द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

कठोपनिषद्भाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

கடோபநிஷத்பாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

ॐ नमो भगवते वैवस्वताय मृत्यवे ब्रह्मविद्याचार्याय, नचिकेतसे च ।
अथ काठकोपनिषद्वल्लीनां सुखार्थप्रबोधनार्थमल्पग्रन्था वृत्तिरारभ्यते ।
இப்பொழுது கடோபநிஷத்வல்லீகளின் அர்த்தத்தை சுலபமாக புரிந்துகொள்வதற்காக இந்த சிறிய நூல் ஆரம்பிக்கப்படுகிறது.
सदेर्धातोर्विशरणगत्यवसादनार्थस्योपनिपूर्वस्य क्विप्प्रत्ययान्तस्य रूपमिदम् ‘उपनिषत्’ इति । उपनिषच्छब्देन च व्याचिख्यासितग्रन्थप्रतिपाद्यवेद्यवस्तुविषया विद्या उच्यते । केन पुनरर्थयोगेनोपनिषच्छब्देन विद्योच्यत इति, उच्यते ।
(அனுவாதம்) நாசம்,செல்லுதல்,சிதிலமாக்குதல் என்ற மூன்று அர்த்தங்களை உடைய,  அவ்வாறே उप, नि என்ற இரண்டு உபசர்க்கத்தை முதலாவதாக உடைய, அவ்வாறே (क्विप्) (க்விப்) பிரத்யயத்தை முடிவாக உடைய  ஸத்தாதுவினுடைய உபநிஷத் என்று உபநிஷத் சப்தத்தால் இனி எந்த கிரந்தத்தை வியாக்கியானம் செய்ய விரும்புகிறோமோ அதில் விளக்கப்பட்ட அறிய வேண்டிய விஷயத்தைப்பற்றினதை வித்யா என்று கூறுகிறோம். மேலும் எந்த அர்த்தத்தைக் கொண்டு உபநிஷத் சப்தத்தால் வித்யா கூறப்படுமோ அதை கூறுகிறோம்.
ये मुमुक्षवो दृष्टानुश्रविकविषयवितृष्णाः सन्तः उपनिषच्छब्दवाच्यां वक्ष्यमाणलक्षणां विद्यामुपसद्योपगम्य तन्निष्ठतया निश्चयेन शीलयन्ति तेषामविद्यादेः संसारबीजस्य विशरणाद्धिंसनाद्विनाशनादित्यनेनार्थयोगेन विद्योपनिषदित्युच्यते । तथा च वक्ष्यति ‘निचाय्य तं मृत्युमुखात्प्रमुच्यते’ (क. उ. १ । ३ । १५) इति ।
(அனுவாதம்) எந்த முமூக்ஷுக்கள் இஹலோக, பரலோக விஷயங்களில் ஆசையற்று இருந்துகொண்டு உபநிஷத் இனி கூறப்போகிற வித்தையை அடைந்து இதிலேயே லயித்து நிச்சயமாக இருக்கின்றார்களோ  அவர்களுடைய ஸம்ஸார பீஜமாகிய அவித்யை முதலியவைகளை நாசம் செய்வதால் வித்யா “உபநிஷத்” என்று கூறப்படுகிறது. அவ்வாறே “நிச்சாய்ய தம் ம்ருத்யு முகாத் ப்ரமுச்யதே” நிச்சயமாக அதை சாக்ஷாத்கரித்து ம்ருத்யுவிடமிருந்து விடுபடுகிறான் என்று இனி கூறப்போகிறார்
पूर्वोक्तविशेषणान्वा मुमुक्षून्परं ब्रह्म गमयतीति च ब्रह्मगमयितृत्वेन योगाद्ब्रह्मविद्या उपनिषत् । तथा च वक्ष्यति ‘ब्रह्म प्राप्तो विरजोऽभूद्विमृत्युः’ (क. उ. २ । ३ । १८) इति ।
(அனுவாதம்) அல்லது முன்பு கூறிய விசேஷணங்களையுடைய முமுக்ஷுக்களை பரப்ரஹ்மத்தை அடையச்செய்வதால் பிரஹ்மத்தை அடைவிக்கும் தன்மை உள்ளதால் பிரஹ்மவித்யா உபநிஷத் எனப்படுகிறது. அவ்வாறே இனிக் கூறப்போகிறார். “ப்ரஹ்ம ப்ராப்தோ விரஜோ அபூத்விம்ருத்யு”: பிரஹ்மத்தை அடைந்தவன் விரஜன் (சுத்தமானவன்) அமரன் ஆகின்றான் என்று.
लोकादिर्ब्रह्मजज्ञो योऽग्निः, तद्विषयाया विद्याया द्वितीयेन वरेण प्रार्थ्यमानायाः स्वर्गलोकफलप्राप्तिहेतुत्वेन गर्भवासजन्मजराद्युपद्रवबृन्दस्य लोकान्तरे पौनःपुन्येन प्रवृत्तस्यावसादयितृत्वेन शैथिल्यापादनेन धात्वर्थयोगादग्निविद्यापि उपनिषदित्युच्यते । तथा च वक्ष्यति ‘स्वर्गलोका अमृतत्वं भजन्ते’ (क. उ. १ । १ । १३) इत्यादि ।
(அனுவாதம்) லோக முதலியவைகள் பிரஹ்மாவிடமிருந்து உண்டானதும், அறியப்பட்டதுமான அக்னி சம்பந்தப்பட்ட வித்தையை இரண்டாவது வரமாகக் கேட்டுப் பெற்றதால் அவனுக்கு முன்செய்த புண்ணிய கர்மங்களினால் லோகாந்தரமான சுவர்க்க பலப்பிராப்த்தியினால் கர்பவாசம், ஜன்மம், முதுமை முதலியவைகள் நீங்கி சத் சொரூபமானதால் அக்னிவித்தையும் உபநிஷத் என்று கூறப்படுகிறது. அவ்வாறே கூறப்போகிறார். “ஸ்வர்க்க லோகா அம்ருதத்வம் பஜந்தே” என்று.
ननु चोपनिषच्छब्देनाध्येतारो ग्रन्थमप्यभिलपन्ति — उपनिषदमधीमहे उपनिषदमध्यापयाम इति च ।
(அனுவாதம்) ஆனால் அத்யயனம் செய்பவர்கள் உபநிஷத் சப்தத்தால் கிரந்தத்தையும் குறிக்கிறார்கள். எவ்வாறு எனில் நாங்கள் உபநிஷத் படிக்கிறோம், படிப்பிக்கின்றோம் என்று.
एवं नैष दोषः, अविद्यादिसंसारहेतुविशरणादेः सदिधात्वर्थस्य ग्रन्थमात्रेऽसम्भवाद्विद्यायां च सम्भवात् ग्रन्थस्यापि तादर्थ्येन तच्छब्दत्वोपपत्तेः ‘आयुर्वै घृतम्’ (तै. सं. २ । ३ । ११) इत्यादिवत् । तस्माद्विद्यायां मुख्यया वृत्त्या उपनिषच्छब्दो वर्तते, ग्रन्थे तु भक्त्येति ।
(அனுவாதம்) இவ்வாறு தோஷமல்ல. அவித்யை சம்சார ஹேதுக்களின் நாசத்தால் சத் தாதுவின் அர்த்தம் க்ரந்த அளவில் சம்பவிக்காது. ஆனால் வித்யையினாலேயே சம்பவிக்கும். நெய் ஆயுள்விருத்திக்கு காரணமாவதால் நெய்யை ஆயுள் என்கிறோமோ அவ்வாறே கிரந்தத்திற்கும் அந்த அர்த்தத்தில் உபநிஷத் என்ற சப்தம் ஏற்பட்டது. ஆகையால் வித்யாவிற்கும் முக்யவிருத்தியால் உபநிஷத் (என்ற சப்தமாகும். அவ்வாறே கெளணவிருத்தியால் கிரந்தத்திற்கும் உபநிஷத் என்ற சப்தமாகும்.)
एवमुपनिषन्निर्वचनेनैव विशिष्टोऽधिकारी विद्यायाम् उक्तः । विषयश्च विशिष्ट उक्तो विद्यायाः परं ब्रह्म प्रत्यगात्मभूतम् । प्रयोजनं चास्या आत्यन्तिकी संसारनिवृत्तिर्ब्रह्मप्राप्तिलक्षणा । सम्बन्धश्चैवम्भूतप्रयोजनेनोक्तः । अतो यथोक्ताधिकारिविषयप्रयोजनसम्बन्धाया विद्यायाः करतलन्यस्तामलकवत्प्रकाशकत्वेन विशिष्टाधिकारिविषयप्रयोजनसम्बन्धा एता वल्ल्यो भवन्तीति । अतस्ता यथाप्रतिभानं व्याचक्ष्महे ॥
இவ்வாறு உபநிஷத் சப்தத்தை விளக்கத்தினாலேயே வித்யைக்கு சிறந்த அதிகாரி கூறப்பட்டது. அவ்வாறே வித்யையின் ப்ரத்யக் ஆத்மரூப பரப்பிரஹ்ம ரூபமாகிய சிறந்த விஷயமானது கூறப்பட்டது. இவ்வாறு இந்த உபநிஷத்தினுடைய ஆத்யந்திக நிவிர்த்தியும், பிரஹ்ம ப்ராப்திரூபமான பிரயோஜனமும் விளக்கப்பட்டது. இப்படிப்பட்ட பிரயோஜனம் கூறியதினாலேயே சம்பந்தமும் சாத்ய-சாதன சம்பந்தமும் கூறப்பட்டதாகிறது. ஆகையால் இவ்வாறு கூறப்பட்ட அதிகாரி, விஷயம், பிரயோஜனம் சம்பந்தம் உடையவைகளாய் இருக்கின்றன. ஆகையால் அதை புத்திக்கு எட்டிய அளவில் விளக்குகிறேன்.
उशन्ह वै वाजश्रवसः सर्ववेदसं ददौ । तस्य ह नचिकेता नाम पुत्र आस ॥ १ ॥
तत्राख्यायिका विद्यास्तुत्यर्था । उशन् कामयमानः । ह वै इति वृत्तार्थस्मरणार्थौ निपातौ । वाजम् अन्नम् , तद्दानादिनिमित्तं श्रवो यशो यस्य सः वाजश्रवाः, रूढितो वा ; तस्यापत्यं वाजश्रवसः । सः वाजश्रवसः किल विश्वजिता सर्वमेधेनेजे तत्फलं कामयमानः । सः तस्मिन्क्रतौ सर्ववेदसं सर्वस्वं धनं ददौ दत्तवान् । तस्य यजमानस्य ह नचिकेता नाम पुत्रः किल आस बभूव ॥
(அனுவாதம்) இந்த கதையானது,ஸ்துதியின் பொருட்டாகும். उशन् உஷன் என்றால் காமனை உடையவன். ஹ வா என்பது முடிந்தவிருத்தாந்தத்தை ஞாபகப்படுத்துவதற்காகும். वाजम् வாஜம் என்றால் அன்னம். அதை தானம் செய்ததினால் ஸ்ரவோ புகழ் பெற்றதால்  வாஜஸ்ரவா என்ற பெயர் ஏற்பட்டது. ரூடி அர்த்தமாகவும் கொள்ளலாம். அவருடைய பிள்ளை வாஜஸ்ரவச: அந்த பலத்தில் காமனை உடையவராய் விச்வஜித் என்ற யாகத்தை முழுமையாக செய்தார். அவர் அந்த வேள்வியில் எல்லா வேத விற்பண்ணர்களுக்கும் தானம் கொடுத்தார். அந்த எஜமானனுக்கு நசிகேதா என்ற பெயருடைய மகன் இருந்தான்.
तꣳ ह कुमारꣳ सन्तं दक्षिणासु नीयमानासु श्रद्धाविवेश सोऽमन्यत ॥ २ ॥
तं ह नचिकेतसं कुमारं प्रथमवयसं सन्तम् अप्राप्तप्रजननशक्तिं बालमेव श्रद्धा आस्तिक्यबुद्धिः पितुर्हितकामप्रयुक्ता आविवेश प्रविष्टवती । कस्मिन्काले इति, आह — ऋत्विग्भ्यः सदस्येभ्यश्च दक्षिणासु नीयमानासु विभागेनोपनीयमानासु दक्षिणार्थासु गोषु, सः आविष्टश्रद्धो नचिकेताः अमन्यत ॥
(அனுவாதம்) முதல் பிராயத்தில் உள்ள சந்தானத்தை உண்டாக்கக் கூடிய சக்தியற்ற அந்த சிறுவனாகிய நசிகேதஸை தன் தந்தைக்கு நன்மை பயக்கக்கூடிய சிரத்தை அதாவது ஆஸ்திக்ய புத்தியானது ஏற்பட்டது. எப்பொழுது எனில் சதஸில் உள்ள ரித்விக்களுக்கு தானம் செய்வதின் பொருட்டு கொண்டுவரப்பட்ட தக்ஷிணைகளாகிய பசுக்களைப் பார்த்து சிரத்தை ஏற்பட்டு நசிகேதஸ் விசாரம் செய்ய ஆரம்பித்தார்.
(अवतारिका.) कथमित्युच्यते-
அவதாரிகை அவன் என்ன எண்ணினானென்பது இம்மந்திரத்தால் கூறப்படுகிறது. (தக்ண்ுணையாகக் கொண்டு செல்லப்பட்ட பசுக்களின் நிலையை மேலே தொடருகிறார். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பசுக்கள்)
पीतोदका जग्धतृणादुग्धदोहा निरिन्द्रियाः ।
अनन्दा नाम ते लोकास्तान्स गच्छति ता ददत् ॥ ३ ॥
दक्षिणार्था गावो विशेष्यन्ते । पीतमुदकं याभिस्ताः पीतोदकाः । जग्धं भक्षितं तृणं याभिस्ता जग्धतृणाः । दुग्धो दोहः क्षीराख्यो यासां ताः दुग्धदोहाः । निरिन्द्रियाः प्रजननासमर्थाः जीर्णाः, निष्फला गाव इत्यर्थः । यास्ताः एवंभूताः गाः ऋत्विग्भ्यो दक्षिणाबुद्ध्या ददत् प्रयच्छन् अनन्दाः अनानन्दाः असुखा नामेत्येतत् । ये ते लोकाः, तान् सः यजमानः गच्छति ॥
(அனுவாதம்) தக்ஷிணைக்காக வைக்கப்பட்டுள்ள பசுக்களை விளக்குகிறார். எவ்வளவு தண்ணீர் குடிக்கமுடியுமோ அவ்வளவு தண்ணீர் குடித்த பசுக்கள் பீதோதக்கா:  எவ்வளவு புல் திண்ணமுடியுமோ அவ்வளவு தின்றபசுக்கள் ஜக்தத்ருணா: எவ்வளவு பால் கரக்கமுடியுமோ அவ்வளவு பால் கரக்கப்பட்ட பசுக்கள் துக்ததோஹா: ஜனிக்கச் செய்வதற்கான சக்தியற்றதும், பலனற்றதுமான பசுக்கள் நிரிந்திரியா: என்பது பொருள். இவ்வாறு எந்த பசுக்கள் உள்ளதோ அவைகள் ரித்விக்களுக்கு புத்தியில்லாமல் தக்ஷிணையாகக் கொடுத்து ஆனந்தமற்ற எந்த உலகம் உள்ளதோ அதை அந்த யஜமானன் அடைகிறான்.
स होवाच पितरं तत कस्मै मां दास्यसीति द्वितीयं तृतीयं तं होवाच मृत्यवे त्वा ददामीति ॥ ४ ॥
तदेवं क्रत्वसम्पत्तिनिमित्तं पितुरनिष्टं फलं पुत्रेण सता निवारणीयं मया आत्मप्रदानेनापि क्रतुसम्पत्तिं कृत्वेत्येवं मन्यमानः पितरमुपगम्य स होवाच पितरम् — हे तत तात कस्मै ऋत्विग्विशेषाय दक्षिणार्थं मां दास्यसीति प्रयच्छसीत्येतत् । स एवमुक्तेन पित्रा उपेक्ष्यमाणोऽपि द्वितीयं तृतीयमपि उवाच — कस्मै मां दास्यसि कस्मै मां दास्यसीति । नायं कुमारस्वभाव इति क्रुद्धः सन् पिता तं ह पुत्रं किल उवाच मृत्यवे वैवस्वताय त्वा त्वां ददामीति ॥
(அனுவாதம்) இவ்வாறு தவறினை செய்யப்பட்ட யாகத்தினால் தந்தைக்கு அநிஷ்ட்டமான பலன் ஏற்படாமல் இருப்பதற்காக சத்புத்திரனான நான் என்னை தியாகம் செய்தாவது நல்ல முறையாக யாகம் செய்து அந்த அநிஷ்ட்ட பலனை போக்க வேண்டும் என்று நினைத்து தந்தையின் சமீபம் சென்று இவ்வாறு கூறினான். தந்தையே எந்த ரித்விக்கின் பொருட்டு என்னை தானம் செய்வீர்கள் என்று கேட்டான். மறுபடியும் இரண்டாவது முறையாக யாருக்குக் கொடுப்பீர்கள் என்று கேட்டான். அவ்வாறே மறுபடியும் மூன்றாவது முறையாக என்னை யாருக்கு தானம் செய்வீர்கள் என்று கேட்டான். இது சிறுபையனுடைய சுபாவம் அல்ல என்று தந்தையானவர் உன்னை யமனுக்குக் கொடுக்கப்போகிறேன் என்று கூறினார்.
बहूनामेमि प्रथमो बहूनामेमि मध्यमः ।
किं स्विद्यमस्य कर्तव्यं यन्मयाद्य करिष्यति ॥ ५ ॥
स एवमुक्तः पुत्रः एकान्ते परिदेवयाञ्चकार । कथमिति, उच्यते —
(அ-கை) இவ்வாறு கூறப்பட்ட புத்திரன் தனிமையில் அனுதாபத்துடன் இருந்தான். எவ்வாறு என்று கூறுகிறார்:
बहूनां शिष्याणां पुत्राणां वा एमि गच्छामि प्रथमः सन् मुख्यया शिष्यादिवृत्त्येत्यर्थः । मध्यमानां च बहूनां मध्यमः मध्यमयैव वृत्त्या एमि । नाधमया कदाचिदपि । तमेवं विशिष्टगुणमपि पुत्रं माम् ‘मृत्यवे त्वा ददामि’ इत्युक्तवान् पिता । सः किंस्वित् यमस्य कर्तव्यं प्रयोजनं मया प्रदत्तेन करिष्यति यत्कर्तव्यम् अद्य ? नूनं प्रयोजनमनपेक्ष्यैव क्रोधवशादुक्तवान् पिता । तथापि तत्पितुर्वचो मृषा मा भूदिति एवं मत्वा परिदेवनापूर्वकमाह पितरं शोकाविष्टं किं मयोक्तमिति॥
(அனுவாதம்)அநேக சிஷ்யர்களுக்குள்ளும் அநேக புத்திரர்களுக்குள்ளும் முதன்மையானவனாய் முக்ய சிஷ்யனாகவும் இருக்கிறேன். அநேக மத்யம சிஷ்யர்களுள் மத்யம விருத்தி உடையவனாகவும் இருக்கிறேன். ஆனால் நான் ஒருபொழுதும் அதமவிருத்தி உடையவனாய் இருந்ததில்லை. இவ்வாறு சிறந்த குணமுடைய புத்திரனாகிய என்னை தந்தையானவர் யமனுக்குக் கொடுக்கப்போகிறேன் என்று கூறினார். இதனால் யமனுக்கு என்ன பிரயோஜனம் என்னைக்கொடுப்பதால் அவருக்கும் என்ன பலன் நிச்சயமாகப் பலனை எதிர்ப்பார்க்காமலேயே கோப வசத்தால் தந்தை இவ்வாறு கூறினார். அவ்வாறு கூறினாலும் அந்த தந்தையின் வாக்குப் பொய் ஆகிவிடக்கூடாது என்று நினைத்து எதற்காக இவ்வாறு கூறினேன் என்று வருத்தத்துடன் இருக்கும் தந்தையை நோக்கி வேதனையுடன் இவ்வாறு கூறினான்.
अनुपश्य यथा पूर्वे प्रतिपश्य तथा परे ।
सस्यमिव मर्त्यः पच्यते सस्यमिवाजायते पुनः ॥ ६ ॥
अनुपश्य आलोचय विभावयानुक्रमेण यथा येन प्रकारेण वृत्ताः पूर्वे अतिक्रान्ताः पितृपितामहादयस्तव । तान्दृष्ट्वा च तेषां वृत्तमास्थातुमर्हसि । वर्तमानाश्च अपरे साधवो यथा वर्तन्ते तांश्च तथा प्रतिपश्य आलोचय । न च तेषां मृषाकरणं वृत्तं वर्तमानं वा अस्ति । तद्विपरीतमसतां च वृत्तं मृषाकरणम् । न च मृषाभूतं कृत्वा कश्चिदजरामरो भवति ; यतः सस्यमिव मर्त्यः मनुष्यः पच्यते जीर्णो म्रियते, मृत्वा च सस्यमिव आजायते आविर्भवति पुनः ; एवमनित्ये जीवलोके किं मृषाकरणेन ? पालयात्मनः सत्यम् । प्रेषय मां यमायेत्यभिप्रायः ॥
(அனுவாதம்) உன்னுடைய தந்தை, பிதாமஹர்கள் முதலியவர்கள் எந்த நெறிமுறைகளை முன்பு கடைப்பிடித்தார்களோ அவைகளை நன்றாக ஆலோசியுங்கள். அதைப்பார்த்து அந்த நெறிமுறைகளை கடைபிடியுங்கள். இப்பொழுதுள்ள சான்றோர்களின் நெறிமுறைகளையும் ஆலோசியுங்கள். அவ்வாறே அந்த நெறிமுறைகளில் முன்னோர்களும், சான்றோர்களும் கடைபிடித்தவைகளில் மித்தை(பொய்) என்பது கிடையாது. எதனால் புல் பூண்டுகள் போல் மனிதர்கள் மரணத்தை அடைகிறார்கள். மரணமடைந்து புல், பூண்டு போல் மறுபடியும் பிறக்கிறார்கள். மேலும் இவ்வாறு உள்ள அநித்தியமான ஜீவலோகத்தில் எதற்காக பொய்யானவைகளை செய்ய வேண்டும். தன்னுடைய சத்தியத்தைக் காப்பாற்றவேண்டும். என்னை எமனின் பொருட்டு அனுப்புங்கள் என்பது அபிப்பிராயம்.
स एवमुक्तः पिता आत्मनः सत्यतायै प्रेषयामास । स च यमभवनं गत्वा तिस्रो रात्रीरुवास यमे प्रोषिते । प्रोष्यागतं यमम् अमात्या भार्या वा ऊचुर्बोधयन्तः —
(அ-கை) அந்த தந்தையானவர் இவ்வாறு கூறிய புத்திரனை சத்தியத்தின் பொருட்டு (யமனின் இருப்பிடத்திற்கு) அனுப்பிவைத்தார். யமன் வெளியில் சென்றதினால் அவன் யமனுடைய பவனத்திற்கு சென்று மூன்று இரவுகள் வசித்தார். சென்று திரும்பிய யமனிடம் அவருடைய மந்திரி அல்லது மனைவி இவ்வாறு தெரிவித்தனர்.
वैश्वानरः प्रविशति अतिथिर्ब्राह्मणो गृहान् ।
तस्यैतां शान्तिं कुर्वन्ति हर वैवस्वतोदकम् ॥ ७ ॥
वैश्वानरः अग्निरेव साक्षात् प्रविशति अतिथिः सन् ब्राह्मणः गृहान् दहन्निव । तस्य दाहं शमयन्त इवाग्नेः एतां पाद्यासनादिदानलक्षणां शान्तिं कुर्वन्ति सन्तोऽतिथेर्यतः, अतः हर आहर हे वैवस्वत, उदकं नचिकेतसे पाद्यार्थम् यतश्चाकरणे प्रत्यवायः श्रूयते ॥
(அனுவாதம்) பிராஹ்மணன் அதிதி ரூபமாக இருந்து கொண்டு சாக்ஷாத் அக்னிபோல் இல்லங்களை தஹிப்பதுபோல் (எரிப்பதுபோல்) நுழைகிறான். ஆகையால் இல்லறத்தில் உள்ள சான்றோர்கள் அதிதிகளுக்கு அந்த எரிப்பதை சாந்தி செய்வதுபோல் அக்னிக்கு அந்த பாத்தியம், ஆசனம், முதலியவைகளை தானம் செய்து சாந்தி செய்கிறார்கள். ஆகையால் ஹே! வைவஸ்வத! நசிகேதசின் பொருட்டு பாத்தியத்திற்காக ஜலம் கொண்டு வாருங்கள். இவ்வாறு செய்யவில்லையெனில் பிரத்யவாயம் (நரகம்) கிடைக்கும் என்பது சுருதியினால் அறிகிறோம்.
आशाप्रतीक्षे सङ्गतं सूनृतां च इष्टापूर्ते पुत्रपशूंश्च सर्वान् ।
एतद्वृङ्क्ते पुरुषस्याल्पमेधसो यस्यानश्नन्वसति ब्राह्मणो गृहे ॥ ८ ॥
आशाप्रतीक्षे, अनिर्ज्ञातप्राप्येष्टार्थप्रार्थना आशा, निर्ज्ञातप्राप्यार्थप्रतीक्षणं प्रतीक्षा, ते आशाप्रतीक्षे ; सङ्गतं सत्संयोगजं फलम् , सूनृतां च सूनृता हि प्रिया वाक् तन्निमित्तं च, इष्टापूर्ते इष्टं यागजं फलं पूर्तम् आरामादिक्रियाजं फलम् , पुत्रपशूंश्च पुत्रांश्च पशूंश्च सर्वान् , एतत् सर्वं यथोक्तं वृङ्क्ते वर्जयति विनाशयतीत्येतत् । पुरुषस्य अल्पमेधसः अल्पप्रज्ञस्य, यस्य अनश्नन् अभुञ्जानः ब्राह्मणः गृहे वसति । तस्मादनुपेक्षणीयः सर्वावस्थास्वप्यतिथिरित्यर्थः ॥
(அனுவாதம்) எந்த சொற்ப அறிவுடையவனுடைய வீட்டில் ப்ராஹ்மணன் சாப்பிடாமல் வசிக்கிறானோ (அவனுடைய) आशा  ஆசை அதாவது அறியாததான பொருளில் விருப்பம் ஆசை எனப்படும். கிடைக்கும் பொருள் தீர்மானமாக இருக்கும் பொழுது அதை எதிர்பார்த்தல் ப்ரதீக்ஷா प्रतीक्षा இவ்விரண்டையும் அடைவதினால் ஏற்படும் பலனையும், இன்சொற்களால் ஏற்படும் பலனையும், इष्टं இஷ்ட்டம் என்பது .யாகம் முதலியனவைகளைச் செய்தலால் ஏற்படும் பலனையும் पूर्तं என்பது குளம், கோவில், சத்திரம், தோட்டம் இவைகளை உண்டாக்குவதாலும் அல்லது பாழ் அடையும் நிலையில் உள்ள முன்சொன்னவைகளை செப்பனிடுவதால் உண்டாகும் பலன்களையும் மற்றும் எல்லா புத்திரர்கள் பசுக்கள் ஆகிய எல்லாவற்றையும் நாசமாக்குகிறது என்பது பொருள். எனவே எந்த நிலையிலும் அதிதியைப் பூஜை செய்தே ஆக வேண்டும். அவனை உபேக்ஷிக்கலாகாது.
एवमुक्तो मृत्युरुवाच नचिकेतसमुपगम्य पूजापुरःसरम्
(அஃகை) இவ்வாறு மனைவியாலும், துணைவர்களாலும், உணர்த்தப்பட்ட தர்மராஜன், நசிகேதனையணுகி அர்க்யபாத்ய, ஆசமனீயங்கள கொடுத்து பூஜித்து இவ்வாறு உரைக்கலனான்.
तिस्रो रात्रीर्यदवात्सीर्गृहे मे अनश्नन्ब्रह्मन्नतिथिर्नमस्यः ।
नमस्तेऽस्तु ब्रह्मन्स्वस्ति मेऽस्तु तस्मात्प्रति त्रीन्वरान्वृणीष्व ॥ ९ ॥
तिस्रः रात्रीः यत् यस्मात् अवात्सीः उषितवानसि गृहे मे मम अनश्नन् हे ब्रह्मन् अतिथिः सन् नमस्यः नमस्कारार्हश्च, तस्मात् नमः ते तुभ्यम् अस्तु भवतु । हे ब्रह्मन् स्वस्ति भद्रं मे अस्तु । तस्मात् भवतोऽनशनेन मद्गृहवासनिमित्ताद्दोषात् । तत्प्राप्त्युपशमेन यद्यपि भवदनुग्रहेण सर्वं मम स्वस्ति स्यात् , तथापि त्वदधिकसम्प्रसादनार्थमनशनेनोषितामेकैकां रात्रिं प्रति त्रीन् वरान् वृणीष्व अभिप्रेतार्थविषयान्प्रार्थयस्व मत्तः ॥
(அனுவாதம்) ஹே ப்ரஹ்மன்! எதனால் என்னுடைய வீட்டில் வணக்கத்திற்குரிய அதிதியாய் இருந்துகொண்டு சாப்பிடாமல் மூன்று இரவுகள் வசித்தீர்களோ அதனால் உங்களுக்கு நமஸ்காரம். ஹே ப்ரஹ்மன்! நீங்கள் சாப்பிடாமல் எங்கள் வீட்டில் வசித்ததினால் ஏற்பட்ட அந்த தோசத்தின் நிவர்த்தியினால் எனக்கு மங்களம் உண்டாகட்டும். உங்களுடைய அனுக்கிரஹத்தால் எனக்கு எல்லா மங்களங்கள் ஏற்பட்டாலும் உங்களை அதிகமாக சந்தோஷப்படுத்துவதற்காக நீங்கள் சாப்பிடாமல் வசித்த ஒவ்வொரு இரவுக்கும் ஒவ்வொரு வரமாக நீங்கள் விரும்பும் விசேஷமான வரங்களை என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.
नचिकेतास्त्वाह यदि दित्सुर्वरान् -
(அஃகை)இவ்வாறு வரத்தை அளிக்கிறேன் என்று கூறிய தர்மராஜனை நோக்கி நசிகேதன் கூறலானான்.
शान्तसङ्कल्पः सुमना यथा स्याद्वीतमन्युर्गौतमो माभिमृत्यो ।
त्वत्प्रसृष्टं माभिवदेत्प्रतीत एतत्त्रयाणां प्रथमं वरं वृणे ॥ १० ॥
शान्तसङ्कल्पः उपशान्तः सङ्कल्पो यस्य मां प्रति ‘यमं प्राप्य किं नु करिष्यति मम पुत्रः’ इति, सः शान्तसङ्कल्पः सुमनाः प्रसन्नचित्तश्च यथा स्यात् वीतमन्युः विगतरोषश्च गौतमः मम पिता मा अभि मां प्रति हे मृत्यो ; किञ्च, त्वत्प्रसृष्टं त्वया विनिर्मुक्तं प्रेषितं गृहं प्रति मा माम् अभिवदेत् प्रतीतः लब्धस्मृतिः, ‘स एवायं पुत्रो ममागतः’ इत्येवं प्रत्यभिजानन्नित्यर्थः । एतत्प्रयोजनं त्रयाणां वराणां प्रथमम् आद्यं वरं वृणे प्रार्थये यत्पितुः परितोषणम् ॥
(அனுவாதம்) शान्तसङ्कल्पः சாந்தசங்கல்ப: என்றால் என்னுடைய பிதாவானவர் என்னைக்குறித்து அவன் யமனை அடைந்து என் மகன் என்ன செய்வான் என்ற சங்கல்பம் சாந்தமடைந்தவர் ஆகவும். सुमनाः சுமனா: பிரசன்ன (நிம்மதி அடைந்த மனதுடையவராகவும், वीतमन्यु வீதமன்யு: கோபம் நீங்கியவராகவும் என்னுடைய பிதாவாகிய கௌதமர் இருக்கும்படி அருளவேண்டும். மேலும் ஹே ம்ருத்யுவே! என் வீட்டை நோக்கி உன்னால் அனுப்பப்பட்ட என்னை அடையாளம் கண்டுகொண்டு அதாவது நான் அன்று எமனிடமனுப்பிய அந்த என் மகனே மறுபடியும் என்னை நாடி வந்துள்ளான் என்று என்னை அடையாளம் கண்டுகொண்டு பேசுபவராகவும் எவ்வாறு இருப்பாரோ அவ்வாறு அருள்புரிவீராக. இதை அதாவது தந்தையை மகிழ்வித்தல் என்ற இதை தாங்கள் அளித்த மூன்று வரங்களுள் முதல் வரமாக வேண்டுகிறேன்.
मृत्युरुवाच —
(இவ்வாறு தந்தையின் மகிழ்வை முதல் வரத்தால் கேட்ட நசிகேதனை நோக்கி) தர்மராஜன் கூறலானான்.
यथा पुरस्ताद्भविता प्रतीत औद्दालकिरारुणिर्मत्प्रसृष्टः ।
सुखं रात्रीः शयिता वीतमन्युस्त्वां ददृशिवान्मृत्युमुखात्प्रमुक्तम् ॥ ११ ॥
यथा बुद्धिः त्वयि पुरस्तात् पूर्वम् आसीत्स्नेहसमन्विता पितुस्तव, भविता प्रीतिसमन्वितस्तव पिता तथैव प्रतीतः प्रतीतवान्सन् । औद्दालकिः उद्दालक एव औद्दालकिः अरुणस्यापत्यम् आरुणिः द्व्यामुष्यायणो वा मत्प्रसृष्टः मयानुज्ञातः सन् उत्तरा अपि रात्रीः सुखं प्रसन्नमनाः शयिता स्वप्ता वीतमन्युः विगतमन्युश्च भविता स्यात् , त्वां पुत्रं ददृशिवान् दृष्टवान् सन् मृत्युमुखात् मृत्युगोचरात् प्रमुक्तं सन्तम् ॥
(அனுவாதம்) உன்னுடைய தந்தையின் புத்தி முன்பு எவ்வாறு உன்னிடத்தில் பிரியமுடையதாய் இருந்ததோ அவ்வாறே உன்னை நினைவுகூர்ந்தவராய் ஔதாலகி அதாவது உத்தாலகரே ஔதாலகி இருப்பார். அருணருடைய பிள்ளையாய் இருப்பதாலும் ஆருணி: அதாவது பிதா, தத்தபிதா இருவருக்கும் பிண்டதானம் செய்பவர், என்னுடைய அனுக்ஞையினால் மற்ற இரவுகளில் சுகமாகவும், நிம்மதியாகவும் தூங்குபவராயும், கோபமற்றவராயும் இருப்பார். அவர் யமனிடமிருந்து விடுபட்டு இருக்கும் உன்னை புத்திரனாய் பார்ப்பார்.
नचिकेता उवाच —
(தந்தையின் நலனையும், நன்மனதையும், தர்மராஜனிடமிருந்து முதல் வரத்தால் பெற்ற நசிகேதன் ஸ்வர்க்கத்தை டைவதற்கான சாதனமாக உள்ள அக்னி வித்தை என்னும் அக்னி ஞானத்தைப் பெறுவதற்காக ஸ்வர்க்க ஸ்வரூபத்தை ம்மந்திரத்தால் கூறுகிறான்)
स्वर्गे लोके न भयं किञ्चनास्ति न तत्र त्वं न जरया बिभेति ।
उभे तीर्त्वा अशनायापिपासे शोकातिगो मोदते स्वर्गलोके ॥ १२ ॥
स्वर्गे लोके रोगादिनिमित्तं भयं किञ्चन किञ्चिदपि नास्ति । न च तत्र त्वं मृत्यो सहसा प्रभवसि, अतो जरया युक्त इह लोक इव त्वत्तो न बिभेति कश्चित्तत्र । किं च उभे अशनायापिपासे तीर्त्वा अतिक्रम्य शोकमतीत्य गच्छतीति शोकातिगः सन् मानसेन दुःखेन वर्जितः मोदते हृष्यति स्वर्गलोके दिवि ॥
(அனுவாதம்) ஸ்வர்க்கத்தில் வியாதி முதலியவைகளால் ஏற்படும் பயம் சிறிதும் கிடையாது. அங்கு ம்ருத்யுவாதிய உங்களுடைய ப்ரபாவம் செல்லாது. அங்கு இந்த உலகத்தில் உள்ளவர்கள் போல் முதுமை அடைந்து எந்த ஒருபுருஷனும் உங்களிடம் பயப்படுவது இல்லை. மேலும் திவ்யமான ஸ்வர்க்க லோகத்தில் பசி, தாகம், இரண்டும் நீங்கி, துக்கத்தை கடந்து அவ்வாறே மானச துக்கத்தை விட்டு எப்பொழுதும் சந்தோஷத்தை அடைகிறான்.
स त्वमग्निं स्वर्ग्यमध्येषि मृत्यो प्रब्रूहि तं श्रद्दधानाय मह्यम् ।
स्वर्गलोका अमृतत्वं भजन्त एतद्द्वितीयेन वृणे वरेण ॥ १३ ॥
एवं गुणविशिष्टस्य स्वर्गलोकस्य प्राप्तिसाधनभूतम् अग्निं स्वर्ग्यं स त्वं मृत्युः अध्येषि स्मरसि, जानासीत्यर्थः । हे मृत्यो, यतः तं प्रब्रूहि कथय श्रद्दधानाय श्रद्धावते मह्यं स्वर्गार्थिने । येनाग्निना चितेन स्वर्गलोकाः स्वर्गो लोको येषां ते स्वर्गलोकाः यजमानाः अमृतत्वम् अमरणतां देवत्वं भजन्ते प्राप्नुवन्ति, तत् एतत् अग्निविज्ञानं द्वितीयेन वरेण वृणे ॥
(அனுவாதம்) ஓ தர்மராஜனே! அத்தகைய ம்ருத்யுவாகிய நீர் இவ்வாறு நல்ல அம்சங்களுடைய ஸ்வர்க்கலோகத்தை அடைவதற்கான சாதனமாகிய அக்னியை அறிவீர். ஆகையால் சிரத்தை உடையவனாயும் சுவர்க்கத்தில் இச்சை உடையவனாகிய எனக்கு எந்த அக்னியினால் ஸ்வர்க்கலோகமானது யஜமானனுக்கு அம்ருதத்தை அதாவது மரணதர்மமற்றதன்மை உடைய தெய்வத்தன்மையை அடையச் செய்யுமோ அதை கூறுவீராக. அந்த இவ்அக்னி விக்ஞானத்தை இரண்டாவது வரத்தினால் ப்ரார்த்திக்கிறேன்.

(அ-கை) இவ்வாறு கேட்ட நசிகேதனை நோக்கி தர்மராஜன் கூறலானான்.
प्र ते ब्रवीमि तदु मे निबोध स्वर्ग्यमग्निं नचिकेतः प्रजानन् ।
अनन्तलोकाप्तिमथो प्रतिष्ठां विद्धि त्वमेतं निहितं गुहायाम् ॥ १४ ॥
प्र ते तुभ्यं प्रब्रवीमि ; यत्त्वया प्रार्थितं तत् उ मे मम वचसः निबोध बुध्यस्व एकाग्रमनाः सन् । स्वर्ग्यं स्वर्गाय हितं स्वर्गसाधनम् अग्निं हे नचिकेतः प्रजानन् विज्ञातवान्सन्नहमित्यर्थः । प्रब्रवीमि तन्निबोधेति च शिष्यबुद्धिसमाधानार्थं वचनम् ।
(அனுவாதம்) ஹே நசிகேத! நன்றாக விசேஷமாக அறிந்த நான் உனக்கு எது உன்னால் வேண்டப்பட்டதோ அந்த ஸ்வர்க்கலோகத்தை அடைவதற்கான சுலபமான சாதனமாகிய அக்னியைக் குறித்துக் கூறுகிறேன். என்னுடைய வசனங்களை ஒருமுகப்படுத்தப்பட்ட மனதுடன் அறிந்து கொள். நன்றாக அறிந்துகொள் என்று கூறியது சிஷ்யனுடைய புத்தியை சமநிலைபடுத்துவதற்கான வசனமாகும்.
अधुनाग्निं स्तौति — अनन्तलोकाप्तिं स्वर्गलोकफलप्राप्तिसाधनमित्येतत् , अथो अपि प्रतिष्ठाम् आश्रयं जगतो विराट्स्वरूपेण, तम् एतम् अग्निं मयोच्यमानं विद्धि विजानीहि त्वं निहितं स्थितं गुहायाम् । विदुषां बुद्धौ निविष्टमित्यर्थः ॥
(அனுவாதம்) இப்பொழுது அக்னிவித்தையை ஸ்துதி செய்கிறார். அனந்த லோகத்தின் அடைவு அதாவது ஸ்வர்க்கலோகத்தை அடைவதற்கான சாதனம் என்பதாகும். அவ்வாறு இருந்தாலும் ஜகத்திற்கு விராட் ரூபமாய் ஆஸ்ரயமாகிறது. என்னால் கூறப்போகிற அந்த இது குகையில் அதாவது ஞானிகளுடைய புத்தியில்  இருப்பதை நீ அறிவாயாக என்பது பொருள்.
इदं श्रुतेर्वचनम् —
(அ-கை) இது வேதவசனமாகும்.
लोकादिमग्निं तमुवाच तस्मै या इष्टका यावतीर्वा यथा वा ।
स चापि तत्प्रत्यवदद्यथोक्तमथास्य मृत्युः पुनरेवाह तुष्टः ॥ १५ ॥
लोकादिं लोकानामादिं प्रथमशरीरित्वात् अग्निं तं प्रकृतं नचिकेतसा प्रार्थितम् उवाच उक्तवान्मृत्युः तस्मै नचिकेतसे । किञ्च, याः इष्टकाः चेतव्याः स्वरूपेण यावतीर्वा सङ्ख्यया यथा वा चीयतेऽग्निर्येन प्रकारेण सर्वमेतदुक्तवानित्यर्थः । स चापि नचिकेताः तत् मृत्युनोक्तं प्रत्यवदत् यथावत्प्रत्ययेनावदत् प्रत्युच्चारितवान् । अथ अस्य प्रत्युच्चारणेन तुष्टः सन् मृत्युः पुनरेवाह वरत्रयव्यतिरेकेणान्यं वरं दित्सुः ॥
(அனுவாதம்) நசிகேதனால் கேட்கப்பட் உலகத்தில் முதலில் தோன்றிய ரூபம்(சரீரம்) ஆகிய அந்த அக்னியைக் குறித்து அந்த நசிகேதனிடம் ம்ருத்யு கூறினார். மேலும் எவ்வாறு செய்ய வேண்டிய வகையும், எண்ணிக்கைகளையும் அல்லது எவ்வாறு அக்னியை செய்யவேண்டும் என்று எல்லாவற்றையும் கூறினார். அந்த நசிகேதனும் ம்ருத்யுவானவர் கூறியவாறு நன்றாக புரிந்துகொண்டு அதைக்குறித்து திருப்பிக்கூறினார். அவர் திரும்பிக்கூறியதைக் கண்டு. சந்தோஷமடைந்த ம்ருத்யு மறுபடியும் மூன்று வரங்களைத் தவிர வேறு ஒரு வரத்தை கொடுப்பதற்கு இச்சை உடையவராகி இவ்வாறு கூறினார்.
कथम् ?
எவ்வாறு?
तमब्रवीत्प्रीयमाणो महात्मा वरं तवेहाद्य ददामि भूयः ।
तवैव नाम्ना भवितायमग्निः सृङ्कां चेमामनेकरूपां गृहाण ॥ १६ ॥
तं नचिकेतसम् अब्रवीत् प्रीयमाणः शिष्यस्य योग्यतां पश्यन्प्रीयमाणः प्रीतिमनुभवन् महात्मा अक्षुद्रबुद्धिः वरं तव चतुर्थम् इह प्रीतिनिमित्तम् अद्य इदानीं ददामि भूयः पुनः प्रयच्छामि । तवैव नचिकेतसः नाम्ना अभिधानेन प्रसिद्धः भविता मयोच्यमानः अयम् अग्निः । किञ्च, सृङ्कां शब्दवतीं रत्नमयीं मालाम् इमाम् अनेकरूपां विचित्रां गृहाण स्वीकुरु । यद्वा, सृङ्काम् अकुत्सितां गतिं कर्ममयीं गृहाण । अन्यदपि कर्मविज्ञानमनेकफलहेतुत्वात्स्वीकुर्वित्यर्थः ॥
(அனுவாதம்) சிஷ்யனுடைய யோக்கியதையை அறிந்து பிரியமடைந்தவரான மஹாத்மா அதாவது சிறந்த புத்தியுடைய ம்ருத்யு, நசிகேதஸைக் குறித்து கூறலானார். இப்பொழுது உனக்கு என்னுடைய பிரியத்தின் காரணமாக இங்கு மறுபடியும் நான்காவது வரம் தருகிறேன். என்னால் கூறப்போகிற இந்த அக்னி உன்னுடைய நசிகேதஸ் என்ற பெயரால் பிரசித்தமாகும். மேலும் ச்ருங்கா அதாவது ரத்னமயமான இந்த அநேக விதமான விசித்திரமான மாலையை அதாவது கோர்வையை கிரஹித்துக்கொள். அல்லது சிருங்காம் - அதாவது உத்தமமான கதியைக் கொடுக்கும் கர்மமயமான கதியைக் கிரஹித்துக்கொள். இதனுடைய தாத்பர்யம் என்னவெனில் இதைத்தவிர அநேக பலன்களுக்குக் காரணமான கர்மவிக்ஞானத்தை என்னிடமிருந்து அறிந்துகொள்.
