द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

प्रश्नोपनिषद्भाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

ப்ரஶ்நோபநிஷத்பாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

मन्त्रोक्तस्यार्थस्य विस्तरानुवादीदं ब्राह्मणमारभ्यते । ऋषिप्रश्नप्रतिवाचनाख्यायिका तु विद्यास्तुतये । एवं संवत्सरब्रह्मचर्यसंवासादितपोयुक्तैर्ग्राह्या, पिप्पलादवत्सर्वज्ञकल्पैराचार्यैः वक्तव्या च, न येन केनचिदिति विद्यां स्तौति । ब्रह्मचर्यादिसाधनसूचनाच्च तत्कर्तव्यता स्यात् ।
(ச.பா) (அ.கை) மந்திரங்களில் கூறப்பட்ட பொருளை விஸ்தாரமாக அனுவாதம் செய்வதின் பொருட்டு இந்த பிராஹ்மணம் ஆரம்பிக்கப்படுகிறது. மஹரிஷி கேள்விகேட்டு அல்லது மஹரிஷி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும் ரூபமான இந்த கதை பிரஹ்மவித்தையைத் துதிப்பதற்காக ஏற்பட்டது. இவ்வாறு ஒருவருஷ காலம் பிரஹ்மசரியத்துடன் குருகுலவாசம் போன்ற தபஸுடன் கூடியவர்களாலேயே இந்த பிரஹ்ம வித்தை கிரஹிக்கத்தக்கது. அவ்வாறே பிப்பலாதர் போன்ற சர்வக்ஞர்களான ஆசாரியர்களாலேயே இந்த பிரஹ்ம வித்தை உபதேசிக்கத்தக்கது. மற்றவர்களால் இது உபதேசிக்க இயலாதது என்று வித்தையை துதிக்கின்றார். இங்கு பிரஹ்மச்சரியம் முதலான சாதனங்களை சூசிப்பதால் அது அனுஷ்ட்டிக்கத்தக்கதாகும்.
सुकेशा च भारद्वाजः शैब्यश्च सत्यकामः सौर्यायणी च गार्ग्यः कौसल्यश्चाश्वलायनो भार्गवो वैदर्भिः कबन्धी कात्यायनस्ते हैते ब्रह्मपरा ब्रह्मनिष्ठाः परं ब्रह्मान्वेषमाणा एष ह वै तत्सर्वं वक्ष्यतीति ते ह समित्पाणयो भगवन्तं पिप्पलादमुपसन्नाः ॥ १ ॥
सुकेशा च नामतः, भरद्वाजस्यापत्यं भारद्वाजः । शैब्यश्च शिबेरपत्यं शैब्यः, सत्यकामो नामतः । सौर्यायणी सूर्यस्यापत्यं सौर्यः, तस्यापत्यं सौर्यायणिः ; छान्दसं सौर्यायणीति ; गार्ग्यः गर्गगोत्रोत्पन्नः । कौसल्यश्च नामतः, अश्वलस्यापत्यमाश्वलायनः । भार्गवः भृगोर्गोत्रापत्यं भार्गवः, वैदर्भिः विदर्भेषु भवः । कबन्धी नामतः, कत्यस्यापत्यं कात्यायनः ; विद्यमानः प्रपितामहो यस्य सः ; युवप्रत्ययः । ते ह एते ब्रह्मपराः अपरं ब्रह्म परत्वेन गताः, तदनुष्ठाननिष्ठाश्च ब्रह्मनिष्ठाः, परं ब्रह्म अन्वेषमाणाः किं तत् यन्नित्यं विज्ञेयमिति तत्प्राप्त्यर्थं यथाकामं यतिष्याम इत्येवं तदन्वेषणं कुर्वन्तः, तदधिगमाय एष ह वै तत्सर्वं वक्ष्यतीति आचार्यमुपजग्मुः । कथम् ? ते ह समित्पाणयः समिद्भारगृहीतहस्ताः सन्तः, भगवन्तं पूजावन्तं पिप्पलादमाचार्यम् उपसन्नाः उपजग्मुः ॥
(ச.பா) சுகேசர் என்பவர் அப்பெயரை உடையவர். பரத்வாஜரின் மகன் பாரத்வாஜர். சிபியினுடைய மகன் சைப்பியர், சத்தியகாமர் பெயராலேயே அவ்வாறு விளங்குபவர். சௌர்யாயணி என்பவர் சூரியனின் பேரர். இங்கு வந்துள்ள தீர்க்கம் வேதவழக்கு. கார்க்கியர் என்பவர் கர்க்க கோத்திரத்தில் உண்டானவர். கெளசல்யர் என்ற பெயரையுடைய அச்வலயரின் மகன் ஆச்வலாயனர். பிருகு கோத்திரத்தில் உண்டானவர் பார்க்கவர். விதர்ப தேசத்தில் இருப்பவர் வைதர்ப்பி கபந்தி என்று ஒருவர் பெயர். காத்தியாயனி மகன் காத்யாயனன். இதை கத்யாயனர் மகன் காத்யாயனன் என்று சொல்லுவதும் உண்டு. இவருக்கு பிரபிதாமகர் இருக்கிறார். இவர்கள் யாவரும் அபரபிரஹ்மத்தை பிரஹ்மமாக எண்ணி அனுஷ்டானத்தில் இருக்கும் பிரஹ்மநிஷ்ட்டர்கள் ஆவர். இவர்கள் பரப்பிரஹ்மத்தை அறிய விரும்பி அது என்ன? எது நித்தியமோ அது அறியத்தக்கது என தீர்மானித்து அதை அடைவதின் பொருட்டு நம் விருப்பம்போல் முயற்சிப்போம் என்று முயற்சித்து அதை அடைவதற்கு இந்த ஆச்சாரியரே தகுந்தவர். இவரே அதை எல்லாம் நமக்குக் கூறுவார் என்று ஆச்சாரியரை அடைந்தார்கள். எவ்வாறு? அவர்கள் சமித்சுமையை கையில் ஏந்திக்கொண்டு ஷட்குணைஷ்வர்ய சம்பன்னராயும் பூஜிக்கத்தகுந்தவராயும் உள்ள பிப்பலாத ஆச்சாரியரை அடைந்தார்கள்.
