द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

छान्दोग्योपनिषद्भाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

சாந்தோக்யோபநிஷத்பாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

‘ओमित्येतदक्षरम्’ इत्यादिना सामावयवविषयमुपासनमनेकफलमुपदिष्टम् । अनन्तरं च स्तोभाक्षरविषयमुपासनमुक्तम् — सर्वथापि सामैकदेशसम्बद्धमेव तदिति । अथेदानीं समस्ते साम्नि समस्तसामविषयाण्युपासनानि वक्ष्यामीत्यारभते श्रुतिः । युक्तं हि एकदेशोपासनानन्तरमेकदेशिविषयमुपासनमुच्यत इति ॥
அனுவாதம் - அ,கை - “ओमित्येतदक्षरम्” (ஒமித்யேததக்ஷரம்) என்பவைகளால் (முதல் அத்யாயத்தில்) அநேக பலன்களை அளிக்கும் ஸாம அவயவ விஷய உபாசனை உபதேசம் செய்யப்பட்டது. அதன்பின் ஸ்தோபாக்ஷர விஷய உபாசனைக் கூறப்பட்டது. அது எவ்வகையாலும் ஸாமத்தின் ஏகதேச சம்பந்தம் உடையதாகிறது. இப்பொழுது எல்லா ஸாமங்களிலும் அதாவது எல்லா ஸாம விஷய உபாசனைகளும் இனி கூறவேண்டும் என்பதற்காக சுருதி ஆரம்பிக்கின்றது. ஏகதேச உபாசனைக்கு அடுத்ததாக ஏகதேசீ (அவயவ) யினால் சம்பந்தமான உபாசனை வர்ணனை செய்யப்படுகிறது என்பது பொருத்தமேயாகும்.
समस्तस्य खलु साम्न उपासनꣳ साधु यत्खलु साधु तत्सामेत्याचक्षते यदसाधु तदसामेति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஓம் எல்லா ஸாமத்தின் உபாசனைகளும் நிச்சயமாக நன்மை செய்வதே. எது நன்மையை அளிக்கின்றதோ அதை ஸாமம் என்று கூறுகின்றோம். எது நன்மை தராதோ அது அஸாமம் (நன்மைதராத ஸாமம்). என்று கூறப்படுகிறது.
समस्तस्य सर्वावयवविशिष्टस्य पाञ्चभक्तिकस्य साप्तभक्तिकस्य च इत्यर्थः । खल्विति वाक्यालङ्कारार्थः । साम्न उपासनं साधु । समस्ते साम्नि साधुदृष्टिविधिपरत्वान्न पुर्वोपासननिन्दार्थत्वं साधुशब्दस्य ।
அனுவாதம் - எல்லாவற்றின் அதாவது எல்லா அவயவங்களுடன் கூடிய ஐந்துவித பக்தியும், ஏழுவித பக்தியும் உடைய ஸாமத்தின் உபாசனை நன்மை தருவதாகும். இங்கு “खलु” (கலு) என்பது வாக்கிய அலங்காரத்திற்காக. ஸாமத்தின் உபாசனை நன்மை அளிக்கக்கூடியது. எல்லா ஸாமங்களும் நல்ல திருஷ்டி விதிபரமாய் இருப்பதால் நன்மை தருவது என்று கூறியது முன்பு கூறிய உபாசனைகளை நிந்திப்பதற்காக அல்ல.
ननु पूर्वत्राविद्यमानं साधुत्वं समस्ते साम्न्यभिधीयते । न, ‘साधु सामेत्युपास्ते’ (छा. उ. २ । १ । ४) इत्युपसंहारात् । साधुशब्दः शोभनवाची । कथमवगंयत इति, आह — यत्खलु लोके साधु शोभनमनवद्यं प्रसिद्धम् , तत्सामेत्याचक्षते कुशलाः । यदसाधु विपरीतम् , तदसामेति ॥
அனுவாதம் - இவ்வாறு கூறினால் முன்பு இல்லாத நன்மை தரும் தன்மை எல்லா ஸாமங்களிலும் கூறப்படுகிறது என்று ஆகும் என்றால், அவ்வாறு அல்ல. இங்கு நன்மை தரும் (நல்ல) ஸாமத்தை உபாசனை செய் என்றது உபஸம்ஹாரம் செய்வதற்காக. (முடித்துவைப்பதற்காக) நல்லது என்ற சப்தம் சோபனம் என்ற அர்த்தத்தை தெரிவிப்பதாம். அது எவ்வாறு அறியப்படுகிறது? எனில் கூறுகிறார் - உலகில் எந்த வஸ்து நல்ல அதாவது சோபனமான தோஷமற்ற ரூபம் பிரசித்தமாவதால் அதை நிபுணர்கள் ஸாம என்று கூறுகின்றனர். எது நல்லது அற்ற விபரீதமானது அது அஸாமம் (ஸாமமாகாது) எனப்படுகிறது.
तदुताप्याहुः साम्नैनमुपागादिति साधुनैनमुपागादित्येव तदाहुरसाम्नैनमुपागादित्यसाधुनैनमुपागादित्येव तदाहुः ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - இந்த விஷயத்தில் கூறப்படுகிறது - அவன் ஸாமத்தினால் ஒருவனை (ராஜா முதலியவர்களை) அணுகினான் என்றால் அது அவன் நல்ல முறையில் அணுகினான் என்பது பொருள். அவன் அஸாமத்தால் அணுகினால் அவன் தகாத நல்ல முறையற்றவழிகளில் அணுகினான் என்பது பொருள்.
तत् तत्रैव साध्वसाधुविवेककरणे उताप्याहुः — साम्ना एनं राजानं सामन्तं च उपागात् उपगतवान् ; कोऽसौ ? यतः असाधुत्वप्राप्त्याशङ्का स इत्यभिप्रायः ; शोभनाभिप्रायेण साधुना एनमुपागात् इत्येव तत् तत्र आहुः लौकिकाः बन्धनाद्यसाधुकार्यमपश्यन्तः । यत्र पुनर्विपर्ययेण बन्धनाद्यसाधुकार्यं पश्यन्ति, तत्र असाम्ना एनमुपागादिति असाधुनैनमुपागादित्येव तदाहुः ॥
அனுவாதம் - இந்த நல்லது, தீயது (நல்லவையற்றது) என்று விவேகம் செய்து கூறப்படுகிறது. ராஜாவிடம் அல்லது ஸாமத்திடம் சென்று இந்த சாமம் கானம் செய்யப்பட்டது. அந்த கானம் செய்தவர் யார்? எவருக்கு அந்த அசாதுத்துவத்தை (தீமையை) அடைவதில் சங்கை உண்டாயிற்றோ அவர் என்பது அபிப்பிராயம், பந்தனம் முதலிய அசாது காரியத்தை காணும் லெளகிகர்கள் அதை (உலகத்தோர்) சோபன (நல்ல) அபிப்பிராயத்தால் கானம் செய்கின்றனர் என்று கூறுவர். அந்த விஷயத்தில் அதற்கு மாறாக பந்தனம் முதலிய காரியங்கள் அசாது காரியம் என்று அறிந்து அவர்கள் கானம் செய்வதை அஸாமம் என்கின்றனர்.
अथोताप्याहुः साम नो बतेति यत्साधु भवति साधु बतेत्येव तदाहुरसाम नो बतेति यदसाधु भवत्यसाधु बतेत्येव तदाहुः ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - இதன்பின் இவ்வாறு கூறுகின்றனர் - நன்மையைக் காணும் போது ஆஹா இது மிக அருமையான ஸாமம் என்கின்றனர். எப்பொழுது அசுபம் ஏற்படும்பொழுது இது எனக்கு அஸாமமாக உள்ளது என்கின்றனர்.
अथोताप्याहुः स्वसंवेद्यं साम नः अस्माकं बतेति अनुकम्पयन्तः संवृत्तमित्याहुः ; एतत्तैरुक्तं भवति, यत्साधु भवति साधु बतेत्येव तदाहुः ; विपर्यये जाते असाम नो बतेति ; यदसाधु भवति असाधु बतेत्येव तदाहुः ; तस्मात्सामसाधुशब्दयोरेकार्थत्वं सिद्धम् ॥
அனுவாதம் - இதன்பின் இவ்வாறு கூறுவார்கள் - ஆஹா! அந்த ஸ்வசம்வேத்திய ஸாமம் நமக்கு கிடைத்துவிட்டது என்று பிரியமானதுடன் கூறுவார்கள். அவர்கள் இதை இவ்வாறு கூறுவார்கள் - எது சாது (நல்லது) ஆகிறதோ அதை சாது (நல்லது) என்றே கூறுவர். அதற்கு மாறான அசாது உண்டானால் அதை அசாது (தீமை) என்று தீனத்தன்மையுடன் கூறுவர் ஆகையால் ஸாமம், சாது (நல்லது) என்ற சப்தங்களுக்கு ஒரே அர்த்தமே சித்திக்கிறது.
स य एतदेवं विद्वान्साधु सामेत्युपास्तेऽभ्याशो ह यदेनꣳ साधवो धर्मा आ च गच्छेयुरुप च नमेयुः ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - இவ்வாறு அறிந்தவன் “साम साधु” (ஸாம சாது - ஸாமம் நன்மை தருவது) என்று உபாசனை செய்பவனிடம் எந்த சாது (நல்ல) தர்மம் உள்ளதோ அது சீக்கிரமாகவே அவனை வந்து அடையும். மேலும் அவனுக்கு சேவையும் செய்கின்றன. அதாவது போகரூபமாய் தயாராக இருக்கும்.
अतः स यः कश्चित्साधु सामेति साधुगुणवत्सामेत्युपास्ते समस्तं साम साधुगुणवद्विद्वान् , तस्यैतत्फलम् अभ्याशो ह क्षिप्रं ह, यत् इति क्रियाविशेषणार्थम् , एनम् उपासकं साधवः शोभनाः धर्माः श्रुतिस्मृत्यविरुद्धाः आ च गच्छेयुः आगच्छेयुश्च ; न केवलमागच्छेयुः, उप च नमेयुः उपनमेयुश्च, भोग्यत्वेनोपतिष्ठेयुरित्यर्थः ॥
அனுவாதம் - ஆகையால் அந்த எவன் ஒருவன் சாது ஸாமம் என்று சாது குணமுடையதாக உபாசிக்கின்றான். அதாவது எல்லா ஸாமத்தையும் சாது குணமுடையதாய் அறிகின்றானோ அவனை சுருதி ஸ்மிருதிகளின் விருத்தமற்ற சுபதர்மங்களை வெகு சீக்கிரமாகவே அடைகின்றான். இங்கு எந்த “यत्” (யத்) பதமோ அது கிரியா விசேஷத்திற்காக. அதை அடைவது மட்டும் அல்லாமல் அது சேவையும் செய்கிறது. அதாவது போகரூபமாய் தயாராக இருக்கிறது.
इति प्रथमखण्डभाष्यम् ॥
लोकेषु पञ्चविधꣳ सामोपासीत पृथिवी हिङ्कारः । अग्निः प्रस्तावोऽन्तरिक्षमुद्गीथ आदित्यः प्रतिहारो द्यौर्निधनमित्यूर्ध्वेषु ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - உலகில் ஐந்து விதமான சாமங்களை உபாசனை செய்யவேண்டும். பிருதிவீ “हिंकारः” (ஹிம்காரம்), அக்னி “प्रस्ताव” (பிரஸ்தாவ), அந்தரிஷம், “उद्गीथ” (உத்கீதம்), ஆதித்யன் “प्रतिहार” (பிரதிஹார), மேலும் த்யுலோகம் “निधनः” (நிதனம்) இவ்வாறு மேல் உலகங்களுக்கு செல்வதற்கான உபாசனை (ஸாமதிருஷ்டி உபாசனை)
कानि पुनस्तानि साधुदृष्टिविशिष्टानि समस्तानि सामान्युपास्यानीति, इमानि तान्युच्यन्ते — लोकेषु पञ्चविधम् इत्यादीनि ।
அனுவாதம் - அ.கை - மேலும் அந்த எல்லா சாது (நல்ல) திருஷ்டியுடன் கூடிய உபாசிக்கப்படும் சாமங்கள் யாவை? என்பதற்கு - அந்த இந்த “लोकेषु पच्चविधम्” (லோகேஷு பஞ்சவிதம் - உலகில் ஐந்து விதம்) என்பது முதலியவைகளால் கூறப்படுகிறது.
ननु लोकादिदृष्ट्या तान्युपास्यानि साधुदृष्ट्या च इति विरुद्धम् ;
அனுவாதம் - சங்கை - ஆனால் அந்த எல்லா ஸாமங்களையும் லோக திருஷ்டியினாலும் அவ்வாறே சாது திருஷ்டியினாலும் உபாசனை செய்யவேண்டும் என்பது ஒன்றுக்கொன்று விருத்தமாக உள்ளதே?
न, साध्वर्थस्य लोकादिकार्येषुकारणस्यानुगतत्वात् — मृदादिवद्धटादिविकारेषु । साधुशब्दवाच्योऽर्थो धर्मो ब्रह्म वा सर्वथापि लोकादिकार्येष्वनुगतम् । अतः यथा यत्र घटादिदृष्टिः मृदादिदृष्ट्यनुगतैव सा, तथा साधुदृष्ट्यनुगतैव लोकादिदृष्टिः — धर्मादिकार्यत्वाल्लोकादीनाम् । यद्यपि कारणत्वमविशिष्टं ब्रह्मधर्मयोः, तथापि धर्म एव साधुशब्दवाच्य इति युक्तम् , साधुकारी साधुर्भवति इति धर्मविषये साधुशब्दप्रयोगात् ।
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறு அல்ல. மண் முதலியவைகள் கடம் முதலிய விகாரங்களில் உள்ளதுபோல் காரணமாக சாது அர்த்தம் லோகம் முதலிய காரியங்களில் அனுகதமாய் உள்ளது. சாது சப்த வாச்சிய பதார்த்தம் தர்மம் அல்லது பிரஹ்மம் எல்லா வகையிலும் லோகம் முதலிய காரியங்களில் அனுகதமாய் உள்ளது. ஆகையால் எவ்வாறு எங்கு கடம் முதலிய திருஷ்டி ஏற்படுகிறதோ அங்கு மண் முதலிய திருஷ்டி அனுகதமாகவே உள்ளது. அவ்வாறே லோகம். முதலிய திருஷ்டிகளில் சாது திருஷ்டியும் அனுகதமாகவே உள்ளது. ஏன்எனில் லோகம் முதலியவைகள் தர்மம் முதலியவைகளின் காரியங்களாகும். பிரஹ்மமும், தர்மமும் காரணத்துவத்தில் சமமாக இருந்தாலும் இங்கு தர்மமே இங்கு சாது சப்தத்திற்கு வாச்சியம் என்பது உசிதமாகும். சாது (நல்ல தர்மத்தை) செய்பவன் சாதுவாகின்றான் என்று இவ்வாறு தர்ம விஷயத்தில் சாது சப்தம் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
ननु लोकादिकार्येषु कारणस्यानुगतत्वादर्थप्राप्तैव तद्दृष्टिरिति ‘साधु सामेत्युपास्ते’ (छा. उ. २ । १ । ४) इति न वक्तव्यम् ।
அனுவாதம் - சங்கை - ஆனால் லோகம் முதலிய காரியங்களில் காரணம் அனுகதமாய் இருப்பதால் அந்த திருஷ்டி ஸ்வதஸ்சித்தமாகவே உள்ளது. ஆகையால் “साधु सामेत्युपास्ते” (ஸாது ஸாமேத்யுபாஸ்தே) என்று கூறமுடியாது.
न, शास्त्रगम्यत्वात्तद्दृष्टेः ; सर्वत्र हि शास्त्रप्रापिता एव धर्मा उपास्याः, न विद्यमाना अप्यशास्त्रीयाः ॥
அனுவாதம் - அவ்வாறு அல்ல. ஏன்எனில் திருஷ்டி சாஸ்திரத்தினால் அறியப்படுவதால் (அடையப்படுவதால்) ஆகும். எங்கும் சாஸ்திரத்தினால் விதிக்கப்பட்ட தர்மத்தையே உபாசிக்க வேண்டும். சாஸ்திரத்திற்கு விருத்தமான தர்மம் இருந்தாலும். அதை உபாசனை செய்ய தகுதி அற்றதாகும்.
लोकेषु पृथिव्यादिषु पञ्चविधं पञ्चभक्तिभेदेन पञ्चप्रकारं साधु समस्तं सामोपासीत । कथम् ? पृथिवी हिङ्कारः । लोकेष्विति या सप्तमी, तां प्रथमात्वेन विपरिणमय्य पृथिवीदृष्ट्या हिङ्कारे पृथिवी हिङ्कार इत्युपासीत । व्यत्यस्य वा सप्तमीश्रुतिं लोकविषयां हिङ्कारादिषु पृथिव्यादिदृष्टिं कृत्वोपासीत ।
அனுவாதம் - பிருதிவி முதலிய லோகங்களில் ஐந்து விதமான ஐந்து பக்தி பேதத்தால் ஐந்துவித ஸாது (நல்ல) குணத்துடன் கூடிய எல்லா ஸாமங்களையும் உபாசனை செய்யவேண்டும். எவ்வாறு? பிருதிவி “हिंकारः” (ஹிம்காரம்) என்று. உலகங்களில் என்பதில் உள்ள ஏழாம் வேற்றுமையை முதல் வேற்றுமையாக மாற்றி பிருதிவி திருஷ்டியினால் “हिंकार” (ஹிம்கார) என்று உபாசிக்க வேண்டும். அல்லது “लोकेषु” (உலகங்களில்) என்ற பதத்தில் உள்ள ஏழாவது வேற்றுமையில் கூறப்பட்ட சுருதியை “हिंकार” (ஹிம்காரம்) முதலியவைகளில் செய்து அங்கு கர்மவிபக்தி (இரண்டாவது வேற்றுமை) லோக சப்தத்தால் ஹிம்காரம் முதலியவைகளில் பிருதிவீ முதலிய திருஷ்டியினால் உபாசனை செய்ய வேண்டும்.
तत्र पृथिवी हिङ्कारः, प्राथम्यसामान्यात् । अग्निः प्रस्तावः । अग्नौ हि कर्माणि प्रस्तूयन्ते । प्रस्तावश्च भक्तिः । अन्तरिक्षमुद्गीथः । अन्तरिक्षं हि गगनम् । गकारविशिष्टश्चोद्गीथः । आदित्यः प्रतिहारः, प्रतिप्राण्यभिमुखत्वान्मां प्रति मां प्रतीति । द्यौर्निधनम् । दिवि निधीयन्ते हि इतो गता इत्यूर्ध्वेषूर्ध्वगतेषु लोकदृष्ट्या सामोपासनम् ॥
அனுவாதம் - அவைகளில் பிருதிவீ ஹிம்காரம். ஏன் எனில் இவை இரண்டும் முதன்மை என்பதில் சமான குணமுடையதால். அக்னி “प्रस्तावः” (பிரஸ்தாவ:). கர்மங்கள் அக்னியில் தான் செய்யப்படுகிறது. பிரஸ்தாவம் ஒருவித ஸாம பக்தியாகும். உத்கீதம் அந்தரிக்ஷம். அந்தரிக்ஷம் என்பது “गगनम्” (ககனம் = ஆகாயம்) “उद्गीथ” (உத்கீத)த்திலும் “गकारम्” (க) உள்ளது. ஆதித்யன் “प्रतिहारः” (பிரதிஹாரம்). ஏன்எனில் என்னை நோக்கி, என்னை நோக்கி என்று எல்லா பிராணிகளும் எதிர் நோக்கி இருப்பதால் ஆகும். (द्यौः) (த்யெளः = தேவலோகம்) நிதனம் (निधनम्) இங்கிருந்து சென்று அடையும் த்விலோகம் என்று மேல் மேல் கதிகளின் லோக திருஷ்டியால் ஸாம உபாசனையாகும்.
अथावृत्तेषु द्यौर्हिङ्कार आदित्यः प्रस्तावोऽन्तरिक्षमुद्गीथोऽग्निः प्रतिहारः पृथिवी निधनम् ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - இப்பொழுது கீழ் லோகத்தில் செய்யவேண்டிய ஸாமோபாசனை கூறப்படுகிறது - த்யுலோகம் “हिंकारः” (ஹிம்காரம்), ஆதித்யன் “प्रस्तावः” (பிரஸ்தாவம்), அந்தரிக்ஷம் “उद्गीथः” (உத்கீதம்), அக்னி “प्रतिहारः” (பிரதிஹாரம்), பிருதிவீ “निधनम्” (நிதனம்).
अथ आवृत्तेषु अवाङ्मुखेषु पञ्चविधमुच्यते सामोपासनम् । गत्यागतिविशिष्टा हि लोकाः । यथा ते, तथादृष्ट्यैव सामोपासनं विधीयते यतः, अत आवृत्तेषु लोकेषु । द्यौर्हिङ्कारः, प्राथम्यात् । आदित्यः प्रस्तावः, उदिते ह्यादित्ये प्रस्तूयन्ते कर्माणि प्राणिनाम् । अन्तरिक्षमुद्गीथः पूर्ववत् । अग्निः प्रतिहारः, प्राणिभिः प्रतिहरणादग्नेः । पृथिवी निधनम् , तत आगतानामिह निधनात् ॥
அனுவாதம் - இப்பொழுது கீழ்நோக்கி உலகங்களில் ஐந்துவிதமான ஸாமோபசனைக் கூறப்படுகிறது. செல்லுதல் வருதல் இவைகளுடன் கூடியதாக லோகங்கள் இருக்கின்றன. ஏன்எனில் அவைகள் எவ்வாறே அந்த திருஷ்டியினாலேயே ஸாம உபாசனை எதனால் விதிக்கப்படுகிறதோ அதனால் கீழ்நோக்கி உள்ள லோகங்களில் த்யுலோகம் முதன்மையாக இருப்பதால் “हिंकार” (ஹிம்காரம்). ஆதித்தியன் “प्रस्तावः” (பிரஸ்தாவம்) ஆதித்யன் உதித்தபின் பிராணிகள் கர்மங்களை ஆரம்பிக்கின்றனர். அந்தரிக்ஷம் “उद्गीथ” உத்கீதம் முன்போல். அக்னி “प्रतिहारः” (பிரதிஹாரம்) பிராணிகளால் அக்னி எதிர் பார்க்கப்படுவதால், பிருதிவி “निधनम्” (நிதனம்) ஏன் எனில் அங்கு இருந்து திரும்பி வருபவர்கள் இங்கு நிலைபெறுகிறார்கள்.
उपासनफलं
அனுவாதம் - அ.கை - உபாசனையின் பலன் -
कल्पन्ते हास्मै लोका ऊर्ध्वाश्चावृत्ताश्च य एतदेवं विद्वांल्लोकेषु पञ्चविधं सामोपास्ते ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - எந்த புருஷன் இவ்வாறு அறிந்து ஸாமத்தை உபாஸனை செய்கின்றானோ அவனைக் குறித்து மேல் லோக, கீழ் லோக போகரூபத்தை அடைய தகுதி உடையவனாகின்றான்.
— कल्पन्ते समर्था भवन्ति ह अस्मै लोका ऊर्ध्वाश्च आवृत्ताश्च, गत्यागतिविशिष्टा भोग्यत्वेन व्यवतिष्ठन्त इत्यर्थः । य एतदेवं विद्वान् लोकेषु पञ्चविधं समस्तं साधु सामेत्युपास्ते इति सर्वत्र योजना पञ्चविधे सप्तविधे च ॥
அனுவாதம் - இவ்வாறு போக்கிய ரூபமாய் அடையப்படுகிறது. அதாவது அந்த புருஷனுக்கு செல்லுதல், வருதல் என்பவைகளுடன் கூடிய மேல் லோகம் அவ்வாறே கீழ் நோக்கியுள்ள லோகம் போகரூபமாய் இருக்கின்றன. இதை இவ்வாறு அறிந்த புருஷன் லோகங்களில் ஐந்துவிதமாக எல்லா ஸாது குண விசிஷ்டமானது ஸாமம் என்று உபாஸனை செய்கின்றான். இவ்வாறே எங்கும் ஐந்துவித, ஏழுவித ஸாமத்தின் உபாஸனையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
इति द्वितीयखण्डभाष्यम् ॥
वृष्टौ पञ्चविधं सामोपासीत पुरोवातो हिङ्कारो मेघो जायते स प्रस्तावो वर्षति स उद्गीथो विद्योतते स्तनयति स प्रतिहार उद्गृह्णाति तन्निधनम् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - மழையின் ஐந்துவிதமான ஸாமத்தை உபாஸனை செய். (மழைக்கு) முந்திய வாயு “हिंकार” (ஹிம்காரம்), மேகம் உற்பத்தியாவது, “प्रस्तावः” (பிரஸ்தாவம்), பொழிவது “उीथः” (உத்கீதம்), மின்னுவதும், இடி இடிப்பதுவும் “प्रतिहारः” (பிரதிஹாரம்) ஆகும்.
वृष्टौ पञ्चविधं साम उपासीत । लोकस्थितेः वृष्टिनिमित्तत्वादानन्तर्यम् । पुरोवातो हिङ्कारः । पुरोवाताद्युद्ग्रहणान्ता हि वृष्टिः, यथा साम हिङ्कारादिनिधनान्तम् ; अतः पुरोवातो हिङ्कारः, प्राथम्यात् । मेघो जायते स प्रस्तावः ; प्रावृषि मेघजनने वृष्टेः प्रस्ताव इति हि प्रसिद्धिः ; वर्षति स उद्गीथः, श्रैष्ठ्यात् ; विद्योतते स्तनयति स प्रतिहारः, प्रतिहृतत्वात् ।
அனுவாதம் - மழையின் ஐந்துவித ஸாமத்தை உபாஸனை செய். லோகத்தின் ஸ்திதிக்கு மழை நிமித்தமாவதால் லோக ஸம்பந்தமான உபாஸனைக்குப்பின் விளக்கப்படுகிறது. மழைக்குமுன் உள்ள வாயு “हिंकार” (ஹிம்கார:). எவ்வாறு ஹிம்கார முதல் நிதனம் வரை ஸாமம் எனப்படுவதில் ஹிம்காரம் முதலாவதாக உள்ளது அவ்வாறே முன் வாயு மழை வரை உள்ளதில் முன் வாயுவும் முதலாவதாக உள்ளது. ஆகையால் “पुरोवातो” மழைக்கு முந்திய (காற்று) வாயு “हिंकार” (ஹிம்காரம்). மேகம் உற்பத்தியாவதால் அது “प्रस्तावः” (பிரஸ்தாவம்), வர்ஷ காலத்தில் மேகம் உண்டாவதால் மழைக்கு பிரஸ்தாவம் என்பது பிரஸித்தம். மழை பெய்வது ஸ்ரேஷ்டமாவதால் “उद्गीथ” (உத்கீதம்) ஆகும். மின்னுவதும் இடிப்பதும் இங்கும் அங்கும் அலைவதால் “प्रतिहारः” (பிரதிஹாரம்) என்பதாகும்.
वर्षति हास्मै वर्षयति ह य एतदेवं विद्वान्वृष्टौ पञ्चविधं सामोपास्ते ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - ஜலத்தை கிரஹிப்பது. “निधनम्” (நிதனம்). இவ்வாறு அறிந்த புருஷன் மழையின் ஐந்துவிதமான ஸாமத்தை உபாஸசனை செய்கின்றான். அவனுக்காக மழை உண்டாகிறது. அவனே மழையைப் பொழியச்செய்கிறான்.
उद्गृह्णाति तत् निधनम् , समाप्तिसामान्यात् । फलमुपासनस्य — वर्षति ह अस्मै इच्छातः । तथा वर्षयति ह असत्यामपि वृष्टौ । य एतदित्यादि पूर्ववत् ॥
அனுவாதம் - மழை நிற்பது (கிரஹிப்பது) “निधनम्” (நிதனம்) ஆகும். ஏன்எனில் இரண்டும் முடிவில் ஸமானமாய் இருப்பதால், உபாஸனையின் பலன்- நம்முடைய இச்சைக்குத் தகுந்தவாறு மழை பெய்வது ஆகும். அவ்வாறே மழையற்ற ஸமயத்திலும் மழை பெய்யச் செய்கிறது. மற்றவை முன்பு கூறியது போல்.
इति तृतीयखण्डभाष्यम् ॥
सर्वास्वप्सु पञ्चविधꣳ सामोपासीत मेघो यत्सम्प्लवते स हिङ्कारो यद्वर्षति स प्रस्तावो याः प्राच्यः स्यन्दन्ते स उद्गीथो याः प्रतीच्यः स प्रतिहारः समुद्रो निधनम् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - இவ்வாறு ஜலத்தை ஐந்து வகையான ஸாமத்தால் உபாஸனை செய். மேகம் எப்பொழுது அடர்த்தியாகிறதோ (திரள்கிறதோ) அது “हिंकारः” (ஹிம்காரம்). மழை பொழிவது “प्रस्तावः” (பிரஸ்தாவம்). (நதிகள்) கிழக்கு திக்கில் பிரவஹிப்பது “उद्गीथः” (உத்கீதம்). அவ்வாறே மேற்கில் பிரவஹிப்பது “प्रतिहारः” (பிரதிஹாரம்). ஸமுத்திரம் “निधनम्” (நிதனம்) ஆகும்.
