अथ हैनं सुकेशा भारद्वाजः पप्रच्छ । भगवन्हिरण्यनाभः कौसल्यो राजपुत्रो मामुपेत्यैतं प्रश्नमपृच्छत षोडशकलं भारद्वाज पुरुषं वेत्थ । तमहं कुमारमब्रवं नाहमिमं वेद यद्यहमिममवेदिषं कथं ते नावक्ष्यमिति, समूलो वा एष परिशुष्यति योऽनृतमभिवदति तस्मान्नार्हाम्यनृतं वक्तुम् । स तूष्णीं रथमारुह्य प्रवव्राज । तं त्वा पृच्छामि क्वासौ पुरुष इति ॥ १ ॥
अथ ह एनं सुकेशा भारद्वाजः पप्रच्छ समस्तं जगत्कार्यकारणलक्षणं सह विज्ञानात्मना परस्मिन्नक्षरे सुषुप्तिकाले सम्प्रतिष्ठत इत्युक्तम् । तत्सामर्थ्यात्प्रलयेऽपि तस्मिन्नेवाक्षरे सम्प्रतिष्ठते जगत्तत एवोत्पद्यत इति च सिद्धं भवति । न ह्यकारणे कार्यस्य सम्प्रतिष्ठानमुपपद्यते ।
(ச.பா) பிறகு இந்த குருவை பரத்வாஜரின் வம்சத்தில் தோன்றிய சுகேசர் என்பவர் கேட்டார். காரிய கரண லக்ஷணமான, சமஸ்த ஜகத்தும், விக்ஞானாத்மாவுடன் கூட சுழுத்தி காலத்தில் பரமாயும், நாசமற்றதாயும் உள்ள அக்ஷரத்தில் நிலைபெற்றுள்ளது என்று கூறப்பட்டது. இவ்வாறு கூறப்பட்டதாலேயே இந்த ஜகத்தானது பிரளயத்திலும் அதிலேயே நிலை பெற்றுள்ளது. பின் உற்பத்தி காலத்தில் அதனிடம் இருந்தே உண்டாகிறது என்றும் சித்தமாயிற்று. காரியத்திற்கு கரணமற்றதில் நிலை பெறுதல் பொருந்தாது.
(ச.பா) அதுவே கூறப்பட்டுள்ளது. ஆத்மாவிலிருந்தே பிராணன் உண்டாகிறது என்று, ஜகத்திற்கு எது மூலமோ அதை அறிவதாலேயே உயர்ந்த ச்ரேயஸ் என்பது எல்லா உபநிஷத்துக்களாலும் நிச்சயிக்கப்பட்டபொருள். அதற்கு மேலும் கூறப்பட்டுள்ளது. எவன் சர்வக்ஞனோ அவன் எல்லாமுமாய் ஆகிறான் என்று, எனவே தாங்கள் கூறவேண்டும். அந்த அக்ஷரமாயும், சத்தியமாயும், புருஷன் எனப்படுவதாயும், அறியத்தக்கதாயும் உள்ள அது எது, எங்கு உள்ளது, அதற்காகவே இந்தக் கேள்வி ஆரம்பிக்கப்படுகிறது. நிகழ்ந்ததை கூறுவது, விக்ஞானம் மிக துர்லபமானது என்பதைத் தெரிவிப்பதற்கும், முமுக்ஷுக்கள் அதை அடைவதற்கு பெரும் முயற்சியை மேற்கொள்ளவேண்டும், என்பதற்காகவே ஆகும்.
हे भगवन् , हिरण्यनाभः नामतः कोसलायां भवः कौसल्यः राजपुत्रः जातितः क्षत्रियः माम् उपेत्य उपगम्य एतम् उच्यमानं प्रश्नम् अपृच्छत । षोडशकलं षोडशसङ्ख्याकाः कला अवयवा इवात्मन्यविद्याध्यारोपितरूपा यस्मिन्पुरुषे, सोऽयं षोडशकलः ; तं षोडशकलं हे भारद्वाज, पुरुषं वेत्थ त्वं विजानासि । तम् अहं राजपुत्रं कुमारं पृष्टवन्तम् अब्रवम् उक्तवानस्मि — नाहमिमं वेद यं त्वं पृच्छसीति ।
(ச.பா) பகவானே கோசல நாட்டில் பிறந்தவனும், ஹிரண்யகர்பன் என்று பெயர் பெற்றவனுமான க்ஷத்திரிய ஜாதியில் பிறந்த ராஜபுத்திரன் ஒருசமயம் என்னை அணுகி மேலே கூறப்போகும் கேள்வியைக் கேட்டார். அக்ஞானத்தால் அவயவம் போன்ற பதினாறு கலைகள் எந்த ஆத்மாவில் ஆரோபிக்கப்பட்டுள்ளதோ அந்த பதினாறு கலைகளுடன் கூடிய புருஷனை ஹே! பாரத்வாஜரே நீர் அறிவீரா எனக்கேட்டார். இவ்வாறு கேட்ட ராஜகுமாரனை நான் சொன்னேன் நீ கேட்கும் புருஷனை நான் அறிய மாட்டேன் என்று.
एवमुक्तवत्यपि मय्यज्ञानमसम्भावयन्तं तमज्ञाने कारणमवादिषम् — यदि कथञ्चित् अहम् इमं त्वया पृष्टं पुरुषम् अवेदिषं विदितवानस्मि, कथम् अत्यन्तशिष्यगुणवतेऽर्थिने ते तुभ्यं न अवक्ष्यं नोक्तवानस्मि न ब्रूयामित्यर्थः । भूयोऽप्यप्रत्ययमेवालक्ष्य प्रत्याययितुमब्रवम् — समूलः सह मूलेन वै एषः अन्यथा सन्तमात्मानमन्यथा कुर्वन् यः अनृतम् अयथाभूतार्थम् अभिवदति, स परिशुष्यति शोषमुपैति इहलोकपरलोकाभ्यां विच्छिद्यते विनश्यति । यत एवं जाने तस्मात् न अर्हामि अहम् अनृतं वक्तुं मूढवत् ।
(ச.பா) நான் இவ்வாறு கூறியபொழுது என்னில் அக்ஞானத்தை பாவிக்கும் அவனுக்கு இவ்வாறு சொன்னேன். அந்த அக்ஞானத்திற்கு காரணத்தை விளக்கினேன். நான் எப்படியாவது அந்த பரம புருஷனை அறிந்திருப்பேனேயானால் அத்தியந்த சிஷ்யனாயும், குணவானாயும், பிரார்த்திப்பவனாயும் உள்ள உனக்கு எப்படி கூறாமல் இருப்பேனா? கூறமாட்டேன் என்பது அல்ல பொருள். மறுபடியும் அவனுக்கு நம்பிக்கை வராததைக் கண்டு அவனுக்கு நம்பிக்கை வரவேண்டி இவ்வாறு கூறினேன். வேறுவிதமாய் இருக்கும் ஆத்மாவை அதன் நிலைக்கு மாறாக வேறுவிதமாய் மாறாக எவன் ஒருவன் கூறுகிறானோ அது பொய்யாகும். அது உள்ளதை உள்ளபடி கூறியது ஆகாது. இவ்வாறு பொய் சொல்லுபவன் இகலோக, பரலோகங்களிலிருந்து பிரிக்கப்பட்டவனாகி வேருடன் நாசமாவான். இதை நான் உணர்ந்து இருப்பதால் நான் மூடன் போல் பொய் சொல்ல முடியாதவனாய் இருக்கிறேன்
स राजपुत्रः एवं प्रत्यायितः तूष्णीं व्रीडितः रथम् आरुह्य प्रवव्राज प्रगतवान् यथागतमेव । अतो न्यायत उपसन्नाय योग्याय जानता विद्या वक्तव्यैव ; अनृतं च न वक्तव्यं सर्वास्वप्यवस्थास्वित्येतत्सिद्धं भवति । तं पुरुषं त्वा त्वां पृच्छामि मम हृदि विज्ञेयत्वेन शल्यमिव स्थितम् , क्व असौ वर्तते विज्ञेयः पुरुष इति ॥
(ச.பா) இவ்வாறு என்னால் திருப்பி அனுப்பப்பட்ட ராஜகுமாரன் வெட்கமுற்று வந்த வழியே தேரில் ஏறிச்சென்றான். எனவே நியாயமாய் தன்னை அணுகியவனாயும், யோக்கியனாயும் பிரஹ்ம வித்தையில் ஆர்வமும், பணிவும் உள்ளவன் பொருட்டே பிரஹ்ம வித்தை கூறத்தக்கது. ஒருபோதும் எந்நிலையிலும், பொய்சொல்லக்கூடாது என்பது இதனால் கூறப்பட்டது ஆகும். எனவே தாங்கள் என் மனதில் அறிய வேண்டும் என்று அம்புபோல் துளைத்துக்கொண்டு இருக்கும் அந்தப் புருஷனைப் பற்றி கேட்கிறேன். அவ்வாறு அறியத்தக்க பரமபுருஷன் எங்கு இருக்கிறான் என்று.
तस्मै स होवाचेहैवान्तःशरीरे सोम्य स पुरुषो यस्मिन्नेताः षोडश कलाः प्रभवन्तीति ॥ २ ॥
तस्मै स होवाच । इहैव अन्तःशरीरे हृदयपुण्डरीकाकाशमध्ये हे सोम्य स पुरुषः, न देशान्तरे विज्ञेयः । यस्मिन् एताः उच्यमानाः षोडश कलाः प्राणाद्याः प्रभवन्ति उत्पद्यन्त इति षोडशभिः कलाभिरुपाधिभूताभिः सकल इव निष्कलः पुरुषो लक्ष्यतेऽविद्ययेति ; तदुपाधिकलाध्यारोपापनयनेन विद्यया स पुरुषः केवलो दर्शयितव्य इति कलानां तत्प्रभवत्वमुच्यते प्राणादीनाम् । अत्यन्तनिर्विशेषे ह्यद्वये विशुद्धे तत्त्वे न शक्योऽध्यारोपमन्तरेण प्रतिपाद्यप्रतिपादनादिव्यवहारः कर्तुमिति कलानां प्रभवस्थित्यप्यया आरोप्यन्तेऽविद्याविषयाः । चैतन्याव्यतिरेकेणैव हि कला जायमानास्तिष्ठन्त्यः प्रलीयमानाश्च सर्वदा लक्ष्यन्ते ।
(ச.பா) “तस्मै स होवाच” என்று குழந்தாய் இங்கேயே இந்த சரீரத்தின் மத்தியில் ஹிருதய புண்டரீக ஆகாசத்தின் மத்தியில் அந்த புருஷனானவன் இருக்கிறான். அவனை வேறு தேசங்களில் தேட வேண்டியது இல்லை. அவனிடத்திலேயே கூறப்படும் பிராணனின் முதலான பதினாறு கலைகளும் உண்டாகின்றன என்று, உபாதிகளான பதினாறு கலைகளால் நிஷ்களமான பரமபுருஷன் சகல கலைகளுடன் கூடியவன் போல் காணப்படுகிறான். இது அவித்தையால் உண்டானது ஆகும். இவ்வாறு அவனிடத்தில் அவித்தையால் ஆரோபிக்கப்பட்டவைகளை வித்தையினால் நீக்கி கேவலமான அந்தபரம புருஷன் பார்க்கத்தக்கவன் என்று இவ்வாறு கலைகள் அவனிடமிருந்து உற்பத்தியானதாகக் கூறப்படுகிறது. பிராணன் முதலான கலைகளுக்கு எந்நிலையிலும் எவ்விசேஷமற்றதும், தனக்கு இரண்டாவதற்றதும், பரம சுத்தமானதும் ஆன ஆத்மதத்துவத்தில் ஆரோபம் இன்றி வேறு வழியால் உற்பத்தி கூறமுடியாது. இவ்வாறு ஆரோபம் இன்றி பிரதிபாத்திய, பிரதிபாதக வியவஹாரங்கள் செய்யமுடியாது. கலைகள் உற்பத்தியாகும் நிலைகள் கூட அவித்தையினால் சைதன்யத்தைக் காட்டிலும் மாறுபடாத சொரூபத்தில் ஆரோபம் செய்யப்படுகின்றன. இவ்வாறு சைதன்யத்தில் உற்பத்தியாகி இருந்து லயம் அடைவதையே பார்க்கிறோம்.