तान्ह स ऋषिरुवाच भूय एव तपसा ब्रह्मचर्येण श्रद्धया संवत्सरं संवत्स्यथ यथाकामं प्रश्नान्पृच्छत यदि विज्ञास्यामः सर्वं ह वो वक्ष्याम इति ॥ २ ॥
तान् एवमुपगतान् सः ह किल ऋषिः उवाच भूयः पुनरेव — यद्यपि यूयं पूर्वं तपस्विन एव, तथापीह तपसा इन्द्रियसंयमेन विशेषतो ब्रह्मचर्येण श्रद्धया च आस्तिक्यबुद्ध्या आदरवन्तः संवत्सरं कालं संवत्स्यथ सम्यग्गुरुशुश्रूषापराः सन्तो वत्स्यथ । ततः यथाकामं यो यस्य कामस्तमनतिक्रम्य यद्विषये यस्य जिज्ञासा तद्विषयान् प्रश्नान् पृच्छत । यदि तद्युष्मत्पृष्टं विज्ञास्यामः । अनुद्धतत्वप्रदर्शनार्थो यदि - शब्दो नाज्ञानसंशयार्थः प्रश्ननिर्णयादवसीयते सर्वं ह वो वः पृष्टार्थं वक्ष्याम इति ॥
(ச.பா) இவ்வாறு தன்னை அடைந்தவர்களைப் பார்த்து குருவான பிப்பலாத மகரிஷி கூறலானார். நீங்கள் முன்பே தபஸ்விகளாக இருப்பினும் மறுபடியும் இந்திரியங்களை அடக்குபவர்களாயும் அதிலும் விசேஷமாக பிரஹ்மசரியத்தோடும், ஆஸ்திக்கிய புத்தியோடும், மிகுந்த ஆதரவோடு ஒருவருஷ காலம் நன்கு குருசுச்ருஷை செய்துகொண்டு இருப்பீர்களாக. அதன்பின் எவருக்கு என்ன விருப்பம் உண்டோ அதை மீறாமலும் எவருக்கு எந்த விஷயம் அறியவேண்டும் என்ற எண்ணம் உள்ளதோ அந்த விஷயமான கேள்விகளை கேட்பீர்களாக. உங்கள் கேள்விகளுக்கு பதிலை அறிவேனேயானால் கூறுகிறேன். இங்கு “यदि” (ஆனால்) என்ற சொல் அவருடைய கர்வமின்மையை காட்டுவதற்கு வந்ததேயன்றி அவருடைய அக்ஞானம், சம்சயம் இவைகளை குறிப்பிடுவது அல்ல. நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் விடை அளிப்பேன் என்பதே பொருள்.
अथ कबन्धी कात्यायन उपेत्य पप्रच्छ भगवन्कुतो ह वा इमाः प्रजाः प्रजायन्त इति ॥ ३ ॥
अथ संवत्सरादूर्ध्वं कबन्धी कात्यायनः उपेत्य उपगम्य पप्रच्छ पृष्टवान् — हे भगवन् , कुतः कस्मात् ह वै इमाः ब्राह्मणाद्याः प्रजाः प्रजायन्ते उत्पद्यन्ते इति । अपरविद्याकर्मणोः समुच्चितयोर्यत्कार्यं या गतिस्तद्वक्तव्यमिति तदर्थोऽयं प्रश्नः ॥
பிறகு ஒரு வருஷம் கழித்து காத்தியாயனனான கபந்தி குருவை அணுகி வினாவினான். பகவானே இந்த பிராஹ்மணர்கள் முதலான பிரஜைகள் எதனிடம் இருந்து உண்டாகின்றனர் என்று கேட்டான். அபரவித்தை, கர்மா இவைகள் இணைந்து செய்யப்பட்டால் அதனால் எந்த காரியம் உண்டாகும். அவர்களுக்கு ஏற்படும் கதி (வழி) என்ன? என்று அந்த அர்த்தமாய் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.
तस्मै स होवाच प्रजाकामो वै प्रजापतिः स तपोऽतप्यत स तपस्तप्त्वा स मिथुनमुत्पादयते रयिं च प्राणं चेत्येतौ मे बहुधा प्रजाः करिष्यत इति ॥ ४ ॥
तस्मै एवं पृष्टवते स ह उवाच तदपाकरणायाह — प्रजाकामः प्रजाः आत्मनः सिसृक्षुः वै, प्रजापतिः सर्वात्मा सन् जगत्स्रक्ष्यामीत्येवं विज्ञानवान्यथोक्तकारी तद्भावभाविताः कल्पादौ निर्वृत्तो हिरण्यगर्भः, सृज्यमानानां प्रजानां स्थावरजङ्गमानां पतिः सन् , जन्मान्तरभावितं ज्ञानं श्रुतिप्रकाशितार्थविषयं तपः, अन्वालोचयत् अतप्यत ।
(ச.பா) இவ்வாறு தன்னை கேட்ட காத்தியாயனரின் பொருட்டு பிப்பலாதர் கூறலானார். அவருடைய சந்தேஹத்தை நீக்குவதற்காக கூறலானார். சர்வாத்மாவாய் இருக்கும் பிரஜாபதியானவர் (ஹிரண்யகர்பர்) தனக்கு பிரஜைகளை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த ஜகத்தைப் படைப்பேன் என்று எண்ணினார். அவர் சொன்னதை சொன்னபடி செய்பவர். ஆதலால் அந்த பாவத்தால் பாவிக்கப்பட்டவராக ஆகி கல்பாதியில் படைக்க வேண்டிய பிரஜைகளுடையவும், ஸ்தாவர ஜங்கமங்களுடையவும், பதியாய் இருந்துகொண்டு ஜன்மாந்தரத்தில் உண்டான ஞானத்தோடும், சுருதியினால் பிரகாசப்படுத்தப்பட்ட அர்த்த விஷயத்தோடும் ஆலோசித்தார். அதாவது இதுவே இங்கு தவம் என்று கூறப்பட்டது.
