द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

कठोपनिषद्भाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

கடோபநிஷத்பாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

पराञ्चि खानि व्यतृणत्स्वयम्भूस्तस्मात्पराङ् पश्यति नान्तरात्मन् ।
कश्चिद्धीरः प्रत्यगात्मानमैक्षदावृत्तचक्षुरमृतत्वमिच्छन् ॥ १ ॥
‘एष सर्वेषु भूतेषु गुढोऽत्मा न प्रकाशते। दृश्यते त्वग्र्यया बुद्ध्या’ (क. उ. १ । ३ । १२) इत्युक्तम् । कः पुनः प्रतिबन्धोऽग्र्याया बुद्धेः, येन तदभावादात्मा न दृश्यत इति तददर्शनकारणप्रदर्शनार्था वल्ली आरभ्यते ; विज्ञाते हि श्रेयःप्रतिबन्धकारणे तदपनयनाय यत्न आरब्धुं शक्यते, नान्यथेति —
(அ-கை) இந்த எல்லா ஜீவராசிகளிலும் ரகஸ்யமாய் மறைந்திருக்கும் ஆத்மா விளங்கவில்லை. ஆனால் சூக்ஷ்ம புத்தி உள்ளவர்களுக்கு விளங்கும் என்று கூறப்பட்டது. ஆகையால் எது சூக்ஷ்ம புத்திக்கு பிரதி பந்தகமாய் (தடையாய்) இருக்கிறது? எது இல்லாததினால் ஆத்மா விளங்கவில்லை என்று அந்த அறிய முடியாததின் காரணத்தை தெரிவிப்பதற்காக இந்த வல்லீ ஆரம்பிக்கப்படுகிறது. ஸ்ரேயஸிற்கு தடையாய் இருக்கும் காரணத்தை அறிந்தால் அல்லவா அதை நீக்குவதற்கான யத்தனத்தை (முயற்சியை) ஆரம்பிக்க முடியும்(வேறு மார்க்கம் இல்லை) வேறு வழியில்லை.
पराञ्चि परागञ्चन्ति गच्छन्तीति, खानि खोपलक्षितानि श्रोत्रादीनीन्द्रियाणि खानीत्युच्यन्ते । तानि पराञ्च्येव शब्दादिविषयप्रकाशनाय प्रवर्तन्ते । यस्मादेवंस्वभावकानि तानि व्यतृणत् हिंसितवान् हननं कृतवानित्यर्थः । कोऽसौ ? स्वयम्भूः परमेश्वरः स्वयमेव स्वतन्त्रो भवति सर्वदा न परतन्त्र इति । तस्मात् पराङ् पराग्रूपाननात्मभूताञ्शब्दादीन् पश्यति उपलभते उपलब्धा नान्तरात्मन् नान्तरात्मानमित्यर्थः ।
(அனுவாதம்) வெளியில் செல்லுதலுடைய ஆகாச உபலக்ஷிதங்களான ஸ்ரோத்திரம் முதலிய இந்திரியங்களை (கானி) என்று சொல்லப்படுகிறது. அவைகள் வெளியில் சென்று சப்தாதி விஷயங்களை விளக்குவதற்காகப் பிரவிர்த்திக்கிறது. இவ்வாறு இருப்பதால் ஸ்வபாவமாகவே ஹிம்சை செய்பவன் என்று பொருள். அவன் யார்? ஸ்வயம்பூ அதாவது பரமேஸ்வரன் அவன் எப்பொழுதும் ஸ்வதந்திரமாகவே இருக்கிறான். பரதந்திரன் அல்ல என்பதாகும். ஆகையால் வெளியில் உள்ள வஸ்துக்கள் அநாத்மாவான சப்தாதிகளை கிரஹிக்கிறது அல்லது அடைகிறது. ஆனால் அந்தராத்மாவை அடைவதில்லை.
एवंस्वभावेऽपि सति लोकस्य कश्चित् नद्याः प्रतिस्रोतःप्रवर्तनमिव धीरः धीमान्विवेकी प्रत्यगात्मानं प्रत्यक् चासावात्मा चेति प्रत्यगात्मा । प्रतीच्येवात्मशब्दो रूढो लोके, नान्यत्र । व्युत्पत्तिपक्षेऽपि तत्रैवात्मशब्दो वर्तते ; ‘यच्चाप्नोति यदादत्ते यच्चात्ति विषयानिह । यच्चास्य सन्ततो भावस्तस्मादात्मेति कीर्त्यते’ ; इत्यात्मशब्दव्युत्पत्तिस्मरणात् ।
(அனுவாதம்) இவ்வாறு ஸ்வபாவம் இருந்தாலும் உலகத்தில் நதிகள் தன் திசையிலிருந்து திருப்பி விடுவது போல் தீர புருஷனும் ப்ரத்யக் ஆத்மாவை நோக்கி திருப்புகிறான்(ப்ரத்யக் ஆத்மாவை அறிகிறான்). உலகில் ஆத்மா என்ற சப்தமானது பிரத்யக்ஆதாவது எல்லாவற்றிற்கும் மூல காரணமான வஸ்துவில் ரூடமாகிறது. அதுவே வ்யுத்பத்தி பக்ஷத்திலும் ப்ரதீசி என்ற சப்தம் ஆத்மா அர்த்திலேயே இருக்கிறது. ‘यच्चाप्नोति यदादत्ते यच्चात्ति विषयानिह। यच्चास्य सन्ततो भावस्तस्मादात्मेति कीर्त्यते’ அதாவது அதுவே எல்லாவற்றிலும் வியாபித்திருக்கிறது. எல்லாவற்றையும் கிரஹிக்கிறது. உலகத்தில்  விஷயங்களின் போக்தாவாக இருக்கிறது, மேலும் எப்பொழுதும் சத்பாவமாகவே இருக்கிறது, ஆகையால் அது ஆத்மா என்ற அர்த்தமாகிறது. இவ்வாறு நான்கு விதமாக ஆத்ம சப்தத்திற்கு வ்யுத்யத்தி சம்பந்தமானது ஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளது.
तं प्रत्यगात्मानं स्वस्वभावम् ऐक्षत् अपश्यत् पश्यतीत्यर्थः, छन्दसि कालानियमात् । कथं पश्यतीति, उच्यते — आवृत्तचक्षुः आवृत्तं व्यावृत्तं चक्षुः श्रोत्रादिकमिन्द्रियजातमशेषविषयात् यस्य स आवृत्तचक्षुः । स एवं संस्कृतः प्रत्यगात्मानं पश्यति । न हि बाह्यविषयालोचनपरत्वं प्रत्यगात्मेक्षणं चैकस्य सम्भवति । किमिच्छन्पुनरित्थं महता प्रयासेन स्वभावप्रवृत्तिनिरोधं कृत्वा धीरः प्रत्यगात्मानं पश्यतीति, उच्यते । अमृतत्वम् अमरणधर्मत्वं नित्यस्वभावताम् इच्छन् आत्मन इत्यर्थः ॥
(அனுவாதம்) அந்த பிரத்யக் ஆத்மாவை தன்னுடைய ஸ்வரூபமாய் பார்க்கிறான். பார்த்தான் என்று இறந்த காலத்தில் சந்தஸின் பொருட்டு வந்ததை நிகழ் காலத்தில் அர்த்தம் செய்ய வேண்டும், எவ்வாறு அறிகிறான் என்று கூறப்படுகிறது. ஆவ்ருர்த்த சக்ஷீ: என்றால் ஸ்ரோத்ரம் முதலான இந்திரியங்களால் உண்டான எல்லா விஷயங்களிருந்தும் உள்முகம் திருப்பிய பார்வை உடையவன். இவ்வாறு நன்கு பண்படுத்தப்பட்டவனே பிரத்யக் ஆத்மாவை அடைகிறான். பாஹ்ய விஷயங்களின் பார்வையும், ப்ரத்யக்காத்மாவின் தரிசனமும் ஒருவனுக்கே சம்பவிக்காது. எதனால் எனில் மறுபடியும் இவ்வாறு மிக முயற்சி செய்து இந்திரியங்களின் ஸ்வபாவ பிரவிர்த்தியை நிரோதம் செய்து தீரனானவன் ப்ரத்யக் ஆத்மாவைப் பார்க்கிறான் என்று கூறப்பட்டது. அமிருதத்துவம் அதாவது மரணமற்றதன்மை அதாவது ஆத்மாவினுடைய நித்யஸ்வபாவத் தன்மையை இச்சிக்கிறான் என்பது பொருள்.
यत्तावत्स्वाभाविकं परागेवानात्मदर्शनं तदात्मदर्शनस्य प्रतिबन्धकारणमविद्या तत्प्रतिकूलत्वाद्या च परागेवाविद्योपप्रदर्शितेषु दृष्टादृष्टेषु भोगेषु तृष्णा ताभ्यामविद्यातृष्णाभ्यां प्रतिबद्धात्मदर्शनाः
(அனுவாதம்) அந்த ஆத்மக்ஞான விஷயத்தில் ஸ்வபாவமாகவே பாஹ்யஅநாத்ம தர்சனம் ஆத்ம தர்சனத்திற்கு பிரதிபந்தமாய் இருப்பதற்கு காரணம் அவித்யா. ஏனெனில் ஆத்ம தர்சனத்திற்கு அவித்யாவே பிரதிகூலமாய் இருக்கிறது. அவித்தையினால் காணப்படும் வெளி நோக்குடைய திருஷ்ட அதிருஷ்ட்ட போகங்களில் உள்ளது த்ருஷ்ணா (ஆசை) அந்த அவித்யா, திருஷ்ணா ஆகிய இவை இரண்டினாலும் ஆத்ம தர்சனம் நன்றாக தடைசெய்யப்பட்டுள்ளது
पराचः कामाननुयन्ति बालास्ते मृत्योर्यन्ति विततस्य पाशम् ।
अथ धीरा अमृतत्वं विदित्वा ध्रुवमध्रुवेष्विह न प्रार्थयन्ते ॥ २ ॥
पराचः बहिर्गतानेव कामान् काम्यान्विषयान् अनुयन्ति अनुगच्छन्ति बालाः अल्पप्रज्ञाः ते तेन कारणेन मृत्योः अविद्याकामकर्मसमुदायस्य यन्ति गच्छन्ति विततस्य विस्तीर्णस्य सर्वतो व्याप्तस्य पाशं पाश्यते बध्यते येन तं पाशं देहेन्द्रियादिसंयोगवियोगलक्षणम् । अनवरतं जन्ममरणजरारोगाद्यनेकानर्थव्रातं प्रतिपद्यन्त इत्यर्थः ।
(அனுவாதம்) மந்த புத்தி உள்ள புருஷன் வெளியில் உள்ள காமனைகளை நோக்கி செல்வான். ஆகையால் அவித்யா காம, கர்ம, சமுதாய ரூபமான ம்ருத்யுவினுடைய விஸ்தாரமாக எங்கும் வியாபித்திருக்கும் பாசத்தை அதாவது தேஹ இந்திரியாதிகளின் சம்யோகம் (அடைதல்) வியோகம் (நாசமடைதல்) ரூபமான பாசத்தை (பந்தத்தை) அடைகிறான். அதாவது ஜனனமரண ஜராரோகம் முதலியவைகளை அடைகிறார்கள் என்பது பொருள்.
यत एवम् अथ तस्मात् धीराः विवेकिनः प्रत्यगात्मस्वरूपावस्थानलक्षणम् अमृतत्वं ध्रुवं विदित्वा । देवाद्यमृतत्वं ह्यध्रुवम् , इदं तु प्रत्यगात्मस्वरूपावस्थानलक्षणं ध्रुवम् , ‘न कर्मणा वर्धते नो कनीयान्’ इति श्रुतेः । तदेवंभूतं कूटस्थमविचाल्यममृतत्वं विदित्वा अध्रुवेषु सर्वपदार्थेषु अनित्येषु निर्धार्य, ब्राह्मणा इह संसारेऽनर्थप्राये न प्रार्थयन्ते किञ्चिदपि प्रत्यगात्मदर्शनप्रतिकूलत्वात् । पुत्रवित्तलोकैषणाभ्यो व्युत्तिष्ठन्त्येवेत्यभिप्रायः ॥
(அனுவாதம்) எதனால் இவ்வாறோ அதனால் விவேகிகள் பிரத்யக் ஆத்மஸ்வரூப அவஸ்தான லக்ஷணமான அம்ருதத்தை நிச்சயமாகத் தெரிந்து கொண்டு மேலும் தேவர்கள் முதலியவர்கள் நிச்சயமாக அம்ருதத்துவம் அல்ல என்று தெரிந்து கொண்டு இந்த ப்ரத்யக் ஆத்மஸ்வரூப அவஸ்தான லக்ஷணம்   न कर्मणा वर्धते नो कनीयान् (நகர்மணா வர்த்ததே நோ கனியான்) என்ற வாக்கியத்தால் கர்மத்தினால் வளர்வதும் இல்லை, குறைவதும் இல்லை என்பது நிச்சயமாகிறது. இப்படிப்பட்ட கூடஸ்த்தம் அசைக்க முடியாததுமான,  அமிர்தத்துவத்தை அறிந்து நிச்சயமற்ற எல்லா அநித்திய பதார்த்தங்களையும் நீக்கி பிராமஹ்மணர்கள் அநர்த்தமாகிய சம்சாரம் ஆத்ம தர்சனத்திற்கு பிரதி கூலமாய் (தடையாய்) இருப்பதால் அதில் சிறிதும் ஈடுபடமாட்டார்கள், புத்ர, வித்த, லோக, ஆகிய ஈஷணாதிரயங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள் என்பது பொருள்.
यद्विज्ञानान्न किञ्चिदन्यत्प्रार्थयन्ते ब्राह्मणाः, कथं तदधिगम इति, उच्यते
(அ-கை) ப்ராஹ்ம்மணர்கள் (பிரஹ்மத்தை அறிந்தவர்கள்) எதை அறிந்ததால் வேறு ஒன்றையும் இச்சிப்பது இல்லையோ அதை எவ்வாறு அறிவது என்பது கூறப்படுகிறது.
येन रूपं रसं गन्धं शब्दान्स्पर्शांश्च मैथुनान् ।
एतेनैव विजानाति किमत्र परिशिष्यते । एतद्वै तत् ॥ ३ ॥
येन विज्ञानस्वभावेनात्मना रूपं रसं गन्धं शब्दान् स्पर्शांश्च मैथुनान् मैथुननिमित्तान्सुखप्रत्ययान् विजानाति विस्पष्टं जानाति सर्वो लोकः ।
(அனுவாதம்) உலகத்தவர்கள் எல்லோரும் எந்த விக்ஞான ஸ்வரூபமான ஆத்மா மூலமாக ரூபம், ரய்ம். கந்தம், சப்தம், ஸ்பர்சம், அவ்வாறே மைதுனத்தால் உண்டாகும் சுகத்தை ஸ்பஷ்ட்டமாக அறிகிறார்களோ(அது ப்ரஹ்மமாகும்)
ननु नैवं प्रसिद्धिर्लोकस्य आत्मना देहादिविलक्षणेनाहं विजानामीति । देहादिसङ्घातोऽहं विजानामीति तु सर्वो लोकोऽवगच्छति ।
(சங்கை) உலகத்தில் ஆத்மாவைக் காட்டிலும் தேஹாதிகளை வேறாய் அறிகிறேன் என்பது உலகில் கிடையாது. ஆனால் எல்லோரும் தேஹாதி சங்காதனான நான் அறிகிறேன் என்றல்லவா கூறுகிறார்கள்.
ननु देहादिसङ्घातस्यापि शब्दादिस्वरूपत्वाविशेषाद्विज्ञेयत्वाविशेषाच्च न युक्तं विज्ञातृत्वम् । यदि हि देहादिसङ्घातो रूपाद्यात्मकः सन् रूपादीन्विजानीयात् , तर्हि बाह्या अपि रूपादयोऽन्योन्यं स्वं स्वं रूपं च विजानीयुः । न चैतदस्ति । तस्माद्देहादिलक्षणांश्च रूपादीन् एतेनैव देहादिव्यतिरिक्तेनैव विज्ञानस्वभावेनात्मना विजानाति लोकः । यथा येन लोहो दहति सोऽग्निरिति तद्वत् ।
(அனுவாதம்) அவ்வாறு அல்ல, தேஹாதி சங்காதமாய் இருந்தாலும் சப்தம் முதலிய ஸ்வரூபத்தைக் காட்டிலும் தனியாக வேறு விஷேசம் இல்லாததால் அவைகளுக்கு விக்ஞாத்ருத்வம் (அறியும் தன்மை) பொருந்தாது. தேஹாதி சங்காதம் ரூபம் முதலியதாய் இருந்து கொண்டு ரூபம் முதலியவைகளை அறியலாம். அவைகள் பாஹ்யமாய் இருந்தாலும் ரூபாதிகள் ஒன்றைஒன்று தன், ஸ்வரூபத்தை அறியலாம் என்றால் அது அவ்வாறு அல்ல. ஆகவே தேஹாதிஸ்வரூபங்களான ரூபாதிகளை, தேஹாதிகளைக் காட்டிலும் வேறுபட்டவனும் விக்ஞான ஸ்வரூபனுமாகிய ஆத்மாவினாலேயே லோகமானது அறிந்து கொள்கிறது. எதனால் இரும்பானது சுடுகிறதோ அது அக்னி என்பது எவ்விதமோ அவ்விதமே இங்கும் அறிக.
आत्मनोऽविज्ञेयम् किम् अत्र अस्मिंल्लोके परिशिष्यते न किञ्चित्परिशिष्यते सर्वमेव त्वात्मना विज्ञेयम् , यस्यात्मनोऽविज्ञेयं न किञ्चित्परिशिष्यते, स आत्मा सर्वज्ञः । एतद्वै तत् । किं तत् यन्नचिकेतसा पृष्टं देवादिभिरपि विचिकित्सितं धर्मादिभ्योऽन्यत् विष्णोः परमं पदं यस्मात्परं नास्ति तद्वै एतत् अधिगतमित्यर्थः ॥
(அனுவாதம்) ஆத்மாவால் அறியாதது இந்த உலகத்தில் எது மிஞ்சி உள்ளது? ஆத்மாவால் அறியாதது சிறிதும் இல்லை. எல்லாம் ஆத்மாவாலேயே அறியப்படுகிறது. எதனால் ஆத்மாவால் அறியாதது சிறிதும் இல்லையோ அதனால் அந்த ஆத்மா சர்வக்ஞன். அது யார்? எந்த விஷயத்தைக் குறித்து நசிகேதசன் எந்த கேள்வியைக் கேட்டாரோ அது தேவர் முதலியவர்களுக்கும் சந்தேகத்தைக் கொடுக்க கூடியது. தர்மா தர்மங்களைக் காட்டிலும் வேறான விஷ்ணுவினுடைய பரமம்பதம். அதைக் காட்டிலும் மேலான பதம் கிடையாது. என்று அறியப்பட்டதாகிறது என்பது பொருள்.
अतिसूक्ष्मत्वाद्दुर्विज्ञेयमिति मत्वैतमेवार्थं पुनः पुनराह
(அ-கை) மிக்க சூக்ஷ்மமாய் இருப்பதால் அதை அறிவது மிகக் கடினம் என்று கருதி இந்த அர்த்தத்தையே மறுபடியும், மறுபடியும் கூறுகிறது.
स्वप्नान्तं जागरितान्तं चोभौ येनानुपश्यति ।
महान्तं विभुमात्मानं मत्वा धीरो न शोचति ॥ ४ ॥
स्वप्नान्तं स्वप्नमध्यं स्वप्नविज्ञेयमित्येतत् । तथा जागरितान्तं जागरितमध्यं जागरितविज्ञेयं च । उभौ स्वप्नजागरितान्तौ येन आत्मना अनुपश्यति लोकः इति सर्वं पूर्ववत् । तं महान्तं विभुमात्मानं मत्वा अवगम्यात्मभावेन साक्षादहमस्मि परमात्मेति धीरः न शोचति ॥
(அனுவாதம்) ஸ்வப்னாந்தம் அதாவது ஸ்வப்நத்தின் அந்தம் (சுழுத்தி அவஸ்தையையும்) ஸ்வப்னத்தின் மத்யத்தில் அறியக்கூடிய பொருள்களையும் அதாவது ஸ்வப்ன ஜாக்ரத்தில் அந்தர்கதமான பதார்த்தங்களை ஆத்மாவால் தொடர்ந்து பார்க்கப்படுகிறது. மற்றவை எல்லாம் முன் போல், அந்த மஹானும், விபுவுமான ஆத்மாவை அறிந்து ஆத்ம பாவனையினால் நான் சாக்ஷாத் பரமாத்ம ஸ்வரூபமாய் இருக்கிறேன் என்று தீரன் (ஞானி)சோகத்தை அடையமாட்டான்.
