Home
Works
Search
About
छान्दोग्योपनिषत् - मन्त्राः
अ
अग्निर्हिङ्कारो वायुः प्रस्ताव आदित्य उद्गीथो नक्षत्राणि प्रतिहारश्चन्द्रमा निधनमेतद्राजनं देवतासु प्रोतम् ॥ १ ॥மந்த்ரார்த்தம் - அக்னி “हिंकारः” (ஹிம்காரம்), வாயு “प्रस्तावः” (பிரஸ்தாவம்), ஆதித்யன் “उद्गीथः” (உத்கீத:) நக்ஷத்திரம் “प्रतिहारः” (பிரதிஹாரம்), சந்திரன் “निधनम्” (நிதனம்) ஆகும். இந்த ராஜனஸாமம் தேவதைகளில் அனுஸ்யூதமாய் உள்ளன.
अग्निष्टे पादं वक्तेति स ह श्वोभूते गा अभिप्रस्थापयाञ्चकार ता यत्राभि सायं बभूवुस्तत्राग्निमुपसमाधाय गा उपरुध्य समिधमाधाय पश्चादग्नेः प्राङुपोपविवेश ॥ १ ॥மந்த்ரார்த்தம் - அக்னி உனக்கு (இரண்டாவது) பாதத்தைக் கூறும் என்று (கூறிவிட்டு ரிஷபம் மெளனமாயிற்று). மறுநாள் அவன் பசுக்களை (குருகுலத்தை நோக்கி) ஒட்டிச்சென்றான். சாயங்காலத்தில் அவைகள் ஒன்று சேர்த்து கட்டிவிட்டு சமித்துக்களால் அக்னியை மூட்டி அதன்முன்னால் கிழக்கு நோக்கி அமர்ந்தான்.
अजा हिङ्कारोऽवयः प्रस्तावो गाव उद्गीथोऽश्वाः प्रतिहारः पुरुषो निधनमेता रेवत्यः पशुषु प्रोताः ॥ १ ॥மந்த்ரார்த்தம் - ஆடுகள் “हिंकारः” (ஹிம்காரம்), செம்மறி ஆடுகள் “प्रस्तावः” (பிரஸ்தாவம்), பசுக்கள் “उद्गीथः” (உத்கீதம்), குதிரைகள் “प्रतिहारः” (பிரதிஹாரம்), புருஷன் (மனிதன்) “निधनम्” (நிதனம்) ஆகும். இந்த “रेवतीसाम” (ரேவதிஸாமா) பசுக்களில் அனுஸ்யூதமாய் உள்ளது.
अतो यान्यन्यानि वीर्यवन्ति कर्माणि यथाग्नेर्मन्थनमाजेः सरणं दृढस्य धनुष आयमनमप्राणन्ननपानं स्तानि करोत्येतस्य हेतोर्व्यानमेवोद्गीथमुपासीत ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - இதைத் தவிர மற்ற எந்த வீர்யமுள்ள கர்மம் உள்ளதோ - எவ்வாறு அக்னியின் மந்தனம் (கடைதல்) ஒரு இலக்கை அடைவதற்காக ஓடுதல், திடமான வில்லை வளைத்தல் போன்ற எல்லா வீர்யமுடைய கர்மங்களை புருஷன் பிராணன், அபானன் கிரியைகளை செய்யாவிடினும் கிரியைகளை செய்கின்றான். ஆகையால் வியான திருஷ்டியினாலேயே உத்கீத உபாசனை செய்ய வேண்டும்.
अत्र यजमानः परस्तादायुषः स्वाहापजहि परिघमित्युक्त्वोत्तिष्ठति तस्मै रुद्रा माध्यन्दिनं सवनं सम्प्रयच्छन्ति ॥ १० ॥ மந்த்ரார்த்தம் - இங்கு யஜமானன் “நான் ஆயுள் முடிந்தபின் (அந்தரிக்ஷலோகத்தை அடைவேனாக) ஸ்வாஹா” என்று கூறி ஸவனம் செய்கின்றான். மேலும் “லோக வாயிலின் தாழ்ப்பாளை நீக்கு” என்று கூறி மேல் எழுகிறான். ருத்ர கணங்கள் அதனால் மத்யான ஸவனத்தின் பலனை அளிக்கின்றனர்.
अत्र यजमानः परस्तादायुषः स्वाहापजहि परिघमित्युक्त्वोत्तिष्ठति तस्मै वसवः प्रातःसवनं सम्प्रयच्छन्ति ॥ ६ ॥ மந்த்ரார்த்தம் - இந்த உலகத்தில் எஜமானன் நான் என் ஆயுள் முடிந்தபின் (புண்ய லோகத்தை அடையவேன்) ஸ்வாஹா என்று கூறி ஹவனம் செய்கின்றன். மேலும் இந்த தாழ்ப்பாளை நீக்கு என்று இவ்வாறு கூறி மேல் எழுகின்றான். வசுகணங்கள் அவனுக்கு பிராதஸ்தவன பலனை அளிக்கின்றன.
अत्स्यन्नं पश्यसि प्रियमत्त्यन्नं पश्यति प्रियं भवत्यस्य ब्रह्मवर्चसं कुले य एतमेवमात्मानं वैश्वानरमुपास्ते पादौ त्वेतावात्मन इति होवाच पादौ ते व्यम्लास्येतां यन्मां नागमिष्य इति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - நீ அன்னத்தை சாப்பிடுகிறாய், பிரியமானவற்றைப் பார்க்கின்றாய் என்று எவர் இந்த வைச்வாநரனை உபாசிக்கின்றாரோ அவர் அன்னத்தை புசிக்கின்றார், பிரியமானதைக் காண்கின்றார். மேலும் அவருடைய குலத்தில் பிரஹ்மவர்ச்சஸ் தோன்றும். ஆனால் அது அந்த ஆத்மாவின் பாதங்களாகும் என்று கூறி நீர் என்னை வந்து அடைந்திருக்காவிட்டால் உங்களுடைய பாதங்கள் செயலை இழந்திருக்கும்.
अत्स्यन्नं पश्यसि प्रियमत्त्यन्नं पश्यति प्रियं भवत्यस्य ब्रह्मवर्चसं कुले य एतमेवमात्मानं वैश्वानरमुपास्ते प्राणस्त्वेष आत्मन इति होवाच प्राणस्य उदक्रमिष्यद्यन्मां नागमिष्य इति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - நீ அன்னத்தைப் புசிக்கின்றாய் மேலும் பிரியமானதைக் காண்கின்றாய் என்று இவ்வாறு எவர் வைச்வாநர ஆத்மாவை உபாசனை செய்கின்றாரோ அவர் அன்னத்தை உண்பர், பிரியமானதைக் காண்பர், மேலும் அவருடைய குலத்தில் பிரஹ்ம தேஜஸ் உண்டாகும். ஆனால் அது ஆத்மாவின் பிராணனாகும் (அங்கமாகும்) என்று இவ்வாறு ராஜா கூறினார். மேலும் இதுவும் கூறினார் - நீர் என்னிடம் வரவில்லை எனில் உங்களுடைய பிராணன் வெளியேறி இருக்கும் என்று.
अत्स्यन्नं पश्यसि प्रियमत्त्यन्नं पश्यति प्रियं भवत्यस्य ब्रह्मवर्चसं कुले य एतमेवमात्मानं वैश्वानरमुपास्ते बस्तिस्त्वेष आत्मन इत होवाच बस्तिस्ते व्यभेत्स्यद्यन्मां नागमिष्य इति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - நீ அன்னத்தை உண்கிறாய், பிரியமானவற்றைப் பார்க்கிறாய் என்று இவ்வாறு வைச்வாநர ஆத்மாவை உபாசனை செய்பவர் அன்னத்தைப் புசிக்கின்றார், பிரியமானவற்றைக் காண்கின்றார், மேலும் அவருடைய குலத்தில் பிரஹ்மதேஜஸ் உண்டாகிறது. ஆனால் இந்த ஆத்மாவின் அடிவயிறு (சிறுநீர்ப் பை) ஆகும் என்று கூறி இவ்வாறு கூறினார். நீர் என்னிடம் வரவில்லையெனில் உங்களுடைய (சிறுநீர் பை) அடிவயிறு வெடித்திருக்கும்.
अत्स्यन्नं पश्यसि प्रियमत्त्यन्नं पश्यति प्रियं भवत्यस्य ब्रह्मवर्चसं कुले य एतमेवमात्मानं वैश्वानरमुपास्ते मूर्धा त्वेष आत्मन इति होवाच मूर्धा ते व्यपतिष्यद्यन्मां नागमिष्य इति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - நீ அன்னத்தை உண்கிறாய் விரும்பியதைக் (பிரியமானதைக்) காண்கிறாய், என்று இவ்வாறு எவன் வைச்வாநர ஆத்மாவை உபாசிக்கின்றானோ அவன் அன்னத்தை உண்கின்றான் பிரியமானவற்றை பார்க்கின்றான். அவனுடைய குலத்தில் பிரஹ்மதேஜஸ் உண்டாகும். அந்த வைத்வாநர ஆத்மா ஸ்தகம் (தலை) ஆகும் என்று ராஜா கூறிவிட்டு மேலும் கூறினார் - நீங்கள் இங்கு என்னிடம் வராமல் இருந்திருந்தால் உங்கள் தலை வீழ்ந்திருக்கும்.
अत्स्यन्नं पश्यसि प्रियमत्त्यन्नं पश्यति प्रियं भवत्यस्य ब्रह्मवर्चसं कुले य एतमेवमात्मानं वैश्वानरमुपास्ते सन्देहस्त्वेष आत्मन इति होवाच सन्देहस्ते व्यशीर्यद्यन्मां नागमिष्य इति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - நீ அன்னத்தைப் புசிக்கின்றாய் மேலும் பிரியமானவற்றைப் பார்க்கின்றாய் என்று இந்த வைச்வாநர ஆத்மாவே உபாசிக்கின்றவர் அன்னத்தை உண்கின்றார் மேலும் பிரியமானவற்றைப் பார்க்கின்றார். மேலும் அவருடைய குலத்தில் பிரஹ்மதேஜஸ் உண்டாகிறது. ஆனால் இது ஆத்மாவின் மத்ய பாகமாகும் என்று ராஜா இவ்வாறு கூறி மேலும் கூறினார் நீ என்னிடம் வராது இருந்திருந்தால் உன்னுடைய மத்யபாக சரீரம் நஷ்டமாகி இருக்கும். (ஏன் எனில் இது அங்கமாகிறது. முழுமையாகாது).
अथ खलु य उद्गीथः स प्रणवो यः प्रणवः स उद्गीथ इति होतृषदनाद्धैवापि दुरुद्गीतमनुसमाहरतीत्यनुसमाहरतीति ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - நிச்சயமாக உத்கீதமே இந்த பிரணவம். இந்த பிரணவமே உத்கீதம் என்று இவ்வாறு (உபாசனை செய்துகொண்டு) உத்காதா ஹோத்ரு கர்மத்தில் செய்யப்படும் உத்கான சம்பந்தப்பட்ட தோஷத்தை சம்சோதனம் செய்து மன்னிக்கப்படுகிறது.
अथ खलु य उद्गीथः स प्रणवो यः प्रणवः स उद्गीथ इत्यसौ वा आदित्य उद्गीथ एष प्रणव ओमिति ह्येष स्वरन्नेति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - நிச்சயமாக எது உத்கீதமோ அது பிரணவம். எது பிரணவமோ அது உத்கீதம். இவ்வாறு இந்த ஆதித்தியனே உத்கீதம். அது பிரணவம். ஏன் எனில் அந்த (ஆதித்தியன்) “ओं” (ஓம்) என்று உச்சாரணம் செய்துகொண்டே செல்கிறது.
अथ खलु व्यानमेवोद्गीथमुपासीत यद्वै प्राणिति स प्राणो यदपानिति सोऽपानः । अथ यः प्राणापानयोः सन्धिः स व्यानो यो व्यानः सा वाक् । तस्मादप्राणन्ननपानन्वाचमभिव्याहरति ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - அதன்பின் மற்றொரு விதமாக (ஆத்யாத்ம உபாசனை) வியான திருஷ்டியினால் உத்கீத உபாசனை செய்யவேண்டும். எந்த புருஷன் பிராணனை (மூச்சை) மூக்கின் வழியாய் வாயுவை வெளியே விடுகிறானோ) செய்கின்றானோ அது பிராணன். மேலும் அதை உள் இழுக்கின்றானோ அது அபானன். அவ்வாறு பிராணன் அபானனின் சந்தி (அதாவது இரண்டின் நடுபாகம்) வியானன் ஆகும். அந்த வியானன் வாக் ஆகும். அதனால் புருஷன் பிராணனும் அபானனும் செய்யாமல் இருக்கும் சமயத்தில் வாக்கினால் பேசுகின்றான்.
अथ खलूद्गीथाक्षराण्युपासीतोद्गीथ इति प्राण एवोत्प्राणेन ह्युत्तिष्ठति वाग्गीर्वाचो ह गिर इत्याचक्षतेऽन्नं थमन्ने हीदं सर्वं स्थितम् ॥ ६ ॥ மந்த்ரார்த்தம் - அதன்பின் நிச்சயமாக உத்கீத அக்ஷரங்களை உபாசனை செய்யவேண்டும்- “उद्गीथ” (உத்கீத) என்ற சப்தத்தில் பிராணனே “उत्” (உத்) ஆகும். ஏன்எனில் பிராணன் எழுகிறது. வாக்கே “गी” (கீ) ஆகும். ஏன்எனில் வாக்கினால் சொற்களை (பதங்களை) உச்சரிக்கின்றான். அவ்வாறே அன்னமே “थ” (த்த) ஆகும். ஏன்எனில் எல்லாம் அன்னத்திலேயே நிலைபெற்றுள்ளது.
अथ खल्वमुमादित्यꣳ सप्तविधꣳ सामोपासीत सर्वदा समस्तेन साम मां प्रति मां प्रतीति सर्वेण समस्तेन साम ॥ १ ॥மந்த்ரார்த்தம் - இப்பொழுது நிச்சயமாக இந்த ஆதித்யனின் திருஷ்டியினால் ஏழுவித ஸாமத்தை உபாஸனை செய்யவேண்டும். ஆதித்யன் எப்பொழுதும் ஸமமாக இருப்பதால் அது ஸாமம். என்னை நோக்குகிறார், என்னை நோக்குகிறார் (माम् प्रति माम् प्रति) என்று கூறுவதால் எல்லோருக்கும் “प्रति” (ப்ரதி) ஸமம் ஆகிறது. ஆகையால் அது ஸாமம்.
अथ खल्वात्मसंमितमतिमृत्यु सप्तविधꣳ सामोपासीत हिङ्कार इति त्र्यक्षरं प्रस्ताव इति त्र्यक्षरं तत्समम् ॥ १ ॥மந்த்ரார்த்தம் - இப்பொழுது நிச்சயமாக (இது கூறப்படுகிறது). தனக்கு ஸமானமான அக்ஷரமுடைய மிருத்யுவைக் கடப்பதற்கு ஏழுவித ஸாமத்தை உபாஸனை செய். “हिंकारः” (ஹிம்காரம்) மூன்று அக்ஷரங்களை உடையது. அவ்வாறே “प्रस्तावः” (பிரஸ்தாவ)மும் மூன்று அக்ஷாரங்களை உடையது. ஆகையால் அதற்கு ஸமானமாகும்.
अथ खल्वाशीःसमृद्धिरुपसरणानीत्युपासीत येन साम्ना स्तोष्यन्स्यात्तत्सामोपधावेत् ॥ ८ ॥மந்த்ரார்த்தம் - இப்பொழுது ஆசைகளின் (காமனைகளின்) நிறைவு (समृद्धि) (வர்ணனை செய்யப்படுகிறது) தியானம் செய்ய வேண்டியவற்றை இவ்வாறு உபாசனை செய் - எந்த சாமத்தை ஸ்துதி செய்து உத்காதாவாகின்றானோ அந்த சாமத்தை சிந்தனை செய்.
अथ खल्वेतयर्चा पच्छ आचामति तत्सवितुर्वृणीमह इत्याचामति वयं देवस्य भोजनमित्याचामति श्रेष्ठं सर्वधातममित्याचामति तुरं भगस्य धीमहीति सर्वं पिबति निर्णिज्य कंसं चमसं वा पश्चादग्नेः संविशति चर्मणि वा स्थण्डिले वा वाचंयमोऽप्रसाहः स यदि स्त्रियं पश्येत्समृद्धं कर्मेति विद्यात् ॥ ७ ॥ மந்த்ரார்த்தம் - அதன்பின் அந்த இந்த ரிக்கினால் ஒவ்வொரு பாதமாக எடுத்து (அந்த மசியலை) உண்கின்றான். “तत्सवितुर्वृणीमहे” (தத்சவித்ர் வ்ருணீமஹே) என்று கூறி அதை உண்கின்றான். “वयं देवस्य भोजनम्” (வயம் தேவஸ்ய போஜனம்) என்று கூறி உண்கின்றான். “श्रेष्द्भ ँºÉ´ÉÇPÉÉiɨɨÉ” (ஸ்ரேஷ்டப் சர்வதாதமம்) என்று கூறி உண்கின்றான். அவ்வாறே “तुरं भगस्य धीमहि” (துரம் பகஸ்ய தீமஹி) என்று கூறி குவலையிலோ, அகப்பையிலோ இருந்ததை வழித்து கழுவி எல்லா மசியலையும் பருகுகின்றான். அதன்பின் அந்த அக்னியின் அருகில் தோலை விரித்து பவித்ரமான யக்ஞ பூமியில் மெளனமாக (வாக்கைக் கட்டுப்படுத்தி) (அநிஷ்டமான ஸ்வப்ன தர்சனமத்தில்) மூழ்காமல் படுக்கின்றான். அந்த சமயத்தில் (ஸ்வப்னத்தில்) ஸ்த்ரீ தர்சனம் ஏற்பட்டால் கர்ம பலமுடையதாக ஆகின்றது.
अथ जुहोति नम आदित्येभ्यश्च विश्वेभ्यश्च देवेभ्यो दिविक्षिद्भ्यो लोकक्षिद्भ्यो लोकं मे यजमानाय विन्दत ॥ १४ ॥ மந்த்ரார்த்தம் - அதன்பின் (யஜமானன் இந்த மந்திரம் மூலமாய்) ஹவனம் செய்கிறான் - “ஸ்வர்க்த்தில் வசிக்கும் த்யுலோக நிவாசி ஆதித்தியனையும், விஷ்வே தேவர்களையும் நமஸ்கரிக்கின்றேன். யஜமானனாகிய என்னை நீ புண்ய லோகத்தை அடையச்செய்.
अथ जुहोति नमो वायवेऽन्तरिक्षक्षिते लोकक्षिते लोकं मे यजमानाय विन्दैष वै यजमानस्य लोक एतास्मि ॥ ९ ॥ மந்த்ரார்த்தம் - அதன்பின் (யஜமானன் இந்த மந்திரம் மூலமாய்) ஹவனம் செய்கிறான்- அந்த ரிக்ஷத்தில் இருக்கும் அந்தரிக்ஷலோக நிவாசி வாயு தேவனுக்கு நமஸ்காரம். என்னுடைய யஜமானனை நீ (அந்தரிக்ஷ) லோகப்பிராப்தியை அடையச்செய். இது நிச்சயமாக யஜமானனுடைய லோகமாகும். நான் இதை இதனால் அடைந்தவனாவேன்
अथ जुहोति नमोऽग्नये पृथिवीक्षिते लोकक्षिते लोकं मे यजमानाय विन्दैष वै यजमानस्य लोक एतास्मि ॥ ५ ॥ மந்த்ரார்த்தம் - அதன்பின் (யஜமானன் இந்த மாத்திரம் மூலமாக) ஹவனம் செய்கின்றான் - பிரிவியில் வசிக்கும் இந்த லோகத்தில் வசிப்பவர் அக்னி தேவதையை நமஸ்காரம் செய்கிறார். என்னுடைய யஜமானனை நீ இந்த பிரிதிவீ லோகத்தை அடையச்செய். இது நிச்சயமாக யஜமானனில் லோகமாகும். நான் இதனால் அடையச்செய்வேன்.
अथ तत ऊर्ध्व उदेत्य नैवोदेता नास्तमेतैकल एव मध्ये स्थाता तदेष श्लोकः ॥ १ ॥மந்த்ரார்த்தம் - அதன்பின் அது மேல்நோக்கி சென்று உதித்தபின் உதிப்பது இல்லை அஸ்தமிப்பதும் இல்லை. மேலும் தனியாக மத்தியில் நிலையாக இருக்கின்றது. இந்த விஷயத்தில் இந்த ஸ்லோகமாகும்.
अथ प्रतिसृप्याञ्जलौ मन्थमाधाय जपत्यमो नामास्यमा हि ते सर्वमिदं स हि ज्येष्ठः श्रेष्ठो राजाधिपतिः स मा ज्यैष्ठ्यꣳ श्रैष्ठ्यꣳ राज्यमाधिपत्यं गमयत्वहमेवेदं सर्वमसानीति ॥ ६ ॥ மந்த்ரார்த்தம் - அதன்பின் அக்னியில் இருந்து சிறிது தள்ளி இருந்துகொண்டு மசியலை கைகளில் அஞ்சலி பந்தமாக ஏந்தி “अमो नामासि” (அமோ நாமாசி) என்பது முதலிய மந்திரங்களால் ஜபிக்கவேண்டும். (அமோ நாமாசி என்பது முதலிய மந்திரங்களின் பொருள் -) ஹே மந்த்த! நீ “अम” (அம) என்ற நாமம் உடையவன். ஏன் எனில் ஜகத் முழுவதும் (உன்னுடைய பிராணபூதம்) உன்னிடத்தில் இருக்கின்றது. அந்த நீயே ஜ்யேஷ்டன், ஸ்ரேஷ்டன், ராஜா மேலும் எல்லாவற்றிக்கும் அதிபதி. அந்த நீ எனக்கு ஜ்யேஷ்டத்துவத்தையும், ஸ்ரேஷ்டத்துவத்தையும், ராஜ்யத்தையும், ஆதிபத்யத்தையும் அடையச்செய். அதனால் நான் சர்வ ரூபமாவேன்.
अथ य आत्मा स सेतुर्विधृतिरेषां लोकानामसम्भेदाय नैतꣳ सेतुमहोरात्रे तरतो न जरा न मृत्युर्न शोको न सुकृतं न दुष्कृतꣳ सर्वे पाप्मानोऽतो निवर्तन्तेऽपहतपाप्मा ह्येष ब्रह्मलोकः ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - மேலும் எந்த ஆத்மாவோ அது இந்த லோகங்களை பாதுகாப்பதற்காக இவைகளை விசேஷ ரூபமாக பாதுகாப்பான சேதுவாக (அணையாக) இருக்கிறது. இந்த அணையை பகலும் இரவும் தாண்டுவது இல்லை. இதனால் மூப்பு இல்லை, மரணம் இல்லை, சோகம் இல்லை மேலும் தர்மமும் அதர்மமும் (புண்யமும், பாபமும்) அடைவதில்லை. இதனால் எல்லா பாபங்களும் நிவிர்த்தியாகிறது. ஏன் எனில் பிரஹ்ம லோகம் பாபமற்றதாய் இருக்கிறது.
अथ य इमे ग्राम इष्टापूर्ते दत्तमित्युपासते ते धूममभिसम्भवन्ति धूमाद्रात्रिं रात्रेरपरपक्षमपरपक्षाद्यान्षड्दक्षिणैति मासांस्तान्नैते संवत्सरमभिप्राप्नुवन्ति ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - எவ்வாறு அந்த கிரஹஸ்தர்கள் கிராமத்தில் இஷ்டா பூர்த்தம் மேலும் தத்தம் (தானம்) என்று உபாசிக்கின்றனரோ அவர்கள் தூம மார்க்கத்தை அடைகின்றனர். தூமத்திலிருந்து ராத்திரியை அடைகின்றனர், ராத்திரியிலிருந்து கிருஷ்ணபக்ஷத்தையும் அவ்வாறே கிருஷ்ணபக்ஷத்தினால் ஆறு மாதங்கள் தக்ஷிண மார்க்கத்தில் சென்று அவைகளை அடைகின்றனர் அவர்கள் சம்வத்சரத்தை (வருடத்தை) அடைவதில்லை.
अथ य एतदेवं विद्वानग्निहोत्रं जुहोति तस्य सर्वेषु लोकेषु सर्वेषु भूतेषु सर्वेष्वात्मसु हुतं भवति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - ஏன்எனில் அந்த இதை (வைச்வாநரனை) இவ்வாறு அறிந்த புருஷன் அக்னிஹோத்திரம் செய்கின்றானோ அவனுடைய எல்லா லோகங்களும், எல்லா பூதங்களும், எல்லா ஆத்மாக்களும் ஹவனம் செய்யப்பட்டதாக ஆகிறது. (உணவு அளித்ததாக ஆகின்றது).
