द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

मुण्डकोपनिषद्भाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

முண்டகோபநிஷத்பாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

‘ब्रह्मा देवानाम्’ इत्याद्याथर्वणोपनिषत् । अस्याश्च विद्यासम्प्रदायकर्तृपारम्पर्यलक्षणं सम्बन्धमादावेवाह स्वयमेव स्तुत्यर्थम् — एवं हि महद्भिः परमपुरुषार्थसाधनत्वेन गुरुणायासेन लब्धा विद्येति । श्रोतृबुद्धिप्ररोचनाय विद्यां महीकरोति, स्तुत्या प्ररोचितायां हि विद्यायां सादराः प्रवर्तेरन्निति ।
“ब्रह्मा देवानां” என்று அதர்வண உபநிஷத் தொடங்கு-கிறது. இந்த உபநிஷத் முதலில் பிரஹ்ம வித்தையைத் துதிப்பதின் பொருட்டு, பிரஹ்ம வித்தையின் சம்ப்ரதாய கர்த்தாக்களின் பரம்பரா லக்ஷண சம்பந்தத்தை விவரிக்கிறது. அஃது எதற்கு எனில், இவ்வாறு அன்றோ சான்றோர்கள் இந்த வித்யா பரமபுருஷாத்த சாதனமென்று அதை மிகவும் முயற்சி செய்து அடைந்தார்கள் என்பதால் ச்ரோத்தாக்களின் புத்தியைத் தூண்டுவதற்காக பிரஹ்ம வித்யையை இவ்வாறு மேம்படுத்திக்கூறுகிறார். இவ்வாறு துதிகளினால் ச்ரோத்தாக்களின் புத்தித் தூண்டப் படுமேயானால், அவர்கள் பிரஹ்ம வித்தையை கிரஹிப்பதில் ஆர்வம் மிக்கவர்களாயிருப்பர் என்பது இதற்குக் காரணமாகும்.
प्रयोजनेन तु विद्यायाः साध्यसाधनलक्षणं सम्बन्धमुत्तरत्र वक्ष्यति ‘भिद्यते हृदयग्रन्थिः’ (मु. उ. २ । २ । ९) इत्यादिना । अत्र चापरशब्दवाच्याया ऋग्वेदादिलक्षणाया विधिप्रतिषेधमात्रपराया विद्यायाः संसारकारणाविद्यादिदोषनिवर्तकत्वं नास्तीति स्वयमेवोक्त्वा परापरेति विद्याभेदकरणपूर्वकम् ‘अविद्यायामन्तरे वर्तमानाः’ (मु. उ. १ । २ । ८) इत्यादिना, तथा परप्राप्तिसाधनं सर्वसाधनसाध्यविषयवैराग्यपूर्वकं गुरुप्रसादलभ्यां ब्रह्मविद्यामाह ‘परीक्ष्य लोकान्’ (मु. उ. १ । २ । १२) इत्यादिना । प्रयोजनं चासकृद्ब्रवीति ‘ब्रह्म वेद ब्रह्मैव भवति’ (मु. उ. ३ । २ । ९) इति ‘परामृताः परिमुच्यन्ति सर्वे’ (मु. उ. ३ । २ । ६) इति च ।
இந்த பிரஹ்ம வித்யையின் பிரயோஐனத்துடன் ஸாதன ஸாத்ய லக்ஷணமான சம்பந்தத்தை ‘भिद्यते हृदयग्रन्थिः’ (பித்யதே ஹ்ருதய க்ரந்தி :இதயத்தில் உள்ள முடிச்சுகள் அறுபடும்) என்பது முதலியவைகளால் மேலே கூறுகிறார். இங்கு “अपर” (அபர) சப்தத்தால் சொல்லப்படும் ரிக்வேதம் முதலியவைகள் விதி, நிஷேதங்களை மாத்திரம் கூறுபவைகளாகவே இருக்கின்றன. அவைகளில் சம்சாரத்திற்குக் காரணமான அவித்தையை நீக்கக்கூடிய வித்தையின் தன்மையில்லை என்பதனைத் தானே கூறி ‘अविद्यायामन्तरे वर्तमानाः’ என்பவைகளால் பர, அபர வித்தைகளின் வேறுபாட்டை விளக்குகிறது. மேலும் “परीक्ष्य लोकानु” என்பவைகளின் வாயிலாக அப்பரம்பொருளை அடைவதற்கு ஸாதனமாக, எல்லா ஸாதன, ஸாத்ய விஷயங்களிலும் வைராக்கியத்தை அடைந்து, ஆச்சாரியரின் அருளால் அடையத்தக்க பிரஹ்ம வித்யையை(ப்பற்றி) கூறுகிறது. இதனால் அடையக் கூடியதைப் பற்றியோ ‘यो ब्रह्म वेद ब्रह्मैव भवति’ (எவன் பிரஹ்மத்தை அறிகிறானோ அவன் பிரஹ்மமாகவே ஆகிறான். என்றும்) ‘परामृताः परिमुच्यन्ति सर्वे’ (மேலான நிலையை அடைந்தவர்கள் எல்லாவற்றிலிருந்தும் விடுபடுகிறார்கள்) என்றும், இவ்வாறு அதனுடைய பலனை அடிக்கடி கூறுகிறார்.
ज्ञानमात्रे यद्यपि सर्वाश्रमिणामधिकारः, तथापि संन्यासनिष्ठैव ब्रह्मविद्या मोक्षसाधनं न कर्मसहितेति ‘भैक्षचर्यां चरन्तः’ (मु. उ. १ । २ । ११) ‘संन्यासयोगात्’ (मु. उ. ३ । २ । ६) इति च ब्रुवन्दर्शयति ।
எல்லா ஆஸ்ரமத்தாருக்குமே ஞானத்தால் பிரஹ்மவித்தையில் அதிகாரம் இருந்தபோதிலும் ‘भैक्षचर्यां चरन्तः’, ‘संन्यासयोगात्’ என்று கூறப்படுவதால் ஸர்வகர்ம சந்நியாசம் செய்து கொண்டவர்களால் அடையப்படும் பிரஹ்ம வித்தையே ஸாதனமாகுமேயன்றி, கர்மநிஷ்ட்டர்களின் பிரஹ்ம்ம வித்யை மோஷ சாதனமாகாது என்பதனை விளக்குகிறார். ஏன் எனில்
विद्याकर्मविरोधाच्च । न हि ब्रह्मात्मैकत्वदर्शनेन सह कर्म स्वप्नेऽपि सम्पादयितुं शक्यम् ; विद्यायाः कालविशेषाभावादनियतनिमित्तत्वाच्च कालसङ्कोचानुपपत्तेः ।
பிரஹ்ம வித்தைக்கும், கர்மாக்களுக்கும் உள்ள விரோதமே காரணமாகும். மேலும் பிரஹ்மாத்மைக்கத்துவ தர்ஸனத்துடன் கூட கர்மானுஷ்ட்டானம் செய்தல் என்பது கனவிலும் நடக்காதது ஆகும். பிரஹ்ம வித்தையை அடைவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம்தான் என்ற நியமம் இல்லாமையாலும், இன்ன நிமித்தத்தால்தான் அடைய வேண்டும் என்ற குறிப்பு இல்லாமையாலும் குறுகிய காலம் என்ற குறைபாடும் இல்லை.
यत्तु गृहस्थेषु ब्रह्मविद्यासम्प्रदायकर्तृत्वादि लिङ्गं न तत्स्थितं न्यायं बाधितुमुत्सहते ; न हि विधिशतेनापि तमःप्रकाशयोरेकत्र सद्भावः शक्यते कर्तुम् , किमुत लिङ्गैः केवलैरिति ।
கிரஹஸ்தாஸ்ரமத்தில் பிரஹ்ம வித்தைக்கு சம்ப்ரதாய கர்த்திருத்துவம் முதலிய லிங்கங்களினால் முன்பு கூறப்பட்ட திடமான நியாயத்தை (நியமத்தை) நீக்குவதற்கு சாமர்த்தியம் கிடையாது. நூறு விதிகளாலும் இருளையும், ஒளியையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்த்தல் என்பது முடியாததாகும். இவ்வாறு இருக்கையில் கேவலம் லிங்கங்களினால் என்ன செய்யமுடியும்.
एवमुक्तसम्बन्धप्रयोजनाया उपनिषदोऽल्पग्रन्थं विवरणमारभ्यते । य इमां ब्रह्मविद्यामुपयन्त्यात्मभावेन श्रद्धाभक्तिपुरःसराः सन्तः, तेषां गर्भजन्मजरारोगाद्यनर्थपूगं निशातयति परं वा ब्रह्म गमयत्यविद्यादिसंसारकारणं वा अत्यन्तमवसादयति विनाशयतीत्युपनिषत् ; उपनिपूर्वस्य सदेरेवमर्थस्मरणात् ॥
இம்மாதிரி கூறப்பட்ட ப்ரயோஐன சம்பந்தங்களுடன் கூடிய இவ்வுபநிஷத்திற்கு சுருக்கமாக உரை எழுதப்படுகிறது. எவன் ஒருவன் இந்த பிரஹ்ம வித்தையை சிரத்தை, பக்தியுடன் இருந்துகொண்டு ஆத்மபாவனையுடன் அடைகிறார்களோ அவர்களுடைய கர்ப, ஐன்ம, மூப்பு, வியாதி முதலிய அநரத்த கூட்டங்களை நாசம் செய்கிறது. அல்லது பரபிரஹ்மத்தை அடையச் செய்கிறது. அவித்யை முதலிய சம்சார காரணத்தை முற்றிலும் நாசம் செய்கிறது என்பதால் உபநிஷத். சத் என்பதற்கு முன்னால் உள்ள உப (उप) நி (नि) என்ற உபசர்க்கங்களால் இவ்வாறு அர்த்தம் கொள்ளப் படுகிறது.
ब्रह्मा देवानां प्रथमः सम्बभूव विश्वस्य कर्ता भुवनस्य गोप्ता ।
स ब्रह्मविद्यां सर्वविद्याप्रतिष्ठामथर्वाय ज्येष्ठपुत्राय प्राह ॥ १ ॥
ब्रह्म परिबृढो महान् धर्मज्ञानवैराग्यैश्वर्यैः सर्वानन्यानतिशेत इति ; देवानां द्योतनवतामिन्द्रादीनां प्रथमः गुणैः प्रधानः सन् , प्रथमः अग्रे वा सम्बभूव अभिव्यक्तः सम्यक् स्वातन्त्र्येणेत्यभिप्रायः । न तथा यथा धर्माधर्मवशात्संसारिणोऽन्ये जायन्ते, ‘योऽसावतीन्द्रियोऽग्राह्यः’ (मनु. १ । ७) इत्यादिस्मृतेः ।
ब्रह्म (பிரஹ்மா)- பரிவிராட். மேலான தர்ம, ஞான, வைராக்கிய ஐஸ்வர்யங்களால் எல்லோரையும் மிஞ்சியவராய் (கடந்தவராய்) இருக்கிறார். देवानां प्रथमः (தேவானாம்பிரதம:)- த்யோதனாவான்களான (பிரகாசிப்பவர்களான இந்திராதி தேவர்களைக் காட்டிலும் குணங்களால் முதன்மையானவராக (முக்கியமானவராக இருக்கிறார். அல்லது முதலில் சர்வ சுதந்திரத்துடன் सम्बभूव - (சம்பபூவ) தோன்றினார் என்பது அபிப்பிராயம். எவ்வாறு தர்மாதர்ம வசத்தால் மற்ற ஐீவர்கள் பிறக்கிறார்களோ அவ்வாறு அல்ல என்பதை ‘योऽसावतीन्द्रियोऽग्राह्यः’ (யோஅசாவதீந் திரியோக்ராஹ்ய......) என்பது முதலான ஸ்மிருதிகளால் அறிகிறோம்.
विश्वस्य सर्वस्य जगतः कर्ता उत्पादयिता, भुवनस्य उत्पन्नस्य गोप्ता पालयितेति विशेषणं ब्रह्मणो विद्यास्तुतये । सः एवं प्रख्यातमहत्त्वो ब्रह्मा ब्रह्मविद्यां ब्रह्मणः परमात्मनो विद्यां ब्रह्मविद्याम् , ‘येनाक्षरं पुरुषं वेद सत्यम्’ (मु. उ. १ । २ । १३) इति विशेषणात् । परमात्मविषया हि सा । ब्रह्मणा वाग्रजेनोक्तेति ब्रह्मविद्या । तां ब्रह्मविद्याम् , सर्वविद्याप्रतिष्ठां सर्वविद्याभिव्यक्तिहेतुत्वात्सर्वविद्याश्रयामित्यर्थः ; सर्वविद्यावेद्यं वा वस्त्वनयैव ज्ञायत इति, ‘येनाश्रुतं श्रुतं भवति अमतं मतमविज्ञातं विज्ञातम्’ (छा. उ. ६ । १ । ३) इति श्रुतेः । सर्वविद्याप्रतिष्ठामिति च स्तौति विद्याम् । अथर्वाय ज्येष्ठपुत्राय ज्येष्ठश्चासौ पुत्रश्च, अनेकेषु ब्रह्मणः सृष्टिप्रकारेष्वन्यतमस्य सृष्टिप्रकारस्य प्रमुखे पूर्वम् अथर्वा सृष्ट इति ज्येष्ठः ; तस्मै ज्येष्ठपुत्राय प्राह प्रोक्तवान् ॥
विश्वस्य कर्ता- விஷ்வஸ்யகர்த்தா) இந்த அகில உலகத்தைப் படைத்தவர், भुवनस्य गोप्ता (புவனஸ்யகோப்தா) படைத்த உலகத்தைக் காப்பவர் என்ற விசேஷணங்கள் பிரஹ்ம வித்தையை துதிப்பதின் பொருட்டாகும். இவ்வாறு மிகவும் பிரசித்தமாக உள்ள स:-அந்த பிரஹ்மா ब्रह्मविद्यां- பிரஹ்ம வித்தையை அதாவது பரமாத்ம வித்தையை கூறினார். “येनाक्षरं पुरुषं वेद सत्यम्‌” (யேனாக்ஷரம் புருஷம் வேத சத்தியம்) என்ற விசேஷணத்தை உடையதாய் இருப்பதால் அல்லவா வாக்கிற்கு அதிபதியாய் உள்ள பிரஹ்மாவால் கூறப்பட்டது. सर्वविद्याप्रतिष्ठां - (சர்வ வித்யா பிரதிஷ்ட்டாம்) எல்லா வித்தைகளும் அந்த பிரஹ்ம்ம வித்தையினிடத்தில் நிலை பெற்றிருக்கின்றன. அதனால் எல்லா வித்தைகளும் வெளிப்படுத்துவதற்குக் காரணமாய் இருப்பதால் எல்லா வித்தைகளுக்கும் ஆஸ்ரயமாய் இருக்கிறதுஎன்பதுபொருள். ‘येनाश्रुतं श्रुतं भवति अमतं मतमविज्ञातं विज्ञातम्’ (யேனாஸ்ருதம் ஸ்ருதம் பவதி அமதம் மதமவிக்ஞாதம் விக்ஞாதம் எதனால் கேட்கப்படாதது கேட்கப்பட்டதாகிறதோ, நினைவிற்கு எட்டாதது நினைக்கப் பட்டதாகிறதோ, அறியப்படாதது அறியப்பட்டதாகிறதோ) என்ற சுருதி வாக்கியப்படி வஸ்துவின் (பிரஹ்மத்தின்) ஞானம் அந்த பிரஹ்ம வித்தையாலேயே உண்டாகிறது என்பதால் எல்லாவித்தைகளும் அதில் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டிருக்கிறது என்று துதிக்கின்றார். अथर्वाय ज्येष्ठपुत्राय - (அதர்வாய ஐ்யேஷ்ட்ட புத்ராய) அந்த பிரஹ்ம வித்தையை பிரஹ்மா தன்னுடைய தலை மகனாகிய அதர்வருக்குக் கூறினார். எல்லோரையும் விட மூத்தவன் என்பதால் ஜேஷ்ட்ட புத்திரன். பிரஹ்மாவினுடைய அநேகவகையான சிருஷ்ட்டிகளுள் ஒரு சிருஷ்ட்டியில் எல்லோருக்கும் முதலாவதாக அதர்வாவை உண்டாக்கினார். ஆகையால் அவர் ஜேஷ்ட்டர் (முதலாமவர்) ஆகையால் அவர் ஜேஷ்ட்ட புத்திரர்.
अथर्वणे यां प्रवदेत ब्रह्माथर्वा तां पुरोवाचाङ्गिरे ब्रह्मविद्याम् ।
स भारद्वाजाय सत्यवहाय प्राह भारद्वाजोऽङ्गिरसे परावराम् ॥ २ ॥
याम् एताम् अथर्वणे प्रवदेत प्रावदद्ब्रह्मविद्यां ब्रह्मा, तामेव ब्रह्मणः प्राप्ताम् अथर्वां पुरा पूर्वम् ; उवाच उक्तवान् अङ्गिरे अङ्गीर्नाम्ने ब्रह्मविद्याम् । स चाङ्गीः भारद्वजाय भरद्वाजगोत्राय सत्यवहाय सत्यवहनाम्ने प्राह प्रोक्तवान् । भारद्वाजः अङ्गिरसे स्वशिष्याय पुत्राय वा परावरां परस्मात्परस्मादवरेणावरेण प्राप्तेति परावरा परावरसर्वविद्याविषयव्याप्तेर्वा, तां परावरामङ्गिरसे प्राहेत्यनुषङ्गः ॥
याम् (யாம்) - எந்த பிரஹ்ம வித்தையை பிரஹ்மா ஆனவர் अथर्वणे - (அதர்வணே) அதர்வணருக்குக் கூறினாரோ तां - (தாம்)-அந்த ब्रह्मणः- (பிரஹ்மண:) - பிரஹ்மாவிடம் பெற்ற ब्रह्मविद्याम् एव- (பிரஹ்ம வித்தையையே पुरा-(புரா) முன்பு अथर्वा - (அதர்வா, அதர்வனர் अङ्गिरे -(அங்கிரே) - அங்கிரஸ் என்ற முனிவருக்குக் उवाच - (உவாச) - கூறினார். स (ச) அந்த அங்கிரசரானவர் भारद्वाजाय (பாரத் வாஐாய) பரத் வாஐர்குலத்தில் உதித்த सत्यवहाय - (சத்யவஹாய) - சத்யவஹர் என்ற பெயருடைய முனிக்கு प्राह -(ப்ராஹ) கூறினார். அவ்வாறே भारद्वाजः अङ्गिरसे - (பாரத்வாஐ: அங்கிரசே) - பாரத்வாஐர் தன்னுடைய யசிஷ்யன் அல்லது புத்திரனாகிய அங்கிரசிற்குக் கூறினார். परावरां - (பராவராம்) இவ்வாறு மேலோர் கீழோர் என்று அடையப்பட்டதால் பராவர வித்தை என்று கொள்ளப்படுகிறது. அல்லது பரவித்யா என்றால் பிரஹ்மவித்தை. அவரவித்தை என்றால் பிரஹ்மத்தைத் தவிர மற்ற கர்மா முதலியவைகளைப் பற்றிய பிரஹ்ம வித்தையில் அடங்கியிருப்பதால் பராபர வித்தை என்று பிரஹ்ம வித்தை கூறப்படுகிறது. அந்த பராபர வித்தை அங்கிரசிற்குக் கூறப்பட்டது என்பது பொருளாகிறது.
शौनको ह वै महाशालोऽङ्गिरसं विधिवदुपसन्नः पप्रच्छ कस्मिन्नु भगवो विज्ञाते सर्वमिदं विज्ञातं भवतीति ॥ ३ ॥
शौनकः शुनकस्यापत्यं महाशालः महागृहस्थः अङ्गिरसं भारद्वाजशिष्यमाचार्यं विधिवत् यथाशास्त्रमित्येतत् ; उपसन्नः उपगतः सन् पप्रच्छ पृष्टवान् । शौनकाङ्गिरसोः सम्बन्धादर्वाग्विधिवद्विशेषणाभावादुपसदनविधेः पूर्वेषामनियम इति गम्यते । मर्यादाकरणार्थं विशेषणम् । मध्यदीपिकान्यायार्थं वा विशेषणम् , अस्मदादिष्वप्युपसदनविधेरिष्टत्वात् ।
महाशालः- (மஹாசால:) - மஹா கிரஹஸ்தராகிய शौनकः- (செளனக:)- சுனகருடைய புத்திரராகிய செளனகர் பரத்வாஐருடைய சிஷ்யரும், ஆச்சாரியருமாகிய अङ्गिरसं - (அங்கிரஸம்) - அங்கிரஸை विधिवत् - (விதிவத்) - சாஸ்திரத்தில் கூறப்பட்ட விதிப்படி उपसन्नः (உபசன்ன:) - அணுகி पप्रच्छ - (பப்ரச்ச) - கேட்டார். செளனகர் அங்கிரஸை விதிப்படி அனுகினாா் என்பதில் உள்ள விதிப்படி என்ற விசேஷணத்தால் குருவை அணுகும் விதியானது இதற்கு முன் உள்ள பரம்பரையில் நியமம் இல்லாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அல்லது மரியாதையின் பொருட்டோ அல்லது மத்திய தீபிகாந்யாயம் என்ற இடையில் வைக்கப்பட்ட விளக்கு போல் முன்னவருக்கும், பின்னவருக்கும் அதே முறைதான் என்று கூறியதாகவும் ஆகலாம். மேலும் ஈண்டு கூறியிருத்தல் நம் போன்றவர்கள் குருவை எவ்வாறு அணுகவேண்டும் என்பதனை வலியுறுத்தி உபதேசிப்பதற்காகவும் ஆகும்.
किमित्याह — कस्मिन्नु भगवो विज्ञाते, नु इति वितर्के, भगवः हे भगवन् , सर्वं यदिदं विज्ञेयं विज्ञातं विशेषेण ज्ञातमवगतं भवतीति ‘एकस्मिन्विज्ञाते सर्वविद्भवति’ इति शिष्टप्रवादं श्रुतवाञ्शौनकः तद्विशेषं विज्ञातुकामः सन्कस्मिन्निति वितर्कयन्पप्रच्छ । अथवा, लोकसामान्यदृष्ट्या ज्ञात्वैव पप्रच्छ । सन्ति हि लोके सुवर्णादिशकलभेदाः सुवर्णत्वाद्येकत्वविज्ञानेन विज्ञायमाना लौकिकैः ; तथा किं न्वस्ति सर्वस्य जगद्भेदस्यैकं कारणम् यत्रैकस्मिन्विज्ञाते सर्वं विज्ञातं भवतीति ।
किमू इति - (கிம் இதி ஆஹ) அவர் என்ன கேட்டார் என்பதைக் கூறுகிறார். भगवो- (பகவோ) ஹேபகவானே! कस्मिन् नु- (கஸ்மின்னு) இதில் नु (னு) என்பது தர்கத்திற்காக (சந்தேஹம்)வந்தது. - எதை विज्ञातं - (விக்ஞாதே) அறிந்தபொழுது எந்த सर्वम् इवम् - (சர்வம் இதம்) இவை எல்லாம் அறிய வேண்டியவை विज्ञातं - (விக்ஞாதம்) விசே ஷமாக அறிந்தவைகளாக (பவதி) ஆகின்றன என்று ஒன்றை அறிவதால் எல்லாம் அறிந்தவன் ஆவான் என்பதை சான்றோர்களின் கூற்றை செளனகர் கேட்டிருக்கிறார். அதை விசேஷமாக அறிவதற்கு இச்சை உள்ளவராகி எதை அறிந்தபொழுது என்று சந்தேஹத்துடன் கேட்டார் அல்லது உலகத்தில் உள்ள சாமான்ய திருஷ்டியினால் அறிந்தே கேட்டார். உலகில் தங்க முதலியவைகளில் அநேக விதபேதங்கள் இருக்கின்றன. உலகத்தோரால் தங்கத்தன்மை முதலியவகளை ஒன்றே என்ற ஞானத்தால் எல்லாம் அறிந்தவைகள் ஆகின்றன. எந்த ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமோ அவ்வாறு இந்த எல்லா உலகின் பேதத்திற்கும் ஒரே காரணம் இருக்கிறது.
नन्वविदिते हि कस्मिन्निति प्रश्नोऽनुपपन्नः ; किमस्ति तदिति तदा प्रश्नो युक्तः ; सिद्धे ह्यस्तित्वे कस्मिन्निति स्यात् , यथा कस्मिन्निधेयमिति ।
न ; अक्षरबाहुल्यादायासभीरुत्वात्प्रश्नः सम्भवत्येव — किं न्वस्ति तद्यस्मिन्नेकस्मिन्विज्ञाते सर्ववित्स्यादिति ॥
(சங்கை) எந்த வஸ்துவை அறியவில்லையோ அந்த வஸ்துவின் விஷயத்தில் எதை எதனிடத்தில் என்ற கேள்வியே எழாது. அந்தவஸ்து இருக்கும்பொழுது என்ன இருக்கின்றது என்ற கேள்வி பொருந்தும்.
(சமாதானம்) அவ்வாறு கூறுவது பொருந்தாது. அக்ஷரம் அதிகமாகவும், ஆயாசத்தின் பயத்தினாலும் எந்த ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்தவன் ஆகின்றான் என்ற கேள்வி எழவே செய்கிறது.
विघा द्विप्रकारिका इति अड्गिरस: अत्तरम् -
அங்கிரஸின் பதில் மற்றும் இரண்டு விதமான வித்தையும்
तस्मै स होवाच । द्वे विद्ये वेदितव्ये इति ह स्म यद्ब्रह्मविदो वदन्ति परा चैवापरा च ॥ ४ ॥
तस्मै शौनकाय सः अङ्गिराः ह किल उवाच उक्तवान् । किमिति, उच्यते — द्वे विद्ये वेदितव्ये ज्ञातव्ये इति । एवं ह स्म किल यत् ब्रह्मविदः वेदार्थाभिज्ञाः परमार्थदर्शिनः वदन्ति । के ते इत्याह — परा च परमात्मविद्या, अपरा च धर्माधर्मसाधनतत्फलविषया ।
அந்த அங்கிரர் செளனகரின் பொருட்டு அல்லவா கூறினார். அது என்ன என்று கூறப்படுகிறது. வேதாந்தத்தை அறிந்தவரும், பரமார்த்தத்தை அறிந்தவருமான அந்த பிரஹ்ம வித்துக்கள் இரண்டு வித்தைகள் அறியப்பட வேண்டியது என்று அல்லவா கூறுகின்றார்கள். அவை இரண்டும் எவை என்று கூறுகிறார். பரா என்ற பரமாத்ம வித்தையும், தர்மாதர்ம சாதனமும் அதன் பல விஷயமும் ஆன அபரா வித்தையும் ஆகும்.
ननु कस्मिन्विदिते सर्वविद्भवतीति शौनकेन पृष्टम् ; तस्मिन्वक्तव्येऽपृष्टमाहाङ्गिराः — द्वे विद्ये इत्यादि ।
(சங்கை) செளனகரால் எதை அறிந்தால் எல்லாம் அறிந்தவன் ஆவான் என்று கேட்கப்பட்டது. அதற்கு அங்கிரர் பதில் அளிக்காமல் (த்வேவித்யே) என்பது முதலியவைகளை அவர் கேட்காததை கூறுகிறார்.
नैष दोषः, क्रमापेक्षत्वात्प्रतिवचनस्य । अपरा हि विद्या अविद्या ; सा निराकर्तव्या तद्विषये हि अविदिते न किञ्चित्तत्त्वतो विदितं स्यादिति ; ‘निराकृत्य हि पूर्वपक्षं पश्चात्सिद्धान्तो वक्तव्यो भवति’ इति न्यायात् ॥ ४ ॥
(சமாதானம்) பதிலில் ஒரு கிரமத்தை அனுசரித்து கூறவேண்டியதால் அது தோஷம் ஆகாது. அபர வித்தையானது அவித்தை. அது நிராகரிக்கப்பட வேண்டியது. அதைக்குறித்து அறிந்தாலும், கொஞ்சமும் உண்மையாக அறிந்ததாகாது. எனவே முதலில் பூர்வபக்ஷத்தை நிராகரித்துப்பின் ஸித்தாந்தைக்கூற வேண்டும் என்ற நியாயத்தை அனுசரித்து அவ்வாறு விடைபகன்றார்.
तत्रापरा, ऋग्वेदो यजुर्वेदः सामवेदोऽथर्ववेदः शिक्षा कल्पो व्याकरणं निरुक्तं छन्दो ज्योतिषमिति । अथ परा यया तदक्षरमधिगम्यते ॥ ५ ॥
तत्र का अपरेत्युच्यते — ऋग्वेदो यजुर्वेदः सामवेदोऽथर्ववेदः इत्येते चत्वारो वेदाः । शिक्षा कल्पो व्याकरणं निरुक्तं छन्दो ज्योतिषम् इत्यङ्गानि षट् ; एषा अपरा विद्योक्ता ।
அவைகளுள் அபரவித்தை என்பது என்ன என்று கூறப்படுகிறது. ரிக்வேதம், யஐுர்வேதம், சாமவேதம், அதர்வணவேதம் என்ற நான்கு வேதங்களும் சிக்ஷா, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ேஐாதிஷம் என்று ஆறு அங்கங்களும் அபரா வித்யாவாகும்.
अथ इदानीम् इयं परा विद्योच्यते यया तत् वक्ष्यमाणविशेषणम् अक्षरम् अधिगम्यते प्राप्यते, अधिपूर्वस्य गमेः प्रायशः प्राप्त्यर्थत्वात् ; न च परप्राप्तेरवगमार्थस्य च भेदोऽस्ति ; अविद्याया अपाय एव हि परप्राप्तिर्नार्थान्तरम् ।
பிறகு, இப்பொழுது எதனால் கூறப்போகும் எந்த மாறுபாடோ, நாசமோ அற்ற பரம்பொருள் அடையப்படுகிறதோ அது பரவித்தை ஆகும். அடையப்படுகிறது என்று கூறுதல் அடைபவன், அடையப்படுவது என்று துவைத பாவனையை உண்டாக்குமே எனில், (அதி + கம்யதே) என்பதற்கு அடையப்படுகிறது என்பது இயல்பாகக் கூறும் பொருளாகும். பரத்தை அடைதல் என்பதற்கும், பரத்தை அறிதல் என்பதற்கும் பேதம் இல்லாமையால் அவ்வாறு பொருள் கொள்ளப்பட்டது. பரத்தை அடைதல் என்பதற்கு அவித்தையை நாசம் செய்தல் என்று வேறு அர்த்தமாகும்.
ननु ऋग्वेदादिबाह्या तर्हि सा कथं परा विद्या स्यात् मोक्षसाधनं च । ‘या वेदबाह्याः स्मृतयो याश्च काश्च कुदृष्टयः’ (मनु. १२ । ९५) इति हि स्मरन्ति । कुदृष्टित्वान्निष्फलत्वादनादेया स्यात् ; उपनिषदां च ऋग्वेदादिबाह्यत्वं स्यात् । ऋग्वेदादित्वे तु पृथक्करणमनर्थकम् अथ परेति ।
(சங்கை) ரிக்வேதம் முதலியவைகள் பாஹியமாகில் எவ்வாறு அது பராவித்தையாகவும், மோக்ஷசாதனமாகவும் ஆகும்? ‘या वेदबाह्याः स्मृतयो याश्च काश्च कुदृष्टयः’ । सर्वास्ता निष्फलाः प्रेत्य तमोनिष्ठा हि ताः स्मृताः ॥ (யாவேதபாஹ்யா : ஸ்மிருதயோ யாச்ச காச்ச குத்ருஷ்டய : சர்வாஸ்தா நிஷ்பலா : ப்ரேத்ய தமோநிஷ்ட்டஹி தா: ஸ்ம்ருதா:) -எவைகள் வேதபாஹ்யங்களோ அவை ஏற்கத்தகாதவை என்றன்றோஸ்ம்ருதிகள் கூறுகின்றன. ஏன்எனில் அவைகள் குதிருஷ்டியோடு கூடியதாகவும், பயனற்றதாயும் உள்ளது என்றன்றோ கூறப்பட்டுள்ளது. அது குதிருஷ்டி உடையதாயும், பயனற்றதாயும் இருப்பதால் அது தள்ளத்தக்கது. உபநிஷத்துக்களை ரிக்வேதம் முதலியவைகளில் இருந்து (அத பரேதி) என்று பிரித்தல் அநர்த்தமாகும்.
न, वेद्यविषयविज्ञानस्य विवक्षितत्वात् । उपनिषद्वेद्याक्षरविषयं हि विज्ञानमिह परा विद्येति प्राधान्येन विवक्षितम् , नोपनिषच्छब्दराशिः । वेदशब्देन तु सर्वत्र शब्दराशिर्विवक्षितः । शब्दराश्यधिगमेऽपि यत्नान्तरमन्तरेण गुर्वभिगमनादिलक्षणं वैराग्यं च नाक्षराधिगमः सम्भवतीति पृथक्करणं ब्रह्मविद्याया अथ परा विद्येति कथनं चेति ॥ ५ ॥
(எவ்வாறு பராவித்யா ஆகும் எனில்) (சமாதானம்)அது அவ்வாறு அன்று. அறியத்தக்க விஷயத்தை உணர்த்தவே விளக்கப்பட்டுள்ளதால் உபநிஷத்துக்களால் அறியத்தக்க அக்ஷர விஷயமான விக்ஞானமே முக்கியமாக பராவித்தை என்று கூறப்பட்டதே அன்றி உபநிஷத்சொற்கோவைகளை பராவித்யா என்று கூறப்படவில்லை. வேதம் என்ற சப்தத்திற்கு எங்கும் சொற்கூட்டமே என்று சொல்லப்பட்டுள்ளது. உபநிஷத்சொற் கூட்டத்தை அறிந்ததால் மாத்திரம் அப்பரம்பொருள் அடையப்படுவது இல்லை. அதைத்தவிர வேறு முயற்ச்சிகளான குருவை அணுகி உபதேசம் பெறல், வைராக்கியம் அடைதல் முதலியவை இன்றி அப்பரம் பொருளை உணர்வது என்பது இல்லை. எனவே தான் பிரஹ்ம வித்தையே வேதங்களிலிருந்து பிரித்து பரா வித்தை என்று கூறப்பட்டது.
यथा विधिविषये कर्त्राद्यनेककारकोपसंहारद्वारेण वाक्यार्थज्ञानकालादन्यत्रानुष्ठेयोऽर्थोऽस्त्यग्निहोत्रादिलक्षणः, न तथेह परविद्याविषये वाक्यार्थज्ञानसमकाल एव तु पर्यवसितो भवति, केवलशब्दप्रकाशितार्थज्ञानमात्रनिष्ठाव्यतिरिक्ताभावात् । तस्मादिह परां विद्यां सविशेषणेनाक्षरेण विशिनष्टि — यत्तदद्रेश्यमित्यादिना । वक्ष्यमाणं बुद्धौ संहृत्य सिद्धवत्परामृशति — यत्तदिति ।
எவ்வாறு விதி கர்மகாண்ட ஸம்பந்தமான விஷயத்தில் அதை விளக்கும் வாக்கியங்களின் அர்த்தத்நை அறியும்பொழுது வேறு கா்த்தா முதலிய அநேக காரங்களின் செயலை உண்டாக்கும் ஸாதனங்களின் சோ்க்கை மூலமாக அக்னிே‘ாத்திரம் முதலிய ஆனஷ்டிக்கக்காரணமாகிறது. இங்கு பராவித்யா விஷயத்தில் அவ்வாறு இல்லை. வெறும் சப்தத்தினால் விளங்கும் அா்த்த ஞானமாத்திர நிஷ்டையானது வேறாக இல்லாததால் வாக்யாா்த்த ஞானமானது சமகாலத்திலேயே முடிவடைகிறது. ஆனையால் இங்கு பராவித்தையை விசேஷணங்களுடன் கூடிய யத்தத்அத்ரேச்யம் முதலியவைகள் விசேஷ்யமாக எடுத்துக்காட்டப்படுகிறது. இனிக்கூறப்போவதை மனதில் வைத்துக்கொண்டு யத்தத்இதி முதலிய வாக்யங்களினால் அந்த சித்த வஸ்துவை சொல்லப்போகிறாா்.
यत्तदद्रेश्यमग्राह्यमगोत्रमवर्णमचक्षुःश्रोत्रं तदपाणिपादम् ।
नित्यं विभुं सर्वगतं सुसूक्ष्मं तदव्ययं यद्भूतयोनिं परिपश्यन्ति धीराः ॥ ६ ॥
अद्रेश्यम् अदृश्यं सर्वेषां बुद्धीन्द्रियाणामगम्यमित्येतत् । दृशेर्बहिःप्रवृत्तस्य पञ्चेन्द्रियद्वारकत्वात् । अग्राह्यं कर्मेन्द्रियाविषयमित्येतत् । अगोत्रम् , गोत्रमन्वयो मूलमित्यनर्थान्तरम् । अगोत्रम् अनन्वयमित्यर्थः । न हि तस्य मूलमस्ति येनान्वितं स्यात् । वर्ण्यन्त इति वर्णा द्रव्यधर्माः स्थूलत्वादयः शुक्लत्वादयो वा । अविद्यमाना वर्णा यस्य तत् अवर्णम् अक्षरम् । अचक्षुःश्रोत्रं चक्षुश्च श्रोत्रं च नामरूपविषये करणे सर्वजन्तूनाम् , ते अविद्यमाने यस्य तदचक्षुःश्रोत्रम् । ‘यः सर्वज्ञः सर्ववित्’ (मु. उ. १ । १ । ९) इति चेतनावत्त्वविशेषणात्प्राप्तं संसारिणामिव चक्षुःश्रोत्रादिभिः करणैरर्थसाधकत्वम् ; तदिह अचक्षुःश्रोत्रमिति वार्यते, ‘पश्यत्यचक्षुः स शृणोत्यकर्णः’ (श्वे. उ. ३ । १९) इत्यादिदर्शनात् ।
(அர்த்தம்) यत्‌ तत्‌ अद्रश्यम्- (யத் தத் அத்ரேஷ்யம்) - என்ற அப்பரம்பொருள் எல்லா புத்தி இந்திரியங்கள் இவைகளுக்கு எட்டாதது. எட்டுவது என்பது வெளிப்பிரவிருத்தி உடைய ஐந்து இந்திரியங்களின் செயலாகும். அதற்கு எட்டாதது என்பது பொருள். अग्राह्यं (அக்ராஹ்யம்) –கர்மேந்திரியங்களுக்கு விஷயமாகாதது. अगोत्र - (அகோத்திரம்) கோத்திரம் என்றால் மூலத்துடன் கூடியது அன்வயம் எனப்படும். அதற்கு நேர்மாறான அனந்வயமாய் இருப்பதால் அதாவது இதற்கு மூலம் இல்லாததால் அகோத்தரம். வர்ணம் என்பது பருமன், வெண்மை போன்ற திரவிய தர்மங்களாகும். அத்தகைய திரவிய தர்மங்கள் அற்ற अवर्ण அக்ஷரம் அவர்ணம் ஆகும். अचक्षुःश्रोत्रं - (அசக்ஷுஸ்சுரோத்ரம்) கண் காது இவைகள் எல்லா பிராணிகளுக்கும் நாமரூபத்தை விஷயம் செய்வதற்கு கருவியாய் இருக்கின்றன. அவைகள் எதற்கு இல்லையோ அது அசக்ஷுசுரோத்திரம். ‘यः सर्वज्ञः सर्ववित्’ - (ய:சர்வக்ஞ :சர்வவித்) என்ற சேதனத்தன்மை விசேஷணமாய் இருப்பதால் மற்ற சம்சாரிகளைப் போல் கண் காது முதலிய கரணங்களால் அர்த்த சாதகத்துவம் ஏற்படுகிறது. पश्यत्यचक्षुः स शृणोत्यकर्णः’ முதலிய உபநிஷத்துகளில் தெரிவித்தபடி இங்கு சக்ஷு: சுரோத்திரம் இவைகள் இல்லாமலேயே பார்க்கிறது, கேட்கிறது என்பதால் அசக்ஷு :சுரோத்திரம்.