किञ्च,
(அ-கை) மேலும்
य इमं मध्वदं वेद आत्मानं जीवमन्तिकात् ।
ईशानं भूतभव्यस्य न ततो विजुगुप्सते । एतद्वै तत् ॥ ५ ॥
यः कश्चित् इमं मध्वदं कर्मफलभुजं जीवं प्राणादिकलापस्य धारयितारमात्मानं वेद विजानाति अन्तिकात् अन्तिके समीपे ईशानम् ईशितारं भूतभव्यस्य कालत्रयस्य, ततः तद्विज्ञानादूर्ध्वमात्मानं न विजुगुप्सते न गोपायितुमिच्छति, अभयप्राप्तत्वात् । यावद्धि भयमध्यस्थोऽनित्यमात्मानं मन्यते तावद्गोपायितुमिच्छत्यात्मानम् । यदा तु नित्यमद्वैतमात्मानं विजानाति, तदा कः किं कुतो वा गोपायितुमिच्छेत् । एतद्वै तदिति पूर्ववत् ॥
(அனுவாதம்) எவன் ஒருவன் இந்த மத்வதம் கர்ம பலத்தை அனுபவிக்கும் அந்த ஜீவன் பிராணன் முதலிய கலாபங்களைத் தரிக்கும் ஆத்மாவை. மேலும் முக்காலத்திற்கும் நியந்தாவான அந்த ஆத்மாவை மிகச் சமீபமாக (அபேதமாக) அறிந்து அதனால் அந்த விக்ஞானத்தை அடைந்ததற்கு மேல் ஆத்மாவை ரக்ஷிக்க விரும்புவதில்லை. எதுவரையிலும் பயம் அத்யஸ்த்தமாய் ஆத்மா உள்ளதோ அது அநித்தியம் என்று அறிகிறார்கள். அப்பொழுது ஆத்மாவை ரக்ஷிக்க இச்சிக்கிறார்கள். எப்பொழுது ஆத்மா நித்தியம், அத்வைதம் என்ற விக்ஞானம் ஏற்பட்ட பொழுது எது? யார்? எதனால்? அதை காப்பாற்ற நினைப்பார்கள். एतत् वैतदिति (ஏதத்வைதத் இதி) என்பது முன்பு போலாகும்.
यः प्रत्यगात्मेश्वरभावेन निर्दिष्टः, स सर्वात्मेत्येतद्दर्शयति —
(அ-கை) எவன் ஒருவன் பிரத்யக் ஆத்மாவை பரமாத்ம பாவனையாக நிச்சயமா உபதேசிக்கப்பட்டானோ அவன் சர்வாத்மா என்பதை விளக்குகிறார்.
यः पूर्वं तपसो जातमद्भ्यः पूर्वमजायत ।
गुहां प्रविश्य तिष्ठन्तं यो भूतेभिर्व्यपश्यत । एतद्वै तत् ॥ ६ ॥
यः कश्चिन्मुमुक्षुः पूर्वं प्रथमं तपसः ज्ञानादिलक्षणाद्ब्रह्मण इत्येतत् ; जातम् उत्पन्नं हिरण्यगर्भम् । किमपेक्ष्य पूर्वमिति, आह — अद्भ्यः पूर्वम् अप्सहितेभ्यः पञ्चभूतेभ्यः, न केवलाभ्योऽद्भ्य इत्यभिप्रायः । अजायत उत्पन्नः यस्तं प्रथमजं देवादिशरीराण्युत्पाद्य सर्वप्राणिगुहां हृदयाकाशं प्रविश्य तिष्ठन्तं शब्दादीनुपलभमानं भूतेभिः भूतैः कार्यकरणलक्षणैः सह तिष्ठन्तं यो व्यपश्यत यः पश्यतीत्येतत् ; य एवं पश्यति, स एतदेव पश्यति — यत्तत्प्रकृतं ब्रह्म ॥
(அனுவாதம்) எந்த ஒரு முமூக்ஷு முதலில் தபஸினால் அதாவது ஞான முதலிய லக்ஷணத்தை உடைய அந்த பிரஹ்மத்திடமிருந்து உண்டானது ஹிரண்யகர்ப்பன். எதை அபேக்ஷித்து முதலில் என்று கூறப்பட்டது என்பதை சொல்லுகிறார் (அத்ப்ய:) முதலில் நீருடன் கூடியவைகளால் உள்ள பஞ்ச பூதங்களிலிருந்தும் கேவலம் தண்ணீரினால் மட்டுமல்ல என்பது அபிப்ராயம் (ஹிரண்யகர்ப்பன்) தேவாதி சரீரங்களை உற்பன்னம் செய்து எல்லாப் பிராணிகளின் ஹிருதய குஹையில் நுழைந்து காரிய கரண ரூப பூதங்களுடன் சப்தாதி விஷயங்களை அனுபவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அவ்வாறு பார்க்கப்பட்ட ஹிரண்யகர்ப தர்சனமே ப்ரகிருதமான ப்ரஹ்ம தர்சனமாகும்.
किञ्च,
(அ-கை) மேலும்
या प्राणेन सम्भवति अदितिर्देवतामयी ।
गुहां प्रविश्य तिष्ठन्तीं या भूतेभिर्व्यजायत । एतद्वै तत् ॥ ७ ॥
या सर्वदेवतामयी सर्वदेवतात्मिका प्राणेन हिरण्यगर्भरूपेण परस्माद्ब्रह्मणः सम्भवति शब्दादीनामदनात् अदितिः तां पूर्ववद्गुहां प्रविश्य तिष्ठन्तीम् अदितिम् । तामेव विशिनष्टि — या भूतेभिः भूतैः समन्विता व्यजायत उत्पन्नेत्येतत् ॥
(அனுவாதம்) எந்த அந்த தேவதா ஸ்வரூபமான ஹிரண்ய கர்ப்பத்துடன் பரப்ரஹ்மத்திடமிருந்து உண்டானதாய் சப்தம் முதலியவைகளை போஜனம் செய்வதால் அதாவது அனுபவித்ததால் அதிதியாக அனுபவிப்பதாக  இருக்கிறது. புத்தி ரூப குகையில் முன்பு போல் பிரவேசித்து இருக்கும் அந்த அதிதியை அறி. அந்த அதிதியின் விசேஷத்தை விளக்குகிறார். எது பூதங்களுடன் அதாவது எது பூதங்களுடன் சேர்ந்து உண்டாயிற்றோ என்பதாகும்.
किञ्च,
(அ-கை) மேலும்
अरण्योर्निर्हितो जातवेदा गर्भ इव सुभृतो गर्भिणीभिः ।
दिवे दिव ईड्यो जागृवद्भिर्हविष्मद्भिर्मनुष्येभिरग्निः । एतद्वै तत् ॥ ८ ॥
यः अधियज्ञम् उत्तराधरारण्योर्निहितः स्थितः जातवेदा अग्निः पुनः सर्वहविषां भोक्ता अध्यात्मं च योगिभिः, गर्भ इव गर्भिणीभिः अन्तर्वत्नीभिरगर्हितान्नभोजनादिना यथा गर्भः सुभृतः सुष्ठु सम्यग्भृतो लोके, इत्थमेव ऋत्विग्भिर्योगिभिश्च सुभृत इत्येतत् । किञ्च, दिवे दिवे अहन्यहनि ईड्यः स्तुत्यो वन्द्यश्च कर्मिभिर्योगिभिश्चाध्वरे हृदये च जागृवद्भिः जागरणशीलैः अप्रमत्तैरित्येतत् । हविष्मद्भिः आज्यादिमद्भिः ध्यानभावनावद्भिश्च मनुष्येभिः मनुष्यैः अग्निः ; एतद्वै तत् तदेव प्रकृतं ब्रह्म ॥
(அனுவாதம்) யாகத்தில் அரணிக் கட்டையின் மேலும் கீழுமாக இருந்து கொண்டு மறுபடியும் எல்லா ஹவிசையும் சாப்பிடுகின்ற போக்தா அத்யாத்ம ரூப ஜாதவேதா எனப்படும் அக்னியாகும். எவ்வாறு கர்ப்பமடைந்த ஸ்தீரீகள் சுத்தமான அன்ன பானாதிகளால் தங்களுடைய கர்ப்பத்தை எவ்வாறு மிகவும் நன்றாக ரக்ஷிக்கிறார்களோ அவ்வாறு யக்ஞம் செய்பவர்களும், யோகிகளும் அதை தாங்குகிறார்கள். மேலும் ஒவ்வொரு நாளும் நல்ல விழிப்புணர்ச்சி உள்ளவர்களும், ஹவிஸ்(நெய்) முதலிய யக்ஞத்திற்கு தேவையானவகள் உள்ளவர்களும் தியானத்தில் ஈடுபாடு உள்ளவர்களுமான மனிதர்கள் யாகத்தில் ஈடுபாடுள்ள கர்மடர்களும், யோகிகளால் ஹ்ருதயத்தில் துதிக்கவும், நமஸ்கரிக்கவும் பட்டதுமான அக்னி எதுவோ அந்த அக்னியாகவும், அதன் உபலஷணமான விராட்புருஷனாகும். அது நிச்சயமாக அந்த ப்ரக்ருத பிரஹ்மமே ஆகிறது.
किञ्च,
(அ-கை) மேலும்
यतश्चोदेति सूर्यः अस्तं यत्र च गच्छति ।
तं देवाः सर्वे अर्पितास्तदु नात्येति कश्चन । एतद्वै तत् ॥ ९ ॥
यतश्च यस्मात्प्राणात् उदेति उत्तिष्ठति सूर्यः, अस्तं निम्लोचनं तिरोधानं यत्र यस्मिन्नेव च प्राणे अहन्यहनि गच्छति, तं प्राणमात्मानं देवाः सर्वे अग्न्यादयः अधिदैवं वागादयश्चाध्यात्मं सर्वे विश्वे अरा इव रथनाभौ अर्पिताः सम्प्रवेशिताः स्थितिकाले । सोऽपि ब्रह्मैव । तत् एतत्सर्वात्मकं ब्रह्म, उ नात्येति नातीत्य तदात्मकतां तदन्यत्वं गच्छति, कश्चन कश्चिदपि एतद्वै तत् ॥
(அனுவாதம்) எந்த பிராணனில் இருந்து ஹிரண்யகர்ப்பரிடமிருந்து சூர்யன் வெளிப்படுகிறதோ, ஒவ்வொரு நாளும் மறைகிறதோ அந்த ஆத்மாவான விச்வ ஹிரண்கர்ப்பர்னிடத்தில் அதாவது வண்டியின் குடத்தில் ஆராக்கால்கள் இணைக்கப்பட்டது போல் அதி தெய்வங்களான அக்னி முதலிய தேவதைகளும், அத்யாத்மத்தில் வாக்காதிகளுமான எல்லா தேவதைகளும் இணைக்கப்பட்டுள்ளன. ஸ்திதி காலத்திலும் அது பிரஹ்மமே. அது சர்வாத்மகமான ப்ரஹ்மமாகும். ஒவ்வொன்றும் பிரஹ்மத்தை விட்டு விலகுவதில்லை .அதாவது ப்ரஹ்மத்தைத் தவிர வேறாக இருத்தலை அடைவதில்லை.
यद्ब्रह्मादिस्थावरान्तेषु वर्तमानं तत्तदुपाधित्वादब्रह्मवदवभासमानं संसार्यन्यत्परस्माद्ब्रह्मण इति मा भूत्कस्यचिदाशङ्केतीदमाह —
(அ-கை) எதானது ப்ரஹ்மா முதல் ஸ்தாவரம் வரை உள்ளவைகள் அந்த அந்த உபாதிகளால் அப்ரஹ்மம் போல் விளங்குகின்ற சம்சாரி, என்றும், பரபிரஹ்ம்மத்தைக் காட்டிலும் வேறானது என்றும் ஒருவனுக்கும் சங்கை வரக்கூடாது என்று இவ்வாறு கூறுகிறார்.
यदेवेह तदमुत्र यदमुत्र तदन्विह ।
मृत्योः स मृत्युमाप्नोति य इह नानेव पश्यति ॥ १० ॥
यदेवेह कार्यकारणोपाधिसमन्वितं संसारधर्मवदवभासमानमविवेकिनाम् , तदेव स्वात्मस्थम् अमुत्र नित्यविज्ञानघनस्वभावं सर्वसंसारधर्मवर्जितं ब्रह्म । यच्च अमुत्र अमुष्मिन्नात्मनि स्थितम् , तदनु इह तदेव इह कार्यकरणनामरूपोपाधिम् अनु विभाव्यमानं नान्यत् ।
(அனுவாதம்) அவிவேகிக்கு எதனாது இங்கு காரிய கரண உபாதிகளுடன் கூடிய சம்சார தர்மம் போல் அவபாஸித்துக் கொண்டிருக்கிறதோ (தோன்றுவது போல் விளங்குகிறதோ) அதுதான் தன்னுள் நிலைத்திருக்கின்றகாரணோ உபாதியில் நித்யவிக் ஞானகன ஸ்வபாவமாய் எல்லா சம்சார தர்மங்களும் அற்றபிரஹ்மம். எது அந்த காரணாத்மாவில் இருக்கிறதோ அந்த ஆத்மாவில் இருந்து கொண்டு அதுவே இங்கு நாம ரூபகரண உபாதியை ஆஸ்ரயத்தே அறியப்படுகிறது. வேறு ஒன்றால் அல்ல.
तत्रैवं सति उपाधिस्वभावभेददृष्टिलक्षणया अविद्यया मोहितः सन् य इह ब्रह्मण्यनानाभूते परस्मादन्योऽहं मत्तोऽन्यत्परं ब्रह्मेति नानेव भिन्नमिव पश्यति उपलभते, स मृत्योर्मरणात् मृत्युं मरणं पुनः पुनः जननमरणभावमाप्नोति प्रतिपद्यते । तस्मात्तथा न पश्येत् । विज्ञानैकरसं नैरन्तर्येणाकाशवत्परिपूर्णं ब्रह्मैवाहमस्मीति पश्येदिति वाक्यार्थः ॥
(அனுவாதம்) இவ்வாறு இருக்கும் பொழுது உபாதிஸ்வபாவ, பேத திருஷ்ட்டியால் அவித்தையினால் மோஹித்தவனாகி எவன் இங்கு நாநா அற்றபிரஹ்மத்தினிடத்தில் நான் வேறு, என்னைக் காட்டிலும் பிரஹ்மம் வேறு என்று நாநாவாக பின்னம் போல் அறிகிறானோ அவன் மறுபடியும், மறுபடியும் மரணத்தை அறிகிறான். ஆகையால் அவ்வாறு பார்க்காதே, விக்ஞானமாயும், ஏகரசமாயும், இடையறாது ஆகாசம் போல் நீக்கமறநிறைந்துள்ளதுமான பரிபூரணமான பிரஹ்மமாய் நான் இருக்கிறேன் என்பது வாக்கியத்தின் பொருளாகும்.
प्रागेकत्वविज्ञानादाचार्यागमसंस्कृत
(அ-கை) ஏகத்துவ விக்ஞானம் அடைவதற்கு முன்னால் குரு, சாஸ்திரம் இவற்றால் பண்படுத்தப்பட்ட
मनसैवेदमाप्तव्यं नेह नानास्ति किञ्चन ।
मृत्योः स मृत्युं गच्छति य इह नानेव पश्यति ॥ ११ ॥
मनसैव इदं ब्रह्मैकरसम् आप्तव्यम् आत्मैव नान्यदस्तीति । आप्ते च नानात्वप्रत्युपस्थापिकाया अविद्याया निवृत्तत्वात् इह ब्रह्मणि नाना नास्ति किञ्चन अणुमात्रमपि । यस्तु पुनरविद्यातिमिरदृष्टिं न मुञ्चति इह ब्रह्मणि नानेव पश्यति, स मृत्योर्मृत्युं गच्छत्येव स्वल्पमपि भेदमध्यारोपयन्नित्यर्थः ॥
(அனுவாதம்) மனதால் இந்த ஏகரச ப்ரஹ்மம் ஆத்மாவே வேறு இல்லை என்று அறியப்பட வேண்டும். அடைந்த பொழுது நாநாத்துவத்தை ஸ்தாபித்த அவித்தையின் நிவர்த்தியால் இந்த பிரஹ்மத்தினிடத்தில் நாநாத்துவம் என்பது அணு அளவும் கிடையாது. மேலும் எவன் ஒருவன் சிறிதளவு பேதத்தை அத்யாரோபம் செய்து அவித்தையாகிற இருண்ட திருஷ்ட்டியை விடவில்லையோ, அவன் நாநாவாகப் பார்ப்பதால் மிருத்யுவிலிருந்து மிருத்யுவையே அடைகின்றான்.
पुनरपि तदेव प्रकृतं ब्रह्माह —
(அ-கை) மறுபடியும் அப்பரம் ப்ரஷ்மத்தைப் பற்றி கூறுகிறார்.
अङ्गुष्ठमात्रः पुरुषो मध्य आत्मनि तिष्ठति ।
ईशानं भूतभव्यस्य न ततो विजुगुप्सते । एतद्वै तत् ॥ १२ ॥
अङ्गुष्ठमात्रः अङ्गुष्ठपरिमाणः । अङ्गुष्ठपरिमाणं हृदयपुण्डरीकं तच्छिद्रवर्त्यन्तःकरणोपाधिरङ्गुष्ठमात्रः अङ्गुष्ठमात्रवंशपर्वमध्यवर्त्यम्बरवत् । पुरुषः पूर्णमनेन सर्वमिति । मध्ये आत्मनि शरीरे तिष्ठति यः तम् आत्मानम् ईशानं भूतभव्यस्य विदित्वा, न तत इत्यादि पूर्ववत् ॥
(அனுவாதம்) அங்குஷ்ட்ட மாத்திரம் என்பது கட்டை விரல் அளவாகும். கட்டை விரல் உள்ள இருதய புண்டரீகத்தில் உள்ள அந்தக் கரணத்தை உபாதியாகக் கொண்டுள்ளது. கட்டை விரல் அளவு உள்ள மூங்கில் ஒட்டையின் மத்தியில் உள்ள ஆகாயம் போல் புருஷன் பூரணமாய் இருப்பதால் எல்லாம் என்பதால் சரீரத்தில் நடுவில் இருக்கிறானோ அந்த நியந்தாவானவனும் முக்காலமும் அறிந்தவனுமான ஆத்மாவை அறிந்தவன். (தன்னை ரக்ஷிப்பதற்கு ஒன்றும் விரும்ப மாட்டான்.)
किञ्च,
மேலும்
अङ्गुष्ठमात्रः पुरुषो ज्योतिरिवाधूमकः ।
ईशानो भूतभव्यस्य स एवाद्य स उ श्वः । एतद्वै तत् ॥ १३ ॥
अङ्गुष्ठमात्रः पुरुषः ज्योतिरिव अधूमकः, अधूमकमिति युक्तं ज्योतिःपरत्वात् । यस्त्वेवं लक्षितो योगिभिर्हृदये ईशानः भूतभव्यस्य स एव नित्यः कूटस्थः अद्य इदानीं प्राणिषु वर्तमानः स उ श्वोऽपि वर्तिष्यते, नान्यस्तत्समोऽन्यश्च जनिष्यत इत्यर्थः । अनेन ‘नायमस्तीति चैके’ (क. उ. १ । १ । २०) इत्ययं पक्षो न्यायतोऽप्राप्तोऽपि स्ववचनेन श्रुत्या प्रत्युक्तः, तथा क्षणभङ्गवादश्च ।
(அனுவாதம்) அங்குஷ்ட மாத்திர உள்ள புருஷன் புகையற்ற ஜ்யோதிஸ் போன்றவன் என்பதால் இங்கு अधूमकम् (புகை அற்றவன்) என்பது பொருந்தும். யோகிகளினால் ஹ்ருதயத்தில் பூத பவிஷ்யங்களுக்கு நியந்தாவான எவன் காணப்பட்டானோ நித்யனும் கூடஸ்தனுமான அவன் இப்பொழுதுள்ள பிராணன்களில்(ஜீவர்களில்) இருக்கிறவனாயும் அவனே நாளையும் இருக்கப் போகிறான். அவனுக்கு சமமாக வேறு என்று உண்டாகப் போவதில்லை. அதனால் இவன் இல்லை என்று சிலருடைய பக்ஷமானது யுக்தியினால் பொருந்தவில்லை. அவ்வாறே சுருதி வாக்கியங்களாலும் மறுக்கப்படுதிறது. அவ்வாறே க்ஷணபங்கவாதமும் மறுக்கப்படுகிறது.