अथ य एतदेवं विद्वान्साम गायत्युभौ स गायति सोऽमुनैव स एष ये चामुष्मात्पराञ्चो लोकास्ताꣳश्चाप्नोति देवकामाꣳश्च ॥ ७ ॥மந்த்ரார்த்தம் - இப்பொழுது எவன் இவ்வாறு (நேத்திர ஆத்மாவையும், ஆதித்ய ஆத்மாவையும் ஒன்று என்று) அறிந்த வித்வான் ஸாமகானம் செய்கின்றான். அந்த (நேத்திர ஆத்மா, ஆதித்ய ஆத்மா) இரண்டிற்குமே கானம் செய்கின்றான் (போற்றுகின்றான்). அவ்வாறே இதன் மூலமாய் இந்த ஆதித்திய லோகத்திற்கு மேலே இருக்கும் லோகத்தையும், தேவதைகளின் போகத்தையும் அடைகின்றான்.
अथ य एष सम्प्रसादोऽस्माच्छरीरात्समुत्थाय परं ज्योतिरुपसम्पद्य स्वेन रूपेणाभिनिष्पद्यत एष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्मेति तस्य ह वा एतस्य ब्रह्मणो नाम सत्यमिति ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இவ்வாறு பிரசன்னம் (சாந்தமான பிரசாதத்தை) அடைந்தவன் இந்த சரீரத்திலிருந்து வெளியேறி பரம்ஜோதியை அடைந்து தன்னுடைய ஸ்பரூபத்துடன் கலந்துவிடுகிறான். இந்த ஆத்மாவே அம்ருதம் அவ்வாறே அபயம் மேலும் அதுவே பிரஹ்மம் என்று இவ்வாறு ஆச்சாரியர் கூறினார். அந்த இந்த பிரஹ்மத்தின் நாமம் (பெயர்) “सत्यम्” (சத்யம்) ஆகும்.
अथ य एषोऽन्तरक्षिणि पुरुषो दृश्यते सैवर्क्तत्साम तदुक्थं तद्यजुस्तद्ब्रह्म तस्यैतस्य तदेव रूपं यदमुष्य रूपं यावमुष्य गेष्णौ तौ गेष्णौ यन्नाम तन्नाम ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே அந்த நேத்திரத்தின் மத்தியில் எந்த புருஷன் காணப்படுகிறானோ அதுவே “ऋक्” (ரிக்), அதுவே “साम” (ஸாம), அதுவே “उक्थ” (உக்த), அதுவே “यजुः” (யஜு:), அதுவே “ब्रह्म” (பிரஹ்ம) ஆகும். அந்த இந்த புருஷனுடைய ரூபம் எதுவோ அது இதன் (ஆதித்யாந்தர்கத புருஷனின்) ரூபமாகும். எது அதற்கு பக்ஷமோ அதுவே இதற்கு பக்ஷம். எது அதன் நாமமோ அதுவே இதன் நாமம் ஆகும்.
अथ यच्चतुर्थममृतं तन्मरुत उपजीवन्ति सोमेन मुखेन न वै देवा अश्नन्ति न पिबन्त्येतदेवामृतं दृष्ट्वा तृप्यन्ति ॥ १ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே இந்த நான்காவது அம்ருதம். மிருத் கணங்கள் சோமனை பிரதானமாக்கி அதனை ஆஸ்ரயித்து ஜீவனத்தை மேற்கொள்கிறது. தேவகணங்கள் சாப்பிடுவது இல்லை, பருகுவதும் இல்லை.. அவர்கள் இந்த அம்ருதத்தைப் பார்த்தே திருப்தி அடைகின்றனர்.
अथ यत्तदजायत सोऽसावादित्यस्तं जायमानं घोषा उलूलवोऽनूदतिष्ठन्सर्वाणि च भूतानि सर्वे च कामास्तस्मात्तस्योदयं प्रति प्रत्यायनं प्रति घोषा उलूलवोऽनूत्तिष्ठन्ति सर्वाणि च भूतानि सर्वे च कामाः ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - அதன் பின் அதனிடம் இருந்து எது உண்டானதோ அது ஆதித்யன். அது உண்டாகும் பொழுது குரவைப்போன்ற கோஷங்கள் எழுந்தன. அவ்வாறே அதிலிருந்து எல்லா ஜீவராசிகள் அவ்வாறே எல்லா போகங்களும் உண்டாயின. இதனால் உதய அஸ்தமனம் ஏற்படும் பொழுது மிகுந்த சப்தமுடைய கோசம் உண்டாயிற்று. அவ்வாறே எல்லா பிராணிகளும் காமனைகளும் உண்டாகின்றன.
अथ यत्तपो दानमार्जवमहिंसा सत्यवचनमिति ता अस्य दक्षिणाः ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே எந்த தபஸ், தானம், ஆர்ஜலம், அஹிம்ஸா மேலும் சத்யம் பேதல் ஆகியவை இதற்கு தக்ஷிணைகளாகும்.
अथ यत्तृतीयममृतं तदादित्या उपजीवन्ति वरुणेन मुखेन न वै देवा अश्नन्ति न पिबन्त्येतदेवामृतं दृष्ट्वा तृप्यन्ति ॥ १ ॥மந்த்ரார்த்தம் - அதற்குப்பின் மூன்றாவது அம்ருதம். ஆதித்யகணங்கள் வருணனை பிரதானமாகக்கொண்டு அதை ஆஸ்ரயித்து உபஜீவிக்கின்றன. ருதவகணங்கள் சாப்பிடுவதோ பருகுவதோ இல்லை. இந்த அம்ருதத்தைப் பார்த்தே திருப்தி அடைகின்றன.
अथ यत्पञ्चमममृतं तत्साध्या उपजीवन्ति ब्रह्मणा मुखेन न वै देवा अश्नन्ति न पिबन्त्येतदेवामृतं दृष्ट्वा तृप्यन्ति ॥ १ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே ஐந்தாவது அம்ருதமாகும். சாத்ய கணங்கள் பிரஹ்மாவை பிரதானமாக்கி அவரை ஆஸ்ரயித்து ஜீவிக்கின்றனர். தேவகணங்கள் சாப்பிடுவது இல்லை, பருகுவதில்லை, அதைப் பார்த்தே திருப்தி அடைகின்றனர்.
अथ यत्प्रथमास्तमिते तन्निधनं तदस्य पितरोऽन्वायत्तास्तस्मात्तान्निदधति निधनभाजिनो ह्येतस्य साम्न एवं खल्वमुमादित्यं सप्तविधꣳ सामोपास्ते ॥ ८ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே ஆதித்யனுடைய எந்த ரூபம் அஸ்தமித்தபின் (மறைந்தபின்) உள்ளதோ அது “निधनम्” (நிதனம்). அதன் இந்த ரூபத்தை பித்ருகணங்கள் சார்ந்து இருக்கின்றனர். இதனால் (சிரார்த்த காலங்களில்) அவர்களை (பித்ரு பிதாமஹர்களை ஆதித்ய ரூபமாய் தர்பையில்) ஸ்தாபிக்கின்றனர். ஏன்எனில் பித்ருகணங்கள் நிச்சயமாக இந்த ஸாமத்தின் நிதனபக்திக்குப் பாத்திரர்கள் ஆகின்றனர். இவ்வாறு இந்த ஆதித்யரூப ஏழுவித ஸாமத்தை உபாஸனை செய்ய வேண்டும்.
अथ यत्प्रथमोदिते स प्रस्तावस्तदस्य मनुष्या अन्वायत्तास्तस्मात्ते प्रस्तुतिकामाः प्रशंसाकामाः प्रस्तावभाजिनो ह्येतस्य साम्नः ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே சூரியன் முதல் முதலில் உதித்தவுடன் எந்த ரூபமோ அது “प्रस्तावः” (பிரஸ்தாவம்). அந்த இந்த ரூபத்தையே மனிதர்கள் சார்ந்திருக்கின்றார்கள். ஆகையால் அவர்கள் போற்றுதலை விரும்புகின்றனர். ஏன் எனில் அவர்கள் இந்த பிரஸ்தாவ பக்தியை உபாஸிக்கின்றனர்.
अथ यत्रैतत्पुरुषः पिपासति नाम तेज एव तत्पीतं नयते तद्यथा गोनायोऽश्वनायः पुरुषनाय इत्येवं तत्तेज आचष्ट उदन्येति तत्रैतदेव शुङ्गमुत्पतितꣳ सोम्य विजानीहि नेदममूलं भविष्यतीति ॥ ५ ॥ மந்த்ரார்த்தம் - இப்பொழுது, இந்த சமயத்தில் இந்த புருஷன் “अशनाया” (பிபாசதி பருக விரும்புகிறான்) என்ற பெயர் உடையவனாகின்றானோ அப்பொழுது அவன் பருகிய ஜலத்தை தேஜஸ் எடுத்துச் செல்கிறது. ஆகையால் எவ்வாறு “गोनाय” (கோநாய) “अशनाया” (அச்வநாய) கோபாலன், அச்வபாலன் அவ்வாறே “अश्वनायः” (புருஷநாய, ராஜா அல்லது சேனாபதி) என்று அழைக்கிறோமோ அவ்வாறே இந்த தேஜஸ் “उदन्या” (உதன்யா) என்று அழைக்கப்படுகிறது. ஹே சோம்ய! இதனால் (இந்த ஜலரூப மூலத்தால்) இந்த சரீரரூப முளை உண்டாகிறது. இவ்வாறு அறிவாயாக. ஏன் எனில் இது மூலம் இல்லாமல் ஆகமுடியாது.
अथ यत्रैतदबलिमानं नीतो भवति तमभित आसीना आहुर्जानासि मां जानासि मामिति स यावदस्माच्छरीरादनुत्क्रान्तो भवति तावज्जानाति ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - எப்பொழுது இந்த சரீரம் பலக்ஷீனத்தை அடைகிறதோ அப்பொழுது நான்கு பக்கங்களிலும் அமர்ந்திருக்கும் சுற்றத்தார் என்ன நான் யார் என்று தெரிகிறதா? நான் யார் என்று தெரிகிறதா? என்று கேட்பர். எதுவரை இந்த சரீரத்திலிருந்து ஜீவன் வெளியேறாதவரை அவர்களை அறிவான்.
अथ यत्रैतदस्माच्छरीरादुत्क्रामत्यथैतैरेव रश्मिभिरूर्ध्वमाक्रमते स ओमिति वा होद्वा मीयते स यावत्क्षिप्येन्मनस्तावदादित्यं गच्छत्येतद्वै खलु लोकद्वारं विदुषां प्रपदनं निरोधोऽविदुषाम् ॥ ५ ॥ மந்த்ரார்த்தம் - மேலும் எப்பொழுது அது இந்த சரீரத்திலிருந்து வெளிக்கிளம்புகிறதோ அப்பொழுது இந்தக் கிரணங்களால் மேலே செல்கின்றான். அது ஓம் என்று கூறிக்கொண்டு ஊர்த்வ (மேல்) லோகத்திற்கோ, அல்லது கீழ் லோகத்திற்கோ செல்கிறது. அவன் மனம் ஒரு எண்ணத்திலிருந்து மற்றொரு எண்ணத்தை அடையும் முன் ஆதித்திய லோகத்தை அடைந்துவிடுகின்றான். அந்த ஆதித்தியனே நிச்சயமாக லோகத்துவாரம் (வழி) ஆகும். இது வித்வான்களுக்கான பிரஹ்ம லோகத்திற்கான துவாரம் ஆகும். மேலும் அது அவித்வான்களுக்கு தடை செய்யப்பட்ட ஸ்தானமாகும்.
अथ यत्रैतदाकाशमनुविषण्णं चक्षुः स चाक्षुषः पुरुषो दर्शनाय चक्षुरथ यो वेदेदं जिघ्राणीति स आत्मा गन्धाय घ्राणमथ यो वेदेदमभिव्याहराणीति स आत्माभिव्याहाराय वागथ यो वेदेदं शृणवानीति स आत्मा श्रवणाय श्रोत्रम् ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - எதில் இந்த கண்களின் மூலமாக உபலக்ஷிக்கப்படும் ஆகாசம் உள்ளதோ அதுவே சாக்ஷீஷ புருஷன். அதன் ரூபத்தை கிரஹிப்பதற்காக நேத்திர இந்திரியம். மேலும் நான் இதனால் முகர்கிறேன் என்பது ஆத்மா அதை கிரஹிப்பதற்காக மூக்கு இந்திரியமாகும். எதானது இந்த சப்தத்தால் பேசுகிறேன் என்று அறிவது ஆத்மா. அந்த சப்தத்தை உச்சாரணம் செய்வது வாக் இந்திரியம். நான் சிரவணம் செய்கின்றேன் என்று அறிவது ஆத்மா. சிரவணம் செய்வதற்காக ஸ்ரோத்திர இந்திரியமாகும்.
अथ यत्रोपाकृते प्रातरनुवाके न पुरा परिधानीयाया ब्रह्मा व्यवदत्युभे एव वर्तनी संस्कुर्वन्ति न हीयतेऽन्यतरा ॥ ४ ॥ स यथोभयपाद्व्रजन्रथो वोभाभ्यां चक्राभ्यां वर्तमानः प्रतितिष्ठत्येवमस्य यज्ञः प्रतितिष्ठति यज्ञं प्रतितिष्ठन्तं यजमानोऽनुप्रतितिष्ठति स इष्ट्वा श्रेयान्भवति ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - மேலும் பிராத அனுவாக்கம் ஆரம்பித்தபின் பரிதாநீயா ரிக்கினால் அதற்குமுன் பிரஹ்மா உச்சரிக்கவில்லையெனில் (எல்லா ரித்விக்களும் சேர்ந்து) இரண்டு மார்க்கங்களையும் தூய்மைப்படுத்துகின்றனர். அதனால் ஒரு மார்க்கமும் நஷ்டமாகாது. எவ்வாறு இரண்டு கால்களால் செல்லும் புருஷன், அல்லது இரண்டு சக்கரங்களால் செல்லும் ரதமும் ஸ்திரமாய் நிலைத்து இருக்கின்றதோ அவ்வாறே இந்த யக்ஞமும் நிலைத்திருக்கும். யக்ஞம் நிலைத்திருப்பதால் எஜமானனும் நிலைத்து இருக்கின்றான். இவ்வாறு யக்ஞம் செய்து ஸ்ரேஷ்டனாகின்றான்.
अथ यत्सङ्गववेलायाꣳ स आदिस्तदस्य वयां स्यन्वायत्तानि तस्मात्तान्यन्तरिक्षेऽनारम्बणान्यादायात्मानं परिपतन्त्यादिभाजीनि ह्येतस्य साम्नः ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - அதன்பின் சூரியனின் எந்த ரூபம் கிரணங்களால் பரவுகின்ற ஸமயத்தில் உள்ளதோ அது “आदि” (ஆதி). அந்த ரூபத்தால் பக்ஷகணங்கள் அனுகதமாய் உள்ளன. ஏன்எனில் அவைகள் இந்த ஸாமத்தின் “आदि” (ஆதி)யை பஜிக்கின்றன. ஆகையால் ஆகாயத்தில் ஆதாரம் ஒன்றும் இல்லாமல் பறந்து திரிகின்றன. ஆகையால் பறவைகள் ஆதியை உபாஸிப்பவைகள். இதுவே அவைகளின் ஸாமம்.
अथ यत्सत्त्रायणमित्याचक्षते ब्रह्मचर्यमेव तद्ब्रह्मचर्येण ह्येव सत आत्मनस्त्राणं विन्दतेऽथ यन्मौनमित्याचक्षते ब्रह्मचर्यमेव तद्ब्रह्मचर्येण ह्येवात्मानमनुविद्य मनुते ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - அவ்வாறே எதனால் “सत्त्रायण” (சத்திலை காப்பாற்றுதல்) (சத்திராண) என்று கூறப்பட்டதோ அதுவும் பிரஹ்மச்சரியமே. ஏன் எனில் பிரஹ்மச்சரிய மூலமாக சத் அதாவது பரமாத்மாவால் (சாதகன்) தான் காப்பாற்றப்படுகின்றான். இதைத்தவிர மெளனமும் அவ்வாறே பிரஹ்மச்சரியம் எனப்படுகிறது. ஏன் எனில் பிரஹ்மச்சரியத்தால் ஆத்மாவை அறிந்து மனனம் (தியானம்) செய்கின்றான்.
अथ यत्सम्प्रतिमध्यन्दिने स उद्गीथस्तदस्य देवा अन्वायत्तास्तस्मात्ते सत्तमाः प्राजापत्यानामुद्गीथभाजिनो ह्येतस्य साम्नः ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே மத்தியான ஸமயத்தில் ஆதித்யனுடைய எந்த ரூபம் உள்ளதோ அது “उद्गीथः” (உத்கீதம்) ஆகும். இந்த ரூபத்தில் தேவகணங்கள் அனுகதமாய் (சார்ந்து) உள்ளார்கள். ஆகையால் அவர்கள் பிரஜாபதியிடம் இருந்து உண்டான பிராணிகளுள் மிகவும் ஸ்ரேஷ்டமானவர்களாய் இருக்கின்றனர். ஏன்எனில் இந்த ஸாமத்தின் உத்கீதத்தை உபாஸிக்கின்றனர்.
अथ यदतः परो दिवो ज्योतिर्दीप्यते विश्वतः पृष्ठेषु सर्वतः पृष्ठेष्वनुत्तमेषूत्तमेषु लोकेष्विदं वाव तद्यदिदमस्मिन्नन्तः पुरुषे ज्योतिः ॥ ७ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே இந்த த்யுலோகத் (சுவர்க்கம்) தைக் காட்டிலும் மேலான ஜ்யோதி விச்வத்திற்கு மேலே அதாவது எல்லாவற்றிக்கும் மேலே (அப்பால்) இருக்கிறது. இதைவிட உத்தமமான வேறுலோகம் கிடையாது. இவ்வாறு உத்தமமான லோகத்தில் பிரகாசித்துக் கொண்டிருப்பது அது நிச்சயமாக இந்த புருஷனின் உள்ளே உள்ள ஜ்யோதியாகும்.
अथ यदनाशकायनमित्याचक्षते ब्रह्मचर्यमेव तदेष ह्यात्मा न नश्यति यं ब्रह्मचर्येणानुविन्दतेऽथ यदरण्यायनमित्याचक्षते ब्रह्मचर्यमेव तदरश्च ह वै ण्यश्चार्णवौ ब्रह्मलोके तृतीयस्यामितो दिवि तदैरं मदीयꣳ सरस्तदश्वत्थः सोमसवनस्तदपराजिता पूर्ब्रह्मणः प्रभुविमितꣳ हिरण्मयम् ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - அவ்வாறே உண்ணாவிரதம் என்று கூறப்படுவதுவும் பிரஹ்மச்சரியமே. ஏன் எனில் எதனால் (சாதகன்) இந்த பிரஹ்மச்சரியத்தால் அடையப்பட்ட அந்த ஆத்மா அழிவதில்லை. மேலும் எந்த அரண்யாயனம் அதாவது வனவாசம் உள்ளதோ அதுவும் பிரஹ்மச்சரியமே. ஏன் எனில் பிரஹ்ம லோகத்தில் “अर” (அர) “ण्य” (ண்ய) என்று இரண்டு சமுத்திரங்கள் உள்ளன. இங்கு இருந்து (இந்த பூமியில் இருந்து) மூன்றாவதான த்யுலோகத்தில் ஐரம்மதீயம் என்னும் ஏரியும் உள்ளது. சோமசவனம் என்ற பெயருடைய அரசமரம் உள்ளது. அங்கு பிரஹ்மாவின் அபராஜித புரம் உள்ளது. மேலும் ஈஸ்வரனுடைய விச்வரூபத்தால் நிர்மாணம் செய்யப்பட்ட தங்கமயமான மண்டபம் உள்ளது.
अथ यदवोचं भुवः प्रपद्य इत्यग्निं प्रपद्ये वायुं प्रपद्य आदित्यं प्रपद्य इत्येव तदवोचम् ॥ ६ ॥மந்த்ரார்த்தம் - மேலும் நான் கூறிய “நான்” “भुवः” (புவ:)வை சரணம் அடைகிறேன். என்றது நான் அக்னியை சரணம் அடைகிறேன். வாயுவை சரணம் அடைகின்றேன், ஆதித்யனை சரணம் அடைகின்றேன் என்பதாகும்.
अथ यदवोचं भूः प्रपद्य इति पृथिवीं प्रपद्येऽन्तरिक्षं प्रपद्ये दिवं प्रपद्य इत्येव तदवोचम् ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே நான் கூறிய “भूः” (பூ:)வை சரணம் அடைகிறேன் என்று கூறியது பிருதிவியை சரணம் அடைகிறேன், அந்தரிக்ஷத்தை சரண் அடைகின்றேன், தேவலோகத்தை சரண் அடைகிறேன் என்பதாகும்.
अथ यदवोचं स्वः प्रपद्य इत्यृग्वेदं प्रपद्ये यजुर्वेदं प्रपद्ये सामवेदं प्रपद्य इत्येव तदवोचं तदवोचम् ॥ ७ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே நான் கூறிய “நான்” “स्वः” (ஸ்வ:)வை சரணம் அடைகிறேன் என்றது நான் ரிக் வேதத்தை சரணம் அடைகின்றேன், யஜுர் வேதத்தை சரணம் அடைகின்றேன். சாம வேதத்தை சரணம் அடைகின்றேன் என்பதாகும். இதை நான் கூறினேன். இதை நான் கூறினேன்.
अथ यदश्नाति यत्पिबति यद्रमते तदुपसदैरेति ॥ २ ॥மந்த்ரார்த்தம் - மேலும் எது சாப்பிடுகிறதோ எது பருகுகிறதோ மேலும் எது ரமிக்கின்றதோ அது உபசதங்களின் சாதிருஷ்யத்தை அடைகிறது. (உபஸதங்களைப் போன்று ஆகிறது).
अथ यदास्य वाङ्मनसि सम्पद्यते मनः प्राणे प्राणस्तेजसि तेजः परस्यां देवतायामथ न जानाति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - மேலும் எப்பொழுது ஜீவனுடைய வாக் மனதிலும், மனம் பிராணனிலும், பிராணன் தேஜஸ்ஸிலும், தேஜஸ் பரதேவதையிடம் லீனமாகின்றதோ அப்பொழுது அறிவதில்லை.
अथ यदि गन्धमाल्यलोककामो भवति सङ्कल्पादेवास्य गन्धमाल्ये समुत्तिष्ठतस्तेन गन्धमाल्यलोकेन सम्पन्नो महीयते ॥ ६ ॥ மந்த்ரார்த்தம் - மேலும் கந்தமால்ய லோகத்தை விரும்பினால் அந்த சங்கல்பத்தால் வாசனையுடன் மாலைகள் தோன்றும் அந்த கந்தமால்ய லோகத்தை அடைந்து மஹிமையை அடைவர்
अथ यदि गीतवादित्रलोककामो भवति सङ्कल्पादेवास्य गीतवादित्रे समुत्तिष्ठतस्तेन गीतवादित्रलोकेन सम्पन्नो महीयते ॥ ८ ॥ மந்த்ரார்த்தம் - மேலும் அந்த கீதம் வாத்ய சம்பந்தமான லோகத்தை விரும்புகிறவன் அந்த சங்கல்பத்தால் அந்த கீதவாத்யத்தை அங்கு அடைகிறான். அந்த கீதவாத்ய லோகத்தை அடைந்து அவன் அந்த மஹிமையை அடைகின்றான்.
अथ यदि तस्याकर्ता भवति तत एव सत्यमात्मानं कुरुते स सत्याभिसन्धः सत्येनात्मानमन्तर्धाय परशुं तप्तं प्रतिगृह्णाति स न दह्यतेऽथ मुच्यते ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - அவன் திருடவில்லையெனில் அவன் உண்மையானவன். அவன் உண்மை வழியில் நடப்பவனாய் இருப்பதால் தன்னுடைய சத்தியமானது மறைக்கப்பட்டு அந்த தஹிக்கின்ற கோடாலியை பிடிக்கின்றான். அது அவனது கையை எரிப்பதில்லை. ஆகையால் அவன் விடுவிக்கப்படுகின்றான்.
अथ यदि भ्रातृलोककामो भवति सङ्कल्पादेवास्य भ्रातरः समुत्तिष्ठन्ति तेन भ्रातृलोकेन सम्पन्नो महीयते ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - மேலும் அந்த ப்ராத்ரு (சகோதர) லோகத்தை இச்சிப்பானாகில் அந்த சங்கல்பத்தினால் அங்கே பிராத்ருகணங்கள் தோன்றுவார்கள். அந்த ப்ராத்ரு லோகத்தை அடைந்து மஹிமையை அடைவார்கள்.
अथ यदि महज्जिगमिषेदमावास्यायां दीक्षित्वा पौर्णमास्यां रात्रौ सर्वौषधस्य मन्थं दधिमधुनोरुपमथ्य ज्येष्ठाय श्रेष्ठाय स्वाहेत्यग्नावाज्यस्य हुत्वा मन्थे सम्पातमवनयेत् ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - எப்பொழுது அந்த மஹத்துவத்தை அடைய விரும்பினால் அதற்காக அமாவாசையில் தீக்ஷை செய்துகொண்டு பெளர்ணமி இரவில் எல்லா மூலிகைகளின் மசியலுடன் தயிர், தேன் இவைகளை ஒன்றாய் கலந்து “ज्येष्द्भाय श्रेष्द्भाय स्वाहा” (ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய ஸ்வாஹா) என்று கூறிக்கொண்டு அதை அக்னியில் நெய்யினால் ஹவனம் செய்து கரண்டியில் இருந்த மீதியையும் அதில் சேர்க்கவேண்டும்.
