द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

केनोपनिषत्पदभाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

கேநோபநிஷத்பதபாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

ब्रह्म ह देवेभ्यो विजिग्ये तस्य ह ब्रह्मणो विजये देवा अमहीयन्त त ऐक्षन्तास्माकमेवायं विजयोऽस्माकमेवायं महिमेति ॥ १ ॥
ब्रह्म ह देवेभ्यो विजिग्ये । ‘अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम्’ (के. उ. २ । ३) इत्यादिश्रवणात् यदस्ति तद्विज्ञातं प्रमाणैः यन्नास्ति तदविज्ञातं शशविषाणकल्पमत्यन्तमेवासद्दृष्टम् । तथेदं ब्रह्माविज्ञातत्वादसदेवेति मन्दबुद्धीनां व्यामोहो मा भूदिति तदर्थेयमाख्यायिका आरभ्यते ।
‘अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम्’ (அவிக்ஞாதம் விஜானதாம் விக்ஞாதமவிஜானதாம்- அறியவில்லை என்பவர்க்கு அறியப்பட்டதாயும், அறிந்தேன் என்பவருக்கு அறியப்படாததாய் இருக்கிறது.) என்பது முதலிய சுருதிவாக்கியங்களால்  எது இருக்கிறதோ அதை பிரமாணங்களினால் அறிகிறோம்.எது இல்லையோ அதி முயல்கொம்புபோல் அறியமுடியாதது. அது முற்றிலும் அசத்தாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு இந்த பிரஹ்மம் அறிய முடியாததால் அசத்தே என்று மந்த புத்தியுடையவர்கள்  வியாமோஹம் அடைந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த கதையானது ஆரம்பிக்கப்படுகிறது.
तदेव हि ब्रह्म सर्वप्रकारेण प्रशास्तृ देवानामपि परो देवः, ईश्वराणामपि परमेश्वरः, दुर्विज्ञेयः, देवानां जयहेतुः, असुराणां पराजयहेतुः ; तत्कथं नास्तीत्येतस्यार्थस्यानुकूलानि ह्युत्तराणि वचांसि दृश्यन्ते ।
அந்த பிரஹ்மமே எல்லா வகையிலும் கட்டளையினால் ப்ரேரணை செய்கிறது. தேவர்களுக்கெல்லாம் மேலான தேவன். ஈஸ்வரர்களுக்கெல்லாம் பரமேஸ்வரன். அறியமுடியாதவன், தேவர்களுக்கெல்லாம் வெற்றிக்குக் காரணமானவன். அசுரர்களுக்கு தோல்விக்குக் காரணமானவன். அது எவ்வாறு அசத்தாகும்? (அதாவது ப்ரஹ்மமானது இல்லாமல் போகும்) இந்த அர்த்தத்தை விளக்குவதற்காகவே அதற்கு அனுகூலமாக இனி வரப்போகின்றவாக்கியங்கள் காணப்படுகின்றன.
अथवा ब्रह्मविद्यायाः स्तुतये । कथम् ? ब्रह्मविज्ञानाद्धि अग्न्यादयो देवा देवानां श्रेष्ठत्वं जग्मुः । ततोऽप्यतितरामिन्द्र इति । अथवा दुर्विज्ञेयं ब्रह्मेत्येतत्प्रदर्श्यते — येनाग्न्यादयोऽतितेजसोऽपि क्लेशेनैव ब्रह्म विदितवन्तस्तथेन्द्रो देवानामीश्वरोऽपि सन्निति ।
அல்லது பிரஹ்ம வித்தையை ஸ்துதிப்பதின் பொருட்டாகும் எவ்வாறு? ப்ரஹ்ம ஞானத்தினால் அல்லவா அக்னி முதலிய தேவர்கள் தேவர்களைக் காட்டிலும் ச்ரேஷ்ட்டத் தன்மையை அடைந்தார்கள். அவர்களைக் காட்டிலும் இந்திரன் அதிக சிரேஷ்ட்டத்தன்மை உடையவனாகிறான். அல்லது பிரஹ்மத்தை அறிவது மிகவும் கடினம் என்பது காண்பிக்கப்படுகிறது. எதனால் அக்னி முதலியவர்கள் மிகுந்த தேஜஸ்விகளாய் இருந்தாலும் கஷ்டப்பட்டே பிரஹ்மத்தை அறிந்தார்கள். இந்திரன் தேவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனாய் இருந்தாலும் மிகவும் கஷ்டப்பட்டே அறிய முடிந்தது.
