चतुर्थ अध्यायः द्वितीय ब्राह्मणम्
मन्त्रः - जनको ह वैदहः कूर्चादुपावसर्पन्नुवाच नमस्तेऽस्तु याज्ञवल्क्यानु मा शाधीति स होवाच यथा वै सम्राण्महान्त-मध्वानमेष्यन् रथं वा नावं वा समाददीतैवमेवैताभिरुपनिषिद्भः समाहितात्मास्येवं वृन्दारक आढः सन्नधीतवेद उक्तोपनिषत्क इतो विमुच्यमानः क्व गमिष्यसीति नाहं तद् भगवन् वेद यत्र गमिष्यामीत्यथ वै तेऽहं तद् वक्ष्यामि यत्र गमिष्यसीति ब्रवीतु भगवानिति।। १।।
अनुवादः - மந்திரம் - விதேஹ ராஜா ஜனகர் தன் ஆசனத்திலிருந்து எழுந்து (யாக்ஞவல்க்யர்) சமீபம் சென்று இவ்வாறு கூறினார் - யாக்ஞவல்கிய! தங்களுக்கு நமஸ்காரம். எனக்கு உபதேசம் செய்யுங்கள். அவர் (யாக்ஞவல்க்யர்) கூறினார்- ஹே ராஜன்! எவ்வாறு நீண்ட மார்க்கத்தில் செல்லும் புருஷன் எவ்வாறு நல்ல ரதத்தையோ, ஓடத்தையோ ஆசரியப்பானோ அவ்வாறு இந்த உபநிஷத்துக்களுடன் (உபாசனைகளுடன் கூடிய பிராணன் முதலிய பிரஹ்மங்களை உபாசனை செய்து சமாஹித சித்தத்தை அடைகிறானோ அவ்வாறு பூஜ்ய, ஶ்ரீமான், வேதத்தை அத்யயனம் செய்த, கூறப்பட்ட உபாசனை செய்தவனாகின்றான். இவ்வளவு இருந்தும் சரீரத்தை விட்டு எங்கு செல்கிறது? (ஜனகர்) பகவன்! நான் எங்கு செல்வேன். அது எனக்குத் தெரியாது. (யாக்ஞவல்க்யர்) இப்பொழுது நான் உங்களுக்கு எங்கு செல்வீர்கள் அதைக் கூறுகிறேன். (ஜனகர்) அதை எனக்கு கூறுங்கள்.
भाष्यम् - जनको ह वैदेहः। यस्मात् सविशेषणानि सर्वाणि ब्रह्माणि जानाति याज्ञवल्क्यः, तस्मादाचार्यकत्वं हित्वा जनकः कूर्चादासनविशेषादुत्थाय उप समीपमवसर्पन् पादयोर्निपतन्नित्यर्थः, उवाचोक्तवान्- नमस्ते तुभ्यमस्तु हे याज्ञवल्क्यः, अनु मा शाध्यनुशधि मामित्यर्थः, इतिशब्दो वाक्यपरिप्तसमाप्त्यर्थः।
अनुवादः - ச.பா- (ஜனகோ ஹ வைதேஹ:). எதனால் யாக்ஞவல்க்யர் விசேஷணங்களுடன் கூடிய எல்லா பிரஹ்மங்களையும் அறிந்தவராய் இருக்கிறாரோ அதனால் ஜனகர் தன்னுடைய ஆச்சாரித்துவத்தை விட்டு விசேஷமான ஆசனத்தில் இருந்து எழுந்து அவர் சமீபம் சென்று பாதங்களைப் பணிந்தார் என்பது பொருள். (ஜனகர்) இவ்வாறு கூறினார் - ஹே யாக்ஞவல்க்கிய உங்களுக்கு நமஸ்காரம்.“अनु मा शाचि” (அனு மா ஷாதி). அதாவது எனக்கு நீங்கள் உபதேசியுங்கள் என்பது பொருள்.इति (இதி) என்றசப்தம் வாக்கியத்தை முடிப்பதற்காக.
भाष्यम् - स होवाच याज्ञवल्क्यः यथा वै लोके हे सम्राट् महान्तं दीर्घमध्वानमेष्यन् गमिष्यन्, रथं वा स्थलेन गमिष्यन्, नावं वा जलेन गमिष्यन् समाददीत एवमेवैतानि ब्रह्माण्येताभिरुप-निषिद्भर्युक्तानि उपासीनः समाहितातात्मासि, अत्यन्तमेताभि-रुपनिषिद्भः संयुक्तात्मासि, न केवलमुपनिषत्समाहितः, एवं वृन्दारकः पूज्यश्चाढश्चेश्वरो न दरिद्र इत्यर्थः, अधीतवेदोऽधीतो वेदो येन स त्वमधीतवेदः, उक्ताश्चोपनिषद आचार्येस्तुभ्यं स त्वमुक्तोपनिषत्कः।
अनुवादः - ச.பா- அந்த யாக்ஞவல்க்யர் இவ்வாறு கூறினார்- ஹே சம்ராட்! எவ்வாறு உலகில் நீண்ட மார்க்கத்தில் செல்பவன் தரையாய் இருந்தால் ரதத்தினாலும், தண்ணீராய் இருந்தால் அதைக்கடப்பதற்கு ஓடத்தை பயன்படுத்துவது போல் இந்த பிரஹ்மங்களை இந்த உபாசனைகளாகிய உபநிஷத்களால் கூறப்பட்டதை உபாசனை செய்கின்றவனாய் சமாஹித ஆத்மாவாய் இருக்கிறாய். அத்யந்தம் அந்த உபநிஷத்துக்களினால் (உபாசனைகளால்) கூடிய ஆத்மாவாய் இரு. கேவலம் உபாசனை மட்டும் அல்ல. இவ்வாறு அறிந்து பூஜ்ய, போற்றுதற்குரிய, ஈஸ்வரனாய். தரித்ரனாய் என்பது பொருள். அதீத வேத.- வேதத்தை அத்யயனம் செய்தவனாயும், கூறப்பட்ட உபநிஷத்கள் அறிந்தவன் எவ்வாறு ஆசாரியர் உபதேசம் செய்தாரோ அவ்வாறு ஆகும் கூறப்பட்ட உபநிஷத் விஷயம்.
भाष्यम् - एवं सर्वविभूतिसम्पन्नोऽपि सन् भयमध्यस्थ एव परमात्मज्ञानेन विनाकृतार्थ एव तावदित्यर्थः, यावत् परं ब्रह्मं न वेत्सि। इतोऽस्माद्देहाद् विमुच्यमान एताभिर्नौरथस्थनीयाभिः समाहितः क्व कस्मिन् गमिष्यसि, किं वस्तु प्राप्स्यसीति?
अनुवादः - ச.பா- இவ்வாறு சர்வவிபூதி உடையவனாய் இருந்தாலும் பரமாத்ம ஞானம் இல்லாவிடில் பயத்தின் நடுவில் இருப்பான். எதுவரை பரம்பிரஹ்மத்தை அறியவில்லையோ அதுவரை கிருதார்த்தம் அற்றவனே என்பது பொருள். இந்த தேஹத்திலிருந்து விடுபட்டு இந்த ஓடம், ரதம் போன்ற உபாசனையினால் சமாஹிதமானவன் எங்கு செல்வான்? எந்த வஸ்துவை அடைவான்
भाष्यम् - जनकः - नाहं तद् वस्तु भगवन् पूजावन् वेद जाने यत्र गमिष्यामीति।
अनुवादः - ச.பா- (ஜனகர்) பகவன்! பூஜாவன்! நான் அந்த வஸ்துவை அறியேன். எங்கு செல்லுவேன் என்று தெரியாது.
भाष्यम् - याज्ञवल्क्यः - अथ यद्येवं न जानीषे यत्र गतः कृतार्थः स्याः अहं वै ते तुभ्यं तद् वक्ष्यामि यत्र गमिष्यसीति।
अनुवादः -ச.பா-கிருதார்த்தர்கள் எங்கு செல்வார்கள் என்று தெரியாவிடின் நான் உங்களுக்கு அவர்கள் எங்கு செல்வார்கள் என்பதைக் கூறுகிறேன்.
भाष्यम् - जनकः - ब्रवीतु भगवानिति, यदि प्रसन्नो मां प्रति।
अनुवादः - ச.பா- ஹே பகவன்! நீங்கள் என்னிடம் பிரசன்னம் ஆனால் எனக்கு அதை உபதேசியுங்கள்.
भाष्यम् - याज्ञवल्क्यः - श्रुणु- ।। १।।
अनुवादः - ச.பா-யாக்ஞவல்க்யர் - கேள்.
मन्त्रः - इन्धो ह वै नामैष योऽयं दक्षिणेऽक्षन् पुरुषस्तं वा एतमिन्ध ँ सन्तमिन्द्र इत्याचक्षते परोक्षेणैव परोक्षप्रिया इव हि देवाः प्रत्यक्षद्विषः।। २।।
अनुवादः - மந்திரம்- எந்த இந்த தக்ஷிண (வலது) நேத்திரத்தில் இருக்கும் புருஷன் இந்தன்(इन्ध) என்ற பெயருடையது. இந்த புருஷன் ஒளிப்பவனாய் இருந்தாலும் பரோக்ஷ ரூபமாய் இந்திரன் என்கிறார்கள். ஏன் எனில் தேவகணங்கள் பரோக்ஷத்தை விரும்புவார்கள். பிரத்க்ஷத்தை துவேஷிப்பவர்கள்.
भाष्यम् - इन्धो ह वै नाम- इन्ध इत्येवन्नामा, यश्चक्षुर्वै ब्रह्मेति पुरोक्त आदित्यान्तर्गतः पुरुषः स एषः, योऽयं दक्षिणेऽक्षन् अक्षणि विशेषेण व्यवस्थितः- स च सत्यनामा, तं वै एतं पुरुषं दीप्तिगुणत्वात् प्रत्यक्षं नाम अस्येन्ध इति, तमिन्धं सन्तमिन्द्र इत्याचक्षते परोक्षेण, यस्मात् परोक्षप्रिया इव हि देवाः प्रत्यक्षद्विषः प्रत्यक्षनामग्रहणं द्विषन्ति। एष त्वं वैश्वानरमात्मानं सम्पन्नोऽसि।।२।।
अनुवादः -ச.பா-“इन्धो ह वै नाम” (இந்தோ வை நாம்). இந்தன் என்றபெயருடையது. கண்களே பிரஹ்மம் என்று கூறிய ஆதித்தியனில் அந்தர்கதமான புருஷனே அந்த இவன். அந்த இந்த வலது கண்ணில் (தக்ஷிண சக்ஷுவில்) விசேஷமாய் இருப்பது அந்த சத்யம் என்றபெயருடையது. அந்த இந்த புருஷன் ஒளிரும் குணமுடையதால் பிரத்யக்ஷ பெயராகிய இந்தம்(इन्ध)என்றபெயருடையதாகிறது. அந்த இந்தம் இருப்பதை இந்திரன் என்று பரோக்ஷமாய் கூறப்படுகிறது. ஏன்எனில் தேவர்கள் பரோக்ஷ பிரியர்கள் போல் இருப்பதால் பரோக்ஷப்பிரியர்கள். ஆகையால் பிரத்யக்ஷ பெயரை கிரஹிப்பதற்கு த்வேஷம் கொள்கிறார்கள். நீ அந்த வைஷ்வானரம் ஆத்மாவை அடைந்தவனாய் இரு.
मन्त्रः - अथैतद् वामेऽक्षणि पुरुषरूपमेषास्य पत्नी विराट् तयोरैष स ँस्तावो य एषोऽन्तर्ह्य्दय आकाशोऽथैनयोरेतदन्नं य एषोऽन्तर्ह्य्दये लोहितपिण्डोऽथैतयोरेतत् प्रावरणं यदेतदन्तर्ह्य्दये जालकमिवाथैनयोरेषा सृतिः सञ्चरणी यैषा ह्य्दयादूर्ध्वा नाडु-च्चरति यथा केशः सहस्रधा भिन्न एवमस्यैता हिता नाम नाडोऽ-न्तर्ह्य्दये प्रतिष्द्भिता भवन्त्येताभिर्वा एतदास्रवदास्रवति तस्मादेष प्रविविक्ता-हारतर इवैव भवत्यस्माच्छारीरादात्मनः।। ३।।
अनुवादः - மந்திரம்- இடது கண்ணில் சக்ஷுவில் எந்த புருஷரூபம் உள்ளதோ அது இந்த இந்திரனின் பத்னி விராட் (அன்னம்) ஆகும். இவை இரண்டும் சேரும் இடம் ஹ்ருதயத்தின் உள் இருக்கும் (அந்தர்கத) ஆகாசமாகும். இவை இரண்டின் எது அன்னமோ அது ஹ்ருதயத்தின் உள்ள சிகப்பு நிறமுடைய பிண்டம். அவை இரண்டையும் மறைக்கக் கூடிய திரையானது இருதயத்தில் காணப்படும் வலை போன்ற பகுதியாகும். இவை இரண்டின் மார்க்கம் அதாவது சஞ்சரிக்கும் வாயில் எது எனில் ஹ்ருதயத்தின் மேலே கிளம்பிச் செல்கின்ற நாடிகள். இவ்வாறு ஆயிரம் பாகங்களாக பிரிக்கப்பட்ட கேசங்கள் போல் இந்த ஹிதா என்ற பெயருடைய நாடிகள் ஹ்ருதயத்தின் உள் இருக்கின்றன. இதன் மூலமாய் அன்னத்தின் ரசம் (சரீரத்தில்) சென்று அடைகிறது. இதனால் (ஸ்தூல சரீர அபிமானி வைஷ்வானரால்) இந்த (சூக்ஷ்ம தேஹ அபிமானி (தைஜசன்) மிக்க சூக்ஷ்மமான அன்னத்தை கிரஹிக்கின்றது.
भाष्यम् - अथैतद् वामेऽक्षणि पुरुषरूपम्, एषास्य पत्नी- यं त्वं वैश्वानरमात्मानं सम्पन्नोऽसि तस्यास्येन्द्रस्य भोक्तृर्भोग्यैषा पत्नी विराडन्नं भोग्यत्वादेव। तदेतदन्नं चात्ता चैकं मिथुनं स्वप्ने। कथम्? तयोरेष इन्द्राण्या इन्द्रस्य चैष संस्तावः, सम्भूय यत्र संस्तवं कुर्वाते अन्योन्यं स एष संस्तावः। कोऽसौ? य एषोऽन्तर्ह्य्दय आकाशः, अन्तर्ह्य्दये ह्य्दयस्य मांसपिण्डस्य मध्ये।
अनुवादः - ச.பா- எந்த இது வாம (இடது) சக்ஷுவில் உள்ள புருஷரூபம் இந்த அதனுடைய பத்தினி - நீங்கள் எந்த வைஷ்வாநர ஆத்மாவை உடையவராய் இருக்கின்றீரோ அந்த இந்த இந்திரனின் போக்யரூப பத்தினியாகும். போக்யமாய் இருப்பதன் காரணமாக அது விராட் அன்னம். அந்த அன்னமும், அத்தாவும் ஸ்வப்னத்தில் ஒன்றாய் சேருகின்றன (மிதுனம் அடைகின்றன). எவ்வாறு? இது இந்திராணி இந்திரனின் சம்ஸ்தாவம்(संस्तावः) அதாவது இரண்டும் சேர்ந்து ஒன்று மற்றொன்றைசம்ஸ்தவம் செய்கின்றன. (போற்றுகின்றன). இதுவே சம்ஸ்தாவம் எனப்படுகிறது. அந்த சம்ஸ்தாவம் எது? அது ஹ்ருதயத்தின் உள்ளே உள்ள (அந்தர் கத) ஆகாசம் ஆகும். அந்தர்கதம் என்றால் மாம்ச பிண்டரூப ஹிருதயத்தின் உள்ளே என்பதாகும்.
भाष्यम् - अथैनयोरेतद् वक्ष्यमाणमन्नं भोज्यं स्थितहेतुः, किं तत्? य एषोऽन्तर्ह्य्दये लोहितपिण्डो लोहित एव पिण्डाकारापन्नो लोहितपिण्डः। अन्नं जग्घ्धं द्वेधा परिणमते, यत् स्थूलं तदधो गच्छति, यदन्यत्तत् पुनरग्निना पच्यमानं द्वेधा परिणमते- यो मध्यमो रसः स लोहितादिक्रमेण पाञ्चभौतिकं पिण्डं शरीरमुप-चिनोति, योऽणिष्द्भो रसः स लोहितपिण्ड इन्द्रस्य लिङ्गात्मनो ह्य्दये मिथुनीभूतस्य, यं तैजसमाचक्षते। स तयोरिन्द्रेन्द्राण्योर्ह्य्दये मिथुनीभूतयोः सूक्ष्मासु नाडीष्वनुप्रविष्टः स्थितिहेतुर्भवति, तदेतदुच्यते- अथैनयोरेतदन्नमित्यादि।
अनुवादः - ச.பா- மேலும் இவ்விரண்டின் இனி கூறப்போகும் அன்னம் அதாவது போஜ்யமே ஸ்திதிக்கு ஹேதுவாகிறது.. அது என்ன? அது ஹிருதயத்தின் உள்ளே இருக்கும் லோஹித பிண்டம் அதாவது ரக்தாகாரவர்ணமுடைய பிண்டம். சாப்பிட்ட அன்னம் இரண்டுவிதமாய் பரிணாமம் ஆகின்றது. எது ஸ்தூல பாகம் கீழே செல்கிறது. மேலும் மற்றொரு பாகம் மறுபடியும் அக்னியினால் பக்குவப்படுத்தப்பட்டு இரண்டுவிதமாய் பரிணாமம் ஆகின்றது. எது மத்ய பாகத்தில் உள்ளதோ அது ரசமாகிறது. அது லோஹிதம் முதலிய கிரமமாக பாஞ்ச பெளதிகம் பிண்டம் சரீரத்தைப் புஷ்ட்டியாக்குகிறது. அதைவிட சூக்ஷ்மமான ரசம் ஆகிறது. அது ஹிருதயத்தில் மிதுன பாவத்தை அடைந்த லிங்காத்மாவாகிய இந்திரனுடைய லோஹிதபிண்டம். இது தேஜஸ் எனப்படுகிறது. அந்த சூக்ஷ்ம நாடிகளில் பிரவேசமாகி ஹிருதயத்தில் மிதுன பாவத்தை அடைந்த இந்திரன், மற்றும் இந்திராணியின் ஸ்திதிக்கு காரணமாகிறது. இதையே“अथैनयोरेतदन्नम्” (அதைனயோரததன்னம்) என்பது முதலிய வாக்கியங்களால் கூறப்படுகிறது.
भाष्यम् - किञ्चान्यत् अथैनयोरेतत् प्रावरणम्, भुक्तवतोः स्वपतोश्च प्रावरणं भवति लोके, तत्सामान्यं हि कल्पयति श्रुतिः, किं तदिह प्रावरणम्? यदेतदन्तर्ह्य्दये जालकमिव- अनेकनाडीछिद्रबहुलत्वाज्जालकमिव।
अनुवादः - ச.பா- இதைத்தவிர வேறு விஷயம்- இவ்விரண்டிற்கும் பிராவரணம் (மறைப்பு) உள்ளது. உலகத்தில் சாப்பிடுகிறவனுக்கும், தூங்குபவனுக்கும் ஆவரணம் (மறைப்பு) உள்ளது என்பதை ஸ்ருதி அதன் சமானத்தன்மையை கல்பிக்கிறது. இங்கு அந்த பிராவரணம் எது? எது ஹ்ருதயத்தில் வலை போல் உள்ளதோ அது. அநேக நாடிகளின் துளைகள் மிகுந்து இருப்பதால் வலைக்குச் (ஜாலத்திற்கு) சமானமாகிறது
भाष्यम् - अथैनयोरेषा सुप्तर्मार्गः, सञ्चरतोऽनयेति सञ्चरणी, स्वप्नाज्जागरितदेशगमनमार्गः का सा श्रुतिः? यैषा ह्य्दयाद्ह्य्दयदेशादूर्ध्वाभिमुखी सती उच्चरति नाडी, तस्याः परिमाणमिदमुच्यते- यथा लोके केशः सहस्रधा भिन्नोऽन्यन्तसूक्ष्मो भवति, एवं सूक्ष्मा अस्य देहस्य सम्बन्धिन्यो हिता नाम हिता इत्येवं ख्याता नाडः, ताश्चान्तर्ह्य्दये मांसपिण्डे प्रतिष्द्भिता भवन्ति, ह्य्दयाद् विप्ररूढास्ताः सर्वत्र कदम्बकेसरवत्, एताभिर्नाडीभि-रत्यन्तसूक्ष्माभिरेतदन्नमास्रवद् गच्छदास्रवति गच्छति।
अनुवादः - ச.பா- மேலும் அவை இரண்டின் அசைவ மார்க்கம், அதனால் சஞ்சரிப்பதால் சஞ்சாரினீ. ஸ்வப்னத்திலிருந்து ஜாகரித தேசத்திற்கு வருவதே மார்க்கம். அந்த மார்க்கம் யாது? எது இந்த ஹ்ருதயத்திலிருந்து அதாவது ஹிருதயதேசத்திலிருந்து மேலே செல்லும் நாடி. அதன் பரிணாமம் என்று கூறப்படுகிறது. எவ்வாறு உலகில் கேசமானது ஆயிரக்கணக்காய் பிரிந்து மிகச் சூக்ஷ்மமாக ஆகின்றதோ அவ்வாறு சூக்ஷ்மமான இந்த தேஹத்தின் சம்பந்தமுடைய ஹிதா எனப்படும் நாடிகள். அவைகள் அந்தர்ஹ்ருதயத்தில் அதாவது மாம்ச பிண்டத்தில் பிரதிஷ்ட்டையாகி இருக்கின்றன. ஹருதயத்திலிருந்து எங்கும் பரவி இருக்கின்றன, கதம்ப மலரின் மகரந்தம் போல். இந்த அத்யந்த சூக்ஷ்மமான நாடிகளால் அன்னம் எல்லா இடத்திற்கும் (சரீரம் முழுவதும்) பரவுகின்றது.
भाष्यम् - तदेतद् देवताशरीरमनेनान्नेन दामभूतेनोप-चीयमानं तिष्द्भति, तस्माद् यस्मात् स्थूलेनान्नेनोपचितः पिण्डः इदं तु देवताशरीरं लिङ्ग सूक्ष्मेणान्नेनोपचितं तिष्द्भति। पिण्डो-पचयकरमप्यन्नं प्रविविक्तमेव मूत्रपुरीषादिस्थूलमपेक्ष्य लिङ्ग-स्थितिकरं त्वन्नं ततोऽपि सूक्ष्मतरम्, अतः प्रविविक्ताहारः पिण्डः, तस्मात् प्रविविक्ताहारादपि प्रविविक्ताहारतर एष लिङ्गात्मा इवैव भवति। अस्माच्छीराच्छरीरमेव शारीरं तस्माच्छारीरदात्मनो वैश्वानरात्तैजसः सूक्ष्मान्नोपचितो भवति।।३।।
अनुवादः -ச.பா-அந்த இந்த தேவதா சரீரம் கயிறு ரூப இந்த அன்னத்தால் புஷ்ட்டி அடைந்து இருக்கின்றது. எதனால் ஸ்தூலமான அன்னத்தினால் வளர்ந்த பிண்டமான இது தேவதா சரீரமாகிய லிங்க சரீரத்தை சூக்ஷ்ம அன்னத்தினால் விருத்தியாகிறது. பிண்டத்தை புஷ்ட்டியாக்கும் அன்னம் பிரிக்கப்பட்டு ஸ்தூலமான மூத்திர மலம் இவைகளை அபேக்ஷித்து லிங்க சரீரத்தை விருத்தி செய்யும் அன்னம் அதைவிட மிக சூக்ஷ்மமானது. ஆகையால் பிரிக்கப்பட்ட பிண்டமாகும். அதனால் பிரிக்கப்பட்ட ஆஹாரத்தைக் காட்டிலும் பிரிக்கப்பட்டதே இந்த லிங்க (சரீரம்) ஆத்மாபோல் ஆகிறது. இந்த சரீரத்திலிருந்து அதாவது சரீரமே சாரீரம். அந்த சாரீர ஆத்மாவாகிய வைஸ்வானரனிடமிருந்து தைஜசன் சூக்ஷ்ம் அன்னம் மூலமாய் புஷ்ட்டியாகிறது. प्राणत्मरूपविद्वांसः सर्वात्मकतावर्णनम् जनकस्य अभयप्राप्तिः। याज्ञवल्क्य आत्मसमर्पणम्
भाष्यम् - अव - स एष ह्य्दयभूतस्तैजसः सूक्ष्मभूतेन प्राणेन विध्नियमाणः प्राण एव भवति।
अनुवादः -அந்த இந்த ஹிருதயபூத தைஜசன் சூக்ஷ்ம பூதமாகிய பிராணனினால் தாரணை செய்யப்பட்டு பிராணனாகவே ஆகிறது.
मन्त्रः - तस्य प्राची दिक् प्राञ्चः प्राणा दक्षिणा दिग् दक्षिणे प्राणाः प्रतीची दिक् प्रत्यञ्चः प्राणा उदीची दिगुदञ्चः प्राणा ऊर्ध्वा दिगूर्ध्वाः प्राणा अवाची दिगवाञ्चः प्राणाः सर्वा दिशः सर्वे प्राणाः स >एष नेति नेत्यात्मागृह्यो न हि गृह्यतेऽशीर्यो न हि शीर्यतेऽसङ्गो न हि सज्यतेऽसितो न व्यथते न रिष्यत्यभयं वै जनक प्राप्तोऽसीति होवाच याज्ञवल्क्यः। स होवाच जनको वैदेहोऽभयं त्वा गच्छताद् याज्ञवल्क्य यो नो भगवन्नभयं वेदयसे नमस्तेऽस्त्विमे विदेहा अयमहमस्मि।। ४।।
अनुवादः - மந்திரம் - அந்த வித்வானுக்கு கிழக்கு திசை கிழக்குப்பிராணன் தக்ஷிண திசை தக்ஷிணப்பிராணன். மேற்கு திசை மேற்குப் பிராணன், வடக்கு திசை வடக்குப் பிராணன். மேல் திசை மேல் பிராணன், கீழ்திசை கீழ் பிராணன். மேலும் எல்லா திசைகளும் சம்பூர்ண பிராணன் ஆகும். அந்த இது நேதி நேதி(नेति-नेति) என்ற ரூபத்தால் வர்ணிக்கப்ட்ட ஆத்மா அகிராஹ்யம். அதை கிரஹிக்கமுடியாது. அது அசீர்யம் (நஷ்ட்டமாகதது) அது சீர்யமற்றது. அசங்கம்- சங்கமற்றது. அது அபத்தம் அதாவது மாறுபடாதது. மேலும் க்ஷீணம் ஆகாதது. ஹே ஜனக! நீ நிச்சயமாய் அபயத்தை அடைந்துவிட்டாய் என்று யாக்ஞவல்க்யர் கூறினார். அந்த விதேஹ ராஜா ஜனகர் கூறினார்- ஹே பகவன் யாக்ஞவல்க்ய! எதனால் நீங்கள் எனக்கு அபய பிரஹ்மத்தின் ஞானத்தை அளித்தீரோ அதனால் உங்களை நமஸ்காரம் செய்கின்றேன். மேலும் இந்த விதேஹ தேசமும் இந்த நானும் உங்களின் அதீனமாகின்றோம் -
भाष्यम् - तस्यास्य विदुषः क्रमेण वैश्वानरात्तैजसं प्राप्तस्य ह्य्दयात्मानमापन्नस्य ह्य्दयात्मनश्च प्राणात्मानमापन्नस्य प्राची दिक् प्राञ्चः प्राग्गताः प्राणाः तथा दक्षिणा दिग् दक्षिणे प्राणाः, तथा प्रतीची दिक् प्रत्यञ्चः प्राणाः, उदीची दिगुदञ्चः प्राणाः, ऊर्ध्वा दिगूर्ध्वाः प्राणाः अवाची दिगवाञ्चः प्राणाः सर्वा दिशः सर्वे प्राणाः।
अनुवादः - ச.பா- கிரமமாக வைஷ்வானரிடமிருந்து தேஜஸ்க்கும் அதிலிருந்து ஹிருதய ஆத்மாவிற்கும், ஹிருதய ஆத்மாவிலிருந்து பிராண பாவத்தை அடைந்த அந்த வித்வானுக்கு கிழக்கு திசை கிழக்கு செல்லும் பிராணன்கள். அவ்வாறே தக்ஷிண (தெற்கு) திக் தெற்கில் பிராணன், அவ்வாறே மேற்கு திசை மேற்கில் பிராணன்கள். வடக்குதிசை, வடக்குதிசையில் உள்ள பிராணன்கள். மேல் நோக்கிய திக் மேல் நோக்கிய பிராணன்கள். கீழ்நோக்கிய திக் கீழ் நோக்கிய பிராணன்கள். எல்லா திசைகள் எல்லா பிராணன்கள்.
भाष्यम् - एवं विद्वान् क्रमेण सर्वात्मकं प्राणमात्मत्वेनोप-गतो भवति। तं सर्वात्मानं प्रत्यगात्मन्युपसंह्य्त्य द्रष्टुर्हि द्रष्टुभावं नेति नेत्यात्मानं तुरीयं प्रतिपद्यते। यमेष विद्वाननेन क्रमेण प्रतिपद्यते, स एष नेति नेत्यात्मेत्यादि न रिष्यतीत्यन्तं व्याख्यातमेतत्।
अनुवादः - ச.பா- இவ்வாறு வித்வான் கிரமமாய் சர்வாத்மகமான பிராணனை ஆத்மபாவமாய் ஆகிறான். அந்த சர்வாத்மாவை பிரத்யக் ஆத்மாவில் உபசம்ஹாரம் செய்து திருஷ்ட்டாவின் திருஷ்ட்ரு பாவத்தை அதாவது “நேதி, நேதி” என்று இவ்வாறு நிர்தேசம் செய்யப்பட்ட துரீய ஆத்மாவை அடைகின்றான். இதுவே வித்வானால் கிரமமாக அடையப்படுகிறது. அந்த இதுவே“नेति नेति” (நேதி நேதி) முதலியவைகளில் இருந்து“न रिष्यति” (ந ரிஷ்யதி) வரை முன்பே வியாக்யானம் செய்யப்பட்டது.
भाष्यम् - अभयं वैजन्ममरणादिनिमित्तभयशून्यं हे जनक प्राप्तोऽसि, इति हैवं किलोवाचोक्तवान् याज्ञवल्क्यः। तदेतदुक्तम्। अथ वै तेऽहं तद् वक्ष्यामि यत्र गमिष्यसीति।
अनुवादः - ச.பா- ஹே ஜனக! அபயம் என்பது ஜன்மமரணம் முதலியவற்றின் நிமித்தமற்றநிலையை அடைவாய் என்று யாக்ஞவல்க்கியர் இவ்வாறு கூறினார். இவ்வாறு இது கூறப்படுகிறது. இப்பொழுது நான் உனக்கு எங்கு செல்வாய் என்பதை கூறப்போகிறேன்.
भाष्यम् - स होवाच जनको वैदेहोऽभयमेवत्वात्वाम-पिगच्छताद् गच्छतु यस्त्वं नोऽस्मान् हे याज्ञवल्क्य भगवन् पूजावन् अभयं ब्रह्म वेदयसे ज्ञापयसि प्रापितवानुपाधिकृताज्ञान-व्यवधानापनयनेन इत्यर्थः। किमन्यदहं विद्यानिष्क्रयार्थं प्रयच्छामि, साक्षादात्मानमेव दत्तवते, अतो नमस्तेऽस्तु इमे विदेहास्तव यथेष्द्भं भुज्यन्ताम्, अयं चाहमस्मि दासभावे स्थितः, यथेष्टं मां राज्यं च प्रतिपद्यस्वेत्यर्थः।।४।।
अनुवादः - ச.பா- அந்த வைதேஹ ராஜா ஜனகர் கூறினார்- ஹே பகவன், பூஜ்ய யாக்ஞவல்க்கிய! நீங்கள் எனக்கு அபயத்தை அடைவாய் என்று அபயபிரஹ்மத்தின் உபாதியினால் உண்டான அக்ஞானத்தை நீக்கி ஞானத்தை அளித்து அதை அடையச்செய்தீர்கள் என்பது பொருள். சாக்ஷாத் ஆத்மாவையே அளித்த உங்களுக்கு வித்யையின் பொருட்டு நான் என்ன கைமாறு செய்யபோகிறேன். ஆகையால் உங்களுக்கு நமஸ்காரம் இந்த விதேஹதேசத்தை இஷ்ட்டப்பட்டவாறு அனுபவியுங்கள். நான் உங்கள் தாஸனாக இருக்கிறேன். இஷ்ட்டப்பட்டவாறு என்னையும் ராஜ்யத்தையும் அடையுங்கள் என்பது பொருள்.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये चतुर्थाध्याये द्वितीयं कूर्चब्राह्मणम्।।२।। चतुर्थ अध्यायः तृतीय ब्राह्मणम्
भाष्यम् - जनकं ह वैदेहं याज्ञवल्क्यो जगामेत्यस्याभि-सम्बन्धः। विज्ञानमय आत्मा साक्षादपरोक्षाद् ब्रह्म सर्वान्तरः पर एव-“नान्योऽतोऽस्ति द्रष्टा नान्यदतोऽस्ति द्रष्टुट” इत्यादि-श्रुतिभ्यः। स एष इह प्रविष्टो वदनादिलिङ्गः, अस्ति व्यतिरिक्त इति मधुकाण्डेऽजातशत्रुसंवादे प्राणादिकर्तृत्वभोक्तृत्वप्रत्याख्या-नेनाधिगतोऽपि सन् पुनः प्राणनादिलिङ्गमुपन्यस्य औषस्तप्रश्ने प्राणानादिलिङ्गो यः सामान्येनाधिगतः“प्राणेन प्राणिति” इत्यादिना“दृष्टेर्द्रष्टा” इत्यादिना अलुप्तशक्तिस्वभावोऽधिगतः।
अनुवादः - ச.பா-“जनकं ह वैदेहं याज्ञवल्क्यो जगाम” (ஜனகம் ஹ வைதேஹம் யாக்ஞவல்க்யோ ஜகாம) முதலிய ரூபமாய் ஆரம்பமாகும் பிராஹ்மணத்தின் சம்பந்தம் இவ்வாறாகும். விக்ஞானமய ஆத்மா சாக்ஷாத் அபரோக்ஷ சர்வாந்திரமான பரம்பிரஹ்மம்.“नान्योऽतोऽस्ति द्रष्टा नान्यदतोऽस्ति द्रष्टुुट”(நான்யோஅஸ்தி த்ருஷ்ட்டா நான்யததோஅஸ்தி த்ருஷ்ட்ரு) முதலிய சுருதிகளின் தாத்பர்யம். அந்த இந்த இங்கு (தேஹத்தில்) பிரவேசித்ததைக் காட்டிலும் வேறாக பேசுதல் முதலிய லிங்கம் இருக்கிறது என்பது மது காண்டத்தில் அஜாதசத்ரு சம்வாதத்தில் பிராணன் முதலிய கர்த்ருத்துவ போக்த்ருத்வங்களின் நிராகரணம் செய்து அறிந்தாலும் மறுபடியும் பிராணனம் (மூச்சுவிடுதல்) முதலிய லிங்கம் மூலமாய் உபந்யாசம் செய்து ஒளஷஸ்தபிரச்னத்தில் பிரானணாதி லிங்கமூலமாய் சாமான்யமாய்“प्राणेन प्राणिति”(ப்ராணேன பிராணிதி) முதலிய வாக்கியங்களால் அறியப்பட்டது.“दृष्टेर्द्रष्टा”முதலிய வாக்கியங்களால் அலுப்த்த சக்தி ஸ்வபாவம் அறியப்படுகிறது.
भाष्यम् - तस्य च परोपाधिनिमित्तः संसारः- यथा रज्जू-षरशुक्तिगगानादिषु सर्पोदकरजतमलिनत्वादि पराध्यारोपण-निमित्तमेव, न स्वतः, तथा।
अनुवादः -ச.பா-அதற்கு மற்ற உபாதியின் நிமித்தமாக சம்சாரம் ஏற்படுகிறது. எவ்வாறு கயிறு. கானல், சிப்பி, ககனம் (ஆகாயம்) முதலியவைகளில் சர்ப்பம், ஜலம், >வெள்ளி, மலினம் முதலிய மற்றவைகளின் அத்யோரப நிமித்தமாய் ஆவது போல் ஆகும். அவ்வாறே இதுவும் ஆகும்.
भाष्यम् - निरुपाधिको निरुपाख्यो नेति नेतीति व्यपदेश्यः साक्षादपरोक्षात् सर्वान्तर आत्मा ब्रह्माक्षरमन्तर्यामी प्रशास्ता औपनिषदः पुरुषो विज्ञानमानन्दं ब्रह्मेत्यधिगतम्। तदेव पुनरिन्ध-संज्ञः प्रविविक्ताहारः ततोऽन्तर्ह्य्दये लिङ्गात्मा प्रविविक्ताहारतरः, ततः परेण जगदात्मा प्राणोपाधिः, ततोऽपि प्रविलाप्य जगदात्मान-मुपाधिभूतं रज्जादाविव सर्पादिकं विद्यया,“स एष नेति नेति” इति साक्षात् सर्वान्तरं ब्रह्माधिगतम्। एवमभयं परिप्रापितो जनको याज्ञवल्क्येनागमतः संक्षेपतः।
अनुवादः - ச.பா- நிருபாதிக, மனோவாக்குக் எட்டாதது, நேதி நேதி என்று நிரூபிக்கப்படுவது, சாக்ஷாத் அபரோக்ஷம், சர்வாந்தர ஆத்மா, பிரஹ்மம், அக்ஷரம், அந்தர்யாமி, சாசனம் செய்பவர், ஒளபநிஷத் புருஷன், விக்ஞானம், ஆனந்தம் பிரஹ்மம் என்று அறியப்பட்டது. அதுவே இந்தன் (வைஷ்வானரன்) சூக்ஷ்மமான அன்னத்தை புசிப்பவன், அதைக்காட்டிலும் அந்தர் ஹிருதயத்தில் உள்ள லிங்காத்மா மிகச் சூக்ஷ்மமான அன்னத்தை கிரஹிப்பதாகும். ஆகையால் பரமான ஜகதாத்மாவிற்கு பிராணன் உற்ாதி. அதைவிட அதிபூதமாகிய ஜகதாத்மாவை ரஜ்ஜு சர்ப்பம் போல் அதை இல்லாமல் செய்து நேதி நேதி“स एष नेति नेति” என்று சாக்ஷாத் சர்வாந்தரம் பிரஹ்மம் அறியப்பட்டது. சம்ஷேபமாகவும் (சுருக்கமாகவும்) ஆகமத்தின் படியும் யாக்ஞவல்க்கியரால் ஜனகருக்கு அபயம் அடையச் செய்யப்பட்டது.
भाष्यम् - अत्र च जाग्रत्स्वप्नसुषुप्ततुरीयाण्युपन्यस्ता-न्यन्यप्रसङ्गेन- इन्धः, प्रविविक्ताहारतरः, सर्वे प्राणाः, स एष नेति नेतीति। इदानीं जाग्रत्स्वप्नादिद्वारेणैव महता तर्केण विस्तरतोऽधिगमः कर्तव्यः, अभयं प्रापयितव्यम्, सद्भावश्चात्मनो विप्रतिपत्याशङ्कानिराकरणद्वारेण व्यतिरिक्तत्वं शुद्धत्वं स्वयंज्योतिष्ट्वमलुप्तशक्तिस्वरूपत्वं निरतिशयानन्दस्वाभाव्यम् अद्वैतत्वं चाधिगन्तव्यम्- इतीदमारभ्यते। आख्यायिका तु विद्यासम्प्रदानग्रहणविधिप्रकाशनार्था, विद्यास्तुतये च विशेषतः वरदानादिसूचनात्।
अनुुवादः -ச.பா-இங்கு (இரண்டாவது பிராஹ்மணத்தில் (உபாசகனின் கிரம முக்திரூப) வேறு பிரசங்கத்தால்-“इन्धः”(இந்தன்)“प्रविविक्तहारतरः” (சூக்ஷ்ம அன்னத்தால் விருத்தி அடைந்தது)“सर्वे प्राणाः” (எல்லாப்பிராணங்களும், மேலும்“स एष नेति नेति”(அந்த இது நேதி நேதி) என்றும் இந்த ரூபங்களால் ஜாக்ரத், ஸ்பன முதலியவைகள் மூலமாய் மஹாதர்க்கத்தினால் விஸ்தாரமாய் புரிய (அறிய) வைக்க வேண்டும். மேலும் அபயத்தை அடையச் செய்ய வேண்டும். அவ்வாறே விபரீத ஞானத்தின் ஆசங்கையை நிவிர்த்தி செய்வதின் வாயிலாய் ஆத்மாவின் சத்பாவம், தேஹாதிகளைக்காட்டிலும் வேறு, தன்மை, சுத்தத்துவம், ஸ்வயம் ஜோதித்துவம், அலுப்த சக்தி ஸ்வரூபம், அத்வைத தத்துவம், ஆகிய இவைகளை அவசியம் அறியச் செய்யவேண்டும் என்பதற்காக இப்பொழுது ஆரம்பிக்கப்படுகிறது. இந்த ஆக்கியாயிகா வித்யா தானம் மேலும் அதை கிரஹிப்பது இவைகளின் விதிகளைத் தெரிவிப்பதற்காகவும். வித்யையின் ஸ்துதிக்காகவும் வரம், தானம் இவைகளின் சூசனையினால் அறியப்படுகிறது.
मन्त्रः - जनक ँ ह वैदेहं याज्ञवल्क्यो जगाम स मेने न वदिष्य इत्यथ ह यज्जनकश्च वैदेहो याज्ञवल्क्यश्चाग्निहोत्रे समूदाते तस्मै ह याज्ञवल्क्यो वरं ददौ स ह कामप्रश्नमेव वव्रे त ँ हास्मै ददौ त ँह सम्राडेव पूर्वं पप्रच्छ।। १।।
अनुवादः - மந்திரம்- விதேஹராஜா ஜனகரிடம் யாக்ஞவல்க்கியர் சென்றார். அவர் நான் யாருக்கும் உபதேசம் செய்யமாட்டேன் என்று நினைத்தார். ஆனால் இதற்குமுன் விதேஹ ராஜா ஜனகரும் யாக்ஞவல்க்கியரும் அக்னி ஹோத்திர விஷயத்தில் பரஸ்பரம் சம்வாதம் செய்தனர். அப்பொழுது யாக்ஞவல்க்யர் அவருக்கு வரம் அளித்தார். மேலும் இஷ்ட்டப்படி கேள்வி கேட்கவும் அனுமதித்திருந்தார். அந்த வரத்தை யாக்ஞவல்க்கியர் அளித்தார். ஆகையால் அவருக்குமுன் ராஜாவானவர் கேள்வி கேட்டார்.
भाष्यम् - जनकं ह वैदेहं याज्ञवल्क्यो जगाम। स च गच्छन्नेवं मेने चिन्तितवान्- न वदिष्ये कििञ्चदपि राज्ञे, गमनप्रयोजनं तु योगक्षेमार्थम्। न वदिष्य इत्येवंसङ्कल्पोऽपि याज्ञवल्क्यो यद् यज्जनकः पृष्टवांस्तत्तत् प्रतिपेदे, तत्र को हेतुः सङ्कल्पितस्या-न्यथाकरणे- इत्यत्राख्यायिकामाचष्टे।
अनुवादः - ச.பா- வைதஹராஜா ஜனகரிடம் யாக்ஞவல்க்கியர் சென்றார். அவர் செல்லும்பொழுது இவ்வாறு நினைத்தார். என்னவெனில் நான் ராஜாவிற்கு உபதேசம் செய்யப்போவது இல்லை என்றும், யோகக்ஷமேத்திற்காகவே செல்லுவதின் பிரயோஜனம் என்று. நான் உபதேசம் செய்யமாட்டேன் என்று யாக்ஞவல்கியர் சங்கல்பித்தாலும் ஜனகர் எதை எதைக்கேட்டாரோ அதற்கு பதில் அளித்தார். சங்கல்பத்திற்கு மாறாக செய்ததற்கு என்ன ஹேது என்பதைக் குறித்து சுருதி இந்த ஆக்யாயிகாவை கூறுகிறது.
भाष्यम् - पूर्वत्र किल जनकयाज्ञवल्क्ययोः संवाद आसीदग्निहोत्रे निमित्ते। तत्र जनकस्याग्निहोत्रविषयं विज्ञानमु-पलभ्य परितुष्टो याज्ञवल्क्यस्तस्मै जनकाय ह किल वरं ददौ, स च जनको ह कामप्रश्नमेव वरं वव्रे वृतवान्, तं च वरं हास्मै ददौ याज्ञवल्क्यः, तेन वरप्रदानसामर्थ्येन अव्याचिख्यासुमपि याज्ञवल्क्यं तूष्णीं स्थितमपि सम्राडेव जनकः पूर्वं पप्रच्छ।
अनुवादः - ச.பா-முன்பு அக்னிஹோத்திர நிமித்தமாக ஜனகருக்கும் யாக்ஞவல்க்யருக்கும் சம்வாதம் நடந்தது. அப்பொழுது ஜனகருடைய அக்னிஹோத்திர சம்பந்தமான விஷயத்தில் உள்ள ஞானத்தை அறிந்து சந்தோஷப்பட்டு யாக்ஞவல்க்யர் ஜனகருக்கு வரம் தந்தார். அந்த ஜனகர் காம பிரச்னத்தையே (விரும்பி கேள்வி கேட்பதையே) வரமாக வேண்டினார். யாக்ஞவல்க்யர் அவருக்கு அதை அளித்தார். ஆகையால் அந்த வரப்பிரதான சாமர்த்தியத்தால் ஒன்றும் கூறுவதற்கு இச்சை இல்லாமல் யாக்ஞவல்க்யர் மெளனமாய் இருந்தாலும் சம்ராட் ஜனகரே முதலில் கேட்டார்.
भाष्यम् - तत्रैवानुक्तिर्ब्रह्मविद्यायाः कर्मणा विरुद्धत्वात्, विद्यायाश्च स्वातन्त्र्यात्- स्वतन्त्रा हि ब्रह्मविद्या सहकारिसाधना-न्तरनिरपेक्षा पुरुषार्थसाधनेति च।।१।।
अनुवादः - ச.பா- கர்மத்திற்கு விருத்தமாவதாலும், வித்யா ஸ்வதந்திரமானதாலும் அங்கு பிரஹ்ம வித்யாவின் விளக்கம் அளிக்கப்படவில்லை. பிரஹ்ம வித்யா சஹகாரியான வேறு சாதனங்களின் அபேக்ஷை அற்றதும் புருஷார்த்த சாதனமும் ஆகும். ஆகையால் பிரஹ்மவித்யா ஸ்வதந்தரமானது.
मन्त्रः - याज्ञवल्क्य किं ज्योतिरयं पुरुष इति। आदित्य ज्योतिः सम्राडिति होवाचादित्येनैवायं ज्योतिषास्ते पल्ययते कर्म कुरुते विपल्येतीत्येवमेवैतद् याज्ञवल्क्य।।२।।
अनुवादः - மந்திரம் - ஹே யாக்ஞவல்க்ய! இந்த புருஷன் எந்த ஜ்யோதியை உடையவன்? ஹே சம்ராட்! அது ஆதித்ய ரூப ஜ்யோதியை உடையது என்று இவ்வாறு யாக்ஞவல்க்யர் கூறினார். அது ஆதித்ய ரூபஜ்யோதியினால் உட்காருகிறது. அங்கும் இங்கும் செல்கிறது. கர்மம் செய்கிறது, (செய்யாமலும் இருக்கிறது) மாறியும் இருக்கிறது. இந்த விஷயம் இவ்வளவே ஆகும்.
भाष्यम् - हे याज्ञवल्क्येत्येवं सम्बोध्याभिमुखीकरणाय, किं ज्योतिरयं पुरुष इति- किमस्य पुरुषस्य ज्योतिर्येन ज्योतिषा व्यवहरति, सोऽयं किं ज्योतिः? अयं प्राकृतः कार्यकरणसा-तरूपः शिरःपाण्यादिमान् पुरुषः पृच्छ्यते। किमयं स्वावयवसा-तबाह्येन ज्योतिरन्तरेण व्यवहरति, आहो स्वित् स्वावयवसा-तमध्यपातिना ज्योतिषा ज्योतिष्कार्यमयं पुरुषो निर्वर्तयति, इत्येतदभिप्रेत्य पृच्छति।
अनुवादः - ச.பா- ஹே யாக்ஞவல்க்ய! இவ்வாறு அவரை தன்பக்கம் ஒருமுகப்படுத்த அழைத்த இந்த புருஷனின் ஜ்யோதி எது? அதாவது புருஷனுடைய ஜ்யோதி எது? எந்த ஜ்யோதியால் வியவஹாரம் செய்கின்றான்? அந்த இந்த ஜ்யோதி எது? இந்த சாதாரண காரியகரண சங்காத ரூபமாய் சிரசு, கை முதலியவைகளுடன் கூடிய புருஷனைக் குறித்து வினாவுகிறார். என்ன இந்த அவயவங்களுடன் கூடிய வெளியில் இருக்கும் தன்னை தவிர வேறான ஜ்யோதியினால் வியவஹாரம் செய்கின்றானா? அல்லது தன்னுடைய அவயவங்களுடன் கூடியதின் மத்தியில் இருக்கும் ஜ்யோதியினால் இந்த புருஷன் காரியங்களை செய்கின்றானா என்ற இந்த அபிப்பிராயத்தால் ஜனகர் வினாவை எழுப்பினார்.
भाष्यम् - किं चातः, यदि व्यतिरिक्तेन यदि वाक्यतिरिक्तेन ज्योतिषा ज्योतिष्कार्यं निर्वर्तयति। श्रुणु तत्र कारणम्- यदि व्यतिरिक्तेनैव ज्योतिषा ज्योतिष्कार्यनिर्वर्तकत्वम् अस्य स्वभावो निर्धारितो भवति, ततोऽदृष्टज्योतिष्कार्यविषयेऽप्यनुमास्यामहे व्यतिरिक्तज्योतिर्निमित्तमेवेदं कार्यमिति, अथाव्यतिरिक्तेनैव स्वात्मनाज्योतिषा व्यवहरति, ततोऽप्रत्यक्षेऽपि ज्योतिषि ज्योतिष्कार्यदर्शनेऽव्यतिरिक्तमेव ज्योतिरनुमेयम्, अथानियम एव - व्यतिरिक्तमव्यतिरिक्तं वा ज्योतिः पुरुषस्य व्यवहारहेतुः ततोऽनध्यवसाय एव ज्योतिर्विषये इत्येवं मन्वानः पृच्छति जनको याज्ञवल्क्यम्- किं ज्योतिरयं पुरुष इति।
अनुवादः - ச.பா- மேலும், வியதிரிக்தமாய் இருந்தால் அதாவது இந்த தேஹ முதலிய சங்காதத்திற்கு வியதிரிக்த்தமாகவோ அதிவியத்திரிக்தமாகவோ இருந்தாலும் எவ்விதம் ஜ்யோதியினால் ஜ்யோதியின் காரியம் பூர்ணமாகிறது என்பதால் என்ன ஆகும்? இதன் காரணத்தைக் கேள். இதன் ஸ்வபாவம் ஏதாவது ஒரு வியதிரிக்த ஜ்யோதியினால் ஜ்யோதியின் காரியத்தை முழுமையாக செய்வதற்கு நிச்சயம் செய்தால் அந்த ஜ்யோதியைக் காண முடியாது. அந்த காரியத்தின் விஷயத்தில் நாம் இவ்வாறு அனுமானம் செய்யவேண்டும். அதாவது காரியத்தை விட ஏதோ ஒரு வியதிரிக்த்த ஜ்யோதி காரணமாக இருக்க வேண்டும் என்று. மேலும் அது தன்னைக்காட்டிலும் வேறாகாத அதாவது அபின்ன ஜ்யோதியின் மூலமாகவே வியவஹாரம் நடக்கிறது. அந்த ஜ்யோதி பிரத்யக்ஷமாகாவிடினும் அந்த ஜ்யோதியின் காரியத்தைக் கண்டு அபின்ன ஜ்யோதியின் அனுமானம் ஏற்படுகிறது. இவ்வாறு கருதும்பொழுது புருஷனின் வியாபாரத்தின் ஹேது வியதிரிக்தம் அல்லது அவ்யதிரிக்த்தம் இந்த ஜ்யோதி என்று இதற்கு நியமம் இல்லாததால் இந்த சமயத்தில் ஜ்யோதி விஷயத்தில் அநிச்சயம் ஏற்படுகிறது என்று நினைத்து ஜனகர் யாக்கியவல்க்கியரிடம் கேட்க்கிறார். இந்த புருஷன் எந்த ஜ்யோதியை உடையவனாய் இருக்கின்றான்.
भाष्यम् - शङ्का - नन्वेवमनुमानकौशले जनकस्य किं प्रश्नेन, स्वयमेव कस्मान्न प्रतिपद्यत इति?
अनुवादः - ச.பா- இவ்வாறு ஜனகருக்கு அனுமானத்தில் சாமர்த்தியம் இருக்கும் பொழுது இந்த கேள்வி எதனால்? தானாகவே ஏன் அறியவில்லை? என்று
भाष्यम् - समाधानम् - सत्यमेतत्, तथापि लिङ्गलिङ्ग-सम्बन्धविशेषाणात्यन्तसौक्ष्याद् दुरवबोध्यतां मन्यते बहूनामपि पण्डितानाम् किमुतैकस्य, अत एव हि धर्मसूक्ष्मनिर्णये >परिषापार इष्यते, पुरुषविशेषश्चापेक्ष्यते- दशावरा परिषत्, त्रयो वैको वेति, तस्माद् यद्यप्यनमानकौशलं राज्ञः, तथापि तु युक्तो याज्ञवल्क्यः प्रष्टुम्, विज्ञानकौशलतारतम्योपपत्तेः पुरुषाणाम्।
अनुवादः - ச.பா- இது உண்மையே. ஆனாலும் லிங்கலிங்கி சம்பந்த விசேஷணங்கள் மிகவும் சூக்ஷ்மமாய் இருப்பதால் அநேக பண்டிதர்களுக்கும் அறிவது மிகக்கடினம் என்று எண்ணுகிறார்கள். எவ்வாறு ஒருவரால். ஆகையால் தான் தர்ம சூக்ஷ்மத்தை நிர்ணயம் செய்வதற்கு பரிஷத்வியாபாரம் அதாவது (அநேகம் பேர் கோஷ்ட்டி சேர்ந்த சதஸ்) குறைந்தது பத்து புருஷர்கள் பரிஷித்தாகிறது. அவ்வாறே(சதாசாரமுடைய) மூவர் மேலும் ஒரு (அத்யாத்ம நிஷ்ட்ட புருஷனும் பரிஷத் எனப்படுகிறார்கள். ஆகையால் ராஜாவிற்கு அனுமான குசலத்தன்மை இருந்தாலும் அவ்வாறேபுருஷர்களுக்கு விக்ஞானத்தின் குசலத்தன்மையில் தாரதம்யம் இருப்பதாலும், யாக்ஞவல்க்கியரைக் கேட்பது பொருத்தமே.
भाष्यम् - अथवा श्रुतिः स्वयमेव आख्यायिकाव्याजेन अनुमानमार्गमुपन्यस्य अस्मान् बोधयति पुरुषमतिमनुसरन्ती।
अनुवादः - ச.பா- அல்லது புருஷ புத்தியை அனுசரித்து சுருதியானது ஆக்யாயிகாவை வியாஜமாகவைத்து அனுமான மார்க்கத்தை கூறி ஸ்வயமாகவே நமக்கு போதிக்கிறது.
भाष्यम् - याज्ञवल्क्योऽपि जनकाभिप्रायाभिज्ञतया व्यतिरि-क्तमात्मज्योतिर्बोधयिष्यञ्जनकं व्यतिरिक्तप्रतिपादकमेव लिङ्गं प्रतिपेदे, यथा- प्रसिद्धमादित्यज्योतिः सम्राडिति होवाच।
अनुवादः - ச.பா-ஜனகரின் அபிப்பிராயத்தை அறிந்த யாக்ஞவலக்யரும் தேஹ முதலியவைகளை விட வியத்திரிக்த்த ஆத்ம ஜ்யோதியின் ஞானம் ஏற்படுவதற்காக ஜனகருக்கு வியதிரிக்த ஜ்யோதியை பிரதிபாதகம் லிங்கம் கூறவேண்டும். எவ்வாறு ஹே சம்ராட்! பிரசித்த ஆதித்ய ஜ்யோதியை உடையது, என்று இவ்வாறு கூறினார்.
भाष्यम् - कथम्? आदित्येनैव स्वावयवसातव्यतिरिक्तेन चक्षुषोऽनुग्राहकेण ज्योतिषायं प्राकृतः पुरुष आस्ते उपविशति, पल्ययते पर्येति क्षेत्रमरण्यं वा तत्र गत्वा कर्म कुरुते, विपल्येति विपर्येति च यथागतम् अत्यन्तव्यतिरिक्तज्योतिष्ट्वप्रसिद्धताप्रदर्श-नार्थम् अनेकविशेषणम्, बाह्यानेकज्योतिः- प्रदर्शनं च लिङ्गस्याप्यभिचारित्वप्रदर्शनार्थम्।
अनुवादः - ச.பா- எவ்வாறு? அந்த பிராகிருத புருஷன் ஸ்வய அவயவ சங்காதத்தை வியதிரிக்த்த நேத்திர இந்திரியத்தை அனுக்கிரம் செய்யும் ஆதித்ய ஜ்யோதியினால் உட்காருகிறான். இங்கு அங்கு செல்கிறான். க்ஷதே்திரத்திற்கோ, வனத்திற்கோ செல்கிறார்கள், கர்மம் செய்கின்றான். அவ்வாறே அதைக் கடைபிடிப்பதில்லை. புருஷனின் அத்யந்த ஜ்யோதியின் பிரசித்தியை தெரிவிப்பதற்கு இங்கு அநேக விசேஷணங்கள் தரப்பட்டது. மேலும் அநேக பாஹ்ய ஜ்யோதிகளைத் தெரிவித்த லிங்கத்தின் அவ்ய பிச்சாரித்துவத்தை (மாறுபடாத தன்மையை) தெரிவிப்பதற்காகவே ஆகிறது.
भाष्यम् - जनकः - एवमेवैतद् याज्ञवल्क्य।।२।।
अनुवादः -ச.பா-ஜனகர் - யாக்ஞவல்க்ய! இந்த விஷயம் இவ்வாறேஆகும்.
मन्त्रः - अस्तमित आदित्ये याज्ञवल्क्य किं ज्योतिरेवायं पुरुष इति चन्द्रमा एवास्य ज्योतिर्भवतीति चन्द्रमसैवायं ज्योतिषास्ते पल्ययते कर्म कुरुते विपस्येतीत्येवमेवैतद् याज्ञवल्क्य।। ३।।
अनुवादः - மந்திரம்- (ஜனகர்) ஹே யாக்ஞவல்க்ய! ஆதித்யன் அஸ்தமிதபின் இந்த புருஷன் எந்த ஜ்யோதியை உடையவனாவான். (யாக்ஞவல்க்யர்) அந்த சமயத்தில் சந்திரன் அதன் ஜ்யோதி ஆகிறது. அந்த சந்திரரூப ஜ்யோதியினால், உட்காருகின்றான், அங்கு இங்கு செல்கிறான். கர்மம் செய்கிறான், அதை விடுகிறான். (ஜனகர்) ஹே யாக்ஞவல்க்ய! அந்த விஷயம் சரிதான்.
भाष्यम् - तथास्तमिते आदित्ये याज्ञवल्क्य किं ज्योतिरेवायं पुरुष इति, चन्द्रमा एवास्य ज्योतिः।।३।।
अनुवादः - ச.பா- யாக்ஞவல்க்ய! அவ்வாறு ஆதித்தியன் அஸ்தமான பின் அந்த புருஷன் எந்த ஜ்யோதியை உடையவனாகின்றான்? என்று. சந்திரமாவே அவனுடைய ஜ்யோதி.
मन्त्रः - अस्तमित आदित्ये याज्ञवल्क्य चन्द्रमस्यस्तमिते किं ज्योतिरेवायं पुरुष इत्यग्निरेवास्य ज्योतिर्भवतीत्यग्निनैवायं ज्योति-षास्ते पल्ययते कर्म कुरुते विपल्येतीत्येवमेवैतद् याज्ञवल्क्य।। ४।।
अनुवादः - மந்திரம்- ஹே யாக்ஞவல்க்கிய! ஆதித்தியன் அஸ்தமானபின், அவ்வாறே சந்திரமா அஸ்தமான பின் அந்த புருஷன் எந்த ஜ்யோதி உடையவனாகின்றான். அக்னியே அவனுடைய ஜ்யோதி ஆகிறது. அந்த அக்னிரூப ஜ்யோதியினால் உட்காருகிறான், இங்கும் அங்கும் செல்கிறான், கர்மம் செய்கிறான், செய்யாமலும் இருக்கிறான். ஹே யாக்ஞவல்க்ய! இவ்விஷயம் அவ்வாறே ஆகும்.
मन्त्रः - अस्तमित आदित्ये याज्ञवल्क्य चन्द्रमस्यस्तमिते शान्तेऽग्नौ किं ज्योतिरेवायं पुरुष इतिवागेवास्य ज्योतिर्भवतीति वाचैवायं ज्योतिषास्ते पल्ययते कर्म कुरुते विपल्येतीति तस्माद् वै सम्राडपि यत्र स्वः पाणिर्न विनिर्ज्ञायतेऽथ यत्र वागुच्चरत्युपैव तत्र न्येतीत्येवमेवैतद् याज्ञवल्क्य।। ५।।
अनुवादः - மந்திரம்- ஹே யாக்ஞவல்க்ய! ஆதித்யன் அஸ்தமித்தவுடன், சந்திரமா அஸ்தமித்தபின், அக்னி சாந்தமடைந்தபின் அந்த புருஷன் எந்த ஜ்யோதியை உடையவனாகின்றான், வாக் அவனது ஜ்யோதியாகிறது. அந்த வாக் ரூப ஜ்யோதியினால் அவன் உட்காருகின்றான், இங்கும் அங்கும் செல்கிறான், கர்மம் செய்கிறான், அதை விடுகிறான். ஹே சம்ராட்! இதனாலேயே அங்கு அவன் தன்கையை கூட அறியமாட்டான். எங்கு வாக் உச்சரிக்கப்படுகிறதோ அவ்விடம் செல்கிறான் ஹே யாக்ஞவல்க்கிய! நீங்கள் கூறுவது போலவே ஆகிறது.
भाष्यम् - शान्तेऽग्नौ वाग्ज्योतिः, वागिति शब्दः परिगृह्यते, शब्देन विषयेण श्रोत्रमिन्द्रियं दीप्यते, श्रोत्रेन्द्रिये सम्प्रदीप्ते मनसि विवेक उपजायते, तेन मनसा बाह्यां चेष्टां प्रतिपद्यते-“मनसा ह्येव पश्यति मनसा श्रुणोति” (बृ०उ०१।५।३) इति ब्राह्मणम्।
अनुवादः - ச.பா- அக்னி - சாந்தமானபின் வாக் ஜ்யோதி. வாக் என்பதை சப்தம் என்று கிரஹிக்க வேண்டும். சப்த விஷயங்களால் ஸ்ரோத்திர இந்திரியம் விளங்குகிறது (தூண்டப்படுகிறது). ஸ்ரோத்திர இந்திரியம் நன்றாக தூண்டப்பட்டபொழுது மனதில் விவேகம் உண்டாகிறது. அந்த மனதால் வெளிசேஷ்ட்டைகள் (வெளியே உள்ள பிரவிர்த்திகளை) அடைகிறது.“मनसा ह्येव पश्यति मनसा श्रुणोति” மனதால் பார்க்கிறது. மனதால் கேட்கிறது என்பது பிராஹ்மணம்.
भाष्यम् - कथं पुनर्वाग्ज्योतिरिति, वाचो ज्योतिष्ट्वमप्र-सिद्धमित्यत आह- तस्माद् वै सम्राड् यस्माद् वाचा ज्योतिषानुगृहीतोऽयं पुरुषो व्यवहरति, तस्मात् प्रसिद्धमेतद् वाचो ज्योतिष्ट्वम्, कथम्? अपि- यत्र यस्मिन् काले प्रावृषि प्रायेण मेघान्धकारे सर्वज्योतिः प्रत्यस्तमये स्वोऽपि पाणिर्हस्तो न विस्पष्टं निर्ज्ञायते- अथ तस्मिन् काले सर्वचेष्टानिरोधे प्राप्ते बाह्याज्योतिषोऽभावाद् यत्र वागुच्चरति, श्वा वा भषति, गर्दभो वा रौति, उपैव तत्र न्येति- तेन शब्देन ज्योतिषा श्रोत्रमनसोर्नैरन्तर्य >भवति, तेन ज्योतिष्कार्यत्वं वाक् प्रतिपद्यते, तेन वाचा ज्योतिषोपन्येत्येव- उपगच्छत्येव तत्र संनिहितो भवतीत्यर्थः, तत्र च कर्म कुरुते, विपल्येति।
अनुवादः -ச.பா-எவ்வாறு வாக்ஜ்யோதியாகும்? வாக் ஜ்யோதி என்பது பிரசித்தமாக இல்லை. ஆகையால் சுருதி கூறுகிறது. ஹே சம்ராட்! எதனால் இந்த புருஷன் வாக் ரூப ஜ்யோதிஷால் அனுகிரஹிக்கப்பட்டு வியவஹாரம் செய்கிறான். ஆகையால் வாக் ஜ்யோதிஷ் என்பது பிரசித்தம். எவ்வாறு? எப்பொழுது மழைகாலத்தில் மேகமூட்டம் இருக்கும்பொழுது அநேகமாக எல்லா ஜ்யோதிகளும் அஸ்தமித்தபின் தன்னுடைய கைகளையே சரியாக அறியமுடியாது. அந்த சமயத்தில் எல்லா சேஷ்ட்டைகளும் நின்று விடும்பொழுது வெளிஜ்யோதிகள் இல்லாததால் வாக் உச்சரிக்கும் பொழுது, அதாவது நாய் குரைத்தாலோ, கழுதை கணைத்தாலோ அதன் சமீபம் செல்கிறோம். இந்த சப்தரூப ஜ்யோதியால் ஸ்ரோத்திரமும், மனதும் தனித்தனி என்பது அற்றுப்போகிறது. அதனால் வாக் ஜ்யோதியின் காரியத்தன்மையை அடைகிறது. இங்கு இதன் தாத்பர்யம் என்னவெனில் இரண்டும் மிக நெருக்கமாக இருக்கிறது என்பது பொருள். அப்பொழுது கர்மம் செய்கிறது செய்யாமலும் இருக்கிறது.
भाष्यम् - तत्र वाग्ज्योतिषो ग्रहणं गन्धादीनामुपलक्षणार्थम् गन्धादिभिरपि हि घ्रााणादिष्वनुगृहीतेषु प्रवृत्तिनिवृत्त्यादयो भवन्ति, तेन तैरप्यनुग्रहो भवति कार्यकरणसातस्य, एवमेवैतद् याज्ञवल्क्य।।५।।
अनुवादः - ச.பா- இந்த விஷயத்தில் வாக்ரூப ஜ்யோதியின் கிரஹணம் கந்தம் முதலியவைகளின் உபலக்ஷணமாகும். கந்தம் முதலியவைகளால் கிராணம் முதலியவை அனுக்கிரகிக்கபட்டதால் பிரவிர்த்தி, நிவிர்த்திகள் ஏற்படுகின்றன. ஆகையால் அவைகளால் காரியகரண சங்காதம் (தேஹ இந்திரியங்கள்) அனுகிரகிக்கப்படுகின்றன. (ஜனகர்) ஹே யாக்ஞவல்க்ய! எல்லாம் நீர் கூறுவது போலவே ஆகும்
मन्त्रः - अस्तमित आदित्ये याज्ञवल्क्य चन्द्रमस्यस्तमिते शान्तेऽग्नौ शान्तायां वाचि किं ज्योतिरेवार्यं पुरुष इत्यात्मैवास्य ज्योतिर्भवतीत्यात्मनैवायं ज्योतिषास्ते पल्ययते कर्म कुरुते विपल्येतीति।। ६।।
अनुवादः - மந்திரம்- ஹே யாக்ஞவல்க்ய! ஆதித்தியன் அஸ்தமானபின், சந்திரமா அஸ்தமானபின், அக்னி சாந்தமானபின், வாக் சாந்தமானபின் இந்த புருஷன் எந்த ஜ்யோதியை உடையவனாகின்றான்? ஆத்மாவே இவனுடைய ஜ்யோதி. அந்த ஆத்ம ஜ்யோதியின் மூலமாய் உட்காருகின்றான், இங்கும் அங்கும் செல்கின்றான், கர்மம் செய்கின்றான், செய்யாமலும் இருக்கின்றான்.
भाष्यम् - शान्तायां पुनर्वाचि, गन्धादिष्वपि च शान्तेषु बाह्येष्वनुग्राहकेषु, सर्वप्रवृत्तिनिरोधः प्राप्तोऽस्य पुरुषस्य। एतदुक्तं भवति जाग्रद्विषये बहिर्मुखानि करणानि चक्षुरादीन्यादि-त्यादिज्योतिभिरनुगृह्यमाणानि यदा, तदा स्फुटतरः संव्यवहारोऽस्य पुरुषस्य भवतीति, एवं तावज्जागरिते स्वावयवसात-व्यतिरिक्तैनैव ज्योतिषा ज्योतिष्कार्यसिद्धिरस्य पुरुषस्य दृष्ट्वा तस्मात्ते वयं मन्यामहे- सर्वबाह्यज्योतिः- प्रत्यस्तमयेऽपि स्वप्नसुषुप्तिकाले जागरिते च तादृगवस्थायां स्वावयवसा-तव्यतिरिक्तेनैव ज्योतिषा ज्योतिष्कार्यसिद्धिरस्येति, दृश्यते च स्वप्ने ज्योतिष्कार्यसिद्धिः- बन्धुसङ्गमनवियोगदर्शनं देशान्तरगमानादि च, सुषुप्ताच्चोत्थानम्- सुखमहमस्वाप्सं न कििञ्चदवेदिषमिति, तस्मादस्ति व्यतिरिक्तं किमपि ज्योतिः।
अनुवादः - ச.பா- வாக் சாந்தி ஆனபின் கந்த முதலிய பாஹ்ய அனுக்ரஹங்களும் நிவிர்த்தி ஆனபின் எல்லா பிரவிருத்தியும் அந்த புருஷனுக்கு இல்லாமல் போய் விடும். அது இவ்வாறு கூறப்படுகிறது - ஜாக்ரத் விஷயத்தில் பஹிர்முகங்களான சக்ஷு முதலிய கரணங்கள் ஆதித்தியன் முதலிய ஜ்யோதிகளால் எப்பொழுது அனுகிரஹம் செய்யப்பட்டதோ அப்பொழுது வியவஹாரம் ஸ்பஷ்ட்டமாய் அந்த புருஷனுக்கு ஏற்படுகிறது. அவ்வாறே ஜாக்ரத் அவஸ்தையில் தன்னுடைய அவயவ சங்காதத்தைக் காட்டிலும் வேறான ஜ்யோதியினால் அந்த புருஷனுக்கு ஜ்யோதி சம்பந்தி காரியங்களின் சித்தி ஏற்படுவதைக் காண்கிறோம், ஆகையால் நாம் இவ்வாறு அறிகிறோம். எவ்வாறு எனில் எல்லா பாஹ்ய ஜ்யோதிகளும் அஸ்தமானபின்னும் ஸ்வப்ன சுஷுப்த்தி காலத்தில் ஜாக்ர அவஸ்தையிலும் ஸ்வ அவயவ சங்காத வியதிரிக்தமான (வேறான) ஜ்யோதியால் ஜ்யோதி சம்பந்த காரிய சித்தியானது அந்த புருஷனுக்கு உண்டாகிறது. அவ்வாறே ஸ்வப்னத்திளும் ஜ்யோதியின் காரிய சித்தி இவ்வாறு ஏற்படுகிறது - பந்துக்களுடன் சேர்வதும், பிரிவதும் காணப்படுகிறது. அவ்வாறே தேசாந்தரம் செல்வது முதலியவையும் காணப்படுகிறது. அவ்வாறே தூக்கத்தியிலிருந்து விழிப்பு ஏற்படும்பொழுது நான் சுகமாக தூங்கினேன். எனக்கு ஒன்றும் தெரியவில்லை என்று கூறுகிறான், ஆகையால் இவைகளைக் காட்டிலும் வேறாக ஒரு ஜ்யோதி இருக்கின்றது (என்பது அறியவேண்டும்).
भाष्यम् - किं पुनस्तच्छान्तायां वाचि ज्योतिर्भवति? इत्युच्यते- आत्मैवास्य ज्योतिर्भवतीति। आत्मेति कार्यकरणस्वा-वयवसातव्यतिरिक्तं कार्यकरणावभासकम्, आदित्यादिबाह्य-ज्योतिर्वत् स्वयमन्येनानवभास्यमानमभिधीयते ज्योति, अन्तःस्थं च तत् पारिशेष्यात्- कार्यकरणव्यतिरिक्तं तदिति तावत् सिद्धम्, यच्च कार्यकरणव्यतिरिक्तं कार्यकरणसातानुग्राहकं च ज्यतिस्तद् बाह्यैश्चक्षुरादिकरणैरुपलभ्यमानं दृष्टम्, न तु तथा तच्चक्षुरादिभिरुपलभ्यते, आदित्यादिज्योतिः उपरतेषु, कार्यं तु ज्योतिषो दृश्यते यस्मात्, तस्मादात्मनैवायं ज्योतिषा आस्ते पल्ययते कर्म कुरुते विपल्येतीति, तस्मान्नूनमन्तःस्थं ज्योतिरित्यवगम्यते। किं च आदित्यादिज्योतिर्विलक्षणं तदभौतिकं च, स एव हैतुर्यच्चक्षुरा-द्यग्राह्यत्वम्, आदित्यादिवत्।
अनुवादः -ச.பா-மேலும் அந்த வாக் சாந்தமான பின் எது ஜ்யோதி ஆகிறது? கூறப்படுகிறது - ஆத்மாவே (அதன்) புருஷனுடைய ஜ்யோதியாகும். ஆத்மா ஆவது - இந்த தேஹ இந்திரிய ரூப தன்னுடைய அவயவ சங்காதத்தைக் காட்டிலும் வியதிரிக்தமானது (வேறானது). காரிய காரணங்களை தெரியச் செய்வது (அவபாசகம்). அவ்வாறே ஆதித்யன் முதலிய பாஹ்ய ஜ்யோதிகளைப்போல் ஸ்வயம் வேறு அன்யவற்றால் அவபாசிக்க (விளங்க) செய்யமுடியாதது இந்த ஜ்யோதி. பாரிசேஷ நியாயத்தால் அது அந்தஸ்தம் (உள்ளே இருக்கிறது). அது காரியகரணவியதிரிக்த்தம் என்பது சித்திக்கிறது. எது காரிய >கரண வியதிரிக்த்தம், காரியகரண சங்காதத்தின் உபகாரமாகிறது. அது பாஹ்ய நேத்திரம் முதலிய இந்திரியங்களால் அறியப்படுவதைக் காண்கிறோம். ஆனால் ஆதித்யன் முதலிய ஜ்யோதிகள் நிவிர்த்தி ஆனபின் ஆத்மா அவ்வாறு நேத்திரம் முதலியவைகளால் அறியமுடியாததாக ஆகின்றன. ஆனாலும் எதனால் ஜ்யோதியின் காரியம் காணப்படுகிறதோ அதனால் அந்த புருஷன் இருக்கிறான், இங்கும் அங்கும் செல்கிறான், கர்மம் செய்கின்றான், அதைவிட்டுவிடவும் செய்கின்றான். ஆகையால் இதனால் அறியப்படுவது நிச்சயமாக ஆத்மா அந்தர் ஜ்யோதியாகும். மேலும் ஆதித்யன் முதலிய ஜ்யோதிகளைக் காட்டிலும் விலக்ஷணமானது, மேலும் அபெளதிகம் (பஞ்ச பூதங்களுக்கு அப்பாற்பட்டது). அதனால் ஆத்மஜ்யோதியை ஆதித்யஜோதி முதலியவைகளை கண் முதலியவைகளால் அறிவது போல் அதை அறியமுடியாது.
भाष्यम् - पूर्व - न समानजातीयेनैेवोपकारदर्शनात् यदादित्यादिविलक्षणं ज्योतिरान्तरं सिद्धमिति, एतदसत्, कस्मात्? उपक्रियमाणसमानजातीयेनैव आदित्यादिज्योतिषा कार्यकरण-सातस्य भौतिकस्य भौतिकेनैवोपकारः क्रियमाणो दृश्यते, यथादृष्टं चेदमनुमेयम्, यदि नाम कार्यकरणादर्थान्तरं तदुपकार-मादित्यादिवज्ज्योतिः, तथापि कार्यकरणसातसमानजातीय-मेवानुमेयम्, कार्यकरणसातोपकारकत्वात्, आदित्यादि-योतिर्वत्। यत् पुनरन्तःस्थत्वादप्रत्यक्षत्वाच्च वैलक्षण्यमुच्यते, तच्चक्षुरादिज्योतिर्भिरनैकान्तिकम्, यतोऽप्रत्यक्षाण्यन्तःस्थानि च चक्षुरादिज्योतींषि भौतिकान्येव। तस्मात्तव मनोरथमात्रम्- विलक्षणमात्मज्योतिः सिद्धमिति।
अनुवादः - ச.பா- பூர்வ- அவ்வாறு அல்ல. ஏன் எனில் சமான ஜாதியுள்ள பதார்த்தங்களுக்கே உபகாரம் காணப்படுகிறது. ஆதித்யன் முதலியவைகளைக்காட்டிலும் வேறான அந்தர் ஜ்யோதி இருக்கிறது. என்பது சரியல்ல. ஏன்? ஏன் எனில் உபகாரம் செய்யும் சமானஜாதி உடைய ஆதித்யன் முதலிய ஜ்யோதிகளால் காரியகரண சங்காதத்தின் பெளதிகம் பெளதிக ஜ்யோதிகளினாலேயே உபாகாரம் செய்யப்படுவது காணப்படுகிறது எவ்வாறு காணப்படுகிறதோ அதை இவ்வாறு அனுமானம் செய்யவேண்டும் - (தேஹ இந்திரியம்) காரிய கரணங்களுக்கு உபகாரமாய் இருக்கும் ஜ்யோதி ஆனது ஆதித்யன் முதலியவைகளுக்கு சமானமாக அதைத்தவிர தனியாக வேறு பதார்த்தம் இல்லை. அவ்வாறு இருந்தாலும் ஆதித்தியன் முதலிய ஜ்யோதிகள் போல் காரியகரண சங்காதத்திற்கு உபகாரமாய் இருப்பதால் காரியகரண சங்காதத்திற்கு சமானஜாதி உடையதே (ஆத்மா) என்று அனுமானம் செய்யவேண்டும். மேலும் அந்தஸ்த்தமாய் (உள்ளே) இருப்பதாலும், அப்பிரத்யக்ஷமாய் இருப்பதாலும் விலக்ஷணம் என்று கூறினால் நேத்திரம் முதலிய ஜ்யோதிகள்போல் ஆகும் ஏன் எனில் அப்பிரத்யக்ஷம், அந்தஸ்தம் என்றாலும் கண் முதலியவைகள் பெளதிகமாய் இருக்கின்றன. ஆகையால் ஆத்ம ஜ்யோதியை விலக்ஷணம் (வேறானது) என்று கூறுவது மனோரதமேயாகும் (கல்பனை ஆகும்).
भाष्यम् - कार्यकरणसातभावभावित्वाच्च सात-धर्मत्वम् अनुमीयते ज्योतिषः सामान्यतो दृष्टस्य चानुमानस्य व्यभिचारित्वादप्रामाण्यम्, सामान्यतो दृष्टबलेन हि भवानादि-त्यादिवद् व्यतिरिक्तं ज्योतिः साधयति कार्यकरणेभ्यः, न च प्रत्यक्षमनुमानेन बाधितुं शक्यते, अयमेव तु कार्यकरणसातः प्रत्यक्षं पश्यति श्रुणोति मनुते विजानाति च, यदि नाम ज्योतिरन्तरमस्योपकारकं स्यादादित्यादिवत् न तदात्मा स्यात्, ज्योतिरन्तरम्, आदित्यादिवदेव, य एव तु प्रत्यक्षं दर्शनादिक्रियां करोति स एवात्मा स्यात् कार्यकरणसातः, नान्यः, प्रत्यक्ष-विरोधेऽनुमानस्याप्रामाण्यात्।
अनुवादः - ச.பா- இதைத்தவிர காரியகரண சங்காதபாவம் இருப்பதால் சங்காததர்மத்துவம் ஜ்யோதிக்கு அனுமானம் செய்யப்படுகிறது. சாமான்யமாய் திருஷ்ட்டமும் அனுமானமும் மாறுபடுவதால் அது பிரமாணமாகாது. சாமான்யமாக பார்த்ததின் பலத்தாலேயே ஆதித்யன் முதலியவைகளைப்போல காரியகரணங்களை விட வியதிரிக்தமானது (பின்னமானது) என்று சித்திக்கிறது. ஆனால் அனுமானத்தால் பிரத்யக்ஷம் பாதகமாகாது. ஆகையால் இந்த காரியகரண சங்காதமோ பிரத்யக்ஷமாய் காணப்படுகிறது. எவ்வாறு எனில் கேட்கிறது, நினைக்கிறது, அறிகிறது. அந்தரஸ்தம் (உள் இருக்கும்) ஜ்யோதி ஆதித்யன் முதலியவைகளைப்போல உபகாரமாய் இருந்தால் அந்த அந்தர்ஜ்யோதி ஆத்மா ஆகாது. எது தர்சனம் முதலிய கிரியைகளை செய்கிறதோ அந்த காரியகரண சங்காதமே ஆத்மா ஆகும். வேறு அல்ல. அனுமாணமானப் பிரமாணம் அப்ரமாணமாவதால் பிரத்யக்ஷத்திற்கு விரோதமாகும்.
भाष्यम् - सिद्धान्ती - नन्वयमेव चेद्दर्शनादिक्रियाकर्ता आत्मा संघात कथमविकलस्यैवास्य दर्शनादिक्रियाकर्तृत्वं कदाचिद् भवति कदाचिन्नेति।
अनुवादः - ச.பா- சித்தாந்தீ- அவ்வாறு ஆனால் எவ்வாறு இந்த சங்காதமே தர்சனம் முதலிய கிரியைகளின் கர்தா ஆத்மாவானால் விகாரமற்று இருப்பதால் தர்சன முதலிய கிரியைகளின் கர்த்ருத்துவம் சிலசமயம் ஏற்படுகிறது. சிலசமயம் ஏற்படுவதில்லை அது எவ்வாறு?
भाष्यम् - पूर्व - नैष दोषः, दृष्टत्वात्, न हि दृष्टेऽनुपपन्नं नाम, न हि खद्योते प्रकाशाप्रकाशकत्वेन दृश्यमाने कारणान्तर-मनुमेयम्, अनुमेयत्वे च केनचित् सामान्यात् सर्वं सर्वत्रानुमेयं >स्यात्, तच्चानिष्टम्, न च पदारथस्वभावो नास्ति, न ह्यग्नेरुष्ण-स्वाभाव्यम् अन्यनिमित्तम्, उदकस्य वा शैत्यम्। प्राणिधर्मा-धर्माद्यपेक्षमिति चेत्, धर्माधर्मादेर्निमित्तान्तरापेक्षस्वभावप्रसङ्गः। अस्त्विति चेत्, न, तदनवस्थाप्रसङ्ग स चानिष्टः।
अनुवादः - ச.பா- பூர்வ- திருஷ்ட்டமாய் இருப்பதால் இந்த தோஷம் இல்லை. ஏன்எனில் எது பார்க்கப்படுகிறதோ அந்த பார்க்கப்பட்டதில் அனுபபத்தி (அறியவில்லை) என்பது கிடையாது. மின்னல் பூச்சி பிரகாசிப்பதும் பிரகாசம் அற்று இருப்பதற்கும் வேறு காரணத்தை அனுமானம் செய்ய முடியாது. ஏதாவது ஒரு சாமான்யத்தினால் அனுமானம் செய்தால் எங்கும் அனுமேயம் ஏற்படும் . அது விரும்பத்தக்கது அல்ல, பதார்த்த ஸ்வபாவம் இல்லை என்பது இல்லை. அக்னியின் உஷ்ண சுவபாவமும், ஜலத்தின் குளிர்ச்சி ஸ்வபாவமும் வேறு நிமித்தத்தால் அல்ல, பிராணிகளின் தர்மாதர்மங்களை அபேக்ஷிக்கிறது எனில் தர்மா தர்மங்களுக்கு அந்நிய நிமித்தத்தை அபேக்ஷிக்கும் ஸ்வபாவமுடையதாகி விடும். அவ்வாறே இருக்கட்டும் எனில் அது சரியல்ல. அதனால் அநவஸ்தா தோஷம் ஏற்படும். அது விரும்பத்தக்கதல்ல.
भाष्यम् - सिद्धान्ती - न, स्वप्नस्मृत्योर्दृष्टस्यैव दर्शनात्- यदुक्तं स्वभाववादिना देहस्यैव दर्शनादिक्रिया न व्यतिरिक्तस्येति, >तन्न, यदि हि देहस्यैव दर्शनादिक्रिया स्वप्ने दृष्टस्यैव दर्शनं न स्यात्, अन्धः स्वप्नं पश्यन् दृष्टपूर्वमेव पश्यति न शाकद्वीपादिगतमदृष्ट-रूपम्, ततश्चैतत् सिद्धं भवति- यः स्वप्ने पश्यति दृष्टपूर्वं वस्तु, स एव पूर्वं विद्यमाने चक्षुष्यद्राक्षीत्, न देह इति, देहश्चेद् द्रष्टा, स येनाद्राक्षीत् तस्मिन्नुद्धृते चक्षुषि स्वप्ने तदेव द्दष्टपूर्वं न पश्येत्, अस्ति च लोके प्रसिद्धिः- पूर्वं द्दष्टं मया हिमवतः शृङ्गमद्याहं स्वप्नेऽद्राक्षमित्युद्धृतचक्षुषामन्धानामपि, तस्मादनुद्धृतेऽपि चक्षुषि यः स्वप्नदृक् स एव द्रष्टा, न देह इत्यवगम्यते।
अनुवादः - ச.பா- பார்த்தவைகள் தான் ஸ்வப்னத்திலும் ஸ்மிருதியிலும் பார்க்கப்படுவதால் அவ்வாறு அல்ல. எது கூறப்பட்டதோ தேஹத்தின் ஸ்வபாவம் முதலியவைகளால் தான் தர்சன முதலிய கிரியைகள் எல்லாம், அதைத் தவிர வேறானதினால் அல்ல என்பது சரியல்ல. தர்சனாதி கிரியைகள் எல்லாம் தேஹத்தினுடையது எனில் ஸ்வப்பனத்தில் முன் பாக்கப்பட்டதின் தர்சனமே இருக்காது. குருடன் கூட ஸ்வப்னத்தில் முன்பு பார்த்ததையே பார்க்கின்றான். அவன் பார்க்காவிடில் ஸ்வப்னத்தில் பார்க்கமுடியாது. பார்க்காத சாகாத்வீபம் என்னும் இடத்தைப் பார்க்கமாலேயே கனவில் காணமுடியாது. அதனாலும் இது சித்திக்கிறது. ஸ்வப்னத்தில் காண்பது முன்பு கண்களால் பார்த்தவையே, தேஹத்தால் அல்ல. தேஹம் திருஷ்டாவாக (பார்க்கக்கூடியதா) இருந்தால் அதனால் காணக்கூடிய கண்களின் மறைவால் முன்பு பார்த்த பதார்த்தங்களை ஸ்வப்னத்தில் காணமுடியாது. எவனுக்கு நேத்திரம் இல்லையோ அவன் நான் முன்பு பார்த்த இமயமலை சிகரத்தை இன்று ஸ்வப்னத்தில் பார்த்தேன் என்று கூறுகிறான். இதிலிருந்து தெரிகிறது. ஸ்வனப்னத்தைப் பார்ப்பவன் கண்களின் துணை இல்லாமலேயே திருஷ்டாவாகிறான். ஆகையால் தேஹம் திருஷ்டாவல்ல.
भाष्यम् - तथा स्मृतौ- द्रष्ट्टस्मर्त्रोरेकत्वे सति य एव द्रष्टा स एव स्मर्ता, यदा चैवं तदा निमीलिताक्षोऽपि स्मरन् दृष्टपूर्वं यद् रूपं तद् दृष्टवदेव पश्यतीति, तस्माद् यन्निमीलितं तत्र द्रष्ट्ट, यन्निमीलिते चक्षुषि स्मरद् रूपं पश्यति तदेवानिमीलितेऽपि चक्षुषि द्रष्ट्ट आसीदित्यवगम्यते।
+xÉÖ´ÉÉnù& - ச.பா- அவ்வாறே ஸ்மிருதியிலும் (நினைவுகளிலும்) - பார்ப்பவன் ஸ்மிருதி (ஞாபக சக்தி) யில் பார்ப்பவனும் ஸ்மிருதியும் ஒன்றாய் இருந்தால் பார்ப்பவனே நினைப்பவனும் (ஸ்மிருதா) ஆவான்- அவ்வாறு இல்லையெனில் கண்கள் மூடியிருக்கும்பொழுது முன்பு பார்த்த எந்த ரூபமோ அதை நினைவுபடுத்தி (ஸ்மரித்து) அந்த ரூபத்தையே பார்க்கின்றான். ஆகையால் கண்கள் மூடிக்கொண்டிருக்கும் பொழுது கண்கள் திருஷ்ட்டவல்ல. கண்கள் மூடிக்கொள்ளும்பொழுதும் ஸ்மரித்த ரூபத்தையே கண்கள் திறந்து இருக்கும்பொழுதும் அதையே பார்ப்பது திருஷ்டா ஆகும் என்பது அறியப்படுகிறது. .
भाष्यम् - मृते च देहेऽविकलस्यैव च रूपादिदर्शनाभावात्- देहस्यैव द्रष्ट्टत्वे मृतेऽपि दर्शनादिक्रिया स्यात्। तस्माद् यदपाये देहे दर्शनं न भवति, यद्भावे च भवति, तद् दर्शनादिक्रियाकर्तृ न देह इत्यवगम्यते।
अनुवादः - ச.பா- சரீரம் இறந்தபின் அதில் ஒரு விகாரமும் ஏற்படாததால் ரூபம் முதலிய தர்சனங்கள் காணப்படுவது இல்லை. தேஹத்திற்குத்தான் திருஷ்ட்டா தன்மை இருக்குமாகில் இறந்தபின்னும் தர்சனாதி கிரியைகள் இருக்கவேண்டும். ஆகையால் எது இல்லாத சமயத்தில் தர்சனம் ஏற்படுவது இல்லையோ, எது இருக்கும்பொழுது ஏற்படுகிறதோ அதுவே தர்சனம் முதலியவற்றின் கர்த்தா, தேஹம் அல்ல என்று அறியப்படுகிறது.
भाष्यम् - चक्षुरादीन्येव दर्शनादिक्रियाकर्तृणीति चेन्न, यदहमद्राक्षं तत् स्पृशामीति भिन्नकर्तृकत्वे प्रतिसानानुपपत्तेः मनस्तर्हीति चेन्न, मनसोऽपि विषयत्वाद् रूपादिवद् द्रष्ट्टत्वाद्य-नुपपत्तिः। तस्मादन्तःस्थं व्यतिरिक्तमादित्यादिवदिति सिद्धम्।
अनुवादः - ச.பா- கண் முதலியவைகளே தர்சனமுதலிய கிரியைகளை செய்யும் கர்த்தா எனில் அது பொருந்தாது. எதை நான் பார்க்கவில்லையோ அதை ஸ்பரிசிக்கிறேன் என்று வேறு என்று அனுமானம் சித்திக்காது. அவ்வாறு ஆனால் மனம் திருஷ்ட்டா என்று கருதுவதும் பொருந்தாது. ஏன்எனில் இதுவும் ரூபம் முதலியவைகளைப்போல் விஷயமாக இருப்பதால் திருஷ்ட்டாவாக ஆகாது. ஆகையால் அந்தஸ்தம் (உள்ளே இருக்கும்) அதாவது உள் இருக்கும் ஜ்யோதி ஆதித்யன் முதலியவைகளைப் போல் சரீரத்தைக் காட்டிலும் வியதிரிக்தமானது என்பது சித்தம்.
भाष्यम् - यदुक्तम्- कार्यकरणसातसमानजातीयमेव ज्योतिरन्तरमनुमेयम्, आदित्यादिभिस्तत्समानजातीयैरेव उपक्रिय-माणत्वादितितदसत्, उपकार्योपकारकभावस्यानियमदर्शनात्, कथम्? पार्थिवैरिन्धनैः पार्थिवत्वसमानजातीयैस्तृणोलपा-दिभिरग्नेः प्रज्वलनोपकारः क्रियमाणो दृश्यते, न च तावता तत्समानजातीयैरेवाग्नेः प्रज्वलनोपकारः सर्वत्रानुमेयः स्यात्, येनोदकेनापि प्रज्वलनोपकारो भिन्नजातीयेन वैद्युतस्याग्नेः जाद्भरस्य च क्रियमाणो दृश्यते, तस्माद् उपकार्योपकारकभावे समानजातीयासमानजातीनियमो नास्ति, कदाचित् समानजातीया मनुष्या मनुष्यैरेवोपक्रियन्ते कदाचित् स्थावरपश्वादिभिश्च भिन्नजातीयैः, तस्मादहेतुः कार्यकरणसातसमानजातीयैरेव आदित्यादिज्योतिर्भिरुपक्रियमाणत्वादिति।
अनुवादः - ச.பா- எது கூறப்பட்டதோ - காரிய கரண சங்காத சமான ஜாதி உடையதையே ஆதித்தியன் முதலியவைகளால் அந்த சமான ஜாதியினால் உபகாரம் செய்வதால் வேறு ஒரு ஜ்யோதியை அனுமானம் செய்யவேண்டும். என்பது சரியல்ல. ஏன் எனில் உபகாரிய உபகார பாவத்திற்கு நியமம் காணப்படாததால் எவ்வாறு? பிருதிவி சம்பந்தமான விறகால் அவ்வாறே பிருதிவி சம்பந்தமான சமான ஜாதிகளான துரும்பு, புல் முதலியவைகளால் அக்னி ஜ்லலன ரூபமாவதற்கு உபகாரம் ஆவது காணப்படுகிறது. இதைவைத்து எல்லா இடத்திலும் அவ்வாறு அனுமானம் செய்யமுடியாது. ஏன் எனில் ஜலத்தினாலும் பின்ன ஜாதியை உடைய மின்னலையும், ஜாடரத்திலும் (வயிற்றிலும்) பிரஜ்வலனம் செய்வது காணப்படுகிறது. ஆகையால் உபகாரிய உபகாரத்தில் சமான ஜாதி அசமான ஜாதி என்ற நியமம் இல்லை. சில சமயம் மனிதர்களுக்கும் மனிதர்களை உபகாரம் செய்கின்றனர். சில சமயம் ஸ்தாவரம் பசு முதலிய பின்ன ஜாதிகளும் உபகாரம் செய்வது காணப்படுகிறது. ஆகையால் காரியகரண சங்காத சமான ஜாதியமான ஆதித்யன் முதலிய ஜ்யோதிகளால் உபகாரம் செய்யப்பட்ட காரணத்தால் ஆத்மஜ்யோதி சங்காதத்தின் சமான ஜாதியாய் இருக்கவேண்டும் என்பதற்கு எந்த ஒரு ஹேதுவும் இல்லை.
भाष्यम् - यत् पुनरात्थ- चक्षुरादिभिरादित्यादिज्योतिर्वद् अदृश्यत्वादित्ययं हेतुर्ज्योतिरन्तरस्यान्तःस्थत्वं वैलक्षण्यं च न साधयति, चक्षुरादिभिरनैकान्तिकत्वादिति- तदसत्, चक्षुरादि-करणेभ्योऽन्यत्वे सतीति हेतोर्विशेषत्वोपपत्तेः।
अनुवादः - ச.பா- நீங்கள் கூறியவாறு - ஆதித்யன் முதலிய ஜ்யோதிக்கு சமானமான கண் முதலிய இந்திரியங்களினால் காணமுடியாததால் அந்த ஹேதுவானது சக்ஷு முதலியவைகளால் மாறுபடுவதால் அந்த அந்யஜ்யோதியின் உள்ளே இருப்பதாகவும், விலக்ஷணம் என்பதும் சித்தமாகாது என்று கூறுவது சரியல்ல. ஏன் எனில் கண் முதலிய இந்திரியங்களுக்கு பின்னமானது என்று இவ்வாறு முன் கூறிய ஹேதுவில் விசேஷணங்கள் இருப்பதால் அது ஒப்புக்கொள்ளக் கூடியதே.
भाष्यम् - कार्यकरणसातधर्मत्वं ज्योतिष इति यदुक्तम्, तन्न, अनुमानविरोधात्, आदित्यादिज्योतिर्वत् कार्यकरणसाता-दर्थान्तरं ज्योतिरिति ह्यनुमानमुक्तम्, तेन विरुध्यते इयं प्रतिज्ञा- कार्यकरणसातधर्मत्वं ज्योतिष इति। तद्भभावभावित्वं, त्वसिद्धम् मृते देहे ज्योतिषोऽदर्शनात्।
अनुवादः - ச.பா-காரியகரண சங்காதத்துவம் ஜ்யோதி என்று எது கூறப்பட்டதோ அனுமானத்திற்கு விரோதமாய் இருப்பதால் அது அவ்வாறு அல்ல. ஆதித்தியன் முதலிய ஜ்யோதியைப் போல் காரிய கரண சங்காதத்தை விட வேறு பதார்த்தம் ஜ்யோதி என்று அனுமானம் கூறப்பட்டது அதனால் காரியகரண சங்காததர்மத்துவம் ஜ்யோதி என்னும் இந்த பிரதிஞை விருத்தமாகும். மரணமடைந்த தேஹத்தில் ஜ்யோதி காணப்படாததால் அவ்வாறு பாவிப்பது பொருந்தாது.
भाष्यम् - सामान्यतो दृष्टस्यानुमानस्याप्रामाण्ये सति पान-भोजनादिसर्वव्यवहारलोपप्रसङ्गः, स चानिष्टः पानभोजनाजिषु हि क्षुत्पिपासादिनिवृत्तिमुपलब्धवतः तत्सामान्यात् पानभोजनाद्युपादनं दृश्यमानं लोके न प्राप्नोति, दृश्यन्ते ह्यपलब्धपानभोजनाः सामान्यतः पुनः पानभोजनान्तरैः क्षुत्पिपासादिनिवृत्तिमनुमि-न्वन्तस्तादर्थ्येन प्रवर्तमानाः।
अनुवादः - ச.பா- சாமான்யமாக பார்த்ததினால் உண்டான அனுமானம் அப்ரமாண்யமானால் குடிப்பது சாப்பிடுவது முதலிய எல்லா வியாபாரங்களுக்கும் லோபம் (கேடு) உண்டாகும். அது இஷ்ட்டமல்ல. குடிப்பது, சாப்பிடுவது இரு கைகளினால் அல்லவா பசி தாகம் நீங்குகின்றது. ஆகையால் அதற்கு சமானமாக இருப்பதால் பானம் போஜனம் முதலியவைகளை உலகில் கிரஹிக்கமுடியாது அனுமானம் இல்லாவிடில், பானபோஜனாதிகளை அடைந்து சாமான்யமாய் மறுபடியும் வேறு பானபோஜனஜங்களால் பசி தாகத்தை நிவிர்த்திப்பதற்காக அனுமானம் செய்து அதில் பிரவிர்த்திக்கின்றனர்.
भाष्यम् - यदुक्तम्- अयमेव तु देहो दर्शनादिक्रियाकर्तेति, तत् प्रथममेव परिह्य्तं स्वप्नस्मृत्योर्देहादर्थान्तरभूतो द्रष्टेति। अनेनैव ज्योतिरन्तरस्य अनात्मत्वमपि प्रत्युक्तम्। यत् पुनः खद्योतादेः कदाचित्कं प्रकाशाप्रकाशकत्वम्, तदसत्, पक्षाद्यवयवसं-कोविकासनिमित्तत्वात् प्रकाशाप्रकाशकत्वस्य। यत् पुनरुक्तम्, धर्माधर्मयोरवश्यं फलदातृत्वं स्वभावोऽभ्युपगन्तव्य इति- तद-भ्युपगमे भवतः सिद्धान्तहानात्। एतेनानवस्थादोषः प्रत्युक्तः। तस्मादस्ति व्यतिरिक्तं चान्तःस्थं ज्योतिरात्मेति।।६।।
अनुवादः -ச.பா-முன்பு கூறப்பட்டது - இந்த தேஹமே தர்சனகிரியாகர்த்தா என்பது ஸ்வப்ன ஸ்மிருதி இவைகள் தேஹத்தைக் காட்டிலும் திருஷ்ட்டா வேறு என்று முன்பே பரிஹாரம் செய்யப்பட்டது. இதனால் ஜ்யோதியை விட வேறானது அநாத்மா என்று கூறப்பட்டது. எது மறுபடியும் மின்னல் பூச்சி முதலியவைகள் போல் சிலசமயம் பிரகாசமாயும், சிலசமயம் அப்ரகாசமாயும் இருக்கிறது என்பது அசத். ஏன்எனில் அதன் இறக்கை முதலிய அவயவங்களில் சாங்கோச விகாச (சுருங்கி, விரிதல்) நிமித்தத்தால் பிரகாசத்துவமும், அப்ரகாசமாய் இருக்கின்றன. எது மறுபடியும் கூறப்பட்டதோ அது தர்மா தர்மங்கள் அவசியம் பலம் அளிக்கக்கூடியது என்பது ஏற்றுக்கொள்ளும் பொழுது உன்னுடைய சித்தாந்ததிற்கு ஹானி உண்டாகும். அதனால் உன்னால் ஆசங்கை செய்யப்பட்ட அநவஸ்தாதோஷமும் நிராகரிக்கப்படுகிறது. ஆகையால் காரியகரணசங்காதத்திற்கு வேறானதும், தனக்கு >உள்ளே (அந்தஸ்தம்) இருப்பது ஆத்ம ஜ்யோதி என்பது சித்திக்கின்றது.