अथ यदि मातृलोककामो भवति सङ्कल्पादेवास्य मातरः समुत्तिष्ठन्ति तेन मातृलोकेन सम्पन्नो महीयते ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - மேலும் அந்த மாத்ரு லோகத்தை காமனை செய்பவன் (விரும்புபவன்) அந்த சங்கல்பத்தால் மாத்ருக்கள் அவனுக்கு அங்கே தோன்றுவார்கள். அந்த மாத்ருலோகத்தை அடைந்து அந்த மஹிமையை அடைகின்றனர்.
अथ यदि सखिलोककामो भवति सङ्कल्पादेवास्य सखायः समुत्तिष्ठन्ति तेन सखिलोकेन सम्पन्नो महीयते ॥ ५ ॥ மந்த்ரார்த்தம் - மேலும் அந்த சகீலோகத்தை விரும்பினால் அந்த சங்கல்பத்தால் நண்பர்கள் தோன்றுவர். அந்த சகீலோகத்தை அடைந்து மஹிமையை அடைவர்.
अथ यदि सामतो रिष्येत्स्वः स्वाहेत्याहवनीये जुहुयात्साम्नामेव तद्रसेन साम्नां वीर्येण साम्नां यज्ञस्य विरिष्टं सन्दधाति ॥ ६ ॥மந்த்ரார்த்தம் - மேலும் சாம ரிக்குகளால் குறை ஏற்பட்டால் “स्वः स्वाहा” (ஸ்வ: ஸ்வாஹா) என்று ஆஹவநீய அக்னியில் ஆஹுதி செய்யவேண்டும். இவ்வாறு இந்த சாமத்தின் ரசத்தால் சாமத்தின் வீர்யத்தின் வாயிலாக யக்ஞத்தின் சாம சம்பந்தமான குறை நீங்கி பிரஹ்மா பூர்ணமாக்குகிறார்.
अथ यदि स्त्रीलोककामो भवति सङ्कल्पादेवास्य स्त्रियः समुत्तिष्ठन्ति तेन स्त्रीलोकेन सम्पन्नो महीयते ॥ ९ ॥ மந்த்ரார்த்தம் - மேலும் அவன் ஸ்திரீ லோகத்தை விரும்பினால் அந்த சங்கல்பத்தால் ஸ்திரீகள் அங்கு தோன்றுவர். அந்த ஸ்திரீலோகத்தை அடைந்து மஹிமை அடைவர்.
अथ यदि स्वसृलोककामो भवति सङ्कल्पादेवास्य स्वसारः समुत्तिष्ठन्ति तेन स्वसृलोकेन सम्पन्नो महीयते ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - மேலும் சகோதரி லோகத்தை விரும்புபவர்கள் அந்த சங்கல்பத்தால் அங்கு சகோதரிகள் தோன்றுவார்கள். அந்த சகோதரி லோகத்தை அடைந்து அந்த மஹிமையைப் அடைவார்கள்.
अथ यदिदमस्मिन्ब्रह्मपुरे दहरं पुण्डरीकं वेश्म दहरोऽस्मिन्नन्तराकाशस्तस्मिन्यदन्तस्तदन्वेष्टव्यं तद्वाव विजिज्ञासितव्यमिति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - இப்பொழுது இந்த பிரஹ்ம புரத்தின் உள்ளே எந்த இந்த சூக்ஷ்மமான கமலாகார ஸ்தானம் (தாமரை ரூபமான ஸ்தானம்) உள்ளதோ அதில் சூக்ஷ்ம ஆகாசம் உள்ளது. அதன் உள்ளே எந்த வஸ்து உள்ளதோ அதைத் தேடவேண்டும். மேலும் அதை அறிய இச்சை (विजिसा) செய்ய வேண்டும்.
अथ यदु चैवास्मिञ्छव्यं कुर्वन्ति यदि च नार्चिषमेवाभिसम्भवन्त्यर्चिषोऽहरह्न आपूर्यमाणपक्षमापूर्यमाणपक्षाद्यान्षडुदङ्ङेति मासाꣳस्तान्मासेभ्यः संवत्सरꣳ संवत्सरादादित्यमादित्याच्चन्द्रमसं चन्द्रमसो विद्युतं तत्पुरुषोऽमानवः स एनान्ब्रह्म गमयत्येष देवपथो ब्रह्मपथ एतेन प्रतिपद्यमाना इमं मानवमावर्तं नावर्तन्ते नावर्तन्ते ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - இப்பொழுது முன்பு கூறப்பட்ட பிரஹ்ம வேதாவின் கதி கூறப்படுகிறது) - அவர்களுக்கு அந்திமகர்மம் (சவகர்மம்) செய்தாலும், செய்யவிட்டாலும் அவர்கள் அர்ச்சிராபிமானி தேவதையை அடைகின்றனர். அதன்பின் அர்ச்சிராபிமானி தேவதையினால் பகல் அபிமானி தேவதையையும், பகல் அபிமானி தேவதையினால் சுக்ல அபிமானி தேவதையும் மேலும் சுக்ல அபிமானி தேவதையினால் உத்ராயணத்தின் ஆறுமாதங்களை அடைகின்றனர். மாதங்களினால் வருடங்களையும். வருடங்களினால் ஆதித்யனையும், ஆதித்யனால் சந்திரனையும், சந்திரனால் மின்னலையும் (विद्युत्) அடைகின்றனர். அங்கிருந்து அமானவ புருஷன் இவர்களை பிரஹ்ம லோகத்தை அடையச் செய்கிறான். இது தேவ மார்க்கம், அதாவது பிரஹ்ம மார்க்கமாகும். ஆகையால் இதை அறிந்த புருஷன் மானவ (மானிட) மண்டலத்திற்கு திரும்பமாட்டான் திரும்பமாட்டான்.
अथ यदूर्ध्वं मध्यन्दिनात्प्रागपराह्णात्स प्रतिहारस्तदस्य गर्भा अन्वायत्तास्तस्मात्ते प्रतिहृतानावपद्यन्ते प्रतिहारभाजिनो ह्येतस्य साम्नः ॥ ६ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே ஆதித்யனுடைய ரூபம் மத்யானத்திற்குப் பின் பிற்பகலுக்கு முன் எதுவோ அது “प्रतिहारः” ஆகும். இதனை கருவில் உள்ள உயிர்கள் சார்ந்து இருக்கின்றன. ஆகையால் அவை பிரதிஹ்ருத அதாவது மேலே ஆகர்ஷிப்பதால் கீழே விழுவது இல்லை. ஏன்எனில் அவைகள் இந்த ஸாமத்தின் இந்த பிரதிஹார பக்திக்கு பாத்திரமாகின்றன.
अथ यदूर्ध्वमपराह्णात्प्रागस्तमयात्सउपद्रवस्तदस्यारण्या अन्वायत्तास्तस्मात्ते पुरुषं दृष्ट्वा कक्षꣳ श्वभ्रमित्युपद्रवन्त्युपद्रवभाजिनो ह्येतस्य साम्नः ॥ ७ ॥ மந்த்ரார்த்தம் - அவ்வாறே ஆதித்தியனின் எந்த ரூபம் பிற்பகலுக்குப்பின் சூரிய அஸ்தமத்திற்கு முன் உள்ளதோ அந்த ரூபம் “उपद्रवः” (உபத்ரவம்). அதன் அந்த ரூபத்தை சார்ந்து இருப்பவை காட்டு மிருகங்கள். ஆகையால் மனிதர்களைக் கண்டால் பயத்தால் காட்டிற்குள் அல்லது குகையினுள் ஓடுகின்றன. ஏன்எனில் அவை இந்த லாமத்தின் உபத்திரவ பக்தியை உபாஸிப்பவைகள்.
अथ यदेतदक्ष्णः शुक्लं भाः सैवर्गथ यम्नीलं परः कृष्णं तत्साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयते । अथ यदेवैतदक्ष्णः शुक्लं भाः सैव साथ यन्नीलं परः कृष्णं तदमस्तत्साम ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே எது இந்த நேத்திரத்தின் சுக்ல பிரகாசம் உள்ளதோ அது “ऋक्” (ரிக்) மேலும் எந்த நீல நிறம் அதாவது முற்றிலும் கருமை நிறம் உள்ளதோ அது “साम” (ஸாம) ஆகும். இவ்வாறு (சுக்ல பிரகாச ரூப) (வெண்மை பிரகாசரூப) ரிக்கில் (நீலவர்ணமாகிய முற்றிலும் கருமைரூப) ஸாமம் நிலைபெற்றுள்ளது. ஆகையால் ரிக்கில் நிலைபெற்ற ஸாமத்தைக் கானம் செய்கின்றனர். அவ்வாறே அந்த எந்த நேத்திரத்தில் சுக்ல (வெண்மை) பிரகாசம் உள்ளதோ அது “सा” (ஸா) எந்த நீல வர்ணம் அதாவது முற்றிலும் கருமையான வர்ணம் உள்ளதோ அது “अम” (அம) ஆகும். இவ்வாறு இரண்டும் சேர்ந்து “साम” (ஸாம) ஆகும்.
अथ यदेतदादित्यस्य शुक्लं भाः सैवर्गथ यन्नीलं परः कृष्णं तत्साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयते ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே எந்த அந்த ஆதித்யனின் சுக்ல (வெண்மை) ஜோதியோ அது ரிக் ஆகும். அதில் எந்த நீல நிறம் முற்றிலும் கருமை நிறமாகக் காணப்படுகிறதோ அது சாமமாகும். அந்த இந்த (நீல நிற) சாமம் இந்த (கருமை நிற ஜோதி ரூப) ரிக்கில் அதிஷ்டித்திருக்கின்றது. ஆகையால் ரிக்கில் அதிஷ்டிதமான சாமம் கானம் செய்யப்படுகிறது.
अथ यदेवैतदादित्यस्य शुक्लं भाः सैव साथ यन्नीलं परः कृष्णं तदमस्तत्सामाथ य एषोऽन्तरादित्ये हिरण्मयः पुरुषो दृश्यते हिरण्यश्मश्रुर्हिरण्यकेश आप्रणखात्सर्व एव सुवर्णः ॥ ६ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே அந்த எந்த ஆதித்தியனின் வெண்மையான பிரகாசமோ அது “सा” (சா) ஆகும். மேலும் எந்த நீல நிறமோ அதாவது முற்றிலும் கருப்போ அது “अम” (அம) ஆகும். அவை இரண்டும் சேர்ந்து “साम” (சாம) ஆகும். அவ்வாறே எது ஆதித்திய மண்டலத்தின் உள் இருக்கும் ஸ்வர்ணமய “सा” (சா) புருஷன் காணப்படுகிறான். எந்த ஸ்வர்ணத்திற்குக் சமானமான மீசையும் ஸ்வர்ணத்திற்கு ஒப்பான முடி உடையவனும் அவ்வாறே நகம் வரையிலும் எது ஸ்வர்ண மயமாய் உள்ளதோ அது “सा” (சா).
अथ यद्द्वितीयममृतं तद्रुद्रा उपजीवन्तीन्द्रेण मुखेन न वै देवा अश्नन्ति न पिबन्त्येतदेवामृतं दृष्ट्वा तृप्यन्ति ॥ १ ॥மந்த்ரார்த்தம் - இப்பொழுது இரண்டாவது அம்ருதம். (கூறப்படுகிறது). ருத்ரகணங்கள் இந்திரனை பிரதானமாக செய்து (தலைவனாக செய்து) அவரை ஆஸ்ரயித்து ஜீவிக்கின்றனர். தேவகணங்கள் சாப்பிடுவது இல்லை, பருகுவதும் இல்லை. அவர்கள் அம்ருதத்தை பார்த்ததாலேயே திருப்தியை அடைகின்றான்.
अथ यद्धसति यज्जक्षति यन्मैथुनं चरति स्तुतशस्त्रैरेव तदेति ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே சிரிப்பது, பக்ஷணம் செய்வது (சாப்பிடுவது), மனைவியுடன் சேர்வது ஆகியவை ஸ்துதி பாராயணங்களுக்கு (स्तुतशस्त्रैः) சமானமாகின்றது. (ஏன் எனில் சப்தம் ஏற்படுத்துவதில் இரண்டும் சமானமாய் இருப்பதால்)
अथ यद्यज्ञ इत्याचक्षते ब्रह्मचर्यमेव तद्ब्रह्मचर्येण ह्येव यो ज्ञाता तं विन्दतेऽथ यदिष्टमित्याचक्षते ब्रह्मचर्यमेव तद्ब्रह्मचर्येण ह्येवेष्ट्वात्मानमनुविन्दते ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - இப்பொழுது (உலகில்) எதை யக்ஞம் என்கின்றனரோ அது பிரஹ்மச்சர்யமே ஆகும். ஏன் எனில் எது அறியப்படுகிறதோ அது பிரஹ்மச்சரிய மூலமாக அதை (பிரஹ்மலோகத்தை) அடையப்படுகிறது, மேலும் எதை “इष्ट” (இஷ்ட) என்று கூறப்படுகிறதோ அதுவும் பிரஹ்மசர்யமே. ஏன் எனில் பிரஹ்மசரியத்தின் மூலமாக பூஜை செய்து புருஷன் ஆத்மாவை அடைகிறான்.
अथ यद्यन्नपानलोककामो भवति सङ्कल्पादेवास्यान्नपाने समुत्तिष्ठतस्तेनान्नपानलोकेन सम्पन्नो महीयते ॥ ७ ॥ மந்த்ரார்த்தம் - மேலும் அன்னம் பானம் சம்பந்தமான லோகத்தை விரும்பினால் அந்த சங்கல்பத்தால் அன்னம்பானம் அவன் முன்னால் தோன்றும். அந்த அன்ன பானத்தை அடைந்தவனாய் மஹிமையை அடைகிறான்.
अथ यद्यप्येनानुत्क्रान्तप्राणाञ्छूलेन समासं व्यतिषन्दहेन्नैवैनं ब्रूयुः पितृहासीति न मातृहासीति न भ्रातृहासीति न स्वसृहासीति नाचार्यहासीति न ब्राह्मणहासीति ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - ஆனால் எவருடைய பிராணன் வெளியேறுகிறதோ அந்த பிதா முதலியவர்களை சூலத்தால் ஒரே வெட்டாக வெட்டி சின்னாபின்னமாக்கினாலும் நீ பிதாவைக் கொன்றவன், நீ மாதாவைக் கொன்றவன், நீ சகோதரனைக் கொன்றவன், நீ சகோதரியைக் கொன்றவன், நீ ஆச்சாரியாரைக் கொன்றவன், மேலும் நீ பிராஹ்மணனைக் கொன்றவன் என்று கூறமாட்டார்கள்.
अथ यद्येनमूष्मसूपालभेत प्रजापतिं शरणं प्रपन्नोऽभूवं स त्वा प्रति पेक्ष्यतीत्येनं ब्रूयादथ यद्येनं स्पर्शेषूपालभेत मृत्युं शरणं प्रपन्नोऽभूवं स त्वा प्रति धक्ष्यतीत्येनं ब्रूयात् ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - மேலும் எவர் ஒருவர் இந்த ஊஷ்ம வர்ண உச்சாரணத்தில் தோஷத்தை தெரிவிக்கிறார்களோ அவர்களிடம் இவ்வாறு கூறவேண்டும் நான் பிரஜாபதியை சரண் அடைந்துள்ளேன். அவர் உன்னை தண்டிப்பார். மேலும் ஒருவர் ஸ்பர்ச உச்சாரணத்தில் தோஷம் பார்த்தால் அவரிடம் நான் மிருத்யுவை சரணம் அடைந்துள்ளேன். அவர் உன்னை அழித்துவிடுவார் என்று கூறு.
अथ या एता हृदयस्य नाड्यस्ताः पिङ्गलस्याणिम्नस्तिष्ठन्ति शुक्लस्य नीलस्य पीतस्य लोहितस्येत्यसौ वा आदित्यः पिङ्गल एष शुक्ल एष नील एष पीत एष लोहितः ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - மேலும் எந்த இந்த ஹிருதயத்தின் நாடிகள் உள்ளதோ அவை மங்கலவர்ணம் அதாவது சிகப்பு கலந்த மஞ்சள் நிறம் உள்ள சூக்ஷ்மமான ரசமாகும். அவை வெண்மை, நீலம், மஞ்சள் சிகப்பு ஆகிய ரசங்கள் ஆகும். ஏன் எனில் அந்த ஆதித்யன் சிகப்பு கலந்த மஞ்சள் நிறமுடையது. அவ்வாறே அது வெண்மை, நீலம், மஞ்சள் மேலும் சிகப்பு நிறம் உடையது.
अथ यां चतुर्थीं जुहुयात्तां जुहुयात्समानाय स्वाहेति समानस्तृप्यति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - அதன்பின் நான்காவது ஆஹுதி அளிக்கும்பொழுது “समानाय स्वाहा” (சமானாய ஸ்வாஹா) என்று அளிக்க வேண்டும். அதனால் சமானன் திருப்தி அடைகிறது.
अथ यां तृतीयां जुहुयात्तां जुहुयादपानाय स्वाहेत्यपानस्तृप्यति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - அதன்பின் மூன்றாவது ஆஹுதி அளிக்கும்போது “अपानाय स्वाहा” (அபானாய ஸ்வாஹா) என்று கூறி அளிக்கவேண்டும். இதனால் அபானன் திருப்தி அடைகிறது.
अथ यां द्वितीयां जुहुयात्तां जुहुयाद्व्यानाय स्वाहेति व्यानस्तृप्यति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - அதன்பின் இரண்டாவது ஆஹுதி அளிக்கும்பொழுத “व्यानाय स्वाहा” என்று கூறி ஆஹுதி செய்யவேண்டும். இதனால் வியானன் திருப்தி அடைகின்றான்.
अथ यां पञ्चमीं जुहुयात्तां जुहुयादुदानाय स्वाहेत्युदानस्तृप्यति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - அதன்பின் ஐந்தாவது ஆஹுதியை “उदनाय स्वाहा” (உதானாய ஸ்வாஹா) என்று கூறி ஆஹுதி செய்யவேண்டும். அதனால் உதானன் திருப்தி அடைகிறது.
अथ यानि चतुश्चत्वारिंशद्वर्षाणि तन्माध्यन्दिनं सवनं चतुश्चत्वारिंशदक्षरा त्रिष्टुप्त्रैष्टुभं माध्यंन्दिनꣳ सवनं तदस्य रुद्रा अन्वायत्ताः प्राणा वाव रुद्रा एते हीदं सर्वꣳ रोदयन्ति ॥ ३ ॥तं चेदेतस्मिन्वयसि किञ्चिदुपतपेत्सब्रूयात्प्राणा रुद्रा इदं मे माध्यंन्दिनꣳ सवनं तृतीयसवनमनुसन्तनुतेति माहं प्राणानां रुद्राणां मध्ये यज्ञो विलोप्सीयेत्युद्धैव तत एत्यगदो ह भवति ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - இதற்குப்பின் நாற்பத்தி நான்கு(44) வருடங்கள் மத்யதின சவனமாகும். திருஷ்ட்டுப் சந்தஸ் நாற்பத்தி (44) நான்கு அக்ஷரங்கள் உடையது. மேலும் மத்யதின சவன திருஷ்டுப் சந்தஸுடன் சம்பந்தம் உள்ளது. இந்த மத்யதின சவனத்தில் ருத்ர கணங்கள் அனுகதமாய் (தொடர்ந்து) உள்ளது. பிராணனே ருத்திரன். ஏன்எனில் இந்த சம்பூர்ண பிராணி சமுதாயத்தையும் அழச்செய்கிறது. இவ்வாறு யக்ஞ கர்த்தாவை இந்த ஆயுளில் ரோகம் முதலியவைகளால் கஷ்டப்படுத்தினால் இவ்வாறு கூறவேண்டும் - ஹே பிராணரூப ருத்ரகண! என்னுடைய இந்த மத்யான கால சவனத்தை மூன்றாவது சவனத்துடன் சேர்த்து ஒன்றாக்கிவிடு. யக்ஞரூபமான நான் பிராணரூப ருத்திரர்களின் மத்தியில் ஒருநாளும் நஷ்டமாகக் கூடாது. இவ்வாறு கூறுவதால் அந்த இந்த கஷ்ட்ங்கள் விலகிவிடுகின்றன. ரோகம் அற்றவனாகவும் ஆகின்றான்.
अथ यान्यष्टाचत्वारिꣳशद्वर्षाणि तत्तृतीयसवनमष्टाचत्वारिꣳशदक्षरा जगती जागतं तृतीयसवनं तदस्यादित्या अन्वायत्ताः प्राणा वावादित्या एते हीदं सर्वमाददते ॥ ५ ॥तं चेदस्मिन्वयसि किञ्चिदुपतपेत्स ब्रूयात्प्राणा आदित्या इदं मे तृतीयसवनमायुरनुसन्तनुतेति माहं प्राणानामादित्यानां मध्ये यज्ञो विलोप्सीयेत्युद्धैव तत एत्यगदो हैव भवति ॥ ६ ॥மந்த்ரார்த்தம் - இதன்பின் நாற்பத்தி எட்டு வருடங்களோ அவை மூன்றாவது சவனம். இது ஜகத் சந்தஸ். நாற்பத்தி எட்டு அக்ஷரங்கள் உடையது. அவ்வாறு மூன்றாவது (சாயங்கால) சவனம் ஜகதீ சந்தஸ்சுடன் சம்பந்தம் உடையது. இதில் ஆதித்ய கணங்கள் அனுகதமாய் உள்ளன. (தொடர்பு உடையதாய் உள்ளன). பிராணனே ஆதித்யன். ஏன் எனில் இந்த எல்லா உண்டாகும் விஷயங்களையும் கிரஹிக்கின்றது. இந்த உபாசகனுக்கு ஆயுளில் ஏதாவது ஒரு ரோகம் முதலியவை கஷ்டம் செய்தால் இவ்வாறு கூறவேண்டும் - ஹே பிராணரூப ஆதித்யனே! என்னுடைய இந்த மூன்றாவது சாயங்கால சவனத்தை ஆயுளுடன் ஒன்றாக சேர்த்துவிடு. யக்ஞஸ்வரூபமான நான் பிராண ரூப ஆதித்யனிடத்தில் (மத்தியில்) நஷ்டம் ஆகக்கூடாது. என்று கூறி அந்த கஷ்டத்திலிருந்து விடுபட்டு ரோகம் (நோய்) அற்றவனாக ஆகின்றான்.
अथ ये चास्येह जीवा ये च प्रेता यच्चान्यदिच्छन्न लभते सर्वं तदत्र गत्वा विन्दतेऽत्र ह्यस्यैते सत्याः कामा अनृतापिधानास्तद्यथापि हिरण्यनिधिं निहितमक्षेत्रज्ञा उपर्युपरि सञ्चरन्तो न विन्देयुरेवमेवेमाः सर्वाः प्रजा अहरहर्गच्छन्त्य एतं ब्रह्मलोकं न विन्दन्त्यनृतेन हि प्रत्यूढाः ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - மேலும் எந்த இந்த லோகத்தில் ஜீவித்துக்கொண்டு இருப்பவர்கள் அல்லது இறந்தவர்கள் மேலும் வேறு பதார்த்தங்ளையோ பார்க்க விரும்பினால் அவை எல்லாம் இங்கு (இந்த ஹிருதயஆகாசத்தில் இருக்கும் பிரஹ்மத்திற்கு) சென்று அடைகின்றனர். ஏன்எனில் அங்கு இந்த சத்யகாமம் பொய்யால் மறைக்கப்படாமல் இருக்கின்றது. இந்த விஷயத்தைக் குறித்து திருஷ்டாந்தம் கூறப்படுகிறது- எவ்வாறு பிருதிவியின் அடியில் தங்கம் மறைந்துள்ளது.. அதை அறியாமல் அந்த அறியாத புருஷன் மீண்டும் மீண்டும் அதன் மேல் சஞ்சாரம் செய்தாலும் அதை அறிவதில்லை. அவ்வாறே எல்லா பிரஜைகளும் நித்யப்பிராப்த்தியான பிரஹ்ம லோகத்திற்கு சென்றாலும் அதை அறிவதில்லை. ஏன்எனில் அது மித்யையால் (பொய்யால்) மறைக்கப்பட்டுள்ளது.
अथ येऽस्य दक्षिणा रश्मयस्ता एवास्य दक्षिणा मधुनाड्यो यजूꣳष्येव मधुकृतो यजुर्वेद एव पुष्पं ता अमृता आपः ॥ १ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே இதனுடைய தக்ஷிண (தெற்கு) பாகத்தின் கிரணங்கள் எவையோ அவை இதன் தக்ஷிண திசையில் இருக்கும் மது நாடிகள் (கூடு). யஜுர் சுருதி தேன் ஈ. யஜுர்வேதம் புஷ்பம். அவ்வாறே இது (சோமம் முதலிய ரூப) அம்ருதமே “आपः” (ஜலம்) ஆகும்.
अथ येऽस्य प्रत्यञ्चो रश्मयस्ता एवास्य प्रतीच्यो मधुनाड्यः सामान्येव मधुकृतः सामवेद एव पुष्पं ता अमृता आपः ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - அவ்வாறே இந்த மேற்குப் பக்கத்தில் இருக்கும் கிரணங்கள் எவையோ அவை இதன் மேற்குப் பக்கத்தில் உள்ள தேன்கூடு (தேன் அடை) ஆகும். சாம சுருதிகளே (மந்திரங்களே) தேனீக்கள் ஆகும். சாமவேத விகித கர்மங்கள் புஷ்பம் ஆகும். அவ்வாறே அந்த (சோமம் முதலிய ரூப) அம்ருதம் என்னும் “आपः” (ஆப:) ஆகும்.