(ச.பா) எனவே பிராந்தர்களான சிலர் அக்னியின் சேர்க்கையால் நெய்போல் கடாகாரமாகவே சைதன்யம் ஒவ்வொரு க்ஷணமும் உண்டாகிறது, வசிக்கிறது என்று கூறுவர். அவர்களை நிராகரிக்கும் சிலர் சூன்யமேயாவும் என்று கூறுவர். கடம் முதலான விஷயங்களை சைதன்யமாய் சேதனாவத்தாக செய்வதற்காக நித்தியமான ஆத்மாவிற்கு அநித்தியத்துவத்தையும், உண்டாகிறது என்று கூறுவர். சைதன்யம், பூததர்மம் என்று லோகாயதவாதிகள் கூறுவர். நீக்க முடியாதது தன்னை அணுகி உள்ளவற்றின் தன்மையை, சைதன்யமான ஆத்மாவே நாம, ரூப உபாதி தர்மங்களுடன் பிரகாசிக்கச் செய்கிறது. சத்தியமாயும், ஞானமாயும் முடிவற்றதாயும் இருப்பது பிரஹ்மம், “பிரக்ஞானம்பிரஹ்ம” “விக்ஞானம் ஆனந்தம் பிரஹ்ம,” “விக்ஞானகன:” என்பன போன்ற சுருதிகளால் முற்சொன்னது அறியப்படுகிறது. சொரூபங்களில் வியபிசரிக்கும் (மாறுபடும்) பதார்த்தங்களில் சைதன்யம் மாறுபடுவது இல்லை. அது எவ்வாறு எனில் எப்படி, எப்படி எந்தப் பதார்த்தம் அறியப்படுகிறதோ அவ்வாறு, அவ்வாறே அவை அறியப்படுவதால் சைதன்யத்திற்கு மாறுபடாத தன்மையும்.
वस्तुतत्त्वं भवति किञ्चित् , न ज्ञायत इति चानुपपन्नम् ; रूपं च दृश्यते, न चास्ति चक्षुरिति यथा । व्यभिचरति तु ज्ञेयम् ; न ज्ञानं व्यभिचरति कदाचिदपि ज्ञेयम् , ज्ञेयाभावेऽपि ज्ञेयान्तरे भावाज्ज्ञानस्य । न हि ज्ञानेऽसति ज्ञेयं नाम भवति कस्यचित् ; सुषुप्तेऽदर्शनात् ।
(ச.பா) அதுவே வஸ்து தத்துவமாகும். மேலும் அது அவ்வாறு அறியப்படுவது இல்லை என்று கூறுவது பொருந்தாது. அது எவ்வாறு எனில் இவன் ரூபத்தைப் பார்க்கிறான் ஆனால் கண் இல்லை என்று கூறுவது போல் ஆகும். ஞேயம் மாறுபடும். ஒருபோதும் ஞானம் மாறுபடுவது இல்லை. சில சமயங்களில் ஞேயம் மாறுபடாமல் இருக்கலாம். சக்ஷுஸ்சானது சுழுத்தியில் இல்லை. அவ்வாறு ஆகலாமே என்று கூறுவதும் பொருந்தாது. ஞான அபாவத்தில் ஞேயம் ஒரு போதும் இருக்காது. சுழுத்தியில் அதன் அபாவம் காணப்படுகிறது.
ज्ञानस्यापि सुषुप्तेऽभावाज्ज्ञेयवज्ज्ञानस्वरूपस्य व्यभिचार इति चेत् ।
(ச.பா) (பூர்வ) ஞானத்திற்கு சுழுத்தியில் அபாவம் இருக்கிறது. அதனால் ஞேயமான ஞானஸ்வரூபம் மாறுபடுகிறது என்று கூறுவாயேயானால்.
न, ज्ञेयावभासकस्य ज्ञानस्यालोकवज्ज्ञेयाभिव्यक्त्यर्थत्वात्स्वव्यङ्ग्याभावे आलोकाभावानुपपत्तिवत् अप्रतीतेषु वस्तुषु सुषुप्ते विज्ञानाभावानुपपत्तेः । न ह्यन्धकारे चक्षुषो रूपानुपलब्धौ चक्षुषोऽभावः शक्यः कल्पयितुमवैनाशिकेन ।
(ச.பா) (சித்தாந்தீ) அதுவும் அவ்வாறு இல்லை. ஞேயத்தை பிரகாசிக்கச் செய்யும் ஞானத்திற்கு கண்போல் ஞேய வியபிசாரித்துவம் ஏற்படாது. அங்கு பார்வையை தெரியப்படுத்தும் விக்ஞானத்தின் அபாவத்தால் பார்க்கும் கண் இன்மை சுழுத்தியில் ஏற்றுக்கொள்ளப்படுவது இல்லை. அதுபோல் விக்ஞானத்திற்கும் அனுபபத்தி, இருளில் கண்ணால் ரூபமானது பார்க்கப்படவில்லை என்பதற்காக வைநாசிகரால் கண்ணின் இன்மை கல்பிக்கமுடியாது.
वैनाशिको ज्ञेयाभावे ज्ञानाभावं कल्पयत्येवेति चेत् ।
(ச.பா) (பூர்வ) வைநாசிகன் ஞேயத்தின் இன்மையால் ஞானத்தின் அபாவத்தையே கல்பிக்கிறான்.
येन तदभावं कल्पयेत्तस्याभावः केन कल्प्यत इति वक्तव्यं वैनाशिकेन ; तदभावस्यापि ज्ञेयत्वाज्ज्ञानाभावे तदनुपपत्तेः ।
(ச.பா) (சித்தாந்தீ) இவ்வாறு கல்பிக்கப்படும் அபாவம் யாரால் கல்பிக்கப்படுகிறது. அந்த அபாவம் யாரால் கல்பிக்கப்பட்டது என்று வாய்ச்சொல் வீரனான வைநாசிகரால் நிரூபிக்கப்படவேண்டும். அந்த அபாவமும் ஞேயமாய் இருப்பதால் அந்த ஞான அபாவத்துவம் ஒத்துக்கொள்ள முடியாதது.
ज्ञानस्य ज्ञेयाव्यतिरिक्तत्वाज्ज्ञेयाभावे ज्ञानाभाव इति चेत् ।
(ச.பா) (பூர்வ) ஞானத்திற்கு ஞேயத்தில் இருந்து வேறுபட்ட தன்மை உள்ளதால் ஞேய அபாவத்தால் ஞான அபாவம் என்று கூறுவாயேயானால்.
न, अभावस्यापि ज्ञेयत्वाभ्युपगमात् — अभावोऽपि ज्ञेयोऽभ्युपगम्यते वैनाशिकैर्नित्यश्च । तदव्यतिरिक्तं चेज्ज्ञानं नित्यं कल्पितं स्यात् । तदभावस्य च ज्ञानात्मकत्वादभावत्वं च वाङ्मात्रमेव ; न परमार्थतोऽभावत्वमनित्यत्वं च ज्ञानस्य । न च नित्यस्य ज्ञानस्याभावनाममात्राध्यारोपे किञ्चिन्नश्छिन्नम् ।
(ச.பா) (சித்தாந்தீ) அதுவும் சரியல்ல. அபாவத்திற்கும் ஞேயத்துவம் புரிந்துகொள்ளப்படுவதால் அபாவமும் ஞேயம் என்று வைநாசிகர்கள் ஒப்புக்கொள்கின்றனர். அதிலிருந்து மாறுபடாதது நித்தியம் என்ற பொழுது ஞானத்திற்கும் நித்தியம் கல்பிதம் ஆகும். ஏன்எனில் அபாவத்திற்கும் ஞானத்மகத்துவ அபாவத்துவம் கல்பிக்கப்பட்டது ஆகும். இது வெறும் வாய்ச்சொல்லால் மாத்திரம் வாதத்திற்காக கல்பிக்கப்பட்டது. உண்மையில் ஞானத்திற்கே அபாவத்துவமும், அநித்தியத்துவமும் சித்திக்காது. மேலும் நித்தியமான ஞானத்திற்கு அபாவம் என்ற பேரை மாத்திரம் ஆரோபம் செய்வதற்கு நமக்கு கொஞ்சமும் அபிப்ராயம் இல்லை
अथाभावो ज्ञेयोऽपि सन् ज्ञानव्यतिरिक्त इति चेत् ।
(ச.பா) (பூர்வ) மேலும் அபாவம் ஞேயமாய் இருப்பினும் ஞானத்திற்கு மாறுபட்டது என்றால்
न तर्हि ज्ञेयाभावो ज्ञानाभावः ।
(ச.பா) (ஸித்தாந்தீ) அவ்வாறு கூறுவாயேயானால் ஞேய அபாவம் ஏற்படும் பொழுது ஞான அபாவம் ஏற்படும்
ज्ञेयं ज्ञानव्यतिरिक्तम् ; न तु ज्ञानं ज्ञेयव्यतिरिक्तमिति चेत् ।
(ச.பா) (பூர்வ) ஞேயம், ஞானத்தைக் காட்டிலும் வேறுபட்டது, ஞானம் ஞேயத்தைக் காட்டிலும் வேறுபட்டது அல்ல. என்று கூறுவாயேயானால்
न , शब्दमात्रत्वाद्विशेषानुपपत्तेः । ज्ञेयज्ञानयोरेकत्वं चेदभ्युपगम्यते, ज्ञेयं ज्ञानव्यातिरिक्तम् , न ज्ञेयव्यतिरिक्तं ज्ञानम् इति तु शब्दमात्रमेव तत् — वह्निरग्निव्यतिरिक्तः, अग्निर्न वह्निव्यतिरिक्त इति यद्वत् — अभ्युपगम्यम् । ज्ञेयव्यतिरेके तु ज्ञानस्य ज्ञेयाभावे ज्ञानाभावानुपपत्तिः सिद्धा ।
(ச.பா) (சித்தாந்தீ) அதுவும் சரியல்ல. வெறும் சொல் அலங்காரங்கள் அன்றி இதில் விசேஷம் ஏதும் இல்லை. ஞான ஞேயங்களின் ஏகத்துவத்தை ஒப்புக் கொள்வோமேயானால் ஞேயம் ஞானத்தைக் காட்டிலும் வேறுபட்டதாகவோ, ஞானம் ஞேயத்தைக் காட்டிலும் வேறுபட்டதாகவோ ஆவது இல்லை. இது வெறும் வாய்ச்சொல் அலங்காரம்தான். எவ்வாறு வந்ஹி அக்னியை விடவேறானது அல்லவோ, மேலும் அக்னி வந்ஹியை விட வேறானது அல்லவோ அவ்வாறு அறியவேண்டும். ஞேயத்தைக்காட்டிலும் வேறானதாக ஆனால் ஞானத்திற்கு ஞேயம் இல்லாததால் ஞானஅபாவம் ஒப்புக்கொள்ளத்தக்கதல்ல என்று சித்திக்கிறது.
