द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

केनोपनिषत्पदभाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

கேநோபநிஷத்பதபாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

‘केनेषितम्’ इत्याद्योपनिषत्परब्रह्मविषया वक्तव्येति नवमस्याध्यायस्यारम्भः । प्रागेतस्मात्कर्माण्यशेषतः परिसमापितानि, समस्तकर्माश्रयभूतस्य च प्राणस्योपासनान्युक्तानि, कर्माङ्गसामविषयाणि च । अनन्तरं च गायत्रसामविषयं दर्शनं वंशान्तमुक्तं कार्यम् ।
(अनुवादः) “கேனஇஷிதம்” முதலிய உபநிஷத்பர பரஹ்ம விஷயத்தைப் பற்றிக்கூறவேண்டும் என்பதற்காக ஒன்பதாவது அத்தியாயம் ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கு முன் (எட்டு அத்தியாயங்களில்)இந்தக் கர்மங்களைப் பற்றி மிச்சமின்றி முற்றிலும் கூறப்பட்டுள்ளது. எல்லா கர்மங்களுக்கும் ஆஸ்ரயமான பிராணனுடைய (ஹிரண்யகர்பனுடைய) உபாசனைகள், கர்மங்களின் அங்கமான சாம விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. அதன் பின் காயத்ரசாம விஷயதர்சனமும், (சிஷ்யன், ஆசிரியர்) இவர்களின் வம்ச பரம்பரை அறுபடாமல் தொடர்வதற்கான “வம்ச” விவரமாக விளக்கப்பட்டுள்ளன.
सर्वमेतद्यथोक्तं कर्म च ज्ञानं च सम्यगनुष्ठितं निष्कामस्य मुमुक्षोः सत्त्वशुद्ध्यर्थं भवति । सकामस्य तु ज्ञानरहितस्य केवलानि श्रौतानि स्मार्तानि च कर्माणि दक्षिणमार्गप्रतिपत्तये पुनरावृत्तये च भवन्ति । स्वाभाविक्या त्वशास्त्रीयया प्रवृत्त्या पश्वादिस्थावरान्ता अधोगतिः स्यात् । ‘अथैतयोः पथोर्न कतरेणचन तानीमानि क्षुद्राण्यसकृदावर्तीनि भूतानि भवन्ति जायस्व म्रियस्वेत्येतत्तृतीयं स्थानम्’ (छा. उ. ५ । १० । ८) इति श्रुतेः ; ‘प्रजा ह तिस्रोऽत्यायमीयुः’ (ऐ. आ. २ । १ । १), ( ऋ. मं. ८ । १०१ । १४) इति च मन्त्रवर्णात् ।
(அனுவாதம்)கூறப்பட்ட எல்லா கர்மங்களும், ஞானங்களும்,(உபாசனைகளும்) நன்கு அனுஷ்டித்த நிஷ்காம முமூக்ஷுவிற்கு சித்தசுத்தியின் பொருட்டு ஆகிறது. ஞானமற்ற சகாமனுக்கு கேவலம் சிரௌத கர்மாக்கள், ஸ்மார்த்த கர்மாக்கள் தக்ஷிணாயன மார்க்கத்தை அடைந்து புனராவிர்த்தி (மறுபடியும், மறுபடியும் ஜன்மம் எடுத்தல்) பொருட்டு ஆகிறது. ஸ்வபாவமாகவே சாஸ்திரத்திற்கு மாறான ப்ரவிர்த்தியால் பசு முதல் ஸ்தாவர வரையிலான கீழான கதி ’अधोगतिः’ யை அடைகிறார்கள். எவர்கள் உத்தராயணம், தக்ஷிணாயணம் ஆகிய இரண்டு மார்க்கங்களிலும் இல்லையோ அவர்கள் எப்பொழுதும் சுற்றிக்கொண்டே இருக்கும் ஜீவர்களாகிறார்கள். அவர்கள் பிறப்பதும், இறப்பதுமாகவே இருப்பார்கள்.இது மூன்றாவது மார்க்கமாகும் என்ற சுருதியினாலும் “இந்த பிரசித்தமான மூன்றுவகை பிரஜைகளும் தர்மத்தின் மூலம் 3 வழிகளை அடைகிறார்கள்” என்ற மந்திரத்தால் அறிகிறோம்.
विशुद्धसत्त्वस्य तु निष्कामस्यैव बाह्यादनित्यात्साध्यसाधनसम्बन्धादिहकृतात्पूर्वकृताद्वा संस्कारविशेषोद्भवाद्विरक्तस्य प्रत्यगात्मविषया जिज्ञासा प्रवर्तते । तदेतद्वस्तु प्रश्नप्रतिवचनलक्षणया श्रुत्या प्रदर्श्यते ‘केनेषितम्’ इत्याद्यया । काठके चोक्तम् ‘पराञ्चि खानि व्यतृणत्स्वयम्भूस्तस्मात्पराङ् पश्यति नान्तरात्मन् । कश्चिद्धीरः प्रत्यगात्मानमैक्षदावृत्तचक्षुरमृतत्वमिच्छन्’ (क. उ. २ । १ । १) इत्यादि । ‘परीक्ष्य लोकान्कर्मचितान्ब्राह्मणो निर्वेदमायान्नास्त्यकृतः कृतेन । तद्विज्ञानार्थं स गुरुमेवाभिगच्छेत्समित्पाणिः श्रोत्रियं ब्रह्मनिष्ठम्’ (मु. उ. १ । २ । १२) इत्याद्याथर्वणे च ।
(அனுவாதம்)வெளிவிஷயங்களாயும், அநித்தியமாயும் உள்ள சாத்ய சாதன சம்பந்தத்தால் இப்பிறவியிலோ, முற்பிறவிகளிலோ, நிஷ்கர்மாக்கள் அல்லது விசேஷமான சம்ஸ்காரம் வெளிப்பட்டபொழுது நிஷ்காமனாயும், சித்தசுத்தி உடையவனுமான விரக்தனுக்கு ப்ரத்யக் ஆத்ம விஷயத்தில் ஜிக்ஞாசை (அறிய வேண்டும் என்றஇச்சை) உண்டாகிறது. அந்த இந்த வஸ்துவைப் பற்றி கேள்வி பதில் ரூபமாக சுருதியில் ’केनेषितम्’(கேனேஷிதம்) என்பது முதலியவை உபதேசிக்கப்படுகிறது. “ஸ்வயம்புவாகிய பரமாத்மா இந்திரியங்களை பஹிர்(வெளி) முகமாகப் பிரித்து அளித்திருக்கிறார். ஆகையால் வெளிவிஷயங்களில் பார்வை உடையவைகளாகி அந்தராத்மாவைப் பார்ப்பதில்லை” என்று காடகத்திலும், “உலகத்தில் கர்மங்களினால் சேகரித்த கர்மபலன்களை பரீக்ஷித்த ப்ராஹ்மணானவன் கர்மங்களினால் அக்ருதம் எனப்படும் நித்யமோக்ஷம் ஒரு போதும் அடையமுடியாது என்று அறிந்து அதனால் வைராக்கியம் அடைந்தவன் அதை அறிவதன் பொருட்டு சமித் பாணியுடன் ச்ரோத்திரிய ப்ரஹ்மநிஷ்ட்டராகிய குருவை அடைய வேண்டும்” என்பது முதலிய அதர்வணத்தினாலும் அறிய வேண்டும்.
एवं हि विरक्तस्य प्रत्यगात्मविषयं विज्ञानं श्रोतुं मन्तुं विज्ञातुं च सामर्थ्यमुपपद्यते, नान्यथा । एतस्माच्च प्रत्यगात्मब्रह्मविज्ञानात्संसारबीजमज्ञानं कामकर्मप्रवृत्तिकारणमशेषतो निवर्तते, ‘तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः’ (ई. उ. ७) इति मन्त्रवर्णात् , ‘तरति शोकमात्मवित्’ (छा. उ. ७ । १ । ३) ‘भिद्यते हृदयग्रन्थिश्छिद्यन्ते सर्वसंशयाः । क्षीयन्ते चास्य कर्माणि तस्मिन्दृष्टे परावरे’ (मु. उ. २ । २ । ९) इत्यादिश्रुतिभ्यश्च ।
(அனுவாதம்)இவ்வாறு விரக்த புருஷனுக்கு ப்ரத்யக் ஆத்ம விஷய விக்ஞானமானது கேட்பதற்கும் (சிரவணத்திற்கும்) மனனம் செய்வதற்கும் அறிவதற்கும் சாமர்த்தியம் உண்டாகிறது. மற்றவைகளால் அல்ல. இந்த ப்ரத்யக் ஆத்ம பிரஹ்ம ஞானத்தால் காம கர்ம பிரவிர்த்தியின் காரணமான, சம்சார பீஜமாகிய அக்ஞானம் முற்றிலும் நிவர்த்தி ஆகிறது. “ஏகத்துவத்தை அறிந்தவனுக்கு மோஹமேது? சோகம் ஏது?” என்றஈஸாவாஸ்ய மந்திரத்தினாலும், “ ஆத்மவித் சோகத்தைக் கடக்கிறான்” அந்தபராவர திருஷ்ட்டியை உடையவனுடைய எல்லா சமுசயங்களும் நீங்குகின்றன, அவனுடைய எல்லா கர்மங்களும் நசிக்கின்றன என்பது முதலான சுருதிகளினாலும் அறிகிறோம்.
कर्मसहितादपि ज्ञानादेतत्सिध्यतीति चेत् , न ; वाजसनेयके तस्यान्यकारणत्ववचनात् । ‘जाया मे स्यात्’ (बृ. उ. १ । ४ । १७) इति प्रस्तुत्य ‘पुत्रेणायं लोको जय्यो नान्येन कर्मणा, कर्मणा पितृलोको विद्यया देवलोकः’ (बृ. उ. १ । ५ । १६) इत्यात्मनोऽन्यस्य लोकत्रयस्य कारणत्वमुक्तं वाजसनेयके ।
(அனு)(பூர்வபக்ஷி) இது கர்மத்துடன் கூடிய உபாஸனத்தாலும் அடையலாமே எனில்? (சித்) முடியாது. வாஜசனேயகத்தில் அதற்கு வேறு காரணம் கூறப்பட்டிருப்பதால் “எனக்கு மனைவி வேண்டும்” என்று பிருஹதாரண்யத்தில் ஆரம்பித்து “இந்த லோகம் புத்திரனால் ஜயிக்கப்பிடுகிறது. மற்றகர்மத்தினால் அல்ல.கர்மத்தினால் பித்ரு லோகம், வித்தையினால் (உபாசனையினால்) தேவலோகம் என்று ஆத்மாவைக் காட்டிலும் வேறு மூன்று லோகங்களின் காரணத்துவம் வாஜசனேயகத்தில் கூறப்பட்டுள்ளது.