भाष्यम् - यद्यपि व्यतिरिक्तत्वादि सिद्धम् तथापि समानजातीयानुग्राहकत्वदर्शननिमित्तभ्रान्त्या करणानामेवान्यतमो व्यतिरिक्तो वा इत्यविवेकतः पृच्छति-
अनुवादः -ச.பா-வியதிரிக்தம் முதலியவைகள் சித்தித்தாலும் சமான ஜாதிகளுக்குள் அனுகிரஹத்தால் (உபகார) நிமித்த பிராந்தியினால் கரணங்கள் அதைப்போல ஒன்றா அல்லது வியதிரிக்தமா என்று அவிவேகத்தால் கேட்கிறான்.
मन्त्रः - कतम आत्मेति योऽयं विज्ञानमयः प्राणेषु ह्य्द्यन्तर्ज्योतिः पुरुषः स समानः सन्नुभौ लोकावनुसञ्चरति ध्यायतीव लेलायतीव स हि स्वप्नो भूत्वेमं लोकमतिक्रामति मृत्यो रूपाणि।। ७।।
अनुवादः - மந்திரம்- ஆத்மா யார்? (யாக்ஞ) எது பிராணன்களின் புத்தி விருத்திகளினுள் இருக்கிறதோ அது விஞ்ஞானமய ஜ்யோதி ஸ்வரூப புருஷன் அதைப்போன்று இந்த லோகம் பரலோகம் ஆகிய இரண்டிலும் சஞ்சாரம் செய்கிறது. அது (அந்த புத்தி விருத்தியை அனுசரித்து) சிந்தனை செய்கிறது. மேலும் (ப்ராணவிருத்தியை அனுசரித்து) பிருவிர்த்தியாகின்றது. அது ஸ்வப்னமாகி இந்த லோகத்தை (தேஹ இந்திரிய சங்காதத்தை) அதிகிரமணம் செய்கிறது. மேலும் (சரீரம் அவ்வாறே இந்திரிய ரூப) மிருத்யுவின் ரூபத்தையும் அதிக்கிரமணம் செய்கிறது.
भाष्यम् - कतम इति, न्यायसूक्ष्मताया दुर्विज्ञेयत्वादुपपद्यते भ्रान्तिः। अथवा शरीरव्यतिरिक्ते सिद्धेऽपि करणानि सर्वाणि विज्ञानवन्तीव, विवेकत आत्मनोऽनुपलब्धत्वात्, अतोऽहं पृच्छामि- कतम आत्मेति, कतमोऽसौ देहेन्द्रियप्राणमनःसु यस्त्वयोक्त आत्मा, येन ज्योतिषास्त इत्युक्तम्।
अनुवादः - ச.பா- எது என்று - சூக்ஷ்மமான யுக்திகளால் மிகக் கடினமாய் அறியவேண்டியதாய் உள்ளதால் பிராந்தி ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அல்லது சரீரத்திற்கு வியதிரிக்தமாய் இருந்தாலும் எல்லா கரணங்களும் விஞ்ஞானம் உடையதாய் காணப்படுவதால் விவேகத்தால் ஆத்மாவை பிரித்து அறிய முடிவதில்லை. ஆகையால் நான் கேட்கின்றேன் ஆத்மா என்பது யாது? எந்த ஆத்மா உங்களால் கூறப்பட்டதோ அது தேஹம், இந்திரியம், பிராணன் மனது இவைகளுள் எது? எந்த ஜ்யோதியால் புருஷனின் வியவஹாரம் நடக்கிறது.
भाष्यम् - अथवा योऽयमात्मा त्वयाभिप्रेतो विज्ञानमयः, सर्व इमे प्राणा विज्ञानमया इव, एषु प्राणेषु कतमः? यथा समुदितेषु ब्राह्मणेषु, सर्व इमे तेजस्विनः कतम एषु षडङ्गविदिति।
अनुवादः - ச.பா- அல்லது எந்த ஆத்மா உங்களால் விஞ்ஞானமயன் என்று குறிப்பிட்டது எதுவோ அது எல்லா பிராணனன்களும் விஞ்ஞானமய சமானமாய் இருப்பதால் இந்தப்பிராணன்களில் அது எது? எவ்வாறு தேஜஸ்ஸுடன் கூடிய பிராஹ்மணர்கள் ஒன்றாய் குழுமி இருக்கும்பொழுது இவர்களில் யார் ஷடங்கத்தையும் அறிந்தவர் என்று கேட்பது போல ஆகிறது.
भाष्यम् - पूर्वस्मिन् व्याख्याने कतम आत्मेत्येतावदेव प्रश्नवाक्यम्, योऽयं विज्ञानमय इति प्रतिवचनम्, द्वितीये तु व्याख्याने प्राणेष्वित्येवमन्तं प्रश्नवाक्यम् अथवा सर्वमेव प्रश्नवाक्यम्- विज्ञानमयो ह्य्द्यन्तर्ज्योतिः पुरुषः कतम इत्येतदन्तम्। योऽयं विज्ञानमय इत्येतस्य शब्दस्य निर्धारितार्थविशेषविषयत्वम्, कतम आत्मेतीतिशब्दस्य प्रश्नवाक्यपरिसमाप्त्यर्थत्वम्- व्यवहित-सम्बन्धमन्तरेण युक्तमिति कृत्वा, कतम आत्मेतीत्येवमन्तमेव प्रश्नवाक्यम्, योऽयमित्यादि परं सर्वमेव प्रतिवचनमिति निश्चीयते।
अनुवादः - ச.பா- முந்திய வியாக்யானத்தில் ஆத்மா எது என்பது வரை கேள்வி வாக்கியமாகும். அதற்கு பதில் அந்த இந்த விஞ்ஞானமயன் என்பதாகும். இரண்டாவது வியாக்யானத்தில் பிராணன்களில் என்பது வரை பிரச்னவாக்கியம். அல்லது எல்லாமே பிரச்ன வாக்கியம் - விஞ்ஞானமயனே அந்தர்ஜ்யோதி புருஷன் யார் என்பது வரையாகும். எந்த இந்த விஞ்ஞானமயன் என்ற சப்தத்தின் நிச்சயமான அர்த்த விசேஷத்தால் சம்பந்தமுடையது. அவ்வாறே“कतम आत्मा” (கதம ஆத்மா) ஆத்மா எது என்பதில் உள்ள“इति” இதி) என்ற சப்தம் பிரச்னவாக்கியத்தை முடிப்பதற்கு ஆகும். இதற்கு எந்த ஒரு வியவஹித சம்பந்தம் இல்லாததே உசிதமாகும். என்று கருதி“कतम आत्मा” எது ஆத்மா? என்பது வரை பிரச்னவாக்கியம்.“योऽयम्” (யோஅயம் = அந்த இது) முதலியவை இனிவரும் எல்லா வாக்கியங்களும் பதில் ஆகும் என்று நிச்சயம் ஆகிறது.
भाष्यम् - योऽमित्यात्मनः प्रत्यक्षत्वान्निर्देशः विज्ञानमयो विज्ञानप्रायो बुद्धिविज्ञानोपाधिसम्पर्काविवेकाद् विज्ञानस्य इत्युच्यते- बुद्धिविज्ञानसम्पृक्त एव हि यस्मादुपलभ्यते, राहुरिव चन्द्रादित्यसम्पृक्तः, बुद्धिर्हि सर्वार्थकरणम्, तपसीव प्रदीपः पुरोऽवस्थितः,“मनसा ह्येव पश्यति मनसा श्रुणोति” इति ह्युक्तम्, बुद्धिविज्ञानालोकविशिष्टमेव हि सर्वं विषयजातमुपलभ्यते, पुरोऽवस्थितप्रदीपालोकविशिष्टमिव तमसि, द्वारमात्राणि त्वन्यानि करणानि बुद्धेः, तस्मात्तेनैव विशेष्यते- विज्ञानमय इति।
अनुवादः - ச.பா- ஆத்மா பிரத்யக்ஷமாவதால்“योऽयम्” (யோஅயம் - அந்த இந்த) என்று குறிப்பிடப்படுகிறது. விஞ்ஞானமயன் - விஞ்ஞானம் அநேகமாய் உள்ளது. புத்தி விஞ்ஞானரூப உபாதியின் சேர்க்கையால் விவேகம் இல்லாத காரணத்தால் விஞ்ஞானமயன் எனப்படுகிறது. ஏன் எனில் ராகு சந்திரன் சூரியனுடன் சேரும்பொழுது காணப்படுகிறது. அவ்வாறு புத்திரூப விஞ்ஞானத்தின் சம்பர்க்கத்தால் (சேர்க்கையால்) அனுபவம் ஏற்படுகிறது. இருளில் வைக்கப்பட்ட தீபம் போல் புத்தியும் எல்லா விதமான வியவஹாரங்களுக்கும் சாதனமாகிறது.“मनसा ह्येव पश्यति मनसा श्रुणोति” (மனசா ஹ்யேவ பச்யதி மனசாஸ்ருணோதி) = மனதால் பார்க்கிறது, மனதால் கேட்கிறது) என்று கூறப்படுகிறது. எவ்வாறு இருளில் தீபப்பிரகாசத்துடன் சேர்ந்து பதார்த்தங்கள் அறியப்படுகிறதோ அவ்வாறு எல்லா பதார்த்தங்களும் புத்திரூப விஞ்ஞானத்தின் அறியப்படும் தன்மையுடன் சேர்ந்து பதார்த்தங்கள் அறியப்படுகின்றன. மற்ற கரணங்கள் (இந்திரியங்கள்) புத்தியின் துவாரம் மாத்திரமாக இருக்கின்றன. ஆகையால் இதனாலேயே இவ்வாறு விஞ்ஞானமயனின் விசேஷமானது தெரிவிக்கப்பட்டது.
भाष्यम् - येषां परमात्मविज्ञप्तिविकार इति व्याख्यानम्, तेषां“विज्ञानमयः”“मनोमयः” इत्यादौ विज्ञानमयशब्दस्य अन्यार्थदेर्शनादश्रौतार्थतावसीयते, संदिग्धश्च पदार्थोऽन्यत्र निश्चितप्रयोगदर्शनान्निर्धारयितुं शक्यः, वाक्यशेषात् निश्चित-न्यायबलाद् वा, सधीरिति चोत्तरत्र पाद्भात्,“ह्य्द्यन्तः” इति वचनाद् युक्तं विज्ञानप्रायत्वमेव।
अनुवादः -ச.பா-எவர்களுடைய மதத்தில் பரமாத்மா விஞ்ஞப்த்தி விகாரம் என்று வியாக்கியானம் செய்யப்பட்டதோ அவர்கள்“விஞ்ஞானமயன்”,“மனோமயன்”முதலியவைகளில் விஞ்ஞானமய சப்தத்திற்கு வேறு அர்த்தம் காணப்படுவதால் சுருதி அர்த்தத்திற்கு விருத்தமாகிறது. சந்தேஹமுள்ள பதத்தின் அர்த்தமற்றஇடத்தில் நிச்சயம் செய்யப்பட்ட பிரயோகத்தைக் கண்டு அதை நிச்சயமாய் அறிந்துகொள்ள முடியும். அல்லது இதைத்தவிர வாக்கியசேஷத்தாலும், நிச்சயம் செய்யப்பட்ட நியாயபலத்தாலும் அறிந்து கொள்ளமுடியும்.“सधीः”(சதீ: = புத்தியுடன் கூடி) என்றவேறு இடத்தில் உள்ள பாடத்தாலும்,“ह्य्द्यन्तः”(ஹ்ருத்யந்த = ஹ்ருதயத்தின் உள்ளே) என்ற வசனத்தாலும் அதற்கு விஞ்ஞான பிராயாதா அதாவது விஞ்ஞா அதிகத்தன்மை என்பது உசிதமாகும்.
भाष्यम् - प्राणेष्विति व्यतिरेकप्रदर्शनार्थासप्तमी- यथा वृक्षेषु पाषाण इति सामीप्यलक्षणा। प्राणेषु हि व्यतिरेकाव्यतिरेकता संदिह्यत आत्मनः, प्राणेषु प्राणेभ्यो व्यतिरिक्त इत्यर्थः, यो हि येषु भवति, स तद्व्यतिरिक्तो भवत्येव- यथा पाषाणेषु वृक्षः।
अनुवादः - ச.பா- “பிராணன்களில்” என்பதில் உள்ள ஏழாம் வேற்றுமை வேறு என்று பிரித்துக் காண்பிப்பதற்காக -எவ்வாறு மரங்களுக்குள் கல் என்பது சமீபத்தில் என்பதைக் குறிக்கிறது. (என்ற லக்ஷணத்தைக் குறிக்கின்றது) பிராணன்களில் என்பதில் வ்யதிரேகமா அல்லது அவ்யதிரேகமா என்ற சந்தேஹம் ஏற்படும். ப்ராணன்களில் என்பது ப்ராணன்களைக் காட்டிலும் வ்யதிரிக்தம் (வேறானது) என்பது பொருள். எது எவைகளில் இருக்கிறது அது அதற்கு வேறானது ஆகும். எவ்வாறு கற்களால் மரம் என்பது போல், (கற்களைக் காட்டிலும் மரம் வேறு ஆவது போல்)
भाष्यम् - ह्य्दि तत्रैतत् स्यात्, प्राणेषु प्राणजातीयैव बुद्धिः स्यादित्यत आह- ह्य्द्यन्तरिति। ह्य्च्छब्देन पुण्डरीकाकारो मांसपिण्डम्, तात्स्थ्याद् बुद्धिर्ह्य्त्, तस्यां ह्य्दि बुद्धौ, अन्तरिति बुद्धिवृत्तिव्यतिरेकप्रदर्शनार्थम्, ज्योतिरवभासात्मकत्वादात्मोच्यते, तेन ह्यवभासकेन आत्मना ज्योतिषा आस्ते पल्ययते कर्म कुरुते, चेतनावानिव ह्ययं कार्यकरणपिण्डः- यथा आदित्यप्रकाशस्थो घटः।
अनुवादः - ச.பா- இங்கு ஹ்ருதி(ह्य्दि) என்பது ஹ்ருதயத்தில் அது இருக்கிறது என்பதாகும். பிராணன்களில் பிராண ஜாதியான புத்தியே ஆகும் என்பதற்காக ஸ்ருதி கூறுகிறது“ह्य्द्यन्तः” (ஹ்ருத்யந்த: = ஹிருதயத்தின் உள்) என்று கூறுகிறது. “ஹ்ருத்”(ह्य्त्) சப்தத்தால் ஹ்ருதய புண்டரீக ஆகாரமாக உள்ள மாம்ச பிண்டமாகும். அதில் இருப்பதால் புத்தி “ஹ்ருத்” ஆகும். அந்த ஹ்ருதி அதாவது புத்தியின் உள்ளே (அந்தர்) என்பது புத்தி வ்ருத்தியை வேறாக காண்பிப்பதற்காக ஆகும். பிரகாசரூபமாய் இருப்பதால் ஆத்மா எனப்படுகிறது. அந்த ஆத்ம ஜ்யோதினால் அல்லவா விளங்குவதால் (அவபாசகத்தினால்) ஆதித்யனின் பிரகாசத்தால் கடம் போல் காரியகரண சங்காதபிண்டம் சேதனம் போல் இருக்கிறது, இங்கும் அங்கும் செல்கிறது, கர்மம் செய்கிறது.
भाष्यम् - यथा वा मरकतादिर्मणिः क्षीरादिद्रव्ये प्रक्षिप्तः परीक्षणाय, आत्मच्छयामेव तत् क्षीरादिद्रव्यं करोति, तादृगेतदात्मज्योतिर्बुद्धेरपि ह्य्दयात् सूक्ष्मत्वाद् ह्य्द्यन्तःस्थमपि ह्य्दयादिकं कार्यकरणसातं चैकीकृत्य आत्मज्योतिश्छायं करोति, पारम्पर्येण सूक्ष्मस्थूलतारतम्यात् सर्वान्तरतमत्वात्।
अनुवादः - ச.பா- எவ்வாறு பிரசோதிப்பதற்காக பால் முதலிய திரவியங்களில் மரகதமணி ஆனது போடப்படுகிறதோ அப்பொழுது பால் முதலிய த்ரவியங்களை தன் நிறமாகவே ஆக்குகிறதோ அவ்வாறு ஆத்ம ஜ்யோதி புத்தியையும் அதாவது ஹிருதயத்தைக் காட்டிலும் சூக்ஷ்மமாவதால் ஹ்ருதய பிண்டத்தில் இருக்கும் ஹ்ருதய முதலிய (புத்தி முதலிய) வைகளையும் காரியகரண சங்காதத்தையும் தன்னுடன் அபின்னமாக்கி ஆத்ம ஜ்யோதியின் பிரகாசத்துடன் கூடியதாகிறது. ஏன் எனில் பரம்பரையான ஸ்தூல சூக்ஷ்ம தாரதம்யத்தால் அது எல்லாவற்றையும் விட மிகச் சூக்ஷ்மமாய் இருக்கிறது.
भाष्यम् - बुद्धिस्तावत् स्वच्छत्वादानन्तर्या च्चात्मचैतन्य-ज्योतिः प्रतिच्छाया भवति, तेन हि विवेकिनामपि तत्र आत्माभिमानबुद्धिः प्रथमा, ततोऽप्यानन्तर्यान्मनसि चैतन्याव-भासता, बुद्धिसम्पर्कात्, तत इन्द्रियेषु, मनः संयोगात्, ततोऽनन्तरं शरीरे, इन्द्रियसम्पर्कात्। एवं पारम्पर्येण कृत्स्नं कार्यकरण-सातमात्मा चैतन्यस्वरूपज्योतिषावभासयति। तेन हि सर्वस्य लोकस्य कार्यकरणसाते तद्धृत्तिषु चानियतात्माभि-मानबुद्धिर्यथाविवेकं जायते।
अनुवादः - ச.பா- புத்தியானது ஸ்வச்சமாயும் ஆத்மாவின் சமீபத்தில் இருப்பதாலும் ஆத்மசதன்ய ஜ்யோதியுடன் சேர்ந்து பிரதிசாயையாக ஆகிறது. அதனால் விவேகிகளுக்கும் அவ்விடத்தில் முதலாவதாக ஆத்ம அபிமான புத்தி உண்டாகிறது. அதன் சமீபத்தில் இருப்பதால் புத்தியின் சேர்க்கையால் மனதில் சைதன்யம் ஆபாசம் ஏற்படுகிறது. மனம் இந்திரியங்களுடன் இணைவதால் மனதால் இந்திரியங்களும், மேலும் இந்திரியங்களுடன் சரீரத்தின் சேர்க்கை ஏற்படும் பொழுது சரீரத்தில் சைதன்ய ஆபாசம் உண்டாகிறது. இவ்வாறு பரம்பரையாய் எல்லா காரியகரண சங்காத ஆத்மா சைதன்ய ரூப பிரகாசத்தால் பிரகாசிக்கச் செய்கிறது. ஆகையால் இந்த உலகின் எல்லா காரியகரண சங்காதத்திலும் அதன்விருத்திகளிலும் தங்களுடைய விவேகத்திற்கு தக்கவாறு நியமம் அற்றஆத்ம அபிமானபுத்தி உண்டாகிறது.
भाष्यम् - तथा च भगवतोक्तं गीतासु“यथा प्रकाशयत्येकः कृत्सनं लोकमिमं रविः। क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत।।” (१३।३३)“यदादित्यगतं तेजः” (१५।१२) इत्यादि च।“नित्योऽनित्यानां चेतनश्चेतनानाम्” (२।२।१४) इति च काद्भके।“तमेव भान्तमनुभाति सर्वं तस्य भासा सर्वमिदं विभाति” (क०उ० २।२।१६) इति च।“येन सूर्यस्तपति तेजसेद्धः” इति च मन्त्रवर्णः। तेनायं ह्य्द्यन्तर्ज्योतिः।
अनुवादः - அவ்வாறே பகவான் கீதையில் கூறி இருக்கிறார்-“यथा प्रकाशयत्येकः कृत्सनं लोकमिमं रविः। क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत।।”(யதா பிரகாசயத்யேக: க்ருத்னம்லோகமிம் ரவி:! க்ஷதே்ரம் க்ஷதே்ரி தா க்ருத்ஸ்னம் பிரகாசயதி பாரத),“यदादित्यगतं तेजः”(யதா ஆதித்ய கதம் தேஜ:) முதலியவை.“नित्योऽनित्यानां चेतनश्चेतनानाम्” (நித்யோ அநித்யானாம் சேதனச் சேதனானாம்) என்று காடகத்திலும்,“तमेव भान्तमनुभाति सर्वं तस्य भासा सर्वमिदं विभाति” (தமேவ பாந்தம்னுபாதி சர்வம் தஸ்ய பாசா சர்வமிதம் விபாதி) என்றும்“येन सूर्यस्तपति तेजसेद्धः” (யேன சூர்யஸ்தபதி தேஜசேத்த:) என்பது மந்திரவர்ணம். அதனால் இந்த ஆத்மா ஹ்ருதயாந்தர்கத ஜ்யோதி.
भाष्यम् - पुरुषः - आकाशवत् सर्वगतत्वात् पूर्ण इति पुरुषः, निरतिशयं चास्य स्वयंज्योतिष्ट्वम्, सर्वावभासकत्वात् स्वयमन्यानवभास्यत्वाच्च। स एष पुरुषः स्वयमेव ज्योतिः स्वभावः, यं त्वं पृच्छसि- कतम आत्मेति।
अनुवादः - ச.பா- புருஷ: - ஆகாசம் போல் சர்வகதமாய் இருப்பதால் பூர்ணம் ஆகையால் புருஷன். எல்லாவற்றையும் அபவாசம் செய்வதாலும், ஸ்வயம் மற்றதால் பிரகாசம் செய்யமுடியாததாலும் நிரதிசயமாயும் ஸ்வயம் பிரகாசமாயும் எல்லாவற்றையும் விட மேலானது. நீர் எந்த ஆத்மாவைக்குறித்து எது என்று வினவினாயோ அந்த இந்த புருஷன் ஸ்வயம் ஜ்யோதி: ஸ்வபாவமானது.
भाष्यम् - बाह्यानां ज्योतिषां सर्वकरणानुग्राहकाणां प्रत्यस्तमयेऽन्तःकरणद्वारेण ह्य्द्यन्तर्ज्योतिः पुरुष आत्मानुग्राहकः करणानामित्युक्तम्। यदापि बाह्यकरणानुग्राहकाणामादि-त्यादिज्योतिषां भावः, तदाप्यादित्यादिज्योतिषां परार्थत्वात् कार्यकरणसातस्याचैतन्ये स्वार्थानुपपत्तेः स्वार्थज्योतिष आत्मनोऽनुग्रहाभावेऽयं कार्यकरणसातो न व्यवहाराय कल्पते, आत्मज्योतिरनुग्रहेणैव हि सर्वदा सर्वः संव्यवहारः“यदेतद्ह्य्दयं मनश्चैतत् संज्ञानम्” (ऐ०उ०३।२) इत्यादि श्रुत्यन्तरात्, साभिमानो हि सर्वप्राणिसंव्यवहारः, अभिमानहेतुं च मरकतमणिदृष्टान्तेनावोचाम।
अनुवादः - ச.பா- எல்லா இந்திரியங்களின் உபகாரகமான் பாஹ்ய ஜ்யோதிகள் அஸ்தமிக்கும்பொழுது அந்தக்கரண வாயிலாய் ஹ்ருதயத்தில் உள்ளே இருக்கும் அந்தர் ஜ்யோதி ஸ்வரூப புருஷன் - பூர்ண ஆத்மா அந்தக்கரணத்தின் மூலமாய் இந்திரியங்களுக்கு உபகாரமாகிறது. எப்பொழுது பாஹ்ய இந்திரியங்களின் உபகாரகமான ஆதித்யன் முதலிய ஜ்யோதிகள் சத்தாய் இருக்கிறதோ அப்பொழுது ஆதித்யன் முதலிய ஜ்யோதிகள் வேறாக இருப்பதாலும் காரியகரண சங்காதம் அசேதனமாய் இருப்பதாலும் அதற்கு ஸ்வார்த்த ஜ்யோதி சம்பவிக்காததால் ஸ்வார்த்த ஜ்யோதி (தன்னை அறிவதற்கான பிரகாசப்படுத்தும் ஜ்யோதி) ஆத்மாவின் அனுக்கிரஹம் இல்லாமல் காரியகரண சங்காதம் வியவஹாரங்களுக்கு சாமர்த்தியம் உடையவைகளாக ஆகாது. ஆத்ம ஜ்யோதியின் அனுகிரஹித்தனாலேயே எல்லா வியவஹாரங்களும்.“यदेतद्ह्य्दयं मनश्चैतत् संज्ञानम्” (யதேதத்ஹ்ருதயம் மனச்சைதத் சம்ஞானம்) என்பது வேறு சுருதிவாக்கியம். அபிமானம் உடையதாலேயே எல்லா பிராணிகளின் வியவஹாரங்கள். மரகதமணி திருஷ்டாந்தத்தால் அபிமான ஹேது கூறப்பட்டது.
भाष्यम् - यद्यप्येवमेतत्, तथापि जाग्रद्विषये सर्वकरणा-गोचरत्वादात्मज्योतिषो बुादिबाह्याभ्यन्तरकार्यकरणव्यवहार- सन्निपातव्याकुलत्वान्न शक्यते तोतिरात्माख्यं मुञ्जेषीका-वन्निष्कृष्य दर्शयितुमित्यतः स्वप्ने दिदर्शयिषुः प्रक्रमते-
अनुवादः - ச.பா- இவ்வாறு இந்த விஷயம் இருந்தாலும் ஜாக்ரத்காலத்தில் ஆத்ம ஜ்யோதி எல்லா இந்திரியங்களுக்கும் அவிஷயமாகின்றது. அவ்வாறே புத்தி முதலிய பாஹ்ய ஆப்யாந்தர காரியகரண வியவஹார கூட்டத்தால் சஞ்சலம் உண்டாவதால் ஆத்ம ஜ்யோதியை மூஞ்சிப்புல்லைப்போல் பிரித்து காண்பிக்க முடியாததால் அதை ஸ்வப்னத்தில் காண்பிப்பதற்காக சுருதி ஆரம்பிக்கிறது.
भाष्यम् - स समानः सन्नुभौ लोकावनुसञ्चरति। यः पुरुषः स्वयमेव ज्योतिरात्मा, स समानः सदृशः सन्- केन? प्रकृतत्वात् सन्निहितत्वाच्च ह्य्दयेन,“ह्य्दि”इति च ह्य्च्छब्दवाच्या बुद्धिः प्रकृता सन्निहिता च, तस्मात्तयैव सामान्यम्।
अनुवादः - ச.பா-அந்த புருஷன் சமானமாக இருந்துகொண்டு இரண்டு லோகங்களிலும் சஞ்சரிக்கின்றான். எந்த புருஷன் தானே ஜ்யோதி ஸ்வரூப ஆத்மாவோ அதற்கு சமானமாய் ஒரு ஜ்யோதியைக் கொண்டு- எதற்கு சமானமாகக் கொண்டு? இந்த பிரகரணத்தின்படியும், சமீபத்தில் இருப்பதாலும் >ஹ்ருதயத்தில் அதாவது“ह्य्दि”(ஹ்ருதி = ஹ்ருதயத்தில்) என்பதிலிருந்து“ह्य्दि” (ஹ்ருத்) சப்த வாச்சியம் புத்தி என்பது இந்த பிரகரணத்தாலும், சமீபத்தில் இருப்பதாலும் ஆகிறது. ஆகையால் ஆத்மாவிற்கு சமமாய் இருப்பதாகக் கூறப்படுகிறது.
भाष्यम् - किं पुनः सामान्यम्? अश्वमहिषवद् विवेकतो-ऽनुपलब्धिः, अवभास्या बुद्धिः, अवभासकं तदात्मज्योतिः, आलोकवत्, अवभास्यवभासकयोर्विवेकतोऽनुपलब्धिः प्रसिद्धा, विशुद्धत्वाालोकोऽवभास्येन सदृशो भवति, यथा रक्तमवभासयन् रक्तसदृशो रक्ताकारो भवति, यथा हरितं नीलं लोहितं च अवभासयन्नालोकः तत्समानो भवति, तथा बुद्धिमव-भासयन् बुद्धिद्धारेण कृत्स्नं क्षेत्रमवभासयति- इत्युक्तं मरकतमणिनिदर्शनेन। तेन सर्वेण समानो बुद्धिसामान्यद्वारेण।
अनुवादः - ச.பா- சாமான்யம் எவ்வாறு? குதிரை, எருமையைப்போல் விவேகத்தின் அறியாமை. அவபாசம்புத்தி. அதை அவபாசம் செய்வது அந்த ஆத்ம ஜ்யோதி. பார்ப்பதைப்போன்று அவபாசமும். அவபாசகமும் (அவபாசம் செய்வது) பிரித்து அறியமுடியாது என்பது பிரசித்தம். விசுத்தமாய் இருப்பதால் பிரகாசிக்கப்படுவது போல் தோன்றுகிறது. எவ்வாறு சிகப்பு நிறம் வஸ்து பிரகாசம் ஆகும்பொழுது சிகப்புபோல் தோன்றுகிறதோ, அவ்வாறே பச்சை, நீலம் சிகப்பு ஆகிய பதார்த்தங்களை பிரகாசிக்கச் செய்து அதற்கு சமானமாவது போல் புத்தியை பிரகாசிக்கச் செய்து கொண்டு புத்தியின் மூலமாய் எல்லா க்ஷதே்திரங்களையும் பிரகாசிக்கச் செய்கிறது. இதுவே மரகத மணி திருஷ்டாந்தரத்தால் விளக்கப்பட்டது. புத்திசாமான்யத்தால் எல்லாம் சமானமாகின்றது.
भाष्यम् -“सर्वमयः” इति चात एव वक्ष्यति, तेनासौ कुतश्चित् प्रविभज्य मुञ्जेषीकावत् स्वेन ज्योतीरूपेण दर्शयितुं न शक्यत इति, सर्वव्यापारं तत्राध्यारोप्य नामरूपगतम्, ज्योतिधर्म च नामरूपयोः, नामरूपे चात्मज्योतिषि, सर्वो लोको मोमुह्यते- अयमात्मा नायमात्मा, एवं धर्मा नैवंधर्मा, कर्ताऽकर्ता, शुद्धाऽशुद्धो बद्धो मुक्तः, स्थितो गत आगतः अस्ति नास्तीत्यादिविकल्पैः।
अनुवादः - ச.பா- ஆகையால் தான்“सर्वमयः” (சர்வமய:) என்று சுருதி கூறப்போகிறது. ஆகையால் மூஞ்சிப்புல்லைப்போல் பிரித்து தன்னுடைய ஜ்யோதி ரூபத்தால் காண்பிக்கமுடியாது. அந்த நாம ரூபங்களின் எல்லா வியாபாரங்களையும், நாம ரூபங்களில் ஜ்யோதியின் தர்மத்தையும், அவ்வாறே ஆத்ம ஜ்யோதியில் நாம ரூபத்தையும் ஆரோபித்து இந்த லோகம் முழுவதும் - இது ஆத்மா, இது ஆத்மா அல்ல, ஆத்மா இந்த தர்மம் உடையது, ஆத்மா இந்த தர்மம் உடையது அல்ல, கர்த்தா அகர்த்தா, சுத்தமானது சுத்தமற்றது, பந்தமாகும், முக்தமாகும், இருப்பது, செல்வது, வருவது, சத்ரூபம், அசத்ரூபம் என்பது முதலிய விகல்பங்களால் அத்யந்தமோஹத்தை உலகில் எல்லோரும் அடைந்திருக்கின்றார்கள்.
भाष्यम् - अतः समानः सन्नुभौ लोकौ प्रतिपन्नपतिपत्तव्यौ इहलोकपरलोकावुपात्तदेहेन्द्रियादिसातत्यागान्योपादान-सन्तानप्रबन्धशतसन्निपातैरनुक्रमेण सञ्चरति। धीसादृश्यमे-वोभयलोकसञ्चरणहेतुर्न स्वत इति।
अनुवादः - ச.பா- ஆகையால் சமானமாய் இருந்து கொண்டு, அடைந்த இகலோகம், இனி அடையப்போகிற, பரலோகம் ஆகிய இரண்டிலும் அடைந்த தேஹந்த்ரிய சங்காதத்தை விட்டும், அடையப்படாத தேஹேந்த்ரிய சங்காதத்தை கிரஹிப்பதற்காகவும் தொடர்ந்து நூ ற்றுக்கணக்கான சம்பந்தத்தால் கிரமமாய் சம்சாரம் நடக்கிறது. தாத்பர்யம் என்னவென்றால் புத்தியைப்போல இருப்பது இந்த இரண்டுலோகங்களின் சஞ்சாரம் செய்வதற்காக காரணமாகிறது.
भाष्यम् - तत्र नामरूपोपाधिसादृश्यं भ्रान्तिनिमित्तं यत्तदेव हेतुर्न स्वतः, इत्येतदुच्यते- यस्मात् स समानः सन्नुभौ लोकावनुक्रमेण सञ्चरति तदेतत् प्रत्यक्षमित्येतद्दर्शयति- यतो ध्यायतीव ध्यानव्यापारं करोतीव, चिन्तयतीव, ध्यानव्यापारवतीं बुद्धिं स तटस्थेन चित्स्वभावज्योतीरूपेणावभासयन् तत्सदृश-स्तत्समानः सन् ध्यायतीव, आलोकवदेव- अतो भवति चिन्तयतीति भ्रान्तिर्लोकस्य, न तु परमार्थतो ध्यायति।
अनुवादः - ச.பா- இந்த விஷயத்தில் பிராந்தி நிமித்தமான நாம ரூப உபாதியைபோன்றதே இதற்கு ஹேது. ஸ்வயமாக அல்ல என்று கூறப்படுகிறது. எதனால் சமானமாக இருந்துகொண்டு இவ்விரு உலகங்களிலும் கிரமமாக சஞ்சரிப்பது பிரத்யக்ஷம் என்பதை சுருதி தெரிவிக்கிறது. எதனால் தியாயதீவ (தியானம் செய்வது போல) சிந்தயிதீவ (சிந்திப்பது போல என்றதியான வியாபார விருத்தியாகிய புத்தியை அந்த (ஜ்யோதி) தடஸ்த ரூபமாக சித்ஸ்வபாவ ஜ்யோதி ரூபத்தால் பிரகாசித்துக்கொண்டு அதற்கு சமமாக இருந்துகொண்டு தியானம் செய்வது போன்று (தியாய தீவ) பிரகாசிப்பது போன்று இருக்கிறது. ஆகையால் லோகத்திற்கு பிராந்தி ஏற்படுகிறது என்று நினைக்கப்படுகிறது. உண்மையில் அது தியானம் செய்யவில்லை.
भाष्यम् - तथा लेलायतीव अत्यर्थं चलतीव, तेष्वेव करणेषु बुादिषु वायुषु च चलत्सु तदवभासकत्वात् तत्सदृशं तदिति- लेलायतीव, न तु परमार्थतश्चलनधर्मकं तदात्मज्योतिः।
अनुवादः -ச.பா-அவ்வாறு லேலாயதீவ(लेलायतीव)என்பது அதிகம் (அசைவதுபோல) செல்வது போல் ஆகும் அந்த கரணங்களிலும், புத்தி முதலியவைகளிலும், வாயு முதலியவைகளிலும், அசைவு உள்ளவைகளிலும் அது >பிரகாசிப்பதால் அதற்கு சமானதாக அறியப்படுகிறது. ஆகையால் அதைப்போன்று இது அதிக சலனம் உடையதாய் இருக்கின்றுது என்று கருதுகிறார்கள். உண்மையில் அந்த ஆத்ம ஜ்யோதி சலன தர்மம் உடையது அல்ல.
भाष्यम् - कथं पुनरेतदवगम्यते, तत्समानत्वभ्रान्तिरेवो-भयलोकसञ्चरणादिहेतुर्न स्वतः- इत्यस्यार्थस्य प्रदर्शनाय हेतुरुपदिश्यते- स आत्मा हि यस्मात् स्वप्नो भूत्वा, स यथा धिया समानः, सा धीर्यद् यद् भवति तत्तदसावपि भवतीव, तस्माद् यदासौ स्वप्नो भवति स्वापवृत्तिं प्रतिपद्यते धीः, तदा सोऽपि स्वप्नवृत्तिं प्रतिपद्यते, यदा धीर्जिजागरिषति, तदा असावपि।
अनुवादः - ச.பா- மேலும் இது எவ்வாறு அறியமுடியும்? எனில் அந்த புத்தி முதலியவற்றின் சமானத்தன்மையின் பிராந்தி ஆத்மாவின் இரண்டு லோக சஞ்சாரத்திற்கும் காரணமாகிறது. சுயமாக அல்ல. இந்த அர்த்தத்தை தெரிவிப்பதற்காக ஹேதுவை உபதேசிக்கிறது. எதனால் அந்த ஆத்மாவே ஸ்வப்னத்தை அடைந்து அந்த புத்தியின் சமானமாகி அந்த புத்தி எது, எதுவாகிறதோ அது அதுவாக ஆகிறது போல் ஆகிறது. ஆகையால் எப்பொழுது அதற்கு ஸ்வப்னம் ஏற்படுகிறதோ அதாவது புத்தி ஸ்வப்னவிருத்தியை அடைகிறதோ அப்பொழுது இந்த ஆத்மாவும் ஸ்வப்னவிருத்தியை அடைந்ததுபோல் இருக்கிறது. எப்பொழுது புத்தி ஜாக்ரத்தை அடையவிரும்புகிறதோ அப்பொழுது அதுவும் (ஆத்மாவும்) ஜாக்ரத்தை அடைய விரும்புகிறதுபோல் ஆகிறது.
भाष्यम् - अत आह- स्वप्नो भूत्वा स्वप्नवृत्तिमवभासयन् धियः स्वापवृत्त्याकारो भूत्वेमं लोकं जागरितव्यवहारलक्षणं कार्यकरणसातात्मकं लौकिकशास्त्रीयव्यवहारास्पदम्, अति-क्रामत्यतीत्य क्रामति, विविक्तेन स्वेन आत्मजोतिषा स्वप्नात्मिकां धीवृत्तिमवभासयन्नवतिष्द्भते यस्मात् तस्मात् स्वयंज्योतिः स्वभाव एवासौ, विशुद्धः स कर्तृक्रियाकारकफलशून्यः परमार्थतः धीसादृश्यमेव तु उभयलोकसञ्चारादिसंव्यवहारभ्रान्तिहेतुः।
अनुवादः - ச.பா- ஆகையால் சுருதி கூறுகிறது - ஸ்வப்னமாகி ஸ்வப்ன விருத்தியை பிரகாசிக்கச் செய்து கொண்டு அதாவது ஸ்வப்ன விருத்தி ஆகாரமாகி லெளகிகம், அவ்வாறே சாஸ்த்ரீய வியவஹார ரூபத்திற்கு யோக்யமான காரிய கரண சங்காதமய ஜாகரித வியவஹாரரூப லோகத்தை அதிக்கிரமணம் செய்கிறது. அதாவது அதைத்தாண்டிச் செல்கிறது. அப்பொழுது அவைகளைக் காட்டிலும் வேறானதுமான தன்னுடைய ஆத்ம ஜ்யோதியினால் ஸ்வப்னாத்மகமான வ்ருத்தியை எதனால் பிரகாசிக்கச் செய்து கொண்டிருக்கிறதோ அதனால் அது ஸ்வயம் ஜ்யோதிஸ்வரூபம். அது பரமார்த்தமாக (உண்மையில்) கர்த்ரு க்ரியாகாரக பலரூபம் அற்றது. விசுத்தமானது. புத்திக்கு சமானமாய் இருப்பதால் இரு உலக சஞ்சாரம் ஏற்படுவது ப்ராந்தியின் காரணத்தால் ஆகும்.
भाष्यम् - मृत्यो रूपाणि, मृत्युः कर्माविद्यादिः, न तस्यान्यद् रूपं स्वतः, कार्यकरणान्येवास्य रूपाणि, अतस्तानि मृत्यो रूपाण्यतिक्रामति क्रियाफलाश्रयाणि।
अनुवादः - ச.பா- மிருத்யுவின் ரூபங்கள் -கர்மம் அவித்யை முதலியவைகளே மிருத்யு. ஆகையால் தனக்காக தனியான வேறு ரூபம் இல்லை. காரியகரணங்களே அதன் ரூபங்கள். ஆகையால் மிருத்யுவின் அந்த கிரியாபலன்களை ஆஸ்ரயிக்கும் ரூபங்களை கடந்து செல்கிறது.
भाष्यम् - पूर्व - ननु नास्त्येव धिया समानमन्यद् धियोऽव-भासकमात्मज्योतिः, धीव्यतिरेकेण प्रत्यक्षेण वा अनुमानेन वानुपलम्भात्- यथान्या तत्काल एव द्वितीया धीः। यत्त्ववभास्यावभासकयोरन्यत्वेऽपि विवेकानुपलम्भात् सादृश्यमिति घटाद्यालोकयोः- तत्र भवत्वन्यत्वे न आलोकस्योपलम्भाद् घटादेः, संश्लिष्टयोः सादृश्यं भिन्नयोरेव, न च तथेह घटादेरिव धियोऽवभासकं ज्योतिरन्तरं प्रत्यक्षेण वानुमानेन वोपलभामहे, धीरेव हि चित्स्वरूपावभासकत्वेन स्वाकारा विषयाकारा च, तस्मान्नानुमानतो नापि प्रत्यक्षतो धियोऽवभासकं ज्योतिः शक्यते प्रतिपादयितुं व्यतिरिक्तम्।
अनुवादः - ச.பா- பூர்வ- ஆனால் புத்திக்கு சமானமான வேறு ஒன்று புத்தியைப் பிரகாசப்படுத்தும் ஆத்ம ஜ்யோதி இல்லவே இல்லை. ஏன்எனில் பிரத்யக்ஷமாகவோ அனுமானமாகவோ அறியமுடியாது. எவ்வாறு அதே காலத்தில் வேறு புத்தி உண்டாகாதோ அவ்வாறு. பிரகாசிக்கும் கடமும் அதை பிரகாசிக்கச் செய்வதும் வேறாக இருந்தாலும் விவேகமில்லாததால் கடம் முதலியவையும் அதைப்பிரகாசிக்கச் செய்வதும் சமானம் என்றாலும் கடம் முதலியவைகள் பின்னமாய் அறியப்பட்டாலும் அவை பின்னமாய் இருந்தாலும் கடம் முதலியைவகளுடன் சேர்ந்து சமானமாகிறது. ஆனால் இங்கு கடம் முதலியவைகளுக்கு சமானமான பிரத்யக்ஷமாகவோ, அனுமானத்தாலோ புத்தியைப் பிரகாசிக்கக்கூடிய வேறு ஜோதியை அறியமுடியாது. ஆனாலும் சித் ஸ்வரூபமாய் பிரகாசிப்பதால் புத்தியே புத்தியாகாரமாகவும், விஷயாகாரமாகவும் ஆகிறது. ஆகையால் புத்தியை பிரகாசிக்கச் செய்யக்கூடிய அதைவிட வேறான ஜ்யோதியை அனுமானத்தாலோ, ப்ரத்யக்ஷமாகவோ ப்ரதிபாதனம் செய்யமுடியாது. (மீறமுடியாது)
भाष्यम् - यद्यपि दृष्टान्तरूपमभिहितम्, अवभास्याव-भासकयोर्भिन्नयोरेव घटाद्यालोकयोः संयुक्तयोः सादृश्यमिति- तत्राभ्युपगममात्रमस्माभिरुक्तम्, न तत्र घटाद्यवभास्यावभासकौ भिन्नौ, परमार्थतस्तु घटादिरेवावभासात्मकः सालोकः, अन्योऽन्यो हि घटादिरुत्पद्यते, विज्ञानमात्रमेव सालोकघटादिविषयाकार- मवभासते, यदैवम् तदा न बाह्यो दृष्टान्तोऽस्ति विज्ञानलक्षण-मात्रत्वात् सर्वस्य।
अनुवादः - ச.பா- இவ்வாறு பின்னமாய் இருந்தாலும் பரஸ்பரம் ஒன்று சேர்ந்து பிரகாசிக்கும் (அவபாஸ்யமான) கடம் முதலியவைகளும், அவபாசப்படுத்தும் ஜ்யோதியும் த்ருஷ்டாந்தரூபமாய் சமானத்தன்மை கூறப்பட்டது. ஆனாலும் நாங்கள் அதை ஒரே விதமாகவே கூறுகிறோம். ஏன்எனில் கடம் முதலிய அவ பாஸ்யமும், அதன் அவபாசகமும் பின்னமல்ல. உண்மையில் ஆலோகத்துடன் கூடிய (ஜ்யோதியுடன்) கூடிய கடம் முதலியவைகளே அவபாசரூபம். வெவ்வேறு கடம் முதலியவற்றின் உற்பத்தி உண்டாகிறது. விஞ்ஞான மாத்திரத்தாலேயே ஜ்யோதியுடன் கூடிய (அவபாசகத்துடன் கூடிய) கடம் முதலியவை விஷயாகாரமாக விளங்குகின்றன. அப்பொழுது எல்லாவற்றிற்கும் விஞ்ஞான லக்ஷணமாத்திரமே இருப்பதால் அதற்கு பாஹ்ய திருஷ்ட்டாந்தம் இல்லை. (இதுவரை விஞ்ஞானவாதி பெளத்த மதம் கூறப்பட்டது)
भाष्यम् - एवं तस्यैव विज्ञानस्य ग्राह्यग्राहकाकारतामलं परिकल्प्य, तस्यैव पुनर्विशुद्धिं परिकल्पयन्ति, तद् ग्राह्यग्राहक- >विनिर्मुक्तं विज्ञानं स्वच्छीभूतं क्षणिकं व्यवतिष्द्भत इति केचित्। तस्यापि शान्तिं केचिदिच्छन्ति, तदपि विज्ञानं संवृत्तं ग्राह्यग्राह-कांशविनिर्मुक्तं शून्यमेव घटादिबाह्यवस्तुवदित्यपरे माध्यमिका आचक्षते।
अनुवादः - ச.பா- சித்தாந்தீ- இவ்வாறு அந்த விஞ்ஞானத்தின் கிராஹ்ய கிராஹக ஆகாரம் முழுவதும் கல்பித்து பின் அதையே மறுபடியும் விசுத்தியைக் கல்பிக்கின்றனர். அந்த க்ராஹ்ய க்ராஹகத்தின் நீக்கமே (விழுக்தமே) விஞ்ஞானம் ஸ்வச்ச ரூபமானது, க்ஷணிகம் ஆக இருக்கிறது என்று சிலரின் கொள்கை. அதுவும் சாந்தியாவதை சிலர் இச்சிக்கின்றனர். அதுவும் சம்வ்ருத (அவித்தையினால் ஆச்சாதிக்கப்பட்ட) விஞ்ஞானமும் கடம் முதலிய பாஹ்யவஸ்துக்கள்போல் க்ராஹ்யக்ராஹக அம்சமற்று சூன்ய மாத்திரமாகவே இருக்கிறது. என்று சிலர் கூறுகின்றனர்.
भाष्यम् - सर्वा एताः कल्पना बुद्धिविज्ञानावभासकस्य व्यतिरिक्तस्यात्मज्योतिषोऽपवादस्य श्रेयोमार्गस्य प्रतिपक्ष-भूतावैदिकस्य। तत्र येषां बाह्योऽर्थोऽस्ति, तान् प्रत्युच्यते- न तावत् स्वात्मावभासकत्वं घटादेः, तमस्यवस्थितो घटादिस्तावन्न कदाचिदपि स्वात्मनावभास्यते, प्रदीपाद्यालोकसंयोगेन तु नियमे नैवावभास्यमानो दृष्टः सालोको घट इति, संश्लिष्टयोरपि घटालोकयोरन्यत्वमेव, पुनः पुनः संश्लेषे विश्लेषे च विशेषदर्शनाद् रज्जुघटयोरिव। अन्यत्वे च व्यतिरिक्तावभासकत्वम्, न स्वात्मनैव स्वमात्मानमवभासयति।
अनुवादः -ச.பா-இந்த எல்லா கல்பனைகளும் புத்தி விஞ்ஞானத்தை அவபாசகம் செய்யும் அதைக் காட்டிலும் வியதிரிக்தமான ஆத்ம ஜ்யோதியை தியாகம் செய்வதாய் இருப்பதால் வைதிக ஸ்ரேயோமார்க்கத்திற்கு விக்னரூபமாகிறது. எந்த மதத்தில் பாஹ்ய பதார்த்தங்களுக்கு சத்தா இருக்கிறதோ அதைக்குறித்துக் கூறப்படுகிறது. கடம் முதலியவைகளுக்கு ஸ்வயம் தன்னைப்பரிகாசிக்கச் செய்யும் என்பது கிடையாது. இருளில் இருக்கும் கடம் முதலியவைகள் தன்னைத் தானே பிராகாசிக்கச் செய்யாது. தீபம் முதலியவைகளின் சம்யோகத்தால் இந்த கடம் பிரகாசிக்கிறது என்று இவ்வாறு இந்த நியமத்தால் பிரகாசிப்பது காணப்படுகிறது. கடமும் பிரகாசமும் சேர்ந்தபின்னும் ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் பின்னமேயாகும், ஏன் எனில் ரஜ்ஜு கடம் இவைகளைப் போல் மறுபடியும், மறுபடியும் சேர்வதும், பிரிவதுமாகிய விசேஷம் காணப்படுகிறது. இவ்வாறு பேதமுள்ள பதார்த்தங்களுக்கு ஏதோ ஒரு அன்ய பதார்த்தம் ப்ராகாசிக்கச் செய்கிறது என்பது சித்திக்கிறது. அவைகள் ஸ்வயமாய் தன்னைத் தானே ப்ரகாசிக்கச் செய்யாது.
भाष्यम् - पूर्व - ननु प्रदीपः स्वात्मानमेवावभासयन् दृष्ट इति न हि घटादिवत् प्रदीपदर्शनाय प्रकाशान्तरमुपाददते लौकिकाः, तस्मात् प्रदीपः स्वात्मानं प्रकाशयति।
अनुवादः - ச.பா- ஆனால் தீபமானது தன்னைத்தானே ப்ரகாசிக்கச்செய்வது காணப்படுகிறது. எவ்வாறு எனில் உலகத்தோர் கடம் முதலியவைகளைப் போல் தீபத்தைக் காண்பதற்கு வேறு ப்ரகாசத்தை நாடுவது இல்லை. ஆகையால் தீபம் தன்னைப் ப்ரகாசிக்கச் செய்கிறது. >तन्निरसनम्
भाष्यम् - सिद्धान्ती - न, अवभास्यत्वाविशेषात्, यद्यपि प्रदीपोऽन्यस्यावभासकः स्वयमवभासात्मकत्वात्, तथापि व्यतिरिक्तचैतन्यावभास्यत्वं न व्यभिचरति, घटादिवदेव यदा चैवम्, तदा व्यतिरिक्तावभास्यत्वं तावदवश्यम्भावि।
अनुवादः - ச.பா- சித்தாந்தி- அவ்வாறு அல்ல, ஏன் எனில் பிரகாசிப்பதில் தீபத்திற்கும் கடம் முதலியவைகளுக்கும் சமானதா இருக்கின்றது. இவ்வாறு ஸ்வயம் பிரகாச ஸ்வரூபமாய் இருப்பதால் தீபம் மற்றவைகளை பிரகாசிக்கசெய்கிறதாய் இருந்தாலும் கடாதிகளைப்போல் அது தன்னைவிட வேறு ஒன்றால் பிரகாசிக்கப்படுத்துவதாய் இருந்தாலும் தன்னுடைய யோகியதையைவிடவில்லை. ஆனாலும் தீபம் தன்னை விட வேறான ஒன்றால் பிரகாசிக்கிறது என்பது அவசியம் ஆகும்.
भाष्यम् - पूर्व - ननु यथा घटश्चैतन्यावभास्यत्वेऽपि व्यतिरिक्तमालोकान्तरमपेक्षते, न त्वेवं प्रदीपोऽन्यमालोकान्तर-मपेक्षते, तस्मात् प्रदीपोऽन्यावभास्योऽपि सन्नात्मानं घटं चावभासयति।
अनुवादः - ச.பா- பூர்வ- இவ்வாறு சைதன்யத்தால் அவபாசிதமானாலும் கடமானது தன்னைவிட மற்ற பிரகாசத்தை அபேக்ஷிக்கின்றது. இவ்வாறு தீபத்திற்கு வேறு பிரகாசத்தின் அபேக்ஷை இல்லை. ஆகையால் தீபம் வேறு ஒன்றால் பிரகாசம் உடையதாய் இருந்தாலும் தன்னையும் கடத்தையும் பிரகாசிக்கச் செய்கிறது.
भाष्यम् - सिद्धान्ती - न, स्वतः परतो वा विशेषाभावात् यथा चैतन्यावभास्यत्वं घटस्य, तथा प्रदीपस्यापि चैतन्याव-भास्यत्वमविशिष्टम्।
अनुवादः -ச.பா-அவ்வாறு அல்ல. ஸ்வயமாகவோ, மற்றதற்கோ எந்த ஒரு விசேஷமும் இல்லை. எவ்வாறு கடம் சைதன்யத்தால் அவபாசமாகின்றதோ அவ்வாறே அதற்கு சமானமாக தீபமும் சைதன்யத்தால் அவபாசமாகின்றது.
भाष्यम् - यतूच्यते, प्रदीप आत्मानं घटं चावभासयतीति, तदसत्, कस्मात्? यदा आत्मानं नावभासयति, तदा कीदृशं स्यात्? न हि तदा प्रदीपस्य स्वतो वा परतो वा विशेषः कश्चिदुपलभ्यते, स ह्यवभास्यो भवति, यस्यावभासकसन्निधाव-सन्निधौ च विशेष उपलभ्यते, न हि प्रदीपस्य स्वात्मसन्निधि-रसन्निधिर्वा शक्यः कल्पयितुम्, असति च कदाचित्केविशेषे, आत्मानं प्रदीपः प्रकाशयतीति मृषैवोच्यते।
अनुवादः -ச.பா-எது கூறப்படுகிறதோ அதாவது தீபமானது தன்னையும் கடத்தையும் பிரகாசிக்கச் செய்கிறது என்று கூறியது சரியல்ல. ஏன்? எப்பொழுது தன்னை பிரகாசிக்கச் செய்யவில்லையோ அப்பொழுது எவ்வாறு இருந்தது? அந்த சமயத்தில் தீபத்திற்கு மற்றவைகளாலோ, தானாகவோ எந்த ஒரு விசேஷமும் இல்லை. ஆனாலும் அவபாசமாகிறது. ஏன் எனில் அவபாசம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு விசேஷாந்தரம் தெரிகிறது. தீபத்திற்கு தன்னுடைய சந்நிதியிலோ, சந்நிதி இல்லாமலோ கல்பனை செய்யமுடியாது. அசத்தில் அல்லவா விசேஷம் ஒரு சமயம் இருக்கும், ஒரு சமயம் இருக்காது. தீபமானது தன்னைப் பிரகாசிக்கச் செய்கிறது என்பது மித்யாவே (பொய்யே).
भाष्यम् - चैतन्यग्राह्यत्वं तु घटादिभिरविशिष्टं प्रदीपस्य, तस्माद् विज्ञानस्यात्मग्राह्यग्राहकत्वे न प्रदीपो दृष्टान्तः। चैतन्यग्राह्यत्वं च विज्ञानस्य बाह्यविषयैरविशिष्टम्।
अनुवादः -ச.பா-தீபம் சைதன்யத்தால் கிரஹிக்கப்படுவது கடம் முதலியவைகளுக்கு ஒப்பானதாகும். ஆகையால் விஞ்ஞானத்தை கிரஹிப்பதில் கிரஹிக்காமல் இருப்பதில் தீப திருஷ்டாந்தம் பொருந்தாது. சைதன்யத்தால் விஞ்ஞானம் கிரஹிக்கப்படுவதால் தீப திருஷ்ட்டாந்தம் பொருந்தாது. சைதன்ய கிராஹ்யத்துவம் விஞ்ஞானத்தின் பாஹ்ய விஷயங்களைப் போன்றது.
भाष्यम् - चैतन्यग्राह्यत्वे च विज्ञानस्य, किं ग्राह्यविज्ञान-ग्राह्यतैव, किं वा ग्राहकविज्ञानग्राह्यतेति तत्र सन्दिह्यमाने वस्तुनि, योऽन्यत्र दृष्टो न्यायः स कल्पयितुं युक्तो न तु दृष्टविपरीतः, तथा च सति यथा व्यतिरिक्तेनैव ग्राहकेण बाह्यानां प्रदीपानां ग्राह्यत्वं दृष्टम् तथा विज्ञानस्यापिचैतन्यग्राह्यत्वात् प्रकाशकत्वे सत्यपि प्रदीपवद् व्यतिरिक्तचैतन्यग्राह्यत्वं युक्तं कल्पयितुम्, न त्वनन्यग्राह्यत्वम्, यश्चान्यो विज्ञानस्य ग्रहीताः, स आत्मा ज्योतिरन्तरं विज्ञानात्।
अनुवादः - ச.பா- விஞ்ஞானத்திற்கு சைதன்யத்தால் கிரஹிக்கமுடிவது சித்திக்கும்பொழுது க்ராஹ்ய (விஷய விஷயகம்) மாகும்பொழுது விஞ்ஞானத்தின் க்ராஹ்யதாவா அல்லது க்ராஹகமான (விஷயி விஷயமான) விஞ்ஞானத்திற்கா? இவ்வாறு வஸ்து விஷயத்தில் சந்தேஹம் எழும்பொழுது இந்த நியாயம் வேறு பதார்த்த விஷயத்தில் காணப்படுகிறது. என்பது இங்கு கல்பனை செய்யவேண்டும். திருஷ்ட நியாயத்தால் விபரீத கல்பனை செய்வது சரியல்ல. இவ்வாறு இருக்கும்பொழுது வ்யதிரிக்த்தமாய் கிரஹிப்பதால் வெளியில் உள்ள தீபங்களுக்கு க்ராஹ்யத்துவம் காணப்படுகிறது. அவ்வாறே விஞ்ஞானமும் சைதன்ய க்ராஹ்யத்துவத்தால் பிரகாசிக்கும்பொழுது தீபம் போல் வ்யதிரிக்த்த சைதன்ய க்ராஹ்யத்துவம் இல்லை என்பது பொருந்தாது. அதற்கு வேறு கிராஹ்யத்துவம் இல்லை என்பது பொருந்தாது. இவ்வாறு எது விஞ்ஞானத்தின் கிரஹீதா அந்த ஆத்மா விஞ்ஞானத்தைக் காட்டிலும் பின்ன ஜ்யோதி.
भाष्यम् - तदानवस्थेति चेन्न, ग्राह्यत्वमात्रं हि तद्ग्राहकस्य वस्त्वन्तरत्वे लिङ्गमुक्तं न्यायतः, न त्वेकान्ततो ग्राहकत्वे तद्ग्राहकान्तरास्तित्वे वा कदाचिदपि लिङ्गं सम्भवति, तस्मान्न तदनवस्थाप्रसङ्गः।।
अनुवादः - ச.பா- அது அநவஸ்தாதோஷம் என்றால் அல்ல. அது க்ராஹ்யத்துவ மாத்திரமே ஆகும். க்ராஹகத்திற்கு க்ராஹகம் இருக்கும்பொழுது க்ராஹகத்திற்கு வஸ்து அந்தர லிங்கத்துவம் ஒருநாளும் சம்பவிக்காது. ஆகையால் அது அநவஸ்தாதோஷமல்ல.
भाष्यम् - विज्ञानस्य व्यतिरिक्तग्राह्यत्वे करणान्तरापेक्षा-यामनवस्थेति चेन्न, नियमाभावात्- न हि सर्वत्रायं नियमो भवति, यत्र वस्त्वन्तरेण गृह्यते वस्त्वन्तरम्, तत्र ग्राह्यग्राहकव्यतिरिक्तं करणान्तरं स्यादिति नैकान्तेव नियन्तुं शक्यते, वैचित्र्यदर्शनात्, कथम्? घटस्तावत् स्वात्मव्यतिरिक्तेनात्मना गृह्यते, तत्र प्रदीपादि- >रालोको ग्राह्यग्राहकव्यतिरिक्तं करणम्, न हि प्रदीपाद्यालोको घटांशश्चक्षुरंशो वा, घटवच्चक्षुर्ग्राष्ट्वयत्वेऽपि प्रदीपस्य, चक्षुप्रदीपव्यतिरेकेण न बाह्यमालोकस्थानीयं कििञ्चत् करणान्तरमपेक्षते। तस्मान्नैव नियन्तुं शक्यते- यत्र यत्र व्यतिरिक्तग्राह्यत्वं तत्र तत्र करणान्तरं स्यादेवेति। तस्माद् विज्ञानस्य व्यतिरिक्तग्राहकग्राह्यत्वे न करणद्वारानवस्था, नापि ग्राहकत्वद्वाराकदाचिदप्युपपादयितुं शक्यते, तस्मात् सिद्धं विज्ञानव्यतिरिक्तमात्मज्योतिरन्तरमिति।
अनुवादः - ச.பா- விஞ்ஞானத்தை வேறு ஒன்றால் க்ரஹிக்கப்டுகிறது என்று ஏற்றுக்கொண்டால் வேறு இந்திரியத்தை அபேக்ஷிக்கிறது என்று ஏற்படும்பொழுது அநவஸ்த்தா தோஷம் ஆகுமே எனில் அவ்வாறு அல்ல, அதற்கு அந்த நியமம் இல்லாததால், எங்கு வேறு வேறு வஸ்து க்ரஹிக்கப்படுகிறதோ அங்கு அங்கு க்ராஹ்யக்ராஹக வ்யதிரிக்தம் கரணாந்தம் (வேறு கரணம்) இருக்கலாம். என்பதால் விச்சித்ரம் (அநேகமாக) காணப்படுவதால் அதைத்தனியாக நியமனம் செய்யமுடியாது. எவ்வாறு? தீபம் முதலிய பிரகாசத்திற்குக் காரணம் க்ராஹ்ய க்ராஹக வ்யதிரிக்தமாகும். தீபம் முதலிய ஆலோகங்கள் (பிரகாசம்) கடாம்சமோ, கண்களின் (சக்ஷிவின்) அம்சமோ அல்ல. ஆனால் கடத்திற்கு சமானமாய் சக்ஷு கிராஹ்யமானாலும் கண், தீபம் இவற்றிக்கு வ்யதிர்க்த்தமான வேறு காரணத்தை அபேக்ஷிப்பது இல்லை. ஆகையால் எங்கு தன்னைத் தவிர பின்னவஸ்து மூலமாய் க்ராஹ்யம் ஏற்படுகிறதோ அங்கு வேறு காரணம் வேண்டும். ஆகையால் இதற்கு நியமம் கூறப்படவில்லை. ஆகையால் விஞ்ஞானத்திற்கு வ்யதிரிக்த க்ராஹ்ய கிராஹகம் ஏற்படும்பொழுது அதற்கு காரணாந்தர அவஸ்தை இல்லை. க்ராஹக மூலமாய் ஒரு நாளும் அதைக் கூறமுடியாது. ஆகையால் விஞ்ஞான வ்யதிரிக்த்தமான ஆத்ம ஜ்யோதி வேறு என்பது சித்திக்கின்றது.
भाष्यम् - विज्ञानवादी - ननु नास्त्येव बाह्योऽर्थो घटादिः प्रदीपो वा विज्ञानव्यतिरिक्तः, यद्धि यद् व्यतिरेकेण नोपलभ्यते, तत्तावन्मात्रं वस्तु दृष्टम्- यथा स्वप्नविज्ञानग्राह्यं घटपटादिवस्तु स्वप्नविज्ञानव्यतिरेकेणानुपलम्भात् स्वप्नघटप्रदीपादेः स्वप्न-विज्ञानमात्रतावगम्यते, तथा जागरितेऽपि घटप्रदीपादेर्जाग्र-द्विज्ञानव्यतिरेकेणाुपलम्भाज्जाग्रद्विज्ञानमात्रतैव युक्ता भवितुम्। तस्मान्नास्ति बाह्योऽर्थो घटप्रदीपादिः, विज्ञानमात्रमेव तु सर्वम्, तत्र यदुक्तम्- विज्ञानस्य व्यतिरिक्तावभास्यत्वाद् विज्ञानव्यतिरिक्त-मस्ति ज्योतिरन्तरं घटादेरिवेति, तन्मिथ्या, सर्वस्य विज्ञानमात्रत्वे दृष्टान्ताभावात्।
अनुवादः - ச.பா- ஆனால் கடம் முதலியவைகளும், தீபம் முதலியவைகளுமாகிய பாஹ்ய பதார்த்தங்கள் விஞ்ஞானத்தைக் காட்டிலும் வியதிரிக்தம் எனில் அவ்வாறு அல்ல. எந்த வஸ்து இல்லாமல் அறியமுடியாதோ அது அந்த ஸ்வரூபம் மாத்திரம் காணப்படுகிறது - எவ்வாறு ஸ்வப்ன விஞ்ஞானத்தால் க்ரஹிக்கப்படும் கடபடமுதலிய வஸ்துக்கள் ஸ்வப்ன விஞ்ஞானத்திற்கு வ்யதிரிக்தமாக (வேறாக) அறிய முடியாததால் ஸ்வப்ன கடம் தீபம் முதலியவைகள் ஸ்வப்ன விஞ்ஞானமாத்திரத்தாலேயே அறியப்படுகிறது. அவ்வாறே ஜாக்ரதத்திலும் கடம், தீபம் முதலியவைகள் ஜாக்ரத் விஞ்ஞானத்திற்கு வியதிரிக்த்தமாய் (வேறாய்) அறிய முடியாததால் ஜாக்ரத் விஞ்ஞானமாத்திரத்தாலேயே ஏற்படும் என்பது உசிதமாகும். ஆகையால் பாஹ்ய பதார்த்தங்களாகிய கடம், தீபம் முதலியவைகள் இல்லை என்பதாகும். எல்லாம் விக்ஞான மாத்திரமே. இந்த விஷயத்தில் எது கூறப்பட்டதோ அது - விக்ஞானத்திற்கு வ்யதிரிக்த்மாகக் காணப்படுவதால் (பிரகாசிப்பதால்) விஞ்ஞானத்திற்கு வ்யதிரிக்தமாக ஜ்யோதி அந்தரம் (வேறு) கடம் முதலியவைகளைப் போல் இருக்கிறது என்பது மித்யையாகும். ஏன் எனில் எல்லாம் விஞ்ஞான மாத்திரமே என்பதற்கு திருஷ்டாந்தம் இல்லாததால் ஆகும்.
भाष्यम् - सिद्धान्ती - न, यावत्तावदभ्युपगमात्- न तु बाह्योऽर्थो भवता एकान्तेनैव नाभ्युपगम्यते।
अनुवादः - ச.பா- சித்தாந்தி- அவ்வாறு அல்ல. எதுவரை நீ பாஹ்ய பதார்த்தங்களை சத்தாய் பார்க்கிறாயோ அது வரையேயாகும். நீ எவ்விதிமாகவும் பாஹ்ய பதார்த்தங்களை ஸ்வீகாரம் செய்வது இல்லை என்பது இல்லை.
भाष्यम् - विज्ञानम् - ननु मया नाभ्युपगम्यत एव।
अनुवादः - ச.பா- விக்ஞானவாதி- ஆம், நான் அவ்வாறு கருதவில்லை.
भाष्यम् - सिद्धान्ती - न, विज्ञानं घटः प्रदीप इति च शब्दार्थपृथक्त्वाद् यावत्, तावदपि बाह्यमर्थान्तरमवश्यमभ्युप-गन्तव्यम्। विज्ञानादर्थान्तरं वस्तु न चेदभ्युपगम्यते, विज्ञानं घटः पट इत्येवमादीनां शब्दानामेकार्थत्वे पर्यायशब्दत्वं प्राप्नोति। तथा साधनानां फलस्य चैकत्वे, साध्यसाधनभेदोपदेशशास्त्रान-र्थक्यप्रसङ्गः, तत्कर्तुरज्ञानप्रसङ्गो वा।
अनुवादः - ச.பா- அவ்வாறு அல்ல. ஏன்எனில் விஞ்ஞானம், கடம், தீபம் முதலிய சப்தங்களின் அர்த்தம் வெவ்வேறாக இருக்கிறது. எது வரை இவ்வாறு இருக்கிறதோ அதுவரை நீ பாஹ்ய அர்த்தாந்தரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், விஞ்ஞானத்தைக்காட்டிலும் வேறு அன்ய பதார்த்தம் இல்லையென்றால் விஞ்ஞானம், கடம், படம் இவை முதலிய சப்தங்களுக்கு ஒரே அர்த்தம் ஏற்படுவதால் அது பர்யாய பதமாகும். அவ்வாறே சாதனங்களின் பலன்கள் ஏகம் என்றால் சாத்திய சாதன பேதத்தை உபதேசிக்கும் சாஸ்திரங்களுக்கு அநர்த்தழும் உண்டாகும். அந்த கர்த்தாவிற்கும். அஞ்ஞானம் சித்திக்கும்.
भाष्यम् - किञ्चान्यत्- विज्ञानव्यतिरेकेण वादिप्रतिवादि-वाददोषाभ्युपगमात्, न ह्यात्मविज्ञानमात्रमेव वादिप्रतिवादि-वाजस्तद्दोषो वाभ्युपगम्यते, निराकर्तव्यत्वात् प्रतिवाद्यादीनाम्, न ह्यात्मीयं विज्ञानं निराकर्तव्यमभ्युपगम्यते, स्वयं वा आत्मा कस्यचित्, तथा न सति सर्वसंव्यवहारलोपप्रसङ्गः।
अनुवादः - ச.பா-மேலும், விஞ்ஞானத்தைக் காட்டிலும் வேறாக வாதிபிரதிவாதிகளின் தோஷம் காணப்படுவதால் ஆத்மவிஞ்ஞானத்தால் மாத்திரம் எடுத்துக்கொள்ளவில்லை. ஏன்எனில் வாதப்பிரதிவாத அதன் தோஷங்களும் மேலும் பிரிதவாதிகளும் நிராகரணம் செய்யவேண்டியது அவசியம். ஆகையால் ஒருவராலும் தன் (ஸ்வயம்) ஆத்மாவையோ, ஆத்மீய விஞ்ஞானத்தையோ நிராகரணம் செய்வது யோகியமாகது. இவ்வாறு இருப்பதால் எல்லா வியவஹாரங்களுக்கும் லோபம் ஏற்படுகிறது. (எல்லா வியவகாரங்களும் இல்லாமல் போய்விடுகிறது)
भाष्यम् - न च प्रतिवाद्यादयः स्वात्मनैव गृह्यन्त इत्यभ्युपगमः, व्यतिरिक्तग्राह्या हि तेऽभ्युपगम्यन्ते। तस्मात् तद्वत् सर्वमेव व्यतिरिक्तग्राह्यं वस्तु जाग्रद्विषयत्वात्, जाग्रद्वस्तु प्रतिवाद्यादिवदिति सुलभो दृष्टान्तः, सन्तत्यन्तरवद् विज्ञाना- >न्तरवच्चेति। तस्माद् विज्ञानवादिनापि न शक्यं विज्ञानव्यतिरिक्तं ज्योतिरन्तरं निराकर्तुम्।
अनुवादः - ச.பா- பிரதிவாதி முதலியவை விஞ்ஞானரூப ஆத்மாவையே கிரஹிக்கிறது என்று கூறும் விஞ்ஞான வாதிகளையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அவர்கள் தன்னைவிட வேறான வாதி முதலிய வாதிகளின் வாயிலாய் கிரஹிக்கின்றார்கள் என்பது அறியப்படுகிறது. ஆகையால் அதைப்போல் எல்லா வஸ்துக்களும் ஜாக்ரத் விஷயமாய் இருப்பதால் வ்யதிரிக்த்தம் கிரஹிக்கப்படுகிறது. ஜாக்ரத்போல் என்பது பிரதிவாதி முதலியவைகளைப் போல் மேலும் விஞ்ஞானத்தைப் போன்றதும் ஆகும். ஆகையால் விஞ்ஞான வாதிகளாலும் விஞ்ஞானத்திற்கு வ்யதிரிக்தமான (வேறான) வேறு ஜோதியை (ஜ்யோதிரந்தரம்) இருப்பதை நிராகரிக்க முடியாது.
भाष्यम् - स्वप्ने विज्ञानव्यतिरेकाभावादयुक्तमिति चेन्न, अभावादपिभावस्य वस्त्वन्तरत्वोपपत्तेः भवतैव तावत् स्वप्ने घटादिविज्ञानस्य भावभूतत्वमभ्युपगतम्, तदभ्युपगम्य ततिरेकेण घटाद्यभाव उच्यते, स विज्ञानविषयो घटादिर्यद्यभावो यदि वा भावः स्यात् उभयथापि घटादिविज्ञानस्य, भावभूत-त्वमभ्युपगतमेव, न तु तन्निवर्तयितुं शक्यते, तन्निवर्त-कन्यायाभावात। एतेन सर्वस्य शून्यता प्रत्युक्ता। प्रत्यगात्मग्राह्यता चात्मनोऽहमिति मीमांसकपक्षः प्रत्युक्तः।
अनुवादः -ச.பா-ஸ்வப்னத்தில் விஞ்ஞான வ்யதிரேகம் இல்லாததால் பொருந்தாது என்றால் அது அவ்வாறு அல்ல. அபாவமாய் இருந்தாலும் பாவத்தின் வஸ்து அந்தரம் சித்திப்பதால் - உங்களால் ஸ்வப்னத்தில் காணப்பட்ட கடம் முதலியவைகளின் விஞ்ஞானத்திற்கு பாவம் இருந்தது என்பது அறியப்படுகிறது. அதை அறிந்து அதைக்காட்டிலும் வ்யதிர்க்தமான கடம் முதலியவைகளை அபாவம் என்கிறார்கள். அந்த விஞ்ஞானவிஷயம் அபாவமாய் இருந்தாலும் பாவமாய் இருந்தாலும் இருவகையாலும் கடம் முதலியவைகளின் விஞ்ஞானத்திற்கு பாவம் இருந்தது என்பது அறியப்படுகிறது. அதை நிவிர்த்திக்கும் நியாயம் இல்லாததால் அதை நிவிர்த்திக்கமுடியாது. எல்லாம் சூன்யத்துவம் என்று கூறியது நிராகிரக்கப்படுகிறது. ஆத்மா நான் என்று பிரத்யக் ஆத்மாகிரஹிக்கப்படுகிறது என்பதால் மீமாம்சர்களுடைய பக்ஷம் கண்டனம் செய்யப்படுகிறது. (ஏன் எனில் ஆத்மா ஒன்றே க்ராஹ்யமாயும், க்ராஹகமாயும் இருத்தல் என்று இரண்டு ரூபம் உண்டாவது சம்பவிக்காது).
भाष्यम् - यत्तूक्तम्, सालोकोऽन्याश्चान्यश्च घटो जायत इति, तदसत्, क्षणान्तरेऽपि स एवायं घट इति प्रत्यभिज्ञानात्, सादृश्यात् प्रत्यभिज्ञानं कृत्तोत्थितकेशनखादिष्विवेति चेन्न, तत्रापि क्षणिकत्वस्यासिद्धत्वात्, जात्येकत्वाच्च।
अनुवादः - ச.பா- எது கூறப்பட்டதோ அது பிரகாசத்துடன் கூடிய வெவ்வேறு கடங்களை உத்பத்தி ஆகிக்கொண்டே இருக்கிறது என்பது பொருந்தாது. அடுத்த க்ஷணத்திலும் அந்த கடமே இது என்று பிரத்யபிக்ஞா ஏற்படுவதால். சாத்ருஷ்யமாய் இருப்பதாலும் வெட்டப்பட்ட முடி, நகம் இவைகளைப்போல் மீண்டும் தோன்றுவது போல் பிரத்யக்பிக்ஞானம் என்றால் அல்ல. அங்கும் க்ஷணிகத்வமும். ஜாதி ஏகத்துவமும் சித்திப்பதால் ஆகும்.
भाष्यम् - कृत्तेषु पुनरुत्थितेषु च केशनखादिषु केशनखत्व-जातेरेकत्वात् केशनखत्वप्रत्यस्तन्निमित्तोऽभ्रान्त एव। न हि दृश्यमानलूनोत्थितकेशनखादिषु व्यक्तनिमित्तः स एवेति प्रत्ययो भवति, कस्यचिद् दीर्घकालव्यवहितदृष्टेषु च तुल्यपरिमाणेषु, तत्कालीनवालादितुल्या इमे केशनखाद्या इतिप्रत्ययो भवति, न तु न एवेति, घटादिषु पुनर्भवति स एवेति प्रत्ययः, तस्मान्न समो दृष्टान्तः।
अनुवादः - ச.பா- வெட்டப்பட்டு மீண்டும் வளரும் முடி நகம் முதலியவைகள் கேசம் நகம் ஆகியவை ஒரே ஜாதியாவதால் கேசம் நகம் என்பது ப்ரத்தியத்தின் (தோற்றத்தின்) நிமித்தமாவதால் அது ப்ராந்தி அல்ல. வெட்டப்பட்டதும் வளர்வதும் ஆன கேசம் நகம் முதலியவைகளை காணப்படும்பொழுது “அதுவே இது”(स एव) என்று ப்ரத்யயம் ஏற்படாது. ஒருவருக்கு நீண்டகாலத்தின் பின் வெட்டப்பட்ட வளர்ந்தவை காணப்படும்பொழுது அதற்குத் துல்யமான பிரமாணத்தால் அந்த காலத்தில் இருந்த முடி முதலியவைகளுக்கு சமமானதாக இந்த கேச நகங்கள் முதலிய பிரத்யயங்கள் உண்டாகும் என்பது இல்லை. ஆனால் கடம் முதலியவைகளில்(स एव) “அது இதுவே” மறுபடியும் பிரத்யயம் (ஞானம்) ஏற்படுகிறது. ஆகையால் இந்த திருஷ்ட்டாந்தம் பொருந்தாது.
भाष्यम् - प्रत्यक्षेण हि प्रत्यभिज्ञायमाने वस्तुनि तदेवेति, न चान्यत्वमनुमातुं युक्तम्, प्रत्यक्षविरोधे लिङ्गस्याभासत्वोपपत्तेः, सादृश्यप्रत्ययानुपपत्तेश्च, ज्ञानस्य क्षणिकत्वात्, एकस्य हि वस्तुदर्शिनो वस्त्वन्तरदर्शने सादृश्यप्रत्ययः स्यात्, न तु वस्तुदर्शी एको वस्त्वन्तरदर्शनाय क्षणान्तरमवतिष्द्भते, विज्ञानस्य क्षणिकत्वात् सकृद्वस्तुदर्शनेनैव क्षयोपपत्तः। तेनेदं सदृशमिति हि सादृश्यप्रत्ययो भवति, तेनेति दृष्टस्मरणम् इदमिति वर्तमानप्रत्ययः, तेनेति दृष्टं स्मृत्वा, यावदिदमिति वर्तमानक्षणकालमवतिष्द्भेत, ततः क्षणिकवादहानिः, अथ तेनेत्येवोपक्षीणः स्मार्तः प्रत्ययः इदमिति चान्य एव वार्तमानिकः प्रत्ययः क्षीयते, ततः सादृश्य-प्रत्ययानुपपत्तिस्तेनेदं सदृशमिति अनेकदर्शिन एकस्याभावात्।
अनुवादः - ச.பா-பிரத்யக்ஷமாய் அறிந்த வஸ்துவில் ப்ரத்யபிஞா ஏற்படும்பொழுது அதுவே இது(तदेवेति)என்று இருக்கும்பொழுது அதை வேறாக (அந்யமாக) ஆவது உசிதமல்ல. ஏன் எனில் ப்ரத்யக்ஷத்திற்கு விரோதமானால் லிங்கத்திற்கு அபாவம் சித்திக்கும். ஞானம் க்ஷணிகமாய் இருப்பதால் சாதிருஷ்ய பிரத்தியம் சம்பவிக்காது. ஞானம் க்ஷணிகமாக இருப்பதால் ஒரு வஸ்துவை பார்ப்பவன் வேறு வஸ்துவைப் பார்க்கும்பொழுது சாதிருஷ்ய பிரத்யயம் ஏற்படலாம். ஞானம் க்ஷணிகமாய் இருப்பதால் சாதிருஷ்ய பிரத்யயம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் ஒரு வஸ்துவைப் பார்ப்பவன் அடுத்த வஸ்துவைப் பார்ப்பதற்கு முன்னால் அடுத்த க்ஷணத்திலேயே இல்லாமல் போகிறது. ஏன் எனில் விஞ்ஞானம் க்ஷணிகமானதால் ஒரு தடவைப் பார்த்த மறுக்ஷணத்திலேயே அந்த வஸ்து க்ஷயமாகிவிடுகிறது.“तेन इदं”(தேன இதம் = அதனால், இது) என்பது சதிருவும் என்று சாதிருஷ்ய பிரத்யக்ஷமாகிறது.“तेन”(அதனால்) என்பது பார்த்ததின் ஸ்மரணம்.“इदम्”(இது) என்பது வர்த்தமான க்ஷண காலம் இருப்பது. அதனால் க்ஷணிகவாதிக்கு ஹானி ஏற்படுகிறது. ஆகையால்“तेन”என்பதால் ஸ்ம்ருத ஞானம் நீங்கி விடுகிறது.“इदम्”(இதம் - இது) என்பதால் மற்றவார்த்தமானிக ஞானம் க்ஷயம் ஆகிறது. ஆகையால் ஏகத்தின் அபாவத்தாலும் அநேகமாய் பார்ப்பவனுக்கு“तेन इदं”(தேன இதம் - ஆகையால் இது) சத்ருஷம் என்னும் சாத்ருஷ்ய ப்ரத்யயம் பொருந்தாது.
भाष्यम् - व्यपदेशानुपपत्तिश्च- द्रष्टव्यदर्शननैवोपक्षयाद् विज्ञानस्येदं पश्याम्यदेऽद्राक्षमिति व्यपदेशानुपपत्तिः, दृष्टवतो व्यपदेशक्षणानवस्थानात्, अथावतिष्द्भेत, क्षणिकवादहानिः, अथादृष्टवतो व्यपदेशः सादृश्यप्रत्ययश्च, तदानीं जात्यन्धस्येव रूपविशेषव्यपदेशस्तत्सादृश्यप्रत्ययश्च, सर्वमन्धपरम्परेति प्रसज्येत सर्वज्ञशास्त्रप्रणयनादि, न चैतदिष्यते, अकृताभ्यागमकृतवि-प्राणशदोषौ तु प्रसिद्धतरौ क्षणवादे।
अनुवादः - ச.பா- வ்யவஹாரம் சித்திக்கமுடியாது - பார்க்கவேண்டியது பார்த்த உடனேயே க்ஷீணமாவதால் விஞ்ஞானத்தின் இதைப்பார்க்கிறேன், இதைப் பார்த்தேன் என்ற வ்யவஹாரம் சம்பவிக்காது. ஏன்எனில் பார்க்கிறேன் என்று கூறும் க்ஷணத்திலேயே அது இல்லை என்று இவ்வாறு கருதுவதால் விஞ்ஞானவாதத்திற்கு ஹானி ஏற்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டவாறு பார்க்காதவனுக்கு அதன் சாத்ருஷ்யம் ப்ரத்யயம் ஏற்படும். அப்பொழுது பிறவிக் குருடன்போல் ரூப விசேஷத்தைக் கூறுவதும், அதன் சாத்ருஷ்ய புத்தி உண்டாகுமானால் அப்பொழுது சர்வஞ்ஞ புத்தரின் சாஸ்திரமாகிய ப்ரணயனம் முதலிய எல்லாம் அந்த (குருட்டுப்) பரம்பரை ஆகும். ஆகையால் இந்த பிரசங்கத்தில் இஷ்டம் இல்லை. இதனால் அகிருதா ஆகமம், கிருத நாசம் ஆகிய தோஷங்கள் க்ஷணிகவாதத்தில் பிரசித்தம்:
भाष्यम् - दृष्टव्यपदेशहेतुः पूर्वोत्तरसहित एक एव हि श्रुलावत् प्रत्ययो जायत इति चेत्“तेनेदं सदृशम्” इति च, न वर्तमानातीतयोर्भिन्नकालत्वात्- तत्र वर्तमानप्रत्यय एकः >श्रुलावयवस्थानीयः. अतीतश्चापरः, तौ प्रत्ययौ भिन्नकालौ, तदुभयप्रत्ययविषयस्पृक् चेच्छृलाप्रत्ययः, ततः क्षणद्वयव्या-पित्वादेकस्य विज्ञानस्य पुनः क्षणवादहानिः, ममतवतादि-विशेषनुपपत्तेश्च सर्वसंव्यवहारलोपप्रसङ्गः।
अनुवादः - ச.பா- பூர்வதிருஷ்ட்டியை நிர்தேசம் செய்யும் ஹேது முன் பின் ப்ரத்யயத்துடன் சேர்ந்து விலங்குக்கு சமானமான ஒரு ஞானம் ஏற்படுகிறது என்றால்“तेनेदं सदृशम्” (தேன இதம் சத்ருஷம்) (அதனால் அதற்கு சமமாக இது இருக்கிறது) என்பது நிகழ்காலத்தைக் கடந்த வேறு காலமாய் இருப்பதால் அங்கு நிகழ்கால பிரத்யயம் ஒன்று விலங்குபோல் அவயவஸ்தானீயமானது. மற்றொன்று அதீதமானது (கடந்தது). இந்த இரண்டு பிரத்யயங்களும் வெவ்வேறு காலம் உடையது. அந்த இரண்டு பிரத்தியய விஷயத்தை ஸ்பரிசிப்பதாய் இருந்தால் ஒரே விஞ்ஞானத்தால் இரண்டு க்ஷணங்களிலும் வ்யாபகத்தின் காரணமாவதால் க்ஷமிகவாதியின் வாதத்திற்கு ஹானி ஏற்படுகிறது. அவ்வாறே எனது, உனது என்பது முதலியபேதம் உண்டாகாததால் எல்லா வ்யவஹாரங்களுக்கும் லோப பிரசங்கம் ஏற்படும்.
भाष्यम् - सर्वस्य च स्वसंवेद्यविज्ञानमात्रत्वे, विज्ञानस्य च स्वच्छावबोधावभासमात्रस्वाभाव्याभ्युपगमात्, तद्दर्शिनश्चान्य-स्याभावे, अनित्यदुःखशून्यानात्मत्वाद्यनेककल्पनानुपपत्तिः। न च >दाडिमादेरिव विरुद्धानेकांशवत्त्वं विज्ञानस्य, स्वच्छावभास-स्वाभाव्याद् ज्ञानस्य। अनित्यदुःखादीनां विज्ञानांशत्वे च सति- अनुभूयमानत्वाद् व्यतिरिक्तविषयत्वप्रसङ्गः।
अनुवादः - ச.பா- எல்லாம் ஸ்வசம்வேத்ய விஞ்ஞானமாய் இருக்கும்பொழுது விஞ்ஞானத்திற்கு ஸ்வச்சஞான ப்ரகாச ஸ்வரூபம் என்று அறியும்பொழுது அந்த சாஹீக்கு வேறு பாதார்த்தத்தின் சத்தையை ஒப்புக்கொள்ளவில்லையெனில் அதில் அநித்தியத்வம், துக்கத்துவம், சூன்யத்தும், அநாத்மத்துவம் முதலிய அநேக கல்பனைகள் உண்டாவது சம்பவிக்காது. மாதுளை முதலியவைகளுக்கு சமானமாய் அநேக விருத்த அம்சங்களுடன் கூடியதாய் ஆகும் என்பது அல்ல. ஏன் எனில் விஞ்ஞானமோ ஸ்வச்ச பிரகாச ஸ்வரூபம் ஆகும். அநித்திய துக்கம் முதலியவைகள் விஞ்ஞான அம்சம் என்றால் அது அனுபவிக்கப்படுவதால் வ்யதிரிக்த்தமான விஷயம் என்று சம்பவிக்கும்.
भाष्यम् - अथ अनित्यदुःखाद्यात्मैकत्वमेव विज्ञानस्य, तदा तद्वियोगाद् विशुद्धकल्पनानुपपत्तिः, संयोगिमलवियोगाद्धि विशु-द्धिर्भवति, यथा आदर्शप्रभृतीनाम्, न तु स्वभाविकेन धर्मेण कस्यचिद् वियोगो दृष्टः, न ह्यग्नेः स्वाभाविकेन प्रकाशेन औष्ण्येन वा वियोगो दृष्टः, यदपि पुष्पगुणानां रक्तत्वादीनां द्रव्यान्तरयोगेन वियोजनं दृश्यते, तत्रापि संयोगपूर्वत्वमनुमीयते- बीजभावनया पुष्पफलदीनां गुणान्तरोत्पत्तिदर्शनात्, अतो विज्ञानस्य विशुद्धिकल्पनानुपपत्तिः।
अनुवादः - ச.பா- விஞ்ஞானத்திற்கு அநித்தியமான துக்க முதலியன ரூபமானது என்றால் அப்பொழுது அதற்கு விசுத்தி என்ற கல்பனை பொருந்தாது. எவ்வாறு கண்ணாடி முதலியவைகளில் அதில் சேர்ந்த மலினம் நீங்கியவுடன் சுத்தமாகின்றது. ஆனால் ஸ்வபாவமாகவே (இயற்கையாகவே) மலினதர்மம் இருந்தால் அதை ஒருவராலும் நீக்க முடியாது. அக்னியின் இயற்கையான பிரகாசமும், உஷ்ணமும் நீங்குவது காணப்படவில்லை. ஆனால் புஷ்ப குணங்கள் ஆகிய சிகப்பு முதலியவை வேறு பொருள்களின் சேர்க்கையால் நீங்குவது காணப்படுகிறது. ஆனாலும் அதன் சேர்க்கைக்குமுன் இருந்தவை அனுமானம் செய்யப்படுகிறது. பீஜபாவனையினால் (சம்ஸ்காரத்தால்) புஷ்பம்பழம் முதலிய வகைக்கு வேறு குணங்கள் ஏற்படுவது காணப்படுகிறது. ஆகையால் (அநித்ய துக்க முதலியவை உடைய விக்ஞானத்தை ஏற்றுக்கொண்டால்) விக்ஞானத்திற்கு (துக்க முதலியவை அற்ற) விசுத்தி ஏற்படும் கல்பனை சம்பவிக்காது. மேலும் விக்ஞானத்திற்கு அநித்ய துக்க முதலிய ரூபமே என்றால் அப்பொழுது அதன் நிவிர்த்தியினால் அதற்கு விசுத்தியானது என்றகல்பனை பொருந்தாது. ஏன் எனில் சம்யோகமான மலத்தின் நிவிர்த்தியே கண்ணாடி சுத்தமாகிறது. ஆனால் ஸ்வபாவமான தர்மமாய் இருந்தால் அதன் நிவிர்த்தியை காண முடியாது. அக்னியின் ஸ்வபாவிகமான பிரகாசமோ, உஷ்ணமோ நிவித்தியாவது காணப்படவில்லை. அவ்வாறு ஆனாலும் புஷ்பங்களின் குணங்களாகிய ரக்தம் (சிகப்பு) முதலியவைகள் மற்ற திரவ்யங்களின் சேர்க்கையால் அதன் நிவிர்த்தி காணப்பட்டாலும் சேர்க்கைக்கு முன்னால் இருந்ததை அனுமானம் செய்யமுடிகிறது. ஏன் எனில் பீஜ பாவனையினால் (சம்ஸ்காரத்தால்) புஷ்பம், பழம் முதலிய அந்நிய குணங்களின் உத்பத்தி காணப்படுகிறது. ஆகையால் விஞ்ஞானத்திற்கு விசுத்தி கல்பனை சம்பவிக்காது.
भाष्यम् - विषयविषय्याभासत्वं च यन्मलं परिकल्प्यते विज्ञानस्य, तदप्यन्यसंसर्गाभावादनुपपन्नम्, न ह्यविद्यमानेन विद्यमानस्य संसर्गः स्यात्, असति चान्यसंसर्गे यो धर्मो यस्य दृष्टः, स तत्स्वभावत्वान्न तेन वियोगमर्हति- यथाग्नेरौष्ण्यम्, सवितुर्वा प्रभा, तस्मादनित्यसंसर्गेण मलिनत्वं तद्विशुद्धिश्च विज्ञानस्येतीयं कल्पना अन्धपरम्परैव प्रमाणशून्येत्यवगम्यते।
अनुवादः - ச.பா- விஞ்ஞானத்திற்கு விஷய விஷயீ ஆபாசத்தை மலம் என்று கல்பிப்பதுவும் அந்நிய சம்சர்கம் இல்லாததால் அது பொருந்தாது. இல்லாதது இருப்பதுடன் சம்சர்கம் ஏற்படாது. அந்நிய சம்சர்கம் இல்லாததில் சம்சர்கம் இருக்காது. அந்நிய சம்சர்கம் இல்லாததில் எந்த தர்மம் காணப்படுகிறதோ அது அதன் ஸ்வபாவமாய் இருப்பதால் அதற்கு நாசம் பொருந்தாது. எவ்வாறு அக்னியில் உஷ்ணமும், சூரியனிடத்தில் ப்ரகாசமும் அவ்வாறு. ஆகையால் அநித்திய சம்சர்கத்தால் மலினத்துவமும் (அதன் வியோகத்தால்) விசுத்தமும் விஞ்ஞானத்திற்கு கல்பனை செய்வது குருட்டுப் பரம்பரையாகும். இழ்ற்கு ப்ரமாண சூன்யத்துவம் அறியப்படுகிறது.
भाष्यम् - यदपि तस्य विज्ञानस्य निर्वाणं पुरुषार्थं कल्पयन्ति, तत्रापि फलाश्रयानुपपत्तिः, कण्टकविद्धस्य हि कण्टकवेधजनितदुःखनिवृत्तिः फलम्, न तु कण्टकविद्धमरणे तददुःखनिवृत्तिफलस्याश्रय उपपद्यते, तद्वत् सर्वनिर्वाणे, असति च फलाश्रये, पुरुषार्थकल्पना व्यर्थैव, यस्य हि पुरुषशब्दवाच्यस्य सत्त्वस्य आत्मनो विज्ञानस्य चार्थः, परिकल्प्यते, तस्य पुनः पुरुषस्य निर्वाणे, कस्यार्थः पुरुषार्थ इति स्यात्।
अनुवादः - ச.பா- (பெளத்தமதம்) அந்த விஞ்ஞானத்திற்கு நிர்வாணம் புருஷார்த்தம் என்று கல்பிக்கின்றனர். அங்கும் பலத்தின் ஆஸ்ரயம் இல்லை. முள் குத்தியவனுக்கு அந்த முள் குத்தியதால் உண்டான துக்க நிவிர்த்தி பலமாகும். முள் குத்தியவன் மரணம்மானால் அந்த துக்க நிவிர்த்தி ஆஸ்ரயித்தபலன் கிடைக்காது. அதுபோல் சர்வநிர்வாணத்தில் பல ஆஸ்ரயம் இல்லாததால் புருஷார்த்த கல்பனை வியர்த்தமாகும். அந்த புருஷ சப்தவாச்சிய ஜீவன், ஆத்மா அல்லது விஞ்ஞாத்தின் அர்த்தம் கல்பனையாகிவிடும். இவ்வாறு இருக்கும்பொழுது அந்த புருஷனுக்கு நிர்வாணத்தினால் என்ன புருஷார்த்தம் கிடைக்கும்?
भाष्यम् - यस्य पुनरस्त्यनेकार्थदर्शी विज्ञानव्यतिरिक्त आत्मा, तस्य दृष्टस्मरणदुःखसंयोगवियोगादि सर्वमेवोपपन्नम्, अन्यसंयोगिनिमित्तं कालुष्यम्, तद्वियोगनिमित्ता च विशुद्धिरिति। शून्यवादिपक्षस्तु सर्वप्रमाणविप्रतिषिद्ध इति तन्निराकरणाय नादरः क्रियते।।७।।
अनुवादः - ச.பா- மேலும் எவர்களுடைய மதத்தில் அநேக அர்த்தங்களின் சாக்ஷீ விஞ்ஞானத்தைக் காட்டிலும் வ்யதிரிக்தமாய் ஆத்மா இருக்கிறது என்று அவர்களுடைய சித்தாந்தத்தை அனுசரித்துப் பார்க்கும்பொழுது ஸ்மரணம், துக்கத்துடன் சம்யோகம் வியோகம் முதலியவை வேறு ஒரு சம்யோகத்தின் நிமித்தமாக உண்டான கல்மஷமோ அது நீங்கும் நிமித்தத்தால் விசுத்தி ஆகிறது. சூன்யவாதி பக்ஷமோ எல்லாப் பிரமாணங்களுக்கும் விருத்தமாகிறது. ஆகையால் அதை நிராகரணம் செய்வதற்காகவே ஆகும் அதை ஆதரிப்பதற்காக அல்ல
भाष्यम् - यथैवेहैकस्मिन् देहे स्वप्नो भूत्वा मृत्यो रूपाणि कार्यकरणान्यतिक्रम्य स्वप्ने स्व आत्मज्योतिष्यास्ते, एवम्-
अनुवादः - ச.பா- எவ்வாறு இந்த தேஹத்திலேயே ஸ்வப்னத்தை அடைந்து ம்ருத்யு ரூபங்களான தேஹ இந்திரியங்களைக் கடந்து சுவப்னத்தில் தன்னுடைய ஆத்ம ஜ்யோதியில் இருக்கிறதோ அவ்வாறு -
मन्त्रः - स वा अयं पुरुषो जायमानः शरीरमभिसम्पद्यमानः पाप्मपभिः स ँ सृज्यते स उत्क्रामन् म्रियमाणः पाप्मनो विजहाति।।८।।
अनुवादः - மாத்திரம்- அந்த இந்த புருஷன் ஜன்மம் எடுக்கும் சமயத்தில் சரீரத்தை ஆத்மபாவமாய் அடைந்து பாபங்களுடன் (தேஹ இந்திரியங்களுடன்) சேருகிறான். அவ்வாறே மரணம் அடையும்பொழுது - உத்க்ரமணம் செய்யும்பொழுது பாபத்தை (தேஹ இந்திரியங்களை) தியாகம் செய்கின்றான்.
भाष्यम् - स वै प्रकृतः पुरुषोऽयं जायमानः- कथं जाय-मानः? इत्युच्यते- शरीरं देहन्द्रियसंघातमभिसम्पद्यमानः शरीरे आत्मभावमापद्यमान इत्यर्थः, पाप्मभिः पाप्मसमवायिभिर्धर्मा-धर्माश्रयः कार्यकरणैरित्यर्थः, संसृज्यते, स एवोत्क्रामञ्छरी-रान्तरमूर्ध्व क्रामन् गच्छन् म्रियमाण इत्येतस्य व्याख्यान-मुत्क्रामन्निति। तानेव संश्लिष्टान् पाप्मरूपान् कार्यकरणलक्षणान् विजहाति तैर्वियुज्यते, तान् परित्यजति।।
अनुवादः - ச.பா- அந்த இந்த பிரக்ருத புருஷன் ஜன்மம் எடுக்கும்பொழுது. எவ்வாறு ஜன்மம் எடுக்கும்பொழுது இருந்தது? அது கூறப்படுகிறது. சரீரம் அதாவது தேஹம் இந்திரிய சங்காத்தை அடைந்து அதாவது சரீரத்தில் ஆத்ம பாவம் செய்து பாபங்களுடன் அதாவது பாபத்தின் சமவாயி ஆன காரணத்தால் தர்மம் அதர்மத்தின் ஆஸ்ரய பூதமான தேஹ இந்திரியங்களுடன் கூடியதாகின்றது. அவ்வாறு அதுவே உத்க்ரமணம் செய்யும் சமயத்தில் சரீராந்தரத்தின் (வேறு சரீரத்தின்) பொருட்டு உத்கிரமணம் செய்யும்பொழுது (மேலே செல்லும்பொழுது), சுருதியில் மரணம் அடையும் சமயத்தை உத்க்ரமணம் என்று வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளது. அதனுடன் கூடிய பாபரூபங்களான காரியகரண லக்ஷணங்களை தியாகம் செய்வது காணப்படுகிறது.
भाष्यम् - यथायं स्वप्नजाग्रद्वृत्त्योर्वर्तमाने एवैकस्मिन् देहे पाप्मरूपकार्यकरणोपादानपरित्यागाभ्यामनवरतं संचरति धिया समानः सन्, तथा सोऽयं पुरुष उभाविहलोकपरलोकौ जन्ममर-णाभ्यां कार्यकरणोपादानपरित्यागौ अनवरतं प्रतिपद्यमानः आसंसारमोक्षात् संचरति। तस्मात् सिद्धमस्य आत्मज्योतिषोऽन्यत्वं कार्यकरणरूपेभ्यः पाप्मभ्यः, संयोगवियोगाभ्याम्, न हि तद्धर्मत्वे सेति, तैरेव संयोगो वियोगो वा युक्तः।।८।।
अनुवादः - ச.பா- எவ்வாறு இந்த ஸ்வப்ன ஜாக்ரத் விருத்திகள் இருக்கும்பொழுது ஒரே தேஹத்தில் பாபரூபமான காரியகரணத்தை (உபாதான) எடுத்துக்கொள்வதும், பரித்தியாகம் செய்வதும் எப்பொழுதும் புத்தியில் சமானமாக இருந்துகொண்டு சஞ்சரிக்கின்றது அவ்வாறே இந்த புருஷன் இஹலோக பரலோகங்களாகிய இரண்டிலும், ஜன்ம மரணங்களிலும், காரிய கரணங்களையும் (தேஹ இந்திரியங்கள்) இவைகளை அவ்வாறே பரித்தியாகம் செய்யும்வரை எப்பொழுதும் அதை அடைந்து சம்சாரத்திலிருந்து விடுபடும் (மோக்ஷம் ஏற்படும்) வரையிலும் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றான். ஆகையால் இந்த “ஆத்ம ஜ்யோதி” காரியகரணமான பாபங்களில் இருந்தும் சம்யோக வியோகங்களில் இருந்து வேறு (அந்யம்) என்று சித்திக்கிறது. அது தர்மத்துவம் உடையதாய் இருந்தால் அதனுடன் சம்யோகம் வியோகம் இருக்கும். ஆனால் ஜ்யோதிக்குப் பொருந்தாது.
