यदि मन्यसे सु वेदेति दभ्रमेवापि नूनं त्वं वेत्थ ब्रह्मणो रूपं यदस्य त्वं यदस्य देवेष्वथ नु मीमांस्यमेव ते मन्ये विदितम् ॥ १ ॥
यदि मन्यसे सु वेदेति शिष्यबुद्धिविचालना गृहीतस्थिरतायै । विदिताविदिताभ्यां निवर्त्य बुद्धिं शिष्यस्य स्वात्मन्यवस्थाप्य ‘तदेव ब्रह्म त्वं विद्धि’ इति स्वाराज्येऽभिषिच्य उपास्यप्रतिषेधेनाथास्य बुद्धिं विचालयति —
“यदि मन्यसे सुवेद” (யதி மன்யசே சுவேத) என்று ஆசாரியர் கூறியது சிஷ்யனுடைய புத்தியை விசாலமாக்கி அதனால் கிரஹிக்கப்பட்டதை ஸ்திரமாக்குவதின் பொருட்டாகும். அறிந்தவைகளையும், அறியாதவைகளையும் நீக்கி புத்தியை சிஷ்யனுடைய ஆத்மாவினிடத்தில் நிலை நிறுத்தி அதையே பிரஹ்மம் என்று நீ அறி என்று ஸ்வராஜ்யத்தில் அபிஷேகம் செய்து உபாசனையை பிரதிஷேதம் செய்த பின் அவனுடைய புத்தியை அசைத்து நிலைப்படுத்துகிறார்.
यदि मन्यसे सुष्ठु वेद अहं ब्रह्मतत्त्वमिति, ततोऽल्पमेव ब्रह्मणो रूपं वेत्थ त्वमिति नूनं निश्चितं मन्यते आचार्यः । सा पुनर्विचालना किमर्थेति, उच्यते — पूर्वगृहीते वस्तुनि बुद्धेः स्थिरतायै । देवेष्वपि सु वेदाहमिति मन्यते यः सोऽप्यस्य ब्रह्मणो रूपं दभ्रमेव वेत्ति नूनम् । कस्मात् ? अविषयत्वात्कस्यचिद्ब्रह्मणः ।
“यदि मन्यसे सुवेद अहं ब्रह्मेति” (யதிமன்யசே சுவேத அஹம் ப்ரஹ்மேதி) நான் பிரஹ்மத்தை நன்றாக அறிகிறேன் என்றால் நீ பிரஹ்மத்தின் அல்பசொரூபத்தையே நிச்சயம் அறிந்திருக்கின்றாய் என்று ஆசாரியர் உணர்ந்திருக்கின்றார். சிஷ்யனுடைய புத்தியை விசாலனம் (பகுத்து அறிய, விசாரிக்க) செய்வது எதற்கு எனில் கூறப்படுகிறது. முன்பு கிரஹித்தவஸ்துவில் புத்தியை ஸ்திரப்படுத்துவதற்காகவே. எவன் ஒருவன் தேவர்களிடத்திலும் நன்றாக அறிந்திருக்கிறேன் என்று நினைக்கிறானோ அவனும் பிரஹ்மத்தின் ரூபத்தை அல்பமாகவே அறிந்திருக்கின்றான் என்பது நிச்சயம். ஏன் எனில் பிரஹ்மமானது எந்த ஒன்றின் விஷயமும் ஆகாது.
अथवा अल्पमेवास्याध्यात्मिकं मनुष्येषु देवेषु चाधिदैविकमस्य ब्रह्मणो यद्रूपं तदिति सम्बन्धः । अथ नु इति हेतुर्मीमांसायाः । यस्माद्दभ्रमेव सुविदितं ब्रह्मणो रूपम् ‘अन्यदेव तद्विदितात्’ इत्युक्तत्वात् , सु वेदेति च मन्यसे ; अतः अल्पमेव वेत्थ त्वं ब्रह्मणो रूपं यस्मात् अथ नु तस्मात् मीमांस्यमेव अद्यापि ते तव ब्रह्म विचार्यमेव यावद्विदिताविदितप्रतिषेधागमार्थानुभव इत्यर्थः ।
அல்லது அந்த பிரஹ்மத்தினுடைய மனிதர்களிடத்துள்ள ஆத்யாத்மிகமும், தேவர்களிடத்திலுள்ள ஆதிதெய்வீகமும் ஆகிய பிரஹ்மத்தினுடைய எந்தரூபமுள்ளதோ அது மிக சிறிய அளவேயாகும் என்பதாகும், “अथ नु” (அத நு) என்று கூறியது விசாரனையின் பொருட்டாகும். ஏன் எனில் பிரஹ்மத்தினுடைய ரூபம் அறிந்ததைக் காட்டிலும், அறியாததைக் காட்டிலும் வேறு என்பதால் அது சிறியதே ஆகும், எதனால் நீ பிரஹ்மத்தினுடைய ரூபத்தை நன்றாக அறிந்திருக்கிறேன் என்று நினைக்கிறாயோ அதனால் நீ அல்பமே அறிந்திருக்கின்றாய். ஆகையால் அவசியம் விசாரனை செய்ய வேண்டியதே. எது வரையில் அறிந்ததைக் காட்டிலும், அறியாததைக் காட்டிலும் வேறு என்ற ஆகமார்த்த அனுபவம் ஏற்படும் வரை அதாவது இன்றும் உனக்கு விசாரம் செய்ய வேண்டியதே என்பது பொருள்.
मन्ये विदितमिति शिष्यस्य मीमांसानन्तरोक्तिः प्रत्ययत्रयसङ्गतेः । सम्यग्वस्तुनिश्चयाय विचालितः शिष्य आचार्येण मीमांस्यमेव ते इति चोक्तः एकान्ते समाहितो भूत्वा विचार्य यथोक्तं सुपरिनिश्चितः सन्नाह आगमाचार्यात्मानुभवप्रत्ययत्रयस्यैकविषयत्वेन सङ्गत्यर्थम् । एवं हि ‘सुपरिनिष्ठिता विद्या सफला स्यान्नानिश्चिता’ इति न्यायः प्रदर्शितो भवति ; मन्ये विदितमिति परिनिष्ठितनिश्चितविज्ञानप्रतिज्ञाहेतूक्तेः ॥
“मन्ये विदितमिति” (நான் அறிந்திருக்கிறேன் என்று எண்ணுகிறேன் என்றது) சிஷ்யனுடைய விசாரத்திற்கு பின் கூறியது மூன்று பிரத்யயங்களுக்கும் ஆகமம், உபதேசம், ஸ்வானுபவம் பொருந்துகிறது. திடமாகவஸ்து நிச்சயத்தை தெரிந்து கொள்வதற்காக சிரத்தையுடன் கூடிய சிஷ்யனைக் குறித்து ஆச்சாரியர் விசாரணை அவசியம் செய்யவேண்டும் என்று கூறப்பட்ட சிஷ்யன் ஏகாந்தத்தில், சமாஹித மனதை அடைந்து ஆசாரியர் உபதேசித்தவற்றைநன்கு விசாரித்து திட நிச்சயத்தை அடைந்தவனாய் ஆகம, ஆசாரிய, ஆத்மானுபவங்களாகிய மூன்று பிரத்யயங்களையும் ஒரே விஷயத்தில் பொருந்துகிறவாறு கூறினான். இவ்வாறு நன்றாக பரீக்ஷித்து நிச்சயிக்கப்பட்ட ஞானமே பலன் உடையதாகும். மற்றோ நிச்சயிக்கப்படாத அக்ஞானத்தினால் நிவர்த்தியாகாது என்றநியாயமானது எடுத்துக்காட்டப்பட்டதாகும். இதனால் , “मन्ये विदितमिति” (மன்யே விதிதமிதி- அறிந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்) என்று சிஷ்யன் கூறியது அவன் நன்றாக நிச்சயம் செய்யப்பட்ட ஞானத்தை அடைந்தவன் என்றபிரதிக்ஞை ஹேது கூறப்பட்டதாகிறது.
नाह मन्ये सु वेदेति नो न वेदेति वेद च ।
यो नस्तद्वेद तद्वेद नो न वेदेति वेद च ॥ २ ॥
परिनिष्ठितं सफलं विज्ञानं प्रतिजानीते आचार्यात्मनिश्चययोस्तुल्यतायै यस्माद्धेतुमाह — नाह मन्ये सु वेदेति ।
ஆச்சாரியருடையதும் தன்னுடையதும் உள்ள நிச்சயமானது சமம் என்பதை நிரூபிப்பதற்காக நன்றாக நிச்சயிக்கப்பட்டதும், பலத்துடன் கூடியதுமான விக்ஞானத்தை பிரதிக்ஞை செய்கிறேன். எதனால் எனில் “नाहं मन्ये सुवेद इति” (நாஹ மன்யே சுவேதேதி) என்று ஹேதுவைக் கூறுகிறார்.
अहेत्यवधारणार्थो निपातः । नैव मन्ये इत्येतत् । यावदपरिनिष्ठितं विज्ञानं तावत् सु वेद सुष्ठु वेद अहं ब्रह्मेति विपरीतो मम निश्चय आसीत् । सोऽपजगाम भवद्भिर्विचालितस्य यथोक्तार्थमीमांसाफलभूतात्स्वात्मब्रह्मत्वनिश्चयरूपात्सम्यक्प्रत्ययात् । विरुद्धत्वादतो नाह मन्ये सु वेदेति ।
“अह” (அஹ) என்றபதம் நிச்சயார்த்தத்தின் பொருட்டாகும். இதனுடைய தாத்பர்யம் என்னவெனில் நான் (பிரஹ்மத்தை நன்றாக அறிகிறேன்) என்று நினைக்கவில்லை. எதுவரையில் எனக்கு ஞானமுண்டாகவில்லையோ அதுவரை எனக்கு நான் பிரஹ்மத்தை நன்கு அறிகிறேன் என்றவிபரீத நிச்சயம் இருந்தது. உங்களிடமிருந்து (அந்த நிச்சயத்திலிருந்து) நழுவியதை அறிந்து முன்பு கூறப்பட்ட விசாரத்தின் பலபூதத்திலிருந்தும் ஸ்வாத்ம பிரஹ்மத்துவ நிச்சய ரூபத்திலிருந்தும், திடஞானத்திலிருந்தும் ( சம்யக்பிரத்யயத்திலிருந்தும்) விருத்தமாக (மாறுபட்டு) இருப்பதால் அந்த விருத்த நிச்சயம் விலகிவிட்டது. ஆகையால் நான் நன்றாக அறிகிறேன் என்று நான் நினைக்கவில்லை.
यस्माच्चैतत् नैव न वेद नो न वेदेति ; मन्ये इत्यनुवर्तते, अविदितब्रह्मप्रतिषेधात् । कथं तर्हि मन्यसे इत्युक्त आह — वेद च । च—शब्दाद्वेद च न वेद च इत्यभिप्रायः, विदिताविदिताभ्यामन्यत्वाद्ब्रह्मणः । तस्मान्मया विदितं ब्रह्मेति मन्ये इति वाक्यार्थः ।
எதனால்? அறியப்படாத பிரஹ்மம் இல்லை என்பதால் அதை இல்லை என்று நான் அறியவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் எவ்வாறு நினைக்கிறாய் என்று கேட்க (சிஷ்யன்) கூறுகிறான் “वेद च” (வேதச) அறிகிறேன் என்று “च” (ச்ச) சப்தத்தில் அறிந்திருக்கிறேன் அறியாமலும் இருக்கிறேன் என்பது அபிப்ராயமாகும். ஏன் எனில் பிரஹ்மமானது அறிந்ததைக்காட்டிலும், அறியாததைக் காட்டிலும் வேறானது. ஆகையால் நான் பிரஹ்மத்தை அறிந்ததாய் என்று எண்ணுகிறேன் என்பது வாக்கியார்த்தமாகும்.
अथवा वेद चेति नित्यविज्ञानब्रह्मस्वरूपतया नो न वेद वेदैव चाहं स्वरूपविक्रियाभावात् । विशेषविज्ञानं च पराध्यस्तं न स्वत इति परमार्थतो न च वेदेति ।
அல்லது “वेद चेति” (வேத ச்சேதி) என்பதின் அபிப்ராயம் ஸ்வரூபவிக்ரியை அற்று இருப்பதால் நித்யவிக்ஞான ப்ரஹ்மஸ்வரூபமாய் இருப்பதாலும் நான் அறியவில்லை என்பது இல்லை. நான் அறிகிறேன், எதனால் விசேஷ விக்ஞானம் பராத்யஸ்தமாய் (அந்தக்கரணத்தினால் ஆரோபிக்கப்பட்டதாய்) ஆத்மாவைக் காட்டிலும் வேறாக இருக்கிறது. ஆகவே நிஜஸ்வரூபமாக இல்லை என்பதால் பரமார்த்தமாக அறிய முடியாது.
यो नस्तद्वेद तद्वेदेति पक्षान्तरनिरासार्थमाम्नाय उक्तार्थानुवादात् । यः नः अस्माकं मध्ये तद्वेद स एव तद्ब्रह्म वेद नान्यः, उपास्यब्रह्मवित्त्वात् । अतोऽन्यस्य यथाहं वेदेति पक्षान्तरे ब्रह्मवित्त्वं निरस्यते । कुतोऽयमर्थोऽवसीयत इति, उच्यते — उक्तानुवादात् । उक्तं ह्यनुवदति नो न वेदेति वेद चेति ॥
“यो नस्तद्वेद तद्वेद” இந்த வேதவாக்கியமானது முன்பு கூறப்பட்டதின் அர்தத்தினை வலியுறுத்துவதாக இருப்பதால் வேறுபக்ஷங்களை நிராகரிப்பதற்காக ஆகும். நமக்குள் எவன் ஒருவன் இவ்வாறு அறிந்ததைக் காட்டிலும் மற்றும் அறியாததைக் காட்டிலும் வேறு என்று அறிந்தவன் அந்த (பிரஹ்மத்தை) அறிந்தவனாகின்றான். மற்றஉபாசிய பிரஹ்மத்தை உபாசிப்பவர்களும், மற்றபக்ஷத்தை ஆசிரியப்பவர்களும் நிராகரிக்கப்படுகிறார்கள். எதற்காக இதை நிராகரிக்கிறார்கள் எனில் கூறப்படுகிறது. முன்பு கூறப்பட்டதின் அர்த்தத்தை மறுபடியும் கூறுவதின் பொருட்டாகும்,ஏன்எனில் “नो न वेदेति वेद च” (நோ ந வேதேதி வேத ச்ச) நான் அறிந்திருக்கவில்லை நான் அறிந்தவனாயும் இல்லை என்று அனுவாதம் செய்யப்பட்டுள்ளதால் ஆகும்.
यस्यामतं तस्य मतं मतं यस्य न वेद सः ।
अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम् ॥ ३ ॥
यस्यामतमिति श्रौतमाख्यायिकार्थोपसंहारार्थम् । शिष्याचार्योक्तिप्रत्युक्तिलक्षणया अनुभवयुक्तिप्रधानया आख्यायिकया योऽर्थः सिद्धः स श्रौतेन वचनेनागमप्रधानेन निगमनस्थानीयेन सङ्क्षेपत उच्यते । यदुक्तं विदिताविदिताभ्यामन्यद्वागादीनामगोचरत्वात् मीमांसितं चानुभवोपपत्तिभ्यां ब्रह्म, तत्तथैव ज्ञातव्यम् ।
“यस्यामतम्” யஸ்யாமதம் என்றசுருதிவாக்கியம் இந்த கதையை முடிப்பதற்காக வந்ததாகும். சிஷ்யன் அனுபவம் கூறலும் அதற்கு ஆச்சாரியர் விளக்கம் கூறுவதுமாகிய லக்ஷணபூர்வகமாக அனுபவம், யுக்தி முதலியவை பிரதானமாக உடைய கதையின் எந்த அர்த்தம் சித்தித்ததோ அது சுருதி வாக்கியத்தினால் ஆகமத்தை பிரதானமாக உடைய உறுதியானஸ்தானத்தில் சம்க்ஷபேகமாக கூறப்படுகிறது. அறிந்ததைக் காட்டிலும் வேறு என்று எது கூறப்பட்டதோ அது வாக் முதலியவைகளுக்கு அகோசரமாய் இருப்பதால் அது அனுபவ உபபத்திபூர்வமாய் விசாரம் செய்து அறியப்பட்டது எதுவோ அது பிரஹ்மம். அதை அவ்வாறு தான் அறியவேண்டும்.
कस्मात् ? यस्यामतं यस्य विविदिषाप्रयुक्तप्रवृत्तस्य साधकस्य अमतम् अविज्ञातम् अविदितं ब्रह्म इत्यात्मतत्त्वनिश्चयफलावसानावबोधतया विविदिषा निवृत्तेत्यभिप्रायः, तस्य मतं ज्ञातम् ; तेन विदितं ब्रह्म येनाविषयत्वेन आत्मत्वेन प्रतिबुद्धमित्यर्थः । स सम्यग्दर्शी यस्य विज्ञानानन्तरमेव ब्रह्मात्मभावस्यावसितत्वात् सर्वतः कार्यभावो विपर्ययेण मिथ्याज्ञानो भवति । कथम् ? मतं विदितं ज्ञातं मया ब्रह्म इति यस्य विज्ञानम् , स मिथ्यादर्शी विपरीतविज्ञानो विदितादन्यत्वाद्ब्रह्मणो न वेद सः न विजानाति ।
எதனால் ? “यस्यामतं” (யஸ்யாமதம்-) எந்த விவிதிஷையினால் தூண்டப்பட்ட சாதகனுக்கு பிரஹ்மம் அறியப் படாததாய் இருக்கிறது என்பது ஆத்ம தத்துவத்துவ நிச்சயமாகிய பலத்தை முடிவாக உடைய ஞானத்தில் விவிதிஷையானது நிவர்த்தியாகிறது என்பது அபிப்பிராயம். அவனே அறிகிறான் பிரஹ்மத்தை எதனால் அவிஷயமாக (ஆத்மத்துவமாக) தானாகவே அறிகிறானோ அவனே அறிந்தவன் என்பது பொருள். அந்தசம்யக்தர்சீ ஞானமடைந்தபின் பிரஹ்மாத்ம பாவமாகவே நிலைபெற்றதால் எங்கும் காரியஅபாவமே. அதற்குமாறாக அறிபவனுக்கு மித்யாஞானமே ஏற்படுகிறது. எவ்வாறு ? என்றால் பிரஹ்மம் அறியப்பட்டது என்றஞானம் எவனுக்கு உள்ளதோ அவன் மித்யாதர்சீ விபரீதஞானமுடையவன். அறிந்ததைக் காட்டிலும் பிரஹ்மம் வேறாய் இருப்பதால் அவன் அறியவில்லை என்பதாகும்.
ततश्च सिद्धमवैदिकस्य विज्ञानस्य मिथ्यात्वम् , अब्रह्मविषयतया निन्दितत्वात् । तथा कपिलकणभुगादिसमयस्यापि विदितब्रह्मविषयत्वात् अनवस्थिततर्कजन्यत्वाविदितविषयतया विविदिषानिवृत्तेश्च मिथ्यात्वमिति । स्मृतेश्च — ‘या वेदबाह्याः स्मृतयो याश्च काश्च कुदृष्टयः । सर्वास्ता निष्फलाः प्रोक्तास्तमोनिष्ठा हि ताः स्मृताः’ (मनु. १२ । ९५) इति ।
அதனால் அவைதிகமான விக்ஞானத்திற்கு பிரஹ்மம் விஷயமாகாமையினால் நிந்திக்கதக்கதால் மித்யாத்துவம் சித்திக்கிறது. அவ்வாறேகபிலகணாதர் முதலிய மதங்களிலும் பிரஹ்மம் அறியப்பட்ட விஷயமாய் இருப்பதாலும் நிலையற்றதர்க்கத்தினால் உண்டாவதால் விவிதிஷை (அறிய வேண்டும் என்றஆசை) அற்றதால் மித்யாத்துவமே சித்திகிறது. அவ்வாறேஸ்மிருதியிலும் “या वेदबाह्याः स्मृतयो याश्च काश्च कुदृष्टयः । सर्वास्ता निष्फलाः प्रोक्तास्तमोनिष्द्भा हि ताः स्मृताः” (யா வேதபாஹ்யா: ஸ்ம்ருதயோ யாச்ச காச்ச குத்ருஷ்ட்டய: ஸர்வஸ்தா நிஷ்பலா: ப்ரோக்தாஸ்தமோநிஷ்ட்டா ஹி தா: ஸ்ம்ருதா: ) எவைகள் வேதத்திற்கு அந்யமான (பாஹ்யமான) ஸ்மிருதிகள், எந்த தவறான கொள்கை உடைய திருஷ்ட்டிகள் எல்லாம் பலம் அற்றவைகள் என்று தபோநிஷ்ட்டர்கள் கூறுகிறார்கள் என்பதால் விபரீத ஞானமும், மித்யாஞானமும் பிரயோஜனமற்றது என்று அறியப்படுகிறது.
‘अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम्’ इति पूर्वहेतूक्तिः अनुवादस्यानर्थक्यात् — अनुवादमात्रेऽनर्थकं वचनमिति विपर्ययमिथ्याज्ञानयोर्नष्टत्वात् पूर्वोक्तयोः यस्यामतमित्यादिज्ञानाज्ञानयोर्हेत्वर्थत्वेनेदमुच्यते —
அறியவில்லை என்பவர்கள் அறிந்தவர்களாயும், அறிகிறேன் என்பவர்கள் அறியாதவர்களாயும் இருக்கிறார்கள் என்று கூறப்பட்ட ஹேதுவின் அனுவாதமானது (மறுபடியும் கூறுவது) அர்த்தமற்றதாகும். அனுவாத மாத்திரத்தினால் அர்த்தமற்றவசனமாகும் என்று முன்பு கூறப்பட்ட यस्यामतम् (யஸ்யாமதம்) என்பது முதலியவைகளால் ஞான அக்ஞானங்களின் ஹேது அர்த்தத்துடன் இது கூறப்படுகிறது.
अविज्ञातम् अविदितमात्मत्वेनाविषयतया ब्रह्म विजानतां यस्मात् , तस्मात्तदेव ज्ञानं यत्तेषां विज्ञातं विदितं व्यक्तमेव बुद्ध्यादिविषयं ब्रह्म अविजानतां विदिताविदितव्यावृत्तमात्मभूतं नित्यविज्ञानस्वरूपमात्मस्थमविक्रियममृतमजरमभयमनन्यत्वादविषयमित्येवमविजानतां बुद्ध्यादिविषयात्मतयैव नित्यं विज्ञातं ब्रह्म । तस्माद्विदिताविदितव्यक्ताव्यक्तधर्माध्यारोपेण कार्यकारणभावेन सविकल्पमयथार्थविषयत्वात् । शुक्तिकादौ रजताद्यध्यारोपणज्ञानवन्मिथ्याज्ञानं तेषाम् ॥
எதனால் ஞானிகளுக்கு பிரஹ்மமானது தானாகவே ஆத்மஸ்வரூபமாகவே இருப்பதால் இந்திரியங்களுக்கு விஷயமாகாமையால் அறியப்படாததாய் இருக்கிறதோ அதனால் அதுவே ஞானம் ஆகும். மேலும் எந்த அக்ஞானியானவன் அவ்வாறு அறியவில்லையோ அவன் அறியப்பட்ட அறியப்படாத பதார்த்தங்களற்றதன்னுடைய ஆத்மாவின் நித்யவிக்ஞானரூபம், ஆத்மஸ்த்தம்(தன்னிலேயே நிலைபெற்றல்) கிரியை அற்றதும், மரணதர்மமற்றதும், பிறப்பற்றதும், தன்னைக்காட்டிலும் வேறாக இல்லாததால் பயமற்றது, இந்திரிய விஷயமாகாது என்று அறியவில்லையோ அவனுக்கு பிரஹ்மமானது புத்திமுதலிய இந்திரியங்களால் மிகத்தெளிவாக பிரஹ்மமானது விஷயரூபமாக அறியப்படுகிறது. ஆகையால் அறியப்பட்ட அறியப்படாத அல்லது வியக்த அவ்யக்தம் முதலிய தர்மங்களின் ஆரோபத்தினால் காரியகாரணமாக விளங்குவதால் அது அயதார்த்த விஷயமாவதால் சவிகல்பமேயாகும். அவைகளுக்கு சுத்தி முதலியவைகளில் ரஜத முதலிய ஆரோப ஞானம் போல் மித்தியா ஞானமாகும்.
प्रतिबोधविदितं मतममृतत्वं हि विन्दते ।
आत्मना विन्दते वीर्यं विद्यया विन्दतेऽमृतम् ॥ ४ ॥
प्रतिबोधविदितमिति वीप्साप्रत्ययानामात्मावबोधद्वारत्वात् बोधं प्रति बोधं प्रतीति वीप्सा सर्वप्रत्ययव्याप्त्यर्था । बौद्धा हि सर्वे प्रत्ययास्तप्तलोहवन्नित्यविज्ञानस्वरूपात्मव्याप्तत्वाद्विज्ञानस्वरूपावभासाः तदन्यावभासश्चात्मा तद्विलक्षणोऽग्निवदुपलभ्यत इति ते द्वारीभवन्त्यात्मोपलब्धौ । तस्मात्प्रतिबोधावभासप्रत्यगात्मतया यद्विदितं तद्ब्रह्म, तदेव मतं तदेव सम्यग्ज्ञानं यत्प्रत्यगात्मविज्ञानम् , न विषयविज्ञानम् ।
प्रतिबोधविदितं मतम् (பிரதிபோதவிதிதம் மதம்) என்று இரு தடவைகள் கூறப்பட்டுள்ளது.ஏன் எனில் பிரத்யயங்களே ஆத்ம ஞானத்திற்கு வழியாகும். போதம்பிரதி, போதம்பிரதி என்று இருமுறைகூறியது எல்லா பிரத்யயங்களிலும் பிரஹ்மத்தின் வியாப்தியை தெரிவிப்பதற்காக ஆகும். புத்தியில் ஜனிக்கின்றஎல்லாப் ப்ரத்யயங்களும் தப்தாயபிண்டம் போல் நித்யவிக்ஞான ஸ்வரூப ஆத்மாவினால் வியாபிக்கப்பட்டிருப்பதால் விக்ஞான ஸ்வரூப அவபாசங்களாகும். அவ்வாறு அவைகளைக் காட்டிலும் வேறானது அவற்றைஅவபாசம் செய்யும் ஆத்மா அக்னிக்கு சமமாக அவபாசங்களைக் காட்டிலும் முற்றிலும் விலக்ஷணம் என்று அறியப்படுவதால் அவைகள் (ப்ரத்யயங்கள்) ஆத்மாவை அறிவதற்கு வழியாகிறது. ஆகையால் பிரதிபோத அவபாச பிரத்யக் ஆத்மாவாக எது அறியப்பட்டதோ அது பிரஹ்மம். அதுவே அறியப்பட்டதாகும். அதுவே சம்யக்ஞானம் போல் பிரத்யக் ஆத்மவிக்ஞானம், அது விஷயவிக்ஞானமல்ல.
आत्मत्वेन
‘प्रत्यगात्मानमैक्षत्’ (क. उ. २ । १ । १) इति च काठके । अमृतत्वं हि विन्दते इति हेतुवचनं विपर्यये मृत्युप्राप्तेः । विषयात्मविज्ञाने हि मृत्युः प्रारभते इत्यात्मविज्ञानममृतत्वनिमित्तमिति युक्तं हेतुवचनममृतत्वं हि विन्दते इति ।
பிரத்யக் ஆத்மாவை ஆத்மஸ்வரூபமாகவே பார்க்கிறான் என்று கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. ‘अमृतत्वं हि विन्दते’ (அம்ருதத்துவம் ஹி விந்ததே) என்பது ஹேதுவசனமாகும். அதற்கு மாறானது மிருத்யுவின் பொருட்டாகும். விஷயஆத்ம விக்ஞானத்தால் மரணமானது ஆரம்பமாகிறது (அடையப்படுகிறது) என்பதால் ஆத்மவிக்ஞானம் அம்ருதத்துவத்தின் நிமித்தம் என்று இருப்பதால் அம்ருதத்துவம் ஹி விந்தத (அம்ருதத்தை அடைகிறான்) என்றஹேது வசனம் பொருத்தமானதே ஆகும்.
आत्मज्ञानेन किममृतत्वमुत्पाद्यते ।
(பூர்வ) என்ன ஆத்மக் ஞானத்தினால் அம்ருதத்துவமானது (உற்பத்தி) உண்டாகிறதா என்ன?
न ।
(சித்தாந்தி)அவ்வாறு உற்பத்தியாவதில்லை
कथं तर्हि ?
(பூர்வ) அப்படியானால் எவ்வாறு?
आत्मना विन्दते स्वेनैव नित्यात्मस्वभावेनामृतत्वं विन्दते, नालम्बनपूर्वकं विन्दत इति आत्मज्ञानापेक्षम् । यदि हि विद्योत्पाद्यममृतत्वं स्यात् , अनित्यं भवेत्कर्मकार्यवत् । अतो न विद्योत्पाद्यम् ।
(சித்தா) ஆத்மாவினால் (அம்ருதத்தை) அடைகிறான் என்றால் தன்னுடைய நித்ய ஆத்மஸ்வபாவத்தினால் அம்ருதத்தை அடைகிறான். வேறு ஒன்றையும் ஆஸ்ரயித்து அல்ல. विन्दते (விந்ததே) அடைகிறான் என்றால் ஆத்ம விக்ஞானத்தை அபேக்ஷிக்கிறான். வித்தையினால் அம்ருதத்துவம் உண்டாகப்படுகிறது என்றால் கர்ம காரியம் போல் அநித்தியமாகி விடும். ஆகையால் அது வித்தையினால் உண்டாக்கப்படுவதில்லை.
यदि चात्मनैवामृतत्वं विन्दते, किं पुनर्विद्यया क्रियत इत्युच्यते । अनात्मविज्ञानं निवर्तयन्ती सा तन्निवृत्त्या स्वाभाविकस्यामृतत्वस्य निमित्तमिति कल्प्यते ; यत आह — वीर्यं विद्यया विन्दते ।
தன் நித்திய ஆத்மஸ்வரூபத்தினாலேயே அம்ருதத்தை அடைகிறான் என்றால் வித்தையினால் உண்டானது என்று எதற்காக கூறப்படுகிறது? எனில் வித்தையானது அநாத்மவிக்ஞானத்தைப் போக்குகிறது. அதைப் போக்குவதால் ஸ்வபாவமாய் உள்ள அம்ருதத்திற்கு நிமித்தமாக கல்பிக்கப்படுகிறது. அதனால் ‘वीर्यं विद्यया विन्दते’ (வீர்யம் வித்யயா விந்ததே) என்று கூறப்பட்டது.
वीर्यं सामर्थ्यम् अनात्माध्यारोपमायास्वान्तध्वान्तानभिभाव्यलक्षणं बलं विद्यया विन्दते । तच्च किंविशिष्टम् ? अमृतम् अविनाशि । अविद्याजं हि वीर्यं विनाशि, विद्ययाविद्याया बाध्यत्वात् । न तु विद्याया बाधकोऽस्तीति विद्याजममृतं वीर्यम् । अतो विद्या अमृतत्वे निमित्तमात्रं भवति ।
‘नायमात्मा बलहीनेन लभ्यः’ (मु. उ. ३ । २ । ४) इति चाथर्वणे ।
वीर्यं வீர்யம் என்றால் சாமர்த்தியம். எந்த அநாத்மாவின் அத்யாரோபமாயையின் அந்தகாரத்தால் (அக்ஞானத்தால்) எவனுக்கு தோல்வி அடையமுடியாதவாறு பலம் அதாவது சாமர்த்தியம் ஏற்படுகிறது. அது எந்த விசேஷணத்துடன் கூடியது? அம்ருதம் நாசமற்றது (அவிநாசி) அவித்தையினால் உண்டாகும் வீர்யம் நாசமுடையதாகும். வித்தையினால் அவித்யை பாதிக்கப்படும், வித்யைக்கு பாதம் இல்லாததினால் வித்தையினால் உண்டானது அம்ருதம் வீர்யம். ஆகையால் அம்ருதத்திற்கு வித்யை நிமித்தமாத்திரமாய் இருக்கிறது. “नायमात्मा बलहीनेन लभ्यः” (நாயமாத்மா பலஹீனேனலப்ய) இந்த ஆத்மாவானது பலஹீனனால் அடைய முடியாது என்று அதர்வணவேதத்தில் உள்ள முண்டகோபநிஷத்தில் கூறப்பட்ட வாக்கியமாகும்.
लोकेऽपि विद्याजमेव बलमभिभवति न शरीरादिसामर्थ्यम् , यथा हस्त्यादेः । अथवा प्रतिबोधविदितं मतमिति सकृदेवाशेषविपरीतनिरस्तसंस्कारेण स्वप्नप्रतिबोधवद्यद्विदितं तदेव मतं ज्ञातं भवतीति । अथवा गुरूपदेशः प्रतिबोधः । तेन वा विदितं मतमिति । उभयत्र प्रतिबोधशब्दप्रयोगोऽस्ति — ‘सुप्तप्रतिबुद्धः’ ‘गुरुणा प्रतिबोधितः’ इति । पूर्वं तु यथार्थम् ॥
உலகத்திலும் வித்தையினால் உண்டாகும் பலமே மற்றபலங்களை தோல்வி அடையச்செய்கிறது. எவ்வாறு எனில் மனிதனுடைய சாமர்த்தியத்தினால் யானை முதலியவைகளின் பலமும் தோல்வி அடைவது போலாகும். அல்லது பிரதிபோதவிதிதம் மதம் என்பதின் அர்த்தம் அறிய வேண்டியது. தூக்கத்திலிருந்து எழுந்த உடன் எவ்வாறு விபரீத சம்ஸ்காரங்களும் ஒரே தடவையில் பாதமாகிறதோ, அவ்வாறு சம்ஸ்காரங்கள் பாதமாதலே விதிதம் அதாவது அறிகிறான் என்பதாகும். அல்லது குரு உபதேசமாகிய பிரதிபோதத்தால் அறிகிறான் என்பதாகும். இரண்டிடத்திலும் பிரதி போத சப்தமானது பிரயோகபடுத்தப்பட்டுள்ளது. அக்ஞான தூக்கத்திலிருந்து விழித்த குருவினால் ப்ரதிபோதம் செய்யப்பட்டது. இம்மூன்று அர்த்தங்களுள் முதலாவது கூறப்பட்ட அர்த்தமே சரியானதாகும்.
इह चेदवेदीदथ सत्यमस्ति न चेदिहावेदीन्महती विनष्टिः ।
भूतेषु भूतेषु विचित्य धीराः प्रेत्यास्माल्लोकादमृता भवन्ति ॥ ५ ॥
इह चेदवेदीदिति अवश्यकर्तव्यतोक्तिः विपर्यये विनाशश्रुतेः । इह मनुष्यजन्मनि सति अवश्यमात्मा वेदितव्य इत्येतद्विधीयते । कथम् ? इह चेत् अवेदीत् विदितवान् , अथ सत्यं परमार्थतत्त्वम् अस्ति अवाप्तम् ; तस्य जन्म सफलमित्यभिप्रायः । न चेदिहावेदीत् न विदितवान् , वृथैव जन्म । अपि च महती विनष्टिः महान्विनाशो जन्ममरणप्रबन्धाविच्छेदप्राप्तिलक्षणः स्याद्यतः, तस्मादवश्यं तद्विच्छेदाय ज्ञेय आत्मा ।
इहचेदवेदीत् (இஹ சேதவேதீத்) என்று (ஆத்மாவை) அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், அவ்வாறு அறியாவிடின் விநாசம் ஏற்படும் என்று சுருதியில் கூறப்பட்டுள்ளது. இந்த மனித ஜன்மம் இருக்கும் பொழுதே ஆத்மா அவசியம் அறியப்படவேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. எதனால் இந்த ஆத்மதத்துவத்தை அறிந்திருக்கிறானோ அதனால் அவன் ஆத்ம சாக்ஷாத்காரம் அடைந்தவனாகிறான். அவனுடைய ஜன்மமானது சபலமானதாகும் என்பது அபிப்ராயம். இங்கு (இப்பொழுது) அறியவில்லை எனில் அவனுடைய ஜன்மம் வீணானதே. ஆகையால் பெருத்த நஷ்ட்டமாகும். ஆகையால் ஜன்ம, மரணமாகிய பந்தங்கள் நீங்காத லக்ஷணமுடையதாகும். ஆகையால் அதை முற்றிலும் நீக்குவதற்கான அவசியம் ஆத்மாவை அறியவேணடும்.
ज्ञानेन तु किं स्यादिति, उच्यते — भूतेषु भूतेषु चराचरेषु सर्वेष्वित्यर्थः । विचित्य विचार्य पृथङ्निष्कृष्यैकमात्मतत्त्वं संसारधर्मैरस्पृष्टमात्मभावेनोपलभ्येत्यर्थः, अनेकार्थत्वाद्धातूनाम् । न पुनश्चित्वेति सम्भवति, विरोधात् । धीराः धीमन्तः विवेकिनः विनिवृत्तबाह्यविषयाभिलाषाः, प्रेत्य मृत्वा अस्मात् लोकात् शरीराद्यनात्मलक्षणात् व्यावृत्तममत्वाहङ्काराः सन्त इत्यर्थः, अमृताः अमरणधर्माणो नित्यविज्ञानामृतत्वस्वभावा एव भवन्ति ॥
ஞானத்தினால் என்ன பலன் ஏற்படும் என்பது கூறப்படுகிறது. சராசரமாகிய எல்லா பிராணிகளிடத்தும் ஆத்மாவை விசாரித்து பிரித்து ஏகமான ஆத்மதத்துவமானது சம்சார தர்மத்தினால் ஸ்பரிசிக்கப்படாத ஆத்ம பாவனையினால் அடைந்து தாதுக்கு அநேக அர்த்தங்கள் இருப்பதால் அதை நீக்கியபின் மறுபடியும் சம்பவிக்காது. வெளிவிஷயங்கள் விரோதமாய் இருப்பதால் அவைகள் நிவர்த்தி ஆனபின் மறுபடியும் சம்பவிப்பதில்லை. ஆகையால் தீரர்கள், அதாவது புத்திமான்களாகிய விவேகிகள் பாஷ்ய விஷயங்களின் ஆசைகளில் இருந்து நிவர்த்தி அடைந்தவர்களாகி இந்த லோகத்தில் இருந்து அதாவது இந்த சரீரம் முதலிய அநாத்ம லக்ஷணங்களில் இருந்து வெளியேறி மரணமடைந்து மமதை அஹங்காரமற்றவர்களாய் இருந்து கொண்டு அம்ருதர்களாயும், மரணதர்மம் அற்றவர்களாயும், நித்யவிக்ஞான அம்ருதஸ்வபாவம் உடையவர்களாக ஆகின்றனர்.
इति द्वितीयखण्डभाष्यम् ॥