तत्रैव च पारिव्राज्यविधाने हेतुरुक्तः ‘किं प्रजया करिष्यामो येषां नोऽयमात्मायं लोकः’ (बृ. उ. ४ । ४ । २२) इति । तत्रायं हेत्वर्थः — प्रजाकर्मतत्संयुक्तविद्याभिर्मनुष्यपितृदेवलोकत्रयसाधनैरनात्मलोकप्रतिपत्तिकारणैः किं करिष्यामः । न चास्माकं लोकत्रयमनित्यं साधनसाध्यमिष्टम् , येषामस्माकं स्वाभाविकोऽजोऽजरोऽमृतोऽभयो न वर्धते कर्मणा नो कनीयान्नित्यश्च लोक इष्टः । स च नित्यत्वान्नाविद्यानिवृत्तिव्यतिरेकेणान्यसाधननिष्पाद्यः । तस्मात्प्रत्यगात्मब्रह्मविज्ञानपूर्वकः सर्वैषणासंन्यास एव कर्तव्य इति ।
“நமக்கு ஆத்ம லோகத்திலேயே இஷ்டம் இருப்பதால் இந்தப் பிரஜைகளை வைத்து என்ன செய்யப் போகிறோம்” என்று பிருஹதாரண்ய உபநிஷத்தில் சந்நியாச பரிக்ரஹ விதானத்தில் காரணம் கூறப்பட்டுள்ளது. இங்கு அதற்கான ஹேது(காரணம்) கூறப்படுகிறது. புத்திரன், கர்ம, அதனுடன் கூடிய உபாசனை இவைகளால் மனுஷ்ய, பித்ரு,தேவலோகம் என்ற மூன்று லோகங்களாகிய அநாத்ம லோகத்தின் அடைவிற்குக் காரணமானவைகளை வைத்து நாம் என்ன செய்யப்போகிறோம், நமக்கு சாதனசாத்யமாயும், அநித்யமாயும் உள்ள மூன்று லோகங்களிலும் நமக்கு இஷ்டம் இல்லை. நமக்கு எவைகளில் ஸ்வபாவமாகவே பிறப்பற்றதாயும், மூப்பற்றதாயும், அம்ருதமாயும், அபயமாயும், கர்மத்தினால் வளர்ச்சியோ, குறையோ இல்லாததும், நித்யமானதுமான லோகமானது இஷ்ட்டமாகும். அது நித்யமாய் இருப்பதால் அவித்யா நிவிர்த்தியைத் தவிர வேறு சாதனத்தால் சம்பாதிக்க முடியாது.ஆகையால் ப்ரத்யக் ஆத்ம பிரஹ்ம விக்ஞான பூர்வமாய் எல்லா ஏஷணைகளையும் சந்நியாசம் செய்ய வேண்டும்.
कर्मसहभावित्वविरोधाच्च प्रत्यगात्मब्रह्मविज्ञानस्य । न ह्युपात्तकारकफलभेदविज्ञानेन कर्मणा प्रत्यस्तमितसर्वभेददर्शनस्य प्रत्यगात्मब्रह्मविषयस्य सहभावित्वमुपपद्यते, वस्तुप्राधान्ये सति अपुरुषतन्त्रत्वाद्ब्रह्मविज्ञानस्य । तस्माद्दृष्टादृष्टेभ्यो बाह्यसाधनसाध्येभ्यो विरक्तस्य प्रत्यगात्मविषया ब्रह्मजिज्ञासेयम् ‘केनेषितम्’ इत्यादिश्रुत्या प्रदर्श्यते । शिष्याचार्यप्रश्नप्रतिवचनरूपेण कथनं तु सूक्ष्मवस्तुविषयत्वात्सुखप्रतिपत्तिकारणं भवति । केवलतर्कागम्यत्वं च दर्शितं भवति ॥
வஸ்து பிரதானமாய் இருப்பதால் ப்ரஹ்ம ஞானமானது அபுருஷதந்திரமாகும். ப்ரத்யக் ஆத்மப்ரஹ்ம ஞானத்திற்கு கருமத்துடன் இருப்பது என்பது (சஹபாவித்துவம் என்பது) விரோதமாகும். மேலும் காரகபல பேதங்களுடன் கூடிய கர்மத்தினால் எல்லா பேதங்களும் அற்ற ப்ரத்யக் ஆத்ம பிரஹ்ம விஷயத்திற்கு சகபாவித்துவம் ஒருகாலும் உண்டாகாது. ஆகையால் திருஷ்டாத்ருஷ்ட பாஹ்ய சாதன சாத்தியங்களில் விரக்தி அடைந்த புருஷன் பிரத்யக் ஆத்ம விஷயமான ப்ரஹ்மத்தை அடையவேண்டும் என்றஜிஞ்ஞாசை (இச்சை) ஏற்படுவதற்காக “கேனேஷிதம்” முதலிய சுருதிகளால் உபதேசிக்கப்படுகிறது. சிஷ்யன், குரு மூலமாக கேள்வி, பதில் ரூபமாக கூறப்பட்டது. சூக்ஷ்ம விஷயமாக இருப்பதால் சுலபமாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதே காரணமாகும். கேவல தர்க்கத்தினால் மாத்திரம் அறிந்து கொள்ள முடியாது என்பதும் காண்பிக்கபட்டதாகிறது.
‘नैषा तर्केण मतिरापनेया’ (क. उ. १ । २ । ९) इति श्रुतेश्च । ‘आचार्यवान्पुरुषो वेद’ (छा. उ. ६ । १४ । २) ‘आचार्याद्धैव विद्या विदिता साधिष्ठं प्रापदिति’ (छा. उ. ४ । ९ । ३) ‘तद्विद्धि प्रणिपातेन’ (भ. गी. ४ । ३४) इत्यादिश्रुतिस्मृतिनियमाच्च कश्चिद्गुरुं ब्रह्मनिष्ठं विधिवदुपेत्य प्रत्यगात्मविषयादन्यत्र शरणमपश्यन्नभयं नित्यं शिवमचलमिच्छन्पप्रच्छेति कल्प्यते — केनेषितमित्यादि ।
இதை ( பிரஹ்மஜிக்ஞாசாவை) தர்க்க மூலமாக அடைய முடியாது.” “(க.உப )” சுருதியினாலும், “குருவை (ஆசாரியனை) பிரஹ்மம் என்று அறி” “(சா.உப)” ஆசாரியர் மூலமாக அடைந்த பிரஹ்ம வித்தை மேன்மை அடைகிறது. “சா.உப” (ஆசாரியாரை அணுகி) அவரை வணங்குவதால் (அவ்வான்மாவை அறிவாயாக)” “கீதை”  என்பது முதலான ச்ருதி ஸ்மிருதி நியாயத்தால் ஏதோ ஒரு சிஷ்யன் பிரஹ்ம நிஷ்ட்டராகிய குருவை முறைப்படி அணுகி பிரத்யக்ஆத்ம விஷயத்தைத் தவிர மற்றவைகளில் புகலிடம் இல்லை என்று உணர்ந்து (அபயமாயும், நித்தியமாயும், சிவமாயும், அசலமாயும் உள்ளதை) பயமற்றதும், என்றும் மாறாது ஒரே நிலையாய் இருப்பதும், மங்களமானதும், தன் நிலையிலிருந்து என்றும் அசைவோ, நழுவலோ அற்றதுமான ஆன்மாவைப் பற்றிக் கேட்கிறான் என்பதாக சிஷ்யனின் முதல் கேள்வியுடன் இந்த உபநிஷத் தொடங்குகிறது.
केनेषितं पतति प्रेषितं मनः केन प्राणः प्रथमः प्रैति युक्तः ।
केनेषितां वाचमिमां वदन्ति चक्षुःश्रोत्रं क उ देवो युनक्ति ॥ १ ॥
केन इषितं केन कर्त्रा इषितम् इष्टमभिप्रेतं सत् मनः पतति गच्छति स्वविषयं प्रतीति सम्बध्यते । इषेराभीक्ष्ण्यार्थस्य गत्यर्थस्य चेहासम्भवादिच्छार्थस्यैवैतद्रूपमिति गम्यते । इषितमिति इट्प्रयोगस्तु च्छान्दसः । तस्यैव प्रपूर्वस्य नियोगार्थे प्रेषितमित्येतत् ।
केन (கேன)  इषितं (இஷிதம்) எந்த கர்த்தாவால் விரும்பப்பட்டதாகி  प्रेषितम् (ப்ரேஷிதம்) ஏவப்பட்ட (செலுத்தப்பட்ட) मनः  (மன) மனது पतति (பததி) தன் விஷயத்தைக் குறித்து செல்லுகிறது. इष् (இஷ்) என்றதாதுவிற்கு அடிக்கடி என்ற அர்த்தம், செல்லுதல் என்றஅர்த்தம் இங்கு பொருந்தாததால் இச்சை என்றஅர்த்தத்தில் இந்த ரூபம் வந்தது என்று அறிகிறோம்.(इषितम्) இஷிதம் என்பது (इट्प्रयोगः) இட்ப்ரயோகமானது சாந்தஸமாகும். அதையே முதல் முதலில் பிரேரணை (நியோகம்) என்ற அர்த்தத்தில் ப்ரேஷிதம் என்று கூறப்பட்டது.
तत्र प्रेषितमित्येवोक्ते प्रेषयितृप्रेषणविशेषविषयाकाङ्क्षा स्यात् — केन प्रेषयितृविशेषेण, कीदृशं वा प्रेषणमिति । इषितमिति तु विशेषणे सति तदुभयं निवर्तते, कस्येच्छामात्रेण प्रेषितमित्यर्थविशेषनिर्धारणात् ।
ப்ரேஷிதம் (ஏவப்பட்டது) என்று மட்டும் கூறினால் எவரால் ஏவப்பட்டது, எவ்வாறு ஏவப்பட்டது என்றசங்கை வரும். இஷிதம் (விருப்பத்தால்) என்றவிசேஷணத்தால் எவருடைய இச்சையால் என்பதாலேயே பிரேஷிதம் என்றஅர்த்த விசேஷம் இருப்பதால் அந்த இரண்டு சங்கையும் நீங்கிவிடுகிறது.
यद्येषोऽर्थोऽभिप्रेतः स्यात् , केनेषितमित्येतावतैव सिद्धत्वात्प्रेषितमिति न वक्तव्यम् । अपि च शब्दाधिक्यादर्थाधिक्यं युक्तमिति इच्छया कर्मणा वाचा वा केन प्रेषितमित्यर्थविशेषोऽवगन्तुं युक्तः ।
(சங்கை)இவ்வாறு இந்த அர்த்தமே அபிப்ராயமாக இருந்தால். केनेषितं  (கேனஇஷிதம்) எதன் இச்சையால் என்றஅர்த்தமே சித்திப்பதால் प्रेषितं (ப்ரேஷிதம்) ஏவப்பட்டு என்று கூறவேண்டியதில்லை. மேலும் அதிக சப்தங்களாலும் (பதங்களாலும்) அதிக அர்த்தம் ஏற்படும் என்றஇச்சையால் கர்மாவினாலோ வாக்கினாலோ என்று केन प्रेषितम् (கேனப்ரேஷிதம்) எதனால் ஏவப்பட்டது என்றஅந்த விசேஷத்தை அறிய முடியும்.