पुनरपि भेददर्शनापवादं ब्रह्मण आह —
(அ-கை) பிரம்மத்திற்கு பேத தர்சனம் இல்லை என்பதனை விளக்குவது இந்த மந்திரம்.
यथोदकं दुर्गे वृष्टं पर्वतेषु विधावति ।
एवं धर्मान्पृथक्पश्यंस्तानेवानुविधावति ॥ १४ ॥
यथा उदकं दुर्गे दुर्गमे देशे उच्छ्रिते वृष्टं सिक्तं पर्वतेषु पर्ववत्सु निम्नप्रदेशेषु विधावति विकीर्णं सद्विनश्यति, एवं धर्मान् आत्मनोऽभिन्नान् पृथक् पश्यन् पृथगेव प्रतिशरीरं पश्यन् तानेव शरीरभेदानुवर्तिनः अनुविधावति । शरीरभेदमेव पृथक् पुनः पुनः प्रतिपद्यत इत्यर्थः ॥
(அனுவாதம்) எவ்வாறு மிகக் கடினமான உயரத்தில் உள்ள பிரதேசங்களில் பெய்த மழை நீரானது மலைகளில் உள்ள பள்ளத்தாக்குகளில் ஓடி சிதறி நாசமாவது போல் தர்மங்களை அதாவது ஆனந்தம், விஷயானுபவம், சைதன்யம், இவைகளை ஆத்மாவைக் காட்டிலும் வெவ்வேறாக பார்த்து ஒவ்வொரு சரீரத்திலும் தனியாகப் பார்த்து அந்த சரீர தர்மங்களை நோக்கியே ஒடுகிறான். மறபடியும், மறுபடியும் சரீர பேதத்தையே அடைகிறான் என்பது பொருள்.
अस्य पुनर्विद्यावतो विध्वस्तोपाधिकृतभेददर्शनस्य विशुद्धविज्ञानघनैकरसमद्वयमात्मानं पश्यतो विजानतो मुनेर्मननशीलस्यात्मस्वरूपं कथं सम्भवतीति, उच्यते
(அ-கை) எவன் (குரு உபதேசத்தால்) வித்தை உடையவனாயும், உபாதி பேத தர்சனம் நீங்கியவனாயும் உள்ளானோ அவன் மிக்க சுத்தமான ஞானஏகரசமாய் உள்ளதும் அத்வைதமானதுமான ஆத்மாவை அறிந்த முனிக்கு (மனன சீலனுக்கு) ஆத்ம ஸ்வரூபம் எவ்வாறு உண்டாகிறது என்பதைக் கூறுகிறார்.
यथोदकं शुद्धे शुद्धमासिक्तं तादृगेव भवति । एवं मुनेर्विजानत आत्मा भवति गौतम ॥ १५ ॥
यथा उदकं शुद्धे प्रसन्ने शुद्धं प्रसन्नम् आसिक्तं प्रक्षिप्तम् एकरसमेव नान्यथा, तादृगेव भवति आत्माप्येवमेव भवति एकत्वं विजानतो मुनेः मननशीलस्य हे गौतम । तस्मात्कुतार्किकभेददृष्टिं नास्तिककुदृष्टिं चोज्झित्वा मातृपितृसहस्रेभ्योऽपि हितैषिणा वेदेनोपदिष्टमात्मैकत्वदर्शनं शान्तदर्पैरादरणीयमित्यर्थः ॥
(அனுவாதம்) எவ்வாறு சுத்தமான ஜலத்தில் சுத்தமான ஜலத்தை சேர்த்தால் ஒரே ரசமாய் ஆகிவிடும் (ஒன்றாய் ஆகி விடும்). ஆனால் வேறாக ஆவதில்லை. ஹே கௌதம! ஏகத்துவத்தை அறிந்த முனிக்கு அதாவது மனன சீலருக்கு ஆத்மாவும் அவ்வாறே ஆகும். ஆகையால் குதர்க்க திருஷ்ட்டியையும், நாஸ்திக குதிருஷ்ட்டியையும் விட்டு ஆயிரக்கணக்கான அம்மா அப்பாக்களைக் காட்டிலும் நமக்கு ஹிதத்தை (நன்மையை) கொடுக்கும் வேதத்தில் உபதேசித்த ஆத்ம ஐக்கிய தர்சனத்தை தர்ப்பத்தை நீக்கியவர்கள் ஆதரிக்க வேண்டும். (அதன் படி அறிந்து கொள்ள வேண்டும்)
इति चतुर्थवल्लीभाष्यम् ॥
पुरमेकादशद्वारमजस्यावक्रचेतसः ।
अनुष्ठाय न शोचति विमुक्तश्च विमुच्यते । एतद्वै तत् ॥ १ ॥
पुनरपि प्रकारान्तरेण ब्रह्मतत्त्वनिर्धारणार्थोऽयमारम्भः, दुर्विज्ञेयत्वाद्ब्रह्मण:-
(அ-கை) ப்ரஹ்மத்தை அறிவது மிகக் கடினமானதால் மறுபடியும் வேறு பிரகரணத்தால் பிரஹ்ம தத்துவத்தை நிச்சயம் செய்வதற்காக இது ஆரம்பிக்கப்படுகிறது.
पुरं पुरमिव पुरम् । द्वारद्वारपालाधिष्ठात्राद्यनेकपुरोपकरणसम्पत्तिदर्शनात् शरीरं पुरम् । पुरं च सोपकरणं स्वात्मना असंहतस्वतन्त्रस्वाम्यर्थं दृष्टम् । तथेदं पुरसामान्यादनेकोपकरणसंहतं शरीरं स्वात्मना असंहतराजस्थानीयस्वाम्यर्थं भवितुमर्हति ।
(அனுவாதம்) பட்டிணம் போல் பட்டிணம், துவார பாலகர்கள், அதன் அதிஷ்டான தேவதைகள் முதலிய அநேக பட்டிணத்திற்குக்கான உபகரணங்களாகிய சம்பத்துக்களுடன் காணப்படுவதால் புரம் (பட்டிணம்) அந்தபுரமும், அதனுடைய உபகரணங்களும் தன்னுடன் சேராமல் ஸ்வாதந்திரயமாக தன்னுடைய ஸ்வாமி (ராஜா) இருத்தல் காணப்படுகிறது. அவ்வாறே இந்த சரீரமும் அநேக உபகரணங்களுடன் கூடியிருந்தாலும் தானாய் சம்பந்தப்படாத ராஜாவைப் போல் ஸ்வாமியாய் இருத்தல் பொருந்தும்.
तच्चेदं शरीराख्यं पुरम् एकादशद्वारम् ; एकादश द्वाराण्यस्य — सप्त शीर्षण्यानि, नाभ्या सहार्वाञ्चि त्रीणि, शिरस्येकम् , तैरेकादशद्वारं पुरम् । कस्य ? अजस्य जन्मादिविक्रियारहितस्यात्मनो राजस्थानीयस्य पुरधर्मविलक्षणस्य । अवक्रचेतसः अवक्रम् अकुटिलमादित्यप्रकाशवन्नित्यमेवावस्थितमेकरूपं चेतो विज्ञानमस्येति अवक्रचेताः तस्यावक्रचेतसः राजस्थानीयस्य ब्रह्मणः।
(அனுவாதம்) சரீரம் எனப்படும் புரத்தில் பதினொன்று துவாரங்கள் (ஒட்டைகள்). அந்த பதினோறு துவாரங்களில் ஏழு துவாரங்கள் தலையில் இருக்கின்றன. நாபிக்கும், அதற்கு கீழும் சேர்த்து மூன்று துவாரங்கள் இருக்கின்றன. ஒன்று தலையின் உச்சியில் உள்ளது. இந்த பதினோரு துவாரங்கள் உடையது புரம்(சரீரம்). இந்த புரம் யாருடையது? பிறகபற்ற, ஜன்மம் முதலிய விகாரங்கள் அற்ற ராஜ ஸ்தானத்தில் உள்ள புரத்திற்கான தர்மங்களுக்கு விலக்ஷணமான (வேறான) ஆத்மாவிற்கா? குறுகிய அவக்ரசேதச என்றால் புரதர்மத்தைக் காட்டிலும் வேறான ஜன்மம் முதலிய விகாரங்கள் அற்றதும் சூரியனுடையப் பிரகாசம் போல் நித்யமாய் இருக்கும் ஏக ரூபம். சேதஸன்(தைஜசன்) விக்ஞானம் எதற்கு இருக்கிறதோ அது அவக்ரசேத்தஸ் ராஜஸ்தானீயமான ப்ரஹ்மத்தினுடையதாகும்.
यस्येदं पुरं तं परमेश्वरं पुरस्वामिनम् अनुष्ठाय ध्यात्वा । ध्यानं हि तस्यानुष्ठानं सम्यग्विज्ञानपूर्वकम् । तं सर्वैषणाविनिर्मुक्तः सन्समं सर्वभूतस्थं ध्यात्वा न शोचति । तद्विज्ञानादभयप्राप्तेः शोकावसराभावात्कुतो भयेक्षा । इहैवाविद्याकृतकामकर्मबन्धनैर्विमुक्तो भवति । विमुक्तश्च सन्विमुच्यते ; पुनः शरीरं न गृह्णातीत्यर्थः ॥
(அனுவாதம்) அந்த புரம் எவருடையதோ அந்த பரமேஸ்வரரை அதாவது அந்த புரத்தின் ஸ்வாமியை அனுஷ்ட்டானம் செய்து அதாவது தியானம் செய்து, த்யானம் என்பது சம்யக் விக்ஞான பூர்வமாய் அனுஷ்ட்டானம் செய்தவர் எல்லா ஈஷணைகளும் அற்றவராய் இருந்து கொண்டு எல்லோருள்ளும் சமமாய் இருப்பவரை தியானம் செய்து சோகத்தை அடைய மாட்டார். அதை அறிந்ததால் அபயம் (பயமற்றதன்மை) அடைந்தவனுக்கு சோகம் அடைவு இல்லாததால் எதற்கு பயப்பட வேண்டும். இங்கேயே அவித்தையினால் உண்டான காம கர்ம பந்தங்களில் இருந்து விடுபட்டவனாகின்றான். முக்தனாய் இருந்து கொண்டு முக்தனாகின்றான். அதாவது மறுபடியும் சரீரத்தை அடைவதில்லை என்பது பொருள்.
स तु नैकपुरवर्त्येवात्मा किं तर्हि सर्वपुरवर्ती । कथम् ?
(அ-கை) ஆத்மா ஒரு சரீரத்தில் மட்டும் இல்லை. ஆனால் எல்லா சரீரத்தின் உள்ளும் இருக்கிறார் அது எவ்வாறு
हंसः शुचिषद्वसुरन्तरिक्षसद्धोता वेदिषदतिथिर्दुरोणसत् ।
नृषद्वरसदृतसद्व्योमसदब्जा गोजा ऋतजा अद्रिजा ऋतं बृहत् ॥ २ ॥
हंसः हन्ति गच्छतीति । शुचिषत् शुचौ दिवि आदित्यात्मना सीदतीति । वसुः वासयति सर्वानिति । वाय्वात्मना अन्तरिक्षे सीदतीति अन्तरिक्षसत् । होता अग्निः, ‘अग्निर्वै होता’ इति श्रुतेः । वेद्यां पृथिव्यां सीदतीति वेदिषत् , ‘इयं वेदिः परोऽन्तः पृथिव्याः’ (ऋ. मं. १ । २२ । १६४ । ३५) इति मन्त्रवर्णात् । अतिथिः सोमः सन् दुरोणे कलशे सीदतीति दुरोणसत् ।ब्राह्मणोऽतिथिरूपेण वा दुरोणेषु गृहेषु सीदतीति दुरोणसत् ।
(அனுவாதம்) ஹம்ஸ: என்ற பதத்தின் தாது அர்த்தமாகிய செல்லுதல் என்பது (இந்த பரமாத்மா) எங்கும் வியாபித்துள்ளது என்பதாகும். சுத்தமான ஆகாயத்தில் சூரியன் முதலிய திவ்ய ரூபத்துடன் இருப்பதால் शुचिषत् (சுசிஷத்) எல்லாவற்றையும் தன்னிடத்தில் வசிக்கச் செய்வதால் (அதிஷ்ட்டானமாக இருப்பதால்) வசு ( वसु ) வாயு ரூபமாய் அந்தரிக்ஷத்தில் இருப்பதும்होता (ஹோதா) அதுவே அக்னியாய் இருப்பதும் (अग्निर्वै होता ) என்ற சுருதி வாக்கியத்தால் அக்னியே ஹோதா என்பதும் (வேதி) वेदिषत् (வேதிஷத்) பூமியில் செல்வதால் ஆகும். மேலும் யக்ஞ பூமியின் மத்ய பாகத்தில் மந்திர ரூபமாய் இருப்பதாலும் अतिथिः (அதிதி) சோமரஸமாகும். அது கலசத்தில் இருப்பதால் दुरोणसत् (துரோணசத்) என்றும் கூறப்படுகிறது. பிராஹ்மணர்களிடத்தில் அதிதி ரூபமாய் கலசத்தில் அதாவது வீட்டில் இருக்கிறது. ஆகையால் த்ரோணசத் என்கிறோம்.
नृषत् नृषु मनुष्येषु सीदतीति नृषत् । वरसत् वरेषु देवेषु सीदतीति वरसत् । ऋतसत् ऋतं सत्यं यज्ञो वा, तस्मिन् सीदतीति ऋतसत् । व्योमसत् व्योम्नि आकाशे सीदतीति व्योमसत् । अब्जाः अप्सु शङ्खशुक्तिमकरादिरुपेण जायत इति अब्जाः । गोजाः गवि पृथिव्यां व्रीहियवादिरूपेण जायत इति गोजाः । ऋतजाः यज्ञाङ्गरूपेण जायत इति ऋतजाः । अद्रिजाः पर्वतेभ्यो नद्यादिरूपेण जायत इति अद्रिजाः ।
(நிருஷத்) नृषत् மனிதர்களிடத்தில் இருப்பதும், वरसत् (வரசத்) தேவர்களிடத்தில் இருப்பதும் ऋतसत्(ருதசத்) சத்யம் அல்லது யக்ஞத்திடத்தில் இருப்பதும்व्योमसत् (வயோமசத்) ஆகாசத்தில் இருப்பது, अब्जा(அப்ஜா) ஜலத்தில் சங்கு, மீன் முதலிய ரூபமாய் உண்டானது என்பதும், ப்ருதிவியில் गोजा (கோஜா) நெல், யவை முதலிய ரூபமாய் உண்டானதாகும். ऋतजा (ருதஜா) யக்ஞாங்க ரூபமாய் உண்டானது. अद्रिजाः (அத்ரிஜா) மலைகளில் நதி முதலிய ரூபமாய் உண்டானது.
सर्वात्मापि सन् ऋतम् अवितथस्वभाव एव । बृहत् महान् , सर्वकारणत्वात् । यदाप्यादित्य एव मन्त्रेणोच्यते तदाप्यात्मस्वरूपत्वमादित्यस्याङ्गीकृतमिति ब्रह्मणि व्याख्यानेऽप्यविरोधः । सर्वथाप्येक एवात्मा जगतः, नात्मभेद इति मन्त्रार्थः ॥
(அனுவாதம்) சர்வாத்மாவாய் இருந்து கொண்டு ரிதம் அழியாத ஸ்வபாவம் உள்ளது. எல்லாவற்றிற்கும் காரணமாய் இருப்பதால் மிகப் பெரியது. இந்த மந்திரத்தால் சூரியனைக் குறித்தாலும் அந்த சூரியனும் ஆத்ம ஸ்வரூபமே என்று அங்கீகரிக்கப்பட்டதால் சூரியனை குறிக்கும் பிராஹ்மணபாகத்திற்கு விரோதமில்லை. எங்கும் வியாபித்து ஒன்றாகவே ஆத்மா ஜகத்தைக் காட்டிலும் வேறல்ல என்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.
आत्मनः स्वरूपाधिगमे लिङ्गमुच्यते —
(அ-கை) ஆத்மாவினுடைய ஸ்வரூபத்தை அறிவதற்கான லிங்கம் (மார்க்கம்) சொல்லப்படுகிறது.
ऊर्ध्वं प्राणमुन्नयति अपानं प्रत्यगस्यति ।
मध्ये वामनमासीनं विश्वे देवा उपासते ॥ ३ ॥
ऊर्ध्वं हृदयात् प्राणं प्राणवृत्तिं वायुम् उन्नयति ऊर्ध्वं गमयति । तथा अपानं प्रत्यक् अधः अस्यति क्षिपति यः इति वाक्यशेषः । तं मध्ये हृदयपुण्डरीकाकाशे आसीनं बुद्धावभिव्यक्तं विज्ञानप्रकाशनं वामनं वननीयं सम्भजनीयं विश्वे सर्वे देवाः चक्षुरादयः प्राणाः रूपादिविज्ञानं बलिमुपाहरन्तो विश इव राजानम् उपासते तादर्थ्येनानुपरतव्यापारा भवन्तीत्यर्थः । यदर्था यत्प्रयुक्ताश्च सर्वे वायुकरणव्यापाराः, सोऽन्यः सिद्ध इति वाक्यार्थः ॥
(அனுவாதம்) ऊर्ध्वं (ஊர்த்வம்) ஹ்ருதயத்திலிருந்து பிராண விருத்தியை அதாவது வாயுவை மேலே செழுத்துகிறதோ, அதே போல் அபானவிருத்தி ரூபமான வாயுவை கீழே தள்ளுகிறதோ அந்த ஹிருதய புண்டரீக ஆகாசத்தில் இருந்து கொண்டு புத்தியில் விளங்குகின்ற விக்ஞான பிரகாசத்தை உடையவனும் वामनं(வாமனம்) பஜிக்கத்தக்கதுமான அந்த ஆத்மாவை சக்ஷு முதலியவைகளும் பிராண ரூபம் முதலிய விஷயவிக்ஞானமாகிற பலியைக் (கப்பத்தைக்) கொடுக்கிறதாய் ஜீவர்கள் அரசனைப்போல் உபாசிப்பதால் அந்த விஷயத்திலேயே (அந்த அர்த்தத்திலேயே) ஈடுபட்டு அவற்றில் தொழில் (வியாபாரம்) உடையதாகிறது. வாயு கரணங்கள் இவற்றின் வியாபாரங்கள் எதற்காக எவனால் ஏற்பட்டதோ அத்தகையவன் அவற்றைக் காட்டிலும் வேறாகவே இருக்கிறான் என்பது இந்த வாக்கியத்தின் அர்த்தமாகும்.
किञ्च,
(அ-கை) மேலும்
अस्य विस्रंसमानस्य शरीरस्थस्य देहिनः ।
देहाद्विमुच्यमानस्य किमत्र परिशिष्यते । एतद्वै तत् ॥ ४ ॥
अस्य शरीरस्थस्य आत्मनः विस्रंसमानस्य भ्रंशमानस्य देहिनो देहवतः । विस्रंसनशब्दार्थमाह — देहाद्विमुच्यमानस्येति । किमत्र परिशिष्यते प्राणादिकलापे न किञ्चन परिशिष्यते ; अत्र देहे पुरस्वामिविद्रवण इव पुरवासिनां यस्यात्मनोऽपगमे क्षणमात्रात्कार्यकरणकलापरूपं सर्वमिदं हतबलं विध्वस्तं भवति विनष्टं भवति, सोऽन्यः सिद्ध ॥
(அனுவாதம்) இந்த சரீரத்தில் இருக்கும் இந்த ஆத்மாவானவன் விஸ்ரம்ஸமானாக அதாவது நழுவுகின்றவனாக இருக்கும் பொழுது அதாவது தேஹத்தை விட்ட பின் பிராணாதிகளில் எது தான் மிஞ்சப் போகின்றது. நகரத்தில் ஸ்வாமி வெளிக் கிழம்பினால் நகரத்தில் ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள் அது போல் ஆகும்! ஆகவே ஆத்மா வெளிக்கிழம்பிய க்ஷணத்திலேயே காரிய கரண சங்காதம் எல்லாம் பலம் இழந்ததாகிறது. நஷ்ட்டமடைகிறது. அதைக் காட்டிலும் வேறாகிறான்.
