यदि मन्यसे सु वेदेति दभ्रमेवापि नूनं त्वं वेत्थ ब्रह्मणो रूपं यदस्य त्वं यदस्य देवेष्वथ नु मीमांस्यमेव ते मन्ये विदितम् ॥ १ ॥
एवं हेयोपादेयविपरीतस्त्वमात्मा ब्रह्मेति प्रत्यायितः शिष्यः अहमेव ब्रह्मेति सुष्ठु वेदाहमिति मा गृह्णीयादित्याशयादाहाचार्यः शिष्यबुद्धिविचालनार्थम् — यदीत्यादि ।
(அ-கை)இவ்வாறு ஹேயோபாதேயத்தைக் காட்டிலும் (ஏற்பது,ஒதுக்குவது இவைகளைக் காட்டிலும்) மாறான ஆத்மா பிரஹ்மம் என்று விளக்கம் பெற்றசீடன் நானே பிரஹ்மம் என்று நன்கு அறிகிறேன் என்று எண்ணாது நான் என்னை ப்ரஹ்மமாக அறிகிறேன் என்று கருதிவிடக்கூடாது என்று ஆசாரியார் சிஷ்யனுடைய புத்தியை அசைத்துப்பார்த்து திடப்படுத்துவதற்காக “यदि” என்பது முதலிய மந்திரங்களை ஆரம்பிக்கிறார்.
नन्विष्टैव सु वेदाहम् इति निश्चिता प्रतिपत्तिः ।
(பூர்வ) ஆனால் நான் நன்றாக அறிந்திருக்கிறேன் என்று நிச்சயமான ஞானமல்லவா?
(சித்தாந்தி) உண்மையே, நிச்சயமான ஞானம் இஷ்டமே, ஆனாலும் நான் நன்கு அறிகிறேன் என்பது பொருந்தாது. எது அறியப்படுகிறதோ அந்த வஸ்து விஷயமாகிறது. அது நன்றாக அறிய முடியும். எரிக்கும் அக்னிக்கு எரிக்கப்படும் விறகு எப்படி விஷயமாகுமோ. அவ்வாறு தன்னை அக்னி எரிக்க முடியாது. எல்லாவற்றையும் அறியும் தன் ஆத்மா பிரஹ்மம் என்று எல்லா வேதங்களுடைய நிச்சயமான தாத்பர்யமாகும். சென்றகண்டத்தில் ‘श्रोत्रस्य श्रोत्रम्’ (சுரோத்ரயஸ்ய சுரோத்ரம், மனஸோ மன) என்றமந்திரங்களால் அதுவே விளக்கப்பட்டது. ‘यद्वाचानभ्युदितम्’ (யத்வாச்சா அனப்யுதிதம்) என்பதால் அக்கருத்தே மேலும் நிலை நாட்டப்பட்டது. ‘विदितात् अन्यत् अविदितादधि’ (விதிதாத் அன்யத் அவிதிதாததி) என்பதால் வழிவழியாக ப்ரஹ்ம ஞானிகளின் சம்பிரதாய நிச்சயமும் விளக்கப்பட்டது ‘अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम्’ அவிக்ஞாதம் விஜானதாம் விக்ஞாதம் அவிஜானதாம்) என முடிவில் கூறவும் போகிறார். (அறிந்தேன் என்பவர்களுக்கு அறியப்படவில்லை. அறியவில்லை என்பவர்களுக்கு அறியத்தக்கதாகும்) எனவே சிஷ்யன் நன்கு உணர்ந்தேன் என்றுக் கூறிக்கொள்வதை புத்தி நீக்க வேண்டியதே.
न हि वेदिता वेदितुर्वेदितुं शक्यः, अग्निर्दग्धुरिव दग्धुमग्नेः । न चान्यो वेदिता ब्रह्मणोऽस्ति यस्य वेद्यमन्यत्स्याद्ब्रह्म ।
‘नान्यदतोऽस्ति विज्ञातृ’ (बृ. उ. ३ । ८ । ११) इत्यन्यो विज्ञाता प्रतिषिध्यते । तस्मात् सुष्ठु वेदाहं ब्रह्मेति प्रतिपत्तिर्मिथ्यैव । तस्माद्युक्तमेवाहाचार्यो यदीत्यादि ।
எவ்வாறு தஹிக்கும் அக்னியானது தன்னையே தஹிக்காதோ அவ்வாறு எல்லாவற்றையும் அறிபவன், அறிபவனுக்கு அறியப்படுவதாக ஆக முடியாது. அதுபோல் பிரஹ்மத்தை அறியத்தக்க வேறு பொருள் இல்லை. ‘नान्यदतोऽस्ति विज्ञातृ’ (நான்யததோ அஸ்தி விக்ஞாத்ரு) என்று அறிபவனைக் காட்டிலும் வேறு அறியும் பொருள் இல்லை என்று வேதம் கூறுவதால் நான் என்னை ப்ரஹ்மமாக அறிகிறேன் என்ற கூற்று தவறானதாகும். ஆகவேதான் ஆச்சாரியார் यदीत्यादि (யதித்யாதி) பொருத்தமானதே என்று கூறுகின்றனர்.
(குறிப்பு) वेदितुः वेदितुं न हि शक्यः (எல்லாவற்றையும் அறிபவன் அறிபவனுக்கு அறியப்படுவதாக ஆகமுடியாது.) இதனால் சுவசம்வேத்யம் அல்ல என்பது தெளிவாகிறது. यस्य वेद्यम् अन्यत्स्यात् ब्रह्म - பிரஹ்ம்மத்திற்கு அதை அறியத்தக்க வேறு பொருள் இல்லை என்பதால் பரசம்வேத்தியம் அல்ல என்பது தெளிவாகிறது.