सर्वास्वप्सु पञ्चविधं साम उपासीत । वृष्टिपूर्वकत्वात्सर्वासामपामानन्तर्यम् । मेघो यत्सम्प्लवते एकीभावेनेतरेतरं घनीभवति मेघः यदा उन्नतः, तदा सम्प्लवते इत्युच्यते, तदा अपामारभ्भः स हिङ्कारः ; यद्वर्षति स प्रस्तावः ; आपः सर्वतो व्याप्तुं प्रस्तुताः । याः प्राच्यः स्यन्दन्ते स उद्गीथः, श्रौष्ठ्यात् ; याः प्रतीच्यः स प्रतिहारः, प्रतिशब्दसामान्यात् ; समुद्रो निधनम् , तन्निधनत्वादपाम् ॥
அனுவாதம் - எல்லா விதமான ஜலத்திலும் ஐந்துவிதமான ஸாமத்தை உபாஸனை செய்யவேண்டும். தண்ணீர் முழுவதும் மழையினால் உண்டாவதால் மழை உபாஸனைக்குப் பின்னர் ஜல உபாஸனைக் கூறப்படுகிறது. மேகம் எப்பொழுது மேல் எழுந்து ஒன்றுக்கொன்று சேர்ந்து ஒரே பாவத்தை அடைந்து (திடமாகிறது) அடர்த்தியாகிறது. மேகம் எப்பொழுது எழுகிறதோ அதை “संप्लवत” அடர்த்தியாகிறது என்று கூறப்படுகிறது. இது தண்ணீர் ஆவதற்கு ஆரம்பம். ஆதலால் அது “हिंकारः” (ஹிம்காரம்). மழை பொழிவது “प्रस्तावः” (பிரஸ்தாவமாகும். ஏன் எனில் தண்ணீர் எங்கும் பரவுவதாலும், சிரேஷ்டமானதாலும் “उद्गीथ” (உத்கீதம்) கிழக்கு ஆகும். “प्रति” சப்தம் ஸமானமாக இருப்பதால் “प्रतीच्यः” கிழக்கு நோக்கி ப்ரவஹிப்பதாலும் முகமாய் நதி பிரவஹிப்பது “प्रतिहारः” (பிரதிஹாரம்) ஆகும். அந்த ஸமுத்திரத்தில் ஜலம் போய் சேர்வதால் ஸமுத்திரம் “निधनम्” (நிதனம்) ஆகும்.
न हाप्सु पॆत्यप्सुमान्भवति य एतदेवं विद्वान्सर्वास्वप्सु पञ्चविधꣳ सामोपास्ते ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - இவ்வாறு அறிந்த புருஷன் இந்த எல்லாவிதமான ஜலத்தில் ஐந்து விதமான ஸாமத்தை உபாஸனை செய்வதால் அவனுக்கு ஜலத்தினால் மரணம் உண்டாகாது. ஜலம் உடையவனாகின்றான்.
न ह अप्सु प्रैतिं । नेच्छति चेत् । अप्सुमान् अंमान्भवति फलम् ॥
அனுவாதம் - அவன் விரும்பாவிடினும் அவனுக்கு தண்ணீரால் மரணம் கிடையாது. மேலும் ஜலம் உடையவனாகவும் ஆகின்றான் என்பது பஷ்ம்.
इति चतुर्थखण्डभाष्यम् ॥
ऋतुषु पञ्चविधꣳ सामोपासीत वसन्तो हिङ्कारो ग्रीष्मः प्रस्तावो वर्षा उद्गीथः शरत्प्रतिहारो हेमन्तो निधनम् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ருதுக்களில் ஐந்துவிதமான ஸாமத்தால் உபாஸனை செய்ய வேண்டும். வசந்த காலம் “हिंकारः” (ஹிம்காரம்) கோடைகாலம் “प्रस्तावः” (பிரஸ்தாவம்), மழைகாலம் “उद्गीथः” (உத்கீதம்) முன்பனிக்காலம் “प्रतिहारः” (பிரதிஹாரம்) பனிக்காலம் “निधनम्” (நிதனம்).
ऋतुषु पञ्चविधं साम उपासीत । ऋतुव्यवस्थाया यथोक्ताम्बुनिमित्तत्वादानन्तर्यम् । वसन्तो हिङ्कारः, प्राथम्यात् ; ग्रीष्मः प्रस्तावः ; यवादिसङ्ग्रहः प्रस्तूयते हि प्रावृडर्थम् ; वर्षा उद्गीथः, प्राधान्यात् ; शरत् प्रतिहारः, रोगिणां मृतानां च प्रतिहरणात् ; हेमन्तो निधनम् , निवाते निधनात्प्राणिनाम् ॥
அனுவாதம் - ருதுக்களில் ஐந்து விதமான ஸாமத்தை உபாஸிக்க வேண்டும். ருதுக்களின் வரிசையில் நிமித்தமாக முன் கூறிய ஸாமங்கள் இருப்பதால் இப்பொழுது ருதுக்களின் ஸாம உபாஸனை விளக்கப்படுகிறது. முதலில் இருப்பதால் வசந்தகாலம் “हिंकारः” (ஹிம்காரம்), கோடைகாலம் “प्रस्तावः” (பிரஸ்தாவம்) ஏன்எனில் பிராணிகளுக்கு வேண்டிய தானியங்கள் முதலியவைகளை சேகரிப்பதால் ஆகும். பிரதானமாய் இருப்பதால் மழைகாலம் “उद्गीथः” (உத்கீதம்) நோயுற்றவர்களும், மரணமடைபவர்களும் சரத்காலத்தில் வீழ்த்தப்படுகின்றனர், ஆகையால் சரத்காலம் “प्रतिहारः” (பிரதிஹாரம்) பனிக்காலத்தில் காற்று இல்லாமல் அவன் ஒடுங்குவதால் பனிக்காலம் (நிதனம்) “निधनम्” ஆகும்.
इति पञ्चमखण्डभाष्यम् ॥
पशुषु पञ्चविधꣳ सामोपासीताजा हिङ्कारोऽवयः प्रस्तावो गाव उद्गीथोऽश्वाः प्रतिहारः पुरुषो निधनम् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - மிருகங்களில் ஐந்து விதமாக ஸாமத்தை உபாஸனை செய்யவேண்டும். ஆடு “हिंकारः” (ஹிம்காரம்), செம்மறியாடு “प्रस्तावः” (பிரஸ்தாவம்), பசு “उीथः” (உத்கீதம்), குதிரை “प्रतिहारः” (பிரதிஹாரம்), புருஷன் “निधनम्” (நிதனம்).
पशुषु पञ्चविधं साम उपासीत । संयग्वृत्तेष्वृतुषु पशव्यः काल इत्यानन्तर्यम् । अजा हिङ्कारः, प्राधान्यात् , प्राथम्याद्वा — ‘अजः पशूनां प्रथमः’ ( ? ) इति श्रुतेः ; अवयः प्रस्तावः, साहचर्यदर्शनादजावीनाम् ; गाव उद्गीथः, श्रैष्ठ्यात् ; अश्वाः प्रतिहारः, प्रतिहारणात्पुरुषाणाम् ; पुरुषो निधनम् , पुरुषाश्रयत्वात्पशूनाम् ॥
அனுவாதம் - வீட்டு மிருகங்களில் ஐந்துவிதமான ஸாமத்தை உபாஸனை செய்யவேண்டும். ருதுக்கள் நன்றாக அமைந்தால் மிருகங்களுக்கு அனுகூலமாவதால் அதற்குப்பின் விளக்கப்படுகிறது. பிரதானமாய் இருப்பதாலோ அல்லது முதலாவதாக இருப்பதாலோ ஆடு “हिंकारः” (ஹிம்காரம்), “अजः पशूनां प्रथमः” (அஜ: பசூனாம் பிரதம:) என்ற சுருதி வாக்கியத்தால் சித்திக்கின்றது. மற்ற ஆடுகளுடன் சேர்ந்து ஸஞ்சரிப்பதால் செம்மறியாடு “प्रस्तावः” (பிரஸ்தாவம்) ஸ்ரேஷ்டமாவதால் குதிரை“उद्गीथः” (உத்கீதம்). குதிரைகள் மற்றவர்களை ஏற்றிச் செல்வதால் “प्रतिहारः” (பிரதிஹாரம்). மிருகங்கள் புருஷனை ஆஸ்ரயிப்பதால் புருஷன் “निधनम्” (நிதனம்).
भवन्ति हास्य पशवः पशुमान्भवति य एतदेवं विद्वान्पशुषु पञ्चविधꣳ सामोपास्ते ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - இவ்வாறு அறிந்த புருஷன் வீட்டு மிருகங்களில் ஐந்துவித ஸாமத்தை உபாஸனை செய்கின்றானோ அவன் பசுக்களை அடைவான். அவன் பசு உடையவன் ஆவான்.
फलम् —
அனுவாதம் - பலம்
भवन्ति ह अस्य पशवः पशुमान्भवति, पशुफलैश्च भोगत्यागादिभिर्युज्यत इत्यर्थः ॥
அனுவாதம் - அவனுக்கு வீட்டு மிருகங்கள் (பசு) முதலியவைகளை அடைவான். வீட்டு பசுக்களையும் உடையவனாவான், பசுக்களை அடைந்தவன் போகம், தானம் முதலியவைகளை உடையவன் ஆவான்.
इति षष्ठखण्डभाष्यम् ॥
प्राणेषु पञ्चविधं परोवरीयः सामोपासीत प्राणो हिङ्कारो वाक्प्रस्तावश्चक्षुरुद्गीथः श्रोत्रं प्रतिहारो मनो निधनं परोवरीयांसि वा एतानि ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - பிராணனில் ஐந்து விதமான சிறந்த ஆற்றல் குணத்துடன் கூடிய ஸாமத்தை உபாஸனை செய். பிராணன் (மூக்கு) “हिंकारः” (ஹிம்காரம்) ஆகும். வாக் “प्रस्तावः” (பிரஸ்தாவம்), சக்ஷு “उद्गीथ” (உத்கீதம்). ஸ்ரோத்திரம் “प्रतिहारः” (பிரதிஹாரம்) மேலும் மனம் “निधनम्” (நிதனம்) ஆகும். இந்த உபாஸனைகளால் நிச்சயமாக மேலும் மேலும் மிகுந்த ஆற்றலை அடையலாம்.
प्राणेषु पञ्चविधं परोवरीयः साम उपासीत, परं परं वरीयस्त्वगुणवत्प्राणदृष्टिविशिष्टं सामोपासीतेत्यर्थः । प्राणो हिङ्कारः, उत्तरोत्तरवरीयसां प्राथम्यात् ; वाक् प्रस्तावः, वाचा हि प्रस्तूयते सर्वम् , वाग्वरीयसी प्राणात् — अप्राप्तमप्युच्यते वाचा, प्राप्तस्यैव तु गन्धस्य ग्राहकः प्राणः ।
அனுவாதம் - பிராணன்களில் ஐந்து விதமான (பரோவரீய) மிகுந்த வீரியமுள்ள ஸாமத்தை உபாஸிக்க வேண்டும். அதாவது ஒன்றைக்காட்டிலும் ஒன்று மேலான சிரேஷ்ட குணமுடைய பிராண திருஷ்டியுடன் கூடிய ஸாமத்தை உபாஸனை செய்யவேண்டும் என்பது பொருள். பிராணன் கிராணன் (காது) “हिंकारः” (ஹிம்காரம்), ஏன்எனில் ஒன்றைக்காட்டிலும் ஒன்றில் ஸ்ரேஷ்டமான பிராணன் முதன்மையாக இருப்பதால் ஆகும். வாக் “प्रस्तावः” (பிரஸ்தாவம்). எல்லாம் வாக்கினால் அல்லவா பிரஸ்தாபிக்கப்படுகிறது. பிராணனைக்காட்டிலும் வாக் மிக மேலானது. வாக்கினால் அறியாத வஸ்துவையும் நிரூபிக்க முடியும். ஆனால் கிராணம் அடைந்ததையே முகர முடியும்.
चक्षुरुद्गीथः, वाचो बहुतरविषयं प्रकाशयति चक्षुः, अतो वरीयो वाचः उद्गीथः, श्रैष्ठ्यात् ; श्रोत्रं प्रतिहारः, प्रतिहृतत्वात् ; वरीयश्चक्षुषः, सर्वतः श्रवणात् ; मनो निधनम् , मनसि हि निधीयन्ते पुरुषस्य भोग्यत्वेन सर्वेन्द्रियाहृता विषयाः ; वरीयस्त्वं च श्रोत्रान्मनसः, सर्वेन्द्रियविषयव्यापकत्वात् ; अतीन्द्रियविषयोऽपि मनसो गोचर एवेति । यथोक्तहेतुभ्यः परोवरीयांसि प्राणादीनि वै एतानि ॥
அனுவாதம் - சக்ஷு உத்கீதம். வாக்கைக்காட்டிலும் (கண்) சக்ஷு மிகுந்த விஷயங்களைப் பிரகாசப்படுத்துவதால் வாக்கைக் காட்டிலும் மேலானது. ச்ரேஷ்டமானதால் சக்ஷு “उीथः” (உத்கீதம்). ஆகர்ஷிப்பதால் ச்ரோத்திரம் “प्रतिहारः” நான்கு பக்கங்களிலிருந்தும் கேட்பதால் (கண்) சக்ஷுவைக்காட்டிலும் ச்ரோத்திரம் மேலானது. மனம் “निधनम्” (நிதனம்). ஏன்எனில் போக்கியரூபமாய் புருஷனுடைய எல்லா இந்திரியங்களாலும் இழுக்கப்பட்ட விஷயங்கள் மனதில்தான் நிலைபெறுகின்றன. எல்லா இந்திரிய விஷயங்கள் வியாபித்து இருந்தாலும் இந்திரியங்களுக்கு எட்டாத விஷயங்களும் மனதிற்கு கோசரமாகின்றன. மேலே கூறப்பட்ட ஹேதுக்களால் பிராணன் முதலியவைகளின் ஒவ்வொன்றை அபேஷித்து ஒவ்வொன்றின் மேன்மை அறியப்படுகிறது
परोवरीयो हास्य भवति परोवरीयसो ह लोकाञ्जयति य एतदेवं विद्वान्प्राणेषु पञ्चविधं परोवरीयः सामोपास्त इति तु पञ्चविधस्य ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - இதை இவ்வாறு அறிந்த புருஷன் பிராணன்களில் ஐந்து விதமாக மேல் மேல் மிகவும் உத்கிருஷ்டமான ஸாமத்தை உபாஸனை செய்கின்றானோ அவனுடைய ஜீவனம் மேலும் மேலும் சிறப்பு மிக்கதாக ஆகும். மேலும் மேலான மேலான லோகங்களை ஜெயிப்பான் (அடைவான்). இவ்வாறு ஐந்து விதமான ஸாம உபாஸனை நிரூபிக்கப்பட்டது.
एतद्दृष्ट्या विशिष्टं यः परोवरीयः साम उपास्ते, परोवरीयो ह अस्य जीवनं भवतीत्युक्तार्थम् । इति तु पञ्चविधस्य साम्न उपासनमुक्तमिति सप्तविधे वक्ष्यमाणविषये बुद्धिसमाधानार्थम् । निरपेक्षो हि पञ्चविधे, वक्ष्यमाणे बुद्धिं समाधित्सति ॥
அனுவாதம் - எந்த ஒரு புருஷன் இந்த பிராண திருஷ்டியுடன் கூடிய எல்லாவற்றைக்காட்டிலும் மேலான ஸாமத்தை உபாஸிக்கின்றானோ அவனுடைய ஜீவன் மிகவும் சிறப்பானதாக அமையும் என்பது கூறியதின் பொருள். இவ்வாறு ஐந்துவித ஸாம உபாஸனம் கூறியது. ஏழு விதமான இனிக் கூறப்போகும் விஷயத்தில் புத்தியை நிலைபெற செய்வதற்காகக் கூறப்பட்டது. ஏன் எனில் பஞ்சவித உபாஸனையை அபேக்ஷிக்காத புருஷன் இனிக்கூறப்போகும் உபாஸனையில் புத்தியை நிலை நிறுத்தவேண்டும் என்பதாகும்.
इति सप्तमखण्डभाष्यम् ॥
अथ सप्तविधस्य वाचि सप्तविधꣳ सामोपासीत यत्किञ्च वाचो हुमिति स हिङ्कारो युत्प्रेति स प्रस्तावो यदेति स आदिः ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - இப்பொழுது ஏழுவித ஸாமத்தின் உபாஸனை (ஆரம்பிக்கப்படுகிறது). வாக்கில் ஏழுவித ஸாமத்தை உபாஸனை செய்யவேண்டும். வாக்கில் எந்த “हुं” (ஹும்) என்ற ஸ்வரூபம் உள்ளதோ அது “हिंकारः” (ஹிம்காரம்). எந்த “प्र” என்ற ஸ்வரூபம் உள்ளதோ அது “प्रस्तावः” (பிரஸ்தாவம்), என்த ஒரு “आ” (ஆ) என்ற ஸ்வரூபம் உள்ளதோ அது “आदिः” (ஆதி) யாகும்.
अथ अनन्तरं सप्तविधस्य समस्तस्य साम्न उपासनं साध्विदमारभ्यते । वाचि इति सप्तमी पूर्ववत् , वाग्दृष्टिविशिष्टं सप्तविधं सामोपासीतेत्यर्थः । यत्किञ्च वाचः शब्दस्य हुमिति यो विशेषः स हिङ्कारः, हकारसामान्यात् । यत्प्रेति शब्दरूपं स प्रस्तावः, प्र - सामान्यात् । यत् आ इति स आदिः, आकारसामान्यात् । आदिरित्योङ्कारः, सर्वादित्वात् ॥
அனுவாதம் - அதன்பின் ஏழுவிதமான எல்லா ஸாமங்களின் ஸாது உபாஸனை ஆரம்பிக்கப்படுகிறது. वाचि (வாசி - வாக்கில்) என்பதில் உள்ள ஏழாவது வேற்றுமையை முன்போல் அறிந்துகொள்ள வேண்டும். வாக் திருஷ்டியுடன் கூடிய ஏழுவிதமான ஸாமம் உபாஸனை செய்யவேண்டும் என்பது பொருள். எந்த ஒரு வாக்கின் சப்தம் “हुम्” (ஹும்) என்ற விசேஷமோ அது “हकारः” (ஹகாரம்) ஸாமான்யமாய் இருப்பதால் “हिंकारः” (ஹிம்காரம்). எந்த “प्र” (ப்ர) என்ற ஸப்தரூபம் அது “प्र” (ப்ர) ஸமானமாக இருப்பதால் “प्रस्तावः” (பிரஸ்தாவம்). எது “आ” என்பதோ அது “आदिः” (ஆதி). ஏன் எனில் ஆகாரத்திற்கு ஸமானமாக இருப்பதால் ஆகும். எல்லாவற்றிற்கும் ஆதியாக இருப்பதால் “आदिः” (ஆதி) என்பது “ओारः” (ஓம்காரம்) என்று அறிந்து கொள்ள வேண்டும்.
यदुदिति स उद्गीथो यत्प्रतीति स प्रतिहारो यदुपेति स उपद्रवो यन्नीति तन्निधनम् ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எந்த ஒரு “उत्” (உத்) என்ற ஸப்தமுள்ளதோ அது “उद्गीथः” (உத்கீதம்). எந்த ஒரு “प्रति” என்ற சப்தம் உள்ளதோ அது “प्रतिहारः” (ப்ரதிஹாரம்) எந்த ஒரு “उप” (உப) என்ற சப்தம் உள்ளதோ அது “उपद्रवः” (உபத்ரவம்) ஆகும். எந்த ஒரு “नि” (நி) என்ற ஸப்த ரூபமுள்ளதோ அது “निधनम्” (நிதனம்). ஆகும்.
यदुदिति स उद्गीथः, उत्पूर्वत्वादुद्गीथस्य ; यत्प्रतीति स प्रतिहारः, प्रतिसामान्यात् ; यदुपेति स उपद्रवः, उपोपक्रमत्वादुपद्रवस्य ; यन्नीति तन्निधनम् , नि - शब्दसामान्यात् ॥
அனுவாதம் - எது “उत्” (உத்) என்ற ஸப்த ரூபமோ அது “उीथः” (உத்கீதம்). ஏன்எனில் உத்கீதத்தில் “उत्” உத் ஸப்தம் ஆரம்பத்தில் இருப்பதால். எது “प्रति” (ப்ரதி) என்ற ஸப்த ரூபமோ அது “प्रतिहारः” (பிரதிஹாரம்). ஏன்எனில் பிரதி (प्रति) அவைகளில் ஸமானமாய் இருப்பதால். எது “उप” (உப) எனப்படுகிறதோ அது “उपद्रवः” (உபத்ரவம்). ஏன்எனில் அது “उपद्रवः” (உபத்ரவம்) “उप” (உப) என்று ஆரம்பிப்பதால். எது “नि” சப்தமோ அது “निधनम्” (நிதனம்). இரண்டிலும் “नि” (நி) சப்தம் ஸமானமாக இருப்பதால் ஆகும்.
दुग्धेऽस्मै वाग्दोहं यो वाचो दोहोऽन्नवानन्नादो भवति य एतदेवं विद्वान्वाचि सप्तविधꣳ सामोपास्ते ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - எந்த புருஷன் இதை இவ்விதமாக அறிகின்றானோ அந்த புருஷன் வாக்கில் ஏழுவிதமான ஸாமத்தின் உபாஸனை செய்கின்றானோ அதனால் வாக் எந்த ஒரு வாக்கின் பலனோ (ஸாரமோ) அதை அளிக்கிறது. அவ்வாறே அவன் அதிக அன்னத்தை உடையவனாக ஆகின்றான். மேலும் அதை அனுபவிக்கின்றவனாகவும் ஆகின்றான்.
दुग्धेऽस्मै इत्याद्युक्तार्थम् ॥
அனுவாதம் - “दुग्धेऽस्मा” (துக்தே அஸ்மை) என்பது முதலிய சுருதியின் அர்த்தம் முன்பே கூறப்பட்டது.
इति अष्टमखण्डभाष्यम् ॥
अथ खल्वमुमादित्यꣳ सप्तविधꣳ सामोपासीत सर्वदा समस्तेन साम मां प्रति मां प्रतीति सर्वेण समस्तेन साम ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - இப்பொழுது நிச்சயமாக இந்த ஆதித்யனின் திருஷ்டியினால் ஏழுவித ஸாமத்தை உபாஸனை செய்யவேண்டும். ஆதித்யன் எப்பொழுதும் ஸமமாக இருப்பதால் அது ஸாமம். என்னை நோக்குகிறார், என்னை நோக்குகிறார் (माम् प्रति माम् प्रति) என்று கூறுவதால் எல்லோருக்கும் “प्रति” (ப்ரதி) ஸமம் ஆகிறது. ஆகையால் அது ஸாமம்.
अवयवमात्रे साम्न्यादित्यदृष्टिः पञ्चविधेषूक्ता प्रथमे चाध्याये । अथ इदानीं खलु अमुमादित्यं समस्ते साम्न्यवयवविभागशोऽध्यस्य सप्तविधं सामोपासीत । कथं पुनः सामत्वमादित्यस्येति, उच्यते —
அனுவாதம் - ஐந்துவிதமான ஸாமத்தில் ஆதித்திய திருஷ்டி அவயவ மாத்திரமாகவே முதல் அத்யாயத்தில் கூறப்பட்டது. ஆகையால் இப்பொழுது இந்த ஆதித்யனின் எல்லா ஸாமத்திலும் அதனுடைய அவயவ விபாகத்தினை (பிரிவின்படி) ஆரோபித்து ஏழுவித ஸாமத்தின் உபாஸனை செய்யவேண்டும். ஆனால் அந்த ஆதித்யனின் ஸாம ரூபம் எவ்வாறானது? - அது கூறப்படுகிறது.
उद्गीथत्वे हेतुवदादित्यस्य सामत्वे हेतुः । कोऽसौ ? सर्वदा समः वृद्धिक्षयाभावात् ; तेन हेतुना साम आदित्यः । मां प्रति मां प्रतीति तुल्यां बुद्धिमुत्पादयति ; अतः सर्वेण समः ; अतः साम, समत्वादित्यर्थः ।
அனுவாதம் - ஆதித்தியனின் உத்கீத ரூபமாவதில் எவ்வாறு ஹேதுவோ அவ்வாறே ஸாமரூபம் ஆவதிலும் ஹேது. அந்த ஹேது யாது? விருத்தியும் க்ஷயமும் இல்லாததின் காரணத்தால் ஆதித்தியன் எப்பொழுதும் ஸமம். இந்த காரணத்தால் ஆதித்யன் ஸாமம் ஆகும். என்னை நோக்கி, என்னை நோக்கி என்பதற்கு ஒப்பான புத்தியை உண்டாக்குகிறது. ஆகையால் எல்லாம் ஸமம். ஆகையால் ஸாமம். ஸமத்துவமாய் இருப்பதால் அது ஸாமம் ஆகும்.
उद्गीथभक्तिसामान्यवचनादेव लोकादिषूक्तसामान्यात् हिङ्कारादित्वं गम्यत इति हिङ्कारादित्वे कारणं नोक्तम् । सामत्वे पुनः सवितुरनुक्तं कारणं न सुबोधमिति समत्वमुक्तम् ॥
அனுவாதம் - உத்கீத பக்தியின் ஸமானத்தைக் கூறுவதாலேயே உலகிலும் (ஸாம அவயவங்களுக்கு) ஒப்பானதாக கூறப்படுவதால் அதனுடைய “हिंकारः” (ஹிம்காரம்) முதலிய ரூபம் ஏற்படுவது காணப்படுகிறது. ஆகையால் ஹிம்கார ரூபம் ஏற்படுவதற்கான காரணம் கூறப்படவில்லை. மேலும் ஆதித்யனின் ஸாமத்துவத்திலும் காரணம் கூறப்படவில்லை. அதனால் தெளிவாக அறிய முடியாததால் ஸாமத்துவ ரூப காரணம் கூறப்படுகிறது.
तस्मिन्निमानि सर्वाणि भूतान्यन्वायत्तानीति विद्यात्तस्य यत्पुरोदयात्स हिङ्कारस्तदस्य पशवोऽन्वायत्तास्तस्मात्ते हिं कुर्वन्ति हिङ्कारभाजिनो ह्येतस्य साम्नः ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அந்த ஆதித்தியனில் இந்த எல்லா ஜகத்தும் அனுகதமாய் உள்ளது என்று இவ்வாறு அறி. எது இந்த ஆதித்யன் உதயத்திற்கு முன் இருந்ததோ அது “हिंकारः” (ஹிம்காரம்). அந்த சூரியனின் எந்த ஹிம்கார ரூபமோ அதில் மிருகங்கள் அனுகதமாய் உள்ளன. இதனால் அவைகள் “हिंकार” (ஹிம்காரத்தை) செய்கின்றன. ஆகையால் அவை இந்த ஆதித்திய ரூப ஸாமத்திற்கு பாத்திரர்களாகின்றன.
तस्मिन् आदित्ये अवयवविभागशः इमानि वक्ष्यमाणानि सर्वाणि भूतानि अन्वायत्तानि अनुगतान्यादित्यमुपजीव्यत्वेन इति विद्यात् । कथम् ? तस्य आदित्यस्य यत्पुरोदयात् धर्मरूपम् , स हिङ्कारः भक्तिः ; तत्रेदं सामान्यम् , यत्तस्य हिङ्कारभक्तिरूपम् ।
அனுவாதம் - அந்த ஆதித்யனிடத்தில் இனி கூறப்போகும் அவயவங்களின் விபாகங்களின் (பிரிவை) அனுசாரமாக உப ஜீவத்திருக்கும் ரூபமாய் அனுகதமாக உள்ளது. எவ்வாறு? அந்த ஆதித்யனின் உதயத்திற்குமுன் உள்ள தர்ம ரூபம் எதுவோ அது “हिंकारः” (ஹிம்காரம்) ஆகும். அந்த தர்ம ரூபத்திற்கு ஒப்பானதாக இருப்பதால் (ஆதித்யன் என்னும் ஸாமம்) “हिंकारः भक्तिः” (ஹிம்காரம் பக்தி ரூபமாகும்)
तदस्यादित्यस्य साम्नः पशवः गवादयः अन्वायत्ताः अनुगताः तद्भक्तिरूपमुपजीवन्तीत्यर्थः । यस्मादेवम् , तस्मात्ते हिं कुर्वन्ति पशवः प्रागुदयात् । तस्माद्धिङ्कारभाजिनो हि एतस्य आदित्याख्यस्य साम्नः, तद्भक्तिभजनशीलत्वाद्धि त एवं वर्तन्ते ॥
அனுவாதம் - அந்த இந்த ஆதித்ய ரூபத்தின் ஸாமத்தை பசு முதலிய மிருகங்கள் அனுகதமாய் உள்ளன. அதாவது அந்த பக்தி ரூபமாய் உபஜீவிக்கின்றன என்பது பொருள். எதனால் இவ்வாறே அதனால் அந்த மிருகங்கள் உதயம் ஆவதற்கு முன் “हिं” (ஹிம்) என்று சப்தம் செய்கின்றன. ஆகையால் “हिंकार” (ஹிம்கார)த்தை உபாசிப்பதால் அந்த ஆதித்யன் எனப்படும் ஸாமத்தின் அந்த பக்தியை கடைபிடிப்பதால் அவைகள் இவ்வாறு “हिंकारम्” (ஹிம்காரம்) செய்து கொண்டிருக்கின்றன.
