द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

केनोपनिषत्पदभाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

கேநோபநிஷத்பதபாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

ब्रह्मेति होवाच ब्रह्मणो वा एतद्विजये महीयध्वमिति ततो हैव विदाञ्चकार ब्रह्मेति ॥ १ ॥
सा ब्रह्मेति होवाच ह किल ब्रह्मणः वै ईश्वरस्यैव विजये — ईश्वरेणैव जिता असुराः । यूयं तत्र निमित्तमात्रम् । तस्यैव विजये — यूयं महीयध्वं महिमानं प्राप्नुथ । एतदिति क्रियाविशेषणार्थम् । मिथ्याभिमानस्तु युष्माकम् — अस्माकमेवायं विजयोऽस्माकमेवायं महिमेति । ततः तस्मादुमावाक्यात् ह एव विदाञ्चकार ब्रह्मेति इन्द्रः ; अवधारणात् ततो हैव इति, न स्वातन्त्र्येण ॥
அந்த ஜயத்திக்கு காரணம் பிரஹ்மமாகிய ஈஸ்வரனே என்று வித்யாஸ்வரூபினி கூறினாள். ஆகையால் அசுரர்கள் ஈஸ்வரனாலேயே ஜயிக்கப்பட்டார்கள். நீங்கள் அதற்கு நிமித்த மாத்திரமே. அந்த ஜயத்தை நீங்கள் உங்களுடைய மஹிமையாக கருதினீர்கள். एतत् (ஏதத்) என்றது கிரியா விசேஷணத்திற்காக நீங்கள் எங்களுடைய தேஜயம், எங்களுடையதே மஹிமானம் என்று உங்களுக்கு மித்யா அபிமானம் ஏற்பட்டது. ஆகையால் உமாவினுடைய வாக்கியத்தால் (யக்ஷன்) பிரஹ்மம் என்று இந்திரன் அறிந்தவனானான். அவதாரணத்திற்காகவே ततः (ததோ) हैव (ஹைவ) என்று வந்தது, ஸ்வதந்திரமாக அல்ல.
तस्माद्वा एते देवा अतितरामिवान्यान्देवान्यदग्निर्वायुरिन्द्रस्ते ह्येनन्नेदिष्ठं पस्पर्शुस्ते ह्येनत्प्रथमो विदाञ्चकार ब्रह्मेति ॥ २ ॥
यस्मादग्निवाय्विन्द्रा एते देवा ब्रह्मणः संवाददर्शनादिना सामीप्यमुपगताः-
(அ-கை)எதனால் அக்னி வாயு இந்திரன் ஆகிய இவர்கள் பிரஹ்மத்தினிடம் சம்வாதம், தர்சனம் முதலியவைகளால் (பிரஹ்மத்தின்) சமீபம் அடைந்தார்கள் என்பதை.
तस्मात् स्वैर्गुणैः अतितरामिव शक्तिगुणादिमहाभाग्यैः अन्यान् देवान् अतितराम् अतिशेरत इव एते देवाः । इवशब्दोऽनर्थकोऽवधारणार्थो वा । यत् अग्निः वायुः इन्द्रः ते हि देवा यस्मात् एनत् ब्रह्म नेदिष्ठम् अन्तिकतमं प्रियतमं पस्पर्शुः स्पृष्टवन्तो यथोक्तैर्ब्रह्मणः संवादादिप्रकारैः, ते हि यस्माच्च हेतोः एनत् ब्रह्म प्रथमः प्रथमाः प्रधानाः सन्त इत्येतत् , विदाञ्चकार विदाञ्चक्रुरित्येतत् , ब्रह्मेति ॥
ஆகையால் இந்த தேவர்கள் சக்தி குண முதலியவைகளால் மஹாபாக்யசாலியானதால் மற்றதேவர்களைக் காட்டிலும் மேலானவர்கள் போல் தோன்றுகிறார்கள். இவ इव சப்தமானது அர்த்தமற்றது அல்லது நிச்சயத்தைக் குறிப்பதாகும். இந்த அக்னி, வாயு, இந்திரன் ஆகிய தேவர்கள் எதனால் அந்த பிரஹ்மத்தின் மிக சமீபம் அடைந்து பிரியமாய் சம்வாதம் செய்து, ஸ்பரிசித்தார்களோ ஆகையால் அவர்கள் அந்த பிரஹ்மத்தை முதலாவதாக அது பிரஹ்மம் என்று அறிந்தார்களோ அதனால் அவர்கள் பிரதானமானவர்களாகிறார்கள்
तस्माद्वा इन्द्रोऽतितरामिवान्यान्देवान्स ह्येनन्नेदिष्ठं पस्पर्श स ह्येनत्प्रथमो विदाञ्चकार ब्रह्मेति ॥ ३ ॥
यस्मादग्निवायू अपि इन्द्रवाक्यादेव विदाञ्चक्रतुः, इन्द्रेण हि उमावाक्यात्प्रथमं श्रुतं ब्रह्मेति-
(அ-கை) ஏனெனில் அக்னி, வாயு, இருவரும் இந்திரனுடைய வாக்கினால் அறிந்தார்கள். எதற்காக எனில் இந்திரன் அவர்களுக்கு முன் உமையின் வாக்கியத்தால் “அது பிரஹ்மம்” என்று அறிந்தான்.
