अथ हैनं सौर्यायणी गार्ग्यः पप्रच्छ भगवन्नेतस्मिन्पुरुषे कानि स्वपन्ति कान्यस्मिञ्जाग्रति कतर एष देवः स्वप्नान्पश्यति कस्यैतत्सुखं भवति कस्मिन्नु सर्वे सम्प्रतिष्ठिता भवन्तीति ॥ १ ॥
अथ ह एनं सौर्यायणी गार्ग्यः पप्रच्छ प्रश्नत्रयेणापरविद्यागोचरं सर्वं परिसमाप्य संसारं व्याकृतविषयं साध्यसाधनलक्षणमनित्यम् । अथेदानीं साध्यसाधनविलक्षणमप्राणममनोगोचरमतीन्द्रियमविषयं शिवं शान्तमविकृतमक्षरं सत्यं परविद्यागम्यं पुरुषाख्यं सबाह्याभ्यन्तरमजं वक्तव्यमित्युत्तरं प्रश्नत्रयमारभ्यते ।
(ச.பா) பிறகு இந்த குருவை சூரியனுடைய வம்சத்தில் உண்டான கர்க்க கோத்திரத்தில் பிறந்த சிஷ்யன் கேட்டான். முன்பு கேட்கப்பட்ட மூன்று கேள்விகளால் அபரவித்தைக்கு கோசரமான சம்சார விஷயத்தையும், வியாக்ருதமான காரிய விஷயத்தையும், சாத்திய சாதன லக்ஷணத்தோடு கூடின அநித்தியமான முற்கூறப்பட்ட சம்சார விஷயத்தை முடித்துக்கொண்டு கேட்கலானான். இப்பொழுது சாத்திய, சாதன லக்ஷணமற்றதும், பிராணன் போன்றவைகள் அல்லாததும் மனது, இந்திரியம் இவைகளுக்கு விஷயம் ஆகாததும், சர்வமங்களமானதும், சாந்தஸ்வ ரூபமானதும், எம்மாறுபாடுமற்றதும், நித்திய சத்தியமும், பரவித்தையினால் அடையத்தக்கதும் உள்ளும், புறமும் நிறைந்ததும், பிறப்பற்றதுமான புருஷன் எனப்படும் வஸ்துவைக் கூற வேண்டும் என்ற எண்ணத்துடன் மேலே வரும் மூன்று கேள்விகள் தொடங்கப்படுகின்றன.
तत्र सुदीप्तादिवाग्नेर्यस्मात्परस्मादक्षरात्सर्वे भावा विस्फुलिङ्गा इव जायन्ते तत्र चैवापियन्तीत्युक्तं द्वितीये मुण्डके ; के ते सर्वे भावा अक्षराद्विस्फुलिङ्गा इव विभज्यन्ते । कथं वा विभक्ताः सन्तस्तत्रैवापियन्ति । किंलक्षणं वा तदक्षरमिति । एतद्विवक्षया अधुना प्रश्नानुद्भावयति —
(ச.பா) அங்கு நன்கு பிரகாசிக்கின்ற அக்னி போன்ற இந்த அக்ஷரமான பரமாத்ம சொரூபத்திலிருந்து அக்னியில் தோன்றும் பொறிகள் போல் இந்த பாவங்கள் யாவும் உண்டாகின்றன. மறுபடியும் அதனிடத்திலேயே இவை ஒடுங்குகின்றன என்று இரண்டாவது முண்டகத்தில் கூறப்பட்டு உள்ளது. அவ்வாறு இருக்க அக்ஷர ஸ்வரூபத்திலிருந்து என்ன பாவங்கள் வேறுபட்டவைகள் போல் பகுக்கப்படுகின்றன. அவ்வாறு பகுக்கப்பட்ட இந்த பாவங்கள் எல்லாம் மறுபடியும் அந்த அக்ஷர சொரூபத்தில் எவ்வாறு ஒடுங்குகின்றன. அந்த அக்ஷரம் என்ன லக்ஷணமானது என்பதைக் கூறவிரும்பி இப்பொழுது கேள்விகளைக் கிளப்புகிறார்.
भगवन् , एतस्मिन् पुरुषे शिरःपाण्यादिमति कानि करणानि स्वपन्ति स्वापं कुर्वन्ति स्वव्यापारादुपरमन्ते ; कानि च अस्मिन् जाग्रति जागरणमनिद्रावस्थां स्वव्यापारं कुर्वन्ति । कतरः कार्यकरणलक्षणयोः एष देवः स्वप्नान्पश्यति । स्वप्नो नाम जाग्रद्दर्शनान्निवृत्तस्य जाग्रद्वदन्तःशरीरे यद्दर्शनम् । तत्किं कार्यलक्षणेन देवेन निर्वर्त्यते, किं वा करणलक्षणेन केनचिदित्यभिप्रायः ।
(ச.பா) ஹே! குருசிரேஷ்ட்டரே தலை, கை, கால்களுடன் கூடிய இந்த புருஷனிடத்தில் எந்தக் கரணங்கள் தூக்கத்தை அடைகின்றன. அதாவது எந்தக் கரணங்கள் தங்களுடைய செயலில் இருந்து ஒழிவை பெறுகின்றன. அவ்வாறே அவனிடத்தில் எந்தக்கரணங்கள் தூக்கமற்ற விழிப்பு நிலையை அடைந்து தங்களுடைய செயலை செய்கின்றன. எந்த காரிய, கரண லக்ஷணத்துடன் இந்த தேவன் சொப்பனங்களைப் பார்க்கிறான். சொப்பனம் என்பது ஜாக்ரத் அவஸ்தையின் தரிசனத்திலிருந்து ஒழிவு பெற்றவனுக்கு ஜாக்ரத் அவஸ்தை போல் தன் சரீரத்தின் உள்ளில் எந்த தர்சனம் ஏற்படுகிறதோ அதுவே சொப்பனமாகும்.
उपरते च जाग्रत्स्वप्नव्यापारे यत्प्रसन्नं निरायासलक्षणमनाबाधं सुखं कस्य एतत् भवति । तस्मिन्काले जाग्रत्स्वप्नव्यापारादुपरताः सन्तः कस्मिन्नु सर्वे सम्यगेकीभूताः सम्प्रतिष्ठिताः । मधुनि रसवत्समुद्रप्रविष्टनद्यादिवच्च विवेकानर्हाः प्रतिष्ठिता भवन्ति सङ्गताः सम्प्रतिष्ठिता भवन्तीत्यर्थः ।
(ச.பா) அது எந்த காரிய லக்ஷணத்தோடு கூடிய தேவனால் நடத்தப்படுகிறது என்ன கரண லக்ஷணத்தோடு யாரால் நடத்தப்படுகிறது என்பது அபிப்ராயம். இவ்வாறு ஜாக்ரத் சொப்பன வியாபாரங்கள் எந்த பரிசுத்தமாயும், எந்த ஆயாசமும் அற்றதாயும், எதனாலும் பாதிக்கப்படாததாயும் உள்ள சுகம் யாருக்கு ஏற்படுகிறது. அந்த சமயத்தில் ஜாக்ரத், சொப்பனம், முதலிய வியாபாரங்களில் இருந்து ஒழிவு பெற்ற இந்த பாவங்கள் யாரிடத்தில் ஒன்றி, ஒடுங்கி நிலைபெற்றவைகளாய் இருக்கின்றன? எது போல் எனில் தேனில் சுவை போலும், சமுத்திரத்தில் கலந்த நதிகள் போலும் இது இன்னது என்று விவேசனம் செய்ய முடியாதவைகளாய் அதோடே ஒன்றி நிலைபெற்றவைகளாக ஆகின்றன என்பது பொருள்.
