द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

प्रश्नोपनिषद्भाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

ப்ரஶ்நோபநிஷத்பாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

अथ हैनं कौसल्यश्चाश्वलायनः पप्रच्छ भगवन्कुत एष प्राणो जायते कथमायात्यस्मिञ्छरीर आत्मानं वा प्रविभज्य कथं प्रातिष्ठते केनोत्क्रमते कथं बाह्यमभिधत्ते कथमध्यात्ममिति ॥ १ ॥
अथ हैनं कौसल्यश्चाश्वलायनः प्रपच्छ । प्राणैर्ह्येवं निर्धारिततत्त्वः उपलब्धमहिमापि संहतत्वात्स्यादस्य कार्यत्वम् ; अतः पृच्छामि । हे भगवन् , कुतः कस्मात्कारणात् एषः यथावधृतः प्राणः जायते । जातश्च कथं केन वृत्तिविशेषेण आयाति अस्मिन् शरीरे ; किंनिमित्तकमस्य शरीरग्रहणमित्यर्थः । प्रविष्टश्च शरीरे आत्मानं वा प्रविभज्य प्रविभागं कृत्वा कथं केन प्रकारेण प्रातिष्ठते प्रतितिष्ठति । केन वा वृत्तिविशेषेणास्माच्छरीरात् उत्क्रमते उत्क्रामति । कथं बाह्यम् अधिभूतमधिदैवतं च अभिधत्ते धारयति ; कथमध्यात्ममिति, धारयतीति शेषः ॥
(ச.பா) பிறகு அந்த பிப்பலாதரை கோசல நாட்டவனான ஆச்வலாயனன் இவ்வாறு கேட்டான். முற்கூறிய முறைப்படி நிர்தாரணம் செய்யப்பட்ட இந்தப் பிராணனானவன் இவ்வளவு மஹிமையோடு கூடியிருப்பினும், அவன் மற்றவைகளுடன் இணைந்து இருப்பதால் அவனுக்கு காரியத்துவம் ஏற்படுகிறது. எனவே கேட்கிறேன், பகவானே இம்மாதிரி புரிந்துகொள்ளப்பட்ட பிராணன் எந்தக் காரணத்திலிருந்து உண்டாகிறான்? உண்டானவன் எவ்வாறு எந்த விருத்தி விசேஷத்தால் இந்த சரீரத்தை வந்து அடைகிறான்? இதற்கு என்ன நிமித்தத்தால் இவனுக்கு சரீரகிரஹணம் என்பது பொருள். இவ்வாறு சரீரத்தில் பிரவேசித்தவன் தன்னை எவ்வாறு பகுத்துக்கொண்டு என்ன பிரகாரத்தில் நிலை பெறுகிறான்? எந்த விருத்தி விசேஷத்தோடு இந்த சரீரத்திலிருந்து வெளியேறுகிறான்? இவன் பாஹ்யமான அதிபூத, அதி தெய்வங்களை எவ்வாறு தரிக்கிறான்? அவ்வாறே எவ்வாறு அத்யாத்மத்தைத் தரிக்கிறான்? என்று கேட்டான்.
एवं पृष्टः-
(ச.பா) (அ.வை) இவ்வாறு கேட்டவனான
तस्मै स होवाचातिप्रश्नान्पृच्छसि ब्रह्मिष्ठोऽसीति तस्मात्तेऽहं ब्रवीमि ॥ २ ॥
तस्मै स होवाचाचार्यः । प्राण एव तावद्दुर्विज्ञेयत्वाद्विषमप्रश्नार्हः ; तस्यापि जन्मादि त्वं पृच्छसि ; अतः अतिप्रश्नान्पृच्छसि । ब्रह्मिष्ठोऽसीति अतिशयेन त्वं ब्रह्मवित् , अतस्तुष्टोऽहम् , तस्मात् ते तुभ्यम् अहं ब्रवीमि यत्पृष्टं शृणु ॥
(ச.பா) ஆச்வலாயனரின் பொருட்டு அந்த ஆசாரியர் கூறலானார். பிராணனே மிகவும் அறிவதற்கு கஷ்டமானதால் அது மிகவும் குடிலமான கேள்வியாகும். அதற்கு மேலும் நீ அதனுடைய ஜன்ம, முதலானவைகளைப் பற்றி கேட்கிறாய். அதனால் அது அதிபிரச்னம் (கடினமான கேள்வி). அதைக் கேட்கிறாய். நீ பிரஹ்ம வித்துக்களில் உயர்ந்த பிரஹ்ம நிஷ்ட்டனாய் இருக்கிறாய் என்பதால் நான் மிகவும் மகிழ்வு அடைந்துள்ளேன். ஆதலால் இதைக் கூறுகிறேன். கேட்ட கேள்விகளுக்கு பதிலை செவிமடுப்பாயாக.
