‘ईशा वास्यम्’ इत्यादयो मन्त्राः कर्मस्वविनियुक्ताः, तेषामकर्मशेषस्यात्मनो याथात्म्यप्रकाशकत्वात् । याथात्म्यं चात्मनः शुद्धत्वापापविद्धत्वैकत्वनित्यत्वाशरीरत्वसर्वगतत्वादि वक्ष्यमाणम् । तच्च कर्मणा विरुध्यत इति युक्त एवैषां कर्मस्वविनियोगः ।
ஈசாவாஸ்யம் என்று தொடங்கி மேல்வரும் மந்திரங்கள் கர்மங்களில் விநியோகப்படுபவை அல்ல. ஏனெனில் அம்மந்திரங்கள் கர்மஸம்பந்தமற்ற ஆத்மாவினுடைய உண்மை நிலையை விளக்குவதால், ஆத்மாவின் உண்மை நிலையோவெனில் பின்பு கூறப்பட உள்ளது. சுத்தத்தன்மை, பாபஸம்பந்தமற்ற தண்மை, ஒன்றாகவிருக்கும் தன்மை, எப்பொழுதுமிருக்கும் தன்மை, சரீரஸம்பந்தமற்ற தன்மை, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மை முதலியன. ஆத்மாவின் இத்தன்மைகள் கர்மத்திற்கு விருத்தமாக இருப்பதால் இம்மந்திரங்களுக்கு கர்மங்களில் விநியோகமில்லை என்பது பொருத்தமே.
न ह्येवंलक्षणमात्मनो याथात्म्यम् उत्पाद्यं विकार्यम् आप्यं संस्कार्यं वा कर्तृभोक्तृरूपं वा, येन कर्मशेषता स्यात् ; सर्वासामुपनिषदामात्मयाथात्म्यनिरूपणेनैवोपक्षयात् , गीतानां मोक्षधर्माणां चैवम्परत्वात् । तस्मादात्मनोऽनेकत्वकर्तृत्वभोक्तृत्वादि च अशुद्धत्वपापविद्धत्वादि चोपादाय लोकबुद्धिसिद्धं कर्माणि विहितानि ।
இவ்விதமான ஆத்மாவின் உண்மை சொரூபம் உற்பாத்யம், விகார்யம், ஆப்யம், ஸம்ஸ்கார்யம், கர்த்ருத்வம், போக்ருத்வம் எதனால் கர்மத்திற்கு அங்கமாக இருக்கிறதோ அதனால் முன்பு கூறப்பட்ட சுத்தத்வாதி லக்ஷணங்களுடன் கூடிய ஆத்மாவிற்கு கர்ம ஸம்பந்தம் கிடையாது. எல்லா உபநிஷத்துக்களும் ஆத்மாவினுடைய யதார்த்த சொரூபத்தை நிரூபணம் செய்வதிலேயே முடிந்து விடுகின்றன. கீதையும், மோக்ஷ தர்மங்களும் இம்மாதிரி தாத்பரியம் உடையதாகவே இருக்கின்றன. ஆகையால் ஆத்மாவிற்கு (சாமான்ய மனிதர்களுடைய) உலக அறிவினால் ஏற்பட்ட (அனுசரித்துத் தோன்றிய) அநேகத்வம், கர்த்ருத்வம், போக்ருத்வம் முதலியதையும், அசுத்தத்வம், பாபவித்தத்வம், முதலியவைகளை எடுத்துக்கொண்டு கர்மங்கள் விதிக்கப்ட்டுள்ளன. (கர்மம் சாமான்ய ஜனங்களுக்கு சொல்லப்பட்டது.)
यो हि कर्मफलेनार्थी दृष्टेन ब्रह्मवर्चसादिना अदृष्टेन स्वर्गादिना च द्विजातिरहं न काणत्वकुणित्वाद्यनधिकारप्रयोजकधर्मवानित्यात्मानं मन्यते सोऽधिक्रियते कर्मस्विति ह्यधिकारविदो वदन्ति ।
எவன் கர்ம பலத்தில் இச்சையுடையவனோ, எவன் கர்ம பலன்களில் திருஷ்ட பலமாகிய பிரஹ்ம வர்ச்சஸ் முதலியவைகளிலும், அதிர்ஷ்ட பலமான சுவர்க்காதிகளிலும், இச்சையுடையவனோ (இரண்டும், இக, பர, லோக கர்மபலம்.) நான் பிராஹ்மணன், ஒற்றைக் கண்ணன், கூனல் முதலிய அதிகாரமில்லாமைக்கு காரணமான தர்மங்கள் அற்றவன் என்று தன்னை நினைக்கின்றானோ அவன் தான் அதிகாரித்தன்மை உடையவனென்று அதிகாரித்வத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
तस्मादेते मन्त्रा आत्मनो याथात्म्यप्रकाशनेन आत्मविषयं स्वाभाविककर्मविज्ञानं निवर्तयन्तः शोकमोहादिसंसारधर्मविच्छित्तिसाधनमात्मैकत्वादिविज्ञानमुत्पादयन्तीति । एवमुक्ताधिकार्यभिधेयसम्बन्धप्रयोजनान्मन्त्रान्सङ्क्षेपतो व्याख्यास्यामः —
ஆகையால் இந்த மந்திரங்கள் ஆத்மாவினுடைய யதார்த்தத்தை (போதித்து) பிரகாசம் செய்வதால் ஆத்ம விஷயமான சுபாவீகமாக உள்ள அக்ஞானத்தை நிவர்த்தி செய்யக்கூடியவைகளாக இருந்து கொண்டு சோகம், மோஹம் முதலான சம்சார தர்மங்களைப் போக்கக்கூடிய (நிவர்த்தி செய்வதற்கு) சாதனமான ஆத்ம ஐக்யத்வாதி விக்ஞானத்தை உண்டாக்குகின்றன. இவ்வாறு சொல்லப்பட்ட அதிகாரி, விஷயம் (அபிதேயம்) சம்பந்தம், பிரயோஜனம் இவைகளை உடைய மந்திரங்களை மேலே சுருக்கமாக நாம் வியாக்யானம் செய்கிறோம்.
ईशा वास्यमिदं सर्वं यत्किं च जगत्यां जगत् ।
तेन त्यक्तेन भुञ्जीथा मा गृधः कस्य स्विद्धनम् ॥ १ ॥
ईशा ईष्ट (என்றால்) கட்டளை, பிரேரணை, தூண்டுதல், சாசனம். எல்லாம் ஈசுவரனால் மூடப்பட்டுள்ளது (வாஸ்யம்). இந்த எல்லா ஜகத்தும் ஈசுவரனால் நிரப்பப்பட்டுள்ளது. (வ்யாப்தம்) எல்லோரிடத்தும் ஈசுவரன் இருக்கிறார் என்ற சர்வான்மதிருஷ்டி உடையவர்கள் தன்னைக் குறித்தும், பிறருடையதைக் குறித்தும் அநாத்மா என்று விடுவதால் (த்யக்தம்) ஆசை இருக்காது.
ईशा ईष्टे इति ईट् , तेन ईशा । ईशिता परमेश्वरः परमात्मा सर्वस्य । स हि सर्वमीष्टे सर्वजन्तूनामात्मा सन् प्रत्यगात्मतया । तेन स्वेन रूपेणात्मना ईशा वास्यम् आच्छादनीयम् ।
ஈஷ்டே என்றால் கட்டளை இடுதல் அதனால் ஈசா எனப்படுNO-CHகிறான். மூன்றாம் வேற்றுமையில் உள்ளதால் எல்லோரையும் சாசனம் செய்கின்ற பரமேஸ்வரன் தான் பரமாத்மா. அந்த பரமாத்மாவானது எல்லா ஜீவ ராசிகளுக்கும் பிரத்யக் ஆத்மாவாக இருந்துகொண்டு எல்லாவற்றையும் பிரேரிக்கிறார். அந்த தன்னுடைய ஆத்ம சொரூபமான ஈசனால் மறைக்க வேண்டும்.
किम् ? इदं सर्वं यत्किं च यत्किञ्चित् जगत्यां पृथिव्यां जगत् तत्सर्वम् । स्वेनात्मना ईशेन प्रत्यगात्मतया अहमेवेदं सर्वमिति परमार्थसत्यरूपेणानृतमिदं सर्वं चराचरमाच्छादनीयं परमात्मना ।
எதை மறைக்க வேண்டும்? பிருதிவியில் எது எல்லாம் உள்ளதோ அது எல்லாவற்றையும் தன் ஆத்மாவான ஈசனால் பிரத்யகாத்ம ஸ்வரூபமாக இது எல்லாம் நான் தான் என்று மறைக்கவேண்டும். பரமார்த்த ஸத்யரூபமான, தனது பரமாத்ம ஸ்வரூபத்தால் பொய்யான இந்த ஸ்தாவரம், ஜங்கமம் முழுவதையும் மறைக்க வேண்டும்.
(பிரத்யக் ஆத்மாவாக இருந்து கொண்டு இந்த ஜகத் முழுவதும் ஆத்மாவான ஈசனால் மறைக்கப்பட்டுள்ளது. இந்த ஜகத் மறைப்பட்டு நானே எல்லாமாக இருக்கிறேன் என்று தன்னுடைய பரமாத்ம சத்திய ரூபத்தினால் இந்த பொய்யான எல்லா சராசர ஜகத்தும் மறைக்கப்பட வேண்டும்.)
यथा चन्दनागर्वादेरुदकादिसम्बन्धजक्लेदादिजमौपाधिकं दौर्गन्ध्यं तत्स्वरूपनिघर्षणेनाच्छाद्यते स्वेन पारमार्थिकेन गन्धेन।
எவ்வாறு சந்தனம், அகில் முதலியவைகளுக்கு மலின ஜல சம்பந்தத்தினால் ஏற்பட்ட ஈரத்தினால் உண்டான ஒளபாதிகமான துர்கந்தமானது, அதனது சொரூபத்தை (செதுக்குதல்) தேய்ப்பதால் ஏற்பட்ட தனது சொந்தமான உண்மையான (சுகந்தம்) நறுமணத்தினால் எவ்விதம் மறைக்கப்படுகிறதோ (வ்யாபிக்கப்படுகிறதோ).
तद्वदेव हि स्वात्मन्यध्यस्तं स्वाभाविकं कर्तृत्वभोक्तृत्वादिलक्षणं जगद्द्वैतरूपं पृथिव्याम् , जगत्यामित्युपलक्षणार्थत्वात्सर्वमेव नामरूपकर्माख्यं विकारजातं परमार्थसत्यात्मभावनया त्यक्तं स्यात् ।
அவ்வாறே ஆத்மாவில் ஆரோபிதமான (கற்பனை செய்யப்பட்ட) ஸ்வபாவமான கர்த்ருத்வ, போக்த்ருத்வ ரூபமான ஜகத் த்வைரூபம். ஜகத்தில் என்றது ப்ருதிவியில் (ஜகத்யாம்) ஜகத்தில் என்றது உபலக்ஷணார்த்தமாக இருப்பதால், விகாரத்தினால் உண்டான நாமரூப கர்மங்கள் என்ற காரியங்கள் முழுவதும் பரமாத்ம சத்தியமான ஆத்ம பாவனையினால் விடப்பட்டதாக ஆகும். மற்றதற்கு இருப்பு இல்லை என்பதை உணர்த்த சத்யம் என்ற சொல்.
एवमीश्वरात्मभावनया युक्तस्य पुत्राद्येषणात्रयसंन्यासे एवाधिकारः, न कर्मसु ।
இவ்வாறு ஈஸ்வராத்ம பாவனையுடன் கூடியவனுக்கு புத்ராதி ஏக்ஷணாத்திரய சந்நியாசத்தில்தான் அதிகாரம் கர்மங்களில் அல்ல.
तेन त्यक्तेन त्यागेनेत्यर्थः ।
அந்த த்யக்தேன என்பதற்கு விடுதல் என்று பொருள்.
न हि त्यक्तो मृतः पुत्रो भृत्यो वा आत्मसम्बन्धिताभावादात्मानं पालयति । अतस्त्यागेनेत्ययमेवार्थः । भुञ्जीथाः पालयेथाः ।
ஏனெனில் விடப்பட்ட அல்லது இறந்த புத்திரனோ அல்லது வேலைக்காரனோ ஆத்ம சம்பந்தம் அற்றதால் தன்னைக் காப்பாற்றமாட்டான். எனவே இது த்யக்த என்பதன் பொருளாகாது. த்யாகத்தால் என்பது தான். வேதார்த்தம் இவ்வாறு கூறுகிறது. ஏஷணாத்திரய தியாகமே ஆத்மாவைக் காப்பாற்றும்.
