द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

तैत्तिरीयोपनिषद्भाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

தைத்திரீயோபநிஷத்பாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

सर्वाशाध्वान्तनिर्मुक्तं सर्वाशाभास्करं परम् ।
चिदाकाशावतंसं तं सद्गुरुं प्रणमाम्यहम् ॥
ओं शं नो मित्रः शं वरुणः । शं नो भवत्वर्यमा । शं न इन्द्रो बृहस्पतिः । शं नो विष्णुरुरुक्रमः । नमो ब्रह्मणे । नमस्ते वायो । त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि । त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि । ऋतं वदिष्यामि । सत्यं वदिष्यामि । तन्मामवतु । तद्वक्तारमवतु । अवतु माम् । अवतु वक्तारम् ॥ ओं शान्तिः शान्तिः शान्तिः ॥ १ ॥
यस्माज्जातं जगत्सर्वं यस्मिन्नेव प्रलीयते ।
येनेदं धार्यते चैव तस्मै ज्ञानात्मने नमः ॥ १ ॥
(ச்லோக அர்த்தம்) - எதிலிருந்து இந்த ஜகத்முழுவதும் உண்டாயிற்றோ, எதில் அது லயமாகிறதோ (ஒடுங்குகிறதோ), எதன் மூலமாய் அது தரிக்கப்படுகிறதோ (தாங்கப்படுகிறதோ) அந்த ஞானாத்மாவிற்கு நமஸ்காரம்.
यैरिमे गुरुभिः पूर्वं पदवाक्यप्रमाणत ।
व्याख्याताः सर्ववेदान्तास्तान्नित्यं प्रणतोऽस्म्यहम् ॥ २ ॥
(ச்லோக அர்த்தம்) - பூர்வகாலத்தில் எந்த குருமார்களால் பத, வாக்கிய, பிரமாணங்களால் வேதாங்கள் வியாக்கியாணம் செய்யப்பட்டனவோ அந்த குருமார்களுக்கு என் நமஸ்காரங்கள்.
तैत्तिरीयकसारस्य मयाचार्यप्रसादतः ।
विस्पष्टार्थरुचीनां हि व्याख्येयं संप्रणीयते ॥ ३ ॥
(ச்லோக அர்த்தம்) - ஸ்பஷ்டமாக அர்த்தத்தை அறிய விரும்பும் புருஷர்களுக்காக ஆசாரியர்களுடைய கிருபையால் நான் தைத்திரீய சாகையின் சாரபூதமான இந்த உபநிஷத்தை வியாக்கியானம் செய்கிறேன்.
नित्यान्यधिगतानि कर्माण्युपात्तदुरितक्षयार्थानि, काम्यानि च फलार्थिनां पूर्वस्मिन्ग्रन्थे । इदानीं कर्मोपादानहेतुपरिहाराय ब्रह्मविद्या प्रस्तूयते ।
(ச.பா) சஞ்சித பாபங்களின் நாசம் எதற்கு முக்கிய பிரயோஜனமோ அவ்வாறே நித்தியகர்மா, சகாம கர்ம புருஷர்களுக்காக விஹித காமிய கர்மங்கள் இதற்கு முந்தின கிரந்தத்தில் (பூர்வகாண்டத்தில்) அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது கர்மானுஷ்ட்டானங்கனின் உபாதான காரணத்தை நிவர்த்தி செய்வதற்காக பிரஹ்மவித்யா ஆரம்பிக்கப்படுகிறது.
कर्महेतुः कामः स्यात् । प्रवर्तकत्वात् । आप्तकामानां हि कामाभावे स्वात्मन्यवस्थानात् प्रवृत्त्यनुपपत्तिः । आत्मकामित्वे चाप्तकामता ; आत्मा हि ब्रह्म ; तद्विदो हि परप्राप्तिं वक्ष्यति । अतोऽविद्यानिवृतौ स्वात्मन्यवस्थानं परप्राप्तिः । ‘अभयं प्रतिष्ठां विन्दते’ (तै. उ. २ । ७ । १) ‘एतमानन्दमयमात्मा- नमुपसंक्रामति’ (तै. उ. २ । ८ । ५)इत्यादि श्रुतेः ।
ப்ரவர்த்திக்கச் செய்வதால் காமம் கர்மத்திற்கு ஹேதுவாகிறது. ஆப்த்த காமரானவர்களுக்கு காமம் இல்லாததால் ஸ்வாத்மா விடத்திலே நிலை பெற்றிருப்பதால் பிரவிர்த்தி அடையமாட்டார்கள் (பொருந்தாது). ஆத்ம தர்சனத்தின் காமம் பூர்த்தி ஆவதாகும். ஆத்மாவே   பிரஹ்மமானதால் பிரஹ்மவித்துக்களுக்கு பரப்பிராப்தியை கூறப்போகிறார். ஆகையால் அவித்தியா நிவர்த்தியின் மூலமாக ஸ்வாத்மாவில் நிலை பெறுதலே பரப்பிராப்தியாகும். “‘अभयं प्रतिष्ठां विन्दते’ (तै. उ. २ । ७ । १)” (பயமற்றபதத்தை அடைகிறான்)  “‘एतमानन्दमयमात्मानमुपसंक्रामति’ (तै. उ. २ । ८ । ५)” (இந்த ஆனந்தமய ஆத்மாவை அடைகிறான்) என்பது முதலிய சுருதிகளால் அறியப்படுகிறது.
(पूर्वपक्षी) काम्यप्रतिषिद्धयोरनारर्म्भादारब्धस्य चोपभोगेन क्षयान्नित्यानुष्ठानेन प्रत्यवायाभावादयत्नत एव स्वात्मन्यवस्थानं मोक्षः । अथवा निरतिशयायाः प्रीतेः स्वर्गशब्दवाच्याया: कर्महेतुत्वात्कर्मभ्य एव मोक्ष इति चेत् ।
(பூர்வபக்ஷி) காம்ய, நிக்ஷித்த கர்மங்களை ஆரம்பிக்காமலும், பிராரப்த கர்மா, அதன் பலனை அனுபவித்ததால் அதன் நாசத்தாலும், அவ்வாறே நித்தியகர்மாக்களை அனுஷ்ட்டிப்பதால் பிரத்யவாயம் இல்லாததாலும் அநாயாஸமாய் தன் ஆத்மாவில் நிலை பெறுதலாகிய மோக்ஷம். அல்லது நிரதிசய ப்ரீதியாகிய ஸ்வர்க்க சப்தத்தின் பொருளுக்கு கர்மம் ஹேதுவாய் இருப்பதால் கர்மத்தினால் தான் மோக்ஷம் எற்படும் என்ற சங்கைக்கு
(सिध्दान्ती) न ; कर्मानेकत्वात् । अनेकानि ह्यारब्धफलान्यनारब्धफलानि चानेकजन्मान्तरकृतानि विरुद्धफलानि कर्माणि सम्भवन्ति । अतस्तेष्वनारब्धफलानामेकस्मिञ्जन्मन्यु पभोगक्षया सम्भवाच्छेषकर्मनिमित्तशरीरारम्भोपपत्तिः कर्मशेषसद्भावसिद्धिश्च । ‘तद्य इह रमणीयचरणाः’ (छा. उ. ५ । १० । ७) ‘ततः शेषेण’ (आ. ध. २ । २ । २ । ३)(गो. स्मृ. ११) इत्यादि श्रुतिस्मृतिशतेभ्यः ।
(ஸித்தாந்தி) அவ்வாறு அல்ல, கர்மம் அநேகமாய் இருப்பதால், ஆரம்பிக்கப்ட்ட பலன்கள், ஆரம்பிக்கப்படாத பலன்கள், அநேக ஜன்மங்களில் செய்த விருத்தபலன்கள் இவைகளுடன் கூடிய கர்மங்கள் இருக்கின்றன. ஆகையால் அந்த ஆரம்பிக்கப்படாத கர்மங்கள் ஒரே ஜன்மத்தில் அநுபவித்து நாசம் அடையமுடியாததால் அதில் மிஞ்சிய கர்மங்களின் காரணமாக வேறு சரீரம் ஆரம்பித்தல் (எடுத்தல்) ஸம்பவிக்கும். கர்ம சேஷத்தின் இருத்தலை “‘तद्य इह रमणीयचरणाः’ (छा. उ. ५ । १० । ७)” (இந்த உலகத்தில் சுபகர்மங்களை செய்பவர்கள்), ‘ततः शेषेण’ (आ. ध. २ । २ । २ । ३)(गो. स्मृ. ११)” (உபயோகம் செய்தபின் மீதமானது) இதைக்குறித்து நூற்றுக்கணக்கான முதலிய ஸ்ருதி, ஸ்மிருதிகள் கர்ம சேஷத்தைக் கூறுகின்றன.
(पूर्वपक्षी) इष्टानिष्टफलानामनारब्धानां क्षयार्थानि नित्यानीति चेत् ?
(பூர்வ) இஷ்ட அநிஷ்ட்ட பலன்களை அளிக்கும் ஸஞ்சிதகர்மங்களை நாசம் செய்வதற்காக நித்யகர்மங்கள் என்று ஆனால்?
(सिध्दान्ती) न ; अकरणे प्रत्यवायश्रवणात् । प्रत्यवायशब्दो ह्यनिष्टविषयः । नित्याकरणनिमित्तस्य प्रत्यवायस्य दुःखरूपस्यागामिनः परिहारार्थानि नित्यानीत्यभ्युपगमान्नानारब्धफलकर्मक्षयार्थानि ।
(ஸி) அவ்வாறு அல்ல. நித்தியகர்மா அனுஷ்ட்டிக்காவிடில் பிரத்யவாயம் (வரும்) என்று சுருதியினால் அறிகிறோம். நித்திய கர்மா அனுஷ்ட்டிகாவிடில் ஆகாமி துக்க ரூப பிரத்யவாயம் உண்டாகிறது. அதை நாசம் செய்வதற்காக நித்தியகர்மா அனுஷ்ட்டிக்கப்படுகிறது. இவ்வாறு இருப்பதால் ஸஞ்சித கர்மத்தை நித்திய கர்மாவால் நாசம் செய்ய முடியாது.
यदि नामानारब्धफलकर्मक्षयार्थानि नित्यानि कर्माणि तथाप्यशुद्धमेव क्षपयेयुर्नशुद्धम् । विरोधाभावात् । न हीष्टफलस्य कर्मणः शुद्धरूपत्वान्नित्यैर्विरोध उपपद्यते । शुद्धाशुद्धयोर्हि विरोधो युक्तः ।
நித்தியகர்மா, எதனுடைய பலன் ஆரம்பமாகவில்லையோ அந்த கர்மத்தை நாசமாக்குவதாக இருந்தாலும் அசுத்த (பாப) கர்மாவையே நாசம் செய்யும். சுத்த கர்மாவை புண்௴யத்தை அல்ல. ஏன் எனில் புண்யத்திற்கு அதுவே விரோதியாகாது. இஷ்டபலத்திற்கான கர்மாக்கள் சுத்த ரூபமாய் இருத்தலால் நித்திய கர்மாக்களோடு விரோதம் இல்லை. சுத்த அசுத்த கர்மாக்களிடையே தான் விரோதம் பொருந்தும்.
न च कर्महेतूनां कामानां ज्ञानाभावे निवृत्त्यसंभवादशेषकर्मक्षयोपपत्ति: । अनात्मविदो हि कामोऽनात्मफलविषयत्वात् । स्वात्मनि च कामानुपपत्तिर्नित्यप्राप्तत्वात् । स्वयं चात्मा परं ब्रह्मेत्युक्तम् ।
மேலும் கர்மாக்களுக்கு காரணமான காமனைகளுக்கு. ஞானம் இல்லாமல் நிவர்த்தி  ஸம்பவிக்காததால் (நித்திய கர்மங்களின் வாயிலாய்) எல்லா கர்மங்களும் நாசமாதல் ஸம்பவிக்காது. ஆத்மவித்தாக இல்லாதவருக்கு காமம் வரும், அநாத்ம ரூபமான பயனைப்பற்றியதால் ஸ்வாத்மாவிடத்தில் காமம் எப்பொழுதும் ஸம்பவிக்காது நித்யப்ராப்தமாய் இருத்தலால். ஸ்வயம் ஆத்மா பரப்ரஹ்ம ஸ்வரூபம் என்று கூறப்பட்டதால்.(ப்ரம்ஹத்தைப்பற்றியும் காமம் கிடையாது.
नित्यानां चाकरणमभावस्ततः प्रत्यवायानुपपत्तिरिति । अतः पूर्वोपचितदुरितेभ्यः प्राप्यमाणायाः प्रत्यवायक्रियाया नित्याकरणं लक्षणमिति ‘अकुर्वन्विहितं कर्म’ (मनु. ११ । ४४) इति हि शतुर्नानुपपत्तिः । अन्यथाभावाद्भावोत्पत्तिरिति सर्वप्रमाणव्याकोप इति । अतोऽयत्नतः स्वात्मन्यवस्थानमित्यनुपपन्नम् ।
நித்தியகர்மா செய்யாமல் இருத்தல் அபாவரூபமாகும். அதனால் பிரத்யவாயம் ஸம்பவித்தல் அசம்பவமாகும். ஆகையால் நித்திய கர்மாவை செய்யாமல் இருப்பது என்பது, முன் சம்பாதித்த (சஞ்சித) பாபங்களினால் ஏற்படப்போகின்ற பிரத்யவாயத்தின் சூசனயாகும். ஆகையால் “‘अकुर्वन् विहितं कर्म’ (मनु. ११ । ४४)” என்ற வாக்கியத்தின் “अकुर्वन्” (அகுர்வன்) என்ற பதத்தில் உள்ள சத்ரு பிரத்யயம்  உசிதமற்றதல்ல. வேறு அபாவத்தால் பாவத்தின் (பொருளின்) உத்பத்தி ஏற்படுதல் என்பது எல்லா பிரமாணங்களுக்கும் விரோதம் வரும். ஆகையால் இவ்வாறு கருதும்போது கர்மானுஷ்ட்டானத்தால் பிரயத்தனமின்றியே ஆத்மாவிடத்தில் ஸ்திதி உண்டாகும் என்பது பொருந்தாது.
यच्चोक्तं निरतिशयप्रीतेः स्वर्गशब्दवाच्यायाः कर्मनिमित्तत्वात्कर्मारब्ध एव मोक्ष इति, तन्न, नित्यत्वान्मोक्षस्य । न हि नित्यं किंचिदारभ्यते । लोके यदारब्धं तदनित्यमिति । अतो न कर्मारब्धो मोक्षः ।
ஸ்வர்காதி சப்தங்களினால் அறியப்படும் நிரதிசய ப்ரீதி கர்மத்திலிருந்து வருவதாக இருப்பதால் மோக்ஷம் கர்மத்தினால் ஆரம்பமாகிறது என்பது கிடையாது. ஏன்எனில் மோக்ஷம் நித்தியம், மேலும் எந்த ஒரு நித்திய வஸ்துவும் ஆரம்பமாகாது. உலகில் எது ஆரம்பிக்கப்பட்டதோ அது அநித்தியம் ஆகையால் கர்மத்தினால் ஆரம்பிக்கப்படுவது மோக்ஷமல்ல.
(पूर्वपक्षी) विद्यासहितानां कर्मणां नित्यारम्भसामर्थ्यमिति चेत् ?
(பூர்வ) ஞானஸஹித கர்மங்களுக்கு நித்திய மோக்ஷத்தை ஆரம்பிப்பதற்கு ஸாமர்த்தியம் உள்ளது என்றால்?
(सिध्दान्ती) न । विरोधात् । नित्यं चारभ्यत इति विरुद्धम् ।
(ஸி) விரோதமாய் இருப்பதால் அவ்வாறு அல்ல, நித்தியமானது ஆரம்பிக்கிறது என்பது விருத்தமாகும் (பொருந்தாததாகும்).
(पूर्वपक्षी) यद्विनष्टं तदेव नोत्पद्यत इति । प्रध्वंसाभाववन्नित्योऽपि मोक्ष आरभ्य एवेति चेत् ।
(பூர்வ) எந்த பொருள் நஷ்டமானதோ அது மறுபடியும் உண்டாகாது. ஆகையால் பிரத்வம் சாபாவம் போல் நித்யமானதாய் இருந்தாலும் மோக்ஷத்திற்கு ஆரம்பம் உண்டு என்றால்?
न , मोक्षस्य भावरूपत्वात् । प्रध्वंसाभावोऽप्यारभ्यत इति न सम्भवति ; अभावस्य विशेषाभावाद्विकल्पमात्रमेतत् । भावप्रतियोगी ह्यभावः । यथा ह्यभिन्नोऽपि भावो घटपटादिभिर्विशेष्यते भिन्न इव घटभावः पटभाव इति, एवं निर्विशेषोऽप्यभावः क्रियागुणयोगाद्द्रव्यादिवद्विकल्प्यते । न ह्यभाव उत्पलादिवद्विशेषणसहभावी । विशेषणवत्त्वे भाव एव स्यात् ।
(சி) மோக்ஷம் பாவரூபமாய் இருப்பதால் அவ்வாறு அல்ல. பிரத்துவம்சாபாவமும் ஆரம்பம் ஆகாது. ஏன்எனில் அபாவத்தில் வேறு ஒரு விசேஷமும் இல்லாததால் அது வெறும் கற்பனையே. பாவத்தின் ப்ரிதியோகியே (எதிரியே) அபாவமாகும். எவ்வாறு பாவம் அபின்னமாய் இருந்தாலும் பின்னம் போல் கடபாவம், படபாவம் என்று இருப்பதுபோல் நிர்விசேஷமாய் இருந்தாலும் அபாவம். கிரியா, குணங்களின் சேர்க்கையால் திரவியங்கள் போல் விகல்பமாகிறது .(ஆம்பல்புஷ்பம் முதலியது) உத்பலாதிகள் போல் அபாவம் விசேஷணம் உடையது அல்ல. விசேஷணத்துடன் இருந்தால் பாவபதார்தமாகும்.
(पूर्वपक्षी) विद्याकर्मकर्तृनित्यत्वाद्विद्याकर्मसन्तानजनितमोक्षनित्यत्वमिति चेत् ?
(பூர்வ) வித்யா, கர்மம், இவைகளின் கர்த்தா நித்யமானதால் வித்யா, கர்மம் இவைகளின் அவிச்சின்னத்தால் உண்டான மோக்ஷம் நித்யத்துவம் என்றால்?
न ; गङ्गास्रोतोवत्कर्तृत्वस्य दुःखरूपत्वात् । कर्तृत्वोपरमे च मोक्षविच्छेदात् । तस्मादविद्याकामकर्मोपादानहेतुनिवृत्तौ स्वात्मन्यवस्थानं मोक्ष इति । स्वयं चात्मा ब्रह्म तद्विज्ञानादविद्यानिवृत्तिरिति ब्रह्मविद्यार्थोपनिषदारभ्यते ।
(சி) கங்கா பிரவாஹம் போல் கருத்திருத்வத்துவம் துக்க ரூபமாய் இருப்பதால் அவ்வாறு அல்ல. கர்த்திருத்துவம் நீங்கும் பொழுது மோக்ஷமும் இல்லாமல் போகும். ஆகையால் அவித்தியா, காம, கர்மம் இவைகளின் உபாதான காரணம் நிவர்த்தி ஆகும்பொழுது ஆத்ம ஸ்வரூபத்தில் நிலைத்தலே மோக்ஷமாகும். ஸ்வயம் ஆத்மா பிரஹ்மம். அதன் ஞானத்தால் அவித்தியா நிவிர்த்தி ஆகும் என்பதால் பிரஹ்ம ஞானத்தின் பொருட்டு இந்த உபநிஷத் ஆரம்பிக்கப்படுகிறது.
उपनिषदिति विद्योच्यते, तच्छीलिनां गर्भजन्मजरादिनिशातानत्तदवसादनाद्वा ब्रह्मणो वोपनिगमयितृत्वादुपनिषण्णं वास्यां परं श्रेय इति । तदर्थत्वात् ग्रन्थोऽप्युपनिषत् ।
உபநிஷத் என்ற பதத்தால் பிரஹ்மவித்யா  கூறப்படுகிறது. அதைக்கடைப்பிடிப்பதில் ஸாமர்த்திய முடையவர்களுக்கு கர்ப, ஜன்ம, ஜரை முதலியவைகளின் நீக்கத்தினாலோ அல்லது பிரஹ்மத்தின் சமீபம் எடுத்துத் செல்வதாலோ பரம ச்ரேய பிரஹ்மத்தில் நிலைத்து இருப்பதால் இந்த பிரஹ்மவித்யா உபநிஷத் எனப்படுகிறது. அந்த பிரஹ்மவித்யாவை போதிப்பதாக இருப்பதால் இந்த கிரந்தமும் உபநிஷத் எனப்படுகிறது.
ओं शं नो मित्रः शं वरुणः । शं नो भवत्वर्यमा । शं न इन्द्रो बृहस्पतिः । शं नो विष्णुरुरुक्रमः । नमो ब्रह्मणे । नमस्ते वायो । त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि । त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि । ऋतं वदिष्यामि । सत्यं वदिष्यामि । तन्मामवतु । तद्वक्तारमवतु । अवतु माम् । अवतु वक्तारम् ॥ ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥ १ ॥
शं सुखं प्राणवृत्तेरह्नश्चाभिमानी देवतात्मा मित्रो नोऽस्माकं भवतु । तथैवापानवृत्ते रात्रेश्चाभिमानी देवतात्मा वरुणः । चक्षुष्य़ादित्ये चाभिमान्यर्यमा । बल इन्द्रः । वाचि बुद्धौ च बृहस्पतिः । विष्णुरुरुक्रमोविस्तीर्णक्रमः पादयोरभिमानी । एवमाद्याध्यात्मदेवताः शं नः । भवत्विति सर्वत्रानुषङ्गः ।
பிராணவிருத்திக்கும் தினத்திற்கும் அபிமானதேவதை மித்திரனும் (சூரியன்) எங்களுக்கு “शं” சுகரூபமாகட்டும், அவ்வாறே அபான விருத்திக்கும் இரவிற்க்கும் அபிமான தேவதாத்மா வருணன். கண்கள், சூரியன். இவைகளின் அபிமானதேவதை அர்யமா. பலத்தின் அபிமான தேவதை இந்திரன். வாக்கு புத்தியின் அபிமான தேவதை பிரஹஸ்பதி “उरुक्रमः” விஸ்தீரண பாதத்தை (அடியை) வைப்பவராகிய விஷ்ணு பாதங்களின் அபிமான தேவதை. இவ்வாறான எல்லா அத்யாத்ம தேவதைகளும் எங்களுக்கு சுகத்தை அளிக்கட்டும். இவ்வாறு உண்டாகட்டும் (அளிக்கட்டும்) என்று எல்லா வாக்கியங்களிலும் ஸம்பந்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.
तासु हि सुखकृत्सु विद्याश्रवणधारणोपयोगा अप्रतिबन्धेन भविष्यन्तीति तत्सुखकर्तृत्वं प्रार्थ्यते शं नो भवत्विति ।
அவர்கள் ஸுகத்தை அளிப்பவர்களாக இருக்கும்போது ஞானத்தின் பொருட்டு சிரவணம் தாரணம் பயன்பாடுகள் நிர்விக்னமாக எற்படும் ஆதலால் “शं नो भवतु” முதலிய மந்திரங்களின் வாயிலாய் சுகத்தைக் கொடுப்பதற்காக பிரார்த்தனை செய்யப்படுகிறது.
ब्रह्म विविदिषुणा नमस्कारवन्दनक्रिये वायुविषये ब्रह्मविद्योपसर्गशान्त्यर्थं क्रियेते । सर्वक्रियाफलानां तदधीनत्वाद् ब्रह्मवायुस्तस्मै ब्रह्मणे नमः । प्रह्वीभावं करोमीति वाक्यशेषः । नमस्तेतुभ्यं हे वायो नमस्करोमिति । परोक्षप्रत्यक्षाभ्यां वायुरेवाभिधीयते ।
பிரஹ்மஜிக்ஞாஸுவினால் பிரஹ்மவித்தைக்கு ஏற்படும் விக்நங்களை நீக்குவதற்காக வாயு விஷயத்தில் நமஸ்காரத்தையும், வந்தனையும் செய்யப்படுகிறது. எல்லா கர்மங்களின் பலனும் வாயுவின் அதீனமாய் இருத்தலால் வாயு பிரஹ்மமாகும். ஆகையால் அந்த பிரஹ்மத்தை வினய பாவத்துடன் நமஸ்காரம் செய்கிறேன் என்பதாகும். வாயுவே உன் பொருட்டு நமஸ்காரம் அதாவது நமஸ்காரம் செய்கிறேன். பரோக்ஷமாகவும் பிரத்யக்ஷமாகவும் வாயுதான் கூறப்படுகிறார்.
किंचत्वमेव चक्षुराद्यपेक्ष्य बाह्यं संनिकृष्टमव्यवहितं प्रत्यक्षं ब्रह्मासि यस्मात्तस्मात्त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि । ऋतं यथाशास्त्रं यथाकर्तव्यं बुद्धौ सुपरिनिश्चितमर्थं तदपि त्वदधीनत्वात्त्वामेव वदिष्यामि । सत्यमिति स एववाक्कायाभ्यां सम्पाद्यमानः सोऽपि त्वदधीन एव संपाद्य इति त्वामेव सत्यं वदिष्यामि ।
மேலும் நீதான் பாஹ்ய கண்முதலியவைகளை அபேக்ஷித்து சமீபத்தில் இருக்கும் அவ்வியஹித அதாவது பிரத்யக்ஷ பிரஹ்மமாய் இருக்கிறாய். எதனால் அவ்வாறு இருக்கிறாயோ அதனால் நீதான் பிரத்யக்ஷ பிரஹ்மம் என்று கூறுவேன். “ऋतं” (ரிதம்) அதாவது “यथाशास्त्रं” (எவ்வாறு சாஸ்த்திரத்தில் கூறப்பட்டதோ அவ்வாறு) “यथाकर्तव्यं” தன்னுடைய கர்த்தவ்யத்தை அனுசரித்து புத்தியில் நிச்சயம் செய்யப்பட்ட அர்த்தம். அதுவும் உன்னுடைய அதீனமாய் இருப்பதால் நீதான் என்று கூறுவேன். சத்தியம் என்பது அதை வாக், சரீரம் இவைகளால் செய்யக்கூடியது. அதுவும் உன் அதீனத்தாலேயே ஸம்பாதிக்கமுடியும். என்பதால் உன்னையே சத்தியம் என்று கூறுவேன்.
तत्सर्वात्मकं वाय्वाख्यं ब्रह्म मयैवं स्तुतं सन्मां विद्यार्थिनमवतु विद्यासंयोजनेन । तदेव ब्रह्म वक्तारमाचार्यं वक्तृत्वसामर्थ्यसंयोजनेनावतु । अवतु मामवतु वक्तारमिति पुनर्वचनमादरार्थम् । ॐ शान्तिः शान्तिः शान्तिरिति त्रिर्वचनमाध्यात्मिकाधिभौतिकाधिदैविकानां विद्याप्राप्त्युपसर्गाणां प्रशमार्थम् ॥
அந்த வாயு எனப்படும் சர்வாத்மக பிரஹ்மம் என்னால் இவ்வாறு ஸ்துதிக்கப்பட்டதாக இருந்துகொண்டு சத்வித்யார்த்தியாகிய என்னை வித்தையில் ஒன்றச்செய்து ரக்ஷிப்பாயாக. அந்த பிரஹ்மமே வக்தாவாகிய ஆசாரியரை உபதேசிக்க ஸாமர்த்தியத்தை அளித்து அவரை ரக்ஷிப்பாயாக. என்னை ரக்ஷி, ஆச்சாரியரையும் ரக்ஷி என்று இரண்டு முறை கூறுதல் ஆதரவின் பொருட்டாகும். ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்று மும்முறை கூறியது ஆத்யாத்மிக, ஆதிபௌதிக, ஆதிதெய்வீகங்களாகிய விக்னங்களை சாந்தி: செய்வதற்காக (நீக்க) கூறப்பட்டதாகும்.
इति प्रथमानुवाकभाष्यम् ॥
முதல் அனுவாகம் முற்றிற்று.
अर्थज्ञानप्रधानत्वादुपनिषदो ग्रन्थपाठे यत्नोपरमो मा भूदिति शीक्षाध्याय आरभ्यते ।
(அ-கை) உபநிஷத்தில் அர்தஞானம் பிரதானமாய் இருப்பதால் அந்த கிரந்தத்தை அத்யயனம் செய்வதில் பிரயத்தனம் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக சீக்க்ஷா அத்தியாயம் ஆரம்பிக்கப்படுகிறது.
शीक्षां व्याख्यास्यामः वर्णः स्वरः । मात्रा बलम् । साम सन्तानः च् इत्युक्तः शीक्षाध्यायः ॥ १ ॥
शिक्षाशिक्ष्यतेऽनयेति वर्णाद्युच्चारणलक्षणम् । शिक्ष्यन्त इति वा शिक्षा वर्णादयः । शिक्षैव शीक्षा । दैर्घ्यं छान्दसम् । तां शीक्षां व्याख्यास्यामो विस्पष्टमा समन्तात्प्रकथयिष्यामः । चक्षिड़ो वा ख्याञादिष्टस्य व्याङ्पूर्वस्य व्यक्तवाक्कर्मण एतद्रूपम् ।
எதனால் எழுத்துக்களின் உச்சாரணம் கற்பிக்கப்படுகிறதோ அதை சிக்ஷா என்கிறோம் அல்லது எழுத்து முதலியவைகளால் கற்பிக்கப்படுவதால் அவை சிக்ஷா எனப்படுகிறது. சிக்ஷாவையே சீக்ஷா என்கிறோம். “दैर्घ्यं” தீர்க்கத்துவம் வேதத்தின் சிறப்பு, அந்த சீக்ஷாவை வியாக்கியானம் அதாவது எவ்விதமாகவும் ஸ்பஷ்ட்டமாக கூறுவோமாக “व्याख्यास्यामः” என்ற பதத்தில் உள்ள वि மேலும் “आङ्” உபசர்க பூர்வக “चक्षिङ्” தாத்துவின் ஸ்தானத்தில் விகல்பமான “चक्षिङ्” ஆதேசம் செய்வதால் அதன் அர்த்தம் ஸ்பஷ்ட்டமாய் உச்சரிக்கப்படுகிறது என்பதாகும்.
तत्र वर्णः अकारादिः । स्वर उदात्तादिः । मात्रा ह्रस्वाद्याः । बलं प्रयत्नविशेषः । साम वर्णानां मध्यमवृत्त्योच्चारणं समता । सन्तानः सन्ततिः, संहितेत्यर्थः । एवं शिक्षितव्योऽर्थः शिक्षा यस्मिन्नध्याये, सोऽयं शीक्षाध्यायः इति एवम् उक्तः उदितः । उक्त इत्युपसंहारार्थः ॥
இங்கு அகாரதிவர்ணம், உதாத்தாதி ஸ்வரம், ஹ்ரஸ்வாதிமாத்திரை முதலியவை, பலம் பிரயத்ன விசேஷம், ஸாமம் மத்யமவிருத்தி உச்சாரணம் ஸமதா, ஸந்தானம் ஸந்ததி என்றால் ஸம்ஹிதா என்பது பொருள். அதுவே சிக்ஷிக்கப்பட வேண்டியது என்பது பொருள். சிக்ஷை இந்த அத்யாயத்தில் அந்த இந்த சீக்ஷா அத்யாயத்தை இவ்வாறு கூறி பிரகாசப்படுத்தப்பட்டது. இங்கு “उक्त” பதம் உபசம்ஹாரத்திற்காக வந்துள்ளது.
इति द्वितीयानुवाकभाष्यम् ॥
இரண்டாவது அனுவாகம் முற்றிற்று.
अधुना संहितोपनिषदुच्यते
(அ-கை) இப்பொழுது சம்ஹிதோ உபநிஷத் கூறப்படுகிறது.
सह नौ यशः । सह नौ ब्रह्मवर्चसम् । अथातः संहितायाः उपनिषदं व्याख्यास्यामः । पञ्चस्वधिकरणेषु । अधिलोकमधिज्योतिषमधिविद्यमधिप्रजमध्यात्मम् । ता महासंहिता इत्याचक्षते । अथाधिलोकम् । पृथिवी पूर्वरूपम् । द्यौरुत्तररूपम् । आकाशः संधिः ॥ १ ॥
वायुः संधानम् । इत्यधिलोकम् । अथाधिज्यौतिषम् । अग्निः पूर्वरूपम् । आदित्य उत्तररूपम् । आपः संधिः । वैद्युतः संधानम् । इत्यधिज्यौतिषम् । अथाधिविद्यम् । आचार्यः पूर्वरूपम् ॥ २ ॥
अन्तेवास्युत्तररूपम् । विद्या संधिः । प्रवचनँसंधानम् । इत्यधिविद्यम् । अथाधिप्रजम् । माता पूर्वरूपम् । पितोत्तररूपम् । प्रजा संधिः । प्रजननँंसन्धानम् । इत्यधिप्रजम् ॥ ३ ॥
अथाध्यात्मम् । अधरा हनुः पूर्वरूपम् । उत्तरा हनुरुत्तररूपम् । वाक्संधिः । जिह्वा संधानम् । इत्यध्यात्मम् । इतीमाः महासँहिता य एवमेता महासँहिता व्याख्याता वेद । संधीयते प्रजया पशुभिः । ब्रह्मवर्चसेनान्नाद्येन सुवर्गेण लोकेन ॥ ४ ॥
तत्र संहिताद्युपनिषत्परिज्ञाननिमितं यद्यशः प्रार्थ्यते तन्नावावयोः शिष्याचार्ययोः सहैवास्तु । तन्निमितं च यद्ब्रह्मवर्चसं तेजस्तच्च सहैवास्त्विति शिष्यवचनमाशीः । शिष्यस्य ह्यकृतार्थत्वात्प्रार्थनोपपद्यते नाऽऽचार्यस्य । कृतार्थत्वात् । कृतार्थोह्याचार्यो नाम भवति ।
அந்த சம்ஹிதா முதலிய உபநிஷத் அறிவதனால் எந்த யசஸ் (புகழ்) ஆனதோ பிரார்த்திக்கப்பட்டதோ அது சிஷ்ய ஆசாரியர்களாகிய எங்கள் இருவரின் பொருட்டாகட்டும். அதனால் உண்டாகும் எந்த பிரஹ்ம வர்ச்சஸ)ம் தேஜஸ்சும் சேர்ந்து இருக்கட்டும். இவ்விதமான ப்ரார்த்தனை சிஷ்யனுடைய வாக்கியமாகும். ஏன்எனில் அகிருதார்த்தமாக இருப்பதால் சிஷ்யனுக்குத்தான் இந்த பிரார்த்தனை ஸம்பவிக்கும். ஆச்சாரியர்க்கு அல்ல. ஏன்எனில் அவர் கிருதார்த்தர் எந்த புருஷன் கிருதார்த்தனோ அவரே ஆச்சாரியர் என்று கருதப்படுகிறார்.
अथानन्तरमध्ययनलक्षणविधानस्य अतो यतोऽत्यर्थं ग्रन्थभाविता बुद्धिर्नशक्यते सहसाऽर्थज्ञानविषयेऽवतारयितुमित्यतः संहिताया उपनिषदं संहिताविषयं दर्शनमित्येतद्ग्रन्थसंनिकृष्टामेव व्याख्यास्यामः । पञ्चस्वधिकरणेष्वाश्रयेषु ज्ञानविषयेष्वित्यर्थः ।
“अथ”என்பது முன்பு கூறி. ஆத்யயன ரூப விதானத்திற்குப்பின் “अतः” ஆகையால் எதனால் கிரந்தத்தை அத்யயனம் செய்வதில் அத்யந்த ஆஸக்தி உடைய புத்தியினால் அர்த்த ஞானத்தில் பிரவிர்த்தி செய்ய முடியவில்லையோ, அதனால் நாம் கிரந்தத்திற்கு ஸமீபமாய் உள்ள ஸம்ஹிதோ உபநிஷத் அதாவது ஸம்ஹிதா ஸம்பந்தமுடைய திருஷ்ட்டியை ஐந்து அதிகரணங்களில் ஆச்ரயிக்கின்ற ஞான விஷயத்தில் வியாக்கியானம் செய்கிறோம் என்பது பொருள். (தாத்பர்யம் என்னவெனில் வர்ணகத்தின் விஷயத்தை ஐந்து பிரகாரமாய் ஞானம் (உபாஸனம்) கூறப்படுகிறது.
कानि तानीत्याह - अधिलोकं लोकेष्वधि यद्दर्शनं तदधिलोकम् । तथाऽधिज्यौतिषमधि विद्यमधिप्रजमध्यात्ममिति । ता एताः पञ्चविषया उपनिषदो लोकादिमहावस्तुविषयत्वात्संहिताविषयत्वाच्च महत्यश्च ताः संहिताश्च महासंहिता इत्याचक्षते कथयन्ति वेदविदः ।
அந்த பஞ்ச (ஐந்து) அதிகரணம் என்ன என்பதைக் கூறுகிறார். अधिलोकं (அதிலோகம்)- எந்த தர்சனமானது லோகவிஷயமோ அது அதிலோகம் எனப்படும், இவ்வாறே அதிஜ்யோதிஷ்ம், அதிவித்யம், அதிப்பிரஜம், மேலும் அத்யாத்மா இவைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். பஞ்சவிஷய சம்பந்திக்கின்ற உபநிஷத்தில் லோகமுதலிய மஹாவஸ்துவிஷயங்களும், ஸம்ஹிதையின் ஸம்பந்தவிஷயங்களும் உள்ளனவோ, ஆகையால் வேதத்தை நன்கு அறிந்தவர்கள் இவைகளை மஹதீஸம்ஹிதா (महतीसंहिता) அதாவது (महासंहिता) மஹாஸம்ஹிதா என்று கூறுகிறார்கள்.
अथ तासां यथोपन्यस्तानामधिलोकं दर्शनमुच्यते । दर्शनक्रमविवक्षार्थोऽथशब्दः सर्वत्र । पृथिवी पूर्वरूपं पूर्वो वर्णः पूर्वरूपम् । संहितायाः पूर्वे वर्णे पृथिवीदृष्टिः कर्तव्येत्युक्तं भवति । तथा चोत्तररूपमाकाशोऽन्तरिक्षलोकः । संधिर्मध्यं पूर्वोत्तररूपयोः संधीयते अस्मिन्पूर्वोत्तररूपे इति । वायुः संधानम् । संधीयतेऽनेनेति संधानम् । इत्यधिलोकं दर्शनमुक्तम् । अथाधिज्यौतिषमित्यादि समानम् ।
முன் கூறப்பட்ட (ஐந்து வகை உபாசனைகளில்) முதலில் அதிலோக திருஷ்ட்டி கூறப்படுகிறது. தர்சனகிரமத்தை விவரிப்பதற்காக अथ (அத) ஸப்தம் எல்லா இடத்திலும் கூறப்பட்டுள்ளது பிருதிவீ பூர்வரூபம், பூர்வவர்ணம் பூர்வரூபம். இதனால் கூறப்படுகிறது ஸம்ஹிதையின்(சந்தியின்) முதல் வர்ணத்தில் பிரிதிவீதிருஷ்ட்டியை செய்யவேண்டும். இவ்வாறே உத்தரரூபம் (கடைசி எழுத்து) ஆகும். ஆகாசம் அதாவது அந்தரிக்ஷம் சந்தி அதாவது முதலாவது, கடைசி ரூபத்தின் மத்தியம் அதாவது இதனால் முதல், கடைசி இரண்டும் ஒன்றாக்கப்படுகிறது. வாயு ஸந்தானம் எதனால் ஸந்தானம் உண்டாகிறதோ அதுஸந்தானம் எனப்படுகிறது. இவ்வாறு அதிலோக தர்சனம் கூறப்பட்டது, இதற்கு ஸமமாக “अथाधिज्यौतिषम्” (அதாதிஜ்யோதிஷம்) முதலிய மந்திரங்களின் அர்த்தங்களும் அறியப்படவேண்டியவை ஆகும்.
इतीमा इत्युक्ता उपप्रदर्श्यन्ते । यः कश्चिदेवमेता महासंहिता व्याख्याता वेदोपास्ते । वेदेत्युपासनं स्याद्विज्ञानाधिकारात् “इति प्राचीनयोग्योपास्स्व” इति च वचनात् । उपासनं च यथाशास्त्रं तुल्यप्रत्ययसंततिरसंकीर्णा चातत्प्रत्ययैः शास्त्रोक्तालम्बनविषया च । प्रसिद्धश्चोपासनशब्दार्थो लोके गुरुमुपास्ते, राजानमुपास्त इति, यो हि गुर्वादीन्संततमुपचरति स उपास्त इत्युच्यते । स च फलमाप्नोत्युपासनस्य । अतोऽत्रापि च य एवं वेद संधीयते प्रजादिभिः स्वर्गान्तैः प्रजादिफलान्याप्नोतीत्यर्थः ॥
इति तृतीयानुवाकभाष्यम् ॥
“इति” “इमा” (இதி, இமா) என்ற இரண்டு பதங்களும் முன்பு கூறப்பட்ட தர்சனங்களை விவரிக்கிறது. எவன் ஒருவன் இவ்விதமாய் வியாக்கியானம் செய்யப்பட்ட இந்த மஹா ஸம்ஹிதையை அறிகிறானோ அதாவது உபாஸனை செய்கிறானோ இங்கு “वेद” சப்தத்தால் உபாசனையை அறிய வேண்டும். எவ்வாறு எனில் “इति प्राचीनयोग्योपास्स्व” இனிவரும் வசனங்களால் சித்திக்கிறது. சாஸ்திரத்தில் உள்ளவாறு ஸமமான பிரத்யயத்தின் பிரஹ்ாஹம் உபாஸனையாகும் அந்த விருத்திபிரவாஹம் விஜாதீய பிரத்யயம் இல்லாத மேலும் சாஸ்திரத்தில் கூறப்பட்ட ஆலம்பனத்தை ஆச்ரயித்து உபாஸனை செய்யவேண்டும். உலகில் “குருவை உபாஸிக்கிறான்”, “ராஜாவை உபாஸிக்கிறான்” என்பது முதலிய வாக்கியங்களால் “உபாஸனா” சப்தத்தின் அர்த்தம் பிரஸித்தமாய் இருக்கிறது. எந்த புருஷன் குரு முதலியவர்களை எப்பொழுதும் உபசாரம் செய்கிறானோ அவனை உபாஸனை செய்கிறான் என்று கூறப்படுகிறது. அவன் அந்த உபாஸனையின் பலனை அடைகிறான், ஆகையால் இந்த மஹாஸம்ஹிதை ஸம்பந்தமாய் எவன் ஒருவன் இவ்வாறு உபாசனை செய்கிறானோ அவன் பிரஜை முதல் ஸ்வர்க்கம் வரையிலும் உள்ள எல்லா ஸம்பத்துக்களையும் அடைகிறான். அதாவது பிரஜை முதலிய பயனை அடைகிறான் என்பது பொருள்.
மூன்றாவது அனுவாகம் முற்றிற்று.
यश्छन्दसामिति मेधाकामस्य श्रीकामस्य च तत्प्राप्तिसाधनं जपहोमावुच्येते । “स मेन्द्रो मेधया स्पृणोतु” “ततो मे श्रियमावह” इति च लिङ्गदर्शनात् -
(அ-கை) இப்பொழுது “यश्छन्दसाम्” என்ற மந்திரங்களால் மேதையை விரும்புபவன் (मेधाकामि) அவ்வாறே செல்வத்தை விரும்புபவன் (श्रीकामि) ஆகியவரின் விருப்பங்களின் பிராப்த்திகாக அவைகளுக்கு சாதனங்களான ஜபம், ஹோமம் இவைகள் கூறப்படுகிறது. ஏன்எனில் “स मेन्द्रो मेधया स्पृणोतु” (அந்த இந்திரன் என்னை மேதையால் பிரஸன்னமாக்கட்டும்) அவ்வாறே “ततो मे श्रियमावह” (ஆகையால் அந்த செல்வத்தை எனக்கு அடையச்செய்வீராக) என்ற வாக்கியங்களிலிருந்து குறிப்பை அறிகிறோம்-
यश्छन्दसामृषभो विश्वरूपः । छन्दोभ्योऽध्यमृतात्संभूव । स मेन्द्रो मेधया स्पृणोतु । अमृतस्य देवधारणो भूयासम् । शरीरं मे विचर्षणम् । जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरि विश्रुवम् । ब्रह्मणः कोशोऽसि मेधयापिहितः श्रुतं मे गोपाय । आवहन्ती वितन्वाना ॥ १ ॥
कुर्वाणाचीरमात्मनः । वासाँसि मम गावश्च । अन्नपाने च सर्वदा । ततो मे श्रियमावह । लोमशां पशुभिः सह स्वाहा । आमायन्तु ब्रह्मचारिणः स्वाहा । विमायन्तु ब्रह्मचारिणः स्वाहा । प्रमायन्तु ब्रह्मचारिणः स्वाहा । दमायन्तु ब्रह्मचारिणः स्वाहा । शमायन्तु ब्रह्मचारिणः स्वाहा ॥ २ ॥
यश्छन्दसां वेदानामृषभ इवर्षभः प्राधान्यात् । विश्वरूपः सर्वरूपः सर्ववाग्व्याप्तेः। ‘तद्यथा शङ्कुना सर्वाणि पर्णानि सन्तृण्णान्येवमोङ्कारेण सर्वा वाक्सन्तृण्णोङ्कार एवेदं सर्वम्’ (छा. उ. २ । २३ । ३) इत्यादि श्रुत्यन्तरात् । अत एवर्षभत्वमोङ्कारस्य । ओङ्कारो ह्यत्रोपास्य इति ऋषभादिशब्दैः स्तुतिर्न्याय्यैवोङ्कारस्य । छन्दोभ्यो वेदेभ्यो वेदा ह्यमृतं तस्मादमृतादधिसंबभूव । लोकदेववेदव्याहृतिभ्यः सारिष्ठं जिघृक्षोः प्रजापतेस्तपस्यत ओङ्कारः सारिष्ठत्वेन प्रत्यभादित्यर्थः । न हि नित्यस्योङ्कारस्याञ्जसैवोत्पत्तिरेव कल्प्यते । स एवंभूत ओङ्कार इन्द्रः सर्वकामेशः परमेश्वरो मा मां मेधया प्रज्ञया स्पृणोतु प्रीणयतु बलयतु वा । प्रज्ञाबलं हि प्रार्थ्यते ।
(ச.பா) ஓம்காரம் பிரதானமாய் இருப்பதால் ஸந்தஸ் (छन्दस्) வேதத்தில் மேலானதைப்போல் மேலானது (ச்ரேஷ்ட்டத்தைப்போல் ஸ்ரேஷ்டமானது) அவ்வாறே எல்லா வாக்கிலும் வியாபித்திருப்பதால் விச்வரூபமாய் இருக்கிறதோ அது ஸர்வமயமாகும். ‘तद्यथा शङ्कुना सर्वाणि पर्णानि सन्तृण्णान्येवमोङ्कारेण सर्वा वाक्सन्तृण्णोङ्कार एवेदं सर्वम्’ (छा. उ. २ । २३ । ३) (அது எவ்வாறு இலைகளில் உள்ள நரம்புகள் போல்) முதலிய வேறு ச்ருதிகளால் அறிகிறோம். ஆகையால் இவ்வாறு ஓம்காரத்திற்கு (ऋषभः) ச்ரேஷ்ட்டத்தன்மை ஆகும். ஓம்காரமே உபாசிக்கத்தகுந்தது என்று “ऋषभ” (சிறப்பானது) என்ற சப்தங்களால் ஸ்துதி செய்யப்படுவது உசிதமே ஆகும். छन्दोभ्यो வேதங்களிலிருந்து அறிவது தான் அம்ருதம் ஆகையால் அந்த அம்ருதத்தால் பிரதானரூபமாயிற்று. இழ்ன் தாத்பர்யம் என்னவெனில் தேவதை, வேதம், வியாஹ்ருதி இவைகளால் எல்லாவற்றிலும் உத்கிருஷ்ட்டமான ஓம்காரத்தை கிரஹிப்பதில் உள்ள இச்சையால் தபஸ் செய்து கொண்டிருக்கும் பிரஜாபதிக்கும் ஓம்காரமே மிகவும் உத்தமமான ஸாரரூபமாய் விளங்கிற்று. ஏன்எனில் நித்தியமான ஓம்காரத்திற்கு தானாகவே உத்பத்தியை கல்பனை செய்ய முடியாது இவ்விதமான ஓம்காரரூப இந்திரன் எல்லா காமனைகளுக்கும் தலைவனாகிய பரமேஷ்வரன் என்னை மேதைவாயிலாய் பிரசன்னமாக்கட்டும் அல்லது என்னை பலமுடையவன் ஆக்கட்டும் இவ்வாறு புத்தியின் பலத்திற்காக பிரார்த்தனை செய்யப்படுகிறது.
अमृतस्य अमृतत्वहेतुभूतस्य ब्रह्मज्ञानस्य तदधिकारात् , हे देव धारणो धारयिता भूयासं भवेयम् । किं च शरीरं मे मम विचर्षणं विचक्षणं योग्यमित्येतत् । भूयादिति प्रथमपुरुषविपरिणामः । जिह्वा मे मधुमत्तमा मधुमत्यतिशयेन मधुरभाषिणीत्यर्थः । कर्णाभ्यां श्रोत्राभ्यां भूरि बहु विश्रुवं व्यश्रवं श्रोता भूयासमित्यर्थः । आत्माज्ञानयोग्यः कार्यकरणसंघातोऽस्त्विति वाक्यार्थः । मेधा च तदर्थमेव हि प्रार्थ्यते ।
ஹே! தேவனே! நான் அம்ருதன் அதாவது நான் அம்ருதத்தை அடைவதற்கு ஹேதுவான பிரஹ்ம ஞானத்திற்கு யோக்கியனாய் இருப்பதால் அதை தரிப்பதற்கு அருகதை உள்ளவனாக ஆவேனாக, அவ்வாறே என் சரீரமும் அதற்கு யோக்கியமாகட்டும். என்னுடைய நாக்கு மது உடையது ஆகட்டும். அதாவது இனிமையான பேச்சு உடையதாக ஆகட்டும். என்னுடைய செவிகள் நல்ல அநேக சிரவணம் உடையதாக ஆகட்டும். இதன் பொருள் என்னவெனில் ஆத்ம ஞானத்திற்கு காரியகரண ஸங்காத்தங்கள் யோக்கியதை உடையதாகட்டும். மேதையையும் அதன் பொருட்டே பிரார்த்திக்கப்படுகிறது.
ब्रह्मणः परमात्मनः कोशोऽसि । असेरिवोपलब्ध्यधिष्ठानत्वात् । त्वं हि ब्रह्मणः प्रतीकं त्वयि ब्रह्मोपलभ्यते । मेधया लौकिकप्रज्ञया पिहित आच्छादितः स त्वं सामान्यप्रज्ञैरविदिततत्त्व इत्यर्थः । श्रुतं श्रवणपूर्वकमात्मज्ञानादिकं मे गोपाय रक्ष । तत्प्राप्त्यविस्मरणादि कुर्वित्यर्थः । जपार्था एते मन्त्रा मेधाकामस्य ।
பிரஹ்மத்திற்கு அதாவது பரமாத்மாவிற்கு கோசமாய் இருக்கிறாய் கத்திக்கு உரைபோல் அடையவேண்டியதின் அதிஷ்டானமாய் இருப்பது போல் ஆகும். நீதான் பிரஹ்மத்தின் பிரதீகம். ஆகையால் உன்னிடத்தில் பிரஹ்மம் அடையப்படுகிறது. மேதையினால் அதாவது லௌகிக பிரக்ஞையினால் மறைக்கப்பட்ட அந்த நீ ஸாமான்ய பிரக்ஞையினால் தத்துவத்தை அறியமுடியாது என்பது பொருள். கேட்கப்பட்ட அதாவது சிரவணவாயிலாய் அடைந்த ஆத்ம ஞானம் முதலியவைகளை என்னிடத்தில் காப்பாற்றுவாயாக அடைந்ததனை மறக்காமல் இருக்கும் படி செய்வாயாக. இந்த மந்திரம் மேதையை விரும்பும் புருஷனுக்கு ஜபத்தின் பொருட்டாகும்.
होमार्थास्त्वधुना श्रीकामस्य मन्त्रा उच्यन्ते । आवहन्त्यानयन्ती । वितन्वाना विस्तारयन्ती । तनोतेस्तत्कर्मत्वात् । कुर्वाणा निर्वर्तयन्ती । अचीरमचिरं क्षिप्रमेव । छान्दसो दीर्घः । चिरं वा कुर्वाणा । आत्मनो मम , किमित्याह-वासांसि वस्त्राणि मम गावश्च गाश्चेति यावत् अन्नपाने च सर्वदैवमादीनि कुर्वाणा श्रीर्या तां ततो मेधानिर्वर्तनात्परमावहाऽऽनय। अमेधसो हि श्रीरनर्थायैवेति ।
இப்பொழுது ஶ்ரீகாமனுக்கு (செல்வம் வேண்டுபவனுக்கு) வேண்டிய ஹோமத்திற்கான மந்திரம் கூறப்படுகிறது. आवहन्ती (ஆவஹந்தி) கொண்டுவருவது वितन्वाना(விதன்வானா) விஸ்தாரம் செய்வது. ஏன்எனில் “तनु” (தநு) என்றனையின் அர்த்தம் விஸ்தரித்தல் कुर्वाणा (குர்வாணா) செய்வது अचिरं (அச்சிரம்) உடனே அல்லது சீக்கிரம் छान्दसः (ச்சாந்தச:) தீர்க்கம். அல்லது என்பொருட்டு ஸ்திரமாக செய்கிறது?. அது என்னவெனில் எனக்கு வஸ்திரங்கள், எனக்கு பசுக்கள், அன்னம், பானம் முதலிய எந்த ஶ்ரீகள் (செல்வங்கள்) எப்பொழுதும் அடையச்செய்கிறது. நான் நல்ல மேதையை அடைந்த பின் என்னிடம் வரவேண்டும் ஏன் எனில் புத்தி (மேதை) அற்றவனிடத்தில் ஶ்ரீ (செல்வம்) அநத்தர்த்திற்குக் ஹேதுவாகும்.
किंविशिष्टाम् । लोमशामजाव्यादियुक्तामन्यैश्च पशुभिः संयुक्तामावहेत्यधिकारादोङ्कार एवाभिसंबध्यते । स्वाहा स्वाहाकारो होमार्थमन्त्रान्तज्ञापनार्थः । आयन्तु मामिति व्यवहितेन संबन्धः । ब्रह्मचारिणो विमाऽऽयन्तु प्रमाऽऽयन्तु दमायन्तु शमायन्त्वित्यादि ।
வேறு என்ன விசேஷணங்களுடன் கூடிய ஶ்ரீ (சம்பத்) கிடைக்கும்? ரோமங்கள் அடர்த்தியாய் உள்ள செம்மறி ஆடு, வெள்ளாடு முதலிய சம்பத்தை கூறியவாறு மேதை உடன் கிடைக்கச்செய்வாயாக. இங்கு “आवह” (ஆவஹ) கிரியைக்கு அதிகாரம் ஆவதால் ஓம்காரத்துடன் சம்பந்தம் உள்ளது ஸ்வாஹா. என்ற ஸ்வாஹாகரம் ஹோமத்திற்கான மந்திரத்தை ஞாபகப்படுத்துவதற்காக ஆகும். பிரஹ்மச்சாரிகளை என்னிடத்தில் வரவழைக்கச்செய். பிரஹ்மச்சாரிகள் என்னை வந்து அடையட்டும். ஸ்வாஹா பிரஹ்மச்சாரிகள் என்னைக்குறித்து நிஷ்கபடர்களாகட்டும் ஸ்வாஹா. அவர்கள் ஞானத்தை தாரணை செய்யட்டும் ஸ்வாஹா. இந்திரியங்களை அடக்கட்டும் ஸ்வாஹா மனோநிக்ரஹம் செய்யட்டும் ஸ்வாஹா முதலியவைகள்.
यशो जनेऽसानि स्वाहा । श्रेयान् वस्यसोऽसानि स्वाहा । तं त्वा भग प्रविशानि स्वाहा । स मा भग प्रविश स्वाहा । तस्मिन्सहस्रशाखे निभगाहं त्वयि मृजे स्वाहा । यथापः प्रवता यन्ति । यथा मासा अहर्जरम् । एवं मां ब्रह्मचारिणो धातरायन्तु सर्वतः स्वाहा । प्रतिवेशोसि प्रमा पाहि प्र मा पद्यस्व ॥ ३ ॥
यशो यशस्वी जने जनसमुहेऽसानि भवानि । श्रेयान्प्रशस्यतरो वस्यसो वसीयसो वसुतराद्वसुमत्तराद्वासानीत्यन्वयः । किं च तं ब्रह्मणः कोशभूतं त्वा त्वां हे भग भगवन्पुजावन्प्रविशानि प्रविश्य चानन्यस्त्वदात्मैव भवानीत्यर्थः । स त्वमपि मा मां भग प्रविशाऽऽवयोरेकत्वमेवास्तु । तस्मिंस्त्वयि सहस्रशाखे बहुशाखाभेदे हे भगवन् निमृजे शोधयाम्यहं पापकृत्याम् ।
(ச.பா) நான் ஜனங்களால் புகழ் பெற்றவனாக ஆவேன், சிறந்த புகழத்தக்க செல்வமுடைய தனவான்கஞள் சிறந்த தனவான் ஆவேன். அவ்வாறே ஹே பகவானே! னீஜைக்கு உரியவரே! பிரஹ்மத்திற்கு கோச பூதமாயுள்ள உன்னிடத்தில் பிரவேசிக்கிறேன் அதாவது உன்னைக்காட்டிலும் வேறாக இல்லாததால் நீ ஆத்மாவேதான். ஆகையால் பகவானே என்னிடத்தில் பிரவேசம் செய். இருவரும் ஒருவரே என்பதாகட்டும். ஹே பகவன்! - அநேக சாகைகளை உடைய உன்னிடத்தில் நான் என் பாபகர்மங்களை சுத்தப்படுத்துகிறேன்.
यथा लोके आपः प्रवता प्रवणवता निम्नवता देशेन यन्ति गच्छन्ति । यथा च मासा अहर्जरं संवत्सरोऽहर्जरः । अहोभिः परिवर्तमानो लोकाञ्जरयतीत्यहानि वाऽस्मिञ्जीर्यन्त्यन्तर्भवन्तीत्यहर्जरः। तं च यथा मासा यन्त्येवं मां ब्रह्मचारिणो हे धातः सर्वस्य विधातः, मामयन्त्वागच्छन्तु सर्वतः सर्वदिग्भ्यः ।
எவ்வாறு உலகில் ஜலமானது கீழ்நோக்கி உள்ள இடத்திற்கு செல்லுமோ, மாதம் எவ்வாறு வருடத்தை அடைகிறதோ, வருடத்தை अहर्जरः (அஹர்ஜர) எனப்படுகிறது ஏன்எனில் தின ரூபமாய் பிரவிர்த்தித்து உலகத்தை ஜீர்ணம் செய்கிறது. அல்லது அதில் தினம் ஜீரணம் அதாவது வருடத்தில் அந்தர் பூதமாகிறது. ஆகையால் அஹர்ஜரம் எனப்படுகிறது. எவ்வாறு வருடத்தில் மாதம் சேர்கிறதோ அவ்வாறு ஹே! தாத:! எவ்வற்றையும் அளிப்பவரே என்னிடம் எல்லா திசைகளில் இருந்தும் பிரஹ்மச்சாரிகளை வரச் செய்வாயாக.
प्रतिवेशः- श्रमापनयनस्थानमासन्नगृहमित्यर्थः । एवं त्वं प्रतिवेश इव प्रतिवेशस्त्वच्छीलिनां सर्वपापदुःखापनयनस्थानमसि, अतो मा मां प्रति प्रभाहि प्रकाशयात्मानं प्रपद्यस्व च । मां रसविद्धमिव लोहं त्वन्मयं त्वदात्मानं कुर्वित्यर्थः ।
प्रतिवेशः-சிரமத்தைப் போக்குகின்ற ஸ்தானம், அதாவது அருகில் உள்ள வீடு என்பது பொருள். இவ்வாறு நீ பிரதிவேசம் போல் அது தன்னை அனுசரிப்பவர்களுடைய துக்கத்தைப்போக்கும் ஸ்தானமாகிறது ஆகையால் உன்னை வணங்குகிறேன். அதனால் என்னைக்குறித்து உன் பிரகாசத்தால் என்னை உன்பிரகாசமாகிய ஆத்மாவை அடையச்செய்வாயாக, பாதரசத்துடன் கூடிய உலோகத்தைப்போல் என்னை உன்னுடன் அபின்னமாக்கு. (ஒன்றாகச்செய்)
श्रीकामोऽस्मिन्विद्याप्रकरणेऽभिधीयमानो धनार्थः । धनं च कर्मार्थम् । कर्म चोपात्तदुरितक्षयाय । तत्क्षये हि विद्या प्रकाशते । तथा च स्मृतिः - ‘ज्ञानमुत्पद्यते पुंसां क्षयात्पापस्य कर्मणः । यथादर्शतले प्रख्ये पश्यन्त्यात्मानमात्मानि’ (म. भा. शां. २०४ । ८)(गरुड. १ । २३७ । ६) इति ॥
இந்த வித்யா பிரகரணத்தில் தெரிவிக்கப்பட்ட ஶ்ரீகாமன் அதாவது தனத்தை விரும்புபவன் ஆவான். ஏன்எனில் அந்த தனம் கர்மத்தின் பொருட்டாகும். அந்த கர்மத்தால் பாபம் நசிக்கப்படுகிறது. பாபம் நீங்கும் பொழுது அல்லவா வித்யா (ஞானம்) வெளிப்படுகிறது (பிரகாசிக்கிறது). அவ்வாறே ஸ்மிருதியிலும் ‘ज्ञानमुत्पद्यते पुंसां क्षयात्पापस्य कर्मणः । यथादर्शतले प्रख्ये पश्यन्त्यात्मानमात्मानि’ (म. भा. शां. २०४ । ८)(गरुड. १ । २३७ । ६) கர்மத்தால் பாபம் நசிக்கும் பொழுது ஞானம் உண்டாகிறது. எவ்வாறு கண்ணாடி சுத்தமாக்கப்பட்ட பின் முகம் தெளிவாக தெரிகிறதோ அவ்வாறு சுத்த அந்தக்கரணத்தில் ஆத்ம ஸாக்ஷாத்காரம் உண்டாகும்.
इति चतुर्थानुवाकभाष्यम् ॥
संहिताविषयमुपासनमुक्तम् । तदनु मेधाकामस्य श्रीकामस्य मन्त्रा अनुक्रान्तास्ते च पारम्पर्येण विद्योपयोगार्था एव । अनन्तरं व्याहृत्यात्मनो ब्रह्मणोऽन्तरुपासनं स्वाराज्यफलं प्रस्तूयते ।
(அ-கை) ஸம்ஹிதா ஸம்பந்தமான உபாஸனைக் கூறப்பட்டது. அதன்பின் மேதாகாமன், ஶ்ரீகாமன் ஆகிய புருஷர்களுக்கான மந்திரங்கள் சொல்லப்பட்டன. அவைகள் பரம்பரையாக ஞானத்திற்கான உபயோகத்தின் பொருட்டாகும். அதன் பின் இப்பொழுது வ்யாஹ்ருதி ரூபமான பிரஹ்மத்தின் அந்தர்(உள்) உபாஸனை ஸ்வராஜ்ய பலத்தைதருவது சொல்ல ஆரம்பிக்கப்படுகிறது.
भूर्भुवः सुवरिति वा एतास्तिस्रो व्याहृतयः । तासामु ह स्मैतां चतुर्थी माहाचमस्यः प्रवेदयते । मह इति । तद्ब्रह्म । स आत्मा । अङ्गान्यन्या देवताः । भूरिति वा अयं लोकः । भुव इत्यन्तरिक्षम् । सुवरित्यसौ लोकः ॥ १ ॥
मह इत्यादित्यः । आदित्येन वाव सर्वे लोका महीयन्ते । भूरिति वा अग्निः । भुव इति वायुः । सुवरित्यादित्यः । मह इति चन्द्रमाः । चन्द्रमसा वाव सर्वाणि ज्योती्ँषि महीयन्ते । भूरिति वा ऋचः । भुव इति सामानि । सुवरिति यजू्ँँषि ॥ २ ॥
मह इति ब्रह्म । ब्रह्मणा वाव सर्वे वेदा महीयन्ते । भूरिति वै प्राणः । भुव इत्यपानः । सुवरिति व्यानः । मह इत्यन्नम् । अन्नेन वाव सर्वे प्राणा महीयन्ते । ता वा एताश्चतस्रश्चतुर्धा । चतस्रश्चतस्रो व्याहृतयः । ता यो वेद स वेद ब्रह्म । सर्वेऽस्मै देवा बलिमावहन्ति ॥ ३ ॥
भूर्भुवः सुवरिति इतीत्युक्तोपप्रदर्शनार्थः । एतास्तिस्र इति च प्रदर्शितानां परामर्शार्थः। परामृष्टाः स्मार्यन्ते वाइति अनेन । तिस्र एताः प्रसिद्धा व्याहृतयः स्मर्यन्ते तावत् । तासामियं चतुर्थी व्याहृतिर्मह इति । तामेतां चतुर्थीं महाचमसस्यापत्यं माहाचमस्यः प्रवेदयते । उ ह स्म, इत्येतेषां वृत्तानुकथनार्थत्वाद्विदितवान्द दर्शेत्यर्थः। माहाचमस्यग्रहणमार्षानुस्मरणार्थम् । ऋषिस्मरणमप्युपासनाङ्गमिति गम्यत इहोपदेशात् ।
(ச.பா) भूर्भुवः सुवरिति (பூ: புவ: ஸுவ: என்று) இதில் உள்ள “इति” (என்ற) சப்தம் முன்பு கூறிய (வியாகிருதிகளைக் காண்பிக்கப்பதர்க்காக “एतास्तिस्र” என்ற சப்தமும் முன்பு காண்பிக்கப்பட்ட வ்யாஹ்ருதிகளை விரிவாக விளக்குவதற்காக ஆகும். “वै” என்ற அவ்வியயத்தால் விளக்கப்பட்ட வியாஹ்ருதிகளை ஞாபக படுத்தப்பட்டுள்ளது. அதாவது மூன்று பிரசித்தமான வியாகிருதிகளைக் காண்பித்து அதில் “महः” (மஹ:) என்பது நான்காவது வியாஹ்ருதியாகும். இந்த நான்காவது வ்யாஹ்ருதியை மஹாசமஸ்யருடைய பிள்ளை மாஹாசமஸ்யர் அறிந்திருக்கிறார். “उ ह स्म” (உ. ஹ.ஸ்ம) ஆகிய நிபாதங்கள் நடந்ததை ஸ்மரிப்பதற்காக இருப்பதால் அவர் அறிந்திருந்தார். பார்த்தார் என்று பொருள். (வியாகிருதியின் த்ரஷ்ட்டா) ரி:யை ஞாபகபடுத்துவதற்காக மாஹாசமஸ்யர் என்ற பெயர் கூறப்பட்டது. இவ்வாறு உபதேசிக்கப்பட்டதால் என்ன அறிகிறோம் எனில் ரி:யை ஸ்மரிப்பது உபாசனையின் ஒரு அங்கம் என்று.
येयं माहाचमस्येन दृष्टा व्याहृतिर्मह इति तद्ब्रह्म महद्धि ब्रह्म । महश्च व्याहृतिः । किं पुनस्तत् ? स आत्मा । आप्नोतेर्व्याप्तिकर्मणः आत्मा । इतराश्च व्याहृतयो लोका देवा वेदाः प्राणाश्च मह इत्यनेन व्याहृत्यात्मनादित्यचन्द्रब्रह्मान्नभूतेन व्याप्यन्ते यतः अतोऽङ्गान्यवयवा अन्या देवताः । देवताग्रहणमुपलक्षणार्थं लोकादीनाम् । मह इत्येतस्य व्याहृत्यात्मनोदेवलोकादयः सर्वेऽवयवभूताः यतोऽत आहादित्यादिभिर्लोकादयो महीयन्तेइति । आत्मनोह्यङ्गानि महीयन्ते महनं वृद्धिरुपचयः महीयन्ते वर्धन्त इत्यर्थः ।
எந்த महः(மஹ:) என்று வியாகிருதி மாஹாசமஸ்யரால் பார்க்கப்பட்டதோ அது பிரஹ்மமாகும். பிரஹ்மம் மஹத்தானது, அன்றோ! வியாகிருதியும் மஹத்தானது (महः = மஹ:) அது ஆத்மாவாகும், வியாப்த்தி அர்த்தமுடைய (आप्) ஆப்தாத்துவினால் ஆத்மசப்தம் கிடைக்கிறது. தேவ, வேத, மேலும் பிராண ரூபமற்றவியாகிருதிகள் ஆதித்தியன், சந்திரன் பிரஹ்மம், அவ்வாறே அன்னரூப வ்யாஹ்ருதி ஆத்மாவான மஹத்தில் வியாபிக்கிறது. ஆகையால் மற்றதேவதைகள் அங்கமாகும். அதாவது அவயவங்களாகும். லோகாதிகளை உபலக்ஷணமாக செய்வதன் பொருட்டு இங்கு தேவதா சப்தம் எடுத்துக் கொள்ளப்பட்டது “महः” (மஹ:) என்ற இந்த வியாகிருதி யாத்மாவிற்கு எல்லா தேவலோகம் முதலியவைகள் அவயவபூதங்களாய் இருக்கின்றனவோ அதனால் ஆதித்தியன் முதலியவைகளால் லோகம் முதலியவைகள் மஹிமை அடைகின்றன என்று கூறப்படுகிறது. ஆத்மாவினால் அல்லவா அவயவங்கள் மஹிமையை அடைகின்றன. महत् (மஹத்) என்ற சப்தத்தின் அர்த்தம் விருத்தி (வளர்ச்சி) என்பதாகும். மஹீயந்தே (महीयन्ते) என்றால் விருத்தி அடைகின்றன என்பது பொருள்.
अयं लोकोऽग्निर्ऋग्वेदः प्राण इति प्रथमा व्याहृतिर्भुरिति । एवमुत्तरोत्तरैकैका चतुर्धा भवति । मह इति ब्रह्म । ब्रह्मेत्योंकारः, शब्दाधिकारेऽन्यस्यासंभवात् । उक्तार्थमन्यत् ।
இந்த லோகம், அக்னி, ரிக்வேதம், பிராணன் என்பது முதலாவதான “भूः” (பூ:)என்ற வ்யாஹ்ருதியாகும். இவ்வாறு உத்தரோத்திர ஒவ்வொரு வ்யாஹ்ருதியும் நான்கு, நான்கு பிரகாரமாய் இருக்கிறது. “महः” (மஹ:) என்பது பிரஹ்மம். பிரஹ்மத்தின் அர்த்தம் ஓம்காரமாகும், ஏன்எனில் சப்த அதிகரணத்தில் வேறு ஒன்றும் பிரஹ்மமாக ஆகமுடியாது ஸம்பவிக்காது வேறு அர்த்தம் என்பது முன்பே கூறப்பட்டது.
ता वा एताश्चतस्रश्चतुर्धेति । ता वा एता भूर्भुवः सुवर्मह इति चतस्र एकैकशश्चतुर्धा चतुष्प्रकाराः । धाशब्दः प्रकारवचनः । चतस्रश्चचतस्रः सत्यश्चतुर्धा भवन्तीत्यर्थः । तासां यथाक्लृप्तानां पुनरुपदेशस्तथैवोपासननियमार्थः । ता यथोक्तव्याहृतीर्यो वेद स वेद विजानाति । किं ब्रह्म ।
அந்த நான்கு விதமான வியாக்ருதிகளும் நான்கு, நான்கு பிரகாரங்களாய் இருக்கின்றன. அவைகள்: “भूः भुवः सुवः महः” (பூ: புவ: ஸுவ: மஹ:) என்ற நான்கு வ்யாஹ்ருதிகளும் ஒவ்வொன்றும் நான்கு பிரகாரங்களாய் இருக்கின்றன. “धा” (தா) என்ற சப்தம் பிரகாரங்களாக உள்ளன. நான்கும், நான்கு நான்கு பிரகராமாய் ஆகின்றன என்பது பொருள். அவைகள் எவ்விதமாய் கல்பனை செய்யப்பட்டதோ அவ்வாறு உபாசனை செய்வதற்கான நியமம் செய்வதற்காக அதை மறுபடியும் உபதேசம் செய்கிறார் என்பது பொருள். இவ்வாறு கூறப்பட்ட வ்யாஹ்ருதிகளை எவன் அறிகிறானோ அவனே அறிந்தவனாகிறான். எதை அறிகிறான்? பிரஹ்மத்தை அறிகிறான்.
शङ्का- ननु- “तद्ब्रह्म स आत्मा” इति ज्ञाते ब्रह्मणि, न वक्तव्यमविज्ञातवत्स वेद ब्रह्मेति ।
சங்கை- அது பிரஹ்மம், அது ஆத்மா என்ற வாக்கியத்தின் மூலமாய் (மஹ: ரூப வாயிலாய்) பிரஹ்மத்தை அறியப்பட்டதாய் இருந்தாலும் அதை அறியாததைப்போல் அந்த பிரஹ்மத்தை அறிகிறான் என்று கூறுவது ஸரியல்ல.
(समाधानम्)- न । तद्विशेषविवक्षुत्वाददोषः । सत्यं विज्ञातं चतुर्थव्याहृत्यात्मा ब्रह्मेति न तु तद्विशेषो हृदयान्तरुपलभ्यत्वं मनोमयत्वादिश्च । “शान्तिसमृद्धम्” इत्येवमन्तो विशेषण विशेष्यरूपो धर्मपूगो न विज्ञायत इति तद्विवक्षुहि शास्त्रमविज्ञातमिव ब्रह्म मत्वा स वेद ब्रह्मेत्याह । अतो न दोषः । यो हि वक्ष्यमाणेन धर्मपूगेण विशिष्टं ब्रह्म वेद स वेद ब्रह्मेत्यभिप्रायः । अतो वक्ष्यमाणानुवाकेनैकवाक्यताऽस्योभयोर्ह्यनुवाकयोरेकमुपासनम् ।
ஸமாதானம் - இவ்வாறு சங்கை கொள்ள வேண்டியதில்லை ஏன் எனில் இந்த (பிரஹ்மஞான) விஷயத்தில் விசேஷங்கள் கூறவேண்டியதாய் இருப்பதால் இவ்வாறு கூறுவது தோஷமல்ல. இவ்வாறு கூறியது சரிதான். இந்த ஞானம் உண்டானது. நான்காவது வியாகிருதி ரூப பிரஹ்மம். ஆனால் ஹ்ருதயத்தின் உள்ளே அடையப்படுவதும் அவ்வாறே மனோமயத்துவாதி ரூபத்திற்கு விசேஷத்தின் ஞானம் உண்டாகவில்லை. இனி வரப்போகின்ற அனுவாகத்தில் “शान्तिसमृद्धम्” (சாந்தி சம்ருத்தம்) வரையிலும் விசேஷண விசேஹ்ய ரூப தர்ம சமூகத்தை அறியவில்லை என்று அதை விவரிப்பதற்காக சாஸ்திரம் பிரஹ்மத்தை அறியவில்லை என்று நினைத்து அந்த பிரஹ்மத்தை அறிகிறது என்று கூறப்பட்டது. ஆகையால் முற்கூறியது தோஷமல்ல. எவன் ஒருவன் இனிக்கூறப்போகிற தர்ம ஸமூகத்துடன் கூடிய பிரஹ்மத்தை அறிகிறோனோ அவனே பிரஹ்மத்தை அறிகிறவனாகின்றான் என்பது அபிப்பிராயம். ஆகையால் இனி கூறப்போகிற அனுவாகமும் இந்த அனுவாகமும் சேர்ந்து ஒரே உபாசனையாகும்.
लिङ्गाच्च,भूरित्यग्नौ प्रतितिष्ठतीत्यादिकं लिङ्गमुपासनैकत्वे, विधायकाभावाच्च । न हि “वेद” “उपासितव्यः” इति विधायकः कश्चिच्छब्दोऽस्ति । व्याहृत्यनुवाके ‘ता यो वेद’ इति च वक्ष्यमाणार्थत्वान्नोपासनाभेदकः । वक्ष्यमाणार्थत्वं च तद्विशेषविवक्षुत्वादित्यादिनोक्तम् । सर्वे देवा अस्मा एवं विदुषेऽङ्गभूता आवहन्त्यानयन्ति बलिं स्वाराज्यप्राप्तौ सत्यामित्यर्थः ॥
லிங்கமாய் இருப்பதாலும் “भूरित्यग्नौ प्रतितिष्ठति” (பூரிதி அக்னௌ பிரதிஷ்ட்டதி) என்பது பலச்ருதியாகிய இந்த இரண்டு அனுவாக்கங்களும் ஒரே உபாசனை என்பதற்கு லிங்கமாகும். ஏன்எனில் விதானம் செய்யும் சப்தம் இல்லாததால் “वेद” (வேத) “उपासितव्य”(உபாசித்தவ்ய) என்ற விதானம் செய்யும் ஒரு சப்தமும் இல்லை. வ்யாஹ்ருதி அனுவாகத்தில் “ता यो वेद” (தா. யோ. வேத) என்று இனிகூறப்போகிற அர்த்தமாய் இருப்பதால் உபாசனத்தில் பேதமில்லை. இனிக்கூறப்போகின்ற அனுவாகமானது அதன் விசேஷத்தை விவரிக்கப்போவதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அறிந்த உபாஸகன் எல்லா தேவகணங்களுக்கும் அங்க பூதமாக பலியை அளிக்கிறான். அதாவது அவனுக்கு ஸ்வராஜ்ய பிராப்தி ஆன உடன் அந்த தேவதைகள் பலியைத்தருகின்றன.
इति पञ्चमानुवाकभाष्यम् ॥
भूर्भुवः सुवः स्वरूपा मह इत्येतस्य हिरण्यगर्भस्य व्याहृत्यात्मनो ब्रह्मणोऽङ्गान्यन्या देवता इत्युक्तम् । यस्य ता अङ्गभूतास्तस्यैतस्य ब्रह्मणः साक्षादुपलब्ध्यर्थमुपासनार्थं च हृदयाकाशः स्थानमुच्यते शालग्राम इव विष्णोः । तस्मिन्हि तद्ब्रह्मोपास्यमानं मनोमयत्वादिधर्मविशिष्टं साक्षादुपलभ्यते । पाणाविवामलकम् । मार्गश्च सर्वात्मभावप्रतिपत्तये वक्तव्य इत्यनुवाक आरभ्यते -
“भूर्भुवः सुवः स्वरूपा मह”(பூ: புவ: ஸுவ: ஸ்வரூபா மஹ) ஆகிய வ்யாஹ்ருதிகள் பிரஹ்மத்தின் அங்க பூதமான அன்ய தேவதைகள் என்று கூறப்பட்டது. எதற்கு இந்த அங்க பூதங்களை உடைய பிரஹ்மத்தின் ஸாக்ஷாத் உபலப்தியின் பொருட்டு உபாசனை செய்வதற்கு ஹிருதயாகாசம் ஸ்தானம் என்று சாலக்கிரமத்தில் விஷ்ணுவை உபாசிப்பது போல் என்று கூறப்படுகிறது. அதில் தான் அந்த பிரஹ்மம் உபாஸிக்கப்பட வேண்டிய மனோமயமுதலிய தர்மத்துடன் ஸாக்ஷாத்தாக உள்ளங்கை நெல்லிக்கனி போல் அடையப்படுகிறது மேலும் ஸர்வாத்ம பாவத்தை அடைவதற்கான மார்க்கத்தை சொல்ல வேண்டியதற்காக அனுவாகம் ஆரம்பிக்கப்படுகிறது.