न, प्रश्नसामर्थ्यात् ; देहादिसङ्घातादनित्यात्कर्मकार्याद्विरक्तः अतोऽन्यत्कूटस्थं नित्यं वस्तु बुभुत्समानः पृच्छतीति सामर्थ्यादुपपद्यते । इतरथा इच्छावाक्कर्मभिर्देहादिसङ्घातस्य प्रेरयितृत्वं प्रसिद्धमिति प्रश्नोऽनर्थक एव स्यात् ।
(சமாதானம்) கேள்வியின் சாமர்த்தியத்தால் அவ்வாறு அல்ல. தேஹாதி சங்காதங்களிலிருந்தும், அநித்தியமான கர்ம காரியங்களிலிருந்தும் விரக்தி அடைந்தவனாய் இருப்பதால் அநித்தியத்தைத் தவிர வேறான கூடஸ்த்தனாயும், நித்யமாயும் உள்ள வஸ்துவை அறிந்துகொள்வதில் இச்சை உள்ளவன் கேட்கிறான் என்பது கேள்வியின் சாமர்த்தியத்தால்  அறிகிறோம். இவ்வாறு அல்லாமல் இச்சை, வாக், கர்ம இவைகளினால் தேஹசங்காதம் பிரேரணை செய்கின்றன என்பது பிரசித்தம். ஆகையால் இந்த கேள்வியே அர்த்தமற்றதாகிவிடும்.
एवमपि प्रेषितशब्दस्यार्थो न प्रदर्शित एव ।
(சங்கை) இவ்வாறானால் प्रेषितम् (ப்ரேஷிதம்) ஏவப்பட்டது என்றசப்தத்தின் அர்த்தமே காண்பிக்கப்படவில்லையே எனில்
न ; संशयवतोऽयं प्रश्न इति प्रेषितशब्दस्यार्थविशेष उपपद्यते । किं यथाप्रसिद्धमेव कार्यकरणसङ्घातस्य प्रेषयितृत्वम् , किं वा सङ्घातव्यतिरिक्तस्य स्वतन्त्रस्येच्छामात्रेणैव मनआदिप्रेषयितृत्वम् , इत्यस्यार्थस्य प्रदर्शनार्थं केनेषितं पतति प्रेषितं मन इति विशेषणद्वयमुपपद्यते ।
(சமாதானம்) அவ்வாறு அல்ல. இந்த கேள்வியானது சந்தேஹ விக்ஷதே்தின் பேரில் எற்பட்டு இருப்பதால் प्रेषित (ப்ரேஷித) ஏவுதல் என்ற சப்தத்திற்கு (பதத்திற்கு) அர்த்த விசேஷம் ஏற்படுகிறது. எவ்வாறு காரிய காரண சங்காதத்திற்கு பிரேரணை செய்தல் உலகில் பிரசித்தமோ அவ்வாறா? அல்லது சங்காதத்தைக் காட்டிலும் வேறான சுவதந்திரமாக உள்ளதின் இச்சாமாத்திரத்தினாலேயே மனமுதலியவைகள் பிரேரணை செய்யப்படுகின்றனவா? என்றஅர்த்தத்தினால் கேள்வியின் அர்த்தமானது केनेषितं पतति प्रेषितं मनः (கேனேஷிதம் பததி, ப்ரேஷிதம் மன) எதனால் மனமானது இச்சிக்கிறது எதனால் ப்ரேரிக்கப்படுகிறது என்று இரு விசேஷணங்கள் பொருந்துகிறது.
ननु स्वतन्त्रं मनः स्वविषये स्वयं पततीति प्रसिद्धम् ; तत्र कथं प्रश्न उपपद्यते इति, उच्यते — यदि स्वतन्त्रं मनः प्रवृत्तिनिवृत्तिविषये स्यात् , तर्हि सर्वस्यानिष्टचिन्तनं न स्यात् । अनर्थं च जानन्सङ्कल्पयति । अभ्यग्रदुःखे च कार्ये वार्यमाणमपि प्रवर्तत एव मनः । तस्माद्युक्त एव केनेषितमित्यादिप्रश्नः ।
ஆனால் ஸ்வதந்திரமானது தன்னுடைய விஷயங்களில் தானாகவே செல்கிறது என்பது பிரசித்தம். இங்கு எவ்வாறு சந்தேஹம் எழுகிறது எனில் கூறப்படுகிறது. மனமானது ப்ரவிருத்தி, நிவிர்த்தி மார்கத்தில் சுதந்திரமாய் இருந்தால் அதற்கு இஷ்டமில்லாததில் சிந்திக்காது. அது நல்லதல்ல என்று தெரிந்தும் சங்கல்பிக்கிறது. மிகவும் துக்கம் தரக்கூடியதை நீக்க முடியும் என்றாலும் மனது பிரவிர்த்திக்கவே செய்கிறது. ஆகையால் केनेषितम् (கேனேஷிதம்) யாருடைய இச்சையால் என்பது முதலிய கேள்விகள் (प्रश्नः) எழுகிறது.
केन प्राणः युक्तः नियुक्तः प्रेरितः सन् प्रैति गच्छति स्वव्यापारं प्रति । प्रथम इति प्राणविशेषणं स्यात् , तत्पूर्वकत्वात्सर्वेन्द्रियप्रवृत्तीनाम् ।
केन (கேன) யாரால் प्रथम (ப்ரதம) प्राणः (ப்ராண) முதல்வனான ப்ராணன் प्रैैति (ப்ரைதி) தன்னுடைய செயலைக் குறித்துச் செல்லுகிறது. இங்கு எல்லா இந்திரியங்களும் ப்ராணனை முன்னிட்டுக் கொண்டே செயல்படுவதால் प्रथमः (ப்ரதம:) முதன்மையானது என்ற விசேஷணம் ப்ராணனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது
केन इषितां वाचम् इमां शब्दलक्षणां वदन्ति लौकिकाः । तथा चक्षुः श्रोत्रं च स्वे स्वे विषये क उ देवः द्योतनवान् युनक्ति नियुङ्क्ते प्रेरयति ॥
केन इषितां (கேனஇஷிதாம்) யாரால் ஏவப்பட்டதாகி इमां वाचं (இமாம் வாச்சம்) இந்த சப்தரூபமான வார்த்தைகளை உலகத்தோர்  वदन्ति (வதந்தி) சொல்லுகின்றனர், (பேசுகின்றனர்.) அவ்வாறேचक्षुः श्रोत्रम् (சக்ஷு, ச்ரோத்ரம்) கண்ணையும், காதையும் தன் தன் செயல்களில் क उ देवः (க. உ. தேவ) எந்தப்ரகாசிக்கும் தன்மை உள்ள தேவன் युनक्ति (யுனக்த்தி) ஈடுபடும் படி தூண்டுகிறான்.
श्रोत्रस्य श्रोत्रं मनसो मनो यद्वाचो ह वाचं स उ प्राणस्य प्राणः ।
चक्षुषश्चक्षुरतिमुच्य धीराः प्रेत्यास्माल्लोकादमृता भवन्ति ॥ २ ॥
एवं पृष्टवते योग्यायाह गुरुः । शृणु यत् त्वं पृच्छसि, मनआदिकरणजातस्य को देवः स्वविषयं प्रति प्रेरयिता कथं वा प्रेरयतीति ।
(அஃகை பா) இவ்விதம் கேட்ட யோக்யனான சிஷ்யனை நோக்கி குரு கூறுகிறார். மனம் முதலிய இந்திரிய சமூஹத்தைத் தனது விஷயத்தைக் குறித்து ப்ரேரனை செய்யும் தேவன் யார்? எவ்விதம் ப்ரேரனை செய்கிறார்? என்று நீ கேட்டாயோ அவ்விஷயத்தைக் கேள்.
श्रोत्रस्य श्रोत्रं शृणोत्यनेनेति श्रोत्रम् , शब्दस्य श्रवणं प्रति करणं शब्दाभिव्यञ्जकं श्रोत्रमिन्द्रियम् , तस्य श्रोत्रं सः यस्त्वया पृष्टः ‘चक्षुःश्रोत्रं क उ देवो युनक्ति’ (के. उ. १ । १) इति ।
श्रोत्रस्य श्रोत्रं (ச்ரோத்ரஸ்ய ச்ரோத்ரம்) காதுக்குக் காது-எதனால் கேட்கப்படுகிறதோ அது காது. சப்தத்தை கேட்பதற்கான சாதனமானது சப்தத்தைக் கிரஹிக்கும் இந்திரியமாகும். அதற்கு அது காதாகும். அதைக் குறித்து உன்னால் கண், காது இவைகளை எந்த தேவன் அந்த அந்த திறமையுடன் செயல்படச் செய்கிறான் என்று இவ்வாறு உன்னால் கேட்கப்பட்டது.
असावेवंविशिष्टः श्रोत्रादीनि नियुङ्क्त इति वक्तव्ये, नन्वेतदननुरूपं प्रतिवचनं श्रोत्रस्य श्रोत्रमिति ।
(சங்கை) இந்த குணங்கள் உடைய  இவன் ஸ்ரோத்திரம் முதலியவைகளை செயல்படச் செய்கிறவன் யார்? என்ற கேள்விக்கு காதுக்குக்காது என்ற இந்த பதில் பொருந்தாது.
नैष दोषः, तस्यान्यथा विशेषानवगमात् । यदि हि श्रोत्रादिव्यापारव्यतिरिक्तेन स्वव्यापारेण विशिष्टः श्रोत्रादिनियोक्ता अवगम्येत दात्रादिप्रयोक्तृवत् , तदेदमननुरूपं प्रतिवचनं स्यात् । न त्विह श्रोत्रादीनां प्रयोक्ता स्वव्यापारविशिष्टो लवित्रादिवदधिगम्यते । श्रोत्रादीनामेव तु संहतानां व्यापारेणालोचनसङ्कल्पाध्यवसायलक्षणेन फलावसानलिङ्गेनावगम्यते — अस्ति हि श्रोत्रादिभिरसंहतः, यत्प्रयोजनप्रयुक्तः श्रोत्रादिकलापः गृहादिवदिति । संहतानां परार्थत्वादवगम्यते श्रोत्रादीनां प्रयोक्ता । तस्मादनुरूपमेवेदं प्रतिवचनं श्रोत्रस्य श्रोत्रमित्यादि ।
(சமாதானம்)  அந்தப்ரேரணை செய்கிறவனுக்கு வேறு எந்த விசேஷ ரூபமும் கிடையாது ஆகையால் முற்கூறிய தோஷம் கிடையாது. கத்தி முதலியவைகளை பிரேரிக்கிறவன் வேறாய் இருப்பது போல் ச்ரோத்ர முதலியவைகளுக்கு தன்னுடைய வியாபாரங்களைத் தவிர (செயல்களைத் தவிர) வேறு தனியாக தன்னுடைய வியாபாரத்துடன் இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் பதில் இருந்திருக்கும். ஆனால் கத்தியால் வெட்டுபவனைப் போல் எந்த ஒன்றும் ஸ்ரோத்திரம் முதலியவைகளின் தன் தன் வியாபாரத்துடன் கூடிய தூண்டுபவன் அறியப்படவில்லை. அவயவங்களுடன்சேர்ந்து உண்டான ஸ்ரோத்திரம் முதலியவைகளை எந்த சிதாபாசனின் பலவியாப்தியின் லிங்க ரூபங்களான ஆலோசனை, சங்கல்பம் அவ்வாறே நிச்சயம் முதலிய ரூபவியாபாரங்கள் உண்டோ அதனால்  அறியப்படுகிறது. கிருஹம் முதலியவைக்கு சமானமாக எதன் பிரயோஜனத்திற்காக ஸ்ரோத்திரம் முதலிய கரண சமூகம் பிரவிர்த்திக்கின்றதோ அது ஸ்ரோத்திரம் முதலியவைகளிலிருந்து (தனியாக) ஏதோ ஒரு தத்துவம் அவசியம் உள்ளது. சேர்ந்து உள்ள பதார்த்தம் வேறு சாதன ரூபபதார்த்தமாகிறது. இதனால் ஏதோ ஒன்று ஸ்ரோத்திரம் முதலியவைகளைப் பிரேரணை செய்பவன் அவசியம் இருப்பதை  அறிய முடிகிறது. ஆகையால்  (ஸ்ரோத்திரஸ்ய ஸ்ரோத்திரம்) என்று கூறப்பட்ட பதில்கள் சரியானதே.