एवं त्यक्तैषणस्त्वं मा गृधः गृधिम् आकाङ्क्षां मा कार्षीः धनविषयाम् । कस्य स्वित् कस्यचित् परस्य स्वस्य वा धनं मा काङ्क्षीरित्यर्थः । स्विदित्यनर्थको निपातः ।
இவ்வாறு ஏஷணாத்திரய த்யாகம் செய்த சந்நியாசியாகிய நீ உன்னுடைய தனத்திலாவது, பிறருடைய தனத்திலாவது ஆசை வைக்க வேண்டாம். (அர்த்தம் இகலோக, பரலோக விஷயத்தில் ஆசை வைக்காதே).
अथवा, मा गृधः । कस्मात् ?
அல்லது ஆசை கொள்ளாதே. ஏனெனில்?
कस्य स्विद्धनम् इत्याक्षेपार्थः । न कस्यचिद्धनमस्ति, यद्गृध्येत । आत्मैवेदं सर्वमितीश्वरभावनया सर्वं त्यक्तम् । अत आत्मन एवेदं सर्वम् , आत्मैव च सर्वम् । अतो मिथ्याविषयां गृधिं मा कार्षीरित्यर्थः ॥
कस्यस्विद्धनम् என்பது இந்த இடத்தில் ஆட்சேபார்த்தத்தில் வந்துள்ளது. எதில் ஆசை கொள்வானோ அது யாருடைய தனமுமல்ல. ஆத்மாதான். இது எல்லாம் விடப்பட்டதாகின்றது. ஆகையால் எல்லாம் ஆத்மாவினுடையது தான். ஆத்மா தான் எல்லாம் ஆகையால் மித்யா விஷயத்தில் ஆசை கொள்ளாதே என்பது பொருள்.
एवमात्मविदः पुत्राद्येषणात्रयसंन्यासेनात्मज्ञाननिष्ठतया आत्मा रक्षितव्य इत्येष वेदार्थः । अथेतरस्य अनात्मज्ञतयात्मग्रहणाशक्तस्य इदमुपदिशति मन्त्रः —
இவ்வாறு ஆத்மாவை அறிந்தவனுக்கு ஏஷணாத்திரய சந்நியாசத்தினால் ஆத்ம ஞானத்தில் நிலைத்திருப்பதன் மூலம் ஆத்மா ரக்ஷிக்கப்படவேண்டும் என்பது வேதத்தின் அர்த்தம். பிறகு மற்றவனான ஆத்மாவை அறிந்து கொள்ள சக்தி இல்லாத அக்ஞானிக்கு இந்த மந்திரமானது உபதேசிக்கப்படுகிறது.
कुर्वन्नेवेह कर्माणि जिजीविषेच्छतं समाः ।
एवं त्वयि नान्यथेतोऽस्ति न कर्म लिप्यते नरे ॥ २ ॥
कुर्वन्नेव निर्वर्तयन्नेव इह कर्माणि अग्निहोत्रादीनि जिजीविषेत् जीवितुमिच्छेत् शतं शतसङ्ख्याकाः समाः संवत्सरान् । तावद्धि पुरुषस्य परमायुर्निरूपितम् । तथा च प्राप्तानुवादेन यज्जिजीविषेच्छतं वर्षाणि तत्कुर्वन्नेव कर्माणीत्येतद्विधीयते ।
அக்னி ஹோத்திராதி தர்மங்களை செய்துகொண்டே ஜீவிப்பதில் இச்சை கொள்ள வேண்டும். (100 எண்ணிக்கை 100 வருடங்கள்) இதனால் புருஷனுடைய பரம ஆயுளானது 100 வருடம் என நிரூபிக்கப்பட்டது.
எது வரைக்கும் ஜீவிக்க. இச்சிக்கிறானோ அந்த 100 வருடங்களும் கர்மம் செய்துகொண்டே வாழ வேண்டும் என்று கர்மமானது அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
एवम् एवंप्रकारे त्वयि जिजीविषति नरे नरमात्राभिमानिनि इतः एतस्मादग्निहोत्रादीनि कर्माणि कुर्वतो वर्तमानात्प्रकारात् अन्यथा प्रकारान्तरं नास्ति, येन प्रकारेणाशुभं कर्म न लिप्यते ; कर्मणा न लिप्यस इत्यर्थः । अतः शास्त्रविहितानि कर्माण्यग्निहोत्रादीनि कुर्वन्नेव जिजीविषेत् ॥
இந்தப் பிரகாரமாக ஜீவிப்பதில் இச்சை உள்ள மனிஷ்யத்வ அபிமானிக்கு எந்த மார்க்கத்தினர் கர்மமானது அவனை ஒட்டாதோ அந்த அக்னி ஹோத்ராதி விஹித கர்மங்களை செய்துகொண்டே ஜீவித்து இருக்க வேண்டுமேயன்றி மற்றொரு பிரகாரமானது கிடையாது. இதற்கு என்ன பொருள் எனில் அவனை சுபாசுப கர்மங்களை ஒட்டாது என்று பொருள். ஆகையால் சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட அக்னி ஹோத்ராதி கர்மங்களை செய்து கொண்டே வாழவேண்டும்.
कथं पुनरिदमवगम्यते — पूर्वेण मन्त्रेण संन्यासिनो ज्ञाननिष्ठोक्ता, द्वितीयेन तदशक्तस्य कर्मनिष्ठेति ?
(பூர்வபக்ஷம்) முதல் மந்திரத்தினால் சந்நியாசிகளுக்கான ஞான நிஷ்டை கூறப்பட்டது. இரண்டாவது மந்திரத்தினால் அதில் சக்தியற்றவனுக்கு கர்ம நிஷ்டை கூறப்பட்டது என்பது எவ்வாறு அறியப்படுகிறது?
उच्यते — ज्ञानकर्मणोर्विरोधं पर्वतवदकम्प्यं यथोक्तं न स्मरसि किम् ? इहाप्युक्तम् — यो हि जिजीविषेत्स कर्माणि कुर्वन्नेव इति ; ‘ईशा वास्यमिदं सर्वम्’, ‘तेन त्यक्तेन भुञ्जीथाः मा गृधः कस्य स्विद्धनम्’ इति च । ‘न जीविते मरणे वा गृधिं कुर्वीतारण्यमियात् इति पदं ततो न पुनरेयात्’ ( ? ) इति च संन्यासशासनात् । उभयोः फलभेदं च वक्ष्यति ।
(ஸித்தாந்தம்) ஞான கர்ம விரோதமானது பர்வதத்தைப் போல் அசைக்க முடியாதது என்று எவ்வாறு கூறப்பட்டதோ அது ஞாபகமில்லையா என்ன இங்கும் கூறப்பட்டுள்ளது. எவன் ஜீவிக்க. இச்சிக்கிறானோ அவன் கர்மம் செய்க, இதுவெல்லாம் பரமாத்ம பாவனையால் மறைக்கப்படவேண்டும். அதனால் தியாகத்தினால் பரிபாலிக்க, எவருடைய தனத்தினையும் இச்சை செய்யற்க என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறே ஜீவனத்திலாவது, மரணத்திலாவது ஆசை வைக்காதே, அரண்யத்தை அடைவாயாக. இது தான் தாங்கள் அடையவேண்டிய நிலை. அதனின்றும் திரும்பி வருதல் தகாது என்று ஸந்நியாஸ லக்ஷணமானது விதிக்கப்பட்டுள்ளது. இரண்டின் பயன்களின் பேதத்தையும் மேலே சொல்லவும் போகிறது.
‘इमौ द्वावेव पन्थानावनुनिष्क्रान्ततरौ भवतः क्रियापथश्चैव पुरस्तात्संन्यासश्च’ ( ? ) ; तयोः संन्यास एवातिरेचयति — ‘न्यास एवात्यरेचयत्’ (तै. नारा. ७८) इति तैत्तिरीयके । ‘द्वाविमावथ पन्थानौ यत्र वेदाः प्रतिष्ठिताः । प्रवृत्तिलक्षणो धर्मो निवृत्तिश्च विभाषितः’ (मो. ध. २४१ । ६) इत्यादि पुत्राय विचार्य निश्चितमुक्तं व्यासेन वेदाचार्येण भगवता । विभागं चानयोः प्रदर्शयिष्यामः ॥
இவ்விரண்டு மார்க்கங்கள் தான் சிருஷ்டி தொடங்கி வருகின்றனவாக இருக்கின்றன. முதலில் கர்ம மார்க்கமும், பின்னர் சந்நியாச மார்க்கமுமாம். நிவர்த்தி மார்க்கத்தினால் ஏஷணாத்திரய த்யாகம். இந்த இரண்டு மார்க்கங்களுள் சந்நியாச மார்க்கம் தான் மேலானது. த்யாக மார்க்கமே மேலானது என்று தைத்திரீயத்தில் கூறப்பட்டுள்ளது. எதில் வேதங்கள் நிலைப் தர்மமென்றும் மற்றொன்று நிவர்த்தி லக்ஷண தர்மமென்றும் அறியப்பட்டது என்று வேதாச் சாரியரான பகவான் வியாசரால் நன்கு விசாரித்து தனது புத்திரனின் பொருட்டு நிச்சயமாக சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த இரண்டுகளின் பேதத்தையும் காண்பிக்கப் போகிறோம்.
अथेदानीमविद्वन्निन्दार्थोऽयं मन्त्र आरभ्यते —
அவதாரிகை இப்பொழுது அவித்வானை நிந்திப்பதன் பொருட்டு இந்த மந்திரமானது ஆரம்பிக்கப்படுகின்றது.
असुर्या नाम ते लोका अन्धेन तमसा वृताः ।
तांस्ते प्रेत्याभिगच्छन्ति ये के चात्महनो जनाः ॥ ३ ॥
असु र्याः परमात्मभावमद्वयमपेक्ष्य देवादयोऽप्यसुराः । तेषां च स्वभूता लोका असुर्याः नाम । नामशब्दोऽनर्थको निपातः ।
அஸுர்ய = அத்வைதமான பரமாத்ம பாவத்தை அபேக்ஷித்து தேவர்களும் அசுரர்களே. அவர்களுடைய லோகங்களும் அஸுர்ய லோகமே. நாமசப்தத்திற்கு அர்த்தமில்லை.
ते लोकाः कर्मफलानि लोक्यन्ते दृश्यन्ते भुज्यन्त इति जन्मानि । अन्धेन अदर्शनात्मकेनाज्ञानेन तमसा आवृताः आच्छादिताः । तान् स्थावरान्तान् , प्रेत्य त्यक्त्वेमं देहम् अभिगच्छन्ति यथाकर्म यथाश्रुतम् ।
அந்த லோகங்கள் கர்ம பலன்களே. அதாவது கர்ம பலன்கள் (லோக்யந்தே) பார்க்க என்றால் புஜிக்கப்படுவதால் பிறவிகள் லோகங்கள் எனப்படும்.
அந்தேன என்றால் அதர்சனாத்மகமான அக்ஞானமான தமஸினால் மறைக்கப்பட்டவர்களாய், இந்த தேஹத்தை விட்டு (ப்ரஹ்மா முதல்) ஸ்தாவரம் வரையுள்ள பிறவிகளை கர்மாவிற்கு தகுந்தபடி, உபாசனைக்குத் தகுந்தபடி அடைகின்றனர்.
ये के च आत्महनः आत्मानं घ्नन्तीत्यात्महनः । के ? ते जनाः येऽविद्वांसः । कथं ते आत्मानं नित्यं हिंसन्ति ? अविद्यादोषेण विद्यमानस्यात्मनस्तिरस्करणात् । विद्यमानस्यात्मनो यत्कार्यं फलमजरामरत्वादिसंवेदनादिलक्षणम् , तत् हतस्येव तिरोभूतं भवतीति प्राकृता अविद्वांसो जना आत्महन इत्युच्यन्ते । तेन ह्यात्महननदोषेण संसरन्ति ते ॥
ஆத்மாவை எவர்கள் நாசம் செய்கிறார்களோ அவர்கள் ஆத்ம ஹந்தாக்கள் (ஆத்மஹத்தி செய்பவர்) அவர்கள் எவர்களெனின் அவித்வான்கள். அவர்கள் ஆத்மாவை நித்யம் எவ்வாறு ஹிம்சிக்கிறார்கள்?