तस्माद्वै इन्द्रः अतितरामिव अतिशेत इव अन्यान् देवान् । स ह्येनन्नेदिष्ठं पस्पर्श यस्मात् स ह्येनत्प्रथमो विदाञ्चकार ब्रह्मेत्युक्तार्थं वाक्यम् ॥
ஆதலால் இந்திரன் மற்றதேவர்களைக் காட்டிலும் அதிசயித்தவனாகவே ஆகிறான். அவனன்றோ மற்றவர்களை விட சமீபத்தில் சென்று முதலாவதாக தொட்டான். அவ்இந்திரன்தான் முதலாவதாக இதை ப்ரஹ்மமென அறிந்தான் என வாக்கியத்தின் பொருள் சொல்லப்பட்டுவிட்டது.
तस्यैष आदेशो यदेतद्विद्युतो व्यद्युतदा३ इतीन्न्यमीमिषदा३ इत्यधिदैवतम् ॥ ४ ॥
तस्य प्रकृतस्य ब्रह्मणः एषः आदेशः उपमोपदेशः । निरुपमस्य ब्रह्मणो येनोपमानेनोपदेशः सोऽयमादेश इत्युच्यते । किं तत् ? यदेतत् प्रसिद्धं लोके विद्युतः व्यद्युतत् विद्योतनं कृतवदित्येतदनुपपन्नमिति विद्युतो विद्योतनमिति कल्प्यते । आ३ इत्युपमार्थः । विद्युतो विद्योतनमिवेत्यर्थः, ‘यथा सकृद्विद्युतम्’ (बृ. उ. २ । ३ । ६) इति श्रुत्यन्तरे च दर्शनात् । विद्युदिव हि सकृदात्मानं दर्शयित्वा तिरोभूतं ब्रह्म देवेभ्यः ।
இப்பொழுது கூறப்படும் பிரஹ்மத்தினுடைய எந்த ஆதேசம் உள்ளதோ அது உபமான ரூபமான ஆதேசமாகும். உபமானமற்ற இந்த பிரஹ்மத்தை எந்த உபமானத்தால் உபதேசம் செய்யப்படுகிறதோ அது ஆதேசம் எனப்படும். அது என்ன? இந்த உலகத்தில் மின்னல் பிரப்ாசிக்கச் செய்கிறது என்று கூறுவது பொருந்தாததால் வித்யுத்தினுடைய (மின்னலுடைய பிரகாசம் போல்) என்று கல்பிக்கப்படுகிறது. आ३ என்பது உபமான அர்த்தமாகும். மின்னல் மின்னுவது போல் (பிரகாசிப்பது போல்) என்பதாகும். “यथा सकृद्विद्युतम्” (யதாசக்ருத்வித்யுதம்) என்று வேறு சுருதியில் கூறப்பட்டுள்ளது. பிரஹ்மம் மின்னல் போல் ஒரு தடவை தேவர்களுக்கு தன்னைக் காண்பித்து விட்டு மறைந்து விட்டது.
अथवा विद्युतः ‘तेजः’ इत्यध्याहार्यम् । व्यद्युतत् विद्योतितवत् आ३ इव । विद्युतस्तेजः सकृद्विद्योतितवदिवेत्यभिप्रायः । इतिशब्दः आदेशप्रतिनिर्देशार्थः — इत्ययमादेश इति । इच्छब्दः समुच्चयार्थः ।
அல்லது विद्युतः तेजः (வித்யுத தேஜ:-)மின்னலுடைய தேஜஸ் அதாவது பிரகாசம் என்று சேர்த்துக் கொள்ள வேண்டும். மின்னல் போல் பிரகாசிக்கிறது என்று அதாவது மின்னலின் பிரகாசம் ஒரு தடவை பிரகாசிப்பது போல் என்று கொள்ளவேண்டும். “इति” இதி என்றசப்தம் ஆதேசத்தைக் குறிப்பிடுவதாகும் என்பதின் பொருள் இது. ஆதேசம் என்று தெரிவிப்பதற்காக “इत्” (இத்) சப்தம் சமுச்சயார்த்தமாகும்.
अयं चापरस्तस्यादेशः । कोऽसौ ? न्यमीमिषत् यथा चक्षुः । न्यमीमिषत् निमेषं कृतवत् । स्वार्थे णिच् । उपमार्थ एव आकारः । चक्षुषो विषयं प्रति प्रकाशतिरोभाव इव चेत्यर्थः । इति अधिदैवतं देवताविषयं ब्रह्मण उपमानदर्शनम् ॥
இதைத் தவிர மற்றொரு ஆதேசம் இருக்கிறது. அது எது எனில்? எவ்வாறு கண்களின் இமை மூடுவது போல் ஆகும். (அதாவது பிரஹ்மம் இமை மூடுவது போல் மறைந்துவிட்டது என்பதாகும்,) ஸ்வார்த்தத்தல் णिच् (நிச்) ஆகும். आ ஆ) உபமாஅர்த்தத்தில் ஆகும்.கண்கள் மூடுவதால் பிரகாசிக்கப்பட்டவை மறைவது போல் ஆகும் என்பது பொருள். இவ்வாறு பிரஹ்மத்தினது அதி தெய்வமான தேவதா விஷயமான உபமானம் காட்டப்பட்டது.
