अथ हैनं शैब्यः सत्यकामः पप्रच्छ । स यो ह वै तद्भगवन्मनुष्येषु प्रायणान्तमोङ्कारमभिध्यायीत कतमं वाव स तेन लोकं जयतीति ॥ १ ॥
अथ ह एनं शैब्यः सत्यकामः पप्रच्छ । अथेदानीं परापरब्रह्मप्राप्तिसाधनत्वेन ओङ्कारस्योपासनविधित्सया प्रश्न आरभ्यते ।
(ச.பா) பிறகு சைப்பியனான சத்தியகாமன் கேட்டான். இப்பொழுது பராபர பிரஹ்மப்பிராப்திக்கு சாதனமாய் ஓம்கார உபாசனையை விதிக்கவிரும்பி இந்தக் கேள்வி ஆரம்பிக்கப்படுகிறது.
सः यः कश्चित् ह वै भगवन् , मनुष्येषु मनुष्याणां मध्ये तत् अद्भुतमिव प्रायणान्तं मरणान्तं यावज्जीवमित्येतत् ; ओङ्कारम् अभिध्यायीत आभिमुख्येन चिन्तयेत् । बाह्यविषयेभ्य उपसंहृतकरणः समाहितचित्तो भक्त्यावेशितब्रह्मभावे ओङ्कारे आत्मप्रत्ययसन्तानाविच्छेदो भिन्नजातीयप्रत्ययान्तराखिलीकृतो निवातस्थदीपशिखासमोऽभिध्यानशब्दार्थः । सत्यब्रह्मचर्याहिंसापरिग्रहत्यागसंन्यासशौचसन्तोषामायावित्वाद्यनेकयमनियमानुगृहीतः सः एवं यावज्जीवव्रतधारणः, कतमं वाव, अनेके हि ज्ञानकर्मभिर्जेतव्या लोकास्तिष्ठन्ति ; तेषु तेन ओङ्काराभिध्यानेन कतमं सः लोकं जयतीति ॥
(ச.பா) ஹே பகவானே! மனுஷ்யர்களில் எவனொருவன் மிக அத்புதமாக உயிர் உள்ளவரை இந்த ஓம்காரத்தை அபிமுகமாக (இடையூறு இன்றி நேர்முகமாக) சிந்திப்பான். வெளிவிஷயங்களில் இருந்து உள் இழுக்கப்பட்ட கரணங்களை உடையவனாயும், ஓம்காரத்தில் சித்தத்தில் ஒருமுகப்படுத்தியவனாயும், பக்தியால் ஓம்காரத்தில் பிரஹ்ம பாவத்தை அடைந்தவனாக தியானிப்பான். ஆத்ம பிரத்யயத்தை (அதுவே பிரஹ்மம் என்ற நம்பிக்கையை இடைவிடாது) வேறு விஷயங்களில் உண்டான நம்பிக்கையை தகர்த்து காற்று அற்ற இடத்தில் உள்ள தீபத்தின் சிகைபோல் இருத்தல் அபித்தியானம் என்ற சொல்லுக்கு பொருளாகும். சத்தியம், பிரஹ்மசரியம், அஹிம்சை பிறர்பொருளை நாடாமை தியாகம், சந்நியாசம், சௌசம், சந்தோஷம், மாயாவித் தன்மையான கபடம் இன்மை என்பன போன்ற அநேக யமநியமங்களால் அனுக்கிரஹிக்கப்பட்டவனாகி எவன் ஒருவன் உயிர் உள்ளவரை முற்சொன்னபடி ஓம்காரத்தைத் தியானம் செய்கிறான். ஞான, கர்மாக்களால் ஜெயிக்கத்தக்க, அடையத்தக்க பல லோகங்கள் உள்ளன. அவைகளுள் இந்த ஓம்கார அபித்தியானத்தால் எதை அடைகின்றான். (எந்த லோகத்தை அடைகின்றான்)