அவித்யா தோஷத்தினால் எப்பொழுதும் உள்ள ஆத்மாவை (நிராகரிப்பதால்) திரஸ்காரம் செய்வதால் என்க.
அந்த ஆத்மாவினுடைய அஜரத்தன்மை, அமரத்தன்மை முதலியவற்றை சாக்ஷாத்கரித்தல் ரூபமான யாதொரு பலனுண்டோ அது (ஹனனனுக்கு) மறைக்கப்பட்டதால் பிரகிருதி வசப்பட்ட அவித்வான்களாகிய ஜனங்கள் ஆத்ம ஹனனம் செய்கின்றவர்கள் எனப்படுகின்றார்கள்.
அந்த ஆத்ம ஹனன தோஷத்தினால் அவித்வான்கள் சம்சாரத்தை (ஜனன, மரணத்தை) அடைகின்றனர்.
यस्यात्मनो हननादविद्वांसः संसरन्ति, तद्विपर्ययेण विद्वांसो मुच्यन्तेऽनात्महनः, तत्कीदृशमात्मतत्त्वमित्युच्यते —
(அவதாரிகை) எந்த ஆத்மாவை ஹனனம் செய்வதால் அவித்வான்கள் ஸம்ஸாரத்தில் உழல்கிறார்களோ, அதற்கு மாறாக வித்வான்கள் முக்தியடைகிறார்கள். அவர்கள் ஆத்மாவைக் கொன்றவர் ஆகார்கள். அந்த ஆத்ம தத்வமானது எப்படிப்பட்டது என்று கூறப்படுகிறது.
अनेजदेकं मनसो जवीयो नैनद्देवा आप्नुवन्पूर्वमर्षत् ।
तद्धावतोऽन्यानत्येति तिष्ठ—त्तस्मिन्नपो मातरिश्वा दधाति ॥ ४ ॥
अनेजत् न एजत् । ‘एजृ कम्पने’, कम्पनं चलनं स्वावस्थाप्रच्युतिः, तद्वर्जितम् , सर्वदा एकरूपमित्यर्थः । तच्च एकं सर्वभूतेषु । मनसः सङ्कल्पादिलक्षणात् जवीयो जववत्तरम् ।
அனேஜத், ந ஏஜத் என்றால் சலனமற்றது, நழுவாதது (அசைவற்றது) தனது நிலையிலிருந்தும் வழுவாதது, நழுவாதது என்றால் ஏக சொரூபமாக எப்போதும் இருத்தல் என்று அர்த்தம். (உதாரணமாக தன் நிலை வழுவுவதே ம்ருத்யு) ஸங்கல்பாதி ஸ்வரூபமான மனதைக் காட்டிலும் வேகமானது. எல்லா பூதங்களிலும் ஒன்றாக இருக்கின்றது. (ணயாபகமாயிருக்கிறது)
कथं विरुद्धमुच्यते — ध्रुवं निश्चलमिदम् , मनसो जवीय इति च ?
(பூர்வபக்ஷம்) எப்படி விருத்தமாக சொல்கிறீர்கள் எனில்? அந்த ஆத்ம தத்வமானது நிச்சலமாக இவ்வாறு (சலனமற்று) இருந்தும் மனதைக் காட்டிலும் வேகமென்று சொல்லலாமா என்றால்
नैष दोषः, निरुपाध्युपाधिमत्त्वेनोपपत्तेः । तत्र निरुपाधिकेन स्वेन रूपेणोच्यते — अनेजदेकम् इति । मनसः अन्तःकरणस्य सङ्कल्पविकल्पलक्षणस्योपाधेरनुवर्तनात् । इह देहस्थस्य मनसो ब्रह्मलोकादिदूरस्थसङ्कल्पनं क्षणमात्राद्भवतीत्यतो मनसो जविष्ठत्वं लोकप्रसिद्धम् । तस्मिन्मनसि ब्रह्मलोकादीन् द्रुतं गच्छति सति, प्रथमप्राप्त इवात्मचैतन्याभासो गृह्यते । अतः मनसो जवीयः इत्याह ।
இது தோஷமல்ல. நிருபாதிக சோபாதிக ரூபத்தில் பொருந்தத்கூடியது விரோதமில்லை. அங்கு நிருபாதியான ஸ்வஸ்வரூபத்தினால் அநேஜத் ஏப்ம் என்று சொல்லப்படுகிறது. மனஸ: அந்தக் காரணத்திற்கு சங்கற்ப, விகற்ப ரூபமான உபாதி இருப்பதால், இந்த தேகத்தில் இருக்கின்ற மனதிற்கு சங்கற்பத்தினால் பிரஹ்மலோகாதி வரையிலான தூரகமனமானது (வெகு தூரம் செல்லுதல்) க்ஷணத்தில் ஏற்படுவதால் மனமானது மிக வேகமானது என்பது உலகப் பிரசித்தம். அந்த மனதானது பிரஹ்மலோகம் முதலியவற்றிற்கு வேகமாக செல்லும்போது ஆத்ம சைதன்யத்தின் அவபாசம் (பிரகாசம்) இதற்கு முன்னரே அங்கு இருப்பதால் முதலிலேயே அடைந்தது போல நம்மால் கிரஹிக்கப்படுகிறது. அதனால் மனதைவிட (ஆத்ம சைதன்யமானது) வேகமானது என்று கூறப்படுகிறது.
नैनद्देवाः, द्योतनाद्देवाः चक्षुरादीनीन्द्रियाणि, एनत् प्रकृतमात्मतत्त्वं नाप्नुवन् न प्राप्तवन्तः । तेभ्यो मनो जवीयः । मनोव्यापारव्यवहितत्वादाभासमात्रमप्यात्मनो नैव देवानां विषयीभवति ;
தேவர்களாலும் இப்படி சொல்லப்பட்ட ஆத்ம தத்வமானது அடைய முடியாது. தேவர்களென்றால் சக்ஷுராதி இந்திரியங்கள் இவைகள் விஷயங்களை பிரகாசப்படுத்துவதால் (விளக்குவதால்) சக்ஷுராதி இந்திரியங்கள் தேவர்கள் எனப்படுகின்றன. எனவே இந்திரியங்களைக்காட்டிலும் மனது வேகமானது. மனதினாலேயே அடைய முடியாதென்றால் இந்திரியங்களால் எப்படி அறிய முடியும். மனதை அபேக்ஷித்துத்தான் இந்திரியங்கள் வேலை செய்யும் ஆத்மாவின் ஆபாஸம் கூட இந்திரியங்களுக்கு விஷயமாகவே ஆகாது.
यस्माज्जवनान्मनसोऽपि पूर्वमर्षत् पूर्वमेव गतम् , व्योमवद्व्यापित्वात् । सर्वव्यापि तदात्मतत्त्वं सर्वसंसारधर्मवर्जितं स्वेन निरुपाधिकेन स्वरूपेणाविक्रियमेव सत् , उपाधिकृताः सर्वाः संसारविक्रिया अनुभवतीवाविवेकिनां मूढानामनेकमिव च प्रतिदेहं प्रत्यवभासत इत्येतदाह —
எதனால் மனதைக் காட்டிலும் வேகமானதோ மனதிற்கு முன்பே வந்துள்ளது. ஆகாயம் போல வியாபகமாக இருப்பதால் சர்வ வியாபி. அந்த ஆத்ம தத்வமானது எல்லா (சம்சார தர்ம வர்ஜிதம்) சம்சார தர்மமற்றதாயும் தன்னுடைய நிருபாதிக சொரூபத்தினால் அவிக்ரியமாக (கிரியை அற்றதாகவும்) இருந்துகொண்டு உபாதியால் ஏற்பட்ட எல்லா சம்சார விகாரங்களையும் அனுபவிக்கிறது என்றும், மூடாத்மாக்களுக்கு அநேகம் போல ஒவ்வொரு தேகத்திலும் விளங்குகிறது. இவ்வாறு சுருதி கூறுகிறது.
तत् धावतः द्रुतं गच्छतः अन्यान् आत्मविलक्षणान्मनोवागिन्द्रियप्रभृतीन् अत्येति अतीत्य गच्छतीव । इवार्थं स्वयमेव दर्शयति — तिष्ठदिति, स्वयमविक्रियमेव सदित्यर्थः ।
தாவத: (ஆத்மாவானது) வேகமாக செல்லக்கூடிய மற்ற, ஆத்மாவைக்காட்டிலும் விலக்ஷணமான மனோ, வாக், இந்திரிய முதலியவைகளைத் (விட) தாண்டிச் சென்றது போல இருக்கின்றது. திஷ்டத் என்றால் இருக்கிறது. அது கிரியையற்றதாக இருக்கிறது. அதாவது (इव) என்ற சப்தார்தத்தை சுயமாகவே திஷ்டத் என்பதால் அறிவிக்கிறது. சுயமாகவே கிரியை அற்றதாகவே இருக்கிறது என்பது பொருள்.
तस्मिन् आत्मतत्त्वे सति नित्यचैतन्यस्वभावे, मातरिश्वा मातरि अन्तरिक्षे श्वयति गच्छतीति मातरिश्वा वायुः सर्वप्राणभृत्क्रियात्मकः, यदाश्रयाणि कार्यकरणजातानि यस्मिन्नोतानि प्रोतानि च, यत्सूत्रसंज्ञकं सर्वस्य जगतो विधारयितृ, स मातरिश्वा, अपः कर्माणि प्राणिनां चेष्टालक्षणानि अग्न्यादित्यपर्जन्यादीनां ज्वलनदहनप्रकाशाभिवर्षणादिलक्षणानि, दधाति विभजतीत्यर्थः,
நித்ய சைதன்ய ஸ்வரூபமான அந்த ஆத்மதத்துவத்தில், மாதரிஷ்வா என்றால் மாத்தரி என்றால் ஆகாயத்தில் (அந்தரிக்ஷத்தில்) இச்வா என்றால் செல்லுதல் (கச்சதிஇதி) ஆகையால் மாதரிஷ்வா என்பது வாயு. சர்வ பிராணன்களையும் தாங்குகின்ற க்ரியாத்மகமான வாயுவானது மாதரிஷ்வா என்று கூறப்படுகிறது. அதாவது காரிய, காரண சமூகங்கள் எதை ஆசரித்துள்ளனவோ எதில் ஓதப்ரோதமாக (குறுக்கு நெடுக்காக) இருக்கின்றனவோ அதுவே சூத்ராத்மா எனப் பெயருடன் எல்லா ஜகத்தையும் தாங்குகின்றதால் சூத்ராத்மாவிற்கே மாதரிச்வா என்று பெயர். அப: என்றால் கர்மாணி. கர்மாணி என்றால் பிராணிகளின் சேஷ்டா லக்ஷணமான கர்மங்கள். அக்னி, ஆதித்யன், மேகம் முதலியவைகளுக்கு ஜ்வலன, தகன, பிரகாச, அபிவர்ஷணம் (மழை) முதலிய லக்ஷணங்களை பிரித்துக் கொடுக்கின்றது. (தரிக்கும்படி செய்கின்றது என்றும் பொருள் கொள்ளலாம்.)
धारयतीति वा ; ‘भीषास्माद्वातः पवते’ इत्यादिश्रुतिभ्यः । सर्वा हि कार्यकरणविक्रिया नित्यचैतन्यात्मस्वरूपे सर्वास्पदभूते सत्येव भवन्तीत्यर्थः ॥
அதனிடம் பயத்தினால் காற்றானது வீசுகிறது என்ற தைத்ரீய சுருதியினால் அறிகிறோம். எல்லா காரிய, கரணாதி விக்கிரியைகள் (சேஷ்டைகள்) நித்ய, சைதன்ய, ஆத்ம சொரூபமான, எல்லாவற்றின் அதிஷ்டானத்தில்தான் நிலை பெற்றிருக்கின்றன என்று அர்த்தம்.