अथ तु सः एवं तपः तप्त्वा श्रौतं ज्ञानमन्वालोच्य, सृष्टिसाधनभूतं मिथुनम् उत्पादयते मिथुनं द्वन्द्वमुत्पादितवान् रयिं च सोममन्नं प्राणं च अग्निमत्तारम् इत्येतौ अग्नीषोमौ अत्रन्नभूतौ मे मम बहुधा अनेकधा प्रजाः करिष्यतः इति एवं सञ्चिन्त्य अण्डोत्पत्तिक्रमेण सूर्याचन्द्रमसावकल्पयत् ॥
பிறகு அவர் இவ்வாறு தவம் இயற்றி சுருதியுக்தமான ஞானத்தை ஆலோசித்து ஸ்ருஷ்ட்டிக்கு சாதன பூதமான இரட்டையை உண்டாக்கினார். செல்வமாகிற சோமனான அன்னத்தையும், அதை சாப்பிடும், பிராணனான அக்னியையும், அதாவது அக்னி சோமர்கள் என்ற இவர்களைப் படைத்தார். எனக்கு அன்ன பூதமான இவர்கள் பலவிதமான பிரஜைகளை உண்டாக்குவார்கள் என்று சிந்தித்து அண்ட உற்பத்திக் கிரமமாய் சூரியசந்திரர்களை படைத்தார்.
आदित्यो ह वै प्राणो रयिरेव चन्द्रमा रयिर्वा एतत्सर्वं यन्मूर्तं चामूर्तं च तस्मान्मूर्तिरेव रयिः ॥ ५ ॥
तत्र आदित्यः ह वै प्राणः अत्ता अग्निः । रयिरेव चन्द्रमाः । रयिरेवान्नं सोम एव । तदेतदेकमत्ता अग्निश्चान्नं च प्रजापतिरेकं तु मिथुनम् ; गुणप्रधानकृतो भेदः । कथम् ? रयिर्वै अन्नमेव एतत् सर्वम् । किं तत् ? यत् मूर्तं च स्थूलं च अमूर्तं च सूक्ष्मं च । मूर्तामूर्ते अत्त्रन्नरूपे अपि रयिरेव । तस्मात् प्रविभक्तादमूर्तात् यदन्यन्मूर्तरूपं मूर्तिः, सैव रयिः अन्नम् अमूर्तेन अत्त्रा अद्यमानत्वात् ॥
ச.பா) அங்கு சூரியனே பிராணனான அத்தா (சாப்பிடுபவனான) அக்னியாவன். சாப்பிடப்படுவதே சந்திரன். அந்த சந்திரனின் ரூபமான சொரூபங்களே அன்னமாகும். அதுவே சந்திரன் என்று கூறப்பட்டது. அவைகளில் ஒன்று சாப்பிடுவதாயும், மற்றொன்று அன்னமாயும், இரட்டையாக ஆயிற்று. பிரஜாபதி ஒருவர். இந்த பேதம் குணத்தைப் பிரதானமாகக் கொண்டு செய்யப்பட்டது. எவ்வாறு? எனில் இந்த தானியங்களோ, அன்னமோ, இவையாவும் ஸ்தூலமாயோ, சூக்ஷ்மமாயோ இருப்பினும் அன்னமான“रयिः”என்றே கொள்ளவேண்டும். எனவே இவ்வாறு இரண்டாக பகுக்கப்பட்ட எந்த மூர்த்தங்கள் உண்டோ அந்த அமூர்த்தத்தில் இருந்து உண்டான ரூபமேயாகும். அதில் மூர்த்தமானவை அன்னம் என்று கூறப்பட்டு உள்ளது. ஏனெனில் அமூர்த்தத்தினால் உண்ணப்படுவதால்,
तथा अमूर्तोऽपि प्राणोऽत्ता सर्वमेव यच्चाद्यम् । कथम् ?
(ச.பா) (அ.கை) எனவே அமூர்த்தமான பிராணன் முற்கூறப்பட்ட எல்லாவற்றையும் சாப்பிடும் அத்தாவாக ஆகும். எவ்வாறு?
अथादित्य उदयन्यत्प्राचीं दिशं प्रविशति तेन प्राच्यान्प्राणान्रश्मिषु संनिधत्ते । यद्दक्षिणां यत्प्रतीचीं यदुदीचीं यदधो यदूर्ध्वं यदन्तरा दिशो यत्सर्वं, प्रकाशयति तेन, सर्वान्प्राणान्रश्मिषु संनिधत्ते ॥ ६ ॥
तथा अमूर्तोऽपि प्राणोऽत्ता सर्वमेव यच्चाद्यम् । कथम् ? अथ आदित्यः उदयन् उद्गच्छन् प्राणिनां चक्षुर्गोचरमागच्छन् यत्प्राचीं दिशं स्वप्रकाशेन प्रविशति व्याप्नोति, तेन स्वात्मव्याप्त्या सर्वान्तःस्थान् प्राणान् प्राच्यानन्नभूतान् रश्मिषु स्वात्मावभासरूपेषु व्याप्तिमत्सु व्याप्तत्वात्प्राणिनः संनिधत्ते संनिवेशयति आत्मभूतान्करोतीत्यर्थः । तथैव यत्प्रविशति दक्षिणां यत्प्रतीचीं यदुदीचीम् अधः ऊर्ध्वं यत्प्रविशति यच्च अन्तरा दिशः कोणदिशोऽवान्तरदिशः यच्चान्यत् सर्वं प्रकाशयति, तेन स्वप्रकाशव्याप्त्या सर्वान् सर्वदिक्स्थान् प्राणान् रश्मिषु संनिधत्ते ॥
(ச.பா) பிறகு உதிக்கின்ற சூரியனானவன், அதாவது மேலே வரக்கூடிய சூரியன் பிராணிகளின் கண்களுக்கு விஷயமாக வந்துகொண்டு, கிழக்கு திசையை தன்னுடைய பிரகாசத்தால் வியாபித்துக்கொள்கிறான். இத்தகைய தன்னுடைய வியாப்தியால் கிழக்கு திசையில் உள்ள எல்லா பிராணிகளின் பிராணன்களையும், தன் சொரூபத்தைப் பிரகாசப்படுத்தும் கிரணங்களில் நிலைநிறுத்திக் கொள்கிறான். அதாவது தன்னுடைய ஆத்ம பூதங்களாய் செய்துகொள்கிறான் என்பது பொருள். அவ்வாறே தெற்கு திசையில் நுழையும் பொழுதும், வடக்கு திசையில் நுழையும் பொழுதும் தனக்கு கீழ் உள்ள திசையில் பிரவேசிக்கும் பொழுதும், மேல் திசையில் பிரவேசிக்கும் பொழுதும், கோண திசைகளிலும், அவாந்திர திசைகளிலும், பிரவேசிக்கும் பொழுதும், மேலும் மிச்சமுள்ள யாவற்றையும் பிரகாசப்படுத்தும் பொழுதும் தன்னுடைய பிரகாச வியாப்தியால் எல்லா திக்குகளில் உள்ள பிராணிகளின் பிராணன்களையும், தன்னுடைய பிரகாசமான கிரணங்களில் நிலைநிறுத்திக் கொள்கிறான்.