वक्ष्यमाणोपनिषद्विधिपरं वा सर्वम् । ब्रह्मविद्याव्यतिरेकेण प्राणिनां कर्तृत्वभोक्तृत्वाद्यभिमानो मिथ्येत्येतद्दर्शनार्थं वा आख्यायिका, यथा देवानां जयाद्यभिमानस्तद्वदिति ।
இனிகூறப் போகிறஉபநிஷத் விதிபரமா? அல்லது பிரஹ்ம வித்யா அற்றஜீவர்களுக்கு எந்த கர்த்திருத்வ, போக்திருத்வ முதலிய அபிமானம் உள்ளதோ அது தேவர்களிடத்தில் உள்ள வெற்றி முதலிய அபிமானம் போல்மித்தையே ஆகும் என்று காட்டவேண்டி இக்கதை சொல்லப்பட்டது. எவ்விதம் தேவர்களுக்கு   ஐயம் முதலியவற்றின்  அபிமானம் உள்ளதோ அதுபோலவேயாம்.
ब्रह्म यथोक्तलक्षणं परं ह किल देवेभ्योऽर्थाय विजिग्ये जयं लब्धवत् देवानामसुराणां च सङ्ग्रामेऽसुराञ्जित्वा जगदरातीनीश्वरसेतुर्भेत्तॄन् देवेभ्यो जयं तत्फलं च प्रायच्छज्जगतः स्थेम्ने । तस्य ह किल ब्रह्मणो विजये देवाः अग्न्यादयः अमहीयन्त महिमानं प्राप्तवन्तः ।
முன்பு கூறப்பட்ட லக்ஷணமுடைய பரப்பிரஹ்மம் அல்லவா தேவர்களின் நன்மையின் பொருட்டு ஜெயத்தை அடைவித்தார். தேவாசுரர்களின் யுத்தத்தில் ஜகத்தின் எதிரிகளையும் ஈஸ்வரரின் மரியாதையை கொடுப்பவர்களையும் ஜெயித்து தேவர்களுக்கு அந்த பலனாகிய ஜயத்தையும், ஜகத்தின் ஸ்திதியையும் நிலை நாட்டினார். இந்த பிரஹ்மத்தினுடைய வெற்றியால் அல்லவா அக்னி முதலிய தேவர்கள் மஹிமையை அடைந்தார்கள்.
तदा आत्मसंस्थस्य प्रत्यगात्मन ईश्वरस्य सर्वज्ञस्य सर्वक्रियाफलसंयोजयितुः प्राणिनां सर्वशक्तेः जगतः स्थितिं चिकीर्षोः अयं जयो महिमा चेत्यजानन्तः
(அனுவாதம்)அப்பொழுது அந்தக் கரணத்தில் உள்ள பிரத்யக் ஆத்மாகிய சர்வக்ஞனும், எல்லாகர்மங்களின் பலதாதாவும் பிராணிகளின் சர்வசக்தியால் உள்ள ஈஸ்வரன் ஜகத்தின் ஸ்திதியை ரக்ஷிப்பதில் விருப்பமுடையவரால்தான் இந்த  ஜயமும் மஹிமையும் என்று அறியவில்லை.
ते देवाः ऐक्षन्त ईक्षितवन्तः अग्न्यादिस्वरूपपरिच्छिन्नात्मकृतः अस्माकमेवायं विजयः अस्माकमेवायं महिमा अग्निवाय्विन्द्रत्वादिलक्षणो जयफलभूतोऽस्माभिरनुभूयते नास्मत्प्रत्यगात्मभूतेश्वरकृत इति ॥
அக்னி முதலிய ஸ்வரூபத்தின் பரிச்சின்ன முடைய தேவர்கள் நம்மால் தான் இந்த ஜயமும் மஹிமையும் ஏற்பட்டது. மேலும் ஜயமாகிய பலத்திற்கு காரணமான அக்னித்துவம், வாயுத்துவம், அவ்வாறே இந்திரரூபத்துவம் ஆகிய மஹிமைகளை உடையவர்களாய் இருக்கின்றோம்.. ஆகையால் நம்மால் அதை அனுபவிக்க முடிகிறது. நம்முடைய பிரத்யக் ஆத்ம பூதமான ஈஸ்வரனால் அல்ல என்று நினைத்தார்கள்.