तस्मै स होवाच । एतद्वै सत्यकाम परं चापरं च ब्रह्म यदोङ्कारः । तस्माद्विद्वानेतेनैवायतनेनैकतरमन्वेति ॥ २ ॥
पृष्टवते तस्मै स ह उवाच पिप्पलादः — एतद्वै सत्यकाम । एतत् ब्रह्म वै परं च अपरं च ब्रह्म परं सत्यमक्षरं पुरुषाख्यम् अपरं च प्राणाख्यं प्रथमजं यत् तदोङ्कार एव ओङ्कारात्मकम् ओङ्कारप्रतीकत्वात् । परं हि ब्रह्म शब्दाद्युपलक्षणानर्हं सर्वधर्मविशेषवर्जितम् , अतो न शक्यमतीन्द्रियगोचरत्वात्केवलेन मनसावगाहितुम् । ओङ्कारे तु विष्ण्वादिप्रतिमास्थानीये भक्त्यावेशितब्रह्मभावे ध्यायिनां तत्प्रसीदतीत्यवगम्यते शास्त्रप्रामाण्यात् । तथा परं च ब्रह्म । तस्मात्परं चापरं च ब्रह्म यदोङ्कार इत्युपचर्यते । तस्मादेवं विद्वान् एतेनैव आत्मप्राप्तिसाधनेनैव ओङ्काराभिध्यानेन एकतरं परमपरं वा अन्वेति ब्रह्मानुगच्छति ; नेदिष्ठं ह्यालम्बनमोङ्कारो ब्रह्मणः ॥
(ச.பா) இவ்வாறு கேட்ட சத்திய காமனின் பொருட்டு பிப்பலாதர் கூறலானார். சத்தியகாமா! நீ கேட்டதற்கு இதுதான் பதில். இந்த பிரஹ்மமானது பரம் என்றும், அபரம் என்றும், இருவகைப்படும். இதில் பரம் சத்தியமும், அக்ஷரமும் ஆகும். அபரம் என்பது புருஷன் எனப்படும். மேலும் பிராணன் எனப்படும் முதல் தோன்றலும் ஆகும். இவைகள் யாவற்றிற்கும் ஓம்காராத்மகமான ஓம்காரமே பிரதீகம் ஆகும். பரப்பிரஹ்மமானது சப்தம் முதலான உபலக்ஷணங்களால் அறியப்படமுடியாதது. அது சர்வதர்ம விசேஷங்களும் அற்றது. அது இந்திரிய கோசரமாய் இல்லாததால் மனதாலும் அறிந்து கொள்ள முடியாதது. இந்நிலையில் விஷ்ணு முதலான பிரதிமைகளின் ஸ்தானத்தில் இருக்கும் இந்த பிரணவத்தில் பக்தியினால் உண்டான பிரஹ்மபாவத்தோடு தியானம் செய்பவர்களுக்கு அது அருள் செய்கிறது என்று சாஸ்திரப் பிரமாணங்களால் புரிந்துகொள்ளப்படுகிறது. அவ்வாறே அபரப்பிரஹ்மமும் ஆகும். எனவே பராபர பிரஹ்மங்கள் ஓம்காரம் என்று உபசாரமாகக் கூறப்படுகிறது. எனவே இவ்வாறு வித்வானானவன் அறிந்து ஆத்மப்பிராப்திக்கு சாதனமாய் ஓம்காரத்தை அபித்தியானம் செய்வதால் பராபர பிரஹ்மங்களில் ஏதாவது ஒன்றை அடைந்தவனாக ஆகின்றான். பிரஹ்மத்தை உணர்வதற்கு ஓம்காரம் மிக நெருக்கமான விரும்பத்தக்க உபாயம் ஆகும்.