भाष्यम् - ननु न स्तोऽस्योभौ लोकौ, यौ जन्ममरणा-भ्यामनुक्रमेण संचरति स्वप्नजागरिते इव, स्वप्नजागरिते तु प्रत्यक्षमवगम्यते, न त्विहलोकपरलोकौ केनचित् प्रमाणेन, तस्मादेते एव स्वप्नजागरिते इहलोकपरलोकौ। इत्युच्यते।
अनुवादः - ச.பா- ஆனால் ஸ்வப்ன ஜாக்ரத்போல் ஜன்ம மரணங்கள் மூலமாக க்ரமமாக சஞ்சாரம் செய்கிறது. இதற்கும் இந்த இரண்டு லோகங்களும் அல்ல. ஸ்வப்னமும், ஜாக்கிரமும் பிரத்யக்ஷமாய் அறியமுடிகிறது. அவ்வாறு இகலோக பரலோகத்தை ஒரு பிரமாணத்தாலும் அறியமுடியாது. ஆகையால் ஸ்வப்ன ஜாக்ரிதம் இகலோக பரலோகத்தைக் குறிக்கிறது - என்று கூறப்படுகிறது.
मन्त्रः - तस्य वा एतस्य पुरुषस्य द्वे एव स्थाने भवत इदं च परलोकस्थानं च संध्यं तृतीय ँ स्वप्नस्थानं तस्मिन् संध्ये स्थाने तिष्द्भन्नेते उभे स्थाने पश्यतीदं च परलोकस्थानं च। अथ यथाक्रमोऽयं परलोकस्थाने भवति तमाक्रममाक्रम्योभयान् पाप्मन आनन्दा ँश्च पश्यति स यत्र प्रस्वपित्यस्य लोकस्य सर्वावतो मात्रामपादाय स्वयं विहत्य स्वयं निर्माय स्वेन भासा स्वेन ज्योतिषा प्रस्वपित्यत्रायं पुरुषः स्वयं ज्योतिर्भवति।। ९।।
अनुवादः - மந்திரம்- அந்த இந்த புருஷனுக்கு இரண்டு ஸ்தானங்கள் உள்ளது- அவை இஹலோக பரலோக சம்பந்தமான ஸ்தானங்கள். மூன்றாவது ஸ்தானம் ஸ்வப்ன ஸ்தானம் சந்தியஸ்தானம். அந்த சந்தியஸ்தானத்தில் இருந்துகொண்டு அது இந்த லோக ஸ்தானமாகிய பரலோக ஸ்தானம் ஆகிய இரண்டையும் காண்கிறது. அந்த புருஷன் பரலோக ஸ்தானத்திற்காக எந்த சாதனத்தால் அடையமுடியுமோ அந்த சாதனத்தை ஆஸ்ரயித்து பாபம் (பாபத்தின் பலரூப துக்கம்) மற்றும் ஆனந்தம் ஆகிய இரண்டையும் பார்க்கிறான். எப்பொழுது அவன் தூங்குகின்ரானோ அப்பொழுது எல்லாலோகங்களின் மாத்ராவை (ஏக தேசத்தை) ஸவீகரித்து தானே இந்த ஸ்தூல சரீரத்தை அசேதனமாய் செய்து அவ்வாறே தானே தன் வாசனாமய தேஹத்தை படைத்து தன்னுட பிரகாசத்தால் அதாவது தன்னுடைய ஜ்யோதி ரூபத்தால் சயனிக்கின்றான். இந்த அவஸ்தையில் அந்த புருஷன் ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூபமாக ஆகின்றான்.
भाष्यम् - तस्यैतस्य पुरुषस्य वै द्वे एव स्थाने, भवतः, न तृतीयं चतुर्थं वा, के ते? इदं च यत् प्रतिपन्नं वर्तमानं जन्म शरीरेन्द्रियविषयवेदनाविशिष्टं स्थानं प्रत्यक्षतोऽनुभूयमानम्, परलोक एवं स्थानं परलोकस्थानम्- तच्च शरीरादिवियोगो-त्तरकालानुभाव्यम्।
अनुवादः - ச.பா-அந்த இந்த புருஷனுக்கு இரண்டு ஸ்தானங்கள் உள்ளன. மூன்றாவதோ நான்காவதோ ஸ்தானம் இல்லை. அவை எவை? இப்பொழுது நம்மால் அடையப்பட்ட வர்த்தமான ஜன்மம். அதாவது சரீர இந்திரிய விஷயத்தை அறியக்கூடியதன் அனுபவ ஸ்தானம். அது பிரத்யக்ஷமாய் அறியக்கூடியது. பரலோகமே பரலோகஸ்தானம். அது சரீரம் முதலியவைகள் வியோக (நீங்கிய) மானபின் அனுபவிக்கக் கூடியது.
भाष्यम् - शङ्का - ननु स्वप्नोऽपि परलोकः तथा च सति द्वे एवेत्यवधारणमयुक्तम्।
अनुवादः - அவ்வாறானால் ஸ்வப்னமும் பரலோகம் ஆகும். இவ்வாறு இருக்கும்பொழுது இரண்டு ஸ்தானமே என்று நிச்சயமாக கூறுவது பொருந்தாது.
भाष्यम् - समाधानम् - न कथं तर्हि? संध्यं तत्- इहलोकपरलोकयोर्यः संधिस्तस्मिन् भवं संध्यं यत् तृतीयं तत् स्वप्नस्थानम्, तेन स्थानद्वित्वावधारणम्, न हि ग्रामयोः संधिस्तावेव ग्रामावपेक्ष्य तृतीयत्वपरिगमनमर्हति।
अनुवादः - ச.பா- சமாதானம்- அவ்வாறு அல்ல. ஆனால் எவ்வாறு? அது சந்தியம். அதாவது இஹலோக பரலோகங்களின் சந்தியில் (மத்தியில்) இருப்பது சந்தியம். எது மூன்றாவதோ அது ஸ்வப்ன ஸ்தானம். ஆகையால் ஸ்தானம் இரண்டு என்று கூறப்பட்டது. எவ்வாறு எனில் இரண்டு கிராமங்களின் சந்தியானது அந்த இரண்டு கிராமங்களை அபேக்ஷித்து மூன்றாவதாக எண்ணப்படுவது எவ்வாறு பொருந்தாதோ அவ்வாறு ஆகும்.
भाष्यम् - कथं पुनस्तस्य परलोकस्थानस्यास्तित्वम-वगम्यते? यदपेक्ष्य स्वप्नस्थानं संध्यं भवेत्- यतस्तस्मिन् संध्ये स्वप्नस्थाने तिष्द्भन् भवन् वर्तमा न एते उभे स्थाने पश्यति, के ते उभे? इदं च परलोकस्थानं च। तस्मात् स्तः स्वप्नजागरितव्यति-रेकेणोभौ लोकौ, यौ धिया समानः सन्ननुसंचरति जन्ममरण-संतानप्रबन्धेन।
अनुवादः - ச.பா- ஆனால் எவ்வாறு அந்த பரலோக ஸ்தானம் இருக்கிறது என்பது அறியப்படுகிறது? எதை அபேக்ஷித்து ஸ்வப்ன ஸ்தானம் சந்தியம் ஆகிறது? எந்த அந்த சந்தியில் ஸ்வப்ன ஸ்தானத்தில் இருந்து கொண்டு நிகழ்காலத்தில் அந்த இரண்டு ஸ்தானங்களையும் பார்க்கிறதோ அந்த இரண்டும் எவை? இந்த லோகமும் பரலோகமும் ஆகும். ஆகையால் ஸ்வப்னத்திற்கும், ஜாக்ரத்திற்கும் வியதிரிக்தமாக (வேறாக) அந்த இரண்டு லோகங்களும் இருக்கின்றன. அவை இரண்டில் புத்தியினால் சமானமாக இருந்துகொண்டு ஜன்மமரண தொடர்ச்சியினால் பந்தப்பட்டு நிரந்தரம் சஞ்சரித்துக்கொண்டு இருக்கிறான்.
भाष्यम् - कथं पुनः स्वप्ने स्थितः सन्नुभौ लोकौ पश्यति किमाश्रयः केन विधिना? इत्युच्यते- अथ कथं पश्यति? इति श्रुणुयथाक्रम आक्रामत्यनेनेत्याक्रमः- आश्रयोऽवष्टम्भ इत्यर्थः। यादृश आक्रमोऽस्य, सोऽयं यथाक्रमः, अयं पुरुषः परलोकस्थाने प्रतिपत्तव्ये निमित्ते, यथाक्रमो भवति यादृशेन परलोक-प्रतिपत्तिसाधनेन विद्याकर्मपूर्वप्रज्ञालक्षणेन युक्तो भवतीत्यर्थः, तमाक्रमं परलोकस्थानायोन्मुखीभूतं प्राप्ताङ्करीभावमिव बीजं तमाक्रममाक्रम्यावष्टभ्याश्रित्योभयान् पश्यति- बहुवचनं धर्माधर्मफलानेकत्वात्- उभयानुभयप्रकारानित्यर्थः।
अनुवादः - ச.பா- எவ்வாறு ஸ்வப்பனத்தில் இருந்து கொண்டு இந்த இரண்டு உலகங்களையும் பார்க்கிறது. எதை ஆஸ்ரயிக்கிறது? எந்த விதியால்? இவ்வாறு கூறுகிறது- இப்பொழுது எவ்வாறு பார்க்கிறது. அதைக்கேள்-“यथाक्रमः” (யதாகிரம- எவ்வாறு கிரமமோ அவ்வாறு) எதனால் ஜீவன் ஆக்ரமணம் செய்கிறான். அதை ஆக்ரமணம் ஆக்ரமம் - ஆஸ்ரயம் (ஆதாரம்) என்று கூறுகிறோம். இந்த ஜீவன் எவ்வாறு ஆக்ரமணம் செய்கிறதோ அதை அனுசரணம் செய்வது“यथाक्रमः” (யதாக்ரம்) என்று கூறப்படுகிறது. இந்த புருஷன் பரலோக ஸ்தானத்தை அடைவதற்காக (யதாகிரமம்) எவ்வாறு கிரமமோ அவ்வாறு பரலோகப்பிராப்த்தி சாதனங்களாகிய வித்யாகர்ம அபூர்வ பிரக்ஞா லக்ஷணத்தோடு கூடி அமைகிறது. அந்த ஆக்ரமம் அங்குர பாவமடைந்து பீஜத்திற்கு சமானமானதாக பரலோக ஸ்தானத்தைக் குறித்து எதிர்நோக்கி(उन्मुखी) அந்த அந்த ஆதாரத்தை அடைந்து (ஆக்ராந்தம் செய்து) அதனை ஆஸ்ரயித்து இரண்டு லோகங்களையும் காண்கின்றான். இங்கு பஹுவசனம் தர்மா தர்ம பலம் அநேகமாய் இருப்பதால் இஜ்ண்டு ப்ரகாகமாகவும் என்பது பொருள்.
भाष्यम् - कांस्तान्? पाप्मनः पापफलानि- न तु पुनः साक्षादेव पाप्मनां दर्शनं सम्भवति, तस्मात् पापफलानि दुःखानीत्यर्थः- आनन्दांश्च धर्मफलानि सुखानीत्येतत्, तानुभयान् पाप्मन आनन्दांश्च पश्यति जन्मान्तरदृष्टवासनामयान्, यानि च प्रतिपत्तव्यजन्मविषयाणि क्षुद्रधर्माधर्मफलानि, धर्माधर्मप्रयुक्तो देवतानुग्रहाद् वा पश्यति।
अनुवादः - ச.பா- அவை எவை? பாபங்களின் அதாவது பாபபலன்கள். மேலும் பாபங்களின் தர்சனம் நேரடியாக சம்பவிப்பது இல்லை. ஆகையால் பாபபலன்கள் துக்கம் என்பது பொருள். ஆனந்தங்கள் தர்மபலன்களாகிய சுகங்கள் என்பதாகும். ஜன்மாந்ரத்தில் பார்த்த வாசனைகளின் காரியமாகிய பாபங்களையும் ஆனந்தங்களையும் காண்கின்றான். இதைத்தவிர அவைகள் அடையப்படவேண்டிய ஜன்ம சம்பந்தமான தர்ம அதர்மங்களின் கீழான பலன்கள். அல்லது தர்மா தர்மங்களுடன் கூடிய தேவதா அனுகிரஹத்தால் காண்கின்றான்.
भाष्यम् - तत् कथमवगम्यते परलोकस्थानभावितपाप्मा-नन्ददर्शनें स्वप्ने? इत्युच्यते- यस्मादिह जन्मन्यननुभाव्यमपि पश्यति बहुः। न च स्वप्नो नामापूर्वं दर्शनम्, पूर्वदृष्टस्मृतिर्हि स्वप्नः प्रायेण, तेन स्वप्नजागरितस्थानव्यतिरेकेण स्त उभौ लोकौ।
अनुवादः - ச.பா- ஸ்வப்னத்தில் பரலோகத்தில் உண்டாகும் சுகதுக்கங்களை எவ்வாறு அறியப்படுகிறது? இதற்குக் கூறப்படுகிறது- எதனால் இந்த ஜன்மத்தில் அனுபவிக்காததையும் அதிகமாக காண்கிறார்கள். ஸ்வப்னம் என்பது பார்க்காததின் தர்சனமல்ல. அநேகமாக முன் பார்த்ததின் ஸ்மிருதியே ஸ்வப்பனம். ஆகையால் இந்த இரண்டு லோகங்களும் ஜாக்ரதத்திற்கும், ஸ்வப்னத்திற்கும் வ்யதிரிக்தமானது (வேறுபட்டது).
भाष्यम् - यदादित्यादिबाह्यज्योतिषामभावेऽयं कार्यकरण-सातः पुरुषः येन व्यतिरिक्तेन आत्मना ज्योतिषा व्यवहर-तीत्युक्तम्- तदेव नास्ति, यद् आदित्यादिज्योतिषामभावगमनम्, यन्नेदं विविक्तं स्वयंज्योतिरुपलभ्येत, येन सर्वदैवायं कार्यकरणसातः संसृष्ट एवोपलभ्यते तस्मादसत्समोऽसन्नेव वा स्वेन विविक्तस्वभावेन ज्योतीरूपेणात्मेति। अथ क्वचिद् विविक्तः स्वेन ज्योतीरूपेणोलभ्येत बाह्याध्यात्मिकभूतभौतिकसंसर्गशून्यः, ततो यथोक्तं सर्वं भविष्यतीत्येतदर्थमाह-
अनुवादः - ச.பா- எப்பொழுது ஆதித்யன் முதலிய ஜ்யோதிகள் இல்லாதபொழுது காரியகரண சங்காத புருஷன் தனக்கு வ்யதிரிக்த்தமான ஆத்மா ஜ்யோதியினால் வ்யவகாரம் செய்கிறது என்று கூறப்பட்டது. எது ஆதித்யன் முதலிய ஜ்யோதிகள் இல்லாதபோது இந்த வியக்தமான ஸ்வயம் ஜோதி ரூபம் அடையும் என்பது, அதற்கு ஸ்தானமே இல்லையென்பதாகும். எதனால் எப்பொழுதும் இவ்வாறு இந்த காரியகரண சங்காதம் ஆத்ம ஜோதியுடன் சேர்ந்தே அறியப்படுகிறது. ஆகையால் அசத்போல் அசத்தாவாக இருக்கிறது. அல்லது தன்னுடைய விக்த ஸ்வபாவத்தால் ஜ்யோதி ரூபமான ஆத்மாவாய் இருக்கிறது. இவ்வாறு பாஹ்ய ஆத்யாத்மிக பூதபெளதிக சம்சர்க்கமற்று விவிக்தமாய் தன்னுடைய விசுத்தஜ்யோதி ரூபத்தால் அறியப்படுகிறது என்று எவ்வாறு கூறப்பட்டதோ அது எல்லாம் உண்டாகும் என்று இவ்வாறு சுருதி கூறுகிறது.
भाष्यम् - स यः प्रकृत आत्मा यत्र यस्मिन् काले प्रस्वपिति प्रकर्षेण स्वापमनुभवति, तदा किमुपादानः केन विधिना स्वपिति संध्यं स्थानं प्रतिपद्यते? इत्युच्यते- अस्य दृष्टस्य लोकस्य जागरितलक्षणस्य, सर्वावतः सर्वमवतीति सर्वावानयं लोकः कार्यकरणसातौ विषयवेदनासंयुक्तः, सर्वावत्त्वमस्य व्याख्यात-मन्नत्रयप्रकरणे“अथो अयं वा आत्मा” इत्यादिना। सर्वा वा भूतभौतिकमात्रा अस्य संसर्गकारणभूता विद्यन्त इति सर्ववान्, सर्ववानेव सर्वावान्, तस्य सर्वावतो मात्रमेकदेशमवयवम्, अपादायापच्छिद्य आदाय गृहीत्वा- दृष्टजन्मवासनावासितः सन्नित्यर्थः स्वयमात्मनैव विहत्य देहं पातयित्वा निःसम्बोध-मापाद्यजागरिते ह्यादित्यादीनां चक्षुरादिष्वनुग्रहो देहव्यवहारार्थः, देहव्यवहारश्चात्मनो धर्माधर्मफलोपभोगप्रयुक्तः, तद्धर्माधर्मफलोप-भोगोपरमरणमस्मिन् देहे आत्मकर्मोपरमकृतमित्यात्मास्य विहन्तेत्युच्यते स्वयं निर्माय निर्माणं कृत्वा वासनामयं स्वप्नदेहं मायामयमिव, निर्माणमपि तत्कर्मापेक्षत्वात् स्वयंकर्तृकमुच्यते- स्वेन आत्मीयेन, भासामात्रोपादानलक्षणेन भासा दीपयाप्रकाशेन, सर्ववासनात्मकेन अन्तःकरणवृत्तिप्रकाशेनेत्यर्थः- सा हि तत्र विषयभूता सर्ववासनामयी प्रकाशते, सा तत्र स्वयं भा उच्यते- तेन स्वेन भासा विषयभूतेन, स्वेन च ज्योतिषा तद्विषयिणा विविक्तरूपेण अलुप्तदृक्स्वभावेन तद् भारूपं वासनात्मकं विषयीकुर्वन् प्रस्वपिति। यदेवं वर्तनम्, तत् प्रस्वपितीत्युच्यते।
अनुवादः - ச.பா- எந்த அந்த பிராகிருத ஆத்மா எப்பொழுது நன்றாக தூங்குகிறதோ அப்பொழுது எது உபாதனம்? எந்த விதியினால் தூங்குகிறது. என்பதால் சந்தியம் ஸ்தானத்தை அடைகிறது? இதற்குக் கூறப்படுகிறது - இந்த ஜாக்ரத் லக்ஷணமுடைய பார்க்கப்படும் லோகம் முழுவதையும் பாலனம் செய்கிறது. எல்லாவற்றையும் பாலனம் செய்வதால்“सर्वावतः” (சர்வாவத:) எனப்படுகிறது. அந்த இந்தலோகம் அதாவது விஷயவேதனையினால் கூடிய காரியகரண சங்காதம். இதன் சர்வாவத்தா (எல்லாவற்றையும் பாலனம் செய்வது) வைக் குறித்து“अथो >अयं वा आत्मा” (அதோ அயம் வா ஆத்மா) என்பது முதலிய வாக்கியங்களால் அன்னத்திரய பிரகரணத்தில் வியாக்யானம் செய்யப்பட்டது. எல்லா பூதபெளதிக மாத்ராவின் சம்சர்க்க காரணமாய் இருப்பதால் சர்வவான் (எல்லாம் உடையவன்). எல்லாவற்றையும் பாலனம் செய்வதால் சர்வாவான். அந்த சர்வாவானிடம் இருந்து ஏகதேசம், அதாவது அவயவத்தை எடுத்துக்கொண்டு ஜன்மத்தில் பார்த்த (அனுபவித்த) வாசனைகளை அடைந்து ஸ்வயம் அதாவது தேஹத்தை வீழ்த்தி ஒன்றும் அறியாத பாவத்தை அடைந்து பின் விழிப்புநிலை வந்தவுடன் ஆதித்யன் முதலியவைகளின் அனுகிரஹத்தாலும் சக்ஷு முதலியவற்றின் அனுகிரஹத்தாலும் தேஹ வ்யவஹாரங்கள் நடைபெறுகின்றன. தேஹவ்யவஹாரங்கள் தன்னுடைய தர்மாதர்ம பலத்தை அனுபவிக்க கூடியதாய் இருக்கிறது. அந்த தர்மாதர்ம பலன்கள் உபராமம் இந்த தேஹத்தில் தன்னுடைய கர்மங்கள் உபராமம் அடைந்து என்பதால் ஆத்மா இதனை ஹனனம் செய்கிறது என்று கூறப்படுகிறது - தானே நிர்மாணம் செய்துகொண்டு வாசனாமயம் ஸ்வப்ன தேஹம் மாயாமயம் போன்று நிர்மாணம் செய்து, அந்த நிர்மாணமும் கர்மத்தை அபேக்ஷிப்பதால் ஸ்வயம் கர்த்ருகம் எனப்படுகிறது. தன்னுடைய பிரகாசத்தினாலேயே (விளக்கத்தினாலேயே) (பாசா - பிரகாசத்தால்) உபாதான லக்ஷணத்தால் பிரகாசத்தால் எல்லா வாசனாத்மகமான அந்தக்கரண பிரகாசத்தால் - அதுவே அங்கு விஷயங்களோடு கூடிய எல்லா வாசனாமயமாக ப்ரகாசிக்கிறது. அங்கு அது ஸ்வயம் ப்ரகாசம் எனப்படுகிறது. தன்னுடைய ஜ்யோதியால் அந்த விஷயியினால் விவிக்த்த ரூபமாய் அலுப்த்திருக் பாவத்தால் (சாக்ஷி பாவத்தால்) அந்த பிரகாசரூபமானதை (பா ரூபம்) வாசனாத்மகமானதை விஷயம் செய்து கொண்டு நன்றாக தூங்குகின்றது. இவ்வாறு இருப்பது எதுவோ அதுவே“प्रस्वपिति” நன்றாக தூங்குகின்றது என்கிறோம்.இருப்பது எதுவோ அதுவே“प्रस्वपिति” நன்றாக தூங்குகின்றது என்கிறோம்.
भाष्यम् - अत्रैतस्यामवस्थायाम् एतस्मिन्, काले, अयं पुरुष आत्मा, स्वयमेव विविक्तज्योतिर्भवति बाह्याध्यात्मिकभूतभौतिक-संसर्गरहितं ज्योतिर्भवति।
अनुवादः - ச.பா- இந்த அவஸ்தையில் - அந்த சமயத்தில் இந்த புருஷனாகிய ஆத்மா ஸ்வயம் விசுத்த ஜ்யோதி ஸ்வரூபமாய் இருக்கிறது. அதாவது பாஹ்ய ஆத்யாத்மிக பூதபெளதிக சம்சர்கக்கம் அற்று ஜ்யோதியாய் விளங்குகிறது.
भाष्यम् - शङ्का - नन्वस्य लोकस्य मात्रोपादानं कृतम्, कथं तस्मिन् सत्यत्रायं पुरुषः स्वयंज्योतिर्भवतीत्युच्यते?
अनुवादः - ச.பா-சங்கை- ஆனால் இங்கு இந்த லோகம் மாத்திரமே க்ரஹிக்கப்பட்டது. இவ்வாறு இருக்கும்பொழுது இங்கு இந்த புருஷன் ஸ்வயம் ஜ்யோதி என்று எவ்வாறு கூறப்படுகிறது?
भाष्यम् - समाधानम् - नैष दोषः, विषयभूतमेव हि तत्, तेनैव चात्रायं पुरुषः स्वयंज्योतिर्दर्शयितुं शक्यः, न त्वन्यथासति विषये कस्मिंश्चित् सुषुप्तकाल इव, यदा पुनः सा भा वासनात्मिका विषयभूता उपलभ्यमाना भवति, तदा असिः कोशादिव निष्कृष्टः सर्वसंसर्गरहितं चक्षुरादिकार्यकरणव्यावृत्तस्वरूपमलुप्तदृगात्म-ज्योतिः स्वेन रूपेणावभासयद् गृह्यते। तेनात्रायं पुरुषः स्वयंज्योति-र्भवतीति सिद्धम्।।९।।
अनुवादः - ச.பா- இந்த தோஷம் இல்லை. ஏன்எனில் அந்த விஷயமுடையதே ஆகும். ஆகையால் அங்கு இந்த புருஷன் (ஆத்மா) ஸ்வயம் ஜ்யோதி என்று பார்க்கமுடிகிறது. அவ்வாறு இல்லையெனில் சுஷுப்த்தி அவஸ்தைக்கு சமானமாக அப்பொழுது ஒரு விஷயமும் இருக்காது. இந்த சுவயம் ஜ்யோதியை அறியமுடியாது. மேலும் அந்த சமயத்தில் வாசனாமயமான ஜ்யோதி விஷயாகாரமாக ஆகி அறியப்படுகிறது. அந்த சமயம் உறைக்குள் வைக்கப்பட்ட கத்திபோல் எல்லா எல்லா சம்சர்க்கங்களும் அற்று கண் முதலிய காரியகரண வ்யாவிருத்த ஸ்வரூபம் அலுப்த்திருக்(மூடாமல் இருக்கும் திருக்) ஆத்ம ஜ்யோதி தன் ரூபத்தால் பிரகாசித்துக்கொண்டு தானே கிரஹிக்கிறது. அதனால் இங்கு இந்த புருஷன் ஸ்வயம் ஜோதி என்று சித்திக்கின்றது.
भाष्यम् - शङ्का - नन्वत्र कथं पुरुषः स्वयंज्योतिर्येन जागरित इव ग्राह्यग्राहकादिलक्षणः सर्वो व्यवहारो दृश्यते चक्षुराद्यनुग्राहकाश्च आदित्याद्या लोकास्तथैव दृश्यन्ते यथा जागरिते- तत्र कथं विशेषावधारणं क्रियते अत्रायं पुरुषः स्वयंज्योतिर्भवतीति?
अनुवादः - ச.பா- சங்கை- ஆனால் இந்த இடத்தில் புருஷன் (ஆத்மா) ஸ்வயம் ஜோதி என்பது எவ்வாறு? எதனால் ஜாக்ரத்தைப்போல் கிராஹியம் கிராஹ்யகம் முதலிய லக்ஷணமான எல்லா வ்யவஹாரங்களும் காணப்படுகின்றன. அவ்வாறே கண் முதலிய அனுக்ராஹகம், ஆதித்யன் முதலிய லோகங்களும் எவ்வாறு ஜாக்ரதத்தில் காணப்படுகிறதாக இருந்தது. அங்கு இந்த புருஷன் ஸ்வயம் ஜோதி என்று எவ்வாறு விசேஷமாய் புரிந்து கொள்ளமுடியும்?
भाष्यम् - समाधानम् - उच्यते- वैलक्षण्यात् स्वप्नदर्शनस्य, जागरिते हि इन्द्रियबुद्धिमनआलोकादिव्यापारसंकीर्णमात्मज्योतिः, इह तु स्वप्ने इन्द्रियाभावात् तदनुग्राहकादि आलोकाभावाच्च विविक्तं केवलं भवति तस्माद् विलक्षणम्।
अनुवादः - ச.பா- சமாதானம்- கூறப்படுகிறது - ஸ்வப்ன தர்சனத்தின் விலக்ஷணத் தன்மையால் ஜாக்ரத்தில் இந்த்ரியம் புத்தி மனம் தர்சனம் முதலிய வியாபாரங்களாக வ்யாபிப்பது ஆத்மஜ்யோதி இருக்கின்றது. இங்கு ஸ்வப்பனத்தில் இந்திரியங்கள் இல்லாததால் அதற்கு உபயோகரமான ஆதித்யன் முதலிய பிரகாசங்களின் அபாவத்தால் அது விவிக்தமாய் தனியாக இருக்கிறது. ஆகையால் அதைக்காட்டிலும் வேறானது.
भाष्यम् - शङ्का - ननु तथैव विषया उपलभ्यन्ते स्वप्नेऽपि, यथा जागरिते, तत्र कथमिन्द्रियाभावाद् वैलक्षण्यमुच्यत इति?
अनुवादः - ச.பா- சங்கை- ஆனால் எவ்வாறு ஜாக்ரத்திலோ அவ்வாறேதான் ஸ்வப்னத்திலும் விஷயங்கள் அறியப்படுகின்றன. அப்பொழுது எவ்வாறு இந்திரியங்கள் இல்லாததால் வைலக்ஷண்யம் என்று கூறப்படுகிறது? (வைலக்ஷண்யம் = விலக்ஷணத்தன்மை)
भाष्यम् - समाधानम् - श्रुणु- अज्र्वयः - श्रुणु-
अनुवादः -ச.பா-சமாதானம்- கேள்
मन्त्रः - न तत्र रथा न रथयोगा न पन्थानो भवन्त्यरथ स्थान् रथयोगान् पथः सृजते न तत्रानन्दा मुदः प्रमुदो भवन्त्यथानन्दा-न्मुदः प्रमुदः सृजते। न तत्र वेशान्ताः पुष्करिण्यः स्रवन्त्यो भवन्त्यथ वेशान्तान् पुष्करिणीः स्रवन्तीः सृजते स हि कर्ता।। १०।।
अनुवादः - ச.பா- இந்த அவஸ்தையில் ரதம் இல்லை. ரதத்தை செலுத்துவது (குதிரை முதலியவை) இல்லை, மார்க்கமும் இல்லை. ஆனால் ரதம், ரதத்தை செலுத்துபவன், மார்க்கம் இவைகளை உண்டாக்குகிறது. அந்த அவஸ்தையில் ஆனந்தம், மோதம், பிரமோதம் இவைகள் இல்லை. ஆனால் அந்த ஆனந்தம், மோதம் பிரமோதம் இவைகளை உண்டாக்குகிறது. அங்கு சிறு சிறு குட்டைகள், குளங்கள், நதிகள், இல்லை. அந்த குட்டைகள், குளங்கள், நதிகள் உண்டாக்குகிறது அந்த கர்த்தா.
भाष्यम् - न तत्र विषयाः स्वप्ने रथादि लक्षणाः, तथा न रथयोगाः रथेषु युज्यन्ते इति रथयोगा अश्वादयः तत्र न विद्यन्ते, न च पन्थानो रथमार्गा भवन्ति। अथ रथान् रथयोगान् पथश्च सृजते स्वयम्।
अनुवादः -ச.பா-அங்கு ஸ்வப்னத்தில் ரதம் முதலிய விஷயங்கள் இல்லை. ரதத்தில் இணைக்கக்கூடிய குதிரை முதலியவைகளும் அங்கு இல்லை. அங்கு பாதையும் இல்லை. ஆகையால் ரதம், ரதத்துடன் இணைக்கக்கூடியவைகள், பாதை இவைகளை ஸ்வயமாகவே சிருஷ்டி செய்கிறது.
भाष्यम् - शङ्का - कथं पुनः सृजते रथादिसाधनानां वृक्षादीनामभावे?
अनुवादः - ச.பா- சங்கை- ரதம் முதலியவைகளின் சாதனங்களான மரம் முதலியவைகள் இல்லாமல் மறுபடியும் எவ்வாறு சிருஷ்டிக்கிறது.
भाष्यम् - समाधानम् - उच्यते- ननूक्तम्“अस्य लोकस्य सर्वावतो मात्रापादाय स्वयं विहत्य स्वयं निर्माय” इति अन्तःकरण वृत्तेः लोकस्य वासनामात्रा तामपादाय, रथादिवासना-रूपान्तः करणवृत्तिस्तदुपलब्धिनिमित्तेन कर्मणा चोद्यमाना दृश्यत्वेन व्यवतिष्द्भते, तदुच्यते स्वयं निर्मायेति, तदेवाह रथादीन् सृजत इति।
अनुवादः - ச.பா- சமாதானம்- ஆனால் இந்த எல்லாலோகத்தின் ஏக தேசத்தை எடுத்துக்கொண்டு தன்னை (சரீரத்தை) இல்லாமல் செய்து கொண்டு வேறு சரீரத்தை சிருஷ்ட்டித்து என்று கூறப்பட்டுள்ளது. அந்தக்கரண வ்ருத்தியில் இந்த லோகத்தின் ஏக தேசத்தை எடுத்துக்கொண்டு ரதம் முதலிய வாசனாரூப அந்தக்கரண விருத்தி. அதை அறிவதற்கான நிமித்தரூப கர்மத்தால் ப்ரேரிக்கப்பட்டு திருஷ்ய ரூபமாய் இருக்கிறது. அதை ஸ்வயம் நிர்மாணம் செய்கிறது என்று கூறப்படுகிறது. அது ரதம் முதலியவைகளை சிருஷ்டிக்கிறது என்ற சப்தத்தால் கூறப்பட்டது.
भाष्यम् - न तु तत्र, करणं वा करणानुग्राहकाणि वा आदित्यादिज्योर्तीषि, तदवभास्या वा रथादयो विषया विद्यन्ते, तद्वासनामात्रं तु केवलं तदुपलब्धिकर्मनिमित्तचोदितोद्भतान्तः करणवृत्त्याश्रयं दृश्यते। तद् यस्य ज्योतिषो दृश्यतेऽलुप्तदृशः, तदात्मज्योतिरत्र केवलमसिरिव कोशाद् विविक्तम्।
अनुवादः -ச.பா-கரணமோ, கரணங்களுக்கு உபயோககரமாக இருக்கும் ஆதித்யன் முதலிய ஜ்யோதிகளோ, அதனால் ப்ராகாசிக்கச் செய்யக்கூடிய ரதம் முதலிய விஷயங்களோ இல்லை. அது கேவல வாசனாமாத்திரமானாலும் அதை அறியும் கர்ம நிமித்தத்தால் ப்ரேரிக்கப்பட்டு அந்தக்கரணத்தின் உண்டான வ்ருத்தியாகும். அதை ஆஸ்ரயத்துக்கொண்டு >வாசானாமாத்திரமாய் காணப்படுகிறது. அது எந்த ஜ்யோதிசால் அறியப்படுகிறதோ அது அலுப்தத்ருஷமாகும். அப்பொழுது ஆத்மஜ்யோதி உரையேவிட வேறாக இருக்கும் கத்தியைப்போல் விவிக்தமாக இருக்கிறது. (சம்பந்தம் ஒன்றுடனும் இல்லாமல் சுத்தமாக இருக்கிறது.
भाष्यम् - तथा न तत्रानन्दाः सुखविशेषाः, मुदो हर्षाः पुत्रादिलाभनिमित्ताः, प्रमुदस्त एव, प्रकर्षोपेताः, अथ चानन्दादीन् सृजते। तथा न तत्र वेशान्ताः पल्वलाः, पुष्करिण्यस्तडागाः, स्त्रवन्त्यो नद्यो भवन्ति, अथ वेशान्तादीन् सृजते वासनामात्ररूपान्, यस्मात् स हि कर्ता, तद्वासनाश्रयचित्तवृत्त्युद्भवनिमित्तकर्महेतुत्वे-नेत्यवोचाम तस्य कर्तृत्वम्, न तु साक्षादेव तत्र क्रिया सम्भवति, साधनाभावात्।
अनुवादः - ச.பா- அவ்வாறு அந்த சமயத்தில் சுக விசேஷமான ஆனந்தங்கள் அதாவது புத்ரன் முதலியவைகளின் அடைவால் ஏற்படும் சந்தோஷம், அது மட்டும் அல்ல ஆனந்தம் முதலியவைகளையும் சிருஷ்ட்டிக்கிறது, அவ்வாறே அங்கு வீடுகள், செடி, கொடிகள், முளைகல், குளம், குட்டை, தெப்பம், தடாகங்கள், ஓடுகின்ற நதிகள் இல்லை. ஆனால் அது வீடு முதலியவைகளை வாசனாமாத்திரமாய் திருஷ்டிப்பதால் கர்த்தா. அந்த வாசனைகளை ஆஸ்ரயித்த சித்தவிருத்தியினால் உண்டாவதின் கர்மத்தின் நிமித்தத்தால் அதற்கு கர்த்திருத்துவம் என்று கூறினோம், ஆனால் அதற்கு சாதனம் இல்லாததால் சாக்ஷாத்தாக (நேராக) அங்கு க்ரியை சம்பவிக்காது.
भाष्यम् - न हि कारकमन्तरेण क्रिया सम्भवति, न च तत्र हस्तपाददीनि क्रियाकारकाणि सम्भवन्ति, यत्र तु तानि विद्यन्ते जागरिते, तत्र आत्मज्योतिरवभासितैः कार्यकरणै रथादिवासना-श्रयान्तःकरणवृत्त्युद्भवनिमित्तं कर्म निर्वर्त्यते, तेनोच्यते- स हि कर्तेति।
अनुवादः - ச.பா- காரகம் (வினைச்சொல்) இல்லாமல் க்ரியை சம்பவிக்காது. க்ரியாகாரகங்களான கை கால்களும் அங்கு இல்லை. எங்கு ஜாக்ரதத்தில் இருந்ததோ அப்பொழுது (அங்கு) ஆத்மஜ்யோதி பிரகாசத்தால் காரிய கரணங்களால் ரதமுதலிய வாசனைகளை ஆஸ்ரயித்த அந்தக்கரண விருத்தியினால் உண்டானதின் காரணமாய் கர்மம் அடையப்படுகிறது. அதனால் அது கர்த்தா எனப்படுகிறது.
भाष्यम् - तदुक्तम्-“आत्मनैवायं ज्योतिषास्ते पल्ययते कर्म कुरुते”इति, तत्रापि न परमार्थतः स्वतः कर्तृत्वं चैतन्य-ज्योतिषोऽवभासकत्वव्यतिरेकेण- यच्चैतन्यात्मज्योतिषान्तः- करणद्वारेणावभासयति कार्यकरणानि, तदवभासितानि कर्मसु व्याप्रियन्ते कार्यकरणानि, तत्र कर्तृत्वमुपचर्यत आत्मनः। यदुक्तम्-“ध्यायतीव लेलायतीव” इति, तदेवानूद्यते-“स हि कर्ता”इतीह हेत्वर्थम्।।१०।।
अनुवादः -ச.பா-“आत्मनैवायं ज्योतिषास्ते पल्ययते कर्म कुरुते” “அது ஆத்ம ஜ்யோதியினால் உட்காருகிறது. இங்கும் அங்கும் செல்கிறது கர்மம் செய்கிறது, செய்யாமலும் இருக்கிறது” என்று கூறப்பட்டது. அங்கும் உண்மையில் ஸ்வயமாய் கர்த்ருத்வம் இல்லை. சைதன்ய ஜோதியில் அவபாசகம் இல்லாமல் கர்த்ருத்வம் சம்பவிக்காது. எது சைதன்ய ஜ்யோதியால் அந்தக்கரண மூலமாய் காரிய கரணங்களை பிரகாசிக்கச் செய்கிறது. அந்த ப்ரப்ாசிக்கின்ற காரியகரணங்கள் கர்மங்களில் ப்ரவிர்த்திக்கின்றன. அப்பொழுது ஆத்மாவின் கர்த்ருத்வம் உபாசரமாகும்.“ध्यायतीव लेलायतीव”(த்யாதீவ லேலாயதீவ) என்று எது கூறப்பட்டதோ“स हि कर्ता”(ச ஹி கர்த்தா) அதுவே கர்த்தா என்பது ஹேது அர்த்தமாகும், இவ்விதம் அனுவாதம் செய்யப்பட்டது.
मन्त्रः - तदेते श्लोका भवन्ति। स्वप्नेन शारीरमभिप्रहत्या सुप्तः सुप्तानभिचाकशीति। शुक्रमादाय पुनरैति स्थान ँ हिरण्मयः पुरुष एकह ँसः।। ११।।
अनुवादः - ச.பா- இந்த விஷயத்தில் இந்த ஸ்லோகம் - ஆத்மா ஸ்வப்ன மூலமாய் தேஹத்தை அசைவற்றச்செய்து ஸ்வயம் தூங்காமல் தூங்கிக்கொண்டிருக்கும் எல்லா பதார்த்தங்களையும் பிரகாசப்படுத்துகிறது. அது சுத்தமாய் இந்திரய மாத்திர ரூபமாய் இருந்துகொண்டு மறுபடியும் ஜாக்ரத ஸ்தானத்திற்கு வருகிறது. ஹிரண்மய புருஷன் ஒருவனே (இரண்டு அவஸ்தைகளுக்கும்) செல்கிறான்.
भाष्यम् - तदेते- एतस्मिन्नुक्तेऽर्थ एते श्लोका मन्त्रा भवन्ति।
अनुवादः - ச.பா- இந்த கூறப்பட்ட அர்த்தத்திலேயே இந்த ஸ்லோகம் அதாவது மந்திரம் ஆகிறது.
भाष्यम् - स्वप्नेन स्वप्नभावेन, शारीरं शरीरम्, अभिप्रहत्य निश्चेष्टमापाद्यासुप्तः स्वयमलुप्तदृगादिशक्तिस्वभाव्यात्, सुप्तान् वासनाकारोद्भतानन्तः करणवृत्त्याश्रायान् बाह्याध्यात्मिकान् सर्वान्नेव भावान् स्वेन रूपेण प्रत्यस्तमितान् सुप्तान्, अभिचाकशीति, अलुप्तया आत्मदृष्टा पश्यत्यवभासयतीत्यर्थः।
अनुवादः - ச.பா- ஸ்வப்னத்தால் அதாவது ஸ்வப்ன பாவத்தால் சாரீரம் (சரீரத்தில் இருக்கும் ஆத்ம ஜ்யோதி ஸ்வரூபம்) சரீரத்தை சேஷ்ட்டை (அசைவு) அற்றதாக செய்து தான் உறங்காமல் இருந்துகொண்டு தான் அலுப்த்த (மூடப்படாத) திருக் முதலிய சக்தி ஸ்வபாவத்தால் வாசனைகளால் தோன்றிய அந்தக்கரண விருத்திகளை ஆஸ்ரயித்த பாஹ்ய ஆத்யாத்மிகமான எல்லா பாவங்களையும் தன்னுடைய ஸ்வரூபத்தில் மறைத்த அதாவது தூங்கிக்கொண்டே பிராகாசப்படுத்துகிறது. அலுப்த்த ஆத்மதிருஷ்டியினால் காண்கிறது என்று பொருள்.
भाष्यम् - शुक्रं शुद्धं ज्योतिष्मदिन्द्रियमात्रारूपम्, आदाय गृहीत्वा, पुनः कर्मणे जागरितस्थानमेत्यागच्छति, हिरण्यमयो हिरण्मय इव चैतन्यज्योतिःस्वभावः, पुरुषः एकहंसः- एक एव हन्तीत्येकहंसः- एको जाग्रत्स्वप्नेहलोकपरलोकादीन् गच्छतीत्ये-कहंसः।।११।।
अनुव
भाष्यम् - तत्र च जाग्रतस्वप्नसुषुप्तस्थानानां त्रयाणां विप्रकीर्णरूप उक्तः, न पुञ्जीकृत्यैकत्र दर्शितः- यस्माज्जागरिते ससङ्गः समृत्युः सकार्यकरणसात उपलक्ष्यतेऽविद्यया, स्वप्ने तु कामसंयुक्तो मृत्युरूपविनिर्मुक्त उपलभ्यते, सुषुप्ते पुनः सम्प्रसन्नोऽसङ्गो भवतित्यसङ्गतापि दृश्यते, एकवाक्यतया तूपसंह्रियमाणं फलं नित्यमुक्तबुद्धशुद्धस्वभावतास्य नैकत्र पुञ्जीकृत्य प्रदर्शिता, इति तत्प्रदर्शनाय कण्डिका आरभ्यते।
ादः -ச.பா-சுக்ரம் = சுத்தம் ஜ்யோதி ஸ்வரூபமானது. இந்திரிய மாத்திர ரூபத்தை கிரஹித்து கர்மத்தில் அதாவது ஜாக்ரஸ்தானத்தை அடைந்து மறுபடியும் வருகிறது. ஹிரண்யத்தைப் (தங்கத்தைப்) போன்றசைதன்ய ஜ்யோதியின் ஸ்வபாவமான புருஷன்“एकहंसः” (ஏகஹம்ச: ஒருஹம்சம்) என்பது ஒருவனாகவே செல்வது. ஒருவனாகவே இருந்து கொண்டு ஸ்வப்ன ஜாக்ரத் இஹலோக பரலோகத்திற்கும் செல்வதால் ஏக ஹம்ச: என்பதாகும்.
मन्त्रः - प्राणेन रक्षन्नवरं कुलायं बहिष्कुलायादमृत-श्चरित्वा। स ईयतेऽमृतो यत्र काम ँहिरण्यमयः पुरुष एकह ँसः।।
अनुवादः - மந்திரம்- இந்த கீழ்மையான சரீரத்தை பிராணனை ரக்ஷித்துக் கொண்டே அந்த அமிருத தர்மம் சரீரத்திற்கு வெளியே சஞ்சரிக்கிறது. அது தனியாகவே சஞ்சரிக்கும் ஹிரண்மய அம்ருத புருஷன் அங்கு வாசனைக்குத் தகுந்தவாறு அங்கு செல்கிறான்.
भाष्यम् - तथा प्राणेन पञ्चवृत्तिना रक्षन् परिपालयन्- अन्यथा मृतभ्रान्तिः स्यात्, अवरं निकृष्टमनेकाशुचिसातत्वा-दत्यन्तबीभत्सम्, कुलायाम् नीडं शरीरम्, स्वयं तु बहिस्तस्मात् कुलायात्, चरित्वा- यद्यपि शरीरस्थ एव स्वप्नं पश्यति तथापि तत्सम्बन्धाभावात् तत्स्थ इव आकाशो बहिश्चरित्वेत्युच्यते, अमृतः स्वयममरणधर्मा, ईयते गच्छति, यत्र यत्र कामो विषयेषु उद्भतवृत्तिर्भवति तं तं कामं वासनारूपेणोद्भतं गच्छति।।१२।।
अनुवादः - ச.பா- அவ்வாறே பிராண அபானன் முதலிய பஞ்ச விருத்தி உடைய பிராணனால் ரக்ஷிக்கப்படுகிறது, அதற்கு மாறாக இருந்தால் மரணத்தின் ப்ராந்தி ஏற்படும். கீழ்தரமான அநேக பவித்திரமற்றவஸ்துகளின் சங்காதம் ஏற்படுவதின் காரணமாக மிருகத்திற்கான கூண்டு போன்றது சரீரம். அதிலிருந்து தான் வெளிப்பட்டு சஞ்சரிக்கிறது. ஆனாலும் சரீரத்தில்தான் ஸ்வப்னம் கண்டாலும் அதன் சம்பந்தம் இல்லாததால் தன் உள் இருக்கும் ஆகாயம்போல் வெளியில் சஞ்சரிக்கின்றது. அம்ருத: என்றால் ஸ்வயம் அமரண தர்மம் உடையது. எங்கு காமமோ அங்கு செல்கிறது. எங்கு எங்கு காமம் விஷயங்களில் விருத்தி வெளிப்படுகிறதோ அந்த அந்த வாசனாரூபமாய் வெளிப்படுகிறது.
मन्त्रः - स्वप्नान्त उच्चावचमीयमानो रूपाणि देवः कुरुते बहूनि। उतेव स्त्रीभिः सह मोदमानो जक्षदुतेवापि भयानि पश्यन्।। १३।।
अनुवादः - மந்திரம் - அந்த தேவன் ஸ்வப்னாவஸ்தையில் கீழான மேலான பாவனைகளை அடைந்து அநேக ரூபங்களைச் செய்கிறான். இவ்வாறு ஸ்திரீகளுடன் ஆனந்தத்தை அடையலாம் என்று நினைத்து சந்தோஷம் அடைகிறான். அவ்வாறே (புலி முதலியவைகளில்) பயத்தை அடைகிறான்.
भाष्यम् - किञ्च स्वप्नान्ते स्वप्नस्थाने उच्चावचम्- उच्चं देवादिभावम् अवचं तिर्यगादिभावं निकृष्टं तदुच्चावचम्, ईयमानो गम्यमानः प्राप्नुवन्, रूपाणि, देवो द्योतवान् कुरुते निर्वर्तयति वासनारूपाणि बहून्यसेयानि। उतापि स्त्रीभिः सह मोदमान इव, जक्षदिव हसन्निव वयस्यैः, उतेवापि भयानि- बिभेत्येभ्य इति भयानि सिंहव्याघ्राादीनि, पश्यन्निव।।१३।।
अनुवादः -ச.பா-மேலும் ஸ்வப்ன அவஸ்தையில் கீழும், மேலேயும் ஆக இருக்கின்றது. மேல் என்பது தேவ முதலிய பாவம், கீழ் என்றது கீழான திர்யக் (மிருகங்கள்) முதலிய தாழ்ந்த பாவம். இவ்வாறு சிறந்த தாழ்ந்த பாவனைகளை அடைந்து அந்த தேவ அதாவது >ஜ்வலிப்பவன் புருஷன் அநேக வாசனா மய ரூபங்களை செய்கிறான் மேலும் ஸ்திரீகளுடன் ரமிப்பது போலும். தோழர்களுடன் சேர்ந்து சந்தோஷமாய் இருப்பதும் (சிங்கம் புலி இவை) பயத்திற்கு உரியதாக நினைத்து பயப்படுவது போலவும் அவனிடம் காணப்படுகிறது.
मन्त्रः - आराममस्य पश्यन्ति न तं पश्यति कश्चनेति। तं नायतं बोधयेदित्याहुः। दुर्भिष्ज्य ँ हास्मै भवति यमेष न प्रतिपद्यते। अथो खल्वाहुर्जागरितदेश एवास्यैष इति यानि ह्येव जाग्रत् पश्यति तानि सुप्त इत्यत्रायं पुरुषः स्वयंज्योतिर्भवति सोऽहं भगवते सहस्रं ददाम्यत ऊर्ध्वं विमोक्षाय ब्रूहीति।। १४।।
अनुवादः - மந்திரம்- அவனது விளையாட்டையே யாவரும் பார்க்கின்றனர் அவனை யாரும் பார்ப்பதில்லை. அவனை யாரும் திடீர் என்று எழுப்பக்கூடாது என்று உலகோர் கூறுகின்றனர். இந்த இந்த்ரிய ப்ரதேசத்தில் தூங்குபவனை அதை அடைய முடியாததால் அதை சிகிச்சை செய்வது கடினமாகும். இதனால் அவசியம் சிலர் கூறுகின்றான் (ஸ்வப்னஸ்தானம்) அதன் ஜாக்ரத் ஸ்தானம் என்று. ஏன் எனில் எந்த பதார்த்தங்கள் ஜாக்ரத்தில் பார்க்கப்பட்டதோ அதையே தூங்கும் பொழுதும் காண்கிறோம் (ஆனால் இது சரியல்ல) அந்த அவஸ்தையில் அந்த புருஷன் ஸ்வயம் ஜ்யோதி ஆகின்றான். (ஜனகர்) இதற்கு நான் ஶ்ரீமானுக்கு ஆயிரம் முத்திரைகள் தருகிறேன். இனி எனக்கு மோக்ஷமடைவதற்கு உபதேசம் செய்யுங்கள்.
भाष्यम् - आराममारमणमाक्रीडामनेन निर्मितां वासना-रूपाम् अस्यात्मनः पश्यन्ति सर्वे जनाः- ग्रामं नगरं स्त्रियम् >अन्नाद्यमित्यादिवासनानिर्मितम्- आक्रीडनरूपम्, न तं पश्यति तं न पश्यति कश्चन। कष्टं भो वर्ततेऽत्यन्तविविक्तं दृष्टिगोचरापन्नमपि - अहो भाग्यहीनता लोकस्य, यच्छक्यदर्शनमप्यात्मानं न पश्यति- इति लोकं प्रत्यनुक्रोशं दर्शयति श्रुतिः। अत्यन्तविविक्तः स्वयंज्योतिरात्मा स्वप्ने भवतीत्यभिप्रायः।
अनुवादः -ச.பா-உலகில் யாவரும் இந்த ஆத்மாவின் விளையாட்டை அதாவது விளையாட்டாக சிருஷ்டித்த வாசனாரூபமான விளையாட்டைப் காண்கிறார்கள். கிராமம், நகரம், ஸ்திரீ அன்னபோகம் முதலிய வாசனைகளை உண்டாக்கி கிரீடையாகவே (விளையாட்டாகவே) பார்க்கிறது. அதைப் பார்ப்பதில்லை. அந்த ஆத்மாவை யாரும் பார்ப்பதில்லை. ஹோ! கஷ்ட்டம்! அத்யந்தம் விவிக்தமாய் திருஷ்ட்டிக்கு கோசரமாய் இருந்தாலும் அஹோ! ஜீவர்களின் துர்பாக்கியம். பார்ப்பதற்கு முடிவதாய் இருந்தாலும் ஆத்மாவைக் காண்பதில்லை என்று சுருதி ஜீவர்களைக் குறித்து கருணை காட்டுகிறது. இதன் தாத்பர்யம் என்னவெனில் முற்றிலும் சம்சர்க்கமற்று ஸ்வயம் ஜ்யோதிரூப ஆத்மா ஸ்வப்னத்தில் விளங்குகிறது.
भाष्यम् - तं नायतं बोधयेदित्याहुः- प्रसिद्धिरपि लोके विद्यते, स्वप्न आत्मज्योतिषो व्यतिरिक्तत्वे. कासौ? तमात्मानं सुप्तम्, आयतं सहसा भृशम्, न बोधयेत- इत्याहुरेवं कथयन्ति चिकित्सकादयो जना लोके, नूनं ते पश्यन्ति- जाग्रद्देहादिन्द्रिय- >द्वारतोऽपसृज्य केवलो बहिर्वर्तत इति, यत आहुः- तं नायतं बोधयेदिति।
अनुवादः -ச.பா-அவனை திடீர் என்று எழுப்பக்கூடாது என்று கூறுவர் ஸ்வனத்தில் ஆத்மஜ்யோதியின் தனித்தன்மை (வ்யதிரிக்த்தன்மை) விஷயத்தில் உலகில் பிரசித்தமானது. அந்த பிரசித்தமானது எது? அந்த ஆத்மாவை தூங்கும் சமயம் திடீர் என்று மிகுந்த சப்தம் செய்து எழுப்பக்கூடாது என்று இவ்வாறு உலகில் மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஜாக்ரத்தேஹ இந்த்ரியாதி வழிகளை (விட்டு) நழுவி தனியாக வெளியில் இருக்கிறது என்று நிச்சயமாகப் பார்க்கிறார்கள். அதனால் கூறுகிறார்கள் - அவனை திடீர் என்று எழுப்பாதே என்று.
भाष्यम् - तत्र च दोषं पश्यन्ति- भृशं ह्यसौ बोध्यमान-स्तानीन्द्रियद्वाराणि सहसा प्रतिबोध्यमानो न प्रतिपद्यत इति, तदेतदाह- दुर्भिषज्यं हास्मै भवति यमेष न प्रतिपद्यते, यमिन्द्रिय-द्वारदेशम्- यस्माद्देशाच्छुक्रमादायापसृतस्तमिन्द्रियदेशम्- एष आत्मा पुनर्न प्रतिपद्यते, कदाचिद् व्यत्यासेनेन्द्रियमात्राः प्रवेशयति, तत आन्ध्यबाधिर्यादिदोषप्राप्तौ दुर्भिषज्यं दुःखभिषक्कर्मता। हास्मै देहाय भवति, दुःखेन चिकित्सनीयोऽसौ देहो भवतीत्यर्थः। तस्मात् प्रसिापि स्वप्ने स्वयंज्योतिष्ट्वमस्य गम्यते।
अनुवादः - ச.பா- அந்த பலவந்தமாக எழுப்பப்பட்டவன் தனியாக எழுந்து அந்த இந்திரியதுவாரங்களை அடையமுடியாதவனாகின்றான் என்று தோஷத்தைக் காண்கிறான். எந்த இந்திரிய துவார இடத்தை அதாவது எதனால் அந்த இந்த்ரிய மாத்திரத்தை இல்லாமல் செய்தால் அதை ஆத்மா அடையாது. ஆகையால் சுருதி கூறுகிறது அதை மருத்துவத்தால் சரி பண்ணுவது கடினம் என்று. அதனாலேயே அது மறுபடியும் அடைவதில்லை. ஒரு சமயம் வித்யாசமாய் (தன்னைவிட வேறு இடத்திற்கு) இந்த்ரியங்கள் மாத்திரம் பிரவேசித்தால் அதனால் குருட்டுதன்மை ஊமை முதலிய தோஷங்கள் உண்டாகும். அப்பொழுது அதற்கு கடினமாக மருத்துவம் செய்வது தேஹத்திற்கு மிகுந்த துக்கம் உண்டாக்கும். ஆகையால் ஸ்வப்னத்தில் ஸ்வயம் ஜ்யோதி அறியப்படுவது பிரசித்தமாய் இருப்பதாலும் ஆகும்.
भाष्यम् - स्वप्नो भूत्वातिक्रान्तो मृत्यो रूपाणीति तस्मात् स्वप्ने स्वयंज्योतिरात्मा। अथो अपि खल्वन्य आहुः- जागरितदेश एवास्यैष यः स्वप्नः- न संध्यं स्थानान्तरमिहलोकपरलोकाभ्यां व्यतिरिक्तम्, किं तर्हि? इह लोक एव जागरितदेशः।
अनुवादः -ச.பா-இந்த ஸ்வப்னத்தை அடைந்து (சரீரம் முதலியவைகள்) மிருத்யுரூபத்தை தாண்டிச் >செல்கிறது. ஆகையால் ஸ்வப்னத்தில் ஆத்மா ஸ்வயம் ஜ்யோதி. இதனால் சிலர் கூறுகிறார்கள். இந்த ஸ்வப்னம் ஜாகரிததேசம் என்று. இஹ லோகத்தையும், பரலோகத்தைத் தவிர வேறு சந்தியா ஸ்தானம் இல்லை என்கிறார்கள். அவ்வாறானால் அது என்ன? இஹலோகமே ஜாகிரிததேசம் என்கிறார்கள்.
भाष्यम् - यद्येवम्, किञ्जातः? श्रुण्वतो यद् भवति- यदा जागरितदेश एवायं स्वप्नः, तदायमात्मा कार्यकरणेभ्यो न व्यावृत्त-स्तैर्मिश्रीभूतः, अतो न स्वयं ज्योतिरात्मा- इत्यतः स्वयंज्योति-ष्ट्वबाधनाय अन्ये आहुः- जागरितदेश एवास्यैष इति। तत्र च हेतुमाचक्षते- जागरितदेशत्वे यानि हि यस्माद्धस्त्यादीनि पदार्थजातानि, जाग्रज्जागरितदेशे, पश्यति लौकिकः तान्येव सुप्तोऽपि पश्यतीति।
अनुवादः -ச.பா-இந்த விஷயம் இவ்வாறு இருந்தால் இதனால் என்ன ஆகும்? இதனால் என்னவாகும் என்பதைக் கேள்- இந்த ஸ்வப்னம் ஜாகரிததேசமே என்றால் அந்த சமயத்தில் இந்த ஆத்மா தேஹம் இந்திரியங்களைக் காட்டிலும் வேறாக ஆகாது. அதனுடன் சேர்ந்தே இருக்கும். ஆகையால் ஆத்மாஸ்வயம் ஜோதியல்ல ஆகையால் இதை ஸ்வயம் ஜோதித்துவத்தைப் பாதிப்பதற்காக (நீக்குவதற்காக) சிலர் இவ்வாறு கூறுகிறார்கள். என்னவெனில் அதை ஜாக்ரததேசம என்கிறார்கள். அந்த ஜாகிர தேசத்திற்கு இந்த ஹேதுவைக் கூறுகிறார்கள். ஏன்எனில் லெளகிகர்கள் ஜாக்ரத் தேசத்தில் எந்த யானை முதலியவைகளைப் பார்த்தார்களோ அதையே ஸ்வப்னத்திலும் காண்கின்றார்கள் என்று.
भाष्यम् - तदसत्- इन्द्रियोपरमात्, उपरतेषु हीन्द्रियेषु स्वप्नान् पश्यति, तस्मान्नान्यस्य ज्योतिषस्तत्र सम्भवोऽस्ति, तदुक्तम्-“न तत्र रथा न रथयोगाः” इत्यादि तस्मादत्रायं पुरुषः स्वयंज्योतिर्भवत्येव।
अनुवादः - ச.பா- அது சரியல்ல. இந்திரியங்கள் உபராமம் அடைந்ததால் அதாவது ஸ்வப்னங்களை இந்திரியங்கள் உபராமம் அடைந்தபின் காண்கின்றான். ஆகையால் அந்த சமயத்தில் வேறு ஜ்யோதிகள் சம்பவிக்காது. ஆகையால் இவ்வாறு கூறப்படுகிறது.“न तत्र रथा न रथयोगाः” (ந தத்ரதான் ரதயோகா:) முதலிய சுருதி வாக்கியங்களால் ஆகையால் இந்த அவஸ்தையிலும் அந்த புருஷன் சுவயம் ஜ்யோதி ஸ்வரூபமே.
भाष्यम् - स्वयंज्योतिरात्मा अस्तीति स्वप्ननिदर्शनेन प्रदर्शितम्, अतिक्रामति मृत्यो रूपाणीति च, क्रमेण संचरन्निहलोकपरलोकादीनिहलोकपरलोकादिव्यतिरिक्तः, तथा जाग्रत्स्वप्नकुलायाभ्यां व्यतिरिक्तः, तत्र च क्रमसंचारान्नित्यश्च- इत्येतत् प्रतिपादितं याज्ञवल्क्येन। अतो विद्यानिष्क्रयार्थं सहस्रं ददामीत्याह जनकः, सोऽहमेवं बोधितस्त्वया भगवते तुभ्यं सहस्रं ददामि, विमोक्षश्च कामप्रश्नो मयाभिप्रेतः, तदुपयोग्यं तादर्थ्यात्तदेकदेश एव, अतस्त्वां नियोक्ष्यामि समस्तकामप्रश्न-निर्णयश्रवणेन- विमोक्षाय ऊर्ध्वं ब्रूहीति, येन संसाराद् विप्रमुच्येयं त्वत्प्रसादात्। विमोक्षपदार्थेकदेशनिर्णयहेतोः सहस्रदानम्।।१४।।
अनुवादः - ச.பா- ஸ்வபன திருஷ்ட்டாந்தத்தால் ஸ்வயம் ஜ்யோதி ஆத்மா இருக்கிறது என்று காட்டப்பட்டது. அவ்வாறே மிருத்யு ரூபங்களையும் தாண்டி இருக்கிறது (உத்க்கிரமணம் செய்கிறது) மேலும் அது கிரமமாக இஹலோகத்திற்கும் பரலோகத்திற்கும் சம்சாரம் செய்தாலும் இஹலோகம், பரலோகத்திற்கு வ்யதிரிக்த்தமாகவே இருக்கிறது. அவ்வாறே ஜாக்ரத் ஸ்வப்ன சரீரங்களுக்கு வேறாகவே இருக்கிறது. அவைகளில் கிரமமாய் சஞ்சாரம் செய்வதால் நித்யமாகும். இவ்வாறு யாக்ஞவல்க்யர் பிரதிபாதனம் செய்தார். ஆகையால் வித்யா தானத்தால் ஏற்பட்ட கடனைத் தீர்ப்பதற்காக ஜனகர் கூறினார் நான் இவ்வாறு உபதேசம் செய்த உங்களுக்கு ஆயிரம் பசுக்கள் தருகிறேன் என்றார். இப்பொழுது நீங்கள் எனக்கு மனதிற்குப் பிடித்த கேள்வியினால் (பிரசன்னத்தினால்) மோக்ஷ விஷயத்தைக் குறித்து சிரவணம் செய்ய ஆவலாய் இருக்கிறது. ஆத்மதத்துவத்தின் உபதேசம் மோக்ஷத்திற்கும், அதன் ஞானம் ஏற்படுவதற்கும் உபயோகமாகும். அதன் சாதனமாவதால் அதன் தாத்பர்யத்தை ஒரு அளவிற்க்குத்தான் இருக்கிறது. ஆகையால் எல்லா விரும்பிய கேள்விகளின் நிச்சயத்தை அறிவதற்காக உங்களிடம் பிரார்த்தனை செய்கிறேன். இப்பொழுது இனி மோக்ஷத்திற்காக உபதேசம் செய்யுங்கள் எதன் மூலமாய் உங்கள் கிருபையால் நான் சம்சாரத்திலிருந்து முக்தி அடைவேன். அந்த சஹஸ்ரதானம் ஆனது அந்த விமோக்ஷ பதார்தத்தின் ஏகதேசம் நிர்ணயம் செய்யப்பட்டதற்காக ஆகிறது.
भाष्यम् - यत् प्रस्तुतम्-“आत्मनैवायं ज्योतिषास्ते” इति, तत् प्रत्यक्षतः प्रतिपादितम्- अत्रायं पुरुषः स्वयंज्योतिर्भवति, इति स्वप्ने। यत्तुक्तम्-“स्वप्नो भूत्वेमं लोकमतिक्रामति मृत्यो रूपाणि” इति तत्रैतदाशतेमृत्यो रूपाण्यैवातिक्रामति, न मृत्युम्, प्रत्यक्षं ह्येतत् स्वप्ने कार्यकरणव्यावृत्तस्यापि मोगत्रासादिदर्शनम्, तस्मान्नूनं नैवायं मृत्युमतिक्रामति।
अनुवादः -ச.பா-“आत्मनैवायं ज्योतिषास्ते” (ஆத்மனைவாயம் ஜ்யோதிஷாஸ்தே) என்று எதனுடைய பிரஸ்தாபம் செய்யப்பட்டதோ அதை ஸ்வப்பனத்தில் இந்த புருஷன் ஸ்வயம் ஜ்யோதியாய் திகழ்கிறான். அது இவ்வாறு கூறப்பட்டது -“स्वप्नो भूत्वेमं लोकमतिक्रामति मृत्यो रूपाणि”(ஸ்வப்னோ பூத்வேம் லோகமதிக்ராமதி ம்ருத்யோரூபாணி = ஸ்வப்னம் அடைந்து லோகத்தைக் கடக்கின்றான் அதாவது >ம்ருத்யு ரூபங்களைத் தாண்டுகிறான்) என்று பதில் சங்கை செய்யப்படுகிறது- மிருத்யு ரூபங்களைக் கடக்கிறது ஆனால் மிருத்யுவை அல்ல. ஸ்வப்னத்தில் தேஹ இந்திரியங்கள் மறைந்து இருந்தாலும் புருஷனுக்கு ஆனந்தம் பயம் முதலியவைகளைக் காண்கிறான். ஆகையால் (அவசியம்). நிச்சயமாக மிருத்யுவை அதிக்கிரமணம் செய்யவில்லை.
भाष्यम् - कर्मणो हि मृत्योः कार्यं मोदत्रासादि दृश्यते, यदि च मृत्युना बद्ध एवायं स्वभावतः, ततो विमोक्षो नोपपद्यते, न हि स्वभावात् कश्चिद् विमुच्यते, अथ स्वभावो न भवति मृत्युः ततस्तस्मान्मोक्ष उपपत्स्यते। यथासौ मृत्युरात्मीयो धर्मो न भवति, तथा प्रदर्शनाय अत ऊर्ध्वं विमोक्षाय ब्रूहीत्येवं जनकेन पर्यनुयुक्तो याज्ञवल्क्यस्ततिदर्शयिषया प्रववृते-
अनुवादः - ச.பா- சந்தோஷம், பயம் முதலியவைகள் கர்ம ரூப மிருத்யுவின் காரியங்களாக காணப்படுகின்றன. இது மிருத்யுவினால் ஸ்வாபாவமாகவே பந்தப்பட்டிருந்தால் அதிலிருந்து விடுபடமுடியாது. ஸ்வபாவமாய் இருந்தால் ஒன்றாலும் விடுபடமுடியாது. ஆகையால் மிருத்யு ஸ்வபாவமாக ஆகமுடியாது. அதனால் அதிலிருந்து விடுபடமுடியும். எவ்வாறு இந்த மிருத்யு ஆத்மீய தர்மம் ஆகாதோ அதை தெரிவிப்பதற்காக ஜனகரால் அதற்குமேல் மோக்ஷம் அடைவதற்காக கூறுங்கள் என்பதற்காக யாக்ஞவல்க்யர் அதைத் தெரிவிப்பதற்காக ப்ரவிர்த்திக்கிறார்.
मन्त्रः - स वा एष एतस्मिन् सम्प्रसादे रत्वा चरित्वा दृष्ट्वैव पुण्यं च पापं च। पुनः प्रतिन्यायं प्रतियोन्याद्रवति स्वप्नायैव स यत्तत्र किञ्चित् पश्यत्यनन्वागतस्तेन भवत्यसङ्गो ह्ययं पुरुष इत्येवमेवैतद् याज्ञवल्क्य सोऽहं भगवते सहस्रं ददाम्यत ऊर्ध्वं विमोक्षायैव ब्रूहीति।। १५।।
अनुवादः - மந்திரம்- அந்த இந்த ஆத்மா சுக்ஷுப்தியில் ரமித்து, வ்யவஹாரம் செய்து புண்ய பாபங்களை பார்ப்பதாக மட்டும் இருந்து கொண்டு எவ்வாறு வந்ததோ, எங்கிருந்து வந்ததோ அதனுடன் சம்பந்தம் அற்று இருக்கிறது. மறுபடியும் ஸ்வப்னஸ்தானத்தை விட்டு விட்டு வருகிறது. அங்கு அது எதைப் பார்த்ததோ அதனுடன் சம்பந்தம் அற்று இருக்கிறது. ஏன் எனில் அந்த புருஷன் அசங்கன், (ஜனக) ஹே! யாக்ஞவல்க்ய! இந்த விஷயம் இவ்வாறுதான். உங்களுக்கு ஆயிரம் பசுக்கள் தருகிறேன். இதற்குமேல் எனக்கு மோக்ஷத்தின் பொருட்டு உபதேசம் செய்யுங்கள்.
भाष्यम् - स वै प्रकृतः स्वयंज्योतिः पुरुषः एष यः स्वप्ने प्रदर्शितः एतस्मिन् सम्प्रसादे- सम्यक् प्रसीदत्यस्मिन्निति सम्प्रसादः, जागरिते देहेन्द्रिव्यापारशतसन्निपातजं हित्वा कालुष्यं तेभ्यो विप्रमुक्त ईषत् प्रसीदति स्वप्ने, इह तु सुषुप्ते सम्यक् प्रसीदति- इत्यतः सुषुप्तं सम्प्रसाद उच्यते,“तीर्णो हि सदा सर्वाञ्शोकान्” (४।३।२२) इति“सलिल एको द्रष्टा” (४।३।३२) इति हि वक्ष्यति सुषप्तस्थमात्मानम्।
अनुवादः - ச.பா- இப்பொழுது கூறப்படுவது அந்த ஸ்வயம் ஜ்யோதி ஆத்மா. அதை ஸ்வப்னாவஸ்தையில் காண்பிக்கப்பட்டது. இந்த சம்பிரசாதத்தில் அதாவது நன்றாக ப்ரசன்னமாவதால் (விளங்குவதால்) சம்பிரசாதம் எனப்படுகிறது. ஜாக்ரத் காலத்தில் தேஹ இந்திரிய வியாபாரங்கள் நூ ற்றுக்கணக்கானவை உண்டானதினால் ஏற்பட்ட கல்மஷத்தை நீக்கி அதிலிருந்து விடுபட்டு ஸ்வப்பனத்தில் சிறிது அளவு ப்ரசன்னமாகிறது (ப்ரசீதத்தை அடைகிறது). ஆகையால் சுஷுப்த்தியை சம்பிரசாதம் என்று கூறப்படுகிறது.“तीर्णो हि सदा सर्वाञ्शोकान्” (தீர்ணோஹி சதா சர்வான்சோகான்) என்றும்“सलिल एको द्रष्टा” என்றும் சுஷுப்த்தியில் இருக்கும் ஆத்மாவைப் பற்றிக் கூறப்போகிறார்.
भाष्यम् - स वा एष एतस्मिन् सम्प्रसादे क्रमेण सम्प्रसन्नः सन् सुषुप्ते स्थित्वा, कथं सम्प्रसन्नः? स्वप्नात् सुषुप्तं प्रविविक्षुः स्वप्नावस्थ एव रत्वा रतिमनुभूय मित्रबन्धुजनदर्शनादिना, चरित्वा विह्य्त्यानेकधा चरणफलं श्रममुपलभ्येत्यर्थः, दृष्ट्वैव न कृत्वेत्यर्थः, पुण्यं च पुण्यफलम्, पापं च पापफलम्, न तु पुण्यपापयोः साक्षात्दर्शनमस्तीत्यवोचाम, तस्मान्न पुण्यपापाभ्यामनुबद्धः, यो हि करोति पुण्यपापे, स ताभ्यामनुबध्यते, न हि दर्शनमात्रेण तदनुबद्धः स्यात्।
अनुवादः - ச.பா- அந்த இந்த ஆத்மா இந்த சம்ப்ரசாதத்தில் கிரமமாக நன்றாக ப்ரசன்னமடைந்து சுஷுப்த்தியில் இருந்து கொண்டு எவ்வாறு சம்பிரசன்னமாகின்றான்? ஸ்வப்பனத்திலிருந்து சுஷுத்தி அவஸ்தைக்கு ப்ரவேசிப்பதற்கு இச்சை உள்ள ஆத்மா ஸ்வப்பனஸ்தானத்தில் இருந்துகொண்டு நண்பன், பந்து ஜனங்களின் தர்சனம் முதலியவைகளை ரமித்துக்கொண்டு அவ்வாறே அநேக பிரகாரமாக வியவகாரம் செய்து பலரூப சிரமத்தை அடைகிறது. திருஷ்ட்டி மாத்திரமாகவே செய்கையினால் அல்ல என்பது பொருள். புண்யம் புண்யபலம். பாபம் பாபபலம், புண்ய பாபங்களின் சாக்ஷாத் தர்சனம் அல்ல என்று கூறினோம். ஆகையால் புண்ய பாபங்களால் கட்டுப்படமாட்டான். (பந்தப்படமாட்டான்). எவன் புண்ய பாபம் செய்கின்றானோ அவன் அதனால் பந்தப்படுகிறான். அதை பார்ப்பதால் மட்டுமே பந்தப்படமாட்டான்.
भाष्यम् - तस्मात् स्वप्नो भूत्वा मृत्युमतिक्रामत्येव, न मृत्युरूपाण्येव केवलम्। अतो न मृत्योरात्मस्वभावत्वाशङ्का, मृत्युश्चेत् स्वभावोऽस्य, स्वप्नेऽपि कुर्यात्, न तु करोति, स्वभावश्चेत् क्रिया स्यात्, अनिर्मोक्षतैव स्यात्, न तु स्वभावः, स्वप्नेऽभावात्, अतो विमोक्षोऽस्योपपद्यते मृत्योः पुण्यपापाभ्याम्।
अनुवादः - ச.பா- ஆகையால் ஸ்வப்பனம் அடைந்து மிருத்யுவை கடக்கிறார்கள். ம்ருத்யுரூபம் மட்டும் அல்ல. ஆகையால் ம்ருத்யுவின் ஆத்ம ஸ்வபாவத்தில் சங்கை செய்ய வேண்டியதில்லை. ம்ருத்யுவின் ஸ்வபாவமாய் இருந்தால் ஸ்வப்பனத்திலும் உண்டாகும். அவ்வாறு செய்வதில்லை. கிரியை ஸ்வபாவமாக இருந்தால் மோக்ஷமே ஏற்படாது. ஸ்வப்பனத்தில் இல்லாததால் அதன் ஸ்வபாவமல்ல. ஆகையால் அந்த ம்ருத்யு ரூப புண்ய பாபங்கள் நீங்குகின்றன. (மோக்ஷமடைகின்றன)
भाष्यम् - शङ्का - ननु जागरितेऽस्य स्वभाव एव।
अनुवादः - ச.பா- சங்கை- ஆனால் ஜாக்ரதத்தில் அதற்கு ஸ்வபாவம் ஆகும்.
भाष्यम् - समाधानम् - न बुद्ध्याद्युपाधिकृतं हि तत्, तच्च प्रतिपादितं सादृश्यात्“ध्यातीव लेलायतीव” इति। तस्मादे-कान्तेनैव स्वप्ने मृत्युरूपातिक्रमणान्न स्वाभाविकत्वाशङ्का अनिर्मोक्षता वा।
अनुवादः - ச.பா- சமாதானம்- அவ்வாறு அல்ல, அந்த புத்தி முதலியவைகள் உபாதியின் காரணமாகும். அதுவும்“ध्यातीव लेलायतीव” (த்யாயதீவ லேலாயதீவ) என்று சாத்ருஷ்யம் ப்ரதிபாதனம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் ஸ்வப்னத்தில் மிருத்யு ரூபத்தை நியமமாக அதிக்கிரமணம் செய்வதால் அதன் ஸ்வாபாவிகத்தைக் குறித்தோ அல்லது மோக்ஷம் அடையமுடியாததையோ சங்கை செய்ய முடியாது.
भाष्यम् - तत्र“चरित्वा” इति चरणफलं श्रममुपल-भ्येत्यर्थः, ततः सम्प्रसादानुभवोत्तरकालं पुनः प्रतिन्यायं यथान्यायं यथागतम्- निश्चित आयो न्यायः, अयनमायो निर्गमनम्, पुनः >पूर्वगमनवैपरीत्येन यदागमनं स प्रतिन्यायः- यथागतं पुनरागच्छतीत्यर्थः। प्रतियोनि यथास्थानम्, स्वप्नस्थानाद्धि सुषुप्तं प्रतिपन्नः सन् यथास्थानमेव पुनरागच्छति- प्रतियोनि आद्रवति, स्वप्नायैव स्वप्नस्थानायैव।
अनुवादः - ச.பா- அங்கு (ஸ்வப்னஸ் தானத்தில்) வ்யவஹாரம் செய்துவிட்டு அதன் பலனாக சிரமத்தை அடைந்து அதன்பின் சம்பிரசாதத்தை அனுபவித்த பின் மறுபடியும் திரும்புகிறான்“प्रतिन्यायः” பிரதி நியாயம் என்பது எவ்வாறு வந்தான் என்பது பொருள். நிச்சயமாய் வருதல் நியாயம் எனப்படுகிறது. அவ்வாறே அயனம்(अयनम्) ஆயா (வந்தது) என்பது முன் வந்ததற்கு மாறாக வருதல் அதாவது சென்று மறுபடியும் திரும்பி வருதல். பிரதியோனி என்பது யதா ஸ்தானம். ஸ்வப்ன ஸ்தானத்திலிருந்து சுக்ஷுப்த்தியை அடைந்து யதாஸ்தானத்திற்கே திரும்பி வருகிறது. அதாவது யதாஸ்தானம் ஸ்வப்னத்திற்காக மறுபடியும் திரும்புகிறது.
भाष्यम् - ननु स्वप्नेन करोति पुण्यपापे तयोः फलमेव पश्यतीति कथमवगम्यते? यथा जागरिते तथा करोत्येव स्वप्नेऽपि, तुल्यत्वाद् दर्शनस्य- इत्यत आह- स आत्मा, यत् कििञ्चत् तत्र स्वप्ने पश्यति पुण्यपापफलम्, अनन्वगतोऽननुबद्धस्तेन दृष्टेन भवति, नैवानुबद्धो भवति।
अनुवादः - ச.பா- ஆனால் ஸ்வப்னத்தில் புண்ய பாபத்தை செய்வதில்லை பலனை மட்டும் பார்க்கிறது என்பது எவ்வாறு அறியப்படுகிறது? எவ்வாறு ஜாக்ரத்தில் செயல்படுகிறதோ அவ்வாறே ஸ்வப்னத்திலும் தர்சனம் காணப்படுகிறது என்பது கூறப்படுகிறது. அந்த ஆத்மா ஸ்வப்னத்தில் எந்த ஒரு புண்ய பாப பலத்தைப் பார்க்கிறதோ அது பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது அது பந்தப்படாமல் இருக்கிறது. அதாவது அது அதனால் பந்தப்படுவது இல்லை.
भाष्यम् - यदि हि स्वप्ने कृतमेव तेन स्यात्, तेनानुबध्येत, स्वप्नादुत्थितोऽपि समन्वागतः स्यात्, न च तल्लोके स्वप्न-कृतकर्मणा अन्वागतत्वप्रसिद्धिः, न हि स्वप्नकृतेनागसा आगस्का-रिणमात्मानं मन्यते कश्चित्, न च स्वप्नदृश अगः श्रुत्वा लोकस्तं गर्हति परिहरति वा, अतोऽनन्वगत एव तेन भवति।
अनुवादः - ச.பா- அவனால் சுவப்னத்தில் எவ்வாறு செய்யப்பட்டதோ அதனால் பந்தப்படுகிறான். மேலும் ஸ்பனத்திலிருந்து எழுந்தவுடன் அதனால் சம்பந்தப்படுகிறான் என்று இருக்கலாம். ஆனால் உலகில் ஸ்வப்பனத்தில் கர்மத்தினால் சம்பந்தபடுவது என்பது பிரசித்தமாகும். ஸ்வப்பனத்தில் அபராதம் (கஷ்டம்) செய்த புருஷன் தன்னை அபராதம் செய்தவனாக நினைப்பதில்லை. மேலும் உலகிலும் ஸ்வபனம் பார்த்தவனிடம் அபராதத்தைக் கேட்டு அவனை திரஸ்காரம் செய்வதில்லை. ஆகையால் அவன் அதனுடன் ஒட்டாமல் இருக்கிறான்.
भाष्यम् - तस्मात् स्वप्ने कुर्वन्निवोपलभ्यते, न तु क्रियास्ति परमार्थतः,“उतेव स्वीभिः सह मोदमानः” इति श्लोक उक्तः, आख्यातारश्च स्वप्नस्य सह इव शब्देनाचक्षते- हस्तिनोऽद्य घटीकृता धावन्तीव मया दृष्टा इति, अतो न तस्य कर्तृत्वमिति।
अनुवादः - ச.பா- ஆகையால் ஸ்வப்பனத்தில் கர்மம் செய்வது போல் அறியப்படுகிறது. ஆனால் உண்மையில் கிரியா அல்ல.“उतेव स्त्रीभिः सह मोदमानः” (உதேவ ஸ்திரீபி: சஹ மோதமாந) என்று ஸ்லோகத்தில் கூறப்பட்டது. ஆக்யாயிகா காரர் ஸ்வப்னத்துடன்“इव” (இவ = போல்) என்ற சப்தத்துடன் வர்ணனை செய்கிறார். யானைக் கூட்டம் ஓடுவதுபோல் என்னால் பார்க்கப்பட்டது என்று இருப்பதால் அதற்கு கர்த்ருத்தும் இல்லை.
भाष्यम् - कथं पुनरस्याकर्तृत्वमिति कार्यकरणैर्मूर्तैः संश्लेषो मूर्तस्य स तु क्रियाहेतुर्दृष्टः न ह्यमूर्तः कश्चित् क्रियावान् दृश्यते, अमूर्तश्चात्मा, अतोऽसङ्गः, यस्माच्चासङ्गोऽयं पुरुषः, तस्मादनन्वागतस्तेन स्वप्नदृष्टेन, अत एव न क्रियाकर्तृत्वमस्य कथिञ्चदुपपद्यते, कार्यकरणसंश्लेषेण हि कर्तृत्वं स्यात्, स च संश्लेषः सङ्गोऽस्य नास्ति, यतोऽसङ्गो ह्ययं पुरुषः, तस्मादमृतः।
अनुवादः - ச.பா- மேலும் அதற்கு எவ்வாறு அகர்த்ருத்வம்? மூர்த்தத்தின் காரியகரணங்களுடைய மூர்த்தங்களுடன் (சம்ஸ்வேஷம்) சம்பந்தமே அந்த க்ரியைக்கு ஹேதுவாகக் காணப்படுகிறது. மூர்த்தம் அற்றதற்கு எந்த ஒரு க்ரியை உடையதாய் காணப்படவில்லை. ஆத்மா அமூர்த்தம். ஆகையால் அசங்கன். எதனால் இந்த புருஷன் அசங்கமோ அதனால் ஸ்வப்னதிருஷ்ட்டியினால் புண்ய பாபங்களினால் சம்பந்தப்படவில்லை. ஆகையால் தான் கிரியையின் கர்த்ருத்துவம் அதற்கு ஒருபோதும் பொருந்தாது. காரியகரணத்துடன் சம்பந்தப்பட்டால் தான் கர்த்ருத்துவம் இருக்கும். அந்த சம்பந்தமோ (சங்கமோ) அதற்கு இல்லை. எதனால் இந்த புருஷன் அசங்கனோ அதனால் அம்ருதம் ஆகும்.
भाष्यम् - एवमेवैतद् याज्ञवल्क्यः, सोऽहं भगवते सहस्रं ददामि, अत ऊर्ध्वं विमोक्षायैव ब्रूहि, मोक्षपदार्थैकदेशस्य कर्मप्रविवेकस्य सम्यग्दर्शितत्वात्, अत ऊर्ध्वं विमोक्षायैव ब्रूहीति।।१५।।
अनुवादः - ச.பா- ஜனகர்- யாக்ஞவல்க்கிய! நீர் கூறியது போலவே இவை. ஆகையால் நான் தங்களுக்கு ஆயிரம் தருகிறேன். ஆகையால் மோக்ஷத்திற்காக கூறுங்கள். மோக்ஷ பதார்த்தத்தின் ஏகதேசமாகிய கர்ம விவேகத்தைப்பற்றி நன்றாக காண்பித்தீர்கள். இனி மோக்ஷத்திற்காக விளக்குங்கள்.
भाष्यम् - शङ्का - तत्र“असङ्गो ह्ययं पुरुषः” इत्यसङ्ता-कर्तृत्वे हेतुरुक्तः उक्तं च पूर्वम्- कर्मवशात् स ईयते यत्र काममिति, कामश्च सङ्गः, अतोऽसिद्धो हेतुरुक्तः-“असङ्गो ह्ययं पुरुषः” इति। +x´ÉªÉ& - तत्र “असङ्गो ह्ययं पुरुषः” इत्यसङ्ताकर्तृत्वे हेतुरुक्तः, पूर्वं च उक्तम्- सः कर्मवशात् यत्र कामम् ईयते इति। कामः च सङ्गः। अतोऽसिद्धो हेतुरुक्तः- “असङ्गो ह्ययं पुरुषः” इति।
अनुवादः - ச.பா- சங்கை- அங்கு (பூர்வமந்திரத்தில்)“असङ्गो ह्ययं पुरुषः” (அசங்கோ ஹ்யம் புருஷ:) என்ற அசங்க கர்த்திருத்துவம் காரணம் என்று முன்பு கூறப்பட்டது. அவன் கர்ம வசத்தால் எதில் காமமோ அதில் செல்கிறான். காமமே சங்கம். ஆகையால்“असङ्गो ह्ययं पुरुषः” அசங்கோ ஹ்யம் புருஷ: என்பதால் காரணம் சித்திக்காது.
भाष्यम् - न त्वेतदस्ति, कथं तर्हि? असङ्ग एवेत्येतदुच्यते-
अनुवादः - ச.பா- சமாதானம்- அவ்வாறு அல்ல. ஆனாலும் இது அசங்கம் என்பது எவ்வாறு என்று கூறப்படுகிறது.
मन्त्रः - स वा एष एतस्मिन् स्वप्ने रत्वा चरित्वा दृष्ट्वैव पुण्यं च पापं च पुनः प्रतिन्यायं प्रतियोन्याद्रवति बुद्धान्तायैव स यत्तत्र पश्यत्यनन्वागतस्तेन भवत्यसङ्गो ह्ययं पुरुष इत्येवमेवैतद् याज्ञावल्क्य सोऽहं भगवते सहस्रं ददाम्यत ऊर्ध्वं विमोक्षायैव ब्रूहीति।। १६।।
अनुवादः - மந்திரம் - அந்த இந்த ஆத்மா ஸ்வப்னாவஸ்தையில் ரமித்து வியவஹாரங்கள் செய்து அவ்வாறே புண்ய பாபங்களைப் பார்த்து எவ்வாறு வந்ததோ அந்த ஜாக்ரத் ஸ்தானத்திற்குச் செல்கிறது. அங்கு எதைப்பார்த்ததோ அதிலிருந்து சம்பந்தப்படாமல் இருக்கிறது. ஏன் எனில் புருஷன் அசங்கன். (ஜனகர்) யாக்ஞவல்க்ய! நீர் கூறிய விஷயம் அவ்வாறே தான் நான் ஶ்ரீமானாகிய உங்களுக்கு ஆயிரம் தருகிறேன். இதன்பின் தாங்கள் மோக்ஷத்திற்காக எனக்கு உபதேசம் செய்யுங்கள்.
भाष्यम् - स वा एष एतस्मिन् स्वप्ने स वा एष पुरुषः सम्प्रसादात् प्रत्यागतः स्वप्ने रत्वा चरित्वा यथाकामम्, दृष्ट्वैैव पुण्यं च पापं च - इति सर्वं पूर्ववत् बुद्धान्तायैव जागरितस्थानाय। तस्मादसङ्ग एवायं पुरुषः यदि स्वप्ने सङ्गवान् स्यात् कामी, ततस्तत्सङ्गजैर्दोषर्बुद्धान्ताय प्रत्यागतो लिप्येत।।१६।।
अनुवादः -ச.பா-“स वा एष”(ச வா ஏஷ) அந்த இந்த புருஷன் ஸ்வப்னாவஸ்தையில் சுஷுப்த்தியிருந்து எழுந்து வந்து ஸ்வப்பனத்தில் ரமிக்கின்றான். மேலும் வியவஹாரம் செய்துகொண்டு இஷ்டப்படி புண்ய பாபங்களைத் தரிசித்து கொண்டு என்பது முதலிய இவைகள் முன்புபோல் அறிந்துகொள்ள வேண்டும். புத்தாந்தம் என்பது ஜாக்ரத் ஸ்தானத்திற்கு திரும்புகிறான். ஆகையால் இந்த புருஷன் அசங்கன். யவப்னத்தில் சங்கம் உடையவனாய் இருந்து இருந்தால் அந்த சங்கமத்தால் உண்டானது ஜாக்ரத் அவஸ்தையில் அவனை சேரும். (ஒட்டும்).
भाष्यम् - यथासौ स्वप्नेऽसङ्गत्वात् स्वप्नसङ्गजै-र्दोषैर्जागरिते प्रत्यागतो न लिप्यते, एवं जागरितसङ्गजैरपि दौषैर्न लिप्यत एव बुद्धान्ते, तदेतदुच्यते-
अनुवादः - ச.பா- அவ்வாறு ஸ்வப்னாவஸ்தையில் அசங்கமாய் இருந்ததன் காரணமாய் ஜாக்ரத அவஸ்தைக்கு திரும்பியபின் அந்த ஸ்வப்னத்தால் உண்டான தோஷத்தால் தொடப்படுவது இல்லையோ, அவ்வாறே ஜாக்ரத் அவஸ்தையிலும் அந்த ஜாக்ரத் சங்கத்தினால் உண்டான தோஷங்களும் அவனை சேருவது இல்லை. அந்த விஷயத்தைக் குறித்துக் கூறப்படுகிறது.
मन्त्रः - स वा एष एतस्मिन् बुद्धान्ते रत्वा चरित्वा दृष्ट्वैव पुण्यं च पापं च पुनः प्रतिन्यायं प्रतियोन्याद्रवति स्वप्नान्तायैव ।। १७।।
अनुवादः - மந்திரம் - அந்த இந்த புருஷன் ஜாக்ரத் அவஸ்தையில் ரமித்தும் வியவஹாரம் செய்தும் புண்ய பாபங்களைப்பார்த்துக் கொண்டும் மறுபடியும் அவ்வாறே வந்து அதே மார்க்கத்தில் யதாஸ்தானமாகிய ஸ்வப்னஸ்தானத்திற்கு திரும்புகிறான். அந்த இந்த புருஷன் ஜாக்ரத் அவஸ்தையில் ரமிக்கின்றான், சஞ்சரிக்கின்றான் என்பது முதலியவை முன்புபோல் என்று அறிந்து கொள்ளவேண்டும்.
भाष्यम् - स वा एष एतस्मिन् बुद्धान्ते जागरिते रत्वा चरित्वेत्यादि पूर्ववत्। स यत्तत्र बुद्धान्ते कििञ्चत् पश्यत्यनन्वागतःस्तेन भवति- असङ्गो ह्ययं पुरुष इति।
अनुवादः - ச.பா- அந்த ஜாக்ரத் அவஸ்தையில் அதைப் பார்க்கிறானோ அதில் சம்பந்தப்படாமல் (ஒட்டாமல்) இருக்கிறான். ஏன் எனில் அந்த புருஷன் அசங்கன்.
भाष्यम् - शङ्का - ननु दृष्ट्वैवेति कथमवधार्यते? करोति च तत्र पुण्यपापे, तत्फलं च पश्यति।
अनुवादः - ச.பா- சங்கை- ஆனால் எவ்வாறு அது பார்த்துக் கொண்டே என்று நிச்சயம் செய்யப்படுகிறது? அங்கு புண்யம் பாபங்கள் செய்கிறது. அதன் பலன்களையும் பார்க்கிறது.
भाष्यम् - समाधानम् न, कारकावभासकत्वेन कर्तृत्वोपपत्तेः,“आत्मनैवायं ज्योतिषा आस्ते” इत्यादिना आत्मज्योतिषावभासितः कार्यकरणसातो व्यवहरति। तेनास्य कर्तृत्वमुपचर्यते, न स्वतः कर्तृत्वम्, तथा चोक्तम्“ध्यायतीव लेलायतीव” इति बुाद्युपाधिकृतमेव न स्वतः, इह तु परमार्थापेक्षयोपाधिनिरपेक्ष उच्यते- दृष्ट्वैव पुण्यं च पापं च न कृत्वेति, तेन न पूर्वापरव्याघाताशङ्काः यस्मान्निरुपाधिकः परमार्थत न करोति, न लिप्यते क्रियाफलेन, तथा च भगवतोक्तम्- “अनादित्वान्निर्गुणत्वात् परमात्मायमव्ययः। शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते।।” (गीता १३।३१) इति।
अनुवादः -ச.பா-சமாதனம்- அவ்வாறு அல்ல. ஏன் எனில் அதற்கு கர்த்ருத்வம், கர்த்தா கர்மம் முதலிய காரகங்கள் ஆபாச ரூபங்கள் ஆகும்.“आत्मनैवायं ज्योतिषा आस्ते”(அந்த புருஷன் ஆத்மாவின் ஜோதியினால் இருக்கின்றான்) முதலிய ஆத்ம ஜோதியினால் ஆபாசமான தேஹம் இந்த்ரிய சங்காதம் வ்யவஹாரம் செய்கிறது. அதனால் அதற்கு கர்த்ருத்வம் உபசாரமாகும். அதற்கு உண்மையில் சுயமாக கர்த்ருத்துவம் இல்லை. அவ்வாறேகூறப்படுகிறது“ध्यायतीव लेलायतीव”(த்யாயதீவ லேலாயதீவ) என்று. புத்தி முதலிய உபாதிகளினாலேயே தவிர சுயமாக இல்லை. இங்கு பரமார்த்தத்தை அபேக்ஷித்து உபாதியை அபேக்ஷிக்காமல் இவ்வாறு கூறப்படுகிறது - அது புண்யம் பாபத்தை பார்க்கிறதே தவிர செய்வதில்லை. ஆகையால் பூர்வாபரவ்யாகாததோஷ சங்கை இல்லை. ஏன் எனில் நிருபாதிகம் உண்மையில் (பரமார்த்தமாக) செய்வதில்லை, கிரியாபலத்தை அடைவதும் இல்லை (ஸ்பரிசிப்பதும் இல்லை) அவ்வாறேகீதையிலும் கூறப்பட்டுள்ளது.“अज्रादित्वान्निर्गुणत्वात् परमात्मायमव्ययः। शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते।।” (அநாதித்வாந்நிர்குணத்வாத் பரமாத்மாயமவ்யய:! சரீரஸ்த்தோஅபி கெளந்தேய கரோதி ந விப்யதே)
भाष्यम् - तथा सहस्रदानं तु कामप्रविवेकस्य दर्शितत्वात्। तथा“स वा एष एतस्मिन् स्वप्ने”“स वा एष एतस्मिन् बुद्धान्ते” इत्येताभ्यां कण्डिकाभ्यामसङ्गतैव प्रतिपादिता, यस्माद् बुद्धान्ते कृतेन स्वप्नान्तं गतः सम्प्रसन्नोऽसम्बद्धो भवति स्तैन्यादि-कार्यादर्शनात्, तस्मात् त्रिष्वपि स्थानेषु स्वतोऽसङ्ग एवायम्, अतोऽमृतः स्थानत्रयधर्मविलक्षणः।
अनुवादः - அவ்வாறே ஆயிரம் தானம் என்பது காமத்தின் விவேகத்தின் பெருமையை தெரிவிப்பதற்காக ஆகும். அவ்வாறே“स वा एष एतस्मिन् स्वप्ने” (ச ஏஷ ஏதஸ்மின் ஸ்வப்னே”,“स वा एष एतस्मिन् बुद्धान्ते” (ச வா ஏஷ ஏதஸ்மின் புத்தாந்தே) இந்த இரண்டு கண்டிகையில் அசங்கத்துவம் பிரதிபாதிக்கப்பட்டது. ஏன் எனில் ஜாக்ரத் அவஸ்தையில் செய்தவை ஸ்வப்னம் அடைந்தபின் எல்லாவிதமாகவும் தோன்றினாலும் திருட்டு முதலிய காரியங்கள் காணப்படாததால் சம்பந்தம் அற்று இருக்கிறது. ஆகையால் மூன்று அவஸ்தைகளிலும் தான் அசங்கமாய் இருக்கிறது. ஆகையால் அம்ருதம் மூன்று அவஸ்தைகளைக் காட்டிலும் விலக்ஷணமானது.
भाष्यम् - प्रतियोन्याद्रवति स्वप्नान्तायैव, सम्प्रसादाये-त्यर्थः- दर्शनवृत्तेः स्वप्नस्य स्वप्नशब्देनाभिधानदर्शनात्, अन्तशब्देन च विशेषणोपपत्तेः,“एतस्मा अन्ताय धावति” इति च सुषुप्तं दर्शयिष्यति।
अनुवादः - ச.பா- அந்த பிரதியோனி சம்பிரசாதத்தின் பொருட்டு (சுஷுப்தியின் பொருட்டு) ஸ்வப்ன முடிவிற்கு (அந்தத்திற்கு) ஓடுகிறது. என்பது பொருள். ஸ்வப்னத்தில் உள்ள தர்சன விருத்தியின் ஸ்வப்ன சப்தத்தினால் அதைக் குறிப்பிடுவது காணப்படுவதால்“अन्त” (முடிவு) என்ற சப்தத்தால் விசேஷணம் உண்டாவதால்“एतस्मा अन्ताय धावति” (ஏதஸ்மா அந்தாய தாவதி) என்று சுஷுப்த்தியைத் தெரிவிக்கிறது.
भाष्यम् - यदि पुनरेवमुच्यते-“स्वप्नान्ते रत्वा चरित्वा”“एतावुभावन्तावनुसञ्चरति स्वप्नान्तं च बुद्धान्तं च” इति दर्शनात्,“स्वप्नान्तायैव” इत्यत्रापि दर्शनवृत्तिरेव स्वप्न उच्यत इति- तथापि न कििञ्चत् दुष्यति। असङ्गता हि सिषाधयिषिता सिध्यत्येव, यस्माज्जागरिते दृष्ट्वैव पुण्यं च पापं च रत्वा चरित्वा च स्वप्नान्तमागतः, न जागरितदोषेणानुगतो भवति।।१७।।
अनुवादः - மேலும் எவ்வாறு கூறப்படுகிறது எனில் -“स्वप्नान्ते रत्वा चरित्वा” (ஸ்வப்னாந்தே ரத்வா சரித்வா),“एतावुभावन्तवानुसंचरति स्वप्नान्तं च बुद्धान्तं च” (ஏதாவுபாவன் தாவனு சஞ்சரதி ஸ்வப்னாந்தம் ச புத்தாந்தம் ச),“स्वप्नान्तायैव” (ஸ்வப்னாந்தயைவ) இவ்வாறு பிரயோகங்கள் காணப்படுவதால் தர்சன விருத்தியை ஸ்வப்னம் என்கிறார்கள். இதனால் சிறிதும் தோஷமில்லை. எதனால் ஜாக்ரத் அவஸ்தையில் புண்ய பாபங்களைப் பார்த்து ரமித்து, சஞ்சரித்து ஸ்வப்னாந்தத்திற்கு வந்தபின் அங்கு அசங்கத்தன்மையின் சித்தியே அபிஷ்டமாகும். அது சித்திக்கிறது. ஜாக்கிரத்தில் இருந்த தோஷம் அதை அணுகுவது இல்லை.
