प्रथमोऽध्यायः तृतीयब्राह्मणम् ।उद्गीथब्राह्मणम्।
भाष्यम्- द्वया हेत्याद्यस्य कः सम्बन्धः? कर्मणां ज्ञानसहितानांपरा गतिरुक्ता मृत्य्वात्मभावोऽश्वमेधगत्युक्त्या। अथेदानीं मृत्य्वात्मभावसाधनभूतयोः कर्मज्ञानयोर्यत उद्भवस्त-त्प्रकाशनार्थमुद्गीथब्राह्मणमारभ्यते।
அனுவாதம்-“द्वया ह” (த்வயா ஹ) முதலிய வாக்கியங்களால் ஆரம்பம் ஆகும் இந்த பிராஹ்மணத்திற்கு பூர்வ (முந்திய) பிராஹ்மணத்துடன் எவ்வாறு சம்பந்தப்படுகிறது? ஞானத்துடன் கூடிய கர்மங்களுக்கு மிருத்யு ஆத்மபாவ அச்வமேத கதியின் விளக்கத்தால் மேலான (பரா) கதி கூறப்பட்டது. அதன்பின் இப்பொழுது மிருத்யு ஆத்மபாவசாதனமாகிய கர்மஞானங்கள் எதிலிருந்து உண்டாகும் என்பதை தெரிவிப்பதற்காக “உத்கீத பிராஹ்மணம்” ஆரம்பிக்கப்படுகிறது.
भाष्यम्- शङ्का -ननु मृत्य्वात्मभावः पूर्वत्र ज्ञानकर्मणोः फलमुक्तम्। उद्गीथज्ञानकर्मणोस्तु मृत्य्वात्मभावातिक्रमणं फलं वक्ष्यति। अतो भिन्नविषयत्वात्फलस्य न पूर्वकर्मज्ञानोद्भव-प्रकाशनार्थमिति चेत्।
அனுவாதம்-சங்கை- முன்பு ஞானகர்மத்திற்கு பலனாக மிருத்யு ஆத்மபாவம் கூறப்பட்டது. உத்கீத ஞானகர்மத்திற்கோ எனில் மிருத்யு ஆத்மபாவத்திற்கும் மேலான பலன் கூறப்போகிறது. ஆகையால் அந்த பலனைவிட வேறு விஷயமாய் இருப்பதால் முன்பு கூறிய கர்ம ஞானத்தால் உண்டாவதைத் தெரிவிப்பதற்கு அல்ல என்றால்.
भाष्यम््- समाधान्ाम्- नायं दोषः। अग्न्यादित्यात्म-भावत्वादुद्गीथफलस्य। पूर्वत्राप्येतदेव फलमुक्तम्“एतासां देवतानामेको भवति” इति। ननु“मृत्युमतिक्रान्तः” इत्यादि विरुद्धम्, न, स्वाभाविकपाप्मासङ्गविषयत्वादतिक्रमणस्य।
அனுவாதம்- ஸமாதானம்- இந்த தோஷம் இல்லை, உத்கீதத்தின் பலத்திற்கு அக்னி ஆதித்ய ஆத்மகமாய் இருப்பதால் ஆகும்.“एतासां देवतानामेको भवति”(ஏதாசாம் தேவதானாமேகோ பவதி- இதிலிருந்து ஒரு தேவதையாகிறது) என்று முன்பே இந்த பலன் கூறப்பட்டது. இவ்வாறு கூறினால்“मृत्युमतिक्रान्तः” (ம்ருத்யுமதிகிராந்த:) என்பவை விருத்தம் ஆகுமே எனில் அவ்வாறு அல்ல. ஏன் எனில் அதிகிரமணத்தின் விஷயம் ஸ்வபாவமாய் பாபத்தின் சேர்க்கை (சங்க) விஷயமாகும்.
भाष्यम्- कोऽसौ स्वाभाविकः पाप्मासङ्गो मृत्युः? कुतो वा तस्योद्भवः? केन वा तस्यातिक्रमणम्? कथं वा? इत्येतस्यार्थस्य प्रकाशनायाख्यायिकारभ्यते। कथम्-
அனுவாதம்- ஸ்வாபாவிகமாய் பாபத்துடன் கூடிய மிருத்யு யாது? எதனால் அது உண்டாயிற்று? எதனால் அதற்கு அதிக்ரமம்? எவ்வாறு? என்று இதன் விஷயத்தைத் தெளிவுபடுத்துவதற்காக இந்த ஆக்யாயிகா (கதை) ஆரம்பிக்கப்படுகிறது. எவ்வாறு?
द्वया ह प्राजापत्या देवाश्चासुराश्च। ततः कानीयसा एव देवा ज्यायसा असुरास्त एषु लोकेष्वस्पर्धन्त ते ह देवा ऊचुर्हन्तासुरान्यज्ञ उद्गीथेनात्ययामेति ।। १।।
மந்த்ரார்த்தம் -- பிரஜாபதிக்கு தேவ, அசுரர் என்ற இருவிதமான புத்திரர்கள் இருந்தார்கள், இவர்களில் தேவர்கள் குறைவாகவும் அசுரர்கள் அதிகமாயும் இருந்தார்கள், அவர்கள் இவ்வுலகங்களில் பரஸ்பரம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் தேவதைகள் நாங்கள் யக்ஞத்தில் உத்கீத மூலமாய் அசுரரர்களை அதிகிரமணம் செய்வோம் (வெல்வோம்) என்று கூறினார்கள்.
भाष्यम् - द्वया द्विप्रकाराः। हेति पूर्ववृत्तावद्योतको निपातः। वर्तमानप्रजापतेः पूर्वजन्मनि यद् वृत्तं तदवद्योतयति हशब्देन। प्राजापत्याः प्रजापतेर्वृत्तजन्मावस्थस्यापत्यानि प्राजापत्याः। के ते? देवाश्चासुराश्च। तस्यैव प्रजापतेः प्राणा वागादयः।
அனுவாதம்- த்வயா என்றால் இரண்டு வகைகள்“ह” (ஹ) என்பது முந்திய விருத்தாந்தத்தை தெளிவுபடுத்துவதற்காக கூறப்பட்டது. இப்பொழுது உள்ள பிரஜாபதியின் பூர்வஜன்மத்தில் எது நடந்ததோ அதை“ह”சப்தத்தால் விளக்கப்படுகிறது. பிரஜாபதியின் இல்த்தில் இருந்து ஜன்மஅவஸ்தை அடைந்தவர்கள் பிராஜாபத்தியர்கள் என்று கூறப்படுகிறார்கள் அவர்கள் யார்? தேவர்களும், அசுரர்களும் ஆவார்கள், அந்த பிரஜாபதியின் பிராணன், வாக் முதலியவைகளே அர்த்தமாகும் (இந்திரன், விரோசனன் முதலியவர்கள் அல்ல)
भाष्यम् - कथं पुनस्तेषां देवासुरत्वम्? उच्यते- शास्त्रजनितज्ञानकर्मभाविता द्योतनाद्देवा भवन्ति। त एव स्वाभाविकप्रत्यक्षानुमानजनितदृष्टप्रयोजनकर्मज्ञानभाविता असुराः। स्वेष्वेवासुषु रमणात् सुरेभ्यो वा देवेभ्योऽन्यत्वात्।
अनुवादः - पुन तेषां देवासुरत्वं कथम्? उच्यते- शास्त्रजनित ज्ञानकर्मभाविता द्योतनात् देवाः भवन्ति। त एव स्वाभाविक-प्रत्यक्षानुमान जनितदृष्टप्रयोजनकर्मज्ञानभाविताः असुराः। स्वेषु असुषु एव रमणात् सुरेभ्यो देवेभ्यो अन्यत्वात् वा।
அனுவாதம்-மேலும் அவர்களுக்கு தேவத்துவமும் அசுரத்துவமும் எவ்வாறு உண்டாயிற்று? கூறப்படுகிறது - சாஸ்திரத்தினால் உண்டான ஞானகர்மத்தை அனுஷ்டிப்பதால் உண்டாகும் பிரகாசமயத்தால் தேவர்கள் ஆகிறார்கள். ஸ்வபாவமான பிரத்யக்ஷ அனுமானத்தால் உண்டான திருஷ்டகர்ம பிரயோஜன கர்மத்தை அனுசரிக்கும் இவர்கள் அசுரர்கள் ஆவர். தங்களுடைய பிராணனை ரமிக்கின்ற காரணத்தாலோ அல்லது சுரர் அதாவது தேவர்களைக்காட்டிலும் வேறு என்பதாலோ அசுரர் எனப்படுகின்றனர்.
भाष्यम् - यस्माच्च दृष्टप्रयोजनज्ञानकर्मभाविता असुराः, ततस्तस्मात्कानीयसाः, कनीयांस एव कानीयसाः, स्वार्थेऽणि वृद्धिः। कनीयांसोऽल्पा एव देवाः। ज्यायसा असुरा ज्यायान्सोऽसुराः। स्वाभाविकी हि कर्मज्ञानप्रवृत्तिर्महत्तरा प्राणानां शास्त्रजनितायाः कर्मज्ञानप्रवृत्तेर्दृष्टप्रयोजनत्वात्। अत एव कनीयस्त्वं देवानां शास्त्रजनितप्रवृत्तेरल्पत्वात्। अत्यन्तयत्नसाध्या हि सा।
அனுவாதம்- எதனால் திருஷ்ட பிரயோஜனமான ஞானகர்மத்தை அசுரர்கள் அனுசரிக்கின்றார்களோ அதனால் தேவர்கள் குறைவாய் இருக்கின்றார்கள்(कनीयांसाः) கனியாம் என்றால் அல்பம், குறைவு. தேவர்கள் குறைவாகவே இருக்கின்றார்கள், அசுரகணங்கள் மிகுந்தவர்களாய் இருக்கின்றார்கள். கர்மஞானத்தில் பிரவர்த்திப்பவர்களுக்கு திருஷ்டபலமாய் இருப்பதால் பிராணன்களுக்கு சாஸ்திரத்தினால் உண்டான ஞானகர்மங்களை அபேக்ஷித்து ஸ்வபாவமாகவே (சாஸ்திரத்தை அனுசரிக்காத) கர்மஞான பிரவிர்த்தியானது அதிகமானதாகும்.
भाष्यम् - ते देवाश्चासुराश्च प्रजापतिशरीरस्था एषु लोकेषु निमित्तभूतेषु स्वाभाविकेतरकर्मज्ञानसाध्येषु अस्पर्धन्त स्पर्धां कृतवन्तः। देवानां चासुराणां च वृत्त्युद्भवाभिभवौ स्पर्धा। कदाचिच्छास्त्रजनितकर्मज्ञानभावनारूपा वृत्तिः प्राणानामुद्भवति। यदा चोद्भवति तदा दृष्टप्रयोजना प्रत्यक्षानुमानजनित-कर्मज्ञानभावनारूपा तेषामेव प्राणानां वृत्तिरासुर्यभिभूयते। स देवानां जयोऽसुराणां पराजयः। कदाचित्तद्विपर्ययेण देवानां वृत्तिरभिभूयत आसुर्या उद्भवः। सोऽसुराणां जयो देवानां पराजयः। एवं देवानां जये धर्मभूयस्त्वादुत्कर्ष आ प्रजापतित्वप्राप्तेः। असुरजयेऽधर्मभूयस्त्वादपकर्ष आ स्थावरत्वप्राप्तेः। उभयसाम्ये मनुष्यत्वप्राप्तिः।
அனுவாதம்- பிரஜாபதி சரீரத்தில் இருக்கும் அந்த தேவர்களும் அசுரர்களும் அவர் அவர்களின் ஸ்வாபாவிகமாய் ஏற்படும் கர்மஞானங்களினால் உண்டாகும் சாத்யமான லோகங்களின் நிமித்தமாய் சண்டையிட்டனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் விருத்திகள் கிளம்புவதிலும் அடங்குவதிலுமே சண்டை ஏற்பட்டது. ஒரு சமயம் சாஸ்த்திரத்தினால் உண்டாகும் கர்மஞான பாவனாரூபவிருத்திகள் பிராணன்களுக்கு உணடாகிறது. எப்பொழுது அவ்வாறு உண்டாகிறதோ அப்போது பிராணன்களுக்கு திருஷ்ட பிரயோஜனத்தை உடைய பிரத்யக்ஷ அனுமானத்தால் உண்டாகும் கர்மஞான பாவனாரூப அசுர விருத்தியானது அந்தப் பிராணன்களிடத்தில் தோல்வி அடைகிறது. அதுவே தேவர்களின் ஜெயமும், அசுரர்களின் தோல்வியும் ஆகும். ஏதாவது ஒரு சமயம் அதற்கு மாறாக தேவர்களின் விருத்தி மறைந்து அசுர விருந்தி மேலோங்கும். அது அசுரர்களின் ஜெயமும், தேவர்களின் தோல்வியும் ஆகும். இவ்வாறு தேவதைகளுக்கு வெற்றி ஏற்படும் பொழுது தர்மம் அதிகமாவதால் பிரஜாபதிபதத்தை அடைவது வரை மிகவும் மேலானதாகும். (மார்க்கம்) அசுரரர்கள் ஜெயித்ததில் அதர்மம் அதிகமாவதால் ஸ்தாவரத்துவ பிராப்தி வரையிலுமான கீழானதாகும். (மார்க்கம்) இரண்டும் சமமாய் இருந்தால் மனுஷ்யத்துவம் அடையப்படும்.
भाष्यम्-त एवं कनीयस्त्वादभिभूयमाना असुरैर्देवा बाहुल्यादसुराणां किं कृतवन्तः? इत्युच्यते- ते देवा असुरैरभिभूयमाना ह किलोचुरुक्तवन्तः। कथम्? हन्तेदानीम् अस्मिन्यज्ञे ज्योतिष्टोमे, उद्गीथेन उद्गीथकर्मपदार्थकर्तृस्वरूपा-श्रयणेन अत्ययामातिगच्छामः। असुरानभिभूय स्वं देवभावं शास्त्रप्रकाशितं प्रतिपद्यामह इत्युक्तवन्तोऽन्योन्यम्। उद्गीथकर्मपदार्थकर्तृस्वरूपाश्रयणं च ज्ञानकर्मभ्याम्। कर्म वक्ष्यमाणं मन्त्रजपलक्षणं विधिस्त्यमानं“तदेतानि जपेत्” इति। ज्ञानं त्विदमेव निरूप्यमाणम्।
அனுவாதம்- அவர்கள் இவ்வாறு குறைந்தவர்களாய் இருப்பதாலும் அசுரர்கள் அதிகமாய் இருப்பதாலும் அசுரர்களால் தோல்வி அடைந்த தேவர்கள் என்ன செய்தார்கள்? கூறப்படுகிறது, அசுரர்களால் தோல்வி அடைந்த தேவர்கள் கூறியது எவ்வாறு? அஹோ! இப்பொழுது (நாம்) ஜ்யோதிஷ்டோம யக்ஞத்தில் உத்கீதத்தால் அதாவது உத்கீத கர்மபதார்த்த கர்த்ருரூபத்தை ஆஸ்ரயத்து வெல்வோமாக என்று நினைத்தார்கள். அசுரர்களை தோற்கடிக்க சாஸ்திரத்தில் தெரியப்படுத்திய தங்கள் தேவபாவத்தை அடையவேண்டும் என்று அவர்களுக்குள் கூறிக்கொண்டார்கள். உத்கீத கர்மபதார்த்தகர்த்ரு ஸ்வரூபத்தையும், ஞான கர்மங்களையும் ஆஸ்ரயித்தார்கள். இனிக் கூறப்போகிற கர்ம மந்திர ஜப லக்ஷணம்“तदेतानि जपेत्” (ததேதானி ஜபேத்) என்று விதிக்கப்பட்ட லக்ஷணமாகும். ஞானமானது இவ்வாறு என்று நிரூபிக்கப்பட்டது.
भाष्यम्-शङ्का- नन्विदमभ्यारोहजपविशेषोऽर्थवादो न ज्ञाननिरूपणपरम्।
அனுவாதம்- சங்கை- ஆனால் இந்த அப்யாரோஹ அதாவது மந்திரஜப சிறப்பு விதியின் அர்த்தவாதமாகும். ஞான நிரூபணமானது அல்ல.
भाष्यम् - समाधानम् - न,“य एवं वेद” इति वचनात्। उद्गीथप्रस्तावे पुराकल्पश्रवणादुद्गीथविधिपरमिति चेन्न, अप्रकरणात्। उद्गीथस्य चान्यत्र विहितत्वात्। विद्याप्रकरण-त्वाच्चास्य। अभ्यारोहजपस्य चानित्यत्वात्, एवंवित्प्रयोज्यत्वात्, विज्ञानस्य च नित्यवच्छ्रवणात्।“तद्धैतोकजिदेव”(छा० उ० १। ३। २८) इति च श्रुतेः, प्राणस्य वागादीनां च शुशुद्धिवचनात्। न ह्यनुपास्यत्वे प्राणस्य शुद्धिवचनं वागादीनां च सहोपन्यस्तानामशुद्धिवचनम्। वागादिनिन्दया मुख्यप्राणस्तुति-श्चाभिप्रेता उपपद्यते।“मृत्युमतिक्रान्तो दीप्यते”इत्यादि फलवचनं च। प्राणस्वरूपापत्तेर्हि फलं तद्यद्वागाद्यग्न्यादिभावः।
அனுவாதம்- ஸமாதானம்- அவ்வாறு அல்ல.“य एवं वेद” (ய ஏவம் வேத) என்ற வசனம் இருப்பதால், உத்கீத பிரகரணத்தில் பூர்வகல்பத்தின் சுருதியாய் இருப்பதால் இது உத்கீதம் என்று கூறுவது சரியல்ல. இது உத்கீத பிரகரணம் அல்ல. உத்கீதமானது வேறு இடத்தில் விதிக்கப்பட்டுள்ளதாலும் அது வித்யாபிரகரணமாகும். அப்யாரோஹ அதாவது மந்திரஜப விதியானது அநித்தியமாகும். இவ்வாறு அறிந்தவன் விக்ஞானம் நித்யம் என்ற சுருதியால் கூறப்பட்டுள்ளதால் அதை அனுஷ்டானம் செய்வதாலும்“तद्धैतोकजिदेव” (தத்ஹஏதத்லோகஜிதேவ) என்ற சுருதியினாலும் பிராணனுடைய வாக் முதலியவகைளுக்கு சுத்தி அசுத்தி வசனத்தால் கூறப்பட்டுள்ளது. பிராண உபாசனையைக்குறித்து கூறுவதற்கு இஷ்டம் இல்லையெனில் பிராணனைக் குறித்து சுத்தத்துவத்தைக் கூறுதலும் அதனுடன் கூறப்பட்ட அந்த வாக்முதலியவைகளின் அசுத்தத்தன்மையைக் கூறுதலும் பொருந்தாது. இதனால் வாக் முதலியவைகளின் நிந்தை வாயிலாக முக்கிய பிராணன் ஸ்துதியானது யுக்திக்கு பொருந்துவதாய் இருக்கின்றது.“मृत्युमतिक्रान्तो दीप्यते” (ம்ருத்யுமதிக்ராந்தோ தீப்யதே) என்பன முதலிய பலனைக் கூறும் வசனங்களும் இருக்கின்றன. வாக் முதலியவைகளின் அக்னி முதலிய பாவங்களை அடைவதே அவைகளின் பிராணஸ்வரூப பிராப்தியின் பலனாகும்.
भाष्यम्- शङ्का- भवतु नाम प्राणस्योपासनम्, न तु विशुादिगुणवत्तेति। ननु स्याच्छ्रुतत्वात्। न स्यात्, उपास्यत्वे स्तुत्यर्थत्वोपपत्तेः।
அனுவாதம்- சங்கை- பிராணனுடைய உபாசனை இருக்கட்டும். ஆனால் விசுத்தம் முதலிய குணங்கள் உடையதாக ஆகாது. ஏன் எனில் சுருதியில் கூறப்பட்டுள்ளதால் உபாஸ்யத்தில் ஸ்துதி அர்த்தம் பொருந்தாததால் அவ்வாறு ஆகாது.
भाष्यम् - समाधानम् - न, अविपरीतार्थप्रतिपत्तेः श्रेयः प्राप्त्युपपत्तेर्लोकवत्। यो ह्यविपरीतमर्थं प्रतिपद्यते लोके स इष्टं प्राप्नोत्यनिष्टाद्वा निवर्तते, न विपरीतार्थप्रतिपत्त्या। तथेहापि श्रौतशब्दजनितार्थप्रतिपत्तौ श्रेयःप्राप्तिरुपपन्ना न विपर्यये। न चोपासनार्थश्रुतशब्दोत्थविज्ञानविषयस्य अयथार्थत्वे प्रमाणमस्ति। न च तद्विज्ञानस्यापवादः श्रूयते। ततः श्रेयःप्राप्तिदर्शनाद्यथार्थतां प्रतिपद्यामहे; विपर्यये चानर्थप्राप्तिदर्शनात्। यो हि विपर्ययेणार्थंर् प्रतिपद्यते लोके, पुरुषं स्थाणुरित्यमित्रं मित्रमिति वा, सोऽनर्थं प्राप्नुवन्दृश्यते। आत्मेश्वरदेवतादीनामपि अयथार्थानामेव चेद् ग्रहणं श्रुतितः, अनर्थरप्राप्त्यर्थं शास्त्रमिति ध्रुवं प्राप्नुयाोकवदेव, न चैतदिष्टम्; तस्माद्यथाभूतानेव आत्मेश्वरदेवतादीन् ग्राहयत्युपासनार्थं शास्त्रम्।
அனுவாதம்- ஸமாதானம்- அவ்வாறு கூறுவது சரியல்ல, உலகில் விபரீதமற்ற ஞானம் உண்டாகும் பொழுது ஸ்ரேயஸ் பிராப்தி அடையப்படுகிறது. உலகில் எவன் ஒருவன் விபரீதமற்ற பொருளை (அர்த்தத்தை) அடைகிறானோ அவன் இஷ்டத்தை அடைகிறான், மேலும் அநிஷ்டத்திலிருந்து விடுபடுகிறான். விபரீத அர்த்த ஞானத்தை அடைவதால் முடியாது. அவ்வாறே இங்கும் சுருதி சப்தத்தால் உண்டான அர்த்தத்தின் ஞானத்தால் ஸ்ரேயஸ் பிராப்தி உண்டாகும். அதன் விபரீத அர்த்தத்தால் ஏற்படாது. அவ்வாறே இங்கும் சுருதி சப்தத்தால் உண்டான அர்த்தம் அடையப்படும் பொழுது ஸ்ரேயசின் பிராப்தி உண்டாகிறது. விபரீத அர்த்தத்தால் ஏற்படாது. மற்றும் உபாசனையை விளக்குகின்ற சுருதியின் சப்தத்தால் உண்டாகும் விக்ஞானம் அயதார்த்தத்திற்கு (வேறு விபரீத அர்த்தத்திற்கு) பிரமாணம் இல்லை. வேதத்தில் அந்த விக்ஞானத்தை விதிவிலக்காக கூறவில்லை. அதனால் இதிலிருந்து ச்ரேயஸ் பிராப்தி தரிசனத்தின் யதார்த்த அர்த்தத்தை அறிந்துகொள்வோமாக. விபரீதமாய் அறிவதால் அநர்த்த பிராப்தி காணப்படுகிறது. உலகில் எந்த புருடன் விபரீத அர்த்தத்தை கிரஹிக்கின்றானோ அந்த மனிதனை கட்டை (தூண்) என்றும், அல்லது எதிரியை நண்பன் என்றும் அநர்த்தப் பிராப்தியை அடைவது காணப்படுகிறது, ஒருக்கால் வேதத்திலிருந்து ஆத்மா, ஈஸ்வரன், தேவதை முதலியவைகளும் அயதார்த்தமாய் கிரஹிக்கப்படும்பொழுது லௌகிகர்போல் சாஸ்திரமும் அநர்த்தத்திற்காகவே என்று நாம் அவசியம் நினைக்கத்தோன்றும். ஆனால் அது இஷ்டம் (ஏற்கக்கூடியது) அல்ல. ஆகையால் சாஸ்திரமானது உபாசனையின் பொருட்டு யதார்த்த ஆத்மா, ஈஸ்வரன், தேவதை முதலியவைகளை கிரஹித்துக்கொள்ளச் செய்கிறது.
भाष्यम्- शङ्का - नामादौ ब्रह्मदृष्टिदर्शनादयुक्तमिति चेत्स्फुटं नामादेरब्रह्मत्वम्, तत्र ब्रह्मदृष्टिं स्थाण्वादाविव पुरुषदृष्टिं विपरीतां ग्राहयच्छास्त्रं दृश्यते। तस्माद्यथार्थमेव शास्त्रतः प्रतिपत्तेः श्रेय इत्ययुक्तमिति चेत्?
அனுவாதம்- சங்கை- நாமம் முதலியவைகளில் பிரஹ்ம திருஷ்டி காணப்படுவதால் பொருந்தாது. ஏன் என்றால் நாமம் முதலியவைகள் அப்பிரஹ்மத்துவம் என்பது தெளிவாய் இருக்கிறது. அங்கு பிரஹ்ம திருஷ்டியானது ஸ்தாணுவில் (தூணில்) புருட திருஷ்டிபோல் விபரீதமாய் கிரஹிப்பது போல் சாஸ்திரம் காணப்படுகிறது. ஆகையால் சாஸ்திரத்தில் யதார்த்தமே என்று கிரஹிப்பதோ ஸ்ரேயஸ் என்பது பொருந்தாது எனில்?
भाष्यम् - समाधानम् - न, प्रतिमावद्भेदप्रतिपत्तेः। नामादावब्रह्मणि ब्रह्मदृष्टिं विपरीतां ग्राहयति शास्त्रं स्थाण्वादाविव पुरषदृष्टिम्, इति नैतत्साध्ववोचः। कस्मात्? भेदेन हि ब्रह्मणो नामादिवस्तुप्रतिपन्नस्य नामादौ विधीयते ब्रह्मदृष्टिः, प्रतिमादाविव विष्णुदृष्टिः। आलम्बनत्वेन हि नामादिप्रतिपत्तिः प्रतिमादिवदेव, न तु नामाद्येव ब्रह्मेति। यथा स्थाणावनिर्ज्ञाते न स्थाणुरिति, पुरुष एवायमिति प्रतिपद्यते विपरीतम्, न तु तथा नामादौ ब्रह्मदृष्टिर्विपरीता।
அனுவாதம்- ஸமாதானம்- ப்ரதிமையில் தோன்றும் பேதமே அன்றி, (நீங்கள்) கூறுவது போல் அல்ல. பிரஹ்மம் அல்லாத நாமம் முதலியவைகளில் விபரீதமான பிரஹ்மதிருஷ்டியானது ஸ்தாணு முதலியவைகளில் புருஷ திருஷ்டியை போல் சாஸ்திரம் தெரிவிக்கிறது என்று ஏற்றுக்கொள்வது சரியான கூற்று அல்ல எதனால்? ப்ரதிமா முதலியவைகளில் விஷ்ணு திருஷ்டி போல் பிரஹ்மத்திற்கு நாமம் முதலிய வஸ்து பேதங்கள் உடையதாய் அறிவதே நாமம் முதலியவைகளில் பிரஹ்மதிருஷ்டியாய் காணப்படுகிறது. ப்ரதிமா முதலியவைகளைப் போல் ஆலம்பனமாய் நாமம் முதலியவைகளின் இருப்பாகும் (பிரதிபத்தியாகும்). நாமமே பிரஹ்மம் அல்ல, எவ்வாறு ஸ்தாணுவை அறியாதபொழுது ஸ்தாணு அல்ல புருஷனே என்று விபரீதமாய் அறிகிறோமோ அவ்வாறு நாமம் முதலியவைகளில் விபரீதமான பிரஹ்மதிருஷ்டி இல்லை.
भाष्यम्- पूर्व- ब्रह्मदृष्टिरेव केवला नास्ति ब्रह्मेति चेत्। एतेन प्रतिमाब्राह्मणादिषु विष्ण्वादिदेवपित्रादिदृष्टीनां तुल्यता।
அனுவாதம்- பூர்வ- பிரஹ்மதிருஷ்டிதான் இருக்கிறது. (ஆகையால்) பிரஹ்மம் இல்லை. இந்த பிரதிமா,பிராஹ்மணர்கள் இவர்களில் விஷ்ணு முதலிய தேவர்கள், பித்ரு முதலிய திருஷ்டிகளுக்கு சமானமாகும்.
भाष्यम् - समाधानम् - न, ऋगादिषु पृथिव्यादि-दृष्टिदर्शनात्। विद्यमानपृथिव्यादिवस्तुदृष्टीनामेव ऋगादिविषये क्षेपदर्शनात्। तस्मात्तत्सामान्यान्नामादिषु ब्रह्मादिदृष्टीनां विद्यमानब्रह्मादिविषयत्वसिद्धिः।
அனுவாதம்- ஸமாதானம்- அவ்வாறல்ல ஏனெனில் ருக் முதலியவைகளில் பிருதிவி முதலிய திருஷ்டி காணப்படுகிறது. ருக் முதலிய விஷயங்களில் இருக்கும் பிருதிவி முதலிய வஸ்து விஷய திருஷ்டிகள் ஆரோபமாய் காணப்படுகிறது. ஆகையால் அதற்கு சமானமாய் இருப்பதால் நாமம் முதலியவைகளில் பிரஹ்மாதி திருஷ்டிகளானது இருக்கின்ற பிரஹ்மாதி விஷயத்தின் சித்தியாகும்.
भाष्यम्- एतेन प्रतिमाब्राह्मणादिषु विष्ण्वादि-देवपित्रादिबुद्धीनां च सत्यवस्तुविषयत्वसिद्धिः। मुख्यापेक्षत्वाच्च गौणत्वस्य। पञ्चाग्न्यादिषु चाग्नित्वादेर्गौणत्वाद् मुख्याग्न्यादि-सद्भाववन्नामादिषु ब्रह्मत्वस्य गौणत्वान्मुख्यब्रह्म सद्भावोपपत्तिः।
அனுவாதம்- இதனால் ப்ரதிமா மற்றும் பிராமணம் முதலியவைகளில் விஷ்ணு முதலிய தேவ, பித்ரு முதலிய புத்தி உள்ளவர்களுக்கு ஸத்வஸ்து விஷயத்தின் சித்தி உண்டாகிறது. ஏனெனில் கௌணமானது எப்பொழுதும் முக்யத்தை அபேக்ஷிப்பதால் ஏற்படுகிறது. எவ்வாறு பஞ்சாக்னி முதலியவைகளில் அக்னித்வம் கௌணமானதால் முக்ய அக்னி முதலியவைகளின் சத்பாவம் போல் நாமம் முதலியவை பிரஹ்மத்துவமானது கௌணமாய் இருப்பதால் முக்கிய பிரஹ்மமான சத்பாவம் சித்திக்கிறது.
भाष्यम्- क्रियार्थैश्चाविशेषाद्विद्यार्थानाम् यथा च दर्शपौर्णमासादिक्रियेदम्फला विशिष्टेतिकर्तव्यताका एवं क्रमप्रयुक्ताङ्गा च इत्येतदलौकिकं वस्तु प्रत्यक्षाद्यविषयं तथाभूतं च वेदवाक्यैरेव ज्ञाप्यते। तथा, परमात्मेश्वरदेवतादिवस्तु अस्थूलादि-धर्मकमशनायाद्यतीतं चेत्येवमादिविशिष्टमिति वेदवाक्यैरेव ज्ञाप्यते, इत्यलौकिकत्वात्तथाभूतमेव भवितुमर्हतीति न च क्रियार्थैर्वाक्यैर्ज्ञानवाक्यानां बुद्ध्युत्पादकत्वे विशेषोऽस्ति। न चानििश्चता विपर्यस्ता वा परमात्मादिवस्तुविषया बुद्धिरुत्पद्यते।
அனுவாதம்-வித்யா (ஞான) சம்பந்த வாக்கியங்களும் கர்மபரமான வாக்கியங்களும் சமானமாய் இருப்பதால் எவ்வாறு தர்சபூர்ணமாசகிரியை இப்பலனை உடையது, சிறப்பானது என்று கர்மா செய்பவன் இவ்வாறு கிரமமாய் அதன் அங்கங்களை பிரயோகம் செய்யவேண்டும் என்பதெல்லாம் அலௌகிக வார்த்தைகளாகும். இது பிரத்யக்ஷாதி ப்ரமாணத்தின் விஷயங்கள் அல்ல. ஆனால் யதார்த்தமாகும். இதை வேத வாக்கியங்களால்தான் அறியமுடியும். அவ்வாறே பரமாத்மா, ஈஸ்வரன், தேவதை முதலியவை ஸ்தூலத்துவம் முதலிய தர்மங்கள் அற்றது, அவ்வாறே பசி முதலிய தர்மங்களைக் கடந்தது. இவ்வாறு சிறந்த குணங்களுடன் கூடியது என்பது போன்றவை வேத வாக்கியங்களால் தான் அறியமுடிகிறது. என்று அலௌகிகமாய் இருப்பதால் அது மேலும் கிரியார்த்த வாக்கியங்களால் ஞான சம்பந்தமான புத்தி உண்டாவதில் பேதம் ஒன்றும் இல்லை. இதனால் பரமாத்மா முதலிய வஸ்து விஷயத்தில் நிச்சயமற்ற விபரீதபுத்தி உண்டாகாது.
भाष्यम् - पूर्व - अनुष्द्भेयाभावादयुक्तमिति चेत् क्रियार्थैर्वाक्यैस्त्र्यंशा भावनानुष्द्भेया ज्ञाप्यतेऽलौकिक्यपि। न तथा परमात्मेश्वरादिविज्ञानेऽनुष्द्भेयं कििञ्चदस्ति। अतः क्रियार्थैः साधर्म्यमित्ययुक्तमिति चेत्?
அனுவாதம்- பூர்வ- ஞான பரமான வாக்கியங்களால் அனுஷ்டிக்க வேண்டிய கர்மம் ஏற்படாது, ஆகையால் கிரியா வாக்கியங்களுக்கு சமமானது என்று கூறுதல் பொருந்தாது. கிரியார்த்த வாக்கியங்கள் அலௌகிகங்களானாலும் மூன்று அம்சங்கள் (பலம், சாதனம், கர்தவ்யம்) உடைய பாவனையை அனுஷ்டான ரூபமாய் கூறப்பட்டுள்ளது. ஆனால் பரமாத்மா ஈஸ்வரன் முதலிய விக்ஞானத்தில் அனுஷ்டிக்க வேண்டியது சிறிதும் இல்லை. ஆகையால் கிரியா அர்த்தங்களுடன் சமானத்தன்மை கூறுவது பொருத்தமல்ல.
भाष्यम् - सिद्धान्ती - न, ज्ञानस्य तथाभूतार्थविषयत्वात्। न ह्यनुष्द्भेयस्य त्र्यंशस्य भावनाख्यस्यानुष्द्भेयत्वात्तथात्वम्, किं तर्हि? प्रमाणसमधिगतत्वात्। न च तद्विषयाया बुद्धेरनुष्द्भेयविषयत्वा-त्तथार्थत्वम्, किं तर्हि? वेदवाक्यजनितत्वादेव। वेदवाक्याधिगतस्य वस्तुनस्तथात्वे सत्यनुष्द्भेयत्वविशिष्टं चेदनुतिष्द्भति। नो चेदनुष्द्भेयत्वाविशिष्टं नानुतिष्द्भति।
அனுவாதம்-ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல., ஞானமானது பூதார்த்த (முன்பு உள்ள) விஷயமேயாகும். மூன்று அம்சங்களுடன் கூடிய பாவனா எனப்படும் அனுஷ்டானத்தை அனுஷ்டிப்பதால் யதார்த்தம் (உள்ளது உள்ளபடியாக) ஆகாது. பின் எந்த காரணத்தால்? எனில் சுருதி பிரமாணத்தால் அறியமுடியும். இவ்வாறு அந்த பரமாத்ம விஷயபுத்தியின் யதார்த்தமும் அனுஷ்டிக்கவேண்டிய வஸ்து விஷயமாக இருப்பதால் அது அவ்வாறு அல்ல. பின் எதனால்? வேத வாக்கியத்திலிருந்து உண்டானதால்தான். வேத வாக்கியத்தால் அறிந்த வஸ்துவின் யதார்த்தம் சித்திக்கும்பொழுது அது அனுஷ்டேய விஷயமாகிறது. அதனால் புருஷன் அனுஷ்டானம் செய்கிறான். மேலும் அது அனுஷ்டேயத்துடன் கூடியது இல்லை எனில் அதை அனுஷ்டானம் செய்யமாட்டான்.
भाष्यम् - पूर्व - अननुष्द्भेयत्वे वाक्यप्रमाणत्वानुपपत्तिरिति चेत्। न ह्यनुष्द्भेयेऽसति पदानां संहतिरुपपद्यते। अनुष्द्भेयत्वे तु सति तादर्थ्येन पदानि संहन्यन्ते। तत्रानुष्द्भेयनिष्द्भं वाक्यं प्रमाणं भवति इदमनेनैवं कर्तव्यमिति। न त्विदमनेनैवमित्येवंप्रकाराणां पदशतानामपि वाक्यत्वमस्ति“कुर्यात्क्रियेत कर्तव्यं भवेत्स्यादिति पञ्चमम्” इत्येवमादीनामन्यतमेऽसति। अतः परमात्मेश्वरादी-नामवाक्यप्रमाणत्वम्, पदार्थत्वे च प्रमाणान्तरविषयत्वम्। अतोऽसदेतदिति चेत्?
அனுவாதம்- பூர்வ- அனுஷ்டிக்காவிடில் வாக்கிய பிரமாணத்திற்கு விஷயமாகாது எனில் அனுஷ்டிப்பது என்பது இல்லாவிடில் பதங்கள் ஒன்று சேருவது சம்பவிக்காது. அனுஷ்டானமாய் இருக்கும்பொழுது அதைப் பிரகாசப்படுத்துவதற்காக பதங்கள் ஒன்றுபடுகின்றன. அப்பொழுது இதை இவ்வாறு செய்யவேண்டும் என்று அனுஷ்டிப்பதை குறிக்கும் வாக்கியம் பிரமாணம் ஆகிறது. (குர்யாத் கிரியேத கர்தவ்யம், பவேத், ஸ்யாத் எனும் இந்த ஐந்தும் விதியைப் பற்றிக் கூறும் க்ரியாபதங்கள். இந்த க்ரியாபதங்களால் எதனோடும் சேராது என்பதால், இதனால், இவ்வாறு என்று நூ ற்றுக்கணக்கான பதங்கள் இணைந்தாலும் அது வாக்கியமாகாது. ஆகையால் பரமாத்மா ஈஸ்வரன் முதலியவைகளுக்கு அவாக்கிய பிரமாணத்துவமும் பதார்த்தமாய் இருந்தால் (வேறு) அன்ய பிரமாணத்திற்கு விஷயமாகும். ஆகையால் இது அசத் என்பது (பொருந்தாது) எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न“अस्ति मेरुर्वर्णचतुष्टयोपेतः”इत्येवमाद्यननुष्द्भेयेऽपि वाक्यदर्शनात्। न च“मेरुर्वर्णचतुष्टयोपेतः”इत्येवमादिवाक्यश्रवणे मेर्वादावनुष्द्भेयत्वबुद्धिरुत्पद्यते। तथा अस्तिपदसहितानां परमात्मेश्वरादिप्रतिपादकवाक्यपदानां विशेषणविशेष्यभावेन संहतिः केन वार्यते।
அனுவாதம்-ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல“अस्ति,मेरुर्वर्णचतुष्टयोपेतः” (அஸ்தி மேருர்வர்ண-சதுஷ்ட்டயோபேதः = மேரூவானது நான்கு வர்ணங்கள் உடையது) முதலிய வாக்கியங்களில் அனுஷ்டேயம் இல்லாவிடினும் வாக்கியம் காணப்படுகிறது.“मेरुर्वर्णचतुष्टयोपेतः” என்பது முதலிய வாக்கியங்களைக் கேட்பதால் மேரு முதலியவைகளில் அனுஷ்டேய புத்தி உண்டாவதில்லை. பரமாத்மா ஈஸ்வரன் முதலியவைகளை பிரதிபாதனம் செய்யும் வாக்கியங்களின் பதங்களுக்கு விேசஷண, விே†ஷ்ய பாவத்தால், ஒன்றாய் இருப்பதை யார்தான் தடுக்கமுடியும்
भाष्यम् - पूर्व - मेर्वादिज्ञानवत्परमात्मज्ञाने प्रयोजनाभावादयुक्तमिति चेत्?
அனுவாதம்-பூர்வ- மேரு முதலியவைகளின் ஞானம் போல் பரமாத்மா ஞானத்தினால் பிரயோஜனம் இல்லாததால் அவ்வாறு எடுத்துக்கொள்வது பொருந்தாது எனில்?
भाष्यम् - सिद्धान्ती - (ज्ञानवाक्यानां निष्प्रयोजनत्व-परिहारः) न“ब्रह्मविदाप्नोति परम्” (तै० उ० २। १। १)“भिद्यते ह्य्दयग्रन्थिः” (मु० उ० । २। २। २८) इति फलश्रवणात्, संसारबीजाविद्यादिदोषनिवृत्तिदर्शनाच्च। अनन्यशेषत्वाच्च तज्ज्ञान स्य, जुामिव फलश्रुतेरर्थवादत्वानुपपत्तिः।
அனுவாதம்-ஸித்தாந்தீ- அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன்எனில்“ब्रह्मविदाप्नोति परम्” (பிரஹ்ம விதாப்னோதி பரம்) என்றும்“भिद्यते ह्य्दयग्रन्थिः” (பித்யதே ஹ்ருதய கிரந்தி:) என்றும் பலத்தை (சுருதி) மூலமாய் கேட்கப்பட்டதாலும், ஸம்ஸாரபீஜமாகிய அவித்யா முதலிய தோஷங்களின் நிவிர்த்தி காணப்படுவதாலும், பரமாத்மா ஞானம் வேறு எந்த ஒரு கர்மத்தின் சேஷ (அங்க)மாக ஜுஹு (என்ற) கர்மத்தின் பல சுருதி போல் அர்த்தவாதம் சம்பவிக்காது.
भाष्यम् - प्रतिषिद्धानिष्टफलसम्बन्धश्च वेदादेव विज्ञायते। न चानुष्द्भेयः सः। न च प्रतिषिद्धविषये प्रवृत्तक्रियस्य अकरणादन्यदनुष्द्भेयमस्ति। अकर्तव्यताज्ञाननिष्द्भतैव हि परमार्थतः प्रतिषेधविधीनां स्यात्। क्षुधार्तस्य प्रतिषेधज्ञानसंस्कृतस्य अभक्ष्येऽभोज्ये वा प्रत्युपस्थिते कलञ्जाभिशस्तान्नादौ“इदं भक्ष्यमदो भोज्यम्” इति वा ज्ञानमुत्पन्नम्, तद्विषयया प्रतिषेधज्ञानस्मृत्या बाध्यते। मृगतृष्णिकायामिव पेयज्ञानं तद्विषय-याथात्म्यविज्ञानेन। तस्मिन्बाधिते स्वाभाविकविपरीतज्ञानेऽनर्थकरी तद्भक्षणभोजनप्रवृत्तिर्न भवति। विपरीत ज्ञाननिमित्तायाः प्रवृत्तेर्निवृत्तिरेव, न पुनर्यत्नःकार्यस्तदभावे। तस्मात् प्रतिषेधविधीनां वस्तुयाथात्म्यज्ञाननिष्द्भतैव, न पुरुषव्यापार-निष्द्भतागन्धोऽप्यस्ति।
அனுவாதம்- நிஷேதிக்கப்பட்ட அநிஷ்ட பல சம்பந்தமானதை வேதத்திலிருந்தே அறியப்படுகிறது. அதை அனுஷ்டிக்கக்கூடாது. நிஷித்த விஷயத்தில் ப்ரவிருத்தி கிரியையானது செய்யக்கூடாததாய் இருப்பதால் வேறு ஒன்றும் அனுஷ்டிப்பதற்கு இல்லை. அவ்வாறு பிரதிசித்த (நிஷேத) விஷயத்தில் ப்ரவர்த்திக்கும் கிரியையை செய்யாததால் (அனுஷ்டிக்காததால்) வேறு அனுஷ்டானம் இருக்கிறது என்றால் இல்லை. பிரதிஷேத ஞானத்தால் சம்ஸ்காரம் அடைந்த பசியினால் சாப்பிடக்கூடாத, சாப்பிட்டு அனுபவிக்கக்கூடாத மாமிசம், பிரஹ்மஹத்தி தோஷமுடைய சாப்பாடு முதலியவைகள் தம்முன் இருக்கும்பொழுது சாப்பிடவேண்டும் என்ற ஞானம் தோன்றினாலும் அதில் பிரதிஷேத (நிஷித்த) ஞானத்தின் நினைவால் அதை சாப்பிட வேண்டும் என்ற செயல் தடுக்கப்படுகிறது. எவ்வாறு எனில் கானல்நீரில் உண்மையான தண்ணீர் இருப்பதாக உள்ள ஞானம் அதன் யதார்த்த ஸ்வரூபம் தெரிந்த உடன் எவ்வாறு மறைகிறதோ அவ்வாறு ஆகும். அந்த அநர்த்தத்தை உண்டாக்கும் ஸ்வாபாவிகமான விபரீத ஞானம் பாதிக்கப்படும்பொழுது அதை சாப்பிடுவதற்கோ அனுபவிப்பதற்கோ உள்ள ப்ரவ்ருத்தியானது உண்டாகாது. விபரீதஞான நிமித்தத்தின் ப்ரவ்ருத்தியானது நிவர்த்தியாகிறது. அது அபாவமாய் இருப்பதால் முயற்சி செய்யமுடியாது. ஆகையால் பிரதிஷேத விதிகளுக்கு வஸ்து யாதாத்மிய ஞானநிஷ்டையே ஆகும். புருஷ வியாபார நிஷ்டையானது வாசனைக்காககூட இல்லை.
भाष्यम् - तथेहापि परमात्मादियाथात्म्यज्ञानविधीनां तावन्मात्रपर्यवसानतैव स्यात्। तथा तद्विज्ञानसंस्कृतस्य तद्विपरीतार्थज्ञाननिमित्तानां प्रवृत्तीनामनर्थार्थत्वेन ज्ञायमानत्वात् परमात्मादियाथात्म्यज्ञानस्मृत्या स्वाभाविके तन्निमित्तविज्ञाने बाधितेऽभावः स्यात्।
அனுவாதம்- அவ்வாறே இங்கும் பரமாத்மா முதலியவற்றின் ஸ்வரூப ஞானவிதிகளுக்குக்கான தாத்பரியம் அவ்வளவு மாத்திரமேயாகும். அவ்வாறு அந்த விக்ஞானத்தால் சம்ஸ்காரம் அடைந்தவனுக்கு அந்த விபரீத அர்த்தஞான நிமித்தமான ப்ரவ்ருத்திகள் அநர்த்தமாய் அறியப்படுவதால் பரமாத்மா முதலிய ஸ்வரூபஞான ஸ்ம்ருதியினால் (ஞாபகத்தால்) ஸ்வாபாவமான ப்ரவ்ருத்தி விஷயமான ஞானம் பாதிக்கப்படுவதால் ப்ரவ்ருத்திக்கு அபாவம் ஏற்படும்.
भाष्यम्- पूर्व - ननु कलञ्जादिभक्षणादेरनर्थार्थत्व-वस्तुयाथात्म्यज्ञानस्मृत्या स्वाभाविके तद्भक्ष्यत्वादिविषय-विपरीतज्ञाने निवर्तिते तद्भक्षणाद्यनर्थप्रवृत्त्यभाववदप्रतिषेध-विषयत्वाच्छास्त्रविहितप्रवृत्त्यभावो न युक्त इति चेत्।
அனுவாதம்-பூர்வ- ஆனால் மாமிச பக்ஷணம் முதலிய அநர்த்த பதார்த்தங்களின் யதாத்ம்ய ஞானத்தின் ஸ்ம்ருதியால் அதை உண்ணுதல் முதலிய விஷயங்களில் உள்ள அதன் ஸ்வாபாவிகமான விபரீத ஞானம் நீங்கி அதை சாப்பிடுதல் முதலியவைகளில் ப்ரவ்ருத்தி இல்லாததுபோல் ப்ரதிஷேதம் (நீக்கம்) செய்யமுடியாத விஷயத்தில் சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட ப்ரவ்ருத்தியின் அபாவம் பொருந்தாது எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, विपरीतज्ञाननिमित्त-त्वानर्थार्थत्वाभ्यां तुल्यत्वात्। कलञ्जभक्षणादिप्रवृत्तेः मिथ्याज्ञाननिमित्तत्वम्। अनर्थार्थत्वं च यथा, तथा शास्त्रविहितप्रवृत्तीनामपि। तस्मात् परमात्मयाथात्म्यविज्ञानवतः शास्त्रविहितप्रवृत्तीनामपि मिथ्याज्ञाननिमित्तत्वेन अनर्थार्थत्वेन च तुल्यत्वात् परमात्मज्ञानेन विपरीतज्ञाने निवर्तिते, युक्त एवाभावः।
அனுவாதம்-ஸித்தாந்தீ- அவ்வாறல்ல. ஏன்எனில் விபரீத ஞானத்தின் காரணத்தால் அனர்த்தமும் அர்த்தமும் சமானமாகும். மாமிசம் முதலியவை உண்பதில் ப்ரவ்ருத்திப்பது மித்யா ஞான நிமித்தத்தாலாகும். அநர்த்தம் அர்த்தம் எவ்வாறோ அவ்வாறானதே சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட ப்ரவ்ருத்திகளிலும். மித்யாஞான நிமித்தத்தால் அநர்த்தம் அர்த்தம் இரண்டும் சமமாய் இருப்பதால் பரமார்த்த ஞானத்தால் விபரீத ஞானத்தை நிவர்த்தி செய்து தானும் அபாவமாகிறது என்பது பொருத்தமேயாகும்.
भाष्यम् - पूर्व - ननु तत्र युक्तः, नित्यानां तु केवलशास्त्रनिमित्तत्वात्, अनर्थार्थत्वाभावाच्चाभावो न युक्त इति चेत्?
அனுவாதம்-பூர்வ- இங்கு அபாவம் ஆவது உசிதமே. நித்யகர்மங்களை தியாகம் செய்வது உசிதமல்ல. ஏன்எனில் அவை சாஸ்திரங்களால் விதிக்கப்பட்டது. எவ்வகையிலும் அநர்த்தத்தை உண்டுபண்ணுவது இல்லை என்று கூறினால்-
भाष्यम् - सिद्धान्ती - न, अविद्यारागद्वेषादिदोषवतो विहितत्वात्। यथा स्वर्गकामादिदोषवतो दर्शपूर्णमासादीनि कम्यानि कर्माणि विहितानि तथा सर्वानर्थबीजाविद्यादिदोषवतः तज्जनितेष्टानिष्टप्राप्तिपरिहाररागद्वेषादिदोषवतश्च तत्प्रेरिता-विशेषप्रवृत्तेरिष्टानिष्टप्राप्तिपरिहारार्थिनो नित्यानि कर्माणि विधीयन्ते, न केवलं शास्त्रनिमित्तान्येव।
அனுவாதம்-ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. அவித்யா ராகத்வேஷம் முதலிய தோஷம் உடையவர்களுக்கே விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே ஸ்வர்ககாம முதலிய தோஷங்களுடன் கூடியவர்களுக்கே தர்சபூர்ணமாச முதலிய காம்ய கர்மங்கள் விதிக்கப்பட்டது. அவ்வாறே எல்லா அநர்த்தங்களுக்கும் பீஜமாக உள்ள அவித்யை முதலிய தோஷமுடையவனுக்கு அதனால் உண்டாகும் இஷ்டப்ராப்தியும், அநிஷ்ட பரிஹாரமும் ஆகிய ராகத்வேஷம் உடையவர்களுக்கு அதனால் ப்ரேரிக்கப்பட்ட (தூண்டப்பட்ட) இஷ்டப்ராப்தி, அநிஷ்ட நிவர்த்தியாகிய இவைகளை விரும்புபவர்களுக்கு நித்திய கர்மங்கள் விதிக்கப்பட்டது. இவை சாஸ்திர நிமித்தத்தால் மட்டும் அல்ல.
भाष्यम् - न चाग्निहोत्रदर्शपूर्णमासचातुर्मास्य-पशुबन्धसोमानां कर्मणां स्वतः काम्यनित्यत्वविवेकोऽस्ति। कर्तृगतेन हि स्वर्गादिकामदोषेण कामार्थता। तथा अविद्यादिदोषवतः स्वभावप्राप्तेष्टानिष्टप्राप्तिपरिहारार्थिनः, तदर्थान्येव नित्यानि इति युक्तम्, तं प्रति विहितत्वात्।
அனுவாதம்- அக்னிஹோத்ரம் தர்சபூர்ணமாசம், சாதுர்மாஸ்யம், பசு சம்பந்தப்பட்ட சோமயாகம் ஆகிய கர்மங்களுக்கு இயற்கையாகவே காம்யத்துவம், நித்யத்துவம் என்ற விவேகம் கிடையாது. கர்த்தாவின் ஸ்வர்கம் முதலியவைகளின் சம்பந்தமான காமதோஷத்தால் காமம் உடையவர்களாய் ஆகின்றார்கள். அவ்வாறு அவித்யா தோஷம் உடையவர்களாய் ஸ்வபாவமாய் இஷ்டப்ராப்தி, அநிஷ்ட நிவ்ருத்தியில் விருப்பம் உள்ளவர்களுக்காக நித்யகர்மங்கள் விதிக்கப்பட்டதால் அது அவர்களுக்கு பொருந்தும்.
भाष्यम् - न परमात्मयाथात्म्य विज्ञानवतः शमोपाय-व्यतिरेकेण कििञ्चत्कर्म विहितमुपलभ्यते। कर्मनिमित्तदेवतादि-सर्वसाधनविज्ञानोपमर्देन ह्यात्मज्ञानं विधीयते, न चोपमर्दित-क्रियाकारकादिविज्ञानस्य कर्मप्रवृत्तिरुपपद्यते। विशिष्टक्रिया-साधनादिज्ञानपूर्वकत्वात्क्रियाप्रवृत्तेः। न हि देशकालाद्यनवच्छिन्ना-स्थूलाद्वयादिब्रह्मप्रत्ययधारिणः कर्मावसरोऽस्ति।
அனுவாதம்- பரமாத்மாவின் யாதாத்ம்ய (உண்மையான) ஞானம் உடையவனுக்கு சமம் முதலியவைகளை சாதனை செய்வதைத்விர சிறிதும் கர்மம் செய்யவேண்டும் என்பது காணப்படவில்லை. கர்ம நிமித்தமான தேவதை முதலிய எல்லா சாதனங்களை நிவர்த்தி செய்து ஆத்மஞானம் அடையப்படுகிறது. நிவர்த்தியான கிரியாகாரக முதலியவைகளின் விக்ஞானத்தால் கர்மத்தில் ப்ரவ்ருத்தி ஸம்பவிக்காது. கிரியைகளின் ப்ரவ்ருத்தியோ சிறப்பான கிரியா சாதனம் முதலிய ஞான பூர்வகமாய் இருப்பதால் ஆகும். தேச காலங்களால் அவச்சின்னமாகாததும், ஸ்தூல சரீரம் அற்றதும் அத்வைத ரூபமானதும் ஆன பிரஹ்ம பிரத்யயத்திலேயே தாரணை உடையவர்களுக்கு கர்மமே வேண்டியதில்லை.
भाष्यम् - पूर्व - भोजनादिप्रवृत्त्यवसरवत्स्यादिति चेत्?
அனுவாதம்-பூர்வ- போஜனம் முதலிய ப்ரவ்ருத்தி போல் இருக்கலாமே எனில்?
भाष्यम्- सिद्धान्ती - न, अविद्यादिकेवलदोष-निमित्तत्वाद्भोजनादिप्रवृत्तेरावश्यकत्वानुपपत्तेः। न तु तथानियतं कदाचित्क्रियते कदाचिन्न क्रियते चेति नित्यं कर्मोपपद्यते। केवलदोषनिमित्तत्वात्तु भोजनादिकर्मणोऽनियतत्वं स्यात्। दोषोद्भवाभिभवयोरनियतत्वात् कामानामिव काम्येषु शास्त्रनिमित्तकालाद्यपेक्षत्वाच्च नित्यानामनियतत्वानुपपत्तिः। दोषनिमित्तत्वे सत्यपि यथाकाम्याग्निहोत्रस्य शास्त्रविहितत्वात् सायंप्रातःकालाद्यपेक्षत्वमेवम्।
அனுவாதம்-ஸித்தாந்தீ- அவ்வாறு இல்லை. ஏன் எனில் போஜனம் முதலியவைகளில் ப்ரவ்ருத்தி ஆவதற்கான அவசியம் அவித்யை முதலிய தோஷத்தால் மட்டுமே என்பது பொருந்தாது, இதைத்தவிர (போஜனாதிகளைப் போல்) ஒரு சமயம் செய்வதும், ஒரு சமயம் செய்யாமல் இருப்பதும் நித்ய கர்மாவிற்கு நியமம் பொருந்தாது. போஜனாதி கர்மம் (பசிமுதலிய) தோஷத்தால் மட்டுமே ஏற்படுகிறது. ஆகையால் அது நியமம் அற்றதாகிறது. ஏன் எனில் காம்ய விஷயங்களில் தோன்றும் இச்சைபோல் அந்த தோஷங்களின் உத்பத்தியும், நிவிர்த்தியும் நியமம் அற்றது. ஆனால் நித்யகர்மாவானது சாஸ்திரத்தில் உள்ள காலம் முதலியவைகளை அபேக்ஷிப்பதால் நித்யகர்மாவிற்கு நியமம் இல்லை என்பது இல்லை. எவ்வாறு காமிய அக்னிஹோத்ரம் முதலியவைகளுக்கு சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டதால் சாயங்காலம், காலை முதலியவைகளின் அபேக்ஷை உள்ளதோ. அவ்வாறு தோஷத்தின் நிமித்தமாய் இருந்தாலும் நித்ய கர்மாக்களுக்கு நியமத்தின் அபேக்ஷை உள்ளது.
भाष्यम्- पूर्व- तद्भोजनादिप्रवृत्तौ नियमवत्स्यादिति चेत्?
அனுவாதம்-பூர்வ- அந்த போஜனம் முதலிய ப்ரவ்ருத்திகளிலும் (அந்த) நியமம்போல் இருக்கலாமே எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, नियमस्याक्रियात्वात् क्रियायाश्चाप्रयोजकत्वान्नासौ ज्ञानस्यापवादकरः। तस्मात् परमात्मयाथात्म्यज्ञानविधेरपि तद्विपरीतस्थूलद्वैतादिज्ञान-निवर्तकत्वात् सामार्थ्यात्सर्वकर्मप्रतिषेधविध्यर्थत्वं सम्पद्यते, कर्मप्रवृत्त्यभावस्य तुल्यत्वाद् यथा प्रतिषेधविषये। तस्मात् प्रतिषेधविधिवच्च वस्तुृृप्रतिपादनं तत्परत्वं च सिद्धं शास्त्रस्य।
அனுவாதம்-ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல, ஏனெனில் நியமம் ஆனது கிரியாரூபம் அல்ல. மேலும் கர்மமானது பிரயோஜகமும் (ஞானமும்) அல்ல. அதனால் அது (பிக்ஷாடனாதி நியமம்) ஞானத்தைப் போக்குவது அல்ல. ஆகையால் பரமாத்மஸ்வரூப ஞானத்தால் சம்பந்தமுடைய (தத்துவமஸி முதலிய) விதியும், அதைவிட விபரீதமான ஸ்தூலம், மற்றும் துவைதம் முதலிய ஞானத்தை நிவர்த்தி செய்யும் தன்னுடைய சாமர்த்தியத்தால் எல்லாவகையிலும் கர்மத்தை நிஷேதம் செய்கிறது. எவ்வாறு ப்ரதிஷேத விஷயத்தில் கர்மப்ரவ்ருத்தி இல்லாதது போல் ஆகும். ஆகையால் ப்ரதிஷேதவிதியைப்போல் வஸ்து பிரதிபாதனமும், அவ்வாறே கர்மநிஷேதமும் சாஸ்திரத்தினால் சித்திக்கின்றது.
ते ह वाचमूचुस्त्वं न उद्गायेति तथेति तेभ्यो वागुदगायत्। यो वाचि भोगस्तं देवेभ्य आगायद्यत् कल्याणं वदति तदात्मने। ते विदुरनेन वै न उद्गात्रात्येष्यन्तीति तमभिद्रुत्य पाप्मनाविध्यन्स यः स पाप्मा यदेवेदमप्रतिरूपं वदति स एव स पाप्मा।। २।।
மந்த்ரார்த்தம் --அந்த தேவதைகள் வாக்கிடம் “நீங்கள் எங்களுக்காக உத்கானம் செய்யுங்கள்” என்று கூறின. வாக் ஆனது மிகவும் நன்றி என்று கூறி அவர்களுக்காக உத்கானம் செய்தது. தன்னுடைய வாணியை உபயோகித்து தேவதைகளுக்காக கானம் செய்தது. மேலும் சுபமாய் பேசி தனக்காகவும் கானம் செய்தது. அப்பொழுது அசுரர்கள் இந்த உத்காதாவினால் நம்மை தேவர்கள் ஜெயித்துவிடுவார்கள் என்று நினைத்தார்கள். ஆகையால் அவர்கள் வாக்கிடம் சென்று பாபத்துடன் கூடியதாய் செய்தார்கள். அந்த வாக் நிஷித்தமாய் பாஷணம் செய்தது. அதுவே பாபமாகும். அதுவே பாபமாகும்.
भाष्यम्- ते देवा हैवं विनििश्चत्य, वाचं वागभिमानिनीं देवतामूचुरुक्तवन्तः। त्वं नोऽस्मभ्यमुद्गायौद्गात्रं कर्म कुरुष्व। वाग्देवतानिर्वर्त्त्यमौद्गात्रं कर्म दृष्टवन्तः, तामेव च देवतां जपमन्त्राभिधेयाम्“असतो मा सद्गमय” (बृ० उ० १। ३। २८) इति अत्र चोपासनायाः कर्मणश्च कर्तृत्वेन वागादय एव विवक्ष्यन्ते। कस्मात्? यस्मात्परमार्थतस्तत्कर्तृकस्तद्विषय एव च सर्वो ज्ञानकर्मसंव्यवहारः। वक्ष्यति हि“ध्यायतीव लेलायतीव” इत्यात्मकर्तृकत्वाभावं विस्तरतः षष्द्भे।
அனுவாதம்- அந்த தேவர்கள் இவ்வாறு நிச்சயம் செய்து வாக் அபிமானி தேவதையாகிய வாக்கை நோக்கி இவ்வாறு கூறினார்கள். நீ எங்களின் பொருட்டு உத்கீதம் செய்து ஔத்காத்ரம் கர்மம் செய் (என்று கூறினார்கள்). அவர்கள் ஔத்காத்ர கர்மாவை வாக்தேவதை மூலமாக அடையவேண்டிய தகுதியைப் பார்த்தார்கள்.“असतो मा सद्गमय” (அசதோ மா சத்கமய = அசத்திலிருந்து என்னை சத்தை அடையச் செய்) என்ற ஜபமந்திரத்தின் குறிப்பை (அபிதேயத்தை) அறிந்து கொண்டார்கள். இங்கு வாக் முதலியவைகள் உபாசனைக்கும், கர்மாவிற்கும் கர்த்தாவாக விளக்கப்பட்டுள்ளது. எதனால்? ஞானம், கர்ம சம்பந்தமான வியவஹாரங்கள் எல்லாம் அதிலிருந்தே (வாக்கிலிருந்தே) உண்டாகிறது. மேலும் அதன் விஷயமாகவே இருக்கின்றது.“ध्यायतीव लेलायतीव” (த்யாயதீவ, லேலாயதீவ) என்று ஆத்மாவிற்கு கர்த்ருத்துவத்தின் அபாவத்தை மேலே விஸ்தாரமாய் கூறப்போகிறார்.
भाष्यम् - इहापि चाध्यायान्ते उपसंहरिष्यति अव्याकृतादिक्रियाकारकफलजातम्“त्रयं वा इदं नाम रूपं कर्म” इति अविद्याविषयम्। अव्याकृतात्तु यत्परं परमात्माख्यं विद्याविषयम् अनामरूपकर्मात्मकम्“नेति नेति”(२। ३। ६) इति इतरप्रत्याख्यानेनोपसंहरिष्यति पृथक्। यस्तु वागादि-समाहारोपाधिपरिकल्पितः संसार्यात्मा तं च वागादिसमाहार-पक्षपातिनमेव दर्शयिष्यति“एतेभ्यो भूतेभ्यः समुत्थाय तान्येवानुविनश्यति” (२।४।२२) इति। तस्माद्युक्ता वागादीनामेव ज्ञानकर्मकर्तृत्वफलप्राप्तिविवक्षा।
அனுவாதம்- இங்கும் அத்யாயத்தின் முடிவில்“त्रयं वा इदं नाम रूपं कर्म” (த்ரயம் வா இதம் நாம ரூப கர்ம) என்ற வாக்கிய மூலம் அவ்யாக்ருதம் முதலிய கிரியா, காரகம், உண்டான பலம் ஆகியவை அவித்யா விஷயம் என்று இவ்வாறு சுருதி உபசம்ஹாரம் செய்யப்போகிறது. அவ்யாக்ருதத்திலிருந்து மேலே கூறப்போவது நாமம், ரூபம், கர்மம் அற்ற பரமாத்மா எனப்படும் வித்யா விஷயமாகும். அதை“नेति नेति” என்ற வாக்கிய மூலமாய் பரமாத்மாவைத் தவிர மற்ற அநாத்மா விஷயங்களை நிராகரித்து அதை தனியாக உபசம்ஹாரம் செய்யப்போகிறது. மேலும் எந்த வாக் முதலிய சங்காதரூப உபாதியினால் கல்பிக்கப்பட்ட சம்சாரீ ஆத்மா இருக்கிறதோ அதை“एतेभ्यो भूतेभ्यः समुत्थाय तान्येवानुविनश्यति” (ஏதேப்ய: பூதேப்ய: சமுத்தாய தான்யே - வானுவினஷ்யதி = இந்த பூதங்களுடன் உண்டாகி அதன் நாசத்துடன் அதுவும் நாசமாகின்றது) என்ற இந்த வாக்யம் மூலமாய் வாக் முதலிய சங்காதத்தின் சார்புத்தன்மை காண்பிக்கப்படுகிறது. ஆகையால் வாக் முதலியவைகளுக்கே ஞானகர்ம கர்த்ருத்துவ பல பிராப்தி உண்டாகிறது என்று விளக்கப்பட்டது பொருத்தமே.
भाष्यम्- तथेति तथास्त्विति देवैरुक्ता वाक्तेभ्योऽ-र्थिभ्योऽर्थाय उदगायदुद्गानं कृतवती। कः पुनरसौ देवेभ्योऽर्थाय उद्गानकर्मणा वाचा निर्वर्तितः कार्यविशेषः? इत्युच्यते यो वाचि निमित्तभूतायां वागादिसमुदायस्य य उपकारो निष्पद्यते वदनादिव्यापारेण, स एव। सर्वेषां ह्यसौ वाग्वदनाभिनिर्वृत्तो भोगः फलम्।
அனுவாதம்- இவ்வாறு தேவதைகள் கூறியதை அறிந்து வாக் ஆனது அவ்வாறே என்று கூறி பிரார்த்தனை செய்தவர்களின் பொருட்டு உத்கானம் செய்தது. மேலும் அந்த வேண்டிக்கொண்ட தேவதைகளுக்காக உத்கானத்தை வாக்கினால் செய்ததினால் என்ன விசேஷம்? என்று கூறப்படுகிறது- எந்த வாக்கின் நிமித்தமாகக்கொண்டு வாக் முதலிய சமுதாயத்தால் பேசப்படும் செயலால் என்ன உபஹாரம் கிடைக்குமோ அதுவே அதன் காரிய விசேஷம். எல்லோருக்கும் வாக்கின் பேசுதல் (பாடுதல்) முதலியவைகளால் போகரூப பலன் அடையப்படுகிறது.
भाष्यम् - तं भोगं सा त्रिषु पवमानेषु कृत्वा अवशिष्टेषु नवसु स्तोत्रेषु वाचनिकमार्त्विज्यं फलं यत्कल्याणं शोभनं वदति वर्णानभिनिर्वर्तयति तद् आत्मने मह्यमेव। तसाधारणं वाग्देवतायाः कर्म यत्सम्यग्वर्णानामुच्चारणम्। अतस्तदेव विशेष्यते यत्कल्याणं वदतीति। यत्तु वदनकार्यं सर्वसंघातोपकारात्मकं तद्याजमानमेव।
அனுவாதம்- அந்த (வாக்) மூன்று பவமான ஸ்தோத்திரத்தால் அந்த போகத்தை செய்து அதன்பின் மீதமுள்ள ஒன்பது ஸ்தோத்திரங்களால் வாசனிக பலம் அதாவது மங்களகரமான அழகிய பாஷணத்தால் (பேச்சால்) வர்ணங்களை (அக்ஷரங்களை) உச்சாரணம் செய்து அது எனக்காக என்று கானம் செய்தது. வர்ணங்களின் சரியான உச்சாரணமே வாக் தேவதையின் அசாதாரண செயலாகும்.ஆகையால்“यत्कल्याणं वदति” (யத்கல்யாணம் வததி = எது கல்யாணத்தை கூறுகிறதோ) என்ற வாக்கியத்தால் அதன் விசேஷ ரூபத்தைக் காண்பிக்கிறது. அவ்வாறே அது எல்லா சங்காதங்களுக்கும் உபகாரமாய் இருக்கும்वदनकायर्ं (பாஷண காரியம்) உள்ளதோ அது யஜமானனுக்கு சம்பந்தப்பட்டதேயாகும்.
भाष्यम्- तत्र कल्याणवदनात्मसम्बन्धासङ्गावसरं देवताया रन्ध्रं प्रतिलभ्य ते विदुरसुराः कथम्? अनेनोद्गात्रा नोऽस्मा-न्स्वाभाविकं ज्ञानं कर्म चाभिभूयातीत्य शास्त्रजनितकर्मज्ञानरूपेण ज्योतिषोद्गात्रात्मना अत्येष्यन्त्यतिगमिष्यन्ति। इत्येवं विज्ञाय तमुद्गातारमभिद्रुत्याभिगम्य स्वेन आसङ्गलक्षणेन पाप्मना-विध्यंस्ताडितवन्तः संयोजितवन्तः इत्यर्थः।
அனுவாதம்- அப்பொழுது கல்யாண (மங்கள) வசனங்கள் என்னுடன் சம்பந்தமுள்ளது என்ற இவ்வாறான பற்றுடன் ஈடுபட்டிருந்த வாக் தேவதையின்रन्ध्रं அதாவது அதில் உள்ள குறையை அசுரர்கள் அறிந்து கொண்டார்கள். எவ்வாறு? இந்த உத்கான கர்மத்தின் மூலம் தன்னுடைய ஸ்வபாவமான ஞானமும் கர்மும் தடைபட்டு சாஸ்திரத்தினால் உண்டான கர்மஞானரூப ஜோதியால் நாங்கள் அதை பொருட்படுத்தாமல் இருப்போம். இவ்வாறு அறிந்து அந்த உத்காதாவிடம் சென்று தங்கள் அபிநிவேச (பற்று) வடிவ பாபத்தை அடைந்தார்கள்.
भाष्यम् - स यः स पाप्मा प्रजापतेः पूर्वजन्मावस्थस्य वाचि क्षिप्तः स एष प्रत्यक्षीक्रियते। कोऽसौ? यदेवेदमप्रतिरूपमननुरूपं शास्त्रप्रतिषिद्धं वदति येन प्रयुक्तोऽसभ्यबीभत्सानृताद्यनिच्छन्नपि वदति। अनेन कार्येणाप्रतिरूपवदनेन अनुगम्यमानः प्रजापतेः कार्यभूतासु प्रजासु वाचि वर्तते। स एवाप्रतिरूपवदनेनानुमितः स प्रजापतेर्वाचि गतः पाप्मा, कारणानुविधायि हि कार्यमिति।
அனுவாதம்- அந்த பூர்வஜன்மத்தில் இருந்த பாபமானது பிரஜாபதியின் வாக்கில் விழுந்தது. அது இப்பொழுது பிரத்யக்ஷமாய் விளங்குகிறது. அது எது? எந்த ஒன்றானது சாஸ்திரத்திற்கு விரோதமாயும், அதை அனுசரிக்காததுமாய் சாஸ்திரத்தால் நிஷேதம் செய்யப்பட்டவைகளை அது பாஷணம் (பேசுதல்) செய்கிறது. அதனால் பிரேரிக்கப்பட்டு (தூண்டப்பட்டு) அது பிரியப்படாவிட்டாலும் தவறானதும், பயம் பொருந்தியதும், பொய்யானதுமான பேச்சினால் பொருத்தமற்றதாகி அந்த பாபமானது பிரஜாபதியின் காரிய பூதமாகிய பிரஜைகளின் வாக்கில் விளங்குகிறது. பிரஜாபதியின் வாக்கில் புகுந்த பாபத்தின் அனனுரூப பேச்சால் அனுமானிக்கப்படுகிறது. ஏன் எனில் காரியமானது காரணத்தை அனுசரிப்பதாகும்.
अथ ह प्राणमूचुस्त्वं न उद्गायेति। तथेति तेभ्यः प्राण उद्गायद्यः प्राणे भोगस्तं देवेभ्य आगायद्यत्कल्याणं जिघ्राति तदात्मने। ते विदुरनेन वै न उद्गात्रात्येष्यन्तीति तमभिद्रुत्य पाप्मनाविध्यन्स यः स पाप्मा यदेवेदमप्रतिरूपं जिघ्राति स एव स पाप्मा।। ३।।
மந்த்ரார்த்தம் --அதன்பின் (தேவதைகள்) அவர்கள் பிராணனிடம்“நீ எங்களுக்காக உத்கானம் செய்” என்று கூறினார்கள். அப்பொழுது பிராணன்“அவ்வாறே செய்கிறேன்” என்று கூறி அவர்களுக்காக உத்கானம் செய்தது. பிராணனிடத்தில் எந்த போகம் உள்ளதோ அதை தேவதைகளுக்காக கானம் செய்தது. எந்த ஒரு மங்களம் உள்ளதோ அதை தன் பொருட்டு கானம் செய்தது. இந்த உத்காதாவின் மூலமாய் நம்மை தேவகணங்கள் ஜெயித்து விடுவார்கள் என்று அசுரர்கள் அறிந்தார்கள். ஆகையால் அவர்கள் தேவதைகள் சமீபம் சென்று அவர்களை பாபத்தில் சேர்த்தார்கள். இந்த ஒவ்வாத ஒன்றை நுகரச் செய்தது எதுவோ அதுவே அந்த பாபம்.
अथ ह चक्षुरूचुस्त्वं न उद्गायेति। तथेति तेभ्यश्चक्षुरुदगायद्यश्चक्षुषि भोगस्तं देवेभ्य आगायद्यत् कल्याणं पश्यति तदात्मने। ते विदुरनेन वै न उद्गात्रात्येष्यन्तीति तमभिद्रुत्य पाप्मनाविध्यन्स यः स पाप्मा यदेवेदमप्रतिरूपं पश्यति स एव स पाप्मा।। ४।।
மந்த்ரார்த்தம் --மேலும் அவர்கள்,“நீ எங்களின் பொருட்டு உத்கானம் செய்” என்று சக்ஷு(கண்) விடம் கூறினார்கள், அப்பொழுது கண்“அவ்வாறே” என்று அவர்களுக்காக உத்கானம் செய்தது. சக்ஷுவிடத்தில் என்ன போகம் இருந்ததோ அதை தேவர்களுக்காக கானம் செய்தது அதில் எந்த ஒரு மங்கல தர்சனம் உள்ளதோ அதைத் தன்பொருட்டு செய்தது. இந்த உத்காதாவின் மூலமாய் தேவர்கள் நம்மை ஜெயித்து விடுவார்கள் என்று அசுரர்கள் அறிந்தார்கள். ஆகையால் அவர்கள் அதனிடம் சென்று அதைப் பாபமுடையதாய் செய்தார்கள். அந்த ஒவ்வாததாக எதைக் கண்டார்களோ அதுவே பாபமாகும்.
अथ ह श्रोत्रमूचुस्त्वं न उद्गायेति तथेति तेभ्यः श्रोत्रमुदगायद्यः श्रोत्रे भोगस्तं देवेभ्य आगायद्यत्कल्याणं श्रृणोतिते विदुरनेन वै न उद्गात्रात्येष्यन्तीति तमभिद्रुत्य पाप्मनाविध्यन्स यः स पाप्मा यदेवेदमप्रतिरूपं श्रृणोति स एव स पाप्मा।। ५।।
மந்த்ரார்த்தம் -- மேலும் அவர்கள் காதை பார்த்து, “நீ எங்களின் பொருட்டு உத்கானம் செய்” என்று கூறினார்கள். ‘அவ்வாறே’ என்று கூறி அவர்களின் பொருட்டு உத்கானம் செய்தது. ஸ்ரோத்திரத்தில் உள்ள போகத்தைத் தேவர்களின் பொருட்டும், தனக்காக மங்களம் (சுபம்) உண்டாக வேண்டும் என்பதற்காகவும் கானம் செய்தது. தேவர்கள் இந்த உத்கானம் மூலமாய் தன்னை ஜெயித்துவிடுவார்கள் என்று அசுரர்கள் அறிந்தார்கள். ஆகையால் அவர்களைக் குறித்து பாபத்தை அசுரர்கள் அடைவிக்கச் செய்தார்கள். அந்த ஒவ்வாததை கேட்ட அதுவே பாபமாகும்.
अथ ह मन ऊचुस्त्वं न उद्गायेति। तथेति तेभ्यो मन उद्गायद्यो मनसि भोगस्तं देवेभ्य आगायद्यत्कल्याणं सङ्कल्पयति तदात्मने। ते विदुरनेन वै न उद्गात्रात्येष्यन्तीति तमभिद्रुत्य पाप्मनाविध्यन्स यः स पाप्मा यदेवेदमप्रतिरूपं सङ्कल्पयति स एव स पाप्मैवमु खल्वेता देवताः पाप्मभिरुपासृजन्नेवमेनाः पाप्मनाविध्यन्।। ६।।
மந்த்ரார்த்தம் -- அதன் பின் மனதைக்குறித்து தேவர்கள், “நீ எங்களுக்காக உத்கானம் செய்ய வேண்டும்” என்று கேட்டார்கள். அவ்வாறே செய்கிறேன் என்று அவர்களுக்காக உத்கானம் செய்தது. மனதில் உள்ள போகத்தை அவர்களுக்காகவும், மங்களத்தையும் தன்னிடத்தில் சங்கல்பம் செய்தது. அதனால் உத்கானத்தால் தேவர்கள் ஜயத்தை அடைவார்கள் என்று அசுரர்கள் அறிந்தார்கள். அதனால் அதனிடம் சென்று அவர்கள் பாபத்தை அடையும்படி செய்தார்கள். அந்த ஒவ்வாத ஸங்கல்பம் எதுவோ அது பாபமாகும். அது பாபமாகும். இவ்வாறு நிச்சயம் செய்யப்பட்டதால் இந்த தேவதைகளுக்கு பாபம் வந்து சேர்ந்தது. இவ்வாறு அசுரர்கள் பாபத்தை அடையச் செய்தார்கள்.
भाष्यम्- तथैव घ्रााणादिदेवता उद्गीथनिर्वर्तकत्वाज्जप-मन्त्रप्रकाश्या उपास्याश्चेति क्रमेण परीक्षितवन्तः। देवानां चैतन्नििश्चतमासीत् वागादिदेवताः क्रमेण परीक्ष्यमाणाः कल्याणविषयविशेषात्मसम्बन्धासङ्गहेतोरासुरपाप्मसंसर्गाद् उद्गीथनिर्वर्तनासमर्थाः। अतोऽनभिधेयाः“असतो मा सद्गमय” इत्यनुपास्याश्च, अशुद्धत्वादितराव्यापकत्वाच्चेति।
அனுவாதம்- அவ்வாறே க்ராணன் (மூக்கு) முதலிய தேவதைகள் உத்கீத கர்மாவிற்கு கர்த்தாவாய் இருப்பதால் ஜபமந்திர மூலமாய் பிரகாசப்படுத்தவும் உபாசிக்கவும் வேண்டியது. இவ்வாறு அறிந்த தேவதைகள் கிரமமாய் அதைப் பரீக்ஷை செய்தார்கள். தேவதைகள் தங்கள் விஷயத்தில் கிரமமாய் பரீக்ஷை செய்து வாக் முதலிய தேவதைகள் மங்கல (நன்மை)த்தின் விஷயத்தில் விசேஷமாய் சம்பந்தப்பட்டதால் அதன் காரணமான ஆசக்தியால் ஆசுரபாபத்தின் சேர்க்கையை அடைந்ததால் உத்கீதகர்மத்தை நிர்வகிப்பதற்கு சாமர்த்தியம் அற்றவர்கள் ஆனார்கள். ஆகவே அசுத்தம் மற்றும் மற்றவரிடத்து அவ்யாபகமாய் இருப்பதால்“असतो मा सद्गमय” (அஸதோ மா ஸத்கமய) அசதோ மா சத்கமய “என்னை அசத்திலிருந்து ஸத்திற்கு அழைத்துச் செல்வாயாக” எனும் மந்திர ஜபத்தினால் விளங்க முடியாததாயும், உபாசனை செய்ய முடியாததாயும் இருக்கின்றது.
भाष्यम् - एवमु खल्वनुक्ता अप्येतास्त्वगादि देवताः कल्याणाकल्याणकार्यदर्शनादेवं वागादिवदेव, एनाः पाप्मनाविध्य-न्पाप्मना विद्धवन्त इति यदुक्तं तत्पाम्पभिरुपासृजन्पाप्मभिः संसर्गं कृतवन्तः इत्येतत्।
அனுவாதம்- இவ்வாறு கூறாவிடினும் சுபம் மற்றும் அசுபமான என இரண்டு விதமான காரியம் காணப்படுவதால் த்வக் முதலிய வேறு தேவகணங்களும் வாக் முதலியவைகளைப் போலவேதான். இவர்களையும் அசுரர்கள் பாபத்துடன் இணைத்தார்கள். முன்பு கூறிய பாபத்துடன் இணைத்தார்கள் என்பதின் தாத்பர்யம் பாபத்தின் சேர்க்கை மூலமாய் அவர்களை பாபம் உடையவர்களாகச் செய்தார்கள்
अव -´ÉÉMÉÉÊnùnäù´ÉiÉÉ ={ÉɺÉÒxÉÉ +Ê{É ¨ÉÞiª´ÉÊiÉMɨÉxÉɪÉÉ-¶É®úhÉÉ& ºÉxiÉÉä näù´ÉÉ& Gò¨ÉähÉ-
அனுவாதம்- அ.கை- வாக்முதலிய தேவதைகள் உபாசனையினாலும் மிருத்யுவை கடப்பதற்கான சஹாயம் அற்றவர்களாக தேவர்கள் கிரமமாய்-
अथ हेममासन्यं प्राणमूचुस्त्वं न उद्गायेति। तथेति तेभ्य एष प्राण उद्गायत्ते विदुरनेन वै न उद्गात्रात्येष्यन्तीति तमभिद्रुत्य पाप्मनाविव्यत्सन्। स यथाश्मानमृत्वा लोष्टो विध्वंसेतैवं हैव विध्वंसमाना विष्वञ्चो विनेशुस्ततो देवा अभवन्परासुराः। भवत्यात्मना परास्य द्विषन्भ्रातृव्यो भवति य एवं वेद।। ७।।
மந்த்ரார்த்தம் -- அதன் பின் தங்கள் முகத்தில் இருக்கும் பிராணனைக்குறித்து “நீ எங்களுக்காக உத்கானம் செய்யவேண்டும்” என்று கேட்டன. ‘அப்படியே ஆகட்டும்’ என்று கூறிக்கொண்டு பிராணன் ஆனது அவர்களின் பொருட்டு உத்கானம் செய்தது. இந்த கானம் மூலமாய் தேவர்கள் நம்மை ஜெயித்து விடுவார்கள் என்று அறிந்தது. ஆகையால் அதன் சமீபம் சென்று பாபத்தை அடைவிக்க விரும்பின. ஆனால் கல்வீசி எறிந்தால் எப்படி மண் சிதறிப்போகுமா அவ்வாறு பிராணனை அடிக்க முடியாமல் சிதறுண்டு போனார்கள். ஆதலால் தேவர்கள் ஜெயித்தார்கள். அசுரர்கள் தோற்றுப்போனார்கள், இவ்வாறு அறிபவன் பிரஜாபதி ஸ்வரூபத்தை அடைகிறான். இவனுடைய விரோதிகளும் தோல்வி அடைகிறார்கள்.
भाष्यम्- अथानन्तरं ह इममित्यभिनयप्रदर्शनार्थम्। आसन्यमास्ये भवमासन्यं मुखान्तर्बिलस्थं प्राणमुचुस्त्वं न उद्गायेति। तथेत्येवं शरणमुपगतेभ्यः स एष प्राणो मुख्य उद्गायदित्यादि पूर्ववत्। पाप्मनाऽविव्यत्सन्वेधनं कर्तुर्मिष्टवन्तस्ते च दोषासंसर्गिणं सन्तं मुख्यं प्राणम्। स्वेन आसङ्गदोषेण वागादिषु लब्धप्रसरास्तदभ्यासानुवृत्त्या संस्रक्ष्यमाणा विनेशुर्विनष्टा विध्वस्ताः।
அனுவாதம்- அதன் பின் “ஹ இமம்”(ह इमम्) எனும் அபிநயத்தைக் காட்டுவதற்காக (விரல்களினால் நேராகக் காட்டுதல்) அவர்आसन्यम् (ஆசன்யம்) என்றால் முகத்தில் இருப்பது. அதாவது முகத்துவாரத்தில் இருக்கின்ற அந்த முக்கியப்பிராணனை குறித்து “நீ எங்களுக்காக உத்கானம் செய்யவேண்டும்” என்று தேவர்கள் கேட்டுக் கொண்டார்கள். தன்னை சரண் அடைந்தவர்களுக்கு அந்த இந்த முக்கியப்பிராணன் ‘அவ்வாறே’ என்று முன்போல் உத்கானம் செய்தது. அந்த அசுரர்கள் தோஷ சங்கமற்று இருக்கும் முக்கியப் பிராணனை பாபத்தை அடையும்படி செய்ய விரும்பினார்கள். வாக் முதலிய தேவதைகளுக்கு தங்களுடைய அபிநிவேச தோஷத்தின் காரணமாக அந்த கதி ஏற்பட்டது. ஆனால் அந்த அப்யாசத்தின் மூலமாய் முக்கியப் பிராணனைக் குறித்து அந்த தோஷத்தை ஏற்படுத்த முயற்சி செய்யும்பொழுது அசுரர்கள் நாசத்தை அடைந்தார்கள்.
भाष्यम्- कथमिव? इति दृष्टान्त उच्यते- स यथा स दृष्टन्तो यथा लोकेऽश्मानं पाषाणमृत्वा गत्वा प्राप्य, लोष्टः पांसुपिण्डः पाषाणचूर्णनायाश्मनि निक्षिप्तः स्वयं विध्वंसेत विस्त्रंसेत विचूर्णीभवेत्, एवं हैव यथायं दृष्टान्त एवमेव, विध्वंसमाना विशेषेण ध्वंसमाना विष्वञ्चो नानागतयो विनेशुर्विनष्टा यतः, ततस्तस्मादासुरविनाशाद्देवत्वप्रतिबन्धभूतेभ्यः स्वाभाविकासङ्गजनितपाप्मभ्यो वियोगाद् असंसर्गधर्मि-मुख्यप्राणाश्रयबलाद् देवा वागादयः प्रकृता अभवन्।
அனுவாதம்- அது எவ்வாறு? என்று திருஷ்டாந்தம் கூறப்படுகிறது. அது எவ்வாறுள்ளதோ அதற்கான திருஷ்டாந்தமானது கூறப்படுகிறது. எவ்வாறு உலகில் பெரிய கல்லை, உடைப்பதற்காக மண்கட்டியானது அந்த கல்லை நாசப்படுத்துவதற்காக பயன்பட்டதோ அது தானே நாசமாய் பொடிப் பொடியாக ஆகிறதோ அந்த திருஷ்டாந்தம் போல் அந்த அசுரகணங்கள் நாசமாகி நாநா கதியை அடைந்து நஷ்டமடைந்தார்கள். ஆகையால் அந்த அசுரர்களின் நாசத்தால் தேவர்களுக்கு இருந்த பிரதிபந்தங்களான ஸ்வாபாவிகமாய் அடைந்த பாபங்கள் நசித்ததால் அசங்கதர்மியான முக்கிய பிராணனை ஆஸ்ரயித்த பலத்தினால் வாக் முதலிய தேவதைகள் முன்போல் ஆனார்கள்.
भाष्यम् - किमभवन्? स्वं देवतारूपमग्न्याद्यात्मकं वक्ष्यमाणम्। पूर्वमप्यग्न्याद्यात्मन एव सन्तः स्वाभाविकेन पाप्मना तिरस्कृतविज्ञानाः पिण्डमात्राभिमाना आसन्। ते तत्पाप्म-वियोगादुज्झित्वा पिण्डमात्राभिमानं शास्त्रसमर्पितवागा-द्यन्याद्यात्माभिमाना बभूवुरित्यर्थः। किञ्च ते प्रतिपक्षभूता असुराः पराभवन्नित्यनुवर्तते। पराभूता विनष्टा इत्यर्थः।
அனுவாதம்- என்ன ஆயிற்று? இனி கூறப்போவது அக்னி முதலிய தேவதைகளின் சுயரூபத்தைக் குறித்ததாகும். முன்பே அக்னி முதலியவைகள் தாங்களாகவே இருந்தனர். ஆனால் ஸ்வாபாவிகமான பாபத்தினால் திரஸ்காரமான விக்ஞானத்தால் தங்களுடைய பிண்டமாத்திரத்திலேயே அபிமானம் உடையவர்களாக இருந்தார்கள். அதன்பின் (முக்கிய பிராணனின் உத்கீதத்தால்) அவர்களிடம் இருந்த அந்த பாபம் நஷ்டமானதினால் பிண்டமாத்திரத்தில் இருந்த அபிமானத்தை விட்டு சாஸ்த்திரத்தில் கூறப்பட்ட வாக் முதலியவைகளும், அக்னி முதலிய தேவதைகளும் ஆத்மா அபிமானத்தை அடைந்தார் என்பது பொருள். மேலும் அந்த பிரதிபக்ஷிகளான அசுரர்கள் தோல்வி அடைந்தவர்களாக ஆனார்கள். அவர்கள் நஷ்டம் அடைந்தார்கள் என்பது பொருள்.
भाष्यम्- यथा पुराकल्पेन वर्णितः पूर्वयजमानोऽति-क्रान्तकालिक एतामेवाख्यायिकारूपां श्रुतिं दृट्वा तेनैव क्रमेण वागादिदेवताः परीक्ष्य, ताश्चापोह्यासङ्गपाप्मास्पददोषवत्त्वेन-दोषास्पदं मुख्यं प्राणमात्मत्वेनोपगम्य वागाद्याध्यात्मिक-पिण्डमात्रपरिच्छिन्नात्माभिमानं हित्वा वैराजपिण्डाभिमानं वागाद्यग्न्याद्यात्मविषयं वर्तमानप्रजापतित्वं शास्त्रप्रकाशितं प्रतिपन्नः, तथैवायं यजमानस्तेनैव विधिना भवति प्रजापतिस्वरूपेणात्मना। परा चास्य प्रजापतित्वप्रतिपक्षभूतः पाप्मा द्विषन्भ्रातृव्यो भवति। यतोऽद्वेष्टापि भवति किश्चद् भ्रातृव्यो भरतादितुल्यः, यस्त्विन्द्रियविषयासङ्गजनितः पाप्मा भ्रातृव्यो द्वेष्टा च, पारमार्थिकात्मस्वरूपतिरस्करणहेतुत्वात्। स च पराभवति विशीर्यते लोष्टवत्प्राणपरिष्वङ्गात्। कस्यैतत्फलम्? इत्याहय एवं वेद। यथोक्तं प्राणमात्मत्वेन प्रतिपद्यते पूर्वयजमानवदित्यर्थः।।
அனுவாதம்- எவ்வாறு முன்கல்பத்தில் வர்ணிக்கப்பட்ட முன்பு இருந்த யஜமானனின் இந்த புராதன கதை ரூபமான சுருதியை அறிந்து அந்த கிரமமாய் வாக் முதலிய தேவதைகளை பரீக்ஷை செய்து அவர்களிடம் அபினிவேசத்தால் உண்டான பாபத்தின் சம்சர்க்க தோஷத்தின் காரணத்தை ஒழித்துவிட்டு அதன் தோஷமற்ற முக்கியப் பிராணனை ஆத்ம (தன்) பாவமாய் அடைந்த ஆத்யாத்மிக பிண்டமாத்திரமாய் பரிச்சின்னமடைந்த வாக் முதலியவைகளில் ஆத்மத்துவ அபிமானத்தை விட்டு வாக் முதலியவைகளின் அக்னி முதலிய ரூபவிஷய சாஸ்த்திரத்தில் தெரிவிக்கப்பட்ட விராட்பிண்ட அபிமானமானது இப்பொழுது உள்ள பிராஜாபத்யத்திற்கு உண்டாயிற்று. அவ்வாறே இப்பொழுது உள்ள யஜமானனும் அந்தக்கிரம ரூபமாய் பிரஜாபதி ரூபமாய் இருக்கிறார். அவ்வாறே இந்த பிரஜாபதியின் பிரதிபக்ஷமாகிய பாபரூபமாகிய துவேஷத்தை செய்பவன் தோல்வியை (பராபவத்தை) அடைவான், பரதன் முதலியவர்கள் போல் துவேஷம் செய்யாதவர்களாகவும் ஆகிறார்கள். ஆனால் அவர்கள் இந்திரிய விஷயங்களில் உள்ள ஆசை (ஆசக்தி)யினால் உண்டாகும் பாபரூபியான எதிரியை துவேஷிக்கிறார்கள். ஏன்எனில் அது ஆத்மாவின் பாரமார்த்திக ரூபத்தை திரஸ்காரம் செய்வதற்கு காரணமாகின்றது. பிராணனுடன் சங்கம் ஏற்பட்டபின் மண்பிண்டம்போல் (பாபமான தோஷமானது) நஷ்டம் ஆகிவிடுகிறது. அந்தபலன் யாருக்கு கிடைக்கிறது எனில்- சுருதி கூறுகின்றது-“य एवं वेद” (ய ஏவம் வேத) என்று. எவன் இவ்வாறு அறிகிறானோ அதாவது அவன் பூர்வ யஜமானனைப்போல் கூறப்பட்டவாறு பிராணனை ஆத்ம ஸ்வரூபமாக அறிகின்றான்.
अव -फलमुपसंह्य्त्याधुनाख्यायिकारूपमेवाश्रित्याह-कस्माच्च हेतोर्वागादीन्मुक्त्वा मुख्य एव प्राण आत्मत्वेनाश्रयितव्यः? इति तदुपपत्तिनिरूपणाय यस्मादयं वागादीनां पिण्डादीनां च साधारण आत्मा, इत्येतमर्थमाख्यायिकया दर्शयन्त्याह श्रुतिः-
அனுவாதம்- அ.கை- பலனை கூறிமுடித்து இப்பொழுது ஆக்யாயிகா (கதை)யின் ரூபத்தை ஆஸ்ரயித்துக் கூறுகிறார்- எந்த காரணத்தால் வாக் முதலியவைகளைத் தவிர்த்து முக்கிய பிராணனை ஆத்மத்துவமாய் ஆஸ்ரயிக்க வேண்டும்? என்று அந்த உபபத்தியை (ஒப்புக்கொள்ளுதலை) நிரூபிப்பதற்காக இந்த வாக் முதலிய பிண்டங்களின் சாதாரண ஆத்மா என்று அதற்காக இந்த கதையை சுருதி விளக்குகிறது.
ते होचुः क्व नु सोऽभूद्यो न इत्थमसक्तेत्ययमास्येऽन्तरिति सोऽयास्य आिङ्गरसोऽङ्गानां हि रसः।। ८।।
மந்த்ரார்த்தம்-அவர்கள் கூறினார்கள், (எதனால் நாங்கள் இவ்வாறு சக்தி அற்றவர்களாய் இருக்கின்றோம். தேவ பாவத்தை அடையவேண்டும் அது எங்கே உள்ளது?) (என்று விசாரம் செய்து நிச்சயித்தார்கள்) அது முகத்தின் உள்ளே இருக்கின்றது. ஆகையால் முகம் (ஆஸ்யம்) அங்கிரஸ் ஆகும். ஏன்எனில் அது அங்கங்களின் ரசமாகும்.
भाष्यम् - ते प्रजापतिप्राणा मुख्येन प्राणेन परिप्रापितदेवस्वरूपा होचुरुक्तवन्तः फलावस्थाः। किम्? इत्याह क्व न्विति वितर्के। क्व नु कस्मिन्नु सोऽभूत्। क:? यो नोऽस्मानित्थमेवमसक्त सिञ्जतवान्देवभावमात्मत्वेनोपगमितवान्। स्मरन्ति हि लोके केनचिदुपकृता उपकारिणम्।
அனுவாதம்- முக்கிய பிராணன் மூலமாய் தேவதா ஸ்வரூபத்தை அடைந்து அவர்கள் பிரஜாபதியின் பல அவஸ்தித ரூபமான பிராணன் கூறலாயிற்று. என்ன கூறிற்று? அது கூறப்படுகிறது.“क्व नु” (க்வ நு) இது விதர்க்க அர்த்தத்தில் உள்ளது. அதாவது அது எதில் இருக்கிறது? அது யார்? நாம் எதில் ரமித்து ஆத்மபாவமாய் தேவத்துவத்தை அடைவிக்கப்பட்டோம். உலகத்தில் எவர் மூலமாவது உபகாரத்தைப் பெற்றவர் உபகாரத்தைச் செய்தவர்களை நினைக்கிறார்கள்.
भाष्यम् - लोकवदेव स्मरन्तो विचार्यमाणाः कार्यकारण-संघाते आत्मन्येवोपलब्धवन्तः। कथम्? अयमास्येऽन्तरिति, आस्ये मुखे य आकाशस्तस्मिन्नन्तरयं प्रत्यक्षो वर्तत इति। सर्वो हि लोको विचार्याध्यवस्यति, तथा देवाः।
அனுவாதம்- உலகத்தார்போல் நினைவுகூர்ந்து விசாரித்து காரியகரண சங்காத ஆத்மாவையே (சரீரத்தையே) அடைந்தார்கள். எவ்வாறு எனில் முகத்தின் உள்ளே ஆகாசம் இருப்பதை பிரத்யக்ஷமாய் உணர்ந்தார்கள் உலகில் எல்லோரும் விசாரம் செய்து நிச்சயித்திருக்கின்றார்கள் அவ்வாறே தேவதைகளும் செய்தார்கள்.
भाष्यम्-यस्मादयमन्तराकाशे वागाद्यात्मत्वेन विशेषमनाश्रित्य वर्तमान उपलब्धो देवैः, तस्मात्स प्राणोऽयास्यो विशेषानाश्रयाच्च असक्त सिञ्चतवान्वागादीन्। अत एवािङ्गरस आत्मा कार्यकरणानाम्।
அனுவாதம்- எதனால் இந்த அந்தராகாசத்தில் வாக்முதலிய ரூபமாய் வேறு விசேஷத்தை ஆஸ்ரயிக்காமல் இருக்கிறது என்று தேவர்கள் அறிந்தார்கள். ஆகையால் பிராணனே முகம் (ஆஸ்யம்) அவ்வாறே வேறு எந்த ஒரு விசேஷ இந்திரியத்தையும் ஆஸ்ரயிக்காததால் அசக்தமான வாக் முதலிய இந்திரியங்களை அக்னி முதலிய தேவபாவத்தை அடைச்செய்தார். ஆகையால் காரிய கரணங்களின் அங்கிரச ஆத்மா ஆகும்.
भाष्यम्-कथमािङ्गरसः? प्रसिद्धं ह्येतदङ्गानां कार्यकरणलक्षणानां रसः सार आत्मेत्यर्थः। कथं पुनरङ्गरसत्वम्? तदपाये शोषप्राप्तेरिति वक्ष्यामः। यस्माच्चायमङ्गरसत्वा-द्विशेषानाश्रितत्वाच्च कार्यकारणानां साधारण आत्मा विशुद्धश्च, तस्माद्वागादीनपास्य प्राण एवात्मत्वेनाश्रयितव्य, इति वाक्यार्थः। आत्मा ह्यात्मत्वेनोपगन्तव्योऽविपरीतबोधाच्छ्रेयःप्राप्तेः, विपर्यये चानिष्टप्राप्तिदर्शनात्।।
அனுவாதம்- எவ்வாறு ஆங்கிரசம்? அங்கங்களின் காரியகரண லக்ஷணங்களின் சாரம் ஆத்மா என்பது பிரசித்தம் என்பது அர்த்தமாகும். மேலும் அங்கத்தின் சாரம் எவ்வாறு? அந்த சாரம் இழந்துவிட்டால் சரீரமானது வற்றிவிடும் என்று மேலே கூறப்போகிறோம். இவ்வாறு அங்கரசமாய் இருப்பதாலும் விசேஷமாய் ஆஸ்ரயித்து இருப்பதாலும் காரியகரணங்களின் சாதாரண ஆத்மா விசுத்தமாகும். ஆகையால் வாக் முதலியவைகளை நீக்கிய பிராணனே ஆத்மத்துவமாய் ஆஸ்ரயிக்கவேண்டும் என்பது வாக்யத்தின் தாத்பர்யமாகும். ஆத்மாவையே ஆத்மரூபமாய் அறியவேண்டும். விபரீதமற்ற ஞானத்தால் ஸ்ரேயப்ராப்தியும், விபரீத ஞானத்தால் அநிஷ்டப் பிராப்தியும் காணப்படுவதால்.
अव - पूर्व - स्यान्मतं प्राणस्य विशुद्धिरसिद्धेति।
அனுவாதம்-பூர்வ- நம்முடைய விசாரம் பிராணன் விசுத்தம் என்பது சித்திக்காது என்று.
भाष्यम्-सिद्धान्ती- ननु परिह्य्तमेतद्वागादीनां कल्याणवदनाद्यासङ्गवत्प्राणस्य आसङ्गास्पदत्वाभावेन।
அனுவாதம்-ஸித்தாந்தீ- ஆனால் வாக் முதலியவைகளின் மங்கலமான பாஷணங்கள் முதலியவைகளில் ஈடுபாடு உள்ளது போல் பிராணனுக்கு எந்த விதமான ஈடுபாட்டிற்கும் இடம் இல்லாததால் நீ கூறுவது நிராகரிக்கப்பட்டது ஆகும்.
भाष्यम्- पूर्व - बाढम्, किं त्वािङ्गरसत्वेन वागादी-नामात्मत्वोक्त्या वागादिद्वारेण शवस्पृष्टितत्स्पृष्टेरिवाशुद्धता शतेइत्याहशुद्ध एव प्राणः। कुतः?
அனுவாதம்-பூர்வ- சரிதான், ஆனால் எவ்வாறு சவத்தை ஸ்பரிசித்தால் ஸ்பரிசம் செய்தவனுக்கு அசுத்தத்தன்மை உண்டாகிறதோ அவ்வாறு ஆங்கிரஸ் ஆவதால் வாக் முதலியவைகளின் ஆத்மா கூறப்படுவதால் வாக் முதலியவற்றுக்கும் கூட அசுத்தம் ஏற்படும் என்ற சங்கை எழுகின்றதே எனில் சுருதி கூறுகின்றது பிராணன் சுத்தம் என்று. அது எதனால் சுத்தம்?
स वा एषा देवता दूर्नाम दूरं ह्यस्या मृत्युर्दूरं ह वा अस्मान्मृत्युर्भवति य एवं वेद।। ९।।
மந்த்ரார்த்தம் --அந்த இந்த தேவதை“தூர்” என்ற பெயர் உடையது. ஏனெனில் மிருத்யுவானது இதனிடம் இருந்து தூரமாய் இருக்கிறது. எவன் இவ்வாறு அறிகிறானோ அவன் மிருத்யுவிடம் இருந்து தூரமாய் இருக்கின்றான்.
भाष्यम् - स वा एषा देवता दूर्नाम। यं प्राणं प्राप्याश्मानमिव लोष्टवद्विध्वस्ता असुरास्तं परामृशति सेति। सैवैषा येयं वर्तमानयजमानशरीरस्था देवैर्निर्धारिता“अयमास्येऽन्तः” इति देवता च सा स्यात्, उपासनक्रियायाः कर्मभावेन गुणभूतत्वात्।
அனுவாதம்- அந்த இந்த தேவதை “தூர்”(दूर्) என்ற பெயர் உடையது. எந்த பிராணனை அடைந்து, பாறையை அடைந்த மண் பிண்டமானது நாசமாகிறதோ அவ்வாறு அசுரகணங்கள் நஷ்டமடைகிறார்கள் என்று அந்த சுருதியானது இவ்வாறு விமர்சிக்கின்றது. இந்த யஜமான சரீரத்தில் இருக்கும் அதனை (பிராணன்)“अयमास्येऽन्तः” (அந்த முகத்துவாரத்தின் உள்ளே இருக்கிறது) என்று தேவதைகள் நிச்சயம் செய்தார்கள். அந்த தேவதையும் தன் உபாசனா கிரியைகளின் கர்ம பாவமாய் இருப்பதால் குணமுடையதாக இருக்கின்ற காரணத்தினால் அது தேவதையாகிறது.
भाष्यम्- यस्मात्सा दूर्नाम दूरित्येवं ख्याता। नामशब्दः ख्यापनपर्यायः। तस्मात्प्रसिद्धास्या विशुद्धिदूर्नामत्वात्। कुतः पुनर्दूर्नामत्वम्? इत्याह- दूरं दूरे हि यस्मादस्याः प्राणदेवताया मृत्युरासङ्गलक्षणः पाप्मा। असंेषधर्मित्वात्प्राणस्य समीपस्थस्यापि दूरता मृत्योस्तस्माद् दूरित्येवं ख्यातिः, एवं प्राणस्य विशुद्धिर्ज्ञापिता।
அனுவாதம்- ஏனெனில் அந்த பிராணன் தேவதை தூர் என்ற பெயரால் தூரம் என்றே கூறப்படுகிறது. நாமம் என்ற சொல் குறிப்பிடுவதைக் தெரிவிக்கிறது. தூர் என்ற நாமத்தால் அதனுடைய சுத்தமானது பிரசித்தமாய் இருக்கின்றது. எதற்காக தூர் எனும் பெயர்? அதற்கு சுருதி கூறுகிறது- எதனால் அந்த பிராண தேவதையிடமிருந்து மிருத்யுவானது பற்று வடிவமான பாபமானது தூரமாய் இருக்கிறதோ அதனால் “தூர்” எனப்படுகிறது. இவ்வாறு ப்ராணனின் விசுத்தியானது அறியப்படுகிறது.
भाष्यम् - विदुषः फलमुच्यते दूरं ह वा अस्मान्मृत्युर्भवति। अस्मादेवंविदः, य एवं वेद तस्मादेवमिति प्रकृतं विशुद्धिगुणोपेतं प्राणमुपासत इत्यर्थः।
அனுவாதம்- வித்வானின் (உபாஸகரின்) பலன் கூறப்படுகிறது- அவனிடம் இருந்து மிருத்யு தூரமாய் இருக்கிறது. இவ்வாறு அறிந்தவன், அதாவது யார் இவ்வாறு அறிந்தானோ, அதனால் இவ்வாறு உள்ள விசுத்தி குணமுடைய பிராணனை உபாசனை செய்கின்றான் என்பது பொருள்.
भाष्यम् - उपासनं नाम उपास्यार्थवादे यथा देवतादिस्वरूपं श्रुत्या ज्ञाप्यते तथा मनसोपगम्य आसनं चिन्तनं लौकिकप्रत्ययाव्यवधानेन यावत्तद्देवतादिस्वरूपात्माभिव्यक्तिरिति लौकिकात्माभिमानवत्।“देवो भूत्वा देवानप्येति” (बृ० उ० ४ । १। २)“किन्देवतोऽस्यां प्राच्यां दिश्यसि” (बृ० उ० ३। ९। २०) इत्येवमादिश्रुतिभ्यः।।
அனுவாதம்- உபாஸனம் என்பது உபாஸ்ய அர்த்தவாதத்தில் எவ்வாறு தேவதா முதலிய ஸ்வரூபம் சுருதியினால் அறியச் செய்யப்படுகிறது. எவ்வாறு மனதால் அடைந்திருக்கும் சிந்தனம் லௌகிக ப்ரத்யயத்தை ஒழித்து எது வரையில் தேவதாதி ஸ்வரூபத்தில் ஆத்ம அபிமானம், லௌகிக ஆத்மாபிமானத்திற்கு சமமாய் உண்டாகும் வரையில் சிந்தனை செய்தல் உபாஸனையாகும். எவ்வாறு“देवो भूत्वा देवानप्येति” (தேவதாவாகி தேவதைகளில் லீனமாகிறது)“किन्देवतोऽस्यां प्राच्यां दिश्यसि” (இந்த கிழக்கு திசையில் எந்த தேவதை இருக்கிறது) என்பது முதலிய சுருதி வாக்கியங்களால் சித்திக்கிறது.
अव- सा वा एषा देवता दूरं ह वा। अस्मान्मृत्यु-र्भवतीत्युक्तम्। कथं पुनरेवंविदो दूरं मृत्युर्भवति? इत्युच्यते- एवंवित्त्वविरोधात्। इन्द्रिविषयसंसर्गासङ्गजो हि पाप्मा प्राणात्मभिमानिनो हि विरुध्यते, वागादिविशेषात्माभिमानहेतुत्वात् स्वाभाविकाज्ञान हेतुत्वाच्च। शास्त्रजनितो हि प्राणात्मभिमानः। तस्मादेवंविदः पाप्मा दूरं भवतीति युक्तं विरोधात्। तदेतत्प्रदर्शयति।
அனுவாதம்- அ.கை-सा वा एषा देवता”“அந்த இந்த தேவதை” யினிடம் இருந்து மிருத்யு தூரமாய் இருக்கின்றது என்று முன்பு கூறப்பட்டது. எவ்வாறு, மேலும் இந்த மிருத்யு இவ்வாறு அறிந்தவனிடம் இருந்து தூரமாய் இருக்கின்றது என்பதற்கு கூறப்படுகிறது- ஏன்எனில் இவ்வாறு அறிவதால் மிருத்யு விரோதமாய் இருக்கின்றது. இந்திரியங்களினால் உண்டாகும் விஷயங்களின் சேர்க்கையால் உண்டாகும் ஆசக்தியினால் உண்டாகும் பாபம் (மிருத்யு) பிராணாத்மா அபிமானம் உடையவனுக்கு விருத்தமாய் உள்ளது. ஏன் எனில் வாக் முதலிய பரிச்சின்ன ஆத்மாவின் அபிமானத்தின் ஹேதுவாலும் ஸ்வாபாவிகமான அக்ஞானத்தினாலும் உணடாகின்றது. ஆனால் பிராணாத்ம அபிமானமோ சாஸ்திரத்தினால் ஏற்படுகிறது. ஆகையால் இவ்வாறு விரோதமாய் இருப்பதால் இதை இவ்வாறு அறிந்தவனுக்கு பாபம் (மிருத்யு) தூரமாய் இருக்கின்றது என்பது பொருந்தும். அந்த அர்த்தமானது நன்றாக தெரிவிக்கப்படுகிறது.-
स वा एषा देवतैतासां देवतानां पाप्मानं मृत्युमपहत्य यत्रासां दिशामन्तस्तद्गमयाञ्चकार तदासां पाप्मनो विन्यदधात्तस्मान्न जनमियान्नान्तमियान्नेत्पाप्मानं मृत्युमन्ववायानिति।। १०।।
மந்த்ரார்த்தம் -- அந்த இந்த பிராண தேவதை இந்த வாக் முதலிய தேவதைகளின் பாபரூப மிருத்யுவை ஒழித்து எங்கு திசைகளின் முடிவோ அங்கே அடையச்செய்தது. அங்கு அவைகளின் திரஸ்கார பூர்வமாய் அது (பிராண தேவதை) ஸ்தாபித்தது. ஆகையால் “நான் பாபரூப மிருத்யுவுடன் சம்பந்தம் அடையமாட்டேன்” என்றும், இந்த பயத்தால் முடிவுடைய ஜனங்களுடனும் முடிவான தேசத்திற்கும் செல்லமாட்டோம் என்றும் (வாக் முதலிய தேவதைகள் நினைத்தது).
भाष्यम्- स वा एषा देवतेत्युक्तार्थम्। एतासां वागादीनां देवतानां पाप्मानं मृत्युं स्वाभाविकाज्ञानप्रयुक्तेन्द्रियविषय-संसर्गसङ्गजनिते हि पाप्मना सर्वो म्रियते, स ह्यतो मृत्युः, तं प्राणात्माभिमानरूपाभ्यो देवताभ्योऽपच्छिद्यापह्य्त्य, प्राणाभिमान-मात्रतयैव प्राणोऽपहन्तेत्युच्यते। विरोधादेव तु पाप्मैवंविदो दूरं गतो भवति। किं पुनश्चकार देवतानां पाप्मानं मृत्युमपहत्य? इत्युच्यते- यत्र यस्मिन्नासां प्राच्यादीनां दिशा मन्तोऽवसानं तत्तत्र गमयाञ्चकार गमनं कृतवानित्येतत्।
அனுவாதம்- அந்த இந்த தேவதை என்பது முன் கூறப்பட்ட அர்த்தமே. இந்த வாக் முதலிய தேவதைகளின் பாபமாகிய மிருத்யு ஸ்வாபாவிகமான அக்ஞானத்துடன் கூடிய விஷய சேர்க்கையினால் உண்டான பாபத்தினால் எல்லோரும் மரணம் அடைகின்றார்கள். அதுவே அதனால் மிருத்யு எனப்படுகிறது. அந்த பிராணாத்ம அபிமான ரூபமுடைய தேவதைகளிடம் இருந்து நீக்கி (அழித்து) பிராணாத்ம அபிமானமாத்திரமாய் இருத்தலே பிராணதேவதையாய் ஆகப்பட்டதாகும். அதையே பிராணன் நீக்கியது என்கிறோம். இவ்வாறு பாபத்தை விரோதமாய் அறிந்தவன் தூரம் சென்றவனாகின்றான். தேவர்களுடைய பாபமாகிய மிருத்யுவைப் போக்கி மறுபடியும் என்ன செய்தது? அதற்குக் கூறப்படுகிறது- எங்கு அதன் இருப்பிடமாகிய கிழக்கு முதலிய திசைகளின் முடிவிற்கு அதை அடைவிக்கச்செய்தது.