स य एषोऽन्तहृदय आकाशः । तस्मिन्नयं पुरुषो मनोमयः । अमृतो हिरण्मयः । अन्तरेण तालुके । य एष स्तन इवावलम्बते । सेन्द्रयोनिः । यत्रासौ केशान्तो विवर्तते । व्यपोह्य शीर्षकपाले । भूरित्यग्नौ प्रतितिष्ठति । भुव इति वायौ ॥ १ ॥
सुवरित्यादित्ये । मह इति ब्रह्मणि । आप्नोति स्वाराज्यम् । आप्नोति मनसस्पतिम् । वाक्पतिश्चक्षुष्पतिः । श्रोत्रपतिर्विज्ञानपतिः । एतत्ततो भवति । आकाशशरीरं ब्रह्म । सत्यात्म प्राणारामं मन आनन्दम् । शान्तिसमृद्धममृतम् । इति प्राचीनयोग्योपास्स्व ॥ २ ॥
स इति व्युत्क्रम्य अयं पुरुष इत्यनेन सम्बन्ध्यते । य एष अन्तर्हृदये हृदयस्यान्तः । हृदयमिति पुण्डरीकाकारो मांसपिण्डः प्राणायतनोऽनेकनाडीसुषिर ऊर्ध्वनालोऽधोमुखो विशस्यमाने पशौ प्रसिद्ध उपलभ्यते । तस्यान्तः य एष आकाशः प्रसिद्ध एव करकाकाशवत् , तस्मिन् सोऽयं पुरुषः, पुरि शयनात् , पूर्णा वा भूरादयो लोका येनेति पुरुषः मनोमयः, मनः विज्ञानं मनुतेर्ज्ञानकर्मणः, तन्मयः तत्प्रायः, तदुपलभ्यत्वात् । मनुते अनेनेति वा मनः अन्तःकरणम् ; तदभिमानी तन्मयः, तल्लिङ्गो वा । अमृतः अमरणधर्मा । हिरण्मयः ज्योतिर्मयः ।
(ச.பா) “सः”என்ற முதல்பதத்தின்பாடம் கிரமத்தை விட்டு இனிவரும் “अयं पुरुषः” என்றபதத்துடன் ஸம்பந்தப்படுகிறது. இருதயத்தில் உள்ள ஹருதய ஆகாசம், அதாவது வெள்ளைநிற தாமரை ஆகாரமாகி வடிவமாகிய மாம்சபிண்டம் பிராணனுக்கு ஆச்ரியமாகும். அதனுடைய நாடிகளின் துவாரங்களை உடையதும் அவ்வாறே தளங்கள் கிழ்நோக்கியும், கீழ்நோக்கியவைகளாயும் இருக்கின்றன. கர்மத்திற்காக பசுவை வதம் செய்யும்பொழுது இது தெளிவாக தெரிகிறது. அதனுள் ஆகாசம் பிரசித்தமாக கடத்தில் (குடத்துள்) தோன்றும் ஆகாசம் போல் தெரிகிறது. அதுபோல் ஹிருதய ஆகாசத்தில் இந்த புருஷன் இருக்கிறான். புரியில் இருப்பதால் பூர்ணா அல்லது பூ (भूः) முதலிய லோகங்களிலும் வியாபித்திருப்பதால் “पुरुषः” (புருஷன்). அந்த மனோமயம்- ஞானவாச்சியமாகும் “मन” (மன்) தாதுவினால் சித்திப்பதால் “मन”சப்தத்தின் அர்த்தம் விக்ஞானம் (विज्ञानं) எனப்படுகிறது. तन्मय (தன்மய) என்பது அதை அடைவது அதாவது விக்ஞானமயன். ஏன்எனில் அந்த விக்ஞானமயனால் (ஆத்மா) அறியப்படுகிறான். ¨मनुतेऽनेनेति (அதனால்) நினைக்கப்படுவதால் மனம் அந்தக்கரணம். அதன் அபிமானி தன்மயன் அல்லது அதனை சூசிப்பதாக ஆகும். அம்ருதம் அதாவது மரண தர்மமற்ற ஹிரண்மயமான (தங்கமயம்) ஜ்யோதிமயமானவன்.
तस्यैवंलक्षणस्य हृदयाकाशे साक्षात्कृतस्य विदुष आत्मभूतस्य ईश्वररूपस्य प्रतिपत्तये मार्गोऽभिधीयते - हृदयादूर्ध्वं प्रवृत्ता सुषुम्ना नाम नाडी योगशास्त्रेषु प्रसिद्धा । सा च अन्तरेण तालुके मध्ये तालुकयोर्गता । यश्च एष तालुकयोर्मध्ये स्तन इव अवलम्बते मांसखण्डः, तस्य च अन्तरेण इत्येतत् । यत्र च असौ केशान्तः केशानामन्तो मूलं केशान्तः विवर्तते विभागेन वर्तते, मूर्धप्रदेश इत्यर्थः ; तं देशं प्राप्य तेनान्तरेण व्यपोह्य विभज्य विदार्य शीर्षकपाले शिरःकपाले, विनिर्गता या, सा इन्द्रयोनिः इन्द्रस्य ब्रह्मणः योनिः मार्गः, स्वरूपप्रतिपत्तिद्वारमित्यर्थः ।
(ச.பா) ஹ்ருதயாகாசத்தில் ஸாக்ஷாத்காரம் செய்த இந்த லக்ஷணங்களுடன் கூடிய வித்வானுக்கு ஆத்மபூத இந்திர (ஈஸ்வர) ரூபத்தை அடைவதற்கான மார்கம் கூறப்படுகிறது. ஹ்ருதயத்திற்கு மேல் செல்லுகின்ற ஸ)ஷ)ம்னா என்ற நாடி யோக சாஸ்த்திரத்தில் மிகவும் பிரஸித்தமானது. “अन्तरेणतालुके” (அந்தரேனதாலுக்கே) என்றால் இரண்டு தாடைகைளுக்கு நடுவில் செல்லுகிறது. எந்த அந்த தாடைக்கு மத்தியில் ஸ்தனம் போல் இருக்கின்ற மாம்ஸகண்டத்திற்கும் நடுவில் என்பதாகும். அவ்வாறே கேசாந்தம் என்றால் கேசத்தின் மூலபாகம். இந்த இடத்தில் பிரிக்கப்படுகிறது. அதாவது மூர்தா பிரதேசமாகும் (உச்சந்தலையாகும்). அந்த தேசத்தை அடைந்து அங்கு கபாலத்தை பிளந்து வெளிக்கிளம்புகிறது. வெளியே செல்லும் அந்த இந்திரயோனி- அதாவது அந்த மார்க்கம் பிரஹ்மரூபத்தை அடையச்செய்கிறது
तथा एवं विद्वान्मनोमयात्मदर्शी मूर्ध्नो विनिष्क्रम्य अस्य लोकस्याधिष्ठाता भूरिति व्याहृतिरूपो योऽग्निः महतो ब्रह्मणोऽङ्गभूतः, तस्मिन् अग्नौ प्रतितिष्ठति, अग्न्यात्मना इमं लोकं व्याप्नोतीत्यर्थः । तथा भुव इति द्वितीयव्याहृत्यात्मनि वायौ, प्रतितिष्ठतीत्यनुवर्तते । सुवरिति तृतीयव्याहृत्यात्मनि आदित्ये । मह इत्यङ्गिनि चतुर्थव्याहृत्यात्मनि ब्रह्मणि प्रतितिष्ठतीति ।
(ச.பா) மனோமய ஆத்மாவை ஸாக்ஷாத்காரமடைந்த புருஷன், மூர்தானம் (கபாலம்) வாயிலாய் வெளிக்கிளம்பி இந்தலோகத்திற்கு அதிஷ்ட்டதாவாகிய भूः (பூ:)என்று வ்யாஹ்ருதி ரூபமான எந்த அக்னி பிரஹ்மத்திற்கு அங்கமாகியதோ அந்த அக்னியில் பிரதிஷ்ட்டிதமாகி (நிலைபெற்று) ஆத்மாவான இந்த லோகத்தை வியாபிக்கிறான் என்று பொருள். அவ்வாறே भुवः (புவ:) என்று இரண்டாவது வ்யாஹ்ருதி ஆத்மாவான வாயுவில் அனுவர்த்திக்கிறது. ஆதித்தியனிடத்தில் सुवः (ஸுவ:) என்ற மூன்றாவது வியாக்ருதி அனுவர்த்திக்கிறது महः (மஹ:) என்று அங்கத்தில் நான்காவது வியாக்ருதி ஆத்மாவிடத்தில் அனுவர்த்திக்கிறது.
(ச.பா) तेष्वात्मभावेन स्थित्वा आप्नोति ब्रह्मभूतं स्वाराज्यं स्वराड्भावं स्वयमेव राजा अधिपतिर्भवति अङ्गभूतानां देवतानां यथा ब्रह्म ; देवाश्च सर्वे अस्मै अङ्गिने बलिमावहन्ति अङ्गभूताः यथा ब्रह्मणे । आप्नोति मनसस्पतिम् , सर्वेषां हि मनसां पतिः, सर्वात्मकत्वाद्ब्रह्मणः सर्वैर्हि मनोभिस्तन्मनुते । तदाप्नोत्येवं विद्वान् । किं च, वाक्पतिः सर्वासां वाचां पतिर्भवति । तथैव चक्षुष्पतिः चक्षुषां पतिः । श्रोत्रपतिः श्रोत्राणां च पतिः । विज्ञानपतिः विज्ञानानां च पतिः । सर्वात्मकत्वात्सर्वप्राणिनां करणैस्तद्वान्भवतीत्यर्थः ।
(ச.பா) அவைகளில் ஆத்மபாவமாய் இருந்து கொண்டு ब्रह्मभूतः (பிரஹ்ம்மபூத;) அதாவது ஸ்வராஜ்யம் அதையே ஸ்வராட்பாவம், ராஜ்யத்தியின் அதிபதி ஆகிறான். அதன் அங்கபூதமான தேவ கணங்களுக்கு எவ்வாறு பிரஹ்ம்மமோ அவ்வாறு தன்னுடைய அங்கிக்கு (பிரஹ்ம்மத்திற்கு) உபஹாரம் செய்கின்றன. அவ்வாறே மனஸ்பதியை அடைகிறது. எல்லா மனங்களின் பதி ஸர்வாத்மகத்துவமாய் இருப்பதால் பிரஹ்மமாகும். அது எல்லாவற்றையும் மனதின் வாயிலாய் மனனம் செய்கிறது. இவ்வாறு உபாஸனையினால் வித்வான் அதை அடைகிறான். மேலும் வாக்கிற்கு பதியாகிறான். எல்லா வாக்கியங்களுக்கும் பதியாகின்றான். அவ்வாறே எல்லாகண்களில் கண்களின் பார்வைக்கு பதியாகின்றான். காதுகளின் கேட்க்கும் தன்மைக்கு பதியாகவும் ஆகின்றான். விக்ஞானபதி விக்ஞானங்களுக்கு பதியாகின்றான். ஸர்வாத்மாவாய் இருப்பதால் எல்லாப்பிரா௴களின் (ஜீவர்களின்) எல்லா இந்திரியங்களாலும் இந்திரியமுடையவனாகிறான்.
किं च, ततोऽपि अधिकतरम् एतत् भवति । किं तत् ? उच्यते - आकाशशरीरम् आकाशः शरीरमस्य, आकाशवद्वा सूक्ष्मं शरीरमस्येत्याकाशशरीरम् । किं तत् ? प्रकृतं ब्रह्म । सत्यात्म, सत्यं मूर्तामूर्तम् अवितथं स्वरूपं वा आत्मा स्वभावोऽस्य, तदिदं सत्यात्म । प्राणारामम् , प्राणेष्वारमणमाक्रीडा यस्य तत्प्राणारामम् ; प्राणानां वा आरामो यस्मिन् , तत्प्राणारामम् । मन आनन्दम् , आनन्दभूतं सुखकृदेव यस्य मनः, तन्मन आनन्दम् । शान्तिसमृद्धम् , शान्तिरुपशमः, शान्तिश्च तत्समृद्धं च शान्तिसमृद्धम् ; शान्त्या वा समृद्धवत्तदुपलभ्यत इति शान्तिसमृद्धम् । अमृतम् अमरणधर्मि, एतच्चाधिकरणविशेषणं तत्रैव मनोमय इत्यादौ द्रष्टव्यमिति । एवं मनोमयत्वादिधर्मैर्विशिष्टं यथोक्तं ब्रह्म हे प्राचीनयोग्य, उपास्स्व इत्याचार्यवचनोक्तिरादरार्था । उक्तस्तूपासनाशब्दार्थः ॥
(ச.பா) மேலும் இதைவிட மேலானது ஏற்படுகிறது. அது என்ன? என்று கூறப்படுகிறது. “आकाशशरीरं” (ஆகாசசரீரம்) என்பது ஆகாசம் எதற்கு சரீரம் அல்லது ஆகாசத்திற்கு ஸமமாக எதற்கு சூக்ஷ்ம சரீரமோ அது ஆகாசசரீரம். அது என்ன? இந்த இடத்தில் பிரஹ்மம் सत्यात्मा (சத்யாத்மா) மூர்த்தாமூர்த்தா ரூபமாக அல்லது பொய்மை அற்றதன்மை “सत्यात्मा” சத்யாத்மா எனப்படுகிறது. प्राणारामं (பிராணாராமம்) பிராணனிடத்தில் எது ரமிக்கிறதோ அல்லது கிரீடைபுரிகிறதோ அது பிராணாராமமாகும். பிராணன்களுடைய ரமணம் எதில் இருக்கிறதோ அது பிராணாராமம் “मन-आनन्दम्” (மன ஆனந்தம்) எவைகளுக்கு மனம் ஆனந்தபூதமோ அதாவது சுகத்தை அளிக்கிறதோ அதை மன ஆனந்தம் என்று கூறப்படுகிறது शान्तिसमृद्धिम् (சாந்தி ஸம்ருத்ம்) சாந்திரூபசமம். சாந்தியினால் ஸமிருத்தம் (பிரஹ்மம்) அடையப்படுவதாலும் சாந்தி ஸமிருத்தம் எனப்படுகிறது. अमृतम् (அம்ருதம்) மரண தர்மம் அற்றது. இந்த அதிகரண விஷயத்தை மனோமயம் முதலியவைகளில் அறிய வேண்டும். இவ்வாறு மனோமயத்துவாதி தர்மங்களுடன் கூடிய பிரஹ்மத்தைப் பற்றி, அது கூறியவாறோ ஹே பிராசீன யோக்கிய! உபாஸனை செய்ய வேண்டும் என்று குருவானவர் கூறியது ஆதரவுடன் கூறியதாகும்.
इति षष्ठोनुवाकभाष्यम् ॥
यदेतद्व्याहृत्यात्मकं ब्रह्मोपास्यमुक्तम् , तस्यैवेदानीं पृथिव्यादिपाङ्क्तस्वरूपेणोपासनमुच्यते । पञ्चसङ्ख्यायोगात्पङ्क्तिच्छन्दः सम्पक्तिः ; ततः पाङ्क्तत्वं सर्वस्य । पाङ्क्तश्च यज्ञः, ‘पञ्चपदा पङ्क्तिः पाङ्क्तो यज्ञः’ इति श्रुतेः । तेन यत्सर्वं लोकाद्यात्मान्तं च पाङ्क्तं परिकल्पयति, यज्ञमेव तत्परिकल्पयति । तेन यज्ञेन परिकल्पितेन पाङ्क्तात्मकं प्रजापतिमभिसम्पद्यते । तत्कथं पाङ्क्तं वा इदं सर्वमित्यत आह -
(அ-கை) எந்த வ்யாஹ்ருதி ஆத்மகமான ப்ரஹ்மத்தின் உபாஸனம் கூறப்பட்டதோ அதையே இப்போழுது பிருதிவீ முதலிய பாங்க்த ஸ்வரூப உபாஸனமாய் கூறப்படுகிறது. ஐந்து எண்௴க்கையுடன் கூடியதாய் இருப்பதால் பாங்க்த சப்தம் உடையதாகிறது. இதனால் எல்லாம் பாங்க்தமாகிறது. யக்ஞமும் பாங்க்தமாகும் என்பது “पञ्चपदा पङ्क्तिः पाङ्क्तो यज्ञः”(பஞ்ச பதா பங்கத்தி பாங்க்தோ யக்ஞ) என்ற சுருதியினால் அறியப்படுகிறது. ஆகையால் லோகமுதல் ஆத்மா வரையிலும் பாங்தம் கல்பிக்கப்படுகிறது. யக்ஞத்தையே கல்பிக்கிறது. இந்த கல்பனையினால் உண்டான யக்ஞத்தினால் அந்த பாங்க்த ஸ்வரூப பிரஜாபதியை அடைகிறான். இவை எல்லாம் எவ்வாறு பாங்க்தமாகும்? அதை இப்பொழுது கூறுகிறார்-
पृथिव्यन्तरिक्षं द्यौर्दिशोऽवान्तरदिशः । अग्निर्वायुरादित्यश्चन्द्रमा नक्षत्राणि । आप ओषधयो वनस्पतय आकाश आत्मा । इत्यधिभूतम् । अथाध्यात्मम् । प्राणो व्यानोऽपान उदानः समानः । चक्षुः श्रोत्रं मनो वाक् त्वक् । चर्म मांसंस्नावास्थि मज्जा । एतदधिविधाय ऋषिरवोचत् । पाङ्क्तं वा इदं सर्वम् । पाङ्क्तेनैव पाङ्क्तं स्पृणोतीति ॥ १ ॥
पृथिवी अन्तरिक्षं द्यौः दिशः अवान्तरदिशः इति लोकपाङ्क्तम् । अग्निः वायुः आदित्यः चन्द्रमाः नक्षत्राणि इति देवतापाङ्क्तम् । आपः ओषधयः वनस्पतयः आकाशः आत्मा इति भूतपाङ्क्तम् । आत्मेति विराट् , भूताधिकारात् । इत्यधिभूतमिति अधिलोकाधिदैवतपाङ्क्तद्वयोपलक्षणार्थम् , लोकदेवतापाङ्क्तयोर्द्वयोश्चाभिहितत्वात् ।
(ச.பா) பிருதிவீ, அந்தரிஷம், த்யுலோகம், திசைகள், அவாந்தர திசைகள் லோக பாங்க்தமாகும். அக்னி, வாயு, ஆதித்தியன். சந்திரன், நக்ஷத்திரங்கள் தேவதா பாங்தங்களாகும். நீர், ஔஷதிகள், வனஸ்பதிகள், ஆகாசம், ஆத்மா பூதபாங்க்தங்களாகும். இங்கு ஆத்மா என்பது விராட்டைக் குறிக்கிறது ஏன்எனில் பூதங்களுக்கு அதிகரணமாய் இருப்பதால். “इत्यधिभूतम्”என்ற இந்த வாக்கியம் அதிலோகம் அதிதெய்வத ஞானபாங்க்தம் இரண்டும் உபலக்ஷணார்தமாகும். ஏன்எனில் இதில் லோகம், தைவத சம்பந்தமான இரண்டு பாங்க்தங்களும் வர்ணிக்கப்படுகின்றன.
अथ अनन्तरम् अध्यात्मं पाङ्क्तत्रयमुच्यते - प्राणादि वायुपाङ्क्तम् । चक्षुरादि इन्द्रियपाङ्क्तम् । चर्मादि धातुपाङ्क्तम् । एतावद्धीदं सर्वमध्यात्मं बाह्यं च पाङ्क्तमेव इति एतत् एवम् अधिविधाय परिकल्प्य ऋषिः वेदः एतद्दर्शनसम्पन्नो वा कश्चिदृषिः, अवोचत् उक्तवान् । किमित्याह - पाङ्क्तं वा इदं सर्वं पाङ्क्तेनैव आध्यात्मिकेन, सङ्ख्यासामान्यात् , पाङ्क्तं बाह्यं स्पृणोति बलयति पूरयति एकात्मतयोपलभ्यत इत्येतत् । एवं पाङ्क्तमिदं सर्वमिति यो वेद, स प्रजापत्यात्मैव भवतीत्यर्थः ॥
இப்பொழுது இனி மூன்று அத்தியாத்ம பாங்க்தங்களின் வர்ணணம் செய்யப்படுகிறது. பிராணன் முதலிய வாயு பாங்க்தம், கண்முதலிய இந்திரிய பாங்க்தம், மேலும் சர்மம் முதலிய தாது பாங்க்தங்கள். இவைகள் அத்யாத்மம், பாஹ்ய பாங்க்தங்களாகும். இவ்வாறான விதானம் அதாவது கல்பனை செய்து ரி: வேத அல்லது இந்த திருஷ்ட்டியை உடைய ரி: கூறினார், என்ன கூறினார் எனில் இவையெல்லாம் பாங்க்தங்களே. ஆத்யாத்மிக பாங்க்தங்களினால் அல்லவா எண்௴க்கைகளில் சமானமாய் இருப்பதால் உபாசகன் பாஹ்யபாங்க்தங்களை அடைகிறான் அதாவது அதனுடன் ஒரே ரூபமாய் அடைகிறான். இவ்வாறு எல்லா பாங்க்தங்களும் இருக்கின்றன என்று எந்த புருஷன் அறிகிறானோ அவன் பிரஜாபதி ரூபத்தை அடைகிறான் என்பது தாத்பரியம்.
इति सप्तमानुवाकभाष्यम् ॥
व्याहृत्यात्मनो ब्रह्मण उपासनमुक्तम् । अनन्तरं च पाङ्क्तस्वरूपेण तस्यैवोपासनमुक्तम् । इदानीं सर्वोपासनाङ्गभूतस्य ओङ्कारस्योपासनं विधित्स्यते । परापरब्रह्मदृष्ट्या हि उपास्यमान ओङ्कारः शब्दमात्रोऽपि परापरब्रह्मप्राप्तिसाधनं भवति ; स ह्यालम्बनं ब्रह्मणः परस्यापरस्य च, प्रतिमेव विष्णोः, ‘एतेनैवायतनेनैकतरमन्वेति’ (प्र. उ. ५ । २) इति श्रुतेः ।
(அ-கை) வ்யாஹ்ருதிரூப பிரஹ்மத்தின் உபாஸனம் நிருபணம் செய்யப்பட்டது. அதன் பின் பாங்க்த்த ஸ்வரூபத்தால் அதனுடைய உபாஸனை கூறப்பட்டது. இப்பொழுது எல்லா உபாஸனைகளின் அங்கபூதமான ஓம்கார உபாஸனம் விதிக்கப்படுகிறது. பராபர திருஷ்ட்டியால் உபாஸிக்கப்பட்ட ஓம்காரம் சப்தமாத்திரமாய் இருந்தாலும் பராபர பிரஹ்மத்தை அடைவதற்கான ஸாதனமாகிறது. அது பராபரபிரஹ்மத்தின் ஆலம்பனம் ஆகிறது. எவ்வாறு பிரதிமா விஷ்ணுவிற்கு ஆலம்பனம் ஆகிறதோ அவ்வாறு ஆகும். ‘एतेनैवायतनेनैकतरमन्वेति’ (प्र. उ. ५ । २) (ஏதேனைவாயதனேனைகதரமன்வேதி) “இந்த ஆலம்பனத்தால் உபாசகன்”. (பர, அபர) இவைகளில் ஒரு பிரஹ்மத்தை அடைகிறான் என்பது ச்ருதி வாக்கியம்.
ओमिति ब्रह्म । ओमितीदं सर्वम् । ओमित्येतदनुकृतिर्ह स्म वा अप्यो श्रावयेत्याश्रावयन्ति । ओमिति सामानि गायन्ति । ॐ शोमिति शस्त्राणि शंसन्ति । ओमित्यध्वर्युः प्रतिगरं प्रतिगृणाति । ओमिति ब्रह्मा प्रसौति । ओमित्यग्निहोत्रमनुजानाति । ओमिति ब्राह्मणः प्रवक्ष्यन्नाह ब्रह्मोपाप्नवानीति । ब्रह्मैवोपाप्नोति ॥ १ ॥
ओमिति, इतिशब्दः स्वरूपपरिच्छेदार्थः ; ॐ इत्येतच्छब्दरूपं ब्रह्म इति मनसा धारयेत् उपासीत ; यतः ॐ इति इदं सर्वं हि शब्दस्वरूपमोङ्कारेण व्याप्तम् , ‘तद्यथा शङ्कुना’ (छा. उ. २ । २३ । ३) इति श्रुत्यन्तरात् । ‘अभिधानतन्त्रं ह्यभिधेयम्’ इत्यतः इदं सर्वमोङ्कार इत्युच्यते ।
“ஓம்” என்று இதில் என்று (इति) சப்தமான ஓம்கார ஸ்வரூபத்தை நிர்தேசம் செய்வதற்காக (குறிப்பிடுவதற்காக) ஆகும். அதாவது “ஓம்” என்ற சப்தரூபத்தை மனதால் தியானம் செய்யவேண்டும். ஏன்எனில் ஓம் என்ற இது எல்லா சப்தரூபமானது எல்லா சப்தங்களையும் வியாப்பித்துள்ளது. ‘तद्यथा शङ्कुना’ (छा. उ. २ । २३ । ३) (எவ்வாறு இலையில் பெரிய நரம்பு சிறிய நரம்புகளை வியாபித்திருக்கிறது) என்ற சாந்தோக்கிய வாக்யத்தால் ஸித்திக்கிறது. எல்லாம் வாச்சிரம் யாவும் வாசக அதீனமாய் இருப்பதால் எல்லாம் ஓம்காரம் எனப்படுகிறது.
ओङ्कारस्तुत्यर्थ उत्तरो ग्रन्थः, उपास्यत्वात्तस्य । ॐ इत्येतत् अनुकृतिः अनुकरणम् । करोमि यास्यामि चेति कृतमुक्त ओमित्यनुकरोत्यन्यः, अतः ओङ्कारोऽनुकृतिः । ह स्म वै इति प्रसिद्धार्थद्योतकाः । प्रसिद्धं ह्योङ्कारस्यानुकृतित्वम् ।
மேல் வரும் கிரந்தம் ஓம்காரத்தை ஸ்துதிப்பதற்க்காக ஆகும் ஏன்எனில் அது உபாசிக்கப்பட வேண்டியது. ஓம் என்று அதையேப்பின்பற்றுவது. செய்கிறேன், சொல்கிறேன் என்று கூறுவதைக் கேட்டு மற்றவன் செயல்படுவது போல் “ஓம்” என்று அதைக்கேட்டு ஏற்றுக்கொண்டு செல்கிறான். ஆகையால் அது அனுக்ருதி எனப்படுகிறது. ह (ஹ) स्म (ஸ்ம) वा (வா) என்பன பிரசித்தார்த்தத்தை குறிப்பிடுகின்றன. ஏன்எனில் ஓம்காரத்திற்கு அனுக்ருதித்வம் பிரசித்தமானது.
अपि च ओंश्रावय इति प्रैषपूर्वमाश्रावयन्ति प्रतिश्रावयन्ति । तथा ॐ इति सामानि गायन्ति सामगाः । ॐ शोमिति शस्त्राणि शंसन्ति शस्त्रशंसितारोऽपि । तथा ॐ इति अध्वर्युः प्रतिगरं प्रतिगृणाति । ॐ इति ब्रह्मा प्रसौति अनुजानाति । ॐ इति अग्निहोत्रम् अनुजानाति जुहोमीत्युक्ते ॐ इत्येव अनुज्ञां प्रयच्छति ।
மேலும் “ओं श्रावय”(ஓம் ச்ராவய)என்று பிரேரணை பூர்வமாய் யக்ஞம் செய்பவர்கள் ஆச்ராவணம் செய்கிறார்கள். இவ்வாறே ஓம் என்று ஸாமவேதிகள் ஸாமங்களைப் பாடுகின்றார்கள் (சாமகானம் செய்கின்றார்கள்) சஸ்த்திரங்களை சொல்பவர்கள். “ॐ शोम्” (ஓம்சோம்) என்று சொல்லி சஸ்த்திரங்களைக் உறைக்கிறார்கள். அவ்வாறே (अध्वर्यु) அத்வர்யுவானவிச் प्रतिगरं (ஸாமத்தின் நடுவே ஆமோத்ததை வெளிப் படுத்துகிறான் ஓம் என்று கூறி யக்ஞத்தில் பிரஹ்மா (அக்னிஹோத்திரத்தில்) ஆக்ஞையே அளிக்கிறார் (பிரேரணை செய்கிறார்). எஜமானனும் ஓம் என்று கூறி நான் யக்ஞம் (அக்னிஹோத்திரம்) செய்கிறேன் என்று ஸம்மதத்தைத் தெரிவிக்கிறான். அக்னிஹோத்திரம் செய்கிறேன் என்று கூறிய எஜமானனுக்கு “ஓம்” என்று அனுமதி அளிக்கிறார்.
ओं इत्येव ब्राह्मणः प्रवक्ष्यन् प्रवचनं करिष्यन् अध्येष्यमाणः ओमित्याह ओमित्येव प्रतिपद्यते अध्येतुमित्यर्थः ; ब्रह्म वेदम् उपाप्नवानि इति प्राप्नुयां ग्रहीष्यामीति उपाप्नोत्येव ब्रह्म । अथवा, ब्रह्म परमात्मानम् उपाप्नवानीत्यात्मानं प्रवक्ष्यन् प्रापयिष्यन् ओमित्येवाह । स च तेनोङ्कारेण ब्रह्म प्राप्नोत्येव । ओङ्कारपूर्वं प्रवृत्तानां क्रियाणां फलवत्त्वं यस्मात् , तस्मादोङ्कारं ब्रह्मेत्युपासीतेति वाक्यार्थः ॥
(ச.பா) அத்யயனம் செய்யும் பிராஹ்ம்மணன் “ஓம்” என்று உச்சாரணம் செய்கிறான். ஓம் என்று உச்சரித்து அத்தியனம் செய்ய ஆரம்பிக்கின்றான். நான் பிரஹ்ம வேதத்தை அடைவேன். அதாவது அதை கிரஹிப்பேன். என்று, அதனால் அவன் பிரஹ்மத்தை அடைகின்றான். அல்லது நான் பரமாத்மாவாகிய பிரஹ்மதை அடைவேன் என்று இவ்வாறு ஆத்மாவை அடைவதற்கு இச்சை உள்ளவனாய் அந்த “ஓம்”கார வாயிலாய் அந்த பிரஹ்மத்தை அடைகிறான். இவ்வாறு ஓம்கார பூர்வமாக ப்ரவிர்த்திக்கும் கிரியைகள் பலன் உடையவைகளாக ஆகின்றன. ஆகையால் ஓம்காரம் “பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாஸனை செய் என்பது இந்த அனுவாகத்தின் அர்த்தமாகும்.
इत्यष्टमानुवाकभाष्यम् ॥
विज्ञानादेवाप्नोति स्वाराज्यमित्युक्तत्वात् श्रौतस्मार्तानां कर्मणामानर्थक्यं प्राप्तमित्येतन्मा प्रापदिति कर्मणां पुरुषार्थं प्रति साधनत्वप्रदर्शनार्थ इहोपन्यासः -
(அ-கை) விக்ஞானத்தினால் (உபாஸனையினால்) மாத்திரமே ஸ்வாராஜ்யம் ஸித்திக்கும் என்று கூறப்பட்டதால் ச்ரௌத ஸ்மார்த்த கர்மங்கள் விணாகிவிடும். அவ்வாறு ஆகக்கூடாது என்பதற்காக புருஷார்த்தம் அடைவதற்காக கர்மங்களின் ஸாதனத்வத்தை விளக்குவதற்காக இங்கு உபந்நியாசம் செய்யப்படுகிறது. (கூறப்படுகிறது)
ऋतं च स्वाध्यायप्रवचने च । सत्यं च स्वाध्यायप्रवचने च । तपश्च स्वाध्यायप्रवचने च । दमश्च स्वाध्यायप्रवचने च । शमश्च स्वाध्यायप्रवचने च । अग्नयश्य स्वाध्यायप्रवचने च । अग्निहोत्रं च स्वाध्यायप्रवचने च । अतिथयश्च स्वाध्यायप्रवचने च । मानुषं च स्वाध्यायप्रवचने च । प्रजा च स्वाध्यायप्रवचने च । प्रजनश्च स्वाध्यायप्रवचने च । प्रजातिश्च स्वाध्यायप्रवचने च । सत्यमिति सत्यवचा राथीतरः । तप इति तपोनित्यः पौरुशिष्टिः । स्वाध्यायप्रवचने एवेति नाको मौद्गल्यः । तद्धि तपस्तद्धि तपः ॥ १ ॥
ऋतमिति व्याख्यातम् । स्वाध्यायः अध्ययनम् । प्रवचनमध्यापनं ब्रह्मयज्ञो वा । एतानि ऋतादीनि, अनुष्ठेयानि इति वाक्यशेषः । सत्यं सत्यवचनं यथाव्याख्यातार्थं वा । तपः कृच्छ्रादि । दमः बाह्यकरणोपशमः । शमः अन्तःकरणोपशमः । अग्नयश्च आधातव्याः । अग्निहोत्रं च होतव्यम् । अतिथयश्च पूज्याः । मानुषमिति लौकिकः संव्यवहारः । तच्च यथाप्राप्तमनुष्ठेयम् । प्रजा च उत्पाद्या । प्रजनश्च प्रजननम् ; ऋतौ भार्यागमनमित्यर्थः । प्रजातिः पौत्रोत्पत्तिः ; पुत्रो निवेशयितव्य इत्येतत् ।
(ச.பா) “ऋतं" (ருதம்) என்பதற்கு முன்பே வியாக்கியானம் செய்யப்பட்டது स्वाध्याय (ஸ்வாத்யாய்) என்று அத்யயனம் கூறப்படுகிறது. “प्रवचन" (பிரவசன) என்று அத்யாபனம் (சொல்லிக்கொடுத்தல்) அல்லது பிரஹ்ம யக்ஞத்தின் கூறுவது. எந்த ऋतं (ருதம்) முதலியவைகளை அனுஷ்ட்டிக்க வேண்டியது என்பது வாக்கியசேஷமாகும். “सत्यः” (சத்ய) என்பது சத்தியவசனம் அல்லது முன்பே “सत्यंवदिष्यामि” என்ற வாக்கியத்தில் வியாக்யானம் செய்யப்பட்டது. तपः (தப:) என்பது க்ருச்சிராதிகள் दमः (தம) என்பது பாஹ்ய கரண அடக்குதல் . शमः (சம:) அந்தக்கரண அடக்குதல் (உபசமம்). அக்னிகளை ஆதானம் செய்யவேண்டும். அக்னிஹோத்திரம் ஹோமம் செய்யவேண்டும். அதிதிகளுக்கு பூஜை செய்யவேண்டும். அவைகளை அதை எவ்வாறு அடையப்பட்டதோ அதை அனுஷ்ட்டானம் செய்யவேண்டும். பிரஜைகளை உற்பத்தி செய்யவேண்டும். ரூதுகாலத்தில் பாரியை இடத்திற்கு செல்லுதல், மேலும் பௌத்திரன் அடைவதற்காக புத்திரனுக்கு விவாகம் செய்யவேண்டும்.
सर्वैरेतैः कर्मभिर्युक्तस्यापि स्वाध्यायप्रवचने यत्नतोऽनुष्ठेये इत्येवमर्थं सर्वेण सह स्वाध्यायप्रवचनग्रहणम् । स्वाध्यायाधीनं ह्यर्थज्ञानम् । अर्थज्ञानाधीनं च परं श्रेयः । प्रवचनं च तदविस्मरणार्थं धर्मवृद्ध्यर्थं च । ततः स्वाध्यायप्रवचनयोरादरः कार्यः ।
(ச.பா) இந்த எல்லா கர்மங்களுடன் கூடிய புருஷனும் ஸ்வாத்யாத்யயனம் மேலும் யத்னத்துடன் அனுஷ்ட்டானம் செய்யவேண்டும். ஆகையால் இது எல்லா கர்மங்களுடன் ஸ்வாத்யாயமும் பிரவசனமும் கட்டாயம் என்று கிரஹித்துக் கொள்ளவேண்டும். ஸ்வாத்தியாயத்தை அதீனமாக உடையது அர்த்தஞானம். மேலும் அர்த்த ஞானத்தின் அதீனம் பரமஸ்ரேயஸ் ஆகும். பிரவசனமானது அதை மறக்கமால் இருப்பதற்கும். தர்மத்தின் விருத்தியின் பொருட்டாகும். ஆகையால் ஸ்வாத்தியாயம், பிரவசனம் இரண்டிலும் சிரத்தை கொள்ளவேண்டும்.
सत्यमिति सत्यमेवानुष्ठेयमिति सत्यवचाः सत्यमेव वचो यस्य सोऽयं सत्यवचाः, नाम वा तस्य ; राथीतरः रथीतरसगोत्रः राथीतर आचार्यो मन्यते । तप इति तप एव कर्तव्यमिति तपोनित्यः तपसि नित्यः तपःपरः, तपोनित्य इति वा नाम ; पौरुशिष्टिः पुरुशिष्टस्यापत्यं पौरुशिष्टिराचार्यो मन्यते । स्वाध्यायप्रवचने एव अनुष्ठेये इति नाको नामतः मुद्गलस्यापत्यं मौद्गल्य आचार्यो मन्यते । तद्धि तपस्तद्धि तपः । यस्मात्स्वाध्यायप्रवचने एव तपः, तस्मात्ते एवानुष्ठेये इति । उक्तानामपि सत्यतपःस्वाध्यायप्रवचनानां पुनर्ग्रहणमादरार्थम् ॥
(ச.பா) सत्यं (சத்யம்) என்பது சத்தியத்தையே கடைபிடிக்க வேண்டியது என்று சத்தியமே எவன் பேசுகிறானோ அவனுடைய பெயர் சத்தியவச்சன் (சத்யம் பேசுபவன்) ரதீதர வம்ஸத்தல் (கோத்திரத்தில்) உதித்ததால் ராதீதரன் என்ற பெயருடைய ஆச்சாரியன் ஏற்றுக்கொள்கிறார். तपः (தப:) என்றது தபசே செய்யவேண்டும். நித்திய தபோநிஷ்ட்டர். தபோநித்தியர் என்றபெயருடைய पौरुशिष्टिः (பௌருஷ்ட்டி) என்பவர் புரு:ஷ்ட்டருடைய புத்திரன். பௌரு:ஷ்டி ஆச்சாரியன் கூறுகிறார். ஸ்வாத்தியாய, பிரவச்சனங்களை அனுஷ்ட்டானமுடைய நாகர் என்ற பெயருடைய मुद्गलः (முத்கல) என்பவருடைய புத்திரன் மௌத்கஸயர் ஆச்சாரியர் கூறுகிறார். அதுவே தபஸ், அதுவே தபஸ் என்று எதனால் ஸ்வாத்தியாய பிரவசனத்தில் தான் தபஸ், ஆகையால் அதையே அனுஷ்ட்டிக்கவேண்டும். கூறப்பட்ட சத்திய, தபஸ், ஸ்வாத்தியாயம், பிரவசனம் இவைகளை மறுபடியும் எடுத்துகூறுவது அதிகமான சிரத்தையின் பொருட்டாகும்.
इति नवमानुवाकभाष्यम् ॥
अहं वृक्षस्य रेरिवेति स्वाध्यायार्थो मन्त्राम्नायः । स्वाध्यायश्च विद्योत्पत्तये, प्रकरणात् । विद्यार्थं हीदं प्रकरणम् , न च अन्यार्थत्वमवगम्यते । स्वाध्यायेन च विशुद्धसत्त्वस्य विद्योत्पत्तिरवकल्पते -
(அ-கை) “अहं वृक्षस्य रेरिवा” முதலிய மந்திரங்கள் ஸ்வாத்தியாயத்தின் (ஜபத்தின்) பொருட்டாகும். அவ்வாறே ஸ்வாத்தியாயம் வித்யை (உபாசனை) உண்டாவதற்காக கூறப்பட்டது, இந்த பிரகரணத்தால் அறியப்படுகிறது. இந்த பிரகரணம் வித்யையின் பொருட்டாகும். இதைத்தவிர வேறு பிரயோஜனம் அறியப்படவில்லை. ஸ்வாத்தியாயத்தினால் சித்தசுத்தி ஏற்பட்டவனுக்கு வித்யையின் (உபாசனையின்) உற்பத்தியானது கிட்டுகிறது.
अहं वृक्षस्य रेरिवा । कीर्तिः पृष्ठं गिरेरिव । ऊर्ध्वपवित्रो वाजिनीव स्वमृतमस्मि । द्रविणं सवर्चसम् । सुमेधा अमृतोक्षितः । इति त्रिशङ्कोर्वेदानुवचनम् ॥ १ ॥
अहं वृक्षस्य उच्छेद्यात्मकस्य संसारवृक्षस्य रेरिवा प्रेरयिता अन्तर्याम्यात्मना । कीर्तिः ख्यातिः गिरेः पृष्ठमिव उच्छ्रिता मम । ऊर्ध्वपवित्रः ऊर्ध्वं कारणं पवित्रं पावनं ज्ञानप्रकाश्यं परं ब्रह्म यस्य सर्वात्मनो मम, सोऽहमूर्ध्वपवित्रः ; वाजिनि इव वाजवतीव, वाजमन्नम् , तद्वति सवितरीवेत्यर्थः ; यथा सवितरि अमृतमात्मतत्त्वं विशुद्धं प्रसिद्धं श्रुतिस्मृतिशतेभ्यः, एवं सु अमृतं शोभनं विशुद्धमात्मतत्त्वम् अस्मि भवामि ।
(ச.பா) அந்தர்யாமி ரூபமாய் அழியக்கூடிய ஸம்சாரரூப விருக்ஷத்தை பிரேரணை செய்கிறேன். என்னுடைய கீர்த்தி மலையின் மேல்பாகம் போல் உயர்ந்திருக்கிறது. உயர்ந்த பவித்திரம் இங்கு (ऊर्ध्वम्) உயர்ந்தது என்றது காரணம். பவித்திரம் என்றது தூய்மையானது. ஞானத்தால் பிரகாசிக்கக்கூடிய பவித்திரம் பரம்ப்ரஹ்மம் ஸர்வாத்மாவாகிய எனக்கு ஊர்த்துவம்(மேலான) அதாவது காரணமோ அந்த நான் ஊர்த்துவபவித்திரன். वाजिनीव (வாஜநீவ) வாஜமுடையவனுக்கு ஸமானமாக. வாஜ என்றால் அன்னம் அதனுடன் கூடிய சூரியனுக்கு சமானம் என்று பொருள். எவ்வாறு சூரியனிடத்தில் அம்ருதாத்மதத்வம் விசுத்தம் என்பது ச்ருதி ஸ்மிருதிகளில் பிரசித்தமோ அவ்வாறு स्वमृतं (நல்ல அம்ருதம்) மாயும், शोभनं (சோபனம்) மாயும் உள்ள விசுத்த ஆத்ம தத்துவமாய் இருக்கிறேன்.
द्रविणं धनं सवर्चसं दीप्तिमत् तदेव आत्मतत्त्वम् , अस्मीत्यनुवर्तते । ब्रह्मज्ञानं वा आत्मतत्त्वप्रकाशकत्वात्सवर्चसम् , द्रविणमिव द्रविणम् , मोक्षसुखहेतुत्वात् । अस्मिन्पक्षे प्राप्तं मयेत्यध्याहारः कर्तव्यः ।
(ச.பா) திரவினம், தனம், வர்ச்சசுடன் கூடியதான, ஒளிர்கின்ற ஆத்மதத்துவம் நானாக இருக்கிறேன் என்று அனுர்த்திக்கிறது பிரஹ்மஞானம். ஆத்மதத்துவத்தை பிரகாசிக்கச்செய்வதால் ஸவர்ச்சசம் எனப்படுகிறது. மோக்ஷ சுகத்திற்க்கு காரணமாய் இருப்பதால் தனத்திற்கு ஸமமானது, இந்த பக்ஷத்தில் मयाप्राप्तम् (மயாபிராப்தம்-என்னால் அடையப்பட்டது) என்று அத்யாஹாரம் (சேர்த்துக்கொள்ள) செய்யவேண்டும்.
सुमेधाः शोभना मेधा सर्वज्ञत्वलक्षणा यस्य मम, सोऽहं सुमेधाः, संसारस्थित्युत्पत्तिसंहारकौशलयोगात्सुमेधस्त्वम् ; अत एव अमृतः अमरणधर्मा, अक्षितः अक्षीणः अव्ययः अक्षतो वा, अमृतेन वा उक्षितः सिक्तः ‘अमृतोक्षितोऽहम्’ इत्यादि ब्राह्मणम् ।
(ச.பா) “सुमेधाः” (சுமேதா:) சோபனமான மேதை அதாவது சர்வக்ஞ லக்ஷணமுடையவனாகிய அந்த நான் சுமேதா. சம்சாரத்தின் ஸ்திதி, உத்பத்தி, சம்ஹாரம் இவற்றில் சாமர்த்தியம் (கௌசலத்துவம்-குசலத்தன்மை) இருப்பதால் சுமேதா தன்மை. ஆகையால்தான் அம்ருதம் அதாவது மரணதர்மமற்றது சிதிலமடையாதது, க்ஷீணமடையாதது, அவ்வியயமாகும். அல்லது அம்ருதத்தால் நனைக்கப்பட்டது “अमृतोक्षितोऽहम्” முதலிய பிராஹ்மண வாக்கியமாகும்.
इति एवं त्रिशङ्कोः ऋषेः ब्रह्मभूतस्य ब्रह्मविदः वेदानुवचनम् , वेदः वेदनम् आत्मैकत्वविज्ञानम् , तस्य प्राप्तिमनु वचनं वेदानुवचनम् ; आत्मनः कृतकृत्यताप्रख्यापनार्थं वामदेववत्त्रिशङ्कुना आर्षेण दर्शनेन दृष्टो मन्त्राम्नाय आत्मविद्याप्रकाशक इत्यर्थः ।
இவ்வாறு பிரஹ்மபூதராகிய பிரஹ்மவேதாவான திரிசங்கு ரி:யினுடைய வேதானு வசனமாகும். “वेदः” (வேத:) என்றால் ஆத்ம ஏகத்துவ விக்ஞானமாகும். அதை அடைவதற்கான வசனம் வேதானுவசனமாகும், தன்னுடைய க்ருதக்ருத்தியத்தை பிரகடனம் செய்வதற்காக வாமதேவர்க்கு சமமாக திருசங்கு ஆர்ஷரின் தர்சனத்தால் பார்க்கப்பட்ட மந்திர ஆம்னாயமாகிய ஆத்மவித்யையை பிரகாசப்படுத்துவதாகும்.,
अस्य च जपो विद्योत्पत्त्यर्थोऽधिगम्यते । ‘ऋतं च’ इति धर्मोपन्यासादनन्तरं च वेदानुवचनपाठादेतदवगम्यते । एवं श्रौतस्मार्तेषु नित्येषु कर्मसु युक्तस्य निष्कामस्य परं ब्रह्म विविदिषोरार्षाणि दर्शनानि प्रादुर्भवन्त्यात्मादिविषयाणीति ॥
(ச.பா) இதை ஜபிப்பது வித்யா உற்பத்திக்காக என்று அறிப்படுகிறது. ரிதம் முதலிய கர்ம உபாசனைக்குப் பின் வேதானுவசனத்தை சொல்லிய அது அறிந்து கொள்ளமுடியம், அவ்வாறேஸ்ரௌத ஸ்மார்த்தநித்திய கர்மங்களுடன் கூடிய நிஷ்காமனுக்கு பரபிரஹ்ம்மத்தை அறிவதில் விருப்பமுடையவனுக்கு (ஜிக்ஞா) ஆத்மாவிற்கு ஆர்ஷ தர்சனங்கள் அவனுக்கு தோன்றுகின்றன.
इति दशमानुवाकभाष्यम् ॥
वेदमनूच्येत्येवमादिकर्तव्यतोपदेशारम्भः प्राग्ब्रह्मात्मविज्ञानान्नियमेन कर्तव्यानि श्रौतस्मार्तानि कर्माणीत्येवमर्थः, अनुशासनश्रुतेः पुरुषसंस्कारार्थत्वात् । संस्कृतस्य हि विशुद्धसत्त्वस्य आत्मज्ञानमञ्जसैवोपजायते । ‘तपसा कल्मषं हन्ति विद्ययामृतमश्नुते’ (मनु. १२ । १०४) इति हि स्मृतिः । वक्ष्यति च - ‘तपसा ब्रह्म विजिज्ञासस्व’ (तै. उ. ३ । २ । १) इति । अतो विद्योत्पत्त्यर्थमनुष्ठेयानि कर्माणि । अनुशास्तीत्यनुशासनशब्दादनुशासनातिक्रमे हि दोषोत्पत्तिः ।
(அ-கை) பிரஹ்ம விக்ஞானத்திற்கு முன் ஸ்ரௌத, ஸ்மார்த்த கர்மங்களை நியமமாய் அனுஷ்டிக்க வேண்டியதால்“वेदमनूच्य” (வேதம் அநூ ச்சிய) முதலிய ச்ருதிகளால் அவைகளை அவசியம் செய்யவேண்டும் (கர்த்தவ்யம்) என்ற உபதேசம் ஆரம்பிக்கப்படுகிறது. ஏன்எனில் “अनुशासन” (அனுசாசன) ச்ருதியானது புருஷனுடைய சம்ஸ்காரத்திற்காக (அந்தக்கரண சுத்திக்காக) ஆகும். ஏன்எனில் ஸம்ஸ்காரத்துடனும் கூடிய விசுத்தசித்தம் ஏற்படும். அவனுக்கே அநாயஸமாக ஆத்மஞானம் சித்திக்கும். “‘तपसा कल्मषं हन्ति विद्ययामृतमश्नुते’ (मनु. १२ । १०४)”(தபஸா கல்மஷம் ஹந்த்தி வித்தியயா ம்ருதமச்னுதே) என்பது ச்ருதி மேலும் கூறப்போகிறது- ‘तपसा ब्रह्म विजिज्ञासस्व’ (तै. उ. ३ । २ । १)(தபஸா பிரஹ்ம்ம ஜிக்ஞாசஸ்வ) என்று. ஆகையால் வித்யா உற்பத்தயின் பொருட்டு கர்மங்களை அவச்யம் அனுஷ்டிக்க வேண்டும் अनुशास्ति (அனுசாஸ்தி = கட்டளை இடுகிறது) என்பதால் அனுசாசனம் என்ற சப்தம் இருப்பதால் அதை மீறினால் தோஷம் நேரிடும்.
प्रागुपन्यासाच्च कर्मणाम् , केवलब्रह्मविद्यारम्भाच्च पूर्वं कर्माण्युपन्यस्तानि । उदितायां च ब्रह्मविद्यायाम् ‘अभयं प्रतिष्ठां विन्दते’ (तै. उ. २ । ७ । १) ‘न बिभेति कुतश्चन’ (तै. उ. २ । ९ । १) ‘किमहं साधु नाकरवम्’ (तै. उ. २ । ९ । १) इत्यादिना कर्मनैष्किञ्चन्यं दर्शयिष्यति । अतः अवगम्यते - पूर्वोपचितदुरितक्षयद्वारेण विद्योत्पत्त्यर्थानि कर्माणीति । मन्त्रवर्णाच्च - ‘अविद्यया मृत्युं तीर्त्वा विद्ययामृतमश्नुते’ (ई. उ. ११) इति ऋतादीनां पूर्वत्रोपदेशः आनर्थक्यपरिहारार्थः ; इह तु ज्ञानोत्पत्त्यर्थत्वात्कर्तव्यतानियमार्थः ।
கர்மத்தைப்பற்றி முன்பே உபந்நியாஸம் செய்திருந்தாலும் இங்கு கர்மத்தின் உபந்நியாசம் பிரஹ்ம வித்தையின் நிரூபணத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே செய்யப்பட்டது பிரஹ்ம வித்யா உண்டாகும் பொழுது ‘अभयं प्रतिष्ठां विन्दते’ (तै. उ. २ । ७ । १) (அபயம் ப்ரதிஷட்டாம் விந்ததே)பயமற்றநிலையான ‘न बिभेति कुतश्चन’ (तै. उ. २ । ९ । १), ‘किमहं साधु नाकरवम्’ (तै. उ. २ । ९ । १), (நபிபேதிகுதஷ்ச்சன, கிமஹம் சாது நாகரவம்) முதலிய ச்ருதிவாக்கியங்களால் கர்மத்தின் தேவையற்றதன்மை காட்டப்பட்டது. இதனால் என்ன அறியப்படுகிறது எனில் கர்மமானது பூர்வம் செய்த சஞ்சித பாபத்தின் நிவிர்த்திவாயிலாய் ஞானத்தின்ப்பிராப்தி உண்டாகும் என்பதாம். ‘अविद्यया मृत्युं तीर्त्वा विद्ययामृतमश्नुते’ (ई. उ. ११) (அவித்யயா ம்ருத்யும் தீர்த்வா வித்யயாம்ருதமஷ்னுதே- அவித்யையினால் (கர்மத்தால் மிருத்யுவை (பாபத்தை) தாண்டி வித்யையினால் அம்ருதத்தை அடைகிறான் என்ற மந்திர வார்த்தைகளால் நிச்சயம் செய்யப்படுகிறது. ऋतं (ரிதம்) முதலியவை முன்பு உபதேசிக்கப்பட்டது (வேதத்தின்) அநர்த்தத்தை நீக்குவதற்காகும். இங்கு ஞான உற்பத்தி ஆகிய பயனுடையதாய் இருப்பதால் கர்த்தவ்யத்தை நிலை நாட்டுவதற்காக கூறப்படுகிறது.
वेदमनूच्याचार्योऽन्तेवासिनमनुशास्ति । सत्यं वद । धर्मं चर । स्वाध्यायान्मा प्रमदः । आचार्याय प्रियं धनमाहृत्य प्रजातन्तुं मा व्यवच्छेत्सीः । सत्यान्न प्रमदितव्यम् । धर्मान्न प्रमदितव्यम् । कुशलान्न प्रमदितव्यम् । भूत्यै न प्रमदितव्यम् । स्वाध्यायप्रवचनाभ्यां न प्रमदितव्यम् ॥ १ ॥
देवपितृकार्याभ्यां न प्रमदितव्यम् । मातृदेवो भव । पितृदेवो भव । आचार्यदेवो भव । अतिथिदेवो भव । यान्यनवद्यानि कर्माणि । तानि सेवितव्यानि । नो इतराणि । यान्यस्माकं सुचरितानि । तानि त्वयोपास्यानि ॥ २ ॥
नो इतराणि । ये के चास्मच्छ्रेयांसो ब्राह्मणाः । तेषां त्वयासनेन प्रश्वसितव्यम् । श्रद्धया देयम् । अश्रद्धयादेयम् । श्रिया देयम् । ह्रिया देयम् । भिया देयम् । संविदा देयम् । अथ यदि ते कर्मविचिकित्सा वा वृत्तविचिकित्सा वा स्यात् ॥ ३ ॥
ये तत्र ब्राह्मणाः संमर्शिनः । युक्ता आयुक्ताः । अलूक्षा धर्मकामाः स्युः । यथा ते तत्र वर्तेरन् । तथा तत्र वर्तेथाः । अथाभ्याख्यातेषु । ये तत्र ब्राह्मणाः संमर्शिनः । युक्ता आयुक्ताः । अलूक्षा धर्मकामाः स्युः । यथा ते तेषु वर्तेरन् । तथा तेषु वर्तेथाः । एष आदेशः । एष उपदेशः । एषा वेदोपनिषत् । एतदनुशासनम् । एवमुपासितव्यम् । एवमु चैतदुपास्यम् ॥ ४ ॥
वेदम् अनूच्य अध्याप्य आचार्यः अन्तेवासिनं शिष्यम् अनुशास्ति ग्रन्थग्रहणात् अनु पश्चात् शास्ति तदर्थं ग्राहयतीत्यर्थः । अतोऽवगम्यते अधीतवेदस्य धर्मजिज्ञासामकृत्वा गुरुकुलान्न समावर्तितव्यमिति । ‘बुद्ध्वा कर्माणि कुर्वीत’ इति स्मृतेश्च । कथमनुशास्तीत्यत आह -
(ச.பா) வேதத்தை அத்யயனம் செய்வித்தபின் ஆசாரியர் அந்தேவாஸியான சிஷ்யனுக்கு உபதேசம் செய்கிறார். அதாவது கிரந்தத்தை கிரஹித்தபின் அதன் அர்த்தத்தை அனுசாஸனம் செய்து அந்த அர்த்தத்தை கிரஹிக்கச் செய்கிறார். இதனால் என்ன அறிகிறோம் எனில் அதீத (அத்யயனம் செய்த) வேதத்தின் தர்ம ஜிக்ஞாசை இல்லாமல் குருகுலத்தில் இருந்து திரும்பக்கூடாது .“बुद्ध्वा कर्माणि कुर्वीत” (புத்வா கர்மா௴ தாசரேத்) என்ற ஸ்ம்ருதி இவ்வாறு (கட்டளை) செய்கிறது என்பதைக் கூறுகிறார்-
सत्यं वद यथाप्रमाणावगतं वक्तव्यं च वद । तद्वत् धर्मं चर ; धर्म इत्यनुष्ठेयानां सामान्यवचनम् , सत्यादिविशेषनिर्देशात् । स्वाध्यायात् अध्ययनात् मा प्रमदः प्रमादं मा कार्षीः । आचार्याय आचार्यार्थं प्रियम् इष्टं धनम् आहृत्य आनीय दत्त्वा विद्यानिष्क्रयार्थम् आचार्येण च अनुज्ञातः अनुरूपान्दारानाहृत्य प्रजातन्तुं प्रजासन्तानं मा व्यवच्छेत्सीः ; प्रजासन्ततेर्विच्छित्तिर्न कर्तव्या ; अनुत्पद्यमानेऽपि पुत्रे पुत्रकाम्यादिकर्मणा तदुत्पत्तौ यत्नः कर्तव्य इत्यभिप्रायः, प्रजाप्रजनप्रजातित्रयनिर्देशसामर्थ्यात् ; अन्यथा प्रजनश्चेत्येतदेकमेवावक्ष्यत् ।
(ச.பா) ஸத்தியம் वद (வத) - (ஸத்தியமேபேசு) என்பது எவ்வாறு பிரமாணத்தால் அறிகிறோமோ அவ்வாறே கூறவேண்டியதைக் கூறவேண்டும். அவ்வாறு தர்மத்தைக்கடைபிடித்து தர்மத்தை அனுஷ்டானம் செய்வதற்கு யோக்கியமான கர்மங்களின் ஸாமான்யரூபமான வாசகமாகும். ஏன்எனில் ஸத்தியம் முதலிய விசேஷ தர்மங்கள் முன்பே நிர்தேசம் செய்யப்பட்டுள்ளது. அத்யயனம் செய்வதிலும் அதைக் கற்பிப்பதிலும் பிரமாதம் (சோம்பல்) கொள்ளாதே. ஆசாரியருக்கு அவர் விரும்பியதனத்தை கொண்டுவந்து கொடுத்து அவரிடம் பெற்ற வித்யாதானத்தால் உண்டான கடனைத்தீர்த்து அவருடைய ஆக்ஜை பெற்று அதன்படி ஸ்தீரியை விவாஹம் செய்து பிரஜாதந்து அதாவது பிரஜையின் ஸந்ததி அறுபடாமல் செய்வாயாக. ஸந்ததியை விச்சேதமடையச் செய்யாதே. இதன் தாத்பரியம் என்னவெனில் புத்திரன் பிறக்காவிடில் புத்திரன் உண்டாவதற்கு வேண்டிய புத்திரகாமேஷ்ட்டியாகம் போன்றகர்மாக்களை செய்து முயற்சிக்க வேண்டும். (ஒன்பதாவது அனுவாக்கத்தில் கூறப்பட்டவாறு) பிரஜா, பிரஜன, பிரஜாபதி இந்த மூன்றும் நிர்தேசம் செய்யப்பட்டுள்ளது. அதன் ஸாமர்த்தியத்தால் ஸித்திக்கிறது. இல்லாவிடில் இங்கு प्रजन (ப்ரஜன) என்ற ஒரே ஸாதனம் நிர்தேசம் செய்யப்பட்டிருக்கும்.
सत्यात् न प्रमदितव्यं प्रमादो न कर्तव्यः ; सत्याच्च प्रमदनमनृतप्रसङ्गः ; प्रमादशब्दसामर्थ्याद्विस्मृत्याप्यनृतं न वक्तव्यमित्यर्थः ; अन्यथा असत्यवदनप्रतिषेध एव स्यात् । धर्मात् न प्रमदितव्यम् , धर्मशब्दस्यानुष्ठेयविशेषविषयत्वादननुष्ठानं प्रमादः, स न कर्तव्यः, अनुष्ठातव्य एव धर्म इति यावत् । एवं कुशलात् आत्मरक्षार्थात्कर्मणः न प्रमदितव्यम् । भूतिः विभूतिः, तस्यै भूत्यै भूत्यर्थान्मङ्गलयुक्तात्कर्मणः न प्रमदितव्यम् । स्वाध्यायप्रवचनाभ्यां न प्रमदितव्यम् , ते हि नियमेन कर्तव्ये इत्यर्थः । तथा देवपितृकार्याभ्यां न प्रमदितव्यम् , दैवपित्र्ये कर्मणी कर्तव्ये ।
(ச.பா) ஸத்தியத்திலிருந்து நழுவுதல் கூடாது. ஸத்தியத்திலிருந்து நழுவுதல் அஸத்தியம் (பொய்) ஆகும். பிரமாத சப்தத்தின் ஸாமர்த்தியத்தால் ஆகும். மறந்தும் பொய் சொல்லக்கூடாது என்பதாகும். இதன் தாத்பர்யம் என்னவெனில் பொய் பேசுதலை நிஷேதிக்கிறது (தடை செய்கிறது) என்பதாகும். தர்மத்திலிருந்து நழுவுதல் கூடாது. தர்ம சப்தமானது அனுஷ்டானம் செய்யவேண்டிய விஷயமாய் இருப்பதால் நழுவுதல் கூடாது. ஏன்எனில் தர்மம் அவசியம் அனுஷ்டிக்க வேண்டியதாகும். இவ்வாறு ஆத்மரக்ஷணத்திற்கு உபயோககரமாய் இருப்பதால் கர்மத்திலிருந்து நழுவுதல் கூடாது. “भूति” (பூதி) ஐச்வர்யம் ஆகும். ஐச்வர்யத்தை விரும்புபவர்கள் மங்களகரமான கர்மங்களில் இருந்து நழுவுதல் கூடாது. ஸ்வாத்யாயம், கற்பித்தல் இவைகளிலிருந்து நழுவுதல் கூடாது. ஸ்வத்யாயம் என்பது அத்யயனம் (படித்தல்) ப்ரவசனம் (படிப்பித்தல்) இவைகளிலிருந்து நழுவக்கூடாது அதை நியமமாய் ஆச்ரயிக்க வேண்டும் இவ்வாறு தேவகாரியம் பித்ருகாரியம் இவைகளிலிருந்து நழுவாதே அதாவது தேவதாபித்ரு ஸம்பந்தமான கர்மங்கள் அவசியம் செய்யப்பட வேண்டும்.
मातृदेवः माता देवो यस्य सः, त्वं मातृदेवः भव स्याः । एवं पितृदेवो भव ; आचार्यदेवो भव ; अतिथिदेवो भव ; देवतावदुपास्या एते इत्यर्थः । यान्यपि च अन्यानि अनवद्यानि अनिन्दितानि शिष्टाचारलक्षणानि कर्माणि, तानि सेवितव्यानि कर्तव्यानि त्वया । नो न कर्तव्यानि इतराणि सावद्यानि शिष्टकृतान्यपि । यानि अस्माकम् आचार्याणां सुचरितानि शोभनचरितानि आम्नायाद्यविरुद्धानि, तान्येव त्वया उपास्यानि अदृष्टार्थान्यनुष्ठेयानि ; नियमेन कर्तव्यानीत्येतत् । नो इतराणि विपरीतान्याचार्यकृतान्यपि ।
(ச.பா) “मातृदेवो” (மாத்ருதேவோ) மாதா எவருக்கு தெய்வமோ அந்த நீ மாத்ருதேவமாவாய். இவ்வாறே பித்ருதேவோ, ஆச்சாரிய தேவனாவாய் (அதிதிதேவனாகவும் ஆவாய்). இதன் தாத்பர்யம் என்னவெனில் எல்லா தேவதைகளையும் ஸமமாய் உபாஸனை செய்யவேண்டியதாகும். இதைத்தவிர மற்ற நிந்தையற்ற சிஷ்டர்களால் அனுஸரிக்கப்படும் கர்மங்களை நீ செய்யவேண்டியதாகும். சிஷ்டர்கள் அனுசரித்தாலும் தள்ளத்தக்க (நிந்தையுடன் கூடிய) கர்மங்களை நீ செய்யக்கூடாது. எந்த கர்மங்கள். நம்முடைய ஆச்சாரியர்களால் நன்றாக அனுஸரிக்கப்பட்ட சுபமான ஆம்நாயங்களுக்கு விருத்தமல்லாத கர்மங்களை நீ உபாஸனை (அனுஷ்ட்டிக்க வேண்டும்) செய்ய வேண்டும். அதிருஷ்ட்ட பலத்திற்காக அவைகளை அனுஷ்டிக்க வேண்டும். அதாவது நியமமாய் செய்யவேண்டும் என்பதாகும். (2) மற்ற விபரீத கர்மங்களை ஆசாரியர் செய்து இருந்தாலும் அவைகளைச் செய்யக்கூடாது.
ये के च विशेषिता आचार्यत्वादिधर्मैः अस्मत् अस्मत्तः श्रेयांसः प्रशस्ततराः, ते च ब्राह्मणाः, न क्षत्रियादयः, तेषाम् आसनेन आसनदानादिना त्वया प्रश्वसितव्यम् , प्रश्वसनं प्रश्वासः श्रमापनयः ; तेषां श्रमस्त्वया अपनेतव्य इत्यर्थः । तेषां वा आसने गोष्ठीनिमित्ते समुदिते, तेषु न प्रश्वसितव्यं प्रश्वासोऽपि न कर्तव्यः ; केवलं तदुक्तसारग्राहिणा भवितव्यम् ।
(ச.பா) எவர் ஒருவர் ஆசாரியத்துவம் முதலிய தர்மங்களுடையவராய். இருப்பதால் மேலானவர் (ஸ்ரேஷ்ட்டர்). அவ்வாறே அஹ்ர் பிராஹ்மணராயும். க்ஷத்திரியர் முதலியவைகள் அற்றவரோ அவருக்கு ஆசனம் முதலியவைகளை அளித்து அவரை ஆச்வாசபடுத்த அதாவது அவருடைய சிரமத்தைப் போக்கவேண்டும். இதன் பொருள்யாதெனில் உன்னால் அவருடைய சிரமம் போக்கப்பட வேண்டும். அவ்வாறே அவரை ஸபையில் உயர்ந்த ஆசனத்தில் இருத்தி மூச்சுவிடாமல் அவர் கூறுவதின் ஸாரத்தை கிரஹிப்பவனாய் இருக்கவேண்டும்.
किं च, यत्किञ्चिद्देयम् , तत् श्रद्धयैव दातव्यम् । अश्रद्धया अदेयं न दातव्यम् । श्रिया विभूत्या देयं दातव्यम् । ह्रिया लज्जया च देयम् । भिया भीत्या च देयम् । संविदा च मैत्र्य्यादिकार्येण देयम् ।
(ச.பா) மேலும் எவ்வளவு சிறியதானமாய் இருந்தாலும் சிரத்தையுடன் அளிக்க வேண்டும். சிரத்தை அற்று தானம் செய்யக்கூடாது. ஐஸ்வர்யத்திற்குத் தக்கவாறு அளிக்கவேண்டும். வெட்கத்துடன் கொடுக்கவேண்டும். பயத்துடன் அளிக்கவேண்டும். சம்வித் அதாவது மைத்திரியாதி காரியத்தின் நிமித்தமாக அளிக்க வேண்டும் (தானம் செய்யவேண்டும்).
अथ एवं वर्तमानस्य यदि कदाचित् ते तव श्रौते स्मार्ते वा कर्मणि वृत्ते वा आचारलक्षणे विचिकित्सा संशयः स्यात् भवेत् , ये तत्र तस्मिन्देशे काले वा ब्राह्मणाः तत्र कर्मादौ युक्ता इति व्यवहितेन सम्बन्धः कर्तव्यः ; संमर्शिनः विचारक्षमाः, युक्ताः अभियुक्ताः, कर्मणि वृत्ते वा आयुक्ताः अपरप्रयुक्ताः, अलूक्षाः अरूक्षाः अक्रूरमतयः, धर्मकामाः अदृष्टार्थिनः अकामहता इत्येतत् ; स्युः भवेयुः, ते ब्राह्मणाः यथा येन प्रकारेण तत्र तस्मिन्कर्मणि वृत्ते वा वर्तेरन् , तथा त्वमपि वर्तेथाः । अथ अभ्याख्यातेषु, अभ्याख्याता अभ्युक्ताः दोषेण सन्दिह्यमानेन संयोजिताः केनचित् , तेषु च ; यथोक्तं सर्वमुपनयेत् - ये तत्रेत्यादि ।
(ச.பா) இவ்வாறு அனுஷ்டானம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஏதாவது ஒரு ஸமயத்தில் ச்ரௌதத்திலோ ஸ்மார்தத்திலோ அதை கடைபிடிப்பதிலோ ஸந்தேஹம் உண்டாகலாம். அப்பொழுது எவர்கள் அந்த தேசத்திலோ, காலத்திலோ அங்கு பிராஹ்மணர்கள் கர்மங்களில் ஈடுபட்டவர்களாய் இருப்பார்கள் என்ற இடைவெளியுடன் கூடிய பதத்துடன் ஸம்பந்தம் செய்யவேண்டும். संमर्शिनः (ஸம்மர்ஷின) விசாரத்தில் ஸாமர்த்தியசாலிகள். युक्ता (யுக்தா) கர்ம அல்லது கர்மத்தை அனுஷ்டிப்பதில் பூர்ணமாய் ஈடுபடுபவர்கள். आयुक्ताः (ஆயுக்த்தா:) மற்றவைகளில் ஈடுபாடு அற்றவர்க்ள். अलूक्षाः (அலூக்ஷா:) குரூரத் தன்மை அற்ற மதியுடையவர்கள் धर्मकामाः (தர்மகாமா:) அதிருஷ்ட்டத்தில் இச்சை உடையவர்களாயும் காமனைவசத்தால் விவேக சூன்யமற்றவர்கள். அந்த பிராஹ்மணர்கள் எவ்விதமாய் அந்த கர்மங்களில் பிரவிர்த்திக்கிறார்களோ அவ்வாறு நீயும் பிரவிர்த்திப்பாயாக. அவ்வாறே. अभ्याख्याताः (அப்யாக்கியாதா) अभ्युक्त (அப்யுக்தா) அதாவது எவரிடத்தில் ஸம்ஸயத்துடன் கூடிய தோஷம் ஆரோபிக்கப்பட்டதோ அவர்களுக்கு எவ்வாறு முன்பு “ये तत्र” (யேதத்ர) முதலியவைகளால் கூறப்பட்ட எல்லா வியவகாரங்களும் பிரயோகம் செய்யவேண்டியதாகும்.
एषः आदेशः विधिः । एषः उपदेशः पुत्रादिभ्यः पित्रादीनामपि । एषा वेदोपनिषत् वेदरहस्यम् , वेदार्थ इत्येतत् । एतदेव अनुशासनम् ईश्वरवचनम् , आदेशवाच्यस्य विधेरुक्तत्वात् । सर्वेषां वा प्रमाणभूतानामनुशासनमेतत् । यस्मादेवम् , तस्मात् एवं यथोक्तं सर्वम् उपासितव्यं कर्तव्यम् । एवमु च एतत् उपास्यम् उपास्यमेव चैतत् नानुपास्यम् इत्यादरार्थं पुनर्वचनम् ॥ ४ ॥
(ச.பா) இந்த ஆதேசம் (आदेशं) என்பது விதி (विधि) அது புத்திரன் முதலியவர்களுக்கு பிதா முதலியவர்கள் செய்யும் உபதேசமாகும். அந்த உபநிஷத் வேதத்தின் ரஹஸ்யார்த்தமாகும். அதையே அனுசாசனம் (உபதேசம்) செய்ய வேண்டும் என்பது ஈஸ்வர வாக்கியம், அல்லது ஆதேச வாக்கியம் விதியாகும். அது முதலிலேயே கூறப்பட்டதால். இது எல்லா பிரமாண பூதமானதை (உபதேசம்) இங்கு அனுசாஸனம் செய்யப்பட்டது. ஏன்எனில் முதலில் கூறப்பட்டது எல்லாம் உபாஸனை செய்யவேண்டும். இது உபாஸனை செய்யவேண்டும். உபாஸனை செய்யாமல் இருக்கக்கூடாது. இவ்வாறு இரண்டு முறைகூறப்பட்டது உபாஸனையின் ஆதரவின் பொருட்டாகும்.
अत्रैतच्चिन्त्यते विद्याकर्मणोर्विवेकार्थम् - किं कर्मभ्य एव केवलेभ्यः परं श्रेयः, उत विद्यासंव्यपेक्षेभ्यः, आहोस्विद्विद्याकर्मभ्यां संहताभ्याम् , विद्याया वा कर्मापेक्षायाः, उत केवलाया एव विद्याया इति ।
(ச.பா) இப்பொழுது வித்யா, கர்மங்களை விவேகம் செய்வதற்காக இங்கு விசாரம் செய்யப்படுகிறது. (1) பரமஸ்ரேயஸ் (மோக்ஷம்) கர்மத்தினால் மட்டும் அடையப்படுகிறதா? (2) அல்லது வித்தையின் அபேக்ஷயைுடன் கூடிய கர்மத்தாலா? (3) அல்லது ஒன்றுக்கொன்று கலந்த வித்தியா கர்மம் இரண்டினாலுமா? (4) அல்லது கர்மத்தை அபேக்ஷிக்கும் வித்யையினாலா? (5) அல்லது வித்யையினால் மட்டுமா? என்று.
तत्र केवलेभ्य एव कर्मभ्यः स्यात् , समस्तवेदार्थज्ञानवतः कर्माधिकारात् ‘वेदः कृत्स्नोऽधिगन्तव्यः सरहस्यो द्विजन्मना’ इति स्मरणात् । अधिगमश्च सहोपनिषदर्थेनात्मज्ञानादिना । ‘विद्वान्यजते’ ‘विद्वान्याजयति’ इति च विदुष एव कर्मण्यधिकारः प्रदर्श्यते सर्वत्र ज्ञात्वानुष्ठानमिति च । कृत्स्नश्च वेदः कर्मार्थ इति हि मन्यन्ते केचित् । कर्मभ्यश्चेत्परं श्रेयो नावाप्यते, वेदोऽनर्थकः स्यात् ।
(ச.பா) கர்மங்களினால் மாத்திரம் (மட்டும்) சிரேயஸை அடையலாம். ஏன்எனில் எல்லா வேதார்த்தங்களையும் அறிந்தவனுக்கே கர்மத்தில் அதிகாரம் இருப்பதால். இதை “वेदः कृत्स्नोऽधिगन्तव्यः सरहस्यो द्विजन्मना” பிராஹ்மணர்கள் வேதம் முழுவதையும் ரஹஸ்யத்துடன் அறியவேண்டும் என்று ஸ்மிருதியினால் அறிகிறோம். மேலும் வேதத்தின்ஞானம் உபநிஷத்தின் அர்த்தமான ஆத்ம ஞானத்துடன் கூடியதாகிறது “विद्वान्यजते” (வித்வான்யஜதே)- வித்வான் யக்ஞம் செய்கிறான். “विद्वान्याजयति” (வித்வான்யாஜயதி) - வித்வான் யக்ஞத்தை செய்விக்கிறான் என்று வித்வானுக்கே கர்மத்தில் அதிகாரம் என்று எங்கும் காண்பிக்கப்படுகிறது. மேலும் .“ज्ञात्वा चानुष्ठानम्” (ஞாத்வா சானுஷ்டானம்)- அறிந்து அனுஷ்டானம் செய் என்றும் கூறப்படுகிறது. வேதம் முழுவதும் கர்மத்தின் பொருட்டே என்று சிலர் கருதுகிறார்கள். கர்மத்தினால் பரமச்ரேயஸ் (மோக்ஷம்) அடையப்படவில்லை எனில் வேதம் அர்த்தமற்றதாகிவிடும்.
न ; नित्यत्वान्मोक्षस्य । नित्यो हि मोक्ष इष्यते । कर्मकार्यस्य चानित्यत्वं प्रसिद्धं लोके । कर्मभ्यश्चेच्छ्रेयः, अनित्यं स्यात् ; तच्चानिष्टम् । ‘तद्यथेह कर्मचितो लोकः क्षीयते’ (छा. उ. ८ । १ । ६) इतिन्यायानुगृहीतश्रुतिविरोधात् ।
(ச.பா) அது பொருந்தாது. ஏன்எனில் மோக்ஷம் நித்யமானதால். அந்த மோக்ஷம் நித்தியம் என்று ப்ரஸித்தம் உலகில் கர்மகாரியங்களுக்கு அநித்தியத்துவம் பிரஸித்தமாய் இருக்கிறது. ஆகையால் கர்மங்களினால் சிரேயஸ் அநித்தியம் ஆகையால் இது விரும்பத்தக்கதல்ல. “तद्येतह कर्मचितो लोकः क्षीयते” (தத்யதேஹ கர்மசிதோ லோக: க்ஷீயதே) எவ்வாறு கர்மத்தினால் ஸம்பாதிக்கப்பட்ட லோகம் க்ஷீணமாகிறது (நஷ்ட்டமாகிறது) என்ற நியாயத்தை அனுஸரித்த ச்ருதிக்கு விரோதமாகும்.
ननु काम्यप्रतिषिद्धयोरनारम्भात् आरब्धस्य च कर्मण उपभोगेनैव क्षयात् नित्यानुष्ठानाच्च प्रत्यवायानुपपत्तेः ज्ञाननिरपेक्ष एव मोक्ष इति चेत् ?
(ச.பா) காமிய பிரதி:த்த ப்ராரப்த கர்மங்கள் ஆரம்பிக்காமலும் கர்மங்களை அனுபவத்தால் க்ஷயமாவதாலும், நித்ய அனுஷ்டானத்தால் பிரத்யவாயம் உண்டாகாததாலும் மோக்ஷத்திற்கு ஞானத்தின் அபேக்ஷை இல்லை என்றால்.
तच्च न, कर्मशेषसम्भवात्तन्निमित्ता शरीरान्तरोत्पत्तिः प्राप्नोतीति प्रत्युक्तम् ; कर्मशेषस्य च नित्यानुष्ठानेनाविरोधात्क्षयानुपपत्तिरिति च ।
அது பொருந்தாது சேஷகர்மங்கள் இருப்பதின் காரணமாக வேறு சரீரத்தின் உத்பத்தியை அடைவான் என்று கூறப்பட்டுள்ளது. கர்மசேஷம் நித்ய அனுஷ்டானத்திற்கு விரோதமில்லாததால் அதற்கு நாசம் இல்லை என்பதாகும்.