अथ येऽस्योदञ्चो रश्मयस्ता एवास्योदीच्यो मधुनाड्योऽथर्वाङ्गिरस एव मधुकृत इतिहासपुराणं पुष्पं ता अमृता आपः ॥ १ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே இந்த வடக்கு திசையின் எந்த கிரணங்கள் இருக்கின்றதோ அவை இந்த வடக்கு திசையில் இருக்கும் தேன் கூடுகள். அதர்வ அங்கிரச மந்திரங்கள் தேனீக்கள். இதிஹாசம், புராணங்கள் புஷ்பம், அவ்வாறே அந்த (சோமம் முதலிய ரூப) அம்ருதமே “आपः” ஆப:.
अथ येऽस्योर्ध्वा रश्मयस्ता एवास्योर्ध्वा मधुनाड्यो गुह्या एवादेशा मधुकृतो ब्रह्मैव पुष्पं ता अमृता आपः ॥ १ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே இந்த மேல் புறத்தில் உள்ள கிரணங்கள் எவையோ அவை மேல் நோக்கியுள்ள தேன் கூடாகும். இது ரகஸ்யமான உபதேசங் (வித்தை)களே தேனீக்கள். (பிரணவரூப) பிரஹ்மமே புஷ்பம். அவ்வாறே அந்த (சோமம் முதலிய ரூப) ஜலரூப (आपरूप) அம்ருதமாகும்.
अथ यो वेदेदं मन्वानीति स आत्मा मनोऽस्य दैवं चक्षुः स वा एष एतेन दैवेन चक्षुषा मनसैतान्कामान्पश्यन्रमते य एते ब्रह्मलोके ॥ ५ ॥ மந்த்ரார்த்தம் - மேலும் எது மனனம் செய்கின்றேன் என்று அறிகிறதோ அது ஆத்மா. மனது அதன் திவ்ய நேத்திரமாகும். இந்த ஆத்மா இந்த திவ்யமான நேத்திர மூலமாக போகங்களை கண்டு ரமிக்கின்றது.
अथ योऽस्य दक्षिणः सुषिः स व्यानस्तच्छ्रोत्रꣳ स चन्द्रमास्तदेतच्छ्रीश्च यशश्चेत्युपासीत श्रीमान्यशस्वी भवति य एवं वेद ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே இதன் தெற்கு வாசல் எதுவோ அது வியானன். அது ஸ்ரோத்திரம். அது சந்திரன் மேலும் அதுவே ஹீயும், யசும் ஆகும் என்று இவ்வாறு உபாசனை செய்யவேண்டும். எவன் இவ்வாறு அறிகின்றானோ (உபாசிக்கின்றானோ) அவன் ஶ்ரீமானகவும், புகழ் உடையவனாகவும் ஆகின்றான்.
अथ योऽस्य प्रत्यङ्सुषिः सोऽपानः सा वाक्योऽग्निस्तदेतद्ब्रह्मवर्चसमन्नाद्यमित्युपासीत ब्रह्मवर्चस्यन्नादो भवति य एवं वेद ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே இதன் மேற்கு வாசலோ அது அபானன், அது வாக், அது அக்னி மேலும் அதுவே இந்த பிரஹ்ம தேஜஸ் அவ்வாறே அன்னாத்யமும் ஆகும் என்று இவ்வாறு உபாசனை செய். எவன் இவ்வாறு அறிகிறானோ அவன் பிரஹ்ம தேஜஸாகவும் அன்ன போக்தாவாகவும் ஆகின்றான்.
अथ योऽस्योदङ्सुषिः स समानस्तन्मनः स पर्जन्यस्तदेतत्कीर्तिश्च व्युष्टिश्चेत्युपासीत कीर्तिमान्व्युष्टिमान्भवति य एवं वेद ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே இதன் எந்த வடக்கு வாயில் உள்ளதோ அது சமானம். அது மனம், அது மேகம், மேலும் அதுவே இந்த கீர்த்தியும் வ்யுஷ்ட்டி (தேஹத்தின் லாவண்யம்) இவ்வாறு இதை உபாசனை செய்ய வேண்டும். எவர் இவ்வாறு அறிகிறாரோ அவர் கீர்த்திமானும் அழகு உடையவனாகவும் ஆகின்றான்
अथ योऽस्योर्ध्वः सुषिः स उदानः स वायुः स आकाशस्तदेतदोजश्च महश्चेत्युपासीतौजस्वी महस्वान्भवति य एवं वेद ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே இந்த மேல் நோக்கிய வாயில் உதானன். அது வாயு, அது ஆகாசம், மேலும் அது ஓஜஸ்சும், மஹ: ஆகும். இவ்வாறு இதனை உபாசனை செய்யவேண்டும். இவ்வாறு எவன் அறிகிறானோ அவன் ஓஜஸ்வியாகவும் (பலவானாகவும்) மஹஸ்வான் (தேஜஸ்வீ) ஆகவும் ஆகின்றான்.
अथ सप्तविधस्य वाचि सप्तविधꣳ सामोपासीत यत्किञ्च वाचो हुमिति स हिङ्कारो युत्प्रेति स प्रस्तावो यदेति स आदिः ॥ १ ॥மந்த்ரார்த்தம் - இப்பொழுது ஏழுவித ஸாமத்தின் உபாஸனை (ஆரம்பிக்கப்படுகிறது). வாக்கில் ஏழுவித ஸாமத்தை உபாஸனை செய்யவேண்டும். வாக்கில் எந்த “हुं” (ஹும்) என்ற ஸ்வரூபம் உள்ளதோ அது “हिंकारः” (ஹிம்காரம்). எந்த “प्र” என்ற ஸ்வரூபம் உள்ளதோ அது “प्रस्तावः” (பிரஸ்தாவம்), என்த ஒரு “आ” (ஆ) என்ற ஸ்வரூபம் உள்ளதோ அது “आदिः” (ஆதி) யாகும்.
अथ ह चक्षुरुद्गीथमुपासाञ्चक्रिरे तद्धासुराः पाप्मना विविधुस्तस्मात्तेनोभयं पश्यति दर्शनीयं चादर्शनीयं च पाप्मना ह्येतद्विद्धम् ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - அதன்பின் அவர்கள் கண்களை உத்கீத ரூபமாய் உபாசித்தார்கள். அசுரர்கள் அதையும் பாபத்துடன் சேர்த்துவிட்டார்கள். ஆகையால் உலகில் அதனால் பார்க்கத்தகுந்ததும், பார்க்கத்தகாததுமாக இரண்டு விதமான பதார்த்தங்களைப் பார்க்கின்றனர். ஏன்எனில் அது (கண்) பாபத்துடன் கலந்துள்ளதால்.
अथ ह प्राण उच्चिक्रमिषन्स यथा सुहयः पड्वीशशङ्कून्सङ्खिदेदेवमितरान्प्राणान्समखिदत्तं हाभिसमेत्योचुर्भगवन्नेधि त्वं नः श्रेष्ठोऽसि मोत्क्रमीरिति ॥ १२ ॥ மந்த்ரார்த்தம் - அதன்பின் பிராணன் உத்கிரமணம் செய்வதற்கு விரும்பியது. அது எவ்வாறு வீரம் மிகுந்த நல்ல குதிரை தறிகளின் கட்டுக்களில் இருந்து விடுபட்டு ஓடுமோ (அவ்வாறு பிராணன்களுடன்) மற்ற பிராணன்களும் (இந்திரியங்களும்) வெளிப்பெயர்ந்தன. அப்பொழுது அவைகள் ஒன்றாகவே சேர்ந்து பிராணனிடம் கூறின - ஹே பகவானே! தாங்கள் எங்களுடன் இருங்கள். தாங்களே எங்கள் எல்லோரையும்விட ஸ்ரேஷ்டமானவர் தாங்கள் உத்கிரமணம் செய்யாதீர்கள் என்று.
अथ ह प्राणा अहꣳ श्रेयसि व्यूदिरेऽहꣳ श्रेयानस्म्यहꣳ श्रेयानस्मीति ॥ ६ ॥ மந்த்ரார்த்தம் - ஒரு சமயம் பிராணன் அதாவது இந்திரியங்கள் தங்களுக்குள் நான் சிறந்தவன், நானே சிறந்தவன் என்று விவாதம் செய்தன.
अथ ह मन उद्गीथमुपासाञ्चक्रिरे तद्धासुराः पाप्मना विविधुस्तस्मात्तेनोभयं सङ्कल्पते सङ्कल्पनीयं चासङ्कल्पनीयं च पाप्मना ह्येतद्विद्धम् ॥ ६ ॥ மந்த்ரார்த்தம் - அதன்பின் மனதை உத்கீத ரூபத்தால் உபாசனை செய்தனர். அசுரர்கள் அதை (மனதை) பாபத்துடன் சேர்த்தார்கள். இதனால் உலகில் நினைப்பதற்கு தகுந்தது, நினைப்பதற்குத் தகாதது என்று இரண்டு விதமாக நினைக்கப்படுகிறது. ஏன் எனில் பாபத்துடன் அமிழ்த்தப்பட்டுள்ளதால்.
अथ ह य एतानेवं पञ्चाग्नीन्वेद न सह तैरप्याचरन्पाप्मना लिप्यते शुद्धः पूतः पुण्यलोको भवति य एवं वेद य एवं वेद ॥ १० ॥ மந்த்ரார்த்தம் - எவர் இவ்வாறு இந்த பஞ்சாக்னிகளை அறிகிறாரோ அவருடன் சேர்ந்து இருப்பவர்களையும் பாபம் அண்டாது. அஹ்ர் சுத்தமான பவித்திர புண்ய லோகமாகவே ஆகின்றனர். எவர் இவ்வாறு அறிகிறாரோ, எவர் இவ்வாறு அறிகிறாரோ அவர்.
अथ ह य एवायं मुख्यः प्राणस्तमुद्गीथमुपासाञ्चक्रिरे तꣳ हासुरा ऋत्वा विदध्वंसुर्यथाश्मानमाखणमृत्वा विध्वं सेतैवम् ॥ ७ ॥ மந்த்ரார்த்தம் - அதன் பின் எந்த பிரசித்தமான முக்கியப் பிராணனோ அதை உத்கீத ரூபமாய் உபாசனை செய்யவேண்டும். அதன் (பிராணனின்) சமீபத்தை அடைந்து அந்த அசுரகணங்கள் இவ்வாறு குறைபாட்டை அடைந்தவுடன் எவ்வாறு உடைக்க முடியாத கல்பாறையை அடைந்து மண்கட்டி எவ்வாறு சிதறி நஷ்டமாகுமோ அவ்வாறு ஆகும்.
अथ ह वाचमुद्गीथमुपासाञ्चक्रिरे तां हासुराः पाप्मना विविधुस्तस्मात्तयोभयं वदति सत्यं चानृतं च पाप्मना ह्येषा विद्धा ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - அதன்பின் அவர்கள் (தேவர்கள்) வாக்கை உத்கீத ரூபமாய் உபாசனை செய்தார்கள். ஆனால் அசுரர்கள் அதை பாபத்தில் சேர்த்தனர் (தள்ளிவிட்டனர்). இதனால் உலகத்தில் அதனால் சத்தியம், பொய் இரண்டையும் பேசுகிறார்கள். ஏன்எனில் பாபத்தினால் கட்டுப்பட்டவர்களாய் இருக்கின்றனர்.
अथ ह शौनकं च कापेयमभिप्रतारिणं च काक्षसेनिं परिविष्यमाणौ ब्रह्मचारी बिभिक्षे तस्मा उ ह न ददतुः ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - ஒருமுறை கபிகோத்திரத்தில் உதித்த சனகர் மேலும் கக்ஷசேனருடைய புத்திரர் அபிபிரதருடன் போஜனம் செய்வதற்காக அமர்ந்து உணவு பரிமாறப்பட்ட பொழுது ஒரு பிரஹ்மச்சாரி பிக்ஷயைிடும்படிக் கேட்டார். ஆனால் அவர்கள் பிக்ஷை அளிக்கவில்லை.
अथ ह श्रोत्रमुद्गीथमुपासाञ्चक्रिरे तद्धासुराः पाप्मना विविधुस्तस्मात्तेनोभयं शृणोति श्रवणीयं चाश्रवणीयं च पाप्मना ह्येतद्विद्धम् ॥ ५ ॥ மந்த்ரார்த்தம் - அதன்பின் அவர்கள் ஸ்ரோத்திரத்தை உத்கீதரூபமாய் உபாசனை செய்தனர். அசுரர்கள் அதையும் பாபத்துடன் சேர்த்தார்கள். அதனால் உலகில் கேட்பதற்கு தகுதியானதும், கேட்பதற்கு தகுதி அற்றதுமான இரண்டுவித பேச்சுக்களைக் கேட்கின்றனர். ஏன் எனில் பாபத்துடன் அமிழ்த்தப்பட்டுள்ளதால்.
अथ हाग्नयः समूदिरे तप्तो ब्रह्मचारी कुशलं नः पर्यचारीद्धन्तास्मै प्रब्रवामेति तस्मै होचुः प्राणो ब्रह्म कं ब्रह्म खं ब्रह्मेति ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - அதன்பின் அக்னிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இவ்வாறு கூறியது- இந்த பிரஹ்மச்சாரி தீவிரமாக தபஸ் செய்தவன். இவன் நமக்கும் நன்றாக சேவை செய்தான். நல்லது, இவனுக்கு நாம் உபதேசம் செய்வோம் என்று நிச்சயம் செய்து அவனிடம் கூறின - பிராணன் பிரஹ்மம் “कं” (கம் = சுகம்) பிரஹ்மம். “खं” (க்கம் = ஆகாயம்) பிரஹ்மம் என்று.
अथ हेन्द्रोऽप्राप्यैव देवानेतद्भयं ददर्श यथैव खल्वयमस्मिञ्छरीरे साध्वलङ्कृते साध्वलङ्कृतो भवति सुवसने सुवसनः परिष्कृते परिष्कृत एवमेवायमस्मिन्नन्धेऽन्धो भवति स्रामे स्रामः परिवृक्णे परिवृक्णोऽस्यैव शरीरस्य नाशमन्वेष नश्यति नाहमत्र भोग्यं पश्यामीति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஆனால் இந்திரனோ தேவர்களிடம் செல்லாமலேயே இந்த பயத்தைக் கண்டான். எவ்வாறு இந்த சரீரம் நன்றாக அலங்காரம் செய்தபின் நன்றாக அலங்காரம் செய்யப்பட்டதாகிறது. அவ்வாறே அழகான வஸ்திரம் அணிவிக்கப்பட்ட பின் அழகான உடை அணிந்ததாக ஆகிறது. அவ்வாறே ஆடம்பரமாக ஆக்கப்பட்டபின் ஆடம்பரமாக இருக்கிறது. அவ்வாறே அவன் குருட்டுத்தன்மை அடைந்தால் குருடனாகின்றான் ஒற்றைக் கண் அடைந்தால் ஒற்றைக் கண்ணுடையவன் அடைந்தவனாகின்றான். வெட்டப்பட்டால் வெட்டப்பட்டவனாக ஆகின்றான். அவ்வாறே இந்த சரீரம் நாசம் அடைந்தபின் இதுவும் (ஆத்மாவும்) நஷ்டமாகிறது.
अथ हैनं गार्हपत्योऽनुशशास पृथिव्यग्निरन्नमादित्य इति य एष आदित्ये पुरुषो दृश्यते सोऽहमस्मि स एवाहमस्मीति ॥ १ ॥மந்த்ரார்த்தம் - அதன்பின் இந்த கார்ஹபத்ய அக்னி உபதேசம் செய்தது - பிருதிவீ, அக்னி, அன்னம், ஆதித்யன் (ஆகியவை என்னுடைய நான்கு சரீரங்கள்) என்று. ஆதித்யனில் அந்தர்கதமாய் எந்த தேவதைக் காணப்படுகிறதோ அது நான் அதுவே நான் என்று (உபதேசித்தது).
अथ हैनं प्रतिहर्तोपससाद प्रतिहर्तर्या देवता प्रतिहारमन्वायत्ता तां चेदविद्वान्प्रतिहरिष्यसि मूर्धा ते विपतिष्यतीति मा भगवानवोचत्कतमा सा देवतेति ॥ ८ ॥மந்த்ரார்த்தம் - மேலும் பிரதி ஹர்த்தா அவரிடம் வந்து ஶ்ரீமானாகிய நீங்கள் என்ன கூறினீர்கள் எனில் - ஹே ப்ரதிஹர்தா! எந்த தேவதை பிரதிஹர்த்தாவில் அனுகதமாய் உள்ளதோ அதை அறியாமல் பிரதிஹரணம் செய்தால் உன்னுடைய தலை விழுந்துவிடும் என்று கூறினீர்கள். அந்த தேவதை யார்?
अथ हैनं प्रस्तोतोपससाद प्रस्तोतर्या देवता प्रस्तावमन्वायत्ता तां चेदविद्वान्प्रस्तोष्यसि मूर्धा ते विपतिष्यतीति मा भगवानवोचत्कतमा सा देवतेति ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - அதன்பின் அவரிடம் (உஷஸ்தியிடம்) வினயமாக பிரஸ்தோதா வந்து (இவ்வாறு கூறினார்) ஶ்ரீமானாகிய நீங்கள் என்னிடம் கூறியதாவது ஹே ப்ரஸ்தோதா! எந்த தேவதை ப்ரஸ்தோதாவில் அனுகதமாய் உள்ளதோ அதை அறியாமல் நீ பிரஸ்தவனம் செய்தால் உன்னுடைய தலை விழுந்துவிடும் என்று கூறினீர். அந்த தேவதை எது?
अथ हैनं यजमान उवाच भगवन्तं वा अहं विविदिषाणीत्युषस्तिरस्मि चाक्रायण इति होवाच ॥ १ ॥மந்த்ரார்த்தம் - அப்பொழுது அவரிடம் யஜமானன் கூறினார்- நான் ஶ்ரீமானாகிய தங்களை அறிய விரும்புகிறேன். இதற்கு அவர் கூறினார்- நான் சக்ரருடைய புத்திரன் உஷஸ்தி என்று.
अथ हैनं वागुवाच यदहं वसिष्ठोऽस्मि त्वं तद्वसिष्ठोऽसीत्यथ हैनं चक्षुरुवाच यदहं प्रतिष्ठास्मि त्वं तत्प्रतिष्ठासीति ॥ १३ ॥ மந்த்ரார்த்தம் - அதன்பின் வாக் இந்திரியம் கூறியது - நான் வசிஷ்டனாக (செல்வந்தனாக) இருப்பதற்குக் காரணம் நீர் வசிஷ்டனாக இருப்பதால் ஆகும். அவ்வாறே சக்ஷு கூறியது நான் பிரதிஷ்டாவாக இருப்பதற்குக் காரணம் நீர் பிரதிஷ்டாவாக இருப்பதால் ஆகும்.
अथ हैनं श्रोत्रमुवाच यदहं सम्पदस्मि त्वं तत्सम्पदसीत्यथ हैनं मन उवाच यदहमायतनमस्मि त्वं तदायतनमसीति ॥ १४ ॥ மந்த்ரார்த்தம் - அழ்ன்பின் ச்ரோத்திரம் கூறியது நான் சம்பத் உடையவனாய் இருப்பதற்குக் காரணம் நீர் சம்பத் உடையவராய் இருப்பதால் தான். அவ்வாறே மனம் கூறியது-நான் ஆயதனவனாய் (ஆச்ரயமாய்) இருப்பதற்குக் காரணம் நீங்கள் ஆயதனமாய் இருப்பதால் தான் ஆகும்.
अथ हैनमन्वाहार्यपचनोऽनुशशासापो दिशो नक्षत्राणि चन्द्रमा इति य एष चन्द्रमसि पुरुषो दृश्यते सोऽहमस्मि स एवाहमस्मीति ॥ १ ॥மந்த்ரார்த்தம் - அதன்பின் வேறு அன்வாஹார்ய பச்சனம் (தக்ஷிண அக்னி) உபதேசம் செய்தது - ஜலம், திசை, நக்ஷத்திரம், சந்திரமா (ஆகியவை என்னுடைய நான்கு சரீரங்கள்) என்று. சந்திரனில் எந்த தெய்வம் காணப்படுகிறதோ அந்த தெய்வம் நானே, அது நானே.
अथ हैनमाहवनीयोऽनुशशास प्राण आकाशो द्यौर्विद्युदिति य एष विद्युति पुरुषो दृश्यते सोऽहमस्मि स एवाहमस्मीति ॥ १ ॥மந்த்ரார்த்தம் - அதற்குப்பின் ஆஹவனீய அக்னி உபதேசம் செய்தது - பிராணன், ஆகாசம், த்யுலோகம், மின்னல் ஆகியவை (என்னுடைய நான்கு சரீரங்கள்) ஆகும். எவன் ஒருவன் மின்னலில் எந்த புருஷனை (தேவதையை) காண்கின்றானோ (அந்த தேவதையே) அதுவே நான், அதுவே நான்.
अथ हैनमुद्गातोपससादोद्गातर्या देवतोद्गीथमन्वायत्ता तां चेदविद्वानुद्गास्यसि मूर्धा ते विपतिष्यतीति मा भगवानवोचत्कतमा सा देवतेति ॥ ६ ॥மந்த்ரார்த்தம் - அதன்பின் அவர் சமீபத்திற்கு உத்காதா வந்து என்னிடம் ஶ்ரீமானாகிய நீர் கூறினீர். ஹே உத்காதா! உத்கீதத்தில் அனுகதமான தேவதையை அறியாமல் உத்கானம் செய்தால் உன்னுடைய தலை விழுந்து விடும் என்று கூறினீர்கள். அந்த தேவதை யார்?
अथ हैनमृषभोऽभ्युवाद सत्यकाम३ इति भगव इति ह प्रतिशुश्राव प्राप्ताः सोम्य सहस्रꣳ स्मः प्रापय न आचार्यकुलम् ॥ १ ॥மந்த்ரார்த்தம் - அப்பொழுது அவனிடம் காளை “சத்யகாமா” என்று கூறியது. அவன் பகவானே என்று இவ்வாறு பதில் அளித்தார். (காளை கூறியது) ஹே செளம்ய! நாங்கள் ஒரு ஆயிரம் ஆகிவிட்டோம். இப்பொழுது எங்களை ஆசாரிய குலத்திற்கு அழைத்துச்செல் என்று.
अथ होवाच जनं शार्कराक्ष्य कं त्वमात्मानमुपास्स इत्याकाशमेव भगवो राजन्निति होवाचैष वै बहुल आत्मा वैश्वानरो यं त्वमात्मानमुपास्से तस्मात्त्वं बहुलोऽसि प्रजया च धनेन च ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - அதன்பின் ராஜா கூறினார் - ஹே சார்கராக்ஷ்ய! நீர் எந்த ஆத்மாவை உபாசிக்கின்றீர்? அதற்கு அவர் - ஹே பூஜ்ய ராஜாவே! நான் ஆகாசத்தை உபாசிக்கின்றேன். (ராஜா கூறினார்) அது நிச்சயமாக எங்கும் பரந்து (இருக்கும்) விளங்கும் வைச்வாநர ஆத்மாவாகும். அதையே நீங்கள் உபாசனை செய்கின்றீர்கள். ஆகையால் உங்களுக்கு பிரஜைகளும், செல்வமும் பரந்து நிறைந்திருக்கும்.
अथ होवाच बुडिलमाश्वतराश्विं वैयाघ्रपद्य कं त्वमात्मानमुपास्स इत्यप एव भगवो राजन्निति होवाचैष वै रयिरात्मा वैश्वानरो यं त्वमात्मानमुपास्से तस्मात्त्वं रयिमान्पुष्टिमानसि ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - அதன்பின் அச்வதாரா அச்வரின் புத்திரன் புடிலசரிடம் கூறினார் - ஹே வையாக்ரபத்ய! நீர் எந்த ஆத்மாவை உபாசிக்கின்றீர்? அதற்கு அவர் ஹே பூஜ்ய ராஜாவே! நான் ஜலத்தை உபாசனை செய்கின்றேன். (ராஜா கூறினார்-) நீ எதை உபாசனை செய்கின்றாயோ அது நிச்சயமாக “रयिसंज्ञक” (ரயிசம்ஞக - செல்வம் என்னும்) வைச்வாநர ஆத்மாவாகும். இதனால் நீர் “रयिमान्” (ரயிமான்) அதாவது தனவானகாவும், புஷ்ட்டிமானாகவும் ஆவீர். (புஷ்ட்டிமான் - ஆரோக்கியம் உடையவன்).
अथ होवाच सत्ययज्ञं पौलुषिं प्राचीनयोग्य कं त्वमात्मानमुपास्स इत्यादित्यमेव भगवो राजन्निति होवाचैष वै विश्वरूप आत्मा वैश्वानरो यं त्वमात्मानमुपास्से तस्मात्तव बहु विश्वरूपं कुले दृश्यते ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - அதன்பின் அவர் புருஷருடைய புத்திரன் சத்ய யக்ஞனிடம் கூறினார் - ஹே ப்ராசீன யோக்ய! நீர் எந்த ஆத்மாவை உபாசிக்கின்றீர்? அதற்கு அவர் கூறினார் - ஹே பூஜ்ய ராஜாவே! நான் ஆதித்யனை உபாசனை செய்கின்றேன். (ராஜா கூறினார்-) அது நிச்சயமாக விச்வ ரூப வைச்வாநர ஆத்மாவாகும். நீ எந்த ஆத்மாவை உபாசிக்கின்றாயோ அதனால் உன்னுடைய குலத்தில் அநேக விச்வரூப சாதனங்கள் காணப்படுகின்றன.