ननु न्यस्तदात्रादिकरणवत्स्वव्यापारादुपरतानि पृथक्पृथगेव स्वात्मन्यवतिष्ठन्त इत्येतद्युक्तम् ; कुतः प्राप्तिः सुषुप्तपुरुषाणां करणानां कस्मिंश्चिदेकीभावगमनाशङ्कायाः प्रष्टुः ?
(ச.பா) (சங்கை) மேலும் தானியங்களை அறுவடை செய்வதற்காக உள்ள உபகரணங்கள் போல் இந்த கரணங்களும் தங்களுடைய செயலில் இருந்து ஒழிவு பெற்று தனித்தனியாகவே தன்னுடைய சொரூபத்தில் நிலை பெறுகின்றன என்று கூறப்பட்டது. இவ்வாறு கூறப்படுவதால் ஒழிவுபெற்ற கரணங்கள் சுழுத்தி அடைந்த புருஷர்களின் கரணங்களாகும் பொழுது எதனிடத்தில் ஏகமாய் இருக்கும் தன்மையை பெற்றவையாக ஆகும் என்ற ஆசங்கை கேள்வி கேட்பவருடையது ஆகும்.
युक्तैव त्वाशङ्का ; यतः संहतानि करणानि स्वाम्यर्थानि परतन्त्राणि च जाग्रद्विषये ; तस्मात्स्वापेऽपि संहतानां पारतन्त्र्येणैव कस्मिंश्चित्सङ्गतिर्न्याय्येति ; तस्मादाशङ्कानुरूप एव प्रश्नोऽयम् । अत्र तु कार्यकरणसङ्घातो यस्मिंश्च प्रलीनः सुषुप्तप्रलयकालयोः, तद्विशेषं बुभुत्सोः स को नु स्यादिति कस्मिन्सर्वे सम्प्रतिष्ठिता भवन्तीति ॥
(ச.பா) (ஸமாதானம்) இந்த ஆசங்கை பொருத்தமானதே. ஏனெனில் ஒன்றுபட்ட கரணங்கள் ஜாக்ரத் விஷயத்தில் அந்த எஜமானனின் பொருட்டு ஆனவை எனவே பரதந்திரமானவை. அவ்வாறே சொப்பன அவஸ்தையிலும் ஒன்றுபட்ட பொழுது பரதந்திரமாகவே ஒன்றில் ஒன்றுபட்டவையாக ஆவதே நியாயம் என்ற சங்கைக்கு பொருத்தமானதே இந்த பிரஸ்னம். இங்கு காரிய கரணங்களின் சேர்க்கையானது எதில் லயத்தை அடைந்திருக்கிறதோ அது சுழுத்தி பிரளய காலங்கள் ஆகும். அந்த விசேஷத்தை அறிய விரும்பிய சிஷ்யன் அவன் யாராய் இருக்கமுடியும்? எவனிடத்தில் இந்த பாவங்கள்யாவும் நிலைபெற்றதாக இருக்கின்றன? என்று கேட்டார் அந்த பிப்பலாதர்.
तस्मै स होवाच यथा गार्ग्य मरीचयोऽर्कस्यास्तं गच्छतः सर्वा एतस्मिंस्तेजोमण्डल एकीभवन्ति ताः पुनः पुनरुदयतः प्रचरन्त्येवं ह वै तत्सर्वं परे देवे मनस्येकीभवति । तेन तर्ह्येष पुरुषो न शृणोति न पश्यति न जिघ्रति न रसयते न स्पृशते नाभिवदते नादत्ते नानन्दयते न विसृजते नेयायते स्वपितीत्याचक्षते ॥ २ ॥
तस्मै स ह उवाच आचार्यः । शृणु हे गार्ग्य, यत्त्वया पृष्टम् । यथा मरीचयः रश्मयः अर्कस्य आदित्यस्य अस्तम् अदर्शनं गच्छतः सर्वाः अशेषतः एतस्मिन् तेजोमण्डले तेजोराशिरूपे एकीभवन्ति विवेकानर्हत्वमविशेषतां गच्छन्ति, ताः मरीचयस्तस्यैवार्कस्य पुनः पुनः उदयतः उद्गच्छतः प्रचरन्ति विकीर्यन्ते यथायं दृष्टान्तः । एवं ह वै तत् सर्वं विषयेन्द्रियादिजातं परे प्रकृष्टे देवे द्योतनवति मनसि चक्षुरादिदेवानां मनस्तन्त्रत्वात्परो देवो मनः, तस्मिन्स्वप्नकाले एकीभवति मण्डले मरीचिवदविशेषतां गच्छति । जिजागरिषोश्च रश्मिवन्मण्डलान्मनस एव प्रचरन्ति स्वव्यापाराय प्रतिष्ठन्ते।
(ச.பா) அந்த கார்க்கியனின் பொருட்டு ஆசாரியர் கூறலானார். ருஹ கார்க்கியனே! நீ கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறுகின்றேன். எவ்வாறு சூரியனின் கிரணங்கள் சூரியன் அஸ்தமிக்கும் பொழுது அந்தக் கிரணங்கள் யாவையும் சூரியனின் தேஜோமண்டலத்தில் ஒன்றாகி பிரித்து பார்ப்பதற்கு முடியாதவையாக ஒன்றிவிடுகின்றன. மறுபடியும் சூரியன் உதயமாகி மேலே வரும்பொழுது அந்தக் கிரணங்களும் நாலாதிக்குகளிலும் பரவுகின்றன. எவ்வாறு இந்த திருஷ்ட்டாந்தமோ அவ்வாறே இந்த விஷய இந்திரியக் கூட்டங்கள் யாவும் த்யோத்தனாத்மகமான பரமதேவனான மனதில் சொப்பனக் காலத்தில் ஒன்றிவிடுகின்றன. கண் முதலான தேவர்களுக்கு மனஸ் தந்திரமேயானதால் மனம் உயர்ந்த தேவன் எனக் கூறப்பட்டான். இவ்வாறு மனதில் ஒடுங்கிய இந்திரியங்கள் யாவும் சூரிய மண்டலத்தில் ஒன்றிய கிரணங்கள் போல் ஒன்றாகி பகுக்க முடியாதவைகளாக ஆகிவிடுகின்றன. பிறகு ஜாக்ரத் அவஸ்தையை அடைய விரும்பியபொழுது சூரிய மண்டலத்திலிருந்து கிரணங்கள் வெளிக்கிளம்பி நாநாதிக்குகளிலும் பரவுவது போல் இவையாவும் மனதிலிருந்து வெளிக்கிளம்பி தங்களுடைய வியாபாரத்தை செய்யத் தொடங்குகின்றன.
यस्मात्स्वप्नकाले श्रोत्रादीनि शब्दाद्युपलब्धिकरणानि मनस्येकीभूतानीव करणव्यापारादुपरतानि तेन तस्मात् तर्हि तस्मिन्स्वापकाले एषः देवदत्तादिलक्षणः पुरुषः न शृणोति न पश्यति न जिघ्रति न रसयते न स्पृशते न अभिवदते न आदत्ते न आनन्दयते न विसृजते न इयायते स्वपिति इति आचक्षते लौकिकाः ॥
(ச.பா) எதனால் சொப்பனக்காலத்தில் சப்தம் முதலானவைகளை அறியத்தக்க சுரோத்திரம் முதலானவைகள் மனதில் தங்களுடைய வியாபாரத்திலிருந்து ஒழிவு பெற்று ஒன்றிவிடுகின்றனவோ அதனால் அந்த சொப்பன காலத்தில் இந்த தேவதத்தன் முதலான லக்ஷணங்களோடு கூடிய புருஷன் கேட்பது இல்லை, பார்ப்பது இல்லை, முகர்வது இல்லை, சுவைப்பது இல்லை, ஸ்பரிசத்தை உணர்வது இல்லை, பேசுவது இல்லை, எதையும் எடுப்பது இல்லை, ஆனந்திப்பதும் இல்லை, வெளியேற்றப்பட வேண்டியவைகளை வெளியேற்றுவதும் இல்லை. உட்கொள்வதும் இல்லை. இந்நிலையில் அவனை உலகோர் தூங்குகிறான் என்று கூறுகின்றனர்.
