असन्नेव स भवति । असद्ब्रह्मेति वेद चेत् । अस्ति ब्रह्मेति चेद्वेद । सन्तमेन न्ततो विदुरिति । तस्यैष एव शारीर आत्मा । यः पूर्वस्य । अथातोऽनुप्रश्नाः । उताविद्वानमुं लोकं प्रेत्य । कश्चन गच्छती ३ । आहो विद्वानमुं लोकं प्रेत्य । कश्चित्समश्नुता ३ उ । सोऽकामयत । बहु स्यां प्रजायेयेति । स तपोऽतप्यत । स तपस्तप्त्वा । इदं सर्वमसृजत । यदिदं किञ्च । तत्सृष्ट्वा । तदेवानुप्राविशत् । तदनुप्रविश्य । सच्च त्यच्चाभवत् । निरुक्तं चानिरुक्तं च । निलयनं चानिलयनं च । विज्ञानं चाविज्ञानं च । सत्यं चानृतं च सत्यमभवत् । यदिदं किञ्च । तत्सत्यमित्याचक्षते । तदप्येष श्लोको भवति ॥ १ ॥
असन्नेव असत्सम एव, यथा असन् अपुरुषार्थसम्बन्धी, एवं सः भवति अपुरुषार्थसम्बन्धी । कोऽसौ ? यः असत् अविद्यमानं ब्रह्म इति वेद विजानाति चेत् यदि । तद्विपर्ययेण यत्सर्वविकल्पास्पदं सर्वप्रवृत्तिबीजं सर्वविशेषप्रत्यस्तमितमपि, अस्ति तत् ब्रह्म इति वेद चेत् ।
(ச.பா) असन्नेव எவ்வாறு அஸத் (இல்லாத) பதார்த்தம் புருஷார்த்தத்துடன் ஸம்பந்தப்படுவது இல்லையோ அவ்வாறு அவன் அசத்தே. அஸத்திற்கு சமானமாகவே புருஷார்த்தத்தில் ஸம்பந்தம் இல்லாதவனாகிறான். அவன் யார்? அதாவது அவன் ब्रह्म असत् (பிரஹ்ம அசத்) பிரஹ்மம் இல்லை என்று கருதுகிறான். இங்கு चेत् என்பது यदि என்ற பொருளில் வந்துள்ளது. இதைக் காட்டிலும் விபரீதமாய் எந்த தத்துவம் எல்லா விகல்பங்களுக்கும் ஆச்ரயமோ அவ்வாறே எல்லா பிரவிர்த்திகளுக்கும் பீஜரூபமோ, மேலும் எல்லா விசேஷங்களும் அற்றதோ அந்த பிரஹ்மம் ஸத் என்று அறிகிறானோ.
कुतः पुनराशङ्का तन्नास्तित्वे ? व्यवहारातीतत्वं ब्रह्मण इति ब्रूमः । व्यवहारविषये हि वाचारम्भणमात्रे अस्तित्वभावितबुद्धिः तद्विपरीते व्यवहारातीते नास्तित्वमपि प्रतिपद्यते । यथा ‘घटादिर्व्यवहारविषयतयोपपन्नः सन् , तद्विपरीतः असन्’ इति प्रसिद्धम् , एवं तत्सामान्यादिहापि स्याद्ब्रह्मणो नास्तित्वं प्रत्याशङ्का । तस्मादुच्यते - अस्ति ब्रह्मेति चेद्वेदेति ।
(ச.பா) பிரஹ்மத்தின் இருப்பு இல்லை என்ற சங்கை ஏன் ஏற்படுகிறது? வியவஹாரங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்று கூறுகிறோம். வியவஹார விஷயமாய் இருந்தால் அல்லவா கார்ய பொருளானவற்றில் இருக்கிறது என்று பாவிக்கும் புத்தியானது அதைக்காட்டிலும் விபரீதமான வியவஹாரத்திற்கு அப்பாற்பட்ட பதார்த்தத்தில் இல்லை என்று கூட புரிந்துகொள்கிறது. எவ்வாறு (ஜலம் கொண்டுவருதல் முதலிய) வியவஹார விஷயரூபமாய் உள்ள கடம் முதலிய பதார்த்தம் சத் என்றும் அதனினும் விபரீதமானதை (வந்தியாபுத்திரன்) (மலடிமகன்) அசத் என்றும் பிரஸித்தமாய் இருக்கிறது. இவ்வாறு இதற்கு ஸமானமாய் இருப்பதால் இங்கும் பிரஹ்மத்திற்கு இல்லை என்று சங்கை ஏற்படுகிறது. ஆகையால் “பிரஹ்மம் இருக்கிறது என்று அறிந்தால்” (अस्ति ब्रह्मेति चेद्वेदेति) என்று கூறப்படுகிறது.
किं पुनः स्यात्तदस्तीति विजानतः ? तदाह - सन्तं विद्यमानं ब्रह्मस्वरूपेण परमार्थसदात्मापन्नम् एनम् एवंविदं विदुः ब्रह्मविदः । ततः तस्मात् अस्तित्ववेदनात् सः अन्येषां ब्रह्मवद्विज्ञेयो भवतीत्यर्थः ।
(ச.பா) அது (பிரஹ்மம்) இருக்கிறது என்று அறிந்த புருஷனுக்கு என்னபலன் கிடைக்கும்? அதைக் கூறுகிறார். இருக்ககூடிய பிரஹ்மஸ்வரூபத்தை பரமார்த்த ஸத்தையோடு கூடியதாய் தன்னுடைய अस्ति (அஸ்தி) ஸ்வரூபமாய் எப்பொழுது உணர்கிறார்களோ அப்பொழுது அவர்கள் அப்பிரஹ்மத்தை அறிந்தவர்களாய் மற்றவர்களுக்கு பிரஹ்மத்தைப் போல் அறிவதற்கு யோக்கியமாய் ஆகிறான்.
अथवा यो नास्ति ब्रह्मेति मन्यते, स सर्वस्यैव सन्मार्गस्य वर्णाश्रमादिव्यवस्थालक्षणस्य नास्तित्वं प्रतिपद्यते ; ब्रह्मप्रतिपत्त्यर्थत्वात्तस्य । अतः नास्तिकः सः असन् असाधुरुच्यते लोके । तद्विपरीतः सन् यः अस्ति ब्रह्मेति चेद्वेद, स तद्ब्रह्मप्रतिपत्तिहेतुं सन्मार्गं वर्णाश्रमादिव्यवस्थालक्षणं श्रद्दधानतया यथावत्प्रतिपद्यते यस्मात् , ततः तस्मात् सन्तं साधुमार्गस्थम् एनं विदुः साधवः । तस्मादस्तीत्येव ब्रह्म प्रतिपत्तव्यमिति वाक्यार्थः ।
(ச.பா) அல்லது எவர் பிரஹ்மம் இல்லை என்று எண்ணுகிறார்களோ அவர்கள் எல்லா ஸன்மார்க வர்ணாஸ்ரமம் முதலிய அவஸ்தாலக்ஷணத்தில் உள்ள அசிரத்தையால் (नास्तित्वम्) இல்லைத் தன்மையை அடைகிறான். ஏன்எனில் அவர்கள் ப்ரஹ்மத்துவத்தை அடைகிறார்கள், ஆகையால் உலகில் இந்த நாஸ்திகன் அஸாது என்று கூறுகிறார்கள். இதைக்காட்டிலும் விபரீதமான எந்த ஸத் புருஷன் பிரஹ்மத்தை இருக்கிறது என்று உணர்கிறானோ அப்பொழுது அவன் அந்த பிரஹ்மத்தை அடைவதற்கான சன்மார்க்கமாகிய வர்ணாஸ்ரமம் முதலிய வியவஸ்தாலக்ஷண சிரத்தையுடனும் அந்த மார்க்கத்தில் சென்று அந்த பிரஹ்ம்த்தின் யதார்த்தத்தை அறிகின்றானோ அதனால் இந்த நல்வழியில் செல்பவன் என்று இவனை ஸாதுக்கள் அறிகின்றனர். ஆகையால் பிரஹ்மம் இருக்கிறது என்றே அறியவேண்டும். அல்லது ஏற்க வேண்டும் என்பது வாக்யார்த்தம்.