पुनरपि कर्मस्तुतिमेवाह —
(அ.கை) மறுபடியும் கர்மத்தின் ஸ்துதியையே கூறுகிறார்:-
त्रिणाचिकेतस्त्रिभिरेत्य सन्धिं त्रिकर्मकृत्तरति जन्ममृत्यू ।
ब्रह्मजज्ञं देवमीड्यं विदित्वा निचाय्य मां शान्तिमत्यन्तमेति ॥ १७ ॥
त्रिणाचिकेतः त्रिः कृत्वा नाचिकेतोऽग्निश्चितो येन सः त्रिणाचिकेतः ; तद्विज्ञानवान्वा । त्रिभिः मातृपित्राचार्यैः एत्य प्राप्य सन्धिं सन्धानं सम्बन्धम् , मात्राद्यनुशासनं यथावत्प्राप्येत्येतत् । तद्धि प्रामाण्यकारणं श्रुत्यन्तरादवगम्यते ‘यथा मातृमान्पितृमान्’ (बृ. उ. ४ । १ । २) इत्यादेः । वेदस्मृतिशिष्टैर्वा प्रत्यक्षानुमानागमैर्वा । तेभ्यो हि विशुद्धिः प्रत्यक्षा । त्रिकर्मकृत् इज्याध्ययनदानानां कर्ता तरति अतिक्रामति जन्ममृत्यू ।
(அனுவாதம்) நாசிகேதா அக்னியாகத்தை மும்முறைசெய்தல் அல்லது த்ரிநாசிகேதா அக்னியை அறிந்தவனாயும் அதை அத்யயனம் செய்தவனாயும், அதை அனுஷ்டானம் செய்பவனாயும் இருப்பதால் த்ரிநாசிகேதா என்று கூறப்படுகிறது. மாதா, பிதா, ஆசாரியன் ஆகிய மூவர்களை அடைந்து அவர்களுடைய சம்பந்தத்தால் அதாவது மாதா முதலியவர்கள் கூறியவாறு (அறிவுறுத்தியவாறு) அடைந்து என்பதாகும். இதற்கு வேறு ஒரு சுருதியின் பிரமாண வாயிலாய் அறியப்படுகிறது. அதாவது “மாத்ருமான் பித்ருமான் ஆசாரியவான் ப்ரூயாத்” மாதா உடையவன், பிதா உடையவன் ஆசார்யன் உடையவன் கூறட்டும் என்று சுருதி வாக்கியம். வேதம், ஸ்மிருதி, சிஷ்ட்ட புருஷர்களை அடைந்தவர்களுக்கும் பிரத்யக்ஷ அனுமான ஆகமங்களின் சம்பந்தத்தை அடைந்தவர்களுக்கும், விசுத்தி அதாவது சித்த சுத்தியானது ப்ரத்யக்ஷம். (ஸ்பஷ்டமாக தெரிகிறது) த்ரிகர்மக்ருத் அதாவது யக்ஞம், அத்யயனம், தானம் ஆகிய இந்த மூன்று கர்மாக்களையும் செய்த கர்த்தா ஜன்ம மரணத்தைக் கடக்கிறான்.
किञ्च, ब्रह्मजज्ञम् , ब्रह्मणो हिरण्यगर्भाज्जातो ब्रह्मजः ब्रह्मजश्चासौ ज्ञश्चेति ब्रह्मजज्ञः । सर्वज्ञो ह्यसौ । तं देवं द्योतनाज्ज्ञानादिगुणवन्तम् , ईड्यं स्तुत्यं विदित्वा शास्त्रतः, निचाय्य दृष्ट्वा चात्मभावेन इमां स्वबुद्धिप्रत्यक्षां शान्तिम् उपरतिम् अत्यन्तम् एति अतिशयेनैति । वैराजं पदं ज्ञानकर्मसमुच्चयानुष्ठानेन प्राप्नोतीत्यर्थः ॥
(அனுவாதம்) மேலும் ப்ரஹ்மஜக்ஞம் என்பது ப்ரஹ்மத்தினிடமிருந்து அதாவது ஹிரண்ய கர்பத்திடமிருந்து உண்டாவது ப்ரஹ்மஜக்ஞ: பிரஹ்ம்மஜக்ஞ: என்றால் சர்வக்ஞம் என்பது பொருள். அந்த தேவனை அதாவது தேஜோமயமானதால் ஞான முதலிய குணமுடையவராய் இருப்பதால். ஸ்துதிக்கத்தகுந்தவரும், அதை சாஸ்திரமூலமாக அறிந்து அதை ஆத்ம பாவமாக பார்த்து அதை தன்னுடைய புத்தியில் ப்ரத்யக்ஷமாக ஆத்யந்திக சாந்தியை அதாவது உபரதியை அடைகிறான். (ஞானகர்ம சமுச்சயத்தை அடைவான் என்பது இதன் பொருளாகும்.)
इदानीमग्निविज्ञानचयनफलमुपसंहरति, प्रकरणं च —
(அஃகை) இப்பொழுது அக்னி விக்ஞானமும் அந்த யக்ஞத்தின் பலனைக் கூறி இந்த பிரகரணத்தை முடிக்கிறார்.
त्रिणाचिकेतस्त्रयमेतद्विदित्वा य एवं विद्वांश्चिनुते नाचिकेतम् ।
स मृत्युपाशान्पुरतः प्रणोद्य शोकातिगो मोदते स्वर्गलोके ॥ १८ ॥
त्रिणाचिकेतः त्रयं यथोक्तम् ‘या इष्टका यावतीर्वा यथा वा’ इति । एतत् विदित्वा अवगम्य यश्च एवम् आत्मस्वरूपेण अग्निं विद्वान् चिनुते निर्वर्तयति नाचिकेतमग्निं क्रतुम् , सः मृत्युपाशान् अधर्माज्ञानरागद्वेषादिलक्षणान् पुरतः अग्रतः, पूर्वमेव शरीरपातादित्यर्थः, प्रणोद्य अपहाय, शोकातिगः मानसैर्दुःखैर्विगत इत्येतत् , मोदते स्वर्गलोके वैराजे विराडात्मस्वरूपप्रतिपत्त्या ॥
திரிநாசிகேதஸ்திரயம் முன்பு கூறப்பட்டஎந்த இஷ்ட்டி உள்ளதோ அதை உள்ளவாறு அறிந்து புரிந்துகொண்டு எவன் ஆத்ம ஸ்வரூபமாகவே அந்த நாசிகேதாக்னி என்ற யக்ஞத்தை மூன்றுமுறை எந்த வித்வான் செய்கின்றானோ அவன் ம்ருத்யு பாசத்திலிருந்து அதாவது அதர்ம, அக்ஞான ராகதுவேஷாதிகளாகிய லக்ஷணங்களை சரீரம் உள்ளபோதே நீக்கி மனதில் தோன்றும் துக்கங்கள் அற்றவனாய் ஸ்வர்க்கலோகத்தில் அதாவது வைராஜ்யத்தில் விராட் ஆத்ம ரூபத்தை அடைந்து அதில் மகிழ்கிறான். (மகிழ்ச்சி அடைகின்றான்.) (இதுவரை தந்தை மகன் உறவு, அவர்களுள் ஒருவர் பால் மற்றொருவருக்குள்ள அன்பு, போன்ற விஷயங்களையும், ஸ்வர்க்கலோகம் போன்றவைகளை அடைவதற்கான உபாயங்கள் போன்றவைகளாயுமுள்ள கர்மகாண்ட விஷயங்களையே இவ்விரு வரங்கள் விளக்கின. இவ்வாறு கர்மகாண்டத்தில் அவித்யா. காம கர்மரூபமான ஸம்ஸாரமே ஆத்மாவில் ஆரோபணஞ் செய்யப்பட்டதாகும். அவ்வாறு ஆன்மாவில் ஆரோபிக்கப்பட்ட அவித்தையை நீக்கி ஆன்மாவின் சுத்தஸ்வரூபத்தை விளக்குவதற்காக மூன்றாவது வரத்தைப் பற்றியதான அடுத்த மந்திரம் ஆரம்பிக்கப்படுகிறது.)
एष तेऽग्निर्नचिकेतः स्वर्ग्यो यमवृणीथा द्वितीयेन वरेण ।
एतमग्निं तवैव प्रवक्ष्यन्ति जनासस्तृतीयं वरं नचिकेतो वृणीष्व ॥ १९ ॥
एषः ते तुभ्यम् अग्निः वरः हे नचिकेतः, स्वर्ग्यः स्वर्गसाधनः, यम् अग्निं वरम् अवृणीथाः वृतवान् प्रार्थितवानसि द्वितीयेन वरेण, सोऽग्निर्वरो दत्त इत्युक्तोपसंहारः । किञ्च, एतम् अग्निं तवैव नाम्ना प्रवक्ष्यन्ति जनासः जना इत्येतत् । एष वरो दत्तो मया चतुर्थस्तुष्टेन । तृतीयं वरं नचिकेतः वृणीष्व । तस्मिन्ह्यदत्ते ऋणवानेवाहमित्यभिप्रायः ॥
(அனுவாதம்) ஹே! நசிகேத! உன் பொருட்டு நீ கேட்ட அக்னி வரத்தை அதாவது ஸ்வர்க்க சாதனமான எந்த அக்னி வித்தையை வரமாகக் கேட்டாயோ அந்த அக்னிவரத்தையே இரண்டாவது வரமாக கொடுத்திருக்கிறேன். மேலும் அந்த அக்னியை உன் பெயரால் ஜனங்கள் கூறுவார்கள். இந்த நான்காவது வரம் என்னால் சந்தோஷமாக உனக்குக்கொடுக்கப்பட்டது. ஹே! நசிகேத! மூன்றாவதான வரத்தைக் கேள். அதனால் நான் கடன் அற்றவனாவேன்.
एतावद्ध्यतिक्रान्तेन विधिप्रतिषेधार्थेन मन्त्रब्राह्मणेनावगन्तव्यं यद्वरद्वयसूचितं वस्तु नात्मतत्त्वविषययाथात्म्यविज्ञानम् । अतो विधिप्रतिषेधार्थविषयस्य आत्मनि क्रियाकारकफलाध्यारोपणलक्षणस्य स्वाभाविकस्याज्ञानस्य संसारबीजस्य निवृत्त्यर्थं तद्विपरीतब्रह्मात्मैकत्वविज्ञानं क्रियाकारकफलाध्यारोपणशून्यमात्यन्तिकनिःश्रेयसप्रयोजनं वक्तव्यमित्युत्तरो ग्रन्थ आरभ्यते । तमेतमर्थं द्वितीयवरप्राप्त्याप्यकृतार्थत्वं तृतीयवरगोचरमात्मज्ञानमन्तरेणेत्याख्यायिकया प्रपञ्जयति । यतः पूर्वस्मात्कर्मगोचरात्साध्यसाधनलक्षणादनित्याद्विरक्तस्यात्मज्ञानेऽधिकार इति तन्निन्दार्थं पुत्राद्युपन्यासेन प्रलोभनं क्रियते ।
(அனுவாதம்)(அஃகை) விதிநிஷேதங்கள் எதனுடைய பிரயோஜனமோ அதை முன் கூறப்பட்ட மந்திர பிராஹ்மணத்தின் வாயிலாக இந்த இரண்டு வரங்களே காண்பிக்கப்பட்ட வஸ்து என்று அறிய வேண்டும். இதில் ஆத்ம தத்துவத்தின் யதார்த்த ஞானமன்று. ஆகையால் விதிநிஷேதார்த்த விஷயங்கள் ஆத்மாவிடத்தில் கிரியகாரக பலம் ஆகிய அத்யாரோபம் செய்யப்பட்ட சுவாபாவமான அக்ஞானமாகிய சம்சார பீஜத்தை நீக்குவதின் பொருட்டு அதைக்காட்டிலும் வேறான பிரஹ்மாத்மைக்ய ஞானம் அதாவது கிரியா, காரக பல அத்யாரோப லக்ஷணமற்றமுடிவான நிஸ்ச்ரேயஸ பிரயோஜனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக அடுத்ததாக கிரந்தம் ஆரம்பிக்கப்படுகிறது. அதன் பொருட்டு மூன்றாவது வரமாக அறியப்போகிற ஆத்ம ஞானத்தைக் காட்டிலும் வேறான இரண்டாவது வரத்தை அடைந்திருந்தாலும் க்ருதார்த்தம் அடைந்தது ஆகாது என்று இனிவரும் கதை விளக்குகிறது. எதனால் முன்பு அடைந்த கர்மவிஷயமான சாதன அநித்தியத்திலும் சாத்தியலக்ஷ்ணமான அநித்யத்திலும் விரக்தி அடைந்தவனுக்கே ஆத்மஞானத்தில் அதிகாரம் என்பதால் கர்மத்தை நிந்திப்பதற்காக புத்திரன் முதலியவைகளைக் கூறும் வாயிலாக அவற்றில் ஆசையை உண்டாக்கி இனிவரும் கதையினால் சுருதி அப்பொருளை (கர்ம வைராக்ய பூர்வகமான பொருளை) விளக்குவதாலென்க.
नचिकेता उवाच ‘तृतीयं वरं नचिकेतो वृणीष्व’ इत्युक्तः सन् —
(அ-கை)(அனுவாதம்) ஹே நசிகேதா மூன்றாவது வரத்தைக் கேள் என்று கூறப்பட்டவனாய் நசிகேதன் இவ்வாறு கூறலானான்:
येयं प्रेते विचिकित्सा मनुष्ये अस्तीत्येके नायमस्तीति चैके ।
एतद्विद्यामनुशिष्टस्त्वयाहं वराणामेष वरस्तृतीयः ॥ २० ॥
येयं विचिकित्सा संशयः प्रेते मृते मनुष्ये, अस्ति इत्येके अस्ति शरीरेन्द्रियमनोबुद्धिव्यतिरिक्तो देहान्तरसम्बन्ध्यात्मा इत्येके मन्यन्ते, नायमस्ति इति चैके नायमेवंविधोऽस्तीति चैके । अत्र चास्माकं न प्रत्यक्षेण नाप्यनुमानेन निर्णयविज्ञानम् । एतद्विज्ञानाधीनो हि परः पुरुषार्थ इत्यतः एतत् विद्यां विजानीयाम् अहम् अनुशिष्टः ज्ञापितः त्वया । वराणामेष वरस्तृतीयोऽवशिष्टः ॥
(அனுவாதம்)இறந்த மனிதனிடத்தில் எனக்கு சந்தேஹம் இருக்கிறது. சரீரம் இந்திரியம் புத்தி இவைகளைக் காட்டிலும் வேறான தேஹாந்தர சம்பந்தி ஆத்மா இருக்கிறது என்று ஒரு சிலரும், அவ்வாறு இல்லை என்று ஒரு சிலரும் கூறுகின்றனர். இவ்வாறு இல்லை என்றும் இவ்வாறு இருக்கிறது என்றும் சிலர் கூறுவதால் இதில் நமக்கு பிரத்தியக்ஷமாகவோ, அனுமானத்தாலோ நிர்ணயம் செய்ய முடியாது. ஏனெனில் அது ஞானத்தின் அதீனமான பரமபுருஷார்த்தமாகும். ஆகையால் உங்களால் உபதேசிக்கப்பட்டு நான் அறிந்து கொள்வேனாக. நீங்கள் அளித்த வரங்களில் மீதமான மூன்றாவது வரமாகும்.
किमयमेकान्ततो निःश्रेयससाधनात्मज्ञानार्हो न वेत्येतत्परीक्षणार्थमाह —
(அ-கை) அந்த நசிகேதன் நிஸ்ரேயஸ் சாதனமான ஆத்மக் ஞானத்திற்கு பூர்ணமாக யோக்யம் (அருகதை) இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை அறிவதற்கு பரீக்ஷை செய்வதற்காக(யமன்) இவ்வாறு கூறுகிறார்.
देवैरत्रापि विचिकित्सितं पुरा न हि सुविज्ञेयमणुरेष धर्मः ।
अन्यं वरं नचिकेतो वृणीष्व मा मोपरोत्सीरति मा सृजैनम् ॥ २१ ॥
देवैरपि अत्र एतस्मिन्वस्तुनि विचिकित्सितं संशयितं पुरा पूर्वम् । न हि सुविज्ञेयं सुष्ठु विज्ञेयम् असकृच्छ्रुतमपि प्राकृतैर्जनैः, यतः अणुः सूक्ष्मः एषः आत्माख्यः धर्मः । अतः अन्यम् असन्दिग्धफलं वरं नचिकेतः, वृणीष्व । मा मां मा उपरोत्सीः उपरोधं मा कार्षीः अधमर्णमिवोत्तमर्णः । अतिसृज विमुञ्च एनं वरं मा मां प्रति ॥
(அனுவாதம்) தேவர்களும் முன்பு இந்த (ஆத்ம) வஸ்துவினிடத்தில் சந்தேஹம் உடையவர்களாய் இருந்தார்கள். சாதாரண மக்களும் இத்தத்வத்தை கேட்டும் நன்றாக அறியவில்லை. ஆகையால் இந்த ஆத்மா எனப்படும் தர்மம் மிக சூக்ஷ்மமானது. ஆகையால் நசிகேதன் வேறு ஒரு பலம் அதாவது சந்தேஹம் இன்றிய பலத்தைக் கேள். தனமுடையவன் கடன் பட்டவனை இம்சிப்பது போல் என்னை இம்சிக்காதே. இந்த வரத்தை என் பொருட்டு விட்டு விடு.
देवैरत्रापि विचिकित्सितं किल त्वं च मृत्यो यन्न सुज्ञेयमात्थ ।
वक्ता चास्य त्वादृगन्यो न लभ्यो नान्यो वरस्तुल्य एतस्य कश्चित् ॥ २२ ॥
देवैरत्रापि विचिकित्सितं किलेति भवत एव नः श्रुतम् । त्वं च मृत्यो, यत् यस्मात् न सुज्ञेयम् आत्मतत्त्वम् आत्थ कथयसि । अतः पण्डितैरप्यवेदनीयत्वात् वक्ता च अस्य धर्मस्य त्वादृक् त्वत्तुल्यः अन्यः पण्डितश्च न लभ्यः अन्विष्यमाणोऽपि । अयं तु वरो निःश्रेयसप्राप्तिहेतुः । अतः न अन्यः वरः तुल्यः सदृशः अस्ति एतस्य कश्चिदपि । अनित्यफलत्वादन्यस्य सर्वस्यैवेत्यभिप्रायः ॥
(அனுவாதம்) இங்கு தேவர்களும் கூட இந்த வஸ்துவினிடத்தில் சந்தேஹமுடையவர்களாய் இருந்தார்கள் என்று உங்களிடமிருந்து அல்லவா நாங்கள் கேட்டோம். ஹே! மிருத்யுவே! நீங்களும் ஆத்மதத்துவத்தை நன்றாக தெரிந்து கொள்வதற்கான யோகியதையை தெரிவிக்கவில்லை. அதனால் பண்டிதர்களாலும் அறிய முடியாதலால் இந்த தர்மத்தைப் பற்றி கூறுவதில் உங்களுக்கு சமானமாக ஒரு பண்டிதரையும் எவ்வளவு தேடினாலும் கிடைக்கமாட்டார்கள். இந்த வரம் நிஸ்ஸ்ரேயஸின் பொருட்டாகும். ஆகையால் இதற்கு சமானமான வேறு ஒன்று கிடையாது. ஏன் எனில் மற்ற எல்லாவரமும் அநித்யபலம் உடையதாகும் என்பது இதனுடைய அபிப்ராயம்.
एवमुक्तोऽपि पुनः प्रलोभयन्नुवाच मृत्युः —
(அஃகை) இவ்வாறு நசிகேதன் கூறிய பின்பும் மிருத்யுவானவர் அவனை ஏமாற்றுவதற்காக கூறுகிறார்.
शतायुषः पुत्रपौत्रान्वृणीष्व बहून्पशून्हस्तिहिरण्यमश्वान् ।
भूमेर्महदायतनं वृणीष्व स्वयं च जीव शरदो यावदिच्छसि ॥ २३ ॥
शतायुषः शतं वर्षाणि आयूंषि येषां तान् शतायुषः पुत्रपौत्रान् वृणीष्व । किञ्च, गवादिलक्षणान् बहून् पशून् हस्तिहिरण्यम् , हस्ती च हिरण्यं च हस्तिहिरण्यम् , अश्वांश्च । किञ्च, भूमेः पृथिव्याः महत् विस्तीर्णम् आयतनम् आश्रयं मण्डलं साम्राज्यं वृणीष्व । किञ्च, सर्वमप्येतदनर्थकं स्वयं चेदल्पायुरित्यत आह — स्वयं च त्वं जीव धारय शरीरं समग्रेन्द्रियकलापं शरदः वर्षाणि यावत् इच्छसि जीवितुम् ॥
(அனுவாதம்) நூறு ஆயுள் உடைய புத்திரபௌத்திரர்களை (மகன்கள், பேரன்களை) வரமாக பெற்றுக்கொள். மேலும் பசு முதலிய லக்ஷக்கணக்கான அநேக பசுக்களையும், யானைகளையும் தங்கத்தையும், குதிரைகளையும், அவ்வாறே மிக விஸ்தாரணமான நிலத்தை உடைய ராஜ்யத்தை வரமாகப் பெற்றுக்கொள். மேலும் உனக்கு குறுகிய ஆயுள் இருந்தால் இதெல்லாம் வீணாகும். ஆகையால் நீ எதுவரை ஜீவிக்க இச்சிக்கிறாயோ அதுவரை இந்த இந்திரிய முதலியவைகளை உடைய சரீரத்தை தரித்துக் கொண்டு இரு.
एतत्तुल्यं यदि मन्यसे वरं वृणीष्व वित्तं चिरजीविकां च ।
महाभूमौ नचिकेतस्त्वमेधि कामानां त्वा कामभाजं करोमि ॥ २४ ॥
एतत्तुल्यम् एतेन यथोपदिष्टेन सदृशम् अन्यमपि यदि मन्यसे वरम् , तमपि वृणीष्व । किञ्च, वित्तं प्रभूतं हिरण्यरत्नादि चिरजीविकां च सह वित्तेन वृणीष्वेत्येतत् । किं बहुना ? महाभूमौ महत्यां भूमौ राजा नचिकेतः त्वम् एधि भव । किञ्चान्यत् , कामानां दिव्यानां मानुषाणां च त्वा त्वां कामभाजं कामभागिनं कामार्हं करोमि, सत्यसङ्कल्पो ह्यहं देवः ॥
(அனுவாதம்) முன்பு அருளியதற்கு சமமான வேறு வரத்தையோ அல்லது அதைக் காட்டிலும் சிறப்பானது என்று நீ எதை நினைக்கிறாயோ அந்த வரத்தையும் கேள். மேலும் பொன், ரத்தினங்கள் முதலிய செல்வத்தையும் தீர்க்க காலம் வசித்தலையும் வரமாக கேட்பாயாக. ஹே!நசிகேத: அதிகமாக கூறி என்ன பயன். நீ விஸ்தாரமான பூமிக்கு ராஜாவாக ஆவாயாக. மேலும் வேறு காமனைகள் அதாவது தேவர்கள், மனிதர்கள் எதை விரும்புவார்களோ அத்தனை காமனைகளையும் நீ விரும்பியவாறு அனுபவிப்பதற்கு அளிக்கிறேன்: ஏன் எனில் நான் சத்யசங்கல்பதேவன்.
ये ये कामा दुर्लभा मर्त्यलोके सर्वान्कामांश्छन्दतः प्रार्थयस्व ।
इमा रामाः सरथाः सतूर्या न हीदृशा लम्भनीया मनुष्यैः ।
आभिर्मत्प्रत्ताभिः परिचारयस्व नचिकेतो मरणं मानुप्राक्षीः ॥ २५ ॥
ये ये कामाः प्रार्थनीयाः दुर्लभाश्च मर्त्यलोके, सर्वान् तान् कामान् छन्दतः इच्छातः प्रार्थयस्व । किञ्च, इमाः दिव्या अप्सरसः, रमयन्ति पुरुषानिति रामाः, सह रथैर्वर्तन्त इति सरथाः, सतूर्याः सवादित्राः, ताश्च न हि लम्भनीयाः प्रापणीयाः ईदृशाः एवंविधाः मनुष्यैः मर्त्यैः अस्मदादिप्रसादमन्तरेण । आभिः मत्प्रत्ताभिः मया प्रदत्ताभिः परिचारिकाभिः परिचारयस्व आत्मानम् , पादप्रक्षालनादिशुश्रूषां कारयात्मन इत्यर्थः । हे नचिकेतः, मरणं मरणसम्बद्धं प्रश्नं प्रेत्यास्ति नास्तीति काकदन्तपरीक्षारूपं मा अनुप्राक्षीः मैवं प्रष्टुमर्हसि ॥
(அனுவாதம்) மனித உலகத்தில் எந்த எந்த காமனைகள் அவசியம் வேண்டப்பட்டவையும் மிகவும் அரிதாகுமோ அந்த எல்லா காமனைகளையும் நீ வேண்டுவாயாக, மேலும் புருஷர்களை ரமிக்கச் செய்வதால் ராமா: எனப்படும் தேவலோகத்து அப்சரசுகள் ரதங்களைக் கூடியவர்கள், சங்கீத வாத்தியங்களை உடையவர்கள் ஆகிய இவ்வாறு உள்ளவர்கள் எங்களைப் போன்றவர்களின் பிரஸாதம் (அருள்) இன்றி வேறு சாதனத்தால் மனிதர்களால் அடைய முடியாது, என்னால் அளிக்கப்பட்ட பரிச்சாரிணிகளால் (சேவை செய்பவர்களால்) பரிச்சாரம் (சேவைகள்)செய்து கொள். அதாவது, அவர்களைக் கொண்டு உனக்கு பாதம் கழுவுதல் முதலிய சேவைகளை செய்து கொள்வாயாக என்பது பொருள். ஹே நசிகேத மரணத்தைக் குறிது உயிர் பிரிந்த உடன் ஜீவன் இருக்கிறதா? அல்லது இல்லையா என்றகேள்வி காகத்தின் பற்களை எண்ணுவதற்கு ஒப்பாகும். ஆகையால் அதைக் குறித்து கேள்வி நீ எழுப்புவது பொருந்தாது.
एवं प्रलोभ्यमानोऽपि नचिकेता महाह्रदवदक्षोभ्य आह —
(அஃகை) இவ்வாறு பலவாராக தர்மராஜன் குழப்பமேற்படுத்திய (ஆசையை உண்டாக்கிய) போதிலும், கலக்கமுறாத பெருங்குளம் போல் நசிகேதன் கூறலானான். (இஃது எல்லாவற்றினின்றும் விரக்தி அடைந்தவனும், சம, தமாதி குணங்களோடு கூடியவனுமே ஞானமார்க்கத்தைப் பற்றிய உபதேசம் பெறத்தகுந்த அதிகாரி என்பதனை விளக்குகிறது இம்மந்திரம்.)
श्वोभावा मर्त्यस्य यदन्तकैतत्सर्वेन्द्रियाणां जरयन्ति तेजः ।
अपि सर्वं जीवितमल्पमेव तवैव वाहास्तव नृत्यगीते ॥ २६ ॥
श्वो भविष्यन्ति न वेति सन्दिह्यमान एव येषां भावो भवनं त्वयोपन्यस्तानां भोगानां ते श्वोभावाः । किञ्च, मर्त्यस्य मनुष्यस्य अन्तक हे मृत्यो, यत् एतत् सर्वेन्द्रियाणां तेजः तत् जरयन्ति अपक्षपयन्ति । अप्सरःप्रभृतयो भोगा अनर्थायैवैते, धर्मवीर्यप्रज्ञातेजोयशःप्रभृतीनां क्षपयितृत्वात् । यां चापि दीर्घजीविकां त्वं दित्ससि तत्रापि शृणु । सर्वं यद्ब्रह्मणोऽपि जीवितम् आयुः अल्पमेव, किमुतास्मदादिदीर्घजीविका । अतः तवैव तिष्ठन्तु वाहाः रथादयः, तथा तव नृत्यगीते च ॥
(அனுவாதம்) (உங்களால் அளிக்கப்படும் போகங்கள்) நாளை இருக்குமோ, இல்லாமல் போகுமோ, என்று நிச்சயமற்றதாகும். உங்களால் அளிக்கப்படும் போகங்கள் நாளை இல்லாமல் போகும். ஹே ம்ருத்யு! மேலும் மனிதர்களின் முடிவை அளிப்பது எதுவோ அது அப்சரஸ் முதலிய போகங்கள் அவைகள் இந்திரியங்களின் தேஜஸ்ஸை இல்லாமல் செய்கிறது. தர்மம், வீரியம், பிரக்ஞாதேஜஸ்யசஸ் (புகழ்) முதலியவைகளை நசிக்கச் செய்வதால் அவைகள் அநர்த்தங்களே. நீங்கள் எந்த நீண்டாயுளை கொடுத்தீர்களோ அதைக் குறித்தும் கேளுங்கள், பிரஹ்மா முதல் எது எல்லாம் ஜீவிக்கிறதோ அதுவெல்லாம் அல்ப ஆயுளே. என்னவென்று கூறுவது நம்முடைய தீர்க்க ஆயுளை. ஆகையால் ரத முதலியவைகளும் அவ்வாறே நடனம் கீதம் முதலியவைகளும் உங்களிடமே இருக்கட்டும்.
किञ्च-
மேலும்
न वित्तेन तर्पणीयो मनुष्यो लप्स्यामहे वित्तमद्राक्ष्म चेत्त्वा ।
जीविष्यामो यावदीशिष्यसि त्वं वरस्तु मे वरणीयः स एव ॥ २७ ॥
न प्रभूतेन वित्तेन तर्पणीयो मनुष्यः । न हि लोके वित्तलाभः कस्यचित्तृप्तिकरो दृष्टः । यदि नामास्माकं वित्ततृष्णा स्यात् , लप्स्यामहे प्राप्स्यामहे वित्तम् , अद्राक्ष्म दृष्टवन्तो वयं चेत् त्वा त्वाम् । जीवितमपि तथैव — जीविष्यामः यावत् याम्ये पदे त्वम् ईशिष्यसि ईशिष्यसे प्रभुः स्याः । कथं हि मर्त्यस्त्वया समेत्याल्पधनायुर्भवेत् ? वरस्तु मे वरणीयः स एव यदात्मविज्ञानम् ॥
(அனுவாதம்) மனிதன் மிகுந்த செல்வத்தினால் திருப்தி அடையமாட்டான். உலகில் ஒருவரும் செல்வத்தை அடைந்ததால் திருப்தி அடைந்ததாகப் பார்க்கப்படவில்லை. எங்களுக்கு செல்வத்தில் ஆசையிருந்தால் உங்களைப் பார்த்ததினாலேயே இந்த செல்வம் கிடைத்திருக்கும். அவ்வாறே ஜீவிதமும் (ஆயுளும்) கிடைத்திருக்கும். நீங்கள் எது வரையில் யம பதவியில் யஜமானனாக இருந்து கொண்டு நடத்திக் கொண்டிருக்கிறீர்களோ (சாசனை செய்து கொண்டிருக்கிறீர்களோ) அது வரை நாங்கள் ஜீவித்துக் கொண்டிருப்போம். மனிதன் உங்களை அடைந்து எவ்வாறு அல்பதனமும், ஆயுளும் உடையவனாக ஆவான்? அந்த வரமானது ஆத்ம விக்ஞானமாய் இருந்தால் மட்டுமே வரமாக கேட்க வேண்டும்.
यतश्च
ஏனென்றால்
अजीर्यताममृतानामुपेत्य जीर्यन्मर्त्यः क्वधःस्थः प्रजानन् ।
अभिध्यायन्वर्णरतिप्रमोदानतिदीर्घे जीविते को रमेत ॥ २८ ॥
अजीर्यतां वयोहानिमप्राप्नुवताम् अमृतानां सकाशम् उपेत्य उपगम्य आत्मन उत्कृष्टं प्रयोजनान्तरं प्राप्तव्यं तेभ्यः प्रजानन् उपलभमानः स्वयं तु जीर्यन् मर्त्यः जरामरणवान् क्वधःस्थः कुः पृथिवी अधश्चासावन्तरिक्षादिलोकापेक्षया तस्यां तिष्ठतीति क्वधःस्थः सन् कथमेवमविवेकिभिः प्रार्थनीयं पुत्रवित्ताद्यस्थिरं वृणीते ।
(அனுவாதம்) வயது காரணமாக தேய்வு, முதிற்சி, முதலியவைகள் அற்றவர்களும், மரண தர்மம் அற்றவர்களுமான தேவர்களால் தங்கள் போன்றோரின் பக்கத்தில் நெருங்கிய பின் அத்தகைய உத்தமர்களிடத்தில் உத்தம புருஷார்த்தம் உள்ளது என்று அறிந்துள்ளவன். அந்தரிக்ஷாதி லோகங்களுக்குக் கீழே உள்ள மண்ணுலகில் வாழ்பவனும், மேலும் தனக்குக் கீழான மனைவி, மக்கள் பால் ஆசை கொண்டவனும் மூப்பு, மரணம், இவைகளைக் கொண்டவனான அவிவேக மனிதனால் வேண்டப்படும் புத்திரன், செல்வம், பொன், முதலான அஸ்திர பொருள்களை எவ்வாறு வேண்டுவான்.
‘क्व तदास्थः’ इति वा पाठान्तरम् । अस्मिन्पक्षे चैवमक्षरयोजना— तेषु पुत्रादिषु आस्था आस्थितिः तात्पर्येण वर्तनं यस्य स तदास्थः । ततोऽधिकतरं पुरुषार्थं दुष्प्रापमपि अभिप्रेप्सुः क्व तदास्थो भवेत् ? न कश्चित्तदसारज्ञस्तदर्थी स्यादित्यर्थः । सर्वो ह्युपर्युपर्येव बुभूषति लोकः । तस्मान्न पुत्रवित्तादिलोभैः प्रलोभ्योऽहम् । किञ्च, अप्सरःप्रमुखान् वर्णरतिप्रमोदान् अनवस्थितरूपतया अभिध्यायन् निरूपयन् यथावत् अतिदीर्घे जीविते कः विवेकी रमेत ॥
(அனுவாதம்) क्व तथास्थ (க்வ ததாஸ்த்த) என்பது பாடந்தரம். இந்த பஷத்தில் அக்ஷரத்தைச் சேர்க்கவேண்டும். அந்த புத்திரன் முதலியவைகளில் ஆஸ்த்தா (ஆசை, பற்று) என்பது அதன் பரமான (அதைக் குறித்தே உள்ள) பிரவிர்த்தியாம். அதில் அசாரத்தை அறிந்தவன் ஒருவனும் அதில் இச்சை கொள்ளமாட்டான். ஏன் எனில் எல்லோரும் மேலும் மேலும் மேன்மையை அடைய விரும்புகின்றனர். ஆகையால் புத்திரன் தனம் முதலியவைகளில் லோபத்தை அடையமாட்டார்கள். அவ்வாறே வர்ண ராகத்தினால் அடையப்படும் அப்சரஸ் முதலிய சுகங்களில் அஸ்திரத்தன்மையை பாவனை செய்து அதை மித்யா ரூபமாய் அறிந்த விவேகி புருஷன் அதிக காலம் ஜீவிப்பதற்கு எவ்வாறு இச்சிப்பான்.
अतो विहायानित्यैः कामैः प्रलोभनम् , यन्मया प्रार्थितं
(அ) ஆகையால் அநித்யமான் காமனைகளால் என்னை வழிமாற்றுவதை விடுத்து, நான் கேட்ட மரண விஷயமான கேள்விக்கு பதில் கூறுங்கள் என்று வேண்டுகிறேன்.
यस्मिन्निदं विचिकित्सन्ति मृत्यो यत्साम्पराये महति ब्रूहि नस्तत् ।
योऽयं वरो गूढमनुप्रविष्टो नान्यं तस्मान्नचिकेता वृणीते ॥ २९ ॥
यस्मिन् प्रेते इदं विचिकित्सनं विचिकित्सन्ति अस्ति नास्तीत्येवंप्रकारं हे मृत्यो, साम्पराये परलोकविषये महति महाप्रयोजननिमित्ते आत्मनो निर्णयविज्ञानं यत् , तत् ब्रूहि कथय नः अस्मभ्यम् । किं बहुना, योऽयं प्रकृत आत्मविषयः वरः गूढं गहनं दुर्विवेचनं प्राप्तः अनुप्रविष्टः, तस्मात् वरात् अन्यम् अविवेकिभिः प्रार्थनीयमनित्यविषयं वरं नचिकेताः न वृणीते मनसापि इति श्रुतेर्वचनमिति ॥
(அனுவாதம்) ஹே மிருத்யோ! மரணத்திற்குப் பின் இருக்கின்றது இல்லை என்ற விஷயத்தில் சந்தேஹம் உண்டாகிறதோ எந்த விஷயமானது (எந்த ஆன்மாவைப் பற்றி நிர்ணயிக்கக்கூடிய விஷயமானது) பரலோக விஷயத்தில் பெரும் பயனையடையக் காரணமோ அதைக் கூறுவீராக. அதிகம் கூறுவானேன் எந்த இந்த ஆன்மா விஷயத்தைப் பற்றிய வரமானது விளக்கக் கடினமானதோ மிகவும் ரஹஸ்யமானதோ ஆகையால் அதனின்றும் வேறுபட்ட மற்றொரு வரத்தை நசிகேதன் மனதாலும் கேட்கமாட்டான் என்பது சுருதியின் வாக்கியமாகும்.
इति प्रथमवल्लीभाष्यम् ॥
परीक्ष्य शिष्यं विद्यायोग्यतां चावगम्याह —
(அ-கை) சிஷ்யனை பரீக்ஷித்து அவனுக்கு ஆத்ம வித்தையை அறிவதற்கான தகுதியிருப்பதனை உணர்ந்த தர்மராஜன் மேலும் கூறலானார்.
अन्यच्छ्रेयोऽन्यदुतैव प्रेयस्ते उभे नानार्थे पुरुषं सिनीतः ।
तयोः श्रेय आददानस्य साधु भवति हीयतेऽर्थाद्य उ प्रेयो वृणीते ॥ १ ॥
अन्यत् पृथगेव श्रेयः निःश्रेयसं तथा अन्यत् उतैव अपि च प्रेयः प्रियतरमपि ते श्रेयःप्रेयसी उभे नानार्थे भिन्नप्रयोजने सती पुरुषम् अधिकृतं वर्णाश्रमादिविशिष्टं सिनीतः बध्नीतः । ताभ्यां विद्याविद्याभ्यामात्मकर्तव्यतया प्रयुज्यते सर्वः पुरुषः । प्रेयःश्रेयसोर्हि अभ्युदयामृतत्वार्थी पुरुषः प्रवर्तते । अतः श्रेयःप्रेयःप्रयोजनकर्तव्यतया ताभ्यां बद्ध इत्युच्यते सर्वः पुरुषः ।
(அனுவாதம்) (ச்ரேயஸ் மோக்ஷத்திற்கு ஸாதனமான (ஆன்ம) ஞானம்) நமக்கு விருப்பமான மேன்மைகளை அல்லது இன்பங்களை அளிக்கும் ஜ்யோதிஷ்டோம யாகங்களைப் பற்றிய ஞானங்களைக் காட்டிலும் வேறுபட்டது. அவ்வாறே ப்ரேயஸ் நமக்கு இன்பங்களைத் தரவல்ல கர்ம ஞானமானது மோக்ஷ சாதனமான ஆன்ம ஞானங்களைக் காட்டிலும் வேறுபட்டது. வெவ்வேறு பிரயோஜனங்களை உடைய அந்தச்ஸ்ரேயஸ், ப்ரேயஸ் என்ற இரண்டும் வர்ணம், ஆஸ்ரமம், வயது, அவஸ்தை, இவைகளுடன் கூடிய மனிதனை கட்டுப்படுத்துகிறது. ஆகையால் எல்லா புருஷர்களையும் அவை இரண்டும் தங்களுடைய கர்த்தவ்யங்களாக ஈடுபடுத்துகிறது. அப்யுதயத்திலும் (அதாவது தோன்றுகின்ற பலன்களிலும்) அம்ருதத்திலும் அடைய வேண்டும் என்ற விருப்பமுள்ளவனை ச்ரேயஸிலும் பிரேயஸிலும் பிரவிர்த்திக்கச் செய்கிறது. ஆகையால் எல்லா புருஷர்களும் ச்ரேயஸ் அல்லது ப்ரேயஸ் இவைகளின் பயனை அடைவதற்காக தாம் செய்ய வேண்டியவனாக எண்ணி ஈடுபடுகிறார்கள்.
ते यद्यप्येकैकपुरुषार्थसम्बन्धिनी विद्याविद्यारूपत्वाद्विरुद्धे इत्यन्यतरापरित्यागेनैकेन पुरुषेण सहानुष्ठातुमशक्यत्वात्तयोः हित्वा अविद्यारूपं प्रेयः, श्रेय एव केवलम् आददानस्य उपादानं कुर्वतः साधु शोभनं शिवं भवति । यस्त्वदूरदर्शी विमूढो हीयते वियुज्यते अर्थात् पुरुषार्थात्पारमार्थिकात्प्रयोजनान्नित्यात् प्रच्यवत इत्यर्थः । कोऽसौ ? य उ प्रेयः वृणीते उपादत्ते इत्येतत् ॥
(அனுவாதம்) அவை இரண்டும் தனித்தனியாக புருஷார்த்த சம்பந்தமுடைய வித்யா, அவித்யா ரூபமாய் விருத்தமாய் இருப்பதால் ஒன்றைவிடாமல் ஒரே புருஷனால் அனுஷ்ட்டானம் செய்ய முடியாததால் அவை இரண்டினுள் அவித்யா ரூபமாகிய பிரேயஸ்ஸை விட்டு ச்ரேயஸ் மார்க்கத்தை மட்டுமே கடைபிடிப்பவனே சாது, சோபனமானவன், மங்களமானவன் ஆகிறான். எவன் ஒருவன் குறுகிய பார்வையுடன் மூடனாய் இருக்கிறானோ அவன் இந்த புருஷார்த்தமாகிய பாரமார்ததிகமான நித்யத்திலிருந்து நழுவுகிறான் என்பது பொருள். அவன் யார்? எனில் இந்த ப்ரேயஸ் மார்க்கத்தை கடைபிடிப்பவனாகும் என்பதாகும்.
यद्युभे अपि कर्तुं स्वायत्ते पुरुषेण, किमर्थं प्रेय एवादत्ते बाहुल्येन लोक इति, उच्यते ।
(அஃகை) ச்ரேயஸ், ப்ரேயஸ், என்ற இவ்விரண்டில் அவரவர் இஷ்டம் போல் ஒன்றைவிடுத்து, மற்றொன்றை ஏற்பதில் சுதந்திரம் இருந்தும், ஏன் உலகோர் அதிகமாக ச்ரேயஸை விடுத்துப் ப்ரேயஸை ஏற்கின்றனர் என்பதற்கான காரணத்தை விளக்கப் போவது இம்மந்திரம்.
श्रेयश्च प्रेयश्च मनुष्यमेतस्तौ सम्परीत्य विविनक्ति धीरः ।
श्रेयो हि धीरोऽभि प्रेयसो वृणीते प्रेयो मन्दो योगक्षेमाद्वृणीते ॥ २ ॥
सत्यं स्वायत्ते ; तथापि साधनतः फलतश्च मन्दबुद्धीनां दुर्विवेकरूपे सती व्यामिश्रीभूते इव मनुष्यं पुरुषम् आ इतः एतः प्राप्नुतः श्रेयश्च प्रेयश्च । अतो हंस इवाम्भसः पयः, तौ श्रेयःप्रेयःपदार्थौ सम्परीत्य सम्यक्परिगम्य मनसा आलोच्य गुरुलाघवं विविनक्ति पृथक्करोति धीरः धीमान् । विविच्य च श्रेयो हि श्रेय एव अभिवृणीते प्रेयसोऽभ्यर्हितत्वाच्छ्रेयसः । कोऽसौ ? धीरः ।
(அனுவாதம்) தனக்கு ஸ்வதந்திரம் இருப்பது உண்மையே. அப்படி இருந்த போதிலும் சிரேயஸூம், ப்ரேயஸூம், சாதனத்தாலும் பலத்தாலும் மந்த புத்தி உள்ளவர்கள், நல்ல விவேகம் இல்லாமல் இருக்கும் பொழுது மயக்கமடைந்தவன் போல் மனிதன் இந்த ப்ரேயஸ்ஸை மேற்கொள்கிறன். ஆகையால் ஹம்சம் தண்ணீரையும், பாலையும் பிரிப்பது போல் அவ்விரு ச்ரேயஸ், ப்ரேயஸ் ஆகிய பதார்த்தங்களை நன்றாக மனதில் ஆலோசித்து பரீக்ஷித்து எது மேலானது, கீழானது என்று தீரன் தனியாகப் பிரித்து அறிகிறான். அவ்வாறு ஆலோசித்து ப்ரேயஸ்ஸைக் காட்டிலும் சிரேயஸ் மேலானது என்று அறிந்து அதை மேற்கொள்கிறான். அந்த தீரன் யார் எனில்? அவனே புத்திமான் எனப்படுகிறான்.
यस्तु मन्दः अल्पबुद्धिः सः सदसद्विवेकासामर्थ्यात् योगक्षेमात् योगक्षेमनिमित्तं शरीराद्युपचयरक्षणनिमित्तमित्येतत् । प्रेयः पशुपुत्रादिलक्षणं वृणीते ॥
(அனுவாதம்) இதைக் காட்டிலும் விபரீத மந்த அல்ப புத்தியுடையவன் விவேக புத்தி அற்றதால் யோக க்ஷமேத்தின் பொருட்டு சரீர முதலியவைகளின் விருத்தியின் பொருட்டும், ரக்ஷிப்பதின் பொருட்டும் அந்த பசு புத்திரரூபமான ப்ரேயஸ்ஸை மேற்கொள்கிறான்.
स त्वं प्रियान्प्रियरूपांश्च कामानभिध्यायन्नचिकेतोऽत्यस्राक्षीः ।
नैतां सृङ्कां वित्तमयीमवाप्तो यस्यां मज्जन्ति बहवो मनुष्याः ॥ ३ ॥
स त्वं पुनः पुनः मया प्रलोभ्यमानोऽपि प्रियान् पुत्रादीन् प्रियरूपांश्च अप्सरःप्रभृतिलक्षणान् कामान् अभिध्यायन् चिन्तयन् तेषामनित्यत्वासारत्वादिदोषान् हे नचिकेतः, अत्यस्राक्षीः अतिसृष्टवान् परित्यक्तवानसि ; अहो बुद्धिमत्ता तव । न एताम् अवाप्तवानसि सृङ्कां सृतिं कुत्सितां मूढजनप्रवृत्तां वित्तमयीं धनप्रायाम् ; यस्यां सृतौ मज्जन्ति सीदन्ति बहवः अनेके मूढा मनुष्याः ॥
(அனுவாதம்) ஹே! நசிகேத! அந்த நீ மறுபடியும் மறுபடியும் உன்னை ஆசைக் காட்டிக் கொண்டிருந்தாலும் அன்பான புத்திரர்களையும் (அழகான) பிரியமான அப்சரஸ் முதற்கொண்டு உள்ள லக்ஷணங்களை உடைய காமனைகளை பரீக்ஷித்து அவைகளுடைய அநித்யத்துவம் அசாரத்துவம் முதலிய தோஷங்களை களைந்தவனாகிறாய் (விட்டவனாகிறாய்) உன்னுடைய புத்தி போற்றுதலுக்கு உரியது. இந்த அல்பமான மூடர்களாகிய மனிதர்களுடைய விருப்பமாகிய செல்வங்களை நீ அடைய மாட்டாய். ஆனால் அநேக மூட ஜனங்கள் அதில் மூழ்கி கிடக்கிறார்கள்.