ज्ञेयाभावेऽदर्शनादभावो ज्ञानस्येति चेत् ।
(ச.பா) (பூர்வ) ஞேயத்தின் அபாவத்தைக் காண்பதால் அல்லது அந்த அபாவத்தைக் காணாததால் அந்த அபாவம் ஞானத்திற்கே என்று கூறுவாயேயானால்.
न सुषुप्ते ज्ञप्त्यभ्युपगमात् — वैनाशिकैरभ्युपगम्यते हि सुषुप्तेऽपि विज्ञानास्तित्वम् ।
(ச.பா) (சித்தாந்தீ) அதுவும் சரியன்று. சுழுத்தியில் ஞப்தி ஒப்புக்கொள்ளப்படுகிறது. இதை வைநாசிகர்களும் ஒப்புக்கொள்கின்றனர். எனவே சுழுத்தியிலும் ஞானத்திற்கு அஸ்தித்துவம்(இருக்கும் தன்மை) ஒப்புக்கொள்ளப்படுகிறது.
तत्रापि ज्ञेयत्वमभ्युपगम्यते ज्ञानस्य स्वेनैवेति चेत् ।
(ச.பா) (பூர்வ) அங்கும் ஞானத்திற்கு தன்னைத்தானே ஞேயமாய்க் கொள்ளும் தன்மை உள்ளது என்று கூறுவாயேயானால்.
न , भेदस्य सिद्धत्वात् — सिद्धं ह्यभावविज्ञेयविषयस्य ज्ञानस्याभावज्ञेयव्यतिरेकाज्ज्ञेयज्ञानयोरन्यत्वम् । न हि तत्सिद्धं मृतमिवोज्जीवयितुं पुनरन्यथा कर्तुं शक्यते वैनाशिकशतैरपि ।
(ச.பா) (சித்தாந்தீ) அதுவும் சரியன்று. எனவே பேதம் சித்திக்கும், முன்பே அபாவத்தை அறிவதாக உடைய விஷயமான ஞானத்திற்கு அபாவத்தைக் காட்டிலும் ஞேயத்துவம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஞேயம், ஞானம் இவைகளுக்கு அந்நியத்துவம் இல்லை. வைநாசிகன் கூறுவது சித்திக்காது. அது செத்தவனை எழுப்புவது போன்றதும், ஒன்றை மற்றொன்றாக ஆக்குவதும் ஆகும். எனவே இத்தகையதே ஞானத்திற்கு ஞேயத்துவம் கூறும் வாதமும்.
ज्ञानस्य स्वाज्ञेयत्वे तदप्यन्येन तदप्यन्येनेति त्वत्पक्षेऽतिप्रसङ्ग इति चेत् ।
(ச.பா) (பூர்வ) அதுவும் மற்றவனால், அதுவும் மற்றவனால் என்று முற்பக்ஷத்தில் கூறுவது அதிப்பிரசங்கமாகும் என்று கூறுவாயேயானால்
न , तद्विभागोपपत्तेः सर्वस्य — यदा हि सर्वं ज्ञेयं कस्यचित् , तदा तद्व्यतिरिक्तं ज्ञानं ज्ञानमेवेति द्वितीयो विभाग एवाभ्युपगम्यतेऽवैनाशिकैः । न तृतीयस्तद्विषय इत्यनवस्थानुपपत्तिः ।
(ச.பா) (சித்தாந்தீ) அதுவும் சரியன்று. எல்லாவற்றிற்கும் அந்த விபாகமானது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எப்பொழுது ஒருவனுக்கு எல்லாம் ஞேயமாக ஆகிறதோ அப்பொழுது அதற்கு மாறுபட்டது ஞானம் என்று இரண்டாவது விபாகம் வைநாசிகர்களால் ஒப்புக்கொள்ளப்படுகிறது. மூன்றாவது அந்த விஷயம் என்று கூறிக்கொண்டே போனால் அதற்கு முடிவே கிடையாது என்ற தோஷம் உடையதாக ஆகும்.
ज्ञानस्य स्वेनैवाविज्ञेयत्वे सर्वज्ञत्वहानिरिति चेत् ।
(ச.பா) (பூர்வ) ஞானத்திற்கு தன்னை தானே அறிந்து கொள்ளும் ஞேயத்துவம் இல்லாவிடில் அதற்கு சர்வக்ஞத்துவ ஹானி ஏற்படும் என்று கூறுவாயேயானால்
सोऽपि दोषस्तस्यैवास्तु ; किं तन्निबर्हणेनास्माकम् ? अनवस्थादोषश्च ज्ञानस्य ज्ञेयत्वाभ्युपगमात् — अवश्यं च वैनाशिकानां ज्ञानं ज्ञेयम् । स्वात्मना चाविज्ञेयत्वेनानवस्था अनिवार्या ।
(ச.பா) (சித்தாந்தீ) அந்த ஹானியும் அவனுக்கே ஏற்படட்டும். எவ்வாறோ எங்களை சுழட்டவேண்டும் என்ற எண்ணத்தில் நமக்கு அநவஸ்தா தோஷத்தை கல்பித்து ஞானத்திற்கு ஞேயத்துவத்தை ஒப்புக்கொள்ளக் கூறுவாரேயானால் அப்பொழுது கட்டாயமாக வைநாசிகர்களுக்கு ஞானம், ஞேயமாக ஆகும். ஸ்வாத்மாவினால் ஞேயத்துவமாய் அறிந்துகொள்ள முடியாமை என்று முடிவற்ற தோஷம் நீக்கமுடியாதது.
समान एवायं दोष इति चेत् ,
(ச.பா) (பூர்வ) நமக்குள் இந்த தோஷம் சமானமே என்று கூறுவாயேயானால்.
न, ज्ञानस्यैकत्वोपपत्तेः — सर्वदेशकालपुरुषाद्यवस्थास्वेकमेव ज्ञानं नामरूपाद्यनेकोपाधिभेदात् सवित्रादिजलादिप्रतिबिम्बवदनेकधावभासत इति । नासौ दोषः । तथा चेहेदमुच्यत ।
(ச.பா) (சித்தாந்தீ) அதுவும் சரியல்ல. ஏனெனில் ஞானத்திற்கு ஏகத்துவம் என்பது ஏற்படும். எல்லாதேச கால புருஷன் என்ற அவஸ்தைகளில் ஒரே ஞானமானது ஞான, ரூப முதலான அநேக உபாதி பேதங்களால் ஜலம் முதலானவைகளில் பிரதிபிம்பிக்கும் சூரியன் முதலானவைகள் போல் பிரகாசிக்கும். இது தோஷம் அன்று. எனவே இங்கு இது கூறப்படுகிறது.
ननु श्रुतेरिहैवान्तःशरीरे परिच्छिन्नः कुण्डबदरवत्पुरुष इति ।
(ச.பா) (பூர்வ) மேலும் சுருதி வாக்கியத்தால் அந்த பரம புருஷன் இங்கு இந்த சரீரத்தில் குடத்தில் போடப்பட்ட இலந்தைப்பழம் போல் பரிச்சின்னமாய் இருக்கிறான் என்று.
न, प्राणादिकलाकारणत्वात् — न हि शरीरमात्रपरिच्छिन्नः प्राणश्रद्धादीनां कलानां कारणत्वं प्रतिपत्तुं शक्नुयात् । कलाकार्यत्वाच्च शरीरस्य — न हि पुरुषकार्याणां कलानां कार्यं सच्छरीरं कारणकारणं स्वस्य पुरुषं कुण्डबदरमिवाभ्यन्तरीकुर्यात् ।
(ச.பா) (சித்தாந்தீ) அது சரியல்ல, ஏனெனில் அவன் பிராணாதி கலைகளுக்கு காரணமாய் விளங்குவதால் சரீரமாத்திரத்தில் பரிசின்னமாய் உள்ள புருஷனுக்கு பிராணன் சிரத்தை முதலிய கலைகளுக்கு காரணத்துவம் கொள்ள முடியாது. சரீரம் கலாகாரியமாகும். புருஷகாரியங்களான கலைகளின் காரியத்தை சத்தோடுகூடிய சரீரம், காரண, காரணம் அதாவது தனக்கு புருஷனும், புருஷனுக்குத்தானும், குடத்தில் இடப்பட்ட இலந்தைப்பழம் போல் ஆவது இல்லை.
बीजवृक्षादिवत्स्यादिति चेत् — यथा बीजकार्यं वृक्षस्तत्कार्यं च फलं स्वकारणकारणं बीजमभ्यन्तरीकरोत्याम्रादि, तद्वत्पुरुषमभ्यन्तरीकुर्याच्छरीरं स्वकारणकारणमपीति चेत् ।
(ச.பா) (பூர்வ) ஆனால் விருக்ஷம் முதலானவைகளுக்கு விருக்ஷம் காரணமாவது போல் என்றால் அப்படியும் அல்ல. எவ்வாறு எனில் பீஜத்தின் காரியம் விருக்ஷம், அதன் காரியம் பழம், தனக்கு காரண, காரணமான விதையை மா முதலான பழங்கள் தனக்குள் கொண்டுள்ளது போல், சரீரமானது ஸ்வகாரண, காரணமான புருஷனை தனக்குள் கொண்டுள்ளது என்றால்
न, अन्यत्वात्सावयवत्वाच्च — दृष्टान्ते कारणाद्बीजाद्वृक्षफलसंवृत्तान्यन्यान्येव बीजानि ; दार्ष्टान्तिके तु स्वकारणकारणभूतः स एव पुरुषः शरीरेऽभ्यन्तरीकृतः श्रूयते । बीजवृक्षादीनां सावयवत्वाच्च स्यादाधाराधेयत्वम् ; निरवयवश्च पुरुषः, सावयवाश्च कलाः शरीरं च । एतेनाकाशस्यापि शरीराधारत्वमनुपपन्नम् ; किमुताकाशकारणस्य पुरुषस्य तस्मादसमानो दृष्टान्तः ।
(ச.பா) (சித்தாந்தீ) அதுவுமில்லை ஏனெனில் அதுவேறு அவயவத்தோடு கூடியது. கூறப்பட்ட திருஷ்ட்டாந்தத்தில் காரண பீஜத்தினின்று மரம், பழம் இவைகள் உண்டாயின என்ற நியாயம் போல், தாஷ்டாந்திகத்தில் (உபமேயத்தில்) தனக்கு காரணத்திற்கு காரண பூதமான அந்த பரம புருஷனே சரீரத்தில் உள்ளே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏனெனில் விருக்ஷம், பீஜம், இவைகள் அவயவத்தோடு கூடியது ஆகும். அவைகளுக்கு ஆதார, ஆதேயத்துவம் வேண்டும் எனில் பொருந்தும். புருஷன் அவயவம் அற்றவன். கலைகளும், சரீரமும் அவயவத்தோடு கூடியவை. இதனால் ஆகாசத்திற்குக் கூட சரீர ஆதாரத்துவம் பொருந்தாது. இவ்வாறு இருக்க ஆகாசத்திற்கும் காரணமான புருஷனுக்கு அது எவ்வாறு பொருந்தும். எனவே கூறப்பட்ட திருஷ்டாந்தம் பொருத்தமற்றது.
