द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

प्रश्नोपनिषद्भाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

ப்ரஶ்நோபநிஷத்பாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

अथ हैनं भार्गवो वैदर्भिः पप्रच्छ भगवन्कत्येव देवाः प्रजां विधारयन्ते कतर एतत्प्रकाशयन्ते कः पुनरेषां वरिष्ठ इति ॥ १ ॥
प्राणोऽत्ता प्रजापतिरित्युक्तम् । तस्य प्रजापतित्वमत्तृत्वं चास्मिञ्शरीरेऽवधारयितव्यमित्ययं प्रश्न आरभ्यते ।
(அ.கை) பிராணன், அத்தாவான பிரஜாபதி என்று கூறப்பட்டது. அவனுக்கு பிரஜாபதித்தன்மையும், அத்ருத்துவமும் இந்த சரீரத்தில் தீர்மானிக்க வேண்டும் என்று இந்த கேள்வி ஆரம்பிக்கப்படுகிறது.
अथ अनन्तरं ह किल एनं भार्गवः वैदर्भिः पप्रच्छ — हे भगवन् कत्येव देवाः प्रजां शरीरलक्षणां विधारयन्ते विशेषेण धारयन्ते । कतरे बुद्धीन्द्रियकर्मेन्द्रियविभक्तानाम् एतत् प्रकाशनं स्वमाहात्म्यप्रख्यापनं प्रकाशयन्ते । कः असौ पुनः एषां वरिष्ठः प्रधानः कार्यकरणलक्षणानामिति ॥
(ச.பா) பிறகு வைதர்ப தேசத்தில் பிறந்த பார்க்கவன் பிப்பலாதரை இவ்வாறு கேட்டான். பகவானே சரீரலக்ஷணத்தோடு கூடிய இந்தப் பிரஜைகளை எந்த, எத்தனை தேவர்கள் விசேஷமாய் தரிக்கின்றனர். அவர்களுள் எவர்கள் புத்தீந்திரியம் என்றும், கர்மேந்திரியம் என்றும் பிரிக்கப்பட்ட இந்த சரீரத்தை தன்னுடைய பெருமையை விளக்கும் வண்ணம் பிரகாசப்படுத்துகின்றனர். இவர்களுள் இந்த காரிய, கரண லக்ஷணங்களுக்கு எவன் பிரதானமானவன் என்று கேட்டார்.
तस्मै स होवाच । आकाशो ह वा एष देवो वायुरग्निरापः पृथिवी वाङ्मनश्चक्षुः श्रोत्रं च । ते प्रकाश्याभिवदन्ति वयमेतद्बाणमवष्टभ्य विधारयामः ॥ २ ॥
एवं पृष्टवते तस्मै स ह उवाच — आकाशः ह वै एषः देवः वायुः अग्निः आपः पृथिवी इत्येतानि पञ्च महाभूतानि शरीरारम्भकाणि वाङ्मनश्चक्षुः श्रोत्रमित्यादीनि कर्मेन्द्रियबुद्धीन्द्रियाणि च । कार्यलक्षणाः करणलक्षणाश्च ते देवा आत्मनो माहात्म्यं प्रकाश्यं प्रकाश्याभिवदन्ति स्पर्धमाना अहंश्रेष्ठतायै ।
(ச.பா) இவ்வாறு கேட்ட பார்க்கவனின் பொருட்டு இந்த பிப்பலாதர் கூறலானார். இந்த தேவர்களான ஆகாசம், வாயு, அக்னி, தண்ணீர். பிருதிவீ, என்ற ஐந்து மஹாபூதங்களும், சரீரம் ஆரம்பிப்பதற்கான காரணங்கள். வாக், மனம், சக்ஷுஸ், சுரோத்திரம் என்பன போன்ற கர்மேந்திரியங்களுடையவும், புத்தி (ஞான) இந்திரியங்களுடையவும், காரிய லக்ஷணமாயும், கரண லக்ஷணமாயும் உள்ள அதிஷ்ட்டான தேவதைகள், தங்களுடைய பெருமையை வெளிப்படுத்திக்கொண்டு ஒன்றுக்கொன்று போட்டி இட்டவண்ணம் நானே உயர்ந்தவன் என்று தன்னுடைய சிரேஷ்ட்ட தன்மையைப் பற்றி பேசலாயின.