स्यान्मतं प्राणापानाद्यपगमादेवेदं विध्वस्तं भवति न तु व्यतिरिक्तात्मापगमात् , प्राणादिभिरेवेह मर्त्यो जीवतीति ; नैतदस्ति —
(அ-கை) சரீரம், பிராணன், அபானன் முதலியவைகள் வெளியேறுவதாலேயே மனிதன் நஷ்டமடைகிறான் .ஆகையால் காரிய கரண சங்காதத்தைக் காட்டிலும் வேறாக ஆத்மா இல்லை. ஏன் எனில் பிராணாதிகளினால்தான் மனிதன் ஜீவிக்கிறான் என்று சிலர் கருதுகிறார்கள். அது அவ்வாறு அல்ல.( ஏன் எனில்)
न प्राणेन नापानेन मर्त्यो जीवति कश्चन ।
इतरेण तु जीवन्ति यस्मिन्नेतावुपाश्रितौ ॥ ५ ॥
न प्राणेन नापानेन चक्षुरादिना वा मर्त्यः मनुष्यो देहवान् कश्चन जीवति न कोऽपि जीवति । न ह्येषां परार्थानां संहत्यकारित्वाज्जीवनहेतुत्वमुपपद्यते । स्वार्थेनासंहतेन परेण संहतानामवस्थानं न दृष्टं केनचिदप्रयुक्तं यथा गृहादीनां लोके ; तथा प्राणादीनामपि संहतत्वाद्भवितुमर्हति ।
(அனுவாதம்) தேகமுடையவனும், மரண தர்மம் உடையவனாகிய மனிதன் ஒருவனும் பிராணனால் ஜீவிக்கிறதில்லை. அபானனாலோ கண் முதலிய இந்திரியங்களாலோ ஜீவிப்பதில்லை. இந்த பரார்த்தங்கள் எல்லாம் சேர்ந்து காரியத்தை செய்வதால் ஜீவிப்பதற்குக் காரணமாவது பொருந்தாது. உலகில் வீடு முதலியவைகள் தானாகவே ஒன்று சேர்வதாலேயே மற்றொரு சேதனத்தின் ப்ரேரணை இல்லாமல் அவைகள் ஒன்று சேர்வது என்பது காணப்படவில்லை. அவ்வாறே பிராணாதிகளின் சேர்க்கையும் (சேதனம்) இல்லாமல் ஜீவிப்பதற்குக் காரணமாகாது.
अत इतरेण तु इतरेणैव संहतप्राणादिविलक्षणेन तु सर्वे संहताः सन्तः जीवन्ति प्राणान्धारयन्ति । यस्मिन् संहतविलक्षणे आत्मनि सति परस्मिन् एतौ प्राणापानौ चक्षुरादिभिः संहतौ उपाश्रितौ यस्यासंहतस्यार्थे प्राणापानादिः सर्वं व्यापारं कुर्वन्वर्तते संहतः सन् स ततोऽन्यः सिद्ध इत्यभिप्रायः ॥
(அனுவாதம்) ஆகையால் பிராணன் முதலியவைகளின் சேர்க்கையைக் காட்டிலும் விலக்ஷணமான வேறு ஒன்றால் சேர்ந்து கொண்டு ஜீவிக்கின்றன. பிராணனை தரிக்கின்றன.அந்த சேர்க்கைகளுக்கு விலக்ஷணமான பரமான ஆத்மாவில் இந்த பிராணன் அபானன்கள் கண் முதலியவைகளால் சேர்ந்து ஆஸ்ரயத்தை அடைகின்றது. எந்த சேர்க்கையற்ற(ஆத்மாவிடத்தில்)தில் பிராணன் அபானன் முதலியவைகள் வியாபாரங்கள் செய்து கொண்டு இருப்பதால் அவைகளின் சேர்க்கையால் அந்த ஆத்மா அந்த சங்காதத்தைக் காட்டிலும் வேறுபட்டவனாக இருக்கிறது.
हन्त त इदं प्रवक्ष्यामि गुह्यं ब्रह्म सनातनम् ।
यथा च मरणं प्राप्य आत्मा भवति गौतम ॥ ६ ॥
हन्तेदानीं पुनरपि ते तुभ्यम् इदं गुह्यं गोप्यं ब्रह्म सनातनं चिरन्तनं प्रवक्ष्यामि । यद्विज्ञानात्सर्वसंसारोपरमो भवति, अविज्ञानाच्च यस्य मरणं प्राप्य यथा च आत्मा भवति यथा आत्मा संसरति तथा शृणु हे गौतम ॥
(அனுவாதம்) ஹே கெளதம இப்பொழுது மறுபடியும் உன் பொருட்டு எதை அறிந்தால் எல்லா சம்சாரங்களும் நீங்குமோ அந்த இந்த ரகஸ்யமாய் பாதுகாக்கப்பட வேண்டிய சநாதனமான பிரஹ்மத்தை கூறுகிறேன். அதை அறியாததினால் எவன் மரணத்தையும், பிறப்பையும் அடைந்து எவ்வாறு சம்சாரத்தை அடைகிறான் என்பதைக் கேள்.
योनिमन्ये प्रपद्यन्ते शरीरत्वाय देहिनः ।
स्थाणुमन्येऽनुसंयन्ति यथाकर्म यथाश्रुतम् ॥ ७ ॥
योनिं योनिद्वारं शुक्रबीजसमन्विताः सन्तः अन्ये केचिदविद्यावन्तो मूढाः प्रपद्यन्ते शरीरत्वाय शरीरग्रहणार्थं देहिनः देहवन्तः योनिं प्रविशन्तीत्यर्थः । स्थाणुं वृक्षादिस्थावरभावम् अन्ये अत्यन्ताधमा मरणं प्राप्य अनुसंयन्ति अनुगच्छन्ति । यथाकर्म यद्यस्य कर्म तद्यथाकर्म यैर्यादृशं कर्म इह जन्मनि कृतं तद्वशेनेत्येतत् । तथा यथाश्रुतं यादृशं च विज्ञानमुपार्जितं तदनुरूपमेव शरीरं प्रतिपद्यन्त इत्यर्थः ; ‘यथाप्रज्ञं हि सम्भवाः’ (ऐ. आ. २ । ३ । २) इति श्रुत्यन्तरात् ॥
(அனுவாதம்) வேறு சில அவித்வான்களாகிய மூடர்கள் சரீரத்தை எடுப்பதன் பொருட்டு சுக்ர பீஜத்தை உடைய யோனியை அடைகிறார்கள். அதாவது யோனியில் ப்ரவேசிக்கிறார்கள் என்பது பொருள். மிகவும் கீழானவர்கள் மரணத்தை அடைந்து மரம் முதலிய தாவர பாவத்தை தொடர்ந்து செல்கிறார்கள். கர்மம் எவ்வாறோ அவ்வாறு ரூபத்தை அடைகிறார்கள். இந்த ஜன்மத்தில் செய்த கர்மத்தை ஒட்டியும். எவ்வாறு விக்ஞானமானது சம்பாதிக்கப்பட்டதோ அவ்வாறு அதை ஒட்டியும் ரூபமான சரீரத்தை அடைகிறார்கள்“यथा प्रज्ञं हि संभवाः”( யதா ப்ரக்ஞம ஹி சம்பவா) எவ்வாறு பிரக்ஞானமோ அவ்வாறு ப்ரஜைகள் ஏற்படுகின்றன) என்று வேறு சுருதியிலும் கூறப்பட்டுள்ளது.
यत्प्रतिज्ञातं गुह्यं ब्रह्म प्रवक्ष्यामीति तदाह —
(அ--கை) ரஹஸ்யமான பிரஹ்மத்தை சொல்கிறேன் என்று முன்பு பிரதிக்ஞை செய்ததை இப்போது கூறுகிறார்.
य एष सुप्तेषु जागर्ति कामं कामं पुरुषो निर्मिमाणः । तदेव शुक्रं तद्ब्रह्म तदेवामृतमुच्यते ।
तस्मिंल्लोकाः श्रिताः सर्वे तदु नात्येति कश्चन । एतद्वै तत् ॥ ८ ॥
य एष सुप्तेषु प्राणादिषु जागर्ति न स्वपिति ; कथम् ? कामं कामं तं तमभिप्रेतं स्त्र्याद्यर्थमविद्यया निर्मिमाणः निष्पादयन् , जागर्ति पुरुषः यः, तदेव शुक्रं शुभ्रं शुद्धं तद्ब्रह्म नान्यद्गुह्यं ब्रह्मास्ति । तदेव अमृतम् अविनाशि उच्यते सर्वशास्त्रेषु । किञ्च, पृथिव्यादयो लोकास्तस्मिन्नेव सर्वे ब्रह्मणि श्रिताः आश्रिताः, सर्वलोककारणत्वात्तस्य । तदु नात्येति कश्चनेत्यादि पूर्ववदेव ॥
(அனுவாதம்) எந்த ஒருவன் பிராணாதிகள் தன் வியாபாரங்களிலிருந்து விராமம்(விடுபட்ட பொழுது) விராமம் அடையாமல் விழித்துக் கொண்டிருக்கிறானோ, அது எவ்வாறு எனின், அவித்தையினால் ஸ்தீரீ முதலிய தனக்கு விருப்பமான பதார்த்தங்களை உண்டு பண்ணிக் கொண்டு எந்த புருடன் இருக்கிறானோ அதுதான் சுக்ரம். சுப்ரம். சுத்தமான அதுவே பிரஹ்மம். வேறு குஹ்யமான (ரஹஸ்யமானது) இல்லை என்பதாகும். அதுவே ஸர்வசாஸ்திரங்களிலும் விநாசம் அற்றது என்று சொல்லப்படுகிறது. மேலும் அது எல்லா லோகங்களுக்கும் காரணமாய் இருப்பதால் எல்லா பிருதிவி முதலியவைகள் அந்த பிரஹ்மத்தில் ஆஸ்ரயத்தவைகளாய் இருக்கின்றன. அதாவது அதை ஒன்றும் கடந்து இருக்காது என்பது முன் போலவே ஆகும்.
अतः कुतार्किकपाषण्डबुद्धिविचालितान्तःकरणानां प्रमाणोपपन्नमप्यात्मैकत्वविज्ञानमसकृदुच्यमानमप्यनृजुबुद्धीनां ब्राह्मणानां चेतसि नाधीयत इति तत्प्रतिपादने आदरवती पुनः पुनराह श्रुतिः —
(அஃகை) அநேக தார்க்கிகர்களின் மூட புத்தியினால் சலனமடைந்த அந்தக்கரணம் உடையவர்களுக்கு பிராமணர்கள் சாஸ்திரப் பிரமானத்தை உடையவர்களாய் இருந்தாலும் ஆத்மா ஒன்றே என்ற விக்ஞானத்தை அநேக தடவை கூறப்பட்டாலும் நேர்மையான புத்தியற்ற ப்ராமணர்களின் மனதில் பதிவதில்லை என்பதால் அதை நன்றாக விளக்கி கூறுவதற்காக ஆதரவுடைய சுருதியானது மறுபடியும், மறுபடியும் எடுத்து உரைக்கின்றது.
अग्निर्यथैको भुवनं प्रविष्टो रूपं रूपं प्रतिरूपो बभूव ।
एकस्तथा सर्वभूतान्तरात्मा रूपं रूपं प्रतिरूपो बहिश्च ॥ ९ ॥
अग्निः यथा एक एव प्रकाशात्मा सन् भुवनम् , भवन्त्यस्मिन्भूतानीति भुवनम् , अयं लोकः, तमिमं प्रविष्टः अनुप्रविष्टः, रूपं रूपं प्रति, दार्वादिदाह्यभेदं प्रतीत्यर्थः, प्रतिरूपः तत्र तत्र प्रतिरूपवान् दाह्यभेदेन बहुविधो बभूव ; एक एव तथा सर्वभूतान्तरात्मा रूपं रूपं सर्वेषां भूतानामभ्यन्तर आत्मा अतिसूक्ष्मत्वाद्दार्वादिष्विव सर्वदेहं प्रति प्रविष्टत्वात् प्रतिरूपो बभूव बहिश्च स्वेनाविकृतेन रूपेण आकाशवत् ॥
(அனுவாதம்) எவ்வாறு ஒரே அக்னியானது பிரகாச ஸ்வரூபமாக இருந்து கொண்டு புவனத்தில் அதாவது பிராணிகள் உண்டாவதால் புவனமயமான லோகத்தில் இந்த அக்னியானது ஒவ்வொரு கட்டை முதலியவைகளில் அந்த, அந்தரூபமாகப் பிரவேசித்து அந்த எரிக்கும் சத்தியின் பேதமாய் தோன்றி அநேக வித வித பேத ரூபங்களாய் தோன்றுகிறது. அவ்வாறே ஆத்மா ஒன்றாகவே இருந்து கொண்டு எல்லா பூதங்களுக்கும் அந்தராத்மாவானது எல்லா ஜீவ ராசிகள் உள்ளும் ஆத்மா மிகவும் சூக்ஷ்மமாய் இருப்பதால் கட்டை முதலியவைகளில் இருப்பது போல் எல்லா தேஹங்களுள்ளும் நுழைந்து இருப்பதால் வெளியிலும் தன்னுடை விகாரமற்ற சுவரூபவமாதால் ஆகாசம் போல் ஒவ்வொரு ரூபத்திலும் விளங்குகிறது.
तथान्यो दृष्टान्तः —
(அ-கை) அவ்வாறு வேறு திருஷ்ட்டாந்தம்
वायुर्यथैको भुवनं प्रविष्टो रूपं रूपं प्रतिरूपो बभूव ।
एकस्तथा सर्वभूतान्तरात्मा रूपं रूपं प्रतिरूपो बहिश्च ॥ १० ॥
वायुर्यथैक इत्यादि । प्राणात्मना देहेष्वनुप्रविष्टः । रूपं रूपं प्रतिरूपो बभूवेत्यादि समानम् ॥
(அனுவாதம்) எவ்வாறு வாயுவானது ஒன்றாகவே இருந்து கொண்டு பிராணாத்மாவாய் ஒவ்வொரு ரூபமாய் அந்த பிரதிரூபமாய் ஆகிறது முதலியவைகள் முன்போலாம்.
एकस्य सर्वात्मत्वे संसारदुःखित्वं परस्यैव स्यादिति प्राप्ते, इदमुच्यते —
(அ-கை) இவ்வாறு ஒன்றே சர்வாத்மாவாய் இருக்கும் பொழுது சம்சார துக்கமானது பரமாத்மாவிற்கே உண்டாகும் என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது.
सूर्यो यथा सर्वलोकस्य चक्षुर्न लिप्यते चाक्षुषैर्बाह्यदोषैः ।
एकस्तथा सर्वभूतान्तरात्मा न लिप्यते लोकदुःखेन बाह्यः ॥ ११ ॥
सूर्यः यथा चक्षुष आलोकेनोपकारं कुर्वन्मूत्रपुरीषाद्यशुचिप्रकाशनेन तद्दर्शिनः सर्वलोकस्य चक्षुः अपि सन् न लिप्यते चाक्षुषैः अशुच्यादिदर्शननिमित्तैराध्यात्मिकैः पापदोषैः बाह्यैश्च अशुच्यादिसंसर्गदोषैः एकः सन् , तथा सर्वभूतान्तरात्मा न लिप्यते लोकदुःखेन बाह्यः ।
(அனுவாதம்) எவ்வாறு சூரியன் கண்களுக்கு தன் பிரகாசத்தினால் பார்ப்பதற்கு உபகாரமாய் இருந்துகொண்டு மல மூத்திரம் முதலிய அசுத்த பதார்த்தங்களை பிரகாசப் படுத்துவதால் அதைப் பார்ப்பவன் எல்லா லோகங்களுக்கும் கண் ரூபமாய் இருந்தாலும் அசுத்தமான பதார்த்தங்களை பார்ப்பதால் உண்டாகும் ஆத்யாத்மிக பாப தோஷங்களும் அவ்வாறே அசுத்தப் பதார்த்தங்களின் சேர்க்கையால் ஏற்படும் பாஹ்ய தோஷங்கள் ஒட்டுவதில்லை. அவ்வாறே எல்லா பூதங்களுக்கும் ஒரே அந்த ராத்மாவாய் இருந்தாலும் துக்கங்கள் ஒட்டுவதில்லை. (சம்பந்தப்படுவது இல்லை) ஆத்மாவானவன் எல்லாவற்றிற்கும் பாஹ்யமாய் இருக்கின்றான்.
लोको ह्यविद्यया स्वात्मन्यध्यस्तया कामकर्मोद्भवं दुःखमनुभवति । न तु सा परमार्थतः स्वात्मनि । यथा रज्जुशुक्तिकोषरगगनेषु सर्परजतोदकमलानि न रज्ज्वादीनां स्वतो दोषरूपाणि सन्ति, संसर्गिणि विपरीतबुद्ध्यध्यासनिमित्तात्तु तद्दोषवद्विभाव्यन्ते ; न तद्दोषैस्तेषां लेपः, विपरीतबुद्ध्यध्यासबाह्या हि ते ;
(அனுவாதம்) உலகில் அத்யாசமான அவித்தையினால் தனது ஆத்மாவிடத்தில் காமம் கர்மங்களினால் உண்டாகும் துக்கத்தை அனுபவிக்கிறான். அந்த அவித்யையானது உண்மையில் தன் ஆத்மாவிடத்தில் இல்லை. எவ்வாறு கயிறு, சுத்தி, கானல்நீர் ஆகாசம் இவைகளில் சர்ப்பம், வெள்ளி, நீர், ஆகாயமலர், ரஜ்ஜு (கயிறு) முதலியவைகளில் இயற்கையாக தோஷ ரூபங்கள் இல்லை.சம்சர்க்கத்தினிடத்தில்  விபரீத புத்தியின் அத்தியாச நிமித்தத்தால் அவைகள் தோஷங்கள் போல் பாவிக்கப்படுகிறது. அவைகள் அந்த தோஷங்களால் தீண்டப்படுவது இல்லை. ஏன் எனில் அது விபரீத புத்தியினால் உண்டான அத்யாசத்தைக் காட்டிலும் பாஹியமாகும் (வெளியில் இருக்கிறது)
तथा आत्मनि सर्वो लोकः क्रियाकारकफलात्मकं विज्ञानं सर्पादिस्थानीयं विपरीतमध्यस्य तन्निमित्तं जन्ममरणादिदुःखमनुभवति ; न त्वात्मा सर्वलोकात्मापि सन् विपरीताध्यारोपनिमित्तेन लिप्यते लोकदुःखेन । कुतः ? बाह्यः रज्ज्वादिवदेव विपरीतबुद्ध्यध्यासबाह्यो हि स इति ॥
(அனுவாதம்) அவ்வாறு ஆத்மாவினிடத்தில் எல்லா லோகங்களும் கிரியாகாரக பல ரூபமான விக்ஞானத்தினால் சர்ப்ப முதலிய ஸ்தானத்தில் விபரீதமான அத்யாசம் செய்து அதன் நிமித்தமாக ஜன்ம மரணாதி துக்கம் அனுபவிக்கிறார்கள். ஆத்மா எல்லா லோகமாய் இருந்து கொண்டு விபரீத அத்தியாச ஆரோப நிமித்தத்தால் ஏற்படும் லோக துக்கங்களினால் தீண்டப்படுவதில்லை. ஏன்? அதைக் காட்டிலும் வெளியில் இருக்கிறது. அது ரஜ்ஜு முதலியவைகள் போல் விபரீத புத்தி அத்யாசத்தைக் காட்டிலும் பாஹ்யமாய் (வெளியில்) இருக்கிறது என்பதாகும்.