आत्मन एष प्राणो जायते । यथैषा पुरुषे च्छायैतस्मिन्नेतदाततं मनोकृतेनायात्यस्मिञ्छरीरे ॥ ३ ॥
आत्मनः परस्मात्पुरुषादक्षरात्सत्यात् एषः उक्तः प्राणः जायते । कथमित्यत्र दृष्टान्तः । यथा लोके एषा पुरुषे शिरःपाण्यादिलक्षणे निमित्ते च्छाया नैमित्तिकी जायते, तद्वत् एतस्मिन् ब्रह्मण्येतत्प्राणाख्यं छायास्थानीयमनृतरूपं तत्त्वं सत्ये पुरुषे आततं समर्पितमित्येतत् । छायेव देहे मनोकृतेन मनःकृतेन मनःसङ्कल्पेच्छादिनिष्पन्नकर्मनिमित्तेनेत्येतत् । वक्ष्यति हि पुण्येन पुण्यमित्यादि । ‘तदेव सक्तः सह कर्मणैति’ (बृ. उ. ४ । ४ । ६) इति श्रुत्यन्तरात् । आयाति आगच्छत्यस्मिञ्शरीरे ॥
(ச.பா) முற்கூறப்பட்ட பிராணனானது அக்ஷரரூபமாயும், சத்தியமாயும் உள்ள இந்த பரமபுருஷனிடத்தினின்றே உண்டாகிறது. அது எவ்வாறு உண்டாகிறது என்ற இடத்தில் திருஷ்டாந்தம் கூறுகிறார். எவ்வாறு உலகில் தலை, கை, கால் என்பன போன்ற நிமித்தமான புருஷனிடத்தில் நைமித்திகமான நிழல் உண்டாகிறதோ அதுபோல் இந்த பிரஹ்மத்தினிடமிருந்து நிழல் ஸ்தானத்தில் உள்ளதும். அநிருதரூபமாயும் உள்ள இந்த பிராணன், பிராணன் எனப்படும் தத்துவம், சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அதாவது சத்தியஸ்வரூபத்தில் இந்த அநிருதம் சமர்பிக்கப்பட்டுள்ளது என்பது பொருள். நிழல்போல் தேஹத்தில் மனதால் உண்டான சங்கல்பம், விருப்பம் முதலானவை தோன்றுகின்றன. கர்ம நிமித்தமாய் என்பதை மேலே “புண்யேனபுண்யம்” என்பவைகளால் கூறப்போகிறார். “तदेव सक्तः सह कर्मणैति” அதுவே கர்மாக்களுடன் கூட இணைந்து பிணைக்கப்பட்டுள்ளது என்று வேறு சுருதி வாக்கியங்களும் கூறும். இவ்வாறு இந்த சரீரத்தைப் பிராணன் அடைகிறது.
यथा सम्राडेवाधिकृतान्विनियुङ्क्त एतान्ग्रामानेतान्ग्रामानधितिष्ठस्वेत्येवमेवैष प्राण इतरान्प्राणान्पृथक्पृथगेव संनिधत्ते ॥ ४ ॥
यथा येन प्रकारेण लोके राजा सम्राडेव ग्रामादिष्वधिकृतान्विनियुङ्क्ते । कथम् ? एतान्ग्रामानेतान्ग्रामानधितिष्ठस्वेति । एवमेव यथायं दृष्टान्तः । एषः मुख्यः प्राणः इतरान् प्राणान् चक्षुरादीनात्मभेदांश्च पृथक्पृथगेव यथास्थानं संनिधत्ते विनियुङ्क्ते ॥
(ச.பா) எவ்வாறு உலகில் சக்கரவர்த்தி கிராமங்களில் தனக்குக் கட்டுப்பட்டவர்களை தலைவனாக்குகிறானோ (அது போல்). எவ்வாறு? நீ இந்த கிராமங்களைப் பார்த்துக்கொள். நீ இந்த கிராமங்களைப் பார்த்துக்கொள் என்று நியமிக்கிறானோ அவ்வாறே இங்கும் என்பது திருஷ்ட்டாந்தமாகும். இந்த முக்கியப் பிராணன் மற்ற பிராணன்களையும், சக்ஷுஸ் முதலானவைகளையும், தனித்தனியாக அவர் அவர்களுக்கு உரிய ஸ்தானத்தில் நியமனம் செய்கிறான்.