अथ यत्प्रथमोदिते स प्रस्तावस्तदस्य मनुष्या अन्वायत्तास्तस्मात्ते प्रस्तुतिकामाः प्रशंसाकामाः प्रस्तावभाजिनो ह्येतस्य साम्नः ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - அவ்வாறே சூரியன் முதல் முதலில் உதித்தவுடன் எந்த ரூபமோ அது “प्रस्तावः” (பிரஸ்தாவம்). அந்த இந்த ரூபத்தையே மனிதர்கள் சார்ந்திருக்கின்றார்கள். ஆகையால் அவர்கள் போற்றுதலை விரும்புகின்றனர். ஏன் எனில் அவர்கள் இந்த பிரஸ்தாவ பக்தியை உபாஸிக்கின்றனர்.
अथ यत्प्रथमोदिते सवितृरूपम् , तदस्य आदित्याख्यस्य साम्नः स प्रस्तावः ; तदस्य मनुष्या अन्वायत्ताः पूर्ववत् । तस्मात्ते प्रस्तुतिं प्रशंसां कामयन्ते, यस्मात्प्रस्तावभाजिनो हि एतस्य साम्नः ॥
அனுவாதம் - அவ்வாறே சூரியனின் முதல் முதலில் உதித்தவுடன் தோன்றும் ரூபம் எதுவோ அது ஆதித்யன் எனப்படும் ஸாமத்தின் “प्रस्तावः” பிரஸ்தாவமாகும். மற்றவை முன்போல். (அந்த பசுக்களைப்போல்) மனிதர்களும் அந்த சூரியனை சார்ந்து இருக்கின்றனர். இதனால் பிரஸ்துதியையும் புகழையும் விரும்புகின்றனர். ஏன் எனில் அவர்கள் இந்த ஸாமத்தின் பிரஸ்தாவத்தை உபாஸனை செய்கின்றனர்.
अथ यत्सङ्गववेलायाꣳ स आदिस्तदस्य वयां स्यन्वायत्तानि तस्मात्तान्यन्तरिक्षेऽनारम्बणान्यादायात्मानं परिपतन्त्यादिभाजीनि ह्येतस्य साम्नः ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - அதன்பின் சூரியனின் எந்த ரூபம் கிரணங்களால் பரவுகின்ற ஸமயத்தில் உள்ளதோ அது “आदि” (ஆதி). அந்த ரூபத்தால் பக்ஷகணங்கள் அனுகதமாய் உள்ளன. ஏன்எனில் அவைகள் இந்த ஸாமத்தின் “आदि” (ஆதி)யை பஜிக்கின்றன. ஆகையால் ஆகாயத்தில் ஆதாரம் ஒன்றும் இல்லாமல் பறந்து திரிகின்றன. ஆகையால் பறவைகள் ஆதியை உபாஸிப்பவைகள். இதுவே அவைகளின் ஸாமம்.
अथ यत् सङ्गववेलायां गवां रश्मीनां सङ्गमनं सङ्गवो यस्यां वेलायाम् , गवां वा वत्सैः सहः, सा सङ्गववेला तस्मिन्काले यत्सावित्रं रूपम् , स आदिः भक्तिविशेषः ओङ्कारः । तदस्य वयांसि पक्षिणोऽन्वायत्तानि ।
அனுவாதம் - அதன்பின் சங்கவ வேளையில் அதாவது எப்பொழுது கிரணங்கள் வெளிப்பட்டு பரவுமோ அல்லது கன்றுக்குட்டிகள் பசுக்களிடம் இருக்க அனுமதிக்கப்படுமோ அந்த வேளையில் சூரிய தேவனின் எந்த ரூபமோ அது “आदिः” (ஆதி) பக்தி விசேஷ ரூபம் “ओारः” (ஓம்காரம்) ஆகும். அதைத் தொடர்ந்து பக்ஷிகளும் அவ்வாறு பறந்தன.
यत एवम् तस्मात् तानि वयांसि अन्तरिक्षे अनारम्बणानि अनालम्बनानि, आत्मानमादाय आत्मानमेव आलम्बनत्वेन गृहीत्वा, परिपतन्ति गच्छन्ति ; अत आकारसामान्यादादिभक्तिभाजीनि हि एतस्य साम्नः ॥
அனுவாதம் - எதனால் இவ்வாறே அதனால் அந்த பறவைகள் ஆகாயத்தில் வேறு ஒன்றையும் ஆதாரமாக கொள்ளாமல் தன்னையே ஆதாரமாகக் கொண்டு அங்கும் இங்கும் பறக்கின்றன. ஆகாரம் ஸமானமாய் இருப்பதால் இந்த ஸாமத்தின் “आदिभक्ति” (ஆதிபக்தி) யை உபாஸனை உடையவைகளாய் ஆகின்றன.
अथ यत्सम्प्रतिमध्यन्दिने स उद्गीथस्तदस्य देवा अन्वायत्तास्तस्मात्ते सत्तमाः प्राजापत्यानामुद्गीथभाजिनो ह्येतस्य साम्नः ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - அவ்வாறே மத்தியான ஸமயத்தில் ஆதித்யனுடைய எந்த ரூபம் உள்ளதோ அது “उद्गीथः” (உத்கீதம்) ஆகும். இந்த ரூபத்தில் தேவகணங்கள் அனுகதமாய் (சார்ந்து) உள்ளார்கள். ஆகையால் அவர்கள் பிரஜாபதியிடம் இருந்து உண்டான பிராணிகளுள் மிகவும் ஸ்ரேஷ்டமானவர்களாய் இருக்கின்றனர். ஏன்எனில் இந்த ஸாமத்தின் உத்கீதத்தை உபாஸிக்கின்றனர்.
अथ यत् सम्प्रतिमध्यन्दिने ऋजुमध्यन्दिने इत्यर्थः, स उद्गीथभक्तिः, तदस्य देवा अन्वायत्ताः, द्योतनातिशयात्तत्काले । तस्मात्ते सत्तमाः विशिष्टतमाः प्राजापत्यानां प्रजापत्यपत्यानाम् , उद्गीथभाजिनो हि एतस्य साम्नः ॥
அனுவாதம் - அவ்வாறே அப்பொழுது சரியான மத்யானத்தில் (எந்த ஆதித்யரூபமோ) அது உத்கீதப் பக்தியாகும். இந்த ரூபத்தை அனுசரிக்கும் (சார்ந்து இருக்கும்) தேவதைகள் அந்த ஸமயத்தில் மிகவும் பிரகாசமுடையவர்களாய் இருக்கின்றனர். ஆகையால் அவர்கள் அந்த பிரஜாபதியின் புத்திரர்கள் மிகவும் ஸ்ரேஷ்டமானவர்கள். ஏன் எனில் இந்த உத்கீத பக்தியை உபாஸிக்கின்றனர்.
अथ यदूर्ध्वं मध्यन्दिनात्प्रागपराह्णात्स प्रतिहारस्तदस्य गर्भा अन्वायत्तास्तस्मात्ते प्रतिहृतानावपद्यन्ते प्रतिहारभाजिनो ह्येतस्य साम्नः ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - அவ்வாறே ஆதித்யனுடைய ரூபம் மத்யானத்திற்குப் பின் பிற்பகலுக்கு முன் எதுவோ அது “प्रतिहारः” ஆகும். இதனை கருவில் உள்ள உயிர்கள் சார்ந்து இருக்கின்றன. ஆகையால் அவை பிரதிஹ்ருத அதாவது மேலே ஆகர்ஷிப்பதால் கீழே விழுவது இல்லை. ஏன்எனில் அவைகள் இந்த ஸாமத்தின் இந்த பிரதிஹார பக்திக்கு பாத்திரமாகின்றன.
अथ यदूर्ध्वं मध्यन्दिनात् प्रागपराह्णात् यद्रूपं सवितुः, स प्रतिहारः ; तदस्य गर्भा अन्वायत्ताः । अतः ते सवितुः प्रतिहारभक्तिरूपेणोर्ध्वं प्रतिहृताः सन्तः नावपद्यन्ते नाधः पतन्ति, तद्द्वारे सत्यपीत्यर्थः । यतः प्रतिहारभाजिनो हि एतस्य साम्नो गर्भाः ॥
அனுவாதம் - அவ்வாறே மத்யானத்திற்குப்பின், பிற்பகலுக்குமுன் எந்த சூரியனின் ரூபமோ அது “प्रतिहारः” (பிரதிஹார:). அது அந்த ரூபத்தை சார்ந்த கர்பங்கள். ஆகையால் அவை பிரதிஹார பக்தி ரூபத்தால் மேல் இழுக்கப்பட்டு அதற்கு கீழேவிழும் வழி இருந்தாலும் அவைகள் கீழேவிழுவது இல்லை என்பது பொருள். அதனால் கர்பங்கள் அந்த ஸாமத்தினுடைய பிரதிகாரத்தை உபாஸிப்பவைகள் ஆகும்.
अथ यदूर्ध्वमपराह्णात्प्रागस्तमयात्सउपद्रवस्तदस्यारण्या अन्वायत्तास्तस्मात्ते पुरुषं दृष्ट्वा कक्षꣳ श्वभ्रमित्युपद्रवन्त्युपद्रवभाजिनो ह्येतस्य साम्नः ॥ ७ ॥
மந்த்ரார்த்தம் - அவ்வாறே ஆதித்தியனின் எந்த ரூபம் பிற்பகலுக்குப்பின் சூரிய அஸ்தமத்திற்கு முன் உள்ளதோ அந்த ரூபம் “उपद्रवः” (உபத்ரவம்). அதன் அந்த ரூபத்தை சார்ந்து இருப்பவை காட்டு மிருகங்கள். ஆகையால் மனிதர்களைக் கண்டால் பயத்தால் காட்டிற்குள் அல்லது குகையினுள் ஓடுகின்றன. ஏன்எனில் அவை இந்த லாமத்தின் உபத்திரவ பக்தியை உபாஸிப்பவைகள்.
अथ यदूर्ध्वमपराह्णात् प्रागस्तमयात् स उपद्रवः, तदस्य आरण्याः पशवः अन्वायत्ताः । तस्मात्ते पुरुषं दृष्ट्वा भीताः कक्षम् अरण्यं श्वभ्रं भयशून्यमिति उपद्रवन्ति उपगच्छन्ति ; दृष्ट्वोपद्रवणात् उपद्रवभाजिनो हि एतस्य साम्नः ॥
அனுவாதம் - அவ்வாறே எந்த ஆதித்யனின் ரூபம் பிற்பகலுக்குப் பின் அஸ்தமிப்பதற்கு முன் எதுவோ அது “उपद्रवः” (உபதிரவம்). அதை காட்டு விலங்குகள் சார்ந்து இருக்கின்றன. ஆகையால் மனிதர்களைக் கண்டவுடன் பயந்து காட்டிற்குள்ளோ அல்லது பயமற்ற குகை முதலியவைகளை நோக்கி ஓடுகின்றன. (உபதிரவந்தி उपद्रवन्ति). இதைப் பார்த்து ஓடுவதால் இந்த ஸாமத்தின் உபத்ரவ பக்திக்கு பாத்திரம் ஆகின்றன.
अथ यत्प्रथमास्तमिते तन्निधनं तदस्य पितरोऽन्वायत्तास्तस्मात्तान्निदधति निधनभाजिनो ह्येतस्य साम्न एवं खल्वमुमादित्यं सप्तविधꣳ सामोपास्ते ॥ ८ ॥
மந்த்ரார்த்தம் - அவ்வாறே ஆதித்யனுடைய எந்த ரூபம் அஸ்தமித்தபின் (மறைந்தபின்) உள்ளதோ அது “निधनम्” (நிதனம்). அதன் இந்த ரூபத்தை பித்ருகணங்கள் சார்ந்து இருக்கின்றனர். இதனால் (சிரார்த்த காலங்களில்) அவர்களை (பித்ரு பிதாமஹர்களை ஆதித்ய ரூபமாய் தர்பையில்) ஸ்தாபிக்கின்றனர். ஏன்எனில் பித்ருகணங்கள் நிச்சயமாக இந்த ஸாமத்தின் நிதனபக்திக்குப் பாத்திரர்கள் ஆகின்றனர். இவ்வாறு இந்த ஆதித்யரூப ஏழுவித ஸாமத்தை உபாஸனை செய்ய வேண்டும்.
अथ यत् प्रथमास्तमितेऽदर्शनं जिगमिषति सवितरि, तन्निधनम् , तदस्य पितरः अन्वायत्ताः ; तस्मात्तान्निदधति — पितृपितामहप्रपितामहरूपेण दर्भेषु निक्षिपन्ति तान् ; तदर्थं पिण्डान्वा स्थापयन्ति । निधनसम्बन्धान्निधनभाजिनो हि एतस्य साम्नः पितरः । एवमवयवशः सप्तधा विभक्तं खलु अमुमादित्यं सप्तविधं सामोपास्ते यः, तस्य तदापत्तिः फलमिति वाक्यशेषः ॥
அனுவாதம் - அவ்வாறே சூரியன் எப்பொழுது அஸ்தமிப்பதற்கு விரும்புகிறதோ அந்த ஸமயத்தில் எந்த ரூபம் ஆதித்யனுக்கு உள்ளதோ அது “निधनम्” (நிதனம்). அதன் இந்த ரூபத்தை பித்ருகணங்கள் சார்ந்து இருக்கின்றனர். அதாவது பிதா, பிதாமஹர், ப்ரபிதாமஹ ரூபமாய் அவர்களை தர்பையில் ஸ்தாபிக்கின்றனர். அல்லது அவர்களை உத்தேசித்து பிண்டத்தை வைக்கின்றார்கள். இவ்வாறு நிதனத்தின் ஸம்பந்தத்தின் காரணமாக அந்த பித்ருகணங்கள் இந்த ஸாமத்தின் நிதன பக்திக்குப் பாத்திரர்கள் ஆகின்றனர். இவ்வாறு அவயவரூபமாய் ஏழு பாகங்களாக பிரித்து இந்த ஆதித்திய ரூப ஏழு வித ஸாமத்தை எவர் உபாஸனை செய்கின்றாரோ அவர் அதனால் ஆதித்ய ரூபத்தை அடைவதையே பலனாக உடையவர்களாகின்றனர். இவ்வாறே மற்ற வாக்கியங்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.
इति नवमखण्डभाष्यम् ॥
अथ खल्वात्मसंमितमतिमृत्यु सप्तविधꣳ सामोपासीत हिङ्कार इति त्र्यक्षरं प्रस्ताव इति त्र्यक्षरं तत्समम् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - இப்பொழுது நிச்சயமாக (இது கூறப்படுகிறது). தனக்கு ஸமானமான அக்ஷரமுடைய மிருத்யுவைக் கடப்பதற்கு ஏழுவித ஸாமத்தை உபாஸனை செய். “हिंकारः” (ஹிம்காரம்) மூன்று அக்ஷரங்களை உடையது. அவ்வாறே “प्रस्तावः” (பிரஸ்தாவ)மும் மூன்று அக்ஷாரங்களை உடையது. ஆகையால் அதற்கு ஸமானமாகும்.
मृत्युः आदित्यः, अहोरात्रादिकालेन जगतः प्रमापयितृत्वात् । तस्य अतितरणाय इदं सामोपासनमुपदिश्यते —
அனுவாதம் - அ.கை - பகல் இரவு முதலிய காலத்தால் ஜகத்தைக் கஷ்டபடுத்துவதின் (வதம் செய்வதின்) காரணமாக ஆதித்யன் “निधनम्” (மிருத்யு). இதைக் கடப்பதற்காக இந்த ஸாமோபஸனை உபதேஸிக்கப்படுகிறது.
अथ खलु अनन्तरम् , आदित्यमृत्युविषयसामोपासनस्य ; आत्मसंमितं स्वावयवतुल्यतया मितम् , परमात्मतुल्यतया वा संमितम् , अतिमृत्यु, मृत्युजयहेतुत्वात् ; यथा प्रथमेऽध्याये उद्गीथभक्तिनामाक्षराणि उद्गीथ इत्युपास्यत्वेनोक्तानि, तथेह साम्नः सप्तविधभक्तिनामाक्षराणि समाहृत्य त्रिभिस्त्रिभिः समतया सामत्वं परिकल्प्य उपास्यत्वेन उच्यन्ते ।
அனுவாதம் - இப்பொழுது நிச்சயமாக ஆதித்ய ரூப மிருத்யு விஷயமான ஸாம உபாஸனைக்குப் பின் தனக்கு ஸமமான - தன்னுடைய அவயவங்களின் ஸாம அவயவங்களுக்கு ஸமமாக இருப்பதின் வாயிலாய் அனுசரிக்கிறது. அல்லது பரமாத்மாவைப் போன்று அறிவதின் காரணமாய் எந்த மிருத்யு ஜெயிப்பதற்கு காரணமாவதால் அதி மிருத்யு (अतिमृत्युः) ஆகிறது. எவ்வாறு முதல் அத்யாயத்தில் உத்கீத பக்தியின் நாமாக்ஷரங்கள் “उद्गीथ” (உத்கீத)மாகும் என்று இவ்வாறு உபாஸனை ரூபத்தால் கூறப்பட்டது. அவ்வாறு இங்கும் ஸாமத்தின் ஏழுவித பக்திகளின் அக்ஷரங்களை ஒன்றாக்கி மும்மூன்றாக ஸமமாக அனுசரித்து கல்பனை செய்து உபாஸ்ய ரூபத்தால் இனி கூறப்படுகிறது.
तदुपासनं मृत्युगोचराक्षरसङ्ख्यासामान्येन मृत्युं प्राप्य, तदतिरिक्ताक्षरेण तस्य आदित्यस्य मृत्योरतिक्तमणायैव सङ्क्रमणं कल्पयति । अतिमृत्यु सप्तविधं साम उपासीत, मृत्युमतिक्रान्तमतिरिक्ताक्षरसङ्ख्यया इत्यतिमृत्यु साम । तस्य प्रथमभक्तिनामाक्षराणि हिङ्कार इति ; एतत् त्र्यक्षरं भक्तिनाम । प्रस्ताव इति च भक्तेस्त्र्यक्षरमेव नाम ; तत् पूर्वेण समम् ॥
அனுவாதம் - அந்த மிருத்யு விஷயத்தின் அக்ஷரங்களின் எண்ணிக்கைக்கு ஒப்பானதால் அந்த அக்ஷரங்களை உபாஸனை செய்வதால் மிருத்யு (ஆதித்ய)னை அடைந்து அதைவிட வேறான அக்ஷரங்கள் மூலமாய் அந்த ஆதித்திய ரூப ம்ருத்யுவை கடப்பதற்காக சுருதி (உபாசகனுக்காக) ஸங்கிரமணத்தை (தாண்டுதலை) கல்பிக்கின்றது. அதிமிருத்யு ஏழுவித ஸாமம் உபாஸனை செய்யவேண்டும் என்று சுருதி வாக்கியம். அதற்கும் மேலாக அக்ஷர எண்ணிக்கையின் மூலமாய் மிருத்யுவைத் தாண்டுவதன் காரணமாக ஸாமம் அதிமிருத்யுவாகும். இந்த ஸாமத்தின் முதல் பக்தியின் நாமாக்ஷரம் “हिंकारः” (ஹிம்காரம்). இந்த பக்தியின் நாமமும் மூன்று அக்ஷரம் உடையது. அவ்வாறே “प्रस्ताव” (பிரஸ்தாவ) பக்தியின் நாமமும் மூன்று அக்ஷரமுடையது. இது முந்திய நாமத்திற்கு ஸமமானது.
आदिरिति द्व्यक्षरं प्रतिहार इति चतुरक्षरं तत इहैकं तत्समम् ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - “आदि” (ஆதி) என்பது இரண்டு அக்ஷரங்களுடைய பெயர் ஆகும். மேலும் “प्रतिहारः” (பிரதிஹாரம்) என்பது நான்கு அக்ஷரங்களுடைய நாமம் ஆகும். இதிலிருந்து ஒரு அக்ஷரத்தை எடுத்து ஆதி நாமாவில் சேர்த்தால் அவை இரண்டும் ஸமமான அக்ஷரங்கள் உடையதாகும்.
आदिरिति द्व्यक्षरम् ; सप्तविधस्य साम्नः सङ्ख्यापूरणे ओङ्कारः आदिरित्युच्यते । प्रतिहार इति चतुरक्षरम् । तत इहैकमक्षरमवच्छिद्य आद्यक्षरयोः प्रक्षिप्यते ; तेन तत् सममेव भवति ॥
அனுவாதம் - “आदि” (ஆதி:) என்பது இரண்டு அக்ஷரங்கள். ஏழுவித ஸாமத்தின் பூர்ணமான எண்ணிக்கை உடையது “ओड्कारः” (ஓம்காரம்) ஆகும். அது ஆதி (आदि) எனப்படுகிறது. “प्रतिहारः” (பிரதிஹாரம்) என்பது நான்கு அக்ஷரம் உடையது. ஆகையால் இதிலிருந்து ஒரு அக்ஷரத்தை எடுத்து “आदि” (ஆதி) அக்ஷரத்துடன் சேர்க்க வேண்டும். அதனால் இரண்டும் ஸமம் ஆகிறது.
उद्गीथ इति त्र्यक्षरमुपद्रव इति चतुरक्षरं त्रिभिस्त्रिभिः समं भवत्यक्षरमतिशिष्यते त्र्यक्षरं तत्समम् ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - “उद्गीथः” (உத்கீதம்) மூன்று அக்ஷரங்களும், “उपद्रवः” (உபத்ரவம்) நான்கு அக்ஷரங்களும் உடைய நாமங்கள் ஆகும். அவை இரண்டும் மூன்று மூன்று அக்ஷரங்களுடன் ஸமானமாக உள்ளது. ஆனால் ஒரு அக்ஷரம் மீதம் உள்ளது. ஆகையால் “अक्षर” (அக்ஷரம்) மூன்று எழுத்துள்ளதால் அந்த ஒன்றும் அவைகளுக்கு ஸமானமாகிறது.
उद्गीथ इति त्र्यक्षरम् उपद्रव इति चतुरक्षरं त्रिभिस्त्रिभिः समं भवति । अक्षरमतिशिष्यते अतिरिच्यते । तेन वैषंये प्राप्ते, साम्नः समत्वकरणाय आह — तदेकमपि सदक्षरमिति त्र्यक्षरमेव भवति । अतः तत् समम् ॥
அனுவாதம் - “उद्गीथ” (உத்கீதம்) என்பது மூன்று அக்ஷரங்கள். “उपद्रवः” (உபத்திரவம்) நான்கு எழுத்துகள் உடையது. மூன்று மூன்று அக்ஷரங்களால் ஸமானமாகின்றது. ஆனால் ஒரு அக்ஷரம் மீதமாய் உள்ளது. அதனால் மாறுபாடு தோன்றுவதால் ஸாமத்திற்கு ஸமத்துவம் ஏற்படுவதற்காக இது ஒரே அக்ஷரமானாலும் “अक्षर” (அக்ஷரம்) என்பதில் மூன்று அக்ஷரங்கள் உள்ளதால் இதுவும் மூன்று அக்ஷரங்களுடன் கூடியதாகிறது. ஆகையால் இதுவும் ஸமத்துவமே.
निधनमिति त्र्यक्षरं तत्सममेव भवति तानि ह वा एतानि द्वाविं शतिरक्षराणि ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - “निधनम्” (நிதனம்) என்ற நாமம் மூன்று அக்ஷரங்களுடையது. ஆகையால் அதற்கு ஸமானமானது. இவை எல்லாம் சேர்ந்து இருபத்தி இரண்டு (22) அக்ஷரங்கள் உடையது.
निधनमिति त्र्यक्षरं तत्सममेव भवति । एवं त्र्यक्षरसमतया सामत्वं सम्पाद्य यथाप्राप्तान्येवाक्षराणि सङ्ख्यायन्ते — तानि ह वा एतानि सप्तभक्तिनामाक्षराणि द्वाविंशतिः ॥
அனுவாதம் - “निधनम्” (நிதனம்) என்பது மூன்று அக்ஷரங்களுடையதாய் ஸமமாகவே ஆகிறது. இவ்வாறு மூன்று அக்ஷர ஸமானத்தால் ஸமத்துவத்தை அடைந்து இவ்வாறு அடையப்பட்டவைகளான அக்ஷரங்கள் எண்ணப்படுகின்றன. அந்த இந்த ஏழு பக்தியின் நாமாக்ஷரங்களின் எண்ணிக்கை இருபத்தி இரண்டு (22) ஆகும்.
एकविंशत्यादित्यमाप्नोत्येकविंशो वा इतोऽसावादित्यो द्वाविंशेन परमादित्याज्जयति तन्नाकं तद्विशोकम् ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - இருபத்தி ஒன்று. அக்ஷரங்களால் ஆதித்யலோகத்தை அடைகின்றான். ஏன் எனில் இந்த லோகத்திலிருந்து எண்ணினால் நிச்சயமாக இருபத்தி ஒன்றாவது இல்லத்தில் உள்ளார். இருபத்தி இரண்டாவது அக்ஷரத்தால் அந்த ஆதித்தியனைக் காட்டிலும் மேலான இந்த துக்கமற்ற அவ்வாறே சோகமற்ற லோகத்தை அடைகின்றான்.
तत्रैकविंशत्यक्षरसङ्ख्यया आदित्यमाप्नोति मृत्युम् । यस्मादेकविंशः इतः अस्माल्लोकात् असावादित्यः सङ्ख्यया । ‘द्वादश मासाः पञ्चर्तवस्त्रय इमे लोका असावादित्य एकविंशः’ (ऐ. ब्रा. ४ । ५), (तां. ब्रा. १० । १ । १०) इति श्रुतेः ; अतिशिष्टेन द्वाविंशेनाक्षरेण परं मृत्योः आदित्यात् जयति आप्नोतीत्यर्थः । यच्च तदादित्यात्परम् ; किं तत् ? नाकम् , कमिति सुखं तस्य प्रतिषेधोऽकं तन्न भवतीति नाकम् , कमेवेत्यर्थः, अमृत्युविषयत्वात् । विशोकं च तत् विगतशोकं मानसदुःखरहितमित्यर्थः — तदाप्नोतीति ॥
அனுவாதம் - அங்கு இருபத்தி ஒன்று அக்ஷரங்களின் எண்ணிக்கை மூலமாக ஆதித்ய லோக ரூபமான மிருத்யுவை அடைகின்றான். ஏன்எனில் இந்த லோகத்தை அபேக்ஷித்து இந்த ஆதித்ய லோகம் இருபத்தி ஒன்றாவது ஆகும். எவ்வாறு எனில் பன்னிரண்டு மாதங்கள், ஐந்து ருதுக்கள், இந்த மூவுலகம் சேர்ந்து இருபத்தி ஒன்றாகும். இது சுருதியில் கூறப்பட்டுள்ளது “द्वादश मासाः पञ्चर्तर्तवस्रय इमे लोका असावादित्य एकवि ्ँशः” (த்வாதச மாஸா: பஞ்சர்தவஸ்த்ரய இமே லோகா அஸாவாதித்ய ஏகவிம்ச). மீதமுள்ள ஒரு அக்ஷர மூலமாக (இருபத்தி இரண்டாவது அக்ஷரமூலமாக) மேலான மிகச்சிறந்த லோகத்தை ஜெயிக்கின்றான் அதாவது அப்பொழுது அடைகின்றான்.
उक्तस्यैव पिण्डितार्थमाह —
அனுவாதம் - அ.கை - சுருதி மேலே கூறியதின் சாராம்சம் கூறப்படுகிறது-
आप्नोति हादित्यस्य जयं परो हास्यादित्यजयाज्जयो भवति य एतदेवं विद्वानात्मसंमितमतिमृत्यु सप्तविधꣳ सामोपास्ते सामोपास्ते ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - (அந்த புருஷன்) ஆதித்திய லோகத்தின் ஜயத்தை அடைகின்றான். அவ்வாறே அந்த ஆதித்யத்தை அடைவதைக்காட்டிலும் மிகவும் உயர்ந்த ஜயத்தை அடைகின்றான். இந்த உபாஸனையை இவ்வாறு அறிந்தவனாகி ஸம எண்ணிக்கை உள்ளதும் மிருத்யுவைக் கடந்ததுமான ஏழுவித ஸாமத்தை உபாஸனை செய்கின்றான். ஸாமத்தை உபாஸனை செய்கின்றான்.
एकविंशतिसङ्ख्यया आदित्यस्य जयमनु, परो ह, अस्य एवंविदः आदित्यजयात् मृत्युगोचरात् परो जयो भवति, द्वाविंशत्यक्षरसङ्ख्ययेत्यर्थः । य एतदेवं विद्वानित्याद्युक्तार्थम् , तस्यैतद्यथोक्तं फलमिति । द्विरभ्यासः साप्तविध्यसमाप्त्यर्थः ॥
அனுவாதம் - இருபத்தி ஒன்று எண்ணிக்கையினால் ஆதித்திய லோகத்தை ஜயிக்கின்றான். அதை இவ்வாறு அறிந்தவன் இருபத்தி இரண்டு எண்ணிக்கை உபாஸனையினால் மிருத்யு கோசரமான ஆதித்தியனை ஜெயிப்பதைக்காட்டிலும் மிக மேலான ஜயத்தை அடைகின்றான் என்பது பொருள். “य एतदेवं विद्वान्” (ய ஏததேவம் வித்வான்) என்பது முதலிய வாக்கியங்களுக்கான அர்த்தம் முன்பே விளக்கப்பட்டது. அதனால் இதற்குமுன் கூறப்பட்ட பலனை அடைவான். ஸாமத்தை உபாஸனை செய், ஸாமத்தை உபாஸனை செய் என்று இருமுறை கூறியது ஏழுவித உபாஸனையின் பூர்த்தியானது (சூசிபிக்கப்படுகிறது) யுதரிவிக்கப்படுகிறது.