प्राणाग्नय एवैतस्मिन्पुरे जाग्रति । गार्हपत्यो ह वा एषोऽपानो व्यानोऽन्वाहार्यपचनो यद्गार्हपत्यात्प्रणीयते प्रणयनादाहवनीयः प्राणः ॥ ३ ॥
सुप्तवत्सु श्रोत्रादिषु करणेषु एतस्मिन् पुरे नवद्वारे देहे प्राणाग्नयः प्राणा एव पञ्च वायवोऽग्नय इवाग्नयः जाग्रति । अग्निसामान्यं हि आह — गार्हपत्यो ह वा एषोऽपानः कथमिति, आह । यस्मात् गार्हपत्यात् अग्नेरग्निहोत्रकाले इतरोऽग्निराहवनीयः प्रणीयते प्रणयनात् , प्रणीयते अस्मादिति प्रणयनो गार्हपत्योऽग्निः, तथा सुप्तस्यापानवृत्तेः प्रणीयत इव प्राणो मुखनासिकाभ्यां सञ्चरति अत आहवनीयस्थानीयः प्राणः । व्यानस्तु हृदयाद्दक्षिणसुषिरद्वारेण निर्गमाद्दक्षिणदिक्सम्बन्धात् अन्वाहार्यपचनः दक्षिणाग्निः ॥
(ச.பா) இந்த ஒன்பது துவாரங்களுடன் கூடிய தேஹமாகிய பட்டிணத்தில் சுரோத்திரம் முதலானவைகள் தூங்கியபொழுது பிராணாக்னி எனப்படும் பிராணன் முதலான ஐந்து வாயுக்கள் அக்னிபோல் விழித்து இருக்கின்றன. இது அக்னி சாமானியமானது அன்றோ. கார்ஹபத்தியம் என்ற அக்னியே இந்த அபானன் ஆகும். எவ்வாறு என்று கூறுகிறார். எதனால் அக்னி ஹோத்திரகாலத்தில் கார்ஹபத்திய அக்னியிலிருந்து மற்றொரு அக்னியான ஆஹவனீயம் என்ற அக்னி பிரணயனம் செய்யப்படுகிறதோ, கொண்டு செல்லப்படுவதால் இதிலிருந்து கொண்டு செல்லப்படுகிறது என்பது பிரணயனம் ஆகும். இவ்வாறு கொண்டு செல்லப்பட்டதே கார்ஹபத்தியாக்னி. அவ்வாறே லயத்தை அடைந்த அபான விருத்தி பிரணயனம் செய்யப்படுவது போல் இருப்பதால் பிராணன் வாய், மூக்கு இவைகளோடு சஞ்சரிப்பதால் ஆஹவனீயஸ்தானமானது பிராணன். வியானனோ எனில் ஹிருதயத்திலிருந்து அதன் வலது புறம் உள்ள துவாரத்தால் வெளிவருவதால் அது தக்ஷிணதிக்குடன் சம்பந்தம் கொண்டமையால் கொண்டுவரப்பட்டு பாகம் (சமையல்) செய்யப்படுவதால் அந்த அக்னி தக்ஷிணாக்னியாகும்.
अत्र च होता अग्निहोत्रस्य-
(ச.பா) (அ.கை) மேலும் ஹோதா என்னும் அக்னிஹோத்திரத்தில் ஹோமம் செய்பவர்.
यदुच्छ्वासनिःश्वासावेतावाहुती समं नयतीति स समानः । मनो ह वाव यजमान इष्टफलमेवोदानः स एनं यजमानमहरहर्ब्रह्म गमयति ॥ ४ ॥
यत् यस्मात् उच्छ्वासनिःश्वासौ अग्निहोत्राहुती इव नित्यं द्वित्वसामान्यादेव तु एतौ आहुती समं साम्येन शरीरस्थितिभावाय नयति यो वायुरग्निस्थानीयोऽपि होता चाहुत्योर्नेतृत्वात् । कोऽसौ ? स समानः । अतश्च विदुषः स्वापोऽप्यग्निहोत्रहवनमेव । तस्माद्विद्वान्नाकर्मीत्येवं मन्तव्य इत्यभिप्रायः । सर्वदा सर्वाणि च भूतानि विचिन्वन्त्यपि स्वपत इति हि वाजसनेयके ।
(ச.பா) எந்த இந்த உச்வாச, நிச்வாசங்களை அக்னிஹோத்திர ஆஹுதி போல் எப்பொழுதும் இந்த இரண்டையும் ஒரே ஆஹுதி போல் சமப்படுத்தி இந்த சரீரத்தில் நிலைபெறுதலின் பொருட்டு இந்த அக்னி ஸ்தானத்திலும் ஹோமம் செய்பவரின் ஸ்தானத்திலும் உள்ள இந்த வாயு சமானன் எனப்படுவான். இந்த சமானன் யார்? இவனே முற்கூறப்பட்டவன். எனவே வித்வான்கள் தூக்கமும் அக்னி ஹோத்திர ஹோமமே என்று கூறுகின்றனர். எனவே வித்வானும் கர்மா செய்யாதவன் (அகர்மி) என்று எண்ணத்தக்கவன் என்று அபிப்ராயம் ஆகும். எப்பொழுதும் எல்லாப் பிராணிகளும் எண்ணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தூங்குகின்றன என்று வாஜசனேயர்கள் கூறுவர்.
अत्र हि जाग्रत्सु प्राणाग्निषूपसंहृत्य बाह्यकरणानि विषयांश्चाग्निहोत्रफलमिव स्वर्गं ब्रह्म जिगमिषुः मनो ह वाव यजमानः जागर्ति । यजमानवत्कार्यकरणेषु प्राधान्येन संव्यवहारात्स्वर्गमिव ब्रह्म प्रति प्रस्थितत्वाद्यजमानो मनः कल्प्यते ।
(ச.பா) இங்கு பிராணாக்கினிகள் முழித்துக்கொண்டு இருக்கும் பொழுது அதாவது வெளிக்கரணங்கள் உபசம்ஹாரம் அடைந்து இருக்கும்பொழுது இவைகள் விழித்து இருந்து விஷயங்களை அக்னி ஹோத்திரபலம் போல் சுவர்க்கம் எனப்படும் பிரஹ்மத்தை அடைய விரும்பும் மனம் எனப்படும் எஜமானன் விழித்து இருக்கிறான். எஜமானன் போல் காரியங்கள் செய்வதில் (காரியங்களிலும், கரணங்களிலும்) பிரதானமாய் வியவஹாரத்துடன் இருப்பதால் சுவர்க்கம் போல் பிரஹ்மத்தை அடைய புறப்பட்ட எஜமானனாக மனம் கல்பிக்கப்படுகிறது.