तस्य पूर्वस्य विज्ञानमयस्य एष एव शरीरे विज्ञानमये भवः शारीरः आत्मा । कोऽसौ ? य एष आनन्दमयः । तं प्रति नास्त्याशङ्का नास्तित्वे । अपोढसर्वविशेषत्वात्तु ब्रह्मणो नास्तित्वं प्रत्याशङ्का युक्ता ; सर्वसाम्याच्च ब्रह्मणः । यस्मादेवम् , अतः तस्मात् अथ अनन्तरं श्रोतुः शिष्यस्य अनुप्रश्नाः आचार्योक्तिमनु एते प्रश्ना अनुप्रश्नाः ।
(ச.பா) இதற்கு முன்நிலையில் உள்ள விக்ஞானமயனுக்கு அந்த விக்ஞானமய சரீரத்தினுள் இருக்கிற சாரீரகன் எனப்படும் ஆத்மா. அவன் யார்? அவனே இந்த ஆனந்தமயன். அவன் இல்லை என்பதில் சங்கை இல்லை .பிரஹ்மமோவெனில் அது எல்லா விசேஷங்களையும் நீக்கி இருப்பதால் அதாவது அது எல்லா விசேஷங்களும் அற்று இருப்பதால் அது இருக்கிறதா? இல்லையா என்ற சங்கை செய்வது பொருத்தமே. ஏன் எனில் அது ஸர்வஸாமான்யமாய் இருப்பதால்(எங்கும் நிறைந்து இருப்பதால்) முற்கூறிய சங்கை எழுவது சகஜமே. பின்னர் இந்த உபநிஷத்தைக் கேட்கும் சிஷ்யனின் ஆசாரியரின் வார்த்தைகளுக்கு தொடர்ந்து வந்த கேள்விகள் ஆகும்.
सामान्यं हि ब्रह्म आकाशादिकारणत्वात् विदुषः अविदुषश्च ; अतः अविदुषोऽपि ब्रह्मप्राप्तिराशङ्क्यते - उत अपि अविद्वान् अमुं लोकं परमात्मानम् इतः प्रेत्य कश्चन, चनशब्दः अप्यर्थे, अविद्वानपि गच्छति प्राप्नोति ? ‘किं वा न गच्छति ? ’इति द्वितीयोऽपि प्रश्नो द्रष्टव्यः, अनुप्रश्ना इति बहुवचनात् ।
(ச.பா) ஆகாசம் முதலியவைகளுக்குக் காரணமாய் இருப்பதால் வித்வான், அவித்வான் ஆகிய இருவர்களுக்கும் ஸாமான்யமாய் பொதுவாக இருக்கிறது என்றால் அவித்வானுக்கும் பிரஹ்மப் பிராப்தி இருக்கட்டும் என்ற சங்கை ஏற்படுகிறது उत अपि என்று அவித்வானும், இந்த லோகத்தை விட்டு அதாவது இந்த சரீரத்தை விட்டு செல்லும் பொழுது பரமாத்மாவை அடைகிறானா?. அல்லது இல்லையா? என்ற இரண்டாவது கேள்வியும், சேர்க்கவேண்டும் (अनुप्रश्ना) என்று பன்மை கூறுப்படுவதால்.
विद्वांसं प्रत्यन्यौ प्रश्नौ - यद्यविद्वान्सामान्यं कारणमपि ब्रह्म न गच्छति, अतो विदुषोऽपि ब्रह्मागमनमाशङ्क्यते ; अतस्तं प्रति प्रश्नः - आहो विद्वानिति । उकारं च वक्ष्यमाणमधस्तादपकृष्य तकारं च पूर्वस्मादुतशब्दाद्व्यासज्य आहो इत्येतस्मात्पूर्वमुतशब्दं संयोज्य पृच्छति - उताहो विद्वानिति । विद्वान् ब्रह्मविदपि कश्चित् इतः प्रेत्य अमुं लोकं समश्नुते प्राप्नोति । समश्नुते उ इत्येवं स्थिते, अयादेशे यलोपे च कृते, अकारस्य प्लुतिः - समश्नुता ३ उ इति । विद्वान्समश्नुते अमुं लोकम् ; किं वा, यथा अविद्वान् , एवं विद्वानपि न समश्नुते इत्यपरः प्रश्नः ।
(ச.பா) வித்வான்களின் விஷயத்தில் மேலும் இரண்டு கேள்விகள் இருக்கின்றன. பிரஹ்மம் எல்லாவற்றிற்கும் ஸாதாரண காரணம். ஆக இருப்பதால் அவித்வான் அதை அடைய முடிவதில்லை. என்பது போல் வித்வானும் பிரஹ்மத்தை அடைய முடியாதே என்ற சங்கை உண்டாகிறது. அதை உத்தேசித்தே கேட்கப்படுகிறது. அதை அதனாலேயே ஆஹோ (आहो) வித்வான் (विद्वान्) என்றகேள்வி தொடங்குகிறது. பிரஹ்மவித்தான வித்வானும் இந்த லோகத்தில் இந்த சரீரத்தை விட்டபின் பிரஹ்மத்தை அடைகிறானா? இங்கு “उ” என்பது அவனுடைய ஸ்திதியில் சந்தேஹத்தைக் கிளப்புவது ஆகும். இங்கு வரக்கூடிய “அய” अय ஆதேசத்திற்கு “ய” காரலோபம் ஏற்பட்ட பொழுது “அ” காரம் லோபத்தை அடைகிறது. समश्नुता उ என்று உகாரமும் மேலேவரக்கூடிய பாவத்தைக் கீழே இழுத்து “த”காரத்தை முதலில் கூறுவதால் இவை இரண்டும் ஒன்றாக இணைந்த பொழுது வித்வானும் பிரஹ்மத்தை அடைகிறானா? என்ற கேள்வியை எழுப்புவதாக ஆகிறது. எனவே ஆகாசம் முதலியவைகளுக்கு காரணமாக உள்ள பரமார்த்த ஸ்வரூபத்தை எவ்வாறு அவித்வான் அடைவது இல்லையோ அவ்வாறே வித்வானும் அடைவது இல்லையா? என்பது மற்றொரு கேள்வி.
द्वावेव वा प्रश्नौ विद्वदविद्वद्विषयौ ; बहुवचनं तु सामर्थ्यप्राप्तप्रश्नान्तरापेक्षया घटते । ‘असद् ब्रह्मेति वेद चेत्’ ‘अस्ति ब्रह्मेति चेद्वेद’ इति श्रवणादस्ति नास्तीति संशयः । ततः अर्थप्राप्तः किमस्ति नास्तीति प्रथमोऽनुप्रश्नः । ब्रह्मणः अपक्षपातित्वात् अविद्वान्गच्छति न गच्छतीति द्वितीयः । ब्रह्मणः समत्वेऽपि अविदुष इव विदुषोऽप्यगमनमाशङ्क्य किं विद्वान्समश्नुते न समश्नुते इति तृतीयोऽनुप्रश्नः ॥
(ச.பா) இங்கு கேள்விகளும் வித்வான், அவித்வான் இவர்களைப் பற்றியதாக இரண்டுதாக ஆகும். இங்கு பன்மை வந்துள்ளதால் இன்னும் வேறு கேள்வியும் எழவழியுண்டு. ‘असद् ब्रह्मेति वेद चेत्’, ‘अस्ति ब्रह्मेति चेद्वेद’ பிரஹ்மம் இல்லை என்று அறிவானேயானால்” “பிரஹ்மம் இருக்கிறது என்று அறிவானேயானல்” என்று சுருதி கூறுவதால் அது இருக்கிறதா அல்லது இல்லையா என்ற ஸம்சயமும் அதனால் அது இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி முதல் கேள்வியாகும், பிரஹ்மமானது எந்த பக்ஷபாதமும் இல்லாததால் அதை அவிவேகி அடைகிறானா? அல்லது இல்லையா? என்பது இரண்டாவது கேள்வி. பிரஹ்மம் ஸமானமாய் இருப்பதால் அவிவேகிபோல், விவேகியும் அதை அடைகிறானா? அல்லது இல்லையா? என்று வித்வானும் பிரஹ்மப்பிராப்தியைக் குறித்தும் சங்கை செய்யப்படுகிறது, இவ்வாறு வித்வான் அந்த பிரஹ்மபதத்தை அடைகிறானா? இல்லையா? என்பது மூன்றாவது கேள்வி.
एतेषां प्रतिवचनार्थ उत्तरो ग्रन्थ आरभ्यते । तत्र अस्तित्वमेव तावदुच्यते । यच्चोक्तम् ‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ इति, तत्र च कथं सत्यत्वमित्येतद्वक्तव्यमिति इदमुच्यते । सत्त्वोक्त्यैव सत्यत्वमुच्यते । उक्तं हि सदेव सत्यमिति ; तस्मात्सत्त्वोक्त्यैव सत्यत्वमुच्यते । कथमेवमर्थता अवगम्यते अस्य ग्रन्थस्य ? शब्दानुगमात् । अनेनैव ह्यर्थेनान्वितानि उत्तरवाक्यानि -
‘तत्सत्यमित्याचक्षते’ (तै. उ. २ । ६ । १) ‘यदेष आकाश आनन्दो न स्यात्’ (तै. उ. २ । ७ । १) इत्यादीनि ।
(ச.பா) இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பின்வரும் கிரந்தம் ஆரம்பிக்கப்படுகிறது. அதில் முதலில் பிரஹ்மத்தின் அஸ்தித்துவத்தை (இருப்பதை) வர்௴க்கப்படுகிறது. பிரஹ்மம் “சத்தியம், ஞானம், ஆனந்தம்” என்று முதலில் கூறப்பட்ட அந்த பிரஹ்மத்தின் ஸத்தியத்தன்மை எவ்வாறு இருக்கிறது என்பதைக் கூறவேண்டும். இதைப்பற்றிக் கூறுகிறார். அதனுடைய சத்தையை (இருப்பை)க் கூறும்பொழுதே அதன் சத்தியத்தன்மை விளக்கப்பட்டதாகிறது. सदेव सत्यम् (ஸதேவ ஸத்யம்) சத்தே சத்தியமாகும் என்று வேறு இடத்திலும் கூறப்பட்டுள்ளது. ஆகையால் அதன் சத்தைக் கூறும் பொழுதே அதன் சத்தியத்துவமும் கூறப்பட்டதாகிறது. ஆனால் இந்த கிரந்தத்தின் தாத்பர்யமும் இதுவே. அதை எவ்வாறு அறிந்துகொள்வது? இதைக் குறித்துக் கூறுகிறார்.