अथ होवाचेन्द्रद्युम्नं भाल्लवेयं वैयाघ्रम्पद्य कं त्वमात्मानमुपास्स इति वायुमेव भगवो राजन्निति होवाचैष वै पृथग्वर्त्मात्मा वैश्वानरो यं त्वमात्मानमुपास्से तस्मात्त्वां पृथग्बलय आयन्ति पृथग्रथश्रेणयोऽनुयन्ति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - அதன்பின் ராஜா பால்லவேய இந்திரத்யும்னவிடம் இவ்வாறு கூறினார் - ஹே வையாக்ர பத்ய! தாங்கள் எந்த ஆத்மாவை உபாசிக்கின்றீர்கள்? அதற்கு அவர் கூறினார் - ஹே பூஜைக்குரிய ராஜாவே! நான் வாயுவை உபாசிக்கின்றேன். (ராஜா கூறினார்-) நீங்கள் எந்த ஆத்மாவை உபாசிக்கின்றீரோ அது நிச்சயமாக அது “पृथग्वर्त्मा” (ப்ரதக்வர்த்மா - அநேக வித பாதைகள் உடைய) வைச்வானர ஆத்மாவாகும். இதனால் உமக்கு அநேக வழிகளில் இருந்தும் உபகாரம் வரும் மேலும் உங்களை பின்தொடர்ந்து அநேக வித ரத வரிசைகள் வரும்.
अथ होवाचोद्दालकमारुणिं गौतम कं त्वमात्मानमुपास्स इति पृथिवीमेव भगवो राजन्निति होवाचैष वै प्रतिष्ठात्मा वैश्वानरो यं त्वमात्मानमुपास्से तस्मात्त्वं प्रतिष्ठितोऽसि प्रजया च पशुभिश्च ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - அதன்பின் ராஜா அருணியினுடைய புத்திரர் உத்தாலகரிடம் கூறினார் - ஹே கெளதமரே! நீங்கள் எந்த ஆத்மாவை உபாசிக்கின்றீர்கள்? அதற்கு அவர் கூறினார் - ஹே பூஜ்ய ராஜாவே! நான் பிருதிவீயை உபாசனை செய்கின்றேன். (ராஜா கூறினார் -) நீ எதை உபாசனை செய்கின்றாயோ அது நிச்சயமாக பிரதிஷ்ட எனப்படும் வைச்வாநர ஆத்மாவாகும். இதனால் உனக்குப் பிரஜைகள் மேலும் கால்நடைச் செல்வமும் பெற்று அதன் காரணமாக நிலைபெற்று இருப்பீர்கள்.
अथ हꣳसा निशायामतिपेतुस्तद्धैवꣳ हꣳ सोहꣳ समभ्युवाद हो होऽयि भल्लाक्ष भल्लाक्ष जानश्रुतेः पौत्रायणस्य समं दिवा ज्योतिराततं तन्मा प्रसाङ्क्षी स्तत्त्वा मा प्रधाक्षीरिति ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அந்த இரவு வேளையில் இரண்டு ஹம்சங்கள் பறந்து சென்றன. அதில் ஒரு ஹம்சம் மற்றஹம்சத்தினிடம் இவ்வாறு கூறியது - ஹே கூர்மையான பார்வை அற்றவனே! ஹே கூர்மையான பார்வை அற்றவனே! ஜன சுருதியின் பேரனான ஜான ஸ்ருதியின் தேஜஸ் பகல் போன்று (த்விலோகம் போன்று) பரந்து விளங்குகிறது. அதைத் தீண்டாதே (தொடாதே). அது உன்னை சம்ஹாரம் செய்துவிடும்படி செய்துவிடாதே.
अथात आत्मादेश एवात्मैवाधस्तादात्मोपरिष्टादात्मा पश्चादात्मा पुरस्तादात्मा दक्षिणत आत्मोत्तरत आत्मैवेदꣳ सर्वमिति स वा एष एवं पश्यन्नेवं मन्वान एवं विजानन्नात्मरतिरात्मक्रीड आत्ममिथुन आत्मानन्दः स स्वराड्भवति तस्य सर्वेषु लोकेषु कामचारो भवति अथ येऽन्यथातो विदुरन्यराजानस्ते क्षय्यलोका भवन्ति तेषाꣳ सर्वेषु लोकेष्वकामचारो भवति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - இப்பொழுது ஆத்மரூபமாக பூமாவின் ஆதேசம் (உபதேசம்) செய்யப்படுகிறது. ஆத்மாவே கீழே இருக்கிறது, ஆத்மாவே மேலே இருக்கிறது. ஆத்மாவே பின்னால் இருக்கிறது, ஆத்மாவே முன்னால் இருக்கிறது, ஆத்மாவே வலது பக்கம் உள்ளது, ஆத்மாவே இடது பக்கம் உள்ளது. இவை எல்லாம் ஆத்மாவேயாகும். அதை இவ்வாறு பார்க்கின்றவன். இவ்வாறு மனனம் செய்கிறவன், இவ்வாறு விசேஷரூபமாய் அறிகின்றவன் ஆத்மரதி, ஆத்மக்ரீடன், ஆத்ம மிதுனன் (ஆத்மாவில் கலந்து இருப்பவன்)) மேலும் ஆத்மானந்தன் ஆகின்றான். அவன் ஸ்வராட், மேலும் எல்லா லோகங்களிலும் தன் இஷ்டப்படியான கதி ஏற்படும். ஆனால் இதை விபரீதமாக அறிந்தவன் அந்யராட் (அதாவது தன்னைவிட வேறு ராஜவை உடையவன் ஆவான்) மேலும் க்ஷயம் அடையக்கூடிய லோகத்தை அடைவான். அவனுக்கு எல்லா லோகங்களிலும் தன் இச்சைப்படியான கதி உண்டாகாது.
अथातः शौव उद्गीथस्तद्ध बको दाल्भ्यो ग्लावो वा मैत्रेयः स्वाध्यायमुद्वव्राज ॥ १ ॥மந்த்ரார்த்தம் - அதன்பின் இப்பொழுது (அன்னம் அடைவதற்கு அபேக்ஷிக்கப்படும்) செளவ (நாய்களின்) உத்கீதம் ஆரம்பிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் பிரசித்தமாக இருந்த தல்பகரின் புத்திரன் பகன் என்றும் அல்லது மித்திரருடைய புத்திரன் க்லாவன் ஸ்வாத்யாயனம் செய்வதற்காக (கிராமத்திற்கு வெளியே) நீர் நிலைக்குச் சென்றான்.
अथाधिदैवतं य एवासौ तपति तमुद्गीथमुपासीतोद्यन्वा एष प्रजाभ्य उद्गायति । उद्यं स्तमो भयमपहन्त्यपहन्ता ह वै भयस्य तमसो भवति य एवं वेद ॥ १ ॥மந்த்ரார்த்தம் - இதன்பின் அதிதைவத உபாசனை வர்ணிக்கப்படுகிறது. எந்த இது (ஆதித்யன்) தபிக்கிறதோ அதை உத்கீத திருஷ்டியினால் உபாசனை செய்ய வேண்டும். அந்த உத்கீதாவாகி பிரஜைகளுக்காக உத்கானம் செய்கின்றான். உதயமாகி அந்தகாரத்தையும் (இருளையும்) பயத்தையும் நாசம் செய்கிறது. எவர் இவ்வாறு இதை அறிகின்றனரோ (உபாசனை செய்கின்றனரோ) அவர் அந்தகாரத்தையும், பயத்தையும் நாசம் செய்பவர் ஆகிறார்.
अथाध्यात्मं प्राणो वाव संवर्गः स यदा स्वपिति प्राणमेव वागप्येति प्राणं चक्षुः प्राणꣳ श्रोत्रं प्राणं मनः प्राणो ह्येवैतान्सर्वान्संवृङ्क्त इति ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - இப்பொழுது அத்யாத்ம தர்சனம் கூறப்படுகிறது - பிராணனே சம்வர்க்கம். எப்பொழுது புருஷன் உறங்குகின்றானோ அப்பொழுது பிராணன் வாக் இந்திரியம் அடைகிறது. பிராணனை சக்ஷு, பிராணனை ஸ்ரோத்திரம் மேலும் பிராணனை மனம் ஆகியவை அடைகின்றன. பிராணனே இவை எல்லாவற்றையும் தன்னில் லயம் ஆகச்செய்கிறது.
अथाध्यात्मं य एवायं मुख्यः प्राणस्तमुद्गीथमुपासीतोमिति ह्येष स्वरन्नेति ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - இதற்குப்பின் அத்யாத்ம உபாசனை - அந்த எந்த முக்கிய (வாயில் உள்ள) பிராணன் உள்ளதோ அதை உத்கீத ரூபத்தால் உபாசனை செய்யவேண்டும். ஏன் எனில் அது “ஓம்” என்று இவ்வாறு (அனுக்ஞா, (अनुज्ञा) செய்தபடி) உச்சரித்தபடி செல்கிறது.
अथाध्यात्मं वागेवर्क्प्राणः साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयते । वागेव सा प्राणोऽमस्तत्साम ॥ १ ॥மந்த்ரார்த்தம் - இதன்பின் அத்யாத்ம உபாசனை - வாக்கே ரிக். பிராணன் ஸாமம். இவ்வாறு இந்த (வாக்ரூப) ரிக்கில் (பிராணரூப) ஸாமம் நிலைபெற்றிருக்கிறது. ஆகையால் ரிக்கில் நிலைபெற்றிருக்கும் ஸாமத்தை கானம் செய்கின்றனர். வாக் “सा” (ஸா), பிராணன் “अम” (அம) ஆகும். இவ்வாறு இவ்விரண்டும் ஸாமம் ஆகும்.
अथानु किमनुशिष्टोऽवोचथा यो हीमानि न विद्यात्कथꣳ सोऽनुशिष्टो ब्रुवीतेति स हायस्तः पितुरर्धमेयाय तꣳ होवाचाननुशिष्य वाव किल मा भगवान्ब्रवीदनु त्वाशिषमिति ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - இவ்வாறு நீ எதையும் அறியாமல் இருந்துகொண்டு எனக்கு சிக்ஷை (உபதேசம்) அளிக்கப்பட்டது என்று எதற்காகக் கூறினாய்? இந்த விஷயங்கள் உனக்கு தெரியாததால் உனக்கு எவ்வாறு சிக்ஷிக்கப்பட்டதாகும்? என்று கேட்டபின் பயந்து தன்னுடைய பிதாவின் இடத்திற்கு வந்து அவரிடம் கூறினான்-ஶ்ரீமானாகிய நீங்கள் எனக்கு சிக்ஷை அளிக்காமல் உனக்கு நான் சிக்ஷை அளித்துவிட்டேன் என்று எவ்வாறு கூறினீர்கள்.
अथानेनैव ये चैतस्मादर्वाञ्चो लोकास्ताꣳश्चाप्नोति मनुष्यकामाꣳश्च तस्मादु हैवंविदुद्गाता ब्रूयात् ॥ ८ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே இதன்மூலமாய் இதற்கும் கீழே உள்ள லோகங்களினதும், மனித சம்பந்தமான காமனைகளையும் (சுகபோகங்களையும்) அடைகின்றான். ஆகையால் இவ்வாறு அறிந்தவன் உத்காதா எனக் கூறப்படுகின்றான்.
अथावृत्तेषु द्यौर्हिङ्कार आदित्यः प्रस्तावोऽन्तरिक्षमुद्गीथोऽग्निः प्रतिहारः पृथिवी निधनम् ॥ २ ॥மந்த்ரார்த்தம் - இப்பொழுது கீழ் லோகத்தில் செய்யவேண்டிய ஸாமோபாசனை கூறப்படுகிறது - த்யுலோகம் “हिंकारः” (ஹிம்காரம்), ஆதித்யன் “प्रस्तावः” (பிரஸ்தாவம்), அந்தரிக்ஷம் “उद्गीथः” (உத்கீதம்), அக்னி “प्रतिहारः” (பிரதிஹாரம்), பிருதிவீ “निधनम्” (நிதனம்).
अथैतयोः पथोर्न कतरेणचन तानीमानि क्षुद्राण्यसकृतावर्तीनि भूतानि भवन्ति जायस्व म्रियस्वेत्येतत्तृतीयꣳ स्थानं तेनासौ लोको न सम्पूर्यते तस्माज्जुगुप्सेत तदेष श्लोकः ॥ ८ ॥ மந்த்ரார்த்தம் - இந்த மார்க்கங்களில் எதிலும் செல்வது இல்லையோ அவர்கள் கீழ் தரமான ஜன்மங்களை அடைந்து மறுபடியும் மறுபடியும் பிறந்து இறந்து சுழல்கின்றனர். பிறப்பதும் இறப்பதும் அவர்களுடைய மூன்றாவது ஸ்தானமாகும். இந்த காரணத்தால் பரலோகம் அடைவதில்லை. ஆகையால் இந்த சம்சார கதியை வெறுக்கவேண்டும். இந்த மந்திரம் இந்த விஷயத்தைக் குறிப்பிடுகிறது.
अथोताप्याहुः साम नो बतेति यत्साधु भवति साधु बतेत्येव तदाहुरसाम नो बतेति यदसाधु भवत्यसाधु बतेत्येव तदाहुः ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - இதன்பின் இவ்வாறு கூறுகின்றனர் - நன்மையைக் காணும் போது ஆஹா இது மிக அருமையான ஸாமம் என்கின்றனர். எப்பொழுது அசுபம் ஏற்படும்பொழுது இது எனக்கு அஸாமமாக உள்ளது என்கின்றனர்.
अधीहि भगव इति होपससाद सनत्कुमारं नारदस्तꣳ होवाच यद्वेत्थ तेन मोपसीद ततस्य ऊर्ध्वं वक्ष्यामीति स होवाच ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஹே பகவானே! எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று கூறிக்ககொண்டு நாரதர் சனத் குமாரரிடம் வந்தார். அவரிடம் சனத்குமாரர் கூறினார் - உனக்கு எது தெரியுமோ அதைக் கூறு. என் பக்கத்தில் அமர்ந்துகொள். அப்பொழுது நான் உனக்கு அதற்கு மேல் கூறவேண்டியதை கூறுகிறேன் என்ற பொழுது நாரதர் கூறினார்.
अनिरुक्तस्त्रयोदशः स्तोभः सञ्चरो हुङ्कारः ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - எதனை விசேஷ ரூபமாக நிரூபணம் செய்யவில்லையோ மேலும் காரிய ரூபத்தால் சஞ்சாரம் செய்யும் அந்த பதிமூன்றாவது ஸ்தோபம் “हींकारः” (ஹீம்காரம்) ஆகும்.
अन्तरिक्षमेवर्ग्वायुः साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयतेऽन्तरिक्षमेव सा वायुरमस्तत्साम ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அந்தரிக்ஷமே ரிக் மேலும் வாயு சாமம். அந்த இந்த சாமம் இந்த ரிக்கில் அதிஷ்டமாகி இருக்கிறது. ஆகையால் ரிக்கில் அதிஷ்டித்தமான சாமத்தை கானம் செய்யப்படுகிறது. அந்தரிக்ஷமே “सा” (சா) என்றும் வாயு “अम” (அம) ஆகும். இவ்வாறு இவை இரண்டும் (சேர்ந்து) “साम” (சாமம்) ஆகும்.
अन्तरिक्षोदरः कोशो भूमिबुध्नो न जीर्यति दीशो ह्यस्य स्रक्तयो द्यौरस्योत्तरं बिलꣳ स एष कोशो वसुधानस्तस्मिन्विश्वमिदꣳ श्रितम् ॥ १ ॥மந்த்ரார்த்தம் - ஒரு பெட்டி உள்ளது. அதன் அந்தரிக்ஷம் உதரம் (நடுபகுதி)யாகும். பிருதிவீ கீழ் பாகமாகும். அது குறைவது இல்லை. திசைகள் அதன் மூலைகள், (ஆகாசம்) சுவர்க்கம் அதன் மேல் பகுதியில் உள்ள வாயில் அந்த இந்தப் பெட்டி செல்வம் நிறைந்தது. இதில் விச்வம் முழுவதும் நிலைபெற்றுள்ளது.
अन्नं वाव बलाद्भूयस्तस्माद्यद्यपि दश रात्रीर्नाश्नीयाद्यद्यु ह जीवेदथवाद्रष्टाश्रोतामन्ताबोद्धाकर्ताविज्ञाता भवत्यथान्नस्यायै द्रष्टा भवति श्रोता भवति मन्ता भवति बोद्धा भवति कर्ता भवति विज्ञाता भवत्यन्नमुपास्स्वेति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - அன்னமே பலத்தைக்காட்டிலும் மேன்மையானது. பத்து நாட்கள் சாப்பிடாமல் ஜீவித்துக்கொண்டிருந்தாலும் அவன் எதையும் பார்க்கமுடியாது, கேட்கமுடியாது, நினைக்கமுடியாது, புரிந்துகொள்ள முடியாது, செய்ய முடியாது, எதையும் அறிய முடியாதவன் ஆகின்றான். அவன் அன்னத்தை ஏற்றுக்கொண்டபின் பார்க்கிறான், கேட்கிறான், சிந்திக்கிறான், புரிந்துகொள்கிறான், செயல்படுகிறான், அறிபவனாகவும் ஆகின்றான். நீ அன்னத்தை உபாசனை செய்.
अन्नमयं हि सोम्य मन आपोमयः प्राणस्तेजोमयी वागिति भूय एव मा भगवान्विज्ञापयत्विति तथा सोम्येति होवाच ॥ ५ ॥ மந்த்ரார்த்தம் - இவ்வாறு ஹே சோம்ய! மனம் அன்னமயம், பிராணன் ஜலமயம், மேலும் வாக் தேஜோமயம் என்று இவ்வாறு (ஆருணி கூறினார்). (அப்பொழுது ச்வேதகேது கூறினான்-) பகவானே! எனக்கு மேலும் அறியச்செய்யுங்கள் என்று கூறியதற்கு ஆருணி கூறினார் - ஹே சோம்ய! அவ்வாறே என்று.
अन्नमयꣳ हि सोम्य मन आपोमयः प्राणस्तेजोमयी वागिति भूय एव मा भगवान्विज्ञापयत्विति तथा सोम्येति होवाच ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! மனம் அன்னமயம், பிராணன் ஜலமயம் மேலும் வாக் தேஜோமயம். இவ்வாறு கூறியபின் ஸ்வேதகேது கூறினார் - ஹே பகவானே! தாங்கள் எனக்கு மேலும் அறிந்துகொள்ள செய்யுங்கள். அப்பொழுது ஆருணி கூறினார் - ஹே சோம்ய ! சரி என்று.
अन्नमशितं त्रेधा विधीयते तस्य यः स्थविष्ठो धातुस्तत्पुरीषं भवति यो मध्यमस्तन्माꣳसं योऽणिष्ठस्तन्मनः ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - சாப்பிடப்பட்ட அன்னம் மூன்று (விதமாக) பாகங்களாக பிரிகிறது. அதில் ஸ்தூலமான பாகம் மலம் ஆகிறது. மத்யபாகம் மாம்சமாகிறது. மிகவும் சூக்ஷ்மமான பாகம் மனமாகிறது.
अन्नमिति होवाच सर्वाणि ह वा इमानि भूतान्यन्नमेव प्रतिहरमाणानि जीवन्ति सैषा देवता प्रतिहारमन्वायत्ता तां चेदविद्वान्प्रत्यहरिष्यो मूर्धा ते व्यपतिष्यत्तथोक्तस्य मयेति तथोक्तस्य मयेति ॥ ९ ॥மந்த்ரார்த்தம் - இதற்கு அவர் அது (தேவதை) அன்னம் என்று கூறினார். ஏன்எனில் எல்லா ஜீவர்களும் தங்களுக்காக அன்னத்தை உண்டு ஜீவிக்கின்றன. அந்த அன்ன தேவதை பிரதிஹாரத்தில் அனுகதமாகி உள்ளது. நான் கூறியவாறு இந்த தேவதையை அறியாமல் பிரதிஹரணம் செய்தால் உன்னுடைய தலை விழுந்துவிடும்.
अपां का गतिरित्यसौ लोक इति होवाचामुष्य लोकस्य का गतिरिति न स्वर्गं लोकमति नयेदिति होवाच स्वर्गं वयं लोकं सामाभिसंस्थापयामः स्वर्गसꣳ स्तावꣳ हि सामेति ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - ஜலத்தின் கதி என்ன? என்ற கேள்வி கேட்டபொழுது அவர் “அந்த லோகம்” என்று கூறினார். இந்த லோகத்தின் கதி என்ன? (இதற்கு தால்ப்யர் கூறினார்). ஸ்வர்க்கலோகத்தைத் தாண்டி ஸாமத்தை வேறு எதன் ஆச்ரயத்தாலும் எடுத்துச்செல்ல முடியாது. இந்த ஸாமம் ஸ்வர்க்கலோகத்தில் நிலைபெறச் செய்யப்படுகிறது. ஏன் எனில் ஸாமத்தை ஸ்வர்க்க ரூபமாக ஸ்துதி செய்து கானம் செய்யப்படுகிறது அதனால் ஆகும்.
अपां सोम्य पीयमानानां योऽणिमा स ऊर्ध्वः समुदीषति स प्राणो भवति ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! பருகிய ஜலத்தின் சூக்ஷ்ம பாகம் மேல் நோக்கி கிளம்பி அது பிராணன் ஆகிறது.
अपाने तृप्यति वाक्तृप्यति वाचि तृप्यन्त्यामग्निस्तृप्यत्यग्नौ तृप्यति पृथिवी तृप्यति पृथिव्यां तृप्यन्त्यां यत्किञ्च पृथिवी चाग्निश्चाधितिष्ठतस्तत्तृप्यति तस्यानु तृप्तिं तृप्यति प्रजया पशुभिरन्नाद्येन तेजसा ब्रह्मवर्चसेनेति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - அபானன் திருப்தி அடைந்ததும் வாக் இந்திரியம் திருப்தி அடைகிறது. வாக் திருப்தி அடைந்ததும் அக்னி திருப்தி அடைகிறது. அக்னி திருப்தி அடைந்ததும் பிருதிவீ திருப்தி அடைகிறது. அவ்வாறே பிருதிவீ திருப்தி அடைந்ததும் எந்த யார் ஒருவர் பிருதிவீ, அக்னி இவைகளின் ஸ்வாமி பாவத்தால் நிலைபெற்றுள்ளார்களோ அவர்கள் திருப்தி உடையவர்களாக ஆகின்றனர். இவ்வாறு இந்த திருப்தி அடைந்தபின் போக்தா, பிரஜை, பசு (கால்நடை) அன்னாத்யம், தேஜஸ் பிரஹ்ம தேஜஸ் இவைகளின் மூலமாக திருப்தி அடைகின்றனர்.
अभिमन्थति स हिङ्कारो धूमो जायते स प्रस्तावो ज्वलति स उद्गीथोऽङ्गारा भवन्ति स प्रतिहार उपशांयति तन्निधनं संशांयति तन्निधनमेतद्रथन्तरमग्नौ प्रोतम् ॥ १ ॥மந்த்ரார்த்தம் - (அக்னிக்காக) கடைவது “हिंकारः” (ஹிம்காரம்) ஆகும். புகை உண்டாவது “प्रस्तावः” (பிரஸ்தாவமாகும்). கொழுந்துவிட்டு எரிவது “उीथः” (உத்கீதமாகும்). கனல் உண்டாவது “प्रतिहारः” (பிரதிஹாரமாகும்). அவ்வாறே சாந்தம் அடைவது “उीथः” (நிதனம்) ஆகும். மேலும் எவ்வகையிலாவது சாந்தம் அடைவதுவும் “निधनम्” (நிதனமாகும்). இந்த “रथतन्तरसाम” (ரதந்தரஸாமம்) அக்னியில் பிரதிஷ்டித்து இருக்கின்றது.
अभ्रं भूत्वा मेघो भवति मेघो भूत्वा प्रवर्षति त इह व्रीहियवा ओषधिवनस्पतयस्तिलमाषा इति जायन्तेऽतो वै खलु दुर्निष्प्रपतरं यो यो ह्यन्नमत्ति यो रेतः सिञ्चति तद्भूय एव भवति ॥ ६ ॥ மந்த்ரார்த்தம் - மேகமாகி அதன்பின் மழை மேகமாகி மழை பெய்கிறது. அப்பொழுது அந்த ஜீவன்கள் இந்த லோகத்தில் தான்யம், பார்லி, மூலிகைகள், செடி கொடிகள், கடுகு மேலும் உளுந்து முதலியவைகளாக உண்டாகின்றன. இவ்வாறு கீழ்நோக்கி திரும்புதல் நிச்சயமாக மிகக் கஷ்டத்தை அளிப்பதாகும். அந்த அன்னத்தை எவர் எவர் உண்கின்றனறோ அவர் அவர் அந்த ரேதஸ்ஸை அளிப்பவர் போன்ற சந்ததியை அடைகின்றனர்.