किं दृष्टान्तेन ? वचनात्स्यादिति चेत् ,
(ச.பா) (பூர்வ) திருஷ்ட்டாந்தம் எதற்கு? முன்சொன்ன வசனமே போதாதா? எனில்
न , वचनस्याकारकत्वात् — न हि वचनं वस्तुनोऽन्यथाकरणे व्याप्रियते ; किं तर्हि, यथाभूतार्थावद्योतने । तस्मादन्तःशरीर इत्येतद्वचनम् ‘अण्डस्यान्तर्व्योम’ इतिवद्द्रष्टव्यम् ।
(ச.பா) (சித்தாந்தீ) அதுவும் சரியன்று, வசனத்திற்கு காரகத்துவம் இல்லை. மேலும் வசனம் சொன்னதை மாற்றிச் சொல்வதற்காக அல்லது மாற்றுவதற்காக மாறாது. அவ்வாறு எனில் என்ன? எனில் வசனம் உள்ளதை அதன் பொருள் சரியாகப்படும்படி வெளிப்படுத்தும். எனவே அந்த சரீரம் அதாவது சரீரத்தின் உள்ளில் என்ற வசனத்திற்கு பிரஹ்மாண்டத்திற்குள் ஆகாசம் என்பது போல் கொள்ளவேண்டும்.
उपलब्धिनिमित्तत्वाच्च, दर्शनश्रवणमननविज्ञानादिलिङ्गैरन्तःशरीरे परिच्छिन्न इव ह्युपलभ्यते पुरुष उपलभ्यते चात्र । अत उच्यते — अन्तःशरीरे सोम्य स पुरुष इति । न पुनराकाशकारणभूतः सन्कुण्डबदरवच्छरीरपरिच्छिन्न इति मनसापीच्छति वक्तुं मूढोऽपि ; किमुत प्रमाणभूता श्रुतिः ॥
(ச.பா) இது வெறும் உபலப்தி. (அறிவதற்கு, தெரிவதற்கு) ஆகமட்டும் நிமித்தமாய் கூறப்பட்டது ஆகும். தரிசன, சிரவண, மனன, விக்ஞானம் போன்ற காரணங்களால் அந்த: சரீரத்தில் புருஷன் பரிச்சின்னம் போல் அடையப்படுகிறான். அல்லது அறியப்படுகிறான். என்று ஹே! குழந்தாய் அந்தப்புருஷன் அந்த: சரீரத்தில் காணப்படுகிறான் என்று கூறப்பட்டது. ஆகாசத்திற்கும் காரணமாய் இருந்துகொண்டு குடத்திலிடப்பட்ட இலந்தைப்பழம் போல் பரிச்சின்னனாய் இருக்கிறான் என்பதற்காக கூறப்படவில்லை. அதை முட்டாளும் மனசால் கூட எண்ண விரும்பமாட்டான். அவ்வாறு இருக்க பிரமாண பூதமான சுருதி அவ்வாறு கூறுமா?
यस्मिन्नेताः षोडश कलाः प्रभवन्तीत्युक्तः पुरुषविशेषणार्थः कलानां प्रभवः, स चान्यार्थोऽपि श्रुतः केन क्रमेण स्यादित्यत इदमुच्यते । चेतनपूर्विका च सृष्टिरित्येवमर्थं च ।
(ச.பா) (அ.கை) எந்த பரமபுருஷனிடத்தில் இந்தப் பதினாறு கலைகளும் பிரகாசிக்கின்றன என்று கூறப்பட்டதோ அந்தப் புருஷனை விசேஷணிப்பதின் பொருட்டு கலைகளுக்கு பிரகாசமான அவன் வேறு பொருள் படைத்தவனாக கூறப்படுகிறான். அது எந்தக் கிரமமாக இருக்கும் என்பதற்காக இது கூறப்படுகிறது.
स ईक्षाञ्चक्रे कस्मिन्नहमुत्क्रान्त उत्क्रान्तो भविष्यामि कस्मिन्वा प्रतिष्ठिते प्रतिष्ठास्यामीति ॥ ३ ॥
स पुरुषः षोडशकलः पृष्टो यो भारद्वाजेन सः ईक्षाञ्चक्रे ईक्षणं दर्शनं चक्रे — कृतवानित्यर्थः — सृष्टिफलक्रमादिविषयम् । कथमिति, उच्यते — कस्मिन् कर्तृविशेषे देहादुत्क्रान्ते उत्क्रान्तो भविष्यामि अहमेव ; कस्मिन्वा शरीरे प्रतिष्ठिते अहं प्रतिष्ठास्यामि प्रतिष्ठितः स्यामित्यर्थः ।
(ச.பா) சேதன பூர்வகமான ஸ்ருஷ்ட்டி அல்லது சேதன பூர்வமானது சிருஷ்ட்டிக்கிரமம் என்ற பொருளை அறிவதன் பொருட்டு பாரத்வாஜனால் எந்த பதினாறு கலைகளுடன் கூடிய புருஷன் கேட்கப்பட்டானோ அந்த பரம புருஷன் பார்த்தான் என்பது பொருள். இஃது சிருஷ்ட்டி பலம், சிருஷ்ட்டி கிரமம் இவைகளைப் பற்றிய விஷயமாகும். அது எவ்வாறு என்று விளக்கப்படுகிறது. எந்த கர்த்திரு விசேஷத்தில் அதாவது எந்த தேஹத்திலிருந்து நான் வெளிக்கிளம்பியவனாக ஆவேன். எந்த சரீரத்தில் நிலைபெற்றவனாய் இருக்கிறேன் என்பது பொருள்.
नन्वात्मा अकर्ता प्रधानं कर्तृ ; अतः पुरुषार्थं प्रयोजनमुररीकृत्य प्रधानं प्रवर्तते महदाद्याकारेण ; तत्रेदमनुपपन्नं पुरुषस्य स्वातन्त्र्येणेक्षापूर्वकं कर्तृत्ववचनम् , सत्त्वादिगुणसाम्ये प्रधाने प्रमाणोपपन्ने सृष्टिकर्तरि सति ईश्वरेच्छानुवर्तिषु वा परमाणुषु सत्सु आत्मनोऽप्येकत्वेन कर्तृत्वे साधनाभावादात्मन आत्मन्यनर्थकर्तृत्वानुपपत्तेश्च । न हि चेतनावान्बुद्धिपूर्वकारी आत्मनः अनर्थं कुर्यात् तस्मात्पुरुषार्थेन प्रयोजनेनेक्षापूर्वकमिव नियतक्रमेण प्रवर्तमानेऽचेतनेऽपि प्रधाने चेतनवदुपचारोऽयं स ईक्षाञ्चक्रे इत्यादिः ; यथा राज्ञः सर्वार्थकारिणि भृत्ये राजेति, तद्वत् ।
(ச.பா) (பூர்வ) மேலும் ஆத்மா அகர்த்தா, பிரதானம் கர்த்தா எனவே அந்தப் புருஷார்த்தத்தை பிரயோஜனமாய் நிச்சயித்துக்கொண்டு பிரதானமே மஹத் முதலான ஆகாரத்தோடு பிரவிர்த்திக்கிறது. எனவே புருஷனுக்கு சுவதந்திரமாய் பார்ப்பதை முன்னிட்டுக்கொண்டு கர்த்திருத்துவம் என்று கூறுதல் பொருந்தாது. சத்துவம் முதலான குணங்களில் சமானமாகக் கொண்டுள்ள பிரதானம் இருக்கையில், அதுவே சிருஷ்ட்டி கர்த்திருத்துவத்தை பிரமாணத்துடன் பெற்று இருக்கிறது என்று இருக்கையில் மேலும் ஈஸ்வரனுடைய இச்சையை பின்தொடரும் பரமாணுக்கள் இருக்கையில் ஆத்மாவானது ஏகத்துவமாய் இருப்பதால் அதற்கு கர்த்திருத்துவத்திற்கான சாதனங்கள் இல்லாமல் இருப்பதால் ஆத்மாவில் பொருளற்ற கர்த்திருத்துவம் என்பது பொருந்தாது. மேலும் சேதனத்துடன் கூடியவன் தன் புத்தி பூர்வகமான காரியங்களால் சிலசமயம் அனர்த்தமும் செய்வான். ஆகையால் புருஷார்த்த பிரயோஜனத்தோடு பார்ப்பது போன்று ஒரு குறிப்பிட்ட கிரமத்தோடு பிரவிர்த்திக்கும், அசேதனமான பிரதானமும், அந்த சேதனத்தின் ஈக்ஷணபலத்தால் சேதனம் போல் பிரவிர்த்திக்கிறது என்பது உபசாரமாய் அவன் பார்த்தான் என்பன போன்றவைகள் கூறப்பட்டன. எவ்வாறு அரசனின் சமஸ்த காரியங்களையும் செய்யும் வேலைக்காரனைப் பார்த்து இவன்தான் ராஜா என்று சொல்வது போல்.
न, आत्मनो भोक्तृत्ववत्कर्तृत्वोपपत्तेः — यथा साङ्ख्यस्य चिन्मात्रस्यापरिणामिनोऽप्यात्मनो भोक्तृत्वम् , तद्वद्वेदवादिनामीक्षापूर्वकं जगत्कर्तृत्वमुपपन्नं श्रुतिप्रामाण्यात् ।
(ச.பா) (சித்தாந்தீ) ஆத்மாவிற்கு போக்த்திருத்துவம் போல் கர்த்திருத்துவமும் பொருந்தாது. எவ்வாறு எனில் சாங்கியனுக்கு சின்மாத்திர ஸ்வரூபமாய் மாறுபடாமல் இருக்கும் ஆத்மாவிற்கு போக்த்திருத்துவமோ அதுபோல் வேத மார்க்கத்தை அனுசரிக்கும் வைதிகர்களுக்கும், ஈக்ஷண பூர்வகமாய் ஜகத் கர்த்திருத்துவம் பொருத்தமானதே. அது சுருதி பிரமாணத்தால் பொருந்தும்.