‘तयोः श्रेय आददानस्य साधु भवति हीयतेऽर्थाद्य उ प्रेयो वृणीते’ इति ह्युक्तम् ; तत्कस्मात् ? यतः
(அ-கை) (அனுவாதம்) அவை இரண்டினுள் ச்ரேயஸ்ஸை ரஷித்துக் கொள்பவனுக்கு நன்மை ஏற்படுகிறது. ப்ரேயஸ்ஸை எடுத்துக் கொண்டால் அவனை நாசம் செய்து விடும் அப்படி இருக்கினும் எதற்காக ப்ரேயஸ்ஸை கிரஹித்துக் கொள்ளும் படி கூறியதற்குக் காரணம் என்ன எனில்.
दूरमेते विपरीते विषूची अविद्या या च विद्येति ज्ञाता ।
विद्याभीप्सिनं नचिकेतसं मन्ये न त्वा कामा बहवोऽलोलुपन्त ॥ ४ ॥
दूरं दूरेण महतान्तरेण एते विपरीते अन्योन्यव्यावृत्तरूपे विवेकाविवेकात्मकत्वात् तमःप्रकाशाविव विषूची विषूच्यौ नानागती भिन्नफले संसारमोक्षहेतुत्वेनेत्येतत् ।
(அனுவாதம்) நாநா கதியும் வெவ்வேறு பலன்களுடன் கூடிய சம்சார நிவர்த்திக்கு இவை இரண்டும் இருளும் பிரகாசமும் போல் விவேகம், அவிவேகம் உடையவகளாய் இருப்பதால் தூரம் எனப்பட்டது நாநா விதமான கதிகளையும் வெவ்வேறு பலன்களையும் உடைய சம்சாரத்திலிருந்து விடுபட காரணமாய் இருப்பதால் எனப்பட்டது.
के ते इति, उच्यते । या च अविद्या प्रेयोविषया विद्येति च श्रेयोविषया ज्ञाता निर्ज्ञाता अवगता पण्डितैः । तत्र विद्याभीप्सिनं विद्यार्थिनं नचिकेतसं त्वामहं मन्ये । कस्मात् ? यस्मादविद्वद्बुद्धिप्रलोभिनः कामाः अप्सरःप्रभृतयः बहवोऽपि त्वा त्वां न अलोलुपन्त न विच्छेदं कृतवन्तः श्रेयोमार्गादात्मोपभोगाभिवाञ्छासम्पादनेन । अतो विद्यार्थिनं श्रेयोभाजनं मन्ये इत्यभिप्रायः ॥
(அனுவாதம்) அவை இரண்டும் எவை என்று கூறுகிறார். பண்டிதர்களால் அவித்யா ப்ரேயஸ் விஷயம் என்றும், வித்யா என்பது ஸ்ரேயஸ் விஷயம் என்றும் அறியப்பட்டதாகும். அந்த விஷயத்தில் நசிகேதனாகிய நீ வித்தையை அறிவதில் தீவிர இச்சை உடையவனாய் இருக்கிறாய் என்று கருதுகிறேன். ஏன் எனில் நீ ஸ்ரேயோ மார்க்கத்தால் ஆத்ம அனுபவத்தில் இச்சையை சம்பாதித்ததால் அவித்வான்களின் புத்தியை சஞ்சலிக்கும் அப்சரஸ் முதலிய காமனைகள் அநேகம் இருந்தாலும் அவைகள் உன்னை அசைக்க முடியாது. ஆகையால் உன்னைச் ச்ரேயஸிற்கு பாத்திரமான வித்யார்த்தியாக கருதுகிறேன் என்பது அபிப்ராயம்
अविद्यायामन्तरे वर्तमानाः स्वयं धीराः पण्डितंमन्यमानाः ।
दन्द्रम्यमाणाः परियन्ति मूढा अन्धेनैव नीयमाना यथान्धाः ॥ ५ ॥
ये तु संसारभाजो जनाः-
(அஃகை) எவர்கள் சம்சாரத்திற்கு பாத்திரமானவர்கள்
अविद्यायाम् अन्तरे मध्ये घनीभूत इव तमसि वर्तमानाः वेष्ट्यमानाः पुत्रपश्वादितृष्णापाशशतैः, स्वयं धीराः प्रज्ञावन्तः पण्डिताः शास्त्रकुशलाश्चेति मन्यमानाः ते दन्द्रम्यमाणाः अत्यर्थं कुटिलामनेकरूपां गतिं गच्छन्तः जरामरणरोगादिदुःखैः परियन्ति परिगच्छन्ति मूढाः अविवेकिनः अन्धेनैव दृष्टिविकलेनैव नीयमानाः विषमे पथि यथा बहवः अन्धाः महान्तमनर्थमृच्छन्ति, तद्वत् ॥
(அனுவாதம்) எவர்கள் சம்சாரத்திற்கு பாத்திரமானவர்கள் திடமான அந்தகாரத்தைப் போல் அவித்தையில் இருந்துக்கொண்டு புத்திரன், பசு முதலியவைகளில் உள்ள த்ருஷ்ணா (ஆசை) என்ற நூ ற்றுக்கணக்கான பாச வலைகளால் சூழப்பட்டவர்கள் தாங்களே தங்களை நாங்கள் தீரர்கள், பிரக்ஞை உடையவர்கள் பண்டிதர்கள் சாஸ்திரத்தில் மிகுந்த சாமர்த்தியம் உள்ளவர்கள் என்று கருதிக்கொண்டு கீழான அநேக ரூபங்களைஉடைய கதிகளை இச்சித்தவர்களாகிய மூடர்களான அவிவேகிகள் பார்வையற்ற குருடனால் கடின பாதையில் அழைத்துச் செல்லப்பட்டவர்களாய் அநேக குருடர்கள் மிகப் பெரிய அநர்த்தத்தை விரும்புவது போல் (அடைவது போல்) மூப்பு, மரணம், ரோகம் முதலிய துக்கங்களை அடைகிறார்கள்.
अत एव मूढत्वात्
(அ-கை) அதனாலேயே மூடத் தன்மையின் காரணமாக
न साम्परायः प्रतिभाति बालं प्रमाद्यन्तं वित्तमोहेन मूढम् ।
अयं लोको नास्ति पर इति मानी पुनः पुनर्वशमापद्यते मे ॥ ६ ॥
न साम्परायः प्रतिभाति । सम्परेयत इति सम्परायः परलोकः, तत्प्राप्तिप्रयोजनः साधनविशेषः शास्त्रीयः साम्परायः । स च बालम् अविवेकिनं प्रति न प्रतिभाति न प्रकाशते नोपतिष्ठत इत्येतत् ।
(அனுவாதம்) சாம்பராயம் விளங்குவது இல்லை. பரலோகப் பிராப்தியை அளிப்பது சாம்ப்ராயம். பரலோகப்ராப்த்தி எதனுடைய பிரயோஜனம் எனில் சாஸ்த்ரீயமான சாதன விசேஷமாகிய சாம்பராயமாகும். அதாவது அவிவேகிகளுக்கு விளங்காது, அடைய முடியாதது ஆகும்.
प्रमाद्यन्तं प्रमादं कुर्वन्तं पुत्रपश्वादिप्रयोजनेष्वासक्तमनसं तथा वित्तमोहेन वित्तनिमित्तेनाविवेकेन मूढं तमसाच्छन्नम् । स तु अयमेव लोकः योऽयं दृश्यमानः स्त्र्यन्नपानादिविशिष्टः नास्ति परः अदृष्टो लोकः इत्येवं मननशीलः मानी पुनः पुनः जनित्वा वशम् अधीनताम् आपद्यते मे मृत्योर्मम । जननमरणादिलक्षणदुःखप्रबन्धारूढ एव भवतीत्यर्थः । प्रायेण ह्येवंविध एव लोकः ॥
(அனுவாதம்) புத்திரன், பசு முதலிய பலன்களின் பற்றுடையவன், அவ்வாறே செல்வத்தில் மோஹத்தின் காரணமாக அவிவேகத்தினால் தமஸால் மறைக்கப்பட்டு பிரமாதத்தை அடைந்த மூடன் எந்தஸ்தீரீ, அன்னம், பானங்கள் முதலியவைகளுடன் கூடிய இந்த த்ருச்யலோகத்தைக் காட்டிலும் வேறு பரலோகம் இல்லை என்று கருதுகிறவன் மீண்டும், மீண்டும் பிறந்து ம்ருத்யுவாகிய என்னுடைய அதீனத்தை அடைகிறான் (என் வசமாகிறான்). ஜனன மரண முதலிய லக்ஷணங்களுடன் கூடிய துக்கங்களில் பந்தப்படுகிறான் என்பது பொருள். இவ்வாறாகவே இந்த லோகம் இருக்கிறது.
यस्तु श्रेयोर्थी स सहस्रेषु कश्चिदेवात्मविद्भवति त्वद्विधः यस्मात्
(அ-கை) உன்னைப் போன்று ஆயிரத்தில் ஒருவன் ச்ரேயஸ் மார்க்கத்தில் விருப்பமுள்ளவன் ஆத்மவித் ஆகின்றான் ஏன்எனில்.
श्रवणायापि बहुभिर्यो न लभ्यः शृण्वन्तोऽपि बहवो यं न विद्युः ।
आश्चर्यो वक्ता कुशलोऽस्य लब्धा आश्चर्यो ज्ञाता कुशलानुशिष्टः ॥ ७ ॥
श्रवणायापि श्रवणार्थं श्रोतुमपि यः न लभ्यः आत्मा बहुभिः अनेकैः, शृण्वन्तोऽपि बहवः अनेके अन्ये यम् आत्मानं न विद्युः न विदन्ति अभागिनः असंस्कृतात्मानो न विजानीयुः । किञ्च, अस्य वक्तापि आश्चर्यः अद्भुतवदेव, अनेकेषु कश्चिदेव भवति । तथा श्रुत्वापि अस्य आत्मनः कुशलः निपुण एवानेकेषु लब्धा कश्चिदेव भवति । यस्मात् आश्चर्यः ज्ञाता कश्चिदेव कुशलानुशिष्टः कुशलेन निपुणेनाचार्येणानुशिष्टः सन् ॥
(அனுவாதம்) ச்ரவணம் செய்தும் எவன் ஆத்மாவை அறியவில்லையோ அவன் அதிகமாக கேட்டிருந்தாலும் அவன் ஆத்மாவை அறியாதவன் பண்படுத்தப்படாதவன், ஆகையால் அவனால் அறிய முடியாது. மேலும் அதைச் சொல்பவனும் (உபதேசம் செய்பவனும்) ஆச்சரியமானவன். அநேகருள் எவனோ ஒருவனே ஆவான். அவ்வாறே அநேகம் பேர் கேட்டிருந்தாலும் அதில் எவனோ ஒரு சாமர்த்தியசாலிக்கே ஆத்மா அடையப்பட்டதாகும். ஏன் எனில் நிபுனனான (சாமர்த்தியசாலியான) ஒரு ஆச்சாரியரால் உபதேசம் பெற்று அதை அறிந்த ஞாதாவும் ஆச்சரியமாகவேயாகிறான்.
कस्मात् ?
(அஃகை) ஏன் அது அத்தகையது என்பதனை விளக்குவது இம்மந்திரம்.
न नरेणावरेण प्रोक्त एष सुविज्ञेयो बहुधा चिन्त्यमानः ।
अनन्यप्रोक्ते गतिरत्र नास्ति अणीयान्ह्यतर्क्यमणुप्रमाणात् ॥ ८ ॥
न हि नरेण मनुष्येण अवरेण प्रोक्तः अवरेण हीनेन प्राकृतबुद्धिनेत्येतत् । उक्तः एषः आत्मा यं त्वं मां पृच्छसि । न हि सुष्ठु सम्यक् विज्ञेयः विज्ञातुं शक्यः यस्मात् बहुधा अस्ति नास्ति कर्ताकर्ता शुद्धोऽशुद्ध इत्याद्यनेकधा चिन्त्यमानः वादिभिः ।
(அனுவாதம்) இவ்வாறு கூறப்பட்ட இந்த ஆத்மாவை குறித்து நீ என்னைக் கேட்கிறாய் சாதாரண மனிதனால் உபதேசிக்கப்பட்டதானால் சாதாரண புத்தி உள்ளவனால் அறிந்து கொள்ள முடியாது. ஏன் எனில் பலவிதமாக இருக்கிறது, இல்லை, கர்த்தா, அகர்த்தா, சுத்தம், அசுத்தம் முதலிய அநேக விதமாக சிந்தனை உடைய வாதிகளால் நன்றாக (தெளிவாக) அறிய முடியாது.
कथं पुनः सुविज्ञेय इति, उच्यते — अनन्यप्रोक्ते अनन्येन अपृथग्दर्शिनाचार्येण प्रतिपाद्यब्रह्मात्मभूतेन प्रोक्ते उक्ते आत्मनि गतिः, अनेकधा अस्तिनास्तीत्यादिलक्षणा चिन्ता गतिः, अत्र अस्मिन्नात्मनि नास्ति न विद्यते सर्वविकल्पगतिप्रत्यस्तमितरूपत्वादात्मनः।
(அனுவாதம்) எல்லா விகல்பகதிகளும் ஆத்மாவிற்கு இல்லாததால் ஆத்மாவைத் தவிரவேறு ஒன்றும் தனியாக இல்லை என்று பிரஹ்மஸ்வரூபமாகவே ஆன ஆச்சாரியரால் பிரதிபாதிக்கப்பட்ட (விளக்கப்பட்ட) ஆத்மாவிடத்தில் இருக்கிறது, இல்லை என்பது முதலிய லக்ஷணங்களுடைய கதிகள் இல்லை.
अथवा स्वात्मभूते अनन्यस्मिन् आत्मनि प्रोक्ते अनन्यप्रोक्ते गतिः अत्र अन्यावगतिर्नास्ति ज्ञेयस्यान्यस्याभावात् । ज्ञानस्य ह्येषा परा निष्ठा यदात्मैकत्वविज्ञानम् । अतः गन्तव्याभावान्न गतिरत्रावशिष्यते संसारगतिर्वात्र नास्त्यनन्य आत्मनि प्रोक्ते नान्तरीयकत्वात्तद्विज्ञानफलस्य मोक्षस्य ।
(அனுவாதம்) அல்லது (அறிபவனைக் காட்டிலும்) அறிபடும் பொருள் வேறாக இல்லாததால் ஸ்வாத்மாவாக இருக்கும், தன்னைக் காட்டிலும் வேறாகாத ஆத்மா கூறப்பட்ட பொழுது வேறு கதி இல்லை, ஆத்ம ஏகத்துவவிக்ஞானமே ஞானத்தின் (பரா) மேலான நிஷ்ட்டையாகும். ஆகையால் இங்கே அடையப்பட வேண்டியது இல்லை. ஆதலால் இங்கு கதி என்பது இல்லை. அனன்ய (வேறு அல்லாத) ஆத்மா உபதேசிக்கப்பட்ட பொழுது சம்சார கதி இல்லை. அவ்வாறே அதைக் காட்டிலும் வேறு இல்லாததால் விக்ஞான பலமாகிய மோக்ஷத்திற்கும் வேறு கதி இல்லை.
अथवा प्रोच्यमानब्रह्मात्मभूतेनाचार्येण अनन्यतया प्रोक्ते आत्मनि अगतिः अनवबोधोऽपरिज्ञानमत्र नास्ति । भवत्येवावगतिस्तद्विषया श्रोतुस्तदनन्योऽहमित्याचार्यस्येवेत्यर्थः ।
(அனுவாதம்) அல்லது பிரஹ்மாத்ம பாவத்தை அடைந்த ஆச்சாரியரால் உபதேசிக்கப்பட்டது. உபதேசிக்கப்பட்டவனால் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது. கேட்டவன் (சிரவணித்தவன்) தான் அதுவாக இருக்கிறேன் என்ற அந்த ஆத்ம விஷயத்தின்  ஞானம்  ஆச்சாரியரைப் போல் ஏற்படும்என்பது பொருள்.
एवं सुविज्ञेय आत्मा आगमवताचार्येणानन्यतया प्रोक्तः । इतरथा अणीयान् अणुतरः अणुप्रमाणादपि सम्पद्यत आत्मा । अतर्क्यम् अतर्क्यः, अणुप्रमाणो न तर्क्यः स्वबुद्ध्यभ्यूहेन केवलेन तर्केण । तर्क्यमाणेऽणुपरिमाणे केनचित्स्थापिते आत्मनि ततोऽणुतरमन्योऽभ्यूहति ततोऽप्यन्योऽणुतरमिति । न हि तर्कस्य निष्ठा क्वचिद्विद्यते ॥
அனுவாதம்) இவ்வாறு வேதசாஸ்த்திரத்தை நன்கு அறிந்த ஆச்சாரியரால் தன்னைத் தவிர வேறு அல்ல என்று கூறப்பட்ட ஆத்மாவை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும், மற்றவர்களால் கூறப்படும் ஆத்மாவானது அணுவாகும். ஆகையால் சுய புத்தியினால் கேவலம் ஊகிக்க முடியாது. ஒருவன் தர்க்கம் செய்து ஆத்மா தர்க்கத்தினால் அணு அளவே உள்ளது என்று கூறினால் இரண்டாவான், அதை விட அணுமாத்திரம் என்பான். அவ்வாறே மூன்றாமவனும் இவ்வாறே முற்றிலும் அணுவையே நிலை நாட்டுவான் என்பது தெளிவாகிறது. ஏன் எனில் குதர்க்கத்திற்கு இருப்பு என்பதே கிடையாது.
नैषा तर्केण मतिरापनेया प्रोक्तान्येनैव सुज्ञानाय प्रेष्ठ ।
यां त्वमापः सत्यधृतिर्बतासि त्वादृङ् नो भूयान्नचिकेतः प्रष्टा ॥ ९ ॥
अतोऽनन्यप्रोक्त आत्मन्युत्पन्ना येयमागमप्रभवा मतिः, नैषा तर्केण स्वबुद्ध्यभ्यूहमात्रेण आपनेया नापनीया न प्रापणीयेत्यर्थः ; नापनेतव्या वा ; नोपहन्तव्या । तार्किको ह्यनागमज्ञः स्वबुद्धिपरिकल्पितं यत्किञ्चिदेव कल्पयति । अत एव च येयमागमप्रभूता मतिः अन्येनैव आगमाभिज्ञेनाचार्येणैव तार्किकात् , प्रोक्ता सती सुज्ञानाय भवति हे प्रेष्ठ प्रियतम ।
(அனுவாதம்) ஆகையால் ஆகம தர்சியாகிய ஆச்சாரியார் வாயிலாக உபதேசம் செய்யப்பட்ட ஆத்மாவிடத்தில் உண்டான சாஸ்திரங்களில் கூறப்பட்ட ஆத்ம விஷயமான புத்தி(மதி)யானது இந்த தர்க்கத்தினால் அதாவது சொந்த புத்தியின் ஊகத்தால் மாத்திரம் அடைய முடியாது. அவ்வாறே இந்த சாஸ்திரங்களால் உண்டான ஆத்ம விஷயக புத்தியை தர்க்கத்தினால் அழிக்க முடியாது. ஏன் எனில் தார்க்கிகர்கள் சாஸ்திரத்தை அறியாதவர்கள். பிரியமானவனே! ஆகையால்தான் இந்த குரு சாஸ்திரத்தால் உண்டான ஆத்மபுத்தி(மதி)யானது தார்க்கிகர்களைக் காட்டிலும் வேறான ஆத்ம வித்துகளாகிய ஆச்சாரியர்களால் உபதேசிக்கப்பட்டால் அது திட ஞானத்தின் பொருட்டாகிறது.
का पुनः सा तर्कागम्या मतिः इति, उच्यते —
மேலும் தர்க்கத்தினால் அறிய முடியாத அந்த மதியானது யாதெனில்? சொல்லப்படுகிறது.
यां त्वं मतिं मद्वरप्रदानेन आपः प्राप्तवानसि । सत्या अवितथविषया धृतिर्यस्य तव स त्वं सत्यधृतिः । बतासीत्यनुकम्पयन्नाह मृत्युर्नचिकेतसं वक्ष्यमाणविज्ञानस्तुतये । त्वादृक् त्वत्तुल्यः नः अस्मभ्यं भूयात् भवतात् । भवत्वन्यः पुत्रः शिष्यो वा प्रष्टा । कीदृक् ? यादृक्त्वं हे नचिकेतः प्रष्टा ॥
(அனுவாதம்) நீ என்னுடைய வரப்பிரசாதத்தால் இந்த ஆத்ம புத்தியை (மதியை) அடைந்தவனாய் இருக்கிறாய். சத்யமும், தைரியமும் எவனுக்கிருக்கிறதோ அவன் சத்ய திருதி: அது நீயாய் இருக்கிறாய். மிருத்யுவானவர் இனிக் கூறப்போகும் விக்ஞானத்தைப் ஸ்துதிப்பதன் பொருட்டு கருணை கூர்ந்தவராய் ஹே நசிகேதா! உன்னைப் போன்று நீ எவ்வாறு விக்ஞானத்தைப் பற்றி கேட்டாயோ அவ்வாறு கேட்கும் சிஷ்யனோ, அல்லது புத்திரனோ, உண்டாகட்டும் உன்னைப் போன்று ஒரு சிஷ்யன் வேண்டும் என்பதாகும்.
पुनरपि तुष्ट आह — कर्मफलकी अनित्यत-
(அ-கை) மேலும் நசிகேதன்பால் மகிழ்வுற்ற தர்மராஜன் கூறலானார்
जानाम्यहं शेवधिरित्यनित्यं न ह्यध्रुवैः प्राप्यते हि ध्रुवं तत् ।
ततो मया नाचिकेतश्चितोऽग्निरनित्यैर्द्रव्यैः प्राप्तवानस्मि नित्यम् ॥ १० ॥
जानाम्यहं शेवधिः निधिः कर्मफललक्षणः निधिरिव प्रार्थ्यत इति । असौ अनित्यम् अनित्य इति जानामि । न हि यस्मात् अनित्यैः अध्रुवैः यत् नित्यं ध्रुवम् , तत् प्राप्यते परमात्माख्यः शेवधिः । यस्त्वनित्यसुखात्मकः शेवधिः, स एवानित्यैर्द्रव्यैः प्राप्यते।
(அனுவாதம்) சேவதி என்றால் நிதி. அதாவது எதானது நிதியைப் போல் (செல்வத்தைப் போல்) வேண்டப்படுகிறதோ அது கர்மபல லக்ஷணமான நிதியாகும். அது அநித்யமானது. அது நித்யம் அல்ல. ஆகையால் அநித்யமும், நிச்சயமற்றதுமானதால் நித்யமும் நிச்சயமானதுமான பரமாத்மா எனப்படும் அந்த சேவதி. (நிதியானது)யை அடைய முடியாது. எதானது அநித்யமான சுகமுடையதான சேவதிதான் அநித்யமான திரவ்யங்களால் அடையப்படும்.
हि यतः, ततः तस्मात् मया जानतापि नित्यमनित्यसाधनैः प्राप्यत इति नाचिकेतः चितः अग्निः अनित्यैः द्रव्यैः पश्वादिभिः स्वर्गसुखसाधनभूतोऽग्निः निर्वर्तित इत्यर्थः । तेनाहमधिकारापन्नो नित्यं याम्यं स्थानं स्वर्गाख्यं नित्यमापेक्षिकं प्राप्तवानस्मि ॥
(அனுவாதம்) எதனால் இவ்வாறோ அதனால் நான் நித்யமானதை அநித்தியமான சாதனைகளால் அடைய முடியாது என்று அறிந்திருந்த போதிலும் நாசிகேத அக்னி ஹோமத்தை அநித்யமான திரவ்யங்களான பசு முதலிய சுவர்க்கசுக சாதனங்களால் செய்திருக்கிறேன் என்பது பொருள். அதனால் நான் அதிகாரத்தை அடைந்து ஆபேக்ஷிக நித்யமான நித்யஸ்தானமாகிய ஸ்வர்க்கத்தை அடைந்தவனாய் இருக்கிறேன்.
कामस्याप्तिं जगतः प्रतिष्ठां क्रतोरनन्त्यमभयस्य पारम् ।
स्तोममहदुरुगायं प्रतिष्ठां दृष्ट्वा धृत्या धीरो नचिकेतोऽत्यस्राक्षीः ॥ ११ ॥
त्वं तु कामस्य आप्तिं समाप्तिम् , अत्र हि सर्वे कामाः परिसमाप्ताः, जगतः साध्यात्माधिभूताधिदैवादेः प्रतिष्ठाम् आश्रयं सर्वात्मकत्वात् , क्रतोः उपासनायाः फलं हैरण्यगर्भं पदम् , अनन्त्यम् आनन्त्यम् , अभयस्य च पारं परां निष्ठाम् , स्तोमं स्तुत्यं महत् अणिमाद्यैश्वर्याद्यनेकगुणसंहतम् , स्तोमं च तन्महच्च निरतिशयत्वात् स्तोममहत् , उरुगायं विस्तीर्णां गतिम् , प्रतिष्ठां स्थितिमात्मनोऽनुत्तमामपि दृष्ट्वा धृत्या धैर्येण धीरः नचिकेतः, धीमान् बुद्धिमान्सन् अत्यस्राक्षीः परमेवाकाङ्क्षन्नतिसृष्टवानसि सर्वमेतत्संसारभोगजातम् । अहो बतानुत्तमगुणोऽसि ॥
(அனுவாதம்) ஹே! நசிகேதா! நீ எல்லா காமனைகளையும் இங்கேயே அடையப்பட்டவனாய் இருக்கிறாய். ஜகத்தில் சாதிக்கவேண்டிய அத்யாத்ம, அதிபூத, அதிதெய்வங்களுக்கெல்லாம் ஆஸ்ரயமாய் சர்வாத்மாவாய் இருப்பதால் கர்மாக்களுடைய பலமாகிய ஹிரண்யகர்ப பதம் முடிவில்லாதது அபயம் மேலான நிஷ்ட்டை நிரதிசயமாய் இருப்பதாலும், அணிமாதி அஷ்ட ஐஸ்வர்யங்களாகிய அநேக குணங்களுடையதாயும் இருப்பதால் போற்றுதற்கு உரிய மஹத் ஆகும். மேலும் விஸ்தீரணமான கதி உடைதாயும் ஸ்திரமானதும், ஆத்மாவுக்கு ஒப்பானதாயும் அந்தப்பரம் பொருளையே குறிக்கோளாகக் கொண்டு எல்லா சம்சாரபோகக் கூட்டங்களையும் தீரனாகிய நீ தைரியமாய் பரித்தியாகம் செய்துவிட்டாய் உனது உத்தமான நற்குணங்களைப்பற்றி என்ன சொல்வது?
यं त्वं ज्ञातुमिच्छस्यात्मानं
(அ-கை) நீ எந்த ஆத்மாவை அறிய இச்சிக்கிறாயோ
तं दुर्दर्शं गूढमनुप्रविष्टं गुहाहितं गह्वरेष्ठं पुराणम् ।
अध्यात्मयोगाधिगमेन देवं मत्वा धीरो हर्षशोकौ जहाति ॥ १२ ॥
तं दुर्दर्शं दुःखेन दर्शनमस्येति दुर्दर्शः अतिसूक्ष्मत्वात् तम् , गूढं गहनम् , अनुप्रविष्टं प्राकृतविषयविज्ञानैः प्रच्छन्नमित्येतत् । गुहाहितं गुहायां बुद्धौ हितं निहितं स्थितं तत्रोपलभ्यमानत्वात् । गह्वरेष्ठं गह्वरे विषमे अनेकानर्थसङ्कटे तिष्ठतीति गह्वरेष्ठम् । यत एवं गूढमनुप्रविष्टो गुहाहितश्च, अतोऽसौ गह्वरेष्ठः ; अतो दुर्दर्शः ।
(அனுவாதம்) எந்த ஆத்மாவை நீ அறிய விரும்புகின்றனையோ அதை அறிவது (பார்ப்பது) மிகக் கடினம். ஏன் எனில் மிகவும் சூக்ஷ்மமானது அடர்ந்த விஷய விகாரங்களினால் மறைக்கப்பட்டதாகும். குஹாஹிதம் புத்தியில் இருப்பன (நிலைபெற்றுள்ளது) அதை அங்கு அறியப்படுவதால் குஹாஹிதம் மிகுந்த கடினமான அனர்த்தங்களில் இருப்பதால் கஹ்வரேஷ்ட்டமாகும். எங்கு இவ்வாறு ரகஸ்யமாய் மறைக்கப்பட்டதாய் எல்லாவற்றிலும் ஊடுறுவி புத்தியில் இருப்பதால் அது கஹ்வரேஷ்ட்ட:! ஆகையால் அதை அறிவது மிகக்கடினமாகும்.
तं पुराणं पुरातनम् अध्यात्मयोगाधिगमेन विषयेभ्यः प्रतिसंहृत्य चेतस आत्मनि समाधानमध्यात्मयोगः तस्याधिगमः प्राप्तिः तेन मत्वा देवम् आत्मानं धीरः हर्षशोकौ आत्मन उत्कर्षापकर्षयोरभावात् जहाति ॥
(அனுவாதம்) அந்த பழமையான ஆத்மயோகத்தினால் விஷயங்களில் இருந்து திருப்பி தன்னில் சித்தத்தை வைத்தல் ஆத்மயோகம் எனப்படும். அதனால் தேவனான ஆத்மாவை நன்றாக அறிந்த தீரனானவன் ஆத்மாவிற்கு நிறைவு, குறைவு இரண்டும் இல்லாததால் சுகதுக்கங்களை போக்குகிறான்.
किञ्च,
மேலும்
एतच्छ्रुत्वा सम्परिगृह्य मर्त्यः प्रवृह्य धर्म्यमणुमेतमाप्य ।
स मोदते मोदनीयं हि लब्ध्वा विवृतं सद्म नचिकेतसं मन्ये ॥ १३ ॥
एतदात्मतत्त्वं यदहं वक्ष्यामि, तच्छ्रुत्वा आचार्यसकाशात् सम्यगात्मभावेन परिगृह्य उपादाय मर्त्यः मरणधर्मा धर्मादनपेतं धर्म्यं प्रवृह्य उद्यम्य पृथक्कृत्य शरीरादेः अणुं सूक्ष्मम् एतम् आत्मानम् आप्य प्राप्य सः मर्त्यः विद्वान् मोदते मोदनीयं हि हर्षणीयमात्मानं लब्ध्वा । तदेतदेवंविधं ब्रह्म सद्म भवनं नचिकेतसं त्वां प्रत्यपावृतद्वारं विवृतम् अभिमुखीभूतं मन्ये, मोक्षार्हं त्वां मन्ये इत्यभिप्रायः ॥
(அனுவாதம்) நான் எந்த இந்த ஆத்மதத்துவத்தை கூறப்போகிறேனோ அதைக் கேட்டு ஆச்சாரிய பிரசாதத்தால் திடமான ஆத்ம பாவனையால் அதை கிரஹித்துக் கொண்டு (புரிந்து கொண்டு) மரண தர்மம் உடைய மனிதன் அந்த தர்மங்களுடன் கூடிய ஆத்மாவை தேஹாதிகளிலிருந்து பிரித்து அணுவாய் சூக்ஷ்மமாய் உள்ள இந்த ஆத்மாவை அடைந்து மனிதன் அதாவது வித்வான் ஆனந்தப்பட வேண்டிய ஆத்மாவை அடைந்து ஆனந்தமாய் இருக்கிறான். அந்த இந்த விதமான பிரஹ்ம பவனத்தின் வாயிலை (த்வாரத்தை) நோக்கி இருக்கிறாய். அதாவது நீ மோக்ஷவாயிலின் விளிம்பை நோக்கி இருக்கிறாய் என்பதாகும்.
यद्यहं योग्यः, प्रसन्नश्चासि भगवन् , मां प्रति
(அ-கை) ஹே பகவன்! நான் யோக்கியனாய் இருந்தால் என்னைக் குறித்து பிரஸன்னம் (சந்தோஷம்) அடைந்தவராய் இருக்கிறீர்.
अन्यत्र धर्मादन्यत्राधर्मादन्यत्रास्मात्कृताकृतात् ।
अन्यत्र भूताच्च भव्याच्च यत्तत्पश्यसि तद्वद ॥ १४ ॥
अन्यत्र धर्मात् शास्त्रीयाद्धर्मानुष्ठानात्तत्फलात्तत्कारकेभ्यश्च पृथग्भूतमित्यर्थः । तथा अन्यत्र अधर्मात् विहिताकरणरूपात् पापात् , तथा अन्यत्रास्मात्कृताकृतात् , कृतं कार्यमकृतं कारणमस्मादन्यत्र । किञ्च, अन्यत्र भूताच्च अतिक्रान्तात्कालात् भव्याच्च भविष्यतश्च तथा अन्यत्र वर्तमानात् । कालत्रयेण यन्न परिच्छिद्यत इत्यर्थः । यदीदृशं वस्तु सर्वव्यवहारगोचरातीतं पश्यसि जानासि तद्वद मह्यम् ॥
(அனுவாதம்) अन्यत्र (அன்யத்ர) வேறு இடத்தில் (வேறானது) என்றால் சாஸ்திரத்தைக் காட்டிலும், தர்ம அனுஷ்டானத்தைக் காட்டிலும், அதன் பலனைக்காட்டிலும், செயல்களைக் காட்டிலும் வேறானது என்பது பொருள். அவ்வாறே அன்யத்ர என்றால் அதர்மத்தைக் காட்டிலும் அவ்வாறே காரியத்தைக் காட்டிலும், காரணத்தைக் காட்டிலும் வேறானது. மேலும் அவ்வாறே இறந்தகால, வருங்கால, நிகழ்காலங்களால் பரிச்சின்னம் (வேறு) ஆகாது என்பது பொருள். எந்த இவ்வாறு எல்லா வியாபாரங்களுக்கும் அப்பாற்பட்டதாய் அறிய முடியாததாய் இருக்கிற வஸ்துவை பார்க்கிறீரோ (அறிகிறீரோ) அதை எனக்குக் கூறுங்கள்.
इत्येवं पृष्टवते मृत्युरुवाच, पृष्टं वस्तु विशेषणान्तरं च विवक्षन् -
(அ-கை) இவ்வாறு கேட்கப்பட்டவனுக்கு, அவன் கேட்ட வஸ்துவை வேறுவிசேஷணங்களுடன் விளக்க விரும்பி யமராஜா கூறுகிறார்.
सर्वे वेदा यत्पदमामनन्ति तपांसि सर्वाणि च यद्वदन्ति ।
यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं सङ्ग्रहेण ब्रवीम्योमित्येतत् ॥ १५ ॥
सर्वे वेदा यत्पदं पदनीयं गमनीयम् अविभागेन अविरोधेन आमनन्ति प्रतिपादयन्ति, तपांसि सर्वाणि च यद्वदन्ति यत्प्राप्त्यर्थानीत्यर्थः । यदिच्छन्तो ब्रह्मचर्यं गुरुकुलवासलक्षणमन्यद्वा ब्रह्मप्राप्त्यर्थं चरन्ति, तत् ते तुभ्यं पदं यज्ज्ञातुमिच्छसि सङ्ग्रहेण सङ्क्षेपतः ब्रवीमि ओं इत्येतत् । तदेतत्पदं यद्बुभुत्सितं त्वया तदेतदोमिति ओंशब्दवाच्यमोंशब्दप्रतीकं च ॥
(அனுவாதம்) எல்லா வேதங்களும் எந்த அடைய வேண்டிய பதத்தை ஆத்மாவிடத்தில் விபாகம் இல்லாமல் உறைக்கின்றதோ, எல்லா தபஸ்விகளாலும் எது கூறப்படுகிறதோ, எது அடையவேண்டியதாய் வேண்டப்படுகிறதோ எதை விரும்பி பிரஹ்மசரிய விரதத்தை அனுஷ்ட்டிக்கிறார்களோ அதை உன் பொருட்டு நீ எந்த பதத்தை அறிய விரும்பினாயோ அதை சுருக்கமாக கூறுகிறேன்.

அது ஓம் என்பதாகும். அது உன்னால் அறிய விரும்பப்பட்ட பதமாகும். அந்த இந்த ஓம் சப்தமானது வாச்சியமாகும். மேலும் இந்த ஓம் சப்தம் பிரதீகமாகவும் ஆகும்.
अतः
(அஃகை) ஆகையால்
एतद्ध्येवाक्षरं ब्रह्म एतद्ध्येवाक्षरं परम् ।
एतद्ध्येवाक्षरं ज्ञात्वा यो यदिच्छति तस्य तत् ॥ १६ ॥
एतद्ध्येवाक्षरं ब्रह्म अपरम् एतद्ध्येवाक्षरं परं च । तयोर्हि प्रतीकमेतदक्षरम् । एतद्ध्येवाक्षरं ज्ञात्वा उपास्य ब्रह्मेति यो यदिच्छति परमपरं वा तस्य तत् भवति । परं चेत् ज्ञातव्यम् , अपरं चेत् प्राप्तव्यम् ॥
(அனுவாதம்) இந்த அக்ஷரமே பரபிரஹ்மமாயும், அபரபிரஹ்மமாயும் இருக்கிறது. பரம், அபரம் இரண்டிற்கும் இந்த அக்ஷரமே ப்ரதீகம். இந்த அக்ஷரத்தையே பரப்பிரஹ்மமாக அறிந்தும் அபரப்பிரஹ்மமாக உபாஸித்தும் எவன் இந்த பிரஹ்மத்தை பரமாகவோ அபரமாகவோ எதை இச்சிக்கின்றானோ அதை அடைகிறான். பரம் என்றால் அறியப்பட வேண்டியது. அபரம் என்றால் அடையப்பட வேண்டியது.
यत एवम् ,
எதனால் இவ்வாறோ அதனால்
एतदालम्बनं श्रेष्ठमेतदालम्बनं परम् ।
एतदालम्बनं ज्ञात्वा ब्रह्मलोके महीयते ॥ १७ ॥
अत एव एतत् ब्रह्मप्राप्त्यालम्बनानां श्रेष्ठं प्रशस्यतमम् । एतदालम्बनं परम् अपरं च, परापरब्रह्मविषयत्वात् । एतदालम्बनं ज्ञात्वा ब्रह्मलोके महीयते । परस्मिन्ब्रह्मण्यपरस्मिंश्च ब्रह्मभूतो ब्रह्मवदुपास्यो भवतीत्यर्थः ॥
(அனுவாதம்) இந்த ஓம்கார ஆலம்பனம் (அக்ஷரம்) பிரஹ்மத்தை அடைவதற்கான ஆலம்பனங்களில் மிகவும் ச்ரேஷ்டமானதாகும். பரப்ரஹ்மம் அபரஹ்மம் விஷயமாய் இருப்பதால் இந்த ஆலம்பனம் பரம், அபரம் என்றாகும். இந்த ஆலம்பனத்தை அறிந்து ப்ரஹ்ம லோகம் அதாவது பரப்ரஹமத்தில் நிலைத்து மஹிமையை அடைகிறான். அபரப்ரஹ்மத்தை பிரஹ்மம் போல் உபாசிக்கத்தக்கதாகிறது.
अन्यत्र धर्मादित्यादिना पृष्टस्यात्मनोऽशेषविशेषरहितस्यालम्बनत्वेन प्रतीकत्वेन चोङ्कारो निर्दिष्टः अपरस्य च ब्रह्मणो मन्दमध्यमप्रतिपत्तॄन्प्रति । अथेदानीं तस्योङ्कारालम्बनस्यात्मनः साक्षात्स्वरूपनिर्दिधारयिषयेदमुच्यते ।

(அ-கை) ஸாதனையற்றவனுக்கு உபதேசித்தல் பயன்தராததோடு தீமையையும் உண்டாக்கும் என்பதால், மந்த, மத்யம அதிகாரி பேதமாக, ஸாதனங்களும், உபதேசிக்கப்படுகின்றன. இவ்வாறு ஸாதனங்களை உபதேசிப்பதன் மூலமாக நீ கேட்ட ஆன்மஸ்வரூபத்தையும் விளக்க முற்படுகிறேன் என்று கூறாமல் கூறித் தொடங்குகிறார். எவ்வுபாதி தர்மமற்ற பரமாத்மா, மந்த, மத்யமம், அதிகாரிகள் உணரும் பொருட்டு, பிரணவத்தைப் பற்றுக் கோடாக கொண்டது போலவும், அவ்பிரணவத்தால் குறிப்பிடப்படுவது போலவும் கூறப்பட்டதேயன்றி, அவ்வான்ம ஸ்வரூபத்திற்கு எத்தகைய உபாதியும் கிடையாது என்பது பொருள். இதுவே இந்த மந்திரத்தால் விளக்கப்படுகிறது.
न जायते म्रियते वा विपश्चिन्नायं कुतश्चिन्न बभूव कश्चित् ।
अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे ॥ १८ ॥
न जायते नोत्पद्यते म्रियते वा न म्रियते च उत्पत्तिमतो वस्तुनोऽनित्यस्यानेका विक्रियाः, तासामाद्यन्ते जन्मविनाशलक्षणे विक्रिये इहात्मनि प्रतिषिध्येते प्रथमं सर्वविक्रियाप्रतिषेधार्थं न जायते म्रियते वेति । विपश्चित् मेधावी अपरिलुप्तचैतन्यस्वभावत्वात् ।
(அனுவாதம்) உண்டாவதும் இல்லை, மரிப்பதும் இல்லை. உற்பத்தி உடைய அநித்தியவஸ்துக்களுக்கே அநேக விதமான மாறுபாடுகள் (விகாரங்கள்) உள்ளன. ஆகையால் ஆரம்பமும் முடிவும் உடையவைகளுக்கே பிறப்பு, அழிவு முதலிய விகாரங்கள் இந்த ஆத்மாவிடத்தில் கிடையாது. முதலில் பிறப்பு இறப்பு அற்றது என்று கூறியது எல்லா மாறுபாடுகளும் அற்றது என்பதற்காக, அது அந்த ஆத்மா மாறுபாடு அற்று இருப்பதால் (விபச்சித்) மேதாவி எனப்படும்.
किञ्च, नायमात्मा कुतश्चित् कारणान्तरात् बभूव न प्रभूतः । अस्माच्चात्मनो न बभूव कश्चिदर्थान्तरभूतः । अतोऽयमात्मा अजो नित्यः शाश्वतः अपक्षयविवर्जितः । यो ह्यशाश्वतः, सोऽपक्षीयते ; अयं तु शाश्वतः अत एव पुराणः पुरापि नव एवेति । यो ह्यवयवोपचयद्वारेणाभिनिर्वर्त्यते, स इदानीं नवः, यथा कुड्यादिः ; तद्विपरीतस्त्वात्मा पुराणो वृद्धिविवर्जित इत्यर्थः । यत एवम् , अतः न हन्यते न हिंस्यते हन्यमाने शस्त्रादिभिः शरीरे ; तत्स्थोऽप्याकाशवदेव ॥
(அனுவாதம்) மேலும் இந்த ஆத்ம ஏதோ ஒரு காரணத்திலிருந்து உண்டாகவில்லை. ஆத்மா தன்னிடத்திலுருந்து ஏதோ ஒரு வேறு வஸ்துவாக தோன்றவில்லை. ஆகையால் ஆத்மா பிறப்பற்றது, நித்யமானது, எப்பொழுதும் உள்ளது, வளர்வதும் கிடையாது, எது நிலை அற்றதோ அதுவே விருத்தியுடையதாகும். இந்த ஆத்மா சாஸ்வதமானது. ஆகையால் அது புராண: எனப்படுகிறது. முன்னும் புதிதாகவே இருக்கிறது. குடம் முதலியவைகள் போல் எது அவயமுடையதாய் இருப்பதே விருத்தி (ஆரம்பம்) உடையதாய் புதிது என்கிறோம். ஆனால் இங்கு ஆத்மா அதற்குமாறாய் எப்பொழுதும் புதிதாகவே இருக்கிறது. அதற்கு விருத்தி கிடையாது. சாஸ்திரங்களால் சரீரத்தை வெட்டி ஹிம்சித்தாலும் அது ஹிம்சைக்கு உள்ளாகாது. சரீரத்தில் இருந்தாலும் ஆகாசம் போல் அசங்கமாய் இருக்கிறது.
हन्ता चेन्मन्यते हन्तुं हतश्चेन्मन्यते हतम् ।
उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते ॥ १९ ॥
(இத்தகைய அசங்க ஸ்வபாவமான, அதாவது எப்பற்றும் அற்ற ஆன்மாவை அறியாது சரீரமே ஆன்மா என்று எண்ணியவன் தன்னை)
एवं भूतमप्यात्मानं शरीरमात्रात्मदृष्टिः हन्ता चेत् यदि मन्यते चिन्तयति इच्छति हन्तुं हनिष्याम्येनमिति योऽप्यन्यो हतः सोऽपि चेन्मन्यते हतमात्मानं हतोऽहमिति उभावपि तौ न विजानीतः स्वमात्मानम् ; यतः नायं हन्ति अविक्रियत्वादात्मनः, तथा न हन्यते आकाशवदविक्रियत्वादेव । अतोऽनात्मज्ञविषय एव धर्माधर्मादिलक्षणः संसारः नात्मज्ञस्य, श्रुतिप्रामाण्यान्न्यायाच्च धर्माधर्माद्यनुपपत्तेः ॥
(அனுவாதம்) இவ்வாறு உள்ள ஆத்மாவை சரீர மாத்திரத்தில் ஆத்ம புத்தி உள்ளவன் கொல்லுவதற்கு (அடிப்பதற்கு) கர்த்தாவாகத் தன்னை எண்ணி இந்த ஆத்மாவை கொல்லும் (அடித்தல்) செயலுக்கு கர்த்தாவாக்கி இவனைக் கொல்லப்போகிறேன் என்று எண்ணுபவனும், இவனைக் காட்டிலும் வேறு ஒருவனை அடிக்கப்பட்டவன் எவனோ அவனும் நான் அடிக்கப்பட்டேன் என ஆத்மாவை ஹனனக்கிரியை உடையவனாய் எண்ணுகிறவனுமாகிய அவ்விருவரும் தங்களது யதார்த்த ஆத்மஸ்வரூபத்தை அறிந்தவர்களாகார். ஏன் எனில் ஆத்மா கிரியை அற்றதால் கொல்லுவதும், கொல்லப்படுவதும் அன்று. இவ்வாறு ஆகாசம் போல் அவிக்கிரியையாய் இருப்பதால் ஆத்மா ஹனனக்கிரியைக்கு கர்த்தா ஆவதில்லை. ஆகையால் அக்ஞானிக்கே தர்மாதர்மங்கள் ஆகிற சம்சாரம் ஆத்ம ஞானிக்கோவெனில் சம்சாரமானது கிடையாது. ச்ருதி பிரமாணத்தாலும், யுத்தியினாலும் தர்மாதர்மங்கள் ஆத்மக் ஞானிக்குப் பொருந்தாது.
कथं पुनरात्मानं जानातीति, उच्यते —
(அ-கை)ஆனால் எவ்வாறு ஆன்மாவை அறிகிறான் என்பது கூறப்படுகிறது.