अभ्राणि सम्प्लवन्ते स हिङ्कारो मेघो जायते स प्रस्तावो वर्षति स उद्गीथो विद्योतते स्तनयति स प्रतिहार उद्गृह्णाति तन्निधनमेतद्वैरूपं पर्जन्ये प्रोतम् ॥ १ ॥மந்த்ரார்த்தம் - மேகங்கள் ஒன்றாய் சேர்வது “हिंकारः” (ஹிம்காரம்) ஆகும் மேகம் உருவாவது “प्रस्तावः” (பிரஸ்தாவம்). மழை பெய்வது “उद्गीथः” (உத்கீதம்) ஆகும். மின்னல் மின்னுவது இடி இடிப்பது “प्रतिहारः” (பிரதிஹாரம்) ஆகும். அவ்வாறே மழை நிற்பது “निधनम्” (நிதனம்) ஆகும். இந்த வைரூப ஸாமம் மேகத்தில் அனுஸ்யூதமாய் உள்ளது.
अमृतत्वं देवेभ्य आगायानीत्यागायेत्स्वधां पितृभ्य आशां मनुष्येभ्यस्तृणोदकं पशुभ्यः स्वर्गं लोकं यजमानायान्नमात्मन आगायानीत्येतानि मनसा ध्यायन्नप्रमत्तः स्तुवीत ॥ २ ॥மந்த்ரார்த்தம் - நான் தேவதைகளுக்காக அம்ருதத்துவத்தின் ஆகானம் (ஸாதனம்) செய்கிறேன் என்று இவ்வாறு சிந்தனை செய்து கொண்டே ஆகானம் செய்ய வேண்டும். பித்ருக்களுக்காக ஸ்வதா, மனிதர்களுக்கு அவர்களின் விருப்பப்படி கால் நடைகளுக்கு புல், ஜலம் ஆகியவை, யஜமானனுக்கு ஸ்வர்க்க லோகம், எனக்காக அன்னத்தின் ஆகானம் செய்கிறேன் என்று இவ்வாறு இவைகளை மனதால் தியானம் செய்துகொண்டே சோம்பலற்று ஸ்துதி செய்ய வேண்டும்.
अयं वाव लोको हाउकारो वायुर्हाइकारश्चन्द्रमा अथकारः । आत्मेहकारोऽग्निरीकारः ॥ १ ॥மந்த்ரார்த்தம் - இந்த லோகம் “हा उकार” (ஹே உகாரம்), வாயு हा इकार (ஹே இகாரம்), சந்திரன் “अथकार” (அதகார) ஆத்மா “इहकार” (இஹகார) மேலும் அக்னி “ईकार” (ஈகார)
अरिष्टं कोशं प्रपद्येऽमुनामुनामुना प्राणं प्रपद्येऽमुनामुनामुना भूः प्रपद्येऽमुनामुनामुना भुवः प्रपद्येऽमुनामुनामुना स्वः प्रपद्येऽमुनामुनामुना ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - இவனுக்காக, இவனுக்காக நான் இவனுடன் நாசமற்ற கோசத்தை (பெட்டியை சரணம் அடைகிறேன். இவனுக்காக, இவனுக்காக இவனுடன் பிராணனை சரணம் அடைகிறேன். இவனுக்காக இவனுக்காக இவனுடன் “भूः” (பூ:) வை சரணம் அடைகிறேன். இவனுக்காக, இவனுக்காக இவனுடன் “भुवः” (புவ:) வை சரணம் அடைகிறேன். இவனுக்காக, இவனுக்காக இவனுடன் “स्वः” (ஸ்வ:) வை சரணம் அடைகின்றேன். (இவனுக்காக என்பது புத்திரனுக்காக).
अशनापिपासे मे सोम्य विजानीहीति यत्रैतत्पुरुषोऽशिशिषति नामाप एव तदशितं नयन्ते तद्यथा गोनायोऽश्वनायः पुरुषनाय इत्येवं तदप आचक्षतेऽशनायेति तत्रैतच्छुङ्गमुत्पतितꣳ सोम्य विजानीहि नेदममूलं भविष्यतीति ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! என்னிடம் இருந்து பசி தாகத்தைப் பற்றி அறிந்துகொள். எப்பொழுது இந்த புருஷன் சாப்பிட விரும்புகிறேன் என்று கூறுகிறானோ அப்பொழுது அவன் முன்பு அருந்திய உணவை (அன்னத்தை) ஜலமானது இழுத்துச் சென்றுவிட்டது என்பதாகும். எவ்வாறு உலகில் பசுக்களின் தலைவன், குதிரைகளின் தலைவன், அவ்வாறே மனிதர்களின் தலைவன் என்று கூறுகிறோமோ அவ்வாறே ஜலத்தை உண்ட அன்னத்தின் தலைவன் (अशनाय) என்று கூறி அழைக்கின்றோம். ஹே சோம்ய! இந்த ஜலத்திலிருந்து இந்த சரீரரூப முளை உண்டாகிறது என்பதை அறிவாயாக. ஏன் எனில் இது காரணம் அற்றதாக இருக்கமுடியாது.
अशरीरो वायुरभ्रं विद्युत्स्तनयित्नुरशरीराण्येतानि तद्यथैतान्यमुष्मादाकाशात्समुत्थाय परं ज्योतिरुपसम्पद्य स्वेन रूपेणाभिनिष्पद्यन्ते ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - வாயு சரீரமற்றது. மேகம், மின்னல் மேலும் இடி இவை எல்லாம் சரீரமற்றது. இவை எல்லாம் இந்த ஆகாசத்திலிருந்து எழுந்து சூரியனில் பரமஜ்யோதியை அடைந்து தங்கள் ஸ்வரூபத்தை அடைகின்றன.
असौ वा आदित्यो देवमधु तस्य द्यौरेव तिरश्चीनवꣳशोऽन्तरिक्षमपूपो मरीचयः पुत्राः ॥ १ ॥மந்த்ரார்த்தம் - “ओं” (ஓம்) இந்த ஆதித்யன் நிச்சயமாக தேவதைகளின் மது. த்யுலோகமே தேன் கூடு. (தேன்கூடு) தொங்குகின்ற குறுக்கு மூங்கில் கம்பு. அந்தரிக்ஷம் சூரிய கதிர்கள் அதில் இருக்கும் முட்டைகள்.
असौ वाव लोको गौतमाग्निस्तस्यादित्य एव समिद्रश्मयो धूमोऽहरर्चिश्चन्द्रमा अङ्गारा नक्षत्राणि विस्फुलिङ्गाः ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஹே கெளதம! த்யுலோகம் அக்னி என்பது பிரசித்தம். அதற்கு ஆதித்யன் சமித். கிரணங்கள் தூமம் (புகை), தினம், ஜ்வாலை, சந்திரன் அங்காரம் (தணல்), நக்ஷத்திரம் விஸ்புலிங்கங்கள் (தீப்பொறிகள்).
अस्य यदेकां शाखां जीवो जहात्यथ सा शुष्यति द्वितीयां जहात्यथ सा शुष्यति तृतीयां जहात्यथ सा शुष्यति सर्वं जहाति सर्वः शुष्यति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - இந்த விருக்ஷத்தின் (மரத்தின்) கிளையின் ஜீவன் நீங்கினால் அந்த கிளை உலர்ந்துவிடும். அவ்வாறே இரண்டாவது கிளையின் ஜீவன் நீங்கினால் அந்த கிளை உலர்ந்துவிடும். அவ்வாறே மூன்றாவது கிளையும் ஜீவன் (உயிர்) நீங்கினால் அந்த கிளையும் உலர்ந்துவிடும். இவ்வாறு மரம் முழுவதிலும் ஜீவன் நீங்கிவிட்டால் மரம் உலர்ந்துவிடும்.
अस्य लोकस्य का गतिरित्याकाश इति होवाच सर्वाणि ह वा इमानि भूतान्याकाशादेव समुत्पद्यन्त आकाशं प्रत्यस्तं यन्त्याकाशो ह्येवैभ्यो ज्यायानाकाशः परायणम् ॥ १ ॥மந்த்ரார்த்தம் - இந்த லோகத்தின் கதி என்ன? இதற்கு பிரவாஹணர் கூறினார் - ஆகாசம் என்று. ஏன் எனில் இந்த எல்லா பூதங்களும் ஆகாயத்தில் இருந்துதான் உண்டாகின்றன. ஆகாசத்திலேயே லயமாகின்றன. மேலும் ஆகாசமே இவைகள் எல்லாவற்றையும்விட பெரியது. ஆகையைால் ஆகாசமே இவைகளின் ஆஸ்ரயம். (கதி)
अस्य सोम्य महतो वृक्षस्य यो मूलेऽभ्याहन्याज्जीवन्स्रवेद्यो मध्येऽभ्याहन्याज्जीवन्स्रवेद्योऽग्रेऽभ्याहन्याज्जीवन्स्रवेत्स एष जीवेनात्मनानुप्रभूतः पेपीयमानो मोदमानस्तिष्टति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! இந்த ஒரு பெரிய மரத்தின் அடிபாகத்தை வெட்டினால் அதில் ரசம் வழியும். ஆனால் அது ஜீவிக்கும். மத்ய பாகத்தை வெட்டினால் அதிலும் ரசம் வழிந்தாலும் ஜீவித்திருக்கும். அவ்வாறே அதன் மேல் பாகத்தை வெட்டினாலும் ரசம் வழியும். ஆனாலும் அது உயிருடன் இருக்கும். அந்த மரம் ஜீவன். ஆத்மாவினால் ஓதப்ரோதமாக (ஊடுருவி) உள்ளது. அது தண்ணீரை பருகி ஆனந்தமுடன் இருக்கிறது.
आकाशो वाव तेजसो भूयानाकाशे वै सूर्याचन्द्रमसावुभौ विद्युन्नक्षत्राण्यग्निराकाशेनाह्वयत्याकाशेन शृणोत्याकाशेन प्रतिशृणोत्याकाशे रमत आकाशे न रमत आकाशे जायत आकाशमभिजायत आकाशमुपास्स्वेति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஆகாசமே தேஜஸ்ஸைவிட சிறந்தது. ஆகாசத்தில்தான் சூரியன், சந்திரன் ஆகிய இரண்டும், அவ்வாறே மின்னல், நக்ஷத்திரம், அக்னியும் நிலைபெற்று இருக்கின்றன. ஆகாசத்தின் வாயிலாக ஒருவர் மற்றொருவரை அழைக்கின்றான், ஆகாசத்தினால் கேட்க்கின்றான். ஆகாசத்தினால் பதில் அளிக்கின்றான். ஆகாசத்தில் ரமிக்கின்றான். ஆகாசத்தில் ரமிப்பது இல்லை. ஆகாசத்தில் தான் (எல்லா பதார்த்தங்களும்) உத்பத்தி ஆகின்றன. ஆகாசத்தை நோக்கியே (எல்லா ஜீவன்களும் முளைகளும்) வளர்கின்றன. நீ ஆகாசத்தை உபாசனை செய்.
आकाशो वै नाम नामरूपयोर्निर्वहिता ते यदन्तरा तद्ब्रह्म तदमृतꣳ स आत्मा प्रजापतेः सभां वेश्म प्रपद्ये यशोऽहं भवामि ब्राह्मणानां यशो राज्ञां यशो विशां यशोऽहमनुप्रापत्सि स हाहं यशसां यशः श्येतमदत्कमदत्कꣳ श्येतं लिन्दु माभिगां लिन्दु माभिगाम् ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஆகாசம் என்ற நாமத்தால் பிரசித்தமான ஆத்மா நாம ரூபத்தை நிர்வாஹம் செய்கிறது. இந்த நாமரூபங்கள் எதில் அந்தர்கதமாக உள்ளதோ (ஊடுருவி உள்ளதோ) அது பிரஹ்மம். அது அம்ருதம், அதுவே ஆத்மா. நான் பிரஜாபதியின் சபாகிரகத்தை அடைந்து இருக்கிறேன். நான் யசஸ் எனப்படும் ஆத்மா ஆவேன். நான் பிராஹ்மணர்களின் யசஸ் நான் க்ஷத்திரியர்களின் யசஷ், வைஸ்யர்களின் யசஷ்ஷை (யசஸ்ஸ்வரூப ஆத்மாவை) அடையவிரும்புகின்றேன். நான் யசஸ்களுக்கெல்லாம் யசஷ். (யசஷ் = பெருமை). நான் சிகப்பு, வெள்ளை நீர் நிறைந்த ஸ்திரீயின் கருப்பையில் புகாமல் இருப்பேனாக. நான் எப்பொழுதும் பசியுடன் சாப்பிட வேண்டும் என்ற நிலையில்லாமல் இருப்பேனாக.
आगाता ह वै कामानां भवति य एतदेवं विद्वानक्षरमुद्गीथमुपास्त इत्यध्यात्मम् ॥ १४ ॥மந்த்ரார்த்தம் - இதனால் இவ்வாறு அறிந்த வித்வான் இந்த உத்கீதம் எனப்படும் அக்ஷரத்தை (ஓம்காரத்தை) இவ்வாறு உபாசனை செய்கிறானோ அவன் காமனைகளை அடையச் செய்பவனாகின்றான். இது அத்யாத்ம உபாசனை.
आत्मानमन्तत उपसृत्य स्तुवीत कामं ध्यायन्नप्रमत्तोऽभ्याशो ह यदस्मै स कामः समृध्येत यत्कामः स्तुवीतेति यत्कामः स्तुवीतेति ॥ १२ ॥மந்த்ரார்த்தம் - கடைசியில் தன்னுடைய ஸ்வரூபத்தை சிந்திக்க வேண்டும். தன்னுடைய காமனைகளை சிந்திக்க வேண்டும். (தளராமல்) சோம்பல் அற்று ஸ்துதி செய்யவேண்டும். எந்த பலத்தின் இச்சை உடையவனாகி அந்த ஸ்துதியை செய்யவேண்டும். அந்த சமயத்தில் அந்த பலம் பூர்த்தியாக அடையப்படுகிறது.
आदित्प्रत्नस्य रेतसः । उद्वयं तमसस्परि ज्योतिः पश्यन्त उत्तरꣳस्वः पश्यन्ति उत्तरं देवं देवत्रा सूर्यमगन्म ज्योतिरुत्तममिति ज्योतिरुत्तममिति ॥ ७ ॥மந்த்ரார்த்தம் - புராதன காரணமான ரேதஸ்ஸிலிருந்து (பீஜத்திலிருந்து) (விதையிலிருந்து) பிரகாசம் காணப்படுகிறது. அது எங்கும் வியாபித்திருக்கும் பிரகாசமாகும். எந்த பரபிரஹ்மத்தில் இருக்கும் பரமதேஜஸ் பிரகாசிக்கின்றதோ அது அதனுடையதாகும். அக்ஞான ரூப அந்தகாரத்தை (இருளை) தாண்டி உத்கிருஷ்டமான ஜ்யோதி காணப்படுகிறது. அவ்வாறே ஆத்மாவின் உத்கிருஷ்ட தேஜஸ்ஸை பார்த்துக்கொண்டே நாம் எல்லா தேவதைகளில் பிரகாசிக்கும் எல்லாவற்றையும்விட உத்தம ஜ்யோதிஸ் ஸ்வரூப சூரியனை அடைகிறோம்.
आदित्य इति होवाच सर्वाणि ह वा इमानि भूतान्यादित्यमुच्चैः सन्तं गायन्ति सैषा देवतोद्गीथमन्वायत्ता तां चेतविद्वानुदगास्यो मूर्धा ते व्यपतिष्यत्तथोक्तस्य मयेति ॥ ७ ॥மந்த்ரார்த்தம் - உஷஸ்தி அது ஆதித்யன் என்று இவ்வாறு கூறினார். ஏன்எனில் எல்லா பிராணிகளும் மேல்நோக்கி எழுந்து ஆதித்யனை கானம் செய்கின்றன. அந்த ஆதித்ய தேவதை உத்கீதத்தில் அனுகதமாய் உள்ளது. ஆகையால் நான் கூறியவாறு இதை அறியாமல் உத்கானம் செய்தால் உன் தலை விழுந்துவிடும் என்று கூறினார்.
आदित्य ऊकारो निहव एकारो विश्वेदेवा औहोयिकारः प्रजापतिर्हिङ्कारः प्राणः स्वरोऽन्नं या वाग्विराट् ॥ २ ॥மந்த்ரார்த்தம் - ஆதித்யன் “ऊकारः” (ஊகாரம்). வரவேற்பு துதி “एकारः” (ஏகாரம்), விச்வதேவன் “औहोयिकारः” (ஒளஹோயிகார:) பிரஜாபதி “हींकारः” (ஹீம்கார:), அவ்வாறே பிராணன் “स्वरः” ஸ்வரம், அன்னம் “या” (யா), விராட் “वाक्” (வாக்) ஆகும்.
आदित्यो ब्रह्मेत्यादेशस्तस्योपव्याख्यानमसदेवेदमग्र आसीत् । तत्सदासीत्तत्समभवत्तदाण्डं निरवर्तत तत्संवत्सरस्य मात्रामशयत तन्निरभिद्यत ते आण्डकपाले रजतं च सुवर्णं चाभवताम् ॥ १ ॥மந்த்ரார்த்தம் - ஆதித்யன் பிரஹ்மம் என்பது உபதேசம். அதன் வியாக்கியானம் செய்யப்படுகிறது. அது முதலில் அசத்தாக இருந்தது (காரணரூபமாக இருந்தது) அது சத் ஆயிற்று (காரிய ரூபமாயிற்று). அது முளைவிட ஆரம்பித்தது. அது ஒரு அண்டமாக பரிணாமமாயிற்று. அது ஒருவருடம் வரை இவ்வாறு இருந்தது. அதன் பின் அது இரண்டாக பிளந்து ரஜத (வெள்ளி) ரூபமாகவும் ஸ்வர்ணரூபமாவும் ஆயிற்று.
आदिरिति द्व्यक्षरं प्रतिहार इति चतुरक्षरं तत इहैकं तत्समम् ॥ २ ॥மந்த்ரார்த்தம் - “आदि” (ஆதி) என்பது இரண்டு அக்ஷரங்களுடைய பெயர் ஆகும். மேலும் “प्रतिहारः” (பிரதிஹாரம்) என்பது நான்கு அக்ஷரங்களுடைய நாமம் ஆகும். இதிலிருந்து ஒரு அக்ஷரத்தை எடுத்து ஆதி நாமாவில் சேர்த்தால் அவை இரண்டும் ஸமமான அக்ஷரங்கள் உடையதாகும்.
आपः पीतास्त्रेधा विधीयन्ते तासां यः स्थविष्ठो धातुस्तन्मूत्रं भवति यो मध्यमस्तल्लोहितं योऽणिष्ठः स प्राणः ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - பருகிய ஜலம் மூன்று பாகங்களாக பிரிகிறது. அதில் எந்த ஸ்தூல பாகம் உள்ளதோ அது சிறுநீர் ஆகிறது. மத்யபாகமானது எதுவோ அது ரத்தமாகிறது. எந்த மிக சூக்ஷ்மமான பாகமோ அது பிராணனாகிறது.
आपयिता ह वै कामानां भवति य एतदेवं विद्वानक्षरमुद्गीथमुपास्ते ॥ ७ ॥ மந்த்ரார்த்தம் - எந்த வித்வான் (உபாசகன்) இவ்வாறு உள்ள இந்த உத்கீத ரூப அக்ஷரத்தை உபாசனை செய்கின்றானோ அவன் எல்லா காமனைகளையும் அடையச் செய்பவனாய் ஆகின்றான்.
आपो वावान्नाद्भूयस्तस्माद्यदा सुवृष्टिर्न भवति व्याधीयन्ते प्राणा अन्नं क नीयो भविष्यतीत्यथ यदा सुवृष्टिर्भवत्यानन्दिनः प्राणा भवन्त्यन्नं बहु भविष्यतीत्याप एवेमा मूर्ता येयं पृथिवी यदन्तरिक्षं यद्द्यौर्यत्पर्वता यद्देवमनुष्या यत्पशवश्च वयाꣳसि च तृणवनस्पतयः श्वापदान्याकीटपतङ्गपिपीलकमाप एवेमा मूर्ता अप उपास्स्वेति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஜலமே அன்னத்தைவிட சிறந்தது. இதனால் நல்ல மழை பெய்யவில்லையெனில் அன்னம் சரியாகக்கிடைக்காது. அதாவது அன்னம் குறைந்துவிடும். அதனால் ஜீவர்கள் துக்கம் அடைவார்கள். எப்பொழுது நல்ல மழை உண்டாகிறதோ அப்பொழது அன்னம் அதிகமாக உண்டாகும் என்று ஜீவர்கள் சந்தோஷம் அடைவார்கள். இந்த பிருதீவி, அந்தரிக்ஷம், த்யுலோகம், பர்வதம், தேவமனிதர்கள், பசு, பக்ஷி அவ்வாறே புல், மரம், செடிகொடிகள், காட்டு மிருகங்கள், புழு, வண்டு, எறும்பு ஆகிய எல்லா உருவங்களும் ஜலமேயாகும். ஆகையால் நீ ஜலத்தை உபாசனைசெய்.
आप्नोति हादित्यस्य जयं परो हास्यादित्यजयाज्जयो भवति य एतदेवं विद्वानात्मसंमितमतिमृत्यु सप्तविधꣳ सामोपास्ते सामोपास्ते ॥ ६ ॥மந்த்ரார்த்தம் - (அந்த புருஷன்) ஆதித்திய லோகத்தின் ஜயத்தை அடைகின்றான். அவ்வாறே அந்த ஆதித்யத்தை அடைவதைக்காட்டிலும் மிகவும் உயர்ந்த ஜயத்தை அடைகின்றான். இந்த உபாஸனையை இவ்வாறு அறிந்தவனாகி ஸம எண்ணிக்கை உள்ளதும் மிருத்யுவைக் கடந்ததுமான ஏழுவித ஸாமத்தை உபாஸனை செய்கின்றான். ஸாமத்தை உபாஸனை செய்கின்றான்.
आशा वाव स्मराद्भूयस्याशेद्धो वै स्मरो मन्त्रानधीते कर्माणि कुरुते पुत्राꣳश्च पशूꣳश्चेच्छत इमं च लोकममुं चेच्छत आशामुपास्स्वेति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஆசையே ஸ்மரணத்தைக் காட்டிலும் மேலானது. ஆசையினால் தூண்டப்பட்டு ஸ்மரணத்தால் (நினைவால்) மந்திரங்களை ஓதுகிறான் கர்மங்களை செய்கின்றான், புத்திரனிடத்திலும், பசுக்களிடத்திலும் ஆசைப்படுகிறான். அவ்வாறே இந்த லோகம், பரலோகங்களில் ஆசை கொள்கிறான். நீ ஆசையை உபாசனை செய்வாயாக.
इति तु पञ्चम्यामाहुतावापः पुरुषवचसो भवन्तीति स उल्बावृतो गर्भो दश वा नव वा मासानन्तः शयित्वा यावद्वाथ जायते ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - இவ்வாறு ஐந்தாவது ஆஹுதி அளித்தபின் “आपः” (ஜலம்) “புருஷ” சப்த வாசகமாகிறது. அது தோல் பையினால் சூழப்பட்டு கர்பத்தில் பத்து மாதங்கள் அல்லது ஒன்பது மாதங்கள் வரை உள்ளேயே சயனித்து அதன்பின் பிறக்கின்றான்.
इदं वाव तज्ज्येष्ठाय पुत्राय पिता ब्रह्म प्रब्रूयात्प्रणाय्याय वान्तेवासिने ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - ஆகையால் இந்த பிரஹ்ம விக்ஞானத்தை பிதாவானாவர் தன்னுடைய ஜேஷ்ட்ட புத்திரனுக்கு அல்லது நல்ல யோக்யம் உள்ள சிஷ்யனுக்கு உபதேசிக்க வேண்டும்.
इदमिति ह प्रतिजज्ञे लोकान्वाव किल सोम्य तेऽवोचन्नहं तु ते तद्वक्ष्यामि यथा पुष्करपलाश आपो न श्लिष्यन्त एवमेवंविदि पापं कर्म न श्लिष्यत इति ब्रवीतु मे भगवानिति तस्मै होवाच ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - அப்பொழுது அவன் (உபகோசலன்) இதை கூறின என்று இவ்வாறு பதில் அளித்தான். (இதற்கு ஆச்சாரியர் கூறினார் -) ஹே செளம்ய! அவைகள் உனக்கு லோகங்களை மட்டுமே உபதேசம் செய்தன. நான் இப்பொழுது இதைக் கூறப்போகிறேன். எதை அறிந்தால் தாமரை இலை தண்ணீர் போல் பாபகர்மங்களின் சம்பந்தம் ஏற்படாதோ அதை இப்பொழுது உனக்குக் கூறபோகிறேன். அவன் கூறினான் - பகவானே எனக்குக் கூறுங்கள் என்று. அப்பொழுது ஆச்சாரியர் அவனிடம் கூறினார்.
इमाः सोम्य नद्यः पुरस्तात्प्राच्यः स्यन्दन्ते पश्चात्प्रतीच्यस्ताः समुद्रात्समुद्रमेवापियन्ति स समुद्र एव भवति ता यथा तत्र न विदुरियमहमस्मीयमहमस्मीति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! கிழக்கே பாயும் நதிகள் கிழக்கு நோக்கி பாய்கின்றன. அவ்வாறே மேற்கே பாயும் நதிகள் மேற்கு நோக்கி பாய்கின்றன. அவைகள் சமுத்திரத்தை அடைந்து சமுத்திரமாகவே ஆகின்றன. அவைகள் சமுத்திரத்தில் கலந்தபின் அவை எல்லாம் நான் இந்த நதி, நான் அந்த நதி என்று அறிந்து கொள்வதில்லை.