कः पुनरत्र पदार्थः श्रोत्रस्य श्रोत्रमित्यादेः ? न ह्यत्र श्रोत्रस्य श्रोत्रान्तरेणार्थः, यथा प्रकाशस्य प्रकाशान्तरेण ।
(சங்கை)மேலும் இங்கு காதுக்குக் காது என்பதற்கு பதத்தின் அர்த்தம் என்ன? எவ்வாறு பிரகாசத்திற்கு அன்யப்ரகாசம் தேவை இல்லையோ அவ்வாறேகாதிற்கு மற்றொரு காது தேவை இல்லை எனில்?
नैष दोषः । अयमत्र पदार्थः — श्रोत्रं तावत्स्वविषयव्यञ्जनसमर्थं दृष्टम् । तत्तु स्वविषयव्यञ्जनसामर्थ्यं श्रोत्रस्य चैतन्ये ह्यात्मज्योतिषि नित्येऽसंहते सर्वान्तरे सति भवति, न असति इति । अतः श्रोत्रस्य श्रोत्रमित्याद्युपपद्यते । तथा च श्रुत्यन्तराणि — ‘आत्मनैवायं ज्योतिषास्ते’ (बृ. उ. ४ । ३ । ६) ‘तस्य भासा सर्वमिदं विभाति’ (मु. उ. २ । २ । १०) ‘येन सूर्यस्तपति तेजसेद्धः’ (तै. ब्रा. ३ । १२ । ९ । ७) इत्यादीनि । ‘यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलम् । ’ (भ. गी. १५ । १२) ‘क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत’ (भ. गी. १३ । ३३) इति च गीतासु । काठके च ‘नित्यो नित्यानां चेतनश्चेतनानाम्’ (क. उ. २ । २ । १३) इति । श्रोत्राद्येव सर्वस्यात्मभूतं चेतनामिति प्रसिद्धम् ; तदिह निवर्त्यते । अस्ति किमपि विद्वद्बुद्धिगम्यं सर्वान्तरतमं कूटस्थमजमजरममृतमभयं श्रोत्रादेरपि श्रोत्रादि तत्सामर्थ्यनिमित्तम् इति प्रतिवचनं शब्दार्थश्चोपपद्यत एव ।
அவ்வாறு இதற்கு தோஷம் கிடையாது. இங்கு இவ்வாறு இந்த பதத்திற்கு அர்த்தம் செய்யவேண்டும். ஸ்ரோத்திரத்திற்கு தன்னுடைய விஷயத்தை கிரஹிக்கும், சாமர்த்தியம் காணப்படுகிறது. அதாவது ஸ்ரோத்திரத்திற்கு தன்னுடைய விஷயத்தை கிரஹிக்கும்  சாமர்த்தியம்  ஆத்மஜ்யோதிஸ்ரூபமாயும், நித்தியமாயும் தன்னைப் ப்ரேரகச் செய்பவன் அற்றதாயும், எல்லாவற்றுள்ளும் உள்ள சைதன்யஸ்வரூபத்தினால் அல்லவா இருக்கிறது. அசத்தாய் இருந்தால் அவ்வாறு சாமர்த்தியம் இருக்காது. ஆகையால் ஸ்ரோத்திரத்திற்கு ஸ்ரோத்திரம் (காதுக்கு காது) என்பது பொருத்தமாய் இருக்கிறது. அவ்வாறேமற்றச்ருதிகளிலும் “ இந்த ஆத்மா தன் ஜ்யோதிஸாலேயே பிரகாசிக்கிறது.” (बृ) “அதனுடைய ப்ரகாசத்தால் இவை எல்லாம் ப்ரகாசிக்கிறது.” (क,श्वे,मु) “சூரியன் எந்த தேஜஸ்ஸின் ஜ்வலனத்தால் தபிக்கிறது” (तै) முதலியவைகளாலும் “எந்த தேஜஸ்ஸானது சூரியனிடத்தில் இருந்துக்கொண்டு ஜகத் முழுவதையும் பிரகாசிக்கச்செய்கிறது..” “ஹே பாரத! க்ஷதே்திரம் க்ஷதே்திரமுடையவனையும் அவ்வாறேமுழுவதையும் பிரகாசிக்கச் செய்கிறது. (गीता) காடகத்திலும் அது நித்தியங்களுக்கு நித்தியமாயும், சேதனங்களுக்கு சேதனம் என்று கூறப்பட்டுள்ளது. ச்ரோத்திராதிகளே எல்லாவற்றின் ஆத்ம பூதமான சேதனம் என்று அக்ஞானிகளுக்கு பிரசித்தமாய் இருக்கிறது. அந்தக் கருத்தானது இங்கு நிராகரிக்கப்படுகிறது. வித்வான்களின் புத்தியால் அறியப்படுவதாயும், எல்லாவற்றைக் காட்டிலும் ஆந்தரமானதாயும், கூடஸ்தன், அஜம், அம்ருதம். அபயமாயும், ஸ்ரோத்ராதிகளுக்கு ஸ்ரோத்தராதிகளுக்கான சாமார்த்தியத்திற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்பது கூறிய பதிலின் சப்தார்த்தத்தினால் பொருந்துகிறது.
तथा मनसः अन्तःकरणस्य मनः । न ह्यन्तःकरणम् अन्तरेण चैतन्यज्योतिषो दीधितिं स्वविषयसङ्कल्पाध्यवसायादिसमर्थं स्यात् । तस्मान्मनसोऽपि मन इति । इह बुद्धिमनसी एकीकृत्य निर्देशो मनस इति ।
அவ்வாறே மனதிற்கு (அந்தக் கரணத்திற்கு) மனமாகும் சைதன்ய ஜ்யோதியின் ஒளியைத் தவிர வேறு ஒன்றால் அந்தக் கரணமானது தன்னுடைய விஷயங்களான சங்கல்பம் செய்தல், நிச்சயம் செய்தல் முதலிய சாமர்த்தியம் உடையதாகாது. ஆகையால் மனதிற்கு மனம் என்பது இங்கு புத்தியையும், மனதையும் ஒன்றாக மனம் என்று நிர்தேசம், செய்யப்பட்டுள்ளது.
यद्वाचो ह वाचम् ; यच्छब्दो यस्मादर्थे श्रोत्रादिभिः सर्वैः सम्बध्यते — यस्माच्छ्रोत्रस्य श्रोत्रम् , यस्मान्मनसो मन इत्येवम् । वाचो ह वाचमिति द्वितीया प्रथमात्वेन विपरिणम्यते, प्राणस्य प्राण इति दर्शनात् । वाचो ह वाचमित्येतदनुरोधेन प्राणस्य प्राणमिति कस्माद्द्वितीयैव न क्रियते ? न ; बहुनामनुरोधस्य युक्तत्वात् । वाचमित्यस्य वागित्येतावद्वक्तव्यं स उ प्राणस्य प्राण इति शब्दद्वयानुरोधेन ; एवं हि बहूनामनुरोधो युक्तः कृतः स्यात् ।
यद्वाचो ह वाचम् (யத்வாச்சோ ஹ வாச்சம்) எது வாக்கிற்கு வாக் என்பதில் எது यत् என்றசப்தமானது ஸ்ரோத்திரம் முதலிய எல்லாவற்றிற்கும் “எதனால்” यस्मात्  என்றहेतुः அர்த்தத்தில் வருகிறது. எவ்வாறு எனில் எதனால் அது ஸ்ரோத்திரத்திற்கு ஸ்ரோத்திரம், எதனால் மனதிற்கு மனம் என்று இவ்வாறு இருப்பதால் இங்கு वाचो (வாச்சோ) ह (ஹ) वाचम् (வாசம்) என்பது இரண்டாவது விபக்தி. ஆனால் இங்கு முதல் விபத்தியாக எற்க வேண்டும். ஏன் எனில் प्राणस्य प्राणः பிராணஸ்ய ப்ராண: என்று இருப்பதால் வாச்சோஹி வாசம் என்பது போல் பிராணஸ்ய பிராணம் என்று ஏன் இரண்டாவது விபக்தியில் கூறப்படவில்லை. அவ்வாறு கூறுவது உசிதமாகாது. ஏன் எனில் அதிகமானவையின் உடன்பாடு கிடைக்கிறது வாசம் என்பதில் “வாக்” என்று கூறப்படுகிறது. ஆனால் स उ प्राणस्य प्राणः  என்று सः प्राणः  அந்த ப்ராணன் என்று இரண்டு சப்தங்கள் முதல் விபத்தியில் வருவதால், இவ்வாறு அதிகமானவை உடன்படுவதால்  முற்கூறியது பொருந்தும்.
पृष्टं च वस्तु प्रथमयैव निर्देष्टुं युक्तम् । स यस्त्वया पृष्टः प्राणस्य प्राणाख्यवृत्तिविशेषस्य प्राणः, तत्कृतं हि प्राणस्य प्राणनसामर्थ्यम् । न ह्यात्मनानधिष्ठितस्य प्राणनमुपपद्यते, ‘को ह्येवान्यात्कः प्राण्याद्यदेष आकाश आनन्दो न स्यात्’ (तै. उ. २ । ७ । १) ‘ऊर्ध्वं प्राणमुन्नयत्यपानं प्रत्यगस्यति’ (क. उ. २ । २ । ३) इत्यादिश्रुतिभ्यः । इहापि च वक्ष्यते ‘येन प्राणः प्रणीयते तदेव ब्रह्म त्वं विद्धि’ (के. उ. १ । ८) इति ।
கேட்ட வஸ்துவை விளக்குவதற்கு முதல் வேற்றுமையே பொருந்தும். எந்த பிராணன் எனப்படும் விருத்தி விசேஷமாகிய ப்ராணனைக் குறித்துக் கேட்டாயோ அந்தப் ப்ராணன் தான் பிராணனுக்கு பிராணன்(மூச்சுவிடுவதற்கான) சாமர்த்தியத்தைக் கொடுக்கிறது. ஆத்மாவின் இருப்பு (அதிஷ்ட்டானம்) இல்லாமல் பிராணனால் ஒன்றும் செய்ய இயலாது. (तै) , “ஆனந்தஸ்வரூப ஆகாசம் இல்லாவிடில் எவன் உயிர் வாழ்வான், மேலும் எவன்தான் ஸ்வாசிப்பான்” “அந்தப் பிராணனை மேலே எடுத்துச் செல்கிறது, அவ்வாறே அபானனைக் கீழ்நோக்கிச் செலுத்துகிறது,” (क) என்பது முதலிய சுருதிகளால் அறிகிறோம்.இங்கும் அவ்வாறே கூறப் போகிறது எதனால் ப்ராணன் சுவாசிக்கிறதோ (பிராணன் வேலை செய்கிறதோ) அதுவே ப்ரஹ்மம் என்று நீ அறி என்பதாகும்.