तत्त्वान्तरपरिणामादात्मनोऽनित्यत्वाशुद्धत्वानेकत्वनिमित्तं चिन्मात्रस्वरूपविक्रियातः पुरुषस्य स्वात्मन्येव भोक्तृत्वे चिन्मात्रस्वरूपविक्रिया न दोषाय । भवतां पुनर्वेदवादिनां सृष्टिकर्तृत्वे तत्त्वान्तरपरिणाम एवेत्यात्मनोऽनित्यत्वादिसर्वदोषप्रसङ्ग इति चेत् ।
(ச.பா) (பூர்வ) வேறு தத்துவமாக பரிணமிக்கிறது. ஆத்மா என்ற ஆத்மாவிற்கு பரிணாமத்தை கூறுவதால் அதற்கு அநித்தியத்துவம், அசுத்தத்துவம், அநேகத்துவம் என்ற நிமித்தங்களால் பல அபவாதங்கள் ஏற்படும். சின்மாத்திர சொரூபமாய் விளங்கும் அதன் மாறுபாட்டால் புருஷனுக்கு தன்னிலேயே போக்த்திருத்துவம் ஏற்படுகிறது. இந்த சின்மாத்திர ஸ்வரூப மாறுபாடு தோஷத்தின் பொருட்டு ஆவது இல்லை. வேதத்தை சான்றாகக் கூறும் உங்களுக்கு சிருஷ்ட்டி கர்த்திருத்துவத்தில் வேறு தத்துவமாய் மாறுபடுதலேயாகும். இதனால் ஆத்மாவிற்கு அநித்தியத்துவம் போன்ற எல்லா தோஷங்களும் ஏற்படும் என்று கூறுவாயேயானால்,
न, एकस्याप्यात्मनोऽविद्याविषयनामरूपोपाध्यनुपाधिकृतविशेषाभ्युपगमात् । अविद्याकृतनामरूपोपाधिनिमित्तो हि विशेषोऽभ्युपगम्यते आत्मनो बन्धमोक्षादिशास्त्रकृतसंव्यवहाराय । परमार्थतोऽनुपाधिकृतं च तत्त्वमेकमेवाद्वितीयमुपादेयं सर्वतार्किकबुद्ध्यनवगम्यं ह्यजमभयं शिवमिष्यते । न तत्र कर्तृत्वं भोक्तृत्वं वा क्रियाकारकफलं वास्ति, अद्वैतत्वात्सर्वभावानाम् ।
(ச.பா) (சித்தாந்தீ) அது சரியல்ல, ஒரே ஆத்மாவிற்கு அவித்தியா விஷயமாய் நாமம், ரூபம், உபாதி அந்த உபாதியைத் தொடர்ந்து ஏற்படும் விசேஷங்கள் இவைகளை ஒப்புக்கொள்வதால் அவித்தையால் உண்டான நாம, ரூப, உபாதிகளால் உண்டான விசேஷம் ஒப்புக்கொள்ளப்பட்டதாக ஆகிறது. அத்தகைய ஆத்மாவிற்கே பந்தமோக்ஷங்கள் என்பன போன்ற சர்வ வியவகாரங்களும், உண்மையில் உபாதியற்ற ஆத்ம தத்துவமானது இரண்டாவதற்ற ஆத்மதத்துவமே ஆகும். அதையே எல்லா தார்க்கிகர்களுடைய புத்திகளாலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த ஆத்மதத்துவமோ பயம் அற்றது. மங்களகரமானது. அதில் கர்த்திருத்துவமோ, போக்த்திருத்துவமோ, கிரியாகாரக பலம் ஒன்றும் கிடையாது. ஏனெனில் அது சர்வபாவங்களுக்கும் அத்வைதமாய் உள்ளது.
साङ्ख्यास्त्वविद्याध्यारोपितमेव पुरुषे कर्तृत्वं क्रियाकारकं फलं चेति कल्पयित्वा आगमबाह्यत्वात्पुनस्ततस्त्रस्यन्तः परमार्थत एव भोक्तृत्वं पुरुषस्येच्छन्ति । तत्त्वान्तरं च प्रधानं पुरुषाद्बाह्यं परमार्थवस्तुभूतमेव कल्पयन्तोऽन्यतार्किककृतबुद्धिविषयाः सन्तो विहन्यन्ते ।
(ச.பா) சாங்கியனோவெனில் அவித்தையினால் அத்யாரோபிதமான புருஷனிடத்திலேயே கர்த்திருத்துவம் கிரியா, காரகம், பலம் என்று கல்பனை செய்து கொண்டு அவன் வேதங்களுக்கு சிலசமயம் வெளிப்பட்டவனாய் இருந்துகொண்டும் மறுபடி அதில் ஈடுபட்டவனாய் உண்மையிலேயே போக்த்திருத்துவத்தை பிரதானத்திற்கு விரும்பியவனாகி மற்றொரு தத்துவமாக பிரதானத்தை ஏற்று அது புருஷனைக் காட்டிலும் உண்மையான வஸ்து என்று கல்பித்துக்கொண்டும், மற்றும் சில தார்கிக புத்தி விஷயத்தை பின்பற்றியவர்களாகி மேல்நிலைக்கு வரமுடியாமல் திணறுகின்றனர்.
तथेतरेतार्किकाः साङ्ख्यैः ; इत्येवं परस्परविरुद्धार्थकल्पनात आमिषार्थिन इव प्राणिनोऽन्योन्यविरुध्यमानार्थदर्शित्वात्परमार्थतत्त्वाद्दूरमेवापकृष्यन्ते । अतस्तन्मतमनादृत्य वेदान्तार्थतत्त्वमेकत्वदर्शनं प्रत्यादरवन्तो मुमुक्षवः स्युरिति तार्किकमतदोषप्रदर्शनं किञ्चिदुच्यतेऽस्माभिः ; न तु तार्किकवत्तात्पर्येण ।
(ச.பா) அவ்வாறே மற்ற தார்க்கிகர்கள் சாங்கியர்களுடனும், மற்றவர்களுடனும் ஒருவருக்கொருவர் விருத்தமான கல்பனையைக் கல்பித்துக்கொண்டு மாமிசத்திற்காக போட்டியிடும் பிராணிகளைப் போல் ஒருவருக்கொருவர் விருத்த அர்த்தங்களைப் பார்த்துக்கொண்டும், அதைக் காண்பித்துக்கொண்டும் இருப்பதால் உண்மையான ஆத்மதத்துவத்திலிருந்து விலகி வெகுதூரம் இழுத்துச் செல்லப்படுகின்றனர். எனவே அவர்களுடைய கொள்கைகளையும், மதங்களையும் விட்டுவிட்டு வேதாந்தத்தின் அர்த்த தத்துவமான ஏகத்துவத்துவ தரிசனத்தை முமுக்ஷுக்கள் ஆதரிப்பவர்களாய் இருக்கின்றனர். இவ்வாறு தார்கிக மததோஷம் கொஞ்சம் கூறப்பட்டதே அன்றி தார்க்கிகனாய் இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் அல்ல.
तथैतदत्रोक्तम् —
(ச.பா) இங்கு இது கூறப்படுகிறது.
विवदत्स्वेव निक्षिप्य विरोधोद्भवकारणम् । तैः संरक्षितसद्बुद्धिः सुखं निर्वाति वेदवित् ॥
(ச.பா) ஒருவருக்கொருவர் மற்றவரை ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாதிக்கின்றனர். பிற மதத்தில் உள்ள விரோதத்தை சுட்டிக்காட்டுகின்றனர். “இவ்வாறு இவர்கள் வாதிட்டுக் கொள்வதைப் பார்த்த வேதவித் சத்தினிடத்தில் தன் புத்தியை நிலைபெற செய்து கொண்டவனாகி அதனின்று சுகமாக விடுபடுகிறான்.”
किञ्च, भोक्तृत्वकर्तृत्वयोर्विक्रिययोर्विशेषानुपपत्तिः । का नामासौ कर्तृत्वाज्जात्यन्तरभूता भोक्तृत्वविशिष्टा विक्रिया, यतो भोक्तैव पुरुषः कल्प्यते न कर्ता ; प्रधानं तु कर्त्रेव न भोक्तृ इति ।
(ச.பா) மேலும் மாறுபாடுகளை உடைய போக்திருத்துவ, கர்த்திருத்துவங்களால் எந்த விசேஷமும் கிடையாது. கர்த்திருத்துவ ஜாதியில் உள் அடங்கிய போக்த்திருத்துவத்துடன் கூடிய மாறுபாடு என்பது எது? ஏனெனில் போக்தாவான புருஷனே கல்பிக்கப்படுகிறான். கர்த்தாவோ, பிரதானமோ இல்லை. கர்த்தாவே போக்தாவாக ஆகிறான்.
ननु उक्तं पुरुषश्चिन्मात्र एव ; स च स्वात्मस्थो विक्रियते भुञ्जानः, न तत्त्वान्तरपरिणामेन । प्रधानं तु तत्त्वान्तरपरिणामेन विक्रियते ; अतो नैकमशुद्धमचेतनं चेत्यादिधर्मवत् । तद्विपरीतः पुरुषः ।
(ச.பா) (பூர்வ) மேலும் கூறப்பட்டுள்ளது. சின்மாத்திர ஸ்வரூபமாய் உள்ள அந்த புருஷனே தன் ஆத்மஸ்வரூபத்தில் இருந்துகொண்டு போக்தாவாக மாறுபாட்டை அடைகிறான். வேறு தத்துவமாக பரிணமிப்பதால் போக்திருத்துவத்தை அடைவது இல்லை. பிரதானமோ வேறு தத்துவமாக பரிணமிக்கும் வழியோடு மாறுபாட்டை அடைகிறது. அதனால் அநேகமாயும், அசுத்தமாயும், அசேதனமாயும், உள்ள பல தர்மங்களை உடையதாக ஆகிறது. இதற்கு மாறுபட்டவன் புருஷன்.
नासौ विशेषः, वाङ्मात्रत्वात् । प्राग्भोगोत्पत्तेः केवलचिन्मात्रस्य पुरुषस्य भोक्तृत्वं नाम विशेषो भोगोत्पत्तिकाले चेत् जायते, निवृत्ते च भोगे पुनस्तद्विशेषादपेतश्चिन्मात्र एव भवतीति चेत् ; महदाद्याकारेण च परिणम्य प्रधानं ततोऽपेत्य पुनः प्रधानस्वरूपेण व्यवतिष्ठत इति अस्यां कल्पनायां न कश्चिद्विशेष इति वाङ्मात्रेण प्रधानपुरुषयोर्विशिष्टविक्रिया कल्प्यते ।
(ச.பா) (சித்தாந்தீ) இந்த விசேஷம் வெறும் வாய்ச்சொல்லால் விளைவது அல்ல. உற்பத்திக்கு முன் நிலையில் அதாவது போக சாதனங்களின் உற்பத்திக்கு முன் நிலையில் கேவல சைதன்ய மாத்திரமாய் இருக்கும் புருஷனுக்கு போக்த்திருத்துவம் என்ற விசேஷம் போக உற்பத்தி காலத்தில் உண்டாகிறது. போக சாதனங்கள் நீங்கியபொழுது மறுபடியும் அந்த விசேஷங்கள் அற்றவனாய் சின்மாத்திரமாகவே ஆகிறான் என்று சொன்னால், பிரதானம், மஹத் முதலான ஆகாரங்களாக பரிணமித்து அந்த மஹத் முதலான ஆகாரங்கள் நீங்கியபொழுது பிரதானம், பிரதானமாகவே இருக்கிறது என்ற இந்த கல்பனையில் எந்த விசேஷமும் இல்லை. வெறும் வாய்ச்சொல்லால் பிரதான புருஷர்களுக்குள், அதாவது பிரதானத்துடன் கூடிய புருஷனுக்கு மாறுபாடு என்று கல்பிக்கப்படுகிறது.
अथ भोगकालेऽपि चिन्मात्र एव प्राग्वत्पुरुष इति चेत् ।
(ச.பா) (பூர்வ) மேலும் போக காலத்திலும் புருஷன் முன்போல் சின்மாத்திரனே என்று கூறுவதானால்
न तर्हि परमार्थतो भोगः पुरुषस्य ।
(ச.பா) (சித்தாந்தீ) அவ்வாறு கூறுவாயேயானால் உண்மையில் போகம் புருஷனுக்கு சித்திக்காது.