यदुक्तं समस्तवेदार्थज्ञानवतः कर्माधिकारादित्यादि, तच्च न ; श्रुतज्ञानव्यतिरेकादुपासनस्य । श्रुतज्ञानमात्रेण हि कर्मण्यधिक्रियते, नोपासनज्ञानमपेक्षते । उपासनं च श्रुतज्ञानादर्थान्तरं विधीयते मोक्षफलम् ; अर्थान्तरप्रसिद्धेश्च स्यात् ; ‘श्रोतव्यः’ इत्युक्त्वा तद्व्यतिरेकेण ‘मन्तव्यो निदिध्यासितव्यः’ इति यत्नान्तरविधानात् मनननिदिध्यासनयोश्च प्रसिद्धं श्रवणज्ञानादर्थान्तरत्वम् ।
(ச.பா) எல்லா வேதார்த்தங்களையும் அறிந்தவனே கர்மாதிகாரி என்று கூறியது முதலியவை ஸரியல்ல. ஏன்எனில் உபாஸனை படித்து வந்த ஞானத்தைக்காட்டிலும் (ச்ருத ஞானத்தைக் காட்டிலும்) வேறானது. மனிதன் படித்த ஞானத்தினாலேயே கர்மத்திற்கு அதிகாரி ஆகிறான். ஆகையால் உபாசனையை அபேக்ஷிப்பதில்லை. உபாசனையோ படித்த ஞானத்தை விட வேறாக விதிக்கப்படுகிறது. அந்த உபாஸனை மோக்ஷத்தைப்பலனாக என்பது பிரசித்தமாய் இருக்கிறது. श्रोतव्यः (ஸ்ரோத்தவ்ய) = கேட்கப்பட வேண்டும்) என்று கூறி அதைக்காட்டிலும் வேறாக “मन्तव्यो निदिध्यासितव्यः” (மந்தவ்யோ நிதித்யாசித்தவ்ய:) = மனனம் செய்யவேண்டும், நிதித்தியாஸனம் செய்யவேண்டும் என்று வேறு பிரயத்தனத்தையும் கூறுகிறது. உலகில் சிரவண ஞானத்தால் மனனம், நிதித்தியாசனம் என்கின்ற வேறு அர்த்தமும் பிரஸித்தமாய் இருக்கிறது.
एवं तर्हि विद्यासंव्यपेक्षेभ्यः कर्मभ्यः स्यान्मोक्षः ; विद्यासहितानां च कर्मणां भवेत्कार्यान्तरारम्भसामर्थ्यम् ; यथा स्वतो मरणज्वरादिकार्यारम्भसमर्थानामपि विषदध्यादीनां मन्त्रसशर्करादिसंयुक्तानां कार्यान्तरारम्भसामर्थ्यम् , एवं विद्याहितैः कर्मभिः मोक्ष आरभ्यत इति चेत् ?
(ச.பா) வித்யையை அபேக்ஷிக்கும் கர்மத்தினால் தான் மோக்ஷம் உண்டாக முடியும். கர்மம் ஞானத்துடன் சேர்ந்து இருக்கும் பொழுது அதில் காரியாந்தரம் ஆரம்பிப்பதற்கான ஸாமர்த்தியம் உண்டாகிறது. எவ்வாறு மரணம், ஜ்வரம் முதலிய காரியங்கள் ஆரம்பிக்கும் ஸாமர்த்தியம் உண்டானாலும் விஷம், அவ்வாறே தயிர் முதலியவைகளில் மந்திரம் மேலும் சர்க்கரை முதலியவைகளுடன் சேரும் பொழுது காரியாந்தரத்தின் ஆரம்பத்திற்கான ஸாமர்த்தியம் உண்டாகிறது. அவ்வாறு வித்தையுடன் கூடிய கர்மத்தினால் மோக்ஷத்தின் ஆரம்பம் ஏற்படலாமே? என்பதற்கு-
(सिध्दान्ती) न ; आरभ्यस्यानित्यत्वादित्युक्तो दोषः ।
(ச.பா) (ஸித்தா) அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன் எனில் எது ஆரம்பிக்கப்படுகிறதோ அது அநித்தியம் என்ற தோஷத்துடன் கூடியதாகும் என்று முன்பே கூறப்பட்டுவிட்டது.
वचनादारभ्योऽपि नित्य एवेति चेत् ?
(ச.பா) (பூர்வ) ஆனால் (न स पुनरावर्तते - அவன் மறுபடியும் பிறப்பதில்லை) என்ற வாக்கியத்தால் ஆரம்பிக்கின்ற மோக்ஷமும் நித்யம் ஆகலாமே?
(सिध्दान्ती) न, ज्ञापकत्वाद्वचनस्य । वचनं नाम यथाभूतस्यार्थस्य ज्ञापकम् , नाविद्यमानस्य कर्तृ । न हि वचनशतेनापि नित्यमारभ्यते, आरब्धं वा अविनाशि भवेत् । एतेन विद्याकर्मणोः संहतयोर्मोक्षारम्भकत्वं प्रत्युक्तम् ॥
(ச.பா) (ஸித்தாந்தீ) இது ஸரியல்ல. ஏனெனில் வாக்கியம் என்பது அறியாததை ஞாபகப்படுத்துவதற்காகவே. வசனம் என்பது யதார்த்த அர்த்தத்தைப் போதிப்பதே ஆகும். இல்லாத பதார்த்தத்தை உண்டாக்காது. நூ ற்றுக்கணக்கான வசனத்தாலும் நித்யமானது ஆரம்பிக்க முடியாது. ஆரம்பிக்கப்படட்து விநாசம் அற்றதாகவும் முடியாது. இதிலிருந்து வித்தியா கர்மத்தின் சமுச்சயம் மோக்ஷத்தை ஆரம்பிக்கும் என்ற கக்ஷியும் பிரதிஷேதம் செய்யப்பட்டது (நிஷேதம் செய்யப்பட்டது).
विद्याकर्मणी मोक्षप्रतिबन्धहेतुनिवर्तके इति चेत् , न ; कर्मणः फलान्तरदर्शनात् । उत्पत्तिविकारसंस्काराप्तयो हि फलं कर्मणो दृश्यन्ते । उत्पत्त्यादिफलविपरीतश्च मोक्षः ।
(ச.பா) வித்யா, கர்மம் இரண்டும் மோக்ஷத்தின் பிரதிபந்தத்தை உண்டாக்கும் ஹேதுக்களை நிவர்த்திக்கக் கூடியதாகும் என்று நீ கூறினால் அது சரியல்ல. ஏன்எனில் கர்மத்தின் பலன் வேறாகக்கூறப்பட்டுள்ளது. உத்பத்தி, ஸம்ஸ்காரம், விகாரம், ஆப்தி இவைகள் கர்மத்தின் பலனாகக்கருதப்படுகிறது. ஆகையால் உத்பத்தியாதி பலத்தைக்காட்டிலும் விபரீதமானது (வேறானது) மோக்ஷம்.
(पूर्वपक्षी) गतिश्रुतेराप्य इति चेत् - ‘सूर्यद्वारेण’(मु. उ. १ । २ । ११), ‘तयोर्ध्वमायन्’ (क. उ. २ । ३ । १६) इत्येवमादिगतिश्रुतिभ्यः प्राप्यो मोक्ष इति चेत् ।
(ச.பா) (பூர்வ) “கதி” சுருதியினால் மோக்ஷம் அடைப்பட வேண்டியது என்று கிடைக்கிறது எனில் ‘सूर्यद्वारेण’(मु. उ. १ । २ । ११), “‘तयोर्ध्वमायन्’ (क. उ. २ । ३ । १६)” (“சூரியத்வாரேண” “தயோர்த்வமாயன்”) முதலிய கதி சுருதிகளால் மோக்ஷம் அடையப்பட முடியும் என்று அறியப்படுகிறதே எனில்.
न ; सर्वगतत्वात् गन्तृभ्यश्चानन्यत्वात् । आकाशादिकारणत्वात्सर्वगतं ब्रह्म, ब्रह्माव्यतिरिक्ताश्च सर्वे विज्ञानात्मानः ; अतो नाप्यो मोक्षः । गन्तुरन्यद्विभिन्नदेशं च भवति गन्तव्यम् । न हि, येनैवाव्यतिरिक्तं यत् , तत्तेनैव गम्यते । तदनन्यत्वसिद्धिश्च ‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ (तै. उ. २ । ६ । १) ‘क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु’ (भ. गी. १३ । २) इत्येवमादिश्रुतिस्मृतिशतेभ्यः ।
(ச.பா) அவ்வாறு அல்ல. ஏன்எனில் எங்கும் நிறைந்துள்ளதாலும். செல்பவனைக்காட்டிலும் வேறாகாததாலும் ஆகாசம் முதலியவைகளுக்கும் காரணமாய் இருப்பதால் ஸர்வகதம் (எங்கும் நிறைந்தது). எல்லா ஜீவ ஆத்மாக்களும் பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறானவர்கள் அல்ல (அபின்னமாகும்). ஆகையால் மோக்ஷம் அடையக்கூடியது அல்ல. செல்பவன் தான் இருக்கும் இடத்தைத் தவிற வேறு இடத்திற்கு செல்லவேண்டும் என்று தோன்றுகிறது. எது எதைக்காட்டிலும் அபின்னமோ அதற்கு செல்லுதல் என்பது கிடையாது. மேலும் அதைக்காட்டிலும் வேறானது இல்லை என்று பிரஸித்தமாகும் பொழுது .“‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ (तै. उ. २ । ६ । १)” “‘क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु’ (भ. गी. १३ । २)”(தத்ஸ்ருஷ்ட்வா ததேவானுப்ராவிஷத், க்ஷதே்ரக்ஞம் சாபிமாம் வித்தி) = அது சிருஷ்ட்டி செய்து அதே உள்ளே நுழைந்தது, அந்த க்ஷதே்ரக்ஞன் என்று என்னை அறி) என்று சுருதி, ஸ்மிருதிகளால் ஸித்தமாகிறது.
गत्यैश्वर्यादिश्रुतिविरोध इति चेत् - अथापि स्यात् यद्यप्राप्यो मोक्षः, तदा गतिश्रुतीनाम् ‘स एकधा’ (छा. उ. ७ । २६ । २) ‘स यदि पितृलोककामः भवति’ (छा. उ. ८ । २ । १) ‘स्त्रीभिर्वा यानैर्वा’ (छा. उ. ८ । १२ । ३) इत्यादिश्रुतीनां च कोपः स्यात् इति चेत् ।
(ச.பா) கதி, ஐஸ்வர்யங்களைப் பற்றி உரைக்கும் சுருதிகளுக்கு விரோதமாகுமே. மோக்ஷம் அடையப்படாததாக இருந்தால் கதி சுருதியும் “‘स एकधा’ (छा. उ. ७ । २६ । २)” (ச ஏகதா = அது ஒரே ரூபமாய் இருக்கிறது) “‘स यदि पितृलोककामः भवति’ (छा. उ. ८ । २ । १)”(ச யதி பித்ருலோககாமோபவதி = அவன் பித்ருலோகத்தில் ஆசை உள்ளவனாய் இருக்கிறான்) “‘स्त्रीभिर्वा यानैर्वा’ (छा. उ. ८ । १२ । ३)” (ஸ்த்ரீபிர்வா யானைர்வா = அவன் ஸ்திரீ, யானம் (மார்க்ககம்) இவைகளுடன் சேர்த்து ஸ்மரிக்கிறான்). என்ற சுருதிகளுக்கு கோபம் வருமே எனில்.
(सिध्दान्ती) न ; कार्यब्रह्मविषयत्वात्तासाम् । कार्ये हि ब्रह्मणि स्त्र्यादयः स्युः, न कारणे ; ‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) ‘यत्र नान्यत्पश्यति’ (छा. उ. ७ । २४ । १) ‘तत्केन कं पश्येत्’ (बृ. उ. २ । ४ । १४)(बृ. उ. ४ । ५ । १५) इत्यादिश्रुतिभ्यः ।
(ச.பா) (ஸித்தாந்தீ) அது சரியல்ல. அவைகள் காரிய பிரஹ்ம விஷயமாய் இருப்பதால். காரிய பிரஹ்மத்தில் அல்லவா ஸ்திரீ முதலியவைகள் இருக்கும், காரண பிரஹ்மத்தில் இருக்க முடியாது. “‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १)” (ஏகமேவாத்விதீயம் = ஒன்றே அத்வீத்யம்), “‘यत्र नान्यत्पश्यति’ (छा. उ. ७ । २४ । १)” (யத்ர நான்யத்பச்யதி-எங்கு வேறு ஒன்றையும் பார்ப்பதில்லை) “‘तत्केन कं पश्येत्’ (बृ. उ. २ । ४ । १४)” (தத்கேன கம் பஷ்யேத் = அதை எவரால் எதைப்பார்ப்பான்) முதலிய ஸ்ருதிகளால் அறிகிறோம்.
विरोधाच्च विद्याकर्मणोः समुच्चयानुपपत्तिः । प्रलीनकर्त्रादिकारकविशेषतत्त्वविषया हि विद्या तद्विपरीतकारकसाध्येन कर्मणा विरुध्यते । न ह्येकं वस्तु परमार्थतः कर्त्रादिविशेषवत् तच्छून्यं चेति उभयथा द्रष्टुं शक्यते । अवश्यं ह्यन्तरन्मिथ्या स्यात् । अन्यतरस्य च मिथ्यात्वप्रसङ्गे युक्तं यत्स्वाभाविकाज्ञानविषयस्य द्वैतस्य मिथ्यात्वम् ; ‘यत्र हि द्वैतमिव भवति’ (बृ. उ. २ । ४ । १४), ‘मृत्योः स मृत्युमाप्नोति’ (क. उ. २ । १ । १०)(बृ. उ. ४ । ४ । १९) ‘अथ यत्रान्यत्पश्यति तदल्पम्’ (छा. उ. ७ । २४ । १) ‘अन्योऽसावन्योऽहमस्मि’ (बृ. उ. १ । ४ । १०) ‘उदरमन्तरं कुरुते। अथ तस्य भयं भवति’ (तै. उ. २ । ७ । १) इत्यादिश्रुतिशतेभ्यः ।
(ச.பா) வித்யாவும் கர்மமும் விரோதமாய் இருப்பதால் அவைகளுக்கு ஸமுச்சயம் (சேர்க்கை) ஏற்படமுடியாது. எதில் கர்த்தா, கரண முதலிய காரக விசேஷங்கள் முற்றிலும் லயமடைந்த அந்த தத்துவத்தை (பிரஹ்மத்தை) விஷயம் செய்யும் வித்யா தனக்கு விபரீதமான ஸாதன ஸாத்தியமான கர்மத்தைக் காட்டிலும் விருத்தமானது. ஒரு வஸ்து உண்மையில் (பரமார்த்தமாக) கர்த்தாமுதலிய விசேஷங்களுடன் கூடியதாயும், அவைகள் அற்றதாகவும் இருக்கும். இரண்டு விதமாக காணமுடியாது அவைகளில் ஒருபக்ஷம் நிச்சயமாக மித்யாவாக (தவறாக) இருக்கவேண்டும். இவ்வாறு ஏதோ ஒன்று மித்யாத்துவமாய் இருக்கும் பொழுது அது ஸ்வபாவமாகவே அக்ஞான விஷயமாய் இருக்கும். அந்த துவைதம் மித்யை என்பதே பொருந்தும். “‘यत्र हि द्वैतमिव भवति’ (बृ. उ. २ । ४ । १४)” (யத்ர ஹித்வைதமிவ பவதி - எங்கு துவைதம் போல் தோன்றுகிறதோ) “‘मृत्योः स मृत्युमाप्नोति’ (क. उ. २ । १ । १०) (बृ. उ. ४ । ४ । १९)” (மிருத்யோ: ச மிருத்யுமாப்னோதி = மரணத்திலிருந்து மரணத்தை அடைகிறான்) “‘अथ यत्रान्यत्पश्यति तदल्पम्’ (छा. उ. ७ । २४ । १)” (எங்கு வேறாய் பார்க்கிறானோ அது அல்பம்) “‘अन्योऽसावन्योऽहमस्मि’ (बृ. उ. १ । ४ । १०) ” (அன்யோऽஅசாவன்யோऽஹமஸ்மி = எது அன்யமோ நான் அங்கு அன்யன்.). “‘उदरमन्तरं कुरुते। अथ तस्य भयं भवति’ (तै. उ. २ । ७ । १)” (உதரமந்தரம் குருதே அத தஸ்ய பயம் பவதி = எவன் சிறிதளவு வேறாய் பார்த்தாலும் பயம் உண்டாகும்) முதலிய நூ ற்றுக்கணக்கான சுருதி பிரமாணங்கள் இருக்கின்றன.
सत्यत्वं च एकत्वस्य ‘एकधैवानुद्रष्टव्यम्’ (बृ. उ. ४ । ४ । २०) ‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) ‘ब्रह्मैवेदं सर्वम्’ ‘आत्मैवेदं सर्वम्’ (छा. उ. ७ । २५ । २) इत्यादिश्रुतिभ्यः । न च सम्प्रदानादिकारकभेदादर्शने कर्मोपपद्यते । अन्यत्वदर्शनापवादाश्च विद्याविषये सहस्रशः श्रूयन्ते । अतो विरोधो विद्याकर्मणोः । अतश्च समुच्चयानुपपत्तिः । तत्र यदुक्तं संहताभ्यां विद्याकर्मभ्यां मोक्ष इत्येतदनुपपन्नमिति, तदयुक्तम् ,॥
(ச.பா) “‘एकधैवानुद्रष्टव्यम्’ (बृ. उ. ४ । ४ । २०)” (ஏகதைவானுத்ரஷ்ட்டவ்யம் ஒரே ரூபமாகவே பார்க்கவேண்டும்). “‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) ” (ஏகமேவாத்விதீயம் = ஒன்றே அத்வைதம்) “‘ब्रह्मैवेदं सर्वम्’” (பிரஹ்மைவேதப் சர்வம் = இவை எல்லாம் பிரஹ்மமே). ‘आत्मैवेदं सर्वम्’ (छा. उ. ७ । २५ । २) (ஆத்மைவ சர்வம் = இவை எல்லாம் ஆத்மாவே) என்பது முதலிய சுருதிகளினால் ஒன்றே சத்தியம் (ஏகத்துவமே சத்தியம்) என்று ஸித்திக்கிறது. ஸம்பிரதானம் முதலிய காரகபேதம் இல்லாததால் கர்மம் ஏற்படுவது ஸம்பவிக்காது. வித்யா விஷயத்தில் அதாவது ஞானவிஷயத்தில் பேத திருஷ்ட்டியின் அபவாதம் ஆயிரக்கணக்காய் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆகையால் வித்யா கர்மங்களுக்குள் விரோதம் உள்ளது. ஆகையால் ஸமுச்சயம் பொருந்தாது. எது முன்பு கூறப்பட்டுள்ளதோ “ஒன்றுக்கொன்று கலந்த வித்யா மேலும் கர்மம் இரண்டினாலும் மோக்ஷம் அடையப்படும்” என்பது ஸித்திக்காது.
(पूर्वपक्षी) तद्विहितत्वात्कर्मणां श्रुतिविरोध इति चेत् - यद्युपमृद्य कर्त्रादिकारकविशेषमात्मैकत्वविज्ञानं विधीयते सर्पादिभ्रान्तिज्ञानोपमर्दकरज्ज्वादिविषयविज्ञानवत् , प्राप्तः कर्मविधिश्रुतीनां निर्विषयत्वाद्विरोधः । विहितानि च कर्माणि । स च विरोधो न युक्तः, प्रमाणत्वाच्छ्रुतीनामिति चेत् ?
(ச.பா) (பூர்வ) கர்மாவும் சுருதியினால் விதிக்கப்பட்டுள்ளதால் அந்த சுருதிக்கு விரோதம் ஆகும். ஸர்ப்ப முதலிய பிராந்திஞானத்தைபாதிக்கும் (நீக்கும்) ரஜ்ஜ) (கயிறு) முதலிய விஷய ஞானத்திற்கு ஸமமாக கர்த்தாமுதலிய காரக விசேஷங்களை நீக்கி ஆத்ம ஏகத்துவஞானத்தை விதானம் செய்யப்பட்டாலும் விஷயம் ஒன்றும் இல்லாததின் காரணத்தால் கர்மத்தை விதானம் செய்யும் சுருதிக்கு (வித்யையை விதானம் செய்யும் சுருதிகளுக்கு) விரோதமாகும். சுருதியினால் கர்மங்கள் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அதற்கு விரோதம் பொருந்தாது. ஏன்எனில் எல்லா சுருதிகளும் பிரமாண பூதமாய் இருப்பதால் விரோதம் என்பது ஸரியல்ல என்று இவ்வாறு கூறினால்.
(सिध्दान्ती) न ; पुरुषार्थोपदेशपरत्वाच्छ्रुतीनाम् । विद्योपदेशपरा तावच्छ्रुतिः संसारात्पुरुषो मोक्षयितव्य इति संसारहेतोरविद्यायाः विद्यया निवृत्तिः कर्तव्येति विद्याप्रकाशकत्वेन प्रवृत्तेति न विरोधः ।
(ச.பா) (ஸித்தாந்தீ) அவ்வாறு கூறுவது ஸரியல்ல. ஏன்எனில் சுருதிகள் பரமபுருஷார்த்தத்தை உபதேசம் செய்யவே பிரவிர்த்திக்கின்றன. சுருதியானது ஞானத்தை உபதேசம் செய்வதிலேயே குறியாய் இருக்கிறது. (தத்பரமாய் இருக்கிறது). ஸம்சாரத்திலிருந்து புருஷனை விடுவிக்கவேண்டும் (மோக்ஷம் அடையச் செய்யவேண்டும்) என்று ஸம்சாரத்திற்குக் காரணமான அவித்தியாவை வித்யையினால் நிவிர்த்தி செய்ய வேண்டும் என்று வித்தையை பிரகாசப்படுத்த மட்டுமே வந்திருப்பதால் விரோதம் இல்லை.
(पूर्वपक्षी) एवमपि कर्त्रादिकारकसद्भावप्रतिपादनपरं शास्त्रं विरुध्यत एवेति चेत् ?
(ச.பா) (பூர்வ) அவ்வாறானாலும் கர்த்தாமுதலிய காரகங்கள் இருக்கிறது என்பதை பிரதிபாதனம் செய்யும் சாஸ்திரம் விருத்தமானதே என்றால்.
(सिध्दान्ती) न ; यथाप्राप्तमेव कारकास्तित्वमुपादाय उपात्तदुरितक्षयार्थं कर्माणि विदधच्छास्त्रं मुमुक्षूणां फलार्थिनां च फलसाधनं न कारकास्तित्वे व्याप्रियते । उपचितदुरितप्रतिबन्धस्य हि विद्योत्पत्तिर्नावकल्पते । तत्क्षये च विद्योत्पत्तिः स्यात् , ततश्चाविद्यानिवृत्तिः, तत आत्यन्तिकः संसारोपरमः ।
(ச.பா) (ஸித்தாந்தீ) அவ்வாறு அல்ல. ஸ்வபாவமாகவே அறியப்பட்ட காரகங்களை ஸ்வீகரித்துக்கொண்டு ஸஞ்சித பாபங்களின் க்ஷயத்திற்காக கர்மங்களை விதிக்கும் சாஸ்திரம் முமுக்ஷ)க்களுக்கும், பலத்தில் இச்சை உடையர்களுக்கும் பல ஸாதனங்களை போதிக்கும் காரகங்களின் இருத்தலை ஊர்ஜிதம் செய்வதற்காக பிரவிர்த்திக்கவில்லை. எவனுக்கு ஸஞ்சித பாபரூப பிரதிபந்தம் இருக்குமோ அவனுக்கு ஞானம் உண்டாகாது. அதன் க்ஷயம் உண்டான உடன் ஞானம் உண்டாகும். மேலும் அப்பொழுது அவித்யையின் நிவிர்த்தி உண்டாகும். அதன் பின் ஸம்சாரத்தின் ஆத்யந்திக உபரதி (முடிவு) உண்டாகும். முற்றிலும் ஸம்சாரம் சாந்தியாகும் (நீங்குகிறது).
अपि च, अनात्मदर्शिनो ह्यनात्मविषयः कामः ; कामयमानश्च करोति कर्माणि ; ततस्तत्फलोपभोगाय शरीराद्युपादानलक्षणः संसारः । तद्व्यतिरेकेणात्मैकत्वदर्शिनो विषयाभावात्कामानुपपत्तिः, आत्मनि चानन्यत्वात्कामानुपपत्तौ स्वात्मन्यवस्थानं मोक्ष इत्यतोऽपि विद्याकर्मणोर्विरोधः । विरोधादेव च विद्या मोक्षं प्रति न कर्माण्यपेक्षते ।
(ச.பா) மேலும் எவன் அநாத்மதர்சியோ அவனுக்கே அநாத்ம வஸ்து ஸம்பந்தமான காமனை ஏற்படும். காமம் உடையவனே கர்மத்தை செய்கிறான். மேலும் அதனால் உண்டாகும் பலனை அனுபவிப்பதற்காக சரீரம் முதலியவைகளை கிரஹண ரூபமான ஸம்சாரத்தை அடைகிறான். அதை விட வேறான ஆத்ம ஏகத்துவதர்சிக்கு விஷயங்கள் இல்லாததால் (அபாவமாய் இருப்பதால்) அதில் அவனுக்கு காமம் ஏற்படுவதில்லை. ஆத்மா தன்னைக்காட்டிலும் அபின்னமாகும். ஆகையால் அதனிடம் காமனையும் ஸம்பவிக்காததால் ஆகையால் ஸ்வாத்ம ஸ்வரூபத்திலேயே நிலை பெறுதலான மோக்ஷம் ஸித்திக்கும். ஆகையால் ஞானத்திற்கும் கர்மத்திற்கும் விரோதம் உள்ளதால் ஞானமே மோக்ஷத்திற்குக்காரணம் ஞானமானது. மோக்ஷம் தருவதற்கு கர்மத்தை அபேக்ஷிப்பதில்லை.
स्वात्मलाभे तु पूर्वोपचितदुरितप्रतिबन्धापनयनद्वारेण विद्याहेतुत्वं प्रतिपद्यन्ते कर्माणि नित्यानीति । अत एवास्मिन्प्रकरणे उपन्यस्तानि कर्माणीत्यवोचाम । एवं च अविरोधः कर्मविधिश्रुतीनाम् । अतः केवलाया एव विद्यायाः परं श्रेय इति सिद्धम् ॥
(ச.பா) ஞானம் தான் உண்டாவதன் பொருட்டு முன்பு சேகரித்த (சஞ்சித) பாப ரூப பிரதிபந்தத்தை நிவிர்த்தி வாயிலாய் நித்யகர்மா ஞானத்தை அடைவதற்கான ஹேதுவாய் இருப்பதால் அவசியம் தேவையாகிறது. ஆகையால் இந்த பிரகரணங்களில் கர்மங்கள் கூறப்பட்டுள்ளன. என்பது முன்பே கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கர்மங்களை விதிக்கும் சுருதிகளுக்கு விரோதம் இல்லை. ஆகையால் வித்யையினால் மாத்திரமே பரமச்ரேயசின் பிராப்தி உண்டாகும் என்பது ஊர்ஜிதமாகிறது.
(पूर्वपक्षी) एवं तर्हि आश्रमान्तरानुपपत्तिः, कर्मनिमित्तत्वाद्विद्योत्पत्तेः । गृहस्थस्यैव विहितानि कर्माणीत्यैकाश्रम्यमेव । अतश्च यावज्जीवादिश्रुतयः अनुकूलतराः स्युः ।
(ச.பா) (பூர்வ) இவ்வாறானால் அன்ய ஆச்ரமம் அதாவது கிரஹஸ்தாஸ்ரமத்தைக் காட்டிலும் வேறு ஆஸ்ரமம் பொருந்தாதே. ஏன்எனில் வித்யையின் உற்பத்தி கர்மத்தின் நிமித்தத்தால் உண்டாகிறது. அந்த கர்மம் கேவலம் கிரஹஸ்தனுக்கே விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஒரே ஆச்ரமமே சித்திக்கிறது. மேலும் “यावज्जीव” (யாவத்ஜீவ = ஜீவிக்கிறவரையில் கர்மம் செய்யவேண்டும்) என்றும் இதற்கு அனுகூலமாக சுருதிகளும் இருக்கின்றன.
(सिध्दान्ती) न ; कर्मानेकत्वात् । न ह्यग्निहोत्रादीन्येव कर्माणि, ब्रह्मचर्यं तपः सत्यवचनं शमः दमः अहिंसा इत्येवमादीन्यपि कर्माणि इतराश्रमप्रसिद्धानि विद्योत्पत्तौ साधकतमान्यसङ्कीर्णा विद्यन्ते ध्यानधारणादिलक्षणानि च । वक्ष्यति च - ‘तपसा ब्रह्म विजिज्ञासस्व’ (तै. उ. ३ । २ । १) इति ।
(ச.பா) (சித்தாந்தீ) அவ்வாறு அல்ல. கர்மா அநேகவிதமாக இருப்பதால். கேவலம் அக்னிஹோத்திரம் முதலியவைகள் மாத்திரம் கர்மம் அல்ல. பிரஹ்மச்சரியம், தபஸ், ஸத்தியம் பேசுதல், சமம், தமம், அஹிம்ஸா முதலிய மற்ற கர்மங்கள் வேறு ஆச்ரமங்களில் பிரசித்தமாகும். அவ்வாறே தியானம், தாரணை முதலிய கர்மங்கள் (ஹிம்சை முதலிய தோங்கள்) இல்லாததின் காரணமாய் இருத்தலால் ஞானம் உண்டாவதற்கு மிகவும் உத்தமமான ஸாதனமாகும். .“‘तपसा ब्रह्म विजिज्ञासस्व’ (तै. उ. ३ । २ । १)”(தபசா பிரஹ்ம்ம விஜிக்ஞாசஸ்வ = தபசால் பிரஹ்மத்தை அறிவதற்கு இச்சை கொள் என்று). ப்ருகு வல்லியில் கூறப்போகிறார்.
जन्मान्तरकृतकर्मभ्यश्च प्रागपि गार्हस्थ्याद्विद्योत्पत्तिसम्भवात् , कर्मार्थत्वाच्च गार्हस्थ्यप्रतिपत्तेः, कर्मसाध्यायां च विद्यायां सत्यां गार्हस्थ्यप्रतिपत्तिरनर्थिकैव ।
(ச.பா) முன்ஜன்மங்களில் செய்த கர்மத்தால் கிரஹஸ்த்தாஸ்ரமத்தை ஸ்வீகாரம் செய்வதற்கு முன்பே ஞானத்தின் உத்பத்தி ஸம்பவிக்கும். அவ்வாறே கிரஹஸ்த்தாஸ்ரமத்தின் ஸ்வீகாரமும் கேவலம் கர்மங்களுக்காகவே ஏற்பட்டது. ஆகையால் கர்ம ஸாத்திய ஞானத்தின் பிராப்தி ஏற்பட்டுவிட்டால் கிரஹஸ்த்தாஸ்ரமத்தின் ஸ்வீகரணமும் வியர்த்தமாகும். (விணாக ஆகும்)
लोकार्थत्वाच्च पुत्रादीनाम् । पुत्रादिसाध्येभ्यश्च अयं लोकः पितृलोको देवलोक इत्येतेभ्यो व्यावृत्तकामस्य, नित्यसिद्धात्मदर्शिनः, कर्मणि प्रयोजनमपश्यतः, कथं प्रवृत्तिरुपपद्यते ? प्रतिपन्नगार्हस्थ्यस्यापि विद्योत्पत्तौ विद्यापरिपाकाद्विरक्तस्य कर्मसु प्रयोजनमपश्यतः कर्मभ्यो निवृत्तिरेव स्यात् , ‘प्रव्रजिष्यन्वा अरेऽहमस्मात्स्थानादस्मि’ (बृ. उ. ४ । ५ । २) इत्येवमादिश्रुतिलिङ्गदर्शनात् ।
(ச.பா) புத்திரன் அடைதல் லோக பிராப்தியின் பொருட்டாகும். அந்த புத்திரன் முதலிய ஸாதனங்களால் அடையப்படுவது இஹலோகம், பித்ருலோகம், தேவலோகம் முதலியவை காமனைகள் நிவிர்த்தியால் நித்திய ஸித்த ஆத்மாவின் ஸாக்ஷாத்காரம் அடைந்தவனுக்கு கர்மத்தில் ஒரு பிரயோஜனமும் காணப்படாத அந்த பிரஹ்மவேத்தாவிற்கு எவ்வாறு கர்மத்தில் பிரவிருத்தி உண்டாகும். எவன் கிரஹஸ்த்தாஸ்ரமத்தில் இருக்கிறானோ அவனும் வித்தையின் பிராப்தியால் விரக்தி அடைந்தவனாய் கர்மத்தில் பிரயோஜனம் இல்லை என்று அறிந்து கர்மத்திலிருந்து நிவிர்த்தியாகிறான். “‘प्रव्रजिष्यन्वा अरेऽहमस्मात्स्थानादस्मि’ (बृ. उ. ४ । ५ । २)” (ப்ரவ்ரஜிஷ்யன்வா அரே அஹமஸ்மாத்ஸ்த்தானாதஸ்மி = இப்பொழுது நான் இந்த ஆஸ்ரமத்திலிருந்து ஸந்நியாஸம் செய்கிறேன்) என்பது முதலிய சுருதி ரூப லிங்கம் (ப்ரமாணம்) காணப்படுகிறது.
(पूर्वपक्षी) कर्म प्रति श्रुतेर्यत्नाधिक्यदर्शनादयुक्तमिति चेत् , - अग्निहोत्रादिकर्म प्रति श्रुतेरधिको यत्नः ; महांश्च कर्मण्यायासः, अनेकसाधनसाध्यत्वादग्निहोत्रादीनाम् ; तपोब्रह्मचर्यादीनां च इतराश्रमकर्मणां गार्हस्थ्येऽपि समानत्वादल्पसाधनापेक्षत्वाच्चेतरेषां न युक्तस्तुल्यवद्विकल्प आश्रमिभिस्तस्य इति चेत् ।
(ச.பா) (பூர்வ) சுருதிக்கு கர்மவிஷயத்தில் அதிக பிரயத்தனம் காணப்படுவதால் அது சரியல்ல என்றால் அக்னிஹோத்திரம் முதலிய கர்மங்களில் மிகவும் அதிகமாக பிரயத்தனம் செய்யவேண்ம். கர்மானுஷ்டானத்தில் அதிக ஆயாஸம் இருக்கிறது. ஏன்எனில் அக்னிஹோத்திராதி கர்மங்கள் அநேக ஸாதனங்களால் ஸாதிக்கக்கூடியதாய் இருக்கிறது. வேறு ஆஸ்ரமங்களின் கர்மங்களான தபஸ், பிரஹ்மச்சரியம் முதலியவைகள் கிரஹஸ்தாஸ்ரமத்தில் அல்பபிரயத்தனத்தை உடையதாய் இருக்கிறது. அவைகளுக்கு ஸமமான கர்த்தவ்யமாய் இருக்கிறது. ஆகையால் மற்ற ஆஸ்ரமங்களுடன் கிருஹஸ்த்தாஸ்ரமத்தை ஸமமாக கருதுதல் ஸரியாகாது.
(सिध्दान्ती) न ; जन्मान्तरकृतानुग्रहात् । यदुक्तं कर्मणि श्रुतेरधिको यत्न इत्यादि, नासौ दोषः, यतो जन्मान्तरकृतमप्यग्निहोत्रादिलक्षणं कर्म ब्रह्मचर्यादिलक्षणं चानुग्राहकं भवति विद्योत्पत्तिं प्रति ; येन च जन्मनैव विरक्ता दृश्यन्ते केचित् ; केचित्तु कर्मसु प्रवृत्ता अविरक्ता विद्याविद्वेषिणः । तस्माज्जन्मान्तरकृतसंस्कारेभ्यो विरक्तानामाश्रमान्तरप्रतिपत्तिरेवेष्यते ।
(ச.பா) (சித்தாந்தீ) அவ்வாறு அல்ல. ஜன்மாந்திரத்தில் செய்த கர்மத்தின் அனுக்கிரஹம் இருப்பதால் சுருதிக்கு கர்மத்தில் அதிக பிரயத்தனம் இருக்கிறது என்பது முதலியவை ஒரு தோஷமுமாகாது. ஏன்எனில் ஜன்மாந்திரத்தில் செய்த அக்னிஹோத்திராதி கர்மங்களும், பிரஹ்மச்சாயாதி ரூப கர்மங்களும் வித்தையின் (ஞானத்தின்) உற்பத்திக்குச்சஹாயமாய் இருக்கின்றன. ஜன்மமாத்திரத்லேயே சிலர் விரக்தர்காளாய் காணப்படுகிறார்கள். வேறு சிலர் கர்மத்திலேயே தத்பரர்களாய் வைராக்கியமற்றவர்களாய் ஞானத்திற்கு விரோதம் உடையவர்களாய்க் காணப்படுகிறார்கள். ஆகையால் ஜன்மாந்திரத்தின் ஸம்ஸ்காரத்தால் விரக்தி உடையவர்கள் மற்ற ஆச்ரமங்களை ஸ்வீகாரம் செய்வது இஷ்டமே.
कर्मफलबाहुल्याच्च । पुत्रस्वर्गब्रह्मवर्चसादिलक्षणस्य कर्मफलस्यासङ्ख्येयत्वात् तत्प्रति च पुरुषाणां कामबाहुल्यात्तदर्थः श्रुतेरधिको यत्नः कर्मसूपपद्यते, आशिषां बाहुल्यदर्शनात् - इदं मे स्यादिदं मे स्यादिति ।
(ச.பா) கர்மபலங்கள் அதிகமாய் இருப்பதாலும், (ச்ருதிக்கு அதில் அதிகம் யக்னம் உள்ளது) புத்திரர், ஸ்வர்க்கம் இவ்வாறு பிரஹ்மதேஜஸ் முதலிய கர்மபலன்கள் கணக்கற்று இருப்பதால் புருஷர்களுக்கும் காமனைகள் அதிகமாய் இருப்பதாலும் சுருதிக்கு கர்மத்தில் அதிகமாய் யத்தனிப்பது உசிதமேயாகும். இது எனக்கு கிடைக்கட்டும், இது எனக்கு கிடைக்கட்டும் என்று காமனைகள் அதிகமாய் காணப்படுகின்றன.
उपायत्वाच्च । उपायभूतानि हि कर्माणि विद्यां प्रति इत्यवोचाम । उपाये च अधिको यत्नः कर्तव्यः, न उपेये ।
(ச.பா) உபாயரூபமாய் இருப்பதாலும் கர்மங்கள் ஞான உத்பத்திக்கு உபாயம் என்பதை முன்பே கூறப்பட்டது. ஆகையால் உபாயங்களில் அதிக பிரயத்தனம் செய்யவேண்டும், உபேயத்தில் அல்ல.
(पूर्वपक्षी) कर्मनिमित्तत्वाद्विद्याया यत्नान्तरानर्थक्यमिति चेत् - कर्मभ्य एव पूर्वोपचितदुरितप्रतिबन्धक्षयाद्विद्योत्पद्यते चेत् , कर्मभ्यः पृथगुपनिषच्छ्रवणादियत्नोऽनर्थक इति चेत् ।
(ச.பா) (பூர்வ) ஞானம் கர்மத்தின் நிமித்தத்தால் உண்டாகிறது. ஆகையால் வேறு பிரயத்தனம் அர்த்தமற்றதாகிவிடும். கர்மங்களின் வாயிலாய் முன்பு சேகரித்த பாபரூப பிரதிபந்தத்தின் நிவிர்த்தியாகும்பொழுது ஞானத்தின் உத்பத்தி உண்டாகிறது. ஆனால் கர்மங்களைக் காட்டிலும் வேறான உபநிஷத்துக்களின் சிரவணாதிகளில் பிரயத்தனம் செய்வது அர்த்தமற்றதாகிவிடுமே எனில்.
(सिध्दान्ती) न ; नियमाभावात् । न हि, ‘प्रतिबन्धक्षयादेव विद्योत्पद्यते, न त्वीश्वरप्रसादतपोध्यानाद्यनुष्ठानात्’ इति नियमोऽस्ति ; अहिंसाब्रह्मचर्यादीनां च विद्यां प्रत्युपकारकत्वात् , साक्षादेव च कारणत्वाच्छ्रवणमनननिदिध्यासनादीनाम् । अतः सिद्धान्याश्रमान्तराणि । सर्वेषां चाधिकारो विद्यायाम् , परं च श्रेयः केवलाया विद्याया एवेति सिद्धम् ॥
(ச.பா) (சித்தாந்தீ) அவ்வாறு அல்ல. இப்படித்தான் என்று கட்டாயம் இல்லை. பிரதிபந்தக்ஷயத்தினால்தான் வித்யையின் உற்பத்தி என்ற நியமம் இல்லை. அவ்வாறே ஈச்வர கிருபை, தபஸ், தியானம் முதலியவைகளின் அனுஷ்டானத்தால் வித்யையின் உத்பத்தி இல்லை என்ற நியமமும் இல்லை. ஏன்எனில் அஹிம்சை, பிரஹ்மச்சரியம் முதலியவை ஞான உத்பத்திக்குத் தேவையானவைகளாகும். அவ்வாறே சிரவண, மனன, நிதித்தியாசனங்கள் ஞானத்திற்கு (வித்யைக்கு) ஸாக்ஷாத்காரணமாகும். ஆகையால் எல்லா ஆச்ரமத்தாரர்களுக்கும் வித்யையில் அதிகாரம் இருப்பது ஸித்திக்கிறது. மேலான ச்ரேயஸ் (மோக்ஷம்) வித்யையினால் மாத்திரமே ஏற்படும்.
इत्येकादशानुवाकभाष्यम् ॥
11 ஆவது அனுவாகம் முற்றிற்று,
अतीतविद्याप्राप्त्युपसर्गशमनार्थां शान्तिं पठति -
(அ.கை) முன்பு கூறப்பட்ட வித்யையின் பிராப்திக்காக அதன் பிரபந்தத்தை நீக்குவதற்காக சாந்தி மந்திரத்தைக் கூறுகிறார்.
शं नो मित्रः शं वरुणः । शं नो भवत्वर्यमा । शं न इन्द्रो बृहस्पतिः । शं नो विष्णुरुरुक्रमः । नमो ब्रह्मणे । नमस्ते वायो । त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि । त्वामेव प्रत्यक्षं ब्रह्मावादिषम् । ऋतमवादिषम् । सत्यमवादिषम् । तन्मामावीत् । तद्वक्तारमावीत् । आवीन्माम् । आवीद्वक्तारम् ॥ ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
शं नो मित्रः शं वरुणः என்ற சாந்திபாடம் நாம் கற்றகல்விநிலை பெறுவதற்காகவும் அதில் உள்ள இடையூறுகள் நீங்குவதற்காகவும் அந்த சாந்திபாடம் மறுபடியும் படிக்கப்படுகிறது.)
व्याख्यातमेतत्पूर्वम् ॥
(பாஷ்யம்) முன்பே வியாக்யானம் செய்யபட்டுவிட்டது
इति द्वादशानुवाकभाष्यम् ॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ तैत्तिरीयोपनिषद्भाष्ये शीक्षावल्लीभाष्यम् सम्पूर्णम् ॥
சீக்ஷாவல்லியில் பன்னிரண்டாவது அனுவாகம்
சுபம்.
अतीतविद्याप्राप्त्युपसर्गप्रशमनार्था शान्तिः पठिता । इदानीं तु वक्ष्यमाणब्रह्मविद्याप्राप्त्युपसर्गोपशमनार्था शान्तिः पठ्यते -
(ச.பா) முன் கூறிய வித்தையை அடைவதற்கு அதன் பிரதிபந்தத்தை நீக்குவதற்கு சாந்தி பாடம் படிக்கப்பட்டது. இப்பொழுது கூறப்போகும் பிரஹ்மவித்தையை அடைவதில் உள்ள இடையூறுகளை நீக்குவதின் பொருட்டு “सह नाववतु” (ஸஹ நாவவது) என்ற சாந்தி பாடம் படிக்கப்படுகிறது.
ओं सह नाववतु । सह नौ भुनक्तु । सह वीर्यं करवावहै । तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै ॥ ओं शान्तिः शान्तिः शान्तिः ॥
सह नाववत्विति । सह नाववतु, नौ शिष्याचार्यौ सहैव अवतु रक्षतु । सह नौ भुनक्तु ब्रह्म भोजयतु । सह वीर्यं विद्यानिमित्तं सामर्थ्यं करवावहै निर्वर्तयावहै । तेजस्वि नौ तेजस्विनोरावयोः अधीतं स्वधीतम् अस्तु अर्थज्ञानयोग्यमस्त्वित्यर्थः । मा विद्विषावहै, विद्याग्रहणनिमित्तं शिष्यस्य आचार्यस्य वा प्रमादकृतादन्यायाद्विद्वेषः प्राप्तः ; तच्छमनायेयमाशीः - मा विद्विषावहै इति । मैव नावितरेतरं विद्वेषमापद्यावहै ।
सह नाववतु (சக நாவவது) சிஷ்யன் ஆசாரியர் ஆக எங்கள் இருவரையும் காப்பாற்று (ரக்ஷி). எங்கள் இருவரையும் பரிபாலனம் செய். எங்கள் இருவருக்கும் வீரியம். அதாவது வித்யையின் நிமித்தம் ஸாமர்த்தியத்தை ஸம்பாதிக்கச்செய். தேஜஸ்வீ-அதாவது தேஜஸ்விகளான நாங்கள் நல்ல விதமாக ஞானத்திற்கு யோக்கியமாய் அத்தியயனம் செய்துள்ளோம், அவ்வாறே துவேஷம் செய்யமாட்டோம். வித்தையை கிரஹித்ததின் காரணமாய் சிஷ்யன் அல்லது ஆசாரியனுக்கு பிரமாதத்தின் (தவறுதலாக) அநியாயத்தால் துவேஷம் ஏற்படலாம். அதை சாந்தி செய்வதற்காக (நீக்குவதற்காக) मा विद्विषावहै (மா வித்விஷாவஹை) துவேஷத்தை அடையமாட்டோம். இதன் தாத்பர்யம் என்னவெனில் ஒருவர் மற்றொருவரை த்வே:க்க மாட்டோம்.
शान्तिः शान्तिः शान्तिरिति त्रिर्वचनमुक्तार्थम् । वक्ष्यमाणविद्याविघ्नप्रशमनार्था चेयं शान्तिः । अविघ्नेनात्मविद्याप्राप्तिराशास्यते, तन्मूलं हि परं श्रेय इति ॥
शान्तिः शान्तिः शान्तिः (சாந்தி: சாந்தி: சாந்தி:) என்று மும்முறை கூறுவதின் பிரயோஜனம் முன்பே கூறப்பட்டுள்ளது. இனி கூறப்போகும் வித்யையின் விகினங்களைப் போக்குவதற்காக ஆகும். இதன்மூலமாய் விகினமற்ற ஆத்மவித்தையை அடைவதற்கான ப்ரார்த்தனை செய்யப்படுகிறது. ஏன்எனில் அதுமூலமாகத்தான் பரம ஸ்ரேயஸ் ஏற்படுகிறது.
संहितादिविषयाणि कर्मभिरविरुद्धान्युपासनान्युक्तानि । अनन्तरं च अन्तःसोपाधिकमात्मदर्शनमुक्तं व्याहृतिद्वारेण स्वाराज्यफलम् । न चैतावता अशेषतः संसारबीजस्य उपमर्दनमस्ति । अतः अशेषोपद्रवबीजस्य अज्ञानस्य निवृत्त्यर्थं विधूतसर्वोपाधिविशेषात्मदर्शनार्थमिदमारभ्यते ब्रह्मविदाप्नोति परमित्यादि।
முதலில் கர்மங்களுக்கு விருத்தமில்லாத உபாஸனைகள் கூறப்பட்டது. அதன் பின் வியாஹ்ருதிகளின் மூலமாய் ஸ்வராஜ்யரூபபலனை அளிக்ககூடிய ஹிருதயத்தில் உள்ள ஸோபாதிக ஆத்ம தர்சனம் கூறப்பட்டது. ஆனாலும் இதனாலேயே ஸம்சாரத்தின் பீஜம் முற்றிலும் நாசமாகாது. ஆகையால் எல்லா உபத்திரவங்களுக்கும் பீஜ(காரண) பூதமான அக்ஞானத்தின் நிவிர்த்திக்காக (அகலுவதற்காக) இந்த உபாதி ரூப விசேஷங்கள் அற்ற ஆத்ம சாக்ஷாத்காரம் அடைவதற்காக இப்பொழுது “ते ब्रह्मविदाप्नोति परं” (பிரஹ்ம்ம விதாப்நோதி பரம்) என்பது முதலிய மந்திரங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன.
प्रयोजनं चास्या ब्रह्मविद्याया अविद्यानिवृत्तिः, ततश्च आत्यन्तिकः संसाराभावः । वक्ष्यति च - ‘विद्वान्न बिभेति कुतश्चन’ (तै. उ. २ । ९ । १) इति । संसारनिमित्ते च सति अभयं प्रतिष्ठां विन्दत इत्यनुपपन्नम् , कृताकृते पुण्यपापे न तपत इति च । अतोऽवगम्यते - अस्माद्विज्ञानात्सर्वात्मब्रह्मविषयादात्यन्तिकः संसाराभाव इति ।
(ச.பா) அந்த பிரஹ்ம வித்யையின் பிரயோஜனம் அவித்யா நிவிர்த்தி. அதன் மூலம் ஆத்யந்திக (முற்றிலும்) ஸம்ஸாரம் விலகுவதாகும். மேலும் கூறப்போகிறார் ‘विद्वान्न बिभेति कुतश्चन’ (तै. उ. २ । ९ । १) (வித்வான்ந பிபேதி குதஸ்ச்சன = வித்வான் எதற்கும் பயப்படமாட்டான்) என்று. ஸம்சாரமாகிற நிமித்தம் இருக்கும் பொழுது அபயத்தை அடைகிறான் என்பதும், புண்ய பாபத்தால் தவிக்கமாட்டான் என்பதும் சரியல்ல. ஆகையால் இந்த ஸர்வாத்ம பிரஹ்ம விஷய ஞானத்தால் ஸம்சாரம் முற்றிலுமாக நீங்கும்.
स्वयमेवाह प्रयोजनम् ‘ब्रह्मविदाप्नोति परम्’ इत्यादावेव सम्बन्धप्रयोजनज्ञापनार्थम् । निर्ज्ञातयोर्हि सम्बन्धप्रयोजनयोः विद्याश्रवणग्रहणधारणाभ्यासार्थं प्रवर्तते । श्रवणादिपूर्वकं हि विद्याफलम् , ‘श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्यः’ (बृ. उ. २ । ४ । ५) इत्यादिश्रुत्यन्तरेभ्यः ।
(ச.பா) இந்த பிரகரணத்தின் சம்பந்தம் மேலும் பிரயோஜனத்தை அறியச்செய்வதற்காக சுருதியானது தானே “ब्रह्मविदाप्नोति परम्” (பிரஹ்ம்மவிதாப்னோதி பரம் = பிரஹ்மத்தை அறிந்தவன் மேலானதை அடைகிறான்) என்பது முதலிய வாக்கியங்களால் ஆரம்பத்திலேயே இதன் பிரயோஜனம் காட்டப்படுகிறது. ஏன்எனில் பிரயோஜனம் ஸம்பந்தம் இவைகளின் ஞானம் இருந்தால் அல்லவா புருஷன் வித்தையின் ச்ரவண, கிரஹண, தாரண, அப்பியாஸத்தில் பிரவிர்த்திப்பான் (ஈடுபடுவான்) வித்யை பலன் சிரவணாதி பூர்வகமாகும். ‘श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्यः’ (बृ. उ. २ । ४ । ५) முதலிய வேறு சுருதிகளாலும் அறிகிறோம்.
ब्रह्मविदाप्नोति परम् । तदेषाभ्युक्ता । सत्यं ज्ञानमनन्तं ब्रह्म । यो वेद निहितं गुहायां परमे व्योमन् । सोऽश्नुते सर्वान् कामान् सह । ब्रह्मणा विपश्चितेति । तस्माद्वा एतस्मादात्मन आकाशः सम्भूतः । आकाशाद्वायुः । वायोरग्निः । अग्नेरापः । अद्भ्यः पृथिवी । पृथिव्या ओषधयः । ओषधीभ्योऽन्नम् । अन्नात्पुरुषः । स वा एष पुरुषोऽन्नरसमयः । तस्येदमेव शिरः । अयं दक्षिणः पक्षः । अयमुत्तरः पक्षः । अयमात्मा । इदं पुच्छं प्रतिष्ठा । तदप्येष श्लोको भवति ॥ १ ॥
ब्रह्मवित्, ब्रह्मेति वक्ष्यमाणलक्षणम् , बृहत्तमत्वात् ब्रह्म, तद्वेत्ति विजानातीति ब्रह्मवित् , आप्नोति प्राप्नोति परं निरतिशयम् ; तदेव ब्रह्म परम् ; न ह्यन्यस्य विज्ञानादन्यस्य प्राप्तिः । स्पष्टं च श्रुत्यन्तरं ब्रह्मप्राप्तिमेव ब्रह्मविदो दर्शयति - ‘स यो ह वै तत्परमं ब्रह्म वेद ब्रह्मैव भवति’ (मु. उ. ३ । २ । ९) इत्यादि ॥
(ச.பா) பிரஹ்மத்தை அறிந்தவன் பிரஹ்மம் என்பது கூறப்போகும் லக்ஷணத்துடன் கூடியது இது எல்லாவற்றையும் விட பெரிது என்பதால் (बृहत्तमत्वात् ब्रह्म) (ப்ருஹத்தமத்வாத் ப்ரஹ்ம) பிரஹ்மம். அதை அறிந்தவன் பிரஹ்மத்தை அறிந்தவன் பரம் அதாவது அந்த நிரதிசய பிரஹ்மத்தை அடைகிறான், வேறு ஒன்றின் ஞானத்தால் வேறு ஒன்றை அடைய முடியாது. இதை ஸ்பஷ்டமாக வேறு சுருதியும் காண்பிக்கிறது. ‘स यो हि वै तत्परमं ब्रह्म वेद ब्रह्मैव भवति’ (मु. उ. ३ । २ । ९) (ச யோ ஹ வை தத்பரமம் பிரஹ்ம்ம வேத பிரஹ்ம்மைவ பவதி - எவன் ஒருவன் அந்த பரப்ரஹ்மத்தை அறிகிறானோ அந்த பிரஹ்மமே ஆகிறான்) என்று.
(शंका) ननु,सर्वगतं सर्वस्य चात्मभूतं ब्रह्म वक्ष्यति । अतो नाप्यम् । आप्तिश्च अन्यस्यान्येन परिच्छिन्नस्य च परिच्छिन्नेन दृष्टा । अपरिच्छिन्नं सर्वात्मकं च ब्रह्मेत्यतः परिच्छिन्नवत् अनात्मवच्च तस्याप्तिरनुपपन्ना ।
(ச.பா) (சங்கை) பிரஹ்மமானது ஸர்வகதமாயும், எல்லாவற்றிற்கும் ஆத்மா என்பதாக கூறப்படப்போகிறது. ஆகையால் அது அடைய முடியாததாகும், அடைதல் என்பது மற்ற பரிச்சின்ன பதார்த்தத்தினால் மற்ற பரிச்சன்ன பதார்த்தத்துடன் ஏற்படுவதைப்பார்க்கிறோம், ஆனால் பிரஹ்மமோ அபரிச்சின்னமாயும் ஸர்வாத்மகமாயும் இருக்கிறது. ஆகையால் பரிச்சின்னமாயும், அநாத்மாவாயும் இருக்கும் பதார்த்தத்தைப்போல் அதனுடைய அடைதல் ஸம்பவிக்காது.
नायं दोषः । कथम् ? दर्शनादर्शनापेक्षत्वाद्ब्रह्मण आप्त्यनाप्त्योः, परमार्थतो ब्रह्मस्वरूपस्यापि सतः अस्य जीवस्य भूतमात्राकृतबाह्यपरिच्छिन्नान्नमयाद्यात्मदर्शिनः तदासक्तचेतसः । प्रकृतसङ्ख्यापूरणस्यात्मनः अव्यवहितस्यापि बाह्यसङ्ख्येयविषयासक्तचित्ततया स्वरूपाभावदर्शनवत् परमार्थब्रह्मस्वरूपाभावदर्शनलक्षणया अविद्यया अन्नमयादीन्बाह्याननात्मन आत्मत्वेन प्रतिपन्नत्वात् अन्नमयाद्यनात्मभ्यो नान्योऽहमस्मीत्यभिमन्यते । एवमविद्यया आत्मभूतमपि ब्रह्म अनाप्तं स्यात् ।
(ச.பா) (சமாதானம்) இது தோஷமாக ஆகாது. எவ்வாறு எனில் பிரஹ்மத்தின் அடைதல், அடையாதிருத்தல் என்பவைகளுக்கு தர்சனம்-அனுபவித்தல், அதர்சனம்- அனுபவிக்காதிருத்தல் என்பதைப் பொருத்தது ஆகும். உண்மையில், பிரஹ்மஸ்வரூபமாய் இருக்கும் இந்த ஜீவனுக்கு பஞ்சபூத மாத்திரமாகி வெளியில் பரிச்சின்னமாயும், அநாத்மாவாயும் உள்ள அன்னமயகோசம் முதலானவைகளில் ஆத்ம தரிசனம் அதையே ஆத்மா என்று கொண்டமையால் அதில் ஈடுபட்ட புத்தியுடையவனாகி பத்து மூடர்களில் பத்தாவதான தன்னை மற்றவர்களை என்னம் படபடப்பினால் தன்னையே உணராமல் ‘தானில்லை’ (தசமன் இறந்தான்) என்று எண்ணுவது போல் அநாத்மாக்களில் இருந்து அவைகளுடன் தன்னை இணைத்துக் கொண்டவனாக ஆகி தன் ஸ்வரூபத்தை அறியாதவனாய், பரமார்த்த பிரஹ்ம ஸ்வரூபத்தின் மறைதலே அறியாமை என்ற அவித்தையால் தனக்கு வெளியில் உள்ள அன்னமயமான அநாத்மாக்களை ஆத்மாவாய் அறிந்தமையால் அன்னமயாதி கோசங்களை (அநாத்மாக்களை) தன்னைக்காட்டிலும் வேறானதாக அறியாது அவைகளையே நான் என்று அறிகிறான். இவ்வாறு அவித்தையினால் அநாத்ம பூதமான தன்மைகளில் உழன்றபொழுது பிரஹ்மம் அடைந்ததாக ஆகாது.
तस्यैवमविद्यया अनाप्तब्रह्मस्वरूपस्य प्रकृतसङ्ख्यापूरणस्यात्मनः अविद्ययानाप्तस्य सतः केनचित्स्मारितस्य पुनस्तस्यैव विद्यया आप्तिर्यथा, तथा श्रुत्युपदिष्टस्य सर्वात्मब्रह्मण आत्मत्वदर्शनेन विद्यया तदाप्तिरुपपद्यत एव ।
(ச.பா) இவ்வாறு அவித்தையால் அடையாத பிரஹ்ம ஸ்வரூபத்தை அதாவது இந்நிலையில் அறியாமையால் பத்து என்ற எண்னை நிரப்புபவனாக உள்ள தன்னை மறந்துள்ளபோது மற்றொரு நண்பனால் “நீதான் பத்தாவது மனிதன்” என்று நினைவுபடுத்தப்பட்டவுடன் தன்னையே அடைவது போல் சுருதிமாதாவினால் உபதேசிக்கப்பட்ட ஸர்வாத்மரூபமான பிரஹ்மத்தை வித்தையால் ஆத்மாவாக உணர்வதுதான் அதை அடைதல் என்று கூறிய சுருதி வாக்கியத்தின் பொருள்.
ब्रह्मविदाप्नोति परमिति वाक्यं सूत्रभूतं सर्वस्य वल्ल्यर्थस्य । ब्रह्मविदाप्नोति परमित्यनेन वाक्येन वेद्यतया सूत्रितस्य ब्रह्मणोऽनिर्धारितस्वरूपविशेषस्य सर्वतो व्यावृत्तस्वरूपविशेषसमर्पणसमर्थस्य लक्षणस्याभिधानेन स्वरूपनिर्धारणाय अविशेषेण च उक्तवेदनस्य ब्रह्मणो वक्ष्यमाणलक्षणस्य विशेषेण प्रत्यगात्मतया अनन्यरूपेण विज्ञेयत्वाय, ब्रह्मविद्याफलं च ब्रह्मविदो यत्परप्राप्तिलक्षणमुक्तम् , स सर्वात्मभावः सर्वसंसारधर्मातीतब्रह्मस्वरूपत्वमेव, नान्यदित्येतत्प्रदर्शनाय च एषा ऋगुदाह्रियते - तदेषाभ्युक्तेति ।
(ச.பா) ब्रह्मविदाप्नोति परम् (பிரஹ்ம்மவிதாப்னோதி பரம் = பிரஹ்மத்தை அறிந்தவன் பரபிரஹ்மத்தை அடைகிறான்) என்றவாக்கியம் சூத்திர ரூபமானது. இந்த எல்லா வல்லியின் அர்த்த விஷயமானது பிரஹ்மத்தை அறிந்தவன் பரத்தை அதாவது பிரஹ்ம்மத்தை அடைகிறான் என்ற வாக்கியத்தால் அறிய வேண்டிய சூத்திரத்தில் பிரஹ்மத்தின் லக்ஷணம் விசேஷரூபத்தின் நிச்சயம் செய்யப்படவில்லை. மேலும் எல்லா வஸ்துக்களிலிருந்தும் பிரித்து ஸ்வரூப விசேஷத்தை அறிவதில் ஸாமர்த்யமுள்ள லக்ஷணத்தின் ஸாமன்யமாய் கூறப்பட்ட அறியவேண்டிய பிரஹ்மத்தின் ஸ்வரூபம் மூலம் விசேஷமாய் நம் ஆத்மாவோடு அனன்யரூபமாய் அறிய வேண்டியதற்காக, பிரஹ்மவித்யா பலமும், பிரஹ்மத்தை அறிந்தவனின் எந்த பரபிரஹ்ம பிராப்த்தி லக்ஷணம் கூறப்படுகிறது, அந்த ஸர்வாத்ம பாவம், எல்லா ஸம்சார தர்மங்களையும் கடந்த பிரஹ்ம ஸ்வரூபமே வேறு அல்ல என்று இதைத் தெரிவிப்பதற்காக இந்த ரிக் ஆனது கூறப்படுகிறது. तदेषाभ्युक्तेति (ததேஷாப்யுக்த்தா) என்று.
तत् तस्मिन्नेव ब्राह्मणवाक्योक्तार्थे एषा ऋक् अभ्युक्ता आम्नाता । सत्यं ज्ञानमनन्तं ब्रह्म इति ब्रह्मणो लक्षणार्थं वाक्यम् । सत्यादीनि हि त्रीणि विशेषणार्थानि पदानि विशेष्यस्य ब्रह्मणः । विशेष्यं ब्रह्म, विवक्षितत्वाद्वेद्यतया । वेद्यत्वेन यतो ब्रह्म प्राधान्येन विवक्षितम् , तस्माद्विशेष्यं विज्ञेयम् । अतः अस्माद्विशेषणविशेष्यत्वादेव सत्यादीनि एकविभक्त्यन्तानि पदानि समानाधिकरणानि । सत्यादिभिस्त्रिभिर्विशेषणैर्विशेष्यमाणं ब्रह्म विशेष्यान्तरेभ्यो निर्धार्यते । एवं हि तज्ज्ञातं भवति, यदन्येभ्यो निर्धारितम् ; यथा लोके नीलं महत्सुगन्ध्युत्पलमिति ।
(ச.பா) அந்த பிராஹ்மணவாயிலாய் கூறப்பட்ட பொருளைப்பற்றி (ஸத்தியம் ஞானமனந்தம் பிரஹ்ம) என்ற ரிக்கால் சொல்லப்படுகிறது. ஸத்தியம், ஞானம் அனந்தம் பிரஹ்ம என்பது பிரஹ்மத்தின் லக்ஷணமான வாக்கியமாகும். ஸத்தியம் முதலிய மூன்று விசேஷணமான பதங்களும் விசேஷ்ய பிரஹ்மத்தின் விசேஷங்களை குறிப்பிடுவதாகும். அறியப்பட வேண்டியதாய் (வேத்திய விஷயமாய்) சொல்ல விரும்பியதால் பிரஹ்மம் விசேஷ்யமாகும். ஏன்எனில் பிரஹ்மத்தை பிரதானமாய் வேத்திய ரூபத்தால் அதாவது ஞானத்தின் விஷயமாய் சொல்ல விரும்பியதால் விசேஷ்யம் என்று அறிய வேண்டும். ஆகையால் இந்த விசேஷண விசேஷ்யமாய் உள்ளதால்தான் சத்தியம் முதலியவைகள் ஒரே விபக்தி (வேற்றுமை) உடைய பதங்களால் ஸமானாதிகரணமாகிறது. முதலிய மூன்று விசேஷணங்களால் விசேஷ்யமான பிரஹ்மம் வேறு விசேஷ்யங்களில் இருந்து வேறுபட்டதாக நிச்சயிக்கப்படுகிறது. மற்றவையிலிருந்து பிரித்து அறியப்பட்டது தான் நிச்சயமாக உணரப்படுகிறது. நீல நிறமுடையது, பெரியது, வாசனையுடையது என்பதாக உத்பலம் கூறப்படுகிறது.
(शंका) ननु, विशेष्यं विशेषणान्तरं व्यभिचरद्विशेष्यते, यथा नीलं रक्तं चोत्पलमिति ; यदा ह्यनेकानि द्रव्याणि एकजातीयान्यनेकविशेषणयोगीनि च, तदा विशेषणस्यार्थवत्त्वम् ; न ह्येकस्मिन्नेव वस्तुनि, विशेषणान्तरायोगात् ; यथा असावेक आदित्य इति, तथा एकमेव ब्रह्म, न ब्रह्मान्तराणि, येभ्यो विशेष्येत नीलोत्पलवत् ।
(ச.பா) (சங்கை) மேலும் விசேஷ்யமானது வேறு விசேஷணங்களால் மாறுபட்டதாக இருக்கும்பொழுது அது விசே:யமாகும். எவ்வாறு எனில் நீலமாயும், சிவப்பாயும் உள்ளது உத்பலம் என்பது போல், எப்பொழுது ஒரே ஜாதியான அநேக திரவியங்கள், அநேக விசேஷணங்களைப் பெற்று இருக்கின்றனவோ அப்பொழுதே விசேஷணம் அர்த்தமுடையதாகும். மேலும் ஒரே வஸ்துவானது வேறு விசேஷணங்களை பெறாமல் இருக்கும் பொழுது விசேஷணம் வீண். எவ்வாறு எனில் இவன் ஒருவனே சூரியன் என்பது போல் ஒன்றேபிரஹ்மம் வேறு பிரஹ்மங்கள் கிடையாது. அவைகளில் இருந்து நீலோத்பலம் போல் விசே:க்கவும் முடியாது என்றால்.
न ; लक्षणार्थत्वाद्विशेषणानाम् । नायं दोषः । कस्मात् ? लक्षणार्थप्रधानानि विशेषणानि, न विशेषणप्रधानान्येव । कः पुनर्लक्षणलक्ष्ययोर्विशेषणविशेष्ययोर्वा विशेषः ? उच्यते । सजातीयेभ्य एव निवर्तकानि विशेषणानि विशेष्यस्य ; लक्षणं तु सर्वत एव, यथा अवकाशप्रदात्राकाशमिति । लक्षणार्थं च वाक्यमित्यवोचाम ॥
(ச.பா) (சமாதானம்) அவ்வாறு அல்ல, ஏன்எனில் இங்கு விசேஷணங்கள் லக்ஷணமாக அமைகின்றன. ஆகையால் இந்ததோஷம் இல்லை. எவ்வாறு? இங்கு லக்ஷணார்த்தமாக விசேஷணங்கள் உள்ளன. ஆனால் லக்ஷண லக்ஷியங்களில் அவ்வாறே விசேஷண விசேஷ்யங்களில் என்ன தனித்தன்மை இருக்கிறது? கூறுகிறோம். ஸமான ஜாதி உடையவைகளிலேயே விசேஷண விசேஷ்யங்கள் கூறத்தக்கவைகளாகும். லக்ஷணமோவெனில் எங்கும் அவகாசம் கொடுப்பது ஆகாசம் என்பது போன்றது. லக்ஷணமாக உணர்த்தும் பொருட்டே வாக்கியம் என்பது முன்பே கூறப்பட்டது.
सत्यादिशब्दा न परस्परं सम्बध्यन्ते, परार्थत्वात् ; विशेष्यार्था हि ते । अत एव एकैको विशेषणशब्दः परस्परं निरपेक्षो ब्रह्मशब्देन सम्बध्यते - सत्यं ब्रह्म ज्ञानं ब्रह्म अनन्तं ब्रह्मेति ।
(ச.பா) ஸத்தியம் முதலான சப்தங்கள் பரஸ்பரம் ஸம்பந்தத்தை அடைவது இல்லை. ஏன்எனில் அவைகள் தன்னிலும் வேறான விசேஷ்யத்தைக் கூறவந்தன. அதனாலேயே ஒவ்வொரு விசேஷண சப்தமும், ஒன்றை ஒன்று அபேக்ஷிக்காது நிரபேக்ஷமாய் பிரஹ்ம ஸப்தத்துடன் ஸம்பந்தப்படுகின்றன. ஸத்யம் பிரஹ்ம, ஞானம் பிரஹ்ம, ஆனந்தம் பிரஹ்ம என்று.
सत्यमिति यद्रूपेण यन्निश्चितं तद्रूपं न व्यभिचरति, तत्सत्यम् । यद्रूपेण यन्निश्चितं तद्रूपं व्यभिचरति, तदनृतमित्युच्यते । अतो विकारोऽनृतम् , ‘ वाचारम्भणं विकारो नामधेयं मृत्तिकेत्येव सत्यम्’ (छा. उ. ६ । १ । ४) एवं सदेव सत्यमित्यवधारणात् । अतः ‘सत्यं ब्रह्म’ इति ब्रह्म विकारान्निवर्तयति ।
(ச.பா) सत्यम् (சத்தியம்)- எந்த பதார்த்தம் எந்த ரூபத்தில் நிச்சயம் செய்யப்பட்டதோ அது எப்பொழுதும் மாறுபடாமல் இருப்பது ஸத்தியம், எந்த ரூபத்துடன் நிச்சயிக்கப்பட்டதோ அது அந்த ரூபத்திலிருந்து மாறுபடுவதால் அது அநிருதமாகும் (பொய்யாகும்) ஆகையால் விகாரம் அந்ருதம். ‘वाचारम्भणं विकारो नामधेयं मृत्तिकेत्येव सत्यम्’ (छा. उ. ६ । १ । ४) (வாசாரம்பணம் விகாரோநாமதேயம் ம்ருதிகேத்யேவ ஸத்தியம் = விகாரம் வாக்கினால் ஆரம்பமாவது மேலும் பெயர் மாத்திரமேயாகும். மண் ஒன்றே ஸத்தியம்) என்று இவ்வாறு சத் ஒன்றே ஸத்தியம் என்று நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஸத்தியம் பிரஹ்மம் என்பதால் பிரஹ்மம் விகாரத்திலிருந்து நிவிர்த்திக்கப்படுகிறது.
अतः कारणत्वं प्राप्तं ब्रह्मणः । कारणस्य च कारकत्वम् , वस्तुत्वात् मृद्वत् अचिद्रूपता च प्राप्ता ; अत इदमुच्यते - ज्ञानं ब्रह्मेति । ज्ञानं ज्ञप्तिः अवबोधः, - भावसाधनो ज्ञानशब्दः - न तु ज्ञानकर्तृ, ब्रह्मविशेषणत्वात्सत्यानन्ताभ्यां सह । न हि सत्यता अनन्तता च ज्ञानकर्तृत्वे सत्युपपद्येते । ज्ञानकर्तृत्वेन हि विक्रियमाणं कथं सत्यं भवेत् , अनन्तं च ? यद्धि न कुतश्चित्प्रविभज्यते, तदनन्तम् । ज्ञानकर्तृत्वे च ज्ञेयज्ञानाभ्यां प्रविभक्तमित्यनन्तता न स्यात् , ‘यत्र नान्यद्विजानाति स भूमा, अथ यत्रान्यद्विजानाति तदल्पम्’ (छा. उ. ७ । २४ । १) इति श्रुत्यन्तरात् ।
(ச.பா) ஆகையால் பிரஹ்மத்திற்கு காரணத்துவம் பிராப்தமாகிறது. காரணத்திற்கு காரகத்துவம் வரும் வஸ்துவாக இருப்பதால் மண்போல் அசித் ரூபம் (ஜடத்துவம்) ஏற்பட்டுவிடும் என்பதால் ஞானம் பிரஹ்ம என்று கூறப்படுகிறது. ஞானம் என்பது அறிவு, அறிதல் என்பதாகும் “ஞான” சப்தம் பாவ தன்மையைக் கூறும் வாசகமாகும். ஸத்தியம், அனந்தம் இவைகள் பிரஹ்மத்திற்கு விசேஷணமாவதால் அதன் அர்த்தம் “ஞானகர்த்தா” ஆக முடியாது. அதற்கு (பிரஹ்மத்திற்கு) ஞான கர்த்திருத்வத்தை ஒப்புக்கொண்டால் பிரஹ்மத்திற்கு ஸத்தியத்வமும், அனந்தத்வமும் ஸம்பவிக்காது. ஞானகர்த்திருத்வத்தால் விகாரத்தை அடைந்தால் பிரஹ்மமானது ஸத்தியமும் அனந்தமும் எவ்வாறு ஆகமுடியும்? எது எதனாலும் எப்பொழுதும் பேதம் அடைவதில்லையோ அது அனந்தம், ஞானம் கர்த்திருத்துவமாய் இருந்தால் ஞேயம், ஞானம் என்ற பேதம் இருப்பதால் அனந்தத்வம் ஸித்திக்காது ‘यत्र नान्यद्विजानाति स भूमा, अथ यत्रान्यद्विजानाति तदल्पम्’ (छा. उ. ७ । २४ । १) யத்ர நான்யத் விஜானாதி ச பூமா அத யத்ரான்யத் விஜானாதி ததல்பம்=எங்கு வேறு ஒன்றை அறியவில்லையோ அது பூமா, மேலும் எங்கு வேறு ஒன்றை அறிகிறானோ அது அல்பமாகும்) என்று வேறு சுருதியிலும் காணப்படுகிறது.
‘नान्यद्विजानाति’ इति विशेषप्रतिषेधात् आत्मानं विजानातीति चेत् , न ; भूमलक्षणविधिपरत्वाद्वाक्यस्य । ‘यत्र नान्यत्पश्यति’ इत्यादि भूम्नो लक्षणविधिपरं वाक्यम् । यथाप्रसिद्धमेव अन्योऽन्यत्पश्यतीत्येतदुपादाय यत्र तन्नास्ति, स भूमा इति भूमस्वरूपं तत्र ज्ञाप्यते । अन्यग्रहणस्य प्राप्तप्रतिषेधार्थत्वात् न स्वात्मनि क्रियास्तित्वपरं वाक्यम् । स्वात्मनि च भेदाभावाद्विज्ञानानुपपत्तिः । आत्मनश्च विज्ञेयत्वे ज्ञात्रभावप्रसङ्गः, ज्ञेयत्वेनैव विनियुक्तत्वात् ॥
(ச.பா) வேறு ஒன்றையும் அறியவில்லை என்று இவ்விதமாக விசேஷத்தை பிரதிஷேதம் செய்வதால் ஆத்மாவை அறிகிறது என்றால் அவ்வாறு அல்ல. இந்த வாக்கியம் பூமலக்ஷணத்தை போதிப்பதாக இருப்பதாலாகும். எங்கு வேறு ஒன்றையும் பார்க்கவில்லை என்பது முதலியவை பூமாவின் லக்ஷண விதி பர வாக்கியமாகும். வேறு ஒன்று மற்றதை அறிகிறது என்று லோகபிரஸித்தமான வஸ்து ஸ்திதியை எங்கு ஏற்றுக்கொள்வது இல்லையோ அது பூமா என்று இவ்வாறு பூமஸ்வரூபத்தை அறியச்சொல்லப்படுகிறது. வேறு என்ற சப்தத்தை எடுத்துக்கொண்டது அடையப்பட்ட துவைதத்தை நீக்குவதற்காக ஆகும். ஆகையால் ஸ்வாத்மாவிடத்தில் கிரியை இருக்கின்றது என்று கூறும் வாக்கியமல்ல. ஸ்வாத்மாவிடத்தில் பேதம் இல்லாததால் விக்ஞானம் ஸம்பவிக்காது. ஆத்மாவிற்கு விக்ேஞயத்துவம் ஏற்படுமேயானால் அதை அறிபவனின் இல்லாமை ஏற்படும். இங்கு ஞேயத்துவமாகவே இந்த வாக்கியம் விநியோகிக்கப்பட்டுள்ளது அன்றோ!
(शंका) एक एवाऽऽत्मा ज्ञेयत्वेन ज्ञातृत्वेन च उभयथा भवतीति चेत् ?
(ச.பா) (சங்கை) ஒரே ஆத்மா ஞேயத்துவமாகவும், ஞாத்திருத்துவமாகவும், இவ்வாறு இரண்டு வகையாய் எவ்வாறு ஆகும்? என்றால்.
(समाधानम्) न ; युगपदनंशत्वात् । न हि निरवयवस्य युगपज्ज्ञेयज्ञातृत्वोपपत्तिः । आत्मनश्च घटादिवद्विज्ञेयत्वे ज्ञानोपदेशानर्थक्यम् । न हि घटादिवत्प्रसिद्धस्य ज्ञानोपदेशः अर्थवान् । तस्मात् ज्ञातृत्वे सति आनन्त्यानुपपत्तिः । सन्मात्रत्वं चानुपपन्नं ज्ञानकर्तृत्वादिविशेषवत्त्वे सति ; सन्मात्रत्वं च सत्यम् , ‘तत् सत्यम्’ (छा. उ. ६ । ८ । १६) इति श्रुत्यन्तरात् । तस्मात्सत्यानन्तशब्दाभ्यां सह विशेषणत्वेन ज्ञानशब्दस्य प्रयोगाद्भावसाधनो ज्ञानशब्दः । ‘ज्ञानं ब्रह्म’ इति कर्तृत्वादिकारकनिवृत्त्यर्थं मृदादिवदचिद्रूपतानिवृत्त्यर्थं च प्रयुज्यते ।
(ச.பா) (ஸமாதானம்) அவ்வாறு அல்ல. ஆத்மா அம்சம் அற்றவர் ஆதலால் ஒரே நேரத்தில் இரண்டு ரூபமும் ஸம்பவிக்காது. அவயவமற்ற ஆத்மா ஒரே சமயத்தில் ஞேயம், ஞாதா என்று ஆகமுடியாது. ஆத்மா கடம் முதலியவைகளைப்போல் ஞேயமாய் (அறியபடும் பொருளாய்) இருந்தால் ஞான உபதேசம் அர்த்தமற்றதாகிவிடும், கடம் முதலியவைகளைப்போல் பிரஸித்தமானவற்றிற்கு உபதேசம் அர்த்தமற்றதாகிவிடும். ஆகையால் ஞாத்திருத்துவமாய் இருக்கையில் அனந்தத்வம் பொருந்தாது. ஞான கர்த்திருத்துவ முதலிய விசேஷத்வம் இருக்கும் பொழுது ஸன்மாத்திரத்துவமும் பொருந்தாது. ஸன்மாத்திரத்துவம் என்பது ஸத்யத்துவமே ஆகும். ‘तत् सत्यम्’ (छा. उ. ६ । ८ । १६) (தத்சத்யம் = அது ஸத்தியம்) என்று வேறு சுருதியினாலும் அறிகிறோம். ஆகையால் சத்தியம் அனந்தம் என்ற இரண்டு சப்தங்களுடன் விசேஷணமாய் ஞான சப்தத்தின் பிரயோகம் இருப்பதால் ஞான சப்தம் பாவ ஸாதனமாகும். ஞானம் பிரஹ்மம் என்பது கர்த்திருத்துவ முதலிய காரகங்களை நிவிர்த்தி செய்வதற்காகவும் மண்முதலியவைகளைப் போன்ற அசித் ரூபத்தை நிவிர்த்தி செய்வதற்காகவும் பிரயோகம் செய்யப்படுகிறது.