श्रोत्रादीन्द्रियप्रस्तावे घ्राणस्येव प्राणस्य न तु युक्तं ग्रहणम् ।
ஆனால் ஸ்ரோத்திராதி இந்திரியங்களைக் கூறும் பொழுது க்ராணேந்திரியத்தைக் (நுகரும் இந்திரியத்தைக்) கிரஹித்துக் கொள்ளவேண்டுமே தவிர பிராணனை அல்ல.
सत्यमेवम् । प्राणग्रहणेनैव तु घ्राणस्य ग्रहणं कृतमेव मन्यते श्रुतिः । सर्वस्यैव करणकलापस्य यदर्थप्रयुक्ता प्रवृत्तिः, तद्ब्रह्मेति प्रकरणार्थो विवक्षितः ।
(சமாதானம்) அது உண்மையே, பிராணனைக் கிரஹித்துக் கொண்டதாலேயே க்ராணத்தையும் கிரஹிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. எல்லா கரணங்களுடைய செயல்களும் அதன் (பிரவிர்த்திகளும்) எதன் பொருட்டோ அது பிரஹ்மம் என்பது இந்தப்ரகரணத்தின் அர்த்தமாகும்.
तथा चक्षुषश्चक्षुः रूपप्रकाशकस्य चक्षुषो यद्रूपग्रहणसामर्थ्यं तदात्मचैतन्याधिष्ठितस्यैव । अतश्चक्षुषश्चक्षुः ।
அவ்வாறேचक्षुषश्चक्षू (சக்ஷுஷச்சக்ஷு) என்பது ரூபத்தைப் பிரகாசம் செய்கின்றகண்ணிற்கு ரூபத்தைக் கிரஹிக்கும் சாமர்த்தியம் எதனாலோ அது ஆத்ம சைதன்யத்தினுடைய இருப்பினாலேயேயாகும். ஆகையால் கண்ணிற்குக் கண் எனப்பட்டது.
प्रष्टुः पृष्टस्यार्थस्य ज्ञातुमिष्टत्वात् श्रोत्रादेः श्रोत्रादिलक्षणं यथोक्तं ब्रह्म ‘ज्ञात्वा’ इत्यध्याह्रियते ; अमृता भवन्ति इति फलश्रुतेश्च । ज्ञानाद्ध्यमृतत्वं प्राप्यते । ज्ञात्वा अतिमुच्य इति सामर्थ्यात् श्रोत्रादिकरणकलापमुज्झित्वा — श्रोत्रादौ ह्यात्मभावं कृत्वा, तदुपाधिः सन् , तदात्मना जायते म्रियते संसरति च । अतः श्रोत्रादेः श्रोत्रादिलक्षणं ब्रह्मात्मेति विदित्वा, अतिमुच्य श्रोत्राद्यात्मभावं परित्यज्य — ये श्रोत्राद्यात्मभावं परित्यजन्ति, ते धीराः धीमन्तः । न हि विशिष्टधीमत्त्वमन्तरेण श्रोत्राद्यात्मभावः शक्यः परित्युक्तम् । प्रेत्य व्यावृत्य अस्मात् लोकात् पुत्रमित्रकलत्रबन्धुषु ममाहम्भावसंव्यवहारलक्षणात् , त्यक्तसर्वैषणा भूत्वेत्यर्थः । अमृताः अमरणधर्माणः भवन्ति ।
கேள்வி கேட்டவன் கேள்வியின் அர்த்தத்தை அறிய விரும்புவதால் ஸ்ரோத்திராதிகளின் ஸ்ரோத்திராதிரூப பிரஹ்மத்தை “அறிந்து” என்பதை அத்யாஹாரம்  சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏன் எனில் அம்ருதத்தை அடைகிறார்கள் என்று பல சுருதி கூறி இருப்பதால் அவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும். ஞானத்தால் முக்தி அடைய முடியும் என்பதால் ஞானத்தால் அல்லவா அம்ருதத்துவம் அடையப்படுகிறது. ஜீவன் ச்ரோத்திரம் முதலிய கரணங்களின் செயல்களை துறந்து ச்ரோத்திரம் முதலியவைகளில் ஆத்மபாவம் வைத்து அதனுடைய உபாதியுடன் கூடி பிறப்பு, இறப்புடன் கூடிய சம்சாரத்தை அடைகிறது, ஆகையால் ச்ரோத்திராதிகளுக்கு ஸ்ரோத்திராதி லக்ஷணமான ப்ரஹ்மம் என்று அறிந்து अतिमुच्य (அதிமுச்சிய) ஸ்ரோத்தராதிகளில் ஆத்மபாவத்தை எவர்கள் விடுகிறார்களோ அவர்கள் धीराः (தீரா) தீரர்கள், தீரத்தன்மை இல்லாமல் எல்லாவற்றையும் துறத்தல் என்பது முடியாததாகும், மகன், நண்பன், மனைவி முதலிய பந்துக்களிடத்தில் எனது, நான் என்றபாவத்துடன் வியவஹாரங்கள் உடைய இந்த உலகத்தை விட்டு प्रेत्य (ப்ரேத்ய) கிளம்பி எல்லா ஏஷணைகளையும் விட்டவர்கள் अमृताः (அம்ருதா) மரணமற்றவர்களாக भवन्ति (பவந்தி) ஆகிறார்கள்.
‘न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशुः’ (तै. ना. २८) ‘पराञ्चि खानि व्यतृणत् . . . आवृत्तचक्षुरमृतत्वमिच्छन्’ (क. उ. २ । १ । १) ‘यदा सर्वे प्रमुच्यन्ते . . . अत्र ब्रह्म समश्नुते’ (क. उ. २ । ३ । १४) इत्यादिश्रुतिभ्यः । अथवा, अतिमुच्येत्यनेनैवैषणात्यागस्य सिद्धत्वात् अस्माल्लोकात्प्रेत्य अस्माच्छरीरादपेत्य मृत्वेत्यर्थः ॥
“கர்மாக்களினாலோ, பிரஜைகளாலோ, அல்லது ,செல்வத்தினாலோ அம்ருததுவத்தை அடையமுடியாது. கேவலம் த்யாகத்தினாலேயே, அம்ருததுவத்தை அடைய முடியும்.” (கைவல்ய:உப) “ஸ்வயம்பூவானவர் இந்திரியங்களை பஹிர் முகமாக படைத்துள்ளார். ஆகையால் அந்தராத்மாவைப்  பார்க்காமல் வெளி விஷயங்களை அறிகின்றது. ஏதோ ஒரு தீரன் அம்ருதத்தை அடைவதற்கு இச்சை உடையவனாய் ஞானக்கண்ணால் ப்ரத்யக் ஆத்மாவைப் பார்க்கிறான்.” (க உ) “எப்பொழுது எவர்கள் எந்த ஹிருதயத்தில் உள்ள (அந்தக் கரணத்தில் உள்ள) எல்லாக் காமனைகளையும் துறக்கிறார்களோ, அங்கு     ப்ரஹ்மத்தை நிச்சயமாக அடைகிறார்கள்.” (க.உ) முதலிய சுருதிகளால் அறிகிறோம், அல்லது  अतिमुच्यन्ते “அதிமுச்யந்தே” என்பதால் ஏஷணைகளை தியாகம் செய்தல் என்று சித்திப்பதால் இந்த லோகத்திலிருந்து கிளம்பி அதாவது இந்த உடலிருந்து பிரிந்து அம்ருதத்தை அடைகிறார்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். இங்கு प्रेत्य (ப்ரேத்ய) என்றசொல்லிற்கு இந்த ஸம்சார உலகத்திலிருந்து விடுபடுவதையே குறிக்கிறது. மரணத்தைக் குறிக்கவில்லை.
न तत्र चक्षुर्गच्छति न वाग्गच्छति नो मनः ।
न विद्मो न विजानीमो यथैतदनुशिष्यात् ॥ ३ ॥
यस्माच्छ्रोत्रादेरपि श्रोत्राद्यात्मभूतं ब्रह्म, अतः
(அ-கை) எதனால் சுரோத்திரம் முதலியவைகளுக்கு ப்ரஹ்மம் சுரோத்திரம் முதலிய ஆத்ம ஸ்வரூபமாயிருக்கிறதோ ஆகையால்.
न तत्र तस्मिन्ब्रह्मणि चक्षुः गच्छति, स्वात्मनि गमनासम्भवात् । तथा न वाक् गच्छति । वाचा हि शब्द उच्चार्यमाणोऽभिधेयं प्रकाशयति यदा, तदाभिधेयं प्रति वाग्गच्छतीत्युच्यते । तस्य च शब्दस्य तन्निर्वर्तकस्य च करणस्यात्मा ब्रह्म । अतो न वाग्गच्छति । यथाग्निर्दाहकः प्रकाशकश्चापि सन् न ह्यात्मानं प्रकाशयति दहति वा, तद्वत् ।
தன்ஆத்மாவிடத்தில் செல்வது என்பது சம்பாவிக்காததினால் அங்கு கண் செல்வதில்லை. அவ்வாறேவாக்கும் செல்வதில்லை. வாக்கினால் உச்சரிக்கப்படும் பொழுது அதன் பொருளை (அப்பெயர் கொண்ட பொருளை) விளக்குகிறது. அதை வாக் சொல்லுகிறது என்று கூறப்படுகிறது. அந்த சப்தத்தை நிர்வஹிப்பதற்கு காரணமான ஆத்மா பிரஹ்மம். ஆகையால் எவ்வாறு அக்னிக்கு தஹிக்கும் தன்மையும் பிரகாசப்படுத்தும் தன்மை இருந்தும் தன்னையே(அக்னியையே) தஹிக்கவும், பிரகாசப்படுத்தவும் செய்யாதோ அவ்வாறேவாக்கும் பிரஹ்மத்தை எட்டுவதோ விளக்குவதோ இல்லை.
नो मनः मनश्चान्यस्य सङ्कल्पयितृ अध्यवसातृ च सत् नात्मानं सङ्कल्पयत्यध्यवस्यति च, तस्यापि ब्रह्मात्मेति । इन्द्रियमनोभ्यां हि वस्तुनो विज्ञानम् । तदगोचरत्वात् न विद्मः तद्ब्रह्म ईदृशमिति ।
नो मनः (நோ மன) ஸங்கல்பாத்மகமான மனது ஆத்மாவைத் தவிர மற்றவைகளையே எண்ணுகிறது. அவைகளைப் பற்றியே ஒரு முடிவிற்கும் வருகிறது. ஆனால் ஆத்மாவைப் பற்றி எண்ணுவதோ அடைவதற்கு முயற்சிப்பதோ இல்லை. அப்படிப்பட்ட மனதிற்கும் ஆத்மா பிரஹ்மமே என்பதாகும். இந்திரியங்கள் மனம் இவைகளால் வஸ்துக்களின் ஞானம் ஏற்படுகிறது. பிரஹ்மமானது அகோசரமாய் (எட்டாததாய்) இருப்பதால் அந்த பிரஹ்மம் இப்படிப்பட்டது என்று நம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை.