स एष वैश्वानरो विश्वरूपः प्राणोऽग्निरुदयते । तदेतदृचाभ्युक्तम् ॥ ७ ॥
स एषः अत्ता प्राणो वैश्वानरः सर्वात्मा विश्वरूपः विश्वात्मत्वाच्च प्राणः अग्निश्च स एवात्ता उदयते उद्गच्छति प्रत्यहं सर्वा दिशः आत्मसात्कुर्वन् । तदेतत् उक्तं वस्तु ऋचा मन्त्रेणापि अभ्युक्तम् ॥
அந்த இந்த அத்தாவான பிராணன் சர்வாத்மாவாய் வைஸ்வானரனாயும் விஸ்வத்தையே ஆத்மாவாகக் கொண்டமையால் விஸ்வரூபனாயும், பிராணனாயும், அக்னியாயும், அவனே அத்தாவாயும் இருந்து கொண்டு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திசையிலும் மேல்கிளம்பி எல்லா திசைகளையும் தன்னால் வியாபிக்கப்பட்டதாக செய்கின்றான். இங்கு கூறப்பட்ட பொருளே மந்திரங்களாலும் கூறப்பட்டு உள்ளது.
विश्वरूपं हरिणं जातवेदसं परायणं ज्योतिरेकं तपन्तम् ।
सहस्ररश्मिः शतधा वर्तमानः प्राणः प्रजानामुदयत्येष सूर्यः ॥ ८ ॥
विश्वरूपं सर्वरूपं हरिणं रश्मिवन्तं जातवेदसं जातप्रज्ञानं परायणं सर्वप्राणाश्रयं ज्योतिः सर्वप्राणिनां चक्षुर्भूतम् एकम् अद्वितीयं तपन्तं तापक्रियां कुर्वाणं स्वात्मानं सूर्यं विज्ञातवन्तो ब्रह्मविदः । कोऽसौ यं विज्ञातवन्तः ? सहस्ररश्मिः अनेकरश्मिः शतधा अनेकधा प्राणिभेदेन वर्तमानः प्राणः प्रजानाम् उदयति एषः सूर्यः ॥
(ச.பா) விஸ்வரூபனாயும், சர்வ சொரூபனாயும், கிரணங்களோடு கூடினவனாயும் உண்டான பிரக்ஞானத்தோடு கூடினவனாயும், எல்லா பிராணன்களுக்கு ஆச்ரய பூதனாயும் ஜோதிஸ் ஸ்வரூபனாயும், தனக்கு இரண்டாவது அற்றவனாயும், எல்லா பிராணிகளுக்கும் கண்ணாய் விளங்குபவனாயும், எரித்தல் என்ற செயலை உடையவனாயும், உள்ளவனான தன்னுடைய ஆத்ம ஸ்வரூபமான சூரியனை விக்ஞானவான்களான பிரஹ்ம வித்துக்கள் அறிகின்றனர். இவன் யார்? எவனை வித்வான்கள் அறிந்தனர்? அநேக கிரணங்களோடு கூடியவனும், அநேகவித பிராணிபேதமாய் உள்ள பிரஜைகளின் பிராண பூதமான இந்த சூரியன் உதிக்கிறான் என்று அறிகின்றனர்.
यश्चासौ चन्द्रमा मूर्तिरन्नममूर्तिश्च प्राणोऽत्तादित्यस्तदेतदेकं मिथुनं सर्वं कथं प्रजाः करिष्यत इति, उच्यते —
(ச.பா) எந்த இந்த சந்திரன் என்ற அன்னமயமான மூர்த்தியும், (ஸ்தூலமும்), அமூர்த்தமான (சூக்ஷ்மம்) பிராணனான அத்தாவும், ஒருவனாகவே இருப்பினும், இந்த இரட்டையான எல்லா பிரஜைகளையும், எவ்வாறு உண்டாக்குகிறான் என்று இந்த மந்திரத்தால் கூறப்படுகிறது.