अणोरणीयान्महतो महीयानात्मास्य जन्तोर्निहितो गुहायाम् ।
तमक्रतुः पश्यति वीतशोको धातुप्रसादान्महिमानमात्मनः ॥ २० ॥
अणोः सूक्ष्मात् अणीयान् श्यामाकादेरणुतरः । महतो महत्परिमाणात् महीयान् महत्तरः पृथिव्यादेः ; अणु महद्वा यदस्ति लोके वस्तु, तत्तेनैवात्मना नित्येनात्मवत्सम्भवति । तदात्मना विनिर्मुक्तमसत्सम्पद्यते । तस्मादसावेवात्मा अणोरणीयान्महतो महीयान् , सर्वनामरूपवस्तूपाधिकत्वात् । स च आत्मा अस्य जन्तोः ब्रह्मादिस्तम्बपर्यन्तस्य प्राणिजातस्य गुहायां हृदये निहितः आत्मभूतः स्थित इत्यर्थः ।
(அனுவாதம்) அணுபரிணாமம் உள்ள ஸ்யாமாக என்ற தானியத்தைக் காட்டிலும் மிகவும் சூக்ஷ்மமானது பிரிதிவி முதலிய பெரியதாய் உள்ளதைக் காட்டிலும் மிகப் பெரியது. உலகில் மிக சூக்ஷ்மமாகவோ, மிகப் பெரிதாக உள்ள வஸ்துக்கள் எவை உள்ளனவோ அவை எல்லாம் அந்த நித்யமான ஆத்மாவினால் ஆத்மாவை போல் தோன்றுகின்றது. அவை ஆத்மாவிடமிருந்து விடுபட்டால் அது அசத்தாகிவிடும். ஆகையால் எல்லா நாம ரூபங்களும் ஆத்மாவிற்கு உபாதியாய் இருப்பதால் அணுவிற்கு அணுவாயும், மஹத்திற்கு மஹத்தாயும் இந்த ஆத்மா உள்ளது. இந்த ஆத்மாவானது இந்த பிரஹ்மா முதல் ஸ்தம்ப பரியந்தம் உள்ள எல்லா ஜீவராசிகளினுடைய குகையாகிய இருதயத்தில் வைக்கப்பட்டு ஆத்மாவாய் விளங்குகிறது, அதாவது எல்லோருள்ளும் அந்தராத்மாவாய் இருக்கிறது என்பது பொருள்.
तम् आत्मानं दर्शनश्रवणमननविज्ञानलिङ्गम् अक्रतुः अकामः, दृष्टादृष्टबाह्यविषयेभ्य उपरतबुद्धिरित्यर्थः । यदा चैवं तदा मनआदीनि करणानि धातवः शरीरस्य धारणात्प्रसीदन्तीत्येषां धातूनां प्रसादादात्मनो महिमानं कर्मनिमित्तवृद्धिक्षयरहितं पश्यति अयमहमस्मीति साक्षाद्विजानाति ; ततो विगतशोको भवति ॥
(அனுவாதம்) அந்த பார்த்தல், கேட்டல், சிந்தித்தல், அறிதல், இவைகளை லிங்கமாக (கிரியா பதமாக) உடைய ஆத்மா அகர்த்தா காமமற்றது, திருஷ்ட்ட அதிருஷ்ட்ட வெளி விஷயங்களில் இருந்து நீங்கிய புத்தி என்பது பொருள். எப்பொழுது இவ்வாறோ அப்பொழுது மன முதலிய கரணங்களாகிய தாதுக்கள் அதாவது சரீரத்தை தரிப்பதால் அந்த தாதுக்களுடைய பிரசாதத்தால் ஆத்மாவினுடைய மஹிமையாகிய கர்மநிமித்தத்தால் உண்டாகும் வளர்ச்சி, குறைதல் அற்றதாய் பார்க்கிறது. அது நானாய் இருக்கிறேன் என்று சாக்ஷாத்தாய் அறிகிறது. ஆகையால் துக்கமற்றதாய் ஆகிறது.
अन्यथा दुर्विज्ञेयोऽयमात्मा कामिभिः प्राकृतपुरुषैर्यस्मात्
(அ-கை) மற்ற காமம் உள்ள சாதாரண மனிதர்களுக்கு இந்த ஆத்மாவை அறிவது மிகக் கடினம் எதனால் எனில்.
आसीनो दूरं व्रजति शयानो याति सर्वतः ।
कस्तं मदामदं देवं मदन्यो ज्ञातुमर्हति ॥ २१ ॥
आसीनः अवस्थितोऽचल एव सन् दूरं व्रजति शयानः याति सर्वतः, एवमसावात्मा देवो मदामदः समदोऽमदश्च सहर्षोऽहर्षश्च विरुद्धधर्मवानतोऽशक्यत्वाज्ज्ञातुं कः तं मदामदं देवं मदन्यो ज्ञातुमर्हति ।
(அனுவாதம்) அசையாமல் இருந்து கொண்டே வெகு தூரம் செல்கிறது. படுத்துக் கொண்டே எல்லா இடத்திற்கும் செல்கிறது. இவ்வாறு இந்த ஆத்மாவாகிய தேவன் சந்தோஷமாயும், சந்தோஷம் அற்றவனாயும் விருத்ததர்மங்களை உடையவனாய் இருப்பவன். ஆகையால் அவனை அறிவது முடியாததால் அந்த மதாமத தேவனை (ஆத்மாவை) என்னைத் தவிர எவன்தான் அறிவதற்கு தகுதி உள்ளவனாவான்.
अस्मदादेरेव सूक्ष्मबुद्धेः पण्डितस्य विज्ञेयोऽयमात्मा स्थितिगतिनित्यानित्यादिविरुद्धानेकधर्मोपाधिकत्वाद्विरुद्धधर्मवान् विश्वरूप इव चिन्तामणिवत्कस्यचिदवभासते । अतो दुर्विज्ञेयत्वं दर्शयति — कस्तं मदन्यो ज्ञातुमर्हतीति ।
(அனுவாதம்) எங்களைப் போன்ற சூக்ஷ்ம புத்தியுள்ள பண்டிதர்களுக்கே ஆத்மா நன்றாக அறியத்தக்கதாகிறது. இருத்தல், செல்லுதல், நித்யம், அநித்யம், போன்ற மாறுபாடுடைய (விருத்த) தர்மங்களான உபாதிகளை உடையதாய் இருப்பதாலும் சிந்தாமணியைப் போன்றும் விச்வரூபத்தைப் போன்றும் தோன்றுகின்றது. ஆகையால் என்னைத் தவிர யாரால்தான் அதை அறிய முடியும் என்று கூறியதால் ஆத்மாவை அறிவது என்பது மிகக் கடினம் என்று உணர்த்தப்படுகிறது.
करणानामुपशमः शयनं करणजनितस्यैकदेशविज्ञानस्योपशमः शयानस्य भवति । यदा चैवं केवलसामान्यविज्ञानत्वात्सर्वतो यातीव यदा विशेषविज्ञानस्थः स्वेन रूपेण स्थित एव सन् मनआदिगतिषु तदुपाधिकत्वाद्दूरं व्रजतीव । स चेहैव वर्तते ॥
(அனுவாதம்) இந்திரியங்களாகிய கரணங்களின் உபசமமே (அடக்குதலே) சயனமாகும். இந்திரியங்களால் உண்டாகும் ஏகதேச விஞ்ஞானத்தின் உபசமம் (அடங்குதல்) சயனிப்பவனுக்கு உண்டாகும். எப்பொழுது இவ்வாறு சாமான்ய விஞ்ஞானம் இருக்கும் பொழுது எங்கும் செல்வது போலவும், எப்பொழுது விசேஷ விஞ்ஞானத்தில் இருந்து கொண்டு தன் ஸ்வரூபத்தில் இருந்து கொண்டு மனம் செல்லும் வழிகளில் அதனுடைய உபாதியாய் இருப்பதால் தூரமாய் செல்லுவது போல் தோன்றுகிறது. ஆனால் அது இங்கேயே இருக்கிறது.
तद्विज्ञानाच्च शोकात्यय इत्यपि दर्शयति —
(அ-கை) அதை அறிவதனால் துக்கத்தையும் கடக்க முடியும் என்பதையும் தெரிவிக்கிறார்.
अशरीरं शरीरेषु अनवस्थेष्ववस्थितम् ।
महान्तं विभुमात्मानं मत्वा धीरो न शोचति ॥ २२ ॥
अशरीरः स्वेन रूपेणाकाशकल्प आत्मा तम् अशरीरं शरीरेषु देवपितृमनुष्यादिशरीरेषु अनवस्थेषु अवस्थितिरहितेष्वनित्येषु अवस्थितं नित्यम् अविकृतमित्येतत् । महान्तम् । महत्त्वस्यापेक्षिकत्वशङ्कायामाह — विभुं व्यापिनम् आत्मानम् ; आत्मग्रहणं स्वतोऽनन्यत्वप्रदर्शनार्थम् । आत्मशब्दः प्रत्यगात्मविषय एव मुख्यः तमीदृशामात्मानं मत्वा अयमहमिति, धीरः धीमान् न शोचति । न ह्येवंविधस्वात्मविदः शोकोपपत्तिः ॥
(அனுவாதம்) அசரீரம் என்பது சுவரூபமாய் ஆகாசத்திற்கு ஒப்பானது ஆத்மா. அந்த சரீரமானது தேவ, பித்ரு, மனுஷ்ய முதலிய சரீரங்களாகிய நிலை பெறாத அதாவது இருப்பு இல்லாத சரீரங்களில் நித்யமாய் விகாரமற்றதாய் இருக்கின்றது. மஹாந்தம் அதாவது மஹத்துவத்தின் ஆபேக்ஷிகசங்கை எழும்பொழுது விபு என்று கூறுகிறார். விபு என்பது வியாபக ஆத்மாவை குறிக்கிறது. ஆத்மா பிரத்யக் ஆத்மாவாக கிரஹித்துக் கொள்வது, இரண்டும் ஒன்றே என்பதைத் தெரிவிப்பதற்காகவே ஆகும். இங்கு ஆத்ம சப்தமானது பிரத்யக் ஆத்ம விஷயமே முக்கியமாகும். இவ்வாறாக ஆத்மாவை அறிந்து அது நான் என்று தீரன் அதாவது புத்திமான் துக்கத்தை அடையமாட்டான். இவ்விதமான ஆத்மாவை அறிந்தவன் சோகத்தை அடையமாட்டான்.
यद्यपि दुर्विज्ञेयोऽयमात्मा तथाप्युपायेन सुविज्ञेय एवेत्याह —
(அ-கை) இந்த ஆத்மாவை அறிவது மிகக் கடினமானதாயினும் உபாயத்தினால் சுலபமாக அறிந்து கொள்ளலாம் என்பதை கூறுகிறார்
नायमात्मा प्रवचनेन लभ्यो न मेधया न बहुना श्रुतेन ।
यमेवैष वृणुते तेन लभ्यस्तस्यैष आत्मा विवृणुते तनूंस्वाम् ॥ २३ ॥
नायमात्मा प्रवचनेन अनेकवेदस्वीकरणेन लभ्यः ज्ञेयः ; नापि मेधया ग्रन्थार्थधारणशक्त्या ; न बहुना श्रुतेन न बाहुश्रुत्येन केवलेन । केन तर्हि लभ्य इति, उच्यते —
(அனுவாதம்) இந்த ஆத்மா அநேக வேதங்களைக் கற்றலாகிற பிரவசனத்தினால் அறிய முடியாது. சாஸ்த்திரார்த் தங்களை நன்றாக தாரணை செய்யும் சக்தியினாலும் அறிய முடியாது. குரு உபதேசமின்றி அநேக விதமான சிரவணத்தினாலும் அறிய முடியாது. அவ்வாறானால் எதனால் அதை அடையமுடியும் என்பதை உபதேசிக்கிறார்.
यमेव स्वमात्मानम् एष साधको वृणुते प्रार्थयते, तेनैवात्मना वरित्रा स्वयमात्मा लभ्यः ज्ञायत इत्येतत् । निष्कामश्चात्मानमेव प्रार्थयते । आत्मनैवात्मा लभ्यत इत्यर्थः । कथं लभ्यत इति, उच्यते — तस्यात्मकामस्य एष आत्मा विवृणुते प्रकाशयति पारमार्थिकीं स्वां तनूं स्वकीयं याथात्म्यमित्यर्थः ॥
(அனுவாதம்) சாதகனானவன் எந்த தன் ஆத்மாவை அடைய பிரார்த்திக்கிறானோ அந்த சாதகனால் தான் விரும்பிய ஆத்மாவை அடையக் கூடியவனாகிறான். தன் ஆத்மாவை அடைவதில் இச்சை உள்ளவனுக்கே இந்த ஆத்மாவானது தன்னுடைய யதார்த்தத்தைப் பிரகாசப்படுத்துகிறது. எவ்வாறு அறியப்படுகிறது என்பது கூறப்படுகிறது. ஆத்மாவை அடைய விருப்பமுள்ளவனுக்கு இந்த ஆத்மா பிரகாசப்படுத்தப்படுகிறது. அதாவது பாரமார்த்திகமான தன்னுடைய ஸ்வரூபத்தை யதார்த்த ஸ்வரூபத்தைப் பிரகாசப்படுத்துகிறது.
किञ्चान्यत् ।
(அ-கை) மேலும் மற்றொன்று உள்ளது.
नाविरतो दुश्चरितान्नाशान्तो नासमाहितः ।
नाशान्तमानसो वापि प्रज्ञानेनैनमाप्नुयात् ॥ २४ ॥
न दुश्चरितात् प्रतिषिद्धाच्छ्रुतिस्मृत्यविहितात्पापकर्मणः अविरतः अनुपरतः । नापि इन्द्रियलौल्यात् अशान्तः अनुपरतः । नापि असमाहितःअनेकाग्रमनाः विक्षिप्तचित्तः । समाहितचित्तोऽपि सन्समाधानफलार्थित्वात् नापि अशान्तमानसः व्यापृतचित्तो वा । प्रज्ञानेन ब्रह्मविज्ञानेन एनं प्रकृतमात्मानम् आप्नुयात् , यस्तु दुश्चरिताद्विरत इन्द्रियलौल्याच्च, समाहितचित्तः समाधानफलादप्युपशान्तमानसश्चाचार्यवान् प्रज्ञानेन एवं यथोक्तमात्मानं प्राप्नोतीत्यर्थः ॥
(அனுவாதம்) சுருதி ஸ்மிருதிகளில் விலக்கப்பட்டதான பாவ கர்மாக்களில் இருந்து விலகாதவனால் இந்த ஆத்மா அடைய முடியாது. இந்திரியங்களின் சஞ்சலத்தால் சாந்தி அடையாதவனால் அடைய முடியாது. மனமானது ஒரு நிலையில் நிறுத்தப்பட்ட பொழுதும் அநேக வெளி விஷயங்களில் நோக்குள்ளவன் கலங்கிய சித்தமுள்ளவன், அவன் மனதை ஒரு நிலைப்படுத்தினாலும் சமாதியில் உள்ள பலத்தில் இச்சை உள்ளவனாய் சாந்தமற்ற கலங்கிய மனமுடையவன் பிரக்ஞானத்தினால் அதாவது பிரஹ்ம்ம ஞானத்தினால் இந்த ஆத்மாவை அடைய முடியாது. எவன் ஒருவன் துர் நடவடிக்கைகளில் இருந்து விலகியும் இந்திரியங்களின் சஞ்சலத்திலிருந்து ஓய்வடைந்தும் உள்ள சமாஹிதசித்தமுள்ளவனாய் சமாதி பலனிலும் உபசாந்தி அடைந்த மனதுடையவன் சிறந்த ஆசார்யனை அடைந்து அவர் உபதேசித்த ஞானத்தினால் ஆத்மாவை அடைவான் என்பது பொருள்.
यस्त्वनेवंभूतः
(அ-கை) எவன் இவ்வாறு இல்லையோ
यस्य ब्रह्म च क्षत्रं च उभे भवत ओदनः ।
मृत्युर्यस्योपसेचनं क इत्था वेद यत्र सः ॥ २५ ॥
यस्त्वनेवंभूतः यस्य आत्मनः ब्रह्म च क्षत्रं च ब्रह्मक्षत्रे सर्वधर्मविधारके अपि सर्वप्राणभूते उभे ओदनः अशनं भवतः स्याताम् , सर्वहरोऽपि मृत्युः यस्य उपसेचनमिवौदनस्य, अशनत्वेऽप्यपर्याप्तः, तं प्राकृतबुद्धिर्यथोक्तसाधनानभियुक्तः सन् कः इत्था इत्थमेवं यथोक्तसाधनवानिवेत्यर्थः, वेद विजानाति यत्र सः आत्मेति ॥
(அனுவாதம்) எல்லா தர்மங்களையும் தாங்கு கின்றவர்களும், எல்லோரையும் காப்பாற்றுகின்றவர்களாகிய பிராஹ்மணர் க்ஷத்திரியர்கள் எந்த ஆத்மாவிற்கு உணவாகும், எல்லோரையும் கொல்லுகின்றவரான ம்ருத்யுவும் எந்த உணவிற்கு ஊறுகாய் போல் இருக்கிறார். சாப்பிட்ட பின்பும் அது அவருக்கு போறாததாகும். அந்த ஆத்மாவை சாதாரண புத்தியுடன் சாதனமற்று இவ்வாறு இருந்துகொண்டு எவ்வாறு முன்பு கூறிய சாதனவான் போல் அந்த ஆத்மாவை எவ்வாறு அறிய முடியும்.
इति द्वितीयवल्लीभाष्यम् ॥
ऋतं पिबन्तौ सुकृतस्य लोके गुहां प्रविष्टौ परमे परार्धे ।
छायातपौ ब्रह्मविदो वदन्ति पञ्चाग्नयो ये च त्रिणाचिकेताः ॥ १ ॥
ऋतं पिबन्तावित्यस्या वल्ल्याः सम्बन्धः —
(அ-கை) ऋतं पिबन्तौ (ருதம் பிபந்தௌ) என்று இவ்வாறு மூன்றாவது வல்லீயின் சம்பந்தமாகும்.
विद्याविद्ये नाना विरुद्धफले इत्युपन्यस्ते, न तु सफले ते यथावन्निर्णीते । तन्निर्णयार्था रथरूपककल्पना, तथा च प्रतिपत्तिसौकर्यम् । एवं च प्राप्तृप्राप्यगन्तृगन्तव्यविवेकार्थं रथरूपकद्वारा द्वावात्मानावुपन्यस्येते —
(அனுவாதம்) வித்யா அவித்யா இரண்டும் வேறு என்றும், அவை ஒன்றுக்கொன்று நேர்மாறான பலன் உள்ளனவென்றும் கூறப்பட்டது. ஆனால் அதன் பலத்துடன் கூடியதை உள்ளபடி நிர்ணயம் செய்யப்படவில்லை. அதை நிர்ணயம் செய்வதின் பொருட்டு (இந்தவல்லீயில்) ரத கல்பனை நன்றாக புரிந்து கொள்வதற்காக செய்யப்பட்டது. அவ்வாறே அடைபவன், அடைய வேண்டிய ஸ்தானம், அவ்வாறே செல்ல வேண்டியது, செல்ல வேண்டிய இடம் எது என்பதை பிரித்து அறிவதற்காக இரண்டு ஆத்மாக்கள் என்று உபன்யாசம் செய்யப்படுகிறது
ऋतं सत्यम् अवश्यंभावित्वात्कर्मफलं पिबन्तौ ; एकस्तत्र कर्मफलं पिबति भुङ्क्ते नेतरः, तथापि पातृसम्बन्धात्पिबन्तावित्युच्येते च्छत्रिन्यायेन । सुकृतस्य स्वयङ्कृतस्य कर्मणः ऋतमिति पूर्वेण सम्बन्धः । लोके अस्मिञ्शरीरे, गुहां गुहायां बुद्धौ प्रविष्टौ, परमे, बाह्यपुरुषाकाशसंस्थानापेक्षया परमम् , परार्धे परस्य ब्रह्मणोऽर्धं स्थानं परार्धं हार्दाकाशम् । तस्मिन्हि परं ब्रह्मोपलभ्यते । ततः तस्मिन्परमे परार्धे हार्दाकाशे प्रविष्टावित्यर्थः ।
(அனுவாதம்) ‘ऋतं’ ருதம் என்பது அவசியம் சம்பவிக்கக்கூடிய சத்யமான கர்மபலத்தை இரண்டும் அனுபவிக்கின்றன. அதில் ஒன்று கர்மபலத்தை அனுபவிக்கின்றது. மற்றொன்று அனுபவிக்கிறதில்லை. அப்படி இருந்த போதிலும் சத்திரி நியாயத்தை அனுசரித்து அனுபவிப்பதுடன் சம்பந்தம் இருப்பதால் இரண்டும் அனுபவிக்கிறது என்று கூறப்பட்டது. தன்னால் செய்யப்பட்ட கர்மம் அவசியம் சம்பவிக்கும் என்பதுடன் சம்பந்திக்கிறது. லோகே- என்றால் இந்த சரீரத்தில் குகையில் அதாவது புத்தியில் இரண்டும் நுழைந்தன. பரமே என்றது வெளியில் புருஷாகாசமானதைக் காட்டிலும் மேலானது. பரம் என்றது பரஹ்மத்தினுடைய ஸ்தானம் அதுவே பரார்த்தம். அதில்தான் பரப்ரஹ்மமானது அடையப்படுகிறது. ஆகையால் அந்த மேலான பிரஹ்மஸ்தானமான ஹ்ருதயாகாசத்தில் இரண்டும் நுழைந்தன என்று அர்த்தம் கொள்ளப்படுகிறது.
तौ च च्छायातपाविव विलक्षणौ संसारित्वासंसारित्वेन ब्रह्मविदो वदन्ति कथयन्ति । न केवलमकर्मिण एव वदन्ति । पञ्चाग्नयो गृहस्थाः । ये च त्रिणाचिकेताः त्रिःकृत्वो नाचिकेतोऽग्निश्चितो यैस्ते त्रिणाचिकेताः ॥
அவ்விரு ஆத்மாக்களும் நிழல், வெயில் போல் சம்சாரி அசம்சாரி தன்மையால் விலக்ஷணமானவர்கள் என்று பிரஹ்மத்தை அறிந்தவர் சொல்லுகிறார்கள். இவ்வாறு அகர்மிகள் மட்டும் கூறவில்லை. எவர்கள்     பஞ்சாக்னிைய உபாசிக்கின்ற கிரஹஸ்தர்களாகிய நாசிகேதர்களும் கூறுகின்றார்கள். எவர்கள் மூன்று முறை நாசிகேதாக்னியை (வளர்த்தார்களோ) உபாசித்தார்களோ அவர்கள் பஞ்சாக்னியை உபாசனை செய்யும் கிரஹஸ்தர்கள். அவர்களும் இதையே கூறுகிறார்கள்.
यः सेतुरीजानानामक्षरं ब्रह्म यत्परम् ।
अभयं तितीर्षतां पारं नाचिकेतं शकेमहि ॥ २ ॥
यः सेतुः सेतुरिव सेतुः ईजानानां यजमानानां कर्मिणाम् , दुःखसन्तरणार्थत्वात् । नाचिकेतं नाचिकेतोऽग्निः तम् , वयं ज्ञातुं चेतुं च शकेमहि शक्तवन्तः । किञ्च, यच्च अभयं भयशून्यं संसारस्य पारं तितीर्षतां तरितुमिच्छतां ब्रह्मविदां यत्परम् आश्रयम् अक्षरम् आत्माख्यं ब्रह्म, तच्च ज्ञातुं शकेमहि । परापरे ब्रह्मणी कर्मिब्रह्मविदाश्रये वेदितव्ये इति वाक्यार्थः ; तयोरेव ह्युपन्यासः कृतः ‘ऋतं पिबन्तौ’ इति ॥
எந்த அக்னியானது கரையைப் போல் (சேதுவைப்போல்) கரையாக(அபரப்ரஹ்மம்) யாகம் செய்கின்ற யஜமானர்களாகிய கர்மிகளுக்கு துக்கத்தை நன்றாக தாண்டச் செய்யும் அந்த நாசிகேதாக்னியை நாம் அறிவதற்கும் யாகம் செய்வதற்கும் சமர்த்தர்களாவோம். மேலும் சம்சார கரையை தாண்டுவதற்கு தீவிர இச்சை உள்ளவர்களாகிய பிரஹ்ம வித்துகளுக்கு மேலான ஆஸ்ரயமாய் இருக்கின்ற பயமற்றதும், அக்ஷரமாயும் இருக்கும் ஆத்மா எனப்படும் அந்த பிரஹ்மத்தை அறிவதற்கும் சமர்த்தர்களாவோம். கர்மிகளுக்கும் பிரஹ்ம வித்துக்களுக்கும் ஆஸ்ரியமான பராபர பிரஹ்மங்கள் அறியப்பட வேண்டியவைகள், அதாவது உபாசிக்கவும் (யாகம் செய்யவும்)அறியவும் தக்கது என்பது வாக்கியார்த்தம். இந்த இரண்டையுமே “ருதம் பிபந்தௌ ” “ऋतं पिबन्तौ” என்று உபந்ஸ்யக்கப்பட்டது.
तत्र यः उपाधिकृतः संसारी विद्याविद्ययोरधिकृतो मोक्षगमनाय संसारगमनाय च, तस्य तदुभयगमने साधनो रथः कल्प्यते —
(அ-கை) உபாதியை உடைய சம்சாரி வித்தையினால் மோக்ஷத்தை அடையும் பொருட்டும் அவித்யையை உடைய அதிகாரி சம்சாரத்தை அடையும் பொருட்டும் அவனுக்கு இரண்டும் அடைவதற்கான சாதனையை ரத வடிவமாக கல்பிக்கப்படுகிறது.
आत्मानं रथिनं विद्धि शरीरं रथमेव तु ।
बुद्धिं तु सारथिं विद्धि मनः प्रग्रहमेव च ॥ ३ ॥
तत्रात्मानम् ऋतपं संसारिणं रथिनं रथस्वामिनं विद्धि विजानीहि ; शरीरं रथम् एव तु रथबद्धहयस्थानीयैरिन्द्रियैराकृष्यमाणत्वाच्छरीरस्य । बुद्धिं तु अध्यवसायलक्षणां सारथिं विद्धि ; बुद्धिनेतृप्रधानत्वाच्छरीरस्य, सारथिनेतृप्रधान इव रथः । सर्वं हि देहगतं कार्यं बुद्धिकर्तव्यमेव प्रायेण । मनः सङ्कल्पविकल्पादिलक्षणं प्रग्रहमेव च रशनामेव विद्धि । मनसा हि प्रगृहीतानि श्रोत्रादीनि करणानि प्रवर्तन्ते रशनयेवाश्वाः ॥
அவைகளில் அந்த ஆத்மாவை கர்ம பல போகத்தை உடைய சம்சாரியை ரதத்தை ஓட்டும் சாரதியாக அறி. ரதத்தில் கட்டப்பட்ட குதிரைகளுக்கு சமமாக சரிரத்தினுடைய இந்திரியங்களால் நன்றாக கட்டுப்பட்டுள்ளதால் இந்த சரீரம் ரதம் எனப்படும். சாரதி ரூபமான நேதா (நடத்துபவன்) ரதத்திற்கு எவ்வாறு பிரதானமோ (முக்கியமோ) அவ்வாறு சரீரத்திற்கு புத்தியின் நேத்ருத் தன்மை (நடத்தும் தன்மை) பிரதானமாய் இருப்பதால் அத்யாவசாய லக்ஷணமுடைய புத்தியை சாரதி என்று அறி. அநேகமாக எல்லா தேஹத்தைச் சேர்ந்த காரியங்களும் புத்தியின் கர்த்தவ்யமே (புத்தியின் செயலே.)மனதை சங்கல்ப, விகல்ப முதலிய லக்ஷணங்களுடன் கூடியதை கடிவாளமாக அறி. கடிவாளங்களால் கட்டுப்பட்ட குதிரைகள் போல் மனதால் அல்லவா கட்டுப்பட்டு சுரோத்திரம் முதலிய இந்திரியங்கள் பிரவிர்த்திக்கின்றன.
इन्द्रियाणि हयानाहुर्विषयांस्तेषु गोचरान् ।
आत्मेन्द्रियमनोयुक्तं भोक्तेत्याहुर्मनीषिणः ॥ ४ ॥
इन्द्रियाणि चक्षुरादीनि हयानाहुः रथकल्पनाकुशलाः, शरीररथाकर्षणसामान्यात् । तेषु इन्द्रियेषु हयत्वेन परिकल्पितेषु गोचरान् मार्गान् रूपादीन्विषयान् विद्धि । आत्मेन्द्रियमनोयुक्तं शरीरेन्द्रियमनोभिः सहितं संयुतमात्मानं भोक्तेति संसारीति आहुः मनीषिणः विवेकिनः ।
ரத கல்பனை செய்யும் சாமர்த்தியசாலிகள் சரீரமும் ரதமும் இழுத்தல் என்பதில் சமமாய் இருப்பதால் கண் முதலிய இந்திரியங்களை குதிரைகள் என்கிறார்கள். குதிரைகளாய் கல்பிக்கப்பட்ட அந்த இந்திரியங்கள் விஷயங்களில் ரூபாதி விஷயங்களை மார்க்கங்களாக அறிகின்றன என்பதை அறி. சரீரம் இந்திரியங்கள் மனம் இவைகளுடன் கூடி சேர்ந்திருப்பதை போக்த்தா அல்லது சம்சாரி என்று விவேகிகள் கூறுகின்றனர்.
न हि केवलस्यात्मनो भोक्तृत्वमस्ति ; बुद्ध्याद्युपाधिकृतमेव तस्य भोक्तृत्वम् । तथा च श्रुत्यन्तरं केवलस्याभोक्तृत्वमेव दर्शयति — ‘ध्यायतीव लेलायतीव’ (बृ. उ. ४ । ३ । ७) इत्यादि । एवं च सति वक्ष्यमाणरथकल्पनया वैष्णवस्य पदस्यात्मतया प्रतिपत्तिरुपपद्यते, नान्यथा, स्वभावानतिक्रमात् ॥
கேவலம் ஆத்மாவிற்கு போக்த்ருத்துவம் இல்லை. புத்தி முதலிய உபாதியினால் ஏற்பட்டதே போக்த்ருத்வம். அவ்வாறே வேறு சுருதியிலும் காட்டப்பட்டுள்ளது, த்யானிப்பது போல் லீலை போல் என்பது முதலியவைகளால் . இவ்வாறு ஆத்மாவிற்கு உபாதி மூலம்தான் போக்த்ருத்வம் ஏற்படுகிறது என்பதால் பின்னால் சொல்லப்படும் ரத கல்பனையானது வைஷ்ணவ பதமாகிய ஆத்மத்துவ ரூபமான ஞானத்திற்கும் பொருந்தும். வேறு விதமாக சொன்னால் பொருந்தாது. ஏன் எனில் ஸ்வபாவத்திற்கு மாறுபாடு ஏற்படாததே காரணமாகும்.
यस्त्वविज्ञानवान्भवत्ययुक्तेन मनसा सदा ।
तस्येन्द्रियाण्यवश्यानि दुष्टाश्वा इव सारथेः ॥ ५ ॥
तत्रैवं सति यस्तु बुद्ध्याख्यः सारथिः अविज्ञानवान् अनिपुणोऽविवेकी प्रवृत्तौ च निवृत्तौ च भवति यथेतरो रथचर्यायाम् अयुक्तेन अप्रगृहीतेन असमाहितेन मनसा प्रग्रहस्थानीयेन सदा युक्तो भवति, तस्य अकुशलस्य बुद्धिसारथेः इन्द्रियाणि अश्वस्थानीयानि अवश्यानि अशक्यनिवारणानि दुष्टाश्वाः अदान्ताश्वाः इव इतरसारथेः भवन्ति ॥
அவ்வாறு இருந்தாலும் புத்தி ரூப சாரதி அறியாமையால் நிபுனத்தன்மை இல்லாதவனுமாகிய அவிவேகி பிரவிர்த்தியிலும் நிவிர்த்தியிலும் எவ்வாறு மற்ற ரதத்தை ஓட்டுபவன் கடிவாளம் இல்லாமல் இருந்தால் எவ்வாறோ அவ்வாறு கட்டுப்படாத மனதுடன் கடிவாளத்திற்கு ஒப்பான ஸ்தானத்தில் எப்பொழுதும் கூடியவனாய் இருக்கிறான். அந்த சாமர்த்தியமற்ற புத்தியாகிய சாரதியினுடைய இந்திரியங்கள் குதிரைகள் ஸ்தானத்தில் இருந்து கொண்டு வசப்படாமல் துஷ்ட்ட குதிரைகள் போல் ஆகின்றன.
यस्तु विज्ञानवान्भवति युक्तेन मनसा सदा ।
तस्येन्द्रियाणि वश्यानि सदश्वा इव सारथेः ॥ ६ ॥
यस्तु पुनः पूर्वोक्तविपरीतसारथिर्भवति तस्य फलमाह — यस्तु विज्ञानवान् निपुणः विवेकवान् युक्तेन मनसा प्रगृहीतमनाः समाहितचित्तः सदा, तस्य अश्वस्थानीयानीन्द्रियाणि प्रवर्तयितुं निवर्तयितुं वा शक्यानि वश्यानि दान्ताः सदश्वा इवेतरसारथेः ॥
எவன் ஒருவன் முன்னர் கூறிய அவிவேகி சாரதியைக் காட்டிலும் வேறுபட்டவனான சாரதியாயும் விக்ஞானவனாயும் அடக்கிய மனமுடைய சித்த சமாதனமுடையவன் எப்பொழுது தன்னுடைய குதிரைகள் ஸ்தானத்தில் உள்ள இந்திரியங்களை பிரவிர்த்திக்க செய்யவும், நிவர்த்திக்க செய்யவும் முடிவதால் வசம் அடைந்த அடக்கப்பட்ட நல்ல குதிரைகள் போல் இந்த புத்தி என்ற சாரதி விளங்குகிறது.
तत्र पूर्वोक्तस्याविज्ञानवतो बुद्धिसारथेरिदं फलमाह —
(அ-கை) அந்த முன்னர் கூறிய விக்ஞானமற்ற புத்திரூப சாரதியின் இந்த பலமானது கூறப்படுகிறது.
यस्त्वविज्ञानवान्भवत्यमनस्कः सदाशुचिः ।
न स तत्पदमाप्नोति संसारं चाधिगच्छति ॥ ७ ॥
यस्त्वविज्ञानवान्भवति । अमनस्कः अप्रगृहीतमनस्कः सः तत एव अशुचिः सदैव । न सः रथी तत् पूर्वोक्तमक्षरं यत्परं पदम् आप्नोति तेन सारथिना । न केवलं तन्नाप्नोति, संसारं च जन्ममरणलक्षणम् अधिगच्छति ॥
(அனுவாதம்) எவன் ஒருவன் அவிக்ஞானவானோ அவன் மனதைக் கட்டுப்படுத்தாதவன். அவன் எப்பொழுதும் பவித்திரமற்றவனாகவே இருக்கிறான். அந்த சாரதியினால் அந்த ரதியானவன் முன்னர் கூறப்பட்ட அக்ஷரமாகிய எந்த மேலான பதம் உண்டோ அதை அடைய மாட்டான். அந்த கைவல்யத்தை மட்டும் அடையவில்லை என்பது இல்லை. ஜன்ம மரண தர்மங்களுடைய சம்சாரத்தை அடைகிறான்.
यस्तु विज्ञानवान्भवति समनस्कः सदा शुचिः ।
स तु तत्पदमाप्नोति यस्माद्भूयो न जायते ॥ ८ ॥
यस्तु द्वितीयो विज्ञानवान् भवति विज्ञानवत्सारथ्युपेतो रथी, विद्वानित्येतत् । युक्तमनाः समनस्कः सः तत एव सदा शुचिः । स तु तत्पदमाप्नोति, यस्मादाप्तात्पदादप्रच्युतः सन् भूयः पुनः न जायते संसारे ॥
(அனுவாதம்) எந்த இரண்டாவது அதிகாரி விக்ஞானமுள்ள சாரதியுடன் கூடிய ரதியானவன் (ஞானம் உள்ளவன்) என்பதாகும். அடக்கிய மனதுடையவன்தான் எப்பொழுதும் பவித்திரமானவன், அவனே தத்பதத்தை அடைகிறான். அடையப்பட்டதினின்றும் நழுவதல் இல்லாமல் இருந்து கொண்டு மறுபடியும் சம்சாரத்தில் பிறக்க மாட்டான்.
किं तत्पदमित्याह —
(அ-கை) அந்த பதம் எது? என்பது கூறப்படுகிறது
विज्ञानसारथिर्यस्तु मनःप्रग्रहवान्नरः ।
सोऽध्वनः पारमाप्नोति तद्विष्णोः परमं पदम् ॥ ९ ॥
विज्ञानसारथिः यस्तु यो विवेकबुद्धिसारथिः पूर्वोक्तः मनःप्रग्रहवान् प्रगृहीतमनाः समाहितचित्तः सन् शुचिर्नरो विद्वान् , सः अध्वनः संसारगतेः पारं परमेव, अधिगन्तव्यमित्येतत् , आप्नोति, मुच्यते सर्वसंसारबन्धनैः । तत् विष्णोः व्यापनशीलस्य ब्रह्मणः परमात्मनो वासुदेवाख्यस्य परमं प्रकृष्टं पदं स्थानम् , सतत्त्वमित्येतत् , यत् असावाप्नोति विद्वान् ॥
(அனுவாதம்) விவேக புத்தியுள்ள சாரதி முன்பு கூறியது போல் மனதைக் கட்டுப்படுத்தினவனாகிய சாது வித்வான் சம்சாரத்தின் எல்லையான (முடிவான) பரத்தையே அடைய வேண்டும் என்பதாகும். அதாவது சம்சாரத்திலிருந்து விடுபடுகிறான். அந்த வித்வான் வியாபகமான பரமாத்மாவாகிய வாசுதேவ ஸ்வரூபமாகிய மேலான ஸ்தானத்தை அடைகிறான்.
अधुना यत्पदं गन्तव्यं तस्येन्द्रियाणि स्थूलान्यारभ्य सूक्ष्मतारतम्यक्रमेण प्रत्यगात्मतयाधिगमः कर्तव्य इत्येवमर्थमिदमारभ्यते ।
(அ-கை) (அனுவாதம்) இப்பொழுது எந்த பதத்தை அடைய வேண்டும் என்பவன் ஸ்தூலமாகிய இந்திரியங்கள் ஆரம்பித்து சூக்ஷ்மதாரதம்மியத்தை அனுசரித்து பிரத்யக் ஆத்ம ஸ்வரூபமாக அடையவேண்டும் என்பதற்தாக இது ஆரம்பிக்கப்படுகிறது.
इन्द्रियेभ्यः परा ह्यर्था अर्थेभ्यश्च परं मनः ।
मनसस्तु परा बुद्धिर्बुद्धेरात्मा महान्परः ॥ १० ॥
स्थूलानि तावदिन्द्रियाणि, तानि यैः परैरर्थैरात्मप्रकाशनायारब्धानि तेभ्य इन्द्रियेभ्यः स्वकार्येभ्यः ते परा हि अर्थाः सूक्ष्मा महान्तश्च प्रत्यगात्मभूताश्च ।
(அனுவாதம்) அந்த இந்திரியங்கள் ஸ்தூலங்கள் எந்த சப்த ஸ்பர்சாதி விஷயங்கள் மூலமாக தன்னை தெரியப்படுத்திக் கொள்ள ஆரம்பமானதோ. அந்த விஷயங்கள் தன்னுடைய காரிய பூதமான இந்திரியங்களைக் காட்டிலும் சூக்ஷ்மமானது. மேலும் மஹானாயும் பிரத்யக் ஆத்மாவாயும் இருக்கிறது.
तेभ्योऽपि अर्थेभ्यश्च परं सूक्ष्मतरं महत्प्रत्यगात्मभूतं च मनः । मनःशब्दवाच्यं मनस आरम्भकं भूतसूक्ष्मम् , सङ्कल्पविकल्पाद्यारम्भकत्वात् । मनसोऽपि परा सूक्ष्मतरा महत्तरा प्रत्यगात्मभूता च बुद्धिः, बुद्धिशब्दवाच्यमध्यवसायाद्यारम्भकं भूतसूक्ष्मम् । बुद्धेरात्मा सर्वप्राणिबुद्धीनां प्रत्यगात्मभूतत्वादात्मा महान् सर्वमहत्त्वात् अव्यक्ताद्यत्प्रथमं जातं हैरण्यगर्भं तत्त्वं बोधाबोधात्मकं महानात्मा बुद्धेः पर इत्युच्यते ॥
(அனுவாதம்) அந்த சப்தாதி அர்த்தங்களை (விஷயங்களை)க் காட்டிலும் மேலானது. மிகவும் சூட்க்ஷ்மமானதும் மஹத்தாயும் உள்ள ப்ரத்யக் ஆத்ம பூதமானது மனமாகும். மன சப்தவாச்சியம் மனமானது சங்கல்ப விகல்பங்கள் முதலியவைகளுக்கு ஆரம்பமாய் இருப்பதால் மனதின் ஆரம்பம் பூத சூக்ஷமமாகும். புத்தியின் ஆத்மா எல்லா பிராணிகளின் புத்திகளுக்கு ஆத்மாவாய் இருப்பதால் ஆத்மா எல்லா மஹத்துவத்திற்கெல்லாம் மஹத்தாகும். அவ்யக்தத்திலிருந்து முதலில் உண்டான ஹிரண்யகர்ப தத்துவம் போதாபோதாத்மகமாக உள்ள மஹத் ஆத்மா புத்தியைக் காட்டிலும் மேலானது.
महतः परमव्यक्तमव्यक्तात्पुरुषः परः ।
पुरुषान्न परं किञ्चित्सा काष्ठा सा परा गतिः ॥ ११ ॥
महतोऽपि परं सूक्ष्मतरं प्रत्यगात्मभूतं सर्वमहत्तरं च अव्यक्तं सर्वस्य जगतो बीजभूतमव्याकृतनामरूपं सतत्त्वं सर्वकार्यकारणशक्तिसमाहाररूपम् अव्यक्तम् अव्याकृताकाशादिनामवाच्यं परमात्मन्योतप्रोतभावेन समाश्रितं वटकणिकायामिव वटवृक्षशक्तिः ।
(அனுவாதம்) மஹத்தைக் காட்டிலும் பரமானதும் சூக்ஷ்மமானதும் ஆன பிரத்யக் ஆத்ம பூதம் எல்லாவற்றைக் காட்டிலும் மஹத்தரம் ஆகும். அவ்யாக்ருத நாம ரூபங்களின் சத்தாஸ்வரூபம். எல்லா காரிய காரணங்களின் சமாஹார ரூபமாகும். அவ்யக்தம் அவ்யாகிருதம், ஆகாசம் முதலிய நாமங்களினால் குறிப்பிடப்பட்டதாகும். பரமாத்மாவிடத்தில் ஒதப்ப்ரோத பாவத்தினால் வடவிருக்ஷ(ஆலமரம்) விதையில் இருக்கும் வடவிருக்ஷ சக்தி போல் ஆச்ரியத்திருக்கிறது.
तस्मादव्यक्तात् परः सूक्ष्मतरः सर्वकारणकारणत्वात्प्रत्यगात्मत्वाच्च महांश्च, अत एव पुरुषः सर्वपूरणात् । ततोऽन्यस्य परस्य प्रसङ्गं निवारयन्नाह — पुरुषान्न परं किञ्चिदिति । यस्मान्नास्ति पुरुषाच्चिन्मात्रघनात्परं किञ्चिदपि वस्त्वन्तरम् , तस्मात्सूक्ष्मत्वमहत्त्वप्रत्यगात्मत्वानां सा काष्ठा निष्ठा पर्यवसानम् ।
(அனுவாதம்) அந்த அவ்யக்தத்தைக் காட்டிலும் மேலான சூக்ஷ்மதரமானதாயும் எல்லா காரணங்களுக்கும் காரணமானதாயும், பிரத்யக் ஆத்மாவாயும், மஹானாயும், எல்லாவற்றிலும் பூரணமாயும் இருப்பதால் புருஷன் எனப்படுகிறான். அதைக் காட்டிலும் வேறான மேலான (உத்க்ருஷ்ட்டமான) பிரசக்தியை நிராகரித்து புருஷனைக் காட்டிலும் மேலானது ஒரு சிறிதும் இல்லை எனப்பட்டது. அந்த புருஷனான சின்மாத்தரகனனைக் காட்டிலும் மேலான வேறு வஸ்து சிறிதும் இல்லை என்பதால் சூக்ஷ்மத்துவம், மஹத்துவம், பிரத்யக்ஆத்மத்துவம் இவைகளின் பராகாஷ்ட்டா மேலான நிலை அதாவது முடிவான நிலையாகும்.
अत्र हि इन्द्रियेभ्य आरभ्य सूक्ष्मत्वादि परिसमाप्तम् । अत एव च गन्तॄणां सर्वगतिमतां संसारिणां सा परा प्रकृष्टा गतिः, ‘यद्गत्वा न निवर्तन्ते’ (भ. गी. १५ । ६) इति स्मृतेः ॥
(அனுவாதம்) இங்கு இந்திரியங்கள் ஆரம்பித்து சூக்ஷ்மத்துவம் முதலியவைகள் முடிவு பெறுகின்றன. ஆகையால் தான் (கந்த்ருணாம்) அதாவது எல்லா கதிகளை உடைய சம்சாரிகளுக்கு இது மேலான அதாவது உத்க்ருஷ்ட்டமான கதியாகும். அதாவது எதை சென்று அடைந்து மறுபடியும் திரும்புதல் இல்லையோ என்று கீதாஸ்ம்ருதியில் கூறப்பட்டுள்ளது.
ननु गतिश्चेदागत्यापि भवितव्यम् , कथम् ‘यस्माद्भूयो न जायते’ (क. उ. १ । ३ । ८) इति ?
(அ-கை) சங்கை செல்லுதல் கதி இருந்தால் திரும்பி வருதல் அவசியம் ஏற்பட வேண்டும். அவ்வாறெனில் எதனால் மறுபடியும் பிறப்பதில்லை? என்று
नैष दोषः । सर्वस्य प्रत्यगात्मत्वादवगतिरेव गतिरित्युपचर्यते । प्रत्यगात्मत्वं च दर्शितम् इन्द्रियमनोबुद्धिपरत्वेन ।
(சமாதானம்)இந்த தோஷம் இல்லை. எல்லாவற்றிற்கும் பிரத்யக் ஆத்மாவாய் இருப்பதால் அறிவதேதான் கதி என்று உபசாரமாகக் கூறப்பட்டது. பிரத்யக் ஆத்ம தத்துவமானது இந்திரிய மனோ புத்தி இவைகளைக் காட்டிலும் மேலானதாக உத்க்ருஷ்ட்டமானதாகக் காட்டப்பட்டது.