अतो न विजानीमः यथा येन प्रकारेण एतत् ब्रह्म अनुशिष्यात् उपदिशेच्छिष्यायेत्यभिप्रायः । यद्धि करणगोचरः, तदन्यस्मै उपदेष्टुं शक्यं जातिगुणक्रियाविशेषणैः । न तज्जात्यादिविशेषणवद्ब्रह्म । तस्माद्विषमं शिष्यानुपदेशेन प्रत्याययितुमिति उपदेशे तदर्थग्रहणे च यत्नातिशयकर्तव्यतां दर्शयति ॥
ஆகையால்  சிஷ்யனுக்கு இந்த பிரஹ்மத்தைப் பற்றி எவ்வாறு உபதேசிப்பது என்பது நாம் அறியவில்லை, எது இந்திரியங்களால் அறிய முடியுமோ அது ஜாதிகுணகிரியை முதலிய விசேஷணங்களுடையதான மற்றவைகளைக் குறித்து உபதேசம் செய்யமுடியும். ஆனால் பிரஹ்மமோ ஜாதி முதலிய விசேஷணங்களுடன் கூடியது அன்று. ஆகையால் சிஷ்யனுக்கு உபதேசம் செய்வதில் உண்டாகும் விஷமமான மாறுபாட்டை நீக்கி உபதேசத்திலும் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதிலும் மிகுந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
अन्यदेव तद्विदितादथो अविदितादधि ।
इति शुश्रुम पूर्वेषां ये नस्तद्व्याचचक्षिरे ॥ ४ ॥
‘न विद्मो न विजानीमो यथैतदनुशिष्यात्’ (के. उ. १ । ३) इति अत्यन्तमेवोपदेशप्रकारप्रत्याख्याने प्राप्ते तदपवादोऽयमुच्यते । सत्यमेवं प्रत्यक्षादिभिः प्रमाणैर्न परः प्रत्याययितुं शक्यः ; आगमेन तु शक्यत एव प्रत्याययितुमिति तदुपदेशार्थमागममाह —
‘न विद्मो न विजानीमो यथैतदनुशिष्यात्’ (பிரஹ்மம் இவ்வாறு இருக்கிறது என்று அறியோம். அவ்வாறேஎவ்வாறு உபதேசிப்பது என்றும் அறியோம்) என்று முற்றிலும் உபதேசம் செய்வது அரிது என்று ஏற்படும் பொழுது அவ்வாதத்தை நீக்குவதற்காகக் கூறப்படுகிறது. அறிய முடியாது, உபதேசிக்கவும் முடியாது என்று கூறியது உண்மைதான். ஆனால் பிரத்யக்ஷாதி பிரமாணங்களால் பரம் பொருளை இவ்வாறு உள்ளது என்று உணர்த்தமுடியாது. ஆனால் ஆகமங்களால் மட்டுமே உபதேசிக்க முடியும் என்று அதை உபதேசிப்பதற்காக ஆகமவாயிலாக கூறுகிறார்.
अन्यदेव तद्विदितादथो अविदितादधीति । अन्यदेव पृथगेव तत् यत्प्रकृतं श्रोत्रादीनां श्रोत्रादीत्युक्तमविषयश्च तेषाम् । तत् विदितात् अन्यदेव हि । विदितं नाम यद्विदिक्रिययातिशयेनाप्तं विदिक्रियाकर्मभूतम् । क्वचित्किञ्चित्कस्यचिद्विदितं स्यादिति सर्वमेव व्याकृतं विदितमेव ; तस्मादन्यदेवेत्यर्थः ।
अन्यदेव तद्विदितादथो अविदितादधीति (அன்யதேவ தத்விதிதாத்அத அவிதிதாத் அதி இதி) अन्यदेव (அன்யதேவ) எது இப்பொழுது விசாரிக்கப்படுகிறதோ அது ச்ரோத்திரம் முதலியவைகளுக்கு ச்ரோத்திரம் முதலியவையாய் இருக்கிறது என்று கூறப்பட்டதோ அது அவிஷயம் (அறிய முடியாதது) அது அறிந்ததைக்காட்டிலும் வேறாகவே இருக்கிறது. அறிவது என்றால் எது விதிகிரியை முதலியவைகளால் அடையப்பட்ட விதிக்கிரியா கர்ம பூதத்தை (நாம ரூபாத்மகத்தை) ஏதாவது ஒரு இடத்திலாவது, சிறிதாவது, எவராலாவது அறியப்பட்டிருக்கும். எல்லா வியாகிருத பொருள்கள்(வெளிப்பட்ட பொருள்கள்) அறியப்பட்டதாகவே இருக்கும். ஆகையால் இந்த பரம் பொருள் அறியப்படும் பொருளைக் காட்டிலும் வேறாகவே இருக்கிறது என்பது பொருள்.
अविदितमज्ञातं तर्हीति प्राप्ते आह — अथो अपि अविदितात् विदितविपरीतादव्याकृतादविद्यालक्षणाद्व्याकृतबीजात् । अधि इति उपर्यर्थे ; लक्षणया अन्यदित्यर्थः । यद्धि यस्मादधि उपरि भवति, तत्तस्मादन्यदिति प्रसिद्धम् ।
अविदितम् (அவிதிதம்) அறிய முடியாதது என்பது அதை அறிய முடியாத வஸ்து ஆகுமோ எனில் கூறுகிறார். ஆகையால் அறிய முடியாததைக் காட்டிலும் அதாவது அறிந்ததைக் காட்டிலும் விபரீதமான வியாக்ருதி அவித்யா லக்ஷணத்தைக் காட்டிலும் வேறானது என்பது வியாக்ருதி லக்ஷணையினால் அறியப்படுகிறது. எது ஒன்று மற்றதைக்காட்டிலும் மேலே இருப்பதால் அது வேறு என்பது பிரசித்தம்.
यद्विदितं तदल्पं मर्त्यं दुःखात्मकं चेति हेयम् । तस्माद्विदितादन्यद्ब्रह्मेत्युक्ते त्वहेयत्वमुक्तं स्यात् । तथा अविदितादधीत्युक्तेऽनुपादेयत्वमुक्तं स्यात् । कार्यार्थं हि कारणमन्यदन्येनोपादीयते । अतश्च न वेदितुरन्यस्मै प्रयोजनायान्यदुपादेयं भवतीत्येवं विदिताविदिताभ्यामन्यदिति हेयोपादेयप्रतिषेधेन स्वात्मनोऽनन्यत्वात् ब्रह्मविषया जिज्ञासा शिष्यस्य निर्वर्तिता स्यात् । न ह्यन्यस्य स्वात्मनो विदिताविदिताभ्यामन्यत्वं वस्तुनः सम्भवतीत्यात्मा ब्रह्मेत्येष वाक्यार्थः ; ‘अयमात्मा ब्रह्म’ (बृ. उ. ४ । ४ । ५) ‘य आत्मापहतपाप्मा’ (छा. उ. ८ । ७ । १) ‘यत्साक्षादपरोक्षाद्ब्रह्म य आत्मा सर्वान्तरः’ (बृ. उ. ३ । ४ । १) इत्यादिश्रुत्यन्तरेभ्यश्चेति ।
எது அறியப்பட்டதோ அது அல்பம், நாசமாகக் கூடியது, துக்கத்துடன் கூடியது, ஆகையால் விடத்தக்கது, ஆகையால் அறியப்பட்டதைக் காட்டிலும் வேறு பிரஹ்மம் என்று கூறினால் பிரஹ்மத்தை விடவேண்டும் என்று ஆகும். அத்தகைய அறியப்பட்டதைக் காட்டிலும் வேறானது ப்ரஹ்மம் என்று சொல்லப்பட்டாலோ (அஹேயத்வம்) விடக்கூடியதன்று என்பது கூறப்பட்டதாகிறது. அறியப்படாததைக் காட்டிலும் தாண்டி உள்ளது என்று கூறினால் ஏற்கத்தகாததைக் காட்டிலும் வேறு என்று கூறப்பட்டதாகும். ஒரு காரியத்தின் பொருட்டே அல்லவாஅதனினும் வேறுபட்ட மற்றொன்று காரணமாய் ஏற்கப்படுகிறது. ஆகையால் ஆத்மாவை அறிந்தவன் வேறு ஒன்றின் பிரயோஜனத்தின் பொருட்டு வேறு ஒன்றையும் எடுத்துக்கொள்ள மாட்டான். இவ்வாறு அறிந்ததையும், அறியாததைக்காட்டிலும் ஆத்மா வேறானது என்பதால் ஹேயோபாதேயம் (தள்ளுவதும், கொள்ளுவதும்) இவ்விரண்டையும் நிஷேதம் செய்வதால் ஆத்மாவானது தன்னைக் காட்டிலும் வேறாக இல்லாததால் சிஷ்யனுக்கு பிரஹ்ம விஷயத்தில் உள்ள ஜிக்ஞாசை ஆனது பூரணமாகிறது. ஸ்வாத்மாவைக் காட்டிலும் வேறான வஸ்துவிற்கு அறிந்தது, அறியாதது ஆகிய இவ்விரண்டைக் காட்டிலும் வேறான தன்மை ஏற்படாது என்பதால் ஆத்மா பிரஹ்மமாகும் என்பது வாக்கியர்த்தம். “अयमात्मा ब्रह्म” (இந்த ஆத்மா பிரஹ்மம்) “य आत्मापहतपात्मा” (எந்த ஆத்மா பாவமற்றதோ) “यत्साक्षादपरोक्षाद् ब्रह्म” (எது சாக்ஷாத்தாக அபராக்ஷமாய் இருப்பதால் பிரஹ்மம்) “य आत्मा सर्वान्तरः” (எந்த ஆத்மா எல்லாவற்றிலும் ஊடுருவி உள்ளதோ) என்பது முதலிய மற்றசுருதிகளாலும் அறிகிறோம்.
एवं सर्वात्मनः सर्वविशेषरहितस्य चिन्मात्रज्योतिषो ब्रह्मत्वप्रतिपादकस्य वाक्यार्थस्याचार्योपदेशपरम्परया प्राप्तत्वमाह — इति शुश्रुमेत्यादि । ब्रह्म चैवमाचार्योपदेशपरम्परयैवाधिगन्तव्यं न तर्कतः प्रवचनमेधाबहुश्रुततपोयज्ञादिभ्यश्च, इति एवं शुश्रुम श्रुतवन्तो वयं पूर्वेषाम् आचार्याणां वचनम् ; ये आचार्याः नः अस्मभ्यं तत् ब्रह्म व्याचचक्षिरे व्याख्यातवन्तः विस्पष्टं कथितवन्तः तेषामित्यर्थः ॥
இவ்வாறு சர்வாத்மாவினுடைய எல்லா விசேஷங்களும் அற்றசின்மாத்திர ஸ்வரூப ஜ்யோதியாகிய பிரஹ்மத்துவத்தை தெளிவுப்படுத்தக் கூடிய வாக்கியார்த்தத்தை ஆச்சாரிய உபதேச பரம்பரையினால் அடைய வேண்டும் என்று கூறுகிறார். शुश्रुम (கேள்விப்பட்டோம்) என்பது முதலியவைகளால் பிரஹ்மமானது இவ்வாறு ஆச்சாரிய உபதேச பரம்பரையினால் மட்டுமே அறிய முடியும்.தர்க்கத்தினாலோ, பிரவசனங்களினாலோ, மேதாவிலாசத்தினாலோ, அநேகசிரவணம் செய்தலாலோ, தபசாலோ, யக்ஞ முதலியவைகளாலோ அறிய முடியாது என்பதை நாங்கள் பூர்வ ஆச்சார்யார்களுடைய வசனங்களைக் கேட்டிருக்கிறோம்.அந்த ஆச்சார்யர்கள் எங்களுக்கு பிரஹ்மத்தைப் பற்றி விளக்கமாகக் கூறி இருக்கிறார்கள். இதுவே அவர்களின் அபிப்ராயம்.