कथं वदन्ति ? वयमेतत् बाणं कार्यकरणसङ्घातम् अवष्टभ्य प्रासादमिव स्तम्भादयः अविशिथिलीकृत्य विधारयामः विस्पष्टं धारयामः । मयैवैकेनायं सङ्घातो ध्रियत इत्येकैकस्याभिप्रायः ॥
(ச.பா) எவ்வாறு சொல்கின்றன எனில்? நாமே காரிய கரணங்களின் சேர்க்கையான பாணம் எனப்படும் இந்த சரீரத்தைப் பற்றிக்கொண்டு அதாவது உப்பரிகையை ஸ்தம்பங்கள் தாங்குவது போல் எவ்வித சேதமும் இன்றி தெளிவாக, நன்றாக தாங்குகிறோம். அதாவது நான் ஒருவனே இந்த சங்காத ரூபமான சரீரத்தைத் தாங்குகிறேன் என்று ஒவ்வொருவருடைய அபிப்பிராயமாகும்
तान्वरिष्ठः प्राण उवाच मा मोहमापद्यथाहमेवैतत्पञ्चधात्मानं प्रविभज्यैतद्बाणमवष्टभ्य विधारयामीति तेऽश्रद्दधाना बभूवुः ॥ ३ ॥
तान् एवमभिमानवतः वरिष्ठः मुख्यः प्राणः उवाच उक्तवान् — मा मैवं मोहम् आपद्यथ अविवेकितयाभिमानं मा कुरुत ; यस्मात् अहमेव एतद्बाणम् अवष्टभ्य विधारयामि पञ्चधा आत्मानं प्रविभज्य प्राणादिवृत्तिभेदं स्वस्य कृत्वा विधारयामि इति उक्तवति च तस्मिन् ते अश्रद्दधानाः अप्रत्ययवन्तः बभूवुः — कथमेतदेवमिति ॥
(ச.பா) இவ்வாறு அபிமானம் கொண்டவர்களில் முக்கியமான பிராணன் இவ்வாறு கூறலாயிற்று. நீங்கள் இவ்வாறு அவிவேகத்தால் அபிமானம் கொள்ளாதீர்கள். ஏனெனில் நான் என்னை ஐந்தாக பிராணன் முதலான விருத்தி பேதம் செய்துகொண்டு இந்த சரீரத்தைத் தாங்குகிறேன். எனவே நீங்கள் அபிமானம் கொள்ள வேண்டாம். இவ்வாறு சொன்ன பிராணன் வார்த்தைகளில் அது எவ்வாறு முடியும்? என்று மற்றதேவதைகள் நம்பிக்கை அற்றதாக ஆயின.
सोऽभिमानादूर्ध्वमुत्क्रामत इव तस्मिन्नुत्क्रामत्यथेतरे सर्व एवोत्क्रामन्ते तस्मिꣳश्च प्रतिष्ठमाने सर्व एव प्रातिष्ठन्ते । तद्यथा मक्षिका मधुकरराजानमुत्क्रामन्तं सर्वा एवोत्क्रामन्ते तस्मिꣳश्च प्रतिष्ठमाने सर्वा एव प्रातिष्ठन्त एवं वाङ्मनश्चक्षुः श्रोत्रं च ते प्रीताः प्राणं स्तुन्वन्ति ॥ ४ ॥
स च प्राणः तेषामश्रद्दधानतामालक्ष्य अभिमानात् ऊर्ध्वम् उत्क्रामत इव उत्क्रामतीव उत्क्रान्तवानिव स रोषान्निरपेक्षः । तस्मिन्नुत्क्रामति यद्वृत्तं तद्दृष्टान्तेन प्रत्यक्षीकरोति — तस्मिन् उत्क्रामति सति अथ अनन्तरमेव इतरे सर्व एव प्राणाश्चक्षुरादयः उत्क्रामन्ते उत्क्रामन्ति उच्चक्रमुः । तस्मिंश्च प्राणे प्रतिष्ठमाने तूष्णीं भवति अनुत्क्रामति सति, सर्व एव प्रातिष्ठन्ते तूष्णीं व्यवस्थिता बभूवुः । तत् यथा लोके मक्षिकाः मधुकराः स्वराजानं मधुकरराजानम् उत्क्रामन्तं प्रति सर्वा एव उत्क्रामन्ते तस्मिंश्च प्रतिष्ठमाने सर्वा एव प्रातिष्ठन्ते प्रतितिष्ठन्ति । यथायं दृष्टान्तः एवं वाङ्मनश्चक्षुः श्रोत्रं चेत्यादयः ते उत्सृज्याश्रद्दधानतां बुद्ध्वा प्राणमाहात्म्यं प्रीताः प्राणं स्तुन्वन्ति स्तुवन्ति ॥