यदि कदाचित् मन्यसे सु वेदेति सुष्ठु वेदाहं ब्रह्मेति । कदाचिद्यथाश्रुतं दुर्विज्ञेयमपि क्षीणदोषः सुमेधाः कश्चित्प्रतिपद्यते कश्चिन्नेति साशङ्कमाह यदीत्यादि । दृष्टं च
‘य एषोऽक्षिणि पुरुषो दृश्यत एष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्म’ (छा. उ. ८ । ७ । ४) इत्युक्ते प्राजापत्यः पण्डितोऽप्यसुरराड्विरोचनः स्वभावदोषवशादनुपपद्यमानमपि विपरीतमर्थं शरीरमात्मेति प्रतिपन्नः । तथेन्द्रो देवराट् सकृद्द्विस्त्रिरुक्तं चाप्रतिपद्यमानः स्वभावदोषक्षयमपेक्ष्य चतुर्थे पर्याये प्रथमोक्तमेव ब्रह्म प्रतिपन्नवान् । लोकेऽपि एकस्माद्गुरोः शृण्वतां कश्चिद्यथावत्प्रतिपद्यते कश्चिदयथावत् कश्चिद्विपरीतं कश्चिन्न प्रतिपद्यते । किमु वक्तव्यमतीन्द्रियमात्मतत्त्वम् । अत्र हि विप्रतिपन्नाः सदसद्वादिनस्तार्किकाः सर्वे । तस्माद्विदितं ब्रह्मेति सुनिश्चितोक्तमपि विषमप्रतिपत्तित्वात् यदि मन्यसे इत्यादि साशङ्कं वचनं युक्तमेवाचार्यस्य । दभ्रम् अल्पमेवापि नूनं त्वं वेत्थ जानीषे ब्रह्मणो रूपम् ।
यदि ஒரு சமயம் ब्रह्म (பிரஹ்மம்) பிரஹ்மத்தை सुवेद (சுவேத) நன்கு அறிகிறேன் इति (இதி) என்று मन्यसे (மன்யசே) எண்ணுவாயேயானால், இங்கு यदि (யதி) என்பது ஒரு சமயம் முன்ஜன்ம கர்ம விசேஷத்தால் வாசனாக்ஷயம் ஏற்பட்டு மிகவும் கஷ்ட்டப்பட்டு அறியவேண்டியதை (பிரஹ்மத்தை) அறிந்திருக்கலாம், ஒரு சமயம் இல்லாமலும் இருக்கலாம் என்பதை விளக்க வந்தது. ஏன் எனில் முன்பு ஒரு சமயம் பிரம்மாவிடம் ஆன்ம தத்துவத்தை உபதேசம் பெறதேவர்களின் தலைவன் இந்திரனும், அசுரர்களின் தலைவன் விரோச்சனனும் சென்றனர். அவரும் அவ்விருவருக்கும் “य एषोऽक्षिणि पुरुषो दृश्यत एष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्म” (ய ஏஷோஅக்ஷிணி புருஷோத்ருஷ்யத ஏஷ ஆத்மேதி ஹோவாச்சைதத் அம்ருதமபயமேதத் பிரஹ்மம்) நம் கண்ணில் நம் கண்ணுக்கு எதிரில் நிற்கும் மனிதனின் பிரதிபிம்பம் தெரியும். அது மாதிரி (உன் கண்ணில் தெரியும் புருஷனே ஆன்மா) என்று உபதேசித்தார். கச்யப பிரஜாபதியின் மகனாயும், நல்ல பண்டிதனாயும், இருப்பினும் கூட அசுரர்களின் அரசனான விரோச்சனன் இயற்கையான அக்ஞான தோஷத்தால் சரீரமே ஆன்மா என்று விபரீதமாக அர்த்தத்தைப் புரிந்து கொண்டு ஆன்மாவை உணர்ந்ததாக திரும்பினான். ஆனால் இந்திரனோ, ஒரு முறைக்கு நான்கு முறைகேட்டு, முதல் மூன்று முறைக் கேட்டதினால் இயற்கையான அக்ஞான தோஷம் நீங்கி நான்காவது முறைஆசிரியரிடமிருந்து நல்விளக்கம் பெற்று ஆத்மஞானம் பெற்றான். இந்திர, விரோச்சன கதியே இப்படி என்றால் இவ்வுலகில் நம் குருவிடமிருந்து ஆன்மதத்துவத்தை கேட்பவர்களில் ஒரு சிலர் உள்ளது உள்ளவாறு புரிந்து கொள்கிறார்கள். சிலர் சரியாக புரிந்து கொள்வதில்லை. சிலர் விபரீதமாக புரிந்து கொள்கின்றனர். சிலர் புரிந்து கொள்ள முடியாதவர்களாய் இருக்கிறார்கள். இதனால் ஆத்ம தத்துவமானது இந்திரியங்களுக்கு எட்டாதது என்று கூறவும் வேண்டுமா? இங்கு எல்லா சத்அசத்வாதிகளாகிய தார்க்கிகர்கள் மாறி அறிகின்றார்கள். ஆகையால் விபரீதமாகப் புரிந்துகொண்டு நான் நன்றாக அறிகிறேன் என்று நினைப்பாயானால் என்ற ஆசாரியருடைய சங்கையுடன் கூடிய வசனம் பொருத்தமானதே ஆகும். नूनं (நூ னம்) நிச்சயமாக दहरम् (தஹரம்) அல்பமாகவே ब्रह्मणः रूपम् (பிரஹ்மண ரூபம்) பிரஹ்மத்தினுடைய ரூபத்தை त्वं (துவம்) நீ वेत्थ (வேத்த)அறிந்திருக்கிறாய்.
किमनेकानि ब्रह्मणो रूपाणि महान्त्यर्भकाणि च, येनाह दभ्रमेवेत्यादि ?
(பூர்வ) என்ன பிரஹ்மத்திற்கு சிறியது, பெரியது, என்றரூபங்கள் இருக்கின்றனவா? இருப்பதால் அல்லவா நீ அறிந்தும் பிரஹ்மத்தினுடைய சிறிய ரூபத்தை அறிந்திருக்கிறாய் என்று கூறுகிறார்.
(சித்தாந்தி) வாஸ்தவம், பிரஹ்மத்தினுடைய அநேக ரூபங்கள் நாமரூப உபாதியினால் தோன்றுகிறது. உண்மையில் அதற்குக்கிடையாது. உண்மையிலோவெனில் ‘अशब्दमस्पर्शमरूपमव्ययं तथारसं नित्यमगन्धवच्च यत्’ (அசப்தமஸ்பர்சம் அரூபமவ்யயம் ததாரசம் நித்யம கந்தவச்ச யத்) என்பது முதலிய உபநிஷத் சப்தங்களால் ரூபங்கள் நிஷேதிக்கப்படுகிறது.
(பூர்வ) எந்த தர்மத்தை வைத்துஎது அறியப்படுகிறதோ அது அதன் ரூபமாகும். அவ்வாறேபிரஹ்மமானது எந்த விசேஷணத்தால் நிரூபிக்கப்படுகிறதோ அதுவே அதனுடைய ரூபமாகும். ஆகையால் இவ்வாறு கூறப்படுகிறது. அதாவது சைதன்யமானது பிருதிவியாதியினுடையவோ அல்லது பரிணாமத்தை அடையக்கூடிய மற்றஎல்லா பதார்த்தங்களுடையவோ அல்லது அந்தக்கரணத்தினுடைய தர்மமோ கிடையாது. ஆகையால் சைதன்ய ரூபத்தால் பிரஹ்மம் என்று பிரஹ்மத்தின் ரூபமானது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே “विज्ञानमानन्दंं ब्रह्म” (விக்ஞானமானந்த பிரஹ்ம) “विज्ञानघन एव” (விக்ஞானகன ஏவ) “प्रज्ञानं ब्रह्म” (பிரக்ஞானம் பிரஹ்ம்ம) என்று பிரஹ்மத்தினுடைய ரூபம் சுருதிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
(சித்தாந்தி) நீர் கூறுவது உண்மையே, இருப்பினும் ப்ரஹ்மமானது அந்தக்கரண தேஹ இந்திரியரூப, உபாதிகளின் வாயிலாகவே விக்ஞானம் முதலிய சப்தங்களால் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. அதனுடைய அனுகரணத்தினால்தான் (அதனுடைய பிரேரணையினால்தான்) தேஹம் முதலியவைகள் விருத்தியோ, குறைதலோ, வெட்டப்படுதலோ, நாசமடைதலோ அடைகின்றன. உண்மையில் ப்ரஹ்மம் அவ்வாறு ஆவதில்லை. சுயமாகவே அது “अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम्” (அவிஞாதம் விஜானதாம் விக்ஞானமவிஜானதாம்) அறிந்தவர்களுக்கு அது அறியப்படாததாயும், அறியாதவர்களுக்கு அறிந்ததாயும் ஆகிறது.