यद्वाचानभ्युदितं येन वागभ्युद्यते ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ५ ॥
‘अन्यदेव तद्विदितादथो अविदितादधि’ (के. उ. १ । ४) इत्यनेन वाक्येन आत्मा ब्रह्मेति प्रतिपादिते श्रोतुराशङ्का जाता — कथं न्वात्मा ब्रह्म । आत्मा हि नामाधिकृतः कर्मण्युपासने च संसारी कर्मोपासनं वा साधनमनुष्ठाय ब्रह्मादिदेवान्स्वर्गं वा प्राप्तुमिच्छति । तत्तस्मादन्य उपास्यो विष्णुरीश्वर इन्द्रः प्राणो वा ब्रह्म भवितुमर्हति, न त्वात्मा ; लोकप्रत्ययविरोधात् । यथान्ये तार्किका ईश्वरादन्य आत्मेत्याचक्षते, तथा कर्मिणोऽमुं यजामुं यजेत्यन्या एव देवता उपासते । तस्माद्युक्तं यद्विदितमुपास्यं तद्ब्रह्म भवेत् , ततोऽन्य उपासक इति । तामेतामाशङ्कां शिष्यलिङ्गेनोपलक्ष्य तद्वाक्याद्वा आह — मैवं शङ्किष्ठाः ।
“अन्यदेव तद्विदितादथो अविदिताद (அன்யதேவ தத்விதிதாததோ அவிதிதாததி) அது அறிந்ததைக் காட்டிலும் வேறு, அறியாததைக் காட்டிலும் மேலாக இருக்கிறது. என்றஇந்த வாக்யத்தால் ஆத்மா ப்ரஹ்மம் என்று கூறும் பொழுது ச்ரோதாவிற்கு (சிஷ்யனுக்கு) இவ்வாறு சங்கை உண்டாயிற்று. எவ்வாறு ஆத்மா ப்ரஹ்மமாகும் என்று, ஆத்மா என்பது கர்மத்திலும் உபாசனையிலும் அதிகாரியான ஸம்ஸாரிஜீவன். அந்த ஸம்ஸாரி கர்மம் உபாசனையாகிய ஏதாவது ஒரு சாதனத்தை அனுஷ்டித்து ப்ரஹ்மா முதலிய தேவர்களையோ அல்லது ஸ்வர்கத்தையோ அடைய விரும்புகின்றான். உலகிலுள்ள நம்பிக்கைக்கு விரோதமானதால் அதைக் காட்டிலும் வேறாக விஷ்ணு, ஈச்வரன், இந்திரன் அல்லது பிராணனோ உபாசனை செய்யக் கூடியதாக ப்ரஹ்மம் ஆகக் கூடியதாகும். எவ்வாறு மற்றதார்க்கிகர்கள் ஈச்வரனைக் காட்டிலும் ஆத்மா வேறு என்று கூறுகின்றனரோ அவ்வாறேகர்மம் செய்பவர்களும் இந்த யக்ஞம் செய்யவேண்டும். இந்த யக்ஞம் செய்யவேண்டும் என்று தேவதைகளை உபாசிக்கின்றனர். ஆகையால் எது அறியப்பட்டதோ அது உபாசிய ப்ரஹ்மமாகிவிடும். ஆகையால் உபாசகன் வேறென்பது சரியாகிவிடும் சிஷ்யனை வ்யாஜமாக வைத்தோ அல்லது அந்த வாக்ய மூலமாகவோ அவனுடைய சங்கையை அறிந்து இவ்வாறு கூறினார். இவ்வாறு சங்கை செய்யாதே என்று.
यत् चैतन्यमात्रसत्ताकम् , वाचा — वागिति जिह्वामूलादिष्वष्टसु स्थानेषु विषक्तमाग्नेयं वर्णानामभिव्यञ्जकं करणम् , वर्णाश्चार्थसङ्केतपरिच्छिन्ना एतावन्त एवंक्रमप्रयुक्ता इति ; एवं तदभिव्यङ्ग्यः शब्दः पदं वागित्युच्यते ; ‘अकारो वै सर्वा वाक्सैषास्य स्पर्शान्तःस्थोष्मभिर्व्यज्यमाना बह्वी नानारूपा भवति’ (ऐ. आ. २ । ३ । ६) इति श्रुतेः । मितममितं स्वरः सत्यानृते एष विकारो यस्याः तया वाचा पदत्वेन परिच्छिन्नया करणगुणवत्या — अनभ्युदितम् अप्रकाशितमनभ्युक्तम् ।
यत् (யத்) சைதன்யமாத்திர சத்தோ, அது वाचा (வாச்சா) வாக்கால், வாக் என்பது ஜிஹ்வாமூலம் என்றஅடிநாக்கு முதலிய எட்டு ஸ்தானங்களில் (ஜிஹ்வாமூலம், ஹ்ருதயம், கண்டம், மூர்த்தா, தந்த, நாசிகா, ஓஷ்ட்ட, தாலு அதாவது அடிநாக்கு, இருதயம், கழுத்து, தலை, பல், மூக்கு, உதடு, கன்னமாகும்) தொட்டுக் கொண்டு அக்னியை தேவதையாகக் கொண்ட எழுத்துக்களை (வர்ணங்களை)வெளிப்படுத்தும் கரணமாகும்.வர்ணங்களையோ, இன்ன பொருளை உணர்த்தக்கூடிய இத்தனை எழுத்துகளை, இன்ன கிரமத்தில் (வர்ணங்கள்) உள்ளவை எனப்படும். உதாரணமாக गौः என்றபசுவை உணர்த்தும் சொல் ग (க கார) औ (ஒள கார) மற்றும் விசர்கத்துடன் கூடியது என்பதாகும். இம்மாதிரி வர்ணங்களின் கோர்வையையுடைய பதமே வாக் எனப்படும். இதை வேதம் “अकारो वै सर्वा वाक्सैषा स्पर्शान्तस्थोष्मभिबर्व्यज्यमाना बवी नानारूपा भवति” அகாரமே எல்லா சொற்களாகவும் மாறுகிறது. அதாவது ஸ்பர்சங்கள் எனப்படும்  क (க) முதல் म (ம) வரையிலான 25 அக்ஷரங்களாலும் அந்தஸ்தங்களாலும்  य र ल व (ய ர ல வ ) என்ற4 அக்ஷரங்களாலும், ஊஷ்மாக்களாலும் = श ष स ह ( ச ஷ ஸ ஹ ) என்ற4 அக்ஷரங்களாலும் மாறுபட்டு ஒலிக்கிறது. இந்த எழுத்துக்களே க்ரமக்கோர்வையின் மாறுபாட்டால்பல்வேறு பொருளை உணர்த்தும் பல்வேறு சொற்களாக மாறுபட்டு ஒலிக்கின்றன. அவை மிதம், அமிதம், ஸ்வரம், ஸத்யம், அநிருதம், எனப்படும். மிதம் என்பது பாதம், ஒரு கட்டுப்பாடான அக்ஷரங்களுடன்  கூடிய முடிவு இவைகளுடன் கூடிய ரிக்வேதம் முதலியவைகளாகும். அமிதம் என்பது இக்கட்டுப் பாடுகளுக்கு  அப்பாற்பட்ட  யஜீர்வேதம் முதலியவைகளாகும். ஸ்வரம் என்பது கீதத்தைப் பிரதாணமாக உடைய சாமவேதம் முதலியனவாகும்.  ஸஒயம் என்பது (கண்ணால்) கண்டதை உணர்த்தலாகும். அதற்கு மாறுபட்டது, அந்ருதம்,(பொய்) இவைகளைக் குணமாகக் கொண்டது வாக், அந்தப் பதரூபமான வாக்கைக் கரண குணமாகக் கொண்டு மனிதனிடத்தில் விளங்கும் வாக்சக்தியினால்  अनभ्युदितम् (அநப்யுதிதம்) விளக்கப்பட-வில்லை.
येन ब्रह्मणा विवक्षितेऽर्थे सकरणा वाक् अभ्युद्यते चैतन्यज्योतिषा प्रकाश्यते प्रयुज्यत इत्येतत् । यत् ‘वाचो ह वाक्’ (के. उ. १ । २) इत्युक्तम् , ‘वदन्वाक्’ (बृ. उ. १ । ४ । ७) ‘यो वाचमन्तरो यमयति’ (बृ. उ. ३ । ७ । १०) इत्यादि च वाजसनेयके । ‘या वाक् पुरुषेषु सा घोषेषु प्रतिष्ठिता कश्चित्तां वेद ब्राह्मणः’ इति प्रश्नमुत्पाद्य प्रतिवचनमुक्तम् ‘सा वाग्यया स्वप्ने भाषते’ ( ? ) इति । सा हि वक्तुर्वक्तिर्नित्या वाक् चैतन्यज्योतिःस्वरूपा, ‘न हि वक्तुर्वक्तेर्विपरिलोपो विद्यते’ (बृ. उ. ४ । ३ । २६) इति श्रुतेः ।
எந்த பிரஹ்மத்தால் வாக், வாக்சக்தியானது விரும்பிய பொருளை உணர்த்துவதில் சக்திபடைத்ததாக விளங்குகிறதோ அதாவது சைதன்ய ஜோதியுடன் கூடியதாய் விளங்குவதாக இருக்கிறதோ அந்த பிரஹ்மஸ்வரூபம் வாக்கிற்கு வாக் எனப்படுகிறது. அவ்வாறேப்ருஹதாரண்யத்தில் “பேசுவதற்குக் காரணம் வாக்” என்றும் எவன் உள்ளே இருந்து கொண்டு பேசுவதற்கு தூண்டுகிறான் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறேவாஜசனேயகத்தில் “எந்த அந்த வாக்கானது புருஷர்களிடத்தில் (சேதனங்களில்) கோஷங்களில் அதாவது வர்ணங்களில் (எழுத்துகளில்) இருக்கிறது என்று ஏதோ ஒரு பிரஹ்மவேத்தாவானவன் அதை அறிகிறான் என்று பிரசன்னத்தை உண்டாக்கி பதிலும் அளிக்கப்பட்டது. எதனால் ஜீவனானவன் ஸ்வப்னத்தில் பேசுகின்றானோ அது வாக் என்று, அதுவே பேசுபவனின் நித்ய வாக் சக்தியாகிய சைதன்யஜ்யோதிஸ்வரூபமாகும். பேசுபவனைக் காட்டிலும் வாக்சக்தியானது வேறு அல்ல என்பது சுருதியின் கருத்தாகும்.