किञ्च,
மேலு
एको वशी सर्वभूतान्तरात्मा एकं रूपं बहुधा यः करोति ।
तमात्मस्थं येऽनुपश्यन्ति धीरास्तेषां सुखं शाश्वतं नेतरेषाम् ॥ १२ ॥
स हि परमेश्वरः सर्वगतः स्वतन्त्रः एकः, न तत्समोऽभ्यधिको वान्योऽस्ति । वशी, सर्वं ह्यस्य जगद्वशे वर्तते । कुतः ? सर्वभूतान्तरात्मा । यत एकमेव सदैकरसमात्मानं विशुद्धविज्ञानघनरूपं नामरूपाद्यशुद्धोपाधिभेदवशेन बहुधा अनेकप्रकारेण यः करोति स्वात्मसत्तामात्रेण अचिन्त्यशक्तित्वात् , तत् आत्मस्थं स्वशरीरहृदयाकाशे बुद्धौ चैतन्याकारेणाभिव्यक्तमित्येतत् —
(அனுவாதம்) அந்த ஆத்மாவே பரமேச்வரன், எங்கும் நிறைந்தவர், ஸ்வதந்திரர் ஒருவரே. அந்த ஆத்மாவைக் காட்டிலும் சமமோ, அதிகமானதோ, வேறு ஒன்று இல்லை. அவரே வசி (वशी) இந்த ஜகத் எல்லாம் அவர் வசமாய் இருக்கிறது. எதனால்? எல்லா பூதங்களிலும் அந்தராத்மாவாய் இருக்கிறது. அதனால் ஏகமாயும் எப்பொழுதும் ஏகரச ரூபம் ஆத்மாவிற்கு நாம ரூப முதலிய அசுத்த உபாதி பேதத்தால் ஆத்மாவினுடைய சத்தாமாத்திரத்தினாலும் தன்னுடைய அசிந்த்ய ரூபசக்தியினாலும், சுவதந்திரமாய் அநேக பிரகாரமாக எவன் செய்கிறானோ அவன் தன் சரீரத்தில் உள்ள ஹ்ருதயாகாசத்தில் அதாவது புத்தியில் சைதன்யாகாரமாய் அபிவியக்தமாகிறது.(தெரிகிறது)
न हि शरीरस्याधारत्वमात्मनः, आकाशवदमूर्तत्वात् ; आदर्शस्थं मुखमिति यद्वत् — तमेतमीश्वरमात्मानं ये निवृत्तबाह्यवृत्तयः अनुपश्यन्ति आचार्यागमोपदेशमनु साक्षादनुभवन्ति धीराः विवेकिनः, तेषां परमेश्वरभूतानां शाश्वतं नित्यं सुखम् आत्मानन्दलक्षणं भवति, नेतरेषां बाह्यासक्तबुद्धीनामविवेकिनां स्वात्मभूतमपि, अविद्याव्यवधानात् ॥
ஆகாயம் போல் ரூபம் இல்லாததால் ஆத்மாவிற்கு சரீரம் ஆதாரம் ஆகாது. கண்ணாடியில் தோன்றும் முகம் கண்ணாடிக்கு ஆதாரம் ஆகாதது போல். அந்த ஈஸ்வரனாகிய ஆத்மாவை எவர்கள் வெளி விருத்திகளிலிருந்து விடுபட்டவர்கள் அறிந்து கொள்கிறார்கள். அந்த ஆத்மாவை குரு சாஸ்திர உபதேசத்தினால் சாக்ஷாத்தாக அறிகிறார்கள். தீரர்களாகிய விவேகிகள் பரமேச்வர ரூபத்தை அடைந்தவர்களுக்கு சாஸ்வதம், நித்யம், சுகம், ஆத்மானந்தம் ஏற்படுகிறது. (அடையப்படுகிறது) வெளி விஷயங்களில் பற்று உள்ள புத்தி உடைய அவிவேகிகளுக்கு ஸ்வாத்ம பூதமாய் இருந்தாலும் அவித்தையினால் மறைக்கப்படுவதால் அவர்களால் அறிய முடியாது.
किञ्च,
மேலும்
नित्यो नित्यानां चेतनश्चेतनानामेको बहूनां यो विदधाति कामान् ।
तमात्मस्थं येऽनुपश्यन्ति धीरास्तेषां शान्तिः शाश्वती नेतरेषाम् ॥ १३ ॥
नित्यः अविनाशी नित्यानाम् अविनाशिनाम् । चेतनः चेतनानां चेतयितॄणां ब्रह्मादीनां प्राणिनाम् । अग्निनिमित्तमिव दाहकत्वमनग्नीनामुदकादीनामात्मचैतन्यनिमित्तमेव चेतयितृत्वमन्येषाम् । किञ्च, स सर्वज्ञः सर्वेश्वरः कामिनां संसारिणां कर्मानुरूपं कामान् कर्मफलानि स्वानुग्रहनिमित्तांश्च कामान् यः एको बहूनाम् अनेकेषाम् अनायासेन विदधाति प्रयच्छतीत्येतत् । तम् आत्मस्थं ये अनुपश्यन्ति धीराः, तेषां शान्तिः उपरतिः शाश्वती नित्या स्वात्मभूतैव स्यात् । न इतरेषाम् अनेवंविधानाम् ॥
(அனுவாதம்) அநித்யமான விநாசம் உடையவற்றிற்கு நித்யமாய் விநாசம் அற்றதாய் இருக்கிறது. சேதனங்களான பிரஹ்மா முதலிய ஜீவர்களுக்கு சேதனம், அக்னி இல்லாத நீர் முதலியவைகள் அக்னி நிமித்தமாக தாஹகத்துவம் (கொளுத்தும் தன்மை) எவ்வாறோ அவ்வாறு ஆத்மா அல்லாத மற்றவைகளுக்கு ஆத்ம சைதன்ய நிமித்தமாகவே சேதயித்ருவம் (சேதனத்தன்மை). மேலும் ஆத்மா சர்வக்ஞன், சர்வேஷ்வரன், காமமுடைய சம்சாரிகளுக்கு அவர்களுடைய காமத்திற்கு தகுந்தவாறு அவர்கள் விரும்பிய கர்ம பலத்தை தன்னுடைய அனுக்கிரஹ நிமித்தத்தால் காமனைகளை ஒன்றாகவே இருந்து கொண்டு அநாயசமாக அநேகர்களுக்கு கொடுக்கிறார். அந்த ஆத்மாவிலிருப்பவரை எந்த தீரர்கள் அதை அறிகிறார்களோ அவர்களுக்கு சாஸ்வதமான நித்ய சாஸ்வதமான ஸ்வாத்ம பூதமான சாந்தியையும், உபரதியையும் அடைகிறார்கள். இவர்களைக் காட்டிலும் வேறானவன் அடைவதில்லை.
तदेतदिति मन्यन्तेऽनिर्देश्यं परमं सुखम् ।
कथं नु तद्विजानीयां किमु भाति विभाति वा ॥ १४ ॥
यत्तदात्मविज्ञानसुखम् अनिर्देश्यं निर्देष्टुमशक्यं परमं प्रकृष्टं प्राकृतपुरुषवाङ्मनसयोरगोचरमपि सन्निवृत्तैषणा ये ब्राह्मणास्ते तदेतत्प्रत्यक्षमेवेति मन्यन्ते, कथं नु केन प्रकारेण तत्सुखमहं विजानीयाम् इदमित्यात्मबुद्धिविषयमापादयेयं यथा निवृत्तविषयैषणा यतयः । किमु तत् भाति दीप्यते प्रकाशात्मकं तत् यतोऽस्मद्बुद्धिगोचरत्वेन विभाति विस्पष्टं दृश्यते किं वा नेति ॥
(அனுவாதம்) எந்த அந்த ஆத்ம விக்ஞானம் சுகமாயும், இவ்வாறு இருக்கிறது என்று குறிப்பிட முடியாததும் பரம் ஆனதும் சாதாரண மனிதர்களுக்கு வாக்கு மனதிற்கு எட்டாததாயும் இருந்தாலும் ஏஷணா திரயம் நீங்கியவர்களாய் எந்த பிராஹ்ம்ணர்கள் இருக்கிறார்களோ எந்த ஒன்று உண்டோ அதை பிரத்யக்ஷமாய் அறிகிறார்கள் என்று கருதுகிறேன். எவ்வாறு, எவ்விதமாக நான் அந்த ஆத்ம சுகத்தை தெரிந்து கொள்வேன்? எவ்வாறு ஏஷணைகள் நிவிர்த்தி அடைந்த சாதுக்கள் போல் “இது” என்று ஆத்ம புத்திக்கு விஷயமாகச் செய்வேன்? எது பிரகாசாத்மகமாக உள்ளதோ அது நம் புத்திக்கு விளங்குமாறு தெளிவாக ப்ரகாசிக்கிறதோ? அல்லது இல்லையா? என்று அடிக்கடி விசாரம் செய்ய வேண்டும்.
अत्रोत्तरमिदम् — भाति च विभाति चेति । कथम् ?
(அ-கை) இதற்குபதில் இந்த ஆத்மா சாமான்யமாயும் பிரகாசிக்கிறது, விசேஷமாயும் ப்ரகாசிக்கிறது அது எவ்வாறு?
न तत्र सूर्यो भाति न चन्द्रतारकं नेमा विद्युतो भान्ति कुतोऽयमग्निः ।
तमेव भान्तमनुभाति सर्वं तस्य भासा सर्वमिदं विभाति ॥ १५ ॥
न तत्र तस्मिन्स्वात्मभूते ब्रह्मणि सर्वावभासकोऽपि सूर्यः भाति तद्ब्रह्म न प्रकाशयतीत्यर्थः । तथा न चन्द्रतारकम् , नेमा विद्युतो भान्ति, कुतः अयम् अस्मद्दृष्टिगोचरः अग्निः । किं बहुना ? यदिदमादित्यादिकं भाति तत् तमेव परमेश्वरं भान्तं दीप्यमानम् अनुभाति अनुदीप्यते । यथा जलोल्मुकादि अग्निसंयोगादग्निं दहन्तमनुदहति न स्वतः, तद्वत् । तस्यैव भासा दीप्त्या सर्वमिदं सूर्यादि विभाति ।
(அனுவாதம்) அந்த ஸ்வாத்ம ஸ்வரூபமான ப்ரஹ்மத்தை எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்தாலும் சூர்யனால் பிரகாசிக்கச் செய்ய முடிவதில்லை .அந்த ப்ரஹ்மத்தை அதனால் பிரகாசிக்கச் செய்ய முடியாது என்பது பொருள். அவ்வாறே சந்திரன், நக்ஷத்திரம், மின்னல் இவைகளாலும் பிரகாசிக்க செய்ய முடியாது. இவ்வாறு இருக்கும் பொழுது நம் கண்களுக்கு புலப்படும் அக்னியினால் எவ்வாறு முடியும். அதிகம் கூறுவானேன் அந்த சூரியன் முதலான எவைகள் எல்லாம் ப்ரகாசித்துக் கொண்டிருக்கிறதோ அவை எல்லாம் அந்த பரமாத்மாவினால் ப்ரகாசப்படுத்தப்பட்டு அதனை ஒட்டியே பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. எவ்வாறு ஜலம், கட்டை முதலியவைகள் அக்னியின் சம்யோகத்தால் அக்னி தஹிக்கின்றதே தவிர அதற்கு சுபாவமாக இல்லையோ அவ்வாறே அந்த ஆத்ம பிரகாசத்தால் சூரியன் முதலியவைகள் எல்லாம் பிரகாசிக்கின்றன.
यत् एवं तदेव ब्रह्म भाति च विभाति च । कार्यगतेन विविधेन भासा तस्य ब्रह्मणो भारूपत्वं स्वतोऽवगम्यते । न हि स्वतोऽविद्यमानं भासनमन्यस्य कर्तुं शक्यम् , घटादीनामन्यावभासकत्वादर्शनात् भारूपाणां च आदित्यादीनां तद्दर्शनात् ॥
(அனுவாதம்) எதனாலோ அதனால் அந்த பிரஹ்மம் சாமான்யமாக பிரகாசிக்கின்றது. மேலும் விசேஷ ரூபமாகவும் பிரகாசிக்கிறது. காரியத்தில் உள்ள அநேக வித பிரகாசத்தினால் அந்த பிரஹ்மத்தினுடைய பிரகாச ரூபமானது சுபாவமாகவே உள்ளது என்று புலப்படுகிறது. சுபாவமாக (சொந்தமாக) இல்லாத ப்ரகாசத்தைக் கொண்டு மற்றவைகளைப் பிரகாசிக்கச் செய்ய முடியாது அல்லவா. எவ்வாறு கடம்(குடம்) முதலியவைகள் பிறவற்றை பிரகாசப்படுத்தும் தன்மையில்லாமல் இருப்பதும் பிரகாச ரூபங்களான சூரியன் முதலியவைகளுக்கு பிரகாசப்படுத்தும் தன்மை காணப்படுவதே காரணமாகும்.
इति पञ्चमवल्लीभाष्यम् ॥
ऊर्ध्वमूलोऽवाक्शाख एषोऽश्वत्थः सनातनः ।
तदेव शुक्रं तद्ब्रह्म तदेवामृतमुच्यते ।
तस्मिंल्लोकाः श्रिताः सर्वे तदु नात्येति कश्चन । एतद्वै तत् ॥ १ ॥
तूलावधारणेनैव मूलावधारणं वृक्षस्य यथा क्रियते लोके, एवं संसारकार्यवृक्षावधारणेन तन्मूलस्य ब्रह्मणः स्वरूपावदिधारयिषया इयं षष्ठी वल्ली आरभ्यते ।
(அ--கை) உலகத்தில் எவ்வாறு காரியத்தை இலவம் பஞ்சை அறிவதால் மரத்தின் மூலம் நிச்சயிக்கப்படுவது போல் சம்சாரத்தை அதாவது சுக துக்கானுபவத்தை காரியமாகக் கொண்ட விருக்ஷத்தை காண்பதால் அதன் மூலமாகிய பிரஹ்மத்தின் ஸ்வரூப அவதியை நிர்தாரணம் செய்வதற்காக இந்த ஆறாவது வல்லீ ஆரம்பிக்கப்படுகிறது.
ऊर्ध्वमूलः ऊर्ध्वं मूलं यत् तद्विष्णोः परमं पदमस्येति सोऽयमव्यक्तादिस्थावरान्तः संसारवृक्षः ऊर्ध्वमूलः । वृक्षश्च व्रश्चनात् विनश्वरत्वात् । अविच्छिन्नजन्मजरामरणशोकाद्यनेकानर्थात्मकः प्रतिक्षणमन्यथास्वभावः मायामरीच्युदकगन्धर्वनगरादिवद्दृष्टनष्टस्वरूपत्वादवसाने च वृक्षवदभावात्मकः कदलीस्तम्भवन्निःसारः अनेकशतपाषण्डबुद्धिविकल्पास्पदः तत्त्वविजिज्ञासुभिरनिर्धारितेदन्तत्त्वः वेदान्तनिर्धारितपरब्रह्ममूलसारः अविद्याकामकर्माव्यक्तबीजप्रभवः अपरब्रह्मविज्ञानक्रियाशक्तिद्वयात्मकहिरण्यगर्भाङ्कुरः सर्वप्राणिलिङ्गभेदस्कन्धः तत्तत्तृष्णाजलासेकोद्भूतदर्पः बुद्धीन्द्रियविषयप्रवालाङ्कुरः श्रुतिस्मृतिन्यायविद्योपदेशपलाशः यज्ञदानतपआद्यनेकक्रियासुपुष्पः सुखदुःखवेदनानेकरसः प्राण्युपजीव्यानन्तफलः तत्तृष्णासलिलावसेकप्ररूढजटिलीकृतदृढबद्धमूलः सत्यनामादिसप्तलोकब्रह्मादिभूतपक्षिकृतनीडः प्राणिसुखदुःखोद्भूतहर्षशोकजातनृत्यगीतवादित्रक्ष्वेलितास्फोटितहसिताक्रुष्टरुदितहाहामुञ्चमुञ्चेत्याद्यनेकशब्दकृततुमुलीभूतमहारवः वेदान्तविहितब्रह्मात्मदर्शनासङ्गशस्त्रकृतोच्छेदः एष संसारवृक्ष अश्वत्थः अश्वत्थवत्कामकर्मवातेरितनित्यप्रचलितस्वभावः । स्वर्गनरकतिर्यक्प्रेतादिभिः शाखाभिः अवाक्शाखः, अवाञ्चः शाखा यस्य सः, सनातनः अनादित्वाच्चिरप्रवृत्तः ।
(அனுவாதம்) ऊर्ध्वमूलम् (ஊர்த்வ மூலம்) விஷ்ணு மூலம் (என்றால்) மேலான அதாவது பகவான் விஷ்ணுவினுடைய பரமபதமாகும். அது இது அவ்யக்தம் வரையிலும் உள்ள சம்ஸார விருக்ஷத்திற்கு (ऊर्ध्वमूलम्.) மேலான காரணமாகும். வெட்டப்படுவதால் விருக்ஷம் எனப்படுகிறது. ஜன்ம மரண சோகம் முதலிய அநேக அநர்த்தங்களுடையது. ஒவ்வொரு க்ஷணமும் மாறுபடும் சுபாவமுடையது. மாயையான கானல் நீர் கந்தர்வ நகரம் முதலியவைகள் போல் த்ருஷ்ட்ட நஷ்ட்ட சுபாவ முடையதால் (பார்க்கும் பொழுதே நசிக்கும் சுவபாவமுடையதால் முடிவில் விருக்ஷம் போல் (மரம் போல்) ஸ்வபாவமுடையது. வாழைத்தண்டு போல் சாரமற்றது. அநேக நூ ற்றுக் கணக்கான பாஷாண்டர்கள் தங்கள் புத்தியினால் செய்யப்படும் விகல்பங்களுக்கு இருப்பிடமானது. தத்துவ ஞானிகளாலும் இவ்வாறுதான் இருக்கிறது என்று நிர்ணயம் செய்யமுடியாதது. வேதாந்திகளால் நிர்தாரணம் செய்யப்பட்ட பரப்ரஹ்மத்தை மூல காரணமாக உடையது. அவித்யா, காம கர்ம அவ்யக்த பீஜத்திலிருந்து உண்டான அபரப்ரஹ்ம விக்ஞான கிரியா சக்தி ஆகிய இரண்டு வித சக்தி ஸ்வரூபமான ஹிரண்ய கர்ப்பனை முளையாக உடையது. எல்லா பிராணிகளின் லிங்க பேதமானது கிளைகளாகும். ஆசை (திருஷ்ணை) என்ற ஜலத்தால் நனைக்கப்பட்டு கொழுப்பு(தர்ப்பம்) உடையதாகிறது. ஞனேந்திரியங்களால் கிரஹிக்கப்படும் விஷயங்கள் தளிர்களாகின்றன. ஸ்ருதி ஸ்மிருதி நியாயம் உபதேசம் இவைகள் இலைகளாகின்றன. யாகம், தானம், தவம், முதலிய அநேகவித கிரியைகளாகிற புஷ்பங்களை உடையது. பிராணிகளால் ஜீவிக்கும் வரையிலும் முடிவற்ற பலன்களை உடையது. அந்த பலன்களில் ஆசை என்ற ஜலம் தெளித்ததால் வளர்ச்சி உடையது. சத்வகுணம் முதலியவைகள் கலந்து ஸ்திரமானது (வாசனைகளை)மாகிய மூலத்தை உடையது. சத்யலோகம் முதலிய ஏழு லோகங்களில் ப்ரஹ்ம தேவன் முதலிய பக்ஷிகளால் கட்டப்பட்ட கூட்டை உடையது. பிராணிகளுடைய சுகதுக்கங்களினால் ஏற்படும் சந்தோஷம், சோகம் இவைகளால் உண்டாகும் நடனமாடுதல், பாட்டுபாடுதல், வாத்தியம் வாசித்தல், விளையாடுதல், இரைச்சல்போடுதல், சிரித்தல், கைதட்டுதல், அழுதல், ஐயோ, ஐயோ, விடு விடு என்றல் முதலியவைகளால் மிகுந்த நெருக்கமாய் சத்தமிடுதல் ஆகியவைகளை உடைத்தானது. வேதாந்தத்தில் பிரதி பாதிக்கப்பட்ட (ஆத்) மதர்சனம் என்னும் ப்ரஹ்மாத்ம (அசங்க) தடையற்ற கத்தியினால் வெட்டக் கூடியதான இந்த சம்சார விருக்ஷமானது அஸ்வத்தமாகும். (அரசமரமாகும்) அதாவது அஸ்வத்த மரம் போல் காமம், கர்மம், ஆகிய காற்றினால் அசைக்கப்பட்டதாய் எப்பொழுதும் அசைந்து கொண்டிருக்கின்ற தன்மை உடையதாய் இருக்கிறது. ஸ்வர்க்கம். நரகம், மிருகம், பிரேத முதலிய கிளைகளைக் கொண்டதாய் இருப்பதால் அது கீழ் நோக்கியவைகளை உள்ளன. அது சனாதன அநாதியாய் இருப்பதால் வெகு காலமாய் பிரவிர்த்திக்கிறது.