तत्र विभागः -
(ச.பா) (அ.வை)அங்கு இவ்வாறு விபாகம் ஏற்படுகிறது.
पायूपस्थेऽपानं चक्षुःश्रोत्रे मुखनासिकाभ्यां प्राणः स्वयं प्रातिष्ठते मध्ये तु समानः । एष ह्येतद्धुतमन्नं समं नयति तस्मादेताः सप्तार्चिषो भवन्ति ॥ ५ ॥
पायूपस्थे पायुश्च उपस्थश्च पायूपस्थं तस्मिन् । अपानम् आत्मभेदं मूत्रपुरीषाद्यपनयनं कुर्वन् संनिधत्ते तिष्ठति । तथा चक्षुःश्रोत्रे चक्षुश्च श्रोत्रं च चक्षुःश्रोत्रं तस्मिश्चक्षुःश्रोत्रे । मुखनासिकाभ्यां मुखं च नासिका च मुखनासिके ताभ्यां मुखनासिकाभ्यां निर्गच्छन् प्राणः स्वयं सम्राट्स्थानीयः प्रातिष्ठते प्रतितिष्ठति । मध्ये तु प्राणापानयोः स्थानयोः नाभ्याम् , समानः अशितं पीतं च समं नयतीति समानः ।
(ச.பா) பிராணனானவன் மலமூத்திரங்களை விசஜர்னம் செய்கிற இடத்தில் தன்னுடைய பேதமான அபானனை நிலைபெறச்செய்து அவைகளை வெளியேறச் செய்கிறான். அவ்வாறே கண், காது, வாய், மூக்கு இவைகளின் வழியாக ராஜாவின் ஸ்தானத்தில் உள்ள பிராணன் நிலைபெற்று உள்ளான். இந்த பிராண அபானன்களுக்கு மத்தியில் இருப்பவன் சமானன் எனப்படுவான். இவனின் ஸ்தானம் நாபியாகும். நாம் உண்ட உணவையும், குடித்த நீரையும் சமானமாகக் கொண்டு செல்வதால் சமானன் எனப்பட்டான்.
एषः हि यस्मात् यदेतत् हुतं भुक्तं पीतं चात्माग्नौ प्रक्षिप्तम् अन्नं समं नयति, तस्मात् अशितपीतेन्धनादग्नेरौदर्याद्धृदयदेशं प्राप्तात् एताः सप्तसङ्‍ख्याका अर्चिषः दीप्तयो निर्गच्छन्त्यो भवन्ति । शीर्षण्यप्राणद्वारा दर्शनश्रवणादिलक्षणरूपादिविषयप्रकाश इत्यभिप्रायः ॥
(ச.பா) இவனே நம்மால் உண்ணுதல், பருகுதல், என்பன போன்ற செய்கைகளால் ஆத்மாக்னியில் போடப்பட்ட அல்லது ஹோமம் செய்யப்பட்ட உணவை சமமாகக்கொண்டு செல்கிறான். இவ்வாறு உண்ணல், பருகுதல் போன்ற எரிபொருள்களால் அக்னி மேலே கிளம்பி ஹ்ருதய தேசத்தை ஏழு சுடர்களாக அடைகிறது. அந்த ஏழு ஜ்வாலைகளே शीर्षण्यः (சீர்ஷண்ய:) என்று கூறப்படுகின்றன. இவ்வாறு பிராணனின் வழியாக பார்த்தல், கேட்டல், இவை போன்ற லக்ஷணத்தால் ரூபம் முதலான விஷயங்களை பிரகாசப்படுத்துகின்றன என்பது அபிப்பிராயம் ஆகும்.