इष्टफलं यागफलमेव उदानः वायुः । उदाननिमित्तत्वादिष्टफलप्राप्तेः । कथम् ? सः उदानः एनं मनआख्यं यजमानं स्वप्नवृत्तिरूपादपि प्रच्याव्य अहरहः सुषुप्तिकाले स्वर्गमिव ब्रह्म अक्षरं गमयति । अतो यागफलस्थानीयः उदानः ॥
(ச.பா) இஷ்ட்டபலமான யாக பலம் உதான வாயுவாகும். உதான நிமித்தமாகவே இஷ்ட்டபலம் அறியப்படுவதால் அவ்வாறு கூறப்பட்டது. எவ்வாறு எனில் அந்த உதானனே மனம் எனப்படும் எஜமானனை சொப்பன விருத்தி ரூபத்திலிருந்தும் நழுவச்செய்து தினம்தோறும் சுழுத்தி காலத்தில் சொர்க்கத்தை அடைவது போல் அக்ஷரமான பிரஹ்மத்தை அடைவிக்கிறது. எனவே யாக பல ஸ்தானத்தில் உள்ளது உதானன்.
एवं विदुषः श्रोत्राद्युपरमकालादारभ्य यावत्सुप्तोत्थितो भवति तावत्सर्वयागफलानुभव एव, नाविदुषामिवानर्थायेति विद्वत्ता स्तूयते । न हि विदुष एव श्रोत्रादीनि स्वपन्ति, प्राणाग्नयो वा जाग्रति । जाग्रत्स्वप्नयोर्मनः स्वातन्त्र्यमनुभवदहरहः सुषुप्तं वा प्रतिपद्यते । समानं हि सर्वप्राणिनां पर्यायेण जाग्रत्स्वप्नसुषुप्तगमनम् ; अतो विद्वत्तास्तुतिरेवेयमुपपद्यते । यत्पृष्टं कतर एष देवः स्वप्नान्पश्यतीति ; तदाह —
(ச.பா) (அ.கை) இவ்வாறு வித்வான்களுக்கு சுரோத்திரம் முதலானவைகள் ஒழிவுபெறும் காலம் தொடங்கி மறுபடியும் எதுவரை எழுந்திருக்கிறானோ அதுவரையில் அவனுக்கு சர்வயாகபல அனுபவமே இந்த தூக்கம். அவித்வான்களுக்கு அநர்த்தத்தின் பொருட்டு ஆகிறது. வித்வான்களுக்கு அவ்வாறு அல்ல. இவ்வாறு வித்வத்தன்மையை துதிப்பதற்கு கூறப்பட்டதே. வித்வான்களுடைய சுரோத்திரம் முதலானவை தூங்குகின்றன. பிராணாக்கினிகள் விழித்திருக்கின்றன. இந்த ஜாக்ரத் சொப்பனங்களில் மனதானது சுவதந்திரத்தை அனுபவித்துக்கொண்டு சுழுத்தியை அடைகிறது என்பது இல்லை. இவை சர்வப்பிராணி சாமானியமே. எனவே பரியாயமாய் (வித்தியாசத்தை) ஜாக்கிரத், சொப்பன, சுழுத்தி கமனங்களை வித்வத்தை துதிப்பதற்காகவே ஏற்பட்டது என்பதே பொருந்தும். நீ எதை எந்த தேவன் சொப்பனங்களை பார்க்கிறான் என்று கேட்டாயோ அதன் பொருட்டு கூறுகிறேன் என்று சொல்லத் தொடங்குகிறார்.
अत्रैष देवः स्वप्ने महिमानमनुभवति । यद्दृष्टं दृष्टमनुपश्यति श्रुतं श्रुतमेवार्थमनुशृणोति देशदिगन्तरैश्च प्रत्यनुभूतं पुनः पुनः प्रत्यनुभवति दृष्टं चादृष्टं च श्रुतं चाश्रुतं चानुभूतं चाननुभूतं च सच्चासच्च सर्वं पश्यति सर्वः पश्यति ॥ ५ ॥
अत्र उपरतेषु श्रोत्रादिषु देहरक्षायै जाग्रत्सु प्राणादिवायुषु प्राक्सुषुप्तिप्रतिपत्तेः एतस्मिन्नन्तराल एषः देवः अर्करश्मिवत्स्वात्मनि संहृतश्रोत्रादिकरणः स्वप्ने महिमानं विभूतिं विषयविषयिलक्षणमनेकात्मभावगमनम् अनुभवति प्रतिपद्यते ।
(ச.பா) சுழுத்திக்கு முன்னிலையில் சுரோத்திரம் முதலானவைகள் ஒடுங்கியும், பிராணன் முதலான வாயுக்கள் தேஹரக்ஷணத்தின் பொருட்டு விழித்துக்கொண்டு இருக்கின்றன. இந்த இடைவெளி காலத்தில் இந்த தேவன் சூரியனின் கிரணங்கள் போல் தன்னுடைய ஆத்மாவில் ஒடுங்கின சுரோத்திரம் முதலான கரணங்கள் உடையவனாகி சொப்பனத்தில் விஷய, விஷயீ லக்ஷணமாய் அநேகாத்ம பாவத்தை அடைவதான விபூதியை அனுபவிக்கிறான், அல்லது அடைகிறான்.
ननु महिमानुभवने करणं मनोऽनुभवितुः ; तत्कथं स्वातन्त्र्येणानुभवतीत्युच्यते ? स्वतन्त्र हि क्षेत्रज्ञः ।
(ச.பா) (பூர்வ) மேலும் மஹிமையை அனுபவிக்கும் காரணமான மனத்தை அனுபவிப்பவனுக்கு எவ்வாறு ஸ்வாதந்திரியமாய் அனுபவிக்கிறது என்று சொல்லப்படுகிறது. இது எவ்வாறு பொருந்தும். க்ஷதே்திரக்ஞன் சுவதந்திரன் அன்றோ, எனில்
नैष दोषः । क्षेत्रज्ञस्य स्वातन्त्र्यस्य मनउपाधिकृतत्वात् । न हि क्षेत्रज्ञः परमार्थतः स्वतः स्वपिति जागर्ति वा । मनउपाधिकृतमेव तस्य जागरणं स्वप्नश्च । उक्तं वाजसनेयके
‘सधीः स्वप्नो भूत्वा’ (बृ. मा. ४ । ३ । ७) ‘ध्यायतीव लेलायतीव’ (बृ. उ. ४ । ३ । ७) इत्यादि । तस्मान्मनसो विभूत्यनुभवे स्वातन्त्र्यवचनं न्याय्यमेव ।
(ச.பா) (சித்தாந்தீ) இது தோஷமாகாது. க்ஷதே்திரக்ஞனின் சுவாதந்திரியம் மன உபாதியினால் உண்டானது. ஒருபோதும் க்ஷதே்திரக்ஞன் தானாகவே தூங்குவதோ, விழிப்பதோ இல்லை. மனமாகிற உபாதியால் ஏற்பட்டதே அவனுடைய ஜாகரணமும், ஸ்வப்பனமும் ஆகும் என்று வாஜசனேயர்கள் கூறுவர். “सधीः स्वप्नो भूत्वा ध्यायतीव लेलायतीव” அந்த புத்தியானது சொப்பனமாகி தியானிப்பது போலும் இங்கும் அங்கும் அலைவது போன்றும் இருக்கிறது என்பன போன்ற வாக்கியங்களால் விளக்கப்படுகிறது. ஆதலால் மனதின் விபூதியை அனுபவிக்கும் தன்மையில் சுவதந்திரவசனம் நியாயமே.