भाष्यम् - अव - एवमयं पुरुष आत्मा स्वयंज्योतिः कार्यकरणविलक्षणस्तत्प्रयोजकाभ्यां कामकर्मभ्यां विलक्षणः- यस्मादसङ्गो ह्ययं पुरुषः असङ्गत्वात्- इत्ययमर्थः“स वा एष एतस्मिन् सम्प्रसादे” इत्याद्याभिस्तिसृभिः कण्डिकाभिः प्रतिपादितः तत्रासङ्गतैव आत्मनः, कुतः? यस्माज्जागरितात् स्वप्नम् स्वप्नाच्च सम्प्रसादम्, सम्प्रसादाच्च पुनः स्वप्नम्, क्रमेण बुद्धान्तं जागरितम्, बुद्धान्ताच्च पुनः स्वप्नान्तम् इत्येव मनुक्रम-संचारेण स्थानत्रयस्य व्यतिरेकः साधितः। पूर्वमप्युपन्यस्तोऽयमर्थः“स्वप्नो भूत्वेमं लोकमतिक्रामति मृत्यो रूपाणि” इति - तं विस्तेरण प्रतिपाद्य, केवलं दृष्टान्तमात्रमवशिष्टम्, तद् वक्ष्यामीत्यरभ्यते-
अनुवादः -ச.பா-அ.கை- இவ்வாறு இந்த புருஷன் ஆத்மா பரம்ஜ்யோதி காரிய கரண விலக்ஷணம், அது பிரேரணை செய்யும் காம கர்மங்களைக் காட்டிலும் வேறானது. ஏன்எனில் இந்த புருஷன் அசங்கன். அசங்கமானதால்“स वा एष एतस्मिन् सम्प्रसादे”(ச வா ஏஷ ஏதஸ்மின் சம்பிரசாதே) முதலிய மூன்று கண்டிகைகளில் கூறப்பட்டுள்ளது. அதில் ஆத்மாவின் அசங்கத்தன்மை எதனால்? எதனால் எனில் ஜாக்ரதத்திலிருந்து ஸ்வப்னம், ஸ்வப்னத்திலிருந்து சம்பிரசாதம் (சுஷுப்தி) மறுபடியும் சுஷுப்த்தியிலிருந்து ஸ்வப்னம், கிரமமாய் ஜாக்ரத், மறுபடியும் ஜாக்ரதத்திலிருந்து ஸ்வப்னம் இவ்வாறு தொடர்ந்து கிரமமாய் மூன்று அவஸ்தைகளிலும் (ஸ்தானங்களிலும்) வேறானது என்று சாதிக்கப்படுகிறது. முன்பே இது விளக்கப்பட்டது.“स्वप्नो भूत्वेमं लोकमतिक्रामति मृत्यो रूपाणि”(ஸ்ப்னோ பூத்வேமம் லோகமதிக்ராமதி ம்ருத்யோ ரூபாணி) என்று விஸ்தாரமாய் விளக்கி இப்பொழுது திருஷ்ட்டா மாத்திரமே மீதம் இருக்கிறது. அதைக் கூறுகிறேன் என்று ஆரம்பிக்கின்றார் -
मन्त्रः - तद् यथा महामत्स्य उभे कूले अनुसंचरति पूर्व चापरं चैवमेवायं पुरुष एतावुभावन्तावनुसंचरति स्वप्नान्तं च बुद्धान्तं च।। १८।।
अनुवादः - மந்திரம் - எவ்வாறு அந்த பெரிய மத்ஸியம் (மீன்) நதியில் அங்கும் இங்கும் இருகரைகளுக்கும் கிரமமாய் சஞ்சரிக்கின்றதோ அவ்வாறு இந்த புருஷன் ஸ்வப்னஸ்தானம் மற்றும் ஜாகரிதஸ்தானம் ஆகிய இரண்டு ஸ்தானங்களுக்கும் கிரமமாக சம்சாரம் செய்கிறான்.
भाष्यम् - तत्तत्रैतस्मिन् यथा प्रदर्शितेऽर्थे दृष्टान्तो-ऽयमुपादीयते- यथा लोके महामत्स्यः, महांश्चासौ मत्स्यश्च, नादेयेन स्त्रोतसाहार्य इत्यर्थः, स्त्रोतश्च विष्टम्भयति, स्वच्छन्दचारी, उभे कूले नद्याः पूर्व चापरञ्चानुक्रमेण संचरति, संचरन्नपि कूलद्वयं तन्मध्यवर्तिना उदकस्त्रोतोवेगेन न परवशीक्रियते- एवमेवायं पुरुष एतावुभौ अन्तौ अनुसंचरति, कौ तौ? स्वप्नान्तं च बुद्धान्तं च।
अनुवादः -ச.பா-அதை அங்கு இதற்கு முன் எவ்வாறு இந்த விஷயத்தைக் குறித்துக் கூறப்பட்டதோ அழ்ற்கு த்ருஷ்டாந்தம் கூறப்படுகிறது. எவ்வாறு உலகில் மஹாமத்ஸ்யம் (பெரிய திமிங்கலம்) மிகப்பெரிய மீன், வேகமாக ஓடும் நதி. அந்த வேகமாக ஓடுகின்ற நதியில் இஷ்டப்படி செல்லக்கூடியது. நதியின் இருகரைக்கும் இங்கும் அங்கும் இரு கரைக்கும் சஞ்சரித்துக்கொண்டு நதியின் மத்தியில் உள்ள தண்ணீரின் வேகத்திற்கு அது அதன் வசமாவதில்லை. அவ்வாறே இந்த புருஷன் அந்த இரண்டு அவஸ்தைகளுக்கும் சஞ்சரிக்கின்றான். அந்த இரண்டும் எவை? ஸ்வப்னாந்தமும் புத்தாந்தமும் (ஜாக்ரமும்) ஆகும்.
भाष्यम् - दृष्टान्तप्रदर्शनफलं तु - मृत्युरूपः कार्यकरण- सातः सह तत्प्रयोजकाभ्यां कामकर्मभ्याम् अनात्मधर्मः अयं चात्मा एतस्माद् विलक्षणः- इति विस्तरतो व्याख्यातम्।।१८।।
अनुवादः - ச.பா- த்ருஷ்டாந்தத்தை காண்பித்தற்கான பலன்- மிருத்யுரூப கார்யகரண சங்காதத்துடன் கூடிய பிரேரணை செய்யும் காம கர்மங்கள் அநாத்ம தர்மங்கள். இந்த ஆத்மாவோ இவைகளைக் காட்டிலும் முற்றிலும் வேறானது. (விலக்ஷணமானது) என்று இவ்வாறு விஸ்தாரமாக விளக்கப்பட்டது.
भाष्यम् - अव - अत्र च स्थानत्रयानुसंचारेण स्वयंज्योतिष आत्मनः कार्यकरणसंघातव्यतिरिक्तस्य कामकर्मभ्यां विविक्तोक्ता, स्वतो नायं संसारधर्मवान्, उपाधिनिमित्तमेव त्वस्य संसारित्वम् अविद्याध्यारोपितम्- इत्येष समुदायार्थः उक्तः।
अनुवादः - ச.பா- இங்கு ஸ்தானங்கள் மூன்றிலும் சஞ்சாரம் செய்வதால் ஸ்வயம் ஜ்யோதி ஆத்மாவின் காரியகரண சங்காத வ்யதிரக்தமான (வேறான) தற்கு காம கர்மங்களில் இருந்தும் வியதிரிக்த்தம் கூறப்பட்டது. அதற்கு ஸ்வயமாக சம்சார தர்மத்துவம் கிடையாது. அவித்யா அத்யாரோபமான உபாதி நிமித்தமாக அதற்கு சம்சாரி தர்மத்துவம் ஆகும். இதுவே அதன் சமுதாயத்தின் சாராம்ஸம் கூறப்பட்டது.
भाष्यम् - तत्र च जाग्रतस्वप्नसुषुप्तस्थानानां त्रयाणां विप्रकीर्णरूप उक्तः, न पुञ्जीकृत्यैकत्र दर्शितः- यस्माज्जागरिते ससङ्गः समृत्युः सकार्यकरणसात उपलक्ष्यतेऽविद्यया, स्वप्ने तु कामसंयुक्तो मृत्युरूपविनिर्मुक्त उपलभ्यते, सुषुप्ते पुनः सम्प्रसन्नोऽसङ्गो भवतित्यसङ्गतापि दृश्यते, एकवाक्यतया तूपसंह्रियमाणं फलं नित्यमुक्तबुद्धशुद्धस्वभावतास्य नैकत्र पुञ्जीकृत्य प्रदर्शिता, इति तत्प्रदर्शनाय कण्डिका आरभ्यते।
अनुवादः - ச.பா- ஆனால் அங்கு ஜாக்ரத் ஸ்வப்ன சுஷுப்த்தி ஸ்தானங்களான மூன்றையும் பிரித்து தனித்தனியாக விளக்கப்பட்டது. ஆனால் ஒன்றாக சேர்த்துக் கூறவில்லை. ஏன்எனில் ஜாக்ரத்தில் சங்கத்துடனும், மிருத்யுவுடனும், காரியகரண சங்காதத்துடனும் அவித்யையினால் காணப்படுகிறது. ஸ்வப்பனத்தில் காமத்துடன் கூடிய மிருத்யு ரூபத்துடன் விடுபட்டுக் காணப்படுகிறது. சுஷுப்த்தியில் மேலும் சம்பிரசாதத்தை அடைந்து அசங்கமாவதால் அசங்கமாகவும் காணப்படுகிறது. ஆகையால் ஒரே வாக்கிய ரூபத்தால் உபசம்ஹாரம் செய்து அறிய வேண்டிய பலமாகும். அதன் நித்திய சுத்த புத்த முக்த ஸ்வபாத்தை ஒரே அவஸ்தையாய் (ஸ்தானமாய்) நன்றாக கிரஹிப்பதற்கு இன்னும் கூறப்படவில்லை. அதற்காக இப்பொழுது அதைத் தெரிவிப்பதற்காக இந்த கண்டிகை ஆரம்பமாகிறது.
भाष्यम् - सुषुप्ते ह्येवंरूतास्य वक्ष्यमाणा“तद् वा अस्यैतदतिच्छन्दा अपहतपाप्माभयं रूपम्” इति, यस्मादेवंरूपं विलक्षणं सुषुप्तं प्रविविक्षति, तत् कथम्? इत्याह दृष्टान्तेना-स्यार्थस्य प्रकटीभावो भवतीति तत्र दृष्टान्त उपादीयते-
अनुवादः - ச.பா- சுஷுப்த்தியில் அதன் ரூபத்தை இனி கூறப்போகும்“तद् वा अस्यैतदतिच्छन्दा अपहतपाप्माभयं रूपम्” (தத் வா அஸ்யேதததிச்சந்தா அபஹதபாப்மாபயம் ரூபம்) என்று, ஏன்எனில் இவ்வாறு இந்த ரூபம் சுஷுப்த்தியைக் காட்டிலும் விலக்ஷணம் என்று கூறவேண்டியதாய் உள்ளது. அது எவ்வாறு? கூறுகிறார் - இந்த அர்த்தத்தை திருஷ்டாந்தம் மூலமாக ஸ்பஷ்டமாய் அறிவதற்காக திருஷ்டாந்தத்தைத் தருகிறார் -
मन्त्रः - तद् यथास्मिन्नाकाशे श्येनो वा सुपर्णो वा विपरिपत्य श्रान्तः स ँहत्य पक्षौ संलयायैव ध्रियत एवमेवायं पुरुष एतस्मा अन्ताय धावति यत्र सुप्तो न कञ्चन काम कामयते न कञ्चन स्वप्नं पश्यति।। १९।।
अनुवादः - மந்திரம்- எவ்வாறு ஆகாயத்தில் பருந்தோ அல்லது அதிகவேகமாக பறந்து செல்லும் பருந்து பறந்து களைப்பு அடைந்தபின் அதன் கூட்டிற்கு இறக்கைகளை ஒடுக்கிக் கொண்டு திரும்புவதுபோல் இந்த புருஷன் இந்த ஸ்தானத்திற்கு திரும்பி இங்கு தூங்கியபின் ஒன்றையும் விரும்புவது இல்லை. அவ்வாறே ஸ்வப்னமும் காண்பதில்லை.
भाष्यम् - तद् यथा- अस्मिन्नाकाशे भौतिके श्येनो वा सुपर्णो वा, सुपर्णशब्देन क्षिप्रः श्येन उच्यते, यथा आकाशेऽस्मिन् विह्य्त्य विपरिपत्य श्रान्तो नानापरिपतनलक्षणेन कर्मणा परिखिन्नः, संह्य्त्य पक्षौ सङ्गमय्य सम्प्रसार्य पक्षौ, सम्यग्लीयते अस्मिन्निति संलयो नीडः, नीडायैव ध्रियते स्वात्मनैव धार्यते स्वयमेव, यथायं दृष्टान्तः, एवमेवायं पुरषः, एतस्मा एतस्मै अन्ताय धावति। अन्तशब्दवाच्यस्य विशेषणम्- यत्र यस्मिन्नन्ते सुप्तः, न कञ्चन न किञ्चदपि, कामं कामयते, तथा न कञ्चन स्वप्नं पश्यतीति, तथा च श्रुत्यन्तरम् -“तस्य त्रय आवसथास्त्रयः स्वप्नाः”इति।
अनुवादः -ச.பா-அது எவ்வாறு - இந்த பெளதிக ஆகாசத்தில் பருந்து அல்லது மிக வேகமாகவும் விரைவாகவும் பறக்கும் பருந்து எவ்வாறு சஞ்சாரம் செய்து மேலே கீழே பறந்து நாநா விதமான கடின கர்மங்களை செய்ததால் உண்டான களைப்பினால் தன் சிறகுகளை ஒடுக்கி தன்னுடைய கூட்டிற்கு தானே திரும்புகிறதோ (லயமடைகிறதோ) அவ்வாறேஇந்த த்ருஷ்ட்டாந்தம் போல் இந்த புருஷன் இந்த (சம்பிரசாத) ஸ்தானத்திற்கு ஓடுகிறான் - அந்த(अन्त)சப்த வாச்சியத்தின் விசேஷணம் - எந்த ஸ்தானத்தில் தூங்கிக்கொண்டு எது ஒன்றையும் இச்சிப்பது இல்லை. அவ்வாறேஒன்றையும் ஸ்வப்னமும் காண்பதில்லை.
भाष्यम् -“न कञ्चन कामम्”इति स्वप्नबुद्धान्तयोर-विशेषेण सर्वः कामः प्रतिषिध्यते,“कञ्चन” इत्यविशेषिता-भिधानात्, तथा न कञ्चन स्वप्नम्, इति- जागरितेऽपि यद् दर्शनम्, तदपि स्वप्नं मन्यते श्रुतिः, अत आह- न कञ्चन स्वप्नं पश्यतीति, तथा च श्रुत्यन्तरम् -“तस्य त्रय आवसथास्त्रयः स्वप्नाः”(ऐ०उ० १।३।१२) इति।
अनुवादः - ச.பா- (ந கஞ்சன காமம்) என்று. கஞ்சன“न कञ्चन कामम्” = ஒன்றையும்) என்பது எந்த ஒரு போக விசேஷத்தின் பெயரைக் கூறாமல் சாமான்யமாக ஸ்வப்ன, ஜாக்ரத் சாமானமாக எல்லா காமனைகளும் நிராகரணம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே“तस्य त्रय आवसथास्त्रयः स्वप्नाः” (ந கஞ்சன ஸ்வப்னம்) என்று ஜாக்ரத் தர்சனமும் ஆகும். அதுவும் ஸ்வப்னமே என்று சுருதியும் கருதுகிறது. ஆகையால் ஒரு ஸ்வப்னமும் காணவில்லையென்று. வேறு சுருதியிலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது - (தஸ்யத்ரிய ஆவஸதாத்ரய: ஸ்வப்னா: = புருஷனுக்கு அவஸ்தைகள் மூன்றும் ஸ்வபனமே என்று).
भाष्यम् - यथा दृष्टान्ते पक्षिणः परिपतनजश्रमापनुत्तये स्वनीडोपसर्पणम्, एवं जाग्रत्स्वप्नयोः कार्यकरणसंयोगज-क्रियाफलैः संयुज्यमानस्य, पक्षिणः परिपतनज इव, श्रमो भवति, तच्छ्रमापनुत्तये स्वात्मनो नीडमायतनं सर्वसंसारधर्मविलक्षणं सर्वक्रियाकारकफलायासशून्यं स्वमात्मानं प्रविशति।।१९।।
अनुवादः - ச.பா- எவ்வாறு திருஷ்டாந்தத்தில் பக்ஷியின் பறத்தலினால் ஏற்பட்ட சிரமத்தை நீக்குவதற்காக தன் கூட்டிற்குத் திரும்புகிறதோ அவ்வாறு ஜாக்ரத் ஸ்வப்னங்களின் காரிய கரணத்தின் சேர்க்கையால் உண்டான க்ரியா பலன்களை உடையவன் பக்ஷியின் பறத்தலினால் உண்டான சிரமம் போல் உண்டாகிறது. அந்த சிரமத்தைப் போக்குவற்காக எல்லா சம்சாரங்களினும் விலக்ஷணமானதும், எல்லா க்ரியா காரக பலத்தினால் உண்டாகும் ஆயாசம் அற்றதுமான தன் ஆத்மாவாகிய கூட்டிற்கு அதாவது தன் இருப்பிடமாகிய தன் ஆத்மாவில் பிரவேசிக்கிறது.
भाष्यम् - अव - यद्यस्यायं स्वभावः- सर्वसंसारधर्मशून्यता, परोपाधिनिमित्तं चास्य संसारधर्मित्वम्, यन्निमित्तं चास्य संसारधर्मित्वम, परोपाधिकृतं संसारधर्मित्वम्, सा चाविद्या- तस्या अविद्यायाः किं स्वाभाविकत्वम्? आहोस्वित् कामकर्मादि-वदागन्तुकत्वम्? यदि चागन्तुकत्वम्? ततो विमोक्ष उपपद्यते, तस्याश्चागन्तुकत्वे कोपपत्तिः? कथं वा नात्मधर्मो-ऽविद्या? इति सर्वानर्थबीजभूताया अविद्यायाः सतत्त्वावधारणार्थं परा कण्डिका >आरभ्यते
अनुवादः -ச.பா-இவ்வாறு இந்த ஸ்வபாவமானால் - எல்லா சம்சார தர்மங்கள் அற்றது இந்த ஆத்மாவின் ஸ்வபாவமானாதால் இதற்கு சம்சாரிக தர்மத்துடன் கூடியது மற்ற உபாதியின் காரணமாகும். எந்த ஹேதுவினால் இதற்கு வேறு உபாதியினால் உண்டான சம்சார தர்மத்துவமானது அவித்யை ஆகும். அந்த அவித்யாவிற்கு என்ன சுவபாவம் உடையது? அல்லது காம கர்மாதிகளைப் போல ஆகந்துகமா? ஆகந்துகம் ஆனால் அதற்கு மோக்ஷம் சம்பவிக்கும். அந்த ஆகந்துக்கதிற்கு என்ன யுக்தி? எவ்வாறு ஆத்மாவிற்கு அவித்யா தர்மமாகாது? என்று எல்லா அநர்த்தங்களுக்கும் பீஜ பூதமான அவித்யையின் ஸ்வரூபத்தை நிர்ணயம் செய்வதற்காக இனிவரும் கண்டிகா ஆரம்பிக்கப்படுகிறது.
मन्त्रः - ता वा अस्यैता हिता नाम नाडो यता केशः सहस्रधा भिन्नस्तावताणिम्ना तिष्द्भन्ति शुक्लस्य नीलस्य पिङ्गलस्य हरितस्य लोहितस्य पूर्णा अथ यत्रैनं घ्नन्तीव जिनन्तीव हस्तीव विच्छाययति गर्तमिव पतति यदेव जाग्रद्भयं पश्यति तदत्राविद्यया मन्यतेऽथ यत्र देव इव राजेवाहमेवेद ँ सर्वोऽस्मीति मन्यते सोऽस्य परमो लोकः।। २०।।
अनुवादः - மந்திரம் - அந்த இந்த ஹிதா எனப்படும் நாடிகள், முடியின் நுனியை ஆயிரக்கணக்காண பாகங்களாக பிரித்தால் எவ்வாறு சூக்ஷ்மமாய் இருக்கிறதோ அவ்வாறே சூக்ஷ்மமாய் இருக்கின்றன. அவை வெண்மை, நீலம், மஞ்சள், பச்சை, சிகப்பு ஆகிய வர்ணங்களுடன் ரசரூபமாய் நிறைந்து இருக்கின்றன, இனி எப்பொழுது அவன் கொல்வது போலும், வெல்வது போலவும், யானை இவனைத் துரத்துவது போலும், அல்லது குழியில் விழுவது போலும், ஜாக்ரத் அவஸ்தையில் பயம் கொள்வதுபோல் ஸ்வப்னா அவஸ்தையிலும் அவித்தையினால் இவ்வாறு கருதுகிறான். மேலும் அங்கு தேவதைக்கு சமானமாகவும், ராஜாவிற்கு சமானமாகவும் மேலும் எல்லாம் நானே என்று கருதுகிறான். அவனுக்கு இதுவே பரமலோகமாகும். (மேலான லோகமாகும்)
भाष्यम् - ता वै, अस्य शिरःपाण्यादिलक्षणस्य पुरुषस्य, एता हिता नाम नाडः, यथा केशः सहस्रधा भिन्नः, तावता तावत्परिमाणेनाणिम्ना अणुत्वेन तिष्द्भन्ति, ताश्च शुक्लस्य रसस्य, नीलस्य पिङ्गलस्य हरितस्य लोहितस्य पूर्णाः, एतैः शुक्लत्वादिभी रसविशेषैः पूर्णा इत्यर्थः, एते च रसानां वर्णविशेषा वातपित्तश्लेष्मणाम् इतरेतरसंयोगवैषम्मविशेषाद् विचित्रा बहवश्च भवन्ति।
अनुवादः -ச.பா-இந்த சிரஸ், கை முதலிய லக்ஷணமுடைய புருஷனுக்கு இந்த ஹிதா எனப்படும் நாடிகள் கேசம் எவ்வாறு ஆயிரக்கணக்காக பிரிந்து வேறு வேறாக இருக்கிறதோ அவ்வாறு அளவில் மிகச்சூக்ஷ்ம்மாக >இருக்கின்றன. அவை வெண்மை, நீலம், மஞ்சள், பச்சை, சிகப்பு ஆகியவை ரசரூபமாய் நிரம்பி இருக்கின்றன. இந்த வெண்மை முதலிய ரச விசேஷங்களால் நிரம்பி இருக்கின்றன என்பது பொருள். அந்த ரசங்களுடைய வர்ண(நிற) விஷேங்கள் வாத, பித்த, ச்லேஷ்மம் ஆகிய இவைகளின் ஒன்று ஒன்றின் சம்யோக விஷமத்தின் விசேஷத்தினால் அநேக விதமாக ஆகின்றன.
भाष्यम् - तास्वेवंविधासु नाडीषु सूक्ष्मासु बालाग्रसहस्र-भेदपरिमाणासु शुक्लादिरसपूर्णासु सकलदेहव्यापिनीषु सप्तदशकं लिङ्गं वर्तते। तदाश्रिताः सर्वा वासना उच्चावचसंसारधर्मानु-भवजनिताः, तल्लिङ्गं वासनाश्रयं सूक्ष्मत्वात् स्वच्छं स्फटिकमणिकल्पं नाडीगतरसोपाधिसंसर्गवशाद् धर्माधर्मप्रेरितो-द्भतवृत्तिविशेषं स्त्रीरथहस्त्याद्याकारविशेषैर्वासनाभिः प्रत्यवभासते।
अनुवादः - ச.பா- அவைகளில் இவ்வாறான சுக்லம் (வெண்மை) முதலிய ரசங்களினால் எல்லா தேஹங்களிலும் நிறைந்து முடியின் நுனியின் ஆயிரக்கணக்காக பிரித்தால் உள்ள அளவு சூக்ஷ்மமான நாடிகளில் பதினேழு தத்துவங்களுடைய லிங்கசரீரம் இருக்கிறது. அதன் அதீனமாய வாசனைகளால் சம்சாரத்தில் கீழான, மேலான தர்மங்கள் உண்டாகின்றன. வாசனைகளை ஆஸ்ரயித்த லிங்கசரீரம் சூக்ஷ்மமானதால் மிகவும் ஸ்வச்சமாய் (தெளிவாய்) ஸ்படிகமணிபோல் நாடியில் இருக்கும் ரச உபாதியின் சேர்க்கையால் தர்மாதர்மங்களில் ப்ரேரணை செய்யப்பட்டு அதனால் உண்டான வ்ருத்தி விசேஷத்தால் ஸ்திரீ, ரதம், யானை முதலிய ஆகார விசேஷங்களான வாசனைகளுடன் கூடி விளங்குகிறது.
भाष्यम् - अथैव सति, यत्र यस्मिन् काले केचन शत्रवोऽन्ये वा तस्करा मामाग्त्य घ्नन्ति- इति मृषैव वासनानिमित्तः प्रत्ययोऽविद्याख्यो जायते, तदेतदुच्यते- एनं स्वप्नदृशंन्तीवेति, तथा जिनन्तीव वशीकुर्वन्तीव, न केचन घ्नन्ति, नापि वशीकुर्वन्ति, केवलं त्वविद्यावासनोद्भवनिमित्तं भ्रान्तिमात्रम्, तथा हस्तीवैनं विच्छाययति विच्छादयति विद्रावयति धावयतीवेत्यर्थः, गर्तमिव पतति- गर्तं जीर्णकूपादिकमिव पतन्तमात्मानमुपलक्षयति, तादृशी ह्यास्य मृषा वासनोद्भवत्यत्यन्तनिकृष्टाधर्मोद्भासितान्तः करण-वृत्त्याश्रया, दुःखरूपत्वात्।
अनुवादः - ச.பா- இவ்வாறு இருக்கும்பொழுது - எந்த சமயத்தில் ஏதோ ஒரு விரோதியோ, திருடனோ என்னை கொல்வான் என்று பொய்யான வாசனை நிமித்தமாக அவித்யா எனப்படும் பிரத்யயம் (அறிவு) உண்டாகிறது. அந்த இது கூறப்படுகிறது - இந்த ஸ்வப்னம் போன்று கொல்வது போலும், அவ்வாறே வசம் செய்வது போன்று தோன்றுகிறது. ஆனால் ஒருவரும் கொல்வது இல்லை, வசம் செய்வதும் இல்லை. ஆனால் இது கேவலம் அவித்யா வாசனையினால் உண்டானதால் பிராந்தி மாத்திரமே. அவ்வாறே யானை அவனை துரத்துகிறது. சிதிளம் அடைந்த கிணற்றில் விழுவதுபோல பார்க்கிறான். அவ்வாறான அவனுடைய பொய்யான வாசனையினால் எது துக்க ரூபத்திற்கு காரணமாயும் முற்றிலும் கீழானதும் அந்தக் கரணத்தின் அதர்மத்தில் தோன்றும் வ்ருத்தியை ஆஸ்ரயித்ததாகும்.
भाष्यम् - किं बहुना, यदेव जाग्रद्भयं पश्यति हस्त्यादिलक्षणम्, तदेव भयरूपम् अत्रास्मिन् स्वप्ने विनैव हस्त्यादिरूपं भयमविद्यावासनया मृषैवोद्भतया मन्यते।
अनुवादः - ச.பா- அதிகமாக என்ன? ஜாக்ரத் அவஸ்தையில் எதோ ஒரு யானை முதலிய ரூபபயம் காணப்படுகிறது. இந்த ஸ்வப்ன அவஸ்தையிலும் யானை முதலிய ரூபபயம் இல்லாமலேய அவித்யா வாசனையினால் பொய்யாகவே உண்டாகிறது என்று அறியவேண்டியது.
भाष्यम् - अथ पुनर्यत्राविद्यापकृष्यमाणा विद्या चोत्कृष्यमाणा- किं विषया किं लक्षणा च? इत्युच्यते- अथ पुनर्यत्र यस्मिन् काले, देव इव स्वयं भवति, देवताविषया विद्या यदोद्भता जागरितकाले, तदोद्भूतया वासनया देवमिवात्मानं मन्यते, स्वप्नेऽपि तदुच्यते- देव इव, राजेव, राज्यस्थोऽभिषिक्तः स्वप्नेऽपि राजाहमिति मन्यते राजवासनावासितः।
अनुवादः - ச.பா- ஆகையால் மேலும் எங்கு அவித்யையின் நீக்கமும் வித்யையின் மேன்பாடும் என்ன விஷயமுடையது? மேலும் என்ன லக்ஷணமுடையது? என்பது கூறப்படுகிறது - மேலும் எப்பொழுது தேவன்போல் தான் ஆகிறானோ, தேவதா விஷயமான வித்யா எப்பொழுது ஜாக்ரத் காலத்தில் உண்டாகிறதோ அப்பொழுது உண்டான வாசனையினால் தன்னை தேவதாவாக நினைக்கின்றான். ஸ்வப்னத்திலும் அது கூறப்படுகிறது - தேவனைப்போல, ராஜாவைப் போல என்று, ஜாக்ரத அவஸ்தையில் ராஜ்யத்தில் அபிஷேகம் செய்யப்பட்டவன் ஸ்வப்னத்திலும் ராஜவாசனையினால் சூழப்பட்டு நான் ராஜா என்று நினைக்கின்றான்.
भाष्यम् - एवमत्यन्तप्रक्षीयमाणाविद्या उद्भता च विद्या सर्वात्मविषया यदा, तदा स्वप्नेऽपि तद्भावभावितः- अहमेवेदं सर्वोऽस्मीति मन्यते, स यः सर्वात्मभावः, सोऽस्यात्मनः परमो लोकः परम आत्मभावः स्वाभाविकः।
अनुवादः -ச.பா-இவ்வாறு முற்றிலும் அவித்யா நீங்கிய பின் வித்யா தோன்றும் பொழுது ஸ்வப்னத்திலும் அந்த பாவித்த பாவனையே அதாவது“अहमेवेदं सर्वोऽस्मीति”(அஹமேவஇதம் சர்வம்அஸ்மி நானே இவை எல்லாமாக இருக்கிறேன் என்று நினைக்கிறான். அதுவே >சர்வாத்ம பாவம். அது அவனுடைய பரமலோகம், அதாவது ஸ்வாபாவிகமாகவே பரம ஆத்மபாவமாகும்.
भाष्यम् - यत्तु सर्वात्मभावादर्वाग् बालाग्रमात्रमप्यन्यत्वेन दृश्यते- नाहमस्मीति, तदवस्थाविद्या, तया अविद्यया ये प्रत्युपस्थापिता अनात्मभावा लोकाः, तेऽपरमाः स्थावरान्ताः, तान् संव्यवहारविषयाँल्लोकानपेक्ष्यायं सर्वात्मभावः समस्तोऽनन्त-रोऽबाह्यः, सोऽस्य परमो लोकः। तस्मादपकृष्यमाणायामविद्यायां विद्यायां च काष्द्भां गतायां सर्वात्मभावो मोक्षः, यथा स्वयंज्योतिष्ट्वं स्वप्ने प्रत्यक्षत उपलभ्यते तद्वत् विद्याफलमुपलभ्यत इत्यर्थः।
अनुवादः -ச.பா-மேலும் எது சர்வாத்ம பாவத்தை எதனால் முடி நூ னி மாத்திரம் கூட நான் அதுவல்ல என்று அந்யரூபமாய் பார்க்கப்படுகிறதோ அவித்யா அவஸ்தை. அந்த அவித்தையினால் அவர்கள் மதிப்பு அளிக்கின்றவை கீழான ஸ்தாவரம் வரையில் உள்ள அநாத்மபாவரூப லோகங்கள் ஆகும். அந்த வியவஹார விஷயமான லோகங்களை அபேக்ஷித்து இந்த சர்வாத்மபாவம் பூர்ணமானது அவ்வாறே உள் வெளி(अन्तर बाह्यः)அற்றது. இதுவே இதன் பரலோகமாகும். ஆகையால் அவித்தியை நிஷேதம் (நஷ்டம்) ஆனபின் வித்யையின் ப்ரகாஷ்ட நிலையை அடைந்த பரமாத்மா பாவமே மோக்ஷம். >அவ்வாறே எவ்வாறு ஸ்வப்நத்தில் ஸ்வயம் ப்ரகாசத்துவம் ப்ரத்யக்ஷமாய் அறியப்படுகிறதோ அவ்வாறு வித்யாபலமாகிய மோக்ஷம் ப்ரத்யக்ஷமாய் அடையப்படுகிறது என்பது பொருள்.
भाष्यम् - तथाविद्यायामप्युत्कृष्यमाणयाम्, तिरोधीयमानायां च विद्यायाम्, अविद्यायाः फलं प्रत्यक्षत एवोपलभ्यते-“अथ यत्रैनं घ्नन्तीव जिनन्तीव” इति। ते एते विद्याविद्याकार्ये सर्वात्मभावः परिच्छिन्नात्मभावश्च, विद्यया शुद्धया सर्वात्मा भवति, अविद्यया चासर्वो भवति, अन्यतः कुतश्चित् प्रविभक्तो भवति, यतः प्रविभक्तो भवति, तेन विरुध्यते, विरुद्धत्वाद्धन्यते जीयते विच्छाद्यते च। असर्वविषयत्वे च भिन्नत्वादेतद् भवति, समस्तस्तु सन् कुतो भिद्यते येन विरुध्येत, विरोधाभावे केन हन्यते जीयते विच्छाद्यते च?
अनुवादः -ச.பா-அவித்யை மேல் எழும்பி வித்யயா திரோபாவம் ஆகும்பொழுது அவித்யையின் பலன் பிரத்யக்ஷமாய் அடையப்படுகிறது என்பது இந்த வாக்கியத்தால்“अथ यत्रैनं घ्नन्तीव जिनन्तीव” (அத யத்தரைனம் க்னந்தீவ ஜினன்தீவ) என்றவாக்கியத்தால் அறிகிறோம். அவை இரண்டின் வித்யா அவித்யா காரியத்தில் சர்வாத்ம பாவமும், பரிச்சின்ன பாவமும் ஆகும். சுத்த வித்யாவினால் பரமாத்மபாவம் ஏற்படுகிறது. அவித்யாவிற்கு சர்வ பாவமற்றதாகிறது. ஆகையால் அது >மற்றதுடன் வேறாகிறது. எதனால் வேறாக ஆகிறதோ அதனால் விருத்தமாகிறது. விருத்தமாய் இருப்பதால் கொல்லுகிறது. வசப்படுத்துகிறது. தொடர்கிறது, என்பது எதனால்?
भाष्यम् - अत इदमविद्यायाः सतत्त्वमुक्तं भवति- सर्वात्मानं सन्तमसर्वात्मत्वेन ग्राहयति, आत्मनोऽन्यद् वस्त्वन्तरमविद्यमानं प्रत्युपस्थापयति आत्मानमसर्वमापादयति, ततस्तद्विषयः कामो भवति यतो भिद्यते, कामतः क्रियामुपादत्ते ततः फलम्- तदेतदुक्तं वक्ष्यमाणं च-“यत्र हि द्वैतमिव भवति तदितर इतरं पश्यति” इत्यादि।
अनुवादः - ச.பா- ஆகையால் அந்த அவித்யையின் ஸ்வபாவம் கூறப்படுகிறது. சர்வாத்மாவாய் இருப்பதை சர்வாத்மா அற்றதாக கிரஹிக்கிறது. ஆத்மாவைக் காட்டிலும் வேறாக இல்லாத வேறு வஸ்துவை இருப்பதாகச் செய்கிறது. ஆத்மாவை சர்வம் அற்றதாய் தெரியப்படுத்துகிறது. எதனால் வேறாகச் செய்ததோ அதனால் அந்த விஷயத்தில் காமம் ஏற்படுகிறது. காமத்தால் கிரியை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதனால் பலன் உண்டாகிறது. அது இப்பொழுது கூறப்படுகிறது. இனி மேலும் கூறப்படும்.“यत्र हि द्वैतमिव भवति तदितर इतरं पश्यति” (யத்ர ஹி த்வைதமிவ பவதி ததிதர இதரம் பஷ்யதி) என்பது முதலியவை.
भाष्यम् - इदमविद्यायाः सतत्त्वं सह कार्येण प्रदर्शितम्, >विद्यायाश्च कार्यं सर्वात्मभावः प्रदर्शितोऽविद्याया विपर्ययेण। सा चाविद्या नात्मनः स्वाभाविको धर्मः- यस्माद् विद्यायमुष्कृष्य-माणायां स्वयमपचीयमाना सती, काष्द्भां गतायां विद्यायां परिनिष्द्भिते सर्वात्मभावे सर्वात्मना निवर्तते, रज्जामिव सर्पज्ञानं निवर्तते, रज्जामिव सर्पज्ञानं रज्जुनिश्चये। तच्चोक्तम्-“यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत केन कं पश्येत्” (बृ० उ० ४।५।१५)इत्यादि, तस्मान्नात्मधर्मोऽविद्या, न हि स्वभाविकस्योच्छित्तिः कदाचिद-प्युपपद्यते, सवितुरिवौष्ण्यप्रकाशयोः। तस्मात् तस्या मोक्ष उपपद्यते।।२०।।
अनुवादः -ச.பா-இந்த அவித்யையின் ஸ்வரூபம் அதன் தத்துவத்துடனும் காரியத்துடனும் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறே வித்யா, அதன் காரியமாகிய சர்வாத்ம பாவம் அவித்யைவிட வேறானதாகக் காண்பிக்கப்பட்டது. அந்த அவித்யா ஆத்மாவின் ஸ்வாபாவிக தர்மம் அல்ல. ஏன் எனில் வித்யை திடமாகும்பொழுது அவித்யா தானாகவே க்ஷீணமாகும்பொழுது பராகாஷ்ட்ட நிலையை அடையும்பொழுது வித்யா பூர்ணமாகும்பொழுது சர்வாத்மபாவம் சர்வாத்மவாய் திகழ்கிறது. ரஜ்ஜுவின் நிச்சய ஞானம் ஏற்பட்டவுடன் ரஜ்ஜுவில் சர்பஞானம் நீங்குவதுபோல் ஆகும். அதுவும் கூறப்பட்டுள்ளது.“यत्र >त्वस्य सर्वमात्मैवाभूत्तत केन कं पश्येत्”(யத்ர த்வஸ்ய சர்வமாத்மைவாபூத்தத்கேன கம்பஷ்யேத்) முதலியவை. ஆகையால் அவித்யா ஆத்ம தர்மம் அல்ல. மேலும் ஸ்வபாவமாய் இருந்தால் அதற்கு ஒரு நாளும் நாசம் உண்டாகாது. எவ்வாறு சூரியனின் ப்ரகாசம் இல்லாமல் போகாதோ அதுபோல் ஆகும். ஆகையால் அதிலிருந்து (அவித்யையில் இருந்து) மோக்ஷம் சம்பவிக்கும்.
भाष्यम् - इदानीं योऽसौ सर्वात्मभावो मोक्षो विद्याफलं क्रियाकारकफलशून्यम्, स प्रत्यक्षतो निर्दिश्यते, यत्राविद्या-कामकर्माणि न सन्ति। तदेतत् प्रस्तुतम्-“यत्र सुप्तो न कञ्चन कामं कामयते न कञ्चन स्वप्नं पश्यति” इति।
अनुवादः -ச.பா- அ.கை- இப்பொழுது அந்த சர்வாத்மபாவமான வித்யாபலம், கிரியாகாரக பல சூன்யமான அந்த மோக்ஷத்தை அவித்யா காமகர்மங்கள் இல்லாததாய் இருக்கிறதோ அதை பிரத்யக்ஷமாய் நிரூபணம் செய்யப்படுகிறது. அது இவ்வாறு துதிக்கப்படுகிறது -“यत्र सुप्तो न कञ्चन कामं कामयते न कञ्चन स्वप्नं पश्यति” (யத்ர சுப்தோ ந கஞ்சன காமம் காமயதே ந கஞ்சன ஸ்வப்னம் பஷ்யதி) என்று இவ்வாறு -
मन्त्रः - तद् वा अस्यैतदतिच्छन्दा अपहतपाप्माभय ँ रूपम्। तद् यथा प्रियया स्त्रिया सम्परिष्वक्तो न बाह्यं किञ्चन वेद नान्तर- >मेवमेवायं पुरुषः प्राज्ञेनात्मना सम्परिष्वक्तो न बाह्यं किञ्चन वेद नान्तरं तद् वा अस्यैतदाप्तकाममात्मकामकाम ँरूप ँशोकान्तरम्।। २१।।
अनुवादः - மந்திரம் - அந்த இது காமம் அற்றது, பாபமற்றது, அவ்வாறே அபயரூபம். வியவஹார காலத்தில் எவ்வாறு பிரியமான மனைவியை ஆலிங்கனம் செய்யும் புருஷனுக்கு வெளி ஞானம் இருக்காது. மேலும் உள்ளேயும் அறியமாட்டான். அவ்வாறு இந்த புருஷன் பிரக்ஞாத்மாவை ஆலிங்கனம் (அந்தமயமாகும் சமயம்) செய்யும்பொழுது வெளியில் உள்ள விஷயத்தையோ, உள்ளே உள்ள விஷயத்தையோ அறியமாட்டான். அதானால் அவன் ஆப்தகாமன், ஆத்மகாமன், அகாமன் மேலும் சோகம் அற்றவன்.
भाष्यम् - तदेतद् वा अस्य रूपम्- यः सर्वात्मभाव“सोऽस्य परमो लोकः” इत्युक्तः - तदतिच्छन्दा अतिच्छन्द-मित्यर्थः, रूपपरत्वात्, छन्दकामः, अतिगतश्छन्दो यस्माद्रूपात् तदतिच्छन्दं रूपम्, अन्योऽसौ सान्तश्छन्दःशब्दो गायत्रायदि-छन्दोवाची, अयं तु कामवचनः अतः स्वरान्त एव, तथाप्यतिच्छन्दा इति पाद्भः स्वाध्यायधर्मो द्रष्टव्यः। अस्ति च लोके कामवचन-प्रयुक्तश्छन्दशब्दः“स्वछच्छन्दः”“परच्छन्दः” इत्यादौ, अत“अतिच्छन्दम्”इत्येवमुपनेयम् कामवर्जितमेतद् रूपमि-त्यस्मिन्नर्थे।
अनुवादः -ச.பா-இதன் ரூபம் இதுவே - எந்த பரமாத்ம பாவமானது“सेऽस्य परमो लोकः”(சோ அஸ்ய பரமோ லோக:) என்று கூறப்பட்டதோ அது (அதிச்சந்தா அதாவது அதிச்சந்தம் என்பது பொருள். ஏன் எனில் அதிச்சந்த சப்த ரூபத்தின் விசேஷணமாகும். ச்சந்த: என்பது காமம். காமத்தைக் கடந்த ரூபமாய் இருப்பதால் அது அதிச்சந்தரூபம். வேறு“சா” வை(सान्तः)அந்தமாக உடைய (ஆகாராந்தி) சப்தம் காயத்திரி முதலியவைகளின் சந்தஸ் வாச்சியமாகும். ஆனால் இங்கு காம வசனமாகும். ஆனால் இது காம வசனம். ஆகையால் இது ஸ்வாரந்தம் ஆகும். ஆனாலும் அதிச்சந்தா என்ற இந்த பாடம் ஸ்வாத்யாய தர்மம் உடையது என்று அறியவேண்டும். உலகில்“स्वछच्छन्दः”“परच्छन्दः”முதலிய வாக்கியங்களில் சந்த(छन्दः)சப்தமானது காமத்தைக் குறிப்பதாகும். ஆகையால் காமம் நீங்கிய (அற்ற) ரூபம் என்பது அதிச்சந்தம்(अतिच्छन्दम्)என்பதை இவ்வாறு அறிந்துகொள்ள வேண்டும்.
भाष्यम् - तथापहतपाप्म पाप्मशब्देन धर्माधर्मावुच्येते,“पाम्पभिः संसृज्यते” (बृ० उ० ४।३।८)“पाप्मनो विजहाति” (४।३।८) इत्युक्तत्वात्, अपहतपाप्म धर्माधर्मवर्जितमित्येतत्।
अनुवादः -ச.பா-அவ்வாறே அபஹதபாப்மாவும். இங்கு பாப்ம சப்தத்தால் தர்மம், அதர்மத்தைக் குறிக்கிறது.“पाम्पभिः संसृज्यते”(பாப்மபி: சம்ச்ருஜ்யதே)“पाप्मनो विजहाति”(பாப்மனோ விஜஹாதி) என்று இந்த சுருதியில் கூறப்பட்டுள்ளதால் அபஹத பாப்ம என்பது தர்மா தர்மங்கள் >அற்றது என்பதாகும்.“अपहतपाप्म”(அபஹதபாப்ம)
भाष्यम् - किञ्च, अभयम्- भयं हि नामाविद्याकार्यम्,“अविद्यया भयं मन्यते” इति ह्युक्तम्। तत्कार्यद्वारेण कारण-प्रतिषेधोऽयम्, अभयं रूपमित्यविद्यावर्जितमित्येतत्। यदेतद् विद्याफलं सर्वात्मभावः, तदेतदतिच्छन्दापहतपाप्माभयं रूपम्- सर्वसंसारधर्मवर्जितम्, अतोऽभयं रूपमेतत्। इदं च पूर्वमेवोपन्य-स्तमतीतानन्तरब्राह्मणसमाप्तौ“अभयं वै जनक प्राप्तोऽसि” (४।२।४) इत्यागमतः। इह तु तर्कतः प्रपिञ्चतं दर्शितागमा-र्थप्रत्ययदार्ढाय।
अनुवादः - ச.பா- மேலும் அபயம் - பயம் என்பது அவித்யா காரியம்.“अविद्यया भयं मन्यते” (அவித்யயா பயம் மன்யதே) என்று கூறப்பட்டது. இது இந்த காரிய (அவித்யா) மூலமாய் காரணம் பிரதிஷேதம் செய்யப்பட்டது. அவித்யை இன்மையே அபயரூபம். எந்த அந்த வித்யாபலம் சர்வாத்மபாவமோ அது இந்த அதிச்சந்தம், அபஹதபாப்மா, அபயம் ரூபம். சர்வ சம்சாரதர்மம் அற்றது. ஆகையால் இது அபயரூபம். இதுவே இதற்கு முன் சென்ற பிராஹ்மணத்தின் முடிவில்“अभयं वै जनकः” (அபயம் வை ஜனக:) என்று ஆகமத்தால் வர்ணனை செய்யப்பட்டது. இப்பொழுது ஆகமத்தால் பிரதிபாதனம் செய்யப்பட்ட அர்தத்தை திடம் செய்வதற்காக தர்க்க மூலமாய் விவரிக்கிறார்.
भाष्यम् - अयमात्मा स्वयं चैतन्यज्योतिः स्वभावः, सर्वं स्वेन चैतन्यज्योतिषावभासयति- स यत्तत्र कििञ्चत् पश्यते, रमते चरति, जानाति चेत्युक्तम्, स्थितं चैतत्र्ययतो नित्यं स्वरूपं चैतन्यज्योतिष्ट्वमात्मनः।
अनुवादः - ச.பா- இந்த ஆத்மா ஸ்வயம் சைதன்ய ஜ்யோதி ஸ்வபாவமாகும். எல்லாவற்றையும் தன்னுடைய ஜ்யோதி ஸ்வரூபத்தால் விளக்குகிறது (ப்ரகாசிக்கச் செய்கிறது). அது எந்த அவஸ்தையில் சிறிதே காண்கிறதோ, ரமிக்கின்றதோ, சஞ்சரிக்கின்றதோ, என்று இவ்வாறு அறிகிறதோ (அது எல்லாவற்றுடனும் அசங்கமாய் இருக்கிறது) அதுவே ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூபம் என்று கூறப்பட்டது. இந்த நியாயத்தால் சைதன்ய ஜ்யோதி ஸ்வரூப ஆத்மா நித்யஸ்வரூபம் என்று நிச்சயம் செய்யப்படுகிறது.
भाष्यम् - स यद्यात्मा अत्राविनष्टः, स्वेनैव रूपेण वर्तते, कस्मादयम्-“अहमस्मीत्यात्मानं वा, बहिर्वा- इमानि भूतानीति” जाग्रत्स्वप्नयोरिव न जानाति? इत्यत्रोच्यते, श्रुण्वत्राज्ञानहेतुम्- एकत्वमेवाज्ञानहेतुः, तत् कथम्? इत्युच्यते। दृष्टान्तेन हि प्रत्यक्षीभवति विवक्षितोऽर्थ इत्याह-
अनुवादः - ச.பா- அந்த ஆத்மா இங்கு (சுஷுப்தி அவஸ்தையில்) நஷ்டமாகாமல் தன் ஸ்வரூபமாகவே இருக்கும் பொழுது எதனால் இது - நான் இருக்கிறேன் என்று தன்னையும், வெளியில் உள்ள இந்த பூதங்களையும் ஜாக்ர ஸ்வப்பனத்தில் உள்ளது போல் ஏன் அறிவது இல்லை? இங்கு அஞ்ஞானத்திற்கான ஹேது கூறப்படுகிறது கேள் - ஏகத்துவமே அஞ்ஞானத்திற்கு ஹேது. அது எவ்வாறு? கூறப்படுகிறது. திருஷ்டாந்தத்தால் விளக்கப்பட்ட பொருள் பிரத்யக்ஷமாகும் என்று கூறுகிறார் - (இங்கு ஏகத்துவம் என்றது அத்வைத திருஷ்டியில் அல்ல. சுஷுப்தியில் ஞானம் உண்டாகாது. இங்கு சித்தலயத்தைக் குறிக்கிறது)
भाष्यम् - तत्तत्र यथा लोके प्रिययेष्टया स्त्रिया सम्परिष्वक्तः सम्यक् परिष्वक्तः कामयन्त्या कामुकः सन् न बाह्यमात्मनः किञ्चन किञ्चदपि वेद- मत्तोऽन्यद् वस्त्विति, न चान्तरम् - अयमहमस्मि सुखी दुःखी वेति, अपरिष्वक्तस्तु तया प्रविभक्तो जानाति सर्वमेव बाह्यम् आभ्यन्तरं च, परिष्वङ्गोत्तरकालं त्वेकत्वापत्तेर्न जानाति- एवमेव यथा दृष्टान्तोऽयं पुरुषः क्षेत्रज्ञो भूतमात्रासंसर्गतः सैन्धवखिल्यवत् प्रविभक्तः जलादौ चन्द्रादिप्रतिबिम्बवत् कार्यकरण इह प्रविष्टः, सोऽयं पुरुषः, प्राज्ञेन परमार्थेन स्वाभाविकेन स्वेनात्मना परेण ज्योतिषा, सम्परिष्वक्तः सम्यक् परिष्वक्त एकीभूतो निरन्तरः सर्वात्मा, न बाह्यां किञ्चन वस्त्वन्तरम्, नाप्यान्तरमात्मनि- अयमहमस्मि सुखी दुःखी वेति वेद।
अनुवादः -ச.பா-இந்த விஷயத்தில் எவ்வாறு உலகில் தன்னில் காமத்தை உண்டாக்கக்கூடிய பிரியமான ஸ்திரீயுடன் காமுகன் சேரும் பொழுது வெளிவிஷயங்களையோ, தன்னைத்தவிர வேறு விஷயங்களையோ, அவ்வாறேஉள்ளே விஷயங்களாகிய சுக துக்கங்களையோ அறிவதில்லை. சேராத சமயத்தில் தனியாக இருந்து கொண்டு வெளி, உள் உள்ள எல்லா விஷயங்களையும் அறிகின்றான். ஆலிங்கனத்திற்குப் பின் ஏகத்துவத்தை அறிவதில்லை. அவ்வாறே இந்த திருஷ்டாந்தத்தைப் போல் க்ஷதே்ரக்ஞ புருஷன் பூதமாத்திரத்தின் சம்சர்க்கத்தால் உப்புக்கட்டிபோல் பிரிந்து, ஜலம் முதலியவைகளில் தோன்றும் சந்திரன் முதலியவைகளின் பிரிதிபிம்பம் போல் இந்த காரியகரணத்தில் (தேஹேந்திரியங்களில்) பிரவேசித்து இருக்கின்றான். அந்த இந்த புருஷனாகிய பிராக்ஞனால் (சுஷுப்த்தியில்) பரமார்த்த ஸ்வபாவிகமான தன்னுடை ஆத்மாவாகிய பரம்ஜ்யோதியினால் ஒன்றாகி (ஏகீபாவத்தை அடைந்து) தனக்கு அந்யமற்று சர்வாத்மா ஆனதால் அதற்கு வெளியிலேயோ, உள்ளேயோ வேறு வஸ்து இல்லை. அவ்வாறே தன்னை இது நான், சுகி, துக்கி என்று ஒன்றையும் அறிவதில்லை.
भाष्यम् - तत्र चैतन्यज्योतिः स्वभावत्वे कस्मादिह न जानातीति यदप्राक्षीः, तत्रायं हेतुर्मयोक्त एकत्वम्, यथा स्त्रीपुंसयोः सम्परिष्वक्तयोः। तत्रार्थान्नानात्वं विशेषविज्ञानहेतुरित्युक्तं भवति, नानात्वे च कारणम् आत्मनो वस्त्वन्तरस्य प्रत्युपस्थापिका-विद्येत्युक्तम्। तत्र चाविद्याया यदा प्रविविक्तो भवति, तदा सर्वेणैकत्वमेवास्य भवति, ततश्च ज्ञानज्ञेयादिकारकविभागे-ऽसति, कुतो विशेषविज्ञानप्रादुर्भावः कामो वा सम्भवति स्वाभाविके स्वरूपस्थ आत्मज्योतिषि?
अनुवादः -ச.பா-இந்த சுஷுப்த்தி அவஸ்தையில் சைதன்ய ஜ்யோதி ஸ்வரூபமாக இருந்தாலும் எதனால் அறியவில்லை? என்று கேட்டாயோ அதற்கு ஸ்திரீ, புருஷனின் ஆலிங்கன சமயத்தில் எவ்வாறு ஏகத்துவம் ஆகிறதோ அவ்வாறு என்று இந்த ஹேது கூறப்பட்டது. இதிலிருந்து சுயமாகவே அறிகிறோம் என்னவெனில் நாநாத்துவம் விசேஷ விக்ஞானத்துவமே ஹேதுவாகிறது. நாநாத்துவத்திற்கு காரணம் ஆத்மாவிற்கு பின்ன வஸ்து இருப்பதாக நினைப்பதற்குக் காரணம் அவித்யா என்று கூறப்பட்டது. எப்பொழுது அவித்யா விலகுகிறதோ அப்பொழுது எல்லாம் ஏகத்துவமாகிறது. ஸ்வாபாவிகமான ஸ்வரூபமாய் இருக்கும் ஆத்மஜோதியில் இருக்கும்பொழுது ஞானஞேய முதலிய காரகவிபாகம் இல்லாதபோது எவ்வாறு விசேஷ விக்ஞானம் உண்டாகிறது? அவ்வாறு காமனையும் எவ்வாறு ஏற்படும்?
भाष्यम् - यस्मादेवं सर्वेकत्वमेवास्य रूपम् अतस्तद् वा अस्यात्मनः स्वयंज्योतिः स्वभावस्यैतद् रूपमाप्तकामम्। यस्मात् समस्तमेतत्, तस्मादाप्ताः कामा अस्मिन् रूपे तदितमाप्तकामम्, यस्य ह्यन्यत्वेन प्रविभक्तः काम, तदनाप्तकामं भवति, यथा जागरितावस्थाया देवदत्तादिरूपम्, न त्विदं तथा कुतश्चित् प्रविभज्यते, अतस्तदाप्तकामं भवति।
अनुवादः - ச.பா- எதனால் இவ்வாறு எல்லாம் ஒன்றே (ஏகத்துவமே) அதன் ரூபம், ஆகையால் அந்த ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூப ஆத்மாவின் இந்த ரூபமே ஆப்த காமமாகும். எதனால் இது எல்லாமாக இருக்கிறதோ அதனால் எல்லாகாமனைகளும் அடையப்பட்டதாகிறது.(आप्तकामम्) இதுவே ஆப்த்த காமம். எந்த காமம் அந்யரூபமாய் பிரித்துக் காணப்படுகிறதோ அது அநாத்ம காமம் ஆகும். எவ்வாறு ஜாக்ரத் அவஸ்தையில் தேவதத்தன் முதலிய ரூபங்கள் வேறாய் காணப்படுகின்றனவோ அவ்வாறு இந்த ஆத்மதத்துவம் அதுபோன்று வேறாக ஆகாததால் ஆப்தகாமமாகும்.
भाष्यम् - किमन्यस्माद् वस्त्वन्तरान्न प्रविभज्यते? आहोस्विदात्मैव तद् वस्त्वन्तरम्? अत आह- नान्यदस्त्यात्मनः कथम्? यत आत्मकामम्- आत्मैव कामा यस्मिन् रूपे, अन्यत्र प्रविभक्ता इवान्यत्वेन काम्यमाना यथा जाग्रत्स्वप्नयोः, तस्यात्मैव अन्यत्वप्रत्युपस्थापकहेतोरविद्याया अभावात्- आत्मकामम्, अत एवाकाममेतद् रूपं काम्यविषयाभावात्, शोकान्तरं शोकच्छिन्द्रं शोकशून्यमित्येतत्, शोकमध्यमिति वा, सर्वथाप्यशोकमेतद् रूपं शोकवर्जितमित्यर्थः।।
अनुवादः - ச.பா- என்ன இது (ஆத்மா ஜ்யோதிர்மய ரூபம்) வேறு எந்த அந்நிய வஸ்துவைக் காட்டிலும் வேறா? அல்லது ஆத்மாவே வேறு அந்நிய வஸ்துவா? இதற்கு சுருதி கூறுகிறது - ஆத்மாவைக்காட்டிலும் அந்நியமாய் ஒன்றும் இல்லை. எவ்வாறு? எதனால் ஆத்மகாமமோ - எந்த ரூபத்திலும் ஆத்மாவே காமமோ. எவ்வாறு ஜாக்ரத் ஸ்வப்ன அவஸ்தைகளில் ஆத்மாவைக் காட்டிலும் வேறாக பிரிக்கப்பட்டது அந்நிய ரூபமாய் இருக்கும்பொழுது காமம் ஏற்படுகிறதோ அவ்வாறு சுஷுப்தியில் அந்நியத்தை வெளிப்படுத்தும் அவித்யா ரூபமாகிய ஹேது இல்லாததால் அதற்கு ஆத்மாவே காமம். ஆகையால் அந்த ரூபம் ஆத்ம காமம். ஆகையால் தான் காம்யவிஷயம் இல்லாததால் இது அகாமரூபம். சோகாந்தரம் என்பது சோக சூன்யம் என்பதாகும். மேலும் சோக அத்யம் அதாவது சோகம் அவனை துன்புறுத்தாது. ஏன் எனில் அதுவாகவே இருக்கிறது. அது எப்பொழுதும் அசோகமாகவே இருக்கிறது. அதாவது சோகம் அற்றது என்பது பொருள்.
भाष्यम् - अव - प्रकृतः स्वयंज्योतिरात्मविद्याकामकर्म-विनिर्मुक्त इत्युक्तम्, असङ्गात्वादात्मनः, आगन्तुकत्वाच्च तेषाम्। तत्रैवमाशङ्का जायते, चैतन्यस्वभावत्वे सत्यप्येकीभावान्न जानाति स्त्रीपुंसयोरिव सम्परिष्वक्तयोरित्युक्तम्, तत्र प्रासिङ्गकमेतदुक्तम्- >कामकर्मादिवत् स्वयंज्योतिष्ट्वमप्यस्यात्मनो न स्वभावः, यस्मात् सम्प्रसादे नोपलभ्यते इत्याशङ्कायां प्राप्तायं तन्निराकरणाय स्त्रीपुंसयोः दृष्टान्तोपादानेन विद्यमानस्यैव स्वयंज्योतिष्ट्वस्य सुषुप्तेऽग्रहणमेकीभावाद्धेतोः, न तु कामकर्मादिवदागन्तुकम्।
अनुवादः -ச.பா-இப்பொழுது எந்த விஷயத்தைக் குறித்து விளக்கப்படுகிறதோ அந்த சுவயம் ஜ்யோதி ஸ்வரூபம் ஆத்மா அவித்யா, காம, கர்மங்கள் அற்றது என்று கூறப்பட்டது. ஏன்எனில் ஆத்மா அசங்கம். அவை (அவித்யா முதலியவை) ஆகந்துகம் (நடுவில் வந்தது). இங்கு இந்த சங்கை எழுகிறது- சைதன்ய ஸ்வபாவமாய் இருந்தாலும் ஸ்திரீபுருஷ ஆலிங்கனம்போல் ஏகீபாவமாய் இருப்பதால் அறிவதில்லை என்று கூறப்பட்டது. இப்பொழுது விளக்கப்பட்டதை அனுசரித்து கூறப்பட்டது - இந்த ஆத்மாவிற்கு காம கர்மம் முதலியவைகள் போல் ஸ்வயம் ஜோதியும் ஸ்வபாவமல்ல. ஏன்எனில் அங்கு சம்பிரசாதம் அறியப்படவில்லை என்றசங்கை உண்டாகும்பொழுது அதை நிராகரணம் செய்வதற்காக ஸ்திரீபுருஷ திருஷ்டாந்தத்தால் ஏகீபாவ ஹேதுவால் சுஷுப்த்தியில் இருக்கும் ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூபத்தைக் க்ரஹிக்க முடிவதில்லை. ஏன்எனில் காம கர்மாதிகள் போல் ஆகந்துகம் அல்ல.
भाष्यम् - इत्येतत् प्रासिङ्गकमभिधाय यत् प्रकृतं तदेवानु-प्रवर्तयति। अत्र चैतत् प्रकृतम्- अविद्याकामकर्मविनिर्मुक्तमेव तद् रूपम्, यत् सुषुप्ते आत्मनो गृह्यते प्रत्यक्षत इति। तदेतद् यथाभूत-मेवाभिहितम् सर्वसम्बन्धातीतमेतद् रूपमिति, यस्मादत्रैतस्मिन् सुषुप्तस्थाने अतिच्छन्दापहतपाप्माभयमेतद् रूपम्, तस्मात्-
अनुवादः -ச.பா-இவ்வாறு தொடர்பு உடைய விஷயத்தை எதுவோ அது இந்த சந்தர்பத்தில் சுருதி எடுத்துக்காட்டுகிறது - அதன் ரூபம் அவித்யா காம கர்மம் அற்றதாய் சுஷுப்தியில் ஆத்மா பிரத்யக்ஷமாய் விளங்குகிறது என்று. அது எவ்வாறு உள்ளதோ அதுவே கூறப்பட்டது - எல்லா சம்பந்தங்களும் கடந்தது இந்த ரூபம் என்று. ஏன்எனில் இந்த சுஷுப்த்தி அவஸ்தையில் அதிச்சந்தமானதும் (காமமற்று) பாபமற்றதும். அபயமானதுமாய் இந்த ரூபம் இருக்கிறதோ ஆகையால் -
मन्त्रः - अत्र पितापिता भवति मातामाता लोका अलोका देवा अदेवा वेदा अवेदाः। अत्र स्तनोऽस्तेनो भवति भ्रूणहाभ्रूणहा चाण्डालोऽचाण्डालः पौल्कसोऽपौल्कसः श्रमणोऽश्रमणस्ता-पसोऽतापसोऽनन्वागतं पुण्येनानन्वागतं पापेन तीर्णो हि तदा सर्वाञ्छोकान् ह्य्दयस्य भवति।। २२।।
अनुवादः - மந்திரம் - இந்த சுஷுப்த்தி அவஸ்தையில் பிதா பிதா அற்றவனாகின்றான், மாதா மாதா அற்றவள் ஆகின்றாள். லோகம் அலோகமாகிறது. தேவன் அதேவனாகின்றான். வேதம் அவேதமாகின்றது. இங்கு திருடன் திருடன் அல்லாதவனாகின்றான். சிசு கொலைகாரன் சிசு கொலையற்றவனாகின்றான், சண்டாளன் அசண்டாளன் ஆகின்றான், புலஸ்தியன், புலஸ்தியன் அற்றவனாகின்றான். சிரமம் சிரமம் அற்றதாகிறது, தாபம் தாபமற்றதாகிறது. அந்த சமயத்தில் அந்த புருஷன் புண்யத்துடன் சம்பந்தப்படுவதில்லை. பாபத்துடனும் சம்பந்தபடுவது இல்லை. ருமலும் ஹ்ருதயம் முழுவதும் சோகத்தைத்தாண்ட செய்கிறது.
भाष्यम् - अत्र पिता जनकः- तस्य च जनयितृत्वाद् यत् पितृत्वं पुत्रं प्रति, तत् कर्मनिमित्तम्, तेन च कर्मणायमसम्बद्धोऽ-स्मिन् काले। तस्मात् पितापुत्रसम्बन्धनिमित्तात् कर्मणो विनिर्मुक्त-त्वात् पिताप्यपिता भवति, तथा पुत्रोऽपि पितुरपुत्रो भवतीति सामर्थ्याद् गम्यते, उभयोर्हि सम्बन्धनिमित्तं कर्म, तदयमतिक्रान्तो वर्तते,“अपहतपाप्म” इति (४।३।२१) ह्युक्तम्।
अनुवादः - ச.பா-இங்கு பிதாவானவர் ஜனகர் (ஜன்மம் அளிப்பவர்) - அவர் ஜன்மத்தை அளிப்பதால் புத்திரனை குறித்து பித்ருத்துவம். அது கர்ம நிமித்தத்தால் ஆகும். அந்த சமயத்தில் (சுஷுப்தியில்) அந்த கர்மங்களுடன் சம்பந்தம் அடைவதில்லை. ஆகையால் பிதாபுத்ர சம்பந்த நிமித்தமான கர்மத்திலிருந்து விடுபட்டதால் பிதா அபிதாவாகிறார். அவ்வாறே புத்திரனும் பிதாவிற்கு அபுத்திரனாகிறான். என்பது வாக்கிய சாமர்த்தியத்தால் அறிகிறோம். இருவருக்கும் சம்பந்த நிமித்தமாக கர்மம். அதைத்தாண்டி இருக்கிறது. அதுவே“अपहतपाप्म”என்று கூறப்பட்டுள்ளது.
भाष्यम् - तथा मातामाता, लोकाः कर्मणा जेतव्या जिताश्च- तत्कर्मसम्बन्धाभावाल्लोका अलोकाः। तथा देवाः कर्माङ्गभूताः- तत्कर्मसम्बन्धात्ययाद् देवा अदेवाः। तथा वेदाः साध्यसाधन-सम्बन्धाभिधायकाः, मन्त्रलक्षणाश्चाभिधायकत्वेन कर्माङ्गभूताः, अधीता अध्येतव्याश्च- कर्मनिमित्तमेव सम्बध्यन्ते पुरुषेण, तत्कर्मातिक्रमणादेतस्मिन् काले वेदा अप्यवेदाः सम्पद्यन्ते।
अनुवादः - ச.பா- அவ்வாறே மாதா அமாதா, லோகங்கள் கர்மங்களால் ஜெயிக்க வேண்டியது. அந்த கர்ம சம்பந்தம் இல்லாததால் அலோகங்கள். அவ்வாறே தேவர்கள் கர்மாங்கமானவர்கள் - கர்ம சம்பந்தம் இல்லாததால் தேவர்கள் அதேவர்களாகிறார்கள். அவ்வாறே வேதங்கள் சாத்ய சாதன சம்பந்தங்களை வர்ணனை செய்வதாயும் அபிதாயக ரூபத்தால் கர்மத்தின் அங்கபூத மந்திராத்மகமானது வேதம். மந்தர லக்ஷணமுடைய வேத வாக்கியங்கள் கர்மாங்கமாகும். அத்யயனம் செய்வது, அத்யயனம் செய்ய வேண்டியது கர்ம நிமித்தமாக புருஷனிடத்தில் சம்பந்தப்படுத்துகிறது. அந்த கர்மங்களைத் தாண்டி உள்ளதால் அந்த சமயத்தில் (சுஷுப்த்தி காலத்தில்) வேதங்கள். அவேதங்கள் ஆகின்றன.
भाष्यम् - न केवलं शुभकर्मसम्बन्धातीतः किं तर्हि? अशुभैरप्यत्यन्तघौरैः कर्मभिरसम्बद्ध एवायं वर्तत इत्येतमर्थमाह- अत्र स्तेनो ब्राह्मणसुवर्णहर्ता, भ्रूणघ्ना सह पाद्भादवगम्यते- स तेन >घोरेण कर्मणैतस्मिन् काले विनिर्मुक्तो भवति, येनायं कर्मणा महापातकी स्तेन उच्यते।
अनुवादः - ச.பா- கேவலம் சுபகார்ம சம்பந்தத்தை மட்டும் தாண்டி இருக்கவில்லை. அசுபகர்மங்களாகிய அத்யந்தகோர கர்மங்களிடம் இருந்து சம்பந்தம் அற்று இருக்கிறது என்பதை கூறுகிறது - இங்கு ஸ்தேனம் என்றது ப்ராஹ்மணர்களின் ஸ்வர்ணங்களை திருடுவது என்பதுभ्रूणघ्ना (ப்ரூணக்ன) என்ற பாடம் இருப்பதால் அறியப்படுகிறது. அந்த கோரமான கர்மங்களை அந்த சமயத்தில் இந்த மஹாபாதகமான கர்மா விநிர்முக்தமாகிறது.
भाष्यम् - तथा भ्रूणहाभ्रूणहा, तथा चाण्डालो न केवलं प्रत्युत्पेन्नेनैव कर्मणा विनिर्मुक्तः किं तर्हि? सहजेनाप्यत्यन्त-निकृष्टजातिप्रापकेणापि विनिर्मुक्त एवायम्, चाण्डालो नाम शूद्रेण ब्राह्मण्यामुत्पन्नश्चण्डाल एव चाण्डालः स जातिनिमित्तेन कर्मणासम्बद्धत्वादचांण्डालो भवति। पौल्कसः, पुल्कस एव पौल्कसः, शूद्रेणैव क्षत्रियायामुत्पन्नः, सोऽप्यपौल्कसो भवति।
अनुवादः - எவ்வாறு ஒரு உன்னத பிராஹ்மனைக் கொன்றவன் கொன்றவனாக ஆகமாட்டானோ அவ்வாறு சண்டாளனும் இப்பொழுது உண்டான கர்மங்களில் இருந்து மட்டும் விடுபடவில்லை இதற்குமுன் செய்த தன்னுடைய ஈன செயலால் ஈன பிறப்பிற்கு காரணமானதிலிருந்தும் விடுபடுகின்றான். சாண்டாளன் என்பது சூத்திரனாகியவனுக்கும் பிராஹ்மணப் பெண்ணுக்கும் பிறந்தவன். இதனால் ஏற்பட்ட இழு பிறவியாகிய சாண்டாளனும் இல்லை. பெளல்கலை: புல்கஸ புல்கஸனே பெளல்கஸ: என்பது சூத்ரதகப்பனுக்கும் க்ஷத்திரிய பெண்ணுக்கும் பிறந்தவன் புல்கஸன். அவனும் அப்புலஸ்கனாகின்றான்.
भाष्यम् - तथा आश्रमलक्षणैश्च कर्मभिरसम्बद्धो भवतीत्युच्यते, श्रमणः परिव्राट्- यत्कर्मनिमित्तो भवति, स तेन विनिर्मुक्तत्वादश्रमणः तथा तापसो वानप्रस्थोऽतापसः। सर्वेषां वर्णाश्रमादीनाम् उपलक्षणार्थमुभयोर्ग्रहणम्।
अनुवादः - ச.பா-அவ்வாறேஆஸ்ரம சம்பந்தமான கர்மங்களில் இருந்து சம்பந்தம் அற்று விடுபடுகிறார்கள். எப்பொழுது சிரமண:(श्रमणः)என்றால் பரிவிராட் எந்த நிமித்தத்தால் ஆகிறானோ அதிலிருந்து விடுபடுவதால் அஸ்ரமண: ஆகிறான். அவ்வாறேதபஸ்செய்யும் வான பிரஸ்த்தன் தபஸ் அற்றவனாகிறான். இந்த இரண்டு வர்ணங்களை எடுத்துக் கொண்டது உபலக்ஷணத்தின் பொருட்டாகும்.
भाष्यम् -किं बहुना? अनन्वागतम्- नान्वागतमनन्वगतम् असम्बद्धमित्येतत्, पुण्येन शास्त्रविहितेन कर्मणा, तथा पापेन विहिताकरणप्रतिषिद्धक्रियालक्षणेन, रूपपरत्वान्नपुंसकलिङ्गम्, >“अभयं रूपम्” इति ह्यनुवर्तते।
अनुवादः -ச.பா-அதிகம் கூறுவதால் என்ன? சம்பந்தம் அற்றது. அதாவது புண்யம் என்பது சாஸ்திர விஹித கர்மத்தால் வருவது. அதனுடன் சம்பந்தம் அற்று இருக்கிறது. அவ்வாறே விகிதகர்மாவை செய்யாததாலும், ப்ரதிஷித்த கர்மாவை செய்வதால் உண்டாகும் பாபத்துடனும் சம்பந்தம் இல்லை. ரூபபரத்துவமாய் இருப்பதால் நபும் சகலிங்கமாகும்.“अभयं रूपम्” (அபயம் ரூபம்) என்று அனுவிருத்தி ஆகிறது.
भाष्यम् - किं पुनरसम्बद्धत्वे कारणम्? इति तद्धेतुरुच्यते- तीर्णोऽतिक्रान्तः हि यस्माद् एवंरूपः, तदा तस्मिन् काले सर्वाञ्छोकान्- शोकाः कामाः, इष्टविषयप्रार्थना हि तद्विषयवियोगे शोकत्वमापद्यते। इष्टं हि विषयमप्राप्तं वियुक्तं चोद्दिश्य चिन्तयान-स्तद्गुणान् संतप्यते पुरुषः अतः शोकोऽरतिः काम इति पर्यायाः।
अनुवादः - ச.பா- மேலும் எதன் காரணமாக சம்பந்தப்படவில்லை? என்பதற்கு ஹேது கூறப்படுகிறது - அந்த சமயத்தில் எதனால் இந்த ரூபமாய் எல்லா சோகங்களையும் கடந்து இருக்கிறது. சோகங்கள் என்றால் காமனைகள். காமம் என்பது இஷ்டவஸ்துவை வேண்டுதலும், அது நஷ்டமானபின் சோகத்தை அடைகிறது. இஷ்டமான விஷயம் கிடைக்கவில்லையெனில் புருஷன் சோகத்தை அடைகிறான். ஆகையால் சோகம், அரதி, காமம் என்பவை பர்யாய பதங்களாகும்.
भाष्यम् - यस्मात् सर्वकामातीतो ह्यत्रायं भवति“न कञ्चन कामं कामयते” “अतिच्छन्दा” इति ह्युक्तम्, तत्प्रक्रियापतितोऽयं शोकशब्दः कामवचन एव भवितुमर्हते। कामश्च कर्महेतुः वक्ष्यति हि-“स यथाकामो भवति तत्क्रतुर्भवति यत्क्रतुर्भवति तत् कर्म कुरुते”इति। अतः सर्वकामातितीर्णत्वाद् युक्तमुक्तम्-“अनन्वागतं पुण्येन” इत्यादि।
अनुवादः - ச.பா- எதனால் இது எல்லா காமங்களையும் கடந்து இருக்கிறது.“न कञ्चन कामं कामयते” (ந கஞ்சணகாமம் காமயதே) இது அதிச்சந்தம் என்று கூறப்பட்டது. அந்த அந்த பிரக்கிரியையினால் உண்டான சோக சப்தம் காமவசம் ஆவது பொருத்தமாகும். காமம் கர்ம ஹேதுவாகும். இதை சுருதி கூறப்போகிறது -“स यथाकामो भवति तत्क्रतुर्भवति यत्क्रतुर्भवति तत् कर्म कुरुते” (ச யதாகாமோ பவதி தத்க்ரதுர்பவதி யத்க்ரதுர்பவதி தத் கர்ம இருதே) என்று ஆகையால் எல்லா காமங்களையும் கடந்துள்ளதால்-“अनन्वागतं पुण्येन” (அனன்வாகதம் புண்யேன) என்பது முதலியவைகளால் கூறியது பொருத்தமே.
भाष्यम् - ह्य्दयस्य- ह्य्दयमिति पुण्डरीककारो मांसपिण्डः, तत्स्थानमन्तः- करणं बुद्धिर्ह्य्दयमित्युच्यते, तात्स्थ्यात्, >मञ्चक्रोशन-वत्। ह्य्दयस्य बुद्धे ये शोकाः, बुद्धिसंश्रया हि ते,“कामः सङ्कल्पो विचिकित्सेत्यादि सर्वं मन एव” (१। ५। ३) इत्युक्तत्वात्। वक्ष्यति च-“कामायेऽस्य ह्य्दि श्रिताः” (४। ४। ७) इति।
अनुवादः - ச.பா- “ஹ்ருதயத்தின்” ஹ்ருதயம் என்றது புண்டரீக ஆகாரமான மாம்ச பிண்டமாகும். அதில் இருக்கும் அந்தக்கரணம் புத்தி அதில் இருப்பதால் மஞ்சம் கூவுகிறது என்பது போல் ஹ்ருதயம் எனப்படுகிறது. ஹ்ருதயத்தில் அதாவது புத்தியில் எந்த சோகங்கள் புத்தியை ஆஸ்ரயித்திருக்கும் அவைகள்“कामः सङ्कल्पो विचिकि-त्सेत्यादि सर्वं मन एव” (காம: சங்கல்போ விசிகித்சேத்யாதி சர்வம் மன ஏவ) என்று கூறப்பட்டுள்ளதால். இனி கூறப்படுகிறது-“कामायेऽस्य ह्य्दि श्रिताः”(காமாயேஅஸ்ய ஹ்ருதி ச்ரிதா:) என்று.
भाष्यम् - आत्मसंश्रयभ्रान्त्यपनोदाय हीदं वचनम्, ह्य्दि श्रिता ह्य्दयस्य शोका इति च ह्य्दयकरणसम्बन्धातीतश्चायमस्मिन् काले“अतिक्रामति मृत्यो रूपाणि” (४। ३। ७) इति ह्युक्तम्। ह्य्दयकरण-सम्बन्धातीतत्वात् तत्संश्रयकामसम्बन्धातीतो भवतीति युक्ततरं वचनम्।
अनुवादः -ச.பா-“ह्य्दि श्रिताः”(ஹிருதி ச்ரிதா:)“ह्य्दयस्य शोका”(ஹ்ருதயஸ்ய சோகா:) ஆகிய வசனங்ள் சோகம் முதலிய ஹ்ருதய கரண சம்பந்தங்களை கடந்து அது இருக்கும் அந்த சமயத்தில்“अतिक्रामति मृत्यो रूपाणि” (அதிக்ராமதி ம்ருத்யோ ரூபாணி) என்று கூறப்பட்டது. ஹ்ருதயகரண சம்பந்தத்தைக் கடந்து இருப்பதால் அதை ஆஸ்ரயித்து காம சம்பந்தத்தை கடந்து இருக்கிறது என்று கூறியது மிகப்பொருத்தமான வசனம் ஆகும்.
भाष्यम् - ये तु वादिनो ह्य्दि श्रिताः कामा वासनाश्च ह्य्दयसम्बन्धिनमात्मानमुपसुप्योपश्लिष्यन्ति, ह्य्दयविोगेऽपि च आत्मन्यवतिष्द्भन्ते पुटतैलस्थ इव पुष्पादि गन्ध इत्याचक्षते, तेषां“कामः सङ्कल्पः”(१। ५। ३)“ह्य्दये ह्येव रूपाणि”(३। ९। २०)“ह्य्दयस्य शोकाः” इत्यादीनां वचनानामानर्थक्यमेव।
अनुवादः - ச.பா- எந்த வாதிகள் ஹிருதயத்தை ஆஸ்ரயித்து இருக்கும் காமனைகளும் வாசனைகளும் ஹ்ருதய சம்பந்தத்தை உடைய ஆத்மாவை ஆலிங்கனம் செய்கிறது. ஹ்ருதயம் வியோகம் (இல்லாவிடினும்) ஆனாலும் புடதைலங்களில் (வாசனை திரவியங்களில்) புஷ்பம் முதலியவைகளில் இருப்பதுபோல் ஆத்மாவில் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.“कामः सङ्कल्पः” (காம: சங்கல்ப:)“ह्य्दये ह्येव रूपाणि” (ஹ்ருதயே ஹ்யேது ரூபாணி) “ह्य्दयस्य शोकाः” (ஹ்ருதயஸ்ய சோகா:) ஆகிய வசனங்கள் அந்தவாதிகளின் கூற்றுப்படி அநர்த்தகமாகி விடும் (அர்த்தமாற்றதாக ஆகிவிடும்).
भाष्यम् - ह्य्दयकरणोत्पाद्यत्वादिति चेद्, न,“ह्य्दि श्रिताः” इति विशेषणात्। न हि ह्य्दयस्य करणामात्रत्वे“ह्य्दि श्रिताः” इति वचनं समञ्चसम्,“ह्य्दये ह्येव रूपाणि प्रतिष्द्भितानि” इति च। आत्मविशुद्धेश्च विवक्षितत्वाद्धृच्छ्रयणवचनं यथार्थमेव युक्तम्, “ध्यायतीव लेलायतीव” इति च श्रुतेरन्यर्थासम्भवात्।
अनुवादः -ச.பா-காமம் முதலியவை ஹ்ருதயரூப கரணத்திலிருந்து உண்டானதால் (ஹிருதய சம்பந்தம்) அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன் எனில்“ह्य्दि श्रिताः”(ஹிருதயத்தில் இருக்கும்) என்றவிசேஷணம் உள்ளதால். ஹிருயத்தின் கரணமாத்திரமே அவை“ह्य्दि श्रिताः”என்றவசனமும்“ह्य्दये ह्येव रूपाणि प्रतिष्द्भितानि”என்றவசனமும் யதார்த்தமாகாது. ஆனால் ஆத்மாவின் விசுத்தியையும் விளக்கி இருப்பதால் ஹ்ருதயத்தை ஆஸ்ரயித்து இருக்கிறது என்பது பொருத்தமானதே. அதுவே“ध्यायतीव लेलायतीव”(த்யாயதீவ லோலாயதீவ) என்ற சுருதிக்கு வேறு அர்த்தம் சம்பவிக்க முடியாது.
भाष्यम् -“कामा येऽस्य ह्य्दि श्रिताः” इति विशेषणा-दात्माश्रया अपि सन्तीति चेन्न, अनाश्रितापेक्षत्वात्- नात्र आश्रयान्तरमपेक्ष्य ये ह्य्दीति विशेषणम्, किं तर्हि? ये ह्य्द्यनाश्रिताः कामास्तानपेक्ष्य विशेषणम्। ये त्वप्ररूढा भविष्या भूताश्च प्रतिपक्षतो निवृत्तास्ते नैव ह्य्दि श्रिताः। सम्भाव्यन्ते च ते, अतो >युक्तं तानपेक्ष्य विशेषणम्- ये प्ररूढा वर्तमाना विषये ते सर्वे प्रमुच्यन्त इति।
अनुवादः -ச.பா-“कामा येऽस्य ह्य्दि श्रिताः”(காம யே அஸ்ய ஹ்ருதி ஸ்ருதா:) என்ற விசேஷணத்தால் காமம் ஆத்மாவை ஆஸ்ரயித்திருக்கிறது என்பது இல்லை. ஏன் எனில் ஹிருதயத்தில் அநாஸ்ரித காமங்களை அபேக்ஷித்து - அங்கு“ये ह्य्दि”(யேஹ்ருதி) என்ற விசேஷணம் இல்லை. அவ்வாறானால் என்ன காரணம்? எந்த காமனை ஹ்ருதயத்தை ஆஸ்ரயிக்கவில்லையோ அதை அபேக்ஷித்து இந்த விசேஷணம். இனிவரும் காலத்தில் உண்டாகும் காமம் ஹிருதயத்தில் ஏற்றப்படுவதில்லை. அவ்வாறு இறந்தகாலத்தில் விரோதத்தின் காரணமாக நிவிர்த்தி ஆகிவிடுகின்றன. ஆகையால் அவை ஹிருதயத்தில் இருப்பது இல்லை. அவைகளின் சம்பாவனா இருந்தது. ஆகையால் அதனை அபேக்ஷித்து இந்த விசேஷணம் அளிக்கப்பட்டது - எவர்கள் நிகழ்காலத்தில் இருக்கும் விஷயங்களில் இருந்தும் விடுபடுகிறார்கள் என்பதாகும்.
भाष्यम् - तथापि विशेषणार्थक्यमिति चेन्न, तेषु यत्नाधिक्याद्धेयार्थत्वात्। इतरथा अश्रुतमनिष्टं च कल्पितं स्यादात्माश्रयत्वं कामानाम्।
अनुवादः -ச.பா-அவ்வாறு இருந்த போதிலும் இது விசேஷணார்த்த வாக்கியம் என்றால் அவ்வாறு அல்ல. அவைகளில் மிக முயற்சிசெய்து நீக்க வேண்டியதாய் உள்ளது. மாறாக விசேஷணம் இல்லாவிடின் காமங்களுக்கு ஆத்மாஸ்ரயத்துவம் ஆனது கேட்கப்படாததும், இஷ்டம் அல்லாததும் கல்பிக்கப்பட்டதாக ஆகும்.
भाष्यम् -“न कञ्चन कामं कामयते” इति प्राप्तप्रतिषेधा-दात्माश्रयत्वं कामानां श्रुतमेवेति चेन्न,“सधीः स्वप्नो भूत्वा” इति परनिमित्तत्वात् कामाश्रयत्वप्राप्तेः। असङ्गवचनाच्च, न हि कामाश्रयत्वेऽसङ्गवचनमुपपद्यते, सङ्गश्च काम इत्यवोचाम।
अनुवादः - ப்ரதிஷேதம் அடைவது வஸ்துவிற்கு ஏற்படுகிறது. ஆகையால்“न कञ्चन कामं कामयते” (ந கஞ்சன காமம் காமயதே) என்று ப்ரதிஷேதம் செய்யப்படுவதால் காமனைகள் ஆத்மாவை ஆஸ்ரயிக்கிறது என்பது சுருதி சம்மதம் எனில் அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன்எனில்“सधीः स्वप्नो भूत्वा” (சதீ: ஸ்வப்னோ பூத்வா) என்று வேறு நிமித்தமாய் இருப்பதால் ஆத்மாவிற்கு காமாஸ்ரயப்பிராப்த்தி வேறு (புத்தியின்) காரணத்தால் ஆகும். ஆத்மா அசங்கம் என்று கூறப்பட்டது சித்திக்கிறது. காமத்திற்கு ஆஸ்ரய பூதமாய் இருக்கும் என்றால் ஆத்மா அசங்கம் என்று கூறுவது உசிதமாகாது. சங்கமே காமம் என்று கூறியுள்ளோம்.
भाष्यम् -“आत्मकामः”इति श्रुतेरात्मविषयोऽस्य कामो भवतीति चेन्न, व्यतिरिक्तकामाभावार्थत्वात्तस्याः। वैशेषिकादित-न्त्रन्यायोपपन्नमात्मनः कामाद्याश्रयत्वमिति चेन्न,“ह्य्दि श्रिताः” इत्यादि विशेषश्रुतिविरोधादनपेक्ष्यास्ता वैशेषिकादितन्त्रोपपत्तयः, श्रुतिविरोधे न्यायाभासत्वोपगमात्।
अनुवादः -ச.பா-“आत्मकामः”(ஆத்மகாம:) என்று சுருதியின் ஆத்ம விஷயத்தில் காமம் உண்டாகிறது என்பது இல்லை. ஏன்எனில் சுருதிக்கு ஆத்மாவைத் தவிர மற்றவைகளில் காமத்தின் அபாவத்தைத் தெரிவிப்பதற்காகவே ஆகும். வைசேஷிகர்கள் முதலியவர்கள் தந்திரம், நியாயம் ஆகியவைகளைக் கொண்டு ஆத்மாவிற்கு காமாஸ்ரியத்துவம் கூறுவது பொருந்தாது. ஏன் எனில்“ह्य्दि श्रिताः” (ஸ்ருதி ஸ்ரிதா:) என்பது முதலிய விசேஷ சுருதிக்கு விரோதமாவதால் வைசேஷிகர்கள் முதலியோரது தந்திரம், யுக்தி முதலியவைகள் தள்ளப்பட வேண்டியவை (அபேக்ஷிக்க வேண்டியவை) களாகும். சுருதிக்கு விரோதமாவதால் அவைகள் நியாய ஆபாசங்களாகும்.
भाष्यम् - स्वयंज्योतिष्ट्वबाधनाच्च, कामादीनां च स्वप्ने केवलदृशिमात्रविषयत्वात् स्वयंज्योतिष्ट्वं सिद्धं स्थितं च बाध्येत, आत्मसमवायित्वेदृश्यत्वानुपपत्तेः, चक्षुर्गतविशेषवत्। द्रष्टुर्हि दृश्यमर्थान्तरभूतमिति द्रष्टुः स्वयंज्योतिष्ट्वं सिद्धम्। तद् बाधितं स्याद् यदि कामाद्याश्रयत्वं परिकल्प्येत।
अनुवादः - ச.பா- இதைத்தவிர அவ்வாறானால் ஆத்மாவின் ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூபம் பாதிக்கப்படும். ஸ்வப்னத்தில் காமம் முதலியவை விஷயங்கள் கேவலம் சாக்ஷிமாத்திர விஷயமாவதால் ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூபம் சித்திப்பதும் பாதிக்கப்படும். ஏன் எனில் அவைகள் ஆத்மாவுடன் சமவாயசம்பந்தம் இருக்கும் பொழுது அவைகள் ஆத்மாவிற்கு திருஷ்யமாக முடியாது. எவ்வாறு கண்களில் உள்ள வெண்மையும், கருமையும் ஆகிய விசேஷம் கண்களுக்கு விஷயமாகாதோ அவ்வாறு. திருஷ்ட்டாவைவிட திருஷ்யம் வேறு பதார்த்தமாகிறது. ஆகையால் பிரஹ்மத்திற்கு ஸ்வயம் பிரகாசத்துவம் சித்திக்கின்றது. ஆகையால் ஆத்மாவில் காம ஆஸ்ரயித்துவத்தைக் கல்பனை செய்தால் அது பாதிக்கப்படும்.
भाष्यम् - सर्वशास्त्रार्थविप्रतिषेधाच्च। परस्यैकदेशक-ल्पानायां कामाद्याश्रयत्वे च सर्वशास्त्रार्थजातं कुप्येत। एतच्च विस्तरेण चतुर्थेऽवोचाम। महता हि प्रयत्नेन कामाद्याश्रयत्व-कल्पनाः प्रतिषेद्धव्याः, आत्मनः परेणैकत्वशास्त्रार्थसिे। तत्कल्पनायां पुनः क्रियमाणायां शास्त्रार्थ एव बाधितः स्यात्। यथेच्छादीनामात्मधर्मत्वं कल्पयन्तो वैशषिका नैयायिकाश्च उपनिषच्छास्त्रार्थेन न सङ्गच्छन्ते, तथेयमपि कल्पनोपनिषच्छा-स्त्रार्थबाधनान्नादरणीया।
अनुवादः - ச.பா- மேலும் எல்லா சாஸ்திரங்களுக்கும் விரோதமாவதாலும் பரமாத்மா ஏகதேசம் என்றும் காமம் முதலியவைகளின் ஆஸ்ரயத்துவங்களின் கல்பனைகள் எல்லா சாஸ்த்திரார்த்த தாத்பரியத்திற்கு விரோதமாகும். இதைக் குறித்து நான்காவதில் (அதாவது உபநிஷத்தின் இரண்டாவது அத்யாயத்தில்) விஸ்தாரமாகக் கூறப்பட்டது. மிகவும் பிரயாசைப்பட்டு காமம் முதலிய ஆஸ்ரயத்துவ தர்மங்களை நீக்க வேண்டும். அந்த கல்பனைகள் மீண்டும் செய்தால் சாஸ்த்திரார்த்தம் பாதிக்கப்படும். எவ்வாறு வைஷேஷிகர்கள், நையாயிகர்கள் முதலியவர்கள் ஆத்மதர்மத்துவமாக கல்பனை செய்கின்றார்கள். அது உபநிஷத் சாஸ்த்திரத்தின் தாத்பர்யத்துடன் பொருந்தாது. அவ்வாறே இந்த கல்பனையும் உபநிஷத் சாஸ்ராத்தத்தை பாதிக்கக்கூடியதாய் இருப்பதால் இதை ஆதரிக்கக் கூடாது.
भाष्यम् - अव - शङ्का - स्त्रीपुंसयोरिवैकत्वान्न पश्यती-त्युक्तम्, स्वयंज्योतिरिति च स्वयंज्योतिष्ट्वं नाम चैतन्यात्म-स्वभावता। यदि हि अग्न्युष्णत्वादिवच्चैतन्यात्मस्वभाव आत्मा स कथमेकत्वेऽपि हि स्वभावं जह्यात्, न जानीयात्? अथ न जहाति, >कथमिह सुषुप्ते न पश्यति? विप्रतिषिद्धमेतत्- चैतन्यमात्मस्वभावो न जानाति चेति।
अनुवादः - ச.பா- அ.கை- ஸ்த்ரீபுருஷ ஐக்யத்தினால் ஒன்றும் பார்ப்பது இல்லை என்று கூறப்பட்டது. அது ஸ்வயம் ஜ்யோதி என்றும் கூறப்பட்டது. ஸ்வயம் ஜ்யோதி என்பது சைதன்ய ஆத்மஸ்வபாவம். அக்னி உஷ்ணம் முதலியவைகளைப் போல சைதன்ய ஆத்ம ஸ்வபாவ ஆத்மா ஏகத்துவமாய் இருந்து கொண்டே ஸ்வபாவத்தை எவ்வாறு விடும்? எவ்வாறு அறியாமல் இருக்கும்? ஆகையால் அது ஸ்வப்பனத்தில் விடுவதும் இல்லையா? பார்ப்பது இல்லையா? சைதன்ய ரூபம் மற்றதைக்காணது என்பது விருத்தமாகும்.
भाष्यम् - समाधानम् - न विप्रतिषिद्धम्, उभयमप्येत-दुपपद्यत एव। कथम्-
अनुवादः - ச.பா- விரோதம் அல்ல. இந்த இரண்டும் சம்பவிக்கும். எவ்வாறு எனில் -
मन्त्रः - यद् वै तन्न पश्यति पश्यन् वै तन्न पश्यति न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वात्। न तु तद्द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्त यत् पश्येत्।। २३।।
अयदा पुनरेतमात्मानमनुवादः - மந்திரம்- அது பார்க்காமலேயே பார்த்துக்கொண்டே பார்க்கவில்லை. திருஷ்டாவின் திருஷ்டி ஒரு நாளும் இல்லாமல் போகாது. ஏன் எனில் அவிநாசி. அந்த சமயத்தில் அதை விட வேறான இரண்டாவது வஸ்து இல்லை. அதனால் பார்ப்பதற்கு.
भाष्यम् - यद् वै सुषुप्ते तत्र पश्यति पश्यन् वै तत्, तत्र पश्यन्नेव न पश्यति। यत् तत्र सुषुप्ते न पश्यतीति जानीषे तन्न तथा गृणीयाः, कस्मात्? पश्यन् वै भवति तत्र।
अनुवादः - ச.பா- எது சுஷுப்த்தியில் அதைப் பார்க்காதோ அது பார்த்துக்கொண்டு இருக்கிறது. அந்த அவஸ்தையில் பார்த்துக்கொண்டே இருந்தும் பார்ப்பதில்லை. எது அங்கு சுஷுப்த்தியில் பார்க்கிறது என்று நினைக்காதே. அவ்வாறே கிரஹிப்பதும் ஏன்? அங்கு பார்த்துக்கொண்டே இருக்கிறது.
भाष्यम् - शङ्का - नन्वेवं न पश्यतीति सुषुप्ते जानीमो यतो न चक्षुर्वा मनो वा दर्शने करणं व्यापृतमस्ति। व्यापृतेषु हि दर्शनश्रवणादिषु पश्यतीति व्यवहारो भवति श्रुणोतीति वा। न च व्यापृतानि करणानि पश्यामः, तस्मान्न पश्यत्येवायम्।
अनुवादः - ச.பா- சங்கை- ஆனால் சுஷுப்த்தியில் இவ்வாறு பார்க்கவில்லை என்று அறிகிறோம். ஏன்எனில் அங்கு தர்சனத்திற்குக் காரணமான கண்களோ, மனமோ அவைகளின் வியாபாரமோ இல்லை. தர்சன சிரவண முதலிய இந்திரியங்களின் வியாபாரம் ஏற்படும்பொழுது பார்க்கிறது, கேட்கிறது என்பது முதலிய வியாபாரம் ஏற்படுகிறது. இங்கு நாம் இந்திரியங்களின் வியாபாரம் இல்லை ஆகையால் பார்க்க முடியவில்லை. ஆகையால் அது பார்ப்பது இல்லை.
भाष्यम् - समाधानम् - न हि, किं तर्हि? पश्यन्नेव भवति, कथम्? न हि यस्माद् द्रष्टुर्दृष्टिकर्तुर्या दृष्टिस्तस्या दृष्टेर्विपरिलोपो विनाशः, स न विद्यते। यथाग्नेरौष्ण्यं यावदग्निभावि, तथायं चात्मा द्रष्टाविनाशी, अतोऽविनाशित्वादात्मनो दृष्टिरप्यविनाशिनी, यावद्द्रष्टुभाविनी हि सा।
अनुवादः - ச.பா- சமாதானம்- அவ்வாறு அல்ல. ஆனால் என்ன? பார்த்துக்கொண்டே எவ்வாறு இருக்கிறது. எதனால் திருஷ்டாவின் திருஷ்டிக்கிரியா கர்த்தாவின் எந்த திருஷ்டியோ அது நாசம் அற்றது. எவ்வாறு அக்னியின் உஷ்ணம் அக்னி உள்ளவரை இருக்குமோ அவ்வாறு இந்த ஆத்மா திருஷ்டா அவிநாசி ஆகையால் ஆத்மா அவிநாசியாய் இருப்பதால் திருஷ்டியும் அவிநாசி. எதுவரை திருஷ்டா உள்ளதோ அது வரை அது உள்ளதாகும்.
भाष्यम् - शङ्का - ननु विप्रतिषिद्धमिदमभिधीयते द्रष्टुः सा दृष्टिर्न विपरिलुप्यत इति च। दृष्टिश्च द्रष्टा क्रियते, दृष्टिकर्तृत्वाद्धि द्रष्टेत्युच्यते, क्रियमाणा च द्रष्टा दृष्टिर्न विपरिलुप्यत इति चाशक्यं वक्तुम्। ननु न विपरिलुप्यत इति वचनादविनाशिनी स्यात्, न वचनस्य ज्ञापकत्वात्। न हि न्यायप्राप्तो विनाशः कृतकस्य वचनशतेनापि वारयितुं शक्यते, >वचनस्य यथाप्राप्तार्थज्ञापकत्वात्।
अनुवादः - ச.பா- சங்கை- ஆனால் த்ருஷ்டாவின் த்ருஷ்டி லோபம் அடையாது என்பது பரஸ்பரம் விருத்தமாகும். திருஷ்டியானது திருஷ்டா மூலமாக ஏற்படுகிறது. த்ருஷ்டியின் கர்த்தா ஆவதால் அது த்ருஷ்டா எனப்படுகிறது. த்ருஷ்டா மூலமாக த்ருஷ்டி அறியப்படுகிறது. அதற்கு லோபமும் ஏற்படுவது இல்லை என்று கூறுவது பொருத்தமல்ல. ஆனால் லோபம் அடைவதில்லை என்ற வசனம் ஞாபகத்துவமாய் இருப்பதால் அவிநாசி என்பது சரியல்ல. செய்யப்பட்டதின் நாசம் என்ற நியாயத்தால் ஏற்பட்ட வசனம் எவ்வாறு அடைப்பட்டதோ அதனை ஞாபகப்படுத்துவதே யாகும். ஆகையால் நூ ற்றுக்கணக்கான வசனங்களாலும் நீக்க முடியாது.
भाष्यम् - समाधानम् - नैष दोषः, आदित्यादिप्रकाश-कत्ववद् दर्शनोपपत्तेः, यथा आदित्यादयो नित्यप्रकाशस्वभावा एव सन्तः स्वाभाविकेन नित्येनैव प्रकाशेन प्रकाशयन्ति, न ह्यप्रकाशात्मानः सन्तः प्रकाशं कुर्वन्तः प्रकाशयन्तीत्युच्यन्ते, किं तर्हि? स्वभावेनैव नित्येन प्रकाशेन। तथायमप्यात्मा अविपरिलुप्तस्वभावया दृष्टा नित्यया द्रष्टेत्युच्यते।
अनुवादः - ச.பா- இந்த தோஷம் இல்லை. சூரியன் முதலிய ப்ரகாசம் போல் தர்சனம் உண்டாகிறது. எவ்வாறு சூரியன் முதலியவைகள் நித்ய ப்ராகாச ஸ்வபாவமாய் இருந்துகொண்டு ஸ்வபாவிகமான நித்யமானதுமான ப்ரகாசத்தால் பிரகாசிக்கக் செய்கின்றதோ அவ்வாறு பிரகாசமற்றதாய் இருந்து கொண்டு மற்றொன்றால் பிரகாசம் செய்து கொண்டு மற்றதை பிரகாசிப்பிக்கிறது என்று கூறவில்லை. ஆனால் என்ன? ஸ்வபாவமான நித்யமான பிரகாசத்தால் ஆகும். அவ்வாறே இந்த ஆத்மாவும் அவிநாசிரூப நித்ய திருஷ்டியினால் திருஷ்டா எனப்படுகிறது.
भाष्यम् - शङ्का - गौणं तर्हि द्रष्टृत्वम्
अनुवादः - ச.பா- சங்கை- ஆனால் த்ருஷ்ருத்துவம் கெளணமாகும்?
भाष्यम् - समाधानम् - न, एवमेव मुख्यत्वोपपत्तेः, यदि ह्यन्यथाप्यात्मनो द्रष्टृत्वं दृष्टम्, तदास्य द्रष्टृत्वस्य गौणत्वम्, न त्वात्मनोऽन्यो दर्शनप्रकारोऽस्ति, तदेवमेव मुख्यं द्रष्टृत्वमुपपद्यते नान्यथा- यथा आदित्यादीनां प्रकाशयितृत्वं नित्येनैव स्वभाविकेनाक्रियमाणे न प्रकाशेन, तदेव च प्रकाशयितृत्वं मुख्यं प्रकाशयितृत्वान्तरानुपपत्तेः, तस्मान्न“द्रष्टुर्दृष्टिर्विपरिलुप्यते” इति न विप्रतिषेधगन्धोऽप्यस्ति।
अनुवादः - ச.பா- அவ்வாறு அல்ல. ஏன்எனில் இதில் முக்யத்துவம் சித்திக்கிறது. ஆத்மாவிற்கு த்ரஷ்டாத்துவம் வேறு பிரகாரமாக இருந்தால் திரஷ்ட்ருத்துவத்திற்கு கெளணத்துவம் சித்திக்கும். ஆனால் ஆத்மாவின் தர்சனம் வேறு ஒன்றாலும் இல்லை. ஆகையால் இவ்வாறு ஆத்மாவிற்கு முக்கிய திரஷ்ட்ருத்துவம் சித்திக்கிறது. வேறு ஒன்றால் அல்ல. எவ்வாறு ஆதித்யன் முதலியவைகளின் பிரகாசப்படுத்துதல் நித்யமாய் ஸ்வபாவிகமான கிரியை அற்ற பிரகாசத்தாலோ அவ்வாறே பிரகாசப்படுத்துதல் முக்கியமாகும். வேறு அந்நிய பிரகாசப்படுத்துவது இல்லை. ஆகையால் திருஷ்டாவின் திருஷ்டி எவ்விதத்திலும் லோபம் இல்லை என்ற கூற்றில் வாசனைக்கு கூட எந்த சிறிது விரோதமும் இல்லை.
