ्मयतपस्त्वम् ।
எவ்வாறு உண்மையான வாக்கானது எவ்வாறு மற்ற ஒன்றோ, இரண்டோ அல்லது மூன்றோ இல்லாமல் போனால் வாங்மய தபஸ் ஆகாதோ அவ்வாறேபிரிய வாக்கினாலும், மற்ற ஒன்றோ, இரண்டோ அல்லது மூன்றோ லக்ஷணங்கள் குறைந்தால் அது வாங்மய தபஸ் ஆகாது.அவ்வாறே ஹிதம் என்ற வார்த்தையிலும் மற்றஒன்றோ, இரண்டோ, அல்லது மூன்றோ இல்லாவிடில் வாங்மய தபஸ் ஆகாது.
किं पुनः तत् तपः ?
அவ்வாறு ஆனால் அந்த வாங்மய தபஸ் எது?
यत् सत्यं वाक्यम् अनुद्वेगकरं प्रियं हितं च, तत् तपः वाङ्मयम् ; यथा ‘शान्तो भव वत्स, स्वाध्यायं योगं च अनुतिष्ठ, तथा ते श्रेयो भविष्यति’ इति । स्वाध्यायाभ्यसनं चैव यथाविधि वाङ्मयं तपः उच्यते ॥ १५ ॥
எது சத்யமானதாயும், கலக்கத்தை உண்டுபண்ணாததாயும், ஒருவருக்கு ஹிதத்தைக் கொடுப்பதாயும் உள்ளதோ அந்த வாக்கே வாங்மய தபஸ் ஆகும். ஹே வத்ஸ! எவ்வாறு நீ சாந்த மாய் இரு. ஓதுதலையும், யோகத்தையும் உடையவனாய் இரு என்பது போல் அவைகள் நன்மையை உண்டாக்கும். எவ்வாறு சாஸ்தி ரத்தில் விதிக்கப்பட்டதோ அவ்வாறு ஓதுதலும், அப்யாசம் செய்த லும் வாங்மய தபஸ் ஆகும்.
मनःप्रसादः सौम्यत्वं मौनमात्मविनिग्रहः ।
भावसंशुद्धिरित्येतत्तपो मानसमुच्यते ॥ १६ ॥
மந: ப்ரஸாத: ஸெளம்யத்வம் மௌனமாத்மவிநிக்ரஹ: ।
பாவஸம்சுத்திரித்யேதத்தபோ மானஸமுச்யதே ॥ 16 ॥
मनःप्रसादः मनसः प्रशान्तिः, स्वच्छतापादनं प्रसादः, सौम्यत्वं यत् सौमनस्यम् आहुः — मुखादिप्रसादादिकार्योन्नेया अन्तःकरणस्य वृत्तिः । मौनं वाङ्‌नियमोऽपि मनःसंयमपूर्वको भवति इति कार्येण कारणम् उच्यते मनःसंयमो मौनमिति । आत्मविनिग्रहः मनोनिरोधः सर्वतः सामान्यरूपः आत्मविनिग्रहः, वाग्विषयस्यैव मनसः संयमः मौनम् इति विशेषः । भावसंशुद्धिः परैः व्यवहारकाले अमायावित्वं भावसंशुद्धिः । इत्येतत् तपः मानसम् उच्यते ॥ १६ ॥
மனசில் சாந்தியும் கலக்கமில்லாத சுத்தமான தன்மையை சம் பாதிப்பது மனபிரசாதமாகும். சௌமியத்துவம் உள்ளது நல்ல மனம் என்கிறோம். அந்த மனதின் ( அந்தக்கரணத்தின்) சுத்த விருத்தியானது முகத்தில் மலர்ச்சியை உண்டாக்கும். மௌனம் என்பது வாக்கை அடக்குவதாக இருந்தாலும் மனதை அடக்குவ தாலேயே ஏற்படுவதால் காரியம் கூறப்பட்டதால் காரணமும் கூறப் பட்டதாகிறது. மனம் அடக்குதலே மௌனம் என்று மனோ நிக்ர ஹம் என்பது சாதாரணமாக எப்பொழுதும் மனதை அடக்குதல் என்பதே. ஆனால் இங்கு வாக்கு விஷயத்தினுடைய மனதின் அடக்கமே மௌனம் என்று லக்ஷணம் கூறப்பட்டுள்ளது. பாவ சம் சுத்தி என்பது வியவஹார காலத்தில் கபடமில்லாமல் இருப்பது இவை மானச தபஸ் எனப்படுகிறது.