न मन्त्राणां जामितास्तीति पूर्वमन्त्रोक्तमप्यर्थं पुनराह —
(அவதாரிகை) மந்திரங்களுக்கு சோம்பல் இல்லாததால் முன் மந்திரத்தில் சொல்லப்பட்டபோதிலும் அதையே திருப்பிச் சொல்கிறது.
तदेजति तन्नैजति तद्दूरे तद्वन्तिके ।
तदन्तरस्य सर्वस्य तदु सर्वस्यास्य बाह्यतः ॥ ५ ॥
तत् आत्मतत्त्वं यत्प्रकृतम् एजति चलति तदेव च नैजति स्वतो नैव चलति, स्वतः अचलमेव सत् चलतीवेत्यर्थः । किञ्च, तद्दूरे वर्षकोटिशतैरप्यविदुषामप्राप्यत्वाद्दूर इव । तदु अन्तिके समीपे अत्यन्तमेव विदुषाम् , आत्मत्वात् न केवलं दूरे, अन्तिके च । तत् अन्तः अभ्यन्तरे अस्य सर्वस्य, ‘य आत्मा सर्वान्तरः’ इति श्रुतेः, अस्य सर्वस्य जगतो नामरूपक्रियात्मकस्य । तत् उ सर्वस्य अस्य बाह्यतः ; व्यापित्वादाकाशवन्निरतिशयसूक्ष्मत्वादन्तः ;
‘प्रज्ञानघन एव’ (बृ. उ. ४ । ५ । १३) इति शासनान्निरन्तरं च ॥
இந்த இடத்தில் ஆத்மா சலிக்கிறது என்று அர்த்தம். சலனமற்றதாக இருந்து கொண்டு (உபாதியினால்) சலிப்பது போல தெரிகிறது. அதுவே சலிக்கிறது. அதுவே சலிப்பதில்லை. அது உண்மையாய் சலிப்பதில்லை. செல்வதில்லை, செல்வது போல் தெரிகிறது என்று அர்த்தம். மேலும் தூரத்தில் இருப்பது போல தெரிகிறது. சத கோடி வருடங்களானாலும் அவித்வான்களுக்கு தெரியாததால் தூரம் போல தெரிகிறது. “தத் உ அந்திகே” எனப் பகுக்க வேண்டும். அது அத்யந்த சமீபத்திலேயே இருக்கின்றது, வித்வான்களுக்கு ஆத்மாவாக இருப்பதால் தூரத்திலும் சமீபத்திலும் மட்டுமல்ல, இவை யாவற்றிற்கும் உள் இருப்பது “ய ஆத்மா சர்வாந்தர” சர்வத்திற்கும் உள் இருப்பதான யாதொரு ஆத்மா உண்டோ என்று பிருகதாரண்ய உபநிஷத் கூறுகிறது. அதுவே வெளியில் நாம ரூபமான இவ்வெல்லா ஜகத்தையும் வியாபித்து இருக்கிறது. ஆகாயம் போல நிரதிசயமாகவும், சூக்ஷுமமாகவும், வியாபகமாகவும் இருப்பதால் அந்த உள்ளே இருப்பது எதுவோ, அதுவே வெளியிலும் வியாபித்து இருக்கிறது. எனவே நிரந்தரமாக இருக்கிறது. உள்ளே நடுவில் மட்டுமின்றி வெளியிலும் (தொடர்ந்து) நிறைந்திருக்கிறது.
यस्तु सर्वाणि भूतानि आत्मन्येवानुपश्यति ।
सर्वभूतेषु चात्मानं ततो न विजुगुप्सते ॥ ६ ॥
எவனொருவன் எல்லா பூதங்களையும் ஆத்மாவினிடத்தே பார்ர்கின்றானோ- எல்லா பூதங்களிலும் ஆத்மாவை பார்க்கிறானோ அவன் மயக்கமடையமாட்டான்.
यस्तु परिव्राट् मुमुक्षुः सर्वाणि भूतानि अव्यक्तादीनि स्थावरान्तानि आत्मन्येव अनुपश्यति, आत्मव्यतिरिक्तानि न पश्यतीत्यर्थः । सर्वभूतेषु तेष्वेव च आत्मानं तेषामपि भूतानां स्वमात्मानमात्मत्वेन — यथास्य देहस्य कार्यकरणसङ्घातस्यात्मा अहं सर्वप्रत्ययसाक्षिभूतश्चेतयिता केवलो निर्गुणोऽनेनैव स्वरूपेणाव्यक्तादीनां स्थावरान्तानामहमेवात्मेति सर्वभूतेषु चात्मानं निर्विशेषं यस्त्वनुपश्यति, सः ततः तस्मादेव दर्शनात् न विजुगुप्सते विजुगुप्सां घृणां न करोति ।
எந்த பரிவிராஜகனான முமூட்சுவானவன் அவ்யக்தம் முதல் ஸ்தாவர பரியந்தம் உள்ள எல்லா பூதங்களையும் ஆத்மாவிலேயே (சாஸ்திர ஆச்சார்ய உபதேசத்திற்கு பிறகு பார்க்கிறானோ) தொடர்ந்து பார்க்கிறானோ அவன் ஆத்மாவைத் தவிர வேறுபட்டதாக பார்ப்பதில்லை என்பது பொருள். எல்லா பிராணிகளிடத்திலேயும், அந்த அந்த பிராணிகள் உள்ளும் தன்னுடைய ஆத்மா தான் அவர்களுக்கும் ஆத்மாவாக இருக்கிறது. எவ்வாறு இந்த காரிய காரண சங்காதமான தேகத்திற்கு ஆத்மாவான நான் அனைத்து எண்ணங்களுக்கும் சாக்ஷியாயும், சேதனமாயும் இருந்துகொண்டு, ஆட்டுவிக்கிறவனாகவும், கேவலமாகவும் (தனியாகவும்) நிர்குணமாகவும், அவ்யக்தாதி முதல் ஸ்தாவர பரியந்தம் எல்லா பூதங்களுக்கும் நானே ஆத்மாவாக இருக்கிறேன் என்று இந்தப் பிரகாரம் எவன் எல்லா பூதங்களிலும் தன்னுடைய நிர்விசேஷ ஆத்ம சொரூபத்தை தொடர்ந்து பார்க்கிறானோ அவன் ஆத்மதர்சியான காரணத்தினால் விருப்பு, வெறுப்பு அவனுக்கு கிடையாது.
प्राप्तस्यैवानुवादोऽयम् । सर्वा हि घृणा आत्मनोऽन्यद्दुष्टं पश्यतो भवति ; आत्मानमेवात्यन्तविशुद्धं निरन्तरं पश्यतो न घृणानिमित्तमर्थान्तरमस्तीति प्राप्तमेव — ततो न विजुगुप्सत इति ॥
இந்த விஜுகுப்ஸையானது (வெறுப்பு) எவனுக்கு ஏற்படுமெனில் ஆத்மாவைக்காட்டிலும் வேறான, தோஷமுள்ள பதார்த்தங்களைப் பார்ப்பவனுக்கு ஏற்படுகிறது. அத்யந்த விசுத்தமான ஆத்மாவை நிரந்தரமாக பார்ப்பவனுக்கு ஏற்படாது, வேறு பொருள் கிடையாததினால். அத்தகைய ஆத்ம சாக்ஷாத்காரத்தினால் வேறு ஒரு பொருள் விஷயத்தில் விஜுகுப்ஸை உடையவனாக ஆகமாட்டான் என்பது பிராப்தமாகிறது. ஆகையினால் அவன் விஜுகுப்ஸையை அடையமாட்டான்.
इममेवार्थमन्योऽपि मन्त्र आह —
(அவதாரிகை) இதே அர்த்தத்தையே அடுத்த மந்திரம் கூறுகிறது.
यस्मिन्सर्वाणि भूतानि आत्मैवाभूद्विजानतः ।
तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः ॥ ७ ॥
यस्मिन्सर्वाणि भूतानि यस्मिन् काले यथोक्तात्मनि वा, तान्येव भूतानि सर्वाणि परमार्थात्मदर्शनात् आत्मैवाभूत् आत्मैव संवृत्तः परमार्थवस्तु विजानतः, तत्र तस्मिन्काले तत्रात्मनि वा, को मोहः कः शोकः । शोकश्च मोहश्च कामकर्मबीजमजानतो भवति, न त्वात्मैकत्वं विशुद्धं गगनोपमं पश्यतः ।
எந்த சமயத்திலோ, (ஆத்மாவை அறிந்த சமயத்தில்) இவ்வாறு கூறப்பட்ட ஆத்மாவிடத்திலோ எல்லா பூதங்களையும் பரமாத்மாவாகவே பார்ப்பதால், அவைகள் ஆத்மாவாகவே ஆகின்றன. ஆத்மாதான் இருக்கிறது. பரமார்த்த வஸ்துவை அனைத்திலும் பார்ப்பவனுக்கு சோகம், மோகம் எப்படி உண்டாகும்? சோகம், மோஹம், காம கர்மத்திற்கு பீஜம். அக்ஞானத்தினால் உண்டாகிறது. எவனொருவன் ஆத்மாவை ஏகமாயும், விசுத்தமாயும், ஆகாயத்திற்கு ஒப்பாகவும் பார்க்கின்றானோ, அவனுக்கு சோகமோகம் உண்டாகாது.
को मोहः कः शोक इति शोकमोहयोरविद्याकार्ययोराक्षेपेणासम्भवप्रकाशनात् सकारणस्य संसारस्यात्यन्तमेवोच्छेदः प्रदर्शितो भवति ॥
ஏது சோகம், ஏது மோஹம் என்று அவித்யா காரியமான சோக மோஹங்களை ஆக்ஷபேித்து இல்லையென்று கூறுவதால், காரணத்துடன் கூடிய சம்சாரத்திற்கு முற்றிலும் இல்லாமை காண்பிக்கப்பட்டது.
योऽयमतीतैर्मन्त्रैरुक्त आत्मा, स स्वेन रूपेण किंलक्षण इत्याह अयं मन्त्रः —
(அவதாரிகை) எந்த இந்த ஆத்மா முந்தின மந்திரங்களால் கூறப்பட்டதோ, அந்த ஆத்மாவின் சொரூப லக்ஷணமானது என்ன என்பது இந்த மந்திரத்தினால் கூறப்படுகிறது.
स पर्यगाच्छुक्रमकायमव्रण—मस्नाविरं शुद्धमपापविद्धम् ।
कविर्मनीषी परिभूः स्वयम्भूर्याथातथ्यतो—ऽर्थान्व्यदधाच्छाश्वतीभ्यः समाभ्यः ॥ ८ ॥
स पर्यगात् , सः यथोक्त आत्मा पर्यगात् परि समन्तात् अगात् गतवान् , आकाशवद्व्यापीत्यर्थः । शुक्रं शुभ्रं ज्योतिष्मत् दीप्तिमानित्यर्थः । अकायम् अशरीरं लिङ्गशरीरवर्जित इत्यर्थः । अव्रणम् अक्षतम् । अस्नाविरम् स्नावाः सिरा यस्मिन्न विद्यन्त इत्यस्नाविरम् । अव्रणमस्नाविरमित्येताभ्यां स्थूलशरीरप्रतिषेधः । शुद्धं निर्मलमविद्यामलरहितमिति कारणशरीरप्रतिषेधः । अपापविद्धं धर्माधर्मादिपापवर्जितम् ।
எந்த இந்த முன்பு படித்த மந்திரங்களில் கூறப்பட்ட அந்த இந்த ஆத்மாவானது எங்கும் உள்ளது. பர்யகாத் என்றால் ஆகாயம் போல சர்வ வியாபி என்று அர்த்தம். சுத்தம், சுக்ரம் என்றால் பிரகாசமாக ஜொலிப்பது. ஆகாயம் என்று கூறியதால் அசரீரம், லிங்க சரீரமற்றது என்று அர்த்தம். அவ்ரணம் என்றால் குறைபாடற்றது (அக்ஷதம்), (புண்அற்றது) அஸ்னாவிரம், என்றால் நரம்பற்றது. அஸ்னாவிரம் அவ்ரணம் என்று கூறப்பட்டதால் தூல சரீரமானது நிஷேதிக்கப்பட்டுள்ளது (நீக்கப்பட்டுள்ளது). சுத்தம், நிர்மலம், அவித்யாமலரகிதம் என்று சொல்வதால் காரண சரீரம் நிஷேதிக்கப்பட்டது. அபாபவித்தம் என்றால் தர்மா தர்ம முதலிய பாபங்களற்றது.