यो हि गन्ता सोऽयमप्रत्यग्रूपं पूरुषं गच्छति अनात्मभूतं न विन्दति स्वरूपेण । तथा च श्रुतिः ‘अनध्वगा अध्वसु पारयिष्णवः’ ( ? ) इत्याद्या । तथा च दर्शयति प्रत्यगात्मत्वं सर्वस्य ।
(அனுவாதம்) எவன் ஒருவன் பிரத்யக் ஆத்மாவை அடைந்தானோ அவனே ஆத்மாவை அடைந்தவன். அதற்கு விபரீதமான அநாத்மாவை அடைய மாட்டான். அவ்வாறே சுருதியும் கூறுகிறது. “अनध्वगा अध्वसु पारयिष्णवः” (அநத்வகா அத்வசு பாரயிஷ்ணவ:) என்று அதாவது சம்சாரத்தை கடப்பதற்கு இச்சை உள்ளவன் மார்க்கம் அற்றவனாகிறான். (ஏன் எனில் தானாகவே இருப்பதால் மார்க்கம் தேவை இல்லை என்பதாகும்) அவ்வாறே எல்லா ஜீவராசிகளுக்கும் ப்ரத்யக் ஆத்மத்வமாக இருத்தல் காண்பிக்கப்படுகிறது.
एष सर्वेषु भूतेषु गूढोऽत्मा न प्रकाशते ।
दृश्यते त्वग्न्यया बुद्ध्या सूक्ष्मया सूक्ष्मदर्शिभिः ॥ १२ ॥
एष पुरुषः सर्वेषु ब्रह्मादिस्तम्बपर्यन्तेषु भूतेषु गूढः संवृतः दर्शनश्रवणादिकर्मा अविद्यामायाच्छन्नः अत एव आत्मा न प्रकाशते आत्मत्वेन कस्यचित् । अहो अतिगम्भीरा दुरवगाह्या विचित्रा चेयं माया, यदयं सर्वो जन्तुः परमार्थतः परमार्थसतत्त्वोऽप्येवं बोध्यमानोऽहं परमात्मेति न गृह्णाति, अनात्मानं देहेन्द्रियादिसङ्घातमात्मनो दृश्यमानमपि घटादिवदात्मत्वेनाहममुष्य पुत्र इत्यनुच्यमानोऽपि गृह्णाति । नूनं परस्यैव मायया मोमुह्यमानः सर्वो लोकोऽयं बम्भ्रमीति । तथा च स्मरणम् — ‘नाहं प्रकाशः सर्वस्य योगमायासमावृतः’ (भ. गी. ७ । २५) इत्यादि ।
(அனுவாதம்) இந்த பரமாத்மா பிரஹ்மா முதல் சிறு பூச்சி வரை எல்லா ஜீவராசிகள் உள்ளும் மறைந்து பார்த்தல், கேட்டல் முதலிய கர்மங்கள் உள்ளவனாகவும் மாயையினால் மறைக்கப்பட்டுள்ளவனாகவும் இருக்கிறான். ஆகையால் ஆத்மா ஒருவருக்கும் ஆத்மாவாக (தானாக) விளங்கவில்லை. மிகவும் கம்பீரமானதும் விளங்காததும், விசித்திரமானதுமான இந்த மாயையானது எந்த இந்த எல்லா ஜீவராசிகளும் உண்மையில் பரமார்த்த தத்துவமானாலும் நான் பரமாத்மா என்று சுருதியினால் அறியச் செய்யப்பட்டாலும் ஆத்மாவை நான் பிரஹ்மம் என்று புரிந்து கொள்வதில்லை. குடம் முதலியவைகள் போல் தேஹ இந்திரியங்கள் முதலியவைகளுடன் கூடியது என்று அறிந்து இருந்தாலும் அதை ஆத்மாவாக நினைத்து நான் இவருடைய புத்திரன் என்று கூறாவிட்டாலும் அறிந்து கொள்கிறான். நிச்சயமாக பரமாத்மாவினுடைய மாயையினால் மோஹமடைந்து லோகத்தில் எல்லாம் சுழன்று கொண்டிருக்கின்றன. அவ்வாறே ஸ்மிருதியிலும் (கீதையிலும்) “(நாஹம் ப்ரகாச சர்வஸ்ய யோகமாயயா சமாவிருத்த)” யோக மாயையினால் நன்றாக மறைக்கப்பட்டுள்ளதால் எல்லோருக்கும் நான் விளங்குவதில்லை.
ननु विरुद्धमिदमुच्यते — मत्वा धीरो न शोचति, न प्रकाशत इति च । नैतदेवम् । असंस्कृतबुद्धेरविज्ञेयत्वान्न प्रकाशत इत्युक्तम् । दृश्यते तु संस्कृतया अग्न्यया, अग्रमिवाग्न्या तया, एकाग्रतयोपेतयेत्येतत् ; सूक्ष्मया सूक्ष्मवस्तुनिरूपणपरया । कैः ? सूक्ष्मदर्शिभिः ‘इन्द्रियेभ्यः परा ह्यर्थाः’इत्यादिप्रकारेण सूक्ष्मतापारम्पर्यदर्शनेन परं सूक्ष्मं द्रष्टुं शीलं येषां ते सूक्ष्मदर्शिनः, तैः सूक्ष्मदर्शिभिः, पण्डितैरित्येतत् ॥
(அனுவாதம்) (சங்கை) ஆனால்मत्वा धीरो न शोचति (மத்வா தீரோ ந சோச்சதி) (அந்த கூடாத்மாவை) அறிந்தவன் சோகத்தை அடையமாட்டான், “न प्रकाशते” (ந பிரகாசதே) விளங்கவில்லை என்றும் மாறுபாடாக கூறப்பட்டது எனில் இவ்வாறு அல்ல, நன்றாக பண்படுத்தப்படாத புத்தியினால் அறிய முடியாததால் பிரகாசிப்பதில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அது (ஆத்மாவானது) யாருக்கு விளங்கும்? நல்ல பண்படுத்தப்பட்ட கூர்மையான சூக்ஷ்மமான ஏகாக்ரமனது உடையவர்களான சூக்ஷ்ம தர்சிகளுக்கு விளங்கும். (இந்திரியேப்ய: பராஹ்யர்த்தா:) இந்திரியங்களைக் காட்டிலும் சூக்ஷம பாரம்பரிய விசாரத்தால் பரமான சூக்ஷ்மத்தை தெரிந்து கொள்ள சாமர்த்தியம் எவர்களுக்கு இருக்கிறதோ அவர்கள் சூக்ஷமதர்சிகள். அவர்களே பண்டிதர்கள்.
तत्प्रतिपत्त्युपायमाह —
(அ-கை)அதை அடைவதற்கான வழி கூறப்படுகிறது,
यच्छेद्वाङ्मनसी प्राज्ञस्तद्यच्छेज्ज्ञान आत्मनि ।
ज्ञानमात्मनि महति नियच्छेत्तद्यच्छेच्छान्त आत्मनि ॥ १३ ॥
यच्छेत् नियच्छेदुपसंहरेत् प्राज्ञः विवेकी । किम् ? वाक् वाचम् ; वागत्रोपलक्षणार्था सर्वेषामिन्द्रियाणाम् । क्व ? मनसी मनसि । छान्दसं दैर्घ्यम् । तच्च मनः यच्छेत् ज्ञाने प्रकाशस्वरूपे बुद्धावात्मनि । बुद्धिर्हि मनआदिकरणान्याप्नोतीत्यात्मा प्रत्यक् च तेषाम् । ज्ञानं बुद्धिम् आत्मनि महति प्रथमजे नियच्छेत् । प्रथमजवत्स्वच्छस्वभावकमात्मनो विज्ञानमापादयेदित्यर्थः । तं च महान्तमात्मानं यच्छेत् शान्ते सर्वविशेषप्रत्यस्तमितरूपे अविक्रिये सर्वान्तरे सर्वबुद्धिप्रत्ययसाक्षिणि मुख्ये आत्मनि ॥
(அனுவாதம்) விவேகியானவன் ஒடுக்க வேண்டும் எதை? வாக்கை. வாக் என்ற பதமானது எல்லா இந்திரியங்களுக்கும் உபலக்ஷணமாகக் கூறப்பட்டது. எதில் ஒடுங்கச் செய்ய வேண்டும்? மனதில். அந்த மனதை ஞானத்தில் அதாவது ப்ரகாச ரூபமான புத்தியில் அதாவது ஆத்மாவில் ,புத்தி அல்லவா மன முதலிய கரணங்களில் (இந்திரியங்களில்) வியாபித்திருப்பதால் அவைகளின் ஆத்மா பிரத்யக் ஸ்வரூபமாகும். அந்த ஞான ரூப ஆத்மாவை முதலில் தோன்றிய மஹத் ஆகிய ஆத்மாவில் ஒடுங்கச் செய்ய வேண்டும். முதலில் தோன்றிய மஹத்தைப் போல் ஆத்மாவை ஸ்வச்சஸ்வபாவமுள்ளதாக அடையச் செய் என்பது பொருள். அந்த மஹத் ஆன ஆத்மாவை சாந்தத்தில் அதாவது எல்லா விசேஷங்களும் அற்றதும், மாறுபாடு அற்றதும், எல்லார் உள்ளும் உள்ளதும், எல்லா புத்தி (பிரத்தியங்களுக்கு) விருத்திகளுக்கும் சாக்ஷியாய் உள்ளதும் முக்கிய ஆத்மாவிடத்தில் ஒடுங்கச் செய்ய வேண்டும்.
एवं पुरुषे आत्मनि सर्वं प्रविलाप्य नामरूपकर्मत्रयं यन्मिथ्याज्ञानविजृम्भितं क्रियाकारकफललक्षणं स्वात्मयाथात्म्यज्ञानेन मरीच्युदकरज्जुसर्पगगनमलानीव मरीचिरज्जुगगनस्वरूपदर्शनेनैव स्वस्थः प्रशान्तः कृतकृत्यो भवति यतः, अतस्तद्दर्शनार्थम
(அனுவாதம்) (அ-கை) கானல், கயிறு, ஆகாசம் இவைகளின் சொரூபத்தை அறிந்ததினாலேயே கானல் நீர், கயிற்றில் பாம்பு, ஆகாயத்தின் மலினம் எல்லாம் நீங்குவது போல் ஸ்வாத்ம யதார்த்த ஞானத்தால் நாமம், ரூபம், கர்ம இவை மூன்றும் மித்தியா ஞானத்தினால் வெளிப்பட்ட கிரியா காரக பலத்தை உடையவைகள் எல்லாம் ஆத்மாவில் இவ்வாறு ஒடுங்கச் செய்து அந்த புருஷன் தன்னில் நிலைத்தவனாயும்,ப்ரசாந்தா ஆத்மாவாயும் கிருதகிருத்யனாகவும் ஆகின்றான். எதனாலோ அதனால் அந்த ஆத்மாவை தரிசிக்க செய்ய வேண்டியதற்காக.
उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान्निबोधत ।
क्षुरस्य धारा निशिता दुरत्यया दुर्गं पथस्तत्कवयो वदन्ति ॥ १४ ॥
अनाद्यविद्याप्रसुप्ताः उत्तिष्ठत हे जन्तवः, आत्मज्ञानाभिमुखा भवत ; जाग्रत अज्ञाननिद्राया घोररूपायाः सर्वानर्थबीजभूतायाः क्षयं कुरुत ।
(அனுவாதம்) அநாதி அவித்தியினால் துயிலும் ஜீவனே! எழுமின். ஆத்ம ஞானத்தில் மனதைக் உள்முகமாக்குங்கள். கோரமான எல்லா அநர்த்தங்களுக்கும் காரண பூதமான அக்ஞான நித்திரையிலிருந்து விழித்துக் கொண்டு அந்த அக்ஞானத்தை நாசம் செய்.
कथम् ? प्राप्य उपगम्य वरान् प्रकृष्टानाचार्यांस्तत्त्वविदः, तदुपदिष्टं सर्वान्तरमात्मानमहमस्मीति निबोधत अवगच्छत ; न ह्युपेक्षितव्यमिति श्रुतिरनुकम्पया आह मातृवत् , अतिसूक्ष्मबुद्धिविषयत्वाज्ज्ञेयस्य । किमिव सूक्ष्मबुद्धिरिति, उच्यते — क्षुरस्य धारा अग्रं निशिता तीक्ष्णीकृता दुरत्यया दुःखेनात्ययो यस्याः सा दुरत्यया । यथा सा पद्भ्यां दुर्गमनीया तथा दुर्गं दुःसम्पाद्यमित्येतत् ; पथः पन्थानं तत् तं ज्ञानलक्षणं मार्गं कवयः मेधाविनो वदन्ति । ज्ञेयस्यातिसूक्ष्मत्वात्तद्विषयस्य ज्ञानमार्गस्य दुःसम्पाद्यत्वं वदन्तीत्यभिप्रायः ॥
(அனுவாதம்) எவ்வாறு தத்துவத்தை அறிந்த மிகச் சிறந்த ஆச்சாரியரை அடைந்து அவர் உபதேசித்த எங்கும் உள்ள ஆத்மாவை நானாய் இருக்கிறேன் என்று அறி. அதை நிராகரிக்கக் கூடாது என்று ஒரு தாயைப் போல் சுருதியானது கருணையினால் க்ஞேயமானது மிகச் சூக்ஷ்ம புத்தி விஷயமாய் இருப்பதால் இவ்வாறு கூறுகிறது. எதைப் போல் சூக்ஷ்ம புத்தி இருக்கிறது என்று கூறப்படுகிறது. கத்தி முனை போல் மிகுந்த கூர்மையால் கஷ்டப்பட்டு நடக்க கூடியதாய் சூக்ஷ்ம புத்தி இருக்கிறது. அதாவது கால்களால் நடந்து செல்ல முடியாததாய் எவ்வாறு இருக்கிறதோ அவ்வாறு இருக்கிறது. தத்வஞானலக்ஷணமார்க்கம் என்று மேதாவிகள் கூறுகிறார்கள். ஞேயம் மிகவும் சூக்ஷ்மமாய் இருப்பதால் அந்த விஷயத்தினுடைய மார்க்கமும் மிகக் கடினமானது என்று கூறுகிறார்கள் என்பது அபிப்ராயம்.
तत्कथमतिसूक्ष्मत्वं ज्ञेयस्येति, उच्यते । स्थूला तावदियं मेदिनी शब्दस्पर्शरूपरसगन्धोपचिता सर्वेन्द्रियविषयभूता तथा शरीरम् । तत्रैकैकगुणापकर्षेण गन्धादीनां सूक्ष्मत्वमहत्त्वविशुद्धत्वनित्यत्वादितारतम्यं दृष्टमबादिषु यावदाकाशमिति । ते गन्धादयः सर्व एव स्थूलत्वाद्विकाराः शब्दान्ताः यत्र न सन्ति, किमु तस्य सूक्ष्मत्वादिनिरतिशयत्वं वक्तव्यमित्येतद्दर्शयति श्रुतिः
(அனுவாதம்) ஞேய ஆத்மாவிற்கு அதி சூக்ஷ்மத்தன்மை எவ்வாறு என்று கூறப்படுகிறது. சப்தஸ்பர்ச ரூபரசகந்தத்துடன் நிறைவுபெற்ற சர்வ இந்திரிய விஷயங்களுடன் கூடிய ஸ்தூலமான இந்த பிருதிவீ அவ்வாறே இந்த சரீரமும் ஆகும். அவற்றுள் ஆகாயம் முதலானவற்றுள் முற்கூறிய கந்தமுதலிய ஐந்து குணங்களுள் ஒவ்வொரு குணமும் குறைவதின் மூலம் சூக்ஷ்மத்துவம், மஹத்துவம், விசுத்தத்துவம், நித்யத்துவம் முதலியவற்றின் தாரதம்யம் பார்க்கப்படுகிறது. ஆகாசம் முதலிய அதாவது அதன் குணங்கள் முதலியவைகள் எல்லாம் ஸ்தூலமாய் இருப்பதால் சப்தம் வரையிலும் உள்ள விகாரங்கள் எங்கு இல்லையோ அதற்கு அதனுடைய சூக்ஷ்மத்துவ முதலிய நிர திசயத்துவம் கூறவேண்டுமா என்று சுருதியானது எடுத்துரைக்கிறது.
अशब्दमस्पर्शमरूपमव्ययं तथारसं नित्यमगन्धवच्च यत् ।
अनाद्यनन्तं महतः परं ध्रुवं निचाय्य तं मृत्युमुखात्प्रमुच्यते ॥ १५ ॥
अशब्दमस्पर्शमरूपमरसमगन्धवच्च यत् , एतद्व्याख्यातं ब्रह्म । अव्ययम् , यद्धि शब्दादिमत् , तद्व्येति ; इदं त्वशब्दादिमत्त्वादव्ययं न व्येति न क्षीयते ; अत एव च नित्यम् ; यद्धि व्येति, तदनित्यम् ; इदं तु न व्येति ; अतो नित्यम् । इतश्च नित्यम् — अनादि अविद्यमानः आदिः कारणमस्य तदिदमनादि । यच्चादिमत् , तत्कार्यत्वादनित्यं कारणे प्रलीयते यथा पृथिव्यादि ; इदं तु सर्वकारणत्वादकार्यम् , अकार्यत्वान्नित्यम् ; न तस्य कारणमस्ति यस्मिन्प्रलीयेत ।
(அனுவாதம்) சப்தம் அற்றதும், ஸ்பர்சமற்றதும் ரூபமற்றதும், அவ்யயமாயும், அவ்வாறே ரஸமற்றதும் ,வாசனையற்றதுமாய் எது உள்ளதோ அது அவ்யயம் பிரஹ்மம் என்று வியாக்யாதம் செய்யப்பட்டது------- எது சப்தாதிகளை உடையதோ அது நாசமாகும். ஆனால் இதுவோ சப்தம் முதலியவைகள் அற்றதால் நாசமற்றது (அவ்யயம்) ஆகையால்தான் நித்தியம், எது நாசமாகிறதோ அது அநித்தியமாகும். அது நாசமடையாது. ஆகையால் நித்தியம் அநாதி என்றால் ஆதியானது, காரணமானது எதற்கு இல்லையோ அது அநாதி எனப்படும். எதற்கு ஆதி அதாவது எதற்கு காரணம் இருக்கிறதோ அது காரியமாவதால் அநித்தியம். எவ்வாறெனில் பிருதிவியாதி காரணத்தில் லயமாவது போல் ஆகும். ஆனால் இந்த ப்ரஹ்மமோ எல்லாவற்றிற்கும் காரணமாவதால் காரியமாகாது. காரியம் அல்லாததால் நித்தியம், அதற்கு காரணம் இல்லை. ஆகையால் அது எந்த காரணத்தில் லயமாகும்.
तथा अनन्तम् अविद्यमानोऽन्तः कार्यमस्य तदनन्तम् । यथा कदल्यादेः फलादिकार्योत्पादनेनाप्यनित्यत्वं दृष्टम् , न च तथाप्यन्तवत्त्वं ब्रह्मणः ; अतोऽपि नित्यम् ।
(அனுவாதம்) அவ்வாறு அனந்தமும் ஆகும் (அதாவது முடிவு அற்றதாகும்). எதற்கு முடிவு (அந்தம்) அதாவது காரியம் இல்லையோ அது அனந்தம். எவ்வாறு கதலி முதலியவைகள் பழம் முதலிய காரியத்தை உற்பத்தி செய்தாலும் அதில் அநித்யமானது காணப்படுகிறது. அப்படியானாலும் பிரஹ்மத்திற்கு முடிவு இல்லை.(अनन्तत्वम्-அநந்தத்துவம்) அதனாலும் நித்தியமாகும்.
महतः महत्तत्त्वाद्बुद्ध्याख्यात् परं विलक्षणं नित्यविज्ञप्तिस्वरूपत्वात् ; सर्वसाक्षि हि सर्वभूतात्मत्वाद्ब्रह्म । उक्तं हि — ‘एष सर्वेषु भूतेषु’ (क. उ. १ । ३ । १२) इत्यादि । ध्रुवं च कूटस्थं नित्यं न पृथिव्यादिवदापेक्षिकं नित्यत्वम् । तत् एवंभूतं ब्रह्म आत्मानं निचाय्य अवगम्य तम् आत्मानं मृत्युमुखात् मृत्युगोचरादविद्याकामकर्मलक्षणात् प्रमुच्यते वियुज्यते ॥
(அனுவாதம்) மஹத் அதாவது புத்தி எனப்படுவதைக் காட்டிலும் வேறாக நித்ய விக்ஞப்தி ஸ்வரூபமாய் இருப்பதால் எல்லா பூதங்களுக்கும் (ஜீவராசிகளுக்கும்) அந்தராத்மாவாய் இருக்கின்ற ப்ரஹ்மம் சர்வசாக்ஷீ. அதுவே (ஏஷ சர்வேஷீபூதேஷீ) என்பது முதலியவைகளால் கூறப்பட்டுள்ளது. (த்ருவம்) கூடஸ்தநித்தியம், ப்ருதிவியாதிகள் போல் ஆபேக்ஷிக நித்தியத்துவம் அல்ல. இவ்வாறு ப்ரஹ்மாத்மாவை நன்றாக அறிந்த புருஷன் ம்ருத்யு வாயிலிருந்து அதாவது அவித்யா காம கர்மரூபம் என்ற ம்ருத்யுவிடமிருந்து விடுபடுகிறான்.
प्रस्तुतविज्ञानस्तुत्यर्थमाह श्रुतिः —
(அஃகை) ஆரம்பிக்கப்பட்ட விக்ஞானத்தை ஸ்துதிக்க வேண்டி சுருதி கூறுகிறது--
नाचिकेतमुपाख्यानं मृत्युप्रोक्तं सनातनम् ।
उक्त्वा श्रुत्वा च मेधावी ब्रह्मलोके महीयते ॥ १६ ॥
नाचिकेतं नचिकेतसा प्राप्तं नाचिकेतं मृत्युना प्रोक्तं मृत्युप्रोक्तम् इदमाख्यानमुपाख्यानं वल्लीत्रयलक्षणं सनातनं चिरन्तनं वैदिकत्वात् उक्त्वा ब्राह्मणेभ्यः श्रुत्वा च आचार्येभ्यः मेधावी ब्रह्मैव लोको ब्रह्मलोकः तस्मिन् ब्रह्मलोके महीयते आत्मभूत उपास्यो भवतीत्यभिप्रायः ॥
(அனுவாதம்) नाचिकेतंम् (நாசிகேதம்) என்றால் நசிகேதன் மூலமாக அடையப்பட்டதும் மிருத்யுவினால் கூறப்பட்ட இந்த ஆக்கியானம்(கதை) மூன்று வல்லீகளுடைய லக்ஷணம் எப்பொழுதும் உள்ளது என்று வைதீகமாக இருப்பதால்பிராஹ்மணர்களுக்குச் சொல்லியும் ஆச்சார்யர்களிடம் கேட்டும் மேதாவியானவன் ப்ரஹ்மமாகிறலோகத்தில் அதாவது ப்ரஹ்மாத்மகமாக இருந்து அதை உபாசிக்கின்றான். ஆத்ம ஸ்வரூபத்தை அடைந்து உபாஸ்யனாகின்றான்.
य इमं परमं गुह्यं श्रावयेद्ब्रह्मसंसदि । प्रयतः श्राद्धकाले वा तदानन्त्याय कल्पते ॥
तदानन्त्याय कल्पत इति ॥ १७ ॥
यः कश्चिदिमं ग्रन्थं परमं प्रकृष्टं गुह्यं गोप्यं श्रावयेत् ग्रन्थतोऽर्थतश्च ब्राह्मणानां संसदि ब्रह्मसंसदि प्रयतः शुचिर्भूत्वा श्राद्धकाले वा श्रावयेत् भुञ्जानाम् , तत् श्राद्धम् अस्य आनन्त्याय अनन्तफलाय कल्पते समर्थ्यते । द्विर्वचनमध्यायपरिसमाप्त्यर्थम् ॥
(அனுவாதம்) எவன் ஒருவன் அந்த பிரக்ருஷ்ட்டமான (மேலான) ரகசியமான கிரந்தத்தை படித்து அர்த்தத்துடன் பிராமணர்களின் சபையில் பரிசுத்தமாக இருந்துகொண்டு அவர்கள் கேட்கும் படி செய்வானோ அல்லது பிராமணர்கள் சிரார்த்த காலத்தில் சாப்பிடும் பொழுது அவர்கள் கேட்கும் படி செய்வானோ அவனுடைய சிரார்த்தமானது முடிவில்லா பலனைக் கொடுக்கும். இரண்டாவது முறைகூறியது இந்த அத்யாயத்தின் முடிவைக் கூறுகிறது.
इति तृतीयवल्लीभाष्यम् ॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ काठकोपनिषद्भाष्ये प्रथमोऽध्यायः ॥
पराञ्चि खानि व्यतृणत्स्वयम्भूस्तस्मात्पराङ् पश्यति नान्तरात्मन् ।
कश्चिद्धीरः प्रत्यगात्मानमैक्षदावृत्तचक्षुरमृतत्वमिच्छन् ॥ १ ॥
‘एष सर्वेषु भूतेषु गुढोऽत्मा न प्रकाशते। दृश्यते त्वग्र्यया बुद्ध्या’ (क. उ. १ । ३ । १२) इत्युक्तम् । कः पुनः प्रतिबन्धोऽग्र्याया बुद्धेः, येन तदभावादात्मा न दृश्यत इति तददर्शनकारणप्रदर्शनार्था वल्ली आरभ्यते ; विज्ञाते हि श्रेयःप्रतिबन्धकारणे तदपनयनाय यत्न आरब्धुं शक्यते, नान्यथेति —
(அ-கை) இந்த எல்லா ஜீவராசிகளிலும் ரகஸ்யமாய் மறைந்திருக்கும் ஆத்மா விளங்கவில்லை. ஆனால் சூக்ஷ்ம புத்தி உள்ளவர்களுக்கு விளங்கும் என்று கூறப்பட்டது. ஆகையால் எது சூக்ஷ்ம புத்திக்கு பிரதி பந்தகமாய் (தடையாய்) இருக்கிறது? எது இல்லாததினால் ஆத்மா விளங்கவில்லை என்று அந்த அறிய முடியாததின் காரணத்தை தெரிவிப்பதற்காக இந்த வல்லீ ஆரம்பிக்கப்படுகிறது. ஸ்ரேயஸிற்கு தடையாய் இருக்கும் காரணத்தை அறிந்தால் அல்லவா அதை நீக்குவதற்கான யத்தனத்தை (முயற்சியை) ஆரம்பிக்க முடியும்(வேறு மார்க்கம் இல்லை) வேறு வழியில்லை.
पराञ्चि परागञ्चन्ति गच्छन्तीति, खानि खोपलक्षितानि श्रोत्रादीनीन्द्रियाणि खानीत्युच्यन्ते । तानि पराञ्च्येव शब्दादिविषयप्रकाशनाय प्रवर्तन्ते । यस्मादेवंस्वभावकानि तानि व्यतृणत् हिंसितवान् हननं कृतवानित्यर्थः । कोऽसौ ? स्वयम्भूः परमेश्वरः स्वयमेव स्वतन्त्रो भवति सर्वदा न परतन्त्र इति । तस्मात् पराङ् पराग्रूपाननात्मभूताञ्शब्दादीन् पश्यति उपलभते उपलब्धा नान्तरात्मन् नान्तरात्मानमित्यर्थः ।
(அனுவாதம்) வெளியில் செல்லுதலுடைய ஆகாச உபலக்ஷிதங்களான ஸ்ரோத்திரம் முதலிய இந்திரியங்களை (கானி) என்று சொல்லப்படுகிறது. அவைகள் வெளியில் சென்று சப்தாதி விஷயங்களை விளக்குவதற்காகப் பிரவிர்த்திக்கிறது. இவ்வாறு இருப்பதால் ஸ்வபாவமாகவே ஹிம்சை செய்பவன் என்று பொருள். அவன் யார்? ஸ்வயம்பூ அதாவது பரமேஸ்வரன் அவன் எப்பொழுதும் ஸ்வதந்திரமாகவே இருக்கிறான். பரதந்திரன் அல்ல என்பதாகும். ஆகையால் வெளியில் உள்ள வஸ்துக்கள் அநாத்மாவான சப்தாதிகளை கிரஹிக்கிறது அல்லது அடைகிறது. ஆனால் அந்தராத்மாவை அடைவதில்லை.
एवंस्वभावेऽपि सति लोकस्य कश्चित् नद्याः प्रतिस्रोतःप्रवर्तनमिव धीरः धीमान्विवेकी प्रत्यगात्मानं प्रत्यक् चासावात्मा चेति प्रत्यगात्मा । प्रतीच्येवात्मशब्दो रूढो लोके, नान्यत्र । व्युत्पत्तिपक्षेऽपि तत्रैवात्मशब्दो वर्तते ; ‘यच्चाप्नोति यदादत्ते यच्चात्ति विषयानिह । यच्चास्य सन्ततो भावस्तस्मादात्मेति कीर्त्यते’ ; इत्यात्मशब्दव्युत्पत्तिस्मरणात् ।
(அனுவாதம்) இவ்வாறு ஸ்வபாவம் இருந்தாலும் உலகத்தில் நதிகள் தன் திசையிலிருந்து திருப்பி விடுவது போல் தீர புருஷனும் ப்ரத்யக் ஆத்மாவை நோக்கி திருப்புகிறான்(ப்ரத்யக் ஆத்மாவை அறிகிறான்). உலகில் ஆத்மா என்ற சப்தமானது பிரத்யக்ஆதாவது எல்லாவற்றிற்கும் மூல காரணமான வஸ்துவில் ரூடமாகிறது. அதுவே வ்யுத்பத்தி பக்ஷத்திலும் ப்ரதீசி என்ற சப்தம் ஆத்மா அர்த்திலேயே இருக்கிறது. ‘यच्चाप्नोति यदादत्ते यच्चात्ति विषयानिह। यच्चास्य सन्ततो भावस्तस्मादात्मेति कीर्त्यते’ அதாவது அதுவே எல்லாவற்றிலும் வியாபித்திருக்கிறது. எல்லாவற்றையும் கிரஹிக்கிறது. உலகத்தில்  விஷயங்களின் போக்தாவாக இருக்கிறது, மேலும் எப்பொழுதும் சத்பாவமாகவே இருக்கிறது, ஆகையால் அது ஆத்மா என்ற அர்த்தமாகிறது. இவ்வாறு நான்கு விதமாக ஆத்ம சப்தத்திற்கு வ்யுத்யத்தி சம்பந்தமானது ஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளது.
तं प्रत्यगात्मानं स्वस्वभावम् ऐक्षत् अपश्यत् पश्यतीत्यर्थः, छन्दसि कालानियमात् । कथं पश्यतीति, उच्यते — आवृत्तचक्षुः आवृत्तं व्यावृत्तं चक्षुः श्रोत्रादिकमिन्द्रियजातमशेषविषयात् यस्य स आवृत्तचक्षुः । स एवं संस्कृतः प्रत्यगात्मानं पश्यति । न हि बाह्यविषयालोचनपरत्वं प्रत्यगात्मेक्षणं चैकस्य सम्भवति । किमिच्छन्पुनरित्थं महता प्रयासेन स्वभावप्रवृत्तिनिरोधं कृत्वा धीरः प्रत्यगात्मानं पश्यतीति, उच्यते । अमृतत्वम् अमरणधर्मत्वं नित्यस्वभावताम् इच्छन् आत्मन इत्यर्थः ॥
(அனுவாதம்) அந்த பிரத்யக் ஆத்மாவை தன்னுடைய ஸ்வரூபமாய் பார்க்கிறான். பார்த்தான் என்று இறந்த காலத்தில் சந்தஸின் பொருட்டு வந்ததை நிகழ் காலத்தில் அர்த்தம் செய்ய வேண்டும், எவ்வாறு அறிகிறான் என்று கூறப்படுகிறது. ஆவ்ருர்த்த சக்ஷீ: என்றால் ஸ்ரோத்ரம் முதலான இந்திரியங்களால் உண்டான எல்லா விஷயங்களிருந்தும் உள்முகம் திருப்பிய பார்வை உடையவன். இவ்வாறு நன்கு பண்படுத்தப்பட்டவனே பிரத்யக் ஆத்மாவை அடைகிறான். பாஹ்ய விஷயங்களின் பார்வையும், ப்ரத்யக்காத்மாவின் தரிசனமும் ஒருவனுக்கே சம்பவிக்காது. எதனால் எனில் மறுபடியும் இவ்வாறு மிக முயற்சி செய்து இந்திரியங்களின் ஸ்வபாவ பிரவிர்த்தியை நிரோதம் செய்து தீரனானவன் ப்ரத்யக் ஆத்மாவைப் பார்க்கிறான் என்று கூறப்பட்டது. அமிருதத்துவம் அதாவது மரணமற்றதன்மை அதாவது ஆத்மாவினுடைய நித்யஸ்வபாவத் தன்மையை இச்சிக்கிறான் என்பது பொருள்.
यत्तावत्स्वाभाविकं परागेवानात्मदर्शनं तदात्मदर्शनस्य प्रतिबन्धकारणमविद्या तत्प्रतिकूलत्वाद्या च परागेवाविद्योपप्रदर्शितेषु दृष्टादृष्टेषु भोगेषु तृष्णा ताभ्यामविद्यातृष्णाभ्यां प्रतिबद्धात्मदर्शनाः
(அனுவாதம்) அந்த ஆத்மக்ஞான விஷயத்தில் ஸ்வபாவமாகவே பாஹ்யஅநாத்ம தர்சனம் ஆத்ம தர்சனத்திற்கு பிரதிபந்தமாய் இருப்பதற்கு காரணம் அவித்யா. ஏனெனில் ஆத்ம தர்சனத்திற்கு அவித்யாவே பிரதிகூலமாய் இருக்கிறது. அவித்தையினால் காணப்படும் வெளி நோக்குடைய திருஷ்ட அதிருஷ்ட்ட போகங்களில் உள்ளது த்ருஷ்ணா (ஆசை) அந்த அவித்யா, திருஷ்ணா ஆகிய இவை இரண்டினாலும் ஆத்ம தர்சனம் நன்றாக தடைசெய்யப்பட்டுள்ளது
पराचः कामाननुयन्ति बालास्ते मृत्योर्यन्ति विततस्य पाशम् ।
अथ धीरा अमृतत्वं विदित्वा ध्रुवमध्रुवेष्विह न प्रार्थयन्ते ॥ २ ॥
पराचः बहिर्गतानेव कामान् काम्यान्विषयान् अनुयन्ति अनुगच्छन्ति बालाः अल्पप्रज्ञाः ते तेन कारणेन मृत्योः अविद्याकामकर्मसमुदायस्य यन्ति गच्छन्ति विततस्य विस्तीर्णस्य सर्वतो व्याप्तस्य पाशं पाश्यते बध्यते येन तं पाशं देहेन्द्रियादिसंयोगवियोगलक्षणम् । अनवरतं जन्ममरणजरारोगाद्यनेकानर्थव्रातं प्रतिपद्यन्त इत्यर्थः ।
(அனுவாதம்) மந்த புத்தி உள்ள புருஷன் வெளியில் உள்ள காமனைகளை நோக்கி செல்வான். ஆகையால் அவித்யா காம, கர்ம, சமுதாய ரூபமான ம்ருத்யுவினுடைய விஸ்தாரமாக எங்கும் வியாபித்திருக்கும் பாசத்தை அதாவது தேஹ இந்திரியாதிகளின் சம்யோகம் (அடைதல்) வியோகம் (நாசமடைதல்) ரூபமான பாசத்தை (பந்தத்தை) அடைகிறான். அதாவது ஜனனமரண ஜராரோகம் முதலியவைகளை அடைகிறார்கள் என்பது பொருள்.
यत एवम् अथ तस्मात् धीराः विवेकिनः प्रत्यगात्मस्वरूपावस्थानलक्षणम् अमृतत्वं ध्रुवं विदित्वा । देवाद्यमृतत्वं ह्यध्रुवम् , इदं तु प्रत्यगात्मस्वरूपावस्थानलक्षणं ध्रुवम् , ‘न कर्मणा वर्धते नो कनीयान्’ इति श्रुतेः । तदेवंभूतं कूटस्थमविचाल्यममृतत्वं विदित्वा अध्रुवेषु सर्वपदार्थेषु अनित्येषु निर्धार्य, ब्राह्मणा इह संसारेऽनर्थप्राये न प्रार्थयन्ते किञ्चिदपि प्रत्यगात्मदर्शनप्रतिकूलत्वात् । पुत्रवित्तलोकैषणाभ्यो व्युत्तिष्ठन्त्येवेत्यभिप्रायः ॥
(அனுவாதம்) எதனால் இவ்வாறோ அதனால் விவேகிகள் பிரத்யக் ஆத்மஸ்வரூப அவஸ்தான லக்ஷணமான அம்ருதத்தை நிச்சயமாகத் தெரிந்து கொண்டு மேலும் தேவர்கள் முதலியவர்கள் நிச்சயமாக அம்ருதத்துவம் அல்ல என்று தெரிந்து கொண்டு இந்த ப்ரத்யக் ஆத்மஸ்வரூப அவஸ்தான லக்ஷணம்   न कर्मणा वर्धते नो कनीयान् (நகர்மணா வர்த்ததே நோ கனியான்) என்ற வாக்கியத்தால் கர்மத்தினால் வளர்வதும் இல்லை, குறைவதும் இல்லை என்பது நிச்சயமாகிறது. இப்படிப்பட்ட கூடஸ்த்தம் அசைக்க முடியாததுமான,  அமிர்தத்துவத்தை அறிந்து நிச்சயமற்ற எல்லா அநித்திய பதார்த்தங்களையும் நீக்கி பிராமஹ்மணர்கள் அநர்த்தமாகிய சம்சாரம் ஆத்ம தர்சனத்திற்கு பிரதி கூலமாய் (தடையாய்) இருப்பதால் அதில் சிறிதும் ஈடுபடமாட்டார்கள், புத்ர, வித்த, லோக, ஆகிய ஈஷணாதிரயங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள் என்பது பொருள்.
यद्विज्ञानान्न किञ्चिदन्यत्प्रार्थयन्ते ब्राह्मणाः, कथं तदधिगम इति, उच्यते
(அ-கை) ப்ராஹ்ம்மணர்கள் (பிரஹ்மத்தை அறிந்தவர்கள்) எதை அறிந்ததால் வேறு ஒன்றையும் இச்சிப்பது இல்லையோ அதை எவ்வாறு அறிவது என்பது கூறப்படுகிறது.
येन रूपं रसं गन्धं शब्दान्स्पर्शांश्च मैथुनान् ।
एतेनैव विजानाति किमत्र परिशिष्यते । एतद्वै तत् ॥ ३ ॥
येन विज्ञानस्वभावेनात्मना रूपं रसं गन्धं शब्दान् स्पर्शांश्च मैथुनान् मैथुननिमित्तान्सुखप्रत्ययान् विजानाति विस्पष्टं जानाति सर्वो लोकः ।
(அனுவாதம்) உலகத்தவர்கள் எல்லோரும் எந்த விக்ஞான ஸ்வரூபமான ஆத்மா மூலமாக ரூபம், ரய்ம். கந்தம், சப்தம், ஸ்பர்சம், அவ்வாறே மைதுனத்தால் உண்டாகும் சுகத்தை ஸ்பஷ்ட்டமாக அறிகிறார்களோ(அது ப்ரஹ்மமாகும்)
ननु नैवं प्रसिद्धिर्लोकस्य आत्मना देहादिविलक्षणेनाहं विजानामीति । देहादिसङ्घातोऽहं विजानामीति तु सर्वो लोकोऽवगच्छति ।
(சங்கை) உலகத்தில் ஆத்மாவைக் காட்டிலும் தேஹாதிகளை வேறாய் அறிகிறேன் என்பது உலகில் கிடையாது. ஆனால் எல்லோரும் தேஹாதி சங்காதனான நான் அறிகிறேன் என்றல்லவா கூறுகிறார்கள்.
ननु देहादिसङ्घातस्यापि शब्दादिस्वरूपत्वाविशेषाद्विज्ञेयत्वाविशेषाच्च न युक्तं विज्ञातृत्वम् । यदि हि देहादिसङ्घातो रूपाद्यात्मकः सन् रूपादीन्विजानीयात् , तर्हि बाह्या अपि रूपादयोऽन्योन्यं स्वं स्वं रूपं च विजानीयुः । न चैतदस्ति । तस्माद्देहादिलक्षणांश्च रूपादीन् एतेनैव देहादिव्यतिरिक्तेनैव विज्ञानस्वभावेनात्मना विजानाति लोकः । यथा येन लोहो दहति सोऽग्निरिति तद्वत् ।
(அனுவாதம்) அவ்வாறு அல்ல, தேஹாதி சங்காதமாய் இருந்தாலும் சப்தம் முதலிய ஸ்வரூபத்தைக் காட்டிலும் தனியாக வேறு விஷேசம் இல்லாததால் அவைகளுக்கு விக்ஞாத்ருத்வம் (அறியும் தன்மை) பொருந்தாது. தேஹாதி சங்காதம் ரூபம் முதலியதாய் இருந்து கொண்டு ரூபம் முதலியவைகளை அறியலாம். அவைகள் பாஹ்யமாய் இருந்தாலும் ரூபாதிகள் ஒன்றைஒன்று தன், ஸ்வரூபத்தை அறியலாம் என்றால் அது அவ்வாறு அல்ல. ஆகவே தேஹாதிஸ்வரூபங்களான ரூபாதிகளை, தேஹாதிகளைக் காட்டிலும் வேறுபட்டவனும் விக்ஞான ஸ்வரூபனுமாகிய ஆத்மாவினாலேயே லோகமானது அறிந்து கொள்கிறது. எதனால் இரும்பானது சுடுகிறதோ அது அக்னி என்பது எவ்விதமோ அவ்விதமே இங்கும் அறிக.
आत्मनोऽविज्ञेयम् किम् अत्र अस्मिंल्लोके परिशिष्यते न किञ्चित्परिशिष्यते सर्वमेव त्वात्मना विज्ञेयम् , यस्यात्मनोऽविज्ञेयं न किञ्चित्परिशिष्यते, स आत्मा सर्वज्ञः । एतद्वै तत् । किं तत् यन्नचिकेतसा पृष्टं देवादिभिरपि विचिकित्सितं धर्मादिभ्योऽन्यत् विष्णोः परमं पदं यस्मात्परं नास्ति तद्वै एतत् अधिगतमित्यर्थः ॥
(அனுவாதம்) ஆத்மாவால் அறியாதது இந்த உலகத்தில் எது மிஞ்சி உள்ளது? ஆத்மாவால் அறியாதது சிறிதும் இல்லை. எல்லாம் ஆத்மாவாலேயே அறியப்படுகிறது. எதனால் ஆத்மாவால் அறியாதது சிறிதும் இல்லையோ அதனால் அந்த ஆத்மா சர்வக்ஞன். அது யார்? எந்த விஷயத்தைக் குறித்து நசிகேதசன் எந்த கேள்வியைக் கேட்டாரோ அது தேவர் முதலியவர்களுக்கும் சந்தேகத்தைக் கொடுக்க கூடியது. தர்மா தர்மங்களைக் காட்டிலும் வேறான விஷ்ணுவினுடைய பரமம்பதம். அதைக் காட்டிலும் மேலான பதம் கிடையாது. என்று அறியப்பட்டதாகிறது என்பது பொருள்.
अतिसूक्ष्मत्वाद्दुर्विज्ञेयमिति मत्वैतमेवार्थं पुनः पुनराह
(அ-கை) மிக்க சூக்ஷ்மமாய் இருப்பதால் அதை அறிவது மிகக் கடினம் என்று கருதி இந்த அர்த்தத்தையே மறுபடியும், மறுபடியும் கூறுகிறது.
स्वप्नान्तं जागरितान्तं चोभौ येनानुपश्यति ।
महान्तं विभुमात्मानं मत्वा धीरो न शोचति ॥ ४ ॥
स्वप्नान्तं स्वप्नमध्यं स्वप्नविज्ञेयमित्येतत् । तथा जागरितान्तं जागरितमध्यं जागरितविज्ञेयं च । उभौ स्वप्नजागरितान्तौ येन आत्मना अनुपश्यति लोकः इति सर्वं पूर्ववत् । तं महान्तं विभुमात्मानं मत्वा अवगम्यात्मभावेन साक्षादहमस्मि परमात्मेति धीरः न शोचति ॥
(அனுவாதம்) ஸ்வப்னாந்தம் அதாவது ஸ்வப்நத்தின் அந்தம் (சுழுத்தி அவஸ்தையையும்) ஸ்வப்னத்தின் மத்யத்தில் அறியக்கூடிய பொருள்களையும் அதாவது ஸ்வப்ன ஜாக்ரத்தில் அந்தர்கதமான பதார்த்தங்களை ஆத்மாவால் தொடர்ந்து பார்க்கப்படுகிறது. மற்றவை எல்லாம் முன் போல், அந்த மஹானும், விபுவுமான ஆத்மாவை அறிந்து ஆத்ம பாவனையினால் நான் சாக்ஷாத் பரமாத்ம ஸ்வரூபமாய் இருக்கிறேன் என்று தீரன் (ஞானி)சோகத்தை அடையமாட்டான்.
किञ्च,
(அ-கை) மேலும்
य इमं मध्वदं वेद आत्मानं जीवमन्तिकात् ।
ईशानं भूतभव्यस्य न ततो विजुगुप्सते । एतद्वै तत् ॥ ५ ॥
यः कश्चित् इमं मध्वदं कर्मफलभुजं जीवं प्राणादिकलापस्य धारयितारमात्मानं वेद विजानाति अन्तिकात् अन्तिके समीपे ईशानम् ईशितारं भूतभव्यस्य कालत्रयस्य, ततः तद्विज्ञानादूर्ध्वमात्मानं न विजुगुप्सते न गोपायितुमिच्छति, अभयप्राप्तत्वात् । यावद्धि भयमध्यस्थोऽनित्यमात्मानं मन्यते तावद्गोपायितुमिच्छत्यात्मानम् । यदा तु नित्यमद्वैतमात्मानं विजानाति, तदा कः किं कुतो वा गोपायितुमिच्छेत् । एतद्वै तदिति पूर्ववत् ॥
(அனுவாதம்) எவன் ஒருவன் இந்த மத்வதம் கர்ம பலத்தை அனுபவிக்கும் அந்த ஜீவன் பிராணன் முதலிய கலாபங்களைத் தரிக்கும் ஆத்மாவை. மேலும் முக்காலத்திற்கும் நியந்தாவான அந்த ஆத்மாவை மிகச் சமீபமாக (அபேதமாக) அறிந்து அதனால் அந்த விக்ஞானத்தை அடைந்ததற்கு மேல் ஆத்மாவை ரக்ஷிக்க விரும்புவதில்லை. எதுவரையிலும் பயம் அத்யஸ்த்தமாய் ஆத்மா உள்ளதோ அது அநித்தியம் என்று அறிகிறார்கள். அப்பொழுது ஆத்மாவை ரக்ஷிக்க இச்சிக்கிறார்கள். எப்பொழுது ஆத்மா நித்தியம், அத்வைதம் என்ற விக்ஞானம் ஏற்பட்ட பொழுது எது? யார்? எதனால்? அதை காப்பாற்ற நினைப்பார்கள். एतत् वैतदिति (ஏதத்வைதத் இதி) என்பது முன்பு போலாகும்.