इति दशमखण्डभाष्यम् ॥
मनो हिङ्कारो वाक्प्रस्तावश्चक्षुरुद्गीथः श्रोत्रं प्रतिहारः प्राणो निधनमेतद्गायत्रं प्राणेषु प्रोतम् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - மனம் ஹிம்காரம், வாக் பிரஸ்தாவம், சக்ஷு உத்கீதம், ஸ்ரோத்திரம் பிரதிஹாரம், பிராணன் நிதனம். அந்த காயத்திரி எனப்படும் ஸாமம் பிராணனில் பிரதிஷ்டையாகி உள்ளது.
विना नामग्रहणं पञ्चविधस्य सप्तविधस्य च साम्न उपासनमुक्तम् । अथेदानीं गायत्रादिनामग्रहणपूर्वकं विशिष्टफलानि सामोपासनान्तराण्युच्यन्ते । यथाक्रमं गायत्रादीनां कर्मणि प्रयोगः, तथैव-
அனுவாதம் - அ.கை - நாமத்தை கிரஹிக்காமல் ஐந்து வித, ஏழுவிதமான ஸாமத்தின் உபாஸனைக் கூறப்பட்டது. ஆகையால் இப்பொழுது காயத்திரி முதலிய நாமத்தைக் கிரஹித்துக்கொண்டு விசேஷமான பலன்களையும், மற்ற ஸாம உபாஸனைகளையும் எடுத்துக் கூறப்படுகிறது. எவ்வாறு கிரமமோ அவ்வாறு காயத்திரி முதலிய கர்மங்களின் பிரயோகம் செய்யப்படுகிறது.
मनो हिङ्कारः, मनसः सर्वकरणवृत्तीनां प्राथम्यात् । तदानन्तर्यात् वाक् प्रस्तावः ; चक्षुः उद्गीथः, श्रैष्ठ्यात् । श्रोत्रं प्रतिहारः, प्रतिहृतत्वात् । प्राणो निधनम् , यथोक्तानां प्राणे निधनात्स्वापकाले । एतद्गायत्रं साम प्राणेषु प्रोतम् , गायत्र्याः प्राणसंस्तुतत्वात् ॥
அனுவாதம் - மனமானது எல்லா கரண விருத்திகளுக்கும் முதலாவதாக இருப்பதால் மனம் “हिंकारः” (ஹிம்காரம்). அதற்கு அடுத்து வருவதால் வாக் “प्रस्तावः” (பிரஸ்தாவம்) மேலானதாக அதாவது ஸ்ரேஷ்டமானதாக இருப்பதால் சக்ஷு “उीथः” (உத்கீதம்). (விஷயங்களால்) இழுக்கப்படுவதால் ஸ்ரோத்திரம் “प्रतिहारः” (பிரதிஹாரம்) ஆகும். ஏன் எனில் தூங்கும் ஸமயத்தில் இவ்வாறு கூறப்பட்டவைகள் பிராணனில் லயமாகின்றன. ஆகையால் பிராணன் “निधनम्” (நிதனம்). காயத்திரி எனப்படும் ஸாமம் பிராணனில் பிரதிஷடித்திருப்பதால் (ஊடுருவி இருப்பதால்) காயத்திரியை பிராண ரூபமாய் ஸ்துதிக்கப்படுகிறது அதாவது உபாஸனை செய்யப்படுகிறது.
स एवमेतद्गायत्रं प्राणेषु प्रोतं वेद प्राणी भवति सर्वमायुरेति ज्योग्जीवति महान्प्रजया पशुभिर्भवति महान्कीर्त्या महामनाः स्यात्तद्व्रतम् ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இவ்வாறு காயத்ரி எனப்படும் பிராணனில் ஊடுறுவி இருப்பதை (பிரதிஷ்டித்திருப்பதை) அறிகிறானோ அவன் பிராணன் உடையவனாகின்றான். பூர்ண ஆயுளையும் அனுபவிக்கின்றான். மிகுந்த புகழுடைய ஜீவனத்தை அடைகின்றான். பிரஜை பசுக்கள் மூலமாய் மிகவும் மேலானவனாக ஆகின்றான். அவ்வாறே கீர்த்தியினாலும் மஹான் ஆகின்றான் பெரிய மனதுடையவனாய் (உதாரமனமுடையவனாய்) அடைவேனாக என்பது அவனுடைய விரதமாகும்.
सः, य एवमेतद्गायत्रं प्राणेषु प्रोतं वेद, प्राणी भवति ; अविकलकरणो भवतीत्येतत् । सर्वमायुरेति, शतं वर्षाणि सर्वमायुः पुरुषस्य इति श्रुतेः । ज्योक् उज्ज्वलः सन् जीवति । महान् भवति प्रजादिभिः । महांश्च कीर्त्या । गायत्रोपासकस्य एतत् व्रतं भवति, यत् महामनाः अक्षुद्रचित्तः स्यादित्यर्थः ॥
அனுவாதம் - எவன் ஒருவன் இவ்வாறு இந்த காயத்ரி எனப்படும் ஸாமத்தை பிராணனில் ஊடுருவி இருக்கிறது. என்று (ப்ரோதம்- பிரதிஷ்டித்திருக்கிறது என்று) அறிகிறானோ அவன் பிராணன் உடையவனாகின்றான். அதாவது குறைவற்ற பூர்ண இந்திரியங்கள் உடையவனாகின்றான். முழு ஆயுளை உடையவனாகின்றான். சுருதியிலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது - “शतं वर्षाणि सर्वमायुः पुरुषस्य” (சதம் வர்ஷாணி ஸர்வமாயு: புருஷஸ்ய) என்று. பிரஜைகளாலும் மேலான கீர்த்தியினாலும் மஹான் ஆகின்றான். காயத்ரி உபாஸகர்களுக்கு பெரிய மனம் உடைவது என்பது விரதமாகிறது. கெட்ட எண்ணங்கள் இல்லாமல் இருப்பது என்பது பொருள்.
इति एकादशखण्डभाष्यम् ॥
अभिमन्थति स हिङ्कारो धूमो जायते स प्रस्तावो ज्वलति स उद्गीथोऽङ्गारा भवन्ति स प्रतिहार उपशांयति तन्निधनं संशांयति तन्निधनमेतद्रथन्तरमग्नौ प्रोतम् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - (அக்னிக்காக) கடைவது “हिंकारः” (ஹிம்காரம்) ஆகும். புகை உண்டாவது “प्रस्तावः” (பிரஸ்தாவமாகும்). கொழுந்துவிட்டு எரிவது “उीथः” (உத்கீதமாகும்). கனல் உண்டாவது “प्रतिहारः” (பிரதிஹாரமாகும்). அவ்வாறே சாந்தம் அடைவது “उीथः” (நிதனம்) ஆகும். மேலும் எவ்வகையிலாவது சாந்தம் அடைவதுவும் “निधनम्” (நிதனமாகும்). இந்த “रथतन्तरसाम” (ரதந்தரஸாமம்) அக்னியில் பிரதிஷ்டித்து இருக்கின்றது.
अभिमन्थति स हिङ्कारः, प्राथंयात् । अग्नेर्धूमो जायते स प्रस्तावः, आनन्तर्यात् । ज्वलति स उद्गीथः, हविःसम्बन्धाच्छ्रैष्ठ्यं ज्वलनस्य । अङ्गारा भवन्ति स प्रतिहारः, अङ्गाराणां प्रतिहृतत्वात् । उपशमः, सावशेषत्वादग्नेः, संशमः निःशेषोपशमः ; समाप्तिसामान्यान्निधनम् । एतद्रथन्तरम् अग्नौ प्रोतम् । मन्थने हि अग्निर्गीयते ॥
அனுவாதம் - (அக்னிக்காக) கடைகின்றனர். எல்லாவற்றிக்கும் முதலாவதாக இருப்பதால் அது “हिंकारः” (ஹிம்காரம்) ஆகும். அதன் பின்னர் அக்னியிலிருந்து புகை உண்டாவது “प्रस्तावः” (பிரஸ்தாவம்). கொழுந்துவிட்டு எரிவது “उद्गीथः” (உத்கீதம்) ஆகும். ஏன் எனில் ஹவிசுடன் ஸம்பந்தப்பட்டதால் அக்னியின் எரிகின்ற ஜ்வாலை சிரேஷ்டமானதாகும். தணல் எதுவோ அது “प्रतिहारः” (பிரதிஹாரமாகும்). ஏன்எனில் அதை சேகரிப்பதால் “प्रतिहारः” (பிரதிஹாரம்) ஆகிறது. அந்த மிச்சமில்லாமல் உபசமம் அடையும் அக்னி எவ்வகையில் சாந்தம் அடைந்தாலும் அது “संशमः” (சம்ஸாம:) அதாவது முற்றிலும் அதனுடன் சேர்ந்து எல்லாம் ஸமாப்த்தியாவதால் ஸாமானமாகிறது. அதுவே “निधनम्” (நிதனம்) ஆகும். அது இந்த “रथतन्तरमग्नौ” (ரதந்தர அக்னியில்) பிரதிஷ்டித்து இருக்கின்றது. கடைதலால் அல்லவா அக்னி உண்டாகிறது.
स य एवमेतद्रथन्तरमग्नौ प्रोतं वेद ब्रह्मवर्चस्यन्नादो भवति सर्वमायुरेति ज्योग्जीवति महान्प्रजया पशुभिर्भवति महान्कीर्त्या न प्रत्यङ्ङग्निमाचामेन्न निष्ठीवेत्तद्व्रतम् ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அந்த எந்த புருஷன் இவ்வாறு ரதந்தர ஸாமத்தை அக்னியில் அனுஸ்யூதமாக உள்ளது என்று அறிகின்றானோ அவன் பிரஹ்ம தேஜஸ்ஸை அடைகின்றான். மேலும் அன்ன போக்தாவாகவும் ஆகின்றான். பூர்ண ஜீவனத்தையும் அனுபவிக்கின்றான். அவனுடைய ஜீவனத்தை மிக ஒளிமிக்கதாக (பிரகாசமுடையதாக) கழிக்கின்றான். பிரஜைகளாலும் பசுக்களாலும் மஹான் ஆகின்றான். (சிறந்தவனாகின்றான்) அவ்வாறே கீர்த்தியினாலும் மஹான் ஆகின்றான். அக்னியைப் பார்த்த வண்ணம் உணவோ நீரோ அருந்தக்கூடாது. உமிழவும் கூடாது.
स य इत्यादि पूर्ववत् । ब्रह्मवर्चसी वृत्तस्वाध्यायनिमित्तं तेजो ब्रह्मवर्चसम् । तेजस्तु केवलं त्विड्भावः । अन्नादो दीप्ताग्निः । न प्रत्यक् , अग्नेरभिमुखो न आचामेत् न भक्षयेत्किञ्चित् ; न निष्ठीवेत् श्लेष्मनिरसनं च न कुर्यात् ; तद्व्रतम् ॥
அனுவாதம் - “स य” (ச ய) முதலிய மந்திரங்களின் அர்த்தம் முன்போல் ஆகும். “ब्रह्मवर्चसी” (பிரஹ்மவர்ச்சஸீ ) என்பது நல்ல ஆசாரத்துடன் ஸ்வாத்யாயத்தின் நிமித்தமாக உண்டாகும் தேஜஸ் பிரஹ்மவார்சஸம் ஆகும். தேஜஸ் என்பது “त्विङ्भावः” (த்விங்பாவம்) அதாவது காந்தியின் பெயர் ஆகும். அன்னாத: என்பது எரியும் அக்னி. அக்னியை நோக்கி ஆசமனீயமோ, சிறிதளவும் சாப்பிடவோ கூடாது. அவ்வாறே உமிழவும் கூடாது கபத்தையோ எச்சிலையோ துப்பக்கூடாது. இது வ்ரதமாகும்?
इति द्वादशखण्डभाष्यम् ॥
उपमन्त्रयते स हिङ्कारो ज्ञपयते स प्रस्तावः स्त्रिया सह शेते स उद्गीथः प्रति स्त्रीं सह शेते स प्रतिहारः कालं गच्छति तन्निधनं पारं गच्छति तन्निधनमेतद्वामदेव्यं मिथुने प्रोतम् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - சந்திப்பது முதலாவதாக இருப்பதால் “हिंकारः” (ஹிம்காரம்). சந்தோஷப்படுத்துவதால் “प्रस्तावः” (பிரஸ்தாவம்). ச்ரேஷ்டமாய் இருப்பதால் சேர்ந்து சயனித்தல் “उीथः” (உத்கீதமாகும்). ஒவ்வொரு ஸ்திரீயை சயனிப்பது ஸ்திரீயின் அபிமுக பாவம் “प्रतिहारः” (பிரிதிஹாரம்). மிதுனத்தின் காலம் முடிவது “निधनम्” (நிதனம்) இந்த வாமதேவ்யமான மிதுனம் வாயு, ஜல ஸம்பந்தத்தால் பிரதிஷ்டிதமாய் உள்ளது.
उपमन्त्रयते सङ्केतं करोति, प्राथम्यात् स हिङ्कारः । ज्ञपयते तोषयति, स प्रस्तावः । सहशयनम् एकपर्यङ्कगमनम् , स उद्गीथः, श्रैष्ठ्यात् । प्रति स्त्रीं शयनं स्त्रिया अभिमुखीभावः, स प्रतिहारः । कालं गच्छति मैथुनेन, पारं समाप्तिं गच्छति तन्निधनम् ; एतद्वामदेव्यं मिथुने प्रोतम् , वाय्वम्बुमिथुनसम्बन्धात् ॥
அனுவாதம் - சமிக்ஞை செய்தல் முதலாவதாக அனுகுதல் இருப்பதால் அது हिंकारः (ஹிம்காரம்) மகிழ்விப்பது சந்தோஷபடுத்துவது அது प्रस्तावः (ப்ரஸ்தாவமாகும்) சேர்ந்து சயநித்தல் ஒரு கட்டிலில் இருப்பது ச்ரேஸ்டமாக இருப்பதால் அது उद्गीथः உத்கீதமாகும். ஒவ்வொரு ஸ்தீரிகளுடனும் (மனைவிகளுடனும்) சயனிப்பது ஸ்தீரிகளுக்கு சாதகமாக இருப்பது அது प्रतिहारः ப்ரதிஹாரமாகும். சேர்ந்திருந்து காலம் முடிவது கடைசியில் முடிவை அடைவது அது निधनम् (நிதனமாகும்.) இது வாமதேவ்யமான மிதுநத்தில் கோர்க்கபட்டது. காற்று, நீர் சம்பந்தத்தால்.
स य एवमेतद्वामदेव्यं मिथुने प्रोतं वेद मिथुनी भवति मिथुनान्मिथुनात्प्रजायते सर्वमायुरेति ज्योग्जीवति महान्प्रजया पशुभिर्भवति महान्कीर्त्या न काञ्चन परिहरेत्तद्व्रतम् ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - स य (ஸ ய) இவை முன்போல், மிதுனம் ஏற்படுகிறது மிதுனத்துடன் தொடர்புடைய வாமதேவ்ய உபாஸனையால் நல்ல தகுந்த ஸ்திரீயை உடையவனாகின்றான். அதன் பலனாக அநேக பிரஜைகளை அடைகின்றான். பூர்ண ஆயுளையும் அடைகின்றான். அவ்வாறே பசுக்களை அடைகிறான். மிகுந்து கீர்த்தியுடனும் இருக்கின்றான். எந்தப் பெண்ணையும் இழிவுபடுத்தக் கூடாது.
स य इत्यादि पूर्ववत् । मिथुनीभवति अविधुरो भवतीत्यर्थः । मिथुनान्मिथुनात्प्रजायते इति अमोघरेतस्त्वमुच्यते । न काञ्चन, काञ्चिदपि स्त्रियं स्वात्मतल्पप्राप्तां न परिहरेत् समागमार्थिनीम् , वामदेव्यसामोपासनाङ्गत्वेन विधानात् । एतस्मादन्यत्र प्रतिषेधस्मृतयः । वचनप्रामाण्याच्च धर्मावगतेर्न प्रतिषेधशास्त्रेणास्य विरोधः ॥
அனுவாதம் - सः (ஸ:) यः (ய:) முதலியவை முன்பு குறிப்பிட்டதுபோல் இனை உடையவனாக இருப்பான் அவிதூரனாக இருப்பான் என்று அர்த்தம். ஒவ்வொரு மிதுனத்திலிருந்து ப்ரஜைகள் உண்டாகின்றன. ப்ரயோஜனமுல்ல ரேதஸ்தன்மையை கூறுகிறது. வாமதேவ்ய ஸாமோபாஸன அங்கமாக விதிக்கப்பட்டதினால் தன்னுடைய படுக்கையை அடைந்து உடல் தொடர்பை விரும்பிகின்ற ஸ்தரீயை இழிவுப்படுத்த கூடாது. இதற்கு ப்ரதிஷேத ஸ்ம்ருதிகள் உண்டு. அது வாமதேவோபாசனத்தை தவிர மற்றயிடங்களில் செயல்படும். அதற்கு இந்த வாக்கியத்துடன் விரோதம் இல்லை.
इति त्रयोदशखण्डभाष्यम् ॥
उद्यन्हिङ्कार उदितः प्रस्तावो मध्यन्दिन उद्गीथोऽपराह्णः प्रतिहारोऽस्तं यन्निधनमेतद्बृहदादित्ये प्रोतम् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - உதிக்கின்ற சூரியன் “हिंकारः” (ஹிம்காரம்). உதித்த சூரியன் “प्रस्तावः” (பிரஸ்தாவம்) ஆகும். மத்தியான ஸமயத்தில் சூரியன் “उद्गीथः” (உத்கீதம்) ஆகும். மத்தியானத்திற்கு பிந்திய காலம் “प्रतिहारः” (பிரதிஹாரம்) ஆகும். மேலும் அஸ்தமிக்கும் (மறையும்) நேரம் சூரியன் “निधनम्” (நிதனம்) ஆகும். இந்த பிருஹத் ஸாமம் சூரியனில் ப்ரோதமாகியுள்ளது.
उद्यन्सविता स हिङ्कारः, प्राथंयाद्दर्शनस्य । उदितः प्रस्तावः, प्रस्तवनहेतुत्वात्कर्मणाम् । मध्यन्दिन उद्गीथः, श्रैष्ठ्यात् । अपराह्णः प्रतिहारः, पश्वादीनां गृहान्प्रति हरणात् । यदस्तं यंस्तन्निधनम् , रात्रौ गृहे निधानात्प्राणिनाम् । एतद्बृहत् आदित्ये प्रोतम् , बृहतः आदित्यदैवत्यत्वात् ॥
அனுவாதம் - உதிக்கப்போகும் சூரியன் “हिंकारः” (ஹிம்காரம்). ஏன்எனில் முதலாவதாக தோன்றுவதால், உதித்த சூரியன் கர்மங்களின் பிரஸ்தாவன ஹேதுவாய் இருப்பதால் உதித்த சூரியன் “प्रस्तावः” (பிரஸ்தாவமாகும்). மத்தியானத்தில் தோன்றும் சூரியன் சிரேஷ்டமாக இருப்பதால் “उद्गीथः” (உத்கீதம்) ஆகும். பிற்பகலில் பசுக்கள் முதலியவை வீடுகளுக்குத் திரும்புவதால் “प्रतिहारः” (பிரதிஹாரம்) ஆகும். அஸ்தமித்தபின் எல்லா பிராணிகளும் தங்களுடைய வீட்டில் (இருப்பதால்) தங்குவதால் (நிதனம் ஆவதால்) அது “निधनम्” (நிதனம் ஆகும்). இது பிரஹத் ஆதித்தியனிடத்தில் ப்ரோதமாய் நிலை பெற்றுள்ளது. ஏன் எனில் ப்ரஹதம் ஆதித்யனின் தேவதை ஆகும்.
स य एवमेतद्बृहदादित्ये प्रोतं वेद तेजस्व्यन्नादो भवति सर्वमायुरेति ज्योग्जीवति महान्प्रजया पशुभिर्भवति महान्कीर्त्या तपन्तं न निन्देत्तद्व्रतम् ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எந்த ஒரு புருஷன் இவ்வாறு பிருஹத் ஸாமத்தை சூரியனில் நிலைபெற்றுள்ளது என்று அறிகிறானோ அவன் தேஜஸ் உடையவனாயும், அன்னத்தை அனுபவிப்பனாகவும் ஆகின்றான். அவன் பூர்ண ஆயுளை அடைகின்றான். பிரகாச ரூபமாக ஜீவனத்தைக் கழிக்கின்றான். பிரஜைகள், பசுக்களை உடையவனாய் மஹான் (மேலானவன்) ஆகின்றான். அவ்வாறே கீர்த்தியினாலும் மஹான் ஆகின்றான். தபிக்கும் (சுட்டு எரிக்கும்) சூரியனை நிந்தை செய்யக்கூடாது இது விரதமாகும்.
स य इत्यादि पूर्ववत् । तपन्तं न निन्देत् ; तद्व्रतम् ॥
அனுவாதம் - “स य” (ஸ ய) முதலியவை முன்போல். சுட்டு எரிப்பதை நிந்தை செய்யக்கூடாது என்பது விரதம்.
इति चतुर्दशखण्डभाष्यम् ॥
अभ्राणि सम्प्लवन्ते स हिङ्कारो मेघो जायते स प्रस्तावो वर्षति स उद्गीथो विद्योतते स्तनयति स प्रतिहार उद्गृह्णाति तन्निधनमेतद्वैरूपं पर्जन्ये प्रोतम् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - மேகங்கள் ஒன்றாய் சேர்வது “हिंकारः” (ஹிம்காரம்) ஆகும் மேகம் உருவாவது “प्रस्तावः” (பிரஸ்தாவம்). மழை பெய்வது “उद्गीथः” (உத்கீதம்) ஆகும். மின்னல் மின்னுவது இடி இடிப்பது “प्रतिहारः” (பிரதிஹாரம்) ஆகும். அவ்வாறே மழை நிற்பது “निधनम्” (நிதனம்) ஆகும். இந்த வைரூப ஸாமம் மேகத்தில் அனுஸ்யூதமாய் உள்ளது.
अभ्राणि अब्भरणात् । मेघः उदकसेक्तृत्वात् । उक्तार्थमन्यत् । एतद्वैरूपं नाम साम पर्जन्ये प्रोतम् । अनेकरूपत्वात् अभ्रादिभिः पर्जन्यस्य, वैरूप्यम् ॥
அனுவாதம் - மேகங்கள் ஜலத்தைத் தாங்குவதால் (தரிப்பதால்) மேகம் எனப்படுகிறது. மற்றவை முன்போல், இந்த ரூப ஸாமமே மேகத்தில் பிரதிஷ்டித்திருக்கின்றது. மேகங்கள் முதலிய அநேக ரூபமாய் இருப்பதால் மழை மேகங்களுக்கு அநேக ரூபங்கள் உடையதாய் இருக்கின்றது.
स य एवमेतद्वैरूपं पर्जन्ये प्रोतं वेद विरूपाꣳश्च सुरूपाꣳश्च पशूनवरुन्धे सर्वमायुरेति ज्योग्जीवति महान्प्रजया पशुभिर्भवति महान्कीर्त्या वर्षन्तं न निन्देत्तद्ब्रतम् ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எந்த அந்த புருஷன் இவ்வாறு அநேக ரூப ஸாமத்தை மழை மேகத்தில் அனுஸ்யூதமாய் அறிகின்றானோ அவன் அழகான பல்வேறு மிருகங்களை உடையவனாகின்றான். பூர்ண ஆயுளை அடைகின்றான். நல்ல பிரகாசமான ஜீவனத்துடன் இருக்கின்றான். பிரஜைகள், கால்நடை செல்வங்களுடனும் மேலானவனாக ஆகின்றான். அவ்வாறே கீர்த்தியினால் மஹான் ஆகின்றான். மழையை நிந்திக்கக்கூடாது. இதுவே விரதமாகும்.
विरूपांश्च सुरूपांश्चाजाविप्रभृतीन्पशूनवरुन्धे प्राप्नोतीत्यर्थः । वर्षन्तं न निन्देत् तद्व्रतम् ॥
அனுவாதம் - பல்வேறு அழகிய வெள்ளாடு, செம்மறி ஆடு முதலிய அநேக கால் நடைகளை அடைவான் என்பது பொருள். மழை பெய்வதை நிந்திக்கக் கூடாது என்பது விரதம்.
इति पञ्चदशखण्डभाष्यम् ॥
वसन्तो हिङ्कारो ग्रीष्मः प्रस्तावो वर्षा उद्गीथः शरत्प्रतिहारो हेमन्तो निधनमेतद्वैराजमृतुषु प्रोतम् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - வஸந்தகாலம் (ருது) “हिंकारः” (ஹிம்காரம்), கோடைகாலம் “प्रस्तावः” (பிரஸ்தாவம்), மழைகாலம் “उद्गीथः” (உத்கீதம்), இலையுதிர்காலம் “प्रतिहारः” (பிரதிஹாரம்), குளிர்காலம் “निधनम्” (நிதனம்). இந்த வைராஜ ஸாமம் ருதுக்காலங்களில் அனுஸ்யூதமாய் இருக்கிறது.
वसन्तो हिङ्कारः, प्राथम्यात् । ग्रीष्मः प्रस्तावः इत्यादि पूर्ववत् ॥
அனுவாதம் - வஸந்தகாலம் முதலாவதாக இருப்பதால் “हिंकारः” (ஹிம்காரம்) கோடைகாலம் “प्रस्तावः” (பிரஸ்தாவம்) என்பன முதலியவை முன்பு போல்.
स य एवमेतद्वैराजमृतुषु प्रोतं वेद विराजति प्रजया पशुभिर्ब्रह्मवर्चसेन सर्वमायुरेति ज्योग्जीवति महान्प्रजया पशुभिर्भवति महान्कीर्त्यर्तून्न निन्देत्तद्व्रतम् ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எந்த அந்த புருஷன் இவ்வாறு வைராஜ ஸாமத்தை ருதுக்களில் (காலங்களில்) அனுஸ்யூதமாய் உள்ளதை அறிகிறானோ அவன் பிரஜைகள், வீட்டு மிருகங்கள், இவைகளாலும் பிரஹ்ம தேஜஸ்சாலும் சோபிக்கின்றான். அவன் பூர்ண ஆயுளை அடைகின்றான். அவனுடைய ஜீவனம் மிக ப்ராகாசமுடையதாகிறது. பிரஜைகள், வீட்டு மிருகங்கள் இவைகளாலும் அவ்வாறே கீர்த்தியினாலும் மஹான் ஆகின்றான். ஆகையால் ருதுக்களை (காலங்களை) நிந்தை செய்யாமல் இருப்பது விரதமாகும்.
एतद्वैराजमृतुषु प्रोतं वेद, विराजति ऋतुवत् — यथा ऋतवः आर्तवैर्धर्मैर्विराजन्ते, एवं प्रजादिभिर्विद्वानिति । उक्तमन्यम् । ऋतून्न निन्देत् , तद्व्रतम् ॥
அனுவாதம் - இந்த வைராஜ்ய ஸாமம் ருதுக்களில் (காலங்களில்) அனுஸ்யூதமாய் இருப்பதை அறிந்தவன் ருதுக்களைப் போல் விளங்குவான். எவன் இவ்வாறு ருதுக்களினாலும், ருதக்களின் ஸம்பந்தமான தர்மங்களினாலும் சோபத்தை (ஒளிர்வை) அடைகின்றான். அவ்வாறே பிரஜை முதலியவைகளினாலும் வித்வான் சோபிக்கின்றான் என்பது முன்பு கூறியவற்றைப் போல் ஆகும். ருதுக்களை நிந்தை செய்யாமல் இருப்பது விரதமாகும்.
इति षोडशखण्डभाष्यम् ॥
पृथिवी हिङ्कारोऽन्तरिक्षं प्रस्तावो द्यौरुद्गीथो दिशः प्रतिहारः समुद्रो निधनमेताः शक्वर्यो लोकेषु प्रोताः ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - பிருதிவீ “हिंकारः” (ஹிம்காரம்) அந்தரிக்ஷம் “प्रस्तावः” (பிரஸ்தாவம்) த்யுலோகம் “उीथः” (உத்கீதம்) திசைகள் “प्रतिहारः” (பிரதிஹாரம்). ஸமுத்திரம் “निधनम्” (நிதனம்). அந்த சக்வரீ ஸாமம் உலகங்களில் ப்ரோதமாய் (ஊடுருவி) உள்ளது.
पृथिवी हिङ्कार इत्यादि पूर्ववत् । शक्वर्य इति नित्यं बहुवचनं रेवत्य इव । लोकेषु प्रोताः ॥
அனுவாதம் - பிருதிவீ ஹிம்காரம் முதலியவை முன்போல். “शक्वर्य” (ஷக்வர்ய) என்ற பதம் “रेवत्य” (ரேவத்ய) என்ற பதம்போல் எப்பொழுதும் பஹுவசனமாகும். லோகங்களில் “शक्वर्य”(சக்வர்ய) ஸாமம் அனுஸ்யூதமாய் உள்ளது.