भाष्यम् - शङ्का - ननु- अनित्यक्रियाकर्तृविषय एव तृच्प्रत्ययान्तस्य शब्दस्य प्रयोगो दृष्टः, छेत्ता भेत्ता गन्तेति, तथा द्रष्टेत्यन्नापीति चेत्?
अनुवादः - ச.பா- சங்கை- அநித்திய கிரியா கர்த்ரு விஷயமே த்ருச் பிரத்யய முடிவு உடைய பிரயோகம் காணப்படுகிறது. அவ்வாறே வெட்டுவது, உடைப்பது, செல்வது என்பவைகளில், அவ்வாறே த்ருஷ்டாவும் ஆகுமே?
भाष्यम् - समाधानम् - न, प्रकाशयितेति दृष्टत्वात्।
अनुवादः - ச.பா- சமாதனம்- அவ்வாறு அல்ல, ஏன்எனில் (நித்ய பிரகாச ஸ்வரூப ஆதித்யன் விஷயத்தில்) பிரகாசிக்கச் செய்வது என்ற பிரயோகம் இருப்பதால்.
भाष्यम् - शङ्का - भवतु प्रकाशकेष्वन्यथासम्भवात्, न त्वात्मनीति चेत्?
अनुवादः -ச.பா-சங்கை- பிரகாசங்களில் வேறு சம்பாவிக்காததால் உண்டாகலாம். ஆனால் ஆத்மாவில் எனில்?
भाष्यम् - समाधानम् - न, दृष्टविपरिलोपश्रुतेः।
अनुवादः - ச.பா- சமாதானம்- அவ்வாறு அல்ல. ஏன்எனில் ஆத்ம திருஷ்டிக்கு லோபம் இல்லை என்பதை சுருதி பிரதிபாதனம் செய்கிறது.
भाष्यम् - शङ्का - पश्यामि न पश्यामीत्यनुभवदर्शनान्नेति चेत्?
अनुवादः - ச.பா- சங்கை- பார்க்கிறேன் பார்க்கவில்லை என்ற அனுபலம் காணப்படுவதால் எனில்?
भाष्यम् - समाधानम् - न, करणव्यापारविशेषापेक्षत्वात्, उद्धृतचक्षुषां च स्वप्ने आत्मदृष्टेरविपरिलोपदर्शनात्। तस्मादवि-परिलुप्तस्वभावैवात्मनो दृष्टिः, अतस्तयाविपरिलुप्तया दृष्टा स्वयंज्योतिःस्वभावया पश्यन्नेव भवति सुषुप्ते।
अनुवादः - ச.பா- சமாதானம்- அவ்வாறு அல்ல. ஏன்எனில் கரண வியாபாரம் அபேக்ஷிப்பதால். யவப்னத்தில் சுஷு இல்லாவிடினும் ஆத்மதிருஷ்டி லோபம் அடைவது இல்லை என்பது காணப்படுவதால். ஆகையால் ஆத்மாவின் திருஷ்டி எப்பொழுதும் லோபம் (நஷ்டம்) அடையாத ஸ்வபாவமுடையது. ஆகையால் அவிநாசி திருஷ்டியால் ஸ்வப்பனத்தில் ஸ்வயம் ஜ்யோதி சுவபாவமாக பார்த்துக் கொண்டே இருக்கிறது.
भाष्यम् - शङ्का - कथं तर्हि न पश्यतीति?
अनुवादः - ச.பா- சங்கை- ஆனால் எவ்வாறு பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது?
भाष्यम् - समाधानम् - उच्यते- न तु तदस्ति। किं तत्? द्वितीयं विषयभूतम्। किं विशिष्टम्? ततो द्रष्टुरन्यदन्यत्वेन विभक्तं यत् पश्येद् यदुपलभेत। यद्धि तद्विशेषदर्शनकारणमन्तःकरणं चक्षूरूपं च, तदविद्ययान्यत्वेन प्रत्युपस्थापितमासीत्। तदेतस्मिन् काल एकीभूतम्, आत्मनः परेण परिष्वङ्गात्। द्रष्टुर्हि परिच्छिन्नस्य विशेषदर्शनाय करणमन्यत्वेन व्यवतिष्द्भते। अयं तु स्वेन सर्वात्मना सम्परिष्वक्तः स्वेन परेण सर्वात्मना सम्परिष्वक्तः स्वेन परेण प्राज्ञेनात्मना प्रिययेव पुरुषः, तेन न पृथक्त्वेन व्यवस्थितानि करणानि विषयाश्च। तदभावाद् विशेषदर्शनं नास्ति, करणादिकृतं हि तन्नात्मकृतम्, आत्मकृतमिव प्रत्यवभासते, तस्मात् तत्कृतेयं भ्रान्तिरात्मनो दृष्टिः परिलुप्यत इति।
अनुवादः - ச.பா- கூறப்படுகிறது - அங்கு அது வஸ்துவே அல்ல. ஆனால் யார்? வேறு விஷயமுடைய வஸ்து. அது எந்த விசேஷத்துடன் கூடியது? அந்த திருஷ்டாவிற்கு அந்யமாக பிரிக்கப்பட்டு (விபக்த்தமாகி) எதைப் பார்க்கிறதோ அது அறியப்படும். அந்த விசேஷ தர்சன காரணமான அந்தக்கரணம் சக்ஷுரூபமும் அந்த வித்யையினால் அந்யரூபமாய் தோன்றியது. அப்பொழுது பரமான ஆத்மாவின் பரிஷ்வங்கத்தால் (ஆலிங்கத்தால்) தன் பிரியமான ஆலிங்கத்தால் புருஷனுக்கு ஏற்படுவது போல் ஏக ரூபமாயிற்று. ஆகையால் கரணங்களோ விஷயங்களோ வேறாக இல்லை. அது இல்லாததால் விசேஷ தர்சனம் இல்லை. அவை கரணங்களால் உண்டாக்கப்பட்டவை. ஆத்மாவால் உண்டாக்கப்பட்டவைகள் அல்ல. ஆத்மா செய்வதுபோல் தோன்றுகிறது. ஆகையால் அந்த ப்ராந்தியினால் ஆத்மாவின் த்ருஷ்டாவிற்கு லோபம் ஏற்படுகிறது.
मन्त्रः - यद् वै तन्न जिघ्राति जिघ्रान् वै तन्न जिघ्राति न हि घ्राातुघ्र्राातेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वान्न तु तद् द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्तं यज्जिघ्रोत्।। २४।। यद् वै तन्न रसयते रसयन् वै तन्न रसयते न हि रसयितू रसयतेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वान्न तु तद् द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्तं यद् रसयेत्।। २५।। यद् वै तन्न वदति वदन् वै तन्न वदति न हि वक्तुर्वक्तेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वान्न तु तद् द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्तं यद् वदेत्।। २६।। यद् वै तन्न श्रुणोति श्रुण्वन् वै तन्न श्रुणोति न हि श्रोतुः श्रुतेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वान्न तु तद् द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्तं यच्छृणुयात्।। २७।। यद् वै तन्न मनुते मन्वानो वै तन्न मनुते न हि मन्तुर्मतेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वान्न तु तद् द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्तं यन्मन्वीत।। २८।। यद् वै तन्न स्पृशति स्पृशन् वै तन्न स्पृशति न हि स्प्रष्टुः स्पृष्टेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वान्न तु तद् द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्तं यत् स्पृशेत्।। २९।। यद् वै तन्न विजानाति विजानन् वै तन्न विजानाति न हि विज्ञातुर्विज्ञातेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वान्न तु तद् द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्तं यद् विजानीयात्।। ३०।।
अनुवादः - மந்திரங்கள்- எது முகராமல் முகர்ந்தும் முகர்வதில்லை. முகர்வதின் வாசனையை கிரஹண சக்தி எவ்வகையிலும் லோபம் ஏற்படுவதில்லை. ஏன் எனில் அவிநாசி. இந்த அவஸ்தையில் அதைத்தவிர வேறான இரண்டாவது வஸ்து இல்லை முகர்வதற்கு (24). அது ருசிக்காமல் ருசித்துக் கொண்டே ருசிப்பதில்லை. ரசத்தை ருசிக்கும் ரசத்தைக் க்ரஹிக்கும் ரசத்தை க்ரஹணசக்திக்கு எவ்வகையிலும் லோபம் அடைவது இல்லை. ஏன் எனில் அது அவிநாசி. இந்த அவஸ்தையில் இதைவிட வேறான இரண்டாவது பதார்த்தம் இல்லை. எதனால் எந்த ரசத்தை கிரஹணம் செய்யும் (25). எது பேசாமல் பேசிக்கொண்டு பேசுவதில்லை. பேசுபவனுடைய வசனசக்தி எவ்விதமாகவும் லோபம் ஆகாது. ஏன் எனில் அது அவிநாசி. இந்த அவஸ்தையில் அதைவிட வேறான இரண்டாவது சிறிதும் இல்லை. எதனால் விஷயத்தைக் குறித்து பேசும் (26). அது கேட்காமல் கேட்டும் கேட்பதில்லை. ஸ்ரோத்தாவின் ஸ்ரவணசக்தி எவ்விதமாகவும் லோபம் உண்டாகாது. ஏன் எனில் அது அவிநாசி. இந்த அவஸ்தையில் இதைவிட வேறான இரண்டாவது வஸ்து இல்லை. எந்த விஷயத்தைக் கேட்கும் (27). எந்த இது மனனம் செய்யாமல் மனனம் செய்துகொண்டே மனனம் செய்வதில்லை. மனனம் செய்பவனுடைய மனனசக்தி எவ்வகையிலும் லோபம் அடைவதில்லை. ஏன் எனில் இது அவிநாசி. இந்த அவஸ்தையில் இதைவிட வேறு இரண்டாவது வஸ்து இல்லை. எதனால் விஷயத்தை இது மனனம் செய்யும் (28). அது ஸ்பர்சம் செய்யாமல் ஸ்பர்சம் செய்து கொண்டே ஸ்பர்சம் செய்வதில்லை. ஸ்பர்சம் செய்பவனுடைய ஸ்பர்ச சக்தி எவ்விதமாகவும் லோபம் அடைவதில்லை. ஏன் எனில் அது அவிநாசி. இந்த அவஸ்தையில் இதைவிட பின்னமான இரண்டாவது பதார்த்தம் இல்லை. அது எதனால் ஸ்பரிசிக்கும் (29). அது எதை அறியவில்லையோ அதை அறிந்து கொண்டே அறிவதில்லை. விஞ்ஞாதாவின் விஞ்ஞான சக்திக்கு எவ்விதமாகவும் லோபம் கிடையாது. ஏன் எனில் அது அவிநாசி. இந்த அவஸ்தையில் இதைவிட வேறான இரண்டாவது வஸ்து இல்லை. எதனால் அதை விசேஷரூபமாய் அறியும் (30).
भाष्यम् - समानमन्यत्, यद् वै तन्न जिघ्राति। यद् वै तत्र रसयते। यद् वै तन्न वदति। यद् वै तन्न श्रुणोति। यद् वै तन्न मनुते। यद् वै तन्न स्पृशति। यद् वै तन्न विजानातीति। मननविज्ञानयोः दृष्टादिसहकारित्वेऽपि सति चक्षुरादिनिरपेक्षो भूतभविष्यद्व-र्तमानविषयव्यापारोविद्यत इति पृथग्ग्रहणम्।
अनुवादः - ச.பா- அது அதை முகர்வது இல்லையோ, அது அதை ருசிப்பது இல்லை. அது பேசுவது இல்லை. அது கேட்பது இல்லை. அது நினைப்பது இல்லை. அது தொடுவது இல்லை, அது அறிவதில்லை என்பது முதலிய மற்ற மந்திரங்களின் அர்த்தம் முன் உள்ளதுபோல். மனன விஞ்ஞானங்கள் த்ருஷ்டி முதலியவைகளுக்கு சாகாரியாய் இருந்தாலும் இவைகளுக்கு கண், இந்திரியங்களை அபேக்ஷிக்காமலேயே பூத, பவிஷ்யத், வர்த்தமான (இறந்தகாலம், வருங்காலம், நிகழ்காலம்) காலம் இவைகளின் விஷய வியாபாரங்கள் இருப்பதால் அவைகளைத் தனியாக க்ரஹணம் செய்யப்படவேண்டும்.
भाष्यम् - प्रश्नः - किं पुनर्दृष्टादीनाम् अग्नेरैष्ण्यप्रका-शनज्वलनादिवद्धर्मभेदः, आहोस्विदभिन्नस्यैव धर्मस्य परोपाधिनिमित्तं धर्मान्यत्वमिति?
अनुवादः - ச.பா- கேள்வி- மேலும் அக்னியின் தர்மமான உஷ்ணத்தன்மை, ப்ராகாசிப்பது, ஜ்வலனம் முதலியவைகளுக்கு சமானமான திருஷ்டி முதலிய தர்மங்களின் பேதமா அல்லது ஒரு (தர்மத்திற்கு) அபின்ன தர்மத்தின் வேறு உபாதியின் காரணமாக வேறு தர்மமா? என்று.
भाष्यम् - उत्तर - अत्र केचिद् व्याचक्षते- आत्मवस्तुनः स्वत एवैकत्वं नानात्वं च, यथा गोर्गोद्रव्यतयैकत्वम्, सास्नादीनां धर्माणां परस्परतो भेदः। यथा स्थूलेष्वेकत्वं नानात्वं च, तथा >निरवयवेष्वमूर्तवस्तुष्वेकत्वं नानात्वं चानुमेयम्। सर्वत्राव्यभिचा-रदर्शनादात्मनोऽपि तद्वदेव दृष्टादीनां परस्परं नानात्वम्, आत्मना चैकत्वमिति।
अनुवादः - ச.பா- பதில்- இங்கு சிலர் இவ்வாறு கூறுகிறார்கள் - ஆத்ம வஸ்துவிற்கு சுயமாகவே ஏகத்துவம், நாநாத்துவம் உள்ளது. எவ்வாறு கோவிற்கு கோரூபத்தால் ஏகத்வமும் அதன் சதைப்பிடிப்பு முதலிய தர்மங்களினால் பரஸ்பரம் பேதம் உண்டாகிறது. எவ்வாறு ஸ்தூலத்தில் ஏகத்துவமும் நாநாத்வமும் காணப்படுகிறதோ அவ்வாறே நிரவயவ அமூர்த்த வஸ்துக்களிலும் ஏகத்துவமும், நாநாத்துவமும் அனுமானிக்க வேண்டும். எங்கும் மாறுபாடு காணப்படாததால் ஆத்மாவிடத்திலும் அவ்வாறே திருஷ்டி முதலியவைகளுக்கு பரஸ்பரம் நாநாத்வம். ஆத்மாவிற்கு ஏகத்வம் என்று.
भाष्यम् - न, अन्यपरत्वात्। न हि दृष्टादिधर्मभेदप्रद-र्शनपरमिदं वाक्यं यद् वै तदित्यादि। किं तर्हि? यदि चैतन्या-त्मज्योतिः, कथं न जानाति सुषुप्ते? नूनमतो न चैतन्यात्मज्योतिः, इत्येवमाशङ्काप्राप्तौ, तन्निराकरणायैतदारब्धं यद् वै तदित्यादि। यदस्य जाग्रत्स्वप्नयोश्चक्षुराद्यनेकोपाधिद्वारं चैतन्यात्मज्योतिः स्वाभाव्यमुपलक्षितं दृष्टाद्याभिधेव्यवहारापन्नम्, सुषुप्ते उपाधिभेदव्यापारनिवृत्तावनुद्भास्यमानत्वादनुपलक्ष्यमाणस्वभाव- >मप्युपाधिभेदेन भिन्नमिव यथाप्राप्तानुवादेनैव विद्यामानत्वमुच्यते। तत्र दृष्टादिधर्मभेदकल्पना विवक्षितार्थानभिज्ञतया।
अनुवादः - அவ்வாறு அல்ல. ஏன்எனில்“यद् वै तत्” (யத் வை தத்) முதலிய இந்த வாக்கியம் திருஷ்டி முதலிய தர்மபேதத்தை காண்பிப்பதற்காக அல்ல. ஆனால் என்ன? சுஷுப்த்தியில் எதனால் சைதன்யாத்மஜ்யோதி இல்லை என்று இவ்வாறு ஆகாங்க்ஷை ஏற்பட்ட பொழுது“यद् वै तत्” (யத் வை தத்) இவை முதலியவைகள் அதை நிராகரணம் செய்வதற்காக இது ஆரம்பிக்கப்படுகிறது. இந்த ஜாக்ரத் ஸ்வப்னங்களுக்கு கண்கள் முதலிய அநேக வ்யாபாரத்தின் வழி சைதன்யாத்மஜ்யோதி ஸ்வாபாவத்தை உபலக்ஷித திருஷ்டி முதலிய வியாபாரங்களை அடைகின்றது. சுஷுப்தியில் உபாதிபேதம் நிவர்த்தியானவுடன் அபிவியக்தி ஆவதில்லை. ஆகையால் அதன் ஸ்வபாவத்தையும் உபலக்ஷிப்பதில்லை. ஆனாலும் அடையப்பட்ட பேதத்தை அனுவாதம் செய்யும் பொழுதே உபாதிபேதத்திலிருந்து பேதப்பட்டதைப் போல் அதன் இருப்புக்கூறப்படுகிறது. அங்கு திருஷ்டி முதலிய கல்பனையை விளக்கியது அர்த்தத்தை அறியாததின் பொருட்டே ஆகும்.
भाष्यम् - सैन्धवघनवत् प्रज्ञानैकरसघनश्रुतिविरोधाच्च,“विज्ञानमानन्दम्”(बृ० उ० ३। ९। २८)“सत्यं ज्ञानम्” (तै० उ० २। १। १)“प्रज्ञानं बह्य” (ऐ० उ० ३। १। ३) इत्यादि श्रुतिभ्यश्च।
अनुवादः - ச.பா- உப்புக்கட்டி போல் பிரஞ்ஞான ஏகரசகனம் என்ற சுருதி வாக்கியத்திற்கு விரோதம் ஏற்படும். ஆதலால் இந்த கல்பனை பொருந்தாது. சுருதி வாக்கியங்கள்“विज्ञानमानन्दम्” (விஞ்ஞானமானந்தம்,“सत्यम् ज्ञानम्” (சத்யம் ஞானம்),“प्रज्ञानं बह्य” (பிரக்ஞானம் பிரஹ்ம) ஆகும்.
भाष्यम् - शब्दप्रवृत्तेश्च, लौकिकी च शब्दप्रवृत्तिश्चक्षुषा रूपं विजानाति, श्रोत्रेण शब्दं विजानाति, रसनेनान्नस्य रसं विजानाति, इति च सर्वत्रैव च दृष्टादिशब्दाभिधेयानां विज्ञानशब्दवाच्यतामेव दर्शयति, शब्दप्रवृत्तिश्च प्रमाणम्।
अनुवादः - ச.பா- சப்த ப்ரவிர்த்தியினாலும் (சைதன்ய பேத கல்பனை சரியல்ல). கண்களினால் ரூபத்தை அறிகிறது, யரோத்ரத்தினால் சப்தத்தை அறிகிறது, ரசன இந்திரியத்தால் அன்னத்தினுடைய ரசத்தை அறிகிறது என்று இந்த சப்தத்தின் லெளகிக ப்ரவிர்த்தியும் எங்கும் திருஷ்டி முதலிய சப்தங்களின் வாச்சியங்களில் விஞ்ஞான சப்தங்களின் வாச்சியத்தன்மை தெரியப்படுத்துகிறது. மேலும் சப்த பிரவிர்த்தியும் பிரமாணமாகும்.
भाष्यम् - दृष्टान्तोपपत्तेश्च, यथा हि लोके स्वच्छ-स्वाभावाव्ययुक्तः स्फटिकस्तन्निमित्तमेव केवलं हरितनीललोहिता-द्युपाधिभेदसंयोगात् तदाकरात्वं भजते, न च स्वच्छस्वाभाव्य-व्यतिरेकेण हरितनीललोहितादिलक्षणा धर्माभेदाः स्फटिकस्य कल्पयितुं शक्यन्ते, तथा चक्षुराद्युपाधिभेदसंयोगात् प्रज्ञानघन-स्वभावस्यैव आत्मज्योतिषो दृष्टादिशक्तिभेद उपलक्ष्यते, प्रज्ञानघनस्य स्वच्छस्वभावाव्यात् स्फटिकस्वच्छस्वाभाव्यवत्।
(
अनुवादः -ச.பா-இந்த விஷயத்தில் திருஷ்டாந்தம் பொருந்துகிறது. எவ்வாறு உலகில் ஸ்வச்ச ஸ்வபாவம் உள்ள ஸ்படிகமணி பச்சை, நீலம், சிகப்பு முதலிய உபாதிகளின் சம்சர்க்கத்தின் காரணத்தால் அதன் ஆகாரமாகிறது. அதன் ஸ்வச்ச ஸ்வபாவத்தை விட வேறான பச்சை, நீலம், சிகப்பு முதலிய தர்ம பேதங்கள் ஸ்படிகத்தில் கல்பிக்க முடியாது. அவ்வாறே சக்ஷு முதலிய உபாதிபேத சம்யோகத்தால் பிரஞ்ஞான கனஸ்வபாவத்தின் ஆத்ம ஜ்யோதியின் திருஷ்டி முதலிய சக்தி பேதங்கள் உபலக்ஷிக்கப்படுகிறது. ஏன் எனில் ஸ்படிகஸ்வச்ச ஸ்வாபாவியம் போல் பிரக்ஞானகனம் ஸ்வச்ச ஸ்வபாவமாகும்.
भाष्यम् - स्वयंज्योतिष्ट्वाच्च, यथा च आदित्यज्योतिर-वभास्यभेदैः संयुज्यमानं हरितनीलपीतलोहितादिभेदैरविभाज्यं तदाकाराभासं भवति, तथा च कृत्स्नं जगदवभासयच्चक्षुरादीनि च तदाकारं भवति। तथा चोक्तम्-“आत्मनैवायं ज्योतिषास्ते” >(४।३।६) इत्यादि।
अनुवादः - ச.பா- ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூபமாய் இருப்பதால். எவ்வாறு சூரிய ஜ்யோதியின் பிரகாசத்தின் பேதங்களுடன் கூடிய பச்சை, நீலம், மஞ்சள், சிகப்பு முதலிய பேதங்களால் விபாகம் (பிரிக்கப்பட்டு) செய்யப்பட்டு அந்த ஆகாரமாய் விளங்குகிறது. அவ்வாறே ஜகத் முழுவதையும் தோன்றச் செய்யும் (விளங்கச் செய்யும்) சக்ஷு முதலியவைகள் அந்த ஆகாரமாகின்றன. அவ்வாறே கூறப்பட்டது -“आत्मनैवायं ज्योतिषास्ते” (ஆத்மனைவாயம் ஜ்யோதிஷாஸ்தே) இவை முதலியவைகளால்.
भाष्यम् - न च निरवयवेष्वनेकात्मता शक्यते कल्पयितुम्, दृष्टान्ताभावात्। यदप्याकाशस्य सर्वगतत्वादिधर्मभेदः परिकल्प्यते, परमाण्वादीनां च गन्धरसाद्यनेकगुणत्वम्, तदपि निरूप्यमाणं परोपाधिनिमित्तमेव भवति।
अनुवादः - ச.பா- நிரவயவ பதார்த்தங்களில் அநேக ரூபங்களைக் கல்பிக்கமுடியாது. ஆகாசத்திற்கு சர்வகதம் முதலிய தர்ம பேதங்களும், பரமாணுவாதிகளின் கந்தரச முதலிய அநேக குணத்துவமும் கல்பனை செய்யப்படுகிறது. அதுவும் விசாரம் செய்தால் பரோபாதி நிமித்தமாகவே ஆகிறது.
भाष्यम् - आकाशस्य तावत् सर्वगतत्वं नाम न स्वतो धर्मोऽस्ति। सर्वोपाधिसंश्रयाद्धि सर्वत्र स्वेन रूपेण सत्त्वमपेक्ष्य सर्वगतत्वव्यवहारः। न त्वाकाशः क्वचिद् गतो वा अगतो वा स्वतः। गमनं हि नाम देशान्तरस्थस्य देशान्तरेण संयोगकारणम्, सा च क्रिया नैवाविशेषे सम्भवति, एवं धर्मभेदा नैव सन्त्याकाशे।
अनुवादः - ச.பா- ஆகாசம் சர்வகதத்துவம் என்பது அதற்கு ஸ்வயமான தர்மம் அல்ல. எல்லா உபாதிகளையும் ஆஸ்ரயித்த காரணத்தால் அதன் ரூபமாய் எங்கும் இருப்பதால் அதை அபேக்ஷித்து அதற்கு சர்வகதத்துவ வியவஹாரம் ஏற்படுகிறது. ஆகாயம் ஒரு நாளும் தானாக செல்லுவதோ வருவதோ கிடையாது. செல்வது என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தை அடைவது. அந்த கிரியை அவிசேஷத்தில் சம்பவிக்காது. இவ்வாறு ஆகாசத்திற்கு தர்மபேதம் கிடையாது.
भाष्यम् - तथा परमाण्वादावपि। परमाणुर्नाम पृथिव्या गन्धघनायाः परमसूक्ष्मोऽवयवो गन्धात्मक एव। न तस्य पुनर्गन्धवत्त्वं नाम शक्यते कल्पयितुम्। अथ तस्यैव रसादिमत्त्वं स्यादिति चेन्न, तत्राप्वादिसंसर्ग निमित्तत्वात्। तस्मान्न निरवयवस्यानेकधर्मवत्त्वे दृष्टान्तोऽस्ति।
अनुवादः - ச.பா- அவ்வாறே பரமானுவாதத்திலும் ஆகும் பரமாணு என்பது கந்தகன பூதமான பிருதிவியின் பரமசூக்ஷ்ம அவயவம் கந்த ரூபமேயாகும். மறுபடியும் அதற்கு கந்ததுவம் என்பது கல்பிக்க முடியாது. அவ்வாறு ஆனால் அதற்கு ரசத்துவம் இருக்குமே எனில் அங்கு அப்பு (ஜலம்) சம்சர்க்க நிமித்தால் ஆகும். ஆகையால் நிரவயவத்திற்கு அநேக தர்மத்திற்கான திருஷ்டாந்தம் இல்லை.
भाष्यम् - एतेन दृगादिशक्तिभेदानां पृथक्चक्षुरूपादि भेदेन परिणामभेदकल्पना परमात्मनि प्रत्युक्ता।।
अनुवादः - ச.பா- இதனால் த்ருக் முதலிய சக்தி பேதங்களைவிடத் தனியாக சக்ஷீரூபம் முதலிய பேதங்களால் பரிணாம பேதக கல்பனைகள் பரமாத்தமாவில் பிரயோகிக்கின்றனர். (அது கண்டனம் செய்யப்பட்டுள்ளது.
भाष्यम् - अव - जाग्रत्स्वप्नयोरिव यद् विजानीयात्तद् द्वितीय प्रविभक्तमन्यत्वेन नास्तीत्युक्तम्। अतः सुषुप्ते न विजानाति विशेषम्।
अनुवादः - ச.பா- அ.கை- ஜாக்ரதி ஸ்வப்னம்போல் எது அறிகிறதோ அது திவிதியமாக (இரண்டாக) விபக்தமாகி (பிரிந்து) வேறாக இல்லை என்று கூறப்பட்டது. ஆகையால் சுஷுப்த்தியில் விசேஷத்தை அறியாது.
भाष्यम् - शङ्का - ननु यद्यस्यायमेव स्वभावः किन्निमित्तमस्य विशेषविज्ञानं स्वभावपरित्यागेन? अथ विशेष-विज्ञानमेवास्य स्वभावः, कस्मादेष विशेषं न विजानातीति?
अनुवादः - ச.பா- சங்கை- ஆனால் இதன் ஸ்வபாவம் இது எனில் தன்னுடைய ஸ்வாபவத்தை விட்டு இந்த விசேஷ விக்ஞானம் எந்த நிமித்தத்தால் ஏற்படுகிறது? மேலும் விசேஷ விக்ஞானம் அதன் ஸ்வபாவமானால் எதனால் அந்த விசேஷத்தை அறிவதில்லை?
भाष्यम् - समाधानम् - उच्यते, श्रुणु-
अनुवादः - ச.பா- சமாதானம்- கூறுகிறேன், கேள் -
मन्त्रः - यत्र वा अन्यदिव स्यात् तत्रान्योऽन्यत् पश्येदन्योऽ-न्यज्जिघ्रोदन्योऽन्यद् रसयेदन्योऽन्यद् वदेदन्योऽन्यच्छृणुया-दन्योऽन्यन्मन्वीतान्योऽन्यत् स्पृशेदन्योऽन्यद् विजानीयात्।। ३१।।
अनुवादः - மந்திரம்- அங்கு (ஜாகரித ஸ்வப்னா அவஸ்தையில்) ஆத்மாவைக் காட்டிலும் வேறாக அது ஆகிறது. அங்கு வேறு வேறு ஒன்றைப் பார்க்கிறது. வேறு வேறு ஒன்றை முகர்கிறது. வேறு வேறு ஒன்றை ருசிக்கிறது. வேறு வேறு ஒன்றைபேசுகிறது. வேறு வேறு ஒன்றைகேட்கிறது. வேறு வேறு ஒன்றை நினைக்கிறது. வேறு வேறு ஒன்றை ஸ்பரிசிக்கிறது. வேறு வேறு ஒன்றை அறிகிறது.
भाष्यम् - यत्र यस्मिञ्जागरिते स्वप्ने वा अन्यदिव आत्मनो वस्त्वन्तरमिवाविद्यया प्रत्युपस्थापितं भवति, तत्र तस्मादविद्या-प्रत्यपस्थापितादन्यः अन्यमिव आत्मानं मन्यमानः, असत्यात्मनः प्रविभक्ते वस्त्वन्तरे, असति चात्मनि ततः प्रविभक्ते, अन्योऽन्यत् पश्येदुपलभेत्। तच्च दर्शितं स्वप्ने प्रत्यक्षतो“घ्नन्तीव जिनन्तीव” इति। तथान्योऽन्यज्जिघ्रोद् रसयेद् वदेच्छृणुयान्मन्वीत स्पृशेद् विजानीयादिति।
अनुवादः - ச.பா- ஜாக்ரத்திலோ, ஸ்வப்பனத்திலோ அந்யம்போல அதாவது அவித்யையினால் ஏற்பட்ட ஆத்மாவை விட வேறான வஸ்து இருந்தாலும் ஆத்மாவை விட வேறான வேறு அன்ய வஸ்து இல்லாததால் ஆத்மாவிற்கு அதைவிட வேறாகத் தோன்றினாலும் அந்த அவித்யையின் மூலமாய் உண்டான வஸ்துவை தன்னைவிட வேறாக நினைத்து வேறு ஒன்றும் மற்றொன்றை அறிகிறது. இந்த விஷயம் ஸ்வப்னத்தில் பிரத்யக்ஷமாய்“घ्नन्तीव जिनन्तीव” (க்னநத்தீவ ஜினந்தீவ) (அவன் கொல்லப்பட்டது போலவும், ஜெயிக்கப்பட்டது போலவும்) என்று. அவ்வாறே மற்றது மற்றதுடன் முகர்கிறது, ருசிக்கிறது, பேசுகிறது, கேட்கிறது, நினைக்கிறது, ஸ்பரிசிக்கிறது, அறிகிறது என்று அறிந்துகொள்ள வேண்டும்.
भाष्यम् - अव - यत्र पुनः साविद्या सुषुप्ते वस्त्वन्तरप्रत्यु-पस्थपिका शान्ता, तेनान्यत्वेन अविद्याप्रविभक्तस्य वस्तुनोऽभावात् तत् केन कं पश्येज्जिघ्रोद् विजानीयाद् वा? अतः-
अनुवादः - ச.பா- அ.கை- ஆனால் இந்த சுஷீப்தியில் மற்ற வஸ்துக்களை தோற்றுவிக்கும் அந்த அவித்யா சாந்தமானதால் அவித்தியினால் விபக்தமான (பிரிக்கப்பட்ட) வஸ்துக்கள் இல்லாததினால் அது எதனால் எதைப் பார்க்கும் முகரும், அறியும்? ஆகையால் -
मन्त्रः - सलिल एको द्रष्टाद्वैतो भवत्येष ब्रह्मलोकः सम्राडिति हैनमनुसशास याज्ञवल्क्य एषास्य परमा गतिरेषास्य परमा सम्पदेषोऽस्य परमो लोक एषोऽस्य परम आनन्द एतस्यैवानन्दस्यान्यानि भूतानि मात्रामुपजीवन्ति।। ३२।।
अनुवादः - மந்திரம்- எவ்வாறு ஜலத்திலோ அவ்வாறே சுஷுப்தியிலும் ஒரே அத்வைத திருஷ்டா ஆகும். ஹே சாம்ராட்! அது பிரஹ்மலோகம். அவ்வாறு யாக்ஞவல்கியர் ஜனகருக்கு உபதேசம் செய்தார். அந்த (இதன்) புருஷனின் பரம கதி. அதுவே இதன் பரம சம்பத்தி. இது இதன் பரமலோகம். இது இதன் பரமானந்தம். இந்த ஆனந்தத்தை மட்டுமே ஆஸ்ரயித்து மற்ற பிராணிகளும் ஜீவனத்தை தாரணம் செய்கின்றன.
भाष्यम् - स्वेनैव हि प्राज्ञेनात्मना स्वयंज्योतिःस्वभावेन सम्परिष्वक्तः समस्तः सम्प्रसन्न आप्तकाम आप्त्मकामः सलिलवत्स्वच्छीभूतः सलिल इव सलिल एको द्वितीयस्याभावात्। अविद्यया हि द्वितीयः प्रविभज्यते, सा च शान्तात्र अत एकः। द्रष्टा दृष्टेरविपरिलुप्त त्वादात्मज्योतिः- स्वभावायाः अद्वैतो द्रष्टव्यस्य द्वितीयस्याभावात्।
अनुवादः - ச.பா- தானே ஸ்வயம் ஜ்யோதி ஸ்வபாவத்தின் பிரக்ஞான ஆத்மாவால் ஆலிங்கம் செய்யப்பட்டு அபரிச்சின்னமாய், சம்பிரசன்னன், ஆப்த்தகாமன், ஆத்மகாமன், ஜலத்திற்கு சமானமாக ஸ்வச்சமாய் ஜலம்போன்று ஏகமாய் துவிதீயம் அற்றதாய் இருக்கிறது. அவித்தை அல்லவா திவிதீயமாய் பிரிக்கிறது (விபக்தி செய்கிறது). அது சாந்தமானதால் ஏகமாய் இருக்கிறது. ஆத்மஜ்யோதி ஸ்வபாவமான திருஷ்டியின் லோபம் இல்லாததின் காரணத்தால் அது திருஷ்டா ஆகும். அவ்வாறே வேறு திருஷ்டா இல்லாததால் திவிதீயமற்றதாய் அது அத்வைதமாய் இருக்கிறது.
भाष्यम् - एतदमृतमभयम्। एष ब्रह्मलोको ब्रह्मैव लोको ब्रह्मलो। पर एवायमस्मिन् काले व्यावृत्तकार्यकरणोपाधिभेदः स्व आत्मज्योतिषि शान्तसर्वसम्बन्धो वर्तते हे सम्राट। इति हैव हैनं जनकमनुशशास अनुशिष्टवान् याज्ञवल्क्य इति श्रुतिवचनमेतत्।
अनुवादः -ச.பா-இது அம்ருதம், அபயம், இந்த பிரஹ்மலோகம்- பிரஹ்மமே லோகம் என்பதால் பிரஹ்மலோகம். ஹே சம்ராட்! இந்த சமயத்தில் வியாவிருத்தமான காரியகரண உபாதி பேதங்கள் சம்பந்தங்கள் நீங்கி பரமாத்மா தன்னுடைய ஆத்மஜ்யோதியாய் விளங்குகிறது. இவ்வாறு யாக்ஞவல்கியர் இந்த ஜனகருக்கு உபதேசம் செய்தார் என்று சுருதி கூறுகின்றது.
भाष्यम् - कथं वानुशशास? एषास्य विज्ञानसमयस्य परमा गतिः। यास्त्वन्या देहग्रहणलक्षणा ब्रह्मादिस्तम्बपर्यन्ता अविद्याकल्पितागतयोऽतोऽपरमा अविद्याविषयत्वात्। इयं तु देवत्वादिगतीनां कर्मविद्यासाध्यानां परमोत्तमा यः समस्तात्मभावः, यत्र नान्यत् पश्यति नान्यच्छृणोति नान्यद् विजानातीति। +x´ÉªÉ& - कथं वा अनुशाशास? एषास्य विज्ञानमयस्य परमा इति गतिः। याः तु अन्यादेहग्रहणलक्षणा ब्रह्मादि स्तम्बपर्यन्ता अविद्या कल्पितागतय अविद्याविषयत्वात् अत अपरमा। यः समस्तात्मभावः देवत्वादिगतिनां कर्मविद्यासाध्यानां इयं तु परमा उत्तमा। यत्र नान्यत् पश्यति नान्यच्छृणोति नान्यत् विजानाति इति।
अनुवादः - ச.பா- எவ்வாறு உபதேசம் செய்யப்பட்டது? இந்த அந்த விக்ஞானமய பரமாத்ம கதி. அந்த அதைவிட வேறான தேஹங்களை எடுக்கும் பிரஹ்மா முதலிய ஸ்தம்ப வரையிலும் உள்ளவை அவித்தையினால் கல்பிக்கப்பட்ட கதிகள், அவித்யா விஷயமானதால் அபரமார்த்தமாகும். இந்த கர்மவித்யா சாத்தியங்களான தேவத்துவம் முதலிய கதிகளைக் காட்டிலும் மிகவும் மேலானது. எல்லாம் ஆத்ம பாவமாகும். எங்கு வேறு ஒன்றை பார்க்காது, வேறு ஒன்றை கேட்காது, மற்றொன்றை அறியாது.
भाष्यम् - एषैव च परमा सम्पत् सर्वासां सम्पदां >विभूतीनामियं परमा स्वभाविकत्वादस्याः कृतका ह्यन्याः सम्पदः। तथैषोऽस्यपरमो लोकः, येऽन्ये कर्मफलाश्रया लोकास्तेऽस्माद-परमाः। अयं तु न केनचन कर्मणा मीयते, स्वभाविकत्वात्, एषोऽस्य परमो लोकः।
अनुवादः - ச.பா- இதுவே மேலான (பரமான) சம்பத் ஆகும். சம்பூர்ண சம்பத்துக்கள் அதாவது எல்லா விபூதிகளிலும் இது மிகவும் சிரேஷ்டமானது. ஏன்எனில் இது ஸ்வபாவமானது மற்ற வகையான சம்பந்துக்களைக் காட்டிலும் வேறானது. அவ்வாறே இதற்கு இதுவே பரமலோகமாகும். மற்ற கர்ம பலத்தை ஆஸ்ரயித்த லோகங்கள் இதைவிட மிக கீழானவை. ஆனால் இதுவோ ஸ்வபாவகமானதால் இதை எந்தக் கர்மத்தினாலும் அடையமுடியாது. ஆகையால் இதுவே பரமலோகம். (மேலான லோகம்)
भाष्यम् - तथैषोऽस्य परम आनन्दः। यान्यन्यानि विषयेन्द्रियसम्बन्धजनितान्यानन्दजातानि तान्यपेक्ष्य एषोऽस्य परम आनन्दो नित्यत्वात्।“यौ वै भूमा तत् सुखम्” (छा० उ० ७। २३। १) इति श्रुत्यन्तरात्। यत्रान्यत् पश्यत्यन्यद् विजानाति तदल्पं मर्त्यममुख्यं सुखम्, इदं तु तद्विपरीतम्, अत एवैषोऽस्य परम आनन्दः।
अनुुवादः -ச.பா-அவ்வாறே இதன் பரமானந்தம். மற்ற விஷய இந்திரிய சம்பந்தத்தால் உண்டான மற்ற ஆனந்தங்களை அபேக்ஷித்து இது நித்யமானதால் பரமானந்தமாகும்.“यौ वै भूमा तत् सुखम्”(யோ வை பூமா தத்சுகம்) என்று வேறு சுருதியினால் அறிகிறோம். எங்கு வேறாய் பார்க்கிறானோ, வேறாய் அறிகிறானோ அது அல்பம், மரணதர்மம் உடையது, முக்கியமற்றசுகம், இதைக்காட்டிலும் மாறனது. ஆகையால் இது அதன் பரமானந்தமாகும்.
भाष्यम् - एतस्यैवानन्दस्य मात्रां कलामविद्याप्रत्य-पस्थापितां विषयेन्द्रियसम्बन्धकालविभाव्यमन्यानि भूतान्यु-पजीवन्ति। कानि तानि? तत्र एवानन्दादविद्यया प्रविभज्य मानस्वरूपाण्यन्यत्वेन तानि ब्रह्मणः परिकल्प्यमानान्यन्यानि सन्त्युपजीवन्ति भूतानि विषयेन्द्रियसम्पर्कद्वारेण विभाव्यमानाम्।
अनुवादः -ச.பா-அவித்யையினால் உண்டான விஷய இந்திரியங்களின் சம்பந்தத்தால் உண்டாகும் பூதங்கள் (ஜீவன்கள்) இந்த ஆனந்தத்தின் லேச மாத்திர கலையினால் ஜீவிக்கின்றன. அவை யாவை? அந்த ஆனந்தத்திலிருந்து அவித்யையினால் வேறாக்கப்பட்ட ஸ்வரூபங்கள் பிரஹ்மத்திற்கு வேறானதாகக் கல்பிக்கப்பட்ட மற்ற விஷய இந்திரிய சேர்க்கையினால் உண்டானவை. இந்த ஆனந்தத்தின் லேச மாத்திரத்தினாலேயே ஜீவிக்கின்றன.
भाष्यम् - यस्य परमानन्दस्य मात्रा अवयवा ब्रह्मादिभि-र्मनुष्यपर्यन्तैर्भूतैरुपजीव्यन्ते, तदानन्दमात्राद्वारेण मात्रिणं परमान्द-मधिजिगमयिषन्नाह, सैन्धवलवणशकलैरिव लवणशैलम्।।
अनुवादः - ச.பா- அ.கை- பிரஹ்மா முதலியவர் முதல் மனுஷ்யர் வரையில் உள்ள ஜீவர்கள் எந்த பரம ஆனந்தத்தின் லேச மாத்திரத்தால் (அவயவத்தால்) ஜீவிக்கின்றார்களோ அந்த ஆனந்தமாத்திரத்தால் உப்பின் சிறு கட்டியின் ஸ்வரூபத்தால் உப்புமலையின் சொரூபம் அறியப்படுவது போல் இந்த ஆனந்தத்தின் லேச மாத்திரத்தால் பரமானந்தின் ஞானம் உண்டாக்குவதற்கான இச்சையுடன் சுருதி இவ்வாறு கூறுகிறது-
मन्त्रः - स यो मनुष्याणा ँशद्धः समृद्धो भवत्यन्येषामधिपतिः सर्वैर्मानुष्यकैर्भोगैः सम्पन्नतमः स मनुष्याणां परम आनन्दोऽथ ये शतं मनुष्याणामानन्दाः स एकः पितृणां जितलोकानामानन्दोऽथ ये शतं पितृणां जितलोकानामानन्दाः स एको गन्धर्वलोक आनन्दोऽथ ये शतं गन्धर्वलोक आनन्दाः स एकः कर्मदेवानामानन्दो ये कर्मणा देवत्वमभिसम्पद्यन्तेऽथ ये शतं कर्मदेवानामानन्दाः स एक आजान-देवानामानन्दो यश्च श्रोत्रियोऽवृजिनोऽकामहतोऽथ ये शतमाजान-देवानामानन्दाः स एकः प्रजापतिलोक आनन्दो यश्च श्रोत्रियोऽ-वृजिनोऽकामहतोऽथ यै शतं प्रजापतिलोक आनन्दाः स एको ब्रह्मलोक आनन्दो यश्च श्रोत्रियोऽवृजिनोऽकामहतोऽथैष एव परम >आनन्द एष ब्रह्मलोकः सम्राडिति होवाच याज्ञवल्क्यः सोऽहं भगवते सहस्रं ददाम्यत ऊर्ध्वं विमोक्षायैव ब्रूहीत्यत्र ह याज्ञवल्क्यो बिभया-ञ्चकार मेधावी राजा सर्वेभ्यो मान्तेभ्य उदरौत्सीदिति।। ३३।।
अनुवादः - மந்திரம் - எந்த அந்த மனித பூர்ணமான அங்கங்களுடன் நிறைந்து மற்றவர்களுக்கு அதிபதியாகவும் மனிதர்களுக்குத் தேவையான எல்லா சாமகிரியைகள் மூலமாய் எல்லோரையும் விட அதிகமாய் உடையவனோ அது மனிதர்களுடைய பரம ஆனந்தமாகும். அந்த மனிதர்களின் நூ று மடங்கு ஆனந்தம் பித்ருலோகத்திற்குச் செல்லும் பித்ரு கணங்களின் ஒரு ஆனந்தமாகும். மேலும் அந்த பித்ரு லோகத்தை ஜெயித்த பித்ருவின் நூ று மடங்கு ஆனந்தம் அது கந்தர்வலோகத்தின் ஒரு ஆனந்தமாகும். அவ்வாறே அந்த கந்தர்வ லோகத்தின் நூ று மடங்கு ஆனந்தம் கர்ம தேவர்களுக்கான அதாவது கர்மங்கள் மூலமாய் தேவதா பாவத்தை அடைந்தவர்களின் ஒரு ஆனந்தமாகும். அந்த கர்மதேவர்களின் நூ று மடங்கு ஆனந்தம் அந்த ஆஜான (ஜன்மத்தினால் அடைந்த) தேவதைகளின் ஒரு ஆனந்தமாகும். மேலும் நிஷ்பாப, நிஷ்காம, ச்ரோத்திய அந்த ஆஜான தேவர்களின் நூ றுமடங்கு ஆனந்தம் பிரஜாபதி லோகத்தின் ஒரு ஆனந்தமாகும். அந்த நிஷ்பாப, நிஷ்காமச்ரோத்திரியனுடைய ஆனந்தமே பரமானந்தம், ஹே சம்ராட்! இதுவே பிரஹ்மலோகம். என்று இவ்வாறு யாக்ஞவல்க்கியர் கூறினார் (ஜனகர் கூறினார்) நான் ஶ்ரீமானாகிய உங்களுக்கு ஆயிரம் பசுக்களைத் தருகின்றேன். இப்பொழுது மேலும் தாங்கள் மோக்ஷத்திற்கான உபதேசம் செய்யுங்கள். இதைக் கேட்ட யாக்ஞவல்க்யர் பயமடைந்து இந்த புத்திமான் ராஜா என்னை எல்லா கேள்விகளுக்கும் நிர்ணயத்துடன் பதில் அளிக்கச் செய்கிறார் என்று.
भाष्यम् - स यः कश्चिन्मनुष्याणां मध्ये राद्धः संसिद्धोऽ-विकलः समग्रावयव इत्यर्थः, समृद्ध उपभोगोपकरणसम्पन्नो भवति, किञ्चान्येषां समानजातीयानामधिपतिः स्वतन्त्र पतिर्न माण्डलिकः, सर्वैः समस्तैः, मानुष्यकैरिति दिव्य भोगोपकरणनिवृत्त्यर्थम्, मनुष्याणामेव यानि भोगोपकरणानि तैः सम्पन्नानामप्यतिशयेन सम्पन्नः सम्पन्नतमः स मनुष्याणां परम आनन्दः।
अनुवादः - ச.பா- மனிதர்களுள் எந்த ஒருவன் ராத்த:(शद्धः) அதாவது குறைவற்ற சம்பூர்ண அவயவங்கள் உடையவன்.समृद्ध (சம்ருத்த:) போகங்களுக்கான உபகரணங்களை உடையவன். மேலும் சமஜாதி புருஷர்கள் மத்தியில் அதிபதி. ஸ்வதந்திர தலைவன் ஆவான். ஆனால் மண்டல அதிபதியல்ல. எல்லா மனிதர்களின் என்ற பிரயோகம் திவ்யமான சாமக்கிரியைகளை செய்வதற்காக அதாவது மனிதர்களுக்கான போக சாமகிரியைகள். இவைகளை உடையவர்களைக் காட்டிலும் அதிகம் உடையவன். அதுவே மனிதர்களின் பரமானந்தம் ஆகும்.
भाष्यम् - तत्र आनन्दानन्दिनोरभेदनिर्देशान्नार्थान्तर भूत-त्वमित्येतत्। परमानन्दस्यैवेयं विषयविषय्याकारेण मात्रा प्रसृतेति ह्युक्तम्“यत्र वा अन्यदिव स्यात्” इत्यादिवाक्येन। तस्माद् युक्तोऽयम्“परम आनन्दः” इत्यभेदनिर्देशः। युधिष्द्भिरादितुल्यो राजात्रोदहरणम्। >अनवयः - तत्र आनन्द आनन्दिनोरभेद निर्देशात् न अर्थान्तरभूतत्वम् इत्येतत्। परमानन्दस्य एव इयं विषयविषयी आकारेण मात्रा प्रसृतेति हि उक्तम् “यत्र वा अन्यदिव स्यात्” इत्यादि वाक्येन। तस्मात् युक्तोऽयम् “परम आनन्दः” इत्यभेदनिर्देशः। अत्र युधिष्टिरादितुल्यो राजा उदाहरणम्।
अनुवादः -ச.பா-அங்கு ஆனந்தம், ஆனந்தமுடையவனுக்கும் அபேதம் நிர்தேசம் செய்யப்பட்டது. ஆகையால் ஆனந்தமாகிய ஆத்மாவிற்கும் ஆனந்தத்திற்கும் பின்ன பதார்த்த பேதம் இல்லை.“यत्र वा अन्यदिव स्यात्”(யத்ரவா அன்யதிவ ஸ்யாத்) முதலிய வாக்கியங்களால் பரமானந்தத்தின் அம்சமாகவே விஷய ரூபமாக தோன்றுகிறது. ஆகையால்“परम आनन्दः”(பரம ஆனந்த:) என்றஅபேத உக்தியானது பொருத்தமே இதற்கு உதாகரணம் யுதிஷ்டிரனுக்கு சமமான ராஜா என்பதாகும்.
भाष्यम् - दृष्टं मनुष्यानन्दमादिं कृत्वा शतगुणोत्तरोत्तर-क्रमेणोत्रीय परमानन्दं यत्र भेदो निवर्तते तमधिगमयति। अत्रायमानन्दः शतगुणोत्तरोत्तरक्रमेण वर्धमानो यत्र वृद्धि-काष्द्भामनुभवति, यत्र गणितभेदो निवर्तते, अन्यदर्शनश्रवण-मननाभावात्, तं परमानन्दं विवक्षन्नाह-
अनुवादः - ச.பா- நமக்கு பிரத்யக்ஷமாய் அனுபவசித்தமான மனுஷ்ய ஆனந்தத்தை முதலாவதாக ஆக்கி நூ று மடங்கு நூ று மடங்காய் மேல் மேல் கிரமமாய் மேலான நிலைக்கு எடுத்துச்சென்று எங்கு பேதம் நிவிர்த்தியாய் இருக்கும் பரமானந்தத்தை நிச்சயமாய் தெரியச் செய்கிறது. இங்கு இந்த ஆனந்தம் மேலும் மேலும் கிரமமாய் வளர்ந்து எங்கு புத்தியானது பரம காஷ்ட்ட நிலையை அனுபவிக்கிறது. மற்றதர்சனம், சிரவணம், மனனம் அற்றும் இந்த எண்ணிக்கை பேதம் அற்றும் இருக்கிறது. அந்த பரமானந்தத்தை விளக்குவதற்காக சுருதி ஆரம்பிக்கிறது.
भाष्यम् - अथ ये मनुष्याणामेवम्प्रकाराः शतमानन्दभेदाः स एकः पितृणाम्। तेषां विशेषणं जितलोकानामिति, श्राद्धादिकर्मभिः पितृंस्तोषयित्वा तेन कर्मणा जितो लोको येषां ये जितलोकाः पितरः, तेषां पितृणां जितलोकानां मनुष्यानन्दशतगुणी-कृतपरिमाण एक आनन्दो भवति।
अनुवादः - ச.பா- இந்த மனுஷ்யானந்தம் போல் நூ று மடங்கு ஆனந்தம் பித்ருக்களுக்கு ஒரு ஆனந்தமாகும். ஜிதலோகம்(जितलोकं) என்பது அவர்களுக்கு விசேஷணம். சிரார்த்தம் முதலிய கர்மங்களால் பித்ருக்களை சந்தோஷம் செய்து அந்த கர்மத்தால் ஜெயிக்கப்பட்ட லோகம். அந்த ஜிதலோகம் எவர்களுக்கோ அவர்கள் ஜிதலோகர்கள் அதாவது பித்ருக்கள். அந்த பித்ருக்களாகிய ஜிதலோகர்களுக்கு மனுஷ்யானந்தத்தின் நூ று எண்ணிக்கை அளவு ஒரு ஆனந்தமாகிறது.
भाष्यम् - सोऽपि शतगुणीकृतो गन्धर्वलोके एक आनन्दो भवति। स च शतगृणीकृतः कर्मदेवानामेक आनन्दः। अग्नि-होत्रादिश्रौतकर्मणा ये देवत्वं प्राप्नुवन्ति ते कर्मदेवाः। तथैव आजानदेवानामेक आनन्दः- आजानत एव उत्पत्तित एव ये देवास्ते आजानदेवाः। यश्च श्रोत्रियोऽधीतवेदः, अवृजिनो वृजिनं पापं तद्रहितो यथोक्तकारीत्यर्थः, अकामहतो वीततृष्ण आजान-देवभ्योऽर्वाग्यावन्तो विषयास्तेषु, तस्य चैवम्भूतस्य आजानदेवैः समान आनन्द इत्येतदन्वाकृष्यते च शब्दात्।।
अनुवादः - ச.பா- அந்த ஆனந்தமும் நூ று எண்ணிக்கை அடைந்து கந்தர்வலோகத்தின் ஒரு ஆனந்தமாகிறது. அந்த ஆனந்தமும் நூ று மடங்காகி கர்மதேவர்களுடைய ஒரு ஆனந்தமாகிறது. அக்னிஹோத்திரம் முதலிய ஸ்ரெளதகர்மத்தால் தேவத்துவத்தை அடைவந்தவர்கள் கர்மதேவர்கள். அவ்வாறே ஆஜான தேவர்களுடைய ஆனந்தம். ஆஜான என்பது உத்பன்னம் ஆகும்பொழுதே எவர்கள் தேவர்களோ அவர்கள் ஆஜான தேவர்கள். எவர் ஸ்ரோத்தியர்களோ அதாவது வேதத்தை அத்யயனம் செய்தவர்கள். விரஜினம் என்பது பாபம் அது அற்றவர்கள் அவிரிஜனர் (பாபம் அற்றவர்) அவர்கள் சாஸ்த்திரத்தில் கூறப்பட்டவாறு கர்மம் செய்பவர்கள். அவ்வாறே“अकामहत” (அகாமஹத) - ஆஜான தேவர்களுக்குக் கீழான விஷயங்கள் உள்ளனவோ அதில் ஆசை அற்றவர்கள். இவ்வாறு புருஷனுடைய ஆனந்தமும் ஆஜான தேவர்களுக்கு சமானமாகும். இந்த அர்த்தம்(यश्च) என்பதில் உள்ள(च) “ச” என்ற சப்தத்தால் கிடைக்கிறது.
भाष्यम् - तच्छतगुणीकृतपरिमाणः प्रजापतिलोके एक आनन्दो विराट्शरीरे। तथा तद्विज्ञानवाञ्श्रोत्रियोऽधीत-वेदऽश्चावृजिन इत्यादि पूर्ववत्, तच्छतगुणीकृतपरिमाण एक आनन्दो ब्रह्मलोके हिरण्यगर्भात्मनि। यश्चेत्यादि पूर्ववदेव। अतः परं गणितनिवृत्तिः। एष परम आनन्द इत्युक्तः, यस्य च परमानन्दस्य ब्रह्मलोकाद्यानन्दा मात्राः, उदधेरिव विप्रुषः।
अनुवादः - ச.பா- அந்த நூ று எண்ணிக்கை அளவு ஆனந்தம் பிரஜாபலோகத்தில் விராட் சரீரத்தில் ஒரு ஆனந்தமாகும். அவ்வாறே அந்த விக்ஞானமுடைய ஸ்ரோத்திரியனும் வேதத்தை அத்யயனம் செய்தவன் அவிரஜினன் என்பது எல்லாம் முன்புபோல். அந்த நூ று எண்ணிக்கை அளவு உள்ள ஒரு ஆனந்தம் பிரஹ்ம லோகத்தில் ஹிரண்யகர்பனின் ஆனந்தம்.“यश्च” (யஷ்ச்ச) முதலியவை முன் போல். ஆகையால் இதற்குப்பின் எண்ணிக்கை நிவிர்த்தியாகிறது. இதுவே பரமானந்தம் என்று கூறப்படுகிறது. சமுத்திரத்தின் துளிபோல் இந்த ஆனந்தங்கள் எல்லாம் பிரஹ்மானந்தத்தின் கேவலம் அம்சமாத்திரம் (லேசமாத்திரம்).
भाष्यम् - एवं शतगुणोत्तरोत्तरवृुपेता आनन्दा यत्रैकतां यान्ति, यश्च श्रोत्रियप्रत्यक्षोऽथैष एव सम्प्रसादलक्षणः परम आनन्दः। तत्र हि नान्यत् पश्यति नान्यच्छृणोति, अतो भूमा, भूमात्वादमृतः, इतरे तद्विपरीताः।
अनुवादः - ச.பா- இவ்வாறு நூ று நூ று எண்ணிக்கையாக மேலும் மேலும் விருத்தியான ஆனந்தங்கள் எங்கு ஒன்றாய் (ஏகமாய்) ஆகிறதோ, எது ஸ்ரோத்திரியனுக்கு பிரத்யக்ஷமாய் ஆகிறதோ அதனால் சம்பிரசாதலக்ஷணம் பரம ஆனந்தம். எங்கும் மற்றதைப் பார்ப்பதில்லையோ, எங்கும் மற்றதைக் கேட்பதில்லையோ ஆகையால் பூமா. பூமாவாய் இருப்பதால் அம்ருதம். மற்றவை இதைக் காட்டிலும் வேறானவை.
भाष्यम् - अत्र च श्रोत्रियत्वावृजिनत्वे तुल्ये, अकाम-हतत्वकृतो विशेष आनन्दशतगुणवृद्धिहेतुः। अत्रैतानि साधनानि श्रोत्रियत्वावृजिनत्वाकामहतत्वानि तस्य तस्यानन्दस्य प्राप्तवर्थाद-भिहितानि, यथा कर्माण्यग्निहोत्रादीनि देवानां देवत्वप्राप्तौ। तत्र च श्रोत्रियत्वावृजिनत्वलक्षणे कर्मणी अधरभूमिष्वपि समाने इति न उत्तरानन्दप्राप्तिसाधने अभ्युपेयेते। अकामहतत्वं तु वैराग्यतार-तम्योपपत्तेरुत्तरोत्तरभूम्यानन्दप्राप्तिसाधनमितयवगम्यते। स एष परम आनन्दो वितृष्णश्रोत्रियप्रत्यक्षोऽधिगतः। तथा च वेदव्यासः-“यच्च कामसुखं लोके यच्च दिव्यं महत् सुखम्। तृष्णाक्षयसुखस्यैते नार्हतः षोडशीं कलाम्” इति।
अनुवादः - ச.பா- இங்கு ஸ்ரோத்திரிய அவர்ஜின (பாபம் அற்ற) என்பவை சமமானவையாய் இருப்பதால் அகாமஹ(अकामहत) என்ற விசேஷ்யம் ஆனந்தத்தின் நூ று என்ற கணக்கின் விருத்திக்கு ஹேதுவாகிறது. எவ்வாறு கர்மங்களாகிய அக்னி ஹோத்திரங்கள் தேவர்களுக்கு தேவப் பிராப்த்திக்காக ஆயிற்றே அவ்ருஜீனத்துவம் அவ்வாறு இங்கு ஸ்ரோத்திரியத்துவம் அவஜீத்துவம், அகாமஹதத்துவம் ஆகிய அந்த சாதனங்கள் அந்த அந்த ஆனந்தத்திற்கான பிராப்த்திக்கு ஆனவை என்று கூறப்பட்டது. இவைகளில் ஸ்ரோத்திரியமும், பாபமற்றதும் ஆன கர்மரூபமானது கீழான பூமிகளுக்கு சமானமாகும் என்பதால் மேலான பூமிகளின் பிராப்த்திக்கு சாதனமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆகையால் “அகாமஹதம்”(अकामहतम्) வைராக்கிய தாரதம்யம் இருப்பதால் மேலான மேலான பூமானந்தம் அடைவதற்கான சாதனம் என்று அறியப்படுகிறது. அந்த இந்த பரமானந்தம் திருஷ்ணை அற்ற(ஆசை அற்ற) ஸ்ரோத்திரியர்களுக்கு பிரத்யக்ஷமாய் அறியப்படுகிறது. அவ்வாறே வேதவியாசரும் கூறியுள்ளார் “कामसुखं लोके यश्च दिव्यं महत् सुखम्। तृष्णाक्षयसुखस्य एते नार्हतः षोडशीं कलाम्” (யச்ச காமசுகம் லோகே யச்ச திவ்யம் மஹத் சுகம். த்ருஷ்ணா க்ஷய சுகஸ்யைதே நார்ஹத ஷோடஷீம்கலாம்) என்று.
भाष्यम् - एष ब्रह्मलोको हे सम्राडिति होवाच याज्ञवल्क्यः। सोऽहमेवमनुशिष्टो भगवते तुभ्यं सहस्रं ददामि गवाम्। अत ऊर्ध्वं विमोक्षायैव ब्रूहीति व्याख्यातमेतत्।
अनुवादः - ச.பா- யாக்ஞவல்க்கியர் - ஹே சம்ராட்! இது பிரஹ்மலோகம் என்று கூறினார். (ஜனகர்-) இவ்வாறு நான் உபதேசிக்கப்பட்டதால் ஹே பகவானே! உமக்கு ஆயிரம் பசுக்கள் அளிக்கிறேன். ஆகையால் எனக்கு மோக்ஷம் அடைவதற்காக மேலும் கூறுங்கள் என்பது முன்பு வியாக்கியானம் செய்யப்பட்டது போல் ஆகும்.
भाष्यम् - अत्र हि विमोक्षायेत्यस्मिन् वाक्ये याज्ञवल्क्यो बिभयाञ्चकार भीतवान्। याज्ञवल्क्यस्य भयकारणमाह श्रुतिः- न याज्ञवल्क्यो वक्तृत्वसामर्थ्याभावाद् भीतवानज्ञानाद् वा। किं तर्हि? मेधावी राजा सर्वेभ्यो मा मामन्तेभ्यः प्रश्ननिर्णयावसानेभ्य उदरौत्सीदावृणोदवरोधं कृतवानित्यर्थः। यद् यन्मया निर्णीतं प्रश्नरूपं विमोक्षार्थं तत्तदेकदेशत्वेनैव कामप्रश्नस्य गृहीत्वा पुनः पुनर्मां पर्यनुयुङ्क्त एव, मेधावित्वादिति। एतद् भयकारणम्- सर्वं मदीयं विज्ञानं कामप्रश्नव्याजेनोपादित्सतीति।
अनुवादः - ச.பா- இங்கு மோக்ஷம் அடைவதற்காக என்ற வாக்கியத்தால் யாக்ஞவல்க்யர் பீதி அடைந்தார். சுருதி யாக்ஞவல்க்யரின் பயத்திற்குக் காரணம் கூறுகிறது - யாக்ஞவல்க்யருக்கு கூறுவதற்கான சாமர்த்தியம் இல்லையென்றே, அக்ஞானத்தினாலோ பயப்படவில்லை. அவ்வாறானால் எதற்காக? மேதாவியான ராஜாஎன்னிடம் இருந்து எல்லா கேள்விகளுக்கும் நிர்ணயம் செய்து தன்னுடைய அபிப்பிராயங்களை முடிவாகக் கூறச் செய்கிறார். எது என்னால் நிர்ணயம் செய்யப்பட்டதோ அந்த பிரச்ன ரூபமான மோக்ஷத்திற்கான காம பிரச்னத்தை ஏகதேசமாக கிரஹித்துக் கொண்டு மறுபடியும் மறுடியும் மேதாவியானதால் கேட்கிறார். என்பதுதான் பயத்திற்கான காரணம். என்னுடைய எல்லா ஞானத்தையும் காமப்பிரச்னமூலமாய் அறிய நினைக்கிறார்.
भाष्यम् - अत्र विज्ञानमयः स्वयंज्योतिरात्मा स्वप्ने प्रदर्शितः। स्वप्नान्तबुद्धान्तसंचारेण कार्यकरणव्यतिरिक्तता। कामकर्मप्रविवेकश्चासङ्गतया महामत्स्यदृष्टान्तेन प्रदर्शितः। पुनश्चाविद्याकार्यं स्वप्न एव घ्नन्तीवेत्यादिना प्रदर्शितम्। अर्थादविद्यायाः सतत्त्वं निर्धारितम्- अतद्धर्माध्यारोपणरूप-त्वमनात्मधर्मत्वं च।
अनुवादः - ச.பா-இங்கு ஸ்வப்பனத்தில் விக்ஞானமய ஸ்வயம் ஜ்யோதி ஆத்மா தெரிவிக்கப்பட்டது. ஸ்வப்ன ஸ்தானம் ஜாக்ரத் ஸ்தானங்களில் சஞ்சாரத்தின் மூலமாய் காரியகரணங்களின் வேறான தன்மை காண்பிக்கப்பட்டது. மேலும்“घ्नन्तीव” (க்னந்தீஇவ) (வெட்டப்பட்டதுபோல்) என்பது முதலியவைகளால் ஸ்வப்னம் அவித்யாகாரியம் என்று காட்டப்பட்டது. இவைகளால் அவித்யா தத்துவத்துடனும், அதத்தர்மங்களின் அத்தியாரோபத்துவமாகிய அநாத்ம தர்மத்துவரூபமும் விளக்கப்பட்டது.
भाष्यम् - तथा विद्यायाश्च कार्यं प्रदर्शितं सर्वात्मभावः स्वप्न एव प्रत्यक्षतः“सर्वोऽस्मीति मन्यते सोऽस्य परम लोकः”इति। तत्र च सर्वात्मभावः स्वभावोऽस्य, एवम् अविद्याकाम-कर्मादिसर्वसंसारधर्मसम्बन्धातीतं रूपमस्य साक्षात् सुषुप्ते गृह्यते इत्येतद् विज्ञापितम्।
अनुवादः - ச.பா- அவ்வாறே“सर्वोऽस्मीति मन्यते सोऽस्य परम लोकः” (சர்வோஅஸ்மீதி மன்யதே சோஅஸ்ய பரம லோக:) என்ற வாக்கியத்தால் ஸ்வப்னத்தில் வித்யையின் காரியமாகிய சர்வாத்ம பாவம் காண்பிக்கப்பட்டது. அங்கு சர்வாத்ம பாவம் ஸ்வபாவமாகும். அவ்வாறே அவித்யா காம கர்ம முதலிய எல்லா சம்சார தர்ம சம்பந்தங்களைத் தாண்டிய ரூபமானது. பிரத்யக்ஷமாய் சுஷுப்தியில் கிரஹிக்கப்படுகிறது என்று கூறப்பட்டது.
भाष्यम् - स्वयंज्योतिरात्मा, एष परम आनन्दः, एष विद्याया विषयः, स एष परमः सम्प्रसादः सुखस्य च पराकाष्द्भा- इत्येतदेवमन्तेन ग्रन्थेन व्याख्यातम्। तच्चैतत् सर्वं विमोक्षपदार्थस्य दृष्टान्तभूतं बन्धनस्य च। ते चैते मोक्षबन्धने सहेतुके सप्रपञ्चे निर्दिष्टे विद्याविद्याकार्ये, तत् सर्वं दृष्टान्तभूतमेवेति, तद्दार्ष्टान्तिकस्थानीये मोक्षबन्धने सहेतुके कामप्रश्नार्थभूते त्वया >वक्तव्ये इति पुनः पर्यनुयुङ्क्ते जनकः- अत ऊर्ध्वं विमोक्षायैव ब्रूहीति।
अनुवादः - ச.பா- இந்த ஸ்வயம் ஜ்யோதி ஆத்மா பரமானந்தம். இது வித்யாவின் விஷயம். அந்த இந்த பரம சம்பிரசாதமாகும். சுகத்தின் பராகாஷ்டா (மேலான முடிவு). இவ்வாறு இது முடிய இந்த கிரந்தத்தில் வியாக்கியானம் செய்யப்பட்டது. அந்த இவை எல்லாம் விமோக்ஷபதார்த்தினதும், பந்தத்தினதுமான திருஷ்டாந்த ரூபமாகும். வித்யா அவித்யா காரியமாகிய இவை மோக்ஷபந்தன ஹேதுவுடன் விஸ்தாரமாய் கூறப்பட்டது. அவை எல்லாம் திருஷ்டாந்த ரூபமாகும். ஆகையால் தாஷ்டாந்த ஸ்தானீயமான மோக்ஷ பந்தங்களின் ஹேதுவுடனும் காம பிரச்னத்தின் காரணமாகவும் நீங்கள் எனக்கு விளக்கவேண்டும் என்று ஜனகர் மேலும் மோக்ஷத்திற்கானதைக் கூறுங்கள் என்றார்.
भाष्यम् - तत्र महामत्स्यवत् स्वप्नबुद्धान्तौ असङ्गः संचरत्येक आत्मा स्वयंज्योतिः- इत्युक्तम्। यथा चासौ कार्यकरणानि मृत्युरूपाणि परित्यजन्नुपाददानश्च महामत्स्यवत् स्वप्नबुद्धान्तावनुसंचरति तथा जायमानो म्रियमाणश्चतैरेव मृत्युरूपैः संयुज्यते वियुज्यते च।“उभौ लोकावनुसंचरति” इति संचरणं स्वप्नबुद्धान्तानुसंचारस्य दार्ष्टान्तिकत्वेन सूचितम्। तदिह विस्तरेण सनिमित्तं संचरणं वर्णयितव्यमिति तदर्थोऽयमारम्भः।
अनुवादः - ச.பா- இதற்கு முன் மஹாமத்ஸ்யம் போல (திமிங்கலம்) ஸ்வப்னத்திலும் ஜாக்ரத்திலும் ஒரே ஸ்வயம் பிரகாச அசங்க ஆத்மா சஞ்சாரம் செய்கிறது. அவ்வாறே இந்த மிருத்யு ரூபமான தேஹ இந்திரியங்களை விட்டும், ஏற்றுக்கொண்டும் மஹாமத்ஸ்யம்போல் ஸ்வப்னத்திற்கும், ஜாக்ரத்திற்கும் சஞ்சரிக்கின்றது. அவ்வாறே பிறப்பு, இறப்பு இவைகளான மிருத்யு ரூபங்களுடன் சேர்வதும், பிரிவதுமாக இருக்கிறது.“उभौ लोकावनुसंचरति” (உபெள லோகாவனுசம்சரதி) என்று ஸ்வப்ன புத்தாந்த சம்சரனத்தின் சஞ்சாரம் தாஷ்டாந்த முகமாக சூசனை செய்யப்பட்டது. இங்கு விஸ்தாரமாய் நிமித்தத்துடன் சம்சரணம் வர்ணிப்பதற்காக இது ஆரம்பிக்கப்படுகிறது.
भाष्यम् - तत्र च बुद्धान्तात् स्वप्नान्तम् अयमात्मा-नुप्रवेशितः। तस्मात् सम्प्रसादस्थानं मोक्षदृष्टान्तभूतम्। ततः प्रच्याव्य बुद्धान्ते संसारव्यवहारः प्रदर्शयितव्यः, इति तेनास्य सम्बन्धः।
अनुवादः - ச.பா- அங்கு இந்த ஆத்மா புத்தாந்தத்திலிருந்து (ஜாக்ரத்திலிருந்து) ஸ்வப்பனம் வரையிலும் உடன் பிரவேசிக்கிறது. ஆகையால் சம்பிரசாதஸ்தானம் மோக்ஷத்திற்கு திருஷ்டாந்தமாகிறது. ஆகையால் அதிலிருந்து நழுவும் பொழுது ஜாக்ரதத்தில் சம்சார வியவஹாரங்களை தெரிவிக்க வேண்டும் என்று அதனால் இதனுடன் சம்பந்தம்.
मन्त्रः - स वा एष एतस्मिन् स्वप्नान्ते रत्वा चरित्वा दृष्ट्वैवव पुण्यं च पापं च पुनः प्रतिन्यायं प्रतियोन्याद्रवति बुद्धान्तायैव।। ३४।।
अनुवादः - மந்திரம் - அந்த இந்த புருஷன் இந்த ஸ்வப்னாந்தத்தில் ரமிக்கின்றான், திரிகின்றான். அவ்வாறே புண்ய பாபங்களைக் கண்டு மறுபடியும் சென்ற மார்க்கத்திலிருந்து யதாஸ்தானமான ஜாகிரத் அவஸ்தாவிற்கே திரும்புகிறது. (அதாவது யோனியைக் குறித்து ஜன்மத்திற்காக திரும்புகிறது)
भाष्यम् - स वै बुद्धान्तात् स्वप्नान्तक्रमेण सम्प्रसन्न एष एतस्मिन् सम्प्रसादे स्थित्वा, ततः पुनरीषत् प्रच्युतः स्वप्नान्ते रत्वा चरित्वेत्यादि पूर्ववद् बुद्धान्तायैव आद्रवति।
अनुवादः - ச.பா- ஜாக்ரத்திலிருந்து ஸ்வப்னாந்த க்ரமமாய் சம்பிரசாதத்தை அடைந்து அந்த சம்பிரசாதத்திலிருந்து புருஷன் சிறிது நழுவி ஸ்வப்னாந்தத்தை அடைந்து அதில் ரமித்து, சஞ்சரித்தல் முதலியவைகளில் இருந்து முன்புபோல் ஜாக்ரத்திற்கே திரும்புகிறான்
भाष्यम् - अव - इत आरभ्यास्य संसारो वर्ण्यते। यथायमात्मा स्वप्नान्तात् बुद्धान्तमागतः, एवमयमस्माद् देहाद् देहान्तरं प्रतिपत्स्यत इत्याहात्र दृष्टान्तम्।
अनुवादः - ச.பா- இதற்கு பின் சம்சார வர்ணனை ஆரம்பிக்கப்படுகிறது. எவ்வாறு இந்த ஆத்மா ஸ்வப்னஸ்தானத்திலிருந்து ஜாக்ரதஸ்தானத்திற்கு செல்கிறதோ அவ்வாறு இந்த ஆத்மா இந்த தேஹத்திலிருந்து வேறு தேஹத்தை அடைகிறது என்பதற்கு திருஷ்டாந்தம் -
मन्त्रः - तद् यथानः सुसमाहितमुत्सर्जद् यायादोवमेवायं शरीर आत्मा प्राज्ञेनात्मनान्वारूढ उत्सर्जन् याति यत्रैतदूर्ध्वोछ्वासी भवति।। ३५।।
अनुवादः - மந்திரம் - எவ்வாறு முழுபாரம் ஏற்றப்பட்ட வண்டி அதிக சப்தம் எழுப்பிக்கொண்டு செல்லுகிறதோ அவ்வாறு இந்த சரீரத்தில் இருக்கும் ஜீவாத்மாவும் பரமாத்மாவினால் இந்த சரீரத்திலிருந்து வெளியேறுகின்றபொழுது மிகுந்த பெருமூச்சுடன் சப்தம் செய்து கொண்டு வெளியேறுகிறது.
यदा पुनरेतमात्मानमभाष्यम् - तत्तत्र यथा लोकेऽनः शकटं सुसमाहितं सुष्टु भृशं वा समाहितं भाण्डोपस्करणेन उलूखलमुसलशूर्पपिद्भरादिनान्नाद्येन च सम्पन्नं सम्भारेण आक्रान्तमित्यर्थः तथा भाराक्रान्तं सदुत्सर्जच्छब्दं कुर्वद् यथा यायाद् गच्छेच्छाकटिकेनाधिष्द्भितं सत्, एवमेव यथोक्तो दृष्टान्तोऽयं शारीरः शरीरे भवः, कोऽसौ? आत्मा लिङ्गोपाधिः, यः स्वप्नबुद्धान्ताविव जन्ममरणाभ्यां पाप्मसंसर्ग-वियोगलक्षणाभ्यामिहलोकपरलोकावनुसंचरति। यस्योत्क्रमणमनु प्राणाद्युत्क्रमणम्, स प्राज्ञेण परेण आत्मना स्वयंज्योतिः- स्वभावेन अन्वारूढोऽधिष्द्भितः- अवभास्यमानः तथा चोक्तम्-“आत्मनैवायं ज्योतिषास्ते पल्ययते” इति उत्सर्जन् याति।
अनुवादः - ச.பா- அது அங்கு எவ்வாறு உலகத்தில் வண்டியில் மிக அதிகமாக பாரம் ஏற்றப்பட்ட அதாவது பாத்திரங்கள், வீட்டிற்கான பாண்டங்கள், உரல், உலக்கை, முறம், சமையல் பாத்திரங்கள், உணவு வகைகளை நிறைத்து ஏற்றிச் செல்லும் வண்டி பாரத்தினால் எவ்வாறு சப்தம் செய்து கொண்டு செல்லுமோ அவ்வாறு இந்த திருஷ்டாந்தத்தில் உள்ளதுபோல் சரீரத்தில் உள்ளவன். அது யாது? எனில் லிங்கதேஹத்தை உபாதியாக உடைய ஆத்மா. எவன் ஸ்வப்ன, ஜாக்கிரத்திற்கும் செல்லுவதுபோல் ஜன்மமரணங்களில் அதாவது பாபத்தின் சம்யோக வியோகலக்ஷணங்களால் இகலோகத்திற்கும் பரலோகத்திற்கும் சம்சாரம் செய்கின்றான். அவ்வாறு இந்த உத்கிரமணத்துடன் பிராணன் முதலியவைகளுக்கும் உத்கிரமணம் ஏற்படுகிறது. அந்த ஸ்வயம் ஜ்யோதி ரூப பிராக்ஞன் அதாவது அவபாஸ்யமாகி அதாவது“आत्मनैवायं ज्योतिषास्ते पल्ययते” (ஆத்மனைவாயம் ஜ்யோதிஷாஸ்தே பல்யயதே) என்று கூறியவாறு சப்தம் செய்துகொண்டே செல்கிறது.
भाष्यम् - तत्र चैतन्यात्मज्योतिषा भास्ये लिङ्गे प्राणप्रधाने गच्छति तदुपाधिरप्यात्मा गच्छतीव। तथा श्रुत्यन्तरम्-“कस्मिन्न्वहम्”(प्र० उ० ६।३) इत्यादि“ध्यायतीव” (बृ० उ० ४। ३। ७) इति च। अत एवोक्तं प्राज्ञेनात्मनान्वारूढ इति। अन्यथा प्राज्ञेन एकीभूतः शकटवत् कथमुत्सर्जन् याति। तेन लिङ्गोपाधिरात्मा उत्सर्जन् मर्मसु निकृत्यमानेषु दुःखवेदनया आर्तः शब्दं कुर्वन् याति गच्छति।
अनुवादः - ச.பா- அப்பொழுது சைதன்யாத்ம ஜ்யோதியினால் விளங்கும் பிராணனை பிரதானமாக உடைய லிங்கதேஹம் வெளியேறும் சமயத்தில் லிங்கதேஹ உபாதியுடன் கூடிய ஆத்மாவும் செல்வது போல் தோன்றுகிறது. அவ்வாறே சுருதிகளிலும்“कस्मिन्न्वहम्” (கஸ்மின்னவஹம்) என்றும்“ध्यायतीव” (தியாயதீவ) என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகையால் பிராக்ஞான ஆத்மாவினால் அதிஷ்ட்டிதமாகி இருக்கிறது. அல்லது வேறு விதமாக பிரக்ஞாத்மாவுடன் ஏக ரூபமாகி வண்டியைப்போல் சப்தம் இட்டுக்கொண்டு செல்கிறது. ஆகையால் லிங்க உபாதி ஆத்மா மர்மஸ்தானங்களை சேதித்துக் கொண்டு செல்லும் பொழுது துக்கத்துடனும் வேதனையுடனும் சப்தம் செய்து கொண்டு செல்கிறது.
भाष्यम् - तत् कस्मिन् काल इति। उच्यते यत्रैतद् भवति। एतदिति क्रियाविशेषणम्। ऊर्ध्वोच्छ्वासी यत्रोर्ध्वोच्छ्वासीत्वस्य भवतीत्यर्थः। दृश्यमानस्याप्यनुवदनं वैराग्यहेतोः- ईदृशः कष्टः खल्वयं संसारः, येनोत्क्रान्तिकाले मर्मसु उत्कृत्त्यमानेषु स्मृतिलोपोदुःखवेदनार्तस्य पुरुषार्थसाधनप्रतिपत्तौ चासामर्थ्यं परवशीकृतचित्तस्य। तस्माद् यावदियमवस्था नागमिष्यति, तावदेव पुरुषार्थसाधनकर्तव्यतायाम् अप्रमत्तो भवेदित्याह कारुण्या-च्छृतिः।।
अनुवादः - ச.பா- அது எந்த சமயத்தில் எங்கு எப்பொழுது ஏற்படும் என்று கூறப்படுகிறது. இங்கு“एतत्” (இது) என்றது கிரியா விசேஷணம், மூச்சு மேலே கிளம்பும்பொழுது அதாவது அதற்கு எப்பொழுது மூச்சு மேலே எழுகிறதோ என்பது பொருள். இதில் வைராக்கியம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த விஷயம் கூறப்படுகிறது. இவ்வாறான கஷ்டம் உடையது அல்லவா இந்த சம்சாரம். தேஹத்தை விடும்பொழுது மர்மஸ்தானத்தை சேதனம் செய்து அதனால் துக்கத்தையும் வேதனையும் அடைந்து தன் ஞாபக சக்தியையும் (ஸ்மிருதியையும்) இழக்கிறான், அவ்வாறே பரவசத்தால் (மற்றதின் வசத்தால்) அந்த புருஷனுடைய சித்தம் புருஷார்த்த சாதனங்களை அடைவதில் சாமர்த்தியம் அற்றதாகிறது. ஆகையால் அந்த அவஸ்தை வராத வரையிலும் புருஷன் புருஷார்த்த சாதனங்களில் ஈடுபட வேண்டும், என்று சுருதியானது கருணையினால் நமக்கு கூறுகிறது.
भाष्यम् - तदस्योर्ध्वोच्छ्वासित्वं कस्मिन् काले किं निमित्तं कथं किमर्थं वा स्यात्। इत्येतदुच्यते।
अनुवादः - ச.பா- அ.கை- அதற்கு மேல மூச்சு (ஊர்தவ உச்ஸ் வாசம்) எப்பொழுது, எந்த காரணத்தால், எவ்வாறு, எதற்காக ஏற்படுகிறது என்பது கூறப்படுகிறது.
मन्त्रः - स यत्रायमणिमानं न्येति जरया वोपतपता वाणिमानं निगच्छति तद् यथाम्रं वोदुम्बरं वा पिप्पलं वा बन्धनात् प्रमुच्यत एवमेवायं पुरुष एभ्योऽङ्गेभ्यः सम्प्रमुच्य पुनः प्रतिन्यायं प्रतियोन्याद्भवति प्राणायैव।। ३६।।
अनुवादः - மந்திரம் - அந்த இந்த தேஹம் எப்பொழுது நலிந்து மெலிந்து போகிறதோ, அல்லது முதுமை, ஜ்வரம் முதலிய ரோகத்தின் காரணத்தால் நலிவு (தேய்வு) அடைகிறதோ அப்பொழுது எவ்வாறு மாம்பழம், அத்திப்பழம், ஆலம்பழம் இவைகள் பந்தத்திலிருந்து விடுபடுகின்றனவோ அவ்வாறே இந்த புருஷன் இந்த அங்கங்களை விட்டு எந்த மார்க்கத்திலிருந்து வந்ததோ அதிலிருந்து ஒவ்வொறு யோனியிலும் பிராணனின் விசேஷத்தின் அபிவியக்திக்காக (வெளிப்பாட்டிற்காக செல்கிறது.
भाष्यम् - सोऽयं प्राकृतः शिरः पाण्यादिमान् पिण्डो यत्र यस्मिन् कालेऽयमणिमानं अणोर्भावमणुत्वं कार्श्यमित्यर्थ, न्येति निगच्छति, किं निमित्तम्? जरया वा स्वयमेव कालपक्वफल-वज्जीर्णः कार्श्यं गच्छति। उपतपतीत्युपतञ्ज्वरादिरोगः, तेनोपतपता वा, उपतप्यमानो हि रोगेण विषयमाग्नितयान्नं भुक्तं न जरयति, ततोऽन्नरसेनानुपचीयमानः पिण्डः कार्श्यमापद्यते। तदुच्यते उपतपता वेत्यणिमानं निगच्छति।
अनुवादः - ச.பா- அந்த இந்த சாதாரண சிரஸ், கை கால்கள் உடைய பிண்டம் எப்பொழுது மிக சூக்ஷ்மமான அணுவிற்கு சமானமாக மெலிவை அடைகிறது என்பது பொருள். மெலிவுத்தன்மையால் இல்லாதது போல் ஆகிறது. எதன் காரணமாக? மூப்பினாலோ அல்லது சுயமாகவோ காலத்தால் பழம்போல் தானே கெட்டுப்போய் மெலிவுத்தன்மையை அடைகிறது. ஜீவரம் முதலியவைகளால் தபிக்கப்படுகிறது. அந்த தபிக்கச் செய்யும் ரோகத்தால் (நோயினால்) விஷம (மாறான) அக்னியினால் சாப்பிட்ட அன்னம் ஜீரணிக்காமல் அந்த அன்ன ரசம் பிண்டத்தில் சேராததால் மெலிவை அடைகிறது. அல்லது ஜீவரம் முதலிய நோய்களால் மெலிவுத் தன்மையை அடைகிறது.
भाष्यम् - यदा अत्यन्तकार्श्यं प्रतिपन्नो जरादिनिमित्तैः, तदोर्ध्वोच्छ्वासी भवति, यदोर्ध्वोच्छ्वासी, तदा भृशाहितसम्भार-शकटवदुत्सर्जन् याति। जराभिभवो रोगादिपीडनं कार्श्यापत्तिश्च शरीरवतोऽवश्यम्भाविन एतेऽनर्था इति वैराग्यायेदमुच्यते।
अनुवादः - ச.பா- எப்பொழுது மூப்பு (ஜரை) முதலிய நிமித்திங்களால் மிகவும் மெலிவை அடைந்த பொழுது மூச்சு மேல் எழுகிறது. எப்பொழுது மூச்சு வெளியேறுகிறதோ அப்பொழுது மிகுந்த பாரம் உடைய வண்டி சப்தம் செய்துகொண்டு போவது போல் சப்தம் செய்து கொண்டு செல்கிறது. இங்கு மூப்பினால் உண்டாவதும், நோயினால் பீடிக்கப்படுவதும், மெலிவு அடைவதும் சரீரம் உடையவைகளுக்கு அவசியம் உண்டாகும் என்பது அநர்த்தம் என்று காட்டி அதில் வைராக்கியம் உண்டாவதற்காக கூறப்பட்டது.
भाष्यम् - यदासावुत्सर्जन् याति तदा कथं शरीरं विमुञ्चति? इति दृष्टान्त उच्यते- तत्तत्र यथा आम्रं वा फलम्, उदुम्बरं वा पिप्पलं वा फलम्- विषमनेकदृष्टान्तोपादानं मरणस्यानियतनिमित्त-ख्यापनार्थम्, अनियतानि हि मरणस्य निमित्तान्यसंख्यातानि च। एतदपि वैराग्यार्थमेव, यस्मादयमनेकमरणनिमित्तवांस्तस्मात् सर्वदा मृत्योरास्ये वर्तत इति- बन्धनात् बध्यते येन वृन्तेन सह स बन्धनकारणो रसो यस्मिन् वा बध्यते इति वृन्तमेवोच्यते बन्धनम्, तस्माद् रसाद् वृन्ताद् वा बन्धनात् प्रमुच्यते वाताद्यनेकनिमित्तम्. एवमेवायं पुरुषो लिङ्गत्मा लिङ्गोपाधिरेभ्योऽङ्गेभ्यश्चक्षुरा-दिदेहावयवेभ्यः सम्प्रमुच्य सम्यङ् निर्लेपेन प्रमुच्य, न सुषुप्तगमनकाल इव प्राणेन रक्षन्, किं तर्हि? सह वायुनोपसंह्य्त्य, >पुनः प्रतिन्यायं पुनः शब्दात् पूर्वमप्ययं देहाद् देहान्तरमसकृद् गतवान् यथा स्वप्नबुद्धान्तौ पुनः पुनर्गच्छति तथा पुनः प्रतिन्यायं प्रतिगमनं यथागतमित्यर्थः। प्रतियोनि योनिं योनिं प्रति कर्मश्रुतादिवशादाद्रवति।
अनुवादः - ச.பா- எப்பொழுது அது சப்தம் செய்து கொண்டு வெளியே செல்லும் பொழுது எவ்வாறு சரீரத்தை விடுகிறது (த்யாகம் செய்கிறது)? இதற்கு திருஷ்ட்டாந்தம் கூறப்படுகிறது. எவ்வாறு மாம்பழமோ, அத்திபழமோ, ஆலம்பழமோ என்ற விஷயமான திருஷ்டாந்தம் மிருத்யுவின் நிச்சயமற்றதன்மையின் நிமித்தத்தைத் தெரிவிப்பதற்காக ஆகும். ஏன் எனில் மிருத்யுவின் காரணம் நிச்சயமற்றதாயும், எண்ண முடியாததாயும் உள்ளது. இது வைராக்கியத்தை உண்டாக்குவதற்காக கூறப்பட்டது. எதனால் இந்த தேஹ மரணத்திற்கு அநேக காரணங்கள் உள்ளன. ஆகையால் எப்பொழுதும் மிருத்யுவை நோக்கியே இருக்கின்றது. (மிருத்யுவின் வாயில் அகப்பட்டுள்ளது). எவ்வாறு பழங்கள் கிளையினால் பந்தப்பட்டுள்ளதோ அவ்வாறு அதில் உள்ள ரசத்தாலோ பந்தப்படுவதை பந்தனம் என்று கூறுகிறோம். அல்லது ரசத்தாலோ, கிளையிலிருந்தோ காற்றினாலோ அல்லது மற்ற நிமித்தத்தாலோ விடுபவது போல் இந்த புருஷனும் லிங்காத்மா அதாவது லிங்க உபாதிகளில் இருந்தும் அங்களிலிருந்தும், கண்கள் முதலிய தேஹ அவயவங்களில் இருந்தும் நன்றாக விடுபட்டு, அதை ஒட்டாமல் விடுபட்டு சுஷுப்தி காலத்தில் பிராணனால் ரக்ஷிக்கப்படுவது இல்லை. வாயுவுடன் சப்தம் செய்து கொண்டு மறுபடியும், மறுபடியும் தேஹத்திலிருந்து வேறு தேஹத்திற்கு அடிக்கடி செல்கிறான். எவ்வாறு ஸ்வப்னத்திற்கும் ஜாக்ரதத்திற்கும் செல்வது போல் எவ்வாறு செல்கிறானோ அவ்வாறு செல்கிறது என்பது பொருள். தங்களுடைய கர்மத்திற்கும் வித்யாவிற்கும் தகுந்தவாறு அனுசரித்து ஒவ்வொறு யோனியையும் அடைகிறது.
भाष्यम् - किमर्थम्? प्राणायैव प्राणव्यूहायैवेत्यर्थः। सप्राण एव हि गच्छति, ततः प्राणायैवेति विशेषणमनर्थकम्, प्राणव्यूहाय हि गमनं देहाद् देहान्तरं प्रति, तेन ह्यस्य कर्मफलोपभोगार्थसिद्धिः, न प्राण सत्तामात्रेण। तस्मात्तादर्थ्यार्थं युक्तं विशेषणं प्राणव्यूहायेति।
अनुवादः - ச.பா- எதனால் செல்கிறது? ஏன்எனில் பிராணனை நிலைபெறசெய்வதற்காக பிராணனுடன் செல்கிறது என்ற ஸ்திதி இருக்கும்பொழுது“प्राणायैव” (பிராணாயைவ) என்ற விசேஷணம் வியர்த்தமாகிவிடும். லிங்காத்மா ஒரு தேஹத்திலிருந்து மற்றொரு தேஹத்திற்குச் செல்லும்பொழுது அங்கு இருப்பதற்காக விசேஷம் அங்கு கர்மபல போகத்திற்காக என்பது சித்திப்பதற்காகவே அன்றி பிராணனின் சத்தா மாத்திரத்தினால் அல்ல. ஆகையால் பிராணன் போகங்களின் அங்கமாகும். இதை சித்தி செய்வதற்காகவே“प्राणव्यूहाय” (பிராணவ்யூஹாய) என்ற விசேஷணம் பொருத்தமாகிறது
भाष्यम् - अव - शङ्का - तत्रास्येदं शरीरं परित्यज्य गच्छतो नान्यस्य देहान्तरस्योपादाने सामर्थ्यमस्ति, देहेन्द्रियवियोगात्, न चान्येऽस्य भृत्यस्थानीया गृहमिव राज्ञे शरीरान्तरं कृत्वा प्रतीक्षमाणा विद्यन्ते, अथैवं सति कथमस्य शरीरान्त-रोपादानमिति?
अनुवादः - ச.பா- அ.கை- சங்கை- மரணசமயத்தில் சரீரத்தை விட்டு செல்பவன் வேறு தேஹத்தை எடுப்பதற்கான சாமர்த்தியம் இல்லை. ஏன் எனில் தேஹேந்திரியங்கள் நஷ்டமானதால் அவனுக்கு ராஜாவிற்காக அவனுடைய பணியாட்கள் கிருஹம் நிர்மாணம் செய்து காத்திருப்பதுபோல் வேறு தேஹத்தை நிர்மாணம் செய்து காத்திருப்பவர்கள் யாரும் இல்லை. ஆகையால் இவ்வாறு இருக்கும்பொழுது எவ்வாறு வேறு சரீரத்தை எடுப்பான்?
भाष्यम् - अव - समाधानम् - उच्यते- सर्वं ह्यस्य जगत् स्वकर्मफलोपभोगसाधनत्वायोपात्तं स्वकर्मफलोपभोगाय चायं प्रवृत्तो देहाद्देहान्तरं प्रतिपित्सुः, तस्मात् सर्वमेव जगत् स्वकर्मणा प्रयुक्तं तत्कर्मफलोपभोगयोग्यं साधनं कृत्वा प्रतीक्षत एव,“कृतं लोकं पुरुषोऽभिजायते”इति श्रुतेः, यथा स्वप्नाज्जागरितं प्रतिपित्सोः, तत् कथम्? इति लोकप्रसिद्धो दृष्टान्त उच्यते-
अनुवादः - ச.பா- சமாதானம்- கூறப்படுகிறது - இந்த ஜீவனால் ஜகத் முழுவதும் தன்னுடைய போக சாதனத்திற்கான ரூபமாய் அடையப்பட்டு அவன் கர்ம பல போகத்திற்காக ஒரு தேஹத்திலிருந்து வேறு தேஹத்தை அடைய விருப்பம் உடையவனாய் பிரவிருத்திக்கின்றான். ஆகையால் இந்த ஜகத் முழுவதும் தன் கர்மங்களால் தூண்டப்பட்டு அந்த கர்மபலத்தை அனுபவிப்பதற்கு யோக்கியமான சாதனமாகச் செய்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்.“कृतं लोकं पुरुषोऽभिजायते” (க்ருதம் லோகம் புருஷோஅபிஜாயதே) என்ற இந்த சுருதியினால் சித்திக்கிறது. எவ்வாறு ஸ்வப்னாவஸ்தையிலிருந்து ஜாக்கிரத் ஸ்தானத்திற்கு வர விரும்புவதுபோல் முதலிலேயே தயாராய் இருக்கிறான். அது எவ்வாறு? என்பது லோக பிரசித்தமான திருஷ்டாந்தத்தால் கூறப்படுகிறது.
मन्त्रः - तद् यथा राजानमायान्तमुग्राः प्रत्येनसः सूतग्राम- >ण्योऽनैः पानैरावसथैः प्रतिकल्पन्तेऽयमायात्ययमागच्छतीत्येवँ-हैवंविद् ँसर्वाणि भूतानि प्रतिकल्पन्तः इदं ब्रह्मायातीद-मागच्छतीति।। ३७।।
अनुवादः - மந்திரம் - எவ்வாறு ராஜாவின் கடுமையான கர்மங்கள் அடைய சேவகர்கள், பாபகர்மங்களைசெய்யும், சூதர்கள், கிராம அதிகாரிகள் ஆகியவர்கள் அன்னம், பானங்கள் மேலும் தங்குவதற்கான இடம் ஆகியவைகளை தயார் செய்து கொண்டு வாருங்கள், வாருங்கள் என்று எதிர்பாத்து காத்திருப்பது போல் கர்மபலத்தை அறிந்தவனை எல்லா பூதங்களும் இந்த பிரஹ்மா வருகிறது, இது வருகிறது என்று இவ்வாறு கூறிக்கொண்டே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.
भाष्यम् - अव - तत्तत्र यथा राजानं राज्याभिषिक्तमायान्तं स्वराष्ट्रे, उग्रा जातिविशेषाः क्रूरकर्माणो वा प्रत्येनसः, प्रति प्रत्येनसि पापकर्मणि नियुक्ताः प्रत्येनसस्तस्कारादिदण्डनादौ नियुक्ताः सूताश्च ग्रामण्यश्च सूतग्रामण्यः- सूता वर्णसङ्कर-जातिविशेषा ग्रामण्यो ग्रामनेतारस्ते पूर्वमेव राज्ञ आगमनं बुद्ध्वा, अन्नैर्भोज्यभक्ष्यादिप्रकारैः, पानैर्मदिरादिभिः, आवसथैश्च प्रासादादिभिः प्रतिकल्पन्ते निष्पन्नैरेव प्रतीक्षन्ते“अयं राजा आयात्ययमागच्छति” इत्येवं वदन्तः।
अनुवादः - ச.பா- அங்கு எவ்வாறு ராஜாபிஷேகம் செய்யப்பட்ட ராஜா ராஜ்யத்திற்கு வரும்பொழுது மிகவும் கடுமையான ஜாதி விசேஷமுடையவர்களோ அல்லது குரூர கர்மங்கள் உடையவர்களும், பாபகர்மங்களுடைய திருடர்கள் முதலியவர்களுக்குத் தண்டனை தருபவர்களாகிய சூதர்களும், சூதகிராமத்தவர்களும், சூதவர்ணசங்கர ஜாதி விஷேயமுடைய கிராமத்தவர்களும், கிராம அதிகாரிகளும் முதலிலேயே ராஜா கிராமத்திற்கு வருவதை அறிந்து அன்னங்களாலும், பானங்களாலும், அவர் தங்கவேண்டிய இருப்பிடத்தையும் தயார் செய்து “ராஜா வருகிறார், ராஜா வருகிறார் என்று கூறிக்கொண்டு எதிர் பார்த்துக்கொண்டு இருப்பதைப்போல் -
भाष्यम् - अव - यथायं दृष्टान्तः, एवं हैवंविदं कर्मफलस्य वेदितारं संसारिणमित्यर्थः, कर्मफलं हि प्रस्तुतं तदेवंशब्देन परामृश्यते, सर्वाणि भूतानि शरीरकर्तृणि करणानुग्रहीतृणि चानित्यादीनि, तत्कर्मप्रयुक्तानि कृतैरेव कर्मफलोपभोगसाधनैः प्रतीक्षन्ते।“इदं ब्रह्म भोक्तृ कर्तॄ चास्माकमायाति तथेदमागच्छति” इत्येवमेव च कृत्वा प्रतीक्षन्त इत्यर्थः।
अनुवादः - ச.பா- அவ்வாறே இந்த திருஷ்டாந்தம் - இவ்வாறு அறியப்பட்ட அதாவது காமபலத்தை அறிந்த சம்சாரி என்பது பொருள். அந்த கர்மபலமே“एवं” (ஏவம் = இவ்வாறு) என்ற சப்தத்தால் விளக்கப்பட்டது. சரீரத்தை உண்டுபண்ணும் எல்லா பூதங்களும், கரணங்களை அனுக்கிரஹிக்கும் ஆதித்தியன் முதலியவைகளும் அந்தக்கர்மத்தால் ப்ரேரிக்கப்பட்டு அதனால் உண்டாக்கப்பட்ட கர்மபலபோக சாதனங்களால் எதிர்நோக்குகின்றன.“इदं ब्रह्म भोक्तृ कर्तृ चास्माकमायाति यथेदमागच्छति” (இதம் பிரஹ்ம போக்த்ரூ கர்த்ருச் சாஸ்மாகமாயாதி யதேதமாச்சதி) என்று இவ்வாறு செய்துகொண்டு எதிர்நோக்கி இருக்கின்றது என்பது பொருள்.
भाष्यम् - अव - तमेव जिगमिषुं के सह गच्छन्ति? ये वा गच्छन्ति ते किं तत्क्रियाप्रणुन्ना आहोस्वित् तत्कर्मवशात् स्वयमेव गच्छन्ति परलोकशरीरकर्तृणि च भूतानीति, अत्रोच्यते दृष्टान्तः-
अनुवादः - ச.பா- அ.கை- இவ்வாறு செல்வதற்கு தயாராக இருக்கும் ஜீவனுடன் எவர் செல்கின்றனர்? எவர்கள் பரலோக சரீரத்தை உண்டாக்கும் ஆதித்யாதி பூதங்கள் செல்கின்றனவா அதன் வாக் முதலியவைகளினால் ப்ரேரிக்கப்பட்டா அல்லது தன்னுடைய கர்மவசத்தால் தாமாகவே செல்கின்றனவா? என்பதை திருஷ்டாந்த மூலமாய் சுருதி கூறுகிறது-
मन्त्रः - तद् यथा राजानं प्रयियासन्तमुग्राः प्रत्येनसः सूत-ग्रामण्योऽभिसमायन्त्येवमेवेमयात्मानमन्तकाले सर्वे प्राणा अभिसमायन्ति यत्रेैतदूर्ध्वोघ्नासी भवति।। ३८।।
अनुवादः - மந்திரம் - எவ்வாறு செல்வதற்கு தயாராக இருக்கும் ராஜாவை நோக்கி உக்ரகர்மாக்களிலும், பாபகர்மாக்களிலும் ஈடுபட்ட சூதர்களும் அவ்வாறே கிராம அதிகாரிகளும் இருக்கிறார்களோ அவ்வாறு பெருமூச்சுடன் வெளிக்கிளம்பும் அந்தியம காலத்தில் எல்லா பிராண சமூகமும் இந்த ஆத்மாவை எதிர் நோக்கியவாறு அதனுடன் செல்கிறது.