‘ज्ञानं ब्रह्म’ इति वचनात्प्राप्तमन्तवत्त्वम् , लौकिकस्य ज्ञानस्य अन्तवत्त्वदर्शनात् । अतः तन्निवृत्त्यर्थमाह - अनन्तमिति ।
(ச.பா) ஞானம் பிரஹ்ம என்ற வசனத்தால் அந்தவத்வம் (பரிச்சின்னத்தன்மை) பிராப்தம் ஆகிறது (ஏற்படுகிறது). லௌகிக ஞானம் முடிவுடைய தன்மை (அந்தத்வம்) உடையதாய் இருப்பதால் அதை நீக்குவதற்காக அனந்தம் என்று கூறப்பட்டது.
(शंका) सत्यादीनामनृतादिधर्मनिवृत्तिपरत्वाद्विशेष्यस्य च ब्रह्मणः उत्पलादिवदप्रसिद्धत्वात् ‘मृगतृष्णाम्भसि स्नातः खपुष्पकृतशेखरः । एष वन्ध्यासुतो याति शशशृङ्गधनुर्धरः’ इतिवत् शून्यार्थतैव प्राप्ता सत्यादिवाक्यस्येति चेत् ?
(ச.பா) (சங்கை) ஸத்திய முதலியவைகள் அந்ருத முதலிய தர்மங்களை நிவிர்த்தி பண்ணுவதாக இருப்பதால் விசேஷ்யமான பிரஹ்மம் உத்பலம் முதலியவைகள் போல் பிரஸித்தம் அற்றதாய் இருப்பதால். मृगतृष्णाम्भसि स्नातः खपुष्पकृतशेखरः । एष वन्ध्यासुतो याति शशशृङ्गधनुर्धरः ம்ருக த்ருஷ்ணாம்பசிஸ்நாத: கபுஷ்பக்ருதஷேகர: ஏஷ வந்தியாசுதோ யாதி ச்ருங்கதனுர்தர: = கானல்நீரில் குளித்து ஆகாயமலரை தலையில் தரித்து அந்த மலடிமகன் முயல் கொம்பால் செய்யப்பட்ட வில்லை ஏந்திச்செல்கிறான்) என்பது போல் ஸத்திய முதலிய வாக்கியங்களுக்கு சூன்யார்த்தமே ஸித்திக்கும் எனில்?
न ; लक्षणार्थत्वात् । विशेषणत्वेऽपि सत्यादीनां लक्षणार्थप्राधान्यमित्यवोचाम । शून्ये हि लक्ष्ये अनर्थकं लक्षणवचनम् । अतः लक्षणार्थत्वान्मन्यामहे न शून्यार्थतेति । विशेषणार्थत्वेऽपि च सत्यादीनां स्वार्थापरित्याग एव । शून्यार्थत्वे हि सत्यादिशब्दानां विशेष्यनियन्तृत्वानुपपत्तिः । सत्याद्यर्थैरर्थवत्त्वे तु तद्विपरीतधर्मवद्भ्यो विशेष्येभ्यो ब्रह्मणो विशेष्यस्य नियन्तृत्वमुपपद्यते । ब्रह्मशब्दोऽपि स्वार्थेनार्थवानेव । तत्र अनन्तशब्दः अन्तवत्त्वप्रतिषेधद्वारेण विशेषणम् । सत्यज्ञानशब्दौ तु स्वार्थसमर्पणेनैव विशेषणे भवतः ॥
(ச.பா) (சமாதானம்) அவ்வாறு அல்ல, இவைகள் லக்ஷணத்தன்மை உடையதால். விசேஷணமாய் இருந்தாலும் ஸத்தியமாதிகள் லக்ஷணார்த்த ப்ரதானமானது என்று கூறினோம். லக்ஷியம் சூனியமாய் இருந்தால் லக்ஷண வசனம் அர்த்தமற்றதாகும். அதுலக்ஷணார்த்த- மானதினால் சூன்யார்த்தமாகாது. விசேஷணார்த் தத்துவமாய் இருந்தாலும் ஸத்தியம் முதலிய பதங்களுக்கு ஸ்வார்த்தபரித்தியாகம் இல்லை, விசேஷணங்களாய் இருந்தாலும் ஸத்தியம் முதலிய சப்தங்கள் ஸ்வார்த்தத்தை தியாகம் செய்வதில்லை (தன்னுடைய அர்த்தத்தை விடுவதில்லை) ஸத்திய முதலிய சப்தங்கள் சூன்யார்த்தமாய் இருந்தால் தன்னுடைய விசே:யத்தின் நியந்தாவாகும். தன்மை பொருந்தாது. பிரஹ்மசப்தம் ஸ்வார்த்தத்தில் அர்த்தமுடையதே. அங்கு அனந்த சப்தம் அந்தம் (முடிவு) உடையதை நிஷேதிப்பதின் வாயிலாய் விசேஷணமாகும். சத்திய ஞான சப்தங்கள் இரண்டும் ஸ்வார்த்தத்தை ஸமர்பித்தலாலேயே விசே ‌ஷணங்களாகின்றன.
(शंका) ‘तस्माद्वा एतस्मादात्मनः’ इति ब्रह्मण्येव आत्मशब्दप्रयोगात् वेदितुरात्मैव ब्रह्म । ‘एतमानन्दमयमात्मानमुपसङ्क्रामति’ (तै. उ. २ । ८ । ५) इति च आत्मतां दर्शयति । तत्प्रवेशाच्च ; ‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ (तै. उ. २ । ६ । १) इति च तस्यैव जीवरूपेण शरीरप्रवेशं दर्शयति । अतो वेदितुः स्वरूपं ब्रह्म ।
(ச.பா) (சங்கை) तस्माद्वा एतस्मादात्मनः (தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மன: = அந்த இந்த ஆத்மாவிலிருந்து) என்பதால் பிரஹ்மத்திலேயே ஆத்மசப்தமானது பிரயோகம் செய்யப்பட்டதால் பிரஹ்மத்தை அறிபவன் ஆத்மாவே. ‘एतमानन्दमयमात्मानमुपसङ्क्रामति’ (तै. उ. २ । ८ । ५) ஏதமானந்தமயமாத்மாண- முபசம்க்ராமதி = இந்த ஆனந்தமய ஆத்மாவை அடைகிறான்) என்று சுருதிவாக்கியத்தால் அதன் ஆத்மத்தன்மையை காண்பிக்கிறார். அதில் அவன் பிரவேசிக்கிறான் என்பதால் விளக்குகிறார். ‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ (तै. उ. २ । ६ । १) தத்ஸ்ருஷ்ட்வாததேவானு பிராவிசத் - அதைப்படைத்து அவனே அதில் நுழைந்தான்) என்று அதையே ஜீவரூபமாய் சரீர பிரவேசத்தை விளக்குகிறார். ஆகையால் அதனை அறிபவனின் ஸ்வரூபம் பிரஹ்மமே.
एवं तर्हि, आत्मत्वाज्ज्ञानकर्तृत्वम् ; ‘आत्मा ज्ञाता’ इति हि प्रसिद्धम् , ‘सोऽकामयत’ (तै. उ. २ । ६ । १) इति च कामिनो ज्ञानकर्तृत्वप्रसिद्धिः ; अतो ज्ञानकर्तृत्वात् ज्ञप्तिर्ब्रह्मेत्ययुक्तम् ।
(ச.பா) இவ்வாறு ஆத்மாவாக இருப்பதால் அதற்கு ஞானத்தின் கர்த்திருத்துவம் வந்துசேர்கிறது.. ஆத்மா ஞாதா என்று அல்லவா பிரஸித்தமாய் இருக்கிறது. ‘सोऽकामयत’ (तै. उ. २ । ६ । १) (ஸோ அகாமயத = அவன் விரும்பினான்) என்ற சுருதியினால் விரும்புகிறவனுக்கு ஞானகர்த்திருத்துவம் இருப்பதால் பிரஹ்மம் ஞப்தி (வடிவமானது) என்று கூறுவது பொருந்தாது.
अनित्यत्वप्रसङ्गाच्च ; यदि नाम ज्ञप्तिर्ज्ञानमिति भावरूपता ब्रह्मणः, तदाप्यनित्यत्वं प्रसज्येत ; पारतन्त्र्यं च, धात्वर्थानां कारकापेक्षत्वात् , ज्ञानं च धात्वर्थः ; अतोऽस्य अनित्यत्वं परतन्त्रता च ।
(ச.பா) இவ்வாறு எடுத்துக்கொண்டால் அநித்தியத்துவம் கூறப்பட்டதாகும். ஞப்தி, ஞானம் என்று பாவரூபதன்மையை பிரஹ்மத்திற்கு எடுத்துக்கொண்டாலும் அதனால் பிரஹ்மத்திற்கு அநித்தியத்தன்மையும், பரதந்திரத்தன்மையும் உண்டாகும். ஏன்எனில் தாது அர்த்தங்களுக்கு காரக அபேக்ஷை இருப்பதால். ஞானமும் தாது அர்த்தமுடையது ஆகையால் அநித்தியமும். பரதந்திரியமும் ஆக ஆகிவிடும்.
न ; स्वरूपाव्यतिरेकेण कार्यत्वोपचारात् । आत्मनः स्वरूपं ज्ञप्तिः न ततो व्यतिरिच्यते । अतो नित्यैव । तथापि बुद्धेरुपाधिलक्षणायाश्चक्षुरादिद्वारैर्विषयाकारपरिणामिन्याः ये शब्दाद्याकारावभासाः, ते आत्मविज्ञानस्य विषयभूता उत्पद्यमाना एव आत्मविज्ञानेन व्याप्ता उत्पद्यन्ते । तस्मादात्मविज्ञानावभास्याश्च ते विज्ञानशब्दवाच्याश्च धात्वर्थभूता आत्मन एव धर्मा विक्रियारूपा इत्यविवेकिभिः परिकल्प्यन्ते ।
(ச.பா) அவ்வாறு அல்ல. ஏன்எனில் ஞானம் ஸ்வரூப பிரஹ்மத்திற்கு அபின்னமானது. அதனால் ஞானத்திற்கு காரியத்துவம் கூறுவது உபசாரமாகும். ஆத்மாவின் ஸ்வரூபம் ஞப்தி. அதைக்காட்டிலும் வேறானது ஒன்றும் இல்லை. ஆகையால் அது (ஞப்தி) நித்யம் ஆகும். ஆனாலும் புத்தியாகிய உபாதி இருப்பதால் கண்முதலிய இந்திரிய வாயிலாய் விஷயாகாரமாக பரிணாமமாகின்ற எந்த சப்தம் முதலிய விஷய அவபாஸங்கள் தோற்றங்கள் அந்த ஆத்ம விக்ஞானத்தின் விஷயங்களாய் உண்டானவைகள் தான் ஆத்ம விக்ஞானத்தால் வியாபித்து உத்பன்னமாகின்றன. ஆகையால் ஆத்ம விக்ஞான அவபாஸங்களாகிய அவைகள் விக்ஞான சப்த வாச்சியங்களாகிய அறிவுகள் ஆத்மாவின் தன்மைகள் மாறுபடும் ரூபமானது என்று அவிவேகிகள் கல்பிக்கின்றனர்.
यत्तु ब्रह्मणो विज्ञानम् , तत् सवितृप्रकाशवत् अग्न्युष्णत्ववच्च ब्रह्मस्वरूपाव्यतिरिक्तं स्वरूपमेव तत् । न तत्कारणान्तरसव्यपेक्षम् , नित्यस्वरूपत्वात् , सर्वभावानां च तेनाविभक्तदेशकालत्वात् कालाकाशादिकारणत्वात् निरतिशयसूक्ष्मत्वाच्च । न तस्यान्यदविज्ञेयं सूक्ष्मं व्यवहितं विप्रकृष्टं भूतं भवद्भविष्यद्वा अस्ति । तस्मात्सर्वज्ञं तद्ब्रह्म ।
(ச.பா) எது பிரஹ்மத்தின் விக்ஞானம் என்று கூறப்பட்டதோ அது சூரியனின் பிரகாசம் போலும், அக்னியின் உஷ்ணம் போலும். பிரஹ்ம ஸ்வரூபத்தைக்காட்டிலும் வேறான ஸ்வரூபமல்ல. ஆனால் அதன் ஸ்வரூபமே. அது நித்திய ஸ்வரூபமாய் இருப்பதால் அதற்கு வேறு காரணத்தை அபேக்ஷிப்பதில்லை. (சார்ந்திருப்பதில்லை). அவ்வாறே பிரஹ்மத்துடன் எல்லா பாவபதார்த்தங்களின் தேசம், காலம் அபின்னமாகும். மேலும் அது காலம் அவ்வாறே ஆகாசம் முதலியவைகளுக்கும் காரணமாகும், அவ்வாறே நிரதிசய சூக்ஷ்மமாகும. ஆகையால் அதைக்காட்டிலும் வேறானது அறியமுடியாது, சூக்ஷ்மமானது, அதைக்காட்டிலும் வேறுபட்டதாயும் உள்ள வேறு பொருள் இதுவரை உண்டாகவும் இல்லை, உண்டாகி இருப்பதும் இல்லை, உண்டாகப் போவதும் இல்லை என்பதால் ஸர்வக்ஞனாய் உள்ள அந்த ஆத்மாவே பிரஹ்மமாகும்.
मन्त्रवर्णाच्च ‘अपाणिपादो जवनो ग्रहीता पश्यत्यचक्षुः स शृणोत्यकर्णः । स वेत्ति वेद्यं न च तस्यास्ति वेत्ता तमाहुरग्र्यं पुरुषं महान्तम्’ (श्वे. उ. ३ । १९) इति । ‘न हि विज्ञतुर्विज्ञातेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वान्न तु तद्द्वितीयमस्ति’ (बृ. उ. ४ । ३ । ३०) इत्यादिश्रुतेश्च । विज्ञातृस्वरूपाव्यतिरेकात्करणादिनिमित्तानपेक्षत्वाच्च ब्रह्मणो ज्ञानस्वरूपत्वेऽपि नित्यत्वप्रसिद्धिः । अतो नैव धात्वर्थस्तत् , अक्रियारूपत्वात् ।
(ச.பா) இவ்வாறேமந்திரம் இதைக் கூறுகிறது. ‘अपाणिपादो जवनो ग्रहीता पश्यत्यचक्षुः स शृणोत्यकर्णः । स वेत्ति वेद्यं न च तस्यास्ति वेत्ता तमाहुरग्र्यं पुरुषं महान्तम्’ (श्वे. उ. ३ । १९) (அபா௴பாதோ ஜவனோக்ரஹீதா பஷ்யத்யசக்ஷ): ஸச்ரூனோத்யகர்ண: ஸவேத்தி வேத்யம் ந ச தஸ்யாஸ்தி வேத்தா தமாரக்ரயம் புருஷம் மஹாந்தம்) கை கால் இல்லாமல் வேகமாக செல்லவும், எடுக்கவும் கூடியவன். கண்கள் இல்லாமல் பார்க்கவும், காதுகள் இல்லாமல் கேட்கவும் செய்பவன். அவன் எல்லாவற்றையும் அறிபவன், அவனால் அறியத்தக்கது வேறு ஒன்றுமில்லை. அதனால் அவரை மஹாத்மா என்றும் பரமபுருஷன் என்றும் கூறுவார்கள் ‘न हि विज्ञतुर्विज्ञातेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वान्न तु तद्द्वितीयमस्ति’ (बृ. उ. ४ । ३ । ३०) ந ஹி விக்ஞாதுர்விபரிலோபோ வித்யதே அவிநா:த்வான்ந து தத்த்வீதீய மஸ்தி = அவிநாசியாக இருப்பதால் விக்ஞாதாவின் ஞானத்தின் குறைபாடு ஒரு நாளும் உண்டாகாது. அதைக்காட்டிலும் இரண்டாவது பொருள் ஒன்றும் கிடையாது என்பது முதலிய சுருதிகளாலும் ஸித்திக்கிறது. தன்னுடைய விக்ஞாத்ருஸ்வரூபத்தில் அபின்னமாய் மேலும் இந்திரியங்கள் முதலிய ஸாதனங்களின் அபேக்ஷயைற்றிருப்பதால் ஞானஸ்வரூபமாய் இருந்தாலும் பிரஹ்மத்தின் நித்தியத்துவம் திடமாக ஸித்திக்கிறது. ஆகையால் கிரியா ரூபம் அற்றதால் ஞானம் தாது அர்த்தமும் அல்ல.
अत एव च न ज्ञानकर्तृ ; तस्मादेव च न ज्ञानशब्दवाच्यमपि तद्ब्रह्म । तथापि तदाभासवाचकेन बुद्धिधर्मविशेषेण ज्ञानशब्देन तल्लक्ष्यते ; न तु उच्यते, शब्दप्रवृत्तिहेतुजात्यादिधर्मरहितत्वात् । तथा सत्यशब्देनापि । सर्वविशेषप्रत्यस्तमितस्वरूपत्वाद्ब्रह्मणः बाह्यसत्तासामान्यविषयेण सत्यशब्देन लक्ष्यते ‘सत्यं ब्रह्म’ इति ; न तु सत्यशब्दवाच्यं ब्रह्म ।
(ச.பா) ஆகையால் பிரஹ்மம் ஞானகர்த்ரு அல்ல. ஆகையால் அந்த பிரஹ்மம் ஞான சப்த வாச்சியமும் அல்ல. அவ்வாறு ஆனாலும் ஞானத்தின் ஆபாஸ வாசகத்தால் புத்தி தர்ம விஷயமாய் லக்ஷ்யிக்கப்படுகிறதே தவிர நேராகக் கூறப்படுவது இல்லை. ஏன்எனில் சப்த பிரவிர்த்தி ஹேதுவான ஜாதி முதலிய தர்மம் ப்ரஹ்மத்தில் இல்லை. அவ்வாறே சத்ய சப்தமும் ஆகும். எல்லா விசேஷணங்களும் நீங்கி ஸ்வஸ்வரூபமானதால் பிரஹ்மத்திற்கு பாஹ்ய (வெளி) ஸத்தாஸாமான்ய விஷயத்தைக்கூறும் ஸத்திய சப்தத்தால் சத்யம் பிரஹ்மம் என்று லக்ஷ்யிக்கப்படுகிறது. ஆகையால் பிரஹ்மம் சத்திய சப்தத்திற்கும் வாச்சியமல்ல.
एवं सत्यादिशब्दा इतरेतरसंनिधानादन्योन्यनियम्यनियामकाः सन्तः सत्यादिशब्दवाच्यात् निवर्तका ब्रह्मणः, लक्षणार्थाश्च भवन्तीति । अतः सिद्धम् ‘यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह’ (तै. उ. २ । ४ । १) ‘अनिरुक्तेऽनिलयने’ (तै. उ. २ । ७ । १) इति च अवाच्यत्वम् , नीलोत्पलवदवाक्यार्थत्वं च ब्रह्मणः ॥
(ச.பா) இவ்வாறு சத்தியம் முதலிய சப்தங்கள் ஒன்று மற்றொன்றின் சந்நிதானத்தில் நியம்ய, நியாமகமாய் இருந்து கொண்டு சத்தியம் முதலிய சப்தவாச்சியங்கள் நிவிர்த்தியாகி பிரஹ்மத்தின் லக்ஷணார்த்தங்களாக ஆகின்றன என்பது சித்திக்கிறது. ‘यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह’ (तै. उ. २ । ४ । १) யதோ வாசோ நிவர்த்ததே அப்ராப்ய மனசாசஹ = எதனால் மனதுடன் கூடியவாக்கும் அதை அடையமுடியாமல் திரும்புகிறதோ), ‘अनिरुक्तेऽनिलयने’ (तै. उ. २ । ७ । १) அநிருக்தே அநிலயனே) சொல்லுவதற்கு தகுதி அற்றது, ஆஸ்ரியமற்றது) என்று அவாச்சியத்வத்வமும், நீலோத்பலம் போன்று வாக்கியார்த்துவமும் அற்றது பிரஹ்மம் என்று ஸித்திக்கிறது.
तद्यथाव्याख्यातं ब्रह्म यः वेद विजानाति निहितं स्थितं गुहायाम् , गूहतेः संवरणार्थस्य निगूढा अस्यां ज्ञानज्ञेयज्ञातृपदार्था इति गुहा बुद्धिः, गूढावस्यां भोगापवर्गौ पुरुषार्थाविति वा, तस्यां परमे प्रकृष्टे व्योमन् व्योम्नि आकाशे अव्याकृताख्ये ; तद्धि परमं व्योम, ‘एतस्मिन्खल्वक्षरे गार्ग्याकाशः’ (बृ. उ. ३ । ८ । ११) इत्यक्षरसंनिकर्षात् ; ‘गुहायां व्योमन्’ इति वा सामानाधिकरण्यादव्याकृताकाशमेव गुहा ; तत्रापि निगूढाः सर्वे पदार्थास्त्रिषु कालेषु, कारणत्वात्सूक्ष्मतरत्वाच्च ; तस्मिन्नन्तर्निहितं ब्रह्म ।
(ச.பா) இவ்வாறு வியாக்கியானம் செய்யப்பட்ட பிரஹ்மத்தை எவன் அறிகிறானோ அந்த பிரஹ்மம் குகையில் வைக்கப்பட்டுள்ளது. குகை என்பது ஆவரணங்களால் மறைக்கப்ட்டுள்ளது என்பது பொருள். அதில் இந்த ஞான, ஞேய, ஞாத்ரு, பதார்த்தங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதால் “குகை” என்பது புத்தியைக்குறிப்பதாகும். அல்லது அதில் போகமும் அபவர்க்கமும் (மோக்ஷம்) ஆகிய புருஷார்த்தங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதால் குகை எனப்படும். அதனுள் பரம ப்ரகிருஷ்ட்டமான ஆகாசத்தில் அதாவது அவ்யாகிருதத்தில் மறைந்ததாய் உள்ளது. அதுவே பரமாகாசமாகும். ‘एतस्मिन्खल्वक्षरे गार्ग्याकाशः’ (बृ. उ. ३ । ८ । ११) (ஏதஸ்மின்னு கல்வக்ஷரே கார்க்யாகாச: = ஹே! கார்க்கீ நிச்சயமாய் இந்த அக்ஷரத்தில் ஆகாசம் நிலை பெற்றுள்ளது) இதை நீ அறிந்து கொள்வாயாக) என்று அக்ஷர ஸ்வரூபத்திற்கு மிக்க நெருக்கமானதாக ஆகாசம் எனப்படும் அவ்யாகிருதம் கூறப்பட்டுள்ளது. குகையில் பரமாகாசம் உள்ளது. அல்லது குகையிலும், ஆகாசத்திலும் என்று ஸமானாதிகரணத்தால் அவ்யாகிருத ஆகாசமே குகையாகும். அங்கே எல்லா பதார்த்தங்களும் மூன்று காலங்களிலும் அவைகளுக்குக் காரணமாய் மிக ஸூக்ஷ்மமாய் மறைந்துள்ளது. அதிலேயே அவைகளால் மறைக்கப்பட்டுள்ளது பிரஹ்மம்.
हार्दमेव तु परमं व्योमेति न्याय्यम् , विज्ञानाङ्गत्वेन व्योम्नो विवक्षितत्वात् । ‘यो वै स बहिर्धा पुरुषादाकाशः’ (छा. उ. ३ । १२ । ७), ‘यो वै सोऽन्तः पुरुष आकाशः’ (छा. उ. ३ । १२ । ८), ‘योऽयमन्तर्हृदय आकाशः’ (छा. उ. ३ । १२ । ९) इति श्रुत्यन्तरात्प्रसिद्धं हार्दस्य व्योम्नः परमत्वम् । तस्मिन्हार्दे व्योम्नि या बुद्धिर्गुहा, तस्यां निहितं ब्रह्म तद्व्यावृत्त्या विविक्ततयोपलभ्यत इति । न ह्यन्यथा विशिष्टदेशकालसम्बन्धोऽस्ति ब्रह्मणः, सर्वगतत्वान्निर्विशेषत्वाच्च । सः एवं ब्रह्म विजानन् ; किमित्याह - अश्नुते भुङ्क्ते सर्वान् निरवशेषान् कामान् काम्यभोगानित्यर्थः । किमस्मदादिवत्पुत्रस्वर्गादीन्पर्यायेण ? नेत्याह - सह युगपत् एकक्षणोपारूढानेव एकयोपलब्ध्या सवितृप्रकाशवन्नित्यया ब्रह्मस्वरूपाव्यतिरिक्तया, यामवोचाम ‘सत्यं ज्ञानम्’ इति । एतत्तदुच्यते - ब्रह्मणा सहेति ।
(ச.பா) ஆனால் யுக்தியுடன் கூடியபக்ஷம் இந்த ஹ்ருதயாகாசம் பரமாகாசமாகும். ஏன்எனில் ஆகாசத்தை விக்ஞானாங்கமாயும் உபாஸனைக்கு அங்கரூபமாயும் கூறப்பட்டுள்ளது. यो वै स बहिर्धा पुरुषादाकाशः (छा. उ. ३ । १२ । ७) (யோ வை ஸ பஹிர்தா புருஷாதாகாச: = எந்த வெளியில் உள்ள ஆகாசம் அதாவது புருஷனைக்காட்டிலும் வெளியில் பிரஸித்தமான பௌதிக ஆகாசம்) यो वै सोऽन्तः पुरुष आकाशः (छा. उ. ३ । १२ । ८) (யோ வை சோ அந்த புருஷ ஆகாச = அந்த புருஷனுடைய உள் இருக்கும் ஆகாசம்) ‘योऽयमन्तर्हृदय आकाशः’ (छा. उ. ३ । १२ । ९) (யோ அயமந்தர்ஹ்ருதய ஆகாச = எந்த அந்த ஆகாசம் ஹ்ருதயத்தின் உள் இருக்கிறதோ) என்று வேறு சுருதியினாலும் ஹ்ருதயாகாசத்திற்கு பரமத்துவம் பிரஸித்தமாய் இருக்கிறது. அந்த ஹிருதயாகாசத்தில் புத்திரூப குகை இருக்கிறது. அதில் பிரஹ்மம் நிலைபெற்றுள்ளது. அந்த புத்திவிருத்தியினால் வியாபித்திருத்தலால் (தனியாய்) ஸ்பஷ்ட்டமாக அடையப்படுகிறது (அறியப்படுகிறது). பிரஹ்மம் ஸர்வகதமாய், நிர்விசேஷ ரூபமாய் இருப்பதால் வேறு விசேஷமான தேச காலத்துடன் ஸம்பந்தம் இல்லை. அந்த பிரஹ்மத்தை அறிவதால் என்ன ஆகும்? என்பதைக் கூறுகிறார்.- அதனால் எல்லா காமனைகளையும் மிச்சம் இல்லாமல் விரும்பியவாறு போகங்களை அடைகிறான். அதாவது போக்தாவாகிறான். நம்மைப்போல் புத்திரன், ஸ்வர்க்கம் முதலிய போகங்களை கிரமமாக புஜிக்கிறானா? எனில் அல்லர் அது ஒரேக்ஷணத்தில் புத்திவிருத்தியில் ஆரூடமாய் எல்லா போகங்களையும் சூரியனுடைய பிரகாசம் போல் நித்தியமாயும் அவ்வாறே பிரஹ்ம ரூபத்திற்கு அபின்னமான ஒன்றே என்ற உபலப்தி (அறிவு) வாயிலாய் அதை நாம் “சத்தியம் ஞானமனந்தம்” என்று நிரூபிக்கப்பட்டுள்ளோம் ब्रह्मणा सह सर्वान् कामान् अश्नुते (ப்ரஹ்மனா ஸஹ ஸர்வான்காமான் அச்னுதே) என்ற சுருதிவாக்கியத்தால் கூறப்பட்டுள்ளது.
ब्रह्मभूतो विद्वान् ब्रह्मस्वरूपेणैव सर्वान्कामान् सह अश्नुते । न तथा यथोपाधिकृतेन स्वरूपेणात्मनो जलसूर्यकादिवत्प्रतिबिम्बभूतेन सांसारिकेण धर्मादिनिमित्तापेक्षांश्चक्षुरादिकरणापेक्षांश्च सर्वान्कामान्पर्यायेणाश्नुते लोकः । कथं तर्हि ? यथोक्तेन प्रकारेण सर्वज्ञेन सर्वगतेन सर्वात्मना नित्यब्रह्मात्मस्वरूपेण धर्मादिनिमित्तानपेक्षान् चक्षुरादिकरणानपेक्षांश्च सर्वान्कामान्सहाश्नुत इत्यर्थः । विपश्चिता मेधाविना सर्वज्ञेन । तद्धि वैपश्चित्यम् , यत्सर्वज्ञत्वम् । तेन सर्वज्ञस्वरूपेण ब्रह्मणा अश्नुत इति । इतिशब्दो मन्त्रपरिसमाप्त्यर्थः ॥
(ச.பா) பிரஹ்மமாகவே ஆனவித்வான் ப்ரஹ்ம ஸ்வரூபத்தால் எல்லா போகங்களையும் சேர்த்து அனுபவிக்கிறான். எவ்வாறு உபாதியினால் உண்டாக்கப்பட்ட ஸ்வரூபத்தை உடைய ஆத்மாவினால் ஜல சூரியன்போன்ற பிரதிபிம்பமாய் உள்ள ஸம்சாரி ஆத்மாவின் வாயிலாய் தர்மம் முதலிய நிமித்தத்தை அபேக்ஷித்தும். அவ்வாறே கண்கள் முதலிய இந்திரியங்களின் அபேக்ஷயைுடனும் கூடிய எல்லா போகங்களையும் கிரமமாய் புஜிக்கிறான். வித்வானுடைய போகம் இவ்வாறு அல்ல. ஆனால் எவ்வாறு போக்தாவாக ஆகிறது? எனில் அது முன்கூறப்பட்டவாறு ஸர்வக்ஞத்துவமாயும், ஸர்வகதமாயுமுள்ள ஸர்வாத்மாவால் நித்ய பிரஹ்ம ஸ்வரூபத்தால் தர்மாதி நிமித்தங்களை அபேக்ஷிக்காமல், கண்கள் முதலிய இந்திரியங்களையும் அபேக்ஷிக்காமல் எல்லா காமனைகளையும் புஜிக்கிறது (அனுபவிக்கிறது) என்பது பொருள். அதாவது பாண்டித்தியம், ஸர்வக்ஞத்துவம் இவைகள் ஸர்வக்ஞஸ்வரூபமாய் பிரஹ்ம ஸ்வரூபத்தால் புஜிக்கிறது. மூலத்தில் உள்ள इति (இதி) சப்தம் மந்திரத்தின் முடிவை காண்பிப்பதற்காக ஆகும்.
सर्व एव वल्ल्यर्थः ‘ब्रह्मविदाप्नोति परम्’ इति ब्राह्मण वाक्येन सूत्रितः । स च सूत्रितोऽर्थः सङ्क्षेपतो मन्त्रेण व्याख्यातः । पुनस्तस्यैव विस्तरेणार्थनिर्णयः कर्तव्य इत्युत्तरस्तद्वृत्तिस्थानीयो ग्रन्थ आरभ्यते - तस्माद्वा एतस्मादित्यादिः ।
(ச.பா) ब्रह्मविदाप्नोति परम् (பிரஹ்ம்மவிதாப்னோதி பரம் = பிரஹ்மத்தை அறிந்தவன் பரம் அதாவது பிரஹ்மத்தை அடைகிறான்) என்று இந்த பிராஹ்ம்மணம் மூலமாய் இந்த வல்லியின் அர்த்தம் முழுவதையும் சூத்திரரூபமாய் விளக்கப்பட்டது. அந்த சூத்திரார்த்தம் சுருக்கமாய் மந்திரத்தால் வியாக்யானம் செய்யப்பட்டது. மறுபடியும் அதையே விஸ்தாரமாய் நிர்ணயம் செய்யவேண்டும் என்று இதற்குப்பின் விருத்திரூப (விளக்கமாக) கிரந்தம் ஆரம்பிக்கப்படுகிறது, तस्मात् वा एतस्मात् (தஸ்மாத்வா ஏதஸ்மாத்) என்று.
तत्र च ‘ सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ इत्युक्तं मन्त्रादौ ; तत्कथं सत्यमनन्तं चेत्यत आह । त्रिविधं ह्यानन्त्यम् - देशतः कालतो वस्तुतश्चेति । तद्यथा - देशतोऽनन्त आकाशः ; न हि देशतस्तस्य परिच्छेदोऽस्ति । न तु कालतश्चानन्त्यं वस्तुतश्च आकाशस्य । कस्मात् ? कार्यत्वात् । नैवं ब्रह्मण आकाशवत्कालतोऽप्यन्तवत्त्वम् । अकार्यत्वात् । कार्यं हि वस्तु कालेन परिच्छिद्यते । अकार्यं च ब्रह्म । तस्मात्कालतोऽस्यानन्त्यम् ।
(ச.பா) முன்பு மந்திரத்தில் ஸத்தியம் ஞானம் அநந்தம் பிரஹ்மம் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. அந்த ஸத்தியம் ஞானமநந்தம் எவ்வாறு ஆகும். என்பதைக் கூறுகிறார், அநந்தத்வம் மூன்று விதமாகும். அதாவது தேசத்தாலும், காலத்தாலும், வஸ்துவாலும் ஆகும். அதில் எவ்வாறு ஆகாசம் தேசத்தால் அநந்தமாகும். அதற்கு தேசத்தால் பரிச்சேதம் இல்லை, ஆனால் காலத்தாலும், வஸ்துவாலும் ஆகாசத்திற்கு அநந்தத்வம் இல்லை. ஏன் இல்லையெனில் காரியமாய் இருத்தலால். இவ்வாறு பிரஹ்மத்திற்கு ஆகாசம் போல் காரியமல்லாததால் காலத்தாலும் அந்தவத்வம் (பரிச்சேதம்) இல்லை. வஸ்து காரியமாய் இருந்தால் காலத்தால் பரிச்சின்னமாகும். பிரஹ்மம் அகாரியம். ஆகையால் அதற்கு காலத்தாலும் அநந்தத்துவம்.
तथा वस्तुतः । कथं पुनर्वस्तुत आनन्त्यम् ? सर्वानन्यत्वात् । भिन्नं हि वस्तु वस्त्वन्तरस्य अन्तो भवति, वस्त्वन्तरबुद्धिर्हि प्रसक्ताद्वस्त्वन्तरान्निवर्तते । यतो यस्य बुद्धेर्निवृत्तिः, स तस्यान्तः । तद्यथा गोत्वबुद्धिरश्वत्वान्निवर्तत इत्यश्वत्वान्तं गोत्वमित्यन्तवदेव भवति । स चान्तो भिन्नेषु वस्तुषु दृष्टः । नैवं ब्रह्मणो भेदः । अतो वस्तुतोऽप्यानन्त्यम् ।
(ச.பா) அவ்வாறே வஸ்துவினாலும் அநந்தத்துவம். எவ்வாறு வஸ்துவினால் அநந்தத்துவம்? எனில் அதுவே எல்லாவடிவமாகவும் இருப்பதால் அதற்கு வஸ்துவால் அந்தத்துவம் கிடையாது. வேறுபட்டவஸ்துவே மற்றொரு வஸ்துவால் அந்தம் உடையதாக ஆகிறது. புஒதியானது வேறு வஸ்துவில் ஈடுபட்டபொழுது முதலில் இருந்த வஸ்துவிலிருந்து அது விடுபட்டதாகிறது. எப்பொழுது எதிலிருந்து புத்தி நிவிர்த்தி அடைகிறதோ அது அந்த வஸ்துவின் அந்தமாகும். அது எவ்வாறு எனில் கோத்துவ புத்தியானது, அச்வ (குதிரை) புத்தி வந்தபொழுது அது நிவிர்த்தியாகிறது. இதனால் அச்வத்தை முடிவாக உடையது கோத்துவ புத்தி என்று ஆகிறது. இந்த முடிவானது வேறு, வேறு பதார்த்தங்களில் காணப்படுகிறதே அன்றி பிரஹ்மத்திற்கு காணப்படுவது இல்லை. ஏன்எனில் பிரஹ்மத்திற்கு பேதம் இல்லை. எனவே அதற்கு வஸ்துவாலும் அந்தம் இல்லை.
कथं पुनः सर्वानन्यत्वं ब्रह्मण इति, उच्यते - सर्ववस्तुकारणत्वात् । सर्वेषां हि वस्तूनां कालाकाशादीनां कारणं ब्रह्म । कार्यापेक्षया वस्तुतोऽन्तवत्त्वमिति चेत् , न ; अनृतत्वात्कार्यस्य वस्तुनः । न हि कारणव्यतिरेकेण कार्यं नाम वस्तुतोऽस्ति, यतः कारणबुद्धिर्विनिवर्तेत ; ‘वाचारम्भणं विकारो नामधेयं मृत्तिकेत्येव सत्यम्’ (छा. उ. ६ । १ । ४) एवं सदेव सत्यमिति श्रुत्यन्तरात् ।
(ச.பா) எவ்வாறு பிரஹ்மத்திற்கு எல்லாவற்றோடும் அனன்யத்துவம்? அதைக்கூறுகிறார் - எல்லா வஸ்துவிற்கும் காரணமாய் இருப்பதால். எல்லாமே காலம், ஆகாசம் முதலிய எல்லா வஸ்துக்களுக்கும் காரணம் பிரஹ்மம், காரியத்தின் அபேக்ஷயைால் வஸ்துவினால் பரிச்சேதம் என்றால் பொருந்தாது. ஏன்எனில் காரியவஸ்து மித்யையாய் இருப்பதால். உண்மையில் காரணத்தைக் காட்டிலும் காரியம் பின்னமல்ல. எனவே காரண புத்தியை கார்யத்திலிருந்து நிவர்த்திக்க (நீக்க) முடியாது. ‘वाचारम्भणं विकारो नामधेयं मृत्तिकेत्येव सत्यम्’ (छा. उ. ६ । १ । ४) (வாச்சாராம்பணம் விகாரோ நாமதேயம் மிருத்திக்கேத்யேவ சத்தியம் = வாக்கினால் ஆரம்பம் ஆகிற விகாரம் கேவலம் நாம மாத்திரமே. மண்தான் (ஸத்தியம்) என்று ஸத்தேதான் ஸத்யம் என்று வேறு சுருதியினாலும் அறியப்படுகிறது.
तस्मादाकाशादिकारणत्वाद्देशतस्तावदनन्तं ब्रह्म । आकाशो ह्यनन्त इति प्रसिद्धं देशतः ; तस्येदं कारणम् ; तस्मात्सिद्धं देशत आत्मन आनन्त्यम् । न ह्यसर्वगतात्सर्वगतमुत्पद्यमानं लोके किञ्चिद्दृश्यते । अतो निरतिशयमात्मन आनन्त्यं देशतः । तथा अकार्यत्वात्कालतः ; तद्भिन्नवस्त्वन्तराभावाच्च वस्तुतः । अत एव निरतिशयसत्यत्वम् ॥
(ச.பா) ஆகையால் ஆகாயம் முதலியவைகளுக்கும் காரணமாய் இருப்பதால் தேசத்தால் அநந்தம் பிரஹ்மம். உலகில் ஆகாசம் தேசத்தால் அநந்தம் என்பது பிரஸித்தம். அப்படிப்பட்ட ஆகாசத்திற்கும் பிரஹ்மம் காரணமாய் இருப்பதால் தேசத்தால் அதற்கு ஆநந்த்யம் ஸித்திக்கிறது. ஏன்எனில் உலகில் ஸர்வகதமல்லாத வஸ்துவிலிருந்து ஸர்வகத வஸ்து உணாடாவது காணப்படவில்லை. ஆகையால் நிரதிசய ஆத்மாவிற்கு தேசத்தாலும், காரியமாய் இருப்பதால் காலத்தாலும் ஆநந்த்யம் ஸித்திக்கிறது. மேலும் அதைக்காட்டிலும் பின்ன (வேறு) வஸ்து இல்லாததால் வஸ்துவாலும் ஆநந்த்யம் ஸித்திக்கிறது. ஆகையால் தான் ஆத்மாவிற்கு நிரதிசய ஸத்தியத்வம் கிடைக்கிறது.
तस्मात् इति मूलवाक्यसूत्रितं ब्रह्म परामृश्यते ; एतस्मात् इति मन्त्रवाक्येन अनन्तरं यथालक्षितम् । यद्ब्रह्म आदौ ब्राह्मणवाक्येन सूत्रितम् , यच्च ‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ इत्यनन्तरमेव लक्षितम् , तस्मादेतस्माद्ब्रह्मण आत्मनः आत्मशब्दवाच्यात् ; आत्मा हि तत् सर्वस्य, ‘तत्सत्यं स आत्मा’ (छा. उ. ६ । ८ । ७) इति श्रुत्यन्तरात् ; अतो ब्रह्म आत्मा ; तस्मादेतस्माद्ब्रह्मण आत्मस्वरूपात् आकाशः सम्भूतः समुत्पन्नः ।
(ச.பா) “तस्मात्” (அதிலிருந்து) என்ற பதவாயிலாய் மூல வாக்கியத்தால் சூத்திர ரூபமாய் கூறப்பட்ட பிரஹ்ம (ब्रह्म) பதத்தை விமர்சிக்கிறார். அவ்வாறே அதன்பின் “एतस्मात्” இதிலிருந்து என்ற வாக்கியத்தால் முன்பு நிர்தேசம் செய்த பிரஹ்மத்தை எடுத்துக்காட்டுகிறது. எந்த பிரஹ்மமானது முதலில் பிராஹ்ம்ணவாக்கிய வாயிலாய் சூத்திர ரூபமாய் எடுத்துக்காட்டப்பட்டதோ அதன்பின் சத்தியம், ஞானமநந்தம் பிரஹ்மம் என்று லக்ஷ்யிக்கப்பட்டதோ அந்த இந்த ஆத்ம சப்த வாச்சிய பிரஹ்மத்தினால் ‘तत्सत्यं स आत्मा’ (छा. उ. ६ । ८ । ७) (தத் சத்தியம் ச ஆத்மா) முதலிய வேறு சுருதியின் அனுஸாரமாக அது எல்லாவற்றிற்கும் ஆத்மா. அந்த இந்த ஆத்மாவிலிருந்து ஆகாசம் உண்டானது.
आकाशो नाम शब्दगुणः अवकाशकरो मूर्तद्रव्याणाम् । तस्मात् आकाशात् स्वेन स्पर्शगुणेन पूर्वेण च आकाशगुणेन शब्देन द्विगुणः वायुः, सम्भूत इत्यनुवर्तते । वायोश्च स्वेन रूपगुणेन पूर्वाभ्यां च त्रिगुणः अग्निः सम्भूतः । अग्नेश्च स्वेन रसगुणेन पूर्वैश्च त्रिभिः चतुर्गुणा आपः सम्भूताः । अद्भ्यः स्वेन गन्धगुणेन पूर्वैश्च चतुर्भिः पञ्चगुणा पृथिवी सम्भूता । पृथिव्याः ओषधयः । ओषधीभ्यः अन्नम् । अन्नात् रेतोरूपेण परिणतात् पुरुषः शिरः - पाण्याद्याकृतिमान् ।
(ச.பா) சப்த குணமுடையதும் எல்லா மூர்த்த திரவியங்களுக்கும் அவகாசம் கொடுப்பதால் அது ஆகாசம் என்று கூறப்படுகிறது. அந்த ஆகாசத்திலிருந்து தன்னுடை ஸ்பர்ச குணத்துடன் முன்னால் இருக்கும் ஆகாசத்தின் சப்த குணத்துடன் சேர்ந்து இரண்டு குணமுடைய வாயு உண்டாயிற்று. வாயுவிலிருந்து தன்னுடைய ரூபகுணத்துடன் இதற்கு முன் இருக்கும் இரண்டு குணங்களுடன் சேர்ந்து முக்குணமுடைய அக்கினி உண்டாயிற்று. அக்னியிலிருந்து தன்னுடைய ரஸ குணத்துடன் முன்புள்ள மூன்று குணங்களுடன் சேர்ந்து அப்பு (நீர்) தோன்றிற்று. அந்த அப்பிலிருந்து தன்னுடைய ஸொந்த குணமாகிய வாசனை (கந்தம்) குணத்துடன் முன்புள்ள நான்கு குணங்குளுடன் சேர்ந்து பிருத்வீ உண்டாயிற்று. பிருதிவியிடமிருந்து ஒஷதிகள் உண்டாயிற்று. ஒஷதிகளில் இருந்து அன்னம் உண்டாயிற்று. அன்னத்திலிருந்து ரேத ரூப பரிணாமத்திலிருந்து தலை கை கால்கள் உடைய புருஷன் தோன்றினான்.
स वै एष पुरुषः अन्नरसमयः अन्नरसविकारः पुरुषाकृतिभावितं हि सर्वेभ्योऽङ्गेभ्यस्तेजःसम्भूतं रेतो बीजम् । तस्माद्यो जायते, सोऽपि तथा पुरुषाकृतिरेव स्यात् ; सर्वजातिषु जायमानानां जनकाकृतिनियमदर्शनात् ।
(ச.பா) அந்த இந்த புருஷன் அன்னரசமயன். அன்னரச விகாரமானவன். புருஷாகாரமாய் பாவிக்கப்பட்டும் அவ்வாறே அவனுடைய எல்லா அங்கங்களிடம் இருந்து உத்பன்னமான தேஜோ ரூபம் சுக்ரமாகும். அது உடலில் பீஜம். அதிலிருந்து உத்பன்னமானதும் அதற்கு ஸமமான புருஷாகாரமாகிறது. ஏன்எனில் எல்லா ஜாதிகளிலும் உண்டாவதில் தன்னை உண்டாக்குபவனின் ஆகிருதியாகும் நியமம் காணப்படுவதால்.
(शंका) सर्वेषामप्यन्नरसविकारत्वे ब्रह्मवंश्यत्वे च अविशिष्टे, कस्मात्पुरुष एव गृह्यते ?
(ச.பா) (சங்கை) ஸ்ருஷ்ட்டியில் எல்லா சரீரங்களும் ஒரே ரூபமாகவே அன்னமயமான விகாரமாகும், அவ்வாறே பிரஹ்மத்தின் அம்சத்திலிருந்து உண்டானவை. இவ்வாறு இருக்கும் பொழுது புருஷனைமட்டும் ஏன் கிரஹிக்கப்படுகிறான்.
(समाधानम्) प्राधान्यात् ।
(ச.பா) (சமாதானம்) - பிரதானத் தன்மை இருப்பதால்.
(शंका) किं पुनः प्राधान्यम् ?
(ச.பா) (சங்கை) - அதன் பிரதானத்தன்மை என்ன?
(समाधानम्) कर्मज्ञानाधिकारः । पुरुष एव हि शक्तत्वादर्थित्वादपर्युदस्तत्वाच्च कर्मज्ञानयोरधिक्रियते, ‘पुरुषे त्वेवाविस्तरामात्मा स हि प्रज्ञानेन सम्पन्नतमो विज्ञातं वदति विज्ञातं पश्यति वेद श्वस्तनं वेद लोकालोकौ मर्त्येनामतमीक्षतीत्येवं सम्पन्नः ; अथेतरेषां पशूनामशनायापिपासे एवाभिविज्ञानम्’ इत्यादि श्रुत्यन्तरदर्शनात् ॥
(ச.பா) (ஸமாதானம்) கர்மத்திலும், ஞானத்திலும் உள்ள அதிகாரமே பிரதானமாகும். அவனுக்கே ஸாமர்த்தியமும். இச்சையும் உள்ளதால் அதில் உதாஸீ னத்தன்மை இல்லாததால் புருஷனே கர்மத்திற்கும், ஞானத்திற்கும் அதிகாரி. पुरुषे त्वेवाविस्तरामात्मा स हि प्रज्ञानेन सम्पन्नतमो विज्ञातं वदति विज्ञातं पश्यति वेद श्वस्तनं वेद लोकालोकौ मर्त्येनामतमीक्षतीत्येवं सम्पन्नः ; अथेतरेषां पशूनामशनायापिपासे एवाभिविज्ञानम् (புருஷனிடத்தில் தான் ஆத்மாவின் பூர்ணமாக ஆவிர்பாவம் ஆகி இருக்கிறது. அது பிரக்ருஷ்ட்டமான ஞானத்தால் எல்லாவற்றையும் விட அதிக பிரக்ஞானம் உடையவனாகிறான். அறிந்ததை கூறவும், அறிந்ததைப் பார்க்கவும் நாளை நடக்கப்போவதை அறியவும் முடியும். அதனால் அவனுக்கு உத்தம, அதம லோகங்களின் ஞானம் உள்ளது. அவ்வாறே கர்ம ஞானரூப அழியக்கூடிய ஸாதனத்தால் மரணமற்றபதத்தில் இச்சைகொள்கிறான். அவனே விவேகம் உடையவனாகிறான். இதைத்தவிற மற்ற பசுக்களுக்கு, பசி, தாகம் இவற்றில் மட்டுமே விசேஷ ஞானம் உள்ளது) இவ்வாறு மற்ற சுருதிகளிலும் காண்பிக்கப்பட்டுள்ளது.
स हि पुरुषः इह विद्यया आन्तरतमं ब्रह्म सङ्क्रामयितुमिष्टः । तस्य च बाह्याकारविशेषेष्वनात्मसु आत्मभाविताबुद्धिः विना आलम्बनविशेषं कञ्चित् सहसा आन्तरतमप्रत्यगात्मविषया निरालम्बना च कर्तुमशक्येति दृष्टशरीरात्मसामान्यकल्पनया शाखाचन्द्रनिदर्शनवदन्तः प्रवेशयन्नाह -
(ச.பா) அந்த புருஷனே இங்கு வித்யையினால் மிகவும் உள் இருக்கும் பிரஹ்மத்தை சென்று அடைய விரும்பப்படுகிறான். ஆனால் அவனுடைய புத்தி வெளிவிஷயங்களாகிய அநாத்ம பதார்த்தங்களில் ஆத்மபாவனையை செய்கிறது. ஏதாவது ஒரு ஆலம்பனம் இல்லாமல் ஒன்றாகவே எல்லாவற்றிக்கும் அந்தரதம் (உள்ளிருக்கும்) பிரத்யக் ஆத்ம சம்பந்தமும், நிராலம்பனமும் அவனுக்கு ஸம்பவிக்காது. ஆகையால் திருஷ்ட சரீரரூப ஆத்மாவுடன் சாமான்ய கல்பனையினால் சாகாசந்திர மரக்கிளையில் சந்திரன் என்ற திருஷ்ட்டாந்தத்தால் உள்ளே பிரவேசம் செய்விக்க சுருதி கூறுகின்றது.
तस्येदमेव शिरः । तस्य अस्य पुरुषस्यान्नरसमयस्य इदमेव शिरः प्रसिद्धम् । प्राणमयादिष्वशिरसां शिरस्त्वदर्शनादिहापि तत्प्रसङ्गो मा भूदिति इदमेव शिर इत्युच्यते । एवं पक्षादिषु योजना । अयं दक्षिणो बाहुः पूर्वाभिमुखस्य दक्षिणः पक्षः । अयं सव्यो बाहुः उत्तरः पक्षः । अयं मध्यमो देहभागः आत्मा अङ्गानाम् , ‘मध्यं ह्येषामङ्गानामात्मा’ इति श्रुतेः । इदमिति नाभेरधस्ताद्यदङ्गम् , तत् पुच्छं प्रतिष्ठा । प्रतितिष्ठत्यनयेति प्रतिष्ठा । पुच्छमिव पुच्छम् , अधोलम्बनसामान्यात् , यथा गोः पुच्छम् ।
(ச.பா) அதனுடைய (அனுபவப் பிரஸித்தமான) சிரஸே சிரஸ். அந்த இந்த புருஷனுடைய அன்னரசமயத்தின் இதுவே (சிரஸே) சிரஸ் என்பது பிரசித்தம். பிராணமயாதிகளிலும் சிரஸாக இல்லாததை சிரஸ்த்வம் கல்பிக்கப்படுவதால் இங்கும் அவ்வாறு எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக இந்த (சிரஸே) சிரஸ் என்று கூறப்படுகிறது. இவ்வாறு பக்ஷங்களிலும் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த வலதுகை கிழக்கு திக்கில் நோக்கும்பொழுது தக்ஷிண (தெற்கு) பக்ஷமாகும். இந்த இடது கை உத்தர (வடக்கு) பக்ஷமாகும். தேஹத்தின் மத்ய பாகமே அங்கங்களின் ஆத்மா. मध्यं ह्येषामङ्गानामात्मा (மத்யம் ஹ்யேஷாமங்காநாமாத்மா = மத்தியபாகமே இந்த அங்கங்களின் ஆத்மா) என்று சுருதியினாலும் அறிகிறோம். இந்த நாபிக்குக் கிழ் உள்ள அங்கம் புச்சம் பிரதிஷ்ட்டா (நிலை பெறஹேது). பசுவின் புச்சம் போல் கீழ் நோக்கியும், நீளமாயும் இருப்பதால் புச்சம் போல் புச்சம் எனப்படுகிறது.
एतत्प्रकृत्य उत्तरेषां प्राणमयादीनां रूपकत्वसिद्धिः, मूषानिषिक्तद्रुतताम्रप्रतिमावत् । तदप्येष श्लोको भवति । तत् तस्मिन्नेवार्थे ब्राह्मणोक्ते अन्नमयात्मप्रकाशके एष श्लोकः मन्त्रः भवति ॥
(ச.பா) இந்த ப்ரகிருதிக்கு மேலாகக் கூறப்போகிறபிராணமயம் முதலானவைகளுக்கு இது ரூபகமாக ஏற்படுகிறது. அச்சில் வார்க்கப்பட்ட தாமிரத்தில் வார்த்த பிரதிமையாவது போல், இந்த இடத்தில் இந்த ச்லோகம் வருகிறது. அதே பொருளில் பிரஹ்ம வாக்கியத்தால் சொல்லப்பட்ட அன்னமயத்தைப் பிரகாசிப்பதற்காக இந்த மந்திரம் வந்துள்ளது. (இங்கு ச்லோகம் என்பது மந்திரத்தையே குறிக்கிறது).
इति प्रथमानुवाकभाष्यम् ॥
अन्नाद्वै प्रजाः प्रजायन्ते । याः काश्च पृथिवीं श्रिताः । अथो अन्नेनैव जीवन्ति । अथैनदपि यन्त्यन्ततः । अन्नं हि भूतानां ज्येष्ठम् । तस्मात्सर्वौषधमुच्यते । सर्वं वै तेऽन्नमाप्नुवन्ति । येऽन्नं ब्रह्मोपासते । अन्नं हि भूतानां ज्येष्ठम् । तस्मात्सर्वौषधमुच्यते । अन्नाद्भूतानि जायन्ते । जातान्यन्नेन वर्धन्ते । अद्यतेऽत्ति च भूतानि । तस्मादन्नं तदुच्यत इति । तस्माद्वा एतस्मादन्नरसमयात् । अन्योऽन्तर आत्मा प्राणमयः । तेनैष पूर्णः । स वा एष पुरुषविध एव । तस्य पुरुषविधताम् । अन्वयं पुरुषविधः । तस्य प्राण एव शिरः । व्यानो दक्षिणः पक्षः । अपान उत्तरः पक्षः । आकाश आत्मा । पृथिवी पुच्छं प्रतिष्ठा । तदप्येष श्लोको भवति ॥ १ ॥
अन्नात् रसादिभावपरिणतात् , वै इति स्मरणार्थः, प्रजाः स्थावरजङ्गमात्मकाः, प्रजायन्ते । याः काश्च अविशिष्टाः पृथिवीं श्रिताः पृथिवीमाश्रिताः, ताः सर्वा अन्नादेव प्रजायन्ते । अथो अपि, जाताः अन्नेनैव जीवन्ति प्राणान्धारयन्ति, वर्धन्त इत्यर्थः । अथ अपि, एनत् अन्नम् , अपियन्ति अपिगच्छन्ति, अपि शब्दः प्रतिशब्दार्थे, अन्नं प्रति लीयन्त इत्यर्थः ; अन्ततः अन्ते जीवनलक्षणाया वृत्तेः परिसमाप्तौ ।
(ச.பா) அன்னத்திலிருந்து ரஸமுதலிய ரூபமாய் பரிணாமமான ஸ்தாவர, ஜங்கம ரூபமான பிரஜைகள் உண்டானார்கள் वा (வா) என்பது ஸ்மரிக்கும் அர்த்தத்தில் வந்துள்ளது. எந்த பிரஜைகள் அவிசேஷபாவத்தால் ப்ருதிவியை ஆச்ரியித்தவைகளாய் அவைகள் எல்லாம் அன்னத்திலிருந்து உத்பன்னர்கள் ஆகிறார்கள். மேலும் உத்பன்னம் ஆனபிறகு அவைகள் அன்னத்தினாலேயே ஜீவிக்கிறார்கள். பிராணதாரணை செய்கிறார்கள். அதாவது வளர்கிறார்கள். பின் கடைசியாக ஜீவன ரூப விருத்திக்கு முடிவு ஏற்பட்ட உடன் அவை அன்னத்திலேயே லயமடைகின்றன. अपि (அபி) என்ற சப்தம் प्रति (ப்ரதி - குறித்து) என்ற அர்த்தத்தில் ஆகும். அதாவது அன்னத்தில் லீனமாகின்றன என்பது பொருள்.
कस्मात् ? अन्नं हि यस्मात् भूतानां प्राणिनां ज्येष्ठं प्रथमजम् । अन्नमयादीनां हि इतरेषां भूतानां कारणमन्नम् ; अतः अन्नप्रभवा अन्नजीवना अन्नप्रलयाश्च सर्वाः प्रजाः । यस्माच्चैवम् , तस्मात् सर्वौषधं सर्वप्राणिनां देहदाहप्रशमनमन्नमुच्यते ॥
(ச.பா) இதன் காரணம் என்ன? பூதங்களுக்கெல்லாம் (பிரா௴களுக்கெல்லாம்) பெரியதும், முதலில் உண்டானதுமாகும். அன்னமயம் முதலிய மற்ற பிரா௴களின் காரணம் அன்னமாகும். ஆகையால் எல்லா பிரஜைகளும் அன்னத்திலிருந்து உண்டானவர்கள். அன்னத்தினால் ஜீவிக்கிறார்கள். அன்னத்திலேயே லீன(லய) மாகிறார்கள். ஏன்எனில் எவ்வாறு உள்ளதோ அதனால் அன்னமே ஸர்வஔஷதம். எல்லா பிரா௴களின் தேஹத்தின் தாகத்தை சாந்தம் செய்கிறது என்று கூறப்படுகிறது.
अन्नब्रह्मविदः फलमुच्यते - सर्वं वै ते समस्तमन्नजातम् आप्नुवन्ति । के ? ये अन्नं ब्रह्म यथोक्तम् उपासते । कथम् ? अन्नजोऽन्नात्मान्नप्रलयोऽहम् , तस्मादन्नं ब्रह्म इति ।
(ச.பா) அன்னமயத்தை பிரஹ்மமாக உபாஸித்தவனின் (உபாசனை செய்பவனின்) பலன் கூறப்படுகிறது- அவர்கள் எல்லாவிதமான அன்னத்தையும் அடைகிறார்கள் எவர்கள்? எவர்கள் முன்கூறிய முறையில் அன்னத்தை பிரஹ்ம ரூபமாய் உபாஸிக்கிறார்கள அவர்கள். எவ்வாறு எனில் அன்னத்திலிருந்து தோன்றி, அன்ன ரூபமாய் இருந்து, அன்னத்திலேயே லயமாகிறேன். ஆகையால் அன்னம் பிரஹ்மம்.
कुतः पुनः सर्वान्नप्राप्तिफलमन्नात्मोपासनमिति, उच्यते - अन्नं हि भूतानां ज्येष्ठं भूतेभ्यः पूर्वमुत्पन्नत्वाज्ज्येष्ठं हि यस्मात् , तस्मात्सर्वौषधमुच्यते ; तस्मादुपपन्ना सर्वान्नात्मोपासकस्य सर्वान्नप्राप्तिः । अन्नाद्भूतानि जायन्ते, जातान्यन्नेन वर्धन्ते इति उपसंहारार्थं पुनर्वचनम् ।
(ச.பா) மேலும் எப்படி அன்னத்தை பிரஹ்மமாக உபாஸிப்பவனுக்கு ஸர்வ அன்னபிராப்தி என்றபலம் உண்டாகிறது என்பதை விளக்குகிறார். அன்னமே பூதங்களுக்குள் முதன்மையானது. எதனால் அந்த அன்னமானது எல்லா பூதங்களுக்கும் முதலில் உண்டாயிற்றோ அதனால் அது ஸர்வஔஷதம் என்று கூறப்படுகிறது. அதனாலேயே அன்னத்தைப் பிரஹ்மமாக உபாஸிப்பவனுக்கு ஸர்வான்னப் பிராப்தி என்பது மிகவும் பொருத்தமானதே. அன்னத்தில் இருந்து எல்லா பூதங்களும் உண்டாகின்றன. அவ்வாறு உண்டான யாவும் அந்த அன்னத்தாலேயே வளர்கின்றன என்று அதை முடிவிற்கு கொண்டுவருவதற்காக மறுபடியும் கூறுகிறார்.
इदानीमन्नशब्दनिर्वचनमुच्यते - अद्यते भुज्यते चैव यद्भूतैः अत्ति च भूतानि स्वयम् , तस्मात् भूतैर्भुज्यमानत्वाद्भूतभोक्तृत्वाच्च अन्नं तत् उच्यते । इति शब्दः प्रथमकोशपरिसमाप्त्यर्थः ।
(ச.பா) இப்பொழுது அன்னத்திற்கு விமர்சனம் கூறப்படுகிறது. எந்த அன்னமானது பூதங்களினால் உண்ணப்படுகிறதோ, எது அந்த பூதங்களை தனக்கு அன்னமாக்கிக் கொள்கிறதோ அது அன்னம் என்று கூறப்படுகிறது. எது போக்தாவிற்கு உணவாகவும், பூதங்களை உண்பதாகவும் உள்ளதோ அது அன்னம் என்று கூறப்படுகிறது. इति என்ற சொல் முதல் கோசத்தை (அன்னமயத்தை) பூர்த்தி செய்யும் அர்த்தத்தில் வந்தது ஆகும்.
अन्नमयादिभ्य आनन्दमयान्तेभ्य आत्मभ्यः अभ्यन्तरतमं ब्रह्म विद्यया प्रत्यगात्मत्वेन दिदर्शयिषु शास्त्रम् अविद्याकृतपञ्चकोशापनयनेन अनेकतुषकोद्रववितुषीकरणेनेव तण्डुलान् प्रस्तौति - तस्माद्वा एतस्मादन्नरसमयादित्यादि ।
(ச.பா) அன்னமயாதி முதல் ஆனந்தமயம் முடிய உள்ள ஆத்மாக்களுக்குள் (சரீரத்திற்குள்ளும்) மிகவும் சூக்ஷ்மமாய் உள் இருக்கும் பிரஹ்மத்தை வித்யையினால் தன்னுடைய பிரத்யக் ரூபமாய் பார்ப்பதற்கு இச்சை உள்ளவன், அநேக உமியுடன் கூடிய தானியங்களை உமியை நீக்கி காட்டுவது போல் சாஸ்த்திரம் அவித்தியையினால் கல்பிக்கப்பட்ட ஐந்து கோசங்களை நீக்குவது तस्मात् वा एतस्मात् என்பது முதலிய வாக்கியங்களால் ஆரம்பிக்கிறார்.
तस्माद्वै एतस्मात् यथोक्तात् अन्नरसमयात्पिण्डात् अन्यः व्यतिरिक्तः अन्तरः अभ्यन्तरः आत्मा पिण्डवदेव मिथ्यापरिकल्पित आत्मत्वेन प्राणमयः, प्राणः वायुः, तन्मयः तत्प्रायः । तेन प्राणमयेन एषः अन्नरसमय आत्मा पूर्णः वायुनेव दृतिः । स वै एष प्राणमय आत्मा पुरुषविध एव पुरुषाकार एव शिरःपक्षादिभिः ।
(ச.பா) அந்த இந்த முன்பு கூறிய அன்னரஸமய பிண்டத்திலிருந்து வேறான உள்ளே ஒன்றிற்க்குள் ஒன்று இருக்கும் ஆத்மா அந்த அன்னரஸ பிண்டத்திற்கு ஸமமாக மித்யை ஆதலால் ஆது ஆத்ம ரூபமாய் கல்பனை செய்யப்பட்டது. ஆத்மத்துவமாய் கல்பனை செய்யப்பட்ட ஆத்மா பிராணமயன். பிராணன் என்பது வாயு. அந்தமயமாய் இருப்பதால் என்பது அபிப்பிராயம். அந்த பிராணமயனால் அன்னரஸமய ஆத்மா காற்றினால் (வாயுவினால்) நிரப்பப்பட்டுள்ளான். அந்த இந்த பிராணமய ஆத்மா புருஷன் போல் அதாவது தலை பக்ஷங்கள் (இறக்கைகள்) முதலியவைகள் உடைய புருஷாகாரமே ஆகும்.
किं स्वत एव ? नेत्याह - प्रसिद्धं तावदन्नरसमयस्यात्मनः पुरुषविधत्वम् ; तस्य अन्नरसमयस्य पुरुषविधतां पुरुषाकारताम् अनु अयं प्राणमयः पुरुषविधः मूषानिषिक्तप्रतिमावत् , न स्वत एव । एवं पूर्वस्य पूर्वस्य पुरुषविधता ; तामनु उत्तरोत्तरः पुरुषविधो भवति, पूर्वः पूर्वश्चोत्तरोत्तरेण पूर्णः ।
(ச.பா) அது ஸ்வயமாகவே அதற்கு புருஷாகாரமா எனில் இல்லை என்று கூறுகிறார். அன்னமய சரீரத்திற்கு புருஷாகாரம் உலகில் பிரஸித்தமாய் இருக்கிறது. ஆகையால் அன்னரஸமயத்திற்கு புருஷாகாரத்துவம், அதைத் தொடர்ந்து வரும் பிராணமயத்திற்கும். புருஷாகாரத்துவம் (விதத்துவம்) அச்சில்வார்க்கப்பட்ட பிரதிமையின் உருவம் போன்றதே அன்றி இயற்கையானது அல்ல. இவ்வாறே முன்பு முன்பு சொல்லப்பட்ட கோசங்களின் புருஷவிதத்துவத்தினால் பின் பின் வரக்கூடிய கோசங்கள் புருஷவிதமாகும். முந்தியகோசம் பிந்தியகோசத்தால் நிரப்பப்பட்டதாக ஆகும்.
कथं पुनः पुरुषविधता अस्येति, उच्यते - तस्य प्राणमयस्य प्राण एव शिरः प्राणमयस्य वायुविकारस्य प्राणः मुखनासिकानिःसरणो वृत्तिविशेषः शिर इति कल्प्यते, वचनात् । सर्वत्र वचनादेव पक्षादिकल्पना । व्यानः व्यानवृत्तिः दक्षिणः पक्षः । अपानः उत्तरः पक्षः । आकाश आत्मा, य आकाशस्थो वृत्तिविशेषः समानाख्यः, स आत्मेव आत्मा प्राणवृत्त्यधिकारात् । मध्यस्थत्वादितराः पर्यन्ता वृत्तीरपेक्ष्य आत्मा ; ‘मध्यं ह्येषामङ्गानामात्मा’ (ऐ. आ. २-३-५) इति प्रसिद्धं मध्यस्थस्यात्मत्वम् ।
(ச.பா) புருஷ விதத்வம் அதாவது புருஷனைப்போன்றதன்மை எவ்வாறு ஏற்படுகிறது. அந்தப்பிராணனுக்குப் பிராணனே சிரஸ். அந்த பிராணமயனுடைய வாயுவிகாரத்திற்கு பிராணன் என்பது வாய், மூக்கு இவைகளில் இருந்து வெளிக்கிளம்பக்கூடிய விருத்தி விசேஷமே சிரஸ் என்று கல்பனை செய்யப்படுகிறது. எல்லா இடத்திலும் வேதம் பிரமாணமாவதால் அந்த வேத வசனத்தைக் கொண்டே பக்ஷம் முதலானவை கல்பிக்கப்படுகிறது. வியானன் - அதாவது வியானவிருத்தி வலது பக்கமாகும். அபானன் இடது பக்கமாகும். ஆகாசம் ஆத்மா. அந்த ஆகாசத்திலிருக்கும் விருத்தி விசேஷம் ஸமானன் எனப்படும் வாயுவே ஆத்மாவாகக் கருதப்படுகிறது. பிராணவிருத்தி முதலான விருத்திகளின் அதிகாரத்திற்கு இந்த விருத்தியானது நடுவில் இருப்பதாலும் இதைச் சுற்றியே மற்ற விருத்திகள் இருப்பதாலும் இந்த சமானன் ஆத்மா எனப்படுகின்றான். मध्यं ह्येषामङ्गानामात्मा (ऐ. आ. २-३-५) (மத்யம் ஹ்யேஷாமங்கானாமாத்மா - இந்த அங்கங்களின் நடுவில் உள்ளதே ஆத்மா) என்று சுருதியில் பிரசித்தமாய் இருப்பதால் இந்த மத்தியில் உள்ள இதற்கு ஆத்மத்துவம் ஏற்படுகிறது.
पृथिवी पुच्छं प्रतिष्ठा । पृथिवीति पृथिवीदेवता आध्यात्मिकस्य प्राणस्य धारयित्री स्थितिहेतुत्वात् । ‘सैषा पुरुषस्यापानमवष्टभ्य’ (प्र. उ. ३ । ८) इति हि श्रुत्यन्तरम् । अन्यथा उदानवृत्त्या ऊर्ध्वगमनं गुरुत्वात्पतनं वा स्याच्छरीरस्य । तस्मात्पृथिवी देवता पुच्छं प्रतिष्ठा प्राणमयस्य आत्मनः । तत् तस्मिन्नेवार्थे प्राणमयात्मविषये एष श्लोको भवति ॥
(ச.பா) பிருதிவீ புச்சம் (வால்) போல் நிலை பெறஹேதுவானது பிருதிவீ தேவதா பிராணனின் ஸ்திதிக்கு ஹேதுவாய் இருப்பதால் அது தரிக்கிறது. ‘सैषा पुरुषस्यापानमवष्टभ्य’ (प्र. उ. ३ । ८) (ஸைஷா புருஷஸ்யா பானமவஷ்ட்ப்ய) அதுவே இந்த புருஷனின் அபானவாயுவை அவலம்பித்து) என்பது வேறு சுருதியிலும் கூறப்பட்டுள்ளது. வேறு உதான வ்ருத்தி (சூக்ஷ்ம) சரீரத்தை மேலே கொண்டு செல்லுகிறது. அல்லது கனமாய் இருப்பதால் (ஸ்தூல) சரீரத்தைக் கிழே விழச்செய்கிறது. ஆகையால் பிருதிவீ தேவதை பிராணமய ஆத்மாவிற்கு புச்சமாய் நிலை பெற்றுள்ளது. அந்த அர்த்தத்தில் பிராணமய ஆத்மவிஷயமாய் இந்த ச்லோகம் கூறப்படுகிறது.
इति द्वितीयानुवाकभाष्यम् ॥
प्राणं देवा अनु प्राणन्ति । मनुष्याः पशवश्च ये । प्राणो हि भूतानामायुः । तस्मात्सर्वायुषमुच्यते । सर्वमेव त आयुर्यन्ति । ये प्राणं ब्रह्मोपासते । प्राणो हि भूतानामायुः । तस्मात्सर्वायुषमुच्यत इति । तस्यैष एव शारीर आत्मा । यः पूर्वस्य । तस्माद्वा एतस्मात्प्राणमयात् । अन्योऽन्तर आत्मा मनोमयः । तेनैष पूर्णः । स वा एष पुरुषविध एव । तस्य पुरुषविधताम् । अन्वयं पुरुषविधः । तस्य यजुरेव शिरः । ऋग्दक्षिणः पक्षः । सामोत्तरः पक्षः । आदेश आत्मा । अथर्वाङ्गिरसः पुच्छं प्रतिष्ठा । तदप्येष श्लोको भवति ॥ १ ॥
प्राणं देवा अनु प्राणन्ति । अग्न्यादयः देवाः प्राणं वाय्वात्मानं प्राणनशक्तिमन्तम् अनु तदात्मभूताः सन्तः प्राणन्ति प्राणनकर्म कुर्वन्ति, प्राणनक्रियया क्रियावन्तो भवन्ति । अध्यात्माधिकारात् देवाः इन्द्रियाणि प्राणमनु प्राणन्ति । मुख्यप्राणमनु चेष्टन्त इति वा । तथा मनुष्याः पशवश्च ये, ते प्राणनकर्मणैव चेष्टावन्तो भवन्ति ।
(ச.பா) பிராணனை அதிஷ்ட்டான தேவர்கள் தொடர்ந்து ஜீவித்தவர்களாக ஆகின்றனர். அக்னி முதலிய அதிஷ்ட்டான தேவர்கள் வாயு ஆத்மாவான பிராணனை அனுசரித்து அந்த பிராண சக்தியை (ஜீவன சக்தியை) அனுசரித்து அதுவாகவே ஆகிபிராணனம் அதுவாகவே ஆகி பிராணன் அதாவது ஜீவத்தன்மையைப் பெற்றிருத்தல் என்பதுடன் கூடியவர்களாகி செயல்திறன் படைத்தவர்களாக ஆகின்றனர். அத்யாத்ம அதிகாரத்தைப் பெற்று தேவர்கள் எனப்படும். இந்திரியங்கள் அந்தப் பிராணனை அனுஸரித்து அதாவது அந்த முக்கியப் பிராணனை அனுஸரித்து செயல்படுபவர்களாக ஆகின்றன என்றும் பொருள் கொள்ளலாம். அவ்வாறே இப்பூமியில் உள்ள பசுக்கள், மனிதர்கள் இவர்களும் பிராணனம் அதாவது சுவாஸித்தல் என்ற செயலினாலேயே செயல்திறன் படைத்தவர்களாக ஆகின்றனர்.
अतश्च नान्नमयेनैव परिच्छिन्नात्मना आत्मवन्तः प्राणिनः । किं तर्हि ? तदन्तर्गतप्राणमयेनापि साधारणेनैव सर्वपिण्डव्यापिना आत्मवन्तो मनुष्यादयः । एवं मनोमयादिभिः पूर्वपूर्वव्यापिभिः उत्तरोत्तरैः सूक्ष्मैः आनन्दमयान्तैराकाशादिभूतारब्धैरविद्याकृतैः आत्मवन्तः सर्वे प्राणिनः ; तथा, स्वाभाविकेनाप्याकाशादिकारणेन नित्येनाविकृतेन सर्वगतेन सत्यज्ञानानन्तलक्षणेन पञ्चकोशातिगेन सर्वात्मना आत्मवन्तः ; स हि परमार्थत आत्मा सर्वेषामित्येतदप्यर्थादुक्तं भवति ।
(ச.பா) இதனால் என்ன தெரியவருகிறது எனில்? ஜீவன் கேவலம் பரிச்சின்ன ரூப அன்னமய கோசத்தினால் மட்டும் ஆத்மா உடையவனாக இல்லை எதனால் என்றால் அந்த மனிதன் முதலிய ஜீவர்களின் உள்ளே இருக்கும் (அந்தர்வர்த்தி) சம்பூர்ணமாய் எல்லாபிண்டங்களிலும் வியாபித்த ஸாதாரண பிராணமய கோசத்திற்கும் ஆத்மா ஆவான். இவ்வாறு பூர்வ பூர்வ கோசங்களில் வியாபிக்கும் மனோமயம் முதல் ஆநந்தமய கோசம் வரையிலும், ஆகாசம் முதலிய பூதங்களுடன் கூடிய அவித்யையினால் உண்டான கோசங்களால் நிரப்பப்பட்ட எல்லா பிரா௴களுக்கும் ஆத்மாவான் ஆவான். அவ்வாறே ஸ்வாபாவிகமாக உள்ள ஆகாசம் முதலானவைகளுக்கு அபின்ன நிமித்த காரணமாயும், நித்தியமானதாயும், மாறுபாடு அற்றதாயும் எங்கும் நிறைந்ததாயும், ஸத்திய ஞான அநந்தலக்ஷணத்தோடு கூடியதாயும் இந்த ஐந்து கோசங்களையும், கடந்ததாயும் உள்ள ஸர்வாத்ம ஸ்வரூபத்தால் ஆத்மாவுடன் கூடியவர்களாக ஆகின்றனர், அந்த பரமாத்மாவே பரமார்த்த ஸத்திய ரூபமானவன் எல்லாவற்றிலும் நிறைந்தவன். எலோருக்கும் ஆத்மாவானவன் என்பதும் இதனாலேயே கூறப்பட்டதாகிறது.
प्राणं देवा अनु प्राणन्तीत्याद्युक्तम् ; तत्कस्मादित्याह - प्राणः हि यस्मात् भूतानां प्राणिनाम् आयुः जीवनम् , ‘यावद्ध्यस्मिञ्शरीरे प्राणो वसति तावदेवायुः’ (कौ. उ. ३ । २) इति श्रुत्यन्तरात् । तस्मात् सर्वायुषम् , सर्वेषामायुः सर्वायुः, सर्वायुरेव सर्वायुषम् इत्युच्यते ; प्राणापगमे मरणप्रसिद्धेः । प्रसिद्धं हि लोके सर्वायुष्ट्वं प्राणस्य ।
(ச.பா) பிராணனை அதிஷ்டான உடைய தேவதைகள் தொடர்ந்து ஜீவிக்கின்றன என்று எதற்காகக் கூறப்பட்டது என்பதை கூறுகிறார். பிராணன் அன்றோ பிரா௴களின் ஜீவனமாகின்றது ‘यावद्ध्यस्मिञ्शरीरे प्राणो वसति तावदेवायुः’ (कौ. उ. ३ । २) (யாவத்ஹ்யாஸ்மின் சரீரே ப்ரானோ வசதி தாவதாயு: = எதுவரையில் பிராணன் இந்த சரீரத்தில் இருக்கிறதோ அதுவரையில் ஆயுள்) என்று வேறு ச்ருதியினாலும் ஸித்திக்கிறது. ஆகையால் அது ஸர்வ ஆயுஷ். எல்லோருடைய ஆயுளும் ஸர்வ ஆயுள். எல்லா ஆயுளுமே சர்வாயுஷம் என்று கூறப்படுகிறது. பிராணன் நீங்கினால் மரணம் ஏற்படுகிறது. பிராணனே ஸர்வ ஆயுள் என்று உலகில் பிரஸித்தமாய் இருக்கிறது.