स यद्येकमात्रमभिध्यायीत स तेनैव संवेदितस्तूर्णमेव जगत्यामभिसम्पद्यते । तमृचो मनुष्यलोकमुपनयन्ते स तत्र तपसा ब्रह्मचर्येण श्रद्धया सम्पन्नो महिमानमनुभवति ॥ ३ ॥
स यद्यप्योङ्कारस्य सकलमात्राविभागज्ञो न भवति, तथाप्योङ्काराभिध्यानप्रभावाद्विशिष्टामेव गतिं गच्छति ; एतदेकदेशज्ञानवैगुण्यतयोङ्कारशरणः कर्मज्ञानोभयभ्रष्टो न दुर्गतिं गच्छति ; किं तर्हि, यदि एवमोङ्कारमेव एकमात्राविभागज्ञ एव केवलः अभिध्यायीत एकमात्रं सदा ध्यायीत, स तेनैव एकमात्राविशिष्टोङ्काराभिध्यानेनैव संवेदितः सम्बोधितः तूर्णं क्षिप्रमेव जगत्यां पृथिव्याम् अभिसम्पद्यते ।
(ச.பா) அந்த சாதகன் இவ்வாறு ஓம்காரத்தின் சகல மாத்திரா விபாகங்களையும் அறியாது இருப்பினும் ஓம்காரத்தினுடைய அபித்தியான பிரபாவத்தால் மேன்மையான கதியையே அடைகிறான். இந்த ஏகதேச ஒம்கார வைகுண்யத்தை பற்றியிருந்த போதிலும், ஓம்காரத்தை சரணமாக அடைந்தமையால் கர்மா ஞானம் என்ற இரண்டிலிருந்தும் பிரஷ்ட்டனாகி துர்கதியை அடைந்து விடுவது இல்லை. அப்பொழுது அவன் என்ன ஆகிறான்? அவன் ஓம்காரத்தின் ஒரு மாத்திரா விபாகத்தை அறிந்தவனாய் இருப்பினும் கேவலம் ஏகமாத்திரமாய் முற்சொன்னபடி அபித்தியானம் செய்வதால் சம்போதனம் செய்யப்பட்டவனாகி நன்கு தூண்டப்பட்டவனாகி, சீக்கிரமாகவே மறுபடியும் பூமியில் உண்டாகிறான்.
किम् ? मनुष्यलोकम् । अनेकानि हि जन्मानि जगत्यां सम्भवन्ति । तत्र तं साधकं जगत्यां मनुष्यलोकमेव उपनयन्ते उपनिगमयन्ति ऋचः । ऋग्वेदरूपा ह्योङ्कारस्य प्रथमा एकमात्रा । तेन स तत्र मनुष्यजन्मनि द्विजाग्र्यः सन् तपसा ब्रह्मचर्येण श्रद्धया च सम्पन्नः महिमानं विभूतिम् अनुभवति न वीतश्रद्धो यथेष्टचेष्टो भवति ; योगभ्रष्टः कदाचिदपि न दुर्गतिं गच्छति ॥
(ச.பா) பூலோகம் எனில் என்ன? மனுஷ்யலோகம். லோகத்தில் எத்தனையோ விதமான ஜன்மாக்கள் உண்டு. அதில் இந்த ஓம்கார உபாசகனை அந்த உபாசனை மனுஷ்யலோகத்தையே அடைவிக்கின்றது. அது எது எனில் அது ரிக்வேத ரூபமான ஓம்காரத்தின் முதல் மாத்திரை. அதை அபித்தியானம் செய்பவன் அந்த அபித்தியானத்தால் கிடைத்த இந்த மனுஷ்ய ஜன்மாவில் பிராஹ்மண சிரேஷ்ட்டனாகி தவத்தாலும் பிரஹ்மசரியத்தாலும் சிரத்தையாலும் உயர்ந்த தன்மையை அடைந்து மஹிமைகளை அதாவது அனுபூதியை அடைகிறான். இவ்வாறு யோக பிரஷ்ட்டனானவன் சிரத்தை அற்றவனாயும் விருப்பம் போல் சஞ்சரிப்பவனாயும் ஆகி ஒரு போதும் துர்கதியை அடைவது இல்லை.