अथाध्यात्मं यदेतद्गच्छतीव च मनोऽनेन चैतदुपस्मरत्यभीक्ष्णं सङ्कल्पः ॥ ५ ॥
अथ अनन्तरम् अध्यात्मं प्रत्यगात्मविषय आदेश उच्यते । यदेतत् गच्छतीव च मनः । एतद्ब्रह्म ढौकत इव विषयीकरोतीव । यच्च अनेन मनसा एतत् ब्रह्म उपस्मरति समीपतः स्मरति साधकः अभीक्ष्णं भृशम् । सङ्कल्पश्च मनसो ब्रह्मविषयः । मनउपाधिकत्वाद्धि मनसः सङ्कल्पस्मृत्यादिप्रत्ययैरभिव्यज्यते ब्रह्म, विषयीक्रियमाणमिव । अतः स एष ब्रह्मणोऽध्यात्ममादेशः ।
அதன் பின் பிரத்யக் ஆத்ம விஷயமாகிய அத்யாத்மம் ஆதேசம் என்று கூறப்படுகிறது. எந்த இந்த மனம் அறிந்தது போல் இந்த பிரஹ்மத்தையும் அறிவது போல் விஷயம் செய்கிறது. (அறிகிறது) எந்த இந்த சாதகன் மனதால் ப்ரஹ்மத்தை அடிக்கடி தனக்கு சமீபமாக நினைக்கிறானோ அது மனதின் சங்கல்பம் பிரஹ்ம விஷயமாகும். மனம் உபாதியாய் இருப்பதால் அல்லவா மனதினுடைய சங்கல்பம், ஸ்மிருதி முதலிய விருத்திகளினால் செய்யப்பட்டது போல் பிரஹ்மம் விளங்குகிறது. ஆகையால் அந்த இந்த பிரஹ்மம் அத்யாத்ம ஆதேசம் ஆகும்.
विद्युन्निमेषणवदधिदैवतं द्रुतप्रकाशनधर्मि, अध्यात्मं च मनःप्रत्ययसमकालाभिव्यक्तिधर्मि, इत्येष आदेशः । एवमादिश्यमानं हि ब्रह्म मन्दबुद्धिगम्यं भवतीति ब्रह्मण आदेश उपदेशः । न हि निरुपाधिकमेव ब्रह्म मन्दबुद्धिभिराकलयितुं शक्यम् ॥
மின்னல் ஒளி இமை மூடுதல் போல் அதிதெய்வம் சீக்கிரம் பிரகாசிக்கும் தர்மமுடையது என்பது அதிதைவ ஆதேசம். அத்யாத்மமானது மனவிருத்தி சமகாலத்தில் வெளிப்படும் தர்மம் உடையது என்பது ஆதேசமாகும். இவ்வாறு ஆதேசம் (உபதேசம்) செய்யப்பட்டது மந்தபுத்தி உடையவர்களுக்காக பிரஹ்மத்தின் உபதேசமாகும்.மந்தபுத்தி உடையவர்களுக்கு நிரூபாதிக பிரஹ்மத்தின் ஞானத்தை அடைய முடியாது.
किञ्च-
மேலும்
तद्ध तद्वनं नाम तद्वनमित्युपासितव्यं स य एतदेवं वेदाभि हैनं सर्वाणि भूतानि संवाञ्छन्ति ॥ ६ ॥
तत् ब्रह्म ह किल तद्वनं नाम तस्य वनं तद्वनं तस्य प्राणिजातस्य प्रत्यगात्मभूतत्वाद्वनं वननीयं सम्भजनीयम् । अतः तद्वनं नाम ; प्रख्यातं ब्रह्म तद्वनमिति यतः, तस्मात् तद्वनमिति अनेनैव गुणाभिधानेन उपासितव्यं चिन्तनीयम् ।
அந்த பிரஹ்மம் அல்லவா तद्वनं ((தத்வனம்) எனப்படும். அதனுடைய வனம் தத்வனம். அதாவது எல்லா பிராணிகளுடைய பிரத்யக் ஆத்மாவாய் இருப்பதால் தத்வனம் वननीयं (வனனீயம்) என்றால் அதை சேவிக்க(பஜிக்க) வேண்டும் என்பதாகும். ஆகையால் அதற்கு தத்வனம் என்ற நாமம். எதனால் பிரஹ்மம் தத்வனம் என்று பிரசித்தமாய் இருக்கிறதோ அதனால் தத்வனம் என்று குணவியஞ்சக நாமத்தால் உபாசனை செய்யவேண்டும் அதாவது சிந்திக்க வேண்டும்.
अनेन नाम्नोपासनस्य फलमाह — स यः कश्चित् एतत् यथोक्तं ब्रह्म एवं यथोक्तगुणं वेद उपास्ते अभि ह एनम् उपासकं सर्वाणि भूतानि अभि संवाञ्छन्ति ह प्रार्थयन्त एव यथा ब्रह्म ॥
இந்த நாமத்தால் உபாசனை செய்பவனுடைய பலன் கூறப்படுகிறது. எவன் ஒருவன் இவ்வாறு கூறப்பட்ட பிரஹ்மத்தை முன்பு கூறப்பட்ட லக்ஷணங்களுடன் உபாசிக்கின்றானோ அந்த உபாசனை எவ்வாறு பிரஹ்மத்தினிடம் இஷ்டப்பட்டதை அடைவதற்கு பிரார்த்தனை செய்கிறோமோ அவ்வாறு எல்லா பிராணிகளும் விரும்பிய பலனை அடைவதற்கு பிரார்த்தனை செய்ய முற்படுகின்றன.
