द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

तैत्तिरीयोपनिषद्भाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

தைத்திரீயோபநிஷத்பாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

सर्वाशाध्वान्तनिर्मुक्तं सर्वाशाभास्करं परम् ।
चिदाकाशावतंसं तं सद्गुरुं प्रणमाम्यहम् ॥
ओं शं नो मित्रः शं वरुणः । शं नो भवत्वर्यमा । शं न इन्द्रो बृहस्पतिः । शं नो विष्णुरुरुक्रमः । नमो ब्रह्मणे । नमस्ते वायो । त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि । त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि । ऋतं वदिष्यामि । सत्यं वदिष्यामि । तन्मामवतु । तद्वक्तारमवतु । अवतु माम् । अवतु वक्तारम् ॥ ओं शान्तिः शान्तिः शान्तिः ॥ १ ॥
यस्माज्जातं जगत्सर्वं यस्मिन्नेव प्रलीयते ।
येनेदं धार्यते चैव तस्मै ज्ञानात्मने नमः ॥ १ ॥
(ச்லோக அர்த்தம்) - எதிலிருந்து இந்த ஜகத்முழுவதும் உண்டாயிற்றோ, எதில் அது லயமாகிறதோ (ஒடுங்குகிறதோ), எதன் மூலமாய் அது தரிக்கப்படுகிறதோ (தாங்கப்படுகிறதோ) அந்த ஞானாத்மாவிற்கு நமஸ்காரம்.
यैरिमे गुरुभिः पूर्वं पदवाक्यप्रमाणत ।
व्याख्याताः सर्ववेदान्तास्तान्नित्यं प्रणतोऽस्म्यहम् ॥ २ ॥
(ச்லோக அர்த்தம்) - பூர்வகாலத்தில் எந்த குருமார்களால் பத, வாக்கிய, பிரமாணங்களால் வேதாங்கள் வியாக்கியாணம் செய்யப்பட்டனவோ அந்த குருமார்களுக்கு என் நமஸ்காரங்கள்.
तैत्तिरीयकसारस्य मयाचार्यप्रसादतः ।
विस्पष्टार्थरुचीनां हि व्याख्येयं संप्रणीयते ॥ ३ ॥
(ச்லோக அர்த்தம்) - ஸ்பஷ்டமாக அர்த்தத்தை அறிய விரும்பும் புருஷர்களுக்காக ஆசாரியர்களுடைய கிருபையால் நான் தைத்திரீய சாகையின் சாரபூதமான இந்த உபநிஷத்தை வியாக்கியானம் செய்கிறேன்.
नित्यान्यधिगतानि कर्माण्युपात्तदुरितक्षयार्थानि, काम्यानि च फलार्थिनां पूर्वस्मिन्ग्रन्थे । इदानीं कर्मोपादानहेतुपरिहाराय ब्रह्मविद्या प्रस्तूयते ।
(ச.பா) சஞ்சித பாபங்களின் நாசம் எதற்கு முக்கிய பிரயோஜனமோ அவ்வாறே நித்தியகர்மா, சகாம கர்ம புருஷர்களுக்காக விஹித காமிய கர்மங்கள் இதற்கு முந்தின கிரந்தத்தில் (பூர்வகாண்டத்தில்) அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது கர்மானுஷ்ட்டானங்கனின் உபாதான காரணத்தை நிவர்த்தி செய்வதற்காக பிரஹ்மவித்யா ஆரம்பிக்கப்படுகிறது.
कर्महेतुः कामः स्यात् । प्रवर्तकत्वात् । आप्तकामानां हि कामाभावे स्वात्मन्यवस्थानात् प्रवृत्त्यनुपपत्तिः । आत्मकामित्वे चाप्तकामता ; आत्मा हि ब्रह्म ; तद्विदो हि परप्राप्तिं वक्ष्यति । अतोऽविद्यानिवृतौ स्वात्मन्यवस्थानं परप्राप्तिः । ‘अभयं प्रतिष्ठां विन्दते’ (तै. उ. २ । ७ । १) ‘एतमानन्दमयमात्मा- नमुपसंक्रामति’ (तै. उ. २ । ८ । ५)इत्यादि श्रुतेः ।
ப்ரவர்த்திக்கச் செய்வதால் காமம் கர்மத்திற்கு ஹேதுவாகிறது. ஆப்த்த காமரானவர்களுக்கு காமம் இல்லாததால் ஸ்வாத்மா விடத்திலே நிலை பெற்றிருப்பதால் பிரவிர்த்தி அடையமாட்டார்கள் (பொருந்தாது). ஆத்ம தர்சனத்தின் காமம் பூர்த்தி ஆவதாகும். ஆத்மாவே   பிரஹ்மமானதால் பிரஹ்மவித்துக்களுக்கு பரப்பிராப்தியை கூறப்போகிறார். ஆகையால் அவித்தியா நிவர்த்தியின் மூலமாக ஸ்வாத்மாவில் நிலை பெறுதலே பரப்பிராப்தியாகும். “‘अभयं प्रतिष्ठां विन्दते’ (तै. उ. २ । ७ । १)” (பயமற்றபதத்தை அடைகிறான்)  “‘एतमानन्दमयमात्मानमुपसंक्रामति’ (तै. उ. २ । ८ । ५)” (இந்த ஆனந்தமய ஆத்மாவை அடைகிறான்) என்பது முதலிய சுருதிகளால் அறியப்படுகிறது.
(पूर्वपक्षी) काम्यप्रतिषिद्धयोरनारर्म्भादारब्धस्य चोपभोगेन क्षयान्नित्यानुष्ठानेन प्रत्यवायाभावादयत्नत एव स्वात्मन्यवस्थानं मोक्षः । अथवा निरतिशयायाः प्रीतेः स्वर्गशब्दवाच्याया: कर्महेतुत्वात्कर्मभ्य एव मोक्ष इति चेत् ।
(பூர்வபக்ஷி) காம்ய, நிக்ஷித்த கர்மங்களை ஆரம்பிக்காமலும், பிராரப்த கர்மா, அதன் பலனை அனுபவித்ததால் அதன் நாசத்தாலும், அவ்வாறே நித்தியகர்மாக்களை அனுஷ்ட்டிப்பதால் பிரத்யவாயம் இல்லாததாலும் அநாயாஸமாய் தன் ஆத்மாவில் நிலை பெறுதலாகிய மோக்ஷம். அல்லது நிரதிசய ப்ரீதியாகிய ஸ்வர்க்க சப்தத்தின் பொருளுக்கு கர்மம் ஹேதுவாய் இருப்பதால் கர்மத்தினால் தான் மோக்ஷம் எற்படும் என்ற சங்கைக்கு
(सिध्दान्ती) न ; कर्मानेकत्वात् । अनेकानि ह्यारब्धफलान्यनारब्धफलानि चानेकजन्मान्तरकृतानि विरुद्धफलानि कर्माणि सम्भवन्ति । अतस्तेष्वनारब्धफलानामेकस्मिञ्जन्मन्यु पभोगक्षया सम्भवाच्छेषकर्मनिमित्तशरीरारम्भोपपत्तिः कर्मशेषसद्भावसिद्धिश्च । ‘तद्य इह रमणीयचरणाः’ (छा. उ. ५ । १० । ७) ‘ततः शेषेण’ (आ. ध. २ । २ । २ । ३)(गो. स्मृ. ११) इत्यादि श्रुतिस्मृतिशतेभ्यः ।
(ஸித்தாந்தி) அவ்வாறு அல்ல, கர்மம் அநேகமாய் இருப்பதால், ஆரம்பிக்கப்ட்ட பலன்கள், ஆரம்பிக்கப்படாத பலன்கள், அநேக ஜன்மங்களில் செய்த விருத்தபலன்கள் இவைகளுடன் கூடிய கர்மங்கள் இருக்கின்றன. ஆகையால் அந்த ஆரம்பிக்கப்படாத கர்மங்கள் ஒரே ஜன்மத்தில் அநுபவித்து நாசம் அடையமுடியாததால் அதில் மிஞ்சிய கர்மங்களின் காரணமாக வேறு சரீரம் ஆரம்பித்தல் (எடுத்தல்) ஸம்பவிக்கும். கர்ம சேஷத்தின் இருத்தலை “‘तद्य इह रमणीयचरणाः’ (छा. उ. ५ । १० । ७)” (இந்த உலகத்தில் சுபகர்மங்களை செய்பவர்கள்), ‘ततः शेषेण’ (आ. ध. २ । २ । २ । ३)(गो. स्मृ. ११)” (உபயோகம் செய்தபின் மீதமானது) இதைக்குறித்து நூற்றுக்கணக்கான முதலிய ஸ்ருதி, ஸ்மிருதிகள் கர்ம சேஷத்தைக் கூறுகின்றன.
(पूर्वपक्षी) इष्टानिष्टफलानामनारब्धानां क्षयार्थानि नित्यानीति चेत् ?
(பூர்வ) இஷ்ட அநிஷ்ட்ட பலன்களை அளிக்கும் ஸஞ்சிதகர்மங்களை நாசம் செய்வதற்காக நித்யகர்மங்கள் என்று ஆனால்?
(सिध्दान्ती) न ; अकरणे प्रत्यवायश्रवणात् । प्रत्यवायशब्दो ह्यनिष्टविषयः । नित्याकरणनिमित्तस्य प्रत्यवायस्य दुःखरूपस्यागामिनः परिहारार्थानि नित्यानीत्यभ्युपगमान्नानारब्धफलकर्मक्षयार्थानि ।
(ஸி) அவ்வாறு அல்ல. நித்தியகர்மா அனுஷ்ட்டிக்காவிடில் பிரத்யவாயம் (வரும்) என்று சுருதியினால் அறிகிறோம். நித்திய கர்மா அனுஷ்ட்டிகாவிடில் ஆகாமி துக்க ரூப பிரத்யவாயம் உண்டாகிறது. அதை நாசம் செய்வதற்காக நித்தியகர்மா அனுஷ்ட்டிக்கப்படுகிறது. இவ்வாறு இருப்பதால் ஸஞ்சித கர்மத்தை நித்திய கர்மாவால் நாசம் செய்ய முடியாது.
यदि नामानारब्धफलकर्मक्षयार्थानि नित्यानि कर्माणि तथाप्यशुद्धमेव क्षपयेयुर्नशुद्धम् । विरोधाभावात् । न हीष्टफलस्य कर्मणः शुद्धरूपत्वान्नित्यैर्विरोध उपपद्यते । शुद्धाशुद्धयोर्हि विरोधो युक्तः ।
நித்தியகர்மா, எதனுடைய பலன் ஆரம்பமாகவில்லையோ அந்த கர்மத்தை நாசமாக்குவதாக இருந்தாலும் அசுத்த (பாப) கர்மாவையே நாசம் செய்யும். சுத்த கர்மாவை புண்௴யத்தை அல்ல. ஏன் எனில் புண்யத்திற்கு அதுவே விரோதியாகாது. இஷ்டபலத்திற்கான கர்மாக்கள் சுத்த ரூபமாய் இருத்தலால் நித்திய கர்மாக்களோடு விரோதம் இல்லை. சுத்த அசுத்த கர்மாக்களிடையே தான் விரோதம் பொருந்தும்.
न च कर्महेतूनां कामानां ज्ञानाभावे निवृत्त्यसंभवादशेषकर्मक्षयोपपत्ति: । अनात्मविदो हि कामोऽनात्मफलविषयत्वात् । स्वात्मनि च कामानुपपत्तिर्नित्यप्राप्तत्वात् । स्वयं चात्मा परं ब्रह्मेत्युक्तम् ।
மேலும் கர்மாக்களுக்கு காரணமான காமனைகளுக்கு. ஞானம் இல்லாமல் நிவர்த்தி  ஸம்பவிக்காததால் (நித்திய கர்மங்களின் வாயிலாய்) எல்லா கர்மங்களும் நாசமாதல் ஸம்பவிக்காது. ஆத்மவித்தாக இல்லாதவருக்கு காமம் வரும், அநாத்ம ரூபமான பயனைப்பற்றியதால் ஸ்வாத்மாவிடத்தில் காமம் எப்பொழுதும் ஸம்பவிக்காது நித்யப்ராப்தமாய் இருத்தலால். ஸ்வயம் ஆத்மா பரப்ரஹ்ம ஸ்வரூபம் என்று கூறப்பட்டதால்.(ப்ரம்ஹத்தைப்பற்றியும் காமம் கிடையாது.
नित्यानां चाकरणमभावस्ततः प्रत्यवायानुपपत्तिरिति । अतः पूर्वोपचितदुरितेभ्यः प्राप्यमाणायाः प्रत्यवायक्रियाया नित्याकरणं लक्षणमिति ‘अकुर्वन्विहितं कर्म’ (मनु. ११ । ४४) इति हि शतुर्नानुपपत्तिः । अन्यथाभावाद्भावोत्पत्तिरिति सर्वप्रमाणव्याकोप इति । अतोऽयत्नतः स्वात्मन्यवस्थानमित्यनुपपन्नम् ।
நித்தியகர்மா செய்யாமல் இருத்தல் அபாவரூபமாகும். அதனால் பிரத்யவாயம் ஸம்பவித்தல் அசம்பவமாகும். ஆகையால் நித்திய கர்மாவை செய்யாமல் இருப்பது என்பது, முன் சம்பாதித்த (சஞ்சித) பாபங்களினால் ஏற்படப்போகின்ற பிரத்யவாயத்தின் சூசனயாகும். ஆகையால் “‘अकुर्वन् विहितं कर्म’ (मनु. ११ । ४४)” என்ற வாக்கியத்தின் “अकुर्वन्” (அகுர்வன்) என்ற பதத்தில் உள்ள சத்ரு பிரத்யயம்  உசிதமற்றதல்ல. வேறு அபாவத்தால் பாவத்தின் (பொருளின்) உத்பத்தி ஏற்படுதல் என்பது எல்லா பிரமாணங்களுக்கும் விரோதம் வரும். ஆகையால் இவ்வாறு கருதும்போது கர்மானுஷ்ட்டானத்தால் பிரயத்தனமின்றியே ஆத்மாவிடத்தில் ஸ்திதி உண்டாகும் என்பது பொருந்தாது.
यच्चोक्तं निरतिशयप्रीतेः स्वर्गशब्दवाच्यायाः कर्मनिमित्तत्वात्कर्मारब्ध एव मोक्ष इति, तन्न, नित्यत्वान्मोक्षस्य । न हि नित्यं किंचिदारभ्यते । लोके यदारब्धं तदनित्यमिति । अतो न कर्मारब्धो मोक्षः ।
ஸ்வர்காதி சப்தங்களினால் அறியப்படும் நிரதிசய ப்ரீதி கர்மத்திலிருந்து வருவதாக இருப்பதால் மோக்ஷம் கர்மத்தினால் ஆரம்பமாகிறது என்பது கிடையாது. ஏன்எனில் மோக்ஷம் நித்தியம், மேலும் எந்த ஒரு நித்திய வஸ்துவும் ஆரம்பமாகாது. உலகில் எது ஆரம்பிக்கப்பட்டதோ அது அநித்தியம் ஆகையால் கர்மத்தினால் ஆரம்பிக்கப்படுவது மோக்ஷமல்ல.
(पूर्वपक्षी) विद्यासहितानां कर्मणां नित्यारम्भसामर्थ्यमिति चेत् ?
(பூர்வ) ஞானஸஹித கர்மங்களுக்கு நித்திய மோக்ஷத்தை ஆரம்பிப்பதற்கு ஸாமர்த்தியம் உள்ளது என்றால்?
(सिध्दान्ती) न । विरोधात् । नित्यं चारभ्यत इति विरुद्धम् ।
(ஸி) விரோதமாய் இருப்பதால் அவ்வாறு அல்ல, நித்தியமானது ஆரம்பிக்கிறது என்பது விருத்தமாகும் (பொருந்தாததாகும்).
(पूर्वपक्षी) यद्विनष्टं तदेव नोत्पद्यत इति । प्रध्वंसाभाववन्नित्योऽपि मोक्ष आरभ्य एवेति चेत् ।
(பூர்வ) எந்த பொருள் நஷ்டமானதோ அது மறுபடியும் உண்டாகாது. ஆகையால் பிரத்வம் சாபாவம் போல் நித்யமானதாய் இருந்தாலும் மோக்ஷத்திற்கு ஆரம்பம் உண்டு என்றால்?
न , मोक्षस्य भावरूपत्वात् । प्रध्वंसाभावोऽप्यारभ्यत इति न सम्भवति ; अभावस्य विशेषाभावाद्विकल्पमात्रमेतत् । भावप्रतियोगी ह्यभावः । यथा ह्यभिन्नोऽपि भावो घटपटादिभिर्विशेष्यते भिन्न इव घटभावः पटभाव इति, एवं निर्विशेषोऽप्यभावः क्रियागुणयोगाद्द्रव्यादिवद्विकल्प्यते । न ह्यभाव उत्पलादिवद्विशेषणसहभावी । विशेषणवत्त्वे भाव एव स्यात् ।
(சி) மோக்ஷம் பாவரூபமாய் இருப்பதால் அவ்வாறு அல்ல. பிரத்துவம்சாபாவமும் ஆரம்பம் ஆகாது. ஏன்எனில் அபாவத்தில் வேறு ஒரு விசேஷமும் இல்லாததால் அது வெறும் கற்பனையே. பாவத்தின் ப்ரிதியோகியே (எதிரியே) அபாவமாகும். எவ்வாறு பாவம் அபின்னமாய் இருந்தாலும் பின்னம் போல் கடபாவம், படபாவம் என்று இருப்பதுபோல் நிர்விசேஷமாய் இருந்தாலும் அபாவம். கிரியா, குணங்களின் சேர்க்கையால் திரவியங்கள் போல் விகல்பமாகிறது .(ஆம்பல்புஷ்பம் முதலியது) உத்பலாதிகள் போல் அபாவம் விசேஷணம் உடையது அல்ல. விசேஷணத்துடன் இருந்தால் பாவபதார்தமாகும்.
(पूर्वपक्षी) विद्याकर्मकर्तृनित्यत्वाद्विद्याकर्मसन्तानजनितमोक्षनित्यत्वमिति चेत् ?
(பூர்வ) வித்யா, கர்மம், இவைகளின் கர்த்தா நித்யமானதால் வித்யா, கர்மம் இவைகளின் அவிச்சின்னத்தால் உண்டான மோக்ஷம் நித்யத்துவம் என்றால்?
न ; गङ्गास्रोतोवत्कर्तृत्वस्य दुःखरूपत्वात् । कर्तृत्वोपरमे च मोक्षविच्छेदात् । तस्मादविद्याकामकर्मोपादानहेतुनिवृत्तौ स्वात्मन्यवस्थानं मोक्ष इति । स्वयं चात्मा ब्रह्म तद्विज्ञानादविद्यानिवृत्तिरिति ब्रह्मविद्यार्थोपनिषदारभ्यते ।
(சி) கங்கா பிரவாஹம் போல் கருத்திருத்வத்துவம் துக்க ரூபமாய் இருப்பதால் அவ்வாறு அல்ல. கர்த்திருத்துவம் நீங்கும் பொழுது மோக்ஷமும் இல்லாமல் போகும். ஆகையால் அவித்தியா, காம, கர்மம் இவைகளின் உபாதான காரணம் நிவர்த்தி ஆகும்பொழுது ஆத்ம ஸ்வரூபத்தில் நிலைத்தலே மோக்ஷமாகும். ஸ்வயம் ஆத்மா பிரஹ்மம். அதன் ஞானத்தால் அவித்தியா நிவிர்த்தி ஆகும் என்பதால் பிரஹ்ம ஞானத்தின் பொருட்டு இந்த உபநிஷத் ஆரம்பிக்கப்படுகிறது.
उपनिषदिति विद्योच्यते, तच्छीलिनां गर्भजन्मजरादिनिशातानत्तदवसादनाद्वा ब्रह्मणो वोपनिगमयितृत्वादुपनिषण्णं वास्यां परं श्रेय इति । तदर्थत्वात् ग्रन्थोऽप्युपनिषत् ।
உபநிஷத் என்ற பதத்தால் பிரஹ்மவித்யா  கூறப்படுகிறது. அதைக்கடைப்பிடிப்பதில் ஸாமர்த்திய முடையவர்களுக்கு கர்ப, ஜன்ம, ஜரை முதலியவைகளின் நீக்கத்தினாலோ அல்லது பிரஹ்மத்தின் சமீபம் எடுத்துத் செல்வதாலோ பரம ச்ரேய பிரஹ்மத்தில் நிலைத்து இருப்பதால் இந்த பிரஹ்மவித்யா உபநிஷத் எனப்படுகிறது. அந்த பிரஹ்மவித்யாவை போதிப்பதாக இருப்பதால் இந்த கிரந்தமும் உபநிஷத் எனப்படுகிறது.
ओं शं नो मित्रः शं वरुणः । शं नो भवत्वर्यमा । शं न इन्द्रो बृहस्पतिः । शं नो विष्णुरुरुक्रमः । नमो ब्रह्मणे । नमस्ते वायो । त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि । त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि । ऋतं वदिष्यामि । सत्यं वदिष्यामि । तन्मामवतु । तद्वक्तारमवतु । अवतु माम् । अवतु वक्तारम् ॥ ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥ १ ॥
शं सुखं प्राणवृत्तेरह्नश्चाभिमानी देवतात्मा मित्रो नोऽस्माकं भवतु । तथैवापानवृत्ते रात्रेश्चाभिमानी देवतात्मा वरुणः । चक्षुष्य़ादित्ये चाभिमान्यर्यमा । बल इन्द्रः । वाचि बुद्धौ च बृहस्पतिः । विष्णुरुरुक्रमोविस्तीर्णक्रमः पादयोरभिमानी । एवमाद्याध्यात्मदेवताः शं नः । भवत्विति सर्वत्रानुषङ्गः ।
பிராணவிருத்திக்கும் தினத்திற்கும் அபிமானதேவதை மித்திரனும் (சூரியன்) எங்களுக்கு “शं” சுகரூபமாகட்டும், அவ்வாறே அபான விருத்திக்கும் இரவிற்க்கும் அபிமான தேவதாத்மா வருணன். கண்கள், சூரியன். இவைகளின் அபிமானதேவதை அர்யமா. பலத்தின் அபிமான தேவதை இந்திரன். வாக்கு புத்தியின் அபிமான தேவதை பிரஹஸ்பதி “उरुक्रमः” விஸ்தீரண பாதத்தை (அடியை) வைப்பவராகிய விஷ்ணு பாதங்களின் அபிமான தேவதை. இவ்வாறான எல்லா அத்யாத்ம தேவதைகளும் எங்களுக்கு சுகத்தை அளிக்கட்டும். இவ்வாறு உண்டாகட்டும் (அளிக்கட்டும்) என்று எல்லா வாக்கியங்களிலும் ஸம்பந்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.
तासु हि सुखकृत्सु विद्याश्रवणधारणोपयोगा अप्रतिबन्धेन भविष्यन्तीति तत्सुखकर्तृत्वं प्रार्थ्यते शं नो भवत्विति ।
அவர்கள் ஸுகத்தை அளிப்பவர்களாக இருக்கும்போது ஞானத்தின் பொருட்டு சிரவணம் தாரணம் பயன்பாடுகள் நிர்விக்னமாக எற்படும் ஆதலால் “शं नो भवतु” முதலிய மந்திரங்களின் வாயிலாய் சுகத்தைக் கொடுப்பதற்காக பிரார்த்தனை செய்யப்படுகிறது.
ब्रह्म विविदिषुणा नमस्कारवन्दनक्रिये वायुविषये ब्रह्मविद्योपसर्गशान्त्यर्थं क्रियेते । सर्वक्रियाफलानां तदधीनत्वाद् ब्रह्मवायुस्तस्मै ब्रह्मणे नमः । प्रह्वीभावं करोमीति वाक्यशेषः । नमस्तेतुभ्यं हे वायो नमस्करोमिति । परोक्षप्रत्यक्षाभ्यां वायुरेवाभिधीयते ।
பிரஹ்மஜிக்ஞாஸுவினால் பிரஹ்மவித்தைக்கு ஏற்படும் விக்நங்களை நீக்குவதற்காக வாயு விஷயத்தில் நமஸ்காரத்தையும், வந்தனையும் செய்யப்படுகிறது. எல்லா கர்மங்களின் பலனும் வாயுவின் அதீனமாய் இருத்தலால் வாயு பிரஹ்மமாகும். ஆகையால் அந்த பிரஹ்மத்தை வினய பாவத்துடன் நமஸ்காரம் செய்கிறேன் என்பதாகும். வாயுவே உன் பொருட்டு நமஸ்காரம் அதாவது நமஸ்காரம் செய்கிறேன். பரோக்ஷமாகவும் பிரத்யக்ஷமாகவும் வாயுதான் கூறப்படுகிறார்.