किञ्च, तत् अपाणिपादं कर्मेन्द्रियरहितमित्येतत् । यत एवम् अग्राह्यमग्राहकं च अतो नित्यमविनाशि । विभुं विविधं ब्रह्मादिस्थावरान्तप्राणिभेदैर्भवतीति विभुम् । सर्वगतं व्यापकमाकाशवत्सुसूक्ष्मम् । शब्दादिस्थूलत्वकारणरहितत्वात् । शब्दादयो ह्याकाशवाय्वादीनामुत्तरोत्तरस्थूलत्वकारणानि ; तदभावात्सुसूक्ष्मम् , किञ्च, तत् अव्ययम् उक्तधर्मत्वादेव न व्येतीत्यव्ययम् । न ह्यनङ्गस्य स्वाङ्गापचयलक्षणो व्ययः सम्भवति शरीरस्येव । नापि कोशापचयलक्षणो व्ययः सम्भवति राज्ञ इव । नापि गुणद्वारको व्ययः सम्भवति, अगुणत्वात्सर्वात्मकत्वाच्च ।
மேலும் तदपाणिपादं (ததபாணிபாதம்) - கை கால் அற்றது அதாவது கர்மேந்திரியமற்றது. எதனால் முற்கூறப்பட்டவைகளால் கிரஹிக்க முடியாததாய் இருக்கிறதோ அதனாலேயே அது नित्यं - (நித்தியம்) நித்யமானது, நாசமற்றது. विभुं - (விபும்) பிரஹ்மா தொடங்கி ஸ்தாவரங்கள் வரையிலான பலவித பிராணி பேதங்களாக அதுவே ஆகிறது என்பதால் விபு ஆகும். सर्वगतं (சர்வகதம்) - வியாபகம். ஆகாசம்போல் சப்தம் முதலிய ஸ்தூலத்தன்மையாக காரணம் இல்லாததால் சுசுக்ஷ்மம். சப்தம் முதலியவைகள் அல்லவா ஆகாசம், வாயு முதலியவைகளுக்கு உத்தரோத்தரம் காரணங்களாகின்றன. அவ்வாறு இல்லாததினால் சுசுக்ஷ்மம் ஆகும். மேலும் तदव्ययम् - (ததவ்யயம்) - முற்கூறிய தர்மங்களைப் பெற்றமையால் அதுமாறுபாடு அற்றது. ஆகையால் அவ்யயம். அதாவது அங்கம் அற்றவனுக்கு தன் சரீரத்தின் தேய்வு அல்லது குறைவு என்ற வியயம் ஏற்படுவதில்லை. சரீரத்திற்குத்தான் ஏற்படுகிறது. மேலும் அரசனின் பொக்கிஷம் போல் குறைவதும் இல்லை. மேலும் நிர்குணமாயும், ஸர்வாத்மகமாயும் இருப்பதால் அதற்கு குணரூபமான வியயமும் (குறைவும்) ஏற்படுவது இல்லை.
यत् एवंलक्षणं भूतयोनिं भूतानां कारणं पृथिवीव स्थावरजङ्गमानां परिपश्यन्ति सर्वत आत्मभूतं सर्वस्य अक्षरं पश्यन्ति धीराः धीमन्तो विवेकिनः । ईदृशमक्षरं यया विद्यया अधिगम्यते सा परा विद्येति समुदायार्थः ॥ ६ ॥
ஸ்தாவரஐங்கமங்களுக்கு பூமி காரணமாய் இருப்பது போல் இத்தகைய லக்ஷணங்களோடு கூடிய भूतयोनिम् - (பூதயோநிம்) - எல்லா பூதங்களுக்கும் காரணமாயும், எங்கும் ஆத்மபூதமாயும் உள்ள அக்ஷர பிரஹ்மத்தை (பரமாத்மாவை) தீரர்கள் புத்திமான்களாகிய விவேகிகள் பார்க்கின்றார்கள். எந்த வித்தையால் பரமாத்மாவை அறிகிறார்களோ அந்த வித்தை பரவித்தை எனப்படும்.(இது ஸம்பூரண மந்திரத்தின் தாத்பா்யா்த்தம்)
भूतयोनिरक्षरमित्युक्तम् । तत्कथं भूतयोनित्वमित्युच्यते दृष्टान्तैः —
(அ.கை) பூதயோனி என்பது அக்ஷரப்ரஹ்மம் என்று கூறப்பட்டது. அதற்கு பூதயோனித்துவம் எவ்வாறு என்பதை பிரசித்தமான த்ருஷ்டாந்தங்களால் விளக்கப்படுகிறது.
यथोर्णनाभिः सृजते गृह्णते च यथा पृथिव्यामोषधयः सम्भवन्ति ।
यथा सतः पुरुषात्केशलोमानि तथाक्षरात्सम्भवतीह विश्वम् ॥ ७ ॥
यथा लोके प्रसिद्धः ऊर्णनाभिः लूताकीटः किञ्चित्कारणान्तरमनपेक्ष्य स्वयमेव सृजते स्वशरीराव्यतिरिक्तानेव तन्तून्बहिः प्रसारयति पुनस्तानेव गृह्णते च गृह्णाति स्वात्मभावमेवापादयति ; यथा च पृथिव्याम् ओषधयः, व्रीह्यादिस्थावराणीत्यर्थः, स्वात्माव्यतिरिक्ता एव प्रभवन्ति सम्भवन्ति ; यथा च सतः विद्यमानाज्जीवतः पुरुषात् केशलोमानि केशाश्च लोमानि च सम्भवन्ति विलक्षणानि ।
எவ்வாறு உலகில் பிரசித்தமோ - சிலந்தியானது வேறு எந்தக் காரணத்தையும் சிறிதும் அபேக்ஷிக்காமல் தானே தன்னுடைய சரீரத்தினின்றும் வேறுபடாத நூலை வெளிப்படுத்துகிறது. மறுபடியும் அதையே தன் உள்ளே இழுத்துக்கொண்டு தானாகவே ஆகிறதோ, எவ்வாறு பூமியில் நெல் முதலான பயிர்களும், தாவரங்களும் தன்னிலிருந்தும் (பூமியிலிருந்தும்) வேறுபடாதவைகளாகவே உண்டாகின்றனவோ, எவ்வாறு ஜீவித்திருக்கின்ற புருஷனிடமிருந்து விலக்ஷணமான கேச, ரோமங்கள் உண்டாகின்றனவோ.
यथैते दृष्टान्ताः, तथा विलक्षणं सलक्षणं च निमित्तान्तरानपेक्षाद्यथोक्तलक्षणात् अक्षरात् सम्भवति समुत्पद्यते इह संसारमण्डले विश्वं समस्तं जगत् । अनेकदृष्टान्तोपादानं तु सुखावबोधनार्थम् ॥
எவ்வாறு திருஷ்ட்டாந்தங்களோ அவ்வாறே த்ருஷ்ட்டாந்தத்தில் கூறப்பட்டவண்ணம் விலக்ஷணமாயும், சலக்ஷணமாயும் உள்ளவைகள் வேறு நிமித்தங்களை எதிர்பார்க்காமல் (அபேக்ஷிக்காமல்) உண்டாகின்றனவோ (ஆறாவது மந்திரத்தில்) கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய அக்ஷரப்ஹ் மத்திலிருந்தே இந்த சம்சார மண்டலத்தில் அகில ஐகத்தும் உண்டாகிறது. சுலபமாக விஷயத்தைப் புரிந்து கொள்வதற்காக அநேக திருஷ்டாந்தங்கள் கூறப்பட்டன. (குறிப்பு) ऊर्णनाभिः- என்ற திருஷ்டாந்தம் அந்தப் பரம்பொருள் ஐகத்திற்கு அபின்ன நிமித்த உபாதனகாரணம் என்பதை விளக்குவதற்காக சுருதியில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. पृथिव्याम् ओषधयः- என்ற திருஷ்டாந்தம் அந்தப் பரம்பொருளில் இருந்து உண்டான ஐகத் அந்த பரம்பொருளைத் தவிர வேறு அல்ல என்பதை விளக்குகிறது. ஏன்எனில் சிலந்தியைவிட அதன்வலை அன்னியமாய் இருக்கிறது. அதன்பின் पुरुषात् केशलोमानि என்ற திருஷ்டாந்தம் சேதனத்திலிருந்து அசேதனம் தோன்றும் என்பதை தெரிவிக்கிறது. இங்கு அநேக திருஷ்டாந்தங்கள் ஏன் கூறப்படுகிறது எனில் ஒரே திருஷடாந்தத்திலேயே எல்லாம் பொருந்துவதாய் இருந்தால் அது பரம்பொருள் ஆகாது.
यद्ब्रह्मण उत्पद्यमानं विश्वं तदनेन क्रमेणोत्पद्यते, न युगपद्बदरमुष्टिप्रक्षेपवदिति क्रमनियमविवक्षार्थोऽयं मन्त्र आरभ्यते —
பிரஹ்மத்தினிடத்திலிருந்து உண்டான இந்த விச்வம் (ஐகத்) இந்த கிரமத்தில் தான் உற்பத்தி ஆகிறது. ஒரு (முஷ்டி) முட்டி இலந்த விதையை இறைத்தாற் போல் அன்று என்று கிரமநியமங்களை விளக்குவதற்காக இந்த மந்திரம்.
तपसा चीयते ब्रह्म ततोऽन्नमभिजायते ।
अन्नात्प्राणो मनः सत्यं लोकाः कर्मसु चामृतम् ॥ ८ ॥
तपसा ज्ञानेन उत्पत्तिविधिज्ञतया भूतयोन्यक्षरं ब्रह्म चीयते उपचीयते उत्पादयिष्यदिदं जगत् अङ्कुरमिव बीजमुच्छूनतां गच्छति पुत्रमिव पिता हर्षेण ।
तपसा (தபசா) - உற்பத்தி விதியை அறிந்த ஞானத்தால் (ப்ரஹ்ம) - அக்ஷரமாயும், எல்லாவற்றிற்கும் பிறப்பிடமாயுள்ள இப்பரம்பொருள் விரிவடைகிறது. எவ்வாறு முளையால் விதை பெருக்குமோ, புத்திர இச்சையால் தந்தை பூரிப்படைவாரோ அவ்வாறு பூரித்து விரிவடைகிறது.
एवं सर्वज्ञतया सृष्टिस्थितिसंहारशक्तिविज्ञानवत्तयोपचितात् ततः ब्रह्मणः अन्नम् अद्यते भुज्यत इत्यन्नमव्याकृतं साधारणं कारणं संसारिणां व्याचिकीर्षितावस्थारूपेण अभिजायते उत्पद्यते । ततश्च अव्याकृताद्व्याचिकीर्षितावस्थात् अन्नात् प्राणः हिरण्यगर्भो ब्रह्मणो ज्ञानक्रियाशक्त्यधिष्ठितो जगत्साधारणोऽविद्याकामकर्मभूतसमुदायबीजाङ्कुरो जगदात्मा अभिजायत इत्यनुषङ्गः ।
ततः (தத;) இவ்வாறு சர்வக்ஞத்தன்மையால் ஸ்ருஷ்ட்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் முதலிய ஞானத்துடன் பூரிப்படைந்த அப்பரம் பொருளிடமிருந்து अत्रम् (அன்னம்) அதாவது அனுபவிக்கப்படுவது அன்னம் எனப்படும். அவ்யாகிருதம் ஸம்சாரிகளின் விருப்பத்திற்கேற்ற அவஸ்தாரூபத்துடன் விரிவடையத்தக்கதாய் अभिजायते (அபி, ஐாயதே) உண்டாகிறது. விரிவடைவதற்குத் தகுந்த அவஸ்தையுடன் கூடிய अत्रात् - (அன்னாத்) - அன்னத்திடமிருந்து அதாவது அவ்யாகிருதத்தினிடமிருந்து प्राणः- (ப்ராண:) ப்ராணன் எனப்படும் ஹிரண்யகர்பன் அதாவது ஞானக்ரியா சக்தியுடன் கூடியவனாயும், ஐகத்திற்கு ஸாதாரணமானவனாயும், அவித்யா காமகர்ம பூதமான ஸமுதாயத்திற்கு பீஐாங்குரமானவனாயும், ஐகதாத்ம ஸ்வரூபனாயும் உள்ள ஹிரண்யகர்பன் உண்டாகிறான்.
तस्माच्च प्राणात् मनः मनआख्यं सङ्कल्पविकल्पसंशयनिर्णयाद्यात्मकमभिजायते । ततोऽपि सङ्कल्पाद्यात्मकान्मनसः सत्यं सत्याख्यमाकाशादिभूतपञ्चकमभिजायते । तस्मात्सत्याख्याद्भूतपञ्चकादण्डक्रमेण सप्त लोकाः भूरादयः । तेषु मनुष्यादिप्राणिवर्णाश्रमक्रमेण कर्माणि । कर्मसु च निमित्तभूतेषु अमृतं कर्मजं फलम् । यावत्कर्माणि कल्पकोटिशतैरपि न विनश्यन्ति, तावत्फलं न विनश्यतीत्यमृतम् ॥ ८ ॥
அந்த பிராணன் என்ற ஹிரண்யகர்பனிடமிருந்து मनः (மன:) - ஸங்கல்ப, விகல்ப, சம்சய, நிர்ணய ஆத்மகமாக உள்ள மனது உண்டாகிறது. சங்கல்ப விகல்ப முதலிய ஆத்மகமான மனதிலிருந்து सत्यं (சத்யம்) சத்யம் எனப்படும் ஆகாசாதி பூதபஞ்சகம் உண்டாகிறது. அந்த சத்யம் எனப்படும் பூதபஞ்சகத்திலிருந்து அண்டக்கிரமமாக लोकाः (லோகா) பூலோகம் முதலிய ஏழு லோகங்கள் உண்டாயின. அந்த ஏழு லோகங்களில் மனுஷ்யன் முதலான பிராணிகள் வர்ணாஸ்ரமத்துடன் கூடிய கர்மாக்களையும், (கர்மசு) அந்த நிமித்த பூதமான கர்மாக்களில் அந்தக் கர்மாக்களினால் உண்டாகும் अमृतम् - (அம்ருதம்) அம்ருதம் எனப்படும் பலனையும் படைத்தார். நூறு கோடி கல்பங்களானாலும் கர்மாக்கள் நசிக்காத வரை கர்ம பலன்களும் நசிக்காது என்பதால் அம்ருதம் என்று கூறப்பட்டது.
उक्तमेवार्थमुपसञ्जिहीर्षुर्मन्त्रो वक्ष्यमाणार्थमाह —
முன்பு கூறிய அர்த்தத்தை முடிப்பதற்கு இச்சை உடையவராய் மேலே கூறப்போகும் மந்திரத்தின் அர்த்தத்தை கூறுகிறார்.
यः सर्वज्ञः सर्वविद्यस्य ज्ञानमयं तपः ।
तस्मादेतद्ब्रह्म नाम रूपमन्नं च जायते ॥ ९ ॥
यः उक्तलक्षणोऽक्षराख्यः सर्वज्ञः सामान्येन सर्वं जानातीति सर्वज्ञः । विशेषेण सर्वं वेत्तीति सर्ववित् । यस्य ज्ञानमयं ज्ञानविकारमेव सार्वज्ञ्यलक्षणं तपः अनायासलक्षणम् , तस्मात् यथोक्तात्सर्वज्ञात् एतत् उक्तं कार्यलक्षणं ब्रह्म हिरण्यगर्भाख्यं जायते । किञ्च, नाम असौ देवदत्तो यज्ञदत्त इत्यादिलक्षणम् , रूपम् इदं शुक्लं नीलमित्यादि, अन्नं च व्रीहियवादिलक्षणम् , जायते पूर्वमन्त्रोक्तक्रमेणेत्यविरोधो द्रष्टव्यः ॥ ९ ॥
यः (ய:) எவன் முற்கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய அக்ஷரம் எனப்படும். सर्वज्ञः (சர்வக்ஞ:) சாமான்யமாய் எல்லாவற்றையும் அறியும் சர்வக்ஞனோ सर्ववित् (சர்வவித்) எல்லாவற்றையும் விசேஷமாய் அறிபவனோ यस्त -(யஸ்ய) எந்த பரமாத்மாவிற்கு ज्ञानमयं- (ஞானமயம்) - ஞானவிகாரமோ எல்லாவற்றையும் அறியும் லக்ஷணமுடைய, ஆயாசமற்ற तपः (தப:) தவமோ तस्मात् (தஸ்மாத்) - கூறப்பட்ட சர்வக்ஞனிடமிருந்து एतत् ब्रहा (ஏதத் பிரஹ்ம) - ஹிரண்ய கர்பன் எனப்படும் இந்த காரியரூபமான பிரஹ்மமானது உண்டாகிறது. மேலும் नाम (நாம) - இவன் தேவதத்தன், இவன் யக்ஞதத்தன் என்ற பெயர் உடைய லக்ஷணங்களும், रूपं (ரூபம்) வெண்மை, கருப்பு போன்ற ரூபங்களும், अत्रं च (அன்னம் ச) நெல், கோதுமை போன்ற உணவுகளும் जायते- உண்டாகின்றன.
व्यष्टिरूपेण अविद्याख्येन उपाधिना अनन्तजीवभावम्‌ आपच्चः सः एव सर्वं स्व-उपाधिः तत्‌ संसृष्टं च वेत्ति इति अधिदैवतम्‌ अध्या तं च त्वाभेदः सूचितः ।
வியஷ்டி ரூபமான அவித்யா எனப்படும் உபாதியினால் முடிவற்ற ஜீவ பாவம் அடைந்து அவனே எல்லாம் தன்னுடைய உபாதியினால் சிருஷ்டிக்கப்பட்டது என்று அறிபவர் என்பதால் அதிதெய்வம், அத்யாத்மம் என்று தத்துவத்தின் அபேதமானது சுருக்கமாகக் கூறப்பட்டது.
इति प्रथममुण्डके प्रथमखण्डभाष्यम् ॥
तदेतत्सत्यं मन्त्रेषु कर्माणि कवयो यान्यपश्यंस्तानि त्रेतायां बहुधा सन्ततानि ।
तान्याचरथ नियतं सत्यकामा एष वः पन्थाः सुकृतस्य लोके ॥ १ ॥
साङ्गा वेदा अपरा विद्योक्ता ‘ऋग्वेदो यजुर्वेदः’ (मु. उ. १ । १ । ५) इत्यादिना । ‘यत्तदद्रेश्यम्’ (मु. उ. १ । १ । ६) इत्यादिना ‘नामरूपमन्नं च जायते’ (मु. उ. १ । १ । ९) इत्यन्तेन ग्रन्थेनोक्तलक्षणमक्षरं यया विद्ययाधिगम्यत इति सा परा विद्या सविशेषणोक्ता । अतः परमनयोर्विद्ययोर्विषयौ विवेक्तव्यौ संसारमोक्षावित्युत्तरो ग्रन्थ आरभ्यते ।
முன் கண்டத்தில் ‘ऋग्वेदो यजुर्वेदः’ (ரிக்வேதோ யஐுர்வேத:) என்ற மந்திரத்தால் அங்கங்களுடன் கூடிய வேதங்கள் அபரவித்தை என்று கூறினார். ‘यत्तदद्रेश्यम्’ (யத்ததத்ரேச்யம்) என்பது தொடங்கி ‘नामरूपमन्नं च जायते’ முடிய உள்ள மந்திரங்களால் கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய அக்ஷரபி்ரஹ்மமானது எந்த வித்தையினால் அறிந்து கொள்ள முடியுமோ அந்த வித்தை பரா வித்தை. அந்த பரா வித்தை விசேஷணங்களுடன் கூறப்பட்டது. இதற்குமேல் இந்த வித்தைகளின் விஷயங்களான ஸம்ஸார மோக்ஷங்களைப் பற்றி விவரிக்க மேலே தொடங்குகிறார
तत्रापरविद्याविषयः कर्त्रादिसाधनक्रियाफलभेदरूपः संसारोऽनादिरनन्तो दुःखस्वरूपत्वाद्धातव्यः प्रत्येकं शरीरिभिः सामस्त्येन नदीस्रोतोवदविच्छेदरूपसम्बन्धः तदुपशमलक्षणो मोक्षः परविद्याविषयोऽनाद्यनन्तोऽजरोऽमरोऽमृतोऽभयः शुद्धः प्रसन्नः स्वात्मप्रतिष्ठालक्षणः परमानन्दोऽद्वय इति ।
அவைகளில் அபரவித்தை விஷயமானது கர்த்தா முதலான ஸாதனக்கிரியைகளோடும், பல பேதங்களோடு கூடியதும், முடிவற்றதும், துக்கஸ்வரூபமாயும் உள்ள சம்சாரமாகும். எனவே அது சரீரம் எடுத்த ஒவ்வொருவராலும் விட்டொழிக்கத்தக்கது. அது மத்ஸ்யத்துடன் கூடிய ஆற்று நீரோட்டம் போல் ஒன்றுக்கொன்று பிரிக்கமுடியாத ஸம்பந்தத்துடன் கூடியதாகும். அந்த சம்சாரத்தை நாசம் செய்வது பரவித்யாவிஷயமான மோக்ஷமாகும். அஃது அனாதியானது முடிவற்றது, பிறப்போ, முதுமையோ, நாசமோ, பயமோ அற்றது. சுத்தமானது. பிரசன்னமானது. தன்னிடத்தில் நிலைபெற்றது. பரமானந்தரூபமானது. இரண்டாவது அற்றது.
पूर्वं तावदपरविद्याया विषयप्रदर्शनार्थमारम्भः । तद्दर्शने हि तन्निर्वेदोपपत्तिः । तथा च वक्ष्यति — ‘परीक्ष्य लोकान्कर्मचितान्’ (मु. उ. १ । २ । १२) इत्यादिना । न ह्यप्रदर्शिते परीक्षोपपद्यत इति तत्प्रदर्शयन्नाह —
ஈண்டு முதலில் அபரவித்தையை விளக்க முற்படுகிறார். ஏன்எனில் அதை ஆராய்வதாலேயே அவைகளில் வெறுப்பும், வைராக்கியமும் ஏற்படும் என்பதால், அதுவே, ‘परीक्ष्य लोकान्कर्मचितान्’ தன் கர்மங்களினால் சம்பாதித்த லோகங்களை பரிசீலனை செய்து வெறுப்புற்றவன். என்பன போன்ற வாக்கியங்களால் வேதங்கள் கூறுகின்றன. அவைகளைப் பார்க்காவிடில் அவைகளைப் பரீக்ஷீத்தல் முடியாது என்பதற்காகவே அதை விளக்கிக் கூறுகிறார்.
तदेतत्सत्यमवितथम् । किं तत् ? मन्त्रेषु ऋग्वेदाद्याख्येषु कर्माणि अग्निहोत्रादीनि मन्त्रैरेव प्रकाशितानि कवयः मेधाविनो वसिष्ठादयः यानि अपश्यन् दृष्टवन्तः । यत्तदेतत्सत्यमेकान्तपुरुषार्थसाधनत्वात् , तानि च वेदविहितानि ऋषिदृष्टानि कर्माणि त्रेतायां त्रयीसंयोगलक्षणायां हौत्राध्वर्यवौद्गात्रप्रकारायामधिकरणभूतायां बहुधा बहुप्रकारं सन्ततानि सम्प्रवृत्तानि कर्मिभिः क्रियमाणानि त्रेतायां वा युगे प्रायशः प्रवृत्तानि ;
तदेतत्सत्यमवितथम् - அந்த இந்த சத்தியம் மித்தை அல்ல. मन्त्रेषु- (அந்த இந்த சத்தியம்) மித்தையற்றது. அது எது? ரிக்வேதம் முதலான வேதங்களில் அந்தந்த வேத மந்திரங்களினாலேயே பிரகாசப்படுத்தப்பட்ட यानि कर्माणि- எந்த அக்னிஹோத்திரம் முதலான கர்மங்களை कवयः मेधाविनो- வஸிஷ்டர் முதலான மேதாவிகள் अपश्यन्- கண்டனரோ तत् एतत्- அந்த அக்கினிஹோத்தராதி கர்மாக்கள் सत्यं - புருஷார்த்தஸாதனமானபடியால் சத்யமானவை. வியா்த்தமல்ல. तानि- அவ்வாறு வேதங்களாலும் விதிக்கப்பட்டு ரிஷிகளாலும் காணப்பட்ட (க்ரஹிக்கப்பட்ட) அந்த கர்மாக்கள் - त्रेतायां - ஹோதா, உத்காதா, அத்வா்யு என்று மூன்று விதமாகச் செய்யக்கூடிய செயலை உடையவை. அவை बहुधा - அநேக விதங்களாக सन्ततानि -விரிவடைந்தவைகளாய் செய்யப்பட்டிருந்தன. அல்லது த்ரேதாயுகத்தில் கர்மடர்களால் செய்யப்பட்டவைகளாய் இருந்தன.
अतो यूयं तानि आचरथ निर्वर्तयत नियतं नित्यं सत्यकामा यथाभूतकर्मफलकामाः सन्तः । एषः वः युष्माकं पन्थाः मार्गः सुकृतस्य स्वयं निर्वर्तितस्य कर्मणः लोके फलनिमित्तं लोक्यते दृश्यते भुज्यत इति कर्मफलं लोक उच्यते । तदर्थं तत्प्राप्तये एष मार्ग इत्यर्थः । यान्येतान्यग्निहोत्रादीनि त्रय्यां विहितानि कर्माणि, तान्येष पन्था अवश्यफलप्राप्तिसाधनमित्यर्थः ॥ १ ॥
अतः (அத:) ஆகையால் सत्यकामाः (சத்யகாமா:) சொல்லப்பட்ட கர்மாக்களின் பலனில் ஆசையுள்ள நீங்கள் तानि नियतं (தானி நியதம்) நியமத்துடன் आचरथ எப்பொழுதும் கடைப்பிடிப்பீர்களாக. एषः वः (ஏஷ: வ:) இதுவே உங்களுக்கு पन्थाः (பன்த்தா:) மார்க்கமும் (வழியாகும்). सुकृतस्य लोके (சுகிருதஸ்யலோகே) நீங்கள் செய்த கர்மாக்களின் பலனை அனுபவிப்பதற்கான லோகங்களை அடைவதற்கான வழியாகும். लोके என்றால் பலத்தின் பொருட்டு எதிர்பார்த்தல், பார்க்கப்படுவது அனுபவித்தல் என்பதால் கர்மபலம் எனப்படுகிறது. வேதங்களால் விதிக்கப்பட்ட அக்னிஹோத்திரம் முதலான கர்மாக்களே அதன்பலனை அடைவதற்காக வழியாகும் அல்லது நிச்சயமாக பலன் ஏற்படுவதற்கான சாதனமாகும் என்பது பொருள்.
तत्राग्निहोत्रमेव तावत्प्रथमं प्रदर्शनार्थमुच्यते, सर्वकर्मणां प्राथम्यात् । तत्कथम् ?
எல்லாக் கர்மாக்களிலும் அக்னிஹோத்திரம் முதன்மையாய் இருப்பதால் அதை முதலில் இந்த மந்திரத்தில் விளக்குகிறார்.
यदा लेलायते ह्यर्चिः समिद्धे हव्यवाहने ।
तदाज्यभागावन्तरेणाहुतीः प्रतिपादयेत् ॥ २ ॥
यदैव इन्धनैरभ्याहितैः सम्यगिद्धे समिद्धे दीप्ते हव्यवाहने लेलायते चलति अर्चिः ; तदा तस्मिन्काले लेलायमाने चलत्यर्चिषि आज्यभागौ आज्यभागयोः अन्तरेण मध्ये आवापस्थाने आहुतीः प्रतिपादयेत् प्रक्षिपेत् देवतामुद्दिश्य । अनेकाहःप्रयोगापेक्षया आहुतीरिति बहुवचनम् ॥ २ ॥
यदा (யதா) எப்பொழுது समिद्धे (சமித்தே) நன்கு விறகுகள் இடப்பட்ட हव्यवाहने (ஹவ்யவாஹனே) - அக்னியில் अर्चिः (அர்ச்சி:) தீப்பிழம்பு लेलायते - (லேலாயதே) - கொழுந்து விட்டு எரிகிறதோ तदा - அப்போது आज्यभागयोरन्तरेण - (ஆஐ்யபாகாயோரன்த்தரேன) அக்நயேஸ்வாஹா, ஸோமாய ஸ்வாஹா என்ற இரு ஆஐ்ய ஆஹுதீகளுக்கு இடையில் आहुतीः - தேவதைகளைக்குறித்து ஆஹுதிகளை प्रतिपादयेत् - இடல்வேண்டும், அளித்தல் வேண்டும். அநேக தினங்கள் ஆஹுதி (அநேக தினங்கள் ஹவனம்) செய்வதால் ஆஹுதீ: என்று பஹீ (பன்மையில்) வசனத்தில் சொல்லப்பட்டது.
एष सम्यगाहुतिप्रक्षेपादिलक्षणः कर्ममार्गो लोकप्राप्तये पन्थाः । तस्य च सम्यक्करणं दुष्करम् ; विपत्तयस्त्वनेका भवन्ति ॥ क थम् ?
இவ்வாறு நன்கு ஆஹுதிகளைப் போடுதல் அல்லது செய்தல் என்பது போன்ற கர்மமார்க்கங்கள் புண்ணிய லோகங்களை அடைவதற்கு வழியாக அமைகிறது. இதை நன்கு அனுஷ்ட்டானம் செய்தல் கடினம். இடையில் இடையூறுகள் பல உண்டாகும்.
यस्याग्निहोत्रमदर्शमपौर्णमासमचातुर्मास्यमनाग्रयणमतिथिवर्जितं च ।
अहुतमवैश्वदेवमविधिना हुतमासप्तमांस्तस्य लोकान्हिनस्ति ॥ ३ ॥
यस्य अग्निहोत्रिणः अग्निहोत्रम् अदर्शं दर्शाख्येन कर्मणा वर्जितम् । अग्निहोत्रिभिरवश्यकर्तव्यत्वाद्दर्शस्य । अग्निहोत्रिसम्बन्ध्यग्निहोत्रविशेषणमिव भवति । तदक्रियमाणमित्येतत् । तथा अपौर्णमासम् इत्यादिष्वप्यग्निहोत्रविशेषणत्वं द्रष्टव्यम् । अग्निहोत्राङ्गत्वस्याविशिष्टत्वात् । अपौर्णमासं पौर्णमासकर्मवर्जितम् । अचातुर्मास्यं चातुर्मास्यकर्मवर्जितम् । अनाग्रयणम् आग्रयणं शरदादिषु कर्तव्यम् , तच्च न क्रियते यस्य तत्तथा । अतिथिवर्जितं च अतिथिपूजनं चाहन्यहन्यक्रियमाणं यस्य । स्वयं सम्यगग्निहोत्रकाले अहुतम् । अदर्शादिवत् अवैश्वदेवं वैश्वदेवकर्मवर्जितम् । हूयमानमप्यविधिना हुतम् अयथाहुतमित्येतत् । एवं दुःसम्पादितमसम्पादितमग्निहोत्राद्युपलक्षितं कर्म किं करोतीत्युच्यते —
यस्य (யஸ்ய) - எந்த அக்னி ஹோத்திரம் செய்பவரின் - अग्निहोत्रं - (அக்னிஹோத்தரம்) அக்னி ஹோத்திரம் अदर्श - (அதர்ஷம்) தர்சம் என்ற அமாவாசையில் செய்ய வேண்டிய கர்மம் அற்றதோ, இங்கு தர்ஷகர்மா அக்கினி ஹோத்திரத்திற்கு சம்பந்தம் இருப்பதால் தர்ஷகர்மா அக்கினி ஹோத்திரத்தின் விசேஷணமாகும். अपौर्णमासं -(அபெளா்ணமாசம்) பெளர்ணமியில் செய்ய வேண்டிய கர்மா செய்யவில்லையோ, அக்னி ஹோத்திரம் சித்திக்க வேண்டுமானால் அதற்கு தர்ஸபூர்ண மாசம் என்ற கர்மாக்கள் மிகவும் அவசியம். இக்கர்மாக்கள் அக்னி ஹோத்திரத்திற்கு அங்கமாகும். அங்க ஹீனமானால் கர்மா சித்திக்காது. अचातुर्मास्यं - (அசாதுர்மாஸ்யம்) சாதுர்மாஸ்யம் என்ற கர்மா அற்றதோ अनाग्रयणम्- (அநாக்ரயணம்) ஆக்நயம் என்ற சரத் காலத்தில் புது தானியத்தால் செய்யத்தக்க கர்மா அற்றதோ, अतिथिवर्जितं च - (அதிதி வர்ஜி தம்ச) தினம், தினம் செய்யவேண்டிய அதிதி பூைஐ அற்றதாயும், अहुतं - (அஹுதம்) செய்யப்பட வேண்டிய காலத்தில் ஹோமம் செய்யப்படாததும். अवैश्वदेवं - (அவைச்வதேவம்) அதர்ஷாதி போல் வைச்வதேவம் என்ற கர்மா அற்றதும், अविधिना हुतं- (அவிதினா ஹுதம்) ஹோமம் செய்யாததாலும், முறைப்படி குறித்த காலத்தில் ஹோமம் செய்யப்படாததுமாக உள்ளதோ அந்த உபலக்ஷிதகர்மா என்ன செய்யும் என்பது கூறப்படுகிறது.
आसप्तमान् सप्तमसहितान् तस्य कर्तुर्लोकान् हिनस्ति हिनस्तीव आयासमात्रफलत्वात् । सम्यक् क्रियमाणेषु हि कर्मसु कर्मपरिणामानुरूप्येण भूरादयः सत्यान्ताः सप्त लोकाः फलं प्राप्तव्यम् । ते लोकाः एवंभूतेनाग्निहोत्रादिकर्मणा त्वप्राप्यत्वाद्धिंस्यन्त इव, आयासमात्रं त्वव्यभिचारीत्यतो हिनस्तीत्युच्यते ।
तस्य (தஸ்ய) அந்த அக்னிஹோத்திரியினுடைய आसप्तमान् -(ஆசப்தமான்) ஏழு உலகங்களுடன் கூடிய लोकान् (லோகான்) எல்லா லோகங்களையும் तस्य (தஸ்ய) அந்த கர்மமானது வெறும் ஆயாச பலத்தை மட்டும் அளிப்பதால் நாசம் செய்கிறது போல் இருக்கிறது. ஒழுங்காக செய்யப்படும் கர்மங்களினால் அல்லவா கர்மங்களின் பரிணாமத்தின்படி பூமி முதலிய சத்யலோகம் வரையிலும் உள்ள ஏழு லோகங்களாகிய பலன்களை அடைகிறார்கள். அவ்வாறு அல்லாமல் முறையற்று செய்த அக்னிஹோத்தி ராதிகர்மங்களால் அந்த லோகங்களை அடையாததினால் हिनस्ति நாசம் செய்யப்பட்டது போல் இருக்கிறது. அதற்கு ஆபாச மாத்திரம் பலம்மாறு படாமல் அதாவது நிச்சயமாக இருக்கிறது. ஆகையால் அந்த ஏழு உலகங்களும் நஷ்டமடைந்தது போல் தோன்றுகிறது.
पिण्डदानाद्यनुग्रहेण वा सम्बध्यमानाः पितृपितामहप्रपितामहाः पुत्रपौत्रप्रपौत्राः स्वात्मोपकाराः सप्त लोका उक्तप्रकारेणाग्निहोत्रादिना न भवन्तीति हिंस्यन्त इत्युच्यते ॥ ३ ॥
அல்லது தந்தை, பாட்டனார், முப்பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப்பேரன் அக்நி ஹோத்திரம் செய்பவன் என்ற ஏழு தலைமுறைகளையும் அதாவது தனக்கு உபகாரமான ஏழு உலகங்களும் கூறப்பட்ட முறையற்ற அக்னி ஹோத்திரம் முதலியவைகளினால் அழிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
काली कराली च मनोजवा च सुलोहिता या च सुधूम्रवर्णा ।
स्फुलिङ्गिनी विश्वरुची च देवी लेलायमाना इति सप्त जिह्वाः ॥ ४ ॥
काली कराली च मनोजवा च सुलोहिता या च सुधूम्रवर्णा । स्फुलिङ्गिनी विश्वरुची च देवी लेलायमाना दहनस्य जिह्वाः । काल्याद्या विश्वरुच्यन्ता लेलायमानाः अग्नेर्हविराहुतिग्रसनार्था एताः किल सप्त जिह्वाः ॥ ४ ॥
कालि - (காளீ) கருப்பானவள் என்றும், करालि च- (கராலீச்ச) கத்தி போன்றவள் என்றும், मनोजवा च - (மனோஐவாச்ச) மனோவேகம் போன்ற வேகம் உடையவள் என்றும், लोहिता - (லோஹிதா) மிகவும் சிவப்பானவள் என்றும், या च-(யாச்ச) எவள் सुधूम्रवर्णा -(சுதூம்ரவர்ணா) கரும் சாம்பல் வர்ணம் கொண்டவள் என்றும், स्फुलिङ्गिनी - (ஸ்புலிங்கினீ) பொறி வீசுபவள் என்றும், विश्वरुची च देवी - (விச்வருசீச்ச தேவீ) உலகையே ருசிப்பவள் தேவீ என்றும், लेलायमानाः -(லேலாயமானா:) கொழுந்துவிட்டு எரிகின்றதும் इति (இதி) ஆகிய सप्तजिहाः ஏழு நாக்குகள் காளீ முதல் விச்வருசீ வரையிலும் உள்ளவைகள் ஆஹுதியை விழுங்குவதற்கான அக்னிதேவனுடைய ஏழு நாக்குகள் ஆகும்.
एतेषु यश्चरते भ्राजमानेषु यथाकालं चाहुतयो ह्याददायन् ।
तं नयन्त्येताः सूर्यस्य रश्मयो यत्र देवानां पतिरेकोऽधिवासः ॥ ५ ॥
एतेषु अग्निजिह्वाभेदेषु यः अग्निहोत्री चरते कर्माचरत्यग्निहोत्रादिकं भ्राजमानेषु दीप्यमानेषु । यथाकालं च यस्य कर्मणो यः कालस्तं कालमनतिक्रम्य यथाकालं यजमानम् आददायन् आददाना आहुतयः तं नयन्ति प्रापयन्ति । एताः आहुतयो या इमा अनेन निर्वर्तिताः सूर्यस्य रश्मयः भूत्वा, रश्मिद्वारैरित्यर्थः । यत्र यस्मिन्स्वर्गे देवानां पतिः इन्द्रः एकः सर्वानुपरि अधि वसतीति अधिवासः ॥ ५ ॥
यः - எந்த அக்னிஹோத்திரியானவன் भ्राजमानेषु - பிரகாசிக்கின்ற एतेषु - முற்கூறப்பட்ட அக்னியின் நாக்குகளில் यथाकालं च - அந்தந்த கர்மாக்களுக்கு உரிய காலங்களில் செய்யப்படும் கர்மாக்களை चरते அக்னிஹோத்ராதி கர்மாக்களைச் செய்கிறானோ एताः आहुतयः யஐமானனால் செய்யப்பட்ட ஆஹுதிகள் எவையோ இவைகளினால் செய்யப்பட்டவைகள் सूर्यस्य சுரியனுடைய रश्मयः கிரணங்களாக ஆகி அந்த கிரணங்களின் மூலமாக आददायन् அந்த எஐமானனை அழைத்துக்கொண்டு यत्र எந்த ஸ்வர்கத்தில் देवानां पतिः தேவர்களுக்குத் தலைவனான இந்திரனின் एकः अधिवासः எந்த ஒன்று மேலானஸ்தானம் உள்ளதோ नयन्ति அங்கு கொண்டு செல்கின்றன.
कथं सूर्यस्य रश्मिभिर्यजमानं वहन्तीत्युच्यते —
சுரியனுடைய கிரணங்களின் மூலமாக எவ்வாறு எஐமானனைச் சுமந்து செல்கின்றன என்பதை இந்த மந்திரம் கூறுகிறது.