(ச.பா) மனதாகிற உபாதியுடன் கூடியிருக்கும் நிலையில் சொப்பன காலத்தில் க்ஷதே்திரக்ஞனுக்கு சுவயம் ஜோதித்தன்மை பாதிக்கப்படுகிறதே என்று சிலர் கூறுவர். அது அவ்வாறு அல்ல. சுருதியினுடைய அர்த்தத்தை சரியாக புரிந்து கொள்ளாததால் ஏற்பட்ட பிராந்தியே அவர்கள் வாதம். எதனால் சுவயம் ஜோதியாய் விளங்குவது போன்ற எல்லா வியவகாரங்களும் மோக்ஷம் வரையிலேயே. அதற்கு முன்நிலையில் ஏற்படும்யாவும் மனம் முதலான உபாதிகளால் உண்டான அவித்தியா விஷயங்களேயாகும். எங்கு மற்றது போல் இருந்து அங்கு மற்றொருவன் வேறு ஒருவனைப் பார்ப்பானேயானால் இந்த ஆத்ம விஷயத்தின் சம்சர்க்கம் ஏற்படாது. “यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत्केन कं पश्येत्” எங்கு இந்த ஆத்மாவினுடைய ஆத்ம ஸ்வரூபமாகவே எல்லாம் ஆகும்பொழுது யார், யாரைப் பார்ப்பர் என்பன போன்ற சுருதி வாக்கியங்களால் முன் சொன்னவைகளை உணர்கிறோம். எனவே இந்த ஆசங்கை மந்தபிரஹ்ம வித்துக்களுடையவே அன்றி ஏகாத்துமத்துவத்தை அறிந்தவர்களுடையது அல்ல.
(ச.பா) (பூர்வ) மேலும் இவ்வாறு இருக்கையில் இந்த புருஷனானவன் ஸ்வயம் ஜோதி என்ற விசேஷணம் பொருள் அற்றதாக ஆகும் என்று கூறுவாயேயானால்.
(ச.பா) (சித்தாந்தீ) அதற்கு பதில் கூறுகிறோம். இது மிகவும் அல்பமானது. இந்த ஹ்ருதயத்தினுடைய உள்பகுதியில் உள்ள ஆகாசத்தில் இவன் நிலைபெற்றுள்ளான் என்று அந்தர் ஹ்ருதயத்தை பரிசேதம் செய்கையில் ஸ்வயம் ஜோதித்தன்மை மிகவும் பாதிக்கப்படும்.
सत्यमेवम् ; अयं दोषो यद्यपि स्यात्स्वप्ने केवलतया स्वयञ्ज्योतिष्ट्वेनार्धं तावदपनीतं भारस्येति चेत् ।
(ச.பா) (பூர்வ) இந்த தோஷம் உண்மையாக இருக்குமேயானால் அப்பொழுது சொப்பனத்தில் கேவலஜ்யோதிஸ் தன்மையான அர்த்தம் பாதிபாரத்தை இறக்கியது போல் ஆகும் என்று கூறுவாயேயானால்.
न , तत्रापि ‘पुरीतति नाडीषु शेते’ इति श्रुतेः पुरीतन्नाडीसम्बन्धादत्रापि पुरुषस्य स्वयञ्ज्योतिष्ट्वेनार्धभारापनयाभिप्रायो मृषैव ।
(ச.பா) (சித்தாந்தீ) அதுவும் சரியன்று. அங்குகூட நாடிகளில் துயில்கிறான் என்பதால் புரீதம் என்ற நாடியில் சம்பந்தம் இருப்பதால், இவ்வாறு இருக்கையில் புருஷனின் ஸ்வயம் ஜோதித்துவத்தில் (ஸ்வஸம்வேத்தியத்தில்) பாதி சுமை கழிக்கப்பட்டது என்ற அபிப்ராயமும் பொய்யானதே.
(ச.பா) (பூர்வ) இந்நிலையில் அங்கு இந்த புருஷனுக்கு எவ்வாறு ஸ்வயம் ஜ்யோதித்துவம்?
अन्यशाखात्वादनपेक्षा सा श्रुतिरिति चेत् ।
(ச.பா) (மத்யஸ்தன்) நீர் கூறும் சுருதி வாக்கியம் வேறு சாகையில் இருப்பதால் அந்த சுருதி இதை அபேக்ஷித்தது அல்ல என்று கூறுவாயேயானால்.
न , अर्थैकत्वस्येष्टत्वात् । एको ह्यात्मा सर्ववेदान्तानामर्थो विजिज्ञापयिषितो बुभुत्सितश्च । तस्माद्युक्ता स्वप्न आत्मनः स्वयञ्ज्योतिष्ट्वोपपत्तिर्वक्तुम् , श्रुतेर्यथार्थतत्त्वप्रकाशकत्वात् ।
(ச.பா) (பூர்வ) அதுவும் சரியானது அன்று. மேலும் ஆத்மாவின் ஏகத்துவமே விரும்பத்தக்கது. எல்லா வேதாந்த வாக்கியங்களிலும் ஒரே ஆத்ம ஸ்வரூபம் பிரதிபாதிக்கப்பட்டுள்ளது. ஆத்மாவை விரும்புவர்களுக்கு அவர்கள் நன்கு தெளிந்து அறியும் வண்ணம் சர்வ வேதாந்த வாக்கியங்களும் ஆத்மாவின் ஏகத்துவத்தையே போதிக்கின்றன. எனவே ஸ்வப்ன ஆத்மாவிற்கு ஸ்வயம் ஜ்யோதித்துவம் கூறுவது பொருத்தமானதே. ஏனெனில் சுருதிகளின் யதார்த்தத்தன்மை அறிந்து கொள்ளத்தக்கது. மேலும் சுருதி வாக்கியம் யதார்த்தத்தையே பிரகாசப்படுத்தும்.
एवं तर्हि शृणु श्रुत्यर्थं हित्वा सर्वमभिमानम् ; न ह्यभिमानेन वर्षशतेनापि श्रुत्यर्थो ज्ञातुं शक्यते सर्वैः पण्डितंमन्यैः । यथा हृदयाकाशे पुरीतति नाडीषु च स्वपतस्तत्सम्बन्धाभावात्ततो विविच्य दर्शयितुं शक्यत इति आत्मनः स्वयञ्ज्योतिष्ट्वं न बाध्यते । एवं मनस्यविद्याकामकर्मनिमित्तोद्भूतवासनावति कर्मनिमित्ता वासना अविद्यया अन्यद्वस्त्वन्तरमिव पश्यतः सर्वकार्यकरणेभ्यः प्रविविक्तस्य द्रष्टुर्वासनाभ्यो दृश्यरूपाभ्योऽन्यत्वेन स्वयञ्ज्योतिष्ट्वं सुदर्पितेनापि तार्किकेण केन वारयितुं शक्यते ? तस्मात्साधूक्तं मनसि प्रलीनेषु करणेष्वप्रलीने च मनसि मनोमयः स्वप्नान्पश्यतीति ।
(ச.பா) (சித்தாந்தீ) இவ்வாறிருக்க, எல்லா அபிமானங்களையும் விட்டு ஒழித்து சுருதி அர்த்தத்தை கேட்பாயாக. அபிமானம் கொண்டு தன்னைப் பண்டிதர்களாக எண்ணிக் கொண்டவர்களால் நூ று வருஷங்களில் கூட சுருதி அர்த்தத்தை அறிந்துகொள்ளவோ, புரிந்துகொள்ளவோ முடியாது. எவ்வாறு ஹ்ருதயாகாசத்தில் விளங்குகிறானோ அவ்வாறே ஸ்வப்ன காலத்தில் புரீதம் என்ற நாடிகளில் விளங்குகிறான். ஆனாலும் அவனுக்கும் அந்த ஸ்வப்னத்திற்கும் சம்பந்தம் இன்மையால் அவனைப்பிரித்து காட்டமுடியும். ஆகவே ஆத்மாவின் ஸ்வயம் ஜ்யோதித்துவம் பாதிக்கப்படுவது இல்லை. இவ்வாறே மனஸில் அவித்தியா காம கர்ம நிமித்தங்களால் உண்டான வாசனைகளால் உண்டாகும் கர்மாக்களின் நிமித்தமான வாசனைகள். அவை அவித்தையால் மற்றொரு வஸ்துவை மற்றொருவன் பார்ப்பதுபோல் எல்லாக் காரிய கரணங்களைக்காட்டிலும், வேறுபட்டு நிற்கும் திருஷ்ட்டாவிற்கு வாசனைகளால் திருஷ்ய ரூபங்களைக் காட்டிலும் வேறுபட்டு இருப்பதால் மிகவும் கொழுப்புடன் இருக்கும் தார்க்கிகனால் கூட ஆத்மாவின் ஸ்வயம் ஜ்யோதித்துவத்தை பாதிக்கும் வண்ணம் ஏதும் சொல்லமுடியாது. எனவே மனதில் கரணங்கள் லயம் அடைந்த பொழுது அதே மனதில் மனோமயனானவன் ஸ்வப்னங்களைப் பார்க்கிறான் என்று கூறப்பட்டது மிகவும் உண்மையானதே, பொருத்தமானதே.