तद्धैषां विजज्ञौ तेभ्यो ह प्रादुर्बभूव तन्न व्यजानत किमिदं यक्षमिति ॥ २ ॥
एवं मिथ्याभिमानेक्षणवतां तत् ह किल एषां मिथ्येक्षणं विजज्ञौ विज्ञातवद्ब्रह्म । सर्वेक्षितृ हि तत् सर्वभूतकरणप्रयोक्तृत्वात् देवानां च मिथ्याज्ञानमुपलभ्य मैवासुरवद्देवा मिथ्याभिमानात्पराभवेयुरिति तदनुकम्पया देवान्मिथ्याभिमानापनोदनेनानुगृह्णीयामिति तेभ्यः देवेभ्यः ह किल अर्थाय प्रादुर्बभूव स्वयोगमाहात्म्यनिर्मितेनात्यद्भुतेन विस्मापनीयेन रूपेण देवानामिन्द्रियगोचरे प्रादुर्बभूव प्रादुर्भूतवत् । तत् प्रादुर्भूतं ब्रह्म न व्यजानत नैव विज्ञातवन्तः देवाः किमिदं यक्षं पूज्यं महद्भूतमिति ॥
இவ்வாறு மித்தியா அபிமானத்தால் விசாரம் செய்யும் அந்த தேவதைகளுடைய மித்தியா விசாரத்தை பிரஹ்மம் அறிந்து கொண்டது. ஏன்எனில் எல்லா ஜீவனுக்கும் ஸர்வ பூதங்களின் கரணங்களை இயக்குவதால் தேவர்கள் மித்யா ஞானத்தை அடைந்து அசுரர்களைப் போல் மித்யா அபிமானத்தால் பராஜயத்தை அடையக்கூடாது என்று கருணையினால் தேவர்களுடைய அபிமானத்தை நீக்கி அனுகிரஹிப்பதின் பொருட்டு தேவர்களின் நன்மைக்காக தோன்றினார். தன்னுடைய யோகமாயையின் பிரபாவத்தால் எல்லோரும் ஆச்சரியம் அடையும் படி மிக அற்புதமான ரூபத்தை தேவர்களின் இந்திரியங்களுக்கு விஷயமாகும்படி தோன்றினார். இவ்வாறு தோன்றிய பிரஹ்மத்தை தேவர்கள் என்னவென்று அறியாதவர்களாகி இந்த யக்ஷன்யார்? பூஜிக்க தகுந்த மஹத்பூதம் எது? என்று நினைத்தார்கள்.
तेऽग्निमब्रुवन् जातवेद एतद्विजानीहि किमेतद्यक्षमिति तथेति ॥ ३ ॥
तदभ्यद्रवत्तमभ्यवदत् कोऽसीत्यग्निर्वा अहमस्मीत्यब्रवीज्जातवेदा वा अहमस्मीति ॥ ४ ॥
तस्मिंस्त्वयि किं वीर्यमित्यपीदं सर्वं दहेयं यदिदं पृथिव्यामिति ॥ ५ ॥
तस्मै तृणं निदधावेतद्दहेति तदुपप्रेयाय सर्वजवेन तन्न शशाक दग्धुं स तत एव निववृते नैतदशकं विज्ञातुं यदेतद्यक्षमिति ॥ ६ ॥
ते तदजानन्तो देवाः सान्तर्भयास्तद्विजिज्ञासवः अग्निम् अग्रगामिनं जातवेदसं सर्वज्ञकल्पम् अब्रुवन् उक्तवन्तः । हे जातवेदः एतत् अस्मद्गोचरस्थं यक्षं विजानीहि विशेषतो बुध्यस्व त्वं नस्तेजस्वी किमेतद्यक्षमिति ।
அதை என்னவென்று அறியாமல் உள்ளே பயந்தவர்களாகி அதை அறிவதில் இச்சை உடையவர்களாகிய அந்த தேவர்கள் முன்னே செல்லக்கூடியதும், செல்லும் பொழுது அறியும் தன்மை உடைய சர்வக்ஞனுக்கு ஒப்பான அக்னியைக் குறித்து இவ்வாறு கூறினார் ஹே ஜாதவேத நீ எங்களைக் காட்டிலும் தேஜஸ் பொருந்தியவன். இந்த யக்ஷன் யார் என்று அதாவது நமக்கு முன்னால் கண்களுக்கு கோச்சரமாகும் இந்த யக்ஷன் யார் என்று விசேஷமாக அறிவாயாக.