शुक्रमित्यादीनि वचांसि पुंलिङ्गत्वेन परिणेयानि, स पर्यगात् इत्युपक्रम्य कविर्मनीषी इत्यादिना पुंलिङ्गत्वेनोपसंहारात् ।
சுக்ரம், சுத்தம் முதலிய நபும்சலிங்க வசனங்களில் புல்லிங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஸபர்யகாதித் ஆரம்பித்து “கவிமனீஷீ” முதலியதால் புல்லிங்கமாக கூறப்பட்டுள்ளதால்.
कविः क्रान्तदर्शी सर्वदृक् ,
‘नान्योऽतोऽस्ति द्रष्टा’ (बृ. उ. ३ । ७ । २३) इत्यादिश्रुतेः । मनीषी मनस ईषिता, सर्वज्ञ ईश्वर इत्यर्थः । परिभूः सर्वेषां परि उपरि भवतीति परिभूः । स्वयम्भूः स्वयमेव भवतीति, येषामुपरि भवति यश्चोपरि भवति स सर्वः स्वयमेव भवतीति स्वयम्भूः ।
கவி: - கிராந்ததர்சீ - சர்வதிருக் எல்லாவற்றையும் அறிந்தவன். இவனைக்காட்டிலும் அந்நியமான த்ரஷ்டா இல்லை என்ற சுருதியினால் அறியப்படுகிறது. ’மனீஷீ’ என்றால் மனதை பிரேரணை (தூண்டுதல்) செய்வதால் ஈஸ்வரன் சர்வக்ஞன் என்று அர்த்தம். எல்லாவற்றிக்கும் மேலாக இருப்பதால் பரிபூ: சுயம்பு தானாகவே தோன்றுவது (சுயமாகத் தோன்றுவது) எவற்றுக்கு மேல் இருக்கிறதோ எது எல்லாவற்றிக்கும் மேலே இருக்கிறதோ அவையாவும், எல்லாமாயும் சுயமாயும் இருப்பதால் சுயம்பு.
स नित्यमुक्त ईश्वरः याथातथ्यतः सर्वज्ञत्वात् यथातथाभावो याथातथ्यं तस्मात् यथाभूतकर्मफलसाधनतः अर्थान् कर्तव्यपदार्थान् व्यदधात् विहितवान् , यथानुरूपं व्यभजदित्यर्थः । शाश्वतीभ्यः नित्याभ्यः समाभ्यः संवत्सराख्येभ्यः प्रजापतिभ्य इत्यर्थः ॥
அந்த நித்ய முக்த ஈஸ்வரன் ஸர்வக்ஞரானதால் (எல்லாம் அறிந்தவரானதால்) உள்ளது உள்ளபடி கர்மபல சாதனத்தை ஒட்டி செய்யவேண்டியதான காரியங்களை (பதார்த்தங்களை) செய்தார். அதாவது அவர்களின் ஸ்வரூபத்திற்கு (தகுதிக்கு) ஏற்றவாறு பிரித்து அளித்தார். சாஸ்வதர்கள், நித்யர்கள் என்று சொல்லப்படுகிற சாமர்களின் பொருட்டு என்றால் ஸம்வத்ஸரர்கள் என்ற பிரஜாபதிகளின் பொருட்டு என்பது பொருள்.
(அவதாரிகை) இந்த ஈசாவாஸ்யம் என்ற உபநிஷத்தில் ஈசாவாஸ்யம் என்ற முதல் மந்திரத்தினால் ஏஷாணாத்திரய பரித்தியாகத்தால் உண்டாகும் ஞான நிஷ்டையானது முதல் (முக்கியமான) வேதார்த்தமாக கூறப்பட்டது. அக்ஞானிகளாய் ஜீவிப்பதில் இச்சையுள்ளவர்களாய் இருப்பவர்களுக்கு ஞான நிஷ்டை (அசம்பவம்) பொருந்தாததினால் குர்வன் ஏவ கர்மாணி ஜீஜீ விஷேத் என்ற இரண்டாவது மந்திரத்தில் கர்ம நிஷ்டை, இரண்டாவது வேதார்த்தமாக கூறப்பட்டது.
இந்த இரண்டு நிஷ்டையின் விபாகமும், இந்த இரண்டு மந்திரங்களால் காட்டப்பட்டுள்ளது. இதையே பிருகதாரண்ய உபநிஷத்திலும் காண்பிக்கப்பட்டுள்ளது. “ஸோ அகாமயத ஜாயாமே ஸ்யாத்” எனக்கு மனைவி வேண்டுமென்று அவன் விரும்பினான் முதலிய மந்திரங்களால் அக்ஞானியாகிய காமனை உள்ள அக்ஞானிக்குத்தான் கர்மங்கள் விதிக்கப்பட்டுள்ளன. “மன ஏவ அஸ்ய ஆத்மா வாக் ஜாயா” மனம் தான் ஆத்மா. வாக் தான் மனைவி முதலிய வசனங்கள் அக்ஞத்வம், காமித்வம், கர்ம நிஷ்டனுக்கு நிச்சயமாக இருக்கிறது என்று அறியப்படுகிறது. அப்படியே அதன் பலமானது சப்தான்ன ஸிருஷ்டி என்ற ஏழு அன்னங்களும் சிருஷ்டிக்கப்படுகிறது.
எல்லோருக்கும் பொதுவான நெல், கோதுமை — முதலியது மனித அன்னம்-1; ஹுதம், பிரஹுதம் என்ற தேவான்னம் -2; மனம், வாக், பிராணன் என்ற போகஸாதனம் - 3; பசுக்களுக்காக அதன் பால் -1 — இந்த ஏழு பிரகாரமான அன்னங்களின் சிருஷ்டி, கர்மத்தின் பலமாகும். அவைகளில் ஆத்ம பாவனை செய்வதால் அனாத்ம சொரூபத்தில் இருத்தல் ஏற்படுகிறது.
மனைவி முதலிய ஏஷணாத்திரய சந்நியாசத்தினால் ஆத்மாவை அறிந்தவர்களுக்கு கர்ம நிஷ்டைகளுக்கு பிரதிகூலமாக ஆத்மசொரூப நிஷ்டைதான் பிருகதாரண்ய உபநிஷத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனில் “கிம் பிரஜயா கரிஷ்யாமோ யேஷாம் நோ அயம் ஆத்மா அயம் லோக:” ஆத்மாவை அறிந்தவர்களுக்கு எந்த நமக்கு இதுவே ஆத்மாவோ, இதுவே லோகமோ, (போக சாதனம்) அந்த நாம் பிரஜைகளினால் என்ன செய்யப்போகிறோம் என்று கூறுவதால் கர்ம நிஷ்டையானது பிரதிகூலமாகிறது. எவர்கள் ஞான நிஷ்டர்களான சந்நியாசிகளோ அவர்களுக்கு அஸூர்யா நாம முதலிய மந்திரங்களால் அவித்வான்களை நிந்திப்பதன் வாயிலாக ஆத்மாவினுடைய யாதாத்மியம் (உண்மை சொரூபமானது) ஸ பர்யகாத் என்பது வரையுள்ள மந்திரங்களால் உபதேசிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தான் ஞான நிஷ்டையில் அதிகாரிகள், காமிகள் அல்ல. அவ்வாறே ச்வேதாச்வதர உபநிஷத் மந்திரங்களிலும் ரிஷிக்கூட்டங்களால் நன்கு சேவிக்கப்பட்டதும், மேலானதும், பவித்ரமானதும் ஆன ஆத்ம ஞானத்தை ஆசிரம தர்மத்தைக் கடந்தவர்களுக்கு உபதேசம் செய்யப்பட்டது என்று இவ்விதமாக ஞான நிஷ்டையானது தனியாக நன்கு பிரித்து உபதேசிக்கப்பட்டுள்ளது.
கர்ம நிஷ்டர்களாக எந்த கர்மிகள் ஜீவிக்கும் அளவும் கர்மம் செய்துக்கொண்டே ஜீவிக்க வேண்டுமென்று விரும்புகிறார்களோ, அவர்களைக் குறித்து இந்த மந்திரமானது உபதேசிக்கப்பட்டுள்ளது.
कथं पुनरेवमवगम्यते, न तु सर्वेषाम् इति ?
இது எல்லோருக்கும் இல்லையென்று எப்படித் தெரிகிறது எனில்,
இவ்வாறு கூறப்படுகிறது காமனை அற்ற புருஷனுக்கு சாதனை அழிந்து சாத்யங்களான பேதம் விட்டதினால், எதில் எல்லாம் அறிந்தவனுக்கு பூதங்களும் ஆத்மாவாகவே ஆகிறதோ (அவனுக்கு) எல்லாமே ஏகத்வமாக தொடர்ந்து பார்ப்பதால் அவனுக்கு சோக, மோகமானது எவ்வாறு உண்டாகும் என்று ஆத்ம ஐக்ய விக்ஞானமானது கூறப்பட்டது. அதை மூடனல்லாதவன் எந்த வேறு ஒரு கர்மாவோடும் மற்ற ஞானத்தோடும் (உபாசனை தேவதா ஞானம்) சமுச்சயம் செய்ய (சேர்க்க) விரும்பமாட்டான். இங்கு சமுச்சய இச்சையினால் அவித்வான் முதலியவர்களின் நிந்தை செய்யப்படுகிறது. அங்கு எதற்கு எதனோடு சமுச்சயமானது சாஸ்திரத்தினாலாவது, நியாயத்தினாலாவது ஸம்பவிக்கிறதோ அது இங்கு கூறப்படுகிறது. எவ்வாறு கூறப்படுகிறதெனில் தேவதா விஷய ஞானத்திற்கு கர்மத்துடன் ஸம்பந்தமிருப்பதால் சொல்லப்பட்டது. தவிர பரமாத்ம ஞானத்தை அல்ல. வித்தையினால் (உபாஸனத்தால்) தேவ லோகம் என (பிருகதாரண்யக உபநிஷத்தில்) வேறாக பலன் கூறப்பட்டுள்ளது. இங்கு ஞான கர்மங்களில் ஒவ்வொன்றை தனித்தனியாக செய்வது நிந்திக்கப்படுகிறது. இரண்டும் சேர்ந்து செய்தால் நிந்திக்கப்படவில்லை. பிருகதாரண்யக உபநிஷத்தில் ஒவ்வொன்றும் தனித்தனியாக பலன் கூறப்பட்டுள்ளது. வித்தையினால் அந்த தேவலோகம் செல்கிறார்கள், வித்தையினால் தேவலோகம் அங்கு தக்ஷிண மார்க்கத்தை அறிந்தவர்கள் போவதில்லை கர்மத்தினால் பிதிர்லோகம் என்று பிருகதாரண்யக உபநிஷத்தில் உள்ளது. ஆகையால் சாஸ்த்திரத்தில் விதிக்கப்பட்ட கர்மமானது செய்யத் தகாததாக ஆகாது எனப்படுகிறது.
अन्धं तमः प्रविशन्ति ये अविद्यामुपासते ।
ततो भूय इव ते तमो य उ विद्यायां रताः ॥ ९ ॥
अन्धं तमः अदर्शनात्मकं तमः प्रविशन्ति । के ? ये अविद्याम् , विद्याया अन्या अविद्या कर्मेत्यर्थः, कर्मणो विद्याविरोधित्वात् , तामविद्यामग्निहोत्रादिलक्षणामेव केवलाम् उपासते तत्पराः सन्तोऽनुतिष्ठन्तीत्यभिप्रायः । ततः तस्मादन्धात्मकात्तमसः भूय इव बहुतरमेव ते तमः प्रविशन्ति । के ? कर्म हित्वा ये उ ये तु विद्यायामेव देवताज्ञाने एव रताः अभिरताः ॥
அங்கு நம்மால் பார்க்க முடியாத அதர்சனமான இருளில் பிரவேசிக்கின்றனர். எவர்களெனின்? அவித்தையானது வித்தைக்கு அன்னியமானது. (அவித்யா) கர்மம் வித்யைக்கு விரோதமானது. அவித்யா என்றால் கர்மம் என்று அர்த்தம். ஏன் எனில் அந்த அவித்தையான அக்னி ஹோத்ராதி லக்ஷணமான கேவல கர்மத்தை மட்டும் உபாசிப்பவர்கள் அதிலேயே கருத்துடன் அனுஷ்டிப்பவர்கள். அதைக்காட்டிலும் அதிகமான அந்தகாரத்தில் (இருளில்) பிரவேசிக்கிறார்கள். எவர்களெனின்? கர்மத்தை அனுஷ்டிக்காமல் வித்தையிலேயே என்றால் தேவதா ஞானத்திலேயே ரமிக்கின்றவர்கள்.