‘यदस्य ब्रह्मणो रूपम्’ इति पूर्वेण सम्बन्धः । न केवलमध्यात्मोपाधिपरिच्छिन्नस्यास्य ब्रह्मणो रूपं त्वमल्पं वेत्थ ; यदप्यधिदैवतोपाधिपरिच्छिन्नस्यास्य ब्रह्मणो रूपं देवेषु वेत्थ त्वम् , तदपि नूनं दभ्रमेव वेत्थ इति मन्येऽहम् । यदध्यात्मं यदपि देवेषु तदपि चोपाधिपरिच्छिन्नत्वाद्दभ्रत्वान्न निवर्तते । यत्तु विध्वस्तसर्वोपाधिविशेषं शान्तमनन्तमेकमद्वैतं भूमाख्यं नित्यं ब्रह्म, न तत्सुवेद्यमित्यभिप्रायः ।
यदस्य (யதஸ்ய) என்ற பதக் கூட்டமானது முன்பு கூறப்பட்ட பிரஹ்ம ரூபத்துடன் சம்பந்தப்பட்டது. நீ கேவலம் அத்யாத்மஉபாதியினால் பரிச்சின்னமடைந்த பிரஹ்மத்தினுடைய அல்ப (சிறிய) ரூபத்தை மட்டும் அறிந்தவனாய் இல்லை. ஆனால் அது (அந்தப்பிரஹ்மரூபமானது) அதிதேவதா உபாதியினால் பரிச்சின்னமடைந்த பிரஹ்மத்தினுடைய ரூபத்தை தேவதைகளிடத்தில் காண்கிறாய். அது நிச்சயமாக அதையும் அல்பமாக காண்கிறாய் என்று நான் கருதுகிறேன். எது அத்யாத்ம ரூபமோ, எது தேவதைகளில் அறிகிறோமோ அதுவும் உபாதிகளினால் பரிச்சின்னமானதால் அல்பத்தைக் காட்டிலும் வேறல்ல. எதற்கு எல்லா உபாதி விசேஷங்களும் அற்ற, சாந்தம், அனந்தம், ஏகம், அத்வைதம், பூமா எனப்படும் நித்யமான பிரஹ்மம் நன்றாக அறியக்கூடியது அல்ல என்பது அபிப்ராயமாகும்.
यत एवम् अथ नु तस्मात् मन्ये अद्यापि मीमांस्यं विचार्यमेव ते तव ब्रह्म । एवमाचार्योक्तः शिष्यः एकान्ते उपविष्टः समाहितः सन् , यथोक्तमाचार्येण आगममर्थतो विचार्य, तर्कतश्च निर्धार्य, स्वानुभवं कृत्वा, आचार्यसकाशमुपगम्य, उवाच — मन्येऽहमथेदानीं विदितं ब्रह्मेति ॥
எதனால் இவ்வாறோ அதனால் இப்பொழுது உனக்கு விசாரணை செய்வது அவசியம் என்று கருதுகிறேன், இவ்வாறு ஆச்சாரியரால் உபதேசிக்கப்பட்ட சிஷ்யன் ஏகாந்தமான இடத்தில் உட்கார்ந்து மனதை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு ஆசாரியர் கூறிய உபதேசப்படி ஆகம அர்த்தத்தை விசாரித்து, தர்க்கத்தின் வாயிலாய் நிச்சயம் செய்து, அதை அநுபவமாய் செய்து கொண்டு ஆசாரியர் சமீபத்தை அடைந்து இப்பொழுது நான் பிரஹ்மத்தை அறிந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன் (என்று கூறினார்.)
नाह मन्ये सु वेदेति नो न वेदेति वेद च ।
यो नस्तद्वेद तद्वेद नो न वेदेति वेद च ॥ २ ॥
कथमिति, शृणु —
(அவதாரிகை) எவ்வாறு என்று கேள்.
न अह मन्ये सु वेदेति, नैवाहं मन्ये सु वेद ब्रह्मेति । नैव तर्हि विदितं त्वया ब्रह्मेत्युक्ते आह — नो न वेदेति वेद च । वेद चेति च—शब्दात् न वेद च ।
நான் நன்றாக அறிகிறேன் என்று நான் நினைக்கவில்லை. நான் பிரஹ்மத்தை நன்றாக அறிந்தேன் என்று நான் நினைக்கவே இல்லை. ஆனால் உன்னால் பிரஹ்மம் நன்றாக அறிப்படவில்லை என்று கூறும்பொழுது குருவானவர் இவ்வாறு கூறுகிறார்- நான் அறியவில்லை என்பது இல்லையாயினும் அறிகிறேன். , “वेद चेति” (வேத சேதி) என்றபதசமூகத்தில் , “च”(ச்ச) சப்தத்தால் நான் அறியவும் இல்லை என்று பொருள் கொள்ள வேண்டும்.
ननु विप्रतिषिद्धं नाह मन्ये सु वेदेति, नो न वेदेति, वेद च इति । यदि न मन्यसे सु वेदेति, कथं मन्यसे वेद चेति । अथ मन्यसे वेदैवेति, कथं न मन्यसे सुवेदेति । एकं वस्तु येन ज्ञायते, तेनैव तदेव वस्तु न सु विज्ञायत इति विप्रतिषिद्धं संशयविपर्ययौ वर्जयित्वा । न च ब्रह्म संशयितत्वेन ज्ञेयं विपरीतत्वेन वेति नियन्तुं शक्यम् । संशयविपर्ययौ हि सर्वत्रानर्थकरत्वेनैव प्रसिद्धौ ।
குருவானவர் கூறுகிறார் நான் பிரஹ்மத்தை நன்றாக அறிகிறேன் என்று நினைக்கவில்லை அவ்வாறேநான் அறியவில்லை என்றும் நான் நினைக்கவில்லை என்பதால் நீ அறிந்திருக்கிறாய் என்பதாகும். இவ்வாறு கூறுவது பரஸ்பரம் விருத்தமாகிறது. எப்பொழுது நன்றாக அறியவில்லை என்று நினைக்கிறாயோ அப்பொழுது எவ்வாறு அறிகிறேன் என்பதாகும்? நான் அறிகிறேன் என்று கருதினால் அது எவ்வாறு நன்றாக அறிந்ததாகாது என்று எண்ணுகிறாய்? ஒருவஸ்துவானது ஒருவனால் அறியப்படின் அவனே அதேவஸ்துவை நான் நன்றாக அறியவில்லை என்று கூறுவது சந்தேக விபரீதம் இல்லை என்பது பொருத்தமற்றதாகும். பிரஹ்மம் சந்தேஹத்துடன் அறிய வேண்டியது என்றோ விபரீதமாக அறிகிறேன் என்றோ நியமம் கிடையாது. சந்தேஹம் விபரீதம் இரண்டும் எங்கும் அநர்த்தத்தையே செய்யும் என்பது பிரசித்தமாகும்.