हृदि ह्येष आत्मा । अत्रैतदेकशतं नाडीनां तासां शतं शतमेकैकस्या द्वासप्ततिर्द्वासप्ततिः प्रतिशाखानाडीसहस्राणि भवन्त्यासु व्यानश्चरति ॥ ६ ॥
हृदि ह्येषः पुण्डरीकाकारमांसपिण्डपरिच्छिन्ने हृदयाकाशे एषः आत्मा आत्मसंयुक्तो लिङ्गात्मा, जीवात्मेत्यर्थः ; अत्र अस्मिन्हृदये एतत् एकशतम् एकोत्तरशतं सङ्ख्यया प्रधाननाडीनां भवति । तासां शतं शतम् एकैकस्याः प्रधाननाड्या भेदाः ; पुनरपि द्वासप्ततिर्द्वासप्ततिः द्वे द्वे सहस्रे अधिके सप्ततिश्च सहस्राणि, सहस्राणां द्वासप्ततिः, प्रतिशाखानाडीसहस्राणि प्रतिप्रतिनाडीशतं सङ्ख्यया प्रधाननाडीनां सहस्राणि भवन्ति ।
(ச.பா) இந்த ஜீவாத்மாவானவன் தாமரையைப் போன்ற மாம்ச பிண்டமான ஹிருதயத்தின் மத்தியில் நிலைபெற்றவனாக இருக்கின்றான். இந்த ஹிருதயத்தில் ஒவ்வொன்றும் நூ ற்றி ஒன்றாக நூ று பிரதான நாடிகள் இருக்கின்றன. அவைகள் மறுபடியும் நூ றுநூ றாகப் பிரிகின்றன. அவை பிரதான நாடியின் பேதங்களாகும். இவ்வாறு பிரிந்த ஒவ்வொன்றிற்கும், எழுபத்திரெண்டு, எழுபத்திரெண்டு கிளை நாடிகள் உள்ளன. இவ்வாறு 27ஆயிரம் நாடிகள் உள்ளன. அவை கிளை நாடிகளுடன் கூடும்பொழுது எழுபத்திரெண்டாயிரம் நாடிகளாக ஆயிரக்கணக்கில் வளர்கின்றனர்.
आसु नाडीषु व्यानो वायुश्चरति । व्यानो व्यापनात् । आदित्यादिव रश्मयो हृदयात्सर्वतोगामिनीभिर्नाडीभिः सर्वदेहं संव्याप्य व्यानो वर्तते । सन्धिस्कन्धमर्मदेशेषु विशेषेण प्राणापानवृत्त्योश्च मध्ये उद्भूतवृत्तिर्वीर्यवत्कर्मकर्ता भवति ॥
(ச.பா) இந்த நாடிகளில் வியானன் என்ற பிராண பேதமான வாயு சஞ்சரிக்கிறது. இதற்கு வியானன் என்ற பெயர் வந்ததே எங்கும் வியாபித்து இருப்பதால், சூரியனிடத்திலிருந்து கிரணங்கள் பரவுவது போல் ஹிருதயத்திலிருந்து உடலில் எல்லா இடத்திற்கும் செல்லும் நாடிகள் வழியாக வியானன் உடல் முழுவதும் வியாபித்தவனாக இருக்கின்றான். இணைப்பு, கழுத்து, மர்மதேசங்களில் விசேஷமாயும் பிராண அபான விருத்தங்களுக்கு மத்தியில் மேல் நோக்கிய விருத்தியை உடையவனாய் வீரியத்துடன் காரியங்களை செய்பவனாய் இருக்கின்றான்.
अथैकयोर्ध्व उदानः पुण्येन पुण्यं लोकं नयति पापेन पापमुभाभ्यामेव मनुष्यलोकम् ॥ ७ ॥
अथ या तु तत्रैकशतानां नाडीनां मध्ये ऊर्ध्वगा सुषुम्नाख्या नाडी, तया एकया ऊर्ध्वः सन् उदानः वायुः आपादतलमस्तकवृत्तिः सञ्चरन् पुण्येन कर्मणा शास्त्रविहितेन पुण्यं लोकं देवादिस्थानलक्षणं नयति प्रापयति । पापेन तद्विपरीतेन पापं नरकं तिर्यग्योन्यादिलक्षणम् । उभाभ्यां समप्रधानाभ्यां पुण्यपापाभ्यामेव मनुष्यलोकं नयतीत्यनुवर्तते ॥
(ச.பா) மேலும், அந்த நூ ற்றி ஒரு நாடிகளின் நடுவில் மேலே செல்லும், ஒரு நாடியான சுஷும்னை என்ற நாடி உள்ளது. அதன் வழியாக உதானன் என்ற வாயு புருஷனின் கால் முதல் மஸ்தகம் வரையிலும் சஞ்சரிக்கும் விருத்தியோடு கூடியதாகி அவன் சாஸ்திரங்களால் விதிக்கப்பட்டுள்ள கர்மாக்களை செய்திருப்பானேயானால் அவனை தேவதாதிஸ்தான லக்ஷணமான புண்யலோகத்தை அடைவிக்கிறது. அவன் இதற்குமாறாக பாப கர்மாக்கள் செய்திருப்பானேயானால் அவனை பசு, பக்ஷி லக்ஷணமான நரகத்தை அடைவிக்கிறது. இந்த புண்ய, பாபங்கள் சமப்பிரதானமாய் இருக்குமேயானால் அவனை மனுஷ்ய லோகத்தை அடைவிக்கிறது.