तथा अस्तु इति तत् यक्षम् अभि अद्रवत् तत्प्रति गतवानग्निः । तं च गतवन्तं पिपृच्छिषुं तत्समीपेऽप्रगल्भत्वात्तूष्णीम्भूतं तद्यक्षम् अभ्यवदत् अग्निं प्रति अभाषत कोऽसीति । एवं ब्रह्मणा पृष्टोऽग्निः अब्रवीत् अग्निर्वै अग्निर्नामाहं प्रसिद्धो जातवेदा इति च नामद्वयेन प्रसिद्धतयात्मानं श्लाघयन्निति ।
அவ்வாறு ஒப்புக்கொண்டு அக்னி அந்த யக்ஷனை நோக்கிச் சென்றது. சென்று அதைக் குறித்து கேட்டு அறிந்து கொள்ள இச்சை கொண்டு சமீபத்தில்  சென்றதும் ஒன்றும் அறியாமல் பேசாமல் இருந்தது. அந்த அக்னியை நோக்கி அந்த யக்ஷன் இவ்வாறு பேசியது. நீ யார் என்று கேட்டது. அவ்வாறு பிரஹ்மத்தினால் கேட்கப்பட்ட அக்னி இவ்வாறு கூறிற்று. நான் அக்னிதேவன். எனக்கு அக்னி என்றபெயர் பிரசித்தமானது. ஜாதவேதா என்றும் இரண்டு பெயர்களால் பிரசித்தமாய் இருக்கிறேன் என்று தன்னை பெருமையாகக் கூறிக்கொண்டது.
एवमुक्तवन्तं ब्रह्मावोचत् तस्मिन् एवं प्रसिद्धगुणनामवति त्वयि किं वीर्यं सामर्थ्यम् इति । सोऽब्रवीत् इदं जगत् सर्वं दहेयं भस्मीकुर्यां यत् इदं स्थावरादि पृथिव्याम् इति । पृथिव्यामित्युपलक्षणार्थम् , यतोऽन्तरिक्षस्थमपि दह्यत एवाग्निना ।
இவ்வாறு கூறப்பட்டவனைக் குறித்து பிரஹ்மம் இவ்வாறு கூறிற்று. இவ்வாறு பிரசித்தமான பெயருடைய உன்னிடத்தில் என்ன சாமர்த்தியம் இருக்கிறது என்று. அந்த அக்னி கூறியதாவது  பிருதிவியில் உள்ள ஸ்தாவரம் முதலியவைகளுடன் கூடிய இந்த ஜகத் முழுவதையும் பஸ்மமாக்கிவிடுவேன் என்று. பிருதிவியில் என்று கூறியது அந்தரிக்ஷம் முதலியவைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உபலக்ஷணமாகக் கூறப்பட்டது. ஏன்எனில் அந்தரிக்ஷத்தில் உள்ளதும் அக்னியினால் தஹிக்கக்கூடியதே.
तस्मै एवमभिमानवते ब्रह्म तृणं निदधौ पुरोऽग्नेः स्थापितवत् । ब्रह्मणा ‘एतत् तृणमात्रं ममाग्रतः दह ; न चेदसि दग्धुं समर्थः, मुञ्च दग्धृत्वाभिमानं सर्वत्र’ इत्युक्तः तत् तृणम् उपप्रेयाय तृणसमीपं गतवान् सर्वजवेन सर्वोत्साहकृतेन वेगेन । गत्वा तत् न शशाक नाशकत् दग्धुम् ।
இவ்வாறு அந்த அபிமானமுடைய அக்னியின் முன் திருணத்தை (துறும்பை) வைத்தது. பிரஹ்மம் இவ்வாறு கூறிற்று. இந்த துரும்பை மாத்திரம் என் முன் எரி, எரிப்பதற்கு சாமர்த்தியம் இல்லையெனில் எல்லா இடத்திலும் தஹிக்கும் தன்மையின் அபிமானத்தை விடு என்று, கூறப்பட்ட அந்த அக்னி துரும்பை எரிப்பதற்காக மிகவும் உற்சாகமாகவும், வேகமாகவும் துரும்பின் பக்கத்தில் சென்றது. அது அங்கு சென்று அதனால் தஹிக்க முடியவில்லை.
सः जातवेदाः तृणं दग्धुमशक्तो व्रीडितो हतप्रतिज्ञः तत एव यक्षादेव तूष्णीं देवान्प्रति निववृते निवृत्तः प्रतिगतवान् न एतत् यक्षम् अशकं शक्तवानहं विज्ञातुं विशेषतः यदेतद्यक्षमिति ॥
(அனுவாதம்) அந்த ஜாதவேதஸ் துரும்பை எரிக்க முடியவில்லை.பின்னர் வெட்கமடைந்து பிரதிக்ஞையை இழந்து இந்தயக்ஷம் யாதென அறிய சக்தியற்றவனாக இருக்கிறேன் என்று அவ் யக்ஷத்தினிடமிருந்து மௌனமாகத் தேவர்களைக் குறித்து திரும்பிவந்தான்.
अथ वायुमब्रुवन् वायवेतद्विजानीहि किमेतद्यक्षमिति तथेति ॥ ७ ॥
तदभ्यद्रवत्तमभ्यवदत्कोऽसीति वायुर्वा अहमस्मीत्यब्रवीन्मातरिश्वा वा अहमस्मीति ॥ ८ ॥
तस्मिंस्त्वयि किं वीर्यमित्यपीदं सर्वमाददीय यदिदं पृथिव्यामिति ॥ ९ ॥
तस्मै तृणं निदधावेतदादत्स्वेति तदुपप्रेयाय सर्वजवेन तन्न शशाकादातुं स तत एव निववृते नैतदशकं विज्ञातुं यदेतद्यक्षमिति ॥ १० ॥
अथ अनन्तरं वायुमब्रुवन् हे वायो एतद्विजानीहीत्यादि समानार्थं पूर्वेण । वानाद्गमनाद्गन्धनाद्वा वायुः । मातर्यन्तरिक्षे श्वयतीति मातरिश्वा । इदं सर्वमपि आददीय गृह्णीयाम् । यदिदं पृथिव्यामित्यादि समानमेव ॥
பின் வாயுவை குறித்து ஹே வாயுவே என்பது முதலியவை பிரஹ்மம் முன்பு கூறியது போலவே கூறியது எல்லாம் சமான அர்த்தமுடையது ஆகும்.வாயு வீசும் பொழுது வாசனையை கொண்டு செல்வதால் வாயு எனப்படுகிறது. அந்தரிக்ஷத்தில் வீசுகிறது என்பதால் மாதரிஷ்வா என்றபெயராகும். இங்கு பிருதிவியில் உள்ள எல்லாவற்றையும் கிரஹிக்கமுடியும். மற்றதெல்லாம் முன்போல் ஆகும்.