भाष्यम् - अव - तद् यथा राजानं प्रयियासन्तं प्रकर्षेण यातुमिच्छन्तमुग्राः प्रत्येनसः सूतग्रामण्यस्तं यथाभिसमाय-न्त्याभिमुख्येन समायन्त्येकीभावेन तमभिमुखा आयन्त्यनाज्ञप्ता एव राज्ञा केवलं तज्जिगमिषाभिज्ञाः, एवमेवेममात्मानं भोक्तारमन्तकाले मरणकाले सर्वे प्राणा वागादयोऽभिसमायन्ति। यत्रैतदूर्ध्वोच्छ्वासी भवतीति व्याख्यातम्।।
अनुवादः - ச.பா- எவ்வாறு மிகவும் செல்வதற்கு இச்சை உள்ள ராஜாவை உக்ரமானவர்களும், பாபகர்மாக்களை செய்யும் சூதர்களும், சூதகிராமத்தில் இருப்பவர்களும் எவ்வாறு எதிர்பார்த்து எல்லோரும் சேர்ந்து ஒரேபாவமாய் அவரைக் குறித்து வருபவர்களை அறியாத ராஜாவுடன் செல்ல விரும்புகிறார்களோ அவ்வாறே இந்த ஆத்மாவாகிய போக்தா (அந்திமகாலத்தில்) மரண காலத்தில் பிராணன் வாக் முதலியவைகளும் சேர்ந்து செல்கின்றன. அப்பொழுது மேல் மூச்சுடன் வெளியேறுகிறது என்று வியாக்கியானம் செய்யப்பட்டது.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये चतुर्थाध्याये तृतीयं ज्योतिर्ब्राह्मणम् ।। ३।।
चतुर्थ अध्यायः चतुर्थ ब्राह्मणम्
भाष्यम् - अव - स यत्रायमात्मा- संसारोपवर्णनं प्रस्तुतम्। तत्रायं पुरुष एभ्योऽङ्गेभ्यः सम्प्रमुच्य इत्युक्तम्। तत् सम्प्रमोक्षणं कस्मिन् काले कथं वा? इति सविस्तरं संसरणं वर्णयितव्य-मित्यारभ्यते-
अनुवादः - ச.பா- அ.கை-“स यत्रायमात्मा” (ச யத்ரஅயமாத்மா) என்பது இந்த இடத்தில் சம்சாரத்தின் உப வர்ணனமாகும். இதில் இந்த புருஷன் இந்த அங்கங்களில் இருந்து நன்றாக விடுபட்டு என்று கூறப்பட்டது. அந்த சம்பிரமோக்ஷம் எப்பொழுது எவ்வாறு? என்று அந்த மோக்ஷத்தைக் குறித்து விஸ்தாரமாய் விளக்குவதற்கு ஆரம்பிக்கப்படுகிறது
मन्त्रः - स यत्रायमात्माबल्यं न्येत्य सम्मोहमिव न्येत्यथैनमेते प्राणा अभिसमायन्ति स एतास्तेजोमात्राः समभ्याददानो ह्य्दयमेवान्ववक्रामति स यत्रैष चाक्षुषः पुरुषः पारङ् पर्यावर्ततेऽथारूपज्ञो भवति।। १।।
अनुवादः - மந்திரம்- அந்த இந்த ஆத்மா எப்பொழுது துர்பலத்தை அடைந்ததை அறிந்து சம்மோக்ஷத்தை அடைகிறது. அப்பொழுது வாக் முதலிய பிராணன். இதை எதிர் நோக்கி வருகின்றன. அந்த இந்த (பிராணன்களின்) தேஜஸ் மாத்திரத்தைக் நன்றாக எல்லாவிதமாகவும் கிரஹித்துக்கொண்டு ஹ்ருதயத்தில் அனுக்கிராந்தமாகிறது (அபிவியக்த்த ஞானவான் ஆகிறது). அப்பொழுது அந்த சாக்ஷுஷ: புருஷன் (ஜீவன்) எல்லா பக்கங்களிலும் மறைக்கப்படுகிறான் (வியாவிருத்தமாகிறான்) அப்பொழுது மூர்ச்சை அடைந்து ரூப ஞானம் அற்றவனாகின்றான்.
भाष्यम् - सोऽयमात्मा प्रस्तुतो यत्र यस्मिन् कालेऽबल्यमबलभावं नि एत्य गत्वा, यद् देहस्य दौर्बल्यं तदात्मन एव दौर्बल्यमित्युपचर्यतेऽबल्यं न्येति, न ह्यासौ स्वतोऽमूर्तत्वाद-बलभावं गच्छति। तथा सम्मोहमिव- सम्मूढता सम्मोहो विवेकाभावः, सम्मूढतामिव न्येति निगच्छति। न चास्य स्वतः सम्मोहोऽसम्मोहो वास्ति, नित्यचैतन्यज्योतिः स्वभावत्वात्। तेनेवशब्दः सम्मोहमिव न्येतीति, उत्क्रान्तिकाले हि करणोपसंहार निमित्तो व्याकुलीभावः, आत्मन इव लक्ष्यते लौकिकैः, तथा च वक्तारो भवन्ति सम्मूढः सम्मूढोऽयमिति।
अनुवादः - ச.பா- அந்த இந்த கூறப்பட்ட ஆத்மா எப்பொழுது பலம் அற்றதன்மையை அடைந்தது என்பது அங்கு தேஹத்தின் துர்பலமாகும். இவ்வாறு உபசாரமாக கூறுவதுதான் உருவமற்றதாய் இருப்பதால் அது பலமற்றதாக ஆகாது. அவ்வாறே மோஹமுடையது போல் அதாவது சம்மூடமாவது அவிவேகத்தால் ஆகும். மூடம் போல் அறியப்படுகிறது. அதற்கு உண்மையில் சம்மோஹமோ, அசம்மோஹமோ கிடையாது. ஏன் எனில் அது நித்ய சைதன்ய ஜ்யோதி ஸ்வபாவமானதால். ஆகையால் இங்கு >“इव” (இவ - போல) என்ற சப்தத்தால் சம்மோஹம் போல் என்று. உலகில் புருஷன் (ஜீவன்) வெளியேறும் சமயத்தில் இந்திரியங்கள் அடங்குவதால் உண்டாகும் வியாகுலம் ஆத்மாவிற்கு என்று நினைக்கிறார்கள். அவ்வாறே அது மூடமாய் அசசேதனமாய் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
भाष्यम् - अथवा उभयत्र इव शब्दप्रयोगो योज्यः, अबल्य-मिव न्येत्य सम्मोहमिव न्येतीति, उभयस्य परोपाधिनिमित्त-त्वाविशेषात्, समानकर्तृकनिर्देशाच्च।
अनुवादः - ச.பா-அல்லது பலம் அற்றது, சம்மோஹம் ஆகிய இவை இரண்டிற்கும்“इव” (இவ - போல) என்ற சப்தத்தைப் பிரயோகம் செய்யவேண்டும். அதாவது பலமற்றதாக ஆகும்பொழுது சம்மூடமும் சேர்ந்தே அடையப்படுகிறது. ஏன் எனில் வேறு உபாதி தோன்றுவது சமமாக இருப்பதாலும் அவ்வாறே இரண்டிற்கும் ஒரே கர்த்தாவாக இருப்பதாலும் ஆகும்.
भाष्यम् - अथास्मिन् काले एते प्राणा वागादय एनमात्मान-मभिसमायन्ति। तदास्य शरीरस्यात्मनोऽङ्गेभ्यः सम्प्रमोक्षणम्। कथं पुनः सम्प्रमोक्षणम्? केन वा प्रकारेणात्मानमभिसमायन्ति? इत्युच्यते- स आत्मा एतास्तेजोमात्राः- तेजसोमात्रास्तेजोमात्रा-स्तेजोऽवयवा रूपादिप्रकाशकत्वाच्चक्षुरादीनि करणानीत्यर्थः, ता एताः समभ्याददानः सम्यङ् निर्लेपेनाभ्याददान आभिमुख्ये-नाददानः संहरमाणः- तत्स्वप्नापेक्षया विशेषणं समिति, न तु स्वप्ने निर्लेपेन सम्यगादानम्, अस्ति त्वादानमात्रम्,“गृहीता वाग् गृहीतंचक्षुः,”(बृ०उ०२।१।१७)“अस्य लोकस्य सर्ववतो मात्रामपादाय” (४।३। १९)“शुक्रमादाय” (४।३। ११) इत्यादि वाक्येभ्यः- ह्य्दयमेव पुण्डरीकाकाशमन्वक्रामत्यन्वागच्छति >ह्य्दयेऽभिव्यक्तविज्ञानो भवतीत्यर्थः, बुादिविक्षेपोपसंहारे सति।
अनुवादः - ச.பா- அந்த ஆத்மா இந்த தேஜஸ்ஸின் துகள்களாக - அதாவது தேஜஸ்ஸின் துகள்கள்(मात्रा) அந்த தேஜஸின் துகள்கள் தேஜஸ்ஸின் அவயவங்களான ரூபம் முதலியவைகளை பிரகாசப்படுத்துவதால் கண் முதலிய இந்திரியங்கள் தேஜஸ்ஸின் துகள்களே ஆகும். இந்த இந்திரியங்களின் அசங்கமாய் அபிமுகமாய்(समभ्याददानः) அதாவது உபசம்ஹாரமாகி ஹிருதயத்தில் அதாவது புண்டரீக ஆகாசத்தில் அபிவியக்த்த விக்ஞானவான் ஆகிறான்.“समभ्याददानः” (சமப்யாததான:) என்ற பதத்தில் உள்ள கிரியா பதத்தில்“सम्” (சம்) என்ற விசேஷணம் சுவப்பனத்தை அபேக்ஷித்து ஒட்டாமல் கண் முதலியவைகள் உபசம்ஹாரம் ஆவதில்லை. ஆதானம் மட்டும் இருக்கிறது.“गृहीता वाग् गृहीतं चक्षुः,”“अस्य लोकस्य सर्ववतो मात्रामपादाय”“शुक्रमादाय” முதலிய வாக்கியங்களால் ஹ்ருதயமே - புண்டரீக ஆகாசத்தில் அனுக்ராந்தமாகிறது (உடன் செல்கிறது) அதாவது புத்தி முதலியவைகளின் விஷேபம் உபசம்ஹாரம் ஆனபின் அபிவியக்த்த விக்ஞானவான் ஆகிறான்.
भाष्यम् - न हि तस्य स्वतश्चलनं विक्षेपपोपसंहारा- दिविक्रिया वा,“ध्यायतीव लेलायतीव”(४।३। ७) इत्युक्तत्वात्। बुाद्युपाधिद्वारैव हि सर्वविक्रियाध्यारोप्यते तस्मिन्।
अनुवादः - ச.பா- அதற்கு (ஆத்மாவிற்கு) சலனம், அல்லது விஷேபம் உபசம்ஹாரம் முதலிய விகாரங்கள் சுயமாக இல்லை. இதையே“ध्यायतीव लेलायतीव” (த்யாபதீவ லேலாயதீவ) முதலிய மந்திரங்கள் மூலமாய் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தி முதலிய உபாதிகளின் மூலமாய் அதற்கு எல்லாவித விகாரங்களும் ஆரோபம் செய்யப்பட்டுள்ளது.
भाष्यम् - कदा पुनस्तस्य तेजोमात्राभ्यादानम् इत्युच्यते- स यत्रैव चक्षुषि भवश्चाक्षुषः पुरुष आदित्यांशो भोक्तृः कर्मणा प्रयुक्तो यावद्देहधारणं तावच्चक्षुषोऽनुग्रहं कुर्वन्, वर्तते, मरणकाले त्वस्य चक्षुरनुग्रहं परित्यजति, स्वमादित्यात्मानं प्रतिपद्यते। तदेतदुक्तम्-“यत्रास्य पुरुषस्य मृतस्याग्निं वागप्येति वातं प्राणश्चक्षुरादित्यम्” (३। २। १३) इत्यादि।
अनुवादः - ச.பா- மறுபடியும் அது எப்பொழுது தேஜசின் துகள்கள் உபசம்ஹாரம் ஆகின்றன? என்பது கூறப்படுகிறது - அது எப்பொழுது கண்ணில் இருக்கும் சாக்ஷுச புருஷன் ஆதித்ய அம்சனாகிய போக்தா கர்மத்தால் பிரேரணை செய்யப்படும் வரையிலும் தேஹத்தை தரிக்கிறது. எதுவரை அது கண்களுக்கு உபகாரம் செய்யும் வரையிலும் இருக்கிறது. மரணகாலத்தில் அதன் அனுக்ரஹத்தை (உபஹாரத்தை) விட்டு தன்னுடைய ஆதித்ய ரூபத்தை அடைகிறது. அது இவ்வாறு கூறப்பட்டுள்ளது.“यत्रास्य पुरुषस्य मृतस्याग्निं वागप्येति वातं प्राणश्चक्षुरादित्यम्” (யத்ரஅஸ்ய புருஷஸ்ய ம்ருதஸ்யாக்னிம் வாகப்யேதி வாதம் பிராணச்சக்ஷீராதித்யம்) என்பது முதலியவவைகளால்.
भाष्यम् - पुनर्देहग्रहणकाले संश्रयिष्यन्ति, तथा स्वप्स्यतः प्रबुध्यतश्च, तदेतदाह- चाक्षुषः पुरुषो यत्र यस्मिन् काले पराङ् पर्यावर्तते परि समन्तात् पराङ् व्यावर्तत इति, अथात्रास्मिन् कालेऽरूपज्ञो भवति, मुमूर्षू रूपं न जानाति। तदा अयमात्मा चक्षुरादितेजोमात्राः समभ्याददानो भवति स्वप्नकाल इव।।
अनुवादः -ச.பா-மறுபयदा पुनरेतमात्मानमடியும் வேறு தேகத்தை எடுக்கும்பொழுது எவ்வாறு அதை ஆஸ்ரயிக்கின்றதோ அவ்வாறேதூங்கும்பொழுதும், ஜாக்ர புருஷ விஷயத்திலும் ஏற்படுகிறது. அதுவே இப்பொழுது கூறப்படுகிறது - சக்ஷுவில் உள்ள புருஷன் எப்பொழுது வெளி முகமாகி சற்றுமுற்றும் வியாபிக்கிறதோ அப்பொழுது ரூப பிரக்ஞை ஏற்படுகிறது. அப்பொழுது மூர்ச்சை ரூபத்தை அறிவதில்லை. அப்பொழுது சொப்னக் காலத்தைப்போல் கண் முதலியவைகளின் தேஜஸ் துகள்களே எல்லாபக்கமும் நன்றாகவே மற்ற பாவத்தால் கிரஹிக்கிறது.
मन्त्रः - एकीभवति न पश्यतीत्याहुरेकीभवति न जिघ्नती-त्याहुरेकीभवति न रसयत इत्याहुरेकीभवति न वदतीत्या-हुरेकीभवति न श्रुणोतीत्याहुरेकीभवति न मनुत इत्याहुरेकीभवति न स्पृशतीत्याहुरेकीभवति न विजानातीत्याहुस्तस्य हैतस्य ह्य्दयस्याग्रं प्रद्योतते तेन प्रद्योतेनैष आत्मा निष्क्रामति चक्षुष्टो वा मूर्ध्नो वान्येभ्यो वा शरीरदेशेभ्यस्तमुत्क्रामन्तं प्राणोऽनूत्क्रामति प्राणमनू-त्क्रामन्तं सर्वे प्राणा अनूत्क्रामन्ति सविज्ञानो भवति सविज्ञानमेवा-न्ववक्रामति तं विद्याकर्मणी समन्वारभेत पूर्वप्रज्ञा च।।२।।
अनुवादः -மந்திரம்-(சக்ஷு இந்திரியம் லிங்காத்மாவுடன்) ஒரே ரூபமாய் ஆகும்பொழுது பார்க்கவில்லை என்கிறார்கள். (கிராணேந்திரியம்) ஒன்றாகும்பொழுது முகரவில்லை என்கிறார்கள். (ரசனேந்திரியம்) ஒரே ரூபமாகும் பொழுது ருசிப்பது இல்லை என்கிறார்கள். (வாக்கிந்திரியம்) ஒரு ரூபம் ஆகும்பொழுது பேசுவது இல்லை என்கிறார்கள். (ஸ்ரோத்திர இந்திரியம்) ஒரே ரூபமாய் ஆகும்பொழுது கேட்கவில்லை. என்கிறார்கள். (மனம்) ஒரே ரூபமாகும்பொழுது நினைப்பது இல்லை என்கிறார்கள். (துவக் இந்திரியம்) ஒரே ரூபமாய் ஆகும்பொழுது தொடு உணர்ச்சி இல்லை என்கிறார்கள். மேலும் எப்பொழுது (புத்தி லிங்காத்மாவுடன்) ஒரே ரூபம் ஆகிறதோ அப்பொழுது அது அறிவதில்லை என்கிறார்கள். அந்த இந்த ஹிருதயத்தின் வெளியே (வெளிமார்க்கத்தால்) முற்றிலும் அறியப்படுவதால் அந்த ஆத்மா கண்களாலோ அல்லது தலை உச்சியினாலோ அல்லது சரீரத்தின் வேறு எந்த மார்க்கத்தாலோ வெளியேறுகிறது. அது உத்கிரமணம் (வெளிக்கிளம்பும்) பொழுது சம்பூர்ண பிராணனும் >(இந்திரியவர்க்கமும்) உத்கிரமணம் செய்கிறது. அப்பொழுது அந்த ஆத்மா விசேஷ விக்ஞானவான் ஆகின்றான். மேலும் விக்ஞானத்துடன் கூடிய பிரதேசத்திற்கே செல்கிறான். அப்பொழுது அதனுடன் ஞானம், கர்மம் அவ்வாறே பூர்வ பிரக்ஞை (பூர்வ வாசனை) களும் உடன் செல்கின்றன.
भाष्यम् - एकीभवति करणजातं स्वेन लिङ्गत्मना, तदेनं पार्श्वस्था आहुर्न पश्यतीति। तथा घ्रााणदेवतानिवृत्तौ घ्रााणमेकीभवति लिङ्गत्मना, तदा न जिघ्रातीत्याहुः। समानमन्यत्। जिायां सोमो वरुणो वा देवता, तन्निवृत्त्यपेक्षया न रसयत इत्याहुः। तथा न वदति न श्रुणोति न मनुते न स्पृशति न विजानातीत्याहुः। तदोपलक्ष्यते देवतानिवृत्तिः करणानां च ह्य्दय एकीभावः।
अनुवादः - ச.பா- எப்பொழுது இந்திரியங்கள் தங்களுடைய லிங்காத்மாவுடன் ஒரே ரூபமாகிறதோ அப்பொழுது அவன் அருகில் இருக்கும் சொந்தபந்தங்களை பார்க்கவில்லை என்று கூறுவர். அவ்வாறே கிராண தேவதை நீங்கிய உடன் கிராணம் லிங்காத்மாவுடன் ஒன்றாகிறது. அப்பொழுது முகர்வதில்லை என்று கூறுவர். மற்றவை இதைப்போன்றே. நாக்கில் சோமம் அல்லது வர்ண தேவதையின் நிவிர்த்தியை அபேக்ஷித்து ருசிப்பதில்லை என்று கூறுவர். அவ்வாறே பேசுவதில்லை, கேட்பதில்லை, நினைப்பதில்லை, ஸ்பரிசிப்பது இல்லை, அறிவதில்லை என்று கூறுவர். அப்பொழுது கர்ணங்களின் தேவதைகளின் நிவிர்த்தியும் கரணங்களின் இதயத்தில் ஏக பாவமும் உபலக்ஷிக்கப்படுகிறது.
भाष्यम् - तत्र ह्य्दय उपसंह्य्तेषु करणेषु योऽन्तर्व्यापारः स कथ्यते- तस्य हैतस्य प्रकृतस्य ह्य्दयस्य ह्य्दयच्छिद्रस्येत्येतत्, अग्रं नाडीमुखं निर्गमनद्वारं प्रद्योतते स्वप्नकाल इव स्वेन भासा तेजोमात्रादानकृतेन स्वेनैव ज्योतिषा आत्मनैव च। तेनात्मज्योतिषा प्रद्योतेन ह्य्दयाग्रेणैष आत्मा विज्ञानमयो लिङ्गोपाधिर्निर्गच्छति निष्क्रामति। तथा आथर्वणे“कस्मिन्न्वहमुत्क्रान्त उत्क्रान्तो भविष्यामि कस्मिन् वा प्रतिष्द्भिते प्रतिष्द्भास्यामिति”(प्र०उ०६।३) “स प्राणमसृजत” (प्र० उ० ६। ४) इति।
अनुवादः -ச.பா-ஹிருதயத்தில் கரணங்கள் ஒடுங்கும்பொழுது உள் வியாபாரங்கள் ஏற்படுவது குறித்துக் கூறப்படுகிறது - அந்த இந்த இருக்கும் ஹிருதயத்தின் அதாவது ஹிருதயத்தின் துவாரமாகிய முன்னால் இருக்கும் நாடி முகம் அதாவது வெளியே செல்லும் துவாரம் மிகவும் தேஜேமயமாய் ஸ்வப்னகாலம்போல் தானாகவே தேஜசின் சிறு பகுதியை எடுத்துக்கொண்டு தானாகவே தோன்றுகிறது. அந்த ஆத்ம ஜ்யோதியினால் பிரகாசப்படுத்தப்பட்ட ஹிருதய துவாரத்தினால் அந்த லிங்க உபாதி விக்ஞானமய ஆத்மா வெளிக்கிளம்புகிறது. அவ்வாறேஆதர்வணத்திலும் “कस्मिन्न्वहमुत्क्रान्त उत्क्रान्तो भविष्यामि कस्मिन् वा प्रतिष्द्भिते प्रतिष्द्भास्यामिति”(கஸ்மின்னவாஹமுத்க்ராந்த உத்க்ராந்தோ பவிஷ்யாமி கஸ்மின் வா ப்ரதிஷ்ட்டிதே பிரதிஷ்ட்டாஸ்யாமீதி)“स प्राणमसृजत”(ச பிராணமருஜத) என்று கூறப்பட்டுள்ளது.
भाष्यम् - तत्र चात्मचैतन्यज्योतिः सर्वदाभिव्यक्ततरम्। तदुपाधिद्वारा ह्यात्मनि जन्ममरणगमनागमनादिसर्वविक्रिया-लक्षणः संव्यवहारः तदात्मकं हि द्वादशविधं करणं बुादि। तत् सूत्रं तज्जीवनं सोऽन्तरात्मा जगतस्तस्थुषश्च। तेन प्रद्योतेन ह्य्दयाग्रप्रकाशेन निष्क्रममाणः केन मार्गेण निष्क्रामति? इत्युच्यते-
अनुवादः - ச.பா- அப்பொழுது ஆத்ம சைதன்ய ஜ்யோதி எப்பொழுதும் நன்றாக வியக்தமாய் உள்ளது. அது உபாதியினால் ஆத்மாவில் ஜன்ம மரண கமனாகமனம் முதலிய எல்லா வியவஹாரங்களுடன் கூடிய சம்வியவஹாரம் ஆகும் அந்த ரூபமான புத்தி முதலிய பன்னிரண்டு விதங்களே காரணமாகும். அது சூத்ரம். அது ஜீவனம் அது ஸ்தாவர ஜங்கமங்களின் அந்தராத்மாவாகும். இவ்வாறு தூண்டப்பட்ட அதாவது ஹிருதயத்தின் முன் உள்ள பிரகாசத்தால் வெளியேறும் ஆத்மா எந்த மார்க்கத்தில் செல்லுகிறது என்று கூறப்படுகிறது.
भाष्यम् - चक्षुष्टो वा आदित्यलोकप्राप्तिनिमित्तं ज्ञानं कर्म वा यदि स्यात्। मूर्ध्नो वा ब्रह्मलोकप्राप्तिनिमित्तं चेत्। अन्येभ्यो वा शरीरदेशेभ्यः शरीरावयवेभ्यो यथाकर्म यथाश्रुतम्।
अनुवादः - ச.பா- ஆதித்திய லோகப் பிராப்திக்காக ஞானம் கர்மம் எவ்வாறோ அவ்வாறு சக்ஷு மூலமாய் வெளியேறுகிறது. பிரஹ்ம லோகப் பிராப்த்திக்குக் காரணமானால் அது சிரஸின் உச்சி வழியாக செல்கிறது. இவ்வாறு தங்களுடைய கர்மத்திற்கும் ஞானத்திற்கு தகுந்தவாறு இந்த சரீரம் வெவ்வேறான தேசம், அவயவங்கள் இவைகளில் இருந்து செல்கிறது.
भाष्यम् - तं विज्ञानात्मानमुत्क्रामन्तं परलोकाय प्रस्थितं परलोकायोद्भूताकूतमित्यर्थः, प्राणः सर्वाधिकारिस्थानीयो राज्ञ इवानूत्क्रामतिः, तं च प्राणमनूत्क्रामन्तं वागादयः सर्वे प्राणा अनूत्क्रामन्ति। यथा प्राधानान्वाचिख्यासा इयम्, न तु क्रमेण सार्थवद् गमनमिह विवक्षितम्।
अनुवादः - ச.பா- அந்த உத்கிரமணம் செய்யும் விக்ஞான ஆத்மா - அதாவது பரலோகத்திற்கு உத்கிரமணம் செய்கிறது என்பது பொருள். ராஜாவினுடைய எல்லா அதிகாரி ஸ்தானத்தில் உள்ளவர்கள் போல் பிராணனை தொடர்ந்து செல்கின்றன. பிராணன் உத்கிராந்தம் செய்யும் பொழுது வாக் முதலியவைகளும் தொடந்து உத்கிரமணம் செய்கின்றன. பிரதான அர்த்தத்தைக் கூறுவதற்கு இச்சித்து கூறப்பட்டது. ஆனால் எல்லாம் சேர்ந்து கிரமமாக செல்கின்றன என்று விளக்குவதற்காக அல்ல.
भाष्यम् - तदैष आत्मा सविज्ञानो भवति स्वप्न इव विशेषविज्ञानवान् भवति कर्मवशात्न स्वतन्त्रः, स्वातन्त्र्येण हि सविज्ञानत्वं सर्वः कृतकृत्यः स्यात्, नैव तु तल्लभ्यते, अत एवाह व्यासः-“सदा तद्भावभावितः”(गीता ८। ६) इति। कर्मणा तद्भाव्यामानेनान्तःकरणवृत्तिविशेषाश्रितवासनात्मकविशेष-विज्ञानेन सर्वो लोक एतस्मिन् काले सविज्ञानो भवति। सविज्ञानमेव च गन्तव्यमन्ववत्क्रामत्यनुगच्छति विशेषविज्ञानाद्भासितमेवेत्यर्थः।
अनुवादः - ச.பா- அந்த சமயத்தில் இந்த ஆத்மா விக்ஞானத்துடன் இருக்கிறது. ஸ்வப்னம் போல் விசேஷ விக்ஞானம் உடையவனாக கர்மவசத்தால் ஆகிறது. சுவதந்திரமாக அல்ல. ஸ்வதந்திரமாக விக்ஞானவனாய் இருந்தால் சர்வக்ருதகிருத்யன் ஆவான். ஆனால் அவ்வாறு அடைவதில்லை. ஆகையால் வியாசர் இவ்வாறு கூறியுள்ளார்-“सदा तद्भावभावितः” (சதா தத்பாவாபாவித:) என்று கர்மத்தினால் அதை பாவிக்கும் அந்தக்கரணத்தின் விருத்தி விசேஷத்தை ஆஸ்ரயித்த வாசனா ரூபமான விக்ஞானத்தால் எல்லா லோகங்களும் அந்த சமயத்தில் விக்ஞானத்துடன் கூடியதாக ஆகிறது. ஆகையால் நல்ல விக்ஞானத்துடன் (நல்லவிதமான எண்ணத்துடன் அதாவது வாசனையுடன்) வேறு நல்ல தேஹத்தையும், நல்ல அனுபவத்தையும் அடைய வேண்டும். இது விசேஷ விக்ஞானத்தாலேயே அடையமுடியும் என்பது பொருள்.
भाष्यम् -तस्मात् तत्काले स्वातन्त्र्यार्थं योगधर्मानुसेवनं परिसंख्यानाभ्यासश्च विशिष्टपुण्योपचयश्च श्रद्दधानैः परलोका-र्थिभिरप्रमत्तैः कर्तव्य इति। सर्वशास्त्राणां यत्नतो विधेयोऽर्थो दुश्चरिताच्चोपरमणम्। न हि तत्काले शक्यते कििञ्चत् सम्पादयितुम्, कर्मणा नीयमानस्य स्वातन्त्र्याभावात्,“पुण्यो वै पुण्येन कर्मणा भवति पापः पापेन”(३।२। १३) इत्युक्तम्। एतस्य ह्यानर्थस्योपशमोपायविधानाय सर्वशाखोपनिषदः प्रवृत्ताः। न हि तद्विहितोपायानुसेवनं मुक्त्वा आत्यन्तिकोऽस्यानर्थस्योपशमो-पायोऽस्ति, तस्मादत्रैवोपनिषद्विहितोपाये यत्नपरैर्भवितव्यमित्येष प्रकारणार्थः।
अनुवादः - ச.பா- ஆகையால் பரலோகம் செல்ல விரும்புபவர்கள் சிரத்தையுடன் அந்த காலத்தில் ஸ்வதந்திரமாய் அடைவதற்காக பிரமாதமற்று எப்பொழுதும் யோகம் தர்மங்களை ஈடுபாட்டுடன் செய்து விவேகத்துடன் அப்யாசம் செய்து விசேஷரூபமாய் புண்யத்தை சம்பாதிக்க வேண்டும். எல்லா சாஸ்த்திரங்களில் விதிக்கப்பட்டதை கடைபிடிக்க வேண்டும். துஷ்கர்மங்களை விலக்க வேண்டும். அந்த சமயத்தில் ஒன்றும் சம்பாதிக்க முடியாது. கர்மத்தால் செலுத்தப்பட்டவனுக்கு ஸ்வதந்திரம் இல்லை.“पुण्यो वै पुण्येन कर्मणा भवति पापः पापेन” (புண்யோ வை புண்யேன கர்மணா பவதி பாப: பாபேன) என்று கூறப்பட்டது. அநர்த்தத்தை நீக்குவதற்கான இந்த விதித உபாயத்தை நிரந்தரம் சேவை செய்வதைத்தவிர வேறு உபாயம் இல்லை. ஆகையால் இப்பொழுதே உபநிஷத்தில் விதிக்கப்பட்ட உபாயத்தைக் கடைபிடிப்பதில் மிகுந்த பிரயத்தனம் செய்யவேண்டும் என்பது இந்த பிரகரணத்தின் தாத்பர்யம் ஆகும்.
भाष्यम् - शकटवत् सम्भृतसम्भार उत्सर्जन् यातीत्युक्तं किं पुनस्तस्य परलोकाय प्रवृत्तस्य पथ्यदनं शाकटिकसम्भारस्थानीयम्, गत्वा वा परलोकं यद् भुङ्क्ते? शरीराद्यारम्भकं च यत् तत् किम्? इत्युच्यते- तं परलोकाय गच्छन्तमात्मानं विद्याकर्मणी, विद्या च कर्म च विद्याकर्मणी विद्या सर्वप्रकारा विहिता प्रतिषिद्धा च, अविहिता अप्रतिषिद्धा च, तथा कर्म विहितं प्रतिषिद्धं च अविहितमप्रतिषिद्धं च, समन्वारभेते सम्यगन्वारभेते अन्वालभेते अनुगच्छतः। पूर्वप्रज्ञा च- पूर्वानुभूतविषया प्रज्ञा पूर्वप्रज्ञा अतीतकर्म फलनानुभववासनेत्यर्थः।
अनुवादः - ச.பா- பாரம் உடைய வண்டியைப்போல் (ஜீவன்) சப்தம் செய்து கொண்டு செல்கிறது என்று கூறப்பட்டது. மேலும் அந்த பரலோகத்திற்கு செல்ல பிரவிர்த்தவனுக்கு பாரவண்டி செல்லும் வழியில் அதற்கு போஜனம் என்ன? சரீரம் முதலியவை ஆரம்பம் எதுவோ அது என்ன? இதற்குக் கூறப்படுகிறது. பரலோகத்திற்கு செல்லும் அந்த ஆத்மாவுடன் வித்யாகர்மம். அதாவது வித்யாவும் கர்மமும். வித்யா எல்லா விதமாகவும் விஹிதமாயும், பிரதிஷித்தமாயும் இருக்கிறது. அவ்வாறேஅவிஹிதமாயும். அப்ரதிஷித்தமாயும் இருக்கிறது. அவ்வாறே கர்மமும் விஹிதமாயும் பிரதிஷித்தமாயும் இருக்கிறது. மேலும் அவிஹிதமாயும் அபிரதிஷித்தமாயும் இருக்கிறது. அந்த வித்யா கர்மம் இரண்டும் அனுசாரனை செய்கிறது. முன்பு அனுபவித்த விஷயபிரக்ஞா அதாவது பூர்வபிரக்ஞையும், செய்த கர்மாவும் அதாவது பலத்தின் அனுபவ வாசனையாகும்.
भाष्यम् - सा च वासना अपूर्वकर्मारम्भे कर्मविपाके चाङ्गं भवति, तेनासावप्यन्वारभते, न हि तया वासनया विना कर्म कर्तुं फलं चोपभोक्तुं शक्यते, न ह्यनभ्यस्ते विषये कौशलमिन्द्रियाणां भवति। पूर्वानुभववासनाप्रवृत्तानां त्विन्द्रियाणामिहाभ्यासमन्तरेण कौशलमुपपद्यते, दृश्यते च केषािञ्चत् कासुचित् क्रियासु चित्रकर्मादिलक्षणासु विवैवेहाभ्यासेन जन्मत एव कौशलं कासुचिदत्यन्तसौकर्ययुक्तास्वप्यकौशलं केषािञ्चत्। यथा विषयोपभोगेषु स्वभावत एव केषािञ्चत् कौशलाकौशले तत्दृश्येते। तच्चैतत् सर्वं पूर्व प्रज्ञोद्भवानुद्भवनिमित्तम्, तेन पूर्वप्रज्ञया विना कर्मणि वा फलोपभोगे वा न कस्यचित् प्रवृत्तिरुपपद्यते।
अनुवादः -ச.பா-அந்த வாசனை அபூர்வகர்ம ஆரம்பத்திற்கும் கர்ம விபாகத்திற்கும் (முதிர்ச்சி அடைவதற்கும்) அங்கமாகும். ஆகையால் அதுவும் அதனுடன் செல்கிறது. அவ்வாறேவாசனை இல்லாமல் கர்மம் செய்வதற்கோ பலனை அனுபவிக்கவோ முடியாது. அவ்வாறே அப்பியாச மற்ற விஷயத்தில் இந்திரியங்களுக்கு சாமர்த்தியம் கிடையாது. இங்கு பூர்வ அனுபவத்தின் வாசனையினால் பிரவிர்த்திக்கும் இந்திரியங்களுக்கு அப்பியாசம் இல்லாமல் சாமர்த்தியம் சம்பவிக்காது. இந்த விஷயத்தை இவ்வாறு காண்கிறோம். என்னவெனில் எந்த ஒரு புருஷனாலும் சித்திரம் வரைதல் முதலிய சமமான கிரியைகளில் ஜன்மத்திலிருந்தே குசலத்தன்மைக் காணப்படுகிறது. மேலும் சில புருஷர்களுக்கு மிக எளிதான கிரியைகளில் குசலத்தன்மைக் காணப்படுவது இல்லை. அவ்வாறேவிஷயங்களின் உபயோகத்திலும் சிலருக்கு ஸ்வபாவமாகவே சாமர்த்தியம் காணப்படுகிறது. அவ்வாறேசிலருக்கு சாமர்த்தியமற்ற தன்மையும் காணப்படுகிறது. அந்த இவை எல்லாம் பூர்வ பிரக்ஞையினால் உண்டான அனுபவ நிமித்தமாகும். ஆகையால் பூர்வ பிரக்ஞை இல்லாமல் கர்மத்திலோ, பலபோகத்திலோ ஒருவருக்கும் பிரவிருத்தி சம்பவிக்காது.
भाष्यम् - तस्मादेतत् त्रयं शाकटिकसम्भारस्थानीयं परलोकपथ्यदनं विद्याकर्मपूर्वर्प्रज्ञाख्यम्। यस्माद् विद्याकर्मणी पूर्वप्रज्ञा च देहान्तरप्रतिपत्त्युपभोगसाधनम्, तस्माद् विद्याकर्मादि शुभमेव समाचरेत् यथेष्टदेहसंयोगोपभोगौ स्यातामिति प्रकरणार्थः।।
अनुवादः - ச.பா- ஆகையால் வண்டியில் உள்ள பாரத்திற்கு ஒப்பான வித்யா, கர்ம, பூர்வ பிரஞ்ஞா ஆகிய மூன்றும் பரலோகத்திற்குச் செல்லும் மார்க்கத்திற்கான போஜன சாமக்கிரியைகள் ஆகும். எதனால் வித்யா கர்மம் பூர்வ பிரஞ்ஞா ஆகிய இவைகள் வேறு தேஹத்தை அடைவதற்கு உபயோகமான சாதனம். ஆகையால் சுபமான வித்யா கர்மங்களையே நன்றாக கடைபிடிக்கவேண்டும். அதனால் இஷ்டப்பட்ட தேஹப்பிராப்த்தியும், அதற்கு வேண்டிய போகங்களும் உண்டாகும் என்பது இந்த பிரகரணத்தின் தாத்பர்யம்.
भाष्यम् - एवं विद्यादिसम्भारसम्भृतो देहान्तरं प्रति-पद्यमानः मुक्त्वा पूर्वं देहं पक्षीव वृक्षान्तरं देहान्तरं प्रतिपद्यते। अथवा आतिवाहिकेन शरीरन्तरेण कर्मफलजन्मदेशं नीयते।
अनुवादः - ச.பா- அ.கை- இவ்வாறு வித்யா முதலிய பாரத்தை சுமப்பவன் வேறு தேஹத்தை அடைவதற்காக முந்திய தேஹத்தைவிட்டு பக்ஷியானது வேறு மரத்தை அடைவது போல் வேறு தேஹத்தை அடைகிறான். அல்லது வேறு ஆதிவாஹிக சரீரத்துடன் கர்மபலத்தால் உண்டான ஸ்தானத்திற்கு அதாவது தேவலோகம் முதலியவைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறான்.
भाष्यम् - शङ्का - किञ्चनात्रस्थस्यैव सर्वगतानां करणानां वृत्तिलाभो भवति। आहोस्विच्छरीरस्थस्य संकुचितानि करणानि मृतस्य भिन्नघटप्रदीपप्रकाशवत् सर्वतो व्याप्य पुनर्देहान्तरारम्भे संकोचमुपगच्छन्ति? किञ्च मनोमात्रं वैशेषिकसमय इव देहान्तरारम्भदेशं प्रति गच्छति? किं वा कल्पनान्तरमेव वेदान्तसमय इति।
अनुवादः - ச.பா- மேலும் இங்கு இருந்துகொண்டே சர்வகதமான இந்திரியங்களின் விருத்திகளை அடைகிறதா? அல்லது சரீரத்தில் உள்ள ஜீவனின் ஒடுங்கிய இந்திரியங்கள் மரணமடைந்தபின் கடம் உடைந்தபின் அதில் இருந்த தீபப்பிரகாசம் போல் வியாபித்து மறுபடியும் வேறு தேஹம் ஆரம்பிக்கும்பொழுது சுருங்கி விடுகிறதா? அல்லது வைசேஷிகமதப்படி மனம் மாத்திரம் வேறு தேஹ ஆரம்ப இடத்தைக் குறித்துச் செல்கிறதா? அல்லது வேதாந்த சித்தாந்தப்படி வேறு கல்பிக்கப்பட்ட தேஹத்தை அடைகிறதா?
भाष्यम् - समाधानम् - उच्यते-“त एते सर्व एव समाः सर्वेऽनन्ताः”(बृ०उ०१।५।१३) इति श्रुतेः- सर्वात्मकानि तावत् करणानि, सर्वात्मकप्राणसंश्रयाच्च, तेषामाध्यात्मिकाधिभौतिक-परिच्छेदः प्राणिकर्मज्ञानभावानानिमित्तः। अतस्तद्वशात् स्वभावतः सर्वगतानामनन्तानामपि प्रणिानां कर्मज्ञानवासनानुरूपेणैव देहान्तरारम्भवशात् प्राणानां वृत्तिः संकुचति विकसति च। तथा चोक्तम्-“समः प्लुषिणा समो मशकेन समो नागेन सम एभि-स्त्रिभिर्लोकैः समोऽनेन सर्वेण” (बृ०उ०१।३।२२) इति। तथा चेदं वचनमनुकूलम्-“स यो हैताननन्तानुपास्ते” (बृ०उ०१।५।१६) इत्यादि“तं यथा यथोपासते” इति च।
अनुवादः - கூறப்படுகிறது -“त एते सर्व एव समाः सर्वेऽनन्ताः” (த ஏதே சர்வ ஏவ சமா: சர்வே அனந்தா:) என்ற சுருதியை அனுசரித்து சர்வாத்மகமான கரணங்கள் அதாவது சர்வாத்மகாமான பிராணனை ஆஸ்ரயக்கின்ற இந்திரியங்கள். அவைகளின் ஆத்யாத்மிக, ஆதிபெளதிக பரிச்சேதமானது பிராணி கர்ம ஞானபாவ நிமித்தத்தால் ஆகும். ஆகையால் அதன் வசத்தால் ஸ்வபாவமாகவே சர்வகதமான அனந்தமான பிராணிகளுக்கு கர்ம ஞானவாசனை அனுரூபமாகவே வேறு தேஹ ஆரம்ப வசத்தால் பிராணிகளுக்கு விருத்தியானது சுருங்கியோ, விகாசமோ ஆகிறது. அவ்வாறே கூறப்பட்டுள்ளது. -“समः प्लुषिणा समो मशकेन समो नागेन सम एभिस्त्रिभिर्लोकैः समोऽनेन सर्वेण” (சம: ப்லுஷிணா சமோ மசகேன சமோ நாகேன சம ஏமிஸ்த்ரிபிர்லோகை: சமோஅனேன சர்வேண) (கரையான், கொசு, யானை முதலியவைகளுக்கு சமமாகவும் மூன்று உலகங்களுக்கும் ஆகிய எல்லாவற்றிற்கும் சமமானதாய்), அவ்வாறே இந்த வசனமும் இதற்கு அனுகூலமானது- “स यो½èþiÉÉxÉxÉxiÉÉxÉÖ{ÉɺiÉä” (ச யோ ஹைதானனந்தானுபாஸ்தே) முதலியவையும்“तं यथा यथोपासते” (தம் யதாயதோபாஸதே) என்றும் அனுகூலமானது.
भाष्यम् - तत्र वासना पूर्वप्रज्ञाख्या विद्याकर्मतन्त्रा जलूकावत् सन्ततैव स्वप्नकाल इव कर्मकृतं देहाद् देहान्तरमारभते ह्य्दयस्थैव। पुनर्देहान्तरारम्भे देहान्तरं पूर्वाश्रयं विमुञ्चति- इत्येतस्मिन्नर्थे दृष्टान्त उपादीयते-
अनुवादः - ச.பா- அந்த சமயத்தில் வித்யா கர்ம அதீனமான பூர்வ பிரஞ்ஞா என்னும் வாசனையுள்ளதோ அது அட்டைப் பூச்சியைப்போல் எங்கும் இருந்து கொண்டு ஹிருதயத்தில் இருந்து கொண்டே ஸ்வப்பன காலம் போல் கர்மத்தால் தேஹத்தை உண்டாக்கி அதிலிருந்து வேறு தேஹத்தை ஆரம்பிக்கிறது. மறுபடியும் வேறு தேஹ ஆரம்பத்தில் வேறு தேஹத்திற்கு முன்பு ஆஸ்ரயித்து தேஹத்தை தியாகம் செய்கிறது என்று இந்த அர்த்தத்தில் திருஷ்ட்டாந்தம் கூறப்போகிறது.
मन्त्रः - तद् यथा तृणाजलायुका तृणास्यान्तं गत्वान्य-माक्रममाक्रम्यात्मनमुपसंहरत्येवमेवायमात्मद ेँशरीरं निहत्याविद्यां गमयित्वान्यमाक्रममाक्रम्यात्मानमुपस ँ हरति।। ३।।
अनुवादः - மந்திரம் - அந்த திருஷ்டாந்தம்- எவ்வாறு அட்டைப்பூச்சி புல்லின் ஒரு முனையிலிருந்து மற்றொரு புல்லின் (த்ருணத்தின்) ரூபத்தை ஆஸ்ரயித்து பிடித்துக்கொண்டு தன்னை விடுவிக்கிறதோ அவ்வாறு அந்த ஆத்மா இந்த சரீரத்தை மூர்ச்சை அடையச் செய்து அவித்யாவை (அசேதன அவஸ்தையை) அடையச் செய்து மற்றொறு ஆதாரத்தை (சரீரத்தை) பற்றிக் கொண்டு இந்த உடம்பை விட்டு விடுகிறான்.
भाष्यम् - तत्तत्र देहान्तरसंचार इदं निदर्शनम्- यथा येन प्रकारेण तृणजलायुका तृणाजलूका तृणस्यान्तमवसानं गत्वा प्राप्य अन्यं तृणान्तरमाक्रमम्, आक्रम्यत इत्याक्रमस्तमाक्रमाक्रम्याश्रित्य, आत्मानम् आत्मन, पूर्वावयवम् उपसंह्य्रत्यन्त्यावयवस्थाने, एवमेव अयमात्मा यः प्रकृतः संसारीदं शरीरं पूर्वोपात्तं निहत्य स्वप्नं प्रतिपित्सुरिव पातयित्वा अविद्यागमयित्वा अचेतनं कृत्वा स्वात्मोपसंहारेण, अन्यमाक्रमं तृमान्तरमिव तृणजलूका शरीरान्तरं गृहीत्वा प्रसरितया वासनया आत्मानमुपसंहरति, तत्रात्मभाव-मारभते, यथा स्वप्ने देहान्तरमारभते स्वप्नदेहान्तरस्थ इव शरीराम्भदेश आरभ्यमाणे देहे जङ्गमें स्थावरे वा।
अनुवादः - ச.பா- இந்த தேஹாந்தர (வேறு தேஹ) சஞ்சாரத்திற்கானது இந்த உதாரணம் - எவ்வாறு அட்டைப்பூச்சி புல்லின் கடைசி நுனிக்குச் சென்று மற்ற புல்லின் நுனியை அடைந்து அதை ஆஸ்ரத்து அதை ஆக்கிரமித்து தன்னுடைய முந்திய அவயவத்தை (புல்லின் நுனியைவிட்டு) பிந்திய அவயவத்தை (மற்றபுல்லின் அவயவத்தை) பற்றுகிறதோ அவ்வாறே இந்த சம்சாரி ஆத்மா முன்பு எடுத்த சரீரத்தை விட்டு சுவப்பனத்தை அடைவது போல் அதை அவித்தையை அடையச் செய்து அசேதனமாக்கி தன்னுடைய ஆத்மாவை ஒடுக்கி வேறு ஒன்றைப் பற்றுவதற்காக அட்டைப்பூச்சி வேறு ஒன்றைப் பற்றுவதுபோல் வேறு சரீரத்தை தன்னுடைய வாசனையினால் கிரஹித்துக்கொண்டு தன்னை உபசம்ஹாரம் செய்கின்றான். அதாவது அதில் தன்னுடைய ஆத்மபாவத்தை செய்கின்றான். எவ்வாறு ஸ்வப்பனத்தில் வேறு தேஹத்தை ஆரம்பிக்கிறதோ அவ்வாறு ஸ்வப்பன தேஹத்தினுள் இருக்கும் ஜீவனைப்போல் இந்த சரீர ஆகாச தேசத்தில் ஆரம்பம் ஆகும் தேஹம் ஜங்கமம் ஸ்தாவர தேஹங்களை தரிப்பவைகளாக இருக்கின்றன.
भाष्यम् - तत्र च कर्मवशात् करणानि लब्धवृत्तीनि संहन्यन्ते, बाह्यं च कुशमृत्तिकास्थानीयं शरीरमारभ्यते। तत्र च करणव्यूहमपेक्ष्य वागाद्यनुग्रहायाग्न्यादिदेवताः संश्रयन्ते। एष देहान्तरारम्भ विधिः।
अनुवादः - ச.பா- அந்த சமயத்தில் கர்ம வசத்தால் அடைந்த விருத்திகள் கூடி ஒடுங்குகின்றன. புல், மண் போன்றவைகளான பாஹ்ய சரீரம் ஆரம்பிக்கின்றது. அப்பொழுது இந்திரியங்களின் வியூகத்தை அபேக்ஷித்து வாக் முதலியவைகளை அனுக்ரஹிப்பதற்காக அக்னி முதலிய தேவதைகள் ஆஸ்ரயிக்கின்றன. இது வேறு தேஹத்தின் ஆரம்பத்திற்கான விதியாகும்.
भाष्यम् - तत्र देहान्तरारम्भे नित्योपात्तमेवोपादानमु-पमृद्योपमृद्य देहान्तरमारभते, आहोस्विदपूर्वमेव पुनः पुनरादत्त इति? अत्रोच्यते दृष्टान्तः-
अनुवादः - ச.பா- அங்கு தேஹாந்தர ஆரம்பத்தில் நித்யம் கிரஹித்த உபாதானத்தை நசிக்கி நசிக்கி வேறு தேஹத்தை ஆரம்பிக்கின்றதா? அல்லது மறுபடியும் மறுபடியும் புதிதாக உபாதானத்தைக் கிரஹிக்கிறதா? என்று இதற்கு திருஷ்டாந்தத்துடன் விளக்கப்படுகிறது ளு
मन्त्रः - तद् यथा पेशस्कारी पेशसो मात्रामपादायान्यन-न्नवतरं कल्याणतरं रूपं तनुत एवमेवायमात्मेद ँ शरीरं निहत्याविद्यां गमयित्वान्यन्नवतरं कल्याणतर ँ रूपं कुरुते पित्र्यं वा गान्धर्वं वा दैवं वा प्राजापत्यं वा बाह्यं वान्येषां वा भूतानाम्।। ४।।
अनुवादः - மந்திரம் - இதில் திருஷ்ட்டாந்தம்- எவ்வாறு தங்க நகைகளைச் செய்பவன் தங்கத்தில் ஒரு பாகத்தை எடுத்து அதை புதிதான மிக்க அழகான ரூபங்களைச் செய்கிறானோ அவ்வாறே இந்த ஆத்மா இந்த சரீரத்தை நஷ்டம் செய்து அசேதனா அவஸ்தையை அடைந்து மற்ற பித்ரு, கந்தர்வ, தேவ, பிரஜாபது பிரஹ்மா அல்லது மற்ற ஜீவர்களையும் புதிதாய் அழகான ரூபங்களை உருவாக்குகின்றான்.
भाष्यम् -- तत्तत्रैतस्मिन्नर्थे- यथा पेशस्कारी पेशः सुवर्णं तत् >करोतिति पेशस्कारी सुवर्णकारः, पेशसः सुवर्णस्य मात्राम-पादायापच्छिद्य गृहीत्वा अन्यत् पूर्वस्माद् रचनाविशेषान्न-वतरमभिनवतरं कल्याणात् कल्याणतरं रूपं तनुते निर्मिनोति। एवमेवायमात्मेत्यादि पूर्ववत्।
अनुवादः - ச.பா- இந்த விஷயத்தில் திருஷ்டாந்தம் கூறப்படுகிறது - எவ்வாறு தங்க நகைகள் செய்பவன்(पेशस्कारी) (பேசஸ்ங்காரி - பேசஸ: தங்கம், தங்கத்தில் ஆபரணம் செய்பவன் பேசஸ்காரி) தங்கத்தில் சிறிது அளவு எடுத்து முன்பு இருந்ததைக் காட்டிலும் வேறானதை சிறப்பாக உருவாக்கி புதிதாக மிக அழகான ரூபத்தை உருவாக்குகிறான். அவ்வாறே இந்த ஆத்மா ஆகிய முதலியவை முன்போல் ஆகும்.
भाष्यम् - नित्योपात्तान्येव पृथिव्यादीन्याकाशान्तानि पञ्च भूतानि यानि“द्वे वाव ब्रह्मणो रूपे” इति चतुर्थे व्याख्यातानि पेशः- स्थानीयानि, तान्येवोपमृद्योपमृद्य, अन्यदन्यच्च देहान्तरं नवतरं कल्याणतरं रूपं संस्थानविशेषं देहान्तरमित्यर्थः कुरुते। पित्र्यं वा पितृभ्यो हितं पितृलोकोपभोगयोग्यमित्यर्थः, गान्धर्वं गन्धर्वाणमुपभोग्योग्यमित्यर्थः, गान्धर्वं गन्धर्वाणमुपभोग्योग्यम्, तथा देवानां देवम्, प्रजापतेः प्राजापत्यम्, ब्रह्मण इदं ब्राह्मं वा, यथाकर्म यथाश्रुतमन्येषां वा भूतानां सम्बन्धि शरीरान्तरं कुरुत इत्यभिसम्बध्यते।
अनुवादः -ச.பா-ஆத்மாவின் நித்யமாக கிரஹிக்கப்பட்டுள்ள பிருதிவீ முதல் ஆகாசம் வரையில் உள்ள பஞ்ச பூதங்கள் உள்ளனவோ அவை“द्वे वाव ब्रह्मणो रूपे”(த்வே வாவ பிரஹ்மணோ ரூபே) என்று இரண்டாவது அத்யாயத்தில் நான்காவது பிராஹ்மணத்தில் தங்கவேலை செய்பவன் ஸ்தானத்தில் வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளது. அதையே நசித்து நசித்து வேறு வேறு தேஹம் அதாவது புதிய மிக அழகான ரூபம் இருக்கும் விசேஷமான வேறு தேஹத்தை உருவாக்குகிறது. பித்ரியம் - என்பது பித்ருகளுக்கான ஹிதமான பித்ருலோகத்தை அனுபவிக்கும் யோக்கியம் உள்ளது என்பது பொருள். காந்தர்வம் - கந்தர்வர்கள் உபயோகிக்க (அனுபவிக்க) யோக்கியமானது. அவ்வாறே தேவர்களுக்கு தைவம், பிரஜாபதிக்கு பிராஜாபத்தியம், பிராஹ்மண இது பிரஹ்மம் ஆகும். மேலும் கர்மத்திற்கும் ஞானத்திற்கும் தகுந்தவாறு மற்ற பூதங்களுடன் சம்பந்தப்பட்ட வேறு சரீரம் உருவாக்கப்படுகிறது இவ்வாறு இதன் சம்பந்தம்.
भाष्यम् - येऽस्य बन्धनसंज्ञका उपाधिभूताः, यैः संयुक्तस्त-न्मयोऽयमिति विभाव्यते, ते पदार्थाः पुञ्जीकृत्येहैकत्र प्रतिनिर्दिश्यन्ते-
अनुवादः - ச.பா- இந்த ஆத்மாவின் பந்தம் எனப்படும் உபாதியுடன் கூடிய பதார்த்தங்கள் எதனுடன் சம்பந்தப்பட்டு அந்த மயமாகிறதோ அது இது என்று பாவிக்கப்படுகிறது (அறியப்படுகிறது). அந்த பதார்த்தங்கள் ஒன்றாக சேர்த்து அதைக் குறித்து நிர்தேசம் செய்யப்படுகிறது.
मन्त्रः - स वा अयमात्मा ब्रह्म विज्ञानमयो मनोमयः प्राणमयश्चक्षुर्मयः श्रोत्रमयः पृथ्वीमय आपोमयो वायुमय आकाशमयस्तेजोमयोऽतेजोमयः काममयोऽकाममयः क्रोधमयोऽ-क्रोधमयो धर्ममयोऽधर्ममयः सर्वमयस्तद् यदेतदिदम्मयोऽदोमय इति यथाकारी यथाचारी तथा भवति साधुकारी साधुर्भवति पापकारी पापो भवति पुण्यः पुण्येन कर्मणा भवति पापः पापेन। अथो खल्वाहुः काममय एवायं पुरुष इति स यथाकामो भवति तत्क्रतुर्भवति यत्क्रतुर्भवति तत् कर्म कुरुते यत् कर्म कुरुते तदभिसम्पद्यते।। ५।।
अनुवादः - மந்திரம் - அந்த இந்த ஆத்மா ப்ரஹ்மம். அது விஞ்ஞானமயன், மனோமயன், பிராணமயன், சக்ஷுமயன், ஸ்ரோத்திரமயன், பிருதிவீமயன், ஜலமயன், வாயுமயன், ஆகாசமயன், தேஜோமயன், அதேஜோமயன், காமமயன் அகாமமயன், க்ரோதமயன் அக்ரோதமயன், தர்மமயன் அதர்மமயன், மேலும் எல்லா மயனும் ஆவான். எது இந்த மயமோ (பிரத்ய க்ஷமோ) எது அதோமயமோ (பரோக்ஷம்) அதுவும் அதுவே. எவ்வாறு செய்கின்றவனாயும், ஆச்சரனை (கடைபிடிப்பவனாகவும்) செய்பவனாகவும் ஆகின்றான். அவ்வாறே ஆகின்றான். சுபகர்மத்தை செய்பவன் சுபம் ஆகின்றான். பாப கர்மா செய்கின்றவன் பாபி ஆகின்றான். புண்யகர்மம் செய்யும் புருஷன் புண்ய ஆத்மாவாகின்றான். பாப கர்மாவினால் பாபி ஆகின்றான். மேலும் சிலர் கூறுகின்றனர் - இந்த புருஷன் காமமயம் என்று. அவனுக்கு எப்பொழுது காமம் உண்டாகிறதோ அதை செய்பவனாகிறான். அப்பொழுது சங்கல்பம் ஏற்படுகிறது. சங்கல்பம் உண்டாகும் பொழுது கர்மம் செய்கின்றான். எந்த கர்மம் செய்கின்றானோ அதை (அந்த பலத்தை) அடைகின்றான்.
भाष्यम् - स वा अयम्, य एवं संसरत्यात्मा, ब्रह्मैव पर एव, योऽशनायाद्यतीतः। विज्ञानमयो विज्ञानं बुद्धिस्तेनोपलक्ष्यमाण-स्तन्मयः।“कतम आत्मेति योऽयं विज्ञानमयः प्राणेषु” (४।३।७) इति ह्युक्तम्। विज्ञानमयोविज्ञानप्रायः, यस्मात्तद्धर्मत्वमस्य विभाव्यते“ध्यायतीव लेलायतीव” (४।३।७) इति।
अनुवादः -ச.பா-அந்த இந்த ஆத்மா இவ்வாறு சஞ்சரிக்கின்றது. அது பசி முதலியவைகளைக் கடந்த பரப்ரஹ்ம ஸ்வரூமேயாகும். விஞ்ஞானமயம் என்பது - விஞ்ஞானம் என்றால் புத்தி. அதனால் உபலக்ஷிக்கப்பட்டு என்பது அந்த மயமாகவே ஆகுதல். இதையே“कतम आत्मेति योऽयं विज्ञानमयः प्राणेषु” (கதம ஆத்மேதி யோஅயம் விஞ்ஞானமய: பிராணேஷு) என்று கூறப்பட்டது. விஞ்ஞானமயன் என்றது விஞ்ஞானம் போன்றஎன்பதாகும். எதனால்“ध्यायतीव लेलायतीव” (த்யாயதீவ லேலாயதீவ) என்பது முதலிய வாக்கியங்களால் அதன் விக்ஞானமய தர்மத்துவம் பாவிக்கப்படுகிறது.
भाष्यम् - तथा मनोमयो मनःसंनिकर्षान्मनोमयः। तथा प्राणमयः प्राणः पञ्चवृत्तिस्तन्मयः येन चेतनश्चलतीव लक्ष्यते। तथा चक्षुर्मयो रूपदर्शनकाले। एवं श्रोत्रमयः शब्दश्रवणकाले। एवं तस्य तस्येन्द्रियस्य व्यापारोद्भवे तत्तन्मयो भवति।
अनुवादः -ச.பா-அவ்வாறே மனோமயன், மனதுடன் சன்நிகர்ஷணத்தின் (அதன் சன்னதியின்) காரணமாக மனோமயன் எனப்படுகிறது. அவ்வாறே பிராணமயன்-பிராணனுடைய பஞ்ச விருத்தியின் மயமாவது. அதாவது சேதனம் சலனம் அடைவதுபோல் காணப்படுகிறது. அவ்வாறே ரூபதர்சன காலத்தில் சக்ஷுமயமாகிறது. சப்தம் சிரவணிக்கும் சமயத்தில் ஸ்ரோத்திரமயமாகிறது. இவ்வாறு அந்த இந்த இந்திரியங்களின் வியாபாரம் ஏற்படும்பொழுது அந்த அந்த மயமாகிறது.
भाष्यम् - एवं बुद्धिप्राणद्वारेण चक्षुरादिकरणमयः सञ्शरीराम्भकपृथिव्यादिभूतमयो भवति। तत्र पार्थिवशरीरम्भे पृथिवीमयो भवति। तथा वरुणादिलोकेषु आप्यशरीरारम्भे आपोमयो भवति। तथा वायव्यशरीराम्भे वायुमयो भवति। तथा आकाशशरीरारम्भे आकाशमयो भवति।
अनुवादः - ச.பா- இவ்வாறு புத்திபிராணன் மூலமாய் கண் முதலியவை இந்திரியமயமாகி சரீர ஆரம்பகமான பிருதிவீ முதலியவை பூதமயமாகிறது. அந்த சமயத்தில் பிருதிவீ சரீரம் ஆரம்பிக்கும்பொழுது பிருதிவீமயமாகிறது. அவ்வாறே வருண முதலிய லோகங்களில் அப் (ஜல) சரீரம் ஆரம்பிக்கும்பொழுது அபோமயமாகிறது (ஜலமயமாகிறது). அவ்வாறே வாயு சரீரம் ஆரம்பிக்கும்பொழுது வாயு மயமாகிறது. அவ்வாறே ஆகாச சரீரம் ஆரம்பிக்கும்பொழுது ஆகாசமயமாகிறது
भाष्यम् - एवमेतानि तैजसानि देवशरीराणि तेष्वार-भ्यमाणेषु तन्मयस्तेजोमयो भवति। अतो व्यतिरिक्तानि पश्वा-दिशरीराणि नरकप्रेतादिशरीराणि चातेजोमयानि। तान्यपेक्ष्याह- अतेजोमय इति।
अनुवादः - ச.பா- இவ்வாறு தைஜசமான தேவ சரீரங்கள் ஆரம்பிக்கும்பொழுது அந்த மயமாவதால் தேஜோமயமாகிறது. அதைக் காட்டிலும் வியதிரிக்தமான (வேறான) பசு முதலிய சரீரங்களும், நரகப்ரேதம் முதலிய சரீரங்கள் அதேஜோமயமாகும். அவைகளை (தேவாதிகளை) அபேக்ஷித்து இவைகளை அதேஜோமயம் என்று சுருதி குறிப்பிடுகிறது.
भाष्यम् - एवं कार्यकरणसघातमयः सन्नात्मा प्राप्तव्यं वस्त्वन्तरं पश्यन्निदं मया प्राप्तमदो मया प्राप्तव्यमित्येवं विपरीतप्रत्ययस्तदभिलाषः काममयो भवति। तस्मिन् कामे दोषं, पश्यतस्तद्विषयाभिलाषप्रशमे चित्तं प्रसन्नमकलुषं शान्तं भवति, तन्मयोऽकाममयः।
अनुवादः - ச.பா- இவ்வாறு ஆத்மா காரியகரண சங்காத மயமாய் இருந்துகொண்டு அடையப்படவேண்டிய வேறு வஸ்து இருக்கிறது என்று பார்த்து என்னால் அடையப்பட்டது, என்னால் அடையப்படவேண்டும் என்ற விபரீதஞானத்தால் அதில் ஆசை அதாவது காமம் ஏற்படுகிறது. அந்த காமத்தில் தோஷத்தைப்பார்த்து அந்த விஷயத்தில் ஆசை நீங்கும்பொழுது சித்தம் பிரசன்னமாகி கல்மஷம் சாந்தமாகிறது. அந்த மயமாதல் அகாமமயமாகும்.
भाष्यम् - एवं तस्मिन् विहते कामे केनचित् स कामः क्रोधत्वेन परिणमते, तेन तन्मयो भवन् क्रोधमयः। स क्रोधः केनचिदुपायेन निवर्तितो यदा भवति तदा प्रसन्नमनाकुलं चित्तं सदक्रोध उच्यते, तेन तन्मयः। एवं कामक्रोधाभ्याम् अकामा-क्रोधाभ्यां च तन्मयो भूत्वा धर्ममयोऽधर्ममयश्च भवति। न हि कामक्रोधादिभिर्विना धर्मादिप्रवृत्तिरुपपद्यते।“यद्यद्धि कुरुते कर्म तत्तत् कामस्य चेष्टितम्” इति स्मरणात्।
अनुवादः - ச.பா- இவ்வாறு எதன் மூலமாகவாவது காமம் அழிந்தபொழுது அந்த காமம் க்ரோதமாக பரிணமிக்கின்றது. அதனால் அந்த மயமாய் ஆவது க்ரோதமயமாகும். அந்தக்ரோதம் எந்த உபாயத்தாலாவது நீங்கியபொழுது பிரசன்னமாய் வியாகூலம் அற்ற சித்தத்துடன் இருப்பது அக்ரோதம் எனப்படுகிறது. அதனால் அந்த மயமாகிறது. இவ்வாறு அந்த அகாம, அக்ரோதங்கள் ஆகிய இரண்டும் அகாம அக்ரோதங்களால் தன்மயமாகி தர்மமயமாயும் அதர்மமயமாயும் ஆகின்றது. காமக் க்ரோதங்கள் இல்லாமல் தர்மம் முதலிய பிரவிர்த்திகள் உண்டாகாது.“यद्यद्धि कुरुते कर्म तत्तत् कामस्य चेष्टितम्” (யத்யத்தி குருதே கர்ம தத்தத் காமஸ்ய ச்சேஷ்டிதம்) என்று சுருதியினால் சித்திக்கின்றது.
भाष्यम् - धर्ममयोऽधर्ममयश्च भूत्वा सर्वमयो भवति। समस्तं धर्माधर्मयोः कार्यं यावत्किञ्चिद् व्याकृतम्, तत् सर्वं धर्माधर्मयोः फलं तत् प्रतिपद्यमानस्तन्मयो भवति। किं बहुना, तदेतत् सिद्धमस्य यदयमिदम्मयो गृह्यमाणविषयादिमयः, तस्मादयमदोमयः। अद इति परोक्षं कार्येण गृह्यमाणेन निर्दिश्यते। अनन्ता ह्यन्तःकरणे भावनाविशेषाः, नैव ते विशेषतो निर्देष्टुं शक्यन्ते। तस्मिंस्तस्मिन् क्षणे कार्यतोऽवगम्यन्ते, इदमस्य ह्य्दि वर्ततेऽदोऽस्येति। तेन गृह्यमाणकार्येणेदम्मयतया निर्दिश्यते, परोक्षोऽन्तःस्थो व्यवहारोऽयमिदानीमदोमय इति।
अनुवादः - ச.பா- தர்ம மயம், அதர்மமயமாகி எல்லாமயமும் (சர்வமயம்) ஆகின்றான். எவை எல்லாம் தோன்றுகிறதோ அவை எல்லாம் தர்மாதர்மங்களின் காரியம். அந்த எல்லா தர்மாதர்மங்களின் பலனை அடைந்து அந்தமயமாகின்றது. இதை விட அதிகமாக கூறுவதற்கு என்ன உள்ளது? இந்த விஷயத்தில் இது சித்திக்கின்றது. அதாவது எது இதம்மயமாய் (இது என்று) கிரஹிக்கப்படும் விஷய முதலிய மயமாகும். ஆகையால் இது அத(अद) மயமாகவும் ஆகிறது.“अद” (அத) என்பது பரோக்ஷ காரியமாய் (வஸ்துவாய்) கிரஹிக்கப்படுகிறது என்று நிர்தேசம் செய்யப்பட்டது. அந்தக்கரணத்தில் பாவனா விசேஷங்கள் முடிவு அற்றதாய் இருக்கின்றன. ஆகையால் விசேஷமாய் இவ்வாறு இருக்கிறது என்று நிச்சயமாய் கூறமுடியாது. அந்த அந்த லக்ஷணத்தில் காரியமாய் அறியப்படுகிறது. “இது” இந்த ஹிருதயத்தில் இருப்பதால் அது (அத)“अद” (பரோக்ஷமாக) இருக்கிறது ஆகையால் கிரஹிக்கப்படும் காரியத்தால்“इदम्” (இதம்) என்று நிர்தேசம் செய்யப்படுகிறது. பரோக்ஷ அந்தக்கரணத்தில் இருக்கும் வியவஹாரங்கள் இது இப்பொழுது அதோமயமாய்(अदोमय) இருக்கிறது எனப்படுகிறது
भाष्यम् - संक्षेपतस्तु यथा कर्तुं यथा वा चरितुं शीलमस्य सोऽयं यथाकारी यथाचारी, स तथा भवति। करणं नाम नियता क्रिया विधिप्रतिषेधादिगम्या, चरणं नामानियतमिति विशेषः। साधुकारी साधुर्भवतीति यथाकारीत्यस्य विशेषणम्, पापकारी पापो भवतीति च यथाचारीत्यस्य।
अनुवादः - ச.பா- சுருக்கமாக என்னவெனில் எவ்வாறு செய்வதற்கும், எவ்வாறு நடக்கவேண்டும் என்பதற்கும் எவனுக்கு அவ்வாறான சுவபாவமுள்ளவனை யதாகாரி(यथाकारी) என்றும் யதாசாரீ(यथाचारी) எனப்படுகிறார்கள். அவன் அவ்வாறே ஆகின்றான். கரணம்(करणं) செயல்) என்பது விதி பிரதிசித்தம் முதலியவை உடைய நியமமான கிரியையாகும். சரணம்(चरणं) நடப்பது) என்பது நியதிவிசேஷம் இல்லாமல் கடைபிடித்தல் நல்லது செப்பவன் (புண்யம் செய்பவன்) நல்லவன் (புண்ணியவான்) ஆகின்றான் என்பதற்கு யதாகாரீ(यथाकारी) என்பது விசேஷணம். பாபம் செய்பவன் பாபி ஆகின்றான். அவனுக்கு(यथाचारी) யதாசாரீ விசேஷணமாகும்.
भाष्यम् - ताच्छील्यप्रत्ययोपादानाद् अत्यन्ततात्पर्यतैव तन्मयत्वम्, न तु तत्कर्ममात्रेणेत्याशाह- पुण्यः पुण्येन कर्मणा भवति पापः पापेनेति। पुण्यपापकर्ममात्रेणैव तन्मयता स्यान्न तु ताच्छील्यमपेक्षते। ताच्छील्ये तु तन्मयत्वातिशय इत्ययं विशेषः।
अनुवादः - ச.பா- தாச்சீல்யம் = எவ்வாறு ஸ்வபாவமோ) என்ற பிரத்தியம் எடுத்துக்கொள்ளப்பட்டதால் அந்தியந்த தாத்பர்யம் உடையதே தன்மயத்துவம். (அதே மயமாதல்) ஆகையால் அதன் கர்மமாத்திரத்தினாலேயே அல்ல என்று சங்கை செய்து அதற்குக் கூறப்படுகிறது - புண்ய கர்மத்தினால் புண்யமும், பாபகர்மத்தினால் பாபமும் உண்டாகிறது. புண்ய பாப கர்மங்களால் மாத்திரமே தன்மயத்தை அடையலாம். அதற்கு(ताच्छीलयम्) தாச்சீல்யத்தை அபேக்ஷிப்பது இல்லை. இங்கு தாச்சீல்யம் (அவ்வாறான ஸ்வபாவம்) இருந்தாலும் தன்மயத்திற்கு இது விசேஷமாகிறது. (அதிகமாகக் கூறப்பட்டது).
भाष्यम् - तत्र कामक्रोधादिपूर्वकपुण्यापुण्यकारिता सर्वमयत्वे हेतुः, संसारस्य कारणम्, देहाद्देहान्तरसंचारस्य च। एतत्प्रयुक्तो ह्यन्यदन्यद् देहान्तरमुपादत्ते। तस्मात् पुण्यापुण्ये संसारस्य कारणम्। एतद्विषयौ हि विधिप्रतिषेधौ। अत्र शास्त्रस्य साफल्यमिति।
अनुवादः -ச.பா-இந்த ஸ்திதியில் காமக்ரோத முதலியவைகளின் பூர்வகமான புண்யம், அபுண்யம் செய்வது சர்வமயத்துவத்திற்கு ஹேதுவாகிறது. சம்சாரத்திற்கும் ஒரு தேஹத்திலிருந்து வேறு தேஹத்திற்கு செல்வதற்கான காரணம் ஆகிறது. இதைப் பிரயோகம் செய்வதாலேயே வெவ்வேறு மற்றதேஹத்தை கிரஹிக்கின்றது. ஆகையால் புண்யா புண்யங்களே சம்சாரத்திற்குக் காரணமாகின்றது. இந்த விஷயங்களே விதி பிரதிஷேதங்கள் (விதி நிஷேதங்கள்). இதுவே சாஸ்த்திரத்தின் பலமுடையதாகிறது.
भाष्यम् - अथो अप्यन्ये बन्धमोक्षकुशलाः खल्वाहुः सत्यं कामादिपूर्वके पुण्यापुण्ये शरीरग्रहणकारणम्, तथापि कामप्रयुक्तो हि पुरुषः पुण्यापुण्ये कर्मणी उपचिनोति। कामप्रहाणे तु कर्म विद्यमानमपि पुण्यापुण्योपचयकरं न भवति। उपचिते अपि पुण्यापुण्ये कर्मणी कामशून्ये फलारम्भके न भवतः। तस्मात् काम एव संसारस्य मूलम्। तथा चोक्तमाथर्वणे-“कामान् यः कामयते मन्यमानः स कामभिर्जायते तत्र तत्र” (मु०उ०३।२।२) इति तस्मात् काममय एवायं पुरुषो यदन्यमयत्वं तदकारणं विद्यमानमपीत्यतोऽवधारयति काममय एवेति।
अनुवादः - ச.பா- இந்த விஷயத்தில் வேறு பந்த மோக்ஷத்தில் குசல புருஷன் இவ்வாறு கூறுகின்றார் - இது சரியாக இருந்தாலும் காமம் முதலியவைகளின் பூர்வகமான புண்யாபுண்யமே சரீர கிரஹனத்திற்குக் காரணமாகின்றது. ஆனால் காமனையினால் பிரேரிக்கப்ட்டு புண்யாபுண்யரூப கர்மங்களைக் கிரஹிக்கின்றார்கள். காமனைகள் நாசமான பின் கர்மங்கள் இருந்தாலும் புண்யாபுண்யங்களின்பலன்கள் ஆரம்பிப்பது இல்லை. புண்யாபுண்யகர்மங்கள் சேர்ந்து இருந்தாலும் காமம் அற்று இருப்பதால் பலம் ஆரம்பிப்பது இல்லை. ஆகையால் காமமே சம்சார மூலம் (காரணம்). அவ்வாறே ஆதர்வணத்திலும்“कामान् यः कामयते मन्यमानः स कामभिर्जायते तत्र तत्र” (காமான் ய: காமயதே மன்யமான: ச: காமபிர்ஜாயதே தத்ர, தத்ர) என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால் காமமயனாகிய இந்த புருஷன் அநன்யத்துவமாயும், காரணமற்றதாயும் இருந்தாலும் காமமயனே என்று நிச்சயமாய் கூறப்படுகிறது.
भाष्यम् - यस्मात् स च काममयः सन् यादृशेन कामेन यथाकामो भवति, तत्क्रतुर्भवति। स काम ईषदभिलाषमात्रेणा-भिव्यक्तो यस्मिन् विषये भवति, सोऽविहन्यमानः स्फुटीभवन् क्रतुत्वमापद्यते। क्रतुर्नामाध्यवसायो निश्चयो यदनन्तरा क्रिया प्रवर्तते।
अनुवादः - ச.பா- எதனால் அவன் காமமயனாய் இருந்து கொண்டு எந்த காமத்தினால்(यथाकाम) காமம் எவ்வாறே அவ்வாறு ஆகின்றான். தத்க்ரது:“तत्क्रतु” ஆகவும் ஆகின்றான். அந்த காமமானது எந்த விஷயத்தில் சிறிது அளவு ஆசை இருந்தாலும் உண்டாகிறது. அதனால் அவன் பாதிக்கப்படாவிட்டாலும் ஸ்பஷ்டமாய் இருந்து கொண்டு“क्रतुत्वम्” (க்ரத்துத்வம்) ரூபத்தை அடைகிறான். க்ரது:“क्रतुः” என்பது நிச்சயமாக எதற்கு பின் கிரியையின் பிரவிர்த்தி ஏற்படுகிறதோ அதுவாகும்.
भाष्यम् - यत्क्रतुर्भवति यादृक्कामकार्येण क्रतुना यथारूपः क्रतुरस्य सोऽयं यत्क्रतुर्भवति, तत् कर्म कुरुते, यद्विषयः क्रतुस्तत्फलनिर्वृत्तये यद् योग्यं कर्म, तत् कुरुते निर्वर्तयति, यत् कर्म कुरुते तदभिसम्पद्यते, तदीयं फलमभिसम्पद्यते। तस्मात् सर्वमयत्वेऽस्य संसारित्वे च काम एव हेतुरिति।
अनुवादः - ச.பா- எந்த க்ரது உண்டாகிறதோ அதாவது காமனையின் காரியரூபம் எவ்வாறு க்ரதுவுடன் சம்பந்தப்படுகிறதோ அவ்வாறு க்ரதுவாகின்றான். அவ்வாறு கர்மம் செய்கின்றான். எந்த விஷயத்திற்காக க்ரது ஆகின்றானோ அதன் பலன் சித்திப்பதற்கு யோக்கியமான கர்மம் செய்கின்றான். எவ்வாறு கர்மம் செய்கின்றானோ அதை அவன் அடைகின்றான். அதாவது பலத்தை அடைகின்றான். ஆகையால் சர்வ மயத்துவம், சம்சாரித்துவத்திற்கு காரணம் காமமேயாகும்.
मन्त्रः - तदेष श्लोको भवति। तदेव सक्तः सह कर्मणैति लिङ्गं मनो यत्र निषक्तमस्य। प्राप्यान्तं कर्मणस्तस्य यत्किञ्चेह करोत्ययम्। तस्माल्लोकात् पुनरैत्यस्मै लोकाय कर्मण इति नु कामयमानोऽथाकामयमानो योऽकामो निष्काम आप्तकाम आत्मकामो न तस्य प्राणा उत्क्रामन्ति ब्रह्मैव सन् ब्रह्माप्येति।। ६।।
अनुवादः - மந்திரம்- இந்த விஷயத்தில் இந்த மந்திரமாகும் - இதனுடைய லிங்கம் என்பது மனம் எதில் மிகுந்த பற்று உடையதாய் இருக்கிறதோ அந்த பலத்திற்காக ஆசைப்பட்டு கர்மத்துடன் அதை அடைகிறான். இந்த உலகில் எது செய்கின்றானோ அந்தக் கர்மத்தின் பலனை அடைந்து மறுபடியும் அந்த லோகத்தில் இருந்து கர்மம் செய்வதற்காக மறுபடியும் இந்த லோகத்திற்கு வருகிறான். காமனை செய்யும் புருஷனே அவசியமாக இவ்வாறு செய்கின்றான். இப்பொழுது எவன் காமனை செய்வதில்லையோ அந்த புருஷன் அகாமன், நிஷ்காமன், ஆப்த்தகாமன், ஆத்மகாமன், ஆகின்றான். அவனுடைய பிராணன் உத்கிரமணம் செய்வதில்லை. பிரஹ்மமாகவே இருந்துகொண்டு பிரஹ்மத்தை அடைகின்றான்.
भाष्यम् - तत्तस्मिन्नर्थे एष श्लोको मन्त्रोऽपि भवति। तदेवैति तदेव गच्छति, सक्त असक्तस्तत्रोद्भताभिलाषः सन्नित्यर्थः, कथमेति? सह कर्मणा यत् कर्म फलासक्तः सन्नकरोत्तेन कर्मणा सहैव तदेति तत् फलमेति। किं तत्? लिङ्गं मनः- मनःप्रधानत्वाल्लिङ्गस्य मनो लिङ्गमित्युच्यते।
अनुवादः - ச.பா- அது அந்த விஷயத்தில் இந்த ஸ்லோகம் மந்திரம் ஆகிறது. அதுவே செல்கிறது. அதாவது மிகுந்த பற்றினால் உண்டான ஆசையுடன் இருந்துகொண்டு என்பது பொருள். அது எவ்வாறு செல்லுகிறது? கர்மாவுடன் அதாவது மிகுந்த பற்றுடன் ஆசைப்பட்டு செய்யும் கர்மத்துடன் அந்த பலத்தை சென்று அடைகிறது. அது (செல்வது) யார்? லிங்கம் அதாவது மனம். மனம் பிரதானமாய் இருப்பதால் மனம் லிங்கம் எனப்படுகிறது.
भाष्यम् - अथ वा लिङ्गयतेऽवगम्यतेऽवगच्छति येन तल्लिङ्गं तन्मनो यत्र यस्मििन्नषक्तं निश्चयेन सक्तमुद्भताभिलाषमस्य संसारिणः, तदभिलाषो हि तत् कर्म कृतवान्, तस्मात्तन्मनोऽ-भिषङ्गवशादेवास्य तेन कर्मणा तत्फलप्राप्तिः। तेनैतत् सिद्धं भवति, कामो मूलं संसारस्येति। अत उच्छिन्नकामस्य विद्यमानान्यपि कर्माणि ब्रह्मविदो वन्ध्याप्रसवानि भवन्ति,“पर्याप्तकामस्य कृतात्मनश्च इहैव सर्वे प्रविलीयन्ति कामाः” (मु०उ०३।२।२) इति श्रुतेः।
अनुवादः - ச.பா- அல்லது எதன் அறிகுறியினால் அறியப்படுகிறதோ(लिङ्गयते) அது லிங்கம் (அறிகுறி) அதுவே மனம். எங்கு எதில் நிச்சயமாக பற்று உண்டாகி அதாவது மிகுந்த ஆசை உடையவன் சம்சாரியாவான் அந்த ஆசைக்காக அந்த கர்மத்தை செய்கிறான். ஆகையால் அந்த மனதின் ஆசக்திக்கு வசமாகியதால் அந்த கர்மத்திலான பலனை அடைகிறான். ஆகையால் காமமே சம்சாரத்திற்கு மூலகாரணம் என்று சித்திக்கின்றது. ஆகையால் காமம் அற்றவனுக்கு கர்மங்கள் இருந்தாலும் பிரஹ்மவித்திற்கு மலடியின் பிரசவம் போல் ஆகும்.“पर्याप्तकामस्य कृतात्मनश्च इहैव सर्वे प्रविलीयन्ति कामाः” इति श्रुतेः। (பர்யாப்த்தகாமஸ்ய கிருதாத்மனஷ்ச இஹைவ சர்வே ப்ரவிலீயந்தி) என்பது சுருதி வசனமாகும்.
भाष्यम् - किञ्च प्राप्यान्तं कर्मणः- प्राप्य भुक्त्वा अन्तमवसानं यावत् कर्मणः फलपरिसमाप्तिं कृत्वेत्यर्थः, कस्य कर्मणोऽन्तं प्राप्येत्युच्यते- तस्य यत्किञ्च कर्मेहास्मिंल्लोके करोति निर्वर्तयत्ययम्, तस्य कर्मणः फलं भुक्त्वा अन्तं प्राप्य तस्माल्लोकात् पुनरत्यागच्छत्यस्मै लोकाय कर्मणो। अयं हि लोकः कर्मप्रधानः, तेनाह-“कर्मणे” इति पुनः कर्मकरणाय। पुन कर्म कृत्वा फलासङ्गवशात् पुनरमुं लोकं यातीत्येवम्। इति नु एवं नु कामयमानः संसरति। यस्मात् कामयमान एवैवं संसरत्यथ तस्मादकामयमानो न क्वचित् संसरति।
अनुवादः - ச.பா- மேலும் கர்மம் முடிவு அடைந்ததும் அதாவது எதுவரை கர்மத்தின் முடிவை அடைந்து அனுபவித்து பலனை முடிவுக்கு கொண்டு வருவது ஆகும். எவருக்கு கர்மத்தின் அந்தம் (முடிவு) ஏற்படுகிறது என்பது கூறப்படுகிறது. இந்த லோகத்தில் எந்த அளவு கர்மம் செய்கின்றானோ அந்த கர்மத்தின் பலத்தை அனுபவித்தபின் முடிவை அடைந்து அந்த லோகத்திலிருந்து கர்மம் செய்வதற்காக மறுபடியும் இந்த லோகத்திற்கு வருகிறான். இந்த லோகம் கர்ம பிரதானமானது. ஆகையால் இவ்வாறு கூறப்பட்டது -“कर्मणे” (கர்மணே) என்று. அதாவது மறுபடியும் கர்மம் செய்வதற்காக என்பது பொருள். மறுபடியும் கர்மம் செய்து பலத்தில் உள்ள ஆசக்தி வசத்தால் மறுபடியும் இந்த லோகத்திற்கு வருகின்றான். இவ்வாறு காமம் உடையவனாய் சஞ்சாரம் செய்கின்றான். எதனால் காமம் உடையவன் இவ்வாறு சஞ்சாரம் செய்கின்றானோ அதனால் காமம் அற்றவன் ஒருபொழுதும் சஞ்சாரம் செய்வதில்லை.
भाष्यम् - फलासक्तस्य हि गतिरुक्ता। अकामस्य हि क्रियानुपपत्तेरकामयमानो मुच्यत एव। कथं पुनरकामयमानो भवति? योऽकामो भवत्यसावकामयमानः। कथमकामतेत्युच्यते- यो निष्कामो यस्मान्निर्गताः कामाः सोऽयं निष्कामः। कथं कामा निर्गच्छन्ति? य आप्तकामो भवत्याप्ताः कामा येन स आप्तकामः।
अनुवादः - ச.பா- பலாசக்தி உள்ளவர்களுக்கே கதி (மார்க்கம்) கூறப்பட்டது. காமனை அற்றவனுக்கு (அகாமனுக்கு) கிரியை இல்லாததினால் அகாமனாய் இருந்து கொண்டு விடுபடுகின்றான். மேலும் அவன் எவ்வாறு அகாமனை உடையவன் ஆகின்றான்? எவன் அகாமனாய் ஆகின்றானோ அவன் அகாமனனாய் ஆகின்றான். எவ்வாறு அவனுக்கு அகாமதா (அகாமத்துவம்) என்று கூறப்படுகிறது - எவன் நிஷ்காமனோ அதாவது எதனால் காமங்கள் நீங்கியதோ அதுவே இந்த நிஷ்காமம். எவ்வாறு காமங்கள் நீங்குகின்றன? எவன் ஆப்த்த காமனாகின்றானோ அதாவது எல்லா காமங்களும் அடைந்தவனாகின்றானோ ஆகையால் அவன் ஆப்த்த காமன்.
भाष्यम् - कथमाप्यन्ते कामाः? आत्मकामत्वेन। यस्यात्मैव नान्यः कामयितव्यो वस्त्वन्तरभूतः पदार्थो भवति। आत्मैवानन्तरो बाह्यः कृत्स्नः प्रज्ञानघन एकरसः नोर्ध्वं न तिर्यङ् नाध आत्मनोऽन्यत् कामयितव्यं वस्त्वन्तरम्। यस्य सर्वमात्मैवाभूत् तत्केन कं पश्येच्छृणुयान्मन्वीत विजानीयाद्वा, एवं विजानन् कं कामयेत। ज्ञायमानो ह्यन्यत्वेन पदार्थः कामयितव्यो भवति, न चासावन्यो ब्रह्मविद आप्तकामस्यास्ति। य एवात्मकामतया आप्तकामः स निष्कामोऽकामोऽकामयमानश्चेति मुच्यते। न हि यस्य आत्मैव सर्वं भवति, तस्यानात्मा कामयितव्योऽस्ति। अनात्मा चान्यः कामयितव्यः सर्वं चात्मैवाभूदिति विप्रतिषिद्धम्। सर्वात्मदर्शिनः कामयितव्याभावात् कर्मानुपपत्तिः।
अनुवादः - ச.பா- எவ்வாறு காமனைகளை அடைகிறார்கள்? ஆத்மாவை காமனை செய்வதால். எதனால் ஆத்மா ஒன்றே காமனை செய்யப்படவேண்டியது ஆகிறது. மற்ற வேறு பதார்த்தங்கள் அல்ல. ஏன் எனில் ஆத்மாவே உள்ளும் வெளியிலும் எதிலும் பூர்ணமாய் பிரக்ஞானமாய் ஏக ரசமாயும் மேலும் மேலேயோ, நடுவிலோ, கீழேயோ ஆத்மாவைத் தவிர காமனை செய்ய வேண்டிய வஸ்து வேறு ஒன்றும் இல்லை. எவர் சர்வாத்ம பாவத்தை அடைந்தாரோ அவர் எதனால் எதைப்பார்ப்பர், கேட்பர், நினைப்பர், அறிவர் என்று அறிந்தவர் எதை காமனை செய்வர். பாதார்தங்களை வேறாக அறிந்தால் அல்லவா காமனை செய்வதாய் ஆகின்றது. இவ்வாறு அந்த ஆப்த்த காமனாகிய பிரஹ்மவித்திற்கு தன்னைத்தவிர வேறு காமனைக்குறிய வஸ்து இல்லை. எவன் இவ்வாறு ஆத்ம காமனையினால் ஆப்த்த காமனோ அவன் நிஷ்காமன், அகாமன், காமனை அற்றவன் முக்தி அடைகிறான். எவனுக்கு எல்லாம் ஆத்மமாகவே ஆகிறதோ அவனுக்கு காமனை செய்வதற்கு வேறு ஒன்றும் இல்லை. அநாத்மா வேறு காமனை செய்ய வேண்டியது என்றும் எல்லாம் ஆத்மாவே ஆகிவிட்டதும் என்றும் கூறுவது விருத்தமானதாகும். சர்வாத்மா தர்சிக்கு காமனை செய்வதற்கானது இல்லாததால் கர்மம் அவர்களுக்கு சம்பவிக்காது.
भाष्यम् - ये तु प्रत्यवायपरिहारार्थं कर्म कल्पयन्ति ब्रह्मविदोऽपि, तेषां नात्मैव सर्वं भवति, प्रत्यवायस्य जिहासितव्यस्य आत्मनोऽन्यस्य अभिप्रेतत्वात्। येन चाशनायद्यतीतो नित्यं प्रत्यवायासम्बद्धो विदित आत्मा, तं वयं ब्रह्मविदं ब्रूमः। नित्यमेव अशनायद्यतीतमात्मानं पश्यति। यस्माच्च जिहासितव्यमन्यमुपादेयं वा यो न पश्यति, तस्य कर्म न शक्यत एव सम्बन्धुम्, यस्त्वब्रह्मवित्तस्य भवत्येव प्रत्यवायपरिहारार्थं कर्मेति न विरोधः। अतः कामाभावादकामयमानो न जायते, मुच्यत एव।
अनुवादः - ச.பா- எந்த பிரஹ்மவித்தாய் இருந்தாலும் பிரத்யவாயம் நீங்குவதற்காக கர்மத்தைக் கல்பித்தாலும் அவர்களுடைய ஆத்மா சர்வம் (எல்லாமாக) ஒரு நாளும் ஆகாது. பிரத்யவாயத்தை நீக்குவது என்பது ஆத்மாவிற்கு அன்யம் உள்ளது என்ற அபிப்பிராயம் ஏற்படும். எதனால் பசி முதலியவற்றைக் கடந்ததும், நித்யமானதும், பிரத்யவாய சம்பந்தம் அற்றதும் ஆகும் ஆத்மா என்று அறிந்தவனை நாங்கள் பிரஹ்ம வித் என்று கூறுகிறோம். நித்யமாகவே பசி முதலியவை அற்றதாய் ஆத்மாவைக் காண்கிறான். எதனால் ஆத்மானவைத்தை தவிர வேறு ஒன்றையும் எடுத்துக்கொள்ள வேண்டும், விடவேண்டும் என்று பார்ப்பது இல்லை. அவனை கர்மம் பந்தப்படுத்தவே முடியாது. எவன் அபிரஹ்மவித்தோ அவனுக்கு பிரத்யவாயம் நீங்குவதற்காக கர்மம் செய்வது விரோதமல்ல. ஆகையால் காமம் இல்லாததால் காமனை அற்றவனாய் இருப்பவன் பிறப்பதில்லை. முக்தியை அடைகின்றான்.
भाष्यम् - तस्यैवमकामयमानस्य कर्माभावे गमनकारणा-भावात् प्राणा वागादयः, नोत्क्रामन्ति नोर्ध्वं क्रामन्ति देहात्। स च विद्वानाप्तकाम आत्मकामतये हैव ब्रह्मभूतः। सर्वात्मनो हि ब्रह्मणो दृष्टान्तत्वेन प्रदर्शितमेतद्रूपम्-“तद्वा अस्यैतदाप्तकाममात्म-काममकामं रूपम्” (बृ०उ०४।३।२१) इति। तस्य हि दार्ष्टान्तिक-भूतोऽयमर्थ उपसंह्रियतेऽथाकामयमान इत्यादिना।
अनुवादः - ச.பா- இவ்வாறு அந்த காமனை அற்றவனுக்கு கர்மம் இல்லாததால் காமனத்திற்கான காரணம் இல்லாததால் தேஹத்திலிருந்து பிராணன். வாக் முதலியவைகள் உத்கிரமணம் செல்வதில்லை. அதாவது மேலே செல்வது இல்லை. அந்த ஆப்த்தகாமன் ஆத்மாகாமனாக இங்கேயே பிரஹ்மம் ஆகின்றான். பிரஹ்மத்தின் சர்வாத்மத்துவ ரூபம் திருஷ்டாந்தம் வாயிலாய் தெரிவிக்கப்பட்டது.“तद्वा अस्यैतदाप्तकाममात्मकाममकामं रूपम्” (யத்வா அஸ்யைததாப்த்தகாமமாத்மகாமமகாம் ரூபம்) என்று. அந்த தார்ஷ்ட்டந்தமான இந்த அர்த்தம் இப்பொழுது (அகாம்யமான) காமனையற்றவன் என்பது முதலியவைகளால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
भाष्यम् - स कथमेवम्भूतो मुच्यत इत्युच्यते- यो हि सुषुप्तावस्थमिव निर्विशेषमद्वैतमलुप्तचिद्रूपज्योतिःस्वभावमात्मानं पश्यति, तस्यैवाकामयमानस्य कर्माभावे गमनकारणाभावात् प्राणा वागादयो नोत्क्रामन्ति। किन्तु विद्वान् स इहैव ब्रह्म, यद्यपि देहवानिव लक्ष्यते, स ब्रह्मैव सन् ब्रह्माप्येति। यस्मान्न हि तस्याब्रह्मत्वपरिच्छेदहेतवः कामाः सन्ति, तस्मादिहैव ब्रह्मैव सन् ब्रह्माप्येति न शरीरपातोत्तरकालम्।
अनुवादः - ச.பா- இவ்வாறு இருப்பவன் எவ்வாறு முக்தி அடைகிறான் என்பதுக் கூறப்படுகிறது- எவன் சுஷுப்த்தி அவஸ்தையைப் போல் நிர்விஷயமாய், அத்வைதமாய், மறைக்கப்படாத (அலுப்த்த) சித்ரூப ஜ்யோதியாய் சுவபாவம் உள்ள ஆத்மாவை அறிகிறானோ அவன் காமம் அற்றவனாய் இருப்பதால் கமனத்திற்குக் காரணமான கர்மம் இல்லாததால் பிராணன் வாக் முதலியவைகள் உத்கிரமணம் செய்வதில்லை. ஆனால் வித்வான் இங்கேயே பிரஹ்மாகிறான். அதாவது தேஹம் உடையவன் போல் இருந்தாலும் (தோன்றினாலும்) அவன் பிரஹ்மமாகவே இருந்து கொண்டு பிரஹ்மத்தை அடைகின்றான். ஏன்எனில் அப்ரஹ்மத்தை பரிச்சேதம் செய்யும் காரணங்களான காமனைகள் அற்றதால் இங்கேயே பிரஹ்மமாக இருந்துகொண்டு பிரஹ்மத்தை அடைகின்றான். சரீரம் வீழ்ந்தபின் அல்ல.
भाष्यम् - न हि विदुषो मृतस्य भावान्तराप्राप्तिर्जीवतोऽन्यो भावो देहान्तरप्रतिसन्धानाभावमात्रेणैव तु ब्रह्माप्येतीत्युच्यते। भावान्तरापत्तौ हि मोक्षस्य सर्वोपनिषद्विवक्षितोऽर्थ आत्मैकत्वाख्यः स बाधितो भवेत्, कर्महेतुकश्च मोक्ष) प्राप्नोति, न ज्ञाननिमित्त इति। स चानिष्टः अनित्यत्वं च मोक्षस्य प्राप्नोति, न हि क्रियानिर्वृत्तोऽर्थो नित्यो दृष्टः। नित्यश्च मोक्षोऽभ्युपगम्यते,“एष नित्यो महिमा” (बृ०उ०४।४।२३) इति मन्त्रवर्णात्।
अनुवादः - ச.பா- மரணமடைந்த வித்வானுக்கு பாவாந்தரம் கிடையாது ஜீவிக்கும் அவஸ்தையைக் காட்டிலும் வேறு (அன்ய) பாவம் அதாவது வேறு தேஹத்தின் சம்யோகம் இல்லாததாலேயே பிரஹ்மத்தை அடைகிறான். முக்தியை அடைகிறான். மோக்ஷத்திற்கு பாவாந்தரத்தை ஒப்புக்கொண்டால் எல்லா உபநிஷத்துக்களாலும் நிச்சயமாய் விளக்கப்பட்ட ஆத்மைக்யம் என்பதற்கு விரோதம் உண்டாகும். மோக்ஷத்திற்கு கர்மம் ஹேது என்றும், ஞானத்தால் அல்ல என்றும் ஏற்படும். அது இஷ்டமல்ல. மோக்ஷத்திற்கு அநித்தியத்துவம் உண்டாகும். எங்கும் கிரியையினால் ஏற்படும் பதார்த்தம் எங்கும் நித்யமாகக் காணப்படவில்லை. இதனால் மோக்ஷம் நித்யம் என்று அறியப்படுகிறது.“एष नित्यो महिमा” (ஏஷ நித்யோ மஹிமா) என்றமந்திர வர்ணத்தால் சித்திக்கின்றது.
भाष्यम् - न च स्वाभाविकात् स्वभावदन्यन्नित्यं कल्पयितुं शक्यम्। स्वभाविकश्चेदग्न्युष्णवदात्मनः स्वभावः, स न शक्यते पुरुषव्यापारानुभावीति वक्तुम्। न ह्यग्नेरौष्ण्यं प्रकाशो वाग्नि-व्यापारानन्तरानुभावी। अग्निव्यापारानुभावी स्वाभाविकश्चेति विप्रतिषिद्धम्।
अनुवादः - ச.பா- ஸ்வாபாவிகமான ஸ்வபாவத்திற்கு (சொரூபத்திற்கு) வேறான நித்யம் கல்பிக்க முடியாது. ஸ்வாபாவிகம் என்றால் அக்னியில் சூடுபோல ஆத்மாவின் ஸ்வபாவம். அது புருஷ வியாபாரத்திற்குப் பின் உண்டாகிறது என்று கூறமுடியாது. அக்னியின் சூடு, பிரகாசம் ஆகியவை அக்னியின் வியாபாரத்திற்குப்பின் தோன்றவில்லை. அக்னியின் வியாபாரத்திற்குப் பின்னர் தோன்றுவதும் ஸ்வாபாவிகம் என்று கூறுவது பொருந்தாது.
भाष्यम् - ज्वलनव्यापारानुभावित्वम् उष्णप्रकाशयोरिति चेन्न, अन्योपलब्धिव्यवधानापगमाभिव्यक्तपेक्षत्वात्। ज्वलना-दिपूर्वकमग्निः उष्णप्रकाशगुणाभ्यामभिव्यज्यते तन्नाग्न्यपेक्षया, किं तर्ह्यन्यदृष्टेरग्नेरौष्ण्यप्रकाशौ धर्मौ व्यवहितौ, कस्यचिद् दृष्टा त्वसम्बध्यमानौ, ज्वलनापेक्षया व्यवधानापगमे दृष्टेरभिव्यज्येते। तदपेक्षया भ्रान्तिरुपजायते- ज्वलनपूर्वकावेतौ उष्णप्रकाशौ धर्मौ जाताविति।
अनुवादः - ச.பா- ஜ்வாலையின் வியாபாரத்தால் பின்னால் ஏற்படும் என்பது மற்றொன்றின் அறிவதற்கான மறைப்பின் (தடையின்) நீக்கத்தை அபேக்ஷித்தே உஷ்ணம் பிரகாசம் எனில் அவ்வாறு அல்ல. ஜ்வாலை முதலியவைகளின் மூலமாக அக்னியானது உஷ்ணம், பிரகாச குணங்களின் வெளிப்பாடு அது அக்னியை அபேக்ஷித்து அல்ல எனில்? அக்னியின் உஷ்ணம், பிரகாச தர்மமற்றதின் திருஷ்ட்டியினால் சம்பந்தம் அற்றது. ஆகையால் ஜ்வலனத்தை அபேக்ஷயைினால் அந்த தடை நீங்கியபின் வெளிப்படுகிறது. இவ்வாறு பிராந்தி ஏற்படுகிறது. எவ்வாறு எனில் உஷ்ணம் பிரகாசம் ஆகிய தர்மங்கள் ஜீவன பூர்வகமாக உண்டாகிறது.