‘तत्सत्यमित्याचक्षते’ (तै. उ. २ । ६ । १) (தத்சத்ய மித்யாசக்ஷதே இது சத்தியம் என்று கூறுகிறது.)
‘यदेष आकाश आनन्दो न स्यात्’ (तै. उ. २ । ७ । १) (யதேஷ ஆகாச ஆனந்தோந ஸ்யாத்-இந்த ஆகாசம் ஆனந்தசொரூபம் இல்லை) முதலியன பின்வரும் வாக்கியங்களும் இந்த அர்த்தத்தை உடையவைகளே.
तत्र असदेव ब्रह्मेत्याशङ्क्यते । कस्मात् ? यदस्ति, तद्विशेषतो गृह्यते ; यथा घटादि । यन्नास्ति, तन्नोपलभ्यते ; यथा शशविषाणादि । तथा नोपलभ्यते ब्रह्म ; तस्माद्विशेषतः अग्रहणान्नास्तीति ।
(ச.பா) இந்த ஸந்தேகத்தில் பிரஹ்மம் அசத் என்ற ஆசங்கை ஏற்படுகிறது அது எதனால்? எது இருக்கிறதோ அதை கடம் முதலியவைகள் போல் விசேஷமாய் கிரஹிக்கப்படுகிறது. முயல் கொம்பு போல் எது இல்லையோ அதை அறியமுடியாது. அவ்வாறே பிரஹ்மத்தை அறியமுடியாது. ஆகையால் முயல்கொம்பு போல் விசேஷமாய் அறிய முடியாததால் அது இல்லாத வஸ்து (அஸத்) ஆகும்.
तन्न, आकाशादिकारणत्वाद्ब्रह्मणः । न नास्ति ब्रह्म । कस्मात् ? आकाशादि हि सर्वं कार्यं ब्रह्मणो जातं गृह्यते ; यस्माच्च जायते किञ्चित् , तदस्तीति दृष्टं लोके, यथा घटाङ्कुरादिकारणं मृद्बीजादि ; तस्मादाकाशादिकारणत्वादस्ति ब्रह्म ।
(ச.பா) அவ்வாறு கூறுவது பொருந்தாது, ஏன்எனில் ஆகாசம் முதலானவைகளுக்கு பிரஹ்மமே காரணமாக இருக்கின்றது. பிரஹ்மம் இல்லாவிடில் ஆகாசம் முதலான காரியங்கள் கிரஹிக்கப்பட முடியாதவையாகும், எது எதில் இருந்து உண்டாகிறதோ, அதற்கு காரணம் இருக்கிறது என்பது உலகில் கண்ட உண்மையாகும். எவ்வாறு எனில் குடம் அங்குரம் இவைகளுக்குக்காரணமான மண்விதை இவைகள் இருப்பதுபோல், ஆகையால் ஆகாசம் முதலானவைகளுக்குக்காரணமாய் இருப்பதால் பிரஹ்மம் இருக்கிறது.
न चासतो जातं किञ्चिद्गृह्यते लोके कार्यम् । असतश्चेन्नामरूपादि कार्यम् , निरात्मकत्वान्नोपलभ्येत ; उपलभ्यते तु ; तस्मादस्ति ब्रह्म । असतश्चेत्कार्यं गृह्यमाणमपि असदन्वितमेव स्यात् ; न चैवम् ; तस्मादस्ति ब्रह्म । तत्र
‘कथमसतः सज्जायेत’ (छा. उ. ६ । २ । २) इति श्रुत्यन्तरमसतः सज्जन्मासम्भवमन्वाचष्टे न्यायतः । तस्मात्सदेव ब्रह्मेति युक्तम् ।
(ச.பா) உலகில் அஸத்தில் இருந்து உண்டான பதார்த்தம் (காரியம்) ஒன்றும் காணப்படவில்லை. நாமரூப முதலிய காரிய வர்க்கங்கள் அசத்திலிருந்து உண்டாகி இருந்தால் அது ஆதாரமற்றதால் அதை கிரஹிக்கமுடியாது. பிரஹ்மத்தை கிரஹிக்க முடிவதால் பிரஹ்மம் இருக்கிறது (அஸ்தி अस्ति). அந்த காரிய வர்க்கம் அஸத்திலிருந்து உண்டாகி இருந்தால் அதை கிரஹித்தாலும் அது அஸத் என்றே கிரஹிக்கப்பட்டுவதாக ஆகவேண்டும். ஆனால் அவ்வாறல்ல. ஆகவே காரணமான ப்ரஹ்மம் ஸத்ரூபமானதே.
‘कथमसतः सज्जायेत’ (छा. उ. ६ । २ । २) (கதமஸத: ஸஞ்ஜாயேத) எவ்வாறு அஸத்திலிருந்து சத் உண்டாகும் என்று வேறு சுருதியில் அஸத்திலிருந்து சத் உண்டாகாது என்று யுக்தியினாலும் கூறப்பட்டுள்ளது. ஆகையால் பிரஹ்மம் ஸத்தே என்பது பொருந்தும்.
(शंका) तद्यदि मृद्बीजादिवत् कारणं स्यात् , अचेतनं तर्हि ?
(ச.பா) (சங்கை) பிரஹ்மம் மண், விதை முதலியவைகள் போல் (ஜகத்திற்கு) காரணமாகில் அதுவும் அசேதனமாகுமே?
(समाधानम्) न ; कामयितृत्वात् । न हि कामयित्रचेतनमस्ति लोके । सर्वज्ञं हि ब्रह्मेत्यवोचाम ; अतः कामयितृत्वोपपत्तिः ।
(ச.பா) (ஸமாதானம்) அவ்வாறு அல்ல. ஏன் எனில் அது காமனை செய்கிறது. உலகில் காமனை செய்யும் ஒருவனும் அசேதனமாய் இல்லை. பிரஹ்மம் ஸர்வக்ஞன் என்று முன்பே கூறியுள்ளோம். ஆகையால் காமனை செய்வது பொருத்தமேயாகும்.
(शंका) कामयितृत्वादस्मदादिवदनाप्तकाममिति चेत्?
(ச.பா) (சங்கை) காமனை செய்பவனாய் இருப்பதால் நம்மைப்போல் பூர்ண காமனாக ஆகமுடியாது என்று ஸித்திக்குமே எனில்?
(समाधानम्) न ; स्वातन्त्र्यात् । यथा अन्यान्परवशीकृत्य कामादिदोषाः प्रवर्तयन्ति, न तथा ब्रह्मणः प्रवर्तकाः कामाः । कथं तर्हि ? सत्यज्ञानलक्षणाः स्वात्मभूतत्वाद्विशुद्धाः । न तैर्ब्रह्म प्रवर्त्यते ; तेषां तु तत्प्रवर्तकं ब्रह्म प्राणिकर्मापेक्षया । तस्मात्स्वातन्त्र्यं कामेषु ब्रह्मणः ; अतो न अनाप्तकामं ब्रह्म ।
(ச.பா) (ஸமாதானம்) அவ்வாறு அல்ல. ஏன் எனில் அது ஸ்வாதந்திரியமுடையதாக இருப்பதால், எவ்வாறு காமம் முதலிய தோஷங்கள் மற்ற ஜீவர்களை வசப்படுத்தி பிரவிர்த்திக்கச் செய்கிறதோ அவ்வாறு காமனைகள் பிரஹ்மத்தை பிரவிர்த்திக்கச் செய்ய முடியாது. அப்படியானால் காமனை எப்படி என்றால்? அந்த ஸத்திய ஞானஸ்வரூபமாயும், அவ்வாறே ஸ்வாத்மபூதமாயும் காமனையில் இருக்கும் காரணத்தால் அது விஸத்தமானது. அதனால் பிரஹ்மத்தை பிரவிர்த்திக்கச் செய்ய முடியாது. ஆனால் ஜீவர்களின் பிராரப்த கர்மங்களை அபேக்ஷித்து பிரஹ்மத்தின் பிரவிர்த்தி ஆகும். ஆகையால் காமனைகளில் பிரஹ்மத்திற்கு ஸ்வதந்திரதன்மை உள்ளது. ஆகையால் பிரஹ்மம் தேவைகள் நிரம்பாததாக ஆகாது.
