ब्रह्मेति होवाच ब्रह्मणो वा एतद्विजये महीयध्वमिति ततो हैव विदाञ्चकार ब्रह्मेति ॥ १ ॥
तस्माद्वा एते देवा अतितरामिवान्यान्देवान्यदग्निर्वायुरिन्द्रस्ते ह्येनन्नेदिष्ठं पस्पर्शुस्ते ह्येनत्प्रथमो विदाञ्चकार ब्रह्मेति ॥ २ ॥
तस्माद्वा इन्द्रोऽतितरामिवान्यान्देवान्स ह्येनन्नेदिष्ठं पस्पर्श स ह्येनत्प्रथमो विदाञ्चकार ब्रह्मेति ॥ ३ ॥
तस्यैष आदेशो यदेतद्विद्युतो व्यद्युतदा३ इतीन्न्यमीमिषदा३ इत्यधिदैवतम् ॥ ४ ॥
तां च पृष्ट्वा तस्या एव वचनात् विदाञ्चकार विदितवान् । अत इन्द्रस्य बोधहेतुत्वाद्विद्यैवोमा । ‘विद्यासहायवानीश्वरः’ इति स्मृतिः । यस्मादिन्द्रविज्ञानपूर्वकमग्निवाय्विन्द्रास्ते हि एनत् नेदिष्ठम् अतिसमीपं ब्रह्मविद्यया ब्रह्म प्राप्ताः सन्तः पस्पर्शुः स्पृष्टवन्तः । ते हि एनत् प्रथमः प्रथमं विदाञ्चकार विदाञ्चक्रुरित्येतत् । तस्मात् अतितराम् अतीत्य अतिशयेन दीप्यन्तेऽन्यान् देवान् । ततोऽपीन्द्रोऽतितरां दीप्यते, आदौ ब्रह्मविज्ञानात् ।
இந்திரன் அந்த உமாவிடம் கேட்டு அந்த உமாதேவியின் வசனத்தால் அறிந்து கொண்டான். இந்திரனுக்கு ஞானம் ஏற்படுவதற்கு காரணமானதால் வித்யாவே உமா. विद्यासहायवान् ईश्वर (வித்யாசஹாயவான் ஈஸ்வர - வித்யைக்கு சஹாயம் செய்பவன் ஈஸ்வரன்) என்று ஸ்மிருதி வசனம், எதனால் இந்திரனுடைய விக்ஞான பூர்வகமாக அக்னி, வாயு, இந்திரன் ஆகிய இந்த தேவர்கள் அந்த பிரஹ்மத்தின் சமீபம் சென்று பிரஹ்ம வித்தையால் பிரஹ்மத்தை அடைந்தவர்களாகி ஸ்பரிசித்து அதாவது முதலில் அறிந்தார்கள். ஆகையால் மற்றதேவர்களை விட மிகுந்த மேன்மை அடைந்தார்கள். ஆகையால் அவர்கள் பிரகாசம் அடைந்தார்கள்.மற்றதேவர்களை விட இந்திரன் மிகவும் பிரகாசித்தான். ஏன்எனில் எல்லோரைக் காட்டிலும் முன்பே அறிந்ததால்.
तस्यैष आदेशः तस्य ब्रह्मण एष वक्ष्यमाणः आदेशः उपासनोपदेश इत्यर्थः । यस्माद्देवेभ्यो विद्युदिव सहसैव प्रादुर्भूतं ब्रह्म द्युतिमत् , तस्माद्विद्युतो विद्योतनं यथा यदेतद्ब्रह्म व्यद्युतत् विद्योतितवत् । आ इत्युपमार्थ आ—शब्दः । यथा घनान्धकारं विदार्य विद्युत्सर्वतः प्रकाशते, एवं तद्ब्रह्म देवानां पुरतः सर्वतःप्रकाशवद्व्यक्तीभूतम् । अतो व्यद्युतदिवेत्युपास्यम् ।
‘यथा सकृद्विद्युतम्’ (बृ. उ. २ । ३ । ६) इति च वाजसनेयके ।
பிரஹ்மத்தினுடையது இந்த ஆதேசம்.அந்த பிரஹ்மத்தினுடைய இந்த கூறப்போகிறஆதேசம் உபாசனா உபதேசமாகும். எதனால் தேவர்களின் பொருட்டு மின்னல் போல் பிரஹ்மம் தோன்றியது. எதனால் இந்த பிரஹ்மம் பிரகாசமயமானதோ அதனால் அது மின்னலுடைய பிரகாசம் போல் பிரகாசித்தது.” आ (ஆ) வின் பொருள் போல் என்று உபமான அர்த்தமாகும்.எவ்வாறு மின்னல் கன அந்தக்காரத்தை நீக்கி எங்கும் பிரகாசத்துடன் கூடி வெளிப்பட்டது. ஆகையால் அதை மின்னலைப் போன்றது என்று உபாசனை செய்ய வேண்டும். எவ்வாறு வாஜசனேயகத்தில் यथा सकृद्विद्युतम् (யதா சக்ருத் வித்யுதம்) ஒரு தடவை மின்னும் மின்னல் என்று கூறப்பட்டுள்ளது.
यस्माच्चेन्द्रोपसर्पणकाले न्यमीमिषत् — यथा कश्चिच्चक्षुर्निमेषणं कृतवानिति । इतीदित्यनर्थकौ निपातौ — निमिषितवदिव तिरोभूतमित्येवमधिदैवतं देवताया अधि यद्दर्शनमधिदैवतं तत् ॥
எதனால் இந்திரன் சமீபத்தில் சென்றசமயம் பிரஹ்மம் இவ்வாறு மறைந்து போயிற்று. எவ்வாறெனில் ஒருவன் கண் இமைகளை மூடினால் எல்லாம் மறைவது போல் மறைந்தது(பிரஹ்மம்) இவ்வாறு அந்த அதிதெய்வ பிரஹ்மதர்ஸனமாகும். எந்த தர்சனம் தேவதா சம்பந்தமுடையதோ அதை அதிதைவதம் என்று கூறப்படுகிறது. ‘इति’ (இதி) ‘इत्’ (இத்) என்றஇந்த இரண்டு பதங்களுக்கும் அர்த்தம் சிறிதும் கிடையாது.
अथाध्यात्मं यदेतद्गच्छतीव च मनोऽनेन चैतदुपस्मरत्यभीक्ष्णं सङ्कल्पः ॥ ५ ॥
अथ अनन्तरम् अध्यात्मम् आत्मनः अधि आत्मविषयम् अध्यात्मम् उच्यत इति वाक्यशेषः । यदेतत् यथोक्तलक्षणं ब्रह्म गच्छतीव प्राप्नोतीव विषयीकरोतीवेत्यर्थः । न पुनर्विषयीकरोति मनः, अविषयत्वाद्ब्रह्मणः । अतो मनो न गच्छति ।
‘येनाहुर्मनो मतम्’ (के. उ. १ । ५) इति चोक्तम् । गच्छतीवेति तु मनसोऽपि मनस्त्वात्
பிறகு ஆத்மவிஷயமாய் இருப்பதால் அத்யாத்மம் என கூறப்பட்டது என்பது கிரியாபதசேஷமாகும்.எந்த அந்த கூறப்பட்ட லக்ஷணமுடைய பிரஹ்மம் அடையப்பட்டது போல், அறிந்தது போல் என்பது இதன் பொருள்.மறுபடியும் பிரஹ்மம் மனதிற்கு அவிஷயமாய் இருப்பதால் அதை விஷயம் செய்ய முடியாது. ஆகையால் மனம் அதை அடையவில்லை(அறியவில்லை) ஏன்எனில் எதனால் (எந்த பிரஹ்மத்தின் இருப்பால்) மனமானது மனனம் செய்கிறதோ என்றகாரணத்தினால் மனதிற்கும் மனமாய் இருப்பதால் அடையப்பட்டது போல் இருக்கிறது என்று கூறப்படுகிறது.
आत्मभूतत्वाच्च ब्रह्मणः तत्समीपे मनो वर्तते इति उपस्मरति अनेन मनसैव तद्ब्रह्म विद्वान्यस्मात् , तस्माद्ब्रह्म गच्छतीवेत्युच्यते । अभीक्ष्णं पुनः पुनः । सङ्कल्पः ब्रह्मप्रेषितस्य मनसः । अत उपस्मरणसङ्कल्पादिभिर्लिङ्गैर्ब्रह्म मनआद्यात्मभूतमित्युपास्यमित्यभिप्रायः ॥
பிரஹ்மத்தினுடைய ஸ்வரூப பூதமாய் இருப்பதால் மனம் அதன் சமீபத்தில் இருக்கிறது. எதனால் வித்வான் அந்த மனதால் அந்த பிரஹ்மத்தை நினைக்கிறானோ அதனால் பிரஹ்மமானது அடையப்பட்டது போல் இருக்கிறது என்று கூறப்படுகிறது. பிரஹ்மத்தினால் பிரேரணை செய்யப்பட்ட மனது மறுபடியும், மறுபடியும் சங்கல்பம் செய்கிறது. ஆகையால் உபஸ்மரணம், சங்கல்பம் முதலிய லிங்கங்களால் மனதை அத்யாத்ம பிரஹ்ம ரூபமாக உபாசனை செய்ய வேண்டும் என்பது அபிப்ராயம்.
तद्ध तद्वनं नाम तद्वनमित्युपासितव्यं स य एतदेवं वेदाभि हैनं सर्वाणि भूतानि संवाञ्छन्ति ॥ ६ ॥
तस्य चाध्यात्ममुपासने गुणो विधीयते —
அந்த அத்யாத்ம உபாசனையின் கௌணத் தன்மையை விளக்குகிறார்.
तद्ध तद्वनं तदेतद्ब्रह्म तच्च तद्वनं च तत् परोक्षं वनं सम्भजनीयम् । वनतेस्तत्कर्मणः । तस्मात्तद्वनं नाम । ब्रह्मणो गौणं हीदं नाम । तस्मादनेन गुणेन तद्वनमित्युपासितव्यम् । स यः कश्चिदेतद्यथोक्तमेवं यथोक्तेन गुणेन वनमित्यनेन नाम्नाभिधेयं ब्रह्म वेद उपास्ते तस्यैतत्फलमुच्यते — सर्वाणि भूतानि एनम् उपासकम् अभिसंवाञ्छन्ति इहाभिसम्भजन्ते सेवंते स्मेत्यर्थः । यथागुणोपासनं हि फलम् ।
तद्ध तद्वनं ( தத்ஹ தத்வனம்) அது இந்த பிரஹ்மம். அதுவே அந்த வனம் மேலும் பரோக்ஷமான வனமாகும். வனம் என்றால் ஸேவிப்பதற்கு உரியது. தத் சப்தம் எதனுடைய கர்ம பூதமாய் இருக்கிறதோ அதனால் வனதாதுவினால் தத்வனம் என்றசப்தம் சித்திக்கிறது. பிரஹ்மத்திற்கு இந்த நாமம் குண விசேஷத்தால் ஏற்பட்டது. ஆகையால் இந்த குணத்தின் காரணமாக அதை (அந்த பிரஹ்மத்தை) வனம் என்று உபாசிக்கப்படுகிறது.அந்த உபாசகனுடைய பலன் கூறப்படுகிறது. அந்த உபாசகனை எல்லா ஜீவர்களும் விரும்புகிறார்கள். அதாவது அவனை சேவிக்கிறார்கள். வணங்குகிறார்கள் என்பது பொருள். இவ்வாறு குணமுடையதின் உபாசனையினால் இந்த பலனை அடைகிறான்.
उपनिषदं भो ब्रूहीत्युक्ता त उपनिषद्ब्राह्मीं वाव त उपनिषदमब्रूमेति ॥ ७ ॥
उपनिषदं भो ब्रूहीत्युक्तायामुपनिषदि शिष्येणोक्त आचार्य आह — उक्ता कथिता ते तुभ्यम् उपनिषदात्मोपासनम् । अधुना ब्राह्मीं वाव ते तुभ्यं ब्रह्मणो ब्राह्मणजातेः उपनिषदम् अब्रूम वक्ष्याम इत्यर्थः । वक्ष्यति हि । ब्राह्मी नोक्ता । उक्ता त्वात्मोपनिषत् । तस्मान्न भूताभिप्रायोऽब्रूमेत्ययं शब्दः ॥
இதுவரை உபநிஷத் கேட்டபின்பும் எனக்கு உபநிஷத் கூறுங்கள் என்று சிஷ்யன் கேட்க ஆச்சாரியர் கூறுகிறார்- உனக்கு உபநிஷத்தும் மேலும் ஆத்ம உபாசனமும் கூறப்பட்டது. இப்பொழுது உனக்கு பிராஹ்மீம் அதாவது பிராஹ்மண ஜாதிகளுடைய உபநிஷத்தைக் கூறப்போகிறேன். உனக்கு பிரஹ்மீ கூறப்படவில்லை. உனக்கு ஆத்மோபநிஷத்தான் கூறப்பட்டது. அகவே अब्रूम (அப்ரூம) என்றசப்தமானது சென்றகாலத்தைக் குறிக்கும் நோக்குடையதன்று.
तस्यै तपो दमः कर्मेति प्रतिष्ठा वेदाः सर्वाङ्गानि सत्यमायतनम् ॥ ८ ॥
तस्यै तस्या वक्ष्यमाणाया उपनिषदः तपः ब्रह्मचर्यादि दमः उपशमः कर्म अग्निहोत्रादि इत्येतानि प्रतिष्ठा आश्रयः । एतेषु हि सत्सु ब्राह्म्युपनिषत्प्रतिष्ठिता भवति । वेदाः चत्वारः अङ्गानि च सर्वाणि । प्रतिष्ठेत्यनुवर्तते । ब्रह्माश्रया हि विद्या । सत्यं यथाभूतवचनमपीडाकरम् आयतनं निवासः । सत्यवत्सु हि सर्वं यथोक्तमायतन इवावस्थितम् ॥
இனி கூறப்போகும் உபநிஷத்தில் தபஸ் - ப்ரஹ்மச்சரியம் முதலியவைகள், தம - உபசமனம், கர்ம- அக்னிஹோத்திராதி கர்மங்கள் ஆகியவைகள் அடிப்படை ஆஸ்ரயங்களாகும். இவைகள் இருக்கும் பொழுது ப்ராஹ்மீ உபநிஷத் நிலை பெற்றதாகிறது. நான்கு வேதங்கள், வேதாங்கங்கள் அடிப்படையாகின்றன. (பிரதிஷ்ட்டா ஆகின்றன.) பிரதிஷ்ட்டா என்றபதம் அனுவர்த்திக்கிறது. ஏன்எனில் வித்யை பிரஹ்மத்தை (வேதத்தை) ஆஸ்ரயித்துக் கொண்டிருக்கிறது. சத்யம் என்றால் யதார்த்தமான சொல் அதாவது மற்றொன்றைபீடிக்காதது. ஆயதனம் என்றால் நிவாசஸ்தானம். ஏன்எனில் சத்தியவான்களிடத்தில் தான் இந்த சாதனங்கள் இருப்பதால் மேற்கூறிய சாதனங்கள் ஆயதனத்திற்கு ஒப்பானதாக இருக்கின்றது.
यो वा एतामेवं वेदापहत्य पाप्मानमनन्ते स्वर्गे लोके ज्येये प्रतितिष्ठति प्रतितिष्ठति ॥ ९ ॥
तामेतां तपआद्यङ्गां तत्प्रतिष्ठां ब्राह्मीमुपनिषदं सायतनामात्मज्ञानहेतुभूताम् एवं यथावत् यो वेद अनुवर्तते अनुतिष्ठति, तस्यैतत्फलमाह — अपहत्य पाप्मानम् अपक्षय्य धर्माधर्मावित्यर्थः । अनन्ते अपारे अविद्यमानान्ते स्वर्गे लोके सुखप्राये निर्दुःखात्मनि परे ब्रह्मणि ज्येये महति सर्वमहत्तरे प्रतितिष्ठति सर्ववेदान्तवेद्यं ब्रह्म आत्मत्वेनावगम्य तदेव ब्रह्म प्रतिपद्यत इत्यर्थः ॥
அந்த தபஸ் முதலிய அங்கங்கள் பிரதிஷ்டை (இருக்கின்ற) செய்யப்பட்ட பிராஹ்மீ உபநிஷத் ஆயதனத்துடன் ஆத்மஞானஹேது உடையது என்று உள்ளவாறு எவன் அறிகிறானோ அவ்வாறேஅனுஷ்ட்டிக்கிறானோ அவனுடைய பலன் கூறப்படுகிறது. எல்லா பாபங்களையும் தொலைத்து அதாவது தர்மம் எது அதர்மம் எது என்று அறிந்தவன் என்பது பொருள். முடிவற்றஸ்வர்க்க லோகத்தில் சுகமாயும் துக்கமற்றதுமான ஆத்மாவாகிய பரப்பிரஹ்மத்தினிடத்தில் அதாவது எல்லாவற்றைக் காட்டிலும் மேலானதில் நிலை பெறுகிறான். எல்லா வேதாந்தத்தாலும் அறியப்பட வேண்டியது பிரஹ்மத்தை ஆத்மாவாக அறிவதுவே பிரஹ்மம் அடையப்பட்டது என்றதற்கு பொருள் ஆகும்.
इति चतुर्थखण्डभाष्यम् ॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ केनोपनिषद्वाक्यभाष्यम् सम्पूर्णम् ॥