अथ भोगकाले चिन्मात्रस्य विक्रिया परमार्थैव, तेन भोगः पुरुषस्येति चेत् ।
(ச.பா) (பூர்வ) போககாலத்தில் சின்மாத்திரமாய் இருக்கும் புருஷனுக்கு மாறுபாடு உண்மையிலேயே ஏற்படும். எனவே போகம் என்பது புருஷனுக்கு சித்திக்கும்.
न ; प्रधानस्यापि भोगकाले विक्रियावत्त्वाद्भोक्तृकत्वप्रसङ्गः । चिन्मात्रस्यैव विक्रिया भोक्तृत्वमिति चेत् , औष्ण्याद्यसाधारणधर्मवतामग्न्यादीनामभोक्तृत्वे हेत्वनुपपत्तिः ।
(ச.பா) (சித்தாந்தீ) அப்படியன்று, பிரதானத்திற்கும் போக காலத்தில் மாறுபாடு போல் தோற்றம் ஏற்படுவதால் போக்த்திருத்தும் ஏற்படுகிறது. சின்மாத்திரமாய் இருப்பவனுக்கு ஒருமாறுபாடே போக்த்திருத்துவம் என்று கூறுவாயேயானால் உஷ்ணம் முதலான தனக்கு அசாதாரண தர்மத்தோடு கூடின அக்னி முதலானவைகளுக்கும் வேறு சில மாறுபாடுகள் ஏற்படும். ஏனெனில் இதற்கு போக்த்திருத்துவம் இன்மை என்று கூறும்பொழுது நீ கூறும் காரணம் பொருந்தாது.
प्रधानपुरुषयोर्द्वयोर्युगपद्भोक्तृत्वमिति चेत् ।
(ச.பா) பிராதனம், புருஷன் இவர்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் போக்த்திருத்துவம் என்று கூறுவாயேயானால்.
न, प्रधानस्य पारार्थ्यानुपपत्तेः — न हि भोक्त्रोर्द्वयोरितरेतरगुणप्रधानभाव उपपद्यते प्रकाशयोरिवेतरेतरप्रकाशने ।
(ச.பா) (சித்தாந்தீ) அது சரியல்ல, பிரதானத்திற்கு ஒருபோதும் பரமார்த்தத்துவம் கிடையாது. மேலும் இரண்டு போக்தாக்களுக்கு ஒரே சமயத்தில் குணப்பிரதான பாவம் உண்டாவது இல்லை. இரண்டு பிரகாசங்கள் இருக்கும்பொழுது ஒன்று மற்றொன்றை பிரகாசப்படுத்துகிறது என்று கூறுவது போல் ஆகும்.
भोगधर्मवति सत्त्वाङ्गिनि चेतसि पुरुषस्य चैतन्यप्रतिबिम्बोदयादविक्रियस्य पुरुषस्य भोक्तृत्वमिति चेत् ।
(ச.பா) (பூர்வ) போக தர்மத்தை உடையதும் சத்துவத்திற்கு அங்கமாகவும் உள்ள உள்ளத்தில் சைதன்யத்தின் பிரதிபிம்பமாக உள்ள புருஷனுக்கு போக்த்திருத்துவம். அவனுக்கே (புருஷனுக்கே) போக்த்திருத்துவம் என்று கூறுவதானால்.
न, पुरुषस्य विशेषाभावे भोक्तृत्वकल्पनानर्थक्यात् । भोगरूपश्चेदनर्थः पुरुषस्य नास्मि सदा निर्विशेषत्वात्पुरुषस्य, कस्यापनयनार्थं मोक्षसाधनं शास्त्रं प्रणीयते ? अविद्याध्यारोपितानर्थापनयनाय शास्त्रप्रणयनमिति चेत् , परमार्थतः पुरुषो भोक्तैव, न कर्ता ; प्रधानं कर्त्रेव न भोक्तृ परमार्थसद्वस्त्वन्तरं पुरुषाच्च इतीयं कल्पना आगमबाह्या व्यर्थानिर्हेतुका च इति नादर्तव्या मुमुक्षुभिः ।
(ச.பா) (சித்தாந்தீ) சரியல்ல. புருஷனுக்கு விசேஷம் இன்மையால் அவனுக்கு போக்த்திருத்துவம் கல்பிப்பது பொருள் அற்றது. புருஷன் போக்த்ருரூபன் இதில் பொருள் அற்ற தன்மை ஏதும் இல்லை. எப்பொழுதும் புருஷன் நிர்விசேஷனாய் இருப்பதால் எதை போக்கடிப்பதற்காக மோக்ஷ சாதனமான சாஸ்திரம் எழுதப்படுகிறது எனில், அது அவித்தையால் ஆரோபிக்கப்பட்ட அநர்த்தங்களை நீக்குவதற்காக இந்த சாஸ்திரங்கள் எழுதப்படுகின்றன எனில், உண்மையில் புருஷன் போக்தாவே கர்த்தா அல்ல. பிரதானம் கர்த்தா அது போக்தாவல்ல. உண்மையில் சத்வஸ்துவான வேறு ஒருபொருள் புருஷன் என்று எல்லாம் கூறிக்கொண்டு போவது கல்பனை செய்தல், புரிந்து கொள்ளமுடியாதது. பொருள் அற்றது. வியர்த்தமானது, காரணமற்றது என்பதால் இது முமுக்ஷுக்களால் ஆதரிக்கத்தகுந்தது அல்ல.
एकत्वेऽपि शास्त्रप्रणयनाद्यानर्थक्यमिति चेत् ।
(ச.பா) ஏகத்துவம் இருப்பினும் சாஸ்திரங்களில் எழுதுதல் பொருள் அற்றது என்று கூறினால்.
न, अभावात् — सत्सु हि शास्त्रप्रणेत्रादिषु तत्फलार्थिषु च शास्त्रस्य प्रणयनमर्थवदनर्थकं वेति विकल्पना स्यात् । न ह्यात्मैकत्वे शास्त्रप्रणेत्रादयस्ततो भिन्नाः सन्ति ; तदभावे एवं विकल्पनैवानुपपन्ना ।
(ச.பா) (ஸித்தாந்தீ) அதுவும் சரியன்று, அபாவமுடையதால் பல சாஸ்திரங்கள் எழுதுபவர்கள் அதனால் ஏற்படும் பலத்தை எழுதுதல், பொருள் அற்றது, பொருள் உடையது என்ற விகல்பனைக்கு உட்பட்டதாக ஆகும். ஆத்மாவிற்கு ஏகத்துவம் சாஸ்திரங்களில் எழுதுவதால் அதை எழுதுபவர்கள் அதைக் காட்டிலும் வேறுபட்டவர்களாக ஆகின்றனர். அது இல்லாமல் இருப்பது என்பது இரண்டாவது. இவ்வாறு விகல்பம் செய்வதே பொருந்தாது.
(ச.பா) ஆத்மாவின் ஏகத்துவத்தை ஒப்புக்கொள்ளும் முன்னால் அதன் பிரமாணங்களும் ஒப்புக்கொள்ளப் பட்டதாக ஆகிறது. ஏகத்துவத்தை ஒப்புக்கொள்ளப்பட்ட உம்மால் அதை ஏற்கும் சாஸ்திரத்தை ஒப்புக்கொள்ளாமல் இருப்பதும் சரியல்ல. இதற்கு சாஸ்திரமே கூறுகிறது எவனுக்கு இந்தயாவும் ஆத்மாவாகவே ஆகிவிட்டதோ அவன் எதைப்பார்ப்பான் என்று கூறுகிறது. சாஸ்திரங்கள் இயற்றுவதில் உள்ள அனுபவத்தை மற்றொரு இடத்தில் கூறுகிறது. பரமார்த்த வஸ்து ஸ்வரூபமாய் இருப்பதால் இவையாவும் அவித்தியா விஷயம். எங்கு இவைகள் த்வைதம் போல் ஆகின்றன என்பது போன்ற வாக்கியங்கள் விஸ்தாரமாய் வாஜசனேய உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளன.
अत्र च विभक्ते विद्याविद्ये परापरे इत्यादावेव शास्त्रस्य । अतो न तार्किकवादभटप्रवेशो वेदान्तराजप्रमाणबाहुगुप्ते इहात्मैकत्वविषये इति ।
(ச.பா) இங்கு பகுக்கப்பட்ட வித்தை, அவித்தைகள், பராபர விஷயமானது என்று முதலிலேயே சாஸ்திரத்தில் கூறப்பட்டதால் வேதாந்த ராஜபிரமாணம் என்ற கைகளால் அரவணைக்கப்பட்ட ஆத்மைகத்துவ விஷயத்தில் தர்க்கவாதம் எனப்படும் போர்வீரனின் பிரவேசம் பலிக்காது.
एतेनाविद्याकृतनामरूपाद्युपाधिकृतानेकशक्तिसाधनकृतभेदवत्त्वाद्ब्रह्मणः सृष्ट्यादिकर्तृत्वे साधनाद्यभावो दोषः प्रत्युक्तो वेदितव्यः, परैरुक्त आत्मानर्थकर्तृत्वादिदोषश्च ।
(ச.பா) இதனால் அவித்தையினால் உண்டான, நாம, ரூப உபாதிகளால் ஏற்பட்ட, மேலும் அநேக சக்தி சாதனங்களால் உண்டான பேதம் போன்ற பிரஹ்மத்தின் காரணங்களே அன்றி, பிரஹ்மத்திற்கு சாதனங்கள் இன்மையால் கர்த்திருத்துவம் எவ்வாறு ஏற்படும் என்ற தோஷம் நிராகரிக்கப்பட்டது என்பதை அறிய வேண்டும். மற்றவர்களால் கூறப்பட்ட கர்த்திருத்துவம் முதலானவை ஆத்மாவிற்கு அனர்த்தத்தை விளைவிக்கும் தோஷங்களால் எந்த எல்லா காரியங்களையும் செய்யும் அரசனுக்கு கர்த்தா முதலானவைகள் உபசரிக்கப்படுவதால் ராஜா கர்த்தா எனக்கூறப்படும் திருஷ்ட்டாந்தமும் இங்கு பொருந்தாது.
यस्तु दृष्टान्तो राज्ञः सर्वार्थकारिणि कर्तरि भृत्ये उपचारो राजा कर्तेति, सोऽत्रानुपपन्नः ; ‘स ईक्षाञ्चक्रे’ इति श्रुतेर्मुख्यार्थबाधनात्प्रमाणभूतायाः । तत्र हि गौणी कल्पना शब्दस्य, यत्र मुख्यार्थो न सम्भवति । इह त्वचेतनस्य मुक्तबद्धपुरुषविशेषापेक्षया कर्तृकर्मदेशकालनिमित्तापेक्षया च बन्धमोक्षादिफलार्था नियता पुरुषं प्रति प्रवृत्तिर्नोपपद्यते ; यथोक्तसर्वज्ञेश्वरकर्तृत्वपक्षे तु उपपन्ना ।
(ச.பா) ஏனெனில் அவர் பார்த்தார் (நினைத்தார்) என்ற இடத்தில் சுருதி வாக்கியத்திற்கு அதுவும் பிரமாணமான சுருதி வாக்கியத்திற்கு மேற்கண்டவாறு எல்லாம் அர்த்த கற்பனை செய்தல் பாதகத்தை உண்டாக்கும். கௌணார்த்த கற்பனை செய்யலாமே எனில் எங்கு முக்கியார்த்தம் சம்பவிக்காதோ அங்குதான் கௌணார்த்த கல்பனை செய்யவேண்டும். இங்கோவெனில் அசேதனமான புருஷனுக்கு முக்த, பத்த விசேஷத்தைக் காட்டிலும், கர்த்தா, கர்மா, தேசம், காலம், நிமித்தம் இவைகளைக் காட்டிலும், இவைகளும் பந்தம், மோக்ஷம் முதலான பலார்த்தங்கள் ஒரே நியமத்தில் உள்ள புருஷனைக் குறித்து ப்ரவிர்த்தித்தல் என்பது இயலாத காரியம். முற்கூறப்பட்ட சர்வக்ஞ ஈஸ்வரனான பரம புருஷனுக்கு கர்த்திருத்துவம் என்ற பக்ஷத்தில் பொருந்தும்.