साधनान्तरानपेक्षत्वाच्च । यथा अन्येषामनात्मभूता धर्मादिनिमित्तापेक्षाः कामाः स्वात्मव्यतिरिक्तकार्यकरणसाधनान्तरापेक्षाश्च, न तथा ब्रह्मणः । किं तर्हि ? स्वात्मनोऽनन्याः ।
(ச.பா) மேலும் வேறு ஸாதனத்தை அபேக்ஷிக்காததால் காமனைக்கான விஷயங்களில் ஸ்வதந்தரதா பிரஹ்மத்திற்கு இருக்கிறது. மேலும் எவ்வாறு அநாத்மபூதமாகவும் தர்மம் முதலியவைகளின் நிமித்தத்தை அபேக்ஷிப்பதாகவும் உள்ள காமங்கள் தன்னைக் காட்டிலும் வேறான காரிய கரண ஸாதனங்களான வேறு ஸாதனங்களை அபேக்ஷிப்பது போல் பிரஹ்மத்திற்கு நிமித்த முதலிய அபேக்ஷை இல்லை எனில் பிரஹ்மத்திற்கு காமனைகள் எவ்வாறு உண்டாகிறது? அவைகள் (காமனைகள்) ஸ்வாத்மாவைக் காட்டிலும் வேறு அல்ல(அநந்யமாகும்).
तदेतदाह - सोऽकामयत । सः आत्मा यस्मादाकाशः सम्भूतः, अकामयत कामितवान् । कथम् ? बहु प्रभूतं स्यां भवेयम् । कथमेकस्यार्थान्तराननुप्रवेशे बहुत्वं स्यादिति, उच्यते - प्रजायेय उत्पद्येय । न हि पुत्रोत्पत्तेरिवार्थान्तरविषयं बहुभवनम् । कथं तर्हि ? आत्मस्थानभिव्यक्तनामरूपाभिव्यक्त्या । यदा आत्मस्थे अनभिव्यक्ते नामरूपे व्याक्रियेते, तदा आत्मस्वरूपापरित्यागेनैव ब्रह्मणः अप्रविभक्तदेशकाले सर्वावस्थासु व्याक्रियेते । तदेतन्नामरूपव्याकरणं ब्रह्मणो बहुभवनम् । नान्यथा निरवयवस्य ब्रह्मणो बहुत्वापत्तिरुपपद्यते अल्पत्वं वा, यथा आकाशस्याल्पत्वं बहुत्वं च वस्त्वन्तरकृतमेव । अतः तद्द्वारेणैवात्मा बहु भवति ।
(ச.பா) இந்த விஷயத்தில் சுருதி கூறுகிறது. அந்த ஆத்மாவானது விரும்பிற்று. எந்த ஆத்மா? எதனின்றும் ஆத்மா தோன்றிற்றோ அந்த ஆத்மா விரும்பிற்று. எவ்வாறு? பஹ)த்துவத்தை அதாவது பலவாறாக ஆகும் தன்மையை அடைந்தது என்று கூறப்படுகிறது. என்னிடமிருந்து பஹ)ப்பிரஜாரூபமாய் பல ரூபங்கள் உண்டாக வேண்டும் என்று எண்௴ அவ்வாறே ஆயிற்று. இது புத்திர உற்பத்தியைப் போல் வேறு விஷயத்தை அடைவதற்கான பஹ)பவனம் (பலதரப்பட்ட தன்மை) ஆகாது. அது எத்தகையது எனில்? தன்னில் இருந்து பலவிதமான நாம ரூபங்களாக வெளிப்படல் என்ற பஹ)பவனம் ஆகும். ஆத்மாவில் இருப்பதும் இதுவரை வெளிப்படாததுமாயும் உள்ள நாமரூபங்கள் எப்பொழுது அபிவ்யக்தி அடைந்து வெளிப்படுகிறதோ அப்பொழுது அந்த நாமரூபங்கள் ஆத்மஸ்வரூபத்தை விடாமலேயே பிரஹ்மத்துடன்கூட பிறிதல் என்ற வேறுபாட்டையும் அடையாமல் தேச காலங்களாலும், மாறுபடாமல் இருந்துகொண்டே எல்லா அவஸ்தைகளிலும், நாநா ரூபங்களாய் வெளிப்படுகிறதோ, அப்பொழுது அந்த நாமரூப அபிவியக்தி எனப்படும் வ்யக்தமாகத் தெரியும் தன்மை பிரஹ்மத்தின் நாநாரூபமான தன்மையாகும். அது வேறுவிதமானது அல்ல. ஏன் எனில் நிரவயவமான பிரஹ்மத்திற்கு பஹ)த்துவம் ஆகிற புத்திரோத்பத்தி போன்ற பஹ)த்துவமோ, அல்பத்துவமோ கிடையாது. எவ்வாறு ஆகாசத்திற்கு பஹ)த்துவமோ, அல்பத்துவமோ வேறு வஸ்துவினால் உண்டாகிறதேயன்றி அதற்கு பஹ)த்வமோ, அல்பத்வமோ கிடையாது. அது போன்றே பிரஹ்மத்திற்கும் ஆகும். ஆகையினால் ஆத்மாவும், நாமரூபங்கள் வாயிலாகவே பஹ)த்வமாகிறது என்று ஏற்படுகின்றது.
न ह्यात्मनोऽन्यदनात्मभूतं तत्प्रविभक्तदेशकालं सूक्ष्मं व्यवहितं विप्रकृष्टं भूतं भवद्भविष्यद्वा वस्तु विद्यते । अतः नामरूपे सर्वावस्थे ब्रह्मणैवात्मवती । न ब्रह्म तदात्मकम् । ते तत्प्रत्याख्याने न स्त एवेति तदात्मके उच्येते । ताभ्यां च उपाधिभ्यां ज्ञातृज्ञेयज्ञानशब्दार्थादिसर्वसंव्यवहारभाग्ब्रह्म ।
(ச.பா) ஆத்மாவைக் காட்டிலும் வேறான அநாத்மபூதமாயும், அவ்வாறே அதைக் காட்டிலும் வேறான தேசகாலங்களுடன் கூடியதாயும், ஸ)க்ஷ்மமானதாயும், அதைக் காட்டிலும் தூரமாய் இருப்பதாயும், உண்டானதாயும், உண்டாகப்போவதாயும், இப்பொழுது இருப்பதாயும், உள்ள வேறு எந்த வஸ்துவும் கிடையாது. ஆகையால் எல்லா அவஸ்தைகளிலும் ஸம்பந்தப்பட்ட நாமரூபங்கள் ப்ரஹ்மத்தினாலேயே ஆத்மபாவத்தை அடைகின்றன. ஆனால் பிரஹ்மமோ அந்த ரூபத்தை ஒரு நாளும் அடைவதில்லை. பிரஹ்மத்தை நிஷேதம் செய்தால் நாமரூபங்கள் இருக்கமுடியாது. ஆகையால் அவைகள் அந்த ஆத்மஸ்வரூபமே ஆகும். அந்த நாமரூப உபாதிகளால்தான் பிரஹ்மமானது ஞாதா. ஞேயம், ஞானம் என்றும் சப்தங்கள் அர்த்தங்கள் முதலிய எல்லா வ்யவஹாரத்தையும் உடையதாக ஆகிறது.
सः आत्मा एवंकामः सन् तपः अतप्यत । तप इति ज्ञानमुच्यते,
‘यस्य ज्ञानमयं तपः’ (मु. उ. १ । १ । ९) इति श्रुत्यन्तरात् । आप्तकामत्वाच्च इतरस्य असम्भव एव तपसः । तत्तपः अतप्यत तप्तवान् , सृज्यमानजगद्रचनादिविषयामालोचनामकरोदात्मेत्यर्थः ।
(ச.பா) அத்தகைய ஆத்மா இவ்வாறு காமனை உடையதாகி தபஸ் செய்தது. தபஸ் என்பது ஞானம் (ஆலோசனை) என்று கூறப்படுகிறது.
‘यस्य ज्ञानमयं तपः’ (मु. उ. १ । १ । ९)” (யஸ்ய ஞானமயம் தப: எதற்கு ஞானரூபதபஸ்) என்று வேறு சுருதியிலும் ஸித்திக்கிறது. எல்லா காமனைகளையும் அடைந்திருப்பதால் ஆத்மாவிற்கு வேறு தபஸ் ஸம்பவிக்காது. (அது) “அவன் தபஸ் செய்தான் (செய்தது)” என்பதின் தாத்பர்யம் என்னவெனில் ஸ்ருஷ்ட்டிக்கப்பட்டிருக்கும் ஜகத்தை உண்டாக்கும் விஷயத்தை ஆலோசித்தல் என்னும் தவத்தை செய்தது என்பது பொருள்.