भाष्यम् - ननु नास्ति दिशामन्तः कथमन्तं गमितवान्? इत्युच्यते- श्रौतविज्ञानवज्जनावधिनिमित्तकल्पितत्वाद्दिशां तद्विरोधिजनाध्युषित एव देशो दिशामन्तः, देशान्तोऽरण्यमिति यद्वदित्यदोषः।
அனுவாதம்- ஆனால் திசைக்கு அந்தம் (முடிவு) இல்லை. ஆகையால் எவ்வாறு முடிவை அடையமுடியும்? எனில் அதற்குக் கூறப்படுகிறது- திசைகளின் கல்பனையைக் கேட்டு அறிந்த புருஷன் அதன் எல்லைவரையிலும் சென்றது போல் ஆகின்றான். ஆகையால் (இந்திரிய விஷயங்களுக்கு) விருத்தமான நடத்தை உடையவர்களுக்கான (பிராணாத்மாபிமானம் உடையவர்களுக்குகான) திசையே திசாந்தமாகும். (மிருத்யு அந்தத்தை அடைகிறது). தேசத்தின் முடிவு காடு என்பது போல் தோஷமற்றது.
भाष्यम् - तत्तत्र गमयित्वा आसां देवतानाम, पाप्मन इति द्वितीयाबहुवचनम्, विन्यदधाद्विविधं न्यग्भावेनादधात्स्थापितवती प्राणदेवता। प्राणात्माभिमानशून्येषु अन्त्यजनेष्विति सामर्थ्यात्। इन्द्रियसंसर्गजो हि स इति प्राण्याश्रयतावगम्यते।
அனுவாதம்- அந்த தேவதைகளின் பாபங்களை அடைந்த பிராண தேவதையானது அவைகளை அநேக விதமாய் திரஸ்கார பூர்வமாய் ஸ்தாபித்தது.पाप्मनः என்பது இரண்டாவது வேற்றுமை, பன்மையாகிய பஹு வசனமாகும். இந்த பிரசங்கத்தின் சாமர்த்தியத்தால் அறியப்படுவது பிராண அபிமான சூன்யர்களை அந்திய (பாபமுடைய) ஜனங்களிடத்து தன் சாமர்த்தியத்தால் ஸ்தாபித்தது. அந்த பாபம் இந்திரிய சம்சர்க்கத்தால் உண்டானதால் அல்லவா அது பிராணிகளை ஆஸ்ரயிக்கின்றது என்பது புலப்படுகிறது.
भाष्यम् - तस्मात्तमन्त्यं जनं नेयान्न गच्छेत्सम्भाषण-दर्शनादिभिर्न संसृजेत्। तत्संसर्गे पाप्मना संसर्गः कृतः स्यात्पाप्माश्रयो हि सः। तज्जननिवासं चान्तं दिगन्तशब्दवाच्यं नेयाज्जनशून्यमपि, जनमपि तद्देशवियुक्तमित्यभिप्रायः।
அனுவாதம்- ஆகையால் அந்த அந்திய (பாபமுடைய) ஜனங்களிடம் போகக்கூடாது. அவர்களுடன் பேசுவது, அவர்களைப் பார்ப்பது முதலியவைகளால் அவர்களுடன் சேரக்கூடாது. அது பாபத்துடன் கூடியிருப்பதால் அதனுடன் சம்பந்தமாகிறது. ஏனென்றால் அது பாபத்தை ஆஸ்ரயித்து அல்லவா இருக்கிறது. அந்த ஜனங்கள் வசிக்கும் ஸ்தானத்தின் அந்தம் எதுவோ அது திகந்த சப்தவாச்ய தேசத்தில் அதற்கு ஜனசூன்யம் இருந்தாலும், செல்லக்கூடாது. அவ்வாறே அந்த தேசத்தில் தனியாக இருக்கும் அந்த்ய ஜனங்களிடமும் செல்லக்கூடாது என்பது இதன் அபிப்பிராயம்.
भाष्यम् - नेदिति परिभयार्थे निपातः। इत्थं जनसंसर्गे पाप्मानं मृत्युमन्ववायानीति। अनु अव अयानीत्यनुगच्छेयमिति, एवं भीतो न जनमन्तं चेयादिति पूर्वेण सम्बन्धः।
அனுவாதம்-“नेत्” (நேத்) என்பது பரிபயம் (எல்லா வகைகளிலும் பயம்) என்ற அர்த்தமுடையது. இவ்வாறு அந்திய ஜனங்களுடன் சம்சர்க்கம் அடைந்தால் நான் பாபரூப மிருத்யுவை அடைவேன் என்று இவ்வாறு பயந்து அந்தந்த ஜனங்களிடமும், அந்தந்த திசைக்கும் செல்லமாட்டேன் என்பது பூர்வத்துடன் சம்பந்தம்.
सा वा एषा देवतैतासां देवतानां पाप्मानं मृत्युमपहत्याथैना मृत्युमत्यवहत् ।। ११।।
மந்த்ரார்த்தம் -- அந்த இந்த பிராணதேவதை தேவதைகளின் பாபரூப மிருத்யுவை ஒழித்து அவைகளை மிருத்யுவை கடக்கச் செய்தது. (அதாவது அக்னி முதலிய தேவதா தன்மையை அடையச்செய்தது)
भाष्यम् - सा वा एषा देवता, तदेतत्प्राणात्मज्ञानकर्मफलं वागादीनामग्न्याद्यात्मत्वमुच्यते। अथैना मृत्युमत्यवहत्। यस्मदाध्यात्मिकपरिच्छेदकरः पाप्मा मृत्युः प्राणात्मविज्ञानेना-पहतस्तस्मात्स प्राणोऽपहन्ता पाप्मनो मृत्योः। तस्मात्स एव प्राण एना वागादिदेवताः प्रकृतं पाप्मानं मृत्युमतीत्य अवहत्प्रापयत्स्वं स्वमपरिच्छिन्नमग्न्यादिदेवतात्मरूपम्।।
அனுவாதம்-“सा वा एषा देवता” (சா வா ஏஷா தேவதா) என்று சுருதியானது பிராணாத்ம ஞானரூப கர்மபலனாகிய வாக் முதலியவைகளுக்கு உள்ள அக்னி முதலிய ரூபத்தை விளக்குகிறது. அதன்பின் பிராணதேவதை அவைகளின் (பாபத்தை) மிருத்யுவை விலக்குகிறது. ஏன்எனில் ஆத்யாத்மிக பரிச்சேதத்தை உண்டாக்கும் பாபரூப மிருத்யுவை பிராணாத்ம ஞானத்தால் நீக்கிவிட்டது. ஆகையால் பிராணனானது பாபரூப மிருத்யுவைப் போக்கவல்லது. ஆகையால் அந்த பிராணனே இந்த வாக் முதலிய தேவதைகளின் பாபரூப மிருத்யுவை நீக்கி அவைகளை அபரிச்சின்ன அக்னி முதலிய தேவதா ரூபத்தை அடையச்செய்தது.
स वै वाचमेव प्रथमामत्यवहत्सा यदा मृत्युमत्यमुच्यत सोऽग्निरभवत्सोऽयमग्निः परेण मृत्युमतिक्रान्तो दीप्यते ।। १२।।
மந்த்ரார்த்தம் -- அந்த பிரசித்தமான பிராணன் பிரதானமான வாக்தேவதையை மிருத்யுவிடம் இருந்து விடுவித்தது. எப்பொழுது அந்த வாக் மிருத்யுவைக் கடந்ததோ அப்பொழுது அக்னி ஆகிவிட்டது. அந்த இந்த அக்னி மிருத்யுவை அதிக்கிரமணம் செய்து (தாண்டி) ஜொலிக்கிறது.
भाष्यम्- स वै वाचमेव प्रथमामत्यवहत्। स प्राणो वाचमेव प्रथमां प्रधानामित्येतत्। उद्गीथकर्मणीतरकरणापेक्षया साधकतमत्वं प्राधान्यं तस्याः। तां प्रथमामत्यवहद्वहनं कृतवान्।
அனுவாதம்-“स वै वाचमेव प्रथमामत्यवहत्” (ச வை வாசமேவ ப்ரதமாமத்யவஹத்)-இந்த பிரசித்தமான பிராணன் முதன்மையான அதாவது பிரதானமான வாக்கை (மிருத்யுவை) தாண்டச்செய்தது. உத்கீதகர்மாவிற்கு மற்ற கரணங்களை விட அதற்கு சாதகத்தன்மையும், பிரதானத்தன்மையும் உள்ளது. அந்த பிரதானமான வாக்தேவதையை பிராணன் மிருத்யுவைக்கடக்கச்செய்தது. (ஒழிக்கச்செய்தது).
भाष्यम् - तस्याः पुनर्मृत्युमतीत्योढायाः किं रूपम्? इत्युच्यते- सा वाग्यदा यस्मिन्काले पाप्मानं मृत्युम् अत्यमुच्यतातीत्यामुच्यत मोचिता स्वयमेव, तदा सोऽग्निरभवत्। सा वाक्पूर्वमप्यग्निरेव सती मृत्युवियोगेऽप्यग्निरेवाभवत्। एतावांस्तु विशेषो मृत्युवियोगे।
அனுவாதம்- ஆனால் மிருத்யுவை கடந்த (வென்ற) அந்த வாக்கிற்கு என்ன ரூபம்? என்பது கூறப்படுகிறது - அந்த வாக் தேவதையானது எப்பொழுது பாபம் அதாவது மிருத்யுவை கடந்து தானாகவே விடுபட்டதோ அப்பொழுது அது அக்னியாகிவிட்டது. அந்த வாக் இதற்கு முன்பும் அக்னியாகவே இருந்துகொண்டு மிருத்யு நாசமடைந்த பின்பும் அக்னியாகவே ஆயிற்று. மிருத்யுவினுடைய நீக்கத்தின் விசேஷணமானது இவ்வளவே ஆகும்.
भाष्यम्- सोऽयमतिक्रान्तोऽग्निः परेण मृत्युं परस्तान्मृत्योर्दीप्यते। प्राोक्षान्मृत्युप्रतिबद्धो अध्यात्मवागात्मना नेदानीमिव दीप्तिमानासीत् इदानीं तु मृत्युं परेण दीप्यते मृत्युवियोगात्।।
அனுவாதம்- அந்த மிருத்யுவை கடந்த அக்னி மிருத்யுவைக்காட்டிலும் மேலாய் (பரமாய்) ஜொலித்துக் கொண்டு இருக்கின்றது. அதிலிருந்து விடுபடுவதற்கு முன் அத்யாத்ம வாக்ரூபத்தால் கட்டுப்பட்டு இப்பொழுது ஜொலித்துக்கொண்டு இருக்கவில்லை. ஆனால் இப்பொழுதோ மிருத்யுவின் நாசத்தால் மிருத்யுவைக் காட்டிலும் மேலாய் (பரமாய்) ஜொலிக்கின்றது.
अथ प्राणमत्यवहत्स स यदा मृत्युमत्यमुच्यत स वायुरभवत्सोऽयं वायुः परेण मृत्युमतिक्रान्तः पवते ।। १३।।
மந்த்ரார்த்தம் -- அதன் பின் பிராணன் (கிராணம்) மேற்கூறியவாறு அந்த வாயு தேவதை மிருத்யுவைக் கடந்து வீசுகின்றது.
भाष्यम् - तथा प्राणो घ्रााणम्- वायुरभवत्। स तु पवते मृत्युं परेणातिक्रान्तः सर्वमन्यदुक्तार्थम्।
அனுவாதம்- அவ்வாறே பிராணன் (கிராண விஷயத்தில் மேற்கூறியவாறு) கிராணம் வாயு ஆயிற்று. அது மிருத்யுவைத் தாண்டி வீசுகிறது. மற்றவை எல்லாம் முற்கூறிய அர்த்தமேயாகும்.
अथ चक्षुरत्यवहत्तद्यदा मृत्युमत्यमुच्यत स आदित्योऽ-भवत्सोऽसावदित्यः परेण मृत्युमतिक्रान्तस्तपति ।। १४।।
மந்த்ரார்த்தம்- (சக்ஷு விஷயத்திலும் முன் கூறியவாறு) சக்ஷு ஆதித்ய தேவதையாகி மிருத்யுவைத்தாண்டி மேலாய் தபிக்கின்றது.
भाष्यम् - तथा चक्षुरादित्योऽभवत्स तु तपति।।
அனுவாதம்- அவ்வாறே சக்ஷு ஆதித்யன் ஆகி மேலாய் தபிக்கின்றது.
अथ श्रोत्रमत्यवहत्तद्यदा मृत्युमत्यमुच्यत ता दिशोऽभवंस्ता इमा दिशः परेण मृत्युमतिक्रान्ताः ।। १५।।
மந்த்ரார்த்தம்- அவ்வாறே (சுரோத்திரவிஷயத்தில் மேற்கூறியவாறு) சுரோத்திரம் திக் தேவதையாகி மிருத்யுவைத் தாண்டி இருக்கிறது.
भाष्यम् - तथा श्रोत्रं दिशोऽभवत्। दिशः प्राच्यादिविभागे-नावस्थिताः।
அனுவாதம்- அவ்வாறே ஸ்ரோத்திரம் திசை ஆயிற்று. திசை கிழக்கு முதலிய விபாகங்களாக ஆயிற்று.
अथ मनोऽत्यवहत्तद्यदा मृत्युमत्यमुच्यत स चन्द्रमा अभवत्सोऽसौ चन्द्रः परेण मृत्युमतिक्रान्तो भात्येवं ह वा एनमेषा देवता मृत्युमतिवहति य एवं वेद ।। १६।।
மந்த்ரார்த்தம்- (மனது விஷயத்திலும் மேற்கூறியவாறு) மனது சந்திர தேவதையாகி மிருத்யுவைத்தாண்டி விளங்குகின்றது. அந்த இந்த அதிக்கிராந்த சந்திரன் மிருத்யுவைக் காட்டிலும் மேலாய் பிரகாசிக்கின்றான். இவ்வாறு அந்த தேவதை அந்த மிருத்யுவைத்தாண்டி இருக்கிறது என்று எவன் அறிகிறானோ அவன் அறிந்தவனாகிறான்.
भाष्यम् - मनचन्द्रमा भाति। यथा पूर्वयजमानं वागाद्यग्न्यादिभावेन मृत्युमत्यवहत्, एवमेनं वर्तमानयजमानमपि ह वा एषा प्राणदेवता मृत्युमतिवहति वागाद्यग्न्यादिभावेन। एवं यो वागादिपञ्चकविशिष्टं प्राणं वेद।“तं यथा यथोपासते तदेव भवति” इति श्रुतेः।।
அனுவாதம்- மனது சந்திரனாகி மிருத்யுவைத்தாண்டி இருக்கின்றது. எவ்வாறு பிராணனானது முன்பு யஜமானனை அதாவது வாக் முதலிய அக்னி முதலிய தம்மை மிருத்யுவைக் கடந்ததோ. அவ்வாறு பிராணதேவதா இந்த இப்பொழுது இருக்கும் யஜமானனையும் வாக் முதலியவைகளை அக்னி முதலிய தன்மைவடிவாக மிருத்யுவைத்தாண்டச் செய்கின்றது. எவன் பிராணனை வாக் முதலிய ஐந்து தேவதைகளுடன் கூடியது என்று அறிகிறானோ.“तं यथा यथोपासते तदेव भवति” (தம் ததா யதோபாஸதே ததேவ பவதி) அவன் அதை எவ்வாறு உபாசிக்கின்றானோ அதுவாகவே ஆகின்றான்.
अथात्मनेऽन्नाद्यमागायद्यद्धि किञ्चान्नमद्यतेऽनेनैव तदद्यत इह प्रतितिष्द्भति ।। १७।।
மந்த்ரார்த்தம்- அதன் பின் அது தனக்கு சாப்பிட வேண்டிய அன்னத்திற்காக கானம் செய்தது. ஏன்எனில் நாம் சிறிது அன்னம் சாப்பிட்டால் அது பிராணன் மூலமாய் சாப்பிட்டதாக ஆகிறது. அவ்வாறே அன்னத்தில் பிராணன் பிரதிஷ்டையாகிறது. (வைக்கப்பட்டிருக்கின்றது).
भाष्यम् - यथा वागादिभिरात्मार्थमागानं कृतं तथा मुख्योऽपि प्राणः सर्वप्राणसाधारणं प्राजापत्यफलमागानं कृत्वा त्रिषु पवमानेषु, अथानन्तरं शिष्टेषु नवसु, स्तोत्रेषु, आत्मने आत्मार्थमन्नाद्यमन्नं च तदाद्यं चान्नाद्यमागायत्।
அனுவாதம்- எவ்வாறு வாக் முதலியவைகள் தங்களுக்காக ஆகானம் செய்ததோ அவ்வாறு முக்கிய பிராணனும் பிராஜாபதி ரூபபலனிற்காக மூன்று பவமானத்தினால் செய்து, அதற்குபின் மீதமுள்ள ஸ்லோகங்களால் ஆகானம் செய்து தன்பொருட்டு அன்னம் ஆவதற்கும், அன்னத்தை உண்ண வேண்டியதற்கும் அந்த அன்னாத்யத்தை ஆகானம் செய்தது.
भाष्यम् - कर्तुः कामसंयोगो वाचनिक इत्युक्तम्। कथं पुनस्तदन्नाद्यं प्राणेनात्मार्थमागीतमिति गम्यते? इत्यत्र हेतुमाह यत्किञ्चेति सामान्यान्नमात्रपरामर्शार्थः। हीति हेतौ। यस्माोके प्राणिभिर्यत्कििञ्चदन्नमद्यते भक्ष्यते तदनेनैव। अन इति प्राणस्याख्या प्रसिद्धा अनःशब्दः सान्तः शकटवाची, यस्त्वन्यः स्वरान्तः स प्राणपर्यायः। प्राणेनैव तदद्यत इत्यर्थः।
அனுவாதம்- கர்த்தாவிற்கு (உத்காத கர்த்தாவிற்கு) விரும்பிய பதார்த்தம் சேருகிறது. அது வாசனிகம் என்று முன்பே கூறப்பட்டது. ஆனால் பிராணன் தனக்காக அன்னாத்யத்தை ஆகானம் செய்தது என்று எவ்வாறு அறிய முடிகிறது? இதற்கு ஹேது கூறப்படுகிறது.“यत् कििञ्चत्” எது கொஞ்சம் என்று சாமானிய அன்னத்தை மாத்திரம் விளக்கபட்டுள்ளதால் ஆகும். ஹி(हि) என்றது ஹேது அர்த்தமாகும். எதனால் உலகில் பிராணிகளால் (ஜீவர்களால்) எந்த சிறிது அன்னம் உட்கொண்டாலும் அது“अन” (அன) அதாவது பிராணன் மூலமாய் சாப்பிடுகிறது“अन” (அன) என்பது பிராணனுடைய நாமம் என்பது பிரசித்தம்अन என்பதுடன் ஸகாரந்த சப்தம். வண்டி என்பதின் வாசகமாகும். மேலும் வேறு ஸ்வரத்தின் (அகாரத்தின்) முடிவாக உடையது பிராணனின் பரியாய பதமாகும். பிராணனே உண்கிறது என்பது இதன் அர்த்தமாகும்.
भाष्यम्- किञ्च न केवलं प्राणेनाद्यत एवान्नाद्यम्, तस्मिञ्छरीराकारपरिणतेऽन्नाद्य इह प्रतितिष्द्भति प्राणः। तस्मात्प्राणेनात्मनः प्रतिष्द्भार्थमागीतमन्नाद्यम्। यदपि प्राणेनान्नादनं तदपि प्रतिष्द्भार्थमेवेति न वागादिष्विव कल्याणासङ्गजपाप्मसम्भवः प्राणेऽस्ति।
அனுவாதம்- மேலும் பிராணன் அன்னத்தை சாப்பிட்டது மட்டுமல்ல அன்னாத்யம். மேலும் அந்த அன்னத்தை உட்கொண்டதால் சரீராகாரமாய் பரிணாமம் அடைந்தபின் அதில் பிராணன் பிரதிஷ்டமாகிறது. ஆகையால் பிராணன் தன் பிரதிஷ்டையின் பொருட்டு அன்னாத்யத்தை ஆகானம் செய்தது. பிராணன் மூலமாய் அன்னமானது புஜிக்கப்படுகிறது. அதுவும் அதன் பிரதிஷ்டாவின் பொருட்டேயாகும். ஆகையால் வாக் முதலியவைகளுக்கு சமானமாய் பிராணனிடத்தில் சுப அபிமான அபிநிவேசத்தால் உண்டாகும் பாபம் சம்பவிக்காது.
अव- शङ्का- नन्ववधारणमयुक्तं प्राणेनैव तदद्यत इति, वागादीनामपि अन्ननिमित्तोपकारदर्शनात्।
அனுவாதம்- அ.கை- சங்கை- ஆனால் வாக் முதலியவைகளுக்கும் அன்னத்தினால் உண்டாகும் உபகாரம் காணப்படுவதால் பிராணனால்தான் அத்யத(अद्यत) சாப்பிடுகிறது என்பது பொருந்தாது.
भाष्यम् - समाधानम् - नैष दोषः, प्राणद्वारत्वात्तदुप-कारस्य। कथं प्राणद्वारकोऽन्नकृतो वागादीनामुपकार इत्येतमर्थं प्रदर्शयन्नाह-
அனுவாதம்- சமாதானம்- அந்த உபகாரம் பிராணன் மூலமாய் இருப்பதால் இந்த தோஷம் இல்லை. எவ்வாறு அன்னத்திற்கு காரணமாகின்ற வாக் முதலியவைகளுக்கு பிராணன் வாயிலாய் உபகாரம் ஏற்படுகின்றது என்பதை விளக்குவதற்காக சுருதி கூறுகிறது-
ते देवा अब्रुवन्नेतावद्वा इदं ्ँसर्वं यदन्नं तदात्मन आगासीरनुनोऽस्मिन्नन्न आभजस्वेति ते वै माभिसंविशतेति तथेति त ँ्समन्तं परिण्यविशन्ति। तस्माद्यदनेनान्नमत्ति तेनैतास्तृप्यन्त्येव ँ्ह वा एन ँ् स्वा अभिसंविशन्ति भर्ता स्वाना ँ् श्रेष्द्भः पुर एता भवत्यन्ना-दोऽधिपतिर्य एवं वेद य उ हैवंविद् स्वेषु प्रति प्रतिबूभूर्षति न हैवालं भार्येभ्यो भवत्यथ य एवैतमनु भवति यो वैतमनु भार्यान्बुभूर्षति स हैवालं भार्येभ्यो भवति ।। १८।।
மந்த்ரார்த்தம்- தேவகணங்கள் (பிராணனை நோக்கி) கூறியது, “இவ்வளவுதானா?, இந்த அன்னம் எல்லாம் உனக்காக வேண்டி கானம் செய்யப்பட்டதா; அன்னம் இல்லாமல் எங்களால் இருக்கமுடியாது. எங்களுக்கும் அன்னத்தில் பங்குகொடு” என்று. (பிராணன் கூறியது.) “உங்களுக்கு அன்னம் வேண்டுமெனில் என்னில் கலந்து விடுங்கள்” என்றது. “மிக்க நன்று” என்று கூறி பூதகணங்கள் எல்லாவகைகளிலும் (பிராணனில்) பிரவேசித்தார்கள் ஆகையால் பிராணன் மூலமாய் புருஷன் அன்னத்தை உட்கொள்கிறான். அதனால் பிராணன் திருப்தி அடைகிறது. ஆகையால் இவ்வாறு அறிந்தவனை அவனுடைய சுற்றத்தார்கள் எல்லாவகையிலும் வந்து ஆஸ்ரயிக்கின்றார்கள், அவன் சுற்றத்தார்களை தாங்குகின்றான். அவர்களுள் மேலானவராயும், அவர்களுக்கு முன்னே செல்பவனாகவும் இருக்கின்றான். அவ்வாறு அன்னத்தை சாப்பிடுபவன் எல்லோருக்கும் அதிபதியாகின்றான். இப்படி அறிந்தவனை பகைக்க விரும்புபவர்கள் தங்களைச் சார்ந்தோரை திருப்தி செய்யமாட்டார்கள். எவன் ஒருவன் இவ்விதம் அனுசரிக்கின்றவனை அனுசரிக்கின்றானோ அவன் இவ்விதம் அனுசரிப்பதால் தன்னை ஆஸ்ரயித்தவர்களை திருப்தி செய்யும் சக்தி உள்ளவனாகின்றான்.
भाष्यम् - ते वागादयो देवाः, स्वविषयद्योतनाद्देवाः, अब्रुवन्नुक्तवन्तो मुख्यं प्राणम् इदमेतावन्नातोऽधिकमस्ति। वा इति स्मरणार्थः। इदं तत्सर्वमेतावदेव, किम्? यदन्नं प्राणस्थितिकरमद्यते लोके तत्सर्वमात्मन आत्मार्थमागासीः आगीतवानसि आगानेनात्मसात्कृतमित्यर्थः। वयं चान्नमन्तरेण स्थातुं नोत्सहामहे। अतोऽनुपश्चान्नोऽस्मानस्मिन्नन्ने आत्मार्थे तवान्नं आभजस्व आभाजयस्व। णिचोऽश्रवणं छान्तसम्। अस्मांश्चान्नभागिनः कुरु।
அனுவாதம்- அந்த வாக் முதலிய தேவதைகள் அதாவது தங்கள் விஷயங்களை பிரகாசப்படுத்துவதால் தேவதைகள் முக்கிய பிராணனிடம் இந்த அன்னம் இவ்வளவு தான். ஆகையால் இதை விட அதிகம் இல்லை. வா என்றது ஞாபகப்படுத்துவதற்காக. இந்த அவை எல்லாம் இவ்வளவுதான் என்றால் அது என்ன? எந்த அன்னமானது பிராணனின் ஸ்திதியின் பொருட்டு உலகத்தில் சாப்பிடுகிறார்களோ அவர்கள் எல்லோருக்காகவும், அதாவது நீ (பிராணனாகிய நீ) தனக்காக ஆகானம் செய்தாய். அதாவது ஆகானம் செய்ததின் வாயிலாய் அவர்களை தன் ஆதீனம் ஆகச் செய்தது. நாங்களும் அன்னம் இல்லாமல் இருக்க முடியாது. ஆகையால் உங்களின் பின்னால் (பிராணனின் பின்னால்) தனக்காக செய்யப்பட்ட கானத்தினால் அடைந்த அன்னத்தில் எங்களுக்கும் பாகம் அடையச்செய்தீர்“आभजस्व” என்பதில் “நிச்”(णिच्) சப்தப்ரயோகம் இல்லையாததால் சாந்தஸம் ஆகும். இதன் பொருளாவது எங்களையும் அன்னத்தை உடையவர்களாய் செய்வாயாக என்பதாகும்.
भाष्यम् - इतर आहते यूयं यद्यन्नार्थिनो वै, मा मामभिसंविशत समन्ततो मामाभिमुख्येन निविशत। इत्येवमुक्तवति प्राणे तथेत्येवमिति, तं प्राणं परिसमन्तं परिसमन्तान्न्यविशन्त निश्चयेनाविशन्त, तं प्राणं परिवेष्ट निविष्टवन्तः इत्यर्थः। तथा निविष्टानां प्राणानुज्ञया तेषां प्राणेनैवाद्यमानं प्राणस्थितिकरं सदन्नं तृप्तिकरं भवति न स्वातन्त्र्येण।
அனுவாதம்- அப்பொழுது மற்றவைகளிடம் - முக்கிய பிராணன் கூறியது “எந்த நீங்கள் அன்னத்தை அடைவதற்கு இச்சை உடையவர்களாயின் எல்லா பக்கங்களிலிருந்தும் எல்லோரும் அபிமுக பாவமாய் எனக்குள்ளே பிரவேசியுங்கள்” என்று. இவ்வாறு பிராணன் கூறியவுடன் “மிக்க நன்று” என்று கூறிக்கொண்டு எல்லா தேவதைகளும் நிச்சயித்து உள்ளே பிரவேசித்தன. இவ்வாறு பிராணனின் கட்டளையினால் பிரவேசித்த எல்லோரும் பிராணன் மூலமாய் சாப்பிட்டார்கள். பிராணனை இருக்கச் செய்யும் அன்னத்தின் மூலமாய் திருப்தி அடையப்படுகிறது. வாக் முதலியவைகளுக்கு ஸ்வதந்திரமாய் சம்பந்தம் ஏற்படாது.
भाष्यम् - तस्माद्युक्तमेवावधारणम् अनेनैव तदद्यत इति। तदेव चाह-तस्माद्यस्मात्प्राणाश्रयतयैव प्राणानुज्ञयाभिसन्निविष्टा वागादिदेवताः तस्माद्यदन्नमनेन प्राणेनात्ति लोकस्तेनान्नेनैता वागाद्यास्तृप्यन्ति।
அனுவாதம்- ஆகையால் பிராணன் மூலமாகவே அன்னத்தை உட்கொண்டன என்று நிச்சயம் செய்வது பொருத்தமேயாகும். அதுவே கூறப்படுகிறது- எதனாலோ அதனால் பிராணனை ஆஸ்ரயித்ததாலும் பிராணனின் கட்டளையினாலும் வாக் முதலிய தேவதைகள் இதில் பிரவேசித்தன. ஆகையால் உலகில் இந்த பிராணனால் எது சாப்பிடப்பட்டதோ அந்த அன்னத்தினாலேயே அந்த இந்த வாக்தேவதைகள் திருப்தி அடைகின்றன.
भाष्यम् - वागाद्याश्रयं प्राणं यो वेद वागादयश्च पञ्च प्राणाश्रया इति तमप्येवमेवं ह वै स्वा ज्ञातय अभिसंविशन्ति वागादय इव प्राणम्। ज्ञातीनामाश्रयणीयो भवतीत्यभिप्रायः। अभिसन्निविष्टानां च स्वानां प्राणवदेव वागादीनां स्वान्नेन भर्ता भवति। तथा श्रेष्द्भः पुरोऽग्रत एता गन्ता भवति वागादीनामिव प्राणः तथान्नादोऽनामयावीत्यर्थः। अधिपतिरधिष्द्भाय च पालयिता स्वतन्त्रः पतिः प्राणवदेव वागादीनाम्। य प्राणं वेद तस्यैतद्यथोक्तं फलं भवति।
அனுவாதம்- வாக் முதலியவைகளின் ஆஸ்ரயமான பிராணனை எந்த வாக் முதலிய ஐந்தும் பிராணனை ஆஸ்ரயித்திருக்கிறது. என்று அறிகிறார்களோ அவர்களை இவ்வாறு சொந்த ஜனங்கள் எல்லோரும் ஆஸ்ரயிப்பார்கள். இதன் தாத்பர்யம் என்னவெனில் தங்களுடைய சொந்த ஜனங்கள் ஆஸ்ரயம் அடைவதற்கு தகுதியுள்ளவர்கள் ஆகின்றனர் என்பதாகும். அவ்வாறு வாக் முதலியவைகளின் தலைவன் பிராணனைப் போல் தங்களை ஆஸ்ரயித்த சொந்த ஜனங்களுக்கு அன்னம் ஈதலின் வாயிலாய் தலைவனாகிறான். அவ்வாறே அவர்களை விட மேலானவனாகிறான். இவ்வாறு அன்னாத(अन्ताद) அதாவது வியாதி அற்றவனாகின்றான் என்பது பொருள். வாக் முதலியவைகளின் அதிபதியாகிய பிராணன் போல் தன் சொந்தபந்தங்களுக்கு அதிஷ்டாதா (அதிபதி) ஆகி அவர்களை பாலனம் செய்யும் தலைவன் ஆகின்றான். எவன் இவ்வாறு அறிகின்றானோ அவன் முற்கூறிய பலனை அடைகின்றான்.
भाष्यम् - किञ्च य उ हैवंविदं प्राणविदं प्रति स्वेषु ज्ञातीनां मध्ये प्रतिः प्रतिकूलो बुभूर्षति प्रतिस्पर्धी भवितुमिच्छति, सोऽसुरा इव प्राणप्रतिस्पर्धिनो न हैवालं न पर्याप्तो भार्येभ्यो भरणीयेभ्यो भवति भर्तुमित्यर्थः। अथ पुनर्य एव ज्ञातीनां मध्ये एतमेवंविदं वागादय इव प्राणम् अनु अनुगतो भवति, यो वैतमेवंविदमन्वेवानुवर्तयन्नेव आत्मीयान्भार्यान् बुभूर्षति भर्तुमिच्छति, यथैव वागादयः प्राणानुवृत्त्यात्मबुुभूर्षव आसन्। स हैवालं पर्याप्तो भार्येभ्यो भरणीयेभ्यो भवति भर्तुं नेतरः स्वतन्त्रः। सर्वमेतत्प्राणगुणविज्ञानफलमुक्तम्।
அனுவாதம்- மேலும் தன்னுடைய சொந்தங்களாகிய ஞாதிகளை இவ்வாறு அறிந்த அந்த பிராணவேத்தாவை பிரதிகூலம் செய்ய நினைப்பவன், பிராணனுக்கு பிரதிபந்தம் செய்யும் அசுரர்களுக்கு சமானமாய் தன்னை ஆஸ்ரயித்தவர்களை தாங்குவதற்கு (உதவி செய்வதற்கு) சாமர்த்தியம் அற்றவனாகின்றான். மேலும் ஞாதிகளுக்கு மத்தியில் வாக் முதலியவைகள் பிராணனை எவ்வாறு அனுசரிக்கின்றதோ அவ்வாறு தனக்காக தாங்கவேண்டியவர்கள் தாங்குவதற்கு இச்சிக்கின்றான். எவ்வாறு வாக் முதலியவைகள் பிராணனை அனுசரித்ததோ அவ்வாறு தானும் தாங்குவதற்கு இச்சித்து ஞாதிகளை தாங்குவதற்கு சாமர்த்தியம் உடையதாய் ஆயிற்று. சுதந்திரமாய் உள்ள மற்றவைகளால் முடியாது. இவை எல்லாம் பிராணகுண விக்ஞானத்தின் பலம் என்று கூறப்பட்டது.
अव- कार्यकरणानामात्मत्वप्रतिपादनाय प्राणस्यािङ्ग-रसत्वमुपन्यस्तं सोऽयास्य आिङ्गरस इति। अस्माद्धेतोरयमािङ्गरस इत्यािङ्गरसत्वे हेतुर्नोक्तः। तद्धेतुसिर्थमारभ्यते, तद्धेतु-सिायत्तं हि कार्यकरणात्मत्त्वं प्राणस्य। अनन्तरं च वागादीनां प्राणाधीनतोक्ता सा च कथमुपपादनीया? इत्याह-
அனுவாதம்- அ.கை- காரிய, கரணங்களின் (பூதங்கள், இந்திரியங்களின்) ஆத்மத்துவத்தை விளக்குவதற்காக“सोऽयास्य आिङ्गरस” என்ற வாக்கியத்தால் பிராணனின் ஆங்கிரஸத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. ஆனால் இதற்கு ஆங்கிரஸதன்மையின் ஹேதுவைக் கூறவில்லை. அந்த ஹேதுவை உண்டாவதற்காக இப்பொழுது ஆரம்பிக்கப்படுகிறது. அந்த ஹேதுவின் சித்தியினால்தான் பிராணனுக்கு காரியகரணத்துவம் உண்டாகிறது. அதன்பின் பிராணனின் அதீன தன்மைக் கூறப்பட்டது. அதை எவ்வாறு விளக்குவது? என்பது கூறப்போகிறார்.
सोऽयास्य आिङ्गरसोऽङ्गाना्ँहि रसः प्राणो वा अङ्गानां रसः प्राणो हि वा अङ्गाना्ँरसस्तस्माद्यस्मात्कस्माच्चाङ्गात्प्राण उत्क्रामति तदेव तच्छुष्यत्येष हि वा अङ्गना्ँरसः।। १९ ।।
மந்த்ரார்த்தம்- அந்த உயிருக்கு முக்கியமானது பிராணன் ஆகும். அது அங்கங்களின் ரசமாகும். அதாவது சாரமாகும். பிராணனே அங்கங்களின் ரசம். நிச்சயமாய் பிராணனே அங்கங்களின் ரசம். ஏன்எனில் எந்த ஒரு அங்கத்திலிருந்து வெளிக்கிளம்புகிறதோ அப்பொழுது அங்கம் உலர்ந்துவிடுகிறது. ஆகையால் அது அங்கங்களின் ரசமாகும்.
भाष्यम्- सोऽयास्य आिङ्गरस इत्यादि। यथोपन्यस्त- मेवोपादीयते उत्तरार्थम्“प्राणो वा अङ्गानां रसः” इत्येवमन्तं वाक्यं यथाव्याख्यातार्थमेव पुनः स्मारयति।
அனுவாதம்-“सोऽयास्य आिङ्गरस” (சோ அயாஸ்ய ஆங்கிரஸ்) என்பது முதலிய வாக்கியங்களால் எவ்வாறு சூசிப்பிக்கப்பட்டதோ அதற்கு சுருதி பதில் அளிப்பதற்காக மேற்கொள்கிறது.“प्राणो वा अङ्गानां रसः” (பிராணோவா அங்கானாம் ரசः) என்றுள்ள வரையில் இந்த வாக்கியம் எவ்வாறு வியாக்கியானம் செய்யப்பட்டதோ அதை ஞாபகப்படுத்துகிறது.
भाष्यम् - कथम्?“प्राणो वा अङ्गानां रसः”इति।“प्राणो हि”हिशब्दः प्रसिद्धौ- अङ्गानां रसः। प्रसिद्धमेतत्प्राणस्याङ्गरसत्वं न वागादीनाम्। तस्माद्युक्तं प्राणो वा इति स्मारणम्।
அனுவாதம்- எவ்வாறு ஞாபகப்படுத்துகிறது?“प्राणो वा अङ्गानां रसः” (ப்ராணோ வா அங்கானாம் ரசः) என்று “பிராணோ ஹி” என்பதில் உள்ள ஹி சப்தம் (பிராணன்) அங்கங்களின் ரசம் பிரசித்தம் என்பதைக் குறிக்கின்றது. பிராணனுக்கே அங்கரசத்துவம் வாக் முதலியவைகளுக்கு இல்லை என்பது பிரஸித்தம். ஆகையால் (பிராணோ வை) என்று ஞாபகப்படுத்துவது உசிதமேயாகும்.
भाष्यम्- कथं पुनः प्रसिद्धत्वम्? इत्यत आह। तस्माच्छब्द उपसंहारार्थ उपरित्वेन सम्बध्यते। यस्माद्यतोऽवयवात्कस्मादनुक्त-विशेषात्, यस्मात्कस्माद्यतः कुतिश्चच्च अङ्गाच्छरीरावयवाद-विशेषितात्प्राण उत्क्रामत्यपसर्पति तदेव तत्रैव तदङ्गंशुष्यति नीरसं भवति शोषमुपैति। तस्मादेव हि वा अङ्गानां रस इत्युपसंहारः।
அனுவாதம்- மேலும் எவ்வாறு பிரஸித்தம்? என்பதற்கு கூறுகிறார்-“तस्मात्” (ஆகையால்) என்ற சப்தம் முடிவுக்கு கொண்டுவதற்காக இனி மேலே கூறப்போவதுடன் சம்பந்தப்படுகிறது. எதனால்(यस्मात्) எந்த அவயவத்திற்கு“कस्मात्” (எதனிடமிருந்து) எதன் விசேஷம் எந்த ஒரு அவயவத்துடனும் கூறப்படவில்லையோ அதனால் எதனால், எதனிடமிருந்து என்பது எந்த ஒரு அவிசேஷமுடைய அங்கத்தின் அதாவது சரீரத்தின் அவயவத்திலிருந்து பிராணன் வெளிக்கிளம்பியதும் அங்கமானது உலர்ந்துவிடுகிறது அதாவது வற்றிவிடுகிறது. ஆகையால் அது நிச்சயமாக அது (பிராணன்) அங்கத்தின் ரசமாகும் என்று நிச்சயம் செய்து முடிவுக்குகொண்டுவருகிறார்.
भाष्यम् - अतः कार्यकरणानामात्मा प्राण इत्येतत्सिद्धम्। आत्मापाये हि शोषो मरणं स्यात्तस्मात्तेन जीवन्ति प्राणिनः सर्वे। तस्मादपास्य वागादीन्प्राण एवोपास्य इति समुदायार्थः।।
அனுவாதம்- ஆகையால் காரிய கரணங்களின் ஆத்மா பிராணன் என்று சித்திக்கின்றது. ஆத்மா நீங்கிவிட்டால் மரணம் ஏற்படுகிறது. ஆகையால் எல்லா பிராணிகளும் அதனாலேயே ஜீவிக்கின்றனர். ஆகையால் வாக் முதலியவைகளை நீக்கி பிராணனையே உபாசிக்கவேண்டும் என்பது பொதுவான அர்த்தமாகும்
अव - न केवलं कार्यकरणयोरेवात्मा प्राणो रूपकर्मभूतयोः। किं तर्हि? ऋग्यजुःसाम्नां नामभूतानामात्मेति सर्वात्मकतया प्राणं स्तुवन्महीकरोत्युपास्यत्वाय-
அனுவாதம்- அ.கை- பிராணரூப ஆத்மகமான பஞ்சபூதங்களுக்கும் கர்மபூத இந்திரியங்களுக்கு மட்டும் இல்லை எனில் பின் எதற்கு? அது நாம ஸ்வரூப ரிக், யஜுர், சாமம் இவைகளுக்கும் ஆத்மாவாகும். இவ்வாறு சர்வாத்மகத்துவத்தை ஸ்துதி செய்வதின் வாயிலாய் வேதமானது அதனை உபாசிப்பதற்காக அதன் மஹத்துவத்தை தெரிவிக்கிறது
एष उ एव बृहस्पतिर्वाग्वै बृहती तस्या एष पतिस्तस्मादु बृहस्पतिः ।। २०।।
மந்த்ரார்த்தம்- இவரே பிருஹஸ்பதி. வாக்கேबृहति மிகப்பெரியது (ப்ருஹதி) அதன் பதி பிருஹஸ்பதி.
भाष्यम्- एष उ एव प्रकृत आिङ्गरसो बृहस्पतिः। कथं बृहस्पतिः? इत्युच्यते- वाग्वै बृहती बृहतीछन्दः षट्त्रिंशदक्षरा। अनुष्टुप्च वाक्। कथम्?“वाग्वा अनुष्टुप्” (नृसिं० पू० २। २) इति श्रुतेः। सा च वागनुष्टुब्बृहत्यां छन्दस्यन्तर्भवति अतो युक्तं वाग्वै बृहतीति प्रसिद्धवद्वक्तुम्। बृहत्यां च सर्वा ऋचोऽन्तर्भवन्ति प्राणसंस्तुतत्वात्।“प्राणो बृहती प्राण ऋच इत्येव विद्यात्” इति श्रुत्यन्तरात्। वागात्मत्वाच्चर्चां प्राणेऽन्तर्भावः।
அனுவாதம்- அந்த பிராணனே இந்த அங்கிரஸ் என்னும் பிருஹஸ்பதி. அது எவ்வாறு பிருஹஸ்பதி? என்பது கூறப்படுகிறது. வாக்கே பிருஹதி(बृहति) எனும் முப்பத்தி ஆறு அக்ஷரங்கள் உடைய மிகப்பெரிய சந்தஸ் ஆகும். அனுஷ்டுப் என்பது வாக். எவ்வாறு?“वाग्वा अनुष्टुप्” (வாக்வா அனுஷ்டுப்) என்ற சுருதி வாக்கினால் அறிகிறோம், அந்த அனுஷ்டுப் வாக் பிருஹதி (மிகப்பெரிய) சந்தஸ்சில் அந்தர்பாவமாகிறது. ஆகையால் வாக் மிகப்பெரியது.(बृहती) (ப்ருஹதீ என்று பிரசித்தமாக கூறுவது பொருத்தமே“प्राणो बृहती प्राण ऋच इत्येव विद्यात्” (பிராணோ ப்ரஹதீ பிராண ருச் இத்யேவ வித்யாத்) என்ற வேறு சுருதியினாலும் அறியலாம். ஆகையால் எல்லா ருக்குகளும் வாக்ரூபமே. ஆகையால் அவைகளும் பிராணனில் அந்தர்பாவமாகிறது.
भाष्यम् - तत्कथम्? इत्याह- तस्या वाचो बृहत्या ऋच एष प्राणः पतिः। तस्या निर्वर्तकत्वात्। कौष्द्भाग्निप्रेरितमारुतनिर्वर्त्या हि ऋक्। पालनाद्वा वाचः पतिः। प्राणेन हि पाल्यते वाक्। अप्राणस्य शब्दोच्चारणसामर्थ्याभावात्। तस्मादु बृहस्पतिर्ऋचां प्राण आत्मेत्यर्थः।।
அனுவாதம்- அது எவ்வாறு? அது கூறப்படுகிறது- அந்த வாக்கிற்கு பிருஹதி ருக் அதன் பிராணன் அதாவது பதியாகும். அதை நிர்வஹிப்பதால். ஜாடர அக்னியினால் தூண்டப்பட்ட வாயுவினால் ருக் உண்டாகிறது. அல்லது வாணியை அது பாலனம் செய்வதால் அது வாக்கின் பதியாகிறது. பிராணனால் அல்லவா வாக் பரிபாலனம் செய்யப்படுகிறது. பிராணன் அற்ற சப்தத்தை உச்சாரணம் செய்வதற்கு சாமர்த்தியம் அற்றது. ஆகையால் பிருஹஸ்பதி ருக்குகளுக்கு பிராணன் அதாவது ஆத்மா ஆகும்.
अव - तथा यजुषाम्। कथम्?
அனுவாதம்- அ.கை- அவ்வாறே யஜுர் மந்திரங்களுக்கும் ஆத்மா. அது எவ்வாறு?
एष उ एव ब्रह्मणस्पतिर्वाग्वै ब्रह्म तस्या एष पतिस्तस्मादु ब्रह्मणस्पतिः।। २१।।
மந்த்ரார்த்தம்- இதுவே பிரஹ்மணஸ்பதி வாக்கே பிரஹ்மம், அதன் பதி பிரஹ்மத்தினுடைய பதி. ஆகையால் பிரஹ்மணஸ்பதி.
भाष्यम् - एष उ एव ब्रह्मणस्पतिः। वाग्वै ब्रह्म, ब्रह्म यजुः तच्च वाग्विशेष एव। तस्या वाचो यजुषो ब्रह्मण एष पतिस्तस्मादु ब्रह्मणस्पतिः पूर्ववत्।
அனுவாதம்- அதுவே பிரஹ்மணஸ்பதி. வாக்கே பிரஹ்மம். பிரஹ்மம் என்பது யஜுர் ஆகும். ஏன்எனில் அதுவும் ஒருவகையான வாக் ஆகும். அந்த வாக் ஆகிய யஜுஸ் பிரஹ்மத்தின் பதியாகும். மற்றவை முன்புபோல்.
भाष्यम् - कथं पुनरेतदवगम्यते बृहतीब्रह्मणोर्ऋग्यजुट्वं न पुनरन्यार्थत्वम्? इत्युच्यते- वाचोऽन्ते सामसामानाधिकरण्य-निर्देशात्“वाग्वै साम” (१। ३। २२) इति तथा च“वाग्वै बृहती”“वाग्वै ब्रह्म” इति च वाक्समानाधिकरणयोर्ऋग्यजुट्वं युक्तम्।
அனுவாதம்-மேலும் எவ்வாறு அறிவது பிருஹதீ(बृहती)ब्रह्मम् இவை கிரமமாய் ருக், யஜுஸ் இவைகளின் வாசகம் என்று. இதற்கு வேறு ஏதாவது அர்த்தம் உள்ளதா? அதற்குக் கூறப்படுகிறது- மேலே“वाग्वै साम”என்ற வாக்யத்தின் வாயிலாய் வாக்கின் சாமத்துடன் உள்ள ஸாமானாதிகரணத்தை காண்பிக்கிறார். அவ்வாறே“वाग्वै बृहती”என்று வாக் ஸமானாதிகரணங்களின் ருக், யஜுஸ் என்பது பொருந்தும்.
भाष्यम् - परिशेषाच्चसाम्नि अभिहिते ऋग्यजुषी एव परिशिष्टे। वाग्विशेषत्वाच्च वाग्विशेषो हि ऋग्यजुषी। तस्मात् तयोर्वाचा समानाधिकरणता युक्ता।
அனுவாதம்- முழுமையானதால் சாமத்தில் சப்தத்தின் சக்தியே ருக், யஜுசில் முழுமையாய் இருக்கிறது. வாக்கின் விசேஷத்தினாலும் வாக்கில், ருக், யஜுஸ் அடங்கி உள்ளது. ஆகையால் வாக்குடன் இரண்டிற்கும் சாமான்யாதிகரணம் ஆவது உசிதமேயாகும்.
भाष्यम्- अविशेषप्रसङ्गाच्च- सामोद्गीथ इति च स्पष्टं विशेषाभिधानत्वम्, तथा बृहतीब्रह्मशब्दयोरपि विशेषाभिधानत्वं युक्तम्। अन्यथा अनिर्धारितविशेषयोरानर्थक्यापत्तेश्च विशेषाभि्ाधानस्य वाात्रत्वे चोभयत्र पौनरुक्त्यात् ऋग्यजुःसामोद्गीथशब्दानां च श्रुतिष्वेवंक्रमदर्शनात्।।
அனுவாதம்- இதைத் தவிர(बृहती ब्रह्म) இவைகளின் ரூடீ அர்த்தத்தைக்கொண்டால்) அவிசேஷமாகும். (விசேஷம் அற்றதாக ஆகும்). (மேலே) சாமம், உத்கீதம் இவைகளைக் கூறி ஸ்பஷ்டமாய் விசேஷத்தைக் கூறுகிறார். அவ்வாறேबृहती, ब्रह्म (பிருஹதீ, பிரஹ்ம) ஆகிய சப்தங்களுக்கு விசேஷ அர்த்தத்தைக் கூறுவது அவசியமாகும். வேறு விதமானால் விசேஷத்தின் நிச்சயம் ஏற்படாததால் அதற்கு அர்த்தமற்ற தன்மை ஏற்படும். அதற்கு வாக்விசேஷம் என்று கூறினால் அது இரண்டுமுறை கூறியதால் புனருக்தி தோஷம் ஏற்படும். அவ்வாறு ருக், யஜுர், சாமம் மேலும் உத்கீதம் என்ற சப்தங்கள் சுருதியில் கிரமமாக காட்டப்பட்டுள்ளது.
एष उ एव साम वाग्वै सामैष सा चामश्चेति तत्साम्नः सामत्वम्। यद्वेव समः प्लुषिणा समो मशकेन समो नागेन सम एभिस्त्रिभिर्लोकैः समोऽनेन सर्वेण तस्माद्वेव सामाश्नुते साम्नः सायुज्य ँ्सलोकतां य एवमेतत्साम वेद ।। २२।।
மந்த்ரார்த்தம்- இதுவே சாமம், அதுவே(सा) வாக் மேலும் எது பிராணனோ அது “அம”(+¨É) ஆகும்.“सा” (சா) வும்.“अम” (அம) வும் சேர்ந்து“साम” (சாம) ஆகும். அது சாமத்தின் சமத்துவமாகும் ஏன்எனில் பிராணன் வெண்வண்டிற்கும், கொசுவிற்கும், யானைக்கும் சமானமாய் இருக்கிறது. இது மூவுலகிற்கும் சமமாய் இருக்கிறது. மேலும் எல்லாவற்றிற்கும் சமமாய் இருக்கின்றது. ஆகையால் அது சாமம்(साम) ஆகும். இந்த சாமத்தை இவ்வாறு எவர் அறிகிறாரோ அவர்கள் சாமத்தின் சாயுஜ்யத்தையும் சாலோகத்தையும் அடைவர்.
भाष्यम् - एष उ एव साम। कथम्? इत्याह वाग्वै सा यत्कििञ्चत्स्त्रीशब्दाभिधेयं सा वाक्। सर्वस्त्रीशब्दाभिधेयवस्तुविषयो हि सर्वनाम“सा” शब्दः। तथा अम एष प्राणः। सर्वपुंशब्दाभिधेयवस्तुविषयोऽमः शब्दः।“केन मे पौंस्नानि नामान्याप्नोषीति, प्राणेनेति बूयात्केन मे स्त्रीनामानीति वाचा” (कौषी० उ० १। ७) इति श्रुत्यन्तरात्। वाक्प्राणाभिधानभूतोऽयं सामशब्दः, तथा प्राणनिर्वर्त्यस्वरादिसमुदायमात्रं गीतिः सामशब्देनाभिधीयते, अतो न प्राणवाग्व्यतिरेकेण सामनामास्ति कििञ्चत्, स्वरवर्णादेश्च प्राणनिर्वर्त्यत्वात्प्राणतन्त्रत्वाच्च। एष उ एव प्राणः साम। यस्मात्साम सामेति वाक्प्राणत्मकम्-सा यामश्चेति, तत्तस्मात्साम्नो गीतिरूपस्य स्वरादिसमुदायस्य सामत्वं तत्प्रगीतं भुवि।
அனுவாதம்- அதுவே (அவனே) சாமம், எவ்வாறு? அது கூறப்படுகிறது. வாக்கே “सा” (அவள்) ஆகும். எது எல்லாம் ஸ்த்ரீலிங்க வாச்யமோ அது வாக்.“सा” (ஸா) என்ற ஸர்வநாம சப்தம் எல்லா ஸ்த்ரீலிங்க சப்தங்களின் வாயிலாய் கூறப்பட்டு அறியப்படும் வஸ்துக்களை விஷயம் செய்கின்றது. அவ்வாறே“अम” (அம) என்பது பிராணனும் ஆகும்.“अम” (அம) சப்தம் எல்லா புல்லிங்க சப்தங்கள் வாயிலாய் கூறப்பட்டு அறியப்படும் வஸ்துக்களை விஷயம் செய்கிறது. என்னுடைய புல்லிங்க நாமம் எதன் மூலமாய் அடையப்படுகிறது? எனில் பிராணனால் என்று கூறி மேலும் ஸ்த்ரீலிங்க நாமங்கள் எதனால் அடைவிக்கப்படுகிறது எனில் “வாக்” கினால் என்று வேறு சுருதியினால் சித்திக்கிறது. “சாம” சப்தமானது வாக், பிராணன்களை குறிப்பிடுவதாக உள்ளது. அவ்வாறே பிராணனிடத்திலிருந்து வெளிக்கிளம்பும் ஸ்வரங்களின் கூட்டமே கானமாகும். அதுவும் சாம சப்தத்தால் கூறப்படுகிறது. ஆகையால் பிராணரூப வாக்கின் வியாபாரத்தை விடுத்து“साम” (ஸாம) என்ற பெயருடைய ஒரு வஸ்துவும் இல்லை. ஏன்எனில் ஸ்வரம், வாக் இவைகளும் பிராணனிடம் இருந்தே உண்டாகிறது. மேலும் பிராணனை அதீனமாக உடையது. ஆகையால் அந்த பிராணனே“साम” (ஸாம) ஆகும். ஏன்எனில்“सा” (ஸா),“अम” (அம) இதன் வ்யுத்பத்திக்கு அனுசாரமாய்“सामसाम” (ஸாம ஸாம) என்று இவ்வாறு கூறி அறியப்படும் பதார்த்தம் வாக், மேலும் பிராணன் ரூபமாகும். ஆகையால் கீத ரூபமான எந்த சாமம் எனப்படும் ஸ்வரம் முதலிய சமுதாயம் உள்ளதோ அது உலகத்தில் சாமத்துவமாய் விளங்குகிறது.
भाष्यम् - यद् उ एव समस्तुल्यः सर्वेण वक्ष्यमाणेन प्रकारेण, तस्माद्वा सामेत्यनेन सम्बन्धः। वाशब्दः सामशब्दलाभ-निमित्तप्रकारान्तरनिर्देशसामर्थ्यलभ्यः। केन पुनः प्रकारेण प्राणस्य तुल्यत्वम्? इत्युच्यते- समः प्लुषिणा पुत्तिकाशरीरेण, समो मशकेन मशकशरीरेण, समो नागेन हस्तिशरीरेण, सम एभिस्त्रिभिर्लोकै-स्त्रैलोक्यशरीरेण प्राजापत्येन, समाऽनेन जगाद्रुपेण हैरण्यगर्भेण। पुत्तिकादिशरीरेषु गोत्वादिवत्कार्त्स्न्येन परिसमाप्त इति समत्वं प्राणस्य, न पुनः शरीरमात्रपरिमाणेनैव, अमूर्तत्वात्सर्वगतत्वाच्च। न च घटप्रासादादिप्रदीपवत्सङ्कोचविकासितया शरीरे तावन्मात्रं समत्वम्।“त एते सर्व एव समाः सर्वेऽनन्ताः”(बृ० उ० १। ५। १३) इति श्रुतेः। सर्वगतस्य त शरीरपरिमाणवृत्तिलाभो न विरुध्यते।
அனுவாதம்- அல்லது இனிக் கூறப்போகும் பிரகாரத்தினால் எது எல்லாவற்றிக்கும் சமமாய் இருக்கிறதோ அதனால்“साम” (சாம) என்ற வாக்கியத்துடன்“यदेव” (யதேவ) முதலிய வாக்கியங்களுடன் சம்பந்தப்படுகிறது,“वा” (வா) சப்தம்साम (சாம) சப்தத்தின் அடைவிற்காக நிமித்தபூதமான வேறு பிரகாரமாய் நிர்தேசம் செய்வதற்கான சாமர்த்தியம் உடையதாய் இருக்கிறது. மேலும் எந்த விதமாய் பிராணனுக்கு சமமாய் (துல்யமாய்) இருக்கிறது? அதற்கு கூறப்படுகிறது. அந்த பிராணன் வெள்ளை எறும்பு சரீரத்திற்கு சமமாய் இருக்கிறது. கொசுவின் சரீரத்திற்கும் சமமாய் இருக்கின்றது. யானையின் சரீரத்திற்கும் சமமாய் இருக்கிறது. அவ்வாறே இந்த மூன்று லோகங்களிலும் அதாவது மூவுலகரூப பிரஜாபதியின் சரீரத்திற்கு சமானமாய் இருக்கிறது. அவ்வாறே ஜகத்ரூப ஹிரண்யகர்பனின் சரீரத்திற்கு சமானமாய் இருக்கின்றது. எவ்வாறு கோவின் (பசுவின்) கோத்துவம் பூரணமாய் வியாபித்திருக்கிறதோ அவ்வாறு எறும்பு முதலிய சரீரங்களில் பூரணமாய் வியாபித்திருக்கிறது. ஆகையால் பிராணன் அவைகளிடம் சமானமாய் இருக்கின்றது. சரீரமாத்திர பரிமாணத்தால் அல்ல. கடம், மாளிகை முதலியவைகளில் உள்ள தீபம் போல் குறைந்தும், மிகுந்தும் பிரகாசிப்பதுபோல் சரீரங்களில் அவ்வளவு மாத்திரமே. அதற்கு சமத்துவம் அல்ல.“त एते सर्व एव समाः सर्वेऽनन्ताः” (த ஏதே சர்வ ஏவ சமா: சர்வே அனந்தா:) என்ற சுருதி வாக்கியத்தால் சித்திக்கிறது. சர்வகத பிராணனின் சரீரத்தின் பரிமாணத்தை அனுசரித்து விருத்தியை அடைவதில் விரோதம் ஒன்றும் இல்லை.
भाष्यम् - एवं समत्वात्सामाख्यं प्राणं वेद यः श्रुतिप्रकाशितमहत्त्वं तस्यैतत्फलम्-अश्नुते व्याप्नोति साम्नः प्राणस्य सायुज्यं सयुग्भावं समानदेहेन्द्रियाभिमानत्वम्, सालोक्यं समानलोकतां वा भावनाविशेषतः य एवमेतद्यथोक्तं साम प्राणं वेद आ प्राणात्माभिमानाभिव्यक्तेरुपास्ते इत्यर्थः।
அனுவாதம்- இவ்வாறு சமத்துவமாய் இருப்பதால்साम (ஸாம) என்று சுருதியினால் பிரகாசப்படுத்தப்பட்ட மஹத்துவமான பிராணனை எவர் அறிவாரோ அவருக்கு இந்த பலம்- ஸாம ஆகிய பிராணன் எனப்படும் சாயுஜ்யம் - சயுக் பாவம் அதாவது அவருடன் ஒரே தேஹமாயும், இந்திரியங்களின் அபிமானத்தையும் அடைகின்றான். அவ்வாறே பாவனா விசேஷத்தால் சாலோகம் அதாவது சமான லோகத்தை அடைந்தவனாகின்றான். எவன் இவ்வாறு கூறப்பட்ட“साम” (ஸாம) பிராணனை அறிகிறானோ அவன் பிராணாத்மா அபிமானம் ஏற்படும் வரையில் உபாசனை செய்வான் என்பது பொருள்.
एष उ वा उद्गीथः प्राणो वा उत्प्राणेन हीद ँ्सर्वमुत्तब्धं वागेव गीथोच्च गीथा चेति स उद्गीथः।। २३।।
மந்த்ரார்த்தம்- அதுவே உத்கீதம்.“उद्गीथ” (பிராணன்“उत्” (உத்). பிராண மூலமாகவே எல்லாம் தாரணை செய்யப்படுகிறது. வாக்கே“गीथा” கீதா. இது“उत्” உத் மேலும்“गीथा” கீதாவும் ஆகும். ஆகையால்“उद्गीथ” (உத்கீத) எனப்படுகிறது.
भाष्यम्- एष उ वा उद्गीथः। उद्गीथो नाम सामावयवो भक्तिविशेषो नोद्गानम्, सामाधिकारात्। कथमुद्गीथः प्राणः? प्राणो वा उत्प्राणेन हि यस्मादिदं सर्वं जगदुत्तब्धमूर्ध्वं स्तब्धमुत्तम्भितं विधृतमित्यर्थः। उत्तब्धार्थावद्योतकोऽयमुच्छन्दः प्राणगुणाभि-धायकः, तस्मादुत्प्राणः। वागेव गीथाशब्दविशेषत्वादुद्गीथभक्तेः। गायतेः शब्दार्थत्वात्सा वागेव। न ह्युद्गीथभक्तेः शब्दव्यतिरेकेण कििञ्चद्रूपमुत्प्रेक्ष्यते। तस्माद्युक्तमवधारणं वागेव गीथेति। उच्च प्राणो गीथा च प्राणतन्त्रा वागित्युभयमेकेन शब्देनाभिधीयते स उद्गीथः।
அனுவாதம்- இதுவே“उद्गीथः” (உத்கீதः) இந்த உத்கீத சப்தத்தால் “ஸாம” த்தின் அவயவபூதமான பக்தி விசேஷமாகும். ஆனால் இது உத்கானம் அல்ல. ஏன்எனில் ஸாமத்தின் அதிகரணமாகும். எவ்வாறு உத்கீதம் பிராணன் ஆகும்? பிராணனே“उत्” (உத்) ஆகும். ஏன்எனில் ஜகத்தை மேல் கிளப்புவதற்கும், ஸ்தம்பிக்க செய்வதற்கும் அதுவே கட்டுப்படுத்துகிறது.“उत्तब्ध” (உத்தப்த்த) அர்த்தத்தை விளக்கும் இது“उत्” (உத்) சப்தம் பிராணனின் குணத்தை கூறுவதாகும். ஆகையால்“उत्” (உத்) பிராணன் ஆகும். வாக்கே“उद्गीथा” (உத்கீதா). ஏன்எனில் உத்கீத என்பது பக்தி விசேஷமாகும்.“गै” (கை) தாதுவின் அர்த்தம் சப்தம் செய்தல். ஆகையால்“गीथा” கீதா வாக் ஆகும். உத்கீத பக்தியின் ஸ்வரூபத்தின் சப்தத்தைத்தவிர வேறு ஒன்றும் அதற்குமேல் இல்லை. ஆகையால் வாக்கே“गीथा” (கீதா.) இவ்வாறு நிச்சயம் செய்வது உசிதமே.“उत्” (உத்) பிராணன்.“गीथा”(கீதா) பிராண தந்திரமான வாக் ஆகும். ஆகையால் இவை இரண்டும் ஒரே சப்தத்தால் கூறப்படுகிறது. அதுவே“उद्गीथः” (உத்கீத:)
तद्धपि ब्रह्मदत्तश्चैकितानेयो राजानं भक्षयन्नुवाचायं त्यस्य राजा मूर्धानं विपातयताद्यदितोऽयास्य आिङ्गरसोऽन्येनोदगायदिति वाचा च ह्येव स प्राणेन चोदगायदिति।। २४।।
மந்த்ரார்த்தம்- இந்த (பிராண) விஷயத்தில் ஒருகதை இருக்கின்றது. சைகிதானேய பிரஹ்மதத்தன் ஒரு யக்ஞத்தில் சோமத்தை அருந்திக்கொண்டே கூறினார். “அயாஸ்ய (अयास्य) என்றும் ஆங்கிரசம் என்னும் பெயருடைய முக்கியப் பிராணனை வாக்குடன் கூடிய பிராணனைத்தவிர வேறு தேவதையின் மூலமாய் உத்கானம் செய்தால் இந்த சோமம் என் தலையை வெடிக்கச்செய்யட்டும்” என்று கூறினார். ஆகையால் அவர் பிராணன் மேலும் வாக் இவைகளின் வாயிலாய் உத்கானம் செய்தார் என்ற நிச்சயம் ஏற்படுகிறது.
भाष्यम् - तद्धापि तत्तत्रैस्मिन्नुक्तेऽर्थे हाप्याख्यायिकापि श्रूयते ह स्म। ब्रह्मदत्तो नामतः चिकितानस्यापत्यं चैकितानस्तदपत्यं युवा चैकितानेयः, राजानं यज्ञे सोमं भक्षयन्नुवाच। किम्? अयं चमसस्थो मया भक्ष्यमाणो राजा त्यस्य तस्य ममानृतवादिनो मूर्धानं शिरो विपातयताद्विस्पष्टं पातयतु। तोरयं तातङ्डादेशः आशिषि लोट्, विपातयतादिति। यद्यहमनृतवादी स्यामित्यर्थः।
அனுவாதம்- தத்தாபி இதன் அர்த்தம் என்னவெனில் முன்பு கூறிய விஷயத்தில் இந்த சரித்திரமானது கேட்கப்படுகிறது. பிரஹ்மதத்தன் என்ற பெயருடைய சிகிதானனின் மகனாகிய சைகிதானன் என்ற யுவஸம்ஞக அபத்ய யக்ஞத்தில் ராஜா அதாவது சோமத்தை அருந்திக்கொண்டே இவ்வாறு கூறினான். என்ன கூறினான்? இந்த சமசத்தில் (பாத்திரத்தில்) இருக்கும் (ராஜானத்தை) சோமத்தை அருந்துகிறேன். இதைத் தவிர்த்து (வாக்குடன் கூடிய பிராணனைத் தவிர்த்து வேறு தேவதையை) கானம் செய்தால் அந்த சோமம் என் தலையை வெடிக்கச் செய்யட்டும். மற்றது சம்ஸ்கிருத இலக்கண சம்பந்தமானது.
भाष्यम् - कथं पुनरनृतवादित्वप्राप्तिः? इत्युुच्यते- यद्यदीतोऽस्मात्प्रकृतात् प्राणााक्संयुक्तात्, अयास्यः- मुख्यप्राणभिधायकेन अयास्यािङ्गरसशब्देनाभिधीयते विश्वसृजां पूर्वर्षीणां सत्रे उद्गातासोऽन्येन देवतान्तरेण वाक्प्राणव्यतिरिक्ते-नोदगायदुद्गानं कृतवान्, ततोऽहमनृतवादी स्याम्, तस्य मम देवता विपरीतप्रतिपत्तुर्मूर्धानं विपातयतु, इत्येवं शपथं चकारेति विज्ञाने प्रत्ययदार्ढकर्तव्यतां दर्शयति।
அனுவாதம்-எவ்வாறு பொய்(अनृतं) பேசுபவனாகின்றான்? அதைக் கூறுகிறார்- இந்த பிரகிருத வாக்குடன் இணைந்த“अयास्यः” (அயாச்யः) அதாவது முக்கியப்பிராணன் என்கின்ற அயாச்ய ஆங்கிரச சப்தத்தால் கூறப்படுகிறது. மேலும் முன்பு இருந்த ரிஷிகளின் சதசில் (சத்திரத்தில்)“उद्गाथा” (உத்காதா) இருந்தார். அவர் வாக்குடன் இணைந்த பிராணனைத் தவிர வேறு தேவதைகளின் மூலமாய் உத்கானம் செய்தால் நான் மித்யாவாதி ஆவேன். ஆகையால் என்னுடைய தேவதா விபரீதஞானமுடையவனுடைய தலை வெடிக்கட்டும் என்று சாபமிட்டது விக்ஞான பிரத்யயத்தில் திடஞானம் ஏற்படுவதற்காக காட்டப்படுகிறது.
भाष्यम्- तमिममाख्यायिकानिर्धारितमर्थं स्वेन वचसोपसंहरति श्रुतिः-वाचा च प्राणप्रधानया प्राणेन च स्वस्यात्मभूतेन सोऽयास्य आिङ्गरस उद्गातोदगायदित्येषोऽर्थो निर्धारितः शपथेन।।
அனுவாதம்-அந்த இந்த கதை அதை திடப்படுத்துவதற்காக சுருதியானது தனது வசனத்தினால் கூறுகிறது. இந்த அயாச்ய அங்கிரஸ் உத்காதா பிராணன் பிரதானமான வாக்கினாலும் தன் ஆத்ம பூதமான பிராணனாலேயே உத்கானம் செய்தது. இந்த அர்த்தத்தை“சபதம்” என்று கூறி திடப்படுத்துகிறார்.
तस्य हैतस्य साम्नो यः स्वं वेद भवति हास्य स्वं तस्य वै स्वर एव स्वं तस्मादार्त्विज्यं करिष्यन्वाचिस्वरमिच्छेत तया वाचा स्वरसम्पन्नयार्त्विज्यं कुर्यात्तस्माद्यज्ञे स्वरवन्तं दिदृक्षन्त एव। अथो यस्य स्वं भवति भवति हास्य स्वं य एवमेतत्साम्नः स्वं वेद ।। २५।।
மந்த்ரார்த்தம்- அந்த இந்த சாம சப்த வாச்ய முக்கிய பிராணனின் சொந்த (தனத்தை) எவன் அறிகிறானோ அதனால் அவன் தனத்தை அடைவான். நிச்சயமாய் அந்த தனம் ஸ்வரமாகும். ஆகையால் ரித்விக் கர்மம் செய்பவர்களின் வாக்கில் ஸ்வரத்தைச் சேர்க்க விரும்ப வேண்டும். அந்த ஸ்வரத்துடன் கூடிய வாக்கினால் ரித்விக் கர்மம் செய்யவேண்டும் . இதனால் யக்ஞத்தில் ஸ்வரத்துடன் உத்கானம் செய்பவனைக் காண்பதில் இச்சை செய்கிறார்கள். உலகத்தில் எவருக்கு தனம் உள்ளதோ (அவரை காண விரும்புவார்கள்) அதைப்போல் இந்த ஸாமத்தைத் தனமாக அறிகிறார்களோ அதனால் தனத்தை அடைகின்றார்கள்.
भाष्यम्- तस्येति प्रकृतं प्राणमभिसम्बध्नाति। हैतस्येति मुख्यं व्यपदिशत्यभिनयेन। साम्नः सामशब्दवाच्यस्य प्राणस्य यः स्वं धनं वेद, तस्यह किं स्यात्? भवति हास्य स्वम्। फलेन प्रलोभ्याभिमुखीकृत्य शुुश्रूषवे आह- तस्य वै साम्नः स्वर एव स्वम्। स्वर इति कण्द्भगतं माधुर्यं तदेवास्य स्वं विभूषणम्। तेन हि भूषितमृद्धिमल्लक्ष्यत उद्गानम्।
அனுவாதம்--“तस्य” (தஸ்ய) (அதனுடைய) என்ற ஸர்வநாம சப்தத்தால் இப்பொழுது குறிப்பிடப்படும் பிராணனின் சம்பந்தத்தை சுருதி காண்பிக்கிறது.“ह एतस्य”(ஹ) ஏதஸ்ய- ஹ இதனுடைய) என்ற பதங்களால் சுருதியானது முக்கியப்பிராணனை கைவிரலால் சுட்டிக்காட்டுகிறது.“साम्नः”(ஸாம்ன:) என்பது ஸாம சப்தத்தின் வாச்யமாகிய முக்கிய பிராணனுடைய சொந்த தனத்தை (ஸ்வரத்தை) அறிகின்றவனுக்கு என்ன பலன் கிடைக்கும்? அதனால் அவனுக்கு தனம் கிடைக்கும். இவ்வாறு பலத்தைக்கூறிய தன்வாயிலாய் அதில் ஒருமுகப்படுத்தி அதைக் கேட்க விரும்புகிறவனுக்கு சுருதி கூறுகிறது- அந்த ஸாமத்திற்கு(साम्नः) ஸ்வரமே தனமாகும். ஸ்வரம் என்பது தொண்டையில் உள்ள மதுரமான தன்மை. அதுவே அதன் ஆபரணமாகும். அதன் வாயிலாய் அணிந்ததால் உத்கானம் அதிகம் உடையவனாகின்றான்.
भाष्यम्-यस्मादेवं तस्मादार्त्विज्यं ऋत्विक्कर्मोद्गानं करिष्यन्वाचि विषये वाचि वागाश्रितं स्वरमिच्छेत इच्छेत् साम्नो धनवत्तां स्वरेण चिकीर्षुरुद्गाता। इदं तु प्रासिङ्गकं विधियतेः साम्नः सौस्वर्येण स्वरवत्त्वप्रत्यये कर्तव्ये इच्छामात्रेण सौस्वर्यं न भवतीति दन्तधावनतैलपानादि सामर्थ्यात्कर्तव्यमित्यर्थः। तथैवं संस्कृतया वाचा स्वरसम्पन्नयार्त्विज्यं कुर्यात्।
அனுவாதம்- ஏனெனில் இவ்வாறு ஆர்த்விஜ்யம் அதாவது உத்கான ரூப ருத்விக் கர்மா செய்துகொண்டு ஸ்வரத்தின் வாயிலாய் ஸாமத்தின் செழிப்பைச் சம்பாதிப்பதில் இச்சை உள்ளவன் உத்காத வாணி விஷயத்தில் (வாக் விஷயத்தில்) அதாவது வாக்கினை சார்ந்து உள்ள ஸ்வரத்தை உத்காதா இச்சை கொள்ள வேண்டும். இந்த பிராசங்கிக விதானம் செய்யப்பட்டது. ஸாமத்தின் நல்ல ஸ்வரத்தன்மை அதாவது ஸ்வரத்தை வெளிப்படுத்துவதற்கு இச்சை மாத்திரம் இருந்தால் அதன் ஸுஸ்வரத்தை வெளிப்படுத்த முடியாது. ஆகையால் இதன் தாத்பரியம் என்னவெனில் பல்தேய்த்தல், எண்ைண தடவுதல் முதலியவைகளின் பலத்தால் நல்ல ஸ்வரத்தை சம்பாதிக்க வேண்டும். இவ்வாறு ஸம்ஸ்காரத்துடன் கூடிய அந்த ஸ்வரத்துடன் கூடிய வாக்கினால் (வாணியினால்) ருத்விக் கர்மம் செய்யவேண்டும்.
भाष्यम्- तस्माद्यस्मात्साम्नः स्वभूतः स्वरस्तेन स्वेन भूषितं साम अतो यज्ञे स्वरवन्तमुद्गातारं दिदृक्षन्त एव द्रष्टुमिच्छन्त एव धनिनामेव लौकिकाः। प्रसिद्धं हि लोकेऽथो अपि यस्य स्वं धनं भवतितं धनिनं दिदृक्षन्ते इति सिद्धस्य गुणविज्ञानफलसम्बन्धस्य उपसंहारः क्रियते-भवति हास्य स्वं य एवमेतत्साम्नः स्वं वेदेति।।
அனுவாதம்- அதனால், ஏனெனில் ஸாமத்தின் தனமாகிய ஸ்வரம், அந்த ஸ்வரத்தால் ஸாமம் அலங்கரிக்கப்பட்டது. ஆகவே லௌகீகஜனங்கள் எவ்வாறு செல்வந்தரை காண விரும்புவார்களோ அவ்வாறே யக்ஞத்தில் ஸ்வரஸம்பன்னராகிய உத்காதாவைக் காண விரும்புகிறார்கள். இது உலகில் பிரசித்தமானது. அவ்வாறு இருந்தாலும் உலகத்தில் எவருக்கு தனம் உள்ளதோ அந்த தனவானைப் பார்ப்பதற்கு விரும்புவது போல என்று ஸித்தமாக உள்ள குணவிக்ஞானரூப பலனாகிய சம்பந்தத்தை இவ்வாறு சாமத்தினுடைய தனத்தை அறிபவர்கள் தனத்தை அடைகிறார்கள் என உபஸம்ஹாரம் செய்ப்படுகிறது.
अव - अथान्यो गुणः सुवर्णवत्तालक्षणो विधीयते। असावपि सौस्वर्यमेव। एतावान्विशेषः पूर्वं कण्द्भगतमाधुर्यमिदं लाक्षणिकं सुवर्णशब्दवाच्यम्।
அனுவாதம்- அ.கை- இப்போது மற்றொரு குணமான ஸ்வர்ணத் (நல்ல எழுத்து) தன்மையான லக்ஷணத்தின் முறையானது கூறப்படுகிறது. இதுவும் ஸுஸ்வரத்துடன் கூடியதே. இதனுடைய விசேஷம் முன் கூறியது தொண்டையில் உள்ள மாதுர்யம் அதாவது இனிமையானத் தன்மை, ஆனால் இதுவோ ஸ்வர்ண சப்தவாச்யமாகிய மாதுர்யத்தின் லாக்ஷணிகம் ஆகும்.
तस्य हैतस्य साम्नो यः सुवर्णं वेद भवति हास्य सुवर्णं तस्य वै स्वर एव सुवर्णं भवति हास्य सुवर्णं य एवमेतत्साम्नः सुवर्णं वेद।। २६।।
மந்த்ரார்த்தம்- எவன் இந்த ஸாமத்தின் ஸுவர்ணத்தை அறிகிறானோ அதனால் ஸுவர்ணத்தை அடைகின்றான். அதன் ஸ்வரமே ஸுவர்ணம். எவன் இவ்வாறு இந்த ஸாமத்தின் ஸுவர்ணத்தை அறிகிறானோ அவன் ஸுவர்ணத்தை அடைகின்றான்.
भाष्यम् - तस्य हैतस्य साम्नो यः सुवर्णं वेद भवति हास्य सुवर्णम्। सुवर्ण शब्दसामान्यात्स्वरसुवर्णयोः लौकिकमेव सुवर्णं गुणविज्ञानफलं भवतीत्यर्थः। तस्य वै स्वर एव सुवर्णम्। भवति हास्य सुवर्णं य एवमेतत्साम्नः सुवर्णं वेदेति पूर्ववत्सर्वम्।
அனுவாதம்-அந்த இந்த ஸாமத்தின் ஸுவர்ணத்தை எவன் அறிகிறானோ அவன் அதனால் ஸுவர்ணத்தை அடைகிறான். ஸ்வரம், ஸ்வர்ணம் ஆகிய இவ்விரண்டிற்காக ஸ்வர்ண சப்தத்தின் பிரயோகம் ஸமான ரூபமாய் ஆகிறது. ஆகையால் இந்த குணத்தை அறிவதால் லௌகிக ஸுவர்ண பலனே கிடைக்கிறது. எவன் இவ்வாறு ஸாமத்தின் ஸுவர்ணத்தை அறிகிறானோ அதனால் ஸுவர்ணத்தை அடைகின்றான். இவ்வாறு எல்லா அர்த்தத்தையும் முன்புபோல் அறிந்து கொள்ளவேண்டும்.
अव - तथा प्रतिष्द्भागुणं विधित्सन्नाह-
அனுவாதம்- அ.கை- இவ்வாறு ஸாமத்தின் பிரதிஷ்டா குணத்தை விளக்குவதற்கு இச்சித்து சுருதி கூறுகிறது.-
तस्य हैतस्य साम्नो यः प्रतिष्द्भां वेद प्रति ह तिष्द्भति तस्य वै वागेव प्रतिष्द्भा वाचि हि खल्वेष एतत्प्राणः प्रतिष्द्भितो गीयतेऽन्न इत्यु हैक आहुः।। २७।।
மந்த்ரார்த்தம்- எவன் இந்த சாமத்தின் பிரதிஷ்டையை அறிகிறானோ அவன் ஸ்திரமாக ஆகின்றான். நிச்சயமாய் வாக்கே (வாணியில்) நிலைபெற்று அல்லவா இந்த பிராணன் கானம் செய்கிறது. சிலர் அது அன்னத்தில் பிரதிஷ்டையாகி கானம் செய்கிறது என்று கூறுகிறார்கள்.
भाष्यम् - तस्य हैतस्य साम्नो यः प्रतिष्द्भां वेद। प्रतितिष्द्भत्यस्यामिति प्रतिष्द्भा वाक्तां प्रतिष्द्भा साम्नो गुणं यो वेद स प्रतितिष्द्भति ह।“तं यथा यथोपासते” इति श्रुतेस्तद्गणत्वं युक्तम्।
அனுவாதம்- எவன் இந்த ஸாமத்தின் பிரதிஷ்டையை அறிகின்றானோ எதில் (ஸாமம்) பிரதிஷ்டையாகி உள்ளதோ அந்த வாக் அவனுடைய ஸ்திரதன்மையாகும். அந்த ஸாமத்தின் குணரூபமான பிரதிஷ்டையை அறிகின்றானோ அவன் பிரதிஷ்டை ஆகின்றான்.“तं यथा यथोपासते” (தம் யதா யதோபாஸதே) (அதை எவன் இவ்வாறு உபாசனை செய்கின்றானோ) என்ற சுருதியை அனுசரித்து அதனுடைய குணத்தின் தன்மையை அறிவது உசிதமாகும்.
भाष्यम् - पूर्ववत्फलेन प्रतिलोभिताय का प्रतिष्द्भेति शुश्रूषवे आह- तस्य वै साम्नो वागेव, वागिति जिामूलीयादीनां स्थानानामाख्या, सैव प्रतिष्द्भा, तदाह-वाचि हि जिामूलीयादिषुहि यस्मात्प्रतिष्द्भितः सन्नेष प्राण एतद्गानंगीयते गीतिभावमापद्यते तस्मात्साम्नः प्रतिष्द्भा वाक्। अन्ने प्रतिष्द्भितो गीयत इत्यु हैकेऽन्ये आहुः। इह प्रतितिष्द्भितीति युक्तम्। अनिन्दितत्वादेकीयपक्षस्य विकल्पेन प्रतिष्द्भागुणविज्ञानं कुर्याद् वाग्वा प्रतिष्द्भान्नं वेति।।
அனுவாதம்- பலனைக்கொண்டு ஈர்ப்பதற்காக கூறப்பட்ட அந்த பிரதிஷ்டா என்ன என்று அறிய விரும்புபவனுக்காக சுருதி முன்புபோல் கூறுகிறது, உறுதியாக அந்த சாமத்தின் வாக்கே. இந்த வாக் என்பது ஜிஹ்வாமூô¦யம் முதலிய ஸ்தானங்களின் பெயர் ஆகும். அதுவே பிரதிஷ்டை. அது இங்கு கூறப்படுகிறது. வாக் தான் ஜிஹ்வாமூô¦யம் முதலியவைகளில் எதனால் பிரதிஷ்டையாய் இருந்துகொண்டு இந்த பிராணன் இந்த கானத்தைக் கானம் செய்தது. கானம் செய்யும் பாவத்தை அடைந்தது. ஆகையால் ஸாமத்தின் பிரதிஷ்டா வாக் ஆகும். வேறு சிலர் அன்னத்தில் (சரீரத்தில்) பிரதிஷ்டையாகி கானம் செய்கிறது என்று கூறுவர். இங்கு பிரதிதிஷ்டதி என்று கூறியது சரியே. இவ்விதம் வேறு புருஷர்களின் கொள்கையும் தோஷமற்றதே. ஆகவே ஸந்தேகமில்லாமல் ப்ரதிஷ்டா குணவிக்ஞானம் செய்யப்படவேண்டும். அதாவது வாக்கானது ப்ரதிஷ்டையாகும். அல்லது அன்னம் (சரீரம்) என (அறிய வேண்டும்).
अव - एवं प्राणविज्ञानवतो जपकर्म विधित्स्यते। यद्विज्ञानवतो जपकर्मण्यधिकारस्तद्विज्ञानमुक्तम्।
அனுவாதம்-அ,கை- இவ்வாறு பிராணனை அறிந்தவர்களுக்கு ஜபகர்மம் விதிக்கப்படுகிறது. எந்த விக்ஞானத்தினால் ஜபகர்மத்தில் அதிகாரமோ அந்த விக்ஞானம் கூறப்பட்டது.
अथातः पवमानानामेवाभ्यारोहः। स वै खलु प्रस्तोता साम प्रस्तैति स यत्र प्रस्तुयात्तदेतानि जपेत्। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमयेति। स यदाहासतो मा सद्गमयेति मृत्युर्वा असत्सदमृतं मृत्योर्मामृतं गमयामृतं मा कुर्वित्येवैतदाह। तमसो मा ज्योतिर्गमयेति मृत्युर्वै तमो ज्योतिरमृतं मृत्योर्मामृतं गमयामृतं मा कुर्वित्येवैतदाह। मृत्योर्मामृतं गमयेति नात्र तिरोहित-मिवास्ति। अथ यानीतराणि स्तोत्राणि तेष्वात्मनेऽन्नाद्यमागाये-त्तस्मादु तेषु वरं वृणीत यं कामं कामयेत त ँ्स एष एवंविदुद्गातात्मने वा यजमानाय वा यं कामं कामयते तमागायति तद्वैतोकजिदेव न हैवालोक्यताया आशास्ति य एवमेतत्साम वेद ।। २८।।
மந்த்ரார்த்தம்- இனி பவமானங்களின் எவ்வாறு மேலே செல்வது (அப்யாரோஹம்) என்பது கூறப்படுகிறது. அந்த ப்ரஸ்தோதா அந்த நிச்சயமாக ஸாமத்தை ஆரம்பம் செய்கிறார். அப்பொழுது ஆரம்பம் செய்யும் சமயத்தில் ஜெபிக்க வேண்டிய மந்திரங்கள்“असतो मा सद्गमय” (அசதோ மா சத்கமய,“तमसो माVªÉÉäÊiÉMÉǨɪɔ தம்சோ மா ஜ்யோதிர்கமய,“मृत्योर्मामृतं गमय” மிருத்யோர்மா அமிருதம்கமய) அவர் கூறும்போது- என்னை அசத்திலிருந்து சத்தை அடையச்செய் என்ற இடத்தில் மிருத்யுவே அசத் மேலும் அம்ருதம் சத். ஆகையால் அது இவ்வாறு கூறுகிறது. என்னை ம்ருத்யுவிலிருந்து அம்ருத்யுவிற்கு எடுத்துச்செல். அதாவது என்னை அமரனாகச்செய். அப்பொழுது கூறுகிறார்.- என்னை இருளிலிருந்து பிரகாசத்திற்கு எடுத்துச்செல் என்ற இதில் ம்ருத்யு இருள் ஆகும். அம்ருதம் ஜோதி (பிரகாசம்) ஆகும். இவ்வாறு என்னை அமரனாகச் செய் என்பதாகும். என்னை ம்ருத்யுவிலிருந்து அம்ருதத்திற்கு எடுத்துச் செல் என்பதில் திரோஹிதம் (மறைப்பு) இல்லை. இதன் பின் வரும் மற்ற ஸ்தோத்திரங்களில் அன்னத்தை பிரதிஷ்டையாக கருதி (அன்னாத்யா) ஆகானம் செய்ய வேண்டும். அதை கானம் செய்வதை அறிந்த யஜமானன் வரம் வேண்டினான். அதேபோல் போகத்தில் இச்சையையும் வேண்டினான், அதை இவ்வாறு அறிந்த உத்காதா தன்னுடைய அதாவது யஜமானனுக்காக எந்த போகத்தை இச்சிக்கிறானோ அதற்காக ஆகானம் செய்கிறான். அந்த இதுவே பிராணதர்சன லோகப்பிராப்திக்கான சாதனமாகும். எவன் ஒருவன் இவ்வாறு இந்த ஸாமத்தை அறிகிறானோ அவனுக்கு அலோக்கியத்தில் (லோகபிராப்தி இன்மையில்) ஆசை உண்டாகாது.
भाष्यम् - अथानन्तरं यस्माच्चैवं विदुषा प्रयुज्यमानं देवभावायाभ्यारोह फलं जपकर्मं, अतस्तस्मात्तद्विधीयत इह। तस्य चोद्गीथसम्बन्धात्सर्वत्र प्राप्तौ पवमानानामिति वचनात् पवमानेषु त्रिष्वपि कर्तव्यतायां प्राप्तायां पुनः कालसंकोचं करोति- स वै खलु प्रस्तोता साम प्रस्तौति। स प्रस्तोता यत्र यस्मिन्काले साम प्रस्तुयात्प्रारभेत तस्मिन्काले एतानि जपेत्।
அனுவாதம்- அதன்பின் எதனால் இவ்வாறு விதுஷனால் (பண்டிதனால்) ப்ரயோகிக்கப்படுகின்ற அப்யாரோக பலனை (மேல் லோகபலனை)க் கொடுக்கும் ஜப கர்மம் தேவபாவத்தை அடையும் பொருட்டாகும். அதனால் அது இங்கு விதிக்கப்படுகிறது. அவருக்கு உத்கீத சம்பந்தத்தால் எங்கும் அடையப்படும் பவமானங்களுக்கு என்ற வசனத்தால் மூன்று பவமானங்களிலும் கர்தவ்யம் அடையப்படுவதால் மறுபடியும் காலத்தை சுருக்குகிறது-“स वै खलु प्रस्तोता सामप्रस्तौति” (ஸ வை கலு ப்ரஸ்தோதா ஸாம ப்ரஸ்தௌதி) என்று ஸ்துதிக்கிறது. அந்த ப்ரஸ்தோதா எங்கு எப்பொழுது சாமத்தை நன்றாக ஸ்துதிப்பதற்கு ஆரம்பிக்கிறாரோ அப்பொழுது இவைகளை ஜபிக்க வேண்டும்.
भाष्यम् - अस्य च जपकर्मण आख्या अभ्यारोह इति। आभिमुख्येनारोहत्यनेन जपकर्मणैवंविद् देवभावात्मान-मित्यभ्यारोहः। एतानीति बहुवचनात्त्रीणि यजूँषि। द्वितीयानिर्देशाद् ब्राह्मणोत्पन्नत्वाच्च यथापद्भित एव स्वरः प्रयोक्तव्यो न मान्त्रः। याजमानं जपकर्म।
அனுவாதம்- இந்த ஜபகர்மத்திற்கு“अभ्यारोह” (அப்யாரோக) என்பது பெயராகும். இந்த ஜபகர்மத்தின் மூலமாய் இவ்வாறு பிராணனை உபாசனை செய்பவன் அபிமுகமாகி தன் தேவ பாவத்தை அடைகிறான். அதாவது மேல் நிலையை அடைகின்றான். ஆகையால் “अभ्यारोह” அப்யாரோஹ) மாகும்.“एतानि” (ஏதானி) இந்த பதம் பஹுவசன அர்த்தமுடையதாய் இருப்பதால் எந்த மூன்று .யஜுர்மந்திரம் உள்ளதோ அதுவும் அவ்வாறே“एतानि” (ஏதானி) சப்தத்தில் இரண்டாவது விபக்தி நிர்தேசமும் இந்த பிராஹ்மணபாகத்தில் உண்டானதால் இதில் இந்த பாடத்தின் அனுசாரமாய் ஸ்வரத்தை பிரயோகிக்க வேண்டும். மந்திர ஸ்வரத்தினை அல்ல. இந்த ஜபகர்மம் யஜமானனுக்காக ஆகும்.
भाष्यम् - एतानि तानि यजू ँ्षि-“असतो मा सद्गमय”“तमसो मा ज्योतिर्गमय”“मृत्योर्मामृतं गमय” इति। मन्त्राणामर्थस्तिरोहितो भवतीति स्वयमेव व्याचष्टे ब्राह्मणं मन्त्रार्थम्-स मन्त्रो यदाह यदुक्तवान्कोऽसाक्वर्थः? इत्युच्यते-“असतो मा सद्गमय” इति मृत्युर्वा असत्- स्वाभाविककर्मविज्ञाने मृत्युरित्युच्येते, असद् अत्यन्ताधोभावहेतुत्वात्। सदमृतम्-सच्छास्त्रीयकर्मविज्ञाने-अमरणहेतुत्वादमृतम्। तस्मादसतो असत्कर्मणोऽज्ञानाच्च मा मां सच्छास्त्रीयकर्मविज्ञाने गमय देवभावसाधनात्मभावमापादयेत्यर्थः। तत्र वाक्यार्थमाह- अमृतं मा कुर्वित्येवैतदाहेति।
அனுவாதம்- இந்த யஜுர் மந்திரத்தில் உள்ளவைகள்-“असतो मा सद्गमय” (அசதோ மா சத்கமய) “तमसो माVªÉÉäÊiÉMÉǨɪɔ (தமசோ மா ஜ்யோதிர்கமய)“मृत्योर्मामृतं गमय” (ம்ருதயோர்மாம்ருதம் கமய) என்று மந்திரங்களின் அர்த்தம் ரஹஸ்யமாய் இருப்பதால் பிராஹ்மணமே சுயமாய் (தானாகவே) மந்திரங்களின் அர்த்தத்தை வியாக்யானம் செய்கிறது. அந்த மந்திரம் என்ன சொல்லுகிறது? அதன் அர்த்தம் என்ன? அதற்கு கூறுகிறது- “அசதோ மா சத்கமய” என்றது மிருத்யுவே அசத் அதாவது ஸ்வாபிவிகமான அர்த்த விக்ஞானத்தில் மிருத்யு என்று கூறுகிறார்கள். ஏன்எனில் அது முற்றிலும் அதோகதிக்குக் காரணமானதால் அது அசத். சத் அமிருதம்- சத் சாஸ்த்ரீயமான கர்மவிக்ஞானத்தில் மரணமற்ற தன்மைக்கு ஹேது ஆவதால் அமிருதம் சத் ஆகும். ஆகையால் அசத்திலிருந்தும், அசத் கர்ம அக்ஞானத்திலிருந்தும் என்னை சத்சாஸ்திர கர்ம விக்ஞானத்தில் சேர்ப்பாயாக. அதாவது தேவ பாவத்திற்கான சாதனமான ஆத்மபாவத்தை அடையச் செய்வாயாக என்பது பொருள். இங்கு வாக்கியார்த்தம் கூறப்படுகிறது- என்னை அமரனாகச் செய்வாயாக என்று.
भाष्यम् - तथा तमसो मा ज्योतिर्गमय्येति। मृत्युर्वै तमः सर्वं ह्यज्ञानमावरणात्मकत्वात्तमः तदेव च मरणहेतुत्वात्मृत्युः। ज्योतिरमृतं पूर्वोक्तविपरीतं दैवं स्वरूपम्। प्रकाशात्मकत्वाज्ज्ञानं ज्योतिः, तदेवामृतमविनाशात्मकत्वात्। तस्मात्तमसो मा ज्योतिर्गमयेति पूर्ववन्मृत्योर्मामृतं गमयेत्यादि। अमृतं मा कुर्वित्येवैतदाह- दैवं प्राजापत्यं फलभावमापादयेत्यर्थः।
அனுவாதம்- அவ்வாறே“तमसो मा ज्योतिर्गमय” (தமஸோ மா ஜ்யோதிர்கமய) என்று மிருத்யுவே தமஸ் ஆகும். எல்லாமே அக்ஞான ஆவரணாத்மகமாய் இருப்பதால் தமஸ். அதுவே மரணத்திற்கு ஹேதுவாய் இருப்பதால் ம்ருத்யு. ஜ்யோதி அம்ருதம். முன்பு கூறப்பட்டதின் விபரீதமானது தெய்வ ஸ்வரூபம். ஞானம் பிரகாசாத்மகமாய் இருப்பதால் ஜ்யோதி. அது விநாசமற்றதாய் இருப்பதால் அதுவே அம்ருதம். ஆகையால் தமஸிலிருந்து என்னை ஜ்யோதியை அடைச்செய் என்பது முன்போல் ம்ருத்யுவிலிருந்து அம்ருதத்தை அடையச்செய் என்பது முதலியவை என்னை அம்ருதனாக்கு என்றே அது கூறுகிறது. தெய்வ பாவமாகிய பிராஜாபத்திய பலனாகிய பாவத்தை அடையச்செய் என்பது பொருள்.
भाष्यम् - पूर्वो मन्त्रोऽसाधनस्वभावात् साधनभाव-मापादयेति। द्वितीयस्तु साधनभावादपि अज्ञानरूपात् साध्यभावमापादयेति। मृत्योर्मामृतं गमयेति पूर्वयोरेव मन्त्रयोः समुिच्चतोऽर्थस्तृतीयेन मन्त्रेणोच्यत इति प्रसिद्धार्थतैव। नात्र तृतीये मन्त्रे तिरोहितमन्तर्हितमिवार्थरूपं पूर्वयोरिव मन्त्रयोरस्ति, यथाश्रुत एवार्थः।
அனுவாதம்-இதற்கு முன் உள்ள மந்திரம் சாதனமற்ற ஸ்வபாவம் உள்ளதால் சாதனபாவத்தை அடையச்செய் என்று குறிப்பிடுகிறது. வேறு மந்திரத்தில் சாதனபாவமாய் இருப்பதால் அக்ஞானரூபமாய் இருப்பதால் சாத்ய பாவத்தை அடையச் செய்,“मृत्योर्मामृतं गमय” (ம்ருத்யோர் மாம்ருதம் கமய) என்ற இந்த மூன்றாவது மந்திரம் வாயிலாய் இதற்குமுன் உள்ள இரண்டு மந்திரங்களையும் சேர்த்து ப்ரஸித்தமான அர்த்தம் சொல்லப்பட்டது. முந்திய இரண்டு மந்திரங்களுக்கு சமமாய் மூன்றாவது மந்திரத்தில் தனியாக வேறு ஒரு அர்த்தம் மறைந்து இல்லை. இதன் பொருள் சுருதியை அனுசரித்துள்ளது.
भाष्यम्- याजमानमुद्गानं कृत्वा पवमानेषु त्रिषु, अथानन्तरं यानीतराणि शिष्टानि स्तोत्राणि तेष्वात्मनेऽन्नाद्यमागायेत् प्राणविदुद्गातप्राण भूतः प्राणवदेव। यस्मात्स एव उद्गातैवं प्राणं यथोक्तं वेत्ति, अतः प्राणवदेव तं कामं साधयितुं समर्थः। तस्माद्यजमानस्तेषु स्तोत्रेषु प्रयुज्यमानेषु वरं वृणीत, यं कामं कामयेत तं कामं वरं वृणीत प्रार्थयेत। यस्मात्स एष एवंविदुद्गातेति तस्माच्छब्दात्प्रागेव सम्बध्यते। आत्मने वा यजमानाय वा यं कामं कामयते इच्छत्युद्गाता तमागायत्यागानेन साधयति।
அனுவாதம்- மூன்று பவமான ஸ்தோத்திரங்களால் உத்கானம் செய்து அதன்பின் ஸ்தோத்திரங்கள் மீதம் உள்ளன. அவைகளில் பிராண உபாசகரான உத்காதா பிராண பூதமாகி பிராணனுக்கு சமமாய் தன்பொருட்டு அன்னாத்யாயத்தை ஆகானம் செய்யவேண்டும். ஏன்எனில் அந்த உத்காதா இவ்வாறு மேேல கூறிய பிராணனை அறிகிறார். ஆகையால் பிராணனுக்கு சமமாய் அந்த காமனைகளை அடையச் செய்வதில் சாமர்த்தியம் உடையவர் ஆகிறார். ஆகையால் அந்த ஸ்தோத்திரங்களின் பிரயோகத்தை அறிந்தபின் யஜமானனுக்காக வரத்தை வேண்டிக்கொள்ள வேண்டும். அவனுக்கு எந்த போகத்தில் இச்சையோ அதை அறிந்து அந்த போகத்தின் வரத்தைப் பெறவேண்டும். ஏன் எனில் அதை இந்த விதமாய் அறிந்த உத்காதா தனக்காகவோ எஜமானனுக்காகவோ போகத்தின் இச்சை செய்கின்றான். அதை ஆகானம் செய்து அதனை அடையச்செய்கின்றான். அதாவது ஆகான மூலமாய் அதனை அடையச் செய்கின்றான்.
भाष्यम्- एवंं तावञ्ज्ञानकर्मभ्यां प्राणात्मापत्तिरित्युक्तम्। तत्र नास्त्याशङ्कासम्भवः। अतः कर्मापाये प्राणापत्तिर्भवति वा न वा? इत्याशङ्क्यते। तदाशङ्कानिवृत्त्यर्थमाह तद्धैतोकजिदेवेति। तद्ध तदेतत्प्राणदर्शनं कर्मवियुक्तं केवलमपि, लोकजिदेवेति लोकसाधनमेव। न ह एवालोक्यतायै अलोकार्हत्वाय आशा आशंसनं प्रार्थनं नैवास्ति ह। न हि प्राणात्मनि उत्पन्नात्माभिमानस्य तत्प्राप्त्याशंसनं सम्भवति। न हि ग्रामस्थः कदा ग्रामं प्राप्नुयामित्यरण्यस्थ इवाशास्ते। असन्निकृष्ट विषये ह्यानात्मन्याशंसनम्, न तत्स्वात्मनि सम्भवति। तस्मान्नाशास्ति कदाचित्प्राणात्मभावं न प्रपद्येयमिति।
அனுவாதம்- இவ்வாறு இதுவரையிலும் ஞானகர்ம சமுச்சயத்தால் பிராண ஆத்மா அடையப்படும் என்று கூறப்பட்டது. இங்கு சங்கை சம்பவிக்காது. ஆகையால் கர்மம் இல்லாவிடின் பிராணனை அடையமுடியுமா அல்லது முடியாதா? என இவ்வாறு சங்கை செய்து அதை நிவர்த்திக்கிறார்-“तद्धैतोकजिदेवेति” அதாவது பிராண விக்ஞான கர்மம் இல்லாமல் பிராணனை அறிந்தவன் லோகத்தை ஜெயித்தவனே. ஆகையால் அது லோக சாதனமேயாகும். அலோகத்திற்கான அருகதை அடைவதில் பிரார்த்தனை ஒருபொழுதும் இல்லை. பிராணாத்மாவிடத்தில் அபிமானம் உள்ளவனுக்கு அதை அடையவேண்டும் என்ற ஆசை உண்டாகாது. எவ்வாறு கிராமத்தில் உள்ளவன் காட்டில் உள்ளவன் போல் கிராமத்தை அடைய விரும்பமாட்டானோ அவ்வாறு ஆகும். தன்னைவிட தூரமாய் இருக்கும் அநாத்மா வஸ்துக்களில் ஆசை ஏற்படும். ஆனால் ஸ்வ ஆத்மாவிடத்தில் ஏற்படாது. ஆகையால் ஒருபொழுதும் பிராணாத்ம பாவத்தை அடையமாட்டேன் என்று ஒருவரும் ஆசை கொள்வதில்லை.
भाष्यम्-कस्यैतत्? य एवमेतत्साम प्राणं यथोक्तं निर्धारितमहिमानंवेद- अहमस्मि प्राण इन्द्रियविषयासङ्गैरासुरैः पाप्मभिरधर्षणीयो विशुद्धः, वागादिपञ्चकं च मदाश्रयत्वा-दग्न्याद्यात्मरूपं स्वाभाविक विज्ञानोत्थेन्द्रियविषयासङ्गजनिता-सुरपाप्मदोषवियुक्तं सर्वभूतेषु च मदाश्रयान्नाद्योपयोगबन्धनम्, आत्मा चाहं सर्वभूतानामािङ्गरसत्वात्, ऋग्यजुःसामोद्गीथभूतायाश्च वाच आत्मा तद्व्याप्तेस्तन्निर्वर्तकत्वाच्च, मम साम्नो गीतिभावमापद्यमानस्य बाह्यं धनं भूषणं सौस्वर्यं ततोऽप्यान्तरं सौवर्ण्य लाक्षणिकं सौस्वर्यम्, गीतिभावमापद्यमानस्य मम कण्द्भादिस्थानानि प्रतिष्द्भा। एवंगुणोऽहं पुत्तिकादिशरीरेषु कार्त्स्न्येन परिसमाप्तोऽमूर्तत्वात्सर्वगतत्वाच्च-इति आ एवमभिमानाभिव्यक्तेर्वेदोपास्त इत्यर्थः।।
அனுவாதம்-அதன் பலன் எதிலிருந்து கிடைக்கிறது? எவன் இவ்வாறு இந்த ஸாமத்தை அதாவது முன்பு நிச்சயம் செய்யப்பட்ட மஹிமானம் உடைய பிராணனை முற்கூறியபடி அறிகிறானோ, நான் இந்திரியங்களின் விஷயத்தில் உள்ள சேர்க்கையால் உண்டாகும் பாபங்களால் அசைத்து அமிழ்த்தமுடியாத விசுத்த பிராணனாய் இருக்கின்றேன். வாக்கு முதலிய பஞ்சகங்களும் என்னை ஆஸ்ரயித்து இருப்பதால் ஸ்வாபாவிகமாய் இந்திரியங்களினால் உண்டாகும் விஷயாசத்தியினால் ஏற்படும் பாபரூப தோஷங்கள் அற்ற அக்னி முதலிய தேவதா ரூபங்களும், மற்றும் எல்லா பூதங்களும் என்னுடைய ஆஸ்ரயத்தால் அன்னாத்யதின் உபயோகத்திற்கு ஹேதுவாகிறது. ரிக், யஜுர், சாம, உத்கீத ரூப வாக்கில் (வாணியில்) வியாபித்து அதை செயல்படச் செய்வதால் நான் ஆத்மா, கீதபாவத்தை அடைந்த என்னுடைய ஸாமத்தின் ஸ்வரம் பாஹ்யதன பூஷணமாகும். மேலும் லாக்ஷணிக ஸ்வரத்தின் ரூபம் ஸுவர்ணம் அதனை அபேக்ஷித்து உள்ளே (ஆந்தரத்தில்) உள்ள தனமாகும். கீதபாவத்தை அடைந்த என்னுடைய தொண்டை முதலியவைகள் பிரதிஷ்டாவாகும். (ஸ்தானமாகும்) இவ்வாறான குணங்களுடைய நான் அமூர்த்தமாயும், சர்வகதமாயும் இருப்பதால் வெள்ளை எறும்பு முதலிய சரீரங்களில் பூரணமாய் வியாபித்திருக்கின்றேன். இவ்வாறு அபிமானம் அடைந்த வரையிலும் எவன் அறிகிறானோ அவன் அதை உபாசனை செய்கின்றான்.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये प्रथमोऽध्याये
प्रथमोऽध्यायः चतुर्थब्राह्मणम् मन्त्रः । ग्रन्थसम्बन्धः।
अव - ज्ञानकर्मभ्यां समुिच्चताभ्यां प्रजापतित्वप्राप्ति-र्व्याख्याता केवलप्राणदर्शनेन च“तद्धैतोकजिदेव” इत्यादिना। प्रजापतेः फलभूतस्य सृष्टिस्थितिसंहारेषु जगतः स्वातन्त्र्यादि-विभूत्युपवर्णनेन ज्ञानकर्मणोर्वैदिकयोः फलोत्कर्षो वर्णयितव्य इत्येवमर्थमारभ्यते। तेन च कर्मकाण्डविहितज्ञानकर्मस्तुतिः कृता भवेत्सामर्थ्यात्।
அனுவாதம்- அகை- (மூன்றாவது ப்ராஹ்மணத்தில்) ஞானகர்ம ஸமுச்சயத்தில்“तद्धैतोकजिदेव” (தத்தைதல்லோகஜிதேவ) என்பது முதலிய வாக்கியங்களினால் கேவலபிராண விக்ஞானத்தினால் பிரஜாபதித்துவம் வியாக்யானம் செய்யப்பட்டது. பலபூதமாகிய பிரஜாபதியின் ஜகத்தை சிருஷ்டிஸ்திதிஸம்ஹாரம் செய்வதில் ஸ்வதந்திர முதலிய விபூதிகளை வர்ணனை செய்து வைதிக ஞானகர்மங்களின் பலத்தின் மேன்மையை வர்ணிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்படுகிறது. அதனால் கர்மகாண்டத்தில் விதிக்கப்பட்ட ஞானகர்மங்களின் ஸ்துதியானது சாமர்த்தியத்தால் செய்யப்பட்டது.
भाष्यम् - विवक्षितं त्वेतत्- सर्वमप्येतज्ज्ञानकर्मफलं संसार एव, भयारत्यादियुक्तत्वाच्च स्थूलव्यक्तानित्यविषयत्वाच्येति। ब्रह्मविद्यायाः केवलाया वक्ष्यमाणाया मोक्षहेतुत्वमित्युत्तरार्थं चेति। न हि संसारविषयात्साध्यसाधनादिभेदलक्षणाद् अविरक्तस्य आत्मैकत्व ज्ञानविषयेऽधिकारः, अतृषितस्येव पाने। तस्माञ्ज्ञानकर्मफलोत्कर्षोपवर्णनमुत्तरार्थम्। तथा च वक्ष्यति-“तदेतत्पदनीयमस्य” (बृ० उ० १। ४। ७)“तदेतत्प्रेयः पुत्रात्”(बृ० उ० १। ४। ८)इत्यादि।
அனுவாதம்- அது விவரிக்கப்பட்டது. இவை எல்லாம் ஞானகர்ம பலம் சம்சாரமே. ஏன்எனில் பயம், திருப்தி அற்றதன்மை முதலியவை சேரும் என்று கேள்விப்பட்டதாலும், காரியகரண லக்ஷணம் உடையதாய் இருப்பதாலும், ஸ்தூலமாயும், வியக்தமாயும், அநித்ய விஷயமாய் இருப்பதாலும் ஆகும். இனி கூறப்போகும் கேவலம் பிரஹ்மவித்யா மோக்ஷத்திற்கு ஹேதுவாகும். இந்த ஆகாமி விஷயத்தை தெரிவிப்பதற்காக இவ்வாறு கூறப்பட்டது. சம்சார விஷயத்திலிருந்தும், சாத்ய சாதனம் முதலிய பேத லக்ஷணங்களில் இருந்தும் விரக்தி அடையாதவனுக்கு ஆத்ம ஏகத்துவ ஞான விஷயத்தில் தாகம் அற்றவனுக்கு தண்ணீர் தேவை இல்லாதது போல் அதிகாரம் இல்லை. ஆகையால் ஞானகர்ம பலத்தின் மேன்மையின் வர்ணனம் இனி வரும் விஷயத்திற்காக ஆகும்.(ब्रह्मविद्या - பிரஹ்மவித்யா) அவ்வாறே சுருதி கூறுகிறது -“तदेतत्पदनीयमस्य” (ததேதத்பதநீயமஸ்ய - இது இதனை அடைய வேண்டியதாகும்)“तदेतत्प्रेयः पुत्रात्” (ததேதத்ப்ரேய: புத்ராத் - அது புத்திரனைக்காட்டிலும் அதிக பிரியமானது ஆகும்) என்பது முதலியவை.
आत्मैवेदमग्र आसीत्पुरुषविधः सोऽनुवीक्ष्य नान्यदात्मनो-ऽपश्यत्सोऽहमस्मीत्यग्रे व्याहरत्ततोऽहंनामाभवत्तस्मादप्येतर्ह्या-मन्त्रितोऽहमयमित्येवाग्र उक्त्वाथान्यन्नाम प्रब्रूते यदस्य भवति स यत्पूर्वोऽस्मात्सर्वस्मात्सर्वान्पाप्मन औषत्तस्तमात्पुरुष ओषति ह वै स तं योऽस्मात्पूर्वो बुभूषति य एवं वेद ।। १ ।।
மந்த்ரார்த்தம்-இதற்கு முன் ஆத்மா புருஷாகாரமாய் இருந்தது. அவர் ஆலோசனை செய்ததில் தன்னைத்தவிர பின்னமாக ஒன்றையும் பார்க்கவில்லை. அவர் ஆரம்பத்தில்“अहम् अस्मि” (அஹம் அஸ்மி) நான் இருக்கின்றேன் என்று கூறினார் ஆகையால் அவர்“अहम्”அஹம் (நான்) என்ற பெயர் உடையவரானார். இதிலிருந்து இப்பொழுதும் இவ்வாறு இந்த பெயரை அறிவதற்கு முன்“अयमहम्”(அயமஹம் - அது நான்) என்று கூறி அதன்பின் தன்னுடைய வேறு பெயர் ஏற்படுகிறது. அது கூறப்படுகிறது. ஏன்எனில் எல்லாவற்றிற்கும் முன்பே இருந்த இந்த (ஆத்மா எனப்படும் பிரஜாபதி) ஆத்மா எல்லா பாபங்களை தஹனம் செய்ததால் அது புருஷன் ஆயிற்று. இவ்வாறு உபாசனை செய்து (பாபங்களை) தஹனம் செய்யப்படுபவன் அதற்கு முன் பிரஜாபதியாக ஆசைப்படுகிறான்.
भाष्यम् - आत्मैवात्मेति प्रजापतिः प्रथमोऽण्डजः शरीर्यभिधीयते। वैदिकज्ञानकर्मफलभूतः स एव। किम्? इदं शरीरभेदजातं तेन प्रजापतिशरीरेणाविभक्तम्। आत्मैवासीदग्रे प्राक्शरीरान्तरोत्पत्तेः। स च पुरुषविधः पुरुषप्रकारः शिरःपाण्यादिलक्षणो विराट्।
அனுவாதம்- ஆத்மாவே ஆத்மா என்பது அண்டத்திலிருந்து உண்டான முதல் சரீரம் உடையவர் பிரஜாபதி எனப்படுகிறார். அவரே வைதிகஞானகர்மபலமாய் உள்ளவர். இவ்வாறு எதனால்? இந்த சரீரம் பேதத்தால் உண்டானதால் பிராஜபதிசரீரம் அபின்னமாகும். வேறு சரீரம் எடுப்பதற்கு முன் ஆத்மாவாகவே இருந்தது. அந்த புருஷவிதன்(पुरुषविधः) புருஷன் போல் தலை அவ்வாறே கை கால்கள் முதலிய லக்ஷணங்களுடன் கூடிய விராட் புருஷனாவான்.
भाष्यम्- स एव प्रथमः सम्भूतोऽनुवीक्ष्यान्वालोचनं कृत्वा, कोऽहं किंलक्षणो वास्मीति, नान्यद्वस्त्वन्तरम् आत्मनः प्राणपिण्डात्मकार्यकरणरूपान्न अपश्यन्न ददर्श। केवलं त्वात्मानमेव सर्वात्मानमपश्यत्। तथा पूर्वजन्मश्रौतविज्ञानसंस्कृतः, सोऽहं प्रजापतिः सर्वात्माहमस्मीत्यग्रेव्याहराह्य्तवान्। ततस्तास्माद्यतः पूर्वज्ञानसंस्काराद् आत्मानमेवाहमित्यभ्यधादग्रे तस्मादहं-नामाभवत्। तस्योपनिषदहमिति श्रुतिप्रदर्शितमेव नाम वक्ष्यति।
அனுவாதம்- முதலில் உண்டானவரான அந்த பிரஜாபதி ஆலோசித்தார். எவ்வாறு எனில் நான் யார்? என்ன லக்ஷணம் உடையவனாய் இருக்கிறேன்? என்று விசாரனை செய்தார். தன்னுடைய பிராண சமுதாயரூப தேஹ சங்காதத்தை விட (காரிய கரணரூபத்தை விட) பின்ன (வேறான) பதார்த்தம் இல்லை என்று பார்த்தார். கேவலம் தன்னையே சர்வாத்மாவாய் பார்த்தார். அவ்வாறே பூர்வ ஜன்மத்தின் “அந்த நான் சர்வாத்மா பிரஜாபதியாய் இருக்கிறேன்” என்ற பூர்வ ஜன்ம ஸ்ரௌத விக்ஞானத்தின் சம்ஸ்காரத்தால் எல்லாவற்றிக்கும் முன்“अहमस्मि” (அஹமஸ்மி இருக்கிறேன்) என்று கூறினார். எதனாலோ அதனால் பூர்வ ஞான சம்ஸ்காரத்தால் அவர் ஆரம்பத்தில் தன்னை“अहम्” (அஹம் - நான்) என்று கூறினார். ஆகையால் (அஹம்-நான்) என்ற பெயர் உண்டானது. சுருதி காட்டிய அதன்“अहम्” என்ற பெயரை உபநிஷத் இனி கூறப்போகிறது.