तदेव आत्मस्वरूपं ब्रह्म निरतिशयं भूमाख्यं बृहत्त्वाद्ब्रह्मेति विद्धि विजानीहि त्वम् । यैर्वागाद्युपाधिभिः ‘वाचो ह वाक्’ ‘चक्षुषश्चक्षुः’ ‘श्रोत्रस्य श्रोत्रं मनसो मनः’ (के. उ. १ । २) ‘कर्ता भोक्ता विज्ञाता नियन्ता प्रशासिता’ ‘विज्ञानमानन्दं ब्रह्म’ (बृ. उ. ३ । ९ । ७) इत्येवमादयः संव्यवहारा असंव्यवहार्ये निर्विशेषे परे साम्ये ब्रह्मणि प्रवर्तन्ते, तान्व्युदस्य आत्मानमेव निर्विशेषं ब्रह्म विद्धीति एवशब्दार्थः । नेदं ब्रह्म यदिदम् इत्युपाधिभेदविशिष्टमनात्मेश्वरादि उपासते ध्यायन्ति । तदेव ब्रह्म त्वं विद्धि इत्युक्तेऽपि नेदं ब्रह्म इत्यनात्मनोऽब्रह्मत्वं पुनरुच्यते नियमार्थम् अन्यब्रह्मबुद्धिपरिसङ्ख्यानार्थं वा ॥
நீ तदेव (ததேவ) அந்த ஆத்மஸ்வரூபமான பிரஹ்மத்தை பெரிதிக்கெல்லாம் பெரியது என்பதால் நிரதிசய பூமா எனப்படும் ப்ரஹ்மம் என்று அறிவாயாக. எந்த வாக் முதலிய உபாதிகளால் வாக்கிற்கு வாக், ச்ரோத்திரத்திற்கு சுரோத்திரம், கண்ணுக்குக் கண், மனதிற்குமனம் என்றும், கர்த்தா, போக்த்தா, விக்ஞாத்தா, நியந்தா, கட்டளையிடுபவன், விக்ஞானம் ஆனந்தம், பிரஹ்மம் என்பது முதலிய வியவகாரங்கள் வியவகாரங்களற்றநிர்விசேஷ  மேலான परे சாம்யமான பிரஹ்மத்தில் பிரவிர்த்திக்கின்றதோ அவைகளை நிராகரித்து ஆத்மாவிடத்திலேயே நிர்விசேஷ பிரஹ்மத்தை அறிவாயாக என்று உபாதிபேதத்துடன் கூடிய அநாத்மாக்களாகிய ஈஸ்வராதிகளை उपासते (உபாஸதே) த்யானம் செய்கின்றானோ அது இந்த பிரஹ்மம் அல்ல. அதுவே ब्रह्म त्वं विद्धि (பிரஹ்மம் துவம்வித்தி) பிரஹ்மமென்று அறி என்று கூறி இருந்த போதிலும் மறுபடியும் नेदंं ब्रह्म (நேதம் பிரஹ்மம்) இது பிரஹ்மம் அல்ல என்று கூறப்பட்டதன் வாயிலாய் அநாத்மாவிற்கு அப்ரஹ்மத்துவம் கூறப்பட்டது. ஆத்மாவிடத்தில் பிரஹ்ம புத்தியை நியமனம் செய்வதற்காகவும், அல்லது மற்றஉபாசனை செய்யக்கூடிய தேவதைகளிடத்தில் பிரஹ்ம புத்தியை நிவர்த்தி செய்வதற்காக ஆகும்( உபாசனைக்குறிய ஈஸ்வரன் முதலியவைகளை முதலில் பிரஹ்மம் என்று அறி என்று கூறி பிரஹ்மமல்ல என்று கூறியதன் மூலமாக ஆத்மாவிற்கு அபிரஹ்மத்துவம் கூறப்பட்டது. ஆத்மாவினிடத்தில் பிரஹ்ம புத்தியை நியமனம் செய்வதற்காக உண்டானது  நியமவிதியாகும். மற்றஉபாசனா தேவதைகளிடத்தில் உள்ள பிரஹ்மபுத்தியை போக்குவதற்காக ஏற்படுவது பரிசங்கியா விதியாகும்.
यन्मनसा न मनुते येनाहुर्मनो मतम् ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ६ ॥
यन्मनसा न मनुते । मन इत्यन्तःकरणं बुद्धिमनसोरेकत्वेन गृह्यते । मनुतेऽनेनेति मनः सर्वकरणसाधारणम् , सर्वविषयव्यापकत्वात् । ‘कामः सङ्कल्पो विचिकित्सा श्रद्धाश्रद्धा धृतिरधृतिर्ह्रीर्धीर्भीरित्येतत्सर्वं मन एव’ (बृ. उ. १ । ५ । ३) इति श्रुतेः कामादिवृत्तिमन्मनः । तेन मनसा यत् चैतन्यज्योतिर्मनसोऽवभासकं न मनुते न सङ्कल्पयति नापि निश्चिनोति लोकः, मनसोऽवभासकत्वेन नियन्तृत्वात् । सर्वविषयं प्रति प्रत्यगेवेति स्वात्मनि न प्रवर्ततेऽन्तःकरणम् । अन्तःस्थेन हि चैतन्यज्योतिषावभासितस्य मनसो मननसामर्थ्यम् ; तेन सवृत्तिकं मनः येन ब्रह्मणा मतं विषयीकृतं व्याप्तम् आहुः कथयन्ति ब्रह्मविदः । तस्मात् तदेव मनस आत्मानं प्रत्यक्चेतयितारं ब्रह्म विद्धि । नेदमित्यादि पूर्ववत् ॥
यन्मसा न मनुते (யன் மனசா ந மனுதே) மனம் என்றால் அந்தக்கரணம், புத்தியையும் மனதையும் ஒன்றாக கிரஹிக்கப்படுகிறது. அதனால் நினைப்பதால் மனம் எனப்படுகிறது. எல்லா விஷயங்களிலும் வியாபித்திருப்பதால் எல்லா கரணங்களுக்கும் சாதாரணமாகிறது. காமம் சங்கல்பம், ஸம்சயம், சிரத்தை, அசிரத்தை, தைரியம், அதைரியம், பயம் எல்லாம் மனம் என்று சுருதியில் கூறப்பட்டுள்ளது. ஆகையால் காமாதிவிருத்தியை உடையது மனம், சைதன்யஜோதியாகிய மனமானது மனதை பிரகாசிக்கச் செய்வதால் நியந்தாவாய் இருப்பதால் எது லோகத்தைபிரகாசப்படுத்துகிறதோ அந்த மனதால் அதை (நியந்தாவை) நினைக்கமுடியாது. சங்கல்பம் செய்யமுடியாது, நிச்சயிக்கவும் முடியாது, அது எல்லா விஷயங்களைக் காட்டிலும் வேறாக இருப்பதாலேயே ஸ்வாத்மாவினிடத்தில் அந்தக்கரணம் அங்கு பிரவிர்த்திப்பதில்லை. (செல்வதில்லை) உள்ளிருக்கும் சைதன்ய ஸ்வரூபத்தினால் பிரகாசப்படுத்தப்பட்ட மனதினால் அல்லவா நினைக்கும் சாமர்த்தியம் ஏற்படுகிறது. அந்த விருத்திகளுடன் கூடிய மனமானது பிரஹ்மத்தினால் விஷயம் செய்யப்பட்டது, வியாபிக்கப்பட்டது என்று ப்ரஹ்மவித்துக்கள் கூறுகிறார்கள். ஆகையால் மனதை எது ஆட்டுவிக்கிறதோ அதையே பிரஹ்மம் என்று அறி नेदंं நேதம் முதலியவை முன் போலாகும்.
यच्चक्षुषा न पश्यति येन चक्षूंषि पश्यति ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ७ ॥
यत् चक्षुषा न पश्यति न विषयीकरोति अन्तःकरणवृत्तिसंयुक्तेन लोकः, येन चक्षूंषि अन्तःकरणवृत्तिभेदभिन्नाश्चक्षुर्वृत्तीः पश्यति चैतन्यात्मज्योतिषा विषयीकरोति व्याप्नोति । तदेवेत्यादि पूर्ववत् ॥
यत् எந்த சைதன்யமானது அந்தக் கரண விருத்தியுடன் கூடிய चक्षुषा கண்களால் न पश्यति பார்க்கப்படவில்லையோ, அதாவது கண்கள் சைதன்ய ரூபத்தை தனக்கு விஷயமாக்கிக் கொள்ள முடியவில்லையோ, येन எந்த சைதன்யாத்ம ஜோதியால் चक्षूंषि (சக்ஷும்ஷி) கண்கள் அதாவது அந்தக் கரண விருத்தியைக் காட்டிலும் வேறாகாத கண்களின் விருத்தியானது லோகத்தைப் पश्यति பார்க்கிறது அதாவது விஷயம் செய்கிறது, வியாபிக்கிறது. तदेव முதலியவை முன்போல் ஆகும்.
यच्छ्रोत्रेण न शृणोति येन श्रोत्रमिदं श्रुतम् ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ८ ॥
यत् श्रोत्रेण न शृणोति दिग्देवताधिष्ठितेन आकाशकार्येण मनोवृत्तिसंयुक्तेन न विषयीकरोति लोकः, येन श्रोत्रम् इदं श्रुतं यत्प्रसिद्धं चैतन्यात्मज्योतिषा विषयीकृतम् । तदेवेत्यादि पूर्ववत् ॥
यत् எந்த ஜ்யோதிஸ்வரூபமானது श्रोत्रेण காதால் கேட்கமுடியாதது. திக்தேவதை முதலியவைகளை அதிஷ்ட்டானமாக உடைய ஆகாச காரியமாகிய (சப்தம்) மனோ விருத்தியுடன் கூடி சப்த லோகத்தை விஷயம் செய்ய முடியாது(தெரிந்து கொள்ள முடியாது) இந்தக் காதானது கேட்கிறது என்பது சைதன்யஜ்யோதியால் விஷயம் செய்கிறது(கேட்கிறது) என்பது பிரசித்தம். तदेव முதலியவை முன்பு போல் ஆகும்.
यत्प्राणेन न प्राणिति येन प्राणः प्रणीयते ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ९ ॥
यत् प्राणेन घ्राणेन पार्थिवेन नासिकापुटान्तरवस्थितेनान्तःकरणप्राणवृत्तिभ्यां सहितेन यन्न प्राणिति गन्धवन्न विषयीकरोति, येन चैतन्यात्मज्योतिषावभास्यत्वेन स्वविषयं प्रति प्राणः प्रणीयते तदेवेत्यादि सर्वं समानम् ॥
ப்ராண விருத்தி அந்தக் கரண விருத்தியுடன் கூடி மூக்கின் துவாரத்தில் இருந்துக் கொண்டு அவ்வாறேப்ருதிவியின் காரிய பூதமான பிராணன் அதாவது க்ராணேந்திரியத்தின் மூலமாக (ப்ரணன்-கந்தம்) வாசனை (கந்தத்தைப் போல்) க்ராணேந்திரியத்திற்கு விஷயமாவதில்லை. ஆனால் இந்த சைதன்ய ஆத்ம ஜ்யோதியினால் பிரகாசப்படுத்தப்பட்டு க்ராணேந்திரியம் தன்னுடைய விஷயத்தைக் குறித்து பிரவிருத்திக்கிறது.(பிரகாசப்படுத்துகிறது) तदेव முதலியவை முன் போல் ஆகும்.
इति प्रथमखण्डभाष्यम् ॥