यथोक्तं कायिकं वाचिकं मानसं च तपः तप्तं नरैः सत्त्वादिगुणभेदेन कथं त्रिविधं भवतीति, उच्यते —
சரீரத்தாலும் வாக்காலும் மனதினாலும் செய்யப்ப டும் தபஸானது மனிதர்களால் கடைபிடிக்கப்பட்டபின் எவ்வாறு சத்துவ முதலிய குண பேதத்தால் மூன்று விதமாகிறது என்பதைக் கூறுகிறார்.
श्रद्धया परया तप्तं तपस्तत्त्रिविधं नरैः ।
अफलकाङ्क्षिभिर्युक्तैः सात्त्विकं परिचक्षते ॥ १७ ॥
ச்ரத்தயா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவிதம் நரை: ।
அபலாகாங்க்ஷி பிர்யுக்தை: ஸாத்விகம் பரிசக்ஷதே ॥ 17 ॥
श्रद्धया आस्तिक्यबुद्ध्या परया प्रकृष्टया तप्तम् अनुष्ठितं तपः तत् प्रकृतं त्रिविधं त्रिप्रकारं त्र्यधिष्ठानं नरैः अनुष्ठातृभिः अफलाकाङ्क्षिभिः फलाकाङ्क्षारहितैः युक्तैः समाहितैः — यत् ईदृशं तपः, तत् सात्त्विकं सत्त्वनिर्वृत्तं परिचक्षते कथयन्ति शिष्टाः ॥ १७ ॥
இந்த இடத்தில் எந்த விஷயமானது கூறப்படுகிறதோ அந்த மூன்று விதமான சரீரத்தாலும், வாக்கினாலும், மனதினாலும் செய் யப்பட்ட தபஸ் ஆனது பலத்தில் இச்சை அற்று மேலும் சமாஹித சித்தமுடைய புருஷர்களால் மிகுந்த சிரத்தையுடனும், ஆஸ்திக புத்தியுடனும் செய்யப்படுகிறதோ அது சாத்வீக தபஸ் என்று மேலான புருஷர்கள் கூறுகிறார்கள்.
सत्कारमानपूजार्थं तपो दम्भेन चैव यत् ।
क्रियते तदिह प्रोक्तं राजसं चलमध्रुवम् ॥ १८ ॥
ஸத்காரமானபூஜார்தம் தபோ தம்பேன சைவ யத் ।
க்ரியதே ததிஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்ருவம் ॥ 18 ॥
सत्कारः साधुकारः ‘साधुः अयं तपस्वी ब्राह्मणः’ इत्येवमर्थम् , मानो माननं प्रत्युत्थानाभिवादनादिः तदर्थम् , पूजा पादप्रक्षालनार्चनाशयितृत्वादिः तदर्थं च तपः सत्कारमानपूजार्थम् , दम्भेन चैव यत् क्रियते तपः तत् इह प्रोक्तं कथितं राजसं चलं कादाचित्कफलत्वेन अध्रुवम् ॥ १८ ॥
தன்னை உபசாரம் செய்வதற்காகவும், மதிப்புக்காகவும், தன்னை வணங்குதல் பொருட்டும் தபஸ் செய்தலாகும். உபசாரத் திற்காக செய்வது என்பது அவன் மிக நல்ல புருஷன், தபஸ்வீ, பிராஹ்மணன் என்று கூறுவதற்காக. அவ்வாறேமானத்திற்காக பூஜை செய்யப்படுவது, பிறர் தன்னைப் பார்த்தவுடன் இருக்கை யில் இருந்து எழுதல், வணங்குதல் முதலியவற்றிற்காகவும், பூஜைக்காக தபஸ் செய்வது என்பது பாதத்தை அலம்பி அர்ச் சனை செய்தல், விருந்து படைத்தல் என்பவைகளை எதிர்பார்த்த லாகும். இவ்வாறு இவைகளுக்காக செய்யப்படும் தவமாகும். அவ் வாறேதம்பத்தின் பொருட்டு (பெருமைக்காக) செய்யப்படும் தவ மும் ராஜசமாகும். அவ்வாறே நிச்சயமற்றபலனை உடையதாகை யால் நாசமுடையது என்றும் அநித்தியம் என்றும் கூறப்படுகிறது.