किंचत्वमेव चक्षुराद्यपेक्ष्य बाह्यं संनिकृष्टमव्यवहितं प्रत्यक्षं ब्रह्मासि यस्मात्तस्मात्त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि । ऋतं यथाशास्त्रं यथाकर्तव्यं बुद्धौ सुपरिनिश्चितमर्थं तदपि त्वदधीनत्वात्त्वामेव वदिष्यामि । सत्यमिति स एववाक्कायाभ्यां सम्पाद्यमानः सोऽपि त्वदधीन एव संपाद्य इति त्वामेव सत्यं वदिष्यामि ।
மேலும் நீதான் பாஹ்ய கண்முதலியவைகளை அபேக்ஷித்து சமீபத்தில் இருக்கும் அவ்வியஹித அதாவது பிரத்யக்ஷ பிரஹ்மமாய் இருக்கிறாய். எதனால் அவ்வாறு இருக்கிறாயோ அதனால் நீதான் பிரத்யக்ஷ பிரஹ்மம் என்று கூறுவேன். “ऋतं” (ரிதம்) அதாவது “यथाशास्त्रं” (எவ்வாறு சாஸ்த்திரத்தில் கூறப்பட்டதோ அவ்வாறு) “यथाकर्तव्यं” தன்னுடைய கர்த்தவ்யத்தை அனுசரித்து புத்தியில் நிச்சயம் செய்யப்பட்ட அர்த்தம். அதுவும் உன்னுடைய அதீனமாய் இருப்பதால் நீதான் என்று கூறுவேன். சத்தியம் என்பது அதை வாக், சரீரம் இவைகளால் செய்யக்கூடியது. அதுவும் உன் அதீனத்தாலேயே ஸம்பாதிக்கமுடியும். என்பதால் உன்னையே சத்தியம் என்று கூறுவேன்.
तत्सर्वात्मकं वाय्वाख्यं ब्रह्म मयैवं स्तुतं सन्मां विद्यार्थिनमवतु विद्यासंयोजनेन । तदेव ब्रह्म वक्तारमाचार्यं वक्तृत्वसामर्थ्यसंयोजनेनावतु । अवतु मामवतु वक्तारमिति पुनर्वचनमादरार्थम् । ॐ शान्तिः शान्तिः शान्तिरिति त्रिर्वचनमाध्यात्मिकाधिभौतिकाधिदैविकानां विद्याप्राप्त्युपसर्गाणां प्रशमार्थम् ॥
அந்த வாயு எனப்படும் சர்வாத்மக பிரஹ்மம் என்னால் இவ்வாறு ஸ்துதிக்கப்பட்டதாக இருந்துகொண்டு சத்வித்யார்த்தியாகிய என்னை வித்தையில் ஒன்றச்செய்து ரக்ஷிப்பாயாக. அந்த பிரஹ்மமே வக்தாவாகிய ஆசாரியரை உபதேசிக்க ஸாமர்த்தியத்தை அளித்து அவரை ரக்ஷிப்பாயாக. என்னை ரக்ஷி, ஆச்சாரியரையும் ரக்ஷி என்று இரண்டு முறை கூறுதல் ஆதரவின் பொருட்டாகும். ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்று மும்முறை கூறியது ஆத்யாத்மிக, ஆதிபௌதிக, ஆதிதெய்வீகங்களாகிய விக்னங்களை சாந்தி: செய்வதற்காக (நீக்க) கூறப்பட்டதாகும்.
इति प्रथमानुवाकभाष्यम् ॥
முதல் அனுவாகம் முற்றிற்று.
अर्थज्ञानप्रधानत्वादुपनिषदो ग्रन्थपाठे यत्नोपरमो मा भूदिति शीक्षाध्याय आरभ्यते ।
(அ-கை) உபநிஷத்தில் அர்தஞானம் பிரதானமாய் இருப்பதால் அந்த கிரந்தத்தை அத்யயனம் செய்வதில் பிரயத்தனம் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக சீக்க்ஷா அத்தியாயம் ஆரம்பிக்கப்படுகிறது.
शीक्षां व्याख्यास्यामः वर्णः स्वरः । मात्रा बलम् । साम सन्तानः च् इत्युक्तः शीक्षाध्यायः ॥ १ ॥
शिक्षाशिक्ष्यतेऽनयेति वर्णाद्युच्चारणलक्षणम् । शिक्ष्यन्त इति वा शिक्षा वर्णादयः । शिक्षैव शीक्षा । दैर्घ्यं छान्दसम् । तां शीक्षां व्याख्यास्यामो विस्पष्टमा समन्तात्प्रकथयिष्यामः । चक्षिड़ो वा ख्याञादिष्टस्य व्याङ्पूर्वस्य व्यक्तवाक्कर्मण एतद्रूपम् ।
எதனால் எழுத்துக்களின் உச்சாரணம் கற்பிக்கப்படுகிறதோ அதை சிக்ஷா என்கிறோம் அல்லது எழுத்து முதலியவைகளால் கற்பிக்கப்படுவதால் அவை சிக்ஷா எனப்படுகிறது. சிக்ஷாவையே சீக்ஷா என்கிறோம். “दैर्घ्यं” தீர்க்கத்துவம் வேதத்தின் சிறப்பு, அந்த சீக்ஷாவை வியாக்கியானம் அதாவது எவ்விதமாகவும் ஸ்பஷ்ட்டமாக கூறுவோமாக “व्याख्यास्यामः” என்ற பதத்தில் உள்ள वि மேலும் “आङ्” உபசர்க பூர்வக “चक्षिङ्” தாத்துவின் ஸ்தானத்தில் விகல்பமான “चक्षिङ्” ஆதேசம் செய்வதால் அதன் அர்த்தம் ஸ்பஷ்ட்டமாய் உச்சரிக்கப்படுகிறது என்பதாகும்.
तत्र वर्णः अकारादिः । स्वर उदात्तादिः । मात्रा ह्रस्वाद्याः । बलं प्रयत्नविशेषः । साम वर्णानां मध्यमवृत्त्योच्चारणं समता । सन्तानः सन्ततिः, संहितेत्यर्थः । एवं शिक्षितव्योऽर्थः शिक्षा यस्मिन्नध्याये, सोऽयं शीक्षाध्यायः इति एवम् उक्तः उदितः । उक्त इत्युपसंहारार्थः ॥
இங்கு அகாரதிவர்ணம், உதாத்தாதி ஸ்வரம், ஹ்ரஸ்வாதிமாத்திரை முதலியவை, பலம் பிரயத்ன விசேஷம், ஸாமம் மத்யமவிருத்தி உச்சாரணம் ஸமதா, ஸந்தானம் ஸந்ததி என்றால் ஸம்ஹிதா என்பது பொருள். அதுவே சிக்ஷிக்கப்பட வேண்டியது என்பது பொருள். சிக்ஷை இந்த அத்யாயத்தில் அந்த இந்த சீக்ஷா அத்யாயத்தை இவ்வாறு கூறி பிரகாசப்படுத்தப்பட்டது. இங்கு “उक्त” பதம் உபசம்ஹாரத்திற்காக வந்துள்ளது.
इति द्वितीयानुवाकभाष्यम् ॥
இரண்டாவது அனுவாகம் முற்றிற்று.
अधुना संहितोपनिषदुच्यते
(அ-கை) இப்பொழுது சம்ஹிதோ உபநிஷத் கூறப்படுகிறது.
सह नौ यशः । सह नौ ब्रह्मवर्चसम् । अथातः संहितायाः उपनिषदं व्याख्यास्यामः । पञ्चस्वधिकरणेषु । अधिलोकमधिज्योतिषमधिविद्यमधिप्रजमध्यात्मम् । ता महासंहिता इत्याचक्षते । अथाधिलोकम् । पृथिवी पूर्वरूपम् । द्यौरुत्तररूपम् । आकाशः संधिः ॥ १ ॥
वायुः संधानम् । इत्यधिलोकम् । अथाधिज्यौतिषम् । अग्निः पूर्वरूपम् । आदित्य उत्तररूपम् । आपः संधिः । वैद्युतः संधानम् । इत्यधिज्यौतिषम् । अथाधिविद्यम् । आचार्यः पूर्वरूपम् ॥ २ ॥
अन्तेवास्युत्तररूपम् । विद्या संधिः । प्रवचनँसंधानम् । इत्यधिविद्यम् । अथाधिप्रजम् । माता पूर्वरूपम् । पितोत्तररूपम् । प्रजा संधिः । प्रजननँंसन्धानम् । इत्यधिप्रजम् ॥ ३ ॥
अथाध्यात्मम् । अधरा हनुः पूर्वरूपम् । उत्तरा हनुरुत्तररूपम् । वाक्संधिः । जिह्वा संधानम् । इत्यध्यात्मम् । इतीमाः महासँहिता य एवमेता महासँहिता व्याख्याता वेद । संधीयते प्रजया पशुभिः । ब्रह्मवर्चसेनान्नाद्येन सुवर्गेण लोकेन ॥ ४ ॥
तत्र संहिताद्युपनिषत्परिज्ञाननिमितं यद्यशः प्रार्थ्यते तन्नावावयोः शिष्याचार्ययोः सहैवास्तु । तन्निमितं च यद्ब्रह्मवर्चसं तेजस्तच्च सहैवास्त्विति शिष्यवचनमाशीः । शिष्यस्य ह्यकृतार्थत्वात्प्रार्थनोपपद्यते नाऽऽचार्यस्य । कृतार्थत्वात् । कृतार्थोह्याचार्यो नाम भवति ।
அந்த சம்ஹிதா முதலிய உபநிஷத் அறிவதனால் எந்த யசஸ் (புகழ்) ஆனதோ பிரார்த்திக்கப்பட்டதோ அது சிஷ்ய ஆசாரியர்களாகிய எங்கள் இருவரின் பொருட்டாகட்டும். அதனால் உண்டாகும் எந்த பிரஹ்ம வர்ச்சஸ)ம் தேஜஸ்சும் சேர்ந்து இருக்கட்டும். இவ்விதமான ப்ரார்த்தனை சிஷ்யனுடைய வாக்கியமாகும். ஏன்எனில் அகிருதார்த்தமாக இருப்பதால் சிஷ்யனுக்குத்தான் இந்த பிரார்த்தனை ஸம்பவிக்கும். ஆச்சாரியர்க்கு அல்ல. ஏன்எனில் அவர் கிருதார்த்தர் எந்த புருஷன் கிருதார்த்தனோ அவரே ஆச்சாரியர் என்று கருதப்படுகிறார்.
अथानन्तरमध्ययनलक्षणविधानस्य अतो यतोऽत्यर्थं ग्रन्थभाविता बुद्धिर्नशक्यते सहसाऽर्थज्ञानविषयेऽवतारयितुमित्यतः संहिताया उपनिषदं संहिताविषयं दर्शनमित्येतद्ग्रन्थसंनिकृष्टामेव व्याख्यास्यामः । पञ्चस्वधिकरणेष्वाश्रयेषु ज्ञानविषयेष्वित्यर्थः ।
“अथ”என்பது முன்பு கூறி. ஆத்யயன ரூப விதானத்திற்குப்பின் “अतः” ஆகையால் எதனால் கிரந்தத்தை அத்யயனம் செய்வதில் அத்யந்த ஆஸக்தி உடைய புத்தியினால் அர்த்த ஞானத்தில் பிரவிர்த்தி செய்ய முடியவில்லையோ, அதனால் நாம் கிரந்தத்திற்கு ஸமீபமாய் உள்ள ஸம்ஹிதோ உபநிஷத் அதாவது ஸம்ஹிதா ஸம்பந்தமுடைய திருஷ்ட்டியை ஐந்து அதிகரணங்களில் ஆச்ரயிக்கின்ற ஞான விஷயத்தில் வியாக்கியானம் செய்கிறோம் என்பது பொருள். (தாத்பர்யம் என்னவெனில் வர்ணகத்தின் விஷயத்தை ஐந்து பிரகாரமாய் ஞானம் (உபாஸனம்) கூறப்படுகிறது.
कानि तानीत्याह - अधिलोकं लोकेष्वधि यद्दर्शनं तदधिलोकम् । तथाऽधिज्यौतिषमधि विद्यमधिप्रजमध्यात्ममिति । ता एताः पञ्चविषया उपनिषदो लोकादिमहावस्तुविषयत्वात्संहिताविषयत्वाच्च महत्यश्च ताः संहिताश्च महासंहिता इत्याचक्षते कथयन्ति वेदविदः ।
அந்த பஞ்ச (ஐந்து) அதிகரணம் என்ன என்பதைக் கூறுகிறார். अधिलोकं (அதிலோகம்)- எந்த தர்சனமானது லோகவிஷயமோ அது அதிலோகம் எனப்படும், இவ்வாறே அதிஜ்யோதிஷ்ம், அதிவித்யம், அதிப்பிரஜம், மேலும் அத்யாத்மா இவைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். பஞ்சவிஷய சம்பந்திக்கின்ற உபநிஷத்தில் லோகமுதலிய மஹாவஸ்துவிஷயங்களும், ஸம்ஹிதையின் ஸம்பந்தவிஷயங்களும் உள்ளனவோ, ஆகையால் வேதத்தை நன்கு அறிந்தவர்கள் இவைகளை மஹதீஸம்ஹிதா (महतीसंहिता) அதாவது (महासंहिता) மஹாஸம்ஹிதா என்று கூறுகிறார்கள்.
अथ तासां यथोपन्यस्तानामधिलोकं दर्शनमुच्यते । दर्शनक्रमविवक्षार्थोऽथशब्दः सर्वत्र । पृथिवी पूर्वरूपं पूर्वो वर्णः पूर्वरूपम् । संहितायाः पूर्वे वर्णे पृथिवीदृष्टिः कर्तव्येत्युक्तं भवति । तथा चोत्तररूपमाकाशोऽन्तरिक्षलोकः । संधिर्मध्यं पूर्वोत्तररूपयोः संधीयते अस्मिन्पूर्वोत्तररूपे इति । वायुः संधानम् । संधीयतेऽनेनेति संधानम् । इत्यधिलोकं दर्शनमुक्तम् । अथाधिज्यौतिषमित्यादि समानम् ।
முன் கூறப்பட்ட (ஐந்து வகை உபாசனைகளில்) முதலில் அதிலோக திருஷ்ட்டி கூறப்படுகிறது. தர்சனகிரமத்தை விவரிப்பதற்காக अथ (அத) ஸப்தம் எல்லா இடத்திலும் கூறப்பட்டுள்ளது பிருதிவீ பூர்வரூபம், பூர்வவர்ணம் பூர்வரூபம். இதனால் கூறப்படுகிறது ஸம்ஹிதையின்(சந்தியின்) முதல் வர்ணத்தில் பிரிதிவீதிருஷ்ட்டியை செய்யவேண்டும். இவ்வாறே உத்தரரூபம் (கடைசி எழுத்து) ஆகும். ஆகாசம் அதாவது அந்தரிக்ஷம் சந்தி அதாவது முதலாவது, கடைசி ரூபத்தின் மத்தியம் அதாவது இதனால் முதல், கடைசி இரண்டும் ஒன்றாக்கப்படுகிறது. வாயு ஸந்தானம் எதனால் ஸந்தானம் உண்டாகிறதோ அதுஸந்தானம் எனப்படுகிறது. இவ்வாறு அதிலோக தர்சனம் கூறப்பட்டது, இதற்கு ஸமமாக “अथाधिज्यौतिषम्” (அதாதிஜ்யோதிஷம்) முதலிய மந்திரங்களின் அர்த்தங்களும் அறியப்படவேண்டியவை ஆகும்.
इतीमा इत्युक्ता उपप्रदर्श्यन्ते । यः कश्चिदेवमेता महासंहिता व्याख्याता वेदोपास्ते । वेदेत्युपासनं स्याद्विज्ञानाधिकारात् “इति प्राचीनयोग्योपास्स्व” इति च वचनात् । उपासनं च यथाशास्त्रं तुल्यप्रत्ययसंततिरसंकीर्णा चातत्प्रत्ययैः शास्त्रोक्तालम्बनविषया च । प्रसिद्धश्चोपासनशब्दार्थो लोके गुरुमुपास्ते, राजानमुपास्त इति, यो हि गुर्वादीन्संततमुपचरति स उपास्त इत्युच्यते । स च फलमाप्नोत्युपासनस्य । अतोऽत्रापि च य एवं वेद संधीयते प्रजादिभिः स्वर्गान्तैः प्रजादिफलान्याप्नोतीत्यर्थः ॥
इति तृतीयानुवाकभाष्यम् ॥
“इति” “इमा” (இதி, இமா) என்ற இரண்டு பதங்களும் முன்பு கூறப்பட்ட தர்சனங்களை விவரிக்கிறது. எவன் ஒருவன் இவ்விதமாய் வியாக்கியானம் செய்யப்பட்ட இந்த மஹா ஸம்ஹிதையை அறிகிறானோ அதாவது உபாஸனை செய்கிறானோ இங்கு “वेद” சப்தத்தால் உபாசனையை அறிய வேண்டும். எவ்வாறு எனில் “इति प्राचीनयोग्योपास्स्व” இனிவரும் வசனங்களால் சித்திக்கிறது. சாஸ்திரத்தில் உள்ளவாறு ஸமமான பிரத்யயத்தின் பிரஹ்ாஹம் உபாஸனையாகும் அந்த விருத்திபிரவாஹம் விஜாதீய பிரத்யயம் இல்லாத மேலும் சாஸ்திரத்தில் கூறப்பட்ட ஆலம்பனத்தை ஆச்ரயித்து உபாஸனை செய்யவேண்டும். உலகில் “குருவை உபாஸிக்கிறான்”, “ராஜாவை உபாஸிக்கிறான்” என்பது முதலிய வாக்கியங்களால் “உபாஸனா” சப்தத்தின் அர்த்தம் பிரஸித்தமாய் இருக்கிறது. எந்த புருஷன் குரு முதலியவர்களை எப்பொழுதும் உபசாரம் செய்கிறானோ அவனை உபாஸனை செய்கிறான் என்று கூறப்படுகிறது. அவன் அந்த உபாஸனையின் பலனை அடைகிறான், ஆகையால் இந்த மஹாஸம்ஹிதை ஸம்பந்தமாய் எவன் ஒருவன் இவ்வாறு உபாசனை செய்கிறானோ அவன் பிரஜை முதல் ஸ்வர்க்கம் வரையிலும் உள்ள எல்லா ஸம்பத்துக்களையும் அடைகிறான். அதாவது பிரஜை முதலிய பயனை அடைகிறான் என்பது பொருள்.
மூன்றாவது அனுவாகம் முற்றிற்று.
यश्छन्दसामिति मेधाकामस्य श्रीकामस्य च तत्प्राप्तिसाधनं जपहोमावुच्येते । “स मेन्द्रो मेधया स्पृणोतु” “ततो मे श्रियमावह” इति च लिङ्गदर्शनात् -
(அ-கை) இப்பொழுது “यश्छन्दसाम्” என்ற மந்திரங்களால் மேதையை விரும்புபவன் (मेधाकामि) அவ்வாறே செல்வத்தை விரும்புபவன் (श्रीकामि) ஆகியவரின் விருப்பங்களின் பிராப்த்திகாக அவைகளுக்கு சாதனங்களான ஜபம், ஹோமம் இவைகள் கூறப்படுகிறது. ஏன்எனில் “स मेन्द्रो मेधया स्पृणोतु” (அந்த இந்திரன் என்னை மேதையால் பிரஸன்னமாக்கட்டும்) அவ்வாறே “ततो मे श्रियमावह” (ஆகையால் அந்த செல்வத்தை எனக்கு அடையச்செய்வீராக) என்ற வாக்கியங்களிலிருந்து குறிப்பை அறிகிறோம்-
यश्छन्दसामृषभो विश्वरूपः । छन्दोभ्योऽध्यमृतात्संभूव । स मेन्द्रो मेधया स्पृणोतु । अमृतस्य देवधारणो भूयासम् । शरीरं मे विचर्षणम् । जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरि विश्रुवम् । ब्रह्मणः कोशोऽसि मेधयापिहितः श्रुतं मे गोपाय । आवहन्ती वितन्वाना ॥ १ ॥
कुर्वाणाचीरमात्मनः । वासाँसि मम गावश्च । अन्नपाने च सर्वदा । ततो मे श्रियमावह । लोमशां पशुभिः सह स्वाहा । आमायन्तु ब्रह्मचारिणः स्वाहा । विमायन्तु ब्रह्मचारिणः स्वाहा । प्रमायन्तु ब्रह्मचारिणः स्वाहा । दमायन्तु ब्रह्मचारिणः स्वाहा । शमायन्तु ब्रह्मचारिणः स्वाहा ॥ २ ॥
यश्छन्दसां वेदानामृषभ इवर्षभः प्राधान्यात् । विश्वरूपः सर्वरूपः सर्ववाग्व्याप्तेः। ‘तद्यथा शङ्कुना सर्वाणि पर्णानि सन्तृण्णान्येवमोङ्कारेण सर्वा वाक्सन्तृण्णोङ्कार एवेदं सर्वम्’ (छा. उ. २ । २३ । ३) इत्यादि श्रुत्यन्तरात् । अत एवर्षभत्वमोङ्कारस्य । ओङ्कारो ह्यत्रोपास्य इति ऋषभादिशब्दैः स्तुतिर्न्याय्यैवोङ्कारस्य । छन्दोभ्यो वेदेभ्यो वेदा ह्यमृतं तस्मादमृतादधिसंबभूव । लोकदेववेदव्याहृतिभ्यः सारिष्ठं जिघृक्षोः प्रजापतेस्तपस्यत ओङ्कारः सारिष्ठत्वेन प्रत्यभादित्यर्थः । न हि नित्यस्योङ्कारस्याञ्जसैवोत्पत्तिरेव कल्प्यते । स एवंभूत ओङ्कार इन्द्रः सर्वकामेशः परमेश्वरो मा मां मेधया प्रज्ञया स्पृणोतु प्रीणयतु बलयतु वा । प्रज्ञाबलं हि प्रार्थ्यते ।
(ச.பா) ஓம்காரம் பிரதானமாய் இருப்பதால் ஸந்தஸ் (छन्दस्) வேதத்தில் மேலானதைப்போல் மேலானது (ச்ரேஷ்ட்டத்தைப்போல் ஸ்ரேஷ்டமானது) அவ்வாறே எல்லா வாக்கிலும் வியாபித்திருப்பதால் விச்வரூபமாய் இருக்கிறதோ அது ஸர்வமயமாகும். ‘तद्यथा शङ्कुना सर्वाणि पर्णानि सन्तृण्णान्येवमोङ्कारेण सर्वा वाक्सन्तृण्णोङ्कार एवेदं सर्वम्’ (छा. उ. २ । २३ । ३) (அது எவ்வாறு இலைகளில் உள்ள நரம்புகள் போல்) முதலிய வேறு ச்ருதிகளால் அறிகிறோம். ஆகையால் இவ்வாறு ஓம்காரத்திற்கு (ऋषभः) ச்ரேஷ்ட்டத்தன்மை ஆகும். ஓம்காரமே உபாசிக்கத்தகுந்தது என்று “ऋषभ” (சிறப்பானது) என்ற சப்தங்களால் ஸ்துதி செய்யப்படுவது உசிதமே ஆகும். छन्दोभ्यो வேதங்களிலிருந்து அறிவது தான் அம்ருதம் ஆகையால் அந்த அம்ருதத்தால் பிரதானரூபமாயிற்று. இழ்ன் தாத்பர்யம் என்னவெனில் தேவதை, வேதம், வியாஹ்ருதி இவைகளால் எல்லாவற்றிலும் உத்கிருஷ்ட்டமான ஓம்காரத்தை கிரஹிப்பதில் உள்ள இச்சையால் தபஸ் செய்து கொண்டிருக்கும் பிரஜாபதிக்கும் ஓம்காரமே மிகவும் உத்தமமான ஸாரரூபமாய் விளங்கிற்று. ஏன்எனில் நித்தியமான ஓம்காரத்திற்கு தானாகவே உத்பத்தியை கல்பனை செய்ய முடியாது இவ்விதமான ஓம்காரரூப இந்திரன் எல்லா காமனைகளுக்கும் தலைவனாகிய பரமேஷ்வரன் என்னை மேதைவாயிலாய் பிரசன்னமாக்கட்டும் அல்லது என்னை பலமுடையவன் ஆக்கட்டும் இவ்வாறு புத்தியின் பலத்திற்காக பிரார்த்தனை செய்யப்படுகிறது.
अमृतस्य अमृतत्वहेतुभूतस्य ब्रह्मज्ञानस्य तदधिकारात् , हे देव धारणो धारयिता भूयासं भवेयम् । किं च शरीरं मे मम विचर्षणं विचक्षणं योग्यमित्येतत् । भूयादिति प्रथमपुरुषविपरिणामः । जिह्वा मे मधुमत्तमा मधुमत्यतिशयेन मधुरभाषिणीत्यर्थः । कर्णाभ्यां श्रोत्राभ्यां भूरि बहु विश्रुवं व्यश्रवं श्रोता भूयासमित्यर्थः । आत्माज्ञानयोग्यः कार्यकरणसंघातोऽस्त्विति वाक्यार्थः । मेधा च तदर्थमेव हि प्रार्थ्यते ।
ஹே! தேவனே! நான் அம்ருதன் அதாவது நான் அம்ருதத்தை அடைவதற்கு ஹேதுவான பிரஹ்ம ஞானத்திற்கு யோக்கியனாய் இருப்பதால் அதை தரிப்பதற்கு அருகதை உள்ளவனாக ஆவேனாக, அவ்வாறே என் சரீரமும் அதற்கு யோக்கியமாகட்டும். என்னுடைய நாக்கு மது உடையது ஆகட்டும். அதாவது இனிமையான பேச்சு உடையதாக ஆகட்டும். என்னுடைய செவிகள் நல்ல அநேக சிரவணம் உடையதாக ஆகட்டும். இதன் பொருள் என்னவெனில் ஆத்ம ஞானத்திற்கு காரியகரண ஸங்காத்தங்கள் யோக்கியதை உடையதாகட்டும். மேதையையும் அதன் பொருட்டே பிரார்த்திக்கப்படுகிறது.