सः एवमालोच्य तपः तप्त्वा प्राणिकर्मादिनिमित्तानुरूपम् इदं सर्वं जगत् देशतः कालतः नाम्ना रूपेण च यथानुभवं सर्वैः प्राणिभिः सर्वावस्थैरनुभूयमानम् असृजत सृष्टवान् । यदिदं किञ्च यत्किञ्चेदमविशिष्टम् , तत् इदं जगत् सृष्ट्वा, किमकरोदिति, उच्यते - तदेव सृष्टं जगत् अनुप्राविशदिति ॥
(ச.பா) அவர் இவ்வாறு ஆலோசனை செய்து, அதாவது தபஸ் செய்து ஜீவர்களின் கர்மானுசாரமாய் இந்த சம்பூர்ண ஜகத்தையும் தேசத்தாலும், காலத்தாலும், நாமரூபத்தாலும், அவர்களுடைய அனுபவத்திற்கு ஏற்றவாறு அதாவது எல்லாப் பிரா௴களாலும் எல்லா அவஸ்தைகளிலும் அனுபவத்திற்குத் தகுந்ததான ஜகத்தைப் படைத்தார். அதாவது இந்த பிரபஞ்சம் யாவையும் மிச்சமின்றி ஸாமான்ய ரூபமாய் அந்த இந்த ஜகத்தைப் படைத்துப் பின் அவர் என்ன செய்தார்? என்று கூறப்படுகிறது. இவ்வாறு உலகைப் படைத்து அதில் பிரவேசித்தார்.
तत्रैतच्चिन्त्यम् - कथमनुप्राविशदिति । किम् , यः स्रष्टा, स तेनैवात्मनानुप्राविशत् , उत अन्येनेति ? किं तावद्युक्तम् ? क्त्वाप्रत्ययश्वणात् , यः स्रष्टा, स एवानुप्राविशदिति ।
(ச.பா) இங்கு அவர் எவ்வாறு பிரவேசித்தார் என்று சிந்திக்கவேண்டும். எவர் அதைப் படைத்தாரோ அவர் அந்த ரூபமாகவே அதில் பிரவேசித்தாரா? அல்லது வேறு ரூபமாய் பிரவேசித்தாரா? எனில் இதில் எது பொருத்தமானது என்பதை क्त्वा பிரத்யயத்தின் மூலமாய் அதில் விளக்குகிறார். எவர் படைத்தாரோ அவரே (அந்த ரூபமாக அதில் விளங்குகிறார். ) அந்த ரூபம்.
(पूर्वपक्षी) ननु न युक्तं मृद्वच्चेत्कारणं ब्रह्म, तदात्मकत्वात्कार्यस्य, कारणमेव हि कार्यात्मना परिणमते ; अतः अप्रविष्टस्यैव कार्योत्पत्तेरूर्ध्वं पृथक्कारणस्य पुनः प्रवेशोऽनुपपन्नः । न हि घटपरिणामव्यतिरेकेण मृदो घटे प्रवेशोऽस्ति । यथा घटे चूर्णात्मना मृदोऽनुप्रवेशः, एवमनेन आत्मना नामरूपकार्ये अनुप्रवेश आत्मनः इति चेत् , श्रुत्यन्तराच्च
‘अनेन जीवेनात्मनानुप्रविश्य’ (छा. उ. ६ । ३ । २) इति ।
(ச.பா) (பூர்வ) மண்௴ற்கு ஸமமாக ஜகத்திற்கு ப்ரஹ்மம் உபாதான காரணமானால் அதன் காரியமும் முன்பே அந்த ரூபமாக உள்ள காரணத்தால் அதில் அதன் புதிதாக பிரவேசம் ஸம்பவிக்கமுடியாது. காரணமே காரியரூபமாய் பரிணாமம் ஆகி இருக்கிறது. ஆகையால் இங்கும் அது பிரவேசிப்பதற்கு முன் நிலையிலேயே காரியம் உண்டானதற்கு பின்பு அந்தக்காரணம் மறுபடியும் பிரவேசிக்கிறது என்று கூறுவது ஒருபொழுதும் பொருத்தமாக ஆகாது. கடரூபமாய் பரிணமித்த பின்பு அதற்குக் காரணமான மண் பிரவேசிக்கிறது என்பது எப்பொழுதும் இல்லை. எவ்வாறு குடத்தில் சூர்ணமான மண் பிரவேசித்த பின்பு மற்றொரு மண் பிரவேசித்து அந்த ரூபமாக ஆகிறது என்பதும் இல்லை. இதையே வேறு சுருதிகள்
‘अनेन जीवेनात्मनानुप्रविश्य’ (छा. उ. ६ । ३ । २) (அநேந ஜீவேனாத்மானா%பிரவிச்ய = இந்த ஆத்மா அதில் ஜீவவடிவத்தில் ப்ரமவசம் அடைகிறது என்று கூறுகின்றன.
(सिध्दान्ती) नैवं युक्तम् , एकत्वाद्ब्रह्मणः । मृदात्मनस्त्वनेकत्वात् सावयवत्वाच्च युक्तो घटे मृदश्चूर्णात्मनानुप्रवेशः, मृदश्चूर्णस्य अप्रविष्टदेशत्वाच्च । न त्वात्मन एकत्वे सति निरवयवत्वादप्रविष्टदेशाभावाच्च प्रवेश उपपद्यते ; कथं तर्हि प्रवेशः स्यात् ? युक्तश्च प्रवेशः, श्रुतत्वात् - ‘तदेवानुप्राविशत्’ इति ।
(ச.பா) (ஸித்தாந்தீ) இவ்வாறு ஏற்றுக்கொள்வது ஸரியன்று (பொருந்தாது). ஏன் எனில் பிரஹ்மம் ஒன்றே. மண் என்பது ஒரு கடத்திற்குக் காரணமாய் இருப்பிணும் அது ஸாவயவமானதால் மறுபடியும் புழுதி ரூபமாய் அதில் நுழைகிறது என்று கூறுவது போல் இங்கு கூறமுடியாது. மண்௴ற்கு அவயவத்தோடு கூடியதன்மை உள்ளதால் அது குடத்திற்குள் புழுதியாய் நுழைகிறது என்று கூறலாம். அது அதன் பிரவேசத்திற்கு இடம் அளிப்பதாக உள்ளது. ஆனால் ஆத்மாவோ ஒன்றாயும், அவயவமற்றதாயும் எங்கும் நிறைந்ததாகவும் இருப்பதாயும் உள்ளதால் அதற்கு பிரவேசம் என்பது கிடையாது (பொருந்தாது). அவ்வாறெனில் அப்பிரவேசம் எத்தகையது? அது எவ்வாறு பொருந்தும்? எனில் அந்தப்பிரவேசம் பொருத்தமானதே. ஏன் எனில் அதுவே அதனுள் நுழைந்தது என்று சுருதிகளில் கூறப்பட்டுள்ளதால் அது பொருத்தமானதே.
(पूर्वपक्षी) सावयवमेवास्तु ; तर्हि सावयवत्वात् मुखो हस्तप्रवेशवत् नामरूपकार्ये जीवात्मनानुप्रवेशो युक्त एवेति चेत् ?
(ச.பா) (பூர்வ) அவ்வாறானால் பிரஹ்மம் அவயவத்துடன் கூடியதாகவே ஆகட்டுமே. அப்படி இருக்கும் பொழுது அவயவத்துடன் இருப்பதால் வாயில் கை நுழைவதற்கு ஒப்பாக அதனுடைய நாமரூப காரியத்தில் ஜீவரூபமாய் பிரவேசித்தல் ஸரியானதே எனில்?
न ; अशून्यदेशत्वात् । न हि कार्यात्मना परिणतस्य नामरूपकार्यदेशव्यतिरेकेण आत्मशून्यः प्रदेशोऽस्ति, यं प्रविशेज्जीवात्मना । कारणमेव चेत्प्रविशेत् , जीवात्मत्वं जह्यात् , यथा घटो मृत्प्रवेशे घटत्वं जहाति । ‘तदेवानुप्राविशत्’ इति च श्रुतेर्न कारणानुप्रवेशो युक्तः ।
(ச.பா) அவ்வாறு அல்ல, ஏன் எனில் அது ஒருபோதும் தான் இல்லாத இடமற்றது என்பதால் அதில் பிரவேசம் என்பது பொருந்தாது. காரியாத்மாவாய் மாறுபாடு அடைந்த நாமரூபம், காரியம், தேசம் இவைகளைக்காட்டிலும் ஆத்மா சூன்யமான அதாவது ஆத்மா இல்லாத ஒரு இடம் இல்லை. அவ்வாறு இடமிருந்தால் அது ஜீவாத்மாவாய் பிரவேசிக்கிறது என்று கூறலாம். அத்தகைய நிலை இங்கு இல்லை. காரணமே அவ்வாறு பிரவேசிக்குமேயானால் அது தன்னுடைய ஜீவாத்மா பாவத்தை விட்டதாக ஆகும். எவ்வாறு எனில் குடமானது மண்௴ல் பிரவேசித்த பொழுது அக்குடம் குடத்தன்மையைவிட்டதாகும். எனவே ‘तदेवानुप्राविशत्’ (ததேவானுப்ராவிசத்- அது நுழைந்தது) என்ற சுருதி வாக்கியத்தின் காரணமாகவும் அது ப்ரவேசித்தது என்பது பொருந்தாது.