अथ यदि द्विमात्रेण मनसि सम्पद्यते सोऽन्तरिक्षं यजुर्भिरुन्नीयते सोमलोकम् । स सोमलोके विभूतिमनुभूय पुनरावर्तते ॥ ४ ॥
अथ पुनः यदि द्विमात्राविभागज्ञो द्विमात्रेण विशिष्टमोङ्कारमभिध्यायीत स्वप्नात्मके मनसि मननीये यजुर्मये सौमदैवत्ये सम्पद्यते एकाग्रतयात्मभावं गच्छति, स एवं सम्पन्नो मृतः अन्तरिक्षम् अन्तरिक्षाधारं द्वितीयमात्रारूपं द्वितीयमात्रारूपैरेव यजुर्भिः उन्नीयते सोमलोकं सौम्यं जन्मप्रापयन्ति तं यजूंषित्यर्थः । स तत्र विभूतिमनुभूय सोमलोके मनुष्यलोकं प्रति पुनरावर्तते ॥
(ச.பா) மேலும் ஒரு சாதகன் ஓம்காரத்தின் இரண்டு மாத்திரவிபாகங்களை அறிந்தவனாகி இரண்டாவது மாத்திரையோடு கூடின ஓம்காரத்தை சொப்பன ஆத்மகமான மனசில் தியானம் செய்வானேயானால் அவன் சோமனை தேவதையாகக் கொண்ட யஜுர்வேத சாரமான இரண்டாவது மாத்திரையை ஏகாக்ரசித்தத்துடன் தியானம் செய்ததால் அங்கு ஆத்மபாவம் பெற்று சோமலோகத்தை அடைகிறான். இவ்வாறு இரண்டாவது மாத்திரா சம்பன்னனானவன் இந்த சரீரம் விழுந்தபோது அந்தரிக்ஷத்திற்கு ஆதாரமாயும், இரண்டாவது ஓம்கார மாத்திரா ரூபமாயும் உள்ள யஜுர் வேதத்தால் மேலே சோம லோகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மிக அழகிய ஜன்மாவை அடைவிக்கிறது யஜுர் வேதம் என்பது பொருள். அவன் அந்த சோமலோகத்தில் விபூதியை அனுபவித்த பிறகு மறுபடியும் மனுஷ்ய லோகத்திற்கே திரும்பி வருகிறான்.
यः पुनरेतं त्रिमात्रेणोमित्येतेनैवाक्षरेण परं पुरुषमभिध्यायीत स तेजसि सूर्ये सम्पन्नः । यथा पादोदरस्त्वचा विनिर्मुच्यत एवं ह वै स पाप्मना विनिर्मुक्तः स सामभिरुन्नीयते ब्रह्मलोकं स एतस्माज्जीवघनात्परात्परं पुरिशयं पुरुषमीक्षते । तदेतौ श्लोकौ भवतः ॥ ५ ॥
यः पुनः एतम् ओङ्कारं त्रिमात्रेण त्रिमात्राविषयविज्ञानविशिष्टेन ओमित्येतेनैव अक्षरेण परं सूर्यान्तर्गतं पुरुषं प्रतीकत्वेन अभिध्यायीत तेनाभिध्यानेन प्रतीकत्वेन ह्यालम्बनत्वं प्रकृतमोङ्कारस्य परं चापरं च ब्रह्मेति अभेदश्रुतेः, ओङ्कारमिति च द्वितीयानेकशः श्रुता बाध्येतान्यथा । यद्यपि तृतीयाभिधानत्वेन करणत्वमुपपद्यते, तथापि प्रकृतानुरोधात्त्रिमात्रं परं पुरुषमिति द्वितीयैव परिणेया ‘त्यजेदेकं कुलस्यार्थे’ इति न्यायेन । सः तृतीयमात्रारूपे तेजसि सूर्ये सम्पन्नो भवति ध्यायमानः, मृतोऽपि सूर्यात्सोमलोकादिवन्न पुनरावर्तते ; किन्तु सूर्ये सम्पन्नमात्र एव ।
(ச.பா) ஒருவன் இந்த ஓம்காரத்தை மூன்று மாத்திரையோடு அதாவது மூன்று மாத்திரைகளின் விஷய விக்ஞானத்தோடு கூடியதாக இந்த ஓம் என்ற அக்ஷரத்தால் சூரியாந்தர்கதமான பரம புருஷனை இந்தப் பிரதீகம் கொண்டு தியானம் செய்யவேண்டும். இந்த அபித்தியானத்தால் இந்த ஓம்காரத்திற்கு பிரதீகத்தன்மையால் ஆலம்பனத்துவம் ஏற்படுகிறது. இவ்வாறு இந்த ஓம்காரத்திற்கு பரமாயும், அபரமாயும் உள்ள பிரஹ்மத்திற்கு அபேதமாய் விளங்குவது என்பது இரண்டாவது ஆதேசம். இது பாதிக்கப்படும் என்றால் வேறு விதமாக கூறுவோமேயானால் மூன்றாவது அபித்தியானத்தால் அதற்கு கரணத்துவம் ஏற்படுகிறது. அப்படி இருப்பினும் இப்போதைய நடைமுறையைப் பின்பற்றி மூன்று மாத்திரைகளோடு கூடிய பரமபுருஷனையே அது குறிக்கிறது என்ற இரண்டாவதே கொள்ளத்தக்கது ஆகும். இது குலத்தின் பொருட்டு ஒருவனைத் தியாகம் செய்யலாம் என்ற நியாயத்திற்கு ஒப்பானது. அந்த மூன்றாவது மாத்திரா ரூபமானது தேஜஸ்ஸான சூரியனில் நிலைபெற்றதாக ஆகிறது. அதை அவ்வாறு தியானிப்பவன் மரணமடைந்தாலும் சூரியலோகத்திலிருந்து சோமலோகத்தை அடைகிறான் என்பது போல் புணராவிர்த்தியை அடைவது இல்லை. ஆனால் சூரியனிடத்திலேயே நிலைபெற்றவன் போல் ஆகிறான்.