ब्रह्मणः परमात्मनः कोशोऽसि । असेरिवोपलब्ध्यधिष्ठानत्वात् । त्वं हि ब्रह्मणः प्रतीकं त्वयि ब्रह्मोपलभ्यते । मेधया लौकिकप्रज्ञया पिहित आच्छादितः स त्वं सामान्यप्रज्ञैरविदिततत्त्व इत्यर्थः । श्रुतं श्रवणपूर्वकमात्मज्ञानादिकं मे गोपाय रक्ष । तत्प्राप्त्यविस्मरणादि कुर्वित्यर्थः । जपार्था एते मन्त्रा मेधाकामस्य ।
பிரஹ்மத்திற்கு அதாவது பரமாத்மாவிற்கு கோசமாய் இருக்கிறாய் கத்திக்கு உரைபோல் அடையவேண்டியதின் அதிஷ்டானமாய் இருப்பது போல் ஆகும். நீதான் பிரஹ்மத்தின் பிரதீகம். ஆகையால் உன்னிடத்தில் பிரஹ்மம் அடையப்படுகிறது. மேதையினால் அதாவது லௌகிக பிரக்ஞையினால் மறைக்கப்பட்ட அந்த நீ ஸாமான்ய பிரக்ஞையினால் தத்துவத்தை அறியமுடியாது என்பது பொருள். கேட்கப்பட்ட அதாவது சிரவணவாயிலாய் அடைந்த ஆத்ம ஞானம் முதலியவைகளை என்னிடத்தில் காப்பாற்றுவாயாக அடைந்ததனை மறக்காமல் இருக்கும் படி செய்வாயாக. இந்த மந்திரம் மேதையை விரும்பும் புருஷனுக்கு ஜபத்தின் பொருட்டாகும்.
होमार्थास्त्वधुना श्रीकामस्य मन्त्रा उच्यन्ते । आवहन्त्यानयन्ती । वितन्वाना विस्तारयन्ती । तनोतेस्तत्कर्मत्वात् । कुर्वाणा निर्वर्तयन्ती । अचीरमचिरं क्षिप्रमेव । छान्दसो दीर्घः । चिरं वा कुर्वाणा । आत्मनो मम , किमित्याह-वासांसि वस्त्राणि मम गावश्च गाश्चेति यावत् अन्नपाने च सर्वदैवमादीनि कुर्वाणा श्रीर्या तां ततो मेधानिर्वर्तनात्परमावहाऽऽनय। अमेधसो हि श्रीरनर्थायैवेति ।
இப்பொழுது ஶ்ரீகாமனுக்கு (செல்வம் வேண்டுபவனுக்கு) வேண்டிய ஹோமத்திற்கான மந்திரம் கூறப்படுகிறது. आवहन्ती (ஆவஹந்தி) கொண்டுவருவது वितन्वाना(விதன்வானா) விஸ்தாரம் செய்வது. ஏன்எனில் “तनु” (தநு) என்றனையின் அர்த்தம் விஸ்தரித்தல் कुर्वाणा (குர்வாணா) செய்வது अचिरं (அச்சிரம்) உடனே அல்லது சீக்கிரம் छान्दसः (ச்சாந்தச:) தீர்க்கம். அல்லது என்பொருட்டு ஸ்திரமாக செய்கிறது?. அது என்னவெனில் எனக்கு வஸ்திரங்கள், எனக்கு பசுக்கள், அன்னம், பானம் முதலிய எந்த ஶ்ரீகள் (செல்வங்கள்) எப்பொழுதும் அடையச்செய்கிறது. நான் நல்ல மேதையை அடைந்த பின் என்னிடம் வரவேண்டும் ஏன் எனில் புத்தி (மேதை) அற்றவனிடத்தில் ஶ்ரீ (செல்வம்) அநத்தர்த்திற்குக் ஹேதுவாகும்.
किंविशिष्टाम् । लोमशामजाव्यादियुक्तामन्यैश्च पशुभिः संयुक्तामावहेत्यधिकारादोङ्कार एवाभिसंबध्यते । स्वाहा स्वाहाकारो होमार्थमन्त्रान्तज्ञापनार्थः । आयन्तु मामिति व्यवहितेन संबन्धः । ब्रह्मचारिणो विमाऽऽयन्तु प्रमाऽऽयन्तु दमायन्तु शमायन्त्वित्यादि ।
வேறு என்ன விசேஷணங்களுடன் கூடிய ஶ்ரீ (சம்பத்) கிடைக்கும்? ரோமங்கள் அடர்த்தியாய் உள்ள செம்மறி ஆடு, வெள்ளாடு முதலிய சம்பத்தை கூறியவாறு மேதை உடன் கிடைக்கச்செய்வாயாக. இங்கு “आवह” (ஆவஹ) கிரியைக்கு அதிகாரம் ஆவதால் ஓம்காரத்துடன் சம்பந்தம் உள்ளது ஸ்வாஹா. என்ற ஸ்வாஹாகரம் ஹோமத்திற்கான மந்திரத்தை ஞாபகப்படுத்துவதற்காக ஆகும். பிரஹ்மச்சாரிகளை என்னிடத்தில் வரவழைக்கச்செய். பிரஹ்மச்சாரிகள் என்னை வந்து அடையட்டும். ஸ்வாஹா பிரஹ்மச்சாரிகள் என்னைக்குறித்து நிஷ்கபடர்களாகட்டும் ஸ்வாஹா. அவர்கள் ஞானத்தை தாரணை செய்யட்டும் ஸ்வாஹா. இந்திரியங்களை அடக்கட்டும் ஸ்வாஹா மனோநிக்ரஹம் செய்யட்டும் ஸ்வாஹா முதலியவைகள்.
यशो जनेऽसानि स्वाहा । श्रेयान् वस्यसोऽसानि स्वाहा । तं त्वा भग प्रविशानि स्वाहा । स मा भग प्रविश स्वाहा । तस्मिन्सहस्रशाखे निभगाहं त्वयि मृजे स्वाहा । यथापः प्रवता यन्ति । यथा मासा अहर्जरम् । एवं मां ब्रह्मचारिणो धातरायन्तु सर्वतः स्वाहा । प्रतिवेशोसि प्रमा पाहि प्र मा पद्यस्व ॥ ३ ॥
यशो यशस्वी जने जनसमुहेऽसानि भवानि । श्रेयान्प्रशस्यतरो वस्यसो वसीयसो वसुतराद्वसुमत्तराद्वासानीत्यन्वयः । किं च तं ब्रह्मणः कोशभूतं त्वा त्वां हे भग भगवन्पुजावन्प्रविशानि प्रविश्य चानन्यस्त्वदात्मैव भवानीत्यर्थः । स त्वमपि मा मां भग प्रविशाऽऽवयोरेकत्वमेवास्तु । तस्मिंस्त्वयि सहस्रशाखे बहुशाखाभेदे हे भगवन् निमृजे शोधयाम्यहं पापकृत्याम् ।
(ச.பா) நான் ஜனங்களால் புகழ் பெற்றவனாக ஆவேன், சிறந்த புகழத்தக்க செல்வமுடைய தனவான்கஞள் சிறந்த தனவான் ஆவேன். அவ்வாறே ஹே பகவானே! னீஜைக்கு உரியவரே! பிரஹ்மத்திற்கு கோச பூதமாயுள்ள உன்னிடத்தில் பிரவேசிக்கிறேன் அதாவது உன்னைக்காட்டிலும் வேறாக இல்லாததால் நீ ஆத்மாவேதான். ஆகையால் பகவானே என்னிடத்தில் பிரவேசம் செய். இருவரும் ஒருவரே என்பதாகட்டும். ஹே பகவன்! - அநேக சாகைகளை உடைய உன்னிடத்தில் நான் என் பாபகர்மங்களை சுத்தப்படுத்துகிறேன்.
यथा लोके आपः प्रवता प्रवणवता निम्नवता देशेन यन्ति गच्छन्ति । यथा च मासा अहर्जरं संवत्सरोऽहर्जरः । अहोभिः परिवर्तमानो लोकाञ्जरयतीत्यहानि वाऽस्मिञ्जीर्यन्त्यन्तर्भवन्तीत्यहर्जरः। तं च यथा मासा यन्त्येवं मां ब्रह्मचारिणो हे धातः सर्वस्य विधातः, मामयन्त्वागच्छन्तु सर्वतः सर्वदिग्भ्यः ।
எவ்வாறு உலகில் ஜலமானது கீழ்நோக்கி உள்ள இடத்திற்கு செல்லுமோ, மாதம் எவ்வாறு வருடத்தை அடைகிறதோ, வருடத்தை अहर्जरः (அஹர்ஜர) எனப்படுகிறது ஏன்எனில் தின ரூபமாய் பிரவிர்த்தித்து உலகத்தை ஜீர்ணம் செய்கிறது. அல்லது அதில் தினம் ஜீரணம் அதாவது வருடத்தில் அந்தர் பூதமாகிறது. ஆகையால் அஹர்ஜரம் எனப்படுகிறது. எவ்வாறு வருடத்தில் மாதம் சேர்கிறதோ அவ்வாறு ஹே! தாத:! எவ்வற்றையும் அளிப்பவரே என்னிடம் எல்லா திசைகளில் இருந்தும் பிரஹ்மச்சாரிகளை வரச் செய்வாயாக.
प्रतिवेशः- श्रमापनयनस्थानमासन्नगृहमित्यर्थः । एवं त्वं प्रतिवेश इव प्रतिवेशस्त्वच्छीलिनां सर्वपापदुःखापनयनस्थानमसि, अतो मा मां प्रति प्रभाहि प्रकाशयात्मानं प्रपद्यस्व च । मां रसविद्धमिव लोहं त्वन्मयं त्वदात्मानं कुर्वित्यर्थः ।
प्रतिवेशः-சிரமத்தைப் போக்குகின்ற ஸ்தானம், அதாவது அருகில் உள்ள வீடு என்பது பொருள். இவ்வாறு நீ பிரதிவேசம் போல் அது தன்னை அனுசரிப்பவர்களுடைய துக்கத்தைப்போக்கும் ஸ்தானமாகிறது ஆகையால் உன்னை வணங்குகிறேன். அதனால் என்னைக்குறித்து உன் பிரகாசத்தால் என்னை உன்பிரகாசமாகிய ஆத்மாவை அடையச்செய்வாயாக, பாதரசத்துடன் கூடிய உலோகத்தைப்போல் என்னை உன்னுடன் அபின்னமாக்கு. (ஒன்றாகச்செய்)
श्रीकामोऽस्मिन्विद्याप्रकरणेऽभिधीयमानो धनार्थः । धनं च कर्मार्थम् । कर्म चोपात्तदुरितक्षयाय । तत्क्षये हि विद्या प्रकाशते । तथा च स्मृतिः - ‘ज्ञानमुत्पद्यते पुंसां क्षयात्पापस्य कर्मणः । यथादर्शतले प्रख्ये पश्यन्त्यात्मानमात्मानि’ (म. भा. शां. २०४ । ८)(गरुड. १ । २३७ । ६) इति ॥
இந்த வித்யா பிரகரணத்தில் தெரிவிக்கப்பட்ட ஶ்ரீகாமன் அதாவது தனத்தை விரும்புபவன் ஆவான். ஏன்எனில் அந்த தனம் கர்மத்தின் பொருட்டாகும். அந்த கர்மத்தால் பாபம் நசிக்கப்படுகிறது. பாபம் நீங்கும் பொழுது அல்லவா வித்யா (ஞானம்) வெளிப்படுகிறது (பிரகாசிக்கிறது). அவ்வாறே ஸ்மிருதியிலும் ‘ज्ञानमुत्पद्यते पुंसां क्षयात्पापस्य कर्मणः । यथादर्शतले प्रख्ये पश्यन्त्यात्मानमात्मानि’ (म. भा. शां. २०४ । ८)(गरुड. १ । २३७ । ६) கர்மத்தால் பாபம் நசிக்கும் பொழுது ஞானம் உண்டாகிறது. எவ்வாறு கண்ணாடி சுத்தமாக்கப்பட்ட பின் முகம் தெளிவாக தெரிகிறதோ அவ்வாறு சுத்த அந்தக்கரணத்தில் ஆத்ம ஸாக்ஷாத்காரம் உண்டாகும்.
इति चतुर्थानुवाकभाष्यम् ॥
संहिताविषयमुपासनमुक्तम् । तदनु मेधाकामस्य श्रीकामस्य मन्त्रा अनुक्रान्तास्ते च पारम्पर्येण विद्योपयोगार्था एव । अनन्तरं व्याहृत्यात्मनो ब्रह्मणोऽन्तरुपासनं स्वाराज्यफलं प्रस्तूयते ।
(அ-கை) ஸம்ஹிதா ஸம்பந்தமான உபாஸனைக் கூறப்பட்டது. அதன்பின் மேதாகாமன், ஶ்ரீகாமன் ஆகிய புருஷர்களுக்கான மந்திரங்கள் சொல்லப்பட்டன. அவைகள் பரம்பரையாக ஞானத்திற்கான உபயோகத்தின் பொருட்டாகும். அதன் பின் இப்பொழுது வ்யாஹ்ருதி ரூபமான பிரஹ்மத்தின் அந்தர்(உள்) உபாஸனை ஸ்வராஜ்ய பலத்தைதருவது சொல்ல ஆரம்பிக்கப்படுகிறது.
भूर्भुवः सुवरिति वा एतास्तिस्रो व्याहृतयः । तासामु ह स्मैतां चतुर्थी माहाचमस्यः प्रवेदयते । मह इति । तद्ब्रह्म । स आत्मा । अङ्गान्यन्या देवताः । भूरिति वा अयं लोकः । भुव इत्यन्तरिक्षम् । सुवरित्यसौ लोकः ॥ १ ॥
मह इत्यादित्यः । आदित्येन वाव सर्वे लोका महीयन्ते । भूरिति वा अग्निः । भुव इति वायुः । सुवरित्यादित्यः । मह इति चन्द्रमाः । चन्द्रमसा वाव सर्वाणि ज्योती्ँषि महीयन्ते । भूरिति वा ऋचः । भुव इति सामानि । सुवरिति यजू्ँँषि ॥ २ ॥
मह इति ब्रह्म । ब्रह्मणा वाव सर्वे वेदा महीयन्ते । भूरिति वै प्राणः । भुव इत्यपानः । सुवरिति व्यानः । मह इत्यन्नम् । अन्नेन वाव सर्वे प्राणा महीयन्ते । ता वा एताश्चतस्रश्चतुर्धा । चतस्रश्चतस्रो व्याहृतयः । ता यो वेद स वेद ब्रह्म । सर्वेऽस्मै देवा बलिमावहन्ति ॥ ३ ॥
भूर्भुवः सुवरिति इतीत्युक्तोपप्रदर्शनार्थः । एतास्तिस्र इति च प्रदर्शितानां परामर्शार्थः। परामृष्टाः स्मार्यन्ते वाइति अनेन । तिस्र एताः प्रसिद्धा व्याहृतयः स्मर्यन्ते तावत् । तासामियं चतुर्थी व्याहृतिर्मह इति । तामेतां चतुर्थीं महाचमसस्यापत्यं माहाचमस्यः प्रवेदयते । उ ह स्म, इत्येतेषां वृत्तानुकथनार्थत्वाद्विदितवान्द दर्शेत्यर्थः। माहाचमस्यग्रहणमार्षानुस्मरणार्थम् । ऋषिस्मरणमप्युपासनाङ्गमिति गम्यत इहोपदेशात् ।
(ச.பா) भूर्भुवः सुवरिति (பூ: புவ: ஸுவ: என்று) இதில் உள்ள “इति” (என்ற) சப்தம் முன்பு கூறிய (வியாகிருதிகளைக் காண்பிக்கப்பதர்க்காக “एतास्तिस्र” என்ற சப்தமும் முன்பு காண்பிக்கப்பட்ட வ்யாஹ்ருதிகளை விரிவாக விளக்குவதற்காக ஆகும். “वै” என்ற அவ்வியயத்தால் விளக்கப்பட்ட வியாஹ்ருதிகளை ஞாபக படுத்தப்பட்டுள்ளது. அதாவது மூன்று பிரசித்தமான வியாகிருதிகளைக் காண்பித்து அதில் “महः” (மஹ:) என்பது நான்காவது வியாஹ்ருதியாகும். இந்த நான்காவது வ்யாஹ்ருதியை மஹாசமஸ்யருடைய பிள்ளை மாஹாசமஸ்யர் அறிந்திருக்கிறார். “उ ह स्म” (உ. ஹ.ஸ்ம) ஆகிய நிபாதங்கள் நடந்ததை ஸ்மரிப்பதற்காக இருப்பதால் அவர் அறிந்திருந்தார். பார்த்தார் என்று பொருள். (வியாகிருதியின் த்ரஷ்ட்டா) ரி:யை ஞாபகபடுத்துவதற்காக மாஹாசமஸ்யர் என்ற பெயர் கூறப்பட்டது. இவ்வாறு உபதேசிக்கப்பட்டதால் என்ன அறிகிறோம் எனில் ரி:யை ஸ்மரிப்பது உபாசனையின் ஒரு அங்கம் என்று.
येयं माहाचमस्येन दृष्टा व्याहृतिर्मह इति तद्ब्रह्म महद्धि ब्रह्म । महश्च व्याहृतिः । किं पुनस्तत् ? स आत्मा । आप्नोतेर्व्याप्तिकर्मणः आत्मा । इतराश्च व्याहृतयो लोका देवा वेदाः प्राणाश्च मह इत्यनेन व्याहृत्यात्मनादित्यचन्द्रब्रह्मान्नभूतेन व्याप्यन्ते यतः अतोऽङ्गान्यवयवा अन्या देवताः । देवताग्रहणमुपलक्षणार्थं लोकादीनाम् । मह इत्येतस्य व्याहृत्यात्मनोदेवलोकादयः सर्वेऽवयवभूताः यतोऽत आहादित्यादिभिर्लोकादयो महीयन्तेइति । आत्मनोह्यङ्गानि महीयन्ते महनं वृद्धिरुपचयः महीयन्ते वर्धन्त इत्यर्थः ।
எந்த महः(மஹ:) என்று வியாகிருதி மாஹாசமஸ்யரால் பார்க்கப்பட்டதோ அது பிரஹ்மமாகும். பிரஹ்மம் மஹத்தானது, அன்றோ! வியாகிருதியும் மஹத்தானது (महः = மஹ:) அது ஆத்மாவாகும், வியாப்த்தி அர்த்தமுடைய (आप्) ஆப்தாத்துவினால் ஆத்மசப்தம் கிடைக்கிறது. தேவ, வேத, மேலும் பிராண ரூபமற்றவியாகிருதிகள் ஆதித்தியன், சந்திரன் பிரஹ்மம், அவ்வாறே அன்னரூப வ்யாஹ்ருதி ஆத்மாவான மஹத்தில் வியாபிக்கிறது. ஆகையால் மற்றதேவதைகள் அங்கமாகும். அதாவது அவயவங்களாகும். லோகாதிகளை உபலக்ஷணமாக செய்வதன் பொருட்டு இங்கு தேவதா சப்தம் எடுத்துக் கொள்ளப்பட்டது “महः” (மஹ:) என்ற இந்த வியாகிருதி யாத்மாவிற்கு எல்லா தேவலோகம் முதலியவைகள் அவயவபூதங்களாய் இருக்கின்றனவோ அதனால் ஆதித்தியன் முதலியவைகளால் லோகம் முதலியவைகள் மஹிமை அடைகின்றன என்று கூறப்படுகிறது. ஆத்மாவினால் அல்லவா அவயவங்கள் மஹிமையை அடைகின்றன. महत् (மஹத்) என்ற சப்தத்தின் அர்த்தம் விருத்தி (வளர்ச்சி) என்பதாகும். மஹீயந்தே (महीयन्ते) என்றால் விருத்தி அடைகின்றன என்பது பொருள்.
अयं लोकोऽग्निर्ऋग्वेदः प्राण इति प्रथमा व्याहृतिर्भुरिति । एवमुत्तरोत्तरैकैका चतुर्धा भवति । मह इति ब्रह्म । ब्रह्मेत्योंकारः, शब्दाधिकारेऽन्यस्यासंभवात् । उक्तार्थमन्यत् ।
இந்த லோகம், அக்னி, ரிக்வேதம், பிராணன் என்பது முதலாவதான “भूः” (பூ:)என்ற வ்யாஹ்ருதியாகும். இவ்வாறு உத்தரோத்திர ஒவ்வொரு வ்யாஹ்ருதியும் நான்கு, நான்கு பிரகாரமாய் இருக்கிறது. “महः” (மஹ:) என்பது பிரஹ்மம். பிரஹ்மத்தின் அர்த்தம் ஓம்காரமாகும், ஏன்எனில் சப்த அதிகரணத்தில் வேறு ஒன்றும் பிரஹ்மமாக ஆகமுடியாது ஸம்பவிக்காது வேறு அர்த்தம் என்பது முன்பே கூறப்பட்டது.
ता वा एताश्चतस्रश्चतुर्धेति । ता वा एता भूर्भुवः सुवर्मह इति चतस्र एकैकशश्चतुर्धा चतुष्प्रकाराः । धाशब्दः प्रकारवचनः । चतस्रश्चचतस्रः सत्यश्चतुर्धा भवन्तीत्यर्थः । तासां यथाक्लृप्तानां पुनरुपदेशस्तथैवोपासननियमार्थः । ता यथोक्तव्याहृतीर्यो वेद स वेद विजानाति । किं ब्रह्म ।
அந்த நான்கு விதமான வியாக்ருதிகளும் நான்கு, நான்கு பிரகாரங்களாய் இருக்கின்றன. அவைகள்: “भूः भुवः सुवः महः” (பூ: புவ: ஸுவ: மஹ:) என்ற நான்கு வ்யாஹ்ருதிகளும் ஒவ்வொன்றும் நான்கு பிரகாரங்களாய் இருக்கின்றன. “धा” (தா) என்ற சப்தம் பிரகாரங்களாக உள்ளன. நான்கும், நான்கு நான்கு பிரகராமாய் ஆகின்றன என்பது பொருள். அவைகள் எவ்விதமாய் கல்பனை செய்யப்பட்டதோ அவ்வாறு உபாசனை செய்வதற்கான நியமம் செய்வதற்காக அதை மறுபடியும் உபதேசம் செய்கிறார் என்பது பொருள். இவ்வாறு கூறப்பட்ட வ்யாஹ்ருதிகளை எவன் அறிகிறானோ அவனே அறிந்தவனாகிறான். எதை அறிகிறான்? பிரஹ்மத்தை அறிகிறான்.
शङ्का- ननु- “तद्ब्रह्म स आत्मा” इति ज्ञाते ब्रह्मणि, न वक्तव्यमविज्ञातवत्स वेद ब्रह्मेति ।
சங்கை- அது பிரஹ்மம், அது ஆத்மா என்ற வாக்கியத்தின் மூலமாய் (மஹ: ரூப வாயிலாய்) பிரஹ்மத்தை அறியப்பட்டதாய் இருந்தாலும் அதை அறியாததைப்போல் அந்த பிரஹ்மத்தை அறிகிறான் என்று கூறுவது ஸரியல்ல.
(समाधानम्)- न । तद्विशेषविवक्षुत्वाददोषः । सत्यं विज्ञातं चतुर्थव्याहृत्यात्मा ब्रह्मेति न तु तद्विशेषो हृदयान्तरुपलभ्यत्वं मनोमयत्वादिश्च । “शान्तिसमृद्धम्” इत्येवमन्तो विशेषण विशेष्यरूपो धर्मपूगो न विज्ञायत इति तद्विवक्षुहि शास्त्रमविज्ञातमिव ब्रह्म मत्वा स वेद ब्रह्मेत्याह । अतो न दोषः । यो हि वक्ष्यमाणेन धर्मपूगेण विशिष्टं ब्रह्म वेद स वेद ब्रह्मेत्यभिप्रायः । अतो वक्ष्यमाणानुवाकेनैकवाक्यताऽस्योभयोर्ह्यनुवाकयोरेकमुपासनम् ।
ஸமாதானம் - இவ்வாறு சங்கை கொள்ள வேண்டியதில்லை ஏன் எனில் இந்த (பிரஹ்மஞான) விஷயத்தில் விசேஷங்கள் கூறவேண்டியதாய் இருப்பதால் இவ்வாறு கூறுவது தோஷமல்ல. இவ்வாறு கூறியது சரிதான். இந்த ஞானம் உண்டானது. நான்காவது வியாகிருதி ரூப பிரஹ்மம். ஆனால் ஹ்ருதயத்தின் உள்ளே அடையப்படுவதும் அவ்வாறே மனோமயத்துவாதி ரூபத்திற்கு விசேஷத்தின் ஞானம் உண்டாகவில்லை. இனி வரப்போகின்ற அனுவாகத்தில் “शान्तिसमृद्धम्” (சாந்தி சம்ருத்தம்) வரையிலும் விசேஷண விசேஹ்ய ரூப தர்ம சமூகத்தை அறியவில்லை என்று அதை விவரிப்பதற்காக சாஸ்திரம் பிரஹ்மத்தை அறியவில்லை என்று நினைத்து அந்த பிரஹ்மத்தை அறிகிறது என்று கூறப்பட்டது. ஆகையால் முற்கூறியது தோஷமல்ல. எவன் ஒருவன் இனிக்கூறப்போகிற தர்ம ஸமூகத்துடன் கூடிய பிரஹ்மத்தை அறிகிறோனோ அவனே பிரஹ்மத்தை அறிகிறவனாகின்றான் என்பது அபிப்பிராயம். ஆகையால் இனி கூறப்போகிற அனுவாகமும் இந்த அனுவாகமும் சேர்ந்து ஒரே உபாசனையாகும்.