भाष्यम् - तस्माद्यस्मात्कारणे प्रजापतावेवं वृत्तं तस्मात्, तत्कार्यभूतेषु प्राणिषु एतर्ह्येतस्मिन्नपि काल आमन्त्रितः कस्त्वमित्युक्तः सन्नहमयमित्येवाग्र उक्त्वा कारणात्माभिधानेन आत्मानमभिधायाग्रे पुनर्विशेषनामजिज्ञासवेऽथानन्तरं विशेषपिण्डाभिधानं देवदत्तो यज्ञदत्तो वेति प्रब्रूते कथयति यन्नामास्य विशेषपिण्डस्य मातापितृकृतं भवति तत्कथयति।
அனுவாதம்- ஏனெனில் இதனால் பிரஜாபதியினிடம் இந்த விருத்தாந்தம் தன்காரிய பூத ஜீவர்களிடத்தில், யாரையாவது நீ யார்? என்று கேட்டால் முதலில் ‘இது நான்’ என்று தன்னை காரணரூப நாமத்தால் கூறி பின் விசேஷ ரூபத்தை அறிய விரும்புகிறான். அவன் தன்னுடைய விசேஷ சரீரத்தை தேவதத்தன், யக்ஞதத்தன் என்று ஏதாவது ஒரு நாமத்தை கூறுகின்றான். அதாவது எந்த பெயரை அவனுடைய விசேஷ பிண்டத்திற்கு தாயார், தந்தை யார் வைத்தனரோ அந்தப் பெயரைக் (நாமத்தை) கூறுகிறான்.
भाष्यम्- स च प्रजापतिरतिक्रान्तजन्मनि सम्यक्कर्मज्ञान-भावनानुष्द्भानैः साधकावस्थायां यद्यस्मात्कर्मज्ञानभावनानुष्द्भानैः प्रजापतित्वं प्रतिपित्सूनां पूर्वः प्रथमः सन् अस्मात्प्रजापतित्व-प्रतिपित्सुसमुदायात्सर्वस्माद् आदौ औषददहत्। किम्? आसङ्गा-ज्ञानलक्षणान्सर्वान्पाप्मनः प्रजापतित्वप्रतिबन्धकारणभूतान्। यस्मादेवं तस्मात्पुरुषः पूर्वमौषदिति पुरुषः।
அனுவாதம்- அந்த பிரஜாபதியானவர் தன்னுடைய பூர்வ ஜன்மத்தில் சாதனை செய்யும் நிலையில் கர்மம், ஞானம் இவைகளின் பாவனையின் அனுஷ்டான மூலமாய், இந்த கர்ம, ஞான பாவனையின் அனுஷ்டானத்தால் பிரஜாபதித்துவத்தினை அடைவதில் இச்சை உள்ளவர்களுக்கு முன்பே இருந்த அதாவது முதலாவதாக இருந்த காரணத்தினால் இந்த பிரஜாபத்தியத்தை அடைவதற்கு இச்சிப்பவன் எல்லா சமுதாயங்களிலிருந்து தகனம் செய்துவிட்டான். எதை? பிராஜாபத்யத்திற்கு பிரதிபந்தக காரணமாயுள்ள அபிநிவேசம், அக்ஞானம் முதலிய எல்லா பாபங்களையும் எதனால் இவ்வாறு ஆனதோ அதனால் அவன் புருஷன் ஆனான்.(पुरुषः புருஷ:) முன்பே எரித்து விட்டதால் புருஷன்{ÉÖ¯û¹É& எனப்படுகிறான்.
भाष्यम्- यथायं प्रजापतिरोषित्वा प्रतिबन्धकान्पाप्मनः सर्वान्पुरुषः प्रजापतिरभवत्, एवमन्योऽपि ज्ञानकर्मभावनानुष्द्भान- विना केवलं ज्ञानबलाद्वौषति भस्मीकरोति ह वै स तम्; कम्? योऽस्माद्विदुषः पूर्वः प्रथमः प्रजापतिर्बुभूषति भवितुमिच्छति तमित्यर्थः। तं दर्शयति यं एवं वेदेति। सामर्थ्याज्ज्ञान-भावनाप्रकर्षवान्।
அனுவாதம்-எவ்வாறு இந்த பிரஜாபதி பிரதிபந்தங்களான எல்லா பாபங்களையும் எரித்து புருஷவடிவ அதாவது பிரஜாபதியாக ஆனாரோ அவ்வாறே மற்றவர்களும் ஞானகர்ம பாவனை அனுஷ்டானம் என்னும் அக்னியினால் அதனை அதாவது ஞானபலத்தினால் மாத்திரமே அதனை எரித்து சாம்பலாக்குகின்றனர்.“ह वै स तम्” (ஹ வை ச தம்) எதை? எந்த வித்வான் இதற்குமுன் அதாவது முதலில் அந்த பிரஜாபதியாக விரும்புகிறானோ அவனுக்கு என்பது தாத்பர்யம். அந்த வித்வானுக்கு வேதமானது இவ்வாறு காட்டுகிறது- யார் இவ்விதம் அறிந்து உபாஸிக்கிறார்களோ, அவர்கள் தன்னுடைய சாமர்த்தியத்தினாலேயே அறிகிறார்கள். ஞானபாவனையில் சிறந்தவனாக ஆகிறான்.
भाष्यम् - शङ्का - नन्वनर्थाय प्राजापत्यप्रतिपिप्सा, एवंविदा चेद्दह्यते।
அனுவாதம்- சங்கை- இவ்வாறு அறிந்தவன் (உபாசனை செய்தவன்) தஹிக்கப்படுவானாகில் பிராஜாபத்யத்தில் உள்ள இச்சை அநர்த்தத்தின் பொருட்டாகுமே?
भाष्यम् - समाधानम् - नैष दोषः, ज्ञानभावनोत्कर्षा-भावात्प्रथमं प्रजापतित्वप्रतिपत्त्यभावमात्रत्वाद्दाहस्य। उत्कृष्ट-साधनः प्रथमं प्रजापतित्वं प्राप्नुवन् न्यूनसाधनो न प्राप्नोतीति, स तं दहतीत्युच्यते। न पुनः प्रत्यक्षमुत्कृष्टसाधनेन इतरो दह्यते। यथा लोके आजिसृतां यः प्रथममाजिमुपसर्पति तेनेतरे दग्धा इवापह्य्तसामर्थ्या भवन्ति तद्वत्।
அனுவாதம்- ஸமாதானம்- இது தோஷம் இல்லை. ஏன்எனில் ஞான பாவனையின் சிறப்புத்தன்மை இல்லாததினால் முன்பே பிரஜாபதித்துவம் அடையமுடியாததே, இங்கே அதன் தஹனம் (எரிப்பு) எனப்படுகிறது. உத்கிருஷ்டமான (சிறந்த) சாதனை உடையவன் முதலில் பிராஜாபத்தியத்தை அடைகிறான். குறைந்த சாதனை உடையவன் அடைவதில்லை. ஆகையால் அவன் தஹித்து சாம்பலாக்கப்படுகிறான் என்று கூறப்படுகிறது. உத்கிருஷ்ட சாதனை உடையவன் தன்னை விட குறைந்த சாதனை உடையவனை எரிப்பதில்லை. எவ்வாறு உலகத்தில் போட்டியில் எல்லையை ஓடி அடைபவர்களில் யார் முதலில் அந்த எல்லையை அடைந்தானோ அவனால் மீதி உள்ளவர்கள் தஹிக்கப்பட்டதாக, சாமர்த்தியத்தை இழந்து, உத்ஸாஹத்தை இழக்கிறார்கள். இவ்வாறே இங்கும் என அறியவேண்டும்.
अव - यदिदं तुष्टूषितं कर्मकाण्डविहितज्ञानकर्मफलं प्राजापत्यलक्षणं नैव तत्संसारविषयमत्यक्रामदितीममर्थं प्रदर्शयिष्यन्नाह।
அனுவாதம்- அ.கை- அந்த இந்த பிராஜாபத்ய லக்ஷணம் கர்மகாண்டத்தில் விஹித ஞான கர்மபலத்தின் ஸ்துதியின் பொருட்டேயாகும். அது சம்சார விஷயத்தைக்காட்டிலும் வெளியில் இல்லை என்பதை தெரிவிப்பதற்காக கூறுகிறது.
सोऽबिभेत्तस्मादेकाकी बिभेति स हायमीक्षां चक्रे यन्मदन्यन्नास्ति कस्मान्नु बिभेमीति तत एवास्य भयं वीयाय कस्माभेष्यद् द्वितीयाद्वै भयं भवति।। २।।
மந்த்ரார்த்தம்- அது பயத்தை அடைந்தது. தனியாக ஒரே புருஷனாய் இருந்ததால் பயமாய் இருந்தது. அதனால் அது இவ்வாறு விசாரம் செய்தது. “என்னைத்தவிர இரண்டாவதாக வேறு ஒருவரும் இல்லை எனில் நான் எதற்காக பயப்படவேண்டும்?” அப்பொழுது அதற்கு பயம் நீங்கியது. ஆனால் எதனால் பயம் உண்டாயிற்று? ஏன் எனில் இரண்டாவது இருந்தால் அல்லவா பயம் ஏற்படும்.
भाष्यम्- सोऽबिभेत्स प्रजापतिर्योऽयं प्रथमः शरीरी पुरुषविधो व्याख्यातः। सोऽबिभेद्भीतवानस्मदादिवदेवेत्याह। यस्मादयं पुरुषविधः शरीरकरणवान् आत्मनाशविपरीत-दर्शनवत्त्वाद् अिबभेत्, तस्मात्तत्सामान्यादद्यत्वेऽप्येकाकी बिभेति। किञ्चास्मदादिवदेव भयहेतुविपरीतदर्शनापनोदकारणं यथाभूतात्म- दर्शनम्। सोऽयं प्रजापतिरीक्षामीक्षणं चक्रे कृतवान् ह। कथम्? इत्याह- यद्यस्मान्मत्तोऽन्यदात्मव्यतिरेकेण वस्त्वन्तरं प्रतिद्वन्द्वीभूतं नास्ति, तस्मिन्नात्मविनाशहेत्वभावे कस्मान्नु बिभेमीति। तत एव यथाभूतात्मदर्शनादस्य प्रजापतेर्भयं वीयाय विस्पष्टमपगतवत्।
அனுவாதம்- அது பயத்தினால் பீதி அடைந்தது அந்த பிரஜாபதி, புருஷாகாரமான முதல் சரீரரூபம் என வியாக்கியானம் செய்யப்பட்டதோ, அவர் நம்மைப்போல் பயத்தை அடைந்தார் என்று சுருதி சரீர இந்திரியங்களை கூறுகின்றது. ஏனெனில் இந்த புருஷாகாரமான சரீரம், உடையவனாகிய பிரஜாபதி தான் நாசம் அடைந்து விடுவோமோ என்ற விபரீத தர்சனத்தால் பயத்தை அடைந்தார். ஆகையால் அதைப்போன்று இருப்பதால் இன்றும் கூட தனியாக இருப்பவர் பயப்படுகின்றனர். மேலும் நம்மைபோன்று ப்ரஜாபதிக்கும் கூட பயத்திற்கு ஹேதுவான விபரீத தர்சனத்தை நிவர்த்தி செய்வதற்கு யதார்த்த ஆத்ம தர்சனமேயாகும். (ஆத்ம ஞானமாகும்). இவ்வாறு இந்த பிரஜாபதி விசாரம் செய்தார். எவ்வாறு? அதற்கு சுருதி கூறுகிறது- எதனால் என்னைத்தவிர வேறு ஒன்றும் அதாவது ஆத்மாவிற்கு வியதிரேகமாய் வேறு வஸ்துவான துவந்துவங்களுடையது இல்லையோ, அதனால் ஆத்மா விநாசமாவதற்கான ஹேது இல்லாததால் எதனால் பயப்பட வேண்டும்? அதனாலேயே யதார்த்த ஆத்ம ஞானத்தால் அந்த பிரஜாபதியின் பயம் நீங்கிவிட்டது மிகவும் தெளிவாக விலகியது.
भाष्यम्- तस्य प्रजापतेर्यद्भयं तत्केवलाविद्यानिमित्तमेव परमार्थदर्शनेऽनुपपन्नमित्याहकस्माद्धभेष्यत् किमित्यसौ भीतवान्परमार्थनिरूपणायां भयमनुपपन्नमेवेत्यभिप्रायः। यस्माद् द्वितयाद्वस्त्वन्तराद्वै भयं भवति। द्वितीयं च वस्त्वन्तरम-विद्याप्रत्युपस्थापितमेव; न ह्यदृश्यमानं द्वितीयं भयजन्मनो हेतुः“तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः” (ईशा० ७) इति मन्त्रवर्णात्। यच्चैकत्वदर्शनेन भयमपनुनोद तद्युक्तम्। कस्मात्? द्वितीयाद्वस्त्वन्तराद्वै भयं भवति तदेकत्वदर्शनेन द्वितीयदर्शन-मपनीतमिति नास्ति यतः।
அனுவாதம்- அந்த பிரஜாபதியின் பயம் கேவலம் அவித்தையினாலே நீங்கிவிட்டது. அதை சுருதி கூறுகிறது- அது எதனால் பயந்தது? அதற்கு ஏற்பட்ட பயத்தின் காரணம் என்ன? இதன் தாத்பர்யம் என்னவெனில் பரமார்த்த விசாரத்தால் நிரூபணம் ஆனவுடன் பயம் உண்டாவது என்பது பொருந்தாது. ஏன்எனில் இரண்டாவது ஒன்று இருந்தால் அல்லவா பயம் ஏற்படும். த்விதீய (இரண்டாவது) வஸ்துவோ அவித்தையினால் உண்டானது. ஏன்எனில் பார்க்கப்படாத இரண்டாவது வஸ்து பயம் உண்டாவதற்கான ஹேது ஆகாது.“तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः” (தத்ர கோ மோஹ: க: சோக ஏகத்துவமனுபஷ்யத: = அங்கு மோஹம் ஏது, சோகமேது ஏகத்துவத்தை அறிந்தவனுக்கு) என்ற ஈசாவாƒய சுருதி மந்திரத்தால் அறிகிறோம். ஏகத்துவ தர்சனத்தால் பயம் நீங்கிவிடும் என்பது பொருத்தமே. (உசிதமே). எதனால்? ஏன்எனில் திவிதீய வேறு வஸ்துவினால் பயம் ஏற்படுகிறது. அந்த திவீதீய தர்சனம் ஆத்ம ஏகத்துவ தர்சனத்தால் நிவர்த்தியாகிவிடுகிறது. ஏன்எனில் இரண்டாவது வஸ்துவே கிடையாது.
भाष्यम्- अत्र चोदयन्ति- कुतः प्रजापतेरेकत्वदर्शनं जातम्? को वास्मै उपदिदश? अथानुपदिष्टमेव प्रादुरभूत, अस्मदादेरपि तथा प्रसङ्गः। अथ जन्मान्तरकृतसंस्कारहेतुकम् एकत्वदर्शनानर्थक्यप्रसङ्गः। यथा प्रजापतेरतिक्रान्तजन्मावस्थस्य एकत्वदर्शनं विद्यमानमप्यविद्याबन्धकारणं नापनिन्ये, यतः अविद्यासंयुक्त एवायं जातोऽबिभेत्, एवं सर्वेषामेकत्वदर्शनानर्थक्यं प्राप्नोति। अन्त्यमेव निवर्तकमिति चेन्न, पूर्ववत्पुनः प्रसङ्गेनानैकान्त्यात्। तस्मादनर्थ कमेवैकत्वदर्शनमिति।
அனுவாதம்- இங்கு சங்கை செய்கின்றார்கள் - எதற்காக பிரஜாபதிக்கு ஏகத்துவ தர்சனம் உண்டாயிற்று? அதை யார் உபதேசம் செய்தார்கள்? அல்லது உபதேசம் இல்லாமலேயே அதற்கு பிராதுர்பாவம் (முன்பு இருந்தது போன்ற பாவம்) ஏற்பட்டது எனில் நமக்கும் அவ்வாறே உண்டாகும் என்று ஏற்படும். ஒருவேளை ஜன்மாந்திரத்தில் செய்த ஸமஸ்காரத்தினால் ஏற்பட்டது என்று எடுத்துக்கொண்டாலும் ஏகத்வதர்சனத்தின் பிரயோஜனமற்ற தன்மை ஏற்படுகிறது. எவ்வாறு பிரஜாபதியின் கடந்த ஜன்மாவஸ்தையின் ஏகத்துவ தர்சனம் இருந்தாலும் அவித்யாரூப பந்தத்தின் காரணம் நீங்கவில்லை. ஏன்எனில் அவித்யையுடன் கூடி உண்டானதால் பயம் உண்டாயிற்று. இவ்வாறு எல்லாவற்றின் ஏகத்துவ தர்சனத்தின் பிரயோஜனமற்ற தன்மை ஏற்படுகிறது. எல்லாவற்றிற்கும் முடிவில் ஏற்படும் ஏகத்துவ ஞானத்தால் அவித்யா நிவர்த்தி ஏற்படும் என்பது சரியில்லை. ஏன்எனில் முன்புபோல் மறுபடியும் சொன்னபடி இருப்பதால் அதற்கு அவ்யபிசாரித் தன்மை இருக்கமுடியாது. ஆகையால் ஏகத்துவ தர்சனம் வீணேயாகும்.
भाष्यम्-समाधानम्-नैष दोषः उत्कृष्टहेतूद्भव-त्वाोकवत्। यथा पुण्यकर्मोद्भवैर्विविक्तैः कार्यकरणैः संयुक्ते जन्मनि सति प्रज्ञामेधास्मृति वैशारद्यं दृष्टम्, तथा प्रजापतेः धर्मज्ञानवैराग्यैश्वर्यविपरीतहेतुसर्वपाप्मदाहात् विशुद्धैः कार्यकरणैः संयुक्तमुत्कृष्टं जन्म, तदुद्भवं चानुपदिष्टमेव युक्तमेकत्वदर्शनं प्रजापतेः। तथा च स्मृतिः-“ज्ञानप्रतिघं यस्य वैराग्यं च जगत्पतेः। ऐश्वर्यं चैव धर्मश्च सहसिद्धं चतुष्टयम्”।। इति।
அனுவாதம்- ஸமாதானம்- இதில் எந்த ஒரு தோஷமும் இல்லை, ஏனெனில் வியவஹாரத்தில் மற்ற லௌகிகர் போல பிரஜாபதியின் ஜன்மம் உத்கிருஷ்ட ஹேதுவினால் ஆகும். எவ்வாறு புண்யகர்மத்தால் உண்டாகும் பவித்திரமான தேஹம் இந்திரியங்களுடன் கூடிய ஜன்மம் உண்டாகும்பொழுது பிரக்ஞா, மேதாசக்தி, ஸ்மிருதி, வைசாரத்யம் (பாண்டித்தியம்) காணப்படுகிறதோ, அவ்வாறே பிரஜாபதிக்கும் தர்ம, ஞான, வைராக்ய, ஐஸ்வர்ய, விபரீதமான பாபங்கள் எரிக்கப்பட்டதால் விசுத்தமான காரிய காரணங்களுடன் கூடிய உத்கிருஷ்டமான ஜன்மம், அந்த ஜன்மம் உடைய அந்த பிரஜாபதிக்கு உபதேசம் இல்லாமலே ஏகத்துவ தர்சனம் (ஏகத்துவ ஞானம்) இருப்பது உசிதமே. (பொருந்தும்). அவ்வாறே ஸ்மிருதியும் கூறுகிறது-“ज्ञानप्रतिघं यस्य वैराग्यं च जगत्पतेः। ऐश्वर्यं चैव धर्मश्च सहसिद्धं चतुष्टयम्”।। इति। (ஞானமப்ரதிகம் யஸ்ய வைராக்யம் ச ஜகத்பதே: ஐச்வர்யம் சைவ தர்மஷ்ச சஹசித்தம் சதுஷ்டயம்) = நிரங்குச ஞானம், வைராக்யம், ஐஸ்வர்யம், தர்மம் இந்த நான்கும் ஜகத்பதியினுடைய ஸஹஸித்தம் (ஜன்மஸித்தம்) ஆகும்.
भाष्यम् - शङ्का - सहसिद्धत्वे भयानुपपत्तिरिति चेत्। न ह्यादित्येन सह तम उदेति।
அனுவாதம்- சங்கை- இவைகளுடன் (இந்த நான்கும்) சேர்ந்து தோன்றுவதால் (சித்திப்பதால்) பயம் உண்டாகாது எனில், சூரியனுடன் சேர்ந்து இருள் தோன்றுவதில்லை. (இருளும் உதிப்பதில்லை)
भाष्यम् - समाधानम् - न, अन्यानुपदिष्टार्थत्वात्सह-सिद्धवाक्यस्य।
அனுவாதம்- ஸமாதானம்- அவ்வாறு அல்ல. ஏனெனில் இந்த ஸஹஸித்த வாக்கியத்தின் தாத்பர்யம், அதன் ஞானத்தை இதன் மூலமாய் உபதேசிக்க வேண்டியதின் இன்மையைத் தெரிவிப்பதற்காக ஆகும்.
भाष्यम्- शङ्का- श्रद्धातात्पर्यप्रणिपातादीनाम् अहेतुत्वमिति चेत् स्यान्मतम्“श्रद्धावा ्ँभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः” (गीता० ४। ३९)“तद्विद्धि प्रणिपातेन” (गीता० ४। ३४) इत्येवमादीनां श्रुतिस्मृतिविहितानां ज्ञानहेतूनामहेतुत्वम्, प्रजापतिरिव जन्मान्तर कृतधर्महेतुत्वे ज्ञानस्येति चेत्?
அனுவாதம்- சங்கை- சிரத்தை, தத்பரத்வம், ப்ரணிபாதம் (பணிவு) முதலியவைகளுக்கு ஞானோத்பத்தியில் ஹேதுத்துவம் இல்லாமல் ஆகிவிடும். என்றால்“श्रद्धावा ्ँभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः” (சிரத்தாவான்லபதே ஞானம் தத்பர: சம்யதேந்திரிய: = இந்திரிய நிக்ரஹம், அதன் பரமாகவே இருத்தல், சிரத்தை ஆகியவை உள்ள புருஷனே ஞானம் அடைவான்) “तद्विद्धि प्रणिपातेन” (தத்வித்தி ப்ரணிபாதேன = இந்த ஞானத்தை சாஷ்டாங்கமாக வணங்கி அறிந்துகொள்ள வேண்டும்) என்பது முதலிய சுருதி ஸ்மிருதிகளில் விதிக்கப்பட்ட ஞானஹேதுக்களுக்கு அஹேதுத்துவம் உண்டாகும்.
भाष्यम् - समाधानम् - न, निमित्तविकल्पसमुच्चय-गुणवदगुणवत्त्वभेदोपपत्तेः। लोके हि नैमित्तिकानां कार्याणां निमित्तभेदोऽनेकधा विकल्प्यते। तथा निमित्तसमुच्चयः। तेषां च विकल्पितानां समुिच्चतानां च पुनर्गुणवदगुणवत्त्वकृतो भेदो भवति। तद्यथारूपज्ञान एव तावन्नैमित्तिके कार्ये- तमसि विनालोकेन चक्षूरूपसन्निकर्षो नक्तञ्चराणां रूपज्ञाने निमित्तं भवति। मन एव केवलं रूपज्ञाननिमित्तं योगिनाम्। अस्माकं तु सन्निकर्षालोकाभ्यां सह तथादित्यचन्द्राद्यालोकभेदैः समुिच्चता निमित्तभेदा भवन्ति। तथा आलोकविशेषगुणवदगुणवत्त्वेन भेदाः स्युः।
அனுவாதம்-ஸமாதானம்- அவ்வாறு இல்லை. ஏன் எனில் நிமித்தங்களுக்கு விகல்பம், சமுச்சயம், குணத்துவம், அகுணத்துவம் ஆகிய பேதங்கள் உண்டாகும். உலகில் நிமித்தங்களால் உண்டாகும் கர்மங்களின் நிமித்தத்தின் பேதம் அநேக விதமாய் விகல்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறே நிமித்தத்தின் சமுச்சயத்திற்கும் அநேகவிதமாய் இருக்கிறது. அவ்வாறே விகல்பிக்கபட்டதும் சமுச்சயமான ஹேதுக்களுக்கும் குணத்துவம் மற்றும் அகுணத்துவம் இவைகளுக்கு காரணபேதம் இருக்கின்றது. அது இவ்வாறு ஆகும்- நைமித்திக காரிய பூதரூப ஞானத்தில் இருட்டில் சஞ்சரிப்பவைகளுக்கு பிரகாசமற்ற இருளில் கண், ரூபம் இரண்டும் சேருவது ரூபஞானம் ஹேதுவாகிறது. யோகிகளுக்கு மனமே ரூபஞானத்திற்கு ஹேதுவாகிறது. அவ்வாறு நமக்கும் சக்ஷுவின் சேர்க்கையும், பிரகாசம் இரண்டும் இருக்கும்பொழுது ரூபஞானம் ஏற்படுகிறது. இவ்வாறே சூரியன், சந்திரன் முதலிய பிரகாச பேதத்தால் வெவ்வேறு வெவ்வேறு (பின்ன, பின்ன) நிமித்தங்களின் சமுச்சயம் ஏற்படுகிறது. அவ்வாறே பிரகாச விஷயங்களிலும் குணமுடையது, குணமற்றது (சிறந்தது, சிறப்புதன்மை அற்றது) என்ற நிமித்தங்களாலும் பேதம் உண்டாகிறது.
भाष्यम् - एवमेव आत्मैकत्वज्ञानेऽपि क्वचिज्जन्मान्तरकृतं कर्म निमित्तं भवति, यथा प्रजापतेः। क्वचित्तपो निमित्तम्,“तपसा ब्रह्म विजिज्ञासस्व” (तै० उ० ३। २। १) इति श्रुतेः। क्वचित्“आचार्यावान्पुरुषो वेद” (छा० उ० ६। १४। २) “श्रद्धावाँभते ज्ञानम्” (गीता०४।३९)“तद्विद्धिप्रणिपातेन” (गीता० ४। ३४)“आचार्याद्धैव” (छा०उ०४।९।३)“द्रष्टव्यः श्रोतव्यः” (बृ०उ०२।४।५) इत्यादिश्रुतिस्मृतिभ्य एकान्तज्ञानलाभनिमित्तत्वं श्रद्धाप्रभृतीनाम् अधर्मादिनिमित्तवियोगहेतुत्वात्। वेदान्तश्रवण-मनननिदिध्यासनानां च साक्षाज्ज्ञेयविषयत्वात्। पापादि-प्रतिबन्धक्षये चात्ममनसोर्भूतार्थज्ञाननिमित्तस्वाभाव्यात्। तस्मादहेतुत्वं न जातु ज्ञानस्य श्रद्धाप्रणिपातादीनामिति।।
அனுவாதம்- ஆத்ம ஏகத்துவ ஞானத்திற்கு ஜன்மாந்திரத்தில் செய்த கர்மத்தின் நிமித்தம் ஆகும். எவ்வாறு பிரஜாபதிக்கு தபசின் நிமித்தமாய் உண்டோ அவ்வாறு ஆகும்.“तपसा ब्रह्म विजिज्ञासस्व” (தபசா பிரஹ்ம விஜிக்ஞாசஸ்வ= தபசால் பிரஹ்மத்தை அறிய இச்சைகொள்) என்று சுருதியும் கூறுகிறது. மேலும் சில =“आचार्यवान्पुरुषो वेद” (ஆசார்யவான் புருஷோ வேத= குருவை உடையவன் பரமபுருஷார்த்தத்தை அடைகின்றான்)“श्रद्धावाँल्लभते ज्ञानम्” (சிரத்தாவான் லபதே ஞானம் = சிரத்தை உள்ளவன் ஞானத்தை அடைகின்றான்.“तद्विद्धि प्रणिपातेन” (தத்வித்தி பிரணிபாதேன = அதை வினய பூர்வமாய் வணங்கி அடையவேண்டும்)“आचार्याद्धैव” (ஆச்சார்யத்தைவ = ஆசாரியர் மூலமாய்- அறிந்து கொள்ளவேண்டும்“द्रष्टव्यः श्रोतव्यः” (திரஷ்டவ்ய: ஸ்ரோதவ்ய: = இந்த ஆத்மா பார்க்கப்படவேண்டியது, சிரவணம் செய்யப்படவேண்டியது) என்பது முதலிய ஸ்ருதி ஸ்மிருதிகளை அனுசரித்து சிரத்தை முதலியவைகள் அதர்மங்களின் நீக்கத்திற்கு ஹேதுவாய் இருப்பதால் ஏகாந்த ஞானலாபத்திற்கு நியதமான நிமித்தமாய் இருக்கிறது. வேதாந்த சிரவண மனனநிதித்யாசனங்கள் நேரடியாக (சாக்ஷாத்) விஷயமாய் இருக்கின்றன. பாப ப்ரதிபந்தக்ஷயத்தால் ஆத்மாவிற்கும் மனதிற்கும் பரமார்த்த ஞானம் ஸ்வபாவமாகவே நிமித்தமாய் இருக்கிறது. ஆகையால் சிரத்தை ப்ரணிபாதம் முதலியவைகள் ஞானத்திற்கு ஒருகாலும் அஹேதுவாய் இருக்காது.
अव - इतश्च संसारविषय एव प्रजापतित्वम्, यतः।
அனுவாதம்-அ.கை-ஆகையால் சம்சாரவிஷயமே பிரஜாபதித்துவம். எதனால்-
स वै नैव रेमे तस्मादेकाकी न रमते स द्वितीयमैच्छत्। स हैतावानास यथा स्त्रीपुमा ँ्सौ सम्परिष्वक्तौ स इममेवात्मानं द्वेधापातयत्ततः पतिश्च पत्नी चाभवतां तस्मादिदमर्धबृगलमिव स्व इति ह स्माह याज्ञवल्क्यस्तस्मादयमाकाशः स्त्रिया पूर्यत एव ता ्ँ समभवत्ततो मनुष्या अजायन्त ।। ३।।
மந்த்ரார்த்தம்- அந்த ப்ரஜாபதியானவர் ரமிக்கவில்லை. ஆகையால் தனி மனிதனுக்கு ரமிக்கும் தன்மை கிடையாது. ஆகையால் இரண்டாவதை விரும்பியது. எவ்வாறு ஸ்த்ரீ, புருஷர்களுக்கு ஒருவருக்கு ஒருவர் ஆலிங்கனம் ஏற்படுகிறதோ அவ்வாறே பரிணாமம் உடையதாயிற்று. அவர் தனது தேஹத்தை இரண்டு பாகமாகப் பிரித்து. அதிலிருந்து பதி (கணவன்), பத்னியும் (மனைவி) உண்டாயினர். ஆகையால் இந்த சரீரம் अर्धबृगल அதாவது இரண்டு தலமுடைய அன்னத்தின் ஒரு தலத்திற்கு சமானம் ஆகிறது. இவ்வாறு யாக்யவல்க்யர் கூறினார். ஆகையால் இந்த(पुरुषार्ध) ஆகாச ஸ்த்ரீயினால் பூர்ணமாகிறது. அது அந்த ஸ்த்ரீயுடன் சேர்ந்தது. அதிலிருந்து மனுஷ்யன் உண்டானான்.
भाष्यम्- स प्रजापतिर्वै नैव रेमे रतिं नान्वभवत्, अरत्याविष्टोऽभूदिस्यर्थः, अस्मदादिवदेव यतः, इदानीमपि तस्मादेकाकित्वादिधर्मवत्त्वादेकाकी न रमते रतिं नानुभवति। रतिर्नामेष्टार्थसंयोगजा क्रीडा, तत्प्रसिङ्गन इष्टवियोगान्मनस्या-कुलीभावोऽरतिरित्युच्यते।
அனுவாதம்- அந்த பிரஜாபதியானவர் ரமிக்கவில்லை ரதியை அனுபவிக்கவில்லை. மனசங்கடமே ஏற்பட்டது என்பது பொருள். எதனால் எனில் நம்மைப் போல் (அரதியாக) ரதியற்றவராக நிரம்பியிருந்தார். ஆகையால் இப்பொழுதும் அந்த ஏகத்துவம் முதலிய தர்மங்கள் உடையதால் புருஷன் தனி ஒருவனாக ரமிப்பதில்லை அதாவது ரதியை அனுபவிப்பதில்லை. ரதி என்றால் இஷ்டமான பொருளை அடைவதால் உண்டாவதே ரதியாகும். அந்த ஆஸக்தி உடைய புருஷனுடைய மனதில் இஷ்டவஸ்து இழப்பதால் உண்டாகும் வியாகூலமே அரதி எனப்படுகிறது.
भाष्यम् - स तस्या अरतेरपनोदाय द्वितीयमरत्यपघातसमर्थ स्त्रीवस्त्वैच्छद्गृद्धिमकरोत्। तस्य चैवं स्त्रीविषयं गृध्यतः स्त्रिया परिष्वक्तस्येवात्मनो भावो बभूव। स तेन सत्येप्सुत्वाद् एतावानेतत्परिमाण आस बभूव ह।
அனுவாதம்- (அது) அவர் அந்த அரதியை (மனக் கஷ்டத்தை) போக்குவதற்காக அந்த அரதியை நாசம் செய்யும் சாமர்த்தியமுடைய இரண்டாவது வஸ்துவான ஸ்திரீயை இச்சித்தார். அவருக்கு இவ்வாறு ஸ்திரீ விஷயத்தில் ஏற்பட்ட இச்சையால்தான் ஸ்தரீயை ஆலிங்கனம் செய்வது போன்ற ஸ்வபாவமான பாவம் அவருக்கு ஏற்பட்டது. அவர் ஸத்யசங்கல்பராய் இருப்பதால் அந்த பாவத்தினால் இவ்வித பரிமாணம் உடையவரானார்.
भाष्यम् - किं परिमाणः? इत्याह- यथा लोके स्त्रीपुमांसौ अरत्यपनोदाय सम्परिष्वक्तौ यत्परिमाणौ स्यातां तथा तत्परिमाणौ बभूवेत्यर्थः। स तथा तत्परिमाणमेव इममात्मानं द्वेधा द्विप्रकारमपातयत्पातितवान् इममेवेत्यवधारणं मूलकारणाद्विराजो विशेषणार्थम्। न क्षीरस्य सर्वोपमर्देन दधिभावापत्तिवद्विराट् सर्वोपमर्देनैतावानास किं तर्हि? आत्मना व्यवस्थितस्यैव विराजः सत्यसंकल्पत्वादात्मव्यतिरिक्तं स्त्रीपुंसपरिष्वक्तपरिमाणं शरीरान्तरं बभूव। स एव च विराट् तथाभूतः स हैतावानासेति सामानाधिकरण्यात्।
அனுவாதம்- என்ன பரிமாணம் (அரதியை நீக்குவது) அடைந்தார்? சுருதி கூறுகிறது- எவ்வாறு உலகில் ஸ்திரீபுருஷர்கள் தங்கள் அரதியை (திருப்தி அற்ற தன்மையை) போக்குவதற்காக ஒன்று சேரும்பொழுது உண்டாகும் திருப்தியற்ற தன்மையின் நீக்கம் உண்டோ அவ்வாறு பிரஜாபதி அந்த பரிமாணத்தை அடைந்தார். என்பது பொருள். அவ்வாறு அவர் இந்த பரிமாணத்திற்காக தன்னை இரண்டாக ஆக்கினார்“इयम् एव” (இந்த தேஹமே) இவ்வாறு நிச்சயம் செய்வது மூலகாரணமாகிய விராட்டின் விசேஷத்தை தெரிவிப்பதற்காக ஆகும். பாலானது தனது ஸ்வரூபம் முழுவதையும் நாசமாக்கி தயிர் ஆவது போல் விராட் தன்னுடைய முன் சொரூபத்தை விட்டு இருந்தார் என்பது இல்லை. பின் எவ்வாறு ஆனார்? தன் சொரூபத்தில் இருந்துகொண்டே விராட் சத்தியசங்கல்பர் ஆனதால் அதனை இந்த சரீரத்தால் பின்னமாய் இருக்கும் ஸ்திரீபுருஷர்கள் ஆலிங்கனம் செய்து பரிமாணம் அடைவது போல் தன் தேஹமாகவே ஆகிவிட்டார். ஏன்எனில் முன் ஸ்திதியில் இருந்த விராட் அவராகவே ஆகிவிட்டார். விராட் வாசகமானது“स” (ஸ) என்பதும்“एतावान्” (ஏதாவான்) என்பதால் ஸாமானாதிகரணம் ஆகும்.
भाष्यम् - ततस्तस्मात्पातनात्पतिश्च पत्नी चाभवतामिति दम्पत्योर्निर्वचनं लौकिकयोः। अत एव तस्मात्, यस्मादात्मन एवार्धः पृथग्भूतो येयं स्त्री, तस्मादिदं शरीरमात्मनोऽर्धबृगलमर्धं च तद् बृगलं विदलं च तदर्धबृगलम् अर्धविदलमिवेत्यर्थः। प्राक्स्त्र्युद्वहनात्कस्यार्धबृगलम्? इत्युच्यते स्व आत्मन इति। एवमाह स्मोक्तवान्किल याज्ञवल्क्यः, यज्ञस्य वल्को वक्ता यज्ञवल्कस्तस्यापत्यं याज्ञवल्क्यो दैवरातिरित्यर्थः। ब्रह्मणा वापत्यम्।
அனுவாதம்- அதிலிருந்து இரண்டாக வெளிப்பட்டதால் (விழுந்ததால்) பதி என்றும் பத்னி என்றும் உண்டாயிற்று என்பது உலகத்தோரால் குறிப்பிடப்படும் தம்பதிகள் என்பதுபோல் ஆகும். ஆகையால் தான் எதனால் தன்னுடைய சரீரத்தின் தனித்து உள்ள பாதியான ஆகவே இச்சரீரம் ஆத்மாவின்अर्धबृगलम् अर्धविदलं என்பது இதன் அர்த்தம். ஆனால் ஸ்திரீயின் விவாகத்திற்கு முன் யாருக்கு பாதி பிரிவு ஏற்பட்டது என்பதற்கு சுருதி கூறுகிறது“स्व” அதாவது தனக்கே என்று. இந்த நிச்சயத்தை யாக்ஞவல்க்யர் கூறினார். யக்ஞத்தின்“वल्कः” வக்தா (யக்ஞத்தை கூறுபவர்) யக்ஞவல்க எனப்படுகிறார். அவருடைய புத்திரன் யாஞ்யவல்கிய அதாவது தைவராதி என்பது பொருள். அல்லது பிரஹ்மாவினுடைய புத்திரன்.
भाष्यम् - यस्मादयं पुरुषार्ध आकशः स्त्र्यर्धशून्यः पुनरुद्वहनात्तस्मात्पूर्यते स्त्र्यर्धेन, पुनः सम्पुटीकरणेनेव विदलाधः। तां स प्रजापतिर्मन्वाख्यः शतरूपाख्यामात्मनो दुहितरं पत्नीत्वेन कल्पितां समभवन्मैथुनमुपगतवान्। ततस्तस्मात्तदुपगमनाद् मनुष्या अजायन्तोत्पन्नाः।।
அனுவாதம்- எதனால் இந்த புருஷனின் பாதிபாகமான ஆகாசம் ஸ்திரீயாகிய பாதிபாகமற்றது. மறுபடியும் அந்த விவாஹத்தால் ஸ்திரீயின் பாதிபாகத்தால் பூர்த்தி அடைந்தது. மறுபடியும் பிரிந்து மறுபடியும் ஒன்றாய் சேர்ந்தது அந்த பிரஜாபதி என்னும் மனு என்பவர் ஸதரூபா எனப்படும் தன்னுடைய அந்த கன்னியை பத்னியாய் கல்பித்து அதனால் மைத்துனத்தை அடைந்தார். அந்த மைத்துனத்தின் ப்ரவ்ருத்தியிலிருந்து மனிதன் உண்டானான்.
सो हेयमीक्षाञ्चक्रे कथं नु मात्मन एव जनयित्वा सम्भवति हन्त तिरोऽसानीति सा गौरभवदृषभ इतरस्ता ्ँसमेवाभवत्ततो गावोऽजायन्त वडवेतराभवदश्ववृष इतरो गर्दभीतरा गर्दभ इतारस्ताँ समेवाभवत्तत एकशफमजायताजेतराभवद्वस्त इतरोऽविरितरा मेष इतरस्ताँ्समेवाभवत्ततोऽजावयोऽजायन्तैवमेव यदिदं किञ्च मिथुनमा पिपीलकाभ्यस्तत्सर्वसृजत।। ४।।
மந்த்ரார்த்தம்- அந்த (சதரூபா) இவ்வாறு நினைத்தாள். எவ்வாறு எனில் ‘தன்னிடம் இருந்தே உண்டாக்கி ஏன் என்னையே அடைகிறது?’ நல்லது. நான் மறைந்து போகிறேன். அதிலிருந்து அது பசுவாயிற்று. இரண்டாவதாகிய அந்த மனு காளை மாடாகி நன்றாக அனுபவித்தது. இதிலிருந்து பசுக்கள் உண்டாயிற்று. அப்பொழுது அது பெண் குதிரையாயிற்று அவ்வாறே மனு ஆண் குதிரை ஆயிற்று. அதன் பின் அது பெண் கழுதையாயிற்று. மனு ஆண் கழுதையாயிற்று. அதனால் சம்போகம் அடைந்தது. அதிலிருந்து ஜ்வலிக்கின்ற பசு (மிருகம்) உண்டாயிற்று. சதரூபா பெண் ஆடாயிற்று. மேலும் மனு ஆண் ஆடாக ஆனார். அதன் பின் பெண் எறும்பாயிற்று. மனு ஆண் எறும்பானார் இதிலிருந்து ஆடு, எறும்புகள் உத்பத்தியானது. இவ்வாறு எறும்பு முதல் ஆரம்பித்து மிதுனத்தினால் (ஸ்திரீ புருஷசேர்க்கையால்) எல்லாவற்றையும் அது உண்டாக்கியது.
भाष्यम् - सा शतरूपा उ ह इयं सेयं दुहितृगमने स्मार्त प्रतिषेधमनुस्मरन्तीक्षाञ्चके। कथं न्विदमकृत्यं यन्मा मामात्मन एव जनयित्वोत्पाद्य सम्भवत्युपगच्छति। यद्यप्ययं निर्घृणोऽहं हन्तेदानीं तिरोऽसानि जात्यन्तरेण तिरस्कृता भवानि। इत्येवमीक्षित्वासौ गौरभवत्। उत्पाद्यप्राणिकर्मभिश्चोद्यमानायाः पुनःपुनः सैव मतिः शतरूपाया मनोश्चाभवत्। ततश्च ऋषभ इतरः। तां समेवाभवदित्यादि पूर्ववत्। ततो गावोऽजायन्त।
அனுவாதம்- அந்த சதரூபா ஸ்ம்ருதிகளில் உள்ள பெண்ணை அடைவது சம்பந்தமான வாக்கியங்களை இந்த ப்ரதிஷேதம் (நிஷேதம் - தடுக்கப்பட்டுள்ளது) செய்யப்பட்டுள்ளதை நினைத்து விசாரம் செய்ய ஆரம்பித்தது. எவ்வாறு எனில் தன்னிடம் இருந்தே உண்டாக்கி என்னையே போகம் செய்வது செய்யக்கூடாத காரியத்தை செய்கிறது என்று. இது தயவில்லாத காரியமாக இருந்தாலும் இப்பொழுது வேறு ஜாதிரூபமாய் தன்னை மறைத்துக் கொண்டது. இவ்வாறு விசாரம் செய்து பசுவாக ஆயிற்று. ஆனால் உத்பன்னம் (தோன்றுவது) ஆவதற்கான யோக்கியமுள்ள பிராணிகளின் கர்மங்களினால் ப்ரேரிக்கப்பட்டு சதரூபியும், மனுவும் மறுபடியும், மறுபடியும் அதேமாதிரி எண்ணம் உடையவர்கள் ஆனார்கள். ஆகையால் மனு ரிஷபம் (காளைமாடு) ஆகி முன்புபோல் அதனுடன் சேர்ந்தார். அதிலிருந்து பசுக்கள் உண்டாயின.
भाष्यम्- तथा वडवेतराभवदश्ववृष इतरः। तथा गर्दभीतरा गर्दभ इतरः। तत्र वडवाश्ववृषादीनां सङ्गमात्तत एकशफमेकखुरमश्वाश्वतरगर्दभाख्यं त्रयमजायत।
அனுவாதம்- அவ்வாறே (சதரூபா) பெண் குதிரையானது மற்றது (மனு) ஆண் குதிரையானது. அவ்வாறே பெண் கழுதையானது மற்றது ஆண் கழுதையானது. இவ்வாறு பெண்குதிரை, ஆண்குதிரை முதலியவைகளின் சங்கமத்தால் குதிரை, சிறப்பான குதிரை, கழுதை ஆகிய இந்த மூன்றும் ஒரே குளம்புடைய பசு (மிருகம்) உண்டாயிற்று.
भाष्यम् - तथा अजेतराभवद्वस्तश्छाग इतरः तथा अविरितरा मेष इतरः तां समेवाभवत्। तां तामिति वीप्सा। तामजां तामविंचेतिसमभवदेवेत्यर्थः।ततोऽजाश्चावयश्चाजावयोऽजायन्त। एवमेव यदिदं किञ्च यत्किञ्चेदं मिथुनं स्त्रीपुंसलक्षणं द्वन्द्वम्, आ पिपीलिकाभ्यः पिपीलिकाभिः सहानेनैवन्यायेन तत्सर्वमसृजत जगत्सृष्टवान्।।
அனுவாதம்- இவ்வாறு சதரூபா பெண் ஆடு ஆயிற்று. மேலும் மனு ஆண் ஆடு ஆயிற்று. மேலும் அது பெண் செம்மறி ஆடாயிற்று. மனு ஆண் செம்மறி ஆடாயிற்று. அதன்பின் சங்கமம் ஏற்பட்டது.“तां” “तां” என்று இரண்டு முறை கூறியது இரண்டின் சங்கமத்தைக் குறிக்கிறது. அதிலிருந்து ஆடு, செம்மறி ஆடுகள் உற்பத்தியானது. இவ்வாறு எறும்பு முதல் எல்லாவற்றிற்கும் ஸ்திரீ புருஷரூபத்தாலேயே மிதுனம் உண்டாகிறது. இந்த நியாயத்தால் இந்த எல்லா ஜகத்தையும் சிருஷ்டித்தார்.
सोऽवेदहं वाव सृष्टिरस्म्यह्ँ हीद्ँ सर्वमसृक्षीति ततः सृष्टिरभवत्सृष्टा ्ँ हास्यैतस्यां भवति य एवं वेद।। ५।।
மந்த்ரார்த்தம்- அந்த பிரஜாபதியானவர் “நானே சிருஷ்டி” என்று அறிந்தார். நானே இவை எல்லாவற்றையும் உண்டாக்கினேன். ஆகையால் “சிருஷ்டி” என்ற நாமம் (பெயர்) உடையவனாகிறேன். எவர் இவ்வாறு அறிகிறாரோ அவர் இதன் (இந்த பிரஜாபதியின்) சிருஷ்டியில் சிரஷ்டா (சிருஷ்டி செய்கிறவன்) ஆக ஆகின்றான்.
भाष्यम्- स प्रजापतिः सर्वमिदं जगत्सृट्वा अवेत्। कथम्? अहं वावाहमेव सृष्टिः सृज्यते इति सृष्टं जगदुच्यते सृष्टिरिति। यन्मया सृष्टं जगन्मदभेदत्वादहमेवास्मि न मत्तो व्यतिरिच्यते। कुत एतत्? अहं हि यस्मादिदं सर्वं जगदसृक्षि सृष्टवानस्मि तस्मादित्यर्थः।
அனுவாதம்- அந்த பிரஜாபதியானவர் இந்த ஜகத் முழுவதையும் ஸ்ருஷ்டி செய்து அறிந்தார். எவ்வாறு? நானே ஸ்ருஷ்டி என்று. ஸ்ருஷ்டிப்பதால் ஜகத் ஸ்ருஷ்டி எனப்படுகிறது. என்னால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட எந்த ஜகத்தானது என்னைக் காட்டிலும் வேறாகாததால் (அபேதமானதால்) நானே அதுவாய் இருக்கிறேன். என்னைக்காட்டிலும் வேறாக ஒன்றும் இல்லை. ஏன் இவ்வாறு? எதனால் நான் இந்த ஜகத் முழுவதையும் ஸ்ருஷ்டித்தவனாய் இருக்கிறேனோ அதனால் ஆகும் என்பது பொருள்.
भाष्यम् - यस्मात्सृष्टिशब्देन आत्मानमेवाभ्यधात्प्रजापतिः, ततस्तस्मात्सृष्टिरभवत् सृष्टिनामाभवत्। सृष्टां जगति, हास्य प्रजापतेरेतस्यामेतस्मिञ्जगति, स प्रजापतिवत्स्रष्टा भवति स्वात्मनोऽनन्यभूतस्य जगतः कः? य एवं प्रजापतिवद्यथोक्तं स्वात्मनोऽनन्य भूतं जगत्साध्यात्मादिभूताधिदैवं जगदहमस्मीति वेद।।
அனுவாதம்- எதனால் பிரஜாபதி தன்னையே சிருஷ்டி சப்தத்தால் கூறினாரோ அதனால் ஸ்ருஷ்டி என்ற நாமம் அவருக்கு ஏற்பட்டது. இந்த ஸ்ருஷ்டியாகிய ஜகத்தில் இந்த பிரஜாபதி தன்னைக்காட்டிலும் வேறாகாத ஜகத்தை அந்த பிரஜாபதி போல் ஸ்ருஷ்டித்தவராகிறார். யார்? எவர் இவ்வாறு பிரஜாபதிபோல் முன்பு கூறியது போல் தன்னைக்காட்டிலும் வேறு ஆகாத அந்த ஜகத் அத்யாத்ம அதி பூத அதிதைவம் ஜகத் நான் என்று அறிகிறான். பிரஜாபதியின் அக்னி முதலிய ஸ்வரூப அதிசிருஷ்ட்டி
अथेत्यभ्यमन्थत्स मुखाच्च योनेर्हस्ताभ्यां चाग्निमसृजत तस्मादेतदुभयमलोमकमन्तरतोऽलोमका हि योनिरन्तरतः। तद्यदिदमाहुरमुं यजामुं यजेत्येकैकं देवमेतस्यैव सा विसृष्टिरेष उ ह्येव सर्वे देवाः। अथ यत्किञ्चेदमार्द्रं तद्रेतसोऽसृजत तदु सोम एतावद्वा इद्ँ सर्वमन्नं चैवान्नादश्च सोम एवान्नमग्निरन्नादः सैषा ब्रह्मणोऽतिसृष्टिः। यस्छ्रेयसो देवानसृजताथ यन्मर्त्यः सन्नमृतानसृजत तस्मादतिसृष्टिरतिसृष्टाँ हास्यैतस्यां भवति य एवं वेद।। ६।।
மந்த்ரார்த்தம்- அதன் பின் அது இவ்வாறு மந்தனம் (கடைதல்) செய்தது. இவ்வாறு முகரூபி யோனியிலிருந்து இரண்டு கைகளால் (மந்தனம்) செய்து அக்கினியை உண்டாக்கினார். ஆகையால் இரண்டு கைகளின் உள் பக்கமும் முடி அற்று இருக்கின்றன. அவ்வாறே முகத்தின் (யோனியின்) உள்பக்கமும் முடி அற்று இருக்கிறது. ஆகையால் யாகத்தில் வெவ்வேறு தேவர்கள் இருப்பதாக நினைத்து இவ்வாறு கூறுகிறார்கள். இந்த (அக்னி) தேவதையை யஜி, இந்த (இந்திர) தேவதையை யஜி என்று கூறினாலும் அவை எல்லாம் ஒரே தேவதையாகும். அது சர்வதேவ ஸ்வரூப பிரஜாபதியாகும். அதன் பின் எது சிறிது ஈரமுள்ள வஸ்து எது உண்டானது அவைகளின் ரசத்தைக் கொண்டு வீர்யத்தை உண்டுபண்ணினார். அதுவே சோமம். இந்த உலகத்தில் உள்ளவை எல்லாம் அன்னமாகவும். அன்னாதகமாயும் உள்ளது. சோமம் அன்னம், அக்னி அன்னாத:- இந்த பிரஹ்மாவின் உக்ரமான ஸ்ருஷ்டி உள்ளதோ அதை தன்னிடமிருந்தே உத்கிருஷ்டமான தேவதைகளை உண்டாக்கினார். (ஸ்ருஷ்டித்தார்) தான் மர்த்தியனாய் இருந்த போதிலும் மரணதர்மம் இல்லாத தேவர்களை (அமர்த்யர்களை) உண்டாக்கினார். ஆகையால் அதி ஸ்ருஷ்டி (உத்கிருஷ்டமான ஸ்ருஷ்டி) ஆகும். எவர் இவ்வாறு அறிகின்றாரோ அவர் இந்த அதி ஸ்ருஷ்டி விஷயத்தில் பிரஜாபதிபோல் ஆகின்றார்.
भाष्यम् - एवं स प्रजापतिर्जगदिदं मिथुनात्मकं सृृट्वा ब्राह्मणादिवर्णनियन्त्रीर्देवताः सिमृक्षुरादौ, अथेति शब्दद्वयम-भिनयप्रदर्शनार्थम्, अनेन प्रकारेण मुखे हस्तौ प्रक्षिप्याभ्य-मन्थदाभिमुख्येन मन्थनमकरोत्। स मुखहस्ताभ्यां मथित्वा मुखाच्च योनेर्हस्ताभ्यां च योनिभ्यामग्निं ब्राह्मणजाते रनुग्रहकर्तारमसृजत सृष्टवान्।
அனுவாதம்- இவ்வாறு அந்த பிரஜாபதியானவர் மிதுனாத்மகமான ஜகத்தை ஸ்ருஷ்டி செய்து பிராமணர் முதலிய வர்ணங்களை (ஜாதிகளை) நியந்த்ரு (ஆட்டுவித்தல்) (தூண்டுதல்) செய்யும் தேவதைகளை உண்டுபண்ணும் இச்சைக்கு முன்னால்- இங்கு“अथ” इति என்ற இரண்டு சப்தங்கள் அபிநயத்தைக் காட்டுவதற்காக ஆகும். இவ்வாறு முகத்தில் கையை வைத்து“अभ्यमन्थत्” முகத்தை அழுத்தினார், அவர் முகத்தை கைகளால் அழுத்தி கடைந்து முகரூபயோனி (காரணம்)யை கைகள் ரூபமான யோனிகளால் அதாவது அந்த இரண்டு யோனிகளால் (காரணங்களால்) பிராஹ்மண ஜாதிக்கு அனுக்கிரஹம் செய்யும் அக்னிதேவதையை உத்பன்னம் செய்தார். (உத்பத்தி செய்தார்)
भाष्यम् - यस्माद्दाहकस्याग्नेर्योनिरेतदुभयं हस्तौ मुखं च, तस्मादुभयमप्येतदलोमकं लोमविवर्जितम्। किं सर्वमेव? न, अन्तरतोऽभ्यन्तरतः, अस्ति हि योन्या सामान्यमुभयस्यास्य। किम्? अलोमका हि योनिरन्तरतः स्त्रीणाम्। तथा ब्राह्मणोऽपि मुखादेव जज्ञे प्रजापतेः। तस्मादेकयोनित्वाेष्द्भेनेवानुजोऽनुगृह्यते अग्निना ब्राह्मणः। तस्माद्ब्राह्मणोऽग्निदेवत्यो मुखवीर्यश्चेति श्रुतिस्मृतिसिद्धम्।
அனுவாதம்- ஏன்எனில் அந்த முகம், இருகைகள் ஆகிய இரண்டும் தாஹ சக்தி உடைய அக்னியின் யோனியாகும். ஆகையால் இரண்டும் ரோமம் இல்லாதவைகளாய் இருக்கின்றன. என்ன? முழுவதுமா? இல்லை உள்பக்கம் மட்டுமே. இரண்டு யோனிகளும் எதற்கு சமானமாகிறது? ஸ்திரீகளின் யோனியின் உள் ரோமம் இல்லாது போல். இவ்வாறு பிராஹ்மணர்களும் பிரஜாபதியின் முகத்திலிருந்து உத்பன்னமானார்கள். ஆகையால் ஒரே யோனியிலிருந்து உண்டானதால் பெரியவன் தன் உடன் பிறந்தவனை அனுக்கிரஹம் செய்வதுபோல் அக்னியும் பிராஹ்மணர்களை அனுக்கிரஹம் செய்கிறது. ஆகையால் அக்னியே பிராஹ்மணர்களின் தேவதையாகவும், முகரூப வீரியத்துடனும் கூடி இருக்கிறது. இது சுருதி ஸ்மிருதிகளால் சித்திக்கிறது.
भाष्यम्- तथा बलाश्रयाभ्यां बाहुभ्यां बलभिदादिकं क्षत्रियजातिनियन्तारं क्षत्रियं च। तस्मादैन्द्रं क्षत्रं बाहुवीर्यं चेति श्रुतौ स्मृतौ चावगतम्। तथोरुत ईहा चेष्टा तदाश्रयाद्वस्वादिलक्षणं विशो नियन्तारं विशं च। तस्मात्कृष्यादिपरो वस्वादिदेवत्यश्च वैश्यः। तथा पूषणं पृथ्वीदैवतं शूद्रं च पां परिचरणक्षममसृजतेति श्रुतिस्मृतिप्रसिद्धेः।
அனுவாதம்-இவ்வாறு பலத்தை ஆஸ்ரயமாக உடைய புஜங்களிலிருந்து அவர் (பிரஜாபதி) க்ஷத்திரிய ஜாதிகளின் நியந்தா ஆகிய இந்திரன் முதலியவர்களையும் க்ஷத்திரியர்களையும் உண்டாக்கினார். இதனால் இந்திர தேவதையின் அனுக்ரஹத்தையும் புஜரூபவீரீயமும் உடையவனாகின்றான். இது ஸ்ருதி ஸ்மிருதிகளினால் அறியப்படுகிறது. அவருடைய ஆசை அதாவது செயல் இவைகளுக்கு ஆஸ்ரய பூதமான தொடைகளிலிருந்து வைஸ்யஜாதிகளின் நியந்தாவாகிய வசு முதலியவைகளையும், வைஸ்ய ஜாதியையும் உத்பன்னம் செய்தார். ஆகையால் வைசியர் உழவு முதலிய கர்மங்களில் ஈடுபட்டவர்களாய் இருக்கின்றனர். மேலும் வசுதேவதைகளால் அனுக்கிரஹிக்கப் பட்டவர்களாக ஆகின்றனர். இவ்வாறே பிருதிவீதேவதை பூஷா (போஷனை) வாகவும், பரிசர்யம் செய்வதில் ஈடுபாடு உடையவர்களான சூத்திர ஜாதி காரர்களை தனது பாதங்களிலிருந்து உண்டாக்கினார். இவ்வாறு சுருதி, ஸ்மிருதிகளில் பிரசித்தமாய் இருக்கிறது.
भाष्यम् - तत्र क्षत्रादिदेवतासर्गमिहानुक्तं वक्ष्यमाणम-प्युक्तवदुपसंहरति सृष्टिसाकल्यनुकीर्त्यै। यथेयं श्रुतिर्व्यवस्थिता तथा प्रजापतिरेव सर्वे देवा इति नििश्चतोऽर्थः। स्त्रष्टुरनन्य-त्वात्सृष्टानाम्। प्रजापतिनैव तु सृष्टत्वाद् देवानाम्।
அனுவாதம்- அங்கு க்ஷத்திரிய முதலிய தேவதைகளின் சிருஷ்டி கூறப்படவில்லை. மேலே கூறப்படவிருக்கிறது. இருந்தாலும் ஸ்ருஷ்டியின் சர்வாங்க பூதமானதை தொடர்ந்து கூறுவதற்காக சுருதி அதை கூறப்பட்டது போல் முடிக்கிறது. எவ்வாறு சுருதியின் நிச்சயம் (வியவஸ்தா) இருக்கிறதோ அதை அனுசரித்து பிரஜாபதியே எல்லா ரூபமாய் இருக்கிறார். இதுவே நிச்சயம் செய்யப்பட்ட பொருள். பிரஜாபதியே தேவர்களை ஸ்ருஷ்டித்தவர். ஸ்ருஷ்டித்தவர் ஸ்ருஷ்டிக்கப்ட்டவை ஸ்ருஷ்டித்தவரைக் காட்டிலும் வேறு அல்ல.
भाष्यम् - अथैवं प्रकरणार्थे व्यवस्थिते तत्स्तुत्यभिप्रायेणा-विद्वन्मतान्तरनिन्दोपन्यासः, अन्यनिन्दान्यस्तुतये। तत्तत्र कर्मप्रकरणे केवलयाज्ञिका यागकाले यदिदं वच आहुः-“अमुमग्निं यजामुमिन्द्रं यज” इत्यादि नामशस्त्रस्तौत्रकमादिभिन्नत्वािद्भन्न-मेवाग्न्यादिदेवमेकैकं मन्यमाना आहुरित्यभिप्रायः। तन्न तथा विद्यात्, यस्मादेतस्यैव प्रजापतेः सा विसृष्टिर्देवभेदः सर्व एष उ ह्येव प्रजापतिरेव प्राणः सर्वे देवाः।
அனுவாதம்- இப்பொழுது பிரகரண அர்த்தம் இவ்வாறு இருக்கும்பொழுது அதன் ஸ்துதியின் பொருட்டு மற்ற மதத்தை நிந்தை செய்யப்படுகிறது. ஏன்எனில் ஒன்றை நிந்தை செய்தால் மற்றொன்று துதிக்கப்படுவதாக ஆகிறது. அங்கு கர்ம பிரகரணத்தில் யக்ஞம் செய்பவர்கள் யக்ஞ சமயத்தில் அக்னி முதலிய தேவதைகளின் ஒவ்வொன்றிற்கும் நாமம், சஸ்த்ரம், ஸ்தோத்ரம், கர்மம் முதலியவை வெவ்வேறாய் இருக்கும் காரணத்தால் ஒவ்வொன்றையும் தனித்தனியாக இருப்பதாக நினைத்து இவ்வாறு கூறுகிறார்கள்- “இந்த அக்னியை யஜனம் செய், இந்த இந்திரனை யஜனம் செய்” என்று கூறுகிறார்கள். அவ்வாறு அந்த ரூபங்களை அவ்வாறு அறிய வேண்டியதில்லை. ஏன்எனில் இந்த சம்பூர்ண ஸ்ருஷ்டி செய்யப்பட்ட தேவ பேதங்கள் பிரஜாபதியினதேயாகும். அதாவது ஸ்ருஷ்டிக்கப்பட்டவை எல்லாம் பிரஜாபதியே. ஆகையால் பிரஜாபதியே ப்ராணனும் அனைத்து தேவர்களும் ஆவார்.
भाष्यम् - अत्र विप्रतिपद्यन्ते- पर एव हिरण्यगर्भ इत्येके। संसारीत्यपरे।
அனுவாதம்- இந்த விஷயத்தில் மதபேதம்- ஹிரண்யகர்பனே பரம் என்று சிலரின் மதம், மற்றவர் அபரமான சம்சாரி என்பர்.
भाष्यम् - प्रथमपक्षम् - पर एव तु मन्त्रवर्णात्।“इन्द्रं मित्रं वरुणमग्निमाहुः” इति श्रुतेः।“एष ब्रह्मैष इन्द्र एष प्रजापतिरेते सर्वे देवाः” (ऐ० उ० ५। ३) इति च श्रुतेः। स्मृतेश्च“एकमेके वदन्त्यग्निं मनुमन्ये प्रजापतिम्” (मनु० १२। १२३) इति,“योऽसावतीन्द्रियोऽग्राह्यः सूक्ष्मोऽव्यक्तः सनातनः। (मनु० १। ७) सर्वभूतमयोऽचिन्त्यः स एव स्वयमुभौ” इति च।
भाष्यम् - द्वितीयपक्षम् - संसार्येव वा स्यात्।“सर्वान्पाप्मन औषत्” (बृ० उ० १। ४। १) इति श्रुतेः। न ह्यसंसारिणः पाप्मदाहप्रसङ्गोऽस्ति।भयारतिसंयोगश्रवणाच्च।“अथ यन्मर्त्यः सन्नमृतानसृजत” (बृ० उ० १। ४। ६) इति च।“हिरण्यगर्भं पश्यति जायमानम्” (श्वे० उ० ४। १२) इति च मन्त्रवर्णात्। स्मृतेश्च कर्मविपाकप्रक्रियायाम्“ब्रह्मा विश्वसृजो धर्मो महानव्यक्तमेव च। उत्तमां सात्त्विकीमेतां गतिमाहुर्मनीषिणः” (मनु० १२। ५०) इति।
அனுவாதம்- இரண்டாவதுபக்ஷம்- அல்லது சம்சாரி ஹிரண்யகர்பம் ஆக வேண்டும். அவ்வாறே“सर्वान्पाप्मन औषत्” (அவன் எல்லா பாபங்களையும் எரித்து விட்டான்) என்பது சுருதியினால் சித்திக்கிறது. அசம்சாரிக்கு (பரமாத்மாவிற்கு) பாபத்தை தஹிக்கவேண்டும் என்பதில்லை. இதைத்தவிர அசம்சாரிக்கு பயம், வேதனை இவைகளின் சங்கமம் கேள்விப்பட்டதில்லை.“अथ यन्मर्त्यः सन्नमृतानसृजत” (அவர் ஸ்வயம் மர்த்யர் ஆகி அம்ருதர்களை அதாவது தேவர்களை ஸ்ருஷ்டித்தார்) என்று“हिरण्यगर्भं पश्यति जायमानम्” (அவன் ஸ்ருஷ்டி செய்யும் ஹிரண்யகர்பனை பார்க்கிறான்) என்ற மந்திரவர்ணங்களாலும் தெரிகிறது. ஸ்ம்ருதியிலும் கர்மவிபாக ப்ரக்ரியையிலும்“ब्रह्मा विश्वसृजो धर्मो महानव्यक्तमेव च। उत्तमां सात्त्विकीमेतां गतिमाहुर्मनीषिणः” (பிரஹ்மா அதாவது ஹிரண்யகர்பர் பிரஜாபதிகண, தர்மம், மஹத்தத்துவம், அவ்யக்தம் ஆகிய இவைகள் மனீஷிகணங்களுக்கு உத்தம சாத்விகர்களுக்கு உத்தம கதி எனக் கூறப்படுகிறது) இவை முதலியவை ஸ்மிருதி வாக்கியங்கள் ஆகும்.
भाष्यम् - शङ्का -अथैवं विरुद्धार्थानुपपत्तेः प्रामाण्यव्याघात इति चेत्?
அனுவாதம்- சங்கை- ஆனால் இவ்வாறு விருத்த அர்த்தம் பொருந்தாது. ஆகையால் பிராமாண்யத்திற்கு வ்யாகாததோஷம் ஏற்படுமே எனில்?
भाष्यम् - समाधानम् - न, कल्पनान्तरोपपत्तेरविरोधात्। उपाधिविशेषसम्बन्धाद्विशेषकल्पनान्तरमुपपद्यते।“आसीनो दूरं व्रजति शयानो याति सर्वतः। कस्तं मदामदं देवं मदन्यो ज्ञातुमर्हति” (क० उ० १। २। २१) इत्येवमादिश्रुतिभ्य उपाधिवशात्संसारित्वं न परमार्थतः। स्वतोऽसंसार्येव।
அனுவாதம்-ஸமாதானம்- அவ்வாறு அல்ல. ஏன் எனில் வேறு ஒரு கல்பனை உண்டாவதால் இதில் விரோதம் இல்லை. உபாதி விசேஷத்தின் சம்பந்தத்தால் ஒரு விசேஷமான கல்பனை சம்பவிக்கும்.“आसीनो दूरं व्रजति शयानो याति सर्वतः। कस्तं मदामदं देवं मदन्यो ज्ञातुमर्हति” (இருந்து கொண்டே தூரம் செல்கிறது. படுத்துக்கொண்டே எல்லா இடத்திற்கும் செல்கிறது, அந்த ஹர்ஷமும் (சந்தோஷமும்) கவலையும் கூடிய தேவதையை என்னைத் தவிர யார் அறியமுடியும்?) என்று இவை முதலிய சுருதிகளினால் உபாதி வசத்தால் சம்சாரித்துவம், உண்மையில் அல்ல என்று அறியப்படுகிறது. ஸ்வத: அசம்சாரியே.
भाष्यम् - एवमेकत्वं नानात्वं च हिरण्यगर्भस्य। तथा सर्वजीवानाम्,“तत्त्वमसि” (छा०उ०६।८।१६) इति श्रुतेः। हिरण्यगर्भस्तु उपाधिशुतिशयापेक्षया प्रायशः पर एवेति श्रुतिस्मृतिवादाः प्रवृत्ताः। संसारित्वं तु क्वचिदेव दर्शयन्ति। जीवानाम् उपाधिगताशुद्धिबाहुल्यात्संसारित्वमेव प्रायशोऽ-भिलप्यते। व्यावृत्तकृत्स्नोपाधिभेदापेक्षया तु सर्वः परत्वेनाभिधीयते श्रुतिस्मृतिवादैः।
அனுவாதம்- இவ்வாறு ஹிரண்யகர்பனுடைய ஏகத்வம், நாநாத்வம் என்பது கூறப்பட்டது. இவ்வாறே ஜீவன்களுக்கும் ஏகத்வம், நாநாத்வம் உள்ளது என்பதை“तत्त्वमसि” (தத்துவமஸி) என்பது சுருதி வாக்கியம். ஹிரண்யகர்பனோவெனில் உபாதியின் மிகச்சுத்தமான அதிசயத்தை அபேக்ஷித்து அநேகமாய் பரமாத்மாவே என்று சுருதி ஸ்மிருதி வாதங்கள் ப்ரவிர்த்திக்கின்றது. இதில் சம்சாரித்துவம் சிறிது அளவே என்பதைக் காட்டுகின்றன. ஜீவர்களுக்கோ எனில் உபாதியின் அசுத்த மிகுதியால் சம்சாரித்துவமே அநேகமாக கூறப்பட்டுள்ளது. அவ்வாறு சம்பூர்ண உபாதி பேதங்களின் பாதத்தை (நீக்கத்தை) அபேக்ஷித்து சுருதி ஸ்மிருதிகள் வாதங்கள் மூலமாய் எல்லாவற்றையும் பரமாத்மா ரூபமாய் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
भाष्यम्- तार्किकैस्तु परित्यक्तागमबलैरस्ति नास्ति कर्ताकर्तेत्यादिविरुद्धं बहु तर्कयिद्भराकुलीकृतः शास्त्रार्थः, तेनार्थनिश्चयो दुर्लभः। ये तु केवलशास्त्रानुसारिणः शान्तदर्पास्तेषां प्रत्यक्षविषय इव नििश्चतः शास्त्रार्थो देवतादिविषयः।
அனுவாதம்- தார்க்கிகர்கள் சாஸ்திர பலத்தை தியாகம் செய்ததினால் (ஆத்மா) இருக்கிறது, இல்லை, கர்த்தா, அகர்த்தா முதலிய விருத்தமான அநேக தர்க்கங்களால் குழப்பி இருக்கின்றார்கள். ஆகையால் அந்த அர்த்தத்தை நிச்சயம் செய்வது மிக்க கடினமானது. எவர்கள் கேவலம் சாஸ்திரத்தை மட்டும் அனுசரிக்கின்றார்களோ, தர்ப்பம் (கர்வம்) அற்றவர்களாயும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு சாஸ்த்ரார்த்தமாகிய தேவதை முதலிய விஷயங்கள் பிரத்யக்ஷ விஷயம் போல் நிச்சயம் செய்கின்றார்கள்.
भाष्यम् - तत्र प्रजापतिरेकस्य देवस्यात्ताद्यलक्षणो भेदो विवक्षित इति तत्राग्निरुक्तोऽत्ता, आद्यः सोम इदानीमुच्यते अथ यत्किञ्चेदं लोक आर्द्र द्रवात्मकं तद्रेतस आत्मनो बीजादसृजतः“रेतस आपः” (ऐ० उ० १। ४) इति श्रुतेः। द्रवात्मकश्च सोमः। तस्मद्यदार्द्र प्रजापतिना रेतसः सृष्टं तदु सोम एव।
அனுவாதம்- இந்த நிச்சயத்தை அறிந்தபின் இப்பொழுது ஒரே தேவனான பிரஜாபதியின் அத்தாअत्ता (போக்தா) மேலும் ஆத்யआद्यः (போக்ய) ரூபபேதங்களை நிரூபணம் செய்வது இஷ்டமாகிறது என்பதால் அங்கு அக்னி அத்தா(अत्ता) எனக்கூறப்பட்டது. ஆத்ய:(आद्यः) என்பது சோமம். சோமத்தின் வர்ணனை செய்யப்படுகிறது - எந்த இந்த உலகத்தில் கொஞ்சம் ஈரத்தன்மை அதாவது திரவாத்மகமாய் உள்ளதோ அதை தன்னுடைய பீஜமான ரேதஸிலிருந்து (வீர்யத்திலிருந்து) உத்பத்தி செய்தார்.“रेतस आपः” என்று சுருதியினாலும் சித்திக்கிறது. சோமம் திரவ ஆத்மகமானது. ஆகையால் பிரஜாபதியின் மூலமாய் தன்னுடைய ரேதஸ்ஸில் இருந்து அந்த சோமம் ஸ்ருஷ்டிக்கப்பட்டது.
भाष्यम्- एतावद्वै एतावदेव नातोऽधिकमिदं सर्वम्। किं तत्? अन्नं चैव सोमो द्रवात्मकत्वादाप्यायकम्। अन्नादश्चाग्निःऔष्ण्याद् रूक्षत्वाच्च। तत्रैवमवध्रियते, सोम एवान्नं यदद्यते तदेव सोम इत्यर्थः। य एवात्ता स एवाग्निः, अर्थबलावधारणम्। अग्निरपि क्वचिद् हूयमानः सोमपक्षस्यैव। सोमोऽपीज्य-मानोऽग्निरेवात्तृत्वात्। एवमग्नीषोमात्मकं जगदात्मत्वेन पश्यन्न केनचिद्दोषेण लिप्यते, प्रजापतिश्च भवति।
அனுவாதம்- இவை எல்லாம் இவ்வளவுதான் ஆகையால் இதைவிட அதிகம் இல்லை. அது எது? அன்னமே சோமம். த்ரவாத்மகத்வமாய் இருப்பதால் சோம போஷகம் (திருப்திபடுத்துவது) அன்னம். உஷ்ணமாயும், ஜொலிப்பதாயும் இருப்பதால் அக்னி அன்னாதம் ஆகிறது. இதனால் இங்கு நிச்சயிக்கப்படுவது என்னவெனில்- சோமமே அன்னம் அதாவது சாப்பிடப்படுவது. அது சோமம், எது அத்தாவோ அது அக்னி. அர்த்தத்தின் பலத்தால் இவ்வாறு கிரஹிக்கப்படுகிறது. யஜனம் செய்வதை அறிந்தவனாய் இருப்பதால் எந்த எந்த அக்னியும் (லதாரசாத்மகம்) சோம பக்ஷமே உள்ளவன் ஆகின்றான். அவ்வாறே சோமத்தையும் யஜனம் செய்ய அறிந்தவனாயும், அத்தாவாகவும் ஆனதால் அக்னி எனப்படுகிறான். இவ்வாறு அக்னிஷோமாத்மகம்(अभिन्नसूत्रत्माकम्) அபின்னசூத்ராத்மகம்) ஜகத்தை ஆத்மஸ்வரூபமாய் பார்ப்பவன் எல்லா தோஷங்களும் அற்றவனாகின்றான். மேலும் அவன் பிரஜாபதியாகவும் ஆகின்றான்.
भाष्यम्-सैषा ब्रह्मणः प्रजापतेरतिसृष्टिरात्मना-ऽप्यतिशया। का सा? इत्याह- यच्छ्रेयसः प्रशस्यतरानात्मनः सकाशाद्यस्मादसृजत देवांस्तस्माद्देवसृष्टिरतिसृष्टिः। कथं पुनरात्मनोऽतिशया सृष्टिः? इत्यत आह अथ यद्यस्मान्मर्त्यः सन्मरणधर्मा सन्नमृतानमरणधर्मिणो देवान् कर्मज्ञानविना सर्वानात्मनः पाप्मन ओषित्वासृजत, तस्मादियमतिसृष्टि-रुत्कृष्टज्ञानस्य फलमित्यर्थः- तस्मादेतामतिसृष्टिं प्रजापतेरात्मभूतां यो वेद स एतस्यामतिसृष्टां प्रजापतिरिव भवति प्रजापतिवदेव स्रष्टा भवति।
அனுவாதம்- அந்த இந்த(सा एषा) பிரஹ்மத்தினுடைய அதாவது பிரஜாபதியின் அதிஸ்ருஷ்டி(अतिसृष्टिः) அதாவது தன்னுடைய அனுகிரத்தால் சாதிக்க மிகப் ப்ராயாசப்படக்கூடிய அதிசயமானது ஆகும். அது என்ன? என்பதற்குக் கூறப்படுகிறது. ஏன்எனில் பிரஜாபதி தன்னை (போன்று) காட்டிலும் ஸ்ரேயசும், புகழ்ச்சியும் கூடிய தேவர்களை ஸ்ருஷ்டித்தார். அதுவே அதிஸ்ருஷ்டியாகும். அது எவ்வாறு தன்னைக்காட்டிலும் மேலான ஸ்ருஷ்டியைச் செய்தார்? அதற்கு சுருதி கூறுகிறது ஏன்எனில் தான் மர்த்ய(मर्त्य) அதாவது மரண தர்மம் உடையவனாய் இருந்துகொண்டு மரண தர்மமற்ற (அம்ருதமான) தேவர்களை கர்மஞான அக்னியினால் தன்னுடைய எல்லா பாபங்களையும் தஹித்து ஸ்ருஷ்டி செய்தார். ஆகையால் இது அதிஸ்ருஷ்டி(अतिसृष्टिः) அதாவது உத்கிருஷ்டமான ஞானத்தின் பலம் என்பது பொருள். ஆகையால் பிரஜாபதியின் ஆத்மபூதமான இந்த அதிஸ்ருஷ்டியை எவர்கள் அறிகின்றார்களோ அவர்கள் பிரஜாபதிக்கு சமம் ஆகின்றார்கள். பிரஜாபதிபோல் ஸ்ருஷ்டா (ஸ்ருஷ்டி செய்பவர்) ஆகின்றனர்.
अव- सर्वं वैदिकं साधनं ज्ञानकर्मलक्षणं कर्त्राद्यनेककारकापेक्षं प्रजापतित्वफलावसानं साध्यमेतावदेव यदेताकृतं जगत्संसारः। अथैतस्यैव साध्यसाधनलक्षणस्य व्याकृतस्य जगतो व्याकरणात्प्राग्बीजावस्था या तां निर्दिदिक्षत्यङ्करादिकार्यानुमितामिव वृक्षस्य, कर्मबीजोऽविद्याक्षेत्रो ह्यासौ संसारवृक्षः समूल उद्धर्तव्य इति। तदुद्धरणे हि पुरुषार्थपरिसमाप्तिः। तथा चोक्तम्-“ऊर्ध्वमूलोऽवाक्शाखः” इति काद्भके। गीतासु च“ऊर्ध्वमूलमधःशाखम्” इति. पुराणे च-“ब्रह्मवृक्षः सनातनः”इति।
அனுவாதம்- அ.கை- கர்த்தா முதலிய அநேக காரகபக்ஷத்தில் ஞானகர்ம லக்ஷணமான அனைத்தும் வைதிக சாதனம். ப்ரஜாபதித்வ பலனின் முடிவு சாத்யம். இதுவரையிலுமே இந்த வ்யாகிருதமான ஜகத் சம்சாரமாகும். அதன்பின் இந்த சாதன சாத்ய லக்ஷணமாகிய வ்யாக்ருத ஜகத் வெளிப்படுவதற்கு முன் எந்NO-CHத பீஜாவஸ்தையில் இருந்ததோ அந்த அங்குரம் முதலிய காரியங்கள் விருக்ஷத்திற்கு உள்ளது போன்ற அனுமானத்தால் கர்மம் பீஜமாயும், அவித்யா ஸ்தலமாயும் (இடமாயும்) உள்ள சம்சார வ்ருக்ஷத்தை மூலத்துடன் நீக்கவேண்டும். அதனை மூலத்துடன் நீக்கினால்தான் புருஷார்த்த பரிஸமாப்தி ஆகிறது. அவ்வாறே காடகத்தில்“ऊर्ध्वमूलोऽवाक्शाखः” என்றும், கீதையில்“ऊर्ध्वमूलमधःशाखम्” என்றும், புராணத்தில்“ब्रह्मवृक्षः सनातनः” என்றும் கூறப்பட்டுள்ளது.
तद्धेदं तर्ह्यव्याकृतमासीत्तन्नामरूपाभ्यामेव व्याक्रियता-सौनामायमिद्रूप इति तदिदमप्येतर्हि नामरूपाभ्यामेव व्याक्रियतेऽसौनामाऽयमिदंँ रूप इति स एष इह प्रविष्टः। आ नखाग्रेभ्यो यथा क्षुरःक्षुरधानेऽवहितः स्याद्विश्वम्भरो वा विश्वम्भरकुलाये तं न पन्ति। अकृत्स्नो हि स प्राणन्नेव प्राणो नाम भवति। वदन्वाक्प्ँश्चक्षुः श्रृण्वञ्श्रोत्रं मन्वानो मनस्तान्यस्यैतानि कर्मनामान्येव। स योऽत एकैकमुपास्ते न स वेदाकृत्स्नो ह्येषोऽत एकैकेन भवत्यात्मेत्येवोपासीतात्र ह्येते सर्वं एकं भवन्ति। तदेतत्पदनीयमस्य सर्वस्य यदयमात्मानेन ह्येतत्सर्वं वेद। यथा ह वै पदेनानुविन्देदेवं कीर्ति ्ँोकं विन्दते य एवं वेद।।७।।
மந்த்ரார்த்தம்- அந்த இந்த ஜகத் அந்த சமயத்தில் (உத்பத்திக்கு முன்) அவ்யாக்ருதமாய் இருந்தது. அது நாம ரூபத்தின் சேர்க்கையால் வ்யக்தமாயிற்று, அதாவது இது இந்த பெயருடையது, இது இந்த ரூபம் உடையது என்று இவ்வாறு வ்யக்தமாயிற்று. ஆகையால் இந்த சமயத்திலும் இந்த அவ்யாகிருத வஸ்து இந்த நாமம் உடையது, இந்த ரூபம் உடையது என்று வ்யக்தமாயிற்று. அந்த(व्याकर्ता) இதில் (சரீரத்தில்) நகம் வரையிலும் பிரவேசம் செய்தார். எவ்வாறு எனில் கத்தி கத்தியின் உறையினுள் நுழைந்து மறைந்து இருப்பது போல. அல்லது விச்வத்தைத்தாங்கும் அக்னி தன்னுடைய ஆஸ்ரயமானவைகளில் (விறகு முதலியவைகளில்) மறைந்து இருக்கிறதோ அவ்வாறு ஆகும். ஆனால் அதை உலகோர் காண முடியாது. அது பூரணமற்றது. ஏன்எனில் பிராண கிரியாவாக இருப்பதாலேயே அது பிராணன், பேசுவதால் அது வாக், பார்ப்பதால் அது கண், கேட்பதால் அது காது, அது மனனம் செய்வதால் மனம். இவை எல்லாம் அதன் கர்மத்தை அனுசரித்துப் பெயர்கள். ஆகையால் இவைகளில் ஒவ்வொன்றாக உபாசனை செய்பவன் அதை அறிய மாட்டான். அது பூரணமற்றது. அது ஒவ்வொரு விசேஷணங்களுடன் கூடியதாய் இருக்கின்றது. ஆகையால் “ஆத்மா” என்று இவ்வாறு அதை உபாசனை செய், ஏன் எனில் இந்த ஆத்மாவில் தான் எல்லாம் ஒன்றாகிவிடுகிறது. அந்த ஆத்மா எல்லோராலும் அடையப்படவேண்டியது. ஏன்எனில் அது ஆத்மா. இந்த ஆத்மாவை அறிந்தால் எல்லாம் அறியப்பட்டதாகும். எவ்வாறு (பசுமுதலியைகளின்) பாதத்தின் மூலமாய் (பசுவை) அடைகிறோமோ அவ்வாறு, எவன் ஒருவன் இவ்வாறு அறிகிறானோ அவன் இதன் மூலமாய் ய†ஸையும் (புகழையும்) பிரியமானவர்களின் ஸகவாசத்தையும் அடைகின்றான்.
भाष्यम् - तद्धेदं तदिति बीजावस्थं जगात्प्रागुत्पत्तेस्तर्हि तस्मिन्काले, परोक्षत्वात्सर्वनाम्नाप्रत्यक्षाभिधानेनाभिधीयते, भूतकालसम्बन्धित्वादव्याकृतभाविनो जगतः, सुखग्रहणार्थ-मैतिह्यप्रयोगो हशब्दः। एवं ह तदा आसीदित्युच्यमाने सुखं तां परोक्षामपि जगतो बीजावस्थां प्रतिपद्यते, युधिष्द्भिरो ह किल राजासीदित्युक्ते यद्वत्। इदमिति व्याकृतनामरूपात्मकं साध्यसाधनलक्षणं यथावर्णितमभिधीयते। तदितंशब्दयोः परोक्षप्रत्यक्षावस्थस्य जगतोऽवगम्यते। तदेवेदमिदमेव च तदव्याकृतमासीदिति। अथैवं सति नासत उत्पत्तिर्न सतो विनाशः कार्यस्येत्यवधृतं भवति।
அனுவாதம்-“तद्धेदं” (तत् ह इदं) तत् அது என்பது ஜகத்தின் உற்பத்திக்குமுன் அந்த சமயத்தில் பீஜரூபமாய் இருந்தது. அதுவே ஸர்வ நாம சப்தத்தால்“इदम्” இது என்று பிரத்யக்ஷமாய் கூறப்பட்டது. ஏன்எனில் இறந்த காலத்துடன் சம்பந்தப்பட்டதால் அவ்யாகிருதமாய் இருக்கும் ஜகத்தை சுலபமாய் புரிந்துகொள்வதற்காக“ह” (ஹ) சப்தமானது ஐதீகப் பிரயோகமாகும். இவ்வாறு“ह” என்று கூறுவதால் பரோக்ஷமாய் இருந்தாலும் அந்த ஜகத்தின் பீஜா அவஸ்தையை பற்றி கேட்பவன் சுலபமாய் அறிகிறான். எவ்வாறு எனில் யுதிஷ்டிரன் ராஜாவாய் இருந்தார் என்பது போல் ஆகும்.“इदम्” (இதம்-இது) என்று வ்யாக்ருதமான நாமரூபாத்மகமான சாத்ய சாதன லக்ஷணமான ஜகத் முன்பு கூறப்பட்ட அதே ஜகத்தேயாகும்.तत् इदं (அது, இது) என்ற இரண்டு சப்தங்கள் பரோக்ஷ பிரத்யக்ஷ அவஸ்தா ரூபமாய் இருக்கும் ஜகத்தின் ஸமானாதிகரணத்தால் பரோக்ஷபிரத்யக்ஷ அவஸ்தை உடைய ஜகத் ஸமானாதி கரணத்தால் ஒன்றே என்று அறியப்படுகிறது. அந்த அவ்யாக்ருத ஜகத்தே இந்த வ்யாக்ருத ஜகத். இந்த வியாகிருத ஜகத்தே அந்த அவ்யாக்ருத ஜகத் ஆகும். ஆகையால் இவ்வாறு இருக்கும் பொழுது அசத்திலிருந்து உத்பத்தியாகாது. சத்தின் கார்யத்திற்கு விநாசம் கிடையாது. என்று நிச்சயம் செய்யப்பட்டது.
भाष्यम् - तदेवम्भूतं जगदव्याकृतं सन्नामरूपाभ्यामेव नाम्ना रूपेणैव च व्याक्रियत। व्याक्रियतेति कर्मकर्तृप्रयोगात्त-त्स्वयमेवात्मैव व्याक्रियत, वि आ अक्रियत, विस्पष्टं नामरूपविशेषावधारणमर्यादां व्यक्तीभावमापद्यत सामर्थ्या-दाक्षिप्तनियन्तृकर्तृसाधनक्रियानिमित्तम्।
அனுவாதம்-அந்த இவ்வாறான ஜகத் அவ்யாக்ருதமாய் இருந்துகொண்டு நாமரூபங்களையே நாமத்தாலும் ரூபத்தாலும் வியக்தமாய் செய்தது. (வெளிப்படையாக்கியது) வ்யாக்ரியம் செய்தது என்பது கர்ம கர்த்ரு பிரயோகத்தால் அது தானே ஆத்மாவே தன்னுடைய சாமர்த்தியத்தால் நியந்தா, கர்த்தாவாக ஆகி சாதனத்தையும் கிரியையும் நிமித்தமாகக் கொண்டு வியக்தமாய் செய்தது.“व्याक्रियत” (வ்யாக்கிரியத)वि आ अक्रियत (வி ஆ அக்ரியத) அதாவது விஸ்பஸ்டமாய் நாமரூப விசேஷமானதின் நிச்சயமான மரியாதையுடன் கூடிய வியக்தி பாவத்தை அடைந்தது.
भाष्यम् - असौनामेति सर्वनाम्नाविशेषाभिधानेन नाममात्रं व्यपदिशति। देवदत्तो यज्ञदत्त इति वा नामास्य इत्यसौनामायम्। तथेदमिति शुक्लकृष्णादीनामविशेषः। इदं शुक्लमिदं कृष्णं वा रूपमस्येतीदंरूपः। तदिदमव्याकृतं वस्तु एतर्ह्येतस्मिन्नपि काले नामरूपाभ्यामेव व्याक्रियते असौनामायमिदंरूप इति।
அனுவாதம்- “असौनाम” असौनाम-அஸௌநாம அதாவது இந்த நாமம்) என்றபதத்தில் “असौ” (இந்த) என்றஸர்வ நாம சப்தத்தால் எந்த ஒரு விசேஷணமும் கூறாமல் பெயரை (நாமத்தை) மட்டும் கூறுகிறது. தேவதத்தன் அல்லது யக்ஞதத்தன் என்ற பெயர். ஆகையால்“असौनाम”(இந்த நாமம்) என்ற ஸர்வநாம சப்தத்தால் கூறப்பட்டது. அவ்வாறே“इदम्”(இதம் -இது) இது வெள்ளை, இது கருப்பு என்பது முதலிய வர்ணங்களின் சாமான்ய வாசகம் (அவிசேஷ வாசகம்) வெள்ளை, அல்லது கருப்பு இதன் ரூபம் ஆகையால் இது“इदंरूपम्”(இந்த ரூபம்) ஆகும். அந்த இந்த அவ்யாக்ருத வஸ்து இப்பொழுது நாமரூப வாயிலாய் இந்த பெயர் உடையது. இந்த ரூபம் உடையது என்று வியக்தமாகிறது (வெளிப்படுகிறது).
भाष्यम् - यदर्थः सर्वशास्त्रारम्भः, यस्मिन्नविद्यया स्वाभाविक्या कर्तृक्रियाफलाध्यारोपणा कृता, यः कारणं सर्वस्य जगतः,यदात्मके नामरूपे सलिलादिव स्वच्छान्मलमिव फेनमव्याकृते व्याक्रियेते, यश्च ताभ्यां नामरूपाभ्यां विलक्षणः स्वतो नित्यशुद्धबुद्धमुक्तस्वभावः स एषोऽव्याकृते आत्मभूते नामरूपे व्याकुर्वन्ब्रह्मादिस्तम्बपर्यन्तेषु देहेष्विह कर्मफलाश्रेयेष्व-शनायादिमत्सु प्रविष्टः।
அனுவாதம்- எதற்காக எல்லா சாஸ்திரங்களும் ஆரம்பமானதோ, எதில் அவித்யையின் ஸ்வபாவமான கர்த்தா, கிரியா, பலன் ஆகியவற்றை அத்யாரோபணம் செய்தவர் எவரோ அவர் எல்லா ஜகத்திற்கும் காரணம், எவருடைய ஸ்வரூபமான நாமரூபம் சுத்தமான ஜலத்தில் நுரை முதலிய மலினம் போல் அவ்யாக்ருதத்திலிருந்து வ்யாக்ருதம் ஆயிற்று. ஆனாலும் நாமரூபத்தைக் காட்டிலும் விலக்ஷணமானதும் ஸ்வயமாகவே நித்திய சுத்த புத்த முக்த ஸ்வபாவமுடையது. அந்த இந்த அவ்யாக்ருதத்தை தன்னிடத்தில் (ஆத்ம பூதத்திடத்தில்) நாமரூபத்தை வியாக்ருதம் செய்து (உணடாக்கி) பிரஹ்மா முதல் ஸ்தம்ப பரியந்தமான தேஹங்களில் கர்ம பலனை ஆஸ்ரயிக்கின்றதும், பசிதாகம் முதலியவைகளை உடைய தேஹங்களில் பிரவேசித்தார். ।। व्याकृतप्रपञ्चे परमात्मानुप्रवेशमीमांसा ।।
भाष्यम्- शङ्का- ननु अव्याकृतं स्वयमेव व्याक्रियते-त्युक्तम्, कथमिदमिदानीम् उच्यते, पर एव तु आत्माव्याकृतं व्याकुर्वन्निह प्रविष्ट इति।
அனுவாதம்- சங்கை- ஸ்வயமாகவே அவ்யாக்ருதம் வியாக்ருதமாயிற்று என்று கூறப்பட்டது. இது இப்பொழுது பரமாத்மாவே அவ்யாக்ருதத்தை வியக்த (வெளிப்படுத்தி) மாக்கி அதில் நுழைந்தது என்று எவ்வாறு கூறுவது?
भाष्यम् - समाधानम् - नैष दोषः, परस्याप्यात्मनोऽ-व्याकृतजगदात्मत्वेन विवक्षित्वात्। आक्षिप्तनियन्तृकर्तृक्रिया निमित्तं हि जगदव्याकृतं व्याक्रियतेत्यवोचाम। इदंशब्दसामानाधि-करण्याच्चाव्याकृतशब्दस्य। यथेदं जगन्नियन्त्राद्यनेककारक-निमित्तादिविशेषवद्व्याकृतम्, तथा अपरित्यक्तान्यतम-विशेषवदेव तदव्याकृतम्। व्याकृताव्याकृतमात्रं तु विशेषः।
அனுவாதம்- ஸமாதானம்- பரமாத்மாவே அவ்யாக்ருத ஜகத் ரூபமாய் விளக்கப்பட்டது. ஆகையால் இது தோஷம் இல்லை. ஈர்க்கப்பட்ட நியந்தா, கர்த்தா, கிரியை இவைகளில் நிமித்தமாய் அவ்யாக்ருத ஜகத் வியாக்ருதமாயிற்று என்று கூறினோம். இதைத்தவிர அவ்யாக்ருத சப்தம்(इदं) “இந்த” என்ற சப்தத்துடன் ஸாமானாதிகரண்யமாவதாலும் சித்திக்கின்றது. இவ்வாறு வ்யாக்ருத ஜகத் பிரேரகம் (நியந்தா) முதலிய அநேக காரகரூப நிமித்தம் முதலிய விசேஷத்துடன் கூடியதாய் இருப்பது போல் வ்யாக்ருதம் ஆயிற்று. அவ்வாறே அவ்யாக்ருதமும் தன்னுடைய எந்த ஒரு விசேஷத்தையும் விடாமல் அதனுடன் சேர்ந்திருக்கின்றது. அதில் வ்யாக்ருதம், அவ்யாக்ருதம் என்ற மாத்திரமே வித்யாசம்.
भाष्यम् - दृष्टश्च लोके विवक्षातः शब्दप्रयोगो ग्राम आगतो ग्रामः शून्य इति। कदाचित् ग्रामशब्देन निवासमात्रविवक्षायां ग्रामः शून्य इति शब्दप्रयोगो भवति, कदाचिन्निवासिजनविवक्षायामपि ग्रामशब्दप्रयोगो भवति ग्रामं च न प्रविशेदिति यथा। तद्वदिहापि जगदिदं व्याकृतमव्याकृतं चेत्यभेदविवक्षायाम् आत्मानात्मनोर्भवति व्यपदेशः। तथेदं जगदुत्पत्तिविनाशात्मकमिति केवल-जगद्व्यपदेशः। तथा“महानज आत्मा”“अस्थूलोऽनणुः” (बृ० उ० ४। ४। २२)“स एष नेति नेति”(बृ० उ० ३। ९। २६) इत्यादि केवलात्मव्यपदेशः।
அனுவாதம்- (கூறப்பட்ட சப்த பிரயோகத்தால் கிராமம் வந்துவிட்டது, கிராமம் சூன்யம் (ஒருவரும் இல்லை) என்று உலகில் காணப்படுகிறது. ஒரு சமயம் கிராம சப்தத்தால் வசிப்பது மாத்திரம் கூறும்பொழுது கிராமம் சூன்யம் என்று சப்தப்பிரயோகம் காணப்படுகிறது. ஒரு சமயம் வசிக்கின்ற ஜனங்களைக் கூறும்பொழுது கிராமம் வந்துவிட்டது என்று கூறுகிறோம். ஒரு சமயம் இரண்டையும் சேர்த்துக்கூறும் பொழுதும் கிராம சப்தத்தின் பிரயோகம் காணப்படுகிறது. எவ்வாறு எனில் “கிராமத்திற்குள் நுழையாதே” என்று கூறப்படுகிறது. அவ்வாறே இங்கும் இந்த ஜகத் வ்யாக்ருதம் அவ்யாக்ருதம் என்று இந்த அபேத தரிசனம் விளக்கப்படுவதால் ஆத்மா அநாத்மாவைப்பற்றி நிர்தேசம் செய்யப்பட்டதாகிறது. அவ்வாறு இந்த ஜகத் உத்பத்தி விநாச ஆத்மகமானது என்று கேவலம் ஜகத்தின் விளக்கமேயாகும். அவ்வாறே“महानज आत्मा” (மஹானஜ ஆத்மா) “अस्थूलोऽनणुः” (அஸ்தூலோஅனணு:)“स एष नेति नेति” (ஸ ஏஷ நேதி நேதி) இவைகள் கேவல ஆத்மாவின் விளக்கமாகும்.
भाष्यम्- शङ्का- ननु परेण व्याकर्त्रा व्याकृतं सर्वतो व्याप्तं सर्वदा जगत्, स कथमिह प्रविष्टः परिकल्प्यते? अप्रविष्टो हि देशः परिच्छिन्नेन प्रवेष्टुं शक्यते, यथा पुरुषेण ग्रामादिः। नाकाशेन कििञ्चन्नित्यप्रविष्टत्वात्।
அனுவாதம்- சங்கை- ஆனால் பரமாத்மாவாகிய வ்யாக்ருத கர்த்தாவால் வ்யாக்ருதம் செய்யப்பட்டு எங்கும் எப்பொழுதும் வியாபிக்கப்பட்டது ஜகத். அது எவ்வாறு இங்கு பிரவேசித்தது என்று கல்பிக்கப்படுகிறது. பிரவேசிக்காத இடத்திற்கு அல்லவா பரிச்சின்னத்தால் பிரவேசிக்கமுடியும். எவ்வாறு புருஷன் கிராமத்திற்குள் செல்லுகிறானோ முதலியவைகள். ஆனால் ஆகாசத்தால் ஒன்றிலும் பிரவேசிக்க முடியாது. ஏனென்றால் அது எல்லாவற்றிலும் நித்யமாக ப்ரவேசமுடையதால்.
भाष्यम् - सिद्धान्ती - पाषाणसर्पादिवद्धर्मान्तरेणेति चेत्। अथापि स्यात्, न पर आत्मा स्वेनैव रूपेण प्रविवेश किं तर्हि? तत्स्थ एव धर्मान्तरेणोपजायते, तेन प्रविष्ट इत्युपचर्यते। यथा पाषाणे सहजोऽन्तःस्थःसर्पो नालिकेरे वा तोयम्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- பாறை சர்ப்பம் முதலியவைகள் போல் வேறு தர்மத்தால் எனில், அப்படியும் இருக்கலாம் பரமாத்மா தன்னுடைய ஸ்வரூபத்தால் பிரவேசிக்கவில்லை. ஆனால் எவ்வாறு எனில்? தன் நிலையில் இருந்துகொண்டே வேறு தர்மத்தால் உத்பன்னமாயிற்று. ஆகையால் பிரவேசித்தது என்று உபசாரமாய் கூறப்பட்டது. எவ்வாறு பாறைக்குள் சர்ப்பமும், தேங்காயில் ஜலமும் சகஜமாய் இருக்கிறதோ அவ்வாறு ஆகும்.
भाष्यम्-पूर्व-न,“तत्सृट्वा तदेवानुप्राविशत्” (तै० उ० २। ६। १) इति श्रुतेः। यः स्रष्टा स भावान्तरमनापन्न एव कार्यं सृट्वा पश्चात्प्राविशदिति हि श्रूयते। यथा भुक्त्वा गच्छतीति भुजिगमिक्रिययोः पूर्वापरकालयोरितरेतरविच्छेदोऽविशिष्टश्च कर्ता तद्वदिहापि स्यात्। न तु तत्स्थस्यैव भावान्तरोपजनन एतत्सम्भवति। न च स्थानान्तरेण वियुज्य स्थानान्तरसंयोगलक्षणः प्रवेशो निरवयवस्यापरिच्छिन्नस्य दृष्टः।
அனுவாதம்- பூர்வ- அவ்வாறு அல்ல.“तत्सृट्वा तदेवानुप्राविशत्” (தத்ஸ்ருஷ்ட்வா ததேவானு பிராவி†த்) என்ற சுருதியினால் அறிகிறோம். எவர் சிரஷ்டாவோ அவர் வேறு பாவத்தை அடையாமலேயே காரியத்தை சிரஷ்டி செய்து அதன்பின் அதில் பிரவேசித்தார் என்று சுருதி கூறுகிறது. சாப்பிட்டுவிட்டு செல்கிறான் என்று சாப்பிடுதல், செல்லுதல் ஆகிய கிரியைகளுக்கு பூர்வபர (முன்பின்) காலங்களின் பரஸ்பரபேதம் இருந்தாலும் அவைகளின் கர்த்தா தனித்தனியாக இல்லையோ அவ்வாறு இங்கும் அறிந்துகொள்ள வேண்டியது. அதிலேயே நிலைபெற்றுக் கொண்டு வேறு பாவத்தை அடைவது என்பது சம்பவிக்காது. அவ்வாறு எது அவயவமாயும், அபரிச்சின்னமாயும் உள்ளதோ அது ஒரு ஸ்தானத்திலிருந்து விலகி வேறு ஸ்தானத்தை அடைவது என்றும் பிரவேசம் காணமுடியாது.
भाष्यम् - सिद्धान्ती - सावयव एव प्रवेशश्रवणादिति चेत्?
அனுவாதம்- ஸித்தாந்தீ- அதற்கு பிரவேசம் கேள்விப்பட்டதால் சாவயவமே (அவயவத்தோடு கூடியதே) என்று ஆனால்?
भाष्यम् - पूर्व - न,“दिव्यो ह्यमूर्तः पुरुषः” (मु० उ० २। १। २)“निष्कलं निष्क्रियम्” (श्वे० उ० ६। १९) इत्यादिश्रुतिभ्यः सर्वव्यपदेश्यधर्मविशेषप्रतिषेधश्रुतिभ्यश्च।
அனுவாதம்- பூர்வ- அவ்வாறு அல்ல“दिव्यो ह्यमूर्तः पुरुषः” (திவ்யோ ஹ்யமூர்த்த: புருஷ)“निष्कलं निष्क्रियम्” (நிஷ்கலம், நிஷ்கிரியம்) முதலிய சுருதிகளாலும், அவ்வாறே எல்லா விதமாகவும் குறிப்பிடப்பட்ட தர்மங்களை நிஷேதிக்கும் சுருதிகளுக்கும் இது இவ்வாறு பொருந்தாது.
भाष्यम् - सिद्धान्ती प्रतिबिम्बप्रवेशवदिति चेत्?
அனுவாதம்- ஸித்தாந்தீ- பிரதிபிம்ப பிரவேசம் போல் எனில்?
भाष्यम् - पूर्व - न, वस्त्वन्तरेण विप्रकर्षानुपपत्तेः।
அனுவாதம்- பூர்வ- அவ்வாறு அல்ல. ஏன்எனில் வேறுரூபமாய் அதற்கு தூரத்திற்கு செல்வது சம்பவியாது.
भाष्यम् - सिद्धान्ती - द्रव्ये गुणप्रवेशवदिति चेत्?
அனுவாதம்- ஸித்தாந்தீ- திரவ்யங்களில் (வஸ்துக்களில்) குணங்கள் பிரவேசிப்பதற்கு சமமாய் அதன் பிரவேசம் என்று எடுத்துக்கொண்டால்?
भाष्यम् - पूर्व - न, अनाश्रितत्वात्। नित्यपरतन्त्रस्यै-वाश्रितस्य गुणस्य द्रव्ये प्रवेशः उपचर्यते। न तु ब्रह्मणः स्वातन्त्र्यश्रवणात्तथा प्रवेश उपपद्यते।
அனுவாதம்- பூர்வ- அவ்வாறு அல்ல, ஏன்எனில் அது எதையும் ஆஸ்ரயிக்கவில்லை. எது நித்யபரதந்திரமாயும், மற்றதை ஆஸ்ரயிப்பதாயும் இருக்கும் குணத்திற்கே திரவ்யங்களில் பிரவேசிப்பது உபசாரமானதாகும். பிரஹ்மத்திற்கு இவ்வாறு பிரவேசம் செய்வது என்பது சம்பவிக்காது. ஏன்எனில் அது சுவதந்திரமானது என்று சுருதியினால் அறிகிறோம்.
भाष्यम् - सिद्धान्ती - फले बीजवदिति चेत्?
அனுவாதம்- ஸித்தாந்தீ- இந்த பிரவேசம் பழத்திற்குள் பீஜ பிரவேசம் போல் எனில்?
भाष्यम्- पूर्व - न सावयवत्ववृद्धिक्षयोत्पत्तिविनाशादि-धर्मवत्त्वप्रसङ्गात्। न चैवं धर्मवत्त्वं ब्रह्मणः“अजोऽजरः” इत्यादि श्रुतिन्यायविरोधात्। तस्मादन्य एव संसारी परिच्छिन्न इह प्रविष्ट इति चेत्?
அனுவாதம்- பூர்வ- அவ்வாறு அல்ல, அவ்வாறு ஆனால் சாவயவத்துவம், வ்ருத்தி, க்ஷயம், உத்பத்தி விநாசம் முதலிய தர்மங்கள் கூடியதாக ஆகும். பிரஹ்மத்திற்கோ தர்மத்துவம் கிடையாது.“अजोऽजरः” முதலிய சுருதிகளின் நியாயத்திற்கு விரோதமாகும். ஆகையால் பரமாத்மாவைக்காட்டிலும் வேறான பரிச்சின்ன சம்சாரிதான் இதில் பிரவேசித்தார் என்றால்?
भाष्यम् - सिद्धान्ती - न,“सेयं देवतैक्षत” (छा० उ० ६। ३। २) इत्यारभ्य“नामरूपे व्याकरवाणि” (६। २। ३) इति तस्या एव प्रवेशव्याकरणकर्तृत्वश्रुतेः। तथा“तत्सृट्वा तदेवानुप्राविशत्” (तै० उ० २। ६। १)“स एतमेव सीमानं विदार्यैतया द्वारा प्रापद्यत” (ऐ० उ० ३। १२)“सर्वाणि रूपाणि विचित्य धीरो नामानि कृत्वाभिवदन्यदास्ते” “त्वं कुमार उत वा कुमारी त्वं जीर्णो दण्डेन वञ्चसि” (श्वे० उ० ४। ३)“पुरश्चक्रे द्विपदः” (बृ० उ० २। ५। १८)“रूपं रूपम्” (क० उ० २। २। ९) इति च मन्त्रवर्णान्न परादन्यस्य प्रवेशः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு கூறுவது சரியல்ல.“सेयं देवतैक्षत” (சேயம் தேவதைக்ஷத) என்று ஆரம்பித்து“नामरूपे व्याकरवाणि” (நாமரூபே வ்யாகரவாணி) வரை உள்ள அந்த சுருதியினால் அதன் பிரவேசமும் அதன் அபிவ்யக்தி (வெளிப்படுதல்) செயலும் சித்திக்கிறது. அவ்வாறே“तत्सृट्वतदेवानुप्राविशत्” (தத்சிருஷ்ட்வா ததேவானுபிராவிசத்)“स एतमेव सीमानं विदार्यैतया द्वारा प्रापद्यत” (ச ஏதமே வ சீமானம் விதார்யைதயா த்வாரா ப்ராப்த்யத)“सर्वाणि रूपाणि विचित्य धीरो नामानि कृत्वाभिवदन्यदास्ते” (சர்வாணி ரூபாணி விச்சித்ய. தீரோ நாமானி கிருத்வா பிவதன்யதாஸ்தே)“त्वं कुमार उत वा कुमारी त्वं जीर्णो दण्डेन वञ्चसि” (த்வம் குமார உதவா குமாரீத்வம் ஜீர்ணோ தண்டேன வஞ்சசி)“पुरश्चक्रेद्विपदः” (புரச்சக்ரேத்விபத:)“रूपं रूपम्” (ரூபம் ரூபம்) என்ற மந்திர வர்ணங்களாலும் பரமாத்மாவைத் தவிர வேறு எந்த பின்ன வஸ்துவிற்கும் பிரவேசம் சித்தியாகாது.
भाष्यम् - पूर्व - प्रविष्टानामितरेतरभेदात्परानेकत्वमिति चेत्?
அனுவாதம்- பூர்வ- ஆனால் ப்ரவேசிக்கின்ற பதார்த்தங்களை ஒன்று மற்றொன்றிலிருந்து பேதப்படுத்துகிறது ஆகையால் பரமாத்மாவிற்கு அநேகத்துவம் ஏற்படுகிறது எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न,“एको देवो बहुधा सन् निविष्टः”“एकःसन्बहुधा विचचार”“त्वमेकोऽसि बहूननुप्रविष्टः”“एको देवः सर्वभूतेषु गूढः सर्वव्यापी सर्वभूतान्तरात्मा” (श्वे० उ० ६। ११) इत्यादि श्रुतिभ्यः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல, ஏன்எனில்“एको देवो बहुधा सन् निविष्टः” (ஏகோ தேவோ பஹுதா சன்னிவிஷ்ட:)“एकःसन्बहुधा विचचार” (ஏக:சன்பஹுதா விசசாரத)“त्वमेकोऽसि बहूननुप्रविष्टः” (த்வமேகோஅசி பஹுனனுபிரவிஷ்ட:)“एको देवः सर्वभूतेषु गूढः सर्वव्यापी सर्वभूतान्तरात्मा” (ஏகோ தேவ: சர்பூதேஷு கூட: சர்வவ்யாபீ சர்வபூதாந்தராத்மா) முதலிய சுருதிகளால் இவ்வாறு சித்திக்கிறது.
भाष्यम् - पूर्व - प्रवेश उपपद्यते नोपपद्यत इति तिष्द्भतु तावत्। प्रविष्टानां संसारित्वात्तदनन्यत्वाच्च परस्य संसारित्वमिति चेत्?
அனுவாதம்- பூர்வ- பிரவேசம் உண்டாகிறதோ உண்டாகவில்லையோ அது இருக்கட்டும், ஆனால் பிரவேசம் செய்தவைகளுக்கு சம்சாரித்துவமும், அநன்யத்துவமாயும் இருப்பதால் பரமாத்மாவிற்கு சம்சாரித்துவம் ஏற்படுமே எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, अशनायाद्यत्ययश्रुतेः। सुखित्वदुःखित्वादिदर्शनान्नेति चेन्न,“न लिप्यते लोकदुःखेनबाह्यः” (क० उ० २। २। ११) इति श्रुतेः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல, ஏன்எனில் பரமாத்மா பசிமுதலிய தர்மங்களை கடந்தது என்று சுருதி வாக்கியத்தால் அறிகின்றோம், சுகித்துவம் துக்கித்துவம் முதலியவைக் காணப்படுவதால் அவ்வாறு கூறுவது சரியல்ல என்பது தவறானதாகும்.“न लिप्यते लोकदुःखेन बाह्यः” (ந லிப்யதே லோகதுக்கேன பாஹ்ய:) என்ற சுருதியினால் அறிகிறோம்.
भाष्यम् - पूर्व - प्रत्यक्षादिविरोधादयुक्तमिति चेत्?
அனுவாதம்-பூர்வ- பிரத்யக்ஷம் முதலியவைகளுக்கு விரோதமாய் இருப்பதால் பொருந்தாது எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, उपाध्याश्रयजनितविशेषविषय-त्वात्प्रत्यक्षादेः।“न दृष्टेर्द्रष्टारं पश्येः”(बृ० उ० ३। ४। २) विज्ञातारमरे केन विजानीयात्”(बृ० उ० ४। ५। १९) अविज्ञातं विज्ञातृ” (बृ० उ० ३। ८। ११) इत्यादि श्रुतिभ्यो नात्मविषयं विज्ञानम्। किं तर्हि? बुद्धाद्युपाध्यात्मप्रतिच्छायाविषयमेव सुखितोऽहं दुःखितोऽहमित्येवमादि प्रत्यक्षविज्ञानम्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல, ஏன்எனில் பிரத்யக்ஷம் முதலியவைகள் உபாதியை ஆஸ்ரயிப்பதினால் உண்டான விஷயமாவதால்“न दृष्टेर्द्रष्टारं पश्येः” (ந திருஷ்டேதிருஷ்டாரம் பச்யே:)“विज्ञातारमरे केन विजानीयात्” (விக்ஞாதாரமரே கேன விஜானீயாத்)“अविज्ञातं विज्ञातृ” (அவிக்ஞாதம் விக்ஞாத்ரு) முதலிய ஸ்ருதிகளால் ஆத்மவிஷயம் அறியக்கூடியது அல்ல என்று அறிகிறோம். பின் எவ்வாறு ஏற்படுகிறது? எனில் புத்தி முதலிய உபாதிகள் உடைய ஆத்மாவின் சாயா (பிரதிபிம்ப) விஷயமே நான் சுகமாய் இருக்கிறேன் நான் துக்கமாய் இருக்கிறேன் என்பது முதலியவை பிரத்யக்ஷ விக்ஞானம் ஆகும்.
