द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

केनोपनिषद्वाक्यभाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

கேநோபநிஷத்வாக்யபாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

समाप्तं कर्मात्मभूतप्राणविषयं विज्ञानं कर्म चानेकप्रकारम् , ययोर्विकल्पसमुच्चयानुष्ठानाद्दक्षिणोत्तराभ्यां सृतिभ्यामावृत्त्यनावृत्ती भवतः । अत ऊर्ध्वं फलनिरपेक्षज्ञानकर्मसमुच्चयानुष्ठानात्कृतात्मसंस्कारस्य उच्छिन्नात्मज्ञानप्रतिबन्धकस्य द्वैतविषयदोषदर्शिनः निर्ज्ञाताशेषबाह्यविषयत्वात् संसारबीजमज्ञानमुच्चिच्छित्सतः प्रत्यगात्मविषयजिज्ञासोः ‘केनेषितम् . . . ’ इत्यात्मस्वरूपतत्त्वविज्ञानाय अयमध्याय आरभ्यते । तेन च मृत्युपदमज्ञानमुच्छेत्तव्यम् ; तत्तन्त्रो हि संसारो यतः । अनधिगतत्वादात्मनो युक्ता तदधिगमाय तद्विषया जिज्ञासा ।
(அனு) எந்த இரண்டினை (கர்ம, உபாசனை) தனித்தனியாகவோ, இரண்டும் சேர்ந்து சமுச்சயமாகவோ அனுஷ்டிப்பதால் தக்ஷிண,உத்தராயண மார்கத்தால் ஆவிர்த்தி (திரும்பி ஜன்மம் எடுத்தல்) அநாவிர்த்தி (க்ரமமுக்தி) உண்டாகிறதோ அந்த கர்மாத்ம பூத பிராணவிஷயமான விக்ஞானமும், கர்மமும் அநேக விதமாக கூறி முடிக்கப்பட்டுள்ளது. அதற்குமேல் பலத்தில் இச்சை அற்று ஞான கர்ம சமுச்சயத்தை அனுஷ்ட்டித்ததால் சித்த சுத்தியை அடைந்தவனும், ஆத்மஞானத்தின் தடைகள் நீங்கியவனும், த்வைத விஷயத்தில் தோஷ தர்சனமுடையவனும், பாஹ்ய விஷயங்களில் முற்றிலும் அதன் தன்மையை அறிந்தால் சம்சாரத்திற்கு காரணமான அக்ஞானத்தை நீக்குவதற்காக ப்ரத்யக் ஆத்மவிஷயத்தை அறிந்து கொள்வதில் இச்சை உள்ளவனுக்கு केनेषितम् (கேனஈஷிதம்) என்று ஆத்மஸ்வரூப தத்துவம் அறிவதற்காக இந்த அத்தியாயம் ஆரம்பிக்கப்படுகிறது. அந்த ஆத்ம ஸாக்ஷாத்காரத்தால் தான் மிருத்யுவிற்கு (ஸம்ஸாரத்திற்கு) காரணமான அக்ஞானம் நாசமாக வேண்டும். ஏனெனில் அக்ஞானத்தினால்தான் ஸம்ஸாரம் (சுகதுக்கானுபவம்) ஏற்படுகிறது. ஆத்மாவை அறியாதிருப்பதால், அதையறிவதற்காக அதைப் பற்றிய ஜிக்ஞாசையானது பொருத்தமுள்ளதாகிறது.
कर्मविषये चानुक्तिस्तद्विरोधित्वात् । अस्य विजिज्ञासितव्यस्यात्मतत्त्वस्य कर्मविषयेऽवचनं कस्मादिति चेत् , आत्मनो हि यथावद्विज्ञानं कर्मणा विरुध्यते । निरतिशयब्रह्मस्वरूपो ह्यात्मा विजिज्ञापयिषितः, ‘तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदम्’ (के. उ. १ । ४) इत्यादिश्रुतेः । न हि स्वाराज्येऽभिषिक्तो ब्रह्मत्वं गमितः कञ्चन नमितुमिच्छति । अतो ब्रह्मास्मीति सम्बुद्धौ न कर्म कारयितुं शक्यते । न ह्यात्मानमवाप्तार्थं ब्रह्म मन्यमानः प्रवृत्तिं प्रयोजनवतीं पश्यति । न च निष्प्रयोजना प्रवृत्तिः । अतो विरुध्यत एव कर्मणा ज्ञानम् । अतः कर्मविषयेऽनुक्तिः । विज्ञानविशेषविषयैव जिज्ञासा ।
கர்ம காண்டத்தில் ஆத்மதத்துவத்தின் நிரூபணம் கர்ம விஷயத்திற்கு விரோதமாய் இருப்பதால் கூறப்படவில்லை. அறியப்படவேண்டிய ஆத்மதத்துவம் கர்மகாண்டத்தில் கூறப்படவில்லை.ஏன் எனில் ஆத்மாவின் யதார்த்த ஞானம் கர்மத்திற்கு விரோதமானதாகும். நிரதிசய ப்ரஹ்ம ஸ்வரூபமாகிய ஆத்மாவே அறியப்படவேண்டியது. “நீ அந்த ப்ரஹ்மத்தை அறி, எந்த லோகத்திற்காக உபாசனை செய்கிறாயோ அது ப்ரஹ்மம் அல்ல” (“के.उप”) என்பது முதலிய சுருதியில் கூறப்பட்டுள்ளது. ஸ்வராஜ்யத்தில் நனைந்து பிரஹ்மத்துவம் அடைந்தவன் ஒருவரையும் வணங்க இச்சைப்படுவதில்லை. ஆகையால் ப்ரஹ்மமாய் இருக்கிறேன் என்று அறிந்தவன் கர்மத்தை செய்விக்கமாட்டான்.நான் பிரஹ்மம் என்று அறிந்தவன் ஆத்மாவை அடைவதற்காக பிரவிர்த்திப்பதில் ப்ரயோஜனத்தை காணமாட்டான். பிரவிர்த்தியானது நிஷ்ப்ரயோஜனமாகாது. ஆகையால் கர்மமானது ஆத்ம ஞானத்திற்கு விரோதமானது, ஆகையால் கர்மகாண்டத்தில் ஆத்மஞானத்தைப் பற்றி கூறப்படவில்லை. ஜிக்ஞாசா என்பது விக்ஞான விசேஷ விஷயமாகும்.
कर्मानारम्भ इति चेत् , न । निष्कामस्य संस्कारार्थत्वात् ।
கர்மா ஆரம்பிக்கவேண்டியதில்லையே எனில் அவ்வாறு அல்ல, நிஷ்காம கர்மத்தினால் சித்த சுத்தி உண்டாகிறது.
यदि ह्यात्मविज्ञानेन आत्माविद्याविषयत्वात्परितित्याजयिषितं कर्म, ततः ‘प्रक्षालनाद्धि पङ्कस्य दूरादस्पर्शनं वरम्’ ( ? ) इत्यनारम्भ एव कर्मणः श्रेयान् अल्पफलत्वात् आयासबहुलत्वात् तत्त्वज्ञानादेवं च श्रेयःप्राप्तेः इति चेत् ।
(பூர்வ) ஆத்மக் ஞானத்தினாலேயே ஆத்மாவை அறியமுடியாத அவித்யா விஷயமாகிய கர்மாவை பரித்யாகம் செய்வதில் இஷ்டம். எவ்வாறெனில் “சகதியைச் சுத்தம் செய்வதை விட தூரத்தில் இருந்துகொண்டு அதைத் தொடாமல் இருப்பதே மேலாகும்” (म.वन.२/४९) என்பதால் கர்மாவை ஆரம்பிக்காமல் இருப்பதே மேல். ஏன் எனில் அல்பபலனும், மிகுந்த ஆயாசத்துடன் செய்ய வேண்டியதாயும் உள்ளதால் தத்வக்ஞானத்தினாலேயே ச்ரேயஸ் அடையப்படுவதால் எனில்
सत्यम् एतदविद्याविषयं कर्म अल्पफलत्वादिदोषवद्बन्धरूपं च सकामस्य ; ‘कामान्यः कामयते’ (मु. उ. ३ । २ । २) ‘इति नु कामयमानः’ (बृ. उ. ४ । ४ । ६) इत्यादिश्रुतिभ्यः । न निष्कामस्य । तस्य तु संस्कारार्थान्येव कर्माणि भवन्ति तन्निर्वर्तकप्राणविज्ञानसहितानि । ‘देवयाजी श्रेयानात्मयाजी वा’इत्युपक्रम्य ‘आत्मयाजी तु करोतीदं मेऽनेनाङ्गं संस्क्रियते’ इति संस्कारार्थमेव कर्माणीति वाजसनेयके ; ‘महायज्ञैश्च यज्ञैश्च ब्राह्मीयं क्रियते तनुः । ’ (मनु. २ । २८)‘यज्ञो दानं तपश्चैव पावनानि मनीषिणाम्’ (भ. गी. १८ । ५) इत्यादिस्मृतेश्च ।
வாஸ்தவமே , சகாமனுக்கு அவித்யா விஷயமான கர்மாவானது அல்பபலம் முதலிய தோஷங்களும், பந்தரூபமானதும் ஆகும்.“காமனைகளை எவன் விரும்புகிறானோ” (மு--உப) “இவ்வாறு காமனை செய்பவன்” முதலிய ச்ருதிகளால் நிஷ்காமனுக்கு அல்ல என்று அறிகிறோம். நிஷ்காமனுக்கு சித்த சுத்தியின் பொருட்டாகிறது. அந்த நிஷ்காமனுக்கு கர்மாக்கள் செய்வதற்கு ஆஸ்ரயமான விக்ஞானத்துடன் கூடிய (உபாசனையுடன் கூடிய) கர்மாக்கள் சித்த சுத்தியின் பொருட்டாகிறது. “தேவயாஜீ மேலானவனா அல்லது ஆத்மயாஜீயா இவ்வாறு ஆரம்பித்து ஆத்மயாஜீ” இதனால்  என்னுடைய அந்த அங்கம் (அந்தக்கரணம்) சுத்தமாகட்டும் என்று சித்த சுத்தியின் பொருட்டே இந்த கர்மாக்கள் என்று வாஜசனேயகத்தில் உள்ளது.“ இந்த சரீரம் மஹாயக்ஞம் மேலும் யக்ஞ மூலமாக ப்ரஹ்ம ஞானத்திற்கான யோக்யதையையும் அடையச் செய்கிறது.” “யக்ஞம், தானம், தபஸ் இவைகள் மனிதர்களை புனிதமாக்குகிறது.” (கீதா) முதலிய ஸ்மிருதிகளாலும் சித்தமாகிறது.
प्राणादिविज्ञानं च केवलं कर्मसमुच्चितं वा सकामस्य प्राणात्मप्राप्त्यर्थमेव भवति । निष्कामस्य त्वात्मज्ञानप्रतिबन्धकनिर्मृष्ट्यै भवत्यादर्शनिर्मार्जनवत् । उत्पन्नात्मविद्यस्य त्वनारम्भः, निरर्थकत्वात् । ‘कर्मणा बध्यते जन्तुर्विद्यया च विमुच्यते । तस्मात्कर्म न कुर्वन्ति यतयः पारदर्शिनः’ (मो. ध. २४१_७) इति, क्रियापथश्चैव पुरस्तात्संन्यासश्च तयोः संन्यास एवात्यरेचयत् इति, ‘त्यागेनैके’ (तै. ना. २८) ‘नान्यः पन्था विद्यते’ (श्वे. उ. ३ । ८) इत्यादिश्रुतिभ्यश्च ।
சகாம புருஷனுக்கு பிராணாதி உபாஸனமானது தனியாகவோ கர்மாவுடன் கூடவோ பிராணாத்மாவை அடைவதற்குக் காரணமாகிறது. கண்ணாடியை சுத்தம் செய்வது போல் நிஷ்காம புருஷனுக்கு ஆத்மபிரதிபந்த நிவர்த்திக்குக் காரணமாகிறது. ஆத்ம ஞானம் அடைந்தவனுக்கு கர்மாவை ஆரம்பித்தல் பிரயோஜனமற்றதாகும். “கர்மாவினால் பந்தமடைகிறான்,வித்தையால் ஜீவன் முக்தி அடைகிறான். ஆகையால் பாரதர்சிகளான யதிகள் கர்மாவை செய்வதில்லை” (महा.शा.२४२/७) என்றும்  “முதலில் கர்மாவும் பின் சந்நியாசமும் கைக்கொள்ளவேண்டும். அதில் சந்நியாசமே மிகவும் உத்கிருஷ்ட்டமானது”, என்றும், “த்யாகத்தினாலேயே” (कै.उ.१/२) வேறு மார்க்கமில்லை (श्वे.उ.३/८) என்பது முதலிய சுருதிகளால் அறிகிறோம்.
न्यायाच्च । उपायभूतानि हि कर्माणि संस्कारद्वारेण ज्ञानस्य । ज्ञानेन त्वमृतत्वप्राप्तिः, ‘अमृतत्वं हि विन्दते’ (के. उ. २ । ४) ‘विद्यया विन्दतेऽमृतम्’ (के. उ. २ । ४) इत्यादिश्रुतिस्मृतिभ्यश्च । न हि नद्याः पारगो नावं न मुञ्चति यथेष्टदेशगमनं प्रति स्वातन्त्र्ये सति ।
யுக்தியினாலும் கர்மாக்கள் சித்தசுத்தி மூலமாக ஞானத்திற்கு உபாயங்களாகின்றன.“அம்ருதத்தை அடைகிறான்” (के.उ.२/४) “ஞானத்தினால் (ப்ரஹ்ம வித்தையால்) அம்ருதத்தை அடைகிறான்.” என்பது முதலிய ச்ருதிஸ்மிருதிகளாலும் அறிகிறோம். ஸ்வதந்திரமாக தான் விரும்பிய தேசம் செல்பவன். நதியை கடந்தபின் ஓடத்தை விடாமல் இருப்பது இல்லை அல்லவா?(ஓடத்தை விட்டுவிடுவான் அல்லவா)
न हि स्वभावसिद्धं वस्तु सिषाधयिषति साधनैः । स्वभावसिद्धश्चात्मा । तथा नापिपयिषितः, आत्मत्वे सति नित्याप्तत्वात् । नापि विचिकारयिषितः, आत्मत्वे सति नित्यत्वादविकारित्वादविषयत्वादमूर्तत्वा्च ;
ஸ்வபாவசித்தமான வஸ்து சாதனைகளால் அடைய விரும்பப்படுவது இல்லை.ஏன் எனில் ஆத்மா சுவபாவமாகவே சித்தித்திருக்கிறது. நித்யமாய் ஆத்மஸ்வரூபமாகவே இருப்பதால் அடையவும் விரும்பப்படுவதுமில்லை. இவ்வாறு அதற்கு விகாரமும் விரும்பப்படவில்லை. ஏனெனில் ஆத்மா  நித்தியமாயும் அவிகாரியாயும்,அவிஷயமாயும், அமூர்த்தமாயும் இருக்கின்றது.
श्रुतेश्च ‘न वर्धते कर्मणा’ (बृ. उ. ४ । ४ । २३) इत्यादि ; स्मृतेश्च ‘अविकार्योऽयमुच्यते’ (भ. गी. २ । २५) इति । न च सञ्चिस्कीर्षितः, ‘शुद्धमपापविद्धम्’ (ई. उ. ८) इत्यादिश्रुतिभ्यः । अनन्यत्वाच्च । अन्येनान्यत्संस्क्रियते । न चात्मनोऽन्यभूता क्रियास्ति । न च स्वेनैवात्मना स्वमात्मानं सञ्चिस्कीर्षेत् । न च वस्त्वन्तराधानं नित्यप्राप्तिर्वा वस्त्वन्तरस्य नित्या । नित्यत्वं चेष्टं मोक्षस्य । अत उत्पन्नविद्यस्य कर्मारम्भोऽनुपपन्नः । अतो व्यावृत्तबाह्यबुद्धेरात्मविज्ञानाय ‘केनेषितम्’ इत्याद्यारम्भः ॥
“ஆத்மா கர்மாக்களினால் வளர்வதில்லை” (बृ) முதலிய சுருதிகளாலும், “இது அவிகாரியம் எனப்படுகிறது.” என்ற(गी) ஸ்மிருதியினாலும் அறிகிறோம். “சுத்தமானது பாபம் அற்றது” (ई) என்றசுருதியினாலும் ஆத்மாவை சுத்தம் செய்ய வேண்டியதில்லை என்று அறிகிறோம். மேலும் தன்னைத் தவிர வேறு அற்றதாய் இருப்பதால் மற்றொன்றால் சுத்தம் செய்யக்கூடியதும் அல்ல. மேலும் ஆத்மாவைத் தவிர வேறு க்ரியை இல்லை. அவ்வாறேதன்னாலேயே தன் ஆத்மாவை சுத்தம் செய்து கொள்ள முடியாது. வஸ்துவைத் தவிர வேறானதை ஆராதனை செய்வதால் நித்யப்ராப்தி கிடையாது. வஸ்துவைத் தவிர வேறு ஒன்று நித்யமாகாது. மோக்ஷமானது நித்யமாய் இருப்பதே இஷ்டம். ஆகையால் ஆத்ம ஞானம் அடைந்தமையால் கர்மாக்கள் ஆரம்பிக்க வேண்டியதில்லை. ஆகையால் வெளி விஷயங்களில் புத்தி அற்றவன் ஆத்மாவை அறிந்து கொள்வதற்காக கேனேஷிதம் ‘केनेषितम्’ என்று ஆரம்பிக்கப்படுகிறது.
प्रवृत्तिलिङ्गाद्विशेषार्थः प्रश्न उपपन्नः । रथादीनां हि चेतनावदधिष्ठितानां प्रवृत्तिर्दृष्टा, न अनधिष्ठितानाम् । मनआदीनां च अचेतनानां प्रवृत्तिर्दृश्यते ; तद्धि लिङ्गं चेतनावतोऽधिष्ठातुरस्तित्वे । करणानि हि मनआदीनि नियमेन प्रवर्तन्ते ; तन्नासति चेतनावत्यधिष्ठातर्युपपद्यते । तद्विशेषस्य चानधिगमाच्चेतनावत्यधिष्ठातृसामान्ये चाधिगते विशेषार्थः प्रश्न उपपद्यते ।
ப்ரவிர்த்தி ரூபலிங்கத்தால் விசேஷமான தத்வ விஷயத்தில் ப்ரசன்னம் (கேள்வி) எழுகிறது. ரதம் முதலிய அசேதன பதார்த்தங்கள் சேதனமாகிய ஜீவர்களின் அதிகாரத்தால் (தூண்டுதலால்) பிரவிர்த்திக்கிறது. தூண்டுதல் இல்லாவிடில் ப்ரவிர்த்திப்பதில்லை. மனம் முதலிய அசேதனங்களின் ப்ரவிர்த்திக்காணப்படுகிறது. அந்த லிங்கத்தினால் சேதனமாகிய அதிஷ்ட்டா இருக்கிறது என்று அனுமானிக்கப்படுகிறது. மன முதலிய கரணங்கள் நியமமாக பிரவிர்த்திக்கிறது. அதனுடைய  ப்ரவிர்த்தி சேதன அதிஷ்ட்டாதா இல்லாமல் பிரவிர்த்திக்காது. இவ்வாறு சாமானிய சேதனத்தினுடைய ஞானம் இருந்தும் அதனுடைய விசேஷ ஞானம் ஏற்படுவதற்காக இந்த விசேஷமான கேள்வியானது எழுகிறது.
केनेषितं पतति प्रेषितं मनः केन प्राणः प्रथमः प्रैति युक्तः ।
केनेषितां वाचमिमां वदन्ति चक्षुःश्रोत्रं क उ देवो युनक्ति ॥ १ ॥
केनेषितं केनेष्टं कस्येच्छामात्रेण मनः पतति गच्छति, स्वविषये नियमेन व्याप्रियत इत्यर्थः । मनुतेऽनेनेति विज्ञाननिमित्तमन्तःकरणं मनः । प्रेषितमिवेत्युपमार्थः । न त्विषितप्रेषितशब्दयोरर्थाविह सम्भवतः । न हि शिष्यानिव मनआदीनि विषयेभ्यः प्रेषयत्यात्मा । विविक्तनित्यचित्स्वरूपतया तु निमित्तमात्रं प्रवृत्तौ नित्यचिकित्साधिष्ठातृवत् ।
केनेषितं  (கேனேஷிதம்)  யாருடைய  இச்சை மாத்திரத்தால் மனமானது पतति (பததி) தன்னுடைய விஷயங்களில் செயல்படுகிறது. எதனால் நினைக்கிறானோ அது விக்ஞான நிமித்த அந்தக்கரணமாகிய மனம் துாண்டப்பட்டது போல் இருக்கிறது என்று உபமான அர்த்தமாகக் கொள்ளவேண்டும். இஷிதம், ப்ரேஷிதம் என்ற இவ்விரண்டின் சப்தத்தின் அர்த்தம் இங்கு பொருந்தாது. (குருவானவர்) சிஷ்யர்களைப் பிரேரிப்பது போல் (கட்டளை இடுவது போல்) மனம் முதலியவைகளை ஆத்மா ப்ரேரிப்பது இல்லை. அநித்ய வஸ்துக்களைக் காட்டிலும் வேறானதும் நித்ய சுவரூபமான ஆத்மா சகோரபக்ஷியைப் போல் நிமித்த மாத்திரமாக இருந்துகொண்டு மன முதலியவைகளை ப்ரேரணை செய்கிறது. (சகோரபக்ஷி - ராஜாவிற்கு உணவு பரிமாறும் முன் அந்த உணவை சகோரபக்ஷி பார்த்த பின்பே ராஜாவிற்கு அளிக்கப்படும். ஏன் எனில் உணவில் விஷம் இருந்தால் அந்த சகோரப்பக்ஷியின் கண்கள் சிவப்பாகிவிடும். விஷத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே (சந்நிதிமாத்திரத்திலேயே) கண்களில் சிவப்பு வர்ணம் ஏற்படுவது போல் ஆத்மாவின் சந்நிதியில் மன முதலியவைகள் செயல்படுகின்றன.)
प्राण इति नासिकाभवः प्रकरणात् । प्रथमत्वं च क्रियायाः प्राणनिमित्तत्वात् । स्वतो विषयावभासमात्रं करणानां प्रवृत्तिः । चलिक्रिया तु प्राणस्यैव मनआदिषु । तस्मात्प्राथम्यं प्राणस्य । प्रैति गच्छति । युक्तः प्रयुक्त इत्येतत् । वाचो वचनं किंनिमित्तं प्राणिनाम् । चक्षुःश्रोत्रयोश्च को देवः प्रयोक्ता । करणानामधिष्ठाता चेतनावान्यः, स किंविशेषण इत्यर्थः ॥
இந்த இடத்தில் பிராணன் என்றால் மூக்கிலிருந்து உண்டாகும். மூச்சு கிரியைக்கு (செயலுக்கு) பிராணன் நிமித்தமாய் இருப்பதால் அதற்கு முதன்மை, கரணங்களுக்கு ஸ்வத: (தானாகவே) பிரவிர்த்தித்தல் என்பது விஷயங்களைப் பிரகாசப்படுத்துதல் மாத்திரமே. மனமுதலியவைகளின் சலனகிரியையும் பிராணனுடையதே. வாக் ஆனது எந்த நிமித்தத்தால் பிரேரிக்கப்பட்டு தன் செயலில் ஈடுபடுகிறது. பிராணிகளுடைய கண், காது முதலியவைகள் எந்த தேவன் பிரேரிக்கிறான்?  கரணங்களை (இந்திரியங்களை) தூண்டும் சேதனத்தை உடையவன் யார்? அவனுடைய விசேஷணம் என்ன? என்பது பொருள்.இவ்வாறு கேட்ட யோக்கியனான சிஷ்யனின் பொருட்டு குரு கூறிய பதிலாக அமைவது அடுத்த மந்திரம்.
श्रोत्रस्य श्रोत्रं मनसो मनो यद्वाचो ह वाचं स उ प्राणस्य प्राणः ।
चक्षुषश्चक्षुरतिमुच्य धीराः प्रेत्यास्माल्लोकादमृता भवन्ति ॥ २ ॥
‘श्रोत्रस्य श्रोत्रम्’ इत्यादिप्रतिवचनं निर्विशेषस्य निमित्तत्वार्थम् । विक्रियादिविशेषरहितस्यात्मनो मनआदिप्रवृत्तौ निमित्तत्वमित्येतत् ‘श्रोत्रस्य श्रोत्रम्’ इत्यादिप्रतिवचनस्यार्थः, अनुगमात् । अनुगतानि ह्यस्मिन्नर्थेऽक्षराणि ।
श्रोत्रस्य (ஸ்ரோத்திரஸ்ய) श्रोत्रम्  (ஸ்ரோத்ரம்) முதலிய பதில்கள் நிர்விசேஷ ஆத்மாவிற்கு நிமித்தத்வதைத் தெரிவிக்கின்றன. கிரியை முதலிய விசேஷ தர்மங்கள் அற்ற, ஆத்மா மன முதலியவைகளின் பிரவிர்த்திக்கு நிமித்தமாத்திரம் என்பதே இந்த ச்ரோத்திரத்தின் ச்ரோத்திரம்முதலிய பதில்களின் அர்த்தமாகும் என்பது பொருந்துகிறது. இங்கு இந்த அர்த்தத்தில் அக்ஷரங்கள் அதற்கு அனுசரணையாக இருக்கின்றன.
कथम् ? शृणोत्यनेनेति श्रोत्रम् । तस्य शब्दावभासकत्वं श्रोत्रत्वम् । शब्दोपलब्धृरूपतयावभासकत्वं न स्वतः श्रोत्रस्य ; अचिद्रूपत्वात् , आत्मनश्च चिद्रूपत्वात् ।
எவ்வாறு? அதனால் கேட்கப்படுவதால் ஸ்ரோத்ரம்(காது) அதனுடைய சப்தத்தை பிரகாசிக்கச் செய்வது ஸ்ரோத்ரத்துவம். அதற்கு சப்தத்தை கிரஹிக்கச் செய்யும் பிரகாசிக்கும் தன்மை அதற்கு ஸ்வயமாக கிடையாது. ஏன் எனில் ஸ்ரோத்திரமானது அசித் ரூபமாகும். ஆத்மாவே சித்ரூபமாகும்.
यच्छ्रोत्रस्योपलब्धृत्वेनावभासकत्वं तदात्मनिमित्तत्वाच्छ्रोत्रस्य श्रोत्रमित्युच्यते । यथा क्षत्रस्य क्षत्रम् , यथा वा उदकस्यौष्ण्यमग्निनिमित्तमिति दग्धुरप्युदकस्य दग्धाग्निरुच्यते उदकमपि ह्यग्निसंयोगादग्निरुच्यते, तद्वदनित्यं यत्संयोगादुपलब्धृत्वं तत्करणं श्रोत्रादि । उदकस्येव दग्धृत्वमनित्यं हि तत्र तत् । यत्र तु नित्यमुपलब्धृत्वमग्नाविवौष्ण्यं स नित्योपलब्धिस्वरूपत्वात् दग्धेवोपलब्धोच्यते । श्रोत्रादिषु श्रोतृत्वाद्युपलब्धिरनित्या, नित्या चात्मनि । अतः श्रोत्रस्य श्रोत्रमित्याद्यक्षराणामर्थानुगमादुपपद्यते निर्विशेषस्योपलब्धिस्वरूपस्यात्मनो मनआदिप्रवृत्तिनिमित्तत्वमिति । मनआदिष्वेवं यथोक्तम् ।
எது ச்ரோத்திரத்தை விஷயங்களைக் கிரஹிப்பதாய் செய்கிறதோ அது ஆத்மாவின் நிமித்தத்தால் ஆகும், ஆகையால் ஸ்ரோத்திரஸ்ய ஸ்ரோத்தரம் என்று கூறப்பட்டது. எவ்வாறு க்ஷத்திரியனுக்கு க்ஷத்திரியத்வம் தர்மத்தினால் என்பதால்  தர்மத்தை க்ஷத்ரஸ்ய க்ஷத்ரம் என்கிறோமோ, ஜலத்திற்கு உஷ்ணமானது அக்னியின் நிமித்தத்தால் எற்படும் ஜலத்தின் சுடும் தன்மை என்பதால் சுடுகிறது என்கிறோம். அக்னியை தக்தாவிற்கு தக்தா  என்கிறோமோ, அதே போல் எதனுடைய சேர்க்கையால் அநித்தியமான கிரஹிக்கும் தன்மை ச்ரோத்திராதிகளுக்கு இருக்கிறதோ அங்கு அந்த ஜலத்திற்கு சுடும் தன்மைபோல் அநித்தியமே அல்லவா. அக்னியில் எவ்வாறு உஷ்ணமானது நித்தியமாய் கிரஹிக்கப்படுகிறதோ அவ்வாறு ஆத்மாவும் நித்தியகிரஹிக்கும் ஸ்வரூபமாய் இருப்பதால் சுடுகிறது என்பது போல் கிரஹிப்பது கூறப்படுகிறது. ச்ரோத்திரம் முதலியவைகளில் கேட்பவை முதலியவைகள் கிரஹிப்பது என்பது அநித்தியமாகும். எதனால் ஆத்மா நித்யமோ ஆகையால் ச்ரோத்திரஸ்ய ஸ்ரோத்திரம் என்று கூறப்பட்டது. இந்த அக்ஷரங்களினால் அர்த்தமானது விளங்குவதால் நிர்விசேஷமாயும் உபலப்த்தி ஸ்வரூபமாயும் உள்ள ஆத்மா மனமுதலியவைகளின் ப்ரவிர்த்திக்கு நிமித்தமாய் இருக்கிறது என்று நிச்சயமாகிறது. இவ்வாறு மனம் முதலியவைகளிலும் தெரிந்து கொள்ளவேண்டும்.
वाचो ह वाचं प्राणस्य प्राण इति विभक्तिद्वयम् । सर्वत्रैवं हि द्रष्टव्यम् । कथम् ? पृष्टत्वात् स्वरूपनिर्देशः । प्रथमयैव च निर्देशः । तस्य च ज्ञेयत्वात्कर्मत्वमिति द्वितीया । अतो वाचो ह वाचं प्राणस्य प्राण इत्यस्मात्सर्वत्रैव विभक्तिद्वयम् ।
वाचो ह वाचं प्राणस्य प्राण (வாசோ ஹ வாச்சம், ப்ராணஸ்ய ப்ராண) என்று இரண்டு விபக்திகளும் எல்லா இடத்திற்கும் பொருந்தும். அது எவ்வாறு? எனில் கேட்டதினால் ஸ்வரூபம் நிர்தேசம் செய்யப்படவேணும், நிர்தேசம் செய்வது முதல் வேற்றுமையினாலாகும். அது அறியப்பட வேண்டியதாய் இருப்பதால் கர்மத்துவம் ஆகும். ஆகையால் இரண்டாவது வேற்றுமையிலும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகையால் वाचो ह वाचं प्राणस्य प्राण (வாசோ ஹ வாச்சம், ப்ராணஸ்ய ப்ராணம்) என்று இருப்பதால் இதிலிருந்து எல்லாவற்றிலும் இரண்டு வேற்றுமையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரிகிறது.
यदेतच्छ्रोत्राद्युपलब्धिनिमित्तं श्रोत्रस्य श्रोत्रमित्यादिलक्षणं तत् नित्योपलब्धिस्वरूपं निर्विशेषमात्मतत्त्वं बुद्ध्वा अतिमुच्य अनवबोधनिमित्ताध्यारोपिताद्बुद्ध्यादिलक्षणात्संसारान्मोक्षणं कृत्वा धीराः धीमन्तः प्रेत्य अस्मात् लोकात् शरीरात् प्रेत्य वियुज्य अन्यस्मिन्नप्रतिसन्धीयमाने निर्निमित्तत्वादमृता भवन्ति ।
எந்த இந்த ஸ்ரோத்திரம் முதலானவைகளுக்கு ஞான  (उपलब्धि)  த்திற்கு  நிமித்தமாக  இருப்பதால் ச்ரோத்திரத்திற்கு ச்ரோத்திரம் முதலிய லக்ஷணமும் நித்யஞானஸ்வரூபமானதும், நிர்விசேஷமும் ஆனதுமான ஆத்மதத்துவம் இருக்கிறதோ அதை அறிந்து अतिमुच्य (அதிமுச்ய) அறியாமையினால் அத்யாரோபிதமான புத்தியாதி லக்ஷணமான சம்சாரத்திலிருந்து விடுபட்டு धीराः (தீரா:) தீரர்கள் प्रेत्य (ப்ரேத்ய) இந்த லோகத்திலிருந்து அதாவது இந்த சரீரத்திலிருந்து விடுபட்டு மறுபடி உடலுடன் தொடர்பு இல்லாததால் மரணதர்மமற்றவர்களாய் ஆகிறார்கள்.
सति ह्यज्ञाने कर्माणि शरीरान्तरं प्रतिसन्दधते । आत्मावबोधे तु सर्वकर्मारम्भनिमित्ताज्ञानविपरीतविद्याग्निविप्लुष्टत्वात्कर्मणामिति अनारम्भेऽमृता एव भवन्ति । शरीरादिसन्तानाविच्छेदप्रतिसन्धानाद्यपेक्षया अध्यारोपितमृत्युवियोगात्पूर्वमप्यमृताः सन्तो नित्यात्मस्वरूपत्वादमृता भवन्तीत्युपचर्यते ॥
அக்ஞானம் இருக்கும் பொழுது அல்லவா கர்மாக்களினால் வேறு சரீரத்தை அடைகின்றார்கள். ஆத்மாவை அறிந்த பின் எல்லா கர்மங்களின் ஆரம்பத்திற்கும் காரணமான அக்ஞானத்திற்கு விபரீதமான ஞானக்கினியினால் எரிக்கப்பட்ட கர்மங்கள் வேறு உடலை ஆரம்பிக்காததால் அவர்கள் மரணமற்றவர்களாகிறார்கள். சரீராதிகளின் தொடர்ச்சி நீங்காததால் அதையே அனுசந்தானம் செய்வதின் காரணமாக அத்யாரோபம் செய்யப்பட்ட மரணதர்மம் நீங்குவதற்கு முன்பே மரணமற்றவர்களாய் இருந்தாலும் நித்யஸ்வரூபமானதால் மரணமற்றவர்கள் ஆகிறார்கள் என்று உபசாரமாகக் கூறப்பட்டது.
न तत्र चक्षुर्गच्छति न वाग्गच्छति नो मनः ।
न विद्मो न विजानीमो यथैतदनुशिष्यात् ॥ ३ ॥
न तत्र चक्षुर्गच्छतीत्युक्तेऽपि पर्यनुयोगे हेतुरप्रतिपत्तेः । ‘श्रोत्रस्य श्रोत्रम्’ इत्येवमादिनोक्तेऽप्यात्मतत्त्वे अप्रतिपन्नत्वात्सूक्ष्मत्वहेतोर्वस्तुनः पुनः पुनः पर्यनुयुयुक्षाकारणमाह — न तत्र चक्षुर्गच्छतीति । तत्र श्रोत्राद्यात्मभूते चक्षुरादीनि, वाक्चक्षुषोः सर्वेन्द्रियोपलक्षणार्थत्वात् , न विज्ञानमुत्पादयन्ति ।
கண்இந்திரியம் அங்கு(ஆத்மாவிடத்தில்) செல்லவில்லை என்று கூறினாலும் கூட புரிந்து கொள்ளாத காரணத்தினால் மறுபடியும் அதைக் குறித்து வினா எழுகிறது. காதுக்குக் காதாய் இருக்கிறது என்பதுமுதலியவைகளினால் கூறினாலும் ஆத்ம தத்துவம் மிகவும் சூக்ஷ்மமாய் இருப்பதின் காரணமாக புரிந்து கொள்ளாததினால் மறுபடியும், மறுபடியும் கேள்வி வருகிறதின் காரணமாக இவ்வாறு கூறுகிறார். அங்கு கண் செல்லவில்லை என்ற இடத்தில் சுரோத்திரம் முதலிய ஆத்ம ஸ்வரூபமான ஆத்ம தத்துவ விஷயத்தில் கண்கள் முதலிய இந்திரியங்கள் ஞானத்தை உண்டுபண்ண முடியாது, ஏன் எனில் இவைகள் எல்லா இந்திரியங்களுக்கும் உபலக்ஷணமாகும்.
सुखादिवत्तर्हि गृह्येतान्तःकरणेन अत आह — नो मनः, न सुखादिवन्मनसो विषयस्तत् , इन्द्रियाविषयत्वात् ।
சுகாதிகளைப் போல் அந்தக் கரணத்தினால் கிரஹிக்கலாமே என்றால்  அதற்கு கூறுகிறார். नो मनः (நோ மன:) ஆத்மதத்துவம் இந்திரியங்களுக்கு விஷயமாகததால் சுகாதிகளைப் போல் மனதின் விஷயமல்ல.(சுகாதிகளை அறிவது போல் மனம் ஆத்மாவை அறியமுடியாது.)
न विद्मो न विजानीमः अन्तःकरणेन, यथा एतत् ब्रह्म मनआदिकरणजातम् अनुशिष्यात् अनुशासनं कुर्यात् प्रवृत्तिनिमित्तं यथा भवेत् , तथा अविषयत्वान्न विद्मो न विजानीमः ।
அந்தக்கரணத்தினால் அறிய முடியாது. அறிவிக்கவும் முடியாது. ஏன் எனில் அந்த பிரஹ்மம் மனம் முதலிய கரணங்களால் உண்டானவைகளை பிரவிர்த்தியின் பொருட்டு அதை செயல்படுத்தும், மற்றவைகளை செயல்படுத்தவும் செய்யும். அந்த பிரஹ்மம் அவிஷயமாய் இருப்பதால் அதை அறிய முடியாது. அதை அறிவிக்கவும் முடியாது.
अथवा श्रोत्रादीनां श्रोत्रादिलक्षणं ब्रह्म विशेषेण दर्शयेत्युक्त आचार्य आह — न शक्यते दर्शयितुम् । कस्मात् ? न तत्र चक्षुर्गच्छतीत्यादि पूर्ववत्सर्वम् । अत्र तु विशेषो यथैतदनुशिष्यादिति । यथैतत् अनुशिष्यात् प्रतिपादयेत् अन्योऽपि शिष्यानितोऽन्येन विधिनेत्यभिप्रायः ॥
அல்லது சுரோத்திராதிகளுடைய ஸ்ரோத்திராதி லக்ஷணமான பிரஹ்மத்தை விசேஷமாக காண்பிப்பீராக என்று கேட்ட சிஷ்யனுக்கு ஆச்சாரியார் கூறுகிறார். அதைக் காண்பிக்க முடியாது என்று. எதனால்? எனில் அங்கு கண் முதலியவைகள் செல்லாததினால் என்பது முன்பு கூறப்பட்டது போலாகும். இவ்வாறு இருக்கும் பொழுது இதை ஒருவருக்கு எவ்வாறு உபதேசம் செய்வது என்பது இந்த வாக்கியத்தின் விசேஷம். ஒரு குருவால் தன்னைத் தவிர வேறான சிஷ்யனுக்கு மற்றஎந்த விதி முறையால் உபதேசம் அதாவது பிரதிபாதனம்(விளக்குவான்) என்பது அபிப்ராயம்
अन्यदेव तद्विदितादथो अविदितादधि ।
इति शुश्रुम पूर्वेषां ये नस्तद्व्याचचक्षिरे ॥ ४ ॥
सर्वथापि ब्रह्म बोधयेत्युक्त आचार्य आह ‘अन्यदेव तद्विदितादथो अविदितादधि’ इत्यागमम् । विदिताविदिताभ्यामन्यत् यो हि ज्ञाता स एव सः, सर्वात्मकत्वात् । अतः सर्वात्मनो ज्ञातुर्ज्ञात्रन्तराभावाद्विदितादन्यत्वम् । ‘स वेत्ति वेद्यं न च तस्यास्ति वेत्ता’ (श्वे. उ. ३ । १९) इति च मन्त्रवर्णात् । ‘विज्ञातारमरे केन विजानीयात्’ (बृ. उ. २ । ४ । १४) इति च वाजसनेयके । अपि च व्यक्तमेव विदितं तस्मादन्यदित्यभिप्रायः । यद्विदितं व्यक्तं तदन्यविषयत्वादल्पं सविरोधं ततोऽनित्यम् अत एवानेकत्वादशुद्धम् अत एव तद्विलक्षणं ब्रह्मेति सिद्धम् ।
எவ்விதமாகவாவது ப்ரஹ்மத்தை போதியுங்கள் என்று கேட்டதற்கு ஆச்சாரியார் கூறுகிறார். அறிந்ததைத் காட்டிலும் வேறு, அறியாததைக் காட்டிலும் மேலே (தாண்டி இருக்கிறது) என்றஆகமப்படி அறிந்ததைக் காட்டிலும், அறியாததைக் காட்டிலும் வேறு ஆகும். அது சர்வாத்மாவாய் இருப்பதால் எவன் ஞாதாவோ அவனே அவன். சர்வாத்மாவாய் இருப்பதால் அறிபவனை அறிவதற்கு வேறு ஒரு அறிபவன் இல்லாததினால் அறிவதைக் காட்டிலும் வேறு. “स वेत्ति वेद्यं न च तस्यास्ति वेत्ता” (ச வேத்தி வேத்யம் ந ச தஸ்யாஸ்த்தி வேத்தா) அறிய வேண்டியதை அறிந்தவனை அறிவதற்கு வேறு வேத்தா(அறிபவன்) தேவையில்லை என்று “ஸ்வேத உபநிஷத் வாக்கியம்” “विज्ञातारमरे केन विजानीयात्” (விக்ஞாதாரமரே கேன விஜாநீயாத்) அரே! அறிபவனை யார் அறிவார் என்று வாஜசனேய வாக்கும் நன்றாக வியக்தமாக அறியப்படுவதால் அது பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறு என்பது அபிப்ராயம். எது வியக்தமாக அறியப்படுகிறதோ அது வேறு விஷயமாய் இருப்பதால் அது அல்பமானது, விரோதமானது, அநேகமாக இருப்பதால் அநித்யமானது, அசுத்தமானது ஆகையால்தான் வியக்தமாய் அறியப்படுவதால் அதைக்காட்டிலும் வேறானது பிரஹ்மம் என்று சித்திக்கிறது.
अस्तु तर्ह्यविदितम् ।
அவ்வாறானால் ப்ரஹ்மம் அறியப்படாததாகுமே?
न, विज्ञानानपेक्षत्वात् । यद्ध्यविदितं तद्विज्ञानापेक्षम् । अविदितविज्ञानाय हि लोकप्रवृत्तिः । इदं तु विज्ञानानपेक्षम् । कस्मात् ? विज्ञानस्वरूपत्वात् । न हि यस्य यत्स्वरूपं तत्तेनान्यतोऽपेक्ष्यते । न च स्वत एव वापेक्षा, अनपेक्षमेव सिद्धत्वात् । न हि प्रदीपः स्वरूपाभिव्यक्तौ प्रकाशान्तरमन्यतोऽपेक्षते, स्वतो वा । यद्ध्यनपेक्षं तत्स्वत एव सिद्धम् , प्रकाशात्मकत्वात् । प्रदीपस्यान्योऽपेक्षितोऽप्यनर्थकः स्यात् , प्रकाशे विशेषाभावात् । न हि प्रदीपस्य स्वरूपाभिव्यक्तौ प्रदीपप्रकाशोऽर्थवान् । न चैवमात्मनोऽन्यत्र विज्ञानमस्ति, येन स्वरूपविज्ञानेऽप्यपेक्ष्येत । विरोध इति चेत् , न ; अन्यत्वात् ।
அது பொருந்தாது. ஏன் எனில் ப்ரஹ்மத்தை அறிவதற்கு ஒன்றையும் அபேக்ஷிக்கவில்லை. எது அறியப்படாமல் இருக்கிறதோ அந்த வஸ்து விக்ஞானத்தை(அறிவை) அபேக்ஷிக்கிறது. அறியாத வஸ்துவை அறிவதற்கல்லவா உலகத்தில் பிரவிர்த்தி ஏற்படுகிறது. இதுவோ விக்ஞானத்தை அபேக்ஷிக்கவில்லை. ஏன் எனில் விக்ஞான சொரூபமாய் இருப்பதால் (அறிவு சொரூபமாய் இருந்ததால்) எதற்கு அது சொரூபமோ அது அதனால் வேறு ஒன்றைஅபேக்ஷிக்காது, தன்னை அபேக்ஷிக்கவில்லை. ஆகையால் அதற்கு அனபேக்ஷிதத் தன்மையே சித்திக்கிறது. தீப சொரூபம் விளங்குவதற்கு வேறு பிரகாசத்தையோ, தன்னையோ அபேக்ஷிக்கவில்லை. எது அனபேக்ஷக வஸ்துவோ அது ஸ்வதஸ்சித்தமாகவே இருக்கிறது. பிரகாசத்திற்கு தனியாக ஒரு விசேஷமும் இல்லாததினால் தீபமானது பிரகாசாத்மகமாக இருப்பதால் மற்றொரு பிரகாசத்தை ஆஸ்ரியத்தல் என்பது அர்த்தமற்றதாகும். அவ்வாறேதீபத்தின் ஸ்வரூப விளக்கத்தில் தீபபிரகாசமானது அர்த்தமற்றதாகும்.அவ்வாறேஆத்மாவை விட வேறு ஒரு விக்ஞானம் இல்லை. ஆகையால் ஆத்மஸ்வரூப ஞானத்தின் பொருட்டு அபேக்ஷிக்கிறது. இதனால் விரோதம் உண்டாகுமே எனில் அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன் எனில் ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் ஞானம் வேறு அல்ல.
स्वरूपविज्ञाने विज्ञानस्वरूपत्वाद्विज्ञानान्तरं नापेक्षत इत्येतदसत् । दृश्यते हि विपरीतज्ञानमात्मनि सम्यग्ज्ञानं च — न जानाम्यात्मानमिति च, श्रुतेश्च । ‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) ‘आत्मानमेवावेत्’ (बृ. उ. १ । ४ । १०) ‘एतं वै तमात्मानं विदित्वा’ (बृ. उ. ३ । ५ । १) इति च सर्वत्र श्रुतिष्वात्मविज्ञाने विज्ञानान्तरापेक्षत्वं दृश्यते । तस्मात्प्रत्यक्षश्रुतिविरोध इति चेत् ,
(பூர்வ) விஞ்ஞான சொரூபமாய் இருப்பதால் சொரூபத்தை அறிவதற்கு வேறு விக்ஞானத்தை (அறிவை) அபேக்ஷிக்காது என்று கூறுவது அசத்தாகும். ஆத்மாவிடத்தில் விபரீதஞானம், சம்யக்ஞானம் இரண்டும் நான் ஆத்மாவை அறியவில்லை என்பதிலிருந்து தெரிகிறதல்லவா? சுருதியிலும் “तत्वमसि” (தத்துமஸி) (சாந்தோக்கியம்) நீ அதுவாய் இருக்கிறாய், “आत्मानमेवावेत्” (ஆத்மானமேவாவே) (ப்ருஹ) ஆத்மாவை அறியவேண்டும். “एतं वै तमात्मानं विदित्वा” (ஏதம்வை தமாத்மானம் விதித்வா) (ப்ருஹ) இந்த அந்த ஆத்மாவை அறிந்து, என்று எல்லா சுருதிகளிலும் ஆத்மாவை அறிவதற்கு மற்றொரு ஞானத்தை அபேக்ஷிப்பது காணப்படுகிறது. ஆகையால் பிரத்யக்ஷத்திற்கும், ஸ்ருதிக்கும் விரோதமாகுமே எனில்.
न ; कस्मात् ? अन्यो हि स आत्मा बुद्ध्यादिकार्यकरणसङ्घातात्माभिमानसन्तानाविच्छेदलक्षणोऽविवेकात्मको बुद्ध्याद्यवभासप्रधानश्चक्षुरादिकरणो नित्यचित्स्वरूपात्मान्तःसारो यत्रानित्यं विज्ञानमवभासते । बौद्धप्रत्ययानामाविर्भावतिरोभावधर्मकत्वात्तद्धर्मतयैव विलक्षणमपि चावभासते ।
(சித்தாந்தி)அவ்வாறு இல்லை. ஏன் எனில் எங்கு அநித்தியமான விக்ஞானம் விளங்குகிறதோ புத்தி முதலிய காரிய கரணசங்காத அபிமான தொடர்ச்சியானது சேதம் அடையாததும், அவிவேக புத்தி உடையதாயும் புத்தியில் அவபாசிக்கிறதும் (பிரதிபலிக்கிறதும்) சக்ஷுராதி கரண ரூபமானதுமான அந்த ஜீவாத்மாவானது, எல்லோருள்ளும் சாரமாய் உள்ள நித்ய சித்சுவரூபமான  ஆத்மாவைக் காட்டிலும் வேறு. புத்தியின் பிரத்யயங்கள் (விருத்திகள்)தோன்றி மறைவதாய் இருப்பதால் அதனுடைய தர்மங்கள் சுத்த ஆத்மாவைக் காட்டிலும் வேறாகவே இருக்கின்றது.
अन्तःकरणस्य मनसोऽपि मनोऽन्तर्गतत्वात् सर्वान्तरश्रुतेः । अन्तर्गतेन नित्यविज्ञानस्वरूपेण आकाशवदप्रचलितात्मना अन्तर्गर्भभूतेन स बाह्यो बुद्ध्यात्मा तद्विलक्षणः, अनग्निरिवाग्निः अर्चिर्भिरिवाग्नेः प्रत्ययैराविर्भावतिरोभावधर्मकैर्विज्ञानाभासरूपैरनित्यैः अनित्यविज्ञान आत्मा सुखी दुःखी इत्यभ्युपगतो लौकिकैः, अतोऽन्यो नित्यविज्ञानस्वरूपादात्मनः । तत्र हि विज्ञानापेक्षा विपरीतज्ञानत्वं चोपपद्यते, न पुनर्नित्यविज्ञाने ।
அந்தக்கரணமாகிய மனத்திற்கும் மனமாக ஊடுறுவி இருப்பதால் ஆன்மாவை சர்வாந்தரம் என்று சுருதியில் கூறப்பட்டுள்ளது. அந்தர்கதமாயும், நித்யவிஞ்ஞான சொரூபமாயும், ஆகாயம் போல் சலனமற்று ஆத்மா உள்ளே கர்பரூபமாயும், வெளியில் புத்தியாத்மாவாய் அதற்கு விலக்ஷணமாகஅக்னியில் உள்ள ஜுவாலையைப் (வெளிச்சம்) போல் பிரத்யயங்களால் (விருத்திகளால்) வெளிக்கிளம்பியும், உள் அடங்கியதுமான தர்மங்களால் விக்ஞான ஆபாசரூப அநித்யவிக்ஞான ரூப ஆத்மா(ஜீவாத்மா) யோகிகளால் சுகி, துக்கி எனப்படுகிறார்கள். ஆகையால் நித்யவிஞ்ஞான ஸ்வரூபமாய் ஆத்மா இருப்பதால் அந்த ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறு, அங்குதான் ஞானத்தின் அபேக்ஷயைும், விபரீத ஞானமும் உண்டாகும். ஆனால் நித்யவிக்ஞான சுவரூபத்திற்கு கிடையாது.
‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) इति बोधोपदेशो नोपपद्यत इति चेत् , ‘आत्मानमेवावेत्’ (बृ. उ. १ । ४ । १०) इत्येवमादीनि च, नित्यबोधात्मकत्वात् । न ह्यादित्योऽन्येन प्रकाश्यते ; अतस्तदर्थबोधोपदेशोऽनर्थक एवेति चेत् ।
(பூர்வ) ஆத்மாவையே அறிய வேண்டும்(பிருஹ-உப) என்பது முதலியவைகளால் நித்யஞான சொரூபமாய் இருத்ததால் சூரியனை மற்றொன்றால் பிரகாசம் செய்ய முடியாததால் அதனுடைய அர்த்த ஞானத்தை போதித்தல் அநர்த்தமாகும். ஆகையால் “தத்துவமசி” என்றமஹாவாக்கியமும் ஞான உபதேசத்திற்கு பொருந்தாது எனில்.
न ; लोकाध्यारोपापोहार्थत्वात् । सर्वात्मनि हि नित्यविज्ञाने बुद्ध्याद्यनित्यधर्मा लोकैरध्यारोपिता आत्माविवेकतः ; तदपोहार्थो बोधोपदेशो बोधात्मनः । तत्र च बोधाबोधौ समञ्जसौ । अन्यनिमित्तत्वादुदक इवौष्ण्यमग्निनिमित्तम् । रात्र्यहनी इवादित्यनिमित्ते
(சித்தாந்தி) அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன் எனில் லோகத்தின் அத்யாரோபத்தைப் போக்குவதாலாகும். உலகத்தோர்களால் ஆத்மாவின் அவிவேகத்தால் சர்வாத்மாவாயும், நித்ய விக்ஞான சொரூபமாயுமுள்ள ஆத்மாவிடத்தில் புத்தி முதலிய அநித்ய தர்மங்கள் அத்யாரோபம் செய்யப்பட்டுள்ளன, அதை நீக்குவதற்காகவே ஞானாத்மாவின் ஞான உபதேசமாகும். இங்கு போதம், அபோதம், இரண்டும் பொருந்தும். எவ்வாறு எனில் அக்னியின் காரணமாக தண்ணீரில் உஷ்ணமும், சூரியனின் காரணமாக இரவும்,பகலும் போல அந்நிய நிமித்தமாய் இருப்பதாலாகும்.
लोके नित्यावौष्ण्यप्रकाशावग्न्यादित्ययोरन्यत्र भावाभावयोः सनिमित्तत्वादनित्याविवोपचर्येते । धक्ष्यत्यग्निः प्रकाशयिष्यति सविता इति तद्वत् । एवं च सुखदुःखबन्धमोक्षाद्यध्यारोपो लोकस्य तदपेक्ष्य ‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) ‘आत्मानमेवावेत्’ इत्यात्मावबोधोपदेशिन्यः श्रुतयः केवलमध्यारोपापोहार्थाः ।
உலகத்தில் நித்யமாய் உஷ்ணம் பிரகாசம் உடைய அக்னி, சூரியன் இவைகள் மற்றஇடத்தில் பாவ, அபாவத்தின் காரணமாக அநித்தியம் போல் தோன்றுகிறது. அக்னி சூட்டை உண்டு பண்ணப்போகிறது, சூரியன் பிரகாசிக்கச் செய்யப்போகிறது என்பது போல், அவ்வாறே உலகத்தினுடைய சுக,துக்க பந்தமோக்ஷங்கள் முதலியவை ஆரோபமாகும். அதைக் குறித்தே தத்துவமசி, “ஆத்மானமேவாவேத்” (அதுவாய் நீ இருக்கிறாய்) (ஆத்மாவையே அறிய வேண்டும்) என்ற ஆத்ம பாவத்தின் ஞானோபதேசத்தால் சுருதிகள் கேவலம் அத்யாரோபத்தை நீக்குவதின் பொருட்டேயாகும்.
यथा सवितासौ प्रकाशयत्यात्मानम् इति तद्वत् बोधकर्तृत्वं च नित्यबोधात्मनि । तस्मादन्यदविदितात् । अधिशब्दश्चान्यार्थे । यद्वा यद्धि यस्याधि तत्ततोऽन्यत्सामर्थ्यात् , यथाधि भृत्यादीनां राजा । अव्यक्तमेवाविदितं ततोऽन्यदित्यर्थः ।
எவ்வாறு சூரியன் தன்னைத்தானே பிரகாசிக்கச் செய்கிறதோ அது போல் போதம், அபோதகர்த்திருத்துவம் நித்யாத்மாவிடம் இருக்கிறது. ஆகையால் அறியாததைக் காட்டிலும் வேறு, அதி (अधि) சப்தம் வேறு என்றஅர்த்தத்தை உடையது. அல்லது எது, எதற்கு மேலோ, அது அதைக் காட்டிலும் வேறாகும், எவ்வாறு எனில் அதி(மேலே) என்பது பணியாளர்களுக்கு மேலே ராஜா என்பது போலாகும். அறியப்படாத பொருள் அவ்யக்த்தமேயாகும் என்பது பொருள்
विदितमविदितं च व्यक्ताव्यक्ते कार्यकारणत्वेन विकल्पिते, ताभ्यामन्यद्ब्रह्म विज्ञानस्वरूपं सर्वविशेषप्रत्यस्तमितमित्ययं समुदायार्थः । अत एवात्मत्वान्न हेय उपादेयो वा । अन्यद्ध्यन्येन हेयमुपादेयं वा’ न तेनैव तद्यस्य कस्यचिद्घेयमुपादेयं वा भवति । आत्मा च ब्रह्म सर्वान्तरत्वादविषयः । अतोऽन्यस्यापि न हेयमुपादेयं वा । अन्याभावाच्च ।
அறியப்படுகிறது என்றும், அறியப்படாதது என்றும் வியக்தம், அவ்யக்தம் என்றும் காரிய காரணத்துவமாக கல்பிக்கப்படுகிறது. அவ்விரண்டைக் காட்டிலும் வேறானது பிரஹ்மம். அந்த பிரஹ்மமானது விக்ஞான ஸ்வரூபம் எல்லா விசேஷணங்களும் அற்றது என்பது பொதுவான அர்த்தமாகும். அதனாலேயே ஆத்மாவாய் இருப்பதால் ஹேயோபாதேயம் (தள்ளவோ, எடுக்கவோ முடியாது) அற்றது. வேறு ஒன்றை, வேறு ஒன்றால் தள்ளவோ,கொள்ளவோ முடியும், ஆகையால் எவர் ஒருவருக்கும் ஆத்மாவின் ஹேயோபாதேயம் சம்பவியாது. சர்வாத்மாவாய் இருப்பதால் ஆத்மா பிரஹ்மம். அவிஷயமாய் இருப்பதால் வேறு ஒன்றுக்கும் ஹேயோபாதேயம் ஆகாது. மேலும் அதைத் தவிர வேறு இல்லை.
इति शुश्रुम पूर्वेषामित्यागमोपदेशः । व्याचचक्षिरे इत्यस्वातन्त्र्यं तर्कप्रतिषेधार्थम् । ये नः तत् ब्रह्म उक्तवन्तः ते तमेवागमं ब्रह्मप्रतिपादकं व्याख्यातवन्तः, न पुनः स्वबुद्धिप्रभवेण तर्केणोक्तवन्त इति तस्यैव द्रढिम्ने आगमपारम्पर्याविच्छेदं दर्शयति विद्यास्तुतये । तर्कस्त्वनवस्थितो भ्रान्तोऽपि भवतीति ॥
“इति शुश्रुम पूर्वेषाम्” (இதி சுச்ருமபூர்வேஷாம்) என்றது ஆகம உபதேசம். व्याचचक्षिर (வ்யாசசக்ஷிரே) என்று சுதந்திரமற்றதன்மையையும், தர்க்கத்தை நிஷேதம் செய்வதற்காகவும் கூறப்பட்டது. அவர்கள் (ஆசார்யர்கள்) எங்களுக்கு ப்ரஹ்மத்தை உபதேசித்தார்கள். அவர்கள் எப்பொழுதும் ப்ரஹ்மத்தை பற்றியே வியாக்யானம் செய்தார்கள். மேலும் தங்களுடைய  சுய புத்தியினாலோ, தர்க்கத்தினாலோ, கூறவில்லை என்று ஆகமத்தினுடைய பாரம்பரியத்தின் விச்சேத மற்றதன்மையை வித்யாஸ்துதியின் பொருட்டு காண்பிக்கின்றார். தர்க்கமானது அநவஸ்தாதோஷமுடைய பிராந்தியாகும் என்பதால் இவ்வாறு கூறுகிறார்.
यद्वाचानभ्युदितं येन वागभ्युद्यते ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ५ ॥
यद्वाचेति मन्त्रानुवादो दृढप्रतीत्यै । ‘अन्यदेव तद्विदितात्’ इति योऽयमागमार्थो ब्राह्मणोक्तः अस्यैव द्रढिम्ने इमे मन्त्राः यद्वाचा इत्यादयः पठ्यन्ते ।
यद्वाचा (யத்வாச்சா) முதலிய மந்திரங்களினால் உபதேசிக்கப்பட்ட ஆத்ம தத்துவத்தை திடமாக புரிந்துகொள்வதற்காக மேலும் கூறப்படுகிறது. “அது அறிந்ததைக் காட்டிலும் வேறு” என்று எது கூறப்பட்டதோ அந்த ஆகமத்தின் தாத்பர்யத்தை இந்த பிராஹ்மணத்தினால் முன்பு கூறப்பட்டது. அதை திடப்படுத்துவதற்காக यद्वाचा (யத்வாச்சா) முதலிய மந்திரங்களால் கூறப்படுகிறது.
यत् ब्रह्म वाचा शब्देन अनभ्युदितम् अनभ्युक्तम् , अप्रकाशितमित्येतत् । येन वागभ्युद्यत इति वाक्प्रकाशहेतुत्वोक्तिः । येन प्रकाश्यत इति वाचोऽभिधानस्य अभिधेयप्रकाशकत्वस्य हेतुत्वमुच्यते ब्रह्मणः ।
எந்த பிரஹ்மமானது வாக்கினால் அதாவது சப்தத்தினால் பிரகாசப்படுத்த(தெரியப்படுத்த) முடியாது என்று கூறி அந்த வாக்கின் பிரகாசத்திற்கு எது காரணம் என்று கூறப்படுகிறது. எதனால் பிரகாசப்படுத்தப்படுகிறது என்று கூறி வாக்கினால் உச்சரிக்கப்படுவதின் उच्चारण வாச்சியத்தை அதாவது அபிதேயத்தை பிரகாசப்படுத்துவதற்கு பிரஹ்மமே காரணம் என்று கூறப்படுகிறது. (அதாவது வாக்கிற்கு பிரஹ்மத்தின் காரணமாகவே ஒரு பொருளை பிரகாசப்படுத்தும் சாமர்த்தியம் ஏற்படுகிறது என்பது கருத்து)
उक्तं च ‘केनेषितां वाचमिमां वदन्ति’ (के. उ. १ । १) ‘यद्वाचो ह वाचम्’ (के. उ. १ । २) इति । तदेव ब्रह्म त्वं विद्धि इत्यविषयत्वेन ब्रह्मण आत्मन्यवस्थापनार्थ आम्नायः । यद्वाचानभ्युदितं वाक्प्रकाशनिमित्तं चेति ब्रह्मणोऽविषयत्वेन वस्त्वन्तरजिघृक्षां निवर्त्य स्वात्मन्येवावस्थापयत्याम्नायः तदेव ब्रह्म त्वं विद्धि इति ; यत्नत उपरमयति नेदमित्युपास्यप्रतिषेधाच्च ॥
இந்த வாக்கானது எதனால்  பிரகாசப் படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டதோ அதுவே பிரஹ்மம் என்று அறி. பிரஹ்மம் அவிஷயமானதால் ஆத்மாவிலேயே நிலைபெறச் செய்கிறது வேதவாக்கியம். எதனால் வாக்கால் அறியமுடியாதோ எதன் உதவியால் வாக்கானது செயல்படுகிறதோ அந்த பிரஹ்மம் அவிஷயமாய் இருப்பதால் அதை அறிவதற்கு வேறு வஸ்துவின் தேவையை நீக்கி சுவ (தன்) ஆத்மாவிடத்திலேயே நிலை பெற்றிருக்கிறதோ அதுவே பிரஹ்மம் என்று நீ அறி என்று ஆம்நாயமானது உபரமத்தை அடையச்செய்கிறது. “இது அல்ல” என்பது உபாஸ்யத்தை பிரதிஷேதம் செய்கிறது  (நீக்குகிறது)मन्त्रम् ५
यन्मनसा न मनुते येनाहुर्मनो मतम् ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ६ ॥
यच्चक्षुषा न पश्यति येन चक्षूंषि पश्यति ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ७ ॥
यच्छ्रोत्रेण न शृणोति येन श्रोत्रमिदं श्रुतम् ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ८ ॥
यत्प्राणेन न प्राणिति येन प्राणः प्रणीयते ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ९ ॥
यन्मनसेत्यादि समानम् । मनो मतमिति । येन ब्रह्मणा मनोऽपि विषयीकृतं नित्यविज्ञानस्वरूपेणेत्येतत् । सर्वकरणानामविषयस्तानि च सव्यापाराणि सविषयाणि नित्यविज्ञानस्वरूपावभासतया येनावभास्यन्त इति श्लोकार्थः । ‘क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत’ (भ. गी. १३ । ३३) इति स्मृतेः । ‘तस्य भासा’ (मु. उ. २ । २ । १०) इति चाथर्वणे । येन प्राण इति क्रियाशक्तिरप्यात्मविज्ञाननिमित्तेत्येतत् ॥
यन्मनसा  என்பன  முதலியவைகள்  சமான அர்த்தமுடையவை. மனம் அறியப்பட்டது என்று எந்த நித்யவிக்ஞான ஸ்வரூபமாகிய ப்ரஹ்மத்தால் மனமும் அறியப்படுகிறது (விஷயப்படுத்தப்பட்டது) என்பதால் அந்த ப்ரஹ்மமானது எல்லா கரணங்களுக்கும் அவிஷயமாகிறது. அந்தக்கரணங்களின் வியாபாரங்களும், விஷயங்களும் நித்ய விக்ஞான ஸ்வரூப அவபாசத்தினால் பிரகாசிக்கின்றன என்பது ஸ்லோகத்தின் அர்த்தமாகும். க்ஷதே்திரம், க்ஷதே்ரக்ஞன் அவ்வாறேஎல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்கிறது என்பது கீதாவாக்கியம். “तस्य भासा” அதனுடைய பிரகாசத்தால் என்பது அதர்வணத்தில் உள்ள முண்டகோபநிஷத் வாக்கியம். எதனால் प्राण என்று குறிப்பிட்டதால் கிரியாசக்தியும் ஆத்மவிக்ஞான நிமித்தத்தாலே செயல்படுகிறது என்பது பொருள்.
इति प्रथमखण्डभाष्यम् ॥
यदि मन्यसे सु वेदेति दभ्रमेवापि नूनं त्वं वेत्थ ब्रह्मणो रूपं यदस्य त्वं यदस्य देवेष्वथ नु मीमांस्यमेव ते मन्ये विदितम् ॥ १ ॥
यदि मन्यसे सु वेदेति शिष्यबुद्धिविचालना गृहीतस्थिरतायै । विदिताविदिताभ्यां निवर्त्य बुद्धिं शिष्यस्य स्वात्मन्यवस्थाप्य ‘तदेव ब्रह्म त्वं विद्धि’ इति स्वाराज्येऽभिषिच्य उपास्यप्रतिषेधेनाथास्य बुद्धिं विचालयति —
“यदि मन्यसे सुवेद” (யதி மன்யசே சுவேத) என்று ஆசாரியர் கூறியது சிஷ்யனுடைய புத்தியை விசாலமாக்கி அதனால் கிரஹிக்கப்பட்டதை ஸ்திரமாக்குவதின் பொருட்டாகும். அறிந்தவைகளையும், அறியாதவைகளையும் நீக்கி புத்தியை சிஷ்யனுடைய ஆத்மாவினிடத்தில் நிலை நிறுத்தி அதையே பிரஹ்மம் என்று நீ அறி என்று ஸ்வராஜ்யத்தில் அபிஷேகம் செய்து உபாசனையை பிரதிஷேதம் செய்த பின் அவனுடைய புத்தியை அசைத்து நிலைப்படுத்துகிறார்.
यदि मन्यसे सुष्ठु वेद अहं ब्रह्मतत्त्वमिति, ततोऽल्पमेव ब्रह्मणो रूपं वेत्थ त्वमिति नूनं निश्चितं मन्यते आचार्यः । सा पुनर्विचालना किमर्थेति, उच्यते — पूर्वगृहीते वस्तुनि बुद्धेः स्थिरतायै । देवेष्वपि सु वेदाहमिति मन्यते यः सोऽप्यस्य ब्रह्मणो रूपं दभ्रमेव वेत्ति नूनम् । कस्मात् ? अविषयत्वात्कस्यचिद्ब्रह्मणः ।
“यदि मन्यसे सुवेद अहं ब्रह्मेति” (யதிமன்யசே சுவேத அஹம் ப்ரஹ்மேதி) நான் பிரஹ்மத்தை நன்றாக அறிகிறேன் என்றால் நீ பிரஹ்மத்தின் அல்பசொரூபத்தையே நிச்சயம் அறிந்திருக்கின்றாய் என்று ஆசாரியர் உணர்ந்திருக்கின்றார். சிஷ்யனுடைய புத்தியை விசாலனம் (பகுத்து அறிய, விசாரிக்க) செய்வது எதற்கு எனில் கூறப்படுகிறது. முன்பு கிரஹித்தவஸ்துவில் புத்தியை ஸ்திரப்படுத்துவதற்காகவே. எவன் ஒருவன் தேவர்களிடத்திலும் நன்றாக அறிந்திருக்கிறேன் என்று நினைக்கிறானோ அவனும் பிரஹ்மத்தின் ரூபத்தை அல்பமாகவே அறிந்திருக்கின்றான் என்பது நிச்சயம். ஏன் எனில் பிரஹ்மமானது எந்த ஒன்றின் விஷயமும்  ஆகாது.
अथवा अल्पमेवास्याध्यात्मिकं मनुष्येषु देवेषु चाधिदैविकमस्य ब्रह्मणो यद्रूपं तदिति सम्बन्धः । अथ नु इति हेतुर्मीमांसायाः । यस्माद्दभ्रमेव सुविदितं ब्रह्मणो रूपम् ‘अन्यदेव तद्विदितात्’ इत्युक्तत्वात् , सु वेदेति च मन्यसे ; अतः अल्पमेव वेत्थ त्वं ब्रह्मणो रूपं यस्मात् अथ नु तस्मात् मीमांस्यमेव अद्यापि ते तव ब्रह्म विचार्यमेव यावद्विदिताविदितप्रतिषेधागमार्थानुभव इत्यर्थः ।
அல்லது அந்த பிரஹ்மத்தினுடைய மனிதர்களிடத்துள்ள ஆத்யாத்மிகமும், தேவர்களிடத்திலுள்ள ஆதிதெய்வீகமும் ஆகிய பிரஹ்மத்தினுடைய எந்தரூபமுள்ளதோ அது மிக சிறிய அளவேயாகும் என்பதாகும், “अथ नु” (அத நு) என்று கூறியது விசாரனையின் பொருட்டாகும். ஏன் எனில் பிரஹ்மத்தினுடைய ரூபம் அறிந்ததைக் காட்டிலும், அறியாததைக் காட்டிலும் வேறு என்பதால் அது சிறியதே ஆகும், எதனால் நீ பிரஹ்மத்தினுடைய ரூபத்தை நன்றாக அறிந்திருக்கிறேன் என்று நினைக்கிறாயோ அதனால் நீ அல்பமே அறிந்திருக்கின்றாய். ஆகையால் அவசியம் விசாரனை செய்ய வேண்டியதே. எது வரையில் அறிந்ததைக் காட்டிலும், அறியாததைக் காட்டிலும் வேறு என்ற ஆகமார்த்த அனுபவம் ஏற்படும் வரை அதாவது இன்றும் உனக்கு விசாரம் செய்ய வேண்டியதே என்பது பொருள்.
मन्ये विदितमिति शिष्यस्य मीमांसानन्तरोक्तिः प्रत्ययत्रयसङ्गतेः । सम्यग्वस्तुनिश्चयाय विचालितः शिष्य आचार्येण मीमांस्यमेव ते इति चोक्तः एकान्ते समाहितो भूत्वा विचार्य यथोक्तं सुपरिनिश्चितः सन्नाह आगमाचार्यात्मानुभवप्रत्ययत्रयस्यैकविषयत्वेन सङ्गत्यर्थम् । एवं हि ‘सुपरिनिष्ठिता विद्या सफला स्यान्नानिश्चिता’ इति न्यायः प्रदर्शितो भवति ; मन्ये विदितमिति परिनिष्ठितनिश्चितविज्ञानप्रतिज्ञाहेतूक्तेः ॥
“मन्ये विदितमिति” (நான் அறிந்திருக்கிறேன் என்று எண்ணுகிறேன் என்றது) சிஷ்யனுடைய விசாரத்திற்கு பின் கூறியது மூன்று பிரத்யயங்களுக்கும் ஆகமம், உபதேசம், ஸ்வானுபவம் பொருந்துகிறது. திடமாகவஸ்து நிச்சயத்தை தெரிந்து கொள்வதற்காக சிரத்தையுடன் கூடிய சிஷ்யனைக் குறித்து ஆச்சாரியர் விசாரணை அவசியம் செய்யவேண்டும் என்று கூறப்பட்ட சிஷ்யன் ஏகாந்தத்தில், சமாஹித மனதை அடைந்து ஆசாரியர் உபதேசித்தவற்றைநன்கு விசாரித்து திட நிச்சயத்தை அடைந்தவனாய் ஆகம, ஆசாரிய, ஆத்மானுபவங்களாகிய மூன்று பிரத்யயங்களையும் ஒரே விஷயத்தில் பொருந்துகிறவாறு கூறினான். இவ்வாறு நன்றாக பரீக்ஷித்து நிச்சயிக்கப்பட்ட ஞானமே பலன் உடையதாகும். மற்றோ நிச்சயிக்கப்படாத அக்ஞானத்தினால் நிவர்த்தியாகாது என்றநியாயமானது எடுத்துக்காட்டப்பட்டதாகும். இதனால் , “मन्ये विदितमिति” (மன்யே விதிதமிதி- அறிந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்) என்று சிஷ்யன் கூறியது அவன் நன்றாக நிச்சயம் செய்யப்பட்ட ஞானத்தை அடைந்தவன் என்றபிரதிக்ஞை ஹேது கூறப்பட்டதாகிறது.
नाह मन्ये सु वेदेति नो न वेदेति वेद च ।
यो नस्तद्वेद तद्वेद नो न वेदेति वेद च ॥ २ ॥
परिनिष्ठितं सफलं विज्ञानं प्रतिजानीते आचार्यात्मनिश्चययोस्तुल्यतायै यस्माद्धेतुमाह — नाह मन्ये सु वेदेति ।
ஆச்சாரியருடையதும் தன்னுடையதும் உள்ள நிச்சயமானது சமம் என்பதை நிரூபிப்பதற்காக நன்றாக நிச்சயிக்கப்பட்டதும், பலத்துடன் கூடியதுமான விக்ஞானத்தை பிரதிக்ஞை செய்கிறேன். எதனால் எனில் “नाहं मन्ये सुवेद इति”  (நாஹ மன்யே சுவேதேதி) என்று ஹேதுவைக் கூறுகிறார்.
अहेत्यवधारणार्थो निपातः । नैव मन्ये इत्येतत् । यावदपरिनिष्ठितं विज्ञानं तावत् सु वेद सुष्ठु वेद अहं ब्रह्मेति विपरीतो मम निश्चय आसीत् । सोऽपजगाम भवद्भिर्विचालितस्य यथोक्तार्थमीमांसाफलभूतात्स्वात्मब्रह्मत्वनिश्चयरूपात्सम्यक्प्रत्ययात् । विरुद्धत्वादतो नाह मन्ये सु वेदेति ।
“अह” (அஹ) என்றபதம் நிச்சயார்த்தத்தின் பொருட்டாகும். இதனுடைய தாத்பர்யம் என்னவெனில் நான் (பிரஹ்மத்தை நன்றாக அறிகிறேன்) என்று நினைக்கவில்லை. எதுவரையில் எனக்கு ஞானமுண்டாகவில்லையோ அதுவரை எனக்கு நான் பிரஹ்மத்தை நன்கு அறிகிறேன் என்றவிபரீத நிச்சயம் இருந்தது. உங்களிடமிருந்து (அந்த நிச்சயத்திலிருந்து) நழுவியதை அறிந்து முன்பு கூறப்பட்ட விசாரத்தின் பலபூதத்திலிருந்தும் ஸ்வாத்ம பிரஹ்மத்துவ நிச்சய ரூபத்திலிருந்தும், திடஞானத்திலிருந்தும் ( சம்யக்பிரத்யயத்திலிருந்தும்) விருத்தமாக (மாறுபட்டு) இருப்பதால் அந்த விருத்த நிச்சயம் விலகிவிட்டது. ஆகையால் நான் நன்றாக அறிகிறேன் என்று நான் நினைக்கவில்லை.
यस्माच्चैतत् नैव न वेद नो न वेदेति ; मन्ये इत्यनुवर्तते, अविदितब्रह्मप्रतिषेधात् । कथं तर्हि मन्यसे इत्युक्त आह — वेद च । च—शब्दाद्वेद च न वेद च इत्यभिप्रायः, विदिताविदिताभ्यामन्यत्वाद्ब्रह्मणः । तस्मान्मया विदितं ब्रह्मेति मन्ये इति वाक्यार्थः ।
எதனால்? அறியப்படாத பிரஹ்மம் இல்லை என்பதால் அதை இல்லை என்று நான் அறியவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் எவ்வாறு நினைக்கிறாய் என்று கேட்க (சிஷ்யன்) கூறுகிறான் “वेद च” (வேதச) அறிகிறேன் என்று “च” (ச்ச) சப்தத்தில் அறிந்திருக்கிறேன் அறியாமலும் இருக்கிறேன் என்பது அபிப்ராயமாகும். ஏன் எனில் பிரஹ்மமானது அறிந்ததைக்காட்டிலும், அறியாததைக் காட்டிலும் வேறானது. ஆகையால் நான் பிரஹ்மத்தை அறிந்ததாய் என்று எண்ணுகிறேன் என்பது வாக்கியார்த்தமாகும்.
अथवा वेद चेति नित्यविज्ञानब्रह्मस्वरूपतया नो न वेद वेदैव चाहं स्वरूपविक्रियाभावात् । विशेषविज्ञानं च पराध्यस्तं न स्वत इति परमार्थतो न च वेदेति ।
அல்லது “वेद चेति” (வேத ச்சேதி) என்பதின் அபிப்ராயம் ஸ்வரூபவிக்ரியை அற்று இருப்பதால் நித்யவிக்ஞான ப்ரஹ்மஸ்வரூபமாய் இருப்பதாலும் நான் அறியவில்லை என்பது இல்லை. நான் அறிகிறேன், எதனால் விசேஷ விக்ஞானம் பராத்யஸ்தமாய் (அந்தக்கரணத்தினால் ஆரோபிக்கப்பட்டதாய்) ஆத்மாவைக் காட்டிலும் வேறாக இருக்கிறது. ஆகவே நிஜஸ்வரூபமாக இல்லை என்பதால்  பரமார்த்தமாக  அறிய முடியாது.
यो नस्तद्वेद तद्वेदेति पक्षान्तरनिरासार्थमाम्नाय उक्तार्थानुवादात् । यः नः अस्माकं मध्ये तद्वेद स एव तद्ब्रह्म वेद नान्यः, उपास्यब्रह्मवित्त्वात् । अतोऽन्यस्य यथाहं वेदेति पक्षान्तरे ब्रह्मवित्त्वं निरस्यते । कुतोऽयमर्थोऽवसीयत इति, उच्यते — उक्तानुवादात् । उक्तं ह्यनुवदति नो न वेदेति वेद चेति ॥
“यो नस्तद्वेद तद्वेद” இந்த வேதவாக்கியமானது முன்பு கூறப்பட்டதின் அர்தத்தினை வலியுறுத்துவதாக இருப்பதால் வேறுபக்ஷங்களை நிராகரிப்பதற்காக ஆகும். நமக்குள் எவன் ஒருவன் இவ்வாறு அறிந்ததைக் காட்டிலும் மற்றும் அறியாததைக் காட்டிலும் வேறு என்று அறிந்தவன் அந்த (பிரஹ்மத்தை) அறிந்தவனாகின்றான். மற்றஉபாசிய பிரஹ்மத்தை உபாசிப்பவர்களும், மற்றபக்ஷத்தை ஆசிரியப்பவர்களும் நிராகரிக்கப்படுகிறார்கள். எதற்காக இதை நிராகரிக்கிறார்கள் எனில் கூறப்படுகிறது. முன்பு கூறப்பட்டதின் அர்த்தத்தை மறுபடியும் கூறுவதின் பொருட்டாகும்,ஏன்எனில் “नो न वेदेति वेद च” (நோ ந வேதேதி வேத ச்ச) நான் அறிந்திருக்கவில்லை நான் அறிந்தவனாயும் இல்லை என்று அனுவாதம் செய்யப்பட்டுள்ளதால் ஆகும்.
यस्यामतं तस्य मतं मतं यस्य न वेद सः ।
अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम् ॥ ३ ॥
यस्यामतमिति श्रौतमाख्यायिकार्थोपसंहारार्थम् । शिष्याचार्योक्तिप्रत्युक्तिलक्षणया अनुभवयुक्तिप्रधानया आख्यायिकया योऽर्थः सिद्धः स श्रौतेन वचनेनागमप्रधानेन निगमनस्थानीयेन सङ्क्षेपत उच्यते । यदुक्तं विदिताविदिताभ्यामन्यद्वागादीनामगोचरत्वात् मीमांसितं चानुभवोपपत्तिभ्यां ब्रह्म, तत्तथैव ज्ञातव्यम् ।
“यस्यामतम्” யஸ்யாமதம் என்றசுருதிவாக்கியம் இந்த கதையை முடிப்பதற்காக வந்ததாகும்.  சிஷ்யன் அனுபவம் கூறலும் அதற்கு ஆச்சாரியர் விளக்கம் கூறுவதுமாகிய லக்ஷணபூர்வகமாக அனுபவம், யுக்தி முதலியவை பிரதானமாக உடைய கதையின் எந்த அர்த்தம் சித்தித்ததோ அது சுருதி வாக்கியத்தினால் ஆகமத்தை பிரதானமாக உடைய உறுதியானஸ்தானத்தில் சம்க்ஷபேகமாக கூறப்படுகிறது. அறிந்ததைக் காட்டிலும் வேறு என்று எது கூறப்பட்டதோ அது வாக் முதலியவைகளுக்கு அகோசரமாய் இருப்பதால் அது அனுபவ உபபத்திபூர்வமாய்  விசாரம் செய்து அறியப்பட்டது எதுவோ அது பிரஹ்மம். அதை அவ்வாறு தான் அறியவேண்டும்.
कस्मात् ? यस्यामतं यस्य विविदिषाप्रयुक्तप्रवृत्तस्य साधकस्य अमतम् अविज्ञातम् अविदितं ब्रह्म इत्यात्मतत्त्वनिश्चयफलावसानावबोधतया विविदिषा निवृत्तेत्यभिप्रायः, तस्य मतं ज्ञातम् ; तेन विदितं ब्रह्म येनाविषयत्वेन आत्मत्वेन प्रतिबुद्धमित्यर्थः । स सम्यग्दर्शी यस्य विज्ञानानन्तरमेव ब्रह्मात्मभावस्यावसितत्वात् सर्वतः कार्यभावो विपर्ययेण मिथ्याज्ञानो भवति । कथम् ? मतं विदितं ज्ञातं मया ब्रह्म इति यस्य विज्ञानम् , स मिथ्यादर्शी विपरीतविज्ञानो विदितादन्यत्वाद्ब्रह्मणो न वेद सः न विजानाति ।
எதனால் ? “यस्यामतं” (யஸ்யாமதம்-) எந்த விவிதிஷையினால் தூண்டப்பட்ட சாதகனுக்கு பிரஹ்மம் அறியப் படாததாய் இருக்கிறது என்பது ஆத்ம தத்துவத்துவ நிச்சயமாகிய பலத்தை முடிவாக உடைய ஞானத்தில் விவிதிஷையானது நிவர்த்தியாகிறது என்பது அபிப்பிராயம். அவனே அறிகிறான் பிரஹ்மத்தை எதனால் அவிஷயமாக (ஆத்மத்துவமாக) தானாகவே அறிகிறானோ அவனே அறிந்தவன் என்பது பொருள். அந்தசம்யக்தர்சீ ஞானமடைந்தபின் பிரஹ்மாத்ம பாவமாகவே நிலைபெற்றதால் எங்கும் காரியஅபாவமே. அதற்குமாறாக அறிபவனுக்கு மித்யாஞானமே ஏற்படுகிறது. எவ்வாறு ? என்றால் பிரஹ்மம் அறியப்பட்டது என்றஞானம் எவனுக்கு உள்ளதோ அவன் மித்யாதர்சீ விபரீதஞானமுடையவன். அறிந்ததைக் காட்டிலும் பிரஹ்மம் வேறாய் இருப்பதால் அவன் அறியவில்லை என்பதாகும்.
ततश्च सिद्धमवैदिकस्य विज्ञानस्य मिथ्यात्वम् , अब्रह्मविषयतया निन्दितत्वात् । तथा कपिलकणभुगादिसमयस्यापि विदितब्रह्मविषयत्वात् अनवस्थिततर्कजन्यत्वाविदितविषयतया विविदिषानिवृत्तेश्च मिथ्यात्वमिति । स्मृतेश्च — ‘या वेदबाह्याः स्मृतयो याश्च काश्च कुदृष्टयः । सर्वास्ता निष्फलाः प्रोक्तास्तमोनिष्ठा हि ताः स्मृताः’ (मनु. १२ । ९५) इति ।
அதனால் அவைதிகமான விக்ஞானத்திற்கு பிரஹ்மம் விஷயமாகாமையினால் நிந்திக்கதக்கதால் மித்யாத்துவம் சித்திக்கிறது. அவ்வாறேகபிலகணாதர் முதலிய மதங்களிலும் பிரஹ்மம் அறியப்பட்ட விஷயமாய் இருப்பதாலும் நிலையற்றதர்க்கத்தினால் உண்டாவதால் விவிதிஷை (அறிய வேண்டும் என்றஆசை) அற்றதால் மித்யாத்துவமே சித்திகிறது. அவ்வாறேஸ்மிருதியிலும் “या वेदबाह्याः स्मृतयो याश्च काश्च कुदृष्टयः । सर्वास्ता निष्फलाः प्रोक्तास्तमोनिष्द्भा हि ताः स्मृताः” (யா வேதபாஹ்யா: ஸ்ம்ருதயோ யாச்ச காச்ச குத்ருஷ்ட்டய: ஸர்வஸ்தா நிஷ்பலா: ப்ரோக்தாஸ்தமோநிஷ்ட்டா ஹி தா: ஸ்ம்ருதா: ) எவைகள் வேதத்திற்கு அந்யமான (பாஹ்யமான) ஸ்மிருதிகள், எந்த தவறான கொள்கை உடைய திருஷ்ட்டிகள் எல்லாம் பலம் அற்றவைகள் என்று தபோநிஷ்ட்டர்கள் கூறுகிறார்கள் என்பதால் விபரீத ஞானமும், மித்யாஞானமும் பிரயோஜனமற்றது என்று அறியப்படுகிறது.
‘अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम्’ इति पूर्वहेतूक्तिः अनुवादस्यानर्थक्यात् — अनुवादमात्रेऽनर्थकं वचनमिति विपर्ययमिथ्याज्ञानयोर्नष्टत्वात् पूर्वोक्तयोः यस्यामतमित्यादिज्ञानाज्ञानयोर्हेत्वर्थत्वेनेदमुच्यते —
அறியவில்லை என்பவர்கள் அறிந்தவர்களாயும், அறிகிறேன் என்பவர்கள் அறியாதவர்களாயும் இருக்கிறார்கள் என்று கூறப்பட்ட ஹேதுவின் அனுவாதமானது (மறுபடியும் கூறுவது) அர்த்தமற்றதாகும். அனுவாத மாத்திரத்தினால் அர்த்தமற்றவசனமாகும் என்று முன்பு கூறப்பட்ட यस्यामतम् (யஸ்யாமதம்) என்பது முதலியவைகளால் ஞான அக்ஞானங்களின் ஹேது அர்த்தத்துடன் இது கூறப்படுகிறது.
अविज्ञातम् अविदितमात्मत्वेनाविषयतया ब्रह्म विजानतां यस्मात् , तस्मात्तदेव ज्ञानं यत्तेषां विज्ञातं विदितं व्यक्तमेव बुद्ध्यादिविषयं ब्रह्म अविजानतां विदिताविदितव्यावृत्तमात्मभूतं नित्यविज्ञानस्वरूपमात्मस्थमविक्रियममृतमजरमभयमनन्यत्वादविषयमित्येवमविजानतां बुद्ध्यादिविषयात्मतयैव नित्यं विज्ञातं ब्रह्म । तस्माद्विदिताविदितव्यक्ताव्यक्तधर्माध्यारोपेण कार्यकारणभावेन सविकल्पमयथार्थविषयत्वात् । शुक्तिकादौ रजताद्यध्यारोपणज्ञानवन्मिथ्याज्ञानं तेषाम् ॥
எதனால் ஞானிகளுக்கு பிரஹ்மமானது தானாகவே ஆத்மஸ்வரூபமாகவே இருப்பதால் இந்திரியங்களுக்கு விஷயமாகாமையால் அறியப்படாததாய் இருக்கிறதோ அதனால் அதுவே ஞானம் ஆகும். மேலும் எந்த அக்ஞானியானவன் அவ்வாறு அறியவில்லையோ அவன் அறியப்பட்ட அறியப்படாத பதார்த்தங்களற்றதன்னுடைய ஆத்மாவின் நித்யவிக்ஞானரூபம், ஆத்மஸ்த்தம்(தன்னிலேயே நிலைபெற்றல்) கிரியை அற்றதும், மரணதர்மமற்றதும், பிறப்பற்றதும், தன்னைக்காட்டிலும் வேறாக இல்லாததால் பயமற்றது, இந்திரிய விஷயமாகாது என்று அறியவில்லையோ அவனுக்கு பிரஹ்மமானது புத்திமுதலிய இந்திரியங்களால் மிகத்தெளிவாக பிரஹ்மமானது விஷயரூபமாக அறியப்படுகிறது. ஆகையால் அறியப்பட்ட அறியப்படாத அல்லது வியக்த அவ்யக்தம் முதலிய தர்மங்களின் ஆரோபத்தினால் காரியகாரணமாக விளங்குவதால் அது அயதார்த்த விஷயமாவதால் சவிகல்பமேயாகும். அவைகளுக்கு சுத்தி முதலியவைகளில் ரஜத முதலிய ஆரோப ஞானம் போல் மித்தியா ஞானமாகும்.
प्रतिबोधविदितं मतममृतत्वं हि विन्दते ।
आत्मना विन्दते वीर्यं विद्यया विन्दतेऽमृतम् ॥ ४ ॥
प्रतिबोधविदितमिति वीप्साप्रत्ययानामात्मावबोधद्वारत्वात् बोधं प्रति बोधं प्रतीति वीप्सा सर्वप्रत्ययव्याप्त्यर्था । बौद्धा हि सर्वे प्रत्ययास्तप्तलोहवन्नित्यविज्ञानस्वरूपात्मव्याप्तत्वाद्विज्ञानस्वरूपावभासाः तदन्यावभासश्चात्मा तद्विलक्षणोऽग्निवदुपलभ्यत इति ते द्वारीभवन्त्यात्मोपलब्धौ । तस्मात्प्रतिबोधावभासप्रत्यगात्मतया यद्विदितं तद्ब्रह्म, तदेव मतं तदेव सम्यग्ज्ञानं यत्प्रत्यगात्मविज्ञानम् , न विषयविज्ञानम् ।
प्रतिबोधविदितं मतम् (பிரதிபோதவிதிதம் மதம்) என்று இரு தடவைகள் கூறப்பட்டுள்ளது.ஏன் எனில் பிரத்யயங்களே ஆத்ம ஞானத்திற்கு வழியாகும். போதம்பிரதி, போதம்பிரதி என்று இருமுறைகூறியது எல்லா பிரத்யயங்களிலும் பிரஹ்மத்தின் வியாப்தியை தெரிவிப்பதற்காக ஆகும். புத்தியில் ஜனிக்கின்றஎல்லாப் ப்ரத்யயங்களும் தப்தாயபிண்டம் போல் நித்யவிக்ஞான ஸ்வரூப ஆத்மாவினால் வியாபிக்கப்பட்டிருப்பதால்  விக்ஞான ஸ்வரூப அவபாசங்களாகும். அவ்வாறு அவைகளைக் காட்டிலும் வேறானது அவற்றைஅவபாசம் செய்யும் ஆத்மா அக்னிக்கு சமமாக அவபாசங்களைக் காட்டிலும் முற்றிலும் விலக்ஷணம் என்று அறியப்படுவதால் அவைகள் (ப்ரத்யயங்கள்) ஆத்மாவை அறிவதற்கு வழியாகிறது. ஆகையால் பிரதிபோத அவபாச பிரத்யக் ஆத்மாவாக எது அறியப்பட்டதோ அது பிரஹ்மம். அதுவே அறியப்பட்டதாகும். அதுவே சம்யக்ஞானம் போல் பிரத்யக் ஆத்மவிக்ஞானம், அது விஷயவிக்ஞானமல்ல.
आत्मत्वेन ‘प्रत्यगात्मानमैक्षत्’ (क. उ. २ । १ । १) इति च काठके । अमृतत्वं हि विन्दते इति हेतुवचनं विपर्यये मृत्युप्राप्तेः । विषयात्मविज्ञाने हि मृत्युः प्रारभते इत्यात्मविज्ञानममृतत्वनिमित्तमिति युक्तं हेतुवचनममृतत्वं हि विन्दते इति ।
பிரத்யக் ஆத்மாவை  ஆத்மஸ்வரூபமாகவே பார்க்கிறான் என்று கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. ‘अमृतत्वं हि विन्दते’ (அம்ருதத்துவம் ஹி விந்ததே) என்பது ஹேதுவசனமாகும். அதற்கு மாறானது மிருத்யுவின் பொருட்டாகும். விஷயஆத்ம விக்ஞானத்தால் மரணமானது ஆரம்பமாகிறது (அடையப்படுகிறது) என்பதால் ஆத்மவிக்ஞானம் அம்ருதத்துவத்தின் நிமித்தம் என்று இருப்பதால் அம்ருதத்துவம் ஹி விந்தத (அம்ருதத்தை அடைகிறான்) என்றஹேது வசனம் பொருத்தமானதே ஆகும்.
आत्मज्ञानेन किममृतत्वमुत्पाद्यते ।
(பூர்வ) என்ன ஆத்மக் ஞானத்தினால் அம்ருதத்துவமானது (உற்பத்தி) உண்டாகிறதா என்ன?   
न ।
(சித்தாந்தி)அவ்வாறு உற்பத்தியாவதில்லை
कथं तर्हि ?
(பூர்வ)  அப்படியானால் எவ்வாறு?
आत्मना विन्दते स्वेनैव नित्यात्मस्वभावेनामृतत्वं विन्दते, नालम्बनपूर्वकं विन्दत इति आत्मज्ञानापेक्षम् । यदि हि विद्योत्पाद्यममृतत्वं स्यात् , अनित्यं भवेत्कर्मकार्यवत् । अतो न विद्योत्पाद्यम् ।
(சித்தா) ஆத்மாவினால் (அம்ருதத்தை) அடைகிறான் என்றால் தன்னுடைய நித்ய ஆத்மஸ்வபாவத்தினால் அம்ருதத்தை அடைகிறான். வேறு ஒன்றையும் ஆஸ்ரயித்து அல்ல. विन्दते (விந்ததே) அடைகிறான் என்றால் ஆத்ம விக்ஞானத்தை அபேக்ஷிக்கிறான். வித்தையினால் அம்ருதத்துவம் உண்டாகப்படுகிறது என்றால் கர்ம காரியம் போல் அநித்தியமாகி விடும். ஆகையால் அது வித்தையினால் உண்டாக்கப்படுவதில்லை.
यदि चात्मनैवामृतत्वं विन्दते, किं पुनर्विद्यया क्रियत इत्युच्यते । अनात्मविज्ञानं निवर्तयन्ती सा तन्निवृत्त्या स्वाभाविकस्यामृतत्वस्य निमित्तमिति कल्प्यते ; यत आह — वीर्यं विद्यया विन्दते ।
தன் நித்திய ஆத்மஸ்வரூபத்தினாலேயே அம்ருதத்தை அடைகிறான் என்றால் வித்தையினால் உண்டானது என்று எதற்காக கூறப்படுகிறது? எனில் வித்தையானது அநாத்மவிக்ஞானத்தைப் போக்குகிறது.  அதைப் போக்குவதால் ஸ்வபாவமாய் உள்ள அம்ருதத்திற்கு நிமித்தமாக கல்பிக்கப்படுகிறது. அதனால் ‘वीर्यं विद्यया विन्दते’ (வீர்யம் வித்யயா  விந்ததே) என்று கூறப்பட்டது.
वीर्यं सामर्थ्यम् अनात्माध्यारोपमायास्वान्तध्वान्तानभिभाव्यलक्षणं बलं विद्यया विन्दते । तच्च किंविशिष्टम् ? अमृतम् अविनाशि । अविद्याजं हि वीर्यं विनाशि, विद्ययाविद्याया बाध्यत्वात् । न तु विद्याया बाधकोऽस्तीति विद्याजममृतं वीर्यम् । अतो विद्या अमृतत्वे निमित्तमात्रं भवति । ‘नायमात्मा बलहीनेन लभ्यः’ (मु. उ. ३ । २ । ४) इति चाथर्वणे ।
वीर्यं வீர்யம் என்றால் சாமர்த்தியம். எந்த அநாத்மாவின் அத்யாரோபமாயையின் அந்தகாரத்தால் (அக்ஞானத்தால்) எவனுக்கு தோல்வி அடையமுடியாதவாறு பலம் அதாவது சாமர்த்தியம் ஏற்படுகிறது. அது எந்த விசேஷணத்துடன் கூடியது? அம்ருதம் நாசமற்றது (அவிநாசி) அவித்தையினால் உண்டாகும் வீர்யம் நாசமுடையதாகும். வித்தையினால் அவித்யை பாதிக்கப்படும், வித்யைக்கு பாதம் இல்லாததினால் வித்தையினால் உண்டானது அம்ருதம் வீர்யம். ஆகையால் அம்ருதத்திற்கு வித்யை நிமித்தமாத்திரமாய் இருக்கிறது. “नायमात्मा बलहीनेन लभ्यः” (நாயமாத்மா பலஹீனேனலப்ய) இந்த ஆத்மாவானது பலஹீனனால் அடைய முடியாது என்று அதர்வணவேதத்தில் உள்ள முண்டகோபநிஷத்தில் கூறப்பட்ட வாக்கியமாகும்.
लोकेऽपि विद्याजमेव बलमभिभवति न शरीरादिसामर्थ्यम् , यथा हस्त्यादेः । अथवा प्रतिबोधविदितं मतमिति सकृदेवाशेषविपरीतनिरस्तसंस्कारेण स्वप्नप्रतिबोधवद्यद्विदितं तदेव मतं ज्ञातं भवतीति । अथवा गुरूपदेशः प्रतिबोधः । तेन वा विदितं मतमिति । उभयत्र प्रतिबोधशब्दप्रयोगोऽस्ति — ‘सुप्तप्रतिबुद्धः’ ‘गुरुणा प्रतिबोधितः’ इति । पूर्वं तु यथार्थम् ॥
உலகத்திலும் வித்தையினால் உண்டாகும் பலமே மற்றபலங்களை தோல்வி அடையச்செய்கிறது. எவ்வாறு எனில் மனிதனுடைய சாமர்த்தியத்தினால் யானை முதலியவைகளின் பலமும் தோல்வி அடைவது போலாகும். அல்லது பிரதிபோதவிதிதம் மதம் என்பதின் அர்த்தம்  அறிய வேண்டியது. தூக்கத்திலிருந்து எழுந்த உடன் எவ்வாறு விபரீத சம்ஸ்காரங்களும் ஒரே தடவையில் பாதமாகிறதோ, அவ்வாறு சம்ஸ்காரங்கள் பாதமாதலே விதிதம் அதாவது அறிகிறான் என்பதாகும். அல்லது குரு உபதேசமாகிய பிரதிபோதத்தால் அறிகிறான் என்பதாகும். இரண்டிடத்திலும் பிரதி போத சப்தமானது பிரயோகபடுத்தப்பட்டுள்ளது. அக்ஞான தூக்கத்திலிருந்து விழித்த குருவினால் ப்ரதிபோதம் செய்யப்பட்டது. இம்மூன்று அர்த்தங்களுள் முதலாவது கூறப்பட்ட அர்த்தமே சரியானதாகும்.
इह चेदवेदीदथ सत्यमस्ति न चेदिहावेदीन्महती विनष्टिः ।
भूतेषु भूतेषु विचित्य धीराः प्रेत्यास्माल्लोकादमृता भवन्ति ॥ ५ ॥
इह चेदवेदीदिति अवश्यकर्तव्यतोक्तिः विपर्यये विनाशश्रुतेः । इह मनुष्यजन्मनि सति अवश्यमात्मा वेदितव्य इत्येतद्विधीयते । कथम् ? इह चेत् अवेदीत् विदितवान् , अथ सत्यं परमार्थतत्त्वम् अस्ति अवाप्तम् ; तस्य जन्म सफलमित्यभिप्रायः । न चेदिहावेदीत् न विदितवान् , वृथैव जन्म । अपि च महती विनष्टिः महान्विनाशो जन्ममरणप्रबन्धाविच्छेदप्राप्तिलक्षणः स्याद्यतः, तस्मादवश्यं तद्विच्छेदाय ज्ञेय आत्मा ।
इहचेदवेदीत् (இஹ சேதவேதீத்) என்று (ஆத்மாவை) அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், அவ்வாறு அறியாவிடின் விநாசம் ஏற்படும் என்று சுருதியில் கூறப்பட்டுள்ளது. இந்த மனித ஜன்மம் இருக்கும் பொழுதே ஆத்மா அவசியம் அறியப்படவேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. எதனால் இந்த ஆத்மதத்துவத்தை அறிந்திருக்கிறானோ அதனால் அவன் ஆத்ம சாக்ஷாத்காரம் அடைந்தவனாகிறான். அவனுடைய ஜன்மமானது சபலமானதாகும் என்பது அபிப்ராயம். இங்கு (இப்பொழுது) அறியவில்லை எனில் அவனுடைய ஜன்மம் வீணானதே. ஆகையால் பெருத்த நஷ்ட்டமாகும். ஆகையால் ஜன்ம, மரணமாகிய பந்தங்கள் நீங்காத லக்ஷணமுடையதாகும். ஆகையால் அதை முற்றிலும் நீக்குவதற்கான அவசியம் ஆத்மாவை அறியவேணடும்.
ज्ञानेन तु किं स्यादिति, उच्यते — भूतेषु भूतेषु चराचरेषु सर्वेष्वित्यर्थः । विचित्य विचार्य पृथङ्निष्कृष्यैकमात्मतत्त्वं संसारधर्मैरस्पृष्टमात्मभावेनोपलभ्येत्यर्थः, अनेकार्थत्वाद्धातूनाम् । न पुनश्चित्वेति सम्भवति, विरोधात् । धीराः धीमन्तः विवेकिनः विनिवृत्तबाह्यविषयाभिलाषाः, प्रेत्य मृत्वा अस्मात् लोकात् शरीराद्यनात्मलक्षणात् व्यावृत्तममत्वाहङ्काराः सन्त इत्यर्थः, अमृताः अमरणधर्माणो नित्यविज्ञानामृतत्वस्वभावा एव भवन्ति ॥
ஞானத்தினால் என்ன பலன் ஏற்படும் என்பது கூறப்படுகிறது. சராசரமாகிய எல்லா பிராணிகளிடத்தும் ஆத்மாவை விசாரித்து பிரித்து ஏகமான ஆத்மதத்துவமானது சம்சார தர்மத்தினால் ஸ்பரிசிக்கப்படாத ஆத்ம பாவனையினால் அடைந்து தாதுக்கு அநேக அர்த்தங்கள் இருப்பதால் அதை நீக்கியபின் மறுபடியும் சம்பவிக்காது. வெளிவிஷயங்கள்  விரோதமாய் இருப்பதால் அவைகள் நிவர்த்தி ஆனபின் மறுபடியும் சம்பவிப்பதில்லை. ஆகையால் தீரர்கள், அதாவது புத்திமான்களாகிய விவேகிகள் பாஷ்ய விஷயங்களின் ஆசைகளில் இருந்து நிவர்த்தி அடைந்தவர்களாகி இந்த லோகத்தில் இருந்து அதாவது இந்த சரீரம் முதலிய அநாத்ம லக்ஷணங்களில் இருந்து வெளியேறி மரணமடைந்து மமதை அஹங்காரமற்றவர்களாய் இருந்து கொண்டு அம்ருதர்களாயும், மரணதர்மம் அற்றவர்களாயும், நித்யவிக்ஞான அம்ருதஸ்வபாவம் உடையவர்களாக ஆகின்றனர்.
इति द्वितीयखण्डभाष्यम् ॥
ब्रह्म ह देवेभ्यो विजिग्ये तस्य ह ब्रह्मणो विजये देवा अमहीयन्त त ऐक्षन्तास्माकमेवायं विजयोऽस्माकमेवायं महिमेति ॥ १ ॥
तद्धैषां विजज्ञौ तेभ्यो ह प्रादुर्बभूव तन्न व्यजानत किमिदं यक्षमिति ॥ २ ॥
तेऽग्निमब्रुवन् जातवेद एतद्विजानीहि किमेतद्यक्षमिति तथेति ॥ ३ ॥
तदभ्यद्रवत्तमभ्यवदत् कोऽसीत्यग्निर्वा अहमस्मीत्यब्रवीज्जातवेदा वा अहमस्मीति ॥ ४ ॥
तस्मिंस्त्वयि किं वीर्यमित्यपीदं सर्वं दहेयं यदिदं पृथिव्यामिति ॥ ५ ॥
तस्मै तृणं निदधावेतद्दहेति तदुपप्रेयाय सर्वजवेन तन्न शशाक दग्धुं स तत एव निववृते नैतदशकं विज्ञातुं यदेतद्यक्षमिति ॥ ६ ॥
अथ वायुमब्रुवन् वायवेतद्विजानीहि किमेतद्यक्षमिति तथेति ॥ ७ ॥
तदभ्यद्रवत्तमभ्यवदत्कोऽसीति वायुर्वा अहमस्मीत्यब्रवीन्मातरिश्वा वा अहमस्मीति ॥ ८ ॥
तस्मिंस्त्वयि किं वीर्यमित्यपीदं सर्वमाददीय यदिदं पृथिव्यामिति ॥ ९ ॥
तस्मै तृणं निदधावेतदादत्स्वेति तदुपप्रेयाय सर्वजवेन तन्न शशाकादातुं स तत एव निववृते नैतदशकं विज्ञातुं यदेतद्यक्षमिति ॥ १० ॥
अथेन्द्रमब्रुवन्मघवन्नेतद्विजानीहि किमेतद्यक्षमिति तथेति तदभ्यद्रवत्तस्मात्तिरोदधे ॥ ११ ॥
स तस्मिन्नेवाकाशे स्त्रियमाजगाम बहु शोभमानामुमां हैमवतीं तां होवाच किमेतद्यक्षमिति ॥ १२ ॥
ब्रह्म ह देवेभ्य इति ब्रह्मणो दुर्विज्ञेयतोक्तिः यत्नाधिक्यार्था । समाप्ता ब्रह्मविद्या यदधीनः पुरुषार्थः । अत ऊर्ध्वमर्थवादेन ब्रह्मणो दुर्विज्ञेयतोच्यते । तद्विज्ञाने कथं नु नाम यत्नमधिकं कुर्यादिति ।
ब्रह्म ह देवेभ्य (பிரஹ்ம ஹ தேவேப்ய) என்றவாக்கியத்தினால் பிரஹ்மத்தை அறிவது மிகக் கடினம் என்று கூறியது பிரஹ்மத்தை அடைவதற்கு அதிகப் பிரயத்தனம் செய்ய வேண்டும் என்பதற்காகவேயாகும். எதன் அதீனமாக புருஷார்த்தம் இருக்கிறதோ அந்த பிரஹ்மவித்யா (சமாப்தமாகிறது) முடிவுக்கு வருகிறது. ஆகையால் இனி அர்த்தவாதத்தால் பிரஹ்மத்தினுடைய துர்விக்ஞேயத்துவத்தை கூறப்படுகிறது. அதை அறிவதற்கு எவ்வாறு அதிக பிரயத்தனம் செய்ய வேண்டும்? என்று.
शमाद्यर्थो वाम्नायः अभिमानशातनात् । शमादि वा ब्रह्मविद्यासाधनं विधित्सितं तदर्थोऽयमर्थवादाम्नायः । न हि शमादिसाधनरहितस्य अभिमानरागद्वेषादियुक्तस्य ब्रह्मविज्ञाने सामर्थ्यमस्ति, व्यावृत्तबाह्यमिथ्याप्रत्ययग्राह्यत्वाद्ब्रह्मणः । यस्माच्चाग्न्यादीनां जयाभिमानं शातयति, ततश्च ब्रह्मविज्ञानं दर्शयत्यभिमानोपशमे, तस्माच्छमादिसाधनविधानार्थोऽयमर्थवाद इत्यवसीयते ।
அல்லது இந்த சுருதிபாகமானது அபிமானத்தை நாசம் செய்து சமம் முதலியவைகள் शमतमादि அடைவதற்காகும். சமம் முதலியவைகள் பிரஹ்ம வித்தையின் சாதனமாகும் என்று கூறுவதில் இஷ்ட்டமாகும். ஆகையால் அதன் பொருட்டு இது அர்த்தவாத சுருதியாகும். பிரஹ்மத்தைக் காட்டிலும் மாறான பாஹ்யமித்யா விருத்திகள் கிரஹிக்கப்படுவதால் சமாதி शमादि சாதனமில்லாத அபிமானம் ராகத்வேஷாதிகளுடன் கூடினவனுக்கு பிரஹ்ம ஞானத்தில் சாமர்த்தியம் ஏற்படுவது இல்லை. எதனால் அக்னி முதலிய தேவர்களின் ஐயஅபிமானம் நஷ்ட்டமானதினால் ப்ரஹ்ம ஞானம் அடைவதற்கு சமாதி (शमादि) சாதனம்  அவசியம் கடைபிடிக்கவேண்டும் என்பதற்காக இந்த அர்த்தவாதமானது கூறப்படுகிறது.
सगुणोपासनार्थो वा, अपोदितत्वात् । ‘नेदं यदिदमुपासते’ (के. उ. १ । ५) (के. उ. १ । ६) (के. उ. १ । ७) (के. उ. १ । ८) (के. उ. १ । ९) इत्युपास्यत्वं ब्रह्मणोऽपोदितम् । अपोदितत्वादनुपास्यत्वे प्राप्ते तस्यैव ब्रह्मणः सगुणत्वेनाधिदैवतमध्यात्मं चोपासनं विधातव्यमित्येवमर्थो वेति । अधिदैवतम् ‘तद्वनमित्युपासितव्यम्’ (के. उ. ४ । ६) इति हि वक्ष्यति ।
பிரஹ்மம் உபாசிக்கதக்கதல்ல என்பதால் சகுணஉபாசனையை விதிப்பதாகும் नेदं यदिदमुपासत என்று  அந்த உபாசனை பிரஹ்மத்தினிடத்தில் தள்ளப்பட்டதால் அந்த பிரஹ்மத்திற்கே சகுணஉபாசனையான அதிதெய்வம், அத்யாத்ம முதலிய உபாசனை அவசியம் விதிக்கப்படவேண்டும் என்பதால் ஆகும். எது அதிதெய்வமோ அது “வனம்” என்று உபாசிக்கவேண்டும் என்று கூறப்போகிறது.
ब्रह्मेति परः, लिङ्गात् । न ह्यन्यत्र परादीश्वरान्नित्यसर्वज्ञात्परिभूयाग्न्यादींस्तृणं वज्रीकर्तुं सामर्थ्यमस्ति । ‘तन्न शशाक दग्धुम्’ (के. उ. ३ । ६) इत्यादिलिङ्गाद्ब्रह्मशब्दवाच्य ईश्वर इत्यवसीयते । न ह्यन्यथा अग्निस्तृणं दग्धुं नोत्सहते वायुर्वा आदातुम् । ईश्वरेच्छया तु तृणमपि वज्रीभवतीत्युपपद्यते । तत्सिद्धिर्जगतो नियतप्रवृत्तेः ।
பிரஹ்மம் என்றசப்தம் ஈஸ்வரனைக் குறிக்கும் லிங்கமாகும். மேலான சர்வக்ஞ ஈஸ்வரனைக் காட்டிலும் தோல்வி அடைந்த அக்னி முதலிய தேவர்கள் துரும்பை வஜ்ஜிரமாக்கும் சாமர்த்தியம் அற்றவர்கள், எரித்தல் முதலியவை செய்ய முடியாது என்றலிங்கத்தால் ப்ரஹ்ம சப்தவாச்சியம் ஈஸ்வரன் என்பது நிச்சயிக்கப்படுகிறது. ப்ரஹ்மத்தைத் தவிர மற்றஅக்னியால் அந்த துரும்பைஎரிக்க முடியாது. வாயுவினால் அசைக்க முடியாது. ஆனால் ஈஸ்வர இச்சையினால் துரும்பும்  வஜ்ஜிர பாவத்தை அடைகிறது. ஜகத்தினுடைய நியமிக்கப்பட்ட பிரவிர்த்தியினால் அந்த ஈஸ்வரன் இருக்கிறான் என்பது சித்திக்கிறது.
श्रुतिस्मृतिप्रसिद्धिभिर्नित्यसर्वविज्ञाने ईश्वरे सर्वात्मनि सर्वशक्तौ सिद्धेऽपि शास्त्रार्थनिश्चयार्थमुच्यते । तस्येश्वरस्य सद्भावसिद्धिः कुतो भवतीति, उच्यते ।
சுருதி ஸ்மிருதிகளால் பிரசித்தமாக நித்ய சர்வ விக்ஞான சர்வாத்ம சக்தி சித்தித்திருந்தாலும் சாஸ்த்திரார்த்தத்தை நிச்சயம் செய்வதற்காக கூறப்பட்டது. அந்த ஈஸ்வரனுக்கு சத்பாவம் எவ்வாறு சித்திக்கிறது என்று கூறப்படுகிறது.
यदिदं जगद्देवगन्धर्वयक्षरक्षःपितृपिशाचादिलक्षणं द्युवियत्पृथिव्यादित्यचन्द्रग्रहनक्षत्रविचित्रं विविधप्राण्युपभोगयोग्यस्थानसाधनसम्बन्धि, तदत्यन्तकुशलशिल्पिभिरपि दुर्निर्माणं देशकालनिमित्तानुरूपनियतप्रवृत्तिनिवृत्तिक्रमम् एतद्भोक्तृकर्मविभागज्ञप्रयत्नपूर्वकं भवितुमर्हति, कार्यत्वे सति यथोक्तलक्षणत्वात् , गृहप्रासादरथशयनासनादिवत् , विपक्षे आत्मादिवत् ।
எந்த இந்த ஜகத் தேவகந்தர்வயக்ஷ ரக்ஷ பித்ரு பிசாசு முதலிய லக்ஷணமுடையதும் அவ்வாறேஆதித்யசந்திரக்ரஹநக்ஷத்திர முதலிய விசித்திரங்களும் பலவாறான ஜீவர்கள் அனுபவத்திற்கு யோகியமான ஸ்தானங்களும் அதற்கு சம்பந்தமான சாதனங்களும் மிகத்திறமைவாய்ந்த சிற்பிகளாலும் நிர்மாணிக்க முடியாதததும் தேசகால நிமித்தத்திற்கேற்றவாறு நியமிக்கப்பட்ட பிரவிர்த்தி நிவிர்த்தி கர்மத்தை உடைய ஜகத்தின் போக்தா மேலும் கர்மத்தின் விபாகத்தை அறிந்து பிரயத்ன பூர்வமாக (அது உண்மையான) காரியமாய் இருந்தால் முன்பு கூறப்பட்ட லக்ஷணங்கள்      உடையவனாவான். எவ்வாறு எனில் வீடு, மாளிகை, ரதம், சயனம், சாப்பிடுதல், முதலியவைகள் போல் காரியமாகும். கார்யத்வமற்ற ஆத்மா மட்டுமே  நித்யபதார்த்தமாகும்.
कर्मण एवेति चेत् , न ; परतन्त्रस्य निमित्तमात्रत्वात् । यदिदमुपभोगवैचित्र्यं प्राणिनां तत्साधनवैचित्र्यं च देशकालनिमित्तानुरूपनियतप्रवृत्तिनिवृत्तिक्रमं च, तन्न नित्यसर्वज्ञकर्तृकम् ; किं तर्हि, कर्मण एव ; तस्याचिन्त्यप्रभावत्वात् सर्वैश्च फलहेतुत्वाभ्युपगमाच्च । सति कर्मणः फलहेतुत्वे किमीश्वराधिककल्पनयेति न नित्यस्येश्वरस्य नित्यसर्वज्ञशक्तेः फलहेतुत्वं चेति चेत् ।
(பூர்வ) ஜகத்தின் உற்பத்திக்கு கர்மமே காரணம் என்று கூறுவது பொருந்தாது. ஏன் எனில் கர்மம்பரதந்திரமானது நிமித்தமாத்திரமேயாகும். ஜீவர்கள் அநுபவிப்பதற்கான அநேக போகப் பொருள்களும், அவைகளை அடைவதற்கான அநேக விதமான சாதனங்கள் தேச கால நிமித்தத்திற்கு தகுந்த நியமிக்கப்பட்ட பிரவிர்த்தி, நிவிர்த்திகிரமமானது நித்ய சர்வக்ஞனின் செயலாக ஆகாது பின்பு எது காரணம் எனில், கர்மத்தினால்தான். ஏன் எனில் அதற்கு சிந்திக்கமுடியாத பிரபாவமுள்ளது. எல்லா பலன்களுக்கும் அதுவே ஹேதுவாய் இருப்பதாக எல்லோராலும் ஏற்கப்பட்டது. கர்மம்தான் பலத்திற்கு ஹேதுவாய் இருப்பதால் நித்யஈஸ்வரனாயும், நித்ய சர்வக்ஞ சக்தியாயும் உள்ளவனுக்கு பலஹேதுத்துவம் இல்லை, ஏன் எனில், ஈஸ்வரனை அதிகமாக கல்பனை செய்வதில் என்ன பிரயோஜனம்?.
न कर्मण एवोपभोगवैचित्र्याद्युपपद्यते । कस्मात् ? कर्तृतन्त्रत्वात्कर्मणः । चितिमत्प्रयत्ननिर्वृत्तं हि कर्म तत्प्रयत्नोपरमादुपरतं सद्देशान्तरे कालान्तरे वा नियतनिमित्तविशेषापेक्षं कर्तुः फलं जनयिष्यतीति न युक्तमनपेक्ष्यान्यदात्मनः प्रयोक्तृ, कर्तैव फलकाले प्रयोक्तेति चेत् , मया निवर्तितोऽसि त्वां प्रयोक्ष्ये फलाय यदात्मानुरूपं फलमिति ।
(சித்தாந்தி) கர்மத்தினால் மட்டுமே நம்மால் அனுபவிக்கப்படும் விசித்திரங்களை அடையமுடியாது. ஏன்எனில் கர்மம் கர்த்துரு தந்திரமாகும். சேதன புருஷனுடைய பிரயத்தன பூர்வமாக செய்யப்படுவதே கர்மமாகும். பிரயத்தனம் செய்யாவிடில் கர்மமும் செய்யப்படாததாகும். தேசாந்தரத்திலோ, காலாந்தரத்திலோ நியதி நிமித்த விசேஷத்தை அபேக்ஷித்த கர்த்தாவிற்கு பலனை உண்டாக்குகிறது. ஒன்றைஅபேக்ஷிக்காமல் கர்த்தாவிற்கு பலத்தைக் கொடுக்கும் தன்மை பொருந்தாது. பலன் ஏற்படும் சமயத்தில் கர்த்தாவே பலனைக் கொடுப்பவனாய் இருந்தால் என்னால் கர்மா நன்றாக செய்யப்பட்டது ஆகையால் கர்மாவே இப்பொழுது பலன் கிடைப்பதற்காக என்னை பிரவிர்த்திக்கச் செய்கிறாய். ஆகையால் எனக்கு அனுகூலமான பலனை அளிப்பாயாக.
न , देशकालनिमित्तविशेषानभिज्ञत्वात् । यदि हि कर्ता देशादिविशेषाभिज्ञः सन्स्वातन्त्र्येण कर्म नियुञ्ज्यात् , ततोऽनिष्टफलस्याप्रयोक्ता स्यात् । न च निर्निमित्तं तदनिच्छयात्मसमवेतं तच्चर्मवद्विकरोति कर्म ।
அவ்வாறு சம்பவிக்காது. ஏன்எனில் தேசகால நிமித்தங்களின் தன்மைகளை (கர்த்தா) அறியாததினாலாகும். தேசம் முதலியவைகளின் விசேஷத்தை அதாவது தன்மைகளை அறிந்தவனாயின் அவன் ஸ்வதந்திரமாக கர்மங்களை செய்யமுடியுமாதலால் அவன் அநிஷ்ட்ட பலன்களை அளிக்கக்கூடிய கர்மாக்களில் ஈடுபடமாட்டான். மேலும் நிமித்தத்தை அபேக்ஷிக்காமல் கர்த்தாவினுடைய இச்சை இல்லாமலேயே தன்னிடத்தில் பந்தப்பட்டகர்மா சர்மம்போல் விகாரத்தை அடையாது.
न चात्मकृतमकर्तृसमवेतमयस्कान्तमणिवदाक्रष्टृ भवति, प्रधानकर्तृसमवेतत्वात्कर्मणः । भूताश्रयमिति चेत् , न ; साधनत्वात् । कर्तृक्रियायाः साधनभूतानि भूतानि क्रियाकालेऽनुभूतव्यापाराणि समाप्तौ च हलादिवत्कर्त्रा परित्यक्तानि न फलं कालान्तरे कर्तुमुत्सहन्ते । न हि हलं क्षेत्राद्व्रीहीन्गृहं प्रवेशयति । भूतकर्मणोश्चाचेतनत्वात्स्वतः प्रवृत्त्यनुपपत्तिः । वायुवदिति चेत् , न ; असिद्धत्वात् । न हि वायोरचितिमतः स्वतः प्रवृत्तिः सिद्धा, रथादिष्वदर्शनात् ।
(க்ஷணிகவிக்ஞானரூபம்)ஆத்மாவினால் செய்யப்பட்ட கர்மம் கர்த்தாவிடம் நித்திய சம்பந்தம் இல்லையெனில் காந்தம் இரும்பு போல் தனக்குத்தானாகவே பலனை ஆகர்ஷணம் செய்ய முடியாது ஏன் எனில் கர்மத்திற்கு பிரதான கர்த்தாவுடன் நித்திய சம்பந்தம் உள்ளது.  இவ்வாறு கூறினால் கர்மமானது பூதங்களை ஆஸ்ரயித்துக் கொண்டிருக்கிறது என்று ஆகும். அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன்எனில் அவைகள் அதனுடைய சாதனமேயாகும். கர்த்தாகிரியைகளின் சாதன பூதங்களாகிய பூதங்கள் கிரியாகாலத்தில் அனுபவிக்கும் வியாபாரங்கள் முடிந்த உடன் ஏர் முதலியவைகள் போல் கர்த்தாவானவன் விட்டுவிடுகிறான். ஏர் முதலியவைகள் காலாந்தரத்தில் பலனைத்தராது. மேலும் ஏர் ஆனது வயல்களிலிருந்து தானியங்களை கிருஹத்திற்கு கொண்டுசேர்க்காது. பூதகர்மங்கள் அசேதனமானதினால் அவைகளுக்கு பிரவிர்த்தியானது கிடையாது. அவ்வாறெனில் வாயுவானது அசேதனமாயினும் அதற்கு சுயமாக பிரவிர்த்தி காணப்படுகிறதே எனில், அது சரியல்ல. ஏன் எனில் அது அசித்தமாகும். அசேதனமான வாயுவிற்கு சுயமாகவே பிரவிர்த்தியானது ஏற்படாது. ஏன்எனில் ரதம் முதலிய மற்றஅசேதன பதார்த்தங்களில் காணப்படவில்லை.
शास्त्रात्कर्मण एवेति चेत् — शास्त्रं हि क्रियातः फलसिद्धिमाह नेश्वरादेः ‘स्वर्गकामो यजेत’ इत्यादि । न च प्रमाणाधिगतत्वादानर्थक्यं युक्तम् । न चेश्वरास्तित्वे प्रमाणान्तरमस्तीति चेत् ।
(மீமாம்ஸா) சாஸ்திரத்தை அனுசரித்த கர்மத்திற்கல்லவா பலன் ஏற்படுகிறது. என்பதால் “स्वर्गकामो यजेत” (ஸ்வர்ககாமோ யஜேத) என்பது முதலிய சாஸ்திரங்களால் கிரியையினாலேயே பலன் சித்திக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது. பிரமாணசித்திப்பதினால் அர்த்தமற்றதாக இருக்கமுடியாது. ஈஸ்வரன் இருக்கிறான் என்பதற்கு வேறு பிரமாணம் இல்லை என்று கூறினால்-
न , दृष्टन्यायहानानुपपत्तेः । क्रिया हि द्विविधा दृष्टफला अदृष्टफला च । दृष्टफलापि द्विविधा अनन्तरफला कालान्तरफला च । अनन्तरफला गतिभुजिलक्षणा । कालान्तरफला च कृषिसेवादिलक्षणा । तत्रानन्तरफला फलापवर्गिण्येव । कालान्तरफला तु उत्पन्नप्रध्वंसिनी ।
அவ்வாறு அல்ல. முன்பு பார்க்கப்பட்ட நியாயத்திற்கு பொருந்தாததால். கிரியையானது திருஷ்ட்டபலம், அதிருஷ்ட்டபலம் என்று இரண்டு விதமானதாகும். அதில் திருஷ்ட்டபலம் அநந்தரபலம், ஆகாமிபலம் என்று இரண்டு விதமாகும். அதில் அநந்தரபலமானது செல்லுதல் சாப்பிடுதல் முதலிய லக்ஷணமுடையதாகும். காலாந்தர பலமானது விவசாயம், சேவை முதலிய லக்ஷணங்களோடு கூடியதாகும். அதில் அநந்தர பலமானது பலனைக் கொடுக்கும் பொழுதே கிரியை நஷ்ட்டமாகிவிடும். காலாந்தர பலமானது பலத்தை உண்டுபண்ணி விட்டு பலன் கொடுப்பதற்கு முன்பே கிரியை நஷ்ட்டமாகிவிடும்.
आत्मसेव्याद्यधीनं हि कृषिसेवादेः फलं यतः । न चोभयन्यायव्यतिरेकेण स्वतन्त्रं कर्म ततो वा फलं दृष्टम् । तथा च कर्मफलप्राप्तौ न दृष्टन्यायहानमुपपद्यते । तस्माच्छान्ते यागादिकर्मणि नित्यः कर्तृकर्मफलविभागज्ञ ईश्वरः सेव्यादिवद्यागाद्यनुरूपफलदातोपपद्यते । स चात्मभूतः सर्वस्य सर्वक्रियाफलप्रत्ययसाक्षी नित्यविज्ञानस्वभावः संसारधर्मैरसंस्पृष्टः ।
ஏன் எனில் வியவசாயத்தின் பலன் வியவசாயம் செய்பவனுடைய அதீனமாகவும், சேவை முதலியவற்றின் சேவை செய்பவனுடைய அதீனமாய் இருக்கிறது. இவ்வித நியாயத்தைக் காட்டிலும் வேறான கர்மம், அதனால் ஸ்வதந்திரமான பலனோ பார்க்கப்படவில்லை. அவ்வாறேகர்ம பலனை அடைவதில் அறியப்பட்ட நியாயத்திற்கு நஷ்ட்டமானது பொருந்தாது. ஆகையால் யாகாதி கர்மாக்கள் செய்து முடிந்தபின் அந்தயாகாதிகளுக்கு தகுந்தவாறு பலத்தைக் கொடுப்பவனும் அவ்வாறேகர்த்தா, கர்ம, பலன் ஆகிய விபாகங்களை அறிந்த ஈஸ்வரன் சேவைசெய்தல் முதலியவற்றைப் போல் ஆகும். மேலும் அது எல்லாவற்றிற்கும் அந்தராத்மாவாகும். அது எல்லா கர்ம பலன்களுக்கும் அவ்வாறேஎல்லா பிரத்தியங்களுக்கும் சாக்ஷி, நித்திய விக்ஞான ஸ்வரூபமாகும். அவ்வாறேசாம்சாரிகதர்மங்களால் ஸ்பரிஸிக்கப்படாததாகும்.
श्रुतेश्च । ‘न लिप्यते लोकदुःखेन बाह्यः’ (क. उ. २ । २ । ११) ‘जरां मृत्युमत्येति’ (बृ. उ. ३ । ५ । १) ‘विजरो विमृत्युः’ (छा. उ. ८ । ७ । १) ‘सत्यकामः सत्यसङ्कल्पः’ (छा. उ. ८ । ७ । १) ‘एष सर्वेश्वरः’ (बृ. उ. ४ । ४ । २२) ‘पुण्यं कर्म कारयति’ ‘अनश्नन्नन्यो अभिचाकशीति’ (मु. उ. ३ । १ । १) ‘एतस्य वा अक्षरस्य प्रशासने’ (बृ. उ. ३ । ८ । ९) इत्याद्या असंसारिण एकस्यात्मनो नित्यमुक्तस्य सिद्धौ श्रुतयः । स्मृतयश्च सहस्रशो विद्यन्ते । न चार्थवादाः शक्यन्ते कल्पयितुम् , अनन्ययोगित्वे सति विज्ञानोत्पादकत्वात् । न चोत्पन्नं विज्ञानं बाध्यते ।
சுருதிகளிலும் அறிகிறோம், “நலிப்யதே லோகதுக்கேன பாஹ்ய” (எல்லா உலகத்தைக் காட்டிலும் விலக்ஷணமான பரமாத்மாவை உலகத்தில் உள்ள துக்கமானது ஒட்டாது) “ஜராம்மிருத்யுமத்யேதி” அது மூப்பு, மரணம் இவைகளுக்கு அப்பாற்பட்டதாகும். “விஜரோவிமிர்த்யு:” (மூப்பு, மரணமற்றது), “சத்யகாம: சத்யசங்கல்ப:” (அது சத்யகாம, சத்யசங்கல்பம்) “ஏஷ சர்வேச்வர:” (அது சர்வேச்வரன்) “சாது கர்மகாரயதி” (அது சுபகர்மத்தைச் செய்விக்கிறது), அசனன் அன்யோ அபிச்சாகசீதி” வேறுபக்ஷியானது கர்மபலத்தை போகம் செய்யாமல் அதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது. “ஏதஸ்யவா அக்ஷரஸ்ய ப்ரசாசனே” “இந்த அக்ஷரபிரஹ்மத்தின் ஆக்ஞையால்) என்பது முதலிய ஸ்ருதிகளினால் சம்சாரியல்லாத  ஏகமாகிய ஆத்மா நித்யமுக்தன் என்பது சித்திக்கிறது. (விளங்குகிறது) அர்த்தவாதத்தைக் கல்பிக்கமுடியாது. ஏன்எனில் வேறு எந்த ஒருவிதிக்கும் சேஷபூதமாகாத காரணத்தினால் ஸ்வதந்திர ஞானத்தை உண்டுபண்ணக் கூடியதாகும். மேலும் அதனால் உண்டான ஞானம் பாதிக்கமுடியாததாகும்.
अप्रतिषेधाच्च । न चेश्वरो नास्तीति निषेधोऽस्ति । प्राप्त्यभावादिति चेत् , न ; उक्तत्वात् । ‘न हिंस्यात्’ इतिवत्प्राप्त्यभावात्प्रतिषेधो नारभ्यत इति चेत् , न ; ईश्वरसद्भावे न्यायस्योक्तत्वात् । अथवा अप्रतिषेधादिति कर्मणः फलदाने ईश्वरकालादीनां न प्रतिषेधोऽस्ति । न च निमित्तान्तरनिरपेक्षं केवलेन कर्त्रैव प्रयुक्तं फलदं दृष्टम् । न च विनष्टोऽपि यागः कालान्तरे फलदो भवति ।
ஈஸ்வரனை நிஷேதம் செய்யமுடியாததின் காரணமாக ஈஸ்வரன் இல்லை என்று நிஷேதம் செய்யமுடியாது. ஈஸ்வரனே இல்லாததினால் நிஷேதம் பொருந்தவில்லை என்று கூறினால் அது பொருந்தாது. ஏன்எனில் சாஸ்த்திரத்தில் அவ்வாறு கூறப்படவில்லை ஆதலால், न हिंस्यादितिवत् (நஹிம்ஸ்யாதிதிவத்) ஹிம்சயை நிஷேதிப்பது போல் ஈஸ்வரனை நிஷேதித்தலை ஆரம்பிக்கவே இல்லை. அவ்வாறு கூறப்படவேயில்லை. ஏன்எனில் ஈஸ்வரனின் இருப்பை இதற்கு முன் அதற்கான நியாயம் கூறப்பட்டது. அல்லது अप्रतिषेधात् (அப்பிரதி ஷேதாத்) என்ற ஹேதுவின் தாத்பர்யமானது கர்மபலனை கொடுப்பதில் ஈஸ்வரனையோ, காலத்தையோ பிரதிஷேதம் செய்யவில்லை. (நீக்கவில்லை) கர்மத்திற்கு வேறு நிமித்தத்தை அபேக்ஷிக்காமல் கேவல கர்த்தாவினால் பிரேரிக்கப்பட்டு பலத்தைக் கொடுப்பதைப் பார்த்ததில்லை. நஷ்ட்டமானயாகத்தினால் காலந்தரத்தில் பலனைக் கொடுக்கமுடியாது.
सेव्यबुद्धिवत्सेवकेन सर्वज्ञेश्वरबुद्धौ तु संस्कृतायां यागादिकर्मणा विनष्टेऽपि कर्मणि सेव्यादिवेश्वरात्फलं कर्तुर्भवतीति युक्तम् । न तु पुनः पदार्था वाक्यशतेनापि देशान्तरे कालान्तरे वा स्वं स्वं स्वभावं जहति । न हि देशकालान्तरेषु चाग्निरनुष्णो भवति । एवं कर्मणोऽपि कालान्तरे फलं द्विप्रकारमेवोपलभ्यते ।
எவ்வாறு சேவை செய்பவனுடைய சேவையினால் எஜமானனுடைய புத்தியில் சம்ஸ்காரம் உண்டாகிறதோ அவ்வாறேயாகாதி கர்மங்களினால் சர்வக்ஞனாகிய ஈஸ்வரனின் புத்தியில் சமஸ்காரம் அடைந்து பின் அந்த யாகாதி கர்மம் நஷ்ட்டமடைந்தாலும் எவ்வாறு சேவகனுக்கு அவனுடைய எஜமானன் சன்மானம் செய்வாரோ அவ்வாறேஈஸ்வரனும் கர்மம் நஷ்ட்டமடைந்தாலும் அதற்கு தகுந்தவாறு பலனைக் கொடுக்கிறார் என்பது பொருந்தும். ஒரு பதார்த்தமானது நூ ற்றுக்கணக்கான வாக்கியங்களினாலோ, தேசாந்தரத்திலோ, காலந்தரத்திலோ தன் ஸ்வபாவத்தை விடாது. எவ்வாறெனில் தேசாந்தரத்திலோ, காலாந்தரத்திலோ அக்னியானது உஷ்ணமல்லாததாகாது. அவ்வாறு கர்மங்களுக்கும் காலாந்தரத்தில் இரு பிரகாரமான பலன்கள் கிடைக்கிறது.
बीजक्षेत्रसंस्कारपरिरक्षाविज्ञानवत्कर्त्रपेक्षफलं कृष्यादि, विज्ञानवत्सेव्यबुद्धिसंस्कारापेक्षफलं च सेवादि । यागादेः कर्मणस्तथाविज्ञानवत्कर्त्रपेक्षफलत्वानुपपत्तौ कालान्तरफलत्वात्कर्मदेशकालनिमित्तविपाकविभागज्ञबुद्धिसंस्कारापेक्षं फलं भवितुमर्हति, सेवादिकर्मानुरूपफलज्ञसेव्यबुद्धिसंस्कारापेक्षफलस्येव । तस्मात्सिद्धः सर्वज्ञ ईश्वरः सर्वजन्तुबुद्धिकर्मफलविभागसाक्षी सर्वभूतान्तरात्मा । ‘यत्साक्षादपरोक्षात्’ (बृ. उ. ३ । ४ । १) ‘य आत्मा सर्वान्तरः’ (बृ. उ. ३ । ४ । १) इति श्रुतेः ।
விவசாயம் முதலியவை விதை, வயல் ஆகியவற்றின் ரக்ஷித்தலை அறிந்த கர்த்தாவை ஆசரித்ததே அதன்பலன். அவ்வாறேசேவை செய்வதை அறிந்ததைப் போல் சேவ்ய புத்தியின் சம்ஸ்காரத்தை அபேக்ஷித்தே அதன் பலன் ஆகும். யாகாதி கர்மங்களை அவ்வாறு கர்த்தாவால் அறியாமையால் அந்தபலன் கர்த்தாவை அபேக்ஷிக்கிறது என்பது பொருந்தாது. அது காலாந்தர பலனாய் இருப்பதால் கர்ம, தேச, கால, நிமித்த, கர்மத்தின் பரிபக்குவம், விபாகபுத்தி சம்ஸ்காரத்தை அபேக்ஷித்து பலன் ஏற்படுவதற்கு ஏற்றதாகும். எவ்வாறு சேவை முதலிய கர்மானுரூபபலத்தை அறிந்தவன் சேவ்ய புத்தியின் சம்ஸ்காரத்தை அபேக்ஷித்தே பலன் ஏற்படுகிறது. ஆகையால் சர்வக்ஞன் ஈஸ்வரன், எல்லா ஜீவராசிகளுடைய புத்தி கர்மபலன் இவைகளின் விபாகத்தின்சாக்ஷி சர்வபூத அந்த ராத்மா என்று சித்திக்கிறது. “यत्साक्षादपरोक्षाद्ब्रह्म य आत्मा सर्वान्तरः” (யத்சாக்ஷாதப ரோக்ஷாத் பிரஹ்ம் ய ஆத்மா சர்வாந்தர: ) எது சாக்ஷாத் அபரோக்ஷ பிரஹ்மமோ, எது சர்வ அந்தராத்மா என்பது முதலிய சுருதி வாக்கியங்களால் அறிகிறோம்.
स एव चात्रात्मा जन्तूनाम् , ‘नान्योऽतोऽस्ति द्रष्टा श्रोता मन्ता विज्ञाता’ (बृ. उ. ३ । ७ । २३) ‘नान्यदतोऽस्ति विज्ञातृ’ (बृ. उ. ३ । ८ । ११) इत्याद्यात्मान्तरप्रतिषेधश्रुतेः ‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) इति चात्मत्वोपदेशात् । न हि मृत्पिण्डः काञ्चनात्मत्वेनोपदिश्यते ।
எல்லா ஜீவராசிகளுக்கும் அந்தசர்வசாக்ஷியாகிய ஈஸ்வரனே இங்கு ஆத்மாவாகும். ஆகையால் அதைத் தவிர வேறு த்ரஷ்ட்டாவோ, ஸ்ரோத்தாவோ, மந்தாவோ விக்ஞாதாவோ இல்லை. “नान्यदतोऽस्ति विज्ञातृ” (நான்யததோ அஸ்தி விக்ஞாத்ரு) என்பது முதலிய ஆத்மாவைத் தவிர மற்றதை விலக்கும் சுருதியின் வாயிலாய் அறிகிறோம். “तत्त्वमसि” (தத்துவமசி) என்று ஆத்மத்துவத்தை உபதேசிப்பதாலுமாகும். மண்கட்டியை தங்கரூபமானதாக ஒருபோதும் கூறப்படவில்லை.
ज्ञानशक्तिकर्मोपास्योपासकशुद्धाशुद्धमुक्तामुक्तभेदादात्मभेद एवेति चेत् , न । भेददृष्ट्यपवादात् ।
ஞானசக்தி கர்ம உபாஸ்ய, உபாஸக சுத்த, அசுத்த, முக்த, அமுக்த முதலிய பேதங்கள் ஆத்ம பேதங்களே எனில், அவ்வாறு அல்ல. ஏன்எனில் பேததிருஷ்ட்டி அபவாதம் செய்யப்படுவதாகும்.
यदुक्तं संसारिणः ईश्वारादनन्या इति ; तन्न ।
(பூர்வ) - நீங்கள் கூறும் சம்சாரியைக் காட்டிலும் ஈஸ்வரன் வேறு அல்ல என்பதோ அது அவ்வாறு அல்ல. (அதாவது ஈச்வரனைக் காட்டிலும் ஸம்ஸாரிகள் வேறுபட்டவர்கள் அன்று என யாதென்று சொல்லப்பட்டதோ, அது பொருந்தாது.)
किं तर्हि ?
(சி) - அதனால் என்ன?
भेद एव संसार्यात्मनाम् ।
(பூர்வ) - சம்சாரிக்கும் பரமாத்மாவிற்கும் பரஸ்பர பேதம் உள்ளது.
कस्मात् ?
(சி) - எதனால்?
लक्षणभेदात् , अश्वमहिषवत् । कथं लक्षणभेद इति, उच्यते — ईश्वरस्य तावन्नित्यं सर्वविषयं ज्ञानं सवितृप्रकाशवत् । तद्विपरीतं संसारिणां खद्योतस्येव । तथैव शक्तिभेदोऽपि । नित्या सर्वविषया चेश्वरशक्तिः ; विपरीतेतरस्य । कर्म च चित्स्वरूपात्मसत्तामात्रनिमित्तमीश्वरस्य । औष्ण्यस्वरूपद्रव्यसत्तामात्रनिमित्तदहनकर्मवत् राजायस्कान्तप्रकाशकर्मवच्च स्वात्मनोऽविक्रिया रूपम् ; विपरीतमितरस्य । ‘उपासीत’ इति वचनादुपास्य ईश्वरो गुरुराजवत् । उपासकश्चेतरः शिष्यभृत्यवत् । अपहतपाप्मादिश्रवणान्नित्यशुद्ध ईश्वरः । ‘पुण्यो वै पुण्येन’ (बृ. उ. ३ । २ । १३) इति वचनाद्विपरीत इतरः ।
(பூர்வ) குதிரை, எருமை இவைகளைப் போல் லக்ஷண பேதம் இருப்பதால் எவ்வாறு லக்ஷண பேதம் இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஈஸ்வரனுடைய ஞானம் சூரியப்பிரகாசம் போல் நித்யமான எல்லா விஷய ஞானமும் இருக்கிறது. (சர்வக் ஞத்துவம்) சம்சாரிகளுக்கு அதற்கு விபரீதமான மின்னல் பூச்சியின் பிரகாசம் போல் அநித்திய சிறிதுஞானம் இருக்கிறது. (கிஞ்சிக்ஞம்) அவ்வாறேசக்தியின் பேதமுமாகும். அவ்வாறேஈஸ்வரனுடைய சக்தி நித்தியமானதாயும் சர்வவிஷயமாயும் இருக்கிறது. ஆனால் சம்சாரியின் சக்தியும் விபரீதமாய் இருக்கிறது. ஈஸ்வரனுடைய கர்மமும் அதனுடைய சித்ஸ்வரூபியின் சத்தாமாத்திரமாய் இருக்கிறது. எவ்வாறு உஷ்ணமுடைய பதார்த்தங்களின் (சூரியன் முதலியவைகளின்) சத்தாமாத்திரத்தினால் சூடுபடுத்தும் காரியம் ஏற்படுகிறதோ அவ்வாறாகும். அல்லது எவ்வாறு ராஜா, அயஸ்காந்தம், பிரகாசம் முதலியவைகளின் சந்நிதானத்தின் முன் ஏற்படும் கர்மம்போல் விகாரரூபத்தை அடைகிறது. ஆனால் சம்சாரியினுடைய கர்மம் இதைவிட மாறுபட்டதாகும். उपासीत (உபாசீத) என்றசுருதியை அனுசரித்து ஈஸ்வரன், குரு அவ்வாறேராஜா இவர்களுக்கு சமமாக உபாசிக்கப்பட வேண்டியது அவ்வாறேசம்சாரீ சிஷ்யன் சேவகனுக்கு சமானமான உபாசகன் ஆகிறான். अपहतपाप्मा (அபஹத பாப்மா) முதலிய சுருதிகளை அனுசரித்து ஈஸ்வரன் நித்திய சுத்தன். पुण्यो वै पुण्येन முதலிய ஸ்ருதி வாக்கியங்களால் சம்சாரி ஜீவன் இதைக் காட்டிலும் விபரீதமானவன்.
अत एव नित्यमुक्त ईश्वरः । नित्याशुद्धियोगात्संसारीतरः । यत्र च ज्ञानादिलक्षणभेदोऽस्ति तत्र भेदो दृष्टः यथा अश्वमहिषयोः । तथा ज्ञानादिलक्षणभेदादीश्वरादात्मनां भेदोऽस्तीति चेत् ।
ஆகையால் ஈஸ்வரன் நித்யமுக்தனே. நித்ய அசுத்தத்துடன் கூடியவன் சம்சாரி மேலும் எவ்வாறு குதிரைக்கும் எருமைக்கும் பேதம் காணப்படுகிறதோ அங்கு ஞானமுதலியவைகளின் பேதம் இருக்கிறது. அவ்வாறேஞான முதலிய லக்ஷண பேதத்தால் ஈஸ்வரனுக்கும் ஜீவர்களுக்கும் பேதம் இருக்கிறது என்றால்.
न ।
(சி) இல்லை
कस्मात् ?
(பூர்வ) எதனால்
(சி) “अन्योेेऽसावन्योऽहमस्मीति न स वेद” (அன்யோ ऽசாவன்யோ அஹமஸ்மீதி = அது (பிரஹ்மம்) வேறு நான் வேறு என்று எவன் அறிகிறானோ அவன் அறியவில்லை.) “ते क्षय्यलोका भवन्ति” (தே க்ஷய்ய லோகா பவந்தி = அவர்கள் அழியக்கூடிய லோகத்தை அடைவார்கள்), “मृत्योः स मृत्युमाप्नोति” (ம்ருத்யோ : ஸ ம்ருத்யுமாப்னோதி) = மரணத்திலிருந்து மரணத்தை அடைகின்றார்கள்) என்று பேததிருஷ்ட்டியை நிஷேதம் செய்திருக்கின்றார்கள். ஏகத்துவத்தைப் பிரதி பாதிக்கின்றஆயிரக்கணக்கான சுருதிகள் இருக்கின்றன.
यदुक्तं ज्ञानादिलक्षणभेदादिति अत्रोच्यते । न, अनभ्युपगमात् । बुद्ध्यादिभ्यो व्यतिरिक्ता विलक्षणाश्चेश्वराद्भिन्नलक्षणा आत्मानो न सन्ति । एक एवेश्वरश्चात्मा सर्वभूतानां नित्यमुक्तोऽभ्युपगम्यते । बाह्यश्च बुद्ध्यादिसमाहारसन्तानाहङ्कारममत्वादिविपरीतप्रत्ययप्रबन्धाविच्छेदलक्षणो नित्यशुद्धबुद्धमुक्तस्वरूपविज्ञानात्मेश्वरगर्भो नित्यविज्ञानावभासः चित्तचैत्त्यबीजबीजिस्वभावः कल्पितोऽनित्यविज्ञान ईश्वरलक्षणविपरीतोऽभ्युपगम्यते । यस्याविच्छेदे संसारव्यवहारः ; विच्छेदे च मोक्षव्यवहारः ।
ஞான முதலிய லக்ஷணங்களில் உள்ள பேதத்தின் காரணமாக ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் பேதம் உள்ளது என்று எது உன்னால் கூறப்பட்டதோ அது பொருத்தமில்லாததால் பொருந்தாது. புத்தி முதலிய உபாதிகளைக் காட்டிலும் விலக்ஷணமாகவும் வேறானதாகவும் ஒரு ஜீவன் இல்லை. ஒரே நித்ய முக்த ஈஸ்வரன் எல்லா ஜீவர்களுக்கும் ஆத்மாவாக இருக்கிறான். ஏன்எனில் கண்கள் மேலும் புத்தி முதலியவைகளின் சங்காதத்தின் பரம்பரையால் உண்டான அஹங்காரமமகார ரூபவிபரீத ஞானத்தின் ஒழிவு ஏற்படாதது எதற்கு லக்ஷணமோ அதற்கு நித்ய, சுத்த புக்த, முக்த விக்ஞானரூப ஈஸ்வரனே அந்தர்யாமியாகும். அதற்கு ஸ்வயம் நித்ய விக்ஞானத்தின் அவபாச சித்த (பிரதிபிம்பம்), சைத்திய (சுக முதலிய விஷயங்கள்) பீஜம் (அவித்யா) மேலும் பீஜி (தேஹாதிகள்) இவைகளுடன் தாதாத்மியம் ஏற்பட்ட அந்த ரூபமாகவே ஆகிறது அவ்வாறு கல்பிக்கப்பட்ட அநித்திய விக்ஞானவான் மேலும் ஈஸ்வரனுடைய லக்ஷணங்களை காட்டிலும் விபரீதமானவன். அவனே பாஹ்ய ஜீவன் எனப்படுகிறான். எவனுக்கு இந்த உபாதி ஸ்வரூபம் நாசமாகவில்லையோ அவனுக்கு சம்சார வியவஹாரம் ஏற்படுகிறது அவ்வாறேஎவனுக்கு நீங்குகிறதோ அவனுக்கு மோக்ஷ வியவஹாரம் ஏற்படுகிறது.
अन्यश्च मृत्प्रलेपवत्प्रत्यक्षप्रध्वंसो देवपितृमनुष्यादिलक्षणो भूतविशेषसमाहारो न पुनश्चतुर्थोऽन्यो भिन्नलक्षण ईश्वरादभ्युपगम्यते ।
மேலும் மற்றவர் மரணமடைந்தவன் பிரத்யக்ஷமாக நாசமடைவதுபோல் தேவர், பித்ரு, மனுஷ்ய முதலிய லக்ஷணங்கள் கூடிய ஜீவர்கள் (ஆத்மாவைக் காட்டிலும்) எவ்வகையிலும் வேறானவர்களே. ஆனால் ஸ்தூல, சூக்ஷ்ம சுஷுப்தி ஆகிய மூன்று சரீரங்களை காட்டிலும்  வேறான நான்காவது அதாவது சதுர்த்த ஆத்மா அந்த ஈஸ்வரனைக் காட்டிலும் வேறான லக்ஷணங்கள் உடையது ஆகாது.
बुद्ध्यादिकल्पितात्मव्यतिरेकाभिप्रायेण तु लक्षणभेदादित्याश्रयासिद्धो हेतुः, ईश्वरादन्यस्यात्मनोऽसत्त्वात् ।
புத்தி முதலியவைகளால் கல்பிக்கப்பட்டவைகளைக் காட்டிலும் ஆத்மா வேறானது என்று லக்ஷண பேதம் முதலியவைகளை அபேக்ஷித்து கூறப்பட்ட காரணமானது இங்கு பொருந்தாது. ஏன் எனில் ஈஸ்வரனைக் காட்டிலும் வேறு கல்பித ஆத்மா அசத்தியமானதால்.
ईश्वरस्यैव विरुद्धलक्षणत्वमयुक्तमिति चेत् सुखदुःखादियोगश्च,
(பூர்வ) (ஈஸ்வரனைக் காட்டிலும் வேறான விருத்த லக்ஷணம் உடைய ஆத்மா ஒன்றும் இல்லையெனில்) ஈஸ்வரனிடமே விருத்த லக்ஷணமும், அவ்வாறே சுக துக்க முதலியவைகளும் உள்ளது எனில் அது பொருந்தாது.
न । निमित्तत्वे सति लोकविपर्ययाध्यारोपणात् , सवितृवत् । यथा हि सविता नित्यप्रकाशरूपत्वाल्लोकाभिव्यक्त्यनभिव्यक्तिनिमित्तत्वे सति लोकदृष्टिविपर्ययेणोदयास्तमयाहोरात्रादिकर्तृत्वाध्यारोपभाग्भवति, एवमीश्वरे नित्यविज्ञानशक्तिरूपे लोकज्ञानापोहसुखदुःखस्मृत्यादिनिमित्तत्वे सति लोकविपरीतबुद्ध्याध्यारोपितं विपरीतलक्षणत्वं सुखदुःखादयश्च न स्वतः ।
என்று கூறுவது சரியல்ல. சூரியன்போல் ஆத்மா லோக விபர்யயத்தின் அத்யாரோபத்திற்கு நிமித்தமாத்திரமாய் இருக்கிறது. எவ்வாறு சூரியன் நித்யபிரகாசரூபமாய் இருப்பதால் லோகத்தின் வெளிப்பாட்டிற்கும் (அபிவியக்தம்) அடங்குதலுக்கும் (அநபிவியக்தம்) நிமித்தமாய் இருக்கும்பொழுது லோகத்ருஷ்டியின் விபர்யயத்தால் உதயம், அஸ்தமனம், அஹோராத்திரி முதலிய கர்த்திருத்வங்களை அத்யாரோபம் செய்வதாய் ஆகிறது. அவ்வாறு நித்தியவிக்ஞான சக்தி ரூப ஈஸ்வரனிடத்தில் லோகஞானத்தின் நாசமும், அவ்வாறேசுக துக்க, ஸ்ம்ருதி முதலிய நிமித்தங்கள் இருக்கும் பொழுது லோக விபரீத புத்தி ஆரோபிக்கப்படுகிறது.  அவ்வாறேசுகதுக்கங்களுக்கு ஆஸ்ரயம் ஆரோபிக்கப்படுகிறது. அவற்றிற்கு சுயமானபாவம் இல்லை.
आत्मदृष्ट्यनुरूपाध्यारोपाच्च । यथा घनादिविप्रकीर्णेऽम्बरे येनैव सवितृप्रकाशो न दृश्यते, स आत्मदृष्ट्यनुरूपमेवाध्यस्यति सवितेदानीमिह न प्रकाशयतीति सत्येव प्रकाशेऽन्यत्र भ्रान्त्या । एवमिह बौद्धादिवृत्त्युद्भवाभिभवाकुलभ्रान्त्याध्यारोपितः सुखदुःखादियोग उपपद्यते ।
மேலும் எல்லா ஜீவர்களும் தங்களுடைய திருஷ்ட்டியை அனுசரித்து அதில் ஆரோபம் செய்கிறார்கள். எவ்வாறெனில் கருமேகங்களால் சூழப்பட்டதினால் ஆகாயத்தில் சூரியப் பிரகாசம் காணப்படவில்லை. ஆனால் மற்றஇடத்தில் பிரகாசிக்கிறது. பிராந்தியினால் தன்னுடைய திருஷ்ட்டியை அனுசரித்துத்தான் சூரியன் இப்பொழுது இங்கு பிரகாசிக்கவில்லை என்று அத்யாசம் செய்கின்றான். அவ்வாறு இங்கு புத்தி முதலியவைகளின் விருத்திகள் உண்டாவதும் மறைவதால் வியாகூலம் அடைந்ததால் ஏற்பட்ட பிராந்தியினால் ஆரோபிக்கப்பட்ட சுகதுக்கங்களின் அடைவு உண்டாகிறது.
तत्स्मरणाच्च । तस्यैव ईश्वरस्यैव हि स्मरणम् ‘मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च’ (भ. गी. १५ । १५) ‘नादत्ते कस्यचित्पापम्’ (भ. गी. ५ । १५) इत्यादि । अतो नित्यमुक्त एकस्मिन्सवितरीव लोकाविद्याध्यारोपितमीश्वरे संसारित्वम् ; शास्त्रादिप्रामाण्यादभ्युपगतमसंसारित्वमित्यविरोध इति ।
இந்த விஷயத்தில் ஸ்மிருதியும் இருக்கிறது. அந்த ஈஸ்வரனுடைய ஸ்மிருதிவாக்கியம் “मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च” (மத்த: ஸ்மிருதி ஞானமபோஹனம் ச = என்னிடமிருந்து ஸ்மிருதி, ஞானம், அக்ஞானம் உண்டாயிற்று. “नादत्ते कस्यचित्पापम्” ( ந ஆதத்தே கஸ்யசித்பாபம் = நான் ஒருவருடைய பாபத்தையும் ஏற்றுக் கொள்ளமாட்டேன்) என்பது முதலியன. ஆகையால் சூரியனைப் போல் ஒருவனாகிய நித்தமுக்த ஈஸ்வரனிடத்தில் உலகத்தோர் சம்சாரித்துவத்தை அத்யாரோபம் செய்கிறார்கள். சாஸ்திரம் முதலிய பிரமாணங்களால் ஈஸ்வரனிடத்தில் அசம்சாரித்துவத்தை அறிய முடிகிறது. அதனால் விரோதம் இல்லை என்பது தெளிவு ஆகிறது.
एतेन प्रत्येकं ज्ञानादिभेदः प्रत्युक्तः । सौक्ष्म्यचैतन्यसर्वगतत्वाद्यविशेषे च भेदहेत्वभावात् । विक्रियावत्त्वे चानित्यत्वात् । मोक्षे च विशेषानभ्युपगमात् अभ्युपगमे चानित्यत्वप्रसङ्गात् । अविद्यावदुपलभ्यत्वाच्च भेदस्य तत्क्षयेऽनुपपत्तिरिति सिद्धमेकत्वम् ।
இதனால் பிரத்யேக ஜீவனுக்கும் ஞானமுதலிய பேதங்கள் காணப்படுகின்றன. ஏன் எனில் சூக்ஷ்மத்தன்மை, சைதன்யம், சர்வகதம் முதலிய தர்மங்கள் சமானமாய் இருப்பதால் பேதத்திற்கு காரணம் இல்லாமையால் அதற்கு விகாரித் தன்மையை ஏற்றுக்கொண்டால் அநித்தியமாகும். இதைத் தவிர மோக்ஷ தசையில் ஆத்மாவிற்கு ஒரு விசேஷ பாவமும் கிடையாது. பாவம் இருக்கிறது என்றால் அதற்கு அநித்திய பிரசங்கம் ஏற்படும். அவ்வாறேபேதமானது அவித்தை உடையவனாலேயே அடையப்படுகிறது. அவித்யா க்ஷயமாகிவிட்டால் பேதம் இல்லாமல் போகும். ஆகையால் ஏகத்துவமே சித்திக்கிறது.
तस्माच्छरीरेन्द्रियमनोबुद्धिविषयवेदनासन्तानस्याहङ्कारसम्बन्धादज्ञानबीजस्य नित्यविज्ञानान्यनिमित्तस्यात्मतत्त्वयाथात्म्यविज्ञानाद्विनिवृत्तावज्ञानबीजस्य विच्छेद आत्मनो मोक्षसंज्ञा, विपर्यये च बन्धसंज्ञा ; स्वरूपापेक्षत्वादुभयोः ।
ஆகையால் சரீர இந்திரிய மனது புத்தி, விஷயம் அவ்வாறேஇந்திரிய ஞானப்பிரவாஹம் இவைகள் நித்திய விக்ஞான சொரூபமான ஆத்மாவைக் காட்டிலும் வேறான மற்றஒரு நிமித்தத்தால் விளங்குகிறது. ஆத்மாவின் யதார்த்த ஞானத்தினால் அந்த நிமித்தத்தின் நீக்கத்தால் அக்ஞானமாகிய பீஜமானது நசிக்கிறது. அது ஆத்மாவின் மோக்ஷம் எனப்படுகிறது. இதற்குமாறானது பந்தம் எனப்படுகிறது. ஏன்எனில் இவை இரண்டும் (புத்தி முதலியவைகளின் உபாதி உடைய) ஸ்வரூபத்தை அபேக்ஷிக்கின்றது.
ब्रह्म — ह इत्यैतिह्यार्थः — पुरा किल देवासुरसङ्ग्रामे जगत्स्थितिपरिपिपालयिषया आत्मानुशासनानुवर्तिभ्यो देवेभ्यः अर्थिभ्योऽर्थाय विजिग्ये अजैषीदसुरान् । ब्रह्मण इच्छानिमित्तो विजयो देवानां बभूवेत्यर्थः । तस्य ह ब्रह्मणो विजये देवा अमहीयन्त । यज्ञादिलोकस्थित्यपहारिष्वसुरेषु पराजितेषु देवा वृद्धिं पूजां वा प्राप्तवन्तः ।
(பிரஹ்ம ஹ) என்பது இதிகாச அர்த்தத்தைக் குறிக்கிறது. முன்பு தேவாசுரர்களுடைய யுத்தத்தில் உலகஸ்திதியின் ரக்ஷணையின் பொருட்டு தன்னுடைய பிரஹ்மத்தினுடைய கட்டளையை அனுசரிக்கின்றதேவர்களின் வேண்டுகோளாகிய ஜயத்தின் பொருட்டு அசுரர்களை ஜயித்தார். பிரஹ்மத்தினுடைய இச்சாமர்த்திரத்தினாலேயே தேவர்களுக்கு ஜயம் கிடைத்தது என்பது பொருள். ஆனால் அந்த ப்ரஹ்மத்தினுடைய ஜயத்தை தேவர்கள் தங்களால்தான் அடையப்பட்டது என்று அகந்தையை அடைந்தார்கள். யக்ஞம் முதலிய லோகஸ்திதியை அபகரித்த அசுரர்களை ஜெயித்து தேவர்கள் விருத்தியை அல்லது சத்காரத்தையும் அடைந்தார்கள்.
त ऐक्षन्तेति मिथ्याप्रत्ययत्वाद्धेयत्वख्यापनार्थ आम्नायः ।
(த ஐக்ஷந்த) என்பது முதலிய சாஸ்திர வாக்கியங்கள், மித்யாபிரத்தியயமாகிய அபிமானத்தின் நிவர்த்தியை கூறுவதின் பொருட்டாகும்.
ईश्वरनिमित्ते विजये स्वसामर्थ्यनिमित्तोऽस्माकमेवायं विजयोऽस्माकमेवायं महिमेत्यात्मनो जयादिश्रेयोनिमित्तं सर्वात्मानमात्मस्थं सर्वकल्याणास्पदमीश्वरमेवात्मत्वेनाबुद्ध्वा पिण्डमात्राभिमानाः सन्तो यं मिथ्याप्रत्ययं चक्रुः तस्य पिण्डमात्रविषयत्वेन मिथ्याप्रत्ययत्वात्सर्वात्मेश्वरयाथात्म्यावबोधेन हातव्यताख्यापनार्थः तद्धैषामित्याद्याख्यायिकाम्नायः ।
ஈஸ்வரனுடைய நிமித்தத்தால் ஏற்பட்ட ஜயத்தை தங்களுடைய சாமர்த்தியத்தால்தான் தங்களுக்கு இந்த ஜயம், அவ்வாறேதங்களுக்கு இந்த மஹிமை என்று தங்களுடைய ஜயம் முதலிய ஸ்ரேயஸ்ஸின் காரணம் சர்வாத்மாவாயும், எல்லா கல்யாணங்களின் ஆஸ்பதமாகிய ஆத்மாவில் உள்ள ஈஸ்வரனை ஆத்மா பாவமாக அறியாமல் பிண்டமாத்திரத்தில் அபிமானம் கொண்டு அவர்கள் மித்யா ஞானத்தை அடைந்தார்கள். கேவல பிண்டமாத்திரத்தில் சம்பந்தம் வைத்ததால் அதுமித்யா ஞானஸ்வரூபமாகும். ஆகையால் சர்வாத்மா ஈஸ்வரனுடைய யதார்த்த ஸ்வரூபத்தை போதித்து அவர்களின் மித்யாஞானத்தை நீக்குவதற்காக இந்த “तद्धैषाम्” (தத்ஹைஷாம்) என்பது முதலிய கதை ரூபமாக இந்த சாஸ்திரம் (ஆம்நாயம்) கூறுகிறது.
तद्ब्रह्म ह किल एषां देवानामभिप्रायं मिथ्याहङ्काररूपं विजज्ञौ विज्ञातवत् । ज्ञात्वा च मिथ्याभिमानशातनेन तदनुजिघृक्षया देवेभ्योऽर्थाय तेषामेवेन्द्रियगोचरे नातिदूरे प्रादुर्बभूव महेश्वरशक्तिमायोपात्तेनात्यन्ताद्भुतेन प्रादुर्भूतं किल केनचिद्रूपविशेषेण । तत्किलोपलभमाना अपि देवा न व्यजानत न विज्ञातवन्तः किमिदं यदेतद्यक्षं पूज्यमिति ।
அந்த பிரஹ்மானது தேவர்களுடைய மித்யா அஹங்கார ரூபமான அபிப்ராயத்தை அறிந்து மித்யா அபிமானத்தை நீக்கி அவர்களை அனுகிரஹித்து அவர்களின் நன்மையின் பொருட்டு அவர்களின் இந்திரியத்திற்கு கோசரம் ஆகும்படி அருகில் தோன்றினார். மஹேஷ்வரமாயசக்தியினால் எடுத்துக்கொண்ட ஏதோ ஒரு பெரிய விசித்திரமான ரூபவிசேஷத்தை வெளிப்படுத்தினார். இதைப் பார்த்த தேவர்கள் இந்த பூஜைக்குரிய யக்ஷன் யார் என்று அறியாதவர்களாய் இருந்தார்கள்.
तद्विज्ञानायाग्निमब्रुवन् । तृणनिधानेऽयमभिप्रायः — अत्यन्तसम्भावितयोरग्निमारुतयोस्तृणदहनादानाशक्त्या आत्मसम्भावना शातिता भवेदिति ।
தேவர்கள் அதை அறிவதன் பொருட்டு அக்னியிடம் கூறினார்கள். திருணத்தை முன் வைத்ததின் அபிப்பிராயம் என்னவெனில் மிக்க அபிமானமுடைய அக்னி, மாருதம் இவைகளுக்கு திருணத்தை தஹிக்கவோ, அசைப்பதற்கோ சாமர்த்தியம் இல்லாமல் போவதால் அக்னி, வாயுவிடம் திடமாக உள்ள அபிமானத்தை நீக்குவதற்காகும்.
इन्द्र आदित्यो वज्रभृद्वा, अविरोधात् । इन्द्रोपसर्पणे ब्रह्म तिरोदध इत्यस्यायमभिप्रायः — इन्द्रोऽहमित्यधिकतमोऽभिमानोऽस्य ; सोऽहमग्न्यादिभिः प्राप्तं वाक्सम्भाषणमात्रमप्यनेन न प्राप्तोऽस्मीत्यभिमानं कथं न नाम जह्यादिति । तदनुग्रहायैवान्तर्हितं तद्ब्रह्म बभूव ।
இந்திரன், ஆதித்தியன் அல்லது வஜ்ரதாரி இவைகள் தேவராஜாவினுடைய பெயர்கள்.ஏனெனில் இந்த இரண்டு அர்த்தங்களிலும் அர்த்தம் விரோதமில்லை. பிரஹ்மம் இந்திரன் சமீபத்தில்  வந்த உடன் மறைந்து விட்டது. இதன் அபிப்ராயம் என்னவெனில் நான் இந்திரன் என்று எல்லோரைக்காட்டிலும் மிகுந்த அபிமானம் உள்ளதால் என்னால் அக்னி முதலியவைகளிடம் சம்பாஷனை செய்ய முடிந்தது போல், அதுவும் என்னால் முடியவில்லை என்று நினைத்து எவ்விதத்திலாவது இந்திரன் அபிமானத்தை விடவேண்டும் என்பதால் அதனிடத்தில் கிருபை கொண்டு பிரஹ்மம் மறைந்தது.
स शान्ताभिमान इन्द्रः अत्यर्थं ब्रह्म विजिज्ञासुः यस्मिन्नाकाशे ब्रह्मणः प्रादुर्भाव आसीत्तिरोधानं च, तस्मिन्नेव स्त्रियमतिरूपिणीं विद्यामाजगाम । अभिप्रायोद्बोधहेतुत्वाद्रुद्रपत्नी उमा हैमवतीव बहु शोभमाना विद्यैव । विरूपोऽपि विद्यावान्बहु शोभते ॥
இவ்வாறு அபிமானத்தை விட்டதை அறிந்த இந்திரன் பிரஹ்மத்தைப்பற்றி அறிய மிகுந்த இச்சை உள்ளவனானான். அதே ஆகாசப்பிரதேசத்தில் எங்கு பிரஹ்மம் தோன்றி மறைந்ததோ அங்கு ஒரு மிகுந்த அழகானபெண் வித்யா அவர் பக்கத்தில் வந்தாள். பிரஹ்மத்தின் ரகஸ்யத்தை அறிவிப்பதற்காக ருத்திரபத்னீ உமா ஹிமாலய புத்ரி பார்வதிக்கு சமானமான அழகுடைய அந்த பிரஹ்ம வித்யாஸ்வரூபிணி தோன்றினாள்.ஏன்எனில்  அழகற்றவனாய் இருந்தாலும்வித்தை உடையவன் சோபிக்கிறான்.
इति तृतीयखण्डभाष्यम् ॥
ब्रह्मेति होवाच ब्रह्मणो वा एतद्विजये महीयध्वमिति ततो हैव विदाञ्चकार ब्रह्मेति ॥ १ ॥
तस्माद्वा एते देवा अतितरामिवान्यान्देवान्यदग्निर्वायुरिन्द्रस्ते ह्येनन्नेदिष्ठं पस्पर्शुस्ते ह्येनत्प्रथमो विदाञ्चकार ब्रह्मेति ॥ २ ॥
तस्माद्वा इन्द्रोऽतितरामिवान्यान्देवान्स ह्येनन्नेदिष्ठं पस्पर्श स ह्येनत्प्रथमो विदाञ्चकार ब्रह्मेति ॥ ३ ॥
तस्यैष आदेशो यदेतद्विद्युतो व्यद्युतदा३ इतीन्न्यमीमिषदा३ इत्यधिदैवतम् ॥ ४ ॥
तां च पृष्ट्वा तस्या एव वचनात् विदाञ्चकार विदितवान् । अत इन्द्रस्य बोधहेतुत्वाद्विद्यैवोमा । ‘विद्यासहायवानीश्वरः’ इति स्मृतिः । यस्मादिन्द्रविज्ञानपूर्वकमग्निवाय्विन्द्रास्ते हि एनत् नेदिष्ठम् अतिसमीपं ब्रह्मविद्यया ब्रह्म प्राप्ताः सन्तः पस्पर्शुः स्पृष्टवन्तः । ते हि एनत् प्रथमः प्रथमं विदाञ्चकार विदाञ्चक्रुरित्येतत् । तस्मात् अतितराम् अतीत्य अतिशयेन दीप्यन्तेऽन्यान् देवान् । ततोऽपीन्द्रोऽतितरां दीप्यते, आदौ ब्रह्मविज्ञानात् ।
இந்திரன் அந்த உமாவிடம் கேட்டு அந்த உமாதேவியின் வசனத்தால் அறிந்து கொண்டான். இந்திரனுக்கு ஞானம் ஏற்படுவதற்கு காரணமானதால் வித்யாவே உமா. विद्यासहायवान् ईश्वर (வித்யாசஹாயவான் ஈஸ்வர - வித்யைக்கு சஹாயம் செய்பவன் ஈஸ்வரன்) என்று ஸ்மிருதி வசனம், எதனால் இந்திரனுடைய விக்ஞான பூர்வகமாக அக்னி, வாயு, இந்திரன் ஆகிய இந்த தேவர்கள் அந்த பிரஹ்மத்தின் சமீபம் சென்று பிரஹ்ம வித்தையால் பிரஹ்மத்தை அடைந்தவர்களாகி ஸ்பரிசித்து அதாவது முதலில் அறிந்தார்கள். ஆகையால் மற்றதேவர்களை விட மிகுந்த மேன்மை அடைந்தார்கள். ஆகையால் அவர்கள் பிரகாசம் அடைந்தார்கள்.மற்றதேவர்களை விட இந்திரன் மிகவும் பிரகாசித்தான். ஏன்எனில் எல்லோரைக் காட்டிலும் முன்பே அறிந்ததால்.
तस्यैष आदेशः तस्य ब्रह्मण एष वक्ष्यमाणः आदेशः उपासनोपदेश इत्यर्थः । यस्माद्देवेभ्यो विद्युदिव सहसैव प्रादुर्भूतं ब्रह्म द्युतिमत् , तस्माद्विद्युतो विद्योतनं यथा यदेतद्ब्रह्म व्यद्युतत् विद्योतितवत् । आ इत्युपमार्थ आ—शब्दः । यथा घनान्धकारं विदार्य विद्युत्सर्वतः प्रकाशते, एवं तद्ब्रह्म देवानां पुरतः सर्वतःप्रकाशवद्व्यक्तीभूतम् । अतो व्यद्युतदिवेत्युपास्यम् । ‘यथा सकृद्विद्युतम्’ (बृ. उ. २ । ३ । ६) इति च वाजसनेयके ।
பிரஹ்மத்தினுடையது இந்த ஆதேசம்.அந்த பிரஹ்மத்தினுடைய இந்த கூறப்போகிறஆதேசம் உபாசனா உபதேசமாகும். எதனால் தேவர்களின் பொருட்டு மின்னல் போல் பிரஹ்மம் தோன்றியது. எதனால் இந்த பிரஹ்மம் பிரகாசமயமானதோ அதனால் அது மின்னலுடைய பிரகாசம் போல் பிரகாசித்தது.” आ (ஆ) வின் பொருள் போல் என்று உபமான அர்த்தமாகும்.எவ்வாறு மின்னல் கன அந்தக்காரத்தை நீக்கி எங்கும் பிரகாசத்துடன் கூடி வெளிப்பட்டது. ஆகையால் அதை மின்னலைப் போன்றது என்று உபாசனை செய்ய வேண்டும். எவ்வாறு வாஜசனேயகத்தில்  यथा सकृद्विद्युतम् (யதா சக்ருத் வித்யுதம்) ஒரு தடவை மின்னும் மின்னல்  என்று கூறப்பட்டுள்ளது.
यस्माच्चेन्द्रोपसर्पणकाले न्यमीमिषत् — यथा कश्चिच्चक्षुर्निमेषणं कृतवानिति । इतीदित्यनर्थकौ निपातौ — निमिषितवदिव तिरोभूतमित्येवमधिदैवतं देवताया अधि यद्दर्शनमधिदैवतं तत् ॥
எதனால் இந்திரன் சமீபத்தில் சென்றசமயம் பிரஹ்மம் இவ்வாறு மறைந்து போயிற்று. எவ்வாறெனில் ஒருவன் கண் இமைகளை மூடினால் எல்லாம் மறைவது போல் மறைந்தது(பிரஹ்மம்) இவ்வாறு அந்த அதிதெய்வ பிரஹ்மதர்ஸனமாகும். எந்த தர்சனம் தேவதா சம்பந்தமுடையதோ அதை அதிதைவதம் என்று கூறப்படுகிறது. ‘इति’ (இதி) ‘इत्’ (இத்) என்றஇந்த இரண்டு பதங்களுக்கும் அர்த்தம் சிறிதும் கிடையாது.
अथाध्यात्मं यदेतद्गच्छतीव च मनोऽनेन चैतदुपस्मरत्यभीक्ष्णं सङ्कल्पः ॥ ५ ॥
अथ अनन्तरम् अध्यात्मम् आत्मनः अधि आत्मविषयम् अध्यात्मम् उच्यत इति वाक्यशेषः । यदेतत् यथोक्तलक्षणं ब्रह्म गच्छतीव प्राप्नोतीव विषयीकरोतीवेत्यर्थः । न पुनर्विषयीकरोति मनः, अविषयत्वाद्ब्रह्मणः । अतो मनो न गच्छति । ‘येनाहुर्मनो मतम्’ (के. उ. १ । ५) इति चोक्तम् । गच्छतीवेति तु मनसोऽपि मनस्त्वात्
பிறகு ஆத்மவிஷயமாய் இருப்பதால் அத்யாத்மம் என கூறப்பட்டது என்பது கிரியாபதசேஷமாகும்.எந்த அந்த கூறப்பட்ட லக்ஷணமுடைய பிரஹ்மம் அடையப்பட்டது போல், அறிந்தது போல் என்பது இதன் பொருள்.மறுபடியும் பிரஹ்மம் மனதிற்கு அவிஷயமாய் இருப்பதால் அதை விஷயம் செய்ய முடியாது. ஆகையால் மனம் அதை அடையவில்லை(அறியவில்லை) ஏன்எனில் எதனால் (எந்த பிரஹ்மத்தின் இருப்பால்) மனமானது மனனம் செய்கிறதோ என்றகாரணத்தினால் மனதிற்கும் மனமாய் இருப்பதால் அடையப்பட்டது போல் இருக்கிறது என்று கூறப்படுகிறது.
आत्मभूतत्वाच्च ब्रह्मणः तत्समीपे मनो वर्तते इति उपस्मरति अनेन मनसैव तद्ब्रह्म विद्वान्यस्मात् , तस्माद्ब्रह्म गच्छतीवेत्युच्यते । अभीक्ष्णं पुनः पुनः । सङ्कल्पः ब्रह्मप्रेषितस्य मनसः । अत उपस्मरणसङ्कल्पादिभिर्लिङ्गैर्ब्रह्म मनआद्यात्मभूतमित्युपास्यमित्यभिप्रायः ॥
பிரஹ்மத்தினுடைய ஸ்வரூப பூதமாய் இருப்பதால் மனம் அதன் சமீபத்தில் இருக்கிறது. எதனால் வித்வான் அந்த மனதால் அந்த பிரஹ்மத்தை நினைக்கிறானோ அதனால் பிரஹ்மமானது அடையப்பட்டது போல் இருக்கிறது என்று கூறப்படுகிறது. பிரஹ்மத்தினால் பிரேரணை செய்யப்பட்ட மனது மறுபடியும், மறுபடியும் சங்கல்பம் செய்கிறது. ஆகையால் உபஸ்மரணம், சங்கல்பம் முதலிய லிங்கங்களால் மனதை அத்யாத்ம பிரஹ்ம ரூபமாக உபாசனை செய்ய வேண்டும் என்பது அபிப்ராயம்.
तद्ध तद्वनं नाम तद्वनमित्युपासितव्यं स य एतदेवं वेदाभि हैनं सर्वाणि भूतानि संवाञ्छन्ति ॥ ६ ॥
तस्य चाध्यात्ममुपासने गुणो विधीयते —
அந்த அத்யாத்ம உபாசனையின் கௌணத் தன்மையை விளக்குகிறார்.
तद्ध तद्वनं तदेतद्ब्रह्म तच्च तद्वनं च तत् परोक्षं वनं सम्भजनीयम् । वनतेस्तत्कर्मणः । तस्मात्तद्वनं नाम । ब्रह्मणो गौणं हीदं नाम । तस्मादनेन गुणेन तद्वनमित्युपासितव्यम् । स यः कश्चिदेतद्यथोक्तमेवं यथोक्तेन गुणेन वनमित्यनेन नाम्नाभिधेयं ब्रह्म वेद उपास्ते तस्यैतत्फलमुच्यते — सर्वाणि भूतानि एनम् उपासकम् अभिसंवाञ्छन्ति इहाभिसम्भजन्ते सेवंते स्मेत्यर्थः । यथागुणोपासनं हि फलम् ।
तद्ध तद्वनं ( தத்ஹ தத்வனம்) அது இந்த பிரஹ்மம். அதுவே அந்த வனம் மேலும் பரோக்ஷமான வனமாகும். வனம் என்றால் ஸேவிப்பதற்கு உரியது. தத் சப்தம் எதனுடைய கர்ம பூதமாய் இருக்கிறதோ அதனால் வனதாதுவினால் தத்வனம் என்றசப்தம் சித்திக்கிறது. பிரஹ்மத்திற்கு இந்த நாமம் குண விசேஷத்தால் ஏற்பட்டது. ஆகையால் இந்த குணத்தின் காரணமாக அதை (அந்த பிரஹ்மத்தை) வனம் என்று உபாசிக்கப்படுகிறது.அந்த உபாசகனுடைய பலன் கூறப்படுகிறது. அந்த உபாசகனை எல்லா ஜீவர்களும் விரும்புகிறார்கள். அதாவது அவனை சேவிக்கிறார்கள். வணங்குகிறார்கள் என்பது பொருள். இவ்வாறு குணமுடையதின் உபாசனையினால் இந்த பலனை அடைகிறான்.
उपनिषदं भो ब्रूहीत्युक्ता त उपनिषद्ब्राह्मीं वाव त उपनिषदमब्रूमेति ॥ ७ ॥
उपनिषदं भो ब्रूहीत्युक्तायामुपनिषदि शिष्येणोक्त आचार्य आह — उक्ता कथिता ते तुभ्यम् उपनिषदात्मोपासनम् । अधुना ब्राह्मीं वाव ते तुभ्यं ब्रह्मणो ब्राह्मणजातेः उपनिषदम् अब्रूम वक्ष्याम इत्यर्थः । वक्ष्यति हि । ब्राह्मी नोक्ता । उक्ता त्वात्मोपनिषत् । तस्मान्न भूताभिप्रायोऽब्रूमेत्ययं शब्दः ॥
இதுவரை உபநிஷத் கேட்டபின்பும் எனக்கு உபநிஷத் கூறுங்கள் என்று சிஷ்யன் கேட்க ஆச்சாரியர் கூறுகிறார்- உனக்கு உபநிஷத்தும் மேலும் ஆத்ம உபாசனமும் கூறப்பட்டது. இப்பொழுது உனக்கு பிராஹ்மீம் அதாவது பிராஹ்மண ஜாதிகளுடைய உபநிஷத்தைக் கூறப்போகிறேன். உனக்கு பிரஹ்மீ கூறப்படவில்லை. உனக்கு ஆத்மோபநிஷத்தான் கூறப்பட்டது. அகவே अब्रूम (அப்ரூம) என்றசப்தமானது சென்றகாலத்தைக் குறிக்கும் நோக்குடையதன்று.
तस्यै तपो दमः कर्मेति प्रतिष्ठा वेदाः सर्वाङ्गानि सत्यमायतनम् ॥ ८ ॥
तस्यै तस्या वक्ष्यमाणाया उपनिषदः तपः ब्रह्मचर्यादि दमः उपशमः कर्म अग्निहोत्रादि इत्येतानि प्रतिष्ठा आश्रयः । एतेषु हि सत्सु ब्राह्म्युपनिषत्प्रतिष्ठिता भवति । वेदाः चत्वारः अङ्गानि च सर्वाणि । प्रतिष्ठेत्यनुवर्तते । ब्रह्माश्रया हि विद्या । सत्यं यथाभूतवचनमपीडाकरम् आयतनं निवासः । सत्यवत्सु हि सर्वं यथोक्तमायतन इवावस्थितम् ॥
இனி கூறப்போகும் உபநிஷத்தில் தபஸ் - ப்ரஹ்மச்சரியம் முதலியவைகள், தம - உபசமனம், கர்ம- அக்னிஹோத்திராதி கர்மங்கள் ஆகியவைகள் அடிப்படை ஆஸ்ரயங்களாகும். இவைகள் இருக்கும் பொழுது ப்ராஹ்மீ உபநிஷத் நிலை பெற்றதாகிறது. நான்கு வேதங்கள், வேதாங்கங்கள் அடிப்படையாகின்றன. (பிரதிஷ்ட்டா ஆகின்றன.) பிரதிஷ்ட்டா என்றபதம் அனுவர்த்திக்கிறது. ஏன்எனில் வித்யை பிரஹ்மத்தை (வேதத்தை) ஆஸ்ரயித்துக் கொண்டிருக்கிறது. சத்யம் என்றால் யதார்த்தமான சொல் அதாவது மற்றொன்றைபீடிக்காதது. ஆயதனம் என்றால் நிவாசஸ்தானம். ஏன்எனில் சத்தியவான்களிடத்தில் தான் இந்த சாதனங்கள்  இருப்பதால் மேற்கூறிய சாதனங்கள் ஆயதனத்திற்கு ஒப்பானதாக இருக்கின்றது.
यो वा एतामेवं वेदापहत्य पाप्मानमनन्ते स्वर्गे लोके ज्येये प्रतितिष्ठति प्रतितिष्ठति ॥ ९ ॥
तामेतां तपआद्यङ्गां तत्प्रतिष्ठां ब्राह्मीमुपनिषदं सायतनामात्मज्ञानहेतुभूताम् एवं यथावत् यो वेद अनुवर्तते अनुतिष्ठति, तस्यैतत्फलमाह — अपहत्य पाप्मानम् अपक्षय्य धर्माधर्मावित्यर्थः । अनन्ते अपारे अविद्यमानान्ते स्वर्गे लोके सुखप्राये निर्दुःखात्मनि परे ब्रह्मणि ज्येये महति सर्वमहत्तरे प्रतितिष्ठति सर्ववेदान्तवेद्यं ब्रह्म आत्मत्वेनावगम्य तदेव ब्रह्म प्रतिपद्यत इत्यर्थः ॥
அந்த தபஸ் முதலிய அங்கங்கள் பிரதிஷ்டை (இருக்கின்ற) செய்யப்பட்ட பிராஹ்மீ உபநிஷத் ஆயதனத்துடன் ஆத்மஞானஹேது உடையது என்று உள்ளவாறு எவன் அறிகிறானோ அவ்வாறேஅனுஷ்ட்டிக்கிறானோ அவனுடைய பலன் கூறப்படுகிறது. எல்லா பாபங்களையும் தொலைத்து அதாவது தர்மம் எது அதர்மம் எது என்று அறிந்தவன் என்பது பொருள். முடிவற்றஸ்வர்க்க லோகத்தில் சுகமாயும் துக்கமற்றதுமான ஆத்மாவாகிய பரப்பிரஹ்மத்தினிடத்தில் அதாவது எல்லாவற்றைக் காட்டிலும் மேலானதில் நிலை பெறுகிறான். எல்லா வேதாந்தத்தாலும் அறியப்பட வேண்டியது பிரஹ்மத்தை ஆத்மாவாக அறிவதுவே பிரஹ்மம் அடையப்பட்டது  என்றதற்கு பொருள் ஆகும்.
इति चतुर्थखण्डभाष्यम् ॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ केनोपनिषद्वाक्यभाष्यम् सम्पूर्णम् ॥