एह्येहीति तमाहुतयः सुवर्चसः सूर्यस्य रश्मिभिर्यजमानं वहन्ति ।
प्रियां वाचमभिवदन्त्योऽर्चयन्त्य एष वः पुण्यः सुकृतो ब्रह्मलोकः ॥ ६ ॥
एहि एहि इति आह्वयन्त्यः तं यजमानम् आहुतयः सुवर्चसः दीप्तिमत्यः ; किञ्च, प्रियाम् इष्टां वाचं स्तुत्यादिलक्षणाम् अभिवदन्त्यः उच्चारयन्त्यः अर्चयन्त्यः पूजयन्त्यश्च एषः वः युष्माकं पुण्यः सुकृतः ब्रह्मलोकः फलरूपः, इत्थं प्रियां वाचम् अभिवदन्त्यो वहन्तीत्यर्थः । ब्रह्मलोकः स्वर्गः प्रकरणात् ॥ ६ ॥
आहुतयः तम् एहि एहि इति - (ஆஹுதய: தம் ஏஹி ஏஹி இதி) எஐமானனால் செய்யப்பட்ட ஆஹுதிகள் அந்த எஐமானனை வருக வருக என்று அழைப்பவைகளாகவும், सुवर्चसः- (சுவர்ச்சஸ:) அழகிய காந்தியோடு கூடியவைகளாகவும், மேலும் प्रियां वाचम् - (ப்ரியாம் வாச்சம்) பிரியமான ஸ்துதிவடிவிலான சொற்களை, अभिवदन्त्यो - (அபிவதந்த்திய:) உச்சரிப்பவைகளாகவும், अर्चयन्त्यः-(அர்ச்சயன்த்ய:) பூஜிப்பவைகளாகவும் கொண்டு, सूर्यस्य रश्मिभिः -(சுர்யஸ்ய ரஷ்மி பி:) சுரியனின் கிரணங்களின் வாயிலாக एषः (ஏ ஷ:) இதுவே वः (வ:) உங்களுடைய पुण्य सुक्रुतः (புண்ய: சுக்ருத:) புண்ணியமான நற்செயல்களுக்கு வழியான ब्रह्मलोकः- (பிரஹ்ம லோக:) பலரூபம் என்று பிரியமான வார்த்தைகளைக் கூறிக்கொண்டே यजमानं वहन्ति- (யஐமானம் வஹந்தி) யஐமானனாகிய அக்னிஹோத்திரியை அழைத்துச் செல்கின்றன. இந்த இடத்தில் பிரஹ்மலோகம் என்றால் ஸ்வர்க்கத்தைக் குறிக்கிறது
एतच्च ज्ञानरहितं कर्मैतावत्फलमविद्याकामकर्मकार्यम् अतोऽसारं दुःखमूलमिति निन्द्यते —
இந்த ஞானமற்ற கர்மாக்களின் பலன் அவித்தை, காம கர்மங்கள் இவைகளின் காரியமாகும். எனவே இது சாரமற்றது, துக்க மூலமானதும், வெறுக்கத்தக்கதும் ஆகும் என்பதால் இந்த மந்திரத்தில் நிந்திக்கப்படுகிறது.
प्लवा ह्येते अदृढा यज्ञरूपा
अष्टादशोक्तमवरं येषु कर्म ।
एतच्छ्रेयो येऽभिनन्दन्ति मूढा
जरामृत्युं ते पुनरेवापि यन्ति ॥ ७ ॥
प्लवाः विनाशिन इत्यर्थः । हि यस्मात् एते अदृढाः अस्थिराः यज्ञरूपाः यज्ञस्य रूपाणि यज्ञरूपाः यज्ञनिर्वर्तकाः अष्टादश अष्टादशसङ्ख्याकाः षोडशर्त्विजः पत्नी यजमानश्चेत्यष्टादश । एतदाश्रयं कर्म उक्तं कथितं शास्त्रेण येषु अष्टादशसु अवरं केवलं ज्ञानवर्जितं कर्म । अतस्तेषामवरकर्माश्रयाणामष्टादशानामदृढतया प्लवत्वात्प्लवते सह फलेन तत्साध्यं कर्म ; कुण्डविनाशादिव क्षीरदध्यादीनां तत्स्थानां नाशः ।
येषु- (யேஷு) எவைகளில் यज्ञरूपाः- (யக்ஞரூபா:) யாகத்தை நடத்தி வைக்கக்கூடிய (यज्ञस्य रूपाणि) अष्टादश (அஷ்டாதச:) பதினாறு ரித்விக்குகள், யஐமானன், பத்தினி என்று கூறப்பட்ட பதினெட்டு பேரை ஆஸ்ரயித்ததை சாஸ்த்திரத்தில் उक्तम् கூறப்பட்ட कर्म- (கர்மா) கர்மா கேவலம் ஞானம் அற்றதால் अवरम् - (அவரம்) மேன்மையற்றது. हि एते अहढाः (ஹி ஏதே அதிருடா:) எதனால் இவைகள் ஸ்திரமற்று प्लवा (ப்லவா) நாசத்தை அடையக்கூடியவை. எனவே அந்த ஞானமற்ற கர்மாக்களை ஆஸ்ரயித்த பதினெட்டு பேர்களுக்கும் நிலையற்ற தன்மையால், அந்த கர்மாக்களின் பலனுடன் நாசத்தை அடைகின்றன. அவர்களால் சாதிக்கப்பட்ட கர்மாவும் நாசத்தை அடைகிறது. பானை உடைவதால் அதில் உள்ள பால், தயிர் முதலியவைகளும் நாசம் அடைவதைப் போல் இவர்களும் நாசத்தை அடைகின்றனர்.
यत एवम् एतत् कर्म श्रेयः श्रेयःसाधनमिति ये अभिनन्दन्ति अभिहृष्यन्ति अविवेकिनः मूढाः, अतः ते जरां च मृत्युं च जरामृत्युं कञ्चित्कालं स्वर्गे स्थित्वा पुनरेव अपि यन्ति भूयोऽपि गच्छन्ति ॥ ७ ॥
यतः एवम् -(யத: ஏவம்) எதனால் இவ்வாறோ ये मूढाः- (யேமூடா:) எந்த அவிவேகிகளான மூடர்கள் एतत् - இந்த கர்மாவானது श्रेयः (ஸரேய:) ஸ்ரேயஸ்ஸுக்குக் காரணம் என்று अभिनन्दन्ति (அபிநந்தந்தி) சந்தோஷத்தை அடைகிறார்களோ ते (தே) அவர்கள் சிறிது காலம் ஸ்வர்கத்தில் இருந்து விட்டு पुनः एव अपि (புன: ஏவ அபி) மறுபடியும் जरामूत्युं (ஐராம்ருத்யும்) முதுமை மரணம் முதலியவைகளை यन्ति-(யந்தி) அடைகின்றனர்.
अविद्यायामन्तरे वर्तमानाः स्वयं धीराः पण्डितंमन्यमानाः ।
जङ्घन्यमानाः परियन्ति मूढा अन्धेनैव नीयमाना यथान्धाः ॥ ८ ॥
किञ्च, अविद्यायाम् अन्तरे मध्ये वर्तमानाः अविवेकप्रायाः स्वयं वयमेव धीराः धीमन्तः पण्डिता विदितवेदितव्याश्चेति मन्यमाना आत्मानं सम्भावयन्तः, ते च जङ्घन्यमानाः जरारोगाद्यनेकानर्थव्रातैर्हन्यमाना भृशं पीड्यमानाः परियन्ति विभ्रमन्ति मूढाः । दर्शनवर्जितत्वात् अन्धेनैव अचक्षुष्केणैव नीयमानाः प्रदर्श्यमानमार्गाः ; यथा लोके अन्धाः चक्षूरहिता गर्तकण्टकादौ पतन्ति, तद्वत् ॥ ८ ॥
अविद्यायाम् अन्तरे (அவித்யாயாம் அந்தரே) - அவித்தையின் நடுவில் वर्तमानाः (வர்த்தமானா:) உழலும் அவிவேகிகளுக்கு ஒப்பானவர்கள். स्वयं (ஸ்வயம்) - நாங்களே धीराः (தீரா:)- புத்திசாலிகள் पण्डितम्मन्यमानाः (பண்டிதம்மன்யமானா:) - அறிய வேண்டியவைகளை அறிந்தவர்கள் என்று தங்களைத் தாங்களே சிறப்பித்துக் கொண்டவர்களான (அல்லது गुरु-अभावात् குரு இல்லாதவர்கள்) அந்த मूढाः (மூடா:)- மூடர்கள் யதார்த்த ஞானம் அற்றதினால் अन्धेन एव - (அந்தேனஏவ) கண் பார்வை அற்ற குருடனால் नीयमानाः (நீயமானா:) வழி காட்டப்பட்ட अन्धाः (அந்தா:) குருடர்கள் यथा(யதா) எவ்வாறு உலகத்தில் குழிமுற்புதர்களில் விழுவரோ அவ்வாறு जङ्घन्यमानाः (ஐங்கன்யமானா:) முதுமை, வியாதி முதலிய பல அனர்த்தங்களால் அதிக துன்புற்றவர்களாகி परियन्ति சுழன்று உழலுகின்றனர்.
अविद्यायां बहुधा वर्तमाना वयं कृतार्था इत्यभिमन्यन्ति बालाः ।
यत्कर्मिणो न प्रवेदयन्ति रागात्तेनातुराः क्षीणलोकाश्च्यवन्ते ॥ ९ ॥
अविद्यायां बहुधा बहुप्रकारं वर्तमानाः वयमेव कृतार्थाः कृतप्रयोजनाः इति एवम् अभिमन्यन्ति अभिमन्यन्ते अभिमानं कुर्वन्ति बालाः अज्ञानिनः । यत् यस्मादेवं कर्मिणः न प्रवेदयन्ति तत्त्वं न जानन्ति रागात् कर्मफलरागाभिभवनिमित्तम् , तेन कारणेन आतुराः दुःखार्ताः सन्तः क्षीणलोकाः क्षीणकर्मफलाः स्वर्गलोकात् च्यवन्ते ॥ ९ ॥
अविद्यायां बहुधा (அவித்யாயாம் பஹுதா) அவித்தையில் பலவாறாக (பலவித உபாதிகளில்): वर्तमानाः (வர்தமானா:) உழலும் बालाः वयं (பாலா: வயம்) அக்ஞானிகளாகிய நாமே कृतार्थाः (க்ருதார்த்தா:) பிரயோஐனத்துடன் கூடியவர் इति अभिमन्यन्ति (இதி அபிமன்யந்தி) என்று இவ்வாறு அபிமானத்துடன் கூடியவர்களாய் இருக்கின்றனர். यत् कर्मिणः (யத்கர்மிண:) எதனால் இக்கர்மங்களில் ஈடுபட்டவர்கள் न प्रवेदयन्ति (ந ப்ரவேதயந்தி) உண்மை தத்துவத்தை அறியவில்லையோ तेन (தேன) அதனால் அவர்கள் रागात् (ராகாத்) உலகில் உள்ள ஆசையினால் आतुराः (ஆதுரா:) துக்கத்தை அடைந்தவர்களாகி क्षीणलोकाः च्यवन्ते (க்ஷீணலோகா: ச்யவந்தே) கர்மாக்களின் பலன் நாசமுற்றதும் ஸ்வர்கத்திலிருந்து நழுவுகின்றனர்.
इष्टापूर्तं मन्यमाना वरिष्ठं नान्यच्छ्रेयो वेदयन्ते प्रमूढाः ।
नाकस्य पृष्ठे ते सुकृतेऽनुभूत्वेमं लोकं हीनतरं वा विशन्ति ॥ १० ॥
इष्टापूर्तम् इष्टं यागादि श्रौतं कर्म पूर्तं स्मार्तं वापीकूपतडागादिकर्म मन्यमानाः एतदेवातिशयेन पुरुषार्थसाधनं वरिष्ठं प्रधानमिति चिन्तयन्तः, अन्यत् आत्मज्ञानाख्यं श्रेयःसाधनं न वेदयन्ते न जानन्ति प्रमूढाः पुत्रपशुबान्धवादिषु प्रमत्ततया मूढाः ; ते च नाकस्य स्वर्गस्य पृष्ठे उपरिस्थाने सुकृते भोगायतने अनुभूत्वा अनुभूय कर्मफलं पुनः इमं लोकं मानुषम् अस्मात् हीनतरं वा तिर्यङ्नरकादिलक्षणं यथाकर्मशेषं विशन्ति ॥ १० ॥
इष्टापूर्त (இஷ்டாபூர்த்தம்) இஷ்டம் என்ற யாகாதி ஸ்ரெளத கர்மாக்களையும், பூர்தம் என்ற குளம், கிணறு போன்றவைகளை சுத்தம் செய்தல் முதலிய ஸ்மார்த்த கர்மாக்களையும் இதுவே முக்கியமான புருத்த சாதனமென்று वरिष्ठं (வரிஷ்டம்) (மேலான) முதன்மையானது என்று मन्यमानाः (மன்யமானா:) நினைக்கின்ற प्रमूढाः (ப்ரமூடா) மகன் பசு பந்துக்கள் முதலியவைகளில் மிகுந்த மோஹத்தினால் மயங்கிய மூடர்கள் अन्यत् (அந்யத்) இவைகளுக்கு அப்பாற்பட்ட श्रेयः (ஸ்ரேய:) ஆத்மஞானம் எனப்படும் ஸ்ரேயஸ்ஸானசா தனம் न वदयन्ते (ஏ வேதயன்தே) அறிகின்றனர் இல்லை ते च सुक्रुते (தே ச சுக்ருதே) அத்தகைய மூடர்கள் போகங்களுக்கெல்லாம் இருப்பிடமான नाकस्य पृष्ठे (நாகஸ்ய ப்ருஷ்டே) ஸ்வர்க்கத்தின் மேல்இடத்தில் अनुभुत्वा (அனுபூத்வா) (अनुभूय) கர்ம மனுஷ்ய லோகத்தையோ அல்லது हीनतरं वा (ஹீனதரம் வா) இதற்குக் கீழான விலங்குகள் போன்ற பிறவிகளையோ அல்லது நரகம் முதலான லோகங்களையோ विशान्ति (விசந்தி) அவர் அவர்கள் கர்மாக்களுக்கு ஏற்றவண்ணம் அடைகின்றனர்.
तपःश्रद्धे ये ह्युपवसन्त्यरण्ये शान्ता विद्वांसो भैक्षचर्यां चरन्तः ।
सूर्यद्वारेण ते विरजाः प्रयान्ति यत्रामृतः स पुरुषो ह्यव्ययात्मा ॥ ११ ॥
ये पुनस्तद्विपरीतज्ञानयुक्ता वानप्रस्थाः संन्यासिनश्च, तपःश्रद्धे हि तपः स्वाश्रमविहितं कर्म, श्रद्धा हिरण्यगर्भादिविषया विद्या, ते तपःश्रद्धे उपवसन्ति सेवंतेऽरण्ये वर्तमानाः सन्तः । शान्ताः उपरतकरणग्रामाः । विद्वांसः गृहस्थाश्च ज्ञानप्रधाना इत्यर्थः । भैक्षचर्यां चरन्तः परिग्रहाभावादुपवसन्त्यरण्ये इति सम्बन्धः । सूर्यद्वारेण सूर्योपलक्षितेनोत्तरेण पथा ते विरजाः विरजसः, क्षीणपुण्यपापकर्माणः सन्त इत्यर्थः । प्रयान्ति प्रकर्षेण यान्ति यत्र यस्मिन्सत्यलोकादौ अमृतः स पुरुषः प्रथमजो हिरण्यगर्भः हि अव्ययात्मा अव्ययस्वभावो यावत्संसारस्थायी । एतदन्तास्तु संसारगतयोऽपरविद्यागम्याः ।
ये विद्वांसः (யே வித்வாம்ஸ:) முற்சொன்னவர்களி லிருந்து மாறுபட்டவர்களாயும், ஞானத்துடன் கூடிய வானப்பிரஸ்தர்களாயும், சந்நியாசிகளாயும், கிரஹஸ்தராய் இருந்து கொண்டு ஞானத்தை முக்கியமானதாய் கொண்டவர்களாயும் உள்ளதால் भैक्षचर्यां (பைக்ஷ்யச்சர்யாம்) चरन्तः (சரன்த:) ஒன்றையும் சேர்த்து வைக்காததினால் பிக்ஷை எடுப்பவர்களாய் शान्ता (சாந்தா:) புலன் அடக்கம் கொண்டவர்களாய் अरण्ये (அரண்யே) காட்டில் तपःश्रद्वे (தப:ஸ்ரத்தே) தப: - தங்கள் ஆஸ்ரமத்திற்கு உகந்த கர்மாக்களைச் செய்து கொண்டும், श्रद्धा சிரத்தா - ஹிரண்ய கர்பவிஷயமான வித்தையை ஆராய்ந்து उपवसन्ति (உபவசந்தி) வாழ்கின்றனரோ ते (தே) அவா்கள் विरजाः (விரஐா:) புண்ய பாப கா்மங்கள் அற்றவர்களாகி सूर्यद्धारा (சுரியத்வாரா) சுரியனால் உபலக்ஷிக்கப்பட்ட உத்தராயண மார்க்கத்தோடு यत्र (யத்ர) எங்கு எந்த சத்தியாதி லோகத்தில் अमुतः (அம்ருத:) கல்பகாலம் வாழக்கூடிய अव्ययात्मा (அவ்வியயாத்மா) எதுவரையிலும் சம்சாரமும் இருக்குமோ அது வரையில் தன் நிலையிலிருந்து மாறுபடாத स पुरुषाः (ஸ புருஷ:) முதலில் உண்டான ஹிரண்ய கர்பன் உள்ள அந்த லோகத்தை प्रयान्ति (ப்ரயாந்தி) மகிழ்வுடன் அடைகின்றனர். இதுவரையில் அபரவித்தையினால் அடையக் கூடிய சம்சார கதிகள் கூறப்பட்டன.
नन्वेतं मोक्षमिच्छन्ति केचित् । न, ‘इहैव सर्वे प्रविलीयन्ति कामाः’ (मु. उ. ३ । २ । २) ‘ते सर्वगं सर्वतः प्राप्य धीरा युक्तात्मानः सर्वमेवाविशन्ति’ (मु. उ. ३ । २ । ५) इत्यादिश्रुतिभ्यः ; अप्रकरणाच्च । अपरविद्याप्रकरणे हि प्रवृत्ते न ह्यकस्मान्मोक्षप्रसङ्गोऽस्ति । विरजस्त्वं त्वापेक्षिकम् । समस्तमपरविद्याकार्यं साध्यसाधनलक्षणं क्रियाकारकफलभेदभिन्नं द्वैतम् एतावदेव यद्धिरण्यगर्भप्राप्त्यवसानम् । तथा च मनुनोक्तं स्थावराद्यां संसारगतिमनुक्रामता — ‘ब्रह्मा विश्वसृजो धर्मो महानव्यक्तमेव च । उत्तमां सात्त्विकीमेतां गतिमाहुर्मनीषिणः’ (मनु. १२ । ५०) इति ॥ ११ ॥
(சங்கை) ஆனால் சிலர் இதையே மோக்ஷம் என்று இச்சிக்கிறார்கள். (சமாதானம்) அவ்வாறு கூறுவது உகந்தது அல்ல. इहैव सर्वे प्रविलीयन्ति कामाः’ (இஹைவ சர்வேப்ரவிலீ யந்திகாமா:) இங்கேயே எல்லா காமனைகளும் லீனமாகிவிடுகின்றன. ‘ते सर्वगं सर्वतः प्राप्य धीरा युक्तात्मानः सर्वमेवाविशन्ति’ (தே ஸர்வகம் ஸர்வத: ப்ராப்ய தீரா யுக்த்தாத்மான: சர்வமேவாவிசந்தி) அந்த பண்படுத்தப்பட்ட சித்தத்தை உடைய தீரபுருஷன் அந்த எங்கும் நிறைந்ததை பிரஹ்மத்தை எல்லாவிதத்திலும் அடைந்து எல்லாவற்றிலும் பிரவேசிக்கிறார்கள் என்று சுருதிகளினாலும் இங்கு அபர வித்யாபிரகரணத்தில் ஒரு பொழுதும் மோஷத்தைப் பற்றியது ஆகாது. இங்கு கூறப்பட்ட சந்நியாசத் தன்மையானது ஆபேக்ஷிகமாகும். இங்கு கூறப்பட்டவை எல்லாம் அபர வித்யா காரியமாகிய சாத்ய சாதன லக்ஷணத்துடன் கூடிய கிரியாகாரகபல பேதத்துடன் கூடியதும், த்வைதமானதுமாக கூறப்பட்டது எதுவோ அது ஹிரண்யகர் பனை முடிவாக உடையதாகும். அவ்வாறே ஸ்தாவரங்கள் முதலாகக்கொண்ட சம்சார கதியைக்கடந்தது என்று மனு’’ வினாலும் கூறப்பட்டுள்ளது. பிரஹ்மா, மரீசி முதலிய பிரஐாபதிகள், யமராஐா, மஹத்தத்துவம் அவ்யக்த்தம் இவைகளை அடைந்த வித்வான்கள் சாத்வீகமான கதியை அடைந்தார்கள் என்று கூறப்படுகிறது.
अथेदानीमस्मात्साध्यसाधनरूपात्सर्वस्मात्संसाराद्विरक्तस्य परस्यां विद्यायामधिकारप्रदर्शनार्थमिदमुच्यते —
அதன்பின் இப்பொழுது ஸாத்ய ஸாதன ரூபமான எல்லா சம்சாரங்களிலும் விரக்தி அடைந்தவனுக்கு பரவித்தையில் அதிகாரம் என்பதனை தெரிவிப்பதற்காக இந்த மந்திரம் கூறப்படுகிறது –
परीक्ष्य लोकान्कर्मचितान्ब्राह्मणो निर्वेदमायान्नास्त्यकृतः कृतेन ।
तद्विज्ञानार्थं स गुरुमेवाभिगच्छेत्समित्पाणिः श्रोत्रियं ब्रह्मनिष्ठम् ॥ १२ ॥
परीक्ष्य यदेतदृग्वेदाद्यपरविद्याविषयं स्वाभाविकाविद्याकामकर्मदोषवत्पुरुषानुष्ठेयमविद्यादिदोषवन्तमेव पुरुषं प्रति विहितत्वात्तदनुष्ठानकार्यभूताश्च लोका ये दक्षिणोत्तरमार्गलक्षणाः फलभूताः, ये च विहिताकरणप्रतिषेधातिक्रमदोषसाध्या नरकतिर्यक्प्रेतलक्षणाः, तानेतान्परीक्ष्य प्रत्यक्षानुमानोपमानागमैः सर्वतो याथात्म्येनावधार्य लोकान् संसारगतिभूतानव्यक्तादिस्थावरान्तान्व्याकृताव्याकृतलक्षणान्बीजाङ्कुरवदितरेतरोत्पत्तिनिमित्ताननेकानर्थशतसहस्रसङ्कुलान्कदलीगर्भवदसारान्मायामरीच्युदकगन्धर्वनगराकारस्वप्नजलबुद्बुदफेनसमान्प्रतिक्षणप्रध्वंसान्पृष्ठतः कृत्वा विद्याकामदोषप्रवर्तितकर्मचितान्धर्माधर्मनिर्वर्तितानित्येतत् । ब्राह्मणः, ब्राह्मणस्यैव विशेषतोऽधिकारः सर्वत्यागेन ब्रह्मविद्यायामिति ब्राह्मणग्रहणम् । परीक्ष्य लोकान्किं कुर्यादित्युच्यते — निर्वेदम् , निष्पूर्वो विदिरत्र वैराग्यार्थे, वैराग्यम् आयात् कुर्यादित्येतत् ।
எந்த இந்த ரிக் முதலிய அவித்யாவிஷயமானது ஸ்வபாவமாகவே அவித்யாகாம கர்ம தோஷத்துடன் கூடியதாய் புருஷனால் அனுஷ்டிக்கப்பட வேண்டியது. அவித்யா தோஷத்துடன் கூடிய தையே புருஷனைக் குறித்து விதித்திருப்பதால் அதை அனுஷ்டானம் செய்ததினால் ஏற்பட்ட காரிய பூதமாகிய லோகங்கள் எவைகளோ அவைகள் தக்ஷிண, உத்தரமார்க லக்ஷணங்களை பலனாக வுடையவைகளோ அவைகள் விதித கர்மத்தை செய்யாமையாலும், பிரதிசித்தகர் மாக்களை செய்யாததாலும் அடையப்படும் நரக, பசு, ப்ரேத லக்ஷணங்களோடு கூடியவைகளை பிரத்யக்ஷ, அனுமான, உபமான, ஆகமங்களினால் परीक्ष्य பரீக்ஷித்து உள்ளவாறு புரிந்து கொண்டு பீஐாங்குரம் போல் (விதை முளைபோல்) உற்பத்தியின் காரணத்தின் நூற்றுக்கணக்கான அர்த்தத்தி லுள்ள ஆயிரக்கணக்கான சந்தேஹங்களை கதலி பலகர்பத்தைப் போல் சாரமற்ற கானல்நீர் கந்தா்வநகரம், ஸ்வப்னம், ஐலத்தின் நுரைக்கு ஒப்ப ஒவ்வொரு க்ஷணமும் நசிக்கின்ற அவித்தை, காமரூப தோஷத்தினால் தூண்டப்பட்டு செய்யப்பட்ட कर्मचितान् கர்மாவினால் சம்பாதிக்கப்பட்ட புண்ய பாபங்களால் அடையப்படும் வியாகிருதம், அவ்யாக்ருத ரூப சம்சாரகதிரூப அவ்யக்த்தமுதல் ஸ்தாவரங்கள் வரையிலும் உள்ள लोकान् லோகங்களில் விரக்தி ஏற்பட்ட ब्राहाणः பிராஹ்மணன் வைராக்கியத்தை आयात् அடைய வேண்டும் वेद என்பதற்குமுன் नि சேர்த்திருப்பது வைராக்கிய அர்த்தத்தின் பொருட்டாகும். பிராஹ்மணனுக்குத் தான் இதில் விசேஷமான அதிகாரம் என்பதற்காகவே இங்கு பிராஹ்மணன் என்பது எடுத்துக் கொள்ளப்பட்டது.
स वैराग्यप्रकारः प्रदर्श्यते — इह संसारे नास्ति कश्चिदपि अकृतः पदार्थः । सर्व एव हि लोकाः कर्मचिताः कर्मकृतत्वाच्चानित्याः । न नित्यं किञ्चिदस्तीत्यभिप्रायः । सर्वं तु कर्मानित्यस्यैव साधनम् । यस्माच्चतुर्विधमेव हि सर्वं कर्म कार्यम् — उत्पाद्यमाप्यं विकार्यं संस्कार्यं वा । नातः परं कर्मणो विषयोऽस्ति । अहं च नित्येनामृतेनाभयेन कूटस्थेनाचलेन ध्रुवेणार्थेनार्थी, न तद्विपरीतेन । अतः किं कृतेन कर्मणा आयासबहुलेनानर्थसाधनेन इत्येवं निर्विण्णोऽभयं शिवमकृतं नित्यं पदं यत् , तद्विज्ञानार्थं विशेषेणाधिगमार्थं स निर्विण्णो ब्राह्मणः गुरुमेव आचार्यं शमदमादिसम्पन्नम् अभिगच्छेत् । शास्त्रज्ञोऽपि स्वातन्त्र्येण ब्रह्मज्ञानान्वेषणं न कुर्यादित्येतद्गुरुमेवेत्यवधारणफलम् ।
இங்கு அந்த வைராக்கியத்தை எவ்வாறு அடையவேண்டும் என்பது விளக்கப்படுகறிது. இந்த சம்சாரத்தில் நித்திய பதார்த்தமானது சிறிதும் கிடையாது. எல்லா லோகங்களிலுமே கர்மாக்களினால் சம்பாதிக்கப்பட்டதாகும்.கர்மாத்தினால் சம்பாதிக்கப்பட்டவைகள் அநித்தியமானது. நித்தியம் என்பது ஒரு சிறிதும் இல்லை என்பது அபிப்பிராயமாகும். எல்லா கர்மங்களும் அநித்தியத்தின் சாதனமேயாகும். ஏன்எனில் எல்லா கர்ம காரியங்களும் உத்பாத்யம் (உண்டாக்குதல்) ஆப்யம் (அடைதல்) சம்ஸ்கார்யம் (சுத்தப்படுத்துதல்) விகாரியம் (மாற்றுதல்) இவைகளுக்கு உட்பட்டவையே ஆகையால் கர்மத்திற்கு இதைக்காட்டிலும் மேலான விசேஷம் கிடையாது. ஆனாலோ நான் ஏகன், நித்தியன், மரணமற்றவன், பயமற்றவன், கூடஸ்த்தன், சலனமற்றவன் மேலும் நிச்சயமான பதார்தத்தில் இச்சை உடையவன். ஆகையால் அதற்கு விபரீதமான அநித்தியத்தில் இச்சை உடையவன் அல்ல. ஆகையால் அதிக சிரமப்பட்டு, அநர்த்த சாதனமாகிய கர்மாக்களைச் செய்வதினால் என்ன பிரயோஐனம் என்று விரக்தி (வைராக்கியம்) அடைந்தவன் பயமற்றதும், மங்கலகரமானதும், உண்டாக்கப்படாததும், நித்யமானதும் ஆன பதம் எதுவோ அதை விசேஷமாக அறிவதற்கு அந்த வைராக்கியமடைந்த பிராஹ்மணன் சமம் தமம் முதலியவைகளை உடைய குருவையே (ஆசாரியரை) அடைய வேண்டும். எவ்வளவு சாஸ்த்திர அறிவு இருந்தாலும் தானாகவே பிரஹ்மஞானத்தை தேடக்கூடாது என்பதை தெரியப்படுத்துவற்காக गुरुमेव (குருமேவ) குருவையே அடையவேண்டும் ஏவ என்று ஏவாகாரம் சேர்க்கப்பட்டது.
समित्पाणिः समिद्भारगृहीतहस्तः श्रोत्रियम् अध्ययनश्रुतार्थसम्पन्नं ब्रह्मनिष्ठं हित्वा सर्वकर्माणि केवलेऽद्वये ब्रह्मणि निष्ठा यस्य सोऽयं ब्रह्मनिष्ठः ; जपनिष्ठस्तपोनिष्ठ इति यद्वत् । न हि कर्मिणो ब्रह्मनिष्ठता सम्भवति, कर्मात्मज्ञानयोर्विरोधात् । स तं गुरुं विधिवदुपसन्नः प्रसाद्य पृच्छेदक्षरं पुरुषं सत्यम् ॥ १२ ॥
கர்மாவுக்கும் ஆத்மக்ஞானத்திற்கும் விரோதம் இருப்பதால் கர்மிகளுக்கு பிரஹ்மநிஷ்டையானது கூடாது. எல்லாக் கர்மங்களையும் விட்டு ப்ரஹ்மத்திலேயே எவனுக்கு நிஷ்டைஉள்ளதோ அவனே பிரஹ்மநிஷ்டன். ஐபநிஷ்டன் தபோநிஷ்டன் சமித்துக்களை கைகளில் ஏந்தியவனாய் அவன் ஸ்ரோத்திரியராயும், அத்யனம் செய்தவராயும் சிரவணம் செய்ததின் அர்த்தத்தை உணர்ந்தவராயும் பிரஹ்மநிஷ்டராயும் உள்ள அந்த குருவை விதிப்படி அடைந்து அக்ஷரமாயும், சத்தியமாயும் உள்ள புருஷனைப் பற்றிக் கேட்க வேண்டும்.
तस्मै स विद्वानुपसन्नाय सम्यक्प्रशान्तचित्ताय शमान्विताय ।
येनाक्षरं पुरुषं वेद सत्यं प्रोवाच तां तत्त्वतो ब्रह्मविद्याम् ॥ १३ ॥
तस्मै सः विद्वान् गुरुर्ब्रह्मवित् , उपसन्नाय उपगताय । सम्यक् यथाशास्त्रमित्येतत् । प्रशान्तचित्ताय उपरतदर्पादिदोषाय । शमान्विताय बाह्येन्द्रियोपरमेण च युक्ताय, सर्वतो विरक्तायेत्येतत् । येन विज्ञानेन यया विद्यया च परया अक्षरम् अद्रेश्यादिविशेषणं तदेवाक्षरं पुरुषशब्दवाच्यं पूर्णत्वात्पुरि शयनाच्च, सत्यं तदेव परमार्थस्वाभाव्यादव्ययम् , अक्षरं चाक्षरणादक्षतत्वादक्षयत्वाच्च, वेद विजानाति तां ब्रह्मविद्यां तत्त्वतः यथावत् प्रोवाच प्रब्रूयादित्यर्थः । आचार्यस्याप्ययमेव नियमो यन्न्यायप्राप्तसच्छिष्यनिस्तारणमविद्यामहोदधेः ॥ १३ ॥
सः विद्वान् -பிரஹ்மவித்தாகிய குருவானவர் सम्यक् - சாஸ்த்திரமுறைப்படி उपसन्नाय - அவரைஅடைந்த तस्मै प्रशान्तचित्ताय - பஹிர் (வெளி) இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாய் எல்லாவற்றிலும் விரக்தி அடைந்தவன் येन எந்த விக்ஞானத்தால்-மேலான வித்தையால் அக்ஷரம் - அத்ரேஷ்யம் முதலிய விசேஷங்களுடன் கூடியதோ அந்த अक्षरं पुरुष வாச்சியம் - பூரணமாய் இருப்பதாலும், அல்லது உடலில் இருப்பதாலும் ஆகும். सत्यं - அதுவே பரமார்த்தஸ்வபாவமாய் இருப்பதாலும் அக்ஷரம். மேலும் நழுவாததாயும், காயம் அற்றதாயும், நாசமற்றதாயும் அந்த அக்ஷரத்தை அறியும் பொருட்டு तां ब्रह्मविद्यां -அந்த பிரஹ்ம வித்தையை तत्त्वतो -உள்ளவாறு प्रोवाच உபதேசம் செய்ய வேண்டும் என்பது பொருள். ஆச்சாரியருக்கும் தன்னை அடைந்த சத்சிஷ்யனை அவித்தையாகிய பெரிய கடலை தாண்டச் செய்ய வேண்டும் என்பது நியமமாகும்.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ मुण्डकोपनिषद्भाष्ये प्रथमं मुण्डकं समाप्तम् ॥
अपरविद्यायाः सर्वं कार्यमुक्तम् । स च संसारो यत्सारो यस्मान्मूलादक्षरात्सम्भवति यस्मिंश्च प्रलीयते, तदक्षरं पुरुषाख्यं सत्यम् । यस्मिन्विज्ञाते सर्वमिदं विज्ञातं भवति, तत्परस्या ब्रह्मविद्याया विषयः । स वक्तव्य इत्युत्तरो ग्रन्थ आरभ्यते —
அபரவித்தையின் எல்லா காரியங்களும் கூறப்பட்டது. எது சாரமோ அந்த சம்சாரமானது எந்த மூலமான அக்ஷரத்திலிருந்து உண்டாகிறதோ, எதில் மறுபடியும் லயத்தை அடைகிறதோ அது என்றும் நாசமற்ற புருஷன் எனப்படும் ஸத்தியமாகும். எதை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமோ அந்த பரவித்தையின் விஷயம் இனி கூறத்தக்கது என்று மேலே தொடங்கப்படுகிறது.
तदेतत्सत्यं यथा सुदीप्तात्पावकाद्विस्फुलिङ्गाः सहस्रशः प्रभवन्ते सरूपाः ।
तथाक्षराद्विविधाः सोम्य भावाः प्रजायन्ते तत्र चैवापियन्ति ॥ १ ॥
यदपरविद्याविषयं कर्मफललक्षणम् , सत्यं तदापेक्षिकम् । इदं तु परविद्याविषयम् , परमार्थसल्लक्षणत्वात् । तदेतत् सत्यं यथाभूतं विद्याविषयम् ; अविद्याविषयत्वाच्च अनृतमितरत् । अत्यन्तपरोक्षत्वात्कथं नाम प्रत्यक्षवत्सत्यमक्षरं प्रतिपद्येरन्निति दृष्टान्तमाह —
கர்மபல லக்ஷணமான அபரவித்தையின் சத்தியம் கர்மாதிகளை அபேக்ஷித்தபடியால் அது ஆபேக்ஷிகம். இந்தப் பரவித்தை விஷயமோ எதையும் அபேக்ஷிக்காமல் பரமார்த்த ஸ்வரூபமாய் விளங்குவதாகும். तत् एतत् सत्यम् (தத் ஏதத் சத்தியம்) அந்த இந்த வித்யாவிஷய சத்தியமோ அது யதார்த்த சத்தியம். இதைக்காட்டிலும் வேறானது அவித்யா விஷயமானதினால் இது பொய்யானது (அசத்தியமாகும்). அந்த சத்தியமாயும், அக்ஷரமாயும் உள்ளது மிகவும் பரோக்ஷமாய் இருப்பதால் எவ்வாறு பிரத்யக்ஷம் போல் (சாதகர்கள்) கண்டறிவர்? என்பதை திருஷ்டாந்தத்துடன் கூறுகிறார்.
यथा सुदीप्तात् सुष्ठु दीप्तादिद्धात् पावकात् अग्नेः विस्फुलिङ्गाः अग्न्यवयवाः सहस्रशः अनेकशः प्रभवन्ते निर्गच्छन्ति सरूपाः अग्निसलक्षणा एव, तथा उक्तलक्षणात् अक्षरात् विविधाः नानादेहोपाधिभेदमनुविधीयमानत्वाद्विविधाः हे सोम्य, भावाः जीवाः आकाशादिवद्घटादिपरिच्छिन्नाः सुषिरभेदा घटाद्युपाधिप्रभेदमनु भवन्ति ; एवं नानानामरूपकृतदेहोपाधिप्रभवमनु प्रजायन्ते, तत्र चैव तस्मिन्नेव चाक्षरे अपियन्ति देहोपाधिविलयमनु विलीयन्ते घटादिविलयमन्विव सुषिरभेदाः ।
थथा-(யதா) எவ்வாறு सुदिप्तात्-(சுதீப்தாத்) நன்கு விறகுகளில் பற்றி எரிகின்ற पावकात्- (பாவகாத்) அக்நியிலிருந்து सरूपाः (சரூபா:) அந்த அக்நிலக்ஷணமாகவே உள்ள विस्फुलिङ्गाः (விஸ்புலிங்கா:) அக்நி அவயங்களான தீப்பொறிகள் विस्फुलिङ्गाः (சகஸ்ரச:) ஆயிரக்கணக்காக प्रभवन्ते (ப்ரபவந்தே) வெளிவருகின்றவனோ तथा (ததா) அவ்வாறே (அக்ஷராத்) முற்கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய அக்ஷரமான பரம்பொருளிலிருந்து विविधाः (விவிதா:) பலதரப்பட்ட தேஹ உபாதி பேதங்களை அனுசரிக்கக்கூடிய भावाः (பாவா:) ஜீவர்கள். குடம் முதலான பரிச்சின்னமான வஸ்துக்களால் பகுக்கப்பட்ட ஆகாசம் முதலானவை எவ்வாறு குடம் முதலான உபாதி பேதங்களை அனுபவிக்கின்றனவோ அவ்வாறே பல விதமான நாமரூபங்களால் உண்டான உபாதிகளை இயக்கும் தன்மையுடைய ஜீவர்கள் प्रजायन्ते - (ப்ரஐாயந்தே) உண்டாகின்றனர். तत्र च एव -(தத்ர ச்ச ஏவ) அந்த அக்ஷரத்திலேயே अपि यन्ति - (அபி யந்தி) எவ்வாறு கடம் முதலியவைகள் நஷ்டமடைந்த (கடாகாசம் முதலிய) துவாரபேதங்கள் மஹா ஆகாயத்தில் லீனமாகிறதோ அவ்வாறே தேஹ முதலிய உபாதிகள் நஷ்டமானதும் அவை எல்லாம் (ஐீவர்கள்) அக்ஷரத்தில்லீனமாகின்றன.