भाष्यम् - अयमहमिति विषयेण विषयिणः सामानाधिकरण्योपचारात्,“नान्यदतोऽस्ति द्रष्टृ” (बृ० उ० ३। ८। ११) इत्यन्यात्मप्रतिषेधाच्च, देहावयवविशेष्यत्वाच्च सुखदुःखयोर्विषयधर्मत्वम्।
அனுவாதம்- இது (தேஹம்) நான் என்று விஷயத்துடன் விஷயீக்கு ஸமானாதிகரணம் உபசாரம் ஆவதால்“नान्यदतोऽस्ति द्रष्टृ” (நான்யததோ அஸ்தித்ரஷ்ட்ரு) என்று வேறு ஆத்மா இல்லை என்று நிஷேதிப்பதாலும், தேஹ அவயவ விசேஷத்துவமாய் இருப்பதாலும் சுகதுக்கங்கள் விஷய தர்மத்துடன் கூடியது என்று சித்திக்கிறது.
भाष्यम् -“आत्मनस्तु कामाय” (बृ० उ० २। ४। ५) इत्यात्मार्थत्वश्रुतेरयुक्त इति चेन्न,“यत्र वा अन्यदिवस्यात्” इत्यविद्याविषयात्मार्थत्वाभ्युपगमात्“तत्केन कं पश्येत्” (बृ० उ० ४। ५। १५)।“नेह नानास्ति किञ्चन” (बृ० उ० ४। ४। १९)“तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः” (ईशा० ७) इत्यादिना विद्याविषये तत्प्रतिषेधाच्च नात्मधर्मत्वम्।
அனுவாதம்-“आत्मनस्तु कामाय” (ஆத்மனஸ்து காமாய) என்ற ஆத்மார்த்தத்துவம் சுருதிக்கு பொருந்தாதே எனில் அவ்வாறு அல்ல. ஏனெனில்“यत्र वा अन्यदिवस्यात्” (யத்ர வா அந்யதிவ ஸ்யாத்) முதலிய அவித்யா விஷய ஆத்ம அர்த்தத்துவம் என்று கருதப்படுவதால்“तत्केन कं पश्येत्” (தத்கேன கம் பƒúயேத்)“नेह नानास्ति किञ्चन” (நேஹ நாநாஸ்தி கிஞ்சன)“तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः” (தத்ர கோ மோஹ: க: சோக: ஏகத்துவ மனுபச்யத:) என்பது முதலியவைகளால் வித்யா (ஞான) திருஷ்டியில் இவைகள் நிஷேதிக்கப்பட்டுள்ளதால் ஆத்மாவிற்கு தர்மத்துவம் சம்பவிக்காது.
भाष्यम् - पूर्व - तार्किकसमयविरोधादयुक्तमिति चेत्?
அனுவாதம்-பூர்வ-(நையாயிகர்கள்) தார்கிக சித்தாந்தத்திற்கு விரோதமாய் இருப்பதால் இது பொருந்தாது? எனில்.
भाष्यम्- सिद्धान्ती- न, युक्त्याप्यात्मनो दुःखित्वानुपपत्तेः। न हि दुःखेन प्रत्यक्षविषयेण आत्मनो विशेष्यत्वम्, प्रत्यक्षाविषयत्वात्। आकाशस्य शब्दगुणवत्त्व-वदात्मनो दुःखित्वमिति चेन्न, एकप्रत्ययविषयत्वानुपपत्तेः। न हि सुखग्राहकेण प्रत्यक्षविषयेण प्रत्ययेन नित्यानुमेयस्यात्मनो विषयीकरणमुपपद्यते तस्य च विषयीकरणे आत्मन एकत्वाद्विषय्यभावप्रसङ्गः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன்எனில் யுக்தியினாலும் ஆத்மாவிற்கு துக்கித்துவம் நிராகரிக்கப்பட்டுள்ளது. பிரத்யக்ஷ விஷயமாகிய துக்கத்தினால், பிரத்யக்ஷத்திற்கு விஷயமாகாத ஆத்மாவுடன் விசிஷ்டம் (சேர) ஆகமுடியாது. ஆகாசத்தின் சப்தகுணத்துவம் போல் ஆத்மாவிற்கு துக்கித்துவம் எனில் அதற்கு ஏகஞானத்தின் விஷயமாதல் சம்பவிக்காது சுகத்தை கிரஹிக்கும் பிரத்யக்ஷ விஷய ஞானத்தால் நித்யம் இப்படி இருக்கிறது என்று அறியமுடியாத(अनुमेय) ஆத்மாவை விஷயம் செய்தல் என்பது சம்பவிக்காது. அதை விஷயம் செய்யமுடியும் எனில் ஆத்மா ஒன்றே ஆவதால் விஷயீ என்பதற்கு அபாவம் உண்டாகும்.
भाष्यम् - पूर्व - एकस्यैव विषयविषयित्वं दीपवदिति चेत्?
அனுவாதம்- பூர்வ- ஒன்றிற்கே விஷய விஷயித்துவம் தீபம் போல் எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, युगपदसम्भवात्, आत्मन्यंशानुपपत्तेश्च। एतेन विज्ञानस्य ग्राह्यग्राहकत्वं प्रत्युक्तम्। प्रत्यक्षानुमानविषययोश्च दुःखात्मनोर्गुणगुणित्वे नानुमानम्। दुःखस्य नित्यमेव प्रत्यक्षविषयत्वात्, रूपादिसामानाधिकरण्याच्च।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல ஏனெனில் ஆத்மாவில் அம்சம் இல்லாததாலும், இரண்டும் ஒன்றாய் சம்பவிக்காததாலும் ஆகும். இதனால் விக்ஞானத்திற்கு கிராஹிய கிராஹத்துவம் கண்டிக்கப்பட்டுள்ளது. பிரத்யக்ஷ அனுமானங்களுக்கும், துக்கம் ஆத்மாவிற்கும் குணகுணித்வத்தில் அனுமானம் இல்லை. துக்கம் எப்பொழுதும் பிரத்யக்ஷ விஷயமாய் இருப்பதாலும். ரூபம் முதலிய சாமானாதி கரணத்தாலும் ஆகும்.
भाष्यम्- मनःसंयोगजत्वेऽप्यात्मनि दुःखस्य सावयवत्वविक्रियावत्त्वानित्यत्वप्रसङ्गात्। न ह्यविकृत्य संयोगि द्रव्यं गुणः किश्चदुपयन्नपयन्वा दृष्टः क्वचित्। न च निरवयवं विक्रियमाणं दृष्टं क्वचिदनित्यगुणाश्रयं वा नित्यम्। न चाकाश आगमवादिभिर्नित्यतयाभ्युपगम्यते, न चान्यो दृष्टान्तोऽस्ति।
அனுவாதம்- ஆத்மாவிடத்தில் துக்கமானது மனசம்யோகத்தால் என்று எடுத்துக்கொண்டால் ஆத்மாவிற்கு சாவயவத்துவம், விகாரித்துவம் அவ்வாறே அநித்தியமும் இருப்பதாக ஆகிறது. ஏன்எனில் சம்யோக திரவ்யத்திற்கு விகிருதி ஆகாமல் எந்த ஒரு குணமும் வந்துபோவது காணப்படவில்லை. அவ்வாறே நிரவயவத்துவம்விகிருதம் (மாறுபடுவது) ஆவது இல்லை. மேலும் நித்திய வஸ்துவை எந்த ஒரு அநித்திய குணமானது ஆஸ்ரயிப்பது காணப்படவில்லை. ஆகமவாதிகளாலும் ஆகாசத்தை நித்யமானதாய் ஏற்றுக்கொள்ளவில்லை. அதைத்தவிர வேறு திருஷ்டாந்தம் ஒன்றும் இல்லை.
भाष्यम्- पूर्व - विक्रियमाणमपि तत्प्रत्यया-निवृत्तेर्नित्यमेवेति चेत्?
அனுவாதம்- பூர்வ- விக்ருதம் ஆனாலும் அதன் ஞானம் நிவிர்த்தி ஆகாததால் நித்யமே என்றால்? (பரிணாமவாதம்)
भाष्यम् - सिद्धान्ती - न, द्रव्यस्य अवयवान्यथात्व-व्यतिरेकेण विक्रियानुपपत्तेः। सावयवत्वेऽपि नित्यत्वमिति चेन्न, सावयवस्यावयवसंयोगपूर्वकत्वे सति विभागोपपत्तेः। वज्रादिष्वदर्शनान्नेति चेन्न, अनुमेयत्वात् संयोगपूर्वत्वस्य। तस्मान्नात्मनो दुःखाद्यनित्यगुणाश्रयत्वोपपत्तिः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல, ஏனெனில் அவயவங்களுடன் கூடியது தன்னுடைய யதார்த்தத்தை விட்டு மாறாக விக்ரியை சம்பவிக்காது. சாவயவமாய் இருந்தாலும் நித்யத்துவம் என்றால் பொருந்தாது. சாவயவம் அவயவ சம்யோகம் பூர்வகமாய் இருக்கும்பொழுது விபாகம் ஏற்படுகிறது. மின்னல் முதலியவைகளில் காணப்படவில்லை அவ்வாறு கூறுவது சரி அல்ல. ஏனெனில் அதன் அவயவ சம்யோகம் பூர்வகமாய் அனுமானம் செய்யமுடிகிறது. ஆகையால் ஆத்மாவிற்கு துக்கம் முதலிய அநித்திய குணங்களின் ஆஸ்ரயம் ஏற்படுவது சம்பவியாது.
भाष्यम् - पूर्व - परस्यादुःखित्वेऽन्यस्य च दुःखिनोऽभावे दुःखोपशमनाय शास्त्रारम्भानर्थक्यमिति चेत्?
அனுவாதம்- பூர்வ- பரமாத்மா துக்கமற்றவராய் இருப்பதால் மற்றவர்களும் துக்கம் அற்றவர்களாய் இருப்பதால் துக்கத்தை நீக்குவதற்கான சாஸ்திர ஆரம்பம் அர்த்தமற்றதாகிவிடும் எனில்?
भाष्यम्- सिद्धान्ती- न, अविद्याध्यारोपितदुःखित्व-भ्रमापोहार्थत्वात्, आत्मनि प्रकृतसापूरणभ्रमापोहवत्। कल्पितदुःख्यात्माभ्युपगमाच्च।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன்எனில் ஆத்மாவில் (தன்னிடத்தில்) பிரக்ருத (தசமன்) எண்ணிக்கையில் அபூர்ண பிரஹ்மத்தின் (பிராந்தியின்) நிவிர்த்தியைப் போல் சாஸ்திரமானது அவித்தையினால் ஆரோபமான துக்கித்துவ ரூப பிரமத்தின் நிவிர்த்திக்காக ஆகும். அவ்வாறே துக்கி ஆத்மாவும் கல்பிதம் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது,
भाष्यम्- जलसूर्यादिप्रतिबिम्बवदात्मप्रवेशश्च प्रतिबिम्ब-वाकृते कार्यं उपलभ्यत्वम्। प्रागुत्पत्तेरनुपलब्धः आत्मा पश्चात्कार्ये च सृष्टे व्याकृते बुद्धेरन्तरुपलभ्यमानः सूर्यादिप्रति-बिम्बवज्जलादौ कार्यं सृट्वा प्रविष्ट इव लक्ष्यमाणो निर्दिश्यते“स एष इह प्रविष्टः” (बृ०उ०१।४।७)“ताः सृट्वा तदेवानुप्राविशत” “स एतमेव सीमानं विदार्यैतया द्वारा प्रापद्यत” (ऐ० उ० ३। १२)“सेयं देवदैक्षत हन्ताहमिमास्तिस्त्रो देवता अनेन जीवेनात्मनानुप्रविश्य” (छा० उ० ६। २। ३) इत्येवमादिभिः।
அனுவாதம்- ஜலத்தில் சூரிய பிரதிபிம்பத்தைப்போல் விக்ருதமான காரியத்தில் ஆத்மாவின் பிரதிபிம்பம் போல் தோன்றுவது அதன் காரியத்தில் பிரவேசம் ஆகும். உத்பத்திக்கு முன் அறியமுடியவில்லை. அதன்பின் காரியம் சிருஷ்டியில் வெளிப்பட்டபொழுது புத்தியின் உள்ளே அறியப்படுவதால் ஜலம் முதலியவைகளில் சூரியன் முதலியவைகளின் பிரதிபிம்பம்போல் காரியத்தை உண்டுபண்ணி அதில் பிரவேசித்ததுபோல் இருப்பதாக கூறப்படுகிறது.“स एष इह प्रविष्टः” (ச ஏஷ இஹ பிரவிஷ்ட:)“ताः सृट्वा तदेवानुप्राविशत” (தா: சிருஷ்ட்வா ததேவானு பிரவிசத)“स एतमेव सीमानं विदार्यैतया द्वारा प्रापद्यत” (ச ஏதமேவ சீமானம் விதார்யைதயா த்வாரா ப்ராபத்யத) “सेयं देवदैक्षत हन्ताहमिमास्तिस्त्रो देवता अनेन जीवेनात्मनानुप्रविश्य” (சேயம் தேவதைக்ஷத ஹந்தாஹமிமா ஸ்திஸ்ரோ தேவதா அநேன ஜீவேனாத்மனா அனுபிரவிச்ய) முதலியவைகளால் அறிகிறோம்.
भाष्यम् - न तु सर्वगतस्य निरवयवस्य दिग्देशकालान्तराप-क्रमणप्राप्तिलक्षणः प्रवेशः कदाचिदप्युपपद्यते। न च परादात्मनोऽन्योऽस्ति द्रष्टा“नान्यदतोऽस्ति द्रष्टृ नान्यदतोऽस्ति श्रोतृ” (बृ०उ०३।८।११) इत्यादि श्रुतेरित्यवोचाम। उपलब्ध्यर्थत्वाच्चसृष्टिप्रवेशस्थित्यप्ययवाक्यानाम्, उपलब्धेः पुरुषार्थत्वश्रवणात्“आत्मानमेवावेत्” (बृ०उ०१।४।१०) तस्मात्तत्सर्वमभवत्” (बृ० उ० १।४।१०)“ब्रह्मविदाप्नोति परम्” (तै० उ० २। १। १)“स यो ह वै तत्परमं ब्रह्म वेद ब्रह्मैव भवति” (मु० उ० ३। २। ९) आचार्यवान्पुरुषो वेद” (छा० उ० ६। १४। २)“तस्य तावदेव चिरम्” (छा० उ० ६। १४। २) इत्यादिश्रुतिभ्यः।“ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम्” (गी १८। ५५)“ताग्र्ं सर्वविद्यानां प्राप्यते ह्यमृतं ततः” इत्यादिस्मृतिभ्यश्च। भेददर्शनापवादाच्च सृष्टादिवाक्यानाम् आत्मैकत्वदर्शनार्थ-परत्वोपपत्तिः। तस्मात्कार्यस्थस्य उपलभ्यत्वमेव प्रवेश इत्युपचर्यते।
அனுவாதம்- சர்வகதமாயும், நிரவயவமாயும் உள்ள பரமாத்மா தன்நிலையிலிருந்து வேறு திக், தேச, காலத்தை அடைந்து பிரவேசிக்கிறது. என்பது சம்பவிக்காது. பரமாத்மாவைக்காட்டிலும் வேறு (भिन्न பின்ன) த்ரஷ்டா இல்லை.“नान्यदतोऽस्ति द्रष्टृ नान्यदतोऽस्ति श्रोतृ” (நான்யததோஅஸ்தி த்ரஷ்ட்ரு நான்யததோஅஸ்தி ஸ்ரோத்ரு) என்று சுருதியில் முன்பே கூறப்பட்டது. அவ்வாறே சிருஷ்டி, பிரவேச, ஸ்திதி மேலும் லயம் இவைகளை விளக்கும் வாக்கியங்கள் ஆத்மாவை அறிந்து கொள்வதற்காகவே (அடைவதற்காகவே) ஆகும். அதை அடைவதே புருஷார்த்தமாகும்.“आत्मानमेवावेत्” (ஆத்மானமேவாவேத்)“तस्मात्तत्सर्वमभवत्” (தஸ்மாதத்சர்வமபவத்),“ब्रह्मविदाप्नोति परम्” (பிரஹ்மவிதாப்னோதி பரம்)“स यो ह वै तत्परमं ब्रह्म वेद ब्रह्मैव भवति” (ச யோ ஹ வை த்தபரமம் பிரஹ்ம வேத பிரஹ்மைவ பவதி)“आचार्यवान्पुरुषो वेद” (ஆச்சாரியவான்புருஷோ வேத)“तस्य तावदेव चिरम्” (தஸ்ய தாவதேவ சிரம்) முதலிய சுருதிகளாலும்“ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम्” (ததோ மாம் தத்வதோ ஞாத்வா விசதே ததனந்தரம்)“तद्धग्र्ं सर्वविद्यानां प्राप्यते ह्यमृतं ततः” முதலிய ஸ்மிருதிகளினாலும் அறிகிறோம். பேத தர்சனம் நிந்தைக்கு உரியதாவதால் சிருஷ்டி முதலிய வாக்கியங்கள் ஆத்மஏக தர்சனார்த்த பரமாகவே இருக்கின்றன. ஆகையால் காரிய அவஸ்தையில் உள்ள ஆத்மாவின் உபலப்தியே அதன் பிரவேசமாகும் என்று உபசாரமாய் கூறப்படுகிறது.
भाष्यम् - आ नखाग्रेभ्यो नखाग्रमर्यादम् आत्मन-श्चैतन्यमुपलभ्यते। तत्र कथमिव प्रविष्टः? इत्याह-यथा लोके क्षुरधाने क्षुरो धीयतेऽस्मिन्निति क्षुरधानं तस्मिन्नापितोपस्कराधाने, क्षुरोऽन्तःस्थ उपलभ्यते, अवहितः प्रवेशितः स्याद् यथा वा विश्वम्भरोऽग्निः, विश्वस्य भरणाद्विश्वम्भरः कुलाये नीडेऽग्निः काष्द्भादावहितः स्यादित्यनुवर्तते। तत्र हि स मथ्यमान उपलभ्यते।
அனுவாதம்- நகத்தின் நுனிவரையிலும் ஆத்ம சைதன்யம் அடையப்படுகிறது. அதில் எவ்வாறு பிரவேசிக்கிறது? அதற்கு கூறப்படுகிறது. எவ்வாறு உலகில் கத்தியின் உறையில் கத்தி செலுத்தப்படுகிறதோ அவ்வாறு ஆகும். நாவிதன் தலைமுடி நீக்குவதற்காக உறையினுள் உள்ள கத்தியை எடுக்கிறான். மறுபடியும் அதன் உள்ளே செலுத்துகிறான். அதாவது அதிலிருந்து கத்தியை எடுக்கிறான். மறுபடியும் உள்ளே வைக்கிறான். அல்லது எவ்வாறு விச்வம்பரம் அதாவது அக்னி, விச்வத்தைத் தாங்குவதால் விச்வம்பரம். எவ்வாறு கட்டை முதலியவைகளில் மறைந்து இருக்கிறதோ அவ்வாறு இங்கு ஆத்மா அனுவிருத்தியாகிறது. அங்கு கட்டையைக் கடையும்பொழுது காணப்படுகிறது.
भाष्यम् - यथा च क्षुरः क्षुरधान एकदेशेऽवस्थितो यथा चाग्निः काष्द्भादौ सर्वतो व्याप्यावस्थितः, एवं सामान्यतो विशेषतश्च देहं संव्याप्यावस्थित आत्मा। तत्र हि स प्राणनादिक्रियावान् दर्शनादिक्रियावांश्चोपलभ्यते। तस्मात्तत्रैवं प्रविष्टं तमात्मानं प्राणनादिक्रियाविशिष्टं न पश्यन्ति नोपलभ्यते।
அனுவாதம்- எவ்வாறு கத்தி கத்தியின் உறையாகிய ஏகதேசத்தில் இருக்கின்றதோ, மேலும் எவ்வாறு அக்னியானது கட்டை முதலியவைகளில் எங்கும் வியாபித்திருக்கின்றதோ அவ்வாறு ஆத்மா சாமான்யமாயும், விசேஷமாயும் தேஹத்தில் வியாபித்து இருக்கின்றது. அங்கு அது பிராணன் முதலியவைகளையும், தர்சனம் முதலிய கிரியைகளை உடையவைகளையும் காணமுடிகிறது. ஆகையால் அங்கு (சரீரத்தில்) இவ்வாறு பிரவேசித்த பிராணன் முதலியவைகள், கிரியா விசிஷ்டமாகிய ஆத்மாவை அறிய முடிவதில்லை (பார்க்க முடிவதில்லை).
भाष्यम् - शङ्का - नन्वप्राप्तप्रतिषेधोऽयं तं न पश्यन्तीति, दर्शनस्याप्रकृतत्वात्।
அனுவாதம்- சங்கை- ஆனால் அந்த ஆத்மாவை பார்க்க முடியாததால் அடையமுடியாதது (அறியமுடியாதது) தள்ளப்பட்டதாகிறது. ஏனென்றால் தர்சனத்தினுடைய எந்த பிரசங்கமுமில்லை.
भाष्यम् - समाधानम् - नैष दोषः, सृष्टादिवाक्यानाम् आत्मैकत्वप्रतिपत्त्यर्थपरत्वात्प्रकृतमेव तस्य दर्शनम्।“रूपं रूपं प्रतिरूपो बभूव तदस्य रूपं प्रति चक्षणाय” (बृ० उ० २। ५। १९) इति मन्त्रवर्णात्।
அனுவாதம்- ஸமாதானம்- இந்த தோஷம் இல்லை. சிருஷ்டி முதலிய வாக்கியங்கள் ஆத்ம ஏகத்துவத்தை போதிப்பதாய் இருப்பதால் அதன் தர்சனம் இயற்கையானதே“रूपं रूपं प्रतिरूपो बभूव तदस्य रूपं प्रति चक्षणाय” (ரூபம் ரூபம் பிரதிரூபோ பபூவ ததஸ்ய ரூபம் பிரதி சக்ஷனாய) என்ற மந்திரவர்ணத்தால் சித்திக்கின்றது.
भाष्यम् - तत्र प्राणनादिक्रियाविशिष्टस्यादर्शने हेतुमाह-अकृत्स्नोऽसमस्तो हि यस्मात्स प्राणनादिक्रियाविशिष्टः। कुतः पुनरकृत्स्नत्वम्? इत्युच्यते-प्राणन्नेव प्राणनक्रियामेव कुर्वन्प्राणो नाम प्राणसमाख्यः प्राणाभिधानो भवति। प्राणनक्रियाकर्तृत्वाद्धि प्राणः प्राणितीत्युच्यते नान्यां क्रियां कुर्वन्। यथा लावकः पाचक इति। तस्मात्क्रियान्तरविशिष्टस्य अनुपसंहारादकृत्स्नो हि सः। तथा वदन्वदनक्रियां कुर्वन्वक्त्तीति वाक्, पश्यंश्चक्षुश्चष्ट इति चक्षुर्द्रष्टा, श्रृण्वञ्श्रृणोतीति श्रोत्रम्।
அனுவாதம்- (கிரியா விசிஷ்ட ஆத்மாவிற்கு சமம் அற்றதன்மையின் ப்ரதர்சனம்). இப்பொழுது சுருதி பிராணன் முதலிய கிரியா விசிஷ்ட ஆத்மாவை பார்ப்பதற்கு முடியாததின் காரணத்தை கூறுகிறது - ஏனெனில் பிராண முதலிய கிரியைகளுடன் கூடிய ஆத்மா பூரணமற்றது. எதனால் பூர்ணமற்றதாய் இருக்கிறது? அது கூறப்படுகிறது- பிராணனகிரியை (ஸ்வாசிக்கும் பொழுது) செய்யும்பொழுது அந்தப் பிராணன், பிராணன் என்ற பெயர் உடையதாகிறது. எவ்வாறு எனில் வெட்டுபவன், சமைப்பவன் என்பது போல் ஆகும். ஆகையால் அதில் வேறு கிரியையின் விசிஷ்டம் இல்லாததால் அது சம்பூர்ணமற்று இருக்கின்றது. அவ்வாறே வதனக்கிரியை (பேசுதல்) செய்வதால் வக்த, வாக் ஆகிறது. பார்க்கும் சக்தி உள்ள திரஷ்டாவின் பெயர் சக்ஷு, சஷ்ட என்று பார்ப்பவன் த்ரஷ்டா, மேலும் ச்ருணோதி (கேட்பது) என்பதால் ஸ்ரோத்தரம் என்ற பெயர் உடையதாகிறது. (“चेष्टे इति चक्षुः”“श्रृणोति इति श्रोत्रम्”) என்ற வ்யுத்பத்தியினால் அறியப்படுகிறது).
भाष्यम् -“प्राणन्नेव प्राणः”“वदन्वाक्” इत्याभ्यां क्रियाशक्त्युद्भवः प्रदर्शितो भवति।“पश्यंश्चक्षुः”“श्रृण्वञ्श्रोत्रम्” इत्याभ्यां विज्ञानशक्त्युद्भवः प्रदर्श्यते, नामरूपविषयत्वा-द्विज्ञानशक्तेः। श्रोत्रचक्षुषी विज्ञानस्य साधने, विज्ञानं तु नामरूपसाधनम्। न हि नामरूपव्यतिरिक्तं विज्ञेयमस्ति। तयोश्चोपलम्भे करणं चक्षुःश्रोत्रे।
அனுவாதம்-“प्राणन्नेव प्राणः” (ப்ராணன்னேவ ப்ராண:)“वदन्वाक्” (வதன்வாக்) இவைகளினால் கிரியா சக்தியின் உத்பவம் (உண்டானது) காண்பிக்கப்பட்டதாகிறது.“पश्यंश्चक्षुः” (பச்யன் சக்ஷு:)“श्रृण्वञ्श्रोत्रम्” (ƒருண்வன்ச்ரோத்ரம்:) இவை இரண்டினால் ஞானசக்திக்கு நாமரூபம் விஷயமாய் இருப்பதால் விக்ஞான சக்தியின் உத்பவம் காட்டப்பட்டது. ச்ரோத்திரம், கண் ஆகிய இரண்டும் விக்ஞானத்திற்கு சாதனம், விக்ஞானம் நாமரூப சாதனம். நாம ரூபத்தைக் காட்டிலும் வ்யதிரிக்தமான (வேறான) விக்ஞேயம் இல்லை. அவைகளை அறிவதற்கு சக்ஷு, ச்ரோத்திரமே (கண், காது) கரணமாகும்.
भाष्यम् - क्रिया च नामरूपसाध्या प्राणसमवायिनी, तस्याः प्राणाश्रयाया अभिव्यक्तौ वाक्करणम्। तथा पाणिपादपायू-पस्थाख्यानि। सर्वेषामुपलक्षणार्था वाक्। एतदेव हि सर्वं व्याकृतम्। “त्रयं वा इदं नाम रूपं कर्म” (बृ० उ० १। ६। १) इति हि वक्ष्यति।
அனுவாதம்- நாமரூபத்தினால் சாத்தியமாகிற கிரியையானது பிராணனை ஆஸ்ரயிக்கின்றது. மேலும் அந்த பிராணனை ஆஸ்ரயித்த கிரியையின் அபிவியக்திக்கு (வெளிப்பாட்டிற்கு) “வாக்” சாதனம் ஆகும். இவ்வாறே பாணி, பாதம், பாயு, உபஸ்தம் ஆகிய கர்மேந்திரியங்கள் ஆகும். “வாக்” இவை எல்லாவற்றிற்கும் உபலக்ஷணமாகும். இவை எல்லாம் வ்யாக்ருதமான ஜகத் ஆகும்.“त्रयं वा इदं नाम रूपं कर्म” (த்ரயம் வா இதம் நாம ரூபம் கர்ம) என்று இனி கூறப்படுகிறது.
भाष्यम् - मन्वानो मनो मनुत इति। ज्ञानशक्तिविकासानां साधारणं करणं मनो मनुतेऽनेनेति। पुरुषस्तु कर्ता सन्मन्वानो मन इत्युच्यते।
அனுவாதம்-“मन्वानो मनो मनुत इति” (மன்வானோ மனோ மனுத) என்ற வ்யுத்பத்தியினால் மனனம் செய்வதால் அதன் பெயர் மனம் என்று ஆயிற்று. மனம் ஞானசக்தியை வெளிப்படுத்துவதில் சாதாரண சாதனம் ஆகும். ஏன் எனில் இதனால் ஆத்மா மனனம் செய்கிறது. புருஷனே கர்த்தா ஆவதால் மனனம் செய்வது “மனம்” என்று கூறப்படுகிறது.
भाष्यम् -तान्येतानि प्राणादीन्यस्यात्मनः कर्मनामानि कर्मजानि नामानि कर्मनामान्येव, न तु वस्तुमात्रविषयाणि। अतो न कृत्स्नात्मवस्त्ववद्योतकानि। एवं ह्यसावात्मा प्राणनादिक्रियया तत्तत्क्रियाजनितप्राणादिनामरूपाभ्यां व्याक्रियमाणोऽवद्योत्य-मानोऽपि। स योऽतोऽस्मात्प्राणनादिक्रियासमुदायाद् एकैकं प्राणं चक्षुरिति वा विशिष्टम् अनुपसंह्य्तेतरविशिष्टक्रियात्मकं मनसा अयमात्मेत्युपास्ते चिन्तयति, न स वेद न स जानाति ब्रह्म। कस्मात्? अकृत्स्नोऽसमस्तो हि यस्मादेव आत्मा अस्मात्प्राणनादि-समुदायात्। अतः प्रविभक्त एकैकेन विशेषणेन विशिष्ट इतरधर्मान्तरानुपसंहाराद् भवति। यावदयमेवं वेद पश्यामि श्रृणोमि स्मृशामीति वा स्वभावप्रवृत्तिविशिष्टं वेद तावदञ्जसा कृत्स्नमात्मानं न वेद।
அனுவாதம்-அந்த பிராணன் முதலிய இவைகள் கர்மநாமங்கள், அதாவது கர்மங்களினால் உண்டானதால் கர்மநாமாக்கள். வஸ்துமாத்திர விஷயம் செய்வது அல்ல. ஆகையால் பூர்ணமான ஆத்மவஸ்துவை விஷயம் செய்யக்கூடியது அல்ல. இவைகள் இவ்வாறு ஆத்மா பிராணன் (மூச்சுவிடுதல்) முதலிய கிரியையினால் அந்த அந்த கிரியையினால் உண்டான பிராணன் முதலிய நாமரூபங்களால் வியக்தமானா(வெளிப்பட்ட)லும், (பூரணமாய் பிரகாசிக்காது). எந்த அது அந்த பிராணன் முதலிய கிரியா சமுதாயத்தால் ஒவ்வொன்றும் பிராணன், கண் என்றும் அல்லது சேர்ந்தோ (விசிஷ்டமாய்) உள்ள ஆத்மாவை உபசம்ஹாரம் (நீக்காமல்)செய்யாமல் மனதால் இது ஆத்மா என்று உபாசிப்பவன் பிரஹ்மத்தை அறியமாட்டான். எதனால்? எதனால் எனில் இந்த பிராணாதி சமுதாயத்துடன் கூடிய ஆத்மா பூரணமற்றதால் அறியமுடியாது. ஆகையால் ஒவ்வொன்றும் விசேஷணத்துடன் கூடியதாய் மற்ற தர்மங்களை நீக்கக் கூடாததாய் இருக்கிறது. இவ்வாறு இருக்கும்பொழுது பார்க்கிறேன், கேட்கிறேன், ஸ்பர்சிக்கிறேன் என்று ஸ்வபாவ விருத்தியுடன் அறிகிறான், அப்பொழுது அதை சாக்ஷாத் பிரஹ்மஸ்வரூபமாய் சம்பூர்ண ஆத்மாவை அறிவதில்லை.
भाष्यम् - कथं पुनः पश्यन्वेद? इत्याह-आत्मेत्येव, आत्मेति प्राणादीनि विशेषणानि यान्युक्तानि तानि यस्य स आप्नुवंस्तान्यात्मा इत्युच्यते। स तथा कृत्स्नविशेषोपसंहारी सन्कृत्स्नो भवति। वस्तुमात्ररूपेण हि प्राणाद्युपाधिविशेष-क्रियाजनितानि विशेषणानि व्याप्नोति। तथा च वक्ष्यति-“ध्यायतीव लेलायतीव”(बृ० उ० ४। ३। ७) इति। तस्मादात्मेत्येवोपासीत।
(நிருபாதிக ஆத்ம உபாசனையே பூர்ணத்துவம் ஆகும்) அனுவாதம்-எவ்வாறு பார்த்து அறிவது? இதற்குக்கூறுகிறார்- ஆத்மா என்றே அறியவேண்டும். ஆத்மா என்று முன்பு கூறப்பட்ட பிராணன் முதலிய விசேஷணங்களுடன் கூடியது எதுவோ அதை (அந்த ஆத்மா) வ்யாபிப்பதால் ஆத்மா என்று கூறப்படுகிறது. அவ்வாறே அந்த ஆத்மா எல்லா விசேஷணங்களையும் நீக்கி ஸம்பூர்ணமாகிறது. பிராணன் முதலிய உபாதி விசேஷ கிரியையினால் உண்டான விசேஷணங்களை வியாபிக்கிறது. அவ்வாறு இனி இந்த சுருதி கூறப்போகிறது.“ध्यायतीव लेलायतीव”(த்யாதீவ லேலாயதீவ) என்று. ஆகையால் ஆத்மா என்றே உபாசிக்க வேண்டும்.
भाष्यम्- एवं कृत्स्नो ह्यासौ स्वेन वस्तुरूपेण गृह्यमाणो भवति। कस्मात्कृत्स्नः? इत्याशाह अत्रास्मिन्नात्मनि हि यस्मान्निरुपाधिकजलसूर्यप्रतिबिम्बभेदा इवादित्ये प्राणाद्युपाधिकृता विशेषाः प्राणादिकर्मजनामाभिधेया यथोक्ता ह्येते एकमभिन्नतां भवन्ति प्रतिपद्यन्ते।
அனுவாதம்- (இவ்வாறு தன்னுடைய வாஸ்தவிக ரூபத்தால் கிரஹிக்கும் பொழுது சம்பூர்ணமாகிறது. எதனால் சம்பூர்ணம்? என்ற சங்கைக்கு சுருதி கூறுகின்றது- எதனால் இந்த நிருபாதிக ஆத்மாவிடத்தில் ஜலத்தில் இருந்த சூரிய பிரதிபிம்பபேதம் சூரியனிடத்தில் ஒன்றாகின்றதோ அவ்வாறு முற்கூறிய ப்ராணன் முதலிய கர்மத்தால் உண்டான நாமங்களால் கூறும்பொழுது ப்ராணன் முதலிய உபாதிகளின் காரணமாகின்ற எல்லா விசேஷங்களும் ஒன்றாய் ஆவதால் அபின்னமாகிறது.
भाष्यम् -“आत्मेत्येवोपासीत” इति नापूर्वविधिः। पक्षे प्राप्तत्वात्“यत्साक्षादपरोक्षाद्ब्रह्म” (बृ० उ० ३। ४। १)“कतम आत्मेति योऽयं विज्ञानमयः” (बृ० उ० ४। ३। ७) इत्येवमाद्यात्म-प्रतिपादनपराभिःश्रुतिभिरात्मविषयं विज्ञानमुत्पादितम्। तत्रात्म-स्वरूपविज्ञानेनैव तद्विषयानात्माभिमानबुद्धिः कारकादिक्रिया-फलाध्यारोपणात्मिका अविद्या निवर्तिता। तस्यां निवर्तितायां कामादिदोषानुपपत्तेः अनात्मचिन्तानुपपत्तिः। पारिशेष्या-दात्मचिन्तैव। तस्मात्तदुपासनमस्मिन्पक्षे न विधातव्यम्, प्राप्तत्वात्।
அனுவாதம்-“आत्मेत्येवोपासीत” (ஆத்மேத் யேவோபாசீத) என்பதால் இது அபூர்வவிதியல்ல. ஏன் எனில் இந்த பக்ஷத்தில் ஸ்வத. சித்தமாய் இருப்பதால்“यत्साक्षादपरोक्षाद्ब्रह्म” (யத்சாக்ஷாதபரோக்ஷாத்பிரஹ்மம்)“कतम आत्मेति योऽयं विज्ञानमयः” (கதம ஆத்மேதி யோயம் விக்ஞானமய:) இவை முதலியவைகளால் பிரதிபாதனம் செய்யும் சுருதிகளால் ஆத்மவிஷயக ஞானம் உண்டாகிறது. அங்கு ஆத்மஸ்வரூப விக்ஞானத்தால் தான் அந்த அநாத்மவிஷய அபிமான புத்தி அதாவது காரக முதலிய கிரியாபல அத்யாரோபரூபமான அவித்யா நீங்கும். அது நிவ்ருத்தி ஆவதால் காமம் முதலிய தோஷங்களும் சம்பவிக்காது. அநாத்ம சிந்தையும் சம்பவிக்காது. இதன் முடிவான பலன் என்னவெனில் ஆத்மசிந்தனமே உண்டாகிறது. ஆகையால் இந்த பக்ஷத்தில் ஆத்மா ஸ்வத: சித்தமாய் இருப்பதால் ஆத்மோபாஸனையின் விதானம் செய்ய வேண்டியதில்லை என்பது சித்திக்கின்றது.
भाष्यम् - शङ्का - तिष्द्भतु तावत्पाक्षिक्यात्मोपासन प्राप्तिर्नित्या वेति, अपूर्वविधिः स्यात्, ज्ञानोपासनयोरेकत्वे सत्यप्राप्तत्वात्।“न स वेद” इति विज्ञानं प्रस्तुत्य“आत्मेत्यवोपासीत” इत्यभिधानाद्वेदोपासनशब्दयोरेकार्थता-वगम्यते।“अनेन ह्येतत्सर्वं वेद”“आत्मानमेवावेत्” (बृ० उ० १। ४।१०) इत्यादिश्रुतिभ्यश्च विज्ञानमुपासनम्। तस्य चाप्राप्त-त्वाद्विध्यर्हत्वम्।
அனுவாதம்- சங்கை- இவ்வாறு இருக்கட்டும், ஆனால் ஆத்ம உபாசனத்தின் அடைவு நிலை அற்றதா? அல்லது நித்யமா? இவ்வாறு விசாரிக்கும்பொழுது இரண்டாய் இருப்பதால் இது அபூர்வ விதி ஆகும். ஏன்எனில் இங்கு ஞானம், உபாசனை ஆகிய இரண்டிற்கும் ஒரே அர்த்தமாவதால் ஸ்வத: சித்தம் என்பது பிராப்தமாகாது.“न स वेद” (ந ச வேத) என்ற வாக்கியத்தால் விக்ஞானத்தை கூறி,“आत्मत्येवोपासीत” என்று இவ்வாறு கூறியதால் வேத, (ஞானம்), உபாசனை ஆகிய சப்தங்களுக்கு ஒரே அர்த்த ஞானம் அறியப்படுகிறது.“अनेन ह्येतत्सर्वं वेद” (அநேன ஹியேதத்சர்வம் வேத) முதலிய சுருதிகளால் விக்ஞானமே உபாசனை என்று அறிகிறோம். மேலும் அதனை (உபாசனை) அடையமுடியாததால் இங்கு விதியே பொருந்தும். (ஏன்எனில் உபாசனை மானச கர்மா. ஆகையால் ஸ்வத: சித்தமாகாது. ஆகையால் விதியே அவசியமாகிறது.)
भाष्यम् - न च स्वरूपान्वाख्याने पुरुषप्रवृत्तिरुपपद्यते, तस्मादपूर्वविधिरेवायम्। कर्मविधिसामान्याच्च। यथा“यजेत”“जुहुयात्” इत्यादयः कर्मविधयः, न तैरस्य“आत्मेत्येवोपासीत” (१। ४। ७)“आत्मा वा अरे द्रष्टव्यः” (२। ४। ५) इत्याद्यात्मोपासनविधेर्विशेषोऽवगम्यते। मानसक्रियात्वाच्च विज्ञानस्य, तथा“यस्यै देवतायै हविर्गृहीतं स्यात्तां मनसा ध्यायेद्वषट् करिष्यन्”इत्याद्या मनसी क्रिया विधीयते, तथा“आत्मेत्येवोपासीत” (१। ४। ७)“मन्तव्यो निदिध्यासितव्यः” (२। ४। ५) इत्याद्या क्रियैव विधीयते ज्ञानात्मिका। तथावोचाम वेदोपासनशब्दयोरेकार्थत्वमिति।
அனுவாதம்- ஸ்வரூப அன்வாக்யத்தால் புருஷ ப்ரவ்ருத்தி ஏற்படுவது சம்பவிப்பதில்லை. ஆகையால் இது அபூர்வ விதியே ஆகும். கர்மமும் விதியும் சமமாய் இருப்பதாலும் ஆகும். எவ்வாறு“यजेत” (யஜேத),“जुहुयात्” (ஜுஹுயாத்) முதலியவைகளைப்போல் கர்மவிதியாகும். இதிலிருந்து“आत्मेत्येवोपासीत” (ஆத்மேத்யேவோபாசீத) “आत्मा वा अरे द्रष्टव्यः” (ஆத்மா வா அரே திரஷ்டவ்யः) முதலியவைகளில் இருந்து ஆத்ம உபாசனா, விதிகளுக்கு விசேஷமானதாக அறிப்படவில்லை. மேலும் விக்ஞானம் மானச கிரியையாக ஆவதாலும் ஆகும். அவ்வாறே“यस्यै देवतायै हविर्गृहीतं स्यात्तां मनसा ध्यायेद्वषट् करिष्यन्” (யஸ்யை தேவதாயை ஹவிர்க்ருஹீதம் ஸ்யாத்தாம் மனஸா த்யாயேத்வஷட் கரிஷ்யன்) முதலிய மானச கிரியைகள் விதிக்கப்படுகிறது. அவ்வாறே“आत्मेत्येवोपासीत” (ஆத்மேத்யேவோபாசீத),“मन्तव्यो निदिध्यासितव्यः” (மன்தவ்யோ நிதித்யாஸிதவ்ய:) முதலியவை ஞானாத்மகமான கிரியையை தான் விதிக்கிறது. அவ்வாறே வேத உபாசனை சப்தங்களுக்கு ஒரே அர்த்தம் என்று கூறினோம்.
भाष्यम् - भावनांशत्रयोपपत्तेश्च- यथा हि यजेत इत्यस्यां भावनायां किं केन कथम् इति भाव्याद्याकाापनय-कारणांशत्रयमवगम्यते, तथा उपासीत इत्यस्यामपि भावनायां विधीयमानायां किमुपासीत? केनोपासीत? कथमुपासीत? इत्यस्यामाकाायाम् आत्मानमुपासीत मनसा त्यागब्रह्मचर्य-शमदमोपरम तितिक्षादीतिकर्तव्यतासंयुक्त इत्यादिशास्त्रेणेव समर्थ्यतेंऽशत्रयम्। यथा च कृत्स्नस्य दर्शपूर्णमासादिप्रकरणस्य दर्शपूर्णमासादिविध्युद्देशत्वेनोपयोगः, एवमौपनिषदाम् आत्मोपासनप्रकरणाय आत्मोपासनविध्युद्देशत्वेनैवोपयोगः।“नेति नेति” (२।३।६)“अस्थूलम्” (३।८।८)“एकमेवाद्वितीयम्” (छा०उ०६।२।१)“अशनायाद्यतीतः” इत्येवमादिवाक्यानाम् उपास्यात्मस्वरूपविशेषसमर्पणेनोपयोगः। फलं च मोक्षोऽविद्यानिवृत्तिर्वा।
அனுவாதம்- பாவனா அம்சம் மூன்றும் (பலம், கரணம், இதிகர்த்தவ்யதா ஆகியவை) சம்பவிப்பதால் விதி வாக்கியமேயாகும்- எவ்வாறு“यजेत” (யஜேத) என்ற பாவனையில்- எது, எதனால், எவ்வாறு என்ற பாவனை முதலியவை சம்பந்தப்பட்ட ஆப்ாங்க்ஷாக்களை நோக்கங்களை நிவிர்த்தி செய்வதற்காகவே மூன்று அம்சங்களும் காணப்படுகின்றனவோ அவ்வாறே உபாசீத (उपासीत உபாசனை செய்) என்பதிலும் இந்த பாவனையிலும் எதை உபாசிப்பது? எதனால் உபாசிப்பது? எவ்வாறு உபாசிப்பது? போன்ற கேள்விகள் எழும்பொழுது ஆத்மாவை உபாசனை செய், மனதால் செய், அவ்வாறே த்யாகம், பிரஹ்மச்சரியம், சமம், தமம், உபரதி, திதிக்ஷாதி ரூப இதி கர்தவ்யதா உடன் செய் ஆகியவைகளை சாஸ்திரமே மூன்று அம்சங்களைத் தெரிவிக்கின்றது. அவ்வாறே எல்லா தர்சபூர்ணமாசம் முதலிய பிரகரணத்திலும் விதியை உத்தேசித்தே உபயோகமாகின்றது. அவ்வாறே உபநிஷத்துக்களிலும் ஆத்ம உபாசனை பிரகரணத்தில் விதியை உத்தேசித்தே உபயோகமாகிறது.“नेति नेति” (நேதி நேதி)“अस्थूलम्” (அஸ்தூலம்)“एकमेवाद्वितीयम्” (ஏகமேவாஅத்விதீயம்)“अशनायाद्यतीतः” (அசனா-யாத்யதீத:) முதலிய வாக்கியங்களால் உபாசிக்க வேண்டிய ஆத்மஸ்வரூப விசேஷத்தை சமர்ப்பிக்கின்றது. அதன் பலன் மோக்ஷம் அதாவது அவித்யா நிவ்ருத்தி.
भाष्यम् - अपरे वर्णयन्ति उपासनेनात्मविषयं विशिष्टं विज्ञानान्तरं भावयेत्, तेनात्मा ज्ञायते, अविद्यानिवर्तकं च तदेव, नात्मविषयं वेदवाक्यजनितं विज्ञानमिति। एतस्मिन्नर्थे वचनान्यपि-“विज्ञाय प्रज्ञां कुर्वीत” (बृ० उ० ४। ४। २१)“द्रष्टव्यः श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्यः”(२। ४। ५)“सोऽन्वेष्टव्यः स विजिज्ञासितव्यः” (छा० उ० ४। ७। १) इत्यादीनि।
அனுவாதம்- மற்றவர் இவ்வாறு வர்ணிக்கிறார்கள்- உபாசனையினால் ஆத்மவிஷயமான அந்ய விசிஷ்ட விக்ஞானத்தை பாவிக்கவேண்டும். அதனாலேயே அறியப்படுகிறது. அதுவே அவித்யா நிவ்ருத்தியும் ஆகும். வேத வாக்கால் உண்டாகும் ஆத்ம விஷயம் விக்ஞானம் அக்ஞானத்தை நிவ்ருத்திக்காது. இந்த விஷயத்தில் வேத வாக்கியங்கள் உள்ளன.“विज्ञाय प्रज्ञां कुर्वीत” (விக்ஞாய பிரக்ஞாம் குர்வீத)“द्रष्टव्यः श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्यः” (த்ரஷ்டவ்ய: ஸ்ரோதவ்யோ மன்தவ்யோ நிதித்யாசிதவ்ய:)“सोऽन्वेष्टव्यः स विजिज्ञासितव्यः” (சோ அன்வேஷ்டவ்ய: ச விஜிக்ஞாஸிதவ்ய:) என்பது முதலிய வாக்கியங்கள்.
भाष्यम् - समाधानम् - न अर्थान्तराभावात्। न च“आत्मेत्येवोपासीत” इत्यपूर्वविधिः, कस्मात्? आत्मस्वरूप- कथनानात्मप्रतिषेधवाक्यजनितविज्ञानव्यतिरेकेण अर्थान्तरस्य कर्तव्यस्य मानसस्य बाह्यस्य वाभावात्। तत्र हि विधेः साफल्यं यत्र विधिवाक्यश्रवणमात्रजनितविज्ञानव्यतिरेकेण पुरुषप्रवृत्तिर्गम्यते। यथा“दर्शपूर्णमासाभ्यां स्वर्गकामो यजेत” इत्येवमादौ। न हि दर्शपूर्णमासविधिवाक्यजनितविज्ञानमेव दर्शपूर्णमासानुष्द्भानम् तच्चाघिकाराद्यपेक्षानुभावि।
அனுவாதம்- ஸமாதானம்- அவ்வாறு அல்ல. ஏெனனில் அதற்கு வேறு அர்த்தம் இல்லை.“आत्मेत्येवोपासीत” என்பது அபூர்வ விதியல்ல. எதனால்? ஆத்மஸ்வரூபத்தைக் கூறுகிறது அநாத்ம நிஷேத வாக்கியங்களால் உண்டான விக்ஞானத்தைத் தவிர வேறு அர்த்தமான மானச கர்த்தவ்யமோ பாஹ்ய கர்த்தவ்யமோ கிடையாது. இதில் விதியினுடைய பலன் ஆனது எங்கு விதிவாக்கிய சிரவண மாத்திரத்தால் உண்டான விக்ஞானத்தைத்தவிர புருஷப் பிரவிர்த்தியும் காணப்படுகிறது. எவ்வாறு“दर्शपूर्णमासाभ्यां स्वर्गकामो यजेत” (தர்சபூர்ணமாசாப்யாம் ஸ்வர்க்ககாமோ யஜேத) என்பது முதலியவைகளில் உள்ளவாறு தர்ச பூர்ணமாச விதிவாக்கியத்தால் உண்டாகும் விக்ஞானம் மட்டுமே அனுஷ்டானம் அல்ல. அது அதிகாரி முதலியவைகளை அபேக்ஷித்து உண்டாகிறவைகள் ஆகும்.
भाष्यम् - न तु“नेति नेति” (२। ३। ६) इत्याद्यात्मप्रति- पादकवाक्यजनितविज्ञानव्यतिरेकेण दर्शपूर्णमासादिवत्पुरुष-व्यापारः सम्भवति। सर्वव्यापारोपशमहेतुत्वात् तद्वाक्यजनित-विज्ञानस्य। न ह्युदासीनविज्ञानं प्रवृत्तिजनकम्, अब्रह्मानात्म-विज्ञाननिवर्तकत्वाच्च“एकमेवाद्वितीयम्”(छा० उ० ६। २। १)“तत्त्वमसि” (छा० उ० ६। ८-१६) इत्येवमादिवाक्यानाम्। न च तन्निवृत्तौ प्रवृत्तिरुपपद्यते, विरोधात्।
அனுவாதம்-“नेति नेति” என்பது முதலியவை ஆத்மாவை பிரதிபாதிக்கும் வாக்கியத்தால் உண்டாகும் விக்ஞானத்தைக்காட்டிலும் வேறான தர்ச பூர்ணமாசாதிகள் போல் புருஷ வியாபாரம் சம்பவிக்காது. அந்த வாக்கியத்தால் உண்டாகும் விக்ஞானம் எல்லா வியாபாரங்களின் நிவிர்த்திக்கு ஹேதுவாகிறது. ஆகையால் உதாசீன விக்ஞானம் ப்ரவ்ருத்தியை உண்டாக்காது. ஏெனனில் அபிரஹ்மம் மற்றும் அநாத்ம விக்ஞானத்தை நிவர்த்தி செய்வதால் ஆகும் என்பது“एकमेवाद्वितीयम्” (ஏகமேவ அத்விதீயம்)“तत्त्वमसि” (தத்துவமஸி) இவை முதலிய சுருதி வாக்கியங்களால் அறிகிறோம். அதன் நிவர்த்தியால் புருஷப்ரவ்ருத்திக்கு விரோதமானதால் ப்ரவ்ருத்தி உண்டாகாது.
भाष्यम् - पूर्व - वाक्यजनितविज्ञानमात्रान्नाब्रह्मानात्म-विज्ञाननिवृत्तिरिति चेत्?
அனுவாதம்- பூர்வ- (சுருதி) வாக்கியத்தால் உண்டாகும் விக்ஞானத்தால் மாத்திரம் அப்பிரஹ்மம் அநாத்ம--- விக்ஞானம் நிவர்த்தி ஆகாது. எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न,“तत्त्वमसि” (छा० उ० ६। ८-१६)“नेति नेति” (बृ० उ० २। ३। ६)“आत्मैवेदम्” (छा० उ० ७। २५। २) “एकमेवाद्वितीयम्” (छा० उ० ६। २। १)“ब्रह्मैवेदममृतम्” (मु० उ० २। २। ११)“नान्यदतोऽस्ति द्रष्टृ” (बृ० उ० ३। ८। ११)“तदेव ब्रह्म त्वं विद्धि” (के० उ० १। ४) इत्यादिवाक्यानां तद्वादित्वात्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஏெனனில் அதைக்குறித்து“तत्त्वमसि” (தத்துவமஸி)“नेति नेति” (நேதி நேதி)“आत्मैवेदम्” (ஆத்மைவேதம்)“एकमेवाद्वितीयम्” (ஏகமேவாத்விதீயம்)“ब्रह्मैवेदममृतम्” (பிரஹ்மைவேதமம்ருதம்)“नान्यदतोऽस्ति द्रष्टृ” (நான்யதோஸ்தி த்ரஷ்ட்ரு) “तदेव ब्रह्म त्वं विद्धि” (ததேவ பிரஹ்மம் த்வம் வித்தி) இவை முதலிய சுருதி வாக்கியங்களால் பிரதிபாதிக்கப்பட்டிருக்கிறது (கூறப்பட்டிருக்கிறது).
भाष्यम् - पूर्व - द्रष्टव्यविधेर्विषयसमर्पकाण्येतानीति चेत्?
அனுவாதம்- பூர்வ- த்ரஷ்டவ்ய விதிக்கு விஷயத்தை இவைகள் சமர்பிக்கின்றன எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, अर्थन्तराभावादित्युक्तोत्तरत्वात्। आत्मवस्तुस्वरूपसमर्पकैरेव वाक्यैः“तत्त्वमसि” इत्यादिभिः श्रवणकाल एव तद्दर्शनस्य कृतत्वाद् द्रष्टव्यविधेर्नानुष्द्भानान्तरं कर्तव्यमित्युक्तोत्तरमेतत्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல, ஏெனனில் அதற்கு வேறு அர்த்தம் இல்லாததால் என்று கூறப்பட்ட பதில் ஆகும். ஆத்ம வஸ்து ஸ்வரூபத்தை சமர்பிக்கின்ற வாக்யங்கள் ஆகிய“तत्त्वमसि” (தத்துவமஸி) முதலியவைகளால் சிரவண காலத்திலேயே அதனை தர்சனம் செய்வதால் பார்க்கவேண்டும் (தர்சனம் செய்யவேண்டும்) என்ற விதிக்கு வேறு அந்நிய அனுஷ்டானம் செய்ய வேண்டியதில்லை என்ற பதில் முன்பே கூறப்பட்டதாகும்.
भाष्यम् - पूर्व - आत्मस्वरूपान्वाख्यानमात्रेण आत्मविज्ञाने विधिमन्तरेण न प्रवर्तत इति चेत्?
அனுவாதம்- பூர்வ- கேவலம் ஆத்ம ஸ்வரூபத்தின் விளக்கத்தினாலேயே விதியில்லாமல் ஆத்மஞானத்தில் புருஷன் ப்ரவர்த்திப்பது இல்லை எனில்?
भाष्यम्- सिद्धान्ती- न, आत्मवादिवाक्यश्रवणेन आत्मविज्ञानस्य जनितत्वात्- किं भो कृतस्य करणम्? तच्छ्रवणेऽपि न प्रवर्तत इति चेन्न, अनवस्थाप्रसङ्गात्। यथा आत्मवादिवाक्यार्थ-श्रवणे विधिमन्तरेण न प्रवर्तते तथा विधिवाक्यार्थश्रवणेऽपि विधिमन्तरेण न प्रवर्तिष्यत इति विध्यन्तरापेक्षा; तथा तदर्थश्रवणेऽपीत्यनवस्था प्रसज्येत।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஏனெனில் ஆத்மவாதிக்கு வாக்கியத்தின் சிரவணத்தினாலேயே ஆத்ம ஞானம் உண்டாவதால். அங்கு உண்டாக்குவதற்கான கரணம் எது? அதை சிரவணம் செய்தபின்பும் (விதியில்லாமல்) ப்ரவ்ருத்திக்காது என்பது பொருந்தாது. ஏனெனில் அநவஸ்தா தோஷம் ஏற்படும். எவ்வாறு ஆத்மவாதி வாக்கியார்த்த சிரவணத்தில் வேறு விதியில்லாமல் ப்ரவ்ருத்திக்க முடியாதோ அவ்வாறே விதிவாக்கியார்த சிரவணத்திலும் வேறு விதியில்லாமல் ப்ரவிருத்திக்க முடியாததால் வேறு விதியை அபேக்ஷிக்க வேண்டியதாகும். அவ்வாறே அதன் அர்த்த சிரவணத்திலும் அனவஸ்தா தோஷம் உண்டாகும்.
भाष्यम् - पूर्व - वाक्यजनितात्मज्ञानस्मृतिसंततेः श्रवणविज्ञानमात्रादर्थान्तरत्वमिति चेत्?
அனுவாதம்- பூர்வ- ச்ரவண ஞானத்தின் மாத்திரத்தாலேயே வாக்கியத்தால் உண்டான ஆத்மஞானத்தின் ஸ்மிருதியின் பிரவாஹத்திற்கு வேறு அர்த்தம் ஏற்படுமே?
भाष्यम् - सिद्धान्ती - न, अर्थप्राप्तत्वात्। यदैवात्मप्रतिपादकवाक्यश्रवणाद् आत्मविषयं विज्ञानमुत्पद्यते, तदैव तदुत्पद्यमानं तद्विषयं मिथ्याज्ञानं निवर्तयदेवोत्पद्यते। आत्मविषयमिथ्याज्ञाननिवृत्तौ च तत्प्रभवाः स्मृतयो न भवन्ति स्वाभाविक्योऽनात्मवस्तुभेदविषयाः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. அதன் அர்த்தம் (பொருள்) அடையப்படுவதால். எப்பொழுது ஆத்மாவை பிரதிபாதிக்கும் வாக்கிய சிரவணத்தால் ஆத்மவிஷயம் விக்ஞானம் உண்டாகிறதோ அப்பொழுது அதனால் உண்டான அந்த (ஆத்ம) விஷயமித்யா ஞானத்தை நிவர்த்தி செய்துதான் உண்டாகிறது. ஆத்மவிஷய மித்யாஞானத்தின் நிவ்ருத்தியினால் ஸ்வாபாவிக அநாத்மவஸ்துபேத விஷயங்களும், அதன் பிரபவங்களான ஸ்மிருதிகளும் (நினைவுகளும்) உண்டாகாது.
भाष्यम्- अनर्थत्वावगतेश्च, आत्मावगतौहि सत्यामन्य-द्वस्त्वनर्थत्वेनावगम्यते,अनित्यदुःखाशुादिबहुदोषवत्त्वाद् आत्मवस्तुनश्च तद्विलक्षणत्वात्। तस्मादनात्मविज्ञानस्मृतीनाम् आत्मावगतेरभावप्राप्तिः। पारिशेष्यादात्मैकत्वविज्ञान-स्मृतिसन्ततेरर्थत एव भावान्न विधेयत्वम्, शोकमोहभयायासादि-दुःखदोषनिवर्तकत्वाच्च तत्स्मृतेः। विपरीतज्ञानप्रभवो हि शोकमोहादिदोषः। तथा च“तत्र को मोहः” (ईशा० ७)“विद्वान्न बिभेति कुतश्चन” (तै०उ०२।९। १)“अभयं वै जनक प्राप्तोऽसि” (बृ० उ० ४। २। ४)“भिद्यते ह्य्दयग्रन्थिः” (मु० उ० २। २। ८) इत्यादिश्रुतयः।
அனுவாதம்- அநர்த்தத்துவமாய் இருப்பதால் ஆத்மா ஞானம் அடைந்திருக்கும் பொழுது, அநித்ய துக்கம், அசுத்தம் முதலிய அநேக தோஷமுடையதாயும் ஆத்மவஸ்துவைக் காட்டிலும் விலக்ஷணமாக இருப்பதாலும் அநர்த்த வஸ்துக்கள் பின்ன ஸ்வபாவம் உடையவைகளே ஆகும். ஆகையால் அநாத்ம விக்ஞான ஸ்மிருதிகளுக்கு ஆத்மாவை அறிய முடியாது. முடிவு என்னவெனில் ஆத்ம ஏகத்வ விக்ஞானஸ்மிருதி பிரவாஹத்திற்கு வேறு அர்த்தமாவதால் விதேயம் (விதி) பொருந்தாது. சோகம், மோஹம், பயம், ஆயாசம் முதலிய துக்கதோஷங்கள் அந்த ஆத்மவிக்ஞான ஸ்மிருதியினால் நிவர்த்தி ஆகின்றது. சோகமோஹாதி தோஷங்கள் விபரீத ஞானங்களால் உண்டானவை. அவ்வாறே“तत्र को मोहः” (தத்ர கோ மோஹ:”“विद्वान्न बिभेति कुतश्चन” “வித்வான்ந பிபேதி குதஸ்சன”“अभयं वै जनक प्राप्तोऽसि” “அபயம் வை ஜனக ப்ராப்தோஸி”“भिद्यते ह्य्दयग्रन्थिः” “பித்யதே ஹிருதயக்ரந்தி:” முதலிய சுருதிகள் பிரமாணமாகும்.
भाष्यम् - पूर्व - निरोधस्तर्ह्यर्थान्तरमिति चेत्। अथापि स्यािच्चत्तवृत्तिनिरोधस्य वेदवाक्यजनितात्मविज्ञानादर्थान्तरत्वात्, तन्त्रान्तरेषु च कर्तव्यतयावगतत्वाद्विधेयत्वमिति चेत्?
அனுவாதம்- பூர்வ- நிரோதமானது (வேத வாக்கியத்தால் உண்டான ஆத்ம விக்ஞானத்தைக் காட்டிலும்) அர்த்தாந்தரம் ஆகும் எனில் அவ்வாறானாலும் சித்த விருத்தி நிரோதத்தின் வேதவாக்கியத்தால் உண்டான ஆத்ம விக்ஞானத்தால் அர்த்தாந்தரமாய் இருப்பதாலும், வேறு தந்திரங்களில் கர்த்தவ்யம் அறியப்படுவதாலும் விதேயத்துவம் (விதி) இருக்கலாமே எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, मोक्षसाधनत्वेनानवगमात्। नहि वेदान्तेषु ब्रह्मात्मविज्ञानाद् अन्यत्परमपुरुषार्थसाधनत्वेनावगम्यते।“आत्मानमेवावेत्” (बृ०उ०१।४।१०)“तस्मात्तत्सर्वमभवत्” (१। ४। १०)“ब्रह्मविदाप्नोति परम्” (तै० उ०२।१।१)“स यो ह वै तत्परमं ब्रह्म वेद ब्रह्मैव भवति”(मु०उ०३।२।९) “आचार्यवान्पुरुषो वेद” (छा०उ०६।१४।२)“तस्य तावदेव चिरम्” (६।१४।२)“अभयं हि वै ब्रह्म भवति य एवं वेद” (बृ० उ० ४। ४। २५) इत्येवमादि श्रुतिशतेभ्यः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு கூறுவது சரியல்ல. மோக்ஷம் சாதன ரூபமாய் காணப்படாததால். வேதாந்த சாஸ்திரங்களில் ஆத்ம விக்ஞானத்தைத்தவிர அன்ய (வேறு) புருஷார்த்த சாதனம் அறியப்படவில்லை.“आत्मनमेवावेत्” (ஆத்மானமேவாவேத்)“तस्मात्तत्सर्वमभवत्” (தஸ்மாத்தத்சர்வமபவத்)“ब्रह्मविदाप्नोति परम्” (பிரஹ்மவிதாப்னாதி பரம்)“स यो ह वै तत्परमं ब्रह्म वेद ब्रह्मैव भवति” ச யோ ஹ வை தத்பரமம் பிரஹ்மம் வேத பிரஹ்மைவ பவதி)“आचार्यवान्पुरुषो वेद” (ஆச்சாரியவான்புருஷோ வேத)“तस्य तावदेव चिरम्” (தஸ்ய தாவதேவ சிரம்),“अभयं हि वै ब्रह्म भवति य एवं वेद” (அபயம் ஹி வை பிரஹ்ம பவதி ய ஏவம் வேத) இவை முதலிய நூ ற்றுக்கணக்கான சுருதிகளின் தாத்பர்யமாகும்.
भाष्यम् -अनन्यसाधनत्वाच्च निरोधस्य। न ह्यात्मविज्ञानतत्स्मृतिसन्तानव्यतिरेकेण चित्तवृत्तिनिरोधस्य साधनमस्ति। अभ्युपगम्येदमुक्तम् न तु ब्रह्मविज्ञानव्यतिरेकेण अन्यन्मोक्षसाधनमवगम्यते।
அனுவாதம்- (நிரோதத்திற்கு வேறு சாதனம் தேவையில்லை. ஆத்மவிக்ஞான அதன் ஸ்மிருதி பிரவாகத்தைத் தவிர சித்தவிருத்தி நிரோதத்திற்கு வேறு சாதனம் இல்லை. இது அறிந்து கூறப்படடது. பிரஹ்ம விக்ஞானத்தைத்தவிர வேறு மோக்ஷ சாதனம் அறியப்படவில்லை
भाष्यम् - आकााभावाच्च भावनाभावः। यदुक्तं यजेतेत्यादौ किं केन कथम् इति भावनाकाायां फलसाधनेति-कर्तव्यताभिराकाापनयनं यथा, तद्वदिहाप्यात्मविज्ञानविधाव-प्युपपद्यत इति, तदसत्,“एकमेवाद्वितीयम्” (छा० उ० ६। २। १)“तत्त्वमसि” (छा० उ० ६। ८-१६)“नेति नेति” (बृ० उ० २। ३। ६)“अनन्तरमबाह्यम्”(बृ० उ० २। ५। १९)“अयमात्मा ब्रह्म” (२। ५। १९) इत्यादिवाक्यार्थविज्ञानसमकालमेव सर्वाकााविनिवृत्तेः। न च वाक्यार्थविज्ञाने विधिप्रयुक्तः प्रवर्तते विध्यन्तरप्रयुक्तौ चानवस्थादोषमवोचाम। न च“एकमेवाद्वितीयं ब्रह्म” इत्यादिवाक्येषु विधिरवगम्यते। आत्मस्वरूपान्वाख्याने-नैवावसितत्वात्।
அனுவாதம்- (ஆத்ம விக்ஞானத்தில் ஆகாங்க்ஷா இல்லாத காரணத்தால் பாவனை அபாவமாகும். என்பவைகளில் எது கூறப்பட்டதோ அதாவது“किं” (எது)“केन” (எதனால்)“कथम्” (எவ்வாறு) என்ற பாவானா ஆகாங்க்ஷயைில் பலன், சாதனம், இதி கர்தவ்யம்(फलं, साधनम्, इति कर्तव्यता) முதலியவைகளில் எவ்வாறு ஆகாங்க்ஷை நிவர்த்தி ஆகிறதோ அவ்வாறு இங்கும் ஆத்மஞான விதியிலும் ஏற்படலாமே எனில் அது சரியல்ல.“एकमेवाद्वितीयम्” (ஏகமேவாத்விதீயம்)“तत्त्वमसि” (தத்வமஸி)“नेति नेति” (நேதி, நேதி)“अनन्तरमबाह्यम्” (அநந்தரமபாஹ்யம்)“अयमात्मा ब्रह्म” (அயமாத்மா பிரஹ்ம) முதலிய வாக்கியார்த்த விக்ஞான சமகாலத்திலேயே எல்லா ஆகாங்க்ஷகைளும் நீங்கிவிடுகின்றன. வாக்கியார்த்த விக்ஞானத்தில் விதி பிரவிர்த்திக்காது. விதி அந்தரத்தை (வேறு விதி) சேர்த்தால் அநவஸ்தா தோஷம் ஏற்படும் என்று முன்பே கூறப்பட்டது.“एकमेवाद्वितीयं ब्रह्म” (ஏகமேவாத்விதீயம் பிரஹ்ம) முதலிய வாக்கியங்களில் விதிப்பிரயோகம் காணப்படவில்லை. ஆத்மஸ்வரூபத்தின் அனுவாத (விளக்கம்) மாத்திரமேயாகும்.
भाष्यम् - पूर्व - वस्तुस्वरूपान्वाख्यानमात्रत्वाद-प्रामाण्यमिति चेत्। अथापि स्याद्यथा“सोऽरोदीद्यदरोदीत्तद्रुद्रस्य रूद्रत्वम्” इत्येवमादौ वस्तुस्वरूपान्वाख्यानमात्रात्वादप्रामाण्यम्, एवमात्मार्थवाक्यानामपीति चेत्?
அனுவாதம்- பூர்வ- வஸ்து ஸ்வரூப அன்வாக்யான மாத்திரத்தால் அப்பிரமாணமாகுமே எனில், அவ்வாறு ஆனாலும், எவ்வாறு எனில்“सोऽरोदीद्यदरोदीत्त-द्रुद्रस्य रूद्रत्वम्” (சோ அரோதித்யதரோதீத்-தத்ருத்ரஸ்ய ருத்ரத்துவம்) என்பது முதலியவைகளில் வஸ்து ஸ்வரூபம் அன்வாக்யான மாத்திரத்தால் அப்ரமாண்யம். அவ்வாறு ஆத்மார்த்த வாக்கியங்களுக்கும் எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, विशेषात्। न वाक्यस्य वस्त्वन्वाख्यानं क्रियान्वाख्यानं वा प्रामाण्याप्रामाण्यकारणम्, किं तर्हि? नििश्चतफलवद्विज्ञानोत्पादकत्वम्। तद्यन्नास्ति तत्प्रमाणं वाक्यम्, यत्र नास्ति तदप्रमाणम्।
அனுவாதம்- சித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஏெனனில் அந்த அர்த்தவாத வாக்கியங்களுடன் ஆத்மார்த்த வாக்யங்களுக்கு விசேஷத்தன்மை உள்ளது. வஸ்து, கிரியா ஆகியவற்றின் அனுவாதங்கள் பிரமாணத்திற்கோ, அப்ரமாணத்திற்கோ காரணம் அல்ல. நிச்சயமான பலனை உடைய விக்ஞானத்தை உண்டுபண்ணும். அந்த வாக்கியம் எங்கு உள்ளதோ அது பிராமாணிக வாக்கியம் ஆகும். அது இல்லாததில் அப்ராமாண்ய வாக்கியங்கள் ஆகும்.
भाष्यम् - किञ्च भो पृच्छामस्त्वाम् आत्मस्वरूपान्वा-ख्यानपरेषु वाक्येषु फलवन्नििश्चतं च विज्ञानमुत्पद्यते, न वा? उत्पद्यते चेत्कथमप्रामाण्यमिति? किं वा न पश्यसि अविद्याशोकमोहभयादिसंसारबीजदोषनिवृत्तिं विज्ञानफलम्। न श्रृणोषि वा किम्“तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः” (ईशा० ७) “मन्त्रविदेवास्मिनात्मवित्सोऽहं भगवः शोचामि तं मा भगवाञ्छोकस्य पारं तारयतु” (छा० उ० ७। १। ३) इत्येवमाद्यु-पनिषद्वाक्यशतानि? एवं विद्यते किं“सोऽरोदीदित्यादिषु नििश्चतं फलवच्च विज्ञानम्। न चेद्विद्यतऽस्त्वप्रामाण्यम्। तदप्रामाण्ये फलवन्नििश्चतविज्ञानोत्पादकस्य किमित्यप्रामाण्यं स्यात्? तदप्रामाण्ये च दर्शपूर्णमासादिवाक्येषु को विश्रम्भः।
அனுவாதம்- ஹே! நாங்கள் உங்களிடம் மேலும் கேட்கவேண்டும். ஆத்ம ஸ்வரூபத்தை நிரூபணம் செய்யும் வாக்கியங்கள் பலனைப் போன்று நிச்சயமான விக்ஞானத்தை உண்டுபண்ணுகின்றதா? இல்லையா? உண்டுபண்ணுவதால் அது எவ்வாறு அப்ராமாண்யம் ஆகும்? அவித்யா சோக மோஹமயம் முதலிய சம்சார பீஜதோஷ நிவர்த்தியாகிய விக்ஞான பலனை நீ பார்க்கவில்லையா? கேட்கவில்லையா?“तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः” (தத்ர கோ மோஹ: க: சோக: ஏகத்துமனுபஷ்யத:)“मन्त्रविदेवास्मिनात्मवित्सोऽहं भगवः शोचामि तं मा भगवाञ्छोकस्य पारं तारयतु” (மந்த்ர விதேவாஸ்மிநஆத்மவித்சோஅஹம் பகவ: சோசாமி தம் மா பகவாஞ்ச்சோகஸ்ய பாரம் தாரயது) இவை முதலிய நூ ற்றுக்கணக்கான சுருதிவாக்கியங்கள் இவ்வாறு இருக்கும்பொழுது, இந்த வாக்கியங்களில் இவ்வாறு நிச்சயமான பலனுடன் கூடிய விக்ஞானம் இருக்கின்றதா என்ன? அதற்கு அப்ராமாண்யத்தால் பலனும் நிச்சயமான விக்ஞானமும் உண்டாக்கும் வாக்யங்கள் ஏன் அப்ரமாணமாக ஆகக்கூடாது? அதை அவ்வாறு அப்ரமாணமாய் கருதினால் தர்சபூர்ணமாச முதலிய விஷயங்களின் வாக்கியங்களில் எவ்வாறு விசுவாசம் உண்டாகும்?
भाष्यम् - पूर्व - ननु दर्शपूर्णमासादिवाक्यानां पुरुषप्रवृत्ति-विज्ञानोत्पादकत्वात् प्रामाण्यम्। आत्मविज्ञानवाक्येषु तन्नास्तीति।
அனுவாதம்- பூர்வ- தர்சபூர்ணமாசம் முதலிய வாக்கியங்கள் புருஷப்ரவ்ருத்தி விக்ஞானத்தை உண்டுபண்ணுவதால் பிராமாண்யம் ஆகும். ஆத்ம விக்ஞான வாக்கியங்களில் அது இல்லை.
भाष्यम्- सिद्धान्ती- सत्यमेवम्, नैष दोषः। प्रामाण्यकारणोपपत्तेः। प्रामाण्यकारणं च यथोक्तमेव, नान्यत्। अलङ्कारश्चायम्, यत्सर्वप्रवृत्तिबीजनिरोधफलवदविज्ञानो-त्पादकत्वम् आत्मप्रतिपादकवाक्यानां नाप्रामाण्यकारणम्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- சரிதான், ஆனால் இது ஒரு தோஷம் இல்லை. ஆத்ம விக்ஞான விஷயமான வாக்கியங்களிலும் கூட பிராமாண்யத்திற்கு வேண்டிய காரணம் இருக்கின்றது. பிரமாண்ய காரணம் முன்பு கூறப்பட்டதே, வேறு இல்லை. எல்லா விதமான ப்ரவ்ருத்தியின் பீஜ நிரோதமே இதன் பலன். இவ்வாறான விக்ஞானத்தை உண்டுபண்ணும் ஆத்மபிரதிபாதக வாக்கியங்கள் பூஷணமாகும். அவை அந்த அப்ராமாண்யத்திற்குக் காரணமாகாது.
भाष्यम् - यक्तूक्तम्“विज्ञाय प्रज्ञां कुर्वीत” (बृ० उ० ४। ४। २१) इत्यादिवचनानां वाक्यार्थविज्ञानव्यतिरेकेण उपासनार्थत्वमिति, सत्यमेतत्, किन्तु नामपूर्वविध्यर्थता, पक्षे प्राप्तस्य नियतार्थतैव।
அனுவாதம்- இதைத்தவிர எது கூறப்பட்டதோ“विज्ञाय प्रज्ञां कुर्वीत” (விக்ஞாய பிரக்ஞாம் குர்வீத) முதலிய வசனங்களால் வாக்யார்த்த விக்ஞானத்தை காட்டிலும் வேறான உபாசனா அர்த்தத்தை உடையது என்பது சத்தியம், ஆனால் அது அபூர்வ விதியாகாது. ஆனால் ஒரு பக்ஷத்தில் அடையப்படுகின்ற உபாசனையின் நியமத்தின் பொருட்டாகும்.
भाष्यम् - पूर्व - कथं पुनरुपासनस्य पक्षप्राप्तिः? यावता पारिशेष्यादात्मविज्ञानस्मृतिसन्ततिः नित्यैवेत्यभिहितम्।
அனுவாதம்- பூர்வ- ஆனால் எவ்வாறு மறுபடியும் உபாசனைக்கு ஒரு பக்ஷம் ஏற்படுகிறது.? அதாவது முன்கூறியபடி ஆத்ம ஞானத்தால் அநாத்ம சித்தனையின் நிவ்ருத்தியை அடைந்ததின் முடிவில் ஆத்ம விக்ஞான ஸ்மிருதி ப்ரவாஹமானது நித்யம் என்று சித்திக்கிறது.
भाष्यम्-सिद्धान्ती-बाढम्, यद्यप्येवम्, शरीरारम्भकस्य कर्मणो नियतफलत्वात्, सम्यग्ज्ञानप्राप्तावप्यवश्यम्भाविनी प्रवृत्ति-र्वानःकायानाम्, लब्धवृत्तेः कर्मणो बलीयस्त्वान्मुक्तेष्वादि-प्रवृत्तिवत्। तेन पक्षे प्राप्तं ज्ञानप्रवृत्तिदौर्बल्यम्। तस्मात्त्याग-वैराग्यादिसाधनबलावलम्बेन आत्मविज्ञानस्मृतिसन्ततिर्नियन्तव्या भवति, न त्वपूर्वा कर्तव्या, प्राप्तत्वाद् इत्यवोचाम। तस्मात् प्राप्तविज्ञानस्मृतिसन्ताननियमविध्यर्थानि“विज्ञाय प्रज्ञां कुर्वीत” इत्यादिवाक्यानि, अन्यार्थासम्भवात्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- சரிதான். அவ்வாறு இருந்தாலும் சரீர ஆரம்பத்திற்கான கர்மம் நியதபலனாக இருப்பதால் சம்யக்ஞானம் அடைந்தாலும் அவசியம் ஏற்படக்கூடிய ப்ரவ்ருத்தியானது வாக், மனம், சரீரம் முதலியவைகளில் கர்மங்களால் அடைந்த வ்ருத்தியானது வில்லில் இருந்து விடப்பட்ட அம்புபோல் மிகுந்த வலிமை உடையது. ஆகையால் இந்த சந்தர்ப்பத்தில் (பக்ஷத்தில்) ஞானப்ரவ்ருத்தியானது மிகக்கடினம். ஆகையால் தியாகம், வைராக்கியம் முதலிய சாதனபலனை அவலம்பித்து ஆத்மவிக்ஞானஸ்மிருதி ப்ரவாஹத்தை நியமனம் செய்யவேண்டியதாகிறது. அதனால் அபூர்வ விதியால் செய்யத்தகுந்ததல்ல என்பது முன்பே கூறப்பட்டது. ஆகையால் ப்ராப்தியான விக்ஞானஸ்மிருதி சந்தானநியமவிதி அர்த்தங்கள் குறிக்கும்,“विज्ञाय प्रज्ञां कुर्वीत” ஆகிய வாக்கியங்களாகும். ஏனெனில் இதற்கு வேறு அர்த்தம் கொள்ளுதல் சம்பவிக்காது.
भाष्यम् - पूर्व - नन्वनात्मोपासनमिदम्, इतिशब्दप्रयोगात्, यथा“प्रियमित्येतदुपासीत” इत्यादौ न प्रियादिगुणा एवोपास्याः, किं तर्हि? प्रियादिगुणवत्प्राणाद्येवोपास्यम्, तथेहापि इति परात्मशब्दप्रयोगाद् आत्मगुणवदनात्मवस्तूपास्यमिति गम्यते।
அனுவாதம்- பூர்வ- ஆனால் இது அநாத்மஉபாசனம் எவ்வாறு“प्रियमित्येतदुपासीत” (ப்ரியமித்யேததுபாசீத) முதலிய வாக்கியங்களில் “इति” (இதி-இவ்வாறு) என்ற சப்தப் பிரயோகத்தால் ப்ரியம் முதலிய குணங்களையே உபாசிக்க வேண்டுயவதில்லையா? வேறு என்ன? பிரியம் முதலிய குணங்களைப்போல் ப்ராணன் முதலியவைகளை உபாசிக்க வேண்டும். அவ்வாறே இங்கும்“इति” என்ற சொல் ஆத்மசப்தத்திற்கு பின் ப்ரயோகம் செய்யப்பட்டுள்ளதால் ஆத்மாவிற்கு சமமான குணமுடைய அநாத்ம வஸ்துக்களும் உபாசனைக்குரியதே என்று அறியப்படுகிறது.
भाष्यम् - आत्मोपास्यत्ववाक्यवैलक्षण्याच्च परेण च वक्ष्यति-“आत्मानमेव लोकमुपासीत” (१। ४। १५) इति। तत्र च वाक्ये आत्मैवोपास्यत्वेनाभिप्रेतो द्वितीयाश्रवणादात्मानमेवेति। इह तु न द्वितीया श्रूयते। इतिपरश्चात्मशब्दः“आत्मेन्येवोपासीत” इति। अतो नात्मोपास्य आत्मगुणश्चान्य इति त्ववगम्यते।
அனுவாதம்- ஆத்மாவின் உபாயத்துவத்தைக் கூறும் வாக்கியத்திற்கு விலக்ஷணமாய் இருப்பதால் இந்த வாக்கியம் அநாத்ம உபாஸனா சம்பந்தம் உடையது ஆகும். இனி சுருதி கூறப்போகிறது-“आत्मानमेव लोकमुपासीत” (ஸ்ருதி ஆத்மானமேவ லோகமுபாசீத) என்று, அங்கு அந்த வாக்கியத்தில் ஆத்மாவையே உபாயத்துவமாக அபிப்ராயமாகும். ஏனெனில் இந்த ஆத்ம பதத்தில் த்விதீயம் கேள்விப்பட்டதால் ஆத்மாவே என்பதாகும். இங்கு இரண்டாவது இல்லை என்பது சுருதியினால் அறிகிறோம். “इति” என்று ஆத்மபதத்திற்குப் பின் வருகிறது.“आत्मेन्येवोपासीत” (ஆத்மேவோபாசீத) என்று. ஆகையால் அது ஆத்மா உபாசனை அல்ல. ஆத்மா குணம் போன்று வேறான அநாத்மாவே உபாசிக்க வேண்டும் என தெரிகிறது.
भाष्यम् - सिद्धान्ती - न, वाक्यशेष आत्मन उपास्यत्वे-नावगमात्। अस्यैव वाक्यस्य शेषे आत्मैवोपास्यत्वेनावगम्यते“तदेतत्पदनीयमस्य सर्वस्य यदयमात्मा” (बृ० उ० १। ४। ७)“अन्तरतरं यदयमात्मा”(बृ० उ० १। ४। ८)“आत्मानमेवावेत्” (१। ४। १०) इति।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. வாக்கியத்தின் ஆத்மாவையே உபாசிக்க வேண்டும் என்று அறியப்படுகிறது. இந்த வாக்கியசேஷத்தின் முடிவில் ஆத்மாவையே உபாசிக்கவேண்டும் என்று தெரிகிறது-“तदेतत्पदनीयमस्य सर्वस्य यदयमात्मा” (ததேதத்பதநீயமஸ்ய சர்வஸ்ய யதயமாத்மா)“अन्तरतरं यदयमात्मा” (அந்தரதரம் யதயமாத்மா)“आत्मानमेवावेत्” (ஆத்மானமேவாவேத்) என்று.
भाष्यम् - पूर्व - प्रविष्टस्य दर्शनप्रतिषेधादनुपास्यत्वमिति चेत्। यस्यात्मनः प्रवेश उक्तस्तस्यैव दर्शनं वार्यते“तं न पश्यन्ति”(४। ३। २३) इति प्रकृतोपादानात्। तस्मादात्मनोऽनु-पास्यत्वमेवेति।
அனுவாதம்- பூர்வ- (சரீரத்தினுள்) பிரவேசம் செய்த ஆத்மாவின் தரிசனம் தடைப்பட்டதால் அதற்கு உபாசனைக்கு உரியது அல்ல என்று சித்திக்கிறதே எனில்? எந்த ஆத்மாவிற்கு பிரவேசம் கூறப்பட்டதோ அதனுடைய தரிசனத்தை மேல் வரும் வாக்கியம் தடை செய்கிறது-“तं न पश्यन्ति” என்று ஆத்மா உபாசிக்க வேண்டியதில்லை என்று சித்திக்கின்றதே எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, अकृत्स्नत्वदोषात्। दर्शनप्रतिषेधोऽकृत्स्नत्वदोषाभिप्रायेण नात्मोपास्यत्वप्रतिषेधाय। प्राणनादिक्रियाविशिष्टत्वेन विशेषणात्। आत्मनश्चेदुपास्यत्व-मनभिप्रेतं प्राणनाद्येकैकक्रियाविशिष्टस्यात्मनोऽकृत्स्नत्व-वचनमनर्थकं स्यात्“अकृत्स्नो ह्येषोऽत एकैकेन भवति” (१। ४। ७) इति अतोऽनेकैकविशिष्टस्त्वात्मा कृत्स्नत्वादुपास्य एवेति सिद्धम्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஏனெனில் அதற்கு பூர்ணமற்ற தோஷம் உண்டாகும். ஆத்மாவை பார்க்கமுடியாது என்றது அதன் அபூர்ணத்வ ரூபதோஷத்தின் அபிப்ராயத்தாலேயன்றி அதன் உபாசனையை தடுக்கும் அபிப்ராயத்தால் அல்ல. ஏனெனில் ப்ராணனாதி கிரியா விசிஷ்டமானதால் அது விசேஷணமாய் இருக்கிறது. ஆத்மாவிற்கு உபாஸ்யத்துவம் அபிப்பிராயம் இல்லை எனில் பிராணன் முதலிய ஒவ்வொரு கிரியா விசிஷ்ட ஆத்மாவிற்கு பூர்ணத்தன்மை அற்றது என்ற வசனம் அர்த்தமற்றதாகிவிடும்,“अकृत्स्नो ह्येषोऽत एकैकेन भवति” (அக்ருத்ஸ்னோ ஹேஷோ அத ஏகைகேன பவதி) என்ற வசனமாகும். ஆகையால் ஒவ்வொரு கிரியையினால் விசிஷ்டமாகாத பூர்ண ஆத்மா உபாசிக்க வேண்டியதே என்று சித்தமாகிறது.
भाष्यम् - यस्त्वात्मशब्दस्य इतिपरः प्रयोगः, आत्मशब्दप्रत्यययोः आत्मतत्त्वस्य परमार्थतोऽविषयत्वज्ञापनार्थम्, अन्यथा आत्मानमुपासीतेत्येवमवक्ष्यत्। तथा चार्थादात्मनि शब्दप्रत्ययावनुज्ञातौ स्याताम्, तच्चानिष्टम्,“नेति नेति” (२। ३। ६)“विज्ञातारमरे केन विजानीयात्” (२। ४ । १४)“अविज्ञातं विज्ञातृ”(३। ८। १२)“यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह” (तै० उ० २। ४। १) इत्यादिश्रुतिभ्यः। यत्तु “आत्मानमेव लोकमुपासीत” (१। ४। १५) इति तदनात्मोपासन प्रसङ्गनिवृत्ति-परत्वान्न वाक्यान्तरम्।
அனுவாதம்- எதனால் ஆத்ம சப்தத்திற்கு“इतिपरः” (இதிபர) என்று பிரயோகம் எனில் ஆத்ம சப்த ப்ரத்யயங்களுக்கு ஆத்மதத்துவத்தின் பரமார்த்தமாய் (உண்மையாய்) அவிஷயத்துவத்தை ஞாபகப்படுவதற்காக ஆகும். வேறு வகையாய் ஆத்மாவை உபாசி என்று கூறியிருக்கலாம். அவ்வாறு எடுத்துக்கொண்டால் ஆத்மாவில் ஆத்ம சப்த பிரத்யயங்களின் விஷயத்தன்மை ஒப்புக்கொண்டதாகும். அது சரியாகாது. (அது அநிஷ்டம்) “नेति नेति” (நேதி நேதி)“विज्ञातारमरे केन विजानीयात्” (விக்ஞாதாரமரே கேன விஜாநீயாத்) “अविज्ञातं विज्ञातृ” (அவிக்ஞாதம் விக்ஞாத்ரு)“यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह” (யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ) இவை முதலிய சுருதிகளால் அறிகிறோம். மேலும் “आत्मनमेव लोकमुपासीत” (ஆத்மானமேவ லோகமுபாஸீ ¦த) என்று அந்த அநாத்ம உபாசனையை நிவர்த்தி செய்வதற்காகவே ப்ரவர்த்தித்திருப்பதால் வேறு விதமான வாக்கியம் அல்ல.
भाष्यम् - पूर्व - अनिर्ज्ञातत्वसामान्यादात्मा ज्ञातव्योऽनात्मा च। तत्र कस्मादात्मोपासने एव यत्न आस्थीयते“आत्मेत्येवोपासीत” इति नेतरविज्ञान इति?
அனுவாதம்- பூர்வ- பூர்ணமாய் அறியாததில் ஆத்மாவும், அநாத்மாவும் சமானமாய் இருப்பதால் அறியப்படவேண்டியதே ஆகும். அதனால் “आत्मेत्येवोपासीत” (ஆத்மேத்யேவோபாசீத) என்ற இந்த வாக்கியத்தின்படி ஆத்ம உபாசனையில் மட்டும் எதற்காக முயற்சி செய்து விச்வாசம் செய்யவேண்டும், ஏன் அநாத்ம உபாசனை கூறப்படவில்லை?
भाष्यम् - सिद्धान्ती - अत्रोच्यते- तदेतदेव प्रकृतं पदनीयं गमनीयं नान्यत्। अस्य सर्वस्येति निर्धारणार्था षष्द्भी। अस्मिन्सर्वस्मिन्नित्यर्थः। यदयमात्मा यदेतदात्मतत्त्वम्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- இங்கு கூறப்படுகிறது- அந்த இந்த மேன்மையான ஆத்மாவையே அடையவேண்டும். மற்றவைகளை அல்ல (அநாத்மாக்களை அல்ல).“अस्य सर्वस्य” (அஸ்ய சர்வஸ்ய) என்பது நிச்சயமான அர்த்தத்திற்காக 6-ஆம் வேற்றுமை.अस्मिन् (இதில்) என்றதுसर्वस्मिन् (எல்லாவற்றிலும்) என்ற அர்த்ததிற்காக ஆகும். எது இந்த ஆத்மா, என்பது இந்த ஆத்ம தத்துவம் என்பதாகும்.
भाष्यम् - किं न विज्ञातव्यमेवान्यत्? न, किं तर्हि? ज्ञातव्यत्वेऽपि न पृथग्ज्ञानान्तरमपेक्षत आत्मज्ञानात्। कस्मात्? अनेनात्मना ज्ञातेन हि यस्मादेतत्सर्वमनात्मजातम् अन्यद्यत्तत्सर्वं समस्तं वेद जानाति।
அனுவாதம்- அதனால் என்ன, மற்றது (அநாத்மா) அறிய வேண்டியது இல்லையா? வேண்டியதில்லை, எனில்? அறிய வேண்டியதாய் இருந்தாலும் ஆத்மஞானத்தைத் தவிர வேறு ஒரு ஞானத்தையும் அபேக்ஷிக்காது. ஏன் அபேக்ஷிக்காது? எதனால் எனில் இந்த ஆத்ம ஞானத்தால்தான் அந்த அநாத்மாவினால் உண்டான மற்றவை எல்லாம் அந்த புருஷன் அறிகின்றான்.
भाष्यम् - पूर्व - नन्वन्यज्ञानेनान्यन्न ज्ञायत इति।
அனுவாதம்- பூர்வ- ஆனால் மற்ற பதார்த்தத்தின் ஞானத்தால் மற்றொன்றை அறிய முடியாது.
भाष्यम्-सिद्धान्ती-अस्य परिहारं दुन्दुभ्यादिग्रन्थेन वक्ष्यामः। कथं पूनरेतत् पदनीयमित्युच्यते- यथा ह वै लोके पदेन, गवादिखुरािङ्कतो देशः पदमित्युच्यते तेन पदेन, नष्टं विवित्सितं पशुं पदेनान्वेषमाणोऽनुविन्देल्लभेतएवमात्मनि लब्धे सर्वमनुलभत इत्यर्थः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- இதன் நிராகரணம் முரசு முதலியவைகளை கயிற்றால் கட்டி அதன் சப்தத்தை நிராகாரிப்பதுபோல் கூறுகிறேன். ஆனால் அதை எவ்வாறு அடைவது என்பது கூறப்படுகிறது - எவ்வாறு உலகில் கால் அடியினால் (பதத்தால்) பசு முதலியவைகளின் கால் படிந்த இடம் பதம் எனப்படுகிறது. அந்த பதத்தை வைத்து நஷ்டமடைந்த பசுவை அடைய விருப்பப்பட்டு தேடி பசுவை அடைகிறான். அவ்வாறு ஆத்மாவை அடைந்தால் எல்லாம் அடைந்தவனாகின்றான் என்பது பொருள்.
भाष्यम् - पूर्व - नन्वात्मनि ज्ञाते सर्वमन्यज्ज्ञायत इति ज्ञाने प्रकृते, कथं लाभोऽप्रकृत उच्यत इति?
அனுவாதம்- பூர்வ- ஆத்மாவை அறிந்தால் மற்றவை எல்லாம் அறிந்ததாகுமே என்ற ஞானம் இருக்கும் பொழுது எவ்வாறு அதை அடைந்தபின் என்ற அர்த்தம் தோன்றுகிறதே எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, ज्ञानलाभयोरेकार्थत्वस्य विवक्षितत्वात्। आत्मनो ह्यलाभोऽज्ञानमेव, तस्माज्ज्ञानमेवात्मनो लाभः, नानात्मलाभवदप्राप्तप्राप्तिलक्षण आत्मलाभः, लब्धृलब्धव्ययोर्भेदाभावात्। यत्र ह्यात्मनोऽनात्मा लब्धा, लब्धव्योऽनात्मा। स चाप्राप्त उत्पाद्यादिक्रियाव्यवहितः कारकविशेषोपादानेन क्रियाविशेषमुत्पाद्य लब्धव्यः।
அனுவாதம்-ஸித்தாந்தீ-அவ்வாறு அல்ல, ஏன்எனில் ஞானம், லாபம் ஆகிய இரண்டிற்கும் ஒரே அர்த்தமாகும் என்று விளக்கப்பட்டுள்ளது. ஆத்மாவை அடையமுடியாததின் காரணம் அக்ஞானம். ஆகையால் ஞானமே ஆத்மாவின் லாபம் ஆகும். அநாத்ம லாபம் போல் அப்ராப்தத்தின் ப்ராப்தி லக்ஷணமுடையது அல்ல, ஆத்மலாபம். எங்கு ஆத்மா அநாத்மாவை அடையப்பட வேண்டியதாகிறதோ அங்கு ஆத்மா அடையப்பட்டது(लब्धा)ஆகும். அநாத்மா அடையப்படவேண்டியது(लब्धव्या) ஆகிறது. அது அப்ராப்த (அடையப்படாத) அதாவது உத்பாத்யம் முதலிய கிரியைகள் தடைபட்டதை காரக விசேஷங்களை உத்பாதனம் செய்வதால் (உண்டாக்குவதால்) கிரியா விசேஷங்களை உண்டாக்கி அடையவேண்டியது.
भाष्यम् - स त्वप्राप्तप्राप्तिलक्षणोऽनित्यः, मिथ्याज्ञान-जनितकामक्रियाप्रभवत्वात्, स्वप्ने पुत्रादिलाभवत्। अयं तु तद्विपरीत आत्मा। आत्मत्वादेव नोत्पाद्यादिक्रियाव्यवहितः। नित्यलब्धस्वरूपत्वेऽपि सत्यविद्यामात्रं व्यवधानम्। यथा गृह्यमाणाया अपि शुक्तिकाया विपर्ययेण रजताभासया अग्रहणं विपरीतज्ञानव्यवधानमात्रम्, तथा ग्रहणं ज्ञानमात्रमेव, विपरीत-ज्ञानव्यवधानमोहार्थत्वाज्ज्ञानस्य। एवमिहाप्यात्मनोऽलाभोऽ-विद्यामात्रव्यवधानम्। तस्माद्विद्यया तदपोहनमात्रमेव लाभो नान्यः कदाचिदप्युपपद्यते। तस्मादात्मलाभे ज्ञानादर्थान्तरसाधनस्य आनर्थक्यं वक्ष्यामः। तस्मान्निराशङ्कमेव ज्ञानलाभयोरेकार्थत्वं विवक्षयन्नाहज्ञानं प्रकृत्य, अनुविन्देदिति। विन्दतेर्लाभार्थत्वात्।
அனுவாதம்- அந்த (அநாத்மலாபம்) மித்யா ஞானத்தினால் உண்டான காமக்ரியா ப்ரபாவத்தால் ஸ்வப்னத்தில் புத்திரன் முதலியவைகளை அடைவது போன்ற அப்ராப்தத்தின் பிராப்தி லக்ஷணமானதும் அநித்யமானதும் ஆகும். இந்த ஆத்மா அதைக்காட்டிலும் விபரீதமானது (வேறானது) ஆத்மதத்துவமாய் இருப்பதால் உத்பத்தி முதலிய கிரியைகளால் தடுக்கப்படவில்லை. நித்யப்ராப்த ஸ்வரூபமாத்திரமாய் இருந்தாலும் அவித்தையினால் மறைக்கப்பட்டுள்ளது. எவ்வாறு சுத்தியை (சிப்பியை) கிரஹிக்ககூடியதாய் இருந்தாலும் விபரீதமான ரஜத ஆபாசத்தால் விபரீதஞானம் மறைத்ததால் மாத்திரம் கிரஹிக்க முடியாததாய் இருக்கின்றது. அவ்வாறு கிரஹணம் ஞானமாத்திரமே. விபரீத ஞானத்தை நீக்குவதால் ஞானம் இவ்வாறு இங்கும் அவித்யை நீக்குதலே ஆத்மாவை அடைவதாகும் (லாபமாகும்) ஆகையால் அவித்யா நீக்கம்மாத்திரமே ஆத்மாவின் லாபமாகும். வேறு எவ்விதத்தாலும் ஆத்மாவை அடையமுடியாது. ஆகையால் ஆத்ம லாபத்திற்கு ஞானத்தைக்காட்டிலும் வேறு சாதனம் அர்த்தமற்றது என்று கூறுகிறோம். ஆகையால் சங்கை இன்றி ஞானம், லாபம் இரண்டும் ஒரே அர்த்தமுடையதே என்று விவரித்து கூறுகிறார்- ஞானத்தின் மேன்மையான உண்மையை எடுத்துக்கொண்டு லாபத்தை அடை (अनुविन्देत् इति)विन्दते (விந்ததே) என்பது லாபார்த்தமாகும்)
भाष्यम्- गुणविज्ञानफलमिदमुच्यते- यथायमात्मा नाम रूपानुप्रवेशेन ख्यातिं गत आत्मेत्यादिनामरूपाभ्यां प्राणादिसंहतिं चोकं प्राप्तवानित्येवं यो वेद, स कीर्तिं ख्यातिंोकं च सातमिष्टैः सह विन्दते लभते। यद्वा यथोक्तं वस्तु यो वेद मुमुक्षूणामपेक्षितं कीर्तिशब्दितमैक्यज्ञानं तत्फलंोकशब्दितां मुक्तिमाप्नोतीति मुख्यमेव फलम्।
அனுவாதம்- குணவிக்ஞானபலம் இப்பொழுது கூறப்படுகிறது- எவ்வாறு இந்த ஆத்மா நாம, ரூபத்தில் பிரவேசித்து பெயர் பெற்றதாய் (புகழ் பெற்றதாய்) ஆத்மா முதலிய நாம ரூபங்களுடன் ப்ராணன் முதலியவைகளுடன் சேர்ந்து ஸ்லோகம் அதாவது இஷ்ட ஜனங்களை அடைந்து என்று எவன் அறிகின்றானோ அவன் கீர்த்தியையும், ஸ்லோகத்தையும் அதாவது இஷ்ட ஜனங்களுடன் சேர்ந்து அடைகின்றான். அல்லது முன்பு கூறப்பட்ட வஸ்துவை எவன் அறிகிறானோ அந்த முமுக்ஷுக்களால் அபேக்ஷிக்கப்படும் கீர்த்தி சப்தமானது ஆத்ம ஐக்ய ஞானத்தையும் மற்றும் ஸ்லோக சப்தத்தினால் குறிக்கப்படும் அதன் பலனாகிய மோக்ஷத்தை அடைகின்றான். மோக்ஷத்தை அடைவதே முக்கியமான பலன்.
अव - कुतश्चात्मतत्त्वमेव ज्ञेयमनादृत्यान्यदित्याह।
அனுவாதம்- அ.கை- மற்றவைகளை ஏற்றுக்கொள்ளாமல் ஆத்மதத்துவத்தை மட்டும் ஏன் அறிய வேண்டியது ஆகிறது? இதைக் குறித்து சுருதி கூறுகிறது.
तदेतत्प्रेयः पुत्रात्प्रेयो वित्तात्प्रेयोऽन्यस्मात्सर्वस्मादन्तरतरं यदयमात्मा। स योऽन्यमात्मनः प्रियं ब्रूवाणं ब्रूयात्प्रियं रोत्स्यतीतीश्वरो ह तथैव स्यादात्मानमेव प्रियमुपासीत। स य आत्मानमेव प्रियमुपास्ते न हास्य प्रियं प्रमायुक्तं भवति।। ८।।
மந்த்ரார்த்தம்- அந்த இந்த ஆத்மதத்துவம் புத்திரனைக் காட்டிலும் பிரியமானது. செல்வத்தைக் காட்டிலும் பிரியமானது மேலும் எல்லாற்றைக் காட்டிலும் மிகுந்த பிரியமானது. ஏன் எனில் இந்த ஆத்மா அவற்றை அபேக்ஷித்து மிகவும் உள்ளே இருக்கிறது.(अन्तरतरम्) (ஆத்மபிரியதர்சீ, ஆத்மாவைக்காட்டிலும் வேறானதை (அநாத்மாவை)ப் பிரியப்படுகிறானோ அந்த புருஷனிடம் கூறுகிறார், உன்னுடைய பிரியமானது நஷ்டம் அடையக்கூடியது என்று. ஏனெனில் அது அவ்வாறான தகுதி உடையதே. ஆகையால் ஆத்மரூப பிரியத்தையே உபாசனை செய். அந்த ஆத்மரூப பிரியத்தை எவன் உபாசனை செய்கின்றானோ அவனுடைய பிரியமானது முற்றிலும் மரணதர்மத்தை அடையாது.
भाष्यम् - तदेतदात्मतत्त्वं प्रेयः प्रियतरं पुत्रात्। पुत्रो हि लोके प्रियः प्रसिद्धस्तस्मादपि प्रियतरमिति निरतिशय प्रियत्वं दर्शयति। तथा वित्ताद्धिरण्यरत्नादेः, तथा अन्यस्माद्यद्यल्लोके प्रियत्वेन प्रसिद्धं तस्मात्सर्वंस्मादित्यर्थः।
அனுவாதம்- அந்த இந்த ஆத்மதத்துவம் பிரியமானது. புத்திரனைக்காட்டிலும் பிரியமானது. புத்திரன் அல்லவா உலகில் பிரியமானவன். அதைக்காட்டிலும் மிகுந்த நிரதிசய பிரியத்வம் ஆத்மதத்துவம் என்று காணப்படுகிறது. அவ்வாறே செல்வங்களாகிய தங்கம் ரத்தினங்கள் முதலியவைகளைக்காட்டிலும், அவ்வாறே வேறு எது எதெல்லாம் உலகில் பிரியமானதாய் பிரசித்தமாய் உள்ளதோ அதைக்காட்டிலும் பிரியமானது. ஆகையால் எல்லாவற்றையும் விட பிரியமானது என்பது பொருள்.
भाष्यम् - तत्कस्मादात्मतत्त्वमेव प्रियतरं न प्राणादि? इत्युच्यते- अन्तरतरं बाह्यात्पुत्रवित्तादेः प्राणपिण्डसमुदायो ह्यन्तरोऽभ्यन्तरः सन्निकृष्ट आत्मनः। तस्मादप्यन्तरादन्तरतरं यदयमात्मा यदेतदात्मतत्त्वम्। यो हि लोके निरतिशयप्रियः स सर्वप्रयत्नेन लब्धव्यो भवति। तथायमात्मा सर्वलौकिकप्रियेभ्यः प्रियतमः। तस्मात्ताभे महान्यत्न आस्थेव इत्यर्थः, कर्त्तव्यताप्राप्तमप्यन्यप्रियलाभे यत्नमुज्झित्वा।
அனுவாதம்- எதனால் அந்த ஆத்மதத்துவமே பிராணன் முதலியவைகளை விட மிகுந்த பிரியமானது? அதற்குக்கூறப்படுகிறது- பாஹ்ய புத்திரன், செல்வம் முதலியவைககை் காட்டிலும் உள்ளில் இருப்பது பிராணபிண்ட சமுதாயங்கள் அவைகளைக் காட்டிலும் உள் இருப்பதனுள் மிகவும் உள்ளே ஆத்மாவின் சமீபத்தில் இருக்கின்றது. ஆகையால் அதைக்காட்டிலும் உள்ளினுள் மிகவும் உள்ளே எந்த ஆத்மாவோ அதுவே இந்த ஆத்ம தத்துவம். எது உலகில் நிரதிசயமான பிரியமாய் உள்ளதோ அதை மிகுந்த பிரயாசையுடன் அடையவேண்டும். அவ்வாறே இந்த ஆத்மா லௌகிகமான பிரியமானவைகளைக்காட்டிலும் மிகுந்த பிரியமாய் இருப்பது. ஆகையால் அதை அடைவதற்கு வேறு பிரியமானதை அடைவதற்கான கர்தவ்யம் இருந்தாலும் அதைவிட்டுவிட மிகுந்த பிரயத்னம். அவசியம் (ஆத்மலாபத்தின் பொருட்டு) செய்யவேண்டும்.
भाष्यम् - कस्मात्पुनः आत्मानात्मप्रिययोरन्यतरप्रियहानेन इतरप्रियोपादानप्राप्तौ आत्मप्रियोपादानेनैवेतरहानं क्रियते न विपर्ययः? इत्युच्यते- स यः किश्चदन्यमनात्मविशेषं पुत्रादिकं प्रियतरमात्मनःसकाशाद् ब्रुवाणं ब्रूयादात्मप्रियवादी। किम्? प्रियं तवाभिमतं पुत्रादिलक्षणं रोत्स्यत्यावरणं प्राणसंरोधं प्राप्स्यति। विनतीति। स कस्मादेवं ब्रवीति? यस्मादीश्वरः समर्थः पर्याप्तोऽसावेवं वक्तुं ह यस्मात्तस्मात्तथैव स्याद्यत्तेनोक्तं प्राणसंरोधं प्राप्स्यति। यथाभूतवादी हि सः, तस्मात्स ईश्वरो वक्तुम्।
அனுவாதம்- ஆனால் எதனால் இந்த ஆத்மா அநாத்மா இவைகளின் பிரியத்தில் ஒன்றின் பிரியம் நீங்கியபின் மற்றதில் பிரியம் அடையப்படும்போது ஆத்ம பிரியத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு மற்றதின் (அநாத்மாவின் பிரியம்) நஷ்டமானது ஏற்படுகிறது. ஆனால் இதற்கு விபரீதமாக ஏன் ஏற்படுவதில்லை? அதற்குக் கூறப்படுகிறது- எவன் ஒருவன் வேறு அநாத்ம விஷயம் புத்திரன் முதலியவைகளை ஆத்மாவைக்காட்டிலும் அதிக ப்ரியமானது என்று கூறுபவனைக் குறித்து ஆத்மவாதி கூறுகின்றார். அது என்ன? நினைக்கின்ற புத்திரன் முதலிய லக்ஷணமாகிய பிரியம் அழவைத்து மறைந்து பிராணனை நஷ்டமடையச்செய்யும். அவர் எதற்காகக் கூறினார்? அவருடைய சாமர்த்தியம் இவ்வாறு கூறுவதற்கு ஏற்றதாய் இருக்கின்றது. எதனால் அவ்வாறே அதனால் பிராணநஷ்டம் அடைவாய் என்பது நிச்சயம், அந்த யதார்த்தவாதியாய் இருப்பதால் அவ்வாறு கூறுவதற்கு சாமர்த்தியம் உடையவராய் இருக்கின்றார். (இங்குईश्वर शब्दः (ஈஸ்வர சப்தம் சாமர்த்தியத்தைக் குறிக்கின்றது)
भाष्यम् - ईश्वरशब्दः क्षिप्रवाचीति केचित्। भवेद्यदि प्रसिद्धिः स्यात्। तस्मादुज्झित्वान्यत्प्रियमात्मानमेव प्रियमुपासीत।
அனுவாதம்- சிலர் ஈஸ்வரசப்தம் சீக்கிரம் எனப்பொருள் என்று கூறுகிறார்கள். அவ்வாறு பிரசித்தமாக இருக்கட்டும். ஆகையால் மற்ற விஷயங்களில் பிரியத்தைவிட்டு ஆத்மாவையே பிரியம் என்று உபாசிப்பாயாக.
भाष्यम् - स य आत्मानमेव प्रियमुपास्ते, आत्मैव प्रियो नान्योऽस्तीति प्रतिपद्यतेऽन्यौकिकं प्रियमप्यप्रियमेवेति नििश्चत्य उपास्ते चिन्तयति, न हास्यैवंविदः प्रियं प्रमायुक्तं प्रमरणशीलं भवति।
அனுவாதம்- எவன் ஒருவன் ஆத்மாவையே பிரியம் என்று உபாசிக்கின்றானோ, அதாவது ஆத்மாவே பிரியம் மற்ற (அநாத்மாக்கள்) அல்ல என்று அறிகின்றானோ அவன் மற்ற லௌகிக ப்ரியமும் அப்ரியம் என்று நிச்சயித்து உபாசிக்கின்றான். எவன் இவ்வாறு பிரியத்தை அறிகின்றானோ அவன் மரண சீலத்தை (ஸ்வபாவத்தை) அடையமாட்டான்.
भाष्यम् - नित्यानुवादमात्रमेतत्, आत्मविदोऽन्यस्य प्रियस्याप्रियस्य चाभावात्। आत्मप्रियग्रहणस्तुत्यर्थं वा प्रियगुण- फलविधानार्थं वा मन्दात्मदर्शिनः। ताच्छील्यप्रत्ययोपादानात्।
அனுவாதம்- ஆத்மவித்திற்கு வேறு எதிலும் ப்ரியமோ, அப்ரியமோ கிடையாது. ஆகையால் இவ்வாறு கூறுவது நித்யவஸ்துவை விளக்குவதற்காகவே தான். அல்லது இவ்வாறு கூறுவது ஆத்மப்ரியத்தை கிரஹிப்பதைப் ஸ்துதிப்பதற்காக அல்லது திடமற்ற ஆத்மஞானிக்காக பிரியகுணத்துடன் கூடிய ஆத்மாவை உபாசித்தலால் உண்டாகும் பலனைக் கூறுவதற்காகவும் ஆகும்.“ताच्छील्य” எனும் (பிரத்யயத்தை எடுத்துகொண்டதால் ஆகும். (ताच्छील्य என்பது ஸ்வபாவம் ஆகும்).
अव - सूत्रिता ब्रह्मविद्या“आत्मेत्येवोपासीत” इति यदर्थोपनिषत्कृत्स्नापि। तस्यैतस्य सूत्रस्य व्याचिख्यासुः प्रयोजनाभिधित्सयोपोिज्जघांसति-
அனுவாதம்-அ.கை- உபநிஷத் முழுவதையும்“आत्मेत्येवोपासीत”(ஆத்மேத்யேவோபாஸீ த) என்று எந்த அர்த்தமுள்ளதோ அந்த பிரஹ்மவித்யா சுருக்கமாக கூற விரும்புகிறது- அதை வ்யாக்யானம் செய்ய விரும்பும் சுருதி இப்பொழுது அதன் ப்ரயோஜனத்தை கூற விரும்புகிறது.
तदाहुर्यद्ब्रह्मविद्यया सर्वं भविष्यन्तो मनुष्या मन्यन्ते। किमु तद्ब्रह्मावेद्यस्मात्तत्सर्वमभवदिति।। ९।।
மந்த்ரார்த்தம்- எந்த பிரஹ்மவித்தையினால் மனிதன் எல்லாமாக ஆகின்றேன் என்று கருதுகிறான் என்று கூறப்பட்டது. அந்த பிரஹ்மம் எதை அறிந்தது? எதனால் அது எல்லாமாக ஆயிற்று?
भाष्यम् - तदिति वक्ष्यमाणमनन्तरवाक्येऽवद्योत्यं वस्त्वाहुः। ब्राह्मणा ब्रह्म विविदिषवो जन्मजरामरण प्रबन्धचक्रभ्रमणकृतायासदुःखोदकापारमहोदधिप्लवभूतं गुरुमासाद्य तत्तीरमुत्तितीर्षवो धर्माधर्मसाधनतत्फललक्षणात् साध्यसाधनरूपान्निर्विण्णाः तद्विलक्षणनित्यनिरतिशयश्रेयः प्रतिपित्सवः।
அனுவாதம்-तत् (அது) என்று பின்வரும் வாக்கியத்தால் பிரகாசப்படுத்தப் போகின்ற அறியவேண்டிய வஸ்துவை கூறுகின்றார். பிராஹ்மணத்தினால்- பிரஹ்மத்தை அறிந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஜன்ம மரண, ஜரை, மரணம் முதலிய பிரதிபந்த சக்கரத்தில் உழன்று அதன் ஆயாச (சிரம) துக்கம் என்னும் மஹா சமுத்திரத்தில் மூழ்கி அதிலிருந்து மீண்டு ஒடத்திற்கு சமானமான குருவை அடைந்து அந்த தீரத்தை தாண்டுவதற்கு இச்சை உள்ளவர்கள் தர்மாதர்ம சாதனம், அதன் பலனின் லக்ஷணமாகிய சாத்திய சாதன ரூபத்தால் கஷ்டம் அடைந்தவர்கள் அதைவிட்டு அதைவிட வேறான நித்திய நிரதிசய ஸ்ரேயஸ்ஸை அடைய இச்சை உள்ளவர்களாக ஆகின்றனர்.