यः प्रत्यगात्मेश्वरभावेन निर्दिष्टः, स सर्वात्मेत्येतद्दर्शयति —
(அ-கை) எவன் ஒருவன் பிரத்யக் ஆத்மாவை பரமாத்ம பாவனையாக நிச்சயமா உபதேசிக்கப்பட்டானோ அவன் சர்வாத்மா என்பதை விளக்குகிறார்.
यः पूर्वं तपसो जातमद्भ्यः पूर्वमजायत ।
गुहां प्रविश्य तिष्ठन्तं यो भूतेभिर्व्यपश्यत । एतद्वै तत् ॥ ६ ॥
यः कश्चिन्मुमुक्षुः पूर्वं प्रथमं तपसः ज्ञानादिलक्षणाद्ब्रह्मण इत्येतत् ; जातम् उत्पन्नं हिरण्यगर्भम् । किमपेक्ष्य पूर्वमिति, आह — अद्भ्यः पूर्वम् अप्सहितेभ्यः पञ्चभूतेभ्यः, न केवलाभ्योऽद्भ्य इत्यभिप्रायः । अजायत उत्पन्नः यस्तं प्रथमजं देवादिशरीराण्युत्पाद्य सर्वप्राणिगुहां हृदयाकाशं प्रविश्य तिष्ठन्तं शब्दादीनुपलभमानं भूतेभिः भूतैः कार्यकरणलक्षणैः सह तिष्ठन्तं यो व्यपश्यत यः पश्यतीत्येतत् ; य एवं पश्यति, स एतदेव पश्यति — यत्तत्प्रकृतं ब्रह्म ॥
(அனுவாதம்) எந்த ஒரு முமூக்ஷு முதலில் தபஸினால் அதாவது ஞான முதலிய லக்ஷணத்தை உடைய அந்த பிரஹ்மத்திடமிருந்து உண்டானது ஹிரண்யகர்ப்பன். எதை அபேக்ஷித்து முதலில் என்று கூறப்பட்டது என்பதை சொல்லுகிறார் (அத்ப்ய:) முதலில் நீருடன் கூடியவைகளால் உள்ள பஞ்ச பூதங்களிலிருந்தும் கேவலம் தண்ணீரினால் மட்டுமல்ல என்பது அபிப்ராயம் (ஹிரண்யகர்ப்பன்) தேவாதி சரீரங்களை உற்பன்னம் செய்து எல்லாப் பிராணிகளின் ஹிருதய குஹையில் நுழைந்து காரிய கரண ரூப பூதங்களுடன் சப்தாதி விஷயங்களை அனுபவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அவ்வாறு பார்க்கப்பட்ட ஹிரண்யகர்ப தர்சனமே ப்ரகிருதமான ப்ரஹ்ம தர்சனமாகும்.
किञ्च,
(அ-கை) மேலும்
या प्राणेन सम्भवति अदितिर्देवतामयी ।
गुहां प्रविश्य तिष्ठन्तीं या भूतेभिर्व्यजायत । एतद्वै तत् ॥ ७ ॥
या सर्वदेवतामयी सर्वदेवतात्मिका प्राणेन हिरण्यगर्भरूपेण परस्माद्ब्रह्मणः सम्भवति शब्दादीनामदनात् अदितिः तां पूर्ववद्गुहां प्रविश्य तिष्ठन्तीम् अदितिम् । तामेव विशिनष्टि — या भूतेभिः भूतैः समन्विता व्यजायत उत्पन्नेत्येतत् ॥
(அனுவாதம்) எந்த அந்த தேவதா ஸ்வரூபமான ஹிரண்ய கர்ப்பத்துடன் பரப்ரஹ்மத்திடமிருந்து உண்டானதாய் சப்தம் முதலியவைகளை போஜனம் செய்வதால் அதாவது அனுபவித்ததால் அதிதியாக அனுபவிப்பதாக  இருக்கிறது. புத்தி ரூப குகையில் முன்பு போல் பிரவேசித்து இருக்கும் அந்த அதிதியை அறி. அந்த அதிதியின் விசேஷத்தை விளக்குகிறார். எது பூதங்களுடன் அதாவது எது பூதங்களுடன் சேர்ந்து உண்டாயிற்றோ என்பதாகும்.
किञ्च,
(அ-கை) மேலும்
अरण्योर्निर्हितो जातवेदा गर्भ इव सुभृतो गर्भिणीभिः ।
दिवे दिव ईड्यो जागृवद्भिर्हविष्मद्भिर्मनुष्येभिरग्निः । एतद्वै तत् ॥ ८ ॥
यः अधियज्ञम् उत्तराधरारण्योर्निहितः स्थितः जातवेदा अग्निः पुनः सर्वहविषां भोक्ता अध्यात्मं च योगिभिः, गर्भ इव गर्भिणीभिः अन्तर्वत्नीभिरगर्हितान्नभोजनादिना यथा गर्भः सुभृतः सुष्ठु सम्यग्भृतो लोके, इत्थमेव ऋत्विग्भिर्योगिभिश्च सुभृत इत्येतत् । किञ्च, दिवे दिवे अहन्यहनि ईड्यः स्तुत्यो वन्द्यश्च कर्मिभिर्योगिभिश्चाध्वरे हृदये च जागृवद्भिः जागरणशीलैः अप्रमत्तैरित्येतत् । हविष्मद्भिः आज्यादिमद्भिः ध्यानभावनावद्भिश्च मनुष्येभिः मनुष्यैः अग्निः ; एतद्वै तत् तदेव प्रकृतं ब्रह्म ॥
(அனுவாதம்) யாகத்தில் அரணிக் கட்டையின் மேலும் கீழுமாக இருந்து கொண்டு மறுபடியும் எல்லா ஹவிசையும் சாப்பிடுகின்ற போக்தா அத்யாத்ம ரூப ஜாதவேதா எனப்படும் அக்னியாகும். எவ்வாறு கர்ப்பமடைந்த ஸ்தீரீகள் சுத்தமான அன்ன பானாதிகளால் தங்களுடைய கர்ப்பத்தை எவ்வாறு மிகவும் நன்றாக ரக்ஷிக்கிறார்களோ அவ்வாறு யக்ஞம் செய்பவர்களும், யோகிகளும் அதை தாங்குகிறார்கள். மேலும் ஒவ்வொரு நாளும் நல்ல விழிப்புணர்ச்சி உள்ளவர்களும், ஹவிஸ்(நெய்) முதலிய யக்ஞத்திற்கு தேவையானவகள் உள்ளவர்களும் தியானத்தில் ஈடுபாடு உள்ளவர்களுமான மனிதர்கள் யாகத்தில் ஈடுபாடுள்ள கர்மடர்களும், யோகிகளால் ஹ்ருதயத்தில் துதிக்கவும், நமஸ்கரிக்கவும் பட்டதுமான அக்னி எதுவோ அந்த அக்னியாகவும், அதன் உபலஷணமான விராட்புருஷனாகும். அது நிச்சயமாக அந்த ப்ரக்ருத பிரஹ்மமே ஆகிறது.
किञ्च,
(அ-கை) மேலும்
यतश्चोदेति सूर्यः अस्तं यत्र च गच्छति ।
तं देवाः सर्वे अर्पितास्तदु नात्येति कश्चन । एतद्वै तत् ॥ ९ ॥
यतश्च यस्मात्प्राणात् उदेति उत्तिष्ठति सूर्यः, अस्तं निम्लोचनं तिरोधानं यत्र यस्मिन्नेव च प्राणे अहन्यहनि गच्छति, तं प्राणमात्मानं देवाः सर्वे अग्न्यादयः अधिदैवं वागादयश्चाध्यात्मं सर्वे विश्वे अरा इव रथनाभौ अर्पिताः सम्प्रवेशिताः स्थितिकाले । सोऽपि ब्रह्मैव । तत् एतत्सर्वात्मकं ब्रह्म, उ नात्येति नातीत्य तदात्मकतां तदन्यत्वं गच्छति, कश्चन कश्चिदपि एतद्वै तत् ॥
(அனுவாதம்) எந்த பிராணனில் இருந்து ஹிரண்யகர்ப்பரிடமிருந்து சூர்யன் வெளிப்படுகிறதோ, ஒவ்வொரு நாளும் மறைகிறதோ அந்த ஆத்மாவான விச்வ ஹிரண்கர்ப்பர்னிடத்தில் அதாவது வண்டியின் குடத்தில் ஆராக்கால்கள் இணைக்கப்பட்டது போல் அதி தெய்வங்களான அக்னி முதலிய தேவதைகளும், அத்யாத்மத்தில் வாக்காதிகளுமான எல்லா தேவதைகளும் இணைக்கப்பட்டுள்ளன. ஸ்திதி காலத்திலும் அது பிரஹ்மமே. அது சர்வாத்மகமான ப்ரஹ்மமாகும். ஒவ்வொன்றும் பிரஹ்மத்தை விட்டு விலகுவதில்லை .அதாவது ப்ரஹ்மத்தைத் தவிர வேறாக இருத்தலை அடைவதில்லை.
यद्ब्रह्मादिस्थावरान्तेषु वर्तमानं तत्तदुपाधित्वादब्रह्मवदवभासमानं संसार्यन्यत्परस्माद्ब्रह्मण इति मा भूत्कस्यचिदाशङ्केतीदमाह —
(அ-கை) எதானது ப்ரஹ்மா முதல் ஸ்தாவரம் வரை உள்ளவைகள் அந்த அந்த உபாதிகளால் அப்ரஹ்மம் போல் விளங்குகின்ற சம்சாரி, என்றும், பரபிரஹ்ம்மத்தைக் காட்டிலும் வேறானது என்றும் ஒருவனுக்கும் சங்கை வரக்கூடாது என்று இவ்வாறு கூறுகிறார்.
यदेवेह तदमुत्र यदमुत्र तदन्विह ।
मृत्योः स मृत्युमाप्नोति य इह नानेव पश्यति ॥ १० ॥
यदेवेह कार्यकारणोपाधिसमन्वितं संसारधर्मवदवभासमानमविवेकिनाम् , तदेव स्वात्मस्थम् अमुत्र नित्यविज्ञानघनस्वभावं सर्वसंसारधर्मवर्जितं ब्रह्म । यच्च अमुत्र अमुष्मिन्नात्मनि स्थितम् , तदनु इह तदेव इह कार्यकरणनामरूपोपाधिम् अनु विभाव्यमानं नान्यत् ।
(அனுவாதம்) அவிவேகிக்கு எதனாது இங்கு காரிய கரண உபாதிகளுடன் கூடிய சம்சார தர்மம் போல் அவபாஸித்துக் கொண்டிருக்கிறதோ (தோன்றுவது போல் விளங்குகிறதோ) அதுதான் தன்னுள் நிலைத்திருக்கின்றகாரணோ உபாதியில் நித்யவிக் ஞானகன ஸ்வபாவமாய் எல்லா சம்சார தர்மங்களும் அற்றபிரஹ்மம். எது அந்த காரணாத்மாவில் இருக்கிறதோ அந்த ஆத்மாவில் இருந்து கொண்டு அதுவே இங்கு நாம ரூபகரண உபாதியை ஆஸ்ரயத்தே அறியப்படுகிறது. வேறு ஒன்றால் அல்ல.
तत्रैवं सति उपाधिस्वभावभेददृष्टिलक्षणया अविद्यया मोहितः सन् य इह ब्रह्मण्यनानाभूते परस्मादन्योऽहं मत्तोऽन्यत्परं ब्रह्मेति नानेव भिन्नमिव पश्यति उपलभते, स मृत्योर्मरणात् मृत्युं मरणं पुनः पुनः जननमरणभावमाप्नोति प्रतिपद्यते । तस्मात्तथा न पश्येत् । विज्ञानैकरसं नैरन्तर्येणाकाशवत्परिपूर्णं ब्रह्मैवाहमस्मीति पश्येदिति वाक्यार्थः ॥
(அனுவாதம்) இவ்வாறு இருக்கும் பொழுது உபாதிஸ்வபாவ, பேத திருஷ்ட்டியால் அவித்தையினால் மோஹித்தவனாகி எவன் இங்கு நாநா அற்றபிரஹ்மத்தினிடத்தில் நான் வேறு, என்னைக் காட்டிலும் பிரஹ்மம் வேறு என்று நாநாவாக பின்னம் போல் அறிகிறானோ அவன் மறுபடியும், மறுபடியும் மரணத்தை அறிகிறான். ஆகையால் அவ்வாறு பார்க்காதே, விக்ஞானமாயும், ஏகரசமாயும், இடையறாது ஆகாசம் போல் நீக்கமறநிறைந்துள்ளதுமான பரிபூரணமான பிரஹ்மமாய் நான் இருக்கிறேன் என்பது வாக்கியத்தின் பொருளாகும்.
प्रागेकत्वविज्ञानादाचार्यागमसंस्कृत
(அ-கை) ஏகத்துவ விக்ஞானம் அடைவதற்கு முன்னால் குரு, சாஸ்திரம் இவற்றால் பண்படுத்தப்பட்ட
मनसैवेदमाप्तव्यं नेह नानास्ति किञ्चन ।
मृत्योः स मृत्युं गच्छति य इह नानेव पश्यति ॥ ११ ॥
मनसैव इदं ब्रह्मैकरसम् आप्तव्यम् आत्मैव नान्यदस्तीति । आप्ते च नानात्वप्रत्युपस्थापिकाया अविद्याया निवृत्तत्वात् इह ब्रह्मणि नाना नास्ति किञ्चन अणुमात्रमपि । यस्तु पुनरविद्यातिमिरदृष्टिं न मुञ्चति इह ब्रह्मणि नानेव पश्यति, स मृत्योर्मृत्युं गच्छत्येव स्वल्पमपि भेदमध्यारोपयन्नित्यर्थः ॥
(அனுவாதம்) மனதால் இந்த ஏகரச ப்ரஹ்மம் ஆத்மாவே வேறு இல்லை என்று அறியப்பட வேண்டும். அடைந்த பொழுது நாநாத்துவத்தை ஸ்தாபித்த அவித்தையின் நிவர்த்தியால் இந்த பிரஹ்மத்தினிடத்தில் நாநாத்துவம் என்பது அணு அளவும் கிடையாது. மேலும் எவன் ஒருவன் சிறிதளவு பேதத்தை அத்யாரோபம் செய்து அவித்தையாகிற இருண்ட திருஷ்ட்டியை விடவில்லையோ, அவன் நாநாவாகப் பார்ப்பதால் மிருத்யுவிலிருந்து மிருத்யுவையே அடைகின்றான்.
पुनरपि तदेव प्रकृतं ब्रह्माह —
(அ-கை) மறுபடியும் அப்பரம் ப்ரஷ்மத்தைப் பற்றி கூறுகிறார்.
अङ्गुष्ठमात्रः पुरुषो मध्य आत्मनि तिष्ठति ।
ईशानं भूतभव्यस्य न ततो विजुगुप्सते । एतद्वै तत् ॥ १२ ॥
अङ्गुष्ठमात्रः अङ्गुष्ठपरिमाणः । अङ्गुष्ठपरिमाणं हृदयपुण्डरीकं तच्छिद्रवर्त्यन्तःकरणोपाधिरङ्गुष्ठमात्रः अङ्गुष्ठमात्रवंशपर्वमध्यवर्त्यम्बरवत् । पुरुषः पूर्णमनेन सर्वमिति । मध्ये आत्मनि शरीरे तिष्ठति यः तम् आत्मानम् ईशानं भूतभव्यस्य विदित्वा, न तत इत्यादि पूर्ववत् ॥
(அனுவாதம்) அங்குஷ்ட்ட மாத்திரம் என்பது கட்டை விரல் அளவாகும். கட்டை விரல் உள்ள இருதய புண்டரீகத்தில் உள்ள அந்தக் கரணத்தை உபாதியாகக் கொண்டுள்ளது. கட்டை விரல் அளவு உள்ள மூங்கில் ஒட்டையின் மத்தியில் உள்ள ஆகாயம் போல் புருஷன் பூரணமாய் இருப்பதால் எல்லாம் என்பதால் சரீரத்தில் நடுவில் இருக்கிறானோ அந்த நியந்தாவானவனும் முக்காலமும் அறிந்தவனுமான ஆத்மாவை அறிந்தவன். (தன்னை ரக்ஷிப்பதற்கு ஒன்றும் விரும்ப மாட்டான்.)
किञ्च,
மேலும்
अङ्गुष्ठमात्रः पुरुषो ज्योतिरिवाधूमकः ।
ईशानो भूतभव्यस्य स एवाद्य स उ श्वः । एतद्वै तत् ॥ १३ ॥
अङ्गुष्ठमात्रः पुरुषः ज्योतिरिव अधूमकः, अधूमकमिति युक्तं ज्योतिःपरत्वात् । यस्त्वेवं लक्षितो योगिभिर्हृदये ईशानः भूतभव्यस्य स एव नित्यः कूटस्थः अद्य इदानीं प्राणिषु वर्तमानः स उ श्वोऽपि वर्तिष्यते, नान्यस्तत्समोऽन्यश्च जनिष्यत इत्यर्थः । अनेन ‘नायमस्तीति चैके’ (क. उ. १ । १ । २०) इत्ययं पक्षो न्यायतोऽप्राप्तोऽपि स्ववचनेन श्रुत्या प्रत्युक्तः, तथा क्षणभङ्गवादश्च ।
(அனுவாதம்) அங்குஷ்ட மாத்திர உள்ள புருஷன் புகையற்ற ஜ்யோதிஸ் போன்றவன் என்பதால் இங்கு अधूमकम् (புகை அற்றவன்) என்பது பொருந்தும். யோகிகளினால் ஹ்ருதயத்தில் பூத பவிஷ்யங்களுக்கு நியந்தாவான எவன் காணப்பட்டானோ நித்யனும் கூடஸ்தனுமான அவன் இப்பொழுதுள்ள பிராணன்களில்(ஜீவர்களில்) இருக்கிறவனாயும் அவனே நாளையும் இருக்கப் போகிறான். அவனுக்கு சமமாக வேறு என்று உண்டாகப் போவதில்லை. அதனால் இவன் இல்லை என்று சிலருடைய பக்ஷமானது யுக்தியினால் பொருந்தவில்லை. அவ்வாறே சுருதி வாக்கியங்களாலும் மறுக்கப்படுதிறது. அவ்வாறே க்ஷணபங்கவாதமும் மறுக்கப்படுகிறது.
पुनरपि भेददर्शनापवादं ब्रह्मण आह —
(அ-கை) பிரம்மத்திற்கு பேத தர்சனம் இல்லை என்பதனை விளக்குவது இந்த மந்திரம்.
यथोदकं दुर्गे वृष्टं पर्वतेषु विधावति ।
एवं धर्मान्पृथक्पश्यंस्तानेवानुविधावति ॥ १४ ॥
यथा उदकं दुर्गे दुर्गमे देशे उच्छ्रिते वृष्टं सिक्तं पर्वतेषु पर्ववत्सु निम्नप्रदेशेषु विधावति विकीर्णं सद्विनश्यति, एवं धर्मान् आत्मनोऽभिन्नान् पृथक् पश्यन् पृथगेव प्रतिशरीरं पश्यन् तानेव शरीरभेदानुवर्तिनः अनुविधावति । शरीरभेदमेव पृथक् पुनः पुनः प्रतिपद्यत इत्यर्थः ॥
(அனுவாதம்) எவ்வாறு மிகக் கடினமான உயரத்தில் உள்ள பிரதேசங்களில் பெய்த மழை நீரானது மலைகளில் உள்ள பள்ளத்தாக்குகளில் ஓடி சிதறி நாசமாவது போல் தர்மங்களை அதாவது ஆனந்தம், விஷயானுபவம், சைதன்யம், இவைகளை ஆத்மாவைக் காட்டிலும் வெவ்வேறாக பார்த்து ஒவ்வொரு சரீரத்திலும் தனியாகப் பார்த்து அந்த சரீர தர்மங்களை நோக்கியே ஒடுகிறான். மறபடியும், மறுபடியும் சரீர பேதத்தையே அடைகிறான் என்பது பொருள்.
अस्य पुनर्विद्यावतो विध्वस्तोपाधिकृतभेददर्शनस्य विशुद्धविज्ञानघनैकरसमद्वयमात्मानं पश्यतो विजानतो मुनेर्मननशीलस्यात्मस्वरूपं कथं सम्भवतीति, उच्यते
(அ-கை) எவன் (குரு உபதேசத்தால்) வித்தை உடையவனாயும், உபாதி பேத தர்சனம் நீங்கியவனாயும் உள்ளானோ அவன் மிக்க சுத்தமான ஞானஏகரசமாய் உள்ளதும் அத்வைதமானதுமான ஆத்மாவை அறிந்த முனிக்கு (மனன சீலனுக்கு) ஆத்ம ஸ்வரூபம் எவ்வாறு உண்டாகிறது என்பதைக் கூறுகிறார்.
यथोदकं शुद्धे शुद्धमासिक्तं तादृगेव भवति । एवं मुनेर्विजानत आत्मा भवति गौतम ॥ १५ ॥
यथा उदकं शुद्धे प्रसन्ने शुद्धं प्रसन्नम् आसिक्तं प्रक्षिप्तम् एकरसमेव नान्यथा, तादृगेव भवति आत्माप्येवमेव भवति एकत्वं विजानतो मुनेः मननशीलस्य हे गौतम । तस्मात्कुतार्किकभेददृष्टिं नास्तिककुदृष्टिं चोज्झित्वा मातृपितृसहस्रेभ्योऽपि हितैषिणा वेदेनोपदिष्टमात्मैकत्वदर्शनं शान्तदर्पैरादरणीयमित्यर्थः ॥
(அனுவாதம்) எவ்வாறு சுத்தமான ஜலத்தில் சுத்தமான ஜலத்தை சேர்த்தால் ஒரே ரசமாய் ஆகிவிடும் (ஒன்றாய் ஆகி விடும்). ஆனால் வேறாக ஆவதில்லை. ஹே கௌதம! ஏகத்துவத்தை அறிந்த முனிக்கு அதாவது மனன சீலருக்கு ஆத்மாவும் அவ்வாறே ஆகும். ஆகையால் குதர்க்க திருஷ்ட்டியையும், நாஸ்திக குதிருஷ்ட்டியையும் விட்டு ஆயிரக்கணக்கான அம்மா அப்பாக்களைக் காட்டிலும் நமக்கு ஹிதத்தை (நன்மையை) கொடுக்கும் வேதத்தில் உபதேசித்த ஆத்ம ஐக்கிய தர்சனத்தை தர்ப்பத்தை நீக்கியவர்கள் ஆதரிக்க வேண்டும். (அதன் படி அறிந்து கொள்ள வேண்டும்)
इति चतुर्थवल्लीभाष्यम् ॥
पुरमेकादशद्वारमजस्यावक्रचेतसः ।
अनुष्ठाय न शोचति विमुक्तश्च विमुच्यते । एतद्वै तत् ॥ १ ॥
पुनरपि प्रकारान्तरेण ब्रह्मतत्त्वनिर्धारणार्थोऽयमारम्भः, दुर्विज्ञेयत्वाद्ब्रह्मण:-
(அ-கை) ப்ரஹ்மத்தை அறிவது மிகக் கடினமானதால் மறுபடியும் வேறு பிரகரணத்தால் பிரஹ்ம தத்துவத்தை நிச்சயம் செய்வதற்காக இது ஆரம்பிக்கப்படுகிறது.
पुरं पुरमिव पुरम् । द्वारद्वारपालाधिष्ठात्राद्यनेकपुरोपकरणसम्पत्तिदर्शनात् शरीरं पुरम् । पुरं च सोपकरणं स्वात्मना असंहतस्वतन्त्रस्वाम्यर्थं दृष्टम् । तथेदं पुरसामान्यादनेकोपकरणसंहतं शरीरं स्वात्मना असंहतराजस्थानीयस्वाम्यर्थं भवितुमर्हति ।
(அனுவாதம்) பட்டிணம் போல் பட்டிணம், துவார பாலகர்கள், அதன் அதிஷ்டான தேவதைகள் முதலிய அநேக பட்டிணத்திற்குக்கான உபகரணங்களாகிய சம்பத்துக்களுடன் காணப்படுவதால் புரம் (பட்டிணம்) அந்தபுரமும், அதனுடைய உபகரணங்களும் தன்னுடன் சேராமல் ஸ்வாதந்திரயமாக தன்னுடைய ஸ்வாமி (ராஜா) இருத்தல் காணப்படுகிறது. அவ்வாறே இந்த சரீரமும் அநேக உபகரணங்களுடன் கூடியிருந்தாலும் தானாய் சம்பந்தப்படாத ராஜாவைப் போல் ஸ்வாமியாய் இருத்தல் பொருந்தும்.
तच्चेदं शरीराख्यं पुरम् एकादशद्वारम् ; एकादश द्वाराण्यस्य — सप्त शीर्षण्यानि, नाभ्या सहार्वाञ्चि त्रीणि, शिरस्येकम् , तैरेकादशद्वारं पुरम् । कस्य ? अजस्य जन्मादिविक्रियारहितस्यात्मनो राजस्थानीयस्य पुरधर्मविलक्षणस्य । अवक्रचेतसः अवक्रम् अकुटिलमादित्यप्रकाशवन्नित्यमेवावस्थितमेकरूपं चेतो विज्ञानमस्येति अवक्रचेताः तस्यावक्रचेतसः राजस्थानीयस्य ब्रह्मणः।
(அனுவாதம்) சரீரம் எனப்படும் புரத்தில் பதினொன்று துவாரங்கள் (ஒட்டைகள்). அந்த பதினோறு துவாரங்களில் ஏழு துவாரங்கள் தலையில் இருக்கின்றன. நாபிக்கும், அதற்கு கீழும் சேர்த்து மூன்று துவாரங்கள் இருக்கின்றன. ஒன்று தலையின் உச்சியில் உள்ளது. இந்த பதினோரு துவாரங்கள் உடையது புரம்(சரீரம்). இந்த புரம் யாருடையது? பிறகபற்ற, ஜன்மம் முதலிய விகாரங்கள் அற்ற ராஜ ஸ்தானத்தில் உள்ள புரத்திற்கான தர்மங்களுக்கு விலக்ஷணமான (வேறான) ஆத்மாவிற்கா? குறுகிய அவக்ரசேதச என்றால் புரதர்மத்தைக் காட்டிலும் வேறான ஜன்மம் முதலிய விகாரங்கள் அற்றதும் சூரியனுடையப் பிரகாசம் போல் நித்யமாய் இருக்கும் ஏக ரூபம். சேதஸன்(தைஜசன்) விக்ஞானம் எதற்கு இருக்கிறதோ அது அவக்ரசேத்தஸ் ராஜஸ்தானீயமான ப்ரஹ்மத்தினுடையதாகும்.
यस्येदं पुरं तं परमेश्वरं पुरस्वामिनम् अनुष्ठाय ध्यात्वा । ध्यानं हि तस्यानुष्ठानं सम्यग्विज्ञानपूर्वकम् । तं सर्वैषणाविनिर्मुक्तः सन्समं सर्वभूतस्थं ध्यात्वा न शोचति । तद्विज्ञानादभयप्राप्तेः शोकावसराभावात्कुतो भयेक्षा । इहैवाविद्याकृतकामकर्मबन्धनैर्विमुक्तो भवति । विमुक्तश्च सन्विमुच्यते ; पुनः शरीरं न गृह्णातीत्यर्थः ॥
(அனுவாதம்) அந்த புரம் எவருடையதோ அந்த பரமேஸ்வரரை அதாவது அந்த புரத்தின் ஸ்வாமியை அனுஷ்ட்டானம் செய்து அதாவது தியானம் செய்து, த்யானம் என்பது சம்யக் விக்ஞான பூர்வமாய் அனுஷ்ட்டானம் செய்தவர் எல்லா ஈஷணைகளும் அற்றவராய் இருந்து கொண்டு எல்லோருள்ளும் சமமாய் இருப்பவரை தியானம் செய்து சோகத்தை அடைய மாட்டார். அதை அறிந்ததால் அபயம் (பயமற்றதன்மை) அடைந்தவனுக்கு சோகம் அடைவு இல்லாததால் எதற்கு பயப்பட வேண்டும். இங்கேயே அவித்தையினால் உண்டான காம கர்ம பந்தங்களில் இருந்து விடுபட்டவனாகின்றான். முக்தனாய் இருந்து கொண்டு முக்தனாகின்றான். அதாவது மறுபடியும் சரீரத்தை அடைவதில்லை என்பது பொருள்.
स तु नैकपुरवर्त्येवात्मा किं तर्हि सर्वपुरवर्ती । कथम् ?
(அ-கை) ஆத்மா ஒரு சரீரத்தில் மட்டும் இல்லை. ஆனால் எல்லா சரீரத்தின் உள்ளும் இருக்கிறார் அது எவ்வாறு
हंसः शुचिषद्वसुरन्तरिक्षसद्धोता वेदिषदतिथिर्दुरोणसत् ।
नृषद्वरसदृतसद्व्योमसदब्जा गोजा ऋतजा अद्रिजा ऋतं बृहत् ॥ २ ॥
हंसः हन्ति गच्छतीति । शुचिषत् शुचौ दिवि आदित्यात्मना सीदतीति । वसुः वासयति सर्वानिति । वाय्वात्मना अन्तरिक्षे सीदतीति अन्तरिक्षसत् । होता अग्निः, ‘अग्निर्वै होता’ इति श्रुतेः । वेद्यां पृथिव्यां सीदतीति वेदिषत् , ‘इयं वेदिः परोऽन्तः पृथिव्याः’ (ऋ. मं. १ । २२ । १६४ । ३५) इति मन्त्रवर्णात् । अतिथिः सोमः सन् दुरोणे कलशे सीदतीति दुरोणसत् ।ब्राह्मणोऽतिथिरूपेण वा दुरोणेषु गृहेषु सीदतीति दुरोणसत् ।
(அனுவாதம்) ஹம்ஸ: என்ற பதத்தின் தாது அர்த்தமாகிய செல்லுதல் என்பது (இந்த பரமாத்மா) எங்கும் வியாபித்துள்ளது என்பதாகும். சுத்தமான ஆகாயத்தில் சூரியன் முதலிய திவ்ய ரூபத்துடன் இருப்பதால் शुचिषत् (சுசிஷத்) எல்லாவற்றையும் தன்னிடத்தில் வசிக்கச் செய்வதால் (அதிஷ்ட்டானமாக இருப்பதால்) வசு ( वसु ) வாயு ரூபமாய் அந்தரிக்ஷத்தில் இருப்பதும்होता (ஹோதா) அதுவே அக்னியாய் இருப்பதும் (अग्निर्वै होता ) என்ற சுருதி வாக்கியத்தால் அக்னியே ஹோதா என்பதும் (வேதி) वेदिषत् (வேதிஷத்) பூமியில் செல்வதால் ஆகும். மேலும் யக்ஞ பூமியின் மத்ய பாகத்தில் மந்திர ரூபமாய் இருப்பதாலும் अतिथिः (அதிதி) சோமரஸமாகும். அது கலசத்தில் இருப்பதால் दुरोणसत् (துரோணசத்) என்றும் கூறப்படுகிறது. பிராஹ்மணர்களிடத்தில் அதிதி ரூபமாய் கலசத்தில் அதாவது வீட்டில் இருக்கிறது. ஆகையால் த்ரோணசத் என்கிறோம்.
नृषत् नृषु मनुष्येषु सीदतीति नृषत् । वरसत् वरेषु देवेषु सीदतीति वरसत् । ऋतसत् ऋतं सत्यं यज्ञो वा, तस्मिन् सीदतीति ऋतसत् । व्योमसत् व्योम्नि आकाशे सीदतीति व्योमसत् । अब्जाः अप्सु शङ्खशुक्तिमकरादिरुपेण जायत इति अब्जाः । गोजाः गवि पृथिव्यां व्रीहियवादिरूपेण जायत इति गोजाः । ऋतजाः यज्ञाङ्गरूपेण जायत इति ऋतजाः । अद्रिजाः पर्वतेभ्यो नद्यादिरूपेण जायत इति अद्रिजाः ।
(நிருஷத்) नृषत् மனிதர்களிடத்தில் இருப்பதும், वरसत् (வரசத்) தேவர்களிடத்தில் இருப்பதும் ऋतसत्(ருதசத்) சத்யம் அல்லது யக்ஞத்திடத்தில் இருப்பதும்व्योमसत् (வயோமசத்) ஆகாசத்தில் இருப்பது, अब्जा(அப்ஜா) ஜலத்தில் சங்கு, மீன் முதலிய ரூபமாய் உண்டானது என்பதும், ப்ருதிவியில் गोजा (கோஜா) நெல், யவை முதலிய ரூபமாய் உண்டானதாகும். ऋतजा (ருதஜா) யக்ஞாங்க ரூபமாய் உண்டானது. अद्रिजाः (அத்ரிஜா) மலைகளில் நதி முதலிய ரூபமாய் உண்டானது.
सर्वात्मापि सन् ऋतम् अवितथस्वभाव एव । बृहत् महान् , सर्वकारणत्वात् । यदाप्यादित्य एव मन्त्रेणोच्यते तदाप्यात्मस्वरूपत्वमादित्यस्याङ्गीकृतमिति ब्रह्मणि व्याख्यानेऽप्यविरोधः । सर्वथाप्येक एवात्मा जगतः, नात्मभेद इति मन्त्रार्थः ॥
(அனுவாதம்) சர்வாத்மாவாய் இருந்து கொண்டு ரிதம் அழியாத ஸ்வபாவம் உள்ளது. எல்லாவற்றிற்கும் காரணமாய் இருப்பதால் மிகப் பெரியது. இந்த மந்திரத்தால் சூரியனைக் குறித்தாலும் அந்த சூரியனும் ஆத்ம ஸ்வரூபமே என்று அங்கீகரிக்கப்பட்டதால் சூரியனை குறிக்கும் பிராஹ்மணபாகத்திற்கு விரோதமில்லை. எங்கும் வியாபித்து ஒன்றாகவே ஆத்மா ஜகத்தைக் காட்டிலும் வேறல்ல என்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.
आत्मनः स्वरूपाधिगमे लिङ्गमुच्यते —
(அ-கை) ஆத்மாவினுடைய ஸ்வரூபத்தை அறிவதற்கான லிங்கம் (மார்க்கம்) சொல்லப்படுகிறது.
ऊर्ध्वं प्राणमुन्नयति अपानं प्रत्यगस्यति ।
मध्ये वामनमासीनं विश्वे देवा उपासते ॥ ३ ॥
ऊर्ध्वं हृदयात् प्राणं प्राणवृत्तिं वायुम् उन्नयति ऊर्ध्वं गमयति । तथा अपानं प्रत्यक् अधः अस्यति क्षिपति यः इति वाक्यशेषः । तं मध्ये हृदयपुण्डरीकाकाशे आसीनं बुद्धावभिव्यक्तं विज्ञानप्रकाशनं वामनं वननीयं सम्भजनीयं विश्वे सर्वे देवाः चक्षुरादयः प्राणाः रूपादिविज्ञानं बलिमुपाहरन्तो विश इव राजानम् उपासते तादर्थ्येनानुपरतव्यापारा भवन्तीत्यर्थः । यदर्था यत्प्रयुक्ताश्च सर्वे वायुकरणव्यापाराः, सोऽन्यः सिद्ध इति वाक्यार्थः ॥
(அனுவாதம்) ऊर्ध्वं (ஊர்த்வம்) ஹ்ருதயத்திலிருந்து பிராண விருத்தியை அதாவது வாயுவை மேலே செழுத்துகிறதோ, அதே போல் அபானவிருத்தி ரூபமான வாயுவை கீழே தள்ளுகிறதோ அந்த ஹிருதய புண்டரீக ஆகாசத்தில் இருந்து கொண்டு புத்தியில் விளங்குகின்ற விக்ஞான பிரகாசத்தை உடையவனும் वामनं(வாமனம்) பஜிக்கத்தக்கதுமான அந்த ஆத்மாவை சக்ஷு முதலியவைகளும் பிராண ரூபம் முதலிய விஷயவிக்ஞானமாகிற பலியைக் (கப்பத்தைக்) கொடுக்கிறதாய் ஜீவர்கள் அரசனைப்போல் உபாசிப்பதால் அந்த விஷயத்திலேயே (அந்த அர்த்தத்திலேயே) ஈடுபட்டு அவற்றில் தொழில் (வியாபாரம்) உடையதாகிறது. வாயு கரணங்கள் இவற்றின் வியாபாரங்கள் எதற்காக எவனால் ஏற்பட்டதோ அத்தகையவன் அவற்றைக் காட்டிலும் வேறாகவே இருக்கிறான் என்பது இந்த வாக்கியத்தின் அர்த்தமாகும்.
किञ्च,
(அ-கை) மேலும்
अस्य विस्रंसमानस्य शरीरस्थस्य देहिनः ।
देहाद्विमुच्यमानस्य किमत्र परिशिष्यते । एतद्वै तत् ॥ ४ ॥
अस्य शरीरस्थस्य आत्मनः विस्रंसमानस्य भ्रंशमानस्य देहिनो देहवतः । विस्रंसनशब्दार्थमाह — देहाद्विमुच्यमानस्येति । किमत्र परिशिष्यते प्राणादिकलापे न किञ्चन परिशिष्यते ; अत्र देहे पुरस्वामिविद्रवण इव पुरवासिनां यस्यात्मनोऽपगमे क्षणमात्रात्कार्यकरणकलापरूपं सर्वमिदं हतबलं विध्वस्तं भवति विनष्टं भवति, सोऽन्यः सिद्ध ॥
(அனுவாதம்) இந்த சரீரத்தில் இருக்கும் இந்த ஆத்மாவானவன் விஸ்ரம்ஸமானாக அதாவது நழுவுகின்றவனாக இருக்கும் பொழுது அதாவது தேஹத்தை விட்ட பின் பிராணாதிகளில் எது தான் மிஞ்சப் போகின்றது. நகரத்தில் ஸ்வாமி வெளிக் கிழம்பினால் நகரத்தில் ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள் அது போல் ஆகும்! ஆகவே ஆத்மா வெளிக்கிழம்பிய க்ஷணத்திலேயே காரிய கரண சங்காதம் எல்லாம் பலம் இழந்ததாகிறது. நஷ்ட்டமடைகிறது. அதைக் காட்டிலும் வேறாகிறான்.
स्यान्मतं प्राणापानाद्यपगमादेवेदं विध्वस्तं भवति न तु व्यतिरिक्तात्मापगमात् , प्राणादिभिरेवेह मर्त्यो जीवतीति ; नैतदस्ति —
(அ-கை) சரீரம், பிராணன், அபானன் முதலியவைகள் வெளியேறுவதாலேயே மனிதன் நஷ்டமடைகிறான் .ஆகையால் காரிய கரண சங்காதத்தைக் காட்டிலும் வேறாக ஆத்மா இல்லை. ஏன் எனில் பிராணாதிகளினால்தான் மனிதன் ஜீவிக்கிறான் என்று சிலர் கருதுகிறார்கள். அது அவ்வாறு அல்ல.( ஏன் எனில்)
न प्राणेन नापानेन मर्त्यो जीवति कश्चन ।
इतरेण तु जीवन्ति यस्मिन्नेतावुपाश्रितौ ॥ ५ ॥
न प्राणेन नापानेन चक्षुरादिना वा मर्त्यः मनुष्यो देहवान् कश्चन जीवति न कोऽपि जीवति । न ह्येषां परार्थानां संहत्यकारित्वाज्जीवनहेतुत्वमुपपद्यते । स्वार्थेनासंहतेन परेण संहतानामवस्थानं न दृष्टं केनचिदप्रयुक्तं यथा गृहादीनां लोके ; तथा प्राणादीनामपि संहतत्वाद्भवितुमर्हति ।
(அனுவாதம்) தேகமுடையவனும், மரண தர்மம் உடையவனாகிய மனிதன் ஒருவனும் பிராணனால் ஜீவிக்கிறதில்லை. அபானனாலோ கண் முதலிய இந்திரியங்களாலோ ஜீவிப்பதில்லை. இந்த பரார்த்தங்கள் எல்லாம் சேர்ந்து காரியத்தை செய்வதால் ஜீவிப்பதற்குக் காரணமாவது பொருந்தாது. உலகில் வீடு முதலியவைகள் தானாகவே ஒன்று சேர்வதாலேயே மற்றொரு சேதனத்தின் ப்ரேரணை இல்லாமல் அவைகள் ஒன்று சேர்வது என்பது காணப்படவில்லை. அவ்வாறே பிராணாதிகளின் சேர்க்கையும் (சேதனம்) இல்லாமல் ஜீவிப்பதற்குக் காரணமாகாது.
अत इतरेण तु इतरेणैव संहतप्राणादिविलक्षणेन तु सर्वे संहताः सन्तः जीवन्ति प्राणान्धारयन्ति । यस्मिन् संहतविलक्षणे आत्मनि सति परस्मिन् एतौ प्राणापानौ चक्षुरादिभिः संहतौ उपाश्रितौ यस्यासंहतस्यार्थे प्राणापानादिः सर्वं व्यापारं कुर्वन्वर्तते संहतः सन् स ततोऽन्यः सिद्ध इत्यभिप्रायः ॥
(அனுவாதம்) ஆகையால் பிராணன் முதலியவைகளின் சேர்க்கையைக் காட்டிலும் விலக்ஷணமான வேறு ஒன்றால் சேர்ந்து கொண்டு ஜீவிக்கின்றன. பிராணனை தரிக்கின்றன.அந்த சேர்க்கைகளுக்கு விலக்ஷணமான பரமான ஆத்மாவில் இந்த பிராணன் அபானன்கள் கண் முதலியவைகளால் சேர்ந்து ஆஸ்ரயத்தை அடைகின்றது. எந்த சேர்க்கையற்ற(ஆத்மாவிடத்தில்)தில் பிராணன் அபானன் முதலியவைகள் வியாபாரங்கள் செய்து கொண்டு இருப்பதால் அவைகளின் சேர்க்கையால் அந்த ஆத்மா அந்த சங்காதத்தைக் காட்டிலும் வேறுபட்டவனாக இருக்கிறது.
हन्त त इदं प्रवक्ष्यामि गुह्यं ब्रह्म सनातनम् ।
यथा च मरणं प्राप्य आत्मा भवति गौतम ॥ ६ ॥
हन्तेदानीं पुनरपि ते तुभ्यम् इदं गुह्यं गोप्यं ब्रह्म सनातनं चिरन्तनं प्रवक्ष्यामि । यद्विज्ञानात्सर्वसंसारोपरमो भवति, अविज्ञानाच्च यस्य मरणं प्राप्य यथा च आत्मा भवति यथा आत्मा संसरति तथा शृणु हे गौतम ॥
(அனுவாதம்) ஹே கெளதம இப்பொழுது மறுபடியும் உன் பொருட்டு எதை அறிந்தால் எல்லா சம்சாரங்களும் நீங்குமோ அந்த இந்த ரகஸ்யமாய் பாதுகாக்கப்பட வேண்டிய சநாதனமான பிரஹ்மத்தை கூறுகிறேன். அதை அறியாததினால் எவன் மரணத்தையும், பிறப்பையும் அடைந்து எவ்வாறு சம்சாரத்தை அடைகிறான் என்பதைக் கேள்.
योनिमन्ये प्रपद्यन्ते शरीरत्वाय देहिनः ।
स्थाणुमन्येऽनुसंयन्ति यथाकर्म यथाश्रुतम् ॥ ७ ॥
योनिं योनिद्वारं शुक्रबीजसमन्विताः सन्तः अन्ये केचिदविद्यावन्तो मूढाः प्रपद्यन्ते शरीरत्वाय शरीरग्रहणार्थं देहिनः देहवन्तः योनिं प्रविशन्तीत्यर्थः । स्थाणुं वृक्षादिस्थावरभावम् अन्ये अत्यन्ताधमा मरणं प्राप्य अनुसंयन्ति अनुगच्छन्ति । यथाकर्म यद्यस्य कर्म तद्यथाकर्म यैर्यादृशं कर्म इह जन्मनि कृतं तद्वशेनेत्येतत् । तथा यथाश्रुतं यादृशं च विज्ञानमुपार्जितं तदनुरूपमेव शरीरं प्रतिपद्यन्त इत्यर्थः ; ‘यथाप्रज्ञं हि सम्भवाः’ (ऐ. आ. २ । ३ । २) इति श्रुत्यन्तरात् ॥
(அனுவாதம்) வேறு சில அவித்வான்களாகிய மூடர்கள் சரீரத்தை எடுப்பதன் பொருட்டு சுக்ர பீஜத்தை உடைய யோனியை அடைகிறார்கள். அதாவது யோனியில் ப்ரவேசிக்கிறார்கள் என்பது பொருள். மிகவும் கீழானவர்கள் மரணத்தை அடைந்து மரம் முதலிய தாவர பாவத்தை தொடர்ந்து செல்கிறார்கள். கர்மம் எவ்வாறோ அவ்வாறு ரூபத்தை அடைகிறார்கள். இந்த ஜன்மத்தில் செய்த கர்மத்தை ஒட்டியும். எவ்வாறு விக்ஞானமானது சம்பாதிக்கப்பட்டதோ அவ்வாறு அதை ஒட்டியும் ரூபமான சரீரத்தை அடைகிறார்கள்“यथा प्रज्ञं हि संभवाः”( யதா ப்ரக்ஞம ஹி சம்பவா) எவ்வாறு பிரக்ஞானமோ அவ்வாறு ப்ரஜைகள் ஏற்படுகின்றன) என்று வேறு சுருதியிலும் கூறப்பட்டுள்ளது.
यत्प्रतिज्ञातं गुह्यं ब्रह्म प्रवक्ष्यामीति तदाह —
(அ--கை) ரஹஸ்யமான பிரஹ்மத்தை சொல்கிறேன் என்று முன்பு பிரதிக்ஞை செய்ததை இப்போது கூறுகிறார்.