मूढग्राहेणात्मनो यत्पीडया क्रियते तपः ।
परस्योत्सादनार्थं वा तत्तामसमुदाहृतम् ॥ १९ ॥
மூடக்ராஹேணாத்மனோ யத்பீடயா க்ரியதே தப: ।
பரஸ்யோத்ஸாதநார்தம் வா தத்தாமஸமுதாஹ்ருதம் ॥ 19 ॥
मूढग्राहेण अविवेकनिश्चयेन आत्मनः पीडया यत् क्रियते तपः परस्य उत्सादनार्थं विनाशार्थं वा, तत् तामसं तपः उदाहृतम् ॥ १९ ॥
அவிவேகமான நிச்சயத்தால் தன்னை துன்புறுத்திக்கொண்டு செய்யப்படுகின்றதவமும், மற்றவர்களை நாசம் செய்வதற்காக செய்யும் தவமும் தாமஸ தவம் என்று கூறப்படுகிறது.
इदानीं दानत्रैविध्यम् उच्यते —
இப்பொழுது தானத்தின் பேதம் கூறப்படுகிறது.
दातव्यमिति यद्दानं दीयतेऽनुपकारिणे ।
देशे काले च पात्रे च तद्दानं सात्त्विकं स्मृतम् ॥ २० ॥
தாதவ்யமிதி யத்தானம் தீயதேஅனுபகாரிணே ।
தேசே காலே ச பாத்ரே ச தத்தானம் ஸாத்விகம் ஸ்ம்ருதம் ॥ 20 ॥
दातव्यमिति एवं मनः कृत्वा यत् दानं दीयते अनुपकारिणे प्रत्युपकारासमर्थाय, समर्थायापि निरपेक्षं दीयते, देशे पुण्ये कुरुक्षेत्रादौ, काले सङ्क्रान्त्यादौ, पात्रे च षडङ्गविद्वेदपारग इत्यादौ, तत् दानं सात्त्विकं स्मृतम् ॥ २० ॥
எவனுக்கு தானம் கொடுப்பது உசிதம் (பொருத்தம்) என்று மனதில் விசாரித்து திரும்பவும் கொடுப்பதற்கு சக்தியற்றவனுக்கு ஒன்றும் எதிர்பாராமல் புண்ய க்ஷேத்திரங்களாகிய குருக்ஷேத்தி ரம் முதலியதேசத்தில் சங்க்ராந்தி முதலிய காலத்தில் ஆறு அங் கங்களுடன் வேதத்தை அறிந்தவனிடத்தில் செய்யும் தானம் சாத் வீக தானம் எனப்படும்.
यत्तु प्रत्युपकारार्थं फलमुद्दिश्य वा पुनः ।
दीयते च परिक्लिष्टं तद्दानं राजसं स्मृतम् ॥ २१ ॥
யத்து ப்ரத்யுபகாரார்தம் பலமுத்திச்ய வா புன: ।
தீயதே ச பரிக்லிஷ்டம் தத்தானம் ராஜஸம் ஸ்ம்ருதம் ॥ 21 ॥
यत्तु दानं प्रत्युपकारार्थं काले तु अयं मां प्रत्युपकरिष्यति इत्येवमर्थम् , फलं वा अस्य दानस्य मे भविष्यति अदृष्टम् इति, तत् उद्दिश्य पुनः दीयते च परिक्लिष्टं खेदसंयुक्तम् , तत् दानं राजसं स्मृतम् ॥ २१ ॥
எனக்கு பிரதி உபகாரம் செய்வான் என்று செய்யும் தானமும் எனக்கு இந்த தானத்தினால் அதிக நஷ்ட்ட பலம் கிடைக்கும் என்று மனவர்த்தத்துடன் செய்யப்படும் தானமும் ராஜசம் எனப்படுகிறது.