कथं महिमानमनुभवतीति उच्यते । यन्मित्रं पुत्रादि वा पूर्वं दृष्टं तद्वासनावासितः पुत्रमित्रादिवासनासमुद्भूतं पुत्रं मित्रमिव वा अविद्यया पश्यतीत्येवं मन्यते । शृणोति तथा श्रुतमर्थं तद्वासनयानु शृणोतीव । देशदिगन्तरैश्च देशान्तरैर्दिगन्तरैश्च प्रत्यनुभूतं पुनः पुनस्तत्प्रत्यनुभवतीव अविद्यया । तथा दृष्टं चास्मिञ्जन्मन्यदृष्टं च जन्मान्तरदृष्टमित्यर्थः । अत्यन्तादृष्टे वासनानुपपत्तेः । एवं श्रुतं चाश्रुतं चानुभूतं चास्मिञ्जन्मनि केवलेन मनसा अननुभूतं च मनसैव जन्मान्तरेऽनुभूतमित्यर्थः । सच्च परमार्थोदकादि । असच्च मरीच्युदकादि । किं बहुना, उक्तानुक्तं सर्वं पश्यति सर्वः पश्यति सर्वमनोवासनोपाधिः सन्नेवं सर्वकरणात्मा मनोदेवः स्वप्नान्पश्यति ॥
(ச.பா) எவ்வாறு விபூதிகளை அனுபவிக்கிறான் என்று கூறப்படுகிறது. எந்த நண்பனையோ, மகனையோ முதலில் பார்த்தானோ அந்தப் பார்த்த வாசனையினால், வாசனை உண்டாகி புத்திர, மித்திரர்களால் உண்டான வாசனைகளால் புத்திரனை மித்திரன் போலும், மித்திரனைப் புத்திரன் போலும் அவித்தையால் பார்க்கிறான். எண்ணுகிறான். அவ்வாறு முன்பு கேட்ட பொருளை அந்த வாசனையினால் பாவிக்கப்பட்டு தொடர்ந்து கேட்பது போல் கேட்கிறான். வேறு தேசங்களிலும், திக்குகளிலும், அவாந்தர திசைகளும், அனுபவித்ததை மறுபடியும், மறுபடியும் தொடர்நது அனுபவிப்பது போல் அவித்தையால் அனுபவிக்கிறான். அவ்வாறே இந்த ஜன்மாவில் பார்க்காததைக் கூட ஆனால் ஜன்மாந்திரத்தில் பார்த்ததை இந்த ஜன்மாவில் தொடர்ந்து பார்க்கிறான். பார்க்காத விஷயத்திற்கு வாசனை ஏற்படும் என்பது பொருந்தாது. எனவே அவன் எப்பொழுதாவது பார்த்திருத்தல் வேண்டும். இவ்வாறு கேட்டதையும், கேட்காததையும் இந்த ஜன்மாவில் அனுபவித்ததையும், அனுபவிக்காததையும் கேவலம் மனசால் மாத்திரம் அனுபவித்ததையும் அவ்வாறு மனசால் அனுபவிக்காததையும் கூட மனசின் ஜன்மாந்திர சம்பந்தத்தால் இப்பொழுது அனுபவிக்கிறான் என்பது பொருள். சத் என்பது பரமார்த்தமான தண்ணீர் முதலானது ஆகும். அசத் என்பது கானல் நீர் முதலானவையாகும். அதிகம் கூறுவானேன் முற்கூறப்பட்ட யாவற்றையும் எல்லா மனோ வாசனையாகிற உபாதி வசப்பட்டவனாகி எல்லாவற்றையும் சர்வகரணாத்மாவான மனோதேவன் ஸ்வப்பனங்களைப் பார்க்கிறான்.
स यदा तेजसाभिभूतो भवति । अत्रैष देवः स्वप्नान्न पश्यत्यथैतदस्मिञ्शरीरे एतत्सुखं भवति ॥ ६ ॥
सः यदा मनोरूपो देवो यस्मिन्काले सौरेण पित्ताख्येन तेजसा नाडीशयेन सर्वतः अभिभूतो भवति तिरस्कृतवासनाद्वारो भवति, तदा सह करणैर्मनसो रश्मयो हृद्युपसंहृता भवन्ति । यदा मनो दार्वग्निवदविशेषविज्ञानरूपेण कृत्स्नं शरीरं व्याप्यावतिष्ठते, तदा सुषुप्तो भवति । अत्र एतस्मिन्काले एषः मनआख्यो देवः स्वप्नान् न पश्यति दर्शनद्वारस्य निरुद्धत्वात्तेजसा । अथ तदा एतस्मिन् शरीरे एतत्सुखं भवति यद्विज्ञानं निराबाधमविशेषेण शरीरव्यापकं प्रसन्नं भवतीत्यर्थः ॥
(ச.பா) அந்த மனோ ரூபனான தேவனானவன் எந்த சமயத்தில் சூரியனின் பித்தம் எனப்படும் தேஜஸால் நாடிகளில் எங்கும் பரவி எல்லா வாசனாத் துவாரங்களையும், அடைத்த வண்ணம் ஆகிறானோ அப்பொழுது கரணங்களுடன் கூட மனதின் கிரணங்கள் (கரணங்களுடன் மனதை இணைக்கும் கடிவாளங்கள்) உள் இழுக்கப்பட்டவைகளாக ஆகின்றன. எப்பொழுது மனதின் ஜன்னல்கள் மூடப்படுகின்றனவோ அப்பொழுது அந்த மனோதேவன் விக்ஞான ரூபத்தோடு முழுசரீரத்தையும் வியாபித்து நிலைபெறுகிறான். அப்பொழுது சுழுத்தியை அடைந்தவனாக ஆகிறான். இந்த சமயத்தில் இந்த மனம் எனப்படும் தேவன் சொப்பனங்களைப் பார்ப்பது இல்லை. ஏனெனில் முற்கூறப்பட்ட தேஜஸால் தரிசனத்துவாரங்கள் அடைபட்டு விடுகின்றன. மேலும் இந்த சரீரத்தில் இந்த சுகம் ஏற்படுகிறது. எவ்வாறு எனில் எந்த விக்ஞானம் உண்டோ அது எந்த பாதகமும் இன்றி எந்த விசேஷமும் நீங்கி அவிசேஷமாய் சரீரம் முழுவதும் வியாபித்து பிரசன்னமாய் இருக்கிறது என்பது பொருள்.