य एष सुप्तेषु जागर्ति कामं कामं पुरुषो निर्मिमाणः । तदेव शुक्रं तद्ब्रह्म तदेवामृतमुच्यते ।
तस्मिंल्लोकाः श्रिताः सर्वे तदु नात्येति कश्चन । एतद्वै तत् ॥ ८ ॥
य एष सुप्तेषु प्राणादिषु जागर्ति न स्वपिति ; कथम् ? कामं कामं तं तमभिप्रेतं स्त्र्याद्यर्थमविद्यया निर्मिमाणः निष्पादयन् , जागर्ति पुरुषः यः, तदेव शुक्रं शुभ्रं शुद्धं तद्ब्रह्म नान्यद्गुह्यं ब्रह्मास्ति । तदेव अमृतम् अविनाशि उच्यते सर्वशास्त्रेषु । किञ्च, पृथिव्यादयो लोकास्तस्मिन्नेव सर्वे ब्रह्मणि श्रिताः आश्रिताः, सर्वलोककारणत्वात्तस्य । तदु नात्येति कश्चनेत्यादि पूर्ववदेव ॥
(அனுவாதம்) எந்த ஒருவன் பிராணாதிகள் தன் வியாபாரங்களிலிருந்து விராமம்(விடுபட்ட பொழுது) விராமம் அடையாமல் விழித்துக் கொண்டிருக்கிறானோ, அது எவ்வாறு எனின், அவித்தையினால் ஸ்தீரீ முதலிய தனக்கு விருப்பமான பதார்த்தங்களை உண்டு பண்ணிக் கொண்டு எந்த புருடன் இருக்கிறானோ அதுதான் சுக்ரம். சுப்ரம். சுத்தமான அதுவே பிரஹ்மம். வேறு குஹ்யமான (ரஹஸ்யமானது) இல்லை என்பதாகும். அதுவே ஸர்வசாஸ்திரங்களிலும் விநாசம் அற்றது என்று சொல்லப்படுகிறது. மேலும் அது எல்லா லோகங்களுக்கும் காரணமாய் இருப்பதால் எல்லா பிருதிவி முதலியவைகள் அந்த பிரஹ்மத்தில் ஆஸ்ரயத்தவைகளாய் இருக்கின்றன. அதாவது அதை ஒன்றும் கடந்து இருக்காது என்பது முன் போலவே ஆகும்.
अतः कुतार्किकपाषण्डबुद्धिविचालितान्तःकरणानां प्रमाणोपपन्नमप्यात्मैकत्वविज्ञानमसकृदुच्यमानमप्यनृजुबुद्धीनां ब्राह्मणानां चेतसि नाधीयत इति तत्प्रतिपादने आदरवती पुनः पुनराह श्रुतिः —
(அஃகை) அநேக தார்க்கிகர்களின் மூட புத்தியினால் சலனமடைந்த அந்தக்கரணம் உடையவர்களுக்கு பிராமணர்கள் சாஸ்திரப் பிரமானத்தை உடையவர்களாய் இருந்தாலும் ஆத்மா ஒன்றே என்ற விக்ஞானத்தை அநேக தடவை கூறப்பட்டாலும் நேர்மையான புத்தியற்ற ப்ராமணர்களின் மனதில் பதிவதில்லை என்பதால் அதை நன்றாக விளக்கி கூறுவதற்காக ஆதரவுடைய சுருதியானது மறுபடியும், மறுபடியும் எடுத்து உரைக்கின்றது.
अग्निर्यथैको भुवनं प्रविष्टो रूपं रूपं प्रतिरूपो बभूव ।
एकस्तथा सर्वभूतान्तरात्मा रूपं रूपं प्रतिरूपो बहिश्च ॥ ९ ॥
अग्निः यथा एक एव प्रकाशात्मा सन् भुवनम् , भवन्त्यस्मिन्भूतानीति भुवनम् , अयं लोकः, तमिमं प्रविष्टः अनुप्रविष्टः, रूपं रूपं प्रति, दार्वादिदाह्यभेदं प्रतीत्यर्थः, प्रतिरूपः तत्र तत्र प्रतिरूपवान् दाह्यभेदेन बहुविधो बभूव ; एक एव तथा सर्वभूतान्तरात्मा रूपं रूपं सर्वेषां भूतानामभ्यन्तर आत्मा अतिसूक्ष्मत्वाद्दार्वादिष्विव सर्वदेहं प्रति प्रविष्टत्वात् प्रतिरूपो बभूव बहिश्च स्वेनाविकृतेन रूपेण आकाशवत् ॥
(அனுவாதம்) எவ்வாறு ஒரே அக்னியானது பிரகாச ஸ்வரூபமாக இருந்து கொண்டு புவனத்தில் அதாவது பிராணிகள் உண்டாவதால் புவனமயமான லோகத்தில் இந்த அக்னியானது ஒவ்வொரு கட்டை முதலியவைகளில் அந்த, அந்தரூபமாகப் பிரவேசித்து அந்த எரிக்கும் சத்தியின் பேதமாய் தோன்றி அநேக வித வித பேத ரூபங்களாய் தோன்றுகிறது. அவ்வாறே ஆத்மா ஒன்றாகவே இருந்து கொண்டு எல்லா பூதங்களுக்கும் அந்தராத்மாவானது எல்லா ஜீவ ராசிகள் உள்ளும் ஆத்மா மிகவும் சூக்ஷ்மமாய் இருப்பதால் கட்டை முதலியவைகளில் இருப்பது போல் எல்லா தேஹங்களுள்ளும் நுழைந்து இருப்பதால் வெளியிலும் தன்னுடை விகாரமற்ற சுவரூபவமாதால் ஆகாசம் போல் ஒவ்வொரு ரூபத்திலும் விளங்குகிறது.
तथान्यो दृष्टान्तः —
(அ-கை) அவ்வாறு வேறு திருஷ்ட்டாந்தம்
वायुर्यथैको भुवनं प्रविष्टो रूपं रूपं प्रतिरूपो बभूव ।
एकस्तथा सर्वभूतान्तरात्मा रूपं रूपं प्रतिरूपो बहिश्च ॥ १० ॥
वायुर्यथैक इत्यादि । प्राणात्मना देहेष्वनुप्रविष्टः । रूपं रूपं प्रतिरूपो बभूवेत्यादि समानम् ॥
(அனுவாதம்) எவ்வாறு வாயுவானது ஒன்றாகவே இருந்து கொண்டு பிராணாத்மாவாய் ஒவ்வொரு ரூபமாய் அந்த பிரதிரூபமாய் ஆகிறது முதலியவைகள் முன்போலாம்.
एकस्य सर्वात्मत्वे संसारदुःखित्वं परस्यैव स्यादिति प्राप्ते, इदमुच्यते —
(அ-கை) இவ்வாறு ஒன்றே சர்வாத்மாவாய் இருக்கும் பொழுது சம்சார துக்கமானது பரமாத்மாவிற்கே உண்டாகும் என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது.
सूर्यो यथा सर्वलोकस्य चक्षुर्न लिप्यते चाक्षुषैर्बाह्यदोषैः ।
एकस्तथा सर्वभूतान्तरात्मा न लिप्यते लोकदुःखेन बाह्यः ॥ ११ ॥
सूर्यः यथा चक्षुष आलोकेनोपकारं कुर्वन्मूत्रपुरीषाद्यशुचिप्रकाशनेन तद्दर्शिनः सर्वलोकस्य चक्षुः अपि सन् न लिप्यते चाक्षुषैः अशुच्यादिदर्शननिमित्तैराध्यात्मिकैः पापदोषैः बाह्यैश्च अशुच्यादिसंसर्गदोषैः एकः सन् , तथा सर्वभूतान्तरात्मा न लिप्यते लोकदुःखेन बाह्यः ।
(அனுவாதம்) எவ்வாறு சூரியன் கண்களுக்கு தன் பிரகாசத்தினால் பார்ப்பதற்கு உபகாரமாய் இருந்துகொண்டு மல மூத்திரம் முதலிய அசுத்த பதார்த்தங்களை பிரகாசப் படுத்துவதால் அதைப் பார்ப்பவன் எல்லா லோகங்களுக்கும் கண் ரூபமாய் இருந்தாலும் அசுத்தமான பதார்த்தங்களை பார்ப்பதால் உண்டாகும் ஆத்யாத்மிக பாப தோஷங்களும் அவ்வாறே அசுத்தப் பதார்த்தங்களின் சேர்க்கையால் ஏற்படும் பாஹ்ய தோஷங்கள் ஒட்டுவதில்லை. அவ்வாறே எல்லா பூதங்களுக்கும் ஒரே அந்த ராத்மாவாய் இருந்தாலும் துக்கங்கள் ஒட்டுவதில்லை. (சம்பந்தப்படுவது இல்லை) ஆத்மாவானவன் எல்லாவற்றிற்கும் பாஹ்யமாய் இருக்கின்றான்.
लोको ह्यविद्यया स्वात्मन्यध्यस्तया कामकर्मोद्भवं दुःखमनुभवति । न तु सा परमार्थतः स्वात्मनि । यथा रज्जुशुक्तिकोषरगगनेषु सर्परजतोदकमलानि न रज्ज्वादीनां स्वतो दोषरूपाणि सन्ति, संसर्गिणि विपरीतबुद्ध्यध्यासनिमित्तात्तु तद्दोषवद्विभाव्यन्ते ; न तद्दोषैस्तेषां लेपः, विपरीतबुद्ध्यध्यासबाह्या हि ते ;
(அனுவாதம்) உலகில் அத்யாசமான அவித்தையினால் தனது ஆத்மாவிடத்தில் காமம் கர்மங்களினால் உண்டாகும் துக்கத்தை அனுபவிக்கிறான். அந்த அவித்யையானது உண்மையில் தன் ஆத்மாவிடத்தில் இல்லை. எவ்வாறு கயிறு, சுத்தி, கானல்நீர் ஆகாசம் இவைகளில் சர்ப்பம், வெள்ளி, நீர், ஆகாயமலர், ரஜ்ஜு (கயிறு) முதலியவைகளில் இயற்கையாக தோஷ ரூபங்கள் இல்லை.சம்சர்க்கத்தினிடத்தில்  விபரீத புத்தியின் அத்தியாச நிமித்தத்தால் அவைகள் தோஷங்கள் போல் பாவிக்கப்படுகிறது. அவைகள் அந்த தோஷங்களால் தீண்டப்படுவது இல்லை. ஏன் எனில் அது விபரீத புத்தியினால் உண்டான அத்யாசத்தைக் காட்டிலும் பாஹியமாகும் (வெளியில் இருக்கிறது)
तथा आत्मनि सर्वो लोकः क्रियाकारकफलात्मकं विज्ञानं सर्पादिस्थानीयं विपरीतमध्यस्य तन्निमित्तं जन्ममरणादिदुःखमनुभवति ; न त्वात्मा सर्वलोकात्मापि सन् विपरीताध्यारोपनिमित्तेन लिप्यते लोकदुःखेन । कुतः ? बाह्यः रज्ज्वादिवदेव विपरीतबुद्ध्यध्यासबाह्यो हि स इति ॥
(அனுவாதம்) அவ்வாறு ஆத்மாவினிடத்தில் எல்லா லோகங்களும் கிரியாகாரக பல ரூபமான விக்ஞானத்தினால் சர்ப்ப முதலிய ஸ்தானத்தில் விபரீதமான அத்யாசம் செய்து அதன் நிமித்தமாக ஜன்ம மரணாதி துக்கம் அனுபவிக்கிறார்கள். ஆத்மா எல்லா லோகமாய் இருந்து கொண்டு விபரீத அத்தியாச ஆரோப நிமித்தத்தால் ஏற்படும் லோக துக்கங்களினால் தீண்டப்படுவதில்லை. ஏன்? அதைக் காட்டிலும் வெளியில் இருக்கிறது. அது ரஜ்ஜு முதலியவைகள் போல் விபரீத புத்தி அத்யாசத்தைக் காட்டிலும் பாஹ்யமாய் (வெளியில்) இருக்கிறது என்பதாகும்.
किञ्च,
மேலு
एको वशी सर्वभूतान्तरात्मा एकं रूपं बहुधा यः करोति ।
तमात्मस्थं येऽनुपश्यन्ति धीरास्तेषां सुखं शाश्वतं नेतरेषाम् ॥ १२ ॥
स हि परमेश्वरः सर्वगतः स्वतन्त्रः एकः, न तत्समोऽभ्यधिको वान्योऽस्ति । वशी, सर्वं ह्यस्य जगद्वशे वर्तते । कुतः ? सर्वभूतान्तरात्मा । यत एकमेव सदैकरसमात्मानं विशुद्धविज्ञानघनरूपं नामरूपाद्यशुद्धोपाधिभेदवशेन बहुधा अनेकप्रकारेण यः करोति स्वात्मसत्तामात्रेण अचिन्त्यशक्तित्वात् , तत् आत्मस्थं स्वशरीरहृदयाकाशे बुद्धौ चैतन्याकारेणाभिव्यक्तमित्येतत् —
(அனுவாதம்) அந்த ஆத்மாவே பரமேச்வரன், எங்கும் நிறைந்தவர், ஸ்வதந்திரர் ஒருவரே. அந்த ஆத்மாவைக் காட்டிலும் சமமோ, அதிகமானதோ, வேறு ஒன்று இல்லை. அவரே வசி (वशी) இந்த ஜகத் எல்லாம் அவர் வசமாய் இருக்கிறது. எதனால்? எல்லா பூதங்களிலும் அந்தராத்மாவாய் இருக்கிறது. அதனால் ஏகமாயும் எப்பொழுதும் ஏகரச ரூபம் ஆத்மாவிற்கு நாம ரூப முதலிய அசுத்த உபாதி பேதத்தால் ஆத்மாவினுடைய சத்தாமாத்திரத்தினாலும் தன்னுடைய அசிந்த்ய ரூபசக்தியினாலும், சுவதந்திரமாய் அநேக பிரகாரமாக எவன் செய்கிறானோ அவன் தன் சரீரத்தில் உள்ள ஹ்ருதயாகாசத்தில் அதாவது புத்தியில் சைதன்யாகாரமாய் அபிவியக்தமாகிறது.(தெரிகிறது)
न हि शरीरस्याधारत्वमात्मनः, आकाशवदमूर्तत्वात् ; आदर्शस्थं मुखमिति यद्वत् — तमेतमीश्वरमात्मानं ये निवृत्तबाह्यवृत्तयः अनुपश्यन्ति आचार्यागमोपदेशमनु साक्षादनुभवन्ति धीराः विवेकिनः, तेषां परमेश्वरभूतानां शाश्वतं नित्यं सुखम् आत्मानन्दलक्षणं भवति, नेतरेषां बाह्यासक्तबुद्धीनामविवेकिनां स्वात्मभूतमपि, अविद्याव्यवधानात् ॥
ஆகாயம் போல் ரூபம் இல்லாததால் ஆத்மாவிற்கு சரீரம் ஆதாரம் ஆகாது. கண்ணாடியில் தோன்றும் முகம் கண்ணாடிக்கு ஆதாரம் ஆகாதது போல். அந்த ஈஸ்வரனாகிய ஆத்மாவை எவர்கள் வெளி விருத்திகளிலிருந்து விடுபட்டவர்கள் அறிந்து கொள்கிறார்கள். அந்த ஆத்மாவை குரு சாஸ்திர உபதேசத்தினால் சாக்ஷாத்தாக அறிகிறார்கள். தீரர்களாகிய விவேகிகள் பரமேச்வர ரூபத்தை அடைந்தவர்களுக்கு சாஸ்வதம், நித்யம், சுகம், ஆத்மானந்தம் ஏற்படுகிறது. (அடையப்படுகிறது) வெளி விஷயங்களில் பற்று உள்ள புத்தி உடைய அவிவேகிகளுக்கு ஸ்வாத்ம பூதமாய் இருந்தாலும் அவித்தையினால் மறைக்கப்படுவதால் அவர்களால் அறிய முடியாது.
किञ्च,
மேலும்
नित्यो नित्यानां चेतनश्चेतनानामेको बहूनां यो विदधाति कामान् ।
तमात्मस्थं येऽनुपश्यन्ति धीरास्तेषां शान्तिः शाश्वती नेतरेषाम् ॥ १३ ॥
नित्यः अविनाशी नित्यानाम् अविनाशिनाम् । चेतनः चेतनानां चेतयितॄणां ब्रह्मादीनां प्राणिनाम् । अग्निनिमित्तमिव दाहकत्वमनग्नीनामुदकादीनामात्मचैतन्यनिमित्तमेव चेतयितृत्वमन्येषाम् । किञ्च, स सर्वज्ञः सर्वेश्वरः कामिनां संसारिणां कर्मानुरूपं कामान् कर्मफलानि स्वानुग्रहनिमित्तांश्च कामान् यः एको बहूनाम् अनेकेषाम् अनायासेन विदधाति प्रयच्छतीत्येतत् । तम् आत्मस्थं ये अनुपश्यन्ति धीराः, तेषां शान्तिः उपरतिः शाश्वती नित्या स्वात्मभूतैव स्यात् । न इतरेषाम् अनेवंविधानाम् ॥
(அனுவாதம்) அநித்யமான விநாசம் உடையவற்றிற்கு நித்யமாய் விநாசம் அற்றதாய் இருக்கிறது. சேதனங்களான பிரஹ்மா முதலிய ஜீவர்களுக்கு சேதனம், அக்னி இல்லாத நீர் முதலியவைகள் அக்னி நிமித்தமாக தாஹகத்துவம் (கொளுத்தும் தன்மை) எவ்வாறோ அவ்வாறு ஆத்மா அல்லாத மற்றவைகளுக்கு ஆத்ம சைதன்ய நிமித்தமாகவே சேதயித்ருவம் (சேதனத்தன்மை). மேலும் ஆத்மா சர்வக்ஞன், சர்வேஷ்வரன், காமமுடைய சம்சாரிகளுக்கு அவர்களுடைய காமத்திற்கு தகுந்தவாறு அவர்கள் விரும்பிய கர்ம பலத்தை தன்னுடைய அனுக்கிரஹ நிமித்தத்தால் காமனைகளை ஒன்றாகவே இருந்து கொண்டு அநாயசமாக அநேகர்களுக்கு கொடுக்கிறார். அந்த ஆத்மாவிலிருப்பவரை எந்த தீரர்கள் அதை அறிகிறார்களோ அவர்களுக்கு சாஸ்வதமான நித்ய சாஸ்வதமான ஸ்வாத்ம பூதமான சாந்தியையும், உபரதியையும் அடைகிறார்கள். இவர்களைக் காட்டிலும் வேறானவன் அடைவதில்லை.
तदेतदिति मन्यन्तेऽनिर्देश्यं परमं सुखम् ।
कथं नु तद्विजानीयां किमु भाति विभाति वा ॥ १४ ॥
यत्तदात्मविज्ञानसुखम् अनिर्देश्यं निर्देष्टुमशक्यं परमं प्रकृष्टं प्राकृतपुरुषवाङ्मनसयोरगोचरमपि सन्निवृत्तैषणा ये ब्राह्मणास्ते तदेतत्प्रत्यक्षमेवेति मन्यन्ते, कथं नु केन प्रकारेण तत्सुखमहं विजानीयाम् इदमित्यात्मबुद्धिविषयमापादयेयं यथा निवृत्तविषयैषणा यतयः । किमु तत् भाति दीप्यते प्रकाशात्मकं तत् यतोऽस्मद्बुद्धिगोचरत्वेन विभाति विस्पष्टं दृश्यते किं वा नेति ॥
(அனுவாதம்) எந்த அந்த ஆத்ம விக்ஞானம் சுகமாயும், இவ்வாறு இருக்கிறது என்று குறிப்பிட முடியாததும் பரம் ஆனதும் சாதாரண மனிதர்களுக்கு வாக்கு மனதிற்கு எட்டாததாயும் இருந்தாலும் ஏஷணா திரயம் நீங்கியவர்களாய் எந்த பிராஹ்ம்ணர்கள் இருக்கிறார்களோ எந்த ஒன்று உண்டோ அதை பிரத்யக்ஷமாய் அறிகிறார்கள் என்று கருதுகிறேன். எவ்வாறு, எவ்விதமாக நான் அந்த ஆத்ம சுகத்தை தெரிந்து கொள்வேன்? எவ்வாறு ஏஷணைகள் நிவிர்த்தி அடைந்த சாதுக்கள் போல் “இது” என்று ஆத்ம புத்திக்கு விஷயமாகச் செய்வேன்? எது பிரகாசாத்மகமாக உள்ளதோ அது நம் புத்திக்கு விளங்குமாறு தெளிவாக ப்ரகாசிக்கிறதோ? அல்லது இல்லையா? என்று அடிக்கடி விசாரம் செய்ய வேண்டும்.
अत्रोत्तरमिदम् — भाति च विभाति चेति । कथम् ?
(அ-கை) இதற்குபதில் இந்த ஆத்மா சாமான்யமாயும் பிரகாசிக்கிறது, விசேஷமாயும் ப்ரகாசிக்கிறது அது எவ்வாறு?
न तत्र सूर्यो भाति न चन्द्रतारकं नेमा विद्युतो भान्ति कुतोऽयमग्निः ।
तमेव भान्तमनुभाति सर्वं तस्य भासा सर्वमिदं विभाति ॥ १५ ॥
न तत्र तस्मिन्स्वात्मभूते ब्रह्मणि सर्वावभासकोऽपि सूर्यः भाति तद्ब्रह्म न प्रकाशयतीत्यर्थः । तथा न चन्द्रतारकम् , नेमा विद्युतो भान्ति, कुतः अयम् अस्मद्दृष्टिगोचरः अग्निः । किं बहुना ? यदिदमादित्यादिकं भाति तत् तमेव परमेश्वरं भान्तं दीप्यमानम् अनुभाति अनुदीप्यते । यथा जलोल्मुकादि अग्निसंयोगादग्निं दहन्तमनुदहति न स्वतः, तद्वत् । तस्यैव भासा दीप्त्या सर्वमिदं सूर्यादि विभाति ।
(அனுவாதம்) அந்த ஸ்வாத்ம ஸ்வரூபமான ப்ரஹ்மத்தை எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்தாலும் சூர்யனால் பிரகாசிக்கச் செய்ய முடிவதில்லை .அந்த ப்ரஹ்மத்தை அதனால் பிரகாசிக்கச் செய்ய முடியாது என்பது பொருள். அவ்வாறே சந்திரன், நக்ஷத்திரம், மின்னல் இவைகளாலும் பிரகாசிக்க செய்ய முடியாது. இவ்வாறு இருக்கும் பொழுது நம் கண்களுக்கு புலப்படும் அக்னியினால் எவ்வாறு முடியும். அதிகம் கூறுவானேன் அந்த சூரியன் முதலான எவைகள் எல்லாம் ப்ரகாசித்துக் கொண்டிருக்கிறதோ அவை எல்லாம் அந்த பரமாத்மாவினால் ப்ரகாசப்படுத்தப்பட்டு அதனை ஒட்டியே பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. எவ்வாறு ஜலம், கட்டை முதலியவைகள் அக்னியின் சம்யோகத்தால் அக்னி தஹிக்கின்றதே தவிர அதற்கு சுபாவமாக இல்லையோ அவ்வாறே அந்த ஆத்ம பிரகாசத்தால் சூரியன் முதலியவைகள் எல்லாம் பிரகாசிக்கின்றன.
यत् एवं तदेव ब्रह्म भाति च विभाति च । कार्यगतेन विविधेन भासा तस्य ब्रह्मणो भारूपत्वं स्वतोऽवगम्यते । न हि स्वतोऽविद्यमानं भासनमन्यस्य कर्तुं शक्यम् , घटादीनामन्यावभासकत्वादर्शनात् भारूपाणां च आदित्यादीनां तद्दर्शनात् ॥
(அனுவாதம்) எதனாலோ அதனால் அந்த பிரஹ்மம் சாமான்யமாக பிரகாசிக்கின்றது. மேலும் விசேஷ ரூபமாகவும் பிரகாசிக்கிறது. காரியத்தில் உள்ள அநேக வித பிரகாசத்தினால் அந்த பிரஹ்மத்தினுடைய பிரகாச ரூபமானது சுபாவமாகவே உள்ளது என்று புலப்படுகிறது. சுபாவமாக (சொந்தமாக) இல்லாத ப்ரகாசத்தைக் கொண்டு மற்றவைகளைப் பிரகாசிக்கச் செய்ய முடியாது அல்லவா. எவ்வாறு கடம்(குடம்) முதலியவைகள் பிறவற்றை பிரகாசப்படுத்தும் தன்மையில்லாமல் இருப்பதும் பிரகாச ரூபங்களான சூரியன் முதலியவைகளுக்கு பிரகாசப்படுத்தும் தன்மை காணப்படுவதே காரணமாகும்.
इति पञ्चमवल्लीभाष्यम् ॥
ऊर्ध्वमूलोऽवाक्शाख एषोऽश्वत्थः सनातनः ।
तदेव शुक्रं तद्ब्रह्म तदेवामृतमुच्यते ।
तस्मिंल्लोकाः श्रिताः सर्वे तदु नात्येति कश्चन । एतद्वै तत् ॥ १ ॥
तूलावधारणेनैव मूलावधारणं वृक्षस्य यथा क्रियते लोके, एवं संसारकार्यवृक्षावधारणेन तन्मूलस्य ब्रह्मणः स्वरूपावदिधारयिषया इयं षष्ठी वल्ली आरभ्यते ।
(அ--கை) உலகத்தில் எவ்வாறு காரியத்தை இலவம் பஞ்சை அறிவதால் மரத்தின் மூலம் நிச்சயிக்கப்படுவது போல் சம்சாரத்தை அதாவது சுக துக்கானுபவத்தை காரியமாகக் கொண்ட விருக்ஷத்தை காண்பதால் அதன் மூலமாகிய பிரஹ்மத்தின் ஸ்வரூப அவதியை நிர்தாரணம் செய்வதற்காக இந்த ஆறாவது வல்லீ ஆரம்பிக்கப்படுகிறது.
ऊर्ध्वमूलः ऊर्ध्वं मूलं यत् तद्विष्णोः परमं पदमस्येति सोऽयमव्यक्तादिस्थावरान्तः संसारवृक्षः ऊर्ध्वमूलः । वृक्षश्च व्रश्चनात् विनश्वरत्वात् । अविच्छिन्नजन्मजरामरणशोकाद्यनेकानर्थात्मकः प्रतिक्षणमन्यथास्वभावः मायामरीच्युदकगन्धर्वनगरादिवद्दृष्टनष्टस्वरूपत्वादवसाने च वृक्षवदभावात्मकः कदलीस्तम्भवन्निःसारः अनेकशतपाषण्डबुद्धिविकल्पास्पदः तत्त्वविजिज्ञासुभिरनिर्धारितेदन्तत्त्वः वेदान्तनिर्धारितपरब्रह्ममूलसारः अविद्याकामकर्माव्यक्तबीजप्रभवः अपरब्रह्मविज्ञानक्रियाशक्तिद्वयात्मकहिरण्यगर्भाङ्कुरः सर्वप्राणिलिङ्गभेदस्कन्धः तत्तत्तृष्णाजलासेकोद्भूतदर्पः बुद्धीन्द्रियविषयप्रवालाङ्कुरः श्रुतिस्मृतिन्यायविद्योपदेशपलाशः यज्ञदानतपआद्यनेकक्रियासुपुष्पः सुखदुःखवेदनानेकरसः प्राण्युपजीव्यानन्तफलः तत्तृष्णासलिलावसेकप्ररूढजटिलीकृतदृढबद्धमूलः सत्यनामादिसप्तलोकब्रह्मादिभूतपक्षिकृतनीडः प्राणिसुखदुःखोद्भूतहर्षशोकजातनृत्यगीतवादित्रक्ष्वेलितास्फोटितहसिताक्रुष्टरुदितहाहामुञ्चमुञ्चेत्याद्यनेकशब्दकृततुमुलीभूतमहारवः वेदान्तविहितब्रह्मात्मदर्शनासङ्गशस्त्रकृतोच्छेदः एष संसारवृक्ष अश्वत्थः अश्वत्थवत्कामकर्मवातेरितनित्यप्रचलितस्वभावः । स्वर्गनरकतिर्यक्प्रेतादिभिः शाखाभिः अवाक्शाखः, अवाञ्चः शाखा यस्य सः, सनातनः अनादित्वाच्चिरप्रवृत्तः ।
(அனுவாதம்) ऊर्ध्वमूलम् (ஊர்த்வ மூலம்) விஷ்ணு மூலம் (என்றால்) மேலான அதாவது பகவான் விஷ்ணுவினுடைய பரமபதமாகும். அது இது அவ்யக்தம் வரையிலும் உள்ள சம்ஸார விருக்ஷத்திற்கு (ऊर्ध्वमूलम्.) மேலான காரணமாகும். வெட்டப்படுவதால் விருக்ஷம் எனப்படுகிறது. ஜன்ம மரண சோகம் முதலிய அநேக அநர்த்தங்களுடையது. ஒவ்வொரு க்ஷணமும் மாறுபடும் சுபாவமுடையது. மாயையான கானல் நீர் கந்தர்வ நகரம் முதலியவைகள் போல் த்ருஷ்ட்ட நஷ்ட்ட சுபாவ முடையதால் (பார்க்கும் பொழுதே நசிக்கும் சுவபாவமுடையதால் முடிவில் விருக்ஷம் போல் (மரம் போல்) ஸ்வபாவமுடையது. வாழைத்தண்டு போல் சாரமற்றது. அநேக நூ ற்றுக் கணக்கான பாஷாண்டர்கள் தங்கள் புத்தியினால் செய்யப்படும் விகல்பங்களுக்கு இருப்பிடமானது. தத்துவ ஞானிகளாலும் இவ்வாறுதான் இருக்கிறது என்று நிர்ணயம் செய்யமுடியாதது. வேதாந்திகளால் நிர்தாரணம் செய்யப்பட்ட பரப்ரஹ்மத்தை மூல காரணமாக உடையது. அவித்யா, காம கர்ம அவ்யக்த பீஜத்திலிருந்து உண்டான அபரப்ரஹ்ம விக்ஞான கிரியா சக்தி ஆகிய இரண்டு வித சக்தி ஸ்வரூபமான ஹிரண்ய கர்ப்பனை முளையாக உடையது. எல்லா பிராணிகளின் லிங்க பேதமானது கிளைகளாகும். ஆசை (திருஷ்ணை) என்ற ஜலத்தால் நனைக்கப்பட்டு கொழுப்பு(தர்ப்பம்) உடையதாகிறது. ஞனேந்திரியங்களால் கிரஹிக்கப்படும் விஷயங்கள் தளிர்களாகின்றன. ஸ்ருதி ஸ்மிருதி நியாயம் உபதேசம் இவைகள் இலைகளாகின்றன. யாகம், தானம், தவம், முதலிய அநேகவித கிரியைகளாகிற புஷ்பங்களை உடையது. பிராணிகளால் ஜீவிக்கும் வரையிலும் முடிவற்ற பலன்களை உடையது. அந்த பலன்களில் ஆசை என்ற ஜலம் தெளித்ததால் வளர்ச்சி உடையது. சத்வகுணம் முதலியவைகள் கலந்து ஸ்திரமானது (வாசனைகளை)மாகிய மூலத்தை உடையது. சத்யலோகம் முதலிய ஏழு லோகங்களில் ப்ரஹ்ம தேவன் முதலிய பக்ஷிகளால் கட்டப்பட்ட கூட்டை உடையது. பிராணிகளுடைய சுகதுக்கங்களினால் ஏற்படும் சந்தோஷம், சோகம் இவைகளால் உண்டாகும் நடனமாடுதல், பாட்டுபாடுதல், வாத்தியம் வாசித்தல், விளையாடுதல், இரைச்சல்போடுதல், சிரித்தல், கைதட்டுதல், அழுதல், ஐயோ, ஐயோ, விடு விடு என்றல் முதலியவைகளால் மிகுந்த நெருக்கமாய் சத்தமிடுதல் ஆகியவைகளை உடைத்தானது. வேதாந்தத்தில் பிரதி பாதிக்கப்பட்ட (ஆத்) மதர்சனம் என்னும் ப்ரஹ்மாத்ம (அசங்க) தடையற்ற கத்தியினால் வெட்டக் கூடியதான இந்த சம்சார விருக்ஷமானது அஸ்வத்தமாகும். (அரசமரமாகும்) அதாவது அஸ்வத்த மரம் போல் காமம், கர்மம், ஆகிய காற்றினால் அசைக்கப்பட்டதாய் எப்பொழுதும் அசைந்து கொண்டிருக்கின்ற தன்மை உடையதாய் இருக்கிறது. ஸ்வர்க்கம். நரகம், மிருகம், பிரேத முதலிய கிளைகளைக் கொண்டதாய் இருப்பதால் அது கீழ் நோக்கியவைகளை உள்ளன. அது சனாதன அநாதியாய் இருப்பதால் வெகு காலமாய் பிரவிர்த்திக்கிறது.
यदस्य संसारवृक्षस्य मूलं तदेव शुक्रं शुभ्रं शुद्धं ज्योतिष्मत् चैतन्यात्मज्योतिःस्वभावं तदेव ब्रह्म सर्वमहत्त्वात् । तदेव अमृतम् अविनाशस्वभावम् उच्यते कथ्यते सत्यत्वात् । वाचारम्भणं विकारो नामधेयमनृतमन्यदतो मर्त्यम् । तस्मिन् परमार्थसत्ये ब्रह्मणि लोकाः गन्धर्वनगरमरीच्युदकमायासमाः परमार्थदर्शनाभावावगमनाः श्रिताः आश्रिताः सर्वे समस्ताः उत्पत्तिस्थितिलयेषु । तदु तद्ब्रह्म नात्येति नातिवर्तते मृदादिकमिव घटादिकार्यं कश्चन कश्चिदपि विकारः । एतद्वै तत् ॥
(அனுவாதம்) எது இந்த சம்சார விருக்ஷத்தின் காரணமோ(மூலமோ) அதுதான் சுத்தமானது, சைதன்யஜ்யோதி ஸ்வரூபமானது. (சைதன்ய ஜ்யோதி ஸ்வபாவமானது) எல்லாவற்றிற்கும் மகத்தாய் (பெரியதாய்) இருப்பதால் அதுவே பிரஹ்மம். அதுவே சத்யமாய் இருப்பதால் அம்ருதம், நாசமற்ற ஸ்வபாவமுடையது என்று சொல்லப்படுகிறது. உலகில் உள்ள விகாரங்களும் (காரியங்களும்) பெயர்களும் வாக்கினாலேயே வெளிப்படுகிறது. அது அநாத்மாவாகும். ஆகையால் பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறான பொருள்கள் அழியக்கூடியதாகும். அந்த பரமார்த்த சத்யமான பிரஹ்மத்தினிடத்தில் உற்பத்தி ஸ்திதிலயம் உடைய காரியங்களாகிற எல்லா லோகங்களும் கந்தர்வ நகரம், கானல் நீர் போன்ற மாயைக்கு சமமானதும், பரமார்த்த தரிசனத்தால் சுபாவம் ஆகக்கூடியவைகள் ஆஸ்ரயத்திருக்கின்றன. குடம் முதலிய காரியங்கள் மண் முதலிய காரியத்தை ஆஸ்ரயப்பது போல் எந்த காரியமும் ப்ரஹ்மத்தைக் கடந்து இருப்பதில்லை இதுவே அந்த ப்ரஹ்மமாகும்.
यद्विज्ञानादमृता भवन्तीत्युच्यते, जगतो मूलं तदेव नास्ति ब्रह्म ; असत एवेदं निःसृतमिति-
(சங்கை) (அ-கை) எதை அறிந்தால் அம்ருதத்தை அடைவார்கள் என்று கூறப்பட்டதோ அது ப்ரஹ்மமே இல்லை. அது அசத். அதில் இருந்துதான் எல்லாம் உண்டாயிற்று என்பது சரியல்லை.
समाधानम् - तत् न —
(சமாதானம்) அவ்வாறு அல்ல
यदिदं किञ्च जगत्सर्वं प्राण एजति निःसृतम् ।
महद्भयं वज्रमुद्यतं य एतद्विदुरमृतास्ते भवन्ति ॥ २ ॥
यदिदं किञ्च यत्किञ्चेदं जगत्सर्वं प्राणे परस्मिन्ब्रह्मणि सति एजति कम्पते, तत एव निःसृतं निर्गतं सत् प्रचलति नियमेन चेष्टते । यदेवं जगदुत्पत्त्यादिकारणं ब्रह्म तत् महद्भयम् , महच्च तत् भयं च बिभेत्यस्मादिति महद्भयम् , वज्रमुद्यतम् उद्यतमिव वज्रम् ; यथा वज्रोद्यतकरं स्वामिनम् अभिमुखीभूतं दृष्ट्वा भृत्या नियमेन तच्छासने वर्तन्ते, तथेदं चन्द्रादित्यग्रहनक्षत्रतारकादिलक्षणं जगत्सेश्वरं नियमेन क्षणमप्यविश्रान्तं वर्तत इत्युक्तं भवति । ये एतत् विदुः स्वात्मप्रवृत्तिसाक्षिभूतमेकं ब्रह्म अमृताः अमरणधर्माणः ते भवन्ति ॥
(அனுவாதம்) எந்த இந்த ஜகத் உண்டோ அது பிராணண் அதாவது பரப்பிரஹ்மம் இருப்பதால் அசைகிறது. அந்த பிரஹ்மத்திலிருந்தே வெளிப்பட்டு நியமமாக செயல்படுகிறது. எது இவ்வாறு ஜகத்தின் சிருஷ்ட்டி முதலியவையின் காரணமாக எந்த பிரஹ்மம் உண்டோ அது மஹத் பயமாகும். எதனிடமிருந்து பயம் உண்டாகிறதோ மஹத் பயம் எனப்படும். மேலும் அது தூக்கிய வஜ்ரம் (வஜ்ராயுதம்) போல் இருக்கிறது. வஜ்ரத்தை உயர்த்திய எஜமானன் தன்னை நோக்கும் பொழுது வேலைக்காரன் தன் வேலைகளில் (கட்டளைகளில்) நியமமாக ஈடுபடுவான். அதைப் போல் சந்திரன், சூரியன் கிரஹங்கள் நக்ஷத்திரங்கள் முதலியவைகளை லக்ஷணமாக உடைய ஜகத் ஈஸ்வரனுடைய கட்டளைகளை நியமமாக ஒரு க்ஷணமும் ஒய்வில்லாமல் நடக்கிறது என்று கூறப்பட்டதாகிறது. எவர்கள் தன்னுடைய அந்தக் கரண விருத்தியின் சாக்ஷியும் ஏகமுமான பிரஹ்மத்தை அறிகிறார்களோ அவர்கள் அம்ருதம் எனப்படும் மரண தர்மமற்றவர்களாய் ஆகிறார்கள்.
कथं तद्भयाज्जगद्वर्तत इति, आह —
(அ-கை) எவ்வாறு அதன் பயத்தால் ஜகத் இருக்கிறது என்பது கூறப்படுகிறது.
भयादस्याग्निस्तपति भयात्तपति सूर्यः ।
भयादिन्द्रश्च वायुश्च मृत्युर्धावति पञ्चमः ॥ ३ ॥
भयात् भीत्या अस्य परमेश्वरस्य अग्निः तपति ; भयात्तपति सूर्यः, भयादिन्द्रश्च वायुश्च मृत्युर्धावति पञ्चमः । न हि, ईश्वराणां लोकपालानां समर्थानां सतां नियन्ता चेद्वज्रोद्यतकरवन्न स्यात् , स्वामिभयभीतानामिव भृत्यानां नियता प्रवृत्तिरुपपद्यते ॥
(அனுவாதம்) பரமேச்வரனுடைய பயத்தால் அக்னி தஹிக்கிறது. பயத்தினால் சூரியன் தஹிக்கிறான். பயத்தால் இந்திரனும், வாயுவும், எமனும் (ம்ருத்யுவும்) ஓடுகிறது. சாமர்த்தியமுடைய ஈஸ்வரர்களாகிய உலகத்தை ஆளுகிறவர்கள் வஜ்ரத்தை உயர்த்திய கை உடையவர்களாய் நியந்தா (நடத்துபவர்) இல்லை எனில் எஜமானனிடத்தில் பயமுள்ள வேலைக்காரர்கள் போல், அவர்களுக்கு நியமிக்கப்பட்ட பிரவிர்த்தியில் ஈடுபட மாட்டார்கள்.
तच्च
(அ-கை) மேலும் அந்த (பயத்திற்குக் காரணமான) ப்ரஹ்மத்தை
इह चेदशकद्बोद्धुं प्राक्शरीरस्य विस्रसः ।
ततः सर्गेषु लोकेषु शरीरत्वाय कल्पते ॥ ४ ॥
इह जीवन्नेव चेत् यद्यशकत् शक्तः सन् जानातीत्येतत् , भयकारणं ब्रह्म बोद्धुम् अवगन्तुम् , प्राक् पूर्वं शरीरस्य विस्रसः अवस्रंसनात्पतनात् संसारबन्धनाद्विमुच्यते । न चेदशकद्बोद्धुम् , ततः अनवबोधात् सर्गेषु, सृज्यन्ते येषु स्रष्टव्याः प्राणिन इति सर्गाः पृथिव्यादयो लोकाः तेषु सर्गेषु, लोकेषु शरीरत्वाय शरीरभावाय कल्पते समर्थो भवति ; शरीरं गृह्णातीत्यर्थः । तस्माच्छरीरविस्रंसनात्प्रागात्मावबोधाय यत्न आस्थेयः
(அனுவாதம்) இந்த உலகில் ஜீவித்திருக்கும் பொழுதே என்றால் இந்த சரீரம் விழும் முன்பே இந்த பயத்திற்கு காரணம் பிரஹ்மம் என்று அறிவதற்கு சக்தி உள்ளவனாய் இருந்தால் இந்த சரீரம் விழும் முன் சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவாய். அறிய சக்தி இல்லை எனில் அதை அறியாததினால் சர்க்கத்தில் அதாவது சிருஷ்ட்டியில் அழுத்துவாய். படைக்கப்பட வேண்டியவைகளாகிய, ஜீவர்கள் எதில் படைக்கப்படுகின்றனரோ அது சர்க்கம் எனப்படும் பிருதிவி முதலிய லோகங்களாகும். அச்சிருஷ்ட்டிக்கப்பட்ட லோகத்தில் சரீரத்தை எடுப்பதன் சாமர்த்தியமுடையவர்களாகிறார்கள். அதாவது சரீரத்தை எடுக்கிறார்கள் என்பது பொருள். ஆகையால் சரீரம் விழும் முன் பிரத்யக் ஆத்மாவை அறிவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
यस्मादिहैवात्मनो दर्शनमादर्शस्थस्येव मुखस्य स्पष्टमुपपद्यते, न लोकान्तरेषु ब्रह्मलोकादन्यत्र । स च दुष्प्रापः ,कथमिति? उच्यते —
(அ-கை) எதனால் கண்ணாடியில் தோன்றும் முகம் போல இங்கே இந்த சரீரத்திலேயே ஆத்ம தர்சனம் ஸ்பஷ்ட்டமாக(தெளிவாக) ஏற்படுமோ, பிரஹ்ம்ம லோகத்தைத் தவிர மற்றலோகங்களில் தெளிவாக தோன்றுவது இல்லையோ, பிரஹ்ம்ம லோகத்தை அடைவது மிகக் கடினமானதோ ஆகையால் (இந்த தேஹத்திலேயே அடைய முயற்சிக்க வேண்டும்) அது எவ்வாறு என்று கூறப்படுகிறது.
यथादर्शे तथात्मनि यथा स्वप्ने तथा पितृलोके ।
यथाप्सु परीव ददृशे तथा गन्धर्वलोके च्छायातपयोरिव ब्रह्मलोके ॥ ५ ॥
यथा आदर्शे प्रतिबिम्बभूतमात्मानं पश्यति लोकः अत्यन्तविविक्तम् , तथा इह आत्मनि स्वबुद्धावादर्शवन्निर्मलीभूतायां विविक्तमात्मनो दर्शनं भवतीत्यर्थः ।
(அனுவாதம்) லோகமானது (உலகம்) எவ்வாறு கண்ணாடியில் பிரதிபிம்ப ரூபமான தன்னை தெளிவாக பார்க்கிறதோ அவ்வாறு ஆத்மாவில் (தன்னில்) அதாவது கண்ணாடியில் பார்ப்பது போல் நிர்மலமான தன்னுடைய புத்தியில் ஆத்ம தர்சனமானது தெள்ளத் தெளிவாக இருக்கிறது (பார்க்கப்படுகிறது) என்பது பொருள்.
यथा स्वप्ने अविविक्तं जाग्रद्वासनोद्भूतम् , तथा पितृलोके अविविक्तमेव दर्शनमात्मनः कर्मफलोपभोगासक्तत्वात् । यथा च अप्सु अविविक्तावयवमात्मस्वरूपं परीव ददृशे परिदृश्यत इव, तथा गन्धर्वलोके अविविक्तमेव दर्शनमात्मनः एवं च लोकान्तरेष्वपि शास्त्रप्रामाण्यादवगम्यते । छायातपयोरिव अत्यन्तविविक्तं ब्रह्मलोक एवैकस्मिन् । स च दुष्प्रापः, अत्यन्तविशिष्टकर्मज्ञानसाध्यत्वात् । तस्मादात्मदर्शनाय इहैव यत्नः कर्तव्य इत्यभिप्रायः ॥
(அனுவாதம்) எவ்வாறு ஸ்வப்னத்தில் ஜாக்ரத்தின் வாசனையினால் உண்டான வஸ்துவைப் போல் தெளிவாக இல்லையோ அவ்வாறு பித்ரு லோகத்தில் கர்ம பல போகத்தில் ஈடுபட்டிருப்பதினால் ஆத்ம தர்சனம் தெளிவு பெறாததாகவே இருக்கின்றது. எவ்வாறு தண்ணீரில் அவயவங்களை தெளிவுபட பிரித்து அறிய முடியாதது போல் கந்தர்வ லோகத்தில் ஆத்ம ஸ்வரூபம் தெளிவற்றதாய் விளங்குகிறது. அவ்வாறே வேறு மற்ற லோகங்களிலும் தெளிவாக அறிய முடியாது என்பதை சாஸ்திரப் பிரமாணத்தினால் அறிகிறோம். ப்ரஹ்ம லோகம் மட்டும் நிழல், வெயில் போல் மிகவும் தெளிவாக ஆத்ம தர்சனம் ஏற்படுகிறது. அதாவது முற்றிலும் சிறந்த கர்ம ஞானத்தினால் அடையப்படுவதாய் இருப்பதால் அதை அடைவது மிகக் கடினம். ஆகையால் ஆத்ம தர்சனத்தின் பொருட்டு இங்கேயே அதாவது இந்த தேஹத்திலேயே முயற்சி (புருஷப்ரயத்தனம்) செய்ய வேண்டும் என்பது அபிப்ராயம்.
कथमसौ बोद्धव्यः, किं वा तदवबोधे प्रयोजनमिति, उच्यते —
(அ-கை)அதை எவ்வாறு அறிந்து கொள்ள வேண்டும்? அதை அறிவதனால் என்னதான் பிரயோஜனம்? என்பது கூறப்படுகிறது.