संवत्सरो वै प्रजापतिस्तस्यायने दक्षिणं चोत्तरं च । तद्ये ह वै तदिष्टापूर्ते कृतमित्युपासते ते चान्द्रमसमेव लोकमभिजयन्ते । त एव पुनरावर्तन्ते तस्मादेत ऋषयः प्रजाकामा दक्षिणं प्रतिपद्यन्ते । एष ह वै रयिर्यः पितृयाणः ॥ ९ ॥
तदेव कालः संवत्सरो वै प्रजापतिः, तन्निर्वर्त्यत्वात्संवत्सरस्य । चन्द्रादित्यनिर्वर्त्यतिथ्यहोरात्रसमुदायो हि संवत्सरः तदनन्यत्वाद्रयिप्राणैतन्मिथुनात्मक एवेत्युच्यते । तत्कथम् ? तस्य संवत्सरस्य प्रजापतेः अयने मार्गौ द्वौ दक्षिणं चोत्तरं च । प्रसिद्धे ह्ययने षण्मासलक्षणे, याभ्यां दक्षिणेनोत्तरेण च याति सविता केवलकर्मिणां ज्ञानसंयुक्तकर्मवतां च लोकान्विदधत् ।
(ச.பா) இந்த ஒரு சம்வத்சரம் என்பதே பிரஜாபதியாவான். ஏனெனில் அவனாலேயே இந்த சம்வத்சரம் கடத்தப்படுகிறது. சூரியன், சந்திரன் இவர்களின் கதியால் உண்டாகிக் கழிக்கப்படும் திதி, பகல், இரவு இவைகளின் சமுதாயமே அன்றோ சம்வத்சரம் என்பது. இதைக்காட்டிலும் ரயி என்ற அன்னமும், பிராணன் என்ற அத்தாவும் வேறுபட்டது அல்ல. எனவே இந்த மிதுனாத்மகமே (இரட்டை சொரூபமே) பிரஜாபதி அல்லது சம்வத்சரம் என்று கூறப்படுகிறது. அது எவ்வாறு? எனில் இந்த சம்வத்சரமான பிரஜாபதிக்கு தக்ஷிணம், உத்திரம் என்ற இரண்டு மார்க்கங்கள் உண்டு. அவையாவன மிகப் பிரசித்தமாயும், ஆறு மாதங்களைத் தனக்கு கணக்காகும் லக்ஷணமாயும், இரண்டு அயனங்கள், அவை தக்ஷிணாயணம், உத்தராயணம் எனப்படும். இந்த வழியாக செல்லும் சூரியன் கேவல கர்மமார்க்கத்தை அனுசரிப்பவர்களுக்கும், ஞானத்தோடு கூட கர்மாக்களை செய்பவர்களுக்கும் உகந்த லோகங்களைக் கல்பிக்கிறான்
कथम् ? तत् तत्र च ब्राह्मणादिषु ये ह वै ऋषयः तदुपासत इति । क्रियाविशेषणो द्वितीयस्तच्छब्दः । इष्टं च पूर्तं च इष्टापूर्ते इत्यादि कृतमेवोपासते नाकृतं नित्यम् , ते चान्द्रमसमेव चन्द्रमसि भवं प्रजापतेर्मिथुनात्मकस्यांशं रयिमन्नभूतं लोकम् अभिजयन्ते कृतरूपत्वाच्चान्द्रमसस्य । ते एव च कृतक्षयात् पुनरावर्तन्ते इमं लोकं हीनतरं वा विशन्तीति ह्युक्तम् ।
(ச.பா) அது எவ்வாறு எனில்? பிராஹ்மண மந்திரங்களில் இந்த த்விதீயையால் அதை உபாசிக்கிறான் என்று கூறப்படுகிறது. இங்கு அதை என்ற இடத்தில் வந்துள்ள “தத்” என்ற சப்தம் கிரியா விசேஷணம் ஆகும். இவர்கள் இஷ்ட்டாபூர்த்தங்களை நாம் செய்தோம் என்று உபாசிக்கின்றனர். அவர்கள் நித்தியத்தை உபாசிப்பது இல்லை. அவர்கள் சந்திரனிடத்தில் உண்டான அதாவது பிரஜாபதியின் இரட்டைகளில் ஒன்றான அன்னபூதமான லோகத்தை குறித்து யாகம் செய்கின்றனர். அந்த சந்திரனை இவர்கள் ரூபமாக்கிக்கொண்டு பஜித்ததால் அந்த லோகத்தை அடைந்து அதற்கான பலன்களை அனுபவித்து அது நசித்தபொழுது இந்த லோகத்தையோ அல்லது இதற்கும் கீழ்ப்பட்ட லோகத்தையோ அடைகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது
यस्मादेवं प्रजापतिमन्नात्मकं फलत्वेनाभिनिर्वर्तयन्ति चन्द्रमिष्टापूर्तकर्मणा प्रजाकामाः प्रजार्थिनः एते ऋषयः स्वर्गद्रष्टारः गृहस्थाः, तस्मात्स्वकृतमेव दक्षिणं दक्षिणायनोपलक्षितं चन्द्रं प्रतिपद्यन्ते । एष ह वै रयिः अन्नम् , यः पितृयाणः पितृयाणोपलक्षितश्चन्द्रः ॥
(ச.பா) எதனால் பிரஜைகளை விரும்பி இந்த ரிஷிகள் அந்த பிரஜாபதியின் அன்னாத்மக சொரூபத்தை அடைவதே பலமாக எண்ணி இஷ்ட்டாபூர்த்த முதலான கர்மாக்களால் யாகம் செய்கிறார்களோ அவர்கள் அதனால் தங்களால் செய்யப்பட்ட லோகமான தக்ஷிணாயனம் என்று உபலக்ஷிக்கப்பட்ட சந்திரனையே அடைகின்றனர். இவ்வாறு ரயி என்றும், அன்னம் என்றும் கூறப்பட்ட இதுவே பிதிருயாணம் என்று உபலக்ஷணிக்கப்பட்ட சந்திரனாகும். (குறிப்பு) அக்னி ஹோத்திரம், தவம், சத்தியம், வேதங்களைப் பரிபாலித்தல், அதிதிகளைப் பூஜித்தல், வைஸ்வதேவம் இவைகள் இஷ்ட்டம் எனப்படும். குளம், கிணறு, தடாகம், தேவதைகளின் கோவில்கள், அன்னதானம், நந்தவனத்தை வளர்த்தல் இவைகள் பூர்த்தம் எனப்படும்.