भाष्यम् - यद्युष्णप्रकाशयोरपि स्वाभाविकत्वं न स्यात् यः स्वाभाविकोऽग्नेर्धर्मः, तमुदाहरिष्यामः। न च स्वाभाविको धर्म एव नास्ति पदार्थानामिति शक्यं वक्तुम्, न च निगडभङ्ग इवाभावभूतो मोक्षो बन्धननिवृत्तिरुपपद्यते, परमात्मैकत्वाभ्युपगमात्“एकमेवाद्वितीयम्” (छा०उ०६।२।१) इति श्रुतेः। न चान्यो बद्धोऽस्ति, यस्य निगडनिवृत्तिवद् बन्धननिवृत्तिर्मोक्षः स्यात्। परमात्मव्यतिरेकेणान्यस्याभावं विस्तरेणावादिष्म। तस्मादविद्या-निवृत्तिमात्रे मोक्षव्यवहार इति चावोचाम। यथा रज्ज्वादौ सर्पाद्यज्ञाननिवृत्तौ सर्पादिनिवृत्तिः।
अनुवादः - ச.பா- உஷ்ணத்துவம், பிரகாசத்துவம் அக்னியின் ஸ்வபாவ தர்மம் இல்லை என்றால் அந்த அக்னிக்கு ஸ்வாபாவிக தர்மம் உண்டு என்பதற்கு உதாரணம் கூறுகிறோம். ஸ்வபாவிக தர்மமே பதார்தங்களுக்கு இல்லை. என்று கூறுவதற்கு சாத்தியம் இல்லை. பரமாத்மா ஏகத்துவமாய் அறியப்படுவதால்“एकमेवाद्वितीयम्” என்ற சுருதி வாக்கியத்தால் விலங்கு (சங்கிலி) நீங்குவது போன்ற ரூபமாகிய அபாவ ரூபமான மோக்ஷம் பந்த நிவிர்த்தியினால் அடையப்படுகிறது என்று கூறுவது பொருந்தாது. அதற்கு வேறு பந்தமும் கிடையாது. அதற்கு விலங்கு விடுபடுவது போன்ற பந்தத்தின் நிவிர்த்தி மோக்ஷமாகும். பரமாத்மாவிற்கு வ்யதிரிக்தமாக (வேறாக) மற்றதின் அபாவம் விஸ்தாரமாய் கூறுகிறேன். ஆகையால் அவித்யா நிவிர்த்தி மாத்திரமே மோக்ஷ வ்யவஹாரம் என்று கூறினோம். எவ்வாறு ரஜ்ஜு முதலியவைகளில் சர்ப்பம் முதலிய அஞ்ஞானம் நீங்கியவுடன் சர்ப்பம் முதலியவைகள் நீங்குவது போலாகும்.
भाष्यम् - येऽप्याचक्षते मोक्षे विज्ञानान्तरमानन्दान्तरं चाभिव्यज्यत इति तैर्वक्तव्योऽभिव्यक्तिशब्दार्थः। यदि ताव-ल्लौकिक्येव उपलब्धिर्विषयव्याप्तिरभिव्यक्तिशब्दार्थः, ततो वक्तव्यं किं विद्यमानमभिव्यज्यतेऽविद्यमानमिति वा? विद्यमानं चेद् यस्य मुक्तस्य तदभिव्यज्यते तस्यात्मभूतमेव तदिति, उपलब्धिव्यवधा-नानुपपत्तेर्नित्याभिव्यक्तत्वान्मुक्तस्याभिव्यज्यत इति विशेष-वचनमनर्थकम्।
अनुवादः - ச.பா- எவர்கள் மோக்ஷத்திற்கு வேறு விஞ்ஞானம், வேறு ஆனந்தம் தோன்றுகிறது (அறியப்படுகிறது) என்று கூறினால் இந்த“अभिव्यक्ति” (அபிவியக்தி - தோன்றுதல்) என்ற சப்தத்தின் அர்த்தத்தைக் கூறவேண்டும். இவ்வாறு லெளகிகம் போல் அறியப்படுகிறது விஷய வ்யாப்தியே அபிவியக்தத்தின் (அறிவதின் தோன்றுவது) சப்த அர்த்தமானால் இருப்பது அறியப்படுகிறது என்று கூறினால் அறியப்படாத (தோன்றாதது) எது? என்று கூறவேண்டும். இருக்கிறது என்றால் அந்த முக்தனுக்கு அது அறியப்பட்டதாக (வெளிப்பட்டதாக) அதாவது அந்த ஆத்ம ஸ்வரூபமாகவே ஆகின்றான். அது வேறு ஒன்றால் அறிவதாக ஆகாததாலும் எப்பொழுதும் முக்தனுக்கு தெளிவாய் அபிவ்க்தியாய் (விளங்குவதால்) இருப்பதால்“अभिव्यज्यत” என்ற விசேஷணம் அளிக்கப்பட்டுள்ளது.
भाष्यम् - अथ कदाचिदेवाभिव्यज्यते, उपलब्धिव्यवधा-नादनात्मभूतं तदिति, अन्यतोऽभिव्यक्तिप्रसङ्गः। तथा चाभिव्यक्तिसाधनापेक्षता। उपलब्धिसमानाश्रयत्वे तु व्यवधान-कल्पनानुपपत्तेः सर्वदाभिव्यक्तिरनभिव्यक्तिर्वा। न त्वन्तराल-कल्पनायां प्रमाणमस्ति। न च समानाश्रयाणामेकस्यात्मभूतानां धर्माणामितरेतरविषयविषयित्वं सम्भवति।
अनुवादः -ச.பா-ஆகையால் சிலசமயம் அபிவ்யக்தி ஆகிறது என்றால் அதனை அறிவதற்கு தடை இருப்பதால் அது அநாத்மா பூதமாகும். அப்பொழுது அதை அறிவதற்கு வேறு சாதனம் தேவைப்படுவதால் அபிவ்யக்தி ஏற்படுவதில் வினா எழும். அவ்வாறு அபிவ்யக்தி சாதனத்தை அபேக்ஷிக்கின்றது. உபலப்தி சமானாஸ்ரயத்துவம் என்று கருதினால் தடையின் (மறைப்பின்) கல்பனை உண்டாகாததால் அது எப்பொழுதும் அபிவ்யக்தியாய் இருக்கும் அல்லது அபிவ்யக்தி ஆகாமலும் இருக்கும். இவ்வாறு இந்த அந்தரால கல்பனைக்குப் பிரமாணம் இல்லை. சமான ஆஸ்ரயம் உள்ளவைகளுக்கு ஒரே ஆத்மரூபங்களின் தர்மங்களுக்கு விஷய விஷயீத்தும் சம்பவிக்காது.
भाष्यम् - पूर्व - विज्ञानसुखयेश्च प्रागभिव्यक्तेः संसारित्वम्, अभिव्यक्त्युत्तरकालं च मुक्तत्वं यस्य- सोऽन्यः परस्मान्नित्या-भिव्यक्तज्ञानस्वरूपादत्यन्तवैलक्षण्यात्, शैत्यमिवौष्ण्यात्,
अनुवादः - ச.பா- பூர்வ பக்ஷம்- விஞ்ஞானமும் சுகமும் தோன்றுவதற்குமுன் சம்சாரித்துவம் என்றும், தோன்றியபின் (அபிவ்யக்தி ஆனபின்) முக்தத்துவம் என்றும் அது சீதம் உஷ்ணம் போல் முற்றிலும் விலக்ஷணதன்மை உடைய நித்தியமாய் இருக்கும் (அபிவ்யக்த்தமான) ஞானஸ்வரூப பரமாத்மாவைக் காட்டிலும் அது அன்யமானது. (விலக்ஷணமானது. வேறானது).
भाष्यम् - सिद्धान्ती - परमात्मभेदकल्पनायां च वैदिकः कृतान्तः परित्यक्तः स्यात्।
अनुवादः - ச.பா- சித்தாந்தீ- இவ்வாறு பரமாத்விற்கு பேதத்தைக் கல்பனை செய்தால் வைதிக சித்தாந்தம் கைவிடப்பட்டதாக ஆகும்.
भाष्यम् - पूर्व - मोक्षस्य इदानीमिव निर्विशेषत्वेतद-र्थाधिकयत्नानुपपत्तिः शास्त्रवैयर्थ्यं च प्राप्नोतीति चेत्।
अनुवादः - ச.பா- பூர்வ- மோக்ஷத்திற்கு இப்பொழுது உள்ளதுபோல் நிர்விசேஷத்துவம் இருந்தால் அதன் பொருட்டு அதிகபிரயத்தனம் சம்பவிக்காது. மேலும் சாஸ்திரம் அர்த்தமற்றதாக ஆகிவிடுமே எனில்!
भाष्यम् - न, अविद्याभ्रमापोहार्थत्वात्, न हि वस्तुतो मुक्तामुक्तत्व विशेषोऽस्ति, आत्मनो नित्यैकरूपत्वात्, किंतु तद्विषया अविद्या अपोह्यते शास्त्रोपदेशजनितविज्ञानेन, प्राक्तदु-पदेशप्राप्तेस्तदर्थश्च प्रयत्न उपपद्यत एव।
अनुवादः - ச.பா- சித்தாந்தீ- அவித்யையாகிய பிரமையை (மயக்கத்தை) நீக்குவதால் அவ்வாறு அல்ல. ஆத்மா நித்ய ஏக ஸ்வரூபமாய் இருப்பதால் உண்மையில் முக்தி என்றும் அமுக்தி என்றும் விசேஷம் இல்லை. ஆனால் சாஸ்திரத்தினால் உண்டான ஞானத்தால் அந்த விஷயம் என்ற அவித்யை நீங்குகிறது. அது உபதேசம் அடைவதற்குமுன் அதன் பொருட்டு பிரயத்தனம் செய்வதே உசிதமாகும்.
भाष्यम् - पूर्व - अविद्यावतोऽविद्यानिवृत्त्यनिवृत्तिकृतो विशेष आत्मनः स्यादिति चेत्।
अनुवादः - ச.பா-அவித்வானுடைய ஆத்மாவிற்கு அவித்யா நிவிர்த்தி அவ்வாறே நிவிர்த்தி ஆகவில்லை என்பது இருப்பதால் பேதம் (விசேஷம்) இருக்கவே செய்யும் எனில்!
भाष्यम् - सिद्धान्ती - न, अविद्याकल्पनाविषयत्वाभ्यु-पगमात्, रज्जूषरशुक्तिकागगनानां सर्पोदकरजतमलिनात्वादिवददोष इत्यवोचाम।
अनुवादः - ச.பா- அவ்வாறு அல்ல. கயிறு, கானல், இப்பி, ஆகாயத்தில் தோன்றும் சர்ப்பம், ஜலம், ரஜதம் மேலும் மலினத்துவம் முதலியவைகளைப்போல் அவித்யா கல்பனை விஷயமாய் இருப்பதால் எந்த வித தோஷமும் இல்லை. என்று கூறினோம்.
भाष्यम् - पूर्व - तिमिरातिमिरदृष्टिवदविद्याकर्तृत्वाकर्तृ-त्वकृत आत्मनो विशेषः स्यादिति चेत्।
अनुवादः - ச.பா- பூர்வ- கண் நோயினால் சரியாக (தெளிவாக) காணமுடியாமலும், கண்நோய் நீங்கியவுடன் நன்றாக தெளிவாக பார்ப்பதாலும் ஏற்படும் திருஷ்டிபோல் (சந்திரனின் பேதம் காணப்படுவது போல்) அவித்யைக்கு கர்த்தாவாகவும், அகர்த்தாவாகவும் இருப்பதால் ஆத்மாவில் விசேஷம் (பேதம்) உண்டாகலாமே எனில்!
भाष्यम् - सिद्धान्ती - न,“ध्यातीव लेलायतीव” इति स्वतोऽविद्याकर्तृत्वस्य प्रतिसिद्धत्वात्, अनेकव्यापारसंनिपात-जनितत्वाच्च अविद्याभ्रमस्य, विषयत्वोपपत्तेश्च, यस्य च अविद्याभ्रमो घटादिवत् विविक्तो गृह्यते, स न अविद्याभ्रमवान्।
अनुवादः - ச.பா- சித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஏன் எனில்“ध्यातीव लेलायतीव” (த்யாய தீவ லேலாய தீவ) என்று சுருதியே ஸ்வயமாக அவித்யா கர்த்தா என்பதை நிஷேதம் செய்கிறது. மேலும் அநேக வியாபாரங்களின் சேர்க்கையால் உண்டானதாலும், அவித்யையின் விஷயத்துவம் ஆகிறது. ஆகையால் எதன்மூலமாய் அவித்யா ரூப பிரமை கடம் முதலியவைகள் போல் பிரத்யக்ஷமாய் வேறாக கிரஹிக்கும்பொழுது அவன் அவித்யா ரூப பிரமை உடையவன் அல்ல.
भाष्यम् - पूर्व -“अहं न जाने मुग्धोऽस्मि”इति प्रत्यय- दर्शनादविद्याभ्रमवत्त्वमेवेति चेत्।
अनुवादः - ச.பா- பூர்வ-“अहं न जाने मुग्धोऽस्मि” (அஹம் ந ஜானே முக்தோஅஸ்மி) என்ற அனுபவம் காணப்படுவதால் ஆத்மா அவித்யாரூப பிரமை உடையது என்று சித்திக்கிறது.
भाष्यम् - न, तस्यापि विवेकग्रहणात्, न हि यो यस्य विवेकेन ग्रहीता, स तस्मिन् भ्रान्त इत्युच्यते, तस्य च विवेकग्रहणम्, तस्मिन्नेव च भ्रमः- इति विप्रतिषिद्धम्, न जाने मुग्धोऽस्मीति दृश्यते इति ब्रवीषि- तद्दर्शिनश्च अज्ञानं मुग्धरूपता दृश्यत इति च- तद्दर्शनस्य विषयो भवति, कर्मतामापद्यत इति। तत् कथं कर्मभूतं सत् कर्तृत्वरूपदृशिविशेषणम् अज्ञानमुग्धते स्याताम्? अथ दृशिविशेषणत्वं तयोः, कथं कर्म स्याताम्, दृशिना व्याप्येते? कर्म हि कर्तृक्रियया व्याप्यमानं भवति, अन्यच्च व्याप्यम्, अन्यद् व्यापकम्, न तेनैव तद् व्याप्यते, वद कथमेवं सति, अज्ञानमुग्धते दृशिविशेषणे स्याताम्? न चाज्ञानविवेकदर्शी अज्ञानमात्मनः कर्मभूतमुपलभमान उपलब्धृधर्मत्वेन गृाति- शरीरे कार्श्यरूपादिवत्, तथा।
अनुवादः - ச.பா- சித்தாந்தீ- அவ்வாறு அல்ல. அதுவும் வேறாக (விவேகமாக) கிரஹிக்கப்படுவதால். எவன் அதை பிரித்து அறிவதில்லையோ அதில் அவனுக்கு பிராந்தி என்று கூறப்படுகிறது. அவன் பிரித்து வேறாக அறிவதால் அதில் அவனுக்கு பிரமை (பிராந்தி) என்று கூறுவது விருத்தமானதாகும். நான் அறியாத மூடனாய் இருக்கிறேன் என்று அனுபவத்தை தெரிவிக்கின்றான். அதை அவ்வாறு காண்பவன் அஞ்ஞானம் அவ்வாறே மூடத்தன்மையையும் காண்கின்றேன் என்று அது அவனுடைய தர்சனத்திற்கு விஷயமாகின்றது. அதாவது கர்மரூபத்தை அடைகின்றான். அந்த சத் எவ்வாறு கர்மரூபமாயும், கர்தாரூப சாக்ஷி (த்ருஷி) விசேஷணம் அக்ஞானம், மூடத்தன்மை எவ்வாறு உண்டாகும்? ஆகையால் திருஷி (சாக்ஷி) விசேஷணத்துவம் அவை இரண்டிற்கும் எவ்வாறு கர்மம் ஏற்படும். த்ருஷியினால் வியாபிக்கப்படுகிறதா? கர்மம் அல்லவா கர்த்தா கிரியையாக வியாபிக்கப்படுகிறது. ஒன்று வியாபகம், மற்றொன்று வியாப்யமாகின்றது. இவ்வாறு இருக்கும்பொழுது அஞ்ஞானமும், மூடத்தன்மையும் எவ்வாறு த்ருஷி விசேஷணத்தில் இருக்கும்? அதைக்குறித்து கூறு. அஞ்ஞானமுடைய விவேகதர்சீ (அதாவது வேறாக பார்ப்பவன்) அஞ்ஞானியாகிய தன்னை கர்ம பூதனாக நினைத்துக் கொண்டு அறியப்பட்ட தர்மத்துவமாய் கிரஹித்துக்கொள்கிறான். எவ்வாறு எனில் சரீரம் மெலிந்து இருக்கிறது என்பது ரூப முதலிய தர்மங்களைப் போல் சாக்ஷியினுடையதாக உபலப்த்ருத்துவம் என்று கிரஹிக்கமாட்டான்.
भाष्यम् - पूर्व - सुखदुःखेच्छाप्रयत्नादीन् सर्वो लोको गृणातीति चेत्।
अनुवादः - ச.பா- பூர்வ- சுகம், துக்கம், இச்சை, பிரயத்தனம் முதலியவைகளை எல்லா லோகமும் கிரஹிக்கின்றது என்றால்?
भाष्यम् - सिद्धान्ती - तथापि ग्रहीतुर्लोकस्य विविक्ततै-वाभ्युपगता स्यात्।“न जानेऽहं त्वदुक्तं मुग्ध एव” इति चेद् भवत्वज्ञो मुग्धः, यस्तु एवंदर्शी, तं ज्ञम् अमुग्धं प्रतिजानीमहे वयम्। तथा व्यासेनोक्तम्-“इच्छादि कृत्स्नं क्षेत्रं क्षेत्री प्रकाशयति” इति“समं सर्वेषु भूतेषु तिष्द्भन्तं परमेश्वरम्। विनश्यत्स्वविनश्यन्तम्”(गीता १३। २७) इत्यादि शतश उक्तम्। तस्मान्नात्मनः स्वतो बद्धमुक्तज्ञानाज्ञानकृतो विशेषोऽस्ति, सर्वदा समैकरस-स्वाभाव्याभ्युपगमात्।
अनुवादः - ச.பா- சித்தாந்தீ- இவ்வாறு கிரஹிக்கும் புருஷன் வேறாகவே கருதுகின்றான் (மேலும் “நான் அறியவில்லை, நான் மூடனே என்று காண்பவனை, நாம் அறிகிறான் மூடன் அல்ல என்பது நமது கொள்கை) அதையே வியாசர் இவ்வாறு கூறியுள்ளார் -“इच्छादि कृत्स्नं क्षेत्रं क्षेत्री प्रकाशयति” (இச்சாதி க்ருத்ஸ்னம் க்ஷதே்ரம் க்ஷதே்ரீ பிரகாசுயதி) என்றும், கீதையில்”“समं सर्वेषु भूतेषु तिष्द्भन्तं परमेश्वरम्। विनश्यत्स्वविनश्यन्तम्” (சன்ம் சர்வேஷீ பூதேஷீ திருஷ்டாந்தம் பரமேஷ்வரம் விநஷ்யத்ஸ்வ விநஷ்யந்தம்) இவ்வாறு நூ று தடவை கூறப்பட்டுள்ளது. ஆகையால் ஆத்மாவிற்கு ஸ்வயமாக பந்த முக்த ஞான அஞ்ஞானத்தால் உண்டாகும் விசேஷம் (பேதம்) இல்லை. ஏன் எனில் அது எப்பொழுதும் சமமாயும் ஏகரசமாயும் ஸ்வபாவமாகக் காணப்படுவதால் ஆகும்.
भाष्यम् - ये तु- अतोऽन्यथा आत्मवन्तु परिकल्प्य बन्धमोक्षादिशास्त्रं च अर्थवादमापादयन्ति, ते उत्सहन्ते खेऽपि शाकुनं पदं द्रष्टुम्, खं वा मुष्टिना आक्रष्टुम्, चर्मवद् वेष्टितुम्, वयं तु तत् कर्तुमशक्ताः, सर्वदा समैकरसम् अद्वैतम् अविक्रियम् अजम अजरम् अमरम् अमृतम् अभयम् आत्मतत्त्वं ब्रह्मैव स्मः- इत्येष सर्ववेदान्तनिश्चतोऽर्थ इत्येवं प्रतिपद्यामहे। तस्माद् ब्रह्माप्येतीति उपचारमात्रमेतत्- विपरीतग्रहवद्देहसंततेर्विच्छेदमात्रं विज्ञानफ-लमपेक्ष्य।।
अनुवादः - ச.பா- எவர்கள் ஆத்ம தத்துவத்தை வேறு விதமாக கல்பித்து பந்த மோக்ஷமுதலிய சாஸ்திரங்கள் அர்த்தவாதம் என்கிறார்களோ அவர்கள் ஆகாயத்தில் பறக்கும் பக்ஷியின் கால்களைப் பார்ப்பதற்கும், ஆகாயத்தை முஷ்டியினால் குத்தவோ அல்லது வஸ்திரம் அணிவது போல் ஆகும் அவர்களுடைய வாதம். நாம் அவ்வாறு செய்ய முடியாது. நாம் எப்பொழுதும் சமமாயும், ஏகரசமாயும், அத்வைதமாயும், அவிக்கிரயமாயும், அஜமாயும், அஜரமாயும், அமரமாயும், அம்ருதமாயும், அபயமாயும் உள்ள ஆத்மதத்துவமான பிரஹ்மமாகவே இருக்கின்றோம். என்பது எல்லா வேதாந்தங்களின் நிச்சய அர்த்தமாகும் என்பது அறிந்திருக்கின்றோம். விபரீத கிரஹணம் போல் தேஹ சந்ததியின் நீக்கமே (விச்சேதமே) விஞ்ஞானபலம் என்பதை அபேக்ஷித்து பிரஹ்மம் அடையப்படுகிறது என்று கூறுவது உபசார மாத்திரமேயாகும்.
भाष्यम् - स्वप्नबुद्धान्तगमनदृष्टान्तस्य दार्ष्टान्तिकः संसारो वर्णितः। संसारहेतुश्च विद्याकर्मपूर्वप्रज्ञा वर्णिता। यैश्चोपाधिभूतैः कार्यकरणलक्षणभूतैः परिवेष्टितः संसारित्व-मनुभवति, तानि चोक्तानि। तेषां साक्षात्प्रयोजकौ धर्माधर्माविति पूर्वपक्षं कृत्वा काम एवेत्यवधारितम्। यथा च ब्राह्मणेन अयमर्थोऽवधारितः, एवं मन्त्रेणापीति बन्धं बन्धकारणं चाक्त्वोपसह्य्तं प्रकरणम्“इति नु कामयमानः” इति।
अनुवादः - ச.பா- ஸ்வப்னம், ஜாக்ரத் அவஸ்தைகளுக்குச்செல்லும் திருஷ்டாந்தத்தால் தாஷ்டாந்தகமான சம்சாரம் வர்ணிக்கப்பட்டது. சம்சாரத்திற்கு ஹேதுவான வித்யா, கர்மம் மற்றும் பூர்வ பிரக்ஞை வர்ணிக்கப்பட்டது. எந்த உபாதிகளான காரிய கரண (தேஹ இந்திரிய) லக்ஷணங்களால் சூழப்பட்டு சம்சார தர்மத்தை அனுபவிக்கின்றது என்பதும் கூறப்பட்டது. அதை நேரடியாக தூண்டும் தர்மா தர்மங்களை பூர்வ பக்ஷமாக்கி காமமே அதற்கு பிரேரகம் என்று நிச்சயம் செய்யப்பட்டது. அவ்வாறே பிராஹ்மணத்திலும் இவ்வர்த்தமானது நிச்சயம் செய்யப்பட்டது. அவ்வாறே மந்திரங்களினாலும் பந்தம், பந்தத்தின் காரணம் ஆகியவையும் கூறி“इति नु कामयमानः” (இதி து காமயமான:) என்ற பதங்களால் பிரகரணம் உபசம்ஹாரம் செய்யப்பட்டது. (முடிக்கப்பட்டது).
भाष्यम् -“अथाकामयानः” इत्यारभ्य सुषुप्तदृष्टान्तस्य दार्ष्टान्तिकभूतः सर्वात्मभावो मोक्ष उक्तः। मोक्षकारणं च आत्मकामतया यद् आप्तकामत्वमुक्तम्, तच्च सामर्थ्यान्नात्म-ज्ञानमन्तरेण आत्मकामतयाप्तकामत्वमिति- सामर्थ्याद् ब्रह्मविद्यैव मोक्षकारणमित्युक्तम्। अतो यद्यपि कामोमूलमित्युक्तम्, तथापि मोक्षकारणविपर्ययेण बन्धकारणमविद्या इत्येतदप्युक्तमेव भवति। अत्रापि मोक्षो मोक्षसाधनं च ब्राह्मणेनोक्तम्, तस्यैव दृढीकरणाय मन्त्र उदाह्रियते श्लोकशब्दवाच्यः-
अनुवादः - ச.பா- (அதாகாமயமான:) என்று இவ்வாறு ஆரம்பித்து சுஷுப்த்தி திருஷ்டாந்தத்தின் தாஷ்டாந்த ரூபமான சர்வாத்ம பாவ மோக்ஷம் கூறப்பட்டது. மோக்ஷ காரணமான ஆத்ம காமத்தால் எந்த ஆப்த்த காமத்துவம் கூறப்பட்டதோ அது ஆத்மஞான சாமார்த்தியம் இன்றி ஆத்ம காமத்தால் ஆப்த்த காமத்துவத்தை அடையமுடியாது. ஆகையால் பிரஹ்மவித்யா சாமர்த்தியமே மோக்ஷகாரணம் என்று கூறப்பட்டது. ஆகையால் காமம் மூலகாரணம் என்று கூறினாலும் மோக்ஷகாரணத்திற்கு விபரீதான அவித்யா பந்தத்திற்கு காரணமாகிறது என்றும் கூறப்பட்டதாகிறது. இங்கும் மோக்ஷம், மோக்ஷ சாதனத்தைக் குறித்தும் இந்த பிராஹ்மணத்தால் கூறப்பட்டது. அதை திடம் செய்வதற்காக ஸ்லோக சப்த வாச்சிய மந்திரம் எடுத்துரைக்கப்படுறது -
मन्त्रः - तदेष श्लोको भवति। यदा सर्वे प्रमुच्यन्ते कामा येऽस्य ह्य्दि श्रिताः। अथ मर्त्योऽमृतो भवत्यत्र ब्रह्म समश्नुत इति। तद्यथाहिनिर्ल्वयनी वल्मीके मृता प्रत्यस्ता शयीतैवमेवेद ँशरीर ँ शेतेऽथायमशरीरोऽमृतः प्राणो ब्रह्मैव तेज एव सोऽहं भगवते सहस्रं ददामीति होवाच जनको वैदेहः।। ७।।
अनुवादः - மந்திரம்- அந்த அர்தத்தில் இந்த மந்திரம் - எப்பொழுது இந்த ஹிருதயத்தில் ஆஸ்ரயித்து இருந்த எல்லா காமனைகளும் நாசமாகிறதோ அதன்பின் மரண தர்மம் உடையவன் அம்ருதத்தை அடைகிறான். மேலும் (இந்த சரீரத்தில் இருந்துகொண்டே) அவன் பிரஹ்மப்ராப்தியை அடைகிறான். இதறகு திருஷ்டாந்தம் - எவ்வாறு பாம்பின் மேல் சட்டை மரித்தபின் பாம்பினால் கழற்றி விடப்படுகிறதோ அவ்வாறு சரீரம் வீழ்ந்து விடுகிறது. மேலும் அசரீர அம்ருத பிராணனே பிரஹ்மம், தேஜஸ் ஆகும். அப்பொழுது விதேஹராஜா ஜனகர் கூறினார் - அந்த ஜனகனான நான் ஶ்ரீமானாகிய தங்களுக்கு ஆயிரம் பசுக்களைத் தருகிறேன் (என்றார்).
भाष्यम् - तत् तस्मिन्नेवार्थे एष श्लोको मन्त्रो भवति। यदा यस्मिन् काले सर्वे समस्ताः कामाः तृष्णाप्रभेदाः प्रमुच्यन्ते, आत्मकामस्य ब्रह्म विदः समूलतो विशीर्यन्ते, ये प्रसिद्धा लोके इहामुत्रार्थाः पुत्रवित्तलोकैषणालक्षणा अस्य प्रसिद्धस्य पुरुषस्य ह्य्दि बुद्धौ श्रिता आश्रिताः- अथ तदा मर्त्यो मरणधर्मा सन्, कामवियोगात् समूलतः, अमृतो भवति। अन्वय - तत् तस्मिन्नेवार्थे एष श्लोको मन्त्रो भवति। यदा यस्मिन् काले सर्वे समस्ताः कामाः तृष्णाप्रभेदाः प्रमुच्यन्ते। आत्मकामस्य ब्रह्मविदः ये प्रसिद्धा लोके इहामुन्नार्थाः पुत्रवित्तलोकैषणालक्षणा अस्य सिद्धस्य पुरुषस्य ह्य्दि बुद्धौ श्रिता आश्रिताः समूलतो विशीयन्ते अथ तदा मर्त्यो मरणधर्मा सन् समूलतः कामवियोगात् अमृतो भवति।
अनुवादः - ச.பா- அந்த அர்தத்தில் இந்த ஸ்லோகம் மந்திரம் அமைந்திருக்கிறது. எப்பொழுது இந்த த்ருஷணா பேதங்கள் (ஆசைகள்) நீங்குகின்றனவோ அப்பொழுது ஆத்ம காமீ பிரஹ்ம வேதாவிற்கு உலகில் பிரசித்தமாக உள்ள இஹ அமுத்ர (இகபரலோகம்) லோக காமனைகள் புத்ரேஷணே, வித்தேஷணை, லோகேஷணை ஆகியவைகள் பிரசித்தமான புருஷனின் புத்தியை ஆஸ்ரயித்தைவகள் மூலத்துடன் நஷ்டமாகின்றன. அப்பொழுது மரணதர்மம் உடையவனாய் இருந்தாலும் மூலத்துடன் கர்மம் அழிந்தால் அவன் அம்ருதன் ஆகின்றான்.
भाष्यम् - अर्थादनात्मविषयाः कामा अविद्यालक्षणा मृत्यव इत्येतदुक्तं भवति, अतो मृत्युवियोगे विद्वान् जीवन्नेव अमृतो भवति। अत्र अस्मिन्नेव शरीरे वर्तमानो ब्रह्म समश्नुते, ब्रह्मभावं मोक्षं प्रतिपद्यत इत्यर्थः। अतो मोक्षो न देशान्तरगमनाद्यपेक्षते। तस्माद् विदुषो नोत्क्रामन्ति प्राणाः, यथावस्थिता एव स्वकारणे पुरुषे समवनीयन्ते, नाममात्रं हि अवशिष्यते-इत्युक्तम्।
अनुवादः - ச.பா- அதாவது அநாத்ம விஷயங்களான காமங்கள் அவித்யா லக்ஷணமான மிருத்யு என்று கூறப்பட்டதாகிறது. ஆகையால் மிருத்யுவின் வியோகத்தால் (நீக்கத்தால்) வித்வான் ஜீவித்துக்கொண்டு இருக்கும்பொழுதே, அம்ருதனாகின்றான். இந்த சரீரத்தில் இருந்து கொண்டே பிரஹ்மத்தை அடைகிறான். அதாவது பிரஹ்மபாவமாகிய மோக்ஷத்தை அடைகின்றான் என்பது பொருள். ஆகையால் மோக்ஷம் என்பது வேறு தேசத்திற்குச் சென்று அடையவேண்டியது என்பது இல்லை. ஆகையால் வித்வானுடைய பிராணன்கள் உத்கிரமணம் செய்வதில்லை. எவ்வாறு இருக்கின்றானோ அவ்வாறே தன்னுடைய காரணமான புருஷனிடத்தில் பூர்ணமாக லீனமாகிறான். நாமம் மாத்திரமே மிஞ்சுகிறது என்று கூறப்பட்டது.
भाष्यम् - कथं पुनः समवनीतेषु प्राणेषु देहे च स्वकारणे प्रलीने विद्वान् मुक्तोऽत्रैव सर्वात्मा सन् वर्तमानः पुनः पूर्ववद् देहित्वं संसारित्वलक्षणं न प्रतिपद्यते? इत्यत्रोच्यते- तत्तत्रायं दृष्टान्तः- यथा लोके अहिः सर्पः, तस्य निर्ल्वयनी-निर्मोकः, सा अहिनिर्ल्वयनी, वल्मीके सर्पाश्रये वल्मीकादावित्यर्थः, मृताप्रत्यस्ता प्रक्षिप्ता अनात्मभावेन सर्पेण परित्यक्ता, शयीत वर्तेत एवमेव यथार्यं दृष्टान्तः, इदं शरीरं सर्पस्थानीयेन मुक्तेन अनात्मभावेन परित्यक्तं मृतमिव शेते।
अनुवादः - ச.பா- மேலும் பிராணன்கள் லீனமானதும் தேஹம் தன்னுடைய காரணத்தில் லீனமடைந்த வித்வான் இங்கேயே முக்தனாய் சர்வாத்மாவாக இருந்துகொண்டு மறுபடியும் முன்போல் தேஹத்துவமாகிய சம்சாரித்துவ லக்ஷணத்தை எவ்வாறு அடையாமல் இருக்கின்றான்? என்பதற்கு இந்த திருஷ்டாந்தம் மூலமாகக் கூறப்படுகிறது - எவ்வாறு உலகில் பாம்பானது தனது மிருதசட்டையை பாம்பு புற்றை ஆஸ்ரயித்து அதாவது பாம்பு புற்று முதலியவைகளில் உயிர் இழந்த சட்டையை தன்னுடைய பாவனையற்று கழற்றிய பின் அது எவ்வாறு வீழ்ந்து கிடக்கின்றதோ என்ற திருஷ்டாந்தம் போல் சர்ப்பத்தால் தனது அல்ல என்ற பாவனையால் நலிந்த சட்டையை கழற்றி எறிவதுபோல் வித்வானால் அநாத்மா என்று விடப்பட்ட சரீரம் மரணமடைந்தது போல் வீழ்ந்து கிடக்கிறது.
भाष्यम् - अथेतरः सर्पस्थानीयो मुक्तः सर्वात्मभूतः सर्पवत्तत्रैव वर्तमानोऽप्यशरीर एव, न पूर्ववत् पुनः सशरीरो भवति। कामकर्मप्रयुक्तशरीरात्मभावेन हि पूर्व सशरीरो मर्त्यश्च, तद्वियोगादथ इदानीमशरीरः, अत एव च अमृतः, प्राणः प्राणितीति प्राणः-“प्राणस्य प्राणम्” (४।४। १८) इति हि वक्ष्यमाणे श्लोके,“प्राणबन्धनं हि सोम्य मनः” (छा०उ०६।८। २) इति च श्रुत्यन्तरे, प्रकरणवाक्यसामर्थ्याच्च पर एव आत्मा अत्र प्राणशब्दवाच्यः, ब्रह्मैव परमात्मैव। किं पुनस्तत्? तेज एवं विज्ञानं ज्योतिः, येन आत्मज्योतिषा जगदवभास्यमानं प्रज्ञानेत्रं विज्ञानज्योतिष्मत् सदविभ्रंशद् वर्तते।
अनुवादः- இதை விட வேறான எந்த சர்ப்பத்திற்கும் ஒப்பான முக்தனாகிய சர்வாத்மானவன் சர்ப்பம்போல் இங்கேயே இருந்தாலும் அசரீரியே. முன் போல் மறுபடியும் சரீரம் உடையவனாக ஆவதில்லை காம கர்மங்களுடன் கூடிய சரீர ஆத்மா பாவத்தால் சரீரம் உடையவனாயும், மரண தர்மம் உடையவனாய் இருந்தான். அவை நீங்கியதால் இப்பொழுது அசரீரமாக இருக்கிறேன். ஆகையால் அம்ருதமாகும். பிராணன் என்பது பிராணகிரியை.“प्राणस्य प्राणम्” (ப்ராணஸ்ய பிராணம்) இனிவரப்போகும் ஸ்லோகத்தாலும்,“प्राणबन्धनं हि सोम्य मनः” (ப்ராணபந்தனம் ஹி செளம்ய மன:) என்று வேறு சுருதியிலும் கூறப்பட்டுள்ளது. ப்ரகரண வாக்கிய சாமர்த்தியத்தால் பரமாத்மாவே ப்ராண சப்தவாச்சியம் ப்ரஹ்மமே பரமாத்மாவே ஆகும் என்று அறியப்படுகிறது. மறுபடியும் அது என்ன? தேஜஸ்ஸே விஞ்ஞானம் ஜ்யோதியாகும். எந்த ஆத்மஜ்யோதியினால் ஜகத்தோன்றிக் கொண்டிருக்கின்றதோ அந்த பிரக்ஞான நேத்ரம் விஞ்ஞான ஜ்யோதியாய் இருந்து கொண்டு அதிலிருந்து நழுவாமல் இருக்கிறது.
भाष्यम् - यः कामप्रश्नो विमोक्षार्थो याज्ञवल्क्येन वरो दत्तो जनकाय, सहेतुको बन्धमोक्षार्थलक्षणो दृष्टान्तदार्ष्टान्तिकभूतः स एष निर्णीतः सविस्तरो जनकयाज्ञवल्क्याख्यायिकारूपधारिण्या श्रुत्याः, संसारिविकमोक्षोपाय उक्तः प्राणिभ्यः। इदानीं श्रुतिः स्वयमेवाह- विद्यानिष्क्रयार्थं जनकेनैवमुक्तमिति, कथम्? सोऽहमेवं विमोक्षितस्त्वया भगवते तुभ्यं विद्यानिष्क्रयार्थं सहस्रं ददामि-इति ह एवं किल उवाच उक्तवान् जनको वैदेहः।
अनुवादः -ச.பா-யாக்ஞவல்க்யரால் மோக்ஷத்தில் இச்சை உள்ள ஜனகரின் பொருட்டு அவர் வேண்டிய காம பிரச்னத்திற்கான வரம் அளித்ததின் காரணமாக திருஷ்டாந்த தாஷ்டாந்த ரூபமாய் பந்த மோக்ஷார்த்த லக்ஷணத்தை ஹேதுவுடன் அந்த இந்த ஜனகர் யாக்வல்க்யர்களுடைய கதையை உடைய சுருதியினால் விஸ்தாரமாய் நிர்ணயம் செய்து ஜீவர்கள் (பிராணிகள்) சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்காகக் கூறியது. இவ்வாறு சுருதி ஸ்வயமாகவே கூறுகிறது - வித்யை அளித்தற்கு நன்றிக்கடானாக ஜனகரால் எவ்வாறு கூறப்பட்டது? உங்களால் மோக்ஷமடைந்த நான் பகவானாகிய உங்களுக்கு வித்தையை நீங்கள் அளித்தற்கும் நன்றிக்கடனாக உங்களுக்கு ஆயிரம் பசுக்கள் தருகிறேன் என்று வைதேஹராஜா ஜனகர் கூறினார்.
भाष्यम् - अत्र कस्माद् विमोक्षपदार्थे निर्णीते, विदेहराज्य-मात्मानमेव च न निवेदयति, एकेदेशोक्ताविव सहस्रमेव ददति? तत्र कोऽभिप्राय इति?
अनुवादः - ச.பா- இப்பொழுது மோக்ஷதத்துவம் நிர்ணயம் செய்யப்பட்ட பின் விதேஹ ராஜா தன் ராஜ்யத்தையும் தன்னையும் எதற்காக அர்பணிக்கவில்லை? அவ்வாறே ஒரு அளவான ஆயிரம் மட்டுமே தருகிறேன் ஏன் கூறினார்? இதன் அபிப்பிராயம் என்ன? என்பதாகும்.
भाष्यम् - अत्र केचिद् वर्णयन्ति, अध्यात्मविद्यारसिको जनकः, श्रुतमप्यर्थं पुनर्मन्त्रैः शुश्रूषति, अतो न सर्वमेव निवेदयति, श्रुत्वाभिप्रेतं याज्ञवल्क्यात्, पुनरन्ते निवेदयिष्यामीति हि मन्यते, यदि चात्रैव सर्वं निवेदयामि, निवृत्ताभिलाषोऽयं श्रवणादिति मत्वा, श्लोकान् न वक्ष्यति- इति च भयात् सहस्रदानं शुश्रूषलिङ्गज्ञापनायेति।
अनुवादः - ச.பா- இதற்கு சிலர் இவ்வாறு கூறுகிறார்கள் - அத்யாத்ம வித்யையின் ரசிகரான ஜனகர் அதைக்குறித்து கேட்டு இருந்தாலும் மேலும் மந்திரங்களின் மூலமாக கேட்க விரும்புகிறார். ஆகையால் எல்லாவற்றையும் அர்பணிக்கவில்லை. மறுபடியும் யாக்ஞவல்க்கியரிடம் இருந்து முழுமையாகக் கேட்டபின் அர்பணிக்கலாம் என்று நினைத்தார். எல்லாவற்றையும் இப்பொழுதே அர்பணித்து விட்டால் எனக்கு மறுபடியும் கேட்பதில் அபிலாசை நிவிர்த்தியாகிவிட்டது என்று நினைத்து ஸ்லோகங்களை வர்ணிக்கமாட்டார் என்ற பயத்தால் ஆகும் . சஹஸ்ரதானம் கேட்பதற்கு உள்ள ஆசையைக் குறிப்பிடுவதற்காக என்று ஆகிறது?
भाष्यम् - सर्वमप्येतदसत्, पुरुषस्येव प्रमाणभूतायाः श्रुतेर्व्याजानुपपत्तेः। अर्थशेषोपपत्तेश्च- विमोक्षपदार्थं उक्तेऽपि आत्मज्ञानसाधने आत्मज्ञानशेषभूतः सर्वेषणापरित्यागः संन्यासाख्यो वक्तव्योऽर्थशेषो विद्यते, तस्माच्छ्लोकमात्रशुश्रूषा-कल्पना अनृज्वी, अगतिका हि गतिः पुनरुक्तार्थकल्पना, सा चायुक्ता सत्यां गतौ। न च तत् स्तुतिमात्रमित्यवोचाम।
अनुवादः - ச.பா- கூறியது எல்லாம் சரியல்ல. புருஷனுக்குப் பிராணன் போன்ற சுருதிக்கு வியாஜம் கூறுவது சரியல்ல. அதற்கு இன்னும் கூறவேண்டிய அர்த்தம் மீதம் உள்ளது அதாவது மோக்ஷ பதார்த்தம் கூறிய பின்னும் ஆத்மஞான சாதனத்தில் ஆத்ம ஞானத்தின் அங்கமான சர்வ ஏஷணா பரித்தியாகமான சந்நியாசத்தைக் கூறவேண்டிய விஷயம் உள்ளது. ஆகையால் ஸ்லோகத்தை மாத்திரம் கேட்பது என்ற கல்பனை உண்மை அல்ல. கதி அற்றதற்கு கதி கூறுவதாகும். மறுபடியும் கூறி விஷயத்தின் கல்பனை கதி இருக்கும் பொழுது பொருந்தாது. அது (சந்நியாசம் முதலியவை) ஸ்துதி மாத்திரம் அல்ல என்று முன்பே கூறினோம்.
भाष्यम् - प्रश्नः - ननु एवं सति“अत ऊर्ध्वं विमोक्षायैव” इति वक्तव्यम्-
अनुवादः - ச.பா- கேள்வி- இவ்வாறு ஆனால் இதற்கு மேல் விமோக்ஷத்திற்காக கூறுங்கள் என்று கூறி இருக்க வேண்டும்.
भाष्यम् - उत्तरम् - नैष दोषः, आत्मज्ञानवद् अप्रयोजकः संन्यासः पक्षे प्रतिपत्तिकर्मवत्- इति हि मन्यते,“संन्यासेन तनुं त्यजेत्” इति स्मृतेः। साधनत्वपक्षेऽपि न“अत ऊर्ध्वं विमोक्षायैव” इति प्रश्नमर्हति, मोक्षसाधनभूतात्मज्ञानपरिपाकार्थत्वात्।
अनुवादः - ச.பா- இங்கு இந்த தோஷம் இல்லை. ஏன் எனில் ஜனகர் இவ்வாறு அறிந்திருந்தார் - என்னவெனில் ஆத்மஞானத்தைப் போல் சாக்ஷாத் சாதனம் (பிரயோஜகம்) அல்ல என்று. பிரதிபத்தி கர்மத்திற்கு (ஞானத்திற்கு சாதனரூபமான கர்மம்) சமானமாய் அதனுடன் அனுஷ்டானம் செய்யப்படுகிறது. எவ்வாறு எனில்“संन्यासेनतनुं त्यजेत्” (சந்நியாசேன தனும் த்யஜேத்) இவ்வாறு ஸ்மிருதியில் சித்திக்கின்றது. சாதனத்துவ பக்ஷத்திலும்“अत ऊर्ध्वं विमोक्षायैव” (அத ஊர்த்துவம் விமோக்ஷாயைவ) என்ற கேள்வியும் பொருந்தாது. ஏன் எனில் மோக்ஷசாதன பூதமான ஆத்மஞானத்தின் பரிபாகத்திற்காக சந்நியாசம் முதலிய சாதனங்களாகும்.
मन्त्रः - तदेते श्लोका भवन्ति। अणुः पन्था विततः पुराणो मा ँस्पृष्टोऽनुवित्तो मयैव। तेन धीरा अपियन्ति ब्रह्मविद स्वर्गं लोकमित ऊर्ध्वं विमुक्ताः।। ८।।
अनुवादः - மந்திரம் - இந்த விஷயத்தில் இந்த மந்திரம் - இந்த ஞான மார்கம் சூக்ஷ்மமானது, விஸ்தீரமானது, புராதனமானது (மிகவும் பழமையானது). அது என்னால் ஸ்பர்சிக்கப்பட்டுள்ளது (அறியப்பட்டுள்ளது). நான் அந்த பலனை சாதிக்கக்கூடிய ஞானத்தை அடைந்துள்ளேன். தீரனான பிரஹ்மவேத்தா புருஷன் இந்த லோகத்தில் ஜீவித்துக்கொண்டே முக்தனாய் சரீரத்தைத்தியாகம் செய்து அதன் பின் இந்த மார்க்கத்தால் ஸ்வர்க்க லோகத்தை அடைகிறான். அதாவது மோக்ஷத்தை அடைகின்றான்.
भाष्यम् - आत्मकामस्य ब्रह्मविदो मोक्ष इत्येतस्मिन्नर्थे मन्त्रब्राह्मणोक्ते, विस्तरप्रतिपादका एते श्लोका भवन्ति। अणुः सूक्ष्मः पन्था दुर्विज्ञेयत्वात्, विततः विस्तीर्णः, विस्पष्टत-रणहेतुत्वाद्वा“वितरः” इति पाद्भान्तरात्, मोक्षसाधनो ज्ञानमार्गः। पुराणश्चिरंतनो नित्यश्रुतिप्रकाशितत्वात्, न तार्किकबुद्धिप्रभव-कुदृष्टिमार्गवदर्वक्कालिकः। मां स्पृष्टो मया लब्ध इत्यर्थः, यो हि येन लभ्यते, स तं स्पृशतीव संबध्यते। तेनायं ब्रह्मविद्यालक्षणो मोक्षमार्गो मया लब्धत्वात्“मां स्पृष्टः” इत्युच्यते।
अनुवादः - ச.பா- ஆத்ம காமனாகிய பிரஹ்மவித் மோக்ஷம் அடைகிறான் என்ற இந்த விஷயத்தை மந்திர பிராஹ்மணத்தில் கூறப்பட்டதை இந்த ஸ்லோகத்தில் (மந்திரத்தில்) விஸ்தாரமாக விளக்கப்பட்டது. இந்த மார்க்கம் அறிவதற்கு மிகக்கடினமானதால், அணு, சூக்ஷ்மம் என்று கூறப்பட்டது. மேலும்“विततः” (விதத) விஸ்தீரணமானது. ஸ்பஷ்டமாய் தாண்டுவிப்பதால்“वितरः” (விதர:) என்ற பாடாந்தரமும் உள்ளது. ஞான மார்க்கம் மோக்ஷசானம் ஆகும். நித்ய சுருதியினால் பிரகாசப்படுத்துவதால் புராதானமானது அதாவது சிரந்தனமானது (எப்பொழுதும் உள்ளது) தர்க்க புத்தியினால் உண்டாகும் குறுகிய மார்க்கம்போல் கீழானது அல்ல. இங்கு“मां स्पृष्टः” (மாம் ஸ்பிருஷ்ட்ட:) என்னை ஸ்பரிசித்தது என்றது என்னால் அடையப்பட்டது என்பதாகும். எது எதனால் அடையப்படுகிறது அது அதை ஸ்பரிசிக்கிறது என்று சம்பந்தம் ஏற்படுகிறது. ஆகையால் இந்த பிரஹ்ம வித்யாலக்ஷணமான மோக்ஷ மார்க்கம் என்னால் அடையப்பட்டதால் (மாம் ஸ்ப்ருஷ்ட:)“मां स्पृष्टः” என்னை ஸ்பரிஸித்தது என்று கூறப்பட்டது.
भाष्यम् - न केवलं मया लब्धः किं त्वनुवित्तो मयैव, अनुवेदनं नाम विद्यायाः परिपाकापेक्षया फलावसानता-निष्द्भाप्राप्तिः, भुजेरिव तृप्त्यवसानता, पूर्वं तु ज्ञानप्राप्ति-सम्बन्धमात्रमेवेति विशेषः।
अनुवादः - ச.பா- இது கேவலம் என்னால் அடையப்பட்டது மட்டும் அல்லாமல் என்னால் அதை அனுவித்தமும் செய்தேன்,(अनुवेदनं) அனுவேதனம் என்றால் வித்யையின் பரிபாகத்தை அபேக்ஷித்து பலத்தின் முடிவை அடைந்து அதிலேயே நிலைத்திருப்பது. அதாவது நிஷ்டையின் பிராப்த்தி. சாப்பிடுவதால் திருப்த்தி அடைவதுபோல் திருப்த்தியாய் இருப்பதுவேயாகும். இதனால் முன்பு கூறப்பட்டது ஞானப்பிராப்தி சம்பந்தம் மாத்திரமே என்பது விசேஷம்.
भाष्यम् - शङ्का - किम् असावेव मन्त्रदृगेको ब्रह्मविद्याफलं प्राप्तः नान्यः प्राप्तवान्, येन“अनुवित्तो मयैव” इत्यवधारयति?
अनुवादः - ச.பா- சங்கை- என்ன இந்த மந்தர திருக் ஒருவன் தன் பிரஹ்ம வித்யா பலனை அடைந்தானா? மற்றவர் அடையவில்லையா? ஏன் எனில்“अनुवित्तो मयैव” (அனுவித்தோமயைவ) என்று என்னால் மட்டுமே வித்தையின் பரிபாகத்தை அபேக்ஷித்து பலத்தின் முடிவான நிஷ்டை அடையப்பட்டது என்று நிச்சயம் செய்யப்பட்டதால்.
भाष्यम् - समाधानम् - नैष दोषः, अस्याः फलम् आत्मसाक्षिकमनुत्तममिति ब्रह्मविद्यायाः स्तुतिपरत्वात्, एवं हि कृतार्थात्मभिमानकरम् आत्मप्रत्ययसाक्षिकमात्मज्ञानम्, किमतः परमन्यत् स्यात्- इति ब्रह्मविद्यां स्तौति। न तु पुनस्न्यो ब्रह्मवित् तत्फलं न प्राप्नोतीति,“तद् यो यो देवानाम्”(बृ० उ० १। ४।१०) इति सर्वार्थश्रुतेः।
अनुवादः - ச.பா- இந்த தோஷம் இல்லை. ஏன் எனில் இந்த வாக்கியம் இந்த வித்யையின் ஒப்பற்றபலம் ஆத்ம சாக்ஷியாகும், என்று இவ்வாறு பிரஹ்ம வித்யையை ஸ்துதி செய்வதாகும். இவ்வாறு ஆத்ம ஞானி நான் கிருதார்த்தன் ஆவேன் என்று ஆத்மாபிமானம் செய்பவனையும், ஸ்வாநுபவத்தை உடையவனை விட வேறு எந்த பலன் மேலானதாக இருக்கும்? என்று பிரஹ்ம வித்யை ஸ்துதிக்கப்படுகிறது. வேறு பிரஹ்ம வேதா இந்த பலத்தை அடையமுடியாது என்பதில்லை. ஏன் எனில்“तद्योयो देवानाम्” (தத்யோயோ தேவானாம்) என்று எல்லாவற்றையும் விட மேலான க்ருதார்த்தத்தை சுருதி உறைக்கின்றது.
भाष्यम् - तदेवाह- तेन ब्रह्मविद्यामार्गेण धीराः प्रज्ञावन्तः अन्येपि ब्रह्मविद इत्यर्थः, अपियन्ति अपिगच्छन्ति, ब्रह्मविद्याफलं मोक्षं स्वर्गं लोकम्, स्वर्गलोकशब्दस्त्रिविष्टपवाच्यपि सन्निह प्रकरणान्मोक्षाभिधायकः। इतः अस्माच्छरीरपातादूर्ध्वं जीवन्त एव विमुक्ताः सन्तः।।
अनुवादः - ச.பா- அந்த விஷயத்தை சுருதி கூறுகிறது ஆகையால் அந்த தீரர்களான பிரக்ஞை (புத்தி) உடையவர்கள் அதாவது மற்ற ப்ரஹ்ம வித்துக்களும் மோக்ஷபலத்தை அடைவார்கள். வித்யாபலம் மோக்ஷம். அது ஸ்வர்க்கலோகம். ஸ்வர்க்கலோகம் என்பது த்ரிவிஷ்டவாச்சியமானாலும் இங்கு இந்த சந்தர்ப்பத்தில் (பிரகரணப்படி) மோக்ஷத்தையே குறிக்கிறது. இந்த சரீரம் வீழ்ந்த பின்னும் ஜீவித்துக்கொண்டே முக்தர்களாக இருக்கின்றனர்.
मन्त्रः - तस्मिञ्छुक्लमुत नीलमाहुः पिङ्गल ँहरितं लोहितं च। एष पन्था ब्रह्मणा हानुवित्तस्तेनैति ब्रह्मवित् पुण्यकृत्तैजसश्च।। ९।।
अनुवादः - மந்திரம்- இந்த மார்க, விஷயத்தில் மதபேதம் இருக்கின்றது. இதில் சிலர் சுக்ல வர்ணம் என்றும் சிலர் நீல வர்ணம், என்றும் கூறுகிறார்கள். அவ்வாறே சிலர் மஞ்சள் வர்ணம் என்றும் சிலர் பச்சை வர்ணம் என்றும், சிலர் சிகப்பு என்றும் கூறுகிறார்கள். ஆனால் இந்த மார்க்கம் சாக்ஷாத் பிரஹ்மமூலமாய் அனுபவிப்பது. இந்த மார்கத்தால் புண்யம் செய்தவர்கள் பரமாத்ம தேஜஸ் ஸ்வரூப பிரஹ்மவேதர் ஆகிறார்கள்.
भाष्यम् - तस्मिन् मोक्षसाधनमार्गे विप्रतिपत्तिर्मुमुक्षूणाम्, कथम्? तस्मिन्- शुक्लं शुद्धं विमलमाहुः केचिन्मुमुक्षवः, नीलम् अन्ये, पिङ्गलम् अन्ये, हरितं लोहितं च यथादर्शनम्। नाडस्तु एताः सुषु्म्नाद्याः श्लेष्मादिरससंपूर्णाः“शुक्लस्य नीलस्य पिङ्गलस्य” (४। ३। २०) इत्याद्युक्तत्वात्।
अनुवादः - ச.பா- அந்த மோக்ஷ சாதன மார்க்கத்தில் முமுக்ஷுக்களுக்கு எவ்வாறு மதபேதம் இருக்கிறது? அதில் சிலர் சுக்லம் அதாவது சுத்தம் விமலம் என்கிறார்கள். சிலர் நீலம் என்றும், சிலர் பிங்கலம் (மஞ்சள்) என்றும், சிலர் (பச்சை) ஹரிதம், லோஹிதம் என்றும் அவர்கள் அறிந்தவாறு கூறுகின்றனர். இந்த சுஷும்னா முதலிய நாடிகள் ஸ்லேஷம் முதலிய ரசங்களால்“शुक्लस्य नीलस्य पिङ्गलस्य” (சுக்லஸ்ய, நீலஸ்ய, பிங்கலஸ்ய என்று கூறப்பட்டுள்ளதால்) நிறைந்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
भाष्यम् - आदित्यं वा मोक्षमार्गम् एवं विधं मन्यते-“एष शुक्ल एष नीलः” (छा० उ० ८। ६। १) इत्यादि श्रुत्यन्तरात्। दर्शनमार्गस्य च शुक्लादिवर्णासम्भवात्, सर्वथापि तु प्रकृताद् ब्रह्मविद्यामार्गादन्य एते शुक्लादयः।
अनुवादः - ச.பா- சிலர் அதை ஆதித்ய ரூப மார்க்கம் என்று கருதுகின்றனர். இவ்வாறு“एष शुक्ल एष नीलः” (ஏஷ சுக்ல ஏஷ நீல:) மற்ற சுருதிகளில் கூறப்பட்டுள்ளது. தர்சன மார்க்கத்தில் அதாவது ஞான மார்க்கத்தில் சுக்லம் முதலிய வர்ணங்கள் சம்பவிக்காது. அது எவ்வகையிலும் நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரஹ்ம வித்யா மார்கத்தைக் காட்டிலும் சுக்லம் முதலியவை வேறு மார்க்கங்கள் இல்லை.
भाष्यम् - पूर्व - ननु शुक्लः शुद्धोऽद्वैतमार्गः।
अनुवादः - ச.பா- பூர்வ- ஆனால் சுக்லம் அதாவது சுத்த அத்வைத மார்க்கம் ஆகுமே.
भाष्यम् - सिद्धान्ती - न, नीलपीतादिशब्दैर्वर्णवाचकैः सहानुद्रवणात्, यान् शुक्लादीन् योगिनो मोक्षपथान् आहुः, न ते मोक्षमार्गाः, संसारविषया एव हि ते-“चक्षुष्टो वा मूर्ध्नो वान्येभ्यो वा शरीरदेशेभ्यः”(बृ०उ०४।४।२) इति शरीरदेशान्निः सरणसम्बन्धाद् ब्रह्मादिलोकप्रापकाहि ते। तस्मादयमेव मोक्षमार्गः य आत्माकामत्वेन आप्तकामतया सर्वकामक्षयेगमनानुपपत्तौ प्रदीपनिर्वणवच्चक्षुरादीनां कार्यकरणानामत्रैव समवनयः- इति एष ज्ञानमार्गः पन्थाः, ब्रह्मणा परमात्मस्वरूपेणैव ब्राह्मणेन त्यक्तसर्वैषणेन, अनुवित्तः। तेन ब्रह्मविद्यामार्गेण ब्रह्मविदन्यः अपि एति।
अनुवादः - ச.பா- சித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஏன்எனில் நீலம் பீதம் முதலிய வர்ணங்களைக் குறிக்கும் சப்தங்களுடன் கூறப்பட்டதால் ஆகும். யோகிகள் எந்த சுக்லம் முதலியவைகளை மோக்ஷமார்கம் என்று கூறுகிறார்களோ அவைகள் மோக்ஷமார்கங்கள் அல்ல. அவைகள் சம்சார விஷயங்களே.“चक्षुष्टो वा मूर्ध्नो वान्येभ्यो वा शरीरदेशेभ्यः” (சக்ஷுஷ்டோ வா மூர்த்னோ வான்யேப்யோ வா சரீரதேசப்ய:) இவ்வாறு சரீர தேசத்திலிருந்து வெளிக்கிளம்புவதால் அவை பிரஹ்ம லோகம் முதலியவைகளை அடையச் செய்வதாகும். ஆகையால் இதுவே மோக்ஷமார்கம். ஆகையால் எவன் ஆத்மகாமத்துவத்தால் ஆப்த்த காமத்தால் எல்லா காமனைகளும் க்ஷயமானதால் மார்கம் சம்பவிக்காமல் தீபம் போல் அடங்கி கண் முதலிய காரிய கரணங்கள் இங்கேயே லீனமாகின்றது என்பதால் இது ஞான மார்கம் அதாவது பாதை (பந்தா). பிரஹ்மக்ஞனால் எல்லா ஏஷணைகளையும் தியாகம் செய்த பிரஹ்மக்ஞனால் அந்த பிரஹ்மாகிய பரமார்த்த ஸ்வரூபத்தில் நிலைக்க முடிகிறது. அதாவது அனுவித்தமாகிறது.
भाष्यम् - कीदृशो ब्रह्मवित् तेन एति? इत्युच्यते- पूर्वं पुण्यकृद् भूत्वा पुनस्त्यक्तपुत्राद्येषणः परमात्मतेजस्यात्मानं संयोज्य तस्मिन्नभिनिर्वृत्तस्तैजसश्च- आत्मभूत इहैव इत्यर्थः, ईदृशो ब्रह्मवित् तेन मार्गेण एति।
अनुवादः -ச.பா-இவ்வாறான பிரஹ்மவித் எந்த மார்கத்தால் செல்கிறான்? என்பதற்குக் கூறப்படுகிறது முன்பு புண்யம் செய்தவர்களாய் மேலும் புத்திரன் முதலிய ஏஷணாதிரங்களைத் தியாகம் செய்து பரமாத்ம தேஜஸ்ஸில் தன்னை லயம் செய்து அதில் உபசாந்தமாகி தைஜசனாய் அதாவது (சரீரம் இருந்தாலும்) ஆத்ம பூதனாகின்றான். இப்படிப்பட்ட பிரஹ்மவித் இந்த மார்கத்தால் செல்கின்றான்.
भाष्यम् - न पुनः पुण्यादिसमुच्चयकारिणो ग्रहणम्, विरोधा-दित्यवोचाम,“अपुण्यपुण्योपरमे यं पुनर्भवनिर्भयाः। शान्ताः संन्यासिनो यान्ति तस्मै मोक्षात्मने नमः।।” (महा० शा०४७।५५) इति च स्मृतेः“त्यज धर्ममधर्म च”इत्यादिपुण्या-पुण्यत्योगोपदेशात्,“निराशिषमनारम्भं निर्नमस्कारमस्तुतिम्। अक्षीणं क्षीणकर्माणं तं देवा ब्राह्मणं विदुः।” “नैतादृशं ब्राह्मणस्यास्ति वित्तं यथैकता समता सत्यता च। शीलं स्थितिर्दण्डनिधानमार्जवं ततस्ततश्चोपरमः क्रियाभ्यः।।” इत्यादिस्मृतिभ्यश्च।
अनुवादः - ச.பா- மேலும் இங்கு“पुण्यकृत्” (புண்யக்ருத்) என்ற பதத்தால் புண்யம் முதலிய சமுச்சயம் செய்வதை விரோதமாய் இருப்பதால் கிரஹிக்கவில்லை என்று கூறினோம். இந்த விஷயத்தில்“अपुण्यपुण्योपरमे यं पुनर्भवनिर्भयाः। शान्ताः संन्यासिनो यान्ति तस्मै मोक्षात्मने नमः।।” (பாபம் புண்யம் நிவிர்த்தி ஆனபின் மறு ஜன்மத்தினால் நிர்பயம் அவ்வாறே சாந்தம், சந்நியாசி பாவத்தை அடைகிறான். அந்த மோக்ஷ ஆத்மாவிற்கு நமஸ்காரம்) என்பது ஸ்மிருதிவாக்யம்.“त्यज धर्ममधर्म च” (த்யஜ தர்மாதர்மம் ச) என்பது முதலிய புண்யாபுண்ய யோகம் உபதேசிக்கப்பட்டதால்.“निराशिषमनारम्भं निर्नमस्कारमस्तुतिम्। अक्षीणं क्षीणकर्माणं तं देवा ब्राह्मणं विदुः।” (நிராசிஷமனாரம்பம் நிர்நமஸ்காரமஸ்துதிம். அக்ஷீணம் க்ஷீணகர்மாணாம் தம் தேவா பிரஹ்மணம் விது:),“नैतादृशं ब्राह्मणस्यास्ति वित्तं यथैकता समता सत्यता च। शीलं स्थितिर्दण्डनिधानमार्जवं ततस्ततश्चोपरमः क्रियाभ्यः।।” (நைதாத்ருஷம் பிராஹ்மணஸ்யாஸ்தி வித்தம் யதைகதா சமதா சத்யதா ச சீலம் ஸ்திதிதண்ட நிதான மார்ஜவம் ததஸ் ததச்சோபரம; கிரியாப்ய:) முதலிய ஸ்ருதிகளினாலும் அறிகின்றோம்.
भाष्यम् - उपदेक्ष्यति च इहापि तु-“एष नित्यो महिमा ब्राह्मणस्य न वर्धते कर्मणा नो कनीयान्”(४।४।२३) इति कर्मप्रयोजनाभावे हेतुमुक्त्वा,“तस्मादेवंविच्छान्तो दान्तः” (४।४।२३) इत्यादिना सर्वक्रियोपरमम्। तस्माद् यथा- व्याख्यातमेव पुण्यकृत्त्वम्।
अनुवादः - ச.பா- இங்கும் இவ்வாறு உபதேக்கிறார் -“एष नित्यो महिमा ब्राह्मणस्य न वर्धते कर्मणा नो कनीयान्” (ஏஷோ நித்யோ மஹிமா பிராஹ்மணஸ்ய ந வர்த்ததே கர்மணா நோ கனீயான்) என்று கர்ம ப்ரயோ ஜனம் இல்லை என்பதைக் கூறி“तस्मादेवंविच्छान्तो दान्तः” (தஸ்மாதேவம்விச்சாந்தோ தாந்த:) இவை முதலியவைகளால் எல்லா கிரியைகளின் உபரமம் கூறப்பட்டது. ஆகையால் எவ்வாறு வியாக்யாணம் செய்யப்பட்டதோ அதுவே புண்ய க்ருத்துவம்.
भाष्यम् - अथवा यो ब्रह्मवित् तेन एति, स पुण्यकृत् तैजसश्च- इति ब्रह्मवित्स्तुतिरेषा, पुण्यकृति तैजसे च योगिनि महाभाग्यं प्रसिद्धं लोके, ताभ्यामतो ब्रह्मवित् स्तूयते प्रख्यातमहाभाग्यत्वाल्लोके।।
अनुवादः - ச.பா- அல்லது எந்த பிரஹ்ம வித் அந்த மார்க்கத்தில் செல்கிறானோ அவன் புண்யகிருத், தைஜசன். புண்ய கிருத்தினிடமும் தைஜசனிடமும் ஆகிய யோகியின் இடத்தில் உலகில் மஹாபாக்கியம் பிரசித்தம். உலகில் மிகுந்த புகழுடைய பாக்கியசாலியாய் இருப்பதால் அவை இரண்டாலும் (புண்யகிருத், தைஜசன்) பிரஹ்ம வித் புகழப்படுகிறான்.
मन्त्रः - अन्धं तमः प्रविशन्ति येऽविद्यामुपासते। ततो भूय इव ते तमो य उ विद्याया ँरताः।। १०।।
अनुवादः - மந்திரம்- எவர்கள் அவித்தையை (கர்மத்தை) உபாசனை செய்கின்றார்களோ அவர்கள் அஞ்ஞானம் எனப்படும் அந்தகாரத்தில் பிரவேசிக்கின்றனர். மேலும் எவர்கள் வித்யா (கர்மகாண்டரூபதித்ரயீவித்யா) வில் ரமிக்கின்றார்களோ அவர்கள் அதைவிட அதிகமான அந்தகாரத்தில் பிரவேசிக்கின்றனர்.
भाष्यम् - अन्धम् अदर्शनात्मकं तमः संसारनियामकं प्रविशन्ति प्रतिपद्यन्ते, के? ये अविद्यां विद्यातोऽन्यां साध्यसाधन-लक्षणाम् उपासते, कर्म अनुवर्तन्त इत्यर्थः। ततस्तस्मादपि भूय इव बहुतरमिव तमः प्रविशनति, के? ये उ विद्यायाम्, अविद्यावस्तु-प्रतिपादिकायां कर्मार्थायां त्रय्यामेव विद्यायाम्, रता अभिरताः। विधिप्रतिषेधपर एव वेद, नान्योऽस्ति इति, उपनिषदर्थानपेक्षिण इत्यर्थः।
अनुवादः - ச.பா- அந்தம் (குருட்டுத்தன்மை) அதாவது சம்சாரத்தை உண்டுபண்ணும் அதர்சனமான (அஞ்ஞானரூப) இருளை (தமசை) அடைவார்கள். எவர்? எவர்கள் அவித்யையை அதாவது வித்யைக்கு வேறான சாத்திய சாதன லக்ஷணத்தை உபாசிக்கின்றனரோ அதாவது கர்மத்தை அனுஷ்டிக்கின்றவர்கள் என்பது பொருள். அதைவிட மிக அதிகமான இருளை (தமசை) அடைவார்கள். எவர்? எவர்கள் வித்யையில் அதாவது அவித்தியாவஸ்துவை பிரதிபாதிக்கும் கர்ம விஷயங்களுடைய த்ரயீவித்தையில் (வேதத்தில் கர்ம காண்டத்தில்) மிகவும் ரமிக்கின்றவர்கள். வேதம் விதி, நிஷேதபரம் என்று கருதி அதை விட வேறு இல்லை என்று உபநிஷத் தாத்பர்யத்தை உபேக்ஷிக்கின்றவர்கள் என்று பொருள்.
भाष्यम् - किं च -
अनुवादः - மேலும்
मन्त्रः - इहैव सन्तोऽथ विद्मस्तद्वयं न चेदवेदिर्महती विनष्टिः। ये तद्विदुरमृतास्ते भवन्त्यथेतरे दुःखमेवापियन्ति ।। ११।।
अनुवादः - நாம் இந்த சரீரத்தில் இருந்து கொண்டே அதை- (ஆத்மாவை) அறிந்து கொண்டோம் (க்ருதார்த்தனானோம்). அதை அறியவில்லையெனில் அது மிகப்பெரிய ஹானியாகும். அதை அறிந்தால் அவர்கள் அம்ருதத்தை அடைகின்றனர். ஆனால் மற்றவர்களோ துக்கத்தை அடைகின்றார்கள்.
भाष्यम् - इहैव - अनेकानर्थसंकुले सन्तो भवन्तः, अज्ञानदीर्घनिद्रामोहिताः सन्तः, कथंचिदिव ब्रह्मतत्त्वम् आत्मत्वेन अथ विो विजानीमः, तदेतद् ब्रह्म प्रकृतम्, अहो वयं कृतार्था इत्यभिप्रायः। यदेतद् ब्रह्म विजानीमः, तद् न चेद् विदितवन्तो वयम् वेदनं वेदः, वेदोऽस्यास्तीति वेदी, वेद्येव वेदिः, न वेदिः अवेदिः, ततः अहम् अवेदिः स्याम्। यदि अवेदिः स्याम्, को दोषः स्यात्? महती अनन्तपरिमाणा जन्ममरणादिलक्षणा विनष्टिः- विनशनम्। अहो वयमस्मान्महतो विनाशाद् निर्मुक्ताः, यदद्वयं ब्रह्म विदितवन्त इत्यर्थः।
अनुवादः - ச.பா- இங்கேயே - அநேக அநர்த்தங்கள் நிரம்பியதும் (சரீரத்தில்) அஞ்ஞானம் என்னும் நீண்ட நித்திரையினால் மோஹம் அடைந்தவர்களாய் இருந்துகொண்டு எவ்விதத்திலாவது பிரஹ்மத்துவத்தை அதாவது இந்த பிரகரணத்தில் உள்ளவாறு பிரஹ்மத்தை ஆத்மதத்துவமாக அறியவேண்டும். அதனால் க்ருதார்த்தர் ஆவோமாக என்பது அபிப்பிராயம். எந்த இந்த பிரஹ்மத்தை அறியவேண்டும்(वेदनम्). நாம் அதை அறியவில்லையெனில்(न वेदि) யெனில் அவன் அறியாதவன் (அவேதி(अवेदिः) அவ்வாறு ஆனால் நான் அவேதியாவேன். அவேதியானால் என்ன தோஷம்? ஜன்மமரண முதலிய முடிவற்றவனாகி மஹத்தான நஷ்டமுடையவனாவான். நாசமுடையவனாவான். அந்த அத்வைத பிரஹ்மத்தை அறிந்தவர்கள் அஹோ நாங்கள் அந்த மஹத்தான விநாசத்தி விருந்து விடுபட்டவர்கள் ஆனோம் (விமுக்தர்கள் ஆனோம்) என்பது பொருள்.
भाष्यम् - यथा च वयं ब्रह्म विदित्वा अस्माद् विनशनाद् विप्रमुक्ताः, एवं ये तद्विदुः, अमृतास्ते भवन्ति, ये पुनः नैवं ब्रह्म विदुः, ते इतरे ब्रह्मविद्भयोऽन्ये अब्रह्मविद इत्यर्थः दुःखमेव जन्ममरणादिलक्षणमेव अपियन्ति प्रतिपद्यन्ते न कदाचिदपि विदुषां ततो विनिवृत्तिरित्यर्थः, दुःखमेव हि ते आत्मत्वे-नोपगच्छन्ति।
अनुवादः - ச.பா- எவ்வாறு நாம் பிரஹ்மத்தை அறிந்து அந்த விநாசத்திலிருந்து விடுபடுகின்றோமோ அவ்வாறு அதை அறிந்தவர்களின் அம்ருதர்கள் ஆகின்றார்கள். மேலும் எவர்கள் பிரஹ்மத்தை அறியவில்லையோ அவர்கள் அபிரஹ்ம வித்துக்கள் ஜனன மரண ரூபம் முதலிய துக்கத்தையே அடைவார்கள். அதிலிருந்து அவர்கள் ஒரு நாளும் நிவிர்த்தி ஆகமாட்டார்கள். ஏன் எனில் அவர்கள் துக்கத்தையே ஆத்மபாவமாக கிரஹிக்கின்றார்கள்.
अभेददर्शी आत्मज्ञानिनः निर्भयता ¨ÉxjÉ& - ªÉnèùiɨÉxÉÖ{ɶªÉiªÉÉi¨ÉÉxÉÆ näù´É¨Éञ्जसा। ईशानं भूतभव्यस्य न ततोविजुगुप्सते।। १५।।
अनुवादः - மந்திரம் - எப்பொழுது பூத பவிஷயத் காலங்களின் ஸ்வாமி இவைகளைப் பிரகாசிக்கச் செய்பவர் அல்லது கர்ம பல தாதாவாகத்தன்னை மனிதன் சாக்ஷாத்தாக அறிகின்றானோ அப்பொழுது அவன் தன்னை ரக்ஷிப்பதற்கு இச்சை கொள்ள மாட்டான்.
भाष्यम् - यदा पुनरेतमात्मानम्, कथिञ्चत् परमकारुणिकं किञ्चदाचार्यं प्राप्य ततो लब्धप्रसादः सन्, अनु पश्चात् पश्यति साक्षात्करोति स्वमात्मानम्, देवं द्योतनवन्तं दातारं वा सर्वप्राणिकर्मफलानां यथाकर्मानुरूपम्, अञ्जसा साक्षात्, ईशानं स्वामिनं भूतमव्यस्य कालत्रयस्येत्येतत्- न ततस्तस्मादीशानाद् देवादात्मानं विशेषेण जुगुप्सते गोपायितुमिच्छति।
अनुवादः - ச.பா- ஆனால் எப்பொழுது மனிதன் தன்னை எவ்விதமாவது எந்த ஒரு பரம காருண்யரான ஆச்சாரியரை அடைந்து அதனால் அடைந்த பிரசாதத்தால் அதைத் தொடர்ந்து ஸ்வஆத்மாவை சாக்ஷாத் காரம் செய்கின்றான். அதாவது தேவன் ஜ்யோதி ஸ்வரூபமானவன் அல்லது எல்லா ஜீவர்களுக்கும் அவர்களின் கர்மத்தை அனுசரித்து பலம் அளிப்பவன். அவ்வாறே பூதபவிஷ்யத் முதலிய மூன்று காலங்களுக்கு ஸ்வாமி தன்னுடைய ஆத்மாவை சாக்ஷாத்காரம் செய்கிறான். அதை சாக்ஷாத்தாக அறிகிறான். ஆகையால் ஈசான தேவனாவதால் தன்னை விசேஷரூபமாய் ரக்ஷிப்பதற்கு விரும்புவதில்லை.
भाष्यम् - सर्वो हि लोक ईश्वराद् गुप्तिमिच्छति भेददर्शी, अयं त्वेकत्वदर्शी न बिभेति कुतश्चनः अतो न तदा विजुगुप्सते, यदा ईशानं देवमञ्जसा आत्मत्वेन पश्यति। न तदा निन्दति वा कंचित्, सर्वम् आत्मानं हि पश्यति, स एवं पश्यन् कमसौ निन्द्यात्?
अनुवादः - ச.பா- பேத தர்சீ எல்லாலோகத்தையும் ஈஸ்வரரூபத்தால் ரக்ஷிக்க விரும்புகிறான். ஆனால் இந்த ஆத்ம தர்சீ எதற்கும் பயப்படமாட்டான். எப்பொழுதும் ஈசானனான தேவனை ஆத்ம ஸ்வரூபமாய் சாக்ஷாத்காரம் செய்தவன். ஆகையால் எதையும் நிந்தை செய்வதில்லை. மேலும் முற்றிலும் எல்லாவற்றையும் ஆத்மாவாகவே பார்க்கிறான் அவன் இவ்வாறு பார்ப்பவன் எதை அவன் நிந்திப்பான்?
भाष्यम् - किं च-
अनुवादः - ச.பா- அ.கை- மேலும் -
मन्त्रः - यस्मादर्वाक्संवत्सरोऽहोभिः परिवर्तते। तद्देवा ज्योतिषां ज्योतिरायुर्होपासतेऽमृतम्।। १६।।
अनुवादः - மந்திரம் - எதன் கீழ் சம்வத்ஸ்ர சக்ரம் பகல் இரவு முதலிய அவயவங்களுடன் சுழன்று கொண்டிருக்கிறதோ அந்த ஆதித்யன் முதலிய ஜ்யோதிகளுக்கெல்லாம் ஜ்யோதி ஸ்வரூப அம்ருதத்தின் தேவகணம் “ஆயுள்” என்று இவ்வாறு உபாசனை செய்கிறார்கள்.
भाष्यम् - यस्मादीशानाद् अर्वाक्, यस्मादन्यविषय एवेत्यर्थः, संवत्सरः कालात्मा सर्वस्य जनिमतः परिच्छेत्ता, यम् अपरिच्छिन्दन् अर्वागेव वर्तते, अहोभिः स्वावयवैः- अहोरात्रैरित्यर्थः, तद् ज्योतिषां ज्योतिः- आदित्यादिज्योति-षाममप्यवभासकत्वात्, आयुरित्युपासते देवाः, अमृतं ज्योतिः- अतोऽन्यद् म्रियते, न हि ज्योतिः।
अनुवादः - ச.பா- எதனுடைய ஈசானத்தால் (கட்டளையினால்) அர்வாக்கோ(अर्वाक्) (அர்வாக் என்பது அதற்கு அடிமை என்பது பொருள்) இதற்கு அதனால் வேறு விஷயம் என்பது பொருள். சம்பூர்ண உத்பத்தியானவைகளை பரிச்சேதம் செய்யும் காலாத்மாவாகிய சம்வத்சரம் (ஈசானனை) பரிச்சேதம் செய்யாமல்(अहोभिः) (அஹோபி:) அதாவது தன்னுடைய அவயவங்களாகிய பகல் இரவு என்பவைகளால் அதற்கு கீழேயே இருக்கிறது. அந்த ஜ்யோதிகளுக்கெல்லாம் ஜ்யோதியாகும். அதாவது ஆதித்தியன் முதலிய ஜ்யோதிகளுக்கெல்லாம் பிரகாசத்தை அளிப்பதால் அதை தேவர்கள்“आयुः” (ஆயு: ஆயுள்) என்று உபாசிக்கின்றனர் அம்ருதம் என்பது ஜ்யோதி. ஆகையால் அதைத்தவிர மற்றவை மரிக்கும். ஆனால் ஜ்யோதி மரிப்பதில்லை. (ஆகையால் அம்ருதம்).
भाष्यम् - सर्वस्य हि एतज्ज्योतिः आयुः, आयुर्गुणेन यस्माद् देवास्तद्ज्योतिरुपासते, तस्मादायुष्मन्तस्ते। तस्मादायुष्कामेन आयुर्गुणेनोपास्यं ब्रह्मेत्यर्थः।।
अनुवादः - ச.பா- எல்லாவற்றிற்கும் இதுவே ஜ்யோதி ஆயுள் ஆகும். எதனால் தேவர்கள் அந்த ஜ்யோதியை ஆயுள் குணத்துடன் உபாசனை செய்கின்றார்களோ அதனால் ஆயுள் உடையவர்களாய் இருக்கின்றனர். ஆகையால் ஆயுள் காமனை உடையவர்கள் பிரஹ்மத்தை ஆயுள் குணமுடையதாய் உபாசிக்க வேண்டும் என்பது பொருள்.
भाष्यम् - किं च-
अनुवादः - ச.பா- அ.கை- மேலும் -
मन्त्रः - यस्मिन्पञ्च पञ्चजना आकाशश्च प्रतिष्द्भितः। तमेव मन्य आत्मानं विद्वान् ब्रह्मामृतोऽमृतम्।।१७।।
अनुवादः - மந்திரம் - எதில் ஐந்து ஐந்து ஜனங்களும் (அவ்யக்த்தம் எனப்படும்) நிலை பெற்றுள்ளதோ அந்த ஆத்மாவையே நான் அம்ருதமான பிரஹ்மம் என்று கருதுகிறேன். அந்த பிரஹ்மத்தை அறிந்த நான் அம்ருதமாய் இருக்கிறேன்.
भाष्यम् - यस्मिन् यत्र ब्रह्मणि, पञ्च पञ्चजनाः- गन्धर्वादयः पञ्चैव संख्याता गन्धर्वाः पितरो देवा असुरा रक्षांसि- निष्पादपञ्चमा वा वर्णाः. आकाशश्च अव्याकृताख्यः यस्मिन् सूत्रम् ओतं च प्रोतं च यस्मिन् प्रतिष्द्भितः,“एतस्मिन् नु खल्वक्षरे गार्ग्याकाशः”(३।८। ११) इत्युक्तम्, तमेव आत्मानम् अमृतं ब्रह्म मन्ये अहम्, न चाहमात्मानं ततोऽन्यत्वेन जाने। किं तर्हि? अमृतोऽहं ब्रह्म विद्वान् सन्, अज्ञानमात्रेण तु मर्त्योऽहमासम्, तदपगमाद् विद्वानहममृत एव।।
अनुवादः - ச.பா- இதில் - இந்த பிரஹ்மத்தில் ஐந்து ஐந்து ஜனங்கள் அதாவது கந்தர்வர்கள் முதலிய அதாவது கந்தர்வர்கள், பித்ருக்கள், தேவர்கள், அசுரர்கள், ராக்ஷசர்கள் என்ற ஐந்து எண்ணிக்கை உடையவர்கள். அல்லது வேடர்களைச் சேர்த்து ஐந்து வர்ணத்தோர் ஆவர். ஆகாசம் என்பது அவ்யாக்ருதம் எனப்படும் இவைகள் எந்த சூத்திரத்தில் குறுக்கும் நெடுக்குமாய் ஊடுருவி உள்ளனவோ, எதில் நிலை பெற்றுள்ளனவோ -“एतस्मिन् नुखल्वक्षरे गार्ग्याकाशः” (ஏதஸ்மின் நுகல்வக்ஷரே கார்க்யாகாஷ:) என்று கூறப்பட்டது. அந்த ஆத்மாவை அம்ருதம் பிரஹ்ம என்று அறிகிறேன். அதைத்தவிர வேறு ஒன்றை நான் அறியவில்லை. மேலும் என்ன? நான் பிரஹ்மத்தை அறிந்ததால் அம்ருதனாய் இருக்கிறேன். இதற்குமுன் அஞ்ஞானத்தால் அம்ருதம் அற்றவனாய் இருந்தேன். அந்த அஞ்ஞானம் நீங்கியதால் பிரஹ்ம வேதா அம்ருதனாய் இருக்கிறேன்.
भाष्यम् - अव - किं च तेन हि चैतन्यात्मज्योतिषावभास्यमानः प्राण आत्मभूतेन प्राणिति तेन प्राणस्यापि प्राणः सः।
अनुवादः - ச.பா- அ.கை- மேலும் அந்த சைதன்ய ஆத்ம ஜ்யோதியினால் விளங்கும் (பிரகாசிக்கும்) பிராணாத்மரூபமாய் பிராணக்கிரியை செய்வதால் பிராணனுக்கு பிராணனாய் அது இருக்கின்றது -
मन्त्रः - प्राणस्य प्राणमुत चक्षुषश्चक्षुरुत श्रोत्रस्य श्रोत्रं मनसो ये मनो विदुः। ते निचिक्युर्ब्रह्म पुराणमग्र्म्।। १८।।
अनुवादः - மந்திரம் - எதை அந்த பிராணனுக்கு பிராணனாயும், சக்ஷுவிற்கு சக்ஷுவாயும், ஸ்ரோத்திரத்திற்கு ஸ்ரோத்ரமாயும் மனதிற்கு மனதாயும் எவர்கள் அறிகிறார்களோ அவர்கள் மிகப்பழமையானதுமான, முதன்மையானதுமான பிரஹ்மத்தை அறிகின்றனர்.
भाष्यम् - तं प्राणस्य प्राणम्, तथा चक्षुषोऽपि चक्षुः, उत श्रोत्रस्यापि श्रोत्रम्, ब्रह्मशक्त्याधिष्द्भितानां हि चक्षुरादीनां दर्शना-दिसामर्थ्यम्, स्वतः काष्द्भलोष्टसमानि हि तानि चैतन्यात्मज्योतिः शून्यानि, मनसोऽपि मनः- इति ये विदुः- चक्षुरादिव्यापारा-नुमितास्तित्वं प्रत्यगात्मानम्, न विषयभूतं ये विदुः ते निचिक्युः- निश्चयेन ज्ञातवन्तो ब्रह्म, पुराणं चिरन्तनम्, अग्र्म् अग्रे भवम्।“तद्यदात्मविदो विदुः” (मु०उ०२।२।९) इति ह्याथर्वणे।
अनुवादः - ச.பா- அந்த பிராணனுடைய பிராணன், அவ்வாறே சக்ஷுக்களுக்கு சக்ஷு, மேலும் ஸ்ரோத்திரத்திற்கு ஸ்ரோத்ரம். பிரஹ்ம சக்தியினால் அதிஷ்டிதமானதின் காரணமாகவே ஸ்வயமாக அந்த கட்டை பாறை போன்ற சூன்யங்களுக்கு சாமர்த்தியம் ஏற்படுகிறது. சைதன்ய ஜ்யோதி மனதிற்கு மனம் என்று எவர் அறிகின்றார்களோ அதாவது சக்ஷு முதலியவைகளின் வியாபாரங்களால் அதை அனுமானம் செய்யமுடிகிறது. அந்த பிரத்யக் ஆத்மாவை இந்திரியங்களின் விஷயமல்ல என்று எவர்கள் அறிகின்றார்களோ அவர்கள் புராணம் அதாவது புராதனமானது, (எல்லாவற்றிற்கும்) முதன்மையானதும் ஆன பிரஹ்மத்தை நிச்சயமாய் அறிந்தவர் ஆவார்.“तद्यदात्मविदोविदुः” (தத்யதாத்மவிதோவிது:) என்று அதர்வணத்தில் கூறப்பட்டுள்ளது.
भाष्यम् - अव - तद्ब्रह्मदर्शने साधनमुच्यते-
अनुवादः - ச.பா- அ.கை- அந்த பிரஹ்ம தர்சனத்திற்கு சாதனம் கூறப்படுகிறது.
मन्त्रः - मनसौवानुद्रष्टव्यं नेह नानास्ति किञ्चन। मृत्योः स मृत्युमाप्नोति य इह नानेव पश्यति।। १९।।
अनुवादः - மந்திரம் - பிரஹ்மத்தை ஆச்சாரிய உபதேச பூர்வகமானதால் பார்க்க வேண்டும் (அறியவேண்டும்) இதில் நாநா என்பதே சிறிதும் கிடையாது. இதில் எவன் நாநாவைப்போல் பார்க்கின்றானோ அவன் மிருத்யுவிலிருந்து மிருத்யுவையே அடைகின்றான்.
भाष्यम् - मनसैव परमार्थज्ञानसस्कृतेन आचार्योपदेशपूर्वकं चानुद्रष्टव्यम्। तत्र च दर्शनविषये ब्रह्मणि नेह नाना अस्तिकिञ्चन किञ्चदपि। असति नानात्वे, नानात्वमध्यारोपयत्यविद्यया, स मृत्योर्मरणात्, मृत्युं मरणम् आप्नोति। कोऽसौ? य इह नानेव पश्यति। अविद्याध्यारोपणव्यतिरेकेण नास्ति परमार्थतो द्वैतमित्यर्थः।।
अनुवादः - ச.பா- பரமார்த்த ஞான சம்ஸ்காரத்துடன் கூடிய மனதால் ஆச்சாரிய உபதேச பூர்வகமாய் அதைப் பார்க்கவேண்டும். (தரிசிக்க வேண்டும், அறியவேண்டும்) அந்த தர்சன விஷயமான பிரஹ்மத்தில் நாநா என்பது ஒரு சிறிதும் இல்லை, நாநாத்துவம் என்பது இல்லை என்றாலும் நாநாத்துவத்தை அவித்யையினால் அத்யாரோபம் செய்து மரணத்திலிருந்து மரணத்தையே அடைகின்றான். அவன் யார்? எவன் இங்கு நாநா போன்று பார்க்கிறானோ அவன். அவித்யா அத்யாரோபத்திற்கு வ்யதிரிக்தமாக (வேறாக) உண்மையில் துவைதம் இல்லையென்பது பொருள்.
भाष्यम् - अव - यस्मादेवं तस्मात्-
अनुवादः - ச.பா- அ,கை- எதனால் இவ்வாறு இருக்கிறதோ அதனால்-
मन्त्रः - एकधैवानुद्रष्टव्यमेतदप्रमेयं ध्रुवम्। विरजः पर आकाशादज आत्मा महान् ध्रुवः।। २०।।
अनुवादः - மந்திரம் - இந்த பிரஹ்மத்தை ஆச்சாரிய உபதேசத்திற்குப்பின் ஒரே விதமாய் பார்க்க வேண்டும். இந்த பிரஹ்மம் அப்ரமேயம், த்ருவம், நிர்மலம் மேலும் ஆகாசத்தைக் காட்டிலும் சூக்ஷ்மம், அஜன்மா, ஆத்மா, மஹான், அவிநாசி (அவிநாசி) ஆகும்.
भाष्यम् - एकधैव एकेनैव प्रकारेण विज्ञानघनैकरस-प्रकारेण आकाशवन्निरन्तरेण अनुद्रष्टव्यम्, यस्मादेतद् ब्रह्म अप्रमयम् अप्रमेयम्, सर्वैकत्वात्, अन्येन हि अन्यत् प्रमीयते, इदं त्वेकमेव, अतोऽप्रमेयम्, ध्रुवं नित्यं कूटस्थमविचालीत्यर्थः।
अनुवादः -ச.பா-“एकधा” (ஏகதா) என்பது ஒரே பிரகாரமாய் ஆகாசத்திற்கு ஒப்பாக நிரந்தரமாய் விஞ்ஞான கன ஏகரசமாய் தொடர்ந்து பார்க்க வேண்டும். ஏன் எனில் பிரஹ்மம் ஏகத்துவமாய் இருப்பதால் அப்ரமேயாகும். வேறாய் இருந்ததால் மற்றொன்றால் அறிய முடியும் (பிரமை ஏற்படும்). இது ஒன்றாகவே இருப்பதால் அப்ரமேயம், த்ருவம், நித்யம், கூடஸ்தம், சலனபாவ மற்றது என்பது பொருள்.
भाष्यम् - शङ्का - ननु विरुद्धमिदमुच्यते- अप्रमेयं ज्ञायत इति च,“ज्ञायते” इति प्रमाणैर्मीयत इत्यर्थः,“अप्रमेयम्” इति च तत्प्रतिषेधः।
अनुवादः -ச.பா-சங்கை- ஆனால் பிரஹ்மம் அப்ரமேயம் என்றும் அறியப்படவேண்டும் என்று கூறுவது விருத்தமாக உள்ளது. அறியவேண்டியது என்பது பிரமாணத்தின் மூலமாய் அறிய வேண்டியது, அப்ரமேயம் என்று கூறுவதால் அதை ஏற்றுக்கொள்ள முடியாததாகும். (நீக்குவது ஆகும்)
भाष्यम् - समाधानम् - नैष दोषः, अन्यवस्तुवद् अनागम-प्रमाणप्रेमयत्वप्रतिषेधार्थत्वात्, यथा अन्यानि वस्तूनि आगम-निरपेक्षैः प्रमाणैर्विषयी क्रियन्ते, न तथा एतदात्मतत्त्वं प्रमाणान्तरेण विषयीकर्तुं शक्यते, सर्वस्यात्मत्वे केन कं पश्येद् विजानीयात्- इति प्रमातृप्रमाणादिव्यापारप्रतिषेधेनैव आगमोऽपि विज्ञापयति, न तु अभिधानाभिधेयलक्षणवक्यधर्माङ्गीकरणेन, तस्मान्नागमेनापि स्वर्गमेर्वादिवत् तत् प्रतिपाद्यते, प्रतिपादयित्रा-त्मभूतं हि तत्, प्रतिपादयितुः प्रतिपादनस्य प्रतिपाद्यविषयत्वात्, भेदे हि सति तद् भवति।
अनुवादः - ச.பா- இந்த தோஷம் இல்லை. ஏன்எனில்“अप्रमेयम्” (அப்ரமேயம்) என்ற விசேஷணம் மற்ற வஸ்துக்களைப்போல் ஆகமப்பிரமாணத்தைத் தவிர மற்ற ப்ரமாணங்களால் அறிய முடிவதை நிஷேதிப்பதற்காகக் கூறப்பட்டது. எவ்வாறு மற்றவஸ்துக்கள் ஆகமப்ரமாணத்தை அபேக்ஷிக்காமலேயே மற்ற ப்ரமாணங்களால் விஷயம் செய்கின்றன. அவ்வாறு இந்த ஆத்மதத்துவம் வேறு பிரமாணங்களால் விஷயம் செய்ய முடியாது. சர்வாத்மாவாய் இருப்பதால் யாரை எதனால் அறியமுடியும், என்று பிரமாத்ரு பிரமாணம் முதலிய வியாபாரங்களை நிஷேதித்து ஆகமமும் தெரிவிக்கிறது. அபிதான அபிதேயலக்ஷண வாக்கிய தர்மத்தை அங்கீகரித்து அதனால் ஆகமத்தாலும் ஸ்வர்க்கம், மேரு முதலியவைகளைப்போல் அதை பிரதிபாதனம் (கூற) வில்லை. பிரதிபாதனம் செய்பவனுடைய பிரதிபாதனம் பிரதிபாத்தியத்தை விஷயம் செய்பவனாக ஆவதால் அதற்கு பேதம் சம்பவிக்கும்.
भाष्यम् - ज्ञानं च तस्मिन् परात्मभावनिवृत्तिरेव, न तस्मिन् साक्षादात्मप्रभावः कर्तव्यः, विद्यमानत्वादात्मभावस्य, नित्यो हि आत्मभावः सर्वस्य, अतद्विषय इव प्रत्यवभासते, तस्मादतद्विषया-भासनिवृत्तिव्यतिरेकेण न तस्मिन्नात्मभावो विधीयते, अन्यात्मभावनिवृत्तौ, आत्मभावः स्वात्मनि स्वाभाविको यः, स केवलो भवतीति- आत्मा ज्ञायत इत्युच्यते, स्वतश्चाप्रमेयः प्रमाणान्तरेण न विषयीक्रियते इति उभयमप्य विरुद्धमेव।
अनुवादः - ச.பா- ஞானம் அதில் (அநாத்மாவில் உள்ள பரமாத்ம பாவத்தை நிவ்ருர்த்தி செய்வதே ஆகும். அதில் எப்பொழுதும் ஆத்மபாவம் இருப்பதால் அதில் சாக்ஷாத்தாக ஆத்மபாவம் செய்யவேண்டியதில்லை. அது எப்பொழுதும் எல்லாவற்றின் ஆத்மபாவமாய் இருந்து கொண்டு (அக்ஞானத்தால்) அதத்துவ (அப்ரஹ்ம) விஷயம் போல் தோன்றுகிறது. ஆகையால் அதத்துவ விஷய ஆபாசத்தை நிவ்ருத்திப்பதைத் தவிர அதில் வேறு ஆத்மபாவத்தின் விதானம் செய்யப்படவில்லை. அன்ய ஆத்ம பாவ நிவிர்த்தி ஆனவுடன் ஆத்மபாவம் தன் ஆத்மாவில் ஸ்வபாவிகமாய் எது உள்ளதோ அது சுத்த ஸ்வரூபமாகும். ஆகையால் ஆத்மா அறியப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஸ்வயமாய் அப்ரமேயமும், வேறு பிரமாணத்தால் விஷயம் செய்யமுடியாது என்பதாலும், இந்த இரண்டும் (அப்ரமேயம், ஞானம்) விருத்தம் அற்றதாகும்.
भाष्यम् - विरजः - विरजो विगतरतः, रजो नाम धर्माधर्मादिमलम्, तद्रहित इत्येतत्। परः- परो व्यतिरिक्तः सूक्ष्मो व्यापी वा आकाशादपि अव्याकृताख्यात्। अजः- न जायते, जन्मप्रतिषेधाद् उत्तेरऽपि भावविकाराः प्रतिषिद्धाः, सर्वेषां जन्मादित्वात्। आत्मा, महान् परिमाणतो महत्तरः सर्वस्मात्, ध्रुवोऽविनाशी।।
अनुवादः -ச.பா-“विरजः” (விரஜ:) ரஜம் அற்றது அதாவது ரஜ என்பது தர்மாதர்மம் முதலிய மலம் அற்றது ஆகும்.“परः”(பர:) பர என்பது அவ்யாக்ருதம் எனப்படும் ஆகாயத்தைக் காட்டிலும் வேறான சூக்ஷ்மமானதும் வியாபியும் ஆகும்.“अजः” (அஜ:) பிறப்பற்றது. எல்லாவற்றின் ஜன்மத்திற்கு ஆதியாய் இருப்பதால் ஜன்மம் நிராகரிக்கப்படுவதால் இதற்குப் பின்னும் பாவ விகாரங்களை நிஷேதம் செய்யப்படுகிறது.आत्मा (ஆத்மா). மற்றும்महान्(மஹான்) - அளவில் எல்லாவற்றையும் விட பெரிது.ध्रुवः(த்ருவ:) அவிநாசி.
मन्त्रः - तमेव धीरो विज्ञाय प्रज्ञां कुर्वीत ब्राह्मणः। नानुध्यायाद् बहूञ्छब्दान् वाचो विग्लापन ँ हि तदिति।। २१।।
अनुवादः - மந்திரம் - வித்வான் பிராஹ்மணனிடம் இருந்து அறிந்து அதில் பிரக்ஞையை செலுத்த வேண்டும். அநேக சப்தங்களால் எப்பொழுதும் சிந்திக்க வேண்டாம். (தியானம் செய்ய வேண்டாம்) அது வாக்கிற்கு சிரமம் ஏற்படும்.
भाष्यम् - तमीदृशमात्मानमेव, धीरो धीमान्, विज्ञाय उपदेशतः शास्त्रतश्च, प्रज्ञां शास्त्राचार्योपदिष्टविषयां जिज्ञासा-परिसमाप्तिकरीम्, कुर्वीत ब्राह्मणः- एवं प्रज्ञाकरणसाधनानि संन्यासशमदमोपरमतितिक्षासमाधानानि कुर्यादित्यर्थः।
अनुवादः -ச.பா-தீரன் அதாவது புத்திமான் உபதேசத்தாலும் (ஆச்சாரிய) சாஸ்திரத்தினாலும் இவ்வாறு ஆத்மாவை அறிந்து பிராஹ்மணன் உபதேசிக்கப்பட்டதால் ஜிக்ஞானச பூர்த்தி அடையச் செய்யக்கூடிய பிரக்ஞையை (புத்தியை) செய்வாய். இவ்வாறு பிரக்ஞை உண்டாக்கக்கூடிய சாதனங்களான சந்நியாசம், சமம், தமம் உபரமம், திதீக்ஷா சமாதானம் ஆகிய சாதனங்களை அவசியம் செய்யவேண்டும்.
भाष्यम् - न अनुध्यायात्- नानुचिन्तयेत्, बहून् प्रभूतान् शब्दान्, तत्र बहुत्वप्रतिषेधात् केवलात्मैकत्वप्रतिपादकाः स्वल्पाः शब्दा अनुज्ञायन्ते,“ओमित्येवं ध्यायथ आत्मानम्”“अन्या वाचो विमुञ्चथ” (मु०उ०२।२।५) इति च आथर्वणे। वाचो विग्लापनं विशेषेण ग्लानिकरं श्रमकरम्, हि यस्मात् तद् बहुशब्दाभिध्यानमिति।
अनुवादः - ச.பா- அநேக சப்தங்களுடன் அனுத்யானம் செய்யவேண்டாம். அதாவது மிகுந்த சப்தங்களுடன் (அக்ஷரஎண்ணிக்கை உடைய சப்தங்களை) சிந்தனை செய்யவேண்டாம். இங்கு அநேகத்தை நிஷேதிக்கப்பட்டுள்ளதால் கேவல ஆத்ம ஏகத்துவத்தை பிரதிபாதிக்கும் குறைந்த சப்தங்கள் என்று அறியப்படுகிறது.“ओमित्येवं ध्यायथ आत्मानम्” (ஒமித்யேவம் த்யாயத ஆத்மானம்),“अन्या वाचो विमुञ्चथ” (அன்யாவாசோ விமுஞ்சயத) என்று அதர்வண சுருதியில் கூறப்பட்டுள்ளது. ஏன்எனில் அதிக சப்தங்களை அனுத்யானம் செய்வதால் வாக்கிற்கு சிரமம் உண்டாகும்.