उपनिषदं भो ब्रूहीत्युक्ता त उपनिषद्ब्राह्मीं वाव त उपनिषदमब्रूमेति ॥ ७ ॥
एवमनुशिष्टः शिष्य आचार्यमुवाच —
(அ-கை) உபதேசிக்கப்பட்ட சிஷ்யன் இவ்வாறு ஆசாரியாரிடம் கூறினான்:
उपनिषदं रहस्यं यच्चिन्त्यं भो भगवन् ब्रूहि इति ।
ஹே பகவானே! எந்த சிந்திக்கக்கூடிய உபநிஷத் ரகஸ்யம் உள்ளதோ அதை கூறுங்கள்.
एवमुक्तवति शिष्ये आहाचार्यः — उक्ता अभिहिता ते तव उपनिषत् । का पुनः सेत्याह — ब्राह्मीं ब्रह्मणः परमात्मन इयं ब्राह्मी ताम् , परमात्मविषयत्वादतीतविज्ञानस्य, वाव एव ते उपनिषदमब्रूमेति उक्तामेव परमात्मविषयामुपनिषदमब्रूमेत्यवधारयत्युत्तरार्थम् ।
இவ்வாறு கேட்ட சிஷ்யனைக் குறித்து ஆச்சாரியார் கூறுகிறார். உனக்கு உபநிஷத் என்னால் கூறப்பட்டுவிட்டது.அது உபநிஷத்தா என்று கேட்ட சிஷ்யனுக்கு மறுபடியும் கூறுகிறார். உனக்கு என்னால் அந்த பிராஹ்மீ அதாவது பிரஹ்மத்தைப் பற்றிய பரமார்த்த சம்பந்தியான உபநிஷத் என்று கூறப்பட்டது. ஏன்எனில் முன்பு கூறப்பட்ட விக்ஞானம் பரமார்த்த சம்பந்தியாகும். वाव (வாவ) என்பது உனக்கு நிச்சயமாக முன்பே இந்த உபநிஷத் சொல்லப்பட்டது. உபநிஷத்தை லக்ஷ்யமாகக் கொண்ட உனக்குதான் பிரஹ்ம சம்பந்தியான உபநிஷத் சொல்லப்பட்டது என்று இவ்வாறு இனிவரும் கிரந்தத்தின் விஷயத்தை ஸ்பஷ்ட்டமாக்குவதற்காக அதை நிச்சயம் செய்கிறார்.
परमात्मविषयामुपनिषदं श्रुतवतः उपनिषदं भो ब्रूहीति पृच्छतः शिष्यस्य कोऽभिप्रायः ? यदि तावच्छ्रुतस्यार्थस्य प्रश्नः कृतः, ततः पिष्टपेषणवत्पुनरुक्तोऽनर्थकः प्रश्नः स्यात् । अथ सावशेषोक्तोपनिषत्स्यात् , ततस्तस्याः फलवचनेनोपसंहारो न युक्तः ‘प्रेत्यास्माल्लोकादमृता भवन्ति’ (के. उ. २ । ५) इति । तस्मादुक्तोपनिषच्छेषविषयोऽपि प्रश्नोऽनुपपन्न एव, अनवशेषितत्वात् । कस्तर्ह्यभिप्रायः प्रष्टुरिति । उच्यते ।
பரமார்த்த விஷயமான உபநிஷத்தைக் கேட்ட சிஷ்யன் ஹே குருவே உபநிஷத்தை மறுபடியும் கூறுங்கள் என்று கேட்ட சிஷ்யனுடைய அபிப்ராயம் எனன?இவ்வாறு கேட்ட விஷயத்தில் எதற்காக கேள்வி உண்டாயிற்று. அதனால் பிசைந்த மாவை பிசைவது போல் புனருக்தி(மறுபடியும் கூறல் என்ற) அர்த்தமற்றகேள்வியாகும். மேலும் அங்கங்களுடன் கூடிய உபநிஷத் கூறப்பட்ட போதும் அதற்கு தனியாக பல வசனம் தேவையில்லை. ஏன்எனில் “प्रेत्यास्माल्लोकादमृता भवन्ति” (ப்ரேத்யாஸ்மால்லோகாதம்ருதா பவந்தி: இந்த லோகத்திலிருந்து கிளம்பி அமிர்தத்தை அடைகிறார்கள்.) என்று பலன் கூறப்பட்டுள்ளது. ஆகையால் அது பொருந்தாது.ஆகையால் உபநிஷத் கூறப்பட்டதில் ஒரு அங்கவிஷயமும் விடப்படவில்லை. ஆனால் கேட்டவனுடைய அபிப்ராயம் என்ன என்பதைக் கூறத் தொடங்கினார்.