यदस्य संसारवृक्षस्य मूलं तदेव शुक्रं शुभ्रं शुद्धं ज्योतिष्मत् चैतन्यात्मज्योतिःस्वभावं तदेव ब्रह्म सर्वमहत्त्वात् । तदेव अमृतम् अविनाशस्वभावम् उच्यते कथ्यते सत्यत्वात् । वाचारम्भणं विकारो नामधेयमनृतमन्यदतो मर्त्यम् । तस्मिन् परमार्थसत्ये ब्रह्मणि लोकाः गन्धर्वनगरमरीच्युदकमायासमाः परमार्थदर्शनाभावावगमनाः श्रिताः आश्रिताः सर्वे समस्ताः उत्पत्तिस्थितिलयेषु । तदु तद्ब्रह्म नात्येति नातिवर्तते मृदादिकमिव घटादिकार्यं कश्चन कश्चिदपि विकारः । एतद्वै तत् ॥
(அனுவாதம்) எது இந்த சம்சார விருக்ஷத்தின் காரணமோ(மூலமோ) அதுதான் சுத்தமானது, சைதன்யஜ்யோதி ஸ்வரூபமானது. (சைதன்ய ஜ்யோதி ஸ்வபாவமானது) எல்லாவற்றிற்கும் மகத்தாய் (பெரியதாய்) இருப்பதால் அதுவே பிரஹ்மம். அதுவே சத்யமாய் இருப்பதால் அம்ருதம், நாசமற்ற ஸ்வபாவமுடையது என்று சொல்லப்படுகிறது. உலகில் உள்ள விகாரங்களும் (காரியங்களும்) பெயர்களும் வாக்கினாலேயே வெளிப்படுகிறது. அது அநாத்மாவாகும். ஆகையால் பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறான பொருள்கள் அழியக்கூடியதாகும். அந்த பரமார்த்த சத்யமான பிரஹ்மத்தினிடத்தில் உற்பத்தி ஸ்திதிலயம் உடைய காரியங்களாகிற எல்லா லோகங்களும் கந்தர்வ நகரம், கானல் நீர் போன்ற மாயைக்கு சமமானதும், பரமார்த்த தரிசனத்தால் சுபாவம் ஆகக்கூடியவைகள் ஆஸ்ரயத்திருக்கின்றன. குடம் முதலிய காரியங்கள் மண் முதலிய காரியத்தை ஆஸ்ரயப்பது போல் எந்த காரியமும் ப்ரஹ்மத்தைக் கடந்து இருப்பதில்லை இதுவே அந்த ப்ரஹ்மமாகும்.
यद्विज्ञानादमृता भवन्तीत्युच्यते, जगतो मूलं तदेव नास्ति ब्रह्म ; असत एवेदं निःसृतमिति-
(சங்கை) (அ-கை) எதை அறிந்தால் அம்ருதத்தை அடைவார்கள் என்று கூறப்பட்டதோ அது ப்ரஹ்மமே இல்லை. அது அசத். அதில் இருந்துதான் எல்லாம் உண்டாயிற்று என்பது சரியல்லை.
समाधानम् - तत् न —
(சமாதானம்) அவ்வாறு அல்ல
यदिदं किञ्च जगत्सर्वं प्राण एजति निःसृतम् ।
महद्भयं वज्रमुद्यतं य एतद्विदुरमृतास्ते भवन्ति ॥ २ ॥
यदिदं किञ्च यत्किञ्चेदं जगत्सर्वं प्राणे परस्मिन्ब्रह्मणि सति एजति कम्पते, तत एव निःसृतं निर्गतं सत् प्रचलति नियमेन चेष्टते । यदेवं जगदुत्पत्त्यादिकारणं ब्रह्म तत् महद्भयम् , महच्च तत् भयं च बिभेत्यस्मादिति महद्भयम् , वज्रमुद्यतम् उद्यतमिव वज्रम् ; यथा वज्रोद्यतकरं स्वामिनम् अभिमुखीभूतं दृष्ट्वा भृत्या नियमेन तच्छासने वर्तन्ते, तथेदं चन्द्रादित्यग्रहनक्षत्रतारकादिलक्षणं जगत्सेश्वरं नियमेन क्षणमप्यविश्रान्तं वर्तत इत्युक्तं भवति । ये एतत् विदुः स्वात्मप्रवृत्तिसाक्षिभूतमेकं ब्रह्म अमृताः अमरणधर्माणः ते भवन्ति ॥
(அனுவாதம்) எந்த இந்த ஜகத் உண்டோ அது பிராணண் அதாவது பரப்பிரஹ்மம் இருப்பதால் அசைகிறது. அந்த பிரஹ்மத்திலிருந்தே வெளிப்பட்டு நியமமாக செயல்படுகிறது. எது இவ்வாறு ஜகத்தின் சிருஷ்ட்டி முதலியவையின் காரணமாக எந்த பிரஹ்மம் உண்டோ அது மஹத் பயமாகும். எதனிடமிருந்து பயம் உண்டாகிறதோ மஹத் பயம் எனப்படும். மேலும் அது தூக்கிய வஜ்ரம் (வஜ்ராயுதம்) போல் இருக்கிறது. வஜ்ரத்தை உயர்த்திய எஜமானன் தன்னை நோக்கும் பொழுது வேலைக்காரன் தன் வேலைகளில் (கட்டளைகளில்) நியமமாக ஈடுபடுவான். அதைப் போல் சந்திரன், சூரியன் கிரஹங்கள் நக்ஷத்திரங்கள் முதலியவைகளை லக்ஷணமாக உடைய ஜகத் ஈஸ்வரனுடைய கட்டளைகளை நியமமாக ஒரு க்ஷணமும் ஒய்வில்லாமல் நடக்கிறது என்று கூறப்பட்டதாகிறது. எவர்கள் தன்னுடைய அந்தக் கரண விருத்தியின் சாக்ஷியும் ஏகமுமான பிரஹ்மத்தை அறிகிறார்களோ அவர்கள் அம்ருதம் எனப்படும் மரண தர்மமற்றவர்களாய் ஆகிறார்கள்.
कथं तद्भयाज्जगद्वर्तत इति, आह —
(அ-கை) எவ்வாறு அதன் பயத்தால் ஜகத் இருக்கிறது என்பது கூறப்படுகிறது.
भयादस्याग्निस्तपति भयात्तपति सूर्यः ।
भयादिन्द्रश्च वायुश्च मृत्युर्धावति पञ्चमः ॥ ३ ॥
भयात् भीत्या अस्य परमेश्वरस्य अग्निः तपति ; भयात्तपति सूर्यः, भयादिन्द्रश्च वायुश्च मृत्युर्धावति पञ्चमः । न हि, ईश्वराणां लोकपालानां समर्थानां सतां नियन्ता चेद्वज्रोद्यतकरवन्न स्यात् , स्वामिभयभीतानामिव भृत्यानां नियता प्रवृत्तिरुपपद्यते ॥
(அனுவாதம்) பரமேச்வரனுடைய பயத்தால் அக்னி தஹிக்கிறது. பயத்தினால் சூரியன் தஹிக்கிறான். பயத்தால் இந்திரனும், வாயுவும், எமனும் (ம்ருத்யுவும்) ஓடுகிறது. சாமர்த்தியமுடைய ஈஸ்வரர்களாகிய உலகத்தை ஆளுகிறவர்கள் வஜ்ரத்தை உயர்த்திய கை உடையவர்களாய் நியந்தா (நடத்துபவர்) இல்லை எனில் எஜமானனிடத்தில் பயமுள்ள வேலைக்காரர்கள் போல், அவர்களுக்கு நியமிக்கப்பட்ட பிரவிர்த்தியில் ஈடுபட மாட்டார்கள்.
तच्च
(அ-கை) மேலும் அந்த (பயத்திற்குக் காரணமான) ப்ரஹ்மத்தை
इह चेदशकद्बोद्धुं प्राक्शरीरस्य विस्रसः ।
ततः सर्गेषु लोकेषु शरीरत्वाय कल्पते ॥ ४ ॥
इह जीवन्नेव चेत् यद्यशकत् शक्तः सन् जानातीत्येतत् , भयकारणं ब्रह्म बोद्धुम् अवगन्तुम् , प्राक् पूर्वं शरीरस्य विस्रसः अवस्रंसनात्पतनात् संसारबन्धनाद्विमुच्यते । न चेदशकद्बोद्धुम् , ततः अनवबोधात् सर्गेषु, सृज्यन्ते येषु स्रष्टव्याः प्राणिन इति सर्गाः पृथिव्यादयो लोकाः तेषु सर्गेषु, लोकेषु शरीरत्वाय शरीरभावाय कल्पते समर्थो भवति ; शरीरं गृह्णातीत्यर्थः । तस्माच्छरीरविस्रंसनात्प्रागात्मावबोधाय यत्न आस्थेयः
(அனுவாதம்) இந்த உலகில் ஜீவித்திருக்கும் பொழுதே என்றால் இந்த சரீரம் விழும் முன்பே இந்த பயத்திற்கு காரணம் பிரஹ்மம் என்று அறிவதற்கு சக்தி உள்ளவனாய் இருந்தால் இந்த சரீரம் விழும் முன் சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவாய். அறிய சக்தி இல்லை எனில் அதை அறியாததினால் சர்க்கத்தில் அதாவது சிருஷ்ட்டியில் அழுத்துவாய். படைக்கப்பட வேண்டியவைகளாகிய, ஜீவர்கள் எதில் படைக்கப்படுகின்றனரோ அது சர்க்கம் எனப்படும் பிருதிவி முதலிய லோகங்களாகும். அச்சிருஷ்ட்டிக்கப்பட்ட லோகத்தில் சரீரத்தை எடுப்பதன் சாமர்த்தியமுடையவர்களாகிறார்கள். அதாவது சரீரத்தை எடுக்கிறார்கள் என்பது பொருள். ஆகையால் சரீரம் விழும் முன் பிரத்யக் ஆத்மாவை அறிவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
यस्मादिहैवात्मनो दर्शनमादर्शस्थस्येव मुखस्य स्पष्टमुपपद्यते, न लोकान्तरेषु ब्रह्मलोकादन्यत्र । स च दुष्प्रापः ,कथमिति? उच्यते —
(அ-கை) எதனால் கண்ணாடியில் தோன்றும் முகம் போல இங்கே இந்த சரீரத்திலேயே ஆத்ம தர்சனம் ஸ்பஷ்ட்டமாக(தெளிவாக) ஏற்படுமோ, பிரஹ்ம்ம லோகத்தைத் தவிர மற்றலோகங்களில் தெளிவாக தோன்றுவது இல்லையோ, பிரஹ்ம்ம லோகத்தை அடைவது மிகக் கடினமானதோ ஆகையால் (இந்த தேஹத்திலேயே அடைய முயற்சிக்க வேண்டும்) அது எவ்வாறு என்று கூறப்படுகிறது.
यथादर्शे तथात्मनि यथा स्वप्ने तथा पितृलोके ।
यथाप्सु परीव ददृशे तथा गन्धर्वलोके च्छायातपयोरिव ब्रह्मलोके ॥ ५ ॥
यथा आदर्शे प्रतिबिम्बभूतमात्मानं पश्यति लोकः अत्यन्तविविक्तम् , तथा इह आत्मनि स्वबुद्धावादर्शवन्निर्मलीभूतायां विविक्तमात्मनो दर्शनं भवतीत्यर्थः ।
(அனுவாதம்) லோகமானது (உலகம்) எவ்வாறு கண்ணாடியில் பிரதிபிம்ப ரூபமான தன்னை தெளிவாக பார்க்கிறதோ அவ்வாறு ஆத்மாவில் (தன்னில்) அதாவது கண்ணாடியில் பார்ப்பது போல் நிர்மலமான தன்னுடைய புத்தியில் ஆத்ம தர்சனமானது தெள்ளத் தெளிவாக இருக்கிறது (பார்க்கப்படுகிறது) என்பது பொருள்.
यथा स्वप्ने अविविक्तं जाग्रद्वासनोद्भूतम् , तथा पितृलोके अविविक्तमेव दर्शनमात्मनः कर्मफलोपभोगासक्तत्वात् । यथा च अप्सु अविविक्तावयवमात्मस्वरूपं परीव ददृशे परिदृश्यत इव, तथा गन्धर्वलोके अविविक्तमेव दर्शनमात्मनः एवं च लोकान्तरेष्वपि शास्त्रप्रामाण्यादवगम्यते । छायातपयोरिव अत्यन्तविविक्तं ब्रह्मलोक एवैकस्मिन् । स च दुष्प्रापः, अत्यन्तविशिष्टकर्मज्ञानसाध्यत्वात् । तस्मादात्मदर्शनाय इहैव यत्नः कर्तव्य इत्यभिप्रायः ॥
(அனுவாதம்) எவ்வாறு ஸ்வப்னத்தில் ஜாக்ரத்தின் வாசனையினால் உண்டான வஸ்துவைப் போல் தெளிவாக இல்லையோ அவ்வாறு பித்ரு லோகத்தில் கர்ம பல போகத்தில் ஈடுபட்டிருப்பதினால் ஆத்ம தர்சனம் தெளிவு பெறாததாகவே இருக்கின்றது. எவ்வாறு தண்ணீரில் அவயவங்களை தெளிவுபட பிரித்து அறிய முடியாதது போல் கந்தர்வ லோகத்தில் ஆத்ம ஸ்வரூபம் தெளிவற்றதாய் விளங்குகிறது. அவ்வாறே வேறு மற்ற லோகங்களிலும் தெளிவாக அறிய முடியாது என்பதை சாஸ்திரப் பிரமாணத்தினால் அறிகிறோம். ப்ரஹ்ம லோகம் மட்டும் நிழல், வெயில் போல் மிகவும் தெளிவாக ஆத்ம தர்சனம் ஏற்படுகிறது. அதாவது முற்றிலும் சிறந்த கர்ம ஞானத்தினால் அடையப்படுவதாய் இருப்பதால் அதை அடைவது மிகக் கடினம். ஆகையால் ஆத்ம தர்சனத்தின் பொருட்டு இங்கேயே அதாவது இந்த தேஹத்திலேயே முயற்சி (புருஷப்ரயத்தனம்) செய்ய வேண்டும் என்பது அபிப்ராயம்.
कथमसौ बोद्धव्यः, किं वा तदवबोधे प्रयोजनमिति, उच्यते —
(அ-கை)அதை எவ்வாறு அறிந்து கொள்ள வேண்டும்? அதை அறிவதனால் என்னதான் பிரயோஜனம்? என்பது கூறப்படுகிறது.
इन्द्रियाणां पृथग्भावमुदयास्तमयौ च यत् ।
पृथगुत्पद्यमानानां मत्वा धीरो न शोचति ॥ ६ ॥
इन्द्रियाणां श्रोत्रादीनां स्वस्वविषयग्रहणप्रयोजनेन स्वकारणेभ्य आकाशादिभ्यः पृथगुत्पद्यमानानाम् अत्यन्तविशुद्धात्केवलाच्चिन्मात्रात्मस्वरूपात् पृथग्भावं स्वभावविलक्षणात्मकताम् , तथा तेषामेवेन्द्रियाणाम् उदयास्तमयौ च उत्पत्तिप्रलयौ जाग्रत्स्वप्नावस्थाप्रतिपत्त्या नात्मन इति मत्वा ज्ञात्वा विवेकतो धीरः धीमान् न शोचति, आत्मनो नित्यैकस्वभावत्वाव्यभिचाराच्छोककारणत्वानुपपत्तेः । तथा च श्रुत्यन्तरम् ‘तरति शोकमात्मवित्’ (छा. उ. ७ । १ । ३) इति ॥
(அனுவாதம்) தத்தம் விஷயத்தை அறிவதற்கான பிரயோஜனத்தின் பொருட்டு தன்தன் காரணமாகிய ஆகாசாதிகளிலிருந்து தனித்தனியாய் உண்டாகின்ற ச்ரோத்திராதிகள் மிகவும் சுத்தமாயும், ஒன்றாயும் உள்ள சின்மாத்திர ஸ்வபாவத்தைக் காட்டிலும் வேறான ஸ்வாபாவம் உள்ள தன்மை உடையன. அவ்வாறே ஜாக்ரத் ஸ்வப்னத்தை அபேக்ஷித்த இந்திரியங்களுக்கே உற்பத்தி பிரளயங்கள் ஏற்படுகின்றன, ஆத்மாவிற்கு அல்ல என்று அறிந்த தீரன் சோகத்தை அடைவதில்லை. ஆத்ம நித்ய ஏக ஸ்வபாவமுடையதாய் பிறழ்ச்சி அற்று இருப்பதால் சோகத்திற்கு காரணத் தன்மை இல்லை என்பதாகும். அவ்வாறே வேறு சுருதியிலும் “तरति शोकमात्मविद्” (தரதி சோகமாத்மவித்)ஆத்மாவை அறிந்தவன் சோகத்தை கடக்கிறான் என்று கூறப்பட்டுள்ளது.
यस्मादात्मनः इन्द्रियाणां पृथग्भाव उक्तो नासौ बहिरधिगन्तव्यः यस्मात्प्रत्यगात्मा स सर्वस्य ; तत्कथमिति, उच्यते —
(அ-கை)எதனால் ஆத்மாவைக் காட்டிலும் இந்திரியங்களுக்கு வேறாக இருத்தல் என்று சொல்லப்பட்டதோ அது தனியாக வெளியில் இருக்கிறது என்று புரிந்து கொள்ளக் கூடாது. ஏன் எனில் அது எல்லாவற்றிற்கும் அந்தராத்மாவாய் இருப்பதால். அது எவ்வாறு என்று கூறப்படுகிறது.
इन्द्रियेभ्यः परं मनो मनसः सत्त्वमुत्तमम् ।
सत्त्वादधि महानात्मा महतोऽव्यक्तमुत्तमम् ॥ ७ ॥
इन्द्रियेभ्यः परं मन इत्यादि । अर्थानामिहेन्द्रियसमानजातीयत्वादिन्द्रियग्रहणेनैव ग्रहणम् । पूर्ववदन्यत् । सत्त्वशब्दाद्बुद्धिरिहोच्यते ॥
(அனுவாதம்) இந்திரியங்களைக் காட்டிலும் மேலான மனது முதலியவைகள். இங்கு இந்திரியங்கள் சமான ஜாதியாய் இருப்பதால் இந்திரயங்களை கிரஹித்ததினாலேயே அவைகளும் கிரஹிக்கப் பட்டவைகள் ஆகின்றன. மற்றவை முன் போல், சத்துவ சப்தம் இங்கு புத்தியைக் குறிக்கிறது.
अव्यक्तात्तु परः पुरुषो व्यापकोऽलिङ्ग एव च ।
यं ज्ञात्वा मुच्यते जन्तुरमृतत्वं च गच्छति ॥ ८ ॥
अव्यक्तात्तु परः पुरुषः व्यापकः, व्यापकस्याप्याकाशादेः सर्वस्य कारणत्वात् । अलिङ्गः लिङ्ग्यते गम्यते येन तल्लिङ्गं बुद्ध्यादि, तदविद्यमानं यस्य सोऽयमलिङ्गः एव च ; सर्वसंसारधर्मवर्जित इत्येतत् । यं ज्ञात्वा आचार्यतः शास्त्रतश्च मुच्यते जन्तुः अविद्यादिहृदयग्रन्थिभिर्जीवन्नेव ; पतितेऽपि शरीरे अमृतत्वं च गच्छति । सोऽलिङ्गः परोऽव्यक्तात्पुरुष इति पूर्वेणैव सम्बन्धः ॥
(அனுவாதம்) அவ்யக்தத்தைக் காட்டிலும் மேலானவன் எல்லாவற்றிற்கும் காரணமாய் இருப்பதால் ஆகும் ஆகாசம் முதலியவைகளின் வியாபகத்தைக் காட்டிலும் வியாபகமாய் இருக்கிறது. எதனால் அறிய முடியாதது அறியப்படுகிறதோ அது புத்தி முதலிய லிங்கம் எனப்படுகிறது. அவை இல்லாததால் அலிங்கம் எனப்படுகிறது. சம்சார தர்மம் அற்றது என்பதாகும். ஆச்சாரியரிடத்திலிருந்தும் சாஸ்திரத்தினாலும் அதை அறிந்து அவித்யை முதலிய ஹ்ருதய முடுச்சுகளை நீக்கி ஜீவித்திருக்கு பொழுதே முக்தி அடைகின்றான். சரீரம் வீழ்ந்த பின்னும் அம்ருதத்துவத்தை அடைகின்றான். அவன் லிங்கமற்றவன், அவ்யக்தத்தைக் காட்டிலும் மேலான புருஷன் என்று முந்திய வாக்கியத்தின் சம்பந்தம்.
कथं तर्हि तस्य अलिङ्गस्य दर्शनमुपपद्यत इति, उच्यते —
(அ-கை லிங்கம் (சின்னம்) அற்ற ஆத்மாவின் தர்சனம் எவ்வாறு ஏற்படும் என்பதைப் பற்றிக் கூறப்படுகிறது.