स य एवमेताः शक्वर्यो लोकेषु प्रोता वेद लोकी भवति सर्वमायुरेति ज्योग्जीवति महान्प्रजया पशुभिर्भवति महान्कीर्त्या लोकान्न निन्देत्तद्व्रतम् ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எந்த அந்த புருஷன் இவ்வாறு இந்த சக்வர்ய ஸாமத்தை உலகங்களில் அனுஸ்யூதமாய் அறிகின்றானோ உலகங்களை உடையவனாகின்றான். பூர்ண ஆயுளை அடைகின்றான். பிரகாசமாக வாழ்க்கையை கழிக்கின்றான். பிரஜைகள் கால்நடைகளுடன் சிறப்பானவனாகின்றான். அவ்வாறே கீர்த்தியினாலும் மஹான் ஆகின்றான். லோகங்களை நிந்தை செய்யாமல் இருப்பது விரதம்.
लोकी भवति लोकफलेन युज्यत इत्यर्थः । लोकान्न निन्देत् , तद्व्रतम् ॥
அனுவாதம் - லோகமாகின்றான். அதாவது லோக பலத்தை உடையவன் ஆகின்றான். லோகத்தை நிந்தை செய்யாமல் இருப்பது விரதம்.
इति सप्तदशखण्डभाष्यम् ॥
अजा हिङ्कारोऽवयः प्रस्तावो गाव उद्गीथोऽश्वाः प्रतिहारः पुरुषो निधनमेता रेवत्यः पशुषु प्रोताः ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஆடுகள் “हिंकारः” (ஹிம்காரம்), செம்மறி ஆடுகள் “प्रस्तावः” (பிரஸ்தாவம்), பசுக்கள் “उद्गीथः” (உத்கீதம்), குதிரைகள் “प्रतिहारः” (பிரதிஹாரம்), புருஷன் (மனிதன்) “निधनम्” (நிதனம்) ஆகும். இந்த “रेवतीसाम” (ரேவதிஸாமா) பசுக்களில் அனுஸ்யூதமாய் உள்ளது.
अजा हिङ्कार इत्यादि पूर्ववत् । पशुषु प्रोताः ॥
அனுவாதம் - ஆடு ஹிம்காரம் முதலியவை முன்போல். பசுக்களில் “रेवतीसाम” (ரேவதிஸாமா) அனுஸ்யூதமாய் உள்ளது.
स य एवमेता रेवत्यः पशुषु प्रोता वेद पशुमान्भवति सर्वमायुरेति ज्योग्जीवति महान्प्रजया पशुभिर्भवति महान्कीर्त्या पशून्न निन्देत्तद्व्रतम् ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எந்த அந்த புருஷன் இவ்வாறு ரேவதீஸாமத்தை பசுக்களில் அனுஸ்யூதமாய் அறிகிறானோ அவன் கால்நடைகளை உடையவனாகின்றான். பூர்ண ஆயுளை அடைகின்றான். பிரகாசமான வாழ்க்கையை அடைகின்றான் பிரஜைகள், கால்நடைகளாலும் நல்ல கீர்த்தியினாலும் மிக சிறந்தவனாக ஆகின்றான். பசுக்களை நிந்தை செய்யாமல் இருப்பது விரதமாகும்.
इति अष्टादशखण्डभाष्यम् ॥
लोम हिङ्कारस्त्वक्प्रस्तावो मांसमुद्गीथोऽस्थि प्रतिहारो मज्जा निधनमेतद्यज्ञायज्ञीयमङ्गेषु प्रोतम् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - முடி “हिंकारः” (ஹிம்காரம்), தோல் (த்வக்) “प्रस्तावः” (பிரஸ்தாவம்), மாம்சம் “उद्गीथः” (உத்கீதம்), எலும்பு “प्रतिहारः” (பிரதிஹாரம்), மஜ்ஜை “निधनम्” (நிதனம்) ஆகும். யக்ஞயாக்ஞீய ஸாமத்தை அங்கங்களில் அனுஸ்யூதமாய் உள்ளன.
लोम हिङ्कारः, देहावयवानां प्राथम्यात् । त्वक् प्रस्तावः, आनन्तर्यात् । मांसम् उद्गीथः, श्रैष्ठ्यात् । अस्थि प्रतिहारः, प्रतिहृतत्वात् । मज्जा निधनम् , आन्त्यात् । एतद्यज्ञायज्ञीयं नाम साम देहावयवेषु प्रोतम् ॥
அனுவாதம் - தேஹ அவயவங்களுள் முதன்மையானதால் முடி “हिंकारः” (ஹிம்காரம்). அதற்கு அடுத்து இருப்பதால் த்வக் (தோல்) “प्रस्तावः” (பிரஸ்தாவம்). உத்கிருஷ்டமாய் இருப்பதால் மாமிசம் “उद्गीथः” (உத்கீதம்). கடைசியாக இருப்பதால் மஜ்ஜை “निधनम्” (நிதனம்) ஆகும். இந்த யக்ஞாயக்ஞீயம் எனப்படம் ஸாமம் தேஹ அவயவங்களில் அனுஸ்யூதமாய் உள்ளது.
स य एवमेतद्यज्ञायज्ञीयमङ्गेषु प्रोतं वेदाङ्गी भवति नाङ्गेन विहूर्छति सर्वमायुरेति ज्योग्जीवति महान्प्रजया पशुभिर्भवति महान्कीर्त्या संवत्सरं मज्ज्ञो नाश्नीयात्तद्व्रतं मज्ज्ञो नाश्नीयादिति वा ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அந்த எந்த புருஷன் இவ்வாறு இந்த யக்ஞயக்ஞீய ஸாமத்தை அங்கங்களில் அனுஸ்யூதமாய் உள்ளதை அறிகிறானோ அவன் அங்கங்கள் உடையவனாகின்றான். அந்த அங்கங்கள் பழுது ஆவதில்லை. பூர்ண ஆயுளை அடைகிறான். பிரகாசமாக வாழ்கின்றான். பிரஜைகளாலும் கால்நடைகளும் உடையவனாகியும், கீர்த்தியை அடைந்தும் மஹான் ஆகின்றான். ஓராண்டு மாமிசத்தை உண்ணக்கூடாது அல்லது எப்பொழுதும் மாமிசத்தை உண்ணக்கூடாது என்பது விரதம்.
अङ्गी भवति समग्राङ्गो भवतीत्यर्थः । नाङ्गेन हस्तपादादिना विहूर्छति न कुटिलीभवति, पङ्गुः कुणी वा इत्यर्थः । संवत्सरं संवत्सरमात्रं मज्ज्ञो मांसानि नाश्नीयात् न भक्षयेत् । बहुवचनं मत्स्योपलक्षणार्थम् । मज्ज्ञो नाश्नीयात् सर्वदैव नाश्नीयादिति वा, तद्व्रतम् ॥
அனுவாதம் - ஆரோக்கியமான அங்கம் உடையவனாகின்றான். அங்கங்களை பூர்ணமாக உடையவனாகின்றான். கை கால் முதலிய அங்கங்கள் பழுது அடைந்து நொண்டி முதலியவை போன்ற அங்கஹீனம் அடைவதில்லை. ஒரு வருடம் மாத்திரம் மாமிசம் சாப்பிடுவதில்லை. இங்கு பகுவசனத்தால் மீன்களையும் குறிக்கிறது. அல்லது எப்பொழுதும் மாமிசம் சாப்பிடுவது இல்லை என்பது விரதமாகும்.
इति एकोनविंशखण्डभाष्यम् ॥
अग्निर्हिङ्कारो वायुः प्रस्ताव आदित्य उद्गीथो नक्षत्राणि प्रतिहारश्चन्द्रमा निधनमेतद्राजनं देवतासु प्रोतम् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - அக்னி “हिंकारः” (ஹிம்காரம்), வாயு “प्रस्तावः” (பிரஸ்தாவம்), ஆதித்யன் “उद्गीथः” (உத்கீத:) நக்ஷத்திரம் “प्रतिहारः” (பிரதிஹாரம்), சந்திரன் “निधनम्” (நிதனம்) ஆகும். இந்த ராஜனஸாமம் தேவதைகளில் அனுஸ்யூதமாய் உள்ளன.
अग्निः हिङ्कारः, प्रथमस्थानत्वात् । वायुः प्रस्तावः, आनन्तर्यसामान्यात् । आदित्यः उद्गीथः, श्रैष्ठ्यात् । नक्षत्राणि प्रतिहारः, प्रतिहृतत्वात् । चन्द्रमा निधनम् , कर्मिणां तन्निधनात् । एतद्राजनं देवतासु प्रोतम् , देवतानां दीप्तिमत्त्वात् ॥
அனுவாதம் - முதல் ஸ்தானத்தில் இருப்பதால் அக்னி “हिंकारः” (ஹிம்காரம்) அதற்கு அடுத்து இருப்பதற்கு ஸமானமாக இருப்பதால் வாயு “प्रस्तावः” (பிரஸ்தாவம்), உத்கிருஷ்டமாய் இருப்பதால் ஆதித்தியன் “उीथः” (உத்கீதம்). நக்ஷத்திரங்கள் எல்லாம் ஒன்று சேர்வதால் “प्रतिहारः” (பிரதிஹாரம்). அவ்வாறே சந்திரன் “निधनम्” (நிதனம்) ஆகும். ஏன்எனில் கர்ம காண்டிகள் அதில் நிலைபெறுவதால். இந்த ராஜனஸாமத்தை தேவதைகளில் அனுஸ்யூதமாய் உள்ளது. ஏன்எனில் தேவகணங்கள் ஒளிமயமாய் திகழ்வதால் ஆகும்.
विद्वत्फलम् —
அனுவாதம் - இந்த உபாஸனையை அறிந்தவனுடைய பலன் -
स य एवमेतद्राजनं देवतासु प्रोतं वेदैतासामेव देवतानाꣳ सलोकताꣳ सार्ष्टितांꣳसायुज्यं गच्छति सर्वमायुरेति ज्योग्जीवति महान्प्रजया पशुभिर्भवति महान्कीर्त्या ब्राह्मणान्न निन्देत्तद्व्रतम् ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எந்த இந்த புருஷன் இவ்வாறு ராஜன ஸாமத்தை தேவதைகளில் அனுஸ்யூதமாய் உள்ளது என்று அறிகிறானோ அவன் தேவதைகளின் ஸாலோக்கியத்தையும், அவர்களுக்குச் ஸமமான ஐஸ்வர்யத்தையும் ஸாயுஜ்யத்தையும் அடைகின்றான். அவன் பூர்ண ஆயுள் உடையவனாக ஆகின்றான். பிரகாசமான வாழ்க்கையை உடையவனாகின்றான். பிரஜகளையும், பசுக்களையும் உடையவனாகி மஹான் ஆகின்றான். அவ்வாறே கீர்த்தியும் பெற்று மிகச் சிறந்தவனாகின்றான். பிராஹ்மனர்களை நிந்தை செய்யாமல் இருப்பது விரதம்.
एतासामेवाग्न्यादीनां देवतानां सलोकतां समानलोकतां सार्ष्टितां समानर्द्धित्वं सायुज्यं सयुग्भावम् एकदेहदेहित्वमित्येतत् , वा - शब्दोऽत्र लुप्तो द्रष्टव्यः ; सलोकतां वा इत्यादि ; भावनाविशेषतः फलविशेषोपपत्तेः । गच्छति प्राप्नोति ; समुच्चयानुपपत्तेश्च । ब्राह्मणान् न निन्देत् , तद्व्रतम् । ‘एते वै देवाः प्रत्यक्षं यद्ब्राह्मणाः’ ( ? ) इति श्रुतेः ब्राह्मणनिन्दा देवतानिन्दैवेति ॥
அனுவாதம் - இந்த அக்னி முதலிய தேவதைகளின் ஸலோகம் அதாவது ஸமான லோகம், ஸாரிஷ்டி அதாவது ஸமான செல்வத்தை, ஸாயுஜ்யம் அதாவது பரஸ்பரம் ஒன்று சேரும் பாவம் அதாவது ஒரு தேஹத்துவத்தை அடைவது. இதில் “वा” (வா = அல்லது) என்ற சப்தம் இல்லை என்பது அறியப்பட வேண்டியது. ஏன்எனில் ஸலோகம் அல்லது என்று புரிந்துகொள்ள வேண்டும். நம் பாவனைக்குத் தகுந்தவாறு பலன்களும் வேறுபடுகிறது. இங்கு செல்கிறான் என்றது அடைகிறான் என்பது பொருள். இங்கு இந்த பலன்களின் ஸமுச்சயம் இல்லை. பிராஹ்மனர்களை நிந்திக்கக்கூடாது என்பது விரதம். “एते वै देवाः प्रत्यक्षं यद्ब्रह्मणाः” (ஏதே வை தேவா: பிரத்யக்ஷம் யத்ப்ராஹ்மணா:) என்ற சுருதி வாக்கியத்தால் பிராஹ்மண நிந்தை தேவதா நிந்தையாகும் என்று அறியப்படுகிறது.
इति विंशखण्डभाष्यम् ॥
त्रयी विद्या हिङ्कारस्त्रय इमे लोकाः स प्रस्तावोऽग्निर्वायुरादित्यः स उद्गीथो नक्षत्राणि वयांसि मरीचयः स प्रतिहारः सर्पा गन्धर्वाः पितरस्तन्निधनमेतत्साम सर्वस्मिन्प्रोतम् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - மூன்று வித்யை “हिंकारः” (ஹிம்காரம்). இந்த மூன்று உலகங்கள் “प्रस्तावः” (பிரஸ்தாவம்). அக்னி, வாயு, ஆதித்தியன் ஆகியவை “उद्गीथः” (உத்கீதம்). நக்ஷத்திரம், பக்ஷு (பறவைகள்) கிரணங்கள் ஆகியவை “प्रतिहारः” (பிரதிஹாரம்) ஆகும். சர்ப்பம், கந்தர்வர்கள், பித்ருகணங்கள் ஆகியவை “निधनम्” (நிதனம்) ஆகும். இந்த ஸாம உபாசனை எல்லாவற்றிலும் அனுஸ்யூதமாய் உள்ளது.
त्रयी विद्या हिङ्कारः । अग्न्यादिसाम्न आनन्तर्यं त्रयीविद्याया अग्न्यादिकार्यत्वश्रुतेः । हिङ्कारः प्राथंयात्सर्वकर्तव्यानाम् । त्रय इमे लोकास्तत्कार्यत्वादनन्तरा इति प्रस्तावः । अग्न्यादीनामुद्गीथत्वं श्रैष्ठ्यात् । नक्षत्रादीनां प्रतिहृतत्वात्प्रतिहारत्वम् । सर्पादीनां धकारसामान्यान्निधनत्वम् ।
அனுவாதம் - த்ரயீ (மூன்று) வித்யா “हिंकारः” (ஹிம்காரம் ஆகும்). அக்னி முதலிய காரியத்துவ சுருதியினால் திரயீ வித்யாவின் காரியமான அக்னி ஸாமம் அதற்குப் பின்னால் வருவதால் ஆகும். எல்லா கர்த்தவ்யங்களுக்கும் “हिंकारः” (ஹிம்காரம்) முதன்மை-யாவதால் இந்த மூன்று உலகங்களும் அதன் காரியமாவதால் அதற்கு பின்னால் வருவதால் “प्रस्तावः” (பிரஸ்தாவம்) உத்கிருஷ்டமாய் இருப்பதால் அக்னி முதலியவைகள் “उद्गीथः” (உத்கீதம்). நக்ஷத்திரங்கள் முதலியவை கூட்டமாய் சேர்வதால் “प्रतिहारत्वम्” (பிரதிஹாரத்துவம்) ஆகும். சர்ப்பம் முதலியவைகள் “धकारः” (தகார) ஸாமான்யத்தால் “निधनम्” (நிதனம்) “सर्पः” சப்தத்தின் பரியாய பதம் “विषधरः” “पणधरः” என்பது முதலியவைகளில் “धकारम्” (தகாரம்) இருப்பதால் ஆகும்.
एतत्साम नामविशेषाभावात्सामसमुदायः सामशब्दः सर्वस्मिन् प्रोतम् । त्रयीविद्यादि हि सर्वम् । त्रयीविद्यादिदृष्ट्या हिङ्कारादिसामभक्तय उपास्याः । अतीतेष्वपि सामोपासनेषु येषु येषु प्रोतं यद्यत्साम, तद्दृष्ट्या तदुपास्यमिति । कर्माङ्गानां दृष्टिविशेषेणेवाज्यस्य संस्कार्यत्वात् ॥
அனுவாதம் - இந்த ஸாமம் நாமவிசேஷம் அற்றதால் ஸாமக் கூட்டம் முழுவதும் ஸாம சப்தம் எல்லாவற்றிலும் ஊடுருவி உள்ளது. எல்லாம் த்ரயீ வித்யையே. த்ரி வித்யா முதலிய திருஷ்டியினால் “ஹீம்” காரம் முதலிய ஸாம பக்திகள் உபாஸிக்க வேண்டியவைகள். இதற்குமுன் கூறிய ஸாம உபாஸனைகளில் எது ஊடுருவி உள்ளதோ அது அது ஸாமம். அந்த திருஷ்டியால் அதை உபாஸிக்க வேண்டும். நெய் போன்று கர்ம அங்கங்களின் திருஷ்டி விசேஷத்தால் ஸம்ஸ்காரியம் (சுத்தி) ஆகிறது.
स य एवमेतत्साम सर्वस्मिन्प्रोतं वेद सर्वं ह भवति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இவ்வாறு எல்லாவற்றிலும் அனுஸ்யூதமான இந்த ஸாமத்தை அறிகிறானோ அவன் ஸர்வ (எல்லா) ரூபமாக ஆகின்றான்.
सर्वविषयसामविदः फलम् —
அனுவாதம் - அ.கை - எல்லா விஷயமான ஸாமத்தை அறிந்தவன் அடையும் பலன் -
सर्वं ह भवति सर्वेश्वरो भवतीत्यर्थः । निरुपचरितसर्वभावे हि दिक्स्थेभ्यो बलिप्राप्त्यनुपपत्तिः ॥
அனுவாதம் - எல்லாமாக (ஸர்வமாக) ஆகின்றான். அதாவது ஸர்வேச்வரன் ஆகின்றான் என்பது பொருள். ஏன் எனில் ஸர்வ பாவத்தின் உபசாரம் இல்லாமல் எல்லா திக்குகளிலும் இருக்கும் புருஷர்களிடம் இருந்தும் பலியை அடைவது என்பது ஸம்பவிக்காது.
तदेष श्लोको यानि पञ्चधा त्रीणि त्रीणि तेभ्यो न ज्यायः परमन्यदस्ति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - இந்த விஷயத்தில் இந்த மந்திரம் எந்த ஐந்துவிதமாக மூன்று மூன்று கூறப்பட்டதோ அதைத் தவிர சிரேஷ்டமானதோ, அதைக்காட்டிலும் வேறானதோ எது ஒன்றும் இல்லை.
तत् एतस्मिन्नर्थे एषः श्लोकः मन्त्रोऽप्यस्ति । यानि पञ्चधा पञ्चप्रकारेण हिङ्कारादिविभागैः प्रोक्तानि त्रीणि त्रीणि त्रयीविद्यादीनि, तेभ्यः पञ्चत्रिकेभ्यः ज्यायः महत्तरं परं च व्यतिरिक्तम् अन्यत् वस्त्वन्तरं नास्ति न विद्यत इत्यर्थः । तत्रैव हि सर्वस्यान्तर्भावः ॥
அனுவாதம் - அது இந்த அர்த்தத்தில் ச்லோகம் அதாவது மந்திரமும் உள்ளது. “हिंकार” (ஹிம்காரம்) முதலிய விபாகங்கள் மூலமாய் ஐந்து பிரகாரமாகக் கூறப்பட்டதோ அது மூன்று மூன்றாக த்ரீவித்யா முதலியவைகள் ஆகும். இந்த ஐந்து மூன்றாக உள்ளதைக் காட்டிலும் மிகவும் மேலானது (மஹத்தரம்), வேறு வஸ்து ஒன்றும் கிடையாது என்பது பொருள். அதாவது அவைகளிலேயே எல்லாம் அந்தர் பாவமாக உள்ளது. (பலி - பரிசு).
यस्तद्वेद स वेद सर्वꣳ सर्वा दिशो बलिमस्मै हरन्ति सर्वमस्मीत्युपासीत तद्व्रतं तद्व्रतम् ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - எவன் இதை அறிகிறானோ அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாகின்றான். அவனுக்கு எல்லா திசைகளிலிருந்தும் பலி அதாவது போகங்கள் ஸமர்பிக்கப்படுகின்றன. நான் “எல்லாமாக இருக்கின்றேன்” என்று உபாஸனை செய்யவேண்டியது விரதம் ஆகும், விரதம் ஆகும் (நியமம் ஆகும்).
यः तत् यथोक्तं सर्वात्मकं साम वेद, स वेद सर्वं स सर्वज्ञो भवतीत्यर्थः । सर्वा दिशः सर्वदिक्स्था अस्मै एवंविदे बलिं भोगं हरन्ति प्रापयन्तीत्यर्थः । सर्वम् अस्मि भवामि इति एवम् एतत्साम उपासीत, तस्य एतदेव व्रतम् । द्विरुक्तिः सामोपासनसमाप्त्यर्था ॥
அனுவாதம் - எவன் ஒருவன் அதைக் கூறப்பட்டவாறு ஸர்வாத்மகமான ஸாமத்தை அறிகிறானோ அவன் எல்லாம் அறிந்தவன் அதாவது ஸர்வக்ஞனாகின்றான் எல்லா திசைகளும் அதாவது எல்லா திக்குகளில் இருப்பவைகள் இவ்வாறு அறிந்தவனுக்கு பலியை அதாவது போகங்களை அடையச் செய்கிறது. எல்லாம் நானாகவே இருக்கின்றேன். என்று இந்த ஸாமத்தை உபாஸனை செய்யவேண்டும். இதுவே விரதம், இதுவே விரதம் என்று கூறியது ஸாம உபாஸனத்தின் பூர்த்தியை தெரிவிப்பதற்காக ஆகும்.
इति एकविंशखण्डभाष्यम् ॥
विनर्दि साम्नो वृणे पशव्यमित्यग्नेरुद्गीथोऽनिरुक्तः प्रजापतेर्निरुक्तः सोमस्य मृदु श्लक्ष्णं वायोः श्लक्ष्णं बलवदिन्द्रस्य क्रौञ्चं बृहस्पतेरपध्वान्तं वरुणस्य तान्सर्वानेवोपसेवेत वारुणं त्वेव वर्जयेत् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஸாமத்தின் “विनर्दि” (விநர்தி) என்ற பெயருடைய கானத்தை வரிக்கின்றேன். அது கால் நடைகளுக்கு ஹிதத்தை அளிப்பது. மேலும் அது அக்னி ஸம்பந்தமான உத்கீதமாகும். பிரஜாபதியின் உத்கீதம் “अनिरुक्तः” (அநிருக்தம்) ஆகும். சோமத்தின் (சந்திரனின்) உத்கீதம் “निरुक्तः” (நிருக்தம்). வாயுவின் உத்கீதம் உச்சரிப்பதற்கு ஸரளமாகவும் இதமானதாகும். இந்திரனுடையது இதமானதாயும் பலமுடையதாயும் இருக்கும். பிரஹஸ்பதியினுடையது க்ரெளஞ்ச பறவைக்கு ஸமானமான சப்தமுடையது. வருணனுடையது நாசாகாரமாக (கொடூரமாக) இருக்கும். இந்த எல்லா உத்கீதங்களையும் உபாஸனை செய்யவேண்டும். வருண ஸம்பந்தியான உத்கீதத்தை மட்டும் விட்டுவிடவேண்டும்.
सामोपासनप्रसङ्गेन गानविशेषादिसम्पत् उद्गातुरुपदिश्यते, फलविशेषसम्बन्धात् ।
அனுவாதம் - ஸாம உபாஸனை பிரஸங்கத்தால் உத்காதாவிற்கு பல விசேஷ ஸம்பந்தம் இருப்பதால் கான விசேஷம் முதலிய ஸம்பத்துக்கள் உபதேசம் செய்யப்படுகிறது.
विनर्दि विशिष्टो नर्दः स्वरविशेषः ऋषभकूजितसमोऽस्यास्तीति विनर्दि गानमिति वाक्यशेषः । तच्च साम्नः सम्बन्धि पशुभ्यो हितं पशव्यम् अग्नेः अग्निदेवत्यं च उद्गीथः उद्गानम् । तदहमेवंविशिष्टं वृणे प्रार्थये इति कश्चिद्यजमानः उद्गाता वा मन्यते ।
அனுவாதம் - “विनर्दि” (விநர்தி) - “नर्दः” (நர்த:) என்பது ஸ்வர விசேஷத்துடன் கூடிய ரிஷபத்தின் (காளை மாட்டின்) சப்தத்திற்கு சமானமாக கூடியது இந்த கானம். ஆகையால் “विनर्दिगानम्” (நிநர்த்தி கானம்) எனப்படுகின்றது. அந்த ஸாமத்தின் ஸம்பந்தமுடைய கானம் கால்நடைகளுக்கு ஹிதமானது. மேலும் அக்னிதேவதை ஸம்பந்தி உத்கீதமாகும். அதுவே உத்கானம். இவ்வாறு இந்த விசிஷ்ட ஸாமத்தை நான் வரிக்கின்றேன் அதாவது பிரார்த்திக்கின்றேன் என்று யஜமானன் அல்லது உத்காதா கருதுகிறார்கள்.
अनिरुक्तः अमुकसमः इत्यविशेषितः प्रजापतेः प्रजापतिदेवत्यः स गानविशेषः, आनिरुक्त्यात्प्रजापतेः । निरुक्तः स्पष्टः । सोमस्य सोमदेवत्यः स उद्गीथ इत्यर्थः । मृदु श्लक्ष्णं च गानं वायोः वायुदेवत्यं तत् । श्लक्ष्णं बलवच्च प्रयत्नाधिक्योपेतं च इन्द्रस्य ऐन्द्रं तद्गानम् । क्रौञ्चं क्रौञ्चपक्षिनिनादसमं बृहस्पतेः बार्हस्पत्यं तत् । अपध्वान्तं भिन्नकांस्यस्वरसमं वरुणस्य एतद्गानम् । तान्सर्वानेवोपसेवेत प्रयुञ्जीत वारुणं त्वेवैकं वर्जयेत् ॥
அனுவாதம் - பிரஜாபதியினுடைய பிரஜாபதி தெய்வத்தின் அந்த கான விசேஷம் அநிருக்தம் அதாவது எது என்று அறிய முடியாததற்கு ஸமமாவதால் பிரஜாபதி விசேஷரூபமாக நிரூபிக்கப்படவில்லை. நிருக்தம் என்பது ஸ்பஷ்டம் ஆகும். சந்திரனுடைய ஸோம தேவதையின் ஸம்பந்தமான அந்த உத்கீதம் ஸ்பஷ்டமானது என்பது பொருள். வாயுவினுடைய மென்மையான, வலிமையான கானம் வாயு தேவதையின் ஸம்பந்தப்பட்டது. மிருதுவானதும் பலமானதுமானதும் மிகுந்த ப்ரயத்தனத்தை அபேக்ஷிப்பது இந்திரனுடைய அதாவது இந்திர ஸம்பந்தமான கானமாகும். க்ரெளஞ்ச பக்ஷியின் ஸப்தத்திற்கு ஸமானமானது பிருஹஸ்பதியின் அதாவது பிருஹஸ்பதி தேவதை ஸம்பந்தமான கானம். உடைந்த வெங்கல பாத்திரத்தின் சப்தம் போன்றது வருண தேவதா சம்பந்தமான கானம். அந்த எல்லாவற்றையும் பிரயோகம் செய்யவேண்டும். வருண சம்பந்த கானத்தைத் தவிர்க்க வேண்டும்.
अमृतत्वं देवेभ्य आगायानीत्यागायेत्स्वधां पितृभ्य आशां मनुष्येभ्यस्तृणोदकं पशुभ्यः स्वर्गं लोकं यजमानायान्नमात्मन आगायानीत्येतानि मनसा ध्यायन्नप्रमत्तः स्तुवीत ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - நான் தேவதைகளுக்காக அம்ருதத்துவத்தின் ஆகானம் (ஸாதனம்) செய்கிறேன் என்று இவ்வாறு சிந்தனை செய்து கொண்டே ஆகானம் செய்ய வேண்டும். பித்ருக்களுக்காக ஸ்வதா, மனிதர்களுக்கு அவர்களின் விருப்பப்படி கால் நடைகளுக்கு புல், ஜலம் ஆகியவை, யஜமானனுக்கு ஸ்வர்க்க லோகம், எனக்காக அன்னத்தின் ஆகானம் செய்கிறேன் என்று இவ்வாறு இவைகளை மனதால் தியானம் செய்துகொண்டே சோம்பலற்று ஸ்துதி செய்ய வேண்டும்.
अमृतत्वं देवेभ्य आगायानि साधयानि ; स्वधां पितृभ्य आगायानि ; आशां मनुष्येभ्यः, आशां प्रार्थनां प्रार्थितमित्येतत् ; तृणोदकं पशुभ्यः ; स्वर्गं लोकं यजमानाय ; अन्नम् आत्मने मह्यम् आगायानि ; इत्येतानि मनसा चिन्तयन् ध्यायन् अप्रमत्तः स्वरोष्मव्यञ्जनादिभ्यः स्तुवीत ॥
அனுவாதம் - நான் தேவர்களுக்காக அம்ருதத்தின் பொருட்டு ஆகான ஸாதனமாகிய ஆகானத்தை செய்கிறேன். பித்ருகளுக்காக ஸ்வதாவை ஆகானம் செய்கிறேன். மனிதர்களின் விரும்பும் ஆசைகளுக்காக ஆகானம் செய்கின்றேன், வீட்டு விலங்குகளுக்கான புல், தண்ணீருக்காகவும், யஜமானனுக்கு ஸ்வர்க்க லோகத்திற்காகவும், எனக்கான அன்னத்திற்காகவும் ஆகானம் செய்கிறேன் என்று இவ்வாறு மனதால் சிந்தித்துக் கொண்டே ஸ்வரம், ஊஷ்ம மேலும் வ்யஞ்ஜனம் முதலியவைகளில் ஆலஸ்யம் (சோம்பல்) இல்லாமல் ஸ்துதி செய்ய வேண்டும்.