किं पूर्वोक्तोपनिषच्छेषतया तत्सहकारिसाधनान्तरापेक्षा, अथ निरपेक्षैव ? सापेक्षा चेदपेक्षितविषयामुपनिषदं ब्रूहि । अथ निरपेक्षा चेदवधारय पिप्पलादवन्नातः परमस्तीत्येवमभिप्रायः । एतदुपपन्नमाचार्यस्यावधारणवचनम् ‘उक्ता त उपनिषत्’ इति ।
முன்பு கூறப்பட்ட உபநிஷத் அவசேஷ ரூபமாக அதற்கு அந்நிய சஹகாரி சாதனத்தை அபேக்ஷிக்கிறதா? அல்லது அது சாபேக்ஷமானால் அதை அபேக்ஷித்த விஷயம் உள்ள உபநிஷத்தைக் கூறுங்கள். அது நிரபேக்ஷா என்றால் பிப்பலாதர் போல் “வேறு கூறவேண்டியதில்லை”. என்று கூறுங்கள் என்பது அபிப்ராயம். ஆச்சாரியருடைய उक्ता त उपनिषद् (உக்தா த உபநிஷத்) என்றஅவதாரண வசனம் (நிச்சயமாகக் கூறப்பட்ட வசனம்) பொருந்தக்கூடியதேயாகும்.
ननु नावधारणमिदम् , यतोऽन्यद्वक्तव्यमाह ‘तस्यै तपो दमः’ (के. उ. ४ । ८) इत्यादि ।
(சங்கை) மேலும் கூறப்படவேண்டி உள்ளது என்று प्त्तस्यै तपो दमःद्य्भ (தஸ்யை தபோ தம) முதலியவைகள் ஆகம மூலமாக அவதாரணம் செய்வதற்கு (நிச்சயம் செய்வதற்கு) யோக்கியமில்லையே.
सत्यम् , वक्तव्यमुच्यते आचार्येण । न तूक्तोपनिषच्छेषतया तत्सहकारिसाधनान्तराभिप्रायेण वा ; किन्तु ब्रह्मविद्याप्राप्त्युपायाभिप्रायेण वेदैस्तदङ्गैश्च सहपाठेन समीकरणात्तपःप्रभृतीनाम् । न हि वेदानां शिक्षाद्यङ्गानां च साक्षाद्ब्रह्मविद्याशेषत्वं तत्सहकारिसाधनत्वं वा सम्भवति ।
(சமாதானம்) நீ கூறுவது சரியே, ஆச்சாரியரால் உபநிஷத்தின் அங்கமாகவோ, அதனுடைய சஹகாரியான வேறு சாதனத்தின் அபிப்ராயமாகவோ கூறப்பட வேண்டியது கூறப்படவில்லை. ஆனால் வேதம், வேதாங்கம் இவைகளுடன் அத்யயனம் செய்யும் பொழுது கடைபிடிக்கப்படும் தபஸ் முதலியவைகள் பிரஹ்ம வித்யா ப்ராப்திக்கு உபாயமாகும் என்ற அபிப்பிராயத்தால் சொல்லப்பட்டது.ஆனால் வேதங்கள், சிக்ஷாதி அங்கங்கள் நேரடியாக பிரஹ்ம வித்யாவிற்கு அங்கமாகவோ, அதற்கு சஹகாரியான சாதனமாகவோ  ஆகாது.
सहपठितानामपि यथायोगं विभज्य विनियोगः स्यादिति चेत् ; यथा सूक्तवाकानुमन्त्रणमन्त्राणां यथादैवतं विभागः, तथा तपोदमकर्मसत्यादीनामपि ब्रह्मविद्याशेषत्वं तत्सहकारिसाधनत्वं वेति कल्प्यते । वेदानां तदङ्गानां चार्थप्रकाशकत्वेन कर्मात्मज्ञानोपायत्वमित्येवं ह्ययं विभागो युज्यते अर्थसम्बन्धोपपत्तिसामर्थ्यादिति चेत् ।
(சங்கை) வேத வேதாந்தங்களை சேர்த்தே படித்தாலும் முறைப்படி பிரித்து அளிக்க முடியும். எவ்வாறு எனில் சூக்தத்தின் வாக்ரூபமான மந்திரங்களை எவ்வாறு தேவதைகளுக்கு தகுந்தவாறு பிரிக்கப்படுகிறதோ அவ்வாறு தபஸ், தமம், கர்மம், சத்தியம் முதலியவைகளையும் பிரஹ்ம வித்தையின் சேஷத்துவமாக (அங்கமாக)வும் அதனுடைய சஹகாரியான சாதனமாகவும் அறியப்படுகிறது. வேதத்தின் அதன் அங்கங்களின் அர்த்த பிரகாசத்தால் கர்ம ஆத்மஞானத்திற்கு உபாயமாக அல்லவா அந்த விபாகம் (பிரிவு) அர்த்த சம்பந்தத்தின் உபபத்தியின் (தோற்றத்தின்) சாமர்த்தியத்தால் இவ்வாறு இந்த விபாகம் உசிதமாகிறது. (பொருந்துகிறது) என்று கொள்ளலாம்.