एवमाचार्येण विचाल्यमानोऽपि शिष्यो न विचचाल,
‘अन्यदेव तद्विदितादथो अविदितादधि’ (के. उ. १ । ४) इत्याचार्योक्तागमसम्प्रदायबलात् उपपत्त्यनुभवबलाच्च ; जगर्ज च ब्रह्मविद्यायां दृढनिश्चयतां दर्शयन्नात्मनः । कथमित्युच्यते — यः यः कश्चित् नः अस्माकं सब्रह्मचारिणां मध्ये तत् मदुक्तं वचनं तत्त्वतो वेद, सः तत् ब्रह्म वेद ।
இவ்வாறு ஆச்சாரியரால் அசைக்கப்படினும் ‘अन्यदेव तद्विदितादथो अविदितादधि’ (அன்யதேவ தத்விதாததோ அவிதிதாததி= அது அறியப்பட்டதைக் காட்டிலும் வேறு, அறியாததைக் காட்டிலும் வேறு) என்று ஆச்சாரியரால் கூறப்பட்ட ஆகமசம்பிரதாய பலத்தாலும், யுக்தி பலத்தாலும், அனுபவ பலத்தாலும் அந்த சிஷ்யன் தன் நிலையிலிருந்து நழுவவில்லை. தன்னுடைய பிரஹ்மவித்தையில் உள்ள திட நிச்சயத்தை கர்ஜனை செய்தான். எவ்வாறு எனில் கூறுகிறேன்- “यो” எந்த ஒருவன் “नः” (ந:) நம் பிரஹ்மச்சாரிகளின் மத்தியில் “तत्” (தத்) அந்த என்னால் கூறப்பட்ட வசனத்தை உள்ளபடி “वेद” (வேத) அறிந்தவன். “तत्” (தத்) அந்த பிரஹ்மத்தை “वेद” (வேத) அறிந்தவன் ஆகிறான்
किं पुनस्तद्वचनमित्यत आह — नो न वेदेति वेद च इति । यदेव
‘अन्यदेव तद्विदितादथो अविदितादधि’ (के. उ. १ । ४) इत्युक्तम् , तदेव वस्तु अनुमानानुभवाभ्यां संयोज्य निश्चितं वाक्यान्तरेण नो न वेदेति वेद च इत्यवोचत् आचार्यबुद्धिसंवादार्थं मन्दबुद्धिग्रहणव्यपोहार्थं च । तथा च गर्जितमुपपन्नं भवति ‘यो नस्तद्वेद तद्वेद’ इति ॥
மேலும் அந்த வசனம் என்னவென்றால் கூறுகிறார்- நான் அறியவில்லை என்பது இல்லை, அறிகிறேன் என்றுமில்லை ஆச்சாரியருடைய புத்தியை (கருத்தை) நன்றாக தெளிவுபடுத்தும் பொருட்டும், மந்தபுத்தி உள்ளவர்களும் புரிந்துகொள்ளும் பொருட்டும் அதையே “अन्यदेव तद्विदितादथो अविदितादधि” (அன்யதேவ தத்விதிதாததோ அவிதிதாததி- அது அறிந்ததைக் காட்டிலும் வேறு, அறியாததைக் காட்டிலும் மேலே இருக்கிறது ) என்று கூறப்பட்டது. அந்தவஸ்து அனுமான, அனுபவங்களுடன் நிச்சயம் செய்யப்பட்டதை வேறு வாக்கியங்களால் “நான் அறியவில்லை என்பது இல்லை, ஆயினும் அறிகிறேன்” என்று கூறப்பட்டது. அவ்வாறே “यो नस्तद्वेद तद्वेद” (யோ நஸ்தத்வேத தத்வேத) எவன் இந்த பிரஹ்மத்தை உள்ளபடி அறிகிறானோ அவன் நான் அறிகிறேன் என்று கர்ஜிப்பது பொருத்தமாகிறது.
यस्यामतं तस्य मतं मतं यस्य न वेद सः ।
अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम् ॥ ३ ॥
शिष्याचार्यसंवादात्प्रतिनिवृत्य स्वेन रूपेण श्रुतिः समस्तसंवादनिर्वृत्तमर्थमेव बोधयति — यस्यामतमित्यादिना ।
(அ-கை) சிஷ்யன் ஆசார்யர் இருவரும் ஒத்துப்பேசும் முறையினின்றும் விலகி சுருதியானது தன் சொந்த ரூபத்தினால் (தனது அபிப்ராயமாக) இதுவரை கூறிய எல்லா வியவஹாரத்தாலும் ஏற்பட்ட பொருளையே “யஸ்யாமதம்” என்பது முதலியவற்றால் கூறுகிறது.
यस्य ब्रह्मविदः अमतम् अविज्ञातम् अविदितं ब्रह्मेति मतम् अभिप्रायः निश्चयः, तस्य मतं ज्ञातं सम्यग्ब्रह्मेत्यभिप्रायः । यस्य पुनः मतं ज्ञातं विदितं मया ब्रह्मेति निश्चयः, न वेदैव सः न ब्रह्म विजानाति सः ।
எந்த பிரஹ்ம ஞானியானவன் பிரஹ்மத்தை அறியவில்லை என்று நினைக்கிறானோ அவன் பிரஹ்மத்தை நன்றாக அறிந்திருக்கிறான் என்பது அபிப்பிராயம். மறுபடியும் எவன் ஒருவன் ப்ரஹ்மத்தை அறிகிறேன் என்று நினைக்கிறானோ அவன் பிரஹ்மத்தை அறியவில்லை என்பது அபிப்பிராயம்.
विद्वदविदुषोर्यर्थोक्तौ पक्षाववधारयति — अविज्ञातं विजानतामिति, अविज्ञातम् अमतम् अविदितमेव ब्रह्म विजानतां सम्यग्विदितवतामित्येतत् । विज्ञातं विदितं ब्रह्म अविजानताम् असम्यग्दर्शिनाम् , इन्द्रियमनोबुद्धिष्वेवात्मदर्शिनामित्यर्थः ; न त्वत्यन्तमेवाव्युत्पन्नबुद्धीनाम् । न हि तेषां विज्ञातमस्माभिर्ब्रह्मेति मतिर्भवति । इन्द्रियमनोबुद्ध्युपाधिष्वात्मदर्शिनां तु ब्रह्मोपाधिविवेकानुपलम्भात् , बुद्ध्याद्युपाधेश्च विज्ञातत्वात् विदितं ब्रह्मेत्युपपद्यते भ्रान्तिरित्यतः असम्यग्दर्शनं पूर्वपक्षत्वेनोपन्यस्यते — विज्ञातमविजानतामिति । अथवा हेत्वर्थ उत्तरार्धोऽविज्ञातमित्यादिः ॥
வித்வான்களுடையவும், அவித்வான் களுடையவுமான பக்ஷங்களை விவரிக்கிறார். “अविज्ञातं विजानतामिति” (அவிக்ஞாதம் விஜானதாம் என்று) பிரஹ்மத்தை நன்றாக அறிகிறேன் என்பவனுக்கு பிரஹ்மம் அறியப்படவில்லை என்பதாகும்.இந்திரியம், மனம், புத்தி இவைகளில் ஆத்ம பாவனை செய்யும் அக்ஞானிகளாகிய பிரஹ்மத்தை அறியாதவர்களாகிய அசம்யக்தர்சிகளால் அறியப்படவேண்டியதாய் இருக்கிறது. அதாவது மூடபுத்தி உள்ளவர்களால் அறியமுடியாது. ஏன்எனில் எங்களால் பிரஹ்மம் அறியப்படுகிறது என்று கருதுவதால் அவர்களால் அறியப்படாததாகிறது. இந்திரியமனோ புத்தி ஆகிய உபாதிகளில் ஆத்மபாவமுள்ளவர்களுக்கு பிரஹ்மம், உபாதி என்றவிவேகஞானம் இல்லாததால் புத்தி முதலியவைகள் அறியப்பட்டவைகளாக இருப்பதால் அதையே பிரஹ்மம் என்று நினைத்து நான் பிரஹ்மத்தை அறிகிறேன் என்றபிராந்தி இருப்பதால் அசம்யக்தர்சியைப் பற்றி பூர்வபக்ஷரூபமாக “विज्ञातमविजानतामिति” (விக்ஞாதமா விஞானதாமிதி) உபன்யஸ்யிக்கப்பட்டது. அல்லது உத்தரார்த்தத்தில் அவிக்ஞாதமிதி என்று ஹேதுவர்த்தத்தில் உள்ளது.