कार्यान्तरमेव स्यादिति चेत् - तदेवानुप्राविशदिति जीवात्मरूपं कार्यं नामरूपपरिणतं कार्यान्तरमेव आपद्यत इति चेत् ?
(ச.பா) வேறு காரியமாகவே அது மாறியது என்று இருக்குமேயானால் அதுவே அதில் நுழைந்தது என்ற சுருதி வாக்கியத்திற்கு ஜீவாத்மரூபமான காரியம் நாமரூபமாக மாறுபாடு அடைந்த வேறு ஒரு காரியத்தை அடைகிறது என்று கூறுவாயேயானால்?
(सिध्दान्ती) न ; विरोधात् । न हि घटो घटान्तरमापद्यते, व्यतिरेकश्रुतिविरोधाच्च । जीवस्य नामरूपकार्यव्यतिरेकानुवादिन्यः श्रुतयो विरुध्येरन् ; तदापत्तौ मोक्षासम्भवाच्च । न हि यतो मुच्यमानः, तदेव आपद्यते । न हि शृङ्खलापत्तिः बद्धस्य तस्करादेः ।
(ச.பா) (ஸித்தாந்தீ) அவ்வாறு அல்ல, அது முரண்பாடானது. கடமானது, ஒருபோதும் வேறு ஒரு கடத்தன்மையை அடைவதில்லை. மேலும் வியதிரேக சுருதிக்கும் அது விரோதமாகும். ஜீவனுக்கு நாமரூப காரியத்தைக் காட்டிலும் வேறுபாடான தன்மையைக் கூறும் சுருதிகளும் முரண்பாடு உடையவைகளாக ஆகும். முற்கூறியபடி நாம் ஏற்றுக்கொண்டால் மோக்ஷமே ஸம்பவிக்காது. ஏன் எனில் முக்தியை அடைந்தவனும் மறுபடியும் காரணத்தன்மையையே அடைவான் என்பது ஸம்பவிக்காது. இது சங்கிலியால் கட்டப்பட்ட திருடன் முதலியோர் சங்கிலிரூபமாக ஆவதில்லை அல்லவா.
बाह्यान्तर्भेदेन परिणतमिति चेत् - तदेव कारणं ब्रह्म शरीराद्याधारत्वेन तदन्तर्जीवात्मना आधेयत्वेन च परिणतमिति चेत् ?
(ச.பா) உள் வெளி என்ற பேதத்தால் அவ்வாறு மாறுபாட்டை அடைந்துள்ளது எனில்? அதே காரணமான பிரஹ்மமே சரீரம் முதலானவைகளுக்கு ஆதாரத்தன்மையை அடைந்து அந்த சரீரத்தின் உள்ளில் ஜீவாத்மாவாய் ஆதேயமாக பரிணாமத்தை அடைந்துள்ளது என்று கூறுவாயேயானால்.
न ; बहिष्ठस्य प्रवेशोपपत्तेः । न हि यो यस्यान्तःस्थः स एव तत्प्रविष्ट उच्यते । बहिष्ठस्यानुप्रवेशः स्यात् , प्रवेशशब्दार्थस्यैवं दृष्टत्वात् - यथा गृहं कृत्वा प्राविशदिति ।
(ச.பா) அவ்வாறு அல்ல. (அகண்டாகாரமாய்) வெளியில் இருப்பவனுக்கு பிரவேசம் பொருந்தாது. மேலும் எவன் எதன் உள்ளில் இருக்கிறானோ அவன் அதில் பிரவேசித்தான் என்று கூறுவதும் கிடையாது, வெளியில் இருப்பவனே உள்ளே நுழைந்தவனாக ஆகமுடியும் என்ற சொல்லுக்குப் பொருள் உலகில் கூறப்பட்டுள்ளது. எவ்வாறு எனில் வீட்டைக்கட்டி அதில் நுழைந்தான் என்பது போல்.
जलसूर्यकादिप्रतिबिम्बवत् प्रवेशः स्यादिति चेत् , न ; अपरिच्छिन्नत्वादमूर्तत्वाच्च । परिच्छिन्नस्य मूर्तस्यान्यस्य अन्यत्र प्रसादस्वभावके जलादौ सूर्यकादिप्रतिबिम्बोदयः स्यात् , न त्वात्मनः ; अमूर्तत्वात् , आकाशादिकारणस्य आत्मनः व्यापकत्वात् । तद्विप्रकृष्टदेशप्रतिबिम्बाधारवस्त्वन्तराभावाच्च प्रतिबिम्बवत्प्रवेशो न युक्तः ।
(ச.பா) ஜலத்தில் காணப்படும் சூரியன் முதலானவைகளின் பிரதிபிம்பம் போல் இந்த பிரவேசம் இருக்கட்டுமே எனில். அதுவும் பொருத்தமன்று. பிரஹ்மம் அல்லது ஆத்மா பரிச்சின்னமற்றதும், அமூர்த்தமானதும் ஆகும். எனவே மேலே சொன்னது பொருந்தாது. பரிச்சின்னமாயும், மூர்த்தமாயும் உள்ள ஒரு வஸ்துவிற்கு அதைக் காட்டிலும், வேறுபட்டதாயும் தெளிவான ஸ்வபாவம் உள்ளதாயும் இருக்கும் ஜலம் முதலானவைகளில் சூரியன் முதலானவைகளின் பிரதிபிம்பங்கள் ஏற்படும். ஆத்மாவோ, அமூர்த்தமாயும், ஆகாசம் முதலானவைகளுக்கு காரணமாய் உள்ளதாலும், எங்கும் வியாபித்து இருப்பதாலும், இந்தப்பிரவேசம் பொருந்தாது. அதை பிரதிபிம்பிக்கும் வேறு ஒரு தேசமோ அந்த பிரதிபிம்பத்திற்கு ஆதாரமாய் உள்ள மற்றொரு வஸ்துவோ இல்லாததால் ஆத்மாவிற்கு பிரதிபிம்பம் போல் பிரவேசமும் பொருத்தமானது அன்று.
(पूर्वपक्षी) एवं तर्हि नैवास्ति प्रवेशः ; न च गत्यन्तरमुपलभामहे, ‘तदेवानुप्राविशत्’ इति श्रुतेः । श्रुतिश्च नोऽतीन्द्रियविषये विज्ञानोत्पत्तौ निमित्तम् । न चास्माद्वाक्यात् यत्नवतामपि विज्ञानमुत्पद्यते । हन्त तर्ह्यनर्थकत्वादपोह्यमेतद्वाक्यम् ‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ इति ।
(ச.பா) (பூர்வ)இவ்வாறு இருக்குமேயானால் அதற்குப் பிரவேசமும் இல்லை, அதற்கு வேறு வழியும் இல்லை. அப்பொழுது ‘तदेवानुप्राविशत्’ (ததேவானுப்ராவிசத்) அதுவே அதில் நுழைந்தது என்ற சுருதிவாக்கியத்திற்கு என்னதான் விநியோகம்? சுருதிவாக்கியங்களே நமக்கு அதீந்திரிய விஷயமாயுள்ள விக்ஞான உற்பத்திக்குக் காரணமானவை, அது சுருதி வாக்கியத்தாலேயே முடியும், எவ்வளவு தான் முயற்சி செய்து கூறினாலும். இந்த வாக்கியத்தில் இருந்து விக்ஞானம் உண்டாவது இல்லை. அந்தோ! இவ்வாறு எனில் ‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ (தத்ஸ்ருட்வாததேவானுப்ராவிசத்) என்ற சுருதிவாக்கியம் பொருள் இல்லாததால் அதைவிட்டுவிடுவோமே எனில்.