अदेशकाले यद्दानमपात्रेभ्यश्च दीयते ।
असत्कृतमवज्ञातं तत्तामसमुदाहृतम् ॥ २२ ॥
அதேசகாலே யத்தானமபாத்ரேப்யச்ச தீயதே ।
அஸத்க்ருதமவக்ஞாதம் தத்தாமஸமுதாஹ்ருதம் ॥ 22 ॥
अदेशकाले अदेशे अपुण्यदेशे म्लेच्छाशुच्यादिसङ्कीर्णे अकाले पुण्यहेतुत्वेन अप्रख्याते सङ्क्रान्त्यादिविशेषरहिते अपात्रेभ्यश्च मूर्खतस्करादिभ्यः, देशादिसम्पत्तौ वा असत्कृतं प्रियवचनपादप्रक्षालनपूजादिरहितम् अवज्ञातं पात्रपरिभवयुक्तं च यत् दानम् , तत् तामसम् उदाहृतम् ॥ २२ ॥
மிலேச்சர்கள் முதலியோரால் கூடிய பாபமயமான சுத்த மற்ற தேசத்தில், அவ்வாறேபுண்யத்திற்கு ஏதுவான சங்க்ராந்தி முதலிய விசேஷமற்றகாலத்தில், அவ்வாறேமூர்க்கர்கள், திருடர்கள் முதலிய யோக்கியம் அற்றவர்களிடத்தில் அவ் வாறே பிரியமான வாக்கு, பாதத்தைக் கழுவுதல் முதலியவைகள் அற்ற யோக்கியமானவரை அவமானப்படுத்தி செய்யப்படும் தானம் தாமச தானம் எனப்படும்.
यज्ञदानतपःप्रभृतीनां साद्गुण्यकरणाय अयम् उपदेशः उच्यते —
யக்ஞம், தானம், தபஸ் முதலியவைகளை சத்குணத்துடன் கூடியவைகளாக ஆக்கும் பொருட்டு இந்த உபதேசம் செய்யப் படுகிறது.
ओं तत्सदिति निर्देशो ब्रह्मणस्त्रिविधः स्मृतः ।
ब्राह्मणास्तेन वेदाश्च यज्ञाश्च विहिताः पुरा ॥ २३ ॥
ஓம் தத்ஸதிதி நிர்தேசோ ப்ரஹ்மணஸ்த்ரிவித: ஸ்ம்ருத: ।
ப்ராஹ்மணாஸ்தேன வேதாச்ச யக்ஞாச்ச விஹிதா: புரா ॥ 23 ॥
ओं तत् सत् इति एवं निर्देशः, निर्दिश्यते अनेनेति निर्देशः, त्रिविधो नामनिर्देशः ब्रह्मणः स्मृतः चिन्तितः वेदान्तेषु ब्रह्मविद्भिः । ब्राह्मणाः तेन निर्देशेन त्रिविधेन वेदाश्च यज्ञाश्च विहिताः निर्मिताः पुरा पूर्वम् इति निर्देशस्तुत्यर्थम् उच्यते ॥ २३ ॥
(ஓம் தத் ஸத்) என்பது பிரஹ்மத்தைக் குறிப்பிடும் மூன்று வித மான பெயர்களாகும். இவ்வாறு மூன்று விதமான பெயர்கள் வேதாந்தங்களில் பிரஹ்மத்தை அறிந்தவர்கள் கூறி அருளி உள் ளார்கள். முன் காலத்தில் பிரஜாபதியினிடமிருந்தே இந்த பிராஹ்ம ண, வேத மற்றும் யக்ஞங்கள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுவது அந்தப் பெயரை புகழ்வதற்காக ஆகும்.
तस्मादोमित्युदाहृत्य यज्ञदानतपःक्रियाः ।
प्रवर्तन्ते विधानोक्ताः सततं ब्रह्मवादिनाम् ॥ २४ ॥
தஸ்மாதோமித்யுதாஹ்ருத்ய யக்ஞதானதப: க்ரியா: ।
ப்ரவர்தந்தே விதானோக்தா: ஸததம் ப்ரஹ்மவாதினாம் ॥ 24 ॥
तस्मात् ‘ओम् इति उदाहृत्य’ उच्चार्य यज्ञदानतपःक्रियाः यज्ञादिस्वरूपाः क्रियाः प्रवर्तन्ते विधानोक्ताः शास्त्रचोदिताः सततं सर्वदा ब्रह्मवादिनां ब्रह्मवदनशीलानाम् ॥ २४ ॥
வேதத்தைக் கூறுவதில் வல்லவர்கள் ஆகிய பிராஹ்மணர் கள் சாஸ்த்திர விதிப்படி கூறப்பட்ட யக்ஞம், தானம் அவ் வாறேதபஸ் என்னும் கர்மங்களை ஓம் என்றபிரஹ்மத்தின் பெயரை உச்சரித்தே எப்பொழுதும் ஆரம்பிக்கிறார்கள்.