ईश्वरेणैव सर्वाधिकारी प्राणः पुरुषेण सृज्यते ॥
ராஜாவிற்கு சமானமான புருஷனே சர்வாதிகாரி பிராணனை சிருஷ்ட்டிக்கின்றானா? எவ்வாறு?
स प्राणमसृजत प्राणाच्छ्रद्धा खं वायुर्ज्योतिरापः पृथिवीन्द्रियं मनः । अन्नमन्नाद्वीर्यं तपो मन्त्राः कर्म लोका लोकेषु च नाम च ॥ ४ ॥
कथम् ?
நாமாக்களையும் (படைத்தான்)
सः पुरुषः उक्तप्रकारेणेक्षित्वा सर्वप्राणं हिरण्यगर्भाख्यं सर्वप्राणिकरणाधारमन्तरात्मानम् असृजत सृष्टवान् । ततः प्राणात् श्रद्धां सर्वप्राणिनां शुभकर्मप्रवृत्तिहेतुभूताम् ; ततः कर्मफलोपभोगसाधनाधिष्ठानानि कारणभूतानि महाभूतानि असृजत ।
(ச.பா) அந்த ஈஸ்வரனான பரம புருஷனால் எல்லாவற்றிற்கும் அதிகாரியான பிராணன் சிருஷ்ட்டிக்கப்பட்டன. அது எவ்வாறு எனில் சர்வப் பிராணிகளின் கரணங்களைத் தரிப்பதும், அந்தராத்மாவாய் உள்ளதும், ஹிரண்யகர்பன் என்ற பெயர் பெற்றதுமான பிராணனை தன்னுடைய ஈக்ஷணம் என்ற வியாபாரத்தால் படைத்தான். பிறகு அந்தப்பிராணனில் இருந்து சர்வப்பிராணிகளுடையவும், சுபகர்ம பிரவிர்த்திக்கு காரணமான சிரத்தையைப் படைத்தான். அதிலிருந்து கர்மபல போக சாதனங்களுக்கு அதிஷ்ட்டானமானதும், காரண பூதங்களாயும் உள்ள மஹா பூதங்களைப் படைத்தான்.
खं शब्दगुणकम् , वायुः स्वेन स्पर्शगुणेन शब्दगुणेन च विशिष्टो द्विगुणः, तथा ज्योतिः स्वेन रूपेण पूर्वगुणाभ्यां च विशिष्टं शब्दस्पर्शाभ्यां त्रिगुणम् , तथा आपो रसगुणेनासाधारणेन पूर्वगुणानुप्रवेशेन च चतुर्गुणाः, तथा गन्धगुणेन पूर्वगुणानुप्रवेशेन च पञ्चगुणा पृथिवी, तथा तैरेव भूतैरारब्धम् इन्द्रियं द्विप्रकारं बुद्ध्यर्थं कर्मार्थं च दशसङ्ख्याकम् , तस्य चेश्वरमन्तःस्थं संशयविकल्पादिलक्षणं मनः ।
(ச.பா) (முதலில்) சப்த குணத்தினுடைய ஆகாசம், அடுத்து தன்னுடைய ஸ்பரிசம் என்ற காரண குணத்தோடு முன்புள்ள சப்த குணத்தையும் சேர்த்து இரண்டு குணங்கள் உள்ள வாயு, அடுத்து தன்னுடைய ரூபம் என்ற குணத்துடனும், முன் இரண்டு குணத்துடன் கூடி மூன்று குணங்கள் உடைய ஜ்யோதிஸ். அவ்வாறே அசாதாரணமான ரசம் என்ற குணத்துடனும், முந்திய மூன்று குணங்களுடனும் கூடியதும் ஆக நான்கு குணங்களுடன் கூடிய தண்ணீரைப் படைத்தான். அவ்வாறே தன்னுடைய வாசனை என்ற குணத்துடனும் முந்தைய நான்கு குணங்களின் சேர்க்கையால் ஐந்து குணங்களுடன் கூடிய பிருதிவியைப் படைத்தான். முன் சொல்லப்பட்டது பூதங்களில் இருந்து ஆரம்பமானது இந்திரியம். அது இருவகைப்படும். புத்தீந்திரியம், கர்மேந்திரியம் என்று. அது பத்தாகும். அதனின்று உள்ளே இருக்கக்கூடிய சம்சய, சங்கல்பமயமான மனது.
एवं प्राणिनां कार्यं करणं च सृष्ट्वा तत्स्थित्यर्थं व्रीहियवादिलक्षणम् अन्नम् , ततश्च अन्नात् अद्यमानात् वीर्यं सामर्थ्यं बलं सर्वकर्मप्रवृत्तिसाधनम् , तद्वीर्यवतां च प्राणिनां तपः विशुद्धिसाधनं सङ्कीर्यमाणानाम् , मन्त्राः तपोविशुद्धान्तर्बहिःकरणेभ्यः कर्मसाधनभूता ऋग्यजुःसामाथर्वाङ्गिरसः ; ततः कर्म अग्निहोत्रादिलक्षणम् , ततो लोकाः कर्मणां फलम् , तेषु च लोकेषु सृष्टानां प्राणिनां नाम च देवदत्तो यज्ञदत्त इत्यादि ।
(ச.பா) இவ்வாறு பிராணிகளின் காரியம், கரணம் இவைகளைப் படைத்து அவைகள் நிலைபெறுவதின் பொருட்டு (ஸ்திதியின் பொருட்டு) நெல், யவை, கோதுமை, முதலிய லக்ஷணங்களான அன்னம், அந்த அன்னத்தை சாப்பிடுவதால் வீரியத்தையும், சர்வகாரியங்களிலும் பிரவிர்த்திப்பதற்கு சாதனமான பலம், வீரியம், இவைகளைப் படைத்தான். அந்த வீரியத்துடன் கூடியும், கலப்படமாய் இருக்கும் பிராணிகளின் விசுத்தி சாதனமான தவம், கர்மசாதன பூதங்களான ரிக், யஜுஸ், சாமம், அதர்வனம் அங்கிரஸ் மந்திரங்களை செய்தார். மேலும் அதன் பின்னர் அக்னி ஹோத்திரம் முதலிய கர்மங்கள் அவ்வாறே கர்மங்களின் பல ஸ்வரூபமான லோகம் நிர்மாணம் செய்யப்பட்டது. இவ்வாறு நிர்மாணம் செய்யப்பட்ட இந்த உலகங்களில் பிராணிகளுக்கு (ஜீவர்களுக்கு) தேவதத்தன், யக்ஞதத்தன் முதலிய நாமங்கள் ஏற்பட்டது.
एवमेताः कलाः प्राणिनामविद्यादिदोषबीजापेक्षया सृष्टास्तैमिरिकदृष्टिसृष्टा इव द्विचन्द्रमशकमक्षिकाद्याः स्वप्नदृक्सृष्टा इव च सर्वपदार्थाः पुनस्तस्मिन्नेव पुरुषे प्रलीयन्ते हित्वा नामरूपादिविभागम् ॥
(ச.பா) இவ்வாறு அரைகுறைபார்வை உடைய திமிர ரோகியின் திருஷ்டியினால் உண்டான இரண்டு சந்திரன், கொசு, வண்டு முதலியவைகளும் அவ்வாறே ஸ்வப்ன திருஷ்ட்டாவால் சிருஷ்ட்டிக்கபட்ட எல்லா பதார்த்தங்களும் சமானமான பிராணிகளின் அவித்யா முதலிய தோஷரூப பீஜத்தை அபேக்ஷித்து சிருஷ்ட்டிக்கப்பட்டது. இந்த கலைகள் தன்தன் நாமரூப முதலிய விபாகங்களை (பிரிவை) தியாகம் செய்து அந்த புருஷனிடத்திலேயே லீனமாகின்றது. (நதியின் திருஷ்டாந்தத்தால் ஜகத்தின் புருஷ ஆஸ்ரயத்துவம் பிரதிபாதிக்கப்படுகிறது.)
कथम् -
எவ்வாறு?
स यथेमा नद्यः स्यन्दमानाः समुद्रायणाः समुद्रं प्राप्यास्तं गच्छन्ति भिद्येते तासां नामरूपे समुद्र इत्येवं प्रोच्यते । एवमेवास्य परिद्रष्टुरिमाः षोडश कलाः पुरुषायणाः पुरुषं प्राप्यास्तं गच्छन्ति भिद्येते चासां नामरूपे पुरुष इत्येवं प्रोच्यते स एषोऽकलोऽमृतो भवति तदेष श्लोकः ॥ ५ ॥
सः दृष्टान्तः, यथा लोके इमा नद्यः स्यन्दमानाः स्रवन्त्यः समुद्रायणाः, समुद्र एव अयनं गतिरात्मभावो यासां ताः समुद्रायणाः, समुद्रं प्राप्य उपगम्य अस्तम् अदर्शनं नामरूपतिरस्कारं गच्छन्ति ; तासां चास्तं गतानां भिद्येते विनश्येते नामरूपे गङ्गा यमुनेत्यादिलक्षणे ; तदभेदेन समुद्र इत्येवं प्रोच्यते तद्वस्तूदकलक्षणम् ।
(ச.பா) அந்த திருஷ்ட்டாந்தம் இவ்வாறு ஆகும். எவ்வாறு உலகில் நிரந்தரமான பிரவாஹ ரூபமாக ஓடிக்கொண்டிருக்கிறதாய் அவ்வாறே சமுத்திரமே அதன் இருப்பிடம். அயனஸ்தானம் அதாவது அதுவே கதியாகும். அதாவது தன் பாவமானது எவ்வாறு அந்த நதிகள் சமுத்திரத்தை அடைந்து காணாமல் போவது போல் அதாவது நாமரூபத்தை விட்டு அதை அடைந்து கலந்துவிடுகிறது. அவ்வாறே இந்த விதமாக அஸ்தமாகி அந்த நதிகள் கங்கை, யமுனை முதலிய நாமங்களை இழக்கிறது. மேலும் அதில் அபேதமானதால் அது ஜலமய பதார்த்தமாகி சமுத்திரம் என்ற லக்ஷணமுடையதாகிறது.