प्रतिबोधविदितं मतममृतत्वं हि विन्दते ।
आत्मना विन्दते वीर्यं विद्यया विन्दतेऽमृतम् ॥ ४ ॥
“अविज्ञातं विजानताम्” (அவிக்ஞாதம் விஜானதாம்) அறியவில்லை என்றால் அறிந்ததாகிறது என்று நிச்சயமாகிறது. பிரஹ்மமானது முற்றிலும் அறியப்படவில்லை எனில் லௌகிகர்களுக்கும், பிரஹ்ம ஞானம் அடைந்தவர்களும் அறியவில்லை என்பதில் இருவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போகும். மேலும் “अविज्ञातं विजानताम्” (அவிக்ஞாதம் விஜானதாம்) என்பது பரஸ்பர விருத்தமாகும். ஆகையால் எவ்வாறு பிரஹ்மமானது நன்றாக அறியப்பட்டதாகும் என்பதற்காக கூறுகிறார்.
“अविज्ञातं विजानताम्” என்று கூறப்பட்டதின் பொருள் உணரப்பட்டது. பிரம்மம் அவ்வாறு அறியப்படாததானால் உலகியலில் ஈடுபட்டவர்களுக்கும் பிரம்ம ஞானிகளுக்கும் என்ன வித்தியாசம். அறிந்தவர்களுக்கு அறியப்படவில்லை என்பதே பொருத்தமில்லாததாக உள்ளது. அவ்வாறிருக்க அப்பிரம்மம் எவ்வாறு அறியப்படாததாக இருக்குமேயானால் “நான் பிரம்மமாயிருக்கிறேன்” என்றவியவகாரம் எவ்வாறு ஏற்படும்?எனில் அறியப்பட்டது வியவஹாரத்திற்கு அங்கமாகும். அதாவது இப்பொருள் என்னால் அறியப்பட்டது என்னுமிடத்தில் (அவ்வியவஹாரத்தில்) அறியப்பட்டதாக குறிப்பிடப்பட்ட பொருள் அவ்வியவஹாரத்திற்கு அங்கமாகும். ஆனால் அப்பொருளை எது பிரகாசப்படுத்துகிறதோ அது அவ்வியவஹாரத்திற்கு அங்கமாவதில்லை என்பதை விளக்குவது இம்மந்திரம்.
ஆன்ம சைதன்யமான பிரம்மம் எவ்வாறு நன்கு அறியப்பட்டதாக ஆகிறது என்பது இம்மந்திரத்தால் விளக்கப்படுகிறது. (प्रतिबोधविदितं मतम्) ஜடங்களும், புத்தியின் விகாரங்களுமான நீலம், மஞ்சள், போன்றஉருவங்கள் (आकारः ஆகாரங்கள்) சைதன்ய வ்யாப்த்மான பொழுது அவைகள் அஜடங்களாக (ஜடத்தன்மையற்றவைகளாக) காக்ஷியளிக்கின்றன. கருப்புக்காகம் பறக்கிறது, பச்சைக்கிளி பேசுகிறது என்கிறோம். இவைகளில் சைதன்யம் வ்யாப்தமாய் இருப்பதால் இந்நிறங்கள் ஜடங்களாயிருப்பினும் அஜடங்கள் போல் காக்ஷியளிக்கின்றன. அந்த ஜடங்களை எது அஜடமாக விளங்கச் செய்கிறதோ அந்த சைதன்யமே ஆன்மா, அவனே நான் என்று எவன் அறிகிறானோ அவனே பிரம்மத்தை அறிந்தவன் எனப்படுவான்,புத்திக்கு விஷயமாகும் வஸ்துவின் தன்மைகள், அதை வேதாந்த பாஷையில் ப்ரத்யயங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. எனவே எல்லாப் பிரத்யயங்களும் எவனுக்கு விஷயமாகின்றனவோ அவன் ஆன்மா. அவனே புத்திக்கு விஷயமான எல்லாப்ரயத்யயங்களையும் காணும் சாக்ஷியான சித்சக்தி எனப்படும் ஞான சக்தியாவான். இத்தகைய புத்திப்ரத்யயங்களாலேயே, அவைகளினின்றும் தொடர்ந்து வேறுபடாதவனாக குறிக்கப்படுகிறான். இதைத் தவிர ஆன்மாவை அறிவதற்கு வேறு வழியில்லை. இவ்வாறு புத்தி ப்ரத்யயரூபமாய், ப்ரத்யகாத்மாவாய் எப்பொழுது பிரம்மம் அறியப்படுகிறதோ, அப்பொழுது அதை நன்கு அறிந்தவனாகிறான்.
प्रतिबोधविदितं बोधं बोधं प्रति विदितम् । बोधशब्देन बौद्धाः प्रत्यया उच्यन्ते । सर्वे प्रत्यया विषयीभवन्ति यस्य, स आत्मा सर्वबोधान्प्रतिबुध्यते सर्वप्रत्ययदर्शी चिच्छक्तिस्वरूपमात्रः प्रत्ययैरेव प्रत्ययेष्वविशिष्टतया लक्ष्यते ; नान्यद्द्वारमन्तरात्मनो विज्ञानाय ।
प्रतिबोधविदितम् (பிரதிபோதவிதிதம்) என்றால் ஒவ்வொரு போதத்தையும் அறிவது. போதம் என்றசப்தமானது புத்தியில் தோன்றும் பிரத்யயங்கள் என்று கூறப்படுகின்றது. எவனுக்கு எல்லா பிரத்யயங்களும் விஷயமாகின்றதோ அந்த ஆத்மா எல்லா பிரத்யயங்களையும் நன்றாக அறிகிறான்.அவனே எல்லா பிரத்தியயங்களுக்கும் சாக்ஷீ மேலும் சித்சக்தி ஸ்வரூபமாத்திரமாய் இருப்பதால் அந்த பிரத்தியயங்களின் வாயிலாக சாமானியரூபமாக பிரத்தியயங்களில் லக்ஷிக்கப்படுகிறது. அந்த அந்தராத்மாவின் ஞானத்தை அடைவதற்கு அதைத் தவிர வேறு வழியில்லை.