न ; अयुक्तेः । न ह्ययं विभागो घटनां प्राञ्चति । न हि सर्वक्रियाकारकफलभेदबुद्धितिरस्कारिण्या ब्रह्मविद्यायाः शेषापेक्षा सहकारिसाधनसम्बन्धो वा युज्यते । सर्वविषयव्यावृत्तप्रत्यगात्मविषयनिष्ठत्वाच्च ब्रह्मविद्यायास्तत्फलस्य च निःश्रेयसस्य । ‘मोक्षमिच्छन्सदा कर्म त्यजेदेव ससाधनम् । त्यजतैव हि तज्ज्ञेयं त्यक्तुः प्रत्यक्परं पदम्’ ( ? ) तस्मात्कर्मणां सहकारित्वं कर्मशेषापेक्षा वा न ज्ञानस्योपपद्यते । ततोऽसदेव सूक्तवाकानुमन्त्रणवद्यथायोगं विभाग इति । तस्मादवधारणार्थतैव प्रश्नप्रतिवचनस्योपपद्यते । एतावत्येवेयमुपनिषदुक्तान्यनिरपेक्षा अमृतत्वाय ॥
(சமாதானம்) பொருந்தாததால் அது சரியல்ல. இந்த விபாகமானது போற்றுதற்குரிய விளக்கத்திற்கு பொருத்தமானதாய் இல்லை. எந்த ப்ரகாரத்தாலும் கிரியாகாரக பலன் மேலும் பேத புத்தியை நீக்கும் பிரஹ்ம வித்யைக்கு எவ்வகையிலும் சேஷத்தின் (அங்கத்தின்) அபேக்ஷையையோ அல்லது சஹகாரி சாதனங்களையோ சம்பந்தப்படுத்துவது பொருந்தாது. ஏன்எனில் பிரஹ்ம வித்யை மேலும் அதன் பலன் நிஷ்சிரேயஸ் ஆனதினால் எல்லாவிதமாகவும் விஷயங்களிலிருந்து நிவிர்த்தியாகி பிரத்யக் ஆத்மஸ்வரூபத்தில் நிலை பெறுவதாகும். “மோக்ஷத்தில் இச்சை உடையவன் எப்பொழுதும் சாதனத்துடன் கர்மத்தை தியாகம் செய்யவேண்டும். தியாகம் செய்து அந்த த்யாகத்தால் தன்னுடைய பிரத்யக் ஆத்மரூப பரமபதத்தை அறிய முடியும்” ஆகையால் சஹகாரித்துவம், அல்லது கர்மசேஷ அபேக்ஷையோ ஞானத்திற்கு தேவையில்லை. ஆகையால் சூக்தவாக் அனுமந்திரம் போல் மந்திரத்திற்கு ஏற்றவாறு விபாகம் என்பது அசத்தே (பொய்யே) ஆகும். ஆகையால் கேள்வியும் பதிலும் (உபதேசத்தை) திடப்படுத்துவதற்காக ஆகும். என்று எடுத்துகொள்வதே சரியாகும். அம்ருத்துவத்தை அடைவதற்கு இதுவரை உபநிஷத் அந்நிய சாதனங்களின் நிரபேக்ஷையை கூறிற்று.
तस्यै तपो दमः कर्मेति प्रतिष्ठा वेदाः सर्वाङ्गानि सत्यमायतनम् ॥ ८ ॥
यामिमां ब्राह्मीमुपनिषदं तवाग्रेऽब्रूमेति तस्यै तस्या उक्ताया उपनिषदः प्राप्त्युपायभूतानि तपआदीनि । तपः कायेन्द्रियमनसां समाधानम् । दमः उपशमः । कर्म अग्निहोत्रादि । एतैर्हि संस्कृतस्य सत्त्वशुद्धिद्वारा तत्त्वज्ञानोत्पत्तिर्दृष्टा । दृष्टा ह्यमृदितकल्मषस्योक्तेऽपि ब्रह्मण्यप्रतिपत्तिर्विपरीतप्रतिपत्तिश्च, यथेन्द्रविरोचनप्रभृतीनाम् ।
இந்த ப்ராஹ்மீ ஆகிய உபநிஷத்தை உனக்கு இனி கூறுவேன் என்றது உபநிஷத்தை அடைவதற்கான தபஸ் முதலிய உபாயங்களாகும். தபஸ் என்பது சரீர, இந்திரிய, மனம் இவைகளின் சமாதானம். தமம் என்பது அடக்குதல் (அதாவது விபரீதத்தின் நிவிர்த்தி). கர்ம என்பது அக்னி ஹோத்திராதி கர்மங்களாகும். இவைகளால் சித்தசுத்தி ஏற்பட்டு அதனால் தத்வ ஞானத்தின் ப்ராப்த்தியானது பார்க்கப்படுகிறது. மனதில் கல்மஷம் நிவர்த்தியாகவில்லை எனில் அவனுக்கு உபதேசம் செய்தாலும் பிரஹ்ம விஷயத்தில் அக்ஞானம் அல்லது விபரீத ஞானம் உள்ளது என்று காணப்படுகிறது. எவ்வாறு எனில் இந்திரன் விரோசனன் போலாகும்.