(ச.பா) அந்த பிராணனானது மற்றவர்களின் நம்பிக்கை இன்மையைக் கண்டு ரோஷத்துடன் மேலே கிளம்புவதுபோல் கிளம்பிற்று. அது ரோஷத்துடன் மற்றவைகளை அபேக்ஷிக்காது வெளிக்கிளம்பியவுடன் என்ன நிகழ்ந்ததோ அதை திருஷ்ட்டாந்தத்துடன் நம் கண்முன்னே காட்டுகிறார். இவ்வாறு பிராணன் வெளிக்கிளம்பிய பொழுது மற்ற பிராணன்களும் சக்ஷுராதி இந்திரியங்களும் மேலே கிளம்பலாயின. அந்தப் பிராணன் மறுபடியும் அமைதியாக நிலைபெற்று வெளிக்கிளம்பாத போது இவைகளும் அமைதியாய் இருந்தன. அது எவ்வாறு எனில் உலகில் தேனீக்கள் தம் அரசனான மதுகர ராஜா கூட்டைவிட்டு வெளிக்கிளம்பினால் இவையும் தொடர்ந்து வெளிக்கிளம்புகின்றன. அது கூட்டில் நிலைபெற்றபொழுது இவைகளும் கூட்டை அடைகின்றன. இந்த திருஷ்ட்டாந்தத்தைப் போல் வாக், மனஸ், சக்ஷுஸ், சுரோத்திரம் முதலியயாவும் முக்கிய பிராணனின் மேல் அசிரத்தையை விட்டு அதன் மாஹாத்மியத்தை உணர்ந்து மகிழ்வடைந்து பிராணனைத் துதிக்கலாயின.
कथम् -
எவ்வாறு
एषोऽग्निस्तपत्येष सूर्य एष पर्जन्यो मघवानेष वायुः ।
एष पृथिवी रयिर्देवः सदसच्चामृतं च यत् ॥ ५ ॥
एषः प्राणः अग्निः सन् तपति ज्वलति । तथा एषः सूर्यः सन् प्रकाशते । तथा एषः पर्जन्यः सन् वर्षति । किञ्च मघवान् इन्द्रः सन् प्रजाः पालयति जिघांसत्यसुररक्षांसि । किञ्च, एषः वायुः आवहप्रवहादिभेदः । किञ्च, एषः पृथिवी रयिः देवः सर्वस्य जगतः सत् मूर्तम् असत् अमूर्तं च अमृतं च यत् देवानां स्थितिकारणम् ॥
(ச.பா) இந்தப் பிராணனே அக்னியாய் இருந்து ஜ்வலிக்கிறான். அவ்வாறே சூரியனாய் இருந்து பிரகாசிக்கிறான். அவ்வாறே மேகமாய் இருந்து மழையைப் பொழிகின்றான். மேலும் இந்திரனாய் இருந்து மக்களைப் பரிபாலனம் செய்கிறான். ராக்ஷசர்களையும், அசுரர்களையும் அழிக்கிறான். இவனே காற்றாகி வீசுதல், வீசாமல் இருத்தலையும் செய்கிறான். இவனே பிருதிவியாகவும், அன்னமாகவும் ஆகிறான். எல்லா ஜகத்திற்கும், மூர்த்தமாய் இருந்து சத்தாயும், அமூர்த்தமாய் இருந்து அசத்தாயும் விளங்குகிறான். இவனே தேவர்களின் இருக்கைக்கு காரணமான அம்ருதமாயும் விளங்குகிறான்.