अतः प्रत्ययप्रत्यगात्मतया विदितं ब्रह्म यदा, तदा तत् मतं तत्सम्यग्दर्शनमित्यर्थः सर्वप्रत्ययदर्शित्वे चोपजननापायवर्जितदृक्स्वरूपता नित्यत्वं विशुद्धस्वरूपत्वमात्मत्वं निर्विशेषतैकत्वं च सर्वभूतेषु सिद्धं भवेत् , लक्षणभेदाभावाद्व्योन्न इव घटगिरिगुहादिषु । विदिताविदिताभ्यामन्यद्ब्रह्मेत्यागमवाक्यार्थ एवं परिशुद्ध एवोपसंहृतो भवति ।
‘दृष्टेद्रष्टा श्रुतेः श्रोता मतेर्मन्ता विज्ञातेर्विज्ञाता’ (बृ. उ. ३ । ४ । २) इति हि श्रुत्यन्तरम् ।
ஆகையால் எப்பொழுது பிரஹ்மத்தை பிரத்யயங்களின் பிரத்யக் ஆத்மாவாக அதாவது அந்தர்சாக்ஷியாக அறிகிறானோ அப்பொழுது அதை அறிகிறான். அதுவே சம்யக்தர்சனம் எனப்படுகிறது. எல்லாப் பிரத்தியயங்களுக்கும் சாக்ஷியாய் இருப்பதால் அதற்கு விருத்தியோ க்ஷயமோ அற்றதாய் திருக்ஸ்வரூபமாயும் நித்யத்துவம், விசுத்தஸ்வரூபத்துவமாயும், ஆத்மத்துவமாயும், நிர்விசேஷத்துவமாயும் அவ்வாறேஎல்லா பிராணிகளிடத்தும் ஏகத்துவமானது அனுஸ்யூதமாய் கடம், மலை, குகை, முதலியவைகளில் உள்ள ஆகாயம் போல் லக்ஷணபேதம் இல்லாததினால் சித்திக்கிறது. பிரஹ்மமானது அறிந்ததைக் காட்டிலும், அறியாததைக் காட்டிலும் வேறு என்றஆகமவாக்கியார்த்தத்தை நன்றாக விசாரணை செய்து முடிக்கப்படுகிறது. வேறு சுருதியிலும் “दृष्टेर्द्रष्टा श्रुतेः श्रोता मतेर्मन्ता विज्ञातेर्विज्ञाता” (த்ருஷ்டேர்த்ருஷ்ட்டா ச்ருதே:ச்ரோதா மதேர்மன்தா விக்ஞாதேர்விக்ஞாதா) என்று கூறப்பட்டுள்ளது.
यदा पुनर्बोधक्रियाकर्तेति बोधक्रियालक्षणेन तत्कर्तारं विजानातीति बोधलक्षणेन विदितं प्रतिबोधविदितमिति व्याख्यायते, यथा यो वृक्षशाखाश्चालयति स वायुरिति तद्वत् ; तदा बोधक्रियाशक्तिमानात्मा द्रव्यम् , न बोधस्वरूप एव । बोधस्तु जायते विनश्यति च । यदा बोधो जायते, तदा बोधक्रियया सविशेषः । यदा बोधो नश्यति, तदा नष्टबोधो द्रव्यमात्रं निर्विशेषः । तत्रैवं सति विक्रियात्मकः सावयवोऽनित्योऽशुद्ध इत्यादयो दोषा न परिहर्तुं शक्यन्ते ।
எவ்வாறு எது மரத்தின் கிளைகளை அசைக்கின்றதோ அது காற்றாகும் என்பது போல் எப்பொழுது மீண்டும் போதக்கிரியாவின் (பிரத்தியயகிரியாவின்) கர்த்தா என்று போதக்கிரியா லக்ஷணத்துடன் அந்த கர்த்தாவை அறிகிறான் என்பதால் போதலக்ஷணத்துடன் அறிவது பிரதிபோதவிதிதம் என்று வியாக்யானம் செய்யப்பட்டது. அப்பொழுது ஆத்மா போதக்கிரியா சக்தி ரூப திரவ்யம் (வஸ்து)அல்ல.சாக்ஷாத் போதஸ்வரூபம் சித்திக்காது. போதமானது தோன்றும் அழியும், எப்பொழுது போதம் உண்டாகிறதோ அப்பொழுது போதக்கிரியையானது சவிசேஷமாகும்.எப்பொழுது போதம் நசிக்கிறதோ அப்பொழுது போதமற்று திரவ்யமாத்திரம் நிர்விசேஷமாய் இருக்கிறது. இவ்வாறு இருக்கும் பொழுது போதமானது விகாரி, சாவயவ, அநித்யம், அசுத்தம் ஆகும். இந்த தோஷம் நீக்க முடியாததாகும்.
यदपि काणादानाम् आत्ममनःसंयोगजो बोध आत्मनि समवैति ; अत आत्मनि बोद्धृत्वम् , न तु विक्रियात्मक आत्मा ; द्रव्यमात्रस्तु भवति घट इव रागसमवायी । अस्मिन्पक्षेऽप्यचेतनं द्रव्यमात्रं ब्रह्मेति
‘विज्ञानमानन्दं ब्रह्म’ (बृ. उ. ३ । ९ । २७) ‘प्रज्ञानं ब्रह्म’ इत्याद्याः श्रुतयो बाधिताः स्युः । आत्मनो निरवयवत्वेन प्रदेशाभावात् नित्यसंयुक्तत्वाच्च मनसः स्मृत्युत्पत्तिनियमानुपपत्तिरपरिहार्या स्यात् । संसर्गधर्मित्वं चात्मनः श्रुतिस्मृतिन्यायविरुद्धं कल्पितं स्यात् ।
‘असङ्गो न हि सज्जते’ (बृ. उ. ३ । ९ । २६),
(बृ. उ. ४ । ५ । १५) ‘असक्तं सर्वभृत्’ (भ. गी. १३ । १४) इति हि श्रुतिस्मृती । न्यायश्च — गुणवद्गुणवता संसृज्यते, नातुल्यजातीयम् । अतः निर्गुणं निर्विशेषं सर्वविलक्षणं केनचिदप्यतुल्यजातीयेन संसृज्यत इत्येतत् न्यायविरुद्धं भवेत् । तस्मात् नित्यालुप्तज्ञानस्वरूपज्योतिरात्मा ब्रह्मेत्ययमर्थः सर्वबोधबोद्धृत्वे आत्मनः सिध्यति, नान्यथा । तस्मात् ‘प्रतिबोधविदितं मतम्’ इति यथाव्याख्यात एवार्थोऽस्माभिः ।