लिङ्गाच्च,भूरित्यग्नौ प्रतितिष्ठतीत्यादिकं लिङ्गमुपासनैकत्वे, विधायकाभावाच्च । न हि “वेद” “उपासितव्यः” इति विधायकः कश्चिच्छब्दोऽस्ति । व्याहृत्यनुवाके ‘ता यो वेद’ इति च वक्ष्यमाणार्थत्वान्नोपासनाभेदकः । वक्ष्यमाणार्थत्वं च तद्विशेषविवक्षुत्वादित्यादिनोक्तम् । सर्वे देवा अस्मा एवं विदुषेऽङ्गभूता आवहन्त्यानयन्ति बलिं स्वाराज्यप्राप्तौ सत्यामित्यर्थः ॥
லிங்கமாய் இருப்பதாலும் “भूरित्यग्नौ प्रतितिष्ठति” (பூரிதி அக்னௌ பிரதிஷ்ட்டதி) என்பது பலச்ருதியாகிய இந்த இரண்டு அனுவாக்கங்களும் ஒரே உபாசனை என்பதற்கு லிங்கமாகும். ஏன்எனில் விதானம் செய்யும் சப்தம் இல்லாததால் “वेद” (வேத) “उपासितव्य”(உபாசித்தவ்ய) என்ற விதானம் செய்யும் ஒரு சப்தமும் இல்லை. வ்யாஹ்ருதி அனுவாகத்தில் “ता यो वेद” (தா. யோ. வேத) என்று இனிகூறப்போகிற அர்த்தமாய் இருப்பதால் உபாசனத்தில் பேதமில்லை. இனிக்கூறப்போகின்ற அனுவாகமானது அதன் விசேஷத்தை விவரிக்கப்போவதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அறிந்த உபாஸகன் எல்லா தேவகணங்களுக்கும் அங்க பூதமாக பலியை அளிக்கிறான். அதாவது அவனுக்கு ஸ்வராஜ்ய பிராப்தி ஆன உடன் அந்த தேவதைகள் பலியைத்தருகின்றன.
इति पञ्चमानुवाकभाष्यम् ॥
भूर्भुवः सुवः स्वरूपा मह इत्येतस्य हिरण्यगर्भस्य व्याहृत्यात्मनो ब्रह्मणोऽङ्गान्यन्या देवता इत्युक्तम् । यस्य ता अङ्गभूतास्तस्यैतस्य ब्रह्मणः साक्षादुपलब्ध्यर्थमुपासनार्थं च हृदयाकाशः स्थानमुच्यते शालग्राम इव विष्णोः । तस्मिन्हि तद्ब्रह्मोपास्यमानं मनोमयत्वादिधर्मविशिष्टं साक्षादुपलभ्यते । पाणाविवामलकम् । मार्गश्च सर्वात्मभावप्रतिपत्तये वक्तव्य इत्यनुवाक आरभ्यते -
“भूर्भुवः सुवः स्वरूपा मह”(பூ: புவ: ஸுவ: ஸ்வரூபா மஹ) ஆகிய வ்யாஹ்ருதிகள் பிரஹ்மத்தின் அங்க பூதமான அன்ய தேவதைகள் என்று கூறப்பட்டது. எதற்கு இந்த அங்க பூதங்களை உடைய பிரஹ்மத்தின் ஸாக்ஷாத் உபலப்தியின் பொருட்டு உபாசனை செய்வதற்கு ஹிருதயாகாசம் ஸ்தானம் என்று சாலக்கிரமத்தில் விஷ்ணுவை உபாசிப்பது போல் என்று கூறப்படுகிறது. அதில் தான் அந்த பிரஹ்மம் உபாஸிக்கப்பட வேண்டிய மனோமயமுதலிய தர்மத்துடன் ஸாக்ஷாத்தாக உள்ளங்கை நெல்லிக்கனி போல் அடையப்படுகிறது மேலும் ஸர்வாத்ம பாவத்தை அடைவதற்கான மார்க்கத்தை சொல்ல வேண்டியதற்காக அனுவாகம் ஆரம்பிக்கப்படுகிறது.
स य एषोऽन्तहृदय आकाशः । तस्मिन्नयं पुरुषो मनोमयः । अमृतो हिरण्मयः । अन्तरेण तालुके । य एष स्तन इवावलम्बते । सेन्द्रयोनिः । यत्रासौ केशान्तो विवर्तते । व्यपोह्य शीर्षकपाले । भूरित्यग्नौ प्रतितिष्ठति । भुव इति वायौ ॥ १ ॥
सुवरित्यादित्ये । मह इति ब्रह्मणि । आप्नोति स्वाराज्यम् । आप्नोति मनसस्पतिम् । वाक्पतिश्चक्षुष्पतिः । श्रोत्रपतिर्विज्ञानपतिः । एतत्ततो भवति । आकाशशरीरं ब्रह्म । सत्यात्म प्राणारामं मन आनन्दम् । शान्तिसमृद्धममृतम् । इति प्राचीनयोग्योपास्स्व ॥ २ ॥
स इति व्युत्क्रम्य अयं पुरुष इत्यनेन सम्बन्ध्यते । य एष अन्तर्हृदये हृदयस्यान्तः । हृदयमिति पुण्डरीकाकारो मांसपिण्डः प्राणायतनोऽनेकनाडीसुषिर ऊर्ध्वनालोऽधोमुखो विशस्यमाने पशौ प्रसिद्ध उपलभ्यते । तस्यान्तः य एष आकाशः प्रसिद्ध एव करकाकाशवत् , तस्मिन् सोऽयं पुरुषः, पुरि शयनात् , पूर्णा वा भूरादयो लोका येनेति पुरुषः मनोमयः, मनः विज्ञानं मनुतेर्ज्ञानकर्मणः, तन्मयः तत्प्रायः, तदुपलभ्यत्वात् । मनुते अनेनेति वा मनः अन्तःकरणम् ; तदभिमानी तन्मयः, तल्लिङ्गो वा । अमृतः अमरणधर्मा । हिरण्मयः ज्योतिर्मयः ।
(ச.பா) “सः”என்ற முதல்பதத்தின்பாடம் கிரமத்தை விட்டு இனிவரும் “अयं पुरुषः” என்றபதத்துடன் ஸம்பந்தப்படுகிறது. இருதயத்தில் உள்ள ஹருதய ஆகாசம், அதாவது வெள்ளைநிற தாமரை ஆகாரமாகி வடிவமாகிய மாம்சபிண்டம் பிராணனுக்கு ஆச்ரியமாகும். அதனுடைய நாடிகளின் துவாரங்களை உடையதும் அவ்வாறே தளங்கள் கிழ்நோக்கியும், கீழ்நோக்கியவைகளாயும் இருக்கின்றன. கர்மத்திற்காக பசுவை வதம் செய்யும்பொழுது இது தெளிவாக தெரிகிறது. அதனுள் ஆகாசம் பிரசித்தமாக கடத்தில் (குடத்துள்) தோன்றும் ஆகாசம் போல் தெரிகிறது. அதுபோல் ஹிருதய ஆகாசத்தில் இந்த புருஷன் இருக்கிறான். புரியில் இருப்பதால் பூர்ணா அல்லது பூ (भूः) முதலிய லோகங்களிலும் வியாபித்திருப்பதால் “पुरुषः” (புருஷன்). அந்த மனோமயம்- ஞானவாச்சியமாகும் “मन” (மன்) தாதுவினால் சித்திப்பதால் “मन”சப்தத்தின் அர்த்தம் விக்ஞானம் (विज्ञानं) எனப்படுகிறது. तन्मय (தன்மய) என்பது அதை அடைவது அதாவது விக்ஞானமயன். ஏன்எனில் அந்த விக்ஞானமயனால் (ஆத்மா) அறியப்படுகிறான். ¨मनुतेऽनेनेति (அதனால்) நினைக்கப்படுவதால் மனம் அந்தக்கரணம். அதன் அபிமானி தன்மயன் அல்லது அதனை சூசிப்பதாக ஆகும். அம்ருதம் அதாவது மரண தர்மமற்ற ஹிரண்மயமான (தங்கமயம்) ஜ்யோதிமயமானவன்.
तस्यैवंलक्षणस्य हृदयाकाशे साक्षात्कृतस्य विदुष आत्मभूतस्य ईश्वररूपस्य प्रतिपत्तये मार्गोऽभिधीयते - हृदयादूर्ध्वं प्रवृत्ता सुषुम्ना नाम नाडी योगशास्त्रेषु प्रसिद्धा । सा च अन्तरेण तालुके मध्ये तालुकयोर्गता । यश्च एष तालुकयोर्मध्ये स्तन इव अवलम्बते मांसखण्डः, तस्य च अन्तरेण इत्येतत् । यत्र च असौ केशान्तः केशानामन्तो मूलं केशान्तः विवर्तते विभागेन वर्तते, मूर्धप्रदेश इत्यर्थः ; तं देशं प्राप्य तेनान्तरेण व्यपोह्य विभज्य विदार्य शीर्षकपाले शिरःकपाले, विनिर्गता या, सा इन्द्रयोनिः इन्द्रस्य ब्रह्मणः योनिः मार्गः, स्वरूपप्रतिपत्तिद्वारमित्यर्थः ।
(ச.பா) ஹ்ருதயாகாசத்தில் ஸாக்ஷாத்காரம் செய்த இந்த லக்ஷணங்களுடன் கூடிய வித்வானுக்கு ஆத்மபூத இந்திர (ஈஸ்வர) ரூபத்தை அடைவதற்கான மார்கம் கூறப்படுகிறது. ஹ்ருதயத்திற்கு மேல் செல்லுகின்ற ஸ)ஷ)ம்னா என்ற நாடி யோக சாஸ்த்திரத்தில் மிகவும் பிரஸித்தமானது. “अन्तरेणतालुके” (அந்தரேனதாலுக்கே) என்றால் இரண்டு தாடைகைளுக்கு நடுவில் செல்லுகிறது. எந்த அந்த தாடைக்கு மத்தியில் ஸ்தனம் போல் இருக்கின்ற மாம்ஸகண்டத்திற்கும் நடுவில் என்பதாகும். அவ்வாறே கேசாந்தம் என்றால் கேசத்தின் மூலபாகம். இந்த இடத்தில் பிரிக்கப்படுகிறது. அதாவது மூர்தா பிரதேசமாகும் (உச்சந்தலையாகும்). அந்த தேசத்தை அடைந்து அங்கு கபாலத்தை பிளந்து வெளிக்கிளம்புகிறது. வெளியே செல்லும் அந்த இந்திரயோனி- அதாவது அந்த மார்க்கம் பிரஹ்மரூபத்தை அடையச்செய்கிறது
तथा एवं विद्वान्मनोमयात्मदर्शी मूर्ध्नो विनिष्क्रम्य अस्य लोकस्याधिष्ठाता भूरिति व्याहृतिरूपो योऽग्निः महतो ब्रह्मणोऽङ्गभूतः, तस्मिन् अग्नौ प्रतितिष्ठति, अग्न्यात्मना इमं लोकं व्याप्नोतीत्यर्थः । तथा भुव इति द्वितीयव्याहृत्यात्मनि वायौ, प्रतितिष्ठतीत्यनुवर्तते । सुवरिति तृतीयव्याहृत्यात्मनि आदित्ये । मह इत्यङ्गिनि चतुर्थव्याहृत्यात्मनि ब्रह्मणि प्रतितिष्ठतीति ।
(ச.பா) மனோமய ஆத்மாவை ஸாக்ஷாத்காரமடைந்த புருஷன், மூர்தானம் (கபாலம்) வாயிலாய் வெளிக்கிளம்பி இந்தலோகத்திற்கு அதிஷ்ட்டதாவாகிய भूः (பூ:)என்று வ்யாஹ்ருதி ரூபமான எந்த அக்னி பிரஹ்மத்திற்கு அங்கமாகியதோ அந்த அக்னியில் பிரதிஷ்ட்டிதமாகி (நிலைபெற்று) ஆத்மாவான இந்த லோகத்தை வியாபிக்கிறான் என்று பொருள். அவ்வாறே भुवः (புவ:) என்று இரண்டாவது வ்யாஹ்ருதி ஆத்மாவான வாயுவில் அனுவர்த்திக்கிறது. ஆதித்தியனிடத்தில் सुवः (ஸுவ:) என்ற மூன்றாவது வியாக்ருதி அனுவர்த்திக்கிறது महः (மஹ:) என்று அங்கத்தில் நான்காவது வியாக்ருதி ஆத்மாவிடத்தில் அனுவர்த்திக்கிறது.
(ச.பா) तेष्वात्मभावेन स्थित्वा आप्नोति ब्रह्मभूतं स्वाराज्यं स्वराड्भावं स्वयमेव राजा अधिपतिर्भवति अङ्गभूतानां देवतानां यथा ब्रह्म ; देवाश्च सर्वे अस्मै अङ्गिने बलिमावहन्ति अङ्गभूताः यथा ब्रह्मणे । आप्नोति मनसस्पतिम् , सर्वेषां हि मनसां पतिः, सर्वात्मकत्वाद्ब्रह्मणः सर्वैर्हि मनोभिस्तन्मनुते । तदाप्नोत्येवं विद्वान् । किं च, वाक्पतिः सर्वासां वाचां पतिर्भवति । तथैव चक्षुष्पतिः चक्षुषां पतिः । श्रोत्रपतिः श्रोत्राणां च पतिः । विज्ञानपतिः विज्ञानानां च पतिः । सर्वात्मकत्वात्सर्वप्राणिनां करणैस्तद्वान्भवतीत्यर्थः ।
(ச.பா) அவைகளில் ஆத்மபாவமாய் இருந்து கொண்டு ब्रह्मभूतः (பிரஹ்ம்மபூத;) அதாவது ஸ்வராஜ்யம் அதையே ஸ்வராட்பாவம், ராஜ்யத்தியின் அதிபதி ஆகிறான். அதன் அங்கபூதமான தேவ கணங்களுக்கு எவ்வாறு பிரஹ்ம்மமோ அவ்வாறு தன்னுடைய அங்கிக்கு (பிரஹ்ம்மத்திற்கு) உபஹாரம் செய்கின்றன. அவ்வாறே மனஸ்பதியை அடைகிறது. எல்லா மனங்களின் பதி ஸர்வாத்மகத்துவமாய் இருப்பதால் பிரஹ்மமாகும். அது எல்லாவற்றையும் மனதின் வாயிலாய் மனனம் செய்கிறது. இவ்வாறு உபாஸனையினால் வித்வான் அதை அடைகிறான். மேலும் வாக்கிற்கு பதியாகிறான். எல்லா வாக்கியங்களுக்கும் பதியாகின்றான். அவ்வாறே எல்லாகண்களில் கண்களின் பார்வைக்கு பதியாகின்றான். காதுகளின் கேட்க்கும் தன்மைக்கு பதியாகவும் ஆகின்றான். விக்ஞானபதி விக்ஞானங்களுக்கு பதியாகின்றான். ஸர்வாத்மாவாய் இருப்பதால் எல்லாப்பிரா௴களின் (ஜீவர்களின்) எல்லா இந்திரியங்களாலும் இந்திரியமுடையவனாகிறான்.
किं च, ततोऽपि अधिकतरम् एतत् भवति । किं तत् ? उच्यते - आकाशशरीरम् आकाशः शरीरमस्य, आकाशवद्वा सूक्ष्मं शरीरमस्येत्याकाशशरीरम् । किं तत् ? प्रकृतं ब्रह्म । सत्यात्म, सत्यं मूर्तामूर्तम् अवितथं स्वरूपं वा आत्मा स्वभावोऽस्य, तदिदं सत्यात्म । प्राणारामम् , प्राणेष्वारमणमाक्रीडा यस्य तत्प्राणारामम् ; प्राणानां वा आरामो यस्मिन् , तत्प्राणारामम् । मन आनन्दम् , आनन्दभूतं सुखकृदेव यस्य मनः, तन्मन आनन्दम् । शान्तिसमृद्धम् , शान्तिरुपशमः, शान्तिश्च तत्समृद्धं च शान्तिसमृद्धम् ; शान्त्या वा समृद्धवत्तदुपलभ्यत इति शान्तिसमृद्धम् । अमृतम् अमरणधर्मि, एतच्चाधिकरणविशेषणं तत्रैव मनोमय इत्यादौ द्रष्टव्यमिति । एवं मनोमयत्वादिधर्मैर्विशिष्टं यथोक्तं ब्रह्म हे प्राचीनयोग्य, उपास्स्व इत्याचार्यवचनोक्तिरादरार्था । उक्तस्तूपासनाशब्दार्थः ॥
(ச.பா) மேலும் இதைவிட மேலானது ஏற்படுகிறது. அது என்ன? என்று கூறப்படுகிறது. “आकाशशरीरं” (ஆகாசசரீரம்) என்பது ஆகாசம் எதற்கு சரீரம் அல்லது ஆகாசத்திற்கு ஸமமாக எதற்கு சூக்ஷ்ம சரீரமோ அது ஆகாசசரீரம். அது என்ன? இந்த இடத்தில் பிரஹ்மம் सत्यात्मा (சத்யாத்மா) மூர்த்தாமூர்த்தா ரூபமாக அல்லது பொய்மை அற்றதன்மை “सत्यात्मा” சத்யாத்மா எனப்படுகிறது. प्राणारामं (பிராணாராமம்) பிராணனிடத்தில் எது ரமிக்கிறதோ அல்லது கிரீடைபுரிகிறதோ அது பிராணாராமமாகும். பிராணன்களுடைய ரமணம் எதில் இருக்கிறதோ அது பிராணாராமம் “मन-आनन्दम्” (மன ஆனந்தம்) எவைகளுக்கு மனம் ஆனந்தபூதமோ அதாவது சுகத்தை அளிக்கிறதோ அதை மன ஆனந்தம் என்று கூறப்படுகிறது शान्तिसमृद्धिम् (சாந்தி ஸம்ருத்ம்) சாந்திரூபசமம். சாந்தியினால் ஸமிருத்தம் (பிரஹ்மம்) அடையப்படுவதாலும் சாந்தி ஸமிருத்தம் எனப்படுகிறது. अमृतम् (அம்ருதம்) மரண தர்மம் அற்றது. இந்த அதிகரண விஷயத்தை மனோமயம் முதலியவைகளில் அறிய வேண்டும். இவ்வாறு மனோமயத்துவாதி தர்மங்களுடன் கூடிய பிரஹ்மத்தைப் பற்றி, அது கூறியவாறோ ஹே பிராசீன யோக்கிய! உபாஸனை செய்ய வேண்டும் என்று குருவானவர் கூறியது ஆதரவுடன் கூறியதாகும்.
इति षष्ठोनुवाकभाष्यम् ॥
यदेतद्व्याहृत्यात्मकं ब्रह्मोपास्यमुक्तम् , तस्यैवेदानीं पृथिव्यादिपाङ्क्तस्वरूपेणोपासनमुच्यते । पञ्चसङ्ख्यायोगात्पङ्क्तिच्छन्दः सम्पक्तिः ; ततः पाङ्क्तत्वं सर्वस्य । पाङ्क्तश्च यज्ञः, ‘पञ्चपदा पङ्क्तिः पाङ्क्तो यज्ञः’ इति श्रुतेः । तेन यत्सर्वं लोकाद्यात्मान्तं च पाङ्क्तं परिकल्पयति, यज्ञमेव तत्परिकल्पयति । तेन यज्ञेन परिकल्पितेन पाङ्क्तात्मकं प्रजापतिमभिसम्पद्यते । तत्कथं पाङ्क्तं वा इदं सर्वमित्यत आह -
(அ-கை) எந்த வ்யாஹ்ருதி ஆத்மகமான ப்ரஹ்மத்தின் உபாஸனம் கூறப்பட்டதோ அதையே இப்போழுது பிருதிவீ முதலிய பாங்க்த ஸ்வரூப உபாஸனமாய் கூறப்படுகிறது. ஐந்து எண்௴க்கையுடன் கூடியதாய் இருப்பதால் பாங்க்த சப்தம் உடையதாகிறது. இதனால் எல்லாம் பாங்க்தமாகிறது. யக்ஞமும் பாங்க்தமாகும் என்பது “पञ्चपदा पङ्क्तिः पाङ्क्तो यज्ञः”(பஞ்ச பதா பங்கத்தி பாங்க்தோ யக்ஞ) என்ற சுருதியினால் அறியப்படுகிறது. ஆகையால் லோகமுதல் ஆத்மா வரையிலும் பாங்தம் கல்பிக்கப்படுகிறது. யக்ஞத்தையே கல்பிக்கிறது. இந்த கல்பனையினால் உண்டான யக்ஞத்தினால் அந்த பாங்க்த ஸ்வரூப பிரஜாபதியை அடைகிறான். இவை எல்லாம் எவ்வாறு பாங்க்தமாகும்? அதை இப்பொழுது கூறுகிறார்-
पृथिव्यन्तरिक्षं द्यौर्दिशोऽवान्तरदिशः । अग्निर्वायुरादित्यश्चन्द्रमा नक्षत्राणि । आप ओषधयो वनस्पतय आकाश आत्मा । इत्यधिभूतम् । अथाध्यात्मम् । प्राणो व्यानोऽपान उदानः समानः । चक्षुः श्रोत्रं मनो वाक् त्वक् । चर्म मांसंस्नावास्थि मज्जा । एतदधिविधाय ऋषिरवोचत् । पाङ्क्तं वा इदं सर्वम् । पाङ्क्तेनैव पाङ्क्तं स्पृणोतीति ॥ १ ॥
पृथिवी अन्तरिक्षं द्यौः दिशः अवान्तरदिशः इति लोकपाङ्क्तम् । अग्निः वायुः आदित्यः चन्द्रमाः नक्षत्राणि इति देवतापाङ्क्तम् । आपः ओषधयः वनस्पतयः आकाशः आत्मा इति भूतपाङ्क्तम् । आत्मेति विराट् , भूताधिकारात् । इत्यधिभूतमिति अधिलोकाधिदैवतपाङ्क्तद्वयोपलक्षणार्थम् , लोकदेवतापाङ्क्तयोर्द्वयोश्चाभिहितत्वात् ।
(ச.பா) பிருதிவீ, அந்தரிஷம், த்யுலோகம், திசைகள், அவாந்தர திசைகள் லோக பாங்க்தமாகும். அக்னி, வாயு, ஆதித்தியன். சந்திரன், நக்ஷத்திரங்கள் தேவதா பாங்தங்களாகும். நீர், ஔஷதிகள், வனஸ்பதிகள், ஆகாசம், ஆத்மா பூதபாங்க்தங்களாகும். இங்கு ஆத்மா என்பது விராட்டைக் குறிக்கிறது ஏன்எனில் பூதங்களுக்கு அதிகரணமாய் இருப்பதால். “इत्यधिभूतम्”என்ற இந்த வாக்கியம் அதிலோகம் அதிதெய்வத ஞானபாங்க்தம் இரண்டும் உபலக்ஷணார்தமாகும். ஏன்எனில் இதில் லோகம், தைவத சம்பந்தமான இரண்டு பாங்க்தங்களும் வர்ணிக்கப்படுகின்றன.
अथ अनन्तरम् अध्यात्मं पाङ्क्तत्रयमुच्यते - प्राणादि वायुपाङ्क्तम् । चक्षुरादि इन्द्रियपाङ्क्तम् । चर्मादि धातुपाङ्क्तम् । एतावद्धीदं सर्वमध्यात्मं बाह्यं च पाङ्क्तमेव इति एतत् एवम् अधिविधाय परिकल्प्य ऋषिः वेदः एतद्दर्शनसम्पन्नो वा कश्चिदृषिः, अवोचत् उक्तवान् । किमित्याह - पाङ्क्तं वा इदं सर्वं पाङ्क्तेनैव आध्यात्मिकेन, सङ्ख्यासामान्यात् , पाङ्क्तं बाह्यं स्पृणोति बलयति पूरयति एकात्मतयोपलभ्यत इत्येतत् । एवं पाङ्क्तमिदं सर्वमिति यो वेद, स प्रजापत्यात्मैव भवतीत्यर्थः ॥
இப்பொழுது இனி மூன்று அத்தியாத்ம பாங்க்தங்களின் வர்ணணம் செய்யப்படுகிறது. பிராணன் முதலிய வாயு பாங்க்தம், கண்முதலிய இந்திரிய பாங்க்தம், மேலும் சர்மம் முதலிய தாது பாங்க்தங்கள். இவைகள் அத்யாத்மம், பாஹ்ய பாங்க்தங்களாகும். இவ்வாறான விதானம் அதாவது கல்பனை செய்து ரி: வேத அல்லது இந்த திருஷ்ட்டியை உடைய ரி: கூறினார், என்ன கூறினார் எனில் இவையெல்லாம் பாங்க்தங்களே. ஆத்யாத்மிக பாங்க்தங்களினால் அல்லவா எண்௴க்கைகளில் சமானமாய் இருப்பதால் உபாசகன் பாஹ்யபாங்க்தங்களை அடைகிறான் அதாவது அதனுடன் ஒரே ரூபமாய் அடைகிறான். இவ்வாறு எல்லா பாங்க்தங்களும் இருக்கின்றன என்று எந்த புருஷன் அறிகிறானோ அவன் பிரஜாபதி ரூபத்தை அடைகிறான் என்பது தாத்பரியம்.