अरा इव रथनाभौ प्राणे सर्वं प्रतिष्ठितम् ।
ऋचो यजूꣳषि सामानि यज्ञः क्षत्त्रं ब्रह्म च ॥ ६ ॥
किं बहुना ? अरा इव रथनाभौ श्रद्धादि नामान्तं सर्वं स्थितिकाले प्राणे एव प्रतिष्ठितम् । तथा ऋचः यजूंषि सामानि इति त्रिविधा मन्त्राः तत्साध्यश्च यज्ञः क्षत्त्रं च सर्वस्य पालयितृ ब्रह्म च यज्ञादिकर्मकर्तृत्वेऽधिकृतं च एष एव प्राणः सर्वम् ॥
(ச.பா) சிரத்தை தொடங்கி நாமம் முடிய ஸ்திதி காலத்தில் உள்ளயாவும், சக்கரத்தின் குடத்தில் ஆரக்கால்கள் இணைக்கப்பட்டது போல் பிராணனிலேயே எல்லாம் நிலைபெறச் செய்யப்பட்டுள்ளன. எவ்வாறு எனில் ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம் என்ற மூன்று விதமான வேதமந்திரங்களும், அவைகளால் சாதிக்கத்தகுந்த யாகங்களும், எல்லாவற்றையும் பரிபாலனம் செய்யும், க்ஷத்திரியர்களும், பிராஹ்மணர்களும், யக்ஞம் முதலான கர்மாக்களில் கர்த்திருத்துவம் கொண்டமையால் இவர்கள் யாவரும் பிராணனில் இணைக்கப்பட்டு உள்ளனர். அதாவது முற்கூறப்பட்டயாவும் பிராணனேயாகும்.
किञ्च-
மேலும்
प्रजापतिश्चरसि गर्भे त्वमेव प्रतिजायसे ।
तुभ्यं प्राण प्रजास्त्विमा बलिं हरन्ति यः प्राणैः प्रतितिष्ठसि ॥ ७ ॥
यः प्रजापतिरपि स त्वमेव गर्भे चरसि, पितुर्मातुश्च प्रतिरूपः सन् प्रतिजायसे ; प्रजापतित्वादेव प्रागेव सिद्धं तव मातृपितृत्वम् ; सर्वदेहदेह्याकृतिच्छन्नः एकः प्राणः सर्वात्मासीत्यर्थः । तुभ्यं त्वदर्थाय इमाः मनुष्याद्याः प्रजास्तु हे प्राण चक्षुरादिद्वारैः बलिं हरन्ति, यः त्वं प्राणैः चक्षुरादिभिः सह प्रतितिष्ठसि सर्वशरीरेषु, अतस्तुभ्यं बलिं हरन्तीति युक्तम् । भोक्तासि यतस्त्वं तवैवान्यत्सर्वं भोज्यम् ॥
(ச.பா) எவனை பிரஜாபதி என்று சொன்னோமோ அவனும் நீயே, அத்தகைய நீயே கர்பத்தில் சஞ்சரிக்கிறாய். தாய், தந்தையர்களின் பிரதிரூபமாய் இருந்துகொண்டு பிரஜைகளாகவும் ஆகிறாய். இந்த பிரஜாபதித்தன்மை உனக்கு முன்பே சித்தித்தது ஆகும். தாய், தந்தையாய் இருக்கும் தன்மையும் எல்லாத் தேஹம், தேஹிகள் என்ற உருவத்தை விளையாட்டாகக் கொண்டு பிராணன் என்ற நீ ஒருவனே சர்வாத்மாவாக இருக்கிறாய் என்பது பொருள். உன் பொருட்டே இந்த மனுஷ்யர்கள் முதலான பிரஜைகள் சக்ஷுஸ் முதலான துவாரங்களின் வாயிலாக பலியைக் கொண்டுவருகின்றனர். அத்தகைய எந்த நீ உன்னுடைய மற்ற பிராண விருத்திகளினால் சக்ஷுஸ் முதலானவைகளுடன் கூட எல்லா சரீரங்களிலும் நிலைபெற்றவனாய் இருக்கிறாயோ அதனால் அவை உன் பொருட்டு பலியைக் கொண்டுவருகின்றனர் என்பது பொருத்தமாகும். ஏனெனில் எதனால் நீ ஒருவனே போக்தாவாக இருக்கிறாயோ அதனால் மற்றயாவும் போஜ்யமாக ஆகின்றன.