(ச.பா) (ஸித்தாந்தீ) அவ்வாறு அல்ல. ஏனெனில் அதற்கு வேறு அர்த்தமிருப்பதால் ஆகும். எதற்காக இவ்விடத்தில் அநாவசியமான சர்ச்சை. இங்கு இவ்விஷயத்தில் வேறு அர்த்தமானது சொல்லப்பட்டுள்ளது. அதையும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
‘ब्रह्मविदाप्नोति परम्’ (तै. उ. २ । १ । १) (பிரஹ்ம விதாப்னோதிபரம் = பிரஹ்மத்தை அறிந்தவன் அந்த பரமார்த்த ஸ்வரூபத்தை அடைகிறான்)
‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ (तै. उ. २ । १ । १) (சத்யம் ஞானமனந்தம் பிரஹ்ம = ஸத்யம், ஞான, ஆனந்த ஸ்வரூபமானது பிரஹ்மம்)
‘यो वेद निहितं गुहायाम्’ (तै. उ. २ । १ । १) (யோ வேத நிஹிதம் குஹாயாம் = எவன் அந்த மறைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள பிரஹ்மத்தை அறிகிறானோ) என்ற வாக்கியங்களை நினைவுப்படுத்திக் கொள்ளத்தக்கவை. அந்த விக்ஞானத்தைக் கூறவிரும்பிய இடமே இது. அதுவே பிரகிருதமும் ஆகும். பிரஹ்ம ஸ்வரூபத்தை தொடர்ந்து அறிந்து உணர்வதின் பொருட்டு ஆகாயம் தொடங்கி அன்னமயம் முடிவான காரியங்கள் விளக்கிக் காண்பிக்கப்பட்டன. இதில் பிரஹ்மத்தினுடைய தொடர்ச்சியும் இருக்கிறது என்பதனை விளக்கவே இந்த விஷயம் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது அன்னமயமான ஆத்மாவிற்கு உள்ளில் இருப்பவன் அதைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்மாவான பிராணமய ஆத்மா ஆவான். அதற்கு உள் இருப்பவன் மனோமயன். அதற்கும் உள் இருப்பவன் விக்ஞானமயனான ஆத்மா என்று விளக்கப்பட்டது. விக்ஞான குகையில் பிரவேசித்தவனாயும் அங்கு ஆனந்தமயமாயும் உள்ள (ஆனந்தத்துடன் கூடிய ஆத்மா காண்பிக்கப்பட்டது.)
अतः परमानन्दमयलिङ्गाधिगमद्वारेण आनन्दविवृद्ध्यवसान आत्मा । ब्रह्म पुच्छं प्रतिष्ठा सर्वविकल्पास्पदो निर्विकल्पोऽस्यामेव गुहायामधिगन्तव्य इति तत्प्रवेशः प्रकल्प्यते । न ह्यन्यत्रोपलभ्यते ब्रह्म, निर्विशेषत्वात् ; विशेषसम्बन्धो ह्युपलब्धिहेतुर्दृष्टः - यथा राहोश्चन्द्रार्कविशेषसम्बन्धः । एवमन्तःकरणगुहात्मसम्बन्धो ब्रह्मण उपलब्धिहेतुः, संनिकर्षात् , अवभासात्मकत्वाच्च अन्तःकरणस्य ।
(ச.பா) ஆகையால் பரமானந்த ரூபமான ஆத்மாவை அந்த பரமானந்தம் என்ற ஹேதுவை அறிவதின் வாயிலாக ஆனந்தத்தை விர்த்தி செய்யும் ஆத்மாவானவன் கடைசியாகக் கூறப்பட்டான். பிரஹ்மத்தில் நிலை பெற்றுள்ளது என்பதால் எல்லா விகல்பங்களுக்கும் நிலைக்களமாயும், நிர்விகல்பமாயும், உள்ள ஆத்மஸ்வரூபம் இந்த குகையிலேயே நம்மால் அறியத்தக்கது என்பதால் அதனுடைய பிரவேசம் இவ்வாறு கல்பிக்கப்பட்டது. இந்த பிரஹ்மம் வேறு இடத்தில் நம்மால் கண்டுகொள்ளமுடியாது. ஏன் எனில் பிரஹ்மம் நிர்விசேஷமானது. ஒரு விசேஷ ஸம்பந்தத்தை உடையதையே நம்மால் புரிந்து கொள்ளப்படுகிறது என்று உலகில் காணப்படுவதாகும். எவ்வாறு ராகுவை சந்திரன், சூரியனுடன் ஸம்பந்தப்படும் பொழுதே அதைக்கண்டு கொள்கிறோம். அதாவது சந்திர சூரிய ஸம்பந்தத்தாலேயே ராகுவானது அறியப்படுவது போல் ஒரு விசேஷ ஸம்பந்தத்துடன் கூடியபொழுதே ஒரு விஷயம் அறியப்பட்டதாக ஆகிறது. இவ்வாறு அந்தக்கரணத்தினுடைய குகையில் ஏற்படும் ஆத்மஸம்பந்தமே பிரஹ்மத்தை அறிந்துகொள்ளுவதற்குக் காரணமாகும். அந்தக்கரணத்திற்கு மிகவும் நெருங்கி இருப்பதாலும் அந்தக்கரணத்தை பிரகாசப்படுத்துவதாலும் இவ்வாறு கூறப்பட்டது.
यथा च आलोकविशिष्टघटाद्युपलब्धिः, एवं बुद्धिप्रत्ययालोकविशिष्टात्मोपलब्धिः स्यात् , तस्मात् उपलब्धिहेतौ गुहायां निहितमिति प्रकृतमेव । तद्वृत्तिस्थानीये त्विह पुनस्तत्सृष्ट्वा तदेवानुप्राविशदित्युच्यते ॥
(ச.பா) எவ்வாறு நம்பார்வைக்கு விஷயமாக உள்ள வெளிச்சத்துடன் கூடிய குடம் முதலானவைகள் நம்பார்வையின் காரணமாக பார்க்கப்பட்டதாக ஆகிறதோ அவ்வாறே புத்தியின் நிச்சயம் (ச்ரத்தை) என்னும் பார்வையோடு கண்டால் ஆத்மா அறியப்பட்டதாக ஆகும். அதை அவ்வாறு அறிவதின் பொருட்டு புத்தியில் (குகையில்) வைக்கப்பட்டுள்ளது என்று கூறுதல் இங்கு மிகவும் பொருத்தமானதே. ஆனந்தத்தின் வ்ருத்தியின் கடைசி எல்லையாக உள்ள ப்ரஹ்மம் அதிலேயே நுழைந்தது என்று கூறுவது மிகவும் பொருத்தமானதாகும்.
तदेवेदमाकाशादिकारणं कार्यं सृष्ट्वा तदनुप्रविष्टमिवान्तर्गुहायां बुद्धौ द्रष्टृ श्रोतृ मन्तृ विज्ञात्रित्येवं विशेषवदुपलभ्यते । स एव तस्य प्रवेशः ; तस्मादस्ति तत्कारणं ब्रह्म । अतः अस्तित्वादस्तीत्येवोपलब्धव्यं तत् ।
(ச.பா) அந்த ஆகாசம் முதலானவைகளுக்குக் காரணமாய் உள்ள வஸ்துவே காரியத்தைப் படைத்து அதற்குள் பிரவேசித்தது போல் உள்ளே இருக்கும் குகை ஸ்வரூபமான புத்தியில் பார்ப்பவன், கேட்பவன், நினைப்பவன், அறிபவன் என்பன போன்ற விசேஷத்துடன் கூடியவன் போல் காணப்படுகிறான், அதுவே அவனுடைய யப்ரவேசம் ஆகும். அதனால் அதற்குக்காரணமான பிரஹ்மம் இருக்கிறது. அது அவ்வாறு இருப்பதால் அந்த பிரஹ்மம் இருக்கிறது என்று அறியத்தக்கதும் உணரத்தக்கதும் ஆகும்.
तत् कार्यमनुप्रविश्य ; किम् ? सच्च मूर्तं त्यच्च अमूर्तम् अभवत् । मूर्तामूर्ते ह्यव्याकृतनामरूपे आत्मस्थे अन्तर्गतेन आत्मना व्याक्रियेते मूर्तामूर्तशब्दवाच्ये । ते आत्मना त्वप्रविभक्तदेशकाले इति कृत्वा आत्मा ते अभवदित्युच्यते ।
(ச.பா) அது அந்தக் காரியத்தில் தொடர்ந்து பிரவேசித்து என்ன செய்தது? எனில் அது सत् (ஸத்) மூர்த்தமாயும், त्यच्च (த்யச்ச) அமூர்த்தமாயும் ஆயிற்று, மூர்த்தங்கள், அமூர்த்தங்கள் என்பன ஆத்மஸ்வரூபத்தில் இருக்கக்கூடிய அவ்யாகிருதமான நாமரூபங்கள் ஆகும். அவைகளில் அனுப்பிரவேசம் செய்த ஆத்மாவினால் அவை வியாகிருதமாக ஆகும்பொழுது மூர்த்தாமூர்த்தங்கள் என்ற சொல்லுக்கு பொருளாக ஆகின்றன. அவைகள் ஆத்ம ஸ்வரூபத்திலிருந்து பிரிக்கப்படாத தேச காலங்களை உடையவை என்று ஆத்மாவே அவ்வாறு மூர்த்தாமூர்த்தமாக ஆயிற்று என்று கூறப்படுகிறது.