सर्वे स्वरा अकारादय इन्द्रस्य बलकर्मणः प्राणस्य आत्मानः देहावयवस्थानीयाः । सर्वे ऊष्माणः शषसहादयः प्रजापतेर्विराजः कश्यपस्य वा आत्मानः । सर्वे स्पर्शाः कादयो व्यञ्जनानि मृत्योरात्मानः ॥
அனுவாதம் - எல்லா அகாரம் முதலிய ஸ்வரங்கள் இந்திரனுடைய பல கர்மத்தினுடைய பிராணன் ஆத்மா அதாவது தேஹ அவயவ ஸ்தானத்தில் உள்ளது. எல்லா ச (श) ஷ (ष) ஸ (स) ஹ (ह) முதலிய ஊஷ்மாண வர்ணங்கள் பிரஜாபதியினுடையது அதாவது விராட் என்னும் கச்யபருடைய ஆத்மாவாகும், எல்லா க (क) முதலிய வ்யஞ்ஜன வர்ணங்கள் மிருத்யுவின் ஆத்மாவாகும்.
सर्वे स्वरा इन्द्रस्यात्मानः सर्व ऊष्माणः प्रजापतेरात्मानः सर्वे स्पर्शा मृत्योरात्मानस्तं यदि स्वरेषूपालभेतेन्द्रं शरणं प्रपन्नोऽभूवं स त्वा प्रति वक्ष्यतीत्येनं ब्रूयात् ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - எல்லா ஸ்வரங்களும் (உயிர் எழுத்துகள்) இந்திரனின் ஆத்மா. எல்லா ஊஷ்ம வர்ணங்கள் பிரஜாபதியின் ஆத்மா. எல்லா ஸ்பர்ஷ வர்ணங்களும் மிருத்யுவின் ஆத்மா. அந்த உத்காதாவிடம் எந்த புருஷன் ஸ்வரத்தின் உச்சாரணத்தில் தோஷத்தைக் காட்டினால் அவனிடம் நான் இந்திரனிடம் சரணாகதம் அடைந்து உள்ளேன் என்று பதில் அளிக்க வேண்டும்.
तमेवंविदमुद्गातारं यदि कश्चित् स्वरेषूपालभेत — स्वरस्त्वया दुष्टः प्रयुक्त इति, एवमुपालब्धः इन्द्रं प्राणमीश्वरं शरणम् आश्रयं प्रपन्नोऽभूवं स्वरान्प्रयुञ्जानोऽहम् , स इन्द्रः यत्तव वक्तव्यं त्वा त्वां प्रति वक्ष्यति स एव देव उत्तरं दास्यतीत्येनं ब्रूयात् ॥
அனுவாதம் - இவ்வாறு அறிந்த அந்த உத்காதாவை எவர் ஒருவர் கண்டித்தால் அதாவது நீ தோஷத்துடன் கூடிய ஸ்வரத்தை பிரயோகம் செய்கிறாய் என்று கண்டித்தால் அவரைக் குறித்து நீ இவ்வாறு கூறவேண்டும். நான் இந்திரன் அதாவது பிராண ஈஸ்வரனை நான் சரணம் அடைந்திருக்கிறேன். நான் ஸ்வரத்தை பிரயோகம் செய்துள்ளேன். ஆகையால் உன்னிடம் என்ன பதில் கூறவேண்டுமோ அதை இந்திர தேவன் கூறுவார்.
अथ यद्येनमूष्मसूपालभेत प्रजापतिं शरणं प्रपन्नोऽभूवं स त्वा प्रति पेक्ष्यतीत्येनं ब्रूयादथ यद्येनं स्पर्शेषूपालभेत मृत्युं शरणं प्रपन्नोऽभूवं स त्वा प्रति धक्ष्यतीत्येनं ब्रूयात् ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - மேலும் எவர் ஒருவர் இந்த ஊஷ்ம வர்ண உச்சாரணத்தில் தோஷத்தை தெரிவிக்கிறார்களோ அவர்களிடம் இவ்வாறு கூறவேண்டும் நான் பிரஜாபதியை சரண் அடைந்துள்ளேன். அவர் உன்னை தண்டிப்பார். மேலும் ஒருவர் ஸ்பர்ச உச்சாரணத்தில் தோஷம் பார்த்தால் அவரிடம் நான் மிருத்யுவை சரணம் அடைந்துள்ளேன். அவர் உன்னை அழித்துவிடுவார் என்று கூறு.
अथ यद्येनमूष्मसु तथैवोपालभेत, प्रजापतिं शरणं प्रपन्नोऽभूवम् , स त्वा प्रति पेक्ष्यति सञ्चूर्णयिष्यतीत्येनं ब्रूयात् । अथ यद्येनं स्पर्शेषूपालभेत, मृत्युं शरणं प्रपन्नोऽभूवम् , स त्वा प्रति धक्ष्यति भस्मीकरिष्यतीत्येनं ब्रूयात् ॥
அனுவாதம் - மேலும் இவ்வாறு எந்த ஒரு புருஷனாவது இந்த உஷ்ம வர்ணங்களை உச்சரிப்பதில் தோஷம் தெரிவித்தால் அவரிடம் நான் பிரஜாபதியிடம் சரணம் அடைந்திருக்கிறேன். ஆகையால் அவர் உன்னை அதைக் குறித்து பொடி பொடியாக்கிவிடுவார்கள் என்று கூறு. அவ்வாறே எவர் இந்த ஸ்பர்சங்களை உச்சாரணம் செய்வதில் தோஷம் தெரிவித்தால் அவரிடம் நான் மிருத்யு தேவதையிடம் சரணம் அடைந்துள்ளேன். ஆகையால் உன்னை அவர் சாம்பலாக்கிவிடுவார் என்று கூறு.
सर्वे स्वरा घोषवन्तो बलवन्तो वक्तव्या इन्द्रे बलं ददानीति सर्व ऊष्माणोऽग्रस्ता अनिरस्ता विवृता वक्तव्याः प्रजापतेरात्मानं परिददानीति सर्वे स्पर्शालेशेनानभिनिहिता वक्तव्या मृत्योरात्मानं परिहराणीति ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - எல்லா ஸ்வரங்களும் மென்மையான அதாவது தெளிவானதாகவும் வலிமை உடையதாய் உச்சரிக்க வேண்டும். ஆகையால் (அதை உச்சரிக்கும் ஸமயத்தில்) நான் இந்திரனிடத்தில் வலிமையை (ஆற்றலை) அளிக்கின்றேன் என்று (சிந்தனை செய்ய வேண்டும்). எல்லா ஊஷ்ம வர்ணத்தை விழுங்காமல், விட்டு விடாமல், பிரயத்தனத்துடன் உச்சாரணம் செய்ய வேண்டும். மேலும் நான் பிரஜாபதிக்கு ஆத்ம தானம் செய்கின்றேன் (என்று சிந்தனை செய்ய வேண்டும்) அவ்வாறே எல்லா ஸ்பர்ச வர்ணத்தையும் மிருதுவாக ஒன்றுக்கொன்று சேராமல் கூறவேண்டும். எவ்வாறு குழந்தைகள் மெதுவாக மெதுவாக எழுந்திருக்கின்றனவோ அவ்வாறு மெதுவாக மெதுவாக மிருத்யுவிடமிருந்து என்னைக் காத்துக்கொள்கின்றேன்.
यत इन्द्राद्यात्मानः स्वरादयः, अतः सर्वे स्वराः घोषवन्तः बलवन्तो वक्तव्याः । तथा अहमिन्द्रे बलं ददानि बलमादधानीति । तथा सर्वे ऊष्माणः अग्रस्ताः अन्तरप्रवेशिताः अनिरस्ताः बहिरप्रक्षिप्ताः विवृताः विवृतप्रयत्नोपेताः । प्रजापतेरात्मानं परिददानि प्रयच्छानीति । सर्वे स्पर्शाः लेशेन शनकैः अनभिनिहिताः अनभिनिक्षिप्ता वक्तव्याः । मृत्योरात्मानं बालानिव शनकैः परिहरन् मृत्योरात्मानं परिहराणीति ॥
அனுவாதம் - ஏன்எனில் ஸ்வரங்கள் முதலிய இந்திரன் முதலிய ரூபமோ அதனால் எல்லா ஸ்வரங்களும் கோசமும் பலமும் கூடியதாய் உச்சரிக்க வேண்டும். அவ்வாறே நான் இந்திரனிடத்தில் பலத்தை அளிக்கிறேன். (இவ்வாறு சிந்திக்க வேண்டும்). இவ்வாறு எல்லா ஊஷ்மாண (ஸ்வர்க்க) எழுத்துக்களை விழுங்காமல் விட்டுவிடாமல் பிரயத்தனத்துடன் உச்சரித்து பிரஜாபதிக்கு என்னை அளிக்கிறேன். அவ்வாறே ஸ்பர்ச வர்ணத்தை சிறிதளவு ஒவ்வொன்றும் கலக்காமல் உச்சரிக்க வேண்டும். எவ்வாறு உலகில் குழந்தைகள் மெதுவாக எழுகின்றனவோ அவ்வாறு நான் என்னை மிருத்யுவிடம் இருந்து (மரணத்திலிருந்து) மெதுவாகக் காத்துக்கொள்கிறேன்.
इति द्वाविंशखण्डभाष्यम् ॥
त्रयो धर्मस्कन्धा यज्ञोऽध्ययनं दानमिति प्रथमस्तप एव द्वितीयो ब्रह्मचार्याचार्यकुलवासी तृतीयोऽत्यन्तमात्मानमाचार्यकुलेऽवसादयन्सर्व एते पुण्यलोका भवन्ति ब्रह्मसंस्थोऽमृतत्वमेति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - தர்மத்திற்கு மூன்று ஸ்கந்தங்கள் (ஆதார ஸ்தம்பம்) யக்ஞம், அத்யயனம், தானம் ஆகியவைகள் முதல் ஸ்கந்தம் ஆகும். தபஸ் இரண்டாவது ஸ்கந்தமாகும். ஆச்சாரிய குலத்தில் வசிக்கும் பிரஹ்மச்சாரி, அதாவது ஆச்சாரிய குலத்தில் தன் சரீரத்தை முழுமையாக அர்பணிக்கின்றவன் மூன்றாவது ஸ்கந்தம். இவை எல்லாம் புண்ய லோகங்களை அடைகின்றனர். பிரஹ்மத்தில் நல்ல விதமாக நிலைபெற்று (நான்காவது ஆஸ்ரமத்தில் உள்ளவர்) அம்ருதத்தை அடைகின்றனர்.
ओङ्कारस्योपासनविध्यर्थं त्रयो धर्मस्कन्धा इत्याद्यारभ्यते । नैवं मन्तव्यं सामावयवभूतस्यैवोद्गीथादिलक्षणस्योङ्कारस्योपासनात्फलं प्राप्यत इति ; किं तर्हि, यत्सर्वैरपि सामोपासनैः कर्मभिश्चाप्राप्यं तत्फलममृतत्वं केवलादोङ्कारोपासनात्प्राप्यत इति । तत्स्तुत्यर्थं सामप्रकरणे तदुपन्यासः ।
அனுவாதம் - ஓம்காரத்தின் உபாசனையை விதானம் (விதிப்பதற்காக) செய்வதற்காக “त्रयो धर्मस्कन्धाः” (த்ரியோ தர்மஸ்கந்தா:) என்பது முதலிய பிரகரணங்கள் ஆரம்பிக்கப்படுகிறது. ஸாம அவயவரூப உத்கீதம் முதலிய லக்ஷணங்களுடைய ஓம்கார உபாஸனையினால் பலம் அடைய முடியும் என்பது இல்லை. ஆனால் எவ்வாறு? எந்த எல்லா ஸாம உபாஸனை கர்மங்களினால் அடைய முடியாத அந்த அம்ருதத்துவம் ஓம்கார உபாஸனையினால் மட்டுமே அடைய முடியும் என்பதால் அதைப் போற்றுவதற்காக ஸாமப்பிரகரணத்தின் உபந்யாஸம் செய்யப்படுகிறது.
त्रयः त्रिसङ्ख्याका धर्मस्य स्कन्धाः धर्मस्कन्धाः धर्मप्रविभागा इत्यर्थः ; के ते इति, आह — यज्ञः अग्निहोत्रादिः, अध्ययनं सनियमस्य ऋगादेरभ्यासः, दानं बहिर्वेदि यथाशक्ति द्रव्यसंविभागो भिक्षमाणेभ्यः, इति एषः प्रथमः धर्मस्कन्धः गृहस्थसमवेतत्वात् तन्निर्वर्तकेन गृहस्थेन निर्दिश्यते ; प्रथमः एक इत्यर्थः, द्वितीयतृतीयश्रवणात् न आद्यार्थः ।
அனுவாதம் - (தர்மஸ்கந்தா) - என்பது மூன்று எண்ணிக்கை உள்ள தர்ம விபாகங்களாகும் என்பது பொருள். அவைகள் எவை? அதற்குக் கூறப்படுகிறது - யக்ஞம் அக்னிஹோத்திரம் முதலியவைகள். அத்யயனம் - நியமத்துடன் கூடிய ரிக்வேதம் முதலியவைகளின் அப்யாசம். தானம் - வேதிகைக்கு வெளியே பிக்ஷை கேட்பவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு தனத்தை அளிக்கவேண்டும். இவ்வாறு முதல் தர்ம ஸ்கந்தமாகும். இந்த தர்மம் கிரஹஸ்தர்கள் ஸம்பந்தப்பட்டதால் அதனை அனுஷ்டானம் செய்யும் கிரஹஸ்த்த ரூபமாக நிர்தேசம் செய்யப்பட்டது. இங்கும் முதலில் என்ற சப்தத்தின் அர்த்தம் ஒன்றேயாகும். ஏன்எனில் சுருதியில் இரண்டாவது, மூன்றாவது என்ற சப்தத்தால் முதல் முதலில் என்ற அர்த்தத்தில் கூறப்படவில்லை.
तप एव द्वितीयः ; तप इति कृच्छ्रचान्द्रायणादि तद्वान् तापसः परिव्राड्वा, न ब्रह्मसंस्थः आश्रमधर्ममात्रसंस्थः, ब्रह्मसंस्थस्य तु अमृतत्वश्रवणात् ; द्वितीयः धर्मस्कन्धः ।
அனுவாதம் - தபஸ்தான் இரண்டாவது தர்மஸ்கந்தம் தபஸ் என்பது க்ருச்ர சாந்த்ராயண முதலியவைகளுடன் கூடிய தபஸ்வி பரிவிராஜகனாகவோ பிரஹ்ம நிஷ்டனாகவோ அல்ல. ஆனால் கேவலம் ஆஸ்ரம தர்மத்திலேயே இருப்பவன். ஏன்எனில் சுருதியில் பிரஹ்ம நிஷ்டருக்கே அம்ருதத்துவ பிராப்த்தி என்று கூறப்பட்டுள்ளது. இது இரண்டாவது தர்மஸ்கந்தம்.
ब्रह्मचारी आचार्यकुले वस्तुं शीलमस्येत्याचार्यकुलवासी । अत्यन्तं यावज्जीवम् आत्मानं नियमैः आचार्यकुले अवसादयन् क्षपयन् देहं तृतीयः धर्मस्कन्धः । अत्यन्तमित्यादिविशेषणान्नैष्ठिक इति गम्यते । उपकुर्वाणस्य स्वाध्यायग्रहणार्थत्वात् न पुण्यलोकत्वं ब्रह्मचर्येण ।
அனுவாதம் - எவருக்கு ஆசாரிய குலத்தில் வசிப்பதற்கான தன்மை உள்ளதோ அவர் அந்த ஆசாரிய குலத்தில் வசிப்பதால் பிரஹ்மச்சாரி. முற்றிலுமாக உயிர் உள்ளவரை (ஜீவிக்கும் வரை) தன்னை நியமங்களுடன் ஆச்சாரிய குலத்தில் வசித்துக்கொண்டு தன்னுடைய தேஹத்தை வருத்திக் கொண்டிருப்பது மூன்றாவது தர்ம ஸ்கந்தமாகும். முற்றிலும் என்ற விசேஷணத்தால் நைஷ்ட்டிக பிரஹ்மச்சாரி என்று அறியப்படுகிறது. ஸாதரணமாக ஸ்வாத்யயக்ரஹணம் செய்வதற்காகவே இருந்தால் பிரஹ்மச்சரியத்தால் புண்ய லோகத்தை அடையமுடியாது.
सर्व एते त्रयोऽप्याश्रमिणः यथोक्तैर्धर्मैः पुण्यलोका भवन्ति ; पुण्यो लोको येषां त इमे पुण्यलोका आश्रमिणो भवन्ति । अवशिष्टस्त्वनुक्तः परिव्राट् तुरीयः ब्रह्मसंस्थाः ब्रह्मणि सम्यक्स्थितः, सोऽमृतत्वं पुण्यलोकविलक्षणममरणभावमात्यन्तिकम् एति, न आपेक्षिकम् , देवाद्यमृतत्ववत् , पुण्यलोकात्पृथक् अमृतत्वस्य विभागकरणात् ॥
அனுவாதம் - இவை எல்லாம் அதாவது இந்த மூன்று ஆஸ்ரமத்தார்களும் கூறப்பட்ட தர்மங்களால் புண்யலோகமாக ஆகின்றார்கள். எவர் இந்த புண்யலோகத்தை அடைகின்ற ஆஸ்ரமி அவர் புண்யலோகம் எனப்படுகிறார். கூறப்படாத மீதமுள்ள பரிவிராட் பிரஹ்மத்தில் நன்றாக நிலைபெற்று அம்ருதத்துவத்தை அதாவது புண்யலோகத்தைவிட வேறான ஆத்யந்திக மரண பாவமற்ற நிலையை அடைகின்றான். புண்யலோகத்தைக் காட்டிலும் அம்ருதத்துவத்தை தனியாக விபாகம் செய்துள்ளதால் தேவதைகளின் அம்ருதத்தைப் போன்று ஆபேக்ஷிகம் (சார்ந்தது) அல்ல.
यदि च पुण्यलोकातिशयमात्रममृतत्वमभ विष्यत् , ततः पुण्यलोकत्वाद्विभक्तं नावक्ष्यत् । विभक्तोपदेशाच्च आत्यन्तिकममृतत्वमिति गम्यते ।
அனுவாதம் - புண்யலோகத்தின் அதிகத் தன்மையே அம்ருதத்துவமாக இருந்தால் புண்யலோக ரூபமாய் அது இருப்பதால் அதைவிட தனியாக வர்ணனை செய்திருக்காது. தனியாக உபதேசம் செய்யப்பட்டுள்ளதால் ஆத்யந்திக அம்ருதத்துவமே அபிப்பிராயம் ஆகும் என்று அறியப்படுகிறது.
अत्र च आश्रमधर्मफलोपन्यासः प्रणवसेवास्तुत्यर्थः, न तत्फलविध्यर्थः, स्तुतये च प्रणवसेवायाः, आश्रमधर्मफलविधये च, इति हि भिद्येत वाक्यम् । तस्मात्स्मृतिप्रसिद्धाश्रमफलानुवादेन प्रणवसेवाफलममृतत्वं ब्रुवन् प्रणवसेवां स्तौति । यथा पूर्णवर्मणः सेवा भक्तपरिधानमात्रफला, राजवर्मणस्तु सेवा राज्यतुल्यफलेति — तद्वत् ।
அனுவாதம் - இங்கு ஆஸ்ரம தர்மபலத்தின் உபன்யாஸம் பிரணவ உபாஸனையின் ஸ்துதிக்காகவே. அதன் பலத்தை விதிப்பதற்காக அல்ல. அவ்வாறு ஆனால் பிரணவ உபாஸனையினால் ஸ்துதிப்பது என்றும் ஆஸ்ரம பலம் விதிப்பதற்கு என்றும் வாக்கியத்தில் பேதம் உண்டாகும். ஆகையால் மந்திரம் ஸ்மிருதியில் கூறிய ஆஸ்ரம பலத்தை அனுவாதத்தின் மூலமாய் பிரணவ உபாஸனையின் பலன் அம்ருதத்துவம் என்று கூறி பிரணவ உபாஸனத்தை ஸ்துதி செய்கிறது. எவ்வாறு பூர்ண வர்மாவின் சேவையானது பணியாளர் போன்ற போஜனம் வஸ்த்திர மாத்திரமே பலனைக் கொடுக்கும். அவ்வாறே ராஜவர்மாவின் சேவை ராஜ்யத்திற்கு ஸமானமான பலனை அளிக்கவல்லது. அதைப் போன்று அறிந்துகொள்ள வேண்டும்.
प्रणवश्च तत्सत्यं परं ब्रह्म तत्प्रतीकत्वात् । ‘एतद्ध्येवाक्षरं ब्रह्म एतद्ध्येवाक्षरं परम्’ (क. उ. १ । २ । १६) इत्याद्याम्नानात्काठके, युक्तं तत्सेवातोऽमृतत्वम् ॥
அனுவாதம் - பிரணவம் அது ஸத்யம் பரம்பிரஹ்மம். அது அதன் பிரதீகமாக இருப்பதால். கடோபநிஷத்தில் “एतद्धयेवाक्षरं ब्रह्म एतद्धयेवाक्षरं परम्” (எதத்தயேவாக்ஷரம் பிரஹ்ம எதத்தயேவாக்ஷரம் பரம்) என்ற சுருதி இருப்பதால் அதை சேவையினால் (உபாஸனையினால்) அம்ருதத்துவத்தை அடையமுடியும் என்பது பொருத்தமேயாகும்.
अत्र आहुः केचित् — चतुर्णामाश्रमिणामविशेषेण स्वधर्मानुष्ठानात्पुण्यलोकता इहोक्ता ज्ञानवर्जितानाम् ‘सर्व एते पुण्यलोका भवन्ति’ इति । नात्र परिव्राडवशेषितः ; परिव्राजकस्यापि ज्ञानं यमा नियमाश्च तप एवेति ; तप एव द्वितीय इत्यत्र तपः — शब्देन परिव्राट्तापसौ गृहीतौ । अतस्तेषामेव चतुर्णां यो ब्रह्मसंस्थः प्रणवसेवकः सोऽमृतत्वमेतीति चतुर्णामधिकृतत्वाविशेषात् , ब्रह्मसंस्थत्वेऽप्रतिषेधाच्च, स्वकर्मच्छिद्रे च ब्रह्मसंस्थतायां सामर्थ्योपपत्तेः ।
அனுவாதம் - இந்த விஷயத்தில் சிலர் இவ்வாறு கூறுகிறார்கள் - ஞானம் இல்லாதவர்களாக நான்கு ஆஸ்ரமத்தாருக்கும் வித்தியாசம் இல்லாமல் கர்மாக்களை அனுஷ்டிப்பதால் புண்யலோகம் உடையவர்கள் என்பது இங்கு எல்லோருக்குமே புண்யலோகப் பிராப்த்தி உண்டு என்று கூறப்பட்டது. மேலும் இங்கு பரிவிராஜர்களையும் விடவில்லை. பரிவிராஜகர்களுக்கும் ஞானம் யம, நியமங்கள் ஆகியவை தபஸ் ஆகும். தபஸ்ஸே இரண்டாவது தர்மஸ்கந்தம் “तप एव द्वितीयः” என்பதால் தபஸ் சப்தத்தால் பரிவிராட், தபஸ் ஆகியவை கிரஹித்துக்கொள்ள வேண்டும். ஆகையால் அந்த நான்கு ஆஸ்ரமத்தாருக்கும் எந்த பிரஹ்மம் நிஷ்டையோ அது பிரணவ உபாஸனையால் அடையப்படும் அம்ருதத்துவமாகும் என்பதால் நான்கு ஆஸ்ரமத்தாருக்கும் வேறுபாடு இல்லாததால் பிரஹ்மநிஷ்டை ஒதுக்கப்படவில்லை (தள்ளப்படவில்லை). தங்கள் தங்கள் கர்மங்களை அனுஷ்டிக்கும்பொழுது கிடைக்கும் அவகாசத்தில் எல்லோருக்கும் பிரஹ்மநிஷ்டையில் இருப்பதில் ஸாமர்த்தியம் ஸம்பவிக்கும்.
न च यववराहादिशब्दवत् ब्रह्मसंस्थशब्दः परिव्राजके रूढः, ब्रह्मणि संस्थितिनिमित्तमुपादाय प्रवृत्तत्वात् । न हि रूढिशब्दा निमित्तमुपाददते । सर्वेषां च ब्रह्मणि स्थितिरुपपद्यते । यत्र यत्र निमित्तमस्ति ब्रह्मणि संस्थितिः, तस्य तस्य निमित्तवतो वाचकं सन्तं ब्रह्मसंस्थशब्दं परिव्राडेकविषये सङ्कोचे कारणाभावात् निरोद्धुमयुक्तम् । न च पारिव्राज्याश्रमधर्ममात्रेणामृतत्वम् , ज्ञानानर्थक्यप्रसङ्गात्
அனுவாதம் - இதைத்தவிர யவை, வராஹம் முதலிய சப்தங்களைப்போல் பிரஹ்ம ஸம்ஸ்த (பிரஹ்மநிஷ்டை) சப்தம் பரிவிராஜகத்தில் ரூடமல்ல (தனியான அர்த்தமுள்ள சப்தமல்ல). ஏன்எனில் பிரஹ்மத்தின் ஸ்திதிரூப நிமித்தத்தால் பரவிருத்திக்கின்றது. ரூடி சப்தம் எந்த நிமித்தத்தையும் ஆஸ்ரியப்பதில்லை. பிரஹ்மத்தில் எல்லா ஸ்திதிகளும் ஸம்பவிக்கும். எங்கு எங்கு பிரஹ்மத்தில் ஸ்திதிரூப நிமித்தம் உள்ளதோ அந்த அந்த நிமித்தம் உடையதின் வாசகமாக இருப்பதால் பிரஹ்மஸம்ஸ்த்த சப்தம் (ब्रह्मसंस्थशब्दम्) பரிவிராட்டின் வாசகமாகும் என்று சுருக்குவதற்கு எந்த ஒரு காரணமும் இல்லாததால் அந்த அர்த்தத்தை நிராகரிப்பது சரியல்ல. இதைத்தவிர பரிவிராஜ (ஸந்யாச) ஆஸ்ரம தர்மத்தாலேயே அம்ருதத்துவத்தை அடைவது என்பது ஸம்பவிக்காது. ஏன் எனில் இதனால் ஞானத்திற்கு அர்த்தமற்ற தன்மை ஏற்படும்.
पारिव्राज्यधर्मयुक्तमेव ज्ञानममृतत्वसाधनमिति चेत् , न, आश्रमधर्मत्वाविशेषात् । धर्मो वा ज्ञानविशिष्टोऽमृतत्वसाधनमित्येतदपि सर्वाश्रमधर्माणामविशिष्टम् । न च वचनमस्ति परिव्राजकस्यैव ब्रह्मसंस्थस्य मोक्षः, नान्येषाम् इति । ज्ञानान्मोक्ष इति च सर्वोपनिषदां सिद्धान्तः । तस्माद्य एव ब्रह्मसंस्थः स्वाश्रमविहितधर्मवताम् , सोऽमृतत्वमेतीति ॥
அனுவாதம் - பாரிவிராஜ்ய தர்மத்துடன் கூடிய ஞானமே அம்ருதத்துவ ஸாதனம் என்று கூறுவது அல்ல. ஏன்எனில் ஆஸ்ரம தர்மம் வேறு ஆஸ்ரம தர்மங்களைக்காட்டிலும் வித்யாசமானது அல்ல அல்லது ஞான விசிஷ்ட தர்மமே அம்ருதத்துவத்திற்கு ஸாதனம் என்றால் அந்த நியமம் எல்லா ஆஸ்ரம தர்மங்களுக்கும் பொருந்தும். மேலும் பரிவிராஜகர்களுக்கு மட்டுமே பிரஹ்ம ஸம்ஸ்த்தம் மற்றவர்களுக்கு இல்லை என்ற ஸாஸ்த்திர வாக்கியம் இல்லை. ஞானத்தால் மோக்ஷம் என்பது எல்லா உபநிஷத்துகளின் சித்தாந்தமாகும். ஆகையால் எவர் பிரஹ்மஸ்தர் தன்னுடைய ஆஸ்ரம விஹித கர்மங்களை கடைபிடிப்பவர்களோ அவர் அம்ருதத்துவத்தை அடைவர் என்பதாகும்.