आदित्यो ह वै बाह्यः प्राण उदयत्येष ह्येनं चाक्षुषं प्राणमनुगृह्णानः । पृथिव्यां या देवता सैषा पुरुषस्यापानमवष्टभ्यान्तरा यदाकाशः स समानो वायुर्व्यानः ॥ ८ ॥
आदित्यः ह वै प्रसिद्धो ह्यधिदैवतं बाह्यः प्राणः स एष उदयति उद्गच्छति । एष हि एनम् आध्यात्मिकं चक्षुषि भवं चाक्षुषं प्राणं प्रकाशेन अनुगृह्णानः रूपोपलब्धौ चक्षुष आलोकं कुर्वन्नित्यर्थः । तथा पृथिव्याम् अभिमानिनी या देवता प्रसिद्धा सैषा पुरुषस्य अपानम् अपानवृत्तिम् अवष्टभ्य आकृष्य वशीकृत्याध एवापकर्षणेनानुग्रहं कुर्वती वर्तत इत्यर्थः । अन्यथा हि शरीरं गुरुत्वात्पतेत्सावकाशे वोद्गच्छेत् ।
(ச.பா) சூரியன் என்பது பிரசித்தமான அதிதெய்வமான பாஹ்யமான பிராணன் ஆகும். அவன் உதயம் அடைகிறான். அவ்வாறு உதிக்கும் பொழுது ஆத்யாத்மிகமாய் சக்ஷுஸ்ஸில் உள்ள பிராணனை அனுக்கிரஹிப்பவனாகி ரூபத்தை கிரஹிப்பதற்கு கண்ணுக்கு பார்வையை அளித்து அனுக்கிரஹிக்கிறான் என்பது பொருள். அவ்வாறே பிருதிவியில் அதை அபிமானிக்கும் எந்த தேவதை உண்டோ அந்த பிரசித்தமான பிருதிவிதேவதை புருஷனின் அபான விருத்தியைப் பற்றிக்கொண்டு அதாவது அதை வசீகரித்து கீழே இழுப்பதாகி அனுக்கிரஹம் செய்து கொண்டு இருக்கிறது என்பது பொருள். அது அவ்வாறு செய்யாவிடில் இந்த சரீரமானது பாரம் தாங்காமல் கீழே விழுந்துவிடும்.
यदेतत् अन्तरा मध्ये द्यावापृथिव्योः यः आकाशः तत्स्थो वायुराकाश उच्यते, मञ्चस्थवत् । स समानः समानमनुगृह्णानो वर्तत इत्यर्थः । समानस्यान्तराकाशस्थत्वसामान्यात् । सामान्येन च यो बाह्यो वायुः स व्याप्तिसामान्यात् व्यानः व्यानमनुगृह्णानो वर्तत इत्यभिप्रायः ॥
(ச.பா) அல்லது கொஞ்சம் இடைவெளி கிடைத்தாலும் மேலே பறந்துவிடும். இவ்வாறு ஆகாசம், பூமி இவைகளுக்கு மத்தியில் எந்த ஆகாசம் உள்ளதோ அதில் உள்ள காற்றிற்கு ஆகாசம் என்று பெயர். அது கட்டிலில் அமர்ந்திருப்பவனைப் போல் அமர்ந்து இருக்கிறது. அதற்கு சமானன் என்று பெயர். அது சமமாய் இருப்பதற்கு அனுக்கிரஹித்துக் கொண்டு இருக்கிறது என்று பொருள். சமானன் ஆகாசத்தின் நடுவில் இருப்பதாலும் அதற்கு சமானன் என்றுபெயர். எந்த பாஹ்ய வாயுவானது எல்லா இடத்திலும் சமானமாய் இருக்கிறதோ அந்த வாயுவிற்கு வியாபகத்தன்மையால், அவ்வாறு வியாபகத்தை அனுக்கிரஹிப்பதால் அதற்கு வியானன் என்றபெயர் வந்தது என்பது அபிப்ராயம்.