एतस्मिन्काले अविद्याकामकर्मनिबन्धनानि कार्यकरणानि शान्तानि भवन्ति । तेषु शान्तेष्वात्मस्वरूपमुपाधिभिरन्यथा विभाव्यमानमद्वयमेकं शिवं शान्तं भवतीत्येतामेवावस्थां पृथिव्याद्यविद्याकृतमात्रानुप्रवेशेन दर्शयितुं दृष्टान्तमाह —
(ச.பா) (அ.கை) இந்த சமயத்தில் அவித்யா காமகர்மங்களால் செயல்படும் காரியகரணங்கள் யாவும் சாந்தங்களாக (ஒழிவு பெற்றவைகளாக) ஆகின்றன. இவ்வாறு அவைகள் ஒழிவுபெற்றபொழுது ஆத்மஸ்வரூபமானது தனிப்பட்டு பாவிக்கப்பட்டதாகி தனக்கு இரண்டாவதற்றதாய் ஒன்றாய், சிவமாய், சாந்தமாய் ஆகிறது என்ற இந்த அவஸ்தையை பிருதிவி முதலான அவித்தையால் உண்டான மாத்ரா பிரவேசத்தால் காண்பிப்பதற்கு திருஷ்ட்டாந்தத்தைக் கூறுகிறார்.
स यथा सोम्य वयांसि वासोवृक्षं सम्प्रतिष्ठन्त एवं ह वै तत्सर्वं पर आत्मनि सम्प्रतिष्ठते ॥ ७ ॥
स दृष्टान्तः यथा येन प्रकारेण हि सोम्य प्रियदर्शन, वयांसि पक्षिणः वासार्थं वृक्षं वासोवृक्षं प्रति सम्प्रतिष्ठन्ते गच्छन्ति, एवं यथा दृष्टान्तः ह वै तत् वक्ष्यमाणं सर्वं परे आत्मनि अक्षरे सम्प्रतिष्ठते ॥
(ச.பா) ஹே பிரியமான தரிசனமுடையவனே அதற்கு இந்த திருஷ்டாந்தமாகும். எந்தப் பிரகாரமாய் பக்ஷிகள் வாசத்திற்கான மரத்தை வந்து அடைகின்றனவோ அவ்வாறு இந்த திருஷ்டாந்தப்படி மேலே கூறப்போகும் யாவும் அக்ஷரமான பரமாத்மாவை வந்து அடைகின்றன.
किं तत्सर्वम् -
(ச.பா) (அ.வை) அவையாவும் என்ன என்று விளக்குகிறார்.
पृथिवी च पृथिवीमात्रा चापश्चापोमात्रा च तेजश्च तेजोमात्रा च वायुश्च वायुमात्रा चाकाशश्चाकाशमात्रा च चक्षुश्च द्रष्टव्यं च श्रोत्रं च श्रोतव्यं च घ्राणं च घ्रातव्यं च रसश्च रसयितव्यं च त्वक्च स्पर्शयितव्यं च वाक्च वक्तव्यं च हस्तौ चादातव्यं चोपस्थश्चानन्दयितव्यं च पायुश्च विसर्जयितव्यं च पादौ च गन्तव्यं च मनश्च मन्तव्यं च बुद्धिश्च बोद्धव्यं चाहङ्कारश्चाहङ्कर्तव्यं च चित्तं च चेतयितव्यं च तेजश्च विद्योतयितव्यं च प्राणश्च विधारयितव्यं च ॥ ८ ॥
पृथिवी च स्थूला पञ्चगुणा तत्कारणं च पृथिवीमात्रा गन्धतन्मात्रा, तथा आपश्च आपोमात्रा च, तेजश्च तेजोमात्रा च, वायुश्च वायुमात्रा च, आकाशश्चाकाशमात्रा च, स्थूलानि च सूक्ष्माणि च भूतानीत्यर्थः । तथा चक्षुश्च इन्द्रियं रूपं च द्रष्टव्यं च, श्रोत्रं च श्रोतव्यं च, घ्राणं च घ्रातव्यं च, रसश्च रसयितव्यं च, त्वक्च स्पर्शयितव्यं च, वाक्च वक्तव्यं च, हस्तौ च आदातव्यं च, उपस्थश्च आनन्दयितव्यं च, पायुश्च विसर्जयितव्यं च, पादौ च गन्तव्यं च ; बुद्धीन्द्रियाणि कर्मेन्द्रियाणि तदर्थाश्चोक्ताः । मनश्च पूर्वोक्तम् । मन्तव्यं च तद्विषयः । बुद्धिश्च निश्चयात्मिका । बोद्धव्यं च तद्विषयः । अहङ्कारश्च अभिमानलक्षणमन्तःकरणम् । अहङ्कर्तव्यं च तद्विषयः । चित्तं च चेतनावदन्तःकरणम् । चेतयितव्यं च तद्विषयः । तेजश्च त्वगिन्द्रियव्यतिरेकेण प्रकाशविशिष्टा या त्वक् । तया निर्भास्यो विषयो विद्योतयितव्यम् । प्राणश्च सूत्रं यदाचक्षते तेन विधारयितव्यं सङ्ग्रथनीयम् । सर्वं हि कार्यकरणजातं पारार्थ्येन संहतं नामरूपात्मकमेतावदेव ॥
(ச.பா) பிருதிவீ என்ற ஸ்தூல பஞ்ச குணமான பிருதிவியும், அதற்குக் காரணமான கந்ததன் மாத்திரையோடு கூடிய பிருதிவி மாத்திரையும் ஆகும். அவ்வாறே தண்ணீரும் அதன் மாத்திரையும், தேஜஸ்ஸும் அதன் மாத்திரையும், வாயுவும் அதன் மாத்திரையும், ஆகாசமும் அதன் மாத்திரையும் ஆகும். ஸ்தூலமாயும் சூக்ஷ்மமாயும் உள்ள பூதங்கள் என்பது பொருள். அவ்வாறே சக்ஷுஸ் இந்திரியமும், அதனால் பார்க்கத்தக்க ரூபமும் ஆகும். அவ்வாறே சிரவணேந்திரியமும் அதனால் கேட்கத்தக்கதும், கிராணேந்திரியமும் அதனால் முகரத்தக்கதும், ரசனேந்திரியமும் அதனால் சுவைக்கத்தக்கதும், துவக் இந்திரியமும், அதனால் தொடத்தக்கதும், வாக் இந்திரியமும் அதனால் சொல்லத்தக்கதும், ஹஸ்தங்களும் அதனால் எடுக்கத்தக்கவையும், ஜனனேந்திரியமும் அதனால் மகிழத்தக்கதும், பாயு இந்திரியமும், அதனால் வெளியேற்றத்தக்கவைகளும், கால்களும் அதனால் அடையத்தக்கதும் ஆகும். இவ்வாறு புத்தி இந்திரியங்களும், கர்மேந்திரியங்களும் கூறப்பட்டன. மனதை முன்பே கூறிவிட்டோம். நினைக்கத்தக்கது அதன் விஷயமாகும். மனது நினைத்ததை நிச்சயிப்பது புத்தி, அறியத்தக்கது அதன் விஷயம். அஹங்காரம் என்பது அகங்கார லக்ஷணமான அந்தக்கரணம். அஹம் என்ற பாவனை அதன் விஷயம். சித்தம் என்பது சேதனத்தோடு கூடிய அந்தக்கரணம். சேதனாவத்தாய் இருப்பது அதன் விஷயம். தேஜஸ் என்பது துவக் இந்திரியத்தைக் காட்டிலும் வேறுபட்டு பிரகாசத்துடன் கூடியிருக்கும் துவக் விஷயமாகும். அதனால் பிரகாசிக்கும் விஷயம் அறியத்தக்கது. பிராணன் என்று எதை சூத்திரமாக கூறுகிறோமோ அதனால் இணைக்கப்பட்ட யாவும் தரிக்கத்தக்கதும், பிளக்கத்தக்கதும் ஆகும். இவ்வாறு சமஸ்த காரிய சொரூபத்துடன் ஒன்றினயவையாய் ஆகின்றன.