अतः अस्माद्बाह्यादसाधारणादन्नमयादात्मनोऽपक्रम्य अन्तः साधारणं प्राणमयमात्मानं ब्रह्म उपासते ये ‘अहमस्मि प्राणः सर्वभूतानामात्मा आयुः, जीवनहेतुत्वात्’ इति, ते सर्वमेव आयुः अस्मिंल्लोके यन्ति ; नापमृत्युना म्रियन्ते प्राक्प्राप्तादायुष इत्यर्थः । शतं वर्षाणीति तु युक्तम् , ‘सर्वमायुरेति’ (छा. उ. २ । ११ । २)(छा. उ. ४ । ११ । २) इति श्रुतिप्रसिद्धेः ।
(ச.பா) இந்த பாஹ்ய அஸாதாரணமான (தனிப்பட்ட ஒருவனுடையதான) அன்னமய கோசத்தில் உள்ள ஆத்மபுத்தியை நீக்கி அதன் உள்ளே இருக்கும் சாதாரண (எல்லா உடல்களிலும் தொடர்ந்து இருக்கும்) பிராணமய ஆத்மாவை நான் எல்லா பூதங்களுக்கும் ஆத்மா ஆயுள் ஜீவனத்திற்கு ஹேதுவாய் இருக்கும் பிரஹ்மம் என்று உபாஸனை செய்கிறார்களோ அவர்கள் இந்த உலகத்தில் பூர்ண ஆயுளை அடைவார்கள். அதாவது பிராரப்த வசத்தால் அடைந்த ஆயுளுக்கு முன்னர் அபமிருத்யுவினால் மரணம் அடையமாட்டார்கள் என்பது பொருள். ‘सर्वमायुरेति’ (छा. उ. २ । ११ । २) (ஸர்வமாயுரேதி = பூர்ண ஆயுளை அடைகின்றான்) என்று சுருதி பிரஸித்தமாய் இருப்பதால், இங்கு सर्वं आयुः என்றது நூ று வயதைக் குறிப்பதாகும்.
किं कारणम् ? - प्राणो हि भूतानामायुः तस्मात्सर्वायुषमुच्यत इति । यो यद्गुणकं ब्रह्मोपास्ते, स तद्गुणभाग्भवतीति विद्याफलप्राप्तेर्हेत्वर्थं पुनर्वचनम् - प्राणो हीत्यादि । तस्य पूर्वस्य अन्नमयस्य एष एव शरीरे अन्नमये भवः शारीरः आत्मा । कः ? य एष प्राणमयः ।
(ச.பா) பிராணனை ஸர்வ ஆயுள் என்று அறிவது) என்ன காரணம்? என்றால் பிராணனே பூதங்களின் ஆயுள். அதனால் ஸர்வ ஆயுள் என்று கூறப்படுகிறது. எவன் எந்த குணமுடைய பிரஹ்மத்தை உபாசிக்கிறானோ அவன் அந்த குணமுடையவன் ஆகிறான். என்று வித்யா பலத்தை அடைவதற்கு ஆன ஹேதுவாய் இருப்பதைத் தெரிவிப்பதற்காக प्राणोहि என்பது முதலிய வாக்கியங்கள் மறுபடியும் கூறப்பட்டுள்ளன. அதனுடைய முந்திய அன்னமயகோசத்தின் அன்னமயசரீரத்துள் இருக்கும் ஆத்மா யார்? எனில் அந்த பிராணமயனே ஆகும்.
तस्माद्वा एतस्मादित्याद्युक्तार्थमन्यत् । अन्योऽन्तर आत्मा मनोमयः । मन इति सङ्कल्पविकल्पात्मकमन्तःकरणम् , तन्मयो मनोमयः ; सोऽयं प्राणमयस्याभ्यन्तर आत्मा । तस्य यजुरेव शिरः । यजुरिति अनियताक्षरपादावसानो मन्त्रविशेषः ; तज्जातीयवचनो यजुःशब्दः ; तस्य शिरस्त्वम् , प्राधान्यात् । प्राधान्यं च यागादौ संनिपत्योपकारकत्वात् यजुषा हि हविर्दीयते स्वाहाकारादिना ॥
(ச.பா) तस्मात् एतस्मात् (தஸ்மாத் ஏதஸ்மாத்) முதலிய பதங்களின் அர்த்தம் முன்பே கூறப்பட்டது. வேறு அந்தராத்மா மனோமய. சங்கல்பவிகல்பக அந்தக்கரணம் மனம் எனப்படுகிறது. அந்தமயம் மனோமயம் என்று எவ்வாறு அன்னமயம் கூறப்படுகிறதோ அவ்வாறு. அது இந்தப் பிராணமயத்தின் அந்தராத்மா (மிகவும் உள்ளிருக்கும் ஆத்மா) அதற்கு யஜ)ர்வேதம் சிரஸ். நியமம் இல்லாத அக்ஷரங்களுடன் கூடி ஒருபாதத்தில் ஸமாப்தி உடைய மந்திர விசேஷமே யஜ)ஸ், அந்த மந்திரங்களின் ஜாதியிலுள்ள வாக்கியங்கள் யஜ)ஸ் இது பிரதானமாய் இருப்பதால் இது சிரஸ்ஸாக ஆகும். யாகம் முதலியவைகளில் மிகநெருங்கிய உபகாரமாய் இருப்பதால் யஜ)ர்மந்திரம் பிரதானமாகும். ஏன்எனில் ஸ்வாஹா முதலிய யஜ)ர்மந்திரங்களால் ஹவிஸ் முதலியவைகள் ஸமர்பிக்கப்படுகின்றன.
वाचनिकी वा शिरआदिकल्पना सर्वत्र । मनसो हि स्थानप्रयत्ननादस्वरवर्णपदवाक्यविषया तत्सङ्कल्पात्मिका तद्भाविता वृत्तिः श्रोत्रकरणद्वारा यजुःसङ्केतेन विशिष्टा यजुरित्युच्यते । एवम् ऋक् ; एवं साम च ।
(ச.பா) எல்ல இடங்களிலும் வேதம் கூறுவதால் மட்டுமே அந்தந்த பொருளுக்கு சிரஸ் முதலான கல்பனை ஏற்பட்டது. மனதின் விருத்திதான் (உச்சாரணத்தின்) ஸ்தானம் (ஆந்தரிக) பிரயத்னம், (அதிலிருந்து உண்டான) நாதம், (உதாத்தாதி) ஸ்வரம், (அகாராதி) வர்ணம் அதாவது எழுத்து, (அதனால் உண்டாக்கப்படும்) பதம், மேலும் வாக்கியத்துடன் ஸம்பந்தமுடைய அவ்வாறே அவற்றின் ஸங்கல்பம், அதன் பாவத்துடன் கூடிய சிரவணாதி இந்திரியங்களின் வாயிலாய் கேட்கப்படும் ஒலியானது யஜ): என்று கூறப்படுகிறது. இவ்வாறே“ரிக்கும்”, “ஸாமமும்” ஆகும்.
एवं च मनोवृत्तित्वे मन्त्राणाम् , वृत्तिरेव आवर्त्यत इति मानसो जप उपपद्यते । अन्यथा अविषयत्वान्मन्त्रो नावर्तयितुं शक्यः घटादिवत् इति मानसो जपो नोपपद्यते । मन्त्रावृत्तिश्चोद्यते बहुशः कर्मसु ।
(ச.பா) இவ்வாறு மந்திரங்கள் மனதின் விருத்தியாய் இருப்பதால், அந்த விருத்தியே ஆவர்த்தி (திருப்பித்திருப்பி சொல்லுதல்) ஆகிறது என்பதால் அதன் மானசீக ஜபம் பொருந்துகிறது இல்லாவிடில் கடாதிகளைப் போல் மனதின் விஷயமாகாததால் மந்திரத்தின் ஆவிர்த்திமானஸம் ஆகாது. அவ்வாறே மானசீக ஜபமும் பொருந்தாது. ஆனால் மந்திரங்களின் ஆவிர்த்தியும் அநேக கர்மங்களில் விதிக்கப்பட்டுள்ளது.
(शंका) अक्षरविषयस्मृत्यावृत्त्या मन्त्रावृत्तिः स्यात् इति चेत् ।
(ச.பா) (சங்கை) அக்ஷரம் பற்றிய ஸ்மிருதியின் ஆவிர்த்தியால் மந்திராவிருத்தியும், உண்டாகுமே எனில்?
(समाधानम्) न ; मुख्यार्थासम्भवात् । ‘त्रिः प्रथमामन्वाह त्रिरुत्तमाम्’ इति ऋगावृत्तिः श्रूयते । तत्र ऋचः अविषयत्वे तद्विषयस्मृत्यावृत्त्या मन्त्रावृत्तौ च क्रियमाणायाम् ‘त्रिः प्रथमामन्वाह’ इति ऋगावृत्तिर्मुख्योऽर्थश्चोदितः परित्यक्तः स्यात् । तस्मान्मनोवृत्त्युपाधिपरिच्छिन्नं मनोवृत्तिनिष्ठमात्मचैतन्यमनादिनिधनं यजुःशब्दवाच्यम् आत्मविज्ञानं मन्त्रा इति । एवं च नित्यत्वोपपत्तिर्वेदानाम् । अन्यथाविषयत्वे रूपादिवदनित्यत्वं च स्यात् ; नैतद्युक्तम् । ‘सर्वे वेदा यत्रैकं भवन्ति स मानसीन आत्मा’ इति च श्रुतिः नित्यात्मनैकत्वं ब्रुवन्ती ऋगादीनां नित्यत्वे समञ्जसा स्यात् । ‘ऋचोऽक्षरे परमे व्योमन्यस्मिन्देवा अधि विश्वे निषेदुः’ (श्वे. उ. ४ । ८) इति च मन्त्रवर्णः ।
(ச.பா) (ஸமாதானம்) அவ்வாறு அல்ல, ஏன்எனில் (இவ்வாறு ஏற்றுக்கொண்டால் ஜபவிதானத்தை செய்யும் சுருதியின்) முக்கியமான அர்த்தம் ஸம்பவிக்காது. त्रिः प्रथमामन्वाह त्रिरुत्तमाम् (த்ரி: பிரதமாமந்வாஹத்ரிருத்தமாம் = மூன்று முறை முதல் ரிக்கை ஆவிர்த்தி செய்யவேண்டும். மேலும் மூன்று முறை கடைசி ரிக்கை ஆவர்த்தனம் செய் என்று ரிக்கின் ஆவிர்த்தி சுருதியின் கட்டளையாகும். இந்த கிலையில் மந்திரமயமான ரிக் மனதின் விஷயமல்ல. என்றால் மந்திரத்தின் ஆவிர்த்தி ஸ்தானத்தில் கேவலம் அந்த ஸ்மிருதியின் ஆவர்த்தனம் செய்வதாய் இருந்தால் त्रिः प्रथमामन्वाह என்ற சுருதியின் முக்கிய அர்த்தம் விட்டுவிட்டதாக ஆகிவிடும். ஆகையால் மனோவிர்த்திநிஷ்ட்ட ஆத்ம சைதன்யம், அநாதி நிதனம் ஆதியந்தம் அற்ற மந்திரம் யஜ)ஸ் ஸப்தத்தின் வாச்சியம் ஆத்மவிக்ஞானம் யஜ)ர் மந்திரமாகும். இதனால்தான் வேதத்திற்கு நித்தியத்துவம் ஸித்திக்கிறது. இவ்வாறு இல்லை எனில் மற்றஇந்திரிய விஷயங்களாகிய ரூபாதிகளைப்போல் அநித்தியத்துவம் ஏற்படும். ஆகையால் இது பொருந்தாது. सर्वे वेदा यत्रैकं भवन्ति स मानसीन आत्मा (சர்வே வேதா யத்ரைகம் பவந்தி ஸமானசீன ஆத்மா = எதில் எல்லா வேதங்களும் ஒரே ரூபமாய் ஆகிறதோ அது மனரூப உபாதியில் இருக்கும் ஆத்மாவாகும்) என்று அந்த நித்திய ஆத்மாவுடன் ரிக் முதலியவைகளின் ஏகத்துவத்தைக் கூறும் சுருதியும் நித்யத்துவத்தை அடைந்ததாலேயே பயனுள்ளதாகும் (பிரயோஜன முடையதாகும்) ‘ऋचोऽक्षरे परमे व्योमन्यस्मिन्देवा अधि विश्वे निषेदुः’ (श्वे. उ. ४ । ८) (ரிசோ அக்ஷரே பரமே வ்யோமன்யஸ்மின்தேவா அதி விஷ்வே நிஷேது:= எதில் எல்லா தேவர்களும் இருக்கின்றனரோ அந்த அக்ஷர பரபிரஹ்ம ரூப ஆகாசத்தில் எல்லா ரிக்குகளும் தாதாத்மிய பாவமாய் இருக்கின்றன என்பது இந்த மந்திர வர்ணம்.
आदेशः अत्र ब्राह्मणम्, आदेष्टव्यविशेषानादिशतीति । अथर्वणाङ्गिरसा च दृष्टा मन्त्रा ब्राह्मणं च शान्तिकपौष्टिकादिप्रतिष्ठाहेतुकर्मप्रधानत्वात् पुच्छं प्रतिष्ठा । तदप्येष श्लोको भवति मनोमयात्मप्रकाशकः पूर्ववत् ॥
(ச.பா) आदेशाअत्मा இந்த வாக்கியத்தில் உள்ள ஆதேச சப்தம் பிராஹ்மணத்தைக்கூறும். ஏன்எனில் வேதத்தில் பிராஹ்மண பாகத்தில் தான் கர்த்தவ்ய (செய்யவேண்டிய) விஷயங்களை ஆதேசம் (உபதேசம்) செய்யப்படுகிறது அல்லது அங்கிரஸ் என்ற ரி:யினால் சாக்ஷாத்கரிக்கப்பட்ட மந்திரபிராஹ்மணமே புச்சம் பிரதிஷ்ட்டா (நிலை பெறுதல்). ஏன்எனில் அவைகளில் சாந்தி, புஷ்டி இவைகளுக்கான ஸ்திர ஹேது பூதமான கர்மங்களின் பிரதானத்தன்மை இருக்கிறது. முன்போல் இந்த விஷயத்திலும் மனோமய ஆத்மாவை பிரகாசப்(தெரிய)படுத்துகிறது இந்த ஸ்லோகம்.
इति तृतीयानुवाकभाष्यम् ॥
यतो वाचो निवर्तन्ते । अप्राप्य मनसा सह । आनन्दं ब्रह्मणो विद्वान् । न बिभेति कदाचनेति । तस्यैष एव शारीर आत्मा । यः पूर्वस्य । तस्माद्वा एतस्मान्मनोमयात् । अन्योऽन्तर आत्मा विज्ञानमयः । तेनैष पूर्णः । स वा एष पुरुषविध एव । तस्य पुरुषविधताम् । अन्वयं पुरुषविधः । तस्य श्रद्धैव शिरः । ऋतं दक्षिणः पक्षः । सत्यमुत्तरः पक्षः । योग आत्मा । महः पुच्छं प्रतिष्ठा । तदप्येष श्लोको भवति ॥ १ ॥
यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सहेत्यादि । तस्य पूर्वस्य प्राणमयस्य एष एव आत्मा शारीरः शरीरे प्राणमये भवः शरीरः । कः ? य एष मनोमयः । तस्माद्वा एतस्मादिति पूर्ववत् । अन्योऽन्तर आत्मा विज्ञानमयः मनोमयस्याभ्यन्तरो विज्ञानमयः ।
(ச.பா) எங்கிருந்து வாக் மனதுடன் சேர்ந்து அடையமுடியாமல் திரும்புகிறதோ முதலியவை. அந்த முந்திய பிராணமயத்தின் சரீரத்தினால் உள்ள ஆத்மாவாகும். அது யார்? அது அந்த மனேமயமே तस्माद्वा एतस्मात् முதலியவை முன்போல் அர்த்தம் செய்து கொள்ளவேண்டும். வேறு உள்ளே இருக்கும் ஆத்மா விக்ஞானமயம். மனோமயத்தின் உள்ளே இருப்பது விக்ஞான மயன் ஆகும்.
मनोमयो वेदात्मा उक्तः । वेदार्थविषया बुद्धिर्निश्चयात्मिका विज्ञानम् , तच्चाध्यवसायलक्षणमन्तःकरणस्य धर्मः, तन्मयः निश्चयविज्ञानैः प्रमाणस्वरूपैर्निर्वर्तितः आत्मा विज्ञानमयः प्रमाणविज्ञानपूर्वको हि यज्ञादिः तायते । यज्ञादिहेतुत्वं च वक्ष्यति श्लोकेन ।
(ச.பா) மனோமய கோசம் வேதரூபம் என்று கூறப்பட்டது வேதார்த்த விஷயத்தில் நிச்சயமுடைய புத்தி விக்ஞானம் எனப்படும். மேலும் அது அந்தக்கரணத்தின் (அத்யவசாய) முயற்சி ரூப தர்மம் ஆகும். தன்மயம் அதாவது பிரமாணரூப நிச்சய விக்ஞானம் (புத்தி) உடைய ஆத்மா விக்ஞானமயன். ஏன்எனில் பிரமாணத்தின் விக்ஞானத்தால் யக்ஞாதிகளை நிர்வஹிக்கிறான். ஆகையால் விக்ஞானம் யக்ஞத்திற்கு ஹேது. இதை வரும் சுருதிவாக்கியங்களாகிய மந்திரங்களால் கூறப்போகிறார்.
निश्चयविज्ञानवतो हि कर्तव्येष्वर्थेषु पूर्वं श्रद्धा उपपद्यते । सा सर्वकर्तव्यानां प्राथम्यात् शिर इव शिरः । ऋतसत्ये यथाव्याख्याते एव । योगः युक्तिः समाधानम् आत्मैव आत्मा । आत्मवतो हि युक्तस्य समाधानवतः अङ्गानीव श्रद्धादीनि यथार्थप्रतिपत्तिक्षमाणि भवन्ति । तस्मात्समाधानं योग आत्मा विज्ञानमयस्य । महः पुच्छं प्रतिष्ठा ।
(ச.பா) நிச்சயவிக்ஞானம் உடையவர்களுக்கு அல்லவா கர்த்தவ்ய (செய்யவேண்டிய) விஷயங்களில் முதலில் சிரத்தை உண்டாகிறது. அந்த சிரத்தை எல்லா கர்த்தவ்யங்களுக்கும் முதன்மையாய் இருப்பதால் சிரஸ் போல் சிரஸ் ஆகும். ரிதம், சத்தியம் முன்பு வியாக்யானம் செய்யப்பட்டது போல் ஆகும். யோகம், யுக்தி அதாவது சமாதானம் அதன் ஆத்மாவாகும். யுக்தம் என்பது சமாதானம் உடைய ஆத்மாவான புருஷனுக்கு அங்கங்களுக்கு ஒப்பான சிரத்தை முதலிய ஸாதனங்கள் யதார்த்த ஞானத்தை அடைவதில் ஸாமர்த்திய முடையது ஆகிறது. ஆகையால் ஸமாதானமான யோகமே விக்ஞானமய கோசத்தின் ஆத்மா ஆகும். மஹ: அதன் புச்சமாகும்.
मह इति महत्तत्त्वं प्रथमजम् , ‘महद्यक्षं प्रथमजं वेद’ (बृ. उ. ५ । ४ । १) इति श्रुत्यन्तरात् , पुच्छं प्रतिष्ठा कारणत्वात् । कारणं हि कार्याणां प्रतिष्ठा, यथा वृक्षवीरुधां पृथिवी । सर्वविज्ञानानां च महत्तत्त्वं कारणम् । तेन तद्विज्ञानमयस्यात्मनः प्रतिष्ठा । तदप्येष श्लोको भवति पूर्ववत् । यथा अन्नमयादीनां ब्राह्मणोक्तानां प्रकाशकाः श्लोकाः, एवं विज्ञानमयस्यापि ॥
(ச.பா) முதலில் உண்டான மஹத்தத்துவம் மஹ: எனப்படுகிறது. ‘महद्यक्षं प्रथमजं वेद’ (बृ. उ. ५ । ४ । १) மஹத்யக்ஷம் பிரதமஜம் வேத = முதலில் உற்பத்தியான மிகப்பெரிய யக்ஷன் (பூஜைக்குரியவன்) என்று அறி) என்பது வேறுசுருதி வசனம். புச்சம்பிரதிஷ்ட்டா. என்று கூறுவது காரணமாய் இருப்பதால் காரணம் தான் காரியங்களின் பிரதிஷ்ட்டா. எவ்வாறு மரங்களுக்கு பிருதிவி பிரதிஷ்ட்டையோ அவ்வாறு எல்லா புத்தி விக்ஞானங்களுக்கும் மஹத்தத்துவம் காரணம். ஆகையால் அது (மஹத்தத்துவம்) விக்ஞானமய ஆத்மாவின் பிரதிஷ்ட்டா. மற்றதெல்லாம் முன்போல் விக்ஞானமயனின் விஷயங்களில் இந்த ஸ்லோகம் உள்ளது. அதாவது இதற்கு முன்பிராஹ்மண ஸ்லோகங்களால் அன்னமயாதிகளை தெரிவித்து அவ்விதமாகவே இந்த விக்ஞானமயனையும் தெரிவிக்கிறது. இந்த ஸ்லோகம்.
इति चतुर्थानुवाकभाष्यम् ॥
विज्ञानं यज्ञं तनुते । कर्माणि तनुतेऽपि च । विज्ञानं देवाः सर्वे । ब्रह्म ज्येष्ठमुपासते । विज्ञानं ब्रह्म चेद्वेद । तस्माच्चेन्न प्रमाद्यति । शरीरे पाप्मनो हित्वा । सर्वान्कामान्समश्नुत इति । तस्यैष एव शारीर आत्मा । यः पूर्वस्य । तस्माद्वा एतस्माद्विज्ञानमयात् । अन्योऽन्तर आत्मानन्दमयः । तेनैष पूर्णः । स वा एष पुरुषविध एव । तस्य पुरुष विधताम् । अन्वयं पुरुषविधः । तस्य प्रियमेव शिरः । मोदो दक्षिणः पक्षः । प्रमोद उत्तरः पक्षः । आनन्द आत्मा । ब्रह्म पुच्छं प्रतिष्ठा । तदप्येष श्लोको भवति ॥ १ ॥
विज्ञानं यज्ञं तनुते, विज्ञानवान्हि यज्ञं तनोति श्रद्धापूर्वकम् ; अतो विज्ञानस्य कर्तृत्वं तनुत इति । कर्माणि च तनुते । यस्माद्विज्ञानकर्तृकं सर्वम् , तस्माद्युक्तं विज्ञानमय आत्मा ब्रह्मेति । किञ्च, विज्ञानं ब्रह्म सर्वे देवाः इन्द्रादयः ज्येष्ठम् , प्रथमजत्वात् ; सर्ववृत्तीनां वा तत्पूर्वकत्वात्प्रथमजं विज्ञानं ब्रह्म उपासते ध्यायन्ति, तस्मिन्विज्ञानमये ब्रह्मण्यभिमानं कृत्वा उपासत इत्यर्थः । तस्मात्ते महतो ब्रह्मण उपासनात् ज्ञानैश्वर्यवन्तो भवन्ति ।
(ச.பா) விக்ஞானம் யக்ஞத்தை காப்பாற்றுகிறது. விக்ஞானத்தை உடையவன் அன்றோ சிரத்தை முதலியவைகளுடன் யக்ஞத்தை நன்றாக விஸ்தாரமாக செய்கின்றான். ஆகையால் விக்ஞானம் உடையவனுக்கே கர்த்திருத்துவத்தும் ஏற்படுகிறது. कर्माणि तनुते (கர்மா௴ தனுதே) என்றதால் லௌகிகமான கர்மாக்களைச் செய்கிறான் எனப்பொருள் கொள்ளவேண்டும். எதனால் வைதிக, லௌகிக கர்மங்கள்யாவும் விக்ஞானத்தை கர்த்திருத்துவமாய்க் கொண்டு விளங்குகிறதோ அதனாலேயே விக்ஞானமய ஆத்மாவானது பிரஹ்மம் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த விக்ஞான ரூபமான பிரஹ்மத்தை இந்திரன் முதலான எல்லா தேவர்களும் அந்த விக்ஞானத்தை முன்னிட்டுக்கொண்டே எல்லா பிரவிர்த்திகளும் ஏற்படுவதாலும், எல்லாவற்றிற்கும் முதலில் அதுவே தோன்றியதாலும் அந்த விக்ஞானத்தை பிரஹ்மமாக தியானம் செய்கின்றனர். அந்த விக்ஞானமயமான பிரஹ்மத்தில் அபிமானம் கொண்டு உபாஸிக்கின்றனர் என்பது பொருள். ஆகையினால் அந்த மஹத்தான பிரஹ்மத்தை உபாஸிப்பதால் ஞான ஐச்வர்யத்துடன் கூடியவர்களாக ஆகின்றனர்.
तच्च विज्ञानं ब्रह्म चेत् यदि वेद विजानाति ; न केवलं वेदैव, तस्मात् ब्रह्मणः चेत् न प्रमाद्यति ; बाह्येष्वनात्मस्वात्मा भावितः ; तस्मात्प्राप्तं विज्ञानमये ब्रह्मण्यात्मभावनायाः प्रमदनम् ; तन्निवृत्त्यर्थमुच्यते - तस्माच्चेन्न प्रमाद्यतीति । अन्नमयादिष्वात्मभावं हित्वा केवले विज्ञानमये ब्रह्मण्यात्मत्वं भावयन्नास्ते चेदित्यर्थः ।
(ச.பா) அந்த விக்ஞானமயரூப பிரஹ்மத்தை அறிந்தவன் அதை அறிவது மட்டுமல்ல அதில் பிரமாதமும் (நழுவதல்) அடையக்கூடாது. வெளியில் உள்ள அநாத்ம பதார்த்தங்களில் ஆத்ம புத்தி உள்ளதால் விக்ஞானமய பிரஹ்மத்தினிடம் உண்டான ஆத்ம பாவத்திற்கு பிரமாதம் (நழவதல்) ஏற்படலாம். அதை நிவிர்த்தி செய்வதற்காக கூறுகிறார் - ஆகையால் அதில் பிரமாதம் கொள்ளாதே என்று. இதன் தாத்பரியம் என்னவெனில் அன்னமயாதிகளில் ஆத்ம பாவத்தை விட்டு கேவலம் விக்ஞானமய பிரஹ்மத்தில் ஆத்மத்துவத்தை பாவனை செய்து அதில் நிலைத்து இரு என்பது பொருள்.
ततः किं स्यादिति, उच्यते - शरीरे पाप्मनो हित्वा ; शरीराभिमाननिमित्ता हि सर्वे पाप्मानः ; तेषां च विज्ञानमये ब्रह्मण्यात्माभिमानात् निमित्तापाये हानमुपपद्यते ; छत्रापाय इव च्छायायाः । तस्मात् शरीराभिमाननिमित्तान्सर्वान् पाप्मनः शरीरप्रभवान् शरीरे एव हित्वा विज्ञानमयब्रह्मस्वरूपापन्नः तत्स्थान् सर्वान् कामान् विज्ञानमयेनैवात्मना समश्नुते सम्यग्भुङ्क्ते इत्यर्थः ।
(ச.பா) அதனால் என்ன ஆகும் என்று கூறுகிறார் - எல்லா பாபங்களையும் இந்த சரீரத்திலேயே விட்டு விட்டு எல்லா பாபங்களும் சரீரத்தில் உள்ள அபிமானத்தால் உண்டாகின்றன. ஆகையால் விக்ஞானமய பிரஹ்மத்தின் அபிமான நிமித்தத்தால் இவைகள் சரீரத்துடனேயே விழுந்துவிடுகின்றன. இது குடை இல்லாத பொழுது நிழல் இல்லாதது போலாகும். ஆகையால் சரீராத்மாபிமானத்தால் சரீரத்தில் உண்டாகும், எல்லாபாபங்களும் சரீரத்திலேயே விட்டொழித்து விக்ஞானமய பிரஹ்ம ரூபத்தை அடைந்த ஸாதகன் அதில் உள்ள எல்லா காமனைகளையும் விக்ஞானமயமான ஆத்மாவினாலேயே அடைந்தவனாகின்றான். அதாவது அவைகளை நன்கு அநுபவிக்கின்றான்.
तस्य पूर्वस्य मनोमयस्य आत्मा एष एव शरीरे मनोमये भवः शारीरः । कः ? य एष विज्ञानमयः । तस्माद्वा एतस्मादित्युक्तार्थम् । आनन्दमय इति कार्यात्मप्रतीतिः, अधिकारात् मयट्शब्दाच्च । अन्नादिमया हि कार्यात्मानो भौतिका इहाधिकृताः । तदधिकारपतितश्चायमानन्दमयः । मयट् चात्र विकारार्थे दृष्टः, यथा अन्नमय इत्यत्र । तस्मात्कार्यात्मा आनन्दमयः प्रत्येतव्यः ।
(ச.பா) முன்பு கூறப்பட்ட மனோமயத்தின் சாரீரம், அதாவது மனோமய சரீரத்தில் இருக்கும் ஆத்மாவும் இதுவே. யார்? அந்த விக்ஞானமயன் तस्मात् वा एतस्मात् முதலிய வாக்கியங்களின் அர்த்தம் முன்பே கூறப்பட்டது. आनन्दमयः (ஆனந்தமய:) என்ற காரியாத்மா உணர வேண்டும். ஏன்எனில் அதன் அதிகாரம் (தொடர்ச்சி) ஆகும். மேலும் ஆனந்தத்துடன் मयट् சப்தத்தின் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. எங்கு அன்னமயம் முதலிய பௌதிக காரியாத்மா சொல்லப்பட்டுவருகிறதான இந்த ஆனந்தமயனும் அடங்கி உள்ளது (அந்தர்கதமாய் உள்ளது). मयट् (மயட்) சப்தமும் இங்கு விகாரார்த்தத்தில் உள்ளது, எவ்வாறு அன்னமய சப்தத்தில் உள்ளதோ அவ்வாறு, ஆகையால் ஆனந்தமயன் காரியாத்மா என்று அறிய வேண்டும். (ப்ரம்ஹம் அல்ல)
सङ्क्रमणाच्च । ‘आनन्दमयमात्मानमुपसङ्क्रामति’ इति वक्ष्यति । कार्यात्मनां च सङ्क्रमणमन्नात्मनां दृष्टम् । सङ्क्रमणकर्मत्वेन च आनन्दमय आत्मा श्रूयते, यथा ‘अन्नमयमात्मानमुपसङ्क्रामति’ इति । न च आत्मन एवोपसङ्क्रमणम् , अधिकारविरोधात् । असम्भवाच्च । न ह्यात्मनैव आत्मन उपसङ्क्रमणं सम्भवति, स्वात्मनि भेदाभावात् ; आत्मभूतं च ब्रह्म सङ्क्रमितुः ।
(ச.பா) சங்கிரமணத்தினாலும் வந்து அடைகிறான் என்பதாலும்) இது ஸித்திக்கிறது. ஏன்எனில் ஆனந்தமய கோசத்தை (ஆனந்தமய ஆத்மாவை) என்று கூறப்படப்போகிறது அது மற்றொன்றில் போய் சேர்வதால் அவ்வாறு கூறப்பட்டது. ஆனந்தமய ஆத்மாவின் சங்கிரமணத்தைக் கூறப்போகிறார். ஸங்கிரமணம் காரியாத்மாக்களாகிய அநாத்மாக்களிடம் பார்க்கிறோம். சங்கிரமண கர்மத்துவம் ஆனந்தமய ஆத்மாவிற்கு கேள்விப்படுகிறோம். எவ்வாறு அன்னமய ஆத்மாவிற்கு ஸங்கிரமணம் சொல்லியதுபோல் தனக்குத்தானே உபஸங்கிரமணம் ஸம்பவிக்காது. ஏன்எனில் இவ்வாறு கூறுதல் அதிகார விரோதமாகும். மேலும் இது அசம்பவதோஷத்தோடு கூடியது. ஆதலால் ஆத்மாவில் ஆத்மா ஸங்கிரமனம் அடைவது இல்லை. மேலும் தன்னுடைய ஆத்மாவில் எந்த பேதமும் இல்லை. பிரஹ்மமும் ஸங்கிரமம் செய்யும் ஆத்ம பூதமாகும்.
शिरआदिकल्पनानुपपत्तेश्च । न हि यथोक्तलक्षणे आकाशादिकारणे अकार्यपतिते शिरआद्यवयवरूपकल्पना उपपद्यते । ‘अदृश्येऽनात्म्येऽनिरुक्तेऽनिलयने’ (तै. उ. २ । ७ । १) ‘अस्थूलमनणु’ (बृ. उ. ३ । ८ । ८) ‘नेति नेत्यात्मा’ (बृ. उ. ३ । ९ । २६) इत्यादिविशेषापोहश्रुतिभ्यश्च ।
(ச.பா) (ஆத்மாவில்) சிரஸ் முதலிய கல்பனைகள் சம்பவிக்காததின் காரணமாய் இருப்பதாலும் (ஆனந்தமயம் காரியாத்மாவாகும்), ஆகாசம் முதலியவைகளுக்கு காரணமாயும் காரிய வர்க்கத்திற்குள் உட்படாததாய் இல்லாததால் முன்பு கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய ஆத்மாவில் சிரஸ் முதலிய அவயவ ரூப கல்பனை ஏற்படுவது பொருந்தாது. ‘अदृश्येऽनात्म्येऽनिरुक्तेऽनिलयने’ (तै. उ. २ । ७ । १) (அத்ருஷ்யே அநாத்ம்யே அநிருக்தே அநிலயனே = அதிருஷ்யம், அசரீரம், அநிர்வசநீயம். அநிலயனம்), ‘अस्थूलमनणु’ (बृ. उ. ३ । ८ । ८) அஸ்தூலமனணு = ஸ்தூலம் அற்றது, ஸூக்ஷ்மமும் அற்றது) ‘नेति नेत्यात्मा’ (बृ. उ. ३ । ९ । २६) (நேதி நேத்யாத்மா = இது ஆத்மா அல்ல இது ஆத்மா அல்ல) முதலிய விசேஷநிஷேதக சுருதிகளினாலும் ஸித்திக்கிறது.
मन्त्रोदाहरणानुपपत्तेश्च । न हि, प्रियशिरआद्यवयवविशिष्टे प्रत्यक्षतोऽनुभूयमाने आनन्दमये आत्मनि ब्रह्मणि नास्ति ब्रह्मेत्याशङ्काभावात् ‘असन्नेव स भवति असद्ब्रह्मेति वेद चेत्’ (तै. उ. २ । ६ । १) इति मन्त्रोदाहरणमुपपद्यते । ‘ब्रह्म पुच्छं प्रतिष्ठा’ इत्यपि चानुपपन्नं पृथग्ब्रह्मणः प्रतिष्ठात्वेन ग्रहणम् । तस्मात्कार्यपतित एवानन्दमयः, न पर एवात्मा ।
(ச.பா) (ஆனந்தமயனை ஆத்மாவாகக் கொண்டால்) இனி வரக்கூடிய மந்திரங்களை உதாஹரிக்க முடியாது. சிரஸ் முதலிய அவயவங்களுடன் கூடிய ஆனந்தமய ஆத்மரூப பிரஹ்மத்தை பிரத்யக்ஷமாய் அனுபவிப்பதால் அதற்கு பிரஹ்மத்துவம் இல்லை என்று சங்கையை நீக்குவதற்காக ‘असन्नेव स भवति असद्ब्रह्मेति वेद चेत्’ (तै. उ. २ । ६ । १) (அசன்னேவ ஸ பவதி, அஸத் பிரஹ்ம்மேதி வேத ச்சேத் = எவன் பிரஹ்மம் இல்லை என்று அறிகிறானோ அவன் அஸத் ஆவான்) என்று மந்திரத்தால் தெரிவிக்கப்பட்டது (குறிப்பிடபட்டதும்) பொருந்தாது. அவ்வாறே ‘ब्रह्म पुच्छं प्रतिष्ठा’(பிரஹ்ம்ம புச்சம் பிரதிஷ்ட்டா) இந்த வாக்கியத்தினால் மறுபடியும் பிரதிஷ்ட்டா ரூபமாய் பிரஹ்மத்தை தனியாக கிரஹிக்க முடியாது. ஆகையால் அந்த ஆனந்தமயன் காரிய வர்க்கத்தின் அந்தர்கதமாகவே இருக்கிறான். பரமாத்மா அல்ல.
आनन्द इति विद्याकर्मणोः फलम् , तद्विकार आनन्दमयः । स च विज्ञानमयादान्तरः, यज्ञादिहेतोर्विज्ञानमयादस्यान्तरत्वश्रुतेः । ज्ञानकर्मणोर्हि फलं भोक्त्रर्थत्वादान्तरतमं स्यात् ; आन्तरतमश्च आनन्दमय आत्मा पूर्वेभ्यः । विद्याकर्मणोः प्रियाद्यर्थत्वाच्च । प्रियादिप्रयुक्ते हि विद्याकर्मणी ; तस्मात्प्रियादीनां फलरूपाणामात्मसंनिकर्षात् विज्ञानमयादस्याभ्यन्तरत्वमुपपद्यते ; प्रियादिवासनानिर्वर्तितो ह्यात्मा आनन्दमयो विज्ञानमयाश्रितः स्वप्ने उपलभ्यते ।
(ச.பா) आनन्द இங்கு (ஆனந்த) என்பது உபாஸனை மற்றும் கர்மத்தின் பயன், அதன் விகாரமே ஆனந்தமயன் எனப்படுகிறது. அது விக்ஞானமய கோசத்தின் உள்ளே இருக்கிறது. சுருதியின் வாயிலாய் அந்த யக்ஞாதிகளுக்குக் காரண பூதமான விக்ஞானமயத்தைக் காட்டிலும் உள்ளே இருக்கிறது. உபாஸனை மற்றும் கர்மத்தின் பலன் போக்தாவிற்கு ஆகும். ஆகையால் அது எல்லாவற்றைக் காட்டிலும் உள்ளே இருக்கிறது. முன்பு கூறப்பட்ட எல்லா கோசங்களைக்காட்டிலும் ஆனந்தமயரூப ஆத்மா மிகவும் உள்ளே இருக்கிறது. ஏன்எனில் உபாஸனையும் (வித்யாவும்) கர்மமும் பிரியம் முதலியவைகளுக்காக ஆகும். பிரியம் முதலியவைகளை அடைவதற்காகவே வித்யா (உபாஸனை), கர்மம் இவைகளை அனுஷ்டிக்கிறார்கள். ஆகையால் அவைகளின் பல ரூபபிரியம் முதலியவை ஆத்மாவின் நெருக்கம் ஏற்படுவதால் விக்ஞானமயனைக்காட்டிலும் இந்த ஆனந்தமயன் ஆந்தரதமமாய் (மிகவும் உள்ளே) இருப்பது பொருந்தும். பிரியமுதலிய வாஸனையுடன் கூடிய ஆனந்தமயன் விக்ஞானமயனை ஆச்ரயித்து ஸ்வப்னத்தில் அனுபவிக்கப்படுகிறான்.
तस्य आनन्दमयस्यात्मनः इष्टपुत्रादिदर्शनजं प्रियं शिर इव शिरः, प्राधान्यात् । मोद इति प्रियलाभनिमित्तो हर्षः । स एव च प्रकृष्टो हर्षः प्रमोदः । आनन्द इति सुखसामान्यम् आत्मा प्रियादीनां सुखावयवानाम् , तेष्वनुस्यूतत्वात् ।
(ச.பா) அந்த ஆனந்தமய ஆத்மாவிற்கு இஷ்ட புத்திரன் முதலியவர்களின் தர்சனத்தால் உண்டாகும் பிரியம் பிரதானமாய் இருப்பதால் சிரஸ் போல் சிரஸ் ஆகும். மோதம் என்பது பிரியப்பட்டதின் அடைவதால் உண்டாகும் ஸந்தோஷம். அதுவே ப்ரக்ருஷ்ட்ட (அதிக) மாக உள்ள ஸந்தோஷமே பிரமோதம், ஆனந்தம் என்பது ஸாமானிய ஸ)கமாகும். அந்த ஸ)கத்தின் அவயவ பூதமான பிரியம் முதலியவைகளின் ஆத்மா. அது அவைகளில் அனுஸ்யூதமாய் இருப்பதால் ஆகும்.
आनन्द इति परं ब्रह्म ; तद्धि शुभकर्मणा प्रत्युपस्थाप्यमाने पुत्रमित्रादिविषयविशेषोपाधौ अन्तःकरणवृत्तिविशेषे तमसा अप्रच्छाद्यमाने प्रसन्ने अभिव्यज्यते । तद्विषयसुखमिति प्रसिद्धं लोके । तद्वृत्तिविशेषप्रत्युपस्थापकस्य कर्मणोऽनवस्थितत्वात् सुखस्य क्षणिकत्वम् । तद्यदन्तःकरणं तपसा तमोघ्नेन विद्यया ब्रह्मचर्येण श्रद्धया च निर्मलत्वमापद्यते यावत् , तावत् विविक्ते प्रसन्ने अन्तःकरणे आनन्दविशेष उत्कृष्यते विपुलीभवति । वक्ष्यति च - ‘रसो वै सः, रसं ह्येवायं लब्ध्वानन्दी भवति, एष ह्येवानन्दयाति’ (तै. उ. २ । ७ । १) ‘एतस्यैवानन्दस्यान्यानि भूतानि मात्रामुपजीवन्ति’ (बृ. उ. ४ । ३ । ३२) इति श्रुत्यन्तरात् । एवं च कामोपशमोत्कर्षापेक्षया शतगुणोत्तरोत्तरोत्कर्षः आनन्दस्य वक्ष्यते ।
(ச.பா) “ஆனந்த” என்பது பரபிரஹ்ம வாசகம். அது சுபகர்மங்களினால் ஏற்படும் புத்திர, மித்திரன் முதலிய விசேஷ விஷயங்களை உபாதியாயுடைய அது பிரசன்னமான அந்தக்கரண விருத்தி விசேஷத்தில் தமோகுணத்தினால் மறைப்பு நீங்கிய பொழுது வெளிப்படுவது ஆகும். அது உலகில் விஷய ஸ)கம் என்று பிரஸித்தமாய் இருக்கிறது. அந்த விருத்தி விசேஷத்தை அளிக்கும் கர்மம் ஸ்திரமற்றதாய் இருப்பதால் ஸ)கமும் க்ஷ௴கமாகும். அத்தகைய அந்தக்கரணமானது தமோகுணத்தைப்போக்கும் தபஸினாலும். உபாஸனையினாலும் பிரஹ்மசர்யத்தாலும் மேலும் சிரத்தை இவைகளினால் நிர்மலத்தன்மையை அடைகிறது. எவ்வளவு எவ்வளவு ஸ்வச்சமும் (சுத்தமும்) பிரசன்னமுமடைந்த அந்த அந்தக்கரணத்தில் ஆனந்தத்தின் விசேஷம் உச்சம் அடைகிறது. அதாவது பெருகுகிறது. கூறப்போகிறார். ‘रसो वै सः, रसं ह्येवायं लब्ध्वानन्दी भवति, एष ह्येवानन्दयाति’ (तै. उ. २ । ७ । १) (ரஸோ வை ஸ: ரஸம் ஹ்யே வாயம் லப்தவானந்தீ பவதி* ஏஷ ஹ்யேவானந்தயாதி = அது ரஸம், அதை குடித்து, புருஷன் ஆனந்தமுடையவனாகிறான். அந்த ரஸமே எல்லோரையும் ஆனந்திக்கச் செய்கிறது) என்று ‘एतस्यैवानन्दस्यान्यानि भूतानि मात्रामुपजीवन्ति’ (बृ. उ. ४ । ३ । ३२) (ஏதஸ்யைவானந்தஸ்யான்யானி பூதானி மாத்ரமுபஜீவந்தி = இந்த ஆனந்த அம்ச மாத்திரத்தை ஆச்ரயித்து எல்லா பிரா௴களும் ஜீவிக்கின்றன என்று வேறு சுருதியும் கூறுகிறது. இவ்வாறு காமத்தின் சாந்தியானது ஏறுவதற்குத் தகுந்தவாறு நூ று நூ று மடங்குத்தன்மை அதிகமாக உயர்ந்து மகிழ்ச்சியை அளிப்பது என்று இந்த ஆனந்தத்தின் மேன்மையைக் கூறுகிறார்.
एवं च उत्कृष्यमाणस्य आनन्दमयस्यात्मनः परमार्थब्रह्मविज्ञानापेक्षया ब्रह्म परमेव यत्प्रकृतं सत्यज्ञानानन्तलक्षणम् , यस्य च प्रतिपत्त्यर्थं पञ्च अन्नादिमयाः कोशा उपन्यस्ताः, यच्च तेभ्य आभ्यन्तरम् , येन च ते सर्वे आत्मवन्तः, तत् ब्रह्म पुच्छं प्रतिष्ठा । तदेव च सर्वस्याविद्यापरिकल्पितस्य द्वैतस्य अवसानभूतम् अद्वैतं ब्रह्म प्रतिष्ठा, आनन्दमयस्य एकत्वावसानत्वात् । अस्ति तदेकमविद्याकल्पितस्य द्वैतस्यावसानभूतमद्वैतं ब्रह्म प्रतिष्ठा पुच्छम् । तदेतस्मिन्नप्यर्थे एष श्लोको भवति ॥
(ச.பா) இவ்வாறு உயர்ந்த ஆனந்தமயமான ஆத்மாவினுடைய பரமார்த்த பிரஹ்ம விஞானம் மேலே இருக்கக்கூடியது, ஸத்திய, ஞான, அனந்த லக்ஷணமான எந்த பரம்பொருள் உணர்த்த ஆரம்பிக்கப்பட்டதோ எதை அனுபவ பூர்வமாய் அடைவதற்காகவே இந்த அன்னமய முதலான கோசங்கள் கூறப்பட்டனவோ எது இவைகள் எல்லாவற்றைக் காட்டிலும் உள்ளே இருப்பதோ. எதனால் எல்லா பூதங்களும் ஸத்தையை அடைந்தவைகளாக ஆகின்றனவோ அந்த பிரஹ்மமானது புச்சம் எனப்படும் எல்லாவற்றிற்கும் நிலைக்களமாய் விளங்குகிறது. அதிலேயே யாவும் நிலைபெற்றவைகளாய் இருக்கின்றன. அதுவே அவித்தையால் கல்பிக்கப்பட்ட துவைதங்களுக்கு முடிவாகவும் இரண்டாவதற்றதாகவும் பிரஹ்மமாகவும். ஆனந்தமயனுக்கு பிரதிஷ்டையாகவுமாகிறது. முடிந்த முடிவு நிலையில் உள்ளது இது ஒன்றே அவித்தையால் கல்பிக்கப்பட்ட துவைதத்திற்கு முடிவாக உள்ளது. தனக்கு இரண்டாவதற்ற பிரஹ்மமே ஆகும். அந்த பிரஹ்மமே புச்சம் எனக்கூறப்பட்டுள்ளது. இந்த அர்த்தத்திலேயே இதை விளக்கும் ச்லோகம் உள்ளது.
इति पञ्चमानुवाकभाष्यम् ॥
असन्नेव स भवति । असद्ब्रह्मेति वेद चेत् । अस्ति ब्रह्मेति चेद्वेद । सन्तमेन न्ततो विदुरिति । तस्यैष एव शारीर आत्मा । यः पूर्वस्य । अथातोऽनुप्रश्नाः । उताविद्वानमुं लोकं प्रेत्य । कश्चन गच्छती ३ । आहो विद्वानमुं लोकं प्रेत्य । कश्चित्समश्नुता ३ उ । सोऽकामयत । बहु स्यां प्रजायेयेति । स तपोऽतप्यत । स तपस्तप्त्वा । इदं सर्वमसृजत । यदिदं किञ्च । तत्सृष्ट्वा । तदेवानुप्राविशत् । तदनुप्रविश्य । सच्च त्यच्चाभवत् । निरुक्तं चानिरुक्तं च । निलयनं चानिलयनं च । विज्ञानं चाविज्ञानं च । सत्यं चानृतं च सत्यमभवत् । यदिदं किञ्च । तत्सत्यमित्याचक्षते । तदप्येष श्लोको भवति ॥ १ ॥
असन्नेव असत्सम एव, यथा असन् अपुरुषार्थसम्बन्धी, एवं सः भवति अपुरुषार्थसम्बन्धी । कोऽसौ ? यः असत् अविद्यमानं ब्रह्म इति वेद विजानाति चेत् यदि । तद्विपर्ययेण यत्सर्वविकल्पास्पदं सर्वप्रवृत्तिबीजं सर्वविशेषप्रत्यस्तमितमपि, अस्ति तत् ब्रह्म इति वेद चेत् ।
(ச.பா) असन्नेव எவ்வாறு அஸத் (இல்லாத) பதார்த்தம் புருஷார்த்தத்துடன் ஸம்பந்தப்படுவது இல்லையோ அவ்வாறு அவன் அசத்தே. அஸத்திற்கு சமானமாகவே புருஷார்த்தத்தில் ஸம்பந்தம் இல்லாதவனாகிறான். அவன் யார்? அதாவது அவன் ब्रह्म असत् (பிரஹ்ம அசத்) பிரஹ்மம் இல்லை என்று கருதுகிறான். இங்கு चेत् என்பது यदि என்ற பொருளில் வந்துள்ளது. இதைக் காட்டிலும் விபரீதமாய் எந்த தத்துவம் எல்லா விகல்பங்களுக்கும் ஆச்ரயமோ அவ்வாறே எல்லா பிரவிர்த்திகளுக்கும் பீஜரூபமோ, மேலும் எல்லா விசேஷங்களும் அற்றதோ அந்த பிரஹ்மம் ஸத் என்று அறிகிறானோ.
कुतः पुनराशङ्का तन्नास्तित्वे ? व्यवहारातीतत्वं ब्रह्मण इति ब्रूमः । व्यवहारविषये हि वाचारम्भणमात्रे अस्तित्वभावितबुद्धिः तद्विपरीते व्यवहारातीते नास्तित्वमपि प्रतिपद्यते । यथा ‘घटादिर्व्यवहारविषयतयोपपन्नः सन् , तद्विपरीतः असन्’ इति प्रसिद्धम् , एवं तत्सामान्यादिहापि स्याद्ब्रह्मणो नास्तित्वं प्रत्याशङ्का । तस्मादुच्यते - अस्ति ब्रह्मेति चेद्वेदेति ।
(ச.பா) பிரஹ்மத்தின் இருப்பு இல்லை என்ற சங்கை ஏன் ஏற்படுகிறது? வியவஹாரங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்று கூறுகிறோம். வியவஹார விஷயமாய் இருந்தால் அல்லவா கார்ய பொருளானவற்றில் இருக்கிறது என்று பாவிக்கும் புத்தியானது அதைக்காட்டிலும் விபரீதமான வியவஹாரத்திற்கு அப்பாற்பட்ட பதார்த்தத்தில் இல்லை என்று கூட புரிந்துகொள்கிறது. எவ்வாறு (ஜலம் கொண்டுவருதல் முதலிய) வியவஹார விஷயரூபமாய் உள்ள கடம் முதலிய பதார்த்தம் சத் என்றும் அதனினும் விபரீதமானதை (வந்தியாபுத்திரன்) (மலடிமகன்) அசத் என்றும் பிரஸித்தமாய் இருக்கிறது. இவ்வாறு இதற்கு ஸமானமாய் இருப்பதால் இங்கும் பிரஹ்மத்திற்கு இல்லை என்று சங்கை ஏற்படுகிறது. ஆகையால் “பிரஹ்மம் இருக்கிறது என்று அறிந்தால்” (अस्ति ब्रह्मेति चेद्वेदेति) என்று கூறப்படுகிறது.
किं पुनः स्यात्तदस्तीति विजानतः ? तदाह - सन्तं विद्यमानं ब्रह्मस्वरूपेण परमार्थसदात्मापन्नम् एनम् एवंविदं विदुः ब्रह्मविदः । ततः तस्मात् अस्तित्ववेदनात् सः अन्येषां ब्रह्मवद्विज्ञेयो भवतीत्यर्थः ।
(ச.பா) அது (பிரஹ்மம்) இருக்கிறது என்று அறிந்த புருஷனுக்கு என்னபலன் கிடைக்கும்? அதைக் கூறுகிறார். இருக்ககூடிய பிரஹ்மஸ்வரூபத்தை பரமார்த்த ஸத்தையோடு கூடியதாய் தன்னுடைய अस्ति (அஸ்தி) ஸ்வரூபமாய் எப்பொழுது உணர்கிறார்களோ அப்பொழுது அவர்கள் அப்பிரஹ்மத்தை அறிந்தவர்களாய் மற்றவர்களுக்கு பிரஹ்மத்தைப் போல் அறிவதற்கு யோக்கியமாய் ஆகிறான்.
अथवा यो नास्ति ब्रह्मेति मन्यते, स सर्वस्यैव सन्मार्गस्य वर्णाश्रमादिव्यवस्थालक्षणस्य नास्तित्वं प्रतिपद्यते ; ब्रह्मप्रतिपत्त्यर्थत्वात्तस्य । अतः नास्तिकः सः असन् असाधुरुच्यते लोके । तद्विपरीतः सन् यः अस्ति ब्रह्मेति चेद्वेद, स तद्ब्रह्मप्रतिपत्तिहेतुं सन्मार्गं वर्णाश्रमादिव्यवस्थालक्षणं श्रद्दधानतया यथावत्प्रतिपद्यते यस्मात् , ततः तस्मात् सन्तं साधुमार्गस्थम् एनं विदुः साधवः । तस्मादस्तीत्येव ब्रह्म प्रतिपत्तव्यमिति वाक्यार्थः ।
(ச.பா) அல்லது எவர் பிரஹ்மம் இல்லை என்று எண்ணுகிறார்களோ அவர்கள் எல்லா ஸன்மார்க வர்ணாஸ்ரமம் முதலிய அவஸ்தாலக்ஷணத்தில் உள்ள அசிரத்தையால் (नास्तित्वम्) இல்லைத் தன்மையை அடைகிறான். ஏன்எனில் அவர்கள் ப்ரஹ்மத்துவத்தை அடைகிறார்கள், ஆகையால் உலகில் இந்த நாஸ்திகன் அஸாது என்று கூறுகிறார்கள். இதைக்காட்டிலும் விபரீதமான எந்த ஸத் புருஷன் பிரஹ்மத்தை இருக்கிறது என்று உணர்கிறானோ அப்பொழுது அவன் அந்த பிரஹ்மத்தை அடைவதற்கான சன்மார்க்கமாகிய வர்ணாஸ்ரமம் முதலிய வியவஸ்தாலக்ஷண சிரத்தையுடனும் அந்த மார்க்கத்தில் சென்று அந்த பிரஹ்ம்த்தின் யதார்த்தத்தை அறிகின்றானோ அதனால் இந்த நல்வழியில் செல்பவன் என்று இவனை ஸாதுக்கள் அறிகின்றனர். ஆகையால் பிரஹ்மம் இருக்கிறது என்றே அறியவேண்டும். அல்லது ஏற்க வேண்டும் என்பது வாக்யார்த்தம்.
तस्य पूर्वस्य विज्ञानमयस्य एष एव शरीरे विज्ञानमये भवः शारीरः आत्मा । कोऽसौ ? य एष आनन्दमयः । तं प्रति नास्त्याशङ्का नास्तित्वे । अपोढसर्वविशेषत्वात्तु ब्रह्मणो नास्तित्वं प्रत्याशङ्का युक्ता ; सर्वसाम्याच्च ब्रह्मणः । यस्मादेवम् , अतः तस्मात् अथ अनन्तरं श्रोतुः शिष्यस्य अनुप्रश्नाः आचार्योक्तिमनु एते प्रश्ना अनुप्रश्नाः ।
(ச.பா) இதற்கு முன்நிலையில் உள்ள விக்ஞானமயனுக்கு அந்த விக்ஞானமய சரீரத்தினுள் இருக்கிற சாரீரகன் எனப்படும் ஆத்மா. அவன் யார்? அவனே இந்த ஆனந்தமயன். அவன் இல்லை என்பதில் சங்கை இல்லை .பிரஹ்மமோவெனில் அது எல்லா விசேஷங்களையும் நீக்கி இருப்பதால் அதாவது அது எல்லா விசேஷங்களும் அற்று இருப்பதால் அது இருக்கிறதா? இல்லையா என்ற சங்கை செய்வது பொருத்தமே. ஏன் எனில் அது ஸர்வஸாமான்யமாய் இருப்பதால்(எங்கும் நிறைந்து இருப்பதால்) முற்கூறிய சங்கை எழுவது சகஜமே. பின்னர் இந்த உபநிஷத்தைக் கேட்கும் சிஷ்யனின் ஆசாரியரின் வார்த்தைகளுக்கு தொடர்ந்து வந்த கேள்விகள் ஆகும்.
सामान्यं हि ब्रह्म आकाशादिकारणत्वात् विदुषः अविदुषश्च ; अतः अविदुषोऽपि ब्रह्मप्राप्तिराशङ्क्यते - उत अपि अविद्वान् अमुं लोकं परमात्मानम् इतः प्रेत्य कश्चन, चनशब्दः अप्यर्थे, अविद्वानपि गच्छति प्राप्नोति ? ‘किं वा न गच्छति ? ’इति द्वितीयोऽपि प्रश्नो द्रष्टव्यः, अनुप्रश्ना इति बहुवचनात् ।
(ச.பா) ஆகாசம் முதலியவைகளுக்குக் காரணமாய் இருப்பதால் வித்வான், அவித்வான் ஆகிய இருவர்களுக்கும் ஸாமான்யமாய் பொதுவாக இருக்கிறது என்றால் அவித்வானுக்கும் பிரஹ்மப் பிராப்தி இருக்கட்டும் என்ற சங்கை ஏற்படுகிறது उत अपि என்று அவித்வானும், இந்த லோகத்தை விட்டு அதாவது இந்த சரீரத்தை விட்டு செல்லும் பொழுது பரமாத்மாவை அடைகிறானா?. அல்லது இல்லையா? என்ற இரண்டாவது கேள்வியும், சேர்க்கவேண்டும் (अनुप्रश्ना) என்று பன்மை கூறுப்படுவதால்.
विद्वांसं प्रत्यन्यौ प्रश्नौ - यद्यविद्वान्सामान्यं कारणमपि ब्रह्म न गच्छति, अतो विदुषोऽपि ब्रह्मागमनमाशङ्क्यते ; अतस्तं प्रति प्रश्नः - आहो विद्वानिति । उकारं च वक्ष्यमाणमधस्तादपकृष्य तकारं च पूर्वस्मादुतशब्दाद्व्यासज्य आहो इत्येतस्मात्पूर्वमुतशब्दं संयोज्य पृच्छति - उताहो विद्वानिति । विद्वान् ब्रह्मविदपि कश्चित् इतः प्रेत्य अमुं लोकं समश्नुते प्राप्नोति । समश्नुते उ इत्येवं स्थिते, अयादेशे यलोपे च कृते, अकारस्य प्लुतिः - समश्नुता ३ उ इति । विद्वान्समश्नुते अमुं लोकम् ; किं वा, यथा अविद्वान् , एवं विद्वानपि न समश्नुते इत्यपरः प्रश्नः ।
(ச.பா) வித்வான்களின் விஷயத்தில் மேலும் இரண்டு கேள்விகள் இருக்கின்றன. பிரஹ்மம் எல்லாவற்றிற்கும் ஸாதாரண காரணம். ஆக இருப்பதால் அவித்வான் அதை அடைய முடிவதில்லை. என்பது போல் வித்வானும் பிரஹ்மத்தை அடைய முடியாதே என்ற சங்கை உண்டாகிறது. அதை உத்தேசித்தே கேட்கப்படுகிறது. அதை அதனாலேயே ஆஹோ (आहो) வித்வான் (विद्वान्) என்றகேள்வி தொடங்குகிறது. பிரஹ்மவித்தான வித்வானும் இந்த லோகத்தில் இந்த சரீரத்தை விட்டபின் பிரஹ்மத்தை அடைகிறானா? இங்கு “उ” என்பது அவனுடைய ஸ்திதியில் சந்தேஹத்தைக் கிளப்புவது ஆகும். இங்கு வரக்கூடிய “அய” अय ஆதேசத்திற்கு “ய” காரலோபம் ஏற்பட்ட பொழுது “அ” காரம் லோபத்தை அடைகிறது. समश्नुता उ என்று உகாரமும் மேலேவரக்கூடிய பாவத்தைக் கீழே இழுத்து “த”காரத்தை முதலில் கூறுவதால் இவை இரண்டும் ஒன்றாக இணைந்த பொழுது வித்வானும் பிரஹ்மத்தை அடைகிறானா? என்ற கேள்வியை எழுப்புவதாக ஆகிறது. எனவே ஆகாசம் முதலியவைகளுக்கு காரணமாக உள்ள பரமார்த்த ஸ்வரூபத்தை எவ்வாறு அவித்வான் அடைவது இல்லையோ அவ்வாறே வித்வானும் அடைவது இல்லையா? என்பது மற்றொரு கேள்வி.
द्वावेव वा प्रश्नौ विद्वदविद्वद्विषयौ ; बहुवचनं तु सामर्थ्यप्राप्तप्रश्नान्तरापेक्षया घटते । ‘असद् ब्रह्मेति वेद चेत्’ ‘अस्ति ब्रह्मेति चेद्वेद’ इति श्रवणादस्ति नास्तीति संशयः । ततः अर्थप्राप्तः किमस्ति नास्तीति प्रथमोऽनुप्रश्नः । ब्रह्मणः अपक्षपातित्वात् अविद्वान्गच्छति न गच्छतीति द्वितीयः । ब्रह्मणः समत्वेऽपि अविदुष इव विदुषोऽप्यगमनमाशङ्क्य किं विद्वान्समश्नुते न समश्नुते इति तृतीयोऽनुप्रश्नः ॥
(ச.பா) இங்கு கேள்விகளும் வித்வான், அவித்வான் இவர்களைப் பற்றியதாக இரண்டுதாக ஆகும். இங்கு பன்மை வந்துள்ளதால் இன்னும் வேறு கேள்வியும் எழவழியுண்டு. ‘असद् ब्रह्मेति वेद चेत्’, ‘अस्ति ब्रह्मेति चेद्वेद’ பிரஹ்மம் இல்லை என்று அறிவானேயானால்” “பிரஹ்மம் இருக்கிறது என்று அறிவானேயானல்” என்று சுருதி கூறுவதால் அது இருக்கிறதா அல்லது இல்லையா என்ற ஸம்சயமும் அதனால் அது இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி முதல் கேள்வியாகும், பிரஹ்மமானது எந்த பக்ஷபாதமும் இல்லாததால் அதை அவிவேகி அடைகிறானா? அல்லது இல்லையா? என்பது இரண்டாவது கேள்வி. பிரஹ்மம் ஸமானமாய் இருப்பதால் அவிவேகிபோல், விவேகியும் அதை அடைகிறானா? அல்லது இல்லையா? என்று வித்வானும் பிரஹ்மப்பிராப்தியைக் குறித்தும் சங்கை செய்யப்படுகிறது, இவ்வாறு வித்வான் அந்த பிரஹ்மபதத்தை அடைகிறானா? இல்லையா? என்பது மூன்றாவது கேள்வி.
एतेषां प्रतिवचनार्थ उत्तरो ग्रन्थ आरभ्यते । तत्र अस्तित्वमेव तावदुच्यते । यच्चोक्तम् ‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ इति, तत्र च कथं सत्यत्वमित्येतद्वक्तव्यमिति इदमुच्यते । सत्त्वोक्त्यैव सत्यत्वमुच्यते । उक्तं हि सदेव सत्यमिति ; तस्मात्सत्त्वोक्त्यैव सत्यत्वमुच्यते । कथमेवमर्थता अवगम्यते अस्य ग्रन्थस्य ? शब्दानुगमात् । अनेनैव ह्यर्थेनान्वितानि उत्तरवाक्यानि - ‘तत्सत्यमित्याचक्षते’ (तै. उ. २ । ६ । १) ‘यदेष आकाश आनन्दो न स्यात्’ (तै. उ. २ । ७ । १) इत्यादीनि ।
(ச.பா) இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பின்வரும் கிரந்தம் ஆரம்பிக்கப்படுகிறது. அதில் முதலில் பிரஹ்மத்தின் அஸ்தித்துவத்தை (இருப்பதை) வர்௴க்கப்படுகிறது. பிரஹ்மம் “சத்தியம், ஞானம், ஆனந்தம்” என்று முதலில் கூறப்பட்ட அந்த பிரஹ்மத்தின் ஸத்தியத்தன்மை எவ்வாறு இருக்கிறது என்பதைக் கூறவேண்டும். இதைப்பற்றிக் கூறுகிறார். அதனுடைய சத்தையை (இருப்பை)க் கூறும்பொழுதே அதன் சத்தியத்தன்மை விளக்கப்பட்டதாகிறது. सदेव सत्यम् (ஸதேவ ஸத்யம்) சத்தே சத்தியமாகும் என்று வேறு இடத்திலும் கூறப்பட்டுள்ளது. ஆகையால் அதன் சத்தைக் கூறும் பொழுதே அதன் சத்தியத்துவமும் கூறப்பட்டதாகிறது. ஆனால் இந்த கிரந்தத்தின் தாத்பர்யமும் இதுவே. அதை எவ்வாறு அறிந்துகொள்வது? இதைக் குறித்துக் கூறுகிறார். ‘तत्सत्यमित्याचक्षते’ (तै. उ. २ । ६ । १) (தத்சத்ய மித்யாசக்ஷதே இது சத்தியம் என்று கூறுகிறது.) ‘यदेष आकाश आनन्दो न स्यात्’ (तै. उ. २ । ७ । १) (யதேஷ ஆகாச ஆனந்தோந ஸ்யாத்-இந்த ஆகாசம் ஆனந்தசொரூபம் இல்லை) முதலியன பின்வரும் வாக்கியங்களும் இந்த அர்த்தத்தை உடையவைகளே.
तत्र असदेव ब्रह्मेत्याशङ्क्यते । कस्मात् ? यदस्ति, तद्विशेषतो गृह्यते ; यथा घटादि । यन्नास्ति, तन्नोपलभ्यते ; यथा शशविषाणादि । तथा नोपलभ्यते ब्रह्म ; तस्माद्विशेषतः अग्रहणान्नास्तीति ।
(ச.பா) இந்த ஸந்தேகத்தில் பிரஹ்மம் அசத் என்ற ஆசங்கை ஏற்படுகிறது அது எதனால்? எது இருக்கிறதோ அதை கடம் முதலியவைகள் போல் விசேஷமாய் கிரஹிக்கப்படுகிறது. முயல் கொம்பு போல் எது இல்லையோ அதை அறியமுடியாது. அவ்வாறே பிரஹ்மத்தை அறியமுடியாது. ஆகையால் முயல்கொம்பு போல் விசேஷமாய் அறிய முடியாததால் அது இல்லாத வஸ்து (அஸத்) ஆகும்.
तन्न, आकाशादिकारणत्वाद्ब्रह्मणः । न नास्ति ब्रह्म । कस्मात् ? आकाशादि हि सर्वं कार्यं ब्रह्मणो जातं गृह्यते ; यस्माच्च जायते किञ्चित् , तदस्तीति दृष्टं लोके, यथा घटाङ्कुरादिकारणं मृद्बीजादि ; तस्मादाकाशादिकारणत्वादस्ति ब्रह्म ।
(ச.பா) அவ்வாறு கூறுவது பொருந்தாது, ஏன்எனில் ஆகாசம் முதலானவைகளுக்கு பிரஹ்மமே காரணமாக இருக்கின்றது. பிரஹ்மம் இல்லாவிடில் ஆகாசம் முதலான காரியங்கள் கிரஹிக்கப்பட முடியாதவையாகும், எது எதில் இருந்து உண்டாகிறதோ, அதற்கு காரணம் இருக்கிறது என்பது உலகில் கண்ட உண்மையாகும். எவ்வாறு எனில் குடம் அங்குரம் இவைகளுக்குக்காரணமான மண்விதை இவைகள் இருப்பதுபோல், ஆகையால் ஆகாசம் முதலானவைகளுக்குக்காரணமாய் இருப்பதால் பிரஹ்மம் இருக்கிறது.
न चासतो जातं किञ्चिद्गृह्यते लोके कार्यम् । असतश्चेन्नामरूपादि कार्यम् , निरात्मकत्वान्नोपलभ्येत ; उपलभ्यते तु ; तस्मादस्ति ब्रह्म । असतश्चेत्कार्यं गृह्यमाणमपि असदन्वितमेव स्यात् ; न चैवम् ; तस्मादस्ति ब्रह्म । तत्र ‘कथमसतः सज्जायेत’ (छा. उ. ६ । २ । २) इति श्रुत्यन्तरमसतः सज्जन्मासम्भवमन्वाचष्टे न्यायतः । तस्मात्सदेव ब्रह्मेति युक्तम् ।
(ச.பா) உலகில் அஸத்தில் இருந்து உண்டான பதார்த்தம் (காரியம்) ஒன்றும் காணப்படவில்லை. நாமரூப முதலிய காரிய வர்க்கங்கள் அசத்திலிருந்து உண்டாகி இருந்தால் அது ஆதாரமற்றதால் அதை கிரஹிக்கமுடியாது. பிரஹ்மத்தை கிரஹிக்க முடிவதால் பிரஹ்மம் இருக்கிறது (அஸ்தி अस्ति). அந்த காரிய வர்க்கம் அஸத்திலிருந்து உண்டாகி இருந்தால் அதை கிரஹித்தாலும் அது அஸத் என்றே கிரஹிக்கப்பட்டுவதாக ஆகவேண்டும். ஆனால் அவ்வாறல்ல. ஆகவே காரணமான ப்ரஹ்மம் ஸத்ரூபமானதே. ‘कथमसतः सज्जायेत’ (छा. उ. ६ । २ । २) (கதமஸத: ஸஞ்ஜாயேத) எவ்வாறு அஸத்திலிருந்து சத் உண்டாகும் என்று வேறு சுருதியில் அஸத்திலிருந்து சத் உண்டாகாது என்று யுக்தியினாலும் கூறப்பட்டுள்ளது. ஆகையால் பிரஹ்மம் ஸத்தே என்பது பொருந்தும்.
(शंका) तद्यदि मृद्बीजादिवत् कारणं स्यात् , अचेतनं तर्हि ?
(ச.பா) (சங்கை) பிரஹ்மம் மண், விதை முதலியவைகள் போல் (ஜகத்திற்கு) காரணமாகில் அதுவும் அசேதனமாகுமே?
(समाधानम्) न ; कामयितृत्वात् । न हि कामयित्रचेतनमस्ति लोके । सर्वज्ञं हि ब्रह्मेत्यवोचाम ; अतः कामयितृत्वोपपत्तिः ।
(ச.பா) (ஸமாதானம்) அவ்வாறு அல்ல. ஏன் எனில் அது காமனை செய்கிறது. உலகில் காமனை செய்யும் ஒருவனும் அசேதனமாய் இல்லை. பிரஹ்மம் ஸர்வக்ஞன் என்று முன்பே கூறியுள்ளோம். ஆகையால் காமனை செய்வது பொருத்தமேயாகும்.
(शंका) कामयितृत्वादस्मदादिवदनाप्तकाममिति चेत्?
(ச.பா) (சங்கை) காமனை செய்பவனாய் இருப்பதால் நம்மைப்போல் பூர்ண காமனாக ஆகமுடியாது என்று ஸித்திக்குமே எனில்?
(समाधानम्) न ; स्वातन्त्र्यात् । यथा अन्यान्परवशीकृत्य कामादिदोषाः प्रवर्तयन्ति, न तथा ब्रह्मणः प्रवर्तकाः कामाः । कथं तर्हि ? सत्यज्ञानलक्षणाः स्वात्मभूतत्वाद्विशुद्धाः । न तैर्ब्रह्म प्रवर्त्यते ; तेषां तु तत्प्रवर्तकं ब्रह्म प्राणिकर्मापेक्षया । तस्मात्स्वातन्त्र्यं कामेषु ब्रह्मणः ; अतो न अनाप्तकामं ब्रह्म ।
(ச.பா) (ஸமாதானம்) அவ்வாறு அல்ல. ஏன் எனில் அது ஸ்வாதந்திரியமுடையதாக இருப்பதால், எவ்வாறு காமம் முதலிய தோஷங்கள் மற்ற ஜீவர்களை வசப்படுத்தி பிரவிர்த்திக்கச் செய்கிறதோ அவ்வாறு காமனைகள் பிரஹ்மத்தை பிரவிர்த்திக்கச் செய்ய முடியாது. அப்படியானால் காமனை எப்படி என்றால்? அந்த ஸத்திய ஞானஸ்வரூபமாயும், அவ்வாறே ஸ்வாத்மபூதமாயும் காமனையில் இருக்கும் காரணத்தால் அது விஸத்தமானது. அதனால் பிரஹ்மத்தை பிரவிர்த்திக்கச் செய்ய முடியாது. ஆனால் ஜீவர்களின் பிராரப்த கர்மங்களை அபேக்ஷித்து பிரஹ்மத்தின் பிரவிர்த்தி ஆகும். ஆகையால் காமனைகளில் பிரஹ்மத்திற்கு ஸ்வதந்திரதன்மை உள்ளது. ஆகையால் பிரஹ்மம் தேவைகள் நிரம்பாததாக ஆகாது.
साधनान्तरानपेक्षत्वाच्च । यथा अन्येषामनात्मभूता धर्मादिनिमित्तापेक्षाः कामाः स्वात्मव्यतिरिक्तकार्यकरणसाधनान्तरापेक्षाश्च, न तथा ब्रह्मणः । किं तर्हि ? स्वात्मनोऽनन्याः ।
(ச.பா) மேலும் வேறு ஸாதனத்தை அபேக்ஷிக்காததால் காமனைக்கான விஷயங்களில் ஸ்வதந்தரதா பிரஹ்மத்திற்கு இருக்கிறது. மேலும் எவ்வாறு அநாத்மபூதமாகவும் தர்மம் முதலியவைகளின் நிமித்தத்தை அபேக்ஷிப்பதாகவும் உள்ள காமங்கள் தன்னைக் காட்டிலும் வேறான காரிய கரண ஸாதனங்களான வேறு ஸாதனங்களை அபேக்ஷிப்பது போல் பிரஹ்மத்திற்கு நிமித்த முதலிய அபேக்ஷை இல்லை எனில் பிரஹ்மத்திற்கு காமனைகள் எவ்வாறு உண்டாகிறது? அவைகள் (காமனைகள்) ஸ்வாத்மாவைக் காட்டிலும் வேறு அல்ல(அநந்யமாகும்).
तदेतदाह - सोऽकामयत । सः आत्मा यस्मादाकाशः सम्भूतः, अकामयत कामितवान् । कथम् ? बहु प्रभूतं स्यां भवेयम् । कथमेकस्यार्थान्तराननुप्रवेशे बहुत्वं स्यादिति, उच्यते - प्रजायेय उत्पद्येय । न हि पुत्रोत्पत्तेरिवार्थान्तरविषयं बहुभवनम् । कथं तर्हि ? आत्मस्थानभिव्यक्तनामरूपाभिव्यक्त्या । यदा आत्मस्थे अनभिव्यक्ते नामरूपे व्याक्रियेते, तदा आत्मस्वरूपापरित्यागेनैव ब्रह्मणः अप्रविभक्तदेशकाले सर्वावस्थासु व्याक्रियेते । तदेतन्नामरूपव्याकरणं ब्रह्मणो बहुभवनम् । नान्यथा निरवयवस्य ब्रह्मणो बहुत्वापत्तिरुपपद्यते अल्पत्वं वा, यथा आकाशस्याल्पत्वं बहुत्वं च वस्त्वन्तरकृतमेव । अतः तद्द्वारेणैवात्मा बहु भवति ।
(ச.பா) இந்த விஷயத்தில் சுருதி கூறுகிறது. அந்த ஆத்மாவானது விரும்பிற்று. எந்த ஆத்மா? எதனின்றும் ஆத்மா தோன்றிற்றோ அந்த ஆத்மா விரும்பிற்று. எவ்வாறு? பஹ)த்துவத்தை அதாவது பலவாறாக ஆகும் தன்மையை அடைந்தது என்று கூறப்படுகிறது. என்னிடமிருந்து பஹ)ப்பிரஜாரூபமாய் பல ரூபங்கள் உண்டாக வேண்டும் என்று எண்௴ அவ்வாறே ஆயிற்று. இது புத்திர உற்பத்தியைப் போல் வேறு விஷயத்தை அடைவதற்கான பஹ)பவனம் (பலதரப்பட்ட தன்மை) ஆகாது. அது எத்தகையது எனில்? தன்னில் இருந்து பலவிதமான நாம ரூபங்களாக வெளிப்படல் என்ற பஹ)பவனம் ஆகும். ஆத்மாவில் இருப்பதும் இதுவரை வெளிப்படாததுமாயும் உள்ள நாமரூபங்கள் எப்பொழுது அபிவ்யக்தி அடைந்து வெளிப்படுகிறதோ அப்பொழுது அந்த நாமரூபங்கள் ஆத்மஸ்வரூபத்தை விடாமலேயே பிரஹ்மத்துடன்கூட பிறிதல் என்ற வேறுபாட்டையும் அடையாமல் தேச காலங்களாலும், மாறுபடாமல் இருந்துகொண்டே எல்லா அவஸ்தைகளிலும், நாநா ரூபங்களாய் வெளிப்படுகிறதோ, அப்பொழுது அந்த நாமரூப அபிவியக்தி எனப்படும் வ்யக்தமாகத் தெரியும் தன்மை பிரஹ்மத்தின் நாநாரூபமான தன்மையாகும். அது வேறுவிதமானது அல்ல. ஏன் எனில் நிரவயவமான பிரஹ்மத்திற்கு பஹ)த்துவம் ஆகிற புத்திரோத்பத்தி போன்ற பஹ)த்துவமோ, அல்பத்துவமோ கிடையாது. எவ்வாறு ஆகாசத்திற்கு பஹ)த்துவமோ, அல்பத்துவமோ வேறு வஸ்துவினால் உண்டாகிறதேயன்றி அதற்கு பஹ)த்வமோ, அல்பத்வமோ கிடையாது. அது போன்றே பிரஹ்மத்திற்கும் ஆகும். ஆகையினால் ஆத்மாவும், நாமரூபங்கள் வாயிலாகவே பஹ)த்வமாகிறது என்று ஏற்படுகின்றது.