यथा पादोदरः सर्पः त्वचा विनिर्मुच्यते जीर्णत्वग्विनिर्मुक्तः स पुनर्नवो भवति । एवं ह वै एष यथा दृष्टान्तः स पाप्मना सर्पत्वक्स्थानीयेनाशुद्धिरूपेण विनिर्मुक्तः सः सामभिः तृतीयमात्रारूपैः ऊर्ध्वमुन्नीयते ब्रह्मलोकं हिरण्यगर्भस्य ब्रह्मणो लोकं सत्याख्यम् । सः हिरण्यगर्भः सर्वेषां संसारिणां जीवानामात्मभूतः । स ह्यन्तरात्मा लिङ्गरूपेण सर्वभूतानाम् । तस्मिन् हि लिङ्गात्मनि संहताः सर्वे जीवाः । तस्मात्स जीवघनः स विद्वांस्त्रिमात्रोङ्काराभिज्ञः एतस्माज्जीवघनात् हिरण्यगर्भात्परात्परं परमात्माख्यं पुरुषमीक्षते पुरिशयं सर्वशरीरानुप्रविष्टं पश्यति ध्यायमानः । तत् एतौ अस्मिन्यथोक्तार्थप्रकाशकौ श्लोकौ मन्त्रौ भवतः ॥
(ச.பா) எவ்வாறு வயிற்றைகாலாக உடைய சர்ப்பமானது தன்னுடைய மேல்தோலாகிய சட்டையிலிருந்து விடுபட்டதாகி சட்டை உறித்த பாம்பானது மறுபடியும் புதிதாக ஆகிறதோ இந்தத் திருஷ்ட்டாந்தம் போலே இவ்வாறு தியானித்தவன் பாம்பின் சட்டை போன்ற அசுத்தங்களிலிருந்து (பாபங்களிலிருந்து) விடுபட்டவனாகி மூன்றாவது மாத்திரையாகிய சாமரூபத்தால் ஹிரண்யகர்பனின் சத்திய லோகமான பிரஹ்ம லோகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறான். அந்த ஹிரண்யகர்ப்பன் சம்சாரிகளான சர்வ ஜீவர்களுக்கும் ஆத்ம பூதமானவன். அவன் லிங்க ரூபமான அந்தராத்மாவாகி விளங்குகிறான். அந்த லிங்காத்மாவில் எல்லா ஜீவன்களும் இணைக்கப்பட்டுள்ளன. (அவனே சூத்திராத்மா) எனவே அவன் ஜீவகனன். இவ்வாறு அந்த த்ரிமாத்ர ஓம்காரத்தை அறிந்த வித்வான் இந்த ஹிரண்ய கர்ப்பனிடத்தில் இருந்துகொண்டு பரமான, பரமாத்மா எனப்படும் எல்லா சரீரங்களிலும் நுழைந்து புரத்தில் வசிக்கும் அவனை அதே தியானத்துடன் பார்க்கிறான். கூறப்பட்ட இந்த அர்த்தத்தை விளக்கும் இரு மந்திரங்கள் வருபவை.