“पूर्वोपन्यस्तमतनिराकरणम्” (இதற்குமுன் கூறப்பட்ட பரமதத்தை நிராகரித்தல்)
न, कर्मनिमित्तविद्याप्रत्यययोर्विरोधात् । कर्त्रादिकारकक्रियाफलभेदप्रत्ययवत्त्वं हि निमित्तमुपादाय इदं कुरु इदं मा कार्षीः इति कर्मविधयः प्रवृत्ताः । तच्च निमित्तं न शास्त्रकृतम् , सर्वप्राणिषु दर्शनात् । ‘सत् . . . . . एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) ‘आत्मैवेदं सर्वम्’ (छा. उ. ७ । २६ । २) ‘ब्रह्मैवेदं सर्वम्’ इति शास्त्रजन्यः प्रत्ययो विद्यारूपः स्वाभाविकं क्रियाकारकफलभेदप्रत्ययं कर्मविधिनिमित्तमनुपमृद्य न जायते, भेदाभेदप्रत्यययोर्विरोधात् । न हि तैमिरिकद्विचन्द्रादिभेदप्रत्ययमनुपमृद्य तिमिरापगमे चन्द्राद्येकत्वप्रत्यय उपजायते, विद्याविद्याप्रत्यययोर्विरोधात् ।
அனுவாதம் - ஸித்தாந்தீ - கர்ம நிமித்தமான கொள்கைக்கும் ஞானத்தை உண்டுபண்ணும் கொள்கைக்கும் பரஸ்பரம் விரோதம் இருக்கின்றது. கர்த்தா முதலிய காரக, கிரியா மேலும் பலம் என்ற பேதத்துடன் கூடிய நிமித்தத்தைக் கொண்டு இதை செய், இதை செய்யாதே என்று கர்ம விதியில் பிரவிர்த்தி ஏற்படுகிறது. எல்லாப் பிராணிகளிடமும் இதுக் காணப்படுவதால் அந்த நிமித்தம் ஸாஸ்த்திரத்தினால் உண்டாக்கப்பட்டது அல்ல. “सद् एकमेवाद्वितीयम्” (ஸத் ஏகமேவாத்விதீயம்), “आत्मैवेदं सर्वम्” (ஆத்மைவேதம் ஸர்வம்), “ब्रह्मैवेदं सर्वम्” (பிரஹ்மைவேதம் ஸர்வம்) என்று ஸாஸ்த்திரத்தினால் உண்டாவது வித்யாரூப பிரத்யயம். கர்ம விதி நிமித்த ஸ்வாபாவிகமான கிரியாகாரக பலபேத பிரத்யயம் நஷ்டமாகாமல் வித்யாரூப பிரத்தியம் உண்டாகாது. ஏன்எனில் பேத அபேத பிரத்யயங்கள் ஒன்றுக்கொன்று விரோதமானது. கண்நோய் நஷ்டமானபின் கண் நோயால் ஏற்பட்டு இரட்டை சந்திரனாகக் காணப்பட்ட பேத பிரத்யயம் நாசமாகாமல் சந்திரனின் ஏகத்துவம் அறியப்படாததுபோல் ஆகும். ஏன்எனில் ஞான, அக்ஞான (வித்யா அவித்யா) பிரத்யயங்களில் பரஸ்பர விரோதம் இருக்கின்றது.
“परिव्राजएव ब्रह्मसंस्थत्वम्” (பரிவிராஜமே பிரஹ்மஸம்ஸ்தத்வம்)
तत्रैवं सति यं भेदप्रत्ययमुपादाय कर्मविधयः प्रवृत्ताः, स यस्योपमर्दितः ‘सत् . . . एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) ‘तत्सत्यम्’ (छा. उ. ६ । ८ । ७) ‘विकारभेदोऽनृतम्’ (छा. उ. ६ । १ । ४) इत्येतद्वाक्यप्रमाणजनितेनैकत्वप्रत्ययेन, स सर्वकर्मभ्यो निवृत्तः, निमित्तनिवृत्तेः ; स च निवृत्तकर्मा ब्रह्मसंस्थ उच्यते ; स च परिव्राडेव, अन्यस्यासम्भवात् ।
அனுவாதம் - அங்கு இவ்வாறு இருக்கும் பொழுது எந்த பேத பிரத்யத்தை வைத்து கர்ம விதிகளில் பிரவிர்த்தி ஆனவர்கள் அதை நீக்கி “सद् एकमेवाद्वितीयम्” (சத் - ஏகமேவாத்வதீயம்), “तत्सत्यम्” (தத்சத்யம்), “विकारभेदोऽनृतम्” (விகாரபேதோऽந்ருதம்) இவ்வாறான வாக்கிய பிரமாணங்களால் உண்டான ஏகத்துவத்துவ பிரத்யயத்தால் அவன் எல்லா கர்மங்களின் நிமித்தத்திலிருந்து விடுபட்டவன் ஆவான் (निमित्तनिवृत्तेः निवृत्तः) அந்த கர்மங்களில் இருந்து விடுபட்டவன் “ब्रह्मसंस्था” (பிரஹ்மஸம்ஸ்த்தா = பிரஹ்ம நிஷ்டன்) எனப்படுகிறான் மற்றவர்களுக்கு (பரிவிராஜத்தைத் தவிர மற்ற ஆஸ்ரமிகளுக்கு அது ஸம்பவிக்காததால் அவனே பரிவிராட்.
अन्यो हि अनिवृत्तभेदप्रत्ययः सोऽन्यत्पश्यञ्शृण्वन्मन्वानो विजानन्निदं कृत्वेदं प्राप्नुयामिति हि मन्यते । तस्यैवं कुर्वतो न ब्रह्मसंस्थता, वाचारम्भणमात्रविकारानृताभिसन्धिप्रत्ययवत्त्वात् । न च असत्यमित्युपमर्दिते भेदप्रत्यये सत्यमिदमनेन कर्तव्यं मयेति प्रमाणप्रमेयबुद्धिरुपपद्यते — आकाश इव तलमलबुद्धिर्विवेकिनः ।
அனுவாதம் - மற்ற பேத புத்தி நிவிர்த்தியாகாதவர் வேறாகப் பார்க்கின்றான், கேட்கின்றான், நினைக்கின்றான், அறிகின்றான் என்பதால் இவ்வாறு செய்து இதை அடைவேன் என்று நினைக்கின்றான். இவ்வாறு செயல்களில் ஈடுபடுபவன் பிரஹ்ம ஸம்ஸ்தாவாக ஆகமுடியாது. ஏன்எனில் அது வாச்சாரம்பண மாத்திர விகாரத்தில் மித்யாவாக தோற்றமளிப்பவைகளாகும். இது அஸத்யம் என்று பேத திருஷ்டியை நீக்கினால் அதனால் இது ஸத்யம், ஆகையால் இதை செய்யவேண்டும் என்ற பிரமாண பிரமேய ரூப புத்தி ஏற்படாது. எவ்வாறு விவேகி புருஷன் ஆகாசத்தில் தலமலாதிகளைக் காண்பது போல் ஆகும்.
उपमर्दितेऽपि भेदप्रत्यये कर्मभ्यो न निवर्तते चेत् , प्रागिव भेदप्रत्ययानुपमर्दनादेकत्वप्रत्ययविधायकं वाक्यमप्रमाणीकृतं स्यात् । अभक्ष्यभक्षणादिप्रतिषेधवाक्यानां प्रामाण्यवत् युक्तमेकत्ववाक्यस्यापि प्रामाण्यम् , सर्वोपनिषदां तत्परत्वात् ।
அனுவாதம் - பேத திருஷ்டியை நீக்கினால் கர்மங்களில் இருந்து விடுபடவில்லையெனில் முன்போல் பேத திருஷ்டி நீக்காததால் ஏகத்துவ திருஷ்டியை தெரிவிக்கும் வாக்கியம் அப்பிரமாணமாகிவிடும். சாப்பிடக் கூடாததை சாப்பிடுவது முதலிய தள்ளதக்க வேண்டிய வாக்கியங்கள் பிரமாணம் ஆவதுபோல் எல்லா உபநிஷத்துக்களின் கருத்தாய் இருப்பதால் ஏகத்துவ வாக்கியத்திற்கு பிரமாணம் பொருந்தும்
कर्मविधीनामप्रामाण्यप्रसङ्ग इति चेत् ,
அனுவாதம் - பூர்வ - இவ்வாறு கர்மவிதிகள் அப்பிரமாணம் ஆகிவிடுமே எனில்?
न, अनुपमर्दितभेदप्रत्ययवत्पुरुषविषये प्रामाण्योपपत्तेः स्वप्नादिप्रत्यय इव प्राक्प्रबोधात् ।
அனுவாதம் - ஸித்தாந்தீ - அவ்வாறு அல்ல. விழிப்பு ஏற்படுவதற்கு முன் உள்ள ஸ்வப்பனம் முதலிய திருஷ்டியைப் போல் நீக்கப்பட்ட பேத திருஷ்டியுடைய புருஷ விஷயத்தில் பிரமாணம் சித்திக்கின்றது.
विवेकिनामकरणात् कर्मविधिप्रामाण्योच्छेद इति चेत् ?
அனுவாதம் - பூர்வ - விவேகிகள் கர்மம் செய்யாததால் கர்ம விதிகளின் பிரமாணத்தை சேதம் செய்ததாக ஆகிவிடுமே எனில்?
न, कांयविध्यनुच्छेददर्शनात् । न हि, कामात्मता न प्रशस्तेत्येवं विज्ञानवद्भिः कांयानि कर्माणि नानुष्ठीयन्त इति, कांयकर्मविधय उच्छिद्यन्ते, अनुष्ठीयन्त एव कामिभिरिति ; तथा ब्रह्मसंस्थैर्ब्रह्मविद्भिर्नानुष्ठीयन्ते कर्माणीति न तद्विधय उच्छिद्यन्ते, अब्रह्मविद्भिरनुष्ठीयन्त एवेति ।
அனுவாதம் - ஸித்தாந்தீ - அவ்வாறு அல்ல. ஏன்எனில் காம்ய விதிக்கும் சேதம் காணப்படவில்லை. ஸகாமம் சரியல்ல என்ற ஞானம் உண்டான புருஷன் காமிய கர்மங்களை செய்வதில்லை. ஆகையால் காமியகர்ம விதிகளுக்கு சேதம் உண்டாகும் என்பது இல்லை. ஏன் எனில் ஸகாம புருஷனால் அனுஷ்டிப்பது காணப்படுகிறது. அவ்வாறே பிரஹ்ம நிஷ்ட பிரஹ்ம வேத்தாக்களும் கர்மங்களை அனுஷ்டிப்பது இல்லை. ஆகையால் அந்த கர்மவிதி இல்லாமல் போகும் என்பது இல்லை. ஏன்எனில் பிரஹ்மவேத்தாவாக இல்லாதவனால் அது அனுஷ்டிக்கப்படுகிறது.
परिव्राजकानां भिक्षाचरणादिवत् उत्पन्नैकत्वप्रत्ययानामपि गृहस्थादीनामग्रिहोत्रादिकर्मानिवृत्तिरिति चेत् ?
அனுவாதம் - பூர்வ - பரிவிராஜகர்களின் பிக்ஷாடனம் முதலியவைகளை செய்வதைப்போல் ஏகத்துவ ஞானம் உண்டான அந்த கிரஹஸ்தர்களிடத்தும் அக்னி ஹோத்திரம் முதலிய கர்மங்கள் நிவிர்த்தி ஆகவேண்டும் என்பதில்லை எனில்?
न, प्रामाण्यचिन्तायां पुरुषप्रवृत्तेरदृष्टान्तत्वात् — न हि, नाभिचरेदिति प्रतिषिद्धमप्यभिचरणं कश्चित्कुर्वन्दृष्ट इति, शत्रौ द्वेषरहितेनापि विवेकिना अभिचरणं क्रियते । न च कर्मविधिप्रवृत्तिनिमित्ते भेदप्रत्यये बाधिते अग्निहोत्रादौ प्रवर्तकं निमित्तमस्ति, परिव्राजकस्येव भिक्षाचरणादौ बुभुक्षादि प्रवर्तकम् ।
அனுவாதம் - ஸித்தாந்தீ - அவ்வாறு அல்ல. ஏன் எனில் பிரமாண்யத்தை விசாரம் செய்யும்பொழுது புருஷனின் பிரவிர்த்தி திருஷ்டாந்தரூபம் ஆகமுடியாது. அபிசாரம் செய்யாதே என்று தடுக்கப்பட்டாலும் சிலர் அபிசாரத்தை செய்வது காணப்படுகிறது. இவ்வாறு இருந்தாலும் எவருக்கு சத்ருக்களிடத்திலும் துவேஷ பாவம் இல்லாத விவேகி புருஷன் அபிசாரம் செய்வது என்பது முற்றிலும் கிடையாது. இவ்வாறு கர்ம விதியின் பிரவிர்த்திக்குக் காரணமான பேத புத்தி நீங்கின ஞானபுருஷன் அக்னிஹோத்திரம் முதலியவைகளில் பிரவிர்த்திப்பதற்கான எந்த காரணமும் காணப்படவில்லை. எவ்வாறு பரிவிராஜனுக்கு பிக்ஷாடணம் முதலியவைகளின் பிரவிர்த்திகளுக்கு பசி முதலிய நிமித்தமோ (காரணமோ) அவ்வாறு.
इहाप्यकरणे प्रत्यवायभयं प्रवर्तकमिति चेत् ?
அனுவாதம் - பூர்வ - இந்த சமயத்தில் கர்மம் செய்யவில்லையெனில் பிரத்யவாய (நரக) பயம் உண்டாக்கும் எனில்?
न, भेदप्रत्ययवतोऽधिकृतत्वात् । भेदप्रत्ययवान् अनुपमर्दितभेदबुद्धिर्विद्यया यः, स कर्मण्यधिकृत इत्यवोचाम ; यो हि अधिकृतः कर्मणि, तस्य तदकरणे प्रत्यवायः ; न निवृत्ताधिकारस्य, गृहस्थस्येव, ब्रह्मचारिणो विशेषधर्माननुष्ठाने ।
அனுவாதம் - ஸித்தாந்தீ - அவ்வாறு அல்ல. ஏன்எனில் கர்மானுஷ்டானத்தின் அதிகாரி பேத ஞானியாகும். எவருடைய பேத புத்தி வித்யையினால் நீங்காதோ அந்த பேத புத்தியுடையவனே கர்மத்தின் அதிகாரி என்று கூறியுள்ளோம். எவர் கர்மத்திற்கு அதிகாரியோ அவர் அதை செய்யாவிடில் நரகம் ஏற்படும் (பிரத்யவாயப் பிராப்த்தி). அந்த அதிகாரத் தன்மையை கடந்தவருக்கு அவ்வாறு பிரத்யவாயம் ஏற்படாது. எவ்வாறு பிரஹ்மச்சாரியினுடைய விசேஷ தர்மானுஷ்டானம் செய்யவில்லையெனில் பிரத்யவாயம் ஏற்படாதோ அவ்வாறு ஆகும்.
एवं तर्हि सर्वः स्वाश्रमस्थः उत्पन्नैकत्वप्रत्ययः परिव्राडिति चेत् ?
அனுவாதம் - பூர்வ - இவ்வாறு இருக்கும்பொழுது எவருக்கு ஏகத்துவ ஞானம் உண்டானபின் அந்த புருஷன் தன் ஆஸ்ரமத்தில் வசித்துக்கொண்டே பரிவிராஜன் ஆகாலாமே எனில்?
न, स्वस्वामित्वभेदबुद्ध्यनिवृत्तेः, कर्मार्थत्वाच्च इतराश्रमाणाम् — ‘अथ कर्म कुर्वीय’ (बृ. उ. १ । ४ । १७) इति श्रुतेः । तस्मात् स्वस्वामित्वाभावात् भिक्षुरेक एव परिव्राट् , न गृहस्थादिः ।
அனுவாதம் - ஸித்தாந்தீ - அவ்வாறு அல்ல. அவர்களுக்குத் தான் ஸ்வாமி என்ற ரூபமாகிய (அதாவது எனது நான் இதற்கு ஸ்வாமி என்ற அதிகிருத அதிகாரித்துவ ரூபமாகிய) பேத புத்தி நிவிர்த்தியாவதில்லை. ஏன்எனில் அவை மற்ற ஆஸ்ரமங்களுக்கான அனுஷ்டானத்திற்காக ஆகிறது எவ்வாறு எனில் (ஸ்திரீ புத்திரர்கள் பிராப்த்திக்குப்பின்) அதற்குப்பின் நான் கர்மம் செய்வேன் “अथ कर्म कुर्वीय” (அத கர்ம குர்வீய) என்று சுருதி சித்தமாகிறது. ஆகையால் ஸ்வஸ்வாமித்துவ பாவமாவதால் பிக்ஷுவே பரிவிராட் ஆகமுடியும். கிரஹஸ்தன் முதலியவர்கள் அல்ல.
एकत्वप्रत्ययविधिजनितेन प्रत्ययेन विधिनिमित्तभेदप्रत्ययस्योपमर्दितत्वात् यमनियमाद्यनुपपत्तिः परिव्राजकस्येति चेत् ?
அனுவாதம் - பூர்வ - ஏகத்துவ பிரத்யயத்தால் (ஞானத்தால்) உண்டாக்கும் விதி வாக்கியத்தால் உண்டாகும் கர்மவிதி நிமித்தத்தால் பேதஞானம் நிவிர்த்தி ஆனதால் பரிவிராஜகர்களுக்கு (சந்நியாசிகளுக்கு) யமநியம முதலியவைகளை கடைபிடிப்பது (அனுஷ்டிப்பது) சம்பவிக்காது எனில்?
न, बुभुक्षादिना एकत्वप्रत्ययात्प्रच्यावितस्योपपत्तेः, निवृत्त्यर्थत्वात् । न च प्रतिषिद्धसेवाप्राप्तिः, एकत्वप्रत्ययोत्पत्तेः प्रागेव प्रतिषिद्धत्वात् । न हि रात्रौ कूपे कण्टके वा पतितः उदितेऽपि सवितरि पतति तस्मिन्नेव । तस्मात् सिद्धं निवृत्तकर्मा भिक्षुक एव ब्रह्मसंस्थ इति ।
அனுவாதம் - ஸித்தாந்தீ - அவ்வாறு அல்ல. ஏன்எனில் பசி முதலியவைகளால் ஏகத்துவ பிரத்யயத்திலிருந்து நழுவினாலும் அதன் மூலமாய் செய்யக்கூடாத கர்மங்களின் நிவிர்த்திக்காக அதனை கடைபிடிப்பது ஸம்பவிக்கும். இதைத்தவிர ஏகத்துவ (பிரத்யயம்) ஞானம் உண்டாவதற்கு முன்பே அது கடைபிடிக்க தகுந்தது அல்ல என்று தள்ளப்பட்டதால் அந்த செய்யத்தாகாததை அனுஷ்டிப்பது இல்லை. இரவில் கிணற்றிலோ முட்புதரிலோ விழுந்தவன் சூரியன் உதித்தபின் அதில் மறுபடியும் விழமாட்டான். ஆகையால் கர்மாக்களிலிருந்து விடுபட்ட பிக்ஷுவே பிரஹ்மநிஷ்டன் என்று சித்திக்கின்றது.
यत्पुनरुक्तं सर्वेषां ज्ञानवर्जितानां पुण्यलोकतेति — सत्यमेतत् । यच्चोक्तं तपःशब्देन परिव्राडप्युक्त इति — एतदसत् । कस्मात् ? परिव्राजकस्यैव निवृत्तभेदप्रत्ययस्य ब्रह्मसंस्थतासम्भवात् । स एव हि अवशेषित इत्यवोचाम । एकत्वविज्ञानवतोऽग्निहोत्रादिवत्तपोनिवृत्तेश्च । भेदबुद्धिमत एव हि तपःकर्तव्यता स्यात् । एतेन कर्मच्छिद्रे ब्रह्मसंस्थतासामर्थ्यम् , अप्रतिषेधश्च प्रत्युक्तः । तथा ज्ञानवानेव निवृत्तकर्मा परिव्राडिति ज्ञानवैयर्थ्यं प्रत्युक्तम् ।
அனுவாதம் - எது கூறப்பட்டதோ ஞானமற்ற எல்லோருக்கும் புண்யலோகப் பிராப்தி என்பது உண்மையே. ஆனால். “தபஸ்” சப்தத்தால் பரிவிராட்டையும் குறிக்கிறது என்பது உண்மையல்ல. ஏன்? ஏன் எனில் பரிவிராட்டிற்கு பிரஹ்மநிஷ்டை ஸம்பவிப்பதால், இதையே முன்பே கூறினோம், ஏன்எனில் ஏகத்துவ விக்ஞானம் உடையவன் அக்னி ஹோத்திரம் முதலியவைகள் போல் தபஸிலிருந்தும் நிவிர்த்தி ஆகி இருக்கின்றான். பேத புத்தி உள்ளவனுக்கு தபஸ் அவசியம் செய்யவேண்டியதாகும். இதனால் கர்மானுஷ்டானம் அற்ற பிரஹ்மம் நிஷ்டையின் ஸாமர்த்தியத்தால் செய்யக்கூடாததும் நிஷேதம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஞானம் உடையவனே கர்மத்திலிருந்து விடுபட்டவனே பரிவிராட் என்பதால் ஞானம் பிரயோஜனம் அற்றது என்பது கண்டனம் செய்யப்பட்டது.
यत्पुनरुक्तं यववराहादिशब्दवत्परिव्राजके न रूढो ब्रह्मसंस्थशब्द इति, तत्परिहृतम् ; तस्यैव ब्रह्मसंस्थतासम्भवान्नान्यस्येति ।
அனுவாதம் - எது இவ்வாறு மறுபடியும் கூறப்பட்டதோ அதாவது வரகு (யவம்) வராஹம் என்ற சப்தம் போல் பரிவிராட்டிற்கு பிரஹ்ம ஸம்ய்த்த சப்தம் ரூடம் அல்ல என்பது பரிஹாரம் செய்யப்படுகிறது. ஏன் எனில் அந்த பரிவிராட்டிற்கே பிரஹ்ம ஸம்ஸ்த்தா (பிரஹ்மநிஷ்டை) ஸம்பவிக்கிறது. மற்றவர்களுக்கு அல்ல என்பதாகும்.
यत्पुनरुक्तं रूढशब्दाः निमित्तं नोपाददत इति, तन्न, गृहस्थतक्षपरिव्राजकादिशब्ददर्शनात् । गृहस्थितिपारिव्राज्यतक्षणादिनिमित्तोपादाना अपि, गृहस्थपरिव्राजकावाश्रमिविशेषे, विशिष्टजातिमति च तक्षेति, रूढा दृश्यन्ते शब्दाः । न यत्र यत्र निमित्तानि तत्र तत्र वर्तन्ते, प्रसिद्ध्यभावात् । तथा इहापि ब्रह्मसंस्थशब्दो निवृत्तसर्वकर्मतत्साधनपरिव्राडेकविषयेऽत्याश्रमिणि परमहंसाख्ये वृत्त इह भवितुमर्हति, मुख्यामृतत्वफलश्रवणात् ।
அனுவாதம் - எது மறுபடியும் கூறப்பட்டதோ அதாவது ரூட சப்த நிமித்தத்தை மேற்கொள்ளாமல் இவ்வாறு வாதி கூறுவது சரியல்ல. ஏன்எனில் கிரஹஸ்த்தன், தச்சன், பரிவிராஜர் முதலிய சப்தங்கள் காணப்படுவதால் ஆகும், கிருஹத்தில் வசித்தல், பாரிவிராஜ்ய அதாவது எல்லாவற்றையும் தியாகம் செய்து செல்லுதல், மேலும் தச்சன் முதலிய நிமித்தங்களை எடுத்துக்கொண்டாலும் கிருஹஸ்த்தமும், பாரிவிராஜகமும் ஆஸ்ரம விசேஷங்களாகும். ஆனால் தச்சன் என்பது ஜாதி விசேஷமாகும். இவ்வாறு சப்தங்களில் ரூடம் காணப்படுகிறது. எங்கு எங்கு அந்த கிருஹஸ்த்தம் முதலிய சப்த நிமித்தங்களோ அங்கு அங்கு பிரவிர்த்திக்காது. ஏன் எனில் அவ்வாறான பிரசித்தி இல்லை. அவ்வாறே இங்கும் பிரஹ்ம ஸம்ஸ்த்த சப்தம் எல்லா கர்மங்களிலும் அதன் ஸாதனங்களில் இருந்தும் நிவிர்த்தியாகி ஏகமாத்திரமாக (அத்யா ஆஸ்ரமி பரமஹம்ச) பரிவிராஜமாவது உசிதமேயாகும். ஏன் எனில் அதற்கு அம்ருதத்துவமே முக்கிய பலம் என்று கேட்கப்படுவதால் ஆகும்.
अतश्चेदमेवैकं वेदोक्तं पारिव्राज्यम् , न यज्ञोपवीतत्रिदण्डकमण्डल्वादिपरिग्रह इति ; ‘मुण्डोऽपरिग्रहोऽसङ्गः’ (जा. उ. ५) इति च । श्रुतिः ‘अत्याश्रमिभ्यः परमं पवित्रम्’ (श्वे. उ. ६ । २१) इत्यादि च श्वेताश्वतरीये ; ‘निस्तुतिर्निर्नमस्कारः’ (मो. ध. २४२ । ९) इत्यादिस्मृतिभ्यश्च ; ‘तस्मात्कर्म न कुर्वन्ति यतयः पारदर्शिनः । ’ (मो. ध. २४१ । ७)‘तस्मादलिङ्गो धर्मज्ञोऽव्यक्तलिङ्गः’ (अश्व. ४६ । ५१) (व. १० । १२) इत्यादिस्मृतिभ्यश्च ॥
அனுவாதம் - ஆகையால் வேதம் கூறுவது பாரிவிராஜ்யம், ஒன்றை மட்டுமே. யக்ஞோப வீதம், த்ரிதண்டம், கமண்டலம் முதலியவைகளை கிரஹிப்பது முக்கிய பாரிவிராஜ்யம் அல்ல. இந்த விஷயத்தில் “मुण्डोऽपरिग्रहः” (முண்டோऽபரிகிரஹ:) “असः” (அசங்க:) என்பது சுருதி வாக்கியம். “अत्याश्रमिभ्यः परमं पवित्रम्” (அத்யாஸ்ரமிப்ய: பரமம் பவித்ரம்) முதலியவை ச்வேதா ச்வதர உபநிஷத் வாக்கியமாகும். “निःस्तुति र्निर्नमस्कारः” (நிஸ்துதிர் நிர்நமஸ்கார:) முதலிய ஸ்மிருதி வாக்கியங்களாலும், மேலும் “तस्मात्कर्म न कुर्वन्ति यतयः पारदर्शिनः। तस्मादलिङ्गो धर्मज्ञोऽव्यक्तिलिङ्गः” (தஸ்மாத்கர்ம ந குர்வந்தி யதய: பாரதர்சின: தஸ்மாதலிங்கோ தர்மஞோऽவ்யத்கதலிங்க:) என்பன போன்ற ஸ்மிருதிகளாலும் அறிகின்றோம்.
यत्तु साङ्ख्यैः कर्मत्यागोऽभ्युपगम्यते, क्रियाकारकफलभेदबुद्धेः सत्यत्वाभ्युपगमात् , तन्मृषा । यच्च बौद्धैः शून्यताभ्युपगमात् अकर्तृत्वमभ्युपगम्यते, तदप्यसत् , तदभ्युपगन्तुः सत्त्वाभ्युपगमात् । यच्च अज्ञैरलसतया अकर्तृत्वाभ्युपगमः, सोऽप्यसत् , कारकबुद्धेरनिवर्तितत्वात्प्रमाणेन । तस्मात् वेदान्तप्रमाणजनितैकत्वप्रत्ययवत एव कर्मनिवृत्तिलक्षणं पारिव्राज्यं ब्रह्मसंस्थत्वं चेति सिद्धम् । एतेन गृहस्थस्यैकत्वविज्ञाने सति पारिव्राज्यमर्थसिद्धम् ॥
அனுவாதம் - கிரியாகாரக புத்தியை ஸத்யம் என்று ஏற்றுக்கொண்டு எந்த அந்த ஸாங்கியர்கள் கர்மாதியாகத்தை ஒப்புக்கொள்கின்றனர். அது உண்மையல்ல. அவ்வாறே பெளத்தர்கள் சூன்யத்தை ஒப்புக்கொண்டு அகர்த்ருத்துவத்தை ஏற்றுக்கொள்கின்றனர். அதுவும் உண்மையல்ல. ஏன்எனில் இருந்தால் அல்லவா அதை தியாகம் செய்யமுடியும். மேலும் அக்ஞானிகளால் ஆலஸ்யத்தால் (சோம்பேறிதனத்தால்) அகர்த்துவத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். அதுவும் சரியல்ல. ஏன்எனில் பிரமாணங்களால் காரக புத்தியை நிவிர்த்தி செய்ய முடியாது. ஆகையால் வேதாந்தப் பிரமாணத்தால் உண்டான ஏகத்துவ ஞானம் உடையவனுக்கே கர்ம நிவிர்த்தி லக்ஷணம் பாரிவிராஜ்யம் பிரஹ்ம ஸம்ஸ்தத்துவம் (பிரஹ்மநிஷ்டை) என்பது ஸித்திக்கிறது. இதனால் கிருஹஸ்தனுக்கும் ஏகத்துவ ஞானம் ஏற்பட்டவுடன் பாரிவிராஜ்யம் ஸித்தமாகிறது.