तेजो ह वाव उदानस्तस्मादुपशान्ततेजाः पुनर्भवमिन्द्रियैर्मनसि सम्पद्यमानैः ॥ ९ ॥
यद्बाह्यं ह वाव प्रसिद्धं सामान्यं तेजः तच्छरीरे उदानः उदानं वायुमनुगृह्णाति स्वेन प्रकाशेनेत्यभिप्रायः । यस्मात्तेजःस्वभावो बाह्यतेजोनुगृहीत उत्क्रान्तिकर्ता तस्मात् यदा लौकिकः पुरुषः उपशान्ततेजाः भवति, उपशान्तं स्वाभाविकं तेजो यस्य सः । तदा तं क्षीणायुषं मुमूर्षुं विद्यात् । सः पुनः भवं शरीरान्तरं प्रतिपद्यते । कथम् ? सह इन्द्रियैः मनसि सम्पद्यमानैः प्रविशद्भिर्वागादिभिः ॥
(ச.பா) வெளியில் சாமான்யமாக பிரசித்தமாய் எந்த தேஜஸ் இருக்கிறதோ அது சரீரத்தில் உதானவாயுவை தன்னுடைய பிரகாசத்தால் அனுக்கிரஹிக்கிறது என்பது அபிப்ராயம் ஆகும். எதனால் வெளியில் உள்ள தேஜஸ்ஸால் அனுகிரஹிக்கப்பட்ட உதானன் வெளிக்கிளம்பும் சுபாவத்தை உடையவனாக இருக்கிறானோ அதனால் இவ்வாறு அனுக்கிரஹிக்கப்பட்ட நிலையில் லௌகிகமான புருஷன் தேஜஸ் ஒடுங்கியவனாக ஆகிறான். இங்கு உபசாந்தம் என்ற சொல்லுக்கு ஒடுங்கிய ஸ்வாபாவிகமான தேஜஸ்ஸை உடையவன் என்பது பொருள். அந்த நிலையில் அவனை ஆயுஸ் தீர்ந்தவனாயும், மூர்ச்சை அடைந்த நிலையில் உள்ளவனாகவும் அறிய வேண்டும். அவன் மறுபடியும், வேறு ஒரு சரீரத்தை அடைகிறான். எவ்வாறு? மனதில் உண்டாகக்கூடியவையாவும் மற்றொரு இடத்தில் ப்ரவேசிக்கத்தகுந்தவையாவும் உள்ள வாக் முதலான இந்திரியங்களுடன் கூட வேறு சரீரத்தை அடைகிறான்.
यच्चित्तस्तेनैष प्राणमायाति प्राणस्तेजसा युक्तः । सहात्मना यथासङ्कल्पितं लोकं नयति ॥ १० ॥
मरणकाले यच्चित्तो भवति तेन एषः जीवः चित्तेन सङ्कल्पेनेन्द्रियैः सह प्राणं मुख्यप्राणवृत्तिमायाति । मरणकाले क्षीणेन्द्रियवृत्तिः सन्मुख्यया प्राणवृत्त्यैवावतिष्ठत इत्यर्थः । तदा हि वदन्ति ज्ञातय उच्छ्वसिति जीवतीति ।
(ச.பா) லெளகிகமான புருஷன் மரண காலத்தில் எந்த சங்கல்பத்துடன் இருக்கிறானோ அந்த சங்கல்பத்துடன் இந்திரியங்களுடன் கூட முக்கிய பிராணவிருத்தியை அடைகிறான். மரணகாலத்தில் இந்திரிய விருத்திகள் க்ஷீணம் அடைந்தபொழுது முக்கிய பிராண விருத்தியுடன் இருக்கிறான் என்பது பொருள். அப்பொழுது ஞாதிகள் சுவாசம் விடுகிறார். ஜீவிக்கிறார் என்று கூறுகின்றனர்.