इति सप्तमानुवाकभाष्यम् ॥
व्याहृत्यात्मनो ब्रह्मण उपासनमुक्तम् । अनन्तरं च पाङ्क्तस्वरूपेण तस्यैवोपासनमुक्तम् । इदानीं सर्वोपासनाङ्गभूतस्य ओङ्कारस्योपासनं विधित्स्यते । परापरब्रह्मदृष्ट्या हि उपास्यमान ओङ्कारः शब्दमात्रोऽपि परापरब्रह्मप्राप्तिसाधनं भवति ; स ह्यालम्बनं ब्रह्मणः परस्यापरस्य च, प्रतिमेव विष्णोः, ‘एतेनैवायतनेनैकतरमन्वेति’ (प्र. उ. ५ । २) इति श्रुतेः ।
(அ-கை) வ்யாஹ்ருதிரூப பிரஹ்மத்தின் உபாஸனம் நிருபணம் செய்யப்பட்டது. அதன் பின் பாங்க்த்த ஸ்வரூபத்தால் அதனுடைய உபாஸனை கூறப்பட்டது. இப்பொழுது எல்லா உபாஸனைகளின் அங்கபூதமான ஓம்கார உபாஸனம் விதிக்கப்படுகிறது. பராபர திருஷ்ட்டியால் உபாஸிக்கப்பட்ட ஓம்காரம் சப்தமாத்திரமாய் இருந்தாலும் பராபர பிரஹ்மத்தை அடைவதற்கான ஸாதனமாகிறது. அது பராபரபிரஹ்மத்தின் ஆலம்பனம் ஆகிறது. எவ்வாறு பிரதிமா விஷ்ணுவிற்கு ஆலம்பனம் ஆகிறதோ அவ்வாறு ஆகும். ‘एतेनैवायतनेनैकतरमन्वेति’ (प्र. उ. ५ । २) (ஏதேனைவாயதனேனைகதரமன்வேதி) “இந்த ஆலம்பனத்தால் உபாசகன்”. (பர, அபர) இவைகளில் ஒரு பிரஹ்மத்தை அடைகிறான் என்பது ச்ருதி வாக்கியம்.
ओमिति ब्रह्म । ओमितीदं सर्वम् । ओमित्येतदनुकृतिर्ह स्म वा अप्यो श्रावयेत्याश्रावयन्ति । ओमिति सामानि गायन्ति । ॐ शोमिति शस्त्राणि शंसन्ति । ओमित्यध्वर्युः प्रतिगरं प्रतिगृणाति । ओमिति ब्रह्मा प्रसौति । ओमित्यग्निहोत्रमनुजानाति । ओमिति ब्राह्मणः प्रवक्ष्यन्नाह ब्रह्मोपाप्नवानीति । ब्रह्मैवोपाप्नोति ॥ १ ॥
ओमिति, इतिशब्दः स्वरूपपरिच्छेदार्थः ; ॐ इत्येतच्छब्दरूपं ब्रह्म इति मनसा धारयेत् उपासीत ; यतः ॐ इति इदं सर्वं हि शब्दस्वरूपमोङ्कारेण व्याप्तम् , ‘तद्यथा शङ्कुना’ (छा. उ. २ । २३ । ३) इति श्रुत्यन्तरात् । ‘अभिधानतन्त्रं ह्यभिधेयम्’ इत्यतः इदं सर्वमोङ्कार इत्युच्यते ।
“ஓம்” என்று இதில் என்று (इति) சப்தமான ஓம்கார ஸ்வரூபத்தை நிர்தேசம் செய்வதற்காக (குறிப்பிடுவதற்காக) ஆகும். அதாவது “ஓம்” என்ற சப்தரூபத்தை மனதால் தியானம் செய்யவேண்டும். ஏன்எனில் ஓம் என்ற இது எல்லா சப்தரூபமானது எல்லா சப்தங்களையும் வியாப்பித்துள்ளது. ‘तद्यथा शङ्कुना’ (छा. उ. २ । २३ । ३) (எவ்வாறு இலையில் பெரிய நரம்பு சிறிய நரம்புகளை வியாபித்திருக்கிறது) என்ற சாந்தோக்கிய வாக்யத்தால் ஸித்திக்கிறது. எல்லாம் வாச்சிரம் யாவும் வாசக அதீனமாய் இருப்பதால் எல்லாம் ஓம்காரம் எனப்படுகிறது.
ओङ्कारस्तुत्यर्थ उत्तरो ग्रन्थः, उपास्यत्वात्तस्य । ॐ इत्येतत् अनुकृतिः अनुकरणम् । करोमि यास्यामि चेति कृतमुक्त ओमित्यनुकरोत्यन्यः, अतः ओङ्कारोऽनुकृतिः । ह स्म वै इति प्रसिद्धार्थद्योतकाः । प्रसिद्धं ह्योङ्कारस्यानुकृतित्वम् ।
மேல் வரும் கிரந்தம் ஓம்காரத்தை ஸ்துதிப்பதற்க்காக ஆகும் ஏன்எனில் அது உபாசிக்கப்பட வேண்டியது. ஓம் என்று அதையேப்பின்பற்றுவது. செய்கிறேன், சொல்கிறேன் என்று கூறுவதைக் கேட்டு மற்றவன் செயல்படுவது போல் “ஓம்” என்று அதைக்கேட்டு ஏற்றுக்கொண்டு செல்கிறான். ஆகையால் அது அனுக்ருதி எனப்படுகிறது. ह (ஹ) स्म (ஸ்ம) वा (வா) என்பன பிரசித்தார்த்தத்தை குறிப்பிடுகின்றன. ஏன்எனில் ஓம்காரத்திற்கு அனுக்ருதித்வம் பிரசித்தமானது.
अपि च ओंश्रावय इति प्रैषपूर्वमाश्रावयन्ति प्रतिश्रावयन्ति । तथा ॐ इति सामानि गायन्ति सामगाः । ॐ शोमिति शस्त्राणि शंसन्ति शस्त्रशंसितारोऽपि । तथा ॐ इति अध्वर्युः प्रतिगरं प्रतिगृणाति । ॐ इति ब्रह्मा प्रसौति अनुजानाति । ॐ इति अग्निहोत्रम् अनुजानाति जुहोमीत्युक्ते ॐ इत्येव अनुज्ञां प्रयच्छति ।
மேலும் “ओं श्रावय”(ஓம் ச்ராவய)என்று பிரேரணை பூர்வமாய் யக்ஞம் செய்பவர்கள் ஆச்ராவணம் செய்கிறார்கள். இவ்வாறே ஓம் என்று ஸாமவேதிகள் ஸாமங்களைப் பாடுகின்றார்கள் (சாமகானம் செய்கின்றார்கள்) சஸ்த்திரங்களை சொல்பவர்கள். “ॐ शोम्” (ஓம்சோம்) என்று சொல்லி சஸ்த்திரங்களைக் உறைக்கிறார்கள். அவ்வாறே (अध्वर्यु) அத்வர்யுவானவிச் प्रतिगरं (ஸாமத்தின் நடுவே ஆமோத்ததை வெளிப் படுத்துகிறான் ஓம் என்று கூறி யக்ஞத்தில் பிரஹ்மா (அக்னிஹோத்திரத்தில்) ஆக்ஞையே அளிக்கிறார் (பிரேரணை செய்கிறார்). எஜமானனும் ஓம் என்று கூறி நான் யக்ஞம் (அக்னிஹோத்திரம்) செய்கிறேன் என்று ஸம்மதத்தைத் தெரிவிக்கிறான். அக்னிஹோத்திரம் செய்கிறேன் என்று கூறிய எஜமானனுக்கு “ஓம்” என்று அனுமதி அளிக்கிறார்.
ओं इत्येव ब्राह्मणः प्रवक्ष्यन् प्रवचनं करिष्यन् अध्येष्यमाणः ओमित्याह ओमित्येव प्रतिपद्यते अध्येतुमित्यर्थः ; ब्रह्म वेदम् उपाप्नवानि इति प्राप्नुयां ग्रहीष्यामीति उपाप्नोत्येव ब्रह्म । अथवा, ब्रह्म परमात्मानम् उपाप्नवानीत्यात्मानं प्रवक्ष्यन् प्रापयिष्यन् ओमित्येवाह । स च तेनोङ्कारेण ब्रह्म प्राप्नोत्येव । ओङ्कारपूर्वं प्रवृत्तानां क्रियाणां फलवत्त्वं यस्मात् , तस्मादोङ्कारं ब्रह्मेत्युपासीतेति वाक्यार्थः ॥
(ச.பா) அத்யயனம் செய்யும் பிராஹ்ம்மணன் “ஓம்” என்று உச்சாரணம் செய்கிறான். ஓம் என்று உச்சரித்து அத்தியனம் செய்ய ஆரம்பிக்கின்றான். நான் பிரஹ்ம வேதத்தை அடைவேன். அதாவது அதை கிரஹிப்பேன். என்று, அதனால் அவன் பிரஹ்மத்தை அடைகின்றான். அல்லது நான் பரமாத்மாவாகிய பிரஹ்மதை அடைவேன் என்று இவ்வாறு ஆத்மாவை அடைவதற்கு இச்சை உள்ளவனாய் அந்த “ஓம்”கார வாயிலாய் அந்த பிரஹ்மத்தை அடைகிறான். இவ்வாறு ஓம்கார பூர்வமாக ப்ரவிர்த்திக்கும் கிரியைகள் பலன் உடையவைகளாக ஆகின்றன. ஆகையால் ஓம்காரம் “பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாஸனை செய் என்பது இந்த அனுவாகத்தின் அர்த்தமாகும்.
इत्यष्टमानुवाकभाष्यम् ॥
विज्ञानादेवाप्नोति स्वाराज्यमित्युक्तत्वात् श्रौतस्मार्तानां कर्मणामानर्थक्यं प्राप्तमित्येतन्मा प्रापदिति कर्मणां पुरुषार्थं प्रति साधनत्वप्रदर्शनार्थ इहोपन्यासः -
(அ-கை) விக்ஞானத்தினால் (உபாஸனையினால்) மாத்திரமே ஸ்வாராஜ்யம் ஸித்திக்கும் என்று கூறப்பட்டதால் ச்ரௌத ஸ்மார்த்த கர்மங்கள் விணாகிவிடும். அவ்வாறு ஆகக்கூடாது என்பதற்காக புருஷார்த்தம் அடைவதற்காக கர்மங்களின் ஸாதனத்வத்தை விளக்குவதற்காக இங்கு உபந்நியாசம் செய்யப்படுகிறது. (கூறப்படுகிறது)
ऋतं च स्वाध्यायप्रवचने च । सत्यं च स्वाध्यायप्रवचने च । तपश्च स्वाध्यायप्रवचने च । दमश्च स्वाध्यायप्रवचने च । शमश्च स्वाध्यायप्रवचने च । अग्नयश्य स्वाध्यायप्रवचने च । अग्निहोत्रं च स्वाध्यायप्रवचने च । अतिथयश्च स्वाध्यायप्रवचने च । मानुषं च स्वाध्यायप्रवचने च । प्रजा च स्वाध्यायप्रवचने च । प्रजनश्च स्वाध्यायप्रवचने च । प्रजातिश्च स्वाध्यायप्रवचने च । सत्यमिति सत्यवचा राथीतरः । तप इति तपोनित्यः पौरुशिष्टिः । स्वाध्यायप्रवचने एवेति नाको मौद्गल्यः । तद्धि तपस्तद्धि तपः ॥ १ ॥
ऋतमिति व्याख्यातम् । स्वाध्यायः अध्ययनम् । प्रवचनमध्यापनं ब्रह्मयज्ञो वा । एतानि ऋतादीनि, अनुष्ठेयानि इति वाक्यशेषः । सत्यं सत्यवचनं यथाव्याख्यातार्थं वा । तपः कृच्छ्रादि । दमः बाह्यकरणोपशमः । शमः अन्तःकरणोपशमः । अग्नयश्च आधातव्याः । अग्निहोत्रं च होतव्यम् । अतिथयश्च पूज्याः । मानुषमिति लौकिकः संव्यवहारः । तच्च यथाप्राप्तमनुष्ठेयम् । प्रजा च उत्पाद्या । प्रजनश्च प्रजननम् ; ऋतौ भार्यागमनमित्यर्थः । प्रजातिः पौत्रोत्पत्तिः ; पुत्रो निवेशयितव्य इत्येतत् ।
(ச.பா) “ऋतं" (ருதம்) என்பதற்கு முன்பே வியாக்கியானம் செய்யப்பட்டது स्वाध्याय (ஸ்வாத்யாய்) என்று அத்யயனம் கூறப்படுகிறது. “प्रवचन" (பிரவசன) என்று அத்யாபனம் (சொல்லிக்கொடுத்தல்) அல்லது பிரஹ்ம யக்ஞத்தின் கூறுவது. எந்த ऋतं (ருதம்) முதலியவைகளை அனுஷ்ட்டிக்க வேண்டியது என்பது வாக்கியசேஷமாகும். “सत्यः” (சத்ய) என்பது சத்தியவசனம் அல்லது முன்பே “सत्यंवदिष्यामि” என்ற வாக்கியத்தில் வியாக்யானம் செய்யப்பட்டது. तपः (தப:) என்பது க்ருச்சிராதிகள் दमः (தம) என்பது பாஹ்ய கரண அடக்குதல் . शमः (சம:) அந்தக்கரண அடக்குதல் (உபசமம்). அக்னிகளை ஆதானம் செய்யவேண்டும். அக்னிஹோத்திரம் ஹோமம் செய்யவேண்டும். அதிதிகளுக்கு பூஜை செய்யவேண்டும். அவைகளை அதை எவ்வாறு அடையப்பட்டதோ அதை அனுஷ்ட்டானம் செய்யவேண்டும். பிரஜைகளை உற்பத்தி செய்யவேண்டும். ரூதுகாலத்தில் பாரியை இடத்திற்கு செல்லுதல், மேலும் பௌத்திரன் அடைவதற்காக புத்திரனுக்கு விவாகம் செய்யவேண்டும்.
सर्वैरेतैः कर्मभिर्युक्तस्यापि स्वाध्यायप्रवचने यत्नतोऽनुष्ठेये इत्येवमर्थं सर्वेण सह स्वाध्यायप्रवचनग्रहणम् । स्वाध्यायाधीनं ह्यर्थज्ञानम् । अर्थज्ञानाधीनं च परं श्रेयः । प्रवचनं च तदविस्मरणार्थं धर्मवृद्ध्यर्थं च । ततः स्वाध्यायप्रवचनयोरादरः कार्यः ।
(ச.பா) இந்த எல்லா கர்மங்களுடன் கூடிய புருஷனும் ஸ்வாத்யாத்யயனம் மேலும் யத்னத்துடன் அனுஷ்ட்டானம் செய்யவேண்டும். ஆகையால் இது எல்லா கர்மங்களுடன் ஸ்வாத்யாயமும் பிரவசனமும் கட்டாயம் என்று கிரஹித்துக் கொள்ளவேண்டும். ஸ்வாத்தியாயத்தை அதீனமாக உடையது அர்த்தஞானம். மேலும் அர்த்த ஞானத்தின் அதீனம் பரமஸ்ரேயஸ் ஆகும். பிரவசனமானது அதை மறக்கமால் இருப்பதற்கும். தர்மத்தின் விருத்தியின் பொருட்டாகும். ஆகையால் ஸ்வாத்தியாயம், பிரவசனம் இரண்டிலும் சிரத்தை கொள்ளவேண்டும்.
सत्यमिति सत्यमेवानुष्ठेयमिति सत्यवचाः सत्यमेव वचो यस्य सोऽयं सत्यवचाः, नाम वा तस्य ; राथीतरः रथीतरसगोत्रः राथीतर आचार्यो मन्यते । तप इति तप एव कर्तव्यमिति तपोनित्यः तपसि नित्यः तपःपरः, तपोनित्य इति वा नाम ; पौरुशिष्टिः पुरुशिष्टस्यापत्यं पौरुशिष्टिराचार्यो मन्यते । स्वाध्यायप्रवचने एव अनुष्ठेये इति नाको नामतः मुद्गलस्यापत्यं मौद्गल्य आचार्यो मन्यते । तद्धि तपस्तद्धि तपः । यस्मात्स्वाध्यायप्रवचने एव तपः, तस्मात्ते एवानुष्ठेये इति । उक्तानामपि सत्यतपःस्वाध्यायप्रवचनानां पुनर्ग्रहणमादरार्थम् ॥
(ச.பா) सत्यं (சத்யம்) என்பது சத்தியத்தையே கடைபிடிக்க வேண்டியது என்று சத்தியமே எவன் பேசுகிறானோ அவனுடைய பெயர் சத்தியவச்சன் (சத்யம் பேசுபவன்) ரதீதர வம்ஸத்தல் (கோத்திரத்தில்) உதித்ததால் ராதீதரன் என்ற பெயருடைய ஆச்சாரியன் ஏற்றுக்கொள்கிறார். तपः (தப:) என்றது தபசே செய்யவேண்டும். நித்திய தபோநிஷ்ட்டர். தபோநித்தியர் என்றபெயருடைய पौरुशिष्टिः (பௌருஷ்ட்டி) என்பவர் புரு:ஷ்ட்டருடைய புத்திரன். பௌரு:ஷ்டி ஆச்சாரியன் கூறுகிறார். ஸ்வாத்தியாய, பிரவச்சனங்களை அனுஷ்ட்டானமுடைய நாகர் என்ற பெயருடைய मुद्गलः (முத்கல) என்பவருடைய புத்திரன் மௌத்கஸயர் ஆச்சாரியர் கூறுகிறார். அதுவே தபஸ், அதுவே தபஸ் என்று எதனால் ஸ்வாத்தியாய பிரவசனத்தில் தான் தபஸ், ஆகையால் அதையே அனுஷ்ட்டிக்கவேண்டும். கூறப்பட்ட சத்திய, தபஸ், ஸ்வாத்தியாயம், பிரவசனம் இவைகளை மறுபடியும் எடுத்துகூறுவது அதிகமான சிரத்தையின் பொருட்டாகும்.
इति नवमानुवाकभाष्यम् ॥
अहं वृक्षस्य रेरिवेति स्वाध्यायार्थो मन्त्राम्नायः । स्वाध्यायश्च विद्योत्पत्तये, प्रकरणात् । विद्यार्थं हीदं प्रकरणम् , न च अन्यार्थत्वमवगम्यते । स्वाध्यायेन च विशुद्धसत्त्वस्य विद्योत्पत्तिरवकल्पते -
(அ-கை) “अहं वृक्षस्य रेरिवा” முதலிய மந்திரங்கள் ஸ்வாத்தியாயத்தின் (ஜபத்தின்) பொருட்டாகும். அவ்வாறே ஸ்வாத்தியாயம் வித்யை (உபாசனை) உண்டாவதற்காக கூறப்பட்டது, இந்த பிரகரணத்தால் அறியப்படுகிறது. இந்த பிரகரணம் வித்யையின் பொருட்டாகும். இதைத்தவிர வேறு பிரயோஜனம் அறியப்படவில்லை. ஸ்வாத்தியாயத்தினால் சித்தசுத்தி ஏற்பட்டவனுக்கு வித்யையின் (உபாசனையின்) உற்பத்தியானது கிட்டுகிறது.
अहं वृक्षस्य रेरिवा । कीर्तिः पृष्ठं गिरेरिव । ऊर्ध्वपवित्रो वाजिनीव स्वमृतमस्मि । द्रविणं सवर्चसम् । सुमेधा अमृतोक्षितः । इति त्रिशङ्कोर्वेदानुवचनम् ॥ १ ॥
अहं वृक्षस्य उच्छेद्यात्मकस्य संसारवृक्षस्य रेरिवा प्रेरयिता अन्तर्याम्यात्मना । कीर्तिः ख्यातिः गिरेः पृष्ठमिव उच्छ्रिता मम । ऊर्ध्वपवित्रः ऊर्ध्वं कारणं पवित्रं पावनं ज्ञानप्रकाश्यं परं ब्रह्म यस्य सर्वात्मनो मम, सोऽहमूर्ध्वपवित्रः ; वाजिनि इव वाजवतीव, वाजमन्नम् , तद्वति सवितरीवेत्यर्थः ; यथा सवितरि अमृतमात्मतत्त्वं विशुद्धं प्रसिद्धं श्रुतिस्मृतिशतेभ्यः, एवं सु अमृतं शोभनं विशुद्धमात्मतत्त्वम् अस्मि भवामि ।
(ச.பா) அந்தர்யாமி ரூபமாய் அழியக்கூடிய ஸம்சாரரூப விருக்ஷத்தை பிரேரணை செய்கிறேன். என்னுடைய கீர்த்தி மலையின் மேல்பாகம் போல் உயர்ந்திருக்கிறது. உயர்ந்த பவித்திரம் இங்கு (ऊर्ध्वम्) உயர்ந்தது என்றது காரணம். பவித்திரம் என்றது தூய்மையானது. ஞானத்தால் பிரகாசிக்கக்கூடிய பவித்திரம் பரம்ப்ரஹ்மம் ஸர்வாத்மாவாகிய எனக்கு ஊர்த்துவம்(மேலான) அதாவது காரணமோ அந்த நான் ஊர்த்துவபவித்திரன். वाजिनीव (வாஜநீவ) வாஜமுடையவனுக்கு ஸமானமாக. வாஜ என்றால் அன்னம் அதனுடன் கூடிய சூரியனுக்கு சமானம் என்று பொருள். எவ்வாறு சூரியனிடத்தில் அம்ருதாத்மதத்வம் விசுத்தம் என்பது ச்ருதி ஸ்மிருதிகளில் பிரசித்தமோ அவ்வாறு स्वमृतं (நல்ல அம்ருதம்) மாயும், शोभनं (சோபனம்) மாயும் உள்ள விசுத்த ஆத்ம தத்துவமாய் இருக்கிறேன்.
द्रविणं धनं सवर्चसं दीप्तिमत् तदेव आत्मतत्त्वम् , अस्मीत्यनुवर्तते । ब्रह्मज्ञानं वा आत्मतत्त्वप्रकाशकत्वात्सवर्चसम् , द्रविणमिव द्रविणम् , मोक्षसुखहेतुत्वात् । अस्मिन्पक्षे प्राप्तं मयेत्यध्याहारः कर्तव्यः ।
(ச.பா) திரவினம், தனம், வர்ச்சசுடன் கூடியதான, ஒளிர்கின்ற ஆத்மதத்துவம் நானாக இருக்கிறேன் என்று அனுர்த்திக்கிறது பிரஹ்மஞானம். ஆத்மதத்துவத்தை பிரகாசிக்கச்செய்வதால் ஸவர்ச்சசம் எனப்படுகிறது. மோக்ஷ சுகத்திற்க்கு காரணமாய் இருப்பதால் தனத்திற்கு ஸமமானது, இந்த பக்ஷத்தில் मयाप्राप्तम् (மயாபிராப்தம்-என்னால் அடையப்பட்டது) என்று அத்யாஹாரம் (சேர்த்துக்கொள்ள) செய்யவேண்டும்.
सुमेधाः शोभना मेधा सर्वज्ञत्वलक्षणा यस्य मम, सोऽहं सुमेधाः, संसारस्थित्युत्पत्तिसंहारकौशलयोगात्सुमेधस्त्वम् ; अत एव अमृतः अमरणधर्मा, अक्षितः अक्षीणः अव्ययः अक्षतो वा, अमृतेन वा उक्षितः सिक्तः ‘अमृतोक्षितोऽहम्’ इत्यादि ब्राह्मणम् ।
(ச.பா) “सुमेधाः” (சுமேதா:) சோபனமான மேதை அதாவது சர்வக்ஞ லக்ஷணமுடையவனாகிய அந்த நான் சுமேதா. சம்சாரத்தின் ஸ்திதி, உத்பத்தி, சம்ஹாரம் இவற்றில் சாமர்த்தியம் (கௌசலத்துவம்-குசலத்தன்மை) இருப்பதால் சுமேதா தன்மை. ஆகையால்தான் அம்ருதம் அதாவது மரணதர்மமற்றது சிதிலமடையாதது, க்ஷீணமடையாதது, அவ்வியயமாகும். அல்லது அம்ருதத்தால் நனைக்கப்பட்டது “अमृतोक्षितोऽहम्” முதலிய பிராஹ்மண வாக்கியமாகும்.
इति एवं त्रिशङ्कोः ऋषेः ब्रह्मभूतस्य ब्रह्मविदः वेदानुवचनम् , वेदः वेदनम् आत्मैकत्वविज्ञानम् , तस्य प्राप्तिमनु वचनं वेदानुवचनम् ; आत्मनः कृतकृत्यताप्रख्यापनार्थं वामदेववत्त्रिशङ्कुना आर्षेण दर्शनेन दृष्टो मन्त्राम्नाय आत्मविद्याप्रकाशक इत्यर्थः ।
இவ்வாறு பிரஹ்மபூதராகிய பிரஹ்மவேதாவான திரிசங்கு ரி:யினுடைய வேதானு வசனமாகும். “वेदः” (வேத:) என்றால் ஆத்ம ஏகத்துவ விக்ஞானமாகும். அதை அடைவதற்கான வசனம் வேதானுவசனமாகும், தன்னுடைய க்ருதக்ருத்தியத்தை பிரகடனம் செய்வதற்காக வாமதேவர்க்கு சமமாக திருசங்கு ஆர்ஷரின் தர்சனத்தால் பார்க்கப்பட்ட மந்திர ஆம்னாயமாகிய ஆத்மவித்யையை பிரகாசப்படுத்துவதாகும்.,
अस्य च जपो विद्योत्पत्त्यर्थोऽधिगम्यते । ‘ऋतं च’ इति धर्मोपन्यासादनन्तरं च वेदानुवचनपाठादेतदवगम्यते । एवं श्रौतस्मार्तेषु नित्येषु कर्मसु युक्तस्य निष्कामस्य परं ब्रह्म विविदिषोरार्षाणि दर्शनानि प्रादुर्भवन्त्यात्मादिविषयाणीति ॥
(ச.பா) இதை ஜபிப்பது வித்யா உற்பத்திக்காக என்று அறிப்படுகிறது. ரிதம் முதலிய கர்ம உபாசனைக்குப் பின் வேதானுவசனத்தை சொல்லிய அது அறிந்து கொள்ளமுடியம், அவ்வாறேஸ்ரௌத ஸ்மார்த்தநித்திய கர்மங்களுடன் கூடிய நிஷ்காமனுக்கு பரபிரஹ்ம்மத்தை அறிவதில் விருப்பமுடையவனுக்கு (ஜிக்ஞா) ஆத்மாவிற்கு ஆர்ஷ தர்சனங்கள் அவனுக்கு தோன்றுகின்றன.