भाष्यम् - किमाहुरित्याह- यद्ब्रह्मविद्यया ब्रह्म परमात्मा तद्यया वेद्यते सा ब्रह्मविद्या तया ब्रह्मविद्यया, सर्वं निरवशेषं भविष्यन्तो भविष्याम इत्येवं मनुष्या यन्मन्यन्ते। मनुष्यग्रहणं विशेषतोऽधिकारज्ञापनार्थम्। मनुष्या एव हि विशेषतोऽभ्युदयनिः श्रेयससाधनेऽधिकृता इत्यभिप्रायः।
அனுவாதம்-சுருதி என்ன கூறுகிறது என்று கூறுகிறார்- எந்த பிரஹ்மவித்யா அதாவது பிரஹ்ம பரமாத்மா என்பது எதனால் அறியப்படுகிறதோ அது பிரஹ்மவித்யா. அந்த பிரஹ்மவித்யையினால் மீதியில்லாமல் எல்லாமாய் ஆகிவிடலாம் என்று மனிதர்கள் கருதுகிறார்கள். இங்கு மனிதனை எடுத்துக்கொண்டது, விசேஷமாய் மனிதனுக்கே அதிகாரம் உள்ளது என்று காண்பிப்பதற்காக ஆகும். மனிதர்களே விசேஷமாய் அப்யுதய பலனிற்கும், நிஸ்ரேயஸ பலனிற்கும் உள்ள ஸாதனத்திற்கு மனிதர்களுக்கே அதிகாரம் என்பது அபிப்பிராயம்.
भाष्यम् - यथा कर्मविषये फलप्राप्तिं ध्रुवां कर्मभ्यो मन्यन्ते, तथा ब्रह्मविद्याया सर्वात्मभावफलप्राप्तिं ध्रुवामेव मन्यन्ते। वेदप्रामाण्यस्योभयत्राविशेषात्। तत्र विप्रतिषिद्धं वस्तु लक्ष्यतेऽतः पृच्छामः-किमु तद्ब्रह्म यस्य विज्ञानात्सर्वं भविष्यन्तो मनुष्या मन्यन्ते? तत्किमवेद्यस्माद्विज्ञानात्तद् ब्रह्म सर्वमभवत्?
அனுவாதம்- எவ்வாறு கர்மவிஷயத்தில் கர்மத்தினால் பலப்பிராப்த்தி நிச்சயம் என்று நினைக்கிறார்களோ அவ்வாறே பிரஹ்மவித்யையினால் சர்வாத்ம பாவபலப்பிராப்தியும் நிச்சயம் அன்று கருதுகிறார்கள். ஏன்எனில் வேதத்தின் பிரமாணம் இவ்விரண்டின் விஷயங்களிலும் சமமாய் காணப்படுகிறது. ஆனால் (பிரஹ்ம ஞானத்தால் மோக்ஷம்) இந்த விஷயம் விபரீதமாய் அறியப்படுகிறது. ஆகையால் நாம் கேட்கிறோம். அந்த பிரஹ்மம் எது? எதன் விக்ஞானத்தால் எல்லாமாக ஆவேன் என்று மனிதர்கள் நினைக்கின்றார்கள்? அது எதை அறிந்தது? எந்த விக்ஞானத்தால் பிரஹ்மம் எல்லாமாயிற்று?
।। ब्रह्म किं जानाति? एतस्य उत्तरञ्च तादृश-प्रकारज्ञानफलञ्च ।।
भाष्यम् - ब्रह्मच सर्वमिति श्रूयते। तद्यद्यविज्ञाय कििञ्चत्सर्वमभवत्तथान्येषामप्यस्तु, किं ब्रह्मविद्यया? अथ विज्ञाय सर्वमभवत्, विज्ञानसाध्यत्वात्कर्मफलेन तुल्यमेवेत्यनित्यत्वप्रसङ्गः सर्वभावस्य ब्रह्मविद्याफलस्य। अनवस्थादोषश्च तदप्यन्यद्विज्ञाय सर्वमभवत्ततः पूर्वमप्यन्यद्विज्ञायेति। न तावदविज्ञाय सर्वमभवत्, शास्त्रार्थवैरूप्यदोषात्। फलानित्यत्वदोषस्तर्हि? नैकोऽपि दोषोऽर्थविशेषोपपत्तेः।।
அனுவாதம்- பிரஹ்மமும் சர்வம் (எல்லாம்) என்று சுருதியினால் அறிகிறோம், எதுவும் அறியாமலேயே எல்லாமாக ஆயிற்று என்றால் அவ்வாறு மற்றவைகளும் ஆகலாமே, இதனால் பிரஹ்மவித்யையினால் என்ன லாபம்? மேலும் அது அறிந்தே எல்லாமாக ஆயிற்று என்றால் விக்ஞானசாத்யமாவதால் கர்மபலனிற்கு சமம் ஆவதால் சர்வபாவமாகிய பிரஹ்மவித்யா பலனிற்கு அநித்யத்வம் ஏற்படும் என்பதாகும். அநவஸ்தா தோஷமும் உண்டாகும்- அது வேறு ஒன்றை அறிந்து, எல்லாமாக ஆயிற்று என்றால் அதற்குமுன், வேறு ஒன்று அறியப்பட்டது என ஆகுமே என்றால் - அதை அறியாமல் எல்லாம் ஆயிற்று என்று கூறுவது சாஸ்த்ரார்த்த விரோதமாகும். அவ்வாறு ஆனால் பலனிற்கு அநித்தியத்வ தோஷமாகுமே? விசேஷ பிரயோஜனமானதால் தோஷம் ஒன்றும் இல்லை.
अव - यदि किमपि विज्ञायैव तद्ब्रह्म सर्वमभवत्पृच्छामः-किमु तद् ब्रह्मावेत्? यस्मात्तत्सर्वमभवदिति। एवं चोदिते सर्वदोषानागन्धितं प्रतिवचनमाह-
அனுவாதம்- அ.கை- எதையாவது அறிந்துதான் அந்த பிரஹ்மம் சர்வம் (எல்லாம்) ஆயிற்று என்றால் அதற்கு இவ்வாறு கேள்வி கேட்கின்றோம்- அந்த பிரஹ்மம் எதை அறிந்தது? எதனால் எல்லாம் ஆயிற்று? என்று இவ்வாறு விசாரிக்கும் பொழுது இதில் எவ்வகையிலும் வாசனைக்கு கூட (கந்தமாந்திரம் கூட) தோஷம் இல்லை என்று சுருதி இவ்வாறு கூறுகின்றது.
ब्रह्म वा इदमग्र आसीत्तदात्मानमेवावेेत्। अहं ब्रह्मास्मीति। तस्मात्तत्सर्वमभवत्तद्यो यो देवानां प्रत्यबुध्यत स एव तदभवत्त-थर्षीणां तथा मनुष्याणां तद्धैतत्पश्यन्नृषिर्वामदेवः प्रतिपेदेऽहं मनुरभव ्ँसूर्यश्चेति। तदिदमप्येतर्हि य एवं वेदाहं ब्रह्मास्मीति स इद ँ् सर्वं भवति तस्य ह न देवाश्च नाभूत्या ईशते। आत्मा ह्येषा ्ँस भवति। अथ योऽन्यां देवतामुपास्तेऽन्योऽसावन्योऽहमस्मीति न स वेद यथा पशुरेव ँ्स देवानाम्। यथा ह वै बहवः पशवो मनुष्यं भुञ्ज्युरेवमेकैकः पुरुषो देवान्भुनक्त्येकस्मिन्नेव पशावादीय-मानेऽप्रियं भवति किमु बहुषु तस्मादेषां तन्न प्रियं यदेतन्मनुष्या विद्युः।। १०।।
மந்த்ரார்த்தம்-பிரஹ்மம் எதை அறிந்தது? என்பதற்கான பதிலும் இவ்வாறு அறிவதின் பலன் கூறப்படுகிறது. இதற்குமுன் பிரஹ்மமாகவே இருந்தது. அது தன்னையே‘நான் பிரஹ்மம்’ என்று அறிந்தது. ஆகையால் எல்லாம் ஆக ஆயிற்று. அவ்வாறு எந்த எந்த தேவர்கள் அறிந்தார்களோ அவர்கள் அந்த பாவமாகவே ஆனார்கள். அவ்வாறே ரிஷிகளும், மனிதர்களும் அவ்வாறே ஆனார்கள். அவ்வாறே அதைப் பார்த்து வாமதேவரும் அறிந்து நான் மனுவானேன், நான் சூரியன் ஆனேன் என்று அறிந்து கொண்டார். இப்பொழுது எவர்கள் மேல் சொல்லியவாறு“நானே பிரஹ்மமாய் இருக்கின்றேன்” என்று அறிகிறார்களோ அவர்களும் ப்ரஹ்மமாகவே
ஆகின்றார்கள். அவர்களை தேவர்களாலும் வெல்லுவதற்கு இயலாது. ஏனெனில் அவர்கள் தேவர்களுடைய ஆத்மாவாகவும் ஆகின்றார்கள். மேலும் எவர் அன்யதேவதையை“அது வேறு நான் வேறு”என்று இவ்வாறு உபாசிக்கின்றனரோ அவர் அறியவில்லை. எவ்வாறு நமக்கு பசுவோ அவ்வாறு தேவர்களுக்கு பசுவாகின்றான். எவ்வாறு உலகில் பசுக்களால் மனிதன் நன்றாய் காப்பாற்றப்படுகிறானோ அவ்வாறு ஒவ்வொரு மனிதனும் தேவதைகளைக் காப்பாற்றுகிறான் - எவ்வாறு ஒரு பசு நஷ்டமாவதை அறிந்தால் நமக்கு நன்மையாகவில்லை. இவ்வாறு இருக்கும் பொழுது அநேக பசுக்கள் நஷ்டமானால் என்ன சொல்லுவது? ஆகையால் மனிதன் (பிரஹ்ம தத்துவத்தை அறிவதில்) தேவதைகளுக்கு பிரியமில்லை. (ஏனெனில் மனிதனைப் பசு காப்பாற்றுவது போல் மனிதன் தேவர்களை காப்பாற்றுவதால் ஆகும். பிரஹ்மத்தை அறிந்தால் பிரஹ்மமே ஆகிவிடுவதால் ஆகும்)
भाष्यम् - ब्रह्मापरम्, सर्वभावस्य, साध्यत्वोपपत्तेः। न हि परस्य ब्रह्मणः सर्वभावपत्तिर्विज्ञानसाध्या। विज्ञानसाध्यां च सर्वभावापत्तिमाह-“तस्मात्तत्सर्वमभवत्” इति। तस्माद्ब्रह्म वा इदमग्र आसीदित्यपरं ब्रह्मेह भवितुमर्हति।
அனுவாதம்- ஸர்வபாவத்திற்கு சாத்யத்தன்மை உள்ளதால் இங்கு பிரஹ்மசப்தம் அபரப்ரஹ்மத்தைக் குறிக்கிறது. பரமாகிய ப்ரஹ்மத்திற்கு ஸர்வபாவத்தின் அடைவு விக்ஞான சாத்தியம் அல்ல. விக்ஞான சாத்தியத்திற்கு ஸர்வபாவத்தின் அடைவை சுருதி கூறுகிறது- “तस्मात्तत्सर्वमभवत्” (தஸ்மாத்தத்ஸர்வமபவத்) ஆகையால்“ब्रह्म वा इदमग्र आसीत्” (ப்ரஹ்மவா இதமக்ராஸீ த்) என்று ப்ரம்மபதமானது இங்கு அபரப்ரஹ்மமே என்பது பொருத்தமான வாசகமாகும்.
भाष्यम् - मनुष्याधिकाराद्वा तद्भावी ब्राह्मणः स्यात्।“सर्वं भविष्यन्तो मनुष्या मन्यन्ते” इति हि मनुष्याः प्रकृताः, तेषां चाभ्युदयनिःश्रेयससाधने विशेषतोऽधिकार इत्युक्तम्, न परस्य ब्रह्मणो नाप्यपरस्य प्रजापतेः। अतो द्वैतैकत्वापरब्रह्मविद्यया कर्मसहितया अपरब्रह्मभावमुपसम्पन्नो भोज्यादपावृत्तः सर्वप्राप्त्यो-च्छिन्नकामकर्मबन्धनः परब्रह्मभावी ब्रह्मविद्याहेतोर्ब्रह्मेत्यभिधीयते। दृष्टश्च लोके भाविनीं वृत्तिमाश्रित्य शब्दप्रयोगः-यथा“ओदनं पचति” इति, शास्त्रे च-“परिव्राजकः सर्वभूताभयदक्षिणाम्”इत्यादि, तथेहेति केचिद् - ब्रह्म ब्रह्मभावी पुरुषो ब्राह्मणः- इति व्याचक्षते।
அனுவாதம்-அல்லது இங்குமனிதர்களுக்கு அதிகாரம் இருப்பதால் பிரஹ்மரூபத்தை பிரஹ்மசப்தத்தால் அடையப்படுவதால் ப்ராஹ்மணன் என்று அறியப்படுகிறான்.“सर्व भविष्यन्तो मनुष्या मन्यन्ते” (சர்வம் பவிஷ்யந்தோ மனுஷ்யா மன்யந்தே = எல்லாம் அடையமுடியும் என்று மனிதர்கள் கருதுகிறார்கள்) என்பதில் மனிதர்கைளயே குறிக்கிறது. அவர்களுக்கு அப்யுதயநிச்ரேயஸசாதனத்தில் விசேஷமாக அதிகாரம் உள்ளது என்று கூறப்பட்டது. பரப்ரஹ்மத்திற்கோ அபரப்ரஹ்ம பிரஜாபதிக்கோ அவ்வாறு இல்லை. ஆகையால் த்வைத ஏகத்துவ அபரப்ரஹ்ம கர்மத்துடன் கூடிய அபரவித்தையினால் அபரப்ரஹ்மபாவத்தை அடைந்து ஹிரண்யகர்ப சம்பந்த போகங்களில் விரக்தி அடைந்து அவ்வாறே எல்லா வகையிலும் கர்மபலன் அடையப்படுவதற்கு காரணமான காமம், கர்மரூபபந்தம் நஷ்டமாகிவிடுவதால் அந்த ப்ரஹ்மபாவத்தை அடைந்ததின் காரணமாய் அந்த புருஷன்“ब्रह्म”(பிரஹ்ம) என்று கூறப்படுகின்றான். எவ்வாறு உலகில் இனி நடக்கப்போவதை ஆஸ்ரயித்து சப்தமானது பிரயோகிக்கப்படுகிறதோ அதற்கு உதாரணம் - உலகில்“ओदनं पचति”(ஒதனம் பசதி) (அன்னம் சமைக்கிறான்) அவ்வாறே சாஸ்திரத்தில்“परिव्राजकः सर्वभूताभयदक्षिणाम्”(பரிவிராஜக: சர்வபூதாபயதக்ஷிணாம் = சந்நியாசீ எல்லா ஜீவராசிகளுக்கும் அபயம் தக்ஷிணை (தரவேண்டும்) முதலியவைகளாலும், அவ்வாறே இங்கும் சிலர்-“ब्रह्म ब्रह्मभावी पुरुषो ब्राह्मणः” (பிரஹ்ம பிரஹ்மபாவீ புருஷோ ப்ராஹ்மண: - பிரஹ்ம பாவத்தை அடையப்போகிற ப்ராஹ்மணன் பிரஹ்மம் என்று சிலர் கூறுகின்றார்கள்.
भाष्यम् - तन्न, सर्वभावापत्तेरनित्यत्वदोषात्। न हि सोऽस्ति लोके परमार्थतो यो निमित्तवशाभावान्तरमापद्यते नित्यश्चेति। तथा ब्रह्मविज्ञाननिमित्तकृता चेत्सर्वभावापत्तिः, नित्या चेति विरुद्धम्। अनित्यत्वे च कर्मफलतुल्यतेत्युक्तो दोषः।
அனுவாதம்-அவ்வாறு கூறுவது சரியல்ல.ஸர்வபாவம் அடைதல் அநித்யத்வ தோஷமாகும். உலகில் வாஸ்தவமாக எந்த நிமித்தவசத்தால் வேறு பாவத்தை அடைந்து நித்யம் அது என்பது இல்லை. அவ்வாறே பிரஹ்மஞானத்தால் உண்டானதுஸர்வாத்மபாவத்தின் அடைவு நித்தியம் என்பதும் விருத்தமானதாகும். அநித்யத்துவம் என்றால் கர்மபலத்திற்கு ஒப்பானது எனில் தோஷம் என்று கூறப்பட்டது.
भाष्यम् - अविद्याकृतासर्वत्वनिवृत्तिं चेत् सर्वभावापत्तिं ब्रह्मविद्याफलं मन्यसे, ब्रह्मभाविपुरुषकल्पना व्यर्था स्यात्, प्राग्ब्रह्मविज्ञानादपि सर्वो जन्तुर्ब्रह्मत्वान्नित्यमेव सर्वभावापन्नः परमार्थतः, अविद्यया त्वब्रह्मत्वमसर्वत्वं चाध्यारोपितम्, यथा शुक्तिकायां रजतम्, व्योम्नि वा तलमलवत्त्वादि, तथेह ब्रह्मण्यध्यारोपितमविद्यया अब्रह्मत्वमसर्वत्वं च ब्रह्मविद्यया निवर्त्यत इति मन्यसे यदि, तदा युक्तम्“यत्परमार्थत आसीत्परं ब्रह्म”, ब्रह्म शब्दस्य मुख्यार्थभूतम्“ब्रह्म वा इदमग्र आसीत्” इत्यस्मिन्वाक्ये उच्यते इति वक्तुम् यथाभूतार्थवादित्वाद्वेदस्य। न त्वियं कल्पना युक्ता, ब्रह्मशब्दार्थविपरीतो ब्रह्मभावी पुरुषो ब्रह्मेत्युच्यत इति श्रुतहान्यश्रुतकल्पनाया अन्याय्यत्वान्महत्तरे प्रयोजनान्तरेऽसति।
அனுவாதம்- அவித்தையினால் உண்டான சர்வமற்ற தன்மையின் நிவிர்த்தியும் சர்வபாவத்தின் அடைவும் பிரஹ்மவித்தையின் பலன் என்று நினைத்தால் பிரஹ்மம் ஆவேன் என்ற இனிவரும் புருஷ கல்பனை வியர்த்தமாகும். பிரஹ்மஞானத்திற்கு முன்பே எல்லா ஜீவர்களும் பிரஹ்மமாகவே இருப்பதால் வாஸ்தவத்தில் நித்திய சர்வபாவத்தை உடையவர்களே. எவ்வாறு சுக்தியால் ரஜதமும், ஆகாயத்தில் தலமலாதிகளும் ஆரோபிக்கப்பட்டவைகளோ அவ்வாறே அவித்யையினால் அப்ரஹ்மத்துவம், அசர்வத்துவம் ஆரோபிக்கப்பட்டது. அவ்வாறே இங்கும் ப்ரஹ்மத்தில் அத்யாரோபிக்கப்பட்ட அவித்யையினால் அப்ரஹ்மத்துவம், அஸர்வத்துவம் பிரஹ்மவித்யையினால் நிவர்த்தியாகிறது என்று கருதும் பொழுது.“यत्परमार्थत आसीत्परं ब्रह्म” (யத்பரமார்த்த ஆஸீ த்பரம் ப்ரஹ்ம) என்பதுபிரஹ்ம சப்தத்தின் முக்கியார்த்தமான பரபிரஹ்மமாகும். “ब्रह्म वा इदमग्र आसीत्” (பிரஹ்ம வா இதமக்ர ஆஸீ த்) இந்த வாக்கியத்தால் கூறப்பட்ட வேதத்தின் யதார்த்த பூதவாதம் கூறுவது பொருத்தமானதாகும். ப்ரஹ்மசப்தார்த்தத்தின் விபரீதமாகிய பிரஹ்மபாவிபுருஷன் பிரஹ்மம் என்று கூறுவதால் சுருதஹானியும், அச்ருத கல்பனையும் அசத்தாகிய மிகப்பெரிய வேறு பிரயோஜனத்தில் இந்த கல்பனை நியாயமற்றதாய் இருப்பதால் பொருந்தாது.
भाष्यम्- अविद्याकृतव्यतिरेकेणाब्रह्मत्वमसर्वत्वं च विद्यत एवेति चेन्न, तस्य ब्रह्मविद्ययापोहानुपपत्तेः। न हि क्वचि-त्साक्षाद्वस्तुधर्मस्यापोढ्री दृष्टा कर्त्री वा ब्रह्मविद्या। अविद्यायास्तु सर्वत्रैव निवर्तिका दृश्यते। तथेहाप्यब्रह्मत्वमसर्वत्वं चाविद्याकृतमेव निवर्त्यतां ब्रह्मविद्यया। न तु पारमार्थिकं वस्तु कर्तुं निवर्तयितुं वार्हति ब्रह्मविद्या। तस्मार्थैव श्रुतहान्यश्रुतकल्पना।
அனுவாதம்- அவித்யையினால் தவிர வேறு ஒன்றால் அப்ரஹ்மத்துவமும், அஸர்வத்துவமும் விளங்குகிறது என்பது சரியல்ல. அது ப்ரஹ்மவித்யையினால் நீங்காது என்று ஆகிவிடும். ப்ரஹ்மவித்யா சாக்ஷாத்தாக எந்த ஒரு வஸ்துவை நீக்குவதோ உண்டாக்குவதோ காணப்படவில்லை. எங்கும் அவித்யையை நிவர்த்திக்கப்பட வேண்டியதாகவே காணப்படுகிறது. அவ்வாறே இங்கும் ப்ரஹ்மவித்யையினால் அப்பிரஹ்மத்துவமும் அஸர்வத்துவமும் அவித்தையினால் உண்டானதால் நிவர்த்தியாகிறது. ப்ரஹ்மவித்யையினால் பாரமார்த்திக வஸ்துவை உண்டாக்கவோ நிவர்த்தி செய்யவோ முடியாது. ஆகையால் சுருதஹானி அசுருத கல்பனை வியர்த்தமேயாகும்.
भाष्यम् - पूर्व - ब्रह्मण्यविद्यानुपपत्तिरिति चेत्?
அனுவாதம்- பூர்வ- ஆனால் பிரஹ்மத்தில் அவித்யா ஏற்படுவது பொருந்தாது எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, ब्रह्मणि विद्याविधानात्। न हि शुक्तिकायां रजताध्यारोपणेऽसति शुक्तिकात्वं ज्ञाप्यते चक्षुर्गोचरा-पन्नायाम्- इयं शुक्तिका न रजतम्, इति। तथा“सदेवेदं सर्वम्”“ब्रह्मैवेदं सर्वम्”“आत्मैवेदं सर्वम्”“नेदं द्वैतमस्त्यब्रह्म” इति ब्रह्मण्येकत्वविज्ञानं न विधातव्यं ब्रह्मण्यविद्याध्यारोपणायाम-सत्याम्।
(அவித்யா அதிஷ்டான விசாரம்) அனுவாதம்-ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ப்ரஹ்மத்தில் வித்யா விதானம் செய்யப்பட்டுள்ளதால் (விதிக்கப்பட்டுள்ளதால்) சுத்தியில் ரஜதம் அத்யாரோபம் செய்யப்பட்டபொழுது கண்களில் அறியக்கூடிய பார்வை இருந்தபோதிலும் இது சுக்தி ரஜதமல்ல என்று அறிய முடிவதில்லை. அவ்வாறு“सदेवेदं सर्वम्” (ஸதேவ இதம்ஸர்வம்)“ब्रह्मैवेदं सर्वम्”(ப்ரஹ்மைவேதம்ஸர்வம்)“आत्मैवेदं सर्वम्”(ஆத்மைவேதம்ஸர்வம்)“नेदं द्वैतमस्त्यब्रह्म” (நேதம் த்வைமஸ்த்யப்ரஹ்மம்) என்றப்ரஹ்மத்தில் ஏகத்துவ விக்ஞானம் என்று ப்ரஹ்மத்தில் அவித்யா அத்யாரோபம் இருக்கும் பொழுது கூறமுடியாது.
भाष्यम् - पूर्व - न ब्रूमः - शुक्तिकायामिव ब्रह्मण्यतद्धर्माध्यारोपणा नास्तीति, किं तर्हि? न ब्रह्म स्वात्मन्यतद्धर्माध्यारोपनिमित्तम्, अविद्याकर्तृ चेति।
அனுவாதம்- பூர்வ- இவ்வாறு கூறமாட்டோம் - சுத்தியில் ரஜதம் கல்பிக்கப்பட்டது போல் ப்ரஹ்மத்தில் அப்ரஹ்ம தர்மங்கள் ஆரோபம் அல்ல. ஆனால் என்ன? எனில் ப்ரஹ்மம் தன் ஆத்மாவிடத்தில் அப்ரஹ்ம தர்மத்தை ஆரோபமோ, அவித்தையை உண்டாக்குவதும் இல்லை.
भाष्यम् - सिद्धान्ती - भवत्वेवं नाविद्याकर्तृ भ्रान्तं च ब्रह्म। किन्तु नैवाब्रह्माविद्याकर्ता चेतनो भ्रान्तोऽन्य इष्यते।“नान्योऽतोऽस्ति विज्ञाता” (बृ० उ० ३। ७। २३)“नान्यदतोऽस्ति विज्ञातृ” (३। ८। ११)“तत्त्वमसि” (छा० उ० ६। ८-१६)“आत्मानमेवावेत्। अहं ब्रह्मास्मि” (बृ० उ० १। ४। १०)“अन्योऽसावन्योऽहमस्मीति न स वेद” (१। ४। १०) इत्यादि श्रुतिभ्यः। स्मृतिभ्यश्च-“समं सर्वेषु भूतेषु” (गीता १३। २७)“अहमात्मा गुडाकेश” (गीता १०। २०)“शुनि चैव श्वपाके च” (गीता ५। १८)“यस्तु सर्वाणि भूतानि” (ईशा० उ० ७) इत्यादिभ्यः।“यस्मिन्सर्वाणि भूतानि” इति च मन्त्रवर्णात्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு இருக்கட்டும். ப்ரஹ்மம் அவித்யாவின் கர்த்தா அல்ல. ப்ராந்தியும் அல்ல. ஆனால் அவித்யாவின் கர்த்தா வேறு ஒரு அபிரஹ்ம பிராந்தசேதனம் என்றும் கருதமுடியாது.“नान्योऽतोऽस्ति विज्ञाता” (ந அன்யதோஅஸ்தி விக்ஞாதா)“नान्यदतोऽस्ति विज्ञातृ” (ந அன்யதோஅஸ்தி விக்ஞாத்ரு)“तत्त्वमसि” (தத்வமஸி)“आत्मानमेवावेत्। अहं ब्रह्मास्मि” (ஆத்மானமே வாவேத் அஹம்ப்ரஹ்மாஸ்மி), “अन्योऽसावन्योऽहमस्मीति न स वेद” (அன்யே அசாவன்யோஅஹமஸ்மீதி நச வேத) முதலிய சுருதிகளாலும்,“समं सर्वेषु भूतेषु” (சமம் சர்வேஷு பூதேஷு)“अहमात्मा गुडाकेश” (அஹமாத்மா குடாகேச)“शुनि चैव श्वपाके च” (சுனி சைவ ச்வபாகே ச)“यस्तु सर्वाणि भूतानि”(யஸ்து சர்வாணி பூதானி) முதலிய ஸ்மிருதிகளாலும்,“यस्मिन्सर्वाणि भूतानि” (யஸ்மின்சர்வாணி பூதானி) மந்திர வர்ணங்களாலும் சித்திக்கின்றது.
भाष्यम् - पूर्व - नन्वेवं शास्त्रोपदेशानर्थक्यमिति।
அனுவாதம்- பூர்வ- ஆனால், இவ்வாறு சாஸ்திரத்தின் உபதேசம் வியர்தமாகுமே எனில்.
भाष्यम् - सिद्धान्ती - बाढमेवम् अवगतेऽस्त्वेवानर्थक्यम्।
அனுவாதம்-ஸித்தாந்தீ-சரி அவ்வாறே இருக்கட்டும். தத்வஞானம் ஏற்பட்ட உடன் அது வியர்த்தமாகிவிடும்.
भाष्यम् - पूर्व - अवगमानर्थक्यमपीति चेत्?
அனுவாதம்- பூர்வ- ஆனால் இதனால் ஞானமும் வியர்த்தமாகுமே எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, अवगमनिवृत्तेर्दृष्टत्वात्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஏன்எனில் அக்ஞானத்தின் நிவிர்த்தி காணப்படுவதால்.
भाष्यम् - पूर्व - तन्निवृत्तेरप्यनुपपत्तिरेकत्व इति चेत्?
அனுவாதம்-பூர்வ- ப்ரஹ்மம்ஏகத்துவம் என்பதால் அதன் நிவிர்த்தியும் பொருந்தாது எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, दृष्टविरोधात्। दृश्यते ह्येकत्वविज्ञानादेवानवगमनिवृत्तिः। दृश्यमानमप्यनुपपन्नमिति ब्रुवतो दृष्टविरोधः स्यात्, न च दृष्टविरोधः केनचिदप्यभ्युपगम्यते। न च दृष्टेऽनुपपन्नं नाम, दृष्टत्वादेव। दर्शनानुपपत्तिरिति चेत्तत्राप्येषैव युक्तिः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. திருஷ்ட (அனுபவ) விரோதமாய் இருப்பதால், ஏகத்வ விக்ஞானத்தால் அல்லவா அக்ஞானத்தின் நிவிர்த்தி காணப்படுகிறது. நமக்கு காணப்படுவதாய் இருந்தாலும் அதை ஒப்புக்கொள்ளாதது திருஷ்ட விரோதமாகும். திருஷ்ட விரோதத்தை எதனாலும் ஒப்புக்கொள்ள முடியாது. ஏதாவது ஒரு விஷயம் காணப்பட்டபொழுது அது திருஷ்டி கோசரமாவதால் அதை ஒத்துக்கொள்ள முடியாது என்று கூறமுடியாது. தர்சனம் (அநுபவம்) இல்லை என்பதற்கு இதே யுக்திதான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
भाष्यम् -“पुण्यो वै पुण्येन कर्मणा भवति” (बृ० उ० ३। २। १३) “तं विद्याकर्मणी समन्वारभेते” (४। ४। २)“मन्ता बोद्धा कर्ता विज्ञानात्मा पुरुषः” (प्र० उ० ४।९) इत्येवमादि-श्रुतिस्मृतिन्यायेभ्यः परस्माद्विलक्षणोऽन्यः संसार्यवगम्यते। तद्विलक्षणश्च परः“स एष नेति नेति” (बृ० उ० ३। ९। २६)“अशनायाद्यत्येति”“य आत्मापहतपाप्मा विजरो विमृत्युः” (छा०उ०८।७।१)“एतस्य वा अक्षरस्य प्रशासने” (बृ०उ०३।८।९) इत्यादिश्रुतिभ्यः। कणादाक्षपादादितर्कशास्त्रेषु च संसारिविलक्षण ईश्वर उपपत्तितः साध्यते। संसार दुःखापन-यार्थित्वप्रवृत्तिदर्शनात्स्फुटमन्यत्वमीश्वरात्संसारिणोऽवगम्यते।“अवाक्यनादरः” (छा०उ०३।१४।२)“न मे पार्थास्ति” (गीता ३। २२) इति श्रुतिस्मृतिभ्यः।
அனுவாதம்-“पुण्यो वै पुण्येन कर्मणा भवति” (புண்யேன வை புண்யோ கர்மணா பவதி) “तं विद्याकर्मणी समन्वारभेते” (தம் வித்யாகர்மணீ சமன்வாரபேதே)“मन्ता बोद्धा कर्ता विज्ञानात्मा पुरुषः” (மந்தா போத்தா கர்த்தா விக்ஞானாத்மா புருஷ:) முதலிய சுருதி ஸ்மிருதி நியாயங்களால் சம்சாரி ஜீவன் பரமாத்மாவைக் காட்டிலும் வேறு என்று தெரியவருகிறது. அவ்வாறே அதைக் காட்டிலும் விலக்ஷணம் பரமாத்மா“स एष नेति नेति” (ச ஏஷ நேதி நேதி)“अशनायाद्यत्येति” (அஷனாயாதிஅத்யேதி)“य आत्मापहतपाप्मा विजरो विमृत्युः” (ய ஆத்மாஅபஹதபாப்மா விஜரோ விமிருத்யு:)“एतस्य वा अक्षरस्य प्रशासने” (ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரஷாசனே) இவை முதலிய சுருதிகளால் சித்திக்கிறது. கணாத, கௌதம முதலிய தர்க்க சாஸ்திரங்களில் சம்சாரிக்கு விலக்ஷணமாக ஈஸ்வரன் என்று நிச்சயிக்கப்பட்டுள்ளது. சம்சார துக்கத்தைப் போக்கவேண்டி ஜீவனிடம் ப்ரவ்ருத்தி காணப்படுவதால் ஈஸ்வரன் சம்சாரியைக் காட்டிலும் வேறு என்று ஸ்பஷ்டமாக அறியப்படுகிறது“अवाक्यनादरः” (அவாக்கியநாதர:)“न मे पार्थास्ति” (ந மே பார்த்தாஸ்தி), என்று ஸ்ருதி ஸ்மிருதிகளால் அறிகின்றோம்.
भाष्यम् -“सोऽन्वेष्टव्यः स विजिज्ञासितव्यः” (छा० उ० ८। ७। १)“तं विदित्वा न लिप्यते” (बृ० उ० ४। ४। २३)“ब्रह्मविदाप्नति परम्” (तै० उ० २। १। १) “एकधैवानुद्रष्टव्यमेतत्” (बृ० उ० ४। ४। २०) “यो वा एतदक्षरं गार्ग्यविदित्वा” (३। ८। १०)“तमेव धीरो विज्ञाय” (४। ४। २१) “प्रणवो धनुः शरो ह्यात्मा ब्रह्म तल्लक्ष्यमुच्यते” (मु० उ० २। २। ४) इत्यादिकर्मकर्तृनिर्देशाच्च।
அனுவாதம் - “सोऽन्वेष्टव्यः स विजिज्ञासितव्यः” (சோ அன்வேஷ்டவ்ய: ஸ விஜிக்-ஞா-ஸிதவ்ய:)“तं विदित्वा न लिप्यते” (தம் விதித்வா ந லிப்யதே)“ब्रह्मविदाप्नति परम्” (ப்ரஹ்மவிதாப்நோதி பரம்)“एकधैवानुद्रष्टव्यमेतत्” (ஏகதாவானுத்ரஷ்டவ்யமேதத்)“यो वा एतदक्षरंMÉÉMªÉÇÊ´ÉÊnùi´ÉÉ” (யோ வா ஏததக்ஷரம் கார்க்யவிதித்வா)“तमेव धीरो विज्ञाय” (தமேவ தீரோ விக்ஞாய) “प्रणवो धनुः शरो ह्यात्मा ब्रह्म तल्लक्ष्यमुच्यते” (ப்ரணவோ தனு: சரோ ஹ்யாத்மா ப்ரஹ்ம தல்லக்ஷ்யமுச்யதே) இவை முதலியவை கர்மகர்த்ருத்துவத்தைத் தெரிவிப்பதாலும் (பேதம் சித்தமாகிறது).
भाष्यम् - पूर्व - मुमुक्षोश्च गतिमार्गविशेषदेशोपदेशात्। असति भेदे कस्य कुतो गतिः स्यात्? तदभावे च दक्षिणोत्तरमार्गविशेषानुपपत्तिः, गन्तव्यदेशानुपपत्तिश्चेति। भिन्नस्य तु परस्मादात्मनः सर्वमेतदुपपन्नम्।
அனுவாதம்- பூர்வ- முமுக்ஷுவிற்கு கதிமார்க விசேஷதேசத்தை உபதேசிப்பதால் அசத்தான பேதத்தில் யாருக்கு, எதனால் கதி இருக்கும். அது இல்லாவிடில் தக்ஷிணஉத்தரமார்க்கம் என்ற விசேஷம் பொருந்தாது. மேலும் சேரவேண்டிய இடமும் இல்லை. பரமாத்மாவைவிட வேறான ஆத்மாவிற்கு இது எல்லாம் பொருந்தும்.
भाष्यम् - कर्मज्ञानसाधनोपदेशाच्चभिन्नश्चेद्ब्रह्मणः संसारी स्यात्, युक्तस्तं प्रत्यभ्युदयनिःश्रेयससाधनयोः कर्मज्ञानयोरुपदेशो नेश्वरस्याप्तकामत्वात्। तस्माद्युक्तं ब्रह्मेति ब्रह्मभावी पुरुष उच्यत इति चेत्?
அனுவாதம்-கர்மஞானசாதனம் உபதேசிக்கப்பட்டிருப்பதாலும் சம்சாரீ ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு என்றால் அவரைக் குறித்து அப்யுதய நி:ƒச்ரேயச சாதனங்களாகியவை பொருந்தும் ஆப்தகாமனாய் இருப்பதால் ஈஸ்வரனுக்குப் பொருந்தாது. ஆகையால் ப்ரஹ்மபாவி (பிரஹ்மம் ஆகப்போகிற) புருஷன் ப்ரஹ்மம் என்று கூறுவது பொருத்தமே ஆகுமே? எனில்.
भाष्यम्- सिद्धान्ती- न, ब्रह्मोपदेशानर्थक्यप्रसङ्गात्। संसारी चेद्ब्रह्मभाव्यब्रह्म सन् विदित्वात्मानमेवाहं ब्रह्मास्मीति सर्वमभवत्तस्य संसार्यात्मविज्ञानादेव सर्वात्मावस्य फलस्य सिद्धत्वात्परब्रह्मोपदेशस्य ध्रुवमानर्थक्यं प्राप्तम्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- ப்ரஹ்ம உபதேசம் அர்த்தமற்றதாகிவிடும். ஆகையால் அவ்வாறு அல்ல. ப்ரஹ்மபாவி அப்ரஹ்மம் சம்சாரீயாய் இருந்துகொண்டு தன்னையே “நான் ப்ரஹ்மமாய் இருக்கின்றேன்” என்று அறிந்து சர்வபாவத்தை அடைந்து சம்சாரி ஆத்மாவை அறிந்ததாலேயே சர்வாத்ம பலன் சித்தித்தது என்றால் பரப்ரஹ்ம உபதேசம் நிச்சயமாக அர்த்தமற்றதாகிவிடும்.
भाष्यम् - पूर्व - तद्विज्ञानस्य क्वचित्पुरुषार्थर्साधनेऽ-विनियोगात्संसारिण एवाहं ब्रह्मास्मीति ब्रह्मत्वसम्पादनार्थ उपदेश इति चेत्। अनिर्ज्ञाते हि ब्रह्मस्वरूपे किं सम्पादयेदहं ब्रह्मास्मीति। निर्ज्ञातलक्षणे हि ब्रह्मणि शक्या सम्पत्कर्तुम्।
அனுவாதம்- பூர்வ- அந்த ப்ரஹ்மவிக்ஞானத்திற்கு ஏதாவது ஒரு புருஷார்த்த சாதனத்தில் ஈடுபட்ட சம்சாரிக்கே அஹம் ப்ரஹ்மாஸ்மி (நான் ப்ரஹ்மம்) என்ற ப்ரஹ்மத்துவத்தை அடைவதற்காக உபதேசம் செய்யப்பட்டது எனில் அறியப்படாத ப்ரஹ்மஸ்வரூபத்தில் அஹம் பிரஹ்மாஸ்மி என்று எதை சம்பாதிப்பான்? பிரஹ்மத்தின் லக்ஷணத்தை நன்றாக அறிந்தால் அல்லவா அதை அடையமுடியும்.
भाष्यम् - सिद्धान्ती - नः“अयमात्मा ब्रह्म” (बृ० उ० २। ५। १९) “यत्साक्षादपरोक्षाद्ब्रह्म” (३। ४। १) “य आत्मा” (छा० उ० ८। ७। १) “तत्सत्यं स आत्मा”(छा० उ० ६। ८। ७) “ब्रह्मविदाप्नोति परम्” (तै० उ० २। १। १) इति प्रकृत्य“तस्माद्वा एतस्मादात्मनः” (२। १। १) इति सहस्रशो ब्रह्मात्मशब्दयोः सामानाधिकरण्यादेकार्थत्वमेवेत्यवगम्यते। अन्यस्य ह्यन्यत्वे सम्पत्क्रियते नैकत्वे।“इदं सर्वं यदयमात्मा” (बृ० उ० २। ४। ६) इति च प्रकृतस्यैव द्रष्टव्यस्यात्मन एकत्वं दर्शयति। तस्मान्नात्मनो ब्रह्मत्वसम्पदुपपत्तिः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல“अयमात्मा ब्रह्म” (அயமாத்மா ப்ரஹ்ம)“यत्साक्षादपरोक्षाद्ब्रह्म” யத்சாக்ஷாத பரோக்ஷாத் ப்ரஹ்ம) “य आत्मा” (ய ஆத்மா)“तत्सत्यं स आत्मा” (தத்சத்தியம் ச ஆத்மா)“ब्रह्मविदाप्नोति परम्” (ப்ரஹ்மவிதாப்னோதி பரம்) இவ்வாறு விளக்கி“तस्माद्वा एतस्मादात्मनः” (தஸ்மாத்மவா ஏதஸ்மாதாத்மன:) என்பது முதலிய ஆயிரக்கணக்கான சுருதி வாக்கியங்களால் ஸாமானாதிகரண்யத்தை அறியும்பொழுது அதற்கு ஏகத்வ அர்த்தம் அறியப்படுகிறது. ஒன்றை மற்றொன்றால் (அநேகமாய் இருந்தால் சம்பாதிக்கமுடியும். ஆனால் ஏகத்வமாய் இருக்கும்பொழுது அவ்வாறு அல்ல.“इदं सर्वं यदयमात्मा” (இதம் சர்வம் யதயமாத்மா) என்று ப்ரக்ருத்த திரஷ்டவ்ய ஆத்மாவின் ஏகத்வத்தைத் தெரிவிக்கிறது. ஆகையால் ரரஹ்மத்தை அடையவேண்டும் என்பது பொருந்தாது.
भाष्यम् - न चाप्यन्यत्प्रयोजनं ब्रह्मोपदेशस्य गम्यते,“ब्रह्म वेद ब्रह्मैव भवति” (मु० उ० ३। २। ९)“अभयं वै जनक प्राप्तोऽसि” (बृ० उ० ४। २। ४)“अभयं हि वै ब्रह्म भवति” (४। ४। २५) इति च तदापत्तिश्रवणात्। सम्पत्तिश्चेत्तदापत्तिर्न स्यात्। न ह्यन्यस्यान्यभाव उप्पद्यते।
அனுவாதம்- ப்ரஹ்ம உபதேசத்திற்கு வேறு பிரயோஜனமும் கிடையாது.“ब्रह्म वेद ब्रह्मैव भवति” (ப்ரஹ்மவேத ப்ரஹ்மைவ பவதி)“अभयं वै जनक प्राप्तोऽसि” (அபயம் வைஜனக ப்ராப்தோசி)“अभयं हि वै ब्रह्म¦É´ÉÊiÉ” (அபயம் ஹி வை ப்ரஹ்ம பவதி). என்று ப்ரஹ்மப்ராப்தியை சுருதிகளால் அறிகிறோம், ஆத்மா ப்ரஹ்மத்தை அடைகிறது என்று கூறினால் ப்ரஹ்மத்துவத்தை அடையமுடியாது. ஏன்எனில் ஒரு வஸ்து வேறு பாவத்தை அடைவது சம்பவிக்காது.
भाष्यम्- पूर्व- वचनात् सम्पत्तेरपि तद्भावापत्तिः स्यादिति चेत्?
அனுவாதம்- பூர்வ- இது சுருதி வசனமாய் இருப்பதால் ப்ரஹ்மப்ராப்தியினாலும் ப்ரஹ்மபாவத்தை அடையலாமே எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, सम्पत्तेः प्रत्ययमात्रत्वात्। विज्ञानस्य च मिथ्याज्ञाननिवर्तकत्वव्यतिरेकेणाकारकत्व-मित्यवोचाम। न च वचनं वस्तुनः सामर्थ्यजनकम्। ज्ञापकं हि शास्त्रं न कारकमिति स्थितिः।“स एष इह प्रविष्टः” (बृ० उ० १। ४। ७) इत्यादिवाक्येषु च परस्यैव प्रवेश इति स्थितम्। तस्माद्ब्रह्मेति न ब्रह्मभाविपुरुषकल्पना साध्वी।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு கருதவது சரியல்ல. ஏனெனில் அது பிரதீதி (தோற்ற) மாத்திரமேயாகும். விக்ஞானம் அக்ஞானத்தை நிவர்த்தி செய்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை என்பதை முன்பே கூறினோம். இந்த சுருதி வசனம் வஸ்துவின் சாமர்த்தியத்தை உண்டாக்குவதில்லை. சாஸ்திரம் ஞாபகபடுத்துமே தவிர அது செயல்படுவதில்லை என்பது அதன் வாஸ்தவமான நிலை“स एष इह प्रविष्टः” முதலிய சுருதி வாக்கியங்களில் ஒன்றில் மற்றொன்றின் பிரவேசமே நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆகையால் “ப்ரஹ்மம்” என்பது ப்ரஹ்மபாவி புருஷன் (இனி ப்ரஹ்மத்தை அடைவன்) என்ற கல்பனை சரியல்ல.
भाष्यम् -इष्टार्थबाधनाच्च। सैन्धवघनवदनन्तरम-बाह्यमेकरसं ब्रह्मेति विज्ञानं सर्वस्यामुपनिषदि प्रतिपिपादयिषितोऽर्थः। काण्डद्वयेऽप्यन्तेऽवधारणादवगम्यते“इत्यनुशासनम्”“एतावदरेखल्वमृतत्वम्” इति।
அனுவாதம்- இதைத் தவிர (ப்ரஹ்மத்தைத் தவிர) வேறு இஷ்டமான பொருள் வேறு ஒன்றும் இல்லாதால் ஆகும். உப்புக்கட்டி போல் உள் அற்றதும் வெளி அற்றதும் ஏகரசமாயும் இருப்பது ப்ரஹ்மம் என்ற விக்ஞானம் எல்லா உபநிஷத்களிலும் பிரதிபாதிக்கப்பட்ட (விளக்கப்பட்ட) விஷயமாகும். இரண்டு காண்டங்களின் முடிவிலும் நிர்ணயம் செய்யப்படுள்ளதால்“इत्यनुशासनम््” (இத்யனுசாசனம்), “एतावदरे खल्वमृतत्वम्” (ஏதாவதரே கல்வம்ருதத்துவம்) என்று இவ்வாறு அறிகிறோம்.
भाष्यम् - तथा सर्वशाखोपनिषत्सु च ब्रह्मैकत्वविज्ञानं नििश्चतोऽर्थः। तत्र यदि संसारी ब्रह्मणोऽन्य आत्मानमेवावेदिति कल्प्येत, इष्टस्यार्थस्य बाधनं स्यात्। तथा च शास्त्रमुपक्रमोपसंहारयोर्विरोधादसमञ्जसं कल्पितं स्यात्।
அனுவாதம்- அவ்வாறே எல்லா சாகா உபநிஷத்களிலும் ப்ரஹ்மஏகத்துவவிக்ஞானம் நிச்சயம் செய்யப்பட்ட அர்த்தமாகும். இதில் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் பின்னமான சம்சாரி ஆத்மாவேதான் என்று அறிந்தால் இஷ்ட அர்த்தமானது பாதிக்கப்படும். அவ்வாறே இதனால் உபகிரம உபசம்ஹாரத் (ஆரம்பம், முடிவு)திற்கு விரோதமாவதால் சாஸ்த்ரம் விரோதம் என்ற கல்பனை ஏற்படும்.
भाष्यम् - व्यपदेशानुपपत्तेश्च। यदि च“आत्मानमेवावेत्” इति संसारी कल्प्येत, ब्रह्मविद्या इति व्यपदेशो न स्यात्। आत्मानमेवावेदिति संसारिण एव वेद्यत्वोपपत्तेः। आत्मेति वेदितुरन्यदुच्यत इति चेन्न, अहं ब्रह्मास्मीति विशेषणात्। अन्यश्चेद्वेद्यः स्यादयमसाविति वा विशेष्येत न त्वहमस्मीति अहमस्मीति विशेषणादात्मानमेवावेदिति चावधारणान्नििश्चतमात्मैव ब्रह्मेत्यवगम्यते। तथा च सत्युपपन्नो ब्रह्मविद्याव्यपदेशो नान्यथा। संसारिविद्या ह्यन्यथा स्यात्। न च ब्रह्मत्वाब्रह्मत्वे ह्येकस्योपपन्ने परमार्थतः, तमः प्रकाशाविव भानोर्विरुद्धत्वात्।
அனுவாதம்- நாமம் பொருந்தாததால் ஆகும் (அதாவது), சம்சாரி ஜீவன் ப்ரஹ்மசப்தத்திற்கு வாச்சியமாக முடியாது).“आत्मानमेवावेत्” (ஆத்மானமேவாவேத்) என்று சம்சாரி கல்பனை செய்தால் (நினைத்தால்) அதை பிரஹ்மவித்தை என்று கூறமுடியாது. ஏன்எனில்“आत्मानमेवावेत्” என்று கூறுவது சம்சாரிக்குத்தான் வேத்யத்துவம் என்று ஆகிவிடும்.“अहं ब्रह्मास्मि” (அஹம் ப்ரஹ்மாஸ்மி) என்ற விசேஷணத்தால் ஆத்மாவை வேறாக அறியப்படுவதாக கூறுவது சரியல்ல. வேறாக அறிய வேண்டியதாய் இருந்தால் அதை, இதை என்று விசேஷணம் இருக்கும், “அஹம் அஸ்மி” என்று இருக்காது. “அஹம் அஸ்மி” என்ற விசேஷணத்தால் ஆத்மாவையே அறிய வேண்டும் என்று நிச்சயமாக விளக்கப்பட்டுள்ளதால் நிச்சயமாக ஆத்மாவே ப்ரஹ்மம் என்று அறியப்படுகிறது. இவ்வாறு இருப்பதால் “ப்ரஹ்மவித்யா” என்ற பெயர் ஏற்பட்டது வேறு வகையில் அல்ல. வேறு விதமாய் எடுத்துக் கொண்டால் “சம்சாரி வித்யா” என்ற பெயர் ஏற்பட்டுவிடும். ப்ரஹ்மத்துவம் அப்ரஹ்மத்துவம் இரண்டும் எவ்வாறு சூரியனுக்கு இருளும், பிரகாசமும் சேர்ந்து விருத்தமாய் இருப்பதால் ஒரு தர்மமாய் ஆகமுடியாதோ அவ்வாறு உண்மையில் ஒன்றாக முடியாது.
भाष्यम् - न चोभयनिमित्तत्वे ब्रह्मविद्येति नििश्चतो व्यपदेशो युक्तः। तदा ब्रह्मविद्या संसारिविद्या च स्यात्। न च वस्तुनोऽर्धजरतीयत्वं कल्पयितुं युक्तं तत्त्वज्ञानविवक्षायाम्, श्रोतुः संशयो हि तथा स्यात्। नििश्चतं च ज्ञानं पुरुषार्थसाधनमिष्यते“यस्य स्यादद्धा न विचिकित्सास्ति” (छा० उ० ३। १४। ४)“संशयात्मा विनश्यति” (गीता ४। ४०) इति श्रुतिस्मृतिभ्याम्। अतो न संशयितो वाक्यार्थो वाच्यः परहितार्थिना।
அனுவாதம்- அந்த இரண்டு நிமித்தங்களும் இருந்தால் ப்ரஹ்மவித்தையை நிச்சயமாக தீர்மானிக்கமுடியாது. அப்பொழுது ப்ரஹ்மவித்யா என்றும், சம்சாரி வித்யா என்றும் ஆகிவிடும். தத்வஞானத்தை விளக்கும்போது வஸ்துவிற்கு அர்த்த ஜரதீயத்துவத்தை (பாதி கோழி முட்டை இடுவதற்கும் பாதி கோழி சாப்பிடுவதற்கும் ஏற்றுக்கொள்வதை) கல்பிப்பது பொருந்தாது ஆகும். ஏன்எனில் சுரோத்தாவிற்கு சம்சயமே உண்டாகும். நிச்சயமான ஞானமே புருஷார்த்தத்திற்கு சாதனமாகும்.“यस्य स्यादद्धा न विचिकित्सास्ति” (யஸ்ய ஸ்யாதத்தா ந விசிகித்சாஅஸ்தி)“संशयात्मा विनश्यति” (சம்சயஆத்மா விநஷ்யதி) என்று சுருதி ஸ்மிருதிகளால் அறிகின்றோம். ஆகையால் பிறருக்கு ஹிதத்தை செய்ய விரும்புவோர் வாக்கியத்தின் சந்தேஹத்துடன் கூடிய அர்த்தத்தை கூறக்கூடாது.
भाष्यम् - पूर्व - ब्रह्मणि साधकत्वकल्पना अस्मदादिष्वव अपेशला“तदात्मानमेवावेत्तस्मात्तत्सर्वमभवत्” इति- इति चेत्?
அனுவாதம்- பூர்வ-“तदात्मानमेवा-वेत्तस्मा-त्तत्सर्वम--भवत्” (ததாத்மானமேவாஅவேத்தஸ்மாத்தத்சர்வமபவத்) என்று பிரஹ்மத்தில் நம்மைப்போன்று சாதகத்வகல்பனை செய்வது நன்று அல்ல. என்றால்?
भाष्यम् - सिद्धान्ती - न, शास्त्रोपालम्भात्। न ह्यस्मत्कल्पनेयम्, शास्त्रकृता तु, तस्माच्छास्त्रस्यायमुपालम्भः। न च ब्रह्मण इष्टं चिकीर्षुणा शास्त्रार्थविपरीतकल्पनया स्वार्थपरित्यागः कार्यः। न चैतावत्येवाक्षमा युक्ता भवतः। सर्वं हि नानात्वं ब्रह्मणि कल्पितमेव“एकधैवानुद्रष्टव्यम्” (बृ० उ० ४। ४। २०) “नेह नानास्ति किञ्चन” (४। ४। १९) “यत्र हि द्वैतमिव भवति” (२। ४। १४)“एकमेवाद्वितीयम्” (छा० उ० ६। २। १) इत्यादि वाक्यशतेभ्यः। सर्वो हि लोकव्यवहारो ब्रह्मण्येव कल्पितो न परमार्थः सन्, इत्यत्यल्पमिदमुच्यते“इयमेव कल्पना अपेशला” इति।
அனுவாதம்-ஸித்தாந்தீ- அவ்வாறு கூறுவது சரியல்ல. அது சாஸ்திரத்தை அவலம்பித்துள்ளதால் அது நம்முடைய கல்பனையல்ல. சாஸ்திரத்தினால் உண்டானது. ஆகையால் சாஸ்திரத்தை அவலம்பித்தது ஆகும். ப்ரஹ்மத்தில் இச்சை உடையவன் சாஸ்திரத்திற்கு விரோதமான அர்த்தத்தை கல்பனை செய்து அதனால் ஸ்வார்த்தத்தை பரித்தியாகம் செய்யக்கூடாது. ஆகையால் இவ்வாறு பொறுமையற்று இருக்கும் தன்மை உசிதமல்ல. எல்லா நாநாத்துவமும் ப்ரஹ்மத்தில் கல்பிதமே“एकधैवानुद्रष्टव्यम्”(ஏகதைவானுதிரஷ்டவ்யம்) “नेह नानास्ति किञ्चन”(நேஹ நாநாஸ்தி கிஞ்சன)“यत्र हि द्वैतमिव भवति” (யத்ர ஹி த்வைதமிவ பவதி),“एकमेवाद्वितीयम्” (ஏகமேவாத்விதீயம்) இவை முதலிய நூ ற்றுக்கணக்கான வாக்கியங்களால் கூறப்பட்டுள்ளது. எல்லா உலக வியவகாரங்களும் பிரஹ்மத்தில் கல்பிக்கப்பட்டவைகளே. உண்மையில் அல்ல என்பதால் மிகவும் “इयमेव कल्पना अपेशला” (இயம் ஏவ கல்பனா அபே†லா) என்று கூறப்பட்டது.
भाष्यम् - तस्माद् यत्प्रविष्टं स्रष् ब्रह्म तद्ब्रह्म। वैशब्दोऽवधारणार्थः। इदं शरीरस्थं यद् गृह्यते, अग्रे प्राक्प्रतिबोधादपि ब्रह्मैवासीत्, सर्वं चेदम्। किन्त्वप्रतिबोधात्“अब्रह्मास्म्यसर्वं च” इत्यात्मन्यध्यारोपात्“कर्ताहं क्रियावान्फलानां च भोक्ता सुखी दुःखी संसारी” इति चाध्यारोपयति। परमार्थतस्तु ब्रह्मैव तद्विलक्षणं सर्वं च। तत्कथिञ्चदार्येण दयालुना प्रतिबोधितम्“नासि संसारी” इत्यात्मानमेवावेत्स्वाभाविकम्। अविद्याध्यारोपितविशेषवर्जितमिति एवशब्दस्यार्थः।
அனுவாதம்- ஆகையால் எந்த சிருஷ்டிக்கும் ப்ரஹ்மம் பிரவேசித்ததோ அது ப்ரஹ்மம் வை(वै) சப்தமானது நிச்சயமாய் திடப்படுத்துவதற்காக. இந்த சரீரத்தில் எது கிரஹிக்கப்படுகிறதோ அது ஞானம் ஏற்படுவதற்கு முன்பே எல்லாம் ப்ரஹ்மமாகவே இருந்தது. ஆனால் அதை அறியாததினால் “ நான் அப்ரஹ்மமாயும், சர்வம் அற்றதாயும் இருக்கிறேன்” என்று ஆத்மாவில் அத்யாரோபித்து “நான் கர்த்தா, கிரியா, பலன்களின் போக்தா, சுகி, துக்கி, சம்சாரி” என்று அத்யாரோபம் செய்யப்படுகிறது. வாஸ்தவத்தில் அதைக்காட்டிலும் விலக்ஷணம் ப்ரஹ்மம், அதுவே எல்லாமாயும் இருக்கின்றது எவ்வாறாவது ஒரு தயாளுவான ஆச்சாரியரால் போதிக்கப்பட்டு “நான் சம்சாரியல்ல” என்று ஸ்வாபாவிகமான ஆத்மாவையே அறிகிறான். அவித்யா ஆரோபித விசேஷம் அற்றது என்று தெரிவிப்பதற்காக ஏவ(एव) சப்தமாகும்.
भाष्यम् - पूर्व - ब्रूहि कौऽसावात्मा स्वाभाविकः, यमात्मानं विदितवद्ब्रह्म।
அனுவாதம்- பூர்வ- சரிதான், ஆனால் அது ஸ்வாபாவிக ஆத்மா எது? என்று கூறு. எதனால் ப்ரஹ்மத்தை அறியலாம்.
भाष्यम् - सिद्धान्ती - ननु न स्मरस्यात्मानम्, दर्शितो ह्यसौ, य इह प्रविश्य प्राणित्यपानिति व्यानित्युदानिति समानितीति।
அனுவாதம்- ஸித்தாந்தீ- என்ன ஆத்மாவின் ஞாபகம் வரவில்லையா? எது பிரவேசித்து பிராணன் என்றும், அபானன் என்றும், வியானன் என்றும், உதானன் என்றும் சமானன் என்றும் அது காண்பிக்கப்பட்டது அல்லவா?
भाष्यम् - पूर्व - ननु“असौ गौः, असावश्वः” इत्येवमसौ व्यपदिश्यते भवता नात्मानं प्रत्यक्षं दर्शयसि।
அனுவாதம்- பூர்வ- ஆனால் இது பசு, இது குதிரை என்று இவ்வாறு இவைகளை பெயரால் தெரிவிக்கின்றீர்கள்? ஆனால் ஆத்மாவை அவ்வாறு பிரத்யக்ஷமாய் காண்பிக்கவில்லையே?
भाष्यम् - सिद्धान्ती - एवं तर्हि द्रष्टा श्रोता मन्ता विज्ञाता, स आत्मेति।
அனுவாதம்- ஸித்தாந்தீ- மேலும் இவ்வாறு தெரிந்துகொள், எது திரஷ்டா, சுரோதா, மந்தா, விக்ஞாதாவோ அதுவே ஆத்மா என்று.
भाष्यम् - पूर्व - नन्वत्रापि दर्शनादिक्रियाकर्तुः स्वरूपं न प्रत्यक्षं दर्शयसि। न हि गमिरेव गन्तुः स्वरूपं छिदिर्वा छेत्तुः।
அனுவாதம்- பூர்வ- ஆனால் இங்கும் நீ தர்சனம் முதலிய கிரியைகளை செய்யும் ஸ்வரூபத்தை பிரத்யக்ஷமாய் பாரக்கவில்லை. செல்லுவது என்றும் செல்பவனதும் வெட்டுதல் அதாவது வெட்டுபவனதும் ஸ்வபாவம் அல்ல.
भाष्यम् - सिद्धान्ती - एवं तर्हि दृष्टेर्द्रष्टा श्रुतेः श्रोता मतेर्मन्ता विज्ञातेर्विज्ञाता, स आत्मेति।
அனுவாதம்- ஸித்தாந்தீ- இவ்வாறு இருக்கும் பொழுது திரஷ்டாவின் த்ரருஷ்டா ஸ்ரோத்தாவின் ஸ்ரோதா, மந்தாவின் மந்தா, விக்ஞாதாவின் விக்ஞாதா அதுவே ஆத்மா.
भाष्यम् - पूर्व - नन्वत्र को विशेषो द्रष्टरि? यदि दृष्टेर्द्रष्टा, यदि वा घटस्य द्रष्टा, सर्वथापि द्रष्टैव। द्रष्टव्य एव तु भवान्विशेषमाह दृष्टेर्द्रष्टेति द्रष्टा तु यदि दृष्टेः, यदि वा घटस्य, द्रष्टा द्रष्टैव।
அனுவாதம்- பூர்வ- இங்கு திரஷ்டாவில் என்ன விசேஷம்? திருஷ்டியின் திரஷ்டாவிற்கும் கடத்தின் திரஷ்டாவிற்கும் எவ்விதமாகிலும் திரஷ்டாவேயாகும். நீங்கள் திரஷ்டவ்யத்திற்கே விசேஷம் கூறினீர்கள். திருஷ்டியின் திரஷ்டா என்று திரஷ்டாவிற்கும் அல்லது கடத்தின் திருஷ்டி என்றும் கூறினால் திரஷ்டாவேயாகும்.
भाष्यम् - सिद्धान्ती - न, विशेषोपपत्तेः। अस्त्यत्र विशेषः-दृष्टेर्द्रष्टा स दृष्टिश्चेद् भवति नित्यमेव पश्यति दृष्टिम्, न कदाचिदपि दृष्टिर्न दृश्यते द्रष्टा, तत्र द्रष्टुर्दृष्टा नित्यया भवितव्यम्, अनित्या चेद् द्रष्टुर्दृष्टिः. तत्र दृश्या या दृष्टिः सा कदाचिन्न दृश्येतापि, यथानित्यया दृष्टा घटादि वस्तु। न च तद्वद् दृष्टेर्द्रष्टा कदाचिदपि न पश्यति दृष्टिम्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு கூறுவது சரியல்ல.. ஏனெனில் கடதிரஷ்டாவிற்கும், திருஷ்டி திரஷ்டாவிற்கும் பேதம் உள்ளது. இங்கு ஒரு பேதம் உள்ளது- எது திருஷ்டியின் திரஷ்டாவாய் இருக்கிறதோ அது எப்பொழுது திருஷ்டியாகிறதோ அப்பொழுது நித்யமாய் பார்க்கிறது. அவ்வாறு ஏற்படாது எப்பொழுது திரஷ்டாவை திருஷ்டி ஒருபொழுதும் காணமுடியாது. அந்த அவஸ்தையில் திரஷ்டாவின் திருஷ்டி நித்யமாக இருக்கவேண்டும். திரஷ்டாவின் திருஷ்டி அநித்தியமானால் அதன் திருஷ்ய பூதமாகிய திருஷ்டியும் ஒரு பொழுதும் காணமுடியாமல் போகும், எவ்வாறு அநித்திய திருஷ்டியினால் கடம் முதலிய வஸ்து போல் ஆகும். ஆனால் அது போல் திருஷ்டியின் திரஷ்டா எப்பொழுதும் திருஷ்டியைக் காணமுடியாது.
भाष्यम् - पूर्व - किं द्वे दृष्टी द्रष्टुः- नित्या अदृश्या, अन्या अनित्या दृश्येति?
அனுவாதம்- பூர்வ- என்ன திரஷ்டாவிற்கு இரண்டு திருஷ்டிகளா? ஒன்று நித்யமாயும் அதிருஷ்யமாயும், மற்றொன்று அநித்தியமாயும் திருஷ்யமாயும் உள்ளதா?
भाष्यम् - सिद्धान्ती - बाढम्, प्रसिद्धा तावदनित्या दृष्टिः अन्धानन्धत्वदर्शनात्। नित्यैव चेत्सर्वोऽनन्ध एव स्यात्। द्रष्टुस्तु नित्या दृष्टिः“न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते”इति श्रुतेः। अनुमानाच्च- अन्धस्यापि घटाद्याभासविषया स्वप्ने दृष्टिरुपलभ्यते, सा तर्हीतरदृष्टिनाशे न नश्यति, सा द्रष्टुर्दृष्टिः। तयाविपरिलुप्तया नित्यया दृष्टा स्वरूपभूतया स्वयञ्ज्योतिः समाख्ययेतरामनित्यां दृष्टिं स्वप्नबुद्धान्तयोर्वासनाप्रत्ययरूपां नित्यमेवपश्यन्दृष्टेर्द्रष्टा भवति। एवञ्च सति दृष्टिरेव स्वरूपमस्याग्न्यौष्ण्यवत्, न काणादानामिव दष्टिव्यतिरिक्तोऽन्यश्चेतनो द्रष्टा।
அனுவாதம்- ஸித்தாந்தீ- சரிதான், உலகில் அந்த (குருட்டுத்தன்மை) அந்தத் (குருட்டுத்தன்மை அற்றது) தன்மை இரண்டும் காணப்படுவதால் அதில் அநித்திய திருஷ்டி பிரசித்தமாக உள்ளது. நித்யமாய் இருக்கும் பொழுது எல்லாம் அநந்தமாகிறது. (பார்வைதிருஷ்டி) உடையதாகிறது) திரஷ்டாவின் திருஷ்டி ஒருநாளும் லோபம் அடையாது. திரஷ்டாவின் திருஷ்டி நித்யமாகும்.“न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते” ந ஹி திரஷ்டு:திருஷ்டே: விபரிலோபோ வித்யதே) என்பது சுருதியின் வாக்கியம். அனுமானத்தாலும் - பார்வையற்ற புருஷனின் ஸ்வப்பனத்தில் கடம் முதலிய விஷயங்களின் திருஷ்டி காணப்படுகிறது. அந்த திருஷ்டியானது வேறு (கண்களுக்கு சம்பந்தப்பட்ட) த்ருஷ்டி நாசமானாலும் அந்த திருஷ்ட நாசமாகாது. அது திரஷ்டாவின் திருஷ்டி. அந்த திருஷ்டி ஒரு பொழுதும் நஷ்டமாகாத ஸ்வயம் ஜ்யோதி எனப்படும் ஸ்வஸ்வரூபமான நித்ய திருஷ்டியினால் ஸ்வப்னம். ஜாக்ரத் அவஸ்தைகளில் உள்ள வாசனா பிரத்யயரூபமாய் திருஷ்டியை நித்யமாய் பார்ப்பதால் அது திருஷ்டியின் திரஷ்டாவாக ஆகிறது. இவ்வாறு இருப்பதால் அக்னியின் உஷ்ணத்தைப்போல் திருஷ்டியே ஆத்மாவின் ஸ்வரூபமாகும். கணாதர் முதலிய மதத்தை அவலம்பித்தவர்களின் கருத்தைப் போன்று திருஷ்டியைக் காட்டிலும் வேறு ஒரு அன்ய சேதனம் திரஷ்டாவாக ஆகாது.
भाष्यम् - तद्ब्रह्म आत्मानमेव नित्यदृग्रूपमध्यारोपिता-नित्यदृष्टादिवर्जितमेवावेद्विदितवत्।
அனுவாதம்- அந்த பிரஹ்மம் அத்யாரோபித அநித்யதிருஷ்டடி முதலியவைகள் நீங்கிய நித்யதிருக்ரூப ஆத்மாவையே அறிந்ததுபோல் அறிந்தது.
भाष्यम् - पूर्व - ननु विप्रतिषिद्धं“न विज्ञातेर्विज्ञातारं विजानीयाः” (बृ० उ० ३। ४। २) इति श्रुतेः, विज्ञातुर्विज्ञानम्।
அனுவாதம்- பூர்வ- ஆனால்“न विज्ञातेर्विज्ञातारं विजानीयाः” (ந விக்ஞாதேர்விக்ஞானதாரம் விஜானீயா:) என்ற சுருதியினால் விக்ஞாதா (ஆத்மா)வை அறிவது என்பது விருத்தமான கூற்றாககாணப்படுகிறது.
- सिद्धान्ती- न, एवं विज्ञानान्न विप्रतिषेधः। एवं दृष्टेर्द्रष्टेति विज्ञायत एव। अन्यज्ञानानपेक्षत्वाच्च- न च द्रष्टुर्नित्यैव दृष्टिरित्येवं विज्ञाते द्रष्टृविषयां दृष्टिमन्यामाकाते। निवर्तते हि द्रष्टृविषयदृष्टाकाा तदसम्भवादेव। न ह्यविद्यमाने विषय आकाा कस्यचिदुपजायते। न च दृश्या दृष्टिर्द्रष्टारं विषयी-कर्तुमुत्सहते, यतस्तामाकेत। न च स्वरूपविषयाकाास्वस्यैव। तस्मादज्ञानाध्यारोपणनिवृत्तिरेव“आत्मानमेवावेत्” इत्युक्तम्, नात्मनो विषयीकरणम्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. இவ்விதமான விக்ஞானத்தால் சுருதிக்கு விரோதம் உண்டாகாது. இவ்வாறு திருஷ்டியின் த்ரஷ்டா என்று அறிகின்றான். வேறு ஞானத்தை அபேக்ஷிக்காததாலும் திரஷ்டாவின் திருஷ்டி நித்யமே என்று அறியும் பொழுது திரஷ்டாவின் விஷயத்தில் உள்ள திருஷ்டி வேறு ஒரு திருஷ்டியை அபேக்ஷிப்பதில்லை திருஷ்டி விஷய ஆகாங்க்ஷை நிவர்த்தியாவதால் அது இல்லாமல் போகிறது. இல்லாத விஷயத்தில் ஆகாங்க்ஷை ஒருவருக்கும். உண்டாகாது. திருஷ்யத்தால் திருஷ்டியானது திரஷ்டாவை விஷயம் செய்வதற்கு சாமர்த்தியம் அற்றது. ஸ்வரூபவிஷய ஆகாங்க்ஷா தன்னுடையதே எதனால் அதில் ஆகாங்க்ஷயைில்லையோ அதனால் அக்ஞான அத்யாரோப நிவர்த்தியே“आत्मानमेवावेत्” (ஆத்மானமேலாவேத்) என்று கூறப்பட்டது. ஆத்மா விஷயீ கரணம் ஆகாது. (அதாவது ஆத்மாவை விஷயமாய் அறியமுடியாது)
भाष्यम् - तत्कथमवेत्? इत्याह- अहं दृष्टेर्द्रष्टा आत्मा ब्रह्मास्मि भवामीति ब्रह्मैति- यत्साक्षादपरोक्षात्सर्वान्तर आत्मा अशनायाद्यतीतो नेति नेत्यस्थूलमनण्वित्येवमादिलक्षणम्, तदेवाहमस्मि, नान्यः संसारी, यथा भवानाहेति। तस्मादेवं विज्ञानात्तद्ब्रह्म सर्वमभवत्- अब्रह्माध्यारोपणापगमात् तत्कार्यस्यासर्वत्वस्य निवृत्त्या सर्वमभवत्। तस्माद्युक्तमेव मनुष्या मन्यन्ते यद्ब्रह्मविद्यया सर्वं भविष्याम इति।
அனுவாதம்- அந்த ப்ரஹ்மத்தை எவ்வாறு அறிவது? அதற்கு கூறப்படுகிறது- திரஷ்டாவின் திரஷ்டா ஆத்மா பிரஹ்மமாய் இருக்கிறேன் அவ்வாறு அறியப்படுகிறது.“ब्रह्मेति” (ப்ரஹ்மமேதி) அதாவது எது சாக்ஷாத் அபரோக்ஷமாயும். சர்வாந்தர ஆத்மா பசி முதலியவைகளைக் கடந்து நேதி, நேதி என்றும், ஸ்தூலம் அற்றதும் அணுத்துவம் அற்றதுமாகிய அநேக லக்ஷணமுடையது. அதுவே நானாய் இருக்கின்றேன் நீங்கள் கூறுவது போல் நான் சம்சாரியாக வேறாக இல்லை. ஆகையால் இந்த விக்ஞானத்தால் அந்த பிரஹ்மம் எல்லாம் ஆயிற்று. அபிரஹ்ம அத்யாரோபங்களின் நிவர்த்தியால் அந்த காரிய பூத அசர்வத்துவ நிவர்த்தியால் எல்லாம் ஆயிற்று. ஆகையால் மனிதனால் அந்த ப்ரஹ்மவித்தையால் எல்லாமாக ஆவோம் என்று கருதுவது பொருந்தமேயாகும்.
भाष्यम् - यत्पृष्टम्“किमु तद्ब्रह्मावेद् यस्मात्तत्सर्वम-भवत्” इति, तन्निर्णीतम्-“ब्रह्म वा इदमग्र आसीत् तदात्मानमेवावेदहं ब्रह्मास्मीति तस्मात्त सर्वमभवत्”इति।
அனுவாதம்- எது கேட்கப்பட்டதோ“किमु तद्ब्रह्मावेद् यस्मात्तत्सर्वमभवत्” (கிமு தத்பிரஹ்மாவேத் யஸ்மாத்சர்வமபவத்) என்று, அது நிர்ணயம் செய்யப்படுகிறது.“ब्रह्म वा इदमग्र आसीत् तदात्मानमेवावेदहं ब्रह्मास्मीति तस्मात्त सर्वमभवत्” (ப்ரஹ்ம வா இதமக்ர ஆசீத் ததாத்மானமேவாவேதஹம் ப்ரஹ்மாஸ்மீதி தஸ்மாத்தத்சர்வமபவத்) என்று.
भाष्यम् - तत्तत्र यो यो देवानां मध्ये प्रत्यबुध्यत प्रतिबुद्धवानात्मानं यथोक्तेन विधिना, स एव प्रतिबुद्ध आत्मा तद्ब्रह्माभवत्। तथर्षीणां तथा मनुष्याणां च मध्ये। देवानामित्यादि लोकदृष्टपेक्षया न ब्रह्मत्वबुुोच्यते।“पुरः पुरुष आविशत्” इति सर्वत्र ब्रह्मैवानुप्रविष्टमित्यवोचाम। अतः शरीराद्युपाधि-जनितलोकदृष्टपेक्षया देवानामित्याद्युच्यते। परमार्थतस्तु तत्र तत्र ब्रह्मैवाग्र आसीत्प्राक्प्रतिबोधाद् देवादिशरीरेष्वन्यथैव विभाव्यमानम्। तदात्मानमेवावेत्तथैव च सर्वमभवत्।
அனுவாதம்- அது அங்கு தேவர்களின் மத்தியில் எவர் எவர் ஆத்மாவை எவ்வாறு கூறப்பட்டதோ அந்த விதியினால் அறிகிறார்கள் (பிரதிபுத்யத). அதுவே பிரதிபுத்த ஆத்மா. அது ப்ரஹ்மமாயிற்று. அவ்வாறே ரிஷிகளும், மனிதர்களும் அடைந்தார்கள். தேவர்கள் முதலியவை கூறப்பட்டது. லோக திருஷ்டியினால் அன்றி பிரஹ்மத்துவ புத்தியினால் அல்ல.“पुरः पुरुष आविशत्” (புர: புருஷ: ஆவிஷத்) என்றது எங்கும் ப்ரஹ்மமே அனுபிரவேசித்துள்ளது என்று கூறினோம். ஆகையால் சரீரம் முதலிய உபாதியின் நிமித்தமான லோக திருஷ்டியால் தேவர்கள் முதலியவை கூறப்பட்டது. உண்மையில் அறிவதற்கு முன் (பிரபோதம் ஏற்படுவதற்கு முன்) அங்கு அங்கு தேவர் முதலிய சரீரங்களில் வேறாக பாவிக்கப்பட்டவை எல்லாம் அதற்கு முன் ப்ரஹ்மமாகவே இருந்தது. எப்பொழுது ஆத்மாவையே அறிந்தது. அவ்வாறே எல்லாமாகவும் ஆயிற்று.
भाष्यम् - अस्या ब्रह्मविद्यायाः सर्वभावापत्तिः फलमित्येतस्यार्थस्य द्रढिम्ने मन्त्रानुदाहरति श्रुतिः। कथम्? तद् ब्रह्म एतदात्मानमेव“अहमस्मि”इति पश्यन्नेतस्मादेव ब्रह्मणो दर्शनादृषिर्वामदेवाख्यः प्रतिपेदे ह प्रतिपन्नवान्किल। स एतस्मिन्ब्रह्मात्मदर्शनेऽवस्थित एतान्मन्त्रान्ददर्श-“अहं मनुरभवं सूर्यश्च” इत्यादीन्।
அனுவாதம்- இந்த ப்ரஹ்மவித்யையினுடைய சர்வபாவத்தை அடைவதே பலம் என்று இந்த அர்த்தத்தை திடப்படுத்துவதற்காக சுருதி மந்திரத்தினால் விளக்குகிறது. எவ்வாறு? அந்த ப்ரஹ்மம் இந்த ஆத்மாவே என்பதால்“अहमस्मि” (அஹமஸ்மி) என்று பார்த்து, இதனால் ப்ரஹ்மத்தை தரிசித்ததால் ரிஷி வாமதேவர் என்பவர் ஞானத்தை அடைந்தார். அவர் இந்த ப்ரஹ்மாத்ம தர்சனத்தில் நிலைபெற்று“अहं मनुरभवंसूर्यश्च” (அஹம் மனுரபவம் சூர்யƒச) என்பது முதலிய மந்திரங்களை சாக்ஷாத்காரம் செய்தார்.
भाष्यम् -“तदेतद्ब्रह्म पश्यन्”इति ब्रह्मविद्या परामृश्यते।“अहं मनुरभवं सूर्यश्च” इत्यादिना सर्वभावापत्तिं ब्रह्मविद्याफलं परामृशति। पश्यन्सर्वात्मभावं फलं प्रतिपेदे इत्यस्मात्प्रयोगाद् ब्रह्मविद्यासहायसाधनसाध्यं मोक्षं दर्शयति, भुञ्जानस्तृप्यतीति यद्वत्।
அனுவாதம்-“तदेतद्ब्रह्म पश्यन्” (ததேதத்ப்ரஹ்ம பச்யன்) என்று ப்ரஹ்மவித்யா விளக்குகிறது“अहं मनुरभवं सूर्यश्च” (அஹம் மனுரபவம் சூரியƒச), என்பது முதலியவைகளால் ஸர்வபாவத்தின் அடைவை பிரஹ்ம வித்யாபலன் என்று விமர்சிக்கிறது. ப்ரஹ்மத்தை அறிந்த (தரிசித்த) வாமதேவ ரிஷி சர்வாத்மபாவரூப பலனை அடைந்தார் என்பதிலிருந்து மோக்ஷத்திற்கு ப்ரஹ்மவித்யா சஹாயமான சாதனமானதால் அதன் சாத்யமாகிய மோக்ஷம் காட்டப்பட்டது. எவ்வாறு சாப்பிட்டவன் திருப்தி அடைவானோ அவ்வாறு.
भाष्यम्-सेयं ब्रह्मविद्यया सर्वभावापत्तिरासीन्महतां देवादीनां वीर्यातिशयात्। नेदानीमैदंयुगीनानां विशेषतो मनुष्याणाम्, अल्पवीर्यत्वादिति स्यात्कस्यचिद्धिः, तदुत्थापनायाह- तदिदं प्रकृतं ब्रह्म यत्सर्वभूतानुप्रविष्टं दृष्टिक्रियादिलिङ्गम्, एतर्ह्येतस्मिन्नपि वर्तमानकाले यः किश्चावृत्तबाह्यौत्सुक्य आत्मानमेवैवं वेद“अहं ब्रह्मास्मि” इति अपोह्योपाधिजनितभ्रान्तिविज्ञानाध्यारोपितान्विशेषान् संसारधर्मा-नगन्धितमनन्तरमबाह्यं ब्रह्मैवाहमस्मि केवलमिति- सोऽविद्या-कृतासर्वत्वनिवृत्तेर्ब्रह्मविज्ञानादिदं सर्वं भवति। न हि महावीर्येषु वामदेवादिषु हीनवीर्येषु वा वार्तमानिकेषु मनुष्येषु ब्रह्मणो विशेषस्तद्विज्ञानस्य वास्ति।
அனுவாதம்- ப்ரஹ்மவித்யா வாயிலாய் அந்த இந்த ஸர்வாத்மபாவத்தின் பிராப்தி தேவர் முதலிய மஹாபுருஷர்களில் விசேஷ சாமர்த்தியத்தின் காரணமாய் உண்டாயிற்று. இவ்வர்த்தமான யுகத்தில் உள்ள ஜீவர்களுக்கு அல்ப வீரியமுள்ளதால், அதன் காரணமாய் குறிப்பாக மனிதர்கள் அதை அடையமுடியாது என்று இவ்வாறு விசாரம் சித்தத்NO-CHதில் உண்டாகும் பொழுது அதை நிவர்த்திப்பதற்காக சுருதி கூறுகிறது- அவ்வாறான எந்த பிரக்ருத ப்ரஹ்மமானது, எல்லா பூதங்களிலும் பிரவேசித்துள்ளதோ, திருஷ்டி, கிரியா, லிங்கம், அதாவது இந்த நிகழ்காலத்திலும் எந்த ஒரு பாஹ்யத்வ ஆவ்ருத்த விஷயங்களில் ஆசையை துறந்து“अहं ब्रह्मास्मि” (அஹம் ப்ரஹ்மாஸ்மி) என்று ஆத்மாவை இவ்வாறு அறிகிறான். அதாவது உபாதியினால் உண்டான பிராந்தி விக்ஞான அத்யரோபிதமான விசேஷங்களாகிய சம்சார தர்மங்கள் வாசனைக்குக் கூட சிறிதும் அற்றது, உள்ளும் வெளியும் அற்று கேவல சுத்த ப்ரஹ்மமாகவே இருக்கிறேன். அந்த வித்தையினால் உண்டான சர்வத்வமற்ற தன்மை நீங்கிய உல்ன் ப்ரஹ்மம் விக்ஞானத்தினால் இது எல்லாம் ஆகிறது.(इदं सर्वं भवति) (மஹா வீரியம் உடையவர்களான வாமதேவர் முதலியோருக்கும், மந்தவீரியமுள்ள இக்கால மனிதர்களுக்கும் உள்ள ப்ரஹ்மத்திற்கோ, அதன் ஞானத்திற்கோ விசேஷம் (வேறுபாடு) ஒன்றும் இல்லை.
भाष्यम्- वार्तमानिकेषु पुरुषेषु तु ब्रह्मविद्याफले अनैकान्तिकता शत इत्यत आह- तस्य ह ब्रह्मविज्ञातुर्यथोक्तेन विधिना देवा महावीर्याश्च नापि अभूत्य अभवनाय ब्रह्मसर्वभावस्य, नेषते न पर्याप्ताः, किमुतान्ये।
அனுவாதம்- இப்பொழுதுள்ள புருஷர்களுக்கு பிரஹ்மவித்யா பலத்தில் நிச்சயமற்றதன்மை உள்ளது என்ற சங்கை எழும்பொழுது சுருதி கூறுகின்றது- மஹா வீரியமுள்ள தேவகணங்களுக்கும் முன்பு கூறப்பட்ட விதியினால் அந்த ப்ரஹ்மத்தை அறிபவனுக்கு அபூதி அதாவது ஸர்வபாவம் ஏற்படுவதற்கான சாமர்த்தியம் இல்லாத போது அது பரியாப்தம் (போதுமானதாக) ஆகாது. அவ்வாறு இருக்கும்பொழுது மற்றவர்களைக் குறித்து என்ன கூறுவது.
भाष्यम् - ब्रह्मविद्याफलप्राप्तौ विघ्नकरणे देवादय ईशत इति का शङ्का? इत्युच्यते- देवादीन्प्रति ऋणवत्त्वान्मर्त्यानाम्।“ब्रह्मचर्येण ऋषिभ्यो यज्ञेन देवेभ्यः प्रजया पितृभ्यः” इति हि जायमानमेवर्णवन्तं पुरुषं दर्शयति श्रुतिः। पशुनिदर्शनाच्च“अथोऽयं वा” (बृ० उ० १। ४। १६) इत्यादिलोकश्रुतेश्चात्मनो वृत्तिपरिपिपालयिषयाधमर्णानिव देवाः परतन्त्रान्मनुष्यान्प्रत्य-मृतत्वप्राप्तिं प्रति विघ्नं कुर्युरिति न्याय्यैवैषा शङ्का।
(பிரஹ்மவித்யா பலப்பிராப்தியில் தேவர்களினால் எவ்வாறு விக்னம் ஏற்படுகிறது என்பது சங்கை)அனுவாதம்-ப்ரஹ்மவித்யையின் பலப்பிராப்தியில் தேவர்கள் விக்னம் செயவதில் ஈடுபடுகிறார்கள் என்பதில் எதற்காக சங்கை எனில்- இதைக்குறித்துக் கூறப்படுகிறது- மரணதர்மமுடைய மனிதர்கள் தேவர்களைக் குறித்து ருணவான்களாகிறார்கள் (கடன் பட்டவர்களாக ஆகின்றனர்). “ब्रह्मचर्येण ऋषिभ्यो यज्ञेन देवेभ्यः प्रजया पितृभ्यः”(ரிஷிப்யோ யக்ஞேன தேவேப்ய: பிரஜயா பித்ருப்ய:) என்று ஜன்ம மாத்திரத்தினாலேயே புருஷனுக்கு ருணித்துவம் காட்டப்பட்டுள்ளது. அவ்வாறே“अथो अयं वा”(அதோ அயம் வா)என்று (மனிதனை) பசு என்று கூறியிருப்பதால் அவ்வாறு ருணத்தைக் கொடுப்பவன், அந்த ருணத்தைப் பெற்றுக்கொள்பவனுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கின்றான். அவ்வாறே தன்னுடைய விருத்தியை நிர்வஹிப்பதற்காக பரதந்திர மனிதர்களின் அமிருதத்துவ பிராப்திக்கு விக்னம் செய்கின்றார்கள் என்பதில் இந்த சங்கைக்கு நியாயம் உள்ளது.
भाष्यम् - स्वपशून्स्वशरीराणीव च रक्षन्ति देवाः। महत्तरां हि वृत्तिं कर्माधीनां दर्शयिष्यति देवादिनां बहुपशुसमतयैकैकस्य पुरुषस्य।“तस्मादेषां तत्र प्रियं यदेतन्मनुष्या विद्युः”(१। ४। १०) इति हि वक्ष्यति।“यथा ह वै स्वाय लोकायारिष्टिमिच्छेदव ्ँ हेवंविदे सर्वाणि भूतान्यरिष्टिमिच्छन्ति” (१। ४। १६) इति च।
அனுவாதம்- தேவர்கள் தங்களுடைய பசுக்களை தங்களுடைய சரீரத்திற்கு சமமாக ரக்ஷிக்கின்றார்கள். ஒவ்வொரு புருஷனையும் அநேக பசுக்களுடன் சமானமாக செய்து சுருதியானது அதனால் தேவதைகளின் மஹத்தான கர்மாதீன விருத்தியை காண்பிக்கின்றது. மேலும் இவ்வாறு கூறுகிறது“तस्मादेषां तत्र प्रियं यदेतन्मनुष्याःविद्युः” (தஸ்மாதேஷாம் தத்ர பிரியம் யதேதன்பனுஷ்யாவித்யு:)“यथा ह वै स्वाय लोकायारिष्टिमिच्छेदेव ँहैवंविदे सर्वाणि भूतान्यरिष्टिमिच्छन्ति” (யதா ஹ வை ஸ்வாய லோகாயாரிஷ்ட்டிமிச்சேதேவப் ஹைவம்விதே சர்வாணி பூதான்யரிஷ்ட்டிமிச்சந்தி) என்று.
भाष्यम् - ब्रह्मवित्त्वे पारार्थ्यनिवृत्तेर्न स्वलोकत्वं पशुत्वञ्चे-त्यभिप्रायोऽप्रियारिष्टिवचनाभ्यामवगम्यते। तस्माद्ब्रह्मविदो ब्रह्मविद्याफलप्राप्तिं प्रति कुर्युरेव विघ्नं देवाः, प्रभाववन्तश्च हि ते।
அனுவாதம்- ப்ரஹ்மஞானம் அடைந்தவர்களுக்கு மற்றவைகளை அனுபவித்தல் என்பது நீங்கியதால் தேஹாத்மத்துவமும், தேவபசுத்துவமும் இல்லை என்ற அபிப்பிராயம் பிரியமற்ற நன்மையற்ற வசனங்களால் விதிக்கப்படுகிறது. ஆகையால் ப்ரஹ்மவேதாக்களுக்கு ப்ரஹ்மவித்யாபலப்பிராப்திக்கு தேவர்கள் விக்னம் செய்வார்கள். அவர்கள் பிரபாவம் உடையவர்களாகவும் இருக்கின்றார்கள்.
भाष्यम्- शङ्का- नन्वेवं सत्यन्यास्वपि कर्मफलप्राप्तिषु-देवानां विघ्नकरणं पेयपानसमम्। हन्त तर्ह्यविस्रम्भोऽभ्युदय-निःश्रेयससाधनानुष्द्भानेषु। तथेश्वरस्याचिन्त्यशक्तित्वाद्विघ्नकरणे प्रभुत्वम्। तथा कालकर्ममन्त्रौषधितपसाम्। एषां हि फलसम्पत्तिविपत्तिहेतुत्वं शास्त्रे लोके च प्रसिद्धम्। अतोऽप्यनाश्वासः शास्त्रार्थानुष्द्भाने।
அனுவாதம்-சங்கை- இவ்வாறு இருப்பதால் வேறு மற்ற கர்மப்பலப் பிராப்திகளிலும் தேவர்களுக்கு விக்னம் செய்வதில் ஜலம் அருந்துவது போல் (சுலபம்) ஆகிறது. இவ்வாறு இருப்பதால் அப்யுதய பலம், நிஷ்ரேயஸ சாதன அனுஷ்டானங்களில் விஸ்வாசம் ஏற்படாது. அவ்வாறு ஈஸ்வரனுக்கும் சிந்திக்கமுடியாத சக்தி உள்ளதால் விக்னம் செய்வதில் நிபுணத்துவம் உள்ளது. அவ்வாறே கால, கர்ம மந்திர, ஔஷதம் தபசால் மிகுந்த பிரபாவம் உள்ளது. பலத்தின் பிராப்தி, அப்ராப்தி இவைகளுக்குகான ஹேதுத்துவம் உலக வழக்கிலும் சாஸ்திரங்களிலும் பிரசித்தமாய் உள்ளது. ஆகையால் சாஸ்திர அனுஷ்டானத்தில் விச்வாசம் உண்டாகாது.
भाष्यम् - समाधानम् - न, सर्वपदार्थानां नियतनिमित्तोपादानात्, जगद्वैचित्र्यदर्शनाच्च। स्वभावपक्षे च तदुभयानुपपत्तेः।“सुखदुःखादि फलनिमित्तं कर्म” इत्येतस्मिन्पक्षे स्थिते वेदस्मृतिन्यायलोकपरिगृहीते, देवेश्वरकालास्तावन्न कर्मफलविपर्यासकर्तारः, कर्मणां कािकारकत्वात्। कर्म हि शुभाशुभं पुरुषाणां देवकालेश्वरादिकारकमनपेक्ष्य नात्मानं प्रति लभते, लब्धात्मकमपि फलदानेऽसमर्थम्, क्रियाया हि कारकाद्यनेकनिमित्तोपादान-स्वाभाव्यात्। तस्मात्क्रियानुगुणा हि देवेश्वरादय इति कर्मसु तावन्न फलप्राप्तिं प्रत्यविस्रम्भः।
அனுவாதம்- சமாதானம்- அவ்வாறு ஆகமுடியாது. எல்லா பதார்த்தங்களுக்கும் நிச்சயிக்கப்பட்ட காரணம் கிரஹிக்கப்படுகிறது. அவ்வாறே ஜகத்தில் சுகம் துக்கம் முதலியவைச் வைசித்ரியங்கள் காணப்படுவதாலும் ”சுகதுக்க பலன்களின் நிமித்தமானது கர்மம்” என்னும் இப்பக்ஷத்தில் வேதம், ஸ்மிருதி, நியாயம் லோகம் முதலியவைகளின் வாயிலாய் கிரஹிக்கப்படுகிறது, தேவ, ஈஸ்வர, காலம் இவைகள் கர்ம பல விஷயத்திற்கு சககாரிகளாய் இருக்கின்றன. ஏன்எனில் கர்மங்களுக்கு காரகங்கள் அபேக்ஷிக்கப்படுகின்றன, தேவ, கால, ஈஸ்வரன் முதலிய காரகங்களை அபேக்ஷிக்காமல் மனிதர்களுக்கு சுபா சுபகர்மங்கள் தானாகவே வந்து அடையாது. அவ்வாறு இல்லாமல் அடைந்தால் அதற்கு பலன் அளிப்பதில் சமர்த்தம் இருக்காது. ஏன்எனில் காரகம் முதலியவை அநேக நிமித்தங்களை கிரஹித்தால் மட்டுமே கிரியை சம்பவிக்கும். ஆகையால் தேவதா, ஈஸ்வரன் முதலியவை கர்மத்தின் குணத்தை அனுசரிக்கும். ஆகையால் அதன் காரணமாக கர்மத்தின் பலப்ராப்தியில் விசுவாசமற்ற தன்மை ஏற்படாது.
भाष्यम्-कर्मणामप्येषां वशानुगत्वं क्वचित्, स्वसामर्थ्यस्याप्रणोद्यत्वात्। कर्माकालदैवद्रव्यादिस्वभावानां गुणप्रधानभावस्त्वनियतो दुर्विज्ञेयश्चेति तत्कृतो मोहो लोकस्यर्मैव कारकं नान्यत्फलप्राप्ताविति केचित्, दैवमेवेत्यपरे, काल इत्येके द्रव्यादिस्वभाव इति केचित्, सर्व एते संहता एवेत्यपरे। तत्र कर्मणः प्राधान्यमङ्ग ीकृत्य वेदस्मृतिवादाः-“पुण्यो वै पुण्येन कर्मणा भवति पापः पापेन” (बृ० उ० ३। २। १३) इत्यादयः। यद्यप्येषां स्वविषये कस्यचित्प्राधान्योद्भव इतरेषां तत्कालीनप्राधान्य-शक्तिस्तम्भः, तथापि न कर्मणः फलप्राप्तिं प्रत्यनैकान्तिकत्वम्, शास्त्रन्यायनिर्धारितत्वात्कर्मप्राधान्यस्य।
அனுவாதம்- இதைத்தவிர இந்த தேவர்களுக்கு விக்னம் செய்வது என்பது கர்மங்களின் அதீனமாகும். ஏன்எனில் தன்னுடைய சாமர்த்தியத்தால் கர்மங்களை பாதகம் செய்யமுடியாது. கர்ம, காலதேவ, திரவ்யங்களின் ஸ்வபாவங்கள் கௌணமானதாயும், முக்கியமானதாயும் இருப்பதால் அதன் தன்மை நிச்சயமற்றதாயும், அறிய முடியாததாயும் உள்ளது. இதன் காரணமாய் உலகத்தோருக்கு மோஹம் உண்டாகிறது. இதனால் சிலர் பலப்ராப்திக்கு கர்மாவே காரகம் என்றும். சிலர் இல்லை என்றும், சிலர் தெய்வம் என்றும், சிலர் காலம் என்றும், சிலர் த்ரவ்யம் முதலிய ஸ்வபாவம் என்றும் சிலர் எல்லாம் சேர்ந்தது என்றும் கூறுகின்றனர். இதில் கர்மாவையே அங்கீகரித்து வேதம் ஸ்மிருதிகளின் வாதம்-“पुण्यो वै पुण्येन कर्मणा भवति पापः पापेन” (புண்யோ வை புண்யேன கர்மணா பவதி பாப: பாபேன) என்பவை முதலியவைகளால், இவ்வாறு ஆனாலும் எப்பொழுது தன் தன் விஷயத்தில் எது எது பிரதானமாகிறதோ அப்பொழுது மற்ற காரகங்களின் பிரதானசக்தி நிரோதமாகிறது. அவ்வாறு இருந்தாலும் பலப்ராப்தியில் கர்மத்திற்கு அநேகாந்திகத்துவம் (அப்ரதானம்) சம்பவிக்காது. ஏன் எனில் சாஸ்திரங்களாலும், நியாயங்களாலும் கர்மத்திற்கு பிரதானம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
भाष्यम् - न, अविद्यापगममात्रत्वाद् ब्रह्मप्राप्तिफलस्ययदुक्तं ब्रह्मप्राप्ति फलं प्रति देवा विघ्नं कुर्युरिति, तत्र न देवानां विघ्नकरणे सामर्थ्यम्, कस्मात्? विद्याकालानन्तरितत्वाद् ब्रह्मप्राप्तिफलस्य। कथम्? यथा लोके द्रष्टुश्चक्षुष आलोकेन संयोगो यत्कालः, तत्काल एव रूपाभिव्यक्तिः। एवमात्मविषयं विज्ञानं यत्कालम्, तत्काल एव तद्विषयाज्ञानतिरोभावः स्यात्। अतो ब्रह्मविद्यायां सत्यामविद्याकार्यानुपपत्तेः प्रदीप इव तमः कार्यस्य, केन कस्य विघ्नं कुर्युर्देवाः- यत्रात्मत्वमेव देवानां ब्रह्मविदः।
அனுவாதம்- அவ்வாறு ப்ரஹ்மவித்யாபலனில் விக்னம் செய்யமுடியாது. ஏனெனில் ப்ரஹ்மப்ராப்தியின் பலன் அவித்யா நீக்கத்தினாலோயே ஆகும். ப்ரஹ்மவித்யாபலனைக் குறித்து தேவர்கள் விக்னம் செய்யக்கூடும் என்று கூறப்பட்டது. அவ்வாறு இருந்தாலும் அங்கு தேவர்களுக்கு விக்னம் செய்வதில் சக்தியற்றவர்களாக ஆகிறார்கள். எதனால்? ஏன்எனில் ஞானம் அடைந்தபின் ப்ரஹ்மபிராப்திபலன் உண்டாகிறது. எவ்வாறு உலகில் பார்ப்பவன் கண்களின் பிரகாசத்துடன் சம்யோகம் ஏற்படுகிறதோ அப்பொழுது ரூபம் வெளிப்படுகிறது. அவ்வாறே ஆத்ம விஷய விக்ஞானமும் எப்பொழுது உண்டாகிறதோ அப்பொழுதே அந்த விஷய அக்ஞானமும் திரோபாவம் அடைகிறது. (மறைந்துவிடுகிறது.) ஆகையால் இருளின் காரியத்திற்கு எப்படி தீபமோ அவ்வாறு பிரஹ்மவித்யை இருக்கும் பொழுது அவித்யாகாரியம் நிலைக்காது. எதனால், யாருக்கு தேவர்கள் விக்னம் செய்வார்கள்? பிரஹ்மவேத்தாக்கள் தேவர்களையும் ஆத்மபாவமாய் அடைந்தவர்களானார்கள்.
भाष्यम् - तदेतदाह- आत्मा स्वरूपं ध्येयं यत्तत्सर्वशास्त्रैर्विज्ञेयं ब्रह्म, हि यस्मात्, एषां देवानाम्, स ब्रह्मविद्भवति। ब्रह्मविद्यासमकालमेवाविद्यामात्रव्यवधाना-पगमाच्छुक्तिकायाइव रजताभासायाः शुक्तिकात्वमित्यवोचाम। अतो नात्मनः प्रतिकूलत्वे देवानां प्रयत्नः सम्भवति। यस्य ह्यनात्मभूतं फलं देशकालनिमित्तान्तरितम्, तत्रानात्मविषये सफलः प्रयत्नो विघ्नाचरणाय देवानाम्। न त्विह विद्यासमकाल आत्मभूते देशकालनिमित्तानन्तरिते, अवसरानुपपत्तेः।
அனுவாதம்- இதைக்குறித்து சுருதி கூறுகிறது- இந்த தேவர்களுடைய ஆத்மாத்யேயஸ்வரூபம் அதாவது அது எல்லா சாஸ்திரங்களாலும் அறியக்கூடிய விக்ஞேய ப்ரஹ்மம். ஆகையால் ப்ரஹ்மவித் ஆகிறான். ரஜத ஆபாசமுடைய சுக்தியின் சுக்தித்துவம் தெரிந்தபொழுது யதார்த்த ஞானம் உடனே உண்டாவது போல் ப்ரஹ்மவித்தையின் சமகாலத்திலேயே அவித்தை என்பது நீங்கிவிடுகிறது. ஆகையால் ஆத்மாவிற்கு பிரதிகூலம் செய்வதில் தேவதைகளின் பிரயத்தனம் சம்பவிப்பதில்லை. அவர்களுக்கு தேசகால நிமித்தங்களால் மறைக்கப்படாததும், ஞான உதயகாலத்தில் தேவதைகளையும் ஆத்மாவாய் அறிந்த ப்ரஹ்ம வேத்தாவைக்குறித்து விக்னம் செய்வதில் பிரயத்தனம் செய்வது சபலமாகாது. ஏனெனில் அதற்கு தேவை இல்லாமலாகிவிடுகிறது.
भाष्यम् - पूर्व - एवं तर्हि विद्याप्रत्ययसन्तत्यभावाद् विपरीतप्रत्ययतत्कार्ययोश्च दर्शनाद् अन्त्य एवात्मप्रत्ययोऽविद्या-निवर्तको न तु पूर्व इति।
அனுவாதம்- பூர்வ- இவ்வாறு இருக்கும்பொழுது வித்யையின் பிரத்யயத்தின் சந்ததி (தொடர்ச்சி) இல்லாததால் விபரீத பிரத்யயமும் அதன் காரியமும் காணப்படுவதால் முடிவில் (அந்நியத்தில்) தான் ஆத்மாகார விருத்தி அவித்யையை நிவர்த்திக்கின்றது. அதற்கு முன்பு அல்ல, என்று.
भाष्यम् - सिद्धान्ती - न, प्रथमेनानैकान्तिकत्वात्। यदि हि प्रथम आत्मविषयः प्रत्ययोऽविद्यां न निवर्तयति, तथान्त्योऽपि, तुल्यविषयत्वात्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஏன்எனில் முதல் பிரத்யயம் போல் கடைசி பிரத்யயமும் மாறுபடக்கூடும். ஆத்மவிஷயத்தின் முதல் பிரத்யயம் அவித்யாவை நிவர்த்திக்கவில்லை எனில் அவ்வாறே கடைசி பிரத்யயமும் நிவர்த்திக்காது. ஏனெனில் இரண்டின் விஷயமும் சமானமானதேயாகும்.
भाष्यम् - पूर्व - एवं तर्हि सन्ततोऽविद्यानिवर्तको न विच्छिन्न इति।
அனுவாதம்- பூர்வ- அவ்வாறானால் சந்தத (அவிச்சின்ன) ஆத்ம பிரத்யயமே அவித்தையை நிவர்த்தி செய்துவிடும். விச்சின்னத்தால் (பிளவு மறைவுப்பட்டதால்) முடியாது என்பதாகும் என்று.
भाष्यम् - सिद्धान्ती - न, जीवनादौ सति सन्तत्यनुपपत्तेः। न हि जीवनादिहेतुके प्रत्यये सति विद्याप्रत्ययसन्ततिरुपपद्यते, विरोधात्। अथ जीवनादिप्रत्ययतिरस्करणेनैव आमरणान्ताद्विद्या-सन्ततिरिति चेन्न, प्रत्ययेयत्तासन्तानानवधारणाच्छास्त्रार्था-नवधारणदोषात्। इयतां प्रत्ययानां सन्ततिरविद्याया निवर्तिकेत्यनवधारणाच्छास्त्रार्थो नावध्रियेत, तच्चानिष्टम्।
அனுவாதம்-ஸித்தாந்தீ-அவ்வாறு அல்ல. ஏன்எனில் ஜீவனாதிகள் இருக்கும்பொழுது ஆத்மாகார விருத்தி சம்பவிக்காது. ஜீவனாதிகளின் ஹேது பூதமான விருத்திகள் இருக்கும்பொழுது அவிச்சின்னமான (இடையில் விடுபடாத)து விரோதமாய் இருப்பதால் சம்பவிக்காது. ஆகையால் ஜீவனாதி பிரத்யயங்களை (விருத்திகளை) திரஸ்கரிக்காமால் மரணம் வரையிலும் வித்யாசந்ததி உள்ளது என்பது சரியில்லை. ஏனெனில் வித்யா பிரத்யயத்தின் சந்ததியை நிச்சயமாய் புரிந்து கொள்ளாததால் சாஸ்திர அபிப்ராய நிச்சயத்தில் தோஷம் உண்டாகிறது. இவ்வளவு பிரத்யய சந்ததி அவித்தையை நிவிர்த்தி செய்யக்கூடியது என்று நிச்சயமாய் அறியாததால் சாஸ்திரத்தின் அர்த்தத்தை (தாத்பரியத்தை) நிச்சயமாக அறியாதது இஷ்டமாகாது.
भाष्यम् - पूर्व - सन्ततिमात्रत्वेऽवधारित एवेति चेत्?
அனுவாதம்- பூர்வ- அவ்வாறானால் பிரத்தியய சந்ததி மாத்திரமாய் இருப்பதால் சாஸ்த்திரார்த்தம் நிச்சயமாகுமே எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, आद्यन्तयोरविशेषात्। प्रथमा विद्याप्रत्ययसन्ततिर्मरणकालान्ता वेति विशेषाभावात्, आद्यन्तयोः प्रत्ययोः पूर्वोक्तौ दोषौ प्रसज्येयाताम्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஆரம்ப பிரத்யயத்திற்கும் கடைசி பிரத்யயத்திற்கும் விசேஷம் ஒன்றும் தனியாக இல்லை. முதல் வித்யா பிரத்யய சந்ததிக்கும் மரணமுடிவு வரையிலும் உள்ள பிரத்யய சந்ததிக்கும் தனியாக வேறு விசேஷமில்லாததால் ஆத்யந்த பிரத்யயங்களுக்கு முன்பு கூறிய இரண்டு தோஷங்கள் உண்டாகும்.
भाष्यम् - पूर्व - एवं तर्ह्यनिवर्तक एवेति चेत्?
அனுவாதம்- பூர்வ- இவ்வாறு இருக்கும்பொழுது நிவர்த்தி செய்யமுடியாதே எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न,“तस्मात्तत्सर्वमभवत्” (बृ० उ० १।४। १०) इति श्रुतेः।“भिद्यते ह्य्दयग्रन्थिः”(मु० उ० २। २। ८)“तत्र को मोहः”(ईशा० ७) इत्यादि श्रुतिभ्यश्च।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல“तस्मात्तत्सर्वमभवत्” (தஸ்மாத்தத்சர்வமபவத்) என்று சுருதியினாலும்“भिद्यते ह्य्दयग्रन्थिः” (பித்யதே ஹ்ருதயகிரந்தி:)“तत्र को मोहः” (தத்ர கோ மோஹ:) ஸ்மிருதிகளாலும் சித்திக்கிறது.
भाष्यम् - पूर्व - अर्थवाद इति चेत्?
அனுவாதம்- பூர்வ- அர்த்தவாதம் எனில்?
भाष्यम्-सिद्धान्ती - न, सर्वशाखोपनिषदामर्थवादत्व-प्रसङ्गात्। एतावन्मात्रार्थत्वोपक्षीणा हि सर्वशाखोपनिषदः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏனெனில் எல்லா சாஸ்த்ர சாகைளின் உபநிஷத்துக்கள் அர்த்தவாதமாகிவிடும். ஏனெனில் எல்லா சாகைகளின் உபநிஷத்துக்களும் இந்த அர்த்தத்திலேயே முடிகின்றது.
भाष्यम् - पूर्व - प्रत्यक्षप्रमितात्मविषयत्वादस्त्येवेति चेत्?
அனுவாதம்- பூர்வ- பிரத்யக்ஷ பிரமாணத்தால் அறியப்படும் ஆத்மாவுடன் சம்பந்தப்பட்டதால் அதற்கு அர்த்தவாதத்துவம் ஏற்படும் எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, उक्तपरिहारत्वात्। अविद्याशोकमोहभयादिदोषनिवृत्तेः प्रत्यक्षत्वादिति चोक्तः परिहारः। तस्मादाद्योऽन्त्यः सन्ततोऽसन्ततश्चेत्यचोद्यमेतत्। अविद्यादिदोषनिवृत्तिफलावसानत्वाद्विद्यायाः।यएवाविद्यादिदोष-निवृत्तिफलकृत्प्रत्यय आद्योऽन्त्यः सन्ततोऽसन्ततो वा स एव विद्येत्यभ्युपगमान्न चोद्यस्यावतारगन्धोऽप्यस्ति।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. இதனுடைய பரிகாரம் முன்பே கூறப்பட்டுவிட்டது. அவித்யா, சோகம், மோகம், பயம் முதலிய தோஷங்களின் நிவர்த்தி பிரத்யக்ஷம் என்று கூறப்பட்டது. இதன் பரிஹாரம் ஆகும். ஆகையால் ஆதி அந்தமோ, சந்ததி அசந்ததியோவாக இருந்தாலும் அந்த விஷயத்தில் சங்கை இல்லை. ப்ரஹ்ம ஞானத்தால் அவித்யை முதலிய தோஷங்களின் நிவர்த்தி பலனே முடிவானதாகிறது. எது அவித்யை முதலிய தோஷ நிவர்த்தி பலனை உண்டாக்கும் பிரத்யயம் ஆதி அந்தமோ, சந்ததி அசந்ததியோ இருந்தாலோ அது வித்யா என்று அறிய்பபடுவதால் இதில் சந்தேஹம் என்பது வாசனைக்குக் கூட இல்லை.
भाष्यम्- यत्तूक्तं विपरीतप्रत्ययतत्कार्ययोश्च दर्शनादिति, न; तच्छेषस्थितिहेतुत्वात्। येन कर्मणा शरीरमारब्धं तद्विपरीत-प्रत्ययदोषनिमित्तत्वात्तस्य तथाभूतस्यैव विपरीतप्रत्ययदोष-संयुक्तस्य फलदाने सामर्थ्यमिति, यावच्छरीरपातः तावत्फलोप-भोगाङ्गतया विपरीतप्रत्ययं रागादिदोषं च तावन्मात्रमाक्षिपत्येव, मुक्तेषुवत्प्रवृत्तफलत्वात्तद्धेतुकस्य कर्मणः। तेन न तस्य निवर्तिका विद्या, अविरोधात्। किं तर्हि स्वाश्रयादेव स्वात्मविरोध्यविद्याकार्यं यदुत्पिसु तन्निरुणद्धि, अनागतत्वात्। अतीतं हीतरत्।
அனுவாதம்- விபரீதஞானமும், அதன் காரியமும் காணப்படுவதால் ஆத்மஞானம் அவித்தையை நிவர்த்திக்கவில்லை என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் அது ப்ராரப்தத்தின் ஸ்திதியின் காரணமாகும். எந்தக் கர்மத்தினால் வித்வான்களுடைய சரீரம் ஆரம்பித்ததோ அந்த ரூபத்தால் எந்த விபரீத ஞானமும் ராகம் முதலிய தோஷங்களுடன் கூடி பலனைக் கொடுப்பதில் சாமர்த்தியம் உள்ளதாய் இருக்கின்றது. எது வரை சரீரம் நீங்கவில்லையோ அதுவரை பலபோகத்தின் அங்கரூபமாய் விபரீதஞானமும், ராகம் முதலிய தோஷங்களும் காணப்படுகின்றன. ஏனெனில் விடுபட்ட அம்புபோல் இந்த சரீரத்தின் ஆரம்பத்திற்கு காரணமாய் இருந்த கர்மம் விடுபடும்வரை பலனை அளிப்பதில் பிரவர்த்திக்கும். ஆகையால் ஞானம் அதற்கு விரோதி அல்லாததால் அதை நிவர்த்திக்காது. ஆனால் எதை நிவர்த்தி செய்கிறது? ஸ்வ ஆஸ்ரயமாய் இருப்பதால் ஸ்வாத்ம விரோதி அவித்யா காரியம் எழும்பொழுது அதை தடுக்கிறது. ஏனெனில் அது அநாகதமாயும், ப்ராரப்தத்திற்கு அதீதமாயும் இருக்கின்றது.
भाष्यम् - किञ्च, न च विपरीतप्रत्ययो विद्यावत उत्पद्यते, निर्विषयत्वात्। अनवधृतविषयविशेषस्वरूपं हि सामान्यमात्र-माश्रित्य विपरीतप्रत्यय उत्पद्यमान उत्पद्यते, यथा शुक्तिकायां रजतमिति। स च विषयविशेषावधारणवतोऽशेषविपरीत-प्रत्ययाश्रयस्योपमर्दितत्वान्न पूर्ववत्सम्भवति, शुक्तिकादौ सम्यक्प्रत्ययोत्पत्तौ पुनरदर्शनात्।
அனுவாதம்- மேலும், ப்ரஹ்மவித் நிர்விஷயமாய் இருப்பதால் விபரீதஞானம் உண்டாவதில்லை. விஷயத்தின் விசேஷ ஸ்வரூபத்தின் நிச்சய திடஞானம் ஏற்படாதபொழுது சாமான்ய ரூபத்தை ஆஸ்ரயித்து உண்டாகும் விபரீதஞானம் சுத்தியில் ரஜதம் போல் உண்டாகிறது. ஆனால் விஷயத்தின் விசேஷ ஸ்வரூபம் நிச்சயம் ஆனவுடன் அந்த திருஷ்டியில் எல்லாவித விபரீதஞானத்தின் ஆஸ்ரயத்தின் பாதகமானது ஏற்பட்டவுடன் முன்புபோல் தோன்றுவது சம்பவிக்காது. எவ்வாறு எனில் சுத்தி முதலியவைகளில் சம்யக்ஞானம் ஏற்பட்டவுடன் ரஜதத்தின் பிரமை காணப்படுவதில்லை.
भाष्यम् - क्वचित्तु विद्यायाः पूर्वोत्पन्नविपरीतप्रत्ययजनित-संस्कारेभ्यो विपरीतप्रत्ययावभासाः स्मृतयो जायमाना विपरीतप्रत्ययभ्रान्तिमकस्मात्कुर्वन्ति, यथा विज्ञातदिग्विभागस्या-प्यकस्माद्दिग्विपर्ययविभ्रमः। सम्यग्ज्ञानवतोऽपि चेत्पूर्वव-द्विपरीतप्रत्यय उत्पद्यते, सम्यग्ज्ञानेऽप्यविस्रम्भावच्छास्त्रार्थ-विज्ञानादौ प्रवृत्तिरसमञ्जसास्यात्सर्वं च प्रमाणमप्रमाणं सम्पद्येत प्रमाणाप्रमाणयोर्विशेषानुपपत्तेः।
அனுவாதம்- ஞானம் உதயமாவதற்கு முன் விபரீத ஞானத்தினால் உண்டான சம்ஸ்காரங்களினால் விபரீத ஞானமாகிய ஆபாச ஸ்மிருதிகளினால் உண்டாகும் விபரீத ஞானபிராந்தியை நாம் எதிர்பார்க்காமலேயே உண்டாக்குகிறது. எவ்வாறு நாம் அறிந்த திசையை அறிந்து இருந்தாலும் நாம் அறியாமலேயே திக் பிரமை ஏற்படுகிறதோ அவ்வாறு. நல்ல ஞானம் உடையவனாய் இருந்தாலும் முன்பு போல் விபரீதஞானம் உண்டாகிறது. நல்ல ஞானத்திலும் விசுவாசம் இல்லாததால் சாஸ்த்திர தாத்பரியத்திலும் ஞானம் முதலியவைகளில் பிரவர்த்திப்பது கடினமானதாகும். ஆகையால் எல்லாப் பிரமாணமும் அப்ரமாணம் ஆகிவிடும். இவ்வாறு இருக்கும்பொழுது பிரமாணத்திற்கும் அப்பிரமாணத்திற்கும் வித்யாசம் இல்லாமல் ஆகிவிடும்.