किं च, निरुक्तं चानिरुक्तं च, निरुक्तं नाम निष्कृष्य समानासमानजातीयेभ्यः देशकालविशिष्टतया इदं तदित्युक्तम् ; अनिरुक्तं तद्विपरीतम् ; निरुक्तानिरुक्ते अपि मूर्तामूर्तयोरेव विशेषणे । यथा सच्च त्यच्च प्रत्यक्षपरोक्षे, तथा निलयनं चानिलयनं च । निलयनं नीडम् आश्रयः मूर्तस्यैव धर्मः ; अनिलयनं तद्विपरीतम् अमूर्तस्यैव धर्मः ।
(ச.பா) மேலும் அதுவே நிருக்தமாயும், அநிருக்தமாயும் ஆகிறது. நிருக்தம் என்றால் இது இன்னது என்று (நிஷ்கிருஷ்ய) நன்றாக அதன் சாரத்தைப் பிழிந்து அது சமானஜாதியுடன் சேர்ந்ததா அல்லது அசமான ஜாதியுடன் சேர்ந்தது என்றோ அல்லது அதைக் காட்டிலும் வேறுபட்டது என்றோ, தேசகாலங்களுடன் கூடியது அது என்று இது இன்னது என்று பிரித்து நிச்சயம் செய்து கூறப்படுவதாகும். இதற்கு மாறுபட்டது அநிருக்தம் எனப்படும். இவை மூர்த்தா மூர்த்தங்களுக்கே விசேஷணங்கள் ஆகும். எவ்வாறு सच्च, त्यच्च என்பவை பிரத்யக்ஷ அபரோக்ஷங்களோ அவ்வாறே நிலயனம், அநிலயனம் என்பது ஒரு கூட்டை ஆஸ்ரியித்தல், மூர்த்தத்தினுடைய தர்மங்களாகும். அநிலயனம் என்பது அதற்கு நேர்மாறான அமூர்த்தத்தின் தர்மமாகும்.
त्यदनिरुक्तानिलयनानि अमूर्तधर्मत्वेऽपि व्याकृतविषयाण्येव, सर्गोत्तरकालभावश्रवणात् । त्यदिति प्राणाद्यनिरुक्तं तदेवानिलयनं च । अतो विशेषणानि अमूर्तस्य व्याकृतविषयाण्येवैतानि ।
(ச.பா) त्यत् (த்யத்) அநிருக்தம், அநிலயனம் ஆகியவை அமூர்த்தங்களின் தர்மங்களாய் இருந்தாலும் வியக்தத்துடன் சம்பந்தமுடையவை. ஏன் எனில் இதனுடைய சத்தை அதாவது இருப்பு சிருஷ்ட்டிக்குப்பின் கேள்விப்படுகிறோம். त्यत् (த்யத்)என்பது பிராணன் முதலியவைகளின் அநிருக்தமாகும். அதுவே அநிலயனம் என்பதும் ஆகும். எனவே இவைகள் அமூர்த்தங்களின் விசேஷணங்களே. எனவே இவைகளும் வியாகிருத விஷயங்களே ஆகும்.
विज्ञानं चेतनम् ; अविज्ञानं तद्रहितमचेतनं पाषाणादि । सत्यं च व्यवहारविषयम् , अधिकारात् ; न परमार्थसत्यम् ; एकमेव हि परमार्थसत्यं ब्रह्म । इह पुनः व्यवहारविषयमापेक्षिकं सत्यम् , मृगतृष्णिकाद्यनृतापेक्षया उदकादि सत्यमुच्यते । अनृतं च तद्विपरीतम् । किं पुनः ? एतत्सर्वमभवत् , सत्यं परमार्थसत्यम् ; किं पुनस्तत् ? ब्रह्म, ‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ इति प्रकृतत्वात् ।
(ச.பா) விக்ஞானம் சேதனம், அவிக்ஞானம் விக்ஞானமற்ற அசேதனம், கல் முதலியவைகளைப் போன்றதும் அதுபோல் ஸத்தியம், வியாவஹாரிக ஸத்தியமும் வியாவஹாரிக விஷயமாய் இருத்தலால் பாரமார்த்திக ஸத்யமல்ல. அதைப்பற்றியே கூறப்பட்டுவருவதால் பாரமார்த்திக சத்தியம் ஒரே பிரஹ்மம் மட்டும்தான். இங்கு மேலும் வியாவஹாரிக விஷயம் ஆபேக்ஷிகமான ஸத்தியம், எவ்வாறு எனில் கானல் நீரை அபேக்ஷித்து தண்ணீர் ஸத்தியம் என்பது, சத்தியமாவது போல், அநிருதம் என்பது அதற்கு மாறுபட்டது. (கானல் நீர் போன்றவை) இப்படி எல்லாமாக ஆனது பரமார்த்த ஸத்தியம்? அது என்ன? பிரஹ்மமே? ஏன்எனில் இங்கு ஸத்தியம் ஞானம், ஆனந்தம், பிரஹ்மம் என்பதாக கூறப்பட்டுள்ளது.(அதன் பிரகரணம்)
यस्मात् , सत्त्यदादिकं मूर्तामूर्तधर्मजातं यत्किञ्चेदं सर्वमविशिष्टं विकारजातमेकमेव सच्छब्दवाच्यं ब्रह्माभवत् , तद्व्यतिरेकेणाभावान्नामरूपविकारस्य, तस्मात् तत् ब्रह्म सत्यमित्याचक्षते ब्रह्मविदः ।
(ச.பா) எதைக் காட்டிலும் சத், த்யத், என்ற மூர்த்தாமூர்த்ததர்மங்களும் அதைக் காட்டிலும் மிச்சமுள்ள விகாரங்களும் அந்த ஒன்றான சத் என்ற சொல்லுக்கு வாக்கியமாக உள்ள பிரஹ்மமே, அவ்வாறு எல்லாமாக ஆயிற்று. அதைக்காட்டிலும் நாமபேத விகாரங்களுக்கு எந்தக் காரணமும் இல்லாமையால் பிரஹ்மமே அவ்வாறு ஆயிற்று. எனவே அந்த பிரஹ்மம்தான் ஸத்தியம் என்று பிரஹ்மத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
अस्ति नास्तीत्यनुप्रश्नः प्रकृतः ; तस्य प्रतिवचनविषये एतदुक्तम् - ‘आत्माकामयत बहु स्याम्’ इति । स यथाकामं च आकाशादिकार्यं सत्त्यदादिलक्षणं सृष्ट्वा तदनुप्रविश्य पश्यञ्शृण्वन्मन्वानो विजानन् बह्वभवत् ; तस्मात् तदेवेदमाकाशादिकारणं कार्यस्थं परमे व्योमन् हृदयगुहायां निहितं तत्प्रत्ययावभासविशेषेणोपलभ्यमानमस्तीत्येवं विजानीयादित्युक्तं भवति ।
(ச.பா) பிரஹ்மம் இருக்கிறதா இல்லையா என்ற தொடர் கேள்விகளுக்கு விஷயமாகி அதற்கு பதில் கூறும் வாயிலாய் அந்த ஆத்மாதான் பலவாறாக ஆவேன் என்று விரும்பிற்று. அது விரும்பியவாறு சத், த்யத் முதலிய லக்ஷணங்களோடு கூடிய ஆகாசம் முதலிய காரிய வர்க்கங்களை சிருஷ்ட்டி செய்து அதில் பிரவேசித்து பார்ப்பவன், கேட்பவன், நினைப்பவன் மேலும் விக்ஞான ரூபத்தாலும் பலவாறாக ஆனான். ஆகாசம் முதலியவைகளுக்குக் காரணமாயும், காரியவர்க்கத்தில் நிலைபெற்றும், பரமாகாசத்திற்குள் புத்திரூப குகையில் இருந்து விளங்குவதாயும் அதன் நிச்சய ரூபத்தால் (சிரத்தையினால்) வெளிப்படுவதும், அதனால் விசேஷ ரூபமாய் அறியப்படுவதாய் அந்த பிரஹ்மம் இருக்கிறது என்று “அதை அறியவேண்டும்” என்று கூறியதாக ஆயிற்று.
तत् एतस्मिन्नर्थे ब्राह्मणोक्ते एषः श्लोकः मन्त्रः भवति । यथा पूर्वेष्वन्नमयाद्यात्मप्रकाशकाः पञ्चस्वपि, एवं सर्वान्तरतमात्मास्तित्वप्रकाशकोऽपि मन्त्रः कार्यद्वारेण भवति ॥
(ச.பா) இந்த அர்த்தத்திலேயே இந்த தைத்திரீய பிரஹ்மணத்தில் இதே அர்த்தத்தில் இந்த மந்திர ரூபமாய் கூறப்பட்டதாக ஆயிற்று. எவ்வாறு முன்பு கூறப்பட்ட அன்னமயாதி ஐந்து கோசங்களிலும் அதைத்தவிர மற்றமுள்ள எல்லாவற்றிலும் கூறப்பட்டனவோ அவ்வாறே. இந்த ஐந்து கோசங்களிலும் அதைத்தவிர மற்றுமுள்ள எல்லாவற்றிலும் ஸர்வாந்தரமாக உள்ள ஆத்மாவானது இருக்கிறது என்பதை இந்த மந்திரமானது காரியரூபமாய் வஸ்துக்களை விளக்கும் வாயிலாய் பிரஹ்ம வஸ்துவை விளக்குவதாக ஆயிற்று.
इति षष्ठानुवाकभाष्यम् ॥