इन्द्रियाणां पृथग्भावमुदयास्तमयौ च यत् ।
पृथगुत्पद्यमानानां मत्वा धीरो न शोचति ॥ ६ ॥
इन्द्रियाणां श्रोत्रादीनां स्वस्वविषयग्रहणप्रयोजनेन स्वकारणेभ्य आकाशादिभ्यः पृथगुत्पद्यमानानाम् अत्यन्तविशुद्धात्केवलाच्चिन्मात्रात्मस्वरूपात् पृथग्भावं स्वभावविलक्षणात्मकताम् , तथा तेषामेवेन्द्रियाणाम् उदयास्तमयौ च उत्पत्तिप्रलयौ जाग्रत्स्वप्नावस्थाप्रतिपत्त्या नात्मन इति मत्वा ज्ञात्वा विवेकतो धीरः धीमान् न शोचति, आत्मनो नित्यैकस्वभावत्वाव्यभिचाराच्छोककारणत्वानुपपत्तेः । तथा च श्रुत्यन्तरम् ‘तरति शोकमात्मवित्’ (छा. उ. ७ । १ । ३) इति ॥
(அனுவாதம்) தத்தம் விஷயத்தை அறிவதற்கான பிரயோஜனத்தின் பொருட்டு தன்தன் காரணமாகிய ஆகாசாதிகளிலிருந்து தனித்தனியாய் உண்டாகின்ற ச்ரோத்திராதிகள் மிகவும் சுத்தமாயும், ஒன்றாயும் உள்ள சின்மாத்திர ஸ்வபாவத்தைக் காட்டிலும் வேறான ஸ்வாபாவம் உள்ள தன்மை உடையன. அவ்வாறே ஜாக்ரத் ஸ்வப்னத்தை அபேக்ஷித்த இந்திரியங்களுக்கே உற்பத்தி பிரளயங்கள் ஏற்படுகின்றன, ஆத்மாவிற்கு அல்ல என்று அறிந்த தீரன் சோகத்தை அடைவதில்லை. ஆத்ம நித்ய ஏக ஸ்வபாவமுடையதாய் பிறழ்ச்சி அற்று இருப்பதால் சோகத்திற்கு காரணத் தன்மை இல்லை என்பதாகும். அவ்வாறே வேறு சுருதியிலும் “तरति शोकमात्मविद्” (தரதி சோகமாத்மவித்)ஆத்மாவை அறிந்தவன் சோகத்தை கடக்கிறான் என்று கூறப்பட்டுள்ளது.
यस्मादात्मनः इन्द्रियाणां पृथग्भाव उक्तो नासौ बहिरधिगन्तव्यः यस्मात्प्रत्यगात्मा स सर्वस्य ; तत्कथमिति, उच्यते —
(அ-கை)எதனால் ஆத்மாவைக் காட்டிலும் இந்திரியங்களுக்கு வேறாக இருத்தல் என்று சொல்லப்பட்டதோ அது தனியாக வெளியில் இருக்கிறது என்று புரிந்து கொள்ளக் கூடாது. ஏன் எனில் அது எல்லாவற்றிற்கும் அந்தராத்மாவாய் இருப்பதால். அது எவ்வாறு என்று கூறப்படுகிறது.
इन्द्रियेभ्यः परं मनो मनसः सत्त्वमुत्तमम् ।
सत्त्वादधि महानात्मा महतोऽव्यक्तमुत्तमम् ॥ ७ ॥
इन्द्रियेभ्यः परं मन इत्यादि । अर्थानामिहेन्द्रियसमानजातीयत्वादिन्द्रियग्रहणेनैव ग्रहणम् । पूर्ववदन्यत् । सत्त्वशब्दाद्बुद्धिरिहोच्यते ॥
(அனுவாதம்) இந்திரியங்களைக் காட்டிலும் மேலான மனது முதலியவைகள். இங்கு இந்திரியங்கள் சமான ஜாதியாய் இருப்பதால் இந்திரயங்களை கிரஹித்ததினாலேயே அவைகளும் கிரஹிக்கப் பட்டவைகள் ஆகின்றன. மற்றவை முன் போல், சத்துவ சப்தம் இங்கு புத்தியைக் குறிக்கிறது.
अव्यक्तात्तु परः पुरुषो व्यापकोऽलिङ्ग एव च ।
यं ज्ञात्वा मुच्यते जन्तुरमृतत्वं च गच्छति ॥ ८ ॥
अव्यक्तात्तु परः पुरुषः व्यापकः, व्यापकस्याप्याकाशादेः सर्वस्य कारणत्वात् । अलिङ्गः लिङ्ग्यते गम्यते येन तल्लिङ्गं बुद्ध्यादि, तदविद्यमानं यस्य सोऽयमलिङ्गः एव च ; सर्वसंसारधर्मवर्जित इत्येतत् । यं ज्ञात्वा आचार्यतः शास्त्रतश्च मुच्यते जन्तुः अविद्यादिहृदयग्रन्थिभिर्जीवन्नेव ; पतितेऽपि शरीरे अमृतत्वं च गच्छति । सोऽलिङ्गः परोऽव्यक्तात्पुरुष इति पूर्वेणैव सम्बन्धः ॥
(அனுவாதம்) அவ்யக்தத்தைக் காட்டிலும் மேலானவன் எல்லாவற்றிற்கும் காரணமாய் இருப்பதால் ஆகும் ஆகாசம் முதலியவைகளின் வியாபகத்தைக் காட்டிலும் வியாபகமாய் இருக்கிறது. எதனால் அறிய முடியாதது அறியப்படுகிறதோ அது புத்தி முதலிய லிங்கம் எனப்படுகிறது. அவை இல்லாததால் அலிங்கம் எனப்படுகிறது. சம்சார தர்மம் அற்றது என்பதாகும். ஆச்சாரியரிடத்திலிருந்தும் சாஸ்திரத்தினாலும் அதை அறிந்து அவித்யை முதலிய ஹ்ருதய முடுச்சுகளை நீக்கி ஜீவித்திருக்கு பொழுதே முக்தி அடைகின்றான். சரீரம் வீழ்ந்த பின்னும் அம்ருதத்துவத்தை அடைகின்றான். அவன் லிங்கமற்றவன், அவ்யக்தத்தைக் காட்டிலும் மேலான புருஷன் என்று முந்திய வாக்கியத்தின் சம்பந்தம்.
कथं तर्हि तस्य अलिङ्गस्य दर्शनमुपपद्यत इति, उच्यते —
(அ-கை லிங்கம் (சின்னம்) அற்ற ஆத்மாவின் தர்சனம் எவ்வாறு ஏற்படும் என்பதைப் பற்றிக் கூறப்படுகிறது.
न सन्दृशे तिष्ठति रूपमस्य न चक्षुषा पश्यति कश्चनैनम् ।
हृदा मनीषा मनसाभिक्लृप्तो य एतद्विदुरमृतास्ते भवन्ति ॥ ९ ॥
न सन्दृशे सन्दर्शनविषये न तिष्ठति प्रत्यगात्मनः अस्य रूपम् । अतः न चक्षुषा सर्वेन्द्रियेण, चक्षुर्ग्रहणस्योपलक्षणार्थत्वात् , पश्यति नोपलभते कश्चन कश्चिदपि एनं प्रकृतमात्मानम् ।
(அனுவாதம்) இந்த பிரத்யக் ஆத்ம விஷயத்தில் ஸ்திரத்தன்மை ஏற்படுவதில்லை. ஆகையால் ஒருவனும் இந்த பிரகிருத ஆத்மாவை கண்களால் அதாவது எல்லா இந்திரியங்களாலும் அறிந்து கொள்ள முடிவதில்லை. இந்த கண்கள் என்பது எல்லா இந்திரியங்களுக்கும் உபலக்ஷணமாகும்.
कथं तर्हि तं पश्येदिति, उच्यते — हृदा हृत्स्थया बुद्ध्या, मनीषा मनसः सङ्कल्पादिरूपस्य ईष्टे नियन्तृत्वेनेति मनीट् तया मनीषा विकल्पवर्जितया बुद्ध्या । मनसा मननरूपेण सम्यग्दर्शनेन अभिक्लृप्तः अभिसमर्थितः अभिप्रकाशित इत्येतत् । आत्मा ज्ञातुं शक्य इति वाक्यशेषः । तमात्मानं ब्रह्म एतत् ये विदुः अमृताः ते भवन्ति ॥
(அனுவாதம்) எவ்வாறுதான் அதை (ஆத்மாவை) அறிகிறார்கள் என்பது கூறப்படுகிறது. “ ह्य्दा ” (ஹ்ருதா) ஹ்ருதயத்தில் இருக்கும் புத்தியினால் அதாவது मनीषा(மனீஷா) மனதின் சங்கல்ப முதலிய ரூபங்களின் நியந்தவாய் இருக்கின்றதால் “मनीट्”(மனீட்) என்ற அந்த ஹ்ருதா என்றால் இந்த விகல்பமற்ற புத்தியினால் மனனரூப யதார்த்த தர்சன மூலமாய் பிரகாசப்பட்டு அந்த ஆத்மா அறிய முடிகிறது. ஆத்மாவை அறிய முடியும் என்பது இந்த வாக்கியத்தின் சேஷமாகும். (பாகமாகும்) அந்த ஆத்மாவே பிரஹ்மம் என்று எவன் அறிகிறானோ அவன் மரணமற்றதன்மையை அடைகிறான்.
सा हृन्मनीट् कथं प्राप्यत इति तदर्थो योग उच्यते —
(அ-கை) அந்த ह्य्न्मनीट् (ஹ்ருன்மனீட்) விகல்ப மற்ற சுத்தபுத்தியை அடைவது என்பதின் பொருட்டு எவ்வாறு அதற்கு வேண்டிய யோகமானது கூறப்படுகிறது.
यदा पञ्चावतिष्ठन्ते ज्ञानानि मनसा सह ।
बुद्धिश्च न विचेष्टति तामाहुः परमां गतिम् ॥ १० ॥
यदा यस्मिन्काले स्वविषयेभ्यो निवर्तितानि आत्मन्येव पञ्च ज्ञानानि — ज्ञानार्थत्वाच्छ्रोत्रादीनीन्द्रियाणि ज्ञानान्युच्यन्ते — अवतिष्ठन्ते सह मनसा यदनुगतानि, येन सङ्कल्पादिव्यावृत्तेनान्तःकरणेन । बुद्धिश्च अध्यवसायलक्षणा न विचेष्टति स्वव्यापारेषु न विचेष्टते न व्याप्रियते, तामाहुः परमां गतिम् ॥
(அனுவாதம்) எப்பொழுது தன் விஷயங்களில் இருந்து நிவர்த்தி அடைந்து ஆத்மாவிலேயே ஐந்து ஞானங்கள்  (पञ्चज्ञेनेन्द्रियाणि)  அதாவது  ஞானத்தை பிரயோஜனமாக உடையதால் சுரோத்திரம் முதலிய இந்திரியங்களை ஞானங்கள் என்று கூறப்படுகின்றன, அவைகள் ( मनसा ) மனதுடன் அதாவது அதில் தொடர்ந்து உண்டாகும் சங்கல்பங்கள் அற்ற அந்தக்கரணத்துடன் இருக்கின்றனவோ, அத்யவஸாய லக்ஷணமான புத்தியும் தனது வியாபாரங்களில் ப்ரவிருத்திப்பது இல்லையோ, அந்த நிலையே மேலான நிலை என்று கூறுவர்.
तां योगमिति मन्यन्ते स्थिरामिन्द्रियधारणाम् ।
अप्रमत्तस्तदा भवति योगो हि प्रभवाप्ययौ ॥ ११ ॥
ताम् ईदृशीं तदवस्थां योगमिति मन्यन्ते वियोगमेव सन्तम् । सर्वानर्थसंयोगवियोगलक्षणा हीयमवस्था योगिनः । एतस्यां ह्यवस्थायाम् अविद्याध्यारोपणवर्जितस्वरूपप्रतिष्ठ आत्मा स्थिरामिन्द्रियधारणास्थिरामचलामिन्द्रियधारणां बाह्यान्तःकरणानां धारणमित्यर्थः ।
(அனுவாதம்) அந்த இவ்வாறான அவஸ்தையில் உண்மையில் வியோகத்தையே (அநர்த்தத்தின் நீக்கத்தையே) யோகம் என்று கருதுகிறார்கள். யோகிகளினுடைய அவஸ்தையானது எல்லா அனர்த்தங்களில் உள்ள சம்யோகத்தின் வியோகமே (நீக்கமே)யாகும். இந்த அவஸ்தையில் தான் அத்யாரோப மற்றவனாய் தன் ஸ்வரூபத்தில்  நிலை பெற்றிருக்கிறான் (அந்த அவஸ்தையைதான்) ஸ்திரமான இந்திரிய தாரணை என்று சொல்லுகிறார்கள். ஸ்திரம் என்றால் சலனமற்றது. அதாவது சலனமற்ற இந்திரிய தாரணை என்பது பாஹிய அந்தக் கரணங்களின் தாரணமாகும்.
अप्रमत्तः प्रमादवर्जितः समाधानं प्रति नित्यं यत्नवान् तदा तस्मिन्काले, यदैव प्रवृत्तयोगो भवतीति सामर्थ्यादवगम्यते । न हि बुद्ध्यादिचेष्टाभावे प्रमादसम्भवोऽस्ति । तस्मात्प्रागेव बुद्ध्यादिचेष्टोपरमात् अप्रमादो विधीयते । अथवा, यदैव इन्द्रियाणां स्थिरा धारणा, तदानीमेव निरङ्कुशमप्रमत्तत्वमित्यतोऽभिधीयते अप्रमत्तस्तदा भवतीति । कुतः ? योगो हि यस्मात् प्रभवाप्ययौ उपजनापायधर्मक इत्यर्थः । अतः अपायपरिहारायाप्रमादः कर्तव्य इत्यभिप्रायः ॥
(அனுவாதம்) அந்த சமயத்தில் சாதகப் புருஷன் (அப்ரமத்த) பிரமாதம் அற்றவனாக அதாவது எப்பொழுதும் சமாதானம் உடையவனாய் பிரயத்தனம் செய்கிறான். எப்பொழுதும் யோகத்தில் பிரவிர்த்திக்கின்றான் என்று வாக்கியத்தினால் அறிகிறோம். ஏன் எனில் புத்தி முதலியவைகள் சேஷ்ட்டை (சலனம்) அற்றிருக்கும் பொழுது பிரமாதமானது ஏற்படுவதில்லை. ஆகையால் புத்தி முதலியவைகளின் சேஷ்ட்டை நீங்குவதற்கு முன் அப்பிரமாதம் விதிக்கப்படுகிறது, அல்லது எப்பொழுது இந்திரியங்கள் ஸ்திரத் தன்மையை அடைகிறதோ அப்பொழுதே தடையற்ற அப்பிரமாதம் அடையப்படுகிறது. ஆகையால் அப்பொழுது பிரமத்த இல்லாத நிலை உண்டாகிறது என்று கூறப்படுகிறது. ஏன் எனில் யோகமானது உத்பத்தி விநாசம் என்னும் தர்மம் உள்ளது என்பதால் யோகத்திற்கு விநாசம் வராமல் இருப்பதற்காக அப்ரமாதத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
बुद्ध्यादिचेष्टाविषयं चेद्ब्रह्म इदं तदिति विशेषतो गृह्येत, बुद्ध्याद्युपरमे च ग्रहणकारणाभावादनुपलभ्यमानं नास्त्येव ब्रह्म । यद्धि करणगोचरं तदस्तीति प्रसिद्धं लोके विपरीतं चासदिति । अतश्चानर्थको योगोऽनुपलभ्यमानत्वाद्वा नास्तीत्युपलब्धव्यं ब्रह्मेत्येवं प्राप्ते, इदमुच्यते सत्यम् ।
(அ-கை)பிரஹ்மம் புத்தி முதலியவைகளின் வியவகாரத்திற்கு விஷயமானால் இது அது என்று விசேஷமாக அறிய முடியும். புத்தி முதலியவைகள் (உபரமம்) வியவகாரம் அற்றிருக்கும்பொழுது அறிவதற்கான காரணம் இல்லாததால் அறிய வேண்டிய ப்ரஹ்மம் இல்லவே இல்லை. உலகில் இந்திரியங்களுக்கு புலப்படும் பொழுது அது இருக்கிறது என்பது பிரசித்தமாகும். அதற்கு விபரீதமானது அசத்தாகும். ஆகையால் அந்த யோகம் அநர்த்தமாகும். அது அறிய முடியாததால் பிரஹ்மம் இல்லை என்று அறியப்படவேண்டுவது என்று ஆகிறது என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது. இவ்வாறு கூறுவது உண்மைதான்.
नैव वाचा न मनसा प्राप्तुं शक्यो न चक्षुषा ।
अस्तीति ब्रुवतोऽन्यत्र कथं तदुपलभ्यते ॥ १२ ॥
नैव वाचा न मनसा न चक्षुषा नान्यैरपीन्द्रियैः प्राप्तुं शक्यते इत्यर्थः । तथापि सर्वविशेषरहितोऽपि जगतो मूलमित्यवगतत्वादस्त्येव, कार्यप्रविलापनस्यास्तित्वनिष्ठत्वात् । तथा हीदं कार्यं सौक्ष्म्यतारतम्यपारम्पर्येणानुगम्यमानं सद्बुद्धिनिष्ठामेवावगमयति । यदापि विषयप्रविलापनेन प्रविलाप्यमाना बुद्धिः, तदापि सा सत्प्रत्ययगर्भैव विलीयते । बुद्धिर्हि नः प्रमाणं सदसतोर्याथात्म्यावगमे ।
(அனுவாதம்) வாக்காலும், மனதாலும், கண்களாலும், மற்ற இந்திரியங்களாலும் அடைய முடியாது என்பது பொருள். அவ்வாறு இருந்தாலும், எல்லா தர்மங்களும் அற்று இருந்தாலும் ஜகத்தின் மூலம் (காரணம்) என்று அறியப்பட்டதாய் இருப்பதாலும் (எல்லாவற்றிலும் உள்ளூடாய் சன்மாத்திரமாய் இருப்பதாலும்) காரியங்களின் நாசத்தின் அடைவும் அதிஷ்ட்டானமான சத்தில் முடிவதாலும் அது சத்தாகவே இருக்கிறது. அவ்வாறு இருப்பதால் இந்த காரியமும் சூக்ஷ்மம், சூக்ஷ்மதரம், சூக்ஷ்மதமம் என்ற பரம்பரையைத் தொடர்ந்து அறியப்படுவதாய் எல்லாவற்றிற்கும் அதிஷ்ட்டானமான சன்மாத்திரமாய் நிலைபெற்றிருத்தலை தெரிவிக்கின்றது. எப்பொழுது புத்தியானது தனக்கு விஷயமான  பதார்த்தத்தின் நாசத்தால் தானும் நாசம் ஆகும் பொழுது ஸத்  என்ற விசேஷணத்தைத் தன்னில் அடக்கிக் கொண்டு சத்பதார்த்திற்கு நாசமில்லாமல் நாசமாகிறது. சத் அசத் என்பதின் யதார்த்தத்தை அறிவதற்கு நமக்கு புத்தியே பிரமாணம்.
मूलं चेज्जगतो न स्यादसदन्वितमेवेदं कार्यमसदसदित्येव गृह्येत, न त्वेतदस्ति ; सत्सदित्येव तु गृह्यते ; यथा मृदादिकार्यं घटादि मृदाद्यन्वितम् । तस्माज्जगतो मूलमात्मा अस्तीत्येवोपलब्धव्यः । कस्मात् ? अस्तीति ब्रुवतः अस्तित्ववादिन आगमार्थानुसारिणः श्रद्दधानादन्यत्र नास्तिकवादिनि नास्ति जगतो मूलमात्मा निरन्वयमेवेदं कार्यमभावान्तं प्रविलीयत इति मन्यमाने विपरीतदर्शिनि, कथं तद्ब्रह्म तत्त्वत उपलभ्यते ; न कथञ्चनोपलभ्यत इत्यर्थः ॥
(அனுவாதம்) ஜகத்திற்கு காரணம் இல்லை எனில் அசத்துடன் சேர்ந்த இந்த காரியம் அசத் என்றே கிரஹிக்கப்படுகிறது. அவ்வாறு அல்ல, சத், சத் என்றே அறியப்படுகிறது. எவ்வாறெனில் மண்ணில் உண்டான காரியமாகிய கடம் முதலியவைகள் மண்ணுடன் கூடியதாகவே இருக்கின்றன. ஆகையால் ஜகத்திற்கு காரணமாகிற ஆத்மா இருக்கிறது என்று அறியப்பட வேண்டும். ஏன் எனில்? இருக்கிறது என்று கூறுகின்ற ஆத்மா இருக்கிறது கூறும் ஆகம அர்த்தை அனுசரிக்கின்ற வாதிகளுடைய சிரத்தையைக் காட்டிலும் வேறான நாஸ்திக வாதிகள் ஜகத்திற்கு காரணம் இல்லை. அந்த கார்யமானது எதனுடனும் சம்பந்தப்படாமல் அபாவத்தையே முடிவாக உடையது என்று நினைக்கும் விபரீத தர்சிகள் எவ்வாறு அந்த பிரஹ்ம தத்துவத்தை அறிய முடியும்? எவ்வகையாலும் அடைய முடியாது என்பது பொருள்.
तस्मादपोह्यासद्वादिपक्षमासुरम्
(அ-கை) ஆகையைால் அசுரத் தன்மை உள்ள அசத்வாதி பக்ஷத்தை நிராகரணம் செய்து
अस्तीत्येवोपलब्धव्यस्तत्त्वभावेन चोभयोः ।
अस्तीत्येवोपलब्धस्य तत्त्वभावः प्रसीदति ॥ १३ ॥
अस्तीत्येव आत्मा उपलब्धव्यः सत्कार्यबुद्ध्याद्युपाधिभिः । यदा तु तद्रहितोऽविक्रिय आत्मा कार्यं च कारणव्यतिरेकेण नास्ति ‘वाचारम्भणं विकारो नामधेयं मृत्तिकेत्येव सत्यम्’ (छा. उ. ६ । १ । ४) इति श्रुतेः, तदा तस्य निरुपाधिकस्यालिङ्गस्य सदसदादिप्रत्ययविषयत्ववर्जितस्यात्मनस्तत्त्वभावो भवति । तेन च रूपेणात्मोपलब्धव्य इत्यनुवर्तते ।
(அனுவாதம்) அசத்துவ பக்ஷத்தை நீக்கி சத்காரியத்தை உடையது எனவும் புத்தி முதலியவைகளை உபாதிகளாக உடையது என்றும் ஆத்மா இருக்கிறதென்று  அறிந்து கொள்ள வேண்டும். எப்பொழுது அசத் இல்லாத அவிக்கிரியை (விகார) மற்ற ஆத்மா காரணமாய் இருப்பதால் அந்த காரணத்தைக் காட்டிலும் கார்யம் வேறாக இல்லை“वाचारम्भणं विका®úÉä ‘वाचारम्भणं विकारो नामधेयं मृत्तिकेत्येव सत्यम्’(வாச்சாரம்பணம் விகாரோ நாமதேயம் மிருத்திகேத்யேவ சைத்யம்)  என்று சுருதியின் வாக்கியமாகும். அப்பொழுது அந்த நிருபாதிக, லிங்கமற்ற, சத், அசத் ஆகிய பிரத்யய விஷயங்கள் அற்ற ஆத்மாவிற்கு தத்துவ பாவமானது உண்டாகிறது. அவ்விதமாக ஆத்மாவை அறிந்தவனாகிறான் என்று சேர்த்துக் கொள்ள வேண்டும்.
तत्राप्युभयोः सोपाधिकनिरुपाधिकयोरस्तित्वतत्त्वभावयोः — निर्धारणार्था षष्ठी — पूर्वमस्तीत्येवोपलब्धस्यात्मनः सत्कार्योपाधिकृतास्तित्वप्रत्ययेनोपलब्धस्येत्यर्थः । पश्चात्प्रत्यस्तमितसर्वोपाधिरूप आत्मनः तत्त्वभावः विदिताविदिताभ्यामन्योऽद्वयस्वभावः नेति नेतीत्यस्थूलमनण्वह्रस्वमदृश्येऽनात्म्ये निरुक्तेऽनिलयन इत्यादिश्रुतिनिर्दिष्टः प्रसीदति अभिमुखीभवति । आत्मप्रकाशनाय पूर्वमस्तीत्युपलब्धवत इत्येतत् ॥
(அனுவாதம்) ஸோபாதிகம், நிரூபாதிகம் இவைகளின் இருப்பு, தத்வ பாவத்தை அங்கு நிர்தாரணம் செய்வதின் பொருட்டு 6வது வேற்றுமையில் கூறப்பட்டுள்ளது. முன்பே இருக்கிறது என்று அறியப்பட்ட ஆத்மா சத்காரியத்தினாலும்,சத்காரியங்களுக்கு உபயோகப்படுகின்ற காரியங்களினாலும், புத்தி முதலியவைகளின் உபாதியினால் இருக்கிறது என்ற அறிவினால் அறியப்பட்டவனுக்கு என்பது பொருள். பின்பு எல்லா உபாதிகளும் நீங்கி, அறியப்படும் பொருள், அறியபடா பொருள் இவைகளைக் காட்டிலும் வேறாக அத்வைத ஸ்வரூபபாவம்  இருக்கிறது. “नेति नेति” (நேதி நேதி) இதுவல்ல, இதுவல்ல என்றும் “अस्थूलमनण्वह्रस्वम्” (அஸ்தூலமனன்வஹ்ரூஸ்வம்) ஸ்தூலமற்றது, சூக்ஷ்மமற்றது, குறுகிய தன்மை அற்றது என்றும் “अदृश्येऽनात्म्येऽनिरुक्तेऽनिलयने”  (அத்ருஷ்யே, அநாத்ம்யே அநிருக்தே அநிலயனே) திருஷ்யமற்றது, சரீரமற்றது, விசேஷமற்றது. ஆதாரமற்றது, என்றும் சுருதிகளினால் நிர்தேசிக்கப்பட்ட உண்மையான நிலையானது முன்பு இருக்கிறது என்று அறிந்தவனுக்கு ஆத்மப் பிரகாசத்தை அடையும் பொருட்டு (அதாவது தத்வ பாவத்தை அடையும் பொருட்டு அதில் ஈடுபடுகிறான்.)
एवं परमार्थदर्शिनोः-
(அ-கை) இவ்வாறு பரமார்த தர்சிகள்
यदा सर्वे प्रमुच्यन्ते कामा येऽस्य हृदि श्रिताः ।
अथ मर्त्योऽमृतो भवत्यत्र ब्रह्म समश्नुते ॥ १४ ॥
यदा यस्मिन्काले सर्वे कामाः कामयितव्यस्यान्यस्याभावात् प्रमुच्यन्ते विशीर्यन्ते ; ये अस्य प्राक्प्रतिबोधाद्विदुषो हृदि बुद्धौ श्रिताः आश्रिताः ; बुद्धिर्हि कामानामाश्रयः नात्मा, ‘कामः सङ्कल्पः’ (बृ. उ. १ । ५ । ३) इत्यादिश्रुत्यन्तराच्च ;
(அனுவாதம்) எப்பொழுது எல்லா காமனைகளும் அதாவது காமனைகொள்ள வேண்டிய வேறு ஒன்றும் இல்லாததால் அவைகளிலிருந்து விடுபடுகிறார்கள். ஞானம் ஏற்படுவதற்கு முன் புத்தியை எந்த காமனைகள் ஆஸ்ரயித்து இருந்தனவோ அந்த காமனைகளுக்கு புத்தியே ஆஸ்ரயம். ஆத்மா அல்ல. (காம, சங்ல்ப) என்று மற்ற சுருதியிலும் கூறப்பட்டுள்ளது.
अथ तदा मर्त्यः प्राक्प्रबोधादासीत् स प्रबोधोत्तरकालमविद्याकामकर्मलक्षणस्य मृत्योर्विनाशात् अमृतो भवति गमनप्रयोजकस्य मृत्योर्विनाशाद्गमनानुपपत्तेः । अत्र इहैव प्रदीपनिर्वाणवत्सर्वबन्धनोपशमात् ब्रह्म समश्नुते ब्रह्मैव भवतीत्यर्थः ॥
(அனுவாதம்) ஞானம் ஏற்படும் முன் மனிதனாக (மரண தர்மம் உடையவனாய்) இருந்தான். அவன் ஞானம் அடைந்த பின் அவித்யா காம கர்ம லக்ஷணமுள்ள மரண தர்மத்தின் நாசத்தால் மரணமற்றதன்மையை அடைகிறான்.(அமிருதமாகின்றான்) கமனக்கிரியையை ஏற்படுத்தும் மிருத்யு நாசமடைந்ததால் கமனம் அற்றதால் இங்கேயே தீபம் (தன்னில்) சாந்தமாவது போல் எல்லா பந்தங்களும் அற்று பிரஹ்மத்தை அடைகிறான். அதாவது பிரஹ்மமாகவே ஆகிறான்.
कदा पुनः कामानां मूलतो विनाश इति, उच्यते —
(அ-கை) எப்பொழுது காமனைகள் வேறுடன் நாசம் அடையும் என்பது கூறப்படுகிறது.
यदा सर्वे प्रभिद्यन्ते हृदयस्येह ग्रन्थयः ।
अथ मर्त्योऽमृतो भवत्येतावद्ध्यनुशासनम् ॥ १५ ॥
यदा सर्वे प्रभिद्यन्ते भेदमुपयान्ति विनश्यन्ति हृदयस्य बुद्धेरिह जीवत एव ग्रन्थयो ग्रन्थिवद्दृढबन्धनरूपा अविद्याप्रत्यया इत्यर्थः । अहमिदं शरीरं ममेदं धनं सुखी दुःखी चाहमित्येवमादिलक्षणाः तद्विपरीतात् ब्रह्मात्मप्रत्ययोपजनात् ब्रह्मैवाहमस्म्यसंसारीति विनष्टेष्वविद्याग्रन्थिषु तन्निमित्ताः कामा मूलतो विनश्यन्ति । अथ मर्त्योऽमृतो भवति एतावद्धि एतावदेवैतावन्मात्रं नाधिकमस्तीत्याशङ्का कर्तव्या । अनुशासनम् अनुशिष्टः उपदेशः सर्ववेदान्तानामिति वाक्यशेषः ॥
(அனுவாதம்) எப்பொழுது ஜீவித்திருக்கும் பொழுதே முடிச்சுகள் (ஹ்ருதயக்ரந்திகள்) போன்ற திடமாக பந்தப்பட்ட அவித்யா காரியங்களாகிற எல்லாத்தோற்றங்களும் நீங்கி பேதமற்றதாய் இருக்கிறதோ அப்பொழுது நான் இந்த சரீரம், இந்த சரீரம் என்னுடையது, இந்த செல்வம் என்னுடையது, நான் சுகீ, துக்கீ இவை முதலிய லக்ஷணங்களுக்கு விபரீதமான அஹம் பிரஹ்மாஸ்மி (நான் பிரஹ்மமாய் இருக்கிறேன்) என்ற பிரஹ்மாத்ம ஞானம் உண்டாகி நான் சம்சாரம் அற்றவன் என்று அவித்தியா முடிச்சிலிருந்தும் அதன் நிமித்தமான காமனைகளிலிருந்தும் முற்றிலும் விடுபடுகிறான். ஆகையால் மரண தர்மம் உடையவன் மரண மற்ற தன்மை அதாவது அம்ருதமாகிறான். இதற்கு மேலாக ஒன்று இருக்கிறது என்ற சங்கை செய்யதக்கதல்ல, ஆகையால் எல்லா வேதாந்த சாஸ்திரங்களினுடைய உபதேசம் இதுவாகும்.
निरस्ताशेषविशेषव्यापिब्रह्मात्मप्रतिपत्त्या प्रभिन्नसमस्ताविद्यादिग्रन्थेः जीवत एव ब्रह्मभूतस्य विदुषो न गतिर्विद्यते, ‘अत्र ब्रह्म समश्नुते’ (क. उ. २ । ३ । १४) इत्युक्तत्वात् ‘न तस्य प्राणा उत्क्रामन्ति ब्रह्मैव सन्ब्रह्माप्येति’ (बृ. उ. ४ । ४ । ६) इति श्रुत्यन्तराच्च ।
(அ-கை) எல்லா விசேஷங்களாகிய பேதமும் அற்ற எங்கும் நீக்கமற்ற வியாபித்துள்ள ப்ரஹ்மத்தை அடைந்ததினால் நீங்கிய எல்லா அவித்யா ப்ரத்யயத்தையும் உடையவன் ஜீவித்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரஹ்மமானவனாகிய வித்வானுக்கு ஜீவன்முக்தனுக்கு கதி என்பது (மார்க்கம்) கிடையாது. “अत्र ब्रह्म समश्नुते” ( இங்கேயே பிரஹ்மத்தை அடைகிறான்) இந்த சுருதி வாக்கியத்தால் அறிகிறோம் “न तस्य प्राणा उत्क्रामन्ति ब्रह्मैव सन्ब्रह्माप्येति.” (ந தஸ்ய ப்ராணா உத்க்ராமன்தி ப்ரஹ்மைவ ஸன்ப்ரஹ்மாப்யேதி) அவனுடைய பிராணன் வெளிக்கிளம்புவதில்லை. ப்ரஹ்மமாகவே இருந்து கொண்டு ப்ரஹ்மமாகவே ஆகிறது என்று வேறு சுருதியினாலும் அறிகிறோம்.
ये पुनर्मन्दब्रह्मविदो विद्यान्तरशीलिनश्च ब्रह्मलोकभाजः ये च तद्विपरीताः संसारभाजः, तेषामेष गतिविशेष उच्यते प्रकृतोत्कृष्टब्रह्मविद्याफलस्तुतये ।
(அ-கை) மேலும் எவர்கள் பிரஹ்மத்தை நன்றாக அறியாதவர்களோ (அக்ஞானிகள்) மற்றும் உபாசனை முதலிய வேறு வித்தையில் திறமையானவர்களோ அவர்கள் பிரஹ்ம லோகத்தை அடைவார்கள். எவர்கள் அவர்களைக் காட்டிலும் மாறானவர்களாகியவர்கள் சம்சாரத்தை அடைகிறார்கள். அவர்களுடைய கதி விசேஷங்கள் கூறப்படுகிறது. இங்கு கூறப்படுகிறதும், உக்கிருஷ்ட்டமானதுமான பிரஹ்ம வித்தையின் பலத்தை ஸ்துதிப்பதற்கு கூறப்படுகிறது.
किञ्चान्यत् , अग्निविद्या पृष्टा प्रत्युक्ता च । तस्याश्च फलप्राप्तिप्रकारो वक्तव्य इति मन्त्रारम्भः । तत्र —
(அ-கை) மேலும் அக்னி வித்தை நசிகேதனால் கேட்கப்பட்டு யமராஜாவால் பதில் கூறப்பட்டது. அந்த அக்னி வித்தையை அடைவதின் முறையைப் பற்றி கூறவேண்டும் என்பதற்காக இந்த மந்திரம் ஆரம்பிக்கப்படுகிறது. அவ்விடத்தில்
शतं चैका च हृदयस्य नाड्यस्तासां मूर्धानमभिनिःसृतैका ।
तयोर्ध्वमायन्नमृतत्वमेति विष्वङ्ङन्या उत्क्रमणे भवन्ति ॥ १६ ॥
शतं च शतसङ्ख्याकाः एका च सुषुम्ना नाम पुरुषस्य हृदयाद्विनिःसृताः नाड्यः सिराः ; तासां मध्ये मूर्धानं भित्त्वा अभिनिःसृता निर्गता एका सुषुम्ना नाम । तया अन्तकाले हृदये आत्मानं वशीकृत्य योजयेत् ।
நூ ற்றி ஒன்று எண்ணிக்கை உள்ள நாடிகளும், சுஷுமனா என்ற ஒரு நாடியும், புருஷனுடைய இருதயத்திலிருந்து சுஷுமனா என்ற நாடி தலையின் உச்சியைப் பிளந்து செல்கிறது. கடைசி காலத்தில் அந்த ஆத்மாவை (மனதை) தன்னுடைய ஹ்ருதயத்தில் வசம் செய்து ஒன்றச் செய்ய வேண்டும்.
तया नाड्या ऊर्ध्वम् उपरि आयन् गच्छन् आदित्यद्वारेण अमृतत्वम् अमरणधर्मत्वमापेक्षिकम् — ‘आभूतसम्प्लवं स्थानममृतत्वं हि भाष्यते’ (वि. पु. २ । ८ । ९७) इति स्मृतेः — ब्रह्मणा वा सह कालान्तरेण मुख्यममृतत्वमेति भुक्त्वा भोगाननुपमान्ब्रह्मलोकगतान् । विष्वङ् नानागतयः अन्या नाड्यः उत्क्रमणे उत्क्रमणनिमित्तं भवन्ति संसारप्रतिपत्त्यर्था एव भवन्तीत्यर्थः ॥
(அனுவாதம்) அந்த நாடிகள் மேல் நோக்கி சென்று ஆதித்ய மண்டல வழியாக ஆபேக்ஷிக அம்ருத தர்மத்தை அடைகிறது. “आभूतसंप्लवं स्थानममृतत्वं विभाव्यत” (ஆபூத சம்ப்ளவம் ஸ்தானமம்ருதத்வம் விபாவ்யதே) எல்லா பூதங்களும் நாசமாகும் வரை இருக்கும் ஸ்தானம் அம்ருதத்வம் எனப்படுகிறது. என்பது ஸ்ம்ருதி வாக்கியம். காலத்தின் முடிவில் பிரஹ்மாவுடன் ஒப்புவமையற்ற போகங்களை பிரஹ்ம லோகத்தில் அனுபவித்து விட்டு முக்கியமான அம்ருதத்தை அடைகிறான். இதைத் தவிர அநேத கதிகளை உடைய நாடிகள் உத்கிரமணத்திற்கு நிமித்தங்களாக இருக்கின்றன. அவைகள் சம்சார கதியையே அடைபவைகளாய் இருக்கின்றன.
इदानीं सर्ववल्ल्यर्थोपसंहारार्थमाह —
(அ-கை) இப்பொழுது எல்லாவல்லீ அர்த்தங்களையும் முடிவிற்கு கொண்டு வருவதற்காக சொல்லப்படுகிறது.
अङ्गुष्ठमात्रः पुरुषोऽन्तरात्मा सदा जनानां हृदये संनिविष्टः । तं स्वाच्छरीरात्प्रवृहेन्मुञ्जादिवेषीकां धैर्येण ।
तं विद्याच्छुक्रममृतं तं विद्याच्छुक्रममृतमिति ॥ १७ ॥
अङ्गुष्ठमात्रः पुरुषः अन्तरात्मा सदा जनानां सम्बन्धिनि हृदये संनिविष्टः यथाव्याख्यातः ; तं स्वात् आत्मीयात् शरीरात् प्रवृहेत् उद्यच्छेत् निष्कर्षेत् पृथक्कुर्यादित्यर्थः । किमिवेति, उच्यते — मुञ्जादिवेषीकाम् अन्तःस्थां धैर्येण अप्रमादेन । तं शरीरान्निष्कृष्टं चिन्मात्रं विद्यात् विजानीयात् शुक्रं शुद्धम् अमृतं यथोक्तं ब्रह्मेति । द्विर्वचनमुपनिषत्परिसमाप्त्यर्थम् , इतिशब्दश्च ॥
(அனுவாதம்) அங்குஷ்ட்ட மாத்திரமாய் (கட்டைவிரல் அளவில்) உள்ள புருஷன் எப்பொழுதும் ஜனங்களுடன் சம்பந்தப்பட்ட இருதயத்தில் அந்தராத்மாவாய் முன் வியாக்கியானம் செய்யப்பட்டவாறு இருக்கிறான். அவனை தன்னுடைய சரீரத்திலிருந்து பிரிக்க வேண்டும் எவ்வாறு எனில் கூறப்படுகிறது. பிரமாதம் (அறியாமை) இல்லாமல் தைரியமாக முஞ்சிப் புல்லில் இருந்து அதன் உள்ளிருக்கும் ஈக்கையைப் பிரிப்பது  போல் ஆகும். அந்த சரீரத்தினின்று பிரிக்கப்பட்டது, சின்மாத்திரம், சுத்தமானது, அம்ருதம், பிரஹ்மம் என்று அறி. இங்கு இரு முறைகூறியது இந்த உபநிஷத்து முடிவுக்கு வருகிறது என்பதற்காக.
विद्यास्तुत्यर्थोऽयमाख्यायिकार्थोपसंहारः अधुनोच्यते —
(அஃகை) வித்தையை ஸ்துதிப்பதன் பொருட்டு இந்த கதையின் (ஆக்யாயிகையின்) முடிவானது இப்பொழுது சொல்லப்படுகின்றது.
मृत्युप्रोक्तां नचिकेतोऽथ लब्ध्वा विद्यामेतां योगविधिं च कृत्स्नम् ।
ब्रह्म प्राप्तो विरजोऽभूद्विमृत्युरन्योऽप्येवं यो विदध्यात्ममेव ॥ १८ ॥
मृत्युप्रोक्ताम् एतां यथोक्तां ब्रह्मविद्यां योगविधिं च कृत्स्नं समस्तं सोपकरणं सफलमित्येतत् । नचिकेताः अथ वरप्रदानान्मृत्योः लब्ध्वा प्राप्येत्यर्थः । किम् ? ब्रह्म प्राप्तोऽभूत् मुक्तोऽभवदित्यर्थः । कथम् ? विद्याप्राप्त्या विरजः विगतरजाः विगतधर्माधर्मः विमृत्युः विगतकामाविद्यश्च सन् पूर्वमित्यर्थः ।
மிருத்யுவினால் எவ்வாறு கூறப்பட்டதோ அந்த பிரஹ்ம வித்யாவும் யோக விதியும் எல்லா சாதனங்களும் பலனும் உடையதாகும். நசிகேதன் ம்ருத்யுமிடமிருந்து வரத்தை அடைந்து என்பது பொருள் பின் என்ன நடந்தது? ப்ரஹ்மத்தை அடைந்தவனாக ஆனான். அதாவது முக்தனாக ஆனான் எவ்வாறு? வித்தையை அடைந்ததால் புண்ணிய பாபங்கள் அற்றவனாகவும், மிருத்யு அதாவது காமம் அவித்தை அற்றவனாகவும் இருந்து கொண்டு விமுக்தனாய் ஆகிறான்.
न केवलं नचिकेता एव, अन्योऽपि य एवं नचिकेतोवदात्मवित् अध्यात्ममेव निरुपचरितं प्रत्यक्स्वरूपं प्राप्यतत्त्वमेवेत्यभिप्रायः । नान्यद्रूपमप्रत्यग्रूपम् । तदेवमध्यात्मम् एवम् उक्तेन प्रकारेण वेद विजानातीति एवंवित् , सोऽपि विरजाः सन् ब्रह्म प्राप्य विमृत्युर्भवतीति वाक्यशेषः ॥
நசிகேதன் மட்டும் அல்ல மற்றவர்களும் நசிகேதன் போல் ஆத்ம ஞானியும் இந்த சரீரத்தில் இருக்கும் பொழுதே பிரத்யக் ஸ்வரூபத்தை அடைந்து தத்துவமாகவே ஆகிறான் என்பது பொருள். ப்ரத்யக்காக இல்லாத வேறு ரூபத்தை அடைவதில்லை. இவ்வாறு அந்த அத்யாத்மத்தை கூறப்பட்டவாறு அறிந்த ஞானி, அவனும் புண்ணிய பாபங்கள் அற்றவனாய் பிரஹ்மத்தை அடைந்து காமம் அவித்தை அற்றவனாகிறான். என்பது சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
अथ शिष्याचार्ययोः प्रमादकृतान्यायेन विद्याग्रहणप्रतिपादननिमित्तदोषप्रशमनार्थेयं शान्तिरुच्यते —
(அ-கை) சிஷ்யன் குரு இவர்களுக்கு பிரமாதத்தினால் (தவறுகளினால் ஏற்பட்ட அநியாயத்தால் வித்தையை கிரஹித்தல், உபதேசித்தல் இவைகளின் நிமித்தமாக ஏற்படும் தோஷங்கள் சாந்தி அடைவதற்காக (நீங்குவதற்காக) சாந்தி என்று கூறப்பட்டது.
सह नाववतु । सह नौ भुनक्तु । सह वीर्यं करवावहै । तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै ॥ १९ ॥
सह नौ आवाम् अवतु पालयतु विद्यास्वरूपप्रकाशनेन । कः ? स एव परमेश्वरः उपनिषत्प्रकाशितः । किञ्च, सह नौ भुनक्तु तत्फलप्रकाशनेन नौ पालयतु । सहैव आवां विद्याकृतं वीर्यं सामर्थ्यं करवावहै निष्पादयावहै । किञ्च, तेजस्विनौ तेजस्विनोरावयोः यत् अधीतं तत्स्वधीतमस्तु । अथवा, तेजस्वि नौ आवाभ्यां यत् अधीतं तदतीव तेजस्वि वीर्यवदस्त्वित्यर्थः । मा विद्विषावहै शिष्याचार्यावन्योन्यं प्रमादकृतान्यायाध्ययनाध्यापनदोषनिमित्तं द्वेषं मा करवावहै इत्यर्थः । शान्तिः शान्तिः शान्तिरिति त्रिर्वचनं सर्वदोषोपशमनार्थम् इत्योमिति॥
வித்யாஸ்வரூபத்தை பிரகாசிக்க செய்து எங்கள் இருவரையும் சேர்த்து காப்பாற்று. யார் (காப்பாற்றுவது) உபநிஷத்துக்களால் ப்ரகாசப் படுத்தப்பட்ட அந்த பரமேச்வரனே. மேலும் எங்கள் இருவரையும் அந்த பலனை அடைவித்து எங்களைக் காப்பாற்று. எங்கள் இருவருக்கும் சேர்த்து வித்தையினால் ஏற்படும் சாமர்த்தியத்தை அடையச் செய். மேலும் தேஜஸ்ஸை அடைந்த நாங்கள் நன்றாக அத்யயனம் செய்தது வீரியவத் ஆகட்டும் என்பது பொருள். சிஷ்யன் ஆச்சாரியனாகிய நாங்கள் இருவரும் எங்களுக்குள் த்வேஷம் இல்லாமல் இருப்போமாக. அதாவது சிஷ்யன் ஆச்சாரியன் இருவருக்குள்ளும் பரஸ்பரம் பிரமாதத்தால் (அறிவின்மையால்) உண்டாகும் அத்யயனம் (படித்தல்) அத்யாப்பனம் (படிப்பித்தல்) இவைகளின் நிமித்தமாக உண்டாகும் துவேஷம் இன்றி இருப்போமாக சாந்தி, சாந்தி, சாந்தி என்று மும்முறை கூறியதும் ஓம் என்று கூறியதும் எல்லா தோஷங்களும் நீங்குவதற்காக.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ काठकोपनिषद्भाष्यम् सम्पूर्णम् ॥
इति षष्ठी वल्ली ॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ काठकोपनिषद्भाष्ये द्वितीयोऽध्यायः ॥