तिस्रो मात्रा मृत्युमत्यः प्रयुक्ता अन्योन्यसक्ता अनविप्रयुक्ताः ।
क्रियासु बाह्याभ्यन्तरमध्यमासु सम्यक्प्रयुक्तासु न कम्पते ज्ञः ॥ ६ ॥
तिस्रः त्रिसङ्ख्याका अकारोकारमकाराख्याः ओङ्कारस्य मात्राः । मृत्युमत्यः मृत्युर्यासां विद्यते ता मृत्युमत्यः मृत्युगोचरादनतिक्रान्ताः मृत्युगोचरा एवेत्यर्थः । ता आत्मनो ध्यानक्रियासु प्रयुक्ताः । किञ्च, अन्योन्यसक्ताः इतरेतरसम्बद्धाः । अनविप्रयुक्ताः विशेषेणैकैकविषय एव प्रयुक्ता विप्रयुक्ताः, न तथा विप्रयुक्ता अविप्रयुक्ताः, न अविप्रयुक्ता अनविप्रयुक्ताः ।
(ச.பா) ஓம்காரத்திற்கு அகார, உகார, மகாரம் என்ற மூன்று எண்ணிக்கை உடைய மாத்திரைகள் உண்டு. அவை மிருத்யுவோடு கூடினவை. அவை மிருத்யுவிற்கு கோசரம் ஆகாதவை என்பது இல்லை. மிருத்யுவிற்கு கோசரமானவை என்பதே பொருள். அவை ஆத்மாவின் தியானக் காரியங்களில் பிரயோகிக்கப்பட்டுள்ளன.மேலும் அவை ஒன்றோடு ஒன்று இணைந்தவை. சம்பந்தமானவை. பிரிந்தவை அல்ல, ஏன் எனில் ஒரே விஷயத்தில் விசேஷமாய் பிரயோகிக்கப்பட்டவை. அவை பிரிந்தது என்றாலும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாதவை அல்ல.
किं तर्हि, विशेषेणैकस्मिन्ध्यानकाले तिसृषु क्रियासु बाह्याभ्यन्तरमध्यमासु जाग्रत्स्वप्नसुषुप्तस्थानपुरुषाभिध्यानलक्षणासु योगक्रियासु युक्तासु सम्यक्प्रयुक्तासु सम्यग्ध्यानकाले प्रयोजितासु न कम्पते न चलति ज्ञः योगी यथोक्तविभागज्ञः ओङ्कारस्येत्यर्थः । न तस्यैवंविदश्चलनमुपपद्यते । यस्माज्जाग्रत्स्वप्नसुषुप्तपुरुषाः सह स्थानैर्मात्रात्रयरूपेणोङ्कारात्मरूपेण दृष्टाः ; स ह्येवं विद्वान्सर्वात्मभूत ओङ्कारमयः कुतो वा चलेत्कस्मिन्वा ॥
(ச.பா) இவ்வாறு கூறில் என்ன பொருள் எனில் விசேஷமாய் ஒரு விஷயத்தில் தியானம் செய்யும்பொழுது மூன்று காரியங்களில் அதாவது பாஹ்யம், ஆப்யந்தரம், மத்யமம் எனப்படும் ஜாக்ரத் சொப்பன, சுழுத்தி ஸ்தானங்களில் உள்ள புருஷனை அபித்தியானம் செய்யும் லக்ஷணமான யோகக்கிரியைகளில் தியான காலத்தில் பிரயோகம் செய்யப்பட்ட பொழுது அவ்வாறு தியானம் செய்பவன். (செய்யும் யோகி) ஓம்காரத்தின் பொருளை கூறப்பட்ட விபாகத்துடன் அறிந்த யோகி தன் நிலையிலிருந்து அசைவது இல்லை. அவனுக்கு எவ்வித சலனமும் உண்டாவது இல்லை. ஏனெனில் ஜாக்ரத், சொப்பன, சுழுத்தி ஸ்தான புருஷன் அந்தஸ்தான மாத்திரைகளுடன் கூட ஓம்கார ரூபத்துடன் அவரால் பார்க்கப்பட்டான். அவ்வாறு பார்த்த சர்வபூதாத்மகமான ஓம்காரமயமான வித்வான் ஏன் சலிப்பான், எதில் சலிப்பான்.