न सन्दृशे तिष्ठति रूपमस्य न चक्षुषा पश्यति कश्चनैनम् ।
हृदा मनीषा मनसाभिक्लृप्तो य एतद्विदुरमृतास्ते भवन्ति ॥ ९ ॥
न सन्दृशे सन्दर्शनविषये न तिष्ठति प्रत्यगात्मनः अस्य रूपम् । अतः न चक्षुषा सर्वेन्द्रियेण, चक्षुर्ग्रहणस्योपलक्षणार्थत्वात् , पश्यति नोपलभते कश्चन कश्चिदपि एनं प्रकृतमात्मानम् ।
(அனுவாதம்) இந்த பிரத்யக் ஆத்ம விஷயத்தில் ஸ்திரத்தன்மை ஏற்படுவதில்லை. ஆகையால் ஒருவனும் இந்த பிரகிருத ஆத்மாவை கண்களால் அதாவது எல்லா இந்திரியங்களாலும் அறிந்து கொள்ள முடிவதில்லை. இந்த கண்கள் என்பது எல்லா இந்திரியங்களுக்கும் உபலக்ஷணமாகும்.
कथं तर्हि तं पश्येदिति, उच्यते — हृदा हृत्स्थया बुद्ध्या, मनीषा मनसः सङ्कल्पादिरूपस्य ईष्टे नियन्तृत्वेनेति मनीट् तया मनीषा विकल्पवर्जितया बुद्ध्या । मनसा मननरूपेण सम्यग्दर्शनेन अभिक्लृप्तः अभिसमर्थितः अभिप्रकाशित इत्येतत् । आत्मा ज्ञातुं शक्य इति वाक्यशेषः । तमात्मानं ब्रह्म एतत् ये विदुः अमृताः ते भवन्ति ॥
(அனுவாதம்) எவ்வாறுதான் அதை (ஆத்மாவை) அறிகிறார்கள் என்பது கூறப்படுகிறது. “ ह्य्दा ” (ஹ்ருதா) ஹ்ருதயத்தில் இருக்கும் புத்தியினால் அதாவது मनीषा(மனீஷா) மனதின் சங்கல்ப முதலிய ரூபங்களின் நியந்தவாய் இருக்கின்றதால் “मनीट्”(மனீட்) என்ற அந்த ஹ்ருதா என்றால் இந்த விகல்பமற்ற புத்தியினால் மனனரூப யதார்த்த தர்சன மூலமாய் பிரகாசப்பட்டு அந்த ஆத்மா அறிய முடிகிறது. ஆத்மாவை அறிய முடியும் என்பது இந்த வாக்கியத்தின் சேஷமாகும். (பாகமாகும்) அந்த ஆத்மாவே பிரஹ்மம் என்று எவன் அறிகிறானோ அவன் மரணமற்றதன்மையை அடைகிறான்.
सा हृन्मनीट् कथं प्राप्यत इति तदर्थो योग उच्यते —
(அ-கை) அந்த ह्य्न्मनीट् (ஹ்ருன்மனீட்) விகல்ப மற்ற சுத்தபுத்தியை அடைவது என்பதின் பொருட்டு எவ்வாறு அதற்கு வேண்டிய யோகமானது கூறப்படுகிறது.
यदा पञ्चावतिष्ठन्ते ज्ञानानि मनसा सह ।
बुद्धिश्च न विचेष्टति तामाहुः परमां गतिम् ॥ १० ॥
यदा यस्मिन्काले स्वविषयेभ्यो निवर्तितानि आत्मन्येव पञ्च ज्ञानानि — ज्ञानार्थत्वाच्छ्रोत्रादीनीन्द्रियाणि ज्ञानान्युच्यन्ते — अवतिष्ठन्ते सह मनसा यदनुगतानि, येन सङ्कल्पादिव्यावृत्तेनान्तःकरणेन । बुद्धिश्च अध्यवसायलक्षणा न विचेष्टति स्वव्यापारेषु न विचेष्टते न व्याप्रियते, तामाहुः परमां गतिम् ॥
(அனுவாதம்) எப்பொழுது தன் விஷயங்களில் இருந்து நிவர்த்தி அடைந்து ஆத்மாவிலேயே ஐந்து ஞானங்கள்  (पञ्चज्ञेनेन्द्रियाणि)  அதாவது  ஞானத்தை பிரயோஜனமாக உடையதால் சுரோத்திரம் முதலிய இந்திரியங்களை ஞானங்கள் என்று கூறப்படுகின்றன, அவைகள் ( मनसा ) மனதுடன் அதாவது அதில் தொடர்ந்து உண்டாகும் சங்கல்பங்கள் அற்ற அந்தக்கரணத்துடன் இருக்கின்றனவோ, அத்யவஸாய லக்ஷணமான புத்தியும் தனது வியாபாரங்களில் ப்ரவிருத்திப்பது இல்லையோ, அந்த நிலையே மேலான நிலை என்று கூறுவர்.
तां योगमिति मन्यन्ते स्थिरामिन्द्रियधारणाम् ।
अप्रमत्तस्तदा भवति योगो हि प्रभवाप्ययौ ॥ ११ ॥
ताम् ईदृशीं तदवस्थां योगमिति मन्यन्ते वियोगमेव सन्तम् । सर्वानर्थसंयोगवियोगलक्षणा हीयमवस्था योगिनः । एतस्यां ह्यवस्थायाम् अविद्याध्यारोपणवर्जितस्वरूपप्रतिष्ठ आत्मा स्थिरामिन्द्रियधारणास्थिरामचलामिन्द्रियधारणां बाह्यान्तःकरणानां धारणमित्यर्थः ।
(அனுவாதம்) அந்த இவ்வாறான அவஸ்தையில் உண்மையில் வியோகத்தையே (அநர்த்தத்தின் நீக்கத்தையே) யோகம் என்று கருதுகிறார்கள். யோகிகளினுடைய அவஸ்தையானது எல்லா அனர்த்தங்களில் உள்ள சம்யோகத்தின் வியோகமே (நீக்கமே)யாகும். இந்த அவஸ்தையில் தான் அத்யாரோப மற்றவனாய் தன் ஸ்வரூபத்தில்  நிலை பெற்றிருக்கிறான் (அந்த அவஸ்தையைதான்) ஸ்திரமான இந்திரிய தாரணை என்று சொல்லுகிறார்கள். ஸ்திரம் என்றால் சலனமற்றது. அதாவது சலனமற்ற இந்திரிய தாரணை என்பது பாஹிய அந்தக் கரணங்களின் தாரணமாகும்.
अप्रमत्तः प्रमादवर्जितः समाधानं प्रति नित्यं यत्नवान् तदा तस्मिन्काले, यदैव प्रवृत्तयोगो भवतीति सामर्थ्यादवगम्यते । न हि बुद्ध्यादिचेष्टाभावे प्रमादसम्भवोऽस्ति । तस्मात्प्रागेव बुद्ध्यादिचेष्टोपरमात् अप्रमादो विधीयते । अथवा, यदैव इन्द्रियाणां स्थिरा धारणा, तदानीमेव निरङ्कुशमप्रमत्तत्वमित्यतोऽभिधीयते अप्रमत्तस्तदा भवतीति । कुतः ? योगो हि यस्मात् प्रभवाप्ययौ उपजनापायधर्मक इत्यर्थः । अतः अपायपरिहारायाप्रमादः कर्तव्य इत्यभिप्रायः ॥
(அனுவாதம்) அந்த சமயத்தில் சாதகப் புருஷன் (அப்ரமத்த) பிரமாதம் அற்றவனாக அதாவது எப்பொழுதும் சமாதானம் உடையவனாய் பிரயத்தனம் செய்கிறான். எப்பொழுதும் யோகத்தில் பிரவிர்த்திக்கின்றான் என்று வாக்கியத்தினால் அறிகிறோம். ஏன் எனில் புத்தி முதலியவைகள் சேஷ்ட்டை (சலனம்) அற்றிருக்கும் பொழுது பிரமாதமானது ஏற்படுவதில்லை. ஆகையால் புத்தி முதலியவைகளின் சேஷ்ட்டை நீங்குவதற்கு முன் அப்பிரமாதம் விதிக்கப்படுகிறது, அல்லது எப்பொழுது இந்திரியங்கள் ஸ்திரத் தன்மையை அடைகிறதோ அப்பொழுதே தடையற்ற அப்பிரமாதம் அடையப்படுகிறது. ஆகையால் அப்பொழுது பிரமத்த இல்லாத நிலை உண்டாகிறது என்று கூறப்படுகிறது. ஏன் எனில் யோகமானது உத்பத்தி விநாசம் என்னும் தர்மம் உள்ளது என்பதால் யோகத்திற்கு விநாசம் வராமல் இருப்பதற்காக அப்ரமாதத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
बुद्ध्यादिचेष्टाविषयं चेद्ब्रह्म इदं तदिति विशेषतो गृह्येत, बुद्ध्याद्युपरमे च ग्रहणकारणाभावादनुपलभ्यमानं नास्त्येव ब्रह्म । यद्धि करणगोचरं तदस्तीति प्रसिद्धं लोके विपरीतं चासदिति । अतश्चानर्थको योगोऽनुपलभ्यमानत्वाद्वा नास्तीत्युपलब्धव्यं ब्रह्मेत्येवं प्राप्ते, इदमुच्यते सत्यम् ।
(அ-கை)பிரஹ்மம் புத்தி முதலியவைகளின் வியவகாரத்திற்கு விஷயமானால் இது அது என்று விசேஷமாக அறிய முடியும். புத்தி முதலியவைகள் (உபரமம்) வியவகாரம் அற்றிருக்கும்பொழுது அறிவதற்கான காரணம் இல்லாததால் அறிய வேண்டிய ப்ரஹ்மம் இல்லவே இல்லை. உலகில் இந்திரியங்களுக்கு புலப்படும் பொழுது அது இருக்கிறது என்பது பிரசித்தமாகும். அதற்கு விபரீதமானது அசத்தாகும். ஆகையால் அந்த யோகம் அநர்த்தமாகும். அது அறிய முடியாததால் பிரஹ்மம் இல்லை என்று அறியப்படவேண்டுவது என்று ஆகிறது என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது. இவ்வாறு கூறுவது உண்மைதான்.
नैव वाचा न मनसा प्राप्तुं शक्यो न चक्षुषा ।
अस्तीति ब्रुवतोऽन्यत्र कथं तदुपलभ्यते ॥ १२ ॥
नैव वाचा न मनसा न चक्षुषा नान्यैरपीन्द्रियैः प्राप्तुं शक्यते इत्यर्थः । तथापि सर्वविशेषरहितोऽपि जगतो मूलमित्यवगतत्वादस्त्येव, कार्यप्रविलापनस्यास्तित्वनिष्ठत्वात् । तथा हीदं कार्यं सौक्ष्म्यतारतम्यपारम्पर्येणानुगम्यमानं सद्बुद्धिनिष्ठामेवावगमयति । यदापि विषयप्रविलापनेन प्रविलाप्यमाना बुद्धिः, तदापि सा सत्प्रत्ययगर्भैव विलीयते । बुद्धिर्हि नः प्रमाणं सदसतोर्याथात्म्यावगमे ।
(அனுவாதம்) வாக்காலும், மனதாலும், கண்களாலும், மற்ற இந்திரியங்களாலும் அடைய முடியாது என்பது பொருள். அவ்வாறு இருந்தாலும், எல்லா தர்மங்களும் அற்று இருந்தாலும் ஜகத்தின் மூலம் (காரணம்) என்று அறியப்பட்டதாய் இருப்பதாலும் (எல்லாவற்றிலும் உள்ளூடாய் சன்மாத்திரமாய் இருப்பதாலும்) காரியங்களின் நாசத்தின் அடைவும் அதிஷ்ட்டானமான சத்தில் முடிவதாலும் அது சத்தாகவே இருக்கிறது. அவ்வாறு இருப்பதால் இந்த காரியமும் சூக்ஷ்மம், சூக்ஷ்மதரம், சூக்ஷ்மதமம் என்ற பரம்பரையைத் தொடர்ந்து அறியப்படுவதாய் எல்லாவற்றிற்கும் அதிஷ்ட்டானமான சன்மாத்திரமாய் நிலைபெற்றிருத்தலை தெரிவிக்கின்றது. எப்பொழுது புத்தியானது தனக்கு விஷயமான  பதார்த்தத்தின் நாசத்தால் தானும் நாசம் ஆகும் பொழுது ஸத்  என்ற விசேஷணத்தைத் தன்னில் அடக்கிக் கொண்டு சத்பதார்த்திற்கு நாசமில்லாமல் நாசமாகிறது. சத் அசத் என்பதின் யதார்த்தத்தை அறிவதற்கு நமக்கு புத்தியே பிரமாணம்.
मूलं चेज्जगतो न स्यादसदन्वितमेवेदं कार्यमसदसदित्येव गृह्येत, न त्वेतदस्ति ; सत्सदित्येव तु गृह्यते ; यथा मृदादिकार्यं घटादि मृदाद्यन्वितम् । तस्माज्जगतो मूलमात्मा अस्तीत्येवोपलब्धव्यः । कस्मात् ? अस्तीति ब्रुवतः अस्तित्ववादिन आगमार्थानुसारिणः श्रद्दधानादन्यत्र नास्तिकवादिनि नास्ति जगतो मूलमात्मा निरन्वयमेवेदं कार्यमभावान्तं प्रविलीयत इति मन्यमाने विपरीतदर्शिनि, कथं तद्ब्रह्म तत्त्वत उपलभ्यते ; न कथञ्चनोपलभ्यत इत्यर्थः ॥
(அனுவாதம்) ஜகத்திற்கு காரணம் இல்லை எனில் அசத்துடன் சேர்ந்த இந்த காரியம் அசத் என்றே கிரஹிக்கப்படுகிறது. அவ்வாறு அல்ல, சத், சத் என்றே அறியப்படுகிறது. எவ்வாறெனில் மண்ணில் உண்டான காரியமாகிய கடம் முதலியவைகள் மண்ணுடன் கூடியதாகவே இருக்கின்றன. ஆகையால் ஜகத்திற்கு காரணமாகிற ஆத்மா இருக்கிறது என்று அறியப்பட வேண்டும். ஏன் எனில்? இருக்கிறது என்று கூறுகின்ற ஆத்மா இருக்கிறது கூறும் ஆகம அர்த்தை அனுசரிக்கின்ற வாதிகளுடைய சிரத்தையைக் காட்டிலும் வேறான நாஸ்திக வாதிகள் ஜகத்திற்கு காரணம் இல்லை. அந்த கார்யமானது எதனுடனும் சம்பந்தப்படாமல் அபாவத்தையே முடிவாக உடையது என்று நினைக்கும் விபரீத தர்சிகள் எவ்வாறு அந்த பிரஹ்ம தத்துவத்தை அறிய முடியும்? எவ்வகையாலும் அடைய முடியாது என்பது பொருள்.
तस्मादपोह्यासद्वादिपक्षमासुरम्
(அ-கை) ஆகையைால் அசுரத் தன்மை உள்ள அசத்வாதி பக்ஷத்தை நிராகரணம் செய்து
अस्तीत्येवोपलब्धव्यस्तत्त्वभावेन चोभयोः ।
अस्तीत्येवोपलब्धस्य तत्त्वभावः प्रसीदति ॥ १३ ॥
अस्तीत्येव आत्मा उपलब्धव्यः सत्कार्यबुद्ध्याद्युपाधिभिः । यदा तु तद्रहितोऽविक्रिय आत्मा कार्यं च कारणव्यतिरेकेण नास्ति ‘वाचारम्भणं विकारो नामधेयं मृत्तिकेत्येव सत्यम्’ (छा. उ. ६ । १ । ४) इति श्रुतेः, तदा तस्य निरुपाधिकस्यालिङ्गस्य सदसदादिप्रत्ययविषयत्ववर्जितस्यात्मनस्तत्त्वभावो भवति । तेन च रूपेणात्मोपलब्धव्य इत्यनुवर्तते ।
(அனுவாதம்) அசத்துவ பக்ஷத்தை நீக்கி சத்காரியத்தை உடையது எனவும் புத்தி முதலியவைகளை உபாதிகளாக உடையது என்றும் ஆத்மா இருக்கிறதென்று  அறிந்து கொள்ள வேண்டும். எப்பொழுது அசத் இல்லாத அவிக்கிரியை (விகார) மற்ற ஆத்மா காரணமாய் இருப்பதால் அந்த காரணத்தைக் காட்டிலும் கார்யம் வேறாக இல்லை“वाचारम्भणं विका®úÉä ‘वाचारम्भणं विकारो नामधेयं मृत्तिकेत्येव सत्यम्’(வாச்சாரம்பணம் விகாரோ நாமதேயம் மிருத்திகேத்யேவ சைத்யம்)  என்று சுருதியின் வாக்கியமாகும். அப்பொழுது அந்த நிருபாதிக, லிங்கமற்ற, சத், அசத் ஆகிய பிரத்யய விஷயங்கள் அற்ற ஆத்மாவிற்கு தத்துவ பாவமானது உண்டாகிறது. அவ்விதமாக ஆத்மாவை அறிந்தவனாகிறான் என்று சேர்த்துக் கொள்ள வேண்டும்.
तत्राप्युभयोः सोपाधिकनिरुपाधिकयोरस्तित्वतत्त्वभावयोः — निर्धारणार्था षष्ठी — पूर्वमस्तीत्येवोपलब्धस्यात्मनः सत्कार्योपाधिकृतास्तित्वप्रत्ययेनोपलब्धस्येत्यर्थः । पश्चात्प्रत्यस्तमितसर्वोपाधिरूप आत्मनः तत्त्वभावः विदिताविदिताभ्यामन्योऽद्वयस्वभावः नेति नेतीत्यस्थूलमनण्वह्रस्वमदृश्येऽनात्म्ये निरुक्तेऽनिलयन इत्यादिश्रुतिनिर्दिष्टः प्रसीदति अभिमुखीभवति । आत्मप्रकाशनाय पूर्वमस्तीत्युपलब्धवत इत्येतत् ॥
(அனுவாதம்) ஸோபாதிகம், நிரூபாதிகம் இவைகளின் இருப்பு, தத்வ பாவத்தை அங்கு நிர்தாரணம் செய்வதின் பொருட்டு 6வது வேற்றுமையில் கூறப்பட்டுள்ளது. முன்பே இருக்கிறது என்று அறியப்பட்ட ஆத்மா சத்காரியத்தினாலும்,சத்காரியங்களுக்கு உபயோகப்படுகின்ற காரியங்களினாலும், புத்தி முதலியவைகளின் உபாதியினால் இருக்கிறது என்ற அறிவினால் அறியப்பட்டவனுக்கு என்பது பொருள். பின்பு எல்லா உபாதிகளும் நீங்கி, அறியப்படும் பொருள், அறியபடா பொருள் இவைகளைக் காட்டிலும் வேறாக அத்வைத ஸ்வரூபபாவம்  இருக்கிறது. “नेति नेति” (நேதி நேதி) இதுவல்ல, இதுவல்ல என்றும் “अस्थूलमनण्वह्रस्वम्” (அஸ்தூலமனன்வஹ்ரூஸ்வம்) ஸ்தூலமற்றது, சூக்ஷ்மமற்றது, குறுகிய தன்மை அற்றது என்றும் “अदृश्येऽनात्म्येऽनिरुक्तेऽनिलयने”  (அத்ருஷ்யே, அநாத்ம்யே அநிருக்தே அநிலயனே) திருஷ்யமற்றது, சரீரமற்றது, விசேஷமற்றது. ஆதாரமற்றது, என்றும் சுருதிகளினால் நிர்தேசிக்கப்பட்ட உண்மையான நிலையானது முன்பு இருக்கிறது என்று அறிந்தவனுக்கு ஆத்மப் பிரகாசத்தை அடையும் பொருட்டு (அதாவது தத்வ பாவத்தை அடையும் பொருட்டு அதில் ஈடுபடுகிறான்.)