ननु अग्न्युत्सादनदोषभाक्स्यात् परिव्रजन् — ‘वीरहा वा एष देवानां योऽग्रिमुद्वासयते’ (तै. सं. १ । ५ । २) इति श्रुतेः, न, दैवोत्सादितत्वात् , उत्सन्न एव हि स एकत्वदर्शने जाते — ‘अपागादग्नेरग्नित्वम्’ (छा. उ. ६ । ४ । १) इति श्रुतेः । अतो न दोषभाक् गृहस्थः परिव्रजन्निति ॥
அனுவாதம் - ஆனால் (கிருஹஸ்த்தன்) பரிவிராஜன் ஆனதினால் அக்னியை பரித்தியாகம் செய்ததோஷம் உடையவன் ஆவான் என்பது எவ்வாறு “वीरहा वा एष देवानां योऽग्निमुद्वासयते” (வீராஹா வா ஏஷ தேவானாம் யோऽக்னிமுத்வாஸ்யதே) என்ற சுருதியினால் சித்திக்கின்றதே எனில் அவ்வாறு கூறுதல் சரியல்ல. ஏன்எனில் ஏகத்துவ தர்சனத்தால் அக்னியும் தானாகவே சாந்தமாகிவிடுகிறது. “अपागादग्नेरग्नित्वम्” (அபாகாதக்னேரக்னித்துவம்) என்ற சுருதியினால் அறிகிறோம். ஆகையால் பரிவிராஜன் ஆனதால் கிருஹஸ்தன் தோஷமுடையவன் ஆகமாட்டான்.
प्रजापतिर्लोकानभ्यतपत्तेभ्योऽभितप्तेभ्यस्त्रयी विद्या सम्प्रास्रवत्तामभ्यतपत्तस्या अभितप्ताया एतान्यक्षराणि सम्प्रास्रवन्त भूर्भुवः स्वरिति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - பிரஜாபதி லோகங்களை உத்தேசித்து த்யானரூப தபஸ் செய்தார். அந்த லோகங்களின் தியானத்திலிருந்து மூன்று வேதங்கள் தோன்றின. அந்த மூன்று வேதங்களின் தியானத்தால் “भूः” (பூ:) “भुवः” (புவ:) “स्वः” (ஸ்வ:) தோன்றின.
यत्संस्थः अमृतत्वमेति, तन्निरूपणार्थमाह —
அனுவாதம் - அ.கை - எந்த நிலையை அடைந்து புருஷன் அம்ருதத்தை அடைவானோ அதை நிரூபிப்பதற்காக சுருதி கூறுகிறது
प्रजापतिः विराट् कश्यपो वा, लोकान् उद्दिश्य तेषु सारजिघृक्षया अभ्यतपत् अभितापं कृतवान् ध्यानं तपः कृतवानित्यर्थः, तेभ्यः अभितप्तेभ्यः सारभूता त्रयी विद्या सम्प्रास्रवत् प्रजापतेर्मनसि प्रत्यभादित्यर्थः । तामभ्यतपत् — पूर्ववत् । तस्या अभितप्तायाः एतान्यक्षराणि सम्प्रास्रवन्त भूर्भुवः स्वरिति व्याहृतयः ॥
அனுவாதம் - பிரஜாபதி அதாவது விராட் அல்லது கச்யபர் லோகங்களை உத்தேசித்து அவைகளில் சாரத்தை கிரஹிப்பதற்கு இச்சித்து தியானரூப தபஸ் செய்தார். அந்த தியானரூப தபஸின் பூதங்களிலிருந்து சாரபூதமான மூன்று வித்யைகள் உண்டாயிற்று. இதன் தாத்பரியம் என்னவெனில் பிரஜாபதியின் மனதில் இந்த மூன்று வித்தைகள் பிரதிபலித்தது (தோன்றின). முன்புபோல் இவைகளை (மூன்று வித்தைகளை) த்யானம் செய்தார். அந்த த்யான தபஸிலிருந்து “भूः” (பூ:) “भुवः” (புவ:) “स्वः” (ஸ்வ:) என்ற வியாகிருதி ரூப அக்ஷரங்கள் தோன்றின.
तान्यभ्यतपत्तेभ्योऽभितप्तेभ्य ओङ्कारः सम्प्रास्रवत्तद्यथा शङ्कुना सर्वाणि पर्णानि सन्तृण्णान्येवमोङ्कारेण सर्वा वाक्सन्तृण्णोङ्कार एवेदं सर्वमोङ्कार एवेदं सर्वम् ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - (அதன்பின் பிரஜாபதி) அந்த அக்ஷரங்களைத் தியானம் செய்தார் அந்த தியானம் செய்யப்பட்ட அக்ஷரங்களில் இருந்து ஓம்காரம் உண்டாயிற்று. எவ்வாறு நாளங்களால் எல்லா இலைகளும் வியாபித்து உள்ளதோ அவ்வாறு ஓம்காரத்தால் எல்லா வாக்குகளும் வியாபித்து உள்ளது. ஓம்காரமே எது எல்லாம் உண்டோ அவையாவும் ஓம்காரமே எவை எல்லாம் உண்டோ அவையாவும்.
तानि अक्षराणि अभ्यतपत् , तेभ्यः अभितप्तेभ्यः ओङ्कारः सम्प्रास्रवत् । तत् ब्रह्म कीदृशमिति, आह — तद्यथा शङ्कुना पर्णनालेन सर्वाणि पर्णानि पत्रावयवजातानि सन्तृण्णानि निविद्धानि व्याप्तानीत्यर्थः । एवम् ओङ्कारेण ब्रह्मणा परमात्मनः प्रतीकभूतेन सर्वा वाक् शब्दजातं सन्तृण्णा — ‘अकारो वै सर्वा वाक्’ (ऐ. आ. २ । ३ । ७) इत्यादिश्रुतेः ।
அனுவாதம் - (அதன்பின்) அந்த அக்ஷரங்களை தியானம் செய்தார். அந்த தியானத்திலிருந்து “ஓம்காரம்” உண்டானது. அந்த ஓம்காரம் ரூப பிரஹ்மம் எவ்வாறு ஆனது? அதற்குக் கூறப்படுகிறது. எவ்வாறு நரம்புகளால் (நாளங்களால்) இலைகள் நிறைந்து வியாபித்து அவயவ சமூஹமாக வியாபித்திருப்பது போல் இவ்வாறு பரமாத்ம பிரதீக பூத ஓம்கார ரூப பிரஹ்ம மூலமாய் எல்லா வாக் சப்தங்களும் உண்டாகி வியாபித்துள்ளது. “अकारो वै सर्वा वाक्” (அகாரோ வை சர்வா வாக்) என்பது
परमात्मविकारश्च नामधेयमात्रम् इत्यतः ओङ्कार एवेदं सर्वमिति । द्विरभ्यासः आदरार्थः । लोकादिनिष्पादनकथनम् ओङ्कारस्तुत्यर्थमिति ॥
அனுவாதம் - பரமாத்மாவின் விகாரங்களே நாமதேய மாத்திரம். ஆகையால் இவை எல்லாம் ஓம்காரம், இருதடவை கூறியது அதை திடப்படுத்துவதற்காக. லோகங்கள் முதலியவைகளை அடைவிப்பது முதலியவை ஓம்காரத்தின் ஸ்துதிக்காக ஆகும்.
इति त्रयोविंशखण्डभाष्यम् ॥
ब्रह्मवादिनो वदन्ति यद्वसूनां प्रातः सवनꣳ रुद्राणां माध्यन्दिनꣳ सवनमादित्यानां च विश्वेषां च देवानां तृतीयसवनम् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - பிரஹ்ம வாதிகள் கூறுகின்றனர் காலை ஸவனம் வசுக்களினது, மத்யான ஸவனம் ருத்ரர்களினது, மூன்றாவது ஸவனம் ஆதித்யனதும் விச்வதேவர்களுக்கும் ஆனது.
सामोपासनप्रसङ्गेन कर्मगुणभूतत्वान्निवर्त्य ओङ्कारं परमात्मप्रतीकत्वादमृतत्वहेतुत्वेन महीकृत्य प्रकृतस्यैव यज्ञस्य अङ्गभूतानि सामहोममन्त्रोत्थानान्युपदिदिक्षन्नाह —
அனுவாதம் - அ.கை - ஸாம உபாஸன ஸம்தமான கர்மத்தின் குண ரூபமாவதால் (அங்கமாவதால்) இப்பொழுது இந்த ஓம்காரத்தை (உபாஸனை காண்டத்திலிருந்து) நிவிர்த்தி செய்து பரமாத்மாவின் பிரதீகமாக இருப்பதால் அது அம்ருதத்திற்கு ஸாதனம் ஆகும் என்று அதன் மஹத்துவத்தைக் கூறி யக்ஞத்தின் அங்க பூதமான ஸாம, ஹோம, மந்திரம் மேலும் உத்தானம் முதலியவைகளை உபதேஸிக்கவிரும்பி சுருதி இவ்வாறு கூறுகிறது -
ब्रह्मवादिनो वदन्ति, यत्प्रातःसवनं प्रसिद्धं तद्वसूनाम् । तैश्च प्रातःसवनसम्बद्धोऽयं लोको वशीकृतः प्रातःसवनेशानैः । तथा रुदॆर्माध्यन्दिनसवनेशानैः अन्तरिक्षलोकः । आदित्यैश्च विश्वैर्देवैश्च तृतीयसवनेशानैस्तृतीयो लोको वशीकृतः । इति यजमानस्य लोकोऽन्यः परिशिष्टो न विद्यते ॥
அனுவாதம் - பிரஹ்மவாதிகள் கூறுகின்றனர் - எது பிராதஸ் (காலை) ஸவனம் பிரசித்தமோ அது வசுக்களுடையது. அந்த ஸவன அதிஷ்வரர்கள் மூலமாய் பிரதஸ் (காலை) ஸவன ஸம்பந்தமான இந்தலோகம் வசம் ஆக்கப்படுகிறது. அவ்வாறே ருத்திரர்களால் மத்யதின ஸவன அதீஷ்வர்களால் அந்தரிக்ஷலோகம் அடையப்படுகிறது. ஆதித்யன் மேலும் விச்வதேவர்கள் மூலமாய் மூன்றாவது லோகம் தன்னுடைய அதீனமாகிறது. இவ்வாறு யஜமானனுக்கு இதைத்தவிர வேறு லோகம் கிடையாது.
क्व तर्हि यजमानस्य लोक इति स यस्तं न विद्यात्कथं कुर्यादथ विद्वान्कुर्यात् ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - ஆனால் எஜமானனுடைய லோகம் எது? எந்த யஜமானன் அந்த லோகத்தை அறியவில்லையோ அவன் எவ்வாறு யக்ஞத்தை அனுஷ்டானம் செய்வான்? ஆகையால் அதை அறிந்தவனே யக்ஞம் செய்வான்.
अतः क्व तर्हि यजमानस्य लोकः, यदर्थं यजते ; न क्वचिल्लोकोऽस्तीत्यभिप्रायः — ‘लोकाय वै यजते यो यजते’ ( ? ) इति श्रुतेः । लोकाभावे च स यो यजमानः तं लोकस्वीकरणोपायं सामहोममन्त्रोत्थानलक्षणं न विद्यात् न विजानीयात् , सोऽज्ञः कथं कुर्यात् यज्ञम् , न कथञ्चन तस्य कर्तृत्वमुपपद्यत इत्यर्थः ।
அனுவாதம் - ஆகையால் யார்தான் யஜமானனுடைய லோகத்திற்காக யஜனம் செய்வர். இதன் தாத்பர்யம் என்னவெனில் அந்த லோகம் என்பது இல்லை என்பதாகும். “लोकाय वै यजते यो यजते” (லோகாய வை யஜதே யோ யஜதே) என்ற சுருதியினால் லோகம் இல்லை என்பதால் எந்த அந்த யஜமானன் அந்த லோகத்தை அடைவதற்கான உபாயங்களான ஸாமம், ஹோமம், மந்திரம், உத்தான லக்ஷணங்களை அறியாத அந்த அக்ஞான புருஷன் எவ்வாறு யக்ஞம் (செய்வான்) அனுஷ்டிப்பான்? எவ்வகையிலும் அவனுக்கு கர்த்துருத்துவம் ஸம்பவிக்காது என்பது பொருள்.
सामादिविज्ञानस्तुतिपरत्वात् न अविदुषः कर्तृत्वं कर्ममात्रविदः प्रतिषिध्यते — स्तुतये च सामादिविज्ञानस्य, अविद्वत्कर्तृत्वप्रतिषेधाय च इति हि भिद्येत वाक्यम् । आद्ये च औषस्त्ये काण्डे अविदुषोऽपि कर्मास्तीति हेतुमवोचाम । अथ एतद्वक्ष्यमाणं सामाद्युपायं विद्वान्कुर्यात् ॥
அனுவாதம் - ஸாமம் முதலிய விக்ஞானம் ஸ்திக்காகவே ஆகையால் இதன் மூலமாக கேவலம் கர்மம் மாத்திரம் அறிந்தவனுக்கு கர்த்திருத்துவம் நிஷேதிக்கப்படவில்லை (தள்ளப்படவில்லை). ஸாமம் முதலிய விக்ஞானம் ஸ்துதிகாகவென்றும், அவித்வான்களில் கர்ம கர்த்திருத்துவத்தை நிஷேதிப்பதாகவும் இருக்கிறது என்று கூறும் வாக்கியம் பேதமுடையதாகும். ஏன் எனில் முதல் அத்யாயத்தில் ஒளஷஸ்த்திய கண்டத்தில் (பத்தாவது கண்டத்தில்) கர்மம் அவித்வான்களுக்காகவும் ஆகும் என்று நாம் கூறினோம். அதனால் இனிக் கூறப்போகும் சமாதி உபாயத்தை அறிந்த வித்வான் கர்மம் செய்ய வேண்டும் என்பதாகும்.
पुरा प्रातरनुवाकस्योपाकरणाज्जघनेन गार्हपत्यस्योदङ्मुख उपविश्य स वासवं सामाभिगायति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - பிராதர் அனுவாக்கை அதாவது காலை மந்திரங்களை செய்வதற்கு முன் அந்த எஜமானன் கார்ஹபத்திய அக்னிக்கு முன்னால் வடக்கு நோக்கி உட்கார்ந்து வசுதேவதா ஸம்பந்தமான ஸாமத்தை கானம் செய்கின்றான்.
किं तद्वेद्यमिति, आह —
அனுவாதம் - அந்த அறியப்பட வேண்டிய ஸாமம் எது? அது கூறப்படுகிறது
पुरा पूर्वं प्रातरनुवाकस्य शस्त्रस्य प्रारम्भात् जघनेन गार्हपत्यस्य पश्चात् उदङ्मुखः सन् उपविश्य सः वासवं वसुदैवत्यं साम अभिगायति ॥
அனுவாதம் - ப்ராதர அனுவாக்கிற்கு அதாவது காலையில் ஆரம்பிப்பதற்கு யோகியமான “शस्त्र” (சஸ்த்ர) என்னும் ஸ்தோத்திரத்தை படிப்பதற்கு முன் கார்ஹபத்திய அக்னிக்குப் பின் வடக்கு நோக்கி அந்த யஜமானன் வாஸவ அதாவது வசுதேவதா ஸம்பந்தி ஸாமத்தை கானம் செய்கிறார்.
लो३कद्वारमपावा३र्णू ३३ पश्येम त्वा वयं रा ३३३३३ हु३म् आ ३३ ज्या ३ यो ३ आ ३२१११ इति ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - (ஹே அக்னீ!) நீ இந்த லோகத்தின் வாயிலைத்திற. எதனால் நாங்கள் ராஜ்ய பிராப்த்தியின் பொருட்டு உன்னுடைய தர்சனம் வேண்டும்.
लोकद्वारम् अस्य पृथिवीलोकस्य प्राप्तये द्वारम् अपावृणु हे अग्ने तेन द्वारेण पश्येम त्वा त्वां राज्यायेति ॥
அனுவாதம் - ஹே அக்னி! லோகத்தின் வாயில் - பிருதிவிலோகத்தின் வாயிலைத் திற. அந்த வாயிலின் மூலமாக நாங்கள் ராஜ்யப் பிராப்திக்காக உன்னுடைய தர்சனத்தை செய்ய வேண்டும்.
अथ जुहोति नमोऽग्नये पृथिवीक्षिते लोकक्षिते लोकं मे यजमानाय विन्दैष वै यजमानस्य लोक एतास्मि ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - அதன்பின் (யஜமானன் இந்த மாத்திரம் மூலமாக) ஹவனம் செய்கின்றான் - பிரிவியில் வசிக்கும் இந்த லோகத்தில் வசிப்பவர் அக்னி தேவதையை நமஸ்காரம் செய்கிறார். என்னுடைய யஜமானனை நீ இந்த பிரிதிவீ லோகத்தை அடையச்செய். இது நிச்சயமாக யஜமானனில் லோகமாகும். நான் இதனால் அடையச்செய்வேன்.
अथ अनन्तरं जुहोति अनेन मन्त्रेण — नमोऽग्नये प्रह्वीभूताः तुभ्यं वयं पृथिवीक्षिते पृथिवीनिवासाय लोकक्षिते लोकनिवासाय, पृथिवीलोकनिवासायेत्यर्थः ; लोकं मे मह्यं यजमानाय विन्द लभस्व ; एष वै मम यजमानस्य लोकः एता गन्ता अस्मि ॥
அனுவாதம் - இதற்குப்பின் இந்த மந்திரத்தால் ஹவனம் செய்கிறார். அக்னியே! நமஸ்காரம். நாங்கள் பிருதிவியில் வசிப்பவர்கள் மேலும் பிருதிவி லோகவாசி உன்னைக் குறித்து வினயம் ஏற்படுகிறது. என்னுடைய யஜமானனுக்கு நீ புண்ய லோகத்தை அடையச்செய். இது என்னுடைய யஜமானனுக்கு நான் இந்த லோகத்தை அடையச்செய்வேன்.
अत्र यजमानः परस्तादायुषः स्वाहापजहि परिघमित्युक्त्वोत्तिष्ठति तस्मै वसवः प्रातःसवनं सम्प्रयच्छन्ति ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - இந்த உலகத்தில் எஜமானன் நான் என் ஆயுள் முடிந்தபின் (புண்ய லோகத்தை அடையவேன்) ஸ்வாஹா என்று கூறி ஹவனம் செய்கின்றன். மேலும் இந்த தாழ்ப்பாளை நீக்கு என்று இவ்வாறு கூறி மேல் எழுகின்றான். வசுகணங்கள் அவனுக்கு பிராதஸ்தவன பலனை அளிக்கின்றன.
अत्र अस्मिंल्लोके यजमानः अहम् आयुषः परस्तात् ऊर्ध्वं मृतः सन् इत्यर्थः । स्वाहेति जुहोति । अपजहि अपनय परिघं लोकद्वारार्गलम् — इति एतं मन्त्रम् उक्त्वा उत्तिष्ठति । एवमेतैर्वसुभ्यः प्रातःसवनसम्बद्धो लोको निष्क्रीतः स्यात् । ततस्ते प्रातःसवनं वसवो यजमानाय सम्प्रयच्छन्ति ॥
அனுவாதம் - இங்கு இந்த லோகத்தில் யஜமானன் நான் என் ஆயுள் முடிந்தபின் அதாவது இறந்தபின் (புண்ய லோகத்தை அடையவேண்டும் என்று) ஸ்வாஹா என்று கூறி ஹவனம் செய்கின்றான். “நீ லோகத்தின் வாயிலின் தாழ்ப்பாளை நீக்கு” என்ற இந்த மந்திரத்தைக் கூறிக்கொண்டு மேல் எழுகிறான். இவ்வாறு இதன் (ஸாமம், மந்திரம், ஹோமம் மேலும் உத்தானம்) மூலமாய் வசுக்களால் பிராதஸ்தவன ஸம்பந்த லோகத்தை ஸம்பாதிக்கிறார்கள். அப்பொழுது அந்த வசுகணங்கள் யஜமானனுக்கு பிராதஸ்வன பலனை அளிக்கின்றனர்.
पुरा माध्यन्दिनस्य सवनस्योपाकरणाज्जघनेनाग्नीध्रीयस्योदङ्मुख उपविश्य सरौद्रं सामाभिगायति ॥ ७ ॥
மந்த்ரார்த்தம் - மத்தியான ஸவனம் ஆரம்பிப்பதற்கு முன் யஜமானன் தக்ஷிணாக்கினிக்கு முன்னால் வடக்கு நோக்கி உட்கார்ந்துகொண்டு ருத்ர தேவதை ஸம்பந்தியான ஸாமத்தை கானம் செய்கின்றான்.
तथा आग्नीध्रीयस्य दक्षिणाग्नेः जघनेन उदङ्मुख उपविश्य सः रौद्रं साम अभिगायति यजमानः रुद्रदैवत्यं वैराज्याय ॥
அனுவாதம் - அவ்வாறே அக்னி தீர்ய அதாவது தக்ஷிணா அக்னிக்கு முன்னால் வடக்கு நோக்கி அமர்ந்து யஜமானனுக்கு ருத்திர தெய்வத்தன்மையான வைராஜ்யத்திற்காக ருத்ர தேவதை ஸம்பந்தமான ஸாமத்தை கானம் செய்கின்றனர்
लो३कद्वरमपावा३र्णू३३ पश्येम त्वा वयं वैरा३३३३३ हु३म् आ३३ज्या३यो३ आ३२१११इति ॥ ८ ॥
மந்த்ரார்த்தம் - (ஹே வாயு!) நீ அந்தரிக்ஷ லோகத்தின் வாயிலைத் திற. எதனால் இந்த வைராஜ்ய பதத்தை அடைவதற்காக நாங்கள் உன்னை தர்சிக்க வேண்டும்.
अथ जुहोति नमो वायवेऽन्तरिक्षक्षिते लोकक्षिते लोकं मे यजमानाय विन्दैष वै यजमानस्य लोक एतास्मि ॥ ९ ॥
மந்த்ரார்த்தம் - அதன்பின் (யஜமானன் இந்த மந்திரம் மூலமாய்) ஹவனம் செய்கிறான்- அந்த ரிக்ஷத்தில் இருக்கும் அந்தரிக்ஷலோக நிவாசி வாயு தேவனுக்கு நமஸ்காரம். என்னுடைய யஜமானனை நீ (அந்தரிக்ஷ) லோகப்பிராப்தியை அடையச்செய். இது நிச்சயமாக யஜமானனுடைய லோகமாகும். நான் இதை இதனால் அடைந்தவனாவேன்
अत्र यजमानः परस्तादायुषः स्वाहापजहि परिघमित्युक्त्वोत्तिष्ठति तस्मै रुद्रा माध्यन्दिनं सवनं सम्प्रयच्छन्ति ॥ १० ॥
மந்த்ரார்த்தம் - இங்கு யஜமானன் “நான் ஆயுள் முடிந்தபின் (அந்தரிக்ஷலோகத்தை அடைவேனாக) ஸ்வாஹா” என்று கூறி ஸவனம் செய்கின்றான். மேலும் “லோக வாயிலின் தாழ்ப்பாளை நீக்கு” என்று கூறி மேல் எழுகிறான். ருத்ர கணங்கள் அதனால் மத்யான ஸவனத்தின் பலனை அளிக்கின்றனர்.
अन्तरिक्षक्षित इत्यादि समानम् ॥
அனுவாதம் - “अन्तरिक्षक्षिते” (அந்தரிக்ஷிதே) முதலிய மந்திரங்களின் அர்த்தம் ஸமானமாகும்.
पुरा तृतीयसवनस्योपाकरणाज्जघनेनाहवनीयस्योदङ्मुख उपविश्य स आदित्यं स वैश्वदेवं सामाभिगायति ॥ ११ ॥
மந்த்ரார்த்தம் - மூன்றாவது ஸவனம் ஆரம்பிப்பதற்கு முன் யஜமானன் ஆஹவனீய அக்னிக்கு முன் வடக்கு பார்த்து அமர்ந்து ஆதித்யன் அவ்வாறே விச்வேதேவ ஸம்பந்தமான ஸாமத்தை கானம் செய்கின்றான்.
तथा आहवनीयस्योदङ्मुख उपविश्य सः आदित्यदैवत्यम् आदित्यं वैश्वदेवं च साम अभिगायति क्रमेण स्वाराज्याय साम्राज्याय ॥
அனுவாதம் - அவ்வாறே அவன் (அந்த யஜமானன்) ஆஹவனீய அக்கினிக்கு முன் வடக்கு நோக்கி அமர்ந்து ஸ்வாராஜ்யத்தின் பொருட்டு அதாவது ஸாம்ராஜ்யத்தின் பொருட்டு ஆதித்திய தெய்வத்தன்மையை அதாவது ஆதித்திய ஸம்பந்தமானதும், வைச்வாநர ஸம்பந்தமும் ஆன ஸாமத்தை கானம் செய்கின்றான்.
लो३कद्वारमपावा३र्णू३३पश्येम त्वा वयं स्वारा ३३३३३ हु३म् आ३३ ज्या३ यो३ आ ३२१११ इति ॥ १२ ॥
आदित्यमथ वैश्वदेवं लो३कद्वारमपावा३र्णू३३ पश्येम त्वा वयं साम्रा३३३३३ हु३म् आ३३ ज्या३यो३आ ३२१११ इति ॥ १३ ॥
மந்த்ரார்த்தம் - லோகத்தின் வாயிலைத் திற. எதனால் நாங்கள் ஸ்வராஜ்யப் பிராப்திக்காக தங்களை தர்சனம் செய்யவேண்டும். இது ஆதித்ய ஸம்பந்தி ஸாமம் ஆகும். இப்பொழுது விச்வேதேவ ஸம்பந்தி ஸாமத்தைக் கூறுகிறோம் - லோகத்தின் வாயிலைத் திற, அதனால் நாங்கள் ஸ்வராஜ்ய பிராப்திக்காக தங்களைத் தரிசிக்க வேண்டும்.
अथ जुहोति नम आदित्येभ्यश्च विश्वेभ्यश्च देवेभ्यो दिविक्षिद्भ्यो लोकक्षिद्भ्यो लोकं मे यजमानाय विन्दत ॥ १४ ॥
மந்த்ரார்த்தம் - அதன்பின் (யஜமானன் இந்த மந்திரம் மூலமாய்) ஹவனம் செய்கிறான் - “ஸ்வர்க்த்தில் வசிக்கும் த்யுலோக நிவாசி ஆதித்தியனையும், விஷ்வே தேவர்களையும் நமஸ்கரிக்கின்றேன். யஜமானனாகிய என்னை நீ புண்ய லோகத்தை அடையச்செய்.
एष वै यजमानस्य लोक एतास्म्यत्र यजमानः परस्तादायुषः स्वाहापहत परिघमित्युक्त्वोत्तिष्ठति ॥ १५ ॥
மந்த்ரார்த்தம் - இது நிச்சயமாக யஜமானனுடைய லோகம் நான் அதை அடைபவனாக இருக்கின்றேன். இங்கு யஜமானன் ஆயுள் முடிந்தவுடன் (நான் இதனால் அடைவேனாக) ஸ்வாஹா- என்று கூறி ஹவனம் செய்கிறான். மேலும் “லோக வாயிலின் தாழ்ப்பாளை நீக்கு” என்று கூறி மேல் எழுகிறான்.
दिविक्षिद्भ्य इत्येवमादि समानमन्यत् । विन्दत अपहत इति बहुवचनमात्रं विशेषः । याजमानं त्वेतत् , एतास्म्यत्र यजमान इत्यादिलिङ्गात् ॥
அனுவாதம் - “दिविक्षिद्भ्य” என்பன முதலியவை முன் போன்ற ஸமான அர்த்தமுடையவை. “विन्दत, अपहत” (விந்தத, அபஹத) இந்த கிரியா பதங்களில் பஹுவசனங்கள் முந்தின பதங்களை அபேக்ஷித்த விசேஷங்களாகும். இந்த மந்திரம் எஜமானன் சம்பந்தப்பட்டது. ஏன்எனில் “एतास्म्यत्र यजमान” (ஏதஸ்மயத்ர யஜமான) முதலிய லிங்கங்களால் ஸ்பஷ்டமாக ஆகிறது.
तस्मा आदित्याश्च विश्वे च देवास्तृतीयसवनं सम्प्रयज्छन्त्येष ह वै यज्ञस्य मात्रां वेद य एवं वेद य एवं वेद ॥ १६ ॥
மந்த்ரார்த்தம் - அவனுக்கு (யஜமானனுக்கு) ஆதித்யன் மற்றும் விச்வே தேவர்கள் மூன்றாவது ஸவன பலனை அளிப்பர். எவன் இவ்வாறு அறிகிறானோ அவன் இவ்வாறு அறிகிறான் - அது நிச்சயமாக யக்ஞத்தின் யதார்த்த ஸ்வரூபத்தை அறிகிறான்.
एष ह वै यजमानः एवंवित् यथोक्तस्य सामादेर्विद्वान् यज्ञस्य मात्रां यज्ञयाथात्म्यं वेद यथोक्तम् । य एवं वेदेति द्विरुक्तिरध्यायपरिसमाप्त्यर्था ॥
அனுவாதம் - இவ்வாறு அறிந்தவன் - முன்பு கூறியவாறு ஸாமம் முதலியவைகளை அறிந்த இந்த யஜமானன் யக்ஞத்தை மாத்திரம், அதாவது யக்ஞத்தின் உள்ளதை உள்ளவாறு கூறப்பட்டதை அறிகிறான். “य एवं वेद” (ய ஏம் வேத) “य एवं वेद” என்று இருமுறை கூறியது அத்யாயத்தின் முடிவிற்காக ஆகும்.
इति चतुर्विंशखण्डभाष्यम् ॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ छान्दोग्योपनिषद्भाष्ये द्वितीयोऽध्यायः समाप्तः ॥