भाष्यम् - एतेन“सम्यग्ज्ञानानन्तरमेव शरीरपाताभावः कस्मात्?” इत्येतत् परिह्य्तम्। ज्ञानोत्पत्तेः प्रागूर्ध्वं तत्कालजन्मान्तरसिञ्चतानां च कर्मणामप्रवृत्तफलानां विनाशः सिद्धो भवति फलप्राप्तिविघ्ननिषेधश्रुतेरेव।“क्षीयन्ते चास्य कर्माणि” (मु०उ०२।२।८)“तस्य तावदेव चिरम्” (छा०उ०६। १४।२)“सर्वे पाप्मानः प्रदूयन्ते” (छा०उ०५।२४।३)“तं विदित्वा न लिप्यते कर्मणा पापकेन” (बृ०उ०४।४।२३) “एतमु हैवैते न तरतः” (४।४।२२)“नैनं कृताकृते तपतः”(४।४।२२)“एतं ह वाव न तपति” (तै०उ०२।९।१)“न बिभेति कुतश्चन” (तै०उ०२।१।१) इत्यादि श्रुतिभ्यश्च।“ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात्कुरुते” (गीता ४। ३७) इत्यादिस्मृतिभ्यश्च।
அனுவாதம்- அந்த இவைகளால் ஸம்யக்ஞானம் ஏற்பட்ட உடனேயே ஏன் சரீரம் விழவில்லை. எதனால்? என்ற சங்கையை நீக்குவதற்காக இந்த பரிஹாரம் கூறப்படுகிறது. ஞானம் ஏற்படுவதற்கு முன்னும், பின்னும், அந்த சமயத்திலும் வேறு ஜன்மாக்களில் சம்பாதித்த கர்மங்களின் பிரவர்த்தித பலன்களின் நாசம் பலப்பிராப்தியின் விக்னத்தை நிஷேதிக்கும் சுருதியினால் சித்திக்கிறது.“क्षीयन्ते चास्य कर्माणि” (க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி)“तस्य तावदेव चिरम्” (தஸ்ய தாவதேவ சிரம்),“सर्वे पाप्मानः प्रदूयन्ते” (சர்வே பாப்மான: பிரதூயந்தே)“तं विदित्वा न लिप्यते कर्मणा पापकेन” (தம் விதித்வா ந லிப்யதே கர்மணா பாபகேன),“एतमु हैवैते न तरतः” (ஏதமு ஹைவைதே நதரத:)“नैनं कृताकृते तपतः” (நைனம் க்ருதாக்ருதே தபத:)“एतं ह वाव न तपति” (ஏதம் ஹ வாவ ந தபதி),“न बिभेति कुतश्चन” (ந பிபேதிகுதஷ்சன) ஆகிய ஸ்ருதிகளாலும்,“ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात्कुरुते” (ஞானாக்னி: சர்வகர்மாணி பஸ்மசாத்குருதே) என்ற ஸ்ம்ருதி வாக்கியங்களாலும் சித்திக்கின்றது.
भाष्यम् - यत्तु ऋणैः प्रतिबध्यत इति, तन्न, अविद्यावद्विषयत्वात्। अविद्यावान्हि ऋणी, तस्य कर्तृत्वाद्युपपत्तेः।“यत्र वा अन्यदिव स्यात्तत्रान्योऽन्यत्पश्येत्” (४। ३। ३१) इति हि वक्ष्यति। अनन्यत्सद्वस्त्वात्माख्यं यत्राविद्यायां सत्यामन्यदिव स्यात्तिमिरकृतद्वितीयचन्द्रवत्. तत्राविद्याकृतानेककारकापेक्षं दर्शनादिकर्म तत्कृतं फलं च दर्शयति,“तत्रान्योऽन्यत्पश्येत्” इत्यादिना।
அனுவாதம்- எது ருணத்தினால் (கடன்பட்டதால் கடமையினால்) பந்தப்பட்டான் என்று கூறுவது சரியல்ல. ஏெனனில் ருணமானது அவித்யா விஷயமாகும். அவித்வானே ருணியாவான். ஏெனனில் அவனுக்கு கர்த்ருத்வாதிகள் இருக்கின்றன.“यत्र वा अन्यदिव स्यात्तत्रान्योऽन्यत्पश्येत्” (யத்ர வா அன்யதிவ ஸ்யாத்தத்ர அன்யோऽன்யத்பச்யேத்) என்று கூறப்போகிறது. ஆத்மா எனப்படும் அநந்ய ஸத்வஸ்து எங்கு அவித்யை உள்ளதோ அங்கு அந்யம்போல் தோன்றும். எவ்வாறு எனில் கண் ரோகத்தினால் இரண்டு சந்திரன் தோன்றுவது போல் ஆகும். அங்கு அவித்தையினால் ஏற்பட்ட அநேக காரகங்களை அபேக்ஷிக்கும் தர்சனம் முதலிய கர்மங்கள். அவ்வாறே அவற்றின் பலனும் காண்பிக்கப்படுகிறது.“तत्रान्योऽन्यत्पश्येत्” (யத்ரான்யோ அன்யத்ஷ்யேத்) என்பது முதலியவைகளால்.
भाष्यम् - यत्र पुनर्विद्यायां सत्यामविद्याकृतानेकत्व-भ्रमप्रहणम्.“तत्केन कं पश्येत्” (४। ५। १५) इतिकर्मसम्भवं दर्शयति. तस्मादविद्यावद्विषय एव ऋणित्वम्, कर्मसम्भवात् नेतरत्र। एतच्चोत्तरत्र व्याचिख्यासिष्यमाणैरेव वाक्यैर्विस्तरेण प्रदर्शयिष्यामः।
அனுவாதம்- எங்கு மறுபடியும் வித்யா இருக்கும் பொழுது அவித்தையினால் ஏற்பட்ட அநேகத்துவமாகிய பிரமை நீங்கும்பொழுது“तत्केन कं पश्येत्” (தத்கேன கம் பƒயேத்) என்று கர்மம் சம்பவிக்காததைத் தெரிவிக்கிறது. ஆகையால் கர்மம் சம்பவிக்கும் பொழுது அவித்யா விஷயத்துவம் ருணத்துவம், மற்றபடி இல்லை. அதைக் குறித்து மேலே விளக்கப்போகின்ற வாக்கியங்களால் விஸ்தாரமாக விளக்குகிறேன்.
भाष्यम् - तद्यथेहैव तावत्- अथ यः किश्चद् ब्रह्मविद् अन्यामात्मनो व्यतिरिक्तां यां कािञ्चद्देवताम्, उपास्ते स्तुतिनमस्कारयागबल्युपहारप्रणिधानध्यानादिना उप आस्ते तस्या गुणभावमुपगम्य आस्ते- अन्योऽहमस्म्यधिकृतः, मयास्मै ऋणिवत्प्रतिकर्तव्यम्- इत्येवम्प्रत्ययः सन्नुपास्ते, न स इत्थम्प्रत्ययो वेद विजानाति तत्त्वम्।
அனுவாதம்- அதைக் குறித்து அவ்வாறே இந்த மந்திரத்திலும் கூறப்படுகிறது. மேலும் எந்த ஒரு அப்ரஹ்மவித் தன்னைத் தவிர வேறு எந்த ஒரு தேவதையை உபாசனை செய்கின்றானோ அதாவது ஸ்துதி, நமஸ்காரம், யாகம், பலி, உபஹாரம், ப்ரணிதானம், த்யானம் முதலியவைகளால் உபாசிக்கின்றானோ அதன் (தேவதையின்) குண பாவங்களை அடைந்தவனாய் இருக்கின்றான். அந்த அநாத்மா என்னைவிட வேறாய் இருக்கிறது. என்றும் நான் உபாசிக்கும் அதிகாரியாய் வேறாய் இருக்கின்றேன், என்றும் ஆகையால் நான் ருணித்துவத்திற்காக நான் பிரதி உபகாரம் செய்யவேண்டும் என்று இவ்வாறு பாவித்து உபாசனை செய்கின்றான். இவ்வாறு பாவிப்பவன் தத்துவத்தை அறியமாட்டான்.
भाष्यम् - न स केवलमेवंभूतोऽविद्वानविद्यादोषवानेव, किं तर्हि? यथा पशुर्गवादिर्वाहनदोहनाद्युपकारैरुपभुज्यतै, एवं स इज्याद्यनेकोपकारैरुपभोक्तव्यत्वादेकैकेन देवादीनाम्, अतः पशुरिव सर्वार्थेषु कर्मस्वधिकृत इत्यर्थः।
அனுவாதம்- இவ்வாறான வித்வான் அவித்யா தோஷத்துடன் கூடியவன் மாத்திரமல்ல. பின்மேலும் எவ்வாறானவன்? எவ்வாறு எருது, பசு முதலியவைகள் வாஹனமாதல், (பால்) கரத்தல் முதலிய உபகாரங்கள் கூடியதாய் இருக்கிறதோ அவ்வாறே யக்ஞம் முதலிய அநேக உபகாரங்களால் ஒவ்வொரு தேவதைகளுக்கும் போகங்களாவதால் (அவைகளுக்கு பசுவாகும்). ஆகையால் பசுவைப்போல் எல்லா பலன்களைத் தரும் கர்மங்களுக்கு அதிகாரியாகின்றான்.
भाष्यम् - एतस्य ह्यविदुषो वर्णाश्रमादिप्रवि- भागवतोऽधिकृतस्य कर्मणो विद्यासहितस्य केवलस्य च शास्त्रोक्तस्य कार्यं मनुष्यत्वादिको ब्रह्मान्त उत्कर्षः। शास्त्रोक्त-विपरीतस्य च स्वाभाविकस्य कार्यं मनुष्यत्वादिक एव स्थावरान्तोऽपकर्षः। यथा चैतत्तथा“अथ त्रयो वाव लोकाः” (१। ५। १६) इत्यादिना वक्ष्यामः कृत्स्नेनैवाध्यायशेषेण।
அனுவாதம்- இந்த அவித்வானுக்கு வர்ணாச்ரம முதலிய விபாகங்களால் அதிகாரிக்கு சாஸ்திரத்தில் கூறப்பட்டவாறே கேவலம் கர்மா ஆகிய கர்மங்களின் காரியங்கள் மனுஷ்யத்துவத்திலிருந்து ப்ரஹ்மா வரையிலும் மிகவும் உத்க்ருஷ்டமானது. (மேலானது) சாஸ்திரத்திற்கு விருத்தமானதும் ஸ்வபாவமானதும் ஆன காரியம் மனிதனிலிருந்து ஸ்தாவர வரையிலுமானது அதோகதியாகும். எவ்வாறு இதுவோ அவ்வாறு“अथ त्रयो वाव लोकाः” (அத த்ரயோ வாவ லோகா:) என்பன முதலியவைகளால் இந்த அத்யாயத்தின் முடிவில் நல்லவகையில் வர்ணனை செய்வோம்.
भाष्यम्- विद्यायाश्च कार्यं सर्वात्मभावापत्तिरित्येत-त्सेपतो दर्शितम्। सर्वाहीयमुपनिषद् विद्याविद्याविभाग-प्रदर्शनेनैवोपक्षीणा। यथा चैषोऽर्थः कृत्स्नस्य शास्त्रस्य तथा प्रदर्शयिष्यामः।
அனுவாதம்- ப்ரஹ்மவித்யாவின் (ஞானத்தின்) காரியம் சர்வாத்ம பாவத்தை அடைவதே என்பது சுருக்கமாக காட்டப்பட்டது. இந்த எல்லா உபநிஷத்துக்களும் வித்யை, அவித்யை (ஞானம், அக்ஞானம்) இவைகளின் விபாகத்தை (வேற்றுமையை) எடுத்து காட்டுவதிலேயே முடிந்துவிடுகிறது. எல்லா சாஸ்திரங்களின் அபிப்பிராயம் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு இனி காண்பிப்போம் (விளக்குகிறோம்).
भाष्यम् - यस्मादेवम्, तस्मादविद्यावन्तं पुरुषं प्रति देवा ईशत एव विघ्नं कर्तुमनुग्रहं चेत्येतद्दर्शयति यथा ह वै लोके बहवो गो अश्वादयः पशवो मनुष्यं स्वामिनमात्मनोऽधिष्द्भातारं भुञ्ज्युः पालयेयुरेवं बहुपशुस्थानीय एकैकोऽविद्वान्पुरुषो देवान्-देवानिति पित्राद्युपलक्षणार्थम् भुनक्ति पालयतीति। इमे इन्द्रादयोऽन्ये मत्तो ममेशितारो भृत्य इवाहमेषां स्तुतिनमस्कारेज्यादिनाराधनं कृत्वाभ्युदयं निःश्रेयसं च तत्प्रत्तंफलं प्राप्स्यामीत्येवमभिसन्धिः।
அனுவாதம்- எதனால் இவ்வாறு கூறப்பட்டதோ அதனால் அவித்யையை உடைய புருஷனைக்குறித்து தேவர்கள், விக்னமோ அனுக்கிரஹமோ செய்ய ஈடுபடுகிறார்கள் என்பது காண்பிக்கப்படுகிறது. எவ்வாறு உலகில் அநேக பசு குதிரை முதலிய பசுக்கள் (மிருகங்கள்) அதிகாரியாகிய மனிதனை தன்னுடைய எஜமானனாகவும், காப்பாற்றுவதாகவும் இருக்கிறதோ அவ்வாறு அநேக பசுக்களுக்கு சமானமான ஒவ்வொரு அக்ஞானி புருஷன் தாங்கி காப்பாற்றுகின்றான். தேவர்கள் என்று கூறியது மற்ற பித்ருகணம் முதலியவைகளுக்கு உபலக்ஷணமாகும். என்னைவிட வேறான இந்திரன் முதலிய தேவர்கள் என்னை ஆள்பவர்கள். நான் அவர்களுக்கு சேவகனாய் இருந்து ஸ்துதி நமஸ்காரம், அவ்வாறே யக்ஞம் முதலியவைகளால் ஆராதனை செய்து அவர்களால் அளிக்கப்படும் போகம், மோக்ஷம் ஆகிய பலன்களை அடைவேனாக என்று இவ்வாறு அக்ஞானி சங்கல்பம் செய்கின்றான்.
.भाष्यम्- तत्र लोके बहुपशुमतो यथैकस्मिन्नेव पशावादीयमाने व्याघ्राादिनापह्रियमाणे महदप्रियं भवति, तथा बहुपशुस्थानीय एकस्मिन्पुरुषे पशुभावाद् व्युत्तिष्द्भत्यप्रियं भवतीति, किं चित्रं देवानां बहुपश्वपहरण इव कुटुम्बिनः। तस्मादेषां देवानां तन्न प्रियम्, किं तत्? यदेतद्ब्रह्मात्मतत्त्वं कथञ्चन मनुष्या विद्युर्विजानीयुः तथा च स्मरणमनुगीतासु भगवतो व्यासस्य “क्रियाविद्भर्हि कौन्तेय देवलोकः समावृतः। न चैतदिष्टं देवानां मर्त्यैरुपरि वर्तनम्।।”
அனுவாதம்-இவ்வாறு இருக்கும் பொழுது எவ்வாறு உலகில் எந்த ஒரு அநேக பசுக்களை உடையவன் ஒரு பசு சென்றுவிட்டது என்று அறிந்தபின் அதாவது புலி முதலியவைகளால் இழுத்துச் செல்லப்பட்டது என்று அறிந்தபின் எவ்வாறு மிகவும் வருத்தப்படுவானோ அவ்வாறு குடும்பஸ்தன் அநேக பசுக்கள் திருடப்பட்டதை அறிந்தவனுக்கு சமானமாய் அநேக பசுக்களின் ஸ்தானீயமான ஒரு புருஷன் பசு பாவத்திலிருந்து மேன்மை அடைவதை அறிந்து தேவர்கள் பிரியப்படமாட்டார்கள் என்பதில் என்ன ஆச்சரியம். ஆகையால் அதில் தேவர்களுக்கு இஷ்டமில்லை. அது என்ன? அந்த ப்ரஹ்மாத்மதத்வத்தை எவ்வகையிலாவது மனிதன் அறிந்து கொண்டால் என்பதாகும். அவ்வாறே பகவான் வியாசர் அனுகீதையாகிய ஸ்ம்ருதியில் இவ்வாறு கூறுகிறார்- ‘(கிரியாவத்பிர்ஹி கௌந்தேய தேவலோக: சமாவிருத:! ந சைததிஷ்டம் தேவானாம் மர்த்யைருபரி வர்த்தனம்)’ (ஹே! கௌந்தேய தேவலோகம் கர்மத்திலே ஈடுபட்டவர்களால் நன்கு பராமரிக்கப்படுகிறது. மனிதர்கள் அதைவிட மேலான பதவிக்கு போவது தேவர்கள் விரும்புவதில்லை).
भाष्यम् - अतो देवाः पशूनिव व्याघ्राादिभ्यो ब्रह्मविज्ञाना-द्विघ्नमाचिकीर्षन्ति, अस्मदुपभोग्यत्वान्मा व्युत्तिष्द्भेयुरिति। यं तु मुमोचयिष्यन्ति तं श्रद्धादिभिर्योक्ष्यन्ति विपरीतमश्रद्धादिभिः। तस्मान्मुमुक्षुर्देवाराधनपरः श्रद्धाभक्तिपरः प्रणेयोऽप्रमादी स्याद्विद्याप्राप्तिं प्रति विद्यां प्रतीतिं वा काक्वैतत्प्रदर्शितं भवति देवाप्रियवाक्येन।
அனுவாதம்- ஆகையால் தேவகணங்கள் இவ்வாறு நினைத்து நமக்கு உபயோகம் உள்ளவர்களாய் மனிதர்கள் இருப்பதால் அவர்கள் நம்மைவிட மேலே போய்விடுவார்கள். ஆகையால் நாம் அவர்களை பசுக்களை புலியிடமிருந்து வெகு தூரத்தில் வைப்பது போல் இந்த மனிதர்களை தரஹ்மஞானத்திலிருந்து வெகு தூரமாய் விலக்கி வைப்பதற்காக நாம் விக்னம் செய்யவேண்டும் என்று கருதினார்கள். எதிலிருந்து விடுபட நினைக்கிறார்களோ அதில் சிரத்தை முதலிய சாதனங்கள் உடையவர்களாயும் எதை விட விரும்பவில்லையோ அதில் அசிரத்தை கொள்ள செய்தார்கள். ஆகையால் மோக்ஷத்தை அடையவிரும்பும் புருஷன் தேவாராதனை உடையவனாயும், ஸ்ரத்தா பக்தியிலேயே ஈடுபட்டவனாயும், தேவகணங்களுக்கு பிரியமானவராயும், அவ்வாறே ஞானப் பிராப்திக்கு சாதனங்களான ஸ்ரவணம் முதலியவைகளிலும் அல்லது அதன் பலனாகிய ஞானத்திலும் பிரமாதம் (சோம்பல்) அற்று தீவிரமாய் முயற்சி செய்யவேண்டும். இங்கு தேவதைகளுக்கு பிரியமற்ற பாவத்தை கூறும் வாக்கியத்தால் காகூக்தி மூலமாய் காண்பிக்கப்பட்டதாய் ஆகிறது. (காகு(काकु) என்றால் பயம், சோகம் முதலியவைகளால் குரல் நடுங்குவதைக் குறிக்கிறது. இந்த பதத்தால் தேவர்களின் அப்பிரியத்தைக் குறிக்கிறது.)
भाष्यम् - सूत्रितः शास्त्रार्थः“आत्मेत्येवोपासीत” इति। तस्य च व्याचिख्यासितस्य सार्थवादेन“तदाहुर्यद्ब्रह्मविद्यया” इत्यादिना सम्बन्धप्रयोजने अभिहिते। अविद्यायाश्च संसाराधिकारकारणत्वमुक्तम्“अथ योऽन्यां देवतामुपास्ते” इत्यादिना। तत्राविद्वानृणी पशुवद्देवादिकर्मकर्तव्यतया परतन्त्र इत्युक्तम्।
அனுவாதம்-“आत्मेत्येवोपासीत” (ஆத்மேத்யேவோபாசீத) என்று சாஸ்த்திரத்தின் அர்த்தம் சுருக்கமாக வர்ணிக்கப்பட்டது. அந்த அர்த்தவாதத்துடன் வியாக்கியானம் செய்ததை“तदाहुर्यद्ब्रह्मविद्यया” (தழ்ாஹுர்ப்ரஹ்மவித்யயா) என்பது முதலியவைகள் சம்பந்தம், ப்ரயோஜனம் கூறப்படுகிறது.“अथ योऽन्यां देवतामुपास्ते” (அத யோஅன்யாம் தேவதாமுபாசதே) என்பன முதலியவைகளால் அவித்யையினால் சம்சார அதிகாரித்துவம் கூறப்பட்டது. இவ்வாறு இருக்கும் பொழுது அக்ஞானி ரிணீ (கடன் பட்டவன்) ஆக ஆகின்றான். அதாவது பசுவிற்கு சமானமாய் தேவ கர்மங்களுக்கு கர்த்தவ்ய தன்மை உடையவனாவதால் அவன் பரதந்திரன் ஆகின்றான்.
अव - किं पुनर्देवादिकर्मकर्तव्यत्वे निमित्तम्? वर्णा आश्रमाश्च। तत्र के वर्णाः? इत्यत इदमारभ्यते। यन्निमित्तसम्बद्धेषु कर्मस्वयं परतन्त्र एवाधिकृतः संसरति। एतस्यैवार्थस्य प्रदर्शनायाग्निसर्गानन्तरमिन्द्रादिसर्गो नोक्तः। अग्नेस्तु सर्गः प्रजापतेः सृष्टिपरिपूणाय प्रदर्शितः। अयं च इन्द्रादिसर्गस्तत्रैव द्रष्टव्यरतच्छेषत्वात्। इह तु स एवाभिधीयतेऽविदुषः कर्माधिकारहेतुप्रदर्शनाय-
அனுவாதம்- அ.கை- அவ்வாறு ஆனால் கர்மங்களைச் செய்வதின் காரணம் என்ன? வர்ணாஸ்ரமங்கள் அதில் எந்த ஆஸ்ரமத்தவர்கள், என்பதற்காக ஆரம்பிக்கப்படுகிறது. வர்ணரூப நிமித்த சம்பந்த கர்மங்களில் பரதந்திரமான சம்சாரியே அதிகாரியாகின்றான். இந்த அர்த்தத்தைத் தெரிவிப்பதற்காகவே அக்னி சர்கத்திற்கு அடுத்து இந்திரன் முதலிய சர்க்கங்களைக்குறித்துக் கூறப்படவில்லை. பிரஜாபதியின் சிருஷ்டியை பூர்த்தி செய்வதற்காக அக்னி சர்க்கம் விளக்கப்பட்டது. இந்த இந்திரன் முதலிய சர்க்கங்கள் அதிலேயே (அந்தர்கதமாய்) அறிந்து கொள்ளவேண்டும் ஏனெனில் அதன் சேஷமாய் இருப்பதால் ஆகும். இங்கு அவித்வான்களுக்காக கர்ம அதிகாரத்தில் ஹேதுவைக் காட்டுவதற்காக அது வர்ணிக்கப்படுகிறது.
ब्रह्म वा इदमग्र आसीदेकमेव तदेक ्ँ सन्न व्यभवत्। तच्छ्रेयोरूपमत्यसृजत क्षत्रं यान्येतानि देवत्रा क्षत्राणीन्द्रो वरुणः सोमो रुद्रः पर्जन्यो यमो मृत्युरीशान इति। तस्मात्क्षत्रात्परं नास्ति तस्माद्ब्राह्मणः क्षत्रियमधस्तादुपास्ते राजसूये क्षत्र एव तद्यशो दधाति सैषा क्षत्रस्य योनिर्यद्ब्रह्म। तस्माद्यद्यपि राजा परमतां गच्छति ब्रह्मैवान्तत उपनिश्रयति स्वां योनिं य उ एन्ँ हिनस्ति स्वाँ् स योनिमृच्छति स पापीयान्भवति यथा श्रेया्ँ स्ँ हि्ँ सित्वा।। ११।।
மந்த்ரார்த்தம்- ஆரம்பத்தில் ப்ரஹ்மம் ஒன்றே இருந்தது. அது தனியாக இருப்பதால் விபூதியுடன் கூடிய கர்மம் செய்வதில் சாமர்த்தியம் அற்றதாய் இருந்து. அது ஸ்ரேயோ ரூபமான க்ஷத்ரம் என்ற புகழ்ச்சியுடன் கூடிய ரூபத்தை உண்டாக்கியது. அதாவது தேவதைகளில் எந்த க்ஷத்திரியர்களாகிய இந்திரன், வருணன், சோமன், ருத்ரன், மேகம், யமன், ம்ருத்யு, மேலும் ஈசான முதலியவர்களை உத்பன்னம் செய்தது. ஆகையால் க்ஷத்திரியரைக் காட்டிலும் மேலானது ஒன்றும் இல்லை. ஆகையால் ராஜசூயயக்ஞத்தில் ப்ராஹ்மணர்கள் கீழே உட்கார்ந்து கொண்டு க்ஷத்திரியர்களை உபாசனை செய்கிறார்கள். அந்த க்ஷத்திரியர்கள் தங்கள் புகழை ஸ்தாபித்தார்கள். எந்த ப்ரஹ்மம் உள்ளதோ அது க்ஷத்திரியர்களுக்கு யோனி, ஆகையால் ராஜா எவ்வளவு உயர்வானவராய் இருந்தாலும் கடைசியில் ப்ராஹ்மணர்களையே ஆஸ்ரியிக்கின்றார்கள். ஆகையால் க்ஷத்திரியர்கள் இந்த ப்ராஹ்மணரை இம்சை செய்தால் தங்கள் யோனியையே நாசம் செய்தவர்களாகின்றனர். எவ்வாறு எனில் சிரேஷ்டர்களை ஹிம்சை செய்தால் புருஷர்கள் பாபி ஆகிறார்கள். அவ்வாறு இவர்களும் பாபி ஆவார்கள்.
भाष्यम् - ब्रह्म वा इदमग्र आसीद्यदग्निं सृष्ट्वा अग्निरूपापन्नं ब्रह्म। ब्राह्मणजात्यभिमानाद् ब्रह्मेत्यभिधीयते। वै इदं क्षत्रादिजातं ब्रह्मैवाभिन्नमासीदेकमेव। नासीत्क्षत्रादिभेदः। तद्ब्रह्मैकं क्षत्रादिपरिपालयित्रादिशून्यं सद् न व्यभवत्- न विभूतवत् कर्मणे नालमासीदित्यर्थः।
அனுவாதம்- இதற்குமுன் ஆரம்பத்தில் ப்ரஹ்மமே இருந்தது. அக்னியை சிருஷ்டித்து பிரஹ்மம் அக்னிரூபத்தை அடைந்தது. ப்ராஹ்மண ஜாதி அபிமானத்தால் ப்ரஹ்மம் என்று அழைக்கப்படுகிறது. அந்த சமயத்தில் உண்டான க்ஷத்திரிய முதலிய ஜாதிகளும் ப்ரஹ்மத்துடன் அபின்னமாய் ஒன்றாகவே இருந்தது. க்ஷத்திரிய முதலிய பேதங்கள் அற்று இருந்தது. அந்த ஒரே ப்ரஹ்மம் க்ஷத்திரியர் முதலியவர்களை பரிபாலிக்கும் தன்மையற்று விபூதியுடன் கூடிய கர்மங்களை செய்வதில் முயற்சி அற்று இருந்தது.
भाष्यम् - ततस्तद्ब्रह्म“ब्राह्मणोऽस्मि ममेत्थं कर्तव्यम्” इति ब्राह्मणजातिनिमित्तं कर्मकर्तृत्वविभूत्यै श्रेयोरूपं प्रशस्तरूपम् अत्यसृजत अतिशयेनासृजतसृष्टवत्। किं पुनस्तद्यत्सृष्टम्? क्षत्रं क्षत्रियजातिः, तक्तिभेदेन प्रदर्शयतियान्येतानि प्रसिद्धानि लोके देवत्रा देवेषु क्षत्राणीति। जात्याख्यायां पक्षे बहुवचनस्मरणाद् व्यक्तिबहुत्वाद्वा भेदोपचारेण बहुवचनम्।
அனுவாதம்- அதிலிருந்து அந்த ப்ரஹ்மம் நான் ப்ராஹ்மணனாய் இருக்கிறேன். இவ்வாறு செய்யவேண்டியது என் கடமை என்று ப்ராமணஜாதிக்காக கர்மம் செய்வதற்கு இச்சைகொண்டு தனக்கு கர்ம கர்த்ருத்வரூப விபூதியாகிய ஸ்ரேயஸ்ரூபம் அதாவது புகழ்ச்சி உடைய ரூபத்தை சிருஷ்டி செய்தது. மேலும் வேறு என்ன சிருஷ்டி செய்தது? க்ஷத்திரிய ஜாதியை சிருஷ்டித்தது. அதை வியக்தி பேதமாய் காண்பிக்கிறது. இவ்வாறு அதாவது உலகில் தேவர்களில் எவர் க்ஷத்திரிய ரூபத்தால் பிரசித்தர்களாய் இருப்பவர்கள் ஜாதியைப்பற்றி கூறும்பொழுது பஹுவசனம் நினைவு கொள்ளவேண்டும். வியக்தியைக் கூறும்பொழுது அநேகமாய் தோன்றுவதாலும் (இந்திரன் முதலிய அநேக ரூபமாய் தோன்றுவதால்) பஹுவசனம்.
भाष्यम् - कानि पुनस्तानि? इत्याह- तत्राभिषिक्ता एव विशेषतो निर्दिश्यन्ते- इन्द्रो देवानां राजा, वरुणो यादसाम्, सोमो ब्राह्मणानाम्, रुद्रः पशूनाम्, पर्जन्यो विद्युदादीनाम्, यमः पितृणाम्, मृत्युः रोगादीनाम्, ईशानो भासाम्- इत्येवमादीनि देवेषु क्षत्राणि। तदनु, इन्द्रादिक्षत्रदेवताधिष्द्भितानि मनुष्यक्षत्राणि सोमसूर्यवंश्यानि पुरूरवः-प्रभृतीनि सृष्टान्येव द्रष्टव्यानि। तदर्थ एव हि देवक्षत्रसर्गः प्रस्तुतः।
அனுவாதம்- அவர்கள் யார்? அதை சுருதி கூறுகிறது- அங்கு அபிஷிக்த தேவர்களை விசேஷமாய் காண்பிக்கிறது. தேவர்களுக்கு இந்திரன் ராஜா, அவ்வாறே ஜலத்தில் சஞ்சரிக்கின்றவர்களுக்கு வருணன், பிராஹ்மணர்களுக்கு சோமன், பசுக்களுக்கு ருத்ரன், மின்னல் முதலியவைகளுக்கு மேகம், பித்ருக்களுக்கு எமன் ரோகிகளுக்கு மிருத்யு, பிரகாசங்களுக்கு ஈசானன் என்பவை தேவர்களாள் க்ஷத்திரியர்கள். அதைத்தொடர்ந்து இந்திரன் முதலிய க்ஷத்திரிய தேவர்களை ஆதாரமாகக்கொண்டு (அதிஷ்டாதாவாகக் கொண்டு) மனித க்ஷத்திரியர்களாகிய சோம, சூரிய வம்சங்களில் புரூரவ முதலிய சிருஷ்டிகளை அறிய வேண்டியதாகும். அதற்காகவே தேவக்ஷத்திரிய சிருஷ்டி ஆரம்பிக்கப்பட்டது.
भाष्यम् - यस्माद्ब्रह्मणातिशयेन सृष्टं क्षत्रं तस्मात्क्षत्रात्परं नास्ति ब्राह्मणजातेरपि नियन्तृ। तस्माद्ब्राह्मणः कारणभूतोऽपि क्षत्रियस्य क्षत्रियमधस्ताद्ववस्थितः सन्नुपरिस्थितमुपास्ते। क्व? राजसूये। क्षत्र एव तदात्मीयं यशः ख्यातिरूपं ब्रह्मेति दधाति स्थापयति। राजसूयाभिषिक्तेनासन्द्यां स्थितेन राज्ञा आमन्त्रितो ब्रह्मन्निति ऋत्विक्पुनस्तं प्रत्याह“त्वं राजन्ब्रह्मासि” इति। तदेतदभिधीयते-“क्षत्र एव तद्यशो दधाति” इति।
அனுவாதம்- எந்த ப்ரஹ்மத்தினால் க்ஷத்திரியம் புகழ் உடையதாய் சிருஷ்டிக்கபட்டதோ, அவ்வாறே ப்ராஹ்மணஜாதிகளுக்கும் நியந்தாவாய் ஆக்கப்பட்டதோ ஆகையால் க்ஷத்திரியத்தைக் காட்டிலும் மேலானது இல்லை. ஆகையால் ப்ராஹ்மணர் காரணபூதமாய் இருந்தாலும் க்ஷத்திரியனுக்குக் கீழ் அமர்ந்து மேலே இருக்கும் க்ஷத்திரியனை உபாசிக்கின்றனர். எங்கு? ராஜசூயயாகத்தில், க்ஷத்திரியனுக்கே அந்த சமயத்தில் தன்னுடைய “ப்ரஹ்ம” என்ற இந்த நாமரூபயசஸ் ஸ்தாபிக்கப்பட்டது. ராஜசூயயாகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு மஞ்சத்தில் இருக்கும் ராஜா ரித்விக்களை“ब्रह्मन्” (ப்ரஹ்மன்) என்று அழைத்தார். பின் அவரைக்குறித்து ரித்விக்கள்“त्वं राजन्ब्रह्मासि”“ब्रह्मन्” (த்வம் ராஜன்ப்ரஹ்மாசி ராஜா நீ பிரஹ்மண்) என்றார்கள். இதனால் என்ன தெரிவிக்கப்பட்டது எனில் க்ஷத்தியத்துவமே யசஸ்ஸை அளிக்கிறது என்று.
भाष्यम् - सैषा प्रकृता क्षत्रस्य योनिरेव यद्ब्रह्म। तस्माद्यद्यपि राजा परमतां राजसूयाभिषेकगुणं गच्छत्याप्नोति ब्रह्मैव ब्राह्मणजातिमेव, अन्ततोऽन्ते कर्मपरिसमाप्ता-वुपनिश्रयत्याश्रयति स्वां योनिम्, पुरोहितं पुरो निधत्त इत्यर्थः।
அனுவாதம்- எந்த இந்த ப்ரஹ்மமானது (ப்ராஹமணன்) உள்ளதோ அது க்ஷத்திரியருக்கு யோனி (காரணம்) ஆகும். ஆகையால் ராஜா ராஜசூயத்தில் அபிஷேகிக்கப்பட்ட சமயம் மேலான குணமாகிய ப்ராஹ்மண ஜாதியை அடைந்தாலும் அந்த கர்மம் முடிந்த உடன் தன்னுடைய சிறப்பான யோனியை ஆஸ்ரயிக்கின்றான்.“पुरोहितं” (புரோஹிதம்) செய்து மேலே ஸ்தாபிக்கப்படுகிறது என்பது பொருள்.
भाष्यम् - यस्तु पुनर्बलाभिमानात्स्वां योनिं ब्राह्मणजातिं ब्राह्मणं य उ एनं हिनस्ति हिंसति न्यग्भावेन पश्यति, स्वामात्मीयामेव स योनिमृच्छतिस्वं प्रसवं विच्छिनत्ति विनाशयति। स एतत्कृत्वा पापीयान्पापतरो भवति। पूर्वमपि क्षत्रियः पाप एव क्रूरत्वादात्मप्रसवहिंसया सुतराम्। यथा लोके श्रेयांसं प्रशस्ततरं हिंसित्वा परिभूय पापतरो भवति तद्वत्।।
அனுவாதம்- அந்த எவன் ஒருவன் தன் பக்ஷத்தின் அபிமானத்தால் தன்னுடைய யோனியாகிய ப்ராஹ்மணன் ஜாதியை கீழாக மதித்து ஹிம்சை செய்கின்றானோ தன்னுடைய யோனியையே (தன்னுடை காரணத்தையே) விநாசம் செய்கின்றான். அவன் இவ்வாறு செய்தால் மிகக் கொடிய பாபம் செய்தவன் ஆகின்றான். முன்பே குரூரத் தன்மையாலும் தன்னை உண்டாக்கியவனை (பிரசவித்தவனை) ஹிம்சை செய்ததாலும் மிகக்கொடிய பாபியாகின்றான். இவ்வாறு மேலானதும், புகழ்ச்சிகரமாயும் உள்ளதை இம்சித்து தோல்வி அடைந்து மிகுந்த பாபத்தை அடைவார்களோ அது மேல் ஆகும்.
अव - क्षेत्रे सृष्टेऽपि-
स नैव व्यभवत्स विशमसृजत यान्येतानि देवजातानि गणश आख्यायन्ते वसवो रुद्रा आदित्या विश्वेदेवा मरुत इति ।। १२।।
மந்த்ரார்த்தம்-அந்த (ப்ரஹ்ம) விபூதியுடன் கூடிய கர்மம் செய்வதில் சமர்த்த மற்றது. அவர் வைசிய ஜாதியை சிருஷ்டித்தார். அவைகள் எவை எனில் வசு, ரூத்ரன், ஆதித்யன், விச்வேதேவன், மருத் முதலிய தேவ கணங்கள், கணங்களாய் கூறப்படுகிறது.
भाष्यम्- स नैव व्यभवत्, कर्मणे ब्रह्म तथा न व्यभवत्, वित्तोपार्जयितुरभावात्। स विशमसृजत कर्मसाधनवित्तोपार्जनाय। कः पुनरसौ विट्? यान्येतानि देवजातानि- स्वार्थे निष्द्भा, य एते देवजातिभेदा इत्यर्थः, गणशो गणं गणम्, आख्यायन्ते कथ्यन्ते। गणप्राया हि विशः, प्रायेण संहता हि वित्तोपार्जने समर्थाः न एकैकशः। वसवोऽष्टसङ्ख्योे गणः, तथैकादश रुद्राः, द्वादशादित्याः, विश्वेदेवास्त्रयोदश विश्वाया अपत्यानि, सर्वे वा देवाः, मरुतः सप्त सप्त गणाः।।
அனுவாதம்-அந்த ப்ரஹ்மம் தனத்தை சம்பாதிப்பதற்கு யாரும் இல்லாததால் கர்மம் செய்வதில் முயற்சி இல்லாமல் இருந்தது. ஆகையால் அவர் கர்மத்தின் சாதன பூதமான தனத்தை சம்பாதிப்பதற்காக வைசிய ஜாதியை சிருஷ்டித்தார். யார் அந்த வைசியன்? அவர்களோ தேவர்களாய் நிஷ்டை உடையவர்களாய் இருந்தார்கள், அவர்கள் தங்கள் கடமையில் மிகவும் சிரத்தை உள்ளவர்கள் ஆவார்கள், இதன் தாத்பர்யம் என்னவெனில் இந்த தேவஜாதி பேதங்கள் என்று பொருள். அவர்கள் கூட்டம் கூட்டமாய் இருப்பதால் (கணச:) என்று கூறப்படுகிறது. வைசியர்கள் கூட்டமாகவே இருப்பார்கள். அநேகமாய் அவர்கள் செல்வத்தை சம்பாதிப்பதற்கு ஒன்றாய் சேர்ந்தே முயற்சி செய்வார்கள். தனித்தனியாக அல்ல. வசுக்கள் எட்டு எண்ணிக்கை உடையவர்கள், அவ்வாறே ஏகாதச(11) ருத்திரர்கள், த்வாதச(12) ஆதித்தியர்கள், விச்வே தேவர்கள் த்ரயோதச:(13) அல்லது விச்வதேவருடைய புத்திரர்கள் எல்லோரும் அதாவது எல்லா தேவகணங்களும், மருத்கணங்கள் நாற்பத்து ஒன்பது ஆகும்.
स नैव व्यभवत्स शौद्रं वर्णमसृजत पूषणमियं वै पूषेय ँ् हीद ्ँ सर्वं पुष्यति यदिदं किञ्च ।। १३।।
மந்த்ரார்த்தம்- (மேலும்) அது விபூதியுடன் கூடிய கர்மங்களை செய்ய சக்தியற்று இருந்தது. ஆகையால் சூத்திரவர்ணத்தை (ஜாதியை) சிருஷ்டி செய்தது. பூஷா என்பது சூத்ரவர்ணம். அந்த பிருதிவியே பூஷா. ஏன்எனில் எது உள்ளதோ அது இதை போஷணம் செய்கிறது.
भाष्यम् - स परिचारकाभावात्पुनरपि नैव व्यभवत्, स शौद्रं वर्णमसृजत- शूद्र एव शौद्रः, स्वार्थेऽणि वृद्धिः।
அனுவாதம்- அவர் பரிசாரகராக இல்லாததால் மறுபடியும் விபூதி கர்மம் செய்வதில் ஈடுபடவில்லை. அதனால் அவர் சௌத்ரவர்ணத்தை சிருஷ்டித்தார். சூத்ரனே சௌத்ரன். ஸ்வார்த்தத்தில் “अण्” பிரத்யயம் இருப்பதால் ஸ்வரத்தில் விருத்தி உண்டாயிற்று.
भाष्यम् - कः पुनरसौ शौद्रो वर्णो यः सृष्टः? पूषणम्- पुष्यतीति पूषा कः पुनरसौ पूषा? इति विशेषतस्तन्निर्दिशति- इयं पृथिवी पूषा। स्वयमेव निर्वचनमाह- इयं हीदं सर्वं पुष्यति यदिदं किञ्च।।
அனுவாதம்- மறுபடியும் யார் இந்த சௌத்ரவர்ணம்? எது? யார் சிருஷ்டித்தார்.पूषणम्ा् (பூஷணம்) போஷிப்பதால் பூஷா. அந்த பூஷா எது? இதை விசேஷயமாய் நிச்சயரூபமாய் தெரிவிக்கிறது. இந்த பிருதிவீ பூஷா என்று. தானே நிர்வசனம் (திடமான வசனம்) செய்கிறது- இதுவே இந்த மிச்சம் சிறிதும் இல்லாமல் எதுவெல்லாம் உள்ளதோ எல்லாவற்றையும் போஷிக்கிறது.
स नैव व्यभवत्तच्छ्रेयोरूपमत्यसृजत धर्म तदेतत्क्षत्रस्य क्षत्रं यद्धर्मस्तस्माद्धर्मात्परं नास्त्यथो अबलीयान्बलीया ्ँ समाश ँ् सते धर्मेण यथा राज्ञैवं यो वै स धर्मः सत्यं वैतत्तस्मात्सत्यं वदन्तमाहुर्धर्मं वदतीति धर्मं वा वदन्त ँ् सत्यं वदतीत्येतद्धेवैतदुभयं भवति ।। १४।।
மந்த்ரார்த்தம்- அப்பொழுது அதற்கு விபூதியுடன் (போஷணையுடன்) கூடிய கர்மத்தை செய்ய சக்தியற்றதாய் இருந்தது. அவர் ஸ்ரேயரூப தர்மத்தினை அதிசிருஷ்டி செய்தார். அந்த தர்மம் க்ஷத்திரியர்களுக்கும் நியந்தாவாகும். ஆகையால் தர்மத்தைக் காட்டிலும் மேலானது இல்லை. ஆகையால் இவ்வாறு ராஜாவின் சஹாயத்தால் (பிரபல சத்துருக்களையும் ஜெயிக்கக்கூடிய சக்தி கிடைக்கிறது). இவ்வாறு தர்மம் மூலமாய் பலமற்ற புருஷனும் பலவானையும் ஜெயிப்பதற்கு இச்சை உண்டாகிறது. அந்த தர்மம் எதுவோ அது நிச்சயம் சத்யமேயாகும். ஆகையால் சத்தியத்தை உரைப்பவனைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்கள்- என்னவெனில் “இவன் தர்மமயமான வசனத்தைப் பேசுகிறான்” என்றும் அவ்வாறே தர்மமயமான வசனங்களையே பேசுபவனைக்குறித்து அவன் சத்தியத்தை (உண்மையை)யே பேசுகிறான் என்று கூறுகிறார்கள். ஏன்எனில் இரண்டும் தர்மமே ஆகும்.
भाष्यम्- स चतुरः सृष्ट्वापि वर्णान्नैव व्यभवत्, उग्रत्वात्क्षत्रस्यानियताशङ्कया। तच्छ्रेयोरूपमत्यसृजत, किं तत्? धर्मम्; तदेतच्छ्रेयोरूपं सृष्टं क्षत्रस्य क्षत्रं क्षत्रस्यापि नियन्तृ, उग्रादप्युग्रम् यद्धर्मो यो धर्मः; तस्मात्क्षत्रस्यापि नियन्तृत्वाद्धर्मात्परं नास्ति; तेन हि नियम्यन्ते सर्वे। तत्कथम्? इत्युच्यते- अथो अप्यबलीयान्दुर्बलतरो बलीयांसमात्मनो बलवत्तरमप्याशंसते कामयते जेतुं धर्मेण बलेन; यथा लोके राज्ञा सर्वबलवत्तमेनापि कुटुम्बिकः एवम्; तस्मात्सिद्धं धर्मस्य सर्वबलवत्तरत्वा-त्सर्वनियन्तृत्वम्।
அனுவாதம்-(¥ÉÀ) அந்த நான்கு வர்ணங்களையும் சிருஷ்டித்தாலும் க்ஷத்திரிய ஜாதி உக்கிரமாய் இருப்பதால் நியந்தாவாக ஆகமுடியவில்லை. என்ற ஆகாங்க்ஷயைால் விபூதியுடன் கர்மம் செய்வதில் முயற்சி இல்லாமல் இருந்தது. அப்பொழுது அவர் (ப்ரஹ்மம்) தன்னுடைய சாமர்த்தியத்தால் ஸ்ரேயரூபத்தை சிருஷ்டித்தார். அந்த ஸ்ரேய ரூபம் எது? தர்மம் அந்த சிருஷ்டிக்கப்பட்ட தர்மம் அந்த க்ஷத்திரியர்களுக்கும் நியந்தா ஆயிற்று. அது உக்ரத்திற்கும் உக்ரமானது“यद्धर्मः” (யத்தர்மः) என்பதின் அர்த்தம் எந்த தர்மமோ அது க்ஷத்திரியருக்கும் நியந்தாவானதால் தர்மத்தைக் காட்டிலும் மேலானது ஒன்றுமில்லை. ஏன்எனில் அதன் மூலமாய் எல்லாவற்றையும் நியமனம் செய்கிறதாகிறது. அது எவ்வாறு மீறப்படுகிறது - அதனாலும் பலம் அற்றவர்களும் அதாவது மிக்க பலம் அற்றவர்களும் மிகுந்த பலசாலிகளையும் ஜெயிப்பதற்கு தர்மத்தின் பலத்தால் இச்சை கொள்வார்கள். எவ்வாறு உலகில் சாதாரண குடும்பஸ்தன் ராஜாவின் சஹாயத்தால் தன்னைவிட மிக பலசாலியை தோற்கடிக்க விரும்புகிறானோ அவ்வாறு. ஆகையால் எல்லாவற்றையும்விட பலம் மிக்கதாய் இருப்பதால் தர்மம் எல்லவற்றிற்கும் நியந்தாவாகும் என்பது சித்திக்கிறது.
भाष्यम् - यो वै स धर्मो व्यवहारलक्षणो लौकिकैर्व्यवह्रियमाणः सत्यं वै तत्, सत्यमिति यथाशास्त्रार्थता, स एवानुष्द्भीयमानो धर्मनामा भवति, शास्त्रार्थत्वेन ज्ञायमानस्तु सत्यं भवति।
அனுவாதம்- அந்த தர்மமானது லௌகிக புருஷர்களால் வியவஹாரம் செய்ய அறிந்தவர்களின் வியவஹார தர்மம் ஆகும். அது நிச்சயமாய் சத்தியம் ஆகும். இங்கு சத்தியம் என்பது சாஸ்திரத்தின் அனுகூலமானது என்ற அர்த்தமாகும். அந்த சாஸ்திரார்த்தப்படி அனுஷ்டிக்கப்படுவது தர்மம் என்ற பெயர் உடையதாகிறது. சாஸ்திரார்த்தத்துடன் அறிவதே சத்யம் ஆகிறது.
भाष्यम् - यस्मादेवं तस्मात्सत्यं यथाशास्त्रं वदन्तं व्यवहारकाल आहुः समीपस्था उभयविवेकज्ञाः- धर्मं वदतीति, प्रसिद्धं लौकिकं न्यायं वदतीति। तथा विपर्ययेण धर्मं वा लौकिकं व्यवहारं वदन्तमाहुः- सत्यं वदति, शास्त्रादनपेतं वदतीति।
அனுவாதம்-அதனால் இவ்வாறு சத்யம், வியவஹார காலத்தில் சாஸ்திரத்தில் உள்ளவாறு கூறுபவர்களை அருகில் இருக்கும் தர்மம், சத்தியம் இவை இரண்டையும் அறிந்த விவேகிகள் கூறுகிறார்கள்- தர்மமயமானதைப் பேசுகிறார்கள் என்றும், அவ்வாறே மாறுபாடாக தர்மமோ, லௌகிக வியவஹாரங்களை பேசுபவர்களையும் இவ்வாறு கூறுகிறார்கள்- சத்யம் பேசுகிறார்கள். சாஸ்திரத்திற்கு அனுகூலமானதே பேசுகிறார்கள் என்று.
भाष्यम् - एतद्यदुक्तमुभयं ज्ञायमानमनुष्द्भीयमानं चैतद्धर्म एव भवति। तस्मात्स धर्मो ज्ञानानुष्द्भानलक्षणः शास्त्रज्ञानितरांश्च सर्वानेव नियमयति। तस्मात्स क्षत्रस्यापि क्षत्रम्। अतस्तदभिमानो-ऽविद्वांस्तद्विशेषानुष्द्भानाय ब्रह्मक्षत्रविट्शूद्रनिमित्तविशेष-मभिमन्यते। तानि च निसर्गत एव कर्माधिकारनिमित्तानि।
அனுவாதம்- இந்த கூறப்பட்ட இரண்டும் (தர்மம், சத்தியம்) அறிந்து அனுஷ்டிக்கப்படுவதால் தர்மமேயாகும். ஆகையால் அந்த தர்மம் ஞான அனுஷ்டான லக்ஷணம், சாஸ்திரத்தை அறிந்தவர்கள், மற்றும் எல்லோரையும் நியமனம் செய்கிறது. ஆகையால் அது க்ஷத்திரத்திற்கு க்ஷத்ரம். ஆகையால் அதில் அபிமானமுள்ள அக்ஞானிபுருஷன் அதன் விசேஷ ரூபத்தை அனுஷ்டானம் செய்வதற்காக ப்ராஹ்மண க்ஷத்திரிய, வைசிய, சூத்ர ரூப நிமித்த விசேஷத்தால் அபிமானம் செய்ய முற்படுகின்றான். கர்ம- அதிகாரிக்கான நிமித்தங்களை சிருஷ்டி செய்தார்.
तदेतद्ब्रह्म क्षत्रं विट्शूद्रस्तदग्निनैव देवेषु ब्रह्माभवद्-ब्राह्मणो मनुष्येषु क्षत्रियेण क्षत्रियो वैश्येन वैश्यः शूद्रेण शूद्रस्तस्मादग्नावेव देवेषु लोकमिच्छन्ते ब्राह्मणे मनुष्येष्वेताभ्या्ँ हि रूपाभ्यां ब्रह्माभवत्। अथ यो ह वा अस्माल्लोकात्स्वं लोकमदृट्वा प्रैति स एनमविदितो न भुनक्ति यथा वेदो वाननुक्तोऽन्यद्वा कर्माकृतं यदिह वा अप्यनेवंविन्महत्पुण्यं कर्म करोति तद्धास्यान्ततः क्षीयत एवात्मानमेव लोकमुपासीत स य आत्मानमेव लोकमुपास्ते।न हास्य कर्म क्षीयते। अस्मावात्मनो यद्यत्कामयते तत्तत्सृजते।। १५।।
மந்த்ரார்த்தம்- அவ்வாறான இந்த ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்று நான்கு வர்ணங்கள் (ஜாதிகள்). (இதை உண்டுபண்ணும்) ப்ஹ்மம் அக்னி ரூபத்தால் தேவததைகளில் ப்ராஹ்மணர்களும், மனிதர்களில் க்ஷத்ரியர்களும், வைசியர்களினால் வைச்யர்களும், சூத்ரர்களால் சூத்ரர்களும் உண்டானார்கள். இந்த அக்னியில் தான் (கர்மம் செய்து) தேவதைகளின் இடத்தில் கர்மபலத்தில் இச்சை செய்கிறது. அவ்வாறே அந்த மனிதர்கள் இல்த்தில் ப்ராஹ்மண ஜாதிகளிடத்தில் கர்மபலத்தின் இச்சை செய்கிறார்கள். அவ்வாறு சிலர் உலகில் ஆத்மலோகத்தின் தர்சனமில்லாமல் இருக்கின்றார்கள். அவர்கள் ஆத்ம லோகத்தை அறியாததால் (சோக மோஹம் முதலியவைகளின் நிவர்த்தி வாயிலாய்) காப்பாற்றப்படுவது இல்லை. எவ்வாறு எனில் அத்யயனம் செய்யாத வேதம் போலும், அனுஷ்டானம் செய்யாத அன்யகர்மா போல் ஆகும். இவ்வாறு (ஆத்ம லோகத்தை) அறியாத புருஷன் இந்த லோகத்தில் எந்த ஒரு மஹத்தான புண்ய கர்மா செய்தாலும் கடைசியில் அவனுடைய கர்மா க்ஷீணமே ஆகிறது. ஆகையால் ஆத்ம லோகத்தையே உபாசனை செய்யவேண்டும். எந்த புருஷன் ஆத்ம லோகத்தை உபாசிக்கின்றானோ அவனுடைய கர்மா க்ஷீணமாவதில்லை (அழிவதில்லை). இவ்வாறு ஆத்மாவிடமிருந்து புருஷன் எதை எதை விரும்புகின்றானோ அதை அதை அடைகின்றான்.
भाष्यम् - तदेतच्चातुर्वर्ण्यं सृष्टम्- ब्रह्म क्षत्रं विट् शूद्र इति, उत्तरार्थ उपसंहारः यत्तत्स्रष्टृब्रह्म, तदग्निनैवनान्येन रूपेण देवेषु ब्रह्म, ब्राह्मणजातिरभवत्। ब्राह्मणः ब्राह्मणस्वरूपेण मनुष्येषु ब्रह्माभवत्, इतरेषु वर्णेषु विकारान्तरं प्राप्य, क्षत्रियेण क्षत्रियोऽभवदिन्द्रादिदेवताधिष्द्भितः, वैश्येन वैश्यः, शूद्रेण शूद्रः।
அனுவாதம்- ப்ராஹ்மண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரன் ஆகிய நான்கு ஜாதிகளை சிருஷ்டி செய்தார். (அவைகளை சிருஷ்டி செய்தார்- இவ்வாறு கூறப்பட்டது இனிவரும் அர்த்தத்துடன் உள்ள சம்பந்தத்தைக் காண்பிப்பதற்காக. இவைகளை உற்பத்தி செய்த கர்த்தா ப்ரஹ்மம். ஆகையால் அந்ய ரூபமல்ல. அக்னி ரூபத்தால் தேவர்களில் ப்ரஹ்ம. அதாவது ப்ராஹ்மண ஜாதி உண்டாயிற்று. அவ்வாறு அந்த ப்ரஹ்மம் மனிதர்களில் ப்ராஹ்மண ரூபமாய் ப்ராஹ்மணம் ஆயிற்று. இவ்வாறு மற்ற ஜாதிகளிலும் வேறு விகாரங்களை அடைந்து க்ஷத்திரியத்தால் க்ஷத்திரிய ஜாதி, இந்திரன் முதலிய தேவதைகளை அடிப்படையாகக் கொண்டு க்ஷத்திரியரும் உண்டாயிற்று. அவ்வாறே வைƒய ரூபத்தால் வைƒயரும், சூத்ரரூபத்தால் சூத்ரர்களும் உண்டாயினர்.
भाष्यम् - यस्मात्क्षत्रादिषु विकारापन्नम्, अग्नौ ब्राह्मण एव चाविकृतं स्रष्टृ ब्रह्म, तस्मादग्नावेव देवेषु देवानां मध्ये लोकं कर्मफलम्, इच्छन्त्यग्निसम्बद्धं कर्म कृत्वेत्यर्थः। तदर्थमेव हि तद्ब्रह्म कर्माधिकरणत्वेनाग्निरूपेण व्यवस्थितम्। तस्मात् तस्मिन्नग्नौ कर्म कृत्वा तत्फलं प्रार्थयन्त इत्येतदुपपन्नम्।
அனுவாதம்- ஏனெனில் சிருஷ்டி கர்த்தா ப்ரஹ்ம க்ஷத்திரிய முதலிய விகாரத்தை அடைந்தாலும் அக்னியிலும் ப்ராஹ்மணத்திலும் நிர்விகாரமாக இருக்கிறது. ஆகையால் உலகத்தோர் தேவர்களுள் அக்னியின் இடத்தில் கர்மபலத்தை அடைவதற்கு இச்சிக்கின்றார்கள். இதிலிருந்து அக்னி சம்பந்தம் கர்மம் செய்து பலன் கிடைக்கிறது என்று தெரிகிறது. ஆகையினாலேயே அந்த ப்ரஹ்மம் கர்மத்திற்கு ஆதாரபூதமாய் அக்னி ரூபமாய் இருக்கிறது. ஆகையால் அக்னியில் கர்மம் செய்து அந்த கர்மபலனின் பொருட்டு பிரார்த்திக்கின்றார்கள்.
भाष्यम् - ब्राह्मणे मनुष्येषु मनुष्याणां पुनर्मध्ये कर्मफलेच्छायां नाग्न्यादिनिमित्तक्रियापेक्षा, किं तर्हि? जातिमात्रस्वरूपप्रतिलम्भेनैव पुरुषार्थसिद्धिः। यत्र नु देवाधीना पुरुषार्थसिद्धिः, तत्रैवाग्न्यादिसम्बद्धक्रियापेक्षा। स्मृतेश्च- “जप्येनैव तु संसिध्येत्ब्राह्मणो नात्र संशयः। कुर्यादन्यन्न वा कुर्यान्मैत्रो ब्राह्मण उच्यते।।”इति।
அனுவாதம்-மனிதர்களுள் உள்ள ப்ராஹ்மணர்கள் கர்மபல இச்சை உள்ளவர்களுக்கு அக்னி முதலிய நிமித்தக்கிரியைகளின் அபேக்ஷை இல்லை. பின் என்ன செய்வார்கள்? (ப்ராஹ்மண) ஜாதி மாத்ர ஸ்வரூபத்தை அடைந்ததாலேயே புருஷார்த்த சித்தி உண்டாகிறது. எங்கு புருஷார்த்த சித்தி தேவாதீனமாகிறதோ அங்கு அக்னி முதலிய சம்பந்தம் உடைய கர்மங்களை செய்யவேண்டும். ஸ்மிருதியிலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.“जप्येनैव तु संसिध्येत्ब्राह्मणो नात्र संशयः। कुर्यादन्यन्न वा कुर्यान्मैत्रो ब्राह्मण उच्यते।।”(ஜப்யேனைவ து சம்சித்யே ப்ராஹ்மணோ நாத்ர சம்சய: குர்யாதன்யன்னவா குர்யான் மைத்ரோ ப்ராஹ்மண உச்யதே) அர்த்தம்- இதில் சந்தேஹம் ஒன்றும் இல்லை. ஏன்எனில் ப்ராஹ்மணன் (அக்னி முதலிய சம்பந்தமான) கர்மங்களை செய்தாலும் செய்யாவிடிணும் செய்த ஜபத்தால் பூர்ண சித்தியை அடைகிறான். மேலும் சூரிய சம்பந்தப்பட்ட (மைத்திரீ) காயத்ரீ ஜபம் செய்வதால் அல்லது எல்லோரிடத்தும் மித்திரத் திறனைப்போல் (நண்பனைப்போல்) அபயம் கொடுப்பதால் பிராஹ்மணர் மைத்திரன் என்று கூறப்படுகிறார்).
भाष्यम् - पारिव्राज्यदर्शनाच्च। तस्मात् ब्राह्मणत्व एव मनुष्येषु लोकं कर्मफलमिच्छन्ति। यस्मादेताभ्यां हि ब्राह्मणाग्निरूपाभ्यां यत्स्रष्टृब्रह्म साक्षादभवत्।
அனுவாதம்- இதைத்தவிர ப்ராஹ்மணர்களுக்கு சந்நியாசம் விதிக்கப்பட்டுள்ளதாலும் ஆகும். ஆகையால் மனிதர்கள் ப்ராஹ்மணத்துவ லோகமாகிய கர்மபலத்தையே இச்சிக்கின்றார்கள். ஆகையால் இந்த இஜ்ண்டு ப்ராஹ்மண, அக்னிரூபங்களில் கர்ம கர்த்தா மேலும் அதிகரணரூப ப்ராஹ்மண, அக்னி ஆகிய இரண்டு ரூபங்களாய் சிருஷ்டிகர்த்தா பிரஹ்மம் சாக்ஷாத்தாய் வெளிப்பட்டது.
भाष्यम् - अत्र तु परमात्मलोकमग्नौ ब्राह्मणे चेच्छन्तीति केचित्। तदसत्, अविद्याधिकारे कर्माधिकारार्थं वर्णविभागस्य प्रस्तुतत्वात्, परेण च विशेषणात्, यदि ह्यत्र लोकशब्देन पर एवात्मोच्येत, परेण विशेषणमनर्थकं स्यात्“स्वं लोकमदृट्वा” इति।
அனுவாதம்- இங்கு அக்னி, ப்ராஹ்மணத்தில் சிலர் பரமாத்ம லோகத்தை அடைய இச்சிக்கின்றார்கள் என்பது சரியல்ல. அவித்யாபிரகரணத்தில் கர்ம அதிகாரத்தின் பொருட்டு வர்ண (ஜாதி) விபாகம் பிரஸ்தாபிக்கப்பட்டது. மேலும் இனிமேல் (ஆத்மாலோக சப்தத்திற்கு) விசேஷணம் கூறப்பட்டுள்ளதாலும், இங்கு லோக சப்தத்தால் பரமாத்மாவை குறிக்கின்றது என்பது சரியல்ல. ஏன்எனில்“स्वं लोकमदृष्ट्वा” (ஸ்வம் லோகத்ருஷ்ட்வா) என்று மேலே வரும் வாக்கியத்தில் உள்ள“स्वम्” ஸ்வம்) என்ற விசேஷணம் அர்த்தமற்றதாகிவிடும்.
भाष्यम् - स्वलोकव्यतिरिक्तश्चेदग्न्यधीनतया प्रार्थ्यमानः प्रकृतो लोकः, ततः स्वम् इति युक्तं विशेषणम्, स्वत्वेन चाव्यभि-चारात्परमात्मलोकस्य, अविद्याकृतानां च स्वत्वव्यभिचारात्। ब्रवीति च कर्मकृतानां व्यभिचारम्- “क्षीयत एव”इति।
அனுவாதம்- அக்னியின் அபிமானத்தால் பிரார்த்தனை செய்தவன் பிரகிருத லோகத்தைவிட சுவர்லோகம் வேறு என்று அறியும்பொழுது“विशेषणम्” என்ற விசேஷணம் கூறப்பட்ட பரலோகத்தின் நிவிர்த்திக்காக ஆவதால் அது ஸ்வார்த்தமாகிறது. ஏன்எனில் ஸ்வஸ்ரூபத்தால் பரமாத்ம லோகத்திற்கு வியபிசாரம் (பேதம்) இல்லை. அவித்தையினால் உண்டான லோகத்திற்கே பேதம் உள்ளது“क्षीयत एव” (க்ஷீ யதே ஏவ) என்ற வாக்கியத்தால் கர்மம் செய்பவர்களின் வியபிசாரத் தன்மையைத் தெரிவிக்கிறது.
भाष्यम्- ब्रह्मणा सृष्टा वर्णाः कर्मार्थम्; तच्च कर्म धर्माख्यं सर्वानेव कर्तव्यतया नियन्तृ पुरुषार्थसाधनं च। तस्मात्तेनैव चेत्कर्मणा स्वो लोकः परमात्माख्योऽविदितोऽपि प्राप्यते, किं तस्यैव पदनीयत्वेन क्रियत इत्यत आह-अथेति पूर्वपक्षविनिवृत्त्यर्थः, यः किश्चत्, ह वै अस्मात्संसारिकात्पिण्डग्रहणलक्षणादविद्याकाम-कर्महेतुकादग्न्यधीनकर्माभिमानतया वा आगन्तुकादस्वभूता-ोकात्, स्वं लोकमात्माख्यम् आत्मत्वेनान्यभिचारित्वात्, अदृट्वा-“अहं ब्रह्मास्मि” इति, प्रैति म्रियते, स यद्यपि स्वो लोकः अविदितोऽविद्यया व्यवहितोऽस्व इवाज्ञातः एनम्- सापूरण इव लौकिक आत्मानं न भुनक्ति न पालयति शोकमोहभयादि-दोषापनयेन।
அனுவாதம்- சிருஷ்டி கர்த்தா பிரம்மா கர்மத்தின் பொருட்டு ஜாதிகளை சிருஷ்டித்தார். அந்த தர்மம் எனப்படும் கர்மம் கர்தவ்யமாக (கட்டாயம்) செய்யவேண்டியதாய் எல்லோருக்கும் நியந்தாவாயும், புருஷார்த்த சாதனமாயும் இருக்கின்றது. ஆகையால் அந்த கர்மத்தால் பரமாத்மா எனப்படும் ஸ்வலோகம் அறியாவிடினும் அதை அடையமுடியும் என்று அதற்காக செய்ய அவசியம் என்ன என்பதற்குக் கூறுகிறார்-“अथ” (அத) என்று பூர்வபக்ஷியை நிராகரிப்பதற்காக- என்பது பொருள். எவன் ஒருவன் இந்த அவித்யாகாம கர்மத்தினால் உண்டான அவ்வாறே அக்னி அதீனகர்மா அபிமானத்தினால் உண்டான ஆகந்துக (நடுவில்) பிண்ட க்ரஹரூபமான ஸாம்ஸாரிக அநாத்ம பூதமாய் உள்ளதை தன்னுடைய ஆத்மா எனப்படும் லோகத்தை தன் ஆத்ம ஸ்வரூபமாய் ஆனவன் (அறிந்தவன்) ஆனதால் அவ்யபிசாரி ஆவான். “நான் ப்ரஹ்மம்” என்று அறியாதவன் மரணதர்மத்தை அடைகிறான். அதுவும் ஸ்வலோகமாக இருந்தாலும் அதை அறியாததால் அவித்யையினால் மறைக்கப்பட்டு அதாவது தன்னுடைய லோகம் (ஸ்வலோகம்) அல்லாதது போல் அக்ஞானத்தினால் அடைந்ததால் லௌகிக திருஷ்டாந்தத்தில் உள்ள தசம எண்ணிக்கையின் பூர்த்தி போல் இந்த ஆத்மாவின் சோகம், மோஹம், பயம் முதலிய தோஷங்களின் நிவர்த்தி வாயிலாய் மரணத்தை உண்டுபண்ணுவது இல்லை.
भाष्यम् - यथा च लोके वेदोऽननुक्तोऽनधीतः कर्माद्यव-बोधकत्वेन न भुनक्ति, अन्यद्वा लौकिकं कृष्यादि, कर्म अकृतं स्वात्मनानभिव्यिञ्जतम् आत्मीयफलप्रदानेन न भुनक्ति, एवमात्मा स्वो लोकः स्वेनैव नित्यात्मस्वरूपेणानभिव्यिञ्जतोऽविद्यादि प्रहाणेन न भुनक्त्येव।
அனுவாதம்- எவ்வாறு உலகில் வேதம் அத்யயனம் செய்யாமல் கர்மங்கள் முதலியவைகளைப் பற்றி அறியாததால் பலனை அடைவதில்லை. அவ்வாறே லௌகிக கர்மங்களாகிய விவசாயம் முதலியகர்மங்கள் செய்யாவிடின் அதன் ஸ்வரூபம் வெளிப்படாததால் அது பலனளித்து காப்பற்றுவது இல்லை. அவ்வாறு ஆத்மாவாகிய ஸ்வலோகம் தானே நித்ய ஆத்மஸ்ரூபமாய் அபிவ்யக்தி ஆகி (வெளிப்பட்டு) அவித்தை முதலியவைகளை நீக்காமல் (ஸ்வலோகமாய் அதாவது ஆத்மாவாய்) நிலைக்க முடியாது. (சாக்ஷாத்காரம் ஆகமுடியாது).
भाष्यम्- शङ्का- ननु किं स्वलोकदर्शननिमित्त-परिपालनेन? कर्मणः फलप्राप्तिध्रौव्यात्, इष्टफलनिमित्तस्य च कर्मणो बाहुल्यात्, तन्निमित्तं पालनमक्षयं भविष्यति।
அனுவாதம்- சங்கை- ஸ்வலோகதர்சனம் (ஆத்ம சாக்ஷாத்காரம்) உண்டாவதற்கான காரணத்தை பரிபாலனம் செய்வதில் என்ன அவசியம்? ஏன்எனில் கர்மத்தினால் பலன் நிச்சயம் அடையப்படும் என்பதாலும், இஷ்டபலத்திற்கு ஹேதுவாய் இருக்கும் கர்மம் அதிகமாய் இருப்பதாலும் அதன் நிமித்தமாய் அக்ஷய பலன் கிடைக்கும்.
भाष्यम्- समाधानम्- तन्न, कृतस्य क्षयवत्त्वात्, इत्येतदाह- यदिह वै संसारेऽद्भुतवत्किश्चन्महात्मापि, अनेवंवित्- स्वं लोकं यथोक्तेन विधिना अविद्वान्, महहु अश्वमेधादि पुण्यं कर्म इष्टफलमेव नैरन्तर्येण करोति,“अनेनैवानन्त्यं मम भविष्यति” इति तत्कर्म हास्यविद्यावतोऽविद्याजनितकामहेतुत्वात् स्वप्नदर्शन-विभ्रमोद्भूतविभूतिवदन्ततोऽन्ते फलोपभोगस्य क्षीयत एव। तत्कारणयोरविद्याकामयोश्चलत्वात्, कृतक्षयध्रौव्योपपत्तिः। तस्मान्न पुण्यकर्मफलपालनानन्त्याशा अस्त्येव।
அனுவாதம்- சமாதானம்- அவ்வாறு அல்ல ஏன்எனில் செய்யப்பட்டது நாசமாவதால். இதைக்குறித்து சுருதி கூறுகிறது- இந்த உலகில் அதாவது சம்சாரத்தில் அற்புதமான ஒரு மஹாத்மா. அவர் அவித்வான். ஸ்வம் லோகத்தை (பரமாத்மாவை) கூறப்பட்ட விதிபூர்வகமாய் அறியாத அவித்வான் “இதனால் நான் நாசமற்றவனாய் ஆவேன்” என்று மிகப்பெரிய அச்வமேதம் முதலிய இஷ்டபலமே புண்யகர்ம என்று இடைவிடமால் செய்கிறான். அந்த கர்மம் அவனுடைய அவித்யையினாலும், அவித்யையினால் உண்டான காமஹேதுவினாலும் உண்டானதால் ஸ்வப்னத்தில் கண்ட பிரம ஐஸ்வரியம் போல் பலனின் போகத்தின் முடிவில் அந்த கர்மபலம் நிச்சயமாய் அழிவது திண்ணமே. ஆகையால் புண்யபலத்தின் மூலமாய் அழிவற்ற பலனை (சாக்ஷாத்காரத்தை) காப்பாற்றுவதில் ஆசை உண்டாகாது.
भाष्यम् - अत आत्मानमेव स्वं लोकम्-“आत्मानम्” इति“स्वं लोकम्” इत्यस्मिन्नर्थे, स्वं लोकमिति प्रकृतत्वात्, इह च स्वशब्दस्याप्रयोगात्- उपासीत। स य आत्मानमेव लोकमुपास्ते, तस्य किम्? इत्युच्यते- न हास्य कर्मक्षीयते, कर्माभावादेव, इति नित्यानुवादः। यथाविदुषः कर्मक्षयलक्षणं संसारदुःखं सन्ततमेव, न तथा तदस्य विद्यत इत्यर्थः।“मिथिलायां प्रदीप्तायां न मे दह्यति किञ्चन” इति यद्वत्।
அனுவாதம்- ஆகையால் ஆத்மாவே ஸ்வம்லோகம்(आत्मानमेव स्वं लोकम्) -“आत्मानम्” (ஆத்மானம்) என்றும்“स्वं लोकम्” (ஸ்வம் லோகம்) என்றும் கூறுவதில் உள்ள அர்த்தத்தில் ஸ்வம் லோகம் என்ற சப்தத்தால் பிரகரணம் ஆரம்பிக்கப்பட்டது. எவன் ஒருவன் ஆத்மாவையே லோகம் என்று உபாசிப்பதில் இங்கு ஸ்வ(स्व) சப்தம் பிரயோகிக்கப்படாததால் உபாசிக்க வேண்டும் என்று பொருள் ஆகிறது. அவன் ஆத்மாவையே உபாசிக்கின்றான். அதனால் என்ன ஏற்படும்? என்பதைக் கூறுகிறார்- அவனுடைய கர்மம் ஒருநாளும் அழியாது. ஏன்எனில் அவனுக்குக் கர்மம் இல்லை என்பது நித்யத்தன்மையின் அனுவாதமாகும். எவ்வாறு அவிதுஷனுக்கு கர்மக்ஷய லக்ஷணமாகிய சம்சார துக்கம் எப்பொழுதும் உள்ளதோ அவ்வாறு இவனுக்கு கிடையாது என்பது பொருள்.“मिथिलायां प्रदीप्तायां न मे दह्यति किञ्चन” (மிதிலாயாம் ப்ரதீப்தாயாம் ந மே தஷ்யதி கிஞ்சன) என்பது போல் ஆகும்.
भाष्यम् - स्वात्मलोकोपासकस्य विदुषो विद्यासंयोगात्कर्मैव न क्षीयत इत्यपरे वर्णयन्ति। लोकशब्दार्थं च कर्मसमवायिनं द्विधा परिकल्पयन्ति किल- एको व्याकृतावस्थः कर्माश्रयो लोको हैरण्यगर्भाख्यः, तं कर्मसमवायिनं लोकं व्याकृतं परिच्छिन्नं य उपास्ते, तस्य किल परिच्छिन्नकर्मात्मदर्शिनः कर्म क्षीयते। तमेव कर्मसमवायिनं लोकमव्याकृतावस्थं कारणरूपमापाद्य यस्तूपास्ते, तस्यापरिच्छिन्नकर्मात्मदर्शित्वात्तस्य कर्म न क्षीयत इति।
அனுவாதம்- (ஸ்வாத்மலோகம் உபாசிக்கும் வித்வானுக்கு வித்யாகர்மஸம்யோகத்தினால் கர்மம் நஷ்டமாகாது என்று சிலர் கூறுகின்றார்கள். லோக சப்தார்த்தம் கர்ம சம்பந்தத்தால் இருவகையாகக் கல்பிக்கின்றனர். ஒன்று - வ்யாகிருத அவஸ்தையில் இருக்கும் கர்மாதீனமானது ஹிரண்யகர்ப லோகம். அந்த கர்மசம்பந்தத்துடன் கூடிய லோகம் வியாகிருதம். பரிச்சின்னம் ஆனது. அதை எவர் உபாசிக்கிறார்களோ அந்த பரிச்சின்னகர்ம ஆத்மதர்சிகளுக்கு அல்லவா கர்மம் க்ஷீணமாகும். அந்த கர்ம சம்பந்தி லோகத்தை அவ்யாகிருத ரூபத்தில் இருந்துகொண்டு அதாவது காரண ரூபமாய் அடைந்து உபாசனை செய்கிறார்களோ அவர்கள் கர்மா க்ஷீணம் அடைவதில்லை. ஏனெனில் அது அபரிச்சின்ன கர்மாத்ம தர்சீ.
भाष्यम् - भवतीयं शोभना कल्पना न तु श्रौती। स्वलोकशब्देन प्रकृतस्य परमात्मनोऽभिहितत्वात्। स्वं लोकमिति प्रस्तुत्य स्वशब्दं विहायात्मशब्दप्रक्षेपेण पुनस्तस्यैव प्रतिनिर्देशा-दात्मानमेव लोकमुपासीतेति। तत्र कर्मसमवायिलोककल्पनाया अनवसर एव।
அனுவாதம்- இந்த கல்பனை நன்றாகவே இருந்தாலும் சுருதிக்கு சம்மதமில்லை. ஏன்எனில் சுருதியானது ஸ்வலோக சப்தத்தால் பிரகரணத்தில் உள்ள பரமாத்மாவை பிரதிபாதனம் செய்வதால் ஆகும்.“स्वं लोकम्” (ஸ்வம் ஸ்லோகம்) என்று ஆரம்பித்து “ஸ்வ” சப்தத்தை விடுத்து ஆத்ம சப்தம் பிரயோகம் செய்து மறுபடியும் அந்த ஆத்மா லோகம் என்று உபாசிக்க வேண்டும் என்று நிர்தேசம் செய்கிறது. ஆகையால் இங்கு கர்ம சம்பந்தி லோகத்தை கல்பனை செய்வது அவசியம் அற்றது.
भाष्यम् - परेण च केवलविद्याविषयेण विशेषणात्-“किं प्रजया करिष्यामो येषां नोऽयमात्मायं लोकः” (बृ० उ० ४। ४। २२) इति। पुत्रकर्मापरविद्याकृतेभ्यो हि लोकेभ्यो विशिनष्टि“अयमात्मा नो लोकः” इति।“न हास्य केनचन कर्मणा लोको मीयत एषोऽस्य परमो लोकः” इति च। तैः सविशेषणैरस्यैक-वाक्यता युक्ता, इहापि स्वं लोकमिति विशेषणदर्शनात्।
அனுவாதம்- இதைத்தவிர இனி“किं प्रजया करिष्यामो येषां नोऽयमात्मायं लोकः” (கிம் ப்ரஜயா கரிஷ்யாமோ யேஷாம் நோஅயமாத்மாயம் லோக:) இவ்வாறு கேவல ஞான (வித்யா) விஷய வாக்கியங்களால் விசேஷணமாகின்றது. புத்திரன், கர்மா, அபரவித்யா ஆகியவைகளினால் உண்டாகும் லோகங்களை விட(स्वं लोकम्) வேறு என்று பிரித்துக்காட்டுகின்றது. இவ்வாறு“अयमात्मा नो लोकः” (அயமாத்மா நோ லோக:) என்றும்,“न हास्य केनचन कर्मणा लोको मीयत एषोऽस्य परमो लोकः” (ந ஹாஸ்ய கேனசன கர்மணா லோகோ மீயத ஏஷோஅஸ்ய பரமோ லோக:) என்றும் தெரிவிக்கிறது. இந்த விசேஷணங்களுடன் கூடிய வாக்கியத்தால் ஒரே வாக்கியமாக வேண்டும். ஏன்எனில் இங்கும்“स्वं लोकम्” (ஸ்வம் லோகம்) என்ற விசேஷணம் காணப்படுகிறது.
भाष्यम् - अस्मात्कामयत इत्ययुक्तमिति चेत्- इह स्वो लोकः परमात्मा, तदुपासनात्स एव भवतीति स्थिते, यद्यत्कामयते तत्तदस्मादात्मनः सृजत इति तदात्मप्राप्तिव्यतिरेकेण फलवचनमयुक्तमिति चेत्, न, स्वलोकोपासनस्तुतिपरत्वात्, स्वस्मादेव लोकात्सर्वमिष्टं सम्पद्यत इत्यर्थः, नान्यदतः प्रार्थनीयमाप्तकामत्वात्“आत्मतः प्राण आत्मत आशा” (छा० उ० ७। २६। १) इत्यादि श्रुत्यन्तरे यथा।
அனுவாதம்- இதனால் காமனை செய்கிறது என்பது கூறுவது பொருந்தாததால் இங்கு“स्व लोकम्” ஸ்வலோகம் என்பது பரமாத்மா, அதை உபாசனை செய்வதால் அவனாகவே ஆகின்றான் என்று இருக்கும் பொழுது, எது, எது காமனை செய்கின்றானோ அது அது அந்த ஆத்மாவிலிருந்து உண்டாகிறது என்று அது ஆத்ம பிராப்தி வியதிரேகமான (வேறான) பலன் என்ற வசனம் பொருந்தாது என்றால், “ஸ்வலோக” உபாசனை ஸ்துதிபரமாய் இருப்பதால், அவ்வாறு அல்ல. தன்னுடைய ஆத்ம லோகத்திலிருந்தே இஷ்ட சித்தியை அடைகிறான் என்பது பொருள். அதைக்காட்டிலும் வேறு ஒன்றும் பிரார்த்தனைக்கு உரியது அல்ல என்பது வேறு சுருதி வாக்யம்“आत्मतः प्राण आत्मत आशा” என்று
भाष्यम् - सर्वात्मभावप्रदर्शनार्थो वा पूर्ववत्। यदि हि पर एवात्मा सम्पद्यते तदा युक्तः“अस्मावात्मनः” इत्यात्म-शब्दप्रयोगः, स्वस्मादेव प्रकृतादात्मनो लोकादित्येवमर्थः। अन्यथा“अव्याकृतावस्थात्कर्मणो लोकात्” इति सविशेषणमवक्ष्यत् प्रकृतपरमात्मलोकव्यावृत्तये व्याकृतावस्थाव्यावृत्तये च। न ह्यस्मिन्प्रकृते विशेषितेऽश्रुतान्तरालावस्था प्रतिपत्तुं शक्यते।
அனுவாதம்- முன்பு போல் ஸர்வாத்மபாவத்தை தெரிவிப்பதற்காக ஆத்மக்ஞன் பரமாத்மாவாகவே ஆகும்பொழுது“अस्मावात्मनः” என்று இவ்வாறு ஆத்ம சப்த பிரயோகம் பொருந்தமே. ஸ்வஸ்ரூப ப்ரக்ருத ஆத்மாலோகத்திலிருந்து என்பது பொருள். மற்றும் ப்ரக்ருத பரமாத்மலோகத்தையும் வியாகிருத அவஸ்தாவையும் (வியாகிருத ஸ்திதி ப்ரஹ்மலோகத்தையும் வேறுபடுத்தி காண்பிப்பதற்காக சுருதி“अव्याकृतावस्थात्कर्मणो लोकात्” (அவ்யாகிருதாவஸ்தாத்கர்மணோ லோகாத்) என்று விசேஷணத்துடன் கூடி உரைக்கின்றது. ஆகையால் எங்கு (சமஸ்கிருதம்) என்ற விசேஷணம் உள்ளதோ அது சுருதி சம்மதமே. ஆனால் அபரபிரஹ்மத்தின் அந்தராளத்தை (அவ்யாகிருத) அவஸ்தையை ஏற்றுக்கொள்ளவில்லை.
अव - अथो अयं वा आत्मा। अत्राविद्वान् वर्णाश्रमाद्यभि-मानो धर्मेण नियम्यमानो देवादिकर्मकर्तव्यतया पशुवत्परतन्त्र इत्युक्तम्। कानि पुनस्तानि कर्माणि यत्कर्तव्यतया पशुवत्परतन्त्रो भवति? के वा ते देवादयो येषां कर्मभिः पशुवदुपकरोति? इति तदुभयं प्रपञ्चयति-
அனுவாதம்- அ.கை- அதனால் இந்த ஆத்மா. இங்கு அவித்வான் வர்ணாஸ்ரமங்களில் அபிமானம் உடையவனாய் தர்மத்தால் நியமமாய் தேவ முதலிய கர்ம கர்த்தவ்யத்தால் பசுப்போல் பரதந்திரன் ஆகின்றானோ? எவர்களுக்கு தேவர்களுக்கு கானகர்மங்களால் பசுப்போல் உபகாரம் செய்கிறதா? என்ற இந்த இரண்டு கேள்விகளுக்கும் விளக்கம் தரப்படுகிறது.-
अथो अयं वा आत्मा सर्वेषां भूतानां लोकः स यज्जहोति यद्यजते तेन देवानां लोकोऽथ यदनुब्रूते तेन ऋषीणामथ यत्पितृभ्यो निपृणाति यत्प्रजामिच्छते तेन पितृणामथ यन्मनुष्यान्वासयते यदेभ्योऽशनं ददाति तेन मनुष्याणामथ यत्पशुभ्यस्तृणोदकं विन्दति तेन पशूनां यदस्य गृहेषु श्वापदा वया ्ँ्स्या पिपीलिकाभ्य उपजीवन्ति तेन तेषां लोको यथा ह वे स्वाय लोकायारिष्टिमिच्छेदेव्ँ् हैवंविदे सर्वाणि भूतान्यरिष्टिमिच्छन्ति तद्वा एतद्विदितं मीमा्ँ सितम्।। १६।।
மந்த்ரார்த்தம்- இந்த ஆத்மா(गृही-कर्माधिकारि) (கர்மாதிகாரி) எல்லா ஜீவர்களுக்கும் லோகம் (போக்யம்) ஆகும். எவர்கள் ஹவனம், யக்ஞம் செய்கிறார்களோ அதனால் தேவலோகத்தை அடைகிறார்கள். எவர்கள் ஸ்வாத்யாயம் செய்கிறார்களோ அவர்கள் ரிஷிகள், எவர்கள் பித்ருகளுக்கு பிண்டதானம் செய்து சந்தானத்தை இச்சிக்கிறார்களோ பித்ருலோகத்தை எவர்கள் மனிதர்களுக்கு இருப்பிடமும் போஜனமும் அளிக்கிறார்களோ அவர்கள் மனித போகத்தை மேலும் பசுக்களுக்கு புல், ஜலம் முதலியவைகளை அளிக்கிறார்களோ அவர்கள் பசுபோகத்தையும் எவர்களுடைய வீட்டில் நாய், பூனை, பக்ஷி, எறும்பு முதலிய ஜீவஐந்துக்களை ஆஸ்ரயித்து ஜீவனத்தை கடைபிடிக்கிறார்களோ அவர்கள் அந்த அந்த லோகத்தை (போகத்தை) அடைவிக்கிறார்கள். எவ்வாறு லோகத்தில் தன்னுடைய சரீரத்தை விநாசம் அற்றதாய் இருக்க விரும்புகிறார்களோ அவர்கள் அவ்வாறு அறியும் எல்லா ஜீவனும் விநாசம் அற்றதன்மையை விரும்புகின்றன. இந்த கர்மத்தை அவசியம் செய்யவேண்டும் என்பதை அறியவேண்டும். இதனுடைய மீமாம்சையும் இருக்கிறது.
भाष्यम्- अथो इत्ययं वाक्योपन्यासार्थः। अयं यः प्रकृतो गृहीकर्माधिकृतोऽविद्वाञ्छरीरेन्द्रियसतादिविशिष्टःपिण्ड आत्मेत्युच्यते, सर्वेषां देवादीनां पिपीलिकान्तानां भूतानां लोको भोग्य आत्मेत्यर्थः, सर्वेषां वर्णाश्रमादिविहितैः कर्मभिरुपकारित्वात्।
அனுவாதம்-“अथ” என்பது வாக்கியம் ஆரம்பிப்பதற்காக. எவன் இந்த கர்ம அதிகாரி அக்ஞானியாகிய கிரஹஸ்த சரீர இந்திரிய சங்காதங்களுடன் கூடிய பிரகிருதபிண்டம் ஆத்மா என்று கூறப்படுகிறது. எல்லா தேவர்கள் முதல் எறும்பு வரையிலும் உள்ள ஜீவர்களுக்கு லோகம் அதாவது போக்யம் ஆத்மா என்பது பொருள். எல்லா வர்ண ஆஸ்ரமம் முதலிய விஹித கர்மங்களுக்கு உபகாரியாய் இருப்பதால்.
भाष्यम् - कैः पुनः कर्मविशेषैरुपकुर्वन् केषां भूतविशेषाणां लोकः? इत्युच्यते- स गृही यज्जहोति यद्यजते, यागो देवतामुद्दिश्य स्वत्वपरित्यागः, स एव आसेचनाधिको होमः तेन होमयागलक्षणेन कर्मणावश्यकर्तव्यत्वेन देवानां पशुवत्परतन्त्रत्वेन प्रतिबद्ध इति लोकः।
அனுவாதம்- மறுபடியும் யாரால் கர்ம விசேஷங்களால் எந்த விசேஷங்களுக்கு உபகாரம் செய்வதால் அவர்களுக்கு லோக (போக்கிய)மாகிறது? அது கூறப்படுகிறது- அந்த கிருஹஸ்தன் ஹவனம், யஜனம், செய்கிறானோ. அவன் யாகத்தில் தேவதைகளை உத்தேசித்து செய்யும் வஸ்துக்களில் தனது என்பதை தியாகம் செய்து அவனே இவ்வளவு ஆஹுதியை அளிக்கும் கர்மத்தை ஹோமம் என்கிறார்கள். இந்த தியாகரூப ஹோம கர்மத்தால் அதை அவசியம் செய்யவேண்டியதால் அந்த புருஷன் பசுவிற்கு சமமாக தேவதைகளுக்கு பந்தப்படுகிறான் என்பதால் லோகம் (போக்யம்) எனப்படுகிறான்.
भाष्यम् - अथ यदनुब्रूते स्वाध्यायधीतेऽहरहस्तेन ऋषीणां लोकः। अथ यत्पितृभ्यो निपृणाति प्रयच्छन्ति पिण्डोदकादि, यच्च प्रजामिच्छति प्रजार्थमुद्यमं करोति इच्छा चोत्पत्त्युपलक्षणार्था- प्रजां चोत्पादयतीत्यर्थः, तेन कर्मणावश्यकर्तव्यत्वेन पितृणां लोकः पितृणां भोग्यत्वेन परतन्त्रो लोकः।
அனுவாதம்- எவ்வாறு அனுவசனமோ அதாவது தினமும் ஸ்வாத்யாயம் செய்வதால் அது ரிஷிகளின் லோகம் (போக்கியம்) ஆகிறது. பித்ருக்களுக்கு எந்த பிண்ட, நீர் முதலியவைகளை அளிப்பது ஆனது பிரஜையை விரும்புவர் செய்வது பிரஜைக்கான முயற்சியாகும். இங்கு இச்சை (விரும்புவது) என்பது உத்பத்திக்கான உபலக்ஷணமாகும். அதாவது பிரஜையை உத்பன்னம் செய்யக்கூடியதாகும் என்பது பொருள். அந்த கர்மம் அவசியம் செய்வதால் பித்ருக்களுடைய லோகம் அதாவது பித்ருக்களுக்கு போக்கிய ரூபமாய் பரதந்திர லோகமாகிறது.
भाष्यम्- अथ यन्मनुष्यान्वासयते भूम्युदकादिदानेन गृहे, यच्च तेभ्यो वसद्भयोऽवसद्भोे वा अर्थिभ्योऽशनं ददाति, तेन मनुष्याणाम्, अथ यत्पशुभ्यस्तृणोदकं विन्दति लम्भयति, तेन पशूनाम्; यदस्य गृहेषु श्वापदा वयांसि च पिपीलिकाभिः सह कणबलिभाण्डक्षालनाद्युपजीवन्ति, तेन तेषां लोकः।
அனுவாதம்- அவ்வாறே பூமி, நீர் முதலிய தானங்களினால் மனிதர்களை கிருஹத்தில் இருக்கச் (வசிக்கச்செய்வதாலும் அவ்வாறே கிரஹங்களில் வசிக்கிறவர்களாலும் வசிக்காதவர்கள் ஆனாலும் கேட்பவர்களுக்கு போஜனம் அளிப்பதால் மனிதர்களின் லோகம் (போக்கியம்) ஆகிறார்கள். அவ்வாறே பசுக்களுக்கு புல் தண்ணீர் அளித்து அதனால் அந்த பசுக்களின் லோகமாகிறார்கள். இவ்வாறு கிருஹத்தில் நாய், பூணை, பறவை அவ்வாறே எறும்பு வரையில் உள்ள ஜீவ ஜந்துகளுக்கு திணை, தினசரி நாம் உண்ணும் அன்னத்தில் ஒரு பகுதியை நாம் அளிப்பதினாலும், பாத்திரம் முதலியவை கழுவுவதிலிருந்தும் கிடைக்கும் உணவினாலும் வசிக்கின்றன. அதுவே அவற்றின் லோகம்.
भाष्यम् - यस्मादयमेतानि कर्माणि कुर्वन्नुपकरोति देवादिभ्यः, तस्माद्यथा ह वै लोके स्वाय लोकाय स्वस्मै देहायारिष्टिमविनाशं स्वत्वभावाप्रच्युतिमिच्छेत् स्वत्वभावप्रच्युति-भयात्पोषणरक्षणादिभिः सर्वतः परिपालयेत्, एवं हैवंविदे “सर्वभूतभोग्योऽहमनेन प्रकारेण मया अवश्यमृणिवत्प्रति-कर्तव्यम्” इत्येवमात्मानं परिकल्पितवते सर्वाणि भूतानि देवादीनि यथोक्तानि अरिष्टिमविनाशमिच्छन्ति स्वत्वाप्रच्युत्यै सर्वतः संरक्षन्ति कुटुम्बिन इव पशून्-“तस्मादेषां तन्न प्रियम्” इत्युक्तम्। तद्वा एतत्तदेतद्यथोक्तानां कर्मणाम् ऋणवदवश्यकर्तव्यत्वं पञ्चमहायज्ञप्रकरणे विदितं कर्तव्यतया मीमांसितं विचारितं चावदानप्रकरणे।
அனுவாதம்- எதனால் இந்த கர்மாக்கள் தேவர்கள் முதலியோருக்கு உபகாரமாய் இருக்கின்றனவோ அதனால் எவ்வாறு உலகத்தில் தங்கள் சரீரங்கள் விநாசம் அடையாமல் அதாவது தன்னுடைய பாவத்திலிருந்து நழுவிவிடும் பயத்தால் அவைகளை போஷித்து ரக்ஷித்து எல்லா விதமாகவும், பரிபாலனம் செய்கின்றார்கள். இவ்வாறு அறிந்தவர்கள்“सर्वभूतभोग्योऽहमनेन प्रकारेण मया अवश्यमृणिवत्प्रतिकर्तव्यम्” “(ஸர்வபூதபோக்யோ அஹமனேன பிரகாரேன மயா அவƒய மிருணிவத்ப்ரதிகர்தவ்யம்” என்று தன்னில் கல்பனை செய்து கொண்டு முன்பு (மேல்) கூறியவாறு தேவதை முதலிய எல்லா ஜீவராசிகளும் அரிஷ்டம் அதாவது விநாசமற்ற தன்மையை விரும்புகின்றன. எவ்வாறு குடும்பஸ்தன் தன்னுடைய பசுக்களை ரக்ஷிக்கின்றானோ அவ்வாறு தங்களுடைய அதிகாரி நழுவாமல் இருப்பதற்காக எல்லாவிதமாகவும் (தேவர்கள்) ரக்ஷிக்கின்றார்கள்“तस्मादेषां तन्न प्रियम्” (தஸ்மாதேஷாம் தன்ன பிரியம்) என்று கூறப்பட்டது. அந்த இந்த அதாவது மேற்கூறிய கர்மங்களின் கடனுக்கு சமானமாய் அவசியம் செய்யவேண்டியதை பஞ்சமஹாயக்ஞபிரகரணத்தில் விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே அவதான பிரகரணத்திலும் கர்தவ்ய ரூபமாய் மீமாம்சை செய்யப்பட்டுள்ளது. (விசாரம் செய்யப்பட்டுள்ளது)
अव - ब्रह्म विद्वांश्चेत्तस्मात्पशुभावात्कर्तव्यताबन्धनरूपा-त्प्रतिमुच्यते, केनायं कारितः कर्मबन्धनाधिकारेऽवश इव प्रवर्तते, न पुनस्तद्विमोक्षणोपाये विद्याधिकार इति।
அனுவாதம்- அ.கை- பிரஹ்மத்தை அறிந்தவனாகில் அந்த கர்தவ்யம் என்னும் பந்தமுடைய பசு பாவத்திலிருந்து விடுபடுவான். எதாவது ஒரு பிரேரணையால் கர்மபந்த அதிகாரத்தில் தன்வசம் இழந்தவன் போல் பிரவிர்திக்கின்றான். ஆகையால் அவனுக்கு முக்திக்கு உபாயமான வித்யா (ஞான) அதிகாரத்தில் பிரவர்த்திப்பதில்லை.
भाष्यम् - पूर्व - ननूक्तं देवा रक्षन्तीति।
அனுவாதம்- பூர்வ- முன்பு தேவர்கள் அவர்களை ரக்ஷிப்பார்கள் என்று கூறப்பட்டதே எனில்?
भाष्यम्- सिद्धान्ती- बाढम्, कर्माधिकारस्वगोचरारूढानेव तेऽपि रक्षन्ति, अन्यथाकृताभ्यागमकृतनाशप्रसङ्गात्। न तु सामान्यं पुरुषमात्रं विशिष्टाधिकारानारूढम्; तस्माद्भवितव्यं तेन, येन प्रेरितोऽवश एव बहिर्मुखो भवति स्वस्माल्लोकात्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- சரிதான், ஆனால் அவர்கள் கர்மாதிகாரத்தின் வாயிலாய் தங்களின் விஷயங்களை அடைந்து லோகங்களை ரக்ஷிக்கின்றார்கள். அதற்கு மாறாக இருந்தால், கர்மம் செய்யாமலேயே கர்மத்தின் பிராப்தியும் செய்த கர்மத்தின் நாசமும் ஏற்படும். விசிஷ்ட அதிகாரம் ஏற்படாவிடில் சாமான்ய புருஷ மாத்திரத்தால் ரக்ஷை செய்யமுடியாது. அதனால் ஒருவரால் பிரேரிக்கப்பட்டு தன்வசம் இழந்து ஸ்வாத்ம லோகத்திலிருந்து பஹிர்முகமாதல் என்பது நடக்கும் .
भाष्यम् - पूर्व - नन्वविद्या सा, अविद्यावान्हि बहिर्मुखीभूतः प्रवर्तते।
அனுவாதம்- பூர்வ- ஆனால் அது அவித்யா, அவித்யையை உடையவன் அல்லவா பஹிர்முகமாய் பிரவர்த்திப்பான்.
भाष्यम् - सिद्धान्ती - सापि नैव प्रवर्तिका वस्तुस्वरूपावर्णात्मिका हि सा, प्रवर्तकबीजत्वं तु प्रतिपद्यतेऽन्धत्वमिव गर्तादिपतनप्रवृत्तिहेतुः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அது ஒருநாளும் பிரவிர்த்திகச் செய்வதாக ஆகாது. அது வஸ்து ரூபத்தை ஆவரணம் செய்வதாகும். குழியில் விழுவதற்கான ஹேதுவான குருட்டுதன்மையைப் போல் பிரவிர்த்திக்கச் செய்வதற்கான பீஜரூபத்தை அடைகிறான்.
भाष्यम् - पूर्व - एवं तर्ह्युच्यतां किं तद् यत्प्रवृत्तिहेतुरिति?
அனுவாதம்- பூர்வ- இவ்வாறானால் எது பிரவிர்த்திக்கு ஹேதுவாகிறதோ அது எது என்று கூறுவீராக.
भाष्यम् - सिद्धान्ती - तदिहाभिधीयते- एषणा कामः सः“स्वाभाविक्यामविद्यायां वर्तमाना बालाः पराचः कामाननुयन्ति” इति काद्भकश्रुतौ, स्मृतौ च-“काम एष क्रोध एषः” (गीता ३। ३७) इत्यादि, मानवे च सर्वा प्रवृत्तिः कामहेतुक्येवेति। स एषोऽर्थः सविस्तरः प्रदर्श्यत इह आ अध्यायपरिसमाप्तेः-
அனுவாதம்- ஸித்தாந்தீ- அதைக் குறித்து இங்கு கூறப்படுகிறது- அந்த ஏஷணாகாமம் ஆகும்“स्वाभाविक्यामविद्यायां वर्तमाना बालाः पराचः कामाननुयन्ति” (ஸ்வாபாவிக்யாமவித்யாம் வர்த்தமானா பாலா: பராச: காமானனுயந்தி) என்று காடக ஸ்ருதியிலும்,“काम एष क्रोध एषः” (காம ஏஷ க்ரோத ஏஷ:) என்று ஸ்மிருதியிலும் சொல்லப்பட்டுள்ளது. மானவ தர்ம சாஸ்திரத்தில் எல்லா பிரவிருத்திகளும் காமத்தின் ஹேதுவாகவே என்று கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் இந்த அத்யாயம் முடியும் வரையிலும் விஸ்தாரமாக விளக்கப்படுகிறது.-
आत्मैवेदमग्र आसीदेक एव सोऽकामयत जाया मे स्यादथ प्रजायेयाथ वित्तं मे स्यादथ कर्म कुर्वीयेत्येतावान्वै कामो नेच्छ्ँश्चनातो भूयो विन्देत्तस्मादप्येतर्ह्येकाकी कामयते जाया मे स्यादथ प्रजायेयाथ वित्तं मे स्यादथ कर्म कुर्वीयेति स यावदप्येतेषामेकैकं न प्राप्नोत्यकृत्स्न एव तावन्मन्यते तस्यो कृत्स्नता मन एवास्यात्मा वाग्जाया प्राणः प्रजा चक्षुर्मानुषं वित्तं चक्षुषा हि तद्विन्दते श्रौत्रं दैव्ँ श्रोत्रेण हि तच्छृणोत्यात्मैवास्य कर्मात्मना हि कर्म करोति स एष पाो यज्ञः पाः पशु पाः पुरुषः पाङ्मिद ँ् सर्वं यदिदं किञ्च तदिद ँ् सर्वमाप्नोति य एवं वेद।। १७।।
மந்த்ரார்த்தம்- இதற்கு முன் ஆத்மா ஒன்றே இருந்தது. அது எனக்கு ஒரு பெண் (ஸ்திரீ) வேண்டும் என்று காமனை செய்தது. அதன்பின் பிரஜாரூபமாய் உண்டாவேனா என்று (நினைத்தது). அவ்வாறே எனக்கு தனம் வேண்டும், அதன் பின் கர்மம் செய்வேனாக, இவ்வளவு காமனைகள் போதும். இச்சை செய்வதற்கு இதற்கு மேல் அதிகம் ஒன்றும் இல்லை. இதனால் இப்பொழுதும் தனியாக இருக்கும் புருஷன் எனக்கு ஒரு ஸ்திரீ வேண்டும் என்று காமனை செய்கின்றான். நான் சந்தானரூபமாக (புத்திரனாக) உண்டாகவேண்டும் என்றும் அவ்வாறே தனம் வேண்டும். மேலும் நான் கர்மம் செய்வேன் என்று எண்ணுகிறான். எது வரையில் இதில் ஒவ்வொன்றும் அடையவில்லையோ அது வரையில் அவன் பூர்ணமற்றவனாக நினைக்கின்றான். அவனுக்கு பூர்ணத்தன்மை இவ்வாறு கிடைக்கிறது- மனமே இவனுடைய ஆத்மா. வாக் ஸ்திரீ, பிராணன் சந்தானம் (புத்திரன்) மேலும் கண் மானுஷவித்தம் (தனம்) ஏன்எனில் கண்களினால் பசு (சம்ஸ்கிருதம்) முதலிய மனித செல்வத்தை அறிகிறான். ஸ்ரோத்திரம் தைவவித்தம் (செல்வம்) ஏன்எனில் ஸ்ரோத்திரங்களினால் (காதுகளினால்) அவன் அதை (தேவ வித்தத்தை) கேட்கிறான். ஆத்மா (சரீரம்) இதன் கர்மம், ஏனெனில் ஆத்மாவினால் அல்லவா இந்த கர்மத்தை செய்கின்றான். அந்த இந்த யக்ஞம் பாங்க்தம், பசு பாங்க்தம், புருஷன் பாங்க்தம், அவ்வாறே எதுவெல்லாம் உள்ளதோ அது பாங்க்தம். எவன் இவ்வாறு அறிகிறானோ அவன் இவை எல்லாவற்றையும் அடைகின்றான்.
भाष्यम्-आत्मैवेदमग्र आसीत्। आत्मैव स्वाभाविकोऽ-विद्वान्कार्यकरणसातलक्षणो वर्णी, अग्रे प्राग्दारसम्बन्धात्, आत्मेत्यभिधीयते, तस्मादात्मनः पृथग्भूतं काम्यमानं जायादि-भेदरूपं नासीत्, स एवैक आसीत्- जायाद्येषणाबीजभूता विद्यावानेक एवासीत्।
அனுவாதம்- ஆத்மா ஒன்றே இதற்கு முன் இருந்தது. ஆத்மா அதாவது ஸ்வாபாவிக அவித்வான் காரிய (தேஹம்) கரண சங்காத ரூபவர்ணீ (பிரஹ்மசாரீ)யாக ஸ்திரீ சம்பந்தம் ஏற்படுவதற்கு முன் இருந்தது. இவ்வாறு இங்கு (தேஹ இந்திரிய சங்காதம்) ஆத்மா என்று கூறப்படுகிறது. ஆகையால் ஆத்மாவைத் தவிர வேறு தனியாக காமனை செய்யப்படுகிற ஸ்திரீ முதலிய பேதரூபம் இல்லாமல் இருந்தது. அது ஒன்றே இருந்தது. ஸ்த்ரீ முதலிய ஏஷணைகளுக்கு பீஜபூதமான அவித்யையுடன் கூடி ஒன்றாய் இருந்தது.
भाष्यम् - स्वाभाविक्या स्वात्मनि कर्त्रादिकारकक्रिया-फलात्मकताध्यरोपलक्षणया अविद्यावासनया वासितः सोऽकामयत कामितवान्। कथम्? जाया कर्माधिकारहेतुभूता मे मम कर्तुः स्यात्; तया विनाहमनधिकृत एव कर्मणि, अतः कर्माधि-कारसम्पत्तये भवेज्जाया; अथाहं प्रजायेय प्रजारूपेणाहमेवोत्पद्येेय।
அனுவாதம்- தன்னிடத்தில கர்த்ரு முதலிய காரக கிரியா பலனுடையவைகளான அத்யாரோப லக்ஷணையானதும் ஸ்வாபாவிகமானதுமான அவித்யா வாசனையால் சூழப்பட்டு அவன் காமனை செய்தான். எவ்வாறு? எனக்கு கர்தாவிற்கான கர்மாதிகாரத்திற்கு ஹேதுபூதமான ஸ்திரீ வேண்டும். அது இல்லாமல் கர்மத்தில் அதிகாரித்தன்மை அற்றவனாவேன். ஆகையால் கர்மாதிகாரித்துவம் அடைவதற்காக எனக்கு ஸ்திரீ வேண்டும். அதனால் பிரஜா(புத்திரன்) ஆவேன். பிரஜா ரூபாமாய் நானே உண்டாவேன். (பிறப்பேன்).
भाष्यम् - अथ वित्तं मे स्यात्कर्मसाधनं गवादिलक्षणम्। अथाहमभ्युदयनिःश्रेयससाधनं कर्म कुर्वीय; येनाहमनृणी भूत्वा देवादीनां लोकान् प्राप्नुयाम्, तत्कर्म कुर्वीय; काम्यानि च पुत्रवित्तस्वर्गादिसाधनानि। एतावान्वै काम एतावद्विषयपरिच्छिन्न इत्यर्थः।
அனுவாதம்- அவ்வாறே எனக்கு கர்மத்தின் சாதன பூதமான பசு முதலிய வடிவான செல்வத்தை அடைவேனாக. அவ்வாறே நான் அப்யுதயபலன், நிஷ்ஸ்ரேயஸ் கர்ம சாதனரூபமான கர்மத்தை செய்வேனாக. அதனால் கடனற்றவனாக (அருணன்) தேவ லோகத்தை அடைவேனாக, அவ்வாறே புத்ர தன ஸ்வர்க்கம் முதலிய சாதனங்களாகிய காமிய கர்மங்களை செய்வேனாக என்பதாகும். அதாவது இதுவரை கூறப்பட்ட விஷயங்கள் பரிச்சின்னமான காமமேயாகும்.
भाष्यम् - एतावानेव हि कामयितव्यो विषयो यदुत जायापुत्रवित्तकर्माणि साधनलक्षणैषणा; लोकाश्च त्रयो मनुष्यलोकः पितृलोको देवलोक इति फलभूताः साधनैषणा-याश्चास्याः। तदर्था हि जायापुत्रवित्तकर्मलक्षणा साधनैषणा, तस्मात्सा एकैवैषणा या लोकैषणा। सैकैव सत्येषणा साधनापेक्षेति द्विधा, अतोऽवधारयिष्यति“उभे ह्येते एषणे एव” (३। ५। १) इति।
அனுவாதம்- எந்த ஸ்திரீ, புத்திரன், வித்தம் (செல்வம்) ஆகியவைகள் உண்டோ அவைகளே காமனை செய்வதற்கான விஷயங்கள் ஆகும். இது சாதனரூப ஏஷணையாகும். மனுஷ்யலோகம், பித்ருலோகம், தேவலோகம் ஆகிய மூன்றும் சாதன ஏஷணாவின் பலஸ்வரூபமாகும். இந்த மூன்று உலகத்தின் பொருட்டே ஸ்திரீ, புத்திரன், வித்தம் இவ்வாறு காமரூபசாதன ஏஷணாவாகிறது. அதனால் அந்த ஒரு ஏஷணாவே லோகேஷணா எனப்படுகிறது. அது ஒன்றாகவே இருந்தாலும் சாதனத்தை அபேக்ஷிப்பதால் இரண்டுவிதமாய் இருக்கிறது. (சாதன ஏஷணா, சாத்திய (பல) ஏஷணா) ஆகையால் (சுருதி) இதை நிச்சயம் செய்யப்போகிறது“उभे ह्येते एषणे एव” இது இரண்ேட என்று-
भाष्यम् - फलार्थत्वात्सर्वारम्भस्यलोकैषणार्थप्राप्ता उक्तैवेति। एतावान्वा एतावानेव काम इत्यवध्रियते। भोजनेऽभिहिते तृप्तिर्न हि पृथगाभिधेया, तदर्थत्वाद्भोजनस्य। ते एते एषणे साध्यसाधनलक्षणे कामः, येन प्रयुक्तोऽविद्वानवश एव कोशकारवदात्मानं वेष्टयति कर्ममार्ग एवात्मानं प्रणिदध-हिर्मुखीभूतो न स्वं लोकं प्रतिजानाति। तथा च तैत्तिरीयके-“अग्निमुग्धो हैव धूमतान्तः स्वं लोकं न प्रतिजानाति” इति।
அனுவாதம்- எல்லா ஆரம்பமும் பலனிற்காக ஆவதால் அதன் பலனாய் அடையப்பட்ட லோகேஷணை வர்ணனை செய்யப்பட்டது. இவ்வளவு தான் காமம் என்று அது நிச்சயம் செய்யப்பட்டது. போஜனத்தைப் பற்றி நல்லவிதமாக விவரித்தபின் அதனால் (போஜனத்தால்) ஏற்பட்ட திருப்தியைப்பற்றி தனியாக விவரிக்க வேண்டியதில்லை. அந்த இந்த சாதனசாத்யலக்ஷணமான அந்த இரண்டும் காமம் ஆகும். அதனால் ப்ரேரிக்கப்பட்டு அவித்வான் தன்வசப்படாமல் கோசகார புழுவைப்போல் மறைக்கப்படுகிறான். கர்ம மார்க்கத்திலேயே தன்னை ஈடுபடுத்தி பஹிர்முகமாகி ஸ்வம் லோகத்தை(स्वं लोकं) அறிவதில்லை. இது தைத்திரீயத்திலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது-“अग्निमुग्धो हैव धूमतान्तः स्वं लोकं न प्रतिजानाति” (அக்னிமுக்தோ ஹைவ தூமதாந்த: ஸ்வம் லோகம் ந பிரதிஜானாதி).
भाष्यम् - कथं पुनरेतावत्त्वमवधार्यते कामानाम्? अनन्तत्वात्। अनन्ता हि कामाः इत्येतदाशङ्कया हेतुमाह- यस्माद् न इच्छन् च न- इच्छन्नपि, अतोऽस्मात्फलसाधनलक्षणाद् भूयोऽधिकतरं न विन्देन्न लभेत। न हि लोके फलसाधनव्यतिरिक्तं दृष्टमदृष्टं वा लब्धव्यमस्ति। लब्धव्यविषयो हि कामः, तस्य चैतद्व्यतिरेकेणाभावात् युक्तं वक्तुम्“एतावान्वै कामः”इति।
அனுவாதம்- மேலும் காமனைகள் முடிவு அற்றவைகளாய் இருப்பதால் இவ்வளவுதான் என்று எவ்வாறு நிச்சயம் செய்யமுடியும். காமங்கள் முடிவு அற்றவைகளாகும் என்று இவ்வாறு சங்கை செய்து அதற்குக் காரணத்தைக் கூறுகிறது. ஏன் எனில் விரும்பினாலும் இந்த பலம் மேலும் சாதன பூதமான காமனைகளைத் தவிர அதிகமாக ஒன்றையும் அடையமுடியாது. உலகில் பல சாதனங்களைத் தவிர திருஷ்டமோ, அதிருஷ்டமோ அடையப்படவேண்டியது. ஒன்றும் இல்லை. அடையப்பட வேண்டிய விஷயம் அல்லவா காமம். அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆதலால்“एतावान्वै कामः” (ஏதாவான்வை காம:) என்று கூறவது பொருத்தமே ஆகும்.
भाष्यम् - एतदुक्तं भवति- दृष्टार्थमदृष्टार्थं वा साध्यसाधनलक्षणम् अविद्यावत्पुरुषाधिकारविषयमेषणाद्वयं कामः, अतोऽस्माद्विदुषा व्युत्थातव्यमिति।
அனுவாதம்- இது இங்கு கூறப்படுகிறதாகிறது- திருஷ்டர்த்தம் அதிருஷ்டார்த்தம் ஆகிய சாத்ய சாதன லக்ஷணம் அவித்யா புருஷ அதிகாரி விஷயமாகிய ஏஷணாத்வயம் காமம் ஆகும். ஆகையால் வித்வான் இதிலிருந்து மேல் நிலைக்கு செல்லவேண்டும்.