इति दशमानुवाकभाष्यम् ॥
वेदमनूच्येत्येवमादिकर्तव्यतोपदेशारम्भः प्राग्ब्रह्मात्मविज्ञानान्नियमेन कर्तव्यानि श्रौतस्मार्तानि कर्माणीत्येवमर्थः, अनुशासनश्रुतेः पुरुषसंस्कारार्थत्वात् । संस्कृतस्य हि विशुद्धसत्त्वस्य आत्मज्ञानमञ्जसैवोपजायते । ‘तपसा कल्मषं हन्ति विद्ययामृतमश्नुते’ (मनु. १२ । १०४) इति हि स्मृतिः । वक्ष्यति च - ‘तपसा ब्रह्म विजिज्ञासस्व’ (तै. उ. ३ । २ । १) इति । अतो विद्योत्पत्त्यर्थमनुष्ठेयानि कर्माणि । अनुशास्तीत्यनुशासनशब्दादनुशासनातिक्रमे हि दोषोत्पत्तिः ।
(அ-கை) பிரஹ்ம விக்ஞானத்திற்கு முன் ஸ்ரௌத, ஸ்மார்த்த கர்மங்களை நியமமாய் அனுஷ்டிக்க வேண்டியதால்“वेदमनूच्य” (வேதம் அநூ ச்சிய) முதலிய ச்ருதிகளால் அவைகளை அவசியம் செய்யவேண்டும் (கர்த்தவ்யம்) என்ற உபதேசம் ஆரம்பிக்கப்படுகிறது. ஏன்எனில் “अनुशासन” (அனுசாசன) ச்ருதியானது புருஷனுடைய சம்ஸ்காரத்திற்காக (அந்தக்கரண சுத்திக்காக) ஆகும். ஏன்எனில் ஸம்ஸ்காரத்துடனும் கூடிய விசுத்தசித்தம் ஏற்படும். அவனுக்கே அநாயஸமாக ஆத்மஞானம் சித்திக்கும். “‘तपसा कल्मषं हन्ति विद्ययामृतमश्नुते’ (मनु. १२ । १०४)”(தபஸா கல்மஷம் ஹந்த்தி வித்தியயா ம்ருதமச்னுதே) என்பது ச்ருதி மேலும் கூறப்போகிறது- ‘तपसा ब्रह्म विजिज्ञासस्व’ (तै. उ. ३ । २ । १)(தபஸா பிரஹ்ம்ம ஜிக்ஞாசஸ்வ) என்று. ஆகையால் வித்யா உற்பத்தயின் பொருட்டு கர்மங்களை அவச்யம் அனுஷ்டிக்க வேண்டும் अनुशास्ति (அனுசாஸ்தி = கட்டளை இடுகிறது) என்பதால் அனுசாசனம் என்ற சப்தம் இருப்பதால் அதை மீறினால் தோஷம் நேரிடும்.
प्रागुपन्यासाच्च कर्मणाम् , केवलब्रह्मविद्यारम्भाच्च पूर्वं कर्माण्युपन्यस्तानि । उदितायां च ब्रह्मविद्यायाम् ‘अभयं प्रतिष्ठां विन्दते’ (तै. उ. २ । ७ । १) ‘न बिभेति कुतश्चन’ (तै. उ. २ । ९ । १) ‘किमहं साधु नाकरवम्’ (तै. उ. २ । ९ । १) इत्यादिना कर्मनैष्किञ्चन्यं दर्शयिष्यति । अतः अवगम्यते - पूर्वोपचितदुरितक्षयद्वारेण विद्योत्पत्त्यर्थानि कर्माणीति । मन्त्रवर्णाच्च - ‘अविद्यया मृत्युं तीर्त्वा विद्ययामृतमश्नुते’ (ई. उ. ११) इति ऋतादीनां पूर्वत्रोपदेशः आनर्थक्यपरिहारार्थः ; इह तु ज्ञानोत्पत्त्यर्थत्वात्कर्तव्यतानियमार्थः ।
கர்மத்தைப்பற்றி முன்பே உபந்நியாஸம் செய்திருந்தாலும் இங்கு கர்மத்தின் உபந்நியாசம் பிரஹ்ம வித்தையின் நிரூபணத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே செய்யப்பட்டது பிரஹ்ம வித்யா உண்டாகும் பொழுது ‘अभयं प्रतिष्ठां विन्दते’ (तै. उ. २ । ७ । १) (அபயம் ப்ரதிஷட்டாம் விந்ததே)பயமற்றநிலையான ‘न बिभेति कुतश्चन’ (तै. उ. २ । ९ । १), ‘किमहं साधु नाकरवम्’ (तै. उ. २ । ९ । १), (நபிபேதிகுதஷ்ச்சன, கிமஹம் சாது நாகரவம்) முதலிய ச்ருதிவாக்கியங்களால் கர்மத்தின் தேவையற்றதன்மை காட்டப்பட்டது. இதனால் என்ன அறியப்படுகிறது எனில் கர்மமானது பூர்வம் செய்த சஞ்சித பாபத்தின் நிவிர்த்திவாயிலாய் ஞானத்தின்ப்பிராப்தி உண்டாகும் என்பதாம். ‘अविद्यया मृत्युं तीर्त्वा विद्ययामृतमश्नुते’ (ई. उ. ११) (அவித்யயா ம்ருத்யும் தீர்த்வா வித்யயாம்ருதமஷ்னுதே- அவித்யையினால் (கர்மத்தால் மிருத்யுவை (பாபத்தை) தாண்டி வித்யையினால் அம்ருதத்தை அடைகிறான் என்ற மந்திர வார்த்தைகளால் நிச்சயம் செய்யப்படுகிறது. ऋतं (ரிதம்) முதலியவை முன்பு உபதேசிக்கப்பட்டது (வேதத்தின்) அநர்த்தத்தை நீக்குவதற்காகும். இங்கு ஞான உற்பத்தி ஆகிய பயனுடையதாய் இருப்பதால் கர்த்தவ்யத்தை நிலை நாட்டுவதற்காக கூறப்படுகிறது.
वेदमनूच्याचार्योऽन्तेवासिनमनुशास्ति । सत्यं वद । धर्मं चर । स्वाध्यायान्मा प्रमदः । आचार्याय प्रियं धनमाहृत्य प्रजातन्तुं मा व्यवच्छेत्सीः । सत्यान्न प्रमदितव्यम् । धर्मान्न प्रमदितव्यम् । कुशलान्न प्रमदितव्यम् । भूत्यै न प्रमदितव्यम् । स्वाध्यायप्रवचनाभ्यां न प्रमदितव्यम् ॥ १ ॥
देवपितृकार्याभ्यां न प्रमदितव्यम् । मातृदेवो भव । पितृदेवो भव । आचार्यदेवो भव । अतिथिदेवो भव । यान्यनवद्यानि कर्माणि । तानि सेवितव्यानि । नो इतराणि । यान्यस्माकं सुचरितानि । तानि त्वयोपास्यानि ॥ २ ॥
नो इतराणि । ये के चास्मच्छ्रेयांसो ब्राह्मणाः । तेषां त्वयासनेन प्रश्वसितव्यम् । श्रद्धया देयम् । अश्रद्धयादेयम् । श्रिया देयम् । ह्रिया देयम् । भिया देयम् । संविदा देयम् । अथ यदि ते कर्मविचिकित्सा वा वृत्तविचिकित्सा वा स्यात् ॥ ३ ॥
ये तत्र ब्राह्मणाः संमर्शिनः । युक्ता आयुक्ताः । अलूक्षा धर्मकामाः स्युः । यथा ते तत्र वर्तेरन् । तथा तत्र वर्तेथाः । अथाभ्याख्यातेषु । ये तत्र ब्राह्मणाः संमर्शिनः । युक्ता आयुक्ताः । अलूक्षा धर्मकामाः स्युः । यथा ते तेषु वर्तेरन् । तथा तेषु वर्तेथाः । एष आदेशः । एष उपदेशः । एषा वेदोपनिषत् । एतदनुशासनम् । एवमुपासितव्यम् । एवमु चैतदुपास्यम् ॥ ४ ॥
वेदम् अनूच्य अध्याप्य आचार्यः अन्तेवासिनं शिष्यम् अनुशास्ति ग्रन्थग्रहणात् अनु पश्चात् शास्ति तदर्थं ग्राहयतीत्यर्थः । अतोऽवगम्यते अधीतवेदस्य धर्मजिज्ञासामकृत्वा गुरुकुलान्न समावर्तितव्यमिति । ‘बुद्ध्वा कर्माणि कुर्वीत’ इति स्मृतेश्च । कथमनुशास्तीत्यत आह -
(ச.பா) வேதத்தை அத்யயனம் செய்வித்தபின் ஆசாரியர் அந்தேவாஸியான சிஷ்யனுக்கு உபதேசம் செய்கிறார். அதாவது கிரந்தத்தை கிரஹித்தபின் அதன் அர்த்தத்தை அனுசாஸனம் செய்து அந்த அர்த்தத்தை கிரஹிக்கச் செய்கிறார். இதனால் என்ன அறிகிறோம் எனில் அதீத (அத்யயனம் செய்த) வேதத்தின் தர்ம ஜிக்ஞாசை இல்லாமல் குருகுலத்தில் இருந்து திரும்பக்கூடாது .“बुद्ध्वा कर्माणि कुर्वीत” (புத்வா கர்மா௴ தாசரேத்) என்ற ஸ்ம்ருதி இவ்வாறு (கட்டளை) செய்கிறது என்பதைக் கூறுகிறார்-
सत्यं वद यथाप्रमाणावगतं वक्तव्यं च वद । तद्वत् धर्मं चर ; धर्म इत्यनुष्ठेयानां सामान्यवचनम् , सत्यादिविशेषनिर्देशात् । स्वाध्यायात् अध्ययनात् मा प्रमदः प्रमादं मा कार्षीः । आचार्याय आचार्यार्थं प्रियम् इष्टं धनम् आहृत्य आनीय दत्त्वा विद्यानिष्क्रयार्थम् आचार्येण च अनुज्ञातः अनुरूपान्दारानाहृत्य प्रजातन्तुं प्रजासन्तानं मा व्यवच्छेत्सीः ; प्रजासन्ततेर्विच्छित्तिर्न कर्तव्या ; अनुत्पद्यमानेऽपि पुत्रे पुत्रकाम्यादिकर्मणा तदुत्पत्तौ यत्नः कर्तव्य इत्यभिप्रायः, प्रजाप्रजनप्रजातित्रयनिर्देशसामर्थ्यात् ; अन्यथा प्रजनश्चेत्येतदेकमेवावक्ष्यत् ।
(ச.பா) ஸத்தியம் वद (வத) - (ஸத்தியமேபேசு) என்பது எவ்வாறு பிரமாணத்தால் அறிகிறோமோ அவ்வாறே கூறவேண்டியதைக் கூறவேண்டும். அவ்வாறு தர்மத்தைக்கடைபிடித்து தர்மத்தை அனுஷ்டானம் செய்வதற்கு யோக்கியமான கர்மங்களின் ஸாமான்யரூபமான வாசகமாகும். ஏன்எனில் ஸத்தியம் முதலிய விசேஷ தர்மங்கள் முன்பே நிர்தேசம் செய்யப்பட்டுள்ளது. அத்யயனம் செய்வதிலும் அதைக் கற்பிப்பதிலும் பிரமாதம் (சோம்பல்) கொள்ளாதே. ஆசாரியருக்கு அவர் விரும்பியதனத்தை கொண்டுவந்து கொடுத்து அவரிடம் பெற்ற வித்யாதானத்தால் உண்டான கடனைத்தீர்த்து அவருடைய ஆக்ஜை பெற்று அதன்படி ஸ்தீரியை விவாஹம் செய்து பிரஜாதந்து அதாவது பிரஜையின் ஸந்ததி அறுபடாமல் செய்வாயாக. ஸந்ததியை விச்சேதமடையச் செய்யாதே. இதன் தாத்பரியம் என்னவெனில் புத்திரன் பிறக்காவிடில் புத்திரன் உண்டாவதற்கு வேண்டிய புத்திரகாமேஷ்ட்டியாகம் போன்றகர்மாக்களை செய்து முயற்சிக்க வேண்டும். (ஒன்பதாவது அனுவாக்கத்தில் கூறப்பட்டவாறு) பிரஜா, பிரஜன, பிரஜாபதி இந்த மூன்றும் நிர்தேசம் செய்யப்பட்டுள்ளது. அதன் ஸாமர்த்தியத்தால் ஸித்திக்கிறது. இல்லாவிடில் இங்கு प्रजन (ப்ரஜன) என்ற ஒரே ஸாதனம் நிர்தேசம் செய்யப்பட்டிருக்கும்.
सत्यात् न प्रमदितव्यं प्रमादो न कर्तव्यः ; सत्याच्च प्रमदनमनृतप्रसङ्गः ; प्रमादशब्दसामर्थ्याद्विस्मृत्याप्यनृतं न वक्तव्यमित्यर्थः ; अन्यथा असत्यवदनप्रतिषेध एव स्यात् । धर्मात् न प्रमदितव्यम् , धर्मशब्दस्यानुष्ठेयविशेषविषयत्वादननुष्ठानं प्रमादः, स न कर्तव्यः, अनुष्ठातव्य एव धर्म इति यावत् । एवं कुशलात् आत्मरक्षार्थात्कर्मणः न प्रमदितव्यम् । भूतिः विभूतिः, तस्यै भूत्यै भूत्यर्थान्मङ्गलयुक्तात्कर्मणः न प्रमदितव्यम् । स्वाध्यायप्रवचनाभ्यां न प्रमदितव्यम् , ते हि नियमेन कर्तव्ये इत्यर्थः । तथा देवपितृकार्याभ्यां न प्रमदितव्यम् , दैवपित्र्ये कर्मणी कर्तव्ये ।
(ச.பா) ஸத்தியத்திலிருந்து நழுவுதல் கூடாது. ஸத்தியத்திலிருந்து நழுவுதல் அஸத்தியம் (பொய்) ஆகும். பிரமாத சப்தத்தின் ஸாமர்த்தியத்தால் ஆகும். மறந்தும் பொய் சொல்லக்கூடாது என்பதாகும். இதன் தாத்பர்யம் என்னவெனில் பொய் பேசுதலை நிஷேதிக்கிறது (தடை செய்கிறது) என்பதாகும். தர்மத்திலிருந்து நழுவுதல் கூடாது. தர்ம சப்தமானது அனுஷ்டானம் செய்யவேண்டிய விஷயமாய் இருப்பதால் நழுவுதல் கூடாது. ஏன்எனில் தர்மம் அவசியம் அனுஷ்டிக்க வேண்டியதாகும். இவ்வாறு ஆத்மரக்ஷணத்திற்கு உபயோககரமாய் இருப்பதால் கர்மத்திலிருந்து நழுவுதல் கூடாது. “भूति” (பூதி) ஐச்வர்யம் ஆகும். ஐச்வர்யத்தை விரும்புபவர்கள் மங்களகரமான கர்மங்களில் இருந்து நழுவுதல் கூடாது. ஸ்வாத்யாயம், கற்பித்தல் இவைகளிலிருந்து நழுவுதல் கூடாது. ஸ்வத்யாயம் என்பது அத்யயனம் (படித்தல்) ப்ரவசனம் (படிப்பித்தல்) இவைகளிலிருந்து நழுவக்கூடாது அதை நியமமாய் ஆச்ரயிக்க வேண்டும் இவ்வாறு தேவகாரியம் பித்ருகாரியம் இவைகளிலிருந்து நழுவாதே அதாவது தேவதாபித்ரு ஸம்பந்தமான கர்மங்கள் அவசியம் செய்யப்பட வேண்டும்.
मातृदेवः माता देवो यस्य सः, त्वं मातृदेवः भव स्याः । एवं पितृदेवो भव ; आचार्यदेवो भव ; अतिथिदेवो भव ; देवतावदुपास्या एते इत्यर्थः । यान्यपि च अन्यानि अनवद्यानि अनिन्दितानि शिष्टाचारलक्षणानि कर्माणि, तानि सेवितव्यानि कर्तव्यानि त्वया । नो न कर्तव्यानि इतराणि सावद्यानि शिष्टकृतान्यपि । यानि अस्माकम् आचार्याणां सुचरितानि शोभनचरितानि आम्नायाद्यविरुद्धानि, तान्येव त्वया उपास्यानि अदृष्टार्थान्यनुष्ठेयानि ; नियमेन कर्तव्यानीत्येतत् । नो इतराणि विपरीतान्याचार्यकृतान्यपि ।
(ச.பா) “मातृदेवो” (மாத்ருதேவோ) மாதா எவருக்கு தெய்வமோ அந்த நீ மாத்ருதேவமாவாய். இவ்வாறே பித்ருதேவோ, ஆச்சாரிய தேவனாவாய் (அதிதிதேவனாகவும் ஆவாய்). இதன் தாத்பர்யம் என்னவெனில் எல்லா தேவதைகளையும் ஸமமாய் உபாஸனை செய்யவேண்டியதாகும். இதைத்தவிர மற்ற நிந்தையற்ற சிஷ்டர்களால் அனுஸரிக்கப்படும் கர்மங்களை நீ செய்யவேண்டியதாகும். சிஷ்டர்கள் அனுசரித்தாலும் தள்ளத்தக்க (நிந்தையுடன் கூடிய) கர்மங்களை நீ செய்யக்கூடாது. எந்த கர்மங்கள். நம்முடைய ஆச்சாரியர்களால் நன்றாக அனுஸரிக்கப்பட்ட சுபமான ஆம்நாயங்களுக்கு விருத்தமல்லாத கர்மங்களை நீ உபாஸனை (அனுஷ்ட்டிக்க வேண்டும்) செய்ய வேண்டும். அதிருஷ்ட்ட பலத்திற்காக அவைகளை அனுஷ்டிக்க வேண்டும். அதாவது நியமமாய் செய்யவேண்டும் என்பதாகும். (2) மற்ற விபரீத கர்மங்களை ஆசாரியர் செய்து இருந்தாலும் அவைகளைச் செய்யக்கூடாது.
ये के च विशेषिता आचार्यत्वादिधर्मैः अस्मत् अस्मत्तः श्रेयांसः प्रशस्ततराः, ते च ब्राह्मणाः, न क्षत्रियादयः, तेषाम् आसनेन आसनदानादिना त्वया प्रश्वसितव्यम् , प्रश्वसनं प्रश्वासः श्रमापनयः ; तेषां श्रमस्त्वया अपनेतव्य इत्यर्थः । तेषां वा आसने गोष्ठीनिमित्ते समुदिते, तेषु न प्रश्वसितव्यं प्रश्वासोऽपि न कर्तव्यः ; केवलं तदुक्तसारग्राहिणा भवितव्यम् ।
(ச.பா) எவர் ஒருவர் ஆசாரியத்துவம் முதலிய தர்மங்களுடையவராய். இருப்பதால் மேலானவர் (ஸ்ரேஷ்ட்டர்). அவ்வாறே அஹ்ர் பிராஹ்மணராயும். க்ஷத்திரியர் முதலியவைகள் அற்றவரோ அவருக்கு ஆசனம் முதலியவைகளை அளித்து அவரை ஆச்வாசபடுத்த அதாவது அவருடைய சிரமத்தைப் போக்கவேண்டும். இதன் பொருள்யாதெனில் உன்னால் அவருடைய சிரமம் போக்கப்பட வேண்டும். அவ்வாறே அவரை ஸபையில் உயர்ந்த ஆசனத்தில் இருத்தி மூச்சுவிடாமல் அவர் கூறுவதின் ஸாரத்தை கிரஹிப்பவனாய் இருக்கவேண்டும்.
किं च, यत्किञ्चिद्देयम् , तत् श्रद्धयैव दातव्यम् । अश्रद्धया अदेयं न दातव्यम् । श्रिया विभूत्या देयं दातव्यम् । ह्रिया लज्जया च देयम् । भिया भीत्या च देयम् । संविदा च मैत्र्य्यादिकार्येण देयम् ।
(ச.பா) மேலும் எவ்வளவு சிறியதானமாய் இருந்தாலும் சிரத்தையுடன் அளிக்க வேண்டும். சிரத்தை அற்று தானம் செய்யக்கூடாது. ஐஸ்வர்யத்திற்குத் தக்கவாறு அளிக்கவேண்டும். வெட்கத்துடன் கொடுக்கவேண்டும். பயத்துடன் அளிக்கவேண்டும். சம்வித் அதாவது மைத்திரியாதி காரியத்தின் நிமித்தமாக அளிக்க வேண்டும் (தானம் செய்யவேண்டும்).
अथ एवं वर्तमानस्य यदि कदाचित् ते तव श्रौते स्मार्ते वा कर्मणि वृत्ते वा आचारलक्षणे विचिकित्सा संशयः स्यात् भवेत् , ये तत्र तस्मिन्देशे काले वा ब्राह्मणाः तत्र कर्मादौ युक्ता इति व्यवहितेन सम्बन्धः कर्तव्यः ; संमर्शिनः विचारक्षमाः, युक्ताः अभियुक्ताः, कर्मणि वृत्ते वा आयुक्ताः अपरप्रयुक्ताः, अलूक्षाः अरूक्षाः अक्रूरमतयः, धर्मकामाः अदृष्टार्थिनः अकामहता इत्येतत् ; स्युः भवेयुः, ते ब्राह्मणाः यथा येन प्रकारेण तत्र तस्मिन्कर्मणि वृत्ते वा वर्तेरन् , तथा त्वमपि वर्तेथाः । अथ अभ्याख्यातेषु, अभ्याख्याता अभ्युक्ताः दोषेण सन्दिह्यमानेन संयोजिताः केनचित् , तेषु च ; यथोक्तं सर्वमुपनयेत् - ये तत्रेत्यादि ।
(ச.பா) இவ்வாறு அனுஷ்டானம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஏதாவது ஒரு ஸமயத்தில் ச்ரௌதத்திலோ ஸ்மார்தத்திலோ அதை கடைபிடிப்பதிலோ ஸந்தேஹம் உண்டாகலாம். அப்பொழுது எவர்கள் அந்த தேசத்திலோ, காலத்திலோ அங்கு பிராஹ்மணர்கள் கர்மங்களில் ஈடுபட்டவர்களாய் இருப்பார்கள் என்ற இடைவெளியுடன் கூடிய பதத்துடன் ஸம்பந்தம் செய்யவேண்டும். संमर्शिनः (ஸம்மர்ஷின) விசாரத்தில் ஸாமர்த்தியசாலிகள். युक्ता (யுக்தா) கர்ம அல்லது கர்மத்தை அனுஷ்டிப்பதில் பூர்ணமாய் ஈடுபடுபவர்கள். आयुक्ताः (ஆயுக்த்தா:) மற்றவைகளில் ஈடுபாடு அற்றவர்க்ள். अलूक्षाः (அலூக்ஷா:) குரூரத் தன்மை அற்ற மதியுடையவர்கள் धर्मकामाः (தர்மகாமா:) அதிருஷ்ட்டத்தில் இச்சை உடையவர்களாயும் காமனைவசத்தால் விவேக சூன்யமற்றவர்கள். அந்த பிராஹ்மணர்கள் எவ்விதமாய் அந்த கர்மங்களில் பிரவிர்த்திக்கிறார்களோ அவ்வாறு நீயும் பிரவிர்த்திப்பாயாக. அவ்வாறே. अभ्याख्याताः (அப்யாக்கியாதா) अभ्युक्त (அப்யுக்தா) அதாவது எவரிடத்தில் ஸம்ஸயத்துடன் கூடிய தோஷம் ஆரோபிக்கப்பட்டதோ அவர்களுக்கு எவ்வாறு முன்பு “ये तत्र” (யேதத்ர) முதலியவைகளால் கூறப்பட்ட எல்லா வியவகாரங்களும் பிரயோகம் செய்யவேண்டியதாகும்.