अतः परं यदात्मस्वरूपं जलसूर्यकादिवद्भोक्तृत्वकर्तृत्वेनेहानुप्रविष्टम् ।
(ச.பா) (அ.கை) அதன் பிறகு எந்த ரூபமானது ஜலசூரியன் முதலானவைகள் போல் போக்த்ருத்துவ, கர்த்ருத்துவங்களோடு உள்ளதோ, அது இதில் நுழைந்ததாக ஆகிறது.
एष हि द्रष्टा स्प्रष्टा श्रोता घ्राता रसयिता मन्ता बोद्धा कर्ता विज्ञानात्मा पुरुषः । स परेऽक्षर आत्मनि सम्प्रतिष्ठते ॥ ९ ॥
एषः हि द्रष्टा स्प्रष्टा श्रोता घ्राता रसयिता मन्ता बोद्धा कर्ता विज्ञानात्मा, विज्ञानं विज्ञायतेऽनेनेति करणभूतं बुद्ध्यादि, इदं तु विजानातीति विज्ञानं कर्तृकारकरूपम् , तदात्मा तत्स्वभावो विज्ञातृस्वभाव इत्यर्थः । पुरुषः कार्यकरणसङ्घातोक्तोपाधिपूरणात्पुरुषः । स च जलसूर्यकादिप्रतिबिम्बस्य सूर्यादिप्रवेशवज्जलाद्याधारशोषे परे अक्षरे आत्मनि सम्प्रतिष्ठते ॥
(ச.பா) இந்த திருஷ்ட்டாவாயும், தொடுபவனாயும், கேட்பவனாயும், முகருபவனாயும், சுவைப்பவனாயும், எண்ணுபவனாயும், அறிபவனாயும், விக்ஞானாத்மகமான ஆத்மா உள்ளானோ அவன் இதில் நுழைகிறான். இவன் கரணபூதங்களான புத்தி முதலானவைகளை அறிகிறான் என்பதால் விக்ஞான ரூபன் எனப்பட்டான். கர்த்திரு காரக ரூபமான விக்ஞானம் அவருடைய சுபாவமான விக்ஞாத்திரு சுபாவம். அதனுடைய ஆத்மா என்பது பொருள். அவன் புருஷன் என்று ஏன் கூறப்பட்டான் எனில் காரியகரணங்களின் சேர்க்கையாகிற உபாதியோடு நிரம்பி இருப்பதால் புருஷன் எனப்பட்டான். அவன் ஜலசூரிய முதலான பிரதிபிம்பங்களுக்கு சூரியனில் பிரவேசம் போல் ஜகத் ஆதாரசேஷமாயும், பரமாயும், அக்ஷரமாயும் உள்ள ஆத்மாவில் நிலைபெற்றவனாகிறான்.
तदेकत्वविदः फलमाह —
(ச.பா) (அ-கை) அந்த ஏகத்துவத்தை அறிந்தவர்களின் பலத்தைக் கூறுகிறார்.
परमेवाक्षरं प्रतिपद्यते स यो ह वै तदच्छायमशरीरमलोहितं शुभ्रमक्षरं वेदयते यस्तु सोम्य । स सर्वज्ञः सर्वो भवति तदेष श्लोकः ॥ १० ॥
परमेव अक्षरं वक्ष्यमाणविशेषणं प्रतिपद्यते इति । एतदुच्यते — स यो ह वै तत् सर्वैषणाविनिर्मुक्तः अच्छायं तमोवर्जितम् , अशरीरं नामरूपसर्वोपाधिशरीरवर्जितम् , अलोहितं लोहितादिसर्वगुणवर्जितम् , यत एवमतः शुभ्रं शुद्धम् , सर्वविशेषणरहितत्वादक्षरम् , सत्यं पुरुषाख्यमप्राणममनोगोचरं शिवं शान्तं सबाह्याभ्यन्तरमजं वेदयते विजानाति यस्तु सर्वत्यागी हे सोम्य, सः सर्वज्ञः न तेनाविदितं किञ्चित्सम्भवति । पूर्वमविद्यया असर्वज्ञ आसीत् । पुनर्विद्यया अविद्यापनये सर्वः भवति । तत् अस्मिन्नर्थे एषः श्लोकः मन्त्रो भवति उक्तार्थसङ्ग्राहकः ॥
(ச.பா) கூறப்போகும் எந்தவிதமான விசேஷணமும் அற்றதும், பரமாயும், அக்ஷரமாயும் உள்ள சொரூபத்தை எவன் ஒருவன் அடைகின்றானோ அவன் எல்லா ஈக்ஷணைகளிலிருந்தும் விடுபட்டவனாகி தமோகுணம் அற்றவனாய் ஆகிறான். அவன் நாம ரூபங்களாகிற எல்லா உபாதிகளும் அற்றதும், லோஹிதம் எனப்படும் எல்லா குணங்களும் அற்றதும், இவ்வாறு இருப்பதால் மிக சுத்தமாயும், வெண்மையாயும் இருப்பதும், சர்வ விசேஷணங்களும் அற்று அக்ஷரமாய் உள்ள புருஷன் எனப்படும் சத்திய சொரூபத்தையும், பிரமாணங்களுக்கு கோசரமாகாததும், சிவமாயும், சாந்தமாயும், உள்ளும், புறமும், நிறைந்ததாயும் இருக்கும் பரம புருஷனான சத்தியத்தை அறிகிறானோ, ஹே குழந்தாய்! அவன் எல்லாவற்றையும் தியாகம் செய்தவனாய் சர்வக்ஞனாக ஆகிறான். பிரபஞ்சத்தில் அவனால் அறியப்படாதது ஒன்றும் கிடையாது. இந்த சாதகன் முதலில் அவித்தையால் சர்வக்ஞன் ஆனான். பின்பு வித்தையால் அவித்தையானது நீக்கப்பட்டபொழுது எல்லாமுமாய் ஆகிறான். அப்பொழுது அந்நிலையில் கூறப்பட்ட பொருளை சுருக்கிக் கூறுவது இந்த சுலோகம் அல்லது மந்திரம்.
विज्ञानात्मा सह देवैश्च सर्वैः प्राणा भूतानि सम्प्रतिष्ठन्ति यत्र ।
तदक्षरं वेदयते यस्तु सोम्य स सर्वज्ञः सर्वमेवाविवेशेति ॥ ११ ॥
विज्ञानात्मा, सह देवैश्च अग्न्यादिभिः प्राणाः चक्षुरादयः भूतानि पृथिव्यादीनि सम्प्रतिष्ठन्ति प्रविशन्ति यत्र यस्मिन्नक्षरे, तत् अक्षरं वेदयते यस्तु हे सोम्य प्रियदर्शन, स सर्वज्ञः सर्वमेव आविवेश आविशतीत्यर्थः ॥
(ச.பா) பிரியமான பார்வையை உடையவனே, பார்ப்பதற்கு பிரியமானவனே, எந்த விக்ஞானாத்மாவானவன் அக்னி முதலான தேவர்களுடனும், சக்ஷுஸ் முதலான பிராணன்களுடனும், பிருதிவி முதலான பூதங்களுடனும், எந்த அக்ஷரமான பரமாத்ம ஸ்வரூபத்தில் நுழைந்து நிலைபெறுகிறானோ, அந்த அக்ஷர சொரூபத்தை எவன் அனுபவ பூர்வமாய் அறிகிறானோ அவன் சர்வக்ஞன். அவனே எல்லாவற்றிலும் நுழைந்தவனாகவும், அவனில் எல்லாம் நிலைபெற்றவையாகவும் ஆகின்றான்.
इति चतुर्थप्रश्नभाष्यम् ॥