भाष्यम् - सहेतुकौ बन्धमोक्षावभिहितौ मन्त्रब्राह्मणाभ्याम्, श्लोकैश्च पुनर्मोक्षस्वरूपं विस्तरेण प्रतिपादितम्। एवमेतस्मिन् आत्मविषये सर्वो वेदो यथोपयुक्तो भवति, तत्तथा वक्तव्यमिति तदर्थेयं कण्डिका आरभ्यते। तच्च यथा अस्मिन् प्रपाद्भकेऽभिहितं सप्रयोजनमनूद्य अत्रैवोपयोगः कृत्स्न्नस्य वेदस्य काम्यराशिव-र्जितस्य- इत्येवमर्थ उक्तार्थानुवादः“स वा एषः” इत्यादिः।
अनुवादः -ச.பா பிராஹ்மணங்களால் பந்த மோக்ஷங்களை அதன் ஹேதுவுடன் விளக்கப்பட்டது. மேலும் ஸ்லோகங்களால் மோக்ஷ ஸ்வரூபம் விஸ்தாரமாய் கூறப்பட்டது. இவ்வாறு இந்த ஆத்ம விஷயத்தில் எல்லா வேதங்களும் எவ்வாறு உபயோகம் ஆகுமோ அவ்வாறு உள்ளதை உள்ளபடி கூறவேண்டும். என்பதற்காக இந்த கண்டிகை ஆரம்பிக்கப்படுகிறது. அது எவ்வாறு இந்த பிரபாடகத்தில் பிரயோஜனத்துடன் கூறப்பட்ட எல்லா வேதங்களின் காமத்தின் பொருட்டானவைகளைத் தவிர்த்து இங்கு உபயோகமாகின்றது. இதற்காக“स वा एषः”(ச வா ஏஷ) என்பது முதலிய மந்திரங்களால் விளக்கப்படுகிறது.
मन्त्रः - स वा एष महानज आत्मा योऽयं विज्ञानमयः प्राणेषु य एषोऽन्तर्ह्य्दय आकाशस्तस्मिञ्छेते सर्वस्य वशी सर्वस्येशानः सर्वस्याधिपतिः स न साधुना कर्मणा भूयान्नो एवासाधुना कनीयानेष सर्वेश्वर ए, भूताधिपतिरेष भूतपाल एष सेतुर्विधरण एषां लोकानामसम्भेदाय तमेतं वेदानुवचनेन ब्राह्मणा विविदिषन्ति यज्ञेन दानेन तपसानाशकेनैतमेव विदित्वा मुनिर्भवति। एतमेव प्रव्राजिनो लोकमिच्छन्तः प्रव्रजन्ति। एतद्ध स्म वै तत्पूर्वे विद्वा ँसः प्रजां न कामयन्ते किं ह स्म पुत्रैषणायाश्च वित्तैषणायाश्च लोकैषणायाश्च व्युत्थायाथ भिक्षाचर्यं चरन्ति या ह्येव पुत्रैषणा सा वित्तैषणा या वित्तैषणा सा लोकैषणोभे ह्येते एषणे एव भवतः। स एष नेति नेत्यात्मागृह्यो न हि गृह्यतेऽशीर्यो न हि शीर्यतेऽसङ्गो न हि सज्यतेऽसितो न व्यथते न रिष्यत्येतमु हैवैते न तरत इत्यतः पापकरवमित्यतः कल्याणमकरवमित्युभे उ हैवैष एते तरति नैनं कृताकृते तपतः।। २२।।
अनुवादः - மந்திரம் - எந்த இந்த மஹான் அஜ ஆத்மாவோ அதுவே இந்த பிராணன்களில் விஞ்ஞானமயன் அதுவே ஹிருதயத்தில் ஆகாசம். அதில் சயனித்து இருக்கின்றது. எல்லாவற்றையும் தன்வசத்தில் வைத்துள்ளது. எல்லாவற்றையும் சாசனம் (கட்டளை) செய்வது மேலும் எல்லாவற்றிற்கும் அதிபதி. அது சுபகர்மத்தினால் பெரிது ஆவதும் இல்லை. அசுபகர்மத்தால் சிறிதாகவும் ஆவதில்லை. அது சர்வேச்வரன். அதிபதி. பூதங்களை ரக்ஷிக்கிறது (பரிபாலனம் செய்கிறது). இந்த உலகங்களை எல்லை தாண்டாமல் இருப்பதற்கு ஹேதுவாய் இருக்கின்றது. அந்த இந்த ஆத்மாவை பிராமணர்கள் ஸ்வாத்யாயனம், யக்ஞ, தான மேலும் நிஷ்காம தபஸ் மூலமாய் அறிவதற்கு இச்சை செய்கின்றனர். இதை அறிந்து முனி ஆகின்றனர், இந்த ஆத்ம லோகத்தை இச்சித்து தியாகி புருஷன் எல்லாவற்றையும் தியாகம் செய்து செல்கிறான் (சந்தியாசீ ஆகின்றான்) சந்நியாசம் செய்வதற்கான காரணம்- இதற்குமுன் வித்வானுக்கு சந்தானத்தின் இச்சை இல்லாததால் நாம் பிரஜையினால் என்ன அடையப்போகிறோம்? எந்த ஆத்ம லோகமோ அதவே இஷ்டமானது. ஆகையால் இந்த புத்ரேஷணை, வித்தேஷணை, லோகேஷணைகளில் இருந்து விடுபட்டு பிக்ஷாசர்யம் - பிக்ஷயைால் வாழும் விரதத்தைக் கடைபிடிக்கின்றனர். எது புத்ரேஷணையோ அதுவே வித்தேஷணை, எது வித்தேஷணையோ அதுவே லோகேஷணை. இந்த இந்த இரண்டு ஏஷணைகளே. அந்த இதை“नेति नेति” (நேதி, நேதி) என்று நிர்தேசம் செய்யப்பட்ட ஆத்மா அக்கிரயம் கிரஹிக்கமுடியாதது, அது ஆசீர்யம் - நாசம் அடையாதது, அசங்கம் - அது எதனுடனும் சேராதது. பந்தம் ஏற்படாதது ஆகையால் அவன் கெட்டுப்போவது இல்லை. அவ்வாறே நாசமும் உண்டாகாது. இந்த ஆத்மக்ஞனை அவை இரண்டும் (புண்ய பாபங்களின் சம்பந்தமான சோகம் ஹர்ஷம்) இவைகள் அடைவதில்லை. ஆகையால் இதன் நிமித்தால் பாபம் செய்தேன், மேலும் இந்த நிமித்தால் நான் புண்யம் செய்தேன் என்ற இவைகள் இரண்டிலிருந்தும் தாண்டுகிறான். இதனால் என்ன உண்டாகும், என்ன உண்டாகாது என்று நித்ய கர்மாவால் தாபம் ஏற்படாது.
भाष्यम् - स इति उक्तपरामर्शार्थः कोऽसावुकः परामृश्यते? तं प्रतिनिर्दिशति- य एष विज्ञानमय इति। अतीतानन्तरवाक्यो-क्तसंप्रत्ययो मा भूदिति, य एषः। कतम एषः? इत्युच्यते- विज्ञानमयः प्राणेष्विति।
अनुवादः - ச.பா-(ச) என்ற பதம் முன்பு கூறப்பட்டதை விளக்குவதற்காக. முன்பு கூறப்பட்ட எதை சுருதி விளக்குகிறது? அதை“य एष विज्ञानमय” (ய ஏஷ விஞ்ஞான மய) என்று விமர்சிக்கின்றது. முன்பு கூறிய மந்திரத்திற்கு முந்திய வாக்கியத்தில் கூறப்பட்ட (விரஜ: பர ஆகாஷாத்) ஆத்மாவை அறிய வேண்டியதில்லை என்பதற்காக“य एषः” (அந்த இந்த) என்று இவ்வாறு கூறப்பட்டது. அது யார்?“विज्ञानमयः प्राणेषु” (விக்ஞானமய: பிராணேஷீ) என்று பிராணன்களில் விக்ஞானமயன் என்று இந்த வாக்கியத்தால் கூறப்பட்டுள்ளது.
भाष्यम् - उक्तवाक्योल्लिङ्गनं संशयनिवृत्त्यर्थम्, उक्तं हि पूर्वं जनकप्रश्नारम्भे“कतम आत्मेति योऽयं विज्ञानमयः प्राणेषु” इत्यादि। एतदुक्तं भवति- योऽयम्“विज्ञानमयः प्राणेषु” (४।३।७) इत्यादिना वाक्येन प्रतिपादितः स्वयंज्योतिरात्मा, स एष काम-कर्माविद्यानामनात्मधर्मत्वप्रतिपादनद्वारेण मोक्षितः, परमात्म-भावमापादितः पर एवायं नान्य इति, एष स साक्षान्महानज आत्मेत्युक्तः। योऽयं विज्ञानमयः प्राणेष्विति यथाव्याख्यातार्थ एव।
अनुवादः - ச.பா- இந்த வாக்கியத்தால் குறிப்பிடப்பட்டது சம்சய நிவிர்திகாக ஆகும். இதற்கு முன் ஜனகருடைய பிரசன்னம் ஆரம்பத்தில்“कतम आत्मेति योऽयं विज्ञानमयः प्राणेषु” (கதம் ஆத்மேதி யோஅயம் விக்ஞானமய: பிராணேஷீ) என்று கூறப்பட்டது. இது இவ்வாறு கூறப்பட்டது ஆகிறது - அந்த இந்த“विज्ञानमयः प्राणेष्विति” (விஞ்ஞானமய: பிராணேஷு) முதலிய வாக்கியங்களால் ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூபம் ஆத்மா விளக்கப்பட்டது. அந்த இந்த காம கர்ம அவித்யைகளின் அநாத்ம தர்மத்துவ பிரதிபாதிப்பதின் மூலமாக முக்தி அடையச் செய்தது. இதுவே மேலானது இதைத்தவிர அன்யம் இல்லை என்று கூறி பரமாத்ம பாவத்தை அடையச்செய்தது. அந்த இது சாக்ஷாத் மஹான் அஜ ஆத்மா என்று கூறப்பட்டது. அது இந்த விஞ்ஞானமயன் பிராணன்கள் என்று இதனுடைய அர்த்தம். முந்திய வியாக்கியானத்திற்கு சமானமானதாக ஆகும்.
भाष्यम् - य एषोऽन्तर्ह्य्दये ह्य्दयपुण्डरीकमध्ये य एष आकाशो बुद्धिविज्ञानसंश्रयः, तस्मिन्नाकाशे बुद्धिविज्ञानसहिते शेते तिष्द्भति, अथवा संप्रसादकाले अन्तर्ह्य्दये य एष आकाशः पर एव आत्मा निरुपाधिको विज्ञानमयस्य स्वस्वभावः, तस्मिन् स्वस्वभावे परमात्मन्याकाशाख्ये शेते, चतुर्थे एतद् व्याख्यातम्-“क्वैष तदाभूत्” इत्यस्य प्रतिवचनत्वेन।
अनुवादः - ச.பா- எந்த இது அந்தர்ஹ்ருதயத்தில் - ஹ்ருதய புண்டரீகத்தின் மத்தியில் எந்த இந்த புத்தி விஞ்ஞானத்தின் ஆஸ்ரயபூத ஆகாசம் உள்ளதோ அந்த ஆகாசத்தில் புத்தி விஞ்ஞானத்துடன் சயினித்து இருக்கிறது. அல்லது சம்பிரசாத காலத்தில் (சுஷுப்தியில்) அந்தர் ஹிருதயத்தில் விக்ஞானமயத்தின் ஸ்வஸ்வபாவமான நிரூபாதிக பரமாத்மா ஆகும். அந்த ஸ்வஸ்வபாவமான ஆகாசம் எனப்படும் பரமாத்மாவில் சயனிக்கின்றது. இது நான்காவது பிரபாடகத்தில்“क्वैष तदाभूत्” (க்வைஷததாபூத்) என்று பதில் அளிப்பதின் மூலமாய் வியாக்யானம் செய்யப்பட்டது.
भाष्यम् - स च सर्वस्य ब्रह्मेन्द्रादेः, वशी सर्वो हि अस्य वशे वर्तते, उक्तं च-“एतस्य वा अक्षरस्य प्रशासने” (३।८।९) इति। न केवलं वशी, सर्वस्य ईशानः- ईशिता च ब्रह्मेन्द्रप्रभृतीनाम्। ईशितृत्वं च कदाचिज्जातिकृतम्- यथा राजकुमारस्य बलवत्तरानपि भृत्यान् प्रति, तद्वन्माभूदित्याह- सर्वस्याधिपतिः- अधिष्द्भाय पालयिता, स्वतन्त्र इत्यर्थः, न राजपुत्रवदमात्यादिभृत्यतन्त्रः।
अनुवादः - ச.பா- அது பிரஹ்மா முதல் இந்திரன் முதலிய எல்லோரையும் வசம் செய்பவன், எல்லாம் அதனுடைய வசத்தில் இருக்கிறது.“एतस्य वा अक्षरस्य प्रशासने” (ஏதஸ்யவா அக்ஷரஸ்ய பிரசாசனே) என்று கூறப்பட்டுள்ளது. அது வசம் செய்யவில்லை எல்லாவற்றையும் அதன் கட்டளையினால் செயல்படுத்துகிறது. பிரஹ்மா இந்திரன் முதலியோர்களையும் கட்டளையின்படி செயல்படுத்துகிறது. கட்டளையிடுவது சிலசமயம் ஜாதியினாலும் ஏற்படலாம். எவ்வாறு ராஜகுமாரனைவிட பலசாலிகளானாலும் வேலைக்காரர்களிடத்தில் போல் ஆகும். என்று ஆகிவிடக் கூடாது என்பதற்காக எல்லாவற்றிற்கும் அதிபதி(सर्वस्याधिपतिः) என்று கூறப்பட்டது. சர்வஸ்ய அதிபதி என்பது அதிஷ்டாவாக ஆகி பரிபாலனம் செய்வது அதாவது ஸ்வதந்திரம் என்பது பொருள். ராஜபுத்திரனைப்போல் மந்திரி முதலிய சேவர்களுக்கு அதீனம் ஆவது இல்லை என்பதாகும்.
भाष्यम् - त्रयमप्येतद् वशित्वादि हेतुहेतुमद्रूपम्- यस्मात् सर्वस्याधिपतिः, ततोऽसौ सर्वस्येशानः, यो हि यमधिष्द्भाय पालयति, स तं प्रतीष्ट एवेति प्रसिद्धम्, यस्माच्च सर्वस्येशानः, तस्मात् सर्वस्य वशीति।
अनुवादः - ச.பா- இந்த வசித்துவம் முதலிய மூன்றும் ஹேது ஹேதுமத்ரூபம் (அதாவது ஒன்று மற்றொன்றிற்கு ஹேதுவாதல்) எதனால் எல்லாவற்றிற்கும் அதிபதியோ ஆகையால் இது எல்லாவற்றிற்கும் ஈஷானம் (கட்டளையினால் செயல்படுத்துவது) ஆகும். எதானல் அதிஷ்டாவாக இருந்து பரிபாலிக்கிறதோ அது அதைக் குறித்து கட்டளை இடுகிறது என்பது பிரசித்தம். எதனால் சர்வ ஈசானமாக இருக்கிறதோ ஆகையால் அது எல்லாவற்றிற்கும் வசீ ஆகிறது.
भाष्यम् - किं चान्यत्, स एवंभूतो ह्य्द्यन्तर्ज्योतिः पुरुषो विज्ञानमयो न साधुना शास्त्रविहितेन कर्मणा भूयान् भवति, न वर्धते पूर्वावस्थातः केनचिद्धर्मेण, नो एव शास्त्रप्रतिषिद्धेन असाधुना कर्मणा कनीयान् अल्पतरो भवति, पूर्वाववस्थातो न हीयत इत्यर्थः।
अनुवादः - ச.பா- மேலும் வேறு விஷயம் கூறப்படுகிறது. இவ்வாறு ஹ்ருதயத்தில் உள்ள அந்தர் ஜ்யோதி புருஷனான விஞ்ஞானமயன் சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட நல்ல கர்மங்களால் பெரிதாவது இல்லை. எந்த ஒரு தர்மத்தினாலும் தன் முந்திய நிலையிலிருந்து வளர்வது இல்லை. சாஸ்திர பிரதிஷித்த (நிஷித்த) நல்லவைகள் அல்லாத கர்மங்களால் சிறுமை அடைவதில்லை. முந்திய அவஸ்தையிலிருந்து குறைவது இல்லை.
भाष्यम् - किं च सर्वो हि अधिष्द्भानपालनादि कुर्वन् परानुग्रहपीडाकृतेन धर्माधर्माख्येन युज्यते, अस्यैव तु कथं तदभाव इत्युच्यते- यस्मादेष सर्वेश्वरः सन् कर्मणोऽपीशितुं भवत्येव शीलमस्य, तस्माद् न कर्मणा संबध्यते। किं च एष भूताधिपतिर्ब्रह्मदिस्तम्बपर्यन्तानां भूतानामधिपतिरित्युक्तार्थं पदम्।
अनुवादः - ச.பா- மேலும் எல்லாவற்றிற்கும் அதிஷ்டான பரிபாலனம் முதலியவைகளை செய்து கொண்டு மற்றவர்களுக்கு அனுக்ரஹம், பீடை (கஷ்டம் அளிப்பது) செய்வது தர்மாதர்மங்களின் பலத்துடன் கூடியதாகிறது. இந்த பலம் ஏன் ஆத்மாவை அடைவதில்லை என்பதற்குக் கூறப்படுகிறது - எதனால் இந்த சர்வேஷ்வரனாய் இருந்துகொண்டே கர்மத்தையும் அவரே சாசனம் செய்வதற்கான சீலம் உடையவர். ஆகையில் கர்மத்துடன் சம்பந்தப்படுவதில்லை. மேலும் இந்த பூதாதிபதி அதாவது பிரஹ்மா முதல் ஸ்தம்ப முடிய எல்லா பூதங்களுக்கும் அதிபதி. அதிபதி என்ற பதத்தின் அர்த்தம் முன்பே கூறப்பட்டுள்ளது.
भाष्यम् - एष भूतानां तेषामेव पालयिता रक्षिता । एष सेतुः किं विशिष्ट इत्याह- विधरणः- वर्णाश्रमादिव्यवस्थाया विधारयिता, तदाह- एषां भूरादीनां ब्रह्मलोकान्तानां लोकानाम् असंभेदाय असंभिन्नमर्यादायै। परमेश्वरेण सेतुवद्विधार्यमाणा लोकाः संभिन्नमर्यादाः स्युः, अतो लोकानामसंभेदाय सेतु भूतोऽयं परमेश्वरः, यः स्वयं ज्योतिरात्मैव एवंवित् सर्वस्य वशी इत्यादि ब्रह्मविद्यायाः फलमेतन्निर्दिष्टम्।
अनुवादः - ச.பா- அதுவே இந்த எல்லா பூதங்களையும் ரக்ஷிக்கின்றது. இந்த சேது (பாலம்) எந்த விசேஷணத்துடன் கூடியது? என்று கூறப்படுகிறது - விதரண:(विधरणः) அதாவது வர்ணாஸ்ரமம் முதலிய வ்யவஸ்தைகளை வகுத்து அளிப்பது. அது கூறப்படுகிறது - இந்த பூலோகம் முதல் பிரஹ்மலோகம் வரையிலும் மாறாமல் இருப்பதற்காக அதாவது அதன் அதன் எல்லையைத்தாண்டாமல் இருப்பதற்காக ஆகும். பரமேஷ்வரனால் சேதுவைப்போல் லோகங்களை விதாரனை செய்யவில்லை எனில் அதன் எல்லைகள் (மரியாதை) மாறிவிடும். ஆகையால் லோகங்களை மாறாமல் இருப்பதற்காக சேது ரூபமான பரமேஸ்வரன் எவனோ அந்த ஸ்வயம் ஜ்யோதி ஆத்மாவை இவ்வாறு அறிந்தவன் வசீ (वशी) இவை முதலியவைகள் பிரஹ்மவித்யாவின் பலன்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
भाष्यम् - “किं ज्योतिरयं पुरुषः” इत्येवमादिषष्द्भ-प्रपाद्भक-विहितायामेतस्यां ब्रह्मविद्यायाम् एवं फलायां काम्यैकदेशवर्जितं कृत्स्नं कर्मकाण्डं तादर्थ्येन विनियुज्यते, तत् कथमित्युच्यते- तमेतम् एवंभूतमौपनिषदं पुरुषम्, वेदानुवचनेन मन्त्रब्राह्मणाध्ययनेन नित्यस्वाध्यायलक्षणेन, विविदिषन्ति वेदितुमिच्छन्ति। के? ब्राह्मणाः, ब्राह्मणग्रहणमुपलक्षणार्थम्, अविशिष्टो हि अघिकारः त्रयाणां वर्णानाम्। अथवा कर्मकाण्डेन मन्त्रब्राह्मणेन वेदानुवचनेन विविदिषन्ति, कथं विविदिषन्ति? इत्युच्यते- यज्ञेनेत्यादि।
अनुवादः -ச.பா-“किं ज्योतिरयं पुरुषः” (கிம்ஜ்யோதிரயம் புருஷ:) இவை முதலியவை ஆறாவது ப்ரபாடகத்தில் விதிக்கப்பட்ட இந்த பலம் உடைய பிரஹ்ம வித்யாவில் காமிய ரூப ஏகதேசத்தை (பாகத்தை) விட்டு எல்லா கர்ம காண்டமும் ஞானத்தின் உத்பத்திக்கு பொருந்துகிறது. அது எவ்வாறு? என்று கூறப்படுகிறது - அந்த இந்த ஒளபநிஷத்புருஷனை வேதானு வசனத்தாலும், நித்யஸ்வாத்யாய லக்ஷணத்தினாலும் அறியவிரும்புகின்றனர். எவர்கள்? பிராஹ்மணர்கள். பிரஹ்மணர்கள் என்று கூறியது உபலக்ஷணம். ஏன் எனில் மூன்று வர்ணத்தாருக்கும் சமமான அதிகாரம் உண்டு. அல்லது கர்ம காண்ட மந்திர பிராஹ்மணத்தாலும், வேதானு வசனத்தாலும் அறிய விரும்புகின்றனர். எவ்வாறு விரும்புகின்றனர்? கூறப்படுகிறது - யக்ஞம் முதலியவைகளால்.
भाष्यम् - ये पुनर्मन्त्रब्राह्मणलक्षणेन वेदानुवचनेन प्रकाश्यमानं विविदिषन्ति- इति व्याचक्षते, तेषाम् आरण्यकमात्रमेव वेदानुवचनं स्यात्, न हि कर्मकाण्डेन पर आत्मा प्रकाश्यते,“तं त्वौपनिषदम्” (३। ९। २६) इति विशेषश्रुतेः। वेदानुवचनेनेति च अविशेषितत्वात् समस्तग्राहि इदं वचनम्, न च तदेकदेशोत्सर्गो युक्तः।
अनुवादः - ச.பா- ஆனால் சிலர் இவ்வாறு வியாக்யானம் செய்கின்றனர். எவ்வாறு எனில் - மந்திர பிராஹ்மண லக்ஷணமான வேதானு வசனத்தால் பிராகாசிக்கக்கூடியதை அறிய விரும்புகின்றனர். என்று இவ்வாறு கூறுகின்றனர். அவர்கள் ஆரண்யகத்தை மட்டுமே வேதானு வசனம் என்று கருதுகிறார்கள். ஏன் எனில் கர்ம காண்டத்தால் ஆத்மாவைத் தெரியப்படுத்த முடியாது.“तं त्वौपनिषदम्” (தம் த்வெளபநிஷதம்) என்று விசேஷ சுருதியினால் அறியப்படுகிறது. வேதானு வசனத்தினால் என்பதில் விசேஷம் இல்லாததால் இந்த வசனம் எல்லாவற்றையும் கிரஹிக்கின்றது. ஆகையால் இதில் ஒரு பாகத்தை விடுதல் பொருந்தாது.
भाष्यम् - शङ्का - ननु त्वपक्षेऽप्युपनिषद्वर्जमित्येकदेशत्वं स्यात्-
अनुवादः - ச.பா- சங்கை- ஆனால் உங்கள் பக்ஷத்திலும் உபநிஷத்தை விட்டு என்று இவ்வாறு ஏகதேசம் பக்ஷம் ஏற்படுமே -
भाष्यम् - समाधानम् - न, आद्यव्याख्याने अविरोधाद-स्मत्पक्षे नैष दोषो भवति। यदा वेदानुवचनशब्देन नित्यः स्वाध्यायो विधीयते, तदा उपनिषदपि गृहीतैवेति, वेदानुवचनशब्दार्थैकदेशो न परित्यक्तो भवति। यज्ञादिसहपाद्भाच्च- यज्ञादीनि कर्माण्येव अनुक्रमिष्यन् वेदानुवचनशब्दं प्रयुङ्क्ते, तस्मात् कर्मैव वेदानुवचनशब्देनोच्यत इति गम्यते, कर्म हि नित्यस्वाध्यायः।
अनुवादः - ச.பா- அவ்வாறு அல்ல. முதல் வியாக்யானத்தில் விரோதம் இல்லாததால் இந்த பக்ஷத்தில் இந்த தோஷம் உண்டாகாது. எப்பொழுது வேதானுவசன சப்தத்தால் நித்ய ஸ்வாத்யாயனம் விதிக்கப்பட்டதோ அப்பொழுது உபநிஷத்தும் கிரஹிக்கப்படுகிறது. ஆகையால் வேதானுவசன சப்தார்த்தம் ஏகதேசத்தை விட்டு விடவில்லை.(न परित्यक्तम्) யஞ்ஞம் முதலியவைகளுடன் பாடம் இருப்பதாலும் இது சித்திக்கின்றது. சுருதி யக்ஞம் முதலிய கர்மங்களில் அனுக்கிரமணம் செய்து கொண்டே வேதானுவசன சப்தத்தை பிரயோகிக்கிறது. வேதானுவசன சப்தத்தால் கர்மத்தையே கூறுகிறது என்று அறியப்படுகிறது. கர்ம நித்ய ஸ்வாத்யாயனம். .
भाष्यम् - शङ्का - कथं पुर्नित्यस्वाध्यायादिभिः कर्मभि-रात्मानं विविदिषन्ति? नैव हि तान्यात्मानं प्रकाशयन्ति, यथोपनिषदः।
अनुवादः - ச.பா- ஆனால் நித்ய வாத்யாய கர்மங்களினால் ஆத்மாவை அறிய எவ்வாறு இச்சிக்கின்றார்கள்? எவ்வாறு உபநிஷத்துக்கள் ஆத்மாவை விளக்குகின்றனவோ அவ்வாறு அவைகள் விளக்குவதில்லை.
भाष्यम् - समाधानम् - नैष दोषः, कर्मणां विशुद्धिहे-तुत्वात्, कर्मभिः संस्कृता हि विशुद्धात्मानः शक्नुवन्ति आत्मान-मुपनिषत्प्रकाशितमप्रतिबन्धेन वेदितुम्, तथा ह्याथर्वणे-“विशुद्धसत्त्वस्ततस्तु तं पश्यते निष्कलं ध्यायमानः” (मु० उ० ३। १। ८) इति, स्मृतिश्च-“ज्ञानमुत्पद्यते पुंसां क्षयात्पापस्य कर्मणः” इत्यादि।
अनुवादः - ச.பா- கர்மங்கள் சித்த சுத்திக்கு ஹேது ஆவதால் இந்த தோஷம் இல்லை. கர்மங்களால் பண்படுத்தப்பட்ட விசுத்த ஆத்மாவிற்கு உபநிஷத்துகளினால் விளக்கப்பட்ட ஆத்மாவை தடையின்றி அறிவதற்கு முடியும். அவ்வாறே ஆதர்வணத்திலும்“विशुद्धसत्त्वस्ततस्तु तं पश्यते निष्कलं ध्यायमानः” (விசுத்த சத்வஸ்ததஸ்து தம் பஷ்யதே நிஷ்கம்த்யாயமான:) என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறே ஸ்மிருதியிலும்“ज्ञानमुत्पद्यते पुंसां क्षयात्पापस्य कर्मणः” (ஞானமுத்பத்யதே பும்சாம் க்ஷயாத்பாபஸ்ய கர்மண:) என்பது முதலியவைகள் கூறப்பட்டுள்ளது.
भाष्यम् - शङ्का - कथं पुनर्नित्यानि कर्माणि संस्कारा-र्थानोत्यवगभ्यते?
अनुवादः - ச.பா- சங்கை- மேலும் நித்திய கர்மாக்கள் சித்த சுத்திக்கு என்று எவ்வாறு அறியப்படுகிறது?
भाष्यम् -“स ह वा आत्मयाजी यो वेदेदं मेऽनेनाङ्गं संस्क्रियत इदम् मेऽनेनाङ्गमुपधीयते” इत्यादिश्रुतेः सर्वेषु च स्मृतिशास्त्रेषु कर्माणि संस्कारार्थान्येव आचक्षते“अष्टाचत्वा-रिंशत्संस्काराः” इत्यादिषु। गीतासु च-“यज्ञो दानं तपश्चैव पावनानि मनीषिणाम्।।” (१८। ५)“सर्वेऽप्येते यज्ञविदो यज्ञक्षपि-तकल्मषाः।।”(४। ३०) इति। यज्ञेनेति- द्रव्ययज्ञा ज्ञानयज्ञाश्च संस्कारार्थाः, संस्कृतस्य च विशुद्धसत्त्वस्य ज्ञानोत्पत्तिरप्रतिबन्धेन भविष्यति, अतो यज्ञेन विविदिषन्ति।
अनुवादः -ச.பா-“स ह वा आत्मयाजी यो वेदेदं मेऽनेनाङ्गं संस्क्रियत इदम् मेऽनेनाङ्गमुपधीयते” (ச ஹ வா ஆத்மயாஜீ யோ வேதேதம் மேஅனேனாங்கம் சம்ஸ்கிரியத இதம் மே அனேனாங்கமுபதீயதே) என்பது முதலிய சுருதி வாக்கியங்களால் அறிகிறோம். மேலும்“अष्टाचत्वारिंशत्संस्काराः”என்பது முதலிய எல்லா ஸ்மிருதி சாஸ்திரங்களில் கர்மங்கள் சம்ஸ்காரத்திற்காக என்று கூறப்பட்டுள்ளது. கீதையிலும்“यज्ञो दानं तपश्चैव पावनानि मनीषिणाम्।।”(யஞ்ஞோதானம் தபஸ்சைவ பாவநாநி மனீஷிணாம்)“सर्वेऽप्येते यज्ञविदो यज्ञक्षपितकल्मषाः।।”(சர்வே அப்யேதே யஞ்ஞவிதோ யஞ்ஞக்ஷமித கல்மஷா:) என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.यज्ञेन इति (யஞ்ஞேன) என்பது திரவ்ய யஞ்ஞம், ஞானயஞ்ஞம் ஆகிய இவைகள் சம்ஸ்காரத்திற்காக ஆகும். சம்ஸ்க்ருதம் அடைந்த (பண்படுத்தப்பட்ட) விசுத்த சத்துவத்திற்கு ஞான உத்பத்தி தடையின்றி உண்டாகும். ஆகையால் யஞ்ஞத்தால் அறிய விரும்புகின்றனர்.
भाष्यम् - दानेन - दानमपि पापक्षयहेतुत्वाद् धर्मवृद्धि-हेतुत्वाच्च। तपसा, तप इत्यविशेषेण कृच्छ्रचान्द्रायणादिप्राप्तौ विशेषण्- अनाशकेनेति, कामानशानमनाशकम्, न तु भोजननिवृत्तिः, भोजननिवृत्तौ म्रियत एव, न आत्मवेदनम्।
अनुवादः -ச.பா-தானத்தால்(दानेन)என்பது பாபக்ஷயத்திற்கும், தர்ம விருத்திக்கும் ஹேதுவாகிறது. தபஸால்(तपसा)என்பது தப என்று சமான்யமாய் க்ருசர சாந்திராயண முதலியவைகளைக் குறிக்கும். ஆனால் விசேஷமாக(अनाशकेन)அநாசகேன என்பது காமனைகளை புஜிக்கக்கூடாது (அனுபவிக்கக்கூடாது) என்பதாகும். அது போஜன நிவிர்த்தியைக் குறிக்கவில்லை. சாப்பிடவில்லையெனில் மரணம் ஏற்படும். ஆத்மஞானம் உண்டாகாது.
भाष्यम् - वेदानुवचनयज्ञदानतपःशब्देन सर्वमेव नित्यं कर्म उपलक्ष्यते, एवं काम्यवर्जितं नित्यं कर्मजातं सर्वम् आत्मज्ञानोत्पत्तिद्वारेण मोक्षसाधनत्वं प्रतिपद्यते, एवं कर्मकाण्डेनास्यैकवाक्यतावगतिः।
अनुवादः - ச.பா- வேதானு வசனம், யக்ம், தானம் தபஸ் சப்தத்தால் எல்லாம் நித்ய கர்மாவை உபலக்ஷிக்கிறது. (குறிக்கிறது) இவ்வாறு காமம் இன்றிய நித்ய கர்மாவினால் உண்டாவது எல்லாம் ஞானத்தின் உற்பத்தி வாயிலாய் மோக்ஷசாதனமாக ஆகின்றன. இவ்வாறு கர்ம காண்டத்தால் இந்த ஞான காண்டத்தின் ஏக வாக்கியத்தன்மை அறியப்படுகிறது.
भाष्यम् - एवं यथोक्तेन न्यायेनैतमेव आत्मानं विदित्वा यथा प्रकाशितम्, मुनिर्भवति, मननान्मुनिः-योगी भवतीत्यर्थः, एतमेव विदित्वा मुनिर्भवति, नान्यम्।
अनुवादः - ச.பா- இவ்வாறு முன்னர் கூறிய நியாயத்தால் இந்த ஆத்மாவை எவ்வாறு விளக்கப்பட்டதோ அவ்வாறு அறிந்து முனியாகின்றான், மனனம் செய்வதால் முனி. அதாவது யோகி என்று பொருள். இவ்வாறு இதை அறிந்தே முனியாகின்றான். மற்றவைகளை அறிவதால் அல்ல.
भाष्यम् - शङ्का - ननु अन्यवेदनेऽपि मुनित्वं स्यात्, कथमवधार्यते- एतमेवेति?
भाष्यम् - समाधानम् - बाढम् अन्यवेदनेऽपि मुनिर्भवेत्, किन्त्वन्यवेदने न मुनिरेव स्यात्, किं तर्हि? कर्म्यपि भवेत् सः, एतं त्वौपनिषदं पुरुषं विदित्वा मुनिरेव स्यात्, न तु कर्मी, अतोऽसाधारणं मुनित्वं विवक्षितमस्येत्यवधारयति- एतमेवेति। एतस्मिन् हि विदिते, केन कं पश्येदित्येवं क्रियासम्भवान्मननमेव स्यात्।
अनुवादः - ச.பா- சரிதான். வேறு ஒன்றினால் அறிந்தாலும் முனிதான். ஆனால் இவ்வாறு மற்றதால் அறிவதால் முனிமட்டுமல்ல வேறு என்னவெனில் அவன் கர்மியும் ஆகின்றான். இந்த ஒளபநிஷத் புருஷனை அறிந்து முனியாகவே ஆகின்றான். கர்மீ ஆவதில்லை. ஆகையால் இதற்கு அசாதாரண முனித்துவம் கூறப்பட்டது என்பது“एवमेव” (அதையே) என்று நிச்சயமாக கூறப்பட்டது. இந்த சுருதியை அனுசரித்து இதில் கிரியை சம்பவிக்காததால் மனனமே என்று நிச்சயமாகிறது.
भाष्यम् - किं च एतमेव आत्मानं स्वं लोकमिच्छन्तः प्रार्थयन्तः प्रव्राजिनः प्रव्रजनशीलाः प्रव्रजन्ति प्रकर्षेण व्रजन्ति, सर्वाणि कर्माणि संन्यस्यन्तीत्यर्थः।
अनुवादः - ச.பா- மேலும் இந்த ஆத்மாவையே அதாவது ஸ்வம்லோகத்தை இச்சிப்பவர்கள் - பிரார்த்தனை செய்பவர்கள். எல்லாவற்றிலிருந்து விடுபடுபவர்கள் ப்ரவ்ராஜனர்கள்(प्रव्राजिनः) எல்லாவற்றையும் முற்றிலுமாய் துறப்பவர்கள். அதாவது எல்லாக் கர்மங்களையும் சந்நியாசம் (தியாகம்) செய்கிறார்கள் என்பது பொருள்.
भाष्यम् -“एतमेव लेकमिच्छन्तः”, इत्यवधारणान्न बाह्यलोकत्रयेप्सूनां पारिव्राज्येऽधिकार इति गम्यते, न हि गङ्गाद्वारं प्रतिपित्सुः काशीदेशनिवासी पूर्वाभिमुखः प्रैति। तस्माद् बाह्यलोकत्रयार्थिनां पुत्रकर्मापरब्रह्मविद्याः साधनम्,“पुत्रेणायं लोको जय्यो नान्येन कर्मणा” इत्यादिश्रुतेः। अतस्तदर्थिभिः पुत्रादिसाधनं प्रत्याख्या, न पारिव्राज्यं प्रतिपत्तुं युक्तम्, अतत्सधानत्वात् पारिव्राज्यस्य। तस्मात्“एतमेव लोकमिच्छन्तः प्रव्रजन्ति” इति युक्तमवधारणम्।
अनुवादः -ச.பா-“एतमेव लोकमिच्छन्तः”(ஏதமேவலோகமிச்சந்த:) என்று நிச்சயம் செய்வதற்காக பாஹ்ய மூன்று உலகங்களில் இச்சை உள்ளவர்களுக்கு பாரி வ்ராஜ்யத்தில் (சந்நியாசத்தில்) அதிகாரம் இல்லை என்று தெரிகிறது. ஹரித்துவாரம் செல்லவிரும்பும் காசீவாசீ கிழக்கு நோக்கி செல்வதில்லை. ஆகையால் பாஹ்யலோகம் மூன்றில் விருப்பம் உடையவர்கள் புத்ர கர்ம அபரபிரஹ்ம வித்யா இவைகள் சாதனம்.“पुत्रेणायं लोको जय्यो नान्येन कर्मणा” (புத்ரேண அயம் லோகோ ஜய்யோ நான்யேனகர்மணா) முதலிய சுருதிகளால் சித்திக்கிறது. ஆகையால் அதை அடைய விரும்புவர்களுக்கு புத்திரன் முதலிய சாதனங்களைப் பரித்தியாகம் செய்து சந்நியாசத்தை ஏற்றுக்கொள்வது சரியானது ஆகும். ஏன் எனில் சந்நியாசம் அவைகளின் சாதனம் அல்ல. ஆகையால் இந்த லோகத்தையே இச்சிப்பவர்கள் சந்நியாசம் மேற்கொள்கிறார்கள். என்று நிச்சயம் செய்வது பொருத்தமானதாகும்.
भाष्यम् - आत्मलोकप्राप्तिर्हि अविद्यानिवृत्तौ स्वात्मन्य-वस्थानमेव, तस्मादात्मानं चेल्लोकमिच्छति यः, तस्य सर्वक्रियोपरम एव आत्मलोकसाधनं मुख्यमन्तरङ्गम्, यथा पुत्रादिरेव बाह्यलोक-त्रयस्य। पुत्रादिकर्मण आत्मलोकं प्रति असाधनत्वात्। असंभवेन च विरुद्धत्वमवोचाम। तस्मादात्मानं लोकमिच्छन्तः प्रव्रजन्त्यैव, सर्वक्रियाभ्यो निवर्तेरन्नेवेत्यर्थः। यथा च बाह्यलोकत्रयार्थिनः प्रति नियतानि पुत्रादीनि साधनानि विहितानि, एवमात्मलोकार्थिनः सर्वैषणानिवृत्तिः पारिव्राज्यं ब्रह्मविदो विधीयत एव।
अनुवादः - ச.பா- அவித்யா நீங்கிய உடன் தன் ஆத்மாவில் நிலைபெற்றிருத்தலே ஆத்மலோக பிராப்த்தி. ஆகையால் எவர் ஆத்மலோகத்தை இச்சித்தால் அவருடைய எல்லா கிரியைகளும் அடங்கி முக்கிய அங்கமான ஆத்மலோக சாதனம் ஆகிறது. எவ்வாறு பாஹ்யலோகத்திரயங்களுக்கு புத்திரன் முதலியவைகளைப்போல ஆகும். ஆத்மலோகத்தைக் குறித்து அசாதனம் ஆவதால் அந்த சம்பவம் விருத்தமானது என்று கூறினோம் ஆகையால் ஆத்மலோகத்தை இச்சிப்பவர்கள் எல்லா கிரியைகளில் இருந்து விடுபடுகிறார்கள். எல்லா கிரியைகளில் இருந்தும் நிவிர்த்தி ஆனால்தான் ஆத்மலோக பிராப்த்தி ஏற்படும். எவ்வாறு பாஹ்யமான மூன்று லோகங்களை விரும்புவர்களுக்கு நித்ய புத்திரன் முதலிய சாதனங்கள் விதிக்கப்படுகின்றனவோ அவ்வாறு ஆத்மலோகத்தை இச்சிப்பவர்களுக்கு எல்லா ஏஷணா நிவிர்த்தியாகிய சந்யாசம் விதிக்கப்பட்டுள்ளது.
भाष्यम् - कुतः पुनस्ते आत्मलोकार्थिनः प्रव्रजन्त्येवे-त्युच्यते, तत्र अर्थवादवाक्यरूपेण हेतुं दर्शयति- एतद्ध स्म वै तत्। तदेतत् पारिव्राज्ये कारणमुच्यते- ह स्म वै किल पूर्वे अतिक्रान्त-कालीना विद्वांसः- आत्मज्ञाः, प्रजां कर्म अपरब्रह्मविद्यां च, प्रजोपलक्षितं हि त्रयमेतद् बाह्यलोकत्रयसाधनं निर्दिश्यते“प्रजाम्” इति। प्रजां किम्? न कामयन्ते, पुत्रादिलोकत्रयसाधनं न अनुतिष्द्भन्तीत्यर्थः।
अनुवादः - ச.பா- மேலும் எதனால் அந்த ஆத்மலோகத்தை இச்சிப்பவர்கள் சந்நியாசம் மேற்கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் அர்த்தவாத வாக்கிய ரூபத்தால் காரணம் தெரிவிக்கிறது -“एतद्ध स्म वै तत्” (ஏத்த ஸ்ம வை தத்) என்று அந்த இந்த பரிவிராஜ்யத்திற்குக் காரணம் கூறப்படுகிறது. பூர்வம் என்பது சென்ற காலத்தைக் கடந்த வித்வான்களாகிய ஆத்மக்ஞர்கள். பிராஜாம், கர்ம, அபர பிரஹ்மவித்யா ஆகிய இந்த பாஹ்ய லோகங்களுக்கான சாதனங்களையும் பிரஜாம்“प्रजाम्” என்று நிர்தேசம் செய்யப்பட்டது. பிரஜாம் என்பது என்ன? காமனை செய்யாமல் இருப்பது அதாவது புத்திரன் முதலிய மூன்று லோகங்களின் சாதனத்தை அனுஷ்டானம் செய்யாமல் இருப்பது.
भाष्यम् - शङ्का - ननु अपरब्रह्मदर्शनमनुतिष्द्भन्त्येव, तद्बलाद्धि व्युत्थानम्।
अनुवादः - ச.பா- சங்கை- ஆனால் அபர பிரஹ்ம தர்சனத்தை அனுஷ்டித்தால் ஏற்பட்ட பலத்தால் அல்லவா வியுத்தானம் (சந்நியாசம்) ஏற்படுகிறது.
भाष्यम् - समाधानम् - न, अपवादात्,“ब्रह्म तं परादा-द्योऽन्यत्रात्मनो ब्रह्म वेद” (२।४।६)“सर्वं तं परादात्” (२।४।६) इति अपरब्रह्मदर्शनमप्यपवदत्येव, अपरब्रह्मणोऽपि सर्वमध्या-न्तर्भावात्,“यत्र नान्यत्पश्यति” (छा०उ०७।२८) इति च, पूर्वापर-वाह्यान्तरदर्शनप्रतिषेधाच्च“अपूर्वमनपरमनन्तरमबाह्यम्” (बृ०उ०२।५।१९) इति“तत्केन कं पश्येत विजानीयात्” (बृ०उ०२।४।१४) इति च, तस्मान्न आत्मदर्शनव्यतिरेकेण अन्यद् व्युत्थानकारणमपेक्षते।
अनुवादः - ச.பா- அது அபவாதம் ஆவதால் அவ்வாறு அல்ல.“ब्रह्म तं परादाद्योऽन्यत्रात्मनो ब्रह्म वेद” (பிரஹ்ம தம் பராதாத்யோ அன்யத்ராத்மனோ பிரஹ்ம வேத),“सर्वं तं{É®úÉnùÉiÉ” (சர்வம் தம் பராதாத்) என்று அபர பிரஹ்ம தர்சனமும் அபவாதத்தையே செய்கிறது. ஏன் எனில் அபரபிரஹ்மமும் எல்லாவற்றின் (உள்ளும்) அந்தர்பாவமாய் இருக்கிறது.“यत्र नान्यत्पश्यति” (யத்ர நான்யத் பஷ்யதி) என்றும், அவ்வாறே“अपूर्वमनपरमनन्तरमबाह्यम्” (அபூர்வமனமனந்தரம பாஹ்யம்) இன்று இவ்வாறு பிரஹ்மத்தில் பூர்வ, அபர, பாஹ்யம் அவ்வாறே அந்தர் திருஷ்டிகளும் நிஷேதம் செய்யப்பட்டது. மேலும்“तत्केन कं पश्येत विजानीयात्” (தத்கேன கம் பஷ்யேத் விஜானீயாத்) என்றும் சுருதியில் கூறப்பட்டுள்ளது. ஆகையால் ஆத்ம தர்சனத்தைத்தவிர வேறு எந்த ஒரு காரணத்தை அபேக்ஷித்து வியுத்தானம் சித்திக்காது.
भाष्यम् - कः पुनस्तेषामभिप्रायः? इत्युच्यते- किं प्रयोजनं फलं साध्यं करिष्यामः प्रजया साधनेन, प्रजा हि बाह्यलोकसाधनं निर्ज्ञाता, सच बाह्यलोको नास्त्यस्माकमात्मव्यतिरिक्तः, सर्वं हि अस्माकमात्मभूतमेव स सर्वस्य च वयमात्मभूताः। आत्मा च नः आत्मत्वादेव न केनचित् साधनेनोत्पाद्य आप्यो विकार्यः संस्कार्यो वा।
अनुवादः - ச.பா- மேலும் அவற்றின் (வ்யுத்தானம் செய்வதின்) அபிப்பிராயம் என்ன? கூறப்படுகிறது- பிரஜா சாதனத்தால் எந்த பிரயோஜன பலத்தை அதாவது சாத்தியத்தை அடைவோம்? பிரஜா பாஹ்யலோக சாதனம் என்பது அறிந்ததே. அந்த பாஹ்ய லோகமும் நம்முடைய ஆத்மாவை விடவேறானது அல்ல. எல்லாம் நம்முடைய ஆத்மா ஸ்வரூபமே. நாமும் எல்லோருடைய ஆத்ம ஸ்வரூபமாகவே இருக்கின்றோம் அவ்வாறே நம்முடைய ஆத்மாவே ஆத்மா ஆவதால் வேறு சாதனங்களாகிய உத்பாத்ய, ஆப்ய, விகாரியம் மேலும் சம்ஸ்காரியம் ஆகியவைகள் இல்லை.
भाष्यम् - यदप्यात्मयाजिनः संस्कारार्थं कर्मेति, तदपि कार्यकरणात्मदर्शनविषयमेव, इदं मे अनेन अङ्गं संस्क्रियते इत्य-ङ्गािङ्गत्वादिश्रवणात्, न हि विज्ञानघनैकरसनैरन्तर्यदर्शिनोऽ-ङ्गािङ्गसंस्कारोपधानदर्शनं संभवति। तस्मान्न कििञ्चत् प्रजादिसाधनैः करिष्यामः, अविदुषां हि तत् प्रजादिसाधनैः कर्तव्यं फलम्। न हि मृगतृष्णिकायामुदकपानाय तदुदकदर्शी प्रवृत्त इति तत्र ऊषरमात्रमुदकाभावं पश्यतोऽपि प्रवृत्तिर्युक्ता, एवमस्माकमपि परमार्थात्मलोकदर्शिनां प्रजादिसाधनसाध्ये मृगतृष्णिकादि-समेऽविद्वद्दर्शनविषये न प्रवृत्तिर्युक्तेत्यभिप्रायः।
अनुवादः - ச.பா- ஆத்மயாஜிக்கு சம்ஸ்காரத்தின் பொருட்டு கர்மம் என்றாலும் அது தேஹ இந்திரியத்தில் ஆத்மதர்சன விஷயமாகின்றது. இதனால் என் அங்கம் சம்ஸ்காரம் (சுத்தம்) ஆகட்டும் என்று அங்காங்கி முதலியவை சுருதியினால் அறியப்படுகிறது. ஆனால் விஞ்ஞானகன ஏகரசத்தை நிரந்தர தர்சிக்கு அங்காங்கி சம்ஸ்காரத்தை அவலம்பிப்பது என்பது சம்பவிக்காது. ஆகையால் பிரஜா முதலிய சாதனங்களை செய்வதால் பிரயோஜனம் இல்லை. அவித்வான்களே அந்த பிரஜா முதலிய சாதனங்களால் செய்து பலனை அடையவேண்டும். கானல் நீரைப்பார்த்து தண்ணீரை அருந்துவதற்காக அதன்பக்கம் செல்கின்றான். அவ்வாறே கானல் நீர் என்று அறிந்து அதைக் குறித்து பிரவிர்திப்பது பொருந்தாது. அவ்வாறே நமக்கும், பரமார்த்தலோக தர்சிகளுக்கு பிரஜா முதலிய சாதன சாத்யத்தில் கானல் நீருக்கு சமமாய் உள்ள அவித்வான்கள் தர்சன விஷயத்தில் பிரவிர்த்தி பொருந்தாது என்பது அபிப்பிராயம்.
भाष्यम् - तदेतदुच्यते- येषामस्माकं परमार्थदर्शिनां नः, अयमात्मा अशनायादिविनिर्मुक्तः साध्वसाधुभ्यामविकार्योऽयं लोकः फलमभिप्रेतम्, न चास्यात्मनः साध्यसाधनादिसर्व-संसारधर्मविनिर्मुक्तस्य साधनं कििञ्चदेषितव्यम्, साध्यस्य हि साधनान्वेषणा क्रियते, असाधस्य सा धनान्वेषणायां हि, जलबुा स्थल इव तरणं कृतं स्यात्, खे वा शाकुनपदान्वेषणम्। तस्मादेतमात्मनं विदित्वा प्रव्रजेयुरेव ब्राणा, न कर्म आरभेरन्नित्यर्थः, यस्मात् पूर्वे ब्राह्मणा एवं विद्वांसः प्रजामकामयमानाः।
अनुवादः - ச.பா- அந்த இது கூறப்படுகிறது - எந்த பரமார்த்த தர்சிகளாகிய நாம் இந்த பசி முதலிய தர்மங்களில் இருந்து விடுபட்டும், சுபாசுப கர்மங்களால் விகாரம் அடையாமலும் இருக்கும் ஆத்மலோக ரூப பலமே நம்முடைய குறிக்கோள். இந்த சாத்ய சாதன முதலிய எல்லா சம்சார தர்மங்களில் இருந்தும் விடுபட்ட ஆத்மாவிற்கான சாதனத்தை தேடுவது சிறிதும் பொருந்தாது. சாத்திய வஸ்துவாய் இருந்தால் அல்லவா சாதனத்தைத் தேடவேண்டும். சாத்தியம் அல்லாததற்கு சாதனம் தேடுவது கானல்நீரை ஜலம் இருக்கிறது. என்று இடத்தைத் தாண்டுவதற்கும், ஆகாயத்தில் பறக்கும் பக்ஷியின் கால்களைத் தேடுவது போலும் ஆகும். ஆகையால் பிராஹ்மணர்கள் இந்த ஆத்மாவை அறிந்து சந்நியாசம் மேற்கொள்கிறார்கள். அறிந்த முன்னோர்களாகிய பிராஹ்மணர்கள் இவ்வாறு பிரஜையில் காமம் அற்றவர்களாய் கர்மத்தை ஆரம்பிப்பதில்லை என்பது பொருள்.
भाष्यम् - त एवं साध्य साधनसंव्यवहारं निन्दन्तः“अविद्वद्विषयोऽयम्” इति कृत्वा, किं कृतवन्तः? इत्युच्यते-“ते ह स्म किल पुत्रैषणायाश्च वित्तैषणायाश्च लोकैषणायाश्च व्युत्थायाथ भिक्षाचर्यं चरन्ति” इत्यादि व्याख्यातम्।
अनुवादः -ச.பா-இவ்வாறு சாத்ய சாதன ரூப வியவஹாரங்களை நிந்தனை செய்து“अविद्वद्विषयोऽयम्”(அவித்வத்விஷயோ அயம்) என்று கருதி என்ன செய்கிறார்கள்? என்பது கூறப்படுகிறது -“ते ह स्म किल पुत्रैषणायाश्च वित्तैषणायाश्च लोकैषणायाश्च व्युत्थायाथ भिक्षाचर्यं चरन्ति”(தேஹ ஸ்ம கில புத்ரைஷணாயாஷ்ச வித்தைஷணாயா ஷ்ச் லோகைஷணாயாஷ்ச வியுத்தாயாத்த பிக்ஷார்த்தம் சரந்தி) என்பவைகளால் வியாக்யாணம் செய்யப்பட்டது.
भाष्यम् - तस्मादात्मानं लोकमिच्छन्तः प्रव्रजन्ति प्रव्रजेयुः- इत्येष विधिरर्थवादेन संगच्छते, न हि सार्थवादस्य अस्य लोकस्तुत्याभिमुख्यमुपपद्यते, प्रव्रजन्तीत्यस्यार्थवादरूपो हि“एतद्ध स्म” इत्यादिरुत्तरो ग्रन्थः। अर्थवादश्चे,् नार्थवादान्तरमपेक्षेत, अपेक्षते तु एतद्ध स्म इत्याद्यर्थवादं“प्रवजन्ति” इत्येतत्।
अनुवादः -ச.பா-ஆகையால் ஆத்மலோகம் இச்சிப்பவர்கள் சந்நியாசம் செய்கிறார்கள் என்ற விதி அர்த்தவாதத்துடன் பொருந்தும். ஆனால் இந்த அர்த்தவாதத்துடன் கூடிய விதி இந்த ஆத்மலோகத்தின் ஸ்துதிக்குப் பொருந்தாது. ஆனால் பிரவிரஜந்தி(प्रव्रजन्ति)என்பது இந்த அர்த்தவாத ரூபம் ஆகும்“एतद्ध स्म”முதலியவை இனிவரும் கிரந்தத்தில் உள்ளது. அர்த்தவாதம் என்றால் அது வேறு அர்த்தவாதத்தை அபேக்ஷிக்காது. அபேக்ஷிக்கிறது என்றால்(प्रव्रजन्ति)(ஏதத்தஸ்ம) முதலிய அர்த்தவாதம்“பிரவிரஜந்தி” என்பது ஆகும்.
भाष्यम् - यस्मात् पूर्वे विद्वांसः प्रजादिकर्मभ्यो निवृत्ताः प्रव्रजितवन्त एव, तस्मादधुनातना अपि प्रव्रजन्ति प्रव्रजेयुः- इत्येवं संबध्यमानं न लोकस्तुत्यभिमुखं भवितुमर्हति, विज्ञानसमा-नकर्तृकत्वोपदेशादित्यादिना अवोचाम।
अनुवादः - ச.பா- எதனால் முன்னோர்களான வித்வான்கள் பிரஜாமுதலிய கர்மங்களிலிருந்து நிவிர்த்தி அடைந்து சந்நியாசம் மேற்கொண்டார்கள். ஆகையால் இப்பொழுது உள்ளவர்களும் அவ்வாறே சந்யாசம் மேற்கொள்கிறார்கள் (பிரவ்ரஜந்தி-(प्रव्रजन्ति) இவ்வாறு உள்ள சம்பந்தம் உள்ள வாக்கியம் ஆத்ம லோகத்தின் ஸ்துதிக்காக சம்பவிக்காது. ஏன் எனில் விஞ்ஞானத்திற்கும், வியுத்தானத்திற்கும் ஒரே கர்த்தா என்று ஸ்ருதி உபதேசிக்கின்றது. என்பது முதலியவை முன்பே கூறப்பட்டது.
भाष्यम् - वेदानुवचनादिसहपाद्भाच्च, यथात्मवेदनसाधनत्वेन विहितानां वेदानुवचनादीनां यथार्थत्वमेव, नार्थवादत्वम्, तथा तैरेव सह पद्भितस्य पारिव्राज्यस्य आत्मलोकप्राप्तिसाधनत्वेनार्थ वादत्वमयुक्तम्।
अनुवादः - வேதானுவசனம் முதலியவைகளுடன் சேர்ந்து கூறப்பட்டுள்ளதால் எவ்வாறு ஆத்மாவை அறிவதற்கு சாதனமாய் விஹிதமான வேதானுவசனம் முதலியவைகள் யதார்த்தமே யாகும். அர்த்தவாதம் ஆகாது. எவ்வாறு அவைகளுடன் சேர்ந்து படிக்கப்பட்டுள்ளதால் (கூறப்பட்டுள்ளதால்) ப்ரவ்ராஜ்யத்திற்கு (சந்நியாசத்திற்கு) ஆத்மலோக பிராப்த்தி சாதனமாய் இருப்பதால் அர்த்தவாதம் பொருந்தாது.
भाष्यम् - फलविभागोपदेशाच्च,“एतमेवात्मानं लोकं विदित्वा” इति अन्यस्माद् वाह्याद् लोकादात्मानं फलान्तरत्वेन प्रविभजाति, यथा“पुत्रेणैवायं लोको जय्यो नान्येन कर्मणा, कर्मणा पितृलोकः” (१।५।१६) इति।
अनुवादः - ச.பா- பலவிபாகம் உபதேசிக்கப்பட்டதால்“एतमेवात्मानं लोकं विदित्वा” (ஏதமேவாத்மானம் லோகம் விதித்வா) என்ற மற்ற வெளி உலகங்களைக் காட்டிலும் ஆத்மாவை வேறு பலமாக பிரித்துக் காட்டுகிறது. எவ்வாறு“पुत्रेणैवायं लोको जय्यो नान्येन कर्मणा, कर्मणा पितृलोकः” (புத்ரேனைவாயம் லோகோ ஐய்யோ நான்யேன கர்மணா, கர்மணா பித்ருலோக:) என்று பல விபாகம் செய்யப்பட்டுள்ளது.
भाष्यम् - न च प्रव्रजन्तीत्येतत् प्राप्तवल्लोकस्तुतिपरम्, प्रधानवच्चार्थवादापेक्षम्, सकुच्छुतं स्यात्, तस्माद् भ्रान्तिरेवैषा- लोकस्तुतिपरमिति।
अनुवादः - ச.பா- சந்நியாசம்- என்பது வேறு பிரமாணத்தால் அடையப்பட்டது போல் லோகஸ்துதி (அர்த்தவாதம்) பரம் அல்ல. அவ்வாறே மற்ற ப்ரதான கர்மத்தைப் போல் வேறு அர்த்தவாதத்தை அபேக்ஷிப்பது என்பது சுருதியில் ஏதோ ஒரு தடவைக் கேட்டிருக்கலாம். ஆகையால் ஆத்மலோக ஸ்துதி பரம் என்பது பிராந்தி மாத்ரமே.
भाष्यम् - न च अनुष्द्भेयेन पारिव्राज्येन स्तुतिरुपपद्यते। यदि पारिव्रज्यमनुष्द्भेयमपि सदन्यस्तुत्यर्थं स्यात्, दर्शपूर्णमासा-दीनामप्यनुष्द्भेयानां स्तुत्यर्थता स्यात्। न चान्यत्र कर्तव्यतैतस्माद् विषयान्नर्ज्ञाता, यत इह स्तुत्यर्थो भवेत्। यदि पुनः क्वचिद् विधिः परिकल्प्येत पारिव्राज्यस्य, स इहैव मुख्यो नान्यत्र संभवति। यदप्यनधिकृतविषये पारिव्राज्यं परिकल्प्यते, तत्र वृक्षाद्यारोहणा-द्यपि, पारिव्राज्यवत् कल्प्येत, कर्तव्यत्वेनानिर्ज्ञातत्वाविशेषात्। तस्मात् स्तुतित्वगन्धोऽप्यत्र न शक्यः कल्पयितुम्।
अनुवादः -ச.பா-அனுஷ்டானம் செய்வதற்கு யோக்கியமுள்ள பாரிப்ராஜ்யத்திற்கு எந்த ஒரு ஸ்துதியும் உண்டாகாது. அது அனுஷ்டானத்திற்கு யோக்யமாய் இருந்தாலும் அது அந்யவற்றின் ஸ்திதியின் பொருட்டானால் தர்ச பூர்ணமாஸ்பய முதலிய அனுஷ்டேய கர்மங்களும் ஸ்துதியின் பொருட்டாகும். இந்த ஆத்ம ஞானரூப விஷயத்தை விடுத்து மற்றஎந்த ஒரு கர்த்தவ்யத்தன்மை அறியப்படவில்லையெனில் அதனால் அங்கு அது ஸ்துதி அர்த்தமாகும். மேலும் ஏதாவது ஒரு விதியை பாரிவ்ராஜ்யத்திற்கு கல்பித்தால் அது இங்குதான் முக்யமாகும். மற்றதில் சம்பவிக்காது. கர்மத்திற்கு அனதிகாரி விஷயத்தில் பாரிவிராஜ்யம் கல்பித்தால் அங்கு மரம் ஏறுதல் முதலியவைகளிலும் பாரிவிராஜ்யத்தைக் கல்பிக்க வேண்டிவரும். ஏன் எனில் கர்த்தவ்ய ரூபமாய் அறியப்படாதது இரண்டிலும் சமானம் ஆகாததால். ஆகையால் இந்த வாக்கியத்தில் வாசனைக்கு கூட ஸ்துதி ரூபத்தை கல்பிக்க முடியாது.
भाष्यम् - शङ्का - यद्ययमात्मा लोक इष्यते, किमर्थं तत्प्राप्तिसाधनत्वेन कर्माण्येव नारभेरन्, किं पारिव्राज्येनेति?
अनुवादः - ச.பா- சங்கை- ஆத்மலோகத்தில் இச்சை இருந்தால் எதற்காக அதை அடைவதற்கான சாதனரூபமாய் கர்மத்தை ஆரம்பிக்காமல் பாரிவிராஜ்யத்தால் என்ன பிரயோஜனம்?
भाष्यम् - समाधानम् - अत्रोच्यते- अस्य आत्मलोकस्य कर्मभिरसंबन्धात्। यमात्मानमिच्छन्तः प्रव्रजेयुः स आत्मा साधनत्वेन फलत्वेन च उत्पाद्यत्वादिप्रकाराणामन्यतमत्वेनापि कर्मभिनं संबध्यते, तस्मात्“स एष नेति नेत्यात्माऽगृह्यो न हि गृह्यते” इत्यादिलक्षणः-
अनुवादः - ச.பா- சமாதானம்- இதைக் குறித்துக் கூறப்படுகிறது- அந்த ஆத்மலோகத்திற்கு கர்மங்களால் சம்பந்தம் கிடையாது. எவர் ஆத்மாவை இச்சிக்கின்றார்களோ அவர் சந்நியாசம் மேற்கொள்ளவேண்டும். அந்த ஆத்மா சாதனத்தாலோ பல ரூபத்தாலோ அவ்வாறே உத்பத்தி முதலிய பிரகாரங்களுக்கு வேறாய் இருப்பதால் கர்மங்களுடன் சம்பந்தப்படவில்லை. ஆகையால்“स एष नेति नेत्यात्माऽगृह्यो न हि गृह्यते” ச ஏஷ நேதி நேத்யாத்மாஅக்ருஹ்யோ ஹ் ஹி க்ருந்யதே) என்பது முதலிய லக்ஷணங்கள் உடையது
भाष्यम् - यस्मादेवं लक्षण आत्मा कर्मफलसाधना-सम्बन्धीसर्वसंसारधर्मविलक्षणः, अशनायाद्यतीतः, अस्थूलादि-धर्मवान्, अजोऽजरोऽमरोऽमृतोऽभयः सैन्धवघनवद्विज्ञानैक-रसस्वभावः स्वयंज्योतिरेक एवाद्वयः, अपूर्वोऽनपरोऽनन्त-रोऽबाह्यः- इत्येतदागमतस्तर्कतश्च स्थापितम्, विशेषतश्चेह जनकयाज्ञवल्क्यसंवादेऽस्मिन्, तस्मादेवं लक्षणे आत्मनि विदिते आत्मत्वेन नैव कर्मारम्भ उपपद्यते। तस्मादात्मा निर्विशेषः।
अनुवादः - ச.பா- ஏன்எனில் இவ்வாறு லக்ஷணமுடைய ஆத்மா பலசாதன சம்பந்தமற்றது, பசி முதலியவைகளைக் கடந்தது, ஸ்தூல முதலிய தர்மங்கள் அற்றது, அஜம், அஜரம், அமரம், அம்ருதமயமானது, உப்புக்கட்டிபோல் விஞ்ஞான ஏகரசஸ்வபாவமானது, ஸ்வயம் ஜ்யோதி, ஒன்றே அத்வயம், அபூர்வம், அநபரம், உள்ளும் வெளியும் அற்றது - என்று ஆகமத்தாலும், தர்க்கத்தாலும் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஜனகர் யாக்ஞவல்கியர் சம்வாதம் மூலமாய் விசேஷமாய் நிரூபிக்கப்பட்டது. ஆகையால் இந்த லக்ஷணங்களுடைய ஆத்மாவை ஆத்மரூபமாய் அறிந்த பொழுது கர்ம ஆரம்பம் என்பது பொருந்தாது ஆகையால் ஆத்மா நிர்விசேஷம்.
भाष्यम् - न हि चक्षुष्मान् पथि प्रवृत्तोऽहनि कूपे कण्टके वा पतति, कृत्स्नस्यच कर्मफलस्य विद्याफलेऽन्तर्भावात्, न चायत्नप्राप्ये वस्तुनि विद्वान् यत्नमातिष्द्भति।“अङ्के चैन्मधु विन्देत किमर्थं पर्वतं व्रजेत्। इष्टस्यार्थस्य संप्राप्तौ को विद्वान् यत्नमाचरेत्”“सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते” (४।३३) इति गीतासु। इहापि चैतस्यैव परमानन्दस्य। ब्रह्मवित्प्राप्यस्यान्यानि भूतानि मात्रामुपजीवन्तीत्युक्तम्। अतो ब्रह्मविदां न कर्मारम्भः।
अनुवादः - ச.பா- கண்கள் உடையவன் பகலில் வழியில் செல்லும் பொழுது கிணற்றிலோ அல்லது முட்புதரிலோ விழுந்து விடுவதில்லை. கர்மபலன்கள் எல்லாம் ஞானபலத்தில் அந்தர்பாவமாகி (அடங்கி) விடுகிறது, அவ்வாறே பிரயத்தனம் இல்லாமல் கிடைக்கும் வஸ்துவிற்காக பிரயத்தனம் செய்வதில்லை.“अङ्के SÉèx¨ÉvÉÖ Ê´ÉxnäùiÉ ÊEò¨ÉlÉÈ {É´ÉÇiÉÆ µÉVÉäiÉÂ* <¹]õºªÉÉlÉǺªÉ ºÉÆ|ÉÉ{iÉÉè EòÉä Ê´ÉuùÉxÉ ªÉixɨÉÉSÉ®äúiÉ”“सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते” (அங்கே சேன்மது விந்தேத கிமர்த்தம் பர்வதம் வ்ரஜேத். இஷ்டஸ்யர்த்தஸ்ய சம்ப்ராப்த்தெள கோ வித்வான் யத்னமாசரேத்), (சர்வம் கர்மாக்கிலம் பார்த்த ஞானே பரிசமாப்யதே) என்று கீதையிலும் கூறப்பட்டுள்ளது. பிரஹ்மவேதாவால் அடைய யோக்யமான பரமானந்தத்தின் ஒரு அம்சமாத்திரத்தால் மற்ற எல்லா பூதங்களும் (ஜீவர்களும்) ஜீவிக்கின்றன என்று கூறப்பட்டது. ஆகையால் பிரஹ்ம வேதாவிற்காக கர்மம் ஆரம்பிக்க வேண்டியதில்லை.
भाष्यम् - यस्मात् सर्वैषणाविनिवृत्तः स एष नेति नेत्यात्मानमात्मत्वेनोपगम्य तद्रूपेणैव वर्तते, तस्माद् एतमेवंविदं नेति नेत्यात्मभूतम्, उ ह एव एते वक्ष्यमाणे न तरतो न प्राप्नुतः- इति युक्तमेवेति वाक्यशेषः। के ते? इत्युच्यते-“अतोऽ-स्मान्निमित्तात् शरीरधारणादिहेतोः पापम् अपुण्यं कर्म अकरवं कृतवानस्मि, कष्टं खलु मम वृत्तम्, अनेन पापेन कर्मणा अहं नरकं प्रतिपत्स्ये” इति योऽयं पश्चात् पापं कर्म कृतवतः- परितापः स एनं नेति नेत्यात्मभूतं न तरति।
अनुवादः - ச.பா- ஏன்எனில் எல்லா ஏஷணைகளும் நிவிர்த்தி அடைந்தவன் நேதி நேதி என்று ஆத்மாவை ஆத்மரூபமாய் அறிந்து அந்த ரூபமாகவே ஆகின்றான். ஆகையால் “நேதி நேதி” என்று ஆத்மரூப புருஷனை மேலே கூறப்போகும் இருவர் அடையமாட்டார்கள் என்பது உசிதமே, அந்த இருவர் யார்? ஆகையால் அதாவது கூறப்படும் நிமித்தத்தால் சரீரதாரணம் முதலிய காரணத்தால்“पापं अपुण्यं कर्म अकरवं कृतवानस्मि, कष्टं खलु मम वृत्तम्, अनेन पापेन कर्मणा अहं नरकं प्रतिपत्स्ये” (பாபம் அபுண்யம் கர்ம அகரவம் க்ருதவானஸ்மி கஷ்டம் கலு மம வ்ருத்தம், அனேன பாபேன கர்மணா அஹம் நரகம் பிரதிபத்ஸ்யே) என்று எவன் பாபகர்மாவை செய்தானோ அந்த புருஷனிடம் எந்த பச்ச தாபம் உள்ளதோ அதனால் இந்த “நேதி நேதி” என்று சுருதியினால் வர்ணிக்கப்பட்ட ஆத்மஸ்வரூபத்தை அந்த புருஷன் அடையமாட்டான்.
भाष्यम् - तथा-“अतः कल्याणं फलविषयकामान्निमित्ताद् यज्ञदानादिलक्षणं पुण्यं शोभनं कर्म कृतवानस्मि, अतोऽहमस्य फलं सुखमुपभोक्ष्ये देहान्तरे” इत्येषोऽपि हर्षस्तं न तरति। उभे उ ह एव एष ब्रह्मविदेते कर्मणी तरति पुण्यपापलक्षणे। एवं ब्रह्मविदः संन्यासिन उभे अपि कर्मणी क्षीयते- पूर्वजन्मनि कृते ये ते, इह जन्मनि कृते ये ते च, अपूर्वे च नारभ्येते।
अनुवादः -ச.பா-அவ்வாறே-“अतः कल्याणं फलविषयका-मान्निमित्ताद् यज्ञदानादिलक्षणं पुण्यं शोभनं कर्म कृतवानस्मि, अतोऽहमस्य फलं सुखमुपभोक्ष्ये देहान्तरे”(அத: கல்யாணம் பல விஷய காமான் நிமித்தத்வாத் யஞ்ஞ தானாதி லக்ஷணம் புண்யம் ஷோபனம் கர்ம க்ருதவானஸ்மி, அதோ அஹமஸ்ய பலம் சுகமுபபோக்ஷ்யே தேஹாந்தரே) என்றசந்தோஷத்தாலும் அதை அடையமுடியாது. பிரஹ்ம வேத்தா இந்த புண்ய பாபரூபங்களாகிய. இரண்டு விதமான கர்மங்களையும் கடக்கின்றான். இவ்வாறான பிரஹ்ம வேதாவாகிய சந்நியாசிக்கு முன் ஜன்மத்தில் செய்த புண்யபாங்களும், இந்த ஜன்மத்தில் செய்த புண்ய பாபங்களும், அபூர்வ புண்ய பாபங்களும் எப்பொழுதும் ஆரம்பிக்காது.
भाष्यम् - किं च नैनं कृताकृते- कृतं नित्यानुष्द्भानम्, अकृतं तस्यैव अक्रिया, ते अपि कृताकृते एनं न तपतः, अनात्मज्ञं हि कृतं फलदानेन, अकृतं प्रत्यवायोत्पादनेन तपतः। अयं तु ब्रह्मविद् आत्मविद्याग्निना सर्वाणि कर्माणि भस्मीकरोति,“यथैधांसि समिद्धोऽग्निः” (गीता ४।३७) इत्यादिस्मृतेः शरीरम्भकयोस्तु उपभोगेनैव क्षयः। अतो ब्रह्मविदकर्मसम्बन्धी।।
अनुवादः - ச.பா- இவ்வாறு இந்த க்ருத அக்ருத என்பது - க்ருதம் - நித்ய அனுஷ்டானம் ஆகும். அக்ருதம் என்பது அதை செய்யாமல் இருப்பது. அந்த க்ருதம் அக்ருதம் இரண்டும் பிரஹ்மவேத்தாவை தபிக்காது. அநாத்மஞ்ஞனுக்கே செய்த பலன் வாயிலாயும், செய்யாததினால் உண்டாகும் பிரத்யவாயத்தை அடைந்து துன்புறுகிறார்கள். ஆனால் இந்த பிரஹ்மவித் ஆத்மவித்தையாகிய அக்னியினால் எல்லா கர்மங்களையும் சாம்பலாக்கிவிடுகிறான்.“यथैधांसि समिद्धोऽग्निः” (யதைதாம் சி சமித்தோ அக்னி:) முதலிய ஸ்மிருதிகளால் சித்திக்கிறது. புதிய சரீரம் எடுப்பவர்களுக்கு பாப புண்ய கர்மங்கள் உண்டாகின்றன. அதை அனுபவித்தே ஒழிக்க வேண்டும். ஆகையால் பிரஹ்ம வேத்தாக்களுக்கு கர்மத்துடன் சம்பந்தமே இல்லை.
मन्त्रः - तदेतदृचाभ्युक्तम्। एष नित्यो महिमा ब्राह्मणस्य न वर्धते कर्मणा नो कनीयान्। तस्यैव स्यात् पदवित्तं विदित्वा न लिप्यते कर्मणा पापकेनेति। तस्मादेवंविच्छान्तो दान्त उपरतस्तितिक्षुः समाहितो भूत्वात्मन्येवात्मानं पश्यति सर्वमात्मानं पश्यति नैनं पाप्मा तरति सर्वं पाप्मानं तरति नैनं पाप्मा तपति सर्वं पाप्मानं तपति विपापो विरजोऽविचिकित्सो ब्राह्मणो भवत्येष ब्रह्मलोकः सम्राडेनं प्रापितोऽसीति होवाच याज्ञवल्क्यः सोऽहं भगवते विदेहान् ददामि मां चापि सह दास्यायेति।। २३।।
अनुवादः-மந்திரம்- இதைக்குறித்து பிராஹ்மண மூலமாய் இந்த ரிக்கால் அதாவது மந்திரத்தால் கூறப்பட்டுள்ளது - இந்த பிரஹ்ம வேத்தா நித்ய மஹிமா, எந்த கர்மத்தினாலும் பெருகுவதும் இல்லை. குறைவதும் இல்லை என்று அந்த மஹிமையின் ஸ்வரூபத்தை அறியவேண்டும். அதை அறிவதால் பாப கர்மா தீண்டுவது இல்லை. ஆகையால் இவ்வாறு அறிந்தவன் சமம், தமம், உபரதி, திதீக்ஷா சமாதனமாகி ஆத்மாவில் ஆத்மாவை அறிகின்றான் எல்லாவற்றையும் ஆத்மாவாகவே காண்கின்றான். அந்த (புண்ய பாபரூபம்) பாபத்தை அடையமாட்டான், எல்லா பாபங்களையும் தாண்டி விடுகிறான். இந்த பாபத்தினால் தாபத்தை அடைவதில்லை. அது எல்லா பாபங்களையும் எரித்துவிடுகிறது. அந்த பாபமற்ற, நிஷ்காம, நிஷ்சம்சய (சந்தேஹமற்ற) பிராஹ்மணாகின்றான். ஹே சம்ராட்! இது பிரஹ்மலோகம். இதை நீ அடைந்து விட்டாய் இவ்வாறு யாக்ஞவல்க்யர் கூறினார். (ஜனகர்) - நான் ஶ்ரீமானாகிய உங்களுக்கு விதேஹ தேசத்தை அளிக்கிறேன். அதனுடன் தங்களுக்கு சேவை செய்வதற்காக என்னை தங்களுக்கு அர்பணிக்கின்றேன்.
भाष्यम् - तदेतद् वस्तु ब्राह्मणेनोक्तमृचा मन्त्रेण अभ्युक्तं प्रकाशितम्। एष नेति नेत्यादिलक्षणो नित्यो महिमा, अन्ये तु महिमानः कर्मकृता इत्यनित्याः, अयं तु तद्विलक्षणो महिमा स्वाभाविकत्वान्नित्यो ब्रह्मविदो ब्राह्मणस्य त्यक्तसर्वैषणस्य।
अनुवादः-ச.பா- பிராஹ்மணத்தால் கூறப்பட்ட அந்த விஷயம் இந்த ரிக்கால் அதாவது மந்திரத்தால் விளக்கப்படுகிறது. நேதி நேதி முதலியவைகளால் லக்ஷண செய்யப்பட்டது நித்ய மஹிமா. அதைவிட வேறான கர்மத்தினால் உண்டாகும் மஹிமை அநித்தியம், பிராஹ்மணனுக்கு ஏஷணாத்திரயத்தைத் தியாகம் செய்த பிரஹ்ம வேதாவின் இதைவிட லக்ஷணமான மஹிமை ஸ்வாபாவிகமாகவே இருப்பதால் நித்தியம்.
भाष्यम् - कुतोऽस्य नित्यत्वमिति हेतुमाह- कर्मणा न वर्धते शुभलक्षणेन कृतेन बुद्धिलक्षणां विक्रियां न प्राप्नोति, अशुभेन कर्मणा नो कनीयान् नाप्यपक्षयलक्षणां विक्रियां प्राप्नोति। उपचयापचयहेतुभूता एव हि सर्वा विक्रिया इति एताभ्यां प्रतिषिध्यन्ते। अतोऽविक्रियात्वान्नित्य एष महिमा। तस्मात् तस्यैव महिम्नः, स्याद् भवेत्, पदवित्- पदस्य वेत्ता, पद्यते गम्यते ज्ञायत इति महिम्नः स्वरूपमेव पदम्, तस्य पदस्य वेदिता।
अनुवादः-ச.பா-இதற்கு எதனால் நித்யத்வம் என்று ஹேது கூறப்படுகிறது - கர்மத்தினால் பெருகுவது இல்லை. அதாவது சுபலக்ஷண கர்மங்களால் விருத்தி ரூப மாறுபாடு ஏற்படுவது இல்லை. அவ்வாறேஅசுப கர்மங்களால் சிறிதாகவும் அதாவது குறைகின்றதன்மை ரூப விகாரத்தையும் அடைவதில்லை. உபச்சயம் அபச்சய (விருத்தியாவதும், குறைவதும்) மான ஹேது வினாவேயே எல்லா விகாரங்களும் என்று இவைகளால் நிஷேதிக்கப்படுகிறது. ஆகையால் அவிக்கிரியை உடையது ஆனதால் இதன் மஹிமை நித்யம். ஆகையால் அந்த நித்ய மஹிமை வேதவித்திற்கேயாகும். பதவித்(पदवित्)என்பது பதத்தை அறிந்தவன், இந்த மஹிமையாகிய ஸ்வஸ்வரூபத்தை அடைகின்றான். அறிகிறான் என்பதாகும்.
भाष्यम् - किं तत्पदवेदनेन स्यादित्युच्यते- तं विदित्वा महिमानम्, न लिप्यते न सम्बध्यते कर्मणा पापकेन धर्माधर्मलक्षणेन, उभयमपि पापकर्मेव विदुषः।
अनुवादः-ச.பா-அந்த பதத்தை அறிவதால் என்ன ஆகும் என்பது கூறப்படுகிறது- அந்த மஹிமையை அறிந்து தர்மா தர்மலக்ஷணமான பாபகர்மாக்களினால் சம்பந்தம் அடையமாட்டான். புண்யம் பாபம் இரண்டும் பாபமேயாகும்.
भाष्यम् - यस्मादेवमकर्मसम्बन्धी एष ब्राह्मणस्य महिमा नेति नेत्यादिलक्षणः, तस्माद् एवंवित् शान्तः- बाह्येन्द्रियव्यापारत उपशान्तः, तथा दान्तः- अन्तःकरणतृष्णातो निवृत्तः- उपरतः सर्वैषणाविनिर्मुक्तः संन्यासी, तितिक्षुर्द्वन्द्वसहिष्णुः, समाहितः इन्द्रियान्तःकरणचलनरूपाद् व्यावृत्त्या एकाग्र्रूपेण समाहितो भूत्वा, तदेतदुक्तं पुरस्तात्-“बाल्यं च पाण्डित्यं च निर्विद्य” इति, आत्मन्येव स्वे कार्यकरणसंघाते आत्मानं प्रत्यक्वेतयितारं पश्यति।
अनुवादः-ச.பா-எதனால் இவ்வாறு இந்த நேதி நேதி முதலிய லக்ஷணமுடைய பிராஹ்மணனின் மஹிமா கர்மசம்பந்தமற்றது. ஆகையால் இவ்வாறு அறிந்தவன்“शान्तः” (சாந்த:)- வெளி இந்திரிய வியாபாரங்களில் இருந்து சாந்தம் அடைந்தவன். அவ்வாறே“दान्तः”(தாந்த:) - அந்தக் கரணத்தின் த்ருஷ்ணாவிலிருந்து நிவிர்த்தி ஆவது.“उपरतः”(உபரத:) எல்லா ஏஷணைகளில் இருந்தும் விடுபட்ட சந்நியாசி,“तितिक्षुः”திதிக்ஷு: - த்வந்துவங்களை சகித்தல்“समाहितः”(சமாஹித:) - இந்திரிய அந்தக்கரண சலனங்களில் இருந்து விடுபட்டு ஏகாக்ர ரூபமாய் சமாஹிதமாய் இருத்தல். இதைக் குறித்து இதற்கு முன் கூறப்பட்டது.“बाल्यं च पाण्डित्यं च निर्विद्य” (பாவ்யம் ச பாண்டித்யம் ச நிர்வித்ய) என்று, ஆத்மாவிலேயே அதாவது காரிய கரண சங்காத ரூபமான தன்னிடத்தில் அந்தர்வர்த்தி சேதன ஆத்மாவைப் பார்க்கின்றான்.
भाष्यम् - तत्र किं तावन्मात्रं परिच्छिन्नम्? नेत्युच्यते- सर्वं समस्तमात्मानमेव पश्यति, नान्यद् आत्मव्यतिरिक्तं वालाग्र-मात्रमप्यस्तीत्येवं पश्यति, मननान्मुनिर्भवति जाग्रत्स्वप्नसुषुप्ताख्यं स्थानत्रयं हित्वा।
अनुवादः-ச.பா-இதில் (இந்த சரீரத்தில்) அந்த அளவிற்கு பரிச்சின்னமான ஆத்மாவைப் பார்க்கின்றானா? அல்ல என்று கூறுகிறார்-எல்லாம் ஆத்மாவே என்று காண்கின்றான். ஆத்மாவிற்கு வ்யதிரிக்தமாக (வேறாக) முடியின் நுனி மாத்திர அளவும் மற்றொன்றைபார்ப்பது இல்லை. ஜாக்ர ஸ்வப்ன சுஷுப்தி எனப்படும் ஸ்தானம் மூன்றையும் நீக்கி மனனம் செய்வதால் முனி ஆகின்றான்.
भाष्यम् - एवं पश्यन्तं ब्राह्मणं नैनं पाप्मा पुण्यपाप-लक्षणास्तरति, न प्राप्नोति, अयं तु ब्रह्मवित् सर्वं पाप्मानं तरति- आत्मभावेनैव व्याप्नोति, अतिक्रामति। नैनं पाप्मा कृताकृत-लक्षणस्तपति इष्टफलप्रत्यवायोत्पादनाभ्याम्, सर्वं पाप्मानमयं तपति ब्रह्मवित् सर्वात्मदर्शनवनिना भस्मीकरोति।
अनुवादः-ச.பா-இவ்வாறு பார்க்கும் இந்த பிராஹ்மணனை பாப்மா அதாவது புண்ய பாப லக்ஷணமான தோஷம் அடையாது. இந்த பிரஹ்ம வித் எல்லா பாப்மாக்களையும் கடந்து இருக்கின்றான்- ஆத்மபாவனையினாலேயே வியாபித்திருக்கின்றான் அதாவது அதிகிராந்தி(अतिक्रान्ति)செய்கின்றான். இந்த க்ருதாக்ருத பாப்மா இஷ்ட பலத்தை அளிப்பதன் மூலமும், பிரத்யவாயம் ஏற்படுவதாலும் தாம் அடைய மாட்டான். அந்த பிரஹ்ம வித் சர்வாத்ம தர்சன அக்னியினால் எல்லா பாபங்ளையும் எரித்து சாம்பலாகின்றான்.
भाष्यम् - स एष एवंविद् विपापो विगतधर्माधर्मः, विरजो विगतराजः, रजः कामः, विगतकामः, अविचिकित्सः- छिन्नसंशयः, अहमस्मि सर्वात्मा परं ब्रह्मेति निश्चितमति, ब्राह्मणो भवति।
अनुवादः-ச.பா-அந்த இவ்வாறு அறிந்தவன் -“विपापः”(பாபம் அற்றவன்)-தர்மா தர்மம் அற்றவன்,“विरजः”(விரஜ:) ரஜ:-காமம்-காமம் அற்றவன்,“अविचिकित्सः”-சந்தேஹம் அற்றவன் அதாவது நான் சர்வாத்மா பரம்பிரஹ்மம் என்றநிச்சய புத்தி உள்ளவன் பிராஹ்மணன் ஆகின்றான்.
भाष्यम् - अयं त्वेवंभूत एतस्यामवस्थायां मुख्यो ब्राह्मणः, प्रागेतस्माद् ब्रह्मस्वरूपावस्थानाद् गौणमस्य ब्राह्मण्यम्। एष ब्रह्मलोकः- ब्रह्मैव लोको ब्रह्मलोको मुख्यो निरुपचरितः सर्वात्मभावलक्षणः हे सम्राट्। एनं ब्रह्मलोकं परिप्रापितोऽसि अभयं नेति नेत्यादिलक्षणम्- इति होवाच याज्ञवल्क्यः।
अनुवादः -இந்த அவஸ்தையை அடைந்த இந்த பிரஹ்ம வேத்தா முக்கிய பிராஹ்மணன், பிரஹ்ம வேதா ஸ்திதிக்குமுன் இவருடைய ஸ்திதி கெளண பிராஹ்மணத்துவம் ஆகும். இந்த பிரஹ்மலோகம் - பிரஹ்மமே லோகம் அது முக்கியம், உபசாரம் அல்ல. அது சர்வாத்மா பாவ லக்ஷணமாகும். ஹே சம்ராட்! இந்த நேதி நேதி முதலிய லக்ஷணமான அபயம் பிரஹ்ம லோகத்தை நீ அடைந்துவிட்டாய் என்று யாக்ஞவல்க்கியர் கூறினார்.
भाष्यम् - एवं ब्रह्मभूतो जनको याज्ञवल्क्येन ब्रह्मबाव-मापादितः प्रत्याह- सोऽहं त्वया ब्रह्मभावमापादितः सन् भगवते तुभ्यं विदेहान् देशान् मम राज्यं समस्तं ददामि, मां च सह विदेहैर्दास्याय दासकर्मणेददामीति च शब्दात् सम्बध्यते।
अनुवादः-ச.பா-இவ்வாறு யாக்ஞவல்க்யர் மூலமாய் பிரஹ்ம பாவத்தை அடைந்த ஜனகர் இவ்வாறு பதில் அளித்தார். உங்களால் பிரஹ்ம பாவத்தை அடைந்த அந்த நான் பகவானே உங்களுக்கு விதேஹ தேசமாகிய என் ராஜ்யம் முழுவதையையும் அளிக்கிறேன். அவ்வாறேவிதேஹ தேசத்துடன் தாச கர்மத்திற்காக என்னையும் அர்பணிக்கின்றேன் என்றார்.
भाष्यम् - परिसमापिता ब्रह्मविद्या सह संन्यासेन साङ्गा सेतिकर्तव्यता काः, परिसमाप्तः परमपुरुषार्थः, एतावत् पुरुषेण कर्तव्यम्, एषा निष्द्भा, एषा परा गतिः, एतन्निःश्रेयसम्, एतत्, प्राप्य कृतकृत्यो ब्राह्मणो भवति, एतत् सर्ववेदानुशासनमिति।।
अनुवादः-ச.பா-சந்நியாசம், அங்கம் இதிகர்த்த வ்யத்தாவுடன் பிரஹ்மவித்யா பரிசமாப்த்தியாகிறது. பரமபுருஷாத்தமும் சமாப்த்தி ஆகிவிட்டது. புருஷனுடைய கர்த்தவ்யம் இவ்வளவு, இந்த நிஷ்டை, இந்த பராகதி, இதன் நிஷ்ஸ்ரேயஸ்த்துவம், ஆகும். இதை அடைந்து பிராஹ்மணன் க்ருதக்ருத்யனாகின்றான். இது எல்லா வேதத்தின் அனுசாசனம் ஆகும்.
भाष्यम् - अव - योऽयं जनकयाज्ञवल्क्याख्यायिकायां-व्याख्यात आत्मा-
अनुवादः-அ.கை-ச.பா-இந்த ஜனக யாக்ஞவல்க்கிய கதையில் ஆத்மா வியாக்கியானம் செய்யப்பட்டது.
मन्त्रः - स वा एष महानज आत्मान्नादो वसुदानो विन्दते वसु य एवं वेद।। २४।।
अनुवादः-மந்திரம்- அந்த இந்த மஹான் அஜன்மா ஆத்மா அன்னபக்ஷணம் செய்பவன். மேலும் கர்மபலனை அளிப்பவன் என்று இவ்வாறு எவன் அறிகின்றானோ அவன் எல்லா (சம்பூர்ண) கர்ம பலத்தை அடைகின்றான்.
भाष्यम् - स वै एष महान् अज आत्मा अन्नादः सर्वभूतस्थः सर्वान्नानामत्ता, वसुदानः- वसु धनं सर्वप्राणिकर्मफलम्, तस्य दाता, प्राणिनां यथाकर्मा फलेन योजयितेत्यर्थः. तमेतमजमन्नादं वसुदानमात्मानमन्नादवसुदानगुणाभ्यां युक्तं यो वेद, स सर्व भूतेष्वात्मभूतः- अन्नमत्ति, विन्दते च वसु सर्वं कर्मफलजातं लभते सर्वात्मत्वादेव, य एवं यथोक्तं वेद।
अनुवादः-ச.பா-அந்த இந்த மஹான் அஜன்மா ஆத்மா அன்னாத: அதாவது சம்பூர்ண பூதங்களில் இருந்து கொண்டு எல்லா அன்னங்களையும் புசிக்கின்றது. வசுதான - வசு என்றால் தனம் அதாவது எல்லா பிராணிகளுக்கும் கர்மபலத்தை அளிப்பவன். அதாவது பிராணிகளின் கர்மாவிற்கு தகுந்தவாறு கர்மபலனை அளிப்பவன். அந்த இந்த அஜன்மா, அன்னாத, வசுதான ஆத்மாவை எவன் ஒருவன் அன்னதான வசுதான குணமுடையதாய் அறிகின்றானோ அவன் எல்லா பூதங்களிலும் ஆத்மபூதமாய் எல்லா அன்னத்தையும் புசிக்கின்றான். அவ்வாறே எவன் மேலே கூறப்பட்ட விஷயங்களை அறிகின்றானோ அவன் சர்வாத்மாவானதால் வசு அதாவது சம்பூர்ண கர்மபலத்தையும் அடைகின்றான்.
भाष्यम् - अथवा दृष्टफळार्थिभिरप्येवंगुण उपास्यः, तेन अन्नादो वसोश्च लब्धा, दृष्टेनैव फलेन अन्नात्तृत्वेन गोऽश्वादिना चास्य योगो भवतीत्यर्थः।
अनुवादः-ச.பா-அல்லது பலத்தை இச்சிப்பவர்களும் இந்த குணமுடையதை பிரஹ்மத்தை உபாசனை செய்யவேண்டும். இதனால் அவர்கள் அன்னாதர்களாகவும் தனத்தையும் அடைவார்கள். அதாவது பிரத்யக்ஷமாய் அன்னாதத்துவத்தையும், பசு, குதிரை, முதலியவைகளை அடையும் யோக்கியம் உடையவர்களாவான்.
भाष्यम् - अव - इदानीं समस्तस्यैवारण्यकस्य योऽर्थ उक्तः, स समुच्चित्य अस्यां कण्डिकायां निर्दिश्यते, एतावान् समस्तारण्यकार्थ इति-
अनुवादः-ச.பா-இப்பொழுது இந்த ஆரண்யகத்திலுள்ள விஷயம் முழுதும் கூறப்பட்டது. அதை எல்லாம் சேர்ந்து கண்டிகையின் விவரிக்கப்படுகிறது. இது எல்லா ஆரண்யகத்தின் அர்த்தமாகும் என்று -
मन्त्रः - स वा एष महानज आत्माजरोऽमरोऽमृतोऽभयो ब्रह्माभयं वै ब्रह्माभय ँ हि वै ब्रह्म भवति य एवं वेद।। २५।।
अनुवादः -மந்திரம்-அந்த இந்த மஹான் அஜன்மா ஆத்மா அஜரம், அமரம், அம்ருதம் அவ்வாறே அபயம் பிரஹ்மம், அபயமே பிரஹ்மம் என்று எவன் அறிகின்றானோ அவன் அபய பிரஹ்மமாகின்றான்.
भाष्यम् - स वा एष महानज आत्मा अजरो न जीर्यत इति, न विपरिणमत इत्यर्थः, अमरः- यस्माच्च अजरः, तस्माद् अमरः- न म्रियत इत्यमरः, यो हि जायते जीर्यते च, स विनश्यति म्रियते वा, अयं तु अजत्वाद् अजरत्वाच्च अविनाशी यतः, अत एव अमृतः। यस्माद् जनिप्रभृतिभिस्त्रिभिर्भावविकारैर्वर्जितः तस्माद् इतैररपि भावविकारैस्त्रिभिस्तत्कृतैश्च कामकर्ममोहादिभिर्मृत्युरूपैर्वर्जित इत्येतत्।
अनुवादः-ச.பா-அந்த இந்த மஹான் அஜன்மா ஆத்மா“अजरः”(அஜரம்) - என்பது ஜீரணம் அற்றது. அதாவது மாறுபடாதது என்பது பொருள்.“अमरः”(அமர:) எதனால் அஜரமோ அதனால் அமரம். அதாவது மரணம் அற்றது அமரம். எது உண்டாகிறதோ, ஜீரணம் அடைகிறதோ அது நாசம் அடையும், மரணம் அடையும். இது அஜம்யம் (பிறப்பற்றதாயும்) ஜரை அற்றதாயும் இருப்பதால் அவிநாசி (நாசமற்றது) ஆகையால் அது அம்ருதம். எதனால் மூன்று விதமான பிறப்பு முதலிய பாவ விகாரங்கள் அற்றதாய் இருக்கிறதோ அதனால் மூன்று பாவவிகாரங்களாலும் அவ்வாறேஅவைகளால் உண்டாகும் காமம், கர்மம், மோஹம் முதலியவைகள் அற்றது என்பது இதன் தாத்பர்யம்.
भाष्यम् - अभयोऽत एव, यस्माच्चैवं पूर्वोक्तविशेषणः, तस्माद् भयवर्जितः, भयं च हि नाम अविद्याकार्यम्, तत्कार्य-प्रतिषेधेन भावविकारप्रतिषेधेन चाविद्यायाः प्रतिषेधः सिद्धो वेदितव्यः। अभय आत्मा एवं गुणविशिष्टः किमसौ? ब्रह्म परिवृढं निरतिशयं महदित्यर्थः। अभयं वै ब्रह्म, प्रसिद्धमेतद् लोके- अभयं ब्रह्मेति। तस्माद्युक्तमेवंगुणविशिष्ट आत्मा ब्रह्मेति।
अनुवादः-ச.பா-ஆகையால் அபயமே பிரஹ்மம். எதனால் இவ்வாறு முன்கூறப்பட்ட விசேஷணத்துடன் கூடியதோ அதனால் பயம் அற்றது. பயம் என்பது அவித்யா காரியம். அதன் காரியத்தை நிஷேதம் செய்வதாலும், பாவ விகாரங்களையும் நிஷேதம் செய்வதால் அவித்யையின் நிஷேதமும் சித்திக்கிறது என்று அறியவேண்டும். இவ்வாறு குணத்துடன் கூடிய இந்த அபய ஆத்மா எது? பிரஹ்மம் அதாவது எல்லா பக்கமும் நிறைந்ததும், நிரதிசயமானதும், மஹத் ஆனதும் ஆகும் என்பது பொருள். பிரஹ்மம் அபயம். உலகில் பிரஹ்மம் அபயம் என்பது பிரசித்தம். ஆகையால் இந்த விசேஷ குணங்களுடன் கூடியது பிரஹ்மம் என்று கூறுவது பொருத்தமே ஆகும்.
भाष्यम् - य एवं यथोक्तमात्मानमभयं ब्रह्म वेद, सोऽयं हि वै ब्रह्म भवति। एष सर्वस्या उपनिषदः संक्षिप्तोऽर्थ उक्तः। एतस्यैवार्थस्य सम्यक् प्रबोधाय उत्पत्तिस्थितिप्रलयादिकल्पना क्रियाकारकफलाध्यारोपणा चात्मनि कृता, तदपोहेन च नेति नेतीत्यध्यारोपितविशेषापनयद्वारेण पुनस्तत्त्वमावेदितम्।
अनुवादः-ச.பா-எவர் இவ்வாறு கூறப்பட்டவாறு ஆத்மாவை அபயம் பிரஹ்ம என்று அறிகின்றாரோ அவர் இந்த அபயம் பிரஹ்மமாகவே ஆகின்றார். இந்த எல்லா உபநிஷத்துக்களின் சுருக்கமான அர்த்தம் கூறப்பட்டது. இந்த அர்த்தத்தை நன்றாக அறிந்து கொள்வதற்காக உத்பத்தி ஸ்திதி பிரளயம் முதலிய கல்பனை அவ்வாறே கிரியாகாரக பலம் ஆகியவை ஆத்மாவில் அத்யாரோபணம் செய்யப்பட்டது. அதை நீக்குவதற்காக நேதி, நேதி முதலிய ரூபங்களால் அத்யாரோப விசேஷத்தின் நிவிர்த்தி மூலமாய் மறுபடியும் தத்வஞானம் தெரிவிக்கப்பட்டது.
भाष्यम् - यथैकप्रभृत्यापरार्धसंख्यास्वरूपपरिज्ञानाय रेखा-ध्यारोपणं कृत्वा एकेयं रेखा, दशेयम्, शतेयम्, सहस्रेयम्- इति ग्राहयति, अवगमयति संख्यास्वरूपं केवलम्, न तु संख्याया रेखात्मत्वमेव, यथा च आकारादीन्यक्षराणि विजिग्राहयिषुः पत्रमषीरेखादिसंयोगोपायमास्थाय वर्णानां सतत्त्वमावेदयति, न पत्रमष्याद्यात्मतामक्षराणां ग्राहयति तथा चेहोत्पत्त्याद्यनेको-पायमास्थायैकं ब्रह्मतत्त्वमावेदितम्, पुनस्तत्कल्पितोपाय-जनितविशेषपरिशोधनार्थं नेति नेतीति तत्त्वोपसंहारः कृतः। तदुपसंह्य्तं पुनः परिशुद्धं केवलमेव सफलं ज्ञातमन्तेऽस्यां कण्डिकायामिति।
अनुवादः-ச.பா-எவ்வாறு ஒன்று முதல் அதற்கு மேல் உள்ள எண்களின் ஸ்வரூபத்தைக் கற்பிப்பதற்கு அநேக கோடுகளை வைத்து இந்தகோடு ஒன்று, இந்த கோடு பத்து, இது நூ று, இது ஆயிரம் என்று எண்களின் எண்ணிக்கையை மட்டுமே கிரஹிக்கச் செய்கிறது. கோடுகளை அல்ல. அவ்வாறேஅகாரம் முதலான எழுத்துக்களை கிரஹிக்கச் செய்வதற்கு பத்ரம், மை, கோடு முதலியவைகளின் சம்யோக உபாயத்தால் வர்ணங்களின் (எழுத்துக்களின்) ரூபம் அறியப்படுகிறது. ஆனால் பத்ரம், மை, கோடு இவைகளை எழுத்தாக கிரஹிக்கவில்லை. அவ்வாறேஇங்கும் உத்பத்தி முதலிய அநேக உபாயங்களை அவலம்பித்து பிரஹ்ம தத்துவத்தை போதிக்கிறது. மேலும் கல்பித உபாயங்களினால் உண்டான விசேஷத்தை நீக்குவதற்காக நேதி, நேதி என்று தத்துவ உபசம்ஹாரம் செய்யப்பட்டது. (முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது). மறுபடியும் கடைசியில் அது உபசம் ஹிருதம், பரிசுத்தம், கேவல ஞானமே அதனுடைய பலத்துடன் இந்த கண்டிகையில் தெரிவிக்கப்பட்டது.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये चतुर्थाध्याये चतुर्थं शारीकब्राह्मणम् ।।