भाष्यम् - यस्मादेवमविद्वानात्मा कामी पूर्वंर् कामयामास, तथा पूर्वतरोऽपि, एषा लोकस्थितिः प्रजापतेश्चैवमेष सर्ग आसीत्। सोऽबिभेदविद्यया, ततः कामप्रयुक्त एकाक्यरममाणोऽरत्युपघाताय स्त्रियमैच्छत्, तां समभवत्, ततः सर्गोऽयमासीदिति ह्युक्तम्। तस्मात्तत्सृष्टौ एतर्ह्येतस्मिन्नपि काल एकाकी सन्प्राग्दारक्रियातः कामयतेजाया मे स्यात्, अथ प्रजायेय अथ वित्तं मे स्यात्, अथ कर्म कुर्वीय- इत्युक्तार्थं वाक्यम्।
அனுவாதம்- ஏனெனில் இந்த அவித்வான் காமி ஆத்மா இவ்வாறு காமனை செய்தாரோ அவ்வாறே முன்னோர்களும் செய்தார்கள். ஏனெனில் இது லோக ஸ்திதியாகும். பிரஜாபதியின் சர்க்கமும் இவ்வாறாகவே இருந்தது. முதலில் அவித்யையினால் அவர் பயம் அடைந்தார். அதனால் காமத்தினால் பிரேரிக்கப்பட்டு தனியாய் ரமிக்கமுடியாது என்று அந்த ரமிக்கமுடியாத துன்பத்தை நீக்குவதற்காக ஸ்திரீயை விரும்பினார். அந்த ஸ்திரீயும் உண்டாயிற்று. அதிலிருந்து இந்த சிருஷ்டி உண்டாயிற்று என்று கூறப்பட்டது. ஆகையால் இப்பொழுதும் அவருடைய சிருஷ்டியில் ஸ்திரீயை சேர்த்துக்கொள்வதற்கு முன் தனியாக இருந்த புருஷனும் இவ்வாறு காமனை செய்தான்- எனக்கு மனைவி கிடைக்கட்டும். அதன்பின் மகன் பிறக்கட்டும். அவ்வாறே எனக்கு செல்வம் உண்டாகட்டும். மேலும் கர்மம் செய்யவேண்டும் என்று. இவ்வாறு கூறப்பட்ட வாக்கியமாகும்.
भाष्यम् - स एवं कामयमानः सम्पादयंश्च जायादीन्यावत्स एतेषां यथोक्तानां जायादीनामेकैकमपि न प्राप्नोति, अकृत्स्नोऽ-सम्पूर्णोऽहमित्येवं तावदात्मानं मन्यते। पारिशेष्यात्समस्ता-नेवैतान्सम्पादयति यदा, तदा तस्य कृत्स्नता।
அனுவாதம்- அந்த புருஷன் இவ்வாறு காமனை அடைந்து, மனைவி முதலியவைகளை சம்பாதித்து அந்த இந்த கூறப்பட்ட மனைவி முதலியவை ஒவ்வொன்றையும் அடையாதவரை தன்னை முழுமையற்றவனாக இருக்கிறேன் என்று நினைக்கின்றான் (கருதுகின்றான்). முடிவில் எப்பொழுது இவை எல்லாவற்றையும் சம்பாதிக்கின்றானோ அப்பொழுதுதான் அவன் பூரணத்தன்மையை அடைகின்றான்.
भाष्यम्- यदा तु न शक्नोति कृत्स्नतां सम्पादयितुं तदा अस्य कृत्स्नत्वसम्पादनायाह- तस्यो तस्याकृत्स्नत्वाभिमानिनः कृत्स्नता इयम् एवं भवति कथम्? अयं कार्यकरणसातः प्रविभज्यते; तत्र मनोऽनुवृत्ति हि इतरत्सर्वं कार्यकरणजातमिति मनः प्रधानत्वादात्मेवात्मा। यथा जायादीनां कुटुम्बपतिरात्मेव तदनुकारित्वाज्जायादि चतुष्टस्य; एवमिहापि मन आत्मा परिकल्पते कृत्स्नतायै।
அனுவாதம்- எப்பொழுது முழுமையை சம்பாதிக்க முடியவில்லையோ அப்பொழுது அந்த முழுமையை எவ்வாறு சம்பாதிப்பது என்பது கூறப்படுகிறது. அந்த முழுமைத்தன்மையில் அபிமானம் உள்ளவன் எவ்வாறு முழுமை(பூர்ணத்தன்மை)யாவான்? இந்த காரியகரண சங்காதமானது விபாகம் செய்யப்படுகிறது. அதில் மனோவிருத்திதான் மற்ற அனைத்தும் காரியகரணத்தால் உண்டாவதால் மனமே பிரதானமாய் இருப்பதால் மனம் ஆத்மா போல் ஆத்மா எவ்வாறு குடும்பத்தலைவன் மனைவி முதலியவர்களுக்கு ஆத்மாவே. ஏன் எனில் மனைவி முதலிய நான்கும், (மனைவி, புத்திரன், செல்வம், கர்ம) அதை அனுசரிப்பதால் அவ்வாறு இங்கும் மனம் ஆத்மா என்று முழுமைக்காக (பூர்ணத்வத்திற்காக) கல்பிக்கப்படுகிறது.
भाष्यम्- तथा वाग्जाया, मनोऽनुवृत्तित्वसामान्याद्वाचः। वागिति शब्दश्चोदनादिलक्षणः, मनसा श्रोत्रद्वारेण गृह्यतेऽवधार्यते प्रयुज्यते च, इति मनसो जायेव वाक्। ताभ्यां च वानसाभ्यां जायापतिस्थानीयाभ्यां प्रसूयते प्राणः कर्मार्थम्, इति प्राणः प्रजेव। तत्र प्राणचेष्टादिलक्षणं कर्म चक्षुर्दृष्टवित्तसाध्यं भवतीति चक्षुर्मानुषं वित्तम्। तद् द्विविधं वित्तं मानुषमितरच्च, अतो विशिनष्टीतरवित्तनिवृत्त्यर्थं मानुषमिति। गवादि हि मनुष्यसम्बन्धि वित्तं चक्षुर्ग्राह्यं कर्मसाधनम्; तस्मात्तत्स्थानीयम्, तेन सम्बन्धाच्चक्षुर्मानुषं वित्तम्, चक्षुषा हि यस्मात्तन्मानुषं वित्तं विन्दते गवाद्युपलभत इत्यर्थः।
அனுவாதம்- அவ்வாறு வாக் மனதை அனுசரிப்பதில் சமானமாய் இருப்பதால் வாக் ஸ்திரீ (மனைவி) ஆகும். வாக் என்ற சப்தம் விதிநிஷேத லக்ஷணமாகும். மனது ஸ்ரோத்திரத்தின் வாயிலாய் கிரஹித்து நிச்சயம் செய்து உபயோகப்படுத்துகிறது. ஆதலால் மனதிற்கு வாக் மனைவி ஆகும். அந்த வாக் மனம் இரண்டும் கணவன் மனைவி ஸ்தானத்தில் இருந்துகொண்டு கர்மத்திற்காக பிராணனைப்பெற்றது. ஆகையால் பிராணன் பிரஜா (புத்திரன்) ஆகும். பிராணனின் சேஷ்டாதி ரூபகர்மம் கண்களால் அறியப்படும். கண்களால் (சக்ஷுவால்) காணப்படும் செல்வத்தால் சாத்தியமாகிறது. ஆகையால் சக்ஷு: மானுஷ வித்தம். வித்தம் இருவகையாகும். ஒன்று மானுஷ வித்தம், அமானுஷ்யவித்தம் என்று. ஆகையால் அமானுஷ்ய வித்தத்தை தவிர்ப்பதற்காக மானுஷம் என்ற விசேஷணம் கொடுக்கப்பட்டுள்ளது. பசு முதலிய மனுஷ்ய சம்பந்தமான வித்தம் சக்ஷுவால் கிரஹிக்கப்பட்டு கர்மத்திற்கு சாதனமாகிறது. ஆகையால் அது மானுஷ்ய வித்தத்திற்கு ஒப்பானது. ஆகையால் அந்த சம்பந்தத்தால் சக்ஷு: மானுஷ வித்தமாகும். ஏன்எனில் சக்ஷுவால் (கண்களால்) மானுஷவித்தமாகிய பசு முதலியவைகளை அறியமுடிகிறது என்பது பொருள்.
भाष्यम् - किं पुनरितरद्वित्तम्? श्रोत्रं दैवम् देवविषयत्वाद्विज्ञानस्य। विज्ञानं दैवं वित्तम्, तदिह श्रोत्रमेव सम्पत्तिविषयम्। कस्मात्? श्रोत्रेण हि यस्मात्तद्दैवं वित्तं विज्ञानं श्रृणोति; अतः श्रोत्राधीनत्वाद्विज्ञानस्य श्रोत्रमेव तदिति।
அனுவாதம்- மற்றொரு (அமானுஷ) வித்தம் என்பது யாது? விக்ஞானம் தேவ விஷயமாய் இருப்பதால் ஸ்ரோத்திரம் தேவ வித்தமாகும். விக்ஞானம் தைவ வித்தம். இங்கு ஸ்ரோத்திரமே ஸம்பத்தி விஷயம். எதனால்? ஸ்ரோத்திரத்தால் விக்ஞானம் கேட்கப்படுகிறதால் அது தைவம் வித்தம். ஆகையால் விக்ஞானம் ஸ்ரோத்திரத்தை அதீனமாக உடையதால் ஸ்ரோத்திரமே அந்த (தைவ வித்தம்) ஆகும்.
भाष्यम् - किं पुनरेतैरात्मादिवित्तान्तैरिह निवर्त्यं कर्म? इत्युच्यते- आत्मैव- आत्मेति शरीरमुच्यते। कथं पुनरात्मा कर्मस्थानीयः? अस्य कर्महेतुत्वात्। कथं कर्महेतुत्वम्? आत्मना हि शरीरेण यतः कर्म करोति। तस्याकृत्स्नत्वाभिमानिन एवं कृत्स्नता सम्पन्ना यथा बाह्या जायादिलक्षणा एवम्। तस्मात्स एष पाङ्क्तः पञ्चभिर्निर्वृत्तः पाङ्क्तो यज्ञो दर्शनमात्रनिर्वृत्तोऽकर्मिणोऽपि।
அனுவாதம்- ஆனால் ஆத்மா முதல் வித்தம் வரையிலும் நிர்வஹிக்கப்படும் கர்மா யாருடையது? என்பது கூறப்படுகிறது-- ஆத்மாவே. ஆத்மா என்றால் சரீரம் எனப்படுகிறது. மறுபடியும் எவ்வாறு கர்மத்திற்கு ஸ்தானீயமாகும் அதாவது இருப்பிடம் ஆகும்? அதனுடைய கர்ம ஹேதுவினால் ஆகும். எவ்வாறு அது கர்மத்திற்கு ஹேதுவாகிறது? ஆத்மாவினாலேயே, அதாவது சரீரத்தால் கர்மம் செய்யப்படுவதால் ஆகும். எவ்வாறு பாஹ்ய ஸ்திரீ முதலிய லக்ஷணங்கள் பூர்ணமற்றதாய் இருக்கின்றதோ அவ்வாறு அந்த சரீரத்தை பூர்ணத்தன்மை அற்றது என்று அபிமானம் செய்பவன் (என்று அறிபவன்) பூர்ணத்தன்மையை அடைகின்றான். ஆகையால் அந்த இது (ஆத்ம தர்சனம்) பாங்க்தமாகும். பாங்க்தம் என்பது ஐந்தின் வாயிலாய் அடையப்படும் யக்ஞமாகும். அதாவது கர்மம் செய்யாதவனுக்கும் தர்சன மாத்திரத்தாலேயே அடையப்படுகிறது.
भाष्यम्- कथं पुनरस्य पञ्चत्वसम्पत्तिमात्रेण यज्ञत्वम्? उच्यते- यस्मााह्योऽपि यज्ञः पशुपुरुषसाध्यः, स च पशुः पुरुषश्च पाङ् एव यथोक्तमनआदिपञ्चत्वयोगात्। तदाह- पाः पशुर्गवादिः, पाः पुरुषः-पशुत्वेऽप्यधिकृतत्वेनास्य विशेषः पुरुषस्येति पृथक्पुरुषग्रहणम्। किं बहुना? पामिदं सर्वं कर्मसाधनं फलं च, यदिदं किञ्च यत्कििञ्चदिदं सर्वम्। एवं पाङ्ं यज्ञमात्मानं यः सम्पादयति स तदिदं सर्वं जगदात्मत्वेनाप्नोति य एवं वेद।।
அனுவாதம்- ஆனால் பஞ்சத்துவத்தை சம்பாதித்தல் மாத்திரத்தாலேயே எவ்வாறு யக்ஞத்துவம் சித்திக்கிறது? என்பதற்குக் கூறுகிறார் எதனால் எனில் யக்ஞம் பாஹ்யமாய் இருந்தாலும் பசு புருஷர்களால் சாத்யமாகிறது. மேலும் அந்த பசுவும் புருஷனும் முன்பு கூறப்பட்ட மனம் முதலிய ஐந்தின் சம்பந்தத்தால் பாங்க்தமாகும். இவ்வாறு சுருதி கூறுகிறது.- பசு அதாவது கோ முதலியவை பாங்க்தம். புருஷன் பாங்க்தம். புருஷனும் பசுவாய் இருந்தாலும் அதிகாரி ஆவதால் விே†ஷத்தன்மை இருப்பதால் தனியாக கிரஹிக்கப்பட்டுள்ளது. அதிகம் என்ன இருக்கிறது? இந்த பாங்க்தம் எல்லாம் கர்ம சாதனமும் பலமாயும் இருக்கின்றன. (அவ்வாறே எதெல்லாம் உண்டோ அவையாவும் பாங்க்தமே ஆகும். எவன் ஒருவன் இவ்வாறு தன்னை பாங்க்தயக்ஞ ரூபமாய் சம்பாதிக்கின்றானோ அல்லது இவ்வாறு அறிகின்றானோ அவன் இந்த ஜகத் முழுவதையும் ஆத்ம ஸ்வரூபமாய் அடைகின்றான்.
भाष्यम् - यत्सप्तान्नानि मेधया। अविद्या प्रस्तुता, तत्राविद्वानन्यां देवतामुपास्ते“अन्योऽसावन्योऽहमस्मि” इति। स वर्णाश्रमाभिमानः कर्मकर्तव्यतया नियतो जुहोत्यादिकर्मभिः कामप्रयुक्तो देवादीनामुपकुर्वन्सर्वेषां भूतानां लोक इत्युक्तम्। यथा च स्वकर्मभिरेकैकेन सर्वैर्भूतैरसौ लोको भोज्यत्वेन सृष्टः, एवमसावपि जहोत्यादिपाकर्मभिः सर्वाणि भूतानि सर्वं च जगदात्मभोज्यत्वेनासृजत्।
அனுவாதம்- யத்ஸப்தான்னானி மேதயா என்று அவித்யா பிரகரணத்தின் இந்த பஞ்சம பிராஹ்மணம் ஆரம்பிக்கப்படுகிறது. இது அவித்யையின் பிரகரணம். அதில் அவித்வான் அந்ய தேவதைகளை உபாசிக்கின்றான்.“अन्योऽसावन्योऽहमस्मि” (அன்யோऽசாவன்யோऽஹமஸ்மி) என்று. அந்த வர்ணாஸ்ரம அபிமானி கர்ம கர்த்தவ்யம் என்று அபிமானத்தால் ஹோமம், யாகம் முதலிய கர்மங்களால் காமனை»டன் கர்மத்தில் ஈடுபட்டு தேவாதிகளுக்கு உபகாரம் செய்வதால் எல்லா பூதங்களுக்கும் லோகம் (போக்யம்) என்று கூறப்பட்டது. எவ்வாறு ஸ்வகர்மங்களால் ஒவ்வொன்றாய் எல்லா பூதங்களாலும் இந்த லோகமானது போஜ்ய ரூபமாய் சிருஷ்டிக்கப்பட்டதோ. அவ்வாறே இந்த கர்மாதிகாரியும் பாங்த முதலிய கர்மங்களால் யாகம், ஹோமம் முதலியவைகள் செய்து எல்லா பூதங்களுக்கும் இந்த ஜகத் முழுவதும் போக்ய ரூபமாய் சிருஷ்டிக்கபட்டது.
अव - एवमेकैकः स्वकर्मविद्यानुरूप्येण सर्वस्य जगतो भोक्ता भोज्यं च, सर्वस्य सर्वः कर्ता कार्यं चेत्यर्थः। एतदेव च विद्याप्रकरणे मधुविद्यायां वक्ष्यामः-“सर्वं सर्वस्य कार्यं मधु”इत्यात्मैकत्वविज्ञानार्थम्।
அனுவாதம்- அ.கை- இவ்வாறு ஒவ்வொரு ஜீவனுக்கும். ஸ்வகர்ம, வித்யா (ஞானம்) இவைகளை அனுசரித்து ஜகத் முழுவதும் போக்தா, போக்யம் ஆகிறது. அதாவது எல்லாவற்றிற்கும் கர்த்தாவாயும் காரியமாயும் இருக்கின்றது என்பது பொருள். இதையே வித்யாபிரகரணத்தில் மது வித்யையில் கூறப்போகிறோம்- “सर्वं सर्वस्य कार्यं मधु” (சர்வம் சர்வஸ்ய கார்யம் மது) என்று ஆத்ம ஏகத்துவ விக்ஞானத்திற்காக (கூறப்போகிறோம்)
भाष्यम् - यदसौ जुहोतीत्यादिना पान काम्येन कर्मणा आत्मभोज्यत्वेन जगदसृजद् विज्ञानेन च, तज्जगत्सर्वं सप्तधा प्रविभज्यमानं कार्यकारणत्वेन सप्तान्नान्युच्यन्ते, भोज्यत्वात्, तेनासौ पिता तेषामन्नानाम्। एतेषामन्नानां सविनियोगानां सूत्रभूताः सपतः प्रकाशकत्वादिमे मन्त्राः।
அனுவாதம்- அந்த கர்த்தா ஜுஹோதி முதலிய பாங்க்தத்தாலும், காம்ய கர்மத்தாலும், விக்ஞானத்தாலும் தன்னுடைய போஜ்ய ரூபத்தால் ஜகத் சிருஷ்டிக்கப்பட்டது, அந்த ஜகத் முழுவதும் காரிய காரணரூபமாய் ஏழு விதமாய் பிரிக்கப்பட்டு போஜ்யம் (சாப்பிடுவதற்கு உரியதாய்) ஆனதின் காரணமானதால் ஸப்தான்னம் எனப்படுகிறது. ஆகையால் அன்னங்களின் பிதாவாகிறது. இந்த அன்னங்களையும் அதன் விநியோகங்களையும் சுருக்கமாய் தெரிவிப்பதால் இந்த மந்திரம் இவைகளின் சூத்திரபூதமாகும்.
यत्सप्तन्नानि मेधया तपसाजनयत्पिता। एकमस्य साधारणं द्वे देवानभाजयत्। त्रीण्यात्मनेऽकुरुत पशुभ्य एकं प्रायच्छत्। तस्मिन्सर्वं प्रतिष्द्भितं यच्च प्राणिति यच्च न। कस्मात्तानि न क्षीयन्तेऽद्यमानानि सर्वदा। यो वैतामक्षितिं वेद सोऽन्नमत्ति प्रतीकेन। स देवानपि गच्छति स ऊर्जमुपजीवतीतिोकाः।। १।।
மந்த்ரார்த்தம்- பிதா (பிரஜாபதி) ஆனவர் விக்ஞானத்தினாலும், கர்மத்தினாலும் ஏழு அன்னங்களை (ஸப்தான்னங்களை) சிருஷ்டித்தார். இதில் ஒரு அன்னம் சாதாரணம், (அதாவது எல்லா பிராணிகளுக்கும் போக்யமானது) இரண்டு அன்னம் தேவதைகளுக்கானதாகும். மூன்று தனக்காகவும், ஒன்று பசுக்களுக்காக கொடுக்கப்பட்டது. அந்த (பசுக்களுக்காக கொடுக்கப்பட்ட) அன்னத்தில் எவன் பிராணனக்கிரியை செய்தாலும், செய்யாவிட்டாலும் அதில் பிரதிஷ்டை ஆகிறது. அந்த அன்னம் எப்பொழுதும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாலும் ஏன் க்ஷீணம் ஆவதில்லை? எவர் இதை (அன்னத்தை) அக்ஷய (அழிவற்ற) பாவமாய் அறிகிறார்களோ அவர் முக்கியரூப வடிவமாக அன்னத்தை பக்ஷணம் செய்கிறார். அவர் தேவர்களை அடைகிறார்கள். மேலும் அம்ருதத்தின் உபஜீவீ ஆகிறார். இந்த ஸ்லோகம் (மந்திரம்) இந்த விஷயத்தைக் கொண்டதாகும்.
भाष्यम्- यत्सप्तान्नानि, यत् अजनयदिति क्रियाविशेषणम्; मेधया प्रज्ञया विज्ञानेन तपसा च कर्मणा; ज्ञानकर्मणी एव हि मेधातपः शब्दवाच्ये, तयोः प्रकृतत्वात्; नेतरे मेधातपसी, अप्रकरणात्; पां हि कर्म जायादिसाधनम्;“य एवं वेद” इति चानन्तरमेव ज्ञानं प्रकृतम्; तस्मान्न प्रसिद्धयोर्मेधातपसोराशङ्का कार्या; अतो यानि सप्तान्नानि ज्ञानकर्मभ्यां जनितवान्पिता तानि प्रकाशयिष्याम इति वाक्यशेषः।।
அனுவாதம்-“यत् सप्तान्नानि” (யத் சப்த்தான்னானி) என்பதில் உள்ள “யத்”(यत्) என்ற சப்தம் எதை உண்டாக்கியது என்று இவ்வாறு(अजनयत्) உண்டாக்கியது என்ற கிரியா சம்பந்தப்பட்டுள்ளதால்) கிரியா விசேஷணமாகும். மேதையினால் பிரக்ஞையினால் அதாவது விக்ஞானத்தால் அவ்வாறே தபஸினாலும் கர்மத்தினாலும் ஆகும். மேதா, தபஸ் ஆகிய சப்தங்களின் வாச்சியம் ஞானமும் கர்மமும் ஆகும். ஏனெனில் அவைகளே இங்கே விளக்கப்பட்டுள்ளது. இதைவிட வேறான மேதை, (தாரணா சக்தி) கிருச்சிர சாந்திராயணம் முதலிய தபஸ் இவைகளின் வாச்சியம் அல்ல. ஏனெனில் அவைகளைப்பற்றி இங்கு கூறப்படவில்லை. இங்கு ஸ்திரீ முதலியவை எதற்கு சாதனமோ அந்த பாங்க்த கர்மத்தைப்பற்றியும், அதன்பின்“य एवं वेद” (ய ஏவம் வேத) இந்த வாக்கியத்தால் ஞானத்தைப்பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த சப்தங்களால் அறியப்படும் மேதா, தபஸ் ஆகிய இவைகளில் சங்கை செய்ய வேண்டியதில்லை. ஆகையால் பிதா ஆனவர் ஞானம், கர்மம் இவைகளின் மூலமாய் இந்த சப்த(ஏழு) அன்னங்களை உத்பன்னம் செய்தார். அவைகளை நாம் விளக்கப்போகிறோம்.“तानि प्रकाशयिष्यामः” (தானி பிரகா†யிஷ்யாம:) என்ற இந்த வாக்கியத்தால் ஸ்பஷ்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
अव - तत्र मन्त्राणामर्थस्तिरोहितत्वात्प्रायेण दुर्विज्ञेयो भवतीति तदर्थव्याख्यानाय ब्राह्मणं प्रवर्तते-
அனுவாதம்- அ.கை- அங்கு (மந்திர ப்ராஹ்மண ஆத்மகமான வேதத்தில்) மந்திரங்களின் அர்த்தம் மிகவும் கூடமாய் (ரஹஸ்யமாய்) இருப்பதால் அதை புரிந்து கொள்ளுதல் மிகவும் கடினமானதால் அதற்காக அதை வியாக்கியானம் செய்வதற்காக இந்த ப்ராஹ்மணம் ஆரம்பிக்கப்படுகிறது.
यत्सप्तान्नानि मेधया तपसाजनयत्पितेति मेधया हि तपसाजनयत्पिता। एकमस्य साधारणमितीदमेवास्य तत्साधारणमन्नं यदिदमद्यते। स य एतदुपास्ते न स पाप्मनो व्यावर्तते मिश्र ँ् ह्येतत्। द्वे देवानभाजयदिति हुतं च प्रहुतं च तस्माद्देवेभ्यो जुुति च प्र च जुत्यथो आहुर्दर्शपूर्णमासाविति। तस्मान्नेष्टियाजुकः स्यात्। पशुभ्य एकं प्रायच्छदिति तत्पयः। पयो ह्येवाग्रे मनुष्याश्च पशवश्चोपजीवन्ति तस्मात्कुमारं जातं घृतं वैवाग्रे प्रतिलेहयन्ति स्तनं वानुधापयन्त्यथ वत्सं जातमाहुरतृणाद इति। तस्मिन्सर्वं प्रतिष्द्भितं यच्च प्राणिति यच्च नेति पयसि हीद्ँ सर्वं प्रतिष्द्भितं यच्च प्राणिति यच्च न। तद्यदिदमाहुः संवत्सरं पयसा जुदप पुनर्मृत्युं जयतीति न तथा विद्याद्यदहरेव जुहोति तदहः पुनर्मृत्युमपजयत्येवं विद्वान्सर्व ्ँहि देवेभ्योऽन्नाद्यं प्रयच्छति। कस्मात्तानि न क्षीयन्तेऽद्यमानानि सर्वदेति पुरुषो वा अक्षितिः स हीदमन्नं पुनः पुनर्जनयते। यो वैतामक्षितिं वेदेति पुरुषो वा अक्षितिः स हीदमन्नं धिया धिया जनयते कर्मभिर्यद्धैतन्न कुर्यात्क्षीयेत ह सोऽन्नमत्ति प्रतीकेनेति मुखं प्रतीकं मुखेनेत्येतत्। स देवानपि गच्छति स ऊर्जमुपजीवतीति प्रश्ँँसा।। २।।
மந்த்ரார்த்தம்-“यत्सप्तान्नानि मेधया तपसा-जनयत्पिता” (யத்சப்தான்னானி மேதயா தபசாஜனயத்பிதா) என்பதின் அர்த்தம் பிரசித்தமானது. அது என்னவெனில் பிதா ஆனவர் ஞானத்தாலும் கர்மத்தினாலும் அன்னங்களை உற்பத்தி செய்தார் என்பதாகும். அவருடைய ஒரு அன்னம் சாதாரணமானது. அதாவது எது சாப்பிடப்படுகிறதோ அது சாதாரண அன்னம். இதை உபாசனை செய்பவன் பாபத்திலிருந்து விலகமாட்டான். ஏனெனில் அன்னம் கலப்படமாய் இருக்கிறது. (எல்லா பிராணிகளுடையதும் கலந்து இருக்கின்றது.) இரண்டு அன்னம் அவர் தேவதைகளுக்கு அளித்தார். அவை ஹுதம், பிரஹுதமாகும், ஆகையால் க்ருஹஸ்தன் தேவர்களுக்காக ஹவனமும், பலிஹரணமும் செய்கிறான். வேறு சிலர் கூறுகிறார்கள் எந்த இந்த இரண்டு அன்னமானது தர்ச, பூர்ணமாசமாக இருக்கிறதோ, அதனால் காமிய இஷ்டியான யஜனம் முதலியவைகளில் பிரவிர்த்திக்கக்கூடாது என்று. ஒரு அன்னம் பசுவிற்குக் கொடுக்கப்பட்டது. அது பால் ஆகும். மனிதர்களும், பசுக்களும் முதலில் பாலை ஆஸ்ரயித்து ஜீவனத்தை தரிக்கின்றார்கள். ஆகையால் பிறந்த குழந்தைக்கு முதலில் நெய் அளித்து ஸ்தனபானம் செய்விக்கின்றார்கள். அவ்வாறே பிறந்த கன்றுக்குட்டியும் புல்லை சாப்பிடாது என்று கூறுகிறார்கள். பிராணன கிரியை செய்தாலும் செய்யாவிடினும் அவை எல்லாம் பாலில் பிரிதிஷ்டையாகி இருக்கின்றன. ஆகையால் இவ்வாறு கூறுகிறார்கள்- ஒரு வருடம் பாலினால் ஹவனம் செய்பவன் அகால மரணத்தை (அபமிருத்யுவை) ஜயிக்கின்றான் என்று. இவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் ஒரு நாள் ஹவனம் செய்தாலும் அன்றே அபமிருத்யுவை ஜெயிக்கின்றான். இவ்வாறு அறிந்தவன் (உபாசனை செய்தவன்) தேவதைகளுக்கு சம்பூர்ண அன்னாத்யத்தை (உண்பதற்காக) கொடுக்கின்றான். (தானம் செய்கின்றான்). ஆனால் எப்பொழுதும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாலும் அன்னம் ஏன் குறைவதில்லை? இதன் காரணம் என்னவெனில் புருஷன் அவிநாசி (அழிவு அற்றவன்). அவன் மறுபடியும், மறுபடியும் அன்னத்தை உண்டுபண்ணி கொடுக்கின்றான். எவன் இந்த அக்ஷய (அழிவு அற்ற) பாவத்தை அறிகின்றானோ அதாவது நாசமற்றவனாய் இருக்கிறான். அதை இந்த அன்னத்தை ஞானத்தாலும், கர்மாவினாலும் உத்பன்னம் செய்து அளிக்கின்றான். அவன் உத்பன்னம் செய்யவில்லை எனில் அது க்ஷீணமாகிவிடும். அது ப்ரதீகமூலமாய் அதாவது முக்கியமான பிரதீகம் ஆகும். அதன் மூலமாய் அன்னத்தை சாப்பிடுகின்றான். அது தேவதைகளுக்குக் கிடைக்கிறது. அம்ருதத்தின் உபஜீவி ஆகின்றான் என புகழப்படுகிறது (பலன்). அவன் மறுபடியும், மறுபடியும் அன்னத்தை உண்டுபண்ணி கொடுக்கின்றான். எவன் இந்த அக்ஷய (அழிவு அற்ற) பாவத்தை அறிகின்றானோ அதாவது நாசமற்றவனாய் இருக்கிறான். அதை இந்த அன்னத்தை ஞானத்தாலும், கர்மாவினாலும் உத்பன்னம் செய்து அளிக்கின்றான். அவன் உத்பன்னம் செய்யவில்லை எனில் அது க்ஷீணமாகிவிடும். அது ப்ரதீகமூலமாய் அதாவது முக்கியமான பிரதீகம் ஆகும். அதன் மூலமாய் அன்னத்தை சாப்பிடுகின்றான். அது தேவதைகளுக்குக் கிடைக்கிறது. அம்ருதத்தின் உபஜீவி ஆகின்றான் என புகழப்படுகிறது (பலன்).
भाष्यम् - तत्र“यत्सप्तान्नानि मेधया तपसाजनयत्पिता”इत्यस्य कोऽर्थ उच्यते? इति हि शब्देनैव व्याचष्टे प्रसिद्धार्थावद्योतकेन। प्रसिद्धो ह्यस्य मन्त्रस्यार्थ इत्यर्थः। यदजनयदिति चानुवादस्वरूपेण मन्त्रेण प्रसिद्धार्थतैव प्रकाशिता। अतो ब्राह्मणमविशङ्कयैवाह-“मेधया हि तपसाजनयत्पिता” इति?
அனுவாதம்- மேலே கூறப்பட்ட“यत्सप्तान्नानि मेधया तपसाजनयत्पिता” (யத்ஸப்தான்னானி மேதயா தபசாஜனயத் பிதா) இந்த முதல் மந்திரத்தின் அர்த்தம் என்ன? என்பது“हि”(ஹி) சப்தத்தால் பிரசித்த அர்த்தத்தை தெரியப்படுவதற்காக வியாக்கியானம் செய்யப்படுகிறது. இதன் தாத்பரியம் என்னவெனில் இந்த மந்திரத்தின் பொருளானது பிரசித்தமானது.“यदजनयत्” (யதஜனயத்) என்று அனுவாத ஸ்வரூபமாய் இந்த மந்திரத்தால் பிரசித்தமான அர்த்தமே தெளிவாக்கப்பட்டது. ஆகையால் சிறிதும் சந்தேஹமற்ற பாவத்தால் கூறுகிறது.“मेधया हि तपसाजनयत्मिता” (மேதயா ஹி தபசாஜனயத்பிதா) என்று.
भाष्यम् - ननु कथं प्रसिद्धातास्यार्थस्य? इत्युच्यते- जायादिकर्मान्तानां लोकफलसाधनानां पितृत्वं तावत् प्रत्यक्षमेव, अभिहितं च“जाया मे स्यात्” इत्यादिना। तत्र च दैवं वित्तं विद्या कर्म पुत्रश्च फलभूतानां लोकानां साधनं स्रष्टृत्वं प्रतीत्यभिहितम्, वक्ष्यमाणं च प्रसिद्धमेव, तस्माद्युक्तं वक्तुं मेधयेत्यादि।
அனுவாதம்- இந்த அர்த்தத்திற்கு எவ்வாறு பிரசித்தத்துவம்? அதற்குக் கூறப்படுகிறது. ஸ்திரீ முதற்கொண்டு கர்மம் முடிய உள்ள லோகம், பலம், சாதனம் இவைகளுக்கெல்லாம் பித்ரு தன்மை பிரத்யக்ஷமாய் இருக்கிறது.“जाया मे स्यात्” முதலிய வாக்கியங்களால் கூறப்பட்டுள்ளது. அதில் தைவம், வித்தம், வித்யா, கர்மம், புத்திரன் ஆகிய தன்னுடைய பலனுடன் கூடிய லோகங்களின் ஸ்ருஷ்டிக்கும் தன்மைக்கு சாதனம் என்று கூறப்பட்டது. இனிக் கூறப்போவதும் பிரசித்தமே ஆகும். ஆகையால்“मेधया” (மேதயா) என்பது முதலியவை கூறப்பட்டது பொருத்தமே.
भाष्यम् - एषणा हि फलविषया प्रसिद्धैव च लोके। एषणा च जायादीत्युक्तम्“एतावान्वै कामः” इत्यनेन। ब्रह्मविद्याविषये च सर्वैकत्वात्कामानुपपत्तेः।
அனுவாதம்- ஏஷணை அல்லவா பல விஷயத்தில் ஈடுபடச்செய்கிறது. அதைன உலகில் காண்கிறோம்“एतावान्वैकामः” (ஏதாவான்வைகாம:) என்ற வாக்கியத்தால் ஸ்திரீ முதலியவையே ஏஷணா(एषणा) என்று கூறப்பட்டுள்ளது. எல்லாம் ஏகமாய் இருப்பதால் ப்ரஹ்மவித்யா விஷயத்தில் காமம் உண்டாவதில்லை.
भाष्यम् - एतेनाशास्त्रीयप्रज्ञातपोभ्यां स्वाभाविकाभ्यां जगत्स्रष्टृत्वमुक्तमेव भवति, स्थावरान्तस्य चानिष्टफलस्य कर्मविज्ञाननिमित्तत्वात्। विवक्षितस्तु शास्त्रीय एव साध्यसाधनभावो ब्रह्मविद्याविधित्सया तद्वैराग्यस्य विवक्षितत्वात्। सर्वो ह्ययं व्यक्ताव्यक्तलक्षणः संसारोऽशुद्धोऽनित्यः साध्यसाधनरूपो दुःखोऽविद्याविषय इत्येतस्माद्विरक्तस्य ब्रह्मविद्या आरब्धव्येति।
அனுவாதம்- முன்பு கூறப்பட்டதைப்போல் ஸ்தாவரம் வரையிலும் உள்ளவைகள் கர்ம, விக்ஞான நிமித்தமானதால் சாஸ்திரத்திற்கு விரோதமான பிரக்ஞா தபஸ் இவைகளின் ஸ்வபாவத்தால் ஜகத் சிருஷ்டிக்கப்பட்டது. என்று முன்பே கூறப்பட்டது. ப்ரஹ்மவித்யையின் விதானத்தை தெரியப்படுத்துவதின் இச்சையால் அந்த வைராக்கியத்தை பற்றி விளக்கி இருப்பதால் அது சாஸ்திரத்திற்கு சம்மதமான சாத்தியசாதன பாவரூபமே விளக்கப்பட்டதாகிறது. இந்த அனைத்து வயக்த அவ்யக்த லக்ஷணமான சம்சாரம் அசுத்தமானது, அநித்யமானது, சாத்திய சாதன ரூபமானது. துக்கமானது அவித்யா விஷயம் என்று இதிலிருந்து விரக்தி அடைந்தவன் ப்ரஹ்ம வித்யையை ஆரம்பிக்க வேண்டும் என்பதாகும். । साधारण अन्न विवेचनम्।
भाष्यम् - तत्रान्नानां विभागेन विनियोग उच्यते-“एकमस्य साधारणम्” इति मन्त्रपदम्, तस्य व्याख्यानम्“इदमेवास्य तत्साधारणमन्नम्” इत्युक्तम्। अस्य भोक्तृसमुदायस्य, किं तत्? यदिदमद्यते भुज्यते सर्वैः प्राणिभिरहन्यहनि, तत्साधारणं सर्वभोक्त्रर्थमकल्पयत्पिता सृष्ट्वान्नम्।
அனுவாதம்- இப்பொழுது அன்னங்களின் விபாகங்களால் எவ்வாறு பகிர்ந்து அளிப்பது என்பது கூறுகிறது.“एकमस्य साधारणम्” (ஏகமஸ்ய சாதரணம்) என்ற மந்திரபதம், அதனுடைய வியாக்கியானம்“इदमेवास्य तत्साधरणमन्नम्” (இதமேவாஸ்ய தத்சாதரணமன்னம்) என்று உள்ளது. அந்த போக்த்ரு சமுதாயத்தின் அன்னம் என்பது யாது? எல்லா பிராணிகளாலும் தினமும் எது சாப்பிடப்படுகிறதோ அது சாதரண அன்னமாகும். அது பிதாவால் கல்பிக்கப்பட்டதாகும். அதாவது சிருஷ்டிக்கப்பட்டதாகும்.
भाष्यम् - स य एतत्साधारणं सर्वप्राणभृत्स्थितिकरं भुज्यमानमन्नमुपास्ते तत्परो भवतीत्यर्थः- उपासनं हि नाम तात्पर्यं दृष्टं लोके“गुरुमुपास्ते”“राजानमुपास्ते” इत्यादौ- तस्माच्छरीरस्थित्यर्थान्नोपभोगप्रधानो नादृष्टार्थकर्मप्रधान इत्यर्थः, स एवं भूतो न पाप्मनोऽधर्मद्वावर्तते न विमुच्यत इत्येतत्। तथा च मन्त्रवर्णः-“मोघमन्नं विन्दते” इत्यादि। स्मृतिरपि“नात्मार्थं पाचयेदन्नम्”“अप्रदायैभ्यो यो भुङ्क्तेे स्तेन एव सः” (गीता ३। १२)“अन्नादे भ्रूणहा मार्ष्टि” (मनु० ८। ३१७) इत्यादिः।
அனுவாதம்- யாரொருவன் எல்லா பிராணிகளையும் தாங்கி, போஷணை, ஸ்திதி இவைகளை செய்யக்கூடிய சாப்பிடப்படும் சாதரண அன்னம் அதை உபாசிப்பவன் அந்த பரமாகவே ஆகின்றான் என்பது பொருள். உபாசனம் என்பதின் தாத்பர்யம்“गुरुमुपास्ते” (குருமுபாச்தே)“राजानमुपास्ते” (ராஜானாபாச்தே) முதலிய வாக்கியங்கள் உலகில் காணப்படுகிறது. ஆகையால் சரீர ஸ்திதிக்காகவே அன்னம் உபயோகிக்கபடுவது பிரதானமாகும். அதாவது அதிருஷ்டார்த்த கர்மம் பிரதானம் அல்ல என்பது பொருள். இவ்வாறு உள்ள புருஷன் பாபத்திலிருந்து அதாவது அதர்மத்திலிருந்து விடுபட முடியாது. அவ்வாறே“मोघमन्नं विन्दते” (மோகன்னம் விந்ததே) முதலிய மந்திர வர்ணங்களாலும் ஸ்மிருதியும் கூறுகிறது.“नात्मार्थं पाचयेदन्नम्” (நாத்மார்த்தம் பாசயேதன்னம்),“अप्रदायैभ्यो यो भुङ्क्तेे स्तेन एव सः” (அப்பிரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேன ஏவ ச:)“अन्नादे भ्रूणहा मार्ष्टि” (அன்னாதே ப்ரூணாஹா மார்ஷ்டி) முதலியவைகளும் கூறுகின்றன.
भाष्यम् - कस्मात्पुनः पाप्मनो न व्यावर्तते? मिश्रं ह्येतत्सर्वेषां हि स्वं तदप्रविभक्तं यत्प्राणिभिर्भुज्यते। सर्वभोज्यत्वादेव यो मुखे प्रक्षिप्यमाणोऽपि ग्रासः परस्य पीडाकरो दृश्यते,“ममेदं स्यात्” इति हि सर्वेषां तत्राशा प्रतिबद्धा। तस्मान्न परमपीडयित्वा ग्रसितुमपि शक्यते।“दुष्कृतं हि मनुष्याणाम्” इत्यादिस्मरणाच्च।
அனுவாதம்- எதனால் பாபங்களிலிருந்து விடுபடுவதில்லை? எனில் எல்லா பிராணிகளும் இந்த“मिश्रं” (மிஸ்ரம்- அன்னம்) அன்னத்தை பிரிக்காமல் சாப்பிடுவது எல்லோர்க்கும்“तत् हि स्वम्” (தன்னுடைய தனமாகிறது) ஆகிறது. எல்லோரும் சாப்பிட வேண்டியதால் தன் வாயில் அந்த அன்னத்தை வைப்பது மற்றவரை பீடிக்கச் (கஷ்டம்) செய்வது போல் காணப்படுகிறது. ஏனெனில் எல்லோருக்கும்“ममेद स्यात्” (மமேதம் ஸ்யாத்) என்று (எனக்காக ஆகட்டும்) கூறுவதால் அங்கு ஆசையினால் பந்தப்படுகிறான். ஆகையால் மற்றவரை கஷ்டப்படுத்தாமல் சாப்பிடுவது என்பது முடியாத காரியமாகிறது.“दुष्कृतं हि मनुष्याणाम्” (துஷ்கிருதம் ஹி மனுஷ்யானம்) என்பது முதலிய சுருதிகளால் அறிகின்றோம்.
भाष्यम् - गृहिणा वैश्वदेवाख्यमन्नं यदहन्यहनि निरूप्यत इति केचित्, तन्न, सर्वभोक्तृसाधारणत्वं वैश्वदेवाख्यस्यान्नस्य न सर्वप्राणभृद्भज्यमानान्नवत्प्रत्यक्षम्, नापि“यदिदमद्यते” इति तद्विषयं वचनमनुकूलम्। सर्वप्राणभृद्भुज्यमानान्नान्तःपातित्वाच्च वैश्वदेवाख्यस्य युक्तं श्वचाण्डालाद्याद्यास्यान्नस्य ग्रहणम्, वैश्वदेवव्यतिरेकेणापि श्वचाण्डालाद्याद्यान्नदर्शनात्, तत्र युक्तम्,“यदिदमद्यते” इति वचनम्। यदि हि तन्न गृह्येत, साधारणशब्देन पित्रासृष्टत्वाविनियुक्तत्वे तस्य प्रसज्येयाताम्। इष्यते हि तत्सृष्टत्वं तद्विनियुक्तत्वं च सर्वस्यान्नजातस्य।
அனுவாதம்- கிரஹஸ்தன் மூலமாய் தினசரி வைச்வதேவம் என்னும் அன்னத்தை செய்கிறார் என்று சிலர் கூறுகின்றனர். அது சரியல்ல. எல்லா போக்தாவின் சாதரணமான வைச்வதேவம் எனப்படும் அன்னம் பிராணனைத் தாங்குகின்ற எல்லோராலும் சாப்பிடும் அன்னம் போல் பிரத்யக்ஷம் அன்று.“यदिदमद्यते” (யதிதமத்யதே) என்ற அந்த விஷய வசனத்தினாலும் அது அனுகூலம் அல்ல. பிராணனைத் தாங்குகின்ற எல்லோராலும் சாப்பிடப்படும் அன்னமாவதால் நாய், சண்டாளன் முதலியன சாப்பிடப்படும் வைச்வானரன் என்னும் அன்னத்தைக் கிரஹிப்பது பொருத்தமானதாகும்.“यदिदमद्यते” (யதிதமத்யதே) என்ற வசனம் இங்கு பொருந்தும். இங்கு சாதரண சப்தத்தால் அந்த அன்னத்தைக் கிரஹிக்கவில்லையெனில் பிதாவினால் சிருஷ்ட்டிக்கப் படவில்லை என்றும், அதற்கு வினியோகமும் செய்யப்படவில்லை என்றும் ஆகிவிடும். எல்லா அன்னத்திலிருந்து உண்டானவைகளின் ஸ்ருஷ்டித்துவமும், விநியுக்தத்துவமும் சித்தாந்தத்திற்கு இஷ்டமேயாகும்.
भाष्यम् - न च वैश्वदेवाख्यं शास्त्रोक्तं कर्म कुर्वतः पाप्मनोऽविनिवृत्तिर्युक्ता, न च तस्य प्रतिषेधोऽस्ति, न च मत्स्यबन्धनादिकर्मवत्स्वभावजुगुप्सितमेतत्, शिष्टनिर्वर्त्यत्वात्, अकरणे च प्रत्यवायश्रवणात्। इतरत्र च प्रत्यवायोपपत्तेः“अहमन्नमन्नमदन्तमा३ि” (तै०उ० ३। १०। ६) इति मन्त्रवर्णात्।
அனுவாதம்- சாஸ்திரத்தில் வைƒவதேவம் எனப்படும் கர்மம் செய்பவர்களுக்கு பாபத்திலிருந்து நிவர்த்தி இல்லை என்பது பொருந்தாது. அதை நீக்கமுடியாது (பிரதிஷேதம் செய்யமுடியாது). மீன் பிடித்தல் முதலிய கர்மங்களைப்போல் இது ஸ்வபாவமாகவே நிந்திக்கத்தகுந்தது அல்ல. சிலபுருஷர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது என்றும் செய்யாவிடின் ப்ரத்யவாயம் (நரகம்) என்றும் கேள்விப்படுகிறோம்.“अहमन्नमन्नमदन्तमा३द्मि” (அஹமன்னமன்னமதந்தமாஅத்மி) என்ற இந்த மந்த்ரவர்ணத்தால் வேறிடத்தில் ப்ரத்யவாயம் சம்பவிக்கும் என்பது அறியப்படுகிறது. (அதிதிக்கு அளிக்கப்படாமல் உண்ணுதல் ப்ரத்யவாயம் ஆகும்)
भाष्यम् -“द्वे देवानभाजयत्” इति मन्त्रपदम्, ये द्वे अन्ने सृट्वा देवानभाजयत्। के ते द्वे? इत्युच्यते- हुतं च प्रहुतं च। हुतमित्यग्नौ हवनम्, प्रहुतं हुत्वा बलिहरणम्। यस्माद् द्वे एते अन्ने हुतप्रहुते देवानभाजयत्पिता। तस्मादेतर्ह्यपि गृहिणः काले देवेभ्यो जुति देवेभ्य इदमन्नमस्माभिर्दीयमानमिति मन्वाना जुति, प्रजुति च हुत्वा बलिहरणं च कुर्वत इत्यर्थः।
அனுவாதம்-“द्वे देवानभाजयत्” (த்வே தேவானபாஜயத்) என்று மந்திரபதம் ஆகும். அந்த இரண்டு அன்னங்களையும் படைத்து தேவர்களுக்கு அளித்தார். அந்த இரண்டு அன்னங்கள் எவை? ஹுதம் என்றும் பிரஹுதம் என்றும் ஆகும். ஹுதம் என்பது அக்னியில் ஆஹுதி செய்வது. பிரஹுதம் என்பது பலி (தக்ஷிணை முதலியன) அளித்தல். ஆகையால் பிதா இந்த இரண்டு அன்னங்களான ஹுதம், பிரஹுதம் ஆகியவைகளை தேவர்களுக்கு அளித்தார். ஆகையால் இப்பொழுதும் க்ருஹஸ்தர்கள் சமயத்தில் தேவர்களுக்காக ஆஹுதி செய்கின்றார்கள். இந்த அன்னம் நம்மால் தேவர்களுக்கு அளிக்கவேண்டும் என்று கருதி ஹுதமும், பிரஹுதமும் செய்கின்றார்கள். ஹவனம் செய்து பலியும் அளிக்கிறார்கள் என்பது பொருள்.
भाष्यम् - अथो अप्यन्य आहुर्द्वे अन्ने पित्रा देवेभ्यः प्रत्ते न हुतप्रहुते, किं तर्हि? दर्शपूर्णमासाविति। द्वित्वश्रवणाविशेषाद-त्यन्तप्रसिद्धत्वाच्च हुतुप्रहुते इति प्रथमः पक्षः। यद्यपि द्वित्वं हुतप्रहुतयोः सम्भवति, तथापि श्रौतयोरेव तु दर्शपूर्णमासयोर्देवान्नत्वं प्रसिद्धतरम्, मन्त्रप्रकाशितत्वात्। गुणप्रधानप्राप्तौ च प्रधाने प्रथमतरा अवगतिः, दर्शपूर्णमासयोश्च प्राधान्यं हुतप्रहुतापेक्षया। तस्मात्तयोरेव ग्रहणं युक्तम्“द्वे देवानभाजयत्”इति।
அனுவாதம்- மேலும் சிலர் இவ்வாறு கூறுகிறார்கள்- பிதாவின் மூலமாய் தேவர்களுக்கு அளிக்கப்படும் ஹுதபிரஹுத ஆகிய இரண்டு அன்னங்கள் இல்லை எனில், வேறு எதனால்? என்றால் தர்சபூர்ணமாசத்தினால் என்பதாகும். துவிவசனத்தில் இரண்டும் (இருமை) சமமாய் இருப்பதாலும், முற்றிலும் பிரசித்தமாய் இருப்பதாலும் ஹுத பிரஹுத ஆகியவையே அன்னம் என்பது முதல் பக்ஷம். ஹுதம் பிரஹுதம் ஆகியவை இரண்டாக சம்பவித்தாலும், இதை அபேக்ஷித்து ஸ்ருதியினால் பிரதிபாதிக்கப்பட்ட தர்சம் அவ்வாறே பூர்ணமாசங்களே தேவர்களுக்கான அன்னமாவது அதிகப் பிரசித்தமாய் இருக்கிறது. ஏனெனில் இது மந்திரத்தால் கூறப்பட்டது. இதைத்தவிர குணம், பிரதானம் என்ற அர்த்தங்களில் முதலில் பிரதான அர்த்தத்தின் ஞானமே உண்டாகும். ஆகையால் ஹுத பிரஹுத இவைகளை அபேக்ஷித்து தர்சபூர்ணமாசமே பிரதானமாய் இருக்கிறது. ஆகையால்“द्वे देवानभाजयत्” (த்வே தேவானபாஜயத்) என்ற வாக்கியத்தால் அவைகளை கிரஹித்துக்கொள்வதே பொருந்தும். (இது இரண்டாவது பக்ஷம்)
भाष्यम् - यस्माद्देवार्थमेते पित्रा प्रक्लृप्ते दर्शपूर्णमासाख्ये अन्ने, तस्मात्तयोर्देवार्थत्वाविघाताय नेष्टियाजुक इष्टियजनशीलः, इष्टिशब्देन किल काम्या इष्टयः, शातपथीयं प्रसिद्धिः, ताच्छील्यप्रत्ययप्रयोगात्काम्येष्टियजनप्रधानो न स्यादित्यर्थः।
அனுவாதம்-ஏனெனில் பிதாவானவர் தேவர்களுக்காக கல்பிக்கப்பட்டதே தர்ச பூர்ணமாசம் எனப்படும் இரண்டு அன்னம். ஆகையால் அவை இரண்டிற்கும் தேவத்துவத்தை இழக்காமல் இருப்பதற்காக இஷ்டி செய்பவனாக ஆக வேண்டியதில்லை. ஏனெனில் இஷ்டி காமிய இஷ்டி என்று அறிய வேண்டும். இந்த இஷ்டிகளில் சதபத பிராஹ்மணம் பிரசித்தம்.“इष्टियाजुकः”(இஷ்டியாஜுக:) என்ற பதத்தில்“उकञ्”(உகஞ்) என்ற பிரத்யயம்“ताच्छील्य”(தாச்சீல்ய) அதாவது அந்த ஸ்வபாவமுள்ளதாய் என்ற அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தாத்பர்யம் என்னவெனில் பிரதானமாய் காமனைகளுடன் கூடிய யக்ஞங்களை யஜனம் செய்யக்கூடாது என்பதாகும்.
भाष्यम् - पशुभ्य एकं प्रायच्छदितियत्पशुभ्य एकं प्रायच्छत्पिता किं पुनस्तदन्नम्? तत्पयः। कथं पुनरवगम्यते पशवोऽस्यान्नस्य स्वामिनः? इत्यत आह- पयो ह्यग्रे प्रथमं यस्मान्मनुष्याश्च पशवश्च पयः एवोपजीवन्तीति। उचितं हि“तेषां तदन्नम्” अन्यथा कथं तदेवाग्रे नियमेनोपजीवेयुः?
அனுவாதம்- பசுக்களுக்கு ஒரு அன்னம் அளிக்கப்பட்டது - பிதா பசுக்களுக்கு எந்த ஒரு அன்னம் அளித்தாரோ அந்த அன்னம் என்ன? அது பால். அந்த அன்னத்திற்கு ஸ்வாமி பசு என்று எவ்வாறு அறியப்படுகிறது? அதற்கு பதில் கூறப்படுகிறது- மனிதர்களும் பசுக்களும் ஆரம்பத்தில் பாலை ஆஸ்ரயித்தே ஜீவிக்கின்றார்கள்.“तेषां तदन्नम्” (தேஷாம் ததன்னம்) என்று கூறியது பொருத்தமானதே. வேறு விதமாய் ஆரம்பத்தில் (பால் உபயோகிக்கவில்லை எனில்) அதை ஆஸ்ரயிக்கவில்லை எனில் எவ்வாறு ஜீவிக்கமுடியும்.
भाष्यम् - कथमग्रे तदेवोपजीवन्ति? इत्युच्यते मनुष्याश्च पशवश्च यस्मात्तेनैवान्नेन वर्तन्तेऽद्यत्वेऽपि, यथा पित्रा आदौ विनियोगः कृतस्तथा तस्मात्कुमारं बालं जातं घृतं वा त्रैवर्णिका जातकर्मणि जातरूपसंयुक्तं प्रतिलेहयन्ति प्राशयन्ति। स्तनं वानुधापयन्ति पश्चात् पाययन्ति। यथासम्भवमन्येषां स्तनमेवाग्रे धापयन्ति मनुष्येभ्योऽन्येषां पशूनाम्। अथ वत्सं जातमाहुः“कियत्प्रमाणो वत्सः?” इत्येवं पृष्टाः सन्तोऽतृणाद इति। नाद्यापि तृणमत्ति, अतीव बालः, पयसैवाद्यापि वर्तत इत्यर्थः।
அனுவாதம்- அவை எவ்வாறு ஆரம்பத்தில் எதை ஆஸ்ரயித்து ஜீவிக்கிறது? அதற்குக் கூறப்படுகிறது- ஆரம்பத்தில் எவ்வாறு பிதா அளித்தாரோ அவ்வாறே இன்றுவரை மனிதர்களும், பசுக்களும் அந்த அன்னத்தையே ஆஸ்ரயித்து இருக்கின்றார்கள். ஆகையால் பிறந்த குழந்தைக்கு முதல் மூன்று வர்ணத்தாரும் ஜாதகர்மாவில் சுத்திகரிக்கப்பட்ட தங்கத்தால் நெய்யை (வாயில்) தடவுகிறார்கள். அதன்பின் ஸ்தனபானம் செய்விக்கின்றனர். மற்ற அதிகாரம் இல்லாதவர்களுக்கும், மனிதர்கள் அல்லாத பசுக்களுக்கும் ஆரம்பத்தில் ஸ்தனபானம் செய்விக்கப்படுகிறது. ஆகையால் பிறந்த கன்றுக்குட்டியை எவ்வளவு அளவுடையது என்று கேட்டால் இன்று வரை புல்லை சாப்பிடவில்லை என்று பதில் அளிக்கிறார்கள். மிகவும் சிறியது இன்றும் பாலையே சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது என்று பொருள்.
भाष्यम्- यच्चाग्रे जातकर्मादौ घृतमुपजीवन्ति, यच्चेतरे पय एव, तत्सर्वथापि पय एवोपजीवन्ति, घृतस्यापि पयोविकारत्वात्पयस्त्वमेव। कस्मात्पुनः सप्तमं सत्पश्वन्नं चतुर्थत्वेन व्याख्यायते? कर्मसाधनत्वात्। कर्म हि पयःसाधनाश्रयं अिहोत्रादि। तच्च कर्म साधनं वित्तसाध्यं वक्ष्यमाणस्यान्नत्रयस्य साध्यस्य, यथा दर्शपूर्णमासौ पूर्वोक्तावन्ने। अतः कर्म पक्षत्वात् कर्मणा सह पिण्डीकृत्योपदेशः। साधनत्वाविशेषादर्थसम्बन्धा-दानन्तर्यमकारणमिति च। व्याख्याने प्रतिपत्तिसौकर्याच्च। सुखं हि नैरन्तर्येण व्याख्यातुं शक्यन्तेऽन्नानि व्याख्यातानि च सुखं प्रतीयन्ते।
அனுவாதம்- இவ்வாறு ஆரம்பத்தில் ஜாதகர்மா முதலியவைகளில் நெய்யை ஆஸ்ரயித்து ஜீவிக்கின்றன. அவைகளும் பாலை வைத்தே எவ்விதமாயினும் ஜீவிக்கின்றன. ஏன்எனில் நெய்யும் பாலின் விகாரமே. எதனால் ஏழு அன்னங்களில் பசு அன்னத்தை நாலாவதாக எதனால் வியாக்கியாணம் செய்யப்படுகிறது? கர்ம சாதனமாவதால் ஆகும். அக்னி ஹோத்ர முதலிய கர்மங்கள் பால் என்னும் சாதனத்தை ஆஸ்ரயித்து உள்ளன. அந்த கர்மம் இனிக் கூறப்போகின்ற சாத்யமான அன்னத்தின் வித்தசாத்திய சாதனமாகும். எவ்வாறெனில் முன் கூறப்பட்ட தர்ச பூர்ணமாச அன்னம்போல் ஆகும். ஆகையால் கர்மபக்ஷமாய் இருப்பதால் கர்மங்களுடன் எல்லாம் ஒன்றாய் சேர்த்து உபதேசிக்கப்பட்டது. சாதனத்துவம் சமானமாய் இருப்பதால் அதற்குபின் என்பது காரணமற்றதாகும். ஆகையால் சாதன பூத அன்னத்தை ஒரே சமயத்தில் சுலபமாய் வியாக்கியானம் செய்யமுடிகிறது. அதனால் அநாயாசமாய் அந்த வியாக்யானத்தை புரிந்துகொள்ள முடிகிறது.
भाष्यम् - तस्मिन्सर्वं प्रतिष्द्भितं यच्च प्राणिति यच्च नेत्यस्य कोऽर्थः? इत्युच्यते- तस्मिन्पश्वन्ने पयसि सर्वमध्यात्माधिभूताधि-दैवलक्षणं कृत्स्नं जगत्प्रतिष्द्भितं यच्च प्राणिति प्राणचेष्टावद्यच्च न स्थावरं शैलादि। तत्र हिशब्देनैव प्रसिद्धावद्योतकेन व्याख्यातम्। कथं पयोद्रव्यस्य सर्वप्रतिष्द्भात्वम्? कारणत्वोपपत्तेः। कारणत्वं चाग्निहोत्रादिकर्मसमवायित्वम्। अग्निहोत्राद्याहुतिविपरिणा-मात्मकं च जगत्कृत्स्नमिति श्रुतिस्मृतिवादाः शतशो व्यवस्थिताः। अतो युक्तमेव हिशब्देन व्याख्यानम्।
பால் என்னும் திரவ்யத்தின் எல்லாவற்றிற்கும் உள்ள பிரதிஷ்டா தன்மையை நிரூபித்தல்.
அனுவாதம்-எது பிராணக்கிரியை செய்கிறதோ, எது செய்யவில்லையோ எல்லாமே அதில் பிரதிஷ்டித்திருக்கின்றது. இதன் அர்த்தம் என்ன? கூறப்படுகிறது அந்த பால்ரூப பசு அன்னத்தில், எவை எல்லாம் ப்ராணனைச்செய்கிறதோ ஸ்தாவரம், மலைகள் முதலியவைகள் போல் அல்லாமல் பிராண சேஷ்டைகளுடன் அத்யாத்ம, அதிபூத, அதிதெய்வரூப ஜகத் முழுவதும் பிரதிஷ்டையாகி இருக்கின்றது. இங்கு, ஹி,“हि” சப்தத்தால் அதன் முக்கியத்தை இந்த வியாக்கியானம் தெரிவிக்கின்றது. ஆனால் எவ்வாறு பால் என்றதிரவியம் எல்லாவற்றிற்கும் பிரதிஷ்டையாக ஆகிறது? காரணம் இருப்பதால். அக்னிஹோத்திரம் முதலிய கர்மாக்களில் சம்பந்தப்பட்டிருப்பதால் அது காரணத்துவமாகிறது. அக்னிஹோத்திரம் முதலிய ஆஹுதிகளின் விபரிணாம ரூபமே முழுஜகத் ஆகும். இந்த விஷயம் குறித்து நூ ற்றுக்கணக்கான சுருதி ஸ்மிருதி வாதங்கள் இருக்கின்றன. ஆகையால்“हि” (ஹி) சப்தத்தால் வியாக்கியானம் செய்தது பொருத்தமேயாகும்.
भाष्यम् - यत्तद्ब्राह्मणान्तरेष्विदमाहुः- संवत्सरं पयसा जुदप पुनर्मृत्युं जयतीति, संवत्सरेण किल त्रीणि षष्टिशतान्याहुतीनां सप्त च शतानि विंशतिश्चेति याजुष्मतीरिष्टका अभिसम्पद्यमानाः संवत्सरस्य चाहोरात्राणि, संवत्सरमग्निं प्रजापतिमाप्नुवन्ति, एवं कृत्वा संवत्सरं जुदपजयति पुनः मृत्युम्, इतः प्रेत्य देवेषु सम्भूतः पुनर्न म्रियत इत्यर्थः।
அனுவாதம்- அந்த வேறு ப்ராஹ்மணங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது- ஒரு வருடம் பாலினால் ஹவனம் செய்யும் புருஷன் அபமிருத்யுவை ஜயிக்கின்றான். ஒரு வருஷத்தில் முந்நூ ற்று அறுபது ஆஹுதிகள். இருமுறை செய்யும்பொழுது எழுநூ ற்று இருபது முறை செய்து யஜுர் வேதத்தில் கூறப்பட்ட இஷ்டிகா ரூபமாகி சம்வத்சர ரூப அக்னி பிரஜாபதியை அடையச் செய்கின்றது. இந்த பாவனை செய்து ஒரு வருடம் ஹவனம் செய்பவன் மறுபடியும் மிருத்யுவை ஜெயிக்கின்றான். அதாவது மரணமடைந்து தேவர்களிடத்தில் ஜன்மத்தை அடைந்து மறுபடியும் மிருத்யுவை அடைவதில்லை.
भाष्यम्- इत्येवं ब्राह्मणवादा आहुः, न तथा विद्यान्न तथा द्रष्टव्यम्, यदहरेव जुहोति तदहः पुनर्मृत्युमपजयति, न संवत्सराभ्यासमपेक्षते। एवं विद्वान्सन्, यदुक्तम्- पयसि हीदं सर्वं प्रतिष्द्भितं पय आहुतिविपरिणामात्मकत्वात्सर्वस्येति, तदेकेनैवाह्ना जगदात्मत्वं प्रतिपद्यते, तदुच्यते- अपजयति पुनर्मृत्युं पुनर्मरणम्, सकृन्मृत्वा विद्वाञ्छरीरेण वियुज्य सर्वात्मा भवति न पुनर्मरणाय परिच्छिन्नं शरीरं गृह्णातीत्यर्थः।
அனுவாதம்- இவ்வாறு பிராஹ்மணவாதிகள் கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு அறிந்துகொள்ள வேண்டியதில்லை. ஏன்எனில் புருஷன் எந்த தினத்தில் ஹவனம் செய்கின்றானோ அந்த தினத்திலேயே அபமிருத்யுவைக் கடக்கின்றான். ஆகையால் ஒருவருடம் அப்யாசம் செய்ய வேண்டியதில்லை. இவ்வாறு அறிந்து முன்பு எது கூறப்பட்டதோ அவ்வாறு எல்லாம் பாலின் ஆஹுதிகளின் பரிணாம ரூபமாவதால் எல்லாம் பாலிலேயே பிரதிஷ்டை ஆகி இருக்கிறது என்று இவ்வாறு அறிந்தவன் ஒரே ஆஹுதியை செய்வதினாலேயே ஜகத்தின் ஆத்மபாவத்தை அடைகின்றான். இவ்வாறு சுருதி கூறுகிறது- அவன் மரணத்தை மறுபடியும், மறுபடியும் ஜெயிக்கின்றான். வித்வான் ஒருமுறை மிருத்யுவை அடைந்து சரீரத்தை துறந்த ஸர்வாத்மாவாகின்றான். மறுபடியும் மரணத்தின் பொருட்டு மீண்டும் பரிச்சின்ன சரீரத்தை கிரஹிக்கமாட்டான் (சரீரத்தை எடுக்கமாட்டான்).
भाष्यम् - कः पुनर्हेतुः सर्वात्माप्त्या मृत्युमपजयति? इत्युच्यते- सर्वं समस्तं हि यस्माद्देवेभ्यः सर्वेभ्योऽन्नाद्यमन्नमेव तदाद्यं च सायंप्रातराहुतिप्रक्षेपेण प्रयच्छति। तद्युक्तं सर्वमाहुतिमयमात्मानं कृत्वा सर्वदेवान्नरूपेण सर्वैर्देवैरेकात्मभावं गत्वा सर्वदेवमयो भूत्वा पुनर्न म्रियत इति।
அனுவாதம்- ஆனால் சர்வாத்ம பாவத்தை அடைந்து மிருத்யுவை ஜெயிக்கிறான் என்பதற்கு என்ன ஹேது (காரணம்)? அதற்கு கூறப்படுகிறது- எதனால் எல்லா தேவர்களுக்கும் அன்னம் ஆத்யம், (சாப்பிடுதல்) இவை சாயங்காலமும் காலையிலும் ஆஹுதி அளிப்பதினால் எல்லாம் ஆஹுதி மயமாய் தன்னை ஆக்கி எல்லா தேவர்களுக்குமான அன்னரூபமாய் எல்லா தேவர்களுடனும் ஏகாத்ம பாவம் அடைந்து எல்லா தேவமயமாய் மறுபடியும் மரணமடைவதில்லை என்பது உசிதமே.
भाष्यम् - अथैतदप्युक्तं ब्राह्मणेन“ब्रह्म वै स्वयम्भु तपोऽतप्यत, तदैक्षत न वै तपस्यानन्त्यमस्ति, हन्ताहं भूतेष्वात्मानं जुहवानि भूतानि चात्मनीति, तत्सर्वेषु भूतेष्वात्मानं हुत्वा भूतानि चात्मनि सर्वेषां भूतानां श्रैष्द्भं स्वाराज्यमाधिपत्यं पर्येत्” इति।
அனுவாதம்- பிராஹ்மணத்தில் எது கூறப்பட்டதோ அது ஸ்வயம்பூ ப்ரஹ்மா (ஹிரண்யகர்பன்) தபஸ் செய்தார். அவர் இவ்வாறு விசாரம் செய்தார் - நிச்சயமாய் இந்த தபசினால் அனந்தத்துவம் (அம்ருதத்துவம்) இல்லை என்று என்னை பூதங்களுக்கு ஹவனம் செய்வேன். ஏன்எனில் பூதங்களை ஹவனம் செய்வேன் என்று. ஆகையால் அவர் எல்லா பூதங்களில் தன்னையும், தன்னிடத்தில் எல்லா பூதங்களிடத்தும் ஹவனம் செய்து எல்லா பூதங்களையும் ƒரேஷ்டத்துவமும் ஸ்வராஜ்ய அதிபதியாகவும் அடையச்செய்தார்.
भाष्यम्- कस्मात्तानि न क्षीयन्तेऽद्यमानानि सर्वदेति। यदा पित्रा अन्नानि सृट्वा सप्त पृथक्पृथग्भोक्तृभ्यः प्रत्तानि, तदाप्रभृत्येव तैर्भोक्तृभिरद्यमानानि- तन्निमित्तत्वात्तेषां स्थितेः- सर्वदा नैेरन्तर्येण, कृतक्षयोपपत्तेश्च युक्तस्तेषां क्षयः। न च तानि क्षीयमाणानि, जगतोऽविभ्रष्टरूपेणैवावस्थानदर्शनात्। भवितव्यं चाक्षयकारणेन, तस्मात्कस्मात्पुनस्तानि न क्षीयन्त इति प्रश्नः।
அனுவாதம்- (அன்னங்களின் அக்ஷயதன்மையை விளக்குதல்) போக்கியத்திற்கான அன்னங்கள் எதனால் எப்பொழுதும் நாசமடைவதில்லை? எப்பொழுது பிதாவால் ஏழு அன்னங்கள் சிருஷ்டிக்கப்பட்டு போக்தாக்களின் பொருட்டு தனித்தனியாக அளிக்கப்பட்டதோ, அதிலிருந்து அந்த போக்தாக்களினால் எப்பொழுதும் இடைவிடாமல் உட்கொள்ளப்பட்டதால் அவர்கள் நிலைத்து இருக்கின்றார்கள். ஆனால் எது செய்யப்பட்டதோ அது க்ஷயம் அடையக்கூடியது ஆகையால் அவர்களுக்கு க்ஷயம் (நாசம் உண்டாவது) பொருத்தமேயாகும். ஜகத்தை (சம்சாரத்தை) அக்ஷய ரூபமாய் இருப்பதாக பார்ப்பதால் அவர்களுக்கு அவை க்ஷீணம் அடைவதில்லை என்று கருதுகிறார்கள். அந்த அக்ஷயத்திற்கு (நாசமற்ற தன்மைக்கு) காரணம் வேண்டும். ஆகையால் எதனால் நாசமடைவதில்லை என்ற கேள்வி எழுகிறது.
भाष्यम् - तस्येदं प्रतिवचनम्-“पुरुषो वा अक्षितिः”। यथासौ पूर्वमन्नानां स्रष्टासीत्पिता मेधया जायादि सम्बन्धेन च पाकर्मणाभोा च, तथा येभ्यो दत्तान्यन्नानि तेऽपि तेषामन्नानां भोारोऽपि सन्तः पितर एव, मेधया तपसा च यतो जनयन्ति तान्यन्नानि। तदेतदभिधीयते पुरुषो वै योऽन्नानां भोा सोऽक्षितिरक्षयहेतुः।
அனுவாதம்- அதற்கு பதில் கூறப்படுகிறது-“पुरुषो वा+ÊIÉÊiÉ&” (புருஷோ வா அக்ஷிதி:) என்று எவ்வாறு அந்த பிதா விக்ஞானம் மற்றும் மனைவி முதலிய சம்பந்தத்துடன் பாங்க்தகர்ம மூலமாய் அன்னங்களை உண்டாக்கியும் போக்தாவாயும் இருந்தாரோ. இவ்வாறு எவர் அன்னத்தை அளித்தாரோ அவரே போக்தாவாய் இருந்தாலும் பிதாவும் அவரே. மேதையினாலும், தபசாலும் அன்னத்தை உண்டுபண்ணுகிறார்கள். இதனால் எந்த புருஷன் இந்த அன்னத்தின் போக்தாவோ அவன் க்ஷயமற்றவன்- அவனே அக்ஷயத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
भाष्यम्- कथमस्याक्षितित्वम्? इत्युच्यते- स हि यस्मादिदं भुज्यमानं सप्तविधं कार्यकरणलक्षणं क्रियाफलात्मकं पुनः पुनर्भूयो भूयो जनयते उत्पादयति धिया तत्तत्कालभाविन्या तया तया प्रज्ञया, कर्मभिश्च वानःकायचेष्टितैः, यद्यदि ह यद्येतत्सप्तविधमन्नमुक्तं क्षणमात्रमपि न कुर्यात्प्रज्ञया कर्मभिश्च, ततो विच्छिद्येत भुज्यमानत्वात्सातत्येन क्षीयेत ह। तस्माद्यथैवायं पुरुषो भोक्ता अन्नानां नैरन्तर्येण, यथाप्रज्ञं यथाकर्म च करोत्यपि। तस्मात्पुरुषोऽक्षितिः सातत्येन कर्तृत्वात्। तस्माद् भूज्यमाना- न्यप्यन्नानि न क्षीयन्त इत्यर्थः।
அனுவாதம்- அதற்கு எவ்வாறு அழிவு அற்றதன்மை? அதற்குக் கூறப்படுகிறது- ஏனெனில் இந்த உண்ணப்படும் ஏழு விதமான காரியகரண லக்ஷணமானதும் கிரியாபல ஆத்மகமானதுமான மறுபடியும், மறுபடியும், அந்த அந்த காலத்திற்கான பாவனையால் அந்த அந்த பிரக்ஞையினாலும் கர்மாக்களினாலும் வாக், மனம், சரீரம் இவைகளின் சேஷ்டைகளினாலும் உண்டாகிறது. இவ்வாறு இருந்தாலும் கூறப்பட்ட சப்த (ஏழு) வித அன்னத்தை விக்ஞானத்தினாலும் கர்மங்களினாலும் க்ஷணமாத்திரம் உத்பத்தி செய்யக்கூடாது. அது எப்பொழுதும் உட்கொள்ள வேண்டியதால் விச்சின்னமாய் அதாவது க்ஷீணமாகிவிடும். ஆகையால் எவ்வாறு புருஷன் அன்னத்தை நிரந்தரம் சாப்பிடுகிறானோ அவ்வாறே தன்னுடைய புத்தி (விக்ஞானம்), கர்மத்தை அனுசரித்து உத்பத்தி செய்யப்படுகிறது. ஆகையால் நிரந்தரம் கர்த்தா ஆவதால் அழிவு அற்றவன் ஆகின்றான். இதனால் நிரந்தரம் சாப்பிட்டாலும் அன்னம் க்ஷீணம் அடைவதில்லை என்பது இதன் தாத்பர்யம்.
भाष्यम् - अतः प्रज्ञाक्रियालक्षणप्रबन्धारूढः सर्वो लोकः साध्यसाधनलक्षणः क्रियाफलात्मकः संहतानेकप्राणिकर्मवासना-सन्तानावष्टब्धत्वात्क्षणिकोऽशुद्धोऽसारो नदीस्रोतःप्रदीप-सन्तानकल्पः कदलीस्तम्भवदसारः फेनमायामरीच्यम्भःस्वप्नादि-समस्तदात्मगतदृष्टीनामविकीर्यमाणो नित्यः सारवानिव लक्ष्यते।
அனுவாதம்- ஆகையால் பிரக்ஞா கிரியாலக்ஷணத்தில் பந்தப்பட்ட சாத்திய சாதன லக்ஷணமான கிரியாபலரூபமான எல்லா லோகமும் (சம்சாரமும்) க்ஷணிகம், அசுத்தம், சாரமற்றது. நதியின் ஓட்டம் (பிரவாஹம்) போன்றது. விளக்கின் ஜோதியைப்போன்று சாரமற்றது. நுரை போன்றது. கானல் நீர் போன்றது. மேலும் சொப்பனம் போன்றது ஆகும். இவ்வாறு உள்ள இதில் ஆசக்தி (பற்று) அற்றவனுக்கு அந்த பஹிர்முக லோகத்தில் (சம்சாரத்தில்) கிரியை அற்றதும், நித்யமானதும், சாரம் உள்ளதுமான அது அறியப்படுகிறது. ஏனெனில் பரஸ்பரம் கலந்து இருக்கும் பிராணிகளின் முடிவற்ற கர்மாக்களாலும், அவைகளின் வாசனைகளின் தொடர்ச்சியாலும் பந்தப்பட்டு ஸ்திரமானதாக நினைக்கின்றார்கள்.
भाष्यम् - तदेतद्वैराग्यार्थमुच्यते- धिया धिया जनयते कर्मभिर्यद्धैतन्न कुर्यात्क्षीयेत हेति- विरक्तानां ह्यस्माद्ब्रह्मविद्या आरब्धव्या चतुर्थप्रमुखेणेति।
அனுவாதம்- இது வைராக்கியத்திற்காக கூறப்படுகிறது- கர்மாக்களினால் (மறுபடியும் தினமும் மறுபடியும்) அன்னத்தை உத்பத்தி செய்வதால் அது க்ஷீணமாகாது. எவர்கள் இதனால் விரக்தி அடைகிறார்களோ அவர்களுக்காக நான்காவது அத்தியாயத்திலிருந்து ப்ரஹ்மவித்யை ஆரம்பமாகிறது.
भाष्यम् - यो वैतामक्षितिं वेदेति, वक्ष्यमाणान्यपि त्रीण्यान्नान्यस्मिन्नवसरे व्याख्यातान्येवेति कृत्वा तेषां याथात्म्य-विज्ञानफलमुपसंह्रियते- यो वा एताम् अक्षितिम् अक्षयहेतुं यथोक्तं वेद, पुरुषो वा अक्षितिः स हीदमन्नं धिया धिया जनयते कर्मभिर्यद्धैतन्न कुर्यात्क्षीयेत हेति।
அனுவாதம்- (உபாசன பலம்)“यो वैतामक्षितिं वेद” (யோ வைதாமக்ஷிதிம் வேத) இனி கூறப்போகின்ற மூன்று அன்னங்கள் இப்பொழுது வியாக்கியானம் செய்யப்பட்டது என்று சுருதி அவைகளின் யதார்த்த ஸ்வரூப விக்ஞானத்தின் பலத்தை உபசம்ஹாரம் செய்கிறது (முடிக்கிறது). எவர் இந்த அக்ஷிதிம் அதாவது க்ஷயம் அற்ற தன்மையின் ஹேதுவை கூறப்பட்டவாறு அறிந்தவன் க்ஷயம் அற்ற தன்மையை அடைகின்றான்.(पुरुषो वा अक्षितिः) விக்ஞானத்தாலும் கர்மங்களாலும் அந்த அன்னத்தை அவன் உத்பத்தி செய்கின்றான். அவ்வாறு உற்பத்தி செய்யவில்லையெனில் அவன் நிச்சயம் க்ஷயத்தை (நாசத்தை) அடைவான் என்பதாகும்.
भाष्यम् - सोऽन्नमत्ति प्रतीकेनेत्यस्यार्थ उच्यते- मुखं मुख्यत्वं प्राधान्यमित्येतत्। प्राधान्येनैवान्नानां पितुः पुरुषस्याक्षितित्वं यो वेद सोऽन्नमत्ति नान्नं प्रति विद्वानन्ना-नामात्मभूतः, भोक्तैव भवति, न भोज्यतामापद्यते। स देवानपिगच्छति स ऊर्जमुपजीवति, देवानपि गच्छति देवात्मभावं प्रतिपद्यते, ऊर्जममृतं चोपजीवतीति यदुक्तं सा प्रशंसा, नापूर्वार्थोऽन्योऽस्ति।।
அனுவாதம்- இப்பொழுது“सोऽन्नमत्ति प्रतीकेन” (சோஅன்னமத்தி பிரதீகேன) என்ற சுருதிவாக்கியத்தின் அர்த்தம் கூறப்படுகிறது. முகம் என்பது முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. அதாவது பிரதானமானது என்பதாகும். எந்த புருஷன் அன்னத்தின் பிதாவான புருஷனின் நாசமற்றதன்மையை அறிகிறானோ அவன் அன்னத்தை சாப்பிடுகிறான். அவன் அன்னத்தை பிரதானமாய் சாப்பிடுகிறான். அன்னத்தை கௌணமாய் (பிரதானமற்றதாய்) நினைத்து சாப்பிடுவதில்லை. அக்ஞானியைப்போல் ஞானி அன்னத்தின் ஆத்மபூதமாய் ஆவதில்லை போக்தாவாகவே இருக்கின்றான். போஜ்யத்தன்மையை அடைவதில்லை. அவ்வாறே “स देवानपिगच्छति स ऊर्जमुपजीवति” (ச தேவானபிகச்சதி ச ஊர்ஜமுபஜீவதி) என்பவை தேவாத்ம பாவத்தை அடைகின்றார்கள் என்றும் ஊர்ஜ(ऊर्जः) அதாவது அமிருதத்தை அடைந்து உபஜீவிக்கின்றார்கள் என்று கூறுவது புகழ்ச்சியின் பொருட்டேயாகும். வேறு அபூர்வமான அர்த்தம் ஒன்றும் இல்லை.
अव - पाङ्क्तस्य कर्मणः फलभूतानि यानि त्रीण्यन्नान्युपक्षिप्तानि तानि कार्यत्वाद्विस्तीर्णविषयत्वाच्च पूर्वोभ्योऽन्नेभ्यः पृथगुत्कृष्टानि, तेषां व्याख्यानार्थं उत्तरो ग्रन्थ आब्राह्मण-परिसमाप्तेः।
அனுவாதம்- அ.கை- பாங்க்த கர்மத்தின் பலபூதங்களான எந்த மூன்று அன்னங்கள் உண்டோ அவைகள் முன்பு கூறப்பட்டன. அவைகள் காரியத்துவமாய் இருப்பதாலும் விரிவான விஷயமாய் இருப்பதாலும் முந்திய அன்னங்களில் இருந்து வேறுபட்டதாய் உத்கிருஷ்டமானது ஆகும். அவைகளை விளக்குவதற்காக இந்த ப்ராஹ்மணம் முடியும் வரையிலும் இனிவரும் கிரந்தத்தின் பகுதியாகும்.
त्रीण्यात्मनेऽकुरुतेति मनो वाचं प्राणं तान्यात्मनेऽ-कुरुतान्यत्रमना अभूवं नादर्शमन्यत्रमना अभूवं नाश्रौषमिति मनसा ह्येव पश्यति मनसा श्रृणोति। कामः सङ्कल्पो विचिकित्सा श्रद्धाश्रद्धाधृतिरधृतिर्ह्रीर्धीर्भीरित्येतत्सर्वं मन एव तस्मादपि पृष्द्भत उपस्पृष्टो मनसा विजानाति यः कश्च शब्दो वागेव सा। एषा ह्यन्तमायत्तैषा हि न प्राणोऽपानो व्यान उदानः समानोऽन इत्येतत्सर्वं प्राण एवैतन्मयो वा अयमात्मा वायो मनोमयः प्राणमयः।। ३।।
மந்த்ரார்த்தம்- அவர் தனக்காக மூன்று அன்னங்களை செய்தார் என்பது மனம், வாக், பிராணன் இவைகளை தனக்காகச்செய்தார். என்னுடைய மனம் வேறு இடத்தில் இருந்தது ஆகையால் நான் பார்க்கவில்லை. என் மனம் வேறு இடத்தில் இருந்தது ஆகையால் நான் கேட்கவில்லை. (என்று மனிதன் கூறுகின்றான் ஆகையால் நிச்சயமாகிறது) மனதினால் பார்க்கிறான் என்றும் மனதினால் கேட்கிறான் என்றும் (தெரிகிறது) காமம், சங்கல்பம், சம்சயம், சிரத்தை, அசிரத்தை, தாரணாசக்தி, தாரணாசக்தி அற்ற தன்மை, லஜ்ஜை, புத்தி, பயம் இவை எல்லாம் மனதினுடையது. இதனால் பின்னால் இருந்து ஸ்பரிசித்தாலும் (தொட்டாலும்) மனிதன் மனதினால் அறிகின்றான். எந்த சப்தம் உண்டோ, அது வாக்காகும். அது வார்த்தைகளின் முடிவிலேயே அடங்கிவிடுவதால் தெரிவதில்லை. ப்ராணன், அபானன், வியானன், உதானன், சமானன் மேலும் ஸ்வாசம் (अन = அன), இவை எல்லாம் பிராணனே இந்த ஆத்மா (சரீரம்) அவைகளின் மயமே. அதாவது வாங்மயம், மனோமயம், ப்ராணமயம் ஆகும்.
भाष्यम्- त्रीण्यात्मनेऽकुरुतेति कोऽस्यार्थ इत्युच्यते- मनोवाक्प्राणा एतानि त्रीण्यन्नानि, तानि मनो वाचं प्राणं चात्मने आत्मार्थमकुरुत- कृतवान् सृट्वा आदौ पिता।
அனுவாதம்-“त्रीण्यात्मनेऽकुरुत” என்பதற்கு என்ன அர்த்தம் என்று கூறப்படுகிறது. ஆதியில் பிதா மனது, வாக் பிராணன் ஆகிய இந்த மூன்று அன்னங்களையும் படைத்து அந்த மனம், வாக்கு, பிராணன் இவைகளை தனக்காகப் படைத்தார்.
भाष्यम्- तेषां मनसोऽस्तित्वं स्वरूपं च प्रति संशय इत्यत आह- अस्ति तावन्मनः श्रोत्रादिबाह्यकरणव्यतिरिक्तम्, यत एवं प्रसिद्धम्- बाह्यकरणविषयात्मसम्बन्धे सत्यप्यभिमुखीभूतं विषयं न गृाति,“किं दृष्टवासीदं रूपम्?” इत्युक्तो वदति-“अन्यत्र मे गतं मन आसीत्सोऽहमन्यत्रमना आसं नादर्शम्”। तथा“इदं श्रुतवानसि मदीयं वचः?” इत्युक्तः“अन्यत्रमना अभूवं नाश्रौषं न श्रुतवानस्मि”इति।
அனுவாதம்- அந்த மனம் இருக்கிறது என்பதைக் குறித்தும், அதன் ஸ்வரூபத்தைக் குறித்தும் சந்தேஹம் உள்ளதால் சுருதி கூறுகிறது- ஸ்ரோத்திரம் முதலிய பாஹ்ய இந்திரியங்களுக்கு வேறாக மனம் என்பது இருக்கிறது. அதனால் இவ்வாறு பிரசித்தமாகிறது- பாஹ்யகரணம், விஷயம், ஆத்மா இவைகளின் சம்பந்தம் இருந்தாலும் எதிரில் உள்ள விஷயத்தைப் பார்ப்பதில்லை. (கிரஹிப்பது இல்லை). இந்த ரூபத்தைப் பார்த்தாயா? என்று கேட்டால் என்மனம் வேறு இடத்தில் இருந்தது ஆகையால் பார்க்கவில்லை என்று கூறுகின்றான். அவ்வாறே இதைக் கேட்டாயா? என்று கேட்டால் என்மனம் வேறு இடத்தில் இருந்தது ஆகையால் கேட்கவில்லை என்று கூறுகிறான்.
भाष्यम् - तस्माद् यस्यासन्निधौ रूपादिग्रहणसमर्थस्यापि सतश्चक्षुरादेः स्वस्वविषयसम्बन्धे रूपशब्दाविज्ञानं न भवति, यस्य च भावे भवति, तदन्यदस्ति मनो नामान्तः- करणं सर्वकरणविषययोगि इत्यवगम्यते। तस्मात्सर्वो हि लोको मनसा ह्येव पश्यति मनसा श्रृणोति, तग्रत्वे दर्शनाद्यभावात्।
அனுவாதம்- ஆகையால் அதன் (மனிதன்) சந்நிதி இல்லாவிடில் ரூபம் முதலியவைகளை கிரஹிக்கும் சாமர்த்தியம் உடைய கண்கள் முதலியவைகள் தன், தன் விஷய சம்பந்தம் இருந்தாலும் ரூப, சப்தம் முதலிய ஞானம் உண்டாவதில்லை. எது இருந்தால் உண்டாகுமோ அது கண்கள் முதலியவைகளுக்கு வேறாய் எல்லா இந்திரிய விஷயங்களுக்கும் சம்பந்தமுள்ள மனம் என்று பெயருடைய அந்தக்கரணம் என்று அறியப்படுகிறது. ஆகையால் எல்லா லோகமும் (வியவஹார விஷயங்களும்) மனதினாலேயே அறிகிறது (காண்கிறது) கேட்கிறது. அது இல்லாவிடில் (மறைந்துவிடில்) தர்சனம் முதலிய கிரியைகள் சம்பவிக்காது.
भाष्यम् - अस्तित्वे सिद्धे मनसः स्वरूपार्थमिदमुच्यते कामः स्त्रीव्यतिकराभिलाषादिः सङ्कल्पः प्रत्युपस्थितविषयविकल्पनं शुक्लनीलादिभेदेन, विचिकित्सा संशयज्ञानम्, श्रद्धा अदृष्टार्थेषु कर्मस्वास्तिक्यबुद्धिर्देवतादिषु च, अश्रद्धा तद्विपरीता बुद्धिः, धृतिर्धारणं देहाद्यवसादे उत्तम्भनम्, अधृतिस्तद्विपर्ययः ह्रीर्लज्जा, धीः प्रज्ञा, भीर्भयम्, इत्येतदेवमादिकं सर्वं मन एव, मनसोऽन्तःकरणस्य रूपाण्येतानि।
அனுவாதம்- மனதின் இருக்கும் தன்மை நிரூபித்தபின் அதன் ஸ்வரூபம் விளக்கப்படுகிறது. காமம்- ஸ்திரீயை அடைதல் முதலியவற்றில் உள்ள ஆசைகள், ஸங்கல்பம்- முன்னுள்ள விஷயங்களில் வெண்மை, நீலம் முதலிய பேதங்களால் விசேஷ கல்பனை செய்வது, விசிகித்சா- சந்தேஹத்துடன் கூடிய ஞானம், சிரத்தை- அதிருஷ்டமான கர்மங்களிலும் தேவதை முதலியவைகளிலும் உள்ள ஆஸ்திக புத்தி,(धृतिः) த்ருதி- தாங்குதல் அதாவது சரீரம் முதலியவைகள் சிதிலம் அடைந்தாலும் அதைத்தாங்கும் சக்தி, அத்ருதி- அதற்கு நேர்மாறானது, ஹ்ரீ:- வெட்கம், தீ:(धीः) பிரக்ஞை, பீ:(भीः) பயம் இவை எல்லாம் மனமேயாகும். இவை எல்லாம் மனதின் அதாவது அந்தக்கரணத்தின் ரூபங்களேயாகும்
भाष्यम्-मनोऽस्तित्वं प्रत्यन्यच्च कारणमुच्यते- तस्मान्मनो नामास्त्यन्तः- करणम्, यस्माच्चक्षुषो ह्यगोचरे पृष्द्भतोऽप्युपस्पृष्टः केनचिद् हस्तस्यायं स्पर्शो जानोरयमिति विवेकेन प्रतिपद्यते। यदि विवेककृन्मनो नाम नास्ति तर्हि त्वात्रेण कुतो विवेकप्रतिपत्तिः स्यात्? यत्तद्विवेकप्रतिपत्तिकारणम्, तन्मनः।
அனுவாதம்- மனம் இருக்கிறது என்பதற்கு மற்றுமொரு காரணம் கூறப்படுகிறது- ஆகையால் மனம் என்ற அந்தக்கரணம் இருக்கின்றது. எதனால் கண்களால் காணமுடியாத பின்பாகத்தில் ஸ்பரிசம் ஏற்பட்டதை அறிந்த மனிதன் விவேகத்தினால் இது யாருடைய கை என்று அறிகின்றான். விவேகம் செய்யும் மனம் இல்லையெனில் (தோலினால்) மட்டும் விவேக ஞானம் எவ்வாறு உண்டாகும்? இந்த விவேக ஞானம் உள்ளதால் மனம் இருக்கிறது என்று அறியப்படுகிறது.
भाष्यम्- अस्ति तावन्मनः, स्वरूपं च तस्याधिगतम्। त्रीण्यन्नानीह फलभूतानि कर्मणां मनोवाक्प्राणाख्यानि अध्यात्ममधिभूतमधिदैवं च व्याचिख्यासितानि। तत्र आध्यात्मिकानां वानःप्राणानां मनो व्याख्यातम्। अथेदानीं वाग्वक्तव्येत्यारम्भः-
அனுவாதம்- அதாவது மனம் இருக்கிறது. அதன் ஸ்வரூபமும் அறியப்பட்டது. கர்மாக்களின் பலன்களான மனோ வாக் பிராணன் எனப்படும் அத்யாத்ம, அதிபூத அதிதெய்வம் என்ற மூன்று அன்னங்கள் வியாக்கியானம் செய்யவேண்டியவை. இங்கு அத்யாத்மிகமான வாக், மனம், ப்ராணன் இவைகளில் மனம் வியாக்கியானம் செய்யப்பட்டது. ஆகையால் இப்பொழுது வாக்கை குறித்து விளக்குவதற்காக ஆரம்பிக்கப்படுகிறது.
भाष्यम्- यः कश्च लोके शब्दो ध्वनिस्ताल्वादिव्यः प्राणिभिर्वर्णादिलक्षण इतरो वा वादित्रमेघादिनिमित्तः सर्वो ध्वनिर्वागेव सा। इदं तावद्वाचः स्वरूपमुक्तम्? अथ तस्याः कार्यमुच्यते- एषा वाग्घि यस्मादन्तमभिधेयावसानमभिधेय-निर्णयमायत्तानुगता। एषा पुनः स्वयं नाभिधेयवत्प्रकाश्या अभिधेयप्रकाशिकैव, प्रकाशात्मकत्वात् प्रदीपादिवत्। न हि प्रदीपादिप्रकाशः प्रकाशान्तरेण प्रकाश्यते, तद्वद्वाक्प्रकाशिकैव स्वयं न प्रकाश्येत्यनवस्थां श्रुतिः परिहरति- एषा हि न प्रकाश्या। प्रकाशकत्वमेव वाचः कार्यामित्यर्थः।
அனுவாதம்- அந்த இந்த உலகத்தில் பிராணிகளின் தாடை முதலியவைகளால் வெளிப்படும் வர்ணங்கள் (எழுத்துக்கள்) முதலிய ரூப சப்தம் அதாவது த்வனி உள்ளதோ அவ்வாறே சங்கீத வாத்தியங்கள், மேகம் முதலியவைகளால் ஏற்படும் சப்தம் அனைத்துமே அந்த வாக்தான். இவ்வாறு வாக்கின் ஸ்வரூபம் கூறப்பட்டது. இப்பொழுது அதன் காரியம் கூறப்படுகிறது - ஏன்எனில் இந்த வாக்கின் உள் வார்த்தைகளை நிர்ணயிக்கும் இடம் உள்ளதோ அது அதன் உள்அடங்கி இருக்கின்றது. ஆனால் அது வார்த்தைகளைப்போல தன்னைப் பிரகாசப்படுத்த வேண்டியதில்லை. அது வார்த்தைகளையே பிரகாசிக்கச் செய்கின்றது. ஏன்எனில் தீபம் முதலியவைகளைப்போல் பிரகாச ஸ்வரூபமாய் இருக்கின்றது. தீபம் முதலியவைகள் வேறு பிரகாசங்களைக் கொண்டு பிரகாசிப்பதில்லை. அதைப்போல் வாக் ஸ்வயமாய் பிரகாசிக்கின்றது. தான் வேறு பிரகாசத்தால் அல்ல என்று சுருதியானது அநவஸ்தா தோஷத்தை நீக்குகிறது. “एषा हि न प्रकाश्या” (ஏஷா ஹி ந பிரகாƒயா) அந்த வாக் வேறு ஒன்றினாலும் பிரகாசப்படுத்துவது இல்லை. பிரகாசப்படுத்துவதே வாக்கின் காரியம் என்பது பொருள்.
भाष्यम् - अथ प्राण उच्यते- प्राणो मुखनासिकासञ्चार्या ह्य्दयवृत्तिःप्रणयनात्प्राणः, अपनयनान्मूत्रपुरीषादेरपानोऽधो-वृत्तिरानाभिस्थानः; व्यानो व्यायमनकर्मा व्यानः; प्राणापानयोः सन्धिवीर्यवत्कर्महेतुश्च; उदान उत्कर्षोर्ध्वगमनादिहेतुरापादतल-मस्तकस्थान उर्ध्ववृत्तिः, समानः समं नयनाद् भुक्तस्य पीतस्य च कोष्द्भस्थानोऽन्नपक्ता, अन इत्येषां वृत्तिविशेषाणां सामान्यभूता सामान्यदेहचेष्टाभिसम्बन्धिनी वृत्तिः, एवं यथोक्तं प्राणादिवृत्तिजातमेतत्सर्वं प्राण एव।
அனுவாதம்- இப்பொழுது பிராணன் கூறப்படுகிறது - பிராணன் முகம் மூக்கு இவைகளில் சஞ்சரிக்கும் (வாயு) இருதயம் வரையிலும் உள்ள விருத்தி. அது வெளியில் செல்வதால் பிராணன் எனப்படுகிறது. அபானன்- மல மூத்திரங்களை கீழே இழுத்துச்செல்லும் காரணமான வாயு நாபி வரையிலும் இருந்துகொண்டு கீழே செல்லும் விருத்தி. அது அபானன். வியானன் - வியாயமன கர்மா (பலத்தை அளிக்கும் கர்மா) வியானன். பிராணன் அபானன் இவைகளின் சந்தியாகும். அவ்வாறே வீரியமான கர்மத்திற்கு ஹேதுவாகிறது. உதானன் - புஷ்டி உடையதும் மேல் நோக்கி செல்லுவதற்கான ஹேதுவாகும். இதற்கு ஸ்தானம் பாதம் முதல் தலை வரையிலும் ஆகும். மேலே செல்லும் விருத்தி. சமானம்- சாப்பிட்டதையும், பருகியதையும் சமமாய் எடுத்துச் சென்று வயிற்றில் நன்றாக ஜீரணம் செய்யக்கூடியது. அன:(अनः) இது இந்த விசேஷ விருத்திகளின் சாமான்யமாய் இருந்து கொண்டு தேஹத்தின் சாமான்ய சேஷ்டைகளிடம் சம்பந்தம் உடைய விருத்தி, இவ்வாறு மேலே கூறப்பட்ட பிராணன் முதலிய எல்லா விருத்தி கூட்டமும் பிராணனேயாகும்.
भाष्यम्- प्राण इति वृत्तिमानाध्यात्मिकोऽन उक्तः। कर्म चास्य वृत्तिभेदप्रदर्शनेनैव व्याख्यातम्। व्याख्यातान्याध्यात्मिकानि मनोवाक्प्राणाख्यान्यन्नािन। एतन्मय एतद्विकारः प्राजापत्यै-रेतैर्वानः प्राणैरारब्धः। कोऽसौ? अयं कार्यकरणसात आत्मा पिण्ड आत्मस्वरूपत्वेनाभिमतोऽविवेकिभिः। अविशेषणैतन्मय इत्युक्तस्य विशेषेण वायो मनोमयः प्राणमय इति स्फुटीकरणम्।।
அனுவாதம்- பிராணன் என்பது விருத்தியுடன் கூடியது(अनः) அன என்று கூறப்படுகிறது. அந்த கர்மத்தின் விருத்தி பேதத்தைக் காண்பிப்பதற்காகவே வியாக்யானம் செய்யபட்டது. இவ்வாறு மனம், வாக், ப்ராணன் எனப்படும் ஆத்யாத்மிக அன்னங்களின் வியாக்கியானம் ஆகும். இந்த “மயம்” என்பது இதன் விகார அர்த்தமாய் இருப்பதால் இந்த பிராஜாபத்யமான வாக், மனம், பிராணன்களால் ஆரம்பம் ஆகின்றன. எது ஆரம்பம் ஆகிறது? காரியகரண சங்காதமான ஆத்மாவாகிய பிண்டம் (சரீரம்) ஆத்ம ஸ்வரூபமாக அவிவேகிகளால் கருதப்படுகிறது. சாமான்ய ரூபமாய்“एतन्मय” (ஏதன்மய- இந்த மயம்) என்று இவ்வாறு கூறியது வாக்மயம், மனோமயம், பிராணமயம் என்று ஸ்பஷ்டமாய் விளக்குவதற்காக ஆகும்.
अव - तेषामेव प्राजापत्यानामन्नानामाधिभौतिको विस्तारोऽभिधीयते-
அனுவாதம்- அ.கை- அந்த பிராஜாபத்ய அன்னங்களின் ஆதிபௌதிகம் விஸ்தாரமாய் கூறப்படுகிறது.
त्रयो लोका एत एव वागेवायं लोको मनोऽन्तरिक्षलोकः प्राणोऽसौ लोकः।। ४।।
மந்த்ரார்த்தம்- இவைகள் மூன்று லோகங்கள் ஆகும். வாக் இந்த லோகம், மனம் அந்தரிக்ஷம், பிராணன் அந்த (ஸ்வர்க்க) லோகம் ஆகும்.
भाष्यम् - त्रयो लोका भूर्भुवः स्वरित्याख्या एत एव वानःप्राणाः, तत्र विशेषो वागेवायं लोकः, मनोऽन्तरिक्षलोकः, प्राणोऽसौ लोकः।।
அனுவாதம்- பூ:(¦ÉÚ&) புவ:(भुवः) ஸ்வ:(स्वः) எனப்படும் மூன்று லோகங்கள் ஆகும். அவைகளின் விசேஷரூபமானது இவ்வாறாகும்- வாக் என்பது இந்த லோகம், மனம் என்பது அந்தரிக்ஷ லோகம், பிராணன் என்பது அந்த (ஸ்வர்க்க) லோகம் ஆகும்.
त्रयो वेदा एत एव वागेवर्ग्वेदो मनो यजुर्वेदः प्राणः सामवेदः।। ५।।
देवाः पितरो मनुष्या एत एव वागेव देवा मनः पितरः प्राणो मनुष्याः।। ६।।
पिता माता प्रजैत एव मन एव पिता वााता प्राणः प्रजा।। ७।।
மந்த்ரார்த்தம்- அவ்வாறே - மூன்று வேதங்கள் இவைகளே வாக் ரிக்வேதம், மனம் யஜுர்வேதம், பிராணன் சாமவேதம், (5) தேவதை, பித்ருக்கள், மனிதர்கள் அவைகளே. வாக்கே தேவதா, மனம் பித்ருக்கள், பிராணன் மனுஷ்யன் (6) பிதா, மாதா, பிரஜா இவைகளும் அவையே. மனம் பிதா வாக்மாதா, பிராணன் பிரஜை (7).
भाष्यम् - त्रयो वेदा इत्यादीनि वाक्यानि ऋज्वर्थानि।
அனுவாதம்- மூன்று வேதங்கள் முதலிய வாக்கியங்களின் அர்த்தம் சுலபமானது ஆகும்.
विज्ञातं विजिज्ञास्यमविज्ञातमेत एव यत्किञ्च विज्ञातं वाचस्तुद्रूपं वाग्घि विज्ञाता वागेनं तद्भत्वावति ।। ८।।
மந்த்ரார்த்தம்- விக்ஞானம், விஜிக்ஞாஸ்யம், அவிக்ஞாதம் என்பவைகள். எது அறியப்படுகிறதோ (விக்ஞாதம்) அது வாக்ரூபமாகும். வாக் விக்ஞாதா ஆகும். வாக் இதை (தன்னுடைய ஞாதாவை) அறிந்து ரக்ஷை செய்கிறது. (காப்பாற்றுகிறது.)
भाष्यम् - विज्ञातं विजिज्ञास्यमविज्ञातमेत एव। तत्र विशेषः- यत्किञ्च विज्ञातं विस्पष्टं ज्ञातं वाचस्तद्रूपम्। तत्र स्वयमेव हेतुमाह- वाग्घि विज्ञाता प्रकाशात्मकत्वात्। कथमविज्ञाता भवेद् यान्यानपि विज्ञापयति“वाचैव सम्राड्बन्धुः प्रज्ञायते” (४। १। २) इति हि वक्ष्यति।
அனுவாதம்- விக்ஞாதம், விஜிக்ஞாஸ்யம், அவிக்ஞாதம் என்னும் இவைகளாகும். இதன் விசேஷரூபம்- எது அறியப்படுகிறதோ அதாவது ஸ்பஷ்டமாக அறியப்படுகிறதோ அது வாக்ரூபமாகும். அதற்கான ஹேதுவை சுருதியே ஸ்வயமாக கூறுகிறது- பிரகாசரூபமாய் இருப்பதால் வாக் விக்ஞாதா, எது வேறு ஒன்றை அறிகிறதோ அது தன்னை அறியாதது அவிக்ஞாதம் ஆகும்.“वाचैव सम्राड्बन्धुः प्रज्ञायते” (வாசைவ சம்ராட்பந்து: பிரக்ஞாயதே) என்று கூறப்போகிறது.
भाष्यम् - वाग्विशेषविद इदं फलमुच्यते- वागेवैनं यथोक्तवाग्विभूतिविदं तद्विज्ञातं भूत्वा अवति पालयति, विज्ञातरूपेणैवास्यान्नं भोज्यतां प्रतिपद्यत इत्यर्थः।।
அனுவாதம்- வாக் விசேஷத்தை அறிவதால் உண்டாகும் பலன் கூறப்படுகிறது. வாக்கே இவ்வாறு கூறப்பட்ட வாக்கின் விபூதியை (ஐஸ்வரியத்தை) அறிவதால் அந்த விக்ஞாதத்தை அடைந்து பாலனம் செய்கின்றது. விக்ஞான ரூபத்தால் அந்த அன்னத்தை புஜிக்கும் தன்மையை அடையும் என்பது பொருள்.
तथायत्किञ्च विजिज्ञास्यं मनसस्तद्रूपं मनो हि विजिज्ञास्यं मन एनं तद्भत्वावति।। ९।।
மந்த்ரார்த்தம்- அவ்வாறே - எது எல்லாம் அறிய வேண்டியதோ அது மனதின் ரூபம். மனமே விஜிக்ஞாஸ்யம். மனம் விஜிக்ஞாஸ்யமாகி அதை ரக்ஷிக்கின்றது.
भाष्यम् - यत्किञ्च विजिज्ञास्यम्, विस्पष्टं ज्ञातुमिष्टं विजिज्ञास्यम्, तत्सर्वं मनसो रूपम्, मनो ही यस्मात्सन्दि-ह्यमानाकारत्वाद्विजिज्ञास्यम्। पूर्ववन्मनोविभूतिविदः फलम्- मन एनं तद्विजिज्ञास्यं भूत्वा अवति विजिज्ञास्यस्वरूपेणै-वान्नत्वमापद्यते।।
அனுவாதம்- எது அறியவேண்டுமோ அதை ஸ்பஷ்டமாக அறிவது விஜிக்ஞாஸ்யம் (विजिज्ञास्यम्) அவை எல்லாம் மனதின்ரூபம். எதனால் மனமானது சந்தேஹத்துடன் கூடியதாய் இருக்கிறதோ அது விஜிக்ஞாஸ்யம். முன்பு போல் மனதின் விபூதி கூறப்படுகிறது- மனம் அந்த விஜிக்ஞாஸ்யம் ஆகிரக்ஷிக்கிறது. விஜிக்ஞாஸ்ய ஸ்வரூபமாக அன்னத்துவத்தை அடைகிறது.
तथा- यत्किञ्चाविज्ञातं प्राणस्य तद्रूपं प्राणो ह्यविज्ञातः प्राणः एनं तद्भत्वावति।। १०।।
மந்த்ரார்த்தம்- அவ்வாறே- எது அறிந்ததோ அது பிராணனின் ரூபம். பிராணனே அவிக்ஞாதா. பிராணன் அவிக்ஞாதாவாகி அதை ரக்ஷிக்கின்றான்.
भाष्यम्-यत्किञ्चाविज्ञातं विज्ञानागोचरं न च सन्दिह्यमानम्, प्राणस्य तद्रूपम् प्राणोह्यविज्ञातोऽविज्ञातरूपो हि यस्मात्प्राणोऽनिरुक्तश्रुतेः।विज्ञातविजिज्ञास्याविज्ञातभेदेन वानःप्राणविभागे स्थिते त्रयो लोका इत्यादयो वाचनिका एव। सर्वत्र विज्ञातादिरूपदर्शनाद्वचनादेव नियमः स्मर्तव्यः।
அனுவாதம்- எது அறியப்படவில்லையோ அது அறியப்படாத விஷயம். அது சந்தேஹப்பட தகுந்தது அல்ல. அது பிராணனின் ரூபமாகும். பிராணன் அறியப்படாதவன். ஏன் எனில் அநிருக்தி சுருதியினால் பிராணன் அவிக்ஞாதம். இவ்வாறு விக்ஞாத, விஜிக்ஞாஸ்ய, அவிக்ஞாத பேதத்தால் வாக், மனம், பிராணன் இவைகளின் விபாகம் நிச்சயிக்கப்பட்டபொழுது“त्रयोलोकः” (த்ரயோலோக:) என்பவை எல்லாம் வாசிக மாத்திரமே (சொல் மாத்திரமே)யாகும். எங்கும் விக்ஞாதம் முதலிய ரூபதர்சன வசனத்தினால் நியமத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
भाष्यम्- प्राण एनं तद्भत्वा अवति- अविज्ञातरूपेणैवास्य प्राणोऽन्नं भवतीत्यर्थः। शिष्यपुत्रादिभिः सन्दिह्यमानाविज्ञातो-पकारा अपि आचार्यपित्रादयो दृश्यन्ते, तथा मनःप्राणयोरपि सन्दिह्यमानाविज्ञातयोरन्नत्वोपपत्तिः।।
அனுவாதம்- பிராணன் அந்த ரூபமாய் அதை ரக்ஷிக்கின்றது. அவிக்ஞாத ரூபமாய் அதற்கு அன்னம் ஆகிறது என்பது பொருள். சிஷ்யன் புத்திரன் இவர்களுக்கு சந்தேஹம், மற்றும் அஞ்ஞானமும் உபகார விஷயத்தில் உண்டாகிறது. அவ்வாறே ஆசாரிய, பிதாக்களிடத்திலும் உலகில் காணப்படுகிறது. அவ்வாறே சந்தேஹமும். அக்ஞானமும் உள்ள மனம் பிராணன்களுக்கும் சந்தேஹமும், அவிக்ஞாதமும் உள்ள மனமும் பிராணனும் அன்னமாதல் சம்பவிக்கும்.
अव- व्याख्यातो वानःप्राणानामाधिभौतिको विस्तारः। अथायमाधिदैविकार्थं आरम्भः-
அனுவாதம்- அ.கை- வாக், மனம், பிராணன் இவைகளின் ஆதிபௌதிகம் விஸ்தாரமாய் வியாக்கியானம் செய்யப்பட்டது. இப்பொழுது ஆதிதெய்விக விஷயம் ஆரம்பமாகிறது-
तस्यै वाचः पृथिवी शरीरं ज्योतीरूपमयमग्निस्तद्यावत्येव वाक्तावती पृथिवीतावानयमग्निः।। ११।।
மந்த்ரார்த்தம்- அந்த வாக்கினுடைய சரீரம் பிருதிவீ மேலும் அது அக்னி ஜ்யோதி ரூபமானது. எவ்வளவு வாக் உள்ளதோ அவ்வளவு பிருதிவீ. மேலும் அது அவ்வளவு அக்னி.
भाष्यम् - तस्यै तस्या वाचः प्रजापतेरन्नत्वेन प्रस्तुतायाः पृथिवी शरीरं बाह्य आधारः, ज्योतीरूपं प्रकाशात्मकं करणं पृथिव्या आधेयभूतमयं पार्थिवोऽग्निः। द्विरूपा हि प्रजापतेर्वाक्- कार्यमाधारोऽप्रकाशः करणं चाधेयं प्रकाशः, तदुभयं पृथिव्यग्नी वागेव प्रजापतेः।
அனுவாதம்- அந்த பிரஜாபதியின் அன்னமாய் ஸ்துதிக்கப்பட்ட வாக்கின் பிரிதிவீ சரீரம் பாஹ்ய ஆதாரம் ஆகும். பிருதிவியின் ஆதேய பூதமாய் இருப்பது பார்த்திவ அக்னி ஜ்யோதி ரூபமாயும். பிரகாசாத்மக கரணமாகும். பிரஜாபதியின் வாக் இரண்டு ரூபமாய் இருக்கின்றது. (1) காரியம், ஆதாரம், அப்பிரகாசம் (பிரகாசமற்றது) (2) கரணம். ஆதேயம், பிரகாசமானதும் ஆகும். அந்த பிருதிவீ அக்னி இரண்டும் பிரஜாபதியின் வாக் ஆகும்.
भाष्यम् - तत्तत्र यावत्येव यावत्परिमाणैव अध्यात्माधि-भूतभेदभिन्ना सती वाग्भवति, तत्र सर्वत्र आधारत्वेन पृथिवी व्यवस्थिता, तावत्येव भवति कार्यभूताः, तावानयमग्निः, आधेयः करणरूपो ज्योतीरूपेण पृथिवीमनुप्रविष्टस्तावानेव भवति। समानमुत्तरम्।।
அனுவாதம்- அதில் எவ்வளவு பரிமாணம் (அளவு) அந்த அளவிற்கு அத்யாத்ம அதிபூத பேதத்தால் பின்னம் ஆகக்கூடியது வாக் அதில் எங்கும் அதன் ஆதாரரூபமாய் இருக்கும். பிருதிவீ எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கே காரிய பூதமாகிய பிருதிவியும் இருக்கின்றது. அவ்வளவே அக்னியும். ஜ்யோதிரூபமாய் பிருதிவியில் ஊடுருவிய ஆதேயம் மற்றும் காரணரூப அக்கினியும் அந்த அளவேயாகும். இனிவரும் விஷயத்திலும் இவ்வாறே அறிந்துகொள்ள வேண்டும்.
अथैतस्य मनसो द्यौः शरीरं ज्योतीरूपमसावादित्य-स्तद्यावदेव मनस्तावती द्यौस्तावानसावादित्यस्तौ मिथुन ँ्समैतां ततः प्राणोऽजायत स इन्द्रः स एषोऽसपत्नो द्वितीयो वै सपत्नो नास्य सपत्नो भवति य एवं वेद ।। १२।।
மந்த்ரார்த்தம்- (இந்திரரூப பிராணத்தின் உத்பத்தியும், உபாஸனையின் பலனும்) அவ்வாறு இந்த மனதின் த்யுலோக சரீரம் ஜ்யோதி ரூபம் அது ஆதித்யன். அங்கு எவ்வளவு மனம் இருக்கிறதோ அவ்வளவு த்யுலோகமும் அவ்வளவே ஆதித்யனும் ஆகும். அவை (ஆதித்யன், அக்னி) மிதுனத்தை அடைந்தது. அப்பொழுது பிராணன் உத்பத்தியானது. அது இந்திரன். அது சத்ரு அற்றது. வேறு ஒன்று தான் (அதாவது பிரதிபக்ஷி) சத்ரு உடையதாகும். எவர் இவ்வாறு அறிகிறார்களோ அவர்களுக்கு சத்ருக்கள் இருக்கமாட்டார்கள்.