किञ्च-
மேலும்
देवानामसि वह्नितमः पितॄणां प्रथमा स्वधा ।
ऋषीणां चरितं सत्यमथर्वाङ्गिरसामसि ॥ ८ ॥
देवानाम् इन्द्रादीनाम् असि भवसि त्वं वह्नितमः हविषां प्रापयितृतमः । पितॄणां नान्दीमुखे श्राद्धे या पितृभ्यो दीयते स्वधा अन्नं सा देवप्रदानमपेक्ष्य प्रथमा भवति । तस्या अपि पितृभ्यः प्रापयिता त्वमेवेत्यर्थः । किञ्च, ऋषीणां चक्षुरादीनां प्राणानाम् अथर्वाङ्गिरसाम् अङ्गिरसभूतानामथर्वणाम् — ‘तेषामेव प्राणो वाथर्वा’ ( ? ) इति श्रुतेः — चरितं चेष्टितं सत्यम् अवितथं देहधारणाद्युपकारलक्षणं त्वमेवासि ॥
(ச.பா) இந்திரன் முதலான தேவர்களுக்கு ஹவிஸ்சை சேர்ப்பிக்கும் உத்தம அக்னியாகவும், நீயே ஆகிறாய். பித்ருக்களை உத்தேசித்து நாந்திமுகம் என்ற சிராரத்தங்களில் எந்த அன்னமானது கொடுக்கப்படுகிறதோ அதுவாகவும் நீயே ஆகிறாய். அந்த தேவப்பிரதானர்களைக் காட்டிலும், நீயே முன்னவனாக ஆகிறாய். அந்தப் பித்ருக்களுக்கு அன்னத்தை சேர்ப்பிப்பவனும் நீயே என்பது பொருள். மேலும் ரிஷிகளான சக்ஷுஸ் முதலானவைகளுக்கும் அங்கிரஸினிடம் இருந்து உண்டான பிராண பூதமான அதர்வ மந்திரங்களாயும், நீயே இருக்கிறாய். “प्राणो चाथर्वा” பிராணனே அதர்வ வேதம் என்று சுருதி கூறுவதால் நீ அவர்களுக்கும் பிராணனாய் இருக்கிறாய். இவர்களின் செயலை பொய் இல்லாமல் செய்வதோடு தேஹத்தை தரித்தல் என்பன போன்ற உபகார லக்ஷணமாயும் நீயே இருக்கிறாய்.
इन्द्रस्त्वं प्राण तेजसा रुद्रोऽसि परिरक्षिता ।
त्वमन्तरिक्षे चरसि सूर्यस्त्वं ज्योतिषां पतिः ॥ ९ ॥
किञ्च, इन्द्रः परमेश्वरः त्वं हे प्राण, तेजसा वीर्येण रुद्रोऽसि संहरन् जगत् । स्थितौ च परि समन्तात् रक्षिता पालयिता ; परिरक्षिता त्वमेव जगतः सौम्येन रूपेण । त्वम् अन्तरिक्षे अजस्रं चरसि उदयास्तमयाभ्यां सूर्यः त्वमेव च सर्वेषां ज्योतिषां पतिः ॥
(ச.பா) மேலும், ஹே பிராணனே! நீயே பரமேஸ்வரன். உன்னுடைய வீரியத்தால் ஜகத்தை சம்ஹரிக்கும் ருத்திரனாய் இருக்கிறாய். அந்த ஜகத்தின் ஸ்திதி காலத்தில் இந்த ஜகத்தை நாலா பக்கங்களிலும், சௌம்யமான ரூபத்துடன் ரக்ஷிப்பவனும் நீயே. நீயே அந்தரிக்ஷத்தில் உதயம். அஸ்தமனம் என்று இடைவிடாது சஞ்சரிக்கும் சூரியனும் நீயே. நீயே எல்லா ஜ்யோதிஸ்களுக்கும் தலைவனும் ஆவாய்.