न ह्यात्मनोऽन्यदनात्मभूतं तत्प्रविभक्तदेशकालं सूक्ष्मं व्यवहितं विप्रकृष्टं भूतं भवद्भविष्यद्वा वस्तु विद्यते । अतः नामरूपे सर्वावस्थे ब्रह्मणैवात्मवती । न ब्रह्म तदात्मकम् । ते तत्प्रत्याख्याने न स्त एवेति तदात्मके उच्येते । ताभ्यां च उपाधिभ्यां ज्ञातृज्ञेयज्ञानशब्दार्थादिसर्वसंव्यवहारभाग्ब्रह्म ।
(ச.பா) ஆத்மாவைக் காட்டிலும் வேறான அநாத்மபூதமாயும், அவ்வாறே அதைக் காட்டிலும் வேறான தேசகாலங்களுடன் கூடியதாயும், ஸ)க்ஷ்மமானதாயும், அதைக் காட்டிலும் தூரமாய் இருப்பதாயும், உண்டானதாயும், உண்டாகப்போவதாயும், இப்பொழுது இருப்பதாயும், உள்ள வேறு எந்த வஸ்துவும் கிடையாது. ஆகையால் எல்லா அவஸ்தைகளிலும் ஸம்பந்தப்பட்ட நாமரூபங்கள் ப்ரஹ்மத்தினாலேயே ஆத்மபாவத்தை அடைகின்றன. ஆனால் பிரஹ்மமோ அந்த ரூபத்தை ஒரு நாளும் அடைவதில்லை. பிரஹ்மத்தை நிஷேதம் செய்தால் நாமரூபங்கள் இருக்கமுடியாது. ஆகையால் அவைகள் அந்த ஆத்மஸ்வரூபமே ஆகும். அந்த நாமரூப உபாதிகளால்தான் பிரஹ்மமானது ஞாதா. ஞேயம், ஞானம் என்றும் சப்தங்கள் அர்த்தங்கள் முதலிய எல்லா வ்யவஹாரத்தையும் உடையதாக ஆகிறது.
सः आत्मा एवंकामः सन् तपः अतप्यत । तप इति ज्ञानमुच्यते, ‘यस्य ज्ञानमयं तपः’ (मु. उ. १ । १ । ९) इति श्रुत्यन्तरात् । आप्तकामत्वाच्च इतरस्य असम्भव एव तपसः । तत्तपः अतप्यत तप्तवान् , सृज्यमानजगद्रचनादिविषयामालोचनामकरोदात्मेत्यर्थः ।
(ச.பா) அத்தகைய ஆத்மா இவ்வாறு காமனை உடையதாகி தபஸ் செய்தது. தபஸ் என்பது ஞானம் (ஆலோசனை) என்று கூறப்படுகிறது. ‘यस्य ज्ञानमयं तपः’ (मु. उ. १ । १ । ९)” (யஸ்ய ஞானமயம் தப: எதற்கு ஞானரூபதபஸ்) என்று வேறு சுருதியிலும் ஸித்திக்கிறது. எல்லா காமனைகளையும் அடைந்திருப்பதால் ஆத்மாவிற்கு வேறு தபஸ் ஸம்பவிக்காது. (அது) “அவன் தபஸ் செய்தான் (செய்தது)” என்பதின் தாத்பர்யம் என்னவெனில் ஸ்ருஷ்ட்டிக்கப்பட்டிருக்கும் ஜகத்தை உண்டாக்கும் விஷயத்தை ஆலோசித்தல் என்னும் தவத்தை செய்தது என்பது பொருள்.
सः एवमालोच्य तपः तप्त्वा प्राणिकर्मादिनिमित्तानुरूपम् इदं सर्वं जगत् देशतः कालतः नाम्ना रूपेण च यथानुभवं सर्वैः प्राणिभिः सर्वावस्थैरनुभूयमानम् असृजत सृष्टवान् । यदिदं किञ्च यत्किञ्चेदमविशिष्टम् , तत् इदं जगत् सृष्ट्वा, किमकरोदिति, उच्यते - तदेव सृष्टं जगत् अनुप्राविशदिति ॥
(ச.பா) அவர் இவ்வாறு ஆலோசனை செய்து, அதாவது தபஸ் செய்து ஜீவர்களின் கர்மானுசாரமாய் இந்த சம்பூர்ண ஜகத்தையும் தேசத்தாலும், காலத்தாலும், நாமரூபத்தாலும், அவர்களுடைய அனுபவத்திற்கு ஏற்றவாறு அதாவது எல்லாப் பிரா௴களாலும் எல்லா அவஸ்தைகளிலும் அனுபவத்திற்குத் தகுந்ததான ஜகத்தைப் படைத்தார். அதாவது இந்த பிரபஞ்சம் யாவையும் மிச்சமின்றி ஸாமான்ய ரூபமாய் அந்த இந்த ஜகத்தைப் படைத்துப் பின் அவர் என்ன செய்தார்? என்று கூறப்படுகிறது. இவ்வாறு உலகைப் படைத்து அதில் பிரவேசித்தார்.
तत्रैतच्चिन्त्यम् - कथमनुप्राविशदिति । किम् , यः स्रष्टा, स तेनैवात्मनानुप्राविशत् , उत अन्येनेति ? किं तावद्युक्तम् ? क्त्वाप्रत्ययश्वणात् , यः स्रष्टा, स एवानुप्राविशदिति ।
(ச.பா) இங்கு அவர் எவ்வாறு பிரவேசித்தார் என்று சிந்திக்கவேண்டும். எவர் அதைப் படைத்தாரோ அவர் அந்த ரூபமாகவே அதில் பிரவேசித்தாரா? அல்லது வேறு ரூபமாய் பிரவேசித்தாரா? எனில் இதில் எது பொருத்தமானது என்பதை क्त्वा பிரத்யயத்தின் மூலமாய் அதில் விளக்குகிறார். எவர் படைத்தாரோ அவரே (அந்த ரூபமாக அதில் விளங்குகிறார். ) அந்த ரூபம்.
(पूर्वपक्षी) ननु न युक्तं मृद्वच्चेत्कारणं ब्रह्म, तदात्मकत्वात्कार्यस्य, कारणमेव हि कार्यात्मना परिणमते ; अतः अप्रविष्टस्यैव कार्योत्पत्तेरूर्ध्वं पृथक्कारणस्य पुनः प्रवेशोऽनुपपन्नः । न हि घटपरिणामव्यतिरेकेण मृदो घटे प्रवेशोऽस्ति । यथा घटे चूर्णात्मना मृदोऽनुप्रवेशः, एवमनेन आत्मना नामरूपकार्ये अनुप्रवेश आत्मनः इति चेत् , श्रुत्यन्तराच्च ‘अनेन जीवेनात्मनानुप्रविश्य’ (छा. उ. ६ । ३ । २) इति ।
(ச.பா) (பூர்வ) மண்௴ற்கு ஸமமாக ஜகத்திற்கு ப்ரஹ்மம் உபாதான காரணமானால் அதன் காரியமும் முன்பே அந்த ரூபமாக உள்ள காரணத்தால் அதில் அதன் புதிதாக பிரவேசம் ஸம்பவிக்கமுடியாது. காரணமே காரியரூபமாய் பரிணாமம் ஆகி இருக்கிறது. ஆகையால் இங்கும் அது பிரவேசிப்பதற்கு முன் நிலையிலேயே காரியம் உண்டானதற்கு பின்பு அந்தக்காரணம் மறுபடியும் பிரவேசிக்கிறது என்று கூறுவது ஒருபொழுதும் பொருத்தமாக ஆகாது. கடரூபமாய் பரிணமித்த பின்பு அதற்குக் காரணமான மண் பிரவேசிக்கிறது என்பது எப்பொழுதும் இல்லை. எவ்வாறு குடத்தில் சூர்ணமான மண் பிரவேசித்த பின்பு மற்றொரு மண் பிரவேசித்து அந்த ரூபமாக ஆகிறது என்பதும் இல்லை. இதையே வேறு சுருதிகள் ‘अनेन जीवेनात्मनानुप्रविश्य’ (छा. उ. ६ । ३ । २) (அநேந ஜீவேனாத்மானா%பிரவிச்ய = இந்த ஆத்மா அதில் ஜீவவடிவத்தில் ப்ரமவசம் அடைகிறது என்று கூறுகின்றன.
(सिध्दान्ती) नैवं युक्तम् , एकत्वाद्ब्रह्मणः । मृदात्मनस्त्वनेकत्वात् सावयवत्वाच्च युक्तो घटे मृदश्चूर्णात्मनानुप्रवेशः, मृदश्चूर्णस्य अप्रविष्टदेशत्वाच्च । न त्वात्मन एकत्वे सति निरवयवत्वादप्रविष्टदेशाभावाच्च प्रवेश उपपद्यते ; कथं तर्हि प्रवेशः स्यात् ? युक्तश्च प्रवेशः, श्रुतत्वात् - ‘तदेवानुप्राविशत्’ इति ।
(ச.பா) (ஸித்தாந்தீ) இவ்வாறு ஏற்றுக்கொள்வது ஸரியன்று (பொருந்தாது). ஏன் எனில் பிரஹ்மம் ஒன்றே. மண் என்பது ஒரு கடத்திற்குக் காரணமாய் இருப்பிணும் அது ஸாவயவமானதால் மறுபடியும் புழுதி ரூபமாய் அதில் நுழைகிறது என்று கூறுவது போல் இங்கு கூறமுடியாது. மண்௴ற்கு அவயவத்தோடு கூடியதன்மை உள்ளதால் அது குடத்திற்குள் புழுதியாய் நுழைகிறது என்று கூறலாம். அது அதன் பிரவேசத்திற்கு இடம் அளிப்பதாக உள்ளது. ஆனால் ஆத்மாவோ ஒன்றாயும், அவயவமற்றதாயும் எங்கும் நிறைந்ததாகவும் இருப்பதாயும் உள்ளதால் அதற்கு பிரவேசம் என்பது கிடையாது (பொருந்தாது). அவ்வாறெனில் அப்பிரவேசம் எத்தகையது? அது எவ்வாறு பொருந்தும்? எனில் அந்தப்பிரவேசம் பொருத்தமானதே. ஏன் எனில் அதுவே அதனுள் நுழைந்தது என்று சுருதிகளில் கூறப்பட்டுள்ளதால் அது பொருத்தமானதே.
(पूर्वपक्षी) सावयवमेवास्तु ; तर्हि सावयवत्वात् मुखो हस्तप्रवेशवत् नामरूपकार्ये जीवात्मनानुप्रवेशो युक्त एवेति चेत् ?
(ச.பா) (பூர்வ) அவ்வாறானால் பிரஹ்மம் அவயவத்துடன் கூடியதாகவே ஆகட்டுமே. அப்படி இருக்கும் பொழுது அவயவத்துடன் இருப்பதால் வாயில் கை நுழைவதற்கு ஒப்பாக அதனுடைய நாமரூப காரியத்தில் ஜீவரூபமாய் பிரவேசித்தல் ஸரியானதே எனில்?
न ; अशून्यदेशत्वात् । न हि कार्यात्मना परिणतस्य नामरूपकार्यदेशव्यतिरेकेण आत्मशून्यः प्रदेशोऽस्ति, यं प्रविशेज्जीवात्मना । कारणमेव चेत्प्रविशेत् , जीवात्मत्वं जह्यात् , यथा घटो मृत्प्रवेशे घटत्वं जहाति । ‘तदेवानुप्राविशत्’ इति च श्रुतेर्न कारणानुप्रवेशो युक्तः ।
(ச.பா) அவ்வாறு அல்ல, ஏன் எனில் அது ஒருபோதும் தான் இல்லாத இடமற்றது என்பதால் அதில் பிரவேசம் என்பது பொருந்தாது. காரியாத்மாவாய் மாறுபாடு அடைந்த நாமரூபம், காரியம், தேசம் இவைகளைக்காட்டிலும் ஆத்மா சூன்யமான அதாவது ஆத்மா இல்லாத ஒரு இடம் இல்லை. அவ்வாறு இடமிருந்தால் அது ஜீவாத்மாவாய் பிரவேசிக்கிறது என்று கூறலாம். அத்தகைய நிலை இங்கு இல்லை. காரணமே அவ்வாறு பிரவேசிக்குமேயானால் அது தன்னுடைய ஜீவாத்மா பாவத்தை விட்டதாக ஆகும். எவ்வாறு எனில் குடமானது மண்௴ல் பிரவேசித்த பொழுது அக்குடம் குடத்தன்மையைவிட்டதாகும். எனவே ‘तदेवानुप्राविशत्’ (ததேவானுப்ராவிசத்- அது நுழைந்தது) என்ற சுருதி வாக்கியத்தின் காரணமாகவும் அது ப்ரவேசித்தது என்பது பொருந்தாது.
कार्यान्तरमेव स्यादिति चेत् - तदेवानुप्राविशदिति जीवात्मरूपं कार्यं नामरूपपरिणतं कार्यान्तरमेव आपद्यत इति चेत् ?
(ச.பா) வேறு காரியமாகவே அது மாறியது என்று இருக்குமேயானால் அதுவே அதில் நுழைந்தது என்ற சுருதி வாக்கியத்திற்கு ஜீவாத்மரூபமான காரியம் நாமரூபமாக மாறுபாடு அடைந்த வேறு ஒரு காரியத்தை அடைகிறது என்று கூறுவாயேயானால்?
(सिध्दान्ती) न ; विरोधात् । न हि घटो घटान्तरमापद्यते, व्यतिरेकश्रुतिविरोधाच्च । जीवस्य नामरूपकार्यव्यतिरेकानुवादिन्यः श्रुतयो विरुध्येरन् ; तदापत्तौ मोक्षासम्भवाच्च । न हि यतो मुच्यमानः, तदेव आपद्यते । न हि शृङ्खलापत्तिः बद्धस्य तस्करादेः ।
(ச.பா) (ஸித்தாந்தீ) அவ்வாறு அல்ல, அது முரண்பாடானது. கடமானது, ஒருபோதும் வேறு ஒரு கடத்தன்மையை அடைவதில்லை. மேலும் வியதிரேக சுருதிக்கும் அது விரோதமாகும். ஜீவனுக்கு நாமரூப காரியத்தைக் காட்டிலும் வேறுபாடான தன்மையைக் கூறும் சுருதிகளும் முரண்பாடு உடையவைகளாக ஆகும். முற்கூறியபடி நாம் ஏற்றுக்கொண்டால் மோக்ஷமே ஸம்பவிக்காது. ஏன் எனில் முக்தியை அடைந்தவனும் மறுபடியும் காரணத்தன்மையையே அடைவான் என்பது ஸம்பவிக்காது. இது சங்கிலியால் கட்டப்பட்ட திருடன் முதலியோர் சங்கிலிரூபமாக ஆவதில்லை அல்லவா.
बाह्यान्तर्भेदेन परिणतमिति चेत् - तदेव कारणं ब्रह्म शरीराद्याधारत्वेन तदन्तर्जीवात्मना आधेयत्वेन च परिणतमिति चेत् ?
(ச.பா) உள் வெளி என்ற பேதத்தால் அவ்வாறு மாறுபாட்டை அடைந்துள்ளது எனில்? அதே காரணமான பிரஹ்மமே சரீரம் முதலானவைகளுக்கு ஆதாரத்தன்மையை அடைந்து அந்த சரீரத்தின் உள்ளில் ஜீவாத்மாவாய் ஆதேயமாக பரிணாமத்தை அடைந்துள்ளது என்று கூறுவாயேயானால்.
न ; बहिष्ठस्य प्रवेशोपपत्तेः । न हि यो यस्यान्तःस्थः स एव तत्प्रविष्ट उच्यते । बहिष्ठस्यानुप्रवेशः स्यात् , प्रवेशशब्दार्थस्यैवं दृष्टत्वात् - यथा गृहं कृत्वा प्राविशदिति ।
(ச.பா) அவ்வாறு அல்ல. (அகண்டாகாரமாய்) வெளியில் இருப்பவனுக்கு பிரவேசம் பொருந்தாது. மேலும் எவன் எதன் உள்ளில் இருக்கிறானோ அவன் அதில் பிரவேசித்தான் என்று கூறுவதும் கிடையாது, வெளியில் இருப்பவனே உள்ளே நுழைந்தவனாக ஆகமுடியும் என்ற சொல்லுக்குப் பொருள் உலகில் கூறப்பட்டுள்ளது. எவ்வாறு எனில் வீட்டைக்கட்டி அதில் நுழைந்தான் என்பது போல்.
जलसूर्यकादिप्रतिबिम्बवत् प्रवेशः स्यादिति चेत् , न ; अपरिच्छिन्नत्वादमूर्तत्वाच्च । परिच्छिन्नस्य मूर्तस्यान्यस्य अन्यत्र प्रसादस्वभावके जलादौ सूर्यकादिप्रतिबिम्बोदयः स्यात् , न त्वात्मनः ; अमूर्तत्वात् , आकाशादिकारणस्य आत्मनः व्यापकत्वात् । तद्विप्रकृष्टदेशप्रतिबिम्बाधारवस्त्वन्तराभावाच्च प्रतिबिम्बवत्प्रवेशो न युक्तः ।
(ச.பா) ஜலத்தில் காணப்படும் சூரியன் முதலானவைகளின் பிரதிபிம்பம் போல் இந்த பிரவேசம் இருக்கட்டுமே எனில். அதுவும் பொருத்தமன்று. பிரஹ்மம் அல்லது ஆத்மா பரிச்சின்னமற்றதும், அமூர்த்தமானதும் ஆகும். எனவே மேலே சொன்னது பொருந்தாது. பரிச்சின்னமாயும், மூர்த்தமாயும் உள்ள ஒரு வஸ்துவிற்கு அதைக் காட்டிலும், வேறுபட்டதாயும் தெளிவான ஸ்வபாவம் உள்ளதாயும் இருக்கும் ஜலம் முதலானவைகளில் சூரியன் முதலானவைகளின் பிரதிபிம்பங்கள் ஏற்படும். ஆத்மாவோ, அமூர்த்தமாயும், ஆகாசம் முதலானவைகளுக்கு காரணமாய் உள்ளதாலும், எங்கும் வியாபித்து இருப்பதாலும், இந்தப்பிரவேசம் பொருந்தாது. அதை பிரதிபிம்பிக்கும் வேறு ஒரு தேசமோ அந்த பிரதிபிம்பத்திற்கு ஆதாரமாய் உள்ள மற்றொரு வஸ்துவோ இல்லாததால் ஆத்மாவிற்கு பிரதிபிம்பம் போல் பிரவேசமும் பொருத்தமானது அன்று.
(पूर्वपक्षी) एवं तर्हि नैवास्ति प्रवेशः ; न च गत्यन्तरमुपलभामहे, ‘तदेवानुप्राविशत्’ इति श्रुतेः । श्रुतिश्च नोऽतीन्द्रियविषये विज्ञानोत्पत्तौ निमित्तम् । न चास्माद्वाक्यात् यत्नवतामपि विज्ञानमुत्पद्यते । हन्त तर्ह्यनर्थकत्वादपोह्यमेतद्वाक्यम् ‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ इति ।
(ச.பா) (பூர்வ)இவ்வாறு இருக்குமேயானால் அதற்குப் பிரவேசமும் இல்லை, அதற்கு வேறு வழியும் இல்லை. அப்பொழுது ‘तदेवानुप्राविशत्’ (ததேவானுப்ராவிசத்) அதுவே அதில் நுழைந்தது என்ற சுருதிவாக்கியத்திற்கு என்னதான் விநியோகம்? சுருதிவாக்கியங்களே நமக்கு அதீந்திரிய விஷயமாயுள்ள விக்ஞான உற்பத்திக்குக் காரணமானவை, அது சுருதி வாக்கியத்தாலேயே முடியும், எவ்வளவு தான் முயற்சி செய்து கூறினாலும். இந்த வாக்கியத்தில் இருந்து விக்ஞானம் உண்டாவது இல்லை. அந்தோ! இவ்வாறு எனில் ‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ (தத்ஸ்ருட்வாததேவானுப்ராவிசத்) என்ற சுருதிவாக்கியம் பொருள் இல்லாததால் அதைவிட்டுவிடுவோமே எனில்.
(सिध्दान्ती) न, अन्यार्थत्वात् । किमर्थमस्थाने चर्चा ? प्रकृतो ह्यन्यो विवक्षितोऽस्य वाक्यार्थः अस्ति ; स स्मर्तव्यः - ‘ब्रह्मविदाप्नोति परम्’ (तै. उ. २ । १ । १) ‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ (तै. उ. २ । १ । १) ‘यो वेद निहितं गुहायाम्’ (तै. उ. २ । १ । १) इति । तद्विज्ञानं च विवक्षितम् ; प्रकृतं च तत् । ब्रह्मस्वरूपावगमाय च आकाशाद्यन्नमयान्तं कार्यं प्रदर्शितम् ; ब्रह्मावगमश्च आरब्धः । तत्र अन्नमयादात्मनोऽन्योऽन्तर आत्मा प्राणमयः ; तदन्तर्मनोमयो विज्ञानमय इति विज्ञानगुहायां प्रवेशितः ; तत्र च आनन्दमयो विशिष्ट आत्मा प्रदर्शितः ।
(ச.பா) (ஸித்தாந்தீ) அவ்வாறு அல்ல. ஏனெனில் அதற்கு வேறு அர்த்தமிருப்பதால் ஆகும். எதற்காக இவ்விடத்தில் அநாவசியமான சர்ச்சை. இங்கு இவ்விஷயத்தில் வேறு அர்த்தமானது சொல்லப்பட்டுள்ளது. அதையும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். ‘ब्रह्मविदाप्नोति परम्’ (तै. उ. २ । १ । १) (பிரஹ்ம விதாப்னோதிபரம் = பிரஹ்மத்தை அறிந்தவன் அந்த பரமார்த்த ஸ்வரூபத்தை அடைகிறான்) ‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ (तै. उ. २ । १ । १) (சத்யம் ஞானமனந்தம் பிரஹ்ம = ஸத்யம், ஞான, ஆனந்த ஸ்வரூபமானது பிரஹ்மம்) ‘यो वेद निहितं गुहायाम्’ (तै. उ. २ । १ । १) (யோ வேத நிஹிதம் குஹாயாம் = எவன் அந்த மறைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள பிரஹ்மத்தை அறிகிறானோ) என்ற வாக்கியங்களை நினைவுப்படுத்திக் கொள்ளத்தக்கவை. அந்த விக்ஞானத்தைக் கூறவிரும்பிய இடமே இது. அதுவே பிரகிருதமும் ஆகும். பிரஹ்ம ஸ்வரூபத்தை தொடர்ந்து அறிந்து உணர்வதின் பொருட்டு ஆகாயம் தொடங்கி அன்னமயம் முடிவான காரியங்கள் விளக்கிக் காண்பிக்கப்பட்டன. இதில் பிரஹ்மத்தினுடைய தொடர்ச்சியும் இருக்கிறது என்பதனை விளக்கவே இந்த விஷயம் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது அன்னமயமான ஆத்மாவிற்கு உள்ளில் இருப்பவன் அதைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்மாவான பிராணமய ஆத்மா ஆவான். அதற்கு உள் இருப்பவன் மனோமயன். அதற்கும் உள் இருப்பவன் விக்ஞானமயனான ஆத்மா என்று விளக்கப்பட்டது. விக்ஞான குகையில் பிரவேசித்தவனாயும் அங்கு ஆனந்தமயமாயும் உள்ள (ஆனந்தத்துடன் கூடிய ஆத்மா காண்பிக்கப்பட்டது.)
अतः परमानन्दमयलिङ्गाधिगमद्वारेण आनन्दविवृद्ध्यवसान आत्मा । ब्रह्म पुच्छं प्रतिष्ठा सर्वविकल्पास्पदो निर्विकल्पोऽस्यामेव गुहायामधिगन्तव्य इति तत्प्रवेशः प्रकल्प्यते । न ह्यन्यत्रोपलभ्यते ब्रह्म, निर्विशेषत्वात् ; विशेषसम्बन्धो ह्युपलब्धिहेतुर्दृष्टः - यथा राहोश्चन्द्रार्कविशेषसम्बन्धः । एवमन्तःकरणगुहात्मसम्बन्धो ब्रह्मण उपलब्धिहेतुः, संनिकर्षात् , अवभासात्मकत्वाच्च अन्तःकरणस्य ।
(ச.பா) ஆகையால் பரமானந்த ரூபமான ஆத்மாவை அந்த பரமானந்தம் என்ற ஹேதுவை அறிவதின் வாயிலாக ஆனந்தத்தை விர்த்தி செய்யும் ஆத்மாவானவன் கடைசியாகக் கூறப்பட்டான். பிரஹ்மத்தில் நிலை பெற்றுள்ளது என்பதால் எல்லா விகல்பங்களுக்கும் நிலைக்களமாயும், நிர்விகல்பமாயும், உள்ள ஆத்மஸ்வரூபம் இந்த குகையிலேயே நம்மால் அறியத்தக்கது என்பதால் அதனுடைய பிரவேசம் இவ்வாறு கல்பிக்கப்பட்டது. இந்த பிரஹ்மம் வேறு இடத்தில் நம்மால் கண்டுகொள்ளமுடியாது. ஏன் எனில் பிரஹ்மம் நிர்விசேஷமானது. ஒரு விசேஷ ஸம்பந்தத்தை உடையதையே நம்மால் புரிந்து கொள்ளப்படுகிறது என்று உலகில் காணப்படுவதாகும். எவ்வாறு ராகுவை சந்திரன், சூரியனுடன் ஸம்பந்தப்படும் பொழுதே அதைக்கண்டு கொள்கிறோம். அதாவது சந்திர சூரிய ஸம்பந்தத்தாலேயே ராகுவானது அறியப்படுவது போல் ஒரு விசேஷ ஸம்பந்தத்துடன் கூடியபொழுதே ஒரு விஷயம் அறியப்பட்டதாக ஆகிறது. இவ்வாறு அந்தக்கரணத்தினுடைய குகையில் ஏற்படும் ஆத்மஸம்பந்தமே பிரஹ்மத்தை அறிந்துகொள்ளுவதற்குக் காரணமாகும். அந்தக்கரணத்திற்கு மிகவும் நெருங்கி இருப்பதாலும் அந்தக்கரணத்தை பிரகாசப்படுத்துவதாலும் இவ்வாறு கூறப்பட்டது.
यथा च आलोकविशिष्टघटाद्युपलब्धिः, एवं बुद्धिप्रत्ययालोकविशिष्टात्मोपलब्धिः स्यात् , तस्मात् उपलब्धिहेतौ गुहायां निहितमिति प्रकृतमेव । तद्वृत्तिस्थानीये त्विह पुनस्तत्सृष्ट्वा तदेवानुप्राविशदित्युच्यते ॥
(ச.பா) எவ்வாறு நம்பார்வைக்கு விஷயமாக உள்ள வெளிச்சத்துடன் கூடிய குடம் முதலானவைகள் நம்பார்வையின் காரணமாக பார்க்கப்பட்டதாக ஆகிறதோ அவ்வாறே புத்தியின் நிச்சயம் (ச்ரத்தை) என்னும் பார்வையோடு கண்டால் ஆத்மா அறியப்பட்டதாக ஆகும். அதை அவ்வாறு அறிவதின் பொருட்டு புத்தியில் (குகையில்) வைக்கப்பட்டுள்ளது என்று கூறுதல் இங்கு மிகவும் பொருத்தமானதே. ஆனந்தத்தின் வ்ருத்தியின் கடைசி எல்லையாக உள்ள ப்ரஹ்மம் அதிலேயே நுழைந்தது என்று கூறுவது மிகவும் பொருத்தமானதாகும்.
तदेवेदमाकाशादिकारणं कार्यं सृष्ट्वा तदनुप्रविष्टमिवान्तर्गुहायां बुद्धौ द्रष्टृ श्रोतृ मन्तृ विज्ञात्रित्येवं विशेषवदुपलभ्यते । स एव तस्य प्रवेशः ; तस्मादस्ति तत्कारणं ब्रह्म । अतः अस्तित्वादस्तीत्येवोपलब्धव्यं तत् ।
(ச.பா) அந்த ஆகாசம் முதலானவைகளுக்குக் காரணமாய் உள்ள வஸ்துவே காரியத்தைப் படைத்து அதற்குள் பிரவேசித்தது போல் உள்ளே இருக்கும் குகை ஸ்வரூபமான புத்தியில் பார்ப்பவன், கேட்பவன், நினைப்பவன், அறிபவன் என்பன போன்ற விசேஷத்துடன் கூடியவன் போல் காணப்படுகிறான், அதுவே அவனுடைய யப்ரவேசம் ஆகும். அதனால் அதற்குக்காரணமான பிரஹ்மம் இருக்கிறது. அது அவ்வாறு இருப்பதால் அந்த பிரஹ்மம் இருக்கிறது என்று அறியத்தக்கதும் உணரத்தக்கதும் ஆகும்.
तत् कार्यमनुप्रविश्य ; किम् ? सच्च मूर्तं त्यच्च अमूर्तम् अभवत् । मूर्तामूर्ते ह्यव्याकृतनामरूपे आत्मस्थे अन्तर्गतेन आत्मना व्याक्रियेते मूर्तामूर्तशब्दवाच्ये । ते आत्मना त्वप्रविभक्तदेशकाले इति कृत्वा आत्मा ते अभवदित्युच्यते ।
(ச.பா) அது அந்தக் காரியத்தில் தொடர்ந்து பிரவேசித்து என்ன செய்தது? எனில் அது सत् (ஸத்) மூர்த்தமாயும், त्यच्च (த்யச்ச) அமூர்த்தமாயும் ஆயிற்று, மூர்த்தங்கள், அமூர்த்தங்கள் என்பன ஆத்மஸ்வரூபத்தில் இருக்கக்கூடிய அவ்யாகிருதமான நாமரூபங்கள் ஆகும். அவைகளில் அனுப்பிரவேசம் செய்த ஆத்மாவினால் அவை வியாகிருதமாக ஆகும்பொழுது மூர்த்தாமூர்த்தங்கள் என்ற சொல்லுக்கு பொருளாக ஆகின்றன. அவைகள் ஆத்ம ஸ்வரூபத்திலிருந்து பிரிக்கப்படாத தேச காலங்களை உடையவை என்று ஆத்மாவே அவ்வாறு மூர்த்தாமூர்த்தமாக ஆயிற்று என்று கூறப்படுகிறது.
किं च, निरुक्तं चानिरुक्तं च, निरुक्तं नाम निष्कृष्य समानासमानजातीयेभ्यः देशकालविशिष्टतया इदं तदित्युक्तम् ; अनिरुक्तं तद्विपरीतम् ; निरुक्तानिरुक्ते अपि मूर्तामूर्तयोरेव विशेषणे । यथा सच्च त्यच्च प्रत्यक्षपरोक्षे, तथा निलयनं चानिलयनं च । निलयनं नीडम् आश्रयः मूर्तस्यैव धर्मः ; अनिलयनं तद्विपरीतम् अमूर्तस्यैव धर्मः ।
(ச.பா) மேலும் அதுவே நிருக்தமாயும், அநிருக்தமாயும் ஆகிறது. நிருக்தம் என்றால் இது இன்னது என்று (நிஷ்கிருஷ்ய) நன்றாக அதன் சாரத்தைப் பிழிந்து அது சமானஜாதியுடன் சேர்ந்ததா அல்லது அசமான ஜாதியுடன் சேர்ந்தது என்றோ அல்லது அதைக் காட்டிலும் வேறுபட்டது என்றோ, தேசகாலங்களுடன் கூடியது அது என்று இது இன்னது என்று பிரித்து நிச்சயம் செய்து கூறப்படுவதாகும். இதற்கு மாறுபட்டது அநிருக்தம் எனப்படும். இவை மூர்த்தா மூர்த்தங்களுக்கே விசேஷணங்கள் ஆகும். எவ்வாறு सच्च, त्यच्च என்பவை பிரத்யக்ஷ அபரோக்ஷங்களோ அவ்வாறே நிலயனம், அநிலயனம் என்பது ஒரு கூட்டை ஆஸ்ரியித்தல், மூர்த்தத்தினுடைய தர்மங்களாகும். அநிலயனம் என்பது அதற்கு நேர்மாறான அமூர்த்தத்தின் தர்மமாகும்.
त्यदनिरुक्तानिलयनानि अमूर्तधर्मत्वेऽपि व्याकृतविषयाण्येव, सर्गोत्तरकालभावश्रवणात् । त्यदिति प्राणाद्यनिरुक्तं तदेवानिलयनं च । अतो विशेषणानि अमूर्तस्य व्याकृतविषयाण्येवैतानि ।
(ச.பா) त्यत् (த்யத்) அநிருக்தம், அநிலயனம் ஆகியவை அமூர்த்தங்களின் தர்மங்களாய் இருந்தாலும் வியக்தத்துடன் சம்பந்தமுடையவை. ஏன் எனில் இதனுடைய சத்தை அதாவது இருப்பு சிருஷ்ட்டிக்குப்பின் கேள்விப்படுகிறோம். त्यत् (த்யத்)என்பது பிராணன் முதலியவைகளின் அநிருக்தமாகும். அதுவே அநிலயனம் என்பதும் ஆகும். எனவே இவைகள் அமூர்த்தங்களின் விசேஷணங்களே. எனவே இவைகளும் வியாகிருத விஷயங்களே ஆகும்.
विज्ञानं चेतनम् ; अविज्ञानं तद्रहितमचेतनं पाषाणादि । सत्यं च व्यवहारविषयम् , अधिकारात् ; न परमार्थसत्यम् ; एकमेव हि परमार्थसत्यं ब्रह्म । इह पुनः व्यवहारविषयमापेक्षिकं सत्यम् , मृगतृष्णिकाद्यनृतापेक्षया उदकादि सत्यमुच्यते । अनृतं च तद्विपरीतम् । किं पुनः ? एतत्सर्वमभवत् , सत्यं परमार्थसत्यम् ; किं पुनस्तत् ? ब्रह्म, ‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ इति प्रकृतत्वात् ।
(ச.பா) விக்ஞானம் சேதனம், அவிக்ஞானம் விக்ஞானமற்ற அசேதனம், கல் முதலியவைகளைப் போன்றதும் அதுபோல் ஸத்தியம், வியாவஹாரிக ஸத்தியமும் வியாவஹாரிக விஷயமாய் இருத்தலால் பாரமார்த்திக ஸத்யமல்ல. அதைப்பற்றியே கூறப்பட்டுவருவதால் பாரமார்த்திக சத்தியம் ஒரே பிரஹ்மம் மட்டும்தான். இங்கு மேலும் வியாவஹாரிக விஷயம் ஆபேக்ஷிகமான ஸத்தியம், எவ்வாறு எனில் கானல் நீரை அபேக்ஷித்து தண்ணீர் ஸத்தியம் என்பது, சத்தியமாவது போல், அநிருதம் என்பது அதற்கு மாறுபட்டது. (கானல் நீர் போன்றவை) இப்படி எல்லாமாக ஆனது பரமார்த்த ஸத்தியம்? அது என்ன? பிரஹ்மமே? ஏன்எனில் இங்கு ஸத்தியம் ஞானம், ஆனந்தம், பிரஹ்மம் என்பதாக கூறப்பட்டுள்ளது.(அதன் பிரகரணம்)
यस्मात् , सत्त्यदादिकं मूर्तामूर्तधर्मजातं यत्किञ्चेदं सर्वमविशिष्टं विकारजातमेकमेव सच्छब्दवाच्यं ब्रह्माभवत् , तद्व्यतिरेकेणाभावान्नामरूपविकारस्य, तस्मात् तत् ब्रह्म सत्यमित्याचक्षते ब्रह्मविदः ।
(ச.பா) எதைக் காட்டிலும் சத், த்யத், என்ற மூர்த்தாமூர்த்ததர்மங்களும் அதைக் காட்டிலும் மிச்சமுள்ள விகாரங்களும் அந்த ஒன்றான சத் என்ற சொல்லுக்கு வாக்கியமாக உள்ள பிரஹ்மமே, அவ்வாறு எல்லாமாக ஆயிற்று. அதைக்காட்டிலும் நாமபேத விகாரங்களுக்கு எந்தக் காரணமும் இல்லாமையால் பிரஹ்மமே அவ்வாறு ஆயிற்று. எனவே அந்த பிரஹ்மம்தான் ஸத்தியம் என்று பிரஹ்மத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
अस्ति नास्तीत्यनुप्रश्नः प्रकृतः ; तस्य प्रतिवचनविषये एतदुक्तम् - ‘आत्माकामयत बहु स्याम्’ इति । स यथाकामं च आकाशादिकार्यं सत्त्यदादिलक्षणं सृष्ट्वा तदनुप्रविश्य पश्यञ्शृण्वन्मन्वानो विजानन् बह्वभवत् ; तस्मात् तदेवेदमाकाशादिकारणं कार्यस्थं परमे व्योमन् हृदयगुहायां निहितं तत्प्रत्ययावभासविशेषेणोपलभ्यमानमस्तीत्येवं विजानीयादित्युक्तं भवति ।
(ச.பா) பிரஹ்மம் இருக்கிறதா இல்லையா என்ற தொடர் கேள்விகளுக்கு விஷயமாகி அதற்கு பதில் கூறும் வாயிலாய் அந்த ஆத்மாதான் பலவாறாக ஆவேன் என்று விரும்பிற்று. அது விரும்பியவாறு சத், த்யத் முதலிய லக்ஷணங்களோடு கூடிய ஆகாசம் முதலிய காரிய வர்க்கங்களை சிருஷ்ட்டி செய்து அதில் பிரவேசித்து பார்ப்பவன், கேட்பவன், நினைப்பவன் மேலும் விக்ஞான ரூபத்தாலும் பலவாறாக ஆனான். ஆகாசம் முதலியவைகளுக்குக் காரணமாயும், காரியவர்க்கத்தில் நிலைபெற்றும், பரமாகாசத்திற்குள் புத்திரூப குகையில் இருந்து விளங்குவதாயும் அதன் நிச்சய ரூபத்தால் (சிரத்தையினால்) வெளிப்படுவதும், அதனால் விசேஷ ரூபமாய் அறியப்படுவதாய் அந்த பிரஹ்மம் இருக்கிறது என்று “அதை அறியவேண்டும்” என்று கூறியதாக ஆயிற்று.
तत् एतस्मिन्नर्थे ब्राह्मणोक्ते एषः श्लोकः मन्त्रः भवति । यथा पूर्वेष्वन्नमयाद्यात्मप्रकाशकाः पञ्चस्वपि, एवं सर्वान्तरतमात्मास्तित्वप्रकाशकोऽपि मन्त्रः कार्यद्वारेण भवति ॥
(ச.பா) இந்த அர்த்தத்திலேயே இந்த தைத்திரீய பிரஹ்மணத்தில் இதே அர்த்தத்தில் இந்த மந்திர ரூபமாய் கூறப்பட்டதாக ஆயிற்று. எவ்வாறு முன்பு கூறப்பட்ட அன்னமயாதி ஐந்து கோசங்களிலும் அதைத்தவிர மற்றமுள்ள எல்லாவற்றிலும் கூறப்பட்டனவோ அவ்வாறே. இந்த ஐந்து கோசங்களிலும் அதைத்தவிர மற்றுமுள்ள எல்லாவற்றிலும் ஸர்வாந்தரமாக உள்ள ஆத்மாவானது இருக்கிறது என்பதை இந்த மந்திரமானது காரியரூபமாய் வஸ்துக்களை விளக்கும் வாயிலாய் பிரஹ்ம வஸ்துவை விளக்குவதாக ஆயிற்று.
इति षष्ठानुवाकभाष्यम् ॥
असद्वा इदमग्र आसीत् । ततो वै सदजायत । तदात्मानं स्वयमकुरुत । तस्मात्तत्सुकृतमुच्यत इति । यद्वै तत्सुकृतम् । रसो वै सः । रसं ह्येवायं लब्ध्वानन्दी भवति । को ह्येवान्यात्कः प्राण्यात् । यदेष आकाश आनन्दो न स्यात् । एष ह्येवानन्दयाति । यदा ह्येवैष एतस्मिन्नदृश्येऽनात्म्येऽनिरुक्तेऽनिलयनेऽभयं प्रतिष्ठां विन्दते । अथ सोऽभयं गतो भवति । यदा ह्येवैष एतस्मिन्नुदरमन्तरं कुरुते । अथ तस्य भयं भवति । तत्त्वेव भयं विदुषोऽमन्वानस्य । तदप्येष श्लोको भवति ॥ १ ॥
असद्वा इदमग्र आसीत् । असदिति व्याकृतनामरूपविशेषविपरीतरूपम् अव्याकृतं ब्रह्म उच्यते ; न पुनरत्यन्तमेवासत् । न ह्यसतः सज्जन्मास्ति । इदम् इति नामरूपविशेषवद्व्याकृतं जगत् ; अग्रे पूर्वं प्रागुत्पत्तेः ब्रह्मैव असच्छब्दवाच्यमासीत् । ततः असतः वै सत् प्रविभक्तनामरूपविशेषम् अजायत उत्पन्नम् ।
(ச.பா) இதற்கு முன் இந்த (ஜகத்) அசத்தாகவே இருந்தது. அதாவது असत् (அஸத்) என்ற சப்தம் வியாகிருதமான (வியக்தமான) நாமரூப விசேஷ பதார்த்தங்களைக் காட்டிலும் விபரீத (மாறுபட்ட) சுவபாவமுடையதை அவ்யாகிருத பிரஹ்மம் என்று கூறப்படுகிறது. அது முற்றிலும் அஸத் அல்ல. ஏன் எனில் அசத்திலிருந்து சத் உண்டாகாது. இதம் அதாவது நாமரூப விசேஷத்துடன் கூடிய வியாகிருத ஜகத் உற்பத்திக்குமுன் असत् (அஸத்) ஸப்தத்தின் வாச்சியமாக பிரஹ்மமே இருந்தது. அந்த அஸத்திலிருந்து அதாவது நாமரூப விபாகமுடையதாகிய உலகம் விசேஷ நாமரூபம் கொண்டதாக உண்டாயிற்று.
किं ततः प्रविभक्तं कार्यमिति - पितुरिव पुत्रः ? नेत्याह । तत् असच्छब्दवाच्यं स्वयमेव आत्मानमेव अकुरुत कृतवत् । यस्मादेवम् , तस्मात् तत् ब्रह्मैव सुकृतं स्वयं कर्तृ उच्यते । स्वयं कर्तृ ब्रह्मेति प्रसिद्धं लोके सर्वकारणत्वात् ।
(ச.பா) அவ்வாறானால் பிதாவினிடமிருந்து புத்திரன் உண்டாவது போல இந்த காரியவர்க்கமும் அதிலிருந்து (பிரஹ்மத்திடம் இருந்து) வேறாக (பின்னமாக) தோன்றியதா? இல்லை என்று கூறுகிறது. அந்த அஸத் சப்த வாச்சியம் பிரஹ்மம் ஸ்வயமாகவே தன்னை இவ்வாறு செய்துகொண்டது போல் செய்துகொண்டது. அதனால் இவ்வாறே பிரஹ்மம் ஸ்வயமாகவே செய்து கொண்டதால் ஸ்வயம் கர்த்தா என கூறப்படுகிறது. எல்லாவற்றிற்கும் காரணமாய் இருப்பதால் ஸ்வயம் கர்த்தா பிரஹ்மம் என்பது உலகில் பிரசித்தமாய் இருக்கிறது.
यस्माद्वा स्वयमकरोत्सर्वं सर्वात्मना, तस्मात्पुण्यरूपेणापि तदेव ब्रह्म कारणं सुकृतम् उच्यते । सर्वथापि तु फलसम्बन्धादिकारणं सुकृतशब्दवाच्यं प्रसिद्धं लोके । यदि पुण्यं यदि वा अन्यत् सा प्रसिद्धिः नित्ये चेतनकारणे सति उपपद्यते, तस्मादस्ति ब्रह्म, सुकृतप्रसिद्धेरिति । इतश्चास्ति ; कुतः ? रसत्वात् । कुतो रसत्वप्रसिद्धिर्ब्रह्मण इत्यत आह -
(ச.பா) எதனால் எல்லா ரூபமாயும் ஆக்கிக்கொண்டதால் பிரஹ்மமானது ஸ்வயமாகவே இந்த ஸம்பூர்ண ஜகத்தையும் செய்தது. ஆகையால் புண்ய ரூபமானப் பயனைத் தரும் புண்ய ருபமே பிரஹ்மம் சுக்ருத் (सुकृत्) என்று கூறப்படுகிறது. உலகில் எந்த காரியமாய் இருந்தாலும் (புண்ய அல்லது பாப காரியமாய் இருந்தாலும்) எந்த பிரகாரமானாலும் பலத்தின் சம்பந்த முதலியவைகளின் காரணமாகிறது. அது சுகிருத (सुकृत्) சப்த வாச்சிய ரூபமாய் பிரஸித்தமாய் இருக்கிறது. புண்யம் பிரசித்தமாய் இருந்தாலும், அல்லது பாபம் பிரசித்தமாய் இருந்தாலும் அவை நித்தியமாயும் சேதனரூபமாய் உள்ள காரணத்தாலேயே உண்டாகிறது. ஆகையால் அந்த ஸ)கிருத ரூபபிரசித்தியின் ஸத்தையினால் ஸித்திக்கிறது. அது பிரஹ்மமாகும். இதனாலும் பிரஹ்மம் இருக்கிறது என்பது ஸித்திக்கிறது. எதனால்? ரஸரூபமாய் இருப்பதால் ஆகும். எதனால் பிரஹ்மத்திற்கு ரஸத்துவ பிரசித்தி என்பதைக் கூறுகிறார்.
यद्वै तत्सुकृतं रसो वै सः । रसो नाम तृप्तिहेतुः आनन्दकरो मधुराम्लादिः प्रसिद्धो लोके । रसमेव हि अयं लब्ध्वा प्राप्य आनन्दी सुखी भवति । नासत आनन्दहेतुत्वं दृष्टं लोके । बाह्यानन्दसाधनरहिता अपि अनीहा निरेषणा ब्राह्मणा बाह्यरसलाभादिव सानन्दा दृश्यन्ते विद्वांसः ; नूनं ब्रह्मैव रसस्तेषाम् । तस्मादस्ति तत्तेषामानन्दकारणं रसवद्ब्रह्म ।
(ச.பா) எது பிரஸித்தமான சுகிருதமோ அது ரஸமே. புளிப்பு, இனிப்பு முதலியவைகள் போல திருப்தி அளிப்பதாயும், ஆனந்தத்தை அளிப்பதாயும் இருக்கும் உலகில் रस (ரஸம்) என்ற நாமத்தால் பிரஸித்தமாய் இருப்பதாகும். இந்த ரஸத்தை அடைந்து ஆனந்தீஸ)கீயாகின்றான். உலகில் அஸத்திற்கு ஆனந்த ஹேதுத்வம் காணப்படவில்லை. பிரஹ்ம நிஷ்ட ஆசையற்ற மேலும் நிரபேக்ஷ வித்வான் பாஹ்ய ஸ)க ஸாதனங்கள் இல்லாமல் இருந்தாலும் பாஹ்யரஸத்தின் லாபத்தால் ஆனந்தமடைந்தது போல் ஆனந்தமுடையவனாய் காணப்படுகிறான். நிச்சயமாக அவர்களுக்கு ரஸம் பிரஹ்மமே ஆகும். ஆகையால் ரஸத்தைப் போல் ஆனந்தத்தின் காரணம் அந்த பிரஹ்மமே ஆகும்.
इतश्चास्ति ; कुतः ? प्राणनादिक्रियादर्शनात् । अयमपि हि पिण्डो जीवतः प्राणेन प्राणिति अपानेन अपानिति । एवं वायवीया ऐन्द्रियकाश्च चेष्टाः संहतैः कार्यकरणैर्निर्वर्त्यमाना दृश्यन्ते । तच्चैकार्थवृत्तित्वेन संहननं नान्तरेण चेतनमसंहतं सम्भवति, अन्यत्रादर्शनात् ।
(ச.பா) இதனாலும் பிரஹ்மம் இருக்கிறது. எதனால்? (प्राणनादि) மூச்சுவிடுதல் முதலிய காரியங்கள் காணப் படுவதால். ஜீவிக்கின்ற புருஷனுடைய பிண்டம் பிராணனின் ஸஹாயத்தால் பிராணன் உடையதாகிறது. (சுவாசிக்கிறது) அபானன் அபான காரியமாகிய உள் இழுத்து தள்ளவேண்டியவைகளைத் தள்ளுகிறது. இவ்வாறு வாயுவினுடையவும், இந்திரியங்களுடையவும் செயல்கள் காரிய, கரணங்களுடன் சேர்ந்ததாகி செயல்படுவதைப் பார்க்கிறோம். அந்த செயல்முறையும், ஒரே பொருளின் சேர்க்கையாகிற விருத்தியினாலேயே நடைபெறுகின்றன. அந்த ஒரே பொருள் என்பது சேதனமாகும். அந்த சேதனத்துடன் சேராத பொழுது இவைகள் செயல்படுவதில்லை. இந்த சேதனத்தைத் தவிர வேறு சேதனம் இல்லை. அது எவ்வாறு எனில் அந்த சேதனத்தைத் தவிர வேறு சேதனம் இருக்குமேயானால் அது எங்காவது காணப்பட்டிருக்கும். அவ்வாறு எங்கும் கண்டது இல்லை.
तदाह - यत् यदि एषः आकाशे परमे व्योम्नि गुहायां निहित आनन्दो न स्यात् न भवेत् , को ह्येव लोके अन्यात् अपानचेष्टां कुर्यादित्यर्थः । कः प्राण्यात् प्राणनं वा कुर्यात् ; तस्मादस्ति तद्ब्रह्म, यदर्थाः कार्यकरणप्राणनादिचेष्टाः ; तत्कृत एव च आनन्दो लोकस्य ।
(ச.பா) அதையே மேலே கூறுகிறார். அவ்வாறு வேறு ஒன்று இருக்குமேயானால் இந்த சைதன்யமே பரமாகாசத்திலும், புத்தியிலும் நிலை பெற்றுள்ள இதுவே ஆனந்தமாக இல்லாமல் இருக்குமேயானால் அதைத் தவிர இந்த உலகில் வேறு யாரால்தான் அபானன் முதலான சேஷ்டைகளைச் செய்யும் சக்தி படைத்தவர் ஆவார்? என்பது பொருள். யார் பிரா௴களுடைய பிராணனை தூண்டி செயல்படும்படியாகச் செய்வர்? எனவே பிரஹ்மமானது இருக்கின்றது. எக்காரணத்தால் காரிய கரணங்களுடைய செயல்களும் பிராணன் என்ற உயிர்த்தல் முதலான சேஷ்டைகளும் உள்ளதோ அதனாலேயே, அதனால் உண்டானதே உலகில் உள்ள ஆனந்தங்கள் ஆகும்.
कुतः ? एष ह्येव पर आत्मा आनन्दयाति आनन्दयति सुखयति लोकं धर्मानुरूपम् । स एवात्मा आनन्दरूपोऽविद्यया परिच्छिन्नो विभाव्यते प्राणिभिरित्यर्थः । भयाभयहेतुत्वाद्विद्वदविदुषोरस्ति तद्ब्रह्म । सद्वस्त्वाश्रयणेन हि अभयं भवति ; नासद्वस्त्वाश्रयणेन भयनिवृत्तिरुपपद्यते ।
(ச.பா) ஏன் அவ்வாறு? ஏன் எனில் அந்தப் பரமாத்மாதான் உலகில் உள்ளோரையும் தர்மத்தை அனுஸரித்து ஆனந்தப்படுத்துகிறது. அதாவது சுகத்தைக் கொடுக்கிறது. இதன் தாத்பர்யம் என்னவெனில் அந்த ஆனந்தரூப ஆத்மாதான் பிரா௴களின் (ஜீவர்களின்) மூலமாய் அவித்தையினால் பரிச்சின்னமாக காணப்படுகிறது. அவித்வான்களின் பயத்திற்கும், வித்வான்களின் பயமற்றத்தன்மைக்குக் காரணமாய் இருப்பதாலும் பிரஹ்மம் இருக்கிறது. ஏன் எனில் ஸத்பதார்த்தத்தின் ஆச்ரயத்தால் அபயம் உண்டாகிறது. அஸத் பதார்த்தத்தை ஆச்ரயிப்பதால் பயத்தின் நிவிர்த்தி ஸம்பவிக்காது.
कथमभयहेतुत्वमिति, उच्यते - यदा ह्येव यस्मात् एषः साधकः एतस्मिन् ब्रह्मणि - किंविशिष्टे ? अदृश्ये दृश्यं नाम द्रष्टव्यं विकारः, दर्शनार्थत्वाद्विकारस्य ; न दृश्यम् अदृश्यम् , अविकार इत्यर्थः । एतस्मिन्नदृश्ये अविकारेऽविषयभूते, अनात्म्ये अशरीरे, यस्माददृश्यं तस्मादनात्म्यम् , यस्मादनात्म्यं तस्मादनिरुक्तम् ; विशेषो हि निरुच्यते ; विशेषश्च विकारः ; अविकारं च ब्रह्म, सर्वविकारहेतुत्वात् ; तस्मात् अनिरुक्तम् । यत एवम् , तस्मादनिलयनं निलयनं नीड आश्रयः न निलयनम् अनिलयनम् अनाधारं तस्मिन् एतस्मिन् अदृश्येऽनात्म्येऽनिरुक्तेऽनिलयने सर्वकार्यधर्मविलक्षणे ब्रह्मणीति वाक्यार्थः । अभयमिति क्रियाविशेषणम् । अभयामिति वा लिङ्गान्तरं परिणम्यते । प्रतिष्ठां स्थितिमात्मभावं विन्दते लभते । अथ तदा सः तस्मिन्नानात्वस्य भयहेतोरविद्याकृतस्यादर्शनादभयं गतो भवति ।
(ச.பா) பிரஹ்மம் அபயத்திற்குக்காரணம் எவ்வாறு என்பதைக் கூறுகிறார். எப்பொழுது இந்த ஸாதகனானவன் அதிருச்யமாயும், “திருச்யம்” என்பது பார்க்கத்தகுந்த விகாரமாகும். ஏன் எனில் அது பார்க்கத்தக்கதாயும் இருப்பதால், அதிருச்யம் என்பது இந்த மாதிரி விகாரமற்றது என்பது பொருள். இந்த மாதிரி அதிருச்யமாயும், விகாரமற்றதாயும், விஷயமாகாததாயும், சரீரமற்றதாயும், எப்பொழுது அதிருச்யமாயிற்றோ அதனாலேயே சரீரமற்றதாயும், எதனால் சரீரமற்றதாக ஆயிற்றோ அதனால் இன்னது என்று விளக்கமுடியாததாயும், விசேணத்துடன் கூடியதே இன்னது என்று விளக்குவதற்கு சாத்தியமானதாக ஆகும். விசேஷம் என்பது விகாரமாகும். பிரஹ்மமோ அத்தகைய விகாரமற்றது. அதுவே எல்லா விகாரங்களுக்கும் காரணமாய் இருப்பதால் அதனாலேயே அது இன்னது என்று விளக்கமுடியாததாக ஆயிற்று. எதனால் இவ்வாறு இருக்கிறதோ அதனால் அது தனக்கு என்று ஒரு ஆச்ரியத்தை அடையாதது ஆகும். இவ்வாறு அந்த பிரஹ்மத்தில் அதிருச்யமாயும், அநாத்மீயமாயும், அநிருக்தமாயும், அநிலயனமாயும், எல்லா காரிய தர்மங்களுக்கும் விலக்ஷணமாயும் உள்ள பிரஹ்மத்தில் என்பது வாச்சியார்த்தமாகும். “அபயம்” என்பது இங்கு கிரியா விசேஷணம் ஆகும். அல்லது “அபயாம்” என்பதாக ஸ்த்ரீலிங்கமாக) மாற்றி வைத்துக்கொள்ளலாம். அத்தகைய அபயமான ஸ்வரூபத்தில் அந்த ஸாதகன் ஆத்மபாவத்தை அடைகிறான். ஆகையால் அப்பொழுது அவன் அந்த ஸ்வரூபத்தில் அவித்தையால் உண்டான பயத்திற்குக் காரணமான நாநாத்துவத்தை விட்டு நிலைபெற்றமையால் அவன் பயமற்றநிலையை அடைந்தவனாக ஆகிறான்.
स्वरूपप्रतिष्ठो ह्यसौ यदा भवति, तदा नान्यत्पश्यति नान्यच्छृणोति नान्यद्विजानाति । अन्यस्य ह्यन्यतो भयं भवति, न आत्मन एव आत्मनो भयं युक्तम् ; तस्मात् आत्मैव आत्मनः अभयकारणम् । सर्वतो हि निर्भया ब्राह्मणा दृश्यन्ते सत्सु भयहेतुषु ; तच्चायुक्तमसति भयत्राणे ब्रह्मणि । तस्मात्तेषामभयदर्शनादस्ति तदभयकारणं ब्रह्मेति ।
(ச.பா) எப்பொழுது தன் ஸ்வரூபத்தில் நிலைபெற்றாறோ அப்பொழுது வேறு ஒன்றையும் பார்ப்பதில்லை. வேறு ஒன்றையும் கேட்பது இல்லை. வேறு ஒன்றையும் அறிவதில்லை, மற்றவனுக்கோவெனில் அவனைக்காட்டிலும் வேறு ஒருவனிடம் இந்த பயம் உண்டாகின்றது. தனக்குத் தானே பயம் என்பது கிடையாது. ஆகையால் ஆத்மாவே ஆத்மாவிற்கு பயமற்ற தன்மைக்கு காரணமாகும். பிரஹ்ம நிஷ்டர்கள் எதற்கும் (எதிலிருந்தும்) பயம் அடையாதவர்களாகி நிர்பயர்களாய் (அபயம் உடையவர்களாய்) இருக்கின்றனர். எவ்வளவோ பயகாரணங்கள் இருந்தாலும், ஸத்ஸ்வரூபமான பிரஹ்மத்தில் நிலைபெற்றவர்களுக்கு பயம் ஏற்படுவதில்லை. ஆகையால் அவர்களுக்கு பயம் இல்லாமையால், அந்த பயம் இன்மைக்குக் காரணமான பிரஹ்மம் இருக்கிறது என்பது கூறியதாயிற்று.
कदा असौ अभयं गतो भवति साधकः ? यदा नान्यत्पश्यति आत्मनि च अन्तरं भेदं न कुरुते, तदा अभयं गतो भवतीत्यभिप्रायः । यदा पुनरविद्यावस्थायां हि यस्मात् एषः अविद्यावान् अविद्यया प्रत्युपस्थापितं वस्तु तैमिरिकद्वितीयचन्द्रवत्पश्यत्यात्मनि च एतस्मिन् ब्रह्मणि, उत अपि, अरम् अल्पमपि, अन्तरं छिद्रं भेददर्शनं कुरुते ; भेददर्शनमेव हि भयकारणम् ; अल्पमपि भेदं पश्यतीत्यर्थः । अथ तस्माद्भेददर्शनाद्धेतोः तस्य भेददर्शिनः आत्मनो भयं भवति । तस्मादात्मैवात्मनो भयकारणमविदुषः ।
(ச.பா) ஸாதகன் எப்பொழுது அபயத்தை அடைந்தவனாவான்? எப்பொழுது ஆத்மாவிடத்தில் வேறு ஒன்றையும் பார்ப்பதில்லையோ அவ்வாறே வேறாய் பேதம் செய்வதில்லையோ அப்பொழுது அபயத்தை அடைகிறான் என்பது அபிப்பிராயம். எப்பொழுது மறுபடியும் அவித்யா அவஸ்தையில் அதாவது அவித்தியா தோஷத்தால் தன்வித்தையை மறந்த நிலை அடைகிறானோ அப்பொழுது கண்௴ல் திரை படர்ந்தவனுக்கு இரண்டாவது சந்திரன் தெரிவதுபோல் தன்னிலேயே இரண்டாவதைப் பார்கிறானோ. அந்நிலையில் ஒரு சிறு துவாரம் போன்றபேத தர்சனத்தை அடைகிறான். இத்தகைய பேத தர்சனத்தால் அவனுடைய அந்தக்கரணம் சிறிதளவு பேத தர்சனத்தை அடைகிறது என்பது பொருள். ஆகையால் இந்த பேத தர்சனத்தை அடைந்த காரணத்தால் அந்த பேத தர்சனத்தை அடைந்தவனுக்கு அவனுடைய ஆத்மாவே பயகாரணம் ஆகிறது. ஆகையால் அவித்வானுக்கு அவனுடைய ஆத்மாவே அவனுடைய பயத்திற்கு காரணம் என்று கூறுகிறார்.
तदेतदाह - तत् ब्रह्म त्वेव भयं भेददर्शिनो विदुषः ईश्वरोऽन्यो मत्तः अहमन्यः संसारीत्येवंविदुषः भेददृष्टमीश्वराख्यं तदेव ब्रह्म अल्पमप्यन्तरं कुर्वतः भयं भवति एकत्वेन अमन्वानस्य । तस्मात् विद्वानप्यविद्वानेवासौ, योऽयमेकमभिन्नमात्मतत्त्वं न पश्यति ।
(ச.பா) இங்கு சுருதி இதைக் குறித்து கூறுகிறது பேததர்சியான வித்வானுக்கு அந்த பிரஹ்மம் பயத்திற்குக் காரணமாகிறது. என்னைக்காட்டிலும் ஈச்வரன் வேறு. அவ்வாறே நான் ஸம்ஸாரி ஜீவன், என்று இவ்வாறு சிறிது அளவாயினும் வேறுபடுத்தி அதை ஒன்றாகவே அறியாத பேதஞானி பேதரூபமாய் பார்ப்பதால் ஈச்வரன் எனப்படும் பிரஹ்மம் பயரூபமாகிறது. ஆகையால் எந்த ஒரு புருஷன் ஒன்றாயும், அபின்னமாயும் உள்ள ஆத்மதத்துவத்தை பார்க்கவில்லையோ அவன் வித்வானாய் இருந்தாலும் அவித்வானே ஆவான்.
उच्छेदहेतुदर्शनाद्ध्युच्छेद्याभिमतस्य भयं भवति ; अनुच्छेद्यो ह्युच्छेदहेतुः ; तत्र असत्युच्छेदहेतौ उच्छेद्ये न तद्दर्शनकार्यं भयं युक्तम् । सर्वं च जगद्भयवद्दृश्यते । तस्माज्जगतो भयदर्शनाद्गम्यते - नूनं तदस्ति भयकारणमुच्छेदहेतुरनुच्छेद्यात्मकम् , यतो जगद्बिभेतीति । तत् एतस्मिन्नप्यर्थे एषः श्लोकः भवति ॥
(ச.பா) நான் நாசமடைவேன் என்று நினைப்பவனுக்கு நாசத்தின் காரணத்தைப் பார்க்கும்பொழுது பயம் உண்டாகிறது. நாசத்தின் காரணமோ அவிநாசியாகும். ஆகையால் உச்சேததற்குக் (நாசத்திற்கு) காரணம் இல்லை எனில் உச்சேத (நாசமடையும்) பதார்த்தங்களில் அதைப் (அவிநாசியைப்) பார்க்கும் பொழுது பயம் உண்டாகாது. ஆனால் எல்லா ஸம்ஸாரமும் பயம் உடையதாகவே காணப்படுகிறது. ஆகையால் ஜகத்தைப் பயம் உடையதாய் பார்க்கும்பொழுது என்ன அறிகிறோம் எனில் அந்த பயத்தின் காரணத்தை நாசம் செய்வதற்கான ஹேது பூதமானது ஸ்வயம் நாசமற்ற (அவிநாசி) பிரஹ்மமாகும். பிரஹ்மத்தை பேதமாகப் பார்க்கும் பொழுது ஜகத் பயமுடையதாகிறது. இந்த அர்த்தத்தில் இந்த மந்திரம் கூறப்பட்டுள்ளது.
इति सप्तमनुवाकभाष्यम् ॥
भीषास्माद्वातः पवते । भीषोदेति सूर्यः । भीषास्मादग्निश्चेन्द्रश्च । मृत्युर्धावति पञ्चम इति । सैषानन्दस्य मीमां सा भवति । युवा स्यात्साधुयुवाध्यायकः । आशिष्ठो दृढिष्ठो बलिष्ठः । तस्येयं पृथिवी सर्वा वित्तस्य पूर्णा स्यात् । स एको मानुष आनन्दः । ते ये शतं मानुषा आनन्दाः ॥ १ ॥
स एको मनुष्यगन्धर्वाणामानन्दः । श्रोत्रियस्य चाकामहतस्य । ते ये शतं मनुष्यगन्धर्वाणामानन्दाः । स एको देवगन्धर्वाणामानन्दः । श्रोत्रियस्य चाकामहतस्य । ते ये शतं देवगन्धर्वाणामानन्दाः । स एकः पितॄणां चिरलोकलोकानामानन्दः । श्रोत्रियस्य चाकामहतस्य । ते ये शतं पितॄणां चिरलोकलोकानामानन्दाः । स एक आजानजानां देवानामानन्दः ॥ २ ॥
श्रोत्रियस्य चाकामहतस्य । ते ये शतमाजानजानां देवानामानन्दाः । स एकः कर्मदेवानां देवानामानन्दः । ये कर्मणा देवानपियन्ति । श्रोत्रियस्य चाकामहतस्य । ते ये शतं कर्मदेवानां देवानामानन्दाः । स एको देवानामानन्दः । श्रोत्रियस्य चाकामहतस्य । ते ये शतं देवानामानन्दाः । स एक इन्द्रस्यानन्दः ॥ ३ ॥
श्रोत्रियस्य चाकामहतस्य । ते ये शतमिन्द्रस्यानन्दाः । स एको बृहस्पतेरानन्दः । श्रोत्रियस्य चाकामहतस्य । ते ये शतं बृहस्पतेरानन्दाः । स एकः प्रजापतेरानन्दः । श्रोत्रियस्य चाकामहतस्य । ते ये शतं प्रजापतेरानन्दाः । स एको ब्रह्मण आनन्दः । श्रोत्रियस्य चाकामहातस्य ॥ ४ ॥
भीषा भयेन अस्मात् वातः पवते । भीषोदेति सूर्यः । भीषा अस्मात् अग्निश्चेन्द्रश्च । मृत्युर्धावति पञ्चम इति । वातादयो हि महार्हाः स्वयमीश्वराः सन्तः पवनादिकार्येष्वायासबहुलेषु नियताः प्रवर्तन्ते ; तद्युक्तं प्रशास्तरि सति ; यस्मात् नियमेन तेषां प्रवर्तनम् , तस्मादस्ति भयकारणं तेषां प्रशास्तृ ब्रह्म । यतस्ते भृत्या इव राज्ञः अस्मात् ब्रह्मणः भयेन प्रवर्तन्ते तच्च भयकारणमानन्दं ब्रह्म ।
(ச.பா) எதன் பயத்தால் வாயு சலிக்கிறதோ, எதன் பயத்தால் சூரியன் உதிக்கிறானோ, மேலும் எதன் பயத்தால் அக்னி, இந்திரன் அவ்வாறே அவர்களைத் தொடர்ந்து மிருத்யுவும் ஐந்தாவதாக ஓடுகிறது. வாயு முதலிய தேவகணங்கள் பூஜைக்கு உரியவர்களாயும், ஸ்வயமாகவே சாமர்த்தியம் உடையவர்களாய் இருந்தாலும், மிகுந்த சிரமத்துடன் சாதிக்கக் கூடிய சலனம் முதலிய காரியங்களில் நியமத்தின்படி பிரவிர்த்திக்கின்றன. இவ்வாறு நியமமாக (கட்டுப்பாடாக) இருப்பதற்கு கட்டளை இடுபவன் இருந்தால்தான் சாத்தியமாகும். ஏன் எனில் நியமமாக செயல்படுதல் என்பது கட்டளை இடும் பிரஹ்மத்தின் இடம் உள்ள பயத்தின் காரணமாக ஆகும். எவ்வாறு எனில் ராஜாவிடம் உள்ள பயத்தினால் சேவகர்கள் பிரவிர்த்திக்கிறார்களோ, அவ்வாறு அந்த பயத்திற்குக் காரணம் பிரஹ்மம் ஆனந்த ஸ்வரூபமாகும்.
तस्य अस्य ब्रह्मणः आनन्दस्य एषा मीमांसा विचारणा भवति । किमानन्दस्य मीमांस्यमिति, उच्यते - किमानन्दो विषयविषयिसम्बन्धजनितः लौकिकानन्दवत् , आहोस्वित् स्वाभाविकः, इत्येवमेषा आनन्दस्य मीमांसा ॥
(ச.பா) அந்த இந்த பிரஹ்மத்தினுடைய ஆனந்தத்தின் விசாரணை செய்யப்படுகிறது. அந்த ஆனந்தத்தினுடைய மீமாம்சை என்ன? என்று கூறுகிறார். என்ன ஆனந்தம் விஷய விஷயீ ஸம்பந்தத்தால் உண்டான லௌகிக ஆனந்தம் போன்றதா? அல்லது ஸ்வாபாவிகமானதா? என்று ஆனந்தத்தைப்பற்றிய விசாரணையாகும்.
तत्र लौकिक आनन्दो बाह्याध्यात्मिकसाधनसम्पत्तिनिमित्त उत्कृष्टः । सः य एष निर्दिश्यते ब्रह्मानन्दानुगमार्थम् । अनेन हि प्रसिद्धेन आनन्देन व्यावृत्तविषयबुद्धिगम्य आनन्दोऽनुगन्तुं शक्यते ।
(ச.பா) இப்படியிருக்க லௌகிக ஆனந்தமானது வெளியில் உள்ள ஆத்யாத்மிக ஸாதன ஸம்பத்தியின் நிமித்தத்தால் மிகவும் உயர்ந்தது. இந்த ஆனந்தத்தை எதற்காக ச்ருதி குறிப்பிடுகிறது. எனில் இதைத் தொடர்ந்து யோசித்தால் பிரஹ்மானந்தத்தை அனுபவிக்க செய்வதற்காக ஆகும். இந்த ஆனந்தத்தால் விஷயங்களின் தொடர்பில்லாமல் புத்தியால் அடையப்படும் ஆனந்தத்தைத் தொடர்ந்து விளக்கி அதன் வாயிலாய் பிரஹ்மானந்தத்தை விளக்கி அதை அடையச் செய்கிறார்.
लौकिकोऽप्यानन्दः ब्रह्मानन्दस्यैव मात्रा ; अविद्यया तिरस्क्रियमाणे विज्ञाने उत्कृष्यमाणायां च अविद्यायां ब्रह्मादिभिः कर्मवशात् यथाविज्ञानं विषयादिसाधनसम्बन्धवशाच्च विभाव्यमानश्च लोकेऽनवस्थितो लौकिकः सम्पद्यते ; स एव अविद्याकामकर्मापकर्षेण मनुष्यगन्धर्वाद्युत्तरोत्तरभूमिषु अकामहतविद्वच्छ्रोत्रियप्रत्यक्षो विभाव्यते शतगुणोत्तरोत्तरोत्कर्षेण यावद्धिरण्यगर्भस्य ब्रह्मण आनन्द इति । निरस्ते त्वविद्याकृते विषयविषयिविभागे, विद्यया स्वाभाविकः परिपूर्णः एकः आनन्दः अद्वैतः भवतीत्येतमर्थं विभावयिष्यन्नाह -
(ச.பா) லௌகிக ஆனந்தமும் பிரஹ்மானந்தத்தில் லேச (அம்ச)மே. அவித்யையினால் விக்ஞானம் (நிஜ அறிவானது) மறைக்கப்பட்ட (திரஸ்காரம் செய்யப்பட்ட) பொழுது அவித்யை திடமாகும் பொழுது முன்பு செய்த கர்ம வசத்தால் விஷயம் முதலியவைகளின் ஸாதன ஸம்பந்தத்தால் பிரஹ்ம முதலிய ஜீவர்களின் வாயிலாய் அவர் அவர்களுடைய விக்ஞானத்திற்கு எற்றபடி அனுபவிக்கப்படும் உலகத்தின் அஸ்திரமான லௌகிக ஆனந்தத்தை அடைகிறார்கள். அவனே அவித்யாரூப காமகர்மங்களின் நிவிர்த்தியினால் மனுஷ்ய கந்தர்வ முதலிய மேல் மேல் பூமிகளில் காமத்தை வென்ற சுரோத்திரிய வித்வான். நூ று நூ று மடங்கு மேலும் மேலும் உயர்ந்ததாய் ஹிரண்யகர்ப அதாவது பிரஹ்மாவினுடைய ஆனந்தம் வரையிலும் உண்டாகிறது. அவித்தையினால் ஏற்பட்ட விஷயவிஷயீ பிரிவானது அடியும்போது வித்யையினால் ஸ்வாபாவிகமான பரிபூர்ண ஏக ஆனந்தம் அத்வைதம் ஆகிறது என்ற அர்த்தத்தை அறிவதற்காக சுருதி கூறுகிறது.
युवा प्रथमवयाः ; साधुयुवेति साधुश्चासौ युवा चेति यूनो विशेषणम् ; युवाप्यसाधुर्भवति साधुरप्ययुवा, अतो विशेषणं युवा स्यात्साधुयुवेति ; अध्यायकः अधीतवेदः । आशिष्ठः आशास्तृतमः ; दृढिष्ठः दृढतमः ; बलिष्ठः बलवत्तमः ; एवमाध्यात्मिकसाधनसम्पन्नः । तस्येयं पृथिवी उर्वी सर्वा वित्तस्य वित्तेनोपभोगसाधनेन दृष्टार्थेनादृष्टार्थेन च कर्मसाधनेन सम्पन्ना पूर्णा राजा पृथिवीपतिरित्यर्थः । तस्य च य आनन्दः, सः एकः मानुषः मनुष्याणां प्रकृष्टः एक आनन्दः ।
(ச.பா) युवा (யுவா) முதல் வயதில் உள்ளவன் (இள வயதினன்) ஆவான். ஸாதுவாயுமுள்ள இளைஞன் என்று பொருள். மேலும் साधुयुवा (சாதுயுவா) என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இளவயதினனாயும், சாதுவாயும் இருக்கவேண்டும் என்பது பொருள். யுவாவாய் இருப்பவன் சாதுவாயும் இருக்கலாம், சாது அல்லாமலும் இருக்கலாம். சாதுவாய் இருந்தாலும் யுவா அல்லாமலும் இருக்கலாம். ஆகையால் யுவா என்பது சாதுயுவா என்று விசேஷணத்துடன் கூறப்பட்டது. अध्यायकः (அத்யாயக:) என்பது வேதத்தை அத்யயனம் செய்தவன்: आशिष्ठः (ஆசிஷ்ட்ட:) சுறுசுறுப்பாயுள்ளவன் दृढिष्ठः (த்ருடிஷ்டோ) மிகுந்த திடமுடையவன். बलिश्ठो (பலிஷ்ட்டோ) மிகுந்த பலசாலி. அவ்வாறே ஆத்யாத்மிக சாதனம் உடையவன். அவனுக்கு (அந்த யுவாவிற்கு) இந்த பிருதிவீ முதலிய எல்லா செல்வத்தோடும், அனுபவிக்கத்தகுந்த எல்லா சாதனங்களோடும் திருஷ்ட்டார்த்தமாயும், அதிருஷ்டார்த்தமாயும் உள்ள கர்ம சாதனங்களால் நிறைந்ததாயும் உள்ள இந்த பூமிக்கு அவன் அரசன் போல் ஆதிபத்யம் பெற்றவனாக ஆகின்றான். அதாவது இந்த பூமி சமஸ்தசம்பத்துக்களுடன் அவன் ஆணைக்கு உட்பட்டதாக ஆகிறது என்பது பொருள். அவனால் எந்த ஆனந்தம் அனுபவிக்கப்படுகிறதோ அது மனிதர்களின் ஒரு உயர்ந்த ஆனந்தமாகும்.
ते ये शतं मानुषा आनन्दाः, स एको मनुष्यगन्धर्वाणामानन्दः ; मानुषानन्दात् शतगुणेनोत्कृष्टः मनुष्यगन्धर्वाणामानन्दः भवति । मनुष्याः सन्तः कर्मविद्याविशेषात् गन्धर्वत्वं प्राप्ता मनुष्यगन्धर्वाः । ते ह्यन्तर्धानादिशक्तिसम्पन्नाः सूक्ष्मकार्यकरणाः ; तस्मात्प्रतिघाताल्पत्वं तेषां द्वन्द्वप्रतिघातशक्तिसाधनसम्पत्तिश्च । ततः अप्रतिहन्यमानस्य प्रतीकारवतः मनुष्यगन्धर्वस्य स्याच्चित्तप्रसादः । तत्प्रसादविशेषात्सुखविशेषाभिव्यक्तिः । एवं पूर्वस्याः पूर्वस्या भूमेरुत्तरस्यामुत्तरस्यां भूमौ प्रसादविशेषतः शतगुणेन आनन्दोत्कर्ष उपपद्यते ।
(ச.பா) எந்த இந்த மனுஷ்யானந்தத்தின் நூ றுமடங்கு மனுஷ்ய கந்தர்வர்களுக்கு ஒரு ஆனந்தமாகும். மனுஷ்ய ஆனந்தத்தைக் காட்டிலும் மனுஷ்ய கந்தர்வானந்தம் நூ றுமடங்கு அதிகமானதாகும். முதலில் மனுஷ்யர்களாய் இருந்து அதன்பின் கர்ம, உபாசனைகளின் விசேஷத்தால் கந்தர்வர்களான அவர்களை மனுஷ்ய கந்தர்வர்கள் எனப்படுகிறார்கள். அவர்கள் அந்தர்தானம் (மறைதல்) முதலிய சக்தி உடையவர்களாயும், ஸ)க்ஷ்மசரீரம், இந்திரியங்களுடன் கூடியவர்கள். மேலும் தடைகள் குறைவானவையே. எளிதில் தடைகள் வெள்ளும் திறன் உண்டு செய்யக்கூடிய சாதன சம்பத்துகளைப் பெற்றவர்களாய் விளங்குகின்றனர். எனவேதான் இந்த தடை இல்லாமலும் தடைகளைக் களையும் திறமை உள்ளவர்களாயும் இருக்கும் சக்தி மனுஷ்ய கந்தர்வர்களிடம் உள்ளது. இவ்வாறு முந்திய, முந்திய ஆனந்தத்தைக் காட்டிலும் நூ றுமடங்கு உயர்ந்ததாகக் கூறப்பட்டு முன்னிலையில் இருந்தவனைக் காட்டிலும், பின் நிலையில் உள்ளவன் பூர்ணமனத்தெளிவு பெற்றவன் நூ றுமடங்கு உயர்ந்த ஆனந்தம் பெற்றவனாக ஆகின்றான்.
प्रथमं तु अकामहताग्रहणं मनुष्यविषयभोगकामानभिहतस्य श्रोत्रियस्य मनुष्यानन्दात् शतगुणेन आनन्दोत्कर्षः मनुष्यगन्धर्वेण तुल्यो वक्तव्य इत्येवमर्थम् । साधुयुवा अध्यायक इति श्रोत्रियत्वावृजिनत्वे गृह्येते । ते ह्यविशिष्टे सर्वत्र । अकामहतत्वं तु विषयोत्कर्षापकर्षतः सुखोत्कर्षापकर्षाय विशेष्यते । अतः अकामहतग्रहणम् , तद्विशेषतः शतगुणसुखोत्कर्षोपलब्धेः अकामहतत्वस्य परमानन्दप्राप्तिसाधनत्वविधानार्थम् । व्याख्यातमन्यत् ।
(ச.பா) முதல்படியில் அகாமஹதன் காமத்தினால் அடிபடாதவனைக் தனக்கூறாதது ஏனெனில் மனித உலகின் (விருப்பங்களால்) நாசமாக்கப்படாத அந்தக்கரணத்தை உடைய இந்த ச்ரோத்திரியனின் ஆனந்தம் நூ றுமடங்கு உயர்ந்தது. அவன் மனுஷ்ய கந்தர்வனோடு ஒப்பானவன் என்று சொல்லத்தக்கது என்பதாலே சுருதி விளக்குகிறது. साधुयुवा, अध्यायकः என்பது அந்த சுரோத்திரிய த்வத்தையும் பாப இன்மையையும் கூறுகிறது. அதாவது அவன் பாபம் இல்லாதவன் என்பது பொருள். இதையே இனிவரும் இந்தப்பதத்தின் பொருளாக எங்கும் கொள்ளவேண்டும். अकामहतत्वं என்பது விஷயங்களின் மேன்மை, தாழ்மை, ஸ)கத்தின் ஆதிக்கியம், அல்லது குறைவு என்பதை தெரிவிப்பதற்காக ஒவ்வொரு இடத்திலும் விசேஷமாகக் கூறப்பட்டுள்ளது. எனவே அகாமஹதன் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விசேஷணம் விசேஷமாக எதற்காக கூறப்பட்டதெனில் இந்த நூ றுமடங்கு சுகத்தின் மேன்மை என்பது அகாமஹதத்தினுடைய ஆனந்தத்தில் ஒருதிவலை என்று கூறுவதற்காக. பரமானந்தத்தை அடைவதற்கான ஸாதனத்தை விதிப்பதற்கே ஆகும். மற்றவையாவும் முன்பே வியாக்கியானம் செய்யப்பட்டது.