एवं परमार्थदर्शिनोः-
(அ-கை) இவ்வாறு பரமார்த தர்சிகள்
यदा सर्वे प्रमुच्यन्ते कामा येऽस्य हृदि श्रिताः ।
अथ मर्त्योऽमृतो भवत्यत्र ब्रह्म समश्नुते ॥ १४ ॥
यदा यस्मिन्काले सर्वे कामाः कामयितव्यस्यान्यस्याभावात् प्रमुच्यन्ते विशीर्यन्ते ; ये अस्य प्राक्प्रतिबोधाद्विदुषो हृदि बुद्धौ श्रिताः आश्रिताः ; बुद्धिर्हि कामानामाश्रयः नात्मा, ‘कामः सङ्कल्पः’ (बृ. उ. १ । ५ । ३) इत्यादिश्रुत्यन्तराच्च ;
(அனுவாதம்) எப்பொழுது எல்லா காமனைகளும் அதாவது காமனைகொள்ள வேண்டிய வேறு ஒன்றும் இல்லாததால் அவைகளிலிருந்து விடுபடுகிறார்கள். ஞானம் ஏற்படுவதற்கு முன் புத்தியை எந்த காமனைகள் ஆஸ்ரயித்து இருந்தனவோ அந்த காமனைகளுக்கு புத்தியே ஆஸ்ரயம். ஆத்மா அல்ல. (காம, சங்ல்ப) என்று மற்ற சுருதியிலும் கூறப்பட்டுள்ளது.
अथ तदा मर्त्यः प्राक्प्रबोधादासीत् स प्रबोधोत्तरकालमविद्याकामकर्मलक्षणस्य मृत्योर्विनाशात् अमृतो भवति गमनप्रयोजकस्य मृत्योर्विनाशाद्गमनानुपपत्तेः । अत्र इहैव प्रदीपनिर्वाणवत्सर्वबन्धनोपशमात् ब्रह्म समश्नुते ब्रह्मैव भवतीत्यर्थः ॥
(அனுவாதம்) ஞானம் ஏற்படும் முன் மனிதனாக (மரண தர்மம் உடையவனாய்) இருந்தான். அவன் ஞானம் அடைந்த பின் அவித்யா காம கர்ம லக்ஷணமுள்ள மரண தர்மத்தின் நாசத்தால் மரணமற்றதன்மையை அடைகிறான்.(அமிருதமாகின்றான்) கமனக்கிரியையை ஏற்படுத்தும் மிருத்யு நாசமடைந்ததால் கமனம் அற்றதால் இங்கேயே தீபம் (தன்னில்) சாந்தமாவது போல் எல்லா பந்தங்களும் அற்று பிரஹ்மத்தை அடைகிறான். அதாவது பிரஹ்மமாகவே ஆகிறான்.
कदा पुनः कामानां मूलतो विनाश इति, उच्यते —
(அ-கை) எப்பொழுது காமனைகள் வேறுடன் நாசம் அடையும் என்பது கூறப்படுகிறது.
यदा सर्वे प्रभिद्यन्ते हृदयस्येह ग्रन्थयः ।
अथ मर्त्योऽमृतो भवत्येतावद्ध्यनुशासनम् ॥ १५ ॥
यदा सर्वे प्रभिद्यन्ते भेदमुपयान्ति विनश्यन्ति हृदयस्य बुद्धेरिह जीवत एव ग्रन्थयो ग्रन्थिवद्दृढबन्धनरूपा अविद्याप्रत्यया इत्यर्थः । अहमिदं शरीरं ममेदं धनं सुखी दुःखी चाहमित्येवमादिलक्षणाः तद्विपरीतात् ब्रह्मात्मप्रत्ययोपजनात् ब्रह्मैवाहमस्म्यसंसारीति विनष्टेष्वविद्याग्रन्थिषु तन्निमित्ताः कामा मूलतो विनश्यन्ति । अथ मर्त्योऽमृतो भवति एतावद्धि एतावदेवैतावन्मात्रं नाधिकमस्तीत्याशङ्का कर्तव्या । अनुशासनम् अनुशिष्टः उपदेशः सर्ववेदान्तानामिति वाक्यशेषः ॥
(அனுவாதம்) எப்பொழுது ஜீவித்திருக்கும் பொழுதே முடிச்சுகள் (ஹ்ருதயக்ரந்திகள்) போன்ற திடமாக பந்தப்பட்ட அவித்யா காரியங்களாகிற எல்லாத்தோற்றங்களும் நீங்கி பேதமற்றதாய் இருக்கிறதோ அப்பொழுது நான் இந்த சரீரம், இந்த சரீரம் என்னுடையது, இந்த செல்வம் என்னுடையது, நான் சுகீ, துக்கீ இவை முதலிய லக்ஷணங்களுக்கு விபரீதமான அஹம் பிரஹ்மாஸ்மி (நான் பிரஹ்மமாய் இருக்கிறேன்) என்ற பிரஹ்மாத்ம ஞானம் உண்டாகி நான் சம்சாரம் அற்றவன் என்று அவித்தியா முடிச்சிலிருந்தும் அதன் நிமித்தமான காமனைகளிலிருந்தும் முற்றிலும் விடுபடுகிறான். ஆகையால் மரண தர்மம் உடையவன் மரண மற்ற தன்மை அதாவது அம்ருதமாகிறான். இதற்கு மேலாக ஒன்று இருக்கிறது என்ற சங்கை செய்யதக்கதல்ல, ஆகையால் எல்லா வேதாந்த சாஸ்திரங்களினுடைய உபதேசம் இதுவாகும்.
निरस्ताशेषविशेषव्यापिब्रह्मात्मप्रतिपत्त्या प्रभिन्नसमस्ताविद्यादिग्रन्थेः जीवत एव ब्रह्मभूतस्य विदुषो न गतिर्विद्यते, ‘अत्र ब्रह्म समश्नुते’ (क. उ. २ । ३ । १४) इत्युक्तत्वात् ‘न तस्य प्राणा उत्क्रामन्ति ब्रह्मैव सन्ब्रह्माप्येति’ (बृ. उ. ४ । ४ । ६) इति श्रुत्यन्तराच्च ।
(அ-கை) எல்லா விசேஷங்களாகிய பேதமும் அற்ற எங்கும் நீக்கமற்ற வியாபித்துள்ள ப்ரஹ்மத்தை அடைந்ததினால் நீங்கிய எல்லா அவித்யா ப்ரத்யயத்தையும் உடையவன் ஜீவித்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரஹ்மமானவனாகிய வித்வானுக்கு ஜீவன்முக்தனுக்கு கதி என்பது (மார்க்கம்) கிடையாது. “अत्र ब्रह्म समश्नुते” ( இங்கேயே பிரஹ்மத்தை அடைகிறான்) இந்த சுருதி வாக்கியத்தால் அறிகிறோம் “न तस्य प्राणा उत्क्रामन्ति ब्रह्मैव सन्ब्रह्माप्येति.” (ந தஸ்ய ப்ராணா உத்க்ராமன்தி ப்ரஹ்மைவ ஸன்ப்ரஹ்மாப்யேதி) அவனுடைய பிராணன் வெளிக்கிளம்புவதில்லை. ப்ரஹ்மமாகவே இருந்து கொண்டு ப்ரஹ்மமாகவே ஆகிறது என்று வேறு சுருதியினாலும் அறிகிறோம்.
ये पुनर्मन्दब्रह्मविदो विद्यान्तरशीलिनश्च ब्रह्मलोकभाजः ये च तद्विपरीताः संसारभाजः, तेषामेष गतिविशेष उच्यते प्रकृतोत्कृष्टब्रह्मविद्याफलस्तुतये ।
(அ-கை) மேலும் எவர்கள் பிரஹ்மத்தை நன்றாக அறியாதவர்களோ (அக்ஞானிகள்) மற்றும் உபாசனை முதலிய வேறு வித்தையில் திறமையானவர்களோ அவர்கள் பிரஹ்ம லோகத்தை அடைவார்கள். எவர்கள் அவர்களைக் காட்டிலும் மாறானவர்களாகியவர்கள் சம்சாரத்தை அடைகிறார்கள். அவர்களுடைய கதி விசேஷங்கள் கூறப்படுகிறது. இங்கு கூறப்படுகிறதும், உக்கிருஷ்ட்டமானதுமான பிரஹ்ம வித்தையின் பலத்தை ஸ்துதிப்பதற்கு கூறப்படுகிறது.
किञ्चान्यत् , अग्निविद्या पृष्टा प्रत्युक्ता च । तस्याश्च फलप्राप्तिप्रकारो वक्तव्य इति मन्त्रारम्भः । तत्र —
(அ-கை) மேலும் அக்னி வித்தை நசிகேதனால் கேட்கப்பட்டு யமராஜாவால் பதில் கூறப்பட்டது. அந்த அக்னி வித்தையை அடைவதின் முறையைப் பற்றி கூறவேண்டும் என்பதற்காக இந்த மந்திரம் ஆரம்பிக்கப்படுகிறது. அவ்விடத்தில்
शतं चैका च हृदयस्य नाड्यस्तासां मूर्धानमभिनिःसृतैका ।
तयोर्ध्वमायन्नमृतत्वमेति विष्वङ्ङन्या उत्क्रमणे भवन्ति ॥ १६ ॥
शतं च शतसङ्ख्याकाः एका च सुषुम्ना नाम पुरुषस्य हृदयाद्विनिःसृताः नाड्यः सिराः ; तासां मध्ये मूर्धानं भित्त्वा अभिनिःसृता निर्गता एका सुषुम्ना नाम । तया अन्तकाले हृदये आत्मानं वशीकृत्य योजयेत् ।
நூ ற்றி ஒன்று எண்ணிக்கை உள்ள நாடிகளும், சுஷுமனா என்ற ஒரு நாடியும், புருஷனுடைய இருதயத்திலிருந்து சுஷுமனா என்ற நாடி தலையின் உச்சியைப் பிளந்து செல்கிறது. கடைசி காலத்தில் அந்த ஆத்மாவை (மனதை) தன்னுடைய ஹ்ருதயத்தில் வசம் செய்து ஒன்றச் செய்ய வேண்டும்.
तया नाड्या ऊर्ध्वम् उपरि आयन् गच्छन् आदित्यद्वारेण अमृतत्वम् अमरणधर्मत्वमापेक्षिकम् — ‘आभूतसम्प्लवं स्थानममृतत्वं हि भाष्यते’ (वि. पु. २ । ८ । ९७) इति स्मृतेः — ब्रह्मणा वा सह कालान्तरेण मुख्यममृतत्वमेति भुक्त्वा भोगाननुपमान्ब्रह्मलोकगतान् । विष्वङ् नानागतयः अन्या नाड्यः उत्क्रमणे उत्क्रमणनिमित्तं भवन्ति संसारप्रतिपत्त्यर्था एव भवन्तीत्यर्थः ॥
(அனுவாதம்) அந்த நாடிகள் மேல் நோக்கி சென்று ஆதித்ய மண்டல வழியாக ஆபேக்ஷிக அம்ருத தர்மத்தை அடைகிறது. “आभूतसंप्लवं स्थानममृतत्वं विभाव्यत” (ஆபூத சம்ப்ளவம் ஸ்தானமம்ருதத்வம் விபாவ்யதே) எல்லா பூதங்களும் நாசமாகும் வரை இருக்கும் ஸ்தானம் அம்ருதத்வம் எனப்படுகிறது. என்பது ஸ்ம்ருதி வாக்கியம். காலத்தின் முடிவில் பிரஹ்மாவுடன் ஒப்புவமையற்ற போகங்களை பிரஹ்ம லோகத்தில் அனுபவித்து விட்டு முக்கியமான அம்ருதத்தை அடைகிறான். இதைத் தவிர அநேத கதிகளை உடைய நாடிகள் உத்கிரமணத்திற்கு நிமித்தங்களாக இருக்கின்றன. அவைகள் சம்சார கதியையே அடைபவைகளாய் இருக்கின்றன.
इदानीं सर्ववल्ल्यर्थोपसंहारार्थमाह —
(அ-கை) இப்பொழுது எல்லாவல்லீ அர்த்தங்களையும் முடிவிற்கு கொண்டு வருவதற்காக சொல்லப்படுகிறது.
अङ्गुष्ठमात्रः पुरुषोऽन्तरात्मा सदा जनानां हृदये संनिविष्टः । तं स्वाच्छरीरात्प्रवृहेन्मुञ्जादिवेषीकां धैर्येण ।
तं विद्याच्छुक्रममृतं तं विद्याच्छुक्रममृतमिति ॥ १७ ॥
अङ्गुष्ठमात्रः पुरुषः अन्तरात्मा सदा जनानां सम्बन्धिनि हृदये संनिविष्टः यथाव्याख्यातः ; तं स्वात् आत्मीयात् शरीरात् प्रवृहेत् उद्यच्छेत् निष्कर्षेत् पृथक्कुर्यादित्यर्थः । किमिवेति, उच्यते — मुञ्जादिवेषीकाम् अन्तःस्थां धैर्येण अप्रमादेन । तं शरीरान्निष्कृष्टं चिन्मात्रं विद्यात् विजानीयात् शुक्रं शुद्धम् अमृतं यथोक्तं ब्रह्मेति । द्विर्वचनमुपनिषत्परिसमाप्त्यर्थम् , इतिशब्दश्च ॥
(அனுவாதம்) அங்குஷ்ட்ட மாத்திரமாய் (கட்டைவிரல் அளவில்) உள்ள புருஷன் எப்பொழுதும் ஜனங்களுடன் சம்பந்தப்பட்ட இருதயத்தில் அந்தராத்மாவாய் முன் வியாக்கியானம் செய்யப்பட்டவாறு இருக்கிறான். அவனை தன்னுடைய சரீரத்திலிருந்து பிரிக்க வேண்டும் எவ்வாறு எனில் கூறப்படுகிறது. பிரமாதம் (அறியாமை) இல்லாமல் தைரியமாக முஞ்சிப் புல்லில் இருந்து அதன் உள்ளிருக்கும் ஈக்கையைப் பிரிப்பது  போல் ஆகும். அந்த சரீரத்தினின்று பிரிக்கப்பட்டது, சின்மாத்திரம், சுத்தமானது, அம்ருதம், பிரஹ்மம் என்று அறி. இங்கு இரு முறைகூறியது இந்த உபநிஷத்து முடிவுக்கு வருகிறது என்பதற்காக.
विद्यास्तुत्यर्थोऽयमाख्यायिकार्थोपसंहारः अधुनोच्यते —
(அஃகை) வித்தையை ஸ்துதிப்பதன் பொருட்டு இந்த கதையின் (ஆக்யாயிகையின்) முடிவானது இப்பொழுது சொல்லப்படுகின்றது.
मृत्युप्रोक्तां नचिकेतोऽथ लब्ध्वा विद्यामेतां योगविधिं च कृत्स्नम् ।
ब्रह्म प्राप्तो विरजोऽभूद्विमृत्युरन्योऽप्येवं यो विदध्यात्ममेव ॥ १८ ॥
मृत्युप्रोक्ताम् एतां यथोक्तां ब्रह्मविद्यां योगविधिं च कृत्स्नं समस्तं सोपकरणं सफलमित्येतत् । नचिकेताः अथ वरप्रदानान्मृत्योः लब्ध्वा प्राप्येत्यर्थः । किम् ? ब्रह्म प्राप्तोऽभूत् मुक्तोऽभवदित्यर्थः । कथम् ? विद्याप्राप्त्या विरजः विगतरजाः विगतधर्माधर्मः विमृत्युः विगतकामाविद्यश्च सन् पूर्वमित्यर्थः ।
மிருத்யுவினால் எவ்வாறு கூறப்பட்டதோ அந்த பிரஹ்ம வித்யாவும் யோக விதியும் எல்லா சாதனங்களும் பலனும் உடையதாகும். நசிகேதன் ம்ருத்யுமிடமிருந்து வரத்தை அடைந்து என்பது பொருள் பின் என்ன நடந்தது? ப்ரஹ்மத்தை அடைந்தவனாக ஆனான். அதாவது முக்தனாக ஆனான் எவ்வாறு? வித்தையை அடைந்ததால் புண்ணிய பாபங்கள் அற்றவனாகவும், மிருத்யு அதாவது காமம் அவித்தை அற்றவனாகவும் இருந்து கொண்டு விமுக்தனாய் ஆகிறான்.
न केवलं नचिकेता एव, अन्योऽपि य एवं नचिकेतोवदात्मवित् अध्यात्ममेव निरुपचरितं प्रत्यक्स्वरूपं प्राप्यतत्त्वमेवेत्यभिप्रायः । नान्यद्रूपमप्रत्यग्रूपम् । तदेवमध्यात्मम् एवम् उक्तेन प्रकारेण वेद विजानातीति एवंवित् , सोऽपि विरजाः सन् ब्रह्म प्राप्य विमृत्युर्भवतीति वाक्यशेषः ॥
நசிகேதன் மட்டும் அல்ல மற்றவர்களும் நசிகேதன் போல் ஆத்ம ஞானியும் இந்த சரீரத்தில் இருக்கும் பொழுதே பிரத்யக் ஸ்வரூபத்தை அடைந்து தத்துவமாகவே ஆகிறான் என்பது பொருள். ப்ரத்யக்காக இல்லாத வேறு ரூபத்தை அடைவதில்லை. இவ்வாறு அந்த அத்யாத்மத்தை கூறப்பட்டவாறு அறிந்த ஞானி, அவனும் புண்ணிய பாபங்கள் அற்றவனாய் பிரஹ்மத்தை அடைந்து காமம் அவித்தை அற்றவனாகிறான். என்பது சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
अथ शिष्याचार्ययोः प्रमादकृतान्यायेन विद्याग्रहणप्रतिपादननिमित्तदोषप्रशमनार्थेयं शान्तिरुच्यते —
(அ-கை) சிஷ்யன் குரு இவர்களுக்கு பிரமாதத்தினால் (தவறுகளினால் ஏற்பட்ட அநியாயத்தால் வித்தையை கிரஹித்தல், உபதேசித்தல் இவைகளின் நிமித்தமாக ஏற்படும் தோஷங்கள் சாந்தி அடைவதற்காக (நீங்குவதற்காக) சாந்தி என்று கூறப்பட்டது.
सह नाववतु । सह नौ भुनक्तु । सह वीर्यं करवावहै । तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै ॥ १९ ॥
सह नौ आवाम् अवतु पालयतु विद्यास्वरूपप्रकाशनेन । कः ? स एव परमेश्वरः उपनिषत्प्रकाशितः । किञ्च, सह नौ भुनक्तु तत्फलप्रकाशनेन नौ पालयतु । सहैव आवां विद्याकृतं वीर्यं सामर्थ्यं करवावहै निष्पादयावहै । किञ्च, तेजस्विनौ तेजस्विनोरावयोः यत् अधीतं तत्स्वधीतमस्तु । अथवा, तेजस्वि नौ आवाभ्यां यत् अधीतं तदतीव तेजस्वि वीर्यवदस्त्वित्यर्थः । मा विद्विषावहै शिष्याचार्यावन्योन्यं प्रमादकृतान्यायाध्ययनाध्यापनदोषनिमित्तं द्वेषं मा करवावहै इत्यर्थः । शान्तिः शान्तिः शान्तिरिति त्रिर्वचनं सर्वदोषोपशमनार्थम् इत्योमिति॥
வித்யாஸ்வரூபத்தை பிரகாசிக்க செய்து எங்கள் இருவரையும் சேர்த்து காப்பாற்று. யார் (காப்பாற்றுவது) உபநிஷத்துக்களால் ப்ரகாசப் படுத்தப்பட்ட அந்த பரமேச்வரனே. மேலும் எங்கள் இருவரையும் அந்த பலனை அடைவித்து எங்களைக் காப்பாற்று. எங்கள் இருவருக்கும் சேர்த்து வித்தையினால் ஏற்படும் சாமர்த்தியத்தை அடையச் செய். மேலும் தேஜஸ்ஸை அடைந்த நாங்கள் நன்றாக அத்யயனம் செய்தது வீரியவத் ஆகட்டும் என்பது பொருள். சிஷ்யன் ஆச்சாரியனாகிய நாங்கள் இருவரும் எங்களுக்குள் த்வேஷம் இல்லாமல் இருப்போமாக. அதாவது சிஷ்யன் ஆச்சாரியன் இருவருக்குள்ளும் பரஸ்பரம் பிரமாதத்தால் (அறிவின்மையால்) உண்டாகும் அத்யயனம் (படித்தல்) அத்யாப்பனம் (படிப்பித்தல்) இவைகளின் நிமித்தமாக உண்டாகும் துவேஷம் இன்றி இருப்போமாக சாந்தி, சாந்தி, சாந்தி என்று மும்முறை கூறியதும் ஓம் என்று கூறியதும் எல்லா தோஷங்களும் நீங்குவதற்காக.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ काठकोपनिषद्भाष्यम् सम्पूर्णम् ॥
इति षष्ठी वल्ली ॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ काठकोपनिषद्भाष्ये द्वितीयोऽध्यायः ॥