एवं यथायं दृष्टान्तः उक्तलक्षणस्य प्रकृतस्य अस्य पुरुषस्य परिद्रष्टुः परि समन्ताद्द्रष्टुर्दर्शनस्य कर्तुः स्वरूपभूतस्य । यथा अर्कः स्वात्मप्रकाशस्य कर्ता सर्वतः, तद्वत् इमाः षोडश प्राणाद्या उक्ताः कलाः पुरुषायणाः नदीनामिव समुद्रः पुरुषोऽयनमात्मभावगमनं यासां कलानां ताः पुरुषायणाः पुरुषं प्राप्य पुरुषात्मभावमुपगम्य तथैवास्तं गच्छन्ति । भिद्येते च आसां नामरूपे कलानां प्राणाद्याख्या रूपं च यथास्वम् । भेदे च नामरूपयोर्यदनष्टं तत्तत्त्वं पुरुषः इत्येवं प्रोच्यते ब्रह्मविद्भिः ।
(ச.பா) இவ்வாறு இந்த திருஷ்ட்டாந்தம் போல் ஆகும். மேலே கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய பரிதிருஷ்ட்டா அதாவது எவ்வாறு சூரியன் எல்லாவற்றிற்கும், தன்னுடைய ஸ்வரூபத்தையும் பிரகாசிக்கும் கர்த்தாவோ அவ்வாறு எல்லாவற்றையும் மேலும் த்ருஷ்ட்டா - தர்சன கர்த்தா ஸ்வரூபமான இந்த பிரக்ருத புருஷனின் எந்த பிராணன் முதலியவை மேலே கூறப்பட்ட பதினாறு கலைகள் எதற்கு அயனமோ - ஆத்ம பாவத்தின் பிராப்தி ஸ்தானம் இந்த புருஷனே. எவ்வாறு நதிகளுக்கு சமுத்திரமோ அவ்வாறு ஆகும். ஆகையால் எந்த புருஷ அயனம் எனப்படுகிறதோ அந்த புருஷனை அடைந்து - புருஷ ரூபமாய் இருந்துகொண்டு இவ்வாறு லீனமாகிறது. அவ்வாறு இந்த கலைகளின் பிராணன் முதலியவை எனப்படும் நாமம் மேலும் தன்னுடைய தன்னுடைய அநேக பின்னமாக உள்ள ரூபம் நஷ்ட்டமாகிவிடுகிறது. இவ்வாறு நாம ரூபங்கள் நாசம் அடைந்த பின்னும் எதற்கு நாசம் ஏற்படவில்லையோ அந்த தத்துவத்தை பிரஹ்மவேத்தா “புருஷன்” என்று கூறி விளக்குகிறார்.
य एवं विद्वान्गुरुणा प्रदर्शितकलाप्रलयमार्गः, स एषः विद्यया प्रविलापितास्वविद्याकामकर्मजनितासु प्राणादिकलासु अकलः अविद्याकृतकलानिमित्तो हि मृत्युः ; तदपगमेऽकलत्वादेव अमृतः भवति । तदेतस्मिन्नर्थे एषः श्लोकः ॥
(ச.பா) எவர் இவ்வாறு குருவினால் கலைகளின் பிரளயத்தின் மார்க்கத்தைக் காட்டினாரோ அந்த புருஷன் இந்த தத்துவத்தை அறிந்தவன் ஆகின்றான். அவன் இந்த வித்யையின் மூலமாக அவித்யா, காமம், மேலும் கர்மத்தால் உண்டான பிராணன் முதலிய கலைகள் நஷ்ட்டமானதினால் கலையற்றதாய் (நிஷ்கலை) ஆகிறது. மேலும் ம்ருத்யுவும் அவித்யையினால் உண்டான கலைகள் ஆவதால் அவைகளின் நிவிர்த்தியும் ஆனபின் அது நிஷ்கலை ஆனதின் காரணமாக அம்ருதம் ஆகிறது. இந்த சம்பந்தத்தில் இந்த ஸ்லோகம் பிரசித்தமானது.
अरा इव रथनाभौ कला यस्मिन्प्रतिष्ठिताः ।
तं वेद्यं पुरुषं वेद यथा मा वो मृत्युः परिव्यथा इति ॥ ६ ॥
अरा इव रथचक्रपरिवारा इव रथनाभौ रथचक्रस्य नाभौ यथाप्रवेशिताः तदाश्रया भवन्ति यथा, तथेत्यर्थः । कलाः प्राणाद्याः यस्मिन् पुरुषे प्रतिष्ठिताः उत्पत्तिस्थितिलयकालेषु, तं पुरुषं कलानामात्मभूतं वेद्यं वेदनीयं पूर्णत्वात्पुरुषं पुरि शयनाद्वा वेद जानाति ; यथा हे शिष्याः, मा वाः युष्मान् मृत्युः परिव्यथाः मा परिव्यथयतु । न चेद्विज्ञायेत पुरुषो मृत्युनिमित्तां व्यथामापन्ना दुःखिन एव यूयं स्थ । अतस्तन्माभूद्युष्माकमित्यभिप्रायः ॥
(ச.பா) தேர்ச்சக்கரத்தின் அச்சில் ஆரக்கால்கள் சேர்வது போல் அதாவது எவ்வாறு ரத சக்கரத்தின் ஆராக்கால்கள் நாபியில் நிலைபெற்று ஆஸ்ரயித்து உள்ளதோ அவ்வாறு இந்த புருஷனில் பிராணன் முதலிய கலைகள் தன் உத்பத்தி, ஸ்திதி, லயத்தின் சமயத்தில் இருந்துகொண்டிருக்கிறது. கலைகளின் ஆத்மபூதமான அந்த அறியவேண்டிய புருஷனை எங்கும் பூர்ணமாய் அல்லது சரீரரூப புரத்தில் சயனித்துக்கொண்டு இருப்பதால் புருஷன் எனப்படுகிறான். ஹே சிஷ்ய! இதனால் அறிந்துகொள். நீ இந்த புருஷனை அறியவில்லையெனில் நீ மிருத்யு நிமித்தமாக வேதனையுடன் கூடிய துக்கமுடையவனாவாய், ஆகையால் நீ அந்த துக்கத்தை அடையாதே என்பது இதன் அபிப்ராயம்.
तान्होवाचैतावदेवाहमेतत्परं ब्रह्म वेद नातः परमस्तीति ॥ ७ ॥
तान् एवमनुशिष्य शिष्यान् तान् होवाच पिप्पलादः किल एतावदेव वेद्यं परं ब्रह्म वेद विजानाम्यहमेतत् । न अतः अस्मात् परम् अस्ति प्रकृष्टतरं वेदितव्यम् इत्येवमुक्तवान् शिष्याणामविदितशेषास्तित्वाशङ्कानिवृत्तये कृतार्थबुद्धिजननार्थं च ॥
(ச.பா) அந்த சிஷ்யர்களுக்கு பிப்பலாத முனிவரால் இவ்வாறு கூறப்பட்டது. அந்த அறியவேண்டிய பரபிரஹ்மத்தை நான் இவ்வளவுதான் அறிந்து இருக்கிறேன். இதை விட உத்க்ருஷ்ட்டமான மேலும் அறியவேண்டியது ஒன்றும் இல்லை. இவ்வாறு இப்பொழுது சிறிதும் அறியாதது இல்லை என்று சிஷ்யர்களின் சந்தேஹ நிவர்த்திக்காகவும் அவ்வாறே கிருதார்த்த புத்தி ஏற்படுவதற்காகவும் பிப்பலாதர் அவர்களுக்கு கூறினார்.
ते तमर्चयन्तस्त्वं हि नः पिता योऽस्माकमविद्यायाः परं पारं तारयसीति । नमः परमऋषिभ्यो नमः परमऋषिभ्यः ॥ ८ ॥
ततः ते शिष्या गुरुणानुशिष्टाः तं गुरुं कृतार्थाः सन्तो विद्यानिष्क्रयमन्यदपश्यन्तः किं कृतवन्त इत्युच्यते — अर्चयन्तः पूजयन्तः पादयोः पुष्पाञ्जलिप्रकिरणेन प्रणिपातेन च शिरसा । किमूचुरित्याह — त्वं हि नः अस्माकं पिता ब्रह्मशरीरस्य विद्यया जनयितृत्वान्नित्यस्याजरामरणस्याभयस्य । यः त्वमेव अस्माकम् अविद्यायाः विपरीतज्ञानाज्जन्मजरामरणरोगदुःखादिग्राहादपारादविद्यामहोदधेर्विद्याप्लवेन परम् अपुनरावृत्तिलक्षणं मोक्षाख्यं महोदधेरिव पारं तारयसि अस्मानित्यतः पितृत्वं तवास्मान्प्रत्युपपन्नमितरस्मात् । इतरोऽपि हि पिता शरीरमात्रं जनयति, तथापि स पूज्यतमो लोके ; किमु वक्तव्यमात्यन्तिकाभयदातुरित्यभिप्रायः । नमः परमऋषिभ्यः ब्रह्मविद्यासम्प्रदायकर्तृभ्यः । नमः परमऋषिभ्य इति द्विर्वचनमादरार्थम् ॥
(ச.பா) அப்பொழுது குருவினால் உபதேசம் செய்யப்பட்ட சிஷ்யர்கள் கிருதார்த்தர்களாகி அந்த வித்யாதானத்திற்கு எந்த ஒரு பிரதிகாரம் காணமுடியாமல் என்ன என்ன கூறினார்கள் எனில் - அவர்கள் குருவை அர்ச்சித்து அதாவது சரணங்களில் புஷ்பாஞ்சலி செய்து அவ்வாறே தலைவணங்கி அவரை பூஜை செய்து கொண்டே என்ன கூறினர் என்பது கூறப்படுகிறது. “வித்யையின் மூலமாக எங்களுடைய நித்ய, ஜரையற்ற, அமரம் அவ்வாறே அபயரூப பிரஹ்ம சரீரத்தை அறிய செய்ததின் காரணமாக தாங்கள் எங்கள் தந்தை (பிதா) எந்த தங்களுடைய வித்யாரூபமான படகின் வாயிலாய் நாங்கள் விபரீத ஞானரூப அவித்யையினால் அதாவது ஜன்மம், மூப்பு, மரணம், ரோகம் மேலும் துக்கம் முதலியவைகளின் பிடிப்பினால் தாண்ட முடியாமல் இருக்கும் அவித்யாரூப சமுத்திரத்திலிருந்து அதாவது மஹாசாகரம் என்ற மோக்ஷம் எனப்படும் மஹோதத்தின் (சமுத்திரத்தின்) கரையை தாண்டச்செய்தவர். ஆகையால் தாங்கள் பித்ருத்துவம் ஆகிய மற்ற (ஜன்மத்தைக் கொடுக்கும்) மாதா, பிதா அவர்களைக் காட்டிலும் மேலானவர். ஏனெனில் மற்ற பிதாவானவர் கேவல சரீரத்தை உத்பத்தி செய்பவர். ஆனாலும் உலகில் எல்லாவற்றினும் அதிக பூஜிக்கத்தகுந்தவர் ஆகிறார். மேலும் ஆத்யந்திக அபயப்பிரதனம் செய்யும் தங்களை பூஜை செய்ய வேண்டிய விஷயத்தில் என்ன கூறுவது? ஆகையால் பிரஹ்மவித்யா சம்பிரதாயத்தை பிரவிர்த்திக்கச் செய்யும் பரம புருஷருக்கு நமஸ்காரம். இங்கு “नमः परमऋषिभ्यः” (நம: பரமரிஷிப்ய:) என்று இருமுறை கூறியது பெருமைப்படுத்துவதற்காக ஆகும்.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ प्रश्नोपनिषद्भाष्यं सम्पूर्णम् ॥