एषः आदेशः विधिः । एषः उपदेशः पुत्रादिभ्यः पित्रादीनामपि । एषा वेदोपनिषत् वेदरहस्यम् , वेदार्थ इत्येतत् । एतदेव अनुशासनम् ईश्वरवचनम् , आदेशवाच्यस्य विधेरुक्तत्वात् । सर्वेषां वा प्रमाणभूतानामनुशासनमेतत् । यस्मादेवम् , तस्मात् एवं यथोक्तं सर्वम् उपासितव्यं कर्तव्यम् । एवमु च एतत् उपास्यम् उपास्यमेव चैतत् नानुपास्यम् इत्यादरार्थं पुनर्वचनम् ॥ ४ ॥
(ச.பா) இந்த ஆதேசம் (आदेशं) என்பது விதி (विधि) அது புத்திரன் முதலியவர்களுக்கு பிதா முதலியவர்கள் செய்யும் உபதேசமாகும். அந்த உபநிஷத் வேதத்தின் ரஹஸ்யார்த்தமாகும். அதையே அனுசாசனம் (உபதேசம்) செய்ய வேண்டும் என்பது ஈஸ்வர வாக்கியம், அல்லது ஆதேச வாக்கியம் விதியாகும். அது முதலிலேயே கூறப்பட்டதால். இது எல்லா பிரமாண பூதமானதை (உபதேசம்) இங்கு அனுசாஸனம் செய்யப்பட்டது. ஏன்எனில் முதலில் கூறப்பட்டது எல்லாம் உபாஸனை செய்யவேண்டும். இது உபாஸனை செய்யவேண்டும். உபாஸனை செய்யாமல் இருக்கக்கூடாது. இவ்வாறு இரண்டு முறைகூறப்பட்டது உபாஸனையின் ஆதரவின் பொருட்டாகும்.
अत्रैतच्चिन्त्यते विद्याकर्मणोर्विवेकार्थम् - किं कर्मभ्य एव केवलेभ्यः परं श्रेयः, उत विद्यासंव्यपेक्षेभ्यः, आहोस्विद्विद्याकर्मभ्यां संहताभ्याम् , विद्याया वा कर्मापेक्षायाः, उत केवलाया एव विद्याया इति ।
(ச.பா) இப்பொழுது வித்யா, கர்மங்களை விவேகம் செய்வதற்காக இங்கு விசாரம் செய்யப்படுகிறது. (1) பரமஸ்ரேயஸ் (மோக்ஷம்) கர்மத்தினால் மட்டும் அடையப்படுகிறதா? (2) அல்லது வித்தையின் அபேக்ஷயைுடன் கூடிய கர்மத்தாலா? (3) அல்லது ஒன்றுக்கொன்று கலந்த வித்தியா கர்மம் இரண்டினாலுமா? (4) அல்லது கர்மத்தை அபேக்ஷிக்கும் வித்யையினாலா? (5) அல்லது வித்யையினால் மட்டுமா? என்று.
तत्र केवलेभ्य एव कर्मभ्यः स्यात् , समस्तवेदार्थज्ञानवतः कर्माधिकारात् ‘वेदः कृत्स्नोऽधिगन्तव्यः सरहस्यो द्विजन्मना’ इति स्मरणात् । अधिगमश्च सहोपनिषदर्थेनात्मज्ञानादिना । ‘विद्वान्यजते’ ‘विद्वान्याजयति’ इति च विदुष एव कर्मण्यधिकारः प्रदर्श्यते सर्वत्र ज्ञात्वानुष्ठानमिति च । कृत्स्नश्च वेदः कर्मार्थ इति हि मन्यन्ते केचित् । कर्मभ्यश्चेत्परं श्रेयो नावाप्यते, वेदोऽनर्थकः स्यात् ।
(ச.பா) கர்மங்களினால் மாத்திரம் (மட்டும்) சிரேயஸை அடையலாம். ஏன்எனில் எல்லா வேதார்த்தங்களையும் அறிந்தவனுக்கே கர்மத்தில் அதிகாரம் இருப்பதால். இதை “वेदः कृत्स्नोऽधिगन्तव्यः सरहस्यो द्विजन्मना” பிராஹ்மணர்கள் வேதம் முழுவதையும் ரஹஸ்யத்துடன் அறியவேண்டும் என்று ஸ்மிருதியினால் அறிகிறோம். மேலும் வேதத்தின்ஞானம் உபநிஷத்தின் அர்த்தமான ஆத்ம ஞானத்துடன் கூடியதாகிறது “विद्वान्यजते” (வித்வான்யஜதே)- வித்வான் யக்ஞம் செய்கிறான். “विद्वान्याजयति” (வித்வான்யாஜயதி) - வித்வான் யக்ஞத்தை செய்விக்கிறான் என்று வித்வானுக்கே கர்மத்தில் அதிகாரம் என்று எங்கும் காண்பிக்கப்படுகிறது. மேலும் .“ज्ञात्वा चानुष्ठानम्” (ஞாத்வா சானுஷ்டானம்)- அறிந்து அனுஷ்டானம் செய் என்றும் கூறப்படுகிறது. வேதம் முழுவதும் கர்மத்தின் பொருட்டே என்று சிலர் கருதுகிறார்கள். கர்மத்தினால் பரமச்ரேயஸ் (மோக்ஷம்) அடையப்படவில்லை எனில் வேதம் அர்த்தமற்றதாகிவிடும்.
न ; नित्यत्वान्मोक्षस्य । नित्यो हि मोक्ष इष्यते । कर्मकार्यस्य चानित्यत्वं प्रसिद्धं लोके । कर्मभ्यश्चेच्छ्रेयः, अनित्यं स्यात् ; तच्चानिष्टम् । ‘तद्यथेह कर्मचितो लोकः क्षीयते’ (छा. उ. ८ । १ । ६) इतिन्यायानुगृहीतश्रुतिविरोधात् ।
(ச.பா) அது பொருந்தாது. ஏன்எனில் மோக்ஷம் நித்யமானதால். அந்த மோக்ஷம் நித்தியம் என்று ப்ரஸித்தம் உலகில் கர்மகாரியங்களுக்கு அநித்தியத்துவம் பிரஸித்தமாய் இருக்கிறது. ஆகையால் கர்மங்களினால் சிரேயஸ் அநித்தியம் ஆகையால் இது விரும்பத்தக்கதல்ல. “तद्येतह कर्मचितो लोकः क्षीयते” (தத்யதேஹ கர்மசிதோ லோக: க்ஷீயதே) எவ்வாறு கர்மத்தினால் ஸம்பாதிக்கப்பட்ட லோகம் க்ஷீணமாகிறது (நஷ்ட்டமாகிறது) என்ற நியாயத்தை அனுஸரித்த ச்ருதிக்கு விரோதமாகும்.
ननु काम्यप्रतिषिद्धयोरनारम्भात् आरब्धस्य च कर्मण उपभोगेनैव क्षयात् नित्यानुष्ठानाच्च प्रत्यवायानुपपत्तेः ज्ञाननिरपेक्ष एव मोक्ष इति चेत् ?
(ச.பா) காமிய பிரதி:த்த ப்ராரப்த கர்மங்கள் ஆரம்பிக்காமலும் கர்மங்களை அனுபவத்தால் க்ஷயமாவதாலும், நித்ய அனுஷ்டானத்தால் பிரத்யவாயம் உண்டாகாததாலும் மோக்ஷத்திற்கு ஞானத்தின் அபேக்ஷை இல்லை என்றால்.
तच्च न, कर्मशेषसम्भवात्तन्निमित्ता शरीरान्तरोत्पत्तिः प्राप्नोतीति प्रत्युक्तम् ; कर्मशेषस्य च नित्यानुष्ठानेनाविरोधात्क्षयानुपपत्तिरिति च ।
அது பொருந்தாது சேஷகர்மங்கள் இருப்பதின் காரணமாக வேறு சரீரத்தின் உத்பத்தியை அடைவான் என்று கூறப்பட்டுள்ளது. கர்மசேஷம் நித்ய அனுஷ்டானத்திற்கு விரோதமில்லாததால் அதற்கு நாசம் இல்லை என்பதாகும்.
यदुक्तं समस्तवेदार्थज्ञानवतः कर्माधिकारादित्यादि, तच्च न ; श्रुतज्ञानव्यतिरेकादुपासनस्य । श्रुतज्ञानमात्रेण हि कर्मण्यधिक्रियते, नोपासनज्ञानमपेक्षते । उपासनं च श्रुतज्ञानादर्थान्तरं विधीयते मोक्षफलम् ; अर्थान्तरप्रसिद्धेश्च स्यात् ; ‘श्रोतव्यः’ इत्युक्त्वा तद्व्यतिरेकेण ‘मन्तव्यो निदिध्यासितव्यः’ इति यत्नान्तरविधानात् मनननिदिध्यासनयोश्च प्रसिद्धं श्रवणज्ञानादर्थान्तरत्वम् ।
(ச.பா) எல்லா வேதார்த்தங்களையும் அறிந்தவனே கர்மாதிகாரி என்று கூறியது முதலியவை ஸரியல்ல. ஏன்எனில் உபாஸனை படித்து வந்த ஞானத்தைக்காட்டிலும் (ச்ருத ஞானத்தைக் காட்டிலும்) வேறானது. மனிதன் படித்த ஞானத்தினாலேயே கர்மத்திற்கு அதிகாரி ஆகிறான். ஆகையால் உபாசனையை அபேக்ஷிப்பதில்லை. உபாசனையோ படித்த ஞானத்தை விட வேறாக விதிக்கப்படுகிறது. அந்த உபாஸனை மோக்ஷத்தைப்பலனாக என்பது பிரசித்தமாய் இருக்கிறது. श्रोतव्यः (ஸ்ரோத்தவ்ய) = கேட்கப்பட வேண்டும்) என்று கூறி அதைக்காட்டிலும் வேறாக “मन्तव्यो निदिध्यासितव्यः” (மந்தவ்யோ நிதித்யாசித்தவ்ய:) = மனனம் செய்யவேண்டும், நிதித்தியாஸனம் செய்யவேண்டும் என்று வேறு பிரயத்தனத்தையும் கூறுகிறது. உலகில் சிரவண ஞானத்தால் மனனம், நிதித்தியாசனம் என்கின்ற வேறு அர்த்தமும் பிரஸித்தமாய் இருக்கிறது.
एवं तर्हि विद्यासंव्यपेक्षेभ्यः कर्मभ्यः स्यान्मोक्षः ; विद्यासहितानां च कर्मणां भवेत्कार्यान्तरारम्भसामर्थ्यम् ; यथा स्वतो मरणज्वरादिकार्यारम्भसमर्थानामपि विषदध्यादीनां मन्त्रसशर्करादिसंयुक्तानां कार्यान्तरारम्भसामर्थ्यम् , एवं विद्याहितैः कर्मभिः मोक्ष आरभ्यत इति चेत् ?
(ச.பா) வித்யையை அபேக்ஷிக்கும் கர்மத்தினால் தான் மோக்ஷம் உண்டாக முடியும். கர்மம் ஞானத்துடன் சேர்ந்து இருக்கும் பொழுது அதில் காரியாந்தரம் ஆரம்பிப்பதற்கான ஸாமர்த்தியம் உண்டாகிறது. எவ்வாறு மரணம், ஜ்வரம் முதலிய காரியங்கள் ஆரம்பிக்கும் ஸாமர்த்தியம் உண்டானாலும் விஷம், அவ்வாறே தயிர் முதலியவைகளில் மந்திரம் மேலும் சர்க்கரை முதலியவைகளுடன் சேரும் பொழுது காரியாந்தரத்தின் ஆரம்பத்திற்கான ஸாமர்த்தியம் உண்டாகிறது. அவ்வாறு வித்தையுடன் கூடிய கர்மத்தினால் மோக்ஷத்தின் ஆரம்பம் ஏற்படலாமே? என்பதற்கு-
(सिध्दान्ती) न ; आरभ्यस्यानित्यत्वादित्युक्तो दोषः ।
(ச.பா) (ஸித்தா) அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன் எனில் எது ஆரம்பிக்கப்படுகிறதோ அது அநித்தியம் என்ற தோஷத்துடன் கூடியதாகும் என்று முன்பே கூறப்பட்டுவிட்டது.
वचनादारभ्योऽपि नित्य एवेति चेत् ?
(ச.பா) (பூர்வ) ஆனால் (न स पुनरावर्तते - அவன் மறுபடியும் பிறப்பதில்லை) என்ற வாக்கியத்தால் ஆரம்பிக்கின்ற மோக்ஷமும் நித்யம் ஆகலாமே?
(सिध्दान्ती) न, ज्ञापकत्वाद्वचनस्य । वचनं नाम यथाभूतस्यार्थस्य ज्ञापकम् , नाविद्यमानस्य कर्तृ । न हि वचनशतेनापि नित्यमारभ्यते, आरब्धं वा अविनाशि भवेत् । एतेन विद्याकर्मणोः संहतयोर्मोक्षारम्भकत्वं प्रत्युक्तम् ॥
(ச.பா) (ஸித்தாந்தீ) இது ஸரியல்ல. ஏனெனில் வாக்கியம் என்பது அறியாததை ஞாபகப்படுத்துவதற்காகவே. வசனம் என்பது யதார்த்த அர்த்தத்தைப் போதிப்பதே ஆகும். இல்லாத பதார்த்தத்தை உண்டாக்காது. நூ ற்றுக்கணக்கான வசனத்தாலும் நித்யமானது ஆரம்பிக்க முடியாது. ஆரம்பிக்கப்படட்து விநாசம் அற்றதாகவும் முடியாது. இதிலிருந்து வித்தியா கர்மத்தின் சமுச்சயம் மோக்ஷத்தை ஆரம்பிக்கும் என்ற கக்ஷியும் பிரதிஷேதம் செய்யப்பட்டது (நிஷேதம் செய்யப்பட்டது).
विद्याकर्मणी मोक्षप्रतिबन्धहेतुनिवर्तके इति चेत् , न ; कर्मणः फलान्तरदर्शनात् । उत्पत्तिविकारसंस्काराप्तयो हि फलं कर्मणो दृश्यन्ते । उत्पत्त्यादिफलविपरीतश्च मोक्षः ।
(ச.பா) வித்யா, கர்மம் இரண்டும் மோக்ஷத்தின் பிரதிபந்தத்தை உண்டாக்கும் ஹேதுக்களை நிவர்த்திக்கக் கூடியதாகும் என்று நீ கூறினால் அது சரியல்ல. ஏன்எனில் கர்மத்தின் பலன் வேறாகக்கூறப்பட்டுள்ளது. உத்பத்தி, ஸம்ஸ்காரம், விகாரம், ஆப்தி இவைகள் கர்மத்தின் பலனாகக்கருதப்படுகிறது. ஆகையால் உத்பத்தியாதி பலத்தைக்காட்டிலும் விபரீதமானது (வேறானது) மோக்ஷம்.
(पूर्वपक्षी) गतिश्रुतेराप्य इति चेत् - ‘सूर्यद्वारेण’(मु. उ. १ । २ । ११), ‘तयोर्ध्वमायन्’ (क. उ. २ । ३ । १६) इत्येवमादिगतिश्रुतिभ्यः प्राप्यो मोक्ष इति चेत् ।
(ச.பா) (பூர்வ) “கதி” சுருதியினால் மோக்ஷம் அடைப்பட வேண்டியது என்று கிடைக்கிறது எனில் ‘सूर्यद्वारेण’(मु. उ. १ । २ । ११), “‘तयोर्ध्वमायन्’ (क. उ. २ । ३ । १६)” (“சூரியத்வாரேண” “தயோர்த்வமாயன்”) முதலிய கதி சுருதிகளால் மோக்ஷம் அடையப்பட முடியும் என்று அறியப்படுகிறதே எனில்.
न ; सर्वगतत्वात् गन्तृभ्यश्चानन्यत्वात् । आकाशादिकारणत्वात्सर्वगतं ब्रह्म, ब्रह्माव्यतिरिक्ताश्च सर्वे विज्ञानात्मानः ; अतो नाप्यो मोक्षः । गन्तुरन्यद्विभिन्नदेशं च भवति गन्तव्यम् । न हि, येनैवाव्यतिरिक्तं यत् , तत्तेनैव गम्यते । तदनन्यत्वसिद्धिश्च ‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ (तै. उ. २ । ६ । १) ‘क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु’ (भ. गी. १३ । २) इत्येवमादिश्रुतिस्मृतिशतेभ्यः ।
(ச.பா) அவ்வாறு அல்ல. ஏன்எனில் எங்கும் நிறைந்துள்ளதாலும். செல்பவனைக்காட்டிலும் வேறாகாததாலும் ஆகாசம் முதலியவைகளுக்கும் காரணமாய் இருப்பதால் ஸர்வகதம் (எங்கும் நிறைந்தது). எல்லா ஜீவ ஆத்மாக்களும் பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறானவர்கள் அல்ல (அபின்னமாகும்). ஆகையால் மோக்ஷம் அடையக்கூடியது அல்ல. செல்பவன் தான் இருக்கும் இடத்தைத் தவிற வேறு இடத்திற்கு செல்லவேண்டும் என்று தோன்றுகிறது. எது எதைக்காட்டிலும் அபின்னமோ அதற்கு செல்லுதல் என்பது கிடையாது. மேலும் அதைக்காட்டிலும் வேறானது இல்லை என்று பிரஸித்தமாகும் பொழுது .“‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ (तै. उ. २ । ६ । १)” “‘क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु’ (भ. गी. १३ । २)”(தத்ஸ்ருஷ்ட்வா ததேவானுப்ராவிஷத், க்ஷதே்ரக்ஞம் சாபிமாம் வித்தி) = அது சிருஷ்ட்டி செய்து அதே உள்ளே நுழைந்தது, அந்த க்ஷதே்ரக்ஞன் என்று என்னை அறி) என்று சுருதி, ஸ்மிருதிகளால் ஸித்தமாகிறது.
गत्यैश्वर्यादिश्रुतिविरोध इति चेत् - अथापि स्यात् यद्यप्राप्यो मोक्षः, तदा गतिश्रुतीनाम् ‘स एकधा’ (छा. उ. ७ । २६ । २) ‘स यदि पितृलोककामः भवति’ (छा. उ. ८ । २ । १) ‘स्त्रीभिर्वा यानैर्वा’ (छा. उ. ८ । १२ । ३) इत्यादिश्रुतीनां च कोपः स्यात् इति चेत् ।
(ச.பா) கதி, ஐஸ்வர்யங்களைப் பற்றி உரைக்கும் சுருதிகளுக்கு விரோதமாகுமே. மோக்ஷம் அடையப்படாததாக இருந்தால் கதி சுருதியும் “‘स एकधा’ (छा. उ. ७ । २६ । २)” (ச ஏகதா = அது ஒரே ரூபமாய் இருக்கிறது) “‘स यदि पितृलोककामः भवति’ (छा. उ. ८ । २ । १)”(ச யதி பித்ருலோககாமோபவதி = அவன் பித்ருலோகத்தில் ஆசை உள்ளவனாய் இருக்கிறான்) “‘स्त्रीभिर्वा यानैर्वा’ (छा. उ. ८ । १२ । ३)” (ஸ்த்ரீபிர்வா யானைர்வா = அவன் ஸ்திரீ, யானம் (மார்க்ககம்) இவைகளுடன் சேர்த்து ஸ்மரிக்கிறான்). என்ற சுருதிகளுக்கு கோபம் வருமே எனில்.
(सिध्दान्ती) न ; कार्यब्रह्मविषयत्वात्तासाम् । कार्ये हि ब्रह्मणि स्त्र्यादयः स्युः, न कारणे ; ‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) ‘यत्र नान्यत्पश्यति’ (छा. उ. ७ । २४ । १) ‘तत्केन कं पश्येत्’ (बृ. उ. २ । ४ । १४)(बृ. उ. ४ । ५ । १५) इत्यादिश्रुतिभ्यः ।
(ச.பா) (ஸித்தாந்தீ) அது சரியல்ல. அவைகள் காரிய பிரஹ்ம விஷயமாய் இருப்பதால். காரிய பிரஹ்மத்தில் அல்லவா ஸ்திரீ முதலியவைகள் இருக்கும், காரண பிரஹ்மத்தில் இருக்க முடியாது. “‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १)” (ஏகமேவாத்விதீயம் = ஒன்றே அத்வீத்யம்), “‘यत्र नान्यत्पश्यति’ (छा. उ. ७ । २४ । १)” (யத்ர நான்யத்பச்யதி-எங்கு வேறு ஒன்றையும் பார்ப்பதில்லை) “‘तत्केन कं पश्येत्’ (बृ. उ. २ । ४ । १४)” (தத்கேன கம் பஷ்யேத் = அதை எவரால் எதைப்பார்ப்பான்) முதலிய ஸ்ருதிகளால் அறிகிறோம்.
विरोधाच्च विद्याकर्मणोः समुच्चयानुपपत्तिः । प्रलीनकर्त्रादिकारकविशेषतत्त्वविषया हि विद्या तद्विपरीतकारकसाध्येन कर्मणा विरुध्यते । न ह्येकं वस्तु परमार्थतः कर्त्रादिविशेषवत् तच्छून्यं चेति उभयथा द्रष्टुं शक्यते । अवश्यं ह्यन्तरन्मिथ्या स्यात् । अन्यतरस्य च मिथ्यात्वप्रसङ्गे युक्तं यत्स्वाभाविकाज्ञानविषयस्य द्वैतस्य मिथ्यात्वम् ; ‘यत्र हि द्वैतमिव भवति’ (बृ. उ. २ । ४ । १४), ‘मृत्योः स मृत्युमाप्नोति’ (क. उ. २ । १ । १०)(बृ. उ. ४ । ४ । १९) ‘अथ यत्रान्यत्पश्यति तदल्पम्’ (छा. उ. ७ । २४ । १) ‘अन्योऽसावन्योऽहमस्मि’ (बृ. उ. १ । ४ । १०) ‘उदरमन्तरं कुरुते। अथ तस्य भयं भवति’ (तै. उ. २ । ७ । १) इत्यादिश्रुतिशतेभ्यः ।
(ச.பா) வித்யாவும் கர்மமும் விரோதமாய் இருப்பதால் அவைகளுக்கு ஸமுச்சயம் (சேர்க்கை) ஏற்படமுடியாது. எதில் கர்த்தா, கரண முதலிய காரக விசேஷங்கள் முற்றிலும் லயமடைந்த அந்த தத்துவத்தை (பிரஹ்மத்தை) விஷயம் செய்யும் வித்யா தனக்கு விபரீதமான ஸாதன ஸாத்தியமான கர்மத்தைக் காட்டிலும் விருத்தமானது. ஒரு வஸ்து உண்மையில் (பரமார்த்தமாக) கர்த்தாமுதலிய விசேஷங்களுடன் கூடியதாயும், அவைகள் அற்றதாகவும் இருக்கும். இரண்டு விதமாக காணமுடியாது அவைகளில் ஒருபக்ஷம் நிச்சயமாக மித்யாவாக (தவறாக) இருக்கவேண்டும். இவ்வாறு ஏதோ ஒன்று மித்யாத்துவமாய் இருக்கும் பொழுது அது ஸ்வபாவமாகவே அக்ஞான விஷயமாய் இருக்கும். அந்த துவைதம் மித்யை என்பதே பொருந்தும். “‘यत्र हि द्वैतमिव भवति’ (बृ. उ. २ । ४ । १४)” (யத்ர ஹித்வைதமிவ பவதி - எங்கு துவைதம் போல் தோன்றுகிறதோ) “‘मृत्योः स मृत्युमाप्नोति’ (क. उ. २ । १ । १०) (बृ. उ. ४ । ४ । १९)” (மிருத்யோ: ச மிருத்யுமாப்னோதி = மரணத்திலிருந்து மரணத்தை அடைகிறான்) “‘अथ यत्रान्यत्पश्यति तदल्पम्’ (छा. उ. ७ । २४ । १)” (எங்கு வேறாய் பார்க்கிறானோ அது அல்பம்) “‘अन्योऽसावन्योऽहमस्मि’ (बृ. उ. १ । ४ । १०) ” (அன்யோऽஅசாவன்யோऽஹமஸ்மி = எது அன்யமோ நான் அங்கு அன்யன்.). “‘उदरमन्तरं कुरुते। अथ तस्य भयं भवति’ (तै. उ. २ । ७ । १)” (உதரமந்தரம் குருதே அத தஸ்ய பயம் பவதி = எவன் சிறிதளவு வேறாய் பார்த்தாலும் பயம் உண்டாகும்) முதலிய நூ ற்றுக்கணக்கான சுருதி பிரமாணங்கள் இருக்கின்றன.
सत्यत्वं च एकत्वस्य ‘एकधैवानुद्रष्टव्यम्’ (बृ. उ. ४ । ४ । २०) ‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) ‘ब्रह्मैवेदं सर्वम्’ ‘आत्मैवेदं सर्वम्’ (छा. उ. ७ । २५ । २) इत्यादिश्रुतिभ्यः । न च सम्प्रदानादिकारकभेदादर्शने कर्मोपपद्यते । अन्यत्वदर्शनापवादाश्च विद्याविषये सहस्रशः श्रूयन्ते । अतो विरोधो विद्याकर्मणोः । अतश्च समुच्चयानुपपत्तिः । तत्र यदुक्तं संहताभ्यां विद्याकर्मभ्यां मोक्ष इत्येतदनुपपन्नमिति, तदयुक्तम् ,॥
(ச.பா) “‘एकधैवानुद्रष्टव्यम्’ (बृ. उ. ४ । ४ । २०)” (ஏகதைவானுத்ரஷ்ட்டவ்யம் ஒரே ரூபமாகவே பார்க்கவேண்டும்). “‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) ” (ஏகமேவாத்விதீயம் = ஒன்றே அத்வைதம்) “‘ब्रह्मैवेदं सर्वम्’” (பிரஹ்மைவேதப் சர்வம் = இவை எல்லாம் பிரஹ்மமே). ‘आत्मैवेदं सर्वम्’ (छा. उ. ७ । २५ । २) (ஆத்மைவ சர்வம் = இவை எல்லாம் ஆத்மாவே) என்பது முதலிய சுருதிகளினால் ஒன்றே சத்தியம் (ஏகத்துவமே சத்தியம்) என்று ஸித்திக்கிறது. ஸம்பிரதானம் முதலிய காரகபேதம் இல்லாததால் கர்மம் ஏற்படுவது ஸம்பவிக்காது. வித்யா விஷயத்தில் அதாவது ஞானவிஷயத்தில் பேத திருஷ்ட்டியின் அபவாதம் ஆயிரக்கணக்காய் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆகையால் வித்யா கர்மங்களுக்குள் விரோதம் உள்ளது. ஆகையால் ஸமுச்சயம் பொருந்தாது. எது முன்பு கூறப்பட்டுள்ளதோ “ஒன்றுக்கொன்று கலந்த வித்யா மேலும் கர்மம் இரண்டினாலும் மோக்ஷம் அடையப்படும்” என்பது ஸித்திக்காது.