तस्मादिह वातीतेषु वा बहुषु जन्मान्तरेषु तपआदिभिः कृतसत्त्वशुद्धेर्ज्ञानं समुत्पद्यते यथाश्रुतम् ; ‘यस्य देवे परा भक्तिर्यथा देवे तथा गुरौ । तस्यैते कथिता ह्यर्थाः प्रकाशन्ते महात्मनः’ (श्वे. उ. ६ । २३) इति मन्त्रवर्णात् । ‘ज्ञानमुत्पद्यते पुंसां क्षयात्पापस्य कर्मणः’ (मो. २०४ । ८) इति स्मृतेश्च ।
ஆகையால் இந்த ஜன்மத்திலோ அல்லது சென்றஅநேக ஜன்மங்களிலோ செய்த தபஸ் முதலியவைகளினால் (அந்தக்கரண) சித்தசுத்தி அடைந்தவனுக்கு ஞானம் உண்டாகிறது. எவனுக்கு தெய்வத்தினிடத்தில் மேலான பக்தி உள்ளதோ, அவ்வாறே குருவினிடத்திலும் உள்ளதோ அந்த மஹாத்மாவிற்கு முன்பு கூறப்பட்ட விஷயங்கள் நன்றாக பிரகாசிக்கும் (புரியும்). “என்று சுருதியில் உள்ள மந்திரத்தால் அறிகிறோம்.” பாபகர்மங்கள் க்ஷீணமடைந்த புருஷனுக்கு ஞானம் உண்டாகிறது என்றஸ்மிருதி வாக்கியத்தாலும் அறிகிறோம்.
इतिशब्दः उपलक्षणत्वप्रदर्शनार्थः । इति एवमाद्यन्यदपि ज्ञानोत्पत्तेरुपकारकम् ‘अमानित्वमदम्भित्वम्’ (भ. गी. १३ । ७) इत्याद्युपदर्शितं भवति । प्रतिष्ठा पादौ पादाविवास्याः ; तेषु हि सत्सु प्रतितिष्ठति ब्रह्मविद्या प्रवर्तते, पद्भ्यामिव पुरुषः । वेदाश्चत्वारः सर्वाणि चाङ्गानि शिक्षादीनि षट् कर्मज्ञानप्रकाशकत्वाद्वेदानां तद्रक्षणार्थत्वादङ्गानां प्रतिष्ठात्वम् ।
इति (இதி) சப்தமானது உபலக்ஷணத்துவத்தை காண்பிப்பதற்காக ஆகும். இவ்வாறு இதி என்றசப்தத்தால் ஞானம் உண்டாவதற்கு ஆன உபகாரமான “अमानित्वमदम्भित्वम्” (அமானித்துவம் அதம்பித்துவம்) முதலியவைகள் காண்பிக்கப்பட்டதாகிறது. प्रतिष्द्भा (பிரதிஷ்ட்டா) என்றால் கால்கள் அதாவது கால்களுக்கு சமமாக ஆதாரபூதமாய் இருக்கின்றது. எவ்வாறு புருஷன் கால்களால் இருந்து கொண்டு செயல்களை செய்கிறானோ அவ்வாறு இந்த சாதனங்களை கொண்டு பிரஹ்ம வித்யை பிரவிர்த்திக்கிறது. நான்கு வேதங்கள் சிக்ஷை முதலிய ஆறு அங்கங்கள் எல்லாம் கர்ம ஞானங்களை பிரகாசப்படுத்துவதால் வேதங்களை அது ரக்ஷிப்பதால் வேத அங்கங்களுக்கு பிரதிஷ்ட்டா தன்மை ஆகும்.
अथवा, प्रतिष्ठाशब्दस्य पादरूपकल्पनार्थत्वाद्वेदास्त्वितराणि सर्वाङ्गानि शिरआदीनि । अस्मिन्पक्षे शिक्षादीनां वेदग्रहणेनैव ग्रहणं कृतं प्रत्येतव्यम् । अङ्गिनि हि गृहीतेऽङ्गानि गृहीतान्येव भवन्ति, तदायत्तत्वादङ्गानाम् ।
அல்லது பிரதிஷ்ட்டா சப்தமானது பாத ரூபககல்பனையாக இருப்பதால் வேதமானது மற்றஅங்கங்களாகிய சிரசு முதலியவைகளாகும். இந்த பக்ஷத்தில் வேதங்களை கிரஹித்துக் கொண்டால் (எடுத்துக் கொண்டால்) மற்றஎல்லா வேதாங்கங்களையும் கிரஹித்துக் கொண்டதாகும். அங்கங்களை கிரஹித்துக் கொண்டால் அங்கியாகிய வேதங்களையும் கிரஹித்துக் கொண்டதாகும். ஏன் எனில் அங்கியின் அதீனமாக அங்கங்கள் இருக்கின்றன.