स च प्राणः तेजसा उदानवृत्त्या युक्तः सन् सहात्मना स्वामिना भोक्ता स एवमुदान उदानवृत्त्यैव युक्तः प्राणस्तं भोक्तारं पुण्यपापकर्मवशात् यथासङ्कल्पितं यथाभिप्रेतं लोकं नयति प्रापयति ॥
(ச.பா) அந்த பிராணனானது உதான விருத்தியுடன் கூடியதாகி ஜீவாத்மாவான போக்தா என்ற சுவாமியுடன் கூட உதான விருத்தியுடன் கூடியவனாகி, அந்த போக்தாவான ஜீவன் புண்யபாபகர்ம வசத்தால் எந்த லோகத்தை சங்கல்பித்தானோ, நினைத்தானோ அந்த லோகத்தை அடைவிக்கிறது.
य एवंविद्वान्प्राणं वेद न हास्य प्रजा हीयतेऽमृतो भवति तदेष श्लोकः ॥ ११ ॥
यः कश्चित् एवं विद्वान् यथोक्तविशेषणैर्विशिष्टमुत्पत्त्यादिभिः प्राणं वेद जानाति तस्येदं फलमैहिकमामुष्मिकं चोच्यते । न ह अस्य नैवास्य विदुषः प्रजा पुत्रपौत्रादिलक्षणा हीयते च्छिद्यते । पतिते च शरीरे प्राणसायुज्यतया अमृतः अमरणधर्मा भवति ; तत् एतस्मिन्नर्थे सङ्क्षेपाभिधायक एष श्लोकः मन्त्रो भवति ॥
(ச.பா) எந்த ஒரு வித்வான் கூறப்பட்ட விசேஷணங்களுடன் கூடியதும், உற்பத்தி முதலானவைகளையும், அறிகிறானோ அவனுக்கு இந்த இகலோக, பரலோக பலன்கள் கூறப்படுகின்றன. இந்த வித்வானுடைய மகன், பேரன் போன்ற லக்ஷணமான பிரஜைகள் பழுதுபடுவது இல்லை. அதாவது வம்சம் அறுபடுவது இல்லை. சரீரம் விழும்பொழுது பிராண சாயுஜ்யத்தால் மரண தர்மமற்றவனாக ஆகிறான். இந்த அர்த்தத்தை மிகவும் சுருக்கமாக இந்த ஸ்லோகரூபமான மந்திரம் கூறுகிறது.
उत्पत्तिमायतिं स्थानं विभुत्वं चैव पञ्चधा ।
अध्यात्मं चैव प्राणस्य विज्ञायामृतमश्नुते विज्ञायामृतमश्नुत इति ॥ १२ ॥
उत्पत्तिं परमात्मनः प्राणस्य आयतिम् आगमनं मनोकृतेनास्मिञ्शरीरे स्थानं स्थितिं च पायूपस्थादिस्थानेषु विभुत्वं च स्वाम्यमेव सम्राडिव प्राणवृत्तिभेदानां पञ्चधा स्थापनम् । बाह्यमादित्यादिरूपेणाध्यात्मं चैव चक्षुराद्याकारेणावस्थानं विज्ञाय एवं प्राणम् अमृतमश्नुते इति । विज्ञायामृतमश्नुत इति द्विर्वचनं प्रश्नार्थपरिसमाप्त्यर्थम् ॥
(ச.பா) பரமாத்மாவின் இடத்திலிருந்து பிராணனின் உற்பத்தியையும், அதன் வரவையும் மனதின் வியாபாரத்தால் இந்த சரீரத்தில் பாயு, உபஸ்தம் முதலிய ஸ்தானங்களில் நிலைபெறுதலையும், எங்கும் வியாபித்திருக்கும் தன்மையையும், அரசன்போல் தன்னுடைய விருத்தி பேதங்களை ஐந்தாகப் பகுத்து ஐந்து ஸ்தானங்களில் ஸ்தாபித்தலையும், ஆதித்தியாதி ரூபத்தோடு பாஹ்யமாய் இருப்பதை சக்ஷுராதி ரூபத்தோடு ஆத்யாத்மிகமாய் விளங்குவதையும் இவ்வாறு பிராணனை அறிந்து அம்ருதத்தன்மையை அடைகிறான். அம்ருதத்தன்மையை அடைகிறான் என்று இருமுறைக் கூறல் அந்தக் கேள்வியின் பூர்த்தியை விளக்குவதற்காக.
इति तृतीयप्रश्नभाष्यम् ॥