इयमेवर्गग्निः साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयत इयमेव साग्निरमस्तत्साम ॥ १ ॥மந்த்ரார்த்தம் - இதுவே (பிருதிவியே) ரிக், அக்னி சாமம், அந்த இந்த (அக்னி என்னும்) சாமம் இந்த ரிக்கில் நிலைபெற்றுள்ளது. ஆகையால் ரிக்கில் நிலைபெற்றுள்ள சாமத்தை கானம் செய்கிறார்கள். இந்த பிருதிவீயே “सा” (சா) மேலும் அக்னி “सा” ஆகும். இவ்வாறு அவை இரண்டும் சேர்ந்து “साम” (சாம) ஆகிறது.
उदशराव आत्मानमवेक्ष्य यदात्मनो न विजानीथस्तन्मे प्रब्रूतमिति तौ होदशरावेऽवेक्षाञ्चक्राते तौ ह प्रजापतिरुवाच किं पश्यथ इति तौ होचतुः सर्वमेवेदमावां भगव आत्मानं पश्याव आ लोमभ्य आ नखेभ्यः प्रतिरूपमिति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஜலம் நிறைந்த பாத்திரத்தில் நீங்கள் இருவரும் தங்களைப் பார்த்து அந்த ஆத்ம விஷயத்தில் உங்களுக்கு சரியாக அறிய முடியவில்லையெனில் என்னிடம் கூறுங்கள் என்று கூற அவர்கள் இருவரும் ஜலம் நிறைந்த பாத்திரத்தில் பார்த்தார்கள். அவர்களிடம் பிரஜாபதி கேட்டார் - நீங்கள் என்ன பார்த்தீர்கள் என்று. அவர்கள் கூறினார் - ஹே பகவானே! நாங்கள் எங்களுடைய இந்த முடியிலிருந்து நகம் வரையில் உள்ள இந்த ஆத்மாவை (சரீரத்தை) முழுமையாகப் பார்த்தோம் என்று கூறினார்.
उदाने तृप्यति त्वक्तृप्यति त्वचि तृप्यन्त्यां वायुस्तृप्यति वायौ तृप्यत्याकाशस्तृप्यत्याकाशे तृप्यति यत्किञ्च वायुश्चाकाशश्चाधितिष्ठतस्तत्तृप्यति तस्यानु तृप्तिं प्रजया पशुभिरन्नाद्येन तेजसा ब्रह्मवर्चसेन ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - உதானன் திருப்தி அடைந்தபின் துவக் இந்திரியம் திருப்தி அடைகிறது. துவக் திருப்தி அடைந்ததும் வாயு திருப்தி அடைகிறது. வாயு திருப்தி ஆனதும் ஆகாசம் திருப்தி ஆகிறது. அவ்வாறே ஆகாசம் திருப்தியானவுடன் எந்த ஒன்று வாயு மேலும் ஆகாசத்தில் (ஸ்வாமி பாவத்தால்) நிலைத்திருக்கிறதோ அது திருப்தி அடைகிறது. மேலும் அது திருப்தி அடைந்தபின் தானே போக்தா, பிரஜா, பசு (கால்நடை) அன்னாத்யம், தேஜஸ், பிரஹ்மதேஜஸ் இவைகளால் திருப்தி அடைகிறது.
उद्गीथ इति त्र्यक्षरमुपद्रव इति चतुरक्षरं त्रिभिस्त्रिभिः समं भवत्यक्षरमतिशिष्यते त्र्यक्षरं तत्समम् ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - “उद्गीथः” (உத்கீதம்) மூன்று அக்ஷரங்களும், “उपद्रवः” (உபத்ரவம்) நான்கு அக்ஷரங்களும் உடைய நாமங்கள் ஆகும். அவை இரண்டும் மூன்று மூன்று அக்ஷரங்களுடன் ஸமானமாக உள்ளது. ஆனால் ஒரு அக்ஷரம் மீதம் உள்ளது. ஆகையால் “अक्षर” (அக்ஷரம்) மூன்று எழுத்துள்ளதால் அந்த ஒன்றும் அவைகளுக்கு ஸமானமாகிறது.
उद्दालको हारुणिः श्वेतकेतुं पुत्रमुवाच स्वप्नान्तं मे सोम्य विजानीहीति यत्रैतत्पुरुषः स्वपिति नाम सता सोम्य तदा सम्पन्नो भवति स्वमपीतो भवति तस्मादेनꣳ स्वपितीत्याचक्षते स्वꣳ ह्यपीतो भवति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - உத்தாலகர் எனப்படும் ஆருணி தன்னுடைய புத்திரன் ஸ்வேதகேதுவிடம் கூறினார் - ஹே சோம்ய! நீ என்னிடம் இருந்து ஸ்வப்னாந்தத்தை (சுஷீப்த்தி அவஸ்தையை) விசேஷமாக அறிந்துகொள். எந்த அவஸ்தையில் புருஷன் தூங்குகின்றான் என்று எப்பொழுது கூறப்படுகிறதோ அப்பொழுது ஹே சோம்ய! அது சத்துடன் கலக்கின்றான். அதாவது தன் ஸ்வரூபத்தை அடைகின்றான். அதனால் அவனை स्वपिति्ा (ஸ்வபிதி = தூங்குகின்றான்) என்கிறோம். ஏன்எனில் அந்த சமயத்தில் அந்த “स्व” (ஸ்வ) தன்னை அடைகின்றது என்பது பொருள்.
उद्यन्हिङ्कार उदितः प्रस्तावो मध्यन्दिन उद्गीथोऽपराह्णः प्रतिहारोऽस्तं यन्निधनमेतद्बृहदादित्ये प्रोतम् ॥ १ ॥மந்த்ரார்த்தம் - உதிக்கின்ற சூரியன் “हिंकारः” (ஹிம்காரம்). உதித்த சூரியன் “प्रस्तावः” (பிரஸ்தாவம்) ஆகும். மத்தியான ஸமயத்தில் சூரியன் “उद्गीथः” (உத்கீதம்) ஆகும். மத்தியானத்திற்கு பிந்திய காலம் “प्रतिहारः” (பிரதிஹாரம்) ஆகும். மேலும் அஸ்தமிக்கும் (மறையும்) நேரம் சூரியன் “निधनम्” (நிதனம்) ஆகும். இந்த பிருஹத் ஸாமம் சூரியனில் ப்ரோதமாகியுள்ளது.
उपकोसलो ह वै कामलायनः सत्यकामे जाबाले ब्रह्मचर्यमुवास तस्य ह द्वादश वर्षाण्यग्नीन्परिचचार स ह स्मान्यानन्तेवासिनः समावर्तयꣳस्तꣳ ह स्मैव न समावर्तयति ॥ १ ॥மந்த்ரார்த்தம் - உபகோசலன் என்ற பிரசித்தமான பெயருடைய கமலாயரின் புத்திரன் சத்யகாம ஜபாலரிடம் பிரஹ்மச்சர்யத்தை கிரஹித்துக்கொண்டு அங்கு வசித்து வந்தார். அவர் பன்னிரண்டு வருடங்கள் அந்த ஆச்சாரியருடைய அக்னிகளை போஷித்து சேவை செய்துவந்தார். ஆனால் ஆச்சாரியர் மற்ற பிரஹ்மசாரியர்களுக்கு வித்யாபூர்த்தி சம்ஸ்காரம் செய்தார். ஆனால் இவருக்கு மட்டும் (உபகோசலனுக்கு மட்டும்) செய்யவில்லை.
उपमन्त्रयते स हिङ्कारो ज्ञपयते स प्रस्तावः स्त्रिया सह शेते स उद्गीथः प्रति स्त्रीं सह शेते स प्रतिहारः कालं गच्छति तन्निधनं पारं गच्छति तन्निधनमेतद्वामदेव्यं मिथुने प्रोतम् ॥ १ ॥மந்த்ரார்த்தம் - சந்திப்பது முதலாவதாக இருப்பதால் “हिंकारः” (ஹிம்காரம்). சந்தோஷப்படுத்துவதால் “प्रस्तावः” (பிரஸ்தாவம்). ச்ரேஷ்டமாய் இருப்பதால் சேர்ந்து சயனித்தல் “उीथः” (உத்கீதமாகும்). ஒவ்வொரு ஸ்திரீயை சயனிப்பது ஸ்திரீயின் அபிமுக பாவம் “प्रतिहारः” (பிரிதிஹாரம்). மிதுனத்தின் காலம் முடிவது “निधनम्” (நிதனம்) இந்த வாமதேவ்யமான மிதுனம் வாயு, ஜல ஸம்பந்தத்தால் பிரதிஷ்டிதமாய் உள்ளது.
ऋग्वेदं भगवोऽध्येमि यजुर्वेदꣳ सामवेदमाथर्वणं चतुर्थमितिहासपुराणं पञ्चमं वेदानां वेदं पित्र्यꣳ राशिं दैवं निधिं वाकोवाक्यमेकायनं देवविद्यां ब्रह्मविद्यां भूतविद्यां क्षत्त्रविद्यां नक्षत्रविद्याꣳ सर्पदेवजनविद्यामेतद्भगवोऽध्येमि ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - ஹே பகவான்! நான் ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம், நான்காவதான அதர்வவேதம் (இதைத்தவிர) இதிஹாசம், புராண ரூபமான ஐந்தாவது வேதம், வேதங்களின் வேதம் (வ்யாகரணம்), சிரார்த்த கல்பம், கணிதம், உத்பாதஞானம், நிதிசாஸ்திரம், தர்க்க சாஸ்திரம் நீதி சாஸ்திரம் நிருக்தம் (சொல் இலக்கணம்) வேத அங்கங்கள் பஞ்சபூதங்கள் பற்றிய வித்யா, போரிடும் வித்தை, ஜோதிஷம் சர்ப்பவித்யா (கருடமந்திரம்) மேலும் தேவ ஜனங்களின் வித்யை, நடனம், சங்கீதம் முதலியவைகள் எல்லாவற்றையும் ஹே பகவானே அறிந்திருக்கின்றேன்.
ऋतुषु पञ्चविधꣳ सामोपासीत वसन्तो हिङ्कारो ग्रीष्मः प्रस्तावो वर्षा उद्गीथः शरत्प्रतिहारो हेमन्तो निधनम् ॥ १ ॥மந்த்ரார்த்தம் - ருதுக்களில் ஐந்துவிதமான ஸாமத்தால் உபாஸனை செய்ய வேண்டும். வசந்த காலம் “हिंकारः” (ஹிம்காரம்) கோடைகாலம் “प्रस्तावः” (பிரஸ்தாவம்), மழைகாலம் “उद्गीथः” (உத்கீதம்) முன்பனிக்காலம் “प्रतिहारः” (பிரதிஹாரம்) பனிக்காலம் “निधनम्” (நிதனம்).
एकविंशत्यादित्यमाप्नोत्येकविंशो वा इतोऽसावादित्यो द्वाविंशेन परमादित्याज्जयति तन्नाकं तद्विशोकम् ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - இருபத்தி ஒன்று. அக்ஷரங்களால் ஆதித்யலோகத்தை அடைகின்றான். ஏன் எனில் இந்த லோகத்திலிருந்து எண்ணினால் நிச்சயமாக இருபத்தி ஒன்றாவது இல்லத்தில் உள்ளார். இருபத்தி இரண்டாவது அக்ஷரத்தால் அந்த ஆதித்தியனைக் காட்டிலும் மேலான இந்த துக்கமற்ற அவ்வாறே சோகமற்ற லோகத்தை அடைகின்றான்.
एतद्ध स्म वै तद्विद्वांस आहुः पूर्वे महाशाला महाश्रोत्रिया न नोऽद्य कश्चनाश्रुतममतमविज्ञातमुदाहरिष्यतीति ह्येभ्यो विदाञ्चक्रुः ॥ ५ ॥ மந்த்ரார்த்தம் - இந்த த்ரிவிருத்கரணத்தை அறிந்த முன்னோர்களாகிய மஹா கிரஹஸ்தர்களும், மஹாச்ரோத்திரியர்களும் இவ்வாறு கூறினார்கள் - அதாவது இப்பொழுது இந்த விஷயத்தை எங்கள் குலத்தில் ஒருவரும் கேட்காதவர்களாகவோ (அஸ்ரோத்திரியர்களோ), இதைக் குறித்து சிந்திக்காதவர்களாகவோ, அறியாதவர்களாகவோ இருக்கின்றனர் என்று கூறமுடியாது. ஏன் எனில் இந்த அக்னி முதலிய திருஷ்டாந்தங்கள் மூலமாக அவைகள் எல்லாம் அறிந்திருந்தார்கள்.
एतद्ध स्म वै तद्विद्वानाह महिदास ऐतरेयः स किं म एतदुपतपसि योऽहमनेन न प्रेष्यामीति स ह षोडशं वर्षशतमजीवत्प्र ह षोडशं वर्षशतं जीवति य एवं वेद ॥ ७ ॥மந்த்ரார்த்தம் - இந்த பிரசித்தமான வித்யாவை அறிந்த ஐதரேய மஹிதாஸ் என்ற மஹான் கூறினார் - (ஹே ரோகமே) நீ எனக்கு ஏன் கஷ்டத்தைத் தருகின்றாய். என்னை இந்த ரோகத்தின் வாயிலாக என்னை மரணத்தை அடையச்செய்ய முடியாது. எவர் ஒருவர் அறிகிறாரோ அவர் நூ ற்றிப்பதினாறு ஆண்டுகள் ஜீவித்துக் கொண்டிருக்கின்றார் என்று எவன் இவ்வாறு அறிகிறானோ அவன் நூ ற்றுப்பதினாறு ஆண்டுகள் ஜீவித்திருப்பான்,
एतमु एवाहमभ्यगासिषं तस्मान्मम त्वमेकोऽसीति ह कौषीतकिः पुत्रमुवाच प्राणाꣳ स्त्वं भूमानमभिगायताद्बहवो वै मे भविष्यन्तीति ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - நான் ஒருமுகப்படுத்தி இதன் (முக்கிய பிராணனை) மாத்திரம் கானம் செய்தேன் அதனால் எனக்கு ஒரே மகனாக நீ பிறந்தாய் என்று இவ்வாறு கெளஷீதகர் தன்னுடைய புத்திரனிடம் கூறி ஆகையால் நீ “எனக்கு அநேக புத்திரர்கள் வேண்டும்” என்ற கோரிக்கையுடன் பேத குணமுடைய பிராணன்களை ஒருமுகப்படுத்தி கானம் செய் என்றார்.
एतमु एवाहमभ्यगासिषं तस्मान्मम त्वमेकोऽसीति ह कौषीतकिः पुत्रमुवाच रश्मीꣳ स्त्वं पर्यावर्तयाद्बहवो वै ते भविष्यन्तीत्यधिदैवतम् ॥ २ ॥மந்த்ரார்த்தம் - நான் இந்த ஆதித்யன் ஒருவனைக் குறித்தே கானம் செய்தேன். இதனால் எனக்கு நீ ஒரு மகனாகவே இருக்கிறாய் என்று கெளஷீதகர் தன்னுடைய புத்திரனிடம் கூறினார். ஆகையால் நீ (ஆதித்தியனுடைய) கிரணங்களை (ரச்மிகளை) பேத ரூபமாக சிந்தனை செய். அதனால் உனக்கு நிச்சயமாக அநேக புத்திரர்கள் பிறப்பார்கள். இது அதிதைவத உபாசனையாகும்.
एतेषां मे देहीति होवाच तानस्मै प्रददौ हन्तानुपानमित्युच्छिष्टं वै मे पीतꣳ स्यादिति होवाच ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - நீ அவற்றை எனக்குக்கொடு என்று உஷஸ்தியர் கூறினார். அப்பொழுது யானைப்பாகன் அவருக்கு அந்த உளுந்து பண்டத்தை கொடுத்துவிட்டு குடிப்பதற்கு இந்த ஜலத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினான். அதற்கு அவர் கூறினார் இதை நான் ஏற்றுக்கொண்டால் நிச்சயமாக எச்சில் ஜலத்தை குடித்ததாக ஆகும் என்று.
एतꣳ संयद्वाम इत्याचक्षत एतꣳ हि सर्वाणि वामान्यभिसंयन्ति सर्वाण्येनं वामान्यभिसंयन्ति य एवं वेद ॥ २ ॥மந்த்ரார்த்தம் - இதை “संयद्वाम” (சம்யத்வாம - வாம என்றால் மங்கலமான பொருள்.) என்று கூறுகிறார்கள். ஏன் எனில் நமக்குத் தேவையான மங்கலமான வஸ்துக்கள் எல்லா பக்கங்களின் இருந்தும் சேரும். எவன் இவ்வாறு அறிகின்றானோ அவனை எல்லா நன்மை (மங்கலம்) தரும் வஸ்துக்கள் எல்லா பக்கங்களில் இருந்தும் அவனை அடையும்.
एवमेव खलु सोम्य विद्धीति होवाच जीवापेतं वाव किलेदं म्रियते न जीवो म्रियत इति स य एषोऽणिमैतदात्म्यमिदं सर्वं तत्सत्यं स आत्मा तत्त्वमसि श्वेतकेतो इति भूय एव मा भगवान्विज्ञापयत्विति तथा सोम्येति होवाच ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! ஆகையால் இவ்வாறு ஜீவன் இல்லாவிடில் இந்த சரீரம் மரித்துவிடும். ஆனால் ஜீவன் மரிப்பதில்லை என்று இவ்வாறு (ஆருணி) கூறினார் - அந்த எது அணிமாவோ அதன் ரூபமே எல்லாம். அது சத்யம், அது ஆத்மா மேலும் ஹே ச்வேதகேதோ! அது நீயே. (ஆருணி இவ்வாறு கூறியபின் ச்வேதகேது கூறினான்) - பகவானே! எனக்கு மேலும் உபதேசியுங்கள். அப்பொழுது (ஆருணி) கூறினார். ஹே சோம்ய! இவ்வாறு சரி என்று கூறினார்.
एवमेव खलु सोम्यान्नस्याश्यमानस्य योऽणिमा स ऊर्ध्वः समुदीषति तन्मनो भवति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! அவ்வாறே நாம் சாப்பிட்ட அன்னத்தின் எது சூக்ஷ்ம அம்சம் ஆகிறதோ அது நல்ல விதமாக மேலே வருகிறது. அதுவே மனமாகும்.
एवमेव खलु सोम्येमाः सर्वाः प्रजाः सत आगम्य न विदुः सत आगच्छामाह इति त इह व्याघ्रो वा सिꣳहो वा वृको वा वराहो वा कीटो वा पतङ्गो वा दꣳशो वा मशको वा यद्यद्भवन्ति तदाभवन्ति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - சரி அவ்வாறே ஹே சோம்ய! எல்லா ஜீவன்களும் சத்திலிருந்தே தோன்றின அவைகள் சத்திலிருந்து தோன்றியதை அறிவதில்லை. இந்த உலகில் எந்த புலி, சிங்கம், பன்றி, புழு, வண்டு, வெட்டுக்கிளி, கொசு ஆகியவைகளாக எது எது தோன்றுகிறதோ அவை மறுபடியும் ஜீவன் உள்ளதாகவே தோன்றுகின்றன.
एवमेव प्रतिहर्तारमुवाच प्रतिहर्तर्या देवता प्रतिहारमन्वायत्ता तां चेदविद्वान्प्रतिहरिष्यसि मूर्धा ते विपतिष्यतीति ते ह समारतास्तूष्णीमासाञ्चक्रिरे ॥ ११ ॥மந்த்ரார்த்தம் - இவ்வாறே அவர் பிரதிஹர்த்தாவிடமும் கூறினார் - ஹே பிரதிஹர்த்த! எந்த தேவதை பிரதிஹர்த்தாவில் அனுகதமாய் உள்ளதோ அதை அறியாமல் பிரதிஹரணம் செய்தால் உன்னுடைய தலை விழுந்துவிடும் என்று. அப்பொழுது பிரஸ்த்தோதா முதலியவர்கள் தங்கள் தங்கள் கர்மங்களில் இருந்து விலகி மெளனமாக அமர்ந்திருந்தார்கள்.
एवमेवैष मघवन्निति होवाचैतं त्वेव ते भूयोऽनुव्याख्यास्यामि नो एवान्यत्रैतस्माद्वसापराणि पञ्च वर्षाणीति स हापराणि पञ्च वर्षाण्युवास तान्येकशतꣳ सम्पेदुरेतत्तद्यदाहुरेकशतं ह वै वर्षाणि मघवान्प्रजापतौ ब्रह्मचर्यमुवास तस्मै होवाच ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - ஹே இந்திரனே! நீ கூறியது சரிதான் என்று பிரஜாபதி கூறினார் - நான் இதைக் குறித்து மறுபடியும் உனக்கு வியாக்கியானம் செய்கிறான். ஆத்மா இதைத்தவிர வேறு அல்ல. இப்பொழுது நீ ஐந்து வருடங்கள் பிரஹ்மச்சரிய வாசம் செய். அவன் ஐந்து வருடங்கள் வாசம் செய்தான். இவைகள் எல்லாம் சேர்த்து நூ ற்றி ஒரு வருடங்கள் கழிந்தன. இதனால் இந்திரன் நூ ற்றி ஒரு வருடங்கள் பிரஹ்மச்சரிய வாசம் செய்தான் என்று கூறப்படுகிறது. அப்பொழுது அவனிடம் பிரஜாபதி கூறினார்-
एवमेवैष मघवन्निति होवाचैतं त्वेव ते भूयोऽनुव्याख्यास्यामि वसापराणि द्वात्रिंशतं वर्षाणीति स हापराणि द्वात्रिंशतं वर्षाण्युवास तस्मै होवाच ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - பிரஜாபதி கூறினார் - ஹே இந்திரனே! நீ மீறியது சரிதான். நான் உனக்கு மறுபடியும் அதைப்பற்றி விளக்குகிறேன். இப்பொழுது நீ இங்கு முப்பத்தி இரண்டு வருடங்கள் வசிப்பாயாக என்று கூறினார். இந்திரன் அங்கு முப்பத்தி இரண்டு வருடங்கள் வசித்து வந்தான். அப்பொழுது அவனிடம் கூறினார்.
एवमेवैष सम्प्रसादोऽस्माच्छरीरात्समुत्थाय परं ज्योतिरुपसम्पद्य स्वेन रूपेणाभिनिष्पद्यते स उत्तमपुरुषः स तत्र पर्येति जक्षत्क्रीडन् रममाणः स्त्रीभिर्वा यानैर्वा ज्ञातिभिर्वा नोपजनꣳ स्मरन्निदꣳ शरीरꣳ स यथा प्रयोग्य आचरणे युक्त एवमेवायमस्मिञ्छरीरे प्राणो युक्तः ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - இவ்வாறு இந்த சம்பிரசாதம் இந்த சரீரத்திலிருந்து வெளிக்கிளம்பி பரம ஜோதியை அடைந்து தன்னுடைய ஸ்வரூபத்தில் நிலைக்கிறது. அதுவே உத்தம புருஷன். இந்த அவஸ்தையில் சிரிக்கிறது, விளையாடுகிறது. மேலும் ஸ்திரீ, வாகனம் மேலும் சொந்த பந்தங்களுடன் ரமித்துக்கொண்டு தன்னுடன் உண்டான இந்த சரீரத்தை நினைக்காமல் வண்டியில் கட்டப்பட்ட காளை போல் பிராணன் இந்த சரீரத்தில் கட்டுப்பட்டுள்ளது.
एवमेवोद्गातारमुवाचोद्गातर्या देवतोद्गीथमन्वायत्ता तां चेदविद्वानुद्गास्यसि मूर्धा ते विपतिष्यतीति ॥ १० ॥மந்த்ரார்த்தம் - இவ்வாறு அவர் உத்காதாவிடம் கூறினார் - ஹே உத்காதா! எந்த தேவதை உத்கீதத்தில் அனுகதமாய் உள்ளதோ அதை நீ அறியாமல் உத்கானம் செய்தால் உன்னுடைய தலை விழுந்துவிடும் என்று.
एवꣳ सोम्य ते षोडशानां कलानामेका कलातिशिष्टाभूत्सान्नेनोपसमाहिता प्राज्वाली तयैतर्हि वेदाननुभवस्यन्नमयꣳ हि सोम्य मन आपोमयः प्राणस्तेजोमयी वागिति तद्धास्य विजज्ञाविति विजज्ञाविति ॥ ६ ॥ மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! இவ்வாறு நீ அன்னத்தை சாப்பிட்டதால் இந்த பதினாறு கலைகளில் ஒரு கலை மாத்திரம் மீதம் இருந்தது. அது அன்னத்தால் விருத்தி அடைந்து அதாவது இப்பொழுது ஞாபகப்படுத்த முடிகிறது. அதனால் நீ வேதங்களை ஞாபகப்படுத்த முடிகிறது. ஹே சோம்ய! ஆகையால் மனம் அன்னமயம், பிராணன் ஜலமயம் மேலும் வாக் தேஜோமயம் ஆகும். இவ்வாறு கூறியதால் ச்வேதகேது விசேஷ ரூபமாய் அறிந்து கொண்டான்.