यदा त्वमभिवर्षसि अथेमाः प्राण ते प्रजाः ।
आनन्दरूपास्तिष्ठन्ति कामायान्नं भविष्यतीति ॥ १० ॥
यदा पर्जन्यो भूत्वा अभिवर्षसि त्वम् , अथ तदा अन्नं प्राप्य इमाः प्रजाः प्राणते प्राणचेष्टां कुर्वन्तीत्यर्थः । अथवा, हे प्राण, ते तव इमाः प्रजाः स्वात्मभूतास्त्वदन्नसंवर्धितास्त्वदभिवर्षणदर्शनमात्रेण च आनन्दरूपाः सुखं प्राप्ता इव सत्यः तिष्ठन्ति । कामाय इच्छातः अन्नं भविष्यति इत्येवमभिप्रायः ॥
(ச.பா) எப்பொழுது நீ மேகமாகி மழையைப் பொழிகிறாயோ அப்பொழுது இந்த மக்கள் அன்னத்தை அடையப்போகிறோம் என்ற மகிழ்வாலும், அன்னத்தை அடைந்தது போன்றும் மகிழ்வடைகிறார்கள். அல்லது ஹே! பிராணனே! உன்னுடைய இந்தப் பிரஜைகள் உன்னால் உன்னுடைய அன்னபூதமான செயலால் வளர்க்கப்பட்டு உன்னாலேயே வளர்க்கப்பட்ட இவர்கள் உன்னுடைய மழை பொழிதலைக்கண்டு ஆனந்த ரூபர்களாய் இருக்கின்றனர். நம் விருப்பம் போல் விரும்பியபடி அன்னம் உண்டாகப்போகிறது என்பது இங்கு அபிப்ராயம்.
किञ्च
மேலும்
व्रात्यस्त्वं प्राणैकर्षिरत्ता विश्वस्य सत्पतिः ।
वयमाद्यस्य दातारः पिता त्वं मातरिश्व नः ॥ ११ ॥
प्रथमजत्वादन्यस्य संस्कर्तुरभावादसंस्कृतो व्रात्यः त्वम् , स्वभावत एव शुद्ध इत्यभिप्रायः । हे प्राण, एकर्षिः त्वम् आथर्वणानां प्रसिद्ध एकर्षिनामा अग्निः सन् अत्ता सर्वहविषाम् । त्वमेव विश्वस्य सर्वस्य सतो विद्यमानस्य पतिः सत्पतिः । साधुर्वा पतिः सत्पतिः ।
(ச.பா) நீயே முதல் தோன்றலானதால் உனக்கு சம்ஸ்காரம் செய்ய யாரும் இல்லாததால் நீ விராத்தியன், அதாவது சம்ஸ்காரம் அற்றவன். நீ ஸ்வாபாவமாகவே சுத்தமானவன் என்பது அபிப்பிராயம். அதர்வ வேதத்தில் பிரசித்தமான ஏகரிஷிகளுக்கு நீ அக்னியாய் இருந்துகொண்டு எல்லா ஹவிஸையும் ஏற்கிறாய். நீயே சமஸ்த ஜகத்திற்கும் நல்ல தலைவன். நல்ல தலைவன் என்பதால் சத்பதி என்றும் கூறலாம்.
वयं पुनः आद्यस्य तव अदनीयस्य हविषो दातारः । त्वं पिता मातरिश्व हे मातरिश्वन् , नः अस्माकम् अथवा, मातरिश्वनः वायोः पिता त्वम् । अतश्च सर्वस्यैव जगतः पितृत्वं सिद्धम् ॥
(ச.பா) நாங்கள் முதல் தோன்றலான உமக்கு ஹவிசைக் கொடுப்பவர்கள். ஹே! காற்றே நீ எங்கள் தந்தை, அல்லது ஹே! காற்றே நீ இந்த ஜகத்திற்கே தந்தை. நீ காற்றாகி எங்கும் பரவி நிற்பதால் உனக்கு இந்த ஜகத் முழுவதிற்கும் தந்தைத் தன்மை ஏற்படுகிறது.