अथोत्तरेण तपसा ब्रह्मचर्येण श्रद्धया विद्ययात्मानमन्विष्यादित्यमभिजयन्ते । एतद्वै प्राणानामायतनमेतदमृतमभयमेतत्परायणमेतस्मान्न पुनरावर्तन्त इत्येष निरोधः । तदेष श्लोकः ॥ १० ॥
अथ उत्तरेण अयनेन प्रजापतेरंशं प्राणमत्तारम् आदित्यम् अभिजयन्ते । केन ? तपसा इन्द्रियजयेन । विशेषतो ब्रह्मचर्येण श्रद्धया विद्यया च प्रजापत्यात्मविषयया आत्मानं प्राणं सूर्यं जगतः तस्थुषश्च अन्विष्य अहमस्मीति विदित्वा आदित्यम् अभिजयन्ते अभिप्राप्नुवन्ति ।
(ச.பா) மேலும் உத்திராயணத்தால் பிரஜாபதியின் அம்சமான அத்தாவாயும், பிராணமாயும் உள்ள ஆதித்தியனை உபாசிக்கின்றனர். எதனால்? எவ்வாறு எனில் இந்திரிய ஜயத்தாலும், விசேஷமாய் பிரஹ்மசரியத்தாலும், ஆஸ்திக்க புத்தியோடும், சாஸ்திரங்களில் விஸ்வாசத்தோடும், பிரஹ்ம வித்தையாலும், பிரஜாபதியினுடைய ஆத்மவிஷயமாய் உள்ள பிராணனான சூரியனை ஜகத்ஸ்திதிக்கு காரணமாய் உள்ள சூரியனை நான் அவனாகவே இருக்கிறேன் என்று அறிந்து தியானம் செய்பவர்கள் அந்த சூரியனையே அடைகின்றனர்.
एतद्वै आयतनं सर्वप्राणानां सामान्यमायतनम् आश्रयः एतत् अमृतम् अविनाशि अभयम् अत एव भयवर्जितम् न चन्द्रवत्क्षयवृद्धिभयवत् ; एतत् परायणं परा गतिर्विद्यावतां कर्मिणां च ज्ञानवताम् एतस्मान्न पुनरावर्तन्ते यथेतरे केवलकर्मिण इति यस्मात् एषः अविदुषां निरोधः, आदित्याद्धि निरुद्धा अविद्वांसः । नैते संवत्सरमादित्यमात्मानं प्राणमभिप्राप्नुवन्ति । स हि संवत्सरः कालात्मा अविदुषां निरोधः । तत् तत्रास्मिन्नर्थे एषः श्लोकः मन्त्रः ॥
(ச.பா) இவனே எல்லாப் பிராணன்களுக்கும் சாமானியமான ஆச்ரயமானவன். அதுவே நாசமற்ற அம்ருதம். அதுவே பயம் அற்றது. சந்திரனுடைய வளர்ச்சி, தேய்வு போல் பயம் அற்றது. இதுவே உத்தமமான கதி, இதுவே வித்யா(உபாசனா)வான்களுக்கும், உபாசனையோடு கூடிய கர்மிகளுக்கும், உத்தம கதியாகும். இந்த சூரியனை அடைந்தவர்கள் கேவல கர்மிகளைப் போல் மறுபடியும் திரும்பிவருவது இல்லை. எனவே அவித்வான்கள் இந்த சூரியனிடம் இருந்து தடை செய்யப்படுகின்றனர். எனவேதான் அவித்வான்கள் இந்த சம்வத்சர ஆத்மாவான பிராணனை அடைவது இல்லை. அந்த சம்வத்சரமான காலாத்மா இவ்வாறு அவித்வான்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அர்த்தத்திலேயே இந்த சுலோகம் வந்துள்ளது.
पञ्चपादं पितरं द्वादशाकृतिं दिव आहुः परे अर्धे पुरीषिणम् ।
अथेमे अन्य उ परे विचक्षणं सप्तचक्रे षडर आहुरर्पितमिति ॥ ११ ॥
पञ्चपादं पञ्च ऋतवः पादा इवास्य संवत्सरात्मन आदित्यस्य, तैर्ह्यसौ पादैरिव ऋतुभिरावर्तते । हेमन्तशिशिरावेकीकृत्येयं कल्पना । पितरं सर्वस्य जनयितृत्वात्पितृत्वं तस्य ; द्वादशाकृतिं द्वादश मासा आकृतयोऽवयवा आकरणं वा अवयविकरणमस्य द्वादशमासैः तं द्वादशाकृतिम् , दिवः द्युलोकात् परे ऊर्ध्वे अर्धे स्थाने तृतीयस्यां दिवीत्यर्थः ; पुरीषिणं पुरीषवन्तम् उदकवन्तम् आहुः कालविदः ॥
(ச.பா) இந்த சம்வத்சர ஆத்மாவான ஆதித்யனுக்கு ஐந்து ருதுக்கள் பாதங்களாக உள்ளன. அந்த இந்த ஐந்து பாதங்களால் இவன் சுழன்று கொண்டு இருக்கின்றான். ஹேமந்தம், சிசிரம், என்ற ருதுக்களை ஒன்றாகச் செய்து ஐந்து என்று கல்பனை செய்யப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் உண்டுபண்ணுவதால் அவனுக்கு தந்தையின் தன்மை, அவன் பன்னிரெண்டு மாதங்களையும் தன்னுடைய ஆகாரமாய் (உருவமாய்) கொண்டுள்ளான். அல்லது பன்னிரெண்டு மாதங்களையும் தனக்கு அவயவங்களாகக் கொண்டுள்ளான் என்றும் பொருள் கொள்ளலாம். தேவலோகத்தைக் காட்டிலும் மேலே உள்ள மூன்றாவது லோகத்தின் நடுப்பகுதியில் தண்ணீர் மயமாக இவன் இருக்கிறான் என்று காலத்தை அறிந்தோர் கூறுவர்.
अथ तमेवान्ये इमे उ परे कालविदः विचक्षणं निपुणं सर्वज्ञं सप्तचक्रे सप्तहयरूपे चक्रे सन्ततगतिमति कालात्मनि षडरे षडृतुमति आहुः सर्वमिदं जगत्कथयन्ति, अर्पितम् अरा इव रथनाभौ निविष्टमिति ।
(ச.பா) மற்றும் சிலர் காலத்தை அறிந்தவர்கள் இவன் மிகுந்த நிபுணனும், சர்வக்ஞனும் ஆவன். ஏழு குதிரைகளின் ரூபமான சக்கரத்தில் எப்பொழுதும் சுழன்று கொண்டு இருப்பவனும், அதில் ஆறு ரிதுக்களும், ஆரக்கால்கள் போல் இணைக்கப்பட்டுள்ளன. இதுவே ஜகத் என்றும் கூறுகின்றனர். இந்த ஜகத் சக்கரத்தின் குடத்தில் ஆரக்கால்கள் இணைக்கப்பட்டுள்ளது போல் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறுவர்.