अथेन्द्रमब्रुवन्मघवन्नेतद्विजानीहि किमेतद्यक्षमिति तथेति तदभ्यद्रवत्तस्मात्तिरोदधे ॥ ११ ॥
स तस्मिन्नेवाकाशे स्त्रियमाजगाम बहु शोभमानामुमां हैमवतीं तां होवाच किमेतद्यक्षमिति ॥ १२ ॥
अथेन्द्रमब्रुवन्मघवन्नेतद्विजानीहीत्यादि पूर्ववत् । इन्द्रः परमेश्वरो मघवा बलवत्त्वात् तथेति तदभ्यद्रवत् । तस्मात् इन्द्रादात्मसमीपं गतात् तद्ब्रह्म तिरोदधे तिरोभूतम् । इन्द्रस्येन्द्रत्वाभिमानोऽतितरां निराकर्तव्य इत्यतः संवादमात्रमपि नादाद्ब्रह्मेन्द्राय ।
பிறகு தேவர்கள் இந்திரனைக் குறித்து ஹே மகவன்! இதை அறிந்து வா என்று முன்போல் கூறினார்கள். இந்திரன் அவர்களுக்கெல்லாம் ஈஸ்வரன் மிக்க பலசாலி ஆகையால் மகவன் என அழைக்கப்பெற்றான்.அவன் உடனே சரியென்று அதன் சமீபம் சென்றான்.அதன் சமீபம் சென்ற இந்திரனிடமிருந்து அந்த பிரஹ்மம் மறைந்துவிட்டது.இந்திரனிடத்தில் உள்ள இந்திரத்துவ அபிமானத்தை முறறிலும் நீக்கவேண்டும் என்பதற்காக பிரஹ்மம் இந்திரனிடம் சம்வாதம் கூட செய்யவில்லை.
तद्यक्षं यस्मिन्नाकाशे आकाशप्रदेशे आत्मानं दर्शयित्वा तिरोभूतमिन्द्रश्च ब्रह्मणस्तिरोधानकाले यस्मिन्नाकाशे आसीत् , सः इन्द्रः तस्मिन्नेव आकाशे तस्थौ किं यद्यक्षमिति ध्यायन् ; न निववृतेऽग्न्यादिवत् ।
அந்தயக்ஷன் ஆகாசத்தில் ஆகாசப்பிரதேசத்தில் தன்னை காண்பித்து விட்டு மறைந்தது. யக்ஷனாகிய பிரஹ்மம் திரோதனமடைந்த சமயத்தில் அந்த இந்திரன் ஆகாசத்தில் இருந்து கொண்டு இந்த யக்ஷன் யார் என்று தியானித்துக்கொண்டு அக்னி முதலியவர்களைப் போல் திரும்பிச் செல்லவில்லை.
तस्येन्द्रस्य यक्षे भक्तिं बुद्ध्वा विद्या उमारूपिणी प्रादुरभूत्स्त्रीरूपा । सः इन्द्रः ताम् उमां बहु शोभमानाम् ; सर्वेषां हि शोभमानानां शोभनतमा विद्या । तदा बहु शोभमानेति विशेषणमुपपन्नं भवति । हैमवतीं हेमकृताभरणवतीमिव बहु शोभमानामित्यर्थः । अथवा उमैव हिमवतो दुहिता हैमवती नित्यमेव सर्वज्ञेनेश्वरेण सह वर्तत इति ज्ञातुं समर्थेति कृत्वा तामुपजगाम । इन्द्रः तां ह उमां किल उवाच पप्रच्छ ब्रूहि किमेतद्दर्शयित्वा तिरोभूतं यक्षमिति ॥
அந்த இந்திரனுக்கு யக்ஷனிடத்தில் உள்ள பக்தியை அறிந்து வித்யா, உமாரூபிணியாக ஸ்த்ரீ ரூபமாய் தோன்றினாள். அந்த இந்திரனுக்கு மிகுந்த சோபமான அதாவது எல்லா சோபனைகளைக் காட்டிலும் சோபனமுடைய வித்யாஸ்வரூபிணி ஹைமவதீ தோன்றினாள்.அப்பொழுது மிகுந்த சோபனமானது என்றவிசேஷணம் மிகப்பொருத்தமானதாகும். ஹைமவதீ என்பது தங்கநகைகள் அணிந்தவள் போல் மிக சோபனமானவள்.அல்லது ஹிமவான்புத்ரி ஹைமவதீ உமா எப்பொழுதும் ஈஸ்வரனுடன் இருப்பவள் என்பதால் யக்ஷன் யார் என்பதை அறிவதில் சாமர்த்தியம் உடையவள் என்று கருதி உமையை நோக்கி சென்று இவ்வாறு கேட்டான்.இவ்வாறு தோன்றி மறைந்த அந்த யக்ஷன் யார்? என்று.
इति तृतीयखण्डभाष्यम् ॥