समाप्तं कर्मात्मभूतप्राणविषयं विज्ञानं कर्म चानेकप्रकारम् , ययोर्विकल्पसमुच्चयानुष्ठानाद्दक्षिणोत्तराभ्यां सृतिभ्यामावृत्त्यनावृत्ती भवतः । अत ऊर्ध्वं फलनिरपेक्षज्ञानकर्मसमुच्चयानुष्ठानात्कृतात्मसंस्कारस्य उच्छिन्नात्मज्ञानप्रतिबन्धकस्य द्वैतविषयदोषदर्शिनः निर्ज्ञाताशेषबाह्यविषयत्वात् संसारबीजमज्ञानमुच्चिच्छित्सतः प्रत्यगात्मविषयजिज्ञासोः ‘केनेषितम् . . . ’ इत्यात्मस्वरूपतत्त्वविज्ञानाय अयमध्याय आरभ्यते । तेन च मृत्युपदमज्ञानमुच्छेत्तव्यम् ; तत्तन्त्रो हि संसारो यतः । अनधिगतत्वादात्मनो युक्ता तदधिगमाय तद्विषया जिज्ञासा ।
(அனு) எந்த இரண்டினை (கர்ம, உபாசனை) தனித்தனியாகவோ, இரண்டும் சேர்ந்து சமுச்சயமாகவோ அனுஷ்டிப்பதால் தக்ஷிண,உத்தராயண மார்கத்தால் ஆவிர்த்தி (திரும்பி ஜன்மம் எடுத்தல்) அநாவிர்த்தி (க்ரமமுக்தி) உண்டாகிறதோ அந்த கர்மாத்ம பூத பிராணவிஷயமான விக்ஞானமும், கர்மமும் அநேக விதமாக கூறி முடிக்கப்பட்டுள்ளது. அதற்குமேல் பலத்தில் இச்சை அற்று ஞான கர்ம சமுச்சயத்தை அனுஷ்ட்டித்ததால் சித்த சுத்தியை அடைந்தவனும், ஆத்மஞானத்தின் தடைகள் நீங்கியவனும், த்வைத விஷயத்தில் தோஷ தர்சனமுடையவனும், பாஹ்ய விஷயங்களில் முற்றிலும் அதன் தன்மையை அறிந்தால் சம்சாரத்திற்கு காரணமான அக்ஞானத்தை நீக்குவதற்காக ப்ரத்யக் ஆத்மவிஷயத்தை அறிந்து கொள்வதில் இச்சை உள்ளவனுக்கு केनेषितम् (கேனஈஷிதம்) என்று ஆத்மஸ்வரூப தத்துவம் அறிவதற்காக இந்த அத்தியாயம் ஆரம்பிக்கப்படுகிறது. அந்த ஆத்ம ஸாக்ஷாத்காரத்தால் தான் மிருத்யுவிற்கு (ஸம்ஸாரத்திற்கு) காரணமான அக்ஞானம் நாசமாக வேண்டும். ஏனெனில் அக்ஞானத்தினால்தான் ஸம்ஸாரம் (சுகதுக்கானுபவம்) ஏற்படுகிறது. ஆத்மாவை அறியாதிருப்பதால், அதையறிவதற்காக அதைப் பற்றிய ஜிக்ஞாசையானது பொருத்தமுள்ளதாகிறது.
कर्मविषये चानुक्तिस्तद्विरोधित्वात् । अस्य विजिज्ञासितव्यस्यात्मतत्त्वस्य कर्मविषयेऽवचनं कस्मादिति चेत् , आत्मनो हि यथावद्विज्ञानं कर्मणा विरुध्यते । निरतिशयब्रह्मस्वरूपो ह्यात्मा विजिज्ञापयिषितः,
‘तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदम्’ (के. उ. १ । ४) इत्यादिश्रुतेः । न हि स्वाराज्येऽभिषिक्तो ब्रह्मत्वं गमितः कञ्चन नमितुमिच्छति । अतो ब्रह्मास्मीति सम्बुद्धौ न कर्म कारयितुं शक्यते । न ह्यात्मानमवाप्तार्थं ब्रह्म मन्यमानः प्रवृत्तिं प्रयोजनवतीं पश्यति । न च निष्प्रयोजना प्रवृत्तिः । अतो विरुध्यत एव कर्मणा ज्ञानम् । अतः कर्मविषयेऽनुक्तिः । विज्ञानविशेषविषयैव जिज्ञासा ।
கர்ம காண்டத்தில் ஆத்மதத்துவத்தின் நிரூபணம் கர்ம விஷயத்திற்கு விரோதமாய் இருப்பதால் கூறப்படவில்லை. அறியப்படவேண்டிய ஆத்மதத்துவம் கர்மகாண்டத்தில் கூறப்படவில்லை.ஏன் எனில் ஆத்மாவின் யதார்த்த ஞானம் கர்மத்திற்கு விரோதமானதாகும். நிரதிசய ப்ரஹ்ம ஸ்வரூபமாகிய ஆத்மாவே அறியப்படவேண்டியது. “நீ அந்த ப்ரஹ்மத்தை அறி, எந்த லோகத்திற்காக உபாசனை செய்கிறாயோ அது ப்ரஹ்மம் அல்ல” (“के.उप”) என்பது முதலிய சுருதியில் கூறப்பட்டுள்ளது. ஸ்வராஜ்யத்தில் நனைந்து பிரஹ்மத்துவம் அடைந்தவன் ஒருவரையும் வணங்க இச்சைப்படுவதில்லை. ஆகையால் ப்ரஹ்மமாய் இருக்கிறேன் என்று அறிந்தவன் கர்மத்தை செய்விக்கமாட்டான்.நான் பிரஹ்மம் என்று அறிந்தவன் ஆத்மாவை அடைவதற்காக பிரவிர்த்திப்பதில் ப்ரயோஜனத்தை காணமாட்டான். பிரவிர்த்தியானது நிஷ்ப்ரயோஜனமாகாது. ஆகையால் கர்மமானது ஆத்ம ஞானத்திற்கு விரோதமானது, ஆகையால் கர்மகாண்டத்தில் ஆத்மஞானத்தைப் பற்றி கூறப்படவில்லை. ஜிக்ஞாசா என்பது விக்ஞான விசேஷ விஷயமாகும்.
कर्मानारम्भ इति चेत् , न । निष्कामस्य संस्कारार्थत्वात् ।
கர்மா ஆரம்பிக்கவேண்டியதில்லையே எனில் அவ்வாறு அல்ல, நிஷ்காம கர்மத்தினால் சித்த சுத்தி உண்டாகிறது.
यदि ह्यात्मविज्ञानेन आत्माविद्याविषयत्वात्परितित्याजयिषितं कर्म, ततः ‘प्रक्षालनाद्धि पङ्कस्य दूरादस्पर्शनं वरम्’ ( ? ) इत्यनारम्भ एव कर्मणः श्रेयान् अल्पफलत्वात् आयासबहुलत्वात् तत्त्वज्ञानादेवं च श्रेयःप्राप्तेः इति चेत् ।
(பூர்வ) ஆத்மக் ஞானத்தினாலேயே ஆத்மாவை அறியமுடியாத அவித்யா விஷயமாகிய கர்மாவை பரித்யாகம் செய்வதில் இஷ்டம். எவ்வாறெனில் “சகதியைச் சுத்தம் செய்வதை விட தூரத்தில் இருந்துகொண்டு அதைத் தொடாமல் இருப்பதே மேலாகும்” (म.वन.२/४९) என்பதால் கர்மாவை ஆரம்பிக்காமல் இருப்பதே மேல். ஏன் எனில் அல்பபலனும், மிகுந்த ஆயாசத்துடன் செய்ய வேண்டியதாயும் உள்ளதால் தத்வக்ஞானத்தினாலேயே ச்ரேயஸ் அடையப்படுவதால் எனில்
வாஸ்தவமே , சகாமனுக்கு அவித்யா விஷயமான கர்மாவானது அல்பபலம் முதலிய தோஷங்களும், பந்தரூபமானதும் ஆகும்.“காமனைகளை எவன் விரும்புகிறானோ” (மு--உப) “இவ்வாறு காமனை செய்பவன்” முதலிய ச்ருதிகளால் நிஷ்காமனுக்கு அல்ல என்று அறிகிறோம். நிஷ்காமனுக்கு சித்த சுத்தியின் பொருட்டாகிறது. அந்த நிஷ்காமனுக்கு கர்மாக்கள் செய்வதற்கு ஆஸ்ரயமான விக்ஞானத்துடன் கூடிய (உபாசனையுடன் கூடிய) கர்மாக்கள் சித்த சுத்தியின் பொருட்டாகிறது. “தேவயாஜீ மேலானவனா அல்லது ஆத்மயாஜீயா இவ்வாறு ஆரம்பித்து ஆத்மயாஜீ” இதனால் என்னுடைய அந்த அங்கம் (அந்தக்கரணம்) சுத்தமாகட்டும் என்று சித்த சுத்தியின் பொருட்டே இந்த கர்மாக்கள் என்று வாஜசனேயகத்தில் உள்ளது.“ இந்த சரீரம் மஹாயக்ஞம் மேலும் யக்ஞ மூலமாக ப்ரஹ்ம ஞானத்திற்கான யோக்யதையையும் அடையச் செய்கிறது.” “யக்ஞம், தானம், தபஸ் இவைகள் மனிதர்களை புனிதமாக்குகிறது.” (கீதா) முதலிய ஸ்மிருதிகளாலும் சித்தமாகிறது.
प्राणादिविज्ञानं च केवलं कर्मसमुच्चितं वा सकामस्य प्राणात्मप्राप्त्यर्थमेव भवति । निष्कामस्य त्वात्मज्ञानप्रतिबन्धकनिर्मृष्ट्यै भवत्यादर्शनिर्मार्जनवत् । उत्पन्नात्मविद्यस्य त्वनारम्भः, निरर्थकत्वात् ।
‘कर्मणा बध्यते जन्तुर्विद्यया च विमुच्यते । तस्मात्कर्म न कुर्वन्ति यतयः पारदर्शिनः’ (मो. ध. २४१_७) इति, क्रियापथश्चैव पुरस्तात्संन्यासश्च तयोः संन्यास एवात्यरेचयत् इति,
‘त्यागेनैके’ (तै. ना. २८) ‘नान्यः पन्था विद्यते’ (श्वे. उ. ३ । ८) इत्यादिश्रुतिभ्यश्च ।
சகாம புருஷனுக்கு பிராணாதி உபாஸனமானது தனியாகவோ கர்மாவுடன் கூடவோ பிராணாத்மாவை அடைவதற்குக் காரணமாகிறது. கண்ணாடியை சுத்தம் செய்வது போல் நிஷ்காம புருஷனுக்கு ஆத்மபிரதிபந்த நிவர்த்திக்குக் காரணமாகிறது. ஆத்ம ஞானம் அடைந்தவனுக்கு கர்மாவை ஆரம்பித்தல் பிரயோஜனமற்றதாகும். “கர்மாவினால் பந்தமடைகிறான்,வித்தையால் ஜீவன் முக்தி அடைகிறான். ஆகையால் பாரதர்சிகளான யதிகள் கர்மாவை செய்வதில்லை” (महा.शा.२४२/७) என்றும் “முதலில் கர்மாவும் பின் சந்நியாசமும் கைக்கொள்ளவேண்டும். அதில் சந்நியாசமே மிகவும் உத்கிருஷ்ட்டமானது”, என்றும், “த்யாகத்தினாலேயே” (कै.उ.१/२) வேறு மார்க்கமில்லை (श्वे.उ.३/८) என்பது முதலிய சுருதிகளால் அறிகிறோம்.
யுக்தியினாலும் கர்மாக்கள் சித்தசுத்தி மூலமாக ஞானத்திற்கு உபாயங்களாகின்றன.“அம்ருதத்தை அடைகிறான்” (के.उ.२/४) “ஞானத்தினால் (ப்ரஹ்ம வித்தையால்) அம்ருதத்தை அடைகிறான்.” என்பது முதலிய ச்ருதிஸ்மிருதிகளாலும் அறிகிறோம். ஸ்வதந்திரமாக தான் விரும்பிய தேசம் செல்பவன். நதியை கடந்தபின் ஓடத்தை விடாமல் இருப்பது இல்லை அல்லவா?(ஓடத்தை விட்டுவிடுவான் அல்லவா)
न हि स्वभावसिद्धं वस्तु सिषाधयिषति साधनैः । स्वभावसिद्धश्चात्मा । तथा नापिपयिषितः, आत्मत्वे सति नित्याप्तत्वात् । नापि विचिकारयिषितः, आत्मत्वे सति नित्यत्वादविकारित्वादविषयत्वादमूर्तत्वा्च ;
ஸ்வபாவசித்தமான வஸ்து சாதனைகளால் அடைய விரும்பப்படுவது இல்லை.ஏன் எனில் ஆத்மா சுவபாவமாகவே சித்தித்திருக்கிறது. நித்யமாய் ஆத்மஸ்வரூபமாகவே இருப்பதால் அடையவும் விரும்பப்படுவதுமில்லை. இவ்வாறு அதற்கு விகாரமும் விரும்பப்படவில்லை. ஏனெனில் ஆத்மா நித்தியமாயும் அவிகாரியாயும்,அவிஷயமாயும், அமூர்த்தமாயும் இருக்கின்றது.
“ஆத்மா கர்மாக்களினால் வளர்வதில்லை” (बृ) முதலிய சுருதிகளாலும், “இது அவிகாரியம் எனப்படுகிறது.” என்ற(गी) ஸ்மிருதியினாலும் அறிகிறோம். “சுத்தமானது பாபம் அற்றது” (ई) என்றசுருதியினாலும் ஆத்மாவை சுத்தம் செய்ய வேண்டியதில்லை என்று அறிகிறோம். மேலும் தன்னைத் தவிர வேறு அற்றதாய் இருப்பதால் மற்றொன்றால் சுத்தம் செய்யக்கூடியதும் அல்ல. மேலும் ஆத்மாவைத் தவிர வேறு க்ரியை இல்லை. அவ்வாறேதன்னாலேயே தன் ஆத்மாவை சுத்தம் செய்து கொள்ள முடியாது. வஸ்துவைத் தவிர வேறானதை ஆராதனை செய்வதால் நித்யப்ராப்தி கிடையாது. வஸ்துவைத் தவிர வேறு ஒன்று நித்யமாகாது. மோக்ஷமானது நித்யமாய் இருப்பதே இஷ்டம். ஆகையால் ஆத்ம ஞானம் அடைந்தமையால் கர்மாக்கள் ஆரம்பிக்க வேண்டியதில்லை. ஆகையால் வெளி விஷயங்களில் புத்தி அற்றவன் ஆத்மாவை அறிந்து கொள்வதற்காக கேனேஷிதம் ‘केनेषितम्’ என்று ஆரம்பிக்கப்படுகிறது.
प्रवृत्तिलिङ्गाद्विशेषार्थः प्रश्न उपपन्नः । रथादीनां हि चेतनावदधिष्ठितानां प्रवृत्तिर्दृष्टा, न अनधिष्ठितानाम् । मनआदीनां च अचेतनानां प्रवृत्तिर्दृश्यते ; तद्धि लिङ्गं चेतनावतोऽधिष्ठातुरस्तित्वे । करणानि हि मनआदीनि नियमेन प्रवर्तन्ते ; तन्नासति चेतनावत्यधिष्ठातर्युपपद्यते । तद्विशेषस्य चानधिगमाच्चेतनावत्यधिष्ठातृसामान्ये चाधिगते विशेषार्थः प्रश्न उपपद्यते ।
ப்ரவிர்த்தி ரூபலிங்கத்தால் விசேஷமான தத்வ விஷயத்தில் ப்ரசன்னம் (கேள்வி) எழுகிறது. ரதம் முதலிய அசேதன பதார்த்தங்கள் சேதனமாகிய ஜீவர்களின் அதிகாரத்தால் (தூண்டுதலால்) பிரவிர்த்திக்கிறது. தூண்டுதல் இல்லாவிடில் ப்ரவிர்த்திப்பதில்லை. மனம் முதலிய அசேதனங்களின் ப்ரவிர்த்திக்காணப்படுகிறது. அந்த லிங்கத்தினால் சேதனமாகிய அதிஷ்ட்டா இருக்கிறது என்று அனுமானிக்கப்படுகிறது. மன முதலிய கரணங்கள் நியமமாக பிரவிர்த்திக்கிறது. அதனுடைய ப்ரவிர்த்தி சேதன அதிஷ்ட்டாதா இல்லாமல் பிரவிர்த்திக்காது. இவ்வாறு சாமானிய சேதனத்தினுடைய ஞானம் இருந்தும் அதனுடைய விசேஷ ஞானம் ஏற்படுவதற்காக இந்த விசேஷமான கேள்வியானது எழுகிறது.
केनेषितं पतति प्रेषितं मनः केन प्राणः प्रथमः प्रैति युक्तः ।
केनेषितां वाचमिमां वदन्ति चक्षुःश्रोत्रं क उ देवो युनक्ति ॥ १ ॥
केनेषितं केनेष्टं कस्येच्छामात्रेण मनः पतति गच्छति, स्वविषये नियमेन व्याप्रियत इत्यर्थः । मनुतेऽनेनेति विज्ञाननिमित्तमन्तःकरणं मनः । प्रेषितमिवेत्युपमार्थः । न त्विषितप्रेषितशब्दयोरर्थाविह सम्भवतः । न हि शिष्यानिव मनआदीनि विषयेभ्यः प्रेषयत्यात्मा । विविक्तनित्यचित्स्वरूपतया तु निमित्तमात्रं प्रवृत्तौ नित्यचिकित्साधिष्ठातृवत् ।
केनेषितं (கேனேஷிதம்) யாருடைய இச்சை மாத்திரத்தால் மனமானது पतति (பததி) தன்னுடைய விஷயங்களில் செயல்படுகிறது. எதனால் நினைக்கிறானோ அது விக்ஞான நிமித்த அந்தக்கரணமாகிய மனம் துாண்டப்பட்டது போல் இருக்கிறது என்று உபமான அர்த்தமாகக் கொள்ளவேண்டும். இஷிதம், ப்ரேஷிதம் என்ற இவ்விரண்டின் சப்தத்தின் அர்த்தம் இங்கு பொருந்தாது. (குருவானவர்) சிஷ்யர்களைப் பிரேரிப்பது போல் (கட்டளை இடுவது போல்) மனம் முதலியவைகளை ஆத்மா ப்ரேரிப்பது இல்லை. அநித்ய வஸ்துக்களைக் காட்டிலும் வேறானதும் நித்ய சுவரூபமான ஆத்மா சகோரபக்ஷியைப் போல் நிமித்த மாத்திரமாக இருந்துகொண்டு மன முதலியவைகளை ப்ரேரணை செய்கிறது. (சகோரபக்ஷி - ராஜாவிற்கு உணவு பரிமாறும் முன் அந்த உணவை சகோரபக்ஷி பார்த்த பின்பே ராஜாவிற்கு அளிக்கப்படும். ஏன் எனில் உணவில் விஷம் இருந்தால் அந்த சகோரப்பக்ஷியின் கண்கள் சிவப்பாகிவிடும். விஷத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே (சந்நிதிமாத்திரத்திலேயே) கண்களில் சிவப்பு வர்ணம் ஏற்படுவது போல் ஆத்மாவின் சந்நிதியில் மன முதலியவைகள் செயல்படுகின்றன.)
प्राण इति नासिकाभवः प्रकरणात् । प्रथमत्वं च क्रियायाः प्राणनिमित्तत्वात् । स्वतो विषयावभासमात्रं करणानां प्रवृत्तिः । चलिक्रिया तु प्राणस्यैव मनआदिषु । तस्मात्प्राथम्यं प्राणस्य । प्रैति गच्छति । युक्तः प्रयुक्त इत्येतत् । वाचो वचनं किंनिमित्तं प्राणिनाम् । चक्षुःश्रोत्रयोश्च को देवः प्रयोक्ता । करणानामधिष्ठाता चेतनावान्यः, स किंविशेषण इत्यर्थः ॥
இந்த இடத்தில் பிராணன் என்றால் மூக்கிலிருந்து உண்டாகும். மூச்சு கிரியைக்கு (செயலுக்கு) பிராணன் நிமித்தமாய் இருப்பதால் அதற்கு முதன்மை, கரணங்களுக்கு ஸ்வத: (தானாகவே) பிரவிர்த்தித்தல் என்பது விஷயங்களைப் பிரகாசப்படுத்துதல் மாத்திரமே. மனமுதலியவைகளின் சலனகிரியையும் பிராணனுடையதே. வாக் ஆனது எந்த நிமித்தத்தால் பிரேரிக்கப்பட்டு தன் செயலில் ஈடுபடுகிறது. பிராணிகளுடைய கண், காது முதலியவைகள் எந்த தேவன் பிரேரிக்கிறான்? கரணங்களை (இந்திரியங்களை) தூண்டும் சேதனத்தை உடையவன் யார்? அவனுடைய விசேஷணம் என்ன? என்பது பொருள்.இவ்வாறு கேட்ட யோக்கியனான சிஷ்யனின் பொருட்டு குரு கூறிய பதிலாக அமைவது அடுத்த மந்திரம்.
श्रोत्रस्य श्रोत्रं मनसो मनो यद्वाचो ह वाचं स उ प्राणस्य प्राणः ।
चक्षुषश्चक्षुरतिमुच्य धीराः प्रेत्यास्माल्लोकादमृता भवन्ति ॥ २ ॥
‘श्रोत्रस्य श्रोत्रम्’ इत्यादिप्रतिवचनं निर्विशेषस्य निमित्तत्वार्थम् । विक्रियादिविशेषरहितस्यात्मनो मनआदिप्रवृत्तौ निमित्तत्वमित्येतत् ‘श्रोत्रस्य श्रोत्रम्’ इत्यादिप्रतिवचनस्यार्थः, अनुगमात् । अनुगतानि ह्यस्मिन्नर्थेऽक्षराणि ।
श्रोत्रस्य (ஸ்ரோத்திரஸ்ய) श्रोत्रम् (ஸ்ரோத்ரம்) முதலிய பதில்கள் நிர்விசேஷ ஆத்மாவிற்கு நிமித்தத்வதைத் தெரிவிக்கின்றன. கிரியை முதலிய விசேஷ தர்மங்கள் அற்ற, ஆத்மா மன முதலியவைகளின் பிரவிர்த்திக்கு நிமித்தமாத்திரம் என்பதே இந்த ச்ரோத்திரத்தின் ச்ரோத்திரம்முதலிய பதில்களின் அர்த்தமாகும் என்பது பொருந்துகிறது. இங்கு இந்த அர்த்தத்தில் அக்ஷரங்கள் அதற்கு அனுசரணையாக இருக்கின்றன.
कथम् ? शृणोत्यनेनेति श्रोत्रम् । तस्य शब्दावभासकत्वं श्रोत्रत्वम् । शब्दोपलब्धृरूपतयावभासकत्वं न स्वतः श्रोत्रस्य ; अचिद्रूपत्वात् , आत्मनश्च चिद्रूपत्वात् ।
எவ்வாறு? அதனால் கேட்கப்படுவதால் ஸ்ரோத்ரம்(காது) அதனுடைய சப்தத்தை பிரகாசிக்கச் செய்வது ஸ்ரோத்ரத்துவம். அதற்கு சப்தத்தை கிரஹிக்கச் செய்யும் பிரகாசிக்கும் தன்மை அதற்கு ஸ்வயமாக கிடையாது. ஏன் எனில் ஸ்ரோத்திரமானது அசித் ரூபமாகும். ஆத்மாவே சித்ரூபமாகும்.
यच्छ्रोत्रस्योपलब्धृत्वेनावभासकत्वं तदात्मनिमित्तत्वाच्छ्रोत्रस्य श्रोत्रमित्युच्यते । यथा क्षत्रस्य क्षत्रम् , यथा वा उदकस्यौष्ण्यमग्निनिमित्तमिति दग्धुरप्युदकस्य दग्धाग्निरुच्यते उदकमपि ह्यग्निसंयोगादग्निरुच्यते, तद्वदनित्यं यत्संयोगादुपलब्धृत्वं तत्करणं श्रोत्रादि । उदकस्येव दग्धृत्वमनित्यं हि तत्र तत् । यत्र तु नित्यमुपलब्धृत्वमग्नाविवौष्ण्यं स नित्योपलब्धिस्वरूपत्वात् दग्धेवोपलब्धोच्यते । श्रोत्रादिषु श्रोतृत्वाद्युपलब्धिरनित्या, नित्या चात्मनि । अतः श्रोत्रस्य श्रोत्रमित्याद्यक्षराणामर्थानुगमादुपपद्यते निर्विशेषस्योपलब्धिस्वरूपस्यात्मनो मनआदिप्रवृत्तिनिमित्तत्वमिति । मनआदिष्वेवं यथोक्तम् ।
எது ச்ரோத்திரத்தை விஷயங்களைக் கிரஹிப்பதாய் செய்கிறதோ அது ஆத்மாவின் நிமித்தத்தால் ஆகும், ஆகையால் ஸ்ரோத்திரஸ்ய ஸ்ரோத்தரம் என்று கூறப்பட்டது. எவ்வாறு க்ஷத்திரியனுக்கு க்ஷத்திரியத்வம் தர்மத்தினால் என்பதால் தர்மத்தை க்ஷத்ரஸ்ய க்ஷத்ரம் என்கிறோமோ, ஜலத்திற்கு உஷ்ணமானது அக்னியின் நிமித்தத்தால் எற்படும் ஜலத்தின் சுடும் தன்மை என்பதால் சுடுகிறது என்கிறோம். அக்னியை தக்தாவிற்கு தக்தா என்கிறோமோ, அதே போல் எதனுடைய சேர்க்கையால் அநித்தியமான கிரஹிக்கும் தன்மை ச்ரோத்திராதிகளுக்கு இருக்கிறதோ அங்கு அந்த ஜலத்திற்கு சுடும் தன்மைபோல் அநித்தியமே அல்லவா. அக்னியில் எவ்வாறு உஷ்ணமானது நித்தியமாய் கிரஹிக்கப்படுகிறதோ அவ்வாறு ஆத்மாவும் நித்தியகிரஹிக்கும் ஸ்வரூபமாய் இருப்பதால் சுடுகிறது என்பது போல் கிரஹிப்பது கூறப்படுகிறது. ச்ரோத்திரம் முதலியவைகளில் கேட்பவை முதலியவைகள் கிரஹிப்பது என்பது அநித்தியமாகும். எதனால் ஆத்மா நித்யமோ ஆகையால் ச்ரோத்திரஸ்ய ஸ்ரோத்திரம் என்று கூறப்பட்டது. இந்த அக்ஷரங்களினால் அர்த்தமானது விளங்குவதால் நிர்விசேஷமாயும் உபலப்த்தி ஸ்வரூபமாயும் உள்ள ஆத்மா மனமுதலியவைகளின் ப்ரவிர்த்திக்கு நிமித்தமாய் இருக்கிறது என்று நிச்சயமாகிறது. இவ்வாறு மனம் முதலியவைகளிலும் தெரிந்து கொள்ளவேண்டும்.
वाचो ह वाचं प्राणस्य प्राण इति विभक्तिद्वयम् । सर्वत्रैवं हि द्रष्टव्यम् । कथम् ? पृष्टत्वात् स्वरूपनिर्देशः । प्रथमयैव च निर्देशः । तस्य च ज्ञेयत्वात्कर्मत्वमिति द्वितीया । अतो वाचो ह वाचं प्राणस्य प्राण इत्यस्मात्सर्वत्रैव विभक्तिद्वयम् ।
वाचो ह वाचं प्राणस्य प्राण (வாசோ ஹ வாச்சம், ப்ராணஸ்ய ப்ராண) என்று இரண்டு விபக்திகளும் எல்லா இடத்திற்கும் பொருந்தும். அது எவ்வாறு? எனில் கேட்டதினால் ஸ்வரூபம் நிர்தேசம் செய்யப்படவேணும், நிர்தேசம் செய்வது முதல் வேற்றுமையினாலாகும். அது அறியப்பட வேண்டியதாய் இருப்பதால் கர்மத்துவம் ஆகும். ஆகையால் இரண்டாவது வேற்றுமையிலும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகையால் वाचो ह वाचं प्राणस्य प्राण (வாசோ ஹ வாச்சம், ப்ராணஸ்ய ப்ராணம்) என்று இருப்பதால் இதிலிருந்து எல்லாவற்றிலும் இரண்டு வேற்றுமையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரிகிறது.
यदेतच्छ्रोत्राद्युपलब्धिनिमित्तं श्रोत्रस्य श्रोत्रमित्यादिलक्षणं तत् नित्योपलब्धिस्वरूपं निर्विशेषमात्मतत्त्वं बुद्ध्वा अतिमुच्य अनवबोधनिमित्ताध्यारोपिताद्बुद्ध्यादिलक्षणात्संसारान्मोक्षणं कृत्वा धीराः धीमन्तः प्रेत्य अस्मात् लोकात् शरीरात् प्रेत्य वियुज्य अन्यस्मिन्नप्रतिसन्धीयमाने निर्निमित्तत्वादमृता भवन्ति ।
எந்த இந்த ஸ்ரோத்திரம் முதலானவைகளுக்கு ஞான (उपलब्धि) த்திற்கு நிமித்தமாக இருப்பதால் ச்ரோத்திரத்திற்கு ச்ரோத்திரம் முதலிய லக்ஷணமும் நித்யஞானஸ்வரூபமானதும், நிர்விசேஷமும் ஆனதுமான ஆத்மதத்துவம் இருக்கிறதோ அதை அறிந்து अतिमुच्य (அதிமுச்ய) அறியாமையினால் அத்யாரோபிதமான புத்தியாதி லக்ஷணமான சம்சாரத்திலிருந்து விடுபட்டு धीराः (தீரா:) தீரர்கள் प्रेत्य (ப்ரேத்ய) இந்த லோகத்திலிருந்து அதாவது இந்த சரீரத்திலிருந்து விடுபட்டு மறுபடி உடலுடன் தொடர்பு இல்லாததால் மரணதர்மமற்றவர்களாய் ஆகிறார்கள்.
सति ह्यज्ञाने कर्माणि शरीरान्तरं प्रतिसन्दधते । आत्मावबोधे तु सर्वकर्मारम्भनिमित्ताज्ञानविपरीतविद्याग्निविप्लुष्टत्वात्कर्मणामिति अनारम्भेऽमृता एव भवन्ति । शरीरादिसन्तानाविच्छेदप्रतिसन्धानाद्यपेक्षया अध्यारोपितमृत्युवियोगात्पूर्वमप्यमृताः सन्तो नित्यात्मस्वरूपत्वादमृता भवन्तीत्युपचर्यते ॥
அக்ஞானம் இருக்கும் பொழுது அல்லவா கர்மாக்களினால் வேறு சரீரத்தை அடைகின்றார்கள். ஆத்மாவை அறிந்த பின் எல்லா கர்மங்களின் ஆரம்பத்திற்கும் காரணமான அக்ஞானத்திற்கு விபரீதமான ஞானக்கினியினால் எரிக்கப்பட்ட கர்மங்கள் வேறு உடலை ஆரம்பிக்காததால் அவர்கள் மரணமற்றவர்களாகிறார்கள். சரீராதிகளின் தொடர்ச்சி நீங்காததால் அதையே அனுசந்தானம் செய்வதின் காரணமாக அத்யாரோபம் செய்யப்பட்ட மரணதர்மம் நீங்குவதற்கு முன்பே மரணமற்றவர்களாய் இருந்தாலும் நித்யஸ்வரூபமானதால் மரணமற்றவர்கள் ஆகிறார்கள் என்று உபசாரமாகக் கூறப்பட்டது.
न तत्र चक्षुर्गच्छति न वाग्गच्छति नो मनः ।
न विद्मो न विजानीमो यथैतदनुशिष्यात् ॥ ३ ॥
न तत्र चक्षुर्गच्छतीत्युक्तेऽपि पर्यनुयोगे हेतुरप्रतिपत्तेः । ‘श्रोत्रस्य श्रोत्रम्’ इत्येवमादिनोक्तेऽप्यात्मतत्त्वे अप्रतिपन्नत्वात्सूक्ष्मत्वहेतोर्वस्तुनः पुनः पुनः पर्यनुयुयुक्षाकारणमाह — न तत्र चक्षुर्गच्छतीति । तत्र श्रोत्राद्यात्मभूते चक्षुरादीनि, वाक्चक्षुषोः सर्वेन्द्रियोपलक्षणार्थत्वात् , न विज्ञानमुत्पादयन्ति ।
கண்இந்திரியம் அங்கு(ஆத்மாவிடத்தில்) செல்லவில்லை என்று கூறினாலும் கூட புரிந்து கொள்ளாத காரணத்தினால் மறுபடியும் அதைக் குறித்து வினா எழுகிறது. காதுக்குக் காதாய் இருக்கிறது என்பதுமுதலியவைகளினால் கூறினாலும் ஆத்ம தத்துவம் மிகவும் சூக்ஷ்மமாய் இருப்பதின் காரணமாக புரிந்து கொள்ளாததினால் மறுபடியும், மறுபடியும் கேள்வி வருகிறதின் காரணமாக இவ்வாறு கூறுகிறார். அங்கு கண் செல்லவில்லை என்ற இடத்தில் சுரோத்திரம் முதலிய ஆத்ம ஸ்வரூபமான ஆத்ம தத்துவ விஷயத்தில் கண்கள் முதலிய இந்திரியங்கள் ஞானத்தை உண்டுபண்ண முடியாது, ஏன் எனில் இவைகள் எல்லா இந்திரியங்களுக்கும் உபலக்ஷணமாகும்.
सुखादिवत्तर्हि गृह्येतान्तःकरणेन अत आह — नो मनः, न सुखादिवन्मनसो विषयस्तत् , इन्द्रियाविषयत्वात् ।
சுகாதிகளைப் போல் அந்தக் கரணத்தினால் கிரஹிக்கலாமே என்றால் அதற்கு கூறுகிறார். नो मनः (நோ மன:) ஆத்மதத்துவம் இந்திரியங்களுக்கு விஷயமாகததால் சுகாதிகளைப் போல் மனதின் விஷயமல்ல.(சுகாதிகளை அறிவது போல் மனம் ஆத்மாவை அறியமுடியாது.)
न विद्मो न विजानीमः अन्तःकरणेन, यथा एतत् ब्रह्म मनआदिकरणजातम् अनुशिष्यात् अनुशासनं कुर्यात् प्रवृत्तिनिमित्तं यथा भवेत् , तथा अविषयत्वान्न विद्मो न विजानीमः ।
அந்தக்கரணத்தினால் அறிய முடியாது. அறிவிக்கவும் முடியாது. ஏன் எனில் அந்த பிரஹ்மம் மனம் முதலிய கரணங்களால் உண்டானவைகளை பிரவிர்த்தியின் பொருட்டு அதை செயல்படுத்தும், மற்றவைகளை செயல்படுத்தவும் செய்யும். அந்த பிரஹ்மம் அவிஷயமாய் இருப்பதால் அதை அறிய முடியாது. அதை அறிவிக்கவும் முடியாது.
अथवा श्रोत्रादीनां श्रोत्रादिलक्षणं ब्रह्म विशेषेण दर्शयेत्युक्त आचार्य आह — न शक्यते दर्शयितुम् । कस्मात् ? न तत्र चक्षुर्गच्छतीत्यादि पूर्ववत्सर्वम् । अत्र तु विशेषो यथैतदनुशिष्यादिति । यथैतत् अनुशिष्यात् प्रतिपादयेत् अन्योऽपि शिष्यानितोऽन्येन विधिनेत्यभिप्रायः ॥
அல்லது சுரோத்திராதிகளுடைய ஸ்ரோத்திராதி லக்ஷணமான பிரஹ்மத்தை விசேஷமாக காண்பிப்பீராக என்று கேட்ட சிஷ்யனுக்கு ஆச்சாரியார் கூறுகிறார். அதைக் காண்பிக்க முடியாது என்று. எதனால்? எனில் அங்கு கண் முதலியவைகள் செல்லாததினால் என்பது முன்பு கூறப்பட்டது போலாகும். இவ்வாறு இருக்கும் பொழுது இதை ஒருவருக்கு எவ்வாறு உபதேசம் செய்வது என்பது இந்த வாக்கியத்தின் விசேஷம். ஒரு குருவால் தன்னைத் தவிர வேறான சிஷ்யனுக்கு மற்றஎந்த விதி முறையால் உபதேசம் அதாவது பிரதிபாதனம்(விளக்குவான்) என்பது அபிப்ராயம்
अन्यदेव तद्विदितादथो अविदितादधि ।
इति शुश्रुम पूर्वेषां ये नस्तद्व्याचचक्षिरे ॥ ४ ॥
எவ்விதமாகவாவது ப்ரஹ்மத்தை போதியுங்கள் என்று கேட்டதற்கு ஆச்சாரியார் கூறுகிறார். அறிந்ததைத் காட்டிலும் வேறு, அறியாததைக் காட்டிலும் மேலே (தாண்டி இருக்கிறது) என்றஆகமப்படி அறிந்ததைக் காட்டிலும், அறியாததைக் காட்டிலும் வேறு ஆகும். அது சர்வாத்மாவாய் இருப்பதால் எவன் ஞாதாவோ அவனே அவன். சர்வாத்மாவாய் இருப்பதால் அறிபவனை அறிவதற்கு வேறு ஒரு அறிபவன் இல்லாததினால் அறிவதைக் காட்டிலும் வேறு. “स वेत्ति वेद्यं न च तस्यास्ति वेत्ता” (ச வேத்தி வேத்யம் ந ச தஸ்யாஸ்த்தி வேத்தா) அறிய வேண்டியதை அறிந்தவனை அறிவதற்கு வேறு வேத்தா(அறிபவன்) தேவையில்லை என்று “ஸ்வேத உபநிஷத் வாக்கியம்” “विज्ञातारमरे केन विजानीयात्” (விக்ஞாதாரமரே கேன விஜாநீயாத்) அரே! அறிபவனை யார் அறிவார் என்று வாஜசனேய வாக்கும் நன்றாக வியக்தமாக அறியப்படுவதால் அது பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறு என்பது அபிப்ராயம். எது வியக்தமாக அறியப்படுகிறதோ அது வேறு விஷயமாய் இருப்பதால் அது அல்பமானது, விரோதமானது, அநேகமாக இருப்பதால் அநித்யமானது, அசுத்தமானது ஆகையால்தான் வியக்தமாய் அறியப்படுவதால் அதைக்காட்டிலும் வேறானது பிரஹ்மம் என்று சித்திக்கிறது.
अस्तु तर्ह्यविदितम् ।
அவ்வாறானால் ப்ரஹ்மம் அறியப்படாததாகுமே?
न, विज्ञानानपेक्षत्वात् । यद्ध्यविदितं तद्विज्ञानापेक्षम् । अविदितविज्ञानाय हि लोकप्रवृत्तिः । इदं तु विज्ञानानपेक्षम् । कस्मात् ? विज्ञानस्वरूपत्वात् । न हि यस्य यत्स्वरूपं तत्तेनान्यतोऽपेक्ष्यते । न च स्वत एव वापेक्षा, अनपेक्षमेव सिद्धत्वात् । न हि प्रदीपः स्वरूपाभिव्यक्तौ प्रकाशान्तरमन्यतोऽपेक्षते, स्वतो वा । यद्ध्यनपेक्षं तत्स्वत एव सिद्धम् , प्रकाशात्मकत्वात् । प्रदीपस्यान्योऽपेक्षितोऽप्यनर्थकः स्यात् , प्रकाशे विशेषाभावात् । न हि प्रदीपस्य स्वरूपाभिव्यक्तौ प्रदीपप्रकाशोऽर्थवान् । न चैवमात्मनोऽन्यत्र विज्ञानमस्ति, येन स्वरूपविज्ञानेऽप्यपेक्ष्येत । विरोध इति चेत् , न ; अन्यत्वात् ।
அது பொருந்தாது. ஏன் எனில் ப்ரஹ்மத்தை அறிவதற்கு ஒன்றையும் அபேக்ஷிக்கவில்லை. எது அறியப்படாமல் இருக்கிறதோ அந்த வஸ்து விக்ஞானத்தை(அறிவை) அபேக்ஷிக்கிறது. அறியாத வஸ்துவை அறிவதற்கல்லவா உலகத்தில் பிரவிர்த்தி ஏற்படுகிறது. இதுவோ விக்ஞானத்தை அபேக்ஷிக்கவில்லை. ஏன் எனில் விக்ஞான சொரூபமாய் இருப்பதால் (அறிவு சொரூபமாய் இருந்ததால்) எதற்கு அது சொரூபமோ அது அதனால் வேறு ஒன்றைஅபேக்ஷிக்காது, தன்னை அபேக்ஷிக்கவில்லை. ஆகையால் அதற்கு அனபேக்ஷிதத் தன்மையே சித்திக்கிறது. தீப சொரூபம் விளங்குவதற்கு வேறு பிரகாசத்தையோ, தன்னையோ அபேக்ஷிக்கவில்லை. எது அனபேக்ஷக வஸ்துவோ அது ஸ்வதஸ்சித்தமாகவே இருக்கிறது. பிரகாசத்திற்கு தனியாக ஒரு விசேஷமும் இல்லாததினால் தீபமானது பிரகாசாத்மகமாக இருப்பதால் மற்றொரு பிரகாசத்தை ஆஸ்ரியத்தல் என்பது அர்த்தமற்றதாகும். அவ்வாறேதீபத்தின் ஸ்வரூப விளக்கத்தில் தீபபிரகாசமானது அர்த்தமற்றதாகும்.அவ்வாறேஆத்மாவை விட வேறு ஒரு விக்ஞானம் இல்லை. ஆகையால் ஆத்மஸ்வரூப ஞானத்தின் பொருட்டு அபேக்ஷிக்கிறது. இதனால் விரோதம் உண்டாகுமே எனில் அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன் எனில் ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் ஞானம் வேறு அல்ல.
(பூர்வ) விஞ்ஞான சொரூபமாய் இருப்பதால் சொரூபத்தை அறிவதற்கு வேறு விக்ஞானத்தை (அறிவை) அபேக்ஷிக்காது என்று கூறுவது அசத்தாகும். ஆத்மாவிடத்தில் விபரீதஞானம், சம்யக்ஞானம் இரண்டும் நான் ஆத்மாவை அறியவில்லை என்பதிலிருந்து தெரிகிறதல்லவா? சுருதியிலும் “तत्वमसि” (தத்துமஸி) (சாந்தோக்கியம்) நீ அதுவாய் இருக்கிறாய், “आत्मानमेवावेत्” (ஆத்மானமேவாவே) (ப்ருஹ) ஆத்மாவை அறியவேண்டும். “एतं वै तमात्मानं विदित्वा” (ஏதம்வை தமாத்மானம் விதித்வா) (ப்ருஹ) இந்த அந்த ஆத்மாவை அறிந்து, என்று எல்லா சுருதிகளிலும் ஆத்மாவை அறிவதற்கு மற்றொரு ஞானத்தை அபேக்ஷிப்பது காணப்படுகிறது. ஆகையால் பிரத்யக்ஷத்திற்கும், ஸ்ருதிக்கும் விரோதமாகுமே எனில்.
न ; कस्मात् ? अन्यो हि स आत्मा बुद्ध्यादिकार्यकरणसङ्घातात्माभिमानसन्तानाविच्छेदलक्षणोऽविवेकात्मको बुद्ध्याद्यवभासप्रधानश्चक्षुरादिकरणो नित्यचित्स्वरूपात्मान्तःसारो यत्रानित्यं विज्ञानमवभासते । बौद्धप्रत्ययानामाविर्भावतिरोभावधर्मकत्वात्तद्धर्मतयैव विलक्षणमपि चावभासते ।
(சித்தாந்தி)அவ்வாறு இல்லை. ஏன் எனில் எங்கு அநித்தியமான விக்ஞானம் விளங்குகிறதோ புத்தி முதலிய காரிய கரணசங்காத அபிமான தொடர்ச்சியானது சேதம் அடையாததும், அவிவேக புத்தி உடையதாயும் புத்தியில் அவபாசிக்கிறதும் (பிரதிபலிக்கிறதும்) சக்ஷுராதி கரண ரூபமானதுமான அந்த ஜீவாத்மாவானது, எல்லோருள்ளும் சாரமாய் உள்ள நித்ய சித்சுவரூபமான ஆத்மாவைக் காட்டிலும் வேறு. புத்தியின் பிரத்யயங்கள் (விருத்திகள்)தோன்றி மறைவதாய் இருப்பதால் அதனுடைய தர்மங்கள் சுத்த ஆத்மாவைக் காட்டிலும் வேறாகவே இருக்கின்றது.
अन्तःकरणस्य मनसोऽपि मनोऽन्तर्गतत्वात् सर्वान्तरश्रुतेः । अन्तर्गतेन नित्यविज्ञानस्वरूपेण आकाशवदप्रचलितात्मना अन्तर्गर्भभूतेन स बाह्यो बुद्ध्यात्मा तद्विलक्षणः, अनग्निरिवाग्निः अर्चिर्भिरिवाग्नेः प्रत्ययैराविर्भावतिरोभावधर्मकैर्विज्ञानाभासरूपैरनित्यैः अनित्यविज्ञान आत्मा सुखी दुःखी इत्यभ्युपगतो लौकिकैः, अतोऽन्यो नित्यविज्ञानस्वरूपादात्मनः । तत्र हि विज्ञानापेक्षा विपरीतज्ञानत्वं चोपपद्यते, न पुनर्नित्यविज्ञाने ।
அந்தக்கரணமாகிய மனத்திற்கும் மனமாக ஊடுறுவி இருப்பதால் ஆன்மாவை சர்வாந்தரம் என்று சுருதியில் கூறப்பட்டுள்ளது. அந்தர்கதமாயும், நித்யவிஞ்ஞான சொரூபமாயும், ஆகாயம் போல் சலனமற்று ஆத்மா உள்ளே கர்பரூபமாயும், வெளியில் புத்தியாத்மாவாய் அதற்கு விலக்ஷணமாகஅக்னியில் உள்ள ஜுவாலையைப் (வெளிச்சம்) போல் பிரத்யயங்களால் (விருத்திகளால்) வெளிக்கிளம்பியும், உள் அடங்கியதுமான தர்மங்களால் விக்ஞான ஆபாசரூப அநித்யவிக்ஞான ரூப ஆத்மா(ஜீவாத்மா) யோகிகளால் சுகி, துக்கி எனப்படுகிறார்கள். ஆகையால் நித்யவிஞ்ஞான ஸ்வரூபமாய் ஆத்மா இருப்பதால் அந்த ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறு, அங்குதான் ஞானத்தின் அபேக்ஷயைும், விபரீத ஞானமும் உண்டாகும். ஆனால் நித்யவிக்ஞான சுவரூபத்திற்கு கிடையாது.
(பூர்வ) ஆத்மாவையே அறிய வேண்டும்(பிருஹ-உப) என்பது முதலியவைகளால் நித்யஞான சொரூபமாய் இருத்ததால் சூரியனை மற்றொன்றால் பிரகாசம் செய்ய முடியாததால் அதனுடைய அர்த்த ஞானத்தை போதித்தல் அநர்த்தமாகும். ஆகையால் “தத்துவமசி” என்றமஹாவாக்கியமும் ஞான உபதேசத்திற்கு பொருந்தாது எனில்.
न ; लोकाध्यारोपापोहार्थत्वात् । सर्वात्मनि हि नित्यविज्ञाने बुद्ध्याद्यनित्यधर्मा लोकैरध्यारोपिता आत्माविवेकतः ; तदपोहार्थो बोधोपदेशो बोधात्मनः । तत्र च बोधाबोधौ समञ्जसौ । अन्यनिमित्तत्वादुदक इवौष्ण्यमग्निनिमित्तम् । रात्र्यहनी इवादित्यनिमित्ते
(சித்தாந்தி) அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன் எனில் லோகத்தின் அத்யாரோபத்தைப் போக்குவதாலாகும். உலகத்தோர்களால் ஆத்மாவின் அவிவேகத்தால் சர்வாத்மாவாயும், நித்ய விக்ஞான சொரூபமாயுமுள்ள ஆத்மாவிடத்தில் புத்தி முதலிய அநித்ய தர்மங்கள் அத்யாரோபம் செய்யப்பட்டுள்ளன, அதை நீக்குவதற்காகவே ஞானாத்மாவின் ஞான உபதேசமாகும். இங்கு போதம், அபோதம், இரண்டும் பொருந்தும். எவ்வாறு எனில் அக்னியின் காரணமாக தண்ணீரில் உஷ்ணமும், சூரியனின் காரணமாக இரவும்,பகலும் போல அந்நிய நிமித்தமாய் இருப்பதாலாகும்.
लोके नित्यावौष्ण्यप्रकाशावग्न्यादित्ययोरन्यत्र भावाभावयोः सनिमित्तत्वादनित्याविवोपचर्येते । धक्ष्यत्यग्निः प्रकाशयिष्यति सविता इति तद्वत् । एवं च सुखदुःखबन्धमोक्षाद्यध्यारोपो लोकस्य तदपेक्ष्य
‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) ‘आत्मानमेवावेत्’ इत्यात्मावबोधोपदेशिन्यः श्रुतयः केवलमध्यारोपापोहार्थाः ।
உலகத்தில் நித்யமாய் உஷ்ணம் பிரகாசம் உடைய அக்னி, சூரியன் இவைகள் மற்றஇடத்தில் பாவ, அபாவத்தின் காரணமாக அநித்தியம் போல் தோன்றுகிறது. அக்னி சூட்டை உண்டு பண்ணப்போகிறது, சூரியன் பிரகாசிக்கச் செய்யப்போகிறது என்பது போல், அவ்வாறே உலகத்தினுடைய சுக,துக்க பந்தமோக்ஷங்கள் முதலியவை ஆரோபமாகும். அதைக் குறித்தே தத்துவமசி, “ஆத்மானமேவாவேத்” (அதுவாய் நீ இருக்கிறாய்) (ஆத்மாவையே அறிய வேண்டும்) என்ற ஆத்ம பாவத்தின் ஞானோபதேசத்தால் சுருதிகள் கேவலம் அத்யாரோபத்தை நீக்குவதின் பொருட்டேயாகும்.
यथा सवितासौ प्रकाशयत्यात्मानम् इति तद्वत् बोधकर्तृत्वं च नित्यबोधात्मनि । तस्मादन्यदविदितात् । अधिशब्दश्चान्यार्थे । यद्वा यद्धि यस्याधि तत्ततोऽन्यत्सामर्थ्यात् , यथाधि भृत्यादीनां राजा । अव्यक्तमेवाविदितं ततोऽन्यदित्यर्थः ।
எவ்வாறு சூரியன் தன்னைத்தானே பிரகாசிக்கச் செய்கிறதோ அது போல் போதம், அபோதகர்த்திருத்துவம் நித்யாத்மாவிடம் இருக்கிறது. ஆகையால் அறியாததைக் காட்டிலும் வேறு, அதி (अधि) சப்தம் வேறு என்றஅர்த்தத்தை உடையது. அல்லது எது, எதற்கு மேலோ, அது அதைக் காட்டிலும் வேறாகும், எவ்வாறு எனில் அதி(மேலே) என்பது பணியாளர்களுக்கு மேலே ராஜா என்பது போலாகும். அறியப்படாத பொருள் அவ்யக்த்தமேயாகும் என்பது பொருள்
विदितमविदितं च व्यक्ताव्यक्ते कार्यकारणत्वेन विकल्पिते, ताभ्यामन्यद्ब्रह्म विज्ञानस्वरूपं सर्वविशेषप्रत्यस्तमितमित्ययं समुदायार्थः । अत एवात्मत्वान्न हेय उपादेयो वा । अन्यद्ध्यन्येन हेयमुपादेयं वा’ न तेनैव तद्यस्य कस्यचिद्घेयमुपादेयं वा भवति । आत्मा च ब्रह्म सर्वान्तरत्वादविषयः । अतोऽन्यस्यापि न हेयमुपादेयं वा । अन्याभावाच्च ।
அறியப்படுகிறது என்றும், அறியப்படாதது என்றும் வியக்தம், அவ்யக்தம் என்றும் காரிய காரணத்துவமாக கல்பிக்கப்படுகிறது. அவ்விரண்டைக் காட்டிலும் வேறானது பிரஹ்மம். அந்த பிரஹ்மமானது விக்ஞான ஸ்வரூபம் எல்லா விசேஷணங்களும் அற்றது என்பது பொதுவான அர்த்தமாகும். அதனாலேயே ஆத்மாவாய் இருப்பதால் ஹேயோபாதேயம் (தள்ளவோ, எடுக்கவோ முடியாது) அற்றது. வேறு ஒன்றை, வேறு ஒன்றால் தள்ளவோ,கொள்ளவோ முடியும், ஆகையால் எவர் ஒருவருக்கும் ஆத்மாவின் ஹேயோபாதேயம் சம்பவியாது. சர்வாத்மாவாய் இருப்பதால் ஆத்மா பிரஹ்மம். அவிஷயமாய் இருப்பதால் வேறு ஒன்றுக்கும் ஹேயோபாதேயம் ஆகாது. மேலும் அதைத் தவிர வேறு இல்லை.
इति शुश्रुम पूर्वेषामित्यागमोपदेशः । व्याचचक्षिरे इत्यस्वातन्त्र्यं तर्कप्रतिषेधार्थम् । ये नः तत् ब्रह्म उक्तवन्तः ते तमेवागमं ब्रह्मप्रतिपादकं व्याख्यातवन्तः, न पुनः स्वबुद्धिप्रभवेण तर्केणोक्तवन्त इति तस्यैव द्रढिम्ने आगमपारम्पर्याविच्छेदं दर्शयति विद्यास्तुतये । तर्कस्त्वनवस्थितो भ्रान्तोऽपि भवतीति ॥
“इति शुश्रुम पूर्वेषाम्” (இதி சுச்ருமபூர்வேஷாம்) என்றது ஆகம உபதேசம். व्याचचक्षिर (வ்யாசசக்ஷிரே) என்று சுதந்திரமற்றதன்மையையும், தர்க்கத்தை நிஷேதம் செய்வதற்காகவும் கூறப்பட்டது. அவர்கள் (ஆசார்யர்கள்) எங்களுக்கு ப்ரஹ்மத்தை உபதேசித்தார்கள். அவர்கள் எப்பொழுதும் ப்ரஹ்மத்தை பற்றியே வியாக்யானம் செய்தார்கள். மேலும் தங்களுடைய சுய புத்தியினாலோ, தர்க்கத்தினாலோ, கூறவில்லை என்று ஆகமத்தினுடைய பாரம்பரியத்தின் விச்சேத மற்றதன்மையை வித்யாஸ்துதியின் பொருட்டு காண்பிக்கின்றார். தர்க்கமானது அநவஸ்தாதோஷமுடைய பிராந்தியாகும் என்பதால் இவ்வாறு கூறுகிறார்.
यद्वाचानभ्युदितं येन वागभ्युद्यते ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ५ ॥
यद्वाचेति मन्त्रानुवादो दृढप्रतीत्यै । ‘अन्यदेव तद्विदितात्’ इति योऽयमागमार्थो ब्राह्मणोक्तः अस्यैव द्रढिम्ने इमे मन्त्राः यद्वाचा इत्यादयः पठ्यन्ते ।
यद्वाचा (யத்வாச்சா) முதலிய மந்திரங்களினால் உபதேசிக்கப்பட்ட ஆத்ம தத்துவத்தை திடமாக புரிந்துகொள்வதற்காக மேலும் கூறப்படுகிறது. “அது அறிந்ததைக் காட்டிலும் வேறு” என்று எது கூறப்பட்டதோ அந்த ஆகமத்தின் தாத்பர்யத்தை இந்த பிராஹ்மணத்தினால் முன்பு கூறப்பட்டது. அதை திடப்படுத்துவதற்காக यद्वाचा (யத்வாச்சா) முதலிய மந்திரங்களால் கூறப்படுகிறது.
यत् ब्रह्म वाचा शब्देन अनभ्युदितम् अनभ्युक्तम् , अप्रकाशितमित्येतत् । येन वागभ्युद्यत इति वाक्प्रकाशहेतुत्वोक्तिः । येन प्रकाश्यत इति वाचोऽभिधानस्य अभिधेयप्रकाशकत्वस्य हेतुत्वमुच्यते ब्रह्मणः ।
எந்த பிரஹ்மமானது வாக்கினால் அதாவது சப்தத்தினால் பிரகாசப்படுத்த(தெரியப்படுத்த) முடியாது என்று கூறி அந்த வாக்கின் பிரகாசத்திற்கு எது காரணம் என்று கூறப்படுகிறது. எதனால் பிரகாசப்படுத்தப்படுகிறது என்று கூறி வாக்கினால் உச்சரிக்கப்படுவதின் उच्चारण வாச்சியத்தை அதாவது அபிதேயத்தை பிரகாசப்படுத்துவதற்கு பிரஹ்மமே காரணம் என்று கூறப்படுகிறது. (அதாவது வாக்கிற்கு பிரஹ்மத்தின் காரணமாகவே ஒரு பொருளை பிரகாசப்படுத்தும் சாமர்த்தியம் ஏற்படுகிறது என்பது கருத்து)
இந்த வாக்கானது எதனால் பிரகாசப் படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டதோ அதுவே பிரஹ்மம் என்று அறி. பிரஹ்மம் அவிஷயமானதால் ஆத்மாவிலேயே நிலைபெறச் செய்கிறது வேதவாக்கியம். எதனால் வாக்கால் அறியமுடியாதோ எதன் உதவியால் வாக்கானது செயல்படுகிறதோ அந்த பிரஹ்மம் அவிஷயமாய் இருப்பதால் அதை அறிவதற்கு வேறு வஸ்துவின் தேவையை நீக்கி சுவ (தன்) ஆத்மாவிடத்திலேயே நிலை பெற்றிருக்கிறதோ அதுவே பிரஹ்மம் என்று நீ அறி என்று ஆம்நாயமானது உபரமத்தை அடையச்செய்கிறது. “இது அல்ல” என்பது உபாஸ்யத்தை பிரதிஷேதம் செய்கிறது (நீக்குகிறது)मन्त्रम् ५
यन्मनसा न मनुते येनाहुर्मनो मतम् ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ६ ॥
यच्चक्षुषा न पश्यति येन चक्षूंषि पश्यति ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ७ ॥
यच्छ्रोत्रेण न शृणोति येन श्रोत्रमिदं श्रुतम् ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ८ ॥
यत्प्राणेन न प्राणिति येन प्राणः प्रणीयते ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ९ ॥
यन्मनसा என்பன முதலியவைகள் சமான அர்த்தமுடையவை. மனம் அறியப்பட்டது என்று எந்த நித்யவிக்ஞான ஸ்வரூபமாகிய ப்ரஹ்மத்தால் மனமும் அறியப்படுகிறது (விஷயப்படுத்தப்பட்டது) என்பதால் அந்த ப்ரஹ்மமானது எல்லா கரணங்களுக்கும் அவிஷயமாகிறது. அந்தக்கரணங்களின் வியாபாரங்களும், விஷயங்களும் நித்ய விக்ஞான ஸ்வரூப அவபாசத்தினால் பிரகாசிக்கின்றன என்பது ஸ்லோகத்தின் அர்த்தமாகும். க்ஷதே்திரம், க்ஷதே்ரக்ஞன் அவ்வாறேஎல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்கிறது என்பது கீதாவாக்கியம். “तस्य भासा” அதனுடைய பிரகாசத்தால் என்பது அதர்வணத்தில் உள்ள முண்டகோபநிஷத் வாக்கியம். எதனால் प्राण என்று குறிப்பிட்டதால் கிரியாசக்தியும் ஆத்மவிக்ஞான நிமித்தத்தாலே செயல்படுகிறது என்பது பொருள்.
इति प्रथमखण्डभाष्यम् ॥