तदित्यनभिसन्धाय फलं यज्ञतपःक्रियाः ।
दानक्रियाश्च विविधाः क्रियन्ते मोक्षकाङ्क्षिभिः ॥ २५ ॥
ததித்யநபிஸந்தாய பலம் யக்ஞதப:க்ரியா: ।
தானக்ரியாச்ச விவிதா: க்ரியந்தே மோகாங்க்ஷி பி: ॥ 25 ॥
तत् इति अनभिसन्धाय, ‘तत्’ इति ब्रह्माभिधानम् उच्चार्य अनभिसन्धाय च यज्ञादिकर्मणः फलं यज्ञतपःक्रियाः यज्ञक्रियाश्च तपःक्रियाश्च यज्ञतपःक्रियाः दानक्रियाश्च विविधाः क्षेत्रहिरण्यप्रदानादिलक्षणाः क्रियन्ते निर्वर्त्यन्ते मोक्षकाङ्क्षिभिः मोक्षार्थिभिः मुमुक्षुभिः ॥ २५ ॥
தத் என்றபிரஹ்மத்தினுடைய நாமத்தை உச்சரித்தும் பலத்தில் இச்சையற்றும், செய்யப்படும் நாநாவிதமான யக்ஞம் தபஸ் அவ்வாறே பூமி, சேனைகள் முதலியவைகளை தானம் செய்வது முதலிய கிரியைகள்(செயல்கள்) மோக்ஷத்தை அடைய விரும்பு பவர்களால் செய்யப்படுகிறது.
ओन्तच्छब्दयोः विनियोगः उक्तः । अथ इदानीं सच्छब्दस्य विनियोगः कथ्यते —
ஓம் தத் ஸப்தங்களின் பிரயோகம் சொல்லப்பட்டது. இப்பொ ழுது சத் சப்தத்தின் பிரயோகத்தைக் கூறுகிறார்.
सद्भावे साधुभावे च सदित्येतत्प्रयुज्यते ।
प्रशस्ते कर्मणि तथा सच्छब्दः पार्थ युज्यते ॥ २६ ॥
ஸத்பாவே ஸாதுபாவே ச ஸதித்யேதத்ப்ரயுஜ்யதே ।
ப்ரசஸ்தே கர்மணி ததா ஸச்சப்த: பார்த யுஜ்யதே ॥ 26 ॥
सद्भावे, असतः सद्भावे यथा अविद्यमानस्य पुत्रस्य जन्मनि, तथा साधुभावे च असद्वृत्तस्य असाधोः सद्वृत्तता साधुभावः तस्मिन् साधुभावे च सत् इत्येतत् अभिधानं ब्रह्मणः प्रयुज्यते अभिधीयते । प्रशस्ते कर्मणि विवाहादौ च तथा सच्छब्दः पार्थ, युज्यते प्रयुज्यते इत्येतत् ॥ २६ ॥
சத் என்பது இல்லாத மகன் பிறந்த பின் இருக்கிறான் என்று இல்லாதவற்றின் இருப்பிலும் அவ்வாறே தீய ஒழுக்கம் உடைய தீயவன் நல்ல ஒழுக்கம் உள்ளவனாய் இருக்கும்பொழுது சாது நல்லவன் என்று அதில் சாது (நல்ல) தன்மையில் பார்ப்பதும் சத் எனப்படும். இல்லாதது இருக்கும்பொழுது சத் என்பதும், நல் ஒழுக்கத்தை சத் என்பதும் பிரஹ்மத்தின் நாமமாகும். கல்யாணம் முதலிய மங்களகரமான கர்மங்களில் சத் என்ற சொல்லானது பிரயோகிக்கப்படுகிறது.