भाष्यम् - अथैतस्य प्राजापत्यान्नोक्तस्यैव मनसो द्यौर्द्युलोकः शरीरं कार्यमाधारः, ज्योतीरूपं करणमाधेयोऽसावादित्यः। तत्तत्र यावत्परिमाणमेव अध्यात्ममधिभूतं वा मनस्तावती तावद्विस्तारा तावत्परिमाणा मनसो ज्योतीरूपस्य करणस्य आधारत्वेन व्यवस्थिता द्यौः, तावानसावादित्यो ज्योतीरूपं करणमाधेयम्।
அனுவாதம்- அவ்வாறு இந்த பிராஜாபத்திய அன்ன ரூபமாய் கூறப்படும் இந்த மனன்“द्यौः” (த்யௌ:) த்யுலோகம் சரீரம், கார்யம் அதாவது ஆதாரம் மேலும் ஆதித்ய ஜ்யோதிரூப கரணமும் ஆதேயமும் ஆகும். இதில் எவ்வளவு பரிமாணம் உள்ளதோ அந்த அளவு விஸ்தாரம் உள்ளது அத்யாத்ம, அதிபூத மனம் ஆகும். அந்த பரிமாணம் உள்ள மனதின் ஜ்யோதிரூபம் அந்த கரணத்தின் ஆதார ரூபமாய் இருப்பது த்யுலோகம். அவ்வளவு ஜ்யோதிரூப கரணமாகிய ஆதேயம் ஆதித்யன்.
भाष्यम् - तावग्न्यादित्यौ वानसे आधिदैविके मातापितरौ, मिथुनं मैथुन्यमितरेतरसंसर्गं समैतां समगच्छेताम्।“मनसा आदित्येन प्रसूतं पित्रा, वाचाग्निना मात्रा प्रकाशितं कर्म करिष्यामि” इति, अन्तरा रोदस्योः। ततस्तयोरेव सङ्गमनात्प्राणो वायुरजायत परिस्पन्दाय कर्मणे।
भाष्यम्- यो जातः स इन्द्रः परमेश्वरः न केवलमिन्द्र एवासपत्नोऽविद्यमानः सपत्नो यस्य, कः पुनः सपत्नो नाम? द्वितीयो वै प्रतिपक्षत्वेनोपगतः स द्वितीय सपत्न इत्युच्यते। तेन द्वितीयत्वेऽपि सति वानसे न सपत्नत्वं भजेते, प्राणं प्रति गुणभावोपगते एव हि ते अध्यात्ममिव।
அனுவாதம்- எது பிறந்ததோ அது இந்திரன் அதாவது பரமேƒவரன். கேவலம் இந்திரன் மட்டும் அல்ல அசபத்னன் (சத்ரு அற்றவன்) அதற்கு சத்ருவே கிடையாது. ஆனால் யார் சபத்னன் (சத்ரு உடையவன்). இரண்டாவதாய் பிரதிபக்ஷ பாவம் உடையதே சபத்னம் எனப்படுகிறது. ஆகையால் வாக், மனதும் அதைக்காட்டிலும் வேறாய் இருந்தாலும் அதனுடன் சத்ருத்தன்மை கிடையாது. அந்த அத்யாத்ம மனம், வாக் இரண்டிற்கும் சமானமான பிராணனும் கௌண பாவத்தை அடைகிறது.
भाष्यम्-तत्र प्रासिङ्गकासपत्नविज्ञानफलमिदम्- नास्यविदुषः सपत्नः प्रतिपक्षो भवति, य एवं यथोक्तं प्राणमसपत्नं वेद।।
அனுவாதம்- அங்கு கூறப்பட்டவாறு அடைந்த அசபத்ன விக்ஞான பலம் இதுவாகும்- இவ்வாறு எவன் கூறியவாறு அறிந்தானோ அந்த வித்வானுக்கு சத்ருவாகிய பிரதிபக்ஷம் என்பது கிடையாது. (சபத்னம் என்றால் சத்ருவுடன் கூடியது).
अथैतस्य प्राणस्यापः शरीरं ज्योतीरूपमसौ चन्द्रस्तद्यावानेव प्राणस्तावत्य आपस्तावानसौ चन्द्रस्त एते सर्वं एव समाः सर्वेऽनन्ताः स यो हैतानन्तवत उपास्तेऽन्तवन्त ्ँ स लोकं जयत्यथ यो हैताननन्तानुपास्तेऽनन्त ्ँ स लोकं जयति।। १३।।
மந்த்ரார்த்தம்- அவ்வாறே இந்தப் பிராணனுக்கு ஜலம் சரீரம். அந்த சந்திரன் ஜ்யோதிரூபம். எங்கு எவ்வளவு பிராணன் இருக்கின்றதோ அவ்வளவு ஜலம், அவ்வளவே சந்திரன். அவை எல்லாம் சமானமானதும், எல்லாம் அனந்தமானதும் ஆகும். எவன் ஒருவன் அதை அந்தமுடையது என்று உபாசனை செய்கின்றானோ அவன் அந்தமுடைய லோகத்தில் ஜெயத்தை அடைகின்றான். மேலும் எவன் அனந்தம் (அந்தம் அற்றது) என்று அறிந்து உபாசிக்கின்றானோ அவன் அனந்த லோகத்தை ஜெயிக்கின்றான்.
भाष्यम्- अथैतस्य प्रकृतस्य प्राजापत्यान्नस्य प्राणस्य, न प्रजोक्तस्यानन्तरनिर्दिष्टस्य, आपः शरीरं कार्यं करणाधारः पूर्ववोतीरूपमसौ चन्द्रः। तत्र यावानेव प्राणो यावत्परिमाणोऽ-ध्यात्मादिभेदेषु, तावाप्तिमत्य आपःतावत्परिमाणाः तावानसौ चन्द्रोऽबाधेयस्तास्वप्स्वनुप्रविष्टः करणभूतोऽध्यात्ममधिभूतं च तावाप्तिमानेव। तान्येतानि पित्रा पाङ्क्तेन कर्मणा सृष्टानि त्रीण्यन्नानि वानः प्राणाख्यानि। अध्यात्ममधिभूतं च जगत्समस्तमेतैर्व्याप्तम्, नैतेभ्योऽन्यदतिरिक्तं कििञ्चदस्ति कार्यात्मकं करणात्मकं वा। समस्तानि त्वेतानि प्रजापतिः।
அனுவாதம்- அவ்வாறு இவ்விதமாக விளக்கப்பட்ட பிரஜாபதியின் அன்னரூப பிராணனின் அதாவது இங்கு பிரஜாரூபமாய் கூறப்பட்ட பிராணன் அல்ல. இதன் (பிராணனின்) ஜலம், சரீரம் காரியம், கரண ஆதாரம் ஆகும். முன்பு போல் அந்த சந்திரன் ஜ்யோதி ரூபமாகும். அங்கு எவ்வளவு பிராணன் அதாவது எவ்வளவு அத்யாத்ம முதலிய பேதங்கள் உள்ளதோ அவ்வளவு பரிமாணம் உள்ளது (பிராணன்). எவ்வளவு வியாப்தமோ அவ்வளவு ஜலத்தின் ஆதேயம். அந்த ஜலத்தில் அனுப்பிரவேசித்தது அதன் கரண பூதமான அத்யாத்ம, அதிபூத சந்திரனாகும். அதுவும் அவ்வளவு வியாபித்திருக்கின்றது. அந்த வாக், மனம், பிராணன்கள் எனப்படும் மூன்று அன்னங்கள் ஆகிய இவைகளை பிதா பாங்க்தம் என்னும் கர்மத்தால் சிருஷ்டித்தார். அத்யாத்ம அதிபூதமாகிய ஜகத் முழுவதும் அதனால் வியாபிக்கப்பட்டுள்ளது. இந்த வியாபிக்கப்பட்டவைகளைத் தவிர வேறு காரிய ரூபமோ, கரண ரூபமோ சிறிதளவும் கிடையாது. இவை எல்லாம் பிரஜாபதியே.
भाष्यम्-त एते वानःप्राणाः सर्वे एव समास्तुल्या व्याप्तिमन्तो यावत्प्राणिगोचरं साध्यात्माधिभूतं व्याप्य व्यवस्थिताः। अत एवानन्ता यावत्संसारभाविनो हि ते। न हि कार्यकरणप्रत्याख्यानेन संसारोऽवगम्यते। कार्यकरणात्मका हि त इत्युक्तम्।
அனுவாதம்- அந்த வாக், மனம், பிராணன்கள் இவைகள் எல்லாமே சமமாய் வியாபிப்பவைகளே. அத்யாத்ம அதிபூதம் இவைகளுடன் எதுவரையில் பிராணிகளுக்கு விஷயமாகிறதோ அதுவரை எல்லாம் வியாபித்து இருக்கின்றது. ஆகையால் அது அநந்தம். இதன் பொருள் என்னவெனில் ஸம்சாரத்தின் ஸ்திதி உள்ளவரையில் நிலைத்திருப்பதாகும். ஏனெனில் காரிய கரணங்களை விட்டு ஸம்ஸாரம் என்பது அறிய முடியாதது. அவை காரிய கரண ஆத்மகமானது.
भाष्यम् - स यः किश्चद् हैतान्प्रजापतेरात्मभूतानन्तवतः परिच्छिन्नानध्यात्मरूपेण वा अधिभूतरूपेण वोपास्ते, स च तदुपासनानुरूपमेव फलमन्तवन्तं लोकं जयति, परिच्छिन्न एव जायते नैतेषामात्मभूतो भवतीत्यर्थः। अथ पुनर्यो हैताननन्तान्सर्वात्मकान्सर्वप्राण्यात्मभूतान् अपरिच्छिन्नानुपास्ते सोऽनन्तमेव लोकं जयति।
அனுவாதம்- எந்த ஒருவன் பிரஜாபதியின் ஸ்வரூபத்தை எல்லோருக்கும் அந்தம் உடையது (முடிவு உடையது என்று) என்றும் பரிச்சின்னம் என்று அறிந்து அத்யாத்ம அதிபூத ரூபமாய் உபாசனை செய்கின்றானோ அவன் அந்த உபாசனைக்குத் தகுந்தவாறு உள்ள பலனை அந்த(முடிவு)முடைய லோகத்தை அடைகிறான். அதாவது பரிச்சின்ன ரூபமாய் உண்டாகின்றான். மேலும் எல்லாவற்றிகும் ஆத்ம பூதமாக மாட்டான். எவன் ஒருவன் அநந்த (முடிவு அற்ற), ஸர்வாத்மக, எல்லா பிராணிகளின் ஆத்ம பூதமாய் அதாவது அபரிச்சின்னமாய் உள்ள ரூபத்தை உபாசனை செய்கிறானோ அவன் அநந்த லோகத்தை ஜெயிக்கின்றான் (அடைகின்றான்).
अव- पिता पाङ्क्तेन कर्मणा सप्तान्नानि सृट्वा त्रीण्यन्नान्यात्मार्थमकरोदित्युक्तम्। तान्येतानि। पाङ्क्तकर्मफल-भूतानि व्याख्यातानि। तत्र कथं पुनः पाङ्क्तस्य कर्मणः फलमेतानि? इति उच्यते- यस्मात्तेष्वपि त्रिष्वन्नेषु पाङ्क्त-तावगम्यते, वित्तकर्मणोरपि तत्र सम्भवात्। तत्र पृथिव्यग्नी माता, दिवादित्यौ पिता। योऽयमनयोरन्तरा प्राणः, स प्रजेति व्याख्यातम्। तत्र वित्तकर्मणी सम्भावयितव्ये इत्यारम्भः-
அனுவாதம்- அ.கை- பிதா பாங்க்த கர்மத்தினால் ஏழு அன்னங்களை சிருஷ்டித்து அதில் மூன்று அன்னங்களை தனக்காக செய்துகொண்டார் என்று கூறப்பட்டது. அந்த இந்த பாங்க்த கர்மபல பூதங்கள் வியாக்யானம் செய்யப்பட்டது. ஆனால் அந்த பாங்க்த கர்மத்தின் பலன் எவ்வாறானது? என்று கூறப்படுகிறது.- ஏனெனில் அந்த மூன்று அன்னங்களிலும் பாங்க்தம் காணப்படுகிறது. (ஆகையால் அது பாங்த்தம்) இதற்கு காரணம் வித்தம், கர்மமும் அதில் சம்பவிக்கின்றது. இங்கு பிருதிவியும் அக்னியும் மாதா. த்யுலோகமும் ஆதித்யனும் பிதா. இந்த இரண்டின் நடுவில் எது உள்ளதோ அது பிராணன். இது பிரஜா என்று வியாக்கியானம் செய்யப்பட்டது. இங்கு வித்தம், கர்மா இரண்டும் சம்பவிக்க வேண்டும் என்பதற்காக இனி ஆரம்பிக்கப்படுகிறது.
स एष संवत्सरः प्रजापतिः षोडशकालस्तस्य रात्रय एव पञ्चदश कला ध्रुवैवास्य षोडशी कला स रात्रिभिरेवा च पूर्यतेऽप च क्षीयते सोऽमावास्या ँ्रात्रिमेतया षोडश्या कलया सर्वमिदं प्राणभृदनुप्रविश्य ततः प्रातर्जायते तस्मादेता ्ँ रात्रिं प्राणभृतः प्राणं न विच्छिन्द्यादपि कृकलासस्यैतस्या एव देवताया अपचित्यै।।१४।।
மந்த்ரார்த்தம்- அந்த இந்த ஸம்வத்ஸர பிரஜாபதி பதினாறு கலைகள் உடையவர். அதற்கு இரவில் பதினைந்து கலைகள், அந்த பதினாறாவது கலை நித்யம் ஆகும். அது இரவுகளின் மூலமாய் (சுக்ல பக்ஷத்தில்) விருத்தியை அடைகிறது. அவ்வாறே (கிருஷ்ண பக்ஷத்தில்) குறைகிறது. அமாவாசை இரவில் அந்த பதினாறு கலைகளும் எல்லா பிராணிகளிலும் அனு (தொடர்ந்து) பிரவேசித்து மறுநாள் காலையில் உத்பன்னமாகிறது. ஆகையால் அந்த இரவில் எந்தப் பிராணியின் பிராணனையும் நீக்கக்கூடாது. அதுவரையிலும் தேவதையின் பூஜைக்காக (இந்த இரவில்) ஓணானின் பிராணனையும் சிதைக்கக்கூடாது
भाष्यम् -“स एष संवत्सरः” योऽयं त्र्यान्नात्मा प्रजापतिः प्रकृतः, स एष संवत्सरात्मना विशेषतो निर्दिश्यते। षोडशकलः षोडश कला अवयवा अस्य सोऽयं षोडशकलः संवत्सरः संवत्सरात्मा कालरूपः।
அனுவாதம்-“स एष संवत्सरः” (ஸ ஏஷ ஸம்வத்ஸர:) எந்த அந்த மூன்று அன்ன ரூபமான பிரஜாபதி கூறப்பட்டதோ அந்த இந்த ஸம்வத்ஸர ரூபமாய் விசேஷமாய் நிர்தேசம் செய்யப்படுகிறது. ஷோடச கலை என்றால் பதினாறு கலை. அதாவது அவயவம் எதற்கோ அது இந்த ஷோடச கலையாகிய ஸம்வத்ஸர: ஸம்வத்ஸர ரூபமே காலரூபம்.
भाष्यम् - तस्य च कालात्मनः प्रजापतेः रात्रय एवाहोरात्राणि, तिथय इत्यर्थः, पञ्चदश कलाः। ध्रुवैव नित्यैव व्यवस्थिता अस्य प्रजापतेः षोडशी षोडशानां पूरणी कला। स रात्रिभिरेव तिथिभिः कलोक्ताभिरापूर्यते चापक्षीयते च। प्रतिपदाद्याभिर्हि चन्द्रमाः प्रजापतिः शुक्लपक्ष आपूर्यते कलाभिरुपचीयमानाभिर्वर्धते यावत्सम्पूर्णमण्डलः पौर्णमास्याम्। ताभिरेवापचीयमानाभिः कलाभिरपक्षीयते कृष्णपक्षे यावद् ध्रुवैका कला व्यवस्थिता अमावास्यायाम्।
அனுவாதம்- கால ரூபமான பிரஜாபதிக்கு ராத்ரிகளே அஹோராத்ரிகள் அதாவது திதி என்று பொருள். அவை பதினைந்து கலைகள். இந்த பிரஜாபதியின் பதினாறு கலைகளில் பூர்ணமான கலை துருவா அதாவது நித்யமானதாய் இருக்கின்றது. அந்த ராத்திரியில் அதாவது கலை எனப்படுபவைகளால் திதிகளுடன் முழுமை (பூர்ணம்) அடைகிறது, குறைகிறது. அந்த சந்திரனாகிய பிரஜாபதி சுக்ல பக்ஷத்தில் பிரதிபத் (பிரதமை) முதலிய திதிகளால் பெருகுகிறது. மேலும் கலைகளால் பெருகி பெரிதாகி பௌர்ணமியில் பூர்ண மண்டலாகாரமாகின்றது. அவ்வாறே குறைந்து கொண்டே அதன் கலைகளின் மூலமாய் கிருஷ்ணபக்ஷத்தில் கிரமமாய் அமாவாசையை அடையும் வரை க்ஷீணமாகிறது. அமாவாசையில் ஒரு த்ருவா (நித்யா) கலை ஒன்றே இருக்கின்றது.
भाष्यम् - स प्रजापतिः कालात्मा अमावस्याममावास्यायां रात्रिं रात्रौ या व्यवस्थिता ध्रुवा कलोक्ता एतया षोडश्या कलया सर्वमिदं प्राणभृत्प्राणिजातमनुप्रविश्य यदपः पिबति यच्चौषधीरश्नाति तत्सर्वमेव ओषध्यात्मना सर्वं व्याप्यामावास्यां रात्रिमवस्थाय ततोऽपरेद्युः प्रातर्जायते द्वितीयया कलया संयुक्तः।
அனுவாதம்- அந்த காலாத்மரூப பிரஜாபதி அமாவாசை ராத்திரியில் முன்பு கூறப்பட்ட துருவா (நித்யா) எனப்படும் பதினாறாவது கலையினால் இந்த எல்லா பிராணனை தாங்குகின்ற அதாவது பிராணிகளுள் அனுப்பிரவேசித்து ஜலம் குடிக்கின்றது. ஔஷதிகளை சாப்பிடுகிறது. அந்த எல்லா ஔஷதி ரூபமாய் வியாபித்திருக்கும் அமாவாசை ராத்திரியில் இருந்துகொண்டு மறுநாள் அதிகாலையில் இரண்டாவது கலையுடன் கூடி உத்பன்னமாகின்றது.
भाष्यम् - एवं पाङ्क्तात्मकोऽसौ प्रजापतिः। दिवादित्यौ मनः पिता पृथिव्यग्नी वाग्जाया माता तयोश्च प्राणः प्रजा। चान्द्रमस्यस्तिथयः कला वित्तम्, उपचयापचयधर्मित्वाद्वित्तवत्। तासां च कलानां कालावयवानां जगत्परिणामहेतुत्वं कर्म। एवमेष कृत्स्नः प्रजापतिः“जाया मे स्यादथ प्रजायेयाथ वित्तं मे स्यादथ कर्म कुर्वीय” (बृ० उ० १। ४। १७) इत्येषणानुरूप एव पाङ्क्तस्य कर्मणः फलभूतः संवृत्तः। कारणानुविधायि हि कार्यमिति लोकेऽपि स्थितिः।
அனுவாதம்- இவ்வாறு இந்த பிரஜாபதி பாங்க்த ரூபமாய் இருக்கின்றார். த்யுலோகமும், ஆதித்யனும். மனமும் பிதா, ப்ருதிவியும் அக்னியும், வாக்கும் ஜாயா - மாதா. அவ்விருவர்களுடைய பிராணன் பிரஜை. சந்திரனுடைய திதிகள் வித்தம். பெருகும் தன்மையும், குறையும் தன்மையும் செல்வத்திற்கு உள்ளது போல் இருப்பதால் சந்திரனின் திதிகள் வித்தமாகும். அந்த கால அவயவங்கள் ரூபமான கலைகளின் ஜகத் பரிணாம காரணம் கர்மமாகும். இவ்வாறு அந்த சம்பூர்ண பிரஜாபதி“जाया मे स्यादथ प्रजायेयाथ वित्तं मे स्यादथ कर्म कुर्वीय” (ஜாயா மே ஸ்யாதத பிரஜாயேயாத வித்தம் மே ஸ்யாதத கர்ம குர்வீய) இவ்வாறு ஏஷணைக்கு (இச்சைக்கு) தகுந்தவாறே பாங்க்த கர்மத்தின் பலனுடையதாகிறது. காரணத்தை அனுசரித்தே காரியம் என்பதான ஸ்திதி உலகத்திலும் காணப்படுகிறது.
भाष्यम्- यस्मादेष चन्द्र एतां रात्रिं सर्वप्राणिजात-मनुप्रविष्टो ध्रुवया कलया वर्तते, तस्माद्धेतोरेताममावास्यां रात्रिं प्राणभृतः प्राणिनः प्राणं न विच्छिन्द्यात्प्राणिनं न प्रमापयेदित्येतत्, अपि कृकलासस्य कृकलासो हि पापात्मा स्वभावेनैव हिंस्यते प्राणिभिर्दृष्टोऽप्यमङ्गल इति कृत्वा।
அனுவாதம்- எதனால் இந்த சந்திரன் இந்த ராத்திரியில் எல்லா பிராணிகளின் உள்ளும் பிரவேசித்து துருவா (நித்யா) என்னும் கலையாய் இருக்கின்றதோ அதனால் அதாவது அந்தக் காரணத்தால் அந்த ராத்திரி சமயத்தில் பிராணன் தரிக்கும் பிராணிகளின் பிராணனை நீக்கக்கூடாது. அதாவது ஓணான் போன்ற பாவஜீவனாய் இருந்தாலும் அதை கொல்லுவது பாபம் ஆகும். ஆகையால் எந்த ஒரு பிராணியையும் மரணமடையச் செய்யக்கூடாது. ஓணான் பாப பிராணி ஆகையால் அதைப் பார்த்த உடன் கொல்லலாம் என்று நினைப்பதே அமங்கல ரூபமாகும். ஆகையால் ஒரு பிராணியையும் இம்சை செய்யக்கூடாது.
भाष्यम् - ननु प्रतिषिद्धैव प्राणिहिंसा“अहिंसन् सर्वभूतान्यन्यत्र तीर्थेभ्यः” (छा० उ० ८। १५। १) इति।
அனுவாதம்- ஆனால்“अहिंसन् सर्वभूतान्यन्यत्र तीर्थेभ्यः” (அஹிம்ஸன் ஸர்வபூதான்யன்யத்ர தீர்த்தேப்ய:) என்ற இந்த சுருதி வசனத்தின்படி ஹிம்சை சாமான்யமாய் நிஷித்தம் செய்யப்பட்டுள்ளது. (இவ்வாறு இருக்கும் பொழுது இங்கு இதைத் தனியாக பிரித்துக் கூறுவது எதற்காக?)
भाष्यम् - बाढं प्रतिषिद्धा, तथापि नामावास्याया अन्यत्र प्रतिप्रसवार्थं वचनं हिंसायाः कृकलासविषये वा, किं तर्हि? एतस्याः सोमदेवताया अपचित्यै पूजार्थम्।।
அனுவாதம்- சமாதானம்- ஆம். இங்கு பிரதிசித்தமே. ஆனாலும் அமாவாசை அற்ற சமயத்தில் எல்லா பிராணிகளையும் அல்லது ஓணான் இவைகளை இம்சை செய்யலாம் என்று விசேஷமாய் கூறவில்லை. பின் எதற்காக அமாவாசையில் செய்யவேண்டாம் என்று கூறப்பட்டது? எனில் சந்திரதேவனின் குறையும் தன்மையை பூஜிப்பதற்காகக் கூறப்பட்டது. (பெருமைப் படுத்துவதற்காக)
यो वै स संवत्सरः प्रजापतिः षोडशकलोऽयमेव स योऽयमेवंवित्पुरुषस्तस्य वित्तमेव पञ्चदश कला आत्मैवास्य षोडशी कला स वित्तेनैवा च पूर्यतेऽप च क्षीयते तदेतन्नभ्यं यदयमात्मा प्रधिर्वित्तं तस्माद्यद्यपि सर्वज्यानिं जीयत आत्मना चेज्जीवति प्रधीनागादित्येवाहुः ।।१५।।
மந்த்ரார்த்தம்- எந்த இந்த பதினாறு கலைகளுடன் கூடிய ஸம்வத்ஸர பிரஜாபதி என்று இவ்வாறு அறிகின்றானோ அந்த புருஷனே ஆகின்றான். வித்தம் அதன் பதினைந்து கலைகள். அவ்வாறே ஆத்மா (சரீரம்) என்பது பதினாறு கலைகளும் ஆகும். அந்த வித்தத்தால் (செல்வத்தால்) வளர்கின்றான், க்ஷீணம் ஆகின்றான். அந்த ஆத்மா (பிண்டம்) வாய் இருக்கிறது. அது நாபி (ரதநாபி) போன்று ரூபமாய் இருக்கிறது. மேலும் வித்தம் சக்கிரத்தின் ஆரகால்கள்போல் இருக்கின்றது. எல்லா சொத்துக்களும் குறைந்தாலும் சரீரத்தில் உயிருடன் இருப்பானாகிய வித்தம் (சொத்துக்கள்) மறுபடியும் வந்து சேரும். (மறுபடியும்) சம்பாதிப்பான் என்பது ஆகும்.
भाष्यम् - यो वै परोक्षाभिहितः संवत्सरः प्रजापतिः षोडशकलाः स नैवात्यन्तं परोक्षो मन्तव्यः, यस्मादयमेव स प्रत्यक्ष उपलभ्यते। कोऽसावयम्? यो यथोक्तं त्र्यन्नात्मकं प्रजापतिमात्मभूतं वेत्ति स एवंवित्पुरुषः।
அனுவாதம்- எவன் பதினாறு கலைகள் உடைய ஸம்வத்ஸர பிரஜாபதி பரோக்ஷரூபமாய் கூறப்படுகிறாரோ அவர் முற்றிலுமாய் பரோக்ஷமாய் இல்லை என்று அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் பிரத்யக்ஷமாய் அடையப்படுகிறது. அந்த இது யார்? மேலே கூறப்பட்ட அன்னாத்மக பிரஜாபதியை ஆத்ம ரூபமாய் யார் அறிகிறார்களோ அவர் இவ்வாறு அறிந்த புருஷன் ஆவான்.
भाष्यम् - केन सामान्येन प्रजापतिरिति तदुच्यते- तस्यैवंविदः पुरुषस्य गवादि वित्तमेव पञ्चदश कला उपचयापचयधर्मित्वात्, तद्वित्तसाध्यं च कर्म। तस्य कृत्स्नतायै आत्मैव पिण्ड एवास्य विदुषः षोडशी कला ध्रुवस्थानीया। स चन्द्रविद्वित्तेनैवापूर्यते चापक्षीयते च- तदेतल्लोके प्रसिद्धम्।
அனுவாதம்- எதனால் பிரஜாபதி சமானம் என்று கூறப்படுகிறது என்பதைக் கூறப்போகிறார்- அதை இவ்வாறு அறிந்தவன், புருஷனுடைய பசு முதலிய செல்வம் பெருகுவதும், குறைவதுமாய் இருப்பதால் பதினைந்து கலைகள் உடையது. கர்மம் அந்த செல்வத்தின் சாத்யம். அதன் பூர்ணத்திற்காக வித்வானுடைய ஆத்மாவாகிய பிண்டமே ஷோட†கலைகள் (பதினாறு கலைகள்) துருவஸ்தானமாம். அது சந்திரனைப்போல் செல்வத்தால் பெருகியும், குறைந்தும் காணப்படுவது உலக பிரசித்தம்.
भाष्यम् - तदेतन्नभ्यम्, नाभ्यै हितं नभ्यं नाभिं वा अर्हतीति। किं तत्? यदयं योऽयमात्मा पिण्डः। प्रधिर्वित्तं परिवारस्थानीयं बाह्यं चक्रस्येवारनेम्यादि। तस्माद्यद्यपि सर्वज्यानिं सर्वस्वापहरणं जीयते हीयते ग्लानिं प्राप्नोति, आत्मना चक्रनाभिस्थानीयेन चेद्यदि जीवति प्रधिना बाह्येन परिवारेणायमगात्क्षीणोऽयं यथा चक्रमरनेमिविमुक्तमेवमाहुः। जीवंश्चेद् अरनेमिस्थानीयेन वित्तेन पुनरुपचीयत इत्यभिप्रायः।।
அனுவாதம்- அந்த இது நாபி ஆகும். நாபி ஹிதமாயும், அருகதையாயும் இருக்கிறது. அது என்ன? எந்த இந்த ஆத்மா பிண்டம். பரிவாரங்கள் இருக்கக்கூடிய வெளியில் உள்ள சக்கிரம் போல் ஆரங்களும் நாபி முதலியவைகள். ஆகையால் இவையெல்லாம் இழுத்துச் செல்லப்படும் பாஹ்ய சக்கிரங்கள் போல் ஆர நாபி முதலியவைகள். ஆகையால் ஜீவித்திருக்கும்பொழுது இவை எல்லாம் இழுத்துச் செல்லப்படும் பொழுது எல்லாவற்றையும் இழந்துவிடுகிறான். ஆத்மாவால் சக்ரநாபி தானியத்தால் ஜீவிக்கின்றபொழுது பாஹ்ய பரிவாரத்தால், இழுத்துச் செல்லப்பட்டு க்ஷயமான அது அரநேமி இல்லாத சக்கரம் போல் ஆகும். ஜீவித்திருக்கும் பொழுது அரநேமி ஸ்தானீயமான வித்தத்தால் (செல்வத்தால்) மறுபடியும் உபஜீவிக்கின்றான் என்பது அபிப்பிராயம் (பொருள்).
अव - एवं पाङ्क्तेन दैववित्तविद्यासंयुक्तेन कर्मणा त्र्यन्नात्मकः प्रजापतिर्भवतीति व्याख्यातम्। अनन्तरं च जायादिवित्तं परिवारस्थानीयमित्युक्तम्। तत्र पुत्रकर्मापरविद्यानां लोकप्राप्ति-साधनत्वमात्रं सामान्येनावगतम्, न पुत्रादीनां लोकप्राप्तिफलं प्रति विशेषसम्बन्धनियमः। सोऽयं पुत्रादीनां साधनानां साध्यविशेषसम्बन्धो वक्तव्य इत्युत्तरकण्डिका प्रणीयते।
அனுவாதம்- அ.கை- இவ்வாறு தைவம், வித்தம், வித்யா இவைகளுடன் கூடிய பாங்க்த கர்ம வாயிலாய் பிரஜாபதி அன்னரூபம் என்பது வியாக்கியானம் செய்யப்பட்டது. அதன்பின் பரிவார ஸ்தானீயங்களான ஜாயா (ஸ்திரீ), முதலிய வித்தங்களின் வர்ணனை செய்யப்பட்டது. அங்கு புத்திரன், கர்மம், அபரவித்யா இவைகளின் லோகபிராப்த்தி சாதனத்துவத்தை மட்டும் சாமான்யமாய் அறியப்பட்டது. புத்திரன் முதலிய லோகப்பிராப்தி பலனைக்குறித்து விசேஷ சம்பந்தத்திற்கான நியமம் அறிவிக்கப்படவில்லை. அந்த புத்திரன் முதலிய சாதனங்களின் சாத்திய விசேஷ சம்பந்தம் கூறவேண்டும் என்று இந்த கண்டிகா செய்யப்பட்டது.
अथ त्रयो वाव लोका मनुष्यलोकः पितृलोको देवलोक इति सोेऽयं मनुष्यलोकः पुत्रेणैव जय्यो नान्येन कर्मणा कर्मणा पितृलोको विद्यया देवलोको वै लोकाना ँ्श्रेष्द्भस्तस्माद्विद्यां प्रश ँ् सन्ति।। १६।।
மந்த்ரார்த்தம்-(+lÉ) மனுஷ்யலோகம், பித்ருலோகம், தேவலோகம் என்று மூன்று லோகங்கள். அதில் மனிதலோகம் புத்திரர்களின் மூலமாய் அடையப்படுகிறது. வேறு கர்மாக்களால் அல்ல. அவ்வாறே பித்ருலோகம் கர்மத்தாலும், தேவலோகம் வித்யையினாலும் அடையப்படுகிறது. லோகங்களில் தேவ லோகமே சிரேஷ்டமானது. ஆகையால் வித்யாவே போற்றத்தகுந்தது.
भाष्यम् - अथेति वाक्योपन्यासार्थः। त्रयः वावेत्यवधारणार्थः। त्रय एव शास्त्रोक्तसाधननार्हा लोकाः, न न्यूना नाधिका वा। के ते? इत्युच्यते- मनुष्यलोकः पितृलोको देवलोकः इति।
அனுவாதம்-“अथ” (அத) என்ற சப்தம் வாக்கியத்தின் ஆரம்பத்திற்காக ஆகும்.“त्रयो वाव” (த்ரயோ வாவ) என்பது நிச்சயார்த்தத்திற்காக. சாஸ்திரத்தில் கூறப்பட்ட சாதனங்களால் அடையத்தகுந்தவை இந்த மூன்று லோகங்களே. இதைவிட குறைவாகவோ, அதிகமாகவோ கிடையாது. அவை எவை? எனில் கூறப்படுகிறது- மனுஷ்யலோகம், பித்ருலோகம். தேவலோகம் என்பதாகும்.
भाष्यम् - तेषां सोऽयं मनुष्यलोकः पुुत्रेणैव साधनेन जय्यो जेतव्यः साध्यः- यथा च पुत्रेण जेतव्यस्तथोत्तरत्र वक्ष्यामः- नान्येन कर्मणा, विद्यया वेति वाक्यशेषः।
அனுவாதம்- அவைகளில் இந்த மனுஷ்யலோகம் புத்திரன் என்ற சாதனத்தினாலேயே சாதிக்கமுடியும். எவ்வாறு புத்திரனால் சாதிக்கப்படும் என்பதை இனி கூறுவோம். வேறு சாதனங்களான கர்மத்தினாலோ வித்யையினாலோ முடியாது என்பது வாக்கியத்தின் பொருள்.
भाष्यम् - कर्मणा अग्निहोत्रादिलक्षणेन केवलेन पितृलोको जेतव्यो न पुत्रेण नापि विद्यया। विद्यया देवलोको न पुत्रेण नापि कर्मणा।
அனுவாதம்- அக்னிஹோத்திர முதலிய லக்ஷணமுடைய கர்மத்தினால் மாத்திரமே பித்ருலோகத்தை சாதிக்க முடியும். புத்திரனாலோ வித்யையினாலோ அல்ல. வித்யையினால் தேவலோகம் ஜெயிக்கப்படுகிறது. புத்திரனாலோ கர்மத்தினாலோ அல்ல.
भाष्यम् - देवलोको वै लोकानां त्रयाणां श्रेष्द्भः प्रशस्यतमः। तस्मात्तत्साधनत्वाद्विद्यां प्रशंसन्ति।।
அனுவாதம்- மூன்று லோகங்களுக்குள்ளும் தேவலோகமே ஸ்ரேஷ்டமானது. மிக புகழ்ச்சிக்கு உரியது. ஆகையால் அதற்கு சாதனமாய் இருப்பதால் வித்யாவே புகழ்ச்சிக்கு உரியது.
अव - एवं साध्यलोकत्रयफलभेदेन विनियुक्तानि पुत्रकर्मविद्याख्यानि त्रीणि साधनानि। जाया तु पुत्र कर्मार्थत्वान्न पृथक्साधनमिति पृथङ्नाभिहिता। वित्तं च कर्मसाधनत्वान्न पृथक्साधनम्।
அனுவாதம்- அகை- இவ்வாறு புத்ரன், கர்ம, வித்யா எனப்படும் மூன்று சாதனங்களையும் அதன் சாத்யமான மூன்று லோக பேதமும் தெளிவுபடுத்தப்பட்டது. ஸ்திரீ என்பது புத்திரனுக்கான கர்மா ஆவதால் அதைத் தனியாகக் கூறப்படவில்லை. அவ்வாறே வித்தமும் கர்ம சாதனமாய் இருப்பதால் அது தனிசாதனம் அல்ல.
भाष्यम् - विद्याकर्मणोर्लोकजयहेतुत्वं स्वात्मप्रतिलाभेनैव भवतीति प्रसिद्धम्। पुत्रस्य त्वक्रियात्मकत्वात्केन प्रकारेण लोकजयहेतुत्वमिति न ज्ञायते। अतस्तद्वक्तव्यमित्य-थानन्तरमारभ्यते-
அனுவாதம்- வித்யாகர்மங்கள் தன்னுடைய முயற்சியாலேயே லோக ஜயத்திற்குக் காரணமாகிறது என்பது பிரசித்தம். புத்திரனோ கிரியாத்மகமல்ல. இவ்வாறு இருக்கும்பொழுது எவ்வாறு லோக ஜயத்திற்குக் காரணமாவான்? என்பது அறியப்படாததால் அதைக் கூறுவதற்காக இனிவரும் கிரந்தத்தில் ஆரம்பிக்கப்படுகிறது.
अथातः सम्प्रत्तिर्यदा प्रैष्यन्मन्यतेऽयं पुत्रमाह त्वं ब्रह्म त्वं यज्ञस्त्वं लोक इति स पुत्रः प्रत्याहाहं ब्रह्माहं यज्ञोऽहं लोक इति यद्वै किञ्चानूक्तं तस्य सर्वस्य ब्रह्मेत्येकता। ये वै के च यज्ञास्तेषा ँ् सर्वेषां यज्ञ इत्येकता ये वै के च लोकास्तेषा ँ् सर्वेषां लोक इत्येकतैतावद्वा इद ्ँसर्वमेतन्मा सर्व ँ् सन्नयमितोऽभुनजदिति तस्मात्पुत्रमनुशिष्टं लोक्यमाहुस्तस्मादेनमनुशासति स यदैवंविदस्माल्लोकात्प्रैत्यथैभिरेव प्राणैः सह पुत्रमाविशति। स यद्यनेन कििञ्चदक्ष्णयाकृतं भवति तस्मादेन्ँसर्वस्मात्पुत्रो मुञ्चति तस्मात्पुत्रो नाम स पुत्रेणैवास्मिँल्लोके प्रतितिष्द्भत्यथैनमेते दैवाः प्राणा अमृता आविशन्ति।। १७।।
மந்த்ரார்த்தம்-“अथातः” என்பது இனிக் கூறப்போவது - எப்பொழுது பிதாவானவர் நான் இறந்துபோவேன் என்று அறிகின்றாரோ அப்பொழுது அவர் புத்திரனிடம் இவ்வாறு கூறுகிறார். “நீ ப்ரஹ்மம்”, “நீ யக்ஞன்”, நீ லோகம் என்று. அந்த புத்திரன் இவ்வாறு பதில் அளிக்கிறான் - “நான் ப்ரஹ்மம்”, “நான் யக்ஞன்”, “நான் லோகம்” என்று. எது ஸ்வாத்யாயமாய் உள்ளதோ அது எல்லாவற்றிற்கும் ஒன்றேயானது ப்ரஹ்மம். எந்த யக்ஞம் உள்ளதோ அதுவும் ஒன்றாகிறது. மேலும் எந்த லோகம் உண்டோ அதுவும் ஒன்றே. இவ்வளவே கிருஹஸ்தபுருஷன் அவசியம் செய்யவேண்டியது. இந்த என்னுடைய பாரத்தை ஏற்று இந்த லோகத்தை அறிந்து என்னை ரக்ஷிப்பாயாக. ஆகையால் இவ்வாறு அனு†ாஸனம் செய்யப்பட்ட புத்திரனைக் குறித்து“लोक्य”-(லோக்ய) அதாவது லோகப்பிராப்த்தியில் உள்ள ஹிதத்தைக்) கூறுகிறார். இதனால் பிதா அவனுக்கு அனு†ாஸனம் (உபதேசம்) செய்கிறார். இவ்வாறு அறிந்த பிதா இந்த லோகத்திலிருந்து செல்லும்பொழுது தன்னுடைய பிராணனுடன் புத்திரனிடத்தில் வியாப்தியை அடைகின்றார். எவன் ஒருவன் ஏதோ பிரமாதத்தால் (சோம்பலாலோ) அந்த பிதாவின் மூலமாய் செய்யவேண்டிய காரியம் செய்யப்படாததையும் செய்து பிதாவை முக்தி அடையச் செய்கின்றானோ. அதனால் அவனுக்கு “புத்திரன்” என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அந்த பிதா புத்திரன் மூலமாய் இந்த லோகத்தில் பிரதிஷ்டை ஆகிறார். அதன்பின் அவரிடத்தில் ஹிரண்யகர்ப சம்பந்தீ அமிருதப்பிராணன் பிரவேசம் செய்கின்றது.
भाष्यम् - सम्प्रत्तिः संप्रदानम्, सम्प्रत्तिरिति वक्ष्यमाणस्य कर्मणो नामधेयम्। पुत्रे हि स्वात्मव्यापारसम्प्रदानं करोत्यनेन प्रकारेण पिता, तेन सम्प्रत्तिसंज्ञकमिदं कर्म। तत्कस्मिन्काले कर्तव्यम्? इत्याह- स पिता यदा यस्मिन् काले प्रैष्यन् मरिष्यन् मरिष्यामीत्यरिष्टादिदर्शनेन मन्यते, अथ तदा पुत्रमाहूयाह- त्वं ब्रह्म त्वं यज्ञस्त्वं लोक इति। स एवमुक्तः पुत्रः प्रत्याह स तु पूर्वमेवानुशिष्टो जानाति मयैतत्कर्तव्यमिति, तेनाह- अहं ब्रह्माहं यज्ञोऽहं लोक इति एतद्वाक्यत्रयम्।
அனுவாதம்-“सम्प्रत्तिः” (சம்பிரத்): என்பது ஸம்ப்ரதானம் என்று கூறப்படுகிறது. (அதாவது பரம்பரையாக உபதேசிக்கப்படுவது ஆகும்). “ஸம்ப்ரத்தி:”(सम्प्रत्तिः) என்பது இனிக் கூறப்போகும் கர்மத்தின் பெயர் ஆகும். பிதா புத்திரனிடம் தன்னுடைய செயல்பாடுகளை (வியாபாரத்தை) இவ்வாறு சமர்ப்பணம் செய்கிறார். ஆகையால் “ஸம்ப்ரத்தி” என்ற பெயர் ஏற்பட்டது. அது எப்பொழுது செய்யவேண்டும்? என்று கூறுகிறது - அந்த பிதாவானவர் சில அரிஷ்டங்களை அறிந்து தனக்கு மரணம் நெருங்குகிறதை உணர்ந்து அப்பொழுது புத்திரனை அழைத்து இவ்வாறு கூறினார் “நீ ப்ரஹ்மம், நீ யக்ஞம், நீ லோகம் என்று அவர் இவ்வாறு கூறியதும் புத்திரன் இவ்வாறு திருப்பிக் கூறினார். புத்திரன் முன்பே சிக்ஷை செய்யப்பட்டதால் என்னால் இது செய்யப்பட வேண்டும் என்று அறிந்து இருந்தான். அதனால் நான் ப்ரஹ்மம், நான் யக்ஞம், நான் லோகம் என்று கூறினான். இவை மூன்று வாக்கியங்கள் ஆகும்.
भाष्यम् - एतस्यार्थस्तिरोहित इति मन्वाना श्रुतिर्व्याख्या-नाय प्रवर्ततेयद्वै किञ्च यत्किञ्चावशिष्टमनूक्तमधीतमनधीतं च, तस्य सर्वस्यैव ब्रह्मेत्येतस्मिन्पदे एकता एकत्वम्; योऽध्ययनव्यापारो मम कर्तव्य आसीदेतावन्तं कालं वेदविषयः, स इत ऊर्ध्वं त्वं ब्रह्म त्वत्कर्तृकोऽस्त्वित्यर्थः।
அனுவாதம்- இதன் அர்த்தம் மறைந்து இருப்பதாக கருதி அதை வியாக்கியானம் செய்வதற்காக சுருதி ப்ரவ்ருத்திக்கின்றது - எவர்अवशिष्टं (அவசிஷ்டம்)अनूक्तं (அனூக்தம்) அதாவது அத்யயனம் செய்திருந்தாலும், அத்யயனம் செய்யாமல் இருந்தாலும் அவர்கள் எல்லோருக்கும்“ब्रह्म” (ப்ரஹ்ம) என்ற பதம் ஒன்றே. அதாவது வேத விஷயமான ஸ்வாத்யாய காரியத்தை இது நாள் வரையிலும் என்னுடைய கர்த்தவ்யமாக இருந்தது. அதை இனிமேலும் ப்ரஹ்மமாகிய நீ அதை உன் கர்த்ருகமாக இருக்கட்டும் என்று கூறியதாகும்.
भाष्यम् - तथा ये वै के च यज्ञा अनुष्द्भेयाः सन्तो मया अनुष्द्भिताश्चाननुष्द्भिताश्च, तेषां सर्वेषां यज्ञ इत्येतस्मिन्पदे एकतैकत्वम्, मत्कर्तृका यज्ञय आसन्, ते इत ऊर्ध्वं त्वं यज्ञः त्वत्कर्तृका भवन्त्वित्यर्थः। ये वै के च लोका मया जेतव्याः सन्तो जिता अजिताश्च, तेषां सर्वेषां लोक इत्येतस्मिन्पदे एकता। इत ऊर्ध्वं त्वं लोकस्त्वया जेतव्यास्ते। इत ऊर्ध्वं मयाध्ययनयज्ञलोकजय-कर्तव्यक्रतुस्त्वयि समर्पितः, अहं तु मुक्तोऽस्मि कर्तव्यताबन्धन- विषयात्क्रतोः। स च सर्वं तथैव प्रतिपन्नवान्पुत्रोऽनुशिष्टत्वात्।
அனுவாதம்- அவ்வாறே யக்ஞம் அனுஷ்டிக்கப்பட வேண்டியதாய் இருப்பதால் என்னால் அனுஷ்டித்தாலும், அனுஷ்டிக்காவிடினும் அவை எல்லாம் யக்ஞம் என்ற இந்த பதத்தால் ஏகத்துவமே காணப்படுகிறது. அதாவது எந்த யக்ஞம் இதுவரை என்னால் செய்யப்பட்டதோ அது இனி உன்னால் செய்யப்பட வேண்டியவனாவாய். அவ்வாறே எந்த ஒரு உலகம் என்னால் ஜெயிக்கப்பட யோக்கியமுள்ள எல்லா லோகங்களும்“लोकः” (லோக:) என்ற ஒரு பதத்தால் கூறப்பட்டது. இதன்பின்“त्वं लोकः” (த்வம் லோக:) அதாவது அந்த லோகம் உன்னால் ஜெயிக்கப்பட வேண்டும். இதன்பின் அந்த “த்வம் லோகம்” உன்னால் ஜெயிக்கப்பட வேண்டும். இன்றிலிருந்து இதற்குமேல் அத்யயனம், யக்ஞம், லோகத்தை ஜெயிப்பதற்கான கர்த்தவ்யம் இவைகளை உன்னிடம் சமர்ப்பிக்கின்றேன். இப்பொழுது நான் இதற்கான கர்த்தவ்யத்திற்கான பந்தன அபந்தன விஷயங்களாகிய கர்த்தவ்யங்களில் இருந்து விடுபடுகிறேன். சிக்ஷை செய்ததால் அந்த புத்திரனும் அவற்றை எல்லாம் அவ்வாறே அறிந்துகொண்டான்.
भाष्यम् - तत्रेमं पितुरभिप्रायं मन्वाना आचष्टे श्रुतिः- एतावदेतत्परिमाणं वै इदं सर्वं यद्गृहिणा कर्तव्यम्, यदुत वेदा अध्येतव्याः, यज्ञा यष्टव्याः, लोकाश्च जेतव्याः,। एतन्मा सर्वं सन्नयम्- सर्वं हीमं भारं मदधीनं मत्तोऽपच्छिद्य आत्मनि निधाय, इतोऽस्माल्लोकान्मा माम् अभुनजत्पालयिष्यतीति। लृडर्थे लङ्, छन्दसि कालनियमाभावात्।
அனுவாதம்- இப்பொழுது பிதாவினுடைய அபிப்பிராயத்தை அறிந்து சுருதி கூறுகிறது. எவை க்ருஹஸ்தனால் செய்யவேண்டியவையோ அவை இவ்வளவு தான். அதாவது வேதங்களை அத்யயனம் செய்யவேண்டும். யக்ஞத்தை யஜிக்கவேண்டும், லோகங்கள் ஜெயிக்கப்பட வேண்டியது.“एतन्मा सर्वं सन्नयम्” (ஏதன்மா ஸர்வம் ஸன்னயம்) இவைகளின் அபிப்பிராயம் இந்த எல்லா பாரமும் என் அதீனமாய் உள்ளது. (பிதாவிடத்திலிருந்து) என்னிடத்திலிருந்து எடுத்து தன்னிடத்தில் (புத்திரனிடத்தில்) ஏற்றி இந்த லோகத்திலிருந்து வெளியேறியபின் என்னைக் காப்பாற்றுவாயாக என்பதாகும். “लृडर्थे लङ्” (ள்ருடர்தே லங்) வந்துள்ளது. ஏனெனில் சந்தஸ்ஸில் (வேதத்தில்) கால நியமம் கிடையாது.
भाष्यम् - यस्मादेवं सम्पन्नः पुत्रः पितरम् अस्माोकात्कर्तव्यताबन्धनतो मोचयिष्यति, तस्मात्पुत्रमनुशिष्टं लोक्यं लोकहितं पितुराहुर्ब्राह्मणाः। अत एव ह्येनं पुत्रमनुशासति, लोक्योऽयं नः स्यादिति, पितरः।
அனுவாதம்- ஏனெனில் இவ்வாறு அறிந்த புத்திரன் பிதாவை இந்த லோகத்தில் உள்ள கர்த்தவ்ய சம்பந்தத்திலிருந்து விடுவிப்பான். ஆகையால் ப்ராஹ்மணர்கள் அனுசிஷ்ட புத்திரனை (பிதா கூறியவாறு அனுஷ்டிக்கும் புத்திரனை) பிதாவிற்கு லோகத்தில் ஹிதமானதை செய்ததாக கூறுகின்றனர். ஆகையால்தான் இந்த புத்திரனுக்கு பித்ருக்கள் இந்த லோகம் நமக்காக ஆகட்டும் என்று அனு†ாஸனம் செய்கின்றார்கள்.
भाष्यम् - स पिता यदा यस्मिन्काले एवंवित्पुत्रसमर्पित-कर्तव्यताक्रतुः, अस्माोकात्प्रैति म्रियते, अथ तदैभिरेव प्रकृतैर्वानःप्राणैः पुत्रमाविशति पुत्रं व्याप्नोति। अध्यात्म-परिच्छेदहेत्वपगमात् पितुर्वानःप्राणाःस्वेन आधिदैविकेन रूपेण पृथिव्यग्न्याद्यात्मना भिन्नघटप्रदीपप्रकाशवत्सर्वमाविशन्ति। तैः प्राणैः सह पिताप्याविशति, वानःप्राणात्मभावित्वात्पितुः। अहमस्म्यनन्ता वानःप्राण अध्यात्मादिभेदविस्तारा इत्येवं भावितो हि पिता। तस्मात्तत्प्राणानुवृत्तित्वं पितुर्भवतीति युक्तमुक्तम्- एभिरेव प्राणैः सह पुत्रमाविशतीति सर्वेषां ह्यसावात्मा भवति पुत्रस्य च।
அனுவாதம்- இவ்வாறு அறிந்த புத்திரனிடம் தன்னுடைய கர்த்தவ்யத்தின் சங்கல்பத்தை சமர்பித்த பிதா எப்பொழுது இந்த லோகத்திலிருந்து செல்கிறாரோ அதாவது மரணம் அடைகிறாரோ அப்பொழுது கூறப்பட்ட இந்த வாக், மனம், பிராணன்களால் புத்திரனிடத்தில் பிரவேசிக்கிறார். அதாவது வியாபிக்கின்றார். அத்யாத்ம பரிச்சேத ரூப ஹேது நிவர்த்தி ஆனதால் பிதாவின் வாக், மனம், பிராணன் தன்னுடைய பிருதிவீ அவ்வாறே அக்னி முதலிய அதிதெய்வீக ரூபங்களை விட்டு கடத்திற்குள் இருக்கும் தீபம் கடம் உடைந்தபின் எங்கும் பிரகாசித்து வியாபிப்பது போன்று எங்கும் வியாபிக்கின்றது. பிதாவின் வாக், மனம், பிராணன் ஆகிய ஆத்ம பாவமாய் இருப்பதால் அந்த பிராணன்களுடன் சேர்ந்து பிதாவும் பிரவேசிக்கின்றார். நான் அத்யாத்மம் முதலிய பேதங்களால் வியாபிக்கப்பட்ட அனந்தமான வாக், மனம், மேலும் பிராணனாய் இருக்கின்றேன். என்று பிதாவிற்கு இந்த பாவனை ஏற்படுகின்றது. ஆகையால் பிதாவிற்கு பிராணன்களில் அனுவிருத்தி (தொடர்வது)த் தன்மை ஏற்படுகிறது என்று கூறியது பொருத்தமானதே ஆகும். இந்தப் பிராணன்களுடன் புத்திரனிடத்தில் வியாபிக்கின்றார். எல்லோருடையதாயும், புத்திரனுடையதாயும் இந்த ஆத்மா விளங்குகிறது.
भाष्यम् - एतदुक्तं भवति- यस्य पितुरेवमनुशिष्टः पुत्रो भवति सोऽस्मिन्नेव लोके वर्तते पुत्ररूपेण, नैव मृतो मन्तव्य इत्यर्थः। तथा च श्रुत्यन्तरे-“सोऽस्यामितर आत्मा पुण्येभ्यः कर्मभ्यः प्रतिधीयते” (ऐ० उ० ४। ४) इति।
அனுவாதம்- இவ்வாறு கூறப்பட்டதாக ஆகிறது எந்த பிதாவானவர் இவ்வாறு அனுசாசனம் செய்யப்பட்ட புத்திரனாகின்றாரோ அவர் இந்த லோகத்திலேயே புத்திர ரூபத்தில் வசிக்கின்றார். அவர் இறந்ததாக கருத வேண்டியதில்லை. அவ்வாறே வேறு சுருதியிலும் கூறப்படுகிறது“सोऽस्यामितर आत्मा पुण्येभ्यः कर्मभ्यः प्रतिधीयते” (சோऽஸ்யாமிதர ஆத்மா புண்யேப்யः கர்மப்யः ப்ரிதிதீயதே) என்று.
भाष्यम्- अथेदानीं पुत्रनिर्वचनमाह स पुत्रो यदि कदाचिदनेन पित्रा अक्ष्णया कोणच्छिद्रतोऽन्तरा अकृतं भवति कर्तव्यम्, तस्मात्, कर्तव्यतारूपात्पित्रा अकृतात् सर्वस्माोक-प्राप्तिप्रतिबन्धरूपात्पुत्रो मुञ्चति मोचयति तत्सर्वं स्वयमनुति-ष्द्भन्पूरयित्वा। तस्मात्पूरणेन त्रायते स पितरं यस्मात्तस्मात्पुत्रो नाम। इदं तत्पुत्रस्य पुत्रत्वं यत्पितुश्छिद्रं पूरयित्वा त्रायते।
அனுவாதம்- இப்பொழுது சுருதி புத்திரன் என்ற சொல் எவ்வாறு ஏற்பட்டது என்று தெரிவிக்கிறது. அந்த புத்திரன் எப்பொழுது பிதாவால் ஒரு சமயம் ஆலஸ்யத்தால் செய்ய வேண்டியதை செய்யாமை ஏற்படும். செய்ய வேண்டியதை பிதா செய்யாததால் ஸர்வலோகப்பிராப்தி பிரதி பந்தத்திலிருந்து புத்ரன் தானே எல்லாவற்றையும் அனுசரித்து பூர்த்தி செய்து விடுவிக்கின்றான். அதை பூர்த்தி செய்து பிதாவை தாண்டச் செய்ததால் (காப்பாற்றியதால்) புத்திரன் என்ற பெயர் ஏற்பட்டது.(पितरं त्रायते इति- पुत्रः-- பிதரம் த்ராயதே இதி புத்திர:) புத்திரனுடைய புத்திரத்துவம் எதுவோ அது இந்த பிதாவினுடையக் குறையைத் தீர்த்து காப்பாற்றுகிறது.
भाष्यम्- स पितैवंविधेन पुत्रेण मृतोऽपि सन्नमृतोऽस्मिन्नेव लोके प्रतितिष्द्भति, एवमसौ पिता पुत्रेणेमं मनुष्यलोकं जयति। न तथा विद्याकर्मभ्यां देवलोकपितृलोकौ स्वरूपलाभसत्तामात्रेण, न हि विद्याकर्मणी स्वरूपलाभव्यतिरेकेण पुत्रवापारान्तरापेक्षया लोकजयहेतुत्वं प्रतिपद्येते। अथ कृतसम्प्रत्तिकं पितरमेनमेते वागादयः प्राणा दैवा हैरण्यगर्भा अमृता अमरणधर्माण आविशन्ति।
அனுவாதம்- அந்த பிதா இறந்தாலும் இந்த மாதிரியான புத்திரனால் அம்ருதமாய் (மரணமற்றவராய்) இந்த உலகத்திலேயே நிலைத்திருக்கின்றார். இவ்வாறு இந்த பிதா புத்திரனால் இந்த மனுஷ்ய லோகத்தை அடைகின்றார். வித்யா கர்மாக்களால் தேவலோக பித்ரு லோகங்களை ஸ்வரூபமாய் இருத்தலை அடைவதே அன்றி இவ்வாறு அல்ல. வித்யா கர்மாக்களினால் ஸ்வரூபலாபமே அன்றி வேறு புத்திரனைப்போல் வேறு செயல்களின் அபேக்ஷயைால் லோகத்தை அடைவதற்கான ஹேது (காரணம்) வேறு ஒன்றும் இல்லை. அதன்பின் எவர் சம்பிரத்தி கர்மா செய்யப்பட்டதோ அவ்வாறு அந்த பிதாவினிடத்தில் எந்த வாக் முதலிய தேவ ஹிரண்ய கர்ப சம்பந்தப்பட்ட அமிருதம் அமரண தர்மபிராணன் வியாபிக்கிறது. (பிரவேசிக்கிறது) । सम्प्रत्तिकर्मकर्तारेषु वागादि प्राणानां आवेशप्रकारः ।
भाष्यम् - कथमिति वक्ष्यति पृथिव्यै चैनमित्यादि। एवं पुत्रकर्मापरविद्यानां मनुष्यलोकपितृलोकदेवलोकसाध्यार्थता प्रदर्शिता श्रुत्या स्वयमेव। अत्र केचिद्वावदूकाः श्रुत्युक्त-विशेषार्थानभिज्ञाः सन्तः पुत्रादिसाधनानां मोक्षार्थतां वदन्ति। तेषां मुखापिधानं श्रुत्येदं कृतम् जाया मे स्यादित्यादि पाङ्क्तं काम्यं कर्मेत्युपक्रमेण, पुत्रादीनां च साध्यविशेषविनियोगोपसंहारेण च। तस्मादृणश्रुतिरविद्वद्विषया न परमात्मविद्विषयेति सिद्धम्। वक्ष्यति च-“किं प्रजया करिष्यामो येषां नोऽयमात्मायं लोकः” (४। ४। २२) इति।
(பாங்க்த கர்மங்களினால் மோக்ஷம் என்பது நிராகரிக்கப்படுகிறது) அனுவாதம்-“पृथिव्यै चैनम्” -(ப்ருதிவ்யை சைனம்) முதலியவை எவ்வாறு என்று சுருதி கூறப்போகிறது. இவ்வாறு புத்திரன், கர்ம, அவித்யா இவைகளினால் மனுஷ்யலோகம், பித்ருலோகம், தேவலோகம் இவைகள் சாத்யார்த்தங்கள் என்று சுருதியினால் ஸ்வயமாகவே தெளிவாக்கப்பட்டுள்ளது. சில வாதிகள் சுருதியில் கூறப்பட்ட விசேஷ அர்த்தத்தை அறியாமல் புத்திரன் முதலிய சாதனங்களே மோக்ஷத்திற்கு ஆகும் என்று கூறுகிறார்கள். ஸ்திரீ எனக்கு கிடைக்கட்டும் என்பது முதலிய பாங்க்த காமியத்தில் ஆரம்பித்து புத்திரன் முதலிய சாத்திய விசேஷங்கள் வரையிலும் கூறி உபஸம்ஹாரம் செய்து அவர்களின் வாயை சுருதியே அடைத்துவிடுகிறது. ஆகையால் ருண சுருதி அவித்வான் விஷயமாகும். பரமாத்மாவை அறியும் வித்வான் விஷயம் அல்ல என்று சித்திக்கின்றது.“किं प्रजया करिष्यामो येषां नोऽयमात्मायं लोकः” (கிம் பிரஜயா கரிஷ்யாமோ யேஷாம் நோऽயமாத்மாயம் லோக:) என்று சுருதியே கூறப்போகிறது.
भाष्यम् - केचित्तु पितृलोकदेवलोकजयोऽपि पितृलोकदेवलोकाभ्यां व्यावृत्तिरेव, तस्मात्पुत्रकर्मापरविद्याभिः समुिच्चत्यानुष्द्भिताभिस्त्रिभ्य एतेभ्यो लोकेभ्यो व्यावृत्तः परमात्मविज्ञानेन मोक्षमधिगच्छतीति परम्परया मोक्षार्थान्येव पुत्रादिसाधनानीच्छन्ति। तेषामपि मुखापिधानायेयमेव श्रुतिरुत्तरा कृतसम्प्रत्तिकरस्य पुत्रिणः कर्मिणः त्र्यन्नात्मविद्याविदः फलप्रदर्शनाय प्रवृत्ता।
அனுவாதம்- சில மதஸ்தர்களின் கொள்கை என்னவெனில் பித்ருலோகம், தேவலோகம் வென்றாலும் மறுபடியும் பித்ருலோகத்தினின்றும், தேவலோகத்தினின்றும் நிவிர்த்தி ஆகின்றது. ஆகையால் புத்திரன், கர்ம, அபர வித்யா இவைகளை ஸமுச்சயம் செய்து அதன் மூலமாய் இந்த மூன்று லோகங்களையும் நிவர்த்தி செய்யப்பட்டு பரமாத்ம விக்ஞானத்தால் மோக்ஷத்தை அடையலாம் என்று இவ்வாறு புத்திரன் முதலிய ஸாதனங்களால் பரம்பரையாய் மோக்ஷத்திற்காக ஆகின்றது என்று கூறுகின்றனர். அவர்களுடைய வாயை அடக்குவதற்காக இனிவரும் சுருதி எவன் ஸம்ப்ரதி கர்மா செய்கின்றானோ அந்தப் புத்திரனை உடையவன், கர்மடன், மூன்று அன்னாத்ம வித்தையை அறிந்தவன் இவர்கள் அவர்களால் அடையப்படும் பலனை தெரிவிப்பதற்காக பிரவர்த்திக்கின்றது.
भाष्यम् - न चेदमेव फलं मोक्षफलमिति शक्यं वक्तुम्, त्र्यन्नसम्बन्धात्, मेधातपःकार्यत्वाच्चान्नानाम्,“पुनः पुनर्जनयते” इति दर्शनात्,“यद्धैतन्न कुर्यात्क्षीयेत ह” इति च क्षयश्रवणात्। शरीरं ज्योतीरूपमिति च कार्यकरणत्वोपपत्तेः।“त्रयं वा इदम्” इति च नामरूपकर्मात्मकत्वेनोपसंहारात्।
அனுவாதம்- மூன்று அன்னங்களின் சம்பந்தத்தினாலும், அன்னம், மேதாதபஸின் காரியம் என்பது“पुनः पुनर्जनयते” (புன: புனர்ஜனயதே) என்று இந்த வாக்கியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.“यद्धैतन्न कुर्यात्क्षीयेत ह” (யத்தைதன்ன குர்யாத்க்ஷீயேத ஹ) என்று க்ஷயமும் கேட்கப்பட்டது. அதனால் இந்த பலனே மோக்ஷ பலன் என்று கூறமுடியாது. சரீரம் என்றும் ஜோதி ரூபம் என்றும் காரிய கரணங்களின் உபபத்தியும் தெரிவிக்கப்பட்டது. மேலும்“त्रयं वा इदम्” (த்ரயம் வா இதம்) என்றும் நாமரூப கர்மாத்மகமாய் உபஸம்ஹாரம் செய்யப்பட்டது.
भाष्यम् - न चेदमेव साधनत्रयं संहतं सत्कस्यचिन्मोक्षार्थं कस्यचित् त्र्यन्नात्मफलमित्यस्मादेव वाक्यादवगन्तुं शक्यम्, पुत्रादिसाधनां त्र्यन्नात्मफलदर्शनेनैवोपक्षीणत्वाद् वाक्यस्य।
அனுவாதம்- இந்த மூன்று ஸாதனங்களும் சேர்ந்து ஒருவருக்கு மோக்ஷத்தையும், ஒருவருக்கு மூன்று அன்ன ரூப பலனையும் அளிக்கிறது என்பது வாக்கியத்தால் மாத்திரமே அறியமுடியாது. ஏனெனில் புத்திரன் முதலிய சாதனங்களின் பலனைத் தெரிவிப்பதாலேயே இந்த வாக்கியம் முடிவடைகிறது.
पृथिव्यै चैनमग्नेश्च दैवी वागाविशति सा वै देवी वाग्यया यद्यदेव वदति तत्तद्भवति।। १८।।
மந்த்ரார்த்தம்- ப்ருதிவீ அக்னியினால் இவனிடத்தில் தைவீ வாக்காக பிரவேசிக்கிறது. தைவீ வாக்காக இதுவே. புருஷன் இதன் மூலமாய் எது எது பேசுகிறானோ அது, அதுவாகின்றான்.
भाष्यम्- पृथिव्यै पृथिव्याश्च एनम् अग्नेश्च दैवी अधिदैवात्मिका वागेनं कृतसम्प्रत्तिकमाविशति। सर्वेषां हि वाच उपादानभूता दैवी वाक्पृथिव्यग्निलक्षणा, सा ह्याध्यात्मिका- सङ्गादिदोषैर्निरुद्धा। विदुषस्तद्दोषापगमे आवरणभङ्ग इवोदक-प्रदीपप्रकाशवच्च व्याप्नोति। तदेतदुच्यते- पृथिव्या अग्नेश्चैनं दैवी वागाविशतीति।
அனுவாதம்- ப்ருதிவீ அக்கினியினால் தைவீ அதிதைவதரூபமான வாக் அந்த ஸம்ப்ரத்தி கர்மா செய்பவனிடத்தில் வியாபிக்கின்றது. ப்ருதிவீ அக்னி ரூப தைவீ வாக் எல்லா பேச்சுகளுக்கும் (வாசகங்களுக்கும்) உபாதான ரூபமான தைவீ வாக்கே ஆத்யாத்மிக சரீரத்தில் உள்ள பற்று முதலிய தோஷங்களால் சூழப்பட்டுள்ளது. தடையின் நீக்கத்தால் எவ்வாறு ஜலமும், தீபப் பிரகாசமும் வியாபிக்கின்றனவோ அவ்வாறு வித்வானும் தோஷங்கள் விலகியதால் அதில் வியாபிக்கின்றான். இதனால் இது கூறப்படுகிறது. ப்ருதிவியினாலும் அக்னியினாலும் தைவீவாக் பிரவேசிக்கின்றது.
भाष्यम् - सा च दैवी वागनृतादिदोषरहिता शुद्धा, यया वाचा दैव्या यद्यदेव आत्मने परस्मै वा वदति तत्तद् भवति, अमोघा अप्रतिबद्धा अस्य वाग्भवतीत्यर्थः।।
அனுவாதம்- அந்த தைவீ வாக் பொய் ஆகிய தோஷமற்ற சுத்தமான அந்த தைவீ எதை எதை தன் பொருட்டோ பிறரின் பொருட்டோ எது கூறினாலும் அது அதுவாகவே ஆகும். அந்த வாக் தடையற்றதாக (ப்ரதிபந்தம் அற்றதாக) ஆகும்.
அனுவாதம்- அ.கை- அவ்வாறே-
दिवश्चैनमादित्याच्च दैवं मन आविशति तद्वै दैवं मनो येनानन्द्येव भवत्यथो न शोचति।। १९।।
மந்த்ரார்த்தம்- த்யுலோகம், ஆதித்தியனுடன் இவனிடத்தில் தைவ மனம் பிரவேசிக்கிறது. தைவம் மனமேயாகும். அதனால் அவன் ஆனந்தமாகின்றான். அவன் ஒருபொழுதும் சோகத்தை அடைவதில்லை.
भाष्यम् - दिवश्चैनमादित्याच्च दैवं मन आविशति- तच्च दैवं मनः, स्वभावनिर्मलत्वात्, येन मनसा असौ आनन्द्येव भवति सुख्येव भवति, अथो अपि न शोचति, शोकादिनिमित्तासंयोगात्।।
அனுவாதம்- தேவலோகம் மற்றும் ஆதித்யன் இவைகளால் தைவமனம் பிரவேசிக்கின்றது. ஸ்வபாவமாகவே நிர்மலமாய் இருப்பதால் அது தைவமனம் எனப்படுகிறது. அந்த மனதால் ஆனந்தம் உடையவனாக அதாவது சுகியாக ஆகின்றான். சோகம் முதலிய நிமித்தங்கள் இல்லாததால் அவன் துக்கப்படுவது இல்லை.
अव - तथा -
அனுவாதம்- அ.கை- அவ்வாறே -
अद्भश्चैनं चन्द्रमसश्च दैवः प्राण आविशति स वै देवः प्राणो यः सञ्चर ्ँश्चासञ्चर ँ्श्च न व्यथतेऽथो न रिष्यति।स एवंवित्सर्वेषां भूतानामात्मा भवति। यथैषा देवतैव्ँस यथैतां देवता ँ् सर्वाणि भूतान्यवन्त्येव्ँ हैवंविद ँ् सर्वाणि भूतान्यवन्ति। यदु किञ्चेमाः प्रजाः शोचन्त्यमैवासां तद्भवति पुण्यमेवामुं गच्छति न ह वै देवान्पापं गच्छति।। २०।।
மந்த்ரார்த்தம்- அப்பு (ஜலம்) மற்றும் சந்திரன் இவைகளால் தைவமாகிய பிராணன் அவனுள் வியாபித்தது, தைவ பிராணன் அதுவாகவே ஆகிவிட்டது. எவர் இவ்வாறு சஞ்சரிக்கின்றார்களோ, அல்லது சஞ்சரிக்கவில்லையோ அவர்கள் அதனால் பாதிக்கப்படுவதில்லை. மேலும் நஷ்டம் அடைவதும் இல்லை. எவன் ஒருவன் இவ்வாறு அறிகின்றானோ அவன் எல்லா பூதங்களுக்கும் ஆன்மா ஆகின்றான். எவ்வாறு அந்த தேவதை (ஹிரண்யகர்பன்) உள்ளதோ அவ்வாறே அவன் ஆகின்றான். எவ்வாறு எல்லா பிராணிகளும் இந்த தேவதையை பரிபாலனம் செய்கின்றனவோ அவ்வாறு உபாசனை செய்பவனை எல்லா பூதங்களும் காப்பாற்றுகின்றன. எவன் ஒருவன் பிரஜைகளை சோகத்தை அடையச் செய்கின்றானோ அவனும் சோகத்துடன் இருப்பான். இதனால் புண்யத்தை அடைகின்றான். ஏனெனில் தேவதைகளிடத்தில் பாவம் என்பது கிடையாது.
भाष्यम्- अद्भश्चैनं चन्द्रमसश्च दैवः प्राण आविशति। स वै देवः प्राणः किँ्क्षणः? इत्युच्यते- यः सञ्चरन् प्राणिभेदेष्व-सञ्चरन्समष्टिव्यष्टिरूपेण- अथवा सञ्चरन् जङ्गमेषु असञ्चरन्स्थावरेषु, न व्यथते न दुःखनिमित्तेन भयेन युज्यते। अथो अपि न रिष्यति न विनश्यति न हिंसामापद्यते।
அனுவாதம்- ஜலம் மற்றும் சந்திரனாலும் அவனிடத்தில் தெய்வப்பிராணன் வியாபிக்கின்றது. அந்த தைவப் பிராணனின் லக்ஷணம் என்ன? அது கூறப்படுகிறது. எது பிராணி பேதங்களில் சஞ்சரித்துக்கொண்டும் சஞ்சரிக்காமலும் சமஷ்டி வியஷ்டி ரூபமாய் அல்லது ஜங்கமங்களில் சஞ்சரித்துக்கொண்டும், ஸ்தாவரங்களில் சஞ்சரிக்காமலும் இருந்துகொண்டு நலிவடைவதில்லையோ அதற்கு துக்கத்திற்கு நிமித்தமான பயமும் பொருந்தாது. காயப்படுவதும், நசிப்பதும் இல்லை. ஹிம்சையையும் அடைவதில்லை.
भाष्यम् - सः- यो यथोक्तमेवं वेत्ति त्र्यन्नात्मदर्शनं सः सर्वेषां भूतानामात्मा भवति, सर्वेषां भूतानां प्राणो भवति, सर्वेषां भूतानां मनो भवति, सर्वेषां भूतानां वाग्भवति- इत्येवं सर्वाभूतात्मतया सर्वज्ञो भवतीत्यर्थः, सर्वकृच्च। यथैषा पूर्वसिद्धा हिरण्यगर्भदेवता एवमेव नास्य सर्वज्ञत्वे सर्वकृत्त्वे वा क्वचित्प्रतिघातः। स इति दार्ष्टान्तिकनिर्देशः। किञ्च यथैतां हिरण्यगर्भदेवतामिज्यादिभिः सर्वाणि भूतान्यवन्ति पालयन्ति पूजयन्ति, एवं ह एवंविदं सर्वाणि भूतान्यवन्ति- इज्यादिलक्षणां पूजां सततं प्रयुञ्जत इत्यर्थः।
அனுவாதம்- எவன் த்ர்யன்ன ஆத்ம தர்சனத்தை கூறப்பட்டவாறு அறிகிறானோ அவன் எல்லா பூதங்களுக்கும் ஆத்மா ஆகின்றான். எல்லா பூதங்களுக்கும் மனம் ஆகின்றான். எல்லா பூதங்களுக்கும் வாக் ஆகின்றான், இவ்வாறு எல்லா பூதங்களுக்கும் ஆத்ம ரூபமாய் ஸர்வக்ஞன், ஸர்வக்ருத் ஆகின்றான் என்பது பொருள். எவ்வாறு பூர்வ சித்தமான இந்த ஹிரண்யகர்ப தேவதா இருக்கிறதோ அவ்வாறே இதற்கு ஸர்வக்ஞத்திலோ ஸர்வ க்ருத்துவத்திலோ எப்பொழுதும் நாசம் ஏற்படாது.“स” (அது) என்ற சப்தத்தால் தார்ஷ்டாந்தத்தின் நிர்தேசமாகும். மேலும் எவ்வாறு இந்த ஹிரண்யகர்ப தேவதையை எல்லா பிராணிகளும் யக்ஞம் முதலியவைகளால் பாலனம் அதாவது பூஜை செய்கின்றதோ அவ்வாறு உபாஸிக்கின்ற எல்லா பூதங்களையும் ரக்ஷிக்கின்றது. அதாவது யக்ஞம் முதலிய லக்ஷணங்களுடன் இடைவிடாமல் பூஜையை பிரயோகம் செய்கின்றார்கள் என்பது பொருள்.
भाष्यम् - अथेदमाशते-सर्वप्राणिनामात्मा भवती-त्युक्तम्, तस्य च सर्वप्राणिकार्यकरणात्मत्वे सर्वप्राणिसुखदुःखैः सम्बध्येतेति।
அனுவாதம்- இங்கு இது சங்கை செய்யப்படுகிறது - எல்லாப் பிராணிகளுடைய ஆத்மா என்று கூறப்பட்டது. அது எல்லா பிராணிகளின் காரிய கரண ரூபமாய் அதாவது தேஹ இந்திரிய ரூபமாய் இருப்பதால் எல்லா பிராணிகளுக்கும் சுக துக்கங்களின் சம்பந்தம் ஏற்படுமே என்பது ஆகும்.
भाष्यम् - तन्न, अपरिच्छिन्नबुद्धित्वात् परिच्छिन्नात्मबुद्धीनां ह्याक्रोशादौ दुःखसम्बन्धो दृष्टः- अनेनाहमाक्रुष्ट इति। अस्य तु सर्वात्मनो य आक्रुश्यते यश्चाक्रोशति तयोरात्मत्वबुद्धि-विशेषाभावान्न तन्निमित्तं दुःखमुपपद्यते। मरणदुःखवच्च निमित्ताभावाद् यथा हि कस्मिंिश्चन्मृते कस्यचिद् दुःखमुत्पद्यतेममासौ पुत्रो भ्राता चेति, पुत्रादिनिमित्तम्, तन्निमित्ताभावे तन्मरणदर्शिनोऽपि नैव दुःखमुपजायते, तथेश्वरस्याप्य-परिच्छिन्नात्मनो ममतवतादिदुःखनिमित्तमिथ्याज्ञानादिदोषा-भावान्नैव दुःखमुपजायते।
அனுவாதம்- அபரிச்சின்ன புத்தியாய் இருப்பதால் அவ்வாறு அல்ல. பரிச்சின்ன ரூப புத்தியுடையவர்களுக்கே ஆக்ரோஷம் முதலியவைகளில் துக்கசம்பந்தம் காணப்படுகிறது. இதனால் நான் துக்கம் உடையவனாக இருக்கிறேன் என்று நினைக்கின்றான். இந்த ஸர்வாத்ம பாவத்தை உடையவன் எவரால் கஷ்டப்படுகின்றானோ, எவரால் கஷ்டப்படுத்தப்படுகிறானோ அவர்களிடம் ஆத்மத்துவ புத்தி விசேஷம் (வேறுபாடு) இல்லாததால் அதனால் ஏற்படும் துக்கம் உண்டாவது இல்லை. இவ்வாறு ஒரு நிமித்தமும் இல்லாததால் மரண துக்கமும் கிடையாது. எவ்வாறு (உலகில்) யாராவது மரணமடைந்தால் இது என் மகன், இது என் சகோதரன் என்று நினைத்து புத்திரன் முதலிய நிமித்தத்தால் துக்கம் உண்டாகின்றதோ. அவ்வாறு நிமித்தம் இல்லாததால் அந்த மரணத்தை எதிர் பார்க்கின்றவனுக்கும் துக்கம் உண்டாகாது. இவ்வாறு என்னுடையது, உன்னுடையது முதலியவை துக்கத்திற்கான காரணங்களாகும். அவ்வாறே மித்யாஞானம் முதலிய தோஷம் இல்லாததாலும் அபரிச்சின்னரூப ஈஸ்வரனுக்கு துக்கம் என்பது இல்லை.
भाष्यम् - तदेतदुच्यते- यदु किञ्च यत् किञ्च इमाः प्रजाः शोचन्त्यमैव सहैव प्रजाभिस्तच्छोकादिनिमित्तं दुःखं संयुक्तं भवत्यासां प्रजानां परिच्छिन्नबुद्धिजनितत्वात्। सर्वात्मनस्तु केन सह किं संयुक्तं भवेद्वियुक्तं वा? अमुं तु प्राजापत्ये पदे वर्तमानं पुण्यमेव शुभमेवफलमभिप्रेतं पुण्यमिति निरतिशयं हि तेन पुण्यं कृतम्, तेन तत्फलमेव गच्छति। न ह वै देवान्पापं गच्छति, पापफलस्या-वसराभावात् पापफल दुःखं न गच्छतीत्यर्थः।।
அனுவாதம்- அதனால் இங்கு கூறப்படுகிறது எதனால் இந்த பிரஜைகள் சோகத்தை அடைகிறார்களோ அந்த பிரஜைகளுக்கு பரிச்சின்ன புத்தியினால் உண்டாகும் சோகம் முதலியவைகளின் காரணமாக துக்கத்துடன் கூடியவர்களாக ஆகின்றனர். ஸர்வாத்மா எதனுடன் சம்பந்தப்படுகிறது அல்லது சம்பந்தப்படவில்லை? இந்த ப்ராஜாபத்திய பதத்தில் உள்ள புண்யத்தை அதாவது சுபத்தையே அடைகிறது. புண்யமே பலம் என்பது அபிப்பிராயம். அவர் நிரதிசய புண்யம் செய்வதால் அந்த பலனே கிடைக்கும். பாப பலனிற்கு இடம் இல்லாததால் அது தேவதைகளை அடையாது. அதனால் பாப பலனாகிய துக்கத்தை அடையமாட்டார்கள்.
अव -“त एते सर्व एव समाः सर्वेऽनन्ताः” इत्यविशेषेण वानः-प्राणानामुपासनमुक्तम्, नान्यतमगतो विशेष उक्तः। किमेवमेव प्रतिपत्तव्यम्? किं वा विचार्यमाणे किश्चद्विशेषो व्रतमुपासनं प्रति प्रतिपत्तुंु शक्यते? इत्युच्यते-
அனுவாதம்- அ.கை-“त एते सर्व एव समाः सर्वेऽनन्ताः” த ஏதே ஸர்வ ஏவ ஸமா ஸர்வே அநந்தா:) என்று இந்த மந்திரத்தில் வாக், மனம், பிராணன் இவைகளின் உபாசனை சாமான்ய ரூபமாய் விளக்கப்பட்டது. அதில் ஒவ்வொன்றிற்கும் எந்த ஒரு விசேஷத்தையும் கூறவில்லை? அதை எவ்வாறு அறிவது? அல்லது எதை விசாரணை செய்வதால் விரதத்திற்கு அதாவது உபாசனைக்கு ஏதாவது ஒரு விசேஷத்தை அறிந்து கொள்ளமுடியுமா? என்பதற்குக் கூறுகிறார்.
अथातो व्रतमीमा ्ँ सा प्रजापतिर्ह कर्माणि ससृजे तानि सृष्टान्यन्योन्येनास्पर्धन्त वदिष्याम्येवाहमिति वाग्दध्रे द्रक्ष्याम्यहमिति चक्षुः श्रोष्याम्यहमिति श्रोत्रमेवमन्यानि कर्माणि यथाकर्म तानि मृत्युः श्रमो भूत्वोपयेमे तान्याप्नोत्तान्याप्त्वा मृत्युरवारुन्ध तस्माच्छ्राम्यत्येव वाक्छ्राम्यति चक्षुः श्राम्यति श्रोत्रमथेममेव नाप्नोद्योऽयं मध्यमः प्राणस्तानि ज्ञातुं दध्रिरे। अयं वै नः श्रेष्द्भो यः सञ्चर ्ँश्चासञ्चर ्ँश्च न व्यथतेऽथो न रिष्यति हन्तास्यैव सर्वे रूपमसामेति त एतस्यैव सर्वे रूपमभव ्ँस्तस्मादेत एतेनाख्यायन्ते प्राणा इति तेन ह वाव तत्कुलमाचक्षते यस्मिन्कुले भवति य एवं वेद य उ हैवंविदा स्पर्धतेऽनुशुष्यत्यनुशुष्य हैवान्ततो म्रियत इत्यध्यात्मम् ।।२१।।
மந்த்ரார்த்தம்- இப்பொழுது விரதத்தைப் பற்றி விசாரம் செய்யப்படுகிறது. ப்ரஜாபதி கர்மாக்களை (அதாவது கர்மாக்களின் சாதன பூத வாக் முதலிய கரணங்களை) உண்டாக்கினார். உண்டான பின் ஒன்று மற்றொன்றுடன் போட்டியிட ஆரம்பித்தன. வாக் “நான் பேசிக்கொண்டே இருப்பேன் என்று விரதம் எடுத்துக்கொண்டது. அவ்வாறே சக்ஷு “நான் பார்த்துக்கொண்டே இருப்பேன் என்றும், அவ்வாறே காது நான் கேட்டுக்கொண்டே இருப்பேன் என்றும் விரதம் எடுத்துக்கொண்டன. இவ்வாறு தங்கள் தங்கள் கர்மாக்களின் அனுகாரமாக மற்ற இந்திரியங்கங்களும் விரதம் எடுத்துக்கொண்டன. அப்பொழுது மிருத்யு ஓய்வை அடைந்து அதில் சம்பந்தப்பட்டு அவைகளில் வியாபித்தது. அவைகளில் வியாப்தியாகி மிருத்யு அவைகளை விரோதமற்றதாய் செய்தது. இதனால் வாக் ஓய்வு அடைந்தது, கண்கள் ஓய்வை அடைந்தது. காதும் ஓய்வை அடைந்தது. ஆனால் மத்தியமமான பிராணன் இவைகளில் வியாப்தம் அடைய முடியாது. அப்பொழுது அந்த இந்திரியங்கள் பிராணனே சிரேஷ்டம் என்று அறிந்து நிச்சயித்தன. இந்த நிச்சயத்தால் அவைகள் இவ்வாறு கருதியது - நம்மைவிட (பிராணன்) ஸ்ரேஷ்டமானது என்று. அது சஞ்சாரம் செய்தாலும், சஞ்சாரம் செய்யாவிடினும் சிரமப்படுவதில்லை. அது க்ஷீணமும் ஆவதில்லை. நல்லது, நாம் எல்லோரும் அந்த ரூபமாய் ஆகலாம் என்று நிச்சயம் செய்து அவை எல்லாம் அந்த ரூபம் ஆகிவிட்டன. ஆகையால் அவை இந்த பிராணன் என்ற பெயரால் கூறப்படுகிறது. ஆகையால் எவர் இவ்வாறு அறிகிறாறோ அவர் எந்த குலத்தில் உதிக்கின்றாரோ அந்த குலம் அவர் பெயரால் கூறப்படுகிறது. அவ்வாறே எவர் அப்பேர்பட்ட வித்வானிடத்தில் போட்டியிடுகின்றாரோ அவர் வறண்டு, வறண்டுபோய் கடைசியில் மரணம் அடைகின்றார்கள். இது அத்யாத்ம பிராண தர்சனமாகும்.
भाष्यम् - अथातोऽनन्तरं व्रतमीमांसा उपासनकर्म-विचारणेत्यर्थः। एषां प्राणानां कस्य कर्म व्रतत्वेन धारयितव्यमिति मीमांसा प्रवर्तते। तत्र प्रजापतिर्ह-हशब्दःकिलार्थे-प्रजापतिः किल प्रजाः सृष्ट्वा कर्माणि करणानि वागादीनि- कर्मार्थानि हि तानीति कर्माणीत्युच्यन्ते- ससृजे सृृष्टवान्वागादीनि करणानीत्यर्थः।
அனுவாதம்- இதன் பின் விரதத்தைப் பற்றிய விசாரம் அதாவது கர்மா ஆகியவைகளின் விசாரம் செய்யப்படுகிறது. இந்த பிராணன்களுக்கு எந்த கர்மா விரதமாய் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற விசாரத்தில் பிரவர்த்திக்கின்றது. அங்கு பிரஜாபதிர்ஹ(प्रजापतिर्ह) என்பதில் உள்ள சப்தம் அல்லவா என்ற அர்த்தத்தில் ஆகும். பிரஜாபதி அல்லவா பிரஜைகளை சிருஷ்டித்து கர்மங்களையும் அதாவது வாக் முதலிய கரணங்களை சிருஷ்டித்தார். கர்மாத்விற்கான அவைகளை (கரணங்களை) கர்மாணீ என்று கூறப்படுகிறது. வாக் முதலிய கரணங்களை சிருஷ்டித்தார் என்பது பொருள்.
भाष्यम् - तानि पुनः सृष्टान्यन्योन्येन इतरेतरमस्पर्धन्त स्पर्धा संघर्षं चक्रुः। कथम्? वदिष्याम्येव स्वव्यापाराद्व-दनादनुपरतैवाहं स्यामिति वाग्व्रतं दध्रे धृतवती- यद्यन्योऽपि मत्समोऽस्ति स्वव्यापारादनुपरन्तुं शक्तोऽस्ति सोऽपि दर्शयत्वात्मनो वीर्यमिति। तथा द्रक्ष्याम्यहमिति चक्षुः, श्रोष्याम्यहमिति श्रोत्रम्, एवमन्यानि कर्माणि करणानि यथाकर्मयद्यद्यस्य कर्म यथाकर्म।
அனுவாதம்- மறுபடியும் அந்த சிருஷ்டிக்கப்பட்ட (கரணங்கள்) ஒன்றுக்கொன்று போட்டியிட்டன. அது எவ்வாறு? நான் எப்பொழுதும் என்னுடைய வியாபாரமாகிய பேசும் தன்மையை நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பேன் என்று விரதத்தை மேற்கொண்டது. இதனால் அதன் அபிப்பிராயம் என்னவெனில் எனக்கு சமமாக வேறு ஒன்றும் தன் வியாபாரத்தை நிறுத்தாமல் இருப்பது அது தன்னுடைய சாமர்த்தியத்தைக் காட்டுவதாகிறது. அவ்வாறு கண் நான் பார்த்துக் கொண்டே இருப்பேன் என்றும், காது நான் கேட்டுக்கொண்டே இருப்பேன் என்றும் நிச்சயம் செய்தன. இவ்வாறே மற்ற இந்திரியங்களும் அவர்களுடைய கர்மத்தை அனுசரித்து அவ்வாறே இருக்க வேண்டும் என்றவிரதம் எடுத்துக் கொண்டன.
भाष्यम् - तानि करणानि मृत्युर्मारकः श्रमः श्रमरूपी भूत्वा उपयेमे सञ्जग्राह। कथम्? तानि करणानि स्वव्यापारे प्रवृत्तान्याप्नोत्, श्रमरूपेणात्मानं दर्शितवान्। आप्त्वा च तान्यवारुन्ध अवरोधं कृतवान्मृत्युः स्वकर्मभ्यः प्रच्यावित-वानित्यर्थः। तस्मादद्यत्वेऽपि वदने स्वकर्मणि प्रवृत्ता वाक् श्राम्यत्येव श्रमरूपिणा मृत्युना संयुक्ता स्वकर्मतः प्रच्यवते। तथा श्राम्यति चक्षुः श्राम्यति श्रोत्रम्।
அனுவாதம்- அந்த கரணங்களை மிருத்யுவாகிய மாரகன் தான் அசதி உடையவனாகி பிடித்துக் கொண்டான். எவ்வாறு? தங்களுடைய வியாபாரத்தில் பிரவர்த்திக்கும் அந்த கரணங்களை அசதி ரூபமாய் தன்னைக் காண்பித்தது. (அதாவது அவைகளில் வியாபித்தது). அவ்வாறே அவைகளில் வியாபித்தது. மிருத்யு தன் தன் கர்மாக்களில் கர்மாக்களை செய்யவிடாமல் நழுவச்செய்தது. ஆகையால் இன்று வரையிலும் பேச்சாகிய தன் கர்மத்தில் பிரவர்த்தித்த வாக்கை தன் கர்மத்திலிருந்து நழுவச் செய்தது. ஆகையால் இன்று வரை தனது வியாபாரமாகிய பேச்சில் பிரவர்த்தித்து இருந்த வாக் அசதியை அடைந்தது. சிரம ரூபமான மிருத்யுவுடன் சேர்ந்ததால் தன்னுடைய கர்மத்திலிருந்து நழுவியது. இவ்வாறே கண்ணும் அசதியை அடைந்தது. காதும் அசதியை அடைந்தது.
भाष्यम् - अथेममेव मुख्यं प्राणं नाप्नोन्न प्राप्तवान्मृत्युः श्रमरूपी, योऽयं मध्यमः प्राणस्तम्। तेनाद्यत्वेऽप्यश्रान्त एव स्वकर्मणि प्रवर्तते। तानीतराणि करणानि तं ज्ञातुं दध्रिरे धृतवन्ति मनः।
அனுவாதம்- ஆனால் இந்த முக்யப் பிராணனை அதாவது மத்யம பிராணனை அசதிரூபமான மிருத்யு வியாபிப்பதில்லை. ஆகையால் இதுவரையிலும் அசதி (சிரமம்) அடையாமல் தன் கர்மத்தில் பிரவர்த்திக்கின்றது. மற்ற கரணங்கள் (இந்திரியங்கள்) அதை (பிராணனை) அறிவதற்கு மனதில் நிச்சயம் செய்தன.
भाष्यम् - अयं वै नोऽस्माकं मध्ये श्रेष्द्भः प्रशस्यतमोऽभ्यधिकः, यस्माद्यः सञ्चरंश्चासञ्चरंश्च न व्यथतेऽथो न रिष्यति- हन्तेदानीमस्यैव प्राणस्य सर्वे वयं रूपमसाम प्राणमात्मत्वेन प्रतिपद्येमहि-एवं विनििश्चत्य ते एतस्यैव सर्वे रूपमभवन्, प्राणरूपमेवात्मत्वेन प्रतिपन्नाः, प्राणव्रतमेव दध्रिरे अस्मद्व्रतानि न मृत्योर्वारणाय पर्याप्तानीति।
அனுவாதம்- அந்த (பிராணனே) நம் மத்தியில் மிகச் சிரேஷ்டமானதும் மிகவும் புகழத்தக்கதும் ஆகும். ஏன் எனில் அது சஞ்சாரம் செய்தாலும் சஞ்சாரம் செய்யாவிடினும் சலனப்படுவதும் இல்லை. ஹிம்சை செய்வதும் இல்லை. சரிதான் இப்பொழுது நாம் எல்லோரும் பிராண ரூபமாய் ஆவோமாக. அதாவது பிராண ஆத்ம பாவத்தை அடைவோமாக என்று நிச்சயம் செய்து அவை எல்லாம் இந்த பிராண ரூபத்தையே அடைந்தன. நம்முடைய விரதம் மிருத்யுவை நீக்குவதற்குப் போதுமானது அல்ல என்று பிராண விரதத்தையே மேற்கொண்டன.
भाष्यम् - यस्मात्प्राणेन रूपेण रूपवन्तीतराणि करणानि चलनात्मना स्वेन च प्रकाशात्मनः। न हि प्राणादन्यत्र चलनात्मकत्वोपपत्तिः, चलनव्यापारपूर्वकाण्येव हि सर्वदा स्वव्यापारेषु लक्ष्यन्ते, तस्मादेते वागादयः एतेन प्राणाभिधानेन आख्यायन्तेऽभिधीयन्ते प्राणा इत्येवम्।
அனுவாதம்- எதனால் மற்ற கரணங்கள் பிராணனின் சலிக்கக் கூடிய ரூபத்தாலும், தன்னுடைய பிரகாச ஸ்வரூபத்தாலும் ரூபம் உடையதாகின்றன. பிராணனை வேறு இடத்தில் சலனாத்மக வியாபார ரூபத்துவம் என்பது இல்லை. சலன வியாபாரத்தால் தான் எப்பொழும் தங்களுடைய வியாபாரத்தில் பிரவர்த்திக்கின்றன என்பது காணப்படுகிறது. ஆகையால் வாக் முதலிய இந்திரியங்கள் இந்த பிராணனுடைய பெயரால் (நாமத்தால்) “பிராணன்” என்று இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
भाष्यम् - य एवं प्राणात्मतां सर्वकरणानां वेत्ति प्राणशब्दाभिधेयत्वं च, तेन ह वाव तेनैव विदुषा तत्कुलमाचक्षते लौकिकाः। यस्मिन्कुले स विद्वान् जातो भवति तत्कुलं विद्वन्नाम्नैव प्रथितं भवत्यमुष्येदं कुलमिति, यथा तापत्य इति। य एवं यथोक्तं वेद वागादीनां प्राणरूपतां प्राणाख्यत्वं च तस्यैतत्फलम्।
அனுவாதம்- எவன் இவ்வாறு எல்லா கரணங்களின் பிராண ரூபத்தன்மையையும், பிராணன் என்ற சப்தத்தால் அழைக்கப்படுவதையும் அறிகின்றானோ அந்த வித்வான் மூலமாய் லெளகிகர்கள் அதை அறிந்து எந்த குலத்தில் பிறக்கின்றார்களோ அந்த குலம் இவர் பெயரால் இந்த குலம் என்று எவ்வாறு“तापत्य” (தாபத்யகுலம்) எனப்படுகிறதோ அவ்வாறு. எவன் ஒருவன் கூறியவாறு வாக் முதலியவைகளின் பிராண ரூபத்தையும், பிராணன் என்று பெயர் உடையதையும் அறிகின்றானோ அவனுக்கு அந்த பலனே கிடைக்கின்றது.
भाष्यम् - किञ्च यः किश्चदु हैवंविदा प्राणात्मदर्शिना स्पर्धते तत्प्रतिपक्षी सन्, सोऽस्मिन्नेव शरीरेऽनुशुष्यति शोषमुपगच्छति। अनुशुष्य हैव शोषं गत्वैव अन्ततोऽन्ते म्रियते न सहसानुपद्रुतो म्रियते इत्येवमुक्तमध्यात्मं प्राणात्मदर्शनमित्युक्तोपसंहारोऽधि-दैवतप्रदर्शनार्थः।
அனுவாதம்- மேலும் ஒருவர் இவ்வாறு அறிந்த பிராணாத்மதர்சியிடம் அதன் பிரதிபக்ஷியாகி போட்டி இடுகிறானோ அவனுடைய சரீரம் காய்ந்து விடுகிறது. அவ்வாறு வற்றி கடைசியில் மரணம் அடைகிறான். இதைத் தவிர வேறு உபத்திரவத்தால் அடைவதில்லை. இவ்வாறு ஆத்யாத்ம பிராண தர்சனத்தைக் கூறி சுருதி கூறியதை முடிவுக்குக் கொண்டு வந்து இனி ஆதிதைவிக தர்சனத்தைக் கூறுவதற்காக ஆரம்பமாகிறது.
अथाधिदैवतं ज्वलिष्याम्येवाहमित्यग्निर्दध्रे तप्स्याम्यह-मित्यादित्यो भास्याम्यहमिति चन्द्रमा एवमन्या देवता यथा दैवत ्ँ स यथैषां प्राणानां मध्यमः प्राण एवमेतासां देवतानां वायुर्म्लोचन्ति ह्यन्या देवता न वायुः सैषानस्तमिता देवता यद्वायुः।। २२।।
மந்த்ரார்த்தம்- இப்பொழுது அதிதைவத தர்சனம் கூறப்படுகிறது - நான் எரிந்து கொண்டே இருப்பேன் என்று அக்னி நியமனம் செய்தது. சூரியன் நான் சூடாக இருப்பேன் என்று நியமனம் செய்தது. சந்திரன் நான் பிரகாசித்துக் கொண்டு இருப்பேன் என்று. இவ்வாறு மற்றதேவதைகளும் தங்கள் தங்களுடைய வியாபாரத்திற்கு தகுந்தவாறு விரதம் ஏற்றுக்கொண்டன. எவ்வாறு இந்த வாக் முதலியவைகள் பிராணன்களில் மத்யம பிராணனோ அவ்வாறே தேவதைகளிடத்தில் வாயு ஆகும். ஏனெனில் மற்ற தேவகணங்கள் அஸ்தமிக்கின்றன (மறைகின்றன). ஆனால் வாயு அஸ்தமிக்கிறது இல்லை. அந்த வாயு அஸ்தமாகாத தேவதையாகும்.
भाष्यम् - अथानन्तरमधिदैवतं देवताविषयं दर्शनमुच्यते। कस्य देवता विशेषस्य व्रतधारणं श्रेयः? इति मीमांस्यते। अध्यात्मवत्सर्वम्। ज्वलिष्याम्येवाहमित्यग्निर्दध्रे। तप्स्याम्यह-मित्यादित्यः, भास्याम्यहमिति चन्द्रमाः; एवमन्या देवता यथादैवतम्।
அனுவாதம்- அதன்பின் அதிதைவதம் தேவதா விஷயம் தர்சனம் கூறப்படுகிறது. எந்த தேவதா விசேஷத்தின் விரதத்தை மேற்கொள்வது சிறந்தது? என்று அத்யாத்மம் போல் எல்லாம் விசாரணை செய்கிறது என்பதாகும். நான் ஜ்வலித்துக் கொண்டு இருப்பேன் அக்னி விரதத்தை மேற்கொண்டது. நான் சூடாகவே (தபித்துக்கொண்டு) இருப்பேன் என்று ஆதித்தியனும், நான் பிரகாசித்துக் கொண்டு இருப்பேன் என்று சந்திரனும் விரதம் மேற்கொண்டன. அவ்வாறே மற்ற தேவதைகளும் தங்கள் தங்கள் தெய்வத்திற்குத் தகுந்தவாறு விரதத்தை மேற்கொண்டன.
भाष्यम् - सोऽध्यात्मं वागादीनामेषां प्राणानां मध्ये मध्यमः प्राणो मृत्युना अनाप्तः स्वकर्मणो न प्रच्यावितः स्वेन प्राणव्रतेनाभग्नव्रतो यथा, एवमेतासामग्न्यादीनां देवतानां वायुरपि। म्लोचन्त्यस्तं यन्ति स्वकर्मभ्य उपरमन्ते- यथामध्यात्मं वागादयोऽन्या देवता अग्न्याद्याः, न वायुरस्तं याति- यथा मध्यमः प्राणः, अतः सैषा अनस्तमिता देवता यद्वायुर्योऽयं वायुः। एवमध्यात्ममधिदैवं च मीमांसित्वा निर्धारितम्- प्राणवाय्वात्मनो र्व्रतमभग्नमिति।
அனுவாதம்- அந்த வாக் முதலிய அத்யாத்ம பிராணன்களின் மத்தியில் உள்ள மத்யம பிராணன் மிருத்யுவினால் அடையப்படாததால் தன் கர்மத்திலிருந்து நழுவுவது இல்லை. ஆகையால் தன்னுடைய பிராண விரதத்தால் அவைகளுடைய விரதம் பங்கம் அடைவதில்லையோ அவ்வாறே இந்த அக்னி முதலிய தேவதைகளின் வாயுவும் ஆகும். எவ்வாறு அத்யாத்ம வாக் முதலிய தேவதைகளும் மற்றும் வேறு தேவதைகளாகிய அக்னி முதலியைவகளும் தங்கள் கர்மங்களில் இருந்து நிவர்த்தியாகின்றன. எவ்வாறு மத்யமப்பிராணன் நிவர்த்தி ஆவதில்லையோ அவ்வாறே வாயுவும் அஸ்தம் ஆவதில்லை. ஆகையால் எந்த வாயு அஸ்தமிக்காத தேவதையாகுமோ அதுவே இந்த வாயு. இவ்வாறு அத்யாத்ம அதிதைவம் இவைகளை விசாரம் செய்து இவ்வாறு நிச்சயிக்கப்பட்டது - பிராணரூப வாயுரூப உபாசனையின் விரதம் ஒருகாலும் பங்கப்படாததாகும்.
अथैषोको भवति यतश्चोदेति सूर्योऽस्तं यत्र च गच्छतीति प्राणाद्वा एष उदेति प्राणेऽस्तमेति तं देवाश्चक्रिरे धर्म ्ँ स एवाद्य स उ श्व इति यद्वा एतेऽमुर्ह्यध्रियन्त तदेवाप्यद्य कुर्वन्ति। तस्मादेकमेव व्रतं चरेत्प्राण्याच्चैवापान्याच्च नेन्मा पाप्मा मृत्युराप्नुवदिति यद्यु चरेत्समापिपयिषेत्तेनो एतस्यै देवतायै सायुज्य ्ँ सलोकतां जयति।।२३।।
மந்த்ரார்த்- இந்த அர்த்தத்தை பிரதிபாதிக்கக் கூடியது இந்த மந்திரம். எதனால் (இந்த வாயு தேவதையால்) சூரியன் உதயமாகி அஸ்தமிக்கின்றதோ, ஆகிய முதலியவை. அது பிராணனாலேயே உதிக்கின்றது. அது பிராணனிலேயே அஸ்தமனமாகின்றது. இந்த தர்மத்தை தேவதைகள் செய்தன. அது இன்று அதுவே நாளையும் ஆகும். தேவதைகள் எந்த விரதத்தை மேற்கொண்டனவோ அதையே இன்றும் செய்கின்றன. ஆகையால் ஒரே விரதத்தையே ஆசரணம் செய்கிறது. பிராணனும், அபானனும் வியாபாரம் செய். என்னை எந்த பாப மிருத்யுவும் வியாபிக்கக் கூடாது என்ற பயத்துடன் இதை ஆசரணம் (கடைபிடித்தல்) செய்து அதை பூர்த்தி செய்வதில் இச்சை கொள். இதனால் அந்த தேவதை மூலமாய் சாயுஜ்ய, சாலோகம் இவைகளை அடைய முடியும்.
भाष्यम्- अथैतस्यैवार्थस्य प्रकाशकः एषोको मन्त्रो भवति। यतश्च यस्माद्वायोरुदेत्युद्गच्छति सूर्यः, अध्यात्मं च चक्षुरात्मना प्राणाद् अस्तं च यत्र वायौ प्राणे च गच्छत्यपरसंध्यासमये स्वापसमये च पुरुषस्य, तं देवास्तं धर्मं देवाश्चक्रिरे धृतवन्तो वागादयोऽग्न्यादयश्च प्राणव्रतं वायुव्रतं च पुरा विचार्य। स एवाद्येदानीं श्वोऽपि भविष्यत्यपि कालेऽनुवर्त्यतेऽ-नुवर्तिष्यते च देवैरित्यभिप्रायः।
அனுவாதம்- இந்த அர்த்தத்தை பிரகாசப்படுத்தக் கூடிய போற்றுதற்குரிய மந்திரமாகும். எந்த வாயுவினால் சூரியன் உதிக்கின்றான். அவ்வாறே அத்யாத்ம பக்ஷத்தில் அந்த பிராணனால் கண் முதலியவைகள் உதிக்கின்றன. மேலும் வாயு மற்றும் பிராணனிடத்தில் சாயங்காலத்திலும், புருஷனுடைய சுஷூப்தி சமயத்திலும் அஸ்தமிக்கின்றது. அந்த தர்மத்தை தேவதைகள் செய்தன. வாக் முதலிய தேவதைகளும், அக்னி முதலிய தேவதைகளும் முன்பு விசாரனை செய்து பிராண விரதம், வாயு விரதம் இவைகளை மேற்கொண்டன. அதையே இன்றும், இப்பொழுதும் நாளையும் தொடர்ந்து அனுஷ்டிக்கும் சமயத்தில் தேவதைகளின் மூலமாய் அவைகளை தொடர்ந்து செய்வார்கள் என்பது அபிப்பிராயம்.
भाष्यम्- तत्रेमं मन्त्रं संक्षेपतो व्याचष्टे ब्राह्मणम्- प्राणाद्वा एष सूर्य उदेति प्राणेऽस्तमेति। तं देवाश्चक्रिरे धर्मं स एवाद्य स उ श्व इत्यस्य कोऽर्थः? इत्युच्यते- यद्वै एते व्रतममुर्हि अमुष्मिन्काले वागादयोऽग्न्यादयश्च प्राणव्रतं वायुव्रतं चाध्रियन्त, तदेवाद्यापि कुर्वन्त्यनुवर्तन्तेऽनुवर्तिष्यन्ते च। व्रतं तयोरभग्नमेव। यत्तु वागादिव्रतमग्न्यादिव्रतं च तद्भग्नमेव, तेषामस्तमनकाले स्वापकाले च वायौ प्राणे च निम्लुक्तिदर्शनात्।
அனுவாதம்- இங்கு இந்த மந்திரத்தை சுருக்கமாய் ப்ராஹ்மணம் வியாக்கியானம் செய்கின்றது. பிராணனால் சூரியன் உதிக்கின்றது பிராணனிலேயே அஸ்தமிக்கின்றது.“तं देवाश्चक्रिरे धर्मं स एवाद्य स उ श्वः” (தம் தேவாƒசக்ரிரே தர்மம் ஸ ஏவாத்ய ஸ உƒவ:) என்பதின் அர்த்தம் என்ன? என்பது கூறப்படுகிறது- எந்த அந்த வாக் முதலியவைகளும், அக்னி முதலியவைகளும் பிராண விரதத்தையும், வாயு விரதத்தையும் அனுஷ்டித்தனவோ அந்த விரதத்தையே இன்று வரை இப்பொழுதும் இனியும் அனுஷ்டிக்கச் செய்யவேண்டும். அவர்களால் விரதம் தடை செய்யப்படவில்லை. எப்பொழுதும் வாக் முதலிய விரதம், அக்னி முதலிய விரதம் அவைகள் அஸ்தமிக்கும் காலத்திலும், சுஷூப்தி காலத்திலும் காணப்படாததால் அப்பொழுது அது பங்கப்படுகிறது.
भाष्यम् - अथैतदन्यत्रोक्तम्।“यदा वै पुरुषः स्वपिति प्राणं तर्हि वागप्येति प्राणं मनः प्राणं चक्षुः प्राणं श्रोत्रं यदा प्रबुध्यते प्राणादेवाधि पुनर्जायन्त इत्यध्यात्ममथाधिदैवतं यदा वा अग्निः वायुम् अनुगच्छति तर्हि अनूद्वाति तस्मादेनमुदवासीदित्याहुर्वायुं ह्यनूद्वाति यदादित्योऽस्तमेति वायुं तर्हि प्रविशति वायुं चन्द्रमा वायौ दिशः प्रतिष्द्भिता वायोरेवाधि पुनर्जायन्ते” इति।
அனுவாதம்- அந்த விஷயத்தையே வேறு இடத்தில் கூறுகிறார்- எப்பொழுது புருஷன் உறங்குகிறானோ அப்பொழுது வாக் பிராணனில் லீனமாகிறது. அவ்வாறே பிராணனிடத்தில் மனம், பிராணனிடத்தில் கண், காது, இவை எல்லாம் லீனமாகின்றன. அது எப்பொழுது விழிக்கின்றதோ அப்பொழுது பிராணனிடமிருந்து மறுபடியும் உண்டாகின்றன. இது அத்யாத்ம திருஷ்டி. இனி அதிதைவத திருஷ்டி கூறப்படுகிறது. எப்பொழுது அக்னி சாந்தமடைகிறதோ அப்பொழுது வாயுவின் அதீனமாகி சாந்தி அடைகின்றது. இதனால் இது அஸ்தமித்தது என்று கூறுகிறார்கள். எப்பொழுது சூரியன் அஸ்தமிக்கின்றதோ அப்பொழுது வாயுவினிடத்தில் பிரவேசிக்கின்றது. அவ்வாறே வாயுவினிடத்தில் சந்திரனும். மேலும் வாயுவிடத்தில் திசைகளும் பிரதிஷ்டையாகின்றன. இவ்வாறு வாயுவில் இருந்தே மறுபடியும் மறுபடியும் உத்பன்னமாகின்றன.
भाष्यम् - यस्माद् एतदेव व्रतं वागादिष्वग्न्यादिषु चानुगतं यदेतद्वायोश्च प्राणस्य च परिस्पन्दात्मकत्वं सर्वैर्देवैरनुवर्त्यमानं व्रतम् तस्मादन्योऽप्येकमेव व्रतं चरेत्। किं तत्? प्राण्यात्प्राणनव्यापारं कुर्यादपान्यादपाननव्यापारं च न हि प्राणापानव्यापारस्य प्राणना-पाननलक्षणस्योपरमोऽस्ति। तस्मात्तदेवैकं व्रतं चरेद्धित्वेन्द्रियान्तर-व्यापारं नेन्मा मां पाप्मा मृत्युः श्रमरूप्याप्नुवदाप्नुयात्। नेच्छब्दः परिभये-“यद्यहमस्माद् व्रतात्प्रच्युतः स्याम्, ग्रस्त एवाहं मृत्युना” इत्येवं त्रस्तो धारयेत्प्राणव्रतमित्यभिप्रायः।
அனுவாதம்- ஏனெனில் வாக் முதலியவைகளிலும் அக்னி முதலியவைகளிலும் விரதம் அனுகதமாய் இருக்கின்றது. அதாவது வாயு, பிராணன் இவைகளுக்கு எந்த பரிஸ்பந்தரூப தர்மம் உள்ளதோ அது எல்லா தேவதைகளின் மூலமாய் அனுவர்த்த (தொடர்ந்து ஊடுருவி இருத்தல்)மாகிய விரதம் ஆகும். ஆகையால் மற்றவைகளும் ஒரு விரதத்தை ஆசரணம் செய்ய வேண்டும். அந்த ஒரு விரதம் என்ன? பிராணனால் பிராணனை வியாபாரம் செய்யவேண்டும். “அபான்யாத்” அபானன வியாபாரம் செய்ய வேண்டும். ஏனெனில் பிராணன், அபானன் ஆகியவைகளின் வியாபாரம் ஒரு நாளும் நிவர்த்தியாகாது. ஆகையால் இந்த பயத்தால் எனக்கு ஒருபொழுதும் சிரம ரூபியான மிருத்யுவினால் வியாப்தம் ஆகக்கூடாது. என்று மற்ற இந்திரியங்கள் வியாபாரத்தை விட்டு இந்த ஒரு விரதத்தை ஆசரணம் செய்தது. இங்குनेत् (நேத்) சப்தம் பரிபய அர்த்தத்தில் ஆகும். இதன் அபிப்பிராயம் என்னவெனில் -- இந்த விரதத்திலிருந்து நழுவினால் அவசியம் மிருத்யுவினால் பீடிக்கப்பட்டவனாவேன் என்று பயந்து பிராண விரதத்தைக் கடைபிடித்தது.
भाष्यम् - यदि कदाचित् उ चरेत्प्रारभेत् प्राणव्रतम्, समापिपयिषेत्समापयितुमिच्छेत्, यदि ह्यस्माद् व्रतादुपरमेत्प्राणः परिभूतः स्याद्देवाश्च, तस्मात्समापयेदेव। तेन उ तेनानेन व्रतेन प्राणात्मप्रतिपत्त्या सर्वभूतेषु- वागादयोऽग्न्यादयश्च मदात्मका एव, अहं प्राण आत्मा सर्वपरिस्पन्दकृत्- एवं तेनानेन व्रतधारणेन एतस्या एव प्राणदेवतायाः सायुज्यं सयुग्भावमेकात्मत्वं सलोकतां समानलोकतां वा एकस्थानत्वम्विज्ञानमान्द्यापेक्षमेतत् जयति प्राप्नोतीति।।
அனுவாதம்- ஒரு சமயம் பிராண விரதம் ஆரம்பித்தால் அதை பூர்த்தி செய்யவேண்டும் என்று இச்சை கொள்ளவேண்டும். ஏனெனில் இவ்வாறு முடிக்காவிடில் விரதம் தடைபட்டு அதனால் பிராணனும், தேவதைகளும் தோல்வியை அடைவார்கள். ஆகையால் பூர்த்தி செய்யவேண்டும்“तेन उ” (தேன உ) அதாவது அந்த இந்த பிராணத்மபிராப்தி ரூபமாகிய விரதத்தால் எல்லா பூதங்களிலும் அதாவது வாக் முதலியவைகளும் அக்னி முதலியவைகளும் என் ஸ்வரூபமே. நான் பிராணரூப ஆத்மா. எல்லாவற்றையும் சலிக்கச் செய்கின்றவன் என்று இவ்வாறு அந்த இந்த விரதத்தை அனுசரிக்கின்ற இந்த பிராண தேவதையே ஸாயுஜ்யத்தை, ஸம்யோகத்தை அதாவது ஏகரூபத்தை அவ்வாறே விக்ஞானத்தின் மாந்தியத்தின் அபேக்ஷயைால் ஸாலோகத்தை அதாவது ஸமான லோகத்தை அதாவது ஸமான ஸ்தானத்தை ஜெயிக்கின்றது, அடைகின்றது.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये प्रथमोऽध्याये पञ्चमं सप्तान्नब्राह्मणम्।। ப்ருஹதாரண்ய உபநிஷத் பாஷ்யத்தில் முதல் அத்யாயத்தில் ஐந்தாவது பிராஹ்மணம் முற்றிற்று.