तत्रावान्तरफलभेदं विद्याकर्मणोः समुच्चयकारणमाह । अन्यथा फलवदफलवतोः संनिहितयोरङ्गाङ्गितया जामितैव स्यादिति —
அங்கு வித்யா கர்மங்களுக்கு அவாந்தரபலபேதம் இருப்பதினால் அது சமுச்சயத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. ஒன்று பலனுள்ளதாகவும் மற்றொன்று பலனில்லாததாகவும் பக்கத்திலேயே இருக்குமானால், அதில் ஒன்று பிரதானமாகவும் மற்றொன்று அங்கமாகவும் ஆகும். இங்கே சமுச்சயம் கிடையாது.
अन्यदेवाहुर्विद्यया अन्यदाहुरविद्यया ।
इति शुश्रुम धीराणां ये नस्तद्विचचक्षिरे ॥ १० ॥
अन्यत् पृथगेव विद्यया क्रियते फलमिति आहुः वदन्ति, अन्यदाहुरविद्यया कर्मणा क्रियते फलमिति । तथोक्तम् —
‘कर्मणा पितृलोकः, विद्यया देवलोकः’ (बृ. उ. १ । ५ । १६) इति । इति एवं शुश्रुम श्रुतवन्तो वयं धीराणां धीमतां वचनम् । ये आचार्या नः अस्मभ्यं तत् कर्म च ज्ञानं च विचचक्षिरे व्याख्यातवन्तः, तेषामयमागमः पारम्पर्यागत इत्यर्थः ॥
வித்தையினால் வேறான பலன் கிடைக்கிறது என்று கூறுவர்.
(தேவலோகம்). வித்தையினால் தேவலோகம், வித்தையினால் மேல் செல்கின்றனர் என்று சுருதி வாக்யம். அவ்வாறே அவித்தையினால் (கர்மத்தினால்) தனிபலன் என்றும் கர்மத்தினால் பிதிர்லோகம் என்றும் சுருதியினால் கூறப்படுகிறது. இவ்வாறு நாம் புத்திசாலிகளுடைய வசனத்தைக் கேட்டிருக்கிறோம். எந்த ஆசார்யர்கள் நம்பொருட்டு கர்மம், ஞானம் இதை நன்றாகப் பிரித்து வியாக்கியானம் செய்தார்களோ, அவர்களின் இந்த உபதேசம் பரம்பரையினால் வந்தது என்று பொருள்.
यत एवमतः —
विद्यां चाविद्यां च यस्तद्वेदोभयं सह ।
अविद्यया मृत्युं तीर्त्वा विद्ययामृतमश्नुते ॥ ११ ॥
विद्यां च अविद्यां च देवताज्ञानं कर्म चेत्यर्थः । यस्तत् एतदुभयं सह एकेन पुरुषेण अनुष्ठेयं वेद तस्यैवं समुच्चयकारिण एकैकपुरुषार्थसम्बन्धः क्रमेण स्यादित्युच्यते —
இவ்வாறு இருப்பதால் வித்தை (தேவதாஞானம்) அவித்யா (கர்மம்) இரண்டையும் சேர்த்து அனுஷ்டிப்பதை அறிந்துள்ளானோ, அவ்விதமே சேர்ந்து அனுஷ்டிக்கிற அவனுக்குத்தான் இவ்வாறு ஒரே புருஷார்த்த சம்பந்தமானது கிரமமாக உண்டாகும் என்று கூறப்படுகிறது.
अविद्यया कर्मणा अग्निहोत्रादिना मृत्युम् , स्वाभाविकं कर्म ज्ञानं च मृत्युशब्दवाच्यम् , तदुभयं तीर्त्वा अतिक्रम्य विद्यया देवताज्ञानेन अमृतं देवतात्मभावम् अश्नुते प्राप्नोति । तद्ध्यमृतमुच्यते, यद्देवतात्मगमनम् ॥
அவித்யயா என்றால் அக்னி ஹோத்ராதி கர்மத்தினால், ம்ருத்யு என்ற சப்த வாச்சியமான ஸ்வாபாவிகமான (அவித்தையால் ஏற்பட்ட) கர்மம், ஞானம் என்ற இரண்டையும் தாண்டி வித்தையினால் (தேவதாஞானம்) அமிர்தமாகிய தேவதாத்ம பாவத்தை அடைகிறான். தேவதாத்ம பாவத்தை அடைதலே அமிர்தம்.
अधुना व्याकृताव्याकृतोपासनयोः समुच्चिचीषया प्रत्येकं निन्दोच्यते —
இப்பொழுது வியாகிருதோபாஸனம் அவ்யாகிருதோ பாஸனம் இவைகளின் சமுச்சியத்தின் இச்சையினால் ஒவ்வொன்றையும் தனித்தனியாக நிந்தை செய்யப்படுகிறது.
अन्धं तमः प्रविशन्ति येऽसम्भूतिमुपासते ।
ततो भूय इव ते तमो य उ सम्भूत्यां रताः ॥ १२ ॥
अन्धं तमः प्रविशन्ति ये असम्भूतिम् , सम्भवनं सम्भूतिः सा यस्य कार्यस्य सा सम्भूतिः तस्या अन्या असम्भूतिः प्रकृतिः कारणम् अव्याकृताख्यम् , तामसम्भूतिमव्याकृताख्यां प्रकृतिं कारणमविद्यां कामकर्मबीजभूतामदर्शनात्मिकाम् उपासते ये ते तदनुरूपमेवान्धं तमः अदर्शनात्मकं प्रविशन्ति । ततः तस्मादपि भूयो बहुतरमिव तमः ते प्रविशन्ति ये उ सम्भूत्यां कार्यब्रह्मणि हिरण्यगर्भाख्ये रताः ॥
குருட்டு (கார் இருள்) அஸம்பூதியை அடைகிறவர்கள் எவர்கள் எனில்..,
ஸம்பூதி என்றால் உண்டாகுதல், அந்த உற்பத்தியானது எந்தக் காரியத்திற்கு இருக்கிறதோ அது ஸம்பூதி. அதைவிட அன்னியமானது அஸம்பூதி. அதுவே பிரகிருதி. அதன் காரணம் அவித்யா. அந்த அவித்தையே அவ்யாகிருதம் என்று சொல்லப்படுகிறது. அதுவே அஸம்பூதி என்றும் அவ்யாகிருதம் என்றும் சொல்லப்படுகிற மூலப்பிருகிருதி. அதுவே காரணமாகிய அவித்யா. அந்த அவித்தையே காமகர்மத்திற்கு பீஜம். அதர்சனாத்மகமான அந்த அவித்யயை எவர்கள் உபாசிக்கிறார்களோ, அவர்கள் அதற்கு தகுந்தபடி கார் இருளில் பிரவேசிக்கின்றனர். எவர்கள் ஸம்பூதியாகிய வியாகிருதி எனப்படும் காரிய பிரம்மமாகிய ஹிரண்யகர்ப்பனிடத்தில் ரமிக்கின்றார்களோ, அவர்கள் முன்பு கூறப்பட்டதைவிட அதிகமான இருளில் பிரவேசிக்கின்றனர்.
अधुना उभयोरुपासनयोः समुच्चयकारणमवयवफलभेदमाह —
இப்பொழுது இந்த இரண்டு உபாசனைகளையும் சமுச்சயம் செய்வதன் காரணமாகிய அவயவ பல பேதமானது கூறப்படுகிறது.
अन्यदेवाहुः सम्भवादन्यदाहुरसम्भवात् ।
इति शुश्रुम धीराणां ये नस्तद्विचचक्षिरे ॥ १३ ॥
अन्यदेव पृथगेव आहुः फलं सम्भवात् सम्भूतेः कार्यब्रह्मोपासनात् अणिमाद्यैश्वर्यलक्षणम् आख्यातवन्त इत्यर्थः । तथा च अन्यदाहुरसम्भवात् असम्भूतेः अव्याकृतात् अव्याकृतोपासनात् यदुक्तम्
‘अन्धं तमः प्रविशन्ति’ (ई. उ. ९) इति, प्रकृतिलय इति च पौराणिकैरुच्यते । इति एवं शुश्रुम धीराणां वचनं ये नस्तद्विचचक्षिरे व्याकृताव्याकृतोपासनफलं व्याख्यातवन्त इत्यर्थः ॥
ஸம்பூதியாகிய காரியபிரம்ம உபாசனைக்கு பலன் வேறு. இந்த காரியபிரம்ம உபாசனைக்கு அணிமாதி ஐஸ்வர்ய லக்ஷ்ணமான பலனைக் கூறினார்கள் என்று பொருள். அவ்வாறே அஸம்பவம் என்றும் அஸம்பூதி என்றும் கூறப்படுகின்ற அவ்யாகிருத உபாசனையின் பலனானது வேறு என்று சொல்கின்றனர். அவ்யாகிருத உபாசனையினால், அதிகமான இருளில் பிரவேசிக்கிறார்கள் என்று எது கூறப்பட்டதோ, அது பிருகிருதிலயம் என்று பௌராணிகர்களால் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு புத்திசாலிகளுடைய (தீரர்களுடைய) வசனமானது நம்மால் கேட்கப்பட்டது. எவர்கள் நமக்கு வியாகிருத, அவ்யாகிருத பலத்தை விளக்கிக் கூறியிருக்கிறார்களோ அந்த தீரர்களுடைய வசனத்தை கேட்டிருக்கின்றோம்.
यत एवम् , अतः समुच्चयः सम्भूत्यसम्भूत्युपासनयोर्युक्तः एकैकपुरुषार्थत्वाच्चेत्याह —
எதனால் இவ்வாறு கூறப்பட்டதோ அதனால் சம்பூதி, அசம்பூதி உபாசனைகளுக்கு ஒரே புருஷார்த்தமானதால் ஸமுச்சயம் யுக்தம் தான் பலன்.
सम्भूतिं च विनाशं च यस्तद्वेदोभयं सह ।
विनाशेन मृत्युं तीर्त्वा सम्भूत्यामृतमश्नुते ॥ १४ ॥
सम्भूतिं च विनाशं च यस्तद्वेदोभयं सह, विनाशेन, विनाशो धर्मो यस्य कार्यस्य स तेन धर्मिणा अभेदेनोच्यते ‘विनाशः’ इति । तेन तदुपासनेनानैश्वर्यमधर्मकामादिदोषजातं च मृत्युं तीर्त्वा, हिरण्यगर्भोपासनेन ह्यणिमादिप्राप्तिः फलम् , तेनानैश्वर्यादिमृत्युमतीत्य, असम्भूत्या अव्याकृतोपासनया अमृतं प्रकृतिलयलक्षणम् अश्नुते ।
எவனொருவன் ஸம்பூதி, விநாசம் இரண்டையும் சேர்ந்தே அறிகின்றானோ, எந்த காரியமானது விநாசத்தை உடையதாக இருக்கின்றதோ, அந்த தர்மியுடன் அபேதமாக இருப்பதால் விநாசம் என்று கூறப்பட்டது. அந்த ஸம்பூதி (விநாச) உபாசனையினாலே அனைஸ்வரியம் அதர்மம் காமம் முதலிய தோஷமாகிற ம்ருத்யுவைத் தாண்டி, ஹிரண்யகர்ப்ப உபாசனையினால் அணிமாதி ஐஸ்வர்ய பிராப்தி(பலம்) ஏற்படும். அந்த ஹிரண்யகர்ப்ப உபாசனை பலமாகிய அணிமாதி பலப்பிராப்தியினால் அனைஸ்வர்யம் முதலிய ம்ருத்யுவைத் தாண்டி அஸம்பூதி என்கிற அவ்யாகிருத உபாசனையினால் அமிர்தமாகிய பிருகிருதி லய பலத்தை அடைகிறான்.