देवगन्धर्वा जातित एव । चिरलोकलोकानामिति पितॄणां विशेषणम् । चिरकालस्थायी लोको येषां पितॄणाम् , ते चिरलोकलोका इति । आजान इति देवलोकः तस्मिन्नाजाने जाता आजानजा देवाः, स्मार्तकर्मविशेषतो देवस्थानेषु जाताः ।
(ச.பா) தேவ கந்தர்வர்கள் என்பது அவர்களுக்கு ஜாதியினால் ஏற்பட்டது. चिरलोकलोकानाम् (சிரலோகலோகானாம்) என்பது பித்ருக்களுக்கு விசேஷணமாகும். வெகு காலம் இருக்கக்கூடிய எந்த லோகம் பித்ருக்களுடையதோ (பித்ருலோகம்) அதனால் பித்ருக்கள் சிரலோகா: எனப்படுகிறார்கள் आजानः (ஆஜான) என்பது தேவலோகமாகும். அந்த லோகத்தில் உண்டானவர்கள் தேவர்கள் ஆஜானஜர்கள். அவர்கள் ஸ்மார்த்த கர்ம விசேஷத்தால் (அனுஷ்ட்டித்ததால்) தேவஸ்தானத்தில் உண்டானார்கள்.
कर्मदेवा ये वैदिकेन कर्मणा अग्निहोत्रादिना केवलेन देवानपियन्ति । देवा इति त्रयस्त्रिंशद्धविर्भुजः ; इन्द्रस्तेषां स्वामी ; तस्य आचार्यो बृहस्पतिः । प्रजापतिः विराट् त्रैलोक्यशरीरो ब्रह्मा समष्टिव्यष्टिरूपः संसारमण्डलव्यापी ।
(ச.பா) கர்மதேவர்கள் (कर्मदेवाः) என்பது எவர்கள் அக்னி ஹோத்திரம் முதலான கேவல வைதிக கர்மங்களால் தேவலோகத்தைத் அடைந்து அவர்களை விட உயர்ந்தவர்களாய் கருதப்படுகிறார்கள். தேவர்கள் என்பவர்கள் ஹவிர் பாகத்தை புசிக்கும் முப்பத்திமுக்கோடி தேவர்கள். இந்திரன் அவர்களின் தலைவன். பிருஹஸ்பதி அந்த இந்திரனின் ஆச்சாரியன். பிரஜாபதி என்பது விராட் ஸ்வரூபமாயும், அவ்வாறே மூன்று லோகத்தையும் சரீரமாக உடைய பிரஹ்மா. அவர் சமஷ்ட்டி வியஷ்ட்டி ரூபமாய் எல்லா சம்சார மண்டலத்தையும் வியாபித்து இருப்பவர்.
यत्रैते आनन्दभेदा एकतां गच्छन्ति, धर्मश्च तन्निमित्तः ज्ञानं च तद्विषयम् अकामहतत्वं च निरतिशयं यत्र, स एष हिरण्यगर्भो ब्रह्मा, तस्यैष आनन्दः श्रोत्रियेण अवृजिनेन अकामहतेन च सर्वतः प्रत्यक्षमुपलभ्यते । तस्मादेतानि त्रीणि साधनानीत्यवगम्यते । तत्र श्रोत्रियत्वावृजिनत्वे नियते अकामहतत्वं तु उत्कृष्यत इति प्रकृष्टसाधनता अवगम्यते ।
(ச.பா) இந்த நிலையில் ஆனந்த பேதங்கள்யாவும் அற்று ஒருமைத்தன்மையை அடைகிறானோ அது உயர்ந்த நிலையாகும். தர்மம் என்பது உயர்நிலைக்கு உயர்த்துவது. அதற்கு ஞானம் நிமித்தமாக உள்ளது. அந்த விஷயமான காமம் இல்லாமல் இருத்தல் மிகவும் உயர்ந்தது. இந்த நிலை எப்பொழுது ஏற்படுகிறதோ அப்பொழுது அந்த நிலைக்கு உயர்ந்தவன் ஹிரண்யகர்பன் ஆவான். அவனுக்கு எந்த ஆனந்தம் உண்டோ அந்த ஆனந்தத்தைப் பாபமற்றவனாயும், விருப்பங்களால் நாசமாக்கப்படாத அந்தக்கரணத்தை உடையவனாயும் உள்ள சுரோத்திரியனால் எங்கும் எப்பொழுதும் பிரத்யக்ஷமாய் அனுபவிக்கப்படுகிறது. எனவே (பிரஹ்மஞானத்திற்கு) இந்த மூன்று சாதனங்கள் என்று புரிந்துகொள்ளவேண்டும். அவைகளில் சுரோத்திரியனாய் இருத்தலும், பாபமற்றவனாய் இருததலும், பொதுவாக இருப்பவை அகாமஹதத்துவம் என்பது மிகவும் அரிதாக உள்ளதால் அதுவே மிகவும் உயர்ந்த ஸாதனம் என்று புரிந்து கொள்ளப்படுகிறது.
तस्य अकामहतत्वप्रकर्षतश्चोपलभ्यमानः श्रोत्रियप्रत्यक्षो ब्रह्मण आनन्दः यस्य परमानन्दस्य मात्रा एकदेशः, ‘एतस्यैवानन्दस्यान्यानि भूतानि मात्रामुपजीवन्ति’ (बृ. उ. ४ । ३ । ३२) इति श्रुत्यन्तरात् । स एष आनन्दः - यस्य मात्रा समुद्राम्भस इव विप्रुषः प्रविभक्ताः यत्रैकतां गताः - स एष परमानन्दः स्वाभाविकः, अद्वैतात् ; आनन्दानन्दिनोश्च अविभागोऽत्र ॥
(ச.பா) இவ்வாறு அகாமஹதத்துவத்தின் உச்சநிலையைய் பெற்றமையால் அந்த சுரோத்திரியனால் அனுபவிக்கப்படும் ஆனந்தமானது அந்த பரமானந்தத்தின் ஒரு ஏகதேசமேயாகும் இதையே “‘एतस्यैवानन्दस्यान्यानि भूतानि मात्रामुपजीवन्ति’ (बृ. उ. ४ । ३ । ३२) இந்த பிரஹ்மானந்தத்தின் ஒரு சிறு ஏகதேசத்தைப் பெற்றே மற்ற பூதங்கள்யாவும் ஜீவிக்கின்றன” என்று வேறு சுருதிகளும் கூறுகின்றன, அத்தகைய இந்த ஆனந்தங்கள்யாவும் ஸமுத்திரத்தண்ணீரின் ஒரு திவிலை போல் அங்கு பகுக்கப்பட்டவைகளாய் உள்ளன. இவைகள் எங்கு தனித்தனியாகவும் பகுக்கப்படாமலும் ஒரே ரூபமாக இருக்கிறதோ அதுவே இந்த பரமானந்தமாகும். இது அதனுடைய இயற்கை. இது இரண்டாவது அற்ற ஆனந்தமாகும். இதை அடைந்து அநுபவிப்பவர்களே ஆனந்திகள். இங்கு எந்த பகுப்பும் கிடையாது (இந்நிலையை அடைந்தவர்கள் ஜீவன்முக்தர்கள்.)
तदेतन्मीमांसाफलमुपसंह्रियते -
(அ--கை) இவ்வாறு விசாரணை செய்யப்படுவதின் பயனை முடிவிற்குக் கொண்டு வருகிறார்.
स यश्चायं पुरुषे । यश्चासावादित्ये । स एकः । स य एवंवित् । अस्माल्लोकात्प्रेत्य । एतमन्नमयमात्मानमुपसङ्क्रामति । एतं प्राणमयमात्मानमुपसङ्क्रामति । एतं मनोमयमात्मानमुपसङ्क्रामति । एतं विज्ञानमयमात्मानमुपसङ्क्रामति । एतमानन्दमयमात्मानमुपसङ्क्रामति । तदप्येष श्लोको भवति ॥ ५ ॥
यः गुहायां निहितः परमे व्योम्नि आकाशादिकार्यं सृष्ट्वा अन्नमयान्तम् , तदेवानुप्रविष्टः, सः य इति निश्चीयते । कोऽसौ ? अयं पुरुषे । यश्चासावादित्ये यः परमानन्दः श्रोत्रियप्रत्यक्षो निर्दिष्टः, यस्यैकदेशं ब्रह्मादीनि भूतानि सुखार्हाण्युपजीवन्ति, सः यश्चासावादित्ये इति निर्दिश्यते । स एकः भिन्नप्रदेशघटाकाशाकाशैकत्ववत् ।
(ச.பா) எந்தப் புருஷனானவன் புத்தியாகிய குகையிலும், பரமாகாசத்திலும் வைக்கப்பட்டுள்ளானோ, அவன் ஆகாசம் முதலாக அன்னமயம் வரையிலும் படைத்து அதில் நுழைந்தான் என்று கூறப்பட்டதோ அந்த ஸ்வரூபமே இங்கு सः (அவன்) यः(எவன்)என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் யார்? இந்த புருஷனிடத்திலும், எவன் இந்த சூரியனிடத்திலும் வைக்கப்பட்டுள்ளானோ, எவன் சுரோத்திரியனுக்கு பிரத்தியக்ஷமானவன் என்றும் பரமானந்த ஸ்வரூபன் என்றும் குறிப்பிடப்பட்டானோ, எவருடைய ஏகதேசத்தை ஆச்ரயித்ததினால் ஸ)கத்திற்குப் பாத்திரர்களாய் ப்ரஹ்மா முதலிய ஜீவர்கள் ஜீவிக்கின்றார்களோ அவனே यश्चासावादित्ये (அவனே இந்த சூரியனிடத்திலும்) பிரகாசிக்கிறான் என்று நிர்தேசம் செய்யப்படுகிறான். அவன் ஒருவனாகவே இருந்துக்கொண்டு வேறு, வேறு இடத்தில் உள்ளதான கடங்களில் இருக்கும் ஆகாசம் ஒரே ஆகாசம் என்று கூறுவது போலாகும்.
(शंका) ननु तन्निर्देशे स यश्चायं पुरुष इत्यविशेषतोऽध्यात्मं न युक्तो निर्देशः ; यश्चायं दक्षिणेऽक्षन्निति तु युक्तः, प्रसिद्धत्वात् ।
(ச.பா) (சங்கை) இவ்வாறு அதைக் குறிப்பிடுகையில் ‘स यश्चायंपुरुषे (அந்த எந்த இந்த புருஷனிடத்தில்) என்று பொதுவாக அத்யாத்ம ஸ்வரூபத்தை நிர்தேசம் செய்கிறது என்று கூறுவது பொருந்தாது. ஏன் எனில் பிருஹதாரண்யத்தில் அந்த பரம புருஷன் இந்த வலது கண்௴ல் பிரகாசிக்கிறான் என்று கூறியிருப்பது மிகவும் பிரஸித்தமாயும் பொருத்தமாயும் இருக்கிறது.
(समाधानम्) न, पराधिकारात् । परो ह्यात्मा अत्र अधिकृतः ‘अदृश्येऽनात्म्ये’ ‘भीषास्माद्वातः पवते’ ‘सैषानन्दस्य मीमांसा’ इति । न हि अकस्मादप्रकृतो युक्तो निर्देष्टुम् ; परमात्मविज्ञानं च विवक्षितम् । तस्मात् पर एव निर्दिश्यते - स एकः इति ।
(ச.பா) (ஸமாதானம்) பொருந்தாது. ஏன்எனில் இங்கு பரப்ரஹ்மத்தை கூறும் பரம ஆத்மா அல்லவா விஷயமாக உள்ளான். எனவே தான் பார்க்கப்படாதவனாயும், அநாத்மிய ஸ்வரூபத்திலும் நிலை பெற்றுள்ளான் என்று கூறியதும், எவனிடமிருந்து ஏற்பட்ட பயத்தினாலேயே காற்று வீசுகிறது. அத்தகைய ஆனந்தத்தின் விசாரம் இங்கு செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. எனவே ப்ரக்ருதமாக இல்லாத விஷயத்தை கூறுவது ஸரியல்ல பரமாத்ம விதானமன்றோ இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த பரமாத்மாவே இங்கு அவன் ஒருவனே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(शंका) नन्वानन्दस्य मीमांसा प्रकृता ; तस्या अपि फलमुपसंहर्तव्यम् । अभिन्नः स्वाभाविकः आनन्दः परमात्मैव, न विषयविषयिसम्बन्धजनित इति ।
(ச.பா) (சங்கை) ஆனந்தத்தைப் பற்றிய விசாரமே இந்த பிரகரணம். ஆகையால் அதன் பலனையும் பூர்த்திக்கு கொண்டுவரவேண்டும். எங்கும், எப்பொழுதும் பகுக்கப்படாது தன் இயற்கையாகவே ஆனந்தமாய் இருப்பது பரமாத்மா ஒன்றேஆகும். இந்த ஆனந்தம் விஷயம், விஷயீ இவைகளின் ஸம்பந்தத்தால் உண்டானது அல்ல.
ननु तदनुरूप एव अयं निर्देशः - ‘स यश्चायं पुरुषे यश्चासावादित्ये स एकः’ इति भिन्नाधिकरणस्थविशेषोपमर्देन ।
(ச.பா) இதற்கு அனுகூலமாகவே இந்த நிர்தேசம் உள்ளது ‘स यश्चायं पुरुषे यश्चासावादित्ये स एकः’ இந்த புருஷனுடைய சித்தகுகையிலும், ஸூரியனிடத்திலும் பிரகாச ஸ்வரூபமாய் விளங்குபவன் ஒருவனே என்று வேறு, வேறு அதிகரணங்களில் ஏற்படும் விசேஷங்களைக்களைந்து ஒன்றாகச் சேர்த்து இங்கு स என்று நிர்தேசம் செய்யப்பட்டுள்ளது
(शंका) नन्वेवमप्यादित्यविशेषग्रहणमनर्थकम् ।
(ச.பா) (சங்கை) ஆனாலும் இவ்வாறு ஆதித்யன் (சூரியன்) என்று இங்கு விசேஷமாக கூறப்படுவது பொருள் அற்றது.
न अनर्थकम् , उत्कर्षापकर्षापोहार्थत्वात् । द्वैतस्य हि यो मूर्तामूर्तलक्षणस्य पर उत्कर्षः सवित्रभ्यन्तर्गतः स चेत्पुरुषगतविशेषोपमर्देन परमानन्दमपेक्ष्य समो भवति, न कश्चिदुत्कर्षोऽपकर्षो वा तां गतिं गतस्येत्यभयं प्रतिष्ठां विन्दत इत्युपपन्नम् ॥
(ச.பா) அவ்வாறு பொருள் அற்றது அல்ல. ஸந்தோஷத்தின் ஏற்றதாழ்வுகளை நீக்குவதற்காகவே அவ்வாறு கூறப்பட்டது. மூர்த்தாமூர்த்த லக்ஷணமான விஷயத்திற்கே ஒன்றைக் காட்டிலும் ஒன்று உயர்ந்தது, ஒன்று தாழ்ந்தது என்று கூறுதல் பொருத்தமானது ஆகும், ஸூரியனின் உள்ளிலும், புருஷனின் உள்ளிலும் இருப்பவன் அவன் ஒருவனே என்று இந்த ஏற்றத்தாழ்வுக்கான விசேஷங்களை நீக்குவதால் பரமானந்தத்தைப் பார்க்கையில் இவையாவும் ஸமமானவையே. இவைகளுக்குள் எந்த ஏற்றதாழ்வும் ஏற்படாது. அந்த உயர்ந்த நிலையை அடைந்தவனே அபயம் எனப்படும் உத்தமஸ்தானத்தில் நிலை பெற்றுள்ளான் என்று கூறுவதுதான் பொருத்தமாகும்.
अस्ति नास्तीत्यनुप्रश्नो व्याख्यातः । कार्यरसलाभप्राणनाभयप्रतिष्ठाभयदर्शनोपपत्तिभ्योऽस्त्येव तदाकाशादिकारणं ब्रह्मेत्यपाकृतः अनुप्रश्न एकः ; द्वावन्यानुप्रश्नौ विद्वदविदुषोर्ब्रह्मप्राप्त्यप्राप्तिविषयौ ; तत्र विद्वान्समश्नुते न समश्नुत इत्यनुप्रश्नोऽन्त्यः ; तदपाकरणायोच्यते । मध्यमोऽनुप्रश्नः अन्त्यापाकरणादेव अपाकृत इति तदपाकरणाय न यत्यते ।
(ச.பா) பிரஹ்மம் இருக்கிறதா? இல்லையா? என்பதைப் பற்றி தொடர் கேள்வி பதில் அளிக்கப்பட்டது. காரியங்கள் அதை ரஸரூபமாய் அடைதல் உயிர்த்தல், பயமின்மை, அதில் நிலைபெற்றிருத்தல் என்ற காரணங்களை நன்கு யுக்தியுடன் விளக்கி பிரஹ்மமே இருக்கிறது. அதுவே ஆகாசம் முதலியவைகளுக்கு காரணம் என்று பிரஹ்மத்தினுடைய இருக்கையை நிலைநாட்டுவதற்காக வந்த கேள்விகளில் முதலாவது கேள்வியாகும். மேலும் அதைத் தொடர்ந்து இருகேள்விகள் வந்தன. அது வித்வான், அவித்வான்களின் பிரஹ்ம பிராப்தியைப் பற்றியது ஆகும். மேலும் வித்வான் அடைகிறானா? அல்லது அவித்வானைப் போல் பிரஹ்மத்தை அடைவது இல்லையா? என்பது கடைசி கேள்வியாகும். இதைக் கூறும்பொழுதே நடுக்கேள்வி அவித்வானின் நிலை புறக்க௴க்கப்பட்டு விடுகிறது. இந்த கேள்வி தானாகவே வலுப்பெறாமல் நிலை பெறாததால் அதை நீக்குவதற்கு நாம் விசேஷமாக முயற்சிக்கவில்லை.
स यः कश्चित् एवं यथोक्तं ब्रह्म उत्सृज्योत्कर्षापकर्षमद्वैतं सत्यं ज्ञानमनन्तमस्मीत्येवं वेत्तीति एवंवित् ; एवंशब्दस्य प्रकृतपरामर्शार्थत्वात् । स किम् ? अस्माल्लोकात्प्रेत्य दृष्टादृष्टेष्टविषयसमुदायो हि अयं लोकः, तस्मादस्माल्लोकात्प्रेत्य प्रत्यावृत्य निरपेक्षो भूत्वा एतं यथाव्याख्यातम् अन्नमयमात्मानमुपसङ्क्रामति विषयजातमन्नमयात्पिण्डात्मनो व्यतिरिक्तं न पश्यति, सर्वं स्थूलभूतमन्नमयमात्मानं पश्यतीत्यर्थः ।
(ச.பா) இவ்வாறு எந்த ஒருவன் முன்பு கூறிய மேன்மை தாழ்மைகளை விட்டு, அத்வைதம், ஸத்யம், ஞானமனந்தம் பிரஹ்மமாய் இருக்கிறேன் என்று அநுபவபூர்வமாய் உணர்கிறானோ(ன்) இங்கு एवं என்ற சப்தம் இங்கு சொல்லப்பட்ட பதார்த்தத்தை நிர்தேசம் செய்வதற்காக வந்துள்ளது. அது என்ன? எனில் திருஷ்ட்டமாயும், அதிருஷ்ட்டமாயும், உள்ள இஷ்ட விஷயங்களோடு கூடியதாயும் உள்ள இந்த லோகத்திலிருந்து, இந்த சரீரம் விழும்பொழுது ஆத்மாவை உள்ளே திருப்பி எதிலும், அபேக்ஷை இல்லாதவனாகி, முன்பு விளக்கப்பட்ட அன்னமயமான ஆத்மாவை அதாவது அதன் விஷயமான அன்னமய பிண்டத்தை தவிர ஒன்றையும் பார்ப்பவனாக இல்லையோ, அவ்வாறு இந்த ஸ்தூலபூதமயமான இவைகளைப் பார்க்கிறானோ என்பது பொருள்.
ततः अभ्यन्तरमेतं प्राणमयं सर्वान्नमयात्मस्थमविभक्तम् । अथैतं मनोमयं विज्ञानमयमानन्दमयमात्मानमुपसङ्क्रामति । अथादृश्येऽनात्म्येऽनिरुक्तेऽनिलयनेऽभयं प्रतिष्ठां विन्दते ॥
(ச.பா) அதன் பிறகு அன்னமயத்திற்குள்ளே இருக்கக்கூடிய அதாவது அன்னமய ஆத்மகோசத்தால் மறைக்கப்பட்டுள்ள பிராணமயத்தை அடைந்து இந்த எல்லா அன்னமயமானவையாவும், பகுக்கப்படாத ஆத்மாவில் உள்ளதாகப் பார்க்கிறானோ (ஆத்மாவைத் தவிர எல்லாவற்றையும் ஒரே ஜடமாய் பார்க்கிறானோ) என்பது பொருள். பிறகு இவ்வாறு ஒன்றிற்குள் ஒன்றாக மனோமய, விக்ஞானமய, ஆனந்தமய ஆத்மாக்களை உள்முகமாய் வந்து அடைகிறான். பிறகு திருச்யமற்றதாயும், சரீரமற்றதாயும், அநிர்வசநீயமாயும் (இன்னது என்று விளக்க முடியாததாயும்) எல்லாவற்றிற்கும் அதிஷ்டானமாயும், தனக்கு அதிஷ்டானமாக எதையும் கொள்ளாததாயும், பயமற்றதாயும் உள்ள ஆத்மஸ்வரூபத்தில் நிலைபெற்றவனாக ஆகிறான்.
तत्रैतच्चिन्त्यम् - कोऽयमेवंवित् , कथं वा सङ्क्रामतीति ; किं परस्मादात्मनोऽन्यः सङ्क्रमणकर्ता प्रविभक्तः, उत स एवेति ।
(ச.பா) இங்கு இவ்வாறு சிந்திக்கவேண்டும். எவன் இவ்வாறு அறிந்தவன்? அவன் எவ்வாறு உள் ஒடுங்குதலை அடைகிறான்? இந்த உள்முகமாக ஒடுங்குபவன் பரமாத்மாவைத் தவிர வேறுபட்டவனா? அல்லது அவனேதானா?
(पूर्वपक्षी) किं ततः ?
(பூர்வ) அதனால் என்ன? இந்த விசாரத்தால் என்ன லாபம்?
(सिध्दान्ती) यद्यन्यः स्यात् , श्रुतिविरोधः - ‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ (तै. उ. २ । ६ । १) ‘अन्योऽसावन्योऽहमस्मीति । न स वेद’ (बृ. उ. १ । ४ । १०) ‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) ‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) इति । अथ स एव आनन्दमयमात्मानमुपसङ्क्रामतीति, कर्मकर्तृत्वानुपपत्तिः । परस्यैव च संसारित्वं पराभावो वा ।
(ச.பா) (ஸித்தாந்தீ) இவ்வாறு அந்த ஒடுங்குதலைச் செய்பவன் பரமாத்மாவைத் தவிர வேறு ஒருவனாக இருந்தால் அது சுருதி வாக்கியத்திற்கு விரோதமாகும். ‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ (तै. उ. २ । ६ । १) (தத்ஸ்ருஷ்ட்வா ததேவானுப் பிராவிசத் = அதைப் படைத்து அதுவே அதிலேயே நுழைந்தான்) ‘अन्योऽसावन्योऽहमस्मीति । न स वेद’ (बृ. उ. १ । ४ । १०) (அன்யோ அசாவன்யோ அஹமஸ்மீதி ந ச வேத = எவன் ஒருவன் இவன் வேறு, நான் வேறு என்று அறிகிறானோ அவன் அறியவில்லை. ‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) (ஏகமேவாத்விதீயம் = ஒன்றே உள்ளது, இரண்டாவது அற்றது) ‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) (தத்துவமசி = அது நீயாய் இருக்கிறாய்) என்பன போன்ற சுருதி வாக்கியங்களுக்கு விரோதமாகும். ஆகையால் அவனே ஆனந்தமய ஆத்மாவை அடையும்படி செய்கிறான், என்ற இடத்தில் கர்ம, கர்த்திருத்துவம் (அதாவது கர்மாவும் கர்த்தாவும் ஒன்று என்ற அனுபபத்தி ஏற்படும்) என்று அந்த பரமாத்மாவிற்கே ஸம்சாரித்துவம் ஏற்படும் அல்லது அந்த பரமாத்மாவிற்கு அபாவம் ஸித்திக்கும்.
(पूर्वपक्षी) यद्युभयथा प्राप्तो दोषो न परिहर्तुं शक्यत इति, व्यर्था चिन्ता । अथ अन्यतरस्मिन्पक्षे दोषाप्राप्तिः तृतीये वा पक्षे अदुष्टे, स एव शास्त्रार्थ इति व्यर्थैव चिन्ता ।
(ச.பா) (பூர்வ) இவ்வாறு இரண்டு பக்ஷமாக எடுத்துக்கொண்டாலும் அதனால் ஏற்படும் தோஷத்தை நீக்க முடியாதது என்றால் இந்த சிந்தனை வீண் அல்லது ஒரு பக்ஷத்தை எடுத்துக்கொண்டால் குற்றமில்லை எனிலோ இவ்விரண்டையும் விட்டுவிட்டு மூன்றாவதாக தோஷமற்ற ஒரு பக்ஷத்தை ஏற்போம். அதுவே சாஸ்த்திரார்த்தமாகும். அதனால் இந்த சிந்தனை வீணானதாகவே ஆகிறது.
न, तन्निर्धारणार्थत्वात् । सत्यं प्राप्तो दोषो न शक्यः परिहर्तुमन्यतरस्मिन् तृतीये वा पक्षे अदुष्टे अवधृते व्यर्था चिन्ता स्यात् ; न तु सोऽवधृत इति तदवधारणार्थत्वादर्थवत्येवैषा चिन्ता ।
(ச.பா) அப்படி அல்ல. அதை நிர்தாரணம் செய்வதின்பொருட்டு சிந்திக்கிறோம். நாம் ஏதாவது ஒரு பக்ஷத்தை ஏற்பது என்பது சரியானதாகாது. ஏற்பட்ட தோஷத்தை அதாவது உண்மையாக ஏற்பட்ட தோஷத்தை எவ்வழியாலும் நீக்கமுடியாது. இவைகளில் ஒன்றையோ, அல்லது இரண்டாவதோ மூன்றாவது பக்ஷத்தையோ, தோஷமற்றது என்று நாம் தீர்மானித்துக் கொண்டு சிந்திப்பதும் வியர்த்தமானதாகவே ஆகும். அவ்வாறு நிர்தாரணம் செய்யப்படாததால். அதைப் புரிந்துகொண்டு அதை நிச்சயம் செய்வதற்காகவே, இப்பொழுது அந்த சங்கை செய்யப்படுகிறது. என்றால் அப்பொழுது இந்த சிந்தனை பொருள் உள்ளதாக ஆகும்.
(पूर्वपक्षी) सत्यमर्थवती चिन्ता, शास्त्रार्थावधारणार्थत्वात् । चिन्तयसि च त्वम् , न तु निर्णेष्यसि ।
(பூர்வ) சிந்தனை உண்மையாகவே பொருள் உள்ளதே? ஏன் எனில் இந்த சிந்தனை சாஸ்த்திரார்த்தத்தை நிர்தாரணம் செய்வதாக உள்ளது. ஆனால் நீ இப்பொழுது சிந்திக்கிறாய். நிர்ணயம் செய்யபோவதில்லை.
(सिध्दान्ती) किं न निर्णेतव्यमिति वेदवचनम् ?
(சித்தா) நிர்ணயிக்கமுடியாது என்பது வேதவாக்க என்ன?
(पूर्वपक्षी) न ।
(பூர்வ) அவ்வாறு இல்லை.
(सिध्दान्ती) कथं तर्हि ?
(சித்தாந்தி) அவ்வாறு எனில் என்ன கூற வருகிறாய்?
(पूर्वपक्षी) बहुप्रतिपक्षत्वात् ; एकत्ववादी त्वम् , वेदार्थपरत्वात् ; बहवो हि नानात्ववादिनो वेदबाह्याः त्वत्प्रतिपक्षाः ; अतो ममाशङ्का - न निर्णेष्यसीति ।
(ச.பா) (பூர்வ) இந்த விவாதத்திற்கு எதிர்கும் மனிதர்கள் பலர் உள்ளதால் பிரஹ்மத்திற்கு நாநாத்துவத்தை கல்பிக்க பலர் உள்ளனர். ஆனால் அந்த ஏகத்துவத்தை வாதிப்பவன் நீ ஒருவனே. வேதத்தின் அர்த்தத்தை பலர் பலவாறாக அர்த்தம் செய்துக்கொண்டு அதை நாநாவாக வாதிக்கின்றனர். அவர்கள் வேதத்திற்கு புறம்பானவர்கள் எனவே அவர்கள் உனக்கு எதிர்வாதம் செய்வார்கள். ஆகையால் என்னுடைய சங்கை நீ நிர்ணயிப்பது மிகக்கடினம் (முடியாத ஒரு கார்யம்) என்று.
(सिध्दान्ती) एतदेव मे स्वस्त्ययनम् - यन्मामेकयोगिनमनेकयोगिबहुप्रतिपक्षमात्थ । अतो जेष्यामि सर्वान् ; आरभे च चिन्ताम् ॥
(ச.பா) (ஸித்தாந்தீ) எனக்கு இந்த உனது கூற்றே(வாக்யமே) மங்களத்தைக் கொடுப்பது ஆகும். எதனால் என்னுடைய ஏகத்துவத்தை எதிர்த்து பலர் கூடி பிரதிபக்ஷத்தைக் கூற இருக்கின்றார்கள் என்று நீ மீறினாய் அதனால் அவர்களை ஜெயித்தே தீருவேன். சிந்திப்பது என்பது இங்கு ஆரம்பிக்கப்படவேயில்லை.
स एव तु स्यात् , तद्भावस्य विवक्षितत्वात् । तद्विज्ञानेन परमात्मभावो हि अत्र विवक्षितः - ‘ब्रह्मविदाप्नोति परम्’ इति । न हि अन्यस्य अन्यभावापत्तिरुपपद्यते । ननु तस्यापि तद्भावापत्तिरनुपपन्नैव । न, अविद्याकृतानात्मापोहार्थत्वात् । या हि ब्रह्मविद्यया स्वात्मप्राप्तिरुपदिश्यते, सा अविद्याकृतस्य अन्नादिविशेषात्मनः आत्मत्वेनाध्यारोपितस्य अनात्मनः अपोहार्था ।
அடைபவனும் அடையப்படுப்பவனும் ஒருவனே தான். இவை எல்லாம் பிரஹ்மத்தன்மையை உணர்த்தவே கூறப்பட்டது ஆகும். ब्रह्मविदाप्नोति परम्’ (பிரஹ்மவிதாப்னோதிபரம் = பிரஹ்மவித் பரமாத்ம ஸ்வரூபத்தை அடைகிறார்) என்று கூறப்பட்டது அந்த விக்ஞானத்தால் பரமாத்ம பாவத்தைச் சொல்லவிரும்பியதே ஆகும். ஒருவனுக்கு மற்றொருவனுடைய பாவம் (भावम्) ஏற்படுகிறது என்பது பொருத்தமாக ஆகாது. மேலும் அது போன்றே அவன், அவனுடைய பாவத்தை அவன் அடைகின்றான் (தன்னுடைய பாவத்தை தானே அடைகின்றான்) என்று கூறுவதும் பொருந்தாது அன்றோ என்று கூறினால் அதுவும் ஸரியன்று. அவித்தையினால் மறைக்கப்பட்டு (அதோடு) தாதாத்மிய பாவத்தை அடைவதான (அவித்யை என்றத் திறை நீக்குவதற்கே) இவ்வாறு கூறப்பட்டது. தன்னுடைய ஆத்ம ஸ்வரூபத்தை அடைதல் என்ற எந்த பிரஹ்ம வித்தை உண்டோ அது தன் ஸ்வரூபத்தை அடைவதற்காகவே உபதேசிக்கப்பட்டது ஆகும். அந்த ஆத்மஸ்வரூபம் அவித்தையால் உண்டான அன்னமய கோசம் முதலானவைகளில் ஆத்மத்துவம் உள்ளதாக, அத்யாரோபம் செய்யப்பட்டு அவ்வாறு அத்யாரோபம் செய்த அநாத்மாக்களை நீக்குவதற்காகவே சுருதி இவ்வாறு கூறுகிறது.
(पूर्वपक्षी) कथमेवमर्थता अवगम्यते ?
(ச.பா) (பூர்வ) இத்தகைய பொருள் கொண்டது சுருதி என்று எவ்வாறு புரிந்து கொள்ளப்படுகிறது.
(सिध्दान्ती) विद्यामात्रोपदेशात् । विद्यायाश्च दृष्टं कार्यमविद्यानिवृत्तिः ; तच्चेह विद्यामात्रमात्मप्राप्तौ साधनमुपदिश्यते ।
(ச.பா) (ஸித்தாந்தீ) வித்தையை மாத்திரமே சுருதி உபதேசிக்கிறதன்றோ! அவித்தையையின் நிவிர்த்தி ஞானத்தின் பிரத்யக்ஷபலனாகும் இங்கு ஆத்மாவை அடைவதற்கான ஸாதனம் வித்யை (ஞானம்) மட்டுமே என்று கூறப்படுகிறது.
(पूर्वपक्षी) मार्गविज्ञानोपदेशवदिति चेत् , तदात्मत्वे विद्यामात्रसाधनोपदेशोऽहेतुः । कस्मात् ? देशान्तरप्राप्तौ मार्गविज्ञानोपदेशदर्शनात् । न हि ग्राम एव गन्तेति चेत् ।
(ச.பா) (பூர்வ) இந்த உபநிஷத் ஆத்மத்தன்மை பெறுவதற்கு மார்க்கத்தை உபதேசிப்பது போன்றதே. எனவே வித்யை மட்டும் கூறுவது ப்ரஹ்மமே இவன் என்பதற்கு இங்கு காரணம் ஆகாது. எவ்வாறு எனில் வேறு ஊருக்குச் செல்ல வேண்டியவனுக்கு அந்த ஊருக்கு செல்லும் மார்க்கத்தை உபதேசிப்பதை பார்க்கிறோம் அங்கு, அடைய வேண்டிய கிராமமே அடைபவன் என்பது இல்லையே.
(सिध्दान्ती) न ; वैधर्म्यात् । तत्र हि ग्रामविषयं नोपदिश्यते, तत्प्राप्तिमार्गविषयमेवोपदिश्यते विज्ञानम् ; न तथेह ब्रह्मविज्ञानव्यतिरेकेण साधनान्तरविषयं विज्ञानमुपदिश्यते ।
(ச.பா) (ஸித்தாந்தீ) அவ்வாறு கூறுவது பொருந்தாது. ஏன்எனில் இந்த உதாரணம் தவறானது. ஏன் எனில் அவ்விடத்தில் கிராம விஷயமான ஞானம் உபதேசிக்கப்படவில்லை. அதை அடையும் வழி மாத்திரமே உபதேசிக்கப்பட்டது. இவ்விடத்திலோ அடைய வேண்டியதான யாதொரு ப்ரஹ்மமுண்டோ அதன் விஷயமான ஞானம் உபதேசிக்கப்படுகின்றதேயொழிய அதற்கு வேறாக உபாஸனைகள் அல்லது வேறு ஸாதனமோ வேறு விதமான ஞானமோ உபதேசிக்கப்படவில்லை.
उक्तकर्मादिसाधनापेक्षं ब्रह्मविज्ञानं परप्राप्तौ साधनमुपदिश्यत इति चेत् , न ; नित्यत्वान्मोक्षस्येत्यादिना प्रत्युक्तत्वात् । श्रुतिश्च ‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ इति कार्यस्य तदात्मत्वं दर्शयति । अभयप्रतिष्ठोपपत्तेश्च । यदि हि विद्यावान् स्वात्मनोऽन्यन्न पश्यति, ततः अभयं प्रतिष्ठां विन्दत इति स्यात् , भयहेतोः परस्य अन्यस्य अभावात् । अन्यस्य च अविद्याकृतत्वे विद्यया अवस्तुत्वदर्शनोपपत्तिः ; तद्धि द्वितीयस्य चन्द्रस्य असत्त्वम् , यदतैमिरिकेण चक्षुष्मता न गृह्यते ।
(ச.பா) கூறப்பட்ட கர்மம் முதலிய ஸாதனங்களை அபேக்ஷித்து அதோடு கூடிய பிரஹ்மவிக்ஞானம் பரமாத்மாவை அடைவதற்கான சாதனமாக உபதேசிக்கிறது என்று கூறுவாயேயானால், அவ்வாறு அல்ல. ஏன் எனில் முன்பே மோக்ஷம் நித்யமானது என்று அதற்கு பதில் கூறப்பட்டுவிட்டது. ச்ருதியும் அதைப்படைத்து அதன் உள்ளே நுழைந்தான் என்பதால் காரியத்தில் உள்ள அந்த ஆத்மத்தன்மையை காண்பிக்கிறது. அதை அபயத்தில் நிலை பெற்றிருக்கிறான் என்று கூறுவதால் மேலும் வலுவூட்டுகிறது. எப்பொழுது வித்தையை அடைந்தவன் தன்னில் வேறு ஒன்றையும் பார்க்காமல் இருக்கிறானோ அப்பொழுது அந்த அபயமான ஆத்மஸ்வரூபத்தில் நிலைபெறும் தன்மையை அடைகிறான் என்று கூறியதாக ஆகும். அந்நிலையில் பயத்திற்குக் காரணமான மற்றொன்று அங்கு கிடையாது. மற்றது என்பது அவித்தையால் ஏற்பட்டு வித்தையினால் அது இரண்டாவது வஸ்துவல்ல என்று அவித்தை நீங்கி சுவாத்ம தரிசனம் பெறுகிறான். இரண்டாவது சந்திரன் இருக்கிறான் என்பது தவறு எனப்படுவது ஏனெனில் அது கண்விழிப்படல் ரோகம் இல்லாத கண்களை உடைய புருஷனால் கிரஹிக்கப்படுவதில்லை. என்பதே ஆகும் அன்றோ!
(पूर्वपक्षी) नैवं न गृह्यत इति चेत् ,
(ச.பா) (பூர்வ) அது போன்று இங்கும் இரண்டாவது கிரஹிக்கப்படுவது இல்லை என்றில்லையே எனக் கூறுவாயேயானால் அது ஸரியல்ல.
(सिध्दान्ती) न ; सुषुप्तसमाहितयोरग्रहणात् ।
(ச.பா) (ஸித்தாந்தீ) அவ்வாறு கூறாதே, ஏன் எனில் இங்கு தூங்குபவனும், மேலும் ஸமாதியில் இருப்பவனும் அதை த்வைதத்தை கிரஹிப்பது இல்லையே.
सुषुप्तेऽग्रहणमन्यासक्तवदिति चेत् ?
(ச.பா) சுஷுப்தியில் துவைதத்தை கிரஹிக்காதது (ஒரு விஷயத்தை ஆழமாக கிரஹிக்கும் பொழுது) வேறு விஷயத்தை கிரஹிக்காதது போல் ஆகும்.
(सिध्दान्ती) न ; सर्वाग्रहणात् । जाग्रत्स्वप्नयोरन्यस्य ग्रहणात्सत्त्वमेवेति चेत् , न ; अविद्याकृतत्वात् जाग्रत्स्वप्नयोः ; यदन्यग्रहणं जाग्रत्स्वप्नयोः, तदविद्याकृतम् , विद्याभावे अभावात् ।
(ச.பா) (ஸித்தாந்தீ) அது அவ்வாறு அல்ல. அங்கு ஒன்றையும் கிரஹிப்பது இல்லை. ஜாக்ரத், ஸ்வப்னம் இவைகளில் இரண்டாவதான மற்றொன்றை கிரஹிப்பதால் அதற்கு ஸத்துவம் ஏற்படுகிறது, என்று கூறுவாயேயானால் அதுவும் ஸரியல்ல, ஜாக்கிர, ஸவப்பனங்களில் மற்றொன்றைகிரஹித்தல் அவித்தையினால் ஏற்பட்டதாகும், அதே ஜாக்கிரத் ஸ்வப்னங்களில் அவித்தை நீங்குமேயானால் அந்த இரண்டாவதை கிரஹித்தல் என்பது அங்கும் ஏற்படாது.
(पूर्वपक्षी) सुषुप्ते अग्रहणमपि अविद्याकृतमिति चेत् ?
(பூர்வ) சுஷுப்தியில் த்வைதத்தை கிரஹிக்காமல் இருப்பதும் அவித்தையினால் எனில்?
न ; स्वाभाविकत्वात् । द्रव्यस्य हि तत्त्वमविक्रिया, परानपेक्षत्वात् ; विक्रिया न तत्त्वम् , परापेक्षत्वात् । न हि कारकापेक्षं वस्तुनस्तत्त्वम् ; सतो विशेषः कारकापेक्षः, विशेषश्च विक्रिया ; जाग्रत्स्वप्नयोश्च ग्रहणं विशेषः । यद्धि यस्य नान्यापेक्षं स्वरूपम् , तत्तस्य तत्त्वम् ; यदन्यापेक्षम् , न तत्तत्त्वम् ; अन्याभावे अभावात् । तस्मात् स्वाभाविकत्वात् जाग्रत्स्वप्नवत् न सुषुप्ते विशेषः ।
(ச.பா) (சமதானம்) அப்படி அல்ல. இது ஸ்வாபாவிகமானது திரவியத்திற்கு அதன் அதன் தன்மையோடு நிலைபெற்றிருத்தல் என்பதுதான் ஸ்வபாவம். மாறுபாடு என்பது ஒன்றை அபேக்ஷித்து ஏற்படுவதே ஆகும். எனவே விக்கிரியை என்பது மாறுபாடு தத்துவமாகாது. ஏன் எனில் மாறுபாடு மற்றொன்றை அபேக்ஷிக்கின்றது. தன்னை அந்நிலைக்கு மாற்றும் காரகத்தை அபேக்ஷித்தல் என்பது வஸ்து தத்துவமாகாது. ஸத்திற்கு விசேஷம் யாது? எனில் காரகத்தை அபேக்ஷித்து அது விசேஷமான மாறுபாட்டை அடைகிறது. ஜாக்ரத், ஸ்வப்னம் இவைகளை இங்கு கிரஹித்தல் விசேஷமாகும். எது எந்தப் பொருளையும், எந்நிலையிலும் அபேக்ஷிக்காது, ஸ்வரூபத்துடன் விளங்குகிறதோ அது அதனுடைய தத்துவமாகும். மற்றொன்றை அபேக்ஷித்தல் தத்துவமாகாது. ஏன் எனில் அது மற்றொன்றை அபேக்ஷிக்கும்படியான மற்றொன்று இல்லை. எனவே தத்துவத்திற்கு ஸ்வாபாவிகமாய் இருப்பதால் ஜாக்கிரத் ஸ்வப்னங்களை அதன் விசேஷம் என்றும், சுஷுப்தி அத்தகைய விசேஷம் அற்றது என்றும் கூறப்படுகிறது.
येषां पुनरीश्वरो अन्य आत्मनः, कार्यं च अन्यत् , तेषां भयानिवृत्तिः, भयस्य अन्यनिमित्तत्वात् ; सतश्च अन्यस्य आत्महानानुपपत्तिः । न च असत आत्मलाभः । सापेक्षस्य अन्यस्य भयहेतुत्वमिति चेत् , न ; तस्यापि तुल्यत्वात् । यद्धर्माद्यनुसहायीभूतं नित्यमनित्यं वा निमित्तमपेक्ष्य अन्यद्भयकारणं स्यात् , तस्यापि तथाभूतस्य आत्महानाभावात् भयानिवृत्तिः ; आत्महाने वा सदसतोरितरेतरापत्तौ सर्वत्र अनाश्वास एव ।
(ச.பா) எவர்கள் சிலருக்கு ஈஸ்வரனானவன் வேறுபட்டவன். அவனைக் காட்டிலும் ஆத்மா வேறுபட்டது. ஈஸ்வரன் ஆத்மாவின் காரியம் என்று கூறுகின்றனரோ. அவர்களுக்கு பயத்தின் நிவிர்த்தி உண்டாகாது. ஏன் எனில் பயம் வேறு காரணத்தினால் (பொருளால்) உண்டாவது ஆகும். வேறு பதார்த்தத்தை ஸத் என்று கூறினாலும் அதன் ஸ்வரூபத்திற்கு ஹானி வராது. அசத் என்றாலும் அதற்கு ஸ்வரூப சித்தியும் உண்டாகாது. மேலும் வேறானது (அதாவது ஈஸ்வரன்) (நம்முடைய தர்மாதர்மங்களை) அபேக்ஷித்தே பயகாரணமாகிறான். என்று கூறுதலும் பொருந்தாது. ஏன் எனில் அந்த ஈஸ்வரனும் அபேக்ஷயைுடன் கூடினவனே. எங்கும் (ஈஸ்வரன் முதலிய) வேறு பதார்த்தங்கள் நித்திய, அநித்திய அதர்மாதி ரூபத்திற்குச் ஸஹாயமான நிமித்தத்தை அபேக்ஷிப்பதால் பயகாரணமாகிறது. யதார்த்தமாய் இருப்பதால் அந்த ஸ்வரூபத்திற்கு அபாவம் ஏற்படாததால் அதன் பயத்தின் நிவர்த்தியும் கிடைக்காது. மேலும் அந்த ஸ்வரூபத்திற்கு அபாவம் என்று எடுத்துக்கொண்டால் சத், அசத் இவை ஒன்று மற்றொன்றாக மாறும் தன்மை ஏற்படுவதால் அதில் விசுவாசம் கொள்ளமுடியாது. (அத்தகைய ஆத்மாவை அதன் ஸ்வரூபத்தை அறியாது அதை விடுவதோடு அன்றி பயநிவிர்த்திக்கான மற்றொன்றைத் தேடுவதும் இந்நிலையில் எது சத்? எது அசத்? என்று நன்கு புரிந்து கொள்ளாமலும்போவதால் எதிலும் நம்பிக்கை அற்றுப்போகும்.
एकत्वपक्षे पुनः सनिमित्तस्य संसारस्य अविद्याकल्पितत्वाददोषः । तैमिरिकदृष्टस्य हि द्वितीयचन्द्रस्य न आत्मलाभो नाशो वा अस्ति । विद्याविद्ययोः तद्धर्मत्वमिति चेत् , न ; प्रत्यक्षत्वात् । विवेकाविवेकौ रूपादिवत् प्रत्यक्षावुपलभ्येते अन्तःकरणस्थौ । न हि रूपस्य प्रत्यक्षस्य सतो द्रष्ट्टधर्मत्वम् । अविद्या च स्वानुभवेन रूप्यते - मूढोऽहम् अविविक्तं मम विज्ञानम् इति ।
(ச.பா) ஏகத்துவ பக்ஷத்திலோவெனில் நிமித்தத்துடன் கூடிய ஸம்சாரத்திற்கு அவித்தையினால் கல்பிக்கப்பட்டமையினால் தோஷம் ஏற்படாது. கண்௴ல் திரை படர்ந்தவனால் பார்க்கப்பட்ட இரண்டாவது சந்திரனுக்கு தனது ஸ)கதையோ, நாசமோ ஏற்படுவது இல்லை. வித்யை, அவித்யை இவைகளே ஆத்மாவின் குணம் தர்மமே என்றால் அது சரியல்ல. அது பிரத்யக்ஷமானது. விவேகம் அவிவேகம் என்பது ரூபம்போல் பிரத்யக்ஷமாக மனதில் அனுபவிக்கப்படுகிறது. ரூபம் என்பது பிரத்யக்ஷமாய் இருக்கும் போது அதற்கு த்ரஷ்ட்ரு தர்மத்வம் (பார்பவனிடம் உள்ள தன்மை) என்பதும் ஸரியல்ல. அவித்தை என்பது தன்னுடைய அனுபவத்தால் நிரூபணம் செய்யப்படுகிறது. நான் மூடன், அவிவேகி, என்னுடைய ஞானம் தெளிவுபடவில்லை (என்று அனுபவம் உண்டாகின்றது) அல்லவா?
तथा विद्याविवेको अनुभूयते । उपदिशन्ति च अन्येभ्य आत्मनो विद्यां बुधाः । तथा च अन्ये अवधारयन्ति । तस्मात् नामरूपपक्षस्यैव विद्याविद्ये नामरूपे च ; न आत्मधर्मौ, ‘नामरूपयोर्निर्वहिता ते यदन्तरा तद्ब्रह्म’ (छा. उ. ८ । १४ । १) इति श्रुत्यन्तरात् । ते च पुनर्नामरूपे सवितर्यहोरात्रे इव कल्पिते ; न परमार्थतो विद्यमाने ।
(ச.பா) அவ்வாறே விவேகத்தால் வித்தையையும் அனுபவிக்கப்படுகிறது. பிரஹ்மஞானிகள் மற்றவர்களின் பொருட்டு தன்னுடய வித்தையை அதாவது ஆத்ம வித்தையை உபதேசிக்கவும் செல்கின்றனர். அவ்வாறு உபதேசம் பெற்றவர்களே தன்னைப் புரிந்து கொள்கின்றனர். ஆகையால் நாமரூப பக்ஷத்தில் கூறப்பட்டது போல் வித்தை, அவித்தை இவைகள் நாமரூபங்களே. இவை ஆத்மாவின் தர்மங்கள் அல்ல. ‘नामरूपयोर्निर्वहिता ते यदन्तरा तद्ब्रह्म’ (छा. उ. ८ । १४ । १) (நாமரூபயோர்நிர்வஹிதா தே யதந்தரா தத் பிரஹ்ம = எது நாம ரூபங்களாலான உலகை நிர்வஹிக்கச்செய்கிறதோ. அவைகள் எதனுள் இருக்கிறதோ அது பிரஹ்மம்) என்று வேறு சுருதி வாக்கியங்களும் கூறுகின்றன. ஸூரியனிடத்தில் பகல், இரவு இவைகள் கல்பிக்கப்படுவது போல் இந்த நாமரூபங்கள் கல்பிக்கப்பட்டவைகளே அன்றி உண்மையில் இருப்பவைகள் அல்ல.
अभेदे (पूर्वपक्षी) ‘एतमानन्दमयमात्मानमुपसङ्क्रामति’ (तै. उ. २ । ८ । ५) इति कर्मकर्तृत्वानुपपत्तिरिति चेत् ?
(ச.பா) (பூர்வ) அபேதபக்ஷத்தில் ‘एतमानन्दमयमात्मानमुपसङ्क्रामति’ (तै. उ. २ । ८ । ५) (ஏதமானந்த மயமாத்மானமுபசங்க்ராமதி = இந்த ஆனந்தமய ஆத்மாவில் ஒடுங்கும்படி செய்து ஒடுங்குகிறான்) என்று கூறுவதால் கர்மத்துவமும், கர்த்திருத்துவமும் ஒருவனுக்கு ஏற்படுவதால் அநுபபத்தி ஏற்படுமே எனில் அது அவ்வாறு அல்ல.
(सिध्दान्ती) न ; विज्ञानमात्रत्वात् सङ्क्रमणस्य । न जलूकादिवत् सङ्क्रमणमिहोपदिश्यते ; किं तर्हि, विज्ञानमात्रं सङ्क्रमणश्रुतेरर्थः ।
(ச.பா) (ஸித்தாந்தீ) அவ்வாறு அல்ல. இங்கு சங்க்ரமணம் என்னும் ஒடுக்கம் விக்ஞானரூபமாகவே ஆகும். இந்த சங்கிரமணம் அட்டையானது ஒன்றை விட்டுவிட்டு ஒன்றில் தாவுவது போல் இங்கு உபதேசம் செய்யப்படவில்லை. அவ்வாறு எனில் எவ்வாறு? சங்கிரமண சுருதியின் தாத்பரியம் விக்ஞான மாத்திரமேயாகும் என்பது பொருள்.
(पूर्वपक्षी) ननु मुख्यमेव सङ्क्रमणं श्रूयते - उपसङ्क्रामतीति इति चेत् ?
(ச.பா) (பூர்வ) உபஸங்க்ராமதி `उपसङ्क्रामतीति’ என்றசொல் முக்கிய ஸங்கிரமணத்தை அதாவது சமீபத்திற்கு செல்வது என்றஅபிப்ராயம் அல்லவா ஏற்படும்?
(सिध्दान्ती) न ; अन्नमये अदर्शनात् । न हि अन्नमयमुपसङ्क्रामतः बाह्यादस्माल्लोकात् जलूकावत् सङ्क्रमणं दृश्यते, अन्यथा वा ।
(ச.பா) (சித்தாந்தீ) இது சரியல்ல. ஏன்எனில் இது அன்னமயத்தில் பொருந்தாதே! அன்னமயத்தில் ஒடுக்கம் (உபசங்கிரமணம்) அடைபவன் வெளிஉலகத்திலிருந்து அந்த அட்டையைப் போல் ஒடுங்குவதைப் (ஒன்றைவிட்டு ஒன்றை தாவுவதைப்) பார்க்கிறோமா? அல்லது வேறு விதமாகவோ? இல்லையே!
(पूर्वपक्षी) मनोमयस्य बहिर्निर्गतस्य विज्ञानमयस्य वा पुनः प्रत्यावृत्त्या आत्मसङ्क्रमणमिति चेत् ?
(ச.பா) (பூர்வ) மனோமயனுகோ வெளியில் சென்றதான விக்ஞானமயனுகோ தன் நிலைக்குத் திரும்புதல் என்பதாலேயே ஆத்ம சங்கிரமணம் ஏற்படலாமே.
(सिध्दान्ती) न ; स्वात्मनि क्रियाविरोधात् । अन्योऽन्नमयमन्यमुपसङ्क्रामतीति प्रकृत्य मनोमयो विज्ञानमयो वा स्वात्मानमेवोपसङ्क्रामतीति विरोधः स्यात् । तथा न आनन्दमयस्य आत्मसङ्क्रमणमुपपद्यते । तस्मात् न प्राप्तिः सङ्क्रमणम् ; नापि अन्नमयादीनामन्यतमकर्तृकं पारिशेष्यादन्नमयाद्यानन्दमयान्तात्मव्यतिरिक्तकर्तृकं ज्ञानमात्रं च सङ्क्रमणमुपपद्यते ।
(ச.பா) (ஸித்தாந்தீ) தன்னுடைய ஆத்மாவில் எந்த ஒரு கிரியையும் (செயலும்) ஏற்படுவது என்பது விரோதமானதால், இதைத் தவிர மற்றொருவன் இம்மாதிரி ஸங்கிரமணம் செய்கிறான் அன்னமயத்தை என்று கூறிவிட்டு மனோமயமானவனோ, ஆனந்தமயமானவனோ தன்னுடைய ஆத்மாவில் ஸங்கிரமணம் செய்கிறான் என்று விளக்குவது விரோதமாகும். அவ்வாறே ஆனந்தமயனுக்கும், ஆத்மஸங்கிரமணம் செய்வித்தல் பொருந்தாது. ஆகையால் ஸங்கிரமணம் (ஒடுங்குதல்) என்பது அடைதல் என்ற அர்ததத்தில் அல்ல. அன்னமய முதலானவைகளுக்கு கர்த்திருத்துவம் கிடையாது. இவ்வாறு பகுத்துப்பார்த்தால் மிச்சப்படுவது அன்னமயம் தொடங்கி ஆனந்தமயம் முடிய உள்ளயாவும் ஆத்மாவிற்கு வேறுபட்டு கர்த்திருத்துவத்தைப் பெறுவதில்லை. இங்கு ஞானம் மாத்திரமே ஸங்கிரமணம் என்று கூறப்படுகிறது. அதற்கே ஸங்கிரமணம் என்ற சொல் பொருந்தும்.
ज्ञानमात्रत्वे च आनन्दमयान्तःस्थस्यैव सर्वान्तरस्य आकाशाद्यन्नमयान्तं कार्यं सृष्ट्वा अनुप्रविष्टस्य हृदयगुहाभिसम्बन्धादन्नमयादिषु अनात्मसु आत्मविभ्रमः सङ्क्रमणात्मकविवेकविज्ञानोत्पत्त्या विनश्यति । तदेतस्मिन्नविद्याविभ्रमनाशे सङ्क्रमणशब्द उपचर्यते ; न हि अन्यथा सर्वगतस्य आत्मनः सङ्क्रमणमुपपद्यते ।
(ச.பா) ஞானமாத்திரத்தாலேயே ஆனந்தமயத்தில் இருக்கும் நிலையில் அது ஆகாசம் தொடங்கி அன்னமயம் முடிய எல்லா காரியங்களையும் படைத்து ஸர்வந்தர்யாமியாய் அதனுள் நுழைந்து ஹ்ருதய குகையில் அதுவே ஆத்மா என்று நன்கு தெரிந்து புரிந்துகொண்ட நிலையில் அன்னமய முதலானவைகளில் ஏற்பட்ட ஆத்மபிரமத்தை (भ्रम) இந்த ஸங்கிரமணத்தால் விக்ஞானமடைந்து அந்த விக்ஞானத்தின் பலத்தால் அவிவேகம் நாசம் அடைகிறது. இவ்வாறு பிரமத்தை (भ्रम) நீக்குவதற்காக இங்கு ஸங்கிரமணசப்தம் உபசாரமாகக் கூறப்பட்டதே அன்றி ஸர்வாந்தர்யாமியாய் எங்கும் நிறைந்திருக்கும் ஆத்மாவிற்கு ஸங்கிரமணம் கூறப்படவும் இல்லை. அது பொருந்தவும் பொருந்தாது.
वस्त्वन्तराभावाच्च । न च स्वात्मन एव सङ्क्रमणम् । न हि जलूका आत्मानमेव सङ्क्रामति । तस्मात् सत्यं ज्ञानमनन्तं ब्रह्मेति यथोक्तलक्षणात्मप्रतिपत्त्यर्थमेव बहुभवनसर्गप्रवेशरसलाभाभयसङ्क्रमणादि परिकल्प्यते ब्रह्मणि सर्वव्यवहारविषये ; न तु परमार्थतो निर्विकल्पे ब्रह्मणि कश्चिदपि विकल्प उपपद्यते ।
(ச.பா) மேலும் இங்கு வேறு வஸ்து இல்லாததால் ஸங்கிரமணம் நிகழாது. தன்னுடைய ஆத்மாவிலேயே ஸங்கிரமணம் என்று கூறுவதும் பொருந்தாது. அட்டையானது போல் ஒன்றைவிட்டு மற்றொன்றைப் பற்றிக் கொள்கிறதே அன்றி தன்மையே தான் ஸங்கிரமணம் செய்வதில்லை. எனவே ஸத்தியம் ஞானம் ஆனந்தம் பிரஹ்மம் என்று கூறப்பட்ட லக்ஷணத்தோடு கூடின பிரஹ்மத்தை அனுபவபூர்வமாய் உணரும் பொருட்டே, தன்னைத் தானே பலவாறாகப் படைத்துக்கொண்டு அதில் நுழைந்ததாயும், ரஸத்தை அடைந்ததாயும் அபயமாகிற ஆத்மஸ்வரூபத்தில் ஸங்கிரமணம் அடைந்தது போன்றவை, ஸர்வவியவஹாரங்களுக்கும் உட்படாததாக உள்ள பிரஹ்மத்தில் கல்பிக்கப்பட்டவையே அன்றி உண்மையில் எவ்விகல்பமும் அற்ற பிரஹ்மத்தில் எப்பொழுதும் விகல்பம் உண்டாவது இல்லை.
तमेतं निर्विकल्पमात्मानम् एवं क्रमेणोपसङ्क्रम्य विदित्वा न बिभेति कुतश्चन अभयं प्रतिष्ठां विन्दत इत्येतस्मिन्नर्थेऽपि एषः श्लोकः भवति । सर्वस्यैव अस्य प्रकरणस्य आनन्दवल्ल्यर्थस्य सङ्क्षेपतः प्रकाशनाय एष मन्त्रो भवति ॥
(ச.பா) அத்தகைய இந்த நிர்விகல்பமான ஆத்மாவை சங்கிரணப் பிரகாரம் நன்கு அறிந்து அவ்வாறு அறிந்தமையால் அந்த ஸாதகன் எங்கிருந்தும், எதனிடமிருந்தும் எப்பொழுதும் பயமற்றநிலையை அடைந்து அதிலேயே நிலைபெற்றவனாகின்றான் என்ற இப்பொருளை விளக்குவதற்காகவே இந்த மந்திர ரூபமான சுலோகம் அமைந்துள்ளது. இந்த ஆனந்தவல்லி பிரகரணத்தின் சுருக்கமான அர்த்தத்தை வெளிப்படுத்த இந்த மந்திரம் இருக்கிறது.
इति अष्टमानुवाकभाष्यम् ॥
यतो वाचो निवर्तन्ते । अप्राप्य मनसा सह । आनन्दं ब्रह्मणो विद्वान् । न बिभेति कुतश्चनेति । एतं ह वाव न तपति । किमहं साधु ना करवम् । किमहं पापमकरवमिति । स य एवं विद्वानेते आत्मानं स्पृणुते । उभे ह्येवैष एते आत्मानं स्पृणुते । य एवं वेद । इत्युपनिषत् ॥ १ ॥
यतः यस्मात् निर्विकल्पात् यथोक्तलक्षणात् अद्वयानन्दात् आत्मनः, वाचः अभिधानानि द्रव्यादिसविकल्पवस्तुविषयाणि वस्तुसामान्यान्निर्विकल्पे अद्वयेऽपि ब्रह्मणि प्रयोक्तृभिः प्रकाशनाय प्रयुज्यमानानि, अप्राप्य अप्रकाश्यैव निवर्तन्ते स्वसामर्थ्याद्धीयन्ते ।
(ச.பா) எந்த இந்த நிர்விகல்பமாயும், முற்கூறப்பட்ட லக்ஷணங்களோடு கூடியதாயும், தனக்கு இரண்டாவதற்றதாயும், ஆனந்தாத்ம ஸ்வரூபமாயும், விளங்குவதாயும் உள்ள பிரஹ்மத்திலிருந்து ஆத்மரூபத்தில், திரவியம் முதலான ஸவிகல்ப வஸ்து விஷயங்களை விளக்கும் அபிதானம் எனப்படும் சொற்கள், எல்லா வஸ்துவைப்போல் இருப்பதால் நிர்விகல்பமாயும், தனக்கு இரண்டாவது அற்றதாயும் உள்ள பிரஹ்மத்தை விளக்குவதின் பொருட்டு பிரயோகம் செய்யப்பட்டு அதைபிரகாசப்படுத்த முடியாமல் திரும்புகின்றன. அதாவது தன்னுடைய சாமர்த்தியத்தை இழந்து திரும்புகின்றன.
मन इति प्रत्ययो विज्ञानम् । तच्च, यत्राभिधानं प्रवृत्तमतीन्द्रियेऽप्यर्थे, तदर्थे च प्रवर्तते प्रकाशनाय । यत्र च विज्ञानम् , तत्र वाचः प्रवृत्तिः । तस्मात् सहैव वाङ्मनसयोः अभिधानप्रत्ययोः प्रवृत्तिः सर्वत्र ।
(ச.பா) மனம் என்பது அறிவு அல்லது விக்ஞானமாகும். அதுவும் எங்கு அந்த விக்ஞானம் செயல்படுகிறதோ, அங்கு வாக்கு பிரவிர்த்திக்கும். ஆகவே வாக்கு, மனசு, என்பவைகளின் செயலான அபிதானம், பிரத்தியயம் என்ற இரண்டும் சேர்ந்தே எங்கும் செயல்படுகின்றன.
तस्मात् ब्रह्मप्रकाशनाय सर्वथा प्रयोक्तृभिः प्रयुज्यमाना अपि वाचः यस्मादप्रत्ययविषयादनभिधेयाददृश्यादिविशेषणात् सहैव मनसा विज्ञानेन सर्वप्रकाशनसमर्थेन निवर्तन्ते, तं ब्रह्मण आनन्दं श्रोत्रियस्य अवृजिनस्य अकामहतस्य सर्वैषणाविनिर्मुक्तस्य आत्मभूतं विषयविषयिसम्बन्धविनिर्मुक्तं स्वाभाविकं नित्यमविभक्तं परमानन्दं ब्रह्मणो विद्वान् यथोक्तेन विधिना न बिभेति कुतश्चन, निमित्ताभावात् ।
(ச.பா) ஆகையால் பிரஹ்மத்தைப் பிரகாசப்டுத்துவற்காக அபிதானமான சொற்களைப் பிரயோகம் செய்யும் ஸாமர்த்தியசாலிகளின் சொற்கள் கூட நிச்சயமாக அதை அடைவது இல்லை. எதனால் அது அப்பிரத்திய விஷயமாயும், அதிருச்யமாயும், முற்கூறப்பட்ட ஸகல விசேஷணங்களோடும் கூடியதான அந்த ஸ்வரூபத்தை விளக்கமுடியாது. எல்லாவற்றையும் பிரகாசப்படுத்தும் ஸாமர்த்தியத்தோடு கூடின விக்ஞானத்துடன் அதை விளக்கமுடியாமல் திரும்புகின்றன. அந்த பிரஹ்மத்தின் ஆனந்தமானது ச்ரோத்திரியனாயும், பாபமற்றவனாயும், அதன் காரணமாக காமத்தால் நாசமாக்கப்படாதவனாயும், எல்லா ஈஷணைகளிலிருந்தும் விடுபட்டவனாயுள்ள, (அந்த ச்ரோத்தியனுக்கு) ஆத்மபூதமாயும், விஷயவிஷயீ ஸம்பந்தங்களிலிருந்து விடுபட்டதாயும், ஸ்வஸ்வரூபத்தோடு விளங்குவதாயும், எப்பொழுதும் வேறுபடாததாயும் உள்ள பரமானந்தமான பிரஹ்மத்தை முற்கூறப்பட்ட முறையோடு அறிந்தவன் எங்கும், எப்பொழுதும் எதனிடமிருந்தும் பயப்படுவது இல்லை. ஏனெனில் அந்த பயத்திற்கான நிமித்தம் இவனுக்கு இல்லை.
न हि तस्माद्विदुषः अन्यद्वस्त्वन्तरमस्ति भिन्नं यतो बिभेति । अविद्यया यदा उदरमन्तरं कुरुते, अथ तस्य भयं भवतीति हि युक्तम् । विदुषश्च अविद्याकार्यस्य तैमिरिकदृष्टद्वितीयचन्द्रवत् नाशाद्भयनिमित्तस्य न बिभेति कुतश्चनेति युज्यते ।
(ச.பா) இந்த வித்வானுக்கு தன்னைத்தவிர பின்னமான (வேறான) வஸ்து இல்லையே. எதனாலே இவன் பயப்படுவான். அவித்தையினால் சிறிதளவு பேதத்தைச் செய்து கொண்டாலும் அவனுக்கு அதனால் பயம் உண்டாகிறது என்று அல்லவா கூறப்பட்டது. ப்ரஹ்மத்தை அறிந்த வித்வானுக்கு அவித்யாகாரியமான திரையால் மறைக்கப்பட்டு அதனால் பார்க்கப்பட்ட இரண்டாவது சந்திரன் திரை நீக்கப்பட்டவுடன் எவ்வாறு இரண்டாவது சந்திரன் மறைந்து விடுகிறதோ அதுபோல் பயத்திற்குக் காரணமான அவித்தையால் உண்டான இரண்டாவது என்ற பயகாரணம் வித்தையினால் நிவிருத்தி அடையப்பட்ட பொழுது அவன் எதனிடமிருந்தும் பயத்தை அடைவது இல்லை என்று ச்ருதி கூறியது மிகப் பொருத்தமானதாகும்
मनोमये च उदाहृतः मन्त्रः, मनसो ब्रह्मविज्ञानसाधनत्वात् । तत्र ब्रह्मत्वमध्यारोप्य तत्स्तुत्यर्थं न बिभेति कदाचनेति भयमात्रं प्रतिषिद्धम् ; इह अद्वैतविषये न बिभेति कुतश्चनेति भयनिमित्तमेव प्रतिषिध्यते ।
(ச.பா) மனோமயத்தைப்ப்ற்றி கூறுமிடத்தில் இம்மந்திரம் ஏன் உதாகரிக்கப்பட்டது எனில் மனமானது பிரஹ்மவிக்ஞானத்திற்குச் ஸாதனமாய் இருப்பதால்தான் அங்கு பிரஹ்மத்துவத்தை அத்தியாரோபம் செய்து அதை துதிப்பதற்காக அவன் எப்பொழுதும் பயப்படுவதில்லை என்று மட்டும் கூறப்பட்டது. இங்கு பயத்தின் ஹேதுவே பிரதிஷேதம் செய்யப்படுகிறது மேலே அத்வைத விஷயத்தில் எங்கிருந்தும், எதனிடமிருந்தும் எப்பொழுதும் பயப்படுவதில்லை என்று பயநிமித்தமும் ப்ரதிஷேதம் (நீக்கம்) செய்யப்படுகிறது.
नन्वस्ति भयनिमित्तं साध्वकरणं पापक्रिया च ?
(ச.பா) பயநிமித்தமான நல்லதைச் செய்யாததும், பாபச்செயலுமே இருக்கலாமே என்ற சங்கைக்கு-
नैवम् । कथमिति, उच्यते - एतं यथोक्तमेवंविदम् , ह वाव इत्यवधारणार्थौ, न तपति नोद्वेजयति न सन्तापयति । कथं पुनः साध्वकरणं पापक्रिया च न तपतीति, उच्यते - किं कस्मात् साधु शोभनं कर्म नाकरवं न कृतवानस्मि इति पश्चात्सन्तापो भवति आसन्ने मरणकाले ; तथा किं कस्मात् पापं प्रतिषिद्धं कर्म अकरवं कृतवानस्मि इति च नरकपतनादिदुःखभयात् तापो भवति । ते एते साध्वकरणपापक्रिये एवमेनं न तपतः, यथा अविद्वांसं तपतः ।
(ச.பா) அவ்வாறு அல்ல, பாபச் செயலும், நல்லதைச் செய்யாததுமே பயகாரணம் அல்ல என்பது எவ்வாறு என்று கூறப்படுகிறது. இதை உள்ளப்படி உணர்ந்தவனை அவை அணுகுவதே இல்லை. சுருதியில் ह,व (ஹ,வ) என்ற சொற்கள் அதை நிச்சயப்படுத்துவதற்காக வந்தது. அவனை அவை தாபப்படும்படியாக செய்வது இல்லை. மேலும் நல்லதை செய்யாததும், பாபச் செயலும் அவனை எவ்வாறு தாபப்படுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. எதனால் நல்ல கர்மாக்களை நாம் செய்யவில்லையோ அதனால் தாபப்படுகிறேன் என்று அந்த ஸாதகன் (ஞானி) மரணகாலத்தில் பச்சாதாபப்படுவதும் இல்லை. அவ்வாறே நான் நி:த்த கர்மங்களான அப்பாபச்செயல்களை ஏன் செய்தேன். அதனால் நரகத்தில் விழுந்து விடுவேன் என்று பயப்படுவதும் இல்லை. இந்த நற்செயல்கள், பாபச்செயல்கள் அவிவேகியைப் பாதிப்பது போல் விவேகியைப் பாதிப்பது இல்லை.
कस्मात्पुनर्विद्वांसं न तपत इति, उच्यते - स य एवंविद्वान् एते साध्वसाधुनी तापहेतू इति आत्मानं स्पृणुते प्रीणाति बलयति वा, परमात्मभावेन उभे पश्यतीत्यर्थः । उभे पुण्यपापे हि यस्मात् एवम् एष विद्वान् एते आत्मानात्मरूपेणैव पुण्यपापे स्वेन विशेषरूपेण शून्ये कृत्वा आत्मानं स्पृणुत एव । कः ? य एवं वेद यथोक्तमद्वैतमानन्दं ब्रह्म वेद, तस्य आत्मभावेन दृष्टे पुण्यपापे निर्वीर्ये अतापके जन्मान्तरारम्भके न भवतः ।
(ச.பா) ஏன் வித்வான் எந்த தாபத்தையும் அடைவது இல்லை என்பதை விளக்குகிறார். எந்த ஒரு பிரஹ்மஞானியும் இந்த தாபங்களுக்கு காரணமான புண்ய பாபங்களை தன்னுடைய ஆத்மாவை ஸந்தோஷப்படுத்துவதும் இல்லை அவனை பலப்படுத்துவதும் இல்லை. அவர் பரமாத்ம பாவத்துடனேயே அவ்விரண்டையும் பார்க்கிறார் என்பது பொருள். எதனால் இந்த புண்ய பாபங்களை தன்னுடைய ஆத்ம ஸ்வரூபமாகவே பார்க்கிறாரோ அதனால் அவர்களுடைய புண்ய பாபங்கள் இரண்டும் சூன்யமாகி விடுகின்றன. அதனால் அவை இவனைப் பற்றுவது இல்லை. எந்த ஒரு வித்வானானவர் முற்கூறப்பட்ட அத்வைதமாயும், ஆனந்தமாயும், பிரஹ்மமாயுமுள்ள ஆத்மஸ்வரூபத்தை அறிகின்றாரோ, அவரால் ஆத்மபாவத்தால் பார்க்கப்பட்ட புண்ய, பாபங்கள் வீரியமற்றவைகளாகி பாபம் அற்றதாகி, மற்றொரு ஜன்மாவைக்கொடுபதாகவும் ஆவது இல்லை.
इतीयम् एवं यथोक्ता अस्यां वल्ल्यां ब्रह्मविद्योपनिषत् , सर्वाभ्यः विद्याभ्यः परमरहस्यं दर्शितमित्यर्थः - परं श्रेयः अस्यां निषण्णमिति ॥
(ச.பா) இத்தகைய கூறப்பட்டுள்ளப் பொருளை உடைய இந்தவல்லி பிரஹ்மவித்யோபநிஷத்து (பிரஹ்ம வித்தையைக் கூறும் உபநிஷத்) எல்லா வித்தைகளைக் காட்டிலும் ரஹஸ்யமானது விளக்கப்பட்டது என்பது பொருள். மோக்ஷ லக்ஷ்மீ இதில் நிலை பெற்றுள்ளதால் இது உபநிஷத் என்று கூறப்படுகிறது.
इति नवमानुवाकभाष्यम् ॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ तैत्तिरीयोपनिषद्भाष्ये ब्रह्मानन्दवल्लीभाष्यं सम्पूर्णम् ॥
பிரஹ்மானந்தவல்லீ 9வது அனுவாகம்
பிரஹ்மானந்தவல்லீ முடிவுற்றது
சுபம்.
ॐ सह नाववतु । सह नौ भुनक्तु । सह वीर्यं करवावहै । तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै ॥ ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
सत्यं ज्ञानमनन्तं ब्रह्म आकाशादिकार्यमन्नमयान्तं सृष्ट्वा तदेवानुप्रविष्टं विशेषवदिवोपलभ्यमानं यस्मात् , तस्मात् सर्वकार्यविलक्षणम् अदृश्यादिधर्मकमेव आनन्दं तदेवाहमिति विजानीयात् , अनुप्रवेशस्य तदर्थत्वात् ; तस्यैवं विजानतः शुभाशुभे कर्मणी जन्मान्तरारम्भके न भवतः इत्येवमानन्दवल्ल्यां विवक्षितोऽर्थः । परिसमाप्ता च ब्रह्मविद्या । अतः परं ब्रह्मविद्यासाधनं तपो वक्तव्यम् ; अन्नादिविषयाणि च उपासनान्यनुक्तानीत्यतः इदमारभ्यते -
(அ-கை) ஸத்தியம், ஞானம், ஆனந்தம் என்ற லக்ஷணங்களுடன் கூடிய பிரஹ்மமானது ஆகாசம் தொடங்கி அன்னமயம் வரை உள்ள எல்லா காரியங்களையும் படைத்து அவ்வாறு படைத்தவைகளில் தானே நுழைந்து விசேஷத்துடன் கூடியது போல் எவனால் அறியப்படுகிறதோ அதனாலேயே ஸர்வகாரியங்களுக்கும், விலக்ஷணமாயும், அதிருச்யம் முதலான தர்மங்களை உடையதாயும் அந்த ஆனந்தம் விளங்குகிறது. அதில் நுழைந்த ஆத்மா அதுவே நான் என்று தன்னை எந்த லேபமும் (பற்றும்) இல்லாததாக விளங்குகிறது. அவ்வாறு விளங்கும் ஆத்மாவே நான் என்று அனுபவபூர்வமாய் அறியும் பிரஹ்மநிஷ்டருக்கு அடுத்த ஜன்மாவை ஆரம்பிப்பதற்கான சுபாசுபகர்மாக்கள் அவரைப் பற்றுவது இல்லை என்ற பொருளே ஆனந்தவல்லியில் சொல்ல விரும்பி கூறப்பட்டதாகும். இத்துடன் பிரஹ்ம வித்தை ஸம்பூர்ணமடைகிறது. அதற்குமேல் பிரஹ்மவித்தைக்குச் ஸாதனமான தவத்தைக் (தீவிர ஆலோசனை) கூறவேண்டும் மேலும் அன்னம் முதலான விஷயங்கள் உபாஸிக்கத்தகுந்தவை முன்பு கூறப்படாத தவற்றை இந்த பிருகுவல்லீ ஆரம்பிக்கிறது.