यदि पञ्चपादो द्वादशाकृतिर्यदि वा सप्तचक्रः षडरः सर्वथापि संवत्सरः कालात्मा प्रजापतिश्चन्द्रादित्यलक्षणो जगतः कारणम् ॥
(ச.பா) இது ஐந்து கால்களோடும், பன்னிரெண்டு ஆகிருதிகளோடும், அல்லது ஏழு சக்கரத்தோடும், ஆறு ஆரக்கால்களோடும், எப்படி இருப்பினும் காலாத்மாவான சம்வத்சரரூபமான பிரஜாபதி சந்திர சூரிய லக்ஷணத்தோடு கூடி இருப்பினும் நிச்சயமாக ஜகத்திற்குக் காரணம்.
यस्मिन्निदं प्रोतं विश्वं स एव प्रजापतिः संवत्सराख्यः स्वावयवे मासे कृत्स्नः परिसमाप्यते ।
(ச.பா) (அ.கை) எந்த சம்வத்சரரூபமான பிரஜாபதியின் இடத்தில் இந்த பிரபஞ்சம் இணைக்கப்பட்டுள்ளதோ அந்த பிரஜாபதியானவர் தன்னுடைய அவயவமான மாதத்தில் முழுவதும் பரிசமாப்த்தவராக இருக்கிறார்.
मासो वै प्रजापतिस्तस्य कृष्णपक्ष एव रयिः शुक्लः प्राणस्तस्मादेत ऋषयः शुक्ल इष्टं कुर्वन्तीतर इतरस्मिन् ॥ १२ ॥
मासो वै प्रजापतिः यथोक्तलक्षण एव मिथुनात्मकः । तस्य मासात्मनः प्रजापतेरेको भागः कृष्णपक्ष एव रयिः अन्नं चन्द्रमाः अपरो भागः शुक्लः शुक्लपक्षः प्राणः आदित्योऽत्ताग्निर्यस्माच्छुक्लपक्षात्मानं प्राणं सर्वमेव पश्यन्ति, तस्मात्प्राणदर्शिन एते ऋषयः कृष्णपक्षेऽपीष्टं यागं कुर्वन्तः शुक्लपक्ष एव कुर्वन्ति । प्राणव्यतिरेकेण कृष्णपक्षस्तैर्न दृश्यते यस्मात् ; इतरे तु प्राणं न पश्यन्तीत्यदर्शनलक्षणं कृष्णात्मानमेव पश्यन्ति । इतरे इतरस्मिन्कृष्णपक्ष एव कुर्वन्ति शुक्ले कुर्वन्तोऽपि ॥
(ச.பா) அந்த மாதமே முற்கூறப்பட்ட லக்ஷணமான இரட்டை ஆத்மகமான பிரஜாபதியாய் விளங்குகிறது. அந்த பிரஜாபதியின் ஒரு பாகம் கிருஷ்ணபக்ஷம். அதுவே “ரயி”: எனப்படும் அன்னமான சந்திரன். மற்றொரு பாகம் பிராணரூபமான சுக்லபக்ஷம், அந்தப் பிராணனே அத்தாவான சூரியன். எனவே அந்த சுக்லபக்ஷாத்மாவான பிராணனை மகரிஷிகள் எல்லாமாய் பார்க்கின்றனர். அதனால் பிராண தர்சிகளான இந்த மகரிஷிகள் கிருஷ்ணபக்ஷத்தில் தமக்கு இஷ்ட்டமான யாகங்களை செய்தபோதிலும் கூட சுக்லபக்ஷத்திலேயே செய்கின்றனர். ஏனெனில் பிராணனின் இன்று வேறுபட்ட கிருஷ்ணபக்ஷத்தை அவர்கள் பார்ப்பது இல்லை. எனவே அவர்கள் கிருஷ்ணபக்ஷத்தில் செய்தபோதிலும் அது சுக்லபக்ஷத்தில் செய்தது போல் ஆகிறது. அவ்வாறே மற்றவர்கள் பிராணனை பார்க்காததால் அதர்சன லக்ஷணமான கிருஷ்ணமான ஆத்மாவையே பார்க்கின்றனர். எனவே இவர்கள் சுக்லபக்ஷத்தில் யாகங்களை செய்த போதிலும், கிருஷ்ணபக்ஷத்தில் செய்தவர்களாகவே ஆகின்றார்கள்.
अहोरात्रो वै प्रजापतिस्तस्याहरेव प्राणो रात्रिरेव रयिः प्राणं वा एते प्रस्कन्दन्ति ये दिवा रत्या संयुज्यन्ते ब्रह्मचर्यमेव तद्यद्रात्रौ रत्या संयुज्यन्ते ॥ १३ ॥
सोऽपि मासात्मा प्रजापतिः स्वावयवे अहोरात्रे परिसमाप्यते । अहोरात्रो वै प्रजापतिः पूर्ववत् । तस्यापि अहरेव प्राणः अत्ता अग्निः रात्रिरेव रयिः पूर्ववदेव । प्राणम् अहरात्मानं वै एते प्रस्कन्दन्ति निर्गमयन्ति शोषयन्ति वा स्वात्मनो विच्छिद्यापनयन्ति । के ? ये दिवा अहनि रत्या रतिकारणभूतया सह स्त्रिया संयुज्यन्ते मैथुनमाचरन्ति मूढाः । यत एवं तस्मात्तन्न कर्तव्यमिति प्रतिषेधः प्रासङ्गिकः । यत् रात्रौ संयुज्यन्ते रत्या ऋतौ ब्रह्मचर्यमेव तदिति प्रशस्तत्वात् रात्रौ भार्यागमनं कर्तव्यमित्ययमपि प्रासङ्गिको विधिः । प्रकृतं तूच्यते सोऽहोरात्रात्मकः प्रजापतिर्व्रीहियवाद्यन्नात्मना व्यवस्थितः॥
(ச.பா) வெளி
एवं क्रमेण परिणम्य तत्
(ச.பா) (அ.கை) இவ்விதம் க்ரமமாக பரிணாமத்தை அடைந்த அது -
अन्नं वै प्रजापतिस्ततो ह वै तद्रेतस्तस्मादिमाः प्रजाः प्रजायन्त इति ॥ १४ ॥
अन्नं वै प्रजापतिः । कथम् ? ततः तस्मात् ह वै रेतः नृबीजं तत्प्रजाकारणं तस्मात् योषिति सिक्तात् इमाः मनुष्यादिलक्षणाः प्रजाः प्रजायन्ते ।
(ச.பா) வெளி
यत्पृष्टं कुतो ह वै प्रजाः प्रजायन्त इति । तदेवं चन्द्रादित्यमिथुनादिक्रमेण अहोरात्रान्तेन अन्नरेतोद्वारेण इमाः प्रजाः प्रजायन्त इति निर्णीतम् ॥
(ச.பா) வெளி
तद्ये ह वै तत्प्रजापतिव्रतं चरन्ति ते मिथुनमुत्पादयन्ते । तेषामेवैष ब्रह्मलोको येषां
तपो ब्रह्मचर्यं येषु सत्यं प्रतिष्ठितम् ॥ १५ ॥
तत् तत्रैवं सति ये गृहस्थाः । ह वै इति प्रसिद्धस्मरणार्थौ निपातौ । तत् प्रजापतेर्व्रतं प्रजापतिव्रतम् ऋतौ भार्यागमनं चरन्ति कुर्वन्ति, तेषां दृष्टं फलमिदम् । किम् ? ते मिथुनं पुत्रं दुहितरं च उत्पादयन्ते । अदृष्टं च फलमिष्टापूर्तदत्तकारिणां तेषामेव एषः यश्चान्द्रमसो ब्रह्मलोकः पितृयाणलक्षणः येषां तपः स्नातकव्रतादि ब्रह्मचर्यम् ऋतोरन्यत्र मैथुनासमाचरणं येषु च सत्यम् अनृतवर्जनं प्रतिष्ठितम् अव्यभिचारितया वर्तते नित्यमेव ॥
(ச.பா) வெளி
यस्तु पुनरादित्योपलक्षित उत्तरायणः प्राणात्मभावो विरजः शुद्धो न चन्द्रब्रह्मलोकवद्रजस्वलो वृद्धिक्षयादियुक्तः असौ तेषाम् , केषामिति, उच्यते —
(ச.பா) (அ.கை) எது ஆதித்யனை உபலக்ஷணம் செய்து உத்தராயணம் என்று கூறப்பட்டதோ, பிராணாத்ம பாவமானது மிகவும் சுத்தமானது. இது சந்திர ப்ரஹ்ம லோகம் போல் அழுக்காறு கொண்டதோ, வளர்ச்சிதேய்வு இவைகளைக் கொண்டதோ அல்ல. இது யாருக்கு என்று கேட்பின் கூறப்படுகிறது.
तेषामसौ विरजो ब्रह्मलोको न येषु जिह्ममनृतं न माया चेति ॥ १६ ॥
यथा गृहस्थानामनेकविरुद्धसंव्यवहारप्रयोजनवत्त्वात् जिह्मं कौटिल्यं वक्रभावोऽवश्यम्भावि तथा न येषु जिह्मम् , यथा च गृहस्थानां क्रीडादिनिमित्तमनृतमवर्जनीयं तथा न येषु तत् तथा माया गृहस्थानामिव न येषु विद्यते । माया नाम बहिरन्यथात्मानं प्रकाश्यान्यथैव कार्यं करोति, सा माया मिथ्याचाररूपा । मायेत्येवमादयो दोषा येष्वेकाकिषु ब्रह्मचारिवानप्रस्थभिक्षुषु निमित्ताभावान्न विद्यन्ते, तत्साधनानुरूप्येणैव तेषामसौ विरजो ब्रह्मलोक इत्येषा ज्ञानयुक्तकर्मवतां गतिः । पूर्वोक्तस्तु ब्रह्मलोकः केवलकर्मिणां चन्द्रलक्षण इति ॥
(ச.பா) எவ்வாறு அநேக விருத்தமான வியவகார பிரயோஜனங்களைக் கொண்டமையினால் கிரஹஸ்தர்களுடைய பாவம் கோணலானது. அது கிரஹஸ்த தர்மத்திற்கு இன்றியமையாதது. அது இங்கு இல்லை. அவ்வாறே கிரஹஸ்தர்களுக்கு விளையாட்டு, ஊடல், போன்ற நிமித்தங்களால் பொய் சொல்லுதல் சகஜம். அது இங்கு இல்லை. அவ்வாறே வெளியில் வேறு விதமாய்த் தன்னைக் காட்டிக்கொண்டு மறைவில் வேறு விதமாக செயல்படல் மித்யா எனப்படும். இது மித்யாசாரம் என்றும் கூறப்படும். இதுவே இங்கு மாயை. அது இந்த பிரஹ்ம லோகத்தில் கிடையாது. இந்த சூரிய பிரஹ்ம லோகத்தை அடைவதற்கான அதிகாரிகளான பிரஹ்மசாரி, வானபிரஸ்தர், சந்நியாசி இவர்களுக்கு இந்த நிமித்தங்களே இல்லாததால் அவர்களுக்கு இந்த கேள்வியே வரவில்லை. அவர்களுக்கு அவர்களுடைய சாதனத்திற்கு ஒத்ததான இந்த சுத்தமான பிரஹ்மலோகம் என்று ஞானத்தோடு கூடிய கர்மவான்களின் கதி கூறப்பட்டது. முன்கூறப்பட்ட (சந்திர) பிரஹ்மலோகமானது கேவல கர்மமார்க்கத்தை அனுசரிப்பவர்களுக்கே ஆகும். முதல் பிரஸ்னம் முடிந்தது
इति प्रथमप्रश्नभाष्यम् ॥