यथाऽऽकाशस्य सुषिरभेदोत्पत्तिप्रलयनिमित्तत्वं घटाद्युपाधिकृतमेव, तद्वदक्षरस्यापि नामरूपकृतदेहोपाधिनिमित्तमेव जीवोत्पत्तिप्रलयनिमित्तत्वम् ॥
எவ்வாறு ஆகாசத்திற்கு சில (ஸுஷிர) துவார பேதங்களின் உற்பத்தி நாசங்களின் காரணமாகவே, கடாதி உபாதிகள் உண்டாகின்றனவோ, அவ்வாறே இவ்வக்ஷரமான பரம்பொருளுக்கு நாமரூபங்களால் உண்டான தேஹோபாதி காரணங்களே ஐீவனின் உற்பத்தி லயங்களுக்கு நிமித்தமாகும்.
नामरूपबीजभूतादव्याकृताख्यात्स्वविकारापेक्षया परादक्षरात्परं यत्सर्वोपाधिभेदवर्जितमक्षरस्यैव स्वरूपमाकाशस्येव सर्वमूर्तिवर्जितं नेति नेतीत्यादिविशेषणं विवक्षन्नाह —
நாம பேதங்களுக்கு பீஐபூதமான அவ்யாகிருதத்தின்றும் தன்னுடைய விகாரங்களைக் குறித்தும் மேலான அக்ஷரத்தைக் காட்டிலும் (மூலப்பிரக்ருதியைக் காட்டிலும்) மேலானது எதுவோ அது எல்லாவிதமான உபாதிகளிலிருந்தும் விடுபட்ட அக்ஷரமாகிய பரமாத்மாவையே ஆகாசத்தைப்போல் எல்லா ரூபங்களும் (முர்த்தி ஸ்வரூபம்) அற்றதாய் இருப்பதை நேதி, நேதி முதலிய வாக்கியங்களால் விளக்குகிறார்.
दिव्यो ह्यमूर्तः पुरुषः सबाह्याभ्यन्तरो ह्यजः ।
अप्राणो ह्यमनाः शुभ्रो ह्यक्षरात्परतः परः ॥ २ ॥
दिव्यः द्योतनवान् , स्वयञ्ज्योतिष्ट्वात् । दिवि वा स्वात्मनि भवः अलौकिको वा । हि यस्मात् अमूर्तः सर्वमूर्तिवर्जितः, पुरुषः पूर्णः पुरिशयो वा, सबाह्याभ्यन्तरः सह बाह्याभ्यन्तरेण वर्तत इति । अजः न जायते कुतश्चित् , स्वतोऽजस्य जन्मनिमित्तस्य चाभावात् ; यथा जलबुद्बुदादेर्वाय्वादिः, यथा नभःसुषिरभेदानां घटादिः । सर्वभावविकाराणां जनिमूलत्वात् तत्प्रतिषेधेन सर्वे प्रतिषिद्धा भवन्ति । सबाह्याभ्यन्तरो ह्यजः अतोऽजरोऽमृतोऽक्षरो ध्रुवोऽभय इत्यर्थः ।
दिव्यः (திவ்ய:) ஸ்வயம் ஐ்யோதி ஸ்வரூபனாய் இருப்பதால் எல்லாவற்றையும் பிரகாசப்படுத்துபவன் அல்லது, தேவலோகத்தில் அல்லது ஸ்வாத்மாவிடத்திலேயே நிலைத்திருப்பதால் அலெளகிகமானது. हि (ஹி) ஏன்எனில் अमूर्तः (அமூர்த்த:) எல்லா சரீரரூபங்கள் அற்றவன். पुरुषः - (என்றால்) பூர்ணமானவன் அல்லது சரீரரூபபுருஷனுள் சயனித்திருப்பவன் திவ்யமாயும் அமூா்த்தமாயும் உள்ள புருஷன் सबाह्याभ्यन्तरः (சபாஹ்யாப்யந்தர:) உள்ளும், புறமும் கூடியது அதாவது உள்ளும் புறமும் நிறைந்தது. अजः (அஐ:) எவ்வாறு ஐலத்தில் உண்டாகும் நுறை திவலை முதலியவைகளுக்கு வாயுவானது காரணமோ, எவ்வாறு கடாகாச முதலிய பேதங்களுக்கு கடம் முதலான பதார்த்தங்கள் காரணமோ அவ்வாறு எங்காவது எப்பொழுதாவது தானாகவோ மற்றொன்றாகவோ இது உண்டாவதற்கான காரணம் இல்லாததினால் அது பிறப்பற்றது. எல்லா பாவவிகாரங்களுக்கும் பிறப்பையே மூலமாகக் கொண்டவை. பிறப்பற்றது என்றதால் எல்லா பாவவிகாரங்களும் அற்றது ஆகிறது. மேலும் அப்பரம்பொருள் உள்ளும், புறமும் நிறைந்ததாயும், பிறப்பற்றதாயும் இருப்பதால் முதுமை அற்றது, மரணம் அற்றது, அம்ருத சொரூபமானது, நாசமற்றது, நிச்சயமானது, பயமற்றது என்று பொருள் படுவதாய் ஆயிற்று.
यद्यपि देहाद्युपाधिभेददृष्टिभेदेषु सप्राणः समनाः सेन्द्रियः सविषय इव प्रत्यवभासते तलमलादिमदिवाकाशम् , तथापि तु स्वतः परमार्थस्वरूपदृष्टीनाम् अप्राणः अविद्यमानः क्रियाशक्तिभेदवान् चलनात्मको वायुर्यस्मिन्नसौ अप्राणः । तथा अमनाः अनेकज्ञानशक्तिभेदवत्सङ्कल्पाद्यात्मकं मनोऽप्यविद्यमानं यस्मिन्सोऽयममनाः । अप्राणो ह्यमनाश्चेति प्राणादिवायुभेदाः कर्मेन्द्रियाणि तद्विषयाश्च तथा बुद्धिमनसी बुद्धीन्द्रियाणि तद्विषयाश्च प्रतिषिद्धा वेदितव्याः ; यथा श्रुत्यन्तरे — ध्यायतीव लेलायतीवेति ।
மேலும் அவித்யாவசத்தால் உபாதிகளில் பேததிருஷ்டி கொண்டவர்களுக்கு ஆகாசமானது தளமலாதிகள் (மலினம்) உடையதாய் தோன்றுவதுபோல் பிராணனுடன் கூடியது போன்றும், மனதுடன் கூடியது போன்றும், இந்திரியங்களுடன் கூடியது போன்றும், விஷயங்களுடன் கூடியது போன்றும் தோற்றமளிப்பினும், உண்மையானதத்துவதிருஷ்டி உடையவர்களுக்கு अप्राणः (அப்பிரானா:) - கிரியாசக்தி பேதங்களுடன் கூடிய சலனாத்மகமானவாயு எவனிடம் இல்லையோ अमनाः (அமனா:) அவ்வாறே அநேக ஞானசக்தி பேதங்களுடன் கூடியதாகும், ஸங்கல்பாத்மகமானதுமான மனது அற்றது. எனவே அப்பிராணன், அமனது எனப்பட்டது. அப்பிராணன், அமனது என்பதால் பிராணாதி வாயு பேதங்களும், கர்மேந்திரியங்களும், அவைகளின் விஷயங்கள் எல்லாம் விலக்கப்பட்டன என்பது அறியத்தக்கது. அவ்வாறே சுருதியிலும் ध्यायतीव लेलायतीव- (த்யாயதீவ லேலாயதீவ) என்று கூறப்பட்டுள்ளது.
यस्माच्चैवं प्रतिषिद्धोपाधिद्वयस्तस्मात् शुभ्रः शुद्धः । अतोऽक्षरान्नामरूपबीजोपाधिलक्षितस्वरूपात् , सर्वकार्यकरणबीजत्वेनोपलक्ष्यमाणत्वात्परं तत्त्वं तदुपाधिलक्षणमव्याकृताख्यमक्षरं सर्वविकारेभ्यतस्मात्परतोऽक्षरात्परः निरुपाधिकः पुरुष इत्यर्थः ।
எதனால் இந்த இரு உபாதிகளும் தடை செய்யப்பட்டதோ அதனால் शुभ्रः (சுப்ர:) பரிசுத்தமானவன். ஆகையால் अक्षरत् (அக்ஷராத்) அக்ஷரத்தைக் காட்டிலும் நாமரூப பீஐ உபாதி லக்ஷணிக்கப்பhட எல்லா காரிய காரண பீஐமானதினால் உப லக்ஷிக்கப்பட்ட அந்த உபாதிலக்ஷணம் அவ்யாகிருதம் எனப்படும். அக்ஷரம் எல்லா விகாரங்களைக் காட்டிலும் परम् (பரம்) மேலானது. परतः (பரத:) அந்த அக்ஷரமாகிய பரத்தைக் காட்டிலும் நிரூபாதிக புருஷன் மேலானவன் (அப்பாற்பட்டவன்) என்பது பொருள்.
यस्मिंस्तदाकाशाख्यमक्षरं संव्यवहारविषयमोतं च प्रोतं च । कथं पुनरप्राणादिमत्त्वं तस्येत्युच्यते । यदि हि प्राणादयः प्रागुत्पत्तेः पुरुष इव स्वेनात्मना सन्ति, तदा पुरुषस्य प्राणदिना विद्यमानेन प्राणादिमत्त्वं स्यात् ; न तु ते प्राणादयः प्रागुत्पत्तेः सन्ति । अतः प्राणादिमान्परः पुरुषः, यथाऽनुत्पन्ने पुत्रे अपुत्रो देवदत्तः ॥
எந்த ஆகாசம எனப்படும் அக்ஷரத்தில் ஓதம்,ப்ரோதம் ஆகிய வியவகார விஷயங்கள் இருக்கும்பொழுது அதை எவ்வாறு பிராணன் முதலியவைகள் அற்றது என்று கூறமுடியும்? பிராணன் முதலியவைகள் உத்பத்திக்கு முன் இருக்கும் பரம புருஷனைப்போல் தன் ஆத்மாவாய் இருக்கும்பொழுது புருஷனுக்கு பிராணன் முதலியவைகள் இருப்பதால் பிராணாதிமத்வம் உண்டாகலாம். ஆனால் அந்த பிராணன் முதலியவைகள் உத்பத்திக்கு முன் இருக்கும் புருஷனைப்போல் தானாகவே இருக்கின்றன எனில் அப்பொழுது எவ்வாறு புத்திரன் உண்டாகாத தேவதத்தன் அபுத்திரன் என்படுகிறானோ அவ்வாறு பரமபுருஷன் ஆகிறான்
कथं ते न सन्ति प्राणादय इति, उच्यते — यस्मात्
एतस्माज्जायते प्राणो मनः सर्वेन्द्रियाणि च ।
खं वायुर्ज्योतिरापः पृथिवी विश्वस्य धारिणी ॥ ३ ॥
एतस्मादेव पुरुषान्नामरूपबीजोपाधिलक्षितात् जायते उत्पद्यतेऽविद्याविषयो विकारभूतो नामधेयोऽनृतात्मकः प्राणः, ‘वाचारम्भणं विकारो नामधेयम्’ (छा. उ. ६ । १ । ४) ‘अनृतम्’ इति श्रुत्यन्तरात् । न हि तेनाविद्याविषयेणानृतेन प्राणेन सप्राणत्वं परस्य स्यादपुत्रस्य स्वप्नदृष्टेनेव पुत्रेण सपुत्रत्वम् ।
एतस्मात्-(ஏதஸ்மாத்) இந்த புருஷனிடம் இருந்தே நாமரூப பீஐ உபாதியாகக் கொண்ட பரம்பொருளிடமிருந்து அவித்யா விஷய விகாரமான நாமதேயமுடைய பொய்யான प्राणाः பிராணன் जायते உண்டாயிற்று. ‘‘வாச்சாரம்பணம் விகாரோ நாமதேயம்’’ என்னும் ‘‘அனிருதம்’’ என்றும் மற்ற சுருதிகளில் காட்டப்பட்டுள்ளது. அந்த பரம்பொருளுக்கு அவித்யா விஷயமாகிய பொய்யான பிராணனால் பிராணன் உடையதாக ஆகமுடியாது. எவ்வாறு எனில் புத்திரன் இல்லாதவன் சுவப்னத்தில் கண்ட புத்திரனால் புத்திரன் உடையவனாக ஆகமாட்டான்.
एवं मनः सर्वाणि चेन्द्रियाणि विषयाश्चैतस्मादेव जायन्ते । तस्मात्सिद्धमस्य निरुपचरितमप्राणादिमत्त्वमित्यर्थः । यथा च प्रागुत्पत्तेः परमार्थतोऽसन्तस्तथा प्रलीनाश्चेति द्रष्टव्याः । यथा करणानि मनश्चेन्द्रियाणि च, तथा शरीरविषयकारणानि भूतानि खम् आकाशं, वायुः बाह्य आवहादिभेदः, ज्योतिः अग्निः, आपः उदकं, पृथिवी धरित्री विश्वस्य सर्वस्य धारिणी ; एतानि च शब्दस्पर्शरूपरसगन्धोत्तरोत्तरगुणानि पूर्वपूर्वगुणसहितान्येतस्मादेव जायन्ते ॥
एवं இவ்வாறு मनः மனம், सर्वाणि इन्द्रियाणि எல்லா இந்திரியங்கள், விஷயங்கள் எல்லாம் இதிலிருந்தே जायन्ते உண்டாயிற்று. ஆகையால் அதற்கு நிரூபிக்கப்பட்ட அப்ராணாதியாய் இருப்பது சித்தமாகிறது என்பது பொருள். எவ்வாறு (பிராணாதிகள்) உத்பத்திக்குமுன் அசத்தாய் இருந்ததோ அவ்வாறே லயம் அடைந்த பின்பும் இருக்கும் என்று அறியவேண்டும். எவ்வாறு கரணங்கள் மனம், இந்திரியங்கள் உண்டாயிற்றோ அவ்வாறே சரீர விஷய காரணங்களான பூதங்கள் खम् ஆகாயம், वायुः (வாயு:) உள்ளும் வெளியிலும் வீசும் பேதமுடையது. ज्योतिः - அக்னி, आपः தண்ணீர், पृथिवी விச்வத்தை (உலகை) தாங்குவதும், எல்லாவற்றையும் தாங்குவதாகும். இந்த சப்த, ஸ்பர்ச, ரூப, ரச, கந்த முதலியவைகள் பூர்வ பூர்வகுணங்களுடன் கூடியதாய் உத்தரோத்தர குணங்களுடன் கிரமமாக இதிலிருந்தே உண்டாகின்றன.
सङ्क्षेपतः परविद्याविषयमक्षरं निर्विशेषं पुरुषं सत्यम् ‘दिव्यो ह्यमूर्तः’ (मु. उ. २ । १ । २) इत्यादिना मन्त्रेणोक्त्वा, पुनस्तदेव सविशेषं विस्तरेण वक्तव्यमिति प्रववृते ; सङ्क्षेपविस्तरोक्तो हि पदार्थः सुखाधिगम्यो भवति सूत्रभाष्योक्तिवदिति । यो हि प्रथमजात्प्राणाद्धिरण्यगर्भाज्जायतेऽण्डस्यान्तर्विराट् , स तत्त्वान्तरितत्त्वेन लक्ष्यमाणोऽप्येतस्मादेव पुरुषाज्जायत एतन्मयश्चेत्येतदर्थमाह, तं च विशिनष्टि —
பரவித்யா விஷயமாகிய அக்ஷரம், நிர்விசேஷம், புருஷம், திவ்யம், அம்ருதம் முதலியவைகளால் மந்திரத்தை சுருக்கமாக கூறி மறுபடியும் அதையே விசேஷமாகவும், விஸ்தாரமாகவும் கூற வேண்டும் என்று ஏற்படுகிறது. சுத்திரத்திற்கு பாஷ்யம் போல் சுருக்கமாகவும் விளக்கமாகவும் கூறப்பட்டதால் அல்லவா பதார்த்தமானது நன்றாக புரிந்து கொள்ளமுடியும் என்பதால் (மந்திரத்தால் விளக்கப்படுகிறது). எவன் ஒருவன் முதலாவதாக உண்டான பிராணனாகிய ஹிரண்யகர்பனிடம் இருந்து அண்டத்தினுள் ஊடுறுவி விராட் புருஷன் உண்டாகிறான். அவன் வேறுதத்துவங்களுடன் கூடியவனாகக் கூறப்பட்ட போதிலும் அவனும் இப்பரம புருஷனிடமிருந்தே உண்டாகிறான். அப்பரம புருஷனானவனுங்கூட என்பதனை விளக்க விழைகிறார் இம்மந்திரத்தின் வாயிலாக:-
अग्निर्मूर्धा चक्षुषी चन्द्रसूर्यौ दिशः श्रोत्रे वाग्विवृताश्च वेदाः ।
वायुः प्राणो हृदयं विश्वमस्य पद्भ्यां पृथिवी ह्येष सर्वभूतान्तरात्मा ॥ ४ ॥
अग्निः द्युलोकः, ‘असौ वाव लोको गौतमाग्निः’ (छा. उ. ५ । ४ । १) इति श्रुतेः । मूर्धा यस्योत्तमाङ्गं शिरः, चक्षुषी चन्द्रश्च सूर्यश्चेति चन्द्रसूर्यौ ; यस्येति सर्वत्रानुषङ्गः कर्तव्यः अस्येत्यस्य पदस्य वक्ष्यमाणस्य यस्येति विपरिणामं कृत्वा । दिशः श्रोत्रे यस्य । वाक् विवृताश्च उद्घाटिताः प्रसिद्धा वेदाः यस्य । वायुः प्राणो यस्य । हृदयम् अन्तःकरणं विश्वं समस्तं जगत् अस्य यस्येत्येतत् । सर्वं ह्यन्तःकरणविकारमेव जगत् , मनस्येव सुषुप्ते प्रलयदर्शनात् ; जागरितेऽपि तत एवाग्निविस्फुलिङ्गवद्विप्रतिष्ठानात् । यस्य च पद्भ्यां जाता पृथिवी, एष देवो विष्णुरनन्तः प्रथमशरीरी त्रैलोक्यदेहोपाधिः सर्वेषां भूतानामन्तरात्मा ।
अग्निः அக்கினி தேவலோகம் ‘असौ वाव लोको गौतमाग्निः’ என்ற சுருதியின்படி எவருக்கு मूर्धा (மூர்த்தா) மேலான அவயவமாகிய சிரசோ, चक्षुषी (சக்ஷுஷீ) கண்கள் இரண்டும் चन्द्रसूर्यौ (சந்திர சுா்யெள) சந்திர சுரியர்களோ, अस्य (அஸ்ய) என்று மந்திரத்தில் வரப்போகும் பதத்தை यस्य (யஸ்ய) என்று மாற்றிக்கொண்டு அர்த்தம் செய்யவேண்டும். क्षेत्रे (ஸ்நோத்ரே) இருகாதுகளும் திக்குகளோ, विवृता (விவ்ருதா) வெளிப்பட்ட பிரசித்தமானவே தங்கள் वाक् (வாக்) வாக்கோ, प्राणाः (ப்ராண:) பிராணன் वायुः (வாயு:) வாயுவோ, ह्रुदयं (ஹ்ருதயம்) विक्षं (விச்வம்) அகில உலகங்களோ என்று கூறப்பட்டதின் காரணம் இந்த ஐகத்முழுவதும் அந்தக்கரணத்தின் விகாரமேயாகும். ஏன்எனில் ஸீஷுப்தியில் பிரளயத்தையும், விழித்தஉடன் அதனின்று தீப்பொறி போல் அகில உலகங்களும் தோன்றுவதால் அவ்வாறு கூறப்பட்டது. எவருக்கு पद् भ्यां (பத்பியாம்) பாதங்களில் இருந்து पृथिवी (ப்ருதிவீ) இந்த பூமி உண்டாயிற்றோ एषः (ஏஷ) இந்த தேவன் அநந்தன், விஷ்ணு, முதல் சரீரீயாவன், மூன்று உலகமாகிய சரீரத்தை உபாதியாகக் கொண்டவன். सर्वभूतान्तरात्मा (சர்வ-பூத அந்தராத்மா) எல்லா பூதங்களுடையவும் அந்த ராத்மாவாய் விளங்குகிறார்.
स हि सर्वभूतेषु द्रष्टा श्रोता मन्ता विज्ञाता सर्वकरणात्मा पञ्चाग्निद्वारेण च याः संसरन्ति प्रजाः, ता अपि तस्मादेव पुरुषात्प्रजायन्त इत्युच्यते —
அவனே எல்லா பூதங்களிலும் (ஐீவர்களிலும்) பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும், நினைப்பவனாகவும், நிச்சயிப்பவனாகவும் எல்லாவற்றிற்கும் காரணாத்மாவாக விளங்குகிறான். பஞ்சாக்னி (வான், மழை, பூமி, புருஷன், பெண்) மூலமாக எந்த பிரைஐகள் சம்சாரத்தை அடைகின்றனரோ அவர்களும் அந்த புருஷனிடமிருந்தே உண்டாகின்றனர்.
तस्मादग्निः समिधो यस्य सूर्यः सोमात्पर्जन्य ओषधयः पृथिव्याम् ।
पुमान्रेतः सिञ्चति योषितायां बह्वीः प्रजाः पुरुषात्सम्प्रसूताः ॥ ५ ॥
तस्मात् परस्मात्पुरुषात् प्रजावस्थानविशेषरूपः अग्निः । स विशेष्यते — समिधो यस्य सूर्यः, समिध इव समिधः ; सूर्येण हि द्युलोकः समिध्यते । ततो हि द्युलोकाग्नेर्निष्पन्नात् सोमात् पर्जन्यः द्वितीयोऽग्निः सम्भवति । तस्माच्च पर्जन्यात् ओषधयः पृथिव्यां सम्भवन्ति । ओषधिभ्यः पुरुषाग्नौ हुताभ्य उपादानभूताभ्यः पुमानग्निः रेतः सिञ्चति योषितायां योषिति योषाग्नौ स्त्रियामिति । एवं क्रमेण बह्वीः बह्व्यः प्रजाः ब्राह्मणाद्याः पुरुषात् परस्मात् सम्प्रसूताः समुत्पन्नाः ॥
तस्मात् (தஸ்மாத்) அந்த பரமபுருஷனிடமிருந்து பிரைஐகளின் அவஸ்தான ரூபமான अग्निः (அக்னி:) அக்னி (உண்டாகிறது). அதனுடைய விசேஷம் கூறப்படுகிறது. सूर्यः (சுரிய:) यस्य (யஸ்ய) எந்த லோகத்தை समिधः (சமித:) பிரகாசப்படுத்துபவனோ அக்னி ஹோத்திரத்தில் அக்னிபிரகாசப்படுத்துவதுபோல், சுரியனால் அல்லவா த்விலோகமானது பிரகாசப்படுத்தப்படுகிறது. அந்த த்விலோகமான அக்னியாகிய सोमात् (சோமாத்) சந்திரனிடத்திலிருந்து இரண்டாவது அக்னி पर्जन्यः (பர்ஐன்ய:) மேகமானது உண்டாகிறது. அந்த மேகத்தினால் உண்டான மழையினால் पृथिव्याम् (ப்ருத்திவ்யாம்) ओषधयः (ஓ ஷதய:) ஒ ஷதிகள் (தாவரங்கள்) सम्भवन्ति (சம்பவந்தி) தோன்றுகின்றன. (पुरुषाग्नौ) புருஷனாகிய அக்னியில் ஹவனம் செய்வதால் ஏற்படும் வீரியத்திற்கு உபாதானகாரணமான ஒஷாதிகளிலிருந்து (வீரியம் உண்டாகிறது). पुमान् (புமான்) புருஷரூப அக்னியான रेतः (ரேத:) வீரியமானது योषितायां (யோஷிதாயாம்) ஸ்திரீ எனப்படும் அக்னியில் ஹோமம் செய்கிறான். (நிறப்புகிறான்). இவ்வாறு கிரமமாக पुरुषात् (புருஷாத்) அப்பரம புருஷனிடமிருந்து बह्वीः प्रजाः (பஹ்வீி: ப்ரஐா:) ப்ராமணாதிரூப அநேக பிரைஐகள் सम्प्रसूताः (சம்ப்ரசுதா:) உண்டாயினர்.
किञ्च, कर्मसाधनानि फलानि च तस्मादेवेत्याह — कथम् ?
புருஷனிடமிருந்துதான் கா்மசாதனங்களும் பலன்களும் உண்டானதா? அது எவ்வாறு என்று கூறுகிறாா்-
तस्मादृचः साम यजूंषि दीक्षा यज्ञाश्च सर्वे क्रतवो दक्षिणाश्च ।
संवत्सरश्च यजमानश्च लोकाः सोमो यत्र पवते यत्र सूर्यः ॥ ६ ॥
तस्मात् पुरुषात् ऋचः नियताक्षरपादावसानाः गायत्र्यादिच्छन्दोविशिष्टा मन्त्राः ; साम पाञ्चभक्तिकं साप्तभक्तिकं च स्तोभादिगीतिविशिष्टम् ; यजूंषि अनियताक्षरपादावसानानि वाक्यरूपाणि ; एवं त्रिविधा मन्त्राः । दीक्षाः मौञ्ज्यादिलक्षणाः कर्तृनियमविशेषाः । यज्ञाश्च सर्वे अग्निहोत्रादयः । क्रतवः सयूपाः । दक्षिणाश्च एकगवाद्या अपरिमितसर्वस्वान्ताः । संवत्सरश्च कालः कर्माङ्गभूतः । यजमानश्च कर्ता । लोकाः तस्य कर्मफलभूताः ; ते विशेष्यन्ते — सोमः यत्र येषु लोकेषु पवते पुनाति लोकान् यत्र च येषु सूर्यस्तपति । ते च दक्षिणायनोत्तरायणमार्गद्वयगम्या विद्वदविद्वत्कर्तृफलभूताः ॥ ६ ॥
तस्मात् (தஸ்மாத்) அந்த புருஷனிடமிருந்தே ऋचः (ருச்சோ) குறிப்பிட்ட அக்ஷரம் பாதங்களுடன் கூடிய காயத்திரி முதலிய சந்தஸுடன் கூடிய மந்திரங்களும், साम (சாம) பஞ்ச பாக்திகம், ஸப்த பாக்திகம், ஸ்தோமம் முதலான கீதங்களுடன் கூடிய சாம வேதமும், यजूंषि (யஐும்ஷி) கணக்கில் அடங்காத அக்ஷரங்களுடன் கூடிய பாதங்கள் உடைய வாக்கிய ரூபமாய் உள்ள மந்திரங்களுடன் கூடிய தான யஐீர் வேதமும், ஆக இவ்வாறான மூவகை மந்திரங்களும், दीक्षाः (தீக்ஷா) மெளஞ்சீ முதலான கர்த்தாவின் விசேஷ நியமங்களும், यज्ञाश्च (யக்ஞாச்ச) எல்லா அக்னிஹோத்திரங்களும், सर्वे क्रतवः (சர்வேக்ரதவ:) யூ பங்களுடன் கூடிய எல்லா யாகங்களும் दक्षिणाः च (தக்ஷிணா:ச்ச) ஒரு பசு முதல் கணக்கிலடங்காத பசுக்கள் வரையிலும் உள்ள தக்ஷிணைகளையும், ஸர்வஸ்வத்தையும் அளிக்கும் தக்ஷிணைகளும், संवत्सरः च (சம்வத்சர: ச்ச) வர்ஷம் முதலான கர்மாங்கமான காலங்களும், यजमानश्च (யஐ மானஸ்ச்ச) யாக கர்த்தாவும், लोकाः (லோகா:) கர்மத்தின் பலன்களான லோகங்களும், यत्र सोमः पवते எந்த லோகங்களில் சந்திரன் பரிசுத்தப்படுத்துகிறானோ, यत्र सुर्यः तपति எந்த லோகங்களில் சுரியன் தபிக்கின்றானோ அந்த தக்ஷிண உத்தராயண மார்க்கத்தில் செல்லும் வித்வான் அவித்வான்களின் மார்க்கங்களும் உண்டாகின்றன.
तस्माच्च देवा बहुधा सम्प्रसूताः साध्या मनुष्याः पशवो वयांसि ।
प्राणापानौ व्रीहियवौ तपश्च श्रद्धा सत्यं ब्रह्मचर्यं विधिश्च ॥ ७ ॥
तस्माच्च पुरुषात्कर्माङ्गभूता देवाः बहुधा वस्वादिगणभेदेन सम्प्रसूताः सम्यक् प्रसूताः — साध्याः देवविशेषाः, मनुष्याः कर्माधिकृताः, पशवः ग्राम्यारण्याः, वयांसि पक्षिणः ; जीवनं च मनुष्यादीनां प्राणापानौ, व्रीहियवौ हविरर्थौ ; तपश्च कर्माङ्गं पुरुषसंस्कारलक्षणं स्वतन्त्रं च फलसाधनम् ; श्रद्धा यत्पूर्वकः सर्वपुरुषार्थसाधनप्रयोगश्चित्तप्रसाद आस्तिक्यबुद्धिः ; तथा सत्यम् अनृतवर्जनं यथाभूतार्थवचनं चापीडाकरम् ; ब्रह्मचर्यं मैथुनासमाचारः ; विधिश्च इतिकर्तव्यता ॥
तस्मात् च (தஸ்மாத் ச) அந்த பரம புருஷனிடமிருந்து बहुधा (பஹுதா) வசுவாதி கணபேதங்களுடன் கூடிய देवाः (தேவா:) கர்மங்களுக்கு அங்கபூதங்களான தேவர்கள் सम्प्रसूताः (ஸம்ப்ரஸுதா:) நன்கு உண்டாயினர். (அவ்வாறே) साध्याः (ஸாத்யா:) ஸாத்தியர்கள் என்ற தேவர்களும், मनुष्याः கர்மாக்களைக் செய்வதற்கு அதிகாரமுடைய மனிதர்களும், वयांसि (வயாம்ஸி) பக்ஷிகளும், प्राणापानौ (பிராணாபானெள) மனிதர்களுக்கு ஜீவனபூதமான பிராணாபானன்களும், व्रीहियवौ (வீரீஹியவெள) ஹவிஸ் ஆவதற்கான நெல், தினை முதலிய தானியங்களும், तपश्च (தபஸ்ச்ச) புருஷனுக்கு சமஸ்காரத்தை உண்டுபண்ணுவதும் அவ்வாறே ஸ்வதந்திரமாகவே பலத்தைக் கொடுக்கக்கூடிய கர்மத்தினுடைய அங்கபூதமான தபஸும், श्रद्धा (ச்ரத்தா) எதை முன்னிட்டுக்கொண்டு எல்லா புருஷார்த்த சாதனங்களைச் செய்வதற்கு மனதை ஈடுபடுத்துகிறதோ (आस्तिक्यबुद्धिः) அந்த சிரத்தையும், सत्यं (சத்தியம்) சத்தியமும், ब्रह्मचर्यं (ப்ரஹ்ம சர்யம்) புலனடக்கமும் विधिश्च (விதிச்ச) நெறிமுறைகளும், செயல்முறைகளும் உண்டாயின.
सप्त प्राणाः प्रभवन्ति तस्मात्सप्तार्चिषः समिधः सप्त होमाः ।
सप्तेमे लोका येषु चरन्ति प्राणा गुहाशया निहिताः सप्त सप्त ॥ ८ ॥
किञ्च, सप्त शीर्षण्याः प्राणाः तस्मादेव पुरुषात् प्रभवन्ति । तेषां सप्त अर्चिषः दीप्तयः स्वस्वविषयावद्योतनानि । तथा सप्त समिधः सप्तविषयाः ; विषयैर्हि समिध्यन्ते प्राणाः । सप्त होमा ; तद्विषयविज्ञानानि, ‘यदस्य विज्ञानं तज्जुहोति’ (तै. ना. ८०) इति श्रुत्यन्तरात् । किञ्च, सप्त इमे लोकाः इन्द्रियस्थानानि, येषु चरन्ति सञ्चरन्ति प्राणाः इति विशेषणात् । प्राणा येषु चरन्तीति प्राणानां विशेषणमिदं प्राणापानादिनिवृत्त्यर्थम् । गुहायां शरीरे हृदये वा स्वापकाले शेरत इति गुहाशयाः । निहिताः स्थापिता धात्रा सप्त सप्त प्रतिप्राणिभेदम् । यानि च आत्मयाजिनां विदुषां कर्माणि कर्मफलानि चाविदुषां च कर्माणि तत्साधनानि कर्मफलानि च सर्वं चैतत्परस्मादेव पुरुषात्सर्वज्ञात्प्रसूतमिति प्रकरणार्थः ॥ ८ ॥
சிரஸ்ஸில் இருக்கும் सप्तप्राणाः (சபதப்ராணா:) ஏழு பிராணன்களும் (இந்திரியங்களும்), तस्मात् அந்த பரம புருஷனிடமிருந்தே உண்டாகின்றன. सप्तार्चिषः (சப்தார்ச்சி:) அந்தப்பிராணன்களை வெளிப்படுத்தும் பிரகாசங்களும், அவ்வாறே सप्तसमिधः (சப்தசமித:) அவைகளின் ஏழுவிஷயங்களும் ஏன்எனில் இந்திரியங்கள் தன்னுடைய விஷயங்களை பிரகாசப்படுத்துகின்றன. सप्तहोमाः (சப்தஹோமா:) அந்த விஷயங்களைப் பற்றிய அறிவும், ‘यदस्य विज्ञानं तज्जुहोति’ (யதஸ்ய விக்ஞானம் தத் ஜீஹோதி) என்று மற்றொரு சுருதியிலும் கூறப்பட்டுள்ளது. येषु (யே ஷு) அவைகளில் प्राणा (ப்ராணா:) चरन्ति (சரந்தி) ஏழு பிராணன்களும், சஞ்சரிக்கின்றன, இந்த இடத்தில் உள்ள விசேஷம் என்னவெனில் ப்ராணா: என்று கூறியதற்கு பிராண அபானன்களை நிவிர்த்திக்கின்றது. इमे सप्तलोकाः (இமேசப்தலோகா:) இந்த இந்திரியங்களின் ஸ்தானங்களான ஏழு லோகங்களும் (கோளகங்களும்) प्रभवन्ति (பிரபவந்தி) உண்டாகின்றன. குகையில் அதாவது சரீரத்தில் அல்லது ஹ்ருதயத்தில் சொப்பன காலத்தில் ஒடுங்குவதால் गुहाशयाः (குஹாசயா:) सप्तसप्त (சப்தசப்த) ஏழுப் பிராணன்களும் ஒவ்வொரு பிராண பேதத்தினிடமிருந்தும் பிரஹ்ம தேவனால் निहिताः (நிஹிதா:) வைக்கப்படுகின்றன. ஆத்மயாகம் செய்யக்கூடிய வித்வான்களின் கர்மாக்களும், கர்ம பலன்களும் உண்டோ அவைகளும், அவ்வாறே அக்ஞானிகளின் கர்மங்களும், அவைகளின் சாதனங்களும், அவைகளின் பலன்களுமுண்டோ அவைகளும் அந்தப் பரமபுருஷனிடமிருந்தே உண்டாயின என்பது கருத்து.
अतः समुद्रा गिरयश्च सर्वेऽस्मात्स्यन्दन्ते सिन्धवः सर्वरूपाः ।
अतश्च सर्वा ओषधयो रसश्च येनैष भूतैस्तिष्ठते ह्यन्तरात्मा ॥ ९ ॥
अतः पुरुषात् समुद्राः सर्वे क्षाराद्याः । गिरयश्च हिमवदादयः अस्मादेव पुरुषात् सर्वे । स्यन्दन्ते स्रवन्ति गङ्गाद्याः सिन्धवः नद्यः सर्वरूपाः बहुरूपाः । अस्मादेव पुरुषात् सर्वाः ओषधयः व्रीहियवाद्याः । रसश्च मधुरादिः षड्विधः, येन रसेन भूतैः पञ्चभिः स्थूलैः परिवेष्टितः तिष्ठते तिष्ठति हि अन्तरात्मा लिङ्गं सूक्ष्मं शरीरम् । तद्ध्यन्तराले शरीरस्यात्मनश्चात्मवद्वर्तत इत्यन्तरात्मा ॥
अथः (அத:) அந்த பரமபுருஷனிடமிருந்தே समुद्राः (சமுத்ரா:) உப்புக்கடல் முதல் எல்லாக் கடல்களும் (ஏழு கடல்களும்) அந்த புருஷனிடமிருந்தே இமயம் முதலான सर्वे गिरयः च (சர்வே கிரயச்ச) எல்லா மலைகளும் உண்டாகின்றன. अस्मात् (அஸ்மாத்) அந்தப் பரமபுருஷனிடமிருந்தே सर्वरूपाः (சர்வரூபா:) பலவிதமான सिन्धवः (சிந்தவ:) கங்கை முதலான நதிகளும் स्यन्दन्ते (ஸ்யந்தந்தே) பெருகுகின்றன. अतश्च (அதஸ்ச்ச) அந்த பரம புருஷனிடமிருந்தே (சர்வா ஓஷதய:) நெல், தினை, கோதுமை போன்ற பயிர்களும், रसश्च (ரசஸ்ச்ச) இனிப்பு முதலிய ஆறுவிதமான சுவைகளும் (உண்டாகின்றன). येन (யேன) எந்த ரஸத்தினால் भूतैः (பூதை:) உண்டான ஐந்து ஸ்தூல பூதங்களினால் சுழப்பட்டவனாக एष अन्तरात्मा हि (ஏ ஷ அந்தராத்மாஹி) சுக்ஷ்மசரீரமானது तिष्ठति (திஷ்டதி) நிற்கிறது. அதாவது இந்த சுக்ஷ்ம் சரீரமானது தூல சரீரத்திற்கும், ஆன்மாவிற்கும் இடையில் ஆன்மா போல் அத்யந்தமாய் இருப்பதால் அந்தராத்மா என்று கூறப்படுகிறது.
एवं पुरुषात्सर्वमिदं सम्प्रसूतम् । अतो वाचारम्भणं विकारो नामधेयमनृतं पुरुष इत्येव सत्यम् ; अतः
இவ்வாறு பரமபுருஷனிடமிருந்தே இவை எல்லாம் உண்டாயின. ஆகையால் இந்த விகாரங்கள் எல்லாம் வாக்கினால் ஆரம்பிக்கப்பட்டவைகளாய் இருப்பதால் பொய்யாகும். பரமபுருஷனே சத்தியம். ஆகையால் -
पुरुष एवेदं विश्वं कर्म तपो ब्रह्म परामृतम् ।
एतद्यो वेद निहितं गुहायां सोऽविद्याग्रन्थिं विकिरतीह सोम्य ॥ १० ॥
पुरुष एव इदं विश्वं सर्वम् । न विश्वं नाम पुरुषादन्यत्किञ्चिदस्ति । अतो यदुक्तं तदेवेदमभिहितम् ‘कस्मिन्नु भगवो विज्ञाते सर्वमिदं विज्ञातं भवति’ (मु. उ. १ । १ । ३) इति ; एतस्मिन्हि परस्मिन्नात्मनि सर्वकारणे पुरुषे विज्ञाते, पुरुष एवेदं विश्वं नान्यदस्तीति विज्ञातं भवतीति ।
पुरुष एव इदं विश्वं (புருஷ ஏவேதம் விச்வம்) இந்த உலகமெல்லாம் பரமபுருஷனே. பரமபுருஷனைக் காட்டிலும் வேறாக உலகம் என்பது சிறிதும் கிடையாது. ஆகையால் எது கூறப்பட்டதோ அதுவே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ‘कस्मिन्नु भगवो विज्ञाते सर्वमिदं विज्ञातं भवति’ इति (ஹே பகவன்! எதை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகும் என்று). எல்லாவற்றிற்கும் காரண புருஷனாகிய இந்த பரமாத்மாவை அறிந்தால் இந்த உலகமெல்லாம் பரமபுருஷனே. அவனைத் தவிற வேறு இல்லை என்ற ஞானம் ஏற்படுகிறது.