(पूर्वपक्षी) तद्विहितत्वात्कर्मणां श्रुतिविरोध इति चेत् - यद्युपमृद्य कर्त्रादिकारकविशेषमात्मैकत्वविज्ञानं विधीयते सर्पादिभ्रान्तिज्ञानोपमर्दकरज्ज्वादिविषयविज्ञानवत् , प्राप्तः कर्मविधिश्रुतीनां निर्विषयत्वाद्विरोधः । विहितानि च कर्माणि । स च विरोधो न युक्तः, प्रमाणत्वाच्छ्रुतीनामिति चेत् ?
(ச.பா) (பூர்வ) கர்மாவும் சுருதியினால் விதிக்கப்பட்டுள்ளதால் அந்த சுருதிக்கு விரோதம் ஆகும். ஸர்ப்ப முதலிய பிராந்திஞானத்தைபாதிக்கும் (நீக்கும்) ரஜ்ஜ) (கயிறு) முதலிய விஷய ஞானத்திற்கு ஸமமாக கர்த்தாமுதலிய காரக விசேஷங்களை நீக்கி ஆத்ம ஏகத்துவஞானத்தை விதானம் செய்யப்பட்டாலும் விஷயம் ஒன்றும் இல்லாததின் காரணத்தால் கர்மத்தை விதானம் செய்யும் சுருதிக்கு (வித்யையை விதானம் செய்யும் சுருதிகளுக்கு) விரோதமாகும். சுருதியினால் கர்மங்கள் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அதற்கு விரோதம் பொருந்தாது. ஏன்எனில் எல்லா சுருதிகளும் பிரமாண பூதமாய் இருப்பதால் விரோதம் என்பது ஸரியல்ல என்று இவ்வாறு கூறினால்.
(सिध्दान्ती) न ; पुरुषार्थोपदेशपरत्वाच्छ्रुतीनाम् । विद्योपदेशपरा तावच्छ्रुतिः संसारात्पुरुषो मोक्षयितव्य इति संसारहेतोरविद्यायाः विद्यया निवृत्तिः कर्तव्येति विद्याप्रकाशकत्वेन प्रवृत्तेति न विरोधः ।
(ச.பா) (ஸித்தாந்தீ) அவ்வாறு கூறுவது ஸரியல்ல. ஏன்எனில் சுருதிகள் பரமபுருஷார்த்தத்தை உபதேசம் செய்யவே பிரவிர்த்திக்கின்றன. சுருதியானது ஞானத்தை உபதேசம் செய்வதிலேயே குறியாய் இருக்கிறது. (தத்பரமாய் இருக்கிறது). ஸம்சாரத்திலிருந்து புருஷனை விடுவிக்கவேண்டும் (மோக்ஷம் அடையச் செய்யவேண்டும்) என்று ஸம்சாரத்திற்குக் காரணமான அவித்தியாவை வித்யையினால் நிவிர்த்தி செய்ய வேண்டும் என்று வித்தையை பிரகாசப்படுத்த மட்டுமே வந்திருப்பதால் விரோதம் இல்லை.
(पूर्वपक्षी) एवमपि कर्त्रादिकारकसद्भावप्रतिपादनपरं शास्त्रं विरुध्यत एवेति चेत् ?
(ச.பா) (பூர்வ) அவ்வாறானாலும் கர்த்தாமுதலிய காரகங்கள் இருக்கிறது என்பதை பிரதிபாதனம் செய்யும் சாஸ்திரம் விருத்தமானதே என்றால்.
(सिध्दान्ती) न ; यथाप्राप्तमेव कारकास्तित्वमुपादाय उपात्तदुरितक्षयार्थं कर्माणि विदधच्छास्त्रं मुमुक्षूणां फलार्थिनां च फलसाधनं न कारकास्तित्वे व्याप्रियते । उपचितदुरितप्रतिबन्धस्य हि विद्योत्पत्तिर्नावकल्पते । तत्क्षये च विद्योत्पत्तिः स्यात् , ततश्चाविद्यानिवृत्तिः, तत आत्यन्तिकः संसारोपरमः ।
(ச.பா) (ஸித்தாந்தீ) அவ்வாறு அல்ல. ஸ்வபாவமாகவே அறியப்பட்ட காரகங்களை ஸ்வீகரித்துக்கொண்டு ஸஞ்சித பாபங்களின் க்ஷயத்திற்காக கர்மங்களை விதிக்கும் சாஸ்திரம் முமுக்ஷ)க்களுக்கும், பலத்தில் இச்சை உடையர்களுக்கும் பல ஸாதனங்களை போதிக்கும் காரகங்களின் இருத்தலை ஊர்ஜிதம் செய்வதற்காக பிரவிர்த்திக்கவில்லை. எவனுக்கு ஸஞ்சித பாபரூப பிரதிபந்தம் இருக்குமோ அவனுக்கு ஞானம் உண்டாகாது. அதன் க்ஷயம் உண்டான உடன் ஞானம் உண்டாகும். மேலும் அப்பொழுது அவித்யையின் நிவிர்த்தி உண்டாகும். அதன் பின் ஸம்சாரத்தின் ஆத்யந்திக உபரதி (முடிவு) உண்டாகும். முற்றிலும் ஸம்சாரம் சாந்தியாகும் (நீங்குகிறது).
अपि च, अनात्मदर्शिनो ह्यनात्मविषयः कामः ; कामयमानश्च करोति कर्माणि ; ततस्तत्फलोपभोगाय शरीराद्युपादानलक्षणः संसारः । तद्व्यतिरेकेणात्मैकत्वदर्शिनो विषयाभावात्कामानुपपत्तिः, आत्मनि चानन्यत्वात्कामानुपपत्तौ स्वात्मन्यवस्थानं मोक्ष इत्यतोऽपि विद्याकर्मणोर्विरोधः । विरोधादेव च विद्या मोक्षं प्रति न कर्माण्यपेक्षते ।
(ச.பா) மேலும் எவன் அநாத்மதர்சியோ அவனுக்கே அநாத்ம வஸ்து ஸம்பந்தமான காமனை ஏற்படும். காமம் உடையவனே கர்மத்தை செய்கிறான். மேலும் அதனால் உண்டாகும் பலனை அனுபவிப்பதற்காக சரீரம் முதலியவைகளை கிரஹண ரூபமான ஸம்சாரத்தை அடைகிறான். அதை விட வேறான ஆத்ம ஏகத்துவதர்சிக்கு விஷயங்கள் இல்லாததால் (அபாவமாய் இருப்பதால்) அதில் அவனுக்கு காமம் ஏற்படுவதில்லை. ஆத்மா தன்னைக்காட்டிலும் அபின்னமாகும். ஆகையால் அதனிடம் காமனையும் ஸம்பவிக்காததால் ஆகையால் ஸ்வாத்ம ஸ்வரூபத்திலேயே நிலை பெறுதலான மோக்ஷம் ஸித்திக்கும். ஆகையால் ஞானத்திற்கும் கர்மத்திற்கும் விரோதம் உள்ளதால் ஞானமே மோக்ஷத்திற்குக்காரணம் ஞானமானது. மோக்ஷம் தருவதற்கு கர்மத்தை அபேக்ஷிப்பதில்லை.
स्वात्मलाभे तु पूर्वोपचितदुरितप्रतिबन्धापनयनद्वारेण विद्याहेतुत्वं प्रतिपद्यन्ते कर्माणि नित्यानीति । अत एवास्मिन्प्रकरणे उपन्यस्तानि कर्माणीत्यवोचाम । एवं च अविरोधः कर्मविधिश्रुतीनाम् । अतः केवलाया एव विद्यायाः परं श्रेय इति सिद्धम् ॥
(ச.பா) ஞானம் தான் உண்டாவதன் பொருட்டு முன்பு சேகரித்த (சஞ்சித) பாப ரூப பிரதிபந்தத்தை நிவிர்த்தி வாயிலாய் நித்யகர்மா ஞானத்தை அடைவதற்கான ஹேதுவாய் இருப்பதால் அவசியம் தேவையாகிறது. ஆகையால் இந்த பிரகரணங்களில் கர்மங்கள் கூறப்பட்டுள்ளன. என்பது முன்பே கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கர்மங்களை விதிக்கும் சுருதிகளுக்கு விரோதம் இல்லை. ஆகையால் வித்யையினால் மாத்திரமே பரமச்ரேயசின் பிராப்தி உண்டாகும் என்பது ஊர்ஜிதமாகிறது.
(पूर्वपक्षी) एवं तर्हि आश्रमान्तरानुपपत्तिः, कर्मनिमित्तत्वाद्विद्योत्पत्तेः । गृहस्थस्यैव विहितानि कर्माणीत्यैकाश्रम्यमेव । अतश्च यावज्जीवादिश्रुतयः अनुकूलतराः स्युः ।
(ச.பா) (பூர்வ) இவ்வாறானால் அன்ய ஆச்ரமம் அதாவது கிரஹஸ்தாஸ்ரமத்தைக் காட்டிலும் வேறு ஆஸ்ரமம் பொருந்தாதே. ஏன்எனில் வித்யையின் உற்பத்தி கர்மத்தின் நிமித்தத்தால் உண்டாகிறது. அந்த கர்மம் கேவலம் கிரஹஸ்தனுக்கே விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஒரே ஆச்ரமமே சித்திக்கிறது. மேலும் “यावज्जीव” (யாவத்ஜீவ = ஜீவிக்கிறவரையில் கர்மம் செய்யவேண்டும்) என்றும் இதற்கு அனுகூலமாக சுருதிகளும் இருக்கின்றன.
(सिध्दान्ती) न ; कर्मानेकत्वात् । न ह्यग्निहोत्रादीन्येव कर्माणि, ब्रह्मचर्यं तपः सत्यवचनं शमः दमः अहिंसा इत्येवमादीन्यपि कर्माणि इतराश्रमप्रसिद्धानि विद्योत्पत्तौ साधकतमान्यसङ्कीर्णा विद्यन्ते ध्यानधारणादिलक्षणानि च । वक्ष्यति च - ‘तपसा ब्रह्म विजिज्ञासस्व’ (तै. उ. ३ । २ । १) इति ।
(ச.பா) (சித்தாந்தீ) அவ்வாறு அல்ல. கர்மா அநேகவிதமாக இருப்பதால். கேவலம் அக்னிஹோத்திரம் முதலியவைகள் மாத்திரம் கர்மம் அல்ல. பிரஹ்மச்சரியம், தபஸ், ஸத்தியம் பேசுதல், சமம், தமம், அஹிம்ஸா முதலிய மற்ற கர்மங்கள் வேறு ஆச்ரமங்களில் பிரசித்தமாகும். அவ்வாறே தியானம், தாரணை முதலிய கர்மங்கள் (ஹிம்சை முதலிய தோங்கள்) இல்லாததின் காரணமாய் இருத்தலால் ஞானம் உண்டாவதற்கு மிகவும் உத்தமமான ஸாதனமாகும். .“‘तपसा ब्रह्म विजिज्ञासस्व’ (तै. उ. ३ । २ । १)”(தபசா பிரஹ்ம்ம விஜிக்ஞாசஸ்வ = தபசால் பிரஹ்மத்தை அறிவதற்கு இச்சை கொள் என்று). ப்ருகு வல்லியில் கூறப்போகிறார்.
जन्मान्तरकृतकर्मभ्यश्च प्रागपि गार्हस्थ्याद्विद्योत्पत्तिसम्भवात् , कर्मार्थत्वाच्च गार्हस्थ्यप्रतिपत्तेः, कर्मसाध्यायां च विद्यायां सत्यां गार्हस्थ्यप्रतिपत्तिरनर्थिकैव ।
(ச.பா) முன்ஜன்மங்களில் செய்த கர்மத்தால் கிரஹஸ்த்தாஸ்ரமத்தை ஸ்வீகாரம் செய்வதற்கு முன்பே ஞானத்தின் உத்பத்தி ஸம்பவிக்கும். அவ்வாறே கிரஹஸ்த்தாஸ்ரமத்தின் ஸ்வீகாரமும் கேவலம் கர்மங்களுக்காகவே ஏற்பட்டது. ஆகையால் கர்ம ஸாத்திய ஞானத்தின் பிராப்தி ஏற்பட்டுவிட்டால் கிரஹஸ்த்தாஸ்ரமத்தின் ஸ்வீகரணமும் வியர்த்தமாகும். (விணாக ஆகும்)
लोकार्थत्वाच्च पुत्रादीनाम् । पुत्रादिसाध्येभ्यश्च अयं लोकः पितृलोको देवलोक इत्येतेभ्यो व्यावृत्तकामस्य, नित्यसिद्धात्मदर्शिनः, कर्मणि प्रयोजनमपश्यतः, कथं प्रवृत्तिरुपपद्यते ? प्रतिपन्नगार्हस्थ्यस्यापि विद्योत्पत्तौ विद्यापरिपाकाद्विरक्तस्य कर्मसु प्रयोजनमपश्यतः कर्मभ्यो निवृत्तिरेव स्यात् , ‘प्रव्रजिष्यन्वा अरेऽहमस्मात्स्थानादस्मि’ (बृ. उ. ४ । ५ । २) इत्येवमादिश्रुतिलिङ्गदर्शनात् ।
(ச.பா) புத்திரன் அடைதல் லோக பிராப்தியின் பொருட்டாகும். அந்த புத்திரன் முதலிய ஸாதனங்களால் அடையப்படுவது இஹலோகம், பித்ருலோகம், தேவலோகம் முதலியவை காமனைகள் நிவிர்த்தியால் நித்திய ஸித்த ஆத்மாவின் ஸாக்ஷாத்காரம் அடைந்தவனுக்கு கர்மத்தில் ஒரு பிரயோஜனமும் காணப்படாத அந்த பிரஹ்மவேத்தாவிற்கு எவ்வாறு கர்மத்தில் பிரவிருத்தி உண்டாகும். எவன் கிரஹஸ்த்தாஸ்ரமத்தில் இருக்கிறானோ அவனும் வித்தையின் பிராப்தியால் விரக்தி அடைந்தவனாய் கர்மத்தில் பிரயோஜனம் இல்லை என்று அறிந்து கர்மத்திலிருந்து நிவிர்த்தியாகிறான். “‘प्रव्रजिष्यन्वा अरेऽहमस्मात्स्थानादस्मि’ (बृ. उ. ४ । ५ । २)” (ப்ரவ்ரஜிஷ்யன்வா அரே அஹமஸ்மாத்ஸ்த்தானாதஸ்மி = இப்பொழுது நான் இந்த ஆஸ்ரமத்திலிருந்து ஸந்நியாஸம் செய்கிறேன்) என்பது முதலிய சுருதி ரூப லிங்கம் (ப்ரமாணம்) காணப்படுகிறது.
(पूर्वपक्षी) कर्म प्रति श्रुतेर्यत्नाधिक्यदर्शनादयुक्तमिति चेत् , - अग्निहोत्रादिकर्म प्रति श्रुतेरधिको यत्नः ; महांश्च कर्मण्यायासः, अनेकसाधनसाध्यत्वादग्निहोत्रादीनाम् ; तपोब्रह्मचर्यादीनां च इतराश्रमकर्मणां गार्हस्थ्येऽपि समानत्वादल्पसाधनापेक्षत्वाच्चेतरेषां न युक्तस्तुल्यवद्विकल्प आश्रमिभिस्तस्य इति चेत् ।
(ச.பா) (பூர்வ) சுருதிக்கு கர்மவிஷயத்தில் அதிக பிரயத்தனம் காணப்படுவதால் அது சரியல்ல என்றால் அக்னிஹோத்திரம் முதலிய கர்மங்களில் மிகவும் அதிகமாக பிரயத்தனம் செய்யவேண்ம். கர்மானுஷ்டானத்தில் அதிக ஆயாஸம் இருக்கிறது. ஏன்எனில் அக்னிஹோத்திராதி கர்மங்கள் அநேக ஸாதனங்களால் ஸாதிக்கக்கூடியதாய் இருக்கிறது. வேறு ஆஸ்ரமங்களின் கர்மங்களான தபஸ், பிரஹ்மச்சரியம் முதலியவைகள் கிரஹஸ்தாஸ்ரமத்தில் அல்பபிரயத்தனத்தை உடையதாய் இருக்கிறது. அவைகளுக்கு ஸமமான கர்த்தவ்யமாய் இருக்கிறது. ஆகையால் மற்ற ஆஸ்ரமங்களுடன் கிருஹஸ்த்தாஸ்ரமத்தை ஸமமாக கருதுதல் ஸரியாகாது.
(सिध्दान्ती) न ; जन्मान्तरकृतानुग्रहात् । यदुक्तं कर्मणि श्रुतेरधिको यत्न इत्यादि, नासौ दोषः, यतो जन्मान्तरकृतमप्यग्निहोत्रादिलक्षणं कर्म ब्रह्मचर्यादिलक्षणं चानुग्राहकं भवति विद्योत्पत्तिं प्रति ; येन च जन्मनैव विरक्ता दृश्यन्ते केचित् ; केचित्तु कर्मसु प्रवृत्ता अविरक्ता विद्याविद्वेषिणः । तस्माज्जन्मान्तरकृतसंस्कारेभ्यो विरक्तानामाश्रमान्तरप्रतिपत्तिरेवेष्यते ।
(ச.பா) (சித்தாந்தீ) அவ்வாறு அல்ல. ஜன்மாந்திரத்தில் செய்த கர்மத்தின் அனுக்கிரஹம் இருப்பதால் சுருதிக்கு கர்மத்தில் அதிக பிரயத்தனம் இருக்கிறது என்பது முதலியவை ஒரு தோஷமுமாகாது. ஏன்எனில் ஜன்மாந்திரத்தில் செய்த அக்னிஹோத்திராதி கர்மங்களும், பிரஹ்மச்சாயாதி ரூப கர்மங்களும் வித்தையின் (ஞானத்தின்) உற்பத்திக்குச்சஹாயமாய் இருக்கின்றன. ஜன்மமாத்திரத்லேயே சிலர் விரக்தர்காளாய் காணப்படுகிறார்கள். வேறு சிலர் கர்மத்திலேயே தத்பரர்களாய் வைராக்கியமற்றவர்களாய் ஞானத்திற்கு விரோதம் உடையவர்களாய்க் காணப்படுகிறார்கள். ஆகையால் ஜன்மாந்திரத்தின் ஸம்ஸ்காரத்தால் விரக்தி உடையவர்கள் மற்ற ஆச்ரமங்களை ஸ்வீகாரம் செய்வது இஷ்டமே.
कर्मफलबाहुल्याच्च । पुत्रस्वर्गब्रह्मवर्चसादिलक्षणस्य कर्मफलस्यासङ्ख्येयत्वात् तत्प्रति च पुरुषाणां कामबाहुल्यात्तदर्थः श्रुतेरधिको यत्नः कर्मसूपपद्यते, आशिषां बाहुल्यदर्शनात् - इदं मे स्यादिदं मे स्यादिति ।
(ச.பா) கர்மபலங்கள் அதிகமாய் இருப்பதாலும், (ச்ருதிக்கு அதில் அதிகம் யக்னம் உள்ளது) புத்திரர், ஸ்வர்க்கம் இவ்வாறு பிரஹ்மதேஜஸ் முதலிய கர்மபலன்கள் கணக்கற்று இருப்பதால் புருஷர்களுக்கும் காமனைகள் அதிகமாய் இருப்பதாலும் சுருதிக்கு கர்மத்தில் அதிகமாய் யத்தனிப்பது உசிதமேயாகும். இது எனக்கு கிடைக்கட்டும், இது எனக்கு கிடைக்கட்டும் என்று காமனைகள் அதிகமாய் காணப்படுகின்றன.
उपायत्वाच्च । उपायभूतानि हि कर्माणि विद्यां प्रति इत्यवोचाम । उपाये च अधिको यत्नः कर्तव्यः, न उपेये ।
(ச.பா) உபாயரூபமாய் இருப்பதாலும் கர்மங்கள் ஞான உத்பத்திக்கு உபாயம் என்பதை முன்பே கூறப்பட்டது. ஆகையால் உபாயங்களில் அதிக பிரயத்தனம் செய்யவேண்டும், உபேயத்தில் அல்ல.
(पूर्वपक्षी) कर्मनिमित्तत्वाद्विद्याया यत्नान्तरानर्थक्यमिति चेत् - कर्मभ्य एव पूर्वोपचितदुरितप्रतिबन्धक्षयाद्विद्योत्पद्यते चेत् , कर्मभ्यः पृथगुपनिषच्छ्रवणादियत्नोऽनर्थक इति चेत् ।
(ச.பா) (பூர்வ) ஞானம் கர்மத்தின் நிமித்தத்தால் உண்டாகிறது. ஆகையால் வேறு பிரயத்தனம் அர்த்தமற்றதாகிவிடும். கர்மங்களின் வாயிலாய் முன்பு சேகரித்த பாபரூப பிரதிபந்தத்தின் நிவிர்த்தியாகும்பொழுது ஞானத்தின் உத்பத்தி உண்டாகிறது. ஆனால் கர்மங்களைக் காட்டிலும் வேறான உபநிஷத்துக்களின் சிரவணாதிகளில் பிரயத்தனம் செய்வது அர்த்தமற்றதாகிவிடுமே எனில்.
(सिध्दान्ती) न ; नियमाभावात् । न हि, ‘प्रतिबन्धक्षयादेव विद्योत्पद्यते, न त्वीश्वरप्रसादतपोध्यानाद्यनुष्ठानात्’ इति नियमोऽस्ति ; अहिंसाब्रह्मचर्यादीनां च विद्यां प्रत्युपकारकत्वात् , साक्षादेव च कारणत्वाच्छ्रवणमनननिदिध्यासनादीनाम् । अतः सिद्धान्याश्रमान्तराणि । सर्वेषां चाधिकारो विद्यायाम् , परं च श्रेयः केवलाया विद्याया एवेति सिद्धम् ॥
(ச.பா) (சித்தாந்தீ) அவ்வாறு அல்ல. இப்படித்தான் என்று கட்டாயம் இல்லை. பிரதிபந்தக்ஷயத்தினால்தான் வித்யையின் உற்பத்தி என்ற நியமம் இல்லை. அவ்வாறே ஈச்வர கிருபை, தபஸ், தியானம் முதலியவைகளின் அனுஷ்டானத்தால் வித்யையின் உத்பத்தி இல்லை என்ற நியமமும் இல்லை. ஏன்எனில் அஹிம்சை, பிரஹ்மச்சரியம் முதலியவை ஞான உத்பத்திக்குத் தேவையானவைகளாகும். அவ்வாறே சிரவண, மனன, நிதித்தியாசனங்கள் ஞானத்திற்கு (வித்யைக்கு) ஸாக்ஷாத்காரணமாகும். ஆகையால் எல்லா ஆச்ரமத்தாரர்களுக்கும் வித்யையில் அதிகாரம் இருப்பது ஸித்திக்கிறது. மேலான ச்ரேயஸ் (மோக்ஷம்) வித்யையினால் மாத்திரமே ஏற்படும்.
इत्येकादशानुवाकभाष्यम् ॥
11 ஆவது அனுவாகம் முற்றிற்று,
अतीतविद्याप्राप्त्युपसर्गशमनार्थां शान्तिं पठति -
(அ.கை) முன்பு கூறப்பட்ட வித்யையின் பிராப்திக்காக அதன் பிரபந்தத்தை நீக்குவதற்காக சாந்தி மந்திரத்தைக் கூறுகிறார்.
शं नो मित्रः शं वरुणः । शं नो भवत्वर्यमा । शं न इन्द्रो बृहस्पतिः । शं नो विष्णुरुरुक्रमः । नमो ब्रह्मणे । नमस्ते वायो । त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि । त्वामेव प्रत्यक्षं ब्रह्मावादिषम् । ऋतमवादिषम् । सत्यमवादिषम् । तन्मामावीत् । तद्वक्तारमावीत् । आवीन्माम् । आवीद्वक्तारम् ॥ ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
शं नो मित्रः शं वरुणः என்ற சாந்திபாடம் நாம் கற்றகல்விநிலை பெறுவதற்காகவும் அதில் உள்ள இடையூறுகள் நீங்குவதற்காகவும் அந்த சாந்திபாடம் மறுபடியும் படிக்கப்படுகிறது.)
व्याख्यातमेतत्पूर्वम् ॥
(பாஷ்யம்) முன்பே வியாக்யானம் செய்யபட்டுவிட்டது
इति द्वादशानुवाकभाष्यम् ॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ तैत्तिरीयोपनिषद्भाष्ये शीक्षावल्लीभाष्यम् सम्पूर्णम् ॥
சீக்ஷாவல்லியில் பன்னிரண்டாவது அனுவாகம்
சுபம்.