सर्वार्थसङ्ग्रहार्थो द्वितीयो मन्त्रः —
(ச.பா) (அ.வை) மேலே கூறிய இரண்டாவது மந்திரமானது சம்பூர்ண அர்த்தத்தை சங்கிரஹம் செய்வதாகிறது.
ऋग्भिरेतं यजुर्भिरन्तरिक्षं सामभिर्यत्तत्कवयो वेदयन्ते ।
तमोङ्कारेणैवायतनेनान्वेति विद्वान्यत्तच्छान्तमजरममृतमभयं परं चेति ॥ ७ ॥
ऋग्भिः एतं लोकं मनुष्योपलक्षितम् । यजुर्भिः अन्तरिक्षं सोमाधिष्ठितम् । सामभिः यत् तद्ब्रह्मलोक इति तृतीयं कवयः मेधाविनो विद्यावन्त एव नाविद्वांसः वेदयन्ते । तं त्रिविधं लोकमोङ्कारेण साधनेनापरब्रह्मलक्षणम् अन्वेति अनुगच्छति विद्वान् ।
(ச.பா) ரிக்வேதத்தால் மனுஷ்ய லோகமான இந்த லோகம் உபலக்ஷிக்கப்பட்டது. யஜுர் வேதத்தால் சந்திரனை அதிஷ்ட்டானமாகக் கொண்ட அந்தரிக்ஷ லோகம் உபலக்ஷிக்கப்பட்டது. சாமவேதத்தால் எந்த பிரஹ்ம லோகம் உண்டோ அது உபலக்ஷிக்கப்பட்டது. இவ்வாறு மூன்றையும் கவிகளான வித்தையுடன் கூடிய மேதாவிகள் அறிவர். அவித்வான்கள் அறிவது இல்லை. இவ்வாறு முவ்வித லோகங்களையும், ஓம்காரத்தை சாதனமாகக் கொண்டு அபரப்பிரஹ்ம லக்ஷணமான சொரூபத்தை பின்தொடர்கிற மேதாவி வித்வான்.
तेनैवोङ्कारेण यत्तत्परं ब्रह्माक्षरं सत्यं पुरुषाख्यं शान्तं विमुक्तजाग्रत्स्वप्नसुषुप्तादिविशेषं सर्वप्रपञ्चविवर्जितम् , अत एव अजरं जरावर्जितम् अमृतं मृत्युवर्जितमत एव । यस्माज्जरादिविक्रियारहितमतः अभयम् । यस्मादेवाभयं तस्मात् परं निरतिशयम् । तदप्योङ्कारेणैवायतनेन गमनसाधनेनान्वेतीत्यर्थः । इतिशब्दो वाक्यपरिसमाप्त्यर्थः ॥
(ச.பா) அதே ஓம்காரத்தால் எந்த பரப்பிரஹ்மமாயும், நாசமற்றதும், சத்தியமாயும், புருஷன் எனப்படுவதும், சாந்தமாயும், எல்லாவற்றிலிருந்து விடுபட்டதும், ஜாக்ரத், சொப்பனம். சுழுத்தி என்ற விசேஷங்களுடன் கூடிய சர்வபிரபஞ்சமும் அற்றதும், அதனாலேயே முதுமை அற்றதும், மரண தர்மம் அற்றதும், இவ்வாறு முதுமை, மாறுபாடு, மரணதர்மம் இவைகள் இல்லாமையால் பயம் அற்றதாயும் உள்ள சொரூபத்தை அடைகின்றனர். (ஆகின்றனர்) எதனால் இவ்வாறு பயம் அற்றதாய் இருக்கிறதோ அதனால் அது பரம், உவமை அற்றது. அந்த ஓம்காரத்தை பிரஹ்மத்தை அடைவதற்கு சாதனமாகக் கொண்டு அதனுடன் ஒன்றிவிடுகின்றனர் என்பது பொருள். “इति” என்ற சொல் வாக்கியத்தின் பூர்த்தியை காட்டுவது என்பது பொருள்.
इति पञ्चमप्रश्नभाष्यम् ॥