किं पुनरिदं विश्वमित्युच्यते — कर्म अग्निहोत्रादिलक्षणम् ; तपः ज्ञानं तत्कृतं फलमन्यदेव तावद्धीदं सर्वम् ; तच्च एतद्ब्रह्मणः कार्यम् ; तस्मात्सर्वं ब्रह्म परामृतं परममृतमहमेवेति यो वेद निहितं स्थितं गुहायां हृदि सर्वप्राणिनाम्, सः एवं विज्ञानात् अविद्याग्रन्थिं ग्रन्थिमिव दृढीभूतामविद्यावासनां विकिरति विक्षिपति विनाशयति इह जीवन्नेव, न मृतः सन् हे सोम्य प्रियदर्शन ॥
மேலும் இந்த விச்வம் (உலகம்) என்ன என்பதைக் கூறுகிறார். (கர்ம) அக்னிஹோத்திராதி கர்மங்கள். तपो (தபோ) ஞானம், அதனால் செய்யப்பட்ட பலன் அதேபோல் மற்றவை எல்லாம் (விச்வமே). அது பிரஹ்மத்தினுடைய காரியமாகும். ஆகையால் எல்லாம் परामृतः ब्रहा (பராம்ருதம் ப்ரஹ்ம) மேலான மரணமற்றப்ரஹ்மம் நானே என்று एतत् गुहायां (ஏதத்) (குஹாயாம்) எல்லாப் பிராணிகளுடைய இருதய குகைக்குள் निहितः (நிஹிதம்) வைக்கப்பட்டுள்ளது என்று यो (யோ) அறிகின்றானோ हे सोम्य! प्रियदर्शन! (ஹே ஸோம்ய! ப்ரியதா்சன!) स (ச) அவன் இவ்வாறு அறிந்ததால் अविद्याग्रन्थिं (அவித்யாகிரந்திம்) திடமான முடிச்சு போல் உள்ள அவித்யா வாசனையை (இஹ) ஜீவித்துக்கொண்டிருக்கும் பொழுதே विकिरति (விகிரதி) நாசம் செய்கின்றான்.
इति द्वितीयमुण्डके प्रथमखण्डशभाष्यम् ॥
आविः संनिहितं गुहाचरं नाम महत्पदमत्रैतत्समर्पितम् ।
एजत्प्राणन्निमिषच्च यदेतज्जानथ सदसद्वरेण्यं परं विज्ञानाद्यद्वरिष्ठं प्रजानाम् ॥ १ ॥
अरूपं सदक्षरं केन प्रकारेण विज्ञेयमित्युच्यते —
ரூபமற்றதாயும் சத்தாயும் உள்ள அக்ஷரத்தை எவ்வாறு அறிவது என்பது கூறப்படுகிறது.
आविः प्रकाशं, संनिहितम् , वागाद्युपाधिभिः — ज्वलति भ्राजतीति श्रुत्यन्तरात् — शब्दादीनुपलभमानवदवभासते ; दर्शनश्रवणमननविज्ञानाद्युपाधिधर्मैराविर्भूतं सल्लक्ष्यते हृदि सर्वप्राणिनाम् । यदेतदाविर्भूतं ब्रह्म संनिहितं सम्यक् स्थितं हृदि, तत् गुहाचरं नाम गुहायां चरतीति दर्शनश्रवणादिप्रकारैर्गुहाचरमिति प्रख्यातम् । महत् सर्वमहत्त्वात् , पदं पद्यते सर्वेणेति, सर्वपदार्थास्पदत्वात् ।
आविः (ஆவி:) எப்பொழுதும் பிரகாசிப்பதாயும், संनिहितः (சந்நிஹிதம்) - வாக்முதலிய உபாதிகளால் பிரகாசிப்பதாயும், மற்ற சுருதிவாயிலாக சப்தாதிகளால் அடையப்பட்டது போல் விளங்குகிறது. எல்லா ஜீவர்களுடைய இருதயத்தில் தர்சன சிரவண மனன விக்ஞான முதலிய உபாதி தர்மங்களால் ஆவிர்பாவமடைந்ததாய் உள்ளது. அந்த இந்த ஆவிர்பிரஹ்மானது ஹருதயத்தில் நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அது गुहाचरं नाम (குஹாசரம் நாம) குஹாசரம் என்றால் கேட்டால், பார்த்தல் போன்ற பிரகாசங்களால் ஹிருதயத்தில் சஞ்சரிப்பது என்று கூறப்பட்டதாகும். எல்லாவற்றையும் விட மிகப்பெரிய தாய் இருப்பதால் எல்லா பதார்த்தங்களுக்கும் ஆஸ்பதமாயும், எல்லோராலும் அடையப்பட வேண்டியதாய் இருப்பதால் (பதம்)
कथं तन्महत्पदमिति, उच्यते ? यतः अत्र अस्मिन्ब्रह्मणि एतत्सर्वं समर्पितं सम्प्रवेशितं रथनाभाविवाराः — एजत् चलत्पक्ष्यादि, प्राणत् प्राणितीति प्राणापानादिमन्मनुष्यपश्वादि, निमिषच्च यन्निमेषादिक्रियावत् , यच्चानिमिषत् ; च - शब्दात् समस्तमेतदत्रैव ब्रह्मणि समर्पितम् ।
அந்த மஹத்பதம் எவ்வாறு பொருந்தும் எனில் கூறப்படுகிறது. எதனால் ரதத்தின் சக்கரத்தின் நடுவில் உள் குடத்தில் ஆராக்கால்கள் இணைக்கப்பட்டது போல் अत्र (அத்ர) இந்த பிரஹ்மத்திடத்தில் एतत् (ஏதத்) இவையாவும் समर्पितं (சமர்ப்பிதம்) இணைக்கப்பட்டுள்து (ஏஐத்) சஞ்சரிக்கின்ற பக்ஷி முதலானவைகளும், प्राणत् (ப்ராணத்) பிராணாதிகளுடன் கூடிய மனிதன், பசு (மிருகங்கள்) முதலியவைகளும், निमिषच्च (நிமிஷச்ச) கண் இமைப்பவை கண் இமைக்காதவை போன்றயாவும் இந்த பிரஹ்மத்தினிடத்திலேயே இணைக்கப்பட்டுள்ளன.
एतत् यदास्पदं सर्वं जानथ हे शिष्याः, अवगच्छत तदात्मभूतं भवताम् ; सदसत् सदसत्स्वरूपं सदसतोर्मूर्तामूर्तयोः स्थूलसूक्ष्मयोः, तद्व्यतिरेकेणाभावात् । वरेण्यं वरणीयम् , तदेव हि सर्वस्य नित्यत्वात्प्रार्थनीयम् ; परं व्यतिरिक्तं विज्ञानात्प्रजानामिति व्यवहितेन सम्बन्धः ; यल्लौकिकविज्ञानागोचरमित्यर्थः । यत् वरिष्ठं वरतमं सर्वपदार्थेषु वरेषु ; तद्ध्येकं ब्रह्म अतिशयेन वरं सर्वदोषरहितत्वात् ॥
(ஹே சிஷ்யர்களே! ) சத் அசத்தைக் காட்டிலும், மூர்த்தா மூர்த்தங்களைக் காட்டிலும், ஸ்தூல சுக்ஷ்மங்களைக் காட்டிலும் அந்த பிரஹ்மம் வேறாக இல்லாததால் உங்களுடைய ஆத்ம பூதமான सदसत् (சதசத்) சதசத் ஸ்வரூபம், वरेण्यं (வரேண்யம்) அதுவே எல்லாவற்றைக்காட்டிலும் நித்தியமானதால் பிரார்த்திக்கத் தக்கதாயும், प्रजानां विज्ञानात् பிரஐானம் விக்ஞானம் பிரைஐகளுடைய லெளகிக விக்ஞானத்தைக் காட்டிலும் வேறானதால் அகோசரமாயும், எது वरिष्ठं (வரிஷ்டம்) ஒரு தோஷமும் அற்றதாய் எல்லா மேலான பதார்த்தங்களுள் மேலானதாயும் உள்ளதோ அதுவே ஏகமாய் உள்ளப்ரஹ்மம். அதுவே எல்லாவற்றிலும் அடைய வேண்டிய மேலான பதம் என்பதை जानथ (ஐானத) தெரிந்துகொள்.
यदर्चिमद्यदणुभ्योऽणु च यस्मिंल्लोका निहिता लोकिनश्च ।
तदेतदक्षरं ब्रह्म स प्राणस्तदु वाङ्मनः ।
तदेतत्सत्यं तदमृतं तद्वेद्धव्यं सोम्य विद्धि ॥ २ ॥
किञ्च, यत् अर्चिमत् दीप्तिमत् ; तद्दीप्त्या ह्यादित्यादि दीप्यत इति दीप्तिमद्ब्रह्म । किञ्च, यत् अणुभ्यः श्यामाकादिभ्योऽपि अणु च सूक्ष्मम् । च - शब्दात्स्थूलेभ्योऽप्यतिशयेन स्थूलं पृथिव्यादिभ्यः । यस्मिन् लोकाः भूरादयः निहिताः स्थिताः, ये च लोकिनः लोकनिवासिनः मनुष्यादयः ; चैतन्याश्रया हि सर्वे प्रसिद्धाः ; तदेतत् सर्वाश्रयं अक्षरम् ब्रह्म स प्राणः तदु वाङ्मनः वाक्च मनश्च सर्वाणि च करणानि तदु अन्तश्चैतन्यम् ; चैतन्याश्रयो हि प्राणेन्द्रियादिसर्वसङ्घातः, ‘प्राणस्य प्राणम्’ (बृ. उ. ४ । ४ । १०) इति श्रुत्यन्तरात् ।
यदर्चिमत् (யதர்ச்சிமத்) எந்தப் பரமார்த்தஸ்வரூபமானது பிரகாசஸ்வரூபமானதாகவும், அதாவது எதனுடைய பிரகாசத்தால் சுரியன் முதலான ப்ரகாசங்கள் பிரகாசிக்கின்றனவோ, மேலும் यदणुभ्यः (யதணுப்ய:) மிகவும் சுக்ஷ்மமான தினையின் நுனியைக் காட்டிலும் अणुः (அணு:) சுக்ஷ்மமானதும், च (ச்ச) என்ற சப்தத்தால் ப்ருதிவீ முதலியவைகளைக் காட்டிலும் மிகவும் ஸ்தூலமானது என்பதாலும், यस्मिंल्लोकाः (யஸ்மின்லோகா:) எந்த பிரஹ்மஸ்வரூபத்தில் பூலோகம் முதலான லோகங்களும் மேலும் लोकिनश्च (லோகினச்ச) அந்தந்த லோகங்களில் வசிக்கக்கூடிய சைதன்ய ஆஸ்ரயர்களான மனிதர்கள் முதலானவர்களும் : निहिताः (நிஹிதா:) நிலைபெற்றிருக்கின்றனரோ तदतत् (ததேதத்) அந்த சர்வ ஆஸ்ரயமான இதுவே अक्षरं ब्रहा (அக்ஷரம், பிரஹ்மம்) நாசமோ, மாறுபாடோ அடையாத ப்ரஹ்மமாகும். सः प्राणा (ச:ப்ராண:) அந்தப் பரம்பொருளே பிராணனாகும். तत् वाङ्मनः (தத் வாங்மன:) வாக்மன முதலிய எல்லா கரணங்களுக்கும் உள்ளே சைதன்யம் விளங்குவதால் பிராண இந்திரியங்கள் முதலிய சங்காதமானது சைதன்யத்தை ஆஸ்ரயித்தே இருக்கின்றன. ‘प्राणस्य प्राणम्’ (ப்ராணஸ்ய ப்ராணம்) என்று வேறு சுருதியில் கூறப்பட்டுள்ளது.
यत्प्राणादीनामन्तश्चैतन्यमक्षरं तदेतत् सत्यम् अवितथम् , अतः अमृतम् अविनाशि तत् वेद्धव्यं मनसा ताडयितव्यम् । तस्मिन्मनसः समाधानं कर्तव्यमित्यर्थः । यस्मादेवं हे सोम्य, विद्धि अक्षरे चेतः समाधत्स्व ॥
எதுபிராணாதிகளின் உள்ளே சைதன்ய ஸ்வரூபமாயும் அக்ஷரமாயும் உள்ளதோ तत् (தத்) அது एतत् (ஏதத்) இந்த सत्यम् (சத்தியம்) அதாவது பொய்யாகாது. तत् (தத்) அது अमृतं (அம்ருதம்) நாசமற்றது. सोम्य! (சோம்ய) ஹே செளம்ய! तत् वेदितव्यम् (தத் வேதித்தவ்யம்) அது மனதால் திடமாகப் பற்றத்தக்கதாய் உள்ளதால் विद्धि (வித்தி) அறிவாயாக. அதாவது அதில் மனதை வைத்து ஒருமுகப்படுத்துவாயாக.
कथं वेद्धव्यमिति, उच्यते —
அப்பரம்பொருள் எவ்வாறு அறியத்தக்கது என்பது இந்தமந்திரத்தில் கூறப்படுகிறது.
धनुर्गृहीत्वौपनिषदं महास्त्रं शरं ह्युपासानिशितं सन्दधीत ।
आयम्य तद्भावगतेन चेतसा लक्ष्यं तदेवाक्षरं सोम्य विद्धि ॥ ३ ॥
धनुः इष्वासनं गृहीत्वा आदाय औपनिषदम् उपनिषत्सु भवं प्रसिद्धं महास्त्रं महच्च तदस्त्रं च महास्त्रं धनुः, तस्मिन् शरम् ; किंविशिष्टमित्याह — उपासानिशितं सन्तताभिध्यानेन तनूकृतम् , संस्कृतमित्येतत् ; सन्दधीत सन्धानं कुर्यात् । सन्धाय च आयम्य आकृष्य सेन्द्रियमन्तःकरणं स्वविषयाद्विनिवर्त्य लक्ष्य एवावर्जितं कृत्वेत्यर्थः । न हि हस्तेनेव धनुष आयमनमिह सम्भवति । तद्भावगतेन तस्मिन्ब्रह्मण्यक्षरे लक्ष्ये भावना भावः तद्गतेन चेतसा, लक्ष्यं तदेव यथोक्तलक्षणम् अक्षरं सोम्य, विद्धि ॥
सोम्य! (சோம்ய) ஹே செளம்ய! औपनिषदम् (ஒளபநிஷதம்) உபநிஷத்துக்களில் பிரசித்தமான महास्त्रं (மஹாஸ்த்திரம்) பெரிய அஸ்திரமாகிய (ஓம்) धनुः (தனு:) அம்பின் ஸ்தானமாகிய வில்லை गृहीत्वा (க்ருஹீத்வா) எடுத்து उपासानिशितं (உபாஸாநிசிதம்) எப்பொழுதும் தியானம் செய்வதால் நன்கு கூர்மையாக்கப்பட்ட அதாவது நல்ல சமஸ்காரத்தை அடைந்த शरं (சரம்) பானத்தை (மனதை) सन्धयीत (சந்தயீத) பொருத்த வேண்டும். இவ்வாறு வில்லில் அம்பைப் பொருத்தி அதை आयम्या (ஆயம்ய) நன்கு வளைத்து இழுத்து அதாவது இந்திரியங்களுடன் கூடிய அந்தக்கரணத்தை, அதனுடைய விஷயங்களிலிருந்து திருப்பி, அதை குறியை நோக்கி ஒருமுகப்படுத்தி (என்பதில் கைகளினால் அல்ல என்று கொள்ளவேண்டும்) तद्भावगतेन (தத்பாவகதேன) அப்பரம்பொருளான பிரஹ்மமாகிய குறியில் ஈடுபட்ட चेतसा (சேதசா) மனதினால் तदेव (ததேவ) முற்கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய अक्षरं (அக்ஷரம்) மாறுபாடு அற்ற लक्ष्यं (லக்ஷ்யம்) குறியாகிய பிரஹ்மத்தை विद्धि (வித்தி) அறிவாயாக.
यदुक्तं धनुरादि, तदुच्यते —
முன்மந்திரத்தில் கூறப்பட்ட வில் முதலானவைகளை விளக்குவது இந்த மந்திரம்.
प्रणवो धनुः शरो ह्यात्मा ब्रह्म तल्लक्ष्यमुच्यते ।
अप्रमत्तेन वेद्धव्यं शरवत्तन्मयो भवेत् ॥ ४ ॥
प्रणवः ओङ्कारः धनुः । यथा इष्वासनं लक्ष्ये शरस्य प्रवेशकारणम् , तथा आत्मशरस्याक्षरे लक्ष्ये प्रवेशकारणमोङ्कारः । प्रणवेन ह्यभ्यस्यमानेन संस्क्रियमाणस्तदालम्बनोऽप्रतिबन्धेनाक्षरेऽवतिष्ठते । यथा धनुषा अस्त इषुर्लक्ष्ये । अतः प्रणवो धनुरिव धनुः । शरो ह्यात्मा उपाधिलक्षणः पर एव जले सूर्यादिवदिह प्रविष्टो देहे सर्वबौद्धप्रत्ययसाक्षितया ; स शर इव स्वात्मन्येवार्पितोऽक्षरे ब्रह्मणि ; अतः ब्रह्म तत् लक्ष्यमुच्यते लक्ष्य इव मनः समाधित्सुभिरात्मभावेन लक्ष्यमाणत्वात् ।
प्रणवः (ப்ரணவ:) ப்ரணவமாகிய ஓம்காரம் धनुः (தனு:) வில்லாகும். அதாவது எவ்வாறு குறியில் அம்பை நுழைவிப்பதற்கு வில் காரணமோ, அவ்வாறே ஆன்மாவாகிற அம்பிற்கு குறியாகிய பிரஹ்மத்தில் நுழைவதற்குக் காரணமானது பிரணவம் எனப்படும் ஓம்காரமாகும். இடைவிடாது அப்பியாசம் செய்யப்படும் பிரணவத்தால் அதைப் பற்றியவனாகி, எவ்வித இடையூறும் அற்றவனாகி வில்லினால் எய்யப்பட்ட அம்புக்குறியை அடைவது போல் பிரஹ்மத்தோடு ஒன்றி விடுகிறான். ஆகையால் பிரணவமானது அம்புபோல் அம்பாகும். ஐலத்தில் சுரியன் முதலிய பிரதிபிம்பம்போல் शरो हि आत्मा (சரோஹி ஆத்மா) உபாதிகளுடன் கூடிய ஆத்மாவாகிய அம்பு இங்கு தேஹத்தில் நுழைந்தவனாகி புத்தியில் பிரதிபலிக்கும் எல்லா விஷயங்களுக்கும் சாக்ஷியாக விளங்குகிறான். அவன் அம்புபோல் அக்ஷரபிரஹ்மமாகிய தன்னில் எய்யப்படுகிறான். லக்ஷியம் போல் (அதாவது குறியைப்போல்) மனதை ஒருமுகப்படுத்தியவர்கள் ஆத்மாவினிடத்திலேயே குறியாக ஒன்றிவிடுவதால் ब्रह्म तत् लक्ष्यमुच्यत (ப்ரஹ்ம தல்லக்ஷ்யமுச்யதே) ப்ரஹ்மம் அதற்கு (ஓம்காரத்திற்கு) குறியாகக் கூறப்படுகிறது.
तत्रैवं सति अप्रमत्तेन बाह्यविषयोपलब्धितृष्णाप्रमादवर्जितेन सर्वतो विरक्तेन जितेन्द्रियेणैकाग्रचित्तेन वेद्धव्यं ब्रह्म लक्ष्यम् । ततस्तद्वेधनादूर्ध्वं शरवत् तन्मयः भवेत् ; यथा शरस्य लक्ष्यैकात्मत्वं फलं भवति, तथा देहाद्यात्मताप्रत्ययतिरस्करणेनाक्षरैकात्मत्वं फलमापादयेदित्यर्थः ॥
இவ்வாறு இருப்பதால் अप्रमत्तेन (அப்ரமத்தேன) வெளிவிஷயங்களை அடைவதில் ஆசையோ, அல்லது மயக்கமோ அற்றவனாயும், எல்லாவற்றிலும் ஒழிவு பெற்றவனாயும், ஒருமுகப்படுத்தப்பட்ட மனத்தினனாயும் உள்ள சாதகனால் லக்ஷியமான பிரஹ்மமானது वेद्धव्यं (வேத்தவ்யம்) பிரஹ்மமாகிய பிரஹ்மம் அறியத்தக்கது ஆகும். இவ்வாறு அறியப்பட்டபின் அந்த சாதகன் शरवत् (சரவத்) அம்புபோல் तन्मयः (தன்மய:) லக்ஷ்யத்துடன் ஒன்றியவனாக அதாவது பிரஹ்மத்தில் லயித்தவனாக भवेत् (பவேத்) ஆவான். எவ்வாறு அம்பிற்கு லக்ஷியம் ஒன்றே தனக்கு பலம்ஆகிறதோ அவ்வாறே தேஹ முதலியவகைளில் ஆத்மா என்கின்ற புத்தியை திரஸ்கரிப்பதால் அந்த அக்ஷரரூபபிரஹ்மமே ஏகாத்மரூபபலம் ஆகிறது என்பது பொருள்.
अक्षरस्यैव दुर्लक्ष्यत्वात्पुनः पुनर्वचनं सुलक्षणार्थम् ।
அக்ஷரத்தை லக்ஷியம் செய்வது மிகக்கடினமானதால் சுலபமாக லக்ஷியம் செய்வதற்காக மறுபடியும், மறுபடியும் கூறப்படுகிறது.
यस्मिन्द्यौः पृथिवी चान्तरिक्षमोतं मनः सह प्राणैश्च सर्वैः ।
तमेवैकं जानथ आत्मानमन्या वाचो विमुञ्चथामृतस्यैष सेतुः ॥ ५ ॥
यस्मिन् अक्षरे पुरुषे द्यौः पृथिवी च अन्तरिक्षं च ओतं समर्पितं मनश्च सह प्राणैः करणैः अन्यैः सर्वैः, तमेव सर्वाश्रयमेकमद्वितीयं जानथ जानीत हे शिष्याः । आत्मानं प्रत्यक्स्वरूपं युष्माकं सर्वप्राणिनां च । ज्ञात्वा च अन्याः वाचः अपरविद्यारूपाः विमुञ्चथ विमुञ्चत परित्यजत । तत्प्रकाश्यं च सर्वं कर्म ससाधनम् । यतः अमृतस्य एष सेतुः, एतदात्मज्ञानममृतस्यामृतत्वस्य मोक्षस्य प्राप्तये सेतुरिव सेतुः, संसारमहोदधेरुत्तरणहेतुत्वात् ; तथा च श्रुत्यन्तरम् — ‘तमेव विदित्वाति मृत्युमेति नान्यः पन्था विद्यतेऽयनाय’ (श्वे. उ. ३ । ८) इति ॥
यस्मिन् (யஸ்மின்) எந்த அக்ஷரமாகிய பரமபுருஷனிடத்தில் द्यौः (த்யெள:) விண்ணுலகமும் पृथिवी (ப்ருதிவீ) பூமியும் अन्तरिक्षं च (அந்தரிக்ஷம்ச்ச) இடைவெளியும், सर्वैः प्राणैः सह (சர்வை: பிராணை: சஹ) எல்லாப்பிராணன்களும், மற்றகரணங்களுடனும் கூட मनश्च (மனச்ச) மனமும் ओतं (ஓதம்) வைக்கப்பட்டுள்ளது. तमेव (தமேவ) அதுவே எல்லாவற்றிற்கும் ஆஸ்ரயமாக உள்ள அந்த ஒன்றான அத்விதீயமான आत्मानं (ஆத்மானம்) ஆத்மாவை ஹே சிஷ்யர்களே ! அறிவீர்களாக. இவ்வாறு உங்களிடத்திலும், எல்லா பிராணிகளிடத்திலும் ப்ரத்யக் ஸ்வரூபமாய் உள்ள आत्मानं (ஆத்மானம்) ஆத்மாவை அறிந்து अन्याः वाचः (அன்யாவாச:) மற்ற அபரவித்யாரூபமான வாக்குகளையும், அவைகளால் பிரகாசப்படுத்தப்படும் எல்லா கர்ம சாதனங்களையும் विमुञ्चथ (விமுஞ்சத்த) விட்டொழிப்பீர்களாக. एषः (ஏஷ:) இதுவே अमृतस्य (அம்ருதஸ்ய) மோக்ஷத்தை அடைவதற்கான सेतुः (சேது:) பாலமாகும். அதாவது ஞானமாகும். அந்த ஞானமாகிய சேதுவானது சம்ஸாரம் என்கின்ற கடலைத் தாண்டுவதற்குக் காரணமாகும். இதுவே மற்ற சுருதியிலும் கூறப்பட்டுள்ளது. ‘तमेव विदित्वाति मृत्युमेति नान्यः पन्था विद्यतेऽयनाय’। அதை அறிந்து மரணத்தை தாண்டுகிறான். இதைத் தவிர வேறுவழியில்லை.
किञ्च,
மேலும்
अरा इव रथनाभौ संहता यत्र नाड्यः स एषोऽन्तश्चरते बहुधा जायमानः ।
ओमित्येवं ध्यायथ आत्मानं स्वस्ति वः पाराय तमसः परस्तात् ॥ ६ ॥
अरा इव यथा रथनाभौ समर्पिता अराः, एवं संहताः सम्प्रविष्टाः यत्र यस्मिन्हृदये सर्वतो देहव्यापिन्यः नाड्यः, तस्मिन्हृदये बुद्धिप्रत्ययसाक्षिभूतः स एषः प्रकृत आत्मा अन्तः मध्ये चरते चरति वर्तते । पश्यन् शृण्वन्मन्वानो विजानन् बहुधा अनेकधा क्रोधहर्षादिप्रत्ययैर्जायमान इव जायमानः अन्तःकरणोपाध्यनुविधायित्वात् ; वदन्ति हि लौकिका हृष्टो जातः क्रुद्धो जात इति । तमात्मानम् ओमित्येवम् ओङ्कारालम्बनाः सन्तः यथोक्तकल्पनया ध्यायथ चिन्तयत ।
यत्र (யத்ர) எந்த ஹ்ருதயத்தில் எப்பொழுதும் தேஹம் முழுவதும் வியாபித்திருக்கின்ற नाड्यः (நாட்ய:) நாடிகள் रथनाभौ अराः इव (ரதநாபெள அரா இவ) தேர் குடத்தில் ஆராக்கள் போல் संहताः (சம் ஹதா:) நுழைந்தவைகளாக இருக்கின்றன. (तत्र) அந்த ஹ்ருதயத்தில் புத்தியில் கிரஹிக்கப்படும் (ப்ரதிபலிக்கும்) விஷயங்களுக்கு ஸாக்ஷிபூதமாய் விளங்கும் स एषः (ச ஏஷ) அந்த இந்த ப்ரக்ருத ஆத்மா अन्तः (அந்த:) மத்தியில் चरते (ச்சரதே) இருக்கிறான். बहुधा जायमानः (பஹீதா ஐாயமான:) பார்த்துக் கொண்டும், கேட்டுக்கொண்டும், சிந்தித்துக் கொண்டும், அறிந்து கொண்டும், இவ்வாறான கோபம், மகிழ்ச்சி போன்ற பாவப்பிரத்யயங்களான அந்தக் கரண உபாதிகளைப் பின்பற்றி பலவாராக உண்டானவன் போல் இருப்பதால் உலகோர் மகிழ்வடைந்தவனாக ஆனான். கோபமுற்றவனாக ஆனான் என்று கூறுகின்றனர். तम् आत्मानं (தம் ஆத்மானம்) அத்தகைய இந்த ஆத்மாவை ओमित्येवम् (ஓமித்யேவம்) ஓம் என்ற பிரணவத்தைப் பற்றியவர்களாகக் கொண்டு முன்பு கூறிய கல்பனைப்படி (த்யாயத) சிந்திப்பீர்களாக.
उक्तं च वक्तव्यं शिष्येभ्य आचार्येण जानता । शिष्याश्च ब्रह्मविद्याविविदिषुत्वान्निवृत्तकर्माणो मोक्षपथे प्रवृत्ताः । तेषां निर्विघ्नतया ब्रह्मप्राप्तिमाशास्त्याचार्यः — स्वस्ति निर्विघ्नमस्तु वः युष्माकं पाराय परकूलाय ; कस्य ? अविद्यातमसः परस्तात् ; अविद्यारहितब्रह्मात्मस्वरूपगमनायेत्यर्थः ॥
என்று இவ்வாறாக ப்ரஹ்ம நிஷ்ட்டரான ஆச்சாா்யரால் முமூட்சுக்களான சீடர்களின் பொருட்டு கூறப்பட வேண்டியது கூறப்பட்டது. சிஷ்யர்கள் பிரஹ்ம வித்தையை அறிவதில் இச்சை உடையவர்களாய் கர்மாக்களில் இருந்து விடுபட்டு மோக்ஷமார்க்கத்தில் பிரவிர்த்திக்கலாயினர். மேலும் அவர்கள் இடையூரின்றி பிரஹ்மத்தை அடைய ஆச்சாரியர் ஆசி கூறுகிறார். அவித்யா ஆகிய तमसः (தமஸ:) தமஸைக் காட்டிலும் परस्तात् (பரஸ்தாத்) மேலானதை पाराय (பாராய) அறிவதற்கு அதாவது அவித்யா அற்றப்ரஹ்மாத்ம ஸ்வரூபத்தை அடைவதற்கு वः (வ:) உங்களுக்கு स्वस्ति (ஸ்வஸ்தி) இடையூறு அற்ற நன்மை உண்டாகுக.
योऽसौ तमसः परस्तात्संसारमहोदधिं तीर्त्वा गन्तव्यः परविद्याविषयः, स कस्मिन्वर्तत इत्याह —
எந்தப் பொருள் அவித்தை எனப்படும் இருளுக்கு அப்பாற்பட்டதும், பரவித்யா விஷயமானதும், பிறவிப்பெருங்கடலைக்கடந்து அடைய வேண்டியதும் ஆகுமோ அது எதில் உள்ளது என்பதனை விளக்குகிறது.
यः सर्वज्ञः सर्वविद्यस्यैष महिमा भुवि ।
दिव्ये ब्रह्मपुरे ह्येष व्योमन्यात्मा प्रतिष्ठितः
मनोमयः प्राणशरीरनेता प्रतिष्ठितोऽन्ने हृदयं संनिधाय ।
तद्विज्ञानेन परिपश्यन्ति धीरा आनन्दरूपममृतं यद्विभाति ॥ ७ ॥
यः सर्वज्ञः सर्ववित् व्याख्यातः । तं पुनर्विशिनष्टि — यस्यैष प्रसिद्धो महिमा विभूतिः । कोऽसौ महिमा ? यस्येमे द्यावापृथिव्यौ शासने विधृते तिष्ठतः ; सूर्याचन्द्रमसौ यस्य शासनेऽलातचक्रवदजस्रं भ्रमतः ; यस्य शासने सरितः सागराश्च स्वगोचरं नातिक्रामन्ति ; तथा स्थावरं जङ्गमं च यस्य शासने नियतम् ; तथा ऋतवोऽयने अब्दाश्च यस्य शासनं नातिक्रामन्ति ; तथा कर्तारः कर्माणि फलं च यच्छासनात्स्वं स्वं कालं नातिवर्तन्ते, स एष महिमा ; भुवि लोके यस्य स एष सर्वज्ञ एवंमहिमा देवः । दिव्ये द्योतनवति सर्वबौद्धप्रत्ययकृतद्योतने ब्रह्मपुरे । ब्रह्मणो ह्यत्र चैतन्यस्वरूपेण नित्याभिव्यक्तत्वात् ; ब्रह्मणः पुरं हृदयपुण्डरीकं तस्मिन्यद्व्योम, तस्मिन्व्योमनि आकाशे हृत्पुण्डरीकमध्यस्थे प्रतिष्ठित इवोपलभ्यते ; न ह्याकाशवत्सर्वगतस्य गतिरागतिः प्रतिष्ठा वान्यथा सम्भवति ॥
यः (ய:) எவர் सर्वज्ञः (சர்வக்ஞ:) சர்வக்ஞரோ सर्ववित् (சர்வவித்) சர்வவித்தோ அவரை மறுபடியும் यस्य (யஸ்ய) அவருடைய एषः (ஏஷ) இந்த பிரசித்தமான महिमा (மஹிமா) விபூதியை விளக்கமாகக் கூறுகிறார். அந்த மஹிமை யாது? இந்த விண், மண் முதலான லோகங்கள் யாவும் எவருடைய கட்டளையால் இயங்குகிறதோ, எவருடைய கட்டளையால் கொள்ளிக்கட்டையின் சுழற்ச்சியைப்போல் இடைவிடாது சுரிய சந்திரர்கள் சுழல்கின்றனரோ, எவருடைய கட்டளையால் ஆறுகளும், கடல்களும், தங்கள் நிலையைக் கடக்காதவைகளாய் இயங்குகின்றனவோ, அவ்வாறே எவருடைய கட்டளையால் ஸ்தாவரஐங்கமங்கள் தங்களுடைய கட்டுப்பாடுகளை மீறாமல் இருக்கின்றனவோ, மேலும் எவருடைய நியமத்தால் ருதுக்களும், அயனங்களும், வர்ஷங்களும், தங்களுடைய வரைமுறைகளைக் கடப்பதில்லையோ, அதேபோல் எவருடைய கட்டளையால் கர்த்தாக்களும், கர்மாக்களும், அவைகளின் பலன்களும் தங்கள் தங்களுடைய காலத்தைக்கடப்பது இல்லையோ அது இவ்விபூதி என்ற மஹிமையாகும். भुवि (புவி) உலகத்தில் இந்த மஹிமை உடைய சர்வக்ஞானாகியதேவன் दिव्ये (திவ்யே) எல்லாப்பிராணிகளுடைய புத்திகளிலும் அந்த அந்த விஷயமாய் பிரகாசப்படுத்துகின்றதாயும் ब्रह्मपुरे (ப்ரஹ்மபுரே) இங்கு பிரஹ்மமானது சைதன்ய ஸ்வரூபமாய் எப்பொழும் அபிவியக்தமாய் (விளங்குவதாய்) இருப்பதால் பிரஹ்மத்தின் புரமாகிய ஹிருதய தாமரையில் உள்ள व्योम्नि (வ்யோம்னி) ஆகாயத்தில் அதாவது ஹிருதய புண்டரீகத்தின் மத்தியில் एष आत्मा (ஏஷ ஆத்மா) இந்த ஆத்மா प्रतिष्ठितः (ப்ரதிஷ்ட்டித:) நிலைபெற்றுள்ளது போல் காணப்படுகிறது. (நிலைபெற்றுள்ளது போல் ஏன் கூறப்பட்டது எனில்) ஆகாசம் போல் எங்கும் நிறைந்த ஆத்மாவிற்கு போதலோ, வருதலோ, நிலை பெறுதலோ சம்பவிக்காததால் அவ்வாறு கூறப்பட்டது.
स ह्यात्मा तत्रस्थो मनोवृत्तिभिरेव विभाव्यत इति मनोमयः, मनउपाधित्वात् । प्राणशरीरनेता प्राणश्च तच्छरीरं च तत्प्राणशरीरं तस्यायं नेता । अस्मात्स्थूलाच्छरीराच्छरीरान्तरं सूक्ष्मं प्रति प्रतिष्ठितः अवस्थितः अन्ने भुज्यमानान्नविपरिणामे प्रतिदिनमुपचीयमाने अपचीयमाने च पिण्डरूपेऽन्ने हृदयं बुद्धिं पुण्डरीकच्छिद्रे संनिधाय समवस्थाप्य ; हृदयावस्थानमेव ह्यात्मनः स्थितिः, न ह्यात्मनः स्थितिरन्ने ;
இந்த பரமாத்மாவானது मनोमयः (மனோமய:) மனதின் விருத்திகளால் பாவிக்கப்படுவதால் மனோமயனாயும், இவ்வாறு மனதை உபாதியாக்கிக் கொண்டமையால் प्राणशरीरः नेता (ப்ராணசரீர நேதா) பிராணணையும், சரீரத்தையும் நடத்திச் செல்பவனாயும், அதாவது பிராணனை ஸ்தூலசரீரத்தினின்றும், மற்றொரு ஸ்தூல சரீரத்திற்கு கொண்டுசெல்பவனாயும் अन्ते (அன்னே) சாப்பிட்ட அன்னத்தின் பரிணாமத்தால் தினமும் பெருகுவதும், குறைவதுமாய் உள்ள பிண்டரூபமான அன்னத்தில் (ஸ்தூலசரீரத்தில்) हृदयं (ஹ்ருதயம்) ஹிருதயகமலத்தின் மத்தியில் புத்தியை வைத்து அதில் ஆத்மாவை संनिधाय (சந்நிதாய) பாவிக்க வேண்டும். ஹ்ருதயத்தில் நிலைத்தலே ஆத்மாவின் ஸ்திதியாகும். அன்னத்தில் (ஸ்தூலசரீரத்தில்) ஆத்மாவின் ஸ்திதி இல்லை.
तत् आत्मतत्त्वं विज्ञानेन विशिष्टेन शास्त्राचार्योपदेशजनितेन ज्ञानेन शमदमध्यानसर्वत्यागवैराग्योद्भूतेन परिपश्यन्ति सर्वतः पूर्णं पश्यन्ति उपलभन्ते धीराः विवेकिनः । आनन्दरूपं सर्वानर्थदुःखायासप्रहीणं सुखरूपम् अमृतं यद्विभाति विशेषेण स्वात्मन्येव भाति सर्वदा ॥
तत् அந்த ஆத்மதத்துவத்தை विज्ञानेन (விக்ஞானேன) அறிந்ததாலும் சாஸ்திர ஆசார்ய உபதேஸத்தால் உண்டான விசேஷமான ஞானத்தால் சமம், தமம், த்யானம், எல்லாவற்றையும் தியாகம் செய்தல், வைராக்கியம் இவைகளால் உண்டானதாலும் धीराः (தீரா:) தீரர்கள் எனப்படும் விவேகிகள் எல்லா அநர்த்தங்களும், துக்கங்களும் ஆயாசங்களும் அற்று यद् (யத்) எந்த अमृतं (அம்ருதம்) அம்ருதம் विभाति (விபாதி) விளங்குகிறதோ அதாவது விசேஷமாக தன்னுடைய ஆத்மாவிலேயே எப்பொழுதும் பிரகாசிக்கின்றதோ तत् (தத்) அந்த ஆனந்த ஸ்வரூபத்தை परिपश्यन्ति (பரிபச்யந்தி) எங்கும் நிறைந்ததாக காண்கின்றார்கள்.
अस्य परमात्मज्ञानस्य फलमिदमभिधीयते —
இந்த பரமாத்மஞானத்தினுடைய இப்பலத்தை விளக்குகிறார்.