यज्ञे तपसि दाने च स्थितिः सदिति चोच्यते ।
कर्म चैव तदर्थीयं सदित्येवाभिधीयते ॥ २७ ॥
யக்ஞே தபஸி தானே ச ஸ்திதி: ஸதிதி சோச்யதே ।
கர்ம சைவ ததர்தீயம் ஸதித்யேவாபிதீயதே ॥ 27 ॥
यज्ञे यज्ञकर्मणि या स्थितिः, तपसि च या स्थितिः, दाने च या स्थितिः, सा सत् इति च उच्यते विद्वद्भिः । कर्म च एव तदर्थीयं यज्ञदानतपोर्थीयम् ; अथवा, यस्य अभिधानत्रयं प्रकृतं तदर्थीयं यज्ञदानतपोर्थीयम् ईश्वरार्थीयम् इत्येतत् ; सत् इत्येव अभिधीयते । तत् एतत् यज्ञदानतपआदि कर्म असात्त्विकं विगुणमपि श्रद्धापूर्वकं ब्रह्मणः अभिधानत्रयप्रयोगेण सगुणं सात्त्विकं सम्पादितं भवति ॥ २७ ॥
யக்ஞத்தில் நிலைத்தலும் தபஸில் நிலைத்தலும் தானத்தில் நிலைத்தலும் உள்ளதான எந்த நிலை உள்ளதோ அது சத் என்று வித்வான்களால் கூறப்படுகிறது. அவ்வாறு இந்த யக்ஞாதிகளுக் காக கர்மம் அல்லது பிரகிருதத்தில் கூறப்பட்ட பிரஹ்மத்தின் மூன்று பெயர்களைப் பற்றிய ஈஸ்வரார்ப்பணமாக செய்யப்படு வது சத் என்றேகூறப்படுகிறது. அந்த இந்த யக்ஞ தபஸ் முதலிய கர்மங்கள் சாத்வீகமற்றதாய் இருந்தாலும் சிரத்தையுடன் பிரஹ்மத் தினுடைய மூன்று பெயர்களின் பிரயோகத்தால் அதை நல்லகுண மான சாத்வீகமாக்கப்படுகிறது.
तत्र च सर्वत्र श्रद्धाप्रधानतया सर्वं सम्पाद्यते यस्मात् , तस्मात् —
எதனால் எல்லாவற்றிலும் சிரத்தையானது முக்கியமானதாய் இருக்கிறதோ அதனால்-
अश्रद्धया हुतं दत्तं तपस्तप्तं कृतं च यत् ।
असदित्युच्यते पार्थ न च तत्प्रेत्य नो इह ॥ २८ ॥
அச்ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்தம் க்ருதம் சயத் ।
அஸதித்யுச்யதே பார்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ ॥ 28 ॥
अश्रद्धया हुतं हवनं कृतम् , अश्रद्धया दत्तं ब्राह्मणेभ्यः, अश्रद्धया तपः तप्तम् अनुष्ठितम् , तथा अश्रद्धयैव कृतं यत् स्तुतिनमस्कारादि, तत् सर्वम् असत् इति उच्यते, मत्प्राप्तिसाधनमार्गबाह्यत्वात् पार्थ । न च तत् बहुलायासमपि प्रेत्य फलाय नो अपि इहार्थम् , साधुभिः निन्दितत्वात् इति ॥ २८ ॥
சிரத்தையில்லாமல் செய்யும் யக்ஞமும், சிரத்தையில்லாமல் பிராஹ்மணர்களுக்கு செய்யும் தானமும் சிரத்தையில்லாமல் அனுஷ்ட்டிக்கும் தபஸும் அவ்வாறேசிரத்தையற்று செய்யும் ஸ்துதி, நமஸ்காரங்கள் முதலியவைகளும் அசத் எனப்படும். ஹே பார்த்த! ஏனெனில் என்னை அடைவதற்கான மார்க்கத்தினின்றும் வெளியில் இருக்கிறது. ஏனெனில் மிகுந்த சிரமப்பட்டு அசிரத்தை யுடன் செய்வது நல்ல மனிதர்களால் நிந்திக்கப்படுவதால் மரணத் திற்கு பின்னும் பலனைக் கொடுக்காது. அவ்வாறே இந்த லோகத்தி லும் சுகத்தைத் தராது.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये सप्तदशोऽध्यायः ॥
ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே ச்ரத் தாத்ரயவிபாகயோகோ நாம் சப்ததசோத்யாய: