‘केनेषितम्’ इत्याद्योपनिषत्परब्रह्मविषया वक्तव्येति नवमस्याध्यायस्यारम्भः । प्रागेतस्मात्कर्माण्यशेषतः परिसमापितानि, समस्तकर्माश्रयभूतस्य च प्राणस्योपासनान्युक्तानि, कर्माङ्गसामविषयाणि च । अनन्तरं च गायत्रसामविषयं दर्शनं वंशान्तमुक्तं कार्यम् ।
(अनुवादः) “கேனஇஷிதம்” முதலிய உபநிஷத்பர பரஹ்ம விஷயத்தைப் பற்றிக்கூறவேண்டும் என்பதற்காக ஒன்பதாவது அத்தியாயம் ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கு முன் (எட்டு அத்தியாயங்களில்)இந்தக் கர்மங்களைப் பற்றி மிச்சமின்றி முற்றிலும் கூறப்பட்டுள்ளது. எல்லா கர்மங்களுக்கும் ஆஸ்ரயமான பிராணனுடைய (ஹிரண்யகர்பனுடைய) உபாசனைகள், கர்மங்களின் அங்கமான சாம விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. அதன் பின் காயத்ரசாம விஷயதர்சனமும், (சிஷ்யன், ஆசிரியர்) இவர்களின் வம்ச பரம்பரை அறுபடாமல் தொடர்வதற்கான “வம்ச” விவரமாக விளக்கப்பட்டுள்ளன.
(அனுவாதம்)கூறப்பட்ட எல்லா கர்மங்களும், ஞானங்களும்,(உபாசனைகளும்) நன்கு அனுஷ்டித்த நிஷ்காம முமூக்ஷுவிற்கு சித்தசுத்தியின் பொருட்டு ஆகிறது. ஞானமற்ற சகாமனுக்கு கேவலம் சிரௌத கர்மாக்கள், ஸ்மார்த்த கர்மாக்கள் தக்ஷிணாயன மார்க்கத்தை அடைந்து புனராவிர்த்தி (மறுபடியும், மறுபடியும் ஜன்மம் எடுத்தல்) பொருட்டு ஆகிறது. ஸ்வபாவமாகவே சாஸ்திரத்திற்கு மாறான ப்ரவிர்த்தியால் பசு முதல் ஸ்தாவர வரையிலான கீழான கதி ’अधोगतिः’ யை அடைகிறார்கள். எவர்கள் உத்தராயணம், தக்ஷிணாயணம் ஆகிய இரண்டு மார்க்கங்களிலும் இல்லையோ அவர்கள் எப்பொழுதும் சுற்றிக்கொண்டே இருக்கும் ஜீவர்களாகிறார்கள். அவர்கள் பிறப்பதும், இறப்பதுமாகவே இருப்பார்கள்.இது மூன்றாவது மார்க்கமாகும் என்ற சுருதியினாலும் “இந்த பிரசித்தமான மூன்றுவகை பிரஜைகளும் தர்மத்தின் மூலம் 3 வழிகளை அடைகிறார்கள்” என்ற மந்திரத்தால் அறிகிறோம்.
(அனுவாதம்)வெளிவிஷயங்களாயும், அநித்தியமாயும் உள்ள சாத்ய சாதன சம்பந்தத்தால் இப்பிறவியிலோ, முற்பிறவிகளிலோ, நிஷ்கர்மாக்கள் அல்லது விசேஷமான சம்ஸ்காரம் வெளிப்பட்டபொழுது நிஷ்காமனாயும், சித்தசுத்தி உடையவனுமான விரக்தனுக்கு ப்ரத்யக் ஆத்ம விஷயத்தில் ஜிக்ஞாசை (அறிய வேண்டும் என்றஇச்சை) உண்டாகிறது. அந்த இந்த வஸ்துவைப் பற்றி கேள்வி பதில் ரூபமாக சுருதியில் ’केनेषितम्’(கேனேஷிதம்) என்பது முதலியவை உபதேசிக்கப்படுகிறது. “ஸ்வயம்புவாகிய பரமாத்மா இந்திரியங்களை பஹிர்(வெளி) முகமாகப் பிரித்து அளித்திருக்கிறார். ஆகையால் வெளிவிஷயங்களில் பார்வை உடையவைகளாகி அந்தராத்மாவைப் பார்ப்பதில்லை” என்று காடகத்திலும், “உலகத்தில் கர்மங்களினால் சேகரித்த கர்மபலன்களை பரீக்ஷித்த ப்ராஹ்மணானவன் கர்மங்களினால் அக்ருதம் எனப்படும் நித்யமோக்ஷம் ஒரு போதும் அடையமுடியாது என்று அறிந்து அதனால் வைராக்கியம் அடைந்தவன் அதை அறிவதன் பொருட்டு சமித் பாணியுடன் ச்ரோத்திரிய ப்ரஹ்மநிஷ்ட்டராகிய குருவை அடைய வேண்டும்” என்பது முதலிய அதர்வணத்தினாலும் அறிய வேண்டும்.
(அனுவாதம்)இவ்வாறு விரக்த புருஷனுக்கு ப்ரத்யக் ஆத்ம விஷய விக்ஞானமானது கேட்பதற்கும் (சிரவணத்திற்கும்) மனனம் செய்வதற்கும் அறிவதற்கும் சாமர்த்தியம் உண்டாகிறது. மற்றவைகளால் அல்ல. இந்த ப்ரத்யக் ஆத்ம பிரஹ்ம ஞானத்தால் காம கர்ம பிரவிர்த்தியின் காரணமான, சம்சார பீஜமாகிய அக்ஞானம் முற்றிலும் நிவர்த்தி ஆகிறது. “ஏகத்துவத்தை அறிந்தவனுக்கு மோஹமேது? சோகம் ஏது?” என்றஈஸாவாஸ்ய மந்திரத்தினாலும், “ ஆத்மவித் சோகத்தைக் கடக்கிறான்” அந்தபராவர திருஷ்ட்டியை உடையவனுடைய எல்லா சமுசயங்களும் நீங்குகின்றன, அவனுடைய எல்லா கர்மங்களும் நசிக்கின்றன என்பது முதலான சுருதிகளினாலும் அறிகிறோம்.
(அனு)(பூர்வபக்ஷி) இது கர்மத்துடன் கூடிய உபாஸனத்தாலும் அடையலாமே எனில்? (சித்) முடியாது. வாஜசனேயகத்தில் அதற்கு வேறு காரணம் கூறப்பட்டிருப்பதால் “எனக்கு மனைவி வேண்டும்” என்று பிருஹதாரண்யத்தில் ஆரம்பித்து “இந்த லோகம் புத்திரனால் ஜயிக்கப்பிடுகிறது. மற்றகர்மத்தினால் அல்ல.கர்மத்தினால் பித்ரு லோகம், வித்தையினால் (உபாசனையினால்) தேவலோகம் என்று ஆத்மாவைக் காட்டிலும் வேறு மூன்று லோகங்களின் காரணத்துவம் வாஜசனேயகத்தில் கூறப்பட்டுள்ளது.
तत्रैव च पारिव्राज्यविधाने हेतुरुक्तः
‘किं प्रजया करिष्यामो येषां नोऽयमात्मायं लोकः’ (बृ. उ. ४ । ४ । २२) इति । तत्रायं हेत्वर्थः — प्रजाकर्मतत्संयुक्तविद्याभिर्मनुष्यपितृदेवलोकत्रयसाधनैरनात्मलोकप्रतिपत्तिकारणैः किं करिष्यामः । न चास्माकं लोकत्रयमनित्यं साधनसाध्यमिष्टम् , येषामस्माकं स्वाभाविकोऽजोऽजरोऽमृतोऽभयो न वर्धते कर्मणा नो कनीयान्नित्यश्च लोक इष्टः । स च नित्यत्वान्नाविद्यानिवृत्तिव्यतिरेकेणान्यसाधननिष्पाद्यः । तस्मात्प्रत्यगात्मब्रह्मविज्ञानपूर्वकः सर्वैषणासंन्यास एव कर्तव्य इति ।
“நமக்கு ஆத்ம லோகத்திலேயே இஷ்டம் இருப்பதால் இந்தப் பிரஜைகளை வைத்து என்ன செய்யப் போகிறோம்” என்று பிருஹதாரண்ய உபநிஷத்தில் சந்நியாச பரிக்ரஹ விதானத்தில் காரணம் கூறப்பட்டுள்ளது. இங்கு அதற்கான ஹேது(காரணம்) கூறப்படுகிறது. புத்திரன், கர்ம, அதனுடன் கூடிய உபாசனை இவைகளால் மனுஷ்ய, பித்ரு,தேவலோகம் என்ற மூன்று லோகங்களாகிய அநாத்ம லோகத்தின் அடைவிற்குக் காரணமானவைகளை வைத்து நாம் என்ன செய்யப்போகிறோம், நமக்கு சாதனசாத்யமாயும், அநித்யமாயும் உள்ள மூன்று லோகங்களிலும் நமக்கு இஷ்டம் இல்லை. நமக்கு எவைகளில் ஸ்வபாவமாகவே பிறப்பற்றதாயும், மூப்பற்றதாயும், அம்ருதமாயும், அபயமாயும், கர்மத்தினால் வளர்ச்சியோ, குறையோ இல்லாததும், நித்யமானதுமான லோகமானது இஷ்ட்டமாகும். அது நித்யமாய் இருப்பதால் அவித்யா நிவிர்த்தியைத் தவிர வேறு சாதனத்தால் சம்பாதிக்க முடியாது.ஆகையால் ப்ரத்யக் ஆத்ம பிரஹ்ம விக்ஞான பூர்வமாய் எல்லா ஏஷணைகளையும் சந்நியாசம் செய்ய வேண்டும்.
कर्मसहभावित्वविरोधाच्च प्रत्यगात्मब्रह्मविज्ञानस्य । न ह्युपात्तकारकफलभेदविज्ञानेन कर्मणा प्रत्यस्तमितसर्वभेददर्शनस्य प्रत्यगात्मब्रह्मविषयस्य सहभावित्वमुपपद्यते, वस्तुप्राधान्ये सति अपुरुषतन्त्रत्वाद्ब्रह्मविज्ञानस्य । तस्माद्दृष्टादृष्टेभ्यो बाह्यसाधनसाध्येभ्यो विरक्तस्य प्रत्यगात्मविषया ब्रह्मजिज्ञासेयम् ‘केनेषितम्’ इत्यादिश्रुत्या प्रदर्श्यते । शिष्याचार्यप्रश्नप्रतिवचनरूपेण कथनं तु सूक्ष्मवस्तुविषयत्वात्सुखप्रतिपत्तिकारणं भवति । केवलतर्कागम्यत्वं च दर्शितं भवति ॥
வஸ்து பிரதானமாய் இருப்பதால் ப்ரஹ்ம ஞானமானது அபுருஷதந்திரமாகும். ப்ரத்யக் ஆத்மப்ரஹ்ம ஞானத்திற்கு கருமத்துடன் இருப்பது என்பது (சஹபாவித்துவம் என்பது) விரோதமாகும். மேலும் காரகபல பேதங்களுடன் கூடிய கர்மத்தினால் எல்லா பேதங்களும் அற்ற ப்ரத்யக் ஆத்ம பிரஹ்ம விஷயத்திற்கு சகபாவித்துவம் ஒருகாலும் உண்டாகாது. ஆகையால் திருஷ்டாத்ருஷ்ட பாஹ்ய சாதன சாத்தியங்களில் விரக்தி அடைந்த புருஷன் பிரத்யக் ஆத்ம விஷயமான ப்ரஹ்மத்தை அடையவேண்டும் என்றஜிஞ்ஞாசை (இச்சை) ஏற்படுவதற்காக “கேனேஷிதம்” முதலிய சுருதிகளால் உபதேசிக்கப்படுகிறது. சிஷ்யன், குரு மூலமாக கேள்வி, பதில் ரூபமாக கூறப்பட்டது. சூக்ஷ்ம விஷயமாக இருப்பதால் சுலபமாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதே காரணமாகும். கேவல தர்க்கத்தினால் மாத்திரம் அறிந்து கொள்ள முடியாது என்பதும் காண்பிக்கபட்டதாகிறது.
இதை ( பிரஹ்மஜிக்ஞாசாவை) தர்க்க மூலமாக அடைய முடியாது.” “(க.உப )” சுருதியினாலும், “குருவை (ஆசாரியனை) பிரஹ்மம் என்று அறி” “(சா.உப)” ஆசாரியர் மூலமாக அடைந்த பிரஹ்ம வித்தை மேன்மை அடைகிறது. “சா.உப” (ஆசாரியாரை அணுகி) அவரை வணங்குவதால் (அவ்வான்மாவை அறிவாயாக)” “கீதை” என்பது முதலான ச்ருதி ஸ்மிருதி நியாயத்தால் ஏதோ ஒரு சிஷ்யன் பிரஹ்ம நிஷ்ட்டராகிய குருவை முறைப்படி அணுகி பிரத்யக்ஆத்ம விஷயத்தைத் தவிர மற்றவைகளில் புகலிடம் இல்லை என்று உணர்ந்து (அபயமாயும், நித்தியமாயும், சிவமாயும், அசலமாயும் உள்ளதை) பயமற்றதும், என்றும் மாறாது ஒரே நிலையாய் இருப்பதும், மங்களமானதும், தன் நிலையிலிருந்து என்றும் அசைவோ, நழுவலோ அற்றதுமான ஆன்மாவைப் பற்றிக் கேட்கிறான் என்பதாக சிஷ்யனின் முதல் கேள்வியுடன் இந்த உபநிஷத் தொடங்குகிறது.
केनेषितं पतति प्रेषितं मनः केन प्राणः प्रथमः प्रैति युक्तः ।
केनेषितां वाचमिमां वदन्ति चक्षुःश्रोत्रं क उ देवो युनक्ति ॥ १ ॥
केन इषितं केन कर्त्रा इषितम् इष्टमभिप्रेतं सत् मनः पतति गच्छति स्वविषयं प्रतीति सम्बध्यते । इषेराभीक्ष्ण्यार्थस्य गत्यर्थस्य चेहासम्भवादिच्छार्थस्यैवैतद्रूपमिति गम्यते । इषितमिति इट्प्रयोगस्तु च्छान्दसः । तस्यैव प्रपूर्वस्य नियोगार्थे प्रेषितमित्येतत् ।
केन (கேன) इषितं (இஷிதம்) எந்த கர்த்தாவால் விரும்பப்பட்டதாகி प्रेषितम् (ப்ரேஷிதம்) ஏவப்பட்ட (செலுத்தப்பட்ட) मनः (மன) மனது पतति (பததி) தன் விஷயத்தைக் குறித்து செல்லுகிறது. इष् (இஷ்) என்றதாதுவிற்கு அடிக்கடி என்ற அர்த்தம், செல்லுதல் என்றஅர்த்தம் இங்கு பொருந்தாததால் இச்சை என்றஅர்த்தத்தில் இந்த ரூபம் வந்தது என்று அறிகிறோம்.(इषितम्) இஷிதம் என்பது (इट्प्रयोगः) இட்ப்ரயோகமானது சாந்தஸமாகும். அதையே முதல் முதலில் பிரேரணை (நியோகம்) என்ற அர்த்தத்தில் ப்ரேஷிதம் என்று கூறப்பட்டது.
तत्र प्रेषितमित्येवोक्ते प्रेषयितृप्रेषणविशेषविषयाकाङ्क्षा स्यात् — केन प्रेषयितृविशेषेण, कीदृशं वा प्रेषणमिति । इषितमिति तु विशेषणे सति तदुभयं निवर्तते, कस्येच्छामात्रेण प्रेषितमित्यर्थविशेषनिर्धारणात् ।
ப்ரேஷிதம் (ஏவப்பட்டது) என்று மட்டும் கூறினால் எவரால் ஏவப்பட்டது, எவ்வாறு ஏவப்பட்டது என்றசங்கை வரும். இஷிதம் (விருப்பத்தால்) என்றவிசேஷணத்தால் எவருடைய இச்சையால் என்பதாலேயே பிரேஷிதம் என்றஅர்த்த விசேஷம் இருப்பதால் அந்த இரண்டு சங்கையும் நீங்கிவிடுகிறது.
यद्येषोऽर्थोऽभिप्रेतः स्यात् , केनेषितमित्येतावतैव सिद्धत्वात्प्रेषितमिति न वक्तव्यम् । अपि च शब्दाधिक्यादर्थाधिक्यं युक्तमिति इच्छया कर्मणा वाचा वा केन प्रेषितमित्यर्थविशेषोऽवगन्तुं युक्तः ।
(சங்கை)இவ்வாறு இந்த அர்த்தமே அபிப்ராயமாக இருந்தால். केनेषितं (கேனஇஷிதம்) எதன் இச்சையால் என்றஅர்த்தமே சித்திப்பதால் प्रेषितं (ப்ரேஷிதம்) ஏவப்பட்டு என்று கூறவேண்டியதில்லை. மேலும் அதிக சப்தங்களாலும் (பதங்களாலும்) அதிக அர்த்தம் ஏற்படும் என்றஇச்சையால் கர்மாவினாலோ வாக்கினாலோ என்று केन प्रेषितम् (கேனப்ரேஷிதம்) எதனால் ஏவப்பட்டது என்றஅந்த விசேஷத்தை அறிய முடியும்.
न, प्रश्नसामर्थ्यात् ; देहादिसङ्घातादनित्यात्कर्मकार्याद्विरक्तः अतोऽन्यत्कूटस्थं नित्यं वस्तु बुभुत्समानः पृच्छतीति सामर्थ्यादुपपद्यते । इतरथा इच्छावाक्कर्मभिर्देहादिसङ्घातस्य प्रेरयितृत्वं प्रसिद्धमिति प्रश्नोऽनर्थक एव स्यात् ।
(சமாதானம்) கேள்வியின் சாமர்த்தியத்தால் அவ்வாறு அல்ல. தேஹாதி சங்காதங்களிலிருந்தும், அநித்தியமான கர்ம காரியங்களிலிருந்தும் விரக்தி அடைந்தவனாய் இருப்பதால் அநித்தியத்தைத் தவிர வேறான கூடஸ்த்தனாயும், நித்யமாயும் உள்ள வஸ்துவை அறிந்துகொள்வதில் இச்சை உள்ளவன் கேட்கிறான் என்பது கேள்வியின் சாமர்த்தியத்தால் அறிகிறோம். இவ்வாறு அல்லாமல் இச்சை, வாக், கர்ம இவைகளினால் தேஹசங்காதம் பிரேரணை செய்கின்றன என்பது பிரசித்தம். ஆகையால் இந்த கேள்வியே அர்த்தமற்றதாகிவிடும்.
एवमपि प्रेषितशब्दस्यार्थो न प्रदर्शित एव ।
(சங்கை) இவ்வாறானால் प्रेषितम् (ப்ரேஷிதம்) ஏவப்பட்டது என்றசப்தத்தின் அர்த்தமே காண்பிக்கப்படவில்லையே எனில்
न ; संशयवतोऽयं प्रश्न इति प्रेषितशब्दस्यार्थविशेष उपपद्यते । किं यथाप्रसिद्धमेव कार्यकरणसङ्घातस्य प्रेषयितृत्वम् , किं वा सङ्घातव्यतिरिक्तस्य स्वतन्त्रस्येच्छामात्रेणैव मनआदिप्रेषयितृत्वम् , इत्यस्यार्थस्य प्रदर्शनार्थं केनेषितं पतति प्रेषितं मन इति विशेषणद्वयमुपपद्यते ।
(சமாதானம்) அவ்வாறு அல்ல. இந்த கேள்வியானது சந்தேஹ விக்ஷதே்தின் பேரில் எற்பட்டு இருப்பதால் प्रेषित (ப்ரேஷித) ஏவுதல் என்ற சப்தத்திற்கு (பதத்திற்கு) அர்த்த விசேஷம் ஏற்படுகிறது. எவ்வாறு காரிய காரண சங்காதத்திற்கு பிரேரணை செய்தல் உலகில் பிரசித்தமோ அவ்வாறா? அல்லது சங்காதத்தைக் காட்டிலும் வேறான சுவதந்திரமாக உள்ளதின் இச்சாமாத்திரத்தினாலேயே மனமுதலியவைகள் பிரேரணை செய்யப்படுகின்றனவா? என்றஅர்த்தத்தினால் கேள்வியின் அர்த்தமானது केनेषितं पतति प्रेषितं मनः (கேனேஷிதம் பததி, ப்ரேஷிதம் மன) எதனால் மனமானது இச்சிக்கிறது எதனால் ப்ரேரிக்கப்படுகிறது என்று இரு விசேஷணங்கள் பொருந்துகிறது.
ननु स्वतन्त्रं मनः स्वविषये स्वयं पततीति प्रसिद्धम् ; तत्र कथं प्रश्न उपपद्यते इति, उच्यते — यदि स्वतन्त्रं मनः प्रवृत्तिनिवृत्तिविषये स्यात् , तर्हि सर्वस्यानिष्टचिन्तनं न स्यात् । अनर्थं च जानन्सङ्कल्पयति । अभ्यग्रदुःखे च कार्ये वार्यमाणमपि प्रवर्तत एव मनः । तस्माद्युक्त एव केनेषितमित्यादिप्रश्नः ।
ஆனால் ஸ்வதந்திரமானது தன்னுடைய விஷயங்களில் தானாகவே செல்கிறது என்பது பிரசித்தம். இங்கு எவ்வாறு சந்தேஹம் எழுகிறது எனில் கூறப்படுகிறது. மனமானது ப்ரவிருத்தி, நிவிர்த்தி மார்கத்தில் சுதந்திரமாய் இருந்தால் அதற்கு இஷ்டமில்லாததில் சிந்திக்காது. அது நல்லதல்ல என்று தெரிந்தும் சங்கல்பிக்கிறது. மிகவும் துக்கம் தரக்கூடியதை நீக்க முடியும் என்றாலும் மனது பிரவிர்த்திக்கவே செய்கிறது. ஆகையால் केनेषितम् (கேனேஷிதம்) யாருடைய இச்சையால் என்பது முதலிய கேள்விகள் (प्रश्नः) எழுகிறது.
केन प्राणः युक्तः नियुक्तः प्रेरितः सन् प्रैति गच्छति स्वव्यापारं प्रति । प्रथम इति प्राणविशेषणं स्यात् , तत्पूर्वकत्वात्सर्वेन्द्रियप्रवृत्तीनाम् ।
केन (கேன) யாரால் प्रथम (ப்ரதம) प्राणः (ப்ராண) முதல்வனான ப்ராணன் प्रैैति (ப்ரைதி) தன்னுடைய செயலைக் குறித்துச் செல்லுகிறது. இங்கு எல்லா இந்திரியங்களும் ப்ராணனை முன்னிட்டுக் கொண்டே செயல்படுவதால் प्रथमः (ப்ரதம:) முதன்மையானது என்ற விசேஷணம் ப்ராணனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது
केन इषितां वाचम् इमां शब्दलक्षणां वदन्ति लौकिकाः । तथा चक्षुः श्रोत्रं च स्वे स्वे विषये क उ देवः द्योतनवान् युनक्ति नियुङ्क्ते प्रेरयति ॥
केन इषितां (கேனஇஷிதாம்) யாரால் ஏவப்பட்டதாகி इमां वाचं (இமாம் வாச்சம்) இந்த சப்தரூபமான வார்த்தைகளை உலகத்தோர் वदन्ति (வதந்தி) சொல்லுகின்றனர், (பேசுகின்றனர்.) அவ்வாறேचक्षुः श्रोत्रम् (சக்ஷு, ச்ரோத்ரம்) கண்ணையும், காதையும் தன் தன் செயல்களில் क उ देवः (க. உ. தேவ) எந்தப்ரகாசிக்கும் தன்மை உள்ள தேவன் युनक्ति (யுனக்த்தி) ஈடுபடும் படி தூண்டுகிறான்.
श्रोत्रस्य श्रोत्रं मनसो मनो यद्वाचो ह वाचं स उ प्राणस्य प्राणः ।
चक्षुषश्चक्षुरतिमुच्य धीराः प्रेत्यास्माल्लोकादमृता भवन्ति ॥ २ ॥
एवं पृष्टवते योग्यायाह गुरुः । शृणु यत् त्वं पृच्छसि, मनआदिकरणजातस्य को देवः स्वविषयं प्रति प्रेरयिता कथं वा प्रेरयतीति ।
(அஃகை பா) இவ்விதம் கேட்ட யோக்யனான சிஷ்யனை நோக்கி குரு கூறுகிறார். மனம் முதலிய இந்திரிய சமூஹத்தைத் தனது விஷயத்தைக் குறித்து ப்ரேரனை செய்யும் தேவன் யார்? எவ்விதம் ப்ரேரனை செய்கிறார்? என்று நீ கேட்டாயோ அவ்விஷயத்தைக் கேள்.
श्रोत्रस्य श्रोत्रं (ச்ரோத்ரஸ்ய ச்ரோத்ரம்) காதுக்குக் காது-எதனால் கேட்கப்படுகிறதோ அது காது. சப்தத்தை கேட்பதற்கான சாதனமானது சப்தத்தைக் கிரஹிக்கும் இந்திரியமாகும். அதற்கு அது காதாகும். அதைக் குறித்து உன்னால் கண், காது இவைகளை எந்த தேவன் அந்த அந்த திறமையுடன் செயல்படச் செய்கிறான் என்று இவ்வாறு உன்னால் கேட்கப்பட்டது.
असावेवंविशिष्टः श्रोत्रादीनि नियुङ्क्त इति वक्तव्ये, नन्वेतदननुरूपं प्रतिवचनं श्रोत्रस्य श्रोत्रमिति ।
(சங்கை) இந்த குணங்கள் உடைய இவன் ஸ்ரோத்திரம் முதலியவைகளை செயல்படச் செய்கிறவன் யார்? என்ற கேள்விக்கு காதுக்குக்காது என்ற இந்த பதில் பொருந்தாது.
नैष दोषः, तस्यान्यथा विशेषानवगमात् । यदि हि श्रोत्रादिव्यापारव्यतिरिक्तेन स्वव्यापारेण विशिष्टः श्रोत्रादिनियोक्ता अवगम्येत दात्रादिप्रयोक्तृवत् , तदेदमननुरूपं प्रतिवचनं स्यात् । न त्विह श्रोत्रादीनां प्रयोक्ता स्वव्यापारविशिष्टो लवित्रादिवदधिगम्यते । श्रोत्रादीनामेव तु संहतानां व्यापारेणालोचनसङ्कल्पाध्यवसायलक्षणेन फलावसानलिङ्गेनावगम्यते — अस्ति हि श्रोत्रादिभिरसंहतः, यत्प्रयोजनप्रयुक्तः श्रोत्रादिकलापः गृहादिवदिति । संहतानां परार्थत्वादवगम्यते श्रोत्रादीनां प्रयोक्ता । तस्मादनुरूपमेवेदं प्रतिवचनं श्रोत्रस्य श्रोत्रमित्यादि ।
(சமாதானம்) அந்தப்ரேரணை செய்கிறவனுக்கு வேறு எந்த விசேஷ ரூபமும் கிடையாது ஆகையால் முற்கூறிய தோஷம் கிடையாது. கத்தி முதலியவைகளை பிரேரிக்கிறவன் வேறாய் இருப்பது போல் ச்ரோத்ர முதலியவைகளுக்கு தன்னுடைய வியாபாரங்களைத் தவிர (செயல்களைத் தவிர) வேறு தனியாக தன்னுடைய வியாபாரத்துடன் இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் பதில் இருந்திருக்கும். ஆனால் கத்தியால் வெட்டுபவனைப் போல் எந்த ஒன்றும் ஸ்ரோத்திரம் முதலியவைகளின் தன் தன் வியாபாரத்துடன் கூடிய தூண்டுபவன் அறியப்படவில்லை. அவயவங்களுடன்சேர்ந்து உண்டான ஸ்ரோத்திரம் முதலியவைகளை எந்த சிதாபாசனின் பலவியாப்தியின் லிங்க ரூபங்களான ஆலோசனை, சங்கல்பம் அவ்வாறே நிச்சயம் முதலிய ரூபவியாபாரங்கள் உண்டோ அதனால் அறியப்படுகிறது. கிருஹம் முதலியவைக்கு சமானமாக எதன் பிரயோஜனத்திற்காக ஸ்ரோத்திரம் முதலிய கரண சமூகம் பிரவிர்த்திக்கின்றதோ அது ஸ்ரோத்திரம் முதலியவைகளிலிருந்து (தனியாக) ஏதோ ஒரு தத்துவம் அவசியம் உள்ளது. சேர்ந்து உள்ள பதார்த்தம் வேறு சாதன ரூபபதார்த்தமாகிறது. இதனால் ஏதோ ஒன்று ஸ்ரோத்திரம் முதலியவைகளைப் பிரேரணை செய்பவன் அவசியம் இருப்பதை அறிய முடிகிறது. ஆகையால் (ஸ்ரோத்திரஸ்ய ஸ்ரோத்திரம்) என்று கூறப்பட்ட பதில்கள் சரியானதே.
कः पुनरत्र पदार्थः श्रोत्रस्य श्रोत्रमित्यादेः ? न ह्यत्र श्रोत्रस्य श्रोत्रान्तरेणार्थः, यथा प्रकाशस्य प्रकाशान्तरेण ।
(சங்கை)மேலும் இங்கு காதுக்குக் காது என்பதற்கு பதத்தின் அர்த்தம் என்ன? எவ்வாறு பிரகாசத்திற்கு அன்யப்ரகாசம் தேவை இல்லையோ அவ்வாறேகாதிற்கு மற்றொரு காது தேவை இல்லை எனில்?
அவ்வாறு இதற்கு தோஷம் கிடையாது. இங்கு இவ்வாறு இந்த பதத்திற்கு அர்த்தம் செய்யவேண்டும். ஸ்ரோத்திரத்திற்கு தன்னுடைய விஷயத்தை கிரஹிக்கும், சாமர்த்தியம் காணப்படுகிறது. அதாவது ஸ்ரோத்திரத்திற்கு தன்னுடைய விஷயத்தை கிரஹிக்கும் சாமர்த்தியம் ஆத்மஜ்யோதிஸ்ரூபமாயும், நித்தியமாயும் தன்னைப் ப்ரேரகச் செய்பவன் அற்றதாயும், எல்லாவற்றுள்ளும் உள்ள சைதன்யஸ்வரூபத்தினால் அல்லவா இருக்கிறது. அசத்தாய் இருந்தால் அவ்வாறு சாமர்த்தியம் இருக்காது. ஆகையால் ஸ்ரோத்திரத்திற்கு ஸ்ரோத்திரம் (காதுக்கு காது) என்பது பொருத்தமாய் இருக்கிறது. அவ்வாறேமற்றச்ருதிகளிலும் “ இந்த ஆத்மா தன் ஜ்யோதிஸாலேயே பிரகாசிக்கிறது.” (बृ) “அதனுடைய ப்ரகாசத்தால் இவை எல்லாம் ப்ரகாசிக்கிறது.” (क,श्वे,मु) “சூரியன் எந்த தேஜஸ்ஸின் ஜ்வலனத்தால் தபிக்கிறது” (तै) முதலியவைகளாலும் “எந்த தேஜஸ்ஸானது சூரியனிடத்தில் இருந்துக்கொண்டு ஜகத் முழுவதையும் பிரகாசிக்கச்செய்கிறது..” “ஹே பாரத! க்ஷதே்திரம் க்ஷதே்திரமுடையவனையும் அவ்வாறேமுழுவதையும் பிரகாசிக்கச் செய்கிறது. (गीता) காடகத்திலும் அது நித்தியங்களுக்கு நித்தியமாயும், சேதனங்களுக்கு சேதனம் என்று கூறப்பட்டுள்ளது. ச்ரோத்திராதிகளே எல்லாவற்றின் ஆத்ம பூதமான சேதனம் என்று அக்ஞானிகளுக்கு பிரசித்தமாய் இருக்கிறது. அந்தக் கருத்தானது இங்கு நிராகரிக்கப்படுகிறது. வித்வான்களின் புத்தியால் அறியப்படுவதாயும், எல்லாவற்றைக் காட்டிலும் ஆந்தரமானதாயும், கூடஸ்தன், அஜம், அம்ருதம். அபயமாயும், ஸ்ரோத்ராதிகளுக்கு ஸ்ரோத்தராதிகளுக்கான சாமார்த்தியத்திற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்பது கூறிய பதிலின் சப்தார்த்தத்தினால் பொருந்துகிறது.
तथा मनसः अन्तःकरणस्य मनः । न ह्यन्तःकरणम् अन्तरेण चैतन्यज्योतिषो दीधितिं स्वविषयसङ्कल्पाध्यवसायादिसमर्थं स्यात् । तस्मान्मनसोऽपि मन इति । इह बुद्धिमनसी एकीकृत्य निर्देशो मनस इति ।
அவ்வாறே மனதிற்கு (அந்தக் கரணத்திற்கு) மனமாகும் சைதன்ய ஜ்யோதியின் ஒளியைத் தவிர வேறு ஒன்றால் அந்தக் கரணமானது தன்னுடைய விஷயங்களான சங்கல்பம் செய்தல், நிச்சயம் செய்தல் முதலிய சாமர்த்தியம் உடையதாகாது. ஆகையால் மனதிற்கு மனம் என்பது இங்கு புத்தியையும், மனதையும் ஒன்றாக மனம் என்று நிர்தேசம், செய்யப்பட்டுள்ளது.
यद्वाचो ह वाचम् ; यच्छब्दो यस्मादर्थे श्रोत्रादिभिः सर्वैः सम्बध्यते — यस्माच्छ्रोत्रस्य श्रोत्रम् , यस्मान्मनसो मन इत्येवम् । वाचो ह वाचमिति द्वितीया प्रथमात्वेन विपरिणम्यते, प्राणस्य प्राण इति दर्शनात् । वाचो ह वाचमित्येतदनुरोधेन प्राणस्य प्राणमिति कस्माद्द्वितीयैव न क्रियते ? न ; बहुनामनुरोधस्य युक्तत्वात् । वाचमित्यस्य वागित्येतावद्वक्तव्यं स उ प्राणस्य प्राण इति शब्दद्वयानुरोधेन ; एवं हि बहूनामनुरोधो युक्तः कृतः स्यात् ।
यद्वाचो ह वाचम् (யத்வாச்சோ ஹ வாச்சம்) எது வாக்கிற்கு வாக் என்பதில் எது यत् என்றசப்தமானது ஸ்ரோத்திரம் முதலிய எல்லாவற்றிற்கும் “எதனால்” यस्मात् என்றहेतुः அர்த்தத்தில் வருகிறது. எவ்வாறு எனில் எதனால் அது ஸ்ரோத்திரத்திற்கு ஸ்ரோத்திரம், எதனால் மனதிற்கு மனம் என்று இவ்வாறு இருப்பதால் இங்கு वाचो (வாச்சோ) ह (ஹ) वाचम् (வாசம்) என்பது இரண்டாவது விபக்தி. ஆனால் இங்கு முதல் விபத்தியாக எற்க வேண்டும். ஏன் எனில் प्राणस्य प्राणः பிராணஸ்ய ப்ராண: என்று இருப்பதால் வாச்சோஹி வாசம் என்பது போல் பிராணஸ்ய பிராணம் என்று ஏன் இரண்டாவது விபக்தியில் கூறப்படவில்லை. அவ்வாறு கூறுவது உசிதமாகாது. ஏன் எனில் அதிகமானவையின் உடன்பாடு கிடைக்கிறது வாசம் என்பதில் “வாக்” என்று கூறப்படுகிறது. ஆனால் स उ प्राणस्य प्राणः என்று सः प्राणः அந்த ப்ராணன் என்று இரண்டு சப்தங்கள் முதல் விபத்தியில் வருவதால், இவ்வாறு அதிகமானவை உடன்படுவதால் முற்கூறியது பொருந்தும்.
கேட்ட வஸ்துவை விளக்குவதற்கு முதல் வேற்றுமையே பொருந்தும். எந்த பிராணன் எனப்படும் விருத்தி விசேஷமாகிய ப்ராணனைக் குறித்துக் கேட்டாயோ அந்தப் ப்ராணன் தான் பிராணனுக்கு பிராணன்(மூச்சுவிடுவதற்கான) சாமர்த்தியத்தைக் கொடுக்கிறது. ஆத்மாவின் இருப்பு (அதிஷ்ட்டானம்) இல்லாமல் பிராணனால் ஒன்றும் செய்ய இயலாது. (तै) , “ஆனந்தஸ்வரூப ஆகாசம் இல்லாவிடில் எவன் உயிர் வாழ்வான், மேலும் எவன்தான் ஸ்வாசிப்பான்” “அந்தப் பிராணனை மேலே எடுத்துச் செல்கிறது, அவ்வாறே அபானனைக் கீழ்நோக்கிச் செலுத்துகிறது,” (क) என்பது முதலிய சுருதிகளால் அறிகிறோம்.இங்கும் அவ்வாறே கூறப் போகிறது எதனால் ப்ராணன் சுவாசிக்கிறதோ (பிராணன் வேலை செய்கிறதோ) அதுவே ப்ரஹ்மம் என்று நீ அறி என்பதாகும்.
श्रोत्रादीन्द्रियप्रस्तावे घ्राणस्येव प्राणस्य न तु युक्तं ग्रहणम् ।
ஆனால் ஸ்ரோத்திராதி இந்திரியங்களைக் கூறும் பொழுது க்ராணேந்திரியத்தைக் (நுகரும் இந்திரியத்தைக்) கிரஹித்துக் கொள்ளவேண்டுமே தவிர பிராணனை அல்ல.
सत्यमेवम् । प्राणग्रहणेनैव तु घ्राणस्य ग्रहणं कृतमेव मन्यते श्रुतिः । सर्वस्यैव करणकलापस्य यदर्थप्रयुक्ता प्रवृत्तिः, तद्ब्रह्मेति प्रकरणार्थो विवक्षितः ।
(சமாதானம்) அது உண்மையே, பிராணனைக் கிரஹித்துக் கொண்டதாலேயே க்ராணத்தையும் கிரஹிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. எல்லா கரணங்களுடைய செயல்களும் அதன் (பிரவிர்த்திகளும்) எதன் பொருட்டோ அது பிரஹ்மம் என்பது இந்தப்ரகரணத்தின் அர்த்தமாகும்.
तथा चक्षुषश्चक्षुः रूपप्रकाशकस्य चक्षुषो यद्रूपग्रहणसामर्थ्यं तदात्मचैतन्याधिष्ठितस्यैव । अतश्चक्षुषश्चक्षुः ।
அவ்வாறேचक्षुषश्चक्षू (சக்ஷுஷச்சக்ஷு) என்பது ரூபத்தைப் பிரகாசம் செய்கின்றகண்ணிற்கு ரூபத்தைக் கிரஹிக்கும் சாமர்த்தியம் எதனாலோ அது ஆத்ம சைதன்யத்தினுடைய இருப்பினாலேயேயாகும். ஆகையால் கண்ணிற்குக் கண் எனப்பட்டது.
प्रष्टुः पृष्टस्यार्थस्य ज्ञातुमिष्टत्वात् श्रोत्रादेः श्रोत्रादिलक्षणं यथोक्तं ब्रह्म ‘ज्ञात्वा’ इत्यध्याह्रियते ; अमृता भवन्ति इति फलश्रुतेश्च । ज्ञानाद्ध्यमृतत्वं प्राप्यते । ज्ञात्वा अतिमुच्य इति सामर्थ्यात् श्रोत्रादिकरणकलापमुज्झित्वा — श्रोत्रादौ ह्यात्मभावं कृत्वा, तदुपाधिः सन् , तदात्मना जायते म्रियते संसरति च । अतः श्रोत्रादेः श्रोत्रादिलक्षणं ब्रह्मात्मेति विदित्वा, अतिमुच्य श्रोत्राद्यात्मभावं परित्यज्य — ये श्रोत्राद्यात्मभावं परित्यजन्ति, ते धीराः धीमन्तः । न हि विशिष्टधीमत्त्वमन्तरेण श्रोत्राद्यात्मभावः शक्यः परित्युक्तम् । प्रेत्य व्यावृत्य अस्मात् लोकात् पुत्रमित्रकलत्रबन्धुषु ममाहम्भावसंव्यवहारलक्षणात् , त्यक्तसर्वैषणा भूत्वेत्यर्थः । अमृताः अमरणधर्माणः भवन्ति ।
கேள்வி கேட்டவன் கேள்வியின் அர்த்தத்தை அறிய விரும்புவதால் ஸ்ரோத்திராதிகளின் ஸ்ரோத்திராதிரூப பிரஹ்மத்தை “அறிந்து” என்பதை அத்யாஹாரம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏன் எனில் அம்ருதத்தை அடைகிறார்கள் என்று பல சுருதி கூறி இருப்பதால் அவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும். ஞானத்தால் முக்தி அடைய முடியும் என்பதால் ஞானத்தால் அல்லவா அம்ருதத்துவம் அடையப்படுகிறது. ஜீவன் ச்ரோத்திரம் முதலிய கரணங்களின் செயல்களை துறந்து ச்ரோத்திரம் முதலியவைகளில் ஆத்மபாவம் வைத்து அதனுடைய உபாதியுடன் கூடி பிறப்பு, இறப்புடன் கூடிய சம்சாரத்தை அடைகிறது, ஆகையால் ச்ரோத்திராதிகளுக்கு ஸ்ரோத்திராதி லக்ஷணமான ப்ரஹ்மம் என்று அறிந்து अतिमुच्य (அதிமுச்சிய) ஸ்ரோத்தராதிகளில் ஆத்மபாவத்தை எவர்கள் விடுகிறார்களோ அவர்கள் धीराः (தீரா) தீரர்கள், தீரத்தன்மை இல்லாமல் எல்லாவற்றையும் துறத்தல் என்பது முடியாததாகும், மகன், நண்பன், மனைவி முதலிய பந்துக்களிடத்தில் எனது, நான் என்றபாவத்துடன் வியவஹாரங்கள் உடைய இந்த உலகத்தை விட்டு प्रेत्य (ப்ரேத்ய) கிளம்பி எல்லா ஏஷணைகளையும் விட்டவர்கள் अमृताः (அம்ருதா) மரணமற்றவர்களாக भवन्ति (பவந்தி) ஆகிறார்கள்.
“கர்மாக்களினாலோ, பிரஜைகளாலோ, அல்லது ,செல்வத்தினாலோ அம்ருததுவத்தை அடையமுடியாது. கேவலம் த்யாகத்தினாலேயே, அம்ருததுவத்தை அடைய முடியும்.” (கைவல்ய:உப) “ஸ்வயம்பூவானவர் இந்திரியங்களை பஹிர் முகமாக படைத்துள்ளார். ஆகையால் அந்தராத்மாவைப் பார்க்காமல் வெளி விஷயங்களை அறிகின்றது. ஏதோ ஒரு தீரன் அம்ருதத்தை அடைவதற்கு இச்சை உடையவனாய் ஞானக்கண்ணால் ப்ரத்யக் ஆத்மாவைப் பார்க்கிறான்.” (க உ) “எப்பொழுது எவர்கள் எந்த ஹிருதயத்தில் உள்ள (அந்தக் கரணத்தில் உள்ள) எல்லாக் காமனைகளையும் துறக்கிறார்களோ, அங்கு ப்ரஹ்மத்தை நிச்சயமாக அடைகிறார்கள்.” (க.உ) முதலிய சுருதிகளால் அறிகிறோம், அல்லது अतिमुच्यन्ते “அதிமுச்யந்தே” என்பதால் ஏஷணைகளை தியாகம் செய்தல் என்று சித்திப்பதால் இந்த லோகத்திலிருந்து கிளம்பி அதாவது இந்த உடலிருந்து பிரிந்து அம்ருதத்தை அடைகிறார்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். இங்கு प्रेत्य (ப்ரேத்ய) என்றசொல்லிற்கு இந்த ஸம்சார உலகத்திலிருந்து விடுபடுவதையே குறிக்கிறது. மரணத்தைக் குறிக்கவில்லை.
न तत्र चक्षुर्गच्छति न वाग्गच्छति नो मनः ।
न विद्मो न विजानीमो यथैतदनुशिष्यात् ॥ ३ ॥
यस्माच्छ्रोत्रादेरपि श्रोत्राद्यात्मभूतं ब्रह्म, अतः
(அ-கை) எதனால் சுரோத்திரம் முதலியவைகளுக்கு ப்ரஹ்மம் சுரோத்திரம் முதலிய ஆத்ம ஸ்வரூபமாயிருக்கிறதோ ஆகையால்.
न तत्र तस्मिन्ब्रह्मणि चक्षुः गच्छति, स्वात्मनि गमनासम्भवात् । तथा न वाक् गच्छति । वाचा हि शब्द उच्चार्यमाणोऽभिधेयं प्रकाशयति यदा, तदाभिधेयं प्रति वाग्गच्छतीत्युच्यते । तस्य च शब्दस्य तन्निर्वर्तकस्य च करणस्यात्मा ब्रह्म । अतो न वाग्गच्छति । यथाग्निर्दाहकः प्रकाशकश्चापि सन् न ह्यात्मानं प्रकाशयति दहति वा, तद्वत् ।
தன்ஆத்மாவிடத்தில் செல்வது என்பது சம்பாவிக்காததினால் அங்கு கண் செல்வதில்லை. அவ்வாறேவாக்கும் செல்வதில்லை. வாக்கினால் உச்சரிக்கப்படும் பொழுது அதன் பொருளை (அப்பெயர் கொண்ட பொருளை) விளக்குகிறது. அதை வாக் சொல்லுகிறது என்று கூறப்படுகிறது. அந்த சப்தத்தை நிர்வஹிப்பதற்கு காரணமான ஆத்மா பிரஹ்மம். ஆகையால் எவ்வாறு அக்னிக்கு தஹிக்கும் தன்மையும் பிரகாசப்படுத்தும் தன்மை இருந்தும் தன்னையே(அக்னியையே) தஹிக்கவும், பிரகாசப்படுத்தவும் செய்யாதோ அவ்வாறேவாக்கும் பிரஹ்மத்தை எட்டுவதோ விளக்குவதோ இல்லை.
नो मनः मनश्चान्यस्य सङ्कल्पयितृ अध्यवसातृ च सत् नात्मानं सङ्कल्पयत्यध्यवस्यति च, तस्यापि ब्रह्मात्मेति । इन्द्रियमनोभ्यां हि वस्तुनो विज्ञानम् । तदगोचरत्वात् न विद्मः तद्ब्रह्म ईदृशमिति ।
नो मनः (நோ மன) ஸங்கல்பாத்மகமான மனது ஆத்மாவைத் தவிர மற்றவைகளையே எண்ணுகிறது. அவைகளைப் பற்றியே ஒரு முடிவிற்கும் வருகிறது. ஆனால் ஆத்மாவைப் பற்றி எண்ணுவதோ அடைவதற்கு முயற்சிப்பதோ இல்லை. அப்படிப்பட்ட மனதிற்கும் ஆத்மா பிரஹ்மமே என்பதாகும். இந்திரியங்கள் மனம் இவைகளால் வஸ்துக்களின் ஞானம் ஏற்படுகிறது. பிரஹ்மமானது அகோசரமாய் (எட்டாததாய்) இருப்பதால் அந்த பிரஹ்மம் இப்படிப்பட்டது என்று நம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை.
अतो न विजानीमः यथा येन प्रकारेण एतत् ब्रह्म अनुशिष्यात् उपदिशेच्छिष्यायेत्यभिप्रायः । यद्धि करणगोचरः, तदन्यस्मै उपदेष्टुं शक्यं जातिगुणक्रियाविशेषणैः । न तज्जात्यादिविशेषणवद्ब्रह्म । तस्माद्विषमं शिष्यानुपदेशेन प्रत्याययितुमिति उपदेशे तदर्थग्रहणे च यत्नातिशयकर्तव्यतां दर्शयति ॥
ஆகையால் சிஷ்யனுக்கு இந்த பிரஹ்மத்தைப் பற்றி எவ்வாறு உபதேசிப்பது என்பது நாம் அறியவில்லை, எது இந்திரியங்களால் அறிய முடியுமோ அது ஜாதிகுணகிரியை முதலிய விசேஷணங்களுடையதான மற்றவைகளைக் குறித்து உபதேசம் செய்யமுடியும். ஆனால் பிரஹ்மமோ ஜாதி முதலிய விசேஷணங்களுடன் கூடியது அன்று. ஆகையால் சிஷ்யனுக்கு உபதேசம் செய்வதில் உண்டாகும் விஷமமான மாறுபாட்டை நீக்கி உபதேசத்திலும் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதிலும் மிகுந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
अन्यदेव तद्विदितादथो अविदितादधि ।
इति शुश्रुम पूर्वेषां ये नस्तद्व्याचचक्षिरे ॥ ४ ॥
‘न विद्मो न विजानीमो यथैतदनुशिष्यात्’ (பிரஹ்மம் இவ்வாறு இருக்கிறது என்று அறியோம். அவ்வாறேஎவ்வாறு உபதேசிப்பது என்றும் அறியோம்) என்று முற்றிலும் உபதேசம் செய்வது அரிது என்று ஏற்படும் பொழுது அவ்வாதத்தை நீக்குவதற்காகக் கூறப்படுகிறது. அறிய முடியாது, உபதேசிக்கவும் முடியாது என்று கூறியது உண்மைதான். ஆனால் பிரத்யக்ஷாதி பிரமாணங்களால் பரம் பொருளை இவ்வாறு உள்ளது என்று உணர்த்தமுடியாது. ஆனால் ஆகமங்களால் மட்டுமே உபதேசிக்க முடியும் என்று அதை உபதேசிப்பதற்காக ஆகமவாயிலாக கூறுகிறார்.
अन्यदेव तद्विदितादथो अविदितादधीति । अन्यदेव पृथगेव तत् यत्प्रकृतं श्रोत्रादीनां श्रोत्रादीत्युक्तमविषयश्च तेषाम् । तत् विदितात् अन्यदेव हि । विदितं नाम यद्विदिक्रिययातिशयेनाप्तं विदिक्रियाकर्मभूतम् । क्वचित्किञ्चित्कस्यचिद्विदितं स्यादिति सर्वमेव व्याकृतं विदितमेव ; तस्मादन्यदेवेत्यर्थः ।
अन्यदेव तद्विदितादथो अविदितादधीति (அன்யதேவ தத்விதிதாத்அத அவிதிதாத் அதி இதி) अन्यदेव (அன்யதேவ) எது இப்பொழுது விசாரிக்கப்படுகிறதோ அது ச்ரோத்திரம் முதலியவைகளுக்கு ச்ரோத்திரம் முதலியவையாய் இருக்கிறது என்று கூறப்பட்டதோ அது அவிஷயம் (அறிய முடியாதது) அது அறிந்ததைக்காட்டிலும் வேறாகவே இருக்கிறது. அறிவது என்றால் எது விதிகிரியை முதலியவைகளால் அடையப்பட்ட விதிக்கிரியா கர்ம பூதத்தை (நாம ரூபாத்மகத்தை) ஏதாவது ஒரு இடத்திலாவது, சிறிதாவது, எவராலாவது அறியப்பட்டிருக்கும். எல்லா வியாகிருத பொருள்கள்(வெளிப்பட்ட பொருள்கள்) அறியப்பட்டதாகவே இருக்கும். ஆகையால் இந்த பரம் பொருள் அறியப்படும் பொருளைக் காட்டிலும் வேறாகவே இருக்கிறது என்பது பொருள்.
अविदितमज्ञातं तर्हीति प्राप्ते आह — अथो अपि अविदितात् विदितविपरीतादव्याकृतादविद्यालक्षणाद्व्याकृतबीजात् । अधि इति उपर्यर्थे ; लक्षणया अन्यदित्यर्थः । यद्धि यस्मादधि उपरि भवति, तत्तस्मादन्यदिति प्रसिद्धम् ।
अविदितम् (அவிதிதம்) அறிய முடியாதது என்பது அதை அறிய முடியாத வஸ்து ஆகுமோ எனில் கூறுகிறார். ஆகையால் அறிய முடியாததைக் காட்டிலும் அதாவது அறிந்ததைக் காட்டிலும் விபரீதமான வியாக்ருதி அவித்யா லக்ஷணத்தைக் காட்டிலும் வேறானது என்பது வியாக்ருதி லக்ஷணையினால் அறியப்படுகிறது. எது ஒன்று மற்றதைக்காட்டிலும் மேலே இருப்பதால் அது வேறு என்பது பிரசித்தம்.
எது அறியப்பட்டதோ அது அல்பம், நாசமாகக் கூடியது, துக்கத்துடன் கூடியது, ஆகையால் விடத்தக்கது, ஆகையால் அறியப்பட்டதைக் காட்டிலும் வேறு பிரஹ்மம் என்று கூறினால் பிரஹ்மத்தை விடவேண்டும் என்று ஆகும். அத்தகைய அறியப்பட்டதைக் காட்டிலும் வேறானது ப்ரஹ்மம் என்று சொல்லப்பட்டாலோ (அஹேயத்வம்) விடக்கூடியதன்று என்பது கூறப்பட்டதாகிறது. அறியப்படாததைக் காட்டிலும் தாண்டி உள்ளது என்று கூறினால் ஏற்கத்தகாததைக் காட்டிலும் வேறு என்று கூறப்பட்டதாகும். ஒரு காரியத்தின் பொருட்டே அல்லவாஅதனினும் வேறுபட்ட மற்றொன்று காரணமாய் ஏற்கப்படுகிறது. ஆகையால் ஆத்மாவை அறிந்தவன் வேறு ஒன்றின் பிரயோஜனத்தின் பொருட்டு வேறு ஒன்றையும் எடுத்துக்கொள்ள மாட்டான். இவ்வாறு அறிந்ததையும், அறியாததைக்காட்டிலும் ஆத்மா வேறானது என்பதால் ஹேயோபாதேயம் (தள்ளுவதும், கொள்ளுவதும்) இவ்விரண்டையும் நிஷேதம் செய்வதால் ஆத்மாவானது தன்னைக் காட்டிலும் வேறாக இல்லாததால் சிஷ்யனுக்கு பிரஹ்ம விஷயத்தில் உள்ள ஜிக்ஞாசை ஆனது பூரணமாகிறது. ஸ்வாத்மாவைக் காட்டிலும் வேறான வஸ்துவிற்கு அறிந்தது, அறியாதது ஆகிய இவ்விரண்டைக் காட்டிலும் வேறான தன்மை ஏற்படாது என்பதால் ஆத்மா பிரஹ்மமாகும் என்பது வாக்கியர்த்தம். “अयमात्मा ब्रह्म” (இந்த ஆத்மா பிரஹ்மம்) “य आत्मापहतपात्मा” (எந்த ஆத்மா பாவமற்றதோ) “यत्साक्षादपरोक्षाद् ब्रह्म” (எது சாக்ஷாத்தாக அபராக்ஷமாய் இருப்பதால் பிரஹ்மம்) “य आत्मा सर्वान्तरः” (எந்த ஆத்மா எல்லாவற்றிலும் ஊடுருவி உள்ளதோ) என்பது முதலிய மற்றசுருதிகளாலும் அறிகிறோம்.
एवं सर्वात्मनः सर्वविशेषरहितस्य चिन्मात्रज्योतिषो ब्रह्मत्वप्रतिपादकस्य वाक्यार्थस्याचार्योपदेशपरम्परया प्राप्तत्वमाह — इति शुश्रुमेत्यादि । ब्रह्म चैवमाचार्योपदेशपरम्परयैवाधिगन्तव्यं न तर्कतः प्रवचनमेधाबहुश्रुततपोयज्ञादिभ्यश्च, इति एवं शुश्रुम श्रुतवन्तो वयं पूर्वेषाम् आचार्याणां वचनम् ; ये आचार्याः नः अस्मभ्यं तत् ब्रह्म व्याचचक्षिरे व्याख्यातवन्तः विस्पष्टं कथितवन्तः तेषामित्यर्थः ॥
இவ்வாறு சர்வாத்மாவினுடைய எல்லா விசேஷங்களும் அற்றசின்மாத்திர ஸ்வரூப ஜ்யோதியாகிய பிரஹ்மத்துவத்தை தெளிவுப்படுத்தக் கூடிய வாக்கியார்த்தத்தை ஆச்சாரிய உபதேச பரம்பரையினால் அடைய வேண்டும் என்று கூறுகிறார். शुश्रुम (கேள்விப்பட்டோம்) என்பது முதலியவைகளால் பிரஹ்மமானது இவ்வாறு ஆச்சாரிய உபதேச பரம்பரையினால் மட்டுமே அறிய முடியும்.தர்க்கத்தினாலோ, பிரவசனங்களினாலோ, மேதாவிலாசத்தினாலோ, அநேகசிரவணம் செய்தலாலோ, தபசாலோ, யக்ஞ முதலியவைகளாலோ அறிய முடியாது என்பதை நாங்கள் பூர்வ ஆச்சார்யார்களுடைய வசனங்களைக் கேட்டிருக்கிறோம்.அந்த ஆச்சார்யர்கள் எங்களுக்கு பிரஹ்மத்தைப் பற்றி விளக்கமாகக் கூறி இருக்கிறார்கள். இதுவே அவர்களின் அபிப்ராயம்.
यद्वाचानभ्युदितं येन वागभ्युद्यते ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ५ ॥
‘अन्यदेव तद्विदितादथो अविदितादधि’ (के. उ. १ । ४) इत्यनेन वाक्येन आत्मा ब्रह्मेति प्रतिपादिते श्रोतुराशङ्का जाता — कथं न्वात्मा ब्रह्म । आत्मा हि नामाधिकृतः कर्मण्युपासने च संसारी कर्मोपासनं वा साधनमनुष्ठाय ब्रह्मादिदेवान्स्वर्गं वा प्राप्तुमिच्छति । तत्तस्मादन्य उपास्यो विष्णुरीश्वर इन्द्रः प्राणो वा ब्रह्म भवितुमर्हति, न त्वात्मा ; लोकप्रत्ययविरोधात् । यथान्ये तार्किका ईश्वरादन्य आत्मेत्याचक्षते, तथा कर्मिणोऽमुं यजामुं यजेत्यन्या एव देवता उपासते । तस्माद्युक्तं यद्विदितमुपास्यं तद्ब्रह्म भवेत् , ततोऽन्य उपासक इति । तामेतामाशङ्कां शिष्यलिङ्गेनोपलक्ष्य तद्वाक्याद्वा आह — मैवं शङ्किष्ठाः ।
“अन्यदेव तद्विदितादथो अविदिताद (அன்யதேவ தத்விதிதாததோ அவிதிதாததி) அது அறிந்ததைக் காட்டிலும் வேறு, அறியாததைக் காட்டிலும் மேலாக இருக்கிறது. என்றஇந்த வாக்யத்தால் ஆத்மா ப்ரஹ்மம் என்று கூறும் பொழுது ச்ரோதாவிற்கு (சிஷ்யனுக்கு) இவ்வாறு சங்கை உண்டாயிற்று. எவ்வாறு ஆத்மா ப்ரஹ்மமாகும் என்று, ஆத்மா என்பது கர்மத்திலும் உபாசனையிலும் அதிகாரியான ஸம்ஸாரிஜீவன். அந்த ஸம்ஸாரி கர்மம் உபாசனையாகிய ஏதாவது ஒரு சாதனத்தை அனுஷ்டித்து ப்ரஹ்மா முதலிய தேவர்களையோ அல்லது ஸ்வர்கத்தையோ அடைய விரும்புகின்றான். உலகிலுள்ள நம்பிக்கைக்கு விரோதமானதால் அதைக் காட்டிலும் வேறாக விஷ்ணு, ஈச்வரன், இந்திரன் அல்லது பிராணனோ உபாசனை செய்யக் கூடியதாக ப்ரஹ்மம் ஆகக் கூடியதாகும். எவ்வாறு மற்றதார்க்கிகர்கள் ஈச்வரனைக் காட்டிலும் ஆத்மா வேறு என்று கூறுகின்றனரோ அவ்வாறேகர்மம் செய்பவர்களும் இந்த யக்ஞம் செய்யவேண்டும். இந்த யக்ஞம் செய்யவேண்டும் என்று தேவதைகளை உபாசிக்கின்றனர். ஆகையால் எது அறியப்பட்டதோ அது உபாசிய ப்ரஹ்மமாகிவிடும். ஆகையால் உபாசகன் வேறென்பது சரியாகிவிடும் சிஷ்யனை வ்யாஜமாக வைத்தோ அல்லது அந்த வாக்ய மூலமாகவோ அவனுடைய சங்கையை அறிந்து இவ்வாறு கூறினார். இவ்வாறு சங்கை செய்யாதே என்று.
यत् चैतन्यमात्रसत्ताकम् , वाचा — वागिति जिह्वामूलादिष्वष्टसु स्थानेषु विषक्तमाग्नेयं वर्णानामभिव्यञ्जकं करणम् , वर्णाश्चार्थसङ्केतपरिच्छिन्ना एतावन्त एवंक्रमप्रयुक्ता इति ; एवं तदभिव्यङ्ग्यः शब्दः पदं वागित्युच्यते ; ‘अकारो वै सर्वा वाक्सैषास्य स्पर्शान्तःस्थोष्मभिर्व्यज्यमाना बह्वी नानारूपा भवति’ (ऐ. आ. २ । ३ । ६) इति श्रुतेः । मितममितं स्वरः सत्यानृते एष विकारो यस्याः तया वाचा पदत्वेन परिच्छिन्नया करणगुणवत्या — अनभ्युदितम् अप्रकाशितमनभ्युक्तम् ।
यत् (யத்) சைதன்யமாத்திர சத்தோ, அது वाचा (வாச்சா) வாக்கால், வாக் என்பது ஜிஹ்வாமூலம் என்றஅடிநாக்கு முதலிய எட்டு ஸ்தானங்களில் (ஜிஹ்வாமூலம், ஹ்ருதயம், கண்டம், மூர்த்தா, தந்த, நாசிகா, ஓஷ்ட்ட, தாலு அதாவது அடிநாக்கு, இருதயம், கழுத்து, தலை, பல், மூக்கு, உதடு, கன்னமாகும்) தொட்டுக் கொண்டு அக்னியை தேவதையாகக் கொண்ட எழுத்துக்களை (வர்ணங்களை)வெளிப்படுத்தும் கரணமாகும்.வர்ணங்களையோ, இன்ன பொருளை உணர்த்தக்கூடிய இத்தனை எழுத்துகளை, இன்ன கிரமத்தில் (வர்ணங்கள்) உள்ளவை எனப்படும். உதாரணமாக गौः என்றபசுவை உணர்த்தும் சொல் ग (க கார) औ (ஒள கார) மற்றும் விசர்கத்துடன் கூடியது என்பதாகும். இம்மாதிரி வர்ணங்களின் கோர்வையையுடைய பதமே வாக் எனப்படும். இதை வேதம் “अकारो वै सर्वा वाक्सैषा स्पर्शान्तस्थोष्मभिबर्व्यज्यमाना बवी नानारूपा भवति” அகாரமே எல்லா சொற்களாகவும் மாறுகிறது. அதாவது ஸ்பர்சங்கள் எனப்படும் क (க) முதல் म (ம) வரையிலான 25 அக்ஷரங்களாலும் அந்தஸ்தங்களாலும் य र ल व (ய ர ல வ ) என்ற4 அக்ஷரங்களாலும், ஊஷ்மாக்களாலும் = श ष स ह ( ச ஷ ஸ ஹ ) என்ற4 அக்ஷரங்களாலும் மாறுபட்டு ஒலிக்கிறது. இந்த எழுத்துக்களே க்ரமக்கோர்வையின் மாறுபாட்டால்பல்வேறு பொருளை உணர்த்தும் பல்வேறு சொற்களாக மாறுபட்டு ஒலிக்கின்றன. அவை மிதம், அமிதம், ஸ்வரம், ஸத்யம், அநிருதம், எனப்படும். மிதம் என்பது பாதம், ஒரு கட்டுப்பாடான அக்ஷரங்களுடன் கூடிய முடிவு இவைகளுடன் கூடிய ரிக்வேதம் முதலியவைகளாகும். அமிதம் என்பது இக்கட்டுப் பாடுகளுக்கு அப்பாற்பட்ட யஜீர்வேதம் முதலியவைகளாகும். ஸ்வரம் என்பது கீதத்தைப் பிரதாணமாக உடைய சாமவேதம் முதலியனவாகும். ஸஒயம் என்பது (கண்ணால்) கண்டதை உணர்த்தலாகும். அதற்கு மாறுபட்டது, அந்ருதம்,(பொய்) இவைகளைக் குணமாகக் கொண்டது வாக், அந்தப் பதரூபமான வாக்கைக் கரண குணமாகக் கொண்டு மனிதனிடத்தில் விளங்கும் வாக்சக்தியினால் अनभ्युदितम् (அநப்யுதிதம்) விளக்கப்பட-வில்லை.
எந்த பிரஹ்மத்தால் வாக், வாக்சக்தியானது விரும்பிய பொருளை உணர்த்துவதில் சக்திபடைத்ததாக விளங்குகிறதோ அதாவது சைதன்ய ஜோதியுடன் கூடியதாய் விளங்குவதாக இருக்கிறதோ அந்த பிரஹ்மஸ்வரூபம் வாக்கிற்கு வாக் எனப்படுகிறது. அவ்வாறேப்ருஹதாரண்யத்தில் “பேசுவதற்குக் காரணம் வாக்” என்றும் எவன் உள்ளே இருந்து கொண்டு பேசுவதற்கு தூண்டுகிறான் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறேவாஜசனேயகத்தில் “எந்த அந்த வாக்கானது புருஷர்களிடத்தில் (சேதனங்களில்) கோஷங்களில் அதாவது வர்ணங்களில் (எழுத்துகளில்) இருக்கிறது என்று ஏதோ ஒரு பிரஹ்மவேத்தாவானவன் அதை அறிகிறான் என்று பிரசன்னத்தை உண்டாக்கி பதிலும் அளிக்கப்பட்டது. எதனால் ஜீவனானவன் ஸ்வப்னத்தில் பேசுகின்றானோ அது வாக் என்று, அதுவே பேசுபவனின் நித்ய வாக் சக்தியாகிய சைதன்யஜ்யோதிஸ்வரூபமாகும். பேசுபவனைக் காட்டிலும் வாக்சக்தியானது வேறு அல்ல என்பது சுருதியின் கருத்தாகும்.
तदेव आत्मस्वरूपं ब्रह्म निरतिशयं भूमाख्यं बृहत्त्वाद्ब्रह्मेति विद्धि विजानीहि त्वम् । यैर्वागाद्युपाधिभिः ‘वाचो ह वाक्’ ‘चक्षुषश्चक्षुः’
‘श्रोत्रस्य श्रोत्रं मनसो मनः’ (के. उ. १ । २) ‘कर्ता भोक्ता विज्ञाता नियन्ता प्रशासिता’
‘विज्ञानमानन्दं ब्रह्म’ (बृ. उ. ३ । ९ । ७) इत्येवमादयः संव्यवहारा असंव्यवहार्ये निर्विशेषे परे साम्ये ब्रह्मणि प्रवर्तन्ते, तान्व्युदस्य आत्मानमेव निर्विशेषं ब्रह्म विद्धीति एवशब्दार्थः । नेदं ब्रह्म यदिदम् इत्युपाधिभेदविशिष्टमनात्मेश्वरादि उपासते ध्यायन्ति । तदेव ब्रह्म त्वं विद्धि इत्युक्तेऽपि नेदं ब्रह्म इत्यनात्मनोऽब्रह्मत्वं पुनरुच्यते नियमार्थम् अन्यब्रह्मबुद्धिपरिसङ्ख्यानार्थं वा ॥
நீ तदेव (ததேவ) அந்த ஆத்மஸ்வரூபமான பிரஹ்மத்தை பெரிதிக்கெல்லாம் பெரியது என்பதால் நிரதிசய பூமா எனப்படும் ப்ரஹ்மம் என்று அறிவாயாக. எந்த வாக் முதலிய உபாதிகளால் வாக்கிற்கு வாக், ச்ரோத்திரத்திற்கு சுரோத்திரம், கண்ணுக்குக் கண், மனதிற்குமனம் என்றும், கர்த்தா, போக்த்தா, விக்ஞாத்தா, நியந்தா, கட்டளையிடுபவன், விக்ஞானம் ஆனந்தம், பிரஹ்மம் என்பது முதலிய வியவகாரங்கள் வியவகாரங்களற்றநிர்விசேஷ மேலான परे சாம்யமான பிரஹ்மத்தில் பிரவிர்த்திக்கின்றதோ அவைகளை நிராகரித்து ஆத்மாவிடத்திலேயே நிர்விசேஷ பிரஹ்மத்தை அறிவாயாக என்று உபாதிபேதத்துடன் கூடிய அநாத்மாக்களாகிய ஈஸ்வராதிகளை उपासते (உபாஸதே) த்யானம் செய்கின்றானோ அது இந்த பிரஹ்மம் அல்ல. அதுவே ब्रह्म त्वं विद्धि (பிரஹ்மம் துவம்வித்தி) பிரஹ்மமென்று அறி என்று கூறி இருந்த போதிலும் மறுபடியும் नेदंं ब्रह्म (நேதம் பிரஹ்மம்) இது பிரஹ்மம் அல்ல என்று கூறப்பட்டதன் வாயிலாய் அநாத்மாவிற்கு அப்ரஹ்மத்துவம் கூறப்பட்டது. ஆத்மாவிடத்தில் பிரஹ்ம புத்தியை நியமனம் செய்வதற்காகவும், அல்லது மற்றஉபாசனை செய்யக்கூடிய தேவதைகளிடத்தில் பிரஹ்ம புத்தியை நிவர்த்தி செய்வதற்காக ஆகும்( உபாசனைக்குறிய ஈஸ்வரன் முதலியவைகளை முதலில் பிரஹ்மம் என்று அறி என்று கூறி பிரஹ்மமல்ல என்று கூறியதன் மூலமாக ஆத்மாவிற்கு அபிரஹ்மத்துவம் கூறப்பட்டது. ஆத்மாவினிடத்தில் பிரஹ்ம புத்தியை நியமனம் செய்வதற்காக உண்டானது நியமவிதியாகும். மற்றஉபாசனா தேவதைகளிடத்தில் உள்ள பிரஹ்மபுத்தியை போக்குவதற்காக ஏற்படுவது பரிசங்கியா விதியாகும்.
यन्मनसा न मनुते येनाहुर्मनो मतम् ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ६ ॥
यन्मनसा न मनुते । मन इत्यन्तःकरणं बुद्धिमनसोरेकत्वेन गृह्यते । मनुतेऽनेनेति मनः सर्वकरणसाधारणम् , सर्वविषयव्यापकत्वात् ।
‘कामः सङ्कल्पो विचिकित्सा श्रद्धाश्रद्धा धृतिरधृतिर्ह्रीर्धीर्भीरित्येतत्सर्वं मन एव’ (बृ. उ. १ । ५ । ३) इति श्रुतेः कामादिवृत्तिमन्मनः । तेन मनसा यत् चैतन्यज्योतिर्मनसोऽवभासकं न मनुते न सङ्कल्पयति नापि निश्चिनोति लोकः, मनसोऽवभासकत्वेन नियन्तृत्वात् । सर्वविषयं प्रति प्रत्यगेवेति स्वात्मनि न प्रवर्ततेऽन्तःकरणम् । अन्तःस्थेन हि चैतन्यज्योतिषावभासितस्य मनसो मननसामर्थ्यम् ; तेन सवृत्तिकं मनः येन ब्रह्मणा मतं विषयीकृतं व्याप्तम् आहुः कथयन्ति ब्रह्मविदः । तस्मात् तदेव मनस आत्मानं प्रत्यक्चेतयितारं ब्रह्म विद्धि । नेदमित्यादि पूर्ववत् ॥
यन्मसा न मनुते (யன் மனசா ந மனுதே) மனம் என்றால் அந்தக்கரணம், புத்தியையும் மனதையும் ஒன்றாக கிரஹிக்கப்படுகிறது. அதனால் நினைப்பதால் மனம் எனப்படுகிறது. எல்லா விஷயங்களிலும் வியாபித்திருப்பதால் எல்லா கரணங்களுக்கும் சாதாரணமாகிறது. காமம் சங்கல்பம், ஸம்சயம், சிரத்தை, அசிரத்தை, தைரியம், அதைரியம், பயம் எல்லாம் மனம் என்று சுருதியில் கூறப்பட்டுள்ளது. ஆகையால் காமாதிவிருத்தியை உடையது மனம், சைதன்யஜோதியாகிய மனமானது மனதை பிரகாசிக்கச் செய்வதால் நியந்தாவாய் இருப்பதால் எது லோகத்தைபிரகாசப்படுத்துகிறதோ அந்த மனதால் அதை (நியந்தாவை) நினைக்கமுடியாது. சங்கல்பம் செய்யமுடியாது, நிச்சயிக்கவும் முடியாது, அது எல்லா விஷயங்களைக் காட்டிலும் வேறாக இருப்பதாலேயே ஸ்வாத்மாவினிடத்தில் அந்தக்கரணம் அங்கு பிரவிர்த்திப்பதில்லை. (செல்வதில்லை) உள்ளிருக்கும் சைதன்ய ஸ்வரூபத்தினால் பிரகாசப்படுத்தப்பட்ட மனதினால் அல்லவா நினைக்கும் சாமர்த்தியம் ஏற்படுகிறது. அந்த விருத்திகளுடன் கூடிய மனமானது பிரஹ்மத்தினால் விஷயம் செய்யப்பட்டது, வியாபிக்கப்பட்டது என்று ப்ரஹ்மவித்துக்கள் கூறுகிறார்கள். ஆகையால் மனதை எது ஆட்டுவிக்கிறதோ அதையே பிரஹ்மம் என்று அறி नेदंं நேதம் முதலியவை முன் போலாகும்.
यच्चक्षुषा न पश्यति येन चक्षूंषि पश्यति ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ७ ॥
यत् चक्षुषा न पश्यति न विषयीकरोति अन्तःकरणवृत्तिसंयुक्तेन लोकः, येन चक्षूंषि अन्तःकरणवृत्तिभेदभिन्नाश्चक्षुर्वृत्तीः पश्यति चैतन्यात्मज्योतिषा विषयीकरोति व्याप्नोति । तदेवेत्यादि पूर्ववत् ॥
यत् எந்த சைதன்யமானது அந்தக் கரண விருத்தியுடன் கூடிய चक्षुषा கண்களால் न पश्यति பார்க்கப்படவில்லையோ, அதாவது கண்கள் சைதன்ய ரூபத்தை தனக்கு விஷயமாக்கிக் கொள்ள முடியவில்லையோ, येन எந்த சைதன்யாத்ம ஜோதியால் चक्षूंषि (சக்ஷும்ஷி) கண்கள் அதாவது அந்தக் கரண விருத்தியைக் காட்டிலும் வேறாகாத கண்களின் விருத்தியானது லோகத்தைப் पश्यति பார்க்கிறது அதாவது விஷயம் செய்கிறது, வியாபிக்கிறது. तदेव முதலியவை முன்போல் ஆகும்.
यच्छ्रोत्रेण न शृणोति येन श्रोत्रमिदं श्रुतम् ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ८ ॥
यत् श्रोत्रेण न शृणोति दिग्देवताधिष्ठितेन आकाशकार्येण मनोवृत्तिसंयुक्तेन न विषयीकरोति लोकः, येन श्रोत्रम् इदं श्रुतं यत्प्रसिद्धं चैतन्यात्मज्योतिषा विषयीकृतम् । तदेवेत्यादि पूर्ववत् ॥
यत् எந்த ஜ்யோதிஸ்வரூபமானது श्रोत्रेण காதால் கேட்கமுடியாதது. திக்தேவதை முதலியவைகளை அதிஷ்ட்டானமாக உடைய ஆகாச காரியமாகிய (சப்தம்) மனோ விருத்தியுடன் கூடி சப்த லோகத்தை விஷயம் செய்ய முடியாது(தெரிந்து கொள்ள முடியாது) இந்தக் காதானது கேட்கிறது என்பது சைதன்யஜ்யோதியால் விஷயம் செய்கிறது(கேட்கிறது) என்பது பிரசித்தம். तदेव முதலியவை முன்பு போல் ஆகும்.
यत्प्राणेन न प्राणिति येन प्राणः प्रणीयते ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ९ ॥
यत् प्राणेन घ्राणेन पार्थिवेन नासिकापुटान्तरवस्थितेनान्तःकरणप्राणवृत्तिभ्यां सहितेन यन्न प्राणिति गन्धवन्न विषयीकरोति, येन चैतन्यात्मज्योतिषावभास्यत्वेन स्वविषयं प्रति प्राणः प्रणीयते तदेवेत्यादि सर्वं समानम् ॥
ப்ராண விருத்தி அந்தக் கரண விருத்தியுடன் கூடி மூக்கின் துவாரத்தில் இருந்துக் கொண்டு அவ்வாறேப்ருதிவியின் காரிய பூதமான பிராணன் அதாவது க்ராணேந்திரியத்தின் மூலமாக (ப்ரணன்-கந்தம்) வாசனை (கந்தத்தைப் போல்) க்ராணேந்திரியத்திற்கு விஷயமாவதில்லை. ஆனால் இந்த சைதன்ய ஆத்ம ஜ்யோதியினால் பிரகாசப்படுத்தப்பட்டு க்ராணேந்திரியம் தன்னுடைய விஷயத்தைக் குறித்து பிரவிருத்திக்கிறது.(பிரகாசப்படுத்துகிறது) तदेव முதலியவை முன் போல் ஆகும்.
इति प्रथमखण्डभाष्यम् ॥
यदि मन्यसे सु वेदेति दभ्रमेवापि नूनं त्वं वेत्थ ब्रह्मणो रूपं यदस्य त्वं यदस्य देवेष्वथ नु मीमांस्यमेव ते मन्ये विदितम् ॥ १ ॥
एवं हेयोपादेयविपरीतस्त्वमात्मा ब्रह्मेति प्रत्यायितः शिष्यः अहमेव ब्रह्मेति सुष्ठु वेदाहमिति मा गृह्णीयादित्याशयादाहाचार्यः शिष्यबुद्धिविचालनार्थम् — यदीत्यादि ।
(அ-கை)இவ்வாறு ஹேயோபாதேயத்தைக் காட்டிலும் (ஏற்பது,ஒதுக்குவது இவைகளைக் காட்டிலும்) மாறான ஆத்மா பிரஹ்மம் என்று விளக்கம் பெற்றசீடன் நானே பிரஹ்மம் என்று நன்கு அறிகிறேன் என்று எண்ணாது நான் என்னை ப்ரஹ்மமாக அறிகிறேன் என்று கருதிவிடக்கூடாது என்று ஆசாரியார் சிஷ்யனுடைய புத்தியை அசைத்துப்பார்த்து திடப்படுத்துவதற்காக “यदि” என்பது முதலிய மந்திரங்களை ஆரம்பிக்கிறார்.
नन्विष्टैव सु वेदाहम् इति निश्चिता प्रतिपत्तिः ।
(பூர்வ) ஆனால் நான் நன்றாக அறிந்திருக்கிறேன் என்று நிச்சயமான ஞானமல்லவா?
(சித்தாந்தி) உண்மையே, நிச்சயமான ஞானம் இஷ்டமே, ஆனாலும் நான் நன்கு அறிகிறேன் என்பது பொருந்தாது. எது அறியப்படுகிறதோ அந்த வஸ்து விஷயமாகிறது. அது நன்றாக அறிய முடியும். எரிக்கும் அக்னிக்கு எரிக்கப்படும் விறகு எப்படி விஷயமாகுமோ. அவ்வாறு தன்னை அக்னி எரிக்க முடியாது. எல்லாவற்றையும் அறியும் தன் ஆத்மா பிரஹ்மம் என்று எல்லா வேதங்களுடைய நிச்சயமான தாத்பர்யமாகும். சென்றகண்டத்தில் ‘श्रोत्रस्य श्रोत्रम्’ (சுரோத்ரயஸ்ய சுரோத்ரம், மனஸோ மன) என்றமந்திரங்களால் அதுவே விளக்கப்பட்டது. ‘यद्वाचानभ्युदितम्’ (யத்வாச்சா அனப்யுதிதம்) என்பதால் அக்கருத்தே மேலும் நிலை நாட்டப்பட்டது. ‘विदितात् अन्यत् अविदितादधि’ (விதிதாத் அன்யத் அவிதிதாததி) என்பதால் வழிவழியாக ப்ரஹ்ம ஞானிகளின் சம்பிரதாய நிச்சயமும் விளக்கப்பட்டது ‘अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम्’ அவிக்ஞாதம் விஜானதாம் விக்ஞாதம் அவிஜானதாம்) என முடிவில் கூறவும் போகிறார். (அறிந்தேன் என்பவர்களுக்கு அறியப்படவில்லை. அறியவில்லை என்பவர்களுக்கு அறியத்தக்கதாகும்) எனவே சிஷ்யன் நன்கு உணர்ந்தேன் என்றுக் கூறிக்கொள்வதை புத்தி நீக்க வேண்டியதே.
न हि वेदिता वेदितुर्वेदितुं शक्यः, अग्निर्दग्धुरिव दग्धुमग्नेः । न चान्यो वेदिता ब्रह्मणोऽस्ति यस्य वेद्यमन्यत्स्याद्ब्रह्म ।
‘नान्यदतोऽस्ति विज्ञातृ’ (बृ. उ. ३ । ८ । ११) इत्यन्यो विज्ञाता प्रतिषिध्यते । तस्मात् सुष्ठु वेदाहं ब्रह्मेति प्रतिपत्तिर्मिथ्यैव । तस्माद्युक्तमेवाहाचार्यो यदीत्यादि ।
எவ்வாறு தஹிக்கும் அக்னியானது தன்னையே தஹிக்காதோ அவ்வாறு எல்லாவற்றையும் அறிபவன், அறிபவனுக்கு அறியப்படுவதாக ஆக முடியாது. அதுபோல் பிரஹ்மத்தை அறியத்தக்க வேறு பொருள் இல்லை. ‘नान्यदतोऽस्ति विज्ञातृ’ (நான்யததோ அஸ்தி விக்ஞாத்ரு) என்று அறிபவனைக் காட்டிலும் வேறு அறியும் பொருள் இல்லை என்று வேதம் கூறுவதால் நான் என்னை ப்ரஹ்மமாக அறிகிறேன் என்ற கூற்று தவறானதாகும். ஆகவேதான் ஆச்சாரியார் यदीत्यादि (யதித்யாதி) பொருத்தமானதே என்று கூறுகின்றனர்.
(குறிப்பு) वेदितुः वेदितुं न हि शक्यः (எல்லாவற்றையும் அறிபவன் அறிபவனுக்கு அறியப்படுவதாக ஆகமுடியாது.) இதனால் சுவசம்வேத்யம் அல்ல என்பது தெளிவாகிறது. यस्य वेद्यम् अन्यत्स्यात् ब्रह्म - பிரஹ்ம்மத்திற்கு அதை அறியத்தக்க வேறு பொருள் இல்லை என்பதால் பரசம்வேத்தியம் அல்ல என்பது தெளிவாகிறது.
यदि कदाचित् मन्यसे सु वेदेति सुष्ठु वेदाहं ब्रह्मेति । कदाचिद्यथाश्रुतं दुर्विज्ञेयमपि क्षीणदोषः सुमेधाः कश्चित्प्रतिपद्यते कश्चिन्नेति साशङ्कमाह यदीत्यादि । दृष्टं च
‘य एषोऽक्षिणि पुरुषो दृश्यत एष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्म’ (छा. उ. ८ । ७ । ४) इत्युक्ते प्राजापत्यः पण्डितोऽप्यसुरराड्विरोचनः स्वभावदोषवशादनुपपद्यमानमपि विपरीतमर्थं शरीरमात्मेति प्रतिपन्नः । तथेन्द्रो देवराट् सकृद्द्विस्त्रिरुक्तं चाप्रतिपद्यमानः स्वभावदोषक्षयमपेक्ष्य चतुर्थे पर्याये प्रथमोक्तमेव ब्रह्म प्रतिपन्नवान् । लोकेऽपि एकस्माद्गुरोः शृण्वतां कश्चिद्यथावत्प्रतिपद्यते कश्चिदयथावत् कश्चिद्विपरीतं कश्चिन्न प्रतिपद्यते । किमु वक्तव्यमतीन्द्रियमात्मतत्त्वम् । अत्र हि विप्रतिपन्नाः सदसद्वादिनस्तार्किकाः सर्वे । तस्माद्विदितं ब्रह्मेति सुनिश्चितोक्तमपि विषमप्रतिपत्तित्वात् यदि मन्यसे इत्यादि साशङ्कं वचनं युक्तमेवाचार्यस्य । दभ्रम् अल्पमेवापि नूनं त्वं वेत्थ जानीषे ब्रह्मणो रूपम् ।
यदि ஒரு சமயம் ब्रह्म (பிரஹ்மம்) பிரஹ்மத்தை सुवेद (சுவேத) நன்கு அறிகிறேன் इति (இதி) என்று मन्यसे (மன்யசே) எண்ணுவாயேயானால், இங்கு यदि (யதி) என்பது ஒரு சமயம் முன்ஜன்ம கர்ம விசேஷத்தால் வாசனாக்ஷயம் ஏற்பட்டு மிகவும் கஷ்ட்டப்பட்டு அறியவேண்டியதை (பிரஹ்மத்தை) அறிந்திருக்கலாம், ஒரு சமயம் இல்லாமலும் இருக்கலாம் என்பதை விளக்க வந்தது. ஏன் எனில் முன்பு ஒரு சமயம் பிரம்மாவிடம் ஆன்ம தத்துவத்தை உபதேசம் பெறதேவர்களின் தலைவன் இந்திரனும், அசுரர்களின் தலைவன் விரோச்சனனும் சென்றனர். அவரும் அவ்விருவருக்கும் “य एषोऽक्षिणि पुरुषो दृश्यत एष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्म” (ய ஏஷோஅக்ஷிணி புருஷோத்ருஷ்யத ஏஷ ஆத்மேதி ஹோவாச்சைதத் அம்ருதமபயமேதத் பிரஹ்மம்) நம் கண்ணில் நம் கண்ணுக்கு எதிரில் நிற்கும் மனிதனின் பிரதிபிம்பம் தெரியும். அது மாதிரி (உன் கண்ணில் தெரியும் புருஷனே ஆன்மா) என்று உபதேசித்தார். கச்யப பிரஜாபதியின் மகனாயும், நல்ல பண்டிதனாயும், இருப்பினும் கூட அசுரர்களின் அரசனான விரோச்சனன் இயற்கையான அக்ஞான தோஷத்தால் சரீரமே ஆன்மா என்று விபரீதமாக அர்த்தத்தைப் புரிந்து கொண்டு ஆன்மாவை உணர்ந்ததாக திரும்பினான். ஆனால் இந்திரனோ, ஒரு முறைக்கு நான்கு முறைகேட்டு, முதல் மூன்று முறைக் கேட்டதினால் இயற்கையான அக்ஞான தோஷம் நீங்கி நான்காவது முறைஆசிரியரிடமிருந்து நல்விளக்கம் பெற்று ஆத்மஞானம் பெற்றான். இந்திர, விரோச்சன கதியே இப்படி என்றால் இவ்வுலகில் நம் குருவிடமிருந்து ஆன்மதத்துவத்தை கேட்பவர்களில் ஒரு சிலர் உள்ளது உள்ளவாறு புரிந்து கொள்கிறார்கள். சிலர் சரியாக புரிந்து கொள்வதில்லை. சிலர் விபரீதமாக புரிந்து கொள்கின்றனர். சிலர் புரிந்து கொள்ள முடியாதவர்களாய் இருக்கிறார்கள். இதனால் ஆத்ம தத்துவமானது இந்திரியங்களுக்கு எட்டாதது என்று கூறவும் வேண்டுமா? இங்கு எல்லா சத்அசத்வாதிகளாகிய தார்க்கிகர்கள் மாறி அறிகின்றார்கள். ஆகையால் விபரீதமாகப் புரிந்துகொண்டு நான் நன்றாக அறிகிறேன் என்று நினைப்பாயானால் என்ற ஆசாரியருடைய சங்கையுடன் கூடிய வசனம் பொருத்தமானதே ஆகும். नूनं (நூ னம்) நிச்சயமாக दहरम् (தஹரம்) அல்பமாகவே ब्रह्मणः रूपम् (பிரஹ்மண ரூபம்) பிரஹ்மத்தினுடைய ரூபத்தை त्वं (துவம்) நீ वेत्थ (வேத்த)அறிந்திருக்கிறாய்.
किमनेकानि ब्रह्मणो रूपाणि महान्त्यर्भकाणि च, येनाह दभ्रमेवेत्यादि ?
(பூர்வ) என்ன பிரஹ்மத்திற்கு சிறியது, பெரியது, என்றரூபங்கள் இருக்கின்றனவா? இருப்பதால் அல்லவா நீ அறிந்தும் பிரஹ்மத்தினுடைய சிறிய ரூபத்தை அறிந்திருக்கிறாய் என்று கூறுகிறார்.
(சித்தாந்தி) வாஸ்தவம், பிரஹ்மத்தினுடைய அநேக ரூபங்கள் நாமரூப உபாதியினால் தோன்றுகிறது. உண்மையில் அதற்குக்கிடையாது. உண்மையிலோவெனில் ‘अशब्दमस्पर्शमरूपमव्ययं तथारसं नित्यमगन्धवच्च यत्’ (அசப்தமஸ்பர்சம் அரூபமவ்யயம் ததாரசம் நித்யம கந்தவச்ச யத்) என்பது முதலிய உபநிஷத் சப்தங்களால் ரூபங்கள் நிஷேதிக்கப்படுகிறது.
(பூர்வ) எந்த தர்மத்தை வைத்துஎது அறியப்படுகிறதோ அது அதன் ரூபமாகும். அவ்வாறேபிரஹ்மமானது எந்த விசேஷணத்தால் நிரூபிக்கப்படுகிறதோ அதுவே அதனுடைய ரூபமாகும். ஆகையால் இவ்வாறு கூறப்படுகிறது. அதாவது சைதன்யமானது பிருதிவியாதியினுடையவோ அல்லது பரிணாமத்தை அடையக்கூடிய மற்றஎல்லா பதார்த்தங்களுடையவோ அல்லது அந்தக்கரணத்தினுடைய தர்மமோ கிடையாது. ஆகையால் சைதன்ய ரூபத்தால் பிரஹ்மம் என்று பிரஹ்மத்தின் ரூபமானது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே “विज्ञानमानन्दंं ब्रह्म” (விக்ஞானமானந்த பிரஹ்ம) “विज्ञानघन एव” (விக்ஞானகன ஏவ) “प्रज्ञानं ब्रह्म” (பிரக்ஞானம் பிரஹ்ம்ம) என்று பிரஹ்மத்தினுடைய ரூபம் சுருதிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
(சித்தாந்தி) நீர் கூறுவது உண்மையே, இருப்பினும் ப்ரஹ்மமானது அந்தக்கரண தேஹ இந்திரியரூப, உபாதிகளின் வாயிலாகவே விக்ஞானம் முதலிய சப்தங்களால் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. அதனுடைய அனுகரணத்தினால்தான் (அதனுடைய பிரேரணையினால்தான்) தேஹம் முதலியவைகள் விருத்தியோ, குறைதலோ, வெட்டப்படுதலோ, நாசமடைதலோ அடைகின்றன. உண்மையில் ப்ரஹ்மம் அவ்வாறு ஆவதில்லை. சுயமாகவே அது “अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम्” (அவிஞாதம் விஜானதாம் விக்ஞானமவிஜானதாம்) அறிந்தவர்களுக்கு அது அறியப்படாததாயும், அறியாதவர்களுக்கு அறிந்ததாயும் ஆகிறது.
‘यदस्य ब्रह्मणो रूपम्’ इति पूर्वेण सम्बन्धः । न केवलमध्यात्मोपाधिपरिच्छिन्नस्यास्य ब्रह्मणो रूपं त्वमल्पं वेत्थ ; यदप्यधिदैवतोपाधिपरिच्छिन्नस्यास्य ब्रह्मणो रूपं देवेषु वेत्थ त्वम् , तदपि नूनं दभ्रमेव वेत्थ इति मन्येऽहम् । यदध्यात्मं यदपि देवेषु तदपि चोपाधिपरिच्छिन्नत्वाद्दभ्रत्वान्न निवर्तते । यत्तु विध्वस्तसर्वोपाधिविशेषं शान्तमनन्तमेकमद्वैतं भूमाख्यं नित्यं ब्रह्म, न तत्सुवेद्यमित्यभिप्रायः ।
यदस्य (யதஸ்ய) என்ற பதக் கூட்டமானது முன்பு கூறப்பட்ட பிரஹ்ம ரூபத்துடன் சம்பந்தப்பட்டது. நீ கேவலம் அத்யாத்மஉபாதியினால் பரிச்சின்னமடைந்த பிரஹ்மத்தினுடைய அல்ப (சிறிய) ரூபத்தை மட்டும் அறிந்தவனாய் இல்லை. ஆனால் அது (அந்தப்பிரஹ்மரூபமானது) அதிதேவதா உபாதியினால் பரிச்சின்னமடைந்த பிரஹ்மத்தினுடைய ரூபத்தை தேவதைகளிடத்தில் காண்கிறாய். அது நிச்சயமாக அதையும் அல்பமாக காண்கிறாய் என்று நான் கருதுகிறேன். எது அத்யாத்ம ரூபமோ, எது தேவதைகளில் அறிகிறோமோ அதுவும் உபாதிகளினால் பரிச்சின்னமானதால் அல்பத்தைக் காட்டிலும் வேறல்ல. எதற்கு எல்லா உபாதி விசேஷங்களும் அற்ற, சாந்தம், அனந்தம், ஏகம், அத்வைதம், பூமா எனப்படும் நித்யமான பிரஹ்மம் நன்றாக அறியக்கூடியது அல்ல என்பது அபிப்ராயமாகும்.
यत एवम् अथ नु तस्मात् मन्ये अद्यापि मीमांस्यं विचार्यमेव ते तव ब्रह्म । एवमाचार्योक्तः शिष्यः एकान्ते उपविष्टः समाहितः सन् , यथोक्तमाचार्येण आगममर्थतो विचार्य, तर्कतश्च निर्धार्य, स्वानुभवं कृत्वा, आचार्यसकाशमुपगम्य, उवाच — मन्येऽहमथेदानीं विदितं ब्रह्मेति ॥
எதனால் இவ்வாறோ அதனால் இப்பொழுது உனக்கு விசாரணை செய்வது அவசியம் என்று கருதுகிறேன், இவ்வாறு ஆச்சாரியரால் உபதேசிக்கப்பட்ட சிஷ்யன் ஏகாந்தமான இடத்தில் உட்கார்ந்து மனதை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு ஆசாரியர் கூறிய உபதேசப்படி ஆகம அர்த்தத்தை விசாரித்து, தர்க்கத்தின் வாயிலாய் நிச்சயம் செய்து, அதை அநுபவமாய் செய்து கொண்டு ஆசாரியர் சமீபத்தை அடைந்து இப்பொழுது நான் பிரஹ்மத்தை அறிந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன் (என்று கூறினார்.)
नाह मन्ये सु वेदेति नो न वेदेति वेद च ।
यो नस्तद्वेद तद्वेद नो न वेदेति वेद च ॥ २ ॥
कथमिति, शृणु —
(அவதாரிகை) எவ்வாறு என்று கேள்.
न अह मन्ये सु वेदेति, नैवाहं मन्ये सु वेद ब्रह्मेति । नैव तर्हि विदितं त्वया ब्रह्मेत्युक्ते आह — नो न वेदेति वेद च । वेद चेति च—शब्दात् न वेद च ।
நான் நன்றாக அறிகிறேன் என்று நான் நினைக்கவில்லை. நான் பிரஹ்மத்தை நன்றாக அறிந்தேன் என்று நான் நினைக்கவே இல்லை. ஆனால் உன்னால் பிரஹ்மம் நன்றாக அறிப்படவில்லை என்று கூறும்பொழுது குருவானவர் இவ்வாறு கூறுகிறார்- நான் அறியவில்லை என்பது இல்லையாயினும் அறிகிறேன். , “वेद चेति” (வேத சேதி) என்றபதசமூகத்தில் , “च”(ச்ச) சப்தத்தால் நான் அறியவும் இல்லை என்று பொருள் கொள்ள வேண்டும்.
ननु विप्रतिषिद्धं नाह मन्ये सु वेदेति, नो न वेदेति, वेद च इति । यदि न मन्यसे सु वेदेति, कथं मन्यसे वेद चेति । अथ मन्यसे वेदैवेति, कथं न मन्यसे सुवेदेति । एकं वस्तु येन ज्ञायते, तेनैव तदेव वस्तु न सु विज्ञायत इति विप्रतिषिद्धं संशयविपर्ययौ वर्जयित्वा । न च ब्रह्म संशयितत्वेन ज्ञेयं विपरीतत्वेन वेति नियन्तुं शक्यम् । संशयविपर्ययौ हि सर्वत्रानर्थकरत्वेनैव प्रसिद्धौ ।
குருவானவர் கூறுகிறார் நான் பிரஹ்மத்தை நன்றாக அறிகிறேன் என்று நினைக்கவில்லை அவ்வாறேநான் அறியவில்லை என்றும் நான் நினைக்கவில்லை என்பதால் நீ அறிந்திருக்கிறாய் என்பதாகும். இவ்வாறு கூறுவது பரஸ்பரம் விருத்தமாகிறது. எப்பொழுது நன்றாக அறியவில்லை என்று நினைக்கிறாயோ அப்பொழுது எவ்வாறு அறிகிறேன் என்பதாகும்? நான் அறிகிறேன் என்று கருதினால் அது எவ்வாறு நன்றாக அறிந்ததாகாது என்று எண்ணுகிறாய்? ஒருவஸ்துவானது ஒருவனால் அறியப்படின் அவனே அதேவஸ்துவை நான் நன்றாக அறியவில்லை என்று கூறுவது சந்தேக விபரீதம் இல்லை என்பது பொருத்தமற்றதாகும். பிரஹ்மம் சந்தேஹத்துடன் அறிய வேண்டியது என்றோ விபரீதமாக அறிகிறேன் என்றோ நியமம் கிடையாது. சந்தேஹம் விபரீதம் இரண்டும் எங்கும் அநர்த்தத்தையே செய்யும் என்பது பிரசித்தமாகும்.
एवमाचार्येण विचाल्यमानोऽपि शिष्यो न विचचाल,
‘अन्यदेव तद्विदितादथो अविदितादधि’ (के. उ. १ । ४) इत्याचार्योक्तागमसम्प्रदायबलात् उपपत्त्यनुभवबलाच्च ; जगर्ज च ब्रह्मविद्यायां दृढनिश्चयतां दर्शयन्नात्मनः । कथमित्युच्यते — यः यः कश्चित् नः अस्माकं सब्रह्मचारिणां मध्ये तत् मदुक्तं वचनं तत्त्वतो वेद, सः तत् ब्रह्म वेद ।
இவ்வாறு ஆச்சாரியரால் அசைக்கப்படினும் ‘अन्यदेव तद्विदितादथो अविदितादधि’ (அன்யதேவ தத்விதாததோ அவிதிதாததி= அது அறியப்பட்டதைக் காட்டிலும் வேறு, அறியாததைக் காட்டிலும் வேறு) என்று ஆச்சாரியரால் கூறப்பட்ட ஆகமசம்பிரதாய பலத்தாலும், யுக்தி பலத்தாலும், அனுபவ பலத்தாலும் அந்த சிஷ்யன் தன் நிலையிலிருந்து நழுவவில்லை. தன்னுடைய பிரஹ்மவித்தையில் உள்ள திட நிச்சயத்தை கர்ஜனை செய்தான். எவ்வாறு எனில் கூறுகிறேன்- “यो” எந்த ஒருவன் “नः” (ந:) நம் பிரஹ்மச்சாரிகளின் மத்தியில் “तत्” (தத்) அந்த என்னால் கூறப்பட்ட வசனத்தை உள்ளபடி “वेद” (வேத) அறிந்தவன். “तत्” (தத்) அந்த பிரஹ்மத்தை “वेद” (வேத) அறிந்தவன் ஆகிறான்
किं पुनस्तद्वचनमित्यत आह — नो न वेदेति वेद च इति । यदेव
‘अन्यदेव तद्विदितादथो अविदितादधि’ (के. उ. १ । ४) इत्युक्तम् , तदेव वस्तु अनुमानानुभवाभ्यां संयोज्य निश्चितं वाक्यान्तरेण नो न वेदेति वेद च इत्यवोचत् आचार्यबुद्धिसंवादार्थं मन्दबुद्धिग्रहणव्यपोहार्थं च । तथा च गर्जितमुपपन्नं भवति ‘यो नस्तद्वेद तद्वेद’ इति ॥
மேலும் அந்த வசனம் என்னவென்றால் கூறுகிறார்- நான் அறியவில்லை என்பது இல்லை, அறிகிறேன் என்றுமில்லை ஆச்சாரியருடைய புத்தியை (கருத்தை) நன்றாக தெளிவுபடுத்தும் பொருட்டும், மந்தபுத்தி உள்ளவர்களும் புரிந்துகொள்ளும் பொருட்டும் அதையே “अन्यदेव तद्विदितादथो अविदितादधि” (அன்யதேவ தத்விதிதாததோ அவிதிதாததி- அது அறிந்ததைக் காட்டிலும் வேறு, அறியாததைக் காட்டிலும் மேலே இருக்கிறது ) என்று கூறப்பட்டது. அந்தவஸ்து அனுமான, அனுபவங்களுடன் நிச்சயம் செய்யப்பட்டதை வேறு வாக்கியங்களால் “நான் அறியவில்லை என்பது இல்லை, ஆயினும் அறிகிறேன்” என்று கூறப்பட்டது. அவ்வாறே “यो नस्तद्वेद तद्वेद” (யோ நஸ்தத்வேத தத்வேத) எவன் இந்த பிரஹ்மத்தை உள்ளபடி அறிகிறானோ அவன் நான் அறிகிறேன் என்று கர்ஜிப்பது பொருத்தமாகிறது.
यस्यामतं तस्य मतं मतं यस्य न वेद सः ।
अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम् ॥ ३ ॥
शिष्याचार्यसंवादात्प्रतिनिवृत्य स्वेन रूपेण श्रुतिः समस्तसंवादनिर्वृत्तमर्थमेव बोधयति — यस्यामतमित्यादिना ।
(அ-கை) சிஷ்யன் ஆசார்யர் இருவரும் ஒத்துப்பேசும் முறையினின்றும் விலகி சுருதியானது தன் சொந்த ரூபத்தினால் (தனது அபிப்ராயமாக) இதுவரை கூறிய எல்லா வியவஹாரத்தாலும் ஏற்பட்ட பொருளையே “யஸ்யாமதம்” என்பது முதலியவற்றால் கூறுகிறது.
यस्य ब्रह्मविदः अमतम् अविज्ञातम् अविदितं ब्रह्मेति मतम् अभिप्रायः निश्चयः, तस्य मतं ज्ञातं सम्यग्ब्रह्मेत्यभिप्रायः । यस्य पुनः मतं ज्ञातं विदितं मया ब्रह्मेति निश्चयः, न वेदैव सः न ब्रह्म विजानाति सः ।
எந்த பிரஹ்ம ஞானியானவன் பிரஹ்மத்தை அறியவில்லை என்று நினைக்கிறானோ அவன் பிரஹ்மத்தை நன்றாக அறிந்திருக்கிறான் என்பது அபிப்பிராயம். மறுபடியும் எவன் ஒருவன் ப்ரஹ்மத்தை அறிகிறேன் என்று நினைக்கிறானோ அவன் பிரஹ்மத்தை அறியவில்லை என்பது அபிப்பிராயம்.
विद्वदविदुषोर्यर्थोक्तौ पक्षाववधारयति — अविज्ञातं विजानतामिति, अविज्ञातम् अमतम् अविदितमेव ब्रह्म विजानतां सम्यग्विदितवतामित्येतत् । विज्ञातं विदितं ब्रह्म अविजानताम् असम्यग्दर्शिनाम् , इन्द्रियमनोबुद्धिष्वेवात्मदर्शिनामित्यर्थः ; न त्वत्यन्तमेवाव्युत्पन्नबुद्धीनाम् । न हि तेषां विज्ञातमस्माभिर्ब्रह्मेति मतिर्भवति । इन्द्रियमनोबुद्ध्युपाधिष्वात्मदर्शिनां तु ब्रह्मोपाधिविवेकानुपलम्भात् , बुद्ध्याद्युपाधेश्च विज्ञातत्वात् विदितं ब्रह्मेत्युपपद्यते भ्रान्तिरित्यतः असम्यग्दर्शनं पूर्वपक्षत्वेनोपन्यस्यते — विज्ञातमविजानतामिति । अथवा हेत्वर्थ उत्तरार्धोऽविज्ञातमित्यादिः ॥
வித்வான்களுடையவும், அவித்வான் களுடையவுமான பக்ஷங்களை விவரிக்கிறார். “अविज्ञातं विजानतामिति” (அவிக்ஞாதம் விஜானதாம் என்று) பிரஹ்மத்தை நன்றாக அறிகிறேன் என்பவனுக்கு பிரஹ்மம் அறியப்படவில்லை என்பதாகும்.இந்திரியம், மனம், புத்தி இவைகளில் ஆத்ம பாவனை செய்யும் அக்ஞானிகளாகிய பிரஹ்மத்தை அறியாதவர்களாகிய அசம்யக்தர்சிகளால் அறியப்படவேண்டியதாய் இருக்கிறது. அதாவது மூடபுத்தி உள்ளவர்களால் அறியமுடியாது. ஏன்எனில் எங்களால் பிரஹ்மம் அறியப்படுகிறது என்று கருதுவதால் அவர்களால் அறியப்படாததாகிறது. இந்திரியமனோ புத்தி ஆகிய உபாதிகளில் ஆத்மபாவமுள்ளவர்களுக்கு பிரஹ்மம், உபாதி என்றவிவேகஞானம் இல்லாததால் புத்தி முதலியவைகள் அறியப்பட்டவைகளாக இருப்பதால் அதையே பிரஹ்மம் என்று நினைத்து நான் பிரஹ்மத்தை அறிகிறேன் என்றபிராந்தி இருப்பதால் அசம்யக்தர்சியைப் பற்றி பூர்வபக்ஷரூபமாக “विज्ञातमविजानतामिति” (விக்ஞாதமா விஞானதாமிதி) உபன்யஸ்யிக்கப்பட்டது. அல்லது உத்தரார்த்தத்தில் அவிக்ஞாதமிதி என்று ஹேதுவர்த்தத்தில் உள்ளது.
प्रतिबोधविदितं मतममृतत्वं हि विन्दते ।
आत्मना विन्दते वीर्यं विद्यया विन्दतेऽमृतम् ॥ ४ ॥
“अविज्ञातं विजानताम्” (அவிக்ஞாதம் விஜானதாம்) அறியவில்லை என்றால் அறிந்ததாகிறது என்று நிச்சயமாகிறது. பிரஹ்மமானது முற்றிலும் அறியப்படவில்லை எனில் லௌகிகர்களுக்கும், பிரஹ்ம ஞானம் அடைந்தவர்களும் அறியவில்லை என்பதில் இருவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போகும். மேலும் “अविज्ञातं विजानताम्” (அவிக்ஞாதம் விஜானதாம்) என்பது பரஸ்பர விருத்தமாகும். ஆகையால் எவ்வாறு பிரஹ்மமானது நன்றாக அறியப்பட்டதாகும் என்பதற்காக கூறுகிறார்.
“अविज्ञातं विजानताम्” என்று கூறப்பட்டதின் பொருள் உணரப்பட்டது. பிரம்மம் அவ்வாறு அறியப்படாததானால் உலகியலில் ஈடுபட்டவர்களுக்கும் பிரம்ம ஞானிகளுக்கும் என்ன வித்தியாசம். அறிந்தவர்களுக்கு அறியப்படவில்லை என்பதே பொருத்தமில்லாததாக உள்ளது. அவ்வாறிருக்க அப்பிரம்மம் எவ்வாறு அறியப்படாததாக இருக்குமேயானால் “நான் பிரம்மமாயிருக்கிறேன்” என்றவியவகாரம் எவ்வாறு ஏற்படும்?எனில் அறியப்பட்டது வியவஹாரத்திற்கு அங்கமாகும். அதாவது இப்பொருள் என்னால் அறியப்பட்டது என்னுமிடத்தில் (அவ்வியவஹாரத்தில்) அறியப்பட்டதாக குறிப்பிடப்பட்ட பொருள் அவ்வியவஹாரத்திற்கு அங்கமாகும். ஆனால் அப்பொருளை எது பிரகாசப்படுத்துகிறதோ அது அவ்வியவஹாரத்திற்கு அங்கமாவதில்லை என்பதை விளக்குவது இம்மந்திரம்.
ஆன்ம சைதன்யமான பிரம்மம் எவ்வாறு நன்கு அறியப்பட்டதாக ஆகிறது என்பது இம்மந்திரத்தால் விளக்கப்படுகிறது. (प्रतिबोधविदितं मतम्) ஜடங்களும், புத்தியின் விகாரங்களுமான நீலம், மஞ்சள், போன்றஉருவங்கள் (आकारः ஆகாரங்கள்) சைதன்ய வ்யாப்த்மான பொழுது அவைகள் அஜடங்களாக (ஜடத்தன்மையற்றவைகளாக) காக்ஷியளிக்கின்றன. கருப்புக்காகம் பறக்கிறது, பச்சைக்கிளி பேசுகிறது என்கிறோம். இவைகளில் சைதன்யம் வ்யாப்தமாய் இருப்பதால் இந்நிறங்கள் ஜடங்களாயிருப்பினும் அஜடங்கள் போல் காக்ஷியளிக்கின்றன. அந்த ஜடங்களை எது அஜடமாக விளங்கச் செய்கிறதோ அந்த சைதன்யமே ஆன்மா, அவனே நான் என்று எவன் அறிகிறானோ அவனே பிரம்மத்தை அறிந்தவன் எனப்படுவான்,புத்திக்கு விஷயமாகும் வஸ்துவின் தன்மைகள், அதை வேதாந்த பாஷையில் ப்ரத்யயங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. எனவே எல்லாப் பிரத்யயங்களும் எவனுக்கு விஷயமாகின்றனவோ அவன் ஆன்மா. அவனே புத்திக்கு விஷயமான எல்லாப்ரயத்யயங்களையும் காணும் சாக்ஷியான சித்சக்தி எனப்படும் ஞான சக்தியாவான். இத்தகைய புத்திப்ரத்யயங்களாலேயே, அவைகளினின்றும் தொடர்ந்து வேறுபடாதவனாக குறிக்கப்படுகிறான். இதைத் தவிர ஆன்மாவை அறிவதற்கு வேறு வழியில்லை. இவ்வாறு புத்தி ப்ரத்யயரூபமாய், ப்ரத்யகாத்மாவாய் எப்பொழுது பிரம்மம் அறியப்படுகிறதோ, அப்பொழுது அதை நன்கு அறிந்தவனாகிறான்.
प्रतिबोधविदितं बोधं बोधं प्रति विदितम् । बोधशब्देन बौद्धाः प्रत्यया उच्यन्ते । सर्वे प्रत्यया विषयीभवन्ति यस्य, स आत्मा सर्वबोधान्प्रतिबुध्यते सर्वप्रत्ययदर्शी चिच्छक्तिस्वरूपमात्रः प्रत्ययैरेव प्रत्ययेष्वविशिष्टतया लक्ष्यते ; नान्यद्द्वारमन्तरात्मनो विज्ञानाय ।
प्रतिबोधविदितम् (பிரதிபோதவிதிதம்) என்றால் ஒவ்வொரு போதத்தையும் அறிவது. போதம் என்றசப்தமானது புத்தியில் தோன்றும் பிரத்யயங்கள் என்று கூறப்படுகின்றது. எவனுக்கு எல்லா பிரத்யயங்களும் விஷயமாகின்றதோ அந்த ஆத்மா எல்லா பிரத்யயங்களையும் நன்றாக அறிகிறான்.அவனே எல்லா பிரத்தியயங்களுக்கும் சாக்ஷீ மேலும் சித்சக்தி ஸ்வரூபமாத்திரமாய் இருப்பதால் அந்த பிரத்தியயங்களின் வாயிலாக சாமானியரூபமாக பிரத்தியயங்களில் லக்ஷிக்கப்படுகிறது. அந்த அந்தராத்மாவின் ஞானத்தை அடைவதற்கு அதைத் தவிர வேறு வழியில்லை.
अतः प्रत्ययप्रत्यगात्मतया विदितं ब्रह्म यदा, तदा तत् मतं तत्सम्यग्दर्शनमित्यर्थः सर्वप्रत्ययदर्शित्वे चोपजननापायवर्जितदृक्स्वरूपता नित्यत्वं विशुद्धस्वरूपत्वमात्मत्वं निर्विशेषतैकत्वं च सर्वभूतेषु सिद्धं भवेत् , लक्षणभेदाभावाद्व्योन्न इव घटगिरिगुहादिषु । विदिताविदिताभ्यामन्यद्ब्रह्मेत्यागमवाक्यार्थ एवं परिशुद्ध एवोपसंहृतो भवति ।
‘दृष्टेद्रष्टा श्रुतेः श्रोता मतेर्मन्ता विज्ञातेर्विज्ञाता’ (बृ. उ. ३ । ४ । २) इति हि श्रुत्यन्तरम् ।
ஆகையால் எப்பொழுது பிரஹ்மத்தை பிரத்யயங்களின் பிரத்யக் ஆத்மாவாக அதாவது அந்தர்சாக்ஷியாக அறிகிறானோ அப்பொழுது அதை அறிகிறான். அதுவே சம்யக்தர்சனம் எனப்படுகிறது. எல்லாப் பிரத்தியயங்களுக்கும் சாக்ஷியாய் இருப்பதால் அதற்கு விருத்தியோ க்ஷயமோ அற்றதாய் திருக்ஸ்வரூபமாயும் நித்யத்துவம், விசுத்தஸ்வரூபத்துவமாயும், ஆத்மத்துவமாயும், நிர்விசேஷத்துவமாயும் அவ்வாறேஎல்லா பிராணிகளிடத்தும் ஏகத்துவமானது அனுஸ்யூதமாய் கடம், மலை, குகை, முதலியவைகளில் உள்ள ஆகாயம் போல் லக்ஷணபேதம் இல்லாததினால் சித்திக்கிறது. பிரஹ்மமானது அறிந்ததைக் காட்டிலும், அறியாததைக் காட்டிலும் வேறு என்றஆகமவாக்கியார்த்தத்தை நன்றாக விசாரணை செய்து முடிக்கப்படுகிறது. வேறு சுருதியிலும் “दृष्टेर्द्रष्टा श्रुतेः श्रोता मतेर्मन्ता विज्ञातेर्विज्ञाता” (த்ருஷ்டேர்த்ருஷ்ட்டா ச்ருதே:ச்ரோதா மதேர்மன்தா விக்ஞாதேர்விக்ஞாதா) என்று கூறப்பட்டுள்ளது.
यदा पुनर्बोधक्रियाकर्तेति बोधक्रियालक्षणेन तत्कर्तारं विजानातीति बोधलक्षणेन विदितं प्रतिबोधविदितमिति व्याख्यायते, यथा यो वृक्षशाखाश्चालयति स वायुरिति तद्वत् ; तदा बोधक्रियाशक्तिमानात्मा द्रव्यम् , न बोधस्वरूप एव । बोधस्तु जायते विनश्यति च । यदा बोधो जायते, तदा बोधक्रियया सविशेषः । यदा बोधो नश्यति, तदा नष्टबोधो द्रव्यमात्रं निर्विशेषः । तत्रैवं सति विक्रियात्मकः सावयवोऽनित्योऽशुद्ध इत्यादयो दोषा न परिहर्तुं शक्यन्ते ।
எவ்வாறு எது மரத்தின் கிளைகளை அசைக்கின்றதோ அது காற்றாகும் என்பது போல் எப்பொழுது மீண்டும் போதக்கிரியாவின் (பிரத்தியயகிரியாவின்) கர்த்தா என்று போதக்கிரியா லக்ஷணத்துடன் அந்த கர்த்தாவை அறிகிறான் என்பதால் போதலக்ஷணத்துடன் அறிவது பிரதிபோதவிதிதம் என்று வியாக்யானம் செய்யப்பட்டது. அப்பொழுது ஆத்மா போதக்கிரியா சக்தி ரூப திரவ்யம் (வஸ்து)அல்ல.சாக்ஷாத் போதஸ்வரூபம் சித்திக்காது. போதமானது தோன்றும் அழியும், எப்பொழுது போதம் உண்டாகிறதோ அப்பொழுது போதக்கிரியையானது சவிசேஷமாகும்.எப்பொழுது போதம் நசிக்கிறதோ அப்பொழுது போதமற்று திரவ்யமாத்திரம் நிர்விசேஷமாய் இருக்கிறது. இவ்வாறு இருக்கும் பொழுது போதமானது விகாரி, சாவயவ, அநித்யம், அசுத்தம் ஆகும். இந்த தோஷம் நீக்க முடியாததாகும்.
यदपि काणादानाम् आत्ममनःसंयोगजो बोध आत्मनि समवैति ; अत आत्मनि बोद्धृत्वम् , न तु विक्रियात्मक आत्मा ; द्रव्यमात्रस्तु भवति घट इव रागसमवायी । अस्मिन्पक्षेऽप्यचेतनं द्रव्यमात्रं ब्रह्मेति
‘विज्ञानमानन्दं ब्रह्म’ (बृ. उ. ३ । ९ । २७) ‘प्रज्ञानं ब्रह्म’ इत्याद्याः श्रुतयो बाधिताः स्युः । आत्मनो निरवयवत्वेन प्रदेशाभावात् नित्यसंयुक्तत्वाच्च मनसः स्मृत्युत्पत्तिनियमानुपपत्तिरपरिहार्या स्यात् । संसर्गधर्मित्वं चात्मनः श्रुतिस्मृतिन्यायविरुद्धं कल्पितं स्यात् ।
‘असङ्गो न हि सज्जते’ (बृ. उ. ३ । ९ । २६),
(बृ. उ. ४ । ५ । १५) ‘असक्तं सर्वभृत्’ (भ. गी. १३ । १४) इति हि श्रुतिस्मृती । न्यायश्च — गुणवद्गुणवता संसृज्यते, नातुल्यजातीयम् । अतः निर्गुणं निर्विशेषं सर्वविलक्षणं केनचिदप्यतुल्यजातीयेन संसृज्यत इत्येतत् न्यायविरुद्धं भवेत् । तस्मात् नित्यालुप्तज्ञानस्वरूपज्योतिरात्मा ब्रह्मेत्ययमर्थः सर्वबोधबोद्धृत्वे आत्मनः सिध्यति, नान्यथा । तस्मात् ‘प्रतिबोधविदितं मतम्’ इति यथाव्याख्यात एवार्थोऽस्माभिः ।
காணாதர் (வைசேஷிக) மதத்தவர்கள் ஆத்மா மற்றும் மனதின் சம்யோகத்தால் உண்டான போதமானது ஆத்மாவிடத்தில் சமவாய சம்பந்தமாய் உள்ளது. ஆகையால்தான் ஆத்மாவிடத்தில் போத்த்ருத்துவம். ஆத்மா விகாரம் உடையது அல்ல. அது (வெண்மை கருமை முதலிய) நிறங்களின் சமவாய கடத்திற்கு சமமாக திரவ்யமாத்திரமாகவே இருக்கிறது. இந்த பக்ஷத்திலும் பிரஹ்மமானது அசேதனமாயும் திரவ்யமாத்திரமாய் இருப்பதால் “विज्ञानमानन्तं ब्रह्म” (விக்ஞானமானந்தம் ப்ரஹ்ம) “प्रज्ञानं ब्रह्म” (ப்ரக்ஞானம் பிரஹ்மம்) முதலிய சுருதி வாக்கியங்கள் நிராகரிக்கப்பட்டதாகும். ஆத்மா திரவ்யமாய் இருப்பதால் பிரதேசவிஷேசம் இல்லாததினால் எப்பொழுதும் சேர்க்கையுடன் இருக்கும் மனதிற்கு நினைவின் உற்பத்தி நியமமானது உற்பத்தியின்மையினை தடுக்க முடியாததாகும். ஆத்மாவிற்கு சம்சர்க தர்மத்துவம் உள்ளது என்பது சுருதி, ஸ்மிருதி நியாயத்திற்கு விருத்தமாக கல்பிக்கப்பட்டதாகும். ‘असङ्गो न हि सज्जति’ (அசங்கோ ந ஹி சஜ்ஜதே) ‘असक्तं सर्वभृत्’ (அசக்தம் சர்வப்ருத்) என்றல்லவா சுருதி ஸ்மிருதி வசனங்களாகும்.நியாயத்தில் எந்த வஸ்து சகுணமாய் (சஜாதீயமாய்) இருக்கிறதோ அதற்கு குணவானிடத்தில் சம்சர்க்கம் உண்டாகிறது. விஜாதீயவஸ்துவிடத்தில் சம்சர்கம் உண்டாகாது. ஆகையால் நிர்குணம், நிர்விசேஷம், சர்வவிலக்ஷணம் என்று வேறு எந்த ஒரு விஜாதீயத்திடனும் சம்யோகம் உண்டாகாது என்பதின் நியாயத்திற்கு விருத்தம் உண்டாகும். ஆகையால் நித்ய, அலுப்த்த, (நாசமற்ற) ஞானஸ்வரூப ஜ்யோதி ஆத்மா பிரஹ்மம் என்ற இந்த அர்த்தம் சம்பூர்ண போதங்களின் போத்திருத்துவமானது ஆத்மாவிற்கு சித்திக்கிறது. வேறு விதமாக அல்ல. ஆகையால் ‘प्रतिबोधविदितम् मतम्’ என்று எவ்வாறு நம்மால் வியாக்யானம் செய்யப்பட்டதோ அதுவே அர்த்தமாகும்.
மேலும் சுவசம்வேத்தியத்தினால் प्रतिबोधविदितम् (பிரதிபோதவிதிதம்) என்றவாக்கியத்தின் அர்த்தம் விளக்கப்படுகிறது. சோபாதிகம் என்றஇடத்தில் ஆத்மாவிற்கு புத்தி உபாதி ஸ்வரூபமாய் பேதத்தைக் கல்பித்து ஆத்மாவினால் ஆத்மாவை அறிகிறது என்று வியவகாரம் ஏற்படுகிறது. “आत्मन्येवात्मानं पश्यति” (ஆத்மன்யேவா ஆத்மானம்பச்யதி) “स्वयमेवात्मनात्मानं वेत्थ त्वं पुरुषोत्तम” (ஸ்வயமேவாத்மனா ஆத்மானம் வேத்த த்வம் புருஷோத்தம) என்று சுருதி, ஸ்மிருதி வாக்கியங்களாகும். நிருபாதிக ஆத்மா ஏகமாய் இருப்பதால் சுவசம்வேத்தியமோ பரசம்வேத்தியமோ சம்பவியாது. எவ்வாறு பிரகாசத்திற்கு வேறு பிரகாசம் தேவை இல்லையோ அவ்வாறு சம்வேதனஸ்வரூபமாய் இருப்பதால் வேறு சம்வேதனத்தை அபேக்ஷிக்காது.
பெளத்தர்களுடைய பக்ஷத்தில் விக்ஞானத்திற்கு ஸ்வசம்வேத்யத்தை ஏற்றுக்கொள்வதால் க்ஷணிகத்தில் நஷ்டமாகும் தன்மையும் ஆத்மாஅற்ற தன்மையும் ஏற்படுகிறது. “न हि विज्ञातुर्विज्ञातेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वात्” “नित्यं विभुं सर्वगतम्द्य्भद्य्भ” “स वा एष महानज आत्माजरोऽमरोऽमृतोऽभयः” (“ந ஹி விக்ஞாத்துர்விக்ஞாதோ விபரிலோபோ வித்யதே அவிநாசித்வாத்”, “நித்யம், விபும், சர்வகதம்”, “சவாஏஷ மஹானஜ ஆத்மாஜரோ அமரோ அம்ருதோ அபய”) “என்பது முதலிய சுருதிகளின் தாத்பர்யம் பாதிக்கப்படும்.
यत्पुनः प्रतिबोधशब्देन निर्निमित्तो बोधः प्रतिबोधः यथा सुप्तस्य इत्यर्थं परिकल्पयन्ति, सकृद्विज्ञानं प्रतिबोध इत्यपरे ; निर्निमित्तः सनिमित्तः सकृद्वासकृद्वा प्रतिबोध एव हि सः । अमृतत्वम् अमरणभावं स्वात्मन्यवस्थानं मोक्षं हि यस्मात् विन्दते लभते यथोक्तात्प्रतिबोधात्प्रतिबोधविदितात्मकात् , तस्मात्प्रतिबोधविदितमेव मतमित्यभिप्रायः । बोधस्य हि प्रत्यगात्मविषयत्वं च मतममृतत्वे हेतुः । न ह्यात्मनोऽनात्मत्वममृतत्वं भवति । आत्मत्वादात्मनोऽमृतत्वं निर्निमित्तमेव । एवं मर्त्यत्वमात्मनो यदविद्यया अनात्मत्वप्रतिपत्तिः ।
மேலும் சிலர் பிரதிபோத சப்தத்தினால் எவ்வாறு சுஷுப்தபுருஷனுக்கு நிமித்தமில்லாமல் போதம் ஏற்படுகிறதோ அதுவே பிரதிபோதம் என்று கல்பிக்கிறார்கள். அல்லது வேறு சிலர் ஒரு தடவை தோன்றும் போதத்தை பிரதிபோதம் என்கிறார்கள். ஆனால்நிமித்தத்துடனோ, நிமித்தமில்லாமலோ, ஒருமுறையோ, அல்லது பலமுறையோ போதம் ஏற்பட்டாலும் அதி பிரதிபோதமே ஆகும். எதனால் முன்பு கூறப்பட்ட பிரதிபோதத்தினால் ஆத்மாவை அறிந்ததால்(முமூக்ஷுவானவன்) அம்ருதத்துவம் அதாவது அமரணபாவம் தன்னிலேயே நிலைபெற்றுதலாகிய மோக்ஷத்தை அடைகின்றானோஅதனால் பிரதிபோதவிதிதம் அதாவது பிரஹ்மத்தின் பிரத்யேக போதத்தினால் அறிந்தவனாகின்றான் என்பது பொருள். ஆத்மாவிற்கு அநாத்ம தன்மையோ, அம்ருதத்துவமோ அதாவது மரணதர்மமற்றதன்மையோ கிடையாது.ஏன் எனில் தானாகவே இருப்பதால் அம்ருதத்துவமானது ஆத்மாவின் ஸ்வரூபமாகவே இருப்பதால் அதற்கு நிமித்தமானது தேவையற்றதாகும். ஆகையால் ஆத்மாவிற்கு மரணத்துவம் என்பது அவித்தையினால் அனாத்மத்துவம் ஏற்பட்டதால் ஆகும்.
कथं पुनर्यथोक्तयात्मविद्ययामृतत्वं विन्दत इत्यत आह — आत्मना स्वेन रूपेण विन्दते लभते वीर्यं बलं सामर्थ्यम् । धनसहायमन्त्रौषधितपोयोगकृतं वीर्यं मृत्युं न शक्नोत्यभिभवितुम् , अनित्यवस्तुकृतत्वात् ; आत्मविद्याकृतं तु वीर्यमात्मनैव विन्दते, नान्येनेत्यतोऽनन्यसाधनत्वादात्मविद्यावीर्यस्य तदेव वीर्यं मृत्युं शक्नोत्यभिभवितुम् । यत एवमात्मविद्याकृतं वीर्यमात्मनैव विन्दते, अतः विद्यया आत्मविषयया विन्दतेऽमृतम् अमृतत्वम् ।
‘नायमात्मा बलहीनेन लभ्यः’ (मु. उ. ३ । २ । ४)इत्याथर्वणे । अतः समर्थो हेतुः अमृतत्वं हि विन्दत इति ॥
மேலும்கூறப்பட்டவாறு ஆத்மவித்தையினால் எவ்வாறு அம்ருதத்தை அடைகிறான் என்பதைக் கூறுகிறார். தன்னுடைய ஸ்வரூபத்தினால் அமரத்துவத்தை அடைவதற்கான சாமர்த்தியத்தை பெறுகிறான். தனம், சஹாயம்,மந்திரம், ஔஷதம், தபஸ், யோகம், முதலியவைகளினால் உண்டான சாமர்த்தியம் அநித்தியமானதால் (மரணத்தை) மிருத்யுவை தோற்கடிக்க முடியாது. ஆத்மவித்தையினால் உண்டான சாமர்த்தியம் தன் ஸ்வரூப ஞானத்தினால் அடையப்படுகிறது. வேறு ஒன்றினாலும் அடைய முடியாததால் ஆத்மவித்யா சாமர்த்தியத்திற்கு வேறு சாதனமின்மையால் தன் சுவரூப ஞானமாகிய சாமர்த்தியத்தினால் ம்ருத்யுவை தோற்கடிக்க முடியும். ஆகையால் ஆத்ம வித்தையினால் ஏற்பட்ட சாமர்த்தியமானது தன்னுடைய ஸ்வரூப ஞானத்தினால் அடையப்படுகிறது. ஆகையால் ஆத்ம விஷயமான வித்தையினால் அமிருதத்துவம் அடையப்படுகிறது.
इह चेदवेदीदथ सत्यमस्ति न चेदिहावेदीन्महती विनष्टिः ।
भूतेषु भूतेषु विचित्य धीराः प्रेत्यास्माल्लोकादमृता भवन्ति ॥ ५ ॥
कष्टा खलु सुरनरतिर्यक्प्रेतादिषु संसारदुःखबहुलेषु प्राणिनिकायेषु जन्मजरामरणरोगादिसम्प्राप्तिरज्ञानात् । अतः
(அ-கை) ஸம்ஸார துக்கம் நிறைந்துள்ள பிராணி சரீரங்களில் அதாவது தேவர், மனுஷ்யர், விலங்கு, ப்ரேதம் முதலியவைகளாக பிறந்து, முதுமையடைந்து, ரோகம்,மரணம் போன்றகஷ்டமான துன்பங்களை அனுபவித்தல் அக்ஞானத்தால் அல்லவா! அதனால்.
इह एव चेत् मनुष्योऽधिकृतः समर्थः सन् यदि अवेदीत् आत्मानं यथोक्तलक्षणं विदितवान् यथोक्तेन प्रकारेण, अथ तदा अस्ति सत्यं मनुष्यजन्मन्यस्मिन्नविनाशोऽर्थवत्ता वा सद्भावो वा परमार्थता वा सत्यं विद्यते । न चेदिहावेदीदिति, न चेत् इह जीवंश्चेत् अधिकृतः अवेदीत् न विदितवान् , तदा महती दीर्घा अनन्ता विनष्टिः विनाशनं जन्मजरामरणादिप्रबन्धाविच्छेदलक्षणा संसारगतिः ।
इह एव चेत् (இஹ ஏவ ச்சேத்) எந்த ஒரு அதிகாரி புருஷன் ஆத்மாவை அறிவதற்கான சாமர்த்தியமுடையவனாகி எப்பொழுது கூறப்பட்ட லக்ஷணத்தோடு கூடிய ஆத்மாவை கூறப்பட்டவாறு அறிகிறானோ அப்பொழுது சத்தியவஸ்துவாகிறான். அதாவது இந்த மனித ஜன்மத்தில் அவிநாசிதன்மை, அர்த்தத்துடன் கூடிய தன்மை, சத்பாவம் அல்லது பரமார்த்தமாக இருக்கிறவனாகிறான். இங்கு அறியவில்லை எனில் இந்த உலகில் ஜீவித்துக் கொண்டிருக்கும் பொழுதே இந்த அதிகாரி ஆத்மக்ஞானம் அடையவில்லை எனில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். அதாவது ஜன்மஜராமரண முதலிய பந்தங்களின் பரம்பரையை நீக்கமுடியாத லக்ஷணத்துடன் கூடிய சம்சார கதிதான் ஏற்படும்.
तस्मादेवं गुणदोषौ विजानन्तो ब्राह्मणाः भूतेषु भूतेषु सर्वभूतेषु स्थावरेषु चरेषु च एकमात्मतत्त्वं ब्रह्म विचित्य विज्ञाय साक्षात्कृत्य धीराः धीमन्तः प्रेत्य व्यावृत्य ममाहम्भावलक्षणादविद्यारूपादस्माल्लोकात् उपरम्य सर्वात्मैकभावमद्वैतमापन्नाः सन्तः अमृता भवन्ति ब्रह्मैव भवन्तीत्यर्थः ।
‘स यो ह वै तत्परं ब्रह्म वेद ब्रह्मैव भवति’ (मु. उ. ३ । २ । ९) इति श्रुतेः ॥
ஆகையால் இவ்வாறு குணதோஷங்களை அறிந்த பிராஹ்மணர்கள் எல்லா பிராணிகளிடத்திலும் ஸ்தாவர ஜங்கமங்களிலும் ஒரே ஆத்மாவை விசாரித்து அறிந்து சாக்ஷாத்காரத்தை அடைந்த தீரர்கள் இதிலிருந்து விடுபட்டு மமகாரம்அஹங்காரபாவலக்ஷண அவித்தியா ரூபமான இந்த லோகத்தில் விரக்தி அடைந்து சர்வாத்மைக்க பாவமான அத்துவைதத்தை அடைந்தவர்களாகி அமிருதத்தை அடைகிறார்கள். அதாவது பிரஹ்மமாகவே ஆகிறார்கள் என்பது பொருள். “ஸ யோ ஹ வை தத்பரம் ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி” என்பது சுருதி வாக்யம்.
इति द्वितीयखण्डभाष्यम् ॥
ब्रह्म ह देवेभ्यो विजिग्ये तस्य ह ब्रह्मणो विजये देवा अमहीयन्त त ऐक्षन्तास्माकमेवायं विजयोऽस्माकमेवायं महिमेति ॥ १ ॥
ब्रह्म ह देवेभ्यो विजिग्ये ।
‘अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम्’ (के. उ. २ । ३) इत्यादिश्रवणात् यदस्ति तद्विज्ञातं प्रमाणैः यन्नास्ति तदविज्ञातं शशविषाणकल्पमत्यन्तमेवासद्दृष्टम् । तथेदं ब्रह्माविज्ञातत्वादसदेवेति मन्दबुद्धीनां व्यामोहो मा भूदिति तदर्थेयमाख्यायिका आरभ्यते ।
‘अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम्’ (அவிக்ஞாதம் விஜானதாம் விக்ஞாதமவிஜானதாம்- அறியவில்லை என்பவர்க்கு அறியப்பட்டதாயும், அறிந்தேன் என்பவருக்கு அறியப்படாததாய் இருக்கிறது.) என்பது முதலிய சுருதிவாக்கியங்களால் எது இருக்கிறதோ அதை பிரமாணங்களினால் அறிகிறோம்.எது இல்லையோ அதி முயல்கொம்புபோல் அறியமுடியாதது. அது முற்றிலும் அசத்தாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு இந்த பிரஹ்மம் அறிய முடியாததால் அசத்தே என்று மந்த புத்தியுடையவர்கள் வியாமோஹம் அடைந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த கதையானது ஆரம்பிக்கப்படுகிறது.
तदेव हि ब्रह्म सर्वप्रकारेण प्रशास्तृ देवानामपि परो देवः, ईश्वराणामपि परमेश्वरः, दुर्विज्ञेयः, देवानां जयहेतुः, असुराणां पराजयहेतुः ; तत्कथं नास्तीत्येतस्यार्थस्यानुकूलानि ह्युत्तराणि वचांसि दृश्यन्ते ।
அந்த பிரஹ்மமே எல்லா வகையிலும் கட்டளையினால் ப்ரேரணை செய்கிறது. தேவர்களுக்கெல்லாம் மேலான தேவன். ஈஸ்வரர்களுக்கெல்லாம் பரமேஸ்வரன். அறியமுடியாதவன், தேவர்களுக்கெல்லாம் வெற்றிக்குக் காரணமானவன். அசுரர்களுக்கு தோல்விக்குக் காரணமானவன். அது எவ்வாறு அசத்தாகும்? (அதாவது ப்ரஹ்மமானது இல்லாமல் போகும்) இந்த அர்த்தத்தை விளக்குவதற்காகவே அதற்கு அனுகூலமாக இனி வரப்போகின்றவாக்கியங்கள் காணப்படுகின்றன.
अथवा ब्रह्मविद्यायाः स्तुतये । कथम् ? ब्रह्मविज्ञानाद्धि अग्न्यादयो देवा देवानां श्रेष्ठत्वं जग्मुः । ततोऽप्यतितरामिन्द्र इति । अथवा दुर्विज्ञेयं ब्रह्मेत्येतत्प्रदर्श्यते — येनाग्न्यादयोऽतितेजसोऽपि क्लेशेनैव ब्रह्म विदितवन्तस्तथेन्द्रो देवानामीश्वरोऽपि सन्निति ।
அல்லது பிரஹ்ம வித்தையை ஸ்துதிப்பதின் பொருட்டாகும் எவ்வாறு? ப்ரஹ்ம ஞானத்தினால் அல்லவா அக்னி முதலிய தேவர்கள் தேவர்களைக் காட்டிலும் ச்ரேஷ்ட்டத் தன்மையை அடைந்தார்கள். அவர்களைக் காட்டிலும் இந்திரன் அதிக சிரேஷ்ட்டத்தன்மை உடையவனாகிறான். அல்லது பிரஹ்மத்தை அறிவது மிகவும் கடினம் என்பது காண்பிக்கப்படுகிறது. எதனால் அக்னி முதலியவர்கள் மிகுந்த தேஜஸ்விகளாய் இருந்தாலும் கஷ்டப்பட்டே பிரஹ்மத்தை அறிந்தார்கள். இந்திரன் தேவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனாய் இருந்தாலும் மிகவும் கஷ்டப்பட்டே அறிய முடிந்தது.
वक्ष्यमाणोपनिषद्विधिपरं वा सर्वम् । ब्रह्मविद्याव्यतिरेकेण प्राणिनां कर्तृत्वभोक्तृत्वाद्यभिमानो मिथ्येत्येतद्दर्शनार्थं वा आख्यायिका, यथा देवानां जयाद्यभिमानस्तद्वदिति ।
இனிகூறப் போகிறஉபநிஷத் விதிபரமா? அல்லது பிரஹ்ம வித்யா அற்றஜீவர்களுக்கு எந்த கர்த்திருத்வ, போக்திருத்வ முதலிய அபிமானம் உள்ளதோ அது தேவர்களிடத்தில் உள்ள வெற்றி முதலிய அபிமானம் போல்மித்தையே ஆகும் என்று காட்டவேண்டி இக்கதை சொல்லப்பட்டது. எவ்விதம் தேவர்களுக்கு ஐயம் முதலியவற்றின் அபிமானம் உள்ளதோ அதுபோலவேயாம்.
ब्रह्म यथोक्तलक्षणं परं ह किल देवेभ्योऽर्थाय विजिग्ये जयं लब्धवत् देवानामसुराणां च सङ्ग्रामेऽसुराञ्जित्वा जगदरातीनीश्वरसेतुर्भेत्तॄन् देवेभ्यो जयं तत्फलं च प्रायच्छज्जगतः स्थेम्ने । तस्य ह किल ब्रह्मणो विजये देवाः अग्न्यादयः अमहीयन्त महिमानं प्राप्तवन्तः ।
முன்பு கூறப்பட்ட லக்ஷணமுடைய பரப்பிரஹ்மம் அல்லவா தேவர்களின் நன்மையின் பொருட்டு ஜெயத்தை அடைவித்தார். தேவாசுரர்களின் யுத்தத்தில் ஜகத்தின் எதிரிகளையும் ஈஸ்வரரின் மரியாதையை கொடுப்பவர்களையும் ஜெயித்து தேவர்களுக்கு அந்த பலனாகிய ஜயத்தையும், ஜகத்தின் ஸ்திதியையும் நிலை நாட்டினார். இந்த பிரஹ்மத்தினுடைய வெற்றியால் அல்லவா அக்னி முதலிய தேவர்கள் மஹிமையை அடைந்தார்கள்.
तदा आत्मसंस्थस्य प्रत्यगात्मन ईश्वरस्य सर्वज्ञस्य सर्वक्रियाफलसंयोजयितुः प्राणिनां सर्वशक्तेः जगतः स्थितिं चिकीर्षोः अयं जयो महिमा चेत्यजानन्तः
(அனுவாதம்)அப்பொழுது அந்தக் கரணத்தில் உள்ள பிரத்யக் ஆத்மாகிய சர்வக்ஞனும், எல்லாகர்மங்களின் பலதாதாவும் பிராணிகளின் சர்வசக்தியால் உள்ள ஈஸ்வரன் ஜகத்தின் ஸ்திதியை ரக்ஷிப்பதில் விருப்பமுடையவரால்தான் இந்த ஜயமும் மஹிமையும் என்று அறியவில்லை.
ते देवाः ऐक्षन्त ईक्षितवन्तः अग्न्यादिस्वरूपपरिच्छिन्नात्मकृतः अस्माकमेवायं विजयः अस्माकमेवायं महिमा अग्निवाय्विन्द्रत्वादिलक्षणो जयफलभूतोऽस्माभिरनुभूयते नास्मत्प्रत्यगात्मभूतेश्वरकृत इति ॥
அக்னி முதலிய ஸ்வரூபத்தின் பரிச்சின்ன முடைய தேவர்கள் நம்மால் தான் இந்த ஜயமும் மஹிமையும் ஏற்பட்டது. மேலும் ஜயமாகிய பலத்திற்கு காரணமான அக்னித்துவம், வாயுத்துவம், அவ்வாறே இந்திரரூபத்துவம் ஆகிய மஹிமைகளை உடையவர்களாய் இருக்கின்றோம்.. ஆகையால் நம்மால் அதை அனுபவிக்க முடிகிறது. நம்முடைய பிரத்யக் ஆத்ம பூதமான ஈஸ்வரனால் அல்ல என்று நினைத்தார்கள்.
तद्धैषां विजज्ञौ तेभ्यो ह प्रादुर्बभूव तन्न व्यजानत किमिदं यक्षमिति ॥ २ ॥
एवं मिथ्याभिमानेक्षणवतां तत् ह किल एषां मिथ्येक्षणं विजज्ञौ विज्ञातवद्ब्रह्म । सर्वेक्षितृ हि तत् सर्वभूतकरणप्रयोक्तृत्वात् देवानां च मिथ्याज्ञानमुपलभ्य मैवासुरवद्देवा मिथ्याभिमानात्पराभवेयुरिति तदनुकम्पया देवान्मिथ्याभिमानापनोदनेनानुगृह्णीयामिति तेभ्यः देवेभ्यः ह किल अर्थाय प्रादुर्बभूव स्वयोगमाहात्म्यनिर्मितेनात्यद्भुतेन विस्मापनीयेन रूपेण देवानामिन्द्रियगोचरे प्रादुर्बभूव प्रादुर्भूतवत् । तत् प्रादुर्भूतं ब्रह्म न व्यजानत नैव विज्ञातवन्तः देवाः किमिदं यक्षं पूज्यं महद्भूतमिति ॥
இவ்வாறு மித்தியா அபிமானத்தால் விசாரம் செய்யும் அந்த தேவதைகளுடைய மித்தியா விசாரத்தை பிரஹ்மம் அறிந்து கொண்டது. ஏன்எனில் எல்லா ஜீவனுக்கும் ஸர்வ பூதங்களின் கரணங்களை இயக்குவதால் தேவர்கள் மித்யா ஞானத்தை அடைந்து அசுரர்களைப் போல் மித்யா அபிமானத்தால் பராஜயத்தை அடையக்கூடாது என்று கருணையினால் தேவர்களுடைய அபிமானத்தை நீக்கி அனுகிரஹிப்பதின் பொருட்டு தேவர்களின் நன்மைக்காக தோன்றினார். தன்னுடைய யோகமாயையின் பிரபாவத்தால் எல்லோரும் ஆச்சரியம் அடையும் படி மிக அற்புதமான ரூபத்தை தேவர்களின் இந்திரியங்களுக்கு விஷயமாகும்படி தோன்றினார். இவ்வாறு தோன்றிய பிரஹ்மத்தை தேவர்கள் என்னவென்று அறியாதவர்களாகி இந்த யக்ஷன்யார்? பூஜிக்க தகுந்த மஹத்பூதம் எது? என்று நினைத்தார்கள்.
तेऽग्निमब्रुवन् जातवेद एतद्विजानीहि किमेतद्यक्षमिति तथेति ॥ ३ ॥
तदभ्यद्रवत्तमभ्यवदत् कोऽसीत्यग्निर्वा अहमस्मीत्यब्रवीज्जातवेदा वा अहमस्मीति ॥ ४ ॥
तस्मिंस्त्वयि किं वीर्यमित्यपीदं सर्वं दहेयं यदिदं पृथिव्यामिति ॥ ५ ॥
तस्मै तृणं निदधावेतद्दहेति तदुपप्रेयाय सर्वजवेन तन्न शशाक दग्धुं स तत एव निववृते नैतदशकं विज्ञातुं यदेतद्यक्षमिति ॥ ६ ॥
ते तदजानन्तो देवाः सान्तर्भयास्तद्विजिज्ञासवः अग्निम् अग्रगामिनं जातवेदसं सर्वज्ञकल्पम् अब्रुवन् उक्तवन्तः । हे जातवेदः एतत् अस्मद्गोचरस्थं यक्षं विजानीहि विशेषतो बुध्यस्व त्वं नस्तेजस्वी किमेतद्यक्षमिति ।
அதை என்னவென்று அறியாமல் உள்ளே பயந்தவர்களாகி அதை அறிவதில் இச்சை உடையவர்களாகிய அந்த தேவர்கள் முன்னே செல்லக்கூடியதும், செல்லும் பொழுது அறியும் தன்மை உடைய சர்வக்ஞனுக்கு ஒப்பான அக்னியைக் குறித்து இவ்வாறு கூறினார் ஹே ஜாதவேத நீ எங்களைக் காட்டிலும் தேஜஸ் பொருந்தியவன். இந்த யக்ஷன் யார் என்று அதாவது நமக்கு முன்னால் கண்களுக்கு கோச்சரமாகும் இந்த யக்ஷன் யார் என்று விசேஷமாக அறிவாயாக.
तथा अस्तु इति तत् यक्षम् अभि अद्रवत् तत्प्रति गतवानग्निः । तं च गतवन्तं पिपृच्छिषुं तत्समीपेऽप्रगल्भत्वात्तूष्णीम्भूतं तद्यक्षम् अभ्यवदत् अग्निं प्रति अभाषत कोऽसीति । एवं ब्रह्मणा पृष्टोऽग्निः अब्रवीत् अग्निर्वै अग्निर्नामाहं प्रसिद्धो जातवेदा इति च नामद्वयेन प्रसिद्धतयात्मानं श्लाघयन्निति ।
அவ்வாறு ஒப்புக்கொண்டு அக்னி அந்த யக்ஷனை நோக்கிச் சென்றது. சென்று அதைக் குறித்து கேட்டு அறிந்து கொள்ள இச்சை கொண்டு சமீபத்தில் சென்றதும் ஒன்றும் அறியாமல் பேசாமல் இருந்தது. அந்த அக்னியை நோக்கி அந்த யக்ஷன் இவ்வாறு பேசியது. நீ யார் என்று கேட்டது. அவ்வாறு பிரஹ்மத்தினால் கேட்கப்பட்ட அக்னி இவ்வாறு கூறிற்று. நான் அக்னிதேவன். எனக்கு அக்னி என்றபெயர் பிரசித்தமானது. ஜாதவேதா என்றும் இரண்டு பெயர்களால் பிரசித்தமாய் இருக்கிறேன் என்று தன்னை பெருமையாகக் கூறிக்கொண்டது.
एवमुक्तवन्तं ब्रह्मावोचत् तस्मिन् एवं प्रसिद्धगुणनामवति त्वयि किं वीर्यं सामर्थ्यम् इति । सोऽब्रवीत् इदं जगत् सर्वं दहेयं भस्मीकुर्यां यत् इदं स्थावरादि पृथिव्याम् इति । पृथिव्यामित्युपलक्षणार्थम् , यतोऽन्तरिक्षस्थमपि दह्यत एवाग्निना ।
இவ்வாறு கூறப்பட்டவனைக் குறித்து பிரஹ்மம் இவ்வாறு கூறிற்று. இவ்வாறு பிரசித்தமான பெயருடைய உன்னிடத்தில் என்ன சாமர்த்தியம் இருக்கிறது என்று. அந்த அக்னி கூறியதாவது பிருதிவியில் உள்ள ஸ்தாவரம் முதலியவைகளுடன் கூடிய இந்த ஜகத் முழுவதையும் பஸ்மமாக்கிவிடுவேன் என்று. பிருதிவியில் என்று கூறியது அந்தரிக்ஷம் முதலியவைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உபலக்ஷணமாகக் கூறப்பட்டது. ஏன்எனில் அந்தரிக்ஷத்தில் உள்ளதும் அக்னியினால் தஹிக்கக்கூடியதே.
तस्मै एवमभिमानवते ब्रह्म तृणं निदधौ पुरोऽग्नेः स्थापितवत् । ब्रह्मणा ‘एतत् तृणमात्रं ममाग्रतः दह ; न चेदसि दग्धुं समर्थः, मुञ्च दग्धृत्वाभिमानं सर्वत्र’ इत्युक्तः तत् तृणम् उपप्रेयाय तृणसमीपं गतवान् सर्वजवेन सर्वोत्साहकृतेन वेगेन । गत्वा तत् न शशाक नाशकत् दग्धुम् ।
இவ்வாறு அந்த அபிமானமுடைய அக்னியின் முன் திருணத்தை (துறும்பை) வைத்தது. பிரஹ்மம் இவ்வாறு கூறிற்று. இந்த துரும்பை மாத்திரம் என் முன் எரி, எரிப்பதற்கு சாமர்த்தியம் இல்லையெனில் எல்லா இடத்திலும் தஹிக்கும் தன்மையின் அபிமானத்தை விடு என்று, கூறப்பட்ட அந்த அக்னி துரும்பை எரிப்பதற்காக மிகவும் உற்சாகமாகவும், வேகமாகவும் துரும்பின் பக்கத்தில் சென்றது. அது அங்கு சென்று அதனால் தஹிக்க முடியவில்லை.
सः जातवेदाः तृणं दग्धुमशक्तो व्रीडितो हतप्रतिज्ञः तत एव यक्षादेव तूष्णीं देवान्प्रति निववृते निवृत्तः प्रतिगतवान् न एतत् यक्षम् अशकं शक्तवानहं विज्ञातुं विशेषतः यदेतद्यक्षमिति ॥
(அனுவாதம்) அந்த ஜாதவேதஸ் துரும்பை எரிக்க முடியவில்லை.பின்னர் வெட்கமடைந்து பிரதிக்ஞையை இழந்து இந்தயக்ஷம் யாதென அறிய சக்தியற்றவனாக இருக்கிறேன் என்று அவ் யக்ஷத்தினிடமிருந்து மௌனமாகத் தேவர்களைக் குறித்து திரும்பிவந்தான்.
अथ वायुमब्रुवन् वायवेतद्विजानीहि किमेतद्यक्षमिति तथेति ॥ ७ ॥
तदभ्यद्रवत्तमभ्यवदत्कोऽसीति वायुर्वा अहमस्मीत्यब्रवीन्मातरिश्वा वा अहमस्मीति ॥ ८ ॥
तस्मिंस्त्वयि किं वीर्यमित्यपीदं सर्वमाददीय यदिदं पृथिव्यामिति ॥ ९ ॥
तस्मै तृणं निदधावेतदादत्स्वेति तदुपप्रेयाय सर्वजवेन तन्न शशाकादातुं स तत एव निववृते नैतदशकं विज्ञातुं यदेतद्यक्षमिति ॥ १० ॥
अथ अनन्तरं वायुमब्रुवन् हे वायो एतद्विजानीहीत्यादि समानार्थं पूर्वेण । वानाद्गमनाद्गन्धनाद्वा वायुः । मातर्यन्तरिक्षे श्वयतीति मातरिश्वा । इदं सर्वमपि आददीय गृह्णीयाम् । यदिदं पृथिव्यामित्यादि समानमेव ॥
பின் வாயுவை குறித்து ஹே வாயுவே என்பது முதலியவை பிரஹ்மம் முன்பு கூறியது போலவே கூறியது எல்லாம் சமான அர்த்தமுடையது ஆகும்.வாயு வீசும் பொழுது வாசனையை கொண்டு செல்வதால் வாயு எனப்படுகிறது. அந்தரிக்ஷத்தில் வீசுகிறது என்பதால் மாதரிஷ்வா என்றபெயராகும். இங்கு பிருதிவியில் உள்ள எல்லாவற்றையும் கிரஹிக்கமுடியும். மற்றதெல்லாம் முன்போல் ஆகும்.
अथेन्द्रमब्रुवन्मघवन्नेतद्विजानीहि किमेतद्यक्षमिति तथेति तदभ्यद्रवत्तस्मात्तिरोदधे ॥ ११ ॥
स तस्मिन्नेवाकाशे स्त्रियमाजगाम बहु शोभमानामुमां हैमवतीं तां होवाच किमेतद्यक्षमिति ॥ १२ ॥
अथेन्द्रमब्रुवन्मघवन्नेतद्विजानीहीत्यादि पूर्ववत् । इन्द्रः परमेश्वरो मघवा बलवत्त्वात् तथेति तदभ्यद्रवत् । तस्मात् इन्द्रादात्मसमीपं गतात् तद्ब्रह्म तिरोदधे तिरोभूतम् । इन्द्रस्येन्द्रत्वाभिमानोऽतितरां निराकर्तव्य इत्यतः संवादमात्रमपि नादाद्ब्रह्मेन्द्राय ।
பிறகு தேவர்கள் இந்திரனைக் குறித்து ஹே மகவன்! இதை அறிந்து வா என்று முன்போல் கூறினார்கள். இந்திரன் அவர்களுக்கெல்லாம் ஈஸ்வரன் மிக்க பலசாலி ஆகையால் மகவன் என அழைக்கப்பெற்றான்.அவன் உடனே சரியென்று அதன் சமீபம் சென்றான்.அதன் சமீபம் சென்ற இந்திரனிடமிருந்து அந்த பிரஹ்மம் மறைந்துவிட்டது.இந்திரனிடத்தில் உள்ள இந்திரத்துவ அபிமானத்தை முறறிலும் நீக்கவேண்டும் என்பதற்காக பிரஹ்மம் இந்திரனிடம் சம்வாதம் கூட செய்யவில்லை.
तद्यक्षं यस्मिन्नाकाशे आकाशप्रदेशे आत्मानं दर्शयित्वा तिरोभूतमिन्द्रश्च ब्रह्मणस्तिरोधानकाले यस्मिन्नाकाशे आसीत् , सः इन्द्रः तस्मिन्नेव आकाशे तस्थौ किं यद्यक्षमिति ध्यायन् ; न निववृतेऽग्न्यादिवत् ।
அந்தயக்ஷன் ஆகாசத்தில் ஆகாசப்பிரதேசத்தில் தன்னை காண்பித்து விட்டு மறைந்தது. யக்ஷனாகிய பிரஹ்மம் திரோதனமடைந்த சமயத்தில் அந்த இந்திரன் ஆகாசத்தில் இருந்து கொண்டு இந்த யக்ஷன் யார் என்று தியானித்துக்கொண்டு அக்னி முதலியவர்களைப் போல் திரும்பிச் செல்லவில்லை.
तस्येन्द्रस्य यक्षे भक्तिं बुद्ध्वा विद्या उमारूपिणी प्रादुरभूत्स्त्रीरूपा । सः इन्द्रः ताम् उमां बहु शोभमानाम् ; सर्वेषां हि शोभमानानां शोभनतमा विद्या । तदा बहु शोभमानेति विशेषणमुपपन्नं भवति । हैमवतीं हेमकृताभरणवतीमिव बहु शोभमानामित्यर्थः । अथवा उमैव हिमवतो दुहिता हैमवती नित्यमेव सर्वज्ञेनेश्वरेण सह वर्तत इति ज्ञातुं समर्थेति कृत्वा तामुपजगाम । इन्द्रः तां ह उमां किल उवाच पप्रच्छ ब्रूहि किमेतद्दर्शयित्वा तिरोभूतं यक्षमिति ॥
அந்த இந்திரனுக்கு யக்ஷனிடத்தில் உள்ள பக்தியை அறிந்து வித்யா, உமாரூபிணியாக ஸ்த்ரீ ரூபமாய் தோன்றினாள். அந்த இந்திரனுக்கு மிகுந்த சோபமான அதாவது எல்லா சோபனைகளைக் காட்டிலும் சோபனமுடைய வித்யாஸ்வரூபிணி ஹைமவதீ தோன்றினாள்.அப்பொழுது மிகுந்த சோபனமானது என்றவிசேஷணம் மிகப்பொருத்தமானதாகும். ஹைமவதீ என்பது தங்கநகைகள் அணிந்தவள் போல் மிக சோபனமானவள்.அல்லது ஹிமவான்புத்ரி ஹைமவதீ உமா எப்பொழுதும் ஈஸ்வரனுடன் இருப்பவள் என்பதால் யக்ஷன் யார் என்பதை அறிவதில் சாமர்த்தியம் உடையவள் என்று கருதி உமையை நோக்கி சென்று இவ்வாறு கேட்டான்.இவ்வாறு தோன்றி மறைந்த அந்த யக்ஷன் யார்? என்று.
इति तृतीयखण्डभाष्यम् ॥
ब्रह्मेति होवाच ब्रह्मणो वा एतद्विजये महीयध्वमिति ततो हैव विदाञ्चकार ब्रह्मेति ॥ १ ॥
सा ब्रह्मेति होवाच ह किल ब्रह्मणः वै ईश्वरस्यैव विजये — ईश्वरेणैव जिता असुराः । यूयं तत्र निमित्तमात्रम् । तस्यैव विजये — यूयं महीयध्वं महिमानं प्राप्नुथ । एतदिति क्रियाविशेषणार्थम् । मिथ्याभिमानस्तु युष्माकम् — अस्माकमेवायं विजयोऽस्माकमेवायं महिमेति । ततः तस्मादुमावाक्यात् ह एव विदाञ्चकार ब्रह्मेति इन्द्रः ; अवधारणात् ततो हैव इति, न स्वातन्त्र्येण ॥
அந்த ஜயத்திக்கு காரணம் பிரஹ்மமாகிய ஈஸ்வரனே என்று வித்யாஸ்வரூபினி கூறினாள். ஆகையால் அசுரர்கள் ஈஸ்வரனாலேயே ஜயிக்கப்பட்டார்கள். நீங்கள் அதற்கு நிமித்த மாத்திரமே. அந்த ஜயத்தை நீங்கள் உங்களுடைய மஹிமையாக கருதினீர்கள். एतत् (ஏதத்) என்றது கிரியா விசேஷணத்திற்காக நீங்கள் எங்களுடைய தேஜயம், எங்களுடையதே மஹிமானம் என்று உங்களுக்கு மித்யா அபிமானம் ஏற்பட்டது. ஆகையால் உமாவினுடைய வாக்கியத்தால் (யக்ஷன்) பிரஹ்மம் என்று இந்திரன் அறிந்தவனானான். அவதாரணத்திற்காகவே ततः (ததோ) हैव (ஹைவ) என்று வந்தது, ஸ்வதந்திரமாக அல்ல.
तस्माद्वा एते देवा अतितरामिवान्यान्देवान्यदग्निर्वायुरिन्द्रस्ते ह्येनन्नेदिष्ठं पस्पर्शुस्ते ह्येनत्प्रथमो विदाञ्चकार ब्रह्मेति ॥ २ ॥
यस्मादग्निवाय्विन्द्रा एते देवा ब्रह्मणः संवाददर्शनादिना सामीप्यमुपगताः-
(அ-கை)எதனால் அக்னி வாயு இந்திரன் ஆகிய இவர்கள் பிரஹ்மத்தினிடம் சம்வாதம், தர்சனம் முதலியவைகளால் (பிரஹ்மத்தின்) சமீபம் அடைந்தார்கள் என்பதை.
तस्मात् स्वैर्गुणैः अतितरामिव शक्तिगुणादिमहाभाग्यैः अन्यान् देवान् अतितराम् अतिशेरत इव एते देवाः । इवशब्दोऽनर्थकोऽवधारणार्थो वा । यत् अग्निः वायुः इन्द्रः ते हि देवा यस्मात् एनत् ब्रह्म नेदिष्ठम् अन्तिकतमं प्रियतमं पस्पर्शुः स्पृष्टवन्तो यथोक्तैर्ब्रह्मणः संवादादिप्रकारैः, ते हि यस्माच्च हेतोः एनत् ब्रह्म प्रथमः प्रथमाः प्रधानाः सन्त इत्येतत् , विदाञ्चकार विदाञ्चक्रुरित्येतत् , ब्रह्मेति ॥
ஆகையால் இந்த தேவர்கள் சக்தி குண முதலியவைகளால் மஹாபாக்யசாலியானதால் மற்றதேவர்களைக் காட்டிலும் மேலானவர்கள் போல் தோன்றுகிறார்கள். இவ इव சப்தமானது அர்த்தமற்றது அல்லது நிச்சயத்தைக் குறிப்பதாகும். இந்த அக்னி, வாயு, இந்திரன் ஆகிய தேவர்கள் எதனால் அந்த பிரஹ்மத்தின் மிக சமீபம் அடைந்து பிரியமாய் சம்வாதம் செய்து, ஸ்பரிசித்தார்களோ ஆகையால் அவர்கள் அந்த பிரஹ்மத்தை முதலாவதாக அது பிரஹ்மம் என்று அறிந்தார்களோ அதனால் அவர்கள் பிரதானமானவர்களாகிறார்கள்
तस्माद्वा इन्द्रोऽतितरामिवान्यान्देवान्स ह्येनन्नेदिष्ठं पस्पर्श स ह्येनत्प्रथमो विदाञ्चकार ब्रह्मेति ॥ ३ ॥
यस्मादग्निवायू अपि इन्द्रवाक्यादेव विदाञ्चक्रतुः, इन्द्रेण हि उमावाक्यात्प्रथमं श्रुतं ब्रह्मेति-
(அ-கை) ஏனெனில் அக்னி, வாயு, இருவரும் இந்திரனுடைய வாக்கினால் அறிந்தார்கள். எதற்காக எனில் இந்திரன் அவர்களுக்கு முன் உமையின் வாக்கியத்தால் “அது பிரஹ்மம்” என்று அறிந்தான்.
तस्माद्वै इन्द्रः अतितरामिव अतिशेत इव अन्यान् देवान् । स ह्येनन्नेदिष्ठं पस्पर्श यस्मात् स ह्येनत्प्रथमो विदाञ्चकार ब्रह्मेत्युक्तार्थं वाक्यम् ॥
ஆதலால் இந்திரன் மற்றதேவர்களைக் காட்டிலும் அதிசயித்தவனாகவே ஆகிறான். அவனன்றோ மற்றவர்களை விட சமீபத்தில் சென்று முதலாவதாக தொட்டான். அவ்இந்திரன்தான் முதலாவதாக இதை ப்ரஹ்மமென அறிந்தான் என வாக்கியத்தின் பொருள் சொல்லப்பட்டுவிட்டது.
तस्यैष आदेशो यदेतद्विद्युतो व्यद्युतदा३ इतीन्न्यमीमिषदा३ इत्यधिदैवतम् ॥ ४ ॥
तस्य प्रकृतस्य ब्रह्मणः एषः आदेशः उपमोपदेशः । निरुपमस्य ब्रह्मणो येनोपमानेनोपदेशः सोऽयमादेश इत्युच्यते । किं तत् ? यदेतत् प्रसिद्धं लोके विद्युतः व्यद्युतत् विद्योतनं कृतवदित्येतदनुपपन्नमिति विद्युतो विद्योतनमिति कल्प्यते । आ३ इत्युपमार्थः । विद्युतो विद्योतनमिवेत्यर्थः,
‘यथा सकृद्विद्युतम्’ (बृ. उ. २ । ३ । ६) इति श्रुत्यन्तरे च दर्शनात् । विद्युदिव हि सकृदात्मानं दर्शयित्वा तिरोभूतं ब्रह्म देवेभ्यः ।
இப்பொழுது கூறப்படும் பிரஹ்மத்தினுடைய எந்த ஆதேசம் உள்ளதோ அது உபமான ரூபமான ஆதேசமாகும். உபமானமற்ற இந்த பிரஹ்மத்தை எந்த உபமானத்தால் உபதேசம் செய்யப்படுகிறதோ அது ஆதேசம் எனப்படும். அது என்ன? இந்த உலகத்தில் மின்னல் பிரப்ாசிக்கச் செய்கிறது என்று கூறுவது பொருந்தாததால் வித்யுத்தினுடைய (மின்னலுடைய பிரகாசம் போல்) என்று கல்பிக்கப்படுகிறது. आ३ என்பது உபமான அர்த்தமாகும். மின்னல் மின்னுவது போல் (பிரகாசிப்பது போல்) என்பதாகும். “यथा सकृद्विद्युतम्” (யதாசக்ருத்வித்யுதம்) என்று வேறு சுருதியில் கூறப்பட்டுள்ளது. பிரஹ்மம் மின்னல் போல் ஒரு தடவை தேவர்களுக்கு தன்னைக் காண்பித்து விட்டு மறைந்து விட்டது.
अथवा विद्युतः ‘तेजः’ इत्यध्याहार्यम् । व्यद्युतत् विद्योतितवत् आ३ इव । विद्युतस्तेजः सकृद्विद्योतितवदिवेत्यभिप्रायः । इतिशब्दः आदेशप्रतिनिर्देशार्थः — इत्ययमादेश इति । इच्छब्दः समुच्चयार्थः ।
அல்லது विद्युतः तेजः (வித்யுத தேஜ:-)மின்னலுடைய தேஜஸ் அதாவது பிரகாசம் என்று சேர்த்துக் கொள்ள வேண்டும். மின்னல் போல் பிரகாசிக்கிறது என்று அதாவது மின்னலின் பிரகாசம் ஒரு தடவை பிரகாசிப்பது போல் என்று கொள்ளவேண்டும். “इति” இதி என்றசப்தம் ஆதேசத்தைக் குறிப்பிடுவதாகும் என்பதின் பொருள் இது. ஆதேசம் என்று தெரிவிப்பதற்காக “इत्” (இத்) சப்தம் சமுச்சயார்த்தமாகும்.
अयं चापरस्तस्यादेशः । कोऽसौ ? न्यमीमिषत् यथा चक्षुः । न्यमीमिषत् निमेषं कृतवत् । स्वार्थे णिच् । उपमार्थ एव आकारः । चक्षुषो विषयं प्रति प्रकाशतिरोभाव इव चेत्यर्थः । इति अधिदैवतं देवताविषयं ब्रह्मण उपमानदर्शनम् ॥
இதைத் தவிர மற்றொரு ஆதேசம் இருக்கிறது. அது எது எனில்? எவ்வாறு கண்களின் இமை மூடுவது போல் ஆகும். (அதாவது பிரஹ்மம் இமை மூடுவது போல் மறைந்துவிட்டது என்பதாகும்,) ஸ்வார்த்தத்தல் णिच् (நிச்) ஆகும். आ ஆ) உபமாஅர்த்தத்தில் ஆகும்.கண்கள் மூடுவதால் பிரகாசிக்கப்பட்டவை மறைவது போல் ஆகும் என்பது பொருள். இவ்வாறு பிரஹ்மத்தினது அதி தெய்வமான தேவதா விஷயமான உபமானம் காட்டப்பட்டது.
अथाध्यात्मं यदेतद्गच्छतीव च मनोऽनेन चैतदुपस्मरत्यभीक्ष्णं सङ्कल्पः ॥ ५ ॥
अथ अनन्तरम् अध्यात्मं प्रत्यगात्मविषय आदेश उच्यते । यदेतत् गच्छतीव च मनः । एतद्ब्रह्म ढौकत इव विषयीकरोतीव । यच्च अनेन मनसा एतत् ब्रह्म उपस्मरति समीपतः स्मरति साधकः अभीक्ष्णं भृशम् । सङ्कल्पश्च मनसो ब्रह्मविषयः । मनउपाधिकत्वाद्धि मनसः सङ्कल्पस्मृत्यादिप्रत्ययैरभिव्यज्यते ब्रह्म, विषयीक्रियमाणमिव । अतः स एष ब्रह्मणोऽध्यात्ममादेशः ।
அதன் பின் பிரத்யக் ஆத்ம விஷயமாகிய அத்யாத்மம் ஆதேசம் என்று கூறப்படுகிறது. எந்த இந்த மனம் அறிந்தது போல் இந்த பிரஹ்மத்தையும் அறிவது போல் விஷயம் செய்கிறது. (அறிகிறது) எந்த இந்த சாதகன் மனதால் ப்ரஹ்மத்தை அடிக்கடி தனக்கு சமீபமாக நினைக்கிறானோ அது மனதின் சங்கல்பம் பிரஹ்ம விஷயமாகும். மனம் உபாதியாய் இருப்பதால் அல்லவா மனதினுடைய சங்கல்பம், ஸ்மிருதி முதலிய விருத்திகளினால் செய்யப்பட்டது போல் பிரஹ்மம் விளங்குகிறது. ஆகையால் அந்த இந்த பிரஹ்மம் அத்யாத்ம ஆதேசம் ஆகும்.
विद्युन्निमेषणवदधिदैवतं द्रुतप्रकाशनधर्मि, अध्यात्मं च मनःप्रत्ययसमकालाभिव्यक्तिधर्मि, इत्येष आदेशः । एवमादिश्यमानं हि ब्रह्म मन्दबुद्धिगम्यं भवतीति ब्रह्मण आदेश उपदेशः । न हि निरुपाधिकमेव ब्रह्म मन्दबुद्धिभिराकलयितुं शक्यम् ॥
மின்னல் ஒளி இமை மூடுதல் போல் அதிதெய்வம் சீக்கிரம் பிரகாசிக்கும் தர்மமுடையது என்பது அதிதைவ ஆதேசம். அத்யாத்மமானது மனவிருத்தி சமகாலத்தில் வெளிப்படும் தர்மம் உடையது என்பது ஆதேசமாகும். இவ்வாறு ஆதேசம் (உபதேசம்) செய்யப்பட்டது மந்தபுத்தி உடையவர்களுக்காக பிரஹ்மத்தின் உபதேசமாகும்.மந்தபுத்தி உடையவர்களுக்கு நிரூபாதிக பிரஹ்மத்தின் ஞானத்தை அடைய முடியாது.
किञ्च-
மேலும்
तद्ध तद्वनं नाम तद्वनमित्युपासितव्यं स य एतदेवं वेदाभि हैनं सर्वाणि भूतानि संवाञ्छन्ति ॥ ६ ॥
तत् ब्रह्म ह किल तद्वनं नाम तस्य वनं तद्वनं तस्य प्राणिजातस्य प्रत्यगात्मभूतत्वाद्वनं वननीयं सम्भजनीयम् । अतः तद्वनं नाम ; प्रख्यातं ब्रह्म तद्वनमिति यतः, तस्मात् तद्वनमिति अनेनैव गुणाभिधानेन उपासितव्यं चिन्तनीयम् ।
அந்த பிரஹ்மம் அல்லவா तद्वनं ((தத்வனம்) எனப்படும். அதனுடைய வனம் தத்வனம். அதாவது எல்லா பிராணிகளுடைய பிரத்யக் ஆத்மாவாய் இருப்பதால் தத்வனம் वननीयं (வனனீயம்) என்றால் அதை சேவிக்க(பஜிக்க) வேண்டும் என்பதாகும். ஆகையால் அதற்கு தத்வனம் என்ற நாமம். எதனால் பிரஹ்மம் தத்வனம் என்று பிரசித்தமாய் இருக்கிறதோ அதனால் தத்வனம் என்று குணவியஞ்சக நாமத்தால் உபாசனை செய்யவேண்டும் அதாவது சிந்திக்க வேண்டும்.
अनेन नाम्नोपासनस्य फलमाह — स यः कश्चित् एतत् यथोक्तं ब्रह्म एवं यथोक्तगुणं वेद उपास्ते अभि ह एनम् उपासकं सर्वाणि भूतानि अभि संवाञ्छन्ति ह प्रार्थयन्त एव यथा ब्रह्म ॥
இந்த நாமத்தால் உபாசனை செய்பவனுடைய பலன் கூறப்படுகிறது. எவன் ஒருவன் இவ்வாறு கூறப்பட்ட பிரஹ்மத்தை முன்பு கூறப்பட்ட லக்ஷணங்களுடன் உபாசிக்கின்றானோ அந்த உபாசனை எவ்வாறு பிரஹ்மத்தினிடம் இஷ்டப்பட்டதை அடைவதற்கு பிரார்த்தனை செய்கிறோமோ அவ்வாறு எல்லா பிராணிகளும் விரும்பிய பலனை அடைவதற்கு பிரார்த்தனை செய்ய முற்படுகின்றன.
उपनिषदं भो ब्रूहीत्युक्ता त उपनिषद्ब्राह्मीं वाव त उपनिषदमब्रूमेति ॥ ७ ॥
एवमनुशिष्टः शिष्य आचार्यमुवाच —
(அ-கை) உபதேசிக்கப்பட்ட சிஷ்யன் இவ்வாறு ஆசாரியாரிடம் கூறினான்:
उपनिषदं रहस्यं यच्चिन्त्यं भो भगवन् ब्रूहि इति ।
ஹே பகவானே! எந்த சிந்திக்கக்கூடிய உபநிஷத் ரகஸ்யம் உள்ளதோ அதை கூறுங்கள்.
एवमुक्तवति शिष्ये आहाचार्यः — उक्ता अभिहिता ते तव उपनिषत् । का पुनः सेत्याह — ब्राह्मीं ब्रह्मणः परमात्मन इयं ब्राह्मी ताम् , परमात्मविषयत्वादतीतविज्ञानस्य, वाव एव ते उपनिषदमब्रूमेति उक्तामेव परमात्मविषयामुपनिषदमब्रूमेत्यवधारयत्युत्तरार्थम् ।
இவ்வாறு கேட்ட சிஷ்யனைக் குறித்து ஆச்சாரியார் கூறுகிறார். உனக்கு உபநிஷத் என்னால் கூறப்பட்டுவிட்டது.அது உபநிஷத்தா என்று கேட்ட சிஷ்யனுக்கு மறுபடியும் கூறுகிறார். உனக்கு என்னால் அந்த பிராஹ்மீ அதாவது பிரஹ்மத்தைப் பற்றிய பரமார்த்த சம்பந்தியான உபநிஷத் என்று கூறப்பட்டது. ஏன்எனில் முன்பு கூறப்பட்ட விக்ஞானம் பரமார்த்த சம்பந்தியாகும். वाव (வாவ) என்பது உனக்கு நிச்சயமாக முன்பே இந்த உபநிஷத் சொல்லப்பட்டது. உபநிஷத்தை லக்ஷ்யமாகக் கொண்ட உனக்குதான் பிரஹ்ம சம்பந்தியான உபநிஷத் சொல்லப்பட்டது என்று இவ்வாறு இனிவரும் கிரந்தத்தின் விஷயத்தை ஸ்பஷ்ட்டமாக்குவதற்காக அதை நிச்சயம் செய்கிறார்.
परमात्मविषयामुपनिषदं श्रुतवतः उपनिषदं भो ब्रूहीति पृच्छतः शिष्यस्य कोऽभिप्रायः ? यदि तावच्छ्रुतस्यार्थस्य प्रश्नः कृतः, ततः पिष्टपेषणवत्पुनरुक्तोऽनर्थकः प्रश्नः स्यात् । अथ सावशेषोक्तोपनिषत्स्यात् , ततस्तस्याः फलवचनेनोपसंहारो न युक्तः
‘प्रेत्यास्माल्लोकादमृता भवन्ति’ (के. उ. २ । ५) इति । तस्मादुक्तोपनिषच्छेषविषयोऽपि प्रश्नोऽनुपपन्न एव, अनवशेषितत्वात् । कस्तर्ह्यभिप्रायः प्रष्टुरिति । उच्यते ।
பரமார்த்த விஷயமான உபநிஷத்தைக் கேட்ட சிஷ்யன் ஹே குருவே உபநிஷத்தை மறுபடியும் கூறுங்கள் என்று கேட்ட சிஷ்யனுடைய அபிப்ராயம் எனன?இவ்வாறு கேட்ட விஷயத்தில் எதற்காக கேள்வி உண்டாயிற்று. அதனால் பிசைந்த மாவை பிசைவது போல் புனருக்தி(மறுபடியும் கூறல் என்ற) அர்த்தமற்றகேள்வியாகும். மேலும் அங்கங்களுடன் கூடிய உபநிஷத் கூறப்பட்ட போதும் அதற்கு தனியாக பல வசனம் தேவையில்லை. ஏன்எனில் “प्रेत्यास्माल्लोकादमृता भवन्ति” (ப்ரேத்யாஸ்மால்லோகாதம்ருதா பவந்தி: இந்த லோகத்திலிருந்து கிளம்பி அமிர்தத்தை அடைகிறார்கள்.) என்று பலன் கூறப்பட்டுள்ளது. ஆகையால் அது பொருந்தாது.ஆகையால் உபநிஷத் கூறப்பட்டதில் ஒரு அங்கவிஷயமும் விடப்படவில்லை. ஆனால் கேட்டவனுடைய அபிப்ராயம் என்ன என்பதைக் கூறத் தொடங்கினார்.
किं पूर्वोक्तोपनिषच्छेषतया तत्सहकारिसाधनान्तरापेक्षा, अथ निरपेक्षैव ? सापेक्षा चेदपेक्षितविषयामुपनिषदं ब्रूहि । अथ निरपेक्षा चेदवधारय पिप्पलादवन्नातः परमस्तीत्येवमभिप्रायः । एतदुपपन्नमाचार्यस्यावधारणवचनम् ‘उक्ता त उपनिषत्’ इति ।
முன்பு கூறப்பட்ட உபநிஷத் அவசேஷ ரூபமாக அதற்கு அந்நிய சஹகாரி சாதனத்தை அபேக்ஷிக்கிறதா? அல்லது அது சாபேக்ஷமானால் அதை அபேக்ஷித்த விஷயம் உள்ள உபநிஷத்தைக் கூறுங்கள். அது நிரபேக்ஷா என்றால் பிப்பலாதர் போல் “வேறு கூறவேண்டியதில்லை”. என்று கூறுங்கள் என்பது அபிப்ராயம். ஆச்சாரியருடைய उक्ता त उपनिषद् (உக்தா த உபநிஷத்) என்றஅவதாரண வசனம் (நிச்சயமாகக் கூறப்பட்ட வசனம்) பொருந்தக்கூடியதேயாகும்.
(சங்கை) மேலும் கூறப்படவேண்டி உள்ளது என்று प्त्तस्यै तपो दमःद्य्भ (தஸ்யை தபோ தம) முதலியவைகள் ஆகம மூலமாக அவதாரணம் செய்வதற்கு (நிச்சயம் செய்வதற்கு) யோக்கியமில்லையே.
सत्यम् , वक्तव्यमुच्यते आचार्येण । न तूक्तोपनिषच्छेषतया तत्सहकारिसाधनान्तराभिप्रायेण वा ; किन्तु ब्रह्मविद्याप्राप्त्युपायाभिप्रायेण वेदैस्तदङ्गैश्च सहपाठेन समीकरणात्तपःप्रभृतीनाम् । न हि वेदानां शिक्षाद्यङ्गानां च साक्षाद्ब्रह्मविद्याशेषत्वं तत्सहकारिसाधनत्वं वा सम्भवति ।
(சமாதானம்) நீ கூறுவது சரியே, ஆச்சாரியரால் உபநிஷத்தின் அங்கமாகவோ, அதனுடைய சஹகாரியான வேறு சாதனத்தின் அபிப்ராயமாகவோ கூறப்பட வேண்டியது கூறப்படவில்லை. ஆனால் வேதம், வேதாங்கம் இவைகளுடன் அத்யயனம் செய்யும் பொழுது கடைபிடிக்கப்படும் தபஸ் முதலியவைகள் பிரஹ்ம வித்யா ப்ராப்திக்கு உபாயமாகும் என்ற அபிப்பிராயத்தால் சொல்லப்பட்டது.ஆனால் வேதங்கள், சிக்ஷாதி அங்கங்கள் நேரடியாக பிரஹ்ம வித்யாவிற்கு அங்கமாகவோ, அதற்கு சஹகாரியான சாதனமாகவோ ஆகாது.
सहपठितानामपि यथायोगं विभज्य विनियोगः स्यादिति चेत् ; यथा सूक्तवाकानुमन्त्रणमन्त्राणां यथादैवतं विभागः, तथा तपोदमकर्मसत्यादीनामपि ब्रह्मविद्याशेषत्वं तत्सहकारिसाधनत्वं वेति कल्प्यते । वेदानां तदङ्गानां चार्थप्रकाशकत्वेन कर्मात्मज्ञानोपायत्वमित्येवं ह्ययं विभागो युज्यते अर्थसम्बन्धोपपत्तिसामर्थ्यादिति चेत् ।
(சங்கை) வேத வேதாந்தங்களை சேர்த்தே படித்தாலும் முறைப்படி பிரித்து அளிக்க முடியும். எவ்வாறு எனில் சூக்தத்தின் வாக்ரூபமான மந்திரங்களை எவ்வாறு தேவதைகளுக்கு தகுந்தவாறு பிரிக்கப்படுகிறதோ அவ்வாறு தபஸ், தமம், கர்மம், சத்தியம் முதலியவைகளையும் பிரஹ்ம வித்தையின் சேஷத்துவமாக (அங்கமாக)வும் அதனுடைய சஹகாரியான சாதனமாகவும் அறியப்படுகிறது. வேதத்தின் அதன் அங்கங்களின் அர்த்த பிரகாசத்தால் கர்ம ஆத்மஞானத்திற்கு உபாயமாக அல்லவா அந்த விபாகம் (பிரிவு) அர்த்த சம்பந்தத்தின் உபபத்தியின் (தோற்றத்தின்) சாமர்த்தியத்தால் இவ்வாறு இந்த விபாகம் உசிதமாகிறது. (பொருந்துகிறது) என்று கொள்ளலாம்.
न ; अयुक्तेः । न ह्ययं विभागो घटनां प्राञ्चति । न हि सर्वक्रियाकारकफलभेदबुद्धितिरस्कारिण्या ब्रह्मविद्यायाः शेषापेक्षा सहकारिसाधनसम्बन्धो वा युज्यते । सर्वविषयव्यावृत्तप्रत्यगात्मविषयनिष्ठत्वाच्च ब्रह्मविद्यायास्तत्फलस्य च निःश्रेयसस्य । ‘मोक्षमिच्छन्सदा कर्म त्यजेदेव ससाधनम् । त्यजतैव हि तज्ज्ञेयं त्यक्तुः प्रत्यक्परं पदम्’ ( ? ) तस्मात्कर्मणां सहकारित्वं कर्मशेषापेक्षा वा न ज्ञानस्योपपद्यते । ततोऽसदेव सूक्तवाकानुमन्त्रणवद्यथायोगं विभाग इति । तस्मादवधारणार्थतैव प्रश्नप्रतिवचनस्योपपद्यते । एतावत्येवेयमुपनिषदुक्तान्यनिरपेक्षा अमृतत्वाय ॥
(சமாதானம்) பொருந்தாததால் அது சரியல்ல. இந்த விபாகமானது போற்றுதற்குரிய விளக்கத்திற்கு பொருத்தமானதாய் இல்லை. எந்த ப்ரகாரத்தாலும் கிரியாகாரக பலன் மேலும் பேத புத்தியை நீக்கும் பிரஹ்ம வித்யைக்கு எவ்வகையிலும் சேஷத்தின் (அங்கத்தின்) அபேக்ஷையையோ அல்லது சஹகாரி சாதனங்களையோ சம்பந்தப்படுத்துவது பொருந்தாது. ஏன்எனில் பிரஹ்ம வித்யை மேலும் அதன் பலன் நிஷ்சிரேயஸ் ஆனதினால் எல்லாவிதமாகவும் விஷயங்களிலிருந்து நிவிர்த்தியாகி பிரத்யக் ஆத்மஸ்வரூபத்தில் நிலை பெறுவதாகும். “மோக்ஷத்தில் இச்சை உடையவன் எப்பொழுதும் சாதனத்துடன் கர்மத்தை தியாகம் செய்யவேண்டும். தியாகம் செய்து அந்த த்யாகத்தால் தன்னுடைய பிரத்யக் ஆத்மரூப பரமபதத்தை அறிய முடியும்” ஆகையால் சஹகாரித்துவம், அல்லது கர்மசேஷ அபேக்ஷையோ ஞானத்திற்கு தேவையில்லை. ஆகையால் சூக்தவாக் அனுமந்திரம் போல் மந்திரத்திற்கு ஏற்றவாறு விபாகம் என்பது அசத்தே (பொய்யே) ஆகும். ஆகையால் கேள்வியும் பதிலும் (உபதேசத்தை) திடப்படுத்துவதற்காக ஆகும். என்று எடுத்துகொள்வதே சரியாகும். அம்ருத்துவத்தை அடைவதற்கு இதுவரை உபநிஷத் அந்நிய சாதனங்களின் நிரபேக்ஷையை கூறிற்று.
तस्यै तपो दमः कर्मेति प्रतिष्ठा वेदाः सर्वाङ्गानि सत्यमायतनम् ॥ ८ ॥
यामिमां ब्राह्मीमुपनिषदं तवाग्रेऽब्रूमेति तस्यै तस्या उक्ताया उपनिषदः प्राप्त्युपायभूतानि तपआदीनि । तपः कायेन्द्रियमनसां समाधानम् । दमः उपशमः । कर्म अग्निहोत्रादि । एतैर्हि संस्कृतस्य सत्त्वशुद्धिद्वारा तत्त्वज्ञानोत्पत्तिर्दृष्टा । दृष्टा ह्यमृदितकल्मषस्योक्तेऽपि ब्रह्मण्यप्रतिपत्तिर्विपरीतप्रतिपत्तिश्च, यथेन्द्रविरोचनप्रभृतीनाम् ।
இந்த ப்ராஹ்மீ ஆகிய உபநிஷத்தை உனக்கு இனி கூறுவேன் என்றது உபநிஷத்தை அடைவதற்கான தபஸ் முதலிய உபாயங்களாகும். தபஸ் என்பது சரீர, இந்திரிய, மனம் இவைகளின் சமாதானம். தமம் என்பது அடக்குதல் (அதாவது விபரீதத்தின் நிவிர்த்தி). கர்ம என்பது அக்னி ஹோத்திராதி கர்மங்களாகும். இவைகளால் சித்தசுத்தி ஏற்பட்டு அதனால் தத்வ ஞானத்தின் ப்ராப்த்தியானது பார்க்கப்படுகிறது. மனதில் கல்மஷம் நிவர்த்தியாகவில்லை எனில் அவனுக்கு உபதேசம் செய்தாலும் பிரஹ்ம விஷயத்தில் அக்ஞானம் அல்லது விபரீத ஞானம் உள்ளது என்று காணப்படுகிறது. எவ்வாறு எனில் இந்திரன் விரோசனன் போலாகும்.
ஆகையால் இந்த ஜன்மத்திலோ அல்லது சென்றஅநேக ஜன்மங்களிலோ செய்த தபஸ் முதலியவைகளினால் (அந்தக்கரண) சித்தசுத்தி அடைந்தவனுக்கு ஞானம் உண்டாகிறது. எவனுக்கு தெய்வத்தினிடத்தில் மேலான பக்தி உள்ளதோ, அவ்வாறே குருவினிடத்திலும் உள்ளதோ அந்த மஹாத்மாவிற்கு முன்பு கூறப்பட்ட விஷயங்கள் நன்றாக பிரகாசிக்கும் (புரியும்). “என்று சுருதியில் உள்ள மந்திரத்தால் அறிகிறோம்.” பாபகர்மங்கள் க்ஷீணமடைந்த புருஷனுக்கு ஞானம் உண்டாகிறது என்றஸ்மிருதி வாக்கியத்தாலும் அறிகிறோம்.
इतिशब्दः उपलक्षणत्वप्रदर्शनार्थः । इति एवमाद्यन्यदपि ज्ञानोत्पत्तेरुपकारकम्
‘अमानित्वमदम्भित्वम्’ (भ. गी. १३ । ७) इत्याद्युपदर्शितं भवति । प्रतिष्ठा पादौ पादाविवास्याः ; तेषु हि सत्सु प्रतितिष्ठति ब्रह्मविद्या प्रवर्तते, पद्भ्यामिव पुरुषः । वेदाश्चत्वारः सर्वाणि चाङ्गानि शिक्षादीनि षट् कर्मज्ञानप्रकाशकत्वाद्वेदानां तद्रक्षणार्थत्वादङ्गानां प्रतिष्ठात्वम् ।
इति (இதி) சப்தமானது உபலக்ஷணத்துவத்தை காண்பிப்பதற்காக ஆகும். இவ்வாறு இதி என்றசப்தத்தால் ஞானம் உண்டாவதற்கு ஆன உபகாரமான “अमानित्वमदम्भित्वम्” (அமானித்துவம் அதம்பித்துவம்) முதலியவைகள் காண்பிக்கப்பட்டதாகிறது. प्रतिष्द्भा (பிரதிஷ்ட்டா) என்றால் கால்கள் அதாவது கால்களுக்கு சமமாக ஆதாரபூதமாய் இருக்கின்றது. எவ்வாறு புருஷன் கால்களால் இருந்து கொண்டு செயல்களை செய்கிறானோ அவ்வாறு இந்த சாதனங்களை கொண்டு பிரஹ்ம வித்யை பிரவிர்த்திக்கிறது. நான்கு வேதங்கள் சிக்ஷை முதலிய ஆறு அங்கங்கள் எல்லாம் கர்ம ஞானங்களை பிரகாசப்படுத்துவதால் வேதங்களை அது ரக்ஷிப்பதால் வேத அங்கங்களுக்கு பிரதிஷ்ட்டா தன்மை ஆகும்.
अथवा, प्रतिष्ठाशब्दस्य पादरूपकल्पनार्थत्वाद्वेदास्त्वितराणि सर्वाङ्गानि शिरआदीनि । अस्मिन्पक्षे शिक्षादीनां वेदग्रहणेनैव ग्रहणं कृतं प्रत्येतव्यम् । अङ्गिनि हि गृहीतेऽङ्गानि गृहीतान्येव भवन्ति, तदायत्तत्वादङ्गानाम् ।
அல்லது பிரதிஷ்ட்டா சப்தமானது பாத ரூபககல்பனையாக இருப்பதால் வேதமானது மற்றஅங்கங்களாகிய சிரசு முதலியவைகளாகும். இந்த பக்ஷத்தில் வேதங்களை கிரஹித்துக் கொண்டால் (எடுத்துக் கொண்டால்) மற்றஎல்லா வேதாங்கங்களையும் கிரஹித்துக் கொண்டதாகும். அங்கங்களை கிரஹித்துக் கொண்டால் அங்கியாகிய வேதங்களையும் கிரஹித்துக் கொண்டதாகும். ஏன் எனில் அங்கியின் அதீனமாக அங்கங்கள் இருக்கின்றன.
सत्यम् आयतनं यत्र तिष्ठत्युपनिषत् तदायतनम् । सत्यमिति अमायिता अकौटिल्यं वाङ्मनःकायानाम् । तेषु ह्याश्रयति विद्या ये अमायाविनः साधवः, नासुरप्रकृतिषु मायाविषु ;
‘न येषु जिह्ममनृतं न माया च’ (प्र. उ. १ । १६) इति श्रुतेः । तस्मात्सत्यमायतनमिति कल्प्यते । तपआदिष्वेव प्रतिष्ठात्वेन प्राप्तस्य सत्यस्य पुनरायतनत्वेन ग्रहणं साधनातिशयत्वज्ञापनार्थम् ।
‘अश्वमेधसहस्रं च सत्यं च तुलया धृतम् । अश्वमेधसहस्राच्च सत्यमेकं विशिष्यते’ (महाभा. आ. ७४ । १०३) इति स्मृतेः ॥
சத்யம் ஆயதனம் (இருப்பிடம்) என்பதாகும்.) வாக்கு, மனம், காயம், இவைகளின் மாயமற்றத் தன்மையும், குறுகிய தன்மையும் அற்றது சத்யம் எனப்படுகிறது. மாயை அற்றவர்கள் சாதுக்கள், இவர்களை (பிரஹ்ம) வித்தையானது ஆஸ்ரயிக்கிறது. அசுரபிரகிருதிகளில் இருப்பவரிடத்தும் மாயாவிகளிடத்தும் ஆச்ரயிக்காது. “न येषु जिह्ममनृतं न माया च” (நயேஷு ஜிஹ்மந்ருதம் ந மாயாச = எவர்களிடத்தில் குடிலத்தன்மை, மித்யா மாயை இல்லையோ) என்று சுருதியினுடைய வாக்கியம். ஆகையால் “சத்யம்” ஆயதனம் என்று கற்பிக்கப்படுகிறது. தபஸ் முதலியவைகளின் பிரதிஷ்ட்டானத்தினால் அடையப்பட்ட சத்தியத்திறகு மறுபடியும் ஆயதனத்தை க்ரஹிப்பது சாதனத்தினுடைய பெருமையை ஞாபகப்படுத்துவதற்காகும். “अश्वमेधसहस्रं च सत्यं च तुलया धृतम्। अश्वमेधसहस्रांच सत्यमेकं विशिष्यते।” (அஷ்வமேத சஹஸ்ரம் ச்ச சத்யம் ச்ச துலயா த்ருதம் |அசவமேத சஹஸ்ராம்ச்ச சத்யமேகம் விசிஷ்யதே = சஹஸ்ர அச்வமேதத்தையும் சத்யத்தையும் திராசில் நிறுத்னால் சகஸ்ரஅச்வமேதத்தைக் காட்டிலும் சத்யம்தான் விசேஷமாக நிலைக்கிறது.) என்பது ஸ்மிருதி வாக்கியம்.
यो वा एतामेवं वेदापहत्य पाप्मानमनन्ते स्वर्गे लोके ज्येये प्रतितिष्ठति प्रतितिष्ठति ॥ ९ ॥
यो वै एतां ब्रह्मविद्याम्
‘केनेषितम्’ (के. उ. १ । १) इत्यादिना यथोक्ताम् एवं महाभागाम्
‘ब्रह्म ह देवेभ्यः’ (के. उ. ३ । १) इत्यादिना स्तुतां सर्वविद्याप्रतिष्ठां वेद ।
‘अमृतत्वं हि विन्दते’ (के. उ. २ । ४) इत्युक्तमपि ब्रह्मविद्याफलमन्ते निगमयति — अपहत्य पाप्मानम् अविद्याकामकर्मलक्षणं संसारबीजं विधूय अनन्ते अपर्यन्ते स्वर्गे लोके सुखात्मके ब्रह्मणीत्येतत् । अनन्ते इति विशेषणान्न त्रिविष्टपे अनन्तशब्द औपचारिकोऽपि स्यादित्यत आह — ज्येये इति । ज्येये ज्यायसि सर्वमहत्तरे स्वात्मनि मुख्ये एव प्रतितिष्ठति । न पुनः संसारमापद्यत इत्यभिप्रायः ॥
எவன் ஒருவன் இந்த ப்ரஹ்ம வித்யா “केनेषितम्” (கேனேஷிதம்) முதலியவைகளால் எவ்வாறு “ब्रह्म ह देवेभ्यः” (பிரஹ்ம ஹ தேவேப்ய:) முதலிய மந்திரங்களால் கூறப்பட்ட கதைகளின் மூலமாக ஸ்துதிக்கப்பட்ட இந்த மஹாபாகத்தையும், எல்லா வித்யைகளுக்கும் ஆஸ்ரய பூதமான பிரஹ்ம வித்யாவை அறிகிறானோ அவன் எல்லா பாபங்களையும் விட்டு அதாவது அவித்தியா, காம, கர்மரூப சம்சாரத்தை தியாகம் செய்து முடிவற்ற சுவர்க்கலோகத்தில் அதாவது சுகாத்மகமான பிரஹ்மத்தில் நிலை பெறுகிறான். அநந்தம் என்றவிசேஷணம் இருப்பதால் அது சுவர்க்கலோகமல்ல. அந்த சப்தமானது உபசார வார்த்தையாகவும் இருக்கலாம் என்பதற்காக கூறுகிறார்- ज्येये (ஜ்யேயே) என்று, ஜ்யேயே என்றால் மிகவும் மேலான முக்கியமான ஸ்வாத்மாவிடத்தில் நிலை பெற்று மறுபடியும் சம்சாரத்தை அடைவதில்லை என்பது அபிப்ராயம்.
इति चतुर्थखण्डभाष्यम् ॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ केनोपनिषत्पदभाष्यम् सम्पूर्णम् ॥