भिद्यते हृदयग्रन्थिश्छिद्यन्ते सर्वसंशयाः ।
क्षीयन्ते चास्य कर्माणि तस्मिन्दृष्टे परावरे ॥ ८ ॥
भिद्यते हृदयग्रन्थिः अविद्यावासनामयो बुद्ध्याश्रयः कामः, ‘कामा येऽस्य हृदि श्रिताः’ (बृ. उ. ४ । ४ । ७), (का. उ. २ । ३ । १४) इति श्रुत्यन्तरात् । हृदयाश्रयोऽसौ, नात्माश्रयः । भिद्यते भेदं विनाशमुपयाति । छिद्यन्ते सर्वे ज्ञेयविषयाः संशयाः लौकिकानाम् आ मरणात् गङ्गास्रोतोवत्प्रवृत्ता विच्छेदमायान्ति । अस्य विच्छिन्नसंशयस्य निवृत्ताविद्यस्य यानि विज्ञानोत्पत्तेः प्राक्कृतानि जन्मान्तरे चाप्रवृत्तफलानि ज्ञानोत्पत्तिसहभावीनि च क्षीयन्ते कर्माणि, न त्वेतज्जन्मारम्भकाणि, प्रवृत्तफलत्वात् । तस्मिन् सर्वज्ञेऽसंसारिणि परावरे परं च कारणात्मना अवरं च कार्यात्मना तस्मिन्परावरे साक्षादहमस्मीति दृष्टे, संसारकारणोच्छेदान्मुच्यत इत्यर्थः ॥
हृदयग्रन्थिः (ஹ்ருதயக்ரந்தி:) அவித்யா வாசனையின் ஆதிக்கத்தால் புத்தியை ஆஸ்ரயித்துள்ள காமனைகள் (ஆசைகள்) யாவும் புத்தியை ஆஸ்ரியத்தவையே அன்றி ஆத்மாவை ஆஸ்ரியத்தவைகள் அல்ல. அந்த அவித்தையாகிற முடிச்சு भिद्यते (பித்யதே) நாசத்தை அடைகின்றன. ‘कामा येऽस्य हृदि श्रिताः’ என்று வேறு ஒரு ஸ்ருதியிலும் காண்பிக்கப்பட்டுள்ளது. सर्व संशयाः (சர்வசம்சயா:) லெளகீகத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரணம் வரை கங்கையின் புனல்போல், இடைவிடாது பெருக்கெடுத்துக் கொண்டிருக்கும் அறியத்தக்க எல்லாவிஷயங்களிலும் ஏற்படும் சந்தேஹங்கள் யாவும் छिद्यन्ते (சித்யந்தே) அறுக்கப்படுகின்றன அல்லது துண்டிக்கப்படுகின்றன. अस्य (அஸ்ய) இவ்வாறு சந்தேஹங்களற்றவனாயும், அவித்தை நீங்கியவனாயும் உள்ள ஸாதகனின் कर्माणि च (கர்மாணி ச்ச) ஆன்மஞானம் பெறுவதற்கு முன்பும், முற்பிறவிகளிலும், ஞானம் அடையும் காலத்தில் உண்டானவைகளாயும் உள்ள கர்மாக்கள் யாவும் क्षीयन्ते (க்ஷீயந்தே) நாசமடைகின்றன. ஆனால் ஐன்ம ஆரம்பத்திற்கான கர்மா பலத்தைக் கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதால் பலனைக் கொடுக்காமல் நாசமடைவதில்லை. तस्मिन् (தஸ்மின்) சர்வக்ஞனாயும், அசம்சாரியாயும், உள்ள परावरे பராவரே காரணாத்மகமாய் பரமாயும் காரியாத்மகமாய் அபரமாயும் உள்ள அந்த பராமார்த்த சொரூபத்தில் दृष्टे (த்ருஷ்டே்ட) (सति) அனுபவபூர்வமாய் நானே இருக்கிறேன் என்று அறிந்தபோது (தன்னில் தன்னை கண்டபோது) முற்கூறப்பட்டவைகள் யாவும் நாசமடைகின்றன என்பது பொருள்.
उक्तस्यैवार्थस्य सङ्क्षेपाभिधायका उत्तरे मन्त्रास्त्रयोऽपि —
இதுவரை கூறிய அர்த்தத்தையே வரும் மூன்று மந்திரங்களால் சுருக்கிக் கூறுகிறார்.
हिरण्मये परे कोशे विरजं ब्रह्म निष्कलम् ।
तच्छुभ्रं ज्योतिषां ज्योतिस्तद्यदात्मविदो विदुः ॥ ९ ॥
हिरण्मये ज्योतिर्मये बुद्धिविज्ञानप्रकाशे परे कोशे कोश इवासेः । आत्मस्वरूपोपलब्धिस्थानत्वात्परं तत्सर्वाभ्यन्तरत्वात् , तस्मिन् विरजम् अविद्याद्यशेषदोषरजोमलवर्जितं ब्रह्म सर्वमहत्त्वात्सर्वात्मत्वाच्च निष्कलं निर्गताः कला यस्मात्तन्निष्कलं निरवयवमित्यर्थः ।
हिरण्मये (ஹிரண்மயே) ஐ்யோதிர்மயமானதும், புத்திவிருத்திகளை பிரகாசிப்பதாயும் உள்ள परे (பரே) எல்லோர் உள்ளிலும் உறைந்திருப்பதுமான कोशे- கத்தியின் உரைபோன்ற தான பரமார்த்தஸ்வருபத்தை அடைவதற்கான ஸ்தானத்தில் (ஹ்ருதய புண்டரீகத்தில்) அவித்தை முதலிய எல்லா தோஷங்களற்றதாயும், ரஐஸ், அழுக்குகள் அற்றதாயும் உள்ள ब्रह्म (ப்ரம்ம) பிரஹ்மம் விளங்குகிறது. सर्वमहत्त्वात् (சர்வமஹத்வாத்) எல்லாவற்றையும் விடமிகப்பெரியதாயும் सर्वात्मत्वात् (சர்வாத்மத்வாத்) சர்வாத்மாவாயும் இருப்பதால் பிரஹ்மம். மேலும் निष्कलं (நிஷ்கலம்) கலை அற்றதால் நிஷ்கலமாயும், நிரவயவமாயும் பிரஹ்மம் இருக்கிறது.
यस्माद्विरजं निष्कलं च अतः तच्छुभ्रं शुद्धं ज्योतिषां सर्वप्रकाशात्मनामग्न्यादीनामपि तज्ज्योतिः अवभासकम् । अग्न्यादीनामपि ज्योतिष्ट्वमन्तर्गतब्रह्मात्मचैतन्यज्योतिर्निमित्तमित्यर्थः । तद्धि परं ज्योतिर्यदन्यानवभास्यमात्मज्योतिः, तत् यत् आत्मविदः आत्मानं स्वं शब्दादिविषयबुद्धिप्रत्ययसाक्षिणं ये विवेकिनो विदुः विजानन्ति, ते आत्मविदः तद्विदुः, आत्मप्रत्ययानुसारिणः । यस्मात्परं ज्योतिस्तस्मात्त एव तद्विदुः, नेतरे बाह्यार्थप्रत्ययानुसारिणः ॥
எதனால் பிரஹ்மம் பிரகாசமாயும், நிஷ்கலமாயும் இருக்கிறதோ அதனால் तच्छुभ्रं (தச்சுப்ரம்) அது சுத்தமானது. ज्योतिषां (ஐ்யோதிஷாம்) பிரகாசிக்கக் கூடிய அக்னி முதலியவைகளைக் காட்டிலும் तत् ज्योतिः (தத் ஐ்யோதி:) பிரகாசமானது, பிரகாசிக்கச் செய்கிறது. அக்னி முதலானவைகளை பிரகாசிக்கச் செய்யும் எல்லாவற்றிலும் ஊடுறுவி இருக்கும் ப்ரஹ்ம சைதன்யஐ்யோதியாகும் என்பதால் அதுவே நிமித்தமாகும் என்பது பொருள். அதுவே பரம்ஐ்யோதி. எது மற்றவகைளை பிரகாசிக்கச்செய்கிறதோ அது ஆத்மஐ்யோதியாகும். तघादात्मविदः (தத்யதாத்மவித:) அந்த எந்த ஆத்மாவை அறிந்தவர்கள் சப்தாதி விஷயங்களை அறியும் புத்திபிரத்தியயங்களுக்கு சாக்ஷியாக விளங்கும் தன்னை அறிந்த விவேகிகள் विदुः (விது:) அதை அறிவர். அவர்கள் ஆத்மாவை அறிந்தவர்கள். அதை அறிந்தவர்கள் ஆத்மபிரத்யயத்தை அனுசரிப்பவர்களாய் இருப்பர். ஏன்எனில் பரம்ஐ்யோதியாய் இருப்பதால் அவர்களே அறிந்தவர்கள். மற்ற வெளிபிரத்யயங்களுக்கு அனுசரணையாய் இருப்பவர்கள் அறிந்தவர்கள் அல்ல.
कथं तत् ‘ज्योतिषां ज्योतिः’ इति, उच्यते —
அது எவ்வாறு பிரகாசங்களுக்கு எல்லாம் பிரகாசம் என்பதைக் கூறுகிறார்.
न तत्र सूर्यो भाति न चन्द्रतारकं नेमा विद्युतो भान्ति कुतोऽयमग्निः ।
तमेव भान्तमनुभाति सर्वं तस्य भासा सर्वमिदं विभाति ॥ १० ॥
न तत्र तस्मिन्स्वात्मभूते ब्रह्मणि सर्वावभासकोऽपि सूर्यो भाति, तद्ब्रह्म न प्रकाशयतीत्यर्थः । स हि तस्यैव भासा सर्वमन्यदनात्मजातं प्रकाशयति ; न तु तस्य स्वतः प्रकाशनसामर्थ्यम् । तथा न चन्द्रतारकम् , न इमाः विद्युतः भान्ति, कुतोऽयमग्निः अस्मद्गोचरः ।
तत्र (தத்ர) அந்த ஆத்மபூதமான பிரஹ்மத்தில் எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்யும் சுரியனும் न भाति (ந பாதி) பிரகாசிப்பது இல்லை. அதாவது எல்லாவற்றையும் ப்ரகாசப்படுத்தும் சுரியன் அந்தப் பரப்ரஹ்மத்தைப் பிரகாசப்படுத்துவது இல்லை. அந்த சுரியனானவன் அந்தப்பிரஹ்மத்தின் ப்ரகாசத்தைக் கொண்டே மற்ற எல்லா அநாத்ம பதார்த்தங்களையும் பிரகாசிக்கச் செய்கிறது. அதற்கு சுயமாக ப்ரகாசப்படுத்தும் சாமர்த்தியம் இல்லை. அவ்வாறே न चन्द्रतारकम (ந சந்த்ரதாரகம்) சந்திர நக்ஷத்திரங்களுக்கும் அந்த ப்ரஹ்மத்தைப் பிரகாசப்படுத்தும் தன்மையில்லை. नेमा विद्युतः இந்த மின்னல்களும் न भाति (ந பாந்தி) பிரகாசப்படுத்துவது இல்லை. कृतः अयम् अग्निः? (குத : அயம் அக்னி:) எவ்வாறு நம் கண்களுக்கு புலப்படும் அக்னி (பிரஹ்மத்தைப்) பிரகாசப்படுத்தும்.
किं बहुना । यदिदं जगद्भाति, तत्तमेव परमेश्वरं स्वतो भारूपत्वात् भान्तं दीप्यमानम् अनुभाति अनुदीप्यते । यथा जलमुल्मुकादि वा अग्निसंयोगादग्निं दहन्तमनुदहति, न स्वतः ; तद्वत्तस्यैव भासा दीप्त्या सर्वमिदं सूर्यादि जगद्विभाति ।
அதிகம் கூறுவானேன். எதனால் இந்த ஐகத்தானது ப்ரகாசிக்கிறதோ அது ஸ்வயம் பிரகாசமாய் இருப்பதால் भान्तं (பாந்தம்) பிரகாசித்துக் கொண்டிருக்கும் तमेव (தமேவ) அந்த பரமேஸ்வரனை अनुभाति (அனுபாதி) ஆஸ்ரயித்து எல்லாம் பிரகாசிக்கின்றன. எவ்வாறு ஐலம், அங்காராகம் முதலியவைகள் அக்னியின் சம்யோகத்தால் அக்னி போல் சுடாகிறதோ மற்றும் அவைகளுக்கு சுயமாக தஹிக்கும் தன்மை இல்லையோ அவ்வாறே तस्य भासा (தஸ்ய பாசா) அதனுடைய ப்ரகாசத்தால் (அந்தபரமேஸ்வரனுடைய பிரகாசத்தால்) सर्वमिदं (சர்வமிதம்) சுரியன் முதலான ஐகத் विभाति (விபாதி) பிரகாசிக்கின்றது.
यत एवं तदेव ब्रह्म भाति च विभाति च कार्यगतेन विविधेन भासा ; अतस्तस्य ब्रह्मणो भारूपत्वं स्वतोऽवगम्यते । न हि स्वतोऽविद्यमानं भासनमन्यस्य कर्तुं शक्नोति । घटादीनामन्यावभासकत्वादर्शनात् भारूपाणां चादित्यादीनां तद्दर्शनात् ॥
எதனால் இவ்வாறோ அந்த ப்ரஹ்மமே தானே பிரகாசிக்கிறது. மற்றவற்றைப் பிரகாசிக்கவும் செய்கிறது. காரியரூபமாய் விதிவிதமாய் விசேஷரூபமாய் பிரகாசித்துக் கொண்டிருக்கிறதால் அந்த பிரஹ்மத்தினுடைய பிரகாசிக்கும் தன்மை ஸ்வயமாக பிரகாசிக்கும் தன்மை இல்லாமல் மற்றவற்றை பிரகாசிக்கச் செய்யமுடியாது என்பது கட முதலியவைகள் மற்றவைகளை பிரகாசிக்கச் செய்யமுடியாததையும், அவ்வாறே சுரியன் முதலியவைகளிடத்தில் ப்ரகாசிப்பதையும் பிரகாசிக்கச் செய்வதையும் பார்க்கிறோம்.
यत्तज्ज्योतिषां ज्योतिर्ब्रह्म, तदेव सत्यम् ; सर्वं तद्विकारः वाचारम्भणं विकारो नामधेयमात्रमनृतमितरदित्येतमर्थं विस्तरेण हेतुतः प्रतिपादितं निगमनस्थानीयेन मन्त्रेण पुनरुपसंहरति —
எந்த அந்த ப்ரஹ்மம் உள்ளதோ அது ஐ்யோதிகளுக்கெல்லாம் ஐ்யோதி. அதுவே சத்தியம். எல்லாம் அதனுடைய விகாரமே. வாக்கின் ஆரம்பமும் விகாரமும் நாமரூபமாத்திரம். விகாரத்தைக் காட்டிலும் வேறானது அம்ருதம். ஆகையால் விஸ்தாரமாக காரணத்துடன் விளக்குவதற்கு உறுதியாக நிச்சயம் செய்வதற்கு உரிய ஸ்தானத்தில் உள்ள இந்த மந்திரத்தால் மறுபடியும் முடிக்கிறார்.
ब्रह्मैवेदममृतं पुरस्ताद्ब्रह्म पश्चाद्ब्रह्म दक्षिणतश्चोत्तरेण ।
अधश्चोर्ध्वं च प्रसृतं ब्रह्मैवेदं विश्वमिदं वरिष्ठम् ॥ ११ ॥
ब्रह्मैव उक्तलक्षणम् , इदं यत् पुरस्तात् अग्रेऽब्रह्मेवाविद्यादृष्टीनां प्रत्यवभासमानं तथा पश्चाद्ब्रह्म तथा दक्षिणतश्च तथा उत्तरेण तथैवाधस्तात् ऊर्ध्वं च सर्वतोऽन्यदिव कार्याकारेण प्रसृतं प्रगतं नामरूपवदवभासमानम् । किं बहुना, ब्रह्मैवेदं विश्वं समस्तमिदं जगत् वरिष्ठं वरतमम् । अब्रह्मप्रत्ययः सर्वोऽविद्यामात्रो रज्ज्वामिव सर्पप्रत्ययः । ब्रह्मैवैकं परमार्थसत्यमिति वेदानुशासनम् ॥
கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய इदं (இதம்) இந்த अमृतं ब्रह्मैव (அம்ருதம் ப்ரஹ்மைவ) அழிவற்ற பிரஹ்மமே पुरस्तात् (புரஸ்தாத்) அவித்யா திருஷ்டி உடையவர்களுக்குப் பலவித நாமரூபங்களுடன் எதிரில் காட்சி அளிக்கிறது. அவ்வாறே पश्चात् ब्रुहा (பச்சாத் பிரஹ்ம) பின் புரத்திலும் பிரஹ்ம, दक्षिणतः उत्तरेण च (தக்ஷிணத: உத்தரேண ச்ச) தென்புறத்திலும் அல்லது வலப்புரத்திலும், வடபுறத்திலும் அல்லது இடது புறத்திலும் அவ்வாறே अधः ऊर्ध्वं (அத: ஊா்த்வம்:) கீழும், மேலும் இந்த பிரஹ்மமே. प्रसृतं (ப்ரச்ருதம்) எங்கும் (மற்றொன்றைப்போல்) காரிய ரூபமாய் நாமரூபங்களுடன் தோற்றமளிப்பதுபோல் விரிந்துள்ளது. அதிகம் கூறுவானேன் इदं विश्वं (இதம் விச்வம்) இந்த ஐகத் முழுவதும் वरिष्ठं ब्रह्मैव (வரிஷ்ட்ட ப்ரஹ்மைவ) இந்த சிறந்த ப்ரஹ்மமே அவைகளில் பிரஹ்ம பாவனையின்றி, நாமரூபங்களோடு கூடிய பேத பாவனை ஏற்படுவது கயிற்றில் பாம்பு தோன்றுவது போன்று அவித்தையால் ஏற்பட்டது ஆகும். பிரஹ்மம் ஒன்றே உண்மையான சத்தியம் என்பது வேதங்களின் முடிவான கட்டளை ஆகும்.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ मुण्डकोपनिषद्भाष्ये द्वितीयं मुण्डकं समाप्तम् ॥
परा विद्योक्ता यया तदक्षरं पुरुषाख्यं सत्यमधिगम्यते । यदधिगमे हृदयग्रन्थ्यादिसंसारकारणस्यात्यन्तिको विनाशः स्यात् , तद्दर्शनोपायश्च योगो धनुराद्युपादानकल्पनयोक्तः । अथेदानीं तत्सहकारीणि सत्यादिसाधनानि वक्तव्यानीति तदर्थ उत्तरग्रन्थारम्भः । प्राधान्येन तत्त्वनिर्धारणं च प्रकारान्तरेण क्रियते । अत्यन्तदुरवगाहत्वात्कृतमपि तत्र सूत्रभूतो मन्त्रः परमार्थवस्त्ववधारणार्थमुपन्यस्यते —
எந்த (வித்தையினால்) அக்ஷரம் எனப்பட்டதும், புருஷன் எனப்பட்டதும், சத்தியமானதுமான பரம்பொருள் அடையப்படுமோ அந்த பராவித்தையானது இதுவரை உபதேசிக்கப்பட்டது. எதை அறிந்தால் சம்சார காரணமாகிய ஹிருதயக்ரந்தியானது மீண்டும் எழாமல் முற்றிலும் நாசமடையுமோ அந்த ஞானத்தின் உபாயமாகிய யோகமானது வில் முதலான உபாதான கல்பனை மூலமாக கூறப்பட்டது. அதற்கு உதவக்கூடிய சத்திய முதலான சாதனங்களைக் கூறப்பட வேண்டும் என்பதற்காக வரும் கிரந்தமானது ஆரம்பிக்கப்படுகிறது. தத்வஞானத்தை நிச்சயம் செய்யப்பட்ட போதும், அதை புரிந்துகொள்வதற்கு மிகக்கடினமாய் இருப்பதால் முக்கியமாக வேறு விதமாகக் கூறப்படுகிறது. அந்த பரமார்த்த சொரூபத்தை நன்றாகப் புரிந்து கொள்வதற்காக விளக்கப்படுகிறது.
द्वा सुपर्णा सयुजा सखाया समानं वृक्षं परिषस्वजाते ।
तयोरन्यः पिप्पलं स्वाद्वत्ति अनश्नन्नन्योऽभिचाकशीति ॥ १ ॥
द्वा द्वौ, सुपर्णा सुपर्णौ शोभनपतनौ सुपर्णौ, पक्षिसामान्याद्वा सुपर्णौ, सयुजा सयुजौ सहैव सर्वदा युक्तौ, सखाया सखायौ समानाख्यानौ समानाभिव्यक्तिकारणौ, एवंभूतौ सन्तौ समानम् अविशेषमुपलब्ध्यधिष्ठानतया, एकं वृक्षं वृक्षमिवोच्छेदसामान्याच्छरीरं वृक्षं परिषस्वजाते परिष्वक्तवन्तौ । सुपर्णाविवैकं वृक्षं फलोपभोगार्थम् ।
सयुजा (சயுஐா) எப்பொழுதும் இணைபிரியாது சேர்ந்திருப்பவைகளாயும் सखाया (சகாய) சமானமாய் கூறப்படுகிற சமான உருவமுடையவையும் நண்பர்களாயும் உள்ள द्वौ सुपर्णौ (த்வெள சுபர்ணெள) இருபறவைகள். இங்கு सुपर्णौ என்பதற்கு அழகிய இரு சிறகுகளை உடையது அல்லது பக்ஷிகளுக்கு சமானமான ஐீவன், ஈஸ்வரனைக் கொள்ள வேண்டும். समानवृक्षं (சமானவிருக்ஷம்) ஒரே மாதிரி தோற்றமளிக்கக்கூடிய தங்களை வெளிப்படுத்துக் கொள்ள காரணமான அதிஷ்டானமாக உள்ள वृक्षं (வ்ருக்ஷம்) ஒரே மரத்தை அதாவது மரத்தைப்போன்று நஷ்டமடையும் தன்மை சமானமானதால் சரீரம் விருஷம் (மரம்) இரு பக்ஷிகளும் பலபோகத்தின் பொருட்டு ஒரே மரத்தைப் பற்றிக் கொள்வதுபோல் (ஐீவேச்வரர்களும் இந்தசரீரத்தைப்) परिषस्वजाते (பரிஷஸ்வஐாதே) பற்றிக் கொண்டனர்.
अयं हि वृक्ष ऊर्ध्वमूलोऽवाक्शाखोऽश्वत्थोऽव्यक्तमूलप्रभवः क्षेत्रसंज्ञकः सर्वप्राणिकर्मफलाश्रयः, तं परिष्वक्तवन्तौ सुपर्णाविव अविद्याकामकर्मवासनाश्रयलिङ्गोपाध्यात्मेश्वरौ । तयोः परिष्वक्तयोः अन्यः एकः क्षेत्रज्ञो लिङ्गोपाधिवृक्षमाश्रितः पिप्पलं कर्मनिष्पन्नं सुखदुःखलक्षणं फलं स्वादु अनेकविचित्रवेदनास्वादरूपं स्वादु अत्ति भक्षयत्युपभुङ्क्ते अविवेकतः । अनश्नन् अन्यः इतरः ईश्वरो नित्यशुद्धबुद्धमुक्तस्वभावः सर्वज्ञः सत्त्वोपाधिरीश्वरो नाश्नाति । प्रेरयिता ह्यसावुभयोर्भोज्यभोक्त्रोर्नित्यसक्षित्वसत्तामात्रेण । स तु अनश्नन् अन्यः अभिचाकशीति पश्यत्येव केवलम् । दर्शनमात्रं हि तस्य प्रेरयितृत्वं राजवत् ॥
இந்த மரமோவெனில் மிக உத்கிருஷ்டமான பிரஹ்மத்தைத் தனக்கு அதிஷ்டானமாகக் (வேராகக்) கொண்டது. அதாவது ऊर्ध्वमूलः வேரை மேலே உடையதாகும். கீழ்நோக்கானவைகளான பிராணன் முதலானக் கிளைகளைப் போன்றதாகும். அதாவது अवाक् शखः கீழ் நோக்கிய கிளைகள் உடையதாகும். நாளை இம்மரத்தின் நிலையை அல்லது ஸ்தானத்தைக் கட்டுப்படுத்தமுடியாததால் இது अश्चत्थं (அச்வத்தம்) எனப்படும். மேலும் இம்மரத்தின் நிலையை அல்லது ஸ்தானத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் இது अश्चत्थं எனப்படும். மேலும் இம்மரம் அவ்யக்தம் எனப்படும் அவ்யாகிருதமாகிய மூலத்தினின்று தோன்றியது. அதாவது அவ்யாகிருதத்தை தனக்கு உபாதானமாகக் கொண்டதும், க்ஷதே்ரம் எனக்குறிப்பிடப்படுவதுமாகும். மேலும் சர்வ ப்ராணிகளுடைய கர்மபலனை ஆஸ்ரயித்ததுமாகும். இவர்களில் அவித்யா காமகர்மவாசனைகளுக்கு ஆஸ்ரயமான உபாதியைக் கொண்டவன் ஐீவன் என்றும், மாயையை உபாதியாகக்கொண்டவன் ஈஸ்வரன் எனவும் கூறப்பட்டனர். இத்தகைய ஐீவேஸ்வரர்கள் பக்ஷிகளைப் போல் ஒரே மரத்தைப்பற்றிக் கொண்டனர். तयोः (தயோ:) இவ்வாறு மரத்தைப் பற்றிக் கொண்ட இருவரில் अन्यः (அன்ய:) ஒருவன் அதாவது அவித்யா காமகர்மவாசனைகளை ஆஸ்ரயித்த லிங்கோ பாதியை உடைய க்ஷதே்ரக்ஞன் எனப்படும் ஆத்மா (ஐீவாத்மாவனவன்) पिप्पलं (பிப்பலம்) கர்மங்களினால் உண்டான சுக, துக்கரூபமான பலன்கள் स्वादु (ஸ்வாது) அநேகவித விசித்ர அனுபவத்திற்கு நன்மைத்தரக்கூடியது என்று கருதி அவிவேகத்தினால் अत्ति (அத்தி) உண்கிறான். अन्यः (அன்ய:) மற்றவனான நித்ய, சுத்த, புத்த, முக்த, ஸ்வபாவமுடையவனும், சர்வக்ஞனும், மாயையை உபாதியாகக் கொண்டவனுமான ஈஸ்வரன் अनश्नन् (அனச்நன்) முற்கூறப்பட்ட பழத்தை உண்ணாதவனாக அதாவது அந்த ஈஸ்வரன் போஐ்யம் எனப்படும் பழம் போக்தா எனப்படும் ஐீவன் என்ற இரண்டிற்கும் தன்னுடைய வித்தையினால் மாத்திரம் (ஸாக்ஷியாய் இருப்பதால் மாத்திரம்) ப்ரேரணை செய்பவனாகி अभिचाकशीति (அபிச்சாகசீதி) பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் அரசன் போல் பார்ப்பதால் மாத்திரம் பிரேரணை செய்கிறான் என்பது பொருள். (சாக்ஷி மாத்திரமாய் இருக்கிறான்.
तत्रैवं सति
அங்கு இவ்வாறு இருக்கும்பொழுது
समाने वृक्षे पुरुषो निमग्नोऽनीशया शोचति मुह्यमानः ।
जुष्टं यदा पश्यत्यन्यमीशमस्य महिमानमिति वीतशोकः ॥ २ ॥
समाने वृक्षे यथोक्ते शरीरे पुरुषः भोक्ता जीवोऽविद्याकामकर्मफलरागादिगुरुभाराक्रान्तोऽलाबुरिव सामुद्रे जले निमग्नः निश्चयेन देहात्मभावमापन्नोऽयमेवाहममुष्य पुत्रोऽस्य नप्ता कृशः स्थूलो गुणवान्निर्गुणः सुखी दुःखीत्येवंप्रत्ययो नास्त्यन्योऽस्मादिति जायते म्रियते संयुज्यते वियुज्यते च सम्बन्धिबान्धवैः,
समाने वृक्षे (சமானே விருக்ஷே) முற்கூறப்பட்டதான சரீரம் எனப்படும் ஒரே மரத்தில் पुरुषः (புருஷொ) (கா்மபல) போக்தாவான ஐீவன் அவித்யா காமகர்ம பல ராகம் முதலியவைகளின் மிகுந்த பாரத்தால் சமுத்திரஐலத்தில் ले निमग्नो (நிமக்னோ) தேஹாத்ம பாவத்தை நிச்சயமாக அடைந்தமையால், நானே இவன் (இந்த சரீரமான நான்), நான் இன்னாருடைய மகன், இன்னாருடைய பேரன், நான் இளைத்தவன், நான் பருத்தவன், நான் குணவான், நான் குணமற்றவன், நான் சுகீ, நான் துக்கீ என்ற நம்பிக்கையில் வலிமைபெற்றவனாகி இந்த சரீரத்தைக் காட்டிலும் மற்றொன்று இல்லை என்று (எண்ணி)ப் பிறக்கிறான். மரணமடைகிறான். சம்பந்திகளுடனும், பந்துக்களுடனும் இணைகிறான். பிரியவும் செய்கிறான்.
अतः अनीशया, न कस्यचित्समर्थोऽहं पुत्रो मम विनष्टो मृता मे भार्या किं मे जीवितेनेत्येवं दीनभावोऽनीशा, तया शोचति सन्तप्यते मुह्यमानः अनेकैरनर्थप्रकारैरविवेकितया अन्तश्चिन्तामापद्यमानः
अनीशया (அநீசயா) ஆதலால் ஏதும் முடியாதவனாகி (அதாவது தேஹாத்ம பாவத்தை அடைந்ததால்) நான் எதற்கும் சாமர்த்தியம் அற்றவன், என்மகன் இறந்துவிட்டான், என் மனைவியுமிறந்து விட்டாள். இனி ஐீவித்து என்ன பயன் என்று இவ்வாறு தீன பாவத்தை அடைதல் அநீசா. मुह्यमानः(முஹ்யமான:) மோஹத்தை அடைந்தவனாகி, அதாவது இத்தகைய அவிவேகத்தால் பலவிதமான அனர்த்தங்களுக்குள்ளாகி மனக்கவலையுற்று शोचति (சோச்சதி) துக்கத்தினால் தவிக்கிறான்.
स एवं प्रेततिर्यङ्मनुष्यादियोनिष्वाजवञ्जवीभावमापन्नः कदाचिदनेकजन्मसु शुद्धधर्मसञ्चितनिमित्ततः केनचित्परमकारुणिकेन दर्शितयोगमार्गः अहिंसासत्यब्रह्मचर्यसर्वत्यागशमदमादिसम्पन्नः समाहितात्मा सन् जुष्टं सेवितमनेकैर्योगमार्गैः कर्मिभिश्च यदा यस्मिन्काले पश्यति ध्यायमानः अन्यं वृक्षोपाधिलक्षणाद्विलक्षणम् ईशम् असंसारिणमशनायापिपासाशोकमोहजरामृत्य्वतीतमीशं सर्वस्य जगतोऽयमहमस्म्यात्मा सर्वस्य समः सर्वभूतस्थो नेतरोऽविद्याजनितोपाधिपरिच्छिन्नो मायात्मेति महिमानं विभूतिं च जगद्रूपमस्यैव मम परमेश्वरस्य इति ईशम्यदैवं द्रष्टा, तदा वीतशोकः भवति सर्वस्माच्छोकसागराद्विप्रमुच्यते, कृतकृत्यो भवतीत्यर्थः ॥ २ ॥
இவ்வாறு பலவிதமான புழு, பூச்சி, பறவை, விலங்கு, மனிதம் போன்ற பிறவிகளை இடைவிடாது அடைந்தவனாகிக்களைப்புறும் வேளையில் ஏதோ ஒரு சமயம் முந்திய பல பிறவிகளில் சிறுகச் சிறுகச் சம்பாதிக்கப்பட்ட சுகிருதம் (புண்யம்) சித்திசுத்தி இவைகளின் காரணமாய், மிகுந்தகருணை உள்ளம் படைத்த குருவின் தரிசனம் பெற்று, அவரால் தயவுடன் காண்பிக்கப்பட்ட யோகமார்க்கத்தைப் பின்பற்றி, அஹிம்ஸை, ஸத்தியம், பிரம்மசரியம், ஸர்வஸங்க பரித்யாகம், சமம், தமம் போன்றவைகளைப் பெற்று, இவைகளால் ஆன்மாவை நோக்கி ஒருமுகப்படுத்தப்பட்ட மனதினனாகி த்யானம் செய்தவர்களாய் यदा (யதா) எப்பொழுது जुष्टं (ஐுஷ்டம்) அநேக கர்மயோகத்தில் உள்ளவர்களான கர்மாக்களில் ஈடுபட்டவர்களால் சேவிக்கப்படும் अन्यं (அன்யம்) மற்றவனான, அதாவது சரீரமாகிய விருக்ஷத்தை உபாதியாகக் கொண்டவனைக் காட்டிலும் மாறுபட்டவனாகவும், பிறப்பற்றவனாகவும், பசிதாகம், சோகம், மோகம், முதுமை, மரணம், இவைகளைக் கடந்தவனான ईशम् (ஈசம்) ஈஸ்வரனை இந்த எல்லா ெஐகத்திற்கும், இந்த ஈஸ்வரனாகிய நானே ஆத்மாவாய் இருக்கிறேன். இத்தகைய நான் ஸர்வபூதங்களிலும் சமமாய் உள்ளேன். மற்ற அவித்தையினால் உண்டான உபாதிகளால் பரிச்சின்னமடைந்த மாயா ஆத்மாவின் விபூதி என்று எண்ணுவதில்லை. अस्य महिमानम् (அஸ்ய மஹிமானம்) அந்த மஹிமானம் அந்த ஐகத்துரூபமானது என்னுடைய பரமேஸ்வரனுடையதே इति (இதி) என்று तदा (யதா) எப்பொழுது இவ்வாறு பார்க்கிறானோ அப்பொழுது த்ருஷ்ட்டா (அப்படிப்பார்த்தவன்) वीतशोको भवति (வீதசோகோ பவதி) எல்லாவித துக்கங்களிலிருந்தும் விடுபட்டவனாகவும், பிறவிப்பயனை அடைந்தவனாகவும் ஆகிறான்.
अन्योऽपि मन्त्र इममेवार्थमाह सविस्तरम् —
(அ.கை) இந்த மந்திரமும் முன்மந்திரத்தில் கூறியதையே தெளிவு படுத்துகிறது.
यदा पश्यः पश्यते रुक्मवर्णं कर्तारमीशं पुरुषं ब्रह्मयोनिम् ।
तदा विद्वान्पुण्यपापे विधूय निरञ्जनः परमं साम्यमुपैति ॥ ३ ॥
यदा यस्मिन्काले पश्यः पश्यतीति विद्वान् साधक इत्यर्थः । पश्यते पश्यति पूर्ववत् , रुक्मवर्णं स्वयञ्ज्योतिःस्वभावं रुक्मस्येव वा ज्योतिरस्याविनाशि ; कर्तारं सर्वस्य जगतः ईशं पुरुषं ब्रह्मयोनिं ब्रह्म च तद्योनिश्चासौ ब्रह्मयोनिस्तं ब्रह्मयोनिं ब्रह्मणो वा अपरस्य योनिं स यदा चैवं पश्यति, तदा स विद्वान्पश्यः पुण्यपापे बन्धनभूते कर्मणी समूले विधूय निरस्य दग्ध्वा निरञ्जनः निर्लेपो विगतक्लेशः परमं प्रकृष्टं निरतिशयं साम्यं समतामद्वयलक्षणाम् ; द्वैतविषयाणि साम्यान्यतः अर्वाञ्च्येव, अतोऽद्वयलक्षणमेतत् परमं साम्यमुपैति प्रतिपद्यते ॥ ३ ॥
यदा (யதா) எப்பொழுது पश्यः (பச்ய:) வித்வானானஸாதகன் रुक्मवर्णं (ருக்மவர்ணம்) ஸ்வயம்ஐ்யோதிஸ்வபாவம் அல்லது ஸ்வர்ணத்தின் ஐ்யோதி போன்ற ஐ்யோதி. அது விநாசமற்றது. कर्तारं (கர்தாரம்) எல்லா ஐகத்திற்கும் கர்த்தாவாயும் ईशं (ஈசம்) எல்லா திறமைகளுக்கும் நிலைக்களமாக உள்ள ஈசனாயும், ब्रह्मयोनिं (ப்ரஹ்மயோனிம்) பிரஹ்மமாயும், எல்லாவற்றிற்கும் பிறப்பிடமாயும் அல்லது ஹிரண்ய கர்பனுக்குப் பிறப்பிடமாயும் உள்ள पुरुषं (புருஷம்) பரமபுருஷனை எப்பொழுது இவ்வாறு पश्यति (பச்யதி) பார்க்கிறானோ यदा (ததா) அப்பொழுது அந்த विद्वान् (வித்வான்) ஸாதகனானவித்வான் पुण्यपापे (புண்யபாபே) பந்தகாரணங்களான புண்யபாப கர்மங்களைவேறுடன் विधूय (விதூய) களைந்துவிட்டு निरञ्जनो (நிரஞ்ஐனோ) எந்தப்பற்றும் அற்றவனாகி அல்லது எந்த லோபமும் அற்றவனாகி परमं (பரமம்) மிகவும் உயா்ந்ததான साम्यम् (சாம்யம்) இரண்டாவதற்ற அத்துவைத நிலையை उपैति (உபைதி) அடைகிறான். த்வைத விஷயத்தின் சாமான்யத்தன்மை இந்த அத்வைத ரூபசாமான்யத்தினால் மிகவும் மேலானதாகிறது. ஆகையால் அந்த அத்வைதரூப மேலான சாம்யத்தை அடைகிறான்.
किञ्च,
மேலும்
प्राणो ह्येष यः सर्वभूतैर्विभाति विजानन्विद्वान्भवते नातिवादी ।
आत्मक्रीड आत्मरतिः क्रियावानेष ब्रह्मविदां वरिष्ठः ॥ ४ ॥
योऽयं प्राणस्य प्राणः पर ईश्वरः हि एषः प्रकृतः सर्वभूतैः सर्वैर्भूतैः ब्रह्मादिस्तम्बपर्यन्तैः ; इत्थम्भूतलक्षणा तृतीया । सर्वभूतस्थः सर्वात्मा सन्नित्यर्थः । विभाति विविधं दीप्यते । एवं सर्वभूतस्थं यः साक्षादात्मभावेनायमहमस्मीति विजानन् विद्वान् वाक्यार्थज्ञानमात्रेण न भवते न भवतीत्येतत् । किम् ? अतिवादी अतीत्य सर्वानन्यान्वदितुं शीलमस्येत्यतिवादी ।
यः (ய:) எந்த ஒரு ஸாதகனானவன் பிராணனுக்குப் प्राणाः (ப்ராண:) ப்ராணனாய் உள்ள एषः हि (ஏஷ: ஹி) இங்கு விளக்கப்படும் இந்த ஈஸ்வரனே सर्वैर्भूतैः (சர்வபூதை:) நான்முகன் பிரஹ்மா தொடங்கி ஸ்தம்பம் ஈறாக உள்ள எல்லா பூதங்களிலும், சர்வாத் மஸ்வரூபமாய் இருந்து கொண்டு विभाति (விபாதி) பலவாராகப் பிரகாசிக்கிறான் என்று ஆத்ம சாக்ஷாத்கார பாவத்தால் இப்பரம் பொருளாகவே நானிருக்கிறேன் என்று विजानन् (விஐானன்) வாக்கியார்த்த மாத்திரத்தை அறிந்த विद्वान् (வித்வான்) வித்வானானவன் अतिवादी (அதிவாதீ) அதைக் காட்டிலும் வேறு ஒன்று இருப்பதாக கூறுபவனாக (ஆத்மாவைத்தவிர மற்ற விஷயங்களை கூறுபவனாக) न भवते (ந பவதே) ஆகமாட்டான். மற்ற எல்லாவிஷயங்களையும் தாண்டி வாதிக்கும் சக்தி உடையவன் அதிவாதீ.
यस्त्वेवं साक्षादात्मानं प्राणस्य प्राणं विद्वान् , सोऽतिवादी न भवतीत्यर्थः । सर्वं यदा आत्मैव नान्यदस्तीति दृष्टम् , तदा किं ह्यसावतीत्य वदेत् । यस्य त्वपरमन्यद्दृष्टमस्ति, स तदतीत्य वदति । अयं तु विद्वान्नात्मनोऽन्यत्पश्यति ; नान्यच्छृणोति ; नान्यद्विजानाति । अतो नातिवदति ।
எவன் இவ்வாறு பிராணனுக்குப் பிராணன் சாக்ஷாத் ஆத்மாவே என்று அறிகிறானோ அவன் அதிவாதீ ஆகமாட்டான் என்பது பொருள். எப்பொழுதும் யாவும் ஆத்மாவான ப்ரஹ்மமே, அதைத்தவிர வேறு ஒன்று இல்லை என்று கண்டானோ அப்பொழுது அதைக் காட்டிலும் வேறாகக் எதைக் கூறுவான?். எவன் ஒருவன் அபரமான வேறு ஒன்றைப் பார்க்கிறானோ அவன் அதைக்காட்டிலும் வேறாகக்கூறுகிறான். ஆனால் ஸாக்ஷத்காரம் பெற்ற ஞானி ஆத்மாவைக் காட்டிலும் வேறு ஒன்றைப் பார்ப்பதில்லை, வேறு ஒன்றைக் கேட்பதும் இல்லை. வேறு ஒன்றை அறிவதும் இல்லை. எனவே அதைக் காட்டிலும் வேறு ஒன்று இருப்பதாகக் கூறுவதும் இல்லை.