காணாதர் (வைசேஷிக) மதத்தவர்கள் ஆத்மா மற்றும் மனதின் சம்யோகத்தால் உண்டான போதமானது ஆத்மாவிடத்தில் சமவாய சம்பந்தமாய் உள்ளது. ஆகையால்தான் ஆத்மாவிடத்தில் போத்த்ருத்துவம். ஆத்மா விகாரம் உடையது அல்ல. அது (வெண்மை கருமை முதலிய) நிறங்களின் சமவாய கடத்திற்கு சமமாக திரவ்யமாத்திரமாகவே இருக்கிறது. இந்த பக்ஷத்திலும் பிரஹ்மமானது அசேதனமாயும் திரவ்யமாத்திரமாய் இருப்பதால் “विज्ञानमानन्तं ब्रह्म” (விக்ஞானமானந்தம் ப்ரஹ்ம) “प्रज्ञानं ब्रह्म” (ப்ரக்ஞானம் பிரஹ்மம்) முதலிய சுருதி வாக்கியங்கள் நிராகரிக்கப்பட்டதாகும். ஆத்மா திரவ்யமாய் இருப்பதால் பிரதேசவிஷேசம் இல்லாததினால் எப்பொழுதும் சேர்க்கையுடன் இருக்கும் மனதிற்கு நினைவின் உற்பத்தி நியமமானது உற்பத்தியின்மையினை தடுக்க முடியாததாகும். ஆத்மாவிற்கு சம்சர்க தர்மத்துவம் உள்ளது என்பது சுருதி, ஸ்மிருதி நியாயத்திற்கு விருத்தமாக கல்பிக்கப்பட்டதாகும். ‘असङ्गो न हि सज्जति’ (அசங்கோ ந ஹி சஜ்ஜதே) ‘असक्तं सर्वभृत्’ (அசக்தம் சர்வப்ருத்) என்றல்லவா சுருதி ஸ்மிருதி வசனங்களாகும்.நியாயத்தில் எந்த வஸ்து சகுணமாய் (சஜாதீயமாய்) இருக்கிறதோ அதற்கு குணவானிடத்தில் சம்சர்க்கம் உண்டாகிறது. விஜாதீயவஸ்துவிடத்தில் சம்சர்கம் உண்டாகாது. ஆகையால் நிர்குணம், நிர்விசேஷம், சர்வவிலக்ஷணம் என்று வேறு எந்த ஒரு விஜாதீயத்திடனும் சம்யோகம் உண்டாகாது என்பதின் நியாயத்திற்கு விருத்தம் உண்டாகும். ஆகையால் நித்ய, அலுப்த்த, (நாசமற்ற) ஞானஸ்வரூப ஜ்யோதி ஆத்மா பிரஹ்மம் என்ற இந்த அர்த்தம் சம்பூர்ண போதங்களின் போத்திருத்துவமானது ஆத்மாவிற்கு சித்திக்கிறது. வேறு விதமாக அல்ல. ஆகையால் ‘प्रतिबोधविदितम् मतम्’ என்று எவ்வாறு நம்மால் வியாக்யானம் செய்யப்பட்டதோ அதுவே அர்த்தமாகும்.
மேலும் சுவசம்வேத்தியத்தினால் प्रतिबोधविदितम् (பிரதிபோதவிதிதம்) என்றவாக்கியத்தின் அர்த்தம் விளக்கப்படுகிறது. சோபாதிகம் என்றஇடத்தில் ஆத்மாவிற்கு புத்தி உபாதி ஸ்வரூபமாய் பேதத்தைக் கல்பித்து ஆத்மாவினால் ஆத்மாவை அறிகிறது என்று வியவகாரம் ஏற்படுகிறது. “आत्मन्येवात्मानं पश्यति” (ஆத்மன்யேவா ஆத்மானம்பச்யதி) “स्वयमेवात्मनात्मानं वेत्थ त्वं पुरुषोत्तम” (ஸ்வயமேவாத்மனா ஆத்மானம் வேத்த த்வம் புருஷோத்தம) என்று சுருதி, ஸ்மிருதி வாக்கியங்களாகும். நிருபாதிக ஆத்மா ஏகமாய் இருப்பதால் சுவசம்வேத்தியமோ பரசம்வேத்தியமோ சம்பவியாது. எவ்வாறு பிரகாசத்திற்கு வேறு பிரகாசம் தேவை இல்லையோ அவ்வாறு சம்வேதனஸ்வரூபமாய் இருப்பதால் வேறு சம்வேதனத்தை அபேக்ஷிக்காது.
பெளத்தர்களுடைய பக்ஷத்தில் விக்ஞானத்திற்கு ஸ்வசம்வேத்யத்தை ஏற்றுக்கொள்வதால் க்ஷணிகத்தில் நஷ்டமாகும் தன்மையும் ஆத்மாஅற்ற தன்மையும் ஏற்படுகிறது. “न हि विज्ञातुर्विज्ञातेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वात्” “नित्यं विभुं सर्वगतम्द्य्भद्य्भ” “स वा एष महानज आत्माजरोऽमरोऽमृतोऽभयः” (“ந ஹி விக்ஞாத்துர்விக்ஞாதோ விபரிலோபோ வித்யதே அவிநாசித்வாத்”, “நித்யம், விபும், சர்வகதம்”, “சவாஏஷ மஹானஜ ஆத்மாஜரோ அமரோ அம்ருதோ அபய”) “என்பது முதலிய சுருதிகளின் தாத்பர்யம் பாதிக்கப்படும்.
यत्पुनः प्रतिबोधशब्देन निर्निमित्तो बोधः प्रतिबोधः यथा सुप्तस्य इत्यर्थं परिकल्पयन्ति, सकृद्विज्ञानं प्रतिबोध इत्यपरे ; निर्निमित्तः सनिमित्तः सकृद्वासकृद्वा प्रतिबोध एव हि सः । अमृतत्वम् अमरणभावं स्वात्मन्यवस्थानं मोक्षं हि यस्मात् विन्दते लभते यथोक्तात्प्रतिबोधात्प्रतिबोधविदितात्मकात् , तस्मात्प्रतिबोधविदितमेव मतमित्यभिप्रायः । बोधस्य हि प्रत्यगात्मविषयत्वं च मतममृतत्वे हेतुः । न ह्यात्मनोऽनात्मत्वममृतत्वं भवति । आत्मत्वादात्मनोऽमृतत्वं निर्निमित्तमेव । एवं मर्त्यत्वमात्मनो यदविद्यया अनात्मत्वप्रतिपत्तिः ।
மேலும் சிலர் பிரதிபோத சப்தத்தினால் எவ்வாறு சுஷுப்தபுருஷனுக்கு நிமித்தமில்லாமல் போதம் ஏற்படுகிறதோ அதுவே பிரதிபோதம் என்று கல்பிக்கிறார்கள். அல்லது வேறு சிலர் ஒரு தடவை தோன்றும் போதத்தை பிரதிபோதம் என்கிறார்கள். ஆனால்நிமித்தத்துடனோ, நிமித்தமில்லாமலோ, ஒருமுறையோ, அல்லது பலமுறையோ போதம் ஏற்பட்டாலும் அதி பிரதிபோதமே ஆகும். எதனால் முன்பு கூறப்பட்ட பிரதிபோதத்தினால் ஆத்மாவை அறிந்ததால்(முமூக்ஷுவானவன்) அம்ருதத்துவம் அதாவது அமரணபாவம் தன்னிலேயே நிலைபெற்றுதலாகிய மோக்ஷத்தை அடைகின்றானோஅதனால் பிரதிபோதவிதிதம் அதாவது பிரஹ்மத்தின் பிரத்யேக போதத்தினால் அறிந்தவனாகின்றான் என்பது பொருள். ஆத்மாவிற்கு அநாத்ம தன்மையோ, அம்ருதத்துவமோ அதாவது மரணதர்மமற்றதன்மையோ கிடையாது.ஏன் எனில் தானாகவே இருப்பதால் அம்ருதத்துவமானது ஆத்மாவின் ஸ்வரூபமாகவே இருப்பதால் அதற்கு நிமித்தமானது தேவையற்றதாகும். ஆகையால் ஆத்மாவிற்கு மரணத்துவம் என்பது அவித்தையினால் அனாத்மத்துவம் ஏற்பட்டதால் ஆகும்.