भृगुर्वै वारुणिः । वरुणं पितरमुपससार । अधीहि भगवो ब्रह्मेति । तस्मा एतत्प्रोवाच । अन्नं प्राणं चक्षुः श्रोत्रं मनो वाचमिति । तं होवाच । यतो वा इमानि भूतानि जायन्ते । येन जातानि जीवन्ति । यत्प्रयन्त्यभिसंविशन्ति । तद्विजिज्ञासस्व । तद्ब्रह्मेति । स तपोऽतप्यत । स तपस्तप्त्वा ॥ १ ॥
आख्यायिका विद्यास्तुतये, प्रियाय पुत्राय पित्रोक्तेति - भृगुर्वै वारुणिः । वै - शब्दः प्रसिद्धानुस्मारकः, भृगुरित्येवं नामा प्रसिद्धो अनुस्मार्यते, वारुणिः वरुणस्यापत्यं वारुणिः वरुणं पितरं ब्रह्म विजिज्ञासुः उपससार उपगतवान् - अधीहि भगवो ब्रह्म इत्यनेन मन्त्रेण । अधीहि अध्यापय कथय । स च पिता विधिवदुपसन्नाय तस्मै पुत्राय एतत् वचनं प्रोवाच - अन्नं प्राणं चक्षुः श्रोत्रम् मनो वाचम् इति ।
(ச.பா) இந்தக் கதை பிரஹ்மவித்தையை துதிப்பதின் பொருட்டுக் கூறுகிறார். அதாவது பிரியமான மகனின் பொருட்டு தந்தை சொன்னார் என்று भृगुर्वै वारुणिः என்று தொடங்குகிறார். இங்கு வந்துள்ள वै (வை) என்ற சொல் ஒரு பிரசித்தமானவரை ஞாபகத்திற்குக் கொண்டு வருவதற்காக கூறப்பட்டது ஆகும். भृगु என்ற பெயர் பெற்ற ஒரு பிரஸித்த புருஷன் நினைவுக்குக் கொண்டுவரப்படுகிறார். வருணனுடைய மகன் வாரு௴ எனப்படுபவன் தந்தையான வருணனை பிரஹ்மத்தை அறிவதன் பொருட்டு அடைந்தான். अधीहि भगवो ब्रह्मन् என்ற இந்த மந்திரத்தால் அவன் முறைப்படி தந்தையை அணுகினான் என்பது பொருள். இவ்வாறு முறைப்படி அணுகிய அந்த மகனின் பொருட்டு தந்தை இந்த வார்த்தையைக் கூறினார். அன்னம், பிராணன், கண், காது, மனது, வாக்கு (இவை அதை உணர்வதற்கு ஸாதனமானவை) என்று கூறினார்.
अन्नं शरीरं तदभ्यन्तरं च प्राणम् अत्तारम् अनन्तरमुपलब्धिसाधनानि चक्षुः श्रोत्रं मनो वाचम् इत्येतानि ब्रह्मोपलब्धौ द्वाराण्युक्तवान् । उक्त्वा च द्वारभूतान्येतान्यन्नादीनि तं भृगुं होवाच ब्रह्मणो लक्षणम् । किं तत् ?
(ச.பா) அன்னம் என்பது சரீரமாகும். அதன் உள்ளே இருக்கும் பிராணன் அன்னத்தைச் சாப்பிடுவது ஆகும். அந்த பிரஹ்மத்தை அடைவதற்கான சாதனங்கள் கண், காது, மனம், வாக்கு என்பவை. இவை பிரஹ்மத்தை அடைவதற்கான வாயில்கள் (உபாயங்கள்) ஆகும் என்று கூறினார். இவ்வாறு கூறிவிட்டு அதாவது இந்த வாயில்களான அன்னம் முதலானவைகளைக் கூறியபின் அந்த பிருகுவிற்கு பிரஹ்மத்தின் லக்ஷணத்தைக் கூறினார் அது என்ன?
यतः यस्मात् वा इमानि ब्रह्मादीनि स्तम्बपर्यन्तानि भूतानि जायन्ते, येन जातानि जीवन्ति प्राणान्धारयन्ति वर्धन्ते, विनाशकाले च यत्प्रयन्ति यद्ब्रह्म प्रतिगच्छन्ति, अभिसंविशन्ति तादात्म्यमेव प्रतिपद्यन्ते, उत्पत्तिस्थितिलयकालेषु यदात्मतां न जहति भूतानि, तदेतद्ब्रह्मणो लक्षणम् , तद्ब्रह्म विजिज्ञासस्व विशेषेण ज्ञातुमिच्छस्व ; यदेवंलक्षणं ब्रह्म तदन्नादिद्वारेण प्रतिपद्यस्वेत्यर्थः । श्रुत्यन्तरं च - ‘प्राणस्य प्राणमुत चक्षुषश्चक्षुरुत श्रोत्रस्य श्रोत्रमन्नस्यान्नं मनसो ये मनो विदुस्ते निचिक्युर्ब्रह्म पुराणमग्र्यम्’ (बृ. उ. ४ । ४ । १८) इति ब्रह्मोपलब्धौ द्वाराण्येतानीति दर्शयति ।
(ச.பா) எதனிடமிருந்து இந்த பிரஹ்மா 9சதுர்முகன்) தொடங்கி சிறு புழுபரியந்தம் உள்ள எல்லா பூதங்களும் உண்டாகின்றனவோ, எதனால் இந்த உண்டானயாவும் பிராணனங்களைத் தரித்து வளர்கின்றனவோ, இவ்வாறு உண்டாகி வளர்ந்தயாவும், நாசம் அடையும் காலத்தில் எந்த பிரஹ்மத்தை திரும்பி அடைகின்றனவோ, அவ்வாறு அடைந்த நிலையில் அதன் தாதாத்மிய பாவத்தை அடைகின்றனவோ இவ்வாறு உற்பத்தி, ஸ்திதி, லயம் இந்த காலங்களில் எந்த ஆத்ம பாவத்தை இந்த பூதங்கள் விடுவது இல்லையோ அதுவே பிரஹ்மத்தின் லக்ஷணமாகும். அந்த பிரஹ்மத்தை விசேஷமாய் அறிவதற்கு முயற்சிப்பாயாக. இந்த லக்ஷணங்களுடன் கூடிய பிரஹ்மத்தை அன்னம் முதலான வழிகளின் வாயிலாக அடைவாயாக என்பது பொருள். பிருஹதாரண்ய சுருதியும் ‘प्राणस्य प्राणमुत चक्षुषश्चक्षुरुत श्रोत्रस्य श्रोत्रमन्नस्यान्नं मनसो ये मनो विदुस्ते निचिक्युर्ब्रह्म पुराणमग्र्यम्’ (बृ. उ. ४ । ४ । १८) பிராணனுக்குப் பிராணனாயும், கண்ணுக்கு கண்ணாயும், காதுக்குக் காதாயும், அன்னத்திற்கு அன்னமாயும், மனதிற்கு மனதாயும், எது இருக்கிறது என்று தீர்மானிக்கிறார்களோ அதுவே மிகப் பழமையானதும் எல்லாவற்றிற்கும் முதலாயும் உள்ள பிரஹ்மமாகும் என்று பிரஹ்மத்தை அடைவதற்கு இவைகளே வாயில்கள் என்று கூறுகிறது.
स भृगुः ब्रह्मोपलब्धिद्वाराणि ब्रह्मलक्षणं च श्रुत्वा पितुः, तपो ब्रह्मोपलब्धिसाधनत्वेन अतप्यत तप्तवान् । कुतः पुनरनुपदिष्टस्यैव तपसः साधनत्वप्रतिपत्तिर्भृगोः ? सावशेषोक्तेः । अन्नादिब्रह्मणः प्रतिपत्तौ द्वारं लक्षणं च यतो वा इमानि इत्याद्युक्तवान् । सावशेषं हि तत् , साक्षाद्ब्रह्मणोऽनिर्देशात् ।
(ச.பா) இந்த வாரு௴ எனப்படும் பிருகுவானவன் பிரஹ்மத்தை அடைவதற்கான வழிகளையும் பிரஹ்ம லக்ஷணத்தையும் தந்தையிடமிருந்து உபதேச ரூபமாகக் கேட்டு பிரஹ்மத்தை அடைவதற்கு ஸாதனமான தவத்தைச் செய்தான். உபதேசம் செய்யாத தவத்தை எவ்வாறு ஸாதனமாய் அடைந்தான்? ஏன்எனில் ஸாவசேஷமாக (சிறிது மீதம்வைத்து) அன்னம் முதலானவைகள் பிரஹ்மத்தை அடைவதற்கு ஸாதனங்களா மட்டும கூறினார். எனவேதான் எதனிடம் இருந்து இவையாவும் உண்டாயினவோ என்று லக்ஷ்யை கூறினார். நேரடியாக பரப்ரஹ்மத்தைக் கூறவில்லை.
अन्यथा हि स्वरूपेणैव ब्रह्म निर्देष्टव्यं जिज्ञासवे पुत्राय इदमित्थंरूपं ब्रह्म इति ; न चैवं निरदिशत् ; किं तर्हि, सावशेषमेवोक्तवान् । अतोऽवगम्यते नूनं साधनान्तरमप्यपेक्षते पिता ब्रह्मविज्ञानं प्रतीति । तपोविशेषप्रतिपत्तिस्तु सर्वसाधकतमत्वात् ; सर्वेषां हि नियतसाध्यविषयाणां साधनानां तप एव साधकतमं साधनमिति हि प्रसिद्धं लोके । तस्मात् पित्रा अनुपदिष्टमपि ब्रह्मविज्ञानसाधनत्वेन तपः प्रतिपेदे भृगुः । तच्च तपो बाह्यान्तःकरणसमाधानम् , तद्द्वारकत्वाद्ब्रह्मप्रतिपत्तेः, ‘मनसश्चेन्द्रियाणां च ह्यैकाग्र्यं परमं तपः । तज्ज्यायः सर्वधर्मेभ्यः स धर्मः पर उच्यते’ (मो. ध. २४२। ४) इति स्मृतेः । स च तपस्तप्त्वा ॥
(ச.பா) இல்லாவிட்டால் பிரஹ்மத்தை அறிய விரும்பும் மகனின் பொருட்டு இத்தகையது பிரஹ்மம் என்று அதனுடைய ஸ்வரூபத்தயே குறிப்பிட்டிருக்கவேண்டும். அவை அது அவ்வாறு கூறாமல் மீதம்வைத்தே ஸாவசேஷமாக கூறினார். இதிலிருந் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. பிரஹ்மஞானத்தை மகனுக்கு உபதேசிப்பதற்கு வேறு ஒரு ஸாதனத்தை அபேக்ஷித்தார் என்று தபோ விசேஷத்தை என்பது பிரஹ்மத்தை அடைவதற்கு அதுவே உயர்ந்த ஸாதனமாவதால். உலகில் நிச்சயமாக ஸாதிக்கக்கூடிய எல்லா ஸாத்தியங்களிலும் தவமே மிக உயர்ந்த ஸாதனம் ஆகும் என்று பிரஸித்தமாக உள்ளது. எனவேதான் தந்தை உபதேசிக்காத போது கூட பிருகுவானவர் பிரஹ்மவிக்ஞானத்திற்குச் ஸாதனமான தவத்தைக் கொண்டார். அந்ததவம் என்பது பாஹ்யகரணங்கள், அந்தக்கரணம் இவைகளுடைய ஸமாதானம் அடக்குதல் ஆகும். (சமாதானம் என்பது கரணங்களை ஒருநிலைப்படுத்தி ஒருமுகப்படுத்துவதாகும்) அதன் வழியாகவே பிரஹ்மானுபவம் ஏற்படும். ‘मनसश्चेन्द्रियाणां च ह्यैकाग्र्यं परमं तपः । तज्ज्यायः सर्वधर्मेभ्यः स धर्मः पर उच्यते’ (मो. ध. २४२। ४) மனதையும், இந்திரியங்களையும், ஒருமுகப்படுத்துதல் என்பதே முதல் தவமாகும். அதுவே உயர்ந்த தவமும்கூட. அது எல்லா தர்மங்களைக் காட்டிலும் மேலானது. எனவே அது பரமதர்மம், அல்லது உத்தமதர்மம் என்று ஸ்மிருதி கூறுகிறது. அந்த தவத்தை அவன் செய்து.
इति प्रथमानुवाकभाष्यम् ॥
अन्नं ब्रह्मेति व्यजानात् । अन्नाद्ध्येव खल्विमानि भूतानि जायन्ते । अन्नेन जातानि जीवन्ति । अन्नं प्रयन्त्यभिसंविशन्तीति । तद्विज्ञाय । पुनरेव वरुणं पितरमुपससार । अधीहि भगवो ब्रह्मेति । तं होवाच । तपसा ब्रह्म विजिज्ञासस्व । तपो ब्रह्मेति । स तपोऽतप्यत । स तपस्तप्त्वा ॥ १ ॥
अन्नं ब्रह्मेति व्यजानात् विज्ञातवान् । तद्धि यथोक्तलक्षणोपेतम् । कथम् ? अन्नाद्ध्येव खलु इमानि भूतानि जायन्ते । अन्नेन जातानि जीवन्ति । अन्नं प्रयन्त्यभिसंविशन्तीति । तस्माद्युक्तमन्नस्य ब्रह्मत्वमित्यभिप्रायः । स एवं तपस्तप्त्वा, अन्नं ब्रह्मेति विज्ञाय लक्षणेन उपपत्त्या च पुनरेव संशयमापन्नः वरुणं पितरमुपससार - अधीहि भगवो ब्रह्मेति ।
(ச.பா) அவன் அன்னத்தை பிரஹ்மமாக அறிந்தான். அதாவது முற்கூறிய லக்ஷணத்துடன் கூடியதாக அன்னத்தை அறிந்தவன் எவ்வாறு எனில்? அன்னத்தினின்றே இந்த எல்லா பூதங்களும் உண்டாகின்றன. அவ்வாறு உண்டானயாவும் அன்னத்தினால் அன்றோ ஜீவிக்கின்றன. இவ்வாறு அன்னத்தினால் ஜீவித்தயாவும் முடிவில் அந்த அன்னத்திலேயே நுழைந்து ஒடுங்குகின்றன. அதனால் அன்னத்திற்கு பிரஹ்மத்துவம் பொருத்தமே என்பது அபிப்பிராயம். அவன் இவ்வாறு தவம் இயற்றி அன்னத்தைப் பிரஹ்மமாக அறிந்து அந்த லக்ஷணத்தை ஒருவாறு பொருத்திப் பார்த்து மறுபடியும் ஸந்தேஹம் அடைந்தவனாக ஆகி தந்தையான வருணனை முறைப்படி அடைந்து பகவானே எனக்கு பிரஹ்மத்தை உபதேசிப்பீராக என வேண்டினான்
कः पुनः संशयहेतुरस्येति, उच्यते - अन्नस्योत्पत्तिदर्शनात् । तपसः पुनः पुनरुपदेशः साधनातिशयत्वावधारणार्थः । यावद्ब्रह्मणो लक्षणं निरतिशयं न भवति, यावच्च जिज्ञासा न निवर्तते, तावत्तप एव ते साधनम् ; तपसैव ब्रह्म विजिज्ञासस्वेत्यर्थः । ऋज्वन्यत् ॥
(ச.பா) அவனுக்கு இவ்வாறு மறுபடியும் ஸந்தேஹத்திற்குக் காரணம் யாது என்று கூறப்படுகிறது. அன்னத்தினுடைய உற்பத்தியை அவன் கண்டமையால் (அது பிரஹ்மம் அல்ல என்று ஸம்சயம் கொண்டான்) தவத்தை மறுபடியும், மறுபடியும் உபதேசிப்பது எதற்கு எனில் அதுவே பிரஹ்மத்தை உணர்வதற்கு உயர்ந்த ஸாதனம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக. எது வரை நிரதிசயமான பிரஹ்ம ஸாக்ஷாத்காரம் ஏற்படவில்லையோ அதுவரையிலும் அதை அறிய வேண்டும் என்ற இச்சை நீங்குவது இல்லை. அதுவரை தவமே ஸாதனமாகும். தவத்தினாலேயே பிரஹ்மத்தை அறிவாயாக என்பது பொருள். மற்றவையாவும் விளக்கமின்றி புரியும் அர்த்தத்தைக் கொண்டதே.
इति द्वितीयानुवाकभाष्यम् ॥
प्राणो ब्रह्मेति व्यजानात् । प्राणाद्ध्येव खल्विमानि भूतानि जायन्ते । प्राणेन जातानि जीवन्ति । प्राणं प्रयन्त्यभिसंविशन्तीति । तद्विज्ञाय । पुनरेव वरुणं पितरमुपससार । अधीही भगवो ब्रह्मेति । तं होवाच । तपसा ब्रह्म विजिज्ञासस्व । तपो ब्रह्मेति । स तपोऽतप्यत । स तपस्तप्त्वा ॥ १ ॥
इति तृतीयोऽनुवाकः ॥
मनो ब्रह्मेति व्यजानात् । मनसो ह्येव खल्विमानि भूतानि जायन्ते । मनसा जातानि जीवन्ति । मनः प्रयन्त्यभिसंविशन्तीति । तद्विज्ञाय । पुनरेव वरुणं पितरमुससार । अधीहि भगवो ब्रह्मेति । तं होवाच । तपसा ब्रह्म विजिज्ञासस्व । तपो ब्रह्मेति । स तपोऽतप्यत । स तपस्तप्त्वा ॥ १ ॥
इति चतुर्थोऽनुवाकः ॥
विज्ञानं ब्रह्मेति व्यजानात् । विज्ञानाद्ध्येव खल्विमानि भूतानि जायन्ते । विज्ञानेन जातानि जीवन्ति । विज्ञानं प्रयन्त्यभिसंविशन्तीति । तद्विज्ञाय । पुनरेव वरुणं पितरमुपससार । अधीहि भगवो ब्रह्मेति । तं होवाच । तपसा ब्रह्म विजिज्ञासस्व । तपो ब्रह्मेति । स तपोऽतप्यत । स तपस्तप्त्वा ॥ १ ॥
इति पञ्चमोऽनुवाकः ॥
आनन्दो ब्रह्मेति व्यजानात् । आनन्दाद्ध्येव खल्विमानि भूतानि जायन्ते । आनन्देन जातानि जीवन्ति । आनन्दं प्रयन्त्यभिसंविशन्तीति । सैषा भार्गवी वारुणी विद्या । परमे व्योमन् प्रतिष्ठिता । स य एवं वेद प्रतितिष्ठति । अन्नवानन्नादो भवति । महान् भवति । प्रजया पशुभिर्ब्रह्मवर्चसेन । महान् कीर्त्या ॥ १ ॥
एवं तपसा विशुद्धात्मा प्राणादिषु साकल्येन ब्रह्मलक्षणमपश्यन् शनैः शनैः अन्तरनुप्रविश्य अन्तरतममानन्दं ब्रह्म विज्ञातवान् तपसैव साधनेन भृगुः ; तस्मात् ब्रह्म विजिज्ञासुना बाह्यान्तःकरणसमाधानलक्षणं परमं तपः साधनमनुष्ठेयमिति प्रकरणार्थः ।
(ச.பா) இவ்வாறு பிருகுவானவர் தபசையே ஸாதனமாகக் கொண்டு அந்த தவத்தால் பரிசுத்த ஆத்மாவாகி பிராணன் முதலானவைகளில் முழுமையான பிரஹ்ம லக்ஷணத்தைக்காணாது மெல்ல, மெல்ல உள்ளே நுழைந்து எல்லாவற்றிற்கும் உள்ளில் இருக்கும் ஆனந்தத்தை பிரஹ்மமாக அறிந்தார். அதனால் பிரஹ்மத்தை அறிய விரும்புபவர்கள் பாஹ்ய கரணங்களையும், அந்தக்கரணங்களையும் ஒருமுகப்படுத்தும் சமாதான லக்ஷணமான உயர்ந்த தவமான தவத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பதே இந்த பிரகரணத்தின் பொருள் ஆகும்.
अधुना आख्यायिकां च उपसंहृत्य श्रुतिः स्वेन वचनेन आख्यायिकानिर्वर्त्यमर्थमाचष्टे । सैषा भार्गवी भृगुणा विदिता वरुणेन प्रोक्ता वारुणी विद्या परमे व्योमन् हृदयाकाशगुहायां परमे आनन्दे अद्वैते प्रतिष्ठिता परिसमाप्ता अन्नमयादात्मनोऽधिप्रवृत्ता । य एवमन्योऽपि तपसैव साधनेन अनेनैव क्रमेण अनुप्रविश्य आनन्दं ब्रह्म वेद, स एवं विद्याप्रतिष्ठानात् प्रतितिष्ठति आनन्दे परमे ब्रह्मणि, ब्रह्मैव भवतीत्यर्थः ।
(ச.பா) இப்பொழுது சுருதியானது தான் கூறிவந்த கதையிலிருந்து திரும்பி தன்னுடைய வசனத்தினாலேயே இந்தக் கதையினால் அறிந்த பொருளைக் கூறுகிறது, இந்த பார்க்கவி எனப்படும் வித்யை வருணனால் கூறப்பட்டு பிருகுவினால் அறியப்பட்டதாகும். இந்த வித்யையானது பரமாகாசத்திலும், ஹிருதய ஆகாச குகையிலும் பரமானந்தமான அத்வைதத்திலும் நிலை பெற்றதாக உள்ளது, அன்னமயம் முதலான ஆத்மாவைப் பற்றிய விஷயம் முடிவுற்றது. எந்த மற்றொரு ஸாதகனும் தவத்தையே ஸாதனமாகக் கொண்டு இந்தப்பிரகாரமாகவே உள்ளே உள்ளே சென்று. இந்த ஆனந்தமான பிரஹ்மத்தை அறிகிறானோ அந்த ஸாதகனும் ஆனந்தமய பரப்பிரஹ்மத்தில் நிலை பெற்றவனாக ஆகிறான். அவன் பிரஹ்மமாகவே ஆகிறான் என்பது பொருள்.
दृष्टं च फलं तस्योच्यते - अन्नवान् प्रभूतमन्नमयस्य विद्यत इत्यन्नवान् ; सत्तामात्रेण तु सर्वो हि अन्नवानिति विद्याया विशेषो न स्यात् । एवमन्नमत्तीत्यन्नादः, दीप्ताग्निर्भवतीत्यर्थः । महान्भवति । केन महत्त्वमित्यत आह - प्रजया पुत्रादिना पशुभिः गवाश्वादिभिः ब्रह्मवर्चसेन शमदमज्ञानादिनिमित्तेन तेजसा । महान्भवति कीर्त्या ख्यात्या शुभाचारनिमित्तया ॥
(ச.பா) இவனுக்கு திருஷ்ட்ட பயனையும், கூறுகிறார். இவன் மிகுந்த அன்னத்தை உடையவனாவான். ஸத்தா மாத்திரத்தாலேயே எல்லோரும் அன்னத்தை உடையவராகும் பொழுது இந்த வித்யை அடைந்ததால் எந்த விசேஷமும் இல்லையே எனில், அவ்வாறு அல்ல இவன் அன்னத்தை உண்பவனாயும், மிகுந்தப் பிரகாசத்தோடு கூடிய அக்னி போல் ஆவான் என்பது பொருள். மஹானாகவும் ஆவான். இவருக்கு எதனால் மஹத்துவம் என்பதையும் கூறுகிறார், மகன் முதலியவர்களாலும், பசு, குதிரை முதலானவைகளாலும், சமதமாதிகளால் உண்டான தேஜஸாலும். பிரஹ்ம வர்ச்சஸ்சினாலும் மிக உயர்ந்தவனாக ஆகிறான், சுபாசாரத்தோடு கூடிய க்யாதியாலும், புகழாலும் (மிகுந்த புகழாலும்) மஹான் ஆகிறான்.
इति षष्ठानुवाकभाष्यम् ॥
अन्नं न निन्द्यात् । तद्व्रतम् । प्राणो वा अन्नम् । शरीरमन्नादम् । प्राणे शरीरं प्रतिष्ठितम् । शरीरे प्राणः प्रतिष्ठितः । तदेतदन्नमन्ने प्रतिष्ठितम् । स य एतदन्नमन्ने प्रतिष्ठितं वेद प्रतितिष्ठति । अन्नवानन्नादो भवति । महान् भवति । प्रजया पशुभिर्ब्रह्मवर्चसेन । महान् कीर्त्या ॥ १ ॥
किं च, अन्नेन द्वारभूतेन ब्रह्म विज्ञातं यस्मात् , तस्मात् गुरुमिव अन्नं न निन्द्यात् ; तत् अस्य एवं ब्रह्मविदो व्रतम् उपदिश्यते । व्रतोपदेशो अन्नस्तुतये, स्तुतिभाक्त्वं च अन्नस्य ब्रह्मोपलब्ध्युपायत्वात् ।
(ச.பா) மேலும் அன்னத்தை வாயிலாகக் கொண்டு பிரஹ்மம் அறியப்பட்டதன் காரணமாக குருவைப்போல, அன்னத்தை நிந்தனை செய்தல் கூடாது என்று பிரஹ்மவித்துக்களுக்கு விரதமானது உபதேசிக்கப்படுகிறது. இந்த விரதோபதேசம் எதற்கு எனில் அன்னத்தைத் துதிப்பதற்காக. அன்னத்திற்கு துதிக்கப்படும் தன்மை எவ்வாறு ஏற்பட்டது எனில் பிரஹ்மத்தை உணர்வதற்கு அது ஒரு உபாயமாய் இருப்பதால்.
प्राणो वा अन्नम् , शरीरान्तर्भावात्प्राणस्य । यत् यस्यान्तः प्रतिष्ठितं भवति, तत्तस्यान्नं भवतीति । शरीरे च प्राणः प्रतिष्ठितः, तस्मात् प्राणोऽन्नं शरीरमन्नादम् । तथा शरीरमप्यन्नं प्राणोऽन्नादः । कस्मात् प्राणे शरीरं प्रतिष्ठितम् ? तन्निमित्तत्वाच्छरीरस्थितेः । तस्मात् तदेतत् उभयं शरीरं प्राणश्च अन्नमन्नादश्च । येनान्योन्यस्मिन्प्रतिष्ठितं तेनान्नम् ; येनान्योन्यस्य प्रतिष्ठा तेनान्नादः । तस्मात् प्राणः शरीरं च उभयमन्नमन्नादं च ।
(ச.பா) பிராணன் அன்னமாகும், ஏன் எனில் அது சரீரத்தின் உள்ளே இருப்பதால். எது எதன் உள்ளில் நிலைபெற்றுள்ளதோ அது அதற்கு அன்னமாகும். சரீரத்தில் பிராணன் நிலைபெற்றுள்ளது. எனவே பிராணன் அன்னம் என்றும், சரீரம் அன்னத்தைச் சாப்பிடுவது ஆகவும் ஆகிறது. ஏன்எனில் பிராணனில் சரீரம் நிலைபெற்று உள்ளது. அதைக்காரணமாகக் கொண்டே சரீரத்தின் ஸ்திதி ஏற்படுகிறது. எனவேதான் இந்த இரண்டும் அதாவது சரீரமும் பிராணனும் அன்னமாயும், அன்னத்தை சாப்பிடுவதாயும் ஆகின்றன. எதனால் ஒன்று மற்றொன்றில் நிலைபெற்றதாக இருக்கிறதோ அதனால் அன்னமாகின்றன. எதனால் மற்றொன்றின் நிலைபெறும் தன்மைக்கு காரணமாகி அதில் நிலைபெறுகிறதோ அதனால் அன்னத்தை உண்பதாகவும் ஆகிறது. அதனால் பிராணன், சரீரம் என்ற இரண்டும் அன்னமாகவும், அன்னத்தை உண்பதாகவும் ஆகின்றன.
स य एवम् एतदन्नमन्ने प्रतिष्ठितं वेद प्रतितिष्ठति अन्नान्नादात्मनैव । किं च, अन्नवानन्नादो भवतीत्यादि पूर्ववत् ॥
(ச.பா) எந்த ஒரு ஸாதகன் இவ்வாறு ஒரு அன்னம் மற்றொரு அன்னத்தில் நிலை பெற்று இருத்தலை அறிகிறானோ அவன் அன்னத்தை உடையவன் அன்னத்தை உண்பவன் என்ற இடங்களில் முன்போல் பொருள் கொள்ளவேண்டும்.
इति सप्तमानुवाकभाष्यम् ॥
अन्नं न परिचक्षीत । तद्व्रतम् । आपो वा अन्नम् । ज्योतिरन्नादम् । अप्सु ज्योतिः प्रतिष्ठितम् । ज्योतिष्यापः प्रतिष्ठिताः । तदेतदन्नमन्ने प्रतिष्ठितम् । स य एतदन्नमन्ने प्रतिष्ठितं वेद प्रतितिष्ठति । अन्नवानन्नादो भवति । महान्भवति । प्रजया पशुभिर्ब्रह्मवर्चसेन । महान्कीर्त्या ॥
अन्नं न परिचक्षीत न परिहरेत् । तद्व्रतं पूर्ववत्स्तुत्यर्थम् । तदेवं शुभाशुभकल्पनया अपरिह्रीयमाणं स्तुतं महीकृतमन्नं स्यात् । एवं यथोक्तमुत्तरेष्वपि आपो वा अन्नम् इत्यादिषु योजयेत् ॥
(ச.பா) அன்னத்தை ஒருபோதும் விலக்கலாகாது. அதை விரதமாகக்கொள்ள வேண்டும் என்பது முன்போல் அன்னத்தைத் துதிப்பதற்காக வந்ததாகும், இவ்வாறு சுபாசுப கல்பனையினால் நம்மால் கிரஹிக்கப்பட்டு, துதிக்கப்பட்ட அன்னம் மிகவும் பெருமைக்குரியது ஆகும். இவ்வாறே மேலே உள்ள தண்ணீர், அன்னம், இவைகளில் பொருத்திக் கொள்ள வேண்டும்.
इति अष्टमानुवाकभाष्यम् ॥
अन्नं बहु कुर्वीत । तद्व्रतम् । पृथिवी वा अन्नम् । आकाशोऽन्नादः । पृथिव्यामाकाशः प्रतिष्ठितः । आकाशे पृथिवी प्रतिष्ठिता । तदेतदन्नमन्ने प्रतिष्ठितम् । स य एतदन्नमन्ने प्रतिष्ठितं वेद प्रतितिष्ठति । अन्नवानन्नादो भवति । महान्भवति । प्रजया पशुभिर्ब्रह्मवर्चसेन । महान्कीर्त्या ॥
अप्सु ज्योतिः इत्यब्ज्योतिषोरन्नान्नादगुणत्वेनोपासकस्य अन्नस्य बहुकरणं व्रतम् ॥
(ச.பா) தண்ணீர், ஜ்யோதிஸ் என்று இவைகளில் அன்னாதகுணங்களை கண்டு உபாஸிப்பதால் அன்னத்தை எல்லோருக்கும் வாரிவழங்குவதற்காக அதிகரித்தல் விரதம் என்று கூறினார்.
इति नवमानुवाकभाष्यम् ॥
न कञ्चन वसतौ प्रत्याचक्षीत । तद्व्रतम् । तस्माद्यया कया च विधया बह्वन्नं प्राप्नुयात् । अराध्यस्मा अन्नमित्याचक्षते । एतद्वै मुखतोऽन्नं राद्धम् । मुखतोऽस्मा अन्नं राध्यते । एतद्वै मध्यतोऽन्नं राद्धम् । मध्यतोऽस्मा अन्नं राध्यते । एतद्वा अन्ततोऽन्नं राद्धम् । अन्ततोऽस्मा अन्नं राध्यते ॥ १ ॥
य एवं वेद । क्षेम इति वाचि । योगक्षेम इति प्राणापानयोः । कर्मेति हस्तयोः । गतिरिति पादयोः । विमुक्तिरिति पायौ । इति मानुषीः समाज्ञाः । अथ दैवीः । तृप्तिरिति वृष्टौ । बलमिति विद्युति ॥ २ ॥
यश इति पशुषु । ज्योतिरिति नक्षत्रेषु । प्रजातिरमृतमानन्द इत्युपस्थे । सर्वमित्याकाशे । तत्प्रतिष्ठेत्युपासीत । प्रतिष्ठावान् भवति । तन्मह इत्युपासीत । महान् भवति । तन्मन इत्युपासीत । मानवान् भवति ॥ ३ ॥
तन्नम इत्युपासीत । नम्यन्तेऽस्मै कामाः । तद्ब्रह्मेत्युपासीत । ब्रह्मवान् भवति । तद्ब्रह्मणः परिमर इत्युपासीत । पर्येणं म्रियन्ते द्विषन्तः सपत्नाः । परि येऽप्रिया भ्रातृव्याः । स यश्चायं पुरुषे । यश्चासावादित्ये । स एकः ॥ ४ ॥
तथा पृथिव्याकाशोपासकस्य वसतौ वसतिनिमित्तं कञ्चन कञ्चिदपि न प्रत्याचक्षीत, वसत्यर्थमागतं न निवारयेदित्यर्थः । वासे च दत्ते अवश्यं हि अशनं दातव्यम् । तस्माद्यया कया च विधया येन केन च प्रकारेण बह्वन्नं प्राप्नुयात् बह्वन्नसङ्ग्रहं कुर्यादित्यर्थः ।
(ச.பா) அவ்வாறே பிருதிவீ, ஆகாசம், இவைகளை உபாஸிப்பவனின் வாசஸ்தானத்திற்கு, வஸிப்பதற்காக வந்த எந்த ஒருவரையும், தடுக்கக்கூடாது என்பது பொருள். வசிப்பதற்கு இடம் கொடுத்த பின் உண்பதற்கும் அவச்யம் உணவு கொடுக்கவேண்டும், எனவே எந்த முறையை அனுசரித்தாவது மிகுந்த அன்னத்தை சேமித்தல் வேண்டும் என்பது பொருள்.
यस्मादन्नवन्तो विद्वांसः अभ्यागताय अन्नार्थिने अराधि संसिद्धम् अस्मै अन्नम् इत्याचक्षते, न नास्तीति प्रत्याख्यानं कुर्वन्ति, तस्माच्च हेतोः बह्वन्नं प्राप्नुयादिति पूर्वेण सम्बन्धः । अपि च अन्नदानस्य माहात्म्यमुच्यते - यथा यत्कालं प्रयच्छत्यन्नम् , तथा तत्कालमेव प्रत्युपनमते । कथमिति तदेतदाह -
(ச.பா) ஏன்எனில் அன்னத்தை உடையவர்களே, தன்னை வந்தடைந்த வித்வான்களை நிராகரிக்காது அவர்களை ஆராதித்து தாங்கள் அடைய வேண்டிய ஸ்வரூபத்தை அடைந்தவர்களாக ஆகின்றனர். அதனாலேயே அதை (பிரஹ்ம விஷயத்திற்கு அனுகூலமாவதால்) அன்னம் என்று கூறப்படுகிறது, இல்லை என்று அவர்கள் அனுப்புவது இல்லை. எனவே எவ்வாறேனும் அன்னத்தை வெகுவாக சேமித்து அடையவேண்டும் என்று முன்வாக்கியத்துடன் பொருத்திக் கொள்ள வேண்டும். மேலும் அன்னதானத்தின் பெருமை கூறப்படுகிறது எவ்வாறு எந்தவேளையில் அன்னத்தை அளிக்கிறாரோ அது அந்தக்காலத்திலேயே இவனைத்திரும்பி அடைந்து பலன் அளிக்கத் தொடங்குகிறது. அது எவ்வாறு என்று மேலே விளக்குகிறார்.
एतद्वै अन्नं मुखतः मुख्ये प्रथमे वयसि मुख्यया वा वृत्त्या पूजापुरःसरमभ्यागतायान्नार्थिने राद्धं संसिद्धं प्रयच्छतीति वाक्यशेषः । तस्य किं फलं स्यादिति, उच्यते - मुखतः पूर्वे वयसि मुख्यया वा वृत्त्या अस्मै अन्नदाय अन्नं राध्यते ; यथादत्तमुपतिष्ठत इत्यर्थः । एवं मध्यतो मध्यमे वयसि मध्यमेन च उपचारेण ; तथा अन्ततः अन्ते वयसि जघन्येन च उपचारेण परिभवेन तथैवास्मै राध्यते संसिध्यत्यन्नम् ॥
(ச.பா) இந்த அன்னத்தை மிகமுக்கியமான நம் ஆயுள்காலத்தின் முதல் பாகத்தில் முக்கியமான விருத்தியுடன் கூட உண்பதற்காக உணவைவேண்டி நம்மை அணுகியவர்களை மரியாதையுடன் கூட நம்மிடம் தயாராக உள்ள உணவை கொடுக்கிறான் என்பது இந்த வாக்கியத்தின் முழுப்பொருளாகும். அவனுக்கு அவ்வாறு அளிப்பவனுக்கு என்ன பலன்கிட்டும் என்பது கூறப்படுகிறது. இளம் வயதில் முக்கியமான விருத்தியோடு எந்த அன்னத்தை அன்னார்த்திகளுக்கு அளித்தோமோ அது அவ்வாறே மறுபடியும் நம்மை வந்து அடைகிறது என்பது பொருள். இவ்வாறே நடுவயதில் நடுத்தரமான உபசாரத்தால் பூஜிக்கிறான். அவ்வாறே முதுமைவயதில் முறைகுறைந்து உபசாரம் குறைந்து மிகவும் கீழ்நிலையில் அன்னத்தை அளிக்கிறான். எவன் இவ்வாறு அன்னத்தை எந்த பாவத்தில் (எண்ணத்துடன்) அளிக்கிறானோ அந்த பாவத்துடனேயே அன்னம் இவனை வந்து அடைகிறது
य एवं वेद य एवमन्नस्य यथोक्तं माहात्म्यं वेद तद्दानस्य च फलम् , तस्य यथोक्तं फलमुपनमते ।
(ச.பா) அன்னத்தினுடைய மாஹாத்மியத்தை எவன் ஒருவன் முற்கூறிவாறு உணர்கிறானோ அந்த தானத்திற்கு ஏற்ற பலத்தை அடைகிறான்.
इदानीं ब्रह्मण उपासनप्रकारः उच्यते - क्षेम इति वाचि । क्षेमो नाम उपात्तपरिरक्षणम् । ब्रह्म वाचि क्षेमरूपेण प्रतिष्ठितमित्युपास्यम् । योगक्षेम इति, योगः अनुपात्तस्योपादानम् । तौ हि योगक्षेमौ प्राणापानयोः बलवतोः सतोर्भवतः यद्यपि, तथापि न प्राणापाननिमित्तावेव ; किं तर्हि, ब्रह्मनिमित्तौ । तस्माद्ब्रह्म योगक्षेमात्मना प्राणापानयोः प्रतिष्ठितमित्युपास्यम् ।
(ச.பா) இப்பொழுது பிரஹ்மத்தை உபாசிக்க வேண்டியகிரமத்தைக் கூறுகிறார். க்ஷமேம் என்று வாக்கில் கொள்ளவேண்டும். க்ஷமேம் என்பது கிடைத்ததை ரக்ஷித்தல் ஆகும். பிரஹ்மம் வாக்கில் க்ஷமேரூபமாய் நிலைபெற்று உள்ளது என்று உபாசிக்க வேண்டும் மேலே யோகக்ஷமேம் என்று கூறப்பட்டுள்ளது. யோகம் என்பது இதுவரை கிடைக்காததை அடைவது ஆகும். இந்த யோகக்ஷமேங்களாகிய இவை பிராண அபானன்களில் இருப்பவையாய் இருப்பினும் கூட அவை பிராணாபானன்களை நிமித்தமாகக் கொண்டவையாக ஆகாது, பின் எதை நிமித்தமாகக் கொண்டவை எனில் அவை பிரஹ்மத்தை நிமித்தமாகக் கொண்டவை. ஆகையால் பிரஹ்மமானது யோகக்ஷமே ஸ்வரூபமாய் பிராண, அபானன்களில் நிலை பெற்று உள்ளன என்று உபாசிக்கத்தக்கது ஆகும்.
एवमुत्तरेष्वन्येषु तेन तेन आत्मना ब्रह्मैवोपास्यम् । कर्मणो ब्रह्मनिर्वर्त्यत्वात् हस्तयोः कर्मात्मना ब्रह्म प्रतिष्ठितमित्युपास्यम् । गतिरिति पादयोः । विमुक्तिरिति पायौ । इत्येता मानुषीः मनुष्येषु भवा मानुष्याः समाज्ञाः, आध्यात्मिक्यः समाज्ञा ज्ञानानि विज्ञानान्युपासनानीत्यर्थः ।
(ச.பா) இவ்வாறு மேலே வரும் இடங்களில் அந்த அந்த ரூபமாய் பிரஹ்மமே உபாசிக்கத்தகுந்தது ஆகும். கர்மா அல்லது செயல் பிரஹ்மத்தாலேயே நடைபெறுவதால் கைகளில் கர்மாத்மஸ்வரூபமாய் பிரஹ்மம் நிலைபெற்றுள்ளது என்று உபாஸிக்கத்தகுந்ததாகும். செல்கை என்பது பாதங்களிலும், வெளியேற்றுதல் என்பது அபானனிலும் உள்ளது. இவைகள் மனுஷ்யர்களிடத்தில் உண்டாகக்கூடிய பாவங்கள் (உபாஸனைகள்) ஆகும். இவ்வாறு ஆத்யாத்மிகமாக உள்ள ஞானங்களை விக்ஞான ஸ்வரூபமாய் உபாஸிக்க வேண்டும்.
अथ अनन्तरं दैवीः दैव्यः देवेषु भवाः समाज्ञा उच्यन्ते । तृप्तिरिति वृष्टौ । वृष्टेरन्नादिद्वारेण तृप्तिहेतुत्वाद्ब्रह्मैव तृप्त्यात्मना वृष्टौ व्यवस्थितमित्युपास्यम् ; तथा अन्येषु तेन तेनात्मना ब्रह्मैवोपास्यम् । तथा बलरूपेण विद्युति । यशोरूपेण पशुषु । ज्योतीरूपेण नक्षत्रेषु । प्रजातिः अमृतम् अमृतत्वप्राप्तिः पुत्रेण ऋणविमोक्षद्वारेण आनन्दः सुखमित्येतत्सर्वमुपस्थनिमित्तं ब्रह्मैव अनेनात्मना उपस्थे प्रतिष्ठितमित्युपास्यम् ।
(ச.பா) பிறகு தேவர்களிடத்தில் உண்டாவதால் தைவீ எனப்படும் பெயரால் கூறப்படுகின்றன. மழையால் திருப்தி என்று கூறப்பட்டுள்ளது. மழையால் அன்னம் முதலியவைகளை அடைகிறோம். எனவே அது திருப்திக்குக் காரணமாய் இருப்பதால் பிரஹ்மமே திருப்தியினால் ஆத்மஸ்வரூபமாய் மழையில் நிலைபெற்று உள்ளது என்று உபாசிக்கத்தக்கது ஆகும். அவ்வாறே மேலே வரும் விஷயங்களில் அந்த அந்த ஆத்மஸ்வரூபமாய் மின்னலில் பிரஹ்மம் உபாசிக்கத்தகுந்தது ஆகும். பசுக்களில் புகழ்ரூபமாயும், நக்ஷத்திரங்களில் ஜோதிஸ் ரூபமாயும், நிலைபெற்று உள்ளது என்று பிரஹ்மத்தை உபாசிக்கவேண்டும். प्रजातिः என்பதால் அந்த இந்திரியம் அம்ருதத்துவத்தை அடைவிப்பதற்குக் காரணமாகிறது அந்த இந்திரியத்திலிருந்து உண்டாகும் புத்திரனால் பித்ருருணம் முதலியவைகளிலிருந்து விடுதலை அடையும் வாயிலாக ஆனந்தமும், சுகமும் உண்டாவதால் அந்த ஜனனேந்திரியக் காரணமாகக் கொண்டதால் அதிலும் பிரஹ்மமே அந்த ஆத்ம ஸ்வரூபமாய் அங்கு நிலைபெற்று உள்ளது என்று பிரஹ்மத்தை உபாசிக்கவேண்டும்.
सर्वं हि आकाशे प्रतिष्ठितम् ; अतो यत्सर्वमाकाशे तद्ब्रह्मैवेत्युपास्यम् ; तच्चाकाशं ब्रह्मैव । तस्मात् तत् सर्वस्य प्रतिष्ठेत्युपासीत । प्रतिष्ठागुणोपासनात् प्रतिष्ठावान् भवति । एवं सर्वेष्वपि । यद्यत्राधिगतं फलम् , तत् ब्रह्मैव ; तदुपासनात्तद्वान्भवतीति द्रष्टव्यम् ; श्रुत्यन्तराच्च - ‘तं यथा यथोपासते तदेव भवति’ इति ।
(ச.பா) யாவும் ஆகாசத்திலேயே நிலை பெற்றுள்ளதால் அந்த ஆகாசத்திலும் பிரஹ்மம் என்றே உபாசிக்க வேண்டும். இவ்வாறு எல்லாவற்றிற்கும் அவகாசம் (இடம்) அளிப்பது பிரஹ்மமேயாகும். அதனால் அதை எல்லாம் நிலைபெற்ற இருப்பிடம் என்று உபாசிக்கவேண்டும். நிலைபெற்றதன்மையை அதாவது அந்த குணத்தை உபாஸிப்பதால் அந்த பிரதிஷ்ட்டையை உடையவனாக ஆகிறான். இவ்வாறு முற்கூறப்பட்ட விஷயங்களிலும் எது, எது எதன் அதீனமாய் பலன் ஏற்படுகிறதோ அதை பிரஹ்மமே என்று உபாஸிப்பதால் அவைகள்யாவையும் பெற்றவனாகிறான் என்பதை கண்டுகொள்ளவேண்டும். இதையேவேறு சுருதிகளும். “तं यथा यथोपासते तदेव भवति அதை எவ்வாறு, எவ்வாறு உபாசிக்கிறானோ அவ்வாறாகவே ஆகிறான் என்று கூறுகின்றன.
तन्मह इत्युपासीत । महः महत्त्वगुणवत् तदुपासीत । महान्भवति । तन्मन इत्युपासीत । मननं मनः । मानवान्भवति मननसमर्थो भवति । तन्नम इत्युपासीत नमनं नमः नमनगुणवत् तदुपासीत । नम्यन्ते प्रह्वीभवन्ति अस्मै उपासित्रे कामाः काम्यन्त इति भोग्या विषया इत्यर्थः ।
(ச.பா) அதை மஹத் என்று உபாஸிப்பாயாக महः.என்பதால் அது மஹத்துவகுணத்தை உடையது என்று உபாஸிப்பாயாக. இவ்வாறு உபாசிப்பவன் (மஹானாக ஆவான்) அதை மனம் என்று உபாஸிப்பாயாக. மனனம் செய்வதுமனம், அவ்வாறு மனனம் செய்தவன் மனனசாமர்த்தியத்தை உடையவனாக ஆவான். (3) அதை नमः.என்று உபாஸிப்பாயாக. नमनंस (நமனம்) என்பது வளைந்து கொடுத்து வணங்கும் தன்மையாகும். அதை அத்தகைய தன்மை உடையதாக உபாசிப்பாயாக, இவ்வாறு உபாசிப்பவனை உலகத்தில் உள்ள விஷயங்கள்யாவும் வணக்கத்துடன் வந்து அடையும். விஷயங்கள் என்பது இவனால் விரும்பப்படும் அனுபவிக்கத்தக்க விஷயங்கள் என்று பொருள்.
तद्ब्रह्मेत्युपासीत । ब्रह्म परिबृढतममित्युपासीत । ब्रह्मवान् तद्गुणो भवति । तद्ब्रह्मणः परिमर इत्युपासीत ब्रह्मणः परिमरः परिम्रियन्तेऽस्मिन्पञ्च देवता विद्युद्वृष्टिश्चन्द्रमा आदित्योऽग्निरित्येताः । अतः वायुः परिमरः, श्रुत्यन्तरप्रसिद्धेः । स एवायं वायुराकाशेनानन्य इत्याकाशो ब्रह्मणः परिमरः ; तस्मादाकाशं वाय्वात्मानं ब्रह्मणः परिमर इत्युपासीत ।
(ச.பா) அதை பிரஹ்மம் என்று உபாசிப்பாயாக. பிரஹ்மம் என்பது மிகப்பெரியதும், தனக்குள் எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டதும் ஆகும். அதை இவ்வாறு உபாஸிப்பாயாக. இவ்வாறு உபாசிப்பவன் பிரஹ்மத்தை உடையவனாக அதாவது முற்கூறப்பட்ட குணத்துடன் கூடியவனாக ஆவான், அதை பிரஹ்மத்தின் சூழ்நிலை என்று உபாஸிப்பாயாக. பிரஹ்மத்தின் சுற்றுச்சூழ்நிலை (परिमरः) என்பது இதை மின்னல், மழை, சந்திரன், சூரியன், அக்னி என்ற ஐந்து தேவதைகளும் சூழ்ந்தவண்னம் இருக்கின்றனர். அதைக்காட்டிலும் பிரஹ்மத்தில் அடங்கியதும் அதை அறிவதற்குக் காரணமாயும் உள்ளது காற்று. இதுவே வேறு சுருதிகளில் பிரசித்தமானது, அந்த இந்த பிரஹ்மம் வாயு, ஆகாசம் இவைகள்போல் மற்றவைகள் இவைகளை தன்னுள் கொண்டது. காற்று ஆகாசத்தைக்காட்டிலும் வேறுபட்டது அன்று என்பதால் ஆகாசம் பிரஹ்மத்தின் சுழல் (परिमरः) ஆகும். அந்த வாயுவாத்மாவான ஆகாசத்தை பிரஹ்மத்தின் சுழல் எனறு உபாஸிப்பாயாக.
एनम् एवविदं प्रतिस्पर्धिनो द्विषन्तः ; अद्विषन्तोऽपि सपत्ना यतो भवन्ति, अतो विशेष्यन्ते द्विषन्तः सपत्ना इति । एनं द्विषन्तः सपत्नाः ते परिम्रियन्ते प्राणान् जहति । किं च, ये च अप्रिया अस्य भ्रातृव्या अद्विषन्तोऽपि ते च परिम्रियन्ते ॥
(ச.பா) இவ்வாறு பிரஹ்மத்தை அறிந்து உபாசிப்பவனை துவே:ப்பவர்கள் கூட நண்பர்களாகி துவேஷம் அற்றவர்களாக ஆவார்கள். மேலும் துவே:ப்பவர்கள் தங்களுடைய பிராணன்களை விடுவார்களே அன்றி இவனுக்கு வேறு எந்த உபாதையும் ஏற்படாது. மேலும் இவனுக்கு பிரியமற்றவர்கள் கூட இவ்வாறு உணர்ந்தவனை மிக நெருகிய உறவினனாக ஆவார்கள், அவர்களும் இவனுள் ஐக்கியம் ஆவார்கள்.
‘प्राणो वा अन्नं शरीरमन्नादम्’ इत्यारभ्य आकाशान्तस्य कार्यस्यैव अन्नान्नादत्वमुक्तम् ।
प्राणो वा अन्नं शरीरमन्नादम् (பிராணன் என்பது அன்னமாகும். அந்த அன்னத்தை உண்பது சரீரம்) தொடங்கி ஆகாசம் முடிவாக உள்ள காரியத்திற்கே அன்னாதத்தன்மைக் கூறப்பட்டது.
(पूर्वपक्षी) उक्तं नाम - किं तेन ?
(ச.பா) (பூர்வ) ஆம் அவ்வாறு சொல்லப்பட்டது அதனால் என்ன?
तेनैतत्सिद्धं भवति - कार्यविषय एव भोज्यभोक्तृत्वकृतः संसारः, न त्वात्मनीति । आत्मनि तु भ्रान्त्या उपचर्यते ।
(ச.பா) (சி) அதனால் கீழே கூறப்போவது ஸித்தம் ஆயிற்று. காரிய விஷயத்திற்கே போஜ்யம், போக்திருத்துவம் என்ற பிரிவு உண்டாகும் ஸம்ஸாரமேயன்றி ஆத்மாவிற்கு இல்லை. (என்பது ஸித்தமாயிற்று) இந்த ஸம்ஸாரமானது ஆத்மாவில் பிராந்தியினால் உபசாரமாகக் கூறப்படுகிறது.
(पूर्वपक्षी) नन्वात्मापि परमात्मनः कार्यम् , ततो युक्तः तस्य संसार इति ;
(ச.பா) (பூர்வ) ஆத்மாவும் கூட பரமாத்மாவின் காரியமே. அதனால் அதற்கு ஸம்சாரம் ஏற்படுவது பொருத்தமே எனில்.
न असंसारिण एव प्रवेशश्रुतेः । ‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ (तै. उ. २ । ६ । १) इत्याकाशादिकारणस्य हि असंसारिण एव परमात्मनः कार्येष्वनुप्रवेशः श्रूयते । तस्मात्कार्यानुप्रविष्टो जीव आत्मा पर एव असंसारी ; सृष्ट्वा अनुप्राविशदिति समानकर्तृत्वोपपत्तेश्च । सर्गप्रवेशक्रिययोश्चैकश्चेत्कर्ता, ततः क्त्वाप्रत्ययो युक्तः ।
(ச.பா) (சி) அவ்வாறு அல்ல, ஸம்சாரம் அற்றவனுக்கே (ப்ரஹ்மத்திற்கே) பிரவேச சுருதி கூறுகிறது. ‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ (तै. उ. २ । ६ । १)அதைப்படைத்து அதிலேயே நுழைந்தான் என்பதால் ஆகாசம் முதலான காரியங்களுக்குக் காரணமாயும். அதனால் காரியத்தில் நுழைந்த ஜீவன் பரமாத்மாவான அஸம்சாரியே. படைத்து, அதில் நுழைந்தான் என்பதே ஸமான கர்த்திருத்துவம் என்ற உபபத்தியை அடைந்ததாகும், அந்தப்படைப்பில் படைத்தல், அதில் நுழைதல் என்ற இரண்டிற்கும் கர்த்தாவான அவன் ஒருவனே. அதனால் त्वा பிரத்தியயம் இங்கு பொருத்தமானதே.
(पूर्वपक्षी) प्रविष्टस्य तु भावान्तरापत्तिरिति चेत् ?
(ச.பா) (பூர்வ) பிரவேசித்தவனுக்கு வேறு தன்மை ஏற்படுகிறது, என்று கூறுவாயேயானால்.?
न ; प्रवेशस्यान्यार्थत्वेन प्रत्याख्यातत्वात् । ‘अनेन जीवेन आत्मना’ (छा. उ. ६ । ३ । २) इति विशेषश्रुतेः धर्मान्तरेणानुप्रवेश इति चेत् , न ; तत्त्वमसीति पुनस्तद् भावोक्तेः । भावान्तरापन्नस्यैव‘तदपोहार्था संपदिति चेत् । न । (सिध्दान्ती) तत् सत्यम् स आत्मा तत् त्वमसि’ (छा. उ. ६ । १६ । ३) इति सामानाधिकरण्यात् ।
(சித்தாந்தி) அவ்வாறு அல்ல பிரவேசத்திற்கு வேறு அர்த்தம் உண்டு என்று கூறி முன்பே நிராகரிக்கப்பட்டுவிட்டது, ‘अनेन जीवेन आत्मना’ (छा. उ. ६ । ३ । २) அந்த ஜீவாத்மவடிவில் என்று விசேஷசுருதியால் அதற்கு வேறு தர்மத்தை மேற்கொண்டு அனுப்பிரவேசம் ஏற்படுகிறது, என்று கூறுவாயேயானால் அதுவும் சரியல்ல तत् त्वमसि என்ற மஹாவாக்கியத்தால் அதற்கு மறுபடியும் ஆத்மத்வமே கூறப்பட்டுள்ளது. வேறு தன்மை அடைந்தவனுக்கே அந்த பாவத்தைப் போக்குவதற்காக இது உபாயனாவாக்கியமாக வந்துள்ளது என்று கூறுவாயேயானால் அதுவும் அல்ல. तत् सत्यम् स आत्मा तत् त्वमसि’ (छा. उ. ६ । १६ । ३) அதுவே ஸத்தியம், அவனே ஆத்மா என்று தத்வமஸி வாக்கியத்தில் ஸாமானாதிகரண்யத்தால் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
(पूर्वपक्षी) दृष्टं जीवस्य संसारित्वमिति चेत् ?
(பூர்வ) ஜீவனுக்கு ஸம்ஸாரித்துவம் காணப்படுகிறதே? எனில்
(सिध्दान्ती) न ; उपलब्धुरनुपलभ्यत्वात् ।
(சித்தாந்தி) அதுவும் அல்ல. அடைபவன் அறிபவனை மற்றதால் அறியப்பட முடியாதன்றோ.
(पूर्वपक्षी) संसारधर्मविशिष्ट आत्मोपलभ्यत इति चेत् ?
(பூர்வ) ஸம்சார தர்மத்துடன் கூடிய (ஆத்மா நம்மால் அனுபவிக்கப்படுகிறாரே) என்று கூறுவாயேயானால்.
(सिध्दान्ती) न। धर्माणां धर्मिणोऽव्यतिरेकात् कर्मत्वानुपपत्तेः । उष्णप्रकाशयोर्दाह्यप्रकाश्यत्वानुपपत्तिवत् त्रासादिदर्शनाद्दुःखित्वाद्यनुमीयत इति चेत् , न ; त्रासादेर्दुःखस्य च उपलभ्यमानत्वात् नोपलब्धृधर्मत्वम् ।
(சித்தாந்தி) அவ்வாறு அல்ல. தர்மங்கள் (தன்மைகள்) அந்த தர்மத்தை உடையதர்மியைக் காட்டிலும் வேறுபடாததால் அதற்கு கர்மத்துவம் என்பது பொருந்தாததாகும். உஷ்ணம், பிரகாசம், இவைகளுக்கு எரித்தல் பிரகாசப்படுத்தும் தன்மை வராதது போல் இங்கு பயம் முதலானவைகள் காணப்படுவதால் ஜீவனுக்கு துக்கித்வம் (கஷ்டப்படும் தன்மை) முதலானவை அனுமானம் செய்யப்படுகின்றன. என்று கூறுவாயேயானால் அவ்வாறு அல்ல. பயம் முதலானவைகளோ துக்கித்துவமோ அனுபவிக்கப்படுவதால், அவைகளுக்கு அடைபவனோடு கூடியிருக்கும் தன்மை வரவே முடியாது, காணப்படுவதிலுள்ள தன்மை காண்பவனின் தன்மையாக எப்படி ஆகமுடியும்.
(पूर्वपक्षी) कापिलकाणादादितर्कशास्त्रविरोध इति चेत् ।
(பூர்வ) கபிலர், கணாதர் முதலானவர் இயற்றிய சாஸ்திரத்திற்கு இதுவிரோதம் அன்றோ. எனில்
(सिध्दान्ती) न ; तेषां मूलाभावे वेदविरोधे च भ्रान्तत्वोपपत्तेः । श्रुत्युपपत्तिभ्यां च सिद्धम् आत्मनोऽसंसारित्वम् , एकत्वाच्च । कथमेकत्वमिति, उच्यते - स यश्चायं पुरुषे यश्चासावादित्ये स एकः इत्येवमादि पूर्ववत्सर्वम् ॥
(சித்தாந்தி) அதுவும் சரியல்ல. அவர்களுடைய மதங்களுக்கு மூலமே இல்லை, மேலும் அவை சுருதிவிரோதமானவை. ஆதலால் அவர்களுக்கு பிராந்தியினால் ஏற்பட்டதே, இந்த அஸம்ஸாரித்வம் சுருதி, யுக்தி இவைகளால் ஸித்திக்கிறது ஆத்மாவிற்கு ஏகத்துவந்தான் என்று ஸித்தாந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த ஏகத்துவம் எவ்வாறு என்று கூறப்படுகிறது அவன் இந்த புருஷனிடத்திலும், அந்த இவனே சூரியனிடத்திலும் காணப்படுகிறான். அவன் ஒருவனே என்பவைகளுக்கு முன்புபோல் பொருள் கொள்ள வேண்டும்.
स य एवंवित् । अस्माल्लोकात्प्रेत्य । एतमन्नमयमात्मानमुपसङ्क्रम्य । एतं प्राणमयमात्मानमुपसङ्क्रम्य । एतं मनोमयमात्मानमुपसङ्क्रम्य । एतं विज्ञानमयमात्मानमुपसङ्क्रम्य । एतमानन्दमयमात्मानमुपसङ्क्रम्य । इमांल्लोकान्कामान्नी कामरूप्यनुसञ्चरन् । एतत्साम गायन्नास्ते । हा३वु हा३वु हा३वु ॥ ५ ॥
अन्नमयादिक्रमेण आनन्दमयमात्मानमुपसङ्क्रम्य एतत्साम गायन्नास्ते ।
(ச.பா) அன்னமயம் தொடங்கி ஆனந்தமயமான ஆத்மாவரை கிரமமாக ஒன்றுக்குள் ஒன்றை அல்க்கிக் கொண்டு இந்த சாமத்தை பாடிக்கொண்டும் இருக்கிறார்.
‘सत्यं ज्ञानम्’ इत्यस्या ऋचः अर्थः व्याख्यातः विस्तरेण तद्विवरणभूतया आनन्दवल्ल्या । ‘सोऽश्नुते सर्वान्कामान्सह ब्रह्मणा विपश्चिता’ (तै. उ. २ । १ । १) इति तस्य फलवचनस्य अर्थविस्तारो नोक्तः । के ते ? किंविषया वा सर्वे कामाः ? कथं वा ब्रह्मणा सह समश्नुते ? - इत्येतद्वक्तव्यमितीदमिदानीमारभ्यते ।
(ச.பா) सत्यं ज्ञानम् என்ற இந்த“ரிக்”கினுடைய அர்த்தமானது அழ்ற்கு விவரணமாக அமைந்த ஆனந்தவல்லியில் விஸ்தாரமாக விளக்கப்பட்டது, அந்த ஸ்வரூபத்தை உணர்ந்த பிரஹ்மவித் பிரஹ்மத்துடன் கூடவே எல்லாகாமனைகளையும், அனுபவிக்கின்றான், என்று ஆனந்தவல்லியில் நன்குவிளக்கப்பட்டது, அந்த பயனைக் குறிக்கும் வசனத்தின் பொருளை விஸ்தாரமாக அங்கு கூறவில்லை. அந்த விஷயங்கள்யாவை எத்தகைய காமனைகளை அனுபவிக்கின்றான் என்பதற்கு எல்லாகாமனைகளையும் என்று கூறப்பட்டுள்ளது. அவைகளை எவ்வாறு பிரஹ்மத்துடன் கூடவே அடைகிறான் என்பதை கூறவேண்டும் என்று இதை இப்பொழுது தொடங்குகிறார்.
तत्र पितापुत्राख्यायिकायां पूर्वविद्याशेषभूतायां तपः ब्रह्मविद्यासाधनमुक्तम् । प्राणादेराकाशान्तस्य च कार्यस्य अन्नान्नादत्वेन विनियोगश्च उक्तः ; ब्रह्मविषयोपासनानि च । ये च सर्वे कामाः प्रतिनियतानेकसाधनसाध्या आकाशादिकार्यभेदविषयाः, एते दर्शिताः । एकत्वे पुनः कामकामित्वानुपपत्तिः, भेदजातस्य सर्वस्य आत्मभूतत्वात् । तत्र कथं युगपद्ब्रह्मस्वरूपेण सर्वान्कामान् एवंवित्समश्नुत इति, उच्यते - सर्वात्मत्वोपपत्तेः ।
(ச.பா) இங்கு முதலில் தந்தை மகனைப்பற்றிய கதையில் வித்தையினுடைய விசேஷத்தைத் தெளிவுபடுத்தி, “தவம்” பிரஹ்மவித்தைக்கு ஸாதனம் என்று கூறப்பட்டது. பிராணன் முதல் ஆகாசம் ஈறாக உள்ள எல்லா காரியத்திற்கும் அன்னம், அன்னாதத்துவ தன்மையால் விநியோகம் கூறப்பட்டது. பிரஹ்ம விஷயமான உபாசனைகளும் கூறப்பட்டன. எந்த எல்லா விருப்பங்களும் ஒரு நியமத்துடன் அநேக ஸாதனங்களால் ஸாதிக்கத்தகுந்தவைகளாயும், ஆகாசம் முதலான காரியபேதத்தை விஷயங்களாக கொண்டவைகளாயும், காண்பிக்கப்பட்டன, ஏகத்துவம் வரும்பொழுது காம, காமித்துவம் என்பது பொருந்தாது எல்லா பேதங்களுக்கும் அதுவே ஆத்ம பூதமாய் உள்ளது. அவ்வாறு இருக்கையில் எவ்வாறு ஒரே ஸமயத்தில் பிரஹ்ம ஸ்வரூபத்தோடு எல்லா காமனைகளையும் இதை அறிந்தவன் அடைகிறான் என்பது இங்கு கூறப்படுகிறது. அவன் ஸர்வாத்ம பாவத்தைப் பெறுவதால் எல்லாகாமனைகளையும் ஒரே ஸமஸ்த்தில் அடைகிறான் என்பது இங்கு விளக்கப்படுகிறது.
कथं सर्वात्मत्वोपपत्तिरिति, आह - पुरुषादित्यस्थात्मैकत्वविज्ञानेनापोह्योत्कर्षापकर्षावन्नमयादीन्आत्मनोऽविद्याकल्पितान् क्रमेण सङ्क्रम्य आनन्दमयान्तान् सत्यं ज्ञानमनन्तं ब्रह्म अदृश्यादिधर्मकं स्वाभाविकमानन्दमजममृतमभयमद्वैतं फलभूतमापन्नः इमँल्लोकान्भूरादीननुसञ्चरन्निति व्यवहितेन सम्बन्धः । कथमनुसञ्चरन् ? कामान्नी कामतोऽन्नमस्येति कामान्नी ; तथा कामतो रूपाण्यस्येति कामरूपी ; अनुसञ्चरन् सर्वात्मना इमान् लोकानात्मत्वेन अनुभवन् । किम् ? एतत्साम गायन्नास्ते ।
(ச.பா) ஸர்வாத்மபாவம் எவ்வாறு பொருந்தும் என்பதை கூறுகிறார். புருஷன், சூரியன் இவைகளில் உள்ள ஆத்மஸ்வரூபத்தில் ஏகத்துவத்தை அறிவதால் அன்னமயம் முதலான எல்லாவற்றிலும் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கி அதாவது அவித்தையால் கல்பிக்கப்பட்ட எல்லா ஏற்றத்தாழ்வுகளையும் நீக்கி கிரமமாக ஆனந்தமயாந்தமாக உள்ள சொரூபத்தில் லயமடையச்செய்து சத்தியமாயும், ஞானஸ்வரூபமாயும், முடிவற்றதாயும் உள்ளதும், அதிருச்யம் முதலான தர்மத்தைக் கொண்டதுமான பிரஹ்மத்தை, இயற்கையாகவே ஆனந்த ஸ்வரூபனாயும், பிறப்பற்றதாயும், மரண தர்மம் அற்றதாயும், தனக்கு இரண்டாவது அற்றதாயும் உள்ள சுவாத்ம ஸ்வரூபத்தை பலமாக அடைந்தவனாகி இந்த பூமி முதலான லோகத்தில் ஸஞ்சரிக்கின்றான், என்பது வியவஹித சம்பந்தத்தால் இணைத்து பொருள்கூறினார். எவ்வாறு ஸஞ்சரிக்கின்றான்? அவன்தன் விருப்பப்பிரகாரம் அன்னம் முதலானவைகளை அடைந்தவனாகியும், அவ்வாறே தன் விருப்பத்திற்கேற்ற ரூபத்தைப் பெற்றவனாகியும், ஸர்வாத்ம பாவத்துடன் இந்தலோகத்தில் எல்லாவற்றையும் அனுபவித்துக்கொண்டு சஞ்சரிக்கின்றான். எவ்வாறு சஞ்சரிக்கின்றான்? இந்த சாமத்தைப்பாடிக்கொண்டு சஞ்சரிக்கின்றான்.
समत्वाद्ब्रह्मैव साम सर्वानन्यरूपं गायन् शब्दयन् आत्मैकत्वं प्रख्यापयन् लोकानुग्रहार्थं तद्विज्ञानफलं च अतीव कृतार्थत्वं गायन् आस्ते तिष्ठति । कथम् ? हा३वु हा३वु हा३वु । अहो इत्येतस्मिन्नर्थेऽत्यन्तविस्मयख्यापनार्थम् ॥
சமமாக இருப்பதால் பிரஹ்மமே சாமம் எனப்படும். இவ்வாறு சர்வாத்ம பாவத்தை பெற்று எதனின்றும் வேறுபடாது உள்ள பிரஹ்மத்தை அதனுடைய ஏகத்துவத்தை சப்தத்தோடு பாடிக்கொண்டு, அவ்வாறு எதற்குப் பாடுவது எனில், லோக அனுக்கிரஹத்தின் பொருட்டுப் பாடிக்கொண்டு அதை அறிவதால் உண்டாகும் பலத்தால் மிகுந்தகிருதார்த்தத்துவத்தை பாடிக்கொண்டு இருக்கின்றான். எவ்வாறு எனில், என்ன ஆச்சரியம் என்று பிரஹ்மஸ்வரூபத்தை விஸ்மயத்தோடு வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றான்.
कः पुनरसौ विस्मय इति, उच्यते -
இவனுக்கு உண்டான ஆச்சர்யமானது யாது எனின் அதைக் கூறுகிறார்.
अहमन्नमहमन्नमहमन्नम् । अहमन्नादो३ऽहमन्नादो३ऽहमन्नादः । अहं श्लोककृदहं श्लोककृदहं श्लोककृत् । अहमस्मि प्रथमजा ऋता३स्य । पूर्वं देवेभ्योऽमृतस्य ना३भायि । यो मा ददाति स इदेव मा३वाः । अहमन्नमन्नमदन्तमा३द्मि । अहं विश्वं भुवनमभ्यभवा३म् । सुवर्न ज्योतीः । य एवं वेद । इत्युपनिषत् ॥ ६ ॥
अद्वैत आत्मा निरञ्जनोऽपि सन् अहमेवान्नमन्नादश्च । किञ्च, अहमेव श्लोककृत् । श्लोको नाम अन्नान्नादयोः सङ्घातः, तस्य कर्ता चेतनावान् । अन्नस्यैव वा परार्थस्य अन्नादार्थस्य सतोऽनेकात्मकस्य पारार्थ्येन हेतुना सङ्घातकृत् । त्रिरुक्तिः विस्मयत्वख्यापनार्था ।
(ச.பா) எவ்வித லேபமும் (ஒட்டுதலும்) இல்லாமல் நிரஞ்ஜனனாய் எஙகும் நிறைந்த தனக்கு இரண்டாவது அற்ற ஆத்மஸ்வரூபமாய் இருந்துகொண்டே நானே அன்னமாயும் அன்னத்தைச் சாப்பிடுபவனாயும் இருக்கின்றேன், மேலும் நானே இந்த ச்லோகத்தை செய்தவன் ஆவேன், ச்லோகம் என்பது அன்ன அன்னாதங்களுடைய சேர்க்கையாகும் இதைச் செய்யும் கர்த்தாவான சேதனத்தை உடையவன், பரமார்த்தமாய் அன்னமாயும், அன்னத்தை சாப்பிடுவனாயும் இருந்து கொண்டு பிறரின் பொருட்டு இந்த சேர்க்கையை செய்தவனாய் இருக்கின்றேன். இதை மும்முறை கூறுதல் தன்னுடைய ஆச்சரியத்தை தெரியப்படுத்துவதற்கானதாகும்.
अहमस्मि भवामि । प्रथमजाः प्रथमजः प्रथमोत्पन्नः । ऋतस्य सत्यस्य मूर्तामूर्तस्यास्य जगतो देवेभ्यश्च पूर्वममृतस्य नाभिः अमृतत्वस्य नाभिः, मध्यं मत्संस्थम् अमृतत्वं प्राणिनामित्यर्थः ।
(ச.பா) நானே இருக்கின்றேன் நான் எல்லாவற்றிற்கும் முதலில் தோன்றியவன். (ஹிரண்யகர்பனும் நானே) மூர்த்தாமூர்த்தமான ஜகத்திற்கும் எல்லாவற்றையும் இயக்கும் சக்திபடைத்த தேவர்களுக்கும் முதலில் தோன்றியவன் நானே. அந்த அம்ருத ஸ்வரூபத்தின் மத்தியபாகமான நாபியாகவும், விளங்குபவன் நானே. என்னிலேயே இந்த பிரா௴ஜாதங்கள்யாவும் விளங்குகின்றன. அவைகளின் நடுவில் உள்ள என்னாலேயே அவை விளக்கமும் பெறுகின்றன என்பது பொருள்.
यः कश्चित् मा माम् अन्नमन्नार्थिभ्यो ददाति प्रयच्छति - अन्नात्मना ब्रवीति, सः इत् इत्थमेवेत्यर्थः, एवमविनष्टं यथाभूतं माम् आवा अवतीत्यर्थः । यः पुनरन्यो मामदत्वा अर्थिभ्यः काले प्राप्तेऽन्नमत्ति तमन्नमदन्तं भक्षयन्तं पुरुषमहमन्नमेव संप्रत्यद्मि भक्षयामि ।
(ச.பா) எந்த ஒரு சாதகர் அன்னார்த்தியாய், தன்னை அடைந்தவர்களுக்கு அன்னமான என்னைக் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு எக்குறையும் ஏற்படாமல் அந்த பரம் பொருள் அவர்களைக் காக்கிறது என்பது பொருள். எவர் ஒருவர் அன்னார்த்தியாய் தன்னை அடைந்தவர்களுக்கு உரியகாலத்தில் அன்னமளிக்காது தானே உண்கிறார்களோ அவர்களை நானே அன்னமாக உண்டுவிடுகிறேன்.
अत्राह - एवं तर्हि बिभेमि सर्वात्मत्वप्राप्तेर्मोक्षात् ; अस्तु संसार एव, यतो मुक्तोऽप्यहम् अन्नभूतः अद्यः स्याम् अन्यस्य ।
(ச.பா) இந்த விஷயத்தில் ஒருவன் கூறுகிறான் -இப்படியானால் நான் ஸர்வாத்மபாவமான மோக்ஷத்தைக் கண்டுபயப்படுகிறேன். சம்சாரியாய் இருந்து விடுவதே நல்லது. ஏன்எனில் முக்தனாக ஆனபிறகும்கூட நானே முதல் தோன்றலாகவும் அன்னமாகவும் ஆகிறேன் என்னால் நான் மற்றவரால் உண்ணப்பட்டு விடுவேனோ?
एवं मा भैषीः ; संव्यवहारविषयत्वात् सर्वकामाशनस्य ; अतीत्यायं संव्यवहारविषयमन्नान्नादादिलक्षणमविद्याकृतं विद्यया ब्रह्मत्वमापन्नः विद्वान् ; तस्य नैव द्वितीयं वस्त्वन्तरमस्ति, यतो बिभेति ; अतो न भेतव्यं मोक्षात् ।
(ச.பா) பயம் வேண்டாம் இந்த ஸர்வகாமனைகளையும் அனுபவித்தல் என்பது வியவஹார விஷயமானது. இந்த அன்னம் அன்னாதத்துவம் என்ற லக்ஷணத்துடன் கூடிய இவையாவும் அவித்யையினால் உண்டானது. வித்தையால் பிரஹ்மத்துவத்தை அடைந்த வித்வானுக்கு இந்த அவித்யையினால் உண்டான காரியமோ இரண்டாவது வஸ்துவோ ஏற்படுவதும் இல்லை. அவருக்கு அது இல்லவே இல்லை எனவே மோக்ஷ நிலையை அடையும் ஸ்தானத்தில் உள்ளவர்கள் போக்ஷத்தில் ஒருபோதும் பயப்பட வேண்டியது இல்லை.
एवं तर्हि किमिदमाह - अहमन्नमहमन्नाद इति ? उच्यते । योऽयमन्नान्नादादिलक्षणः संव्यवहारः कार्यभूतः, स संव्यवहारमात्रमेव ; न परमार्थवस्तु । स एवंभूतोऽपि ब्रह्मनिमित्तो ब्रह्मव्यतिरेकेणासन्निति कृत्वा ब्रह्मविद्याकार्यस्य ब्रह्मभावस्य स्तुत्यर्थमुच्यते - ‘अहमन्नमहमन्नमहमन्नम् । अहमन्नादोऽहमन्नादोऽहमन्नादः’ इत्यादि । अतः भयादिदोषगन्धोऽपि अविद्यानिमित्तः अविद्योच्छेदाद्ब्रह्मभूतस्य नास्तीति ।
(ச.பா) இப்படியானால் அஹம் அன்னம், அஹம் அன்னாத என்று எதற்காகக் கூறப்படுகிறது எனில், எந்த அன்ன அன்னாதி ரூபமான வியவஹாரவிஷயம் காரியபூதமாய் இருக்கிறதோ அது வியவஹார ரீதியில் உள்ளதே அன்றி பரமார்த்த வஸ்து அன்று. இவ்வாறானவன்கூட பிரஹ்ம நிமித்தமாய் பிரஹ்மத்தைக்காட்டிலும் வேறு எந்த ஒரு விஷயமும் ஸத்தானது அல்ல என்று தீர்மானம் செய்து கொண்டு பிரஹ்ம வித்யாகாரியமான பிரஹ்ம பாவத்தை துதிப்பதற்காக இவ்வாறு கூறப்பட்டது, நானே அன்னமாய் இருக்கிறேன், நானே அன்னாதனாய் இருக்கிறேன் என்று கூறுகிறது, எனவே பயம் முதலான அவித்தையால் உண்டான எந்த தோஷமும் பிரஹ்ம வித்தையால் அவித்தை நீங்கி பிரஹ்ம பூதமானவருக்கு கிடையாது என்று நான் எல்லா உலகத்திலும் பரந்து இருக்கின்றேன்.
अहं विश्वं समस्तं भुवनं भूतैः सम्भजनीयं ब्रह्मादिभिर्भवन्तीति वा अस्मिन् भूतानीति भुवनम् अभ्यभवाम् अभिभवामि परेणेश्वरेण स्वरूपेण । सुवर्न ज्योतीः सुवः आदित्यः ; नकार उपमार्थे ; आदित्य इव सकृद्विभातमस्मदीयं ज्योतीः ज्योतिः, प्रकाश इत्यर्थः ।
(ச.பா) நானே புவனமாயும் அந்த புவனத்தில் உண்டானவர்களால் பஜிக்கத்தக்கவனாயும், பிரஹ்மா இவர்களால் துதிக்கப்படுபவனாயும் இருந்து கொண்டு, அந்த பரமேஸ்வர ஸ்வரூபத்துடன் இந்த பூதங்களிடத்திலும், அவைகள் நிறைந்த புவனத்தையும் ஆள்பவனாய் இருக்கின்றேன், सुवर्न ज्योतीः என்ற இடத்தில் न காரம் உபமார்த்தமாக (உவமையாக) வந்தது, எனவே स्वः என்று ஆயிற்று सुवः சூரியன், சூரியன்போல் எப்பொழுதும் பிரகாசிக்கக்கூடியது நம் ஆத்மஜ்யோதிஸ் என்பது பொருள்.
इति वल्लीद्वयविहिता उपनिषत् परमात्मज्ञानम् ; तामेतां यथोक्तामुपनिषदं शान्तो दान्त उपरतस्तितिक्षुः समाहितो भूत्वा भृगुवत् तपो महदास्थाय य एवं वेद, तस्येदं फलं यथोक्तमोक्ष इति ॥
(ச.பா) என்று இந்த இரண்டு வல்லீகளினால் உபநிஷத்து பரமாத்மக்ஞானத்தை உபதேசித்தது. இவ்வாறு உபநிஷத்தால் விவரிக்கப்பட்ட ஆத்மக்ஞானத்தை உபநிஷத் கூறிய வழியிலேயே சாந்தனாயும், தாந்தனாயும். உபரதனாயும், திதீக்ஷாவாயும், சமாஹிதனாகவும் ஆகி பிருகுவைப்போல் பெரும் தவத்தை செய்து ஆத்மஸ்வரூபத்தை எவன் ஒருவன் அறிகிறானோ அவனுக்கு முற்கூறப்பட்ட மோக்ஷம் என்ற இப்பயன் கிடைக்கிறது.
इति दशमानुवाकभाष्यम् ॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ तैत्तिरीयोपनिषद्भाष्ये भृगुवल्लीभाष्यं सम्पूर्णम् ॥
ப்ருகுவல்லீ முற்றிற்று.
தைத்ரீயோபநிஷத் முடிவுற்றது.
சுபம்.