किञ्च, आत्मक्रीडः आत्मन्येव क्रीडा क्रीडनं यस्य नान्यत्र पुत्रदारादिषु, स आत्मक्रीडः । तथा आत्मरतिः आत्मन्येव रती रमणं प्रीतिर्यस्य, स आत्मरतिः । क्रीडा बाह्यसाधनसापेक्षा ; रतिस्तु साधननिरपेक्षा बाह्यविषयप्रीतिमात्रमिति विशेषः । तथा क्रियावान् ज्ञानध्यानवैराग्यादिक्रिया यस्य सोऽयं क्रियावान् । समासपाठे आत्मरतिरेव क्रियास्य विद्यत इति बहुव्रीहिमतुबर्थयोरन्यतरोऽतिरिच्यते ।
மேலும் आत्मक्रीडः (ஆத்மக்ரீட:) தன்னிலேயே விளையாட்டை உடையவன். இத்தகையவன் மனைவி மக்களுடன் விளையாடுவது இல்லை, அவ்வாறே आत्मरतिः (ஆத்மரதி:) ஆத்மாவிலேயே (தன்னிலேயே) ப்ரீதி உடையவன், க்ரீடா என்பது வெளிசாதனங்களை அபேக்ஷிப்பது. ரதியோ சாதனங்களை அபேக்ஷிப்பது இல்லை. ஆனால் பாஹ்ய விஷயத்தில் ப்ரீதி மாத்திரம் இருத்தல் இரண்டிற்கும் உள்ள வித்தியாசமாகும். क्रियावान् (கிரியாவான்) ஞான, த்யான, வைராக்கிய முதலிய செயல்களோடு கூடியவனாயும் உள்ளவன். (आत्मरतिः क्रियावान्) ஆத்மரதி: க்ரியாவான் என்ற சமாசப்பாடப்படி ஆத்மரதி எவருடைய கிரியையோ என்ற அர்த்தப்படிப் பார்த்தால் பஹுவிரீஹி சமாசமாகும். மேலும் மதுப்பிரத்யயத்தின் அர்த்தம் அதிகமாகும் (தேவையற்றதாகும்.)
केचित्त्वग्निहोत्रादिकर्मब्रह्मविद्ययोः समुच्चयार्थमिच्छन्ति । तच्चैष ब्रह्मविदां वरिष्ठ इत्यनेन मुख्यार्थवचनेन विरुध्यते । न हि बाह्यक्रियावानात्मक्रीड आत्मरतिश्च भवितुं शक्तः । क्वचिद्बाह्यक्रियाविनिवृत्तो ह्यात्मक्रीडो भवति बाह्यक्रियात्मक्रीडयोर्विरोधात् । न हि तमःप्रकाशयोर्युगपदेकत्र स्थितिः सम्भवति ।
சிலர் அக்னிஹோத்திராதிகர்மம், பிரஹ்மவித்யா இவைகளின் சமுச்சயத்தை இச்சிக்கிறார்கள். ஆனால் एषः (ஏஷ) ब्रह्मविदां (ப்ரஹ்மவிதாம்) वरिष्ठः (வரிஷ்ட்ட) என்ற முக்யார்த்த வசனத்திற்கு விருத்தமாகிறது. பாஹ்யவிஷயங்களில் கிரியை உடையவன் ஆத்மக்கிரீட: ஆத்மரதி: ஆகியவைகளை அடையமுடியாது. வெளிகிரியை, ஆத்மகிரீடை இரண்டும் விநோதம் ஆவதால் வெளிக்கிரியைகளிலிருந்து விடுபட்டவனே ஆத்மகிரீடனாவான். இருளும் வெளிச்சமும் ஒரே சமயத்தில் இருப்பது என்பது சம்பவியாது.
तस्मादसत्प्रलपितमेवैतदनेन ज्ञानकर्मसमुच्चयप्रतिपादनम् । ‘अन्या वाचो विमुञ्चथ’ (मु. उ. २ । २ । ५) ‘संन्यासयोगात्’ (मु. उ. ३ । २ । ६) इत्यादिश्रुतिभ्यश्च । तस्मादयमेवेह क्रियावान्यो ज्ञानध्यानादिक्रियावानसम्भिन्नार्यमर्यादः संन्यासी । य एवंलक्षणो नातिवाद्यात्मक्रीड आत्मरतिः क्रियावान्ब्रह्मनिष्ठः, स ब्रह्मविदां सर्वेषां वरिष्ठः प्रधानः ॥
ஆகையால் இந்த ஞானகர்ம சமுச்சயத்தை பிரதிபாதனம் செய்ததை முன்கூறிய வசனங்களின் வாயிலாக அது அஸத் (பொருந்தாது) என்று சித்தமாகிறது. ‘अन्या वाचो विमुञ्चथ’ (அன்யவாச்ச விமுஞ்ச்சத) ‘संन्यासयोगात्’ (சந்நியாச யோகாத்) என்ற சுருதிவாக்கியங்களினாலும் தெரிகிறது. ஆகையால் இங்கு கிரியாவான் எவனோ அவன் ஞானதியானாதி கிரியை உடையவன் ஆரிய மரியாதையை பங்கம் செய்யாத சந்நியாசி. எவன் இந்தலக்ஷணமுடைய சந்நியாசி அதிவாதி ஆகமாட்டானோ. அவனே ஆத்மக்கிரீடன், ஆத்மரதி, கிரியாவான், பிரஹ்மநிஷ்ட்டன். அவனே பிரஹ்மத்தை அறிந்தவர்கள் எல்லோருள்ளும் மேலானவன். அதாவது ப்ரதானமானவன்.
अधुना सत्यादीनि भिक्षोः सम्यग्ज्ञानसहकारीणि साधनानि विधीयन्ते निवृत्तिप्रधानानि —
இப்பொழுது ஸாதகா்களுக்குத் தேவையான சம்யக்ஞானத்திற்கு உதவக்கூடிய சத்தியம் முதலான நிவிர்த்தியைப் பிரதானமாக உடைய சாதனங்கள் விதிக்கப்படுகின்றன.
सत्येन लभ्यस्तपसा ह्येष आत्मा सम्यग्ज्ञानेन ब्रह्मचर्येण नित्यम् ।
अन्तःशरीरे ज्योतिर्मयो हि शुभ्रो यं पश्यन्ति यतयः क्षीणदोषाः ॥ ५ ॥
सत्येन अनृतत्यागेन मृषावदनत्यागेन लभ्यः प्राप्तव्यः । किञ्च, तपसा हीन्द्रियमनएकाग्रतया । ‘मनसश्चेन्द्रियाणां च ह्यैकाग्र्यं परमं तपः’ (मो. ध. २५० । ४) इति स्मरणात् । तद्ध्यनुकूलमात्मदर्शनाभिमुखीभावात्परमं साधनं तपो नेतरच्चान्द्रायणादि । एष आत्मा लभ्य इत्यनुषङ्गः सर्वत्र । सम्यग्ज्ञानेन यथाभूतात्मदर्शनेन ब्रह्मचर्येण मैथुनासमाचारेण । नित्यं सर्वदा ; नित्यं सत्येन नित्यं तपसा नित्यं सम्यग्ज्ञानेनेति सर्वत्र नित्यशब्दोऽन्तर्दीपिकान्यायेनानुषक्तव्यः । वक्ष्यति च ‘न येषु जिह्ममनृतं न माया च’ (प्र. उ. १ । १६) इति ।
सत्येन (சத்யேன) உண்மையால், பொய்யை ஒழிப்பதாலும், பொய்பேசுதலை விடுவதாலும், மேலும் तपसा (தபசா) இந்திரியமனம் இவைகளின் ஏகாக்கிர தன்மையாலும் (ஒருமுகப்படுத்துதலாலும்) ‘मनसश्चेन्द्रियाणां च ह्यैकाग्र्यं परमं तपः’ (மன இந்திாிய ஏகாக்கிரம் மேலானதபஸ்) என்ற ஸ்மிருதி வாக்கியத்தாலும் அறிகிறோம். அதாவது இந்தத்தவமே ஆன்மாவைக்குறித்து தன்னை உள்முகப்படுத்துக் கொள்ள வேண்டிய ஸாதனம் ஆகுமேயன்றி சாந்தி ராயணம் முதலான விரதங்கள் அத்தகைய தவமான ஸாதனம் ஆகாது. हि एष आत्मा (ஹி ஏஷ ஆத்மா) சத்தியம் தபஸ் முதலானவைகளாலேயே இந்த ஆத்மா लभ्यः அடையத்தக்கதாகும். அடையத்தக்கது என்பது மற்ற சாதனங்களுக்கும் பொருந்தும். सम्यग्ज्ञानेन (சம்யக்ஞானேன) ஆத்மாவை உள்ளபடியே அறியும் ஞானம் ब्रह्मचर्येण (ப்ரஹ்மச்சா்யேன) பிரஹ்மச்சரியம் அதாவது புலனடக்கம் எப்பொழுதும் கடைபிடிக்கவேண்டியது. அவ்வாறே சத்தியம், தபஸ், சம்யக்ஞானம் ஆகியவையும் எப்பொழுதும் (नित्यं) என்பதை அந்தர் தீபிகாநியாயத்தால் பொருத்திக்கொள்ள வேண்டும். ‘न येषु जिह्ममनृतं न माया च’ எந்த புருஷர்களிடத்தில் சிறுமை, பொய் மேலும் மாயை இல்லை என்று இனிக்கூறப்போகிறார
क्वासावात्मा य एतैः साधनैर्लभ्य इत्युच्यते — अन्तःशरीरेऽन्तर्मध्ये शरीरस्य पुण्डरीकाकाशे ज्योतिर्मयो हि रुक्मवर्णः शुभ्रः शुद्धो यमात्मानं पश्यन्ति उपलभन्ते यतयः यतनशीलाः संन्यासिनः क्षीणदोषाः क्षीणक्रोधादिचित्तमलाः, स आत्मा नित्यं सत्यादिसाधनैः संन्यासिभिर्लभ्यत इत्यर्थः । न कादाचित्कैः सत्यादिभिर्लभ्यते । सत्यादिसाधनस्तुत्यर्थोऽयमर्थवादः ॥ ५ ॥
இந்த ஆத்மா யார்? எவர் இந்த ஆத்மாவை இந்த ஸாதனங்களால் அடைவர் என்பதைக் கூறுகிறார். क्षीणदोषाः (க்ஷீணதோஷா:) க்ரோதம் முதலிய சித்தமலங்கள் நீங்கப்பெற்ற यतयः (யதய:) முயற்சி உள்ள ஸாதகர்களான சந்நியாசிகள் अन्तःशरीरे (அந்த: சரீரே) சரீரத்தின் ஹிருதயகமலத்தின் மத்தியில் உள்ள ஆகாசத்தில் ज्योतिर्मयो हि (ஐ்யோதிர்மயோ ஹி) ஐ்யோதிர்மயமாயும் ஸ்வர்ண வர்ணமானதாயும் शुभ्रः (சுப்ர:) பரிசுத்தமயமாயும் உள்ள (யம்) ஆத்மாவைப் पश्यन्ति (பச்யந்தி) பார்க்கிறார்கள் அதாவது அடைகின்றனர். அந்த ஆத்மாவானது எப்பொழுதும் சத்யாதி சாதனங்களை கடைபிடிப்பவர்களான சந்நியாசிகளால் அடையப்படுகிறது. ஒருபொழுதும் சத்யாதி சாதனங்களை கடைபிடிப்பவர்களால் அடையமுடியாது. சத்யாதி ஸாதனங்கள் ஸ்துதியின் பொருட்டேயாகும். இது அர்த்தவாதம்.
सत्यमेव जयते नानृतं सत्येन पन्था विततो देवयानः ।
येनाक्रमन्त्यृषयो ह्याप्तकामा यत्र तत्सत्यस्य परमं निधानम् ॥ ६ ॥
सत्यमेव सत्यवानेव जयते जयति, नानृतं नानृतवादीत्यर्थः । न हि सत्यानृतयोः केवलयोः पुरुषानाश्रितयोः जयः पराजयो वा सम्भवति । प्रसिद्धं लोके सत्यवादिनानृतवाद्यभिभूयते न विपर्ययः ; अतः सिद्धं सत्यस्य बलवत्साधनत्वम् ।
सत्यमेव (சத்யமேவ) உண்மையை உடையவனே, அதாவது உண்மையைக்கைக் கொள்பவனே जयति (ஐயதி) வெற்றிபெறுவான். न अनृतं (ந அன்ருதம்) பொய்யை உடையவன் வெற்றிபெறுவது இல்லை. மனிதனை ஆஸ்ரயித்த வெறும் உண்மையோ, பொய்யோ இவைகளுக்கு வெற்றியோ, தோல்வியோ ஏற்படுவது இல்லை. உண்மை விளம்பியால் பொய்பேசுபவன் வெற்றிகொள்ளப்பட்டான் என்பதே உலகில் பிரசித்தமானது. இதில் வேறுபாடு இல்லை. இதனால் உண்மைக்கு வலுவான ஸாதனமாய் இருக்கும் தன்மை உறுதியாகிறது.
किञ्च, शास्त्रतोऽप्यवगम्यते सत्यस्य साधनातिशयत्वम् । कथम् ? सत्येन यथाभूतवादव्यवस्थया पन्थाः देवयानाख्यः विततो विस्तीर्णः सातत्येन प्रवृत्तः । येन पथा हि अक्रमन्ति आक्रमन्ते ऋषयः दर्शनवन्तः कुहकमायाशाठ्याहङ्कारदम्भानृतवर्जिता ह्याप्तकामाः विगततृष्णाः सर्वतो यत्र यस्मिन् , तत्परमार्थतत्त्वं सत्यस्य उत्तमसाधनस्य सम्बन्धि साध्यं परमं प्रकृष्टं निधानं पुरुषार्थरूपेण निधीयत इति निधानं वर्तते । तत्र च येन पथा आक्रमन्ति, स सत्येन वितत इति पूर्वेण सम्बन्धः ॥ ६ ॥
அவ்வாறே சாஸ்த்திரத்தாலும் ஸத்யத்தின் வலுவான ஸாதனத்தன்மை உறுதியாக நிலைநிறுத்தப்படுகிறது. எவ்வாறு? எனில் येन पथा हि (யே பதா ஹி) எந்த மார்க்கத்தால் आप्तकामाः (ஆப்தகாமா:) பொய், மாயை, பிடிவாதம், அஹங்காரம், தம்பம், வஞ்சகம் முதலியவைகள் நீங்கப் பெற்றமையால் ஆசை அற்றவர்களான ऋषयः ஆத்மதர்சனம் பெற்ற முனிவர்கள் अक्रमन्ति (ஆக்ரமந்தி) அந்த ப்ரஹ்மத்தை அடைகின்றனரோ அந்த देवयानः (தேவயான:) தேவயானம் எனப்படும் पन्थाः (பந்தா) மார்க்கமானது सत्येन (சத்யேன) உள்ளதை உள்ளபடி உணரும் சத்தியத்தால் विततः (விதத:) விஸ்தரிக்கப்பட்டதாய் உள்ளது. यत्र (யத்ர) எங்கு பரமாா்த்தமான உண்மை உள்ளதோ அங்கு सत्यस्य (சத்யஸ்ய) உத்தம சாதனமான ஸத்தியத்தால் ஸாதிக்கத்தக்க परमं (பரமம்) உயர்ந்த சத்தியவஸ்துவான பரம்பொருள் புருஷார்த்தரூபமாய் निधानं (நிதானம்) வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சத்தியத்தால் விரிந்துள்ள மார்க்கத்தால் முனிவர்கள் அப்பரம்பொருளை அடைகின்றனர் என்பது கருத்து.
किं तत्किन्धर्मकं च तदित्युच्यते —
அது என்ன? அதனுடைய தர்மம் என்ன? என்பதை அந்தமந்திரத்தால் விளக்கப்படுகிறது.
बृहच्च तद्दिव्यमचिन्त्यरूपं सूक्ष्माच्च तत्सूक्ष्मतरं विभाति ।
दूरात्सुदूरे तदिहान्तिके च पश्यत्स्विहैव निहितं गुहायाम् ॥ ७ ॥
बृहत् महच्च तत् प्रकृतं ब्रह्म सत्यादिसाधनेन सर्वतो व्याप्तत्वात् । दिव्यं स्वयम्प्रभमनिन्द्रियगोचरम् अत एव न चिन्तयितुं शक्यतेऽस्य रूपमिति अचिन्त्यरूपम् । सूक्ष्मादाकाशादेरपि तत्सूक्ष्मतरम् , निरतिशयं हि सौक्ष्म्यमस्य सर्वकारणत्वात् ; विभाति विविधमादित्यचन्द्राद्याकारेण भाति दीप्यते ।
तत् (தத்) சத்தியாதி சாதனங்களால் அடையப்பட்ட அந்த பரப்பிரஹ்மமானது எங்கும் வியாபித்துள்ளதால் बृहत् च (ப்ரஹத்ச் ச) பெரியது. दिव्यं (திவ்யம்) ஸ்வயம் பிரகாசமானது. அது இந்திரியங்களுக்கு அதனுடையரூபம் விஷயமாகாது. ஆகையால் அது अचिन्त्यरूपम् (அசிந்த்தியரூபம்) ஆகாசாதிகளைக் காட்டிலும் சுக்ஷ்மமானதால் அது सूक्ष्मतरम् (சுக்ஷ்மதரம்) எல்லாவற்றிற்கும் காரணமாய் இருப்பதால் எல்லாவற்றைக் காட்டிலும் சுக்ஷ்மமானதாகும். विभाति (விபாதி) அநேகவிதமாக சுரிய சந்திரர்கள் முதலிய ஆகாரமாய் விளங்குகிறது.
किञ्च, दूरात् विप्रकृष्टाद्देशात्सुदूरे विप्रकृष्टतरे देशे वर्ततेऽविदुषामत्यन्तागम्यत्वात्तदब्रह्म । इह देहे अन्तिके समीपे च, विदुषामात्मत्वात् । सर्वान्तरत्वाच्चाकाशस्याप्यन्तरश्रुतेः । इह पश्यत्सु चेतनावत्स्वित्येतत् , निहितं स्थितं दर्शनादिक्रियावत्त्वेन योगिभिर्लक्ष्यमाणम् । क्व ? गुहायां बुद्धिलक्षणायाम् । तत्र हि निगूढं लक्ष्यते विद्वद्भिः । तथाप्यविद्यया संवृतं सन्न लक्ष्यते तत्रस्थमेवाविद्वद्भिः ॥ ७ ॥
மேலும் तत् (தத்) அந்த ப்ரஹ்மம் दूरात् (தூராத்) வெகுதூரத்தினின்றும் सुदुरे (சுதூரே) அவித்வான்களுக்கு முற்றிலும் அடையமுடியாததால், அவர்களால் நெருங்க முடியாத வெகுதூரத்தில் உள்ளது. அவ்வாறே इह (இஹ) இந்ததேஹத்தில் अन्तिके च (அந்திகேச்ச) மிகசமீபத்தில் உள்ளது. அதாவது விவேகிகளுக்கு ஆத்மாவானதால் சமீபத்தில் உள்ளது. ஆகாயத்தைக் காட்டிலும் மிகசமீபத்தில் இருக்கிறது என்று சுருதியிலும் உள்ளது. इह एव पश्यत्सु (இஹ ஏவ பச்யத்சு) இங்கு சேதனத்துடன் விளங்குபவைகளில் அப்பரம்பொருள் गुहायां निहितं (குஹாயாம் நிஹிதம்) பார்த்தல் போன்ற செயல்களுடன் கூடிய தன்மையால், புத்தியில் உறைத்ததாக வித்வான்களால் காணப்படுகிறது. அப்படி தன்னுள்ளேயேயிருப்பினும் அவிவேகிகளுக்கு அவித்தையால் மூடப்பட்டதாகக் கொண்டு காணப்படுவது இல்லை.
पुनरप्यसाधारणं तदुपलब्धिसाधनमुच्यते —
மேலும் அப்பரம்பொருளை அடைவதற்கான அசாதாரணமான ஸாதனம் இம்மந்திரத்தில் விளக்கப்படுகிறது.
न चक्षुषा गृह्यते नापि वाचा नान्यैर्देवैस्तपसा कर्मणा वा ।
ज्ञानप्रसादेन विशुद्धसत्त्वस्ततस्तु तं पश्यते निष्कलं ध्यायमानः ॥ ८ ॥
यस्मात् न चक्षुषा गृह्यते केनचिदप्यरूपत्वात् नापि गृह्यते वाचा अनभिधेयत्वात् न चान्यैर्देवैः इतरेन्द्रियैः । तपसः सर्वप्राप्तिसाधनत्वेऽपि न तपसा गृह्यते । तथा वैदिकेनाग्निहोत्रादिकर्मणा प्रसिद्धमहत्त्वेनापि न गृह्यते । किं पुनस्तस्य ग्रहणे साधनमित्याह —
(இந்தப்பரம்பொருள்) எதனால் அரூபமாய் இருக்கிறதோ அதனால் ஒருவராலும் चक्षुषा (சக்ஷுஷா) கண்ணால் न गृह्यते (ந க்ருஹ்யதே) பார்க்கப்படுவது இல்லை. அதாவது கிரஹிக்கப்படுவது இல்லை. இன்னதென்று குறிப்பிட முடியாததால் वाचा अपि (வாச்சா அபி) न (ந) வாக்கினாலும் கிரஹிக்கப்படுவது இல்லை. अन्यैः देवैः न च (அன்யை: தேவை: நச்ச) மற்ற இந்திரியங்களாலும் கிரஹிக்க முடியாது. कर्मणा பிரசித்தமான மேலான வைதிகமான அக்நிஹோத்திரம் முதலான கர்மாக்கள் மூலமாகவோ அப்பரம்பொருள் न गृहाते (ந க்ருஹ்யதே) கிரஹிக்கப்படுவது இல்லை. அவ்வாறெனில் அதைக்கிரஹிப்பதற்கான சாதனம் எது என்பதை கூறுகிறார்.
ज्ञानप्रसादेन आत्मावबोधनसमर्थमपि स्वभावेन सर्वप्राणिनां ज्ञानं बाह्यविषयरागादिदोषकलुषितमप्रसन्नमशुद्धं सन्नावबोधयति नित्यसंनिहितमप्यात्मतत्त्वं मलावनद्धमिवादर्शम् , विलुलितमिव सलिलम् । तद्यदेन्द्रियविषयसंसर्गजनितरागादिमलकालुष्यापनयनादादर्शसलिलादिवत्प्रसादितं स्वच्छं शान्तमवतिष्ठते, तदा ज्ञानस्य प्रसादः स्यात् ।
ज्ञानप्रसादेन (ஞானப்பிரசாதேன) அழுக்கடைந்த கண்ணாடி முகத்தைக் காட்டதது போலும், சலிக்கின்ற நீர் பிரதிபிம்பத்தைக் காட்டாதது போலும் எல்லாப் பிராணிகளுடைய புத்தியும், அப்பரம்பொருள் அறியும் சாமர்த்தியம் உடையதாய் இருப்பினும், அதுவெளி விஷயங்களில் உள்ள பற்று முதலான தோஷங்களால் கலக்கமுற்று தெளிவின்றி அசுத்தமாய் இருப்பதால் ஆன்மாவை அறிவதில்லை. அதேபுத்தி இந்திரிய விஷயங்களின் சேர்க்கையால் உண்டான ஆசை (பற்று) முதலான அழுக்கற்றதாக இருக்குமேயானால் சுத்தமான கண்ணாடி, சலனமற்ற தெளிந்தநீர் இவைகளில் பிரதிப்பிம் பிப்பது போல் புத்தியானது பரிசுத்தமாயும், சாந்தமாயும் இருக்கும். அந்த ஞானப்பிரசாதத்தால்
तेन ज्ञानप्रसादेन विशुद्धसत्त्वः विशुद्धान्तःकरणः योग्यो ब्रह्म द्रष्टुं यस्मात् , ततः तस्मात्तु तमात्मानं पश्यते पश्यति उपलभते निष्कलं सर्वावयवभेदवर्जितं ध्यायमानः सत्यादिसाधनवानुपसंहृतकरण एकाग्रेण मनसा ध्यायमानः चिन्तयन् ॥ ८ ॥
அந்த ஞானப்பிரகாசத்தால் ध्यायमानः (த்யாயமான:) சத்தியம் முதலான ஸாதனங்களுடனும், புலனடக்கத்துடனும், ஒருமுகப்பட்ட மனதுடன் தியானம் செய்பவன் विशुद्धसत्त्वः (விசுத்த சத்வ:) சுத்த அந்தக்கரணமுடையதால் பிரஹ்மத்தை அறிவதற்கு யோக்கியம் உடையவனாய் ततः (தத:) இருந்ததால் निष्कलं (நிஷ்களம்) எல்லா அவயவபேதம் அற்ற तम् (தம்) அந்த ஆத்மாவை पश्यते (பச்யதே) பார்க்கிறான் அல்லது அடைகிறான்.
यमात्मानमेवं पश्यति,
இந்த ஆத்மாவை இவ்வாறு அறிகிறான்.
एषोऽणुरात्मा चेतसा वेदितव्यो यस्मिन्प्राणः पञ्चधा संविवेश ।
प्राणैश्चित्तं सर्वमोतं प्रजानां यस्मिन्विशुद्धे विभवत्येष आत्मा ॥ ९ ॥
एषः अणुः सूक्ष्मः आत्मा चेतसा विशुद्धज्ञानेन केवलेन वेदितव्यः । क्वासौ ? यस्मिन् शरीरे प्राणः वायुः पञ्चधा प्राणापानादिभेदेन संविवेश सम्यक् प्रविष्टः, तस्मिन्नेव शरीरे हृदये चेतसा ज्ञेय इत्यर्थः ।
यस्मिन् (யஸ்மின்) எந்த சரீரத்தில் प्राणः (ப்ராண:) வாயுவானது पञ्चधा (பஞ்சதா) பிராண அபாரனாதிபஞ்ச பேதங்களுடன் संविवेश(சம்விவேச) நன்கு நுழைந்துள்ளதோ அந்த சரீரத்திலேயே ஹிருதய கமலத்தில் एषः अणुः आत्मा (ஏஷ அணு ஆத்மா) இந்த சுக்ஷ்மமான ஆத்மாவானது चेतसा (சேதஸா) விசுத்தமான ஞானத்தால் மாத்திரமே वेदितव्यः அறியத்தக்கது ஆகும். சுத்தாந்தக்கரணத்தினாலேயே அறியமுடியும் என்பது பொருள்.
कीदृशेन चेतसा वेदितव्य इत्याह — प्राणैः सहेन्द्रियैः चित्तं सर्वमन्तःकरणं प्रजानाम् ओतं व्याप्तं येन क्षीरमिव स्नेहेन, काष्ठमिव चाग्निना । सर्वं हि प्रजानामन्तःकरणं चेतनावत्प्रसिद्धं लोके । यस्मिंश्च चित्ते क्लेशादिमलवियुक्ते शुद्धे विभवति, एषः उक्त आत्मा विशेषेण स्वेनात्मना विभवति आत्मानं प्रकाशयतीत्यर्थः ॥
எத்தகைய விசுத்தஞானத்தால் எனில், प्रजानां (ப்ரஐானாம்) மக்களுடைய सर्वचित्ं (சர்வ சித்தம்) எல்லா அந்தக்கரணங்களும், प्राणैः (ப்ராணை:) இந்திரியங்களுடன் கூடிய ओतं (ஓதம்) பாலில் வெண்ணையும், கட்டையில் நெருப்பாலும், வ்யாபிக்கப்பட்டு இருப்பது போல் வியாபித்து உள்ளது. எல்லா ப்ரைஐகளுடைய அந்தக் கரணங்களும் சேதனம் போல் விளங்குவது உலகில் பிரசித்தம். यस्मिन् (யஸ்மின்) எந்த சித்தத்தில் विशुद्धे (விசுத்தே) க்லேசம் முதலான அழுக்குகள் நீக்கப்பெற்று தூய்மை அடைகிறதோ அப்பொழுது அந்த சித்தத்தில் एष आत्मा (ஏஷ ஆத்மா) முற்கூறப்பட்ட இந்த ஆத்மாவானவன் विभवति (விபவதி) தன்னுடைய உண்மை ஸ்வரூபத்துடன் விசேஷமாய் தன்னைப் பிரகாசப்படுத்துகிறான்.
य एवमुक्तलक्षणं सर्वात्मानमात्मत्वेन प्रतिपन्नस्तस्य सर्वात्मत्वादेव सर्वावाप्तिलक्षणं फलमाह —
எவன் முற்கூறப்பட்ட லக்ஷணத்துடன், ஸர்வாத்மாவாய் விளங்கும் ஆத்மாவை, ஆத்மாவாய்க் கொண்டுள்ளானோ, அவன் ஸர்வாத்மாவாய் விளங்குவதால், எல்லாவற்றையும் அடைகிறான் என்பதனை விளக்குவது இந்த மந்திரம்.
यं यं लोकं मनसा संविभाति विशुद्धसत्त्वः कामयते यांश्च कामान् ।
तं तं लोकं जयते तांश्च कामांस्तस्मादात्मज्ञं ह्यर्चयेद्भूतिकामः ॥ १० ॥
यं यं लोकं पित्रादिलक्षणं मनसा संविभाति सङ्कल्पयति मह्यमन्यस्मै वा भवेदिति, विशुद्धसत्त्वः क्षीणक्लेशः आत्मविन्निर्मलान्तःकरणः कामयते यांश्च कामान् प्रार्थयते भोगान् , तं तं लोकं जयते प्राप्नोति तांश्च कामान्सङ्कल्पितान्भोगान् । तस्माद्विदुषः सत्यसङ्कल्पत्वादात्मज्ञमात्मज्ञानेन विशुद्धान्तःकरणं ह्यर्चयेत्पूजयेत्पादप्रक्षालनशुश्रूषानमस्कारादिभिः भूतिकामः विभूतिमिच्छुः । ततः पूजार्ह एवासौ ॥ १० ॥
विशुद्धसत्त्वः (விசுத்தசத்வ:) க்லேசங்கள் நீங்கினவனாயும், தூய அந்தக்கரணமுடையனாகவும் உள்ள ஆத்மக்ஞானி मनसा (மனஸா) यं यं लोकं (யம்யம் லோகம்) பித்ரு முதலிய லக்ஷணங்களை உடைய லோகங்கள் संविभाति (சம்விபாதி) தனக்கோ மற்றவர்களுக்கோ இருக்கட்டும் என்று சங்கல்பிக்கின்றானோ यांश्च कामान् அந்தபோகங்களை कामयते (காமயதே) பிரார்த்திக்கின்றானோ तं तं लोकं (தம்தம் லோகம்) यांश्च लोकान् (தாம்ச்சலோகான்) ஸத்திய சங்கல்ப்பனானதால் அந்த அந்த லோகங்களையும் ஸங்கல்பிக்கப்பட்ட போகங்களையும் जयते (ஐயதே) அடைகிறான். तस्मात् (தஸ்மாத்) भूतिकामः (பூதிகாம:) செல்வச்செழிப்பையும் விபூதிகளையும் விரும்புபவன் आत्मज्ञं (ஆத்மக்ஞம்) ஆன்மஞானத்தால் தூய்மையடைந்த அந்தக் கரணத்தோடு கூடியவனாயும், ஸத்யசங்கல்பனாயும் உள்ள ஆத்ம ஞானியை अचेयेत् (அர்ச்சயேத்) காலை அலம்புதல், பணிவிடை புரிதல், வணங்குதல், முதலிய செயல்களால் பூஜித்தல் வேண்டும். ஆகையால் அந்த ஆத்மக்ஞானியே பூைஐக்கு அருகதையானவர்.
इति तृतीयमुण्डके प्रथमखण्डभाष्यम् ॥
स वेदैतत्परमं ब्रह्म धाम यत्र विश्वं निहितं भाति शुभ्रम् ।
उपासते पुरुषं ये ह्यकामास्ते शुक्रमेतदतिवर्तन्ति धीराः ॥ १ ॥
स वेद जानाति एतत् यथोक्तलक्षणं ब्रह्म परमं प्रकृष्टं धाम सर्वकामानामाश्रयमास्पदम् , यत्र यस्मिन्ब्रह्मणि धाम्नि विश्वं समस्तं जगत् निहितम् अर्पितम् , यच्च स्वेन ज्योतिषा भाति शुभ्रं शुद्धम् , तमप्येवंविधमात्मज्ञं पुरुषं ये हि अकामाः विभूतितृष्णावर्जिता मुमुक्षवः सन्तः उपासते परमिव देवम् , ते शुक्रं नृबीजं यदेतत्प्रसिद्धं शरीरोपादानकारणम् अतिवर्तन्ति अतिगच्छन्ति धीराः बुद्धिमन्तः, न पुनर्योनिं प्रसर्पन्ति । ‘न पुनः क्व रतिं करोति’ ( ? ) इति श्रुतेः । अतस्तं पूजयेदित्यभिप्रायः ॥
सः (ச:) அந்த ஆத்மஞானியானவன் एतत् परम् (ஏதத் பரம்) முற்கூறப்பட்ட லக்ஷணத்துடன் கூடிய தாயும் மிகவும் உயர்ந்ததாயும் உள்ள ब्रुहा धाम (பிரஹ்மதாம) எல்லா விருப்பங்களுக்கும் ஆத்ம பூதமாய் ஆஸ்ரயமாய் உள்ள பிரஹ்மத்தில் यत्र (யத்ர) சர்வஅதிஷ்டானமாக உள்ள பிரஹ்மத்தில் विश्वं (விச்வம்) ஐகத்முழுவதும் निहितं (நிஹிதம்) வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ப்ரஹ்மமானது शुभ्रं (சுப்ரம்) பரிசுத்தமானதாக भाति (பாதி) தன்னுடைய சுவயம் பிரகாசஐ்யோதியினால் பிரகாசிக்கின்றது என்று वेद (வேத) அனுபவபூர்வமாய் அறிகின்றானோ அத்தகைய पुरुषं (புருஷம்) ஆத்மஞானியான புருஷனை ये हि अकामाः (யேஹி அகாமா:) முற்கூறப்பட்ட விபூதிகளில் ஆசையற்றவர்களான முமூக்ஷுக்கள் सेवन्ते (சேவந்தே) சேவிக்கின்றனரோ அல்லது பரம்பொருளைப்போல் உபாசிக்கிறார்களோ ते धीराः (தேதீரா:) அத்தகைய புத்திசாலிகள் एतत् शुक्रं (ஏதத் சுக்ரம்) சரீரம் உண்டாவதற்கு உபாதான காரணமான புருஷனிடமுள்ள சுக்ரனை अतिवर्तन्ते (அதிவர்தந்தே) கடந்தவர்களாய் இருக்கின்றார்கள். அவர்கள் மறுஐன்மம் எடுப்பதில்லை. ‘न पुनः क्वचिद्गतिं करोति’ (மறுபடியும் பிறப்பிடங்களில் ரமிப்பது இல்லை) என்று சுருதியாலும் அறிகிறோம். ஆகையால் அவர்களை (ஆத்மக்ஞானிகளை) பூஐிக்க வேண்டும் என்பது அபிப்பிராயம்.
मुमुक्षोः कामत्याग एव प्रधानं साधनमित्येतद्दर्शयति —
முமூக்ஷுகளுக்கு காமத்யாகமே முக்கிய சாதனம் என்று காண்பிக்கப்படுகிறது.
कामान्यः कामयते मन्यमानः स कामभिर्जायते तत्र तत्र ।
पर्याप्तकामस्य कृतात्मनस्तु इहैव सर्वे प्रविलीयन्ति कामाः ॥ २ ॥
कामान् यः दृष्टादृष्टेष्टविषयान् कामयते मन्यमानः तद्गुणांश्चिन्तयानः प्रार्थयते, सः तैः कामभिः कामैर्धर्माधर्मप्रवृत्तिहेतुभिर्विषयेच्छारूपैः सह जायते ; तत्र तत्र, यत्र यत्र विषयप्राप्तिनिमित्तं कामाः कर्मसु पुरुषं नियोजयन्ति, तत्र तत्र तेषु तेषु विषयेषु तैरेव कामैर्वेष्टितो जायते ।
यः (ய:) எவன் ஒருவன் कामान् (காமான்) பார்த்த, பார்க்கப்படாதவைகளான இஷ்டமான விஷயங்களில் मन्यमानः (மன்யமான:) உள்ள அந்த அந்த குணங்களை எண்ணியவனாய்க் கொண்டு कामयते (காமயதே) விரும்புகின்றானோ सः (ச:) அந்தகாமியானவன் तत्र तत्र (தத்ர தத்ர) அங்கு அங்கு விஷயங்களை அடைவதின் பொருட்டு விருப்பங்கள், செயலில் மனிதனைப் பிணைக்கின்றனவோ அந்த कामभिः (காமபி:) அந்த விஷயங்களில் உள்ள காமனைகளால் புண்ய, பாபவங்களின் பிரவிர்த்திக்கு ஹேதுவான விஷய இச்சைகளால் சுழப்பட்டவனாக जायते (ஐாயதே) பிறக்கிறான்.
यस्तु परमार्थतत्त्वविज्ञानात्पर्याप्तकामः आत्मकामत्वेन परि समन्ततः आप्ताः कामा यस्य, तस्य पर्याप्तकामस्य कृतात्मनः अविद्यालक्षणादपररूपादपनीय स्वेन परेण रूपेण कृत आत्मा विद्यया यस्य, तस्य कृतात्मनस्तु इहैव तिष्ठत्येव शरीरे सर्वे धर्माधर्मप्रवृत्तिहेतवः प्रविलीयन्ति प्रविलीयन्ते विलयमुपयान्ति, नश्यन्तीत्यर्थः । कामाः तज्जन्महेतुविनाशान्न जायन्त इत्यभिप्रायः ॥ २ ॥
பரமார்த்த தத்துவத்தை அறிந்தமையால் விஷயங்களில் காமனை அற்று ஆத்மாவிடத்திலேயே முழுமையான காமனை உடையவன் எவனோ அந்த पयोप्तकामस्य (பர்யாப்தகாமஸ்ய) பரியாப்தகாமனுடை யவனாயும் कृतात्मनः (க்ருதாத்மன:) அவித்யாவிஷயமான, அபரரூபமான விஷயங்களில் இருந்து புத்தியைத்திருப்பி ஆத்ம ஞானத்தால் தன் ஆ்த்ம ஸ்வரூபத்திலேயே செழுத்தியவன் सर्व कामाः (சா்வே காமா:) தர்மாதர்மப்ரவிருத்தி ஹேதுக்களான விருப்பங்கள் யாவும் इहैव (இஹைவ) இந்த சரீரம் இருக்கும் பொழுதே प्रविलीयन्ति (ப்ரவிலீயந்தி) நாசமடைகின்றன. அதாவது விருப்பங்கள் (காமங்கள்) அவைகள் உண்டாவதற்கான காரணங்களே நாசமடைவதால், அவைகள் உண்டாவது இல்லை என்பது பொருள்.
यद्येवं सर्वलाभात्परम आत्मलाभः, तल्लाभाय प्रवचनादय उपाया बाहुल्येन कर्तव्या इति प्राप्ते, इदमुच्यते —
இவ்வாறு எல்லா லாபத்தைக் காட்டிலும் ஆத்மலாபமே மேலானது. அந்த லாபத்திற்காக ப்ரவசனம் முதலிய அநேக உபாயங்கள் செய்ய வேண்டும் என்று வரும் பொழுது இவ்வாறு கூறப்படுகிறது.
नायमात्मा प्रवचनेन लभ्यो न मेधया न बहुना श्रुतेन ।
यमेवैष वृणुते तेन लभ्यस्तस्यैष आत्मा विवृणुते तनूं स्वाम् ॥ ३ ॥
यः अयमात्मा व्याख्यातः, यस्य लाभः परः पुरुषार्थः, नासौ वेदशास्त्राध्ययनबाहुल्येन प्रवचनेन लभ्यः । तथा न मेधया ग्रन्थार्थधारणशक्त्या, न बहुना श्रुतेन नापि भूयसा श्रवणेनेत्यर्थः ।
अयम् आत्मा (அயம் ஆத்மா) இதுவரை எந்த ஆத்மா விளக்கப்பட்டதோ அதை அடைதல் மிக உயர்ந்த புருஷார்த்தமாகும். அந்த இந்த ஆத்மா प्रवचनेन (ப்ரவசனேன) வேத, சாஸ்திரங்களை அதிகமாகக் கற்றதினால் மாத்திரமோ न लभ्यः (நலப்ய:) அடையத்தக்கது அல்ல. मेधया (மேதயா) சாஸ்திரங்களின் பொருளை மனதில் தரிக்கும் சக்தியாலும் न (ந) அடையத்தக்கது அல்ல. அவ்வாறே बहुना श्रुतेन (பஹுனாச்ருதேன)அதிகமான சிரவனத்தாலும், அதாவது உபநிஷத் விசாரத்தைத் தவிர எந்தமற்ற சிரவணங்களாலும் (ந) அடையத்தக்கது அல்ல என்பது கருத்து.
केन तर्हि लभ्य इति, उच्यते — यमेव परमात्मानमेव एषः विद्वान् वृणुते प्राप्तुमिच्छति, तेन वरणेन एष पर आत्मा लभ्यः, नान्येन साधनान्तरेण, नित्यलब्धस्वभावत्वात् ।
அவ்வாறெனில் யாரால் அடையத்தக்கது எனில், एषः (ஏஷ:) இந்த வித்வானானவன் यं (யம்) எந்தப் பரமாத்மாவை वुणुते (வ்ருணுதே) அடைய விரும்புகின்றானோ तेन (தேன) அந்த உயர்ந்த சாதனத்தால் मभ्यः (லப்ய:) இந்த பரமாத்மா அடையத்தக்கது. அது எப்பொழுதும் அடையப்பட்ட சுவாபாவமானதால் மற்ற சாதாரண வெளிச்சாதனங்களால் அடையமுடியாது.
कीदृशोऽसौ विदुष आत्मलाभ इति, उच्यते — तस्य एष आत्मा अविद्यासञ्छन्नां स्वां परां तनूं स्वात्मतत्त्वं स्वरूपं विवृणुते प्रकाशयति, प्रकाश इव घटादिर्विद्यायां सत्यामाविर्भवतीत्यर्थः । तस्मादन्यत्यागेनात्मप्रार्थनैव आत्मलाभसाधनमित्यर्थः ॥ ३ ॥
இத்தகைய வித்வான்களின் ஆத்ம லாபம் எத்தகையது எனில்? (தஸ்ய) அந்த ஸாதகனுக்கு एषः आत्मा (ஏஷ ஆத்மா) இந்த ஆத்மாவானது स्वाः (ஸ்வாம்) மேலான तनुं (தனும்) அவித்தையால் சுழப்பட்ட தன்னுடைய உண்மை ஸ்வரூபத்தை विवृणुते (விவ்ருணுதே) பிரகாசிக்கச் செய்கிறது. ஒளியானது குடம் முதலியவைகளைப் பிரகாசப்படுத்துவது போல் பிரஹ்மவித்தையால் ஆத்மா பிரகாசிக்கின்றது (வெளிப்படுத்துகின்றது) என்பது பொருள். எனவே அனாத்மாவான விஷயங்களைத் தியாகம் செய்வதாலும் ஆத்மா அனுஸந்தானத்தாலுமே ஆத்மா அடையத்தக்கது ஆகும். இவையே ஆத்ம லாபத்திற்குஸாதனமாகும்.
आत्मप्रार्थनासहायभूतान्येतानि च साधनानि बलाप्रमादतपांसि लिङ्गयुक्तानि संन्याससहितानि । यस्मात्-
லிங்கங்களுடன் கூடிய அதாவது ஸந்நியாசத்துடன் கூடிய பலம், மயக்கமற்று இருத்தல், தபஸ் இவைகள் ஆத்ம பிரார்த்தனைக்கு ஸகாயமான ஸாதனங்களாகும். ஏன்எனில்?
नायमात्मा बलहीनेन लभ्यो न च प्रमादात्तपसो वाप्यलिङ्गात् ।
एतैरुपायैर्यतते यस्तु विद्वांस्तस्यैष आत्मा विशते ब्रह्म धाम ॥ ४ ॥
यस्मादयमात्मा बलहीनेन बलप्रहीणेनात्मनिष्ठाजनितवीर्यहीनेन लभ्यः ; नापि लौकिकपुत्रपश्वादिविषया-सङ्गनिमित्तात्प्रमादात्; तथा तपसो वापि अलिङ्गात् लिङ्गरहितात् । तपोऽत्र ज्ञानम् ; लिङ्गं संन्यासः ; संन्यासरहिताज्ज्ञानान्न लभ्यत इत्यर्थः । एतैः उपायैः बलाप्रमादसंन्यासज्ञानैः यतते तत्परः सन्प्रयतते यस्तु विद्वान्विवेकी आत्मवित् , तस्य विदुषः एष आत्मा विशते सम्प्रविशति ब्रह्म धाम ॥ ४ ॥
अयम् आत्मा (அயம் ஆத்மா) இந்த ஆத்மாவானது बलहीनेन (பலஹீனேன) ஆத்மநிஷ்ட்டையால் உண்டான வீரியமற்றவனால் न लभ्यः (நலப்ய:) அடையத்தக்கதல்ல. प्रमादात् (ப்ரமாதாத்) லெளகிகமான மகன், பசு போன்ற விஷயங்களுடைய ஸங்காதத்தால் உண்டானப் பிரமாதம் எனப்படும் கவனக்குறைவாலும், अलिङ्गात् (அலிங்காத்) ஸந்நியாஸமற்ற तपसः वा (தபச: வா) ஞானத்தாலும் இந்த ஆத்மாவானது न (ந) அடையத்தக்கது அல்ல. यस्तु विद्वान् (யஸ்து வித்வான்) எந்தஒரு வித்வானான ஸாதகன் एतैः उपायैः (ஏதை: உபாயை:) முற்கூறப்பட்ட உபாயங்களான பலம், அப்ரமாதம், ஸந்நியாசத்துடன் கூடியதபஸ் (ஞானம்) இவைகளுடன் यतते (யததே) ஆன்மாவிலேயே ஒன்றியவனாகக் கொண்டு முயற்சிக்கின்றானோ (தஸ்ய) அந்த விவேகியான ஸாதகனுடைய एष आत्मा (ஏஷ ஆத்மா) இந்த ஆத்மாவானது ब्रह्मधाम (பிரஹ்மதாம) பிரஹ்மஸ்தானத்தை विशते (விசதே) அடைகிறான். இங்கு तपसः என்பது ஞானம் लिङ्गंम् என்பது சந்நியாசம் இங்கு ஸந்நியாசம் என்பது ஸர்வஸங்க பரித்தியாகத்தைக் குறிக்குமேயன்றி வெறும் வெளிவேஷத்தைக் குறிக்காது.
कथं ब्रह्म विशत इति, उच्यते —
அந்த ப்ரஹ்மத்தில் எவ்வாறு நுழைகின்றனர் அதாவது எவ்வாறு ஒன்றுகின்றனர் என்பது விளக்கப்படுகிறது.
सम्प्राप्यैनमृषयो ज्ञानतृप्ताः कृतात्मानो वीतरागाः प्रशान्ताः ।
ते सर्वगं सर्वतः प्राप्य धीरा युक्तात्मानः सर्वमेवाविशन्ति ॥ ५ ॥
सम्प्राप्य समवगम्य एनम् आत्मानम् ऋषयः दर्शनवन्तः तेनैव ज्ञानेन तृप्ताः, न बाह्येन तृप्तिसाधनेन शरीरोपचयकारणेन । कृतात्मानः परमात्मस्वरूपेणैव निष्पन्नात्मानः सन्तः । वीतरागाः विगतरागादिदोषाः । प्रशान्ताः उपरतेन्द्रियाः ।
ज्ञानतृप्ताः (ஞானதிருப்தா) சரீரத்தைப் போஷிப்பதற்கான வெளிவிஷயங்களால் திருப்திப்படாது அந்த ஆத்மஞானத்தால் மாத்திரம் திருப்தி அடைந்தவர்களாயும், कृतात्मानः (க்ருதாத்மான:) பரமார்த்தஸ்வரூபமாகவே ஆனவர்களாயும், वीतरागाः (வீதராகா:) பற்று (ராகம்) முதலிய தோஷங்கள் நீங்கியவர்களாயும், प्रशान्ताः (ப்ரசாந்தா:) இந்திரியங்களினின்று ஒழிவு பெற்றவர்களாயும் உள்ள ऋषयः (ரிஷய:) ஆன்மதர்சனம் பெற்ற முனிவர்கள் एनं (ஏனம்) இந்த ஆத்மாவை संप्राप्य (சம்ப்ராப்ய) அடைந்து, அதாவது அநுபவ பூர்வமாய் உணா்ந்ததால் ஸாக்ஷாத்காரம் பெற்று
ते एवंभूताः सर्वगं सर्वव्यापिनम् आकाशवत् सर्वतः सर्वत्र प्राप्य, नोपाधिपरिच्छिन्नेनैकदेशेन ; किं तर्हि, तद्ब्रह्मैवाद्वयमात्मत्वेन प्रतिपद्य धीराः अत्यन्तविवेकिनः युक्तात्मानो नित्यसमाहितस्वभावाः सर्वमेव समस्तं शरीरपातकालेऽपि आविशन्ति भिन्नघटाकाशवदविद्याकृतोपाधिपरिच्छेदं जहति । एवं ब्रह्मविदो ब्रह्म धाम प्रविशन्ति ॥
இவ்வாறான ते धीराः (தேதீரா:) அத்யந்த விவேகிகள் सर्वगं (சர்வகம்) ஆகாசம் போல் எங்கும் நிறைந்த ஆத்மாவை सर्वतः (சர்வத:) எங்கும் प्राप्य (ப்ராப்ய) உபாதி பரிச்சின்னம் இல்லாது அடைந்து (எங்கும் எவ்வாறு உள்ளனர் எனில்) அத்வைதமான ப்ரஹ்மத்திலேயே தானாகவே ஒன்றியவர்களாகி युक्तात्मानः (யுக்தாத்மான:) எப்பொழுதும் சாமாஹிதஸ்வ பாவமுடையவர்களாய் सर्वमेव (சர்வமேவ) சரீரம் விழும் காலத்திலும் எல்லாமாய் இருக்கும் தன்மையை आविशान्ति (ஆவிசந்தி) அடைகின்றனர். எவ்வாறு குடம் உடைந்தபொழுது கடாகாசம், மஹாகாசம் ஆவதுபோல் அவ்வான்ம ஞானிகள் அவித்தையால் உண்டான உபாதிபரிச்சேதங்கள் நீங்குகின்றன. இவ்வாறு பிரஹ்மத்தை அறிந்தோர் பிரஹ்மத்தை அடைகின்றனர்.
किञ्च
மேலும்
वेदान्तविज्ञानसुनिश्चितार्थाः संन्यासयोगाद्यतयः शुद्धसत्त्वाः ।
ते ब्रह्मलोकेषु परान्तकाले परामृताः परिमुच्यन्ति सर्वे ॥ ६ ॥
वेदान्तजनितं विज्ञानं वेदान्तविज्ञानं तस्यार्थः पर आत्मा विज्ञेयः, सोऽर्थः सुनिश्चितो येषां ते वेदान्तविज्ञानसुनिश्चितार्थाः । ते च संन्यासयोगात् सर्वकर्मपरित्यागलक्षणयोगात्केवलब्रह्मनिष्ठास्वरूपाद्योगात् यतयः यतनशीलाः शुद्धसत्त्वाः शुद्धं सत्त्वं येषां संन्यासयोगात् , ते शुद्धसत्त्वाः । ते ब्रह्मलोकेषु ; संसारिणां ये मरणकालास्ते अपरान्तकालाः ; तानपेक्ष्य मुमुक्षूणां संसारावसाने देहपरित्यागकालः परान्तकालः तस्मिन् परान्तकाले साधकानां बहुत्वाद्ब्रह्मैव लोको ब्रह्मलोकः एकोऽप्यनेकवद्दृश्यते प्राप्यते च । अतो बहुवचनं ब्रह्मलोकेष्विति, ब्रह्मणीत्यर्थः । परामृताः परम् अमृतम् अमरणधर्मकं ब्रह्म आत्मभूतं येषां ते परामृता जीवन्त एव ब्रह्मभूताः, परामृताः सन्तः परिमुच्यन्ति परि समन्तात्प्रदीपनिर्वाणवद्भिन्नघटाकाशवच्च निवृत्तिमुपयान्ति परिमुच्यन्ति परि समन्तान्मुच्यन्ते सर्वे, न देशान्तरं गन्तव्यमपेक्षन्ते ।
வேதங்களான உபநிஷத்துக்களால் உண்டான விக்ஞானம், வேதாந்தவிக்ஞானம் ஆகும். அதனுடைய அர்த்தம் பரமாத்மாவாகும். அந்த வேதங்களில் அறியத்தக்க பொருளான ஆத்மாவை நிச்சயமாய் தெரிந்தவர்களே அவர்கள் वेदान्तविज्ञानसुनिश्चितार्थाः (வேதாந்தவிக்ஞான சுநிச்சித்தார்த்தா:) शुद्धसत्त्वाः (சுத்தசத்வா:) சந்நியாச யோகத்தால் எவர்கள் சுத்தசித்தமுடையவர்களோ அவர்கள் यतयः (யதய:) உறுதியான முயற்சி உடையவர்களாயும் உள்ளவர்கள். संन्यासयोगात् (சந்நியாச யோகாத்) எல்லாகர்மங்களையும் பரித்தியாக லக்ஷணத்தோடு கூடிய யோகத்தால் கேவல பிஹ்மநிஷ்ட ஸ்வரூப யோகத்தால் ते (தே) அந்த முமூக்ஷுக்கள் परान्तकाले (பராந்தகாலே) சம்சாரிகளுடைய மரணகாலம் அபராந்த காலம் ஆகும். அதை அபேக்ஷித்து மும்மூக்ஷீக்களின் சம்சாரத்தின் முடிவான தேஹப்பரித்தியாக காலமானது பராந்த காலமாகும். அந்த பராந்தகாலத்தில் परामृताः (பராம்ருதா:) மேலான மரணதர்ம மற்ற பிரஹ்ம ஸ்வரூபமாகவே ஆகியவர்கள் எவர்களோ அவர்கள் பராம்ருதாவாக இருந்து கொண்டு ब्रह्मलोकेषु (ப்ரஹ்ம லோகேஷு) ஸாதகர்கள் அநேகமாய் இருப்பதால் பிரஹ்மலோகம் ஒன்றாய் இருந்தாலும் இங்கு பிரஹ்ம லோகங்களில் என்றும் பன்மையில் கூறப்பட்டுள்ளது. அந்த பரப்ரஹ்ம லோகத்தை सर्वे परिमुच्यन्ति (சர்வே பரிமுச் யந்தி) எல்லாவற்றிலிருந்தும் எரியும் விளக்கின் திரி போலும், கடாகாசம் போலும் விடுபடுகிறார்கள். அவர்கள் தேசாந்தரம் செல்லவேண்டும் என்பது இல்லை. இருந்த இடத்திலேயே பிரஹ்மத்துடன் ஒன்றி விடுகின்றனர்.
‘शकुनीनामिवाकाशे जले वारिचरस्य वा । पदं यथा न दृश्येत तथा ज्ञानवतां गतिः’ (मो. ध. १८१ । ९) ‘अनध्वगा अध्वसु पारयिष्णवः’ ( ? ) इति श्रुतिस्मृतिभ्याम् ।
‘शकुनीनामिवाकाशे जले वारिचरस्य च । पदं यथा न दृश्येत तथा ज्ञानवतां गतिः’ (எவ்வாறு ஆகாயத்தில் பறக்கும் சகுனிப் பறவைகளின் பாதங்களும், நீரில் நீந்தும் மீன்களின் பாதங்களும் அறிய முடியாதோ அவ்வாறே ஞானியின் கதியும் ஆகும்) ‘अनध्वगा अध्वसु पारयिष्णवः’ (சம்சார மார்க்கத்திலிருந்து தாண்டுவதற்கு இச்சை உள்ளவர்கள் சம்சாரமார்க்கத்தை விசாரணை செய்யமாட்டார்கள்) என்பது முதலிய ச்ருதி ஸ்ம்ருதி வாக்கியங்களால் அறிகிறோம்.
देशपरिच्छिन्ना हि गतिः संसारविषयैव परिच्छिन्नसाधनसाध्यत्वात् । ब्रह्म तु समस्तत्वान्न देशपरिच्छेदेन गन्तव्यम् । यदि हि देशपरिच्छिन्नं ब्रह्म स्यात् , मूर्तद्रव्यवदाद्यन्तवदन्याश्रितं सावयवमनित्यं कृतकं च स्यात् । न त्वेवंविधं ब्रह्म भवितुमर्हति । अतस्तत्प्राप्तिश्च नैव देशपरिच्छिन्ना भवितुं युक्ता । अपि च, अविद्यादिसंसारबन्धापनयनमेव मोक्षमिच्छन्ति ब्रह्मविदः, न तु कार्यभूतम् ॥ ६ ॥
பரிச்சின்னமான சாதன சாத்யமாய் இருப்பதால் சம்சாரகதிதான் தேசப்பரிச்சின்னத்துடன் கூடியதாகும். ப்ரஹ்மமோ எங்கும் எல்லாமாய் இருப்பதால் தேசப்பரிச்சேதத்தால் அடையப்படுவது அல்ல. ப்ரஹ்மமானது தேசப்பரிச்சின்னமாய் இருந்தால் உருவம், அவயவம் போல் ஆதியும், அந்தமும், மற்றதை ஆசிரியத்ததாயும், அவயவத்துடன் அநித்தியமாய் உண்டாக்கப்பட்டதாகும். இவ்விதமாக ப்ரஹ்மம் இருக்கிறது என்பது பொருந்தாது. ஆகையால் அதனுடைய அடைவும் தேசப்பரிச்சின்னமுடையதாகாது. பிரஹ்மத்தை அறிந்தவர்களுக்கும் அவித்யா முதலிய சம்சாரபந்தம் நீங்கி மோக்ஷத்தையே விரும்புகிறார்கள். காரியத்துடன் கூடியவைகளை அல்ல.
किञ्च, मोक्षकाले-
மேலும் மோக்ஷகாலத்தில்
गताः कलाः पञ्चदश प्रतिष्ठा देवाश्च सर्वे प्रतिदेवतासु ।
कर्माणि विज्ञानमयश्च आत्मा परेऽव्यये सर्व एकीभवन्ति ॥ ७ ॥
या देहारम्भिकाः कलाः प्राणाद्याः, ताः स्वाः प्रतिष्ठाः गताः स्वं स्वं कारणं गता भवन्तीत्यर्थः । प्रतिष्ठा इति द्वितीयाबहुवचनम् । पञ्चदश पञ्चदशसङ्ख्याका या अन्त्यप्रश्नपरिपठिताः प्रसिद्धाः, देवाश्च देहाश्रयाश्चक्षुरादिकरणस्थाः सर्वे प्रतिदेवतास्वादित्यादिषु गता भवन्तीत्यर्थः ।
पञ्चदश कलाः (பஞ்சதசகலா:) தேஹாரம் பகமான பிராணன் முதலிய பதினைந்து கலைகளும் प्रतिष्ठां गताः (ப்ரதிஷ்ட்டாம் கதா:) அவைகள் தத்தம் பிரதிஷ்டையான மூல ஸ்தானத்திற்குச் சென்று விடுகின்றன, அதாவது காரணங்களை அடைந்தவைகளாகின்றன என்பது பொருள். இங்கு प्रतिष्ठां (ப்ரதிஷ்ட்டா) என்றது இரண்டாவது வேற்றுமை பன்மையாகும். पञ्चदश (பஞ்சதச:) என்றது பதினைந்து எண்ணிக்கை உள்ளதாக கடைசி பிரஸ்னத்தில் இருப்பது பிரசித்தம். देवाश्च தேஹத்தை ஆஸ்ரயித்த கண் முதலான கரணங்களில் இருக்கும் தேவதைகள் सर्वे प्रतिदेवतासु (சர்வேப்ரதி தேவதாசு) எல்லா ப்ரதி தேவதைகளான ஆதித்திய முதலான தேவதைகளைக் குறித்துச் சென்றவைகளாக ஆகின்றன.
यानि च मुमुक्षुणा कृतानि कर्माण्यप्रवृत्तफलानि, प्रवृत्तफलानामुपभोगेनैव क्षीणत्वात् । विज्ञानमयश्चात्मा अविद्याकृतबुद्ध्याद्युपाधिमात्मत्वेन गत्वा जलादिषु सूर्यादिप्रतिबिम्बवदिह प्रविष्टो देहभेदेषु कर्मणां तत्फलार्थत्वात्सह तेनैव विज्ञानमयेनात्मना ; अतो विज्ञानमयो विज्ञानप्रायः । त एते कर्माणि विज्ञानमयश्च आत्मा उपाध्यपनये सति परे अव्यये अनन्तेऽक्षये ब्रह्मणि आकाशकल्पेऽजेऽजरेऽमृतेऽभयेऽपूर्वेऽनपरेऽनन्तरेऽबाह्येऽद्वये शिवे शान्ते सर्वे एकीभवन्ति अविशेषतां गच्छन्ति एकत्वमापद्यन्ते जलाद्याधारापनय इव सूर्यादिप्रतिबिम्बाः सूर्ये, घटाद्यपनय इवाकाशे घटाद्याकाशाः ॥
कर्माणि (கர்மாணி) முமூக்ஷுவினால் செய்யப்பட்ட அப்ரவிருத்தமான பலன்களை உடைய கர்மாக்கள் யாவும், ப்ரவிா்த்தமான பலன்களை உடைய கர்மாக்களின் பலன்களை அநுபவிப்பதாலேயே நாசமுறும். ஆனால் அவ்வாறன்றி आत्मा विज्ञानमयः (ஆத்மா விக்ஞானமய:) அவித்யா தோஷத்தாலுண்டான புத்தி முதலிய உபாதிகளை ஆத்மாவாக எண்ணி, தண்ணீர் முதலானவைகளில் சுரியன் முதலானவைகளின் பிரிதிபிம்பங்கள் போல் இந்த சரீர பேதங்களில் நுழைந்தவனான ஆத்மாவிற்கே (ஐீவாத்மாவிற்கே) கர்மாக்களுடைய பலன்கள் ஆனதால், இந்தக்கர்மாக்களுடைய பலன்கள் முமூக்ஷுவைப் பற்றுவது இல்லை. பரமாத்மாவோ விக்ஞானப் பராயணானவன். எனவே விக்ஞானமயனான இந்த ஆத்மாவின் உபாதிகள் நீங்கப்பெற்ற பொழுது முற்கூறப்பட்ட கர்மாக்கள் யாவும் परे अव्यये (பரே அவ்யயே) முடிவற்றதாயும், நாசமற்றதாயும் ஆகாசம்போல் எங்கும் நிறைந்ததாயும் உள்ள பிரஹ்மத்தில் सर्वे (சர்வே) யாவும், एकीभवन्ति (ஏகீபவந்தி) ஒன்றாகி விடுகின்றன. பிரதி பிம்பங்களுக்கு ஆதாரமான ஐலம் முதலானவைகள் நீக்கப்பெற்றபொழுது அப்பிரதிபிம்பங்கள் சுரியனிலும், இடம் முதலான உபாதிகள் நீக்கப்பட்ட பொழுது கடாகாசம் முதலானவை மஹாகாசத்திலும் ஒன்றி இரண்டறக்கலந்து விடுவது போல் முற்கூறப்பட்டவைகள் யாவும் அப்பரம்பொருளுடன் இரண்டறக்கலந்து விடுகின்றன. परे अव्यये அநந்தமாயும், நாசமற்றதாயும், பிரஹ்மமாயும், ஆகாசத்திற்கு ஒப்பாயும், பிறப்பற்றதாயும். மரணதர்மமற்றதாயும், பயமற்றதாயும், ஆதியற்றதாயும் தன்னைக் காட்டிலும் மேலானது அற்றதாயும். தன்னைத்தவிர வேறு ஒன்று அற்றதாயும், பாஹ்யமற்றதாயும் (வெளிவிஷயங்கள் அற்றதாயும்) இரண்டற்றதாயும், மங்கலகரமானதாயும், சந்ததமாயும் உள்ள பரப்ரஹ்மத்திடத்தில் எல்லாம் இரண்டற்று ஒன்றிவிடுகின்றன.
किञ्च,
மேலும்
यथा नद्यः स्यन्दमानाः समुद्रेऽस्तं गच्छन्ति नामरूपे विहाय ।
तथा विद्वान्नामरूपाद्विमुक्तः परात्परं पुरुषमुपैति दिव्यम् ॥ ८ ॥
यथा नद्यः गङ्गाद्याः स्यन्दमानाः गच्छन्त्यः समुद्रे समुद्रं प्राप्य अस्तम् अदर्शनमविशेषात्मभावं गच्छन्ति प्राप्नुवन्ति नाम च रूपं च नामरूपे विहाय हित्वा, तथा अविद्याकृतनामरूपात् विमुक्तः सन् विद्वान् परात् अक्षरात्पूर्वोक्तात् परं दिव्यं पुरुषं यथोक्तलक्षणम् उपैति उपगच्छति ॥
यथा (யதா) எவ்வாறு स्यन्दमानाः (ஸ்யந்தமானா:) பெருகுகின்ற नद्यः (நத்ய:) கங்கை முதலிய நதிகள் नामरूपे (நாமரூபே) நாபரூபங்களை विहाय (விஹாய) விட்டு समुद्रे (சமுத்ரே) சமுத்திரத்தை அடைந்து अस्तं (அஸ்தம்) விசேஷத் தன்மை அற்று அதனுடன் கலந்து இல்லாமல் गच्छन्ति (கச்சந்தி) ஆகின்றதோ तथा (ததா) அவ்வாறே नामरूपाद्विमुक्तः (நாமரூபாத் விமுக்த:) அவித்தையினால் ஏற்பட்ட நாமரூபங்களிலிருந்து விடுபட்ட विद्वान् (வித்வான்) விவேகியான வித்வானனவன் पराम्परं (பராத்பரம்) முன்பு கூறப்பட்ட அக்ஷரத்தைக் காட்டிலும் திவ்யமான पुरुषं (புருஷம்) முற்கூறப்பட்ட லக்ஷணத்துடன் கூடிய பிரஹ்மத்தை அடைகிறான்.
ननु श्रेयस्यनेके विघ्नाः प्रसिद्धाः ; अतः क्लेशानामन्यतमेनान्येन वा देवादिना च विघ्नितो ब्रह्मविदप्यन्यां गतिं मृतो गच्छति न ब्रह्मैव ।
(சங்கை) ச்ரேயஸ் என்னும் மோக்ஷமடைவதில் அநேக விக்கினங்கள் (இடையூறுகள்) ஏற்படுவது என்பது பிரசித்தமானவை. ஆகையால் மற்றவர்களால் ஏற்படும் க்லேசங்களாலோ, அல்லது தேவர்களால் செய்யப்பட்ட இடையூறுகளின் காரணத்தாலோ பிரஹ்ம வித்தானவனும் மரணமடைந்து வேறு கதியை அடைவான். ப்ரஹ்மத்தை அடைவது இல்லை எனில்
न, विद्ययैव सर्वप्रतिबन्धस्यापनीतत्वात् । अविद्याप्रतिबन्धमात्रो हि मोक्षो नान्यप्रतिबन्धः, नित्यत्वादात्मभूतत्वाच्च । तस्मात्-
(சமாதானம்) அவ்வாறு அல்ல. பிரஹ்ம வித்தையாலேயே எல்லா பிரதி பந்தங்களும் நீக்கப்படுவதால், மோக்ஷத்திற்கு அவித்தியா பிரதிபந்த மாத்திரமேயன்றி வேறு பிரதிபந்தம் கிடையாது. ஏன்எனில் நித்தியமானவனாயும், ஆத்மபூதமாயும் இருப்பதாகும். ஆகையால்
स यो ह वै तत्परमं ब्रह्म वेद ब्रह्मैव भवति नास्याब्रह्मवित्कुले भवति ।
तरति शोकं तरति पाप्मानं गुहाग्रन्थिभ्यो विमुक्तोऽमृतो भवति ॥ ९ ॥
सः यः कश्चित् ह वै लोके तत् परमं ब्रह्म वेद साक्षादहमेवास्मीति जानाति, स नान्यां गतिं गच्छति । देवैरपि तस्य ब्रह्मप्राप्तिं प्रति विघ्नो न शक्यते कर्तुम् ; आत्मा ह्येषां स भवति । तस्माद्ब्रह्म विद्वान् ब्रह्मैव भवति ।
यः ह वै (ய: ஹ வை) எவன் ஒருவன் இவ்வுலகில் तत्परमं ब्रहा (தத் பரமம் ப்ரஹ்ம) அந்த பரப்பிரஹ்மத்தை वेद (வேத) அறிகின்றானோ, அதாவது நான் அந்தப் பரப்பிரஹ்மமாயிருக்கிறேன் என்று சாக்ஷாத்தாக அறிகின்றானோ सः (ச:) அவன் வேறுகதியை அடைவதில்லை. தேவர்களும் அவனுடைய பிரஹ்மப்பிராப்திக்கு இடையூறு செய்ய முடியாதவர்களாகிறார்கள். அவனே (அந்த பிரஹ்ம வேத்தாவே) அவர்களுடைய ஆத்மாவாக இருக்கிறான். ஆகையால் பிரஹ்மத்தை அறிந்தவன் பிரஹ்மமாகின்றான்.
किञ्च, न अस्य विदुषः अब्रह्मवित् कुले भवति ; किञ्च, तरति शोकम् अनेकेष्टवैकल्यनिमित्तं मानसं सन्तापं जीवन्नेवातिक्रान्तो भवति । तरति पाप्मानं धर्माधर्माख्यं गुहाग्रन्थिभ्यः हृदयाविद्याग्रन्थिभ्यः विमुक्तः सन् मृतः भवतीत्युक्तमेव ‘भिद्यते हृदयग्रन्थिः’ (मु. उ. २ । २ । ९) इत्यादि ॥ ९ ॥
மேலும் अस्य (அஸ்ய) இந்த பிரஹ்மத்தை அடைந்த வித்வானின் कुले (குலே) குலத்தில் अब्रह्मवित् பிரஹ்மத்தை அறியாதவன் न भवति (ந பவதி) உண்டாவதும் இல்லை. மேலும் शोकं (சோகம்) தனக்கு இஷ்டமானவைகளை இழப்பதால் உண்டாகும் மானஸீகமான சோகத்தை तरति (தரதி) ஜீவித்துக்கொண்டிருக்கும் பொழுதே கடந்து விடுகிறான். पाप्मानं (பாப்மானம்) தர்மா தர்மம் எனப்படும் புண்யபாபங்களை तरति (தரதி) गुहाग्रन्थिभ्यः (குஹாக்ரந்திப்ய:) அவித்யாரூபான ஹிருதய க்ரந்திகளிலிருந்து (புத்தியை ஆஸ்ரயித்த அவித்யா வாசனைகளிலிருந்து) विमुक्तः (விமுக்த:) விடுபட்டவனாகி अमृतः (அம்ருத:) மரணதர்மமற்றவனாக भवति (பவதி) ஆகின்றான். ‘भिद्यते हृदयग्रन्थिः’ इत्यादि பித்யதே ஹ்ருதய க்ரந்தி இத்யாதி முதலியவகைளால் முன்பே கூறப்பட்டுள்ளது.
अथेदानीं ब्रह्मविद्यासम्प्रदानविध्युपप्रदर्शनेनोपसंहारः क्रियते —
இப்பொழுது பிரஹ்மவித்யா சம்பிரதான விதிமுறைகளை உபதேசிப்பதுடன் முடிவுறை கூறப்படுகிறது.
तदेतहचाभ्युक्तम्-
- அது இந்த ருக்கால் கூறப்படுகிறது.
तदेतदृचाभ्युक्तम् —
क्रियावन्तः श्रोत्रिया ब्रह्मनिष्ठाः स्वयं जुह्वत एकर्षिं श्रद्धयन्तः ।
तेषामेवैतां ब्रह्मविद्यां वदेत शिरोव्रतं विधिवद्यैस्तु चीर्णम् ॥ १० ॥
तदेतत् विद्यासम्प्रदानविधानम् ऋचा मन्त्रेण अभ्युक्तम् अभिप्रकाशितम् ।
அந்த இந்த வித்யா சம்ப்ரதான விதிமுறைகளை இந்த ரிக்மந்திரத்தால் கூறப்பட்டு பிரகாசப்படுத்தப்படுகிறது
क्रियावन्तः यथोक्तकर्मानुष्ठानयुक्ताः । श्रोत्रियाः ब्रह्मनिष्ठाः अपरस्मिन्ब्रह्मण्यभियुक्ताः परं ब्रह्म बुभुत्सवः स्वयम् एकर्षिम् एकर्षिनामानमग्निं जुह्वते जुह्वति श्रद्धयन्तः श्रद्दधानाः सन्तः ये, तेषामेव संस्कृतात्मनां पात्रभूतानाम् एतां ब्रह्मविद्यां वदेत ब्रूयात् शिरोव्रतं शिरस्यग्निधारणलक्षणम् । यथा आथर्वणानां वेदव्रतं प्रसिद्धम् । यैस्तु यैश्च तत् चीर्णं विधिवत् यथाविधानं तेषामेव वदेत ॥ १० ॥
क्रियावन्तः (க்ரியா வந்த:) வேதோக்தமான கர்மானுஷ்டானங்களில் ஈடுபட்டவர்களாயும் உள்ள श्रोत्रियाब्रह्मनिष्ठाः (ஸ்ரோத்திரிய பிரஹ்ம்மநிஷ்ட்டா:) சுரோத்திரியர்களாயும் பரப்ப்ரஹ்மத்தை அறிய வேண்டும் என்ற தீவிர இச்சை உள்ளவர்களாயும் உள்ள श्रद्धयन्तः (ச்ரத்தயந்த:) மிகவும் சிரத்தை உள்ளவர்கள் स्वयं (ஸ்வயம்) தாங்கள் एकर्षिं (ஏகர்ஷிம்) ஏகர்ஷிம் என்ற பெயருடைய அக்னியில் जुह्वते (ஐ்ஹ்வதே) ஹோமம் செய்கிறார்கள். तेषाम् एव (தேஷாம் ஏவ) அத்தகைய ஸம்ஸ்காரம் அடைந்த சத்பாத்திரர்கள் यैः तु (யை: து) எவர்களோ அவர்கள் शिरोव्रतं (சிரோவ்ரதம்) சிரசில் அக்னி தரிப்பது என்ற அதர்வண வேதத்தினரின் வேதவ்ரதமானது चीर्णं विधिवत् (ச்சீர்ணம் விதிவத்) விதிமுறைப்படி செய்யப்பட்டதோ அவர்களுக்குமே एतां ब्रह्मविद्यां (ஏதாம் பிரஹ்மவித்யாம்) இந்த ப்ரஹ்ம வித்தையை वदेत् (வதேத்) உபதேசிக்க வேண்டும். (அத்தகையவர்களே இப்பிரஹ்ம்ம வித்தையை ஏற்கப்பாத்திரமானவர்கள் என்பது பொருள்.
तदेतत्सत्यमृषिरङ्गिराः पुरोवाच नैतदचीर्णव्रतोऽधीते । नमः परमऋषिभ्यो नमः परमऋषिभ्यः ॥ ११ ॥
तदेतत् अक्षरं पुरुषं सत्यम् ऋषिः अङ्गिरा नाम पुरा पूर्वं शौनकाय विधिवदुपसन्नाय पृष्टवते उवाच । तद्वदन्योऽपि तथैव श्रेयोर्थिने मुमुक्षवे मोक्षार्थं विधिवदुपसन्नाय ब्रूयादित्यर्थः । न एतत् ग्रन्थरूपम् अचीर्णव्रतः अचरितव्रतोऽपि अधीते न पठति ; चीर्णव्रतस्य हि विद्या फलाय संस्कृता भवतीति ।
तत् एतत् सत्यम् (தத் ஏதத் சத்தியம்) அந்த இந்த அக்ஷரமாயும், ஸத்தியமாயும் உள்ள புருஷனைக் குறித்து पुरा (புரா) முன்பு अङ्गिराः (அங்கிரா) அங்கிரஸ் என்ற மஹரிஷியானவர் விதிப்படி அவரை அடைந்து பணிவுடன் கேட்ட செளணகரின் பொருட்டு उवाच (உவாச) கூறினார். அவ்வாறே மற்றவர்களும் இவரைப் போலவே விதிப்படி அடைந்தவர்களாகி ச்ரேயஸ்ஸில் விருப்பமுடையவரான முமூக்ஷீவிற்கு மோக்ஷத்தின் பொருட்டு உபதேசிக்க வேண்டும் என்பது பொருள். अचीर्णव्रतः (அசீர்ணவ்ரத:) முற்கூறப்பட்ட வ்ரதத்தை அனுஷ்டிக்காதவன் एतत् (ஏதத்) இந்த கிரந்தவடிவமான (நூல்வடிவமான) பிரஹ்ம வித்தையை न अपि अधीते (ந அபி அதீதே) படிப்பது இல்லை.அம்மாதிரி வ்ரதமுறைகளை மேற்கொண்டவர்களுக்கே ஸம்ஸ்காரமும் அதன் பலனும் ஏற்படும் என்பதேயாகும்.
समाप्ता ब्रह्मविद्या ; सा येभ्यो ब्रह्मादिभ्यः पारम्पर्यक्रमेण सम्प्राप्ता, तेभ्यो नमः परमऋषिभ्यः । परमं ब्रह्म साक्षाद्दृष्टवन्तो ये ब्रह्मादयोऽवगतवन्तश्च, ते परमर्षयः तेभ्यो भूयोऽपि नमः । द्विर्वचनमत्यादरार्थं मुण्डकसमाप्त्यर्थं च ॥
परमऋषिभ्यः (பரமரிஷிப்ய:) பிரஹ்மா முதல் வழிவழியாக இந்த பிரஹ்ம வித்தையை உபதேசித்த அல்லது பிரஹ்மா முதல் வழி, வழியாக இந்த பிரஹ்மவித்தையைக் கொணர்ந்த முனிவர்களின் பொருட்டு नमः (நம:) நமஸ்காரம். परमर्षिभ्यः (பரமரிஷிப்ய:) அப்பரப்பிரஹ்மத்தை ஸாக்ஷாத்தாகக்கண்ட பிரஹ்ம முதலான மற்ற ரிஷிகளுக்கும், எவர்கள் அப்பரப்பிரஹ்மத்தை உணர்ந்தார்களோ அத்தகைய மஹரிஷிகளுக்கும் नमः (நம:) மறுபடியும் நமஸ்காரம். இங்கு இருமுறை நமஸ்கரித்தது இதனுடைய முக்கியத்-தன்மையைக் குறிப்பதற்கும், இந்த முண்டகத்தை முடிப்பதற்கும் ஆகும்.
इति तृतीयमुण्डके द्वितीयखण्डभाष्यम् ॥