किं बहुना-
அதிகம் சொல்வானேன்-
या ते तनूर्वाचि प्रतिष्ठिता या श्रोत्रे या च चक्षुषि ।
या च मनसि सन्तता शिवां तां कुरु मोत्क्रमीः ॥ १२ ॥
या ते त्वदीया तनूः वाचि प्रतिष्ठिता वक्तृत्वेन वदनचेष्टां कुर्वती, या च श्रोत्रे या चक्षुषि या च मनसि सङ्कल्पादिव्यापारेण सन्तता समनुगता तनूः, तां शिवां शान्तां कुरु ; मा उत्क्रमीः उत्क्रमणेनाशिवां मा कार्षीरित्यर्थः ॥
(ச.பா) உன்னுடைய சூக்ஷ்ம சரீரமானது வாக்கில் சொல்லும் தன்மையோடு நிலைபெற்றதாய் உள்ளது. அவ்வாறே சிரவணேந்திரியத்திலும். சக்ஷுர் இந்திரியத்திலும், மனதிலும் தொடர்ந்து நிலை பெற்றுள்ளதோ அவைகளை மிக நல்லவைகளாக செய்வாயாக. நீ இதிலிருந்து கிளம்ப வேண்டாம் என்பது பொருள்.
किं बहुना-
அதிகம் சொல்வானேன்-
प्राणस्येदं वशे सर्वं त्रिदिवे यत्प्रतिष्ठितम् ।
मातेव पुत्रान्रक्षस्व श्रीश्च प्रज्ञां च विधेहि न इति ॥ १३ ॥
अस्मिंल्लोके प्राणस्यैव वशे सर्वमिदं यत्किञ्चिदुपभोगजातं त्रिदिवे तृतीयस्यां दिवि च यत् प्रतिष्ठितं देवाद्युपभोगलक्षणं तस्यापि प्राण एव ईशिता रक्षिता । अतो मातेव पुत्रान् अस्मान् रक्षस्व पालयस्व । त्वन्निमित्ता हि ब्राह्म्यः क्षात्त्र्यश्च श्रियः ताः त्वं श्रीश्च श्रियश्च प्रज्ञां च त्वत्स्थितिनिमित्तां विधेहि नः विधत्स्वेत्यर्थः ।
(ச.பா) இந்த லோகத்தில் உபபோகத்திற்கு ஏற்றயாவும் பிராணனின் வசத்திலே உள்ளது. மூன்றாம் உலகில் தேவர்களுக்கு உபபோக லக்ஷணமாய் எவை உள்ளதோ அவையும், பிராணனிலேயே நிலைபெற்றுள்ளன. இவையாவற்றையும் காப்பவன் பிராணனே. எனவே தாய் குழந்தையைக் காப்பது போல் எம்மை பரிபாலிப்பாயாக. உன் நிமித்தமாகவே பிராஹ்மணர்களுடையவும், க்ஷத்திரியர்களுடையவும், லக்ஷ்மி உள்ளது. அத்தகைய லக்ஷ்மியையும், பிரக்ஞையையும் (அறிவுத்தன்மையையும்) உன் ஸ்திதி நிமித்தமாய் எம்மில் நிலைபெறச் செய்வாயாக என்பது பொருள்.
इत्येवं सर्वात्मतया वागादिभिः प्राणैः स्तुत्या गमितमहिमा प्राणः प्रजापतिरेवेत्यवधृतम् ॥
(ச.பா) இவ்வாறு சர்வாத்மத் தன்மையாக ஸ்துதித்து வாக்கு முதலானவைகளால் பிராணனின் ஸ்துதிமூலமாய் அவனுடைய செல்லும் மஹிமைகொண்ட பிராணனே பிரஜாபதி என்று புரிந்து கொள்ளப்பட்டது.
इति द्वितीयप्रश्नभाष्यम् ॥