सत्यम् आयतनं यत्र तिष्ठत्युपनिषत् तदायतनम् । सत्यमिति अमायिता अकौटिल्यं वाङ्मनःकायानाम् । तेषु ह्याश्रयति विद्या ये अमायाविनः साधवः, नासुरप्रकृतिषु मायाविषु ; ‘न येषु जिह्ममनृतं न माया च’ (प्र. उ. १ । १६) इति श्रुतेः । तस्मात्सत्यमायतनमिति कल्प्यते । तपआदिष्वेव प्रतिष्ठात्वेन प्राप्तस्य सत्यस्य पुनरायतनत्वेन ग्रहणं साधनातिशयत्वज्ञापनार्थम् । ‘अश्वमेधसहस्रं च सत्यं च तुलया धृतम् । अश्वमेधसहस्राच्च सत्यमेकं विशिष्यते’ (महाभा. आ. ७४ । १०३) इति स्मृतेः ॥
சத்யம் ஆயதனம் (இருப்பிடம்) என்பதாகும்.) வாக்கு, மனம், காயம், இவைகளின் மாயமற்றத் தன்மையும், குறுகிய தன்மையும் அற்றது சத்யம் எனப்படுகிறது.  மாயை அற்றவர்கள் சாதுக்கள், இவர்களை (பிரஹ்ம) வித்தையானது ஆஸ்ரயிக்கிறது. அசுரபிரகிருதிகளில் இருப்பவரிடத்தும் மாயாவிகளிடத்தும் ஆச்ரயிக்காது. “न येषु जिह्ममनृतं न माया च” (நயேஷு ஜிஹ்மந்ருதம் ந மாயாச = எவர்களிடத்தில் குடிலத்தன்மை, மித்யா மாயை இல்லையோ) என்று சுருதியினுடைய வாக்கியம். ஆகையால் “சத்யம்” ஆயதனம் என்று கற்பிக்கப்படுகிறது. தபஸ் முதலியவைகளின் பிரதிஷ்ட்டானத்தினால் அடையப்பட்ட சத்தியத்திறகு மறுபடியும் ஆயதனத்தை க்ரஹிப்பது சாதனத்தினுடைய பெருமையை ஞாபகப்படுத்துவதற்காகும். “अश्वमेधसहस्रं च सत्यं च तुलया धृतम्। अश्वमेधसहस्रांच सत्यमेकं विशिष्यते।” (அஷ்வமேத சஹஸ்ரம் ச்ச சத்யம் ச்ச துலயா த்ருதம் |அசவமேத சஹஸ்ராம்ச்ச சத்யமேகம் விசிஷ்யதே = சஹஸ்ர அச்வமேதத்தையும் சத்யத்தையும் திராசில் நிறுத்னால் சகஸ்ரஅச்வமேதத்தைக் காட்டிலும் சத்யம்தான் விசேஷமாக நிலைக்கிறது.) என்பது ஸ்மிருதி வாக்கியம்.
यो वा एतामेवं वेदापहत्य पाप्मानमनन्ते स्वर्गे लोके ज्येये प्रतितिष्ठति प्रतितिष्ठति ॥ ९ ॥
यो वै एतां ब्रह्मविद्याम् ‘केनेषितम्’ (के. उ. १ । १) इत्यादिना यथोक्ताम् एवं महाभागाम् ‘ब्रह्म ह देवेभ्यः’ (के. उ. ३ । १) इत्यादिना स्तुतां सर्वविद्याप्रतिष्ठां वेद । ‘अमृतत्वं हि विन्दते’ (के. उ. २ । ४) इत्युक्तमपि ब्रह्मविद्याफलमन्ते निगमयति — अपहत्य पाप्मानम् अविद्याकामकर्मलक्षणं संसारबीजं विधूय अनन्ते अपर्यन्ते स्वर्गे लोके सुखात्मके ब्रह्मणीत्येतत् । अनन्ते इति विशेषणान्न त्रिविष्टपे अनन्तशब्द औपचारिकोऽपि स्यादित्यत आह — ज्येये इति । ज्येये ज्यायसि सर्वमहत्तरे स्वात्मनि मुख्ये एव प्रतितिष्ठति । न पुनः संसारमापद्यत इत्यभिप्रायः ॥
எவன் ஒருவன் இந்த ப்ரஹ்ம வித்யா “केनेषितम्” (கேனேஷிதம்) முதலியவைகளால் எவ்வாறு “ब्रह्म ह देवेभ्यः” (பிரஹ்ம ஹ தேவேப்ய:) முதலிய மந்திரங்களால் கூறப்பட்ட கதைகளின் மூலமாக ஸ்துதிக்கப்பட்ட இந்த மஹாபாகத்தையும், எல்லா வித்யைகளுக்கும் ஆஸ்ரய பூதமான பிரஹ்ம வித்யாவை அறிகிறானோ அவன் எல்லா பாபங்களையும் விட்டு அதாவது அவித்தியா, காம, கர்மரூப சம்சாரத்தை தியாகம் செய்து முடிவற்ற சுவர்க்கலோகத்தில் அதாவது சுகாத்மகமான பிரஹ்மத்தில் நிலை பெறுகிறான். அநந்தம் என்றவிசேஷணம் இருப்பதால் அது சுவர்க்கலோகமல்ல. அந்த சப்தமானது உபசார வார்த்தையாகவும் இருக்கலாம் என்பதற்காக கூறுகிறார்- ज्येये  (ஜ்யேயே) என்று, ஜ்யேயே என்றால் மிகவும் மேலான முக்கியமான ஸ்வாத்மாவிடத்தில் நிலை பெற்று மறுபடியும் சம்சாரத்தை அடைவதில்லை என்பது அபிப்ராயம்.
इति चतुर्थखण्डभाष्यम् ॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ केनोपनिषत्पदभाष्यम् सम्पूर्णम् ॥