‘सम्भूतिं च विनाशं च’ इत्यत्रावर्णलोपेन निर्देशो द्रष्टव्यः, प्रकृतिलयफलश्रुत्यनुरोधात् ॥
(மூலத்தில்) ஸம்பூதிம் ச விநாசம் ச என்ற இடத்தில் அ என்ற எழுத்து விட்டு குறிப்பிட்டிருப்பதாக கொள்ளவும். பிரகிருதிலய பலன் கூறப்பட்டதே அதன் காரணமாகும்.
(மந்திரத்தில் இறுதி ஸம்பூதியில் அ சேர்த்து அஸம்பூத்யா என்று படிக்கவும்.)
मानुषदैववित्तसाध्यं फलं शास्त्रलक्षणं प्रकृतिलयान्तम् ; एतावती संसारगतिः । अतः परं पूर्वोक्तम् ‘आत्मैवाभूद्विजानतः’ इति सर्वात्मभाव एव सर्वैषणासंन्यासज्ञाननिष्ठाफलम् । एवं द्विप्रकारः प्रवृत्तिनिवृत्तिलक्षणो वेदार्थोऽत्र प्रकाशितः । तत्र प्रवृत्तिलक्षणस्य वेदार्थस्य विधिप्रतिषेधलक्षणस्य कृत्स्नस्य प्रकाशने प्रवर्ग्यान्तं ब्राह्मणमुपयुक्तम् । निवृत्तिलक्षणस्य प्रकाशने अत ऊर्ध्वं बृहदारण्यकम् ।
சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள மானுஷவித்தம் (கர்மா) தைவவித்தம் தேவதா உபாசனை இரண்டினாலும் அடையக்கூடிய பலன் பிரகிருதி லயத்தை முடிவாக உடையது. இதுவரை கூறப்பட்டது சம்சார கதி. இது பிரவிர்த்தி மார்க்கம். அதற்கு மேல் முன்பு கூறப்பட்ட ஆத்மாவை அறிந்தவனுக்கு எல்லாம் ஆத்மாவே என்ற சர்வாத்ம பாவம் தான் ஏஷணாத்திரய சந்நியாச பூர்வகமான ஞான நிஷ்டையின் பலம். இவ்வாறாக இரண்டு பிரகாரமாக பிரவிர்த்தி, நிவிர்த்தி ரூபமான வேதார்த்தமானது, இங்கு பிரகாசப்படுத்தப்பட்டது. அங்கு விதிநிஷேத ரூபமானதும், பிரவிர்த்தி ரூபமானதுமான எல்லா வேதார்த்தத்தையும் பிரகாசப்படுத்தும் விஷயத்தில் பிரவர்க்யாந்தமான (பிரவிர்த்தி) பிராஹ்மணமானது (வேதவாக்யம்) உபயோகிக்கப்படுகிறது. நிவிர்த்தி லக்ஷணமான வேதார்த்தம் முழுவதையும் பிரகாசப்படுத்தும் விஷயத்தில் இதற்கு மேலே உள்ள பிருஹதாரண்யம் உபயோகிக்கப்படுகிறது.
அங்கு கர்ப்ப தானம் முதல் மரணம் வரைக்கும் உள்ள கர்மம் செய்துகொண்டே அபர பிரஹ்ம விஷயமான வித்யையுடன் ஜீவிக்கிறவனுக்கு கூறப்பட்டுள்ளது. (வித்யாம் ச அவித்யாம் ச ய: தத் வேத உபயம் ஸஹ. அவித்ய யாம்ருத்யும் தீர்த்வா வித்யையா அமிர்தம் அஷ்னுதே.)
அங்கு எந்த மார்க்கத்தினால் அழியாத நிலையை அடைகிறான் என்பது கூறப்படுகிறது. அந்த எந்த சத்திய ரூபமான பிரஹ்மம் உண்டோ அது இந்த ஆதித்யன். ஆதித்ய மண்டலத்தில் அந்த எந்த 2 புருஷன் இருக்கின்றானோ அவனும் வலது கண்ணில் எந்த இந்த புருஷன் இருக்கின்றானோ அவர்கள் இருவரும் சத்யம். பிரஹ்மத்தை (அபர பிரஹ்மத்தை) உபாசிப்பவன் முன்பு கூறப்பட்டவாறு கர்மத்தையும் செய்கிறவன் எவனோ அவன் இறுதி காலம் வந்த பொழுது சத்ய ஆத்மாவை தான் அடைய வேண்டிய வழியை ’ஹிரண்மயேன பாத்ரேண’ என்ற மந்திரத்தினால் யாசிக்கிறான்.
हिरण्मयेन पात्रेण सत्यस्यापिहितं मुखम् ।
तत्त्वं पूषन्नपावृणु सत्यधर्माय दृष्टये ॥ १५ ॥
हिरण्मयेन पात्रेण हिरण्मयमिव हिरण्मयम् , ज्योतिर्मयमित्येतत् , तेन पात्रेणेव अपिधानभूतेन सत्यस्य आदित्यमण्डलस्थस्य ब्रह्मणः अपिहितम् आच्छादितं मुखं द्वारम् ; तत् त्वं हे पूषन् अपावृणु अपसारय सत्यधर्माय तव सत्यस्योपासनात्सत्यं धर्मो यस्य मम सोऽहं सत्यधर्मा तस्मै मह्यम् ; अथवा, यथाभूतस्य धर्मस्यानुष्ठात्रे, दृष्टये तव सत्यात्मन उपलब्धये ॥
ஹிரண்மயம் போல் பிரகாசமுள்ள பாத்திரம் போல் மறைக்கிற கிரண ஸமூஹத்தால் ஆதித்ய மண்டலத்திலுள்ள ஸத்ய பிரஹ்மத்தின் முகம் (வழி) மறைக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஏ சூரியனே சத்தியத்தினுடைய உபாசனை செய்வதால் சத்ய தர்மமானது எந்த எனக்கு உண்டாயிற்றோ அந்த நான் சத்திய தர்மாவாக ஆகிறேன் அல்லது ஸத்யோபாஸனம் செய்கிற என் பொருட்டு ஸத்யாத்மாவான உன்னை அடையும் பொருட்டு மறைப்பைப் போக்கும். பிரகாசம்கூட தடையாகிறது. அதுவும் நாம ரூபமாகிறது. எத் திருசியம் தத் நாசம். அக்ஞானமாக இருந்துவிடுகிறது.
पूषन्नेकर्षे यम सूर्य प्राजापत्य व्यूह रश्मीन्समूह तेजो यत्ते रूपं कल्याणतमं
तत्ते पश्यामि योऽसावसौ पुरुषः सोऽहमस्मि ॥ १६ ॥
हे पूषन् जगतः पोषणात्पूषा रविः । तथा एक एव ऋषति गच्छतीत्येकर्षिः हे एकर्षे । तथा सर्वस्य संयमनाद्यमः हे यम । तथा रश्मीनां प्राणानां रसानां च स्वीकरणात्सूर्यः हे सूर्य । प्रजापतेरपत्यं प्राजापत्यः हे प्राजापत्य । व्यूह विगमय रश्मीन् स्वान् । समूह एकीकुरु उपसंहर तेजः तावकं ज्योतिः ।
ஜகத்தை போஷிப்பதனால் (வளர்ப்பது) சூரியனுக்கு பூஷா எனப் பெயர். அவ்வாறே ஒருவனாகவே செல்வதனாலே ஏக ரிஷி : அவ்வாறே எல்லோரையும் நியமனம் செய்வதினாலே யமன். ஹே சூர்ய : கிரணங்களையும், பிராணன்களையும் ரசங்களையும் ஸ்வீகரிப்பதால் சூர்யன் எனப்படுபவன் பிரஜாபதியினுடைய குமாரன் பிராஜாபத்யன் ஹே பிரஜாபத்ய உன்னுடைய கிரகணங்களை ஒடுக்கிக்கொள். ஒன்றாகச் செய் உன்னுடைய தாபகமான ஜ்யோதியைச் சாந்தப்படுத்து.
यत् ते तव रूपं कल्याणतमम् अत्यन्तशोभनम् , तत् ते तवात्मनः प्रसादात् पश्यामि । किञ्च, अहं न तु त्वां भृत्यवद्याचे योऽसौ आदित्यमण्डलस्थः असौ व्याहृत्यवयवः पुरुषः पुरुषाकारत्वात् , पूर्णं वानेन प्राणबुद्ध्यात्मना जगत्समस्तमिति पुरुषः ; पुरि शयनाद्वा पुरुषः । सोऽहम् अस्मि भवामि ॥
எந்த இந்த உன்னுடைய ரூபமானது மிகுந்த சோபையுடன் கூடியதோ அதை ஆத்மாவான உன்னுடைய பிரசாதத்தினால் பார்க்கிறேன். மேலும் நான் உன்னை வேலைக்காரன் போல் யாசிக்கவில்லை. எவன் ஆதித்யமண்டலத்தின் இருக்கிற भुः என்ற வியாஹ்ருதிகளை அங்கமாக உடைய புருஷன் புருஷ: புருஷ வடிவமாக இருப்பதால் பூரணமாகவே இருப்பதால் புருஷன் புருஷ: பிராண, புத்தி வடிவமாக ஜகத் முழுவதும் நிறைந்து இருப்பதால் புருஷன் புருஷ: சரீரத்தில் இருதயக் குகையில் சயனம் செய்வதால் புருஷன் அவனே நானாகிறேன்.
वायुरनिलममृतमथेदं भस्मान्तं शरीरम् ।
ओं क्रतो स्मर कृतं स्मर क्रतो स्मर कृतं स्मर ॥ १७ ॥
अथेदानीं मम मरिष्यतो वायुः प्राणः अध्यात्मपरिच्छेदं हित्वा अधिदैवतात्मानं सर्वात्मकम् अनिलम् अमृतं सूत्रात्मानं प्रतिपद्यतामिति वाक्यशेषः । लिङ्गं चेदं ज्ञानकर्मसंस्कृतमुत्क्रामत्विति द्रष्टव्यम् , मार्गयाचनसामर्थ्यात् । अथ इदं शरीरमग्नौ हुतं भस्मान्तं भस्मावशेषं भूयात् ।
பிறகு இப்பொழுது என்னுடைய மரணத்தருவாயில் இருக்கிற (வாயுவானது) பிராணன் (அத்யாத்ம பரிச்சேதம்) சரீரத்திலுள்ள குறுகிய வடிவத்தை விட்டு அதி தெய்வ ஸ்வரூபமான எல்லாமாக உள்ள (எங்கும் வியாபகமான) அனிலம் (வாயு) அமிர்தமாக உள்ள சூத்ராத்மாவை அடையட்டும். லிங்க தேகமானது உபாசனையினாலும் கர்மத்தினாலும் பண்படுத்தப்பட்டதாய் (மேன்மை அடைகிறது) வெளிக்கிளம்பட்டும் என பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும். மார்க்க யாசனம் செய்திருப்பதால் வெளிக்கிளம்புகிறான் என்று தெரிகிறது. அதன் பிறகு இந்த சரீரமானது அக்னியில் ஹோமம் செய்யப்பட்டு பஸ்பமாக ஆகட்டும்.
ओमिति यथोपासनम् ओम्प्रतीकात्मकत्वात्सत्यात्मकमग्न्याख्यं ब्रह्माभेदेनोच्यते । हे क्रतो सङ्कल्पात्मक स्मर यन्मम स्मर्तव्यं तस्य कालोऽयं प्रत्युपस्थितः, अतः स्मर एतावन्तं कालं भावितं कृतम् अग्ने स्मर यन्मया बाल्यप्रभृत्यनुष्ठितं कर्म तच्च स्मर । क्रतो स्मर कृतं स्मर इति पुनर्वचनमादरार्थम् ॥
உபாஸனத்திற்குத் தக்கபடி ஓங்காரம் பிரதீகமாக இருப்பதால் ஸத்ய ஸ்வரூபமாயும் அக்னி என்ற பெயருள்ளதாயும் இருக்கும் பிரஹ்மம் ஓம் என்று அபேதமாகவே சொல்லப்படுகிறது. ஓங்காரமே பிரஹ்மம் என்று. ஹே, சங்கல்பாத்மக மனமே! (ஹே க்ரதோ) எது என்னால் நினைக்கப்பட வேண்டுமோ அதற்குத் தகுந்த காலமானது நெருங்கிவிட்டது. அதை நினை. ஆகையால் இவ்வளவு காலம் என்னால் செய்யப்பட்டதையும் நினை. பால்யம் முதல் என்னால் எந்தக் காமம் அனுஷ்டிக்கப்பட்டதோ அதையும் நினை. க்ரதோ ஸ்மர. கிருதம் ஸ்மர என்று இரண்டு தடவை கூறியது தனக்கு அவ்விஷயத்தில் உள்ள அதிக ஆதரவைக் காட்டுகிறது.