कथं पुनर्यथोक्तयात्मविद्ययामृतत्वं विन्दत इत्यत आह — आत्मना स्वेन रूपेण विन्दते लभते वीर्यं बलं सामर्थ्यम् । धनसहायमन्त्रौषधितपोयोगकृतं वीर्यं मृत्युं न शक्नोत्यभिभवितुम् , अनित्यवस्तुकृतत्वात् ; आत्मविद्याकृतं तु वीर्यमात्मनैव विन्दते, नान्येनेत्यतोऽनन्यसाधनत्वादात्मविद्यावीर्यस्य तदेव वीर्यं मृत्युं शक्नोत्यभिभवितुम् । यत एवमात्मविद्याकृतं वीर्यमात्मनैव विन्दते, अतः विद्यया आत्मविषयया विन्दतेऽमृतम् अमृतत्वम् ।
‘नायमात्मा बलहीनेन लभ्यः’ (मु. उ. ३ । २ । ४)इत्याथर्वणे । अतः समर्थो हेतुः अमृतत्वं हि विन्दत इति ॥
மேலும்கூறப்பட்டவாறு ஆத்மவித்தையினால் எவ்வாறு அம்ருதத்தை அடைகிறான் என்பதைக் கூறுகிறார். தன்னுடைய ஸ்வரூபத்தினால் அமரத்துவத்தை அடைவதற்கான சாமர்த்தியத்தை பெறுகிறான். தனம், சஹாயம்,மந்திரம், ஔஷதம், தபஸ், யோகம், முதலியவைகளினால் உண்டான சாமர்த்தியம் அநித்தியமானதால் (மரணத்தை) மிருத்யுவை தோற்கடிக்க முடியாது. ஆத்மவித்தையினால் உண்டான சாமர்த்தியம் தன் ஸ்வரூப ஞானத்தினால் அடையப்படுகிறது. வேறு ஒன்றினாலும் அடைய முடியாததால் ஆத்மவித்யா சாமர்த்தியத்திற்கு வேறு சாதனமின்மையால் தன் சுவரூப ஞானமாகிய சாமர்த்தியத்தினால் ம்ருத்யுவை தோற்கடிக்க முடியும். ஆகையால் ஆத்ம வித்தையினால் ஏற்பட்ட சாமர்த்தியமானது தன்னுடைய ஸ்வரூப ஞானத்தினால் அடையப்படுகிறது. ஆகையால் ஆத்ம விஷயமான வித்தையினால் அமிருதத்துவம் அடையப்படுகிறது.
इह चेदवेदीदथ सत्यमस्ति न चेदिहावेदीन्महती विनष्टिः ।
भूतेषु भूतेषु विचित्य धीराः प्रेत्यास्माल्लोकादमृता भवन्ति ॥ ५ ॥
कष्टा खलु सुरनरतिर्यक्प्रेतादिषु संसारदुःखबहुलेषु प्राणिनिकायेषु जन्मजरामरणरोगादिसम्प्राप्तिरज्ञानात् । अतः
(அ-கை) ஸம்ஸார துக்கம் நிறைந்துள்ள பிராணி சரீரங்களில் அதாவது தேவர், மனுஷ்யர், விலங்கு, ப்ரேதம் முதலியவைகளாக பிறந்து, முதுமையடைந்து, ரோகம்,மரணம் போன்றகஷ்டமான துன்பங்களை அனுபவித்தல் அக்ஞானத்தால் அல்லவா! அதனால்.
इह एव चेत् मनुष्योऽधिकृतः समर्थः सन् यदि अवेदीत् आत्मानं यथोक्तलक्षणं विदितवान् यथोक्तेन प्रकारेण, अथ तदा अस्ति सत्यं मनुष्यजन्मन्यस्मिन्नविनाशोऽर्थवत्ता वा सद्भावो वा परमार्थता वा सत्यं विद्यते । न चेदिहावेदीदिति, न चेत् इह जीवंश्चेत् अधिकृतः अवेदीत् न विदितवान् , तदा महती दीर्घा अनन्ता विनष्टिः विनाशनं जन्मजरामरणादिप्रबन्धाविच्छेदलक्षणा संसारगतिः ।
इह एव चेत् (இஹ ஏவ ச்சேத்) எந்த ஒரு அதிகாரி புருஷன் ஆத்மாவை அறிவதற்கான சாமர்த்தியமுடையவனாகி எப்பொழுது கூறப்பட்ட லக்ஷணத்தோடு கூடிய ஆத்மாவை கூறப்பட்டவாறு அறிகிறானோ அப்பொழுது சத்தியவஸ்துவாகிறான். அதாவது இந்த மனித ஜன்மத்தில் அவிநாசிதன்மை, அர்த்தத்துடன் கூடிய தன்மை, சத்பாவம் அல்லது பரமார்த்தமாக இருக்கிறவனாகிறான். இங்கு அறியவில்லை எனில் இந்த உலகில் ஜீவித்துக் கொண்டிருக்கும் பொழுதே இந்த அதிகாரி ஆத்மக்ஞானம் அடையவில்லை எனில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். அதாவது ஜன்மஜராமரண முதலிய பந்தங்களின் பரம்பரையை நீக்கமுடியாத லக்ஷணத்துடன் கூடிய சம்சார கதிதான் ஏற்படும்.
तस्मादेवं गुणदोषौ विजानन्तो ब्राह्मणाः भूतेषु भूतेषु सर्वभूतेषु स्थावरेषु चरेषु च एकमात्मतत्त्वं ब्रह्म विचित्य विज्ञाय साक्षात्कृत्य धीराः धीमन्तः प्रेत्य व्यावृत्य ममाहम्भावलक्षणादविद्यारूपादस्माल्लोकात् उपरम्य सर्वात्मैकभावमद्वैतमापन्नाः सन्तः अमृता भवन्ति ब्रह्मैव भवन्तीत्यर्थः ।
‘स यो ह वै तत्परं ब्रह्म वेद ब्रह्मैव भवति’ (मु. उ. ३ । २ । ९) इति श्रुतेः ॥
ஆகையால் இவ்வாறு குணதோஷங்களை அறிந்த பிராஹ்மணர்கள் எல்லா பிராணிகளிடத்திலும் ஸ்தாவர ஜங்கமங்களிலும் ஒரே ஆத்மாவை விசாரித்து அறிந்து சாக்ஷாத்காரத்தை அடைந்த தீரர்கள் இதிலிருந்து விடுபட்டு மமகாரம்அஹங்காரபாவலக்ஷண அவித்தியா ரூபமான இந்த லோகத்தில் விரக்தி அடைந்து சர்வாத்மைக்க பாவமான அத்துவைதத்தை அடைந்தவர்களாகி அமிருதத்தை அடைகிறார்கள். அதாவது பிரஹ்மமாகவே ஆகிறார்கள் என்பது பொருள். “ஸ யோ ஹ வை தத்பரம் ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி” என்பது சுருதி வாக்யம்.
इति द्वितीयखण्डभाष्यम् ॥