पुनरन्येन मन्त्रेण मार्गं याचते —
மறுபடியும் அடுத்த மந்திரத்தினால் மார்க்கமானது யாசிக்கப்படுகிறது.
अग्ने नय सुपथा राये अस्मान्विश्वानि देव वयुनानि विद्वान् ।
युयोध्यस्मज्जुहुराणमेनो भूयिष्ठां ते नमउक्तिं विधेम ॥ १८ ॥
हे अग्ने नय गमय सुपथा शोभनेन मार्गेण । सुपथेति विशेषणं दक्षिणमार्गनिवृत्त्यर्थम् । निर्विण्णोऽहं दक्षिणेन मार्गेण गतागतलक्षणेन ; अतो याचे त्वां पुनः पुनः गमनागमनवर्जितेन शोभनेन पथा नय । राये धनाय, कर्मफलभोगायेत्यर्थः । अस्मान् यथोक्तधर्मफलविशिष्टान् विश्वानि सर्वाणि हे देव वयुनानि कर्माणि, प्रज्ञानानि वा विद्वान् जानन् ।
ஹே தேவனே அக்னியே எங்களை நல்ல சுபமான (சுபதா) மார்க்கத்தில் அழைத்துச் செல். (உத்தராயண) சுபதா என்ற விசேஷணமானது தக்ஷிண மார்க்கத்தை நிவர்த்தி செய்வதின் பொருட்டாகும். போய் வரக்கூடிய தக்ஷிண மார்க்கத்தினால் நான் மிகுந்த சோகத்துடன் கூடியவனாக இருக்கிறேன். ஆகையால் உன்னிடம் மறுபடியும் மறுபடியும் வருவதும் போவதும் அற்ற சோபனமான மார்க்கந்தனில் செலுத்து என யாசிக்கிறேன். ராயே என்றால் தனத்தின் பொருட்டு. இதற்கு கர்ம பல போகத்தின் பொருட்டு என்று அர்த்தம். இவ்வாறு கூறிய எல்லா புண்ணிய கர்ம பலங்களுடன் கூடிய எங்களை அல்லது ஹே தேவ, எங்களுடைய புண்ய கர்மங்களையும் தேவதா ஞானத்தையும் வேதாந்த சிரவணத்தால் உண்டான ஞானத்தையும் தாங்கள் நன்கு அறிந்து.
किञ्च, युयोधि वियोजय विनाशय अस्मत् अस्मत्तः जुहुराणं कुटिलं वञ्चनात्मकम् एनः पापम् । ततो वयं विशुद्धाः सन्तः इष्टं प्राप्स्याम इत्यभिप्रायः । किन्तु वयमिदानीं ते न शक्नुमः परिचर्यां कर्तुम् ; भूयिष्ठां बहुतरां ते तुभ्यं नमउक्तिं नमस्कारवचनं विधेम नमस्कारेण परिचरेम इत्यर्थः ॥
மேலும் எங்களுடைய (குடிலமான) வஞ்சகாத்மகமான பாபத்தை நாசம் செய். அதனால் நாங்கள் விசுத்தர்களாக இருந்துகொண்டு இஷ்டத்தை அடைவோமாக என்பது அபிப்ராயம். ஆனால் நாங்கள் இப்பொழுது உனக்கு அதிகமாக பணிவிடை செய்வதற்கு சக்தியற்றவர்களாக இருக்கிறோம். உமக்கு நமஸ்கார வசனத்தை செய்கிறோம். நமஸ்கார ரூபமாக பணிவிடை செய்கிறோம் என்பது பொருள்.
அவித்தையினால் (கர்மத்தினால்) ம்ருத்யுவைக் கடந்து வித்தையினால் (தேவதா உபாசனத்தால்) அமிர்தத்துவத்தை அடைகிறான்.
‘விநாசேன மிருத்யும் தீர்த்வா அசம்பூத்யா அமிருதம் அச்னுதே’ என்ற சுருதி வாக்யங்களைக் கேட்டு சிலர் சந்தேஹத்தை அடைகின்றார்கள்.
तत्र तावत्किंनिमित्तः संशय इति, उच्यते —
ஆகையால் அந்த சந்தேகத்தை நிவிர்ப்பதின் பொருட்டு இங்கு சுருக்கமாக விசாரம் செய்யப்போகிறோம்.
அங்கு எதன் நிமித்தமாக சந்தேகம் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.
विद्याशब्देन मुख्या परमात्मविद्यैव कस्मान्न गृह्यते, अमृतत्वं च ?
(பூர்வபக்ஷம்) வித்யா சப்தத்தினால் முக்ய பரமாத்ம வித்தையானது ஏன் கிரஹிக்கப்படவில்லை. அமிர்தத்வம் கூட (முக்யமானது) என் கிரஹிக்கப் படவில்லை.
ननूक्तायाः परमात्मविद्यायाः कर्मणश्च विरोधात्समुच्चयानुपपत्तिः ।
(ஸித்தாந்தம்) முன் கூறப்பட்ட பரமாத்ம வித்தைக்கும் கர்மத்திற்கும் விரோதம் இருப்பதால் சமுச்சயமானது பொருந்தாது.
सत्यम् । विरोधस्तु नावगम्यते, विरोधाविरोधयोः शास्त्रप्रमाणकत्वात् ; यथा अविद्यानुष्ठानं विद्योपासनं च शास्त्रप्रमाणकम् , तथा तद्विरोधाविरोधावपि । यथा च ‘न हिंस्यात्सर्वा भूतानि’ इति शास्त्रादवगतं पुनः शास्त्रेणैव बाध्यते ‘अध्वरे पशुं हिंस्यात्’ इति, एवं विद्याविद्ययोरपि स्यात् ; विद्याकर्मणोश्च समुच्चयः ।
(பூர்வபக்ஷம்) நீர் கூறுவது உண்மை தான். ஆனால் விரோதம் தெரியவில்லை. சாஸ்திர பிரமாணத்தினால்தான் விரோத, அவிரோதங்களை அறியவேண்டும்.
எப்படி அவித்யா அனுஷ்டானத்திற்கும் (கர்மம்) வித்யா உபாசனைக்கும் சாஸ்திரம் பிரமாணமோ அப்படி அதன் விரோத, அவிரோதங்களுக்கும் சாஸ்திரம் தான் பிரமாணம்.
எவ்வாறு எல்லா பூதங்களையும் ஹிம்சை செய்யக்கூடாதென்று சாஸ்திரத்தினால் அறியப்படுகிறதோ.
அதுவே அதே சாஸ்திரத்தினாலேயே யாகத்தில் பசுவை ஹிம்ஸை செய்யலாம் என்று கூறப்பட்டது. அதனால் விரோதமில்லை. அதே மாதிரி வித்தைக்கும் அவித்தைக்கும்கூட விரோதம் இல்லை. வித்யா கர்மங்களின் சமுச்சயம் சாஸ்திரத்தில் சொல்லியிருப்பதால்.
(ஸித்தாந்தம்) அவ்வாறு அல்ல. ஏனெனில் சுருதியானது வித்யையும், அவித்யையும் வெவ்வேறாக விபரீதமாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறது. கதி = பலம். விபரீதமாக வெவ்வேறு மார்க்கம் (கதி) உடையது.
‘विद्यां चाविद्यां च’ इति वचनादविरोध इति चेत् ?
(பூர்வபக்ஷம்) வித்யாம் ச அவித்யாம் ச என்ற வாக்யத்தின் அனுசாரமாக இவ்விரண்டிற்கும் விரோதம். கிடையாது எனின்?
न ; हेतुस्वरूपफलविरोधात् ।
(ஸித்தாந்தம்) அவ்வாறு அல்ல. ஏனெனில் அவைகளின் ஹேது, சொரூபம், பலம் இவைகளில் விரோதமாயிருப்பதால்
विद्याविद्याविरोधाविरोधयोर्विकल्पासम्भवात् समुच्चयविधानादविरोध एवेति चेत् ,
(பூர்வபக்ஷம்) வித்தை, அவித்தைகளின் விரோத, அவிரோதங்களுக்கு விகற்பமானது ஏற்படாததினால் சமுச்சயமானது விதிக்கப்பட்டதினால் அவிரோதமே என்று கூறினால்?
न ; सहसम्भवानुपपत्तेः ।
(ஸித்தாந்தம்) அவ்வாறு அல்ல. ஏனெனில் இவ்விரண்டும் ஒரே சமயத்தில் ஏற்படாததினால் அவிரோதமானது சம்பவிக்காது.
क्रमेणैकाश्रये स्यातां विद्याविद्ये इति चेत् ,
(பூர்வபக்ஷம்) வித்தை அவித்தை இரண்டும் கிரமமாக ஒன்றையே ஆசிரயிக்கின்றதெனில்?
न ; विद्योत्पत्तौ तदाश्रयेऽविद्यानुपपत्तेः ;
(ஸித்தாந்தம்) அவ்வாறு இல்லை. ஏனெனில் வித்தையின் உற்பத்தியினால் அவித்தையானது நாசமாகின்றபொழுது அந்த ஆசிரியத்தில் அவித்தையானது இருக்கமுடியாது.
न हि अग्निरुष्णः प्रकाशश्च इति विज्ञानोत्पत्तौ यस्मिन्नाश्रये तदुत्पन्नम् , तस्मिन्नेवाश्रये शीतोऽग्निरप्रकाशो वा इत्यविद्याया उत्पत्तिः । नापि संशयः अज्ञानं वा,
எப்பொழுது அக்னியானது உஷ்ணமாகவும், பிரகாசமாகவும் இருக்கின்றதென்று விக்ஞானமானது உண்டாயிற்றோ அப்பொழுது அந்த ஆசிரியத்தில் எந்த ஆசிரியமான சித்தத்தில் அக்னி, குளிர்ச்சி பிரகாசமற்றது என்ற பிராந்தி உண்டாகாது. அக்ஞானமோ, சந்தேகமோ உண்டாகாது.
எந்தச் சமயத்தில் ஞானிக்கு எல்லா பூதங்களும் பரமாத்மாவாகவே ஆகிவிட்டதோ ஏகமாகவே பார்ப்பவனுக்கு மோஹமேது? சோகமேது? இவ்வாறு சோக மோஹாதி அசம்பவ சுருதியினால் அறியப்படுகிறது.
அவித்தை இல்லாததினாலே அதனால் உண்டாகக் கூடிய கர்மங்களும் அற்றுப் போகிறது என்று முன்பே கூறியுள்ளோம்.
‘अमृतमश्नुते’ इत्यापेक्षिकममृतम् ; विद्याशब्देन परमात्मविद्याग्रहणे
‘हिरण्मयेन’ (ई. उ. १५) इत्यादिना द्वारमार्गयाचनमनुपपन्नं स्यात् । तस्मात् यथाव्याख्यात एव मन्त्राणामर्थ इत्युपरम्यते ॥
அமிர்தம் அச்னுதே அடைகின்றவன் என்று கூறப்பட்டது ஆபேஷிக அமிர்தம். மற்றவர்களைவிட அதிக காலமிருப்பவன் என்று பொருள்.
வித்தை என்ற சப்தத்தினால் பரமாத்ம வித்தையை கிரஹித்தோமானால் ஹிரண்மயே பாத்ரேண முதலிய மந்திரங்களினால் தூவார மார்க்காதிகளின் யாசனமானது பொருந்தாமல் போகும்.
ஆகையால் உபாசனையோடு சமுச்சயம் சொல்லப்பட்டது. பரமாத்ம விக்ஞானத்தோடு அல்ல என்று எவ்வாறு நம்மால் வியாக்யானம் செய்யப்பட்டதோ அது தான் மந்திரங்களின் யதார்த்தம் என்று உபசம்ஹாரம் செய்கிறேன்.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ ईशावास्योपनिषद्भाष्यम् सम्पूर्णम् ॥