एष उ एव भामनीरेष हि सर्वेषु लोकेषु भाति सर्वेषु लोकेषु भाति य एवं वेद ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - இதுவே பிரகாசத்தை அளிப்பது. இதனாலேயே லோகங்கள் ஒளிமயமாகின்றன. இதை அறிந்தவன் எல்லா உலகங்களிலும் பிரகாசிக்கின்றான்.
एष उ एव वामनीरेष हि सर्वाणि वामानि नयति सर्वाणि वामानि नयति य एवं वेद ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - (பிரஹ்மமே) இவரே மங்கலத்தை அளிப்பவர் ஏன்எனில் அவரே எல்லா மங்கலங்களையும் தரிக்கின்றார். இவ்வாறு எவர் அறிகின்றாரோ அவரை எல்லா மங்கலங்களும் அடையும். எல்லா மங்கலங்களும் அடையும். இவ்வாறு அறிந்தவனுக்கு.
एष तु वा अतिवदति यः सत्येनातिवदति सोऽहं भगवः सत्येनातिवदानीति सत्यं त्वेव विजिज्ञासितव्यमिति सत्यं भगवो विजिज्ञास इति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - (சனத்குமாரர்-) எது சத்யத்தின் காரணத்தால் அதிவதனம் செய்கின்றானோ அவன் நிச்சயமாக அதிவதனம் செய்கின்றான். (நாரதர்-) பகவானே! நான் பரமார்த்த சத்ய விக்ஞானத்தால் நான் அதிவதனம் செய்கின்றேன். (சனத்குமாரர்-) சத்தியத்தையே விசேஷரூபமாக அறிய விருப்பம் கொள்ள வேண்டும். (நாரதர்-) பகவானே! நான் விசேஷரூபமாக சத்யத்தை அறிய விரும்புகின்றேன்.
एष म आत्मान्तर्हृदयेऽणीयान्व्रीहेर्वा यवाद्वा सर्षपाद्वा श्यामाकाद्वा श्यामाकतण्डुलाद्वैष म आत्मान्तर्हृदये ज्यायान्पृथिव्या ज्यायानन्तरिक्षाज्ज्यायान्दिवो ज्यायानेभ्यो लोकेभ्यः ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - இருதய கமலத்திற்குள்ளே உள்ள இந்த என்னுடைய ஆத்மா நெல்லைவிட, கேழ்வரகைவிட, கடுகைவிட சோளத்தைவிட சோள மணியைவிட மிகவும் சிறியவர். அவ்வாறேஹிருதய மலத்தின் உள்ளே உள்ள என்னுடைய ஆத்மா பிருதிவீ, அந்தரிக்ஷம், தேவலோகம், மேலும் இந்த எல்லா லோகங்களைக் காட்டிலும் மிகப்பெரியது.
एष वै यजमानस्य लोक एतास्म्यत्र यजमानः परस्तादायुषः स्वाहापहत परिघमित्युक्त्वोत्तिष्ठति ॥ १५ ॥ மந்த்ரார்த்தம் - இது நிச்சயமாக யஜமானனுடைய லோகம் நான் அதை அடைபவனாக இருக்கின்றேன். இங்கு யஜமானன் ஆயுள் முடிந்தவுடன் (நான் இதனால் அடைவேனாக) ஸ்வாஹா- என்று கூறி ஹவனம் செய்கிறான். மேலும் “லோக வாயிலின் தாழ்ப்பாளை நீக்கு” என்று கூறி மேல் எழுகிறான்.
एष ह वा उदक्प्रवणो यज्ञो यत्रैवंविद्ब्रह्मा भवत्येवंविदं ह वा एषा ब्रह्माणमनुगाथा यतो यत आवर्तते तत्तद्गच्छति ॥ ९ ॥மந்த்ரார்த்தம் - அதில் இவ்வாறு அறிந்தவன் பிரஹ்மாவாகின்றான். அந்த யக்ஞம் நிச்சயமாக வடக்கு நோக்கியதாக அமைகிறது. இவ்வாறு அறிந்தவன் நிச்சயமாக பிரஹ்மாவின் உத்தேசத்தினால் அந்த கானமும் “எங்கு எங்கு யாகம் செய்யப்படுகிறதோ அங்கங்கு இந்த பிரஹ்மா செல்கிறார்.
एष ह वै यज्ञो योऽयं पवत एष ह यन्निदं सर्वं पुनाति यदेष यन्निदं सर्वं पुनाति तस्मादेष एव यज्ञस्तस्य मनश्च वाक्च वर्तनी ॥ १ ॥மந்த்ரார்த்தம் - எது வீடுகிறதோ அது யக்ஞம். எது வீசுகிறதோ அது நிச்சயமாக உலகம் முழுவதையும் பவித்திரம் (தூய்மை) ஆக்குகிறது. ஏன்எனில் அது வீசிக்கொண்டு செல்லும்பொழுது எல்லா சம்சாரத்தையும் பவித்திரமாக்குகிறது ஆகையால் இது யக்ஞம். மனமும் வாக்கும் அதன் இரண்டு மார்க்கங்களாகும்.
एषां भूतानां पृथिवी रसः पृथिव्या आपो रसः । अपामोषधयो रस ओषधीनां पुरुषो रसः पुरुषस्य वाग्रसो वाच ऋग्रस ऋचः साम रसः साम्न उद्गीथो रसः ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - இந்த (ஸராஸரத்திற்கு) பிராணிகளுக்கு பிருதிவீ ரஸம் (உத்பத்தி, ஸ்திதி, லயஸ்தானம்). பிருதிவியின் ரஸம் ஜலம். ஜலத்தின் ரஸம் ஒளஷதிகள் (ஸ்தாவரங்கள்) ஸ்தாவரங்களுக்கு ரஸம் புருஷன். புருஷனின் ரஸம் வாக், வாக்கின் ரஸம் ரிக், ரிக்கின் ரஸம் ஸாமம், ஸாமத்தின் ரஸம் உத்கீதம்.
ओमित्येतदक्षरमुद्गीथमुपासीत । ओमिति ह्युद्गायति तस्योपव्याख्यानम् ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஓம் என்ற இந்த அக்ஷரம் உத்கீதம். இதனை உபாஸனை செய்யவேண்டும். “ஓம்” என்று (உச்சாரம் செய்து உத்காதா யக்ஞத்தில்) உத்கானம் (உச்சஸ்வரத்தில் ஸாமகானத்தை) செய்கின்றார். இதன் (உத்கீத உபாஸனையின்) வியாக்யானம் செய்யப்படுகிறது.
ओमित्येतदक्षरमुद्गीथमुपासीतोमिति ह्युद्गायति तस्योपव्याख्यानम् ॥ १ ॥மந்த்ரார்த்தம் - “ஓம்” என்ற இந்த அக்ஷரம் உத்கீதம் என்று இவ்வாறு உபாசனை செய்யவேண்டும். “ஓம்” என்று உத்கானம் செய்கின்றான். இந்த (உத்கீத உபாசனை வியாக்கியானம் செய்யப்படுகிறது.
ओ३मदा३मों३ पिबा३मों३ देवो वरुणः प्रजापतिः सविता२न्नमहा२हरदन्नपते३ । न्नमिहा२हरा२हरो३मिति ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - ஓம் நாம் சாப்பிடுகிறோம், ஓம் நாம் குடிக்கின்றோம், ஓம் தேவதை, வருணன், பிரஜாபதி, சூரிய தேவன் இங்கு அன்னம் கொண்டுவா, ஓம்.
औपमन्यव कं त्वमात्मानमुपास्स इति दिवमेव भगवो राजन्निति होवाचैष वै सुतेजा आत्मा वैश्वानरो यं त्वमात्मानमुपास्से तस्मात्तव सुतं प्रसुतमासुतं कुले दृश्यते ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - (ராஜா) ஹே ஒளபன்யு! நீ எந்த ஆத்மாவை உபாசனை செய்கின்றாய்? ஹே பூஜ்ய ராஜாவே! நான் த்யுலோகத்தை (தேவலோகத்தை) உபாசனை செய்கின்றேன், என்று இவ்வாறு பதில் அளித்தார். (ராஜா கூறினார்)- நீங்கள் எந்த ஆத்மாவை உபாசனை செய்கின்றீரோ அது நிச்சயமாக “सुतेजा” (சுதேஜா - மிக்க ஜ்யோதி ஸ்வரூபம்) என்ற பெயரால் பிரசித்தமான வைச்வானர ஆத்மா ஆகும். இதனால் உம்முடைய குலத்தில் “सुत” (சுத) प्रसुत (ப்ரசுத) மேலும் “आसुत” (ஆசுத) ஆகிய சோம ஆஹுதிகள் நடைபெறுகின்றன.
कं ते काममागायानीत्येष ह्येव कामागानस्येष्टे य एवं विद्वान्साम गायति साम गायति ॥ ९ ॥மந்த்ரார்த்தம் - நான் உனது எந்த இஷ்டபட்ட காமனைக்காக கானம் செய்து பூர்த்திசெய்ய வேண்டும்? ஏன் எனில் இந்த உத்காதா கானம் செய்து காமனைகளை பூர்த்தி செய்வதில் வல்லவர். அவர் இவ்வாறு அறிந்து ஸாம கானம் செய்கிறார். ஸாமகானம் செய்கிறார்.
कतमा कतमर्क्कतमत्कतमत्साम कतमः कतम उद्गीथ इति विमृष्टं भवति ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - இந்த விசாரம் செய்யப்படுகிறது எனில் எது எது ரிக், எது எது ஸாமம், எது எது உத்கீதம் என்று.
कल्पन्ते हास्मै लोका ऊर्ध्वाश्चावृत्ताश्च य एतदेवं विद्वांल्लोकेषु पञ्चविधं सामोपास्ते ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - எந்த புருஷன் இவ்வாறு அறிந்து ஸாமத்தை உபாஸனை செய்கின்றானோ அவனைக் குறித்து மேல் லோக, கீழ் லோக போகரூபத்தை அடைய தகுதி உடையவனாகின்றான்.
का साम्नो गतिरिति स्वर इति होवाच स्वरस्य का गतिरिति प्राण इति होवाच प्राणस्य का गतिरित्यन्नमिति होवाचान्नस्य का गतिरित्याप इति होवाच ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - ஸாமத்தின் கதி (ஆச்ரயம்) யாது? இதற்கு மற்றவர் “ஸ்வரம்” (स्वरः) என்று கூறினார். ஸ்வரத்தின் கதி என்ன? இவ்வாறு கேள்வி கேட்டதற்கு மற்றவர் “பிராணன்” (प्राणन्) என்று கூறினார் - பிராணனின் கதி என்ன? இதைக் குறித்து மற்றவர் “அன்னம்” (अन्नम्) என்று கூறினார். அவ்வாறே அன்னத்தின் கதி என்ன? இவ்வாறு கேட்டதற்கு தால்ப்யர் ஜலம் (जलम्) என்று கூறினார்.
कुतस्तु खलु सोम्यैवं स्यादिति होवाच कथमसतः सज्जायेतेति । सत्त्वेव सोम्येदमग्र आसीदेकमेवाद्वितीयम् ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - ஆனால் ஹே சோம்ய! இவ்விதம் எவ்வாறு முடியும். அசத்திலிருந்து சத் எவ்வாறு உத்பத்தி ஆகமுடியும்? ஆகையால் ஹே சோம்ய! ஆரம்பத்தில் அது ஏகமாத்திர அத்விதீய சத்தாகவே இருந்தது என்று (ஆருணி) கூறினார்.
क्व तर्हि यजमानस्य लोक इति स यस्तं न विद्यात्कथं कुर्यादथ विद्वान्कुर्यात् ॥ २ ॥மந்த்ரார்த்தம் - ஆனால் எஜமானனுடைய லோகம் எது? எந்த யஜமானன் அந்த லோகத்தை அறியவில்லையோ அவன் எவ்வாறு யக்ஞத்தை அனுஷ்டானம் செய்வான்? ஆகையால் அதை அறிந்தவனே யக்ஞம் செய்வான்.
गायत्री वा इदं सर्वं भूतं यदिदं किञ्च वाग्वै गायत्री वाग्वा इदं सर्वं भूतं गायति च त्रायते च ॥ १ ॥மந்த்ரார்த்தம் - காயத்திரியே இந்த எல்லா பிராணி வர்க்கங்களும் இருக்கின்ற எல்லா ஸ்தாவர ஜங்கம பிராணிகளும் காயத்ரியே. வாக் காயத்ரீ, வாக்கே எல்லா பிராணிகளும். ஏன்எனில் அதுவே காயத்ரியே (அவைகளின் பெயர்களை உச்சரிக்கின்றது) மேலும் அது (பயம் முதலியவைகளில்) இருந்து ரக்ஷிக்கின்றது.
गोअश्वमिह महिमेत्याचक्षते हस्तिहिरण्यं दासभार्यं क्षेत्राण्यायतनानीति नाहमेवं ब्रवीमि ब्रवीमीति होवाचान्यो ह्यन्यस्मिन्प्रतिष्ठित इति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - இந்த உலகில் பசு, குதிரை முதலியவைகளை அவனுடைய மஹிமை என்கின்றனர். அவ்வாறே யானை, தங்கம், சேவகன், மனைவி, க்ஷதே்ரம் மேலும் வீடு இவைகளும் மஹிமை என்று கூறுவர். ஆனால் நான் அவ்வாறு கூறவில்லை. ஏன்எனில் வேறு பதார்த்தம் வேறு ஒன்றில் பிரதிஷ்டை ஆகிறது. ஆனால் நான் இதைக் கூறுகின்றேன் என்று சனத்குமாரர் இவ்வாறு கூறுகிறார் -
चक्षुरेव ब्रह्मणश्चतुर्थः पादः स आदित्येन ज्योतिषा भाति च तपति च भाति च तपति च कीर्त्या यशसा ब्रह्मवर्चसेन य एवं वेद ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - சக்ஷீவே மனம் என்னும் பிரஹ்மத்தின் நான்காவது பாதம். அது ஆதித்யரூப ஜ்யோதியினால் பிரகாசிக்கின்றது, தஹிக்கின்றது. இவ்வாறு எவன் அறிகிறானோ அவன் கீர்த்தியினாலும் புகழினாலும், பிரஹ்ம தேஜஸாலும் பிரகாசிக்கின்றான் தஹிக்கின்றான்.
चक्षुरेवर्गात्मा साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयते । चक्षुरेव सात्मामस्तत्साम ॥ २ ॥மந்த்ரார்த்தம் - சக்ஷு (கண்) “ऋक्” ரிக், ஆத்மா “साम” (ஸாம) ஆகும். இவ்வாறு (சக்ஷுரூப) ரிக்கில் (ஆத்மரூப) ஸாமம் நிலைபெற்றிருக்கின்றது. ஆகையால் ரிக்கில் நிலைபெற்ற சாமத்தை கானம் செய்கின்றனர். சக்ஷுவே “सा” (ஸா), ஆத்மா “अम” (அம) ஆகும். இவ்வாறு இரண்டும் சேர்ந்து சாமம் ஆகிறது.
चक्षुर्होच्चक्राम तत्संवत्सरं प्रोष्य पर्येत्योवाच कथमशकतर्ते मज्जीवितुमिति यथान्धा अपश्यन्तः प्राणन्तः प्राणेन वदन्तो वाचा शृण्वन्तः श्रोत्रेण ध्यायन्तो मनसैवमिति प्रविवेश ह चक्षुः ॥ ९ ॥ மந்த்ரார்த்தம் - சக்ஷு வெளியேறியது. அது ஒருவருடம் வெளியில் தங்கி பின் திரும்பிவந்து கேட்டது - நான் இல்லாமல் நீங்கள் எவ்வாறு ஜீவித்துக்கொண்டிருந்தீர்கள்? (மற்றவை கூறின) - எவ்வாறு குருடன் கண்களால் பார்க்காவிடினும் பிராணனால் சுவாசித்துக்கொண்டும், வாக்கினால் பேசிக்கொண்டும், ச்ரோத்திரத்தால் கேட்டுக்கொண்டும், மனதால் சிந்தித்துக்கொண்டும் இருக்கின்றானோ அவ்வாறு நாங்களும் ஜீவித்துக்கொண்டு இருக்கின்றோம் என்று கூறியதைக் கேட்டு கண்ணும் (கண்களும்) உள்ளே பிரவேசித்தது.
चित्तं वाव सङ्कल्पाद्भूयो यदा वै चेतयतेऽथ सङ्कल्पयतेऽथ मनस्यत्यथ वाचमीरयति तामु नाम्नीरयति नाम्नि मन्त्रा एकं भवन्ति मन्त्रेषु कर्माणि ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - சித்தம் மனதைக்காட்டிலும் சிறந்தது. எப்பொழுது புருஷன் சேதனம் உடையவனாகின்றானோ அப்பொழுது சங்கல்பம் செய்கின்றான். அதன்பின் மனனம் செய்கின்றான். அதன்பின் வாக்கைப் பிரேரணை செய்கின்றான். அதனால் நாமம் உண்டாகிறது. நாமங்களில் மந்திரம் ஒரே ரூபமாகின்றது. மேலும் மந்திரங்களில் கர்மங்கள் ஒன்றாகின்றன.
जानश्रुतिर्ह पौत्रायणः श्रद्धादेयो बहुदायी बहुपाक्य आस स ह सर्वत आवसथान्मापयाञ्चक्रे सर्वत एव मेऽन्नमत्स्यन्तीति ॥ १ ॥ஜனஸ்ருதியின் கொள்ளுப் - பேரனான ஜானஸ்ருதி மிகவும் சிரத்தையுடன் ஏராளமாக தானம் செய்பவர். மிகுந்த உணவை சமைத்து எல்லா மக்களும் உணவு அருந்த வேண்டும் என்று எல்லா இடங்களிலும் அன்ன சத்திரங்களைக் கட்டியிருந்தார்.
त इमे सत्याः कामा अनृतापिधानास्तेषां सत्यानां सतामनृतमपिधानं यो यो ह्यस्येतः प्रैति न तमिह दर्शनाय लभते ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - அந்த இந்த சத்தியகாமம் அநுருதத்தால் (பொய்யால்) மறைக்கப்பட்டுள்ளது. சத்யமாய் இருந்தாலும் அநுருதத்தால் (பொய்யால்) மறைக்கப்படுகிறது. ஏன்எனில் பிராணிகளுக்கு சம்பந்தப்பட்டவை எல்லாம் இங்கு மரணம் அடைந்து வெளியேறுகிறது. அதை மறுபடியும் பார்க்க முடியாது.
त इह व्याघ्रो वा सिंहो वा वृको वा वराहो वा कीटो वा पतङ्गो वा दꣳशो वा मशको वा यद्यद्भवन्ति तदाभवन्ति ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - உலகில் புலி, சிங்கம், ஓநாய், பன்றி, புழு, வண்டு, வெட்டுக்கிளி, கொசு ஆகிய உயிரினங்களும் (சுழுத்திலிருந்து) முன்புபோல் மறுபடியும் திரும்பிவருகின்றன.
त एतदेव रूपमभिसंविशन्त्येतस्माद्रूपादुद्यन्ति ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அந்த தேவகனங்கள் இந்த ரூபத்தை லக்ஷித்து உதாசீனம் அடைகின்றனர். அவ்வாறே அதன்பின் இதனால் உற்சாகத்தை அடைகின்றனர். (மேல் எழுகின்றனர்).
त एतदेव रूपमभिसंविशन्त्येतस्माद्रूपादुद्यन्ति ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அவர்கள் இந்த ரூபத்தை லக்ஷித்து உதாசீனமாகின்றனர். மேலும் இதனால் மேல் எழுவதற்கான சாமர்த்தியம் உடையவர்களாகின்றனர்.
त एतदेव रूपमभिसंविशन्त्येतस्माद्रूपादुद्यन्ति ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அவர்கள் இந்த ரூபத்தை லக்ஷித்து உதாசீனம் அடைகிறார்கள். மேலும் இதனால் மேல் எழுகின்றனர்.
त एतदेव रूपमभिसंविशन्त्येतस्माद्रूपादुद्यन्ति ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அவர்கள் இந்த ரூபத்தை லக்ஷித்து உதாசீனம் ஆகின்றனர் மேலும் இதிலிருந்து மேலே செல்கின்றனர்.
त एतदेव रूपमभिसंविशन्त्येतस्माद्रूपादुद्यन्ति ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அவைகள் இந்த ரூபத்தை லக்ஷித்து உதாசீனமாகின்றன. மேலும் இதனாலேயே வெளிப்படுகின்றனர். (மேல் எழுகின்றனர்)
तं चेदेतस्मिन्वयसि किञ्चिदुपतपेत्स ब्रूयात्प्रा वसव इदं मे प्रातःसवनं माध्यंन्दिनꣳ सवनमनुसन्तनुतेति माहं प्राणानां वसूनां मध्ये यज्ञो विलोप्सीयेत्युद्धैव तत एत्यगदो ह भवति ॥ २ ॥மந்த்ரார்த்தம் - இந்த பிராத: சவனம் உடையவனுடையவனுக்கு (முதல் 24 வயது) ஏதாவது கஷ்டம் வந்தால் இவ்வாறு அதனிடம் கூறவேண்டும். “ஹே! பிராண ரூப வசுகண! என்னுடைய இந்த பிராதஸ் சவனத்தை மத்யதின சவனத்துடன் ஒரே ரூபமாய் செய்து விடு. யக்ஞ ரூபமாகிய நான் தங்களுடைய பிராண ரூப வசுக்களின் மத்தியில் நஷ்டமாகமாட்டேன். அப்பொழுது இந்த கஷ்டங்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமானவனாக ஆவேன்.
तं चेद्ब्रूयुरस्मिꣳश्चेदिदं ब्रह्मपुरे सर्वꣳ समाहितꣳ सर्वाणि च भूतानि सर्वे च कामा यदैतज्जरा वाप्नोति प्रध्वंसते वा किं ततोऽतिशिष्यत इति ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - அந்த ஆச்சாரியரிடம் சிஷ்யர்கள் இவ்வாறு வினவினர் - (தேஹத்தில்) பிரஹ்ம புரத்தில் இவை எல்லாம் நிலைபெற்றுள்ளன. அவ்வாறே எல்லா பூதங்களும் (ஜீவர்களும்) எல்லா காமனைகளும் நல்லவிதமாக நிலைபெற்றுள்ளன. எப்பொழுது இது கிழத்தன்மை அடைந்தாலோ, இந்த சரீரம் நஷ்டமாகிவிட்டாலோ அப்பொழுது எது எஞ்சுகிறது?
तं चेद्ब्रूयुर्यदिदमस्मिन्ब्रह्मपुरे दहरं पुण्डरीकं वेश्म दहरोऽस्मिन्नन्तराकाशः किं तदत्र विद्यते यदन्वेष्टव्यं यद्वाव विजिज्ञासितव्यमिति स ब्रूयात् ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - அவரிடம் (அந்த குருவிடம்) (சிஷ்யர்கள்) இவ்வாறு கூறினர். என்னவெனில் பிரஹ்ம புரத்தில் எந்த சூக்ஷ்மமான கமலாகாரமாய் வீடு (கிருஹம்) உள்ளதோ அதில் எந்த அந்தர் ஆகாசம் உள்ளதோ அதனுள் என்ன வஸ்து உள்ளது. எதைத் தேடவேண்டும் எதை அறியவிரும்ப வேண்டும்? (இவ்வாறு வினவிய சீடர்களுக்கு) ஆச்சாரியர் இவ்வாறு கூறினார்.
तं जायोवाच तप्तो ब्रह्मचारी कुशलमग्नीन्परिचचारीन्मा त्वाग्नयः परिप्रवोचन्प्रब्रूह्यस्मा इति तस्मै हाप्रोच्यैव प्रवासाञ्चक्रे ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அந்த (ஆச்சாரியரின்) மனைவி அவரிடம் கூறினார் - இந்த பிரஹ்மச்சாரி தீவிரமாக தபஸ் செய்திருக்கிறார். அவ்வாறே அக்னிகளையும் நன்றாக கண்காணித்து வந்தார். அக்னிகள் உங்களை நிந்திக்கக் கூடாது. ஆகையால் இந்த வித்யையை அந்த பிரஹ்மச்சாரிக்கு உபதேசியுங்கள். ஆனால் அவர் உபதேசம் செய்யாமலேயே வெளியே சென்றுவிட்டார்.
तं जायोवाच हन्त पत इम एव कुल्माषा इति तान्खादित्वामुं यज्ञं विततमेयाय ॥ ७ ॥மந்த்ரார்த்தம் - அவரிடம் அவருடைய பத்தினி கூறினார் - ஸ்வாமின்! நீங்கள் அளித்த அந்த உளுந்து பண்டமே உள்ளது என்றாள். (உஷஸ்தி) அதை உண்டுவிட்டு யக்ஞம் நடைபெறும் இடத்திற்குச் சென்றார்.
तं मद्गुरुपनिपत्याभ्युवाद सत्यकाम३ इति भगव इति ह प्रतिशुश्राव ॥ २ ॥மந்த்ரார்த்தம் - நீர் பறவை அவனுக்கு அருகில் பறந்து வந்து கூறியது - ஹே சத்யகாமா! என்று. அப்பொழுது அவன் பகவானே! என்று பதில் அளித்தான்.
तं वा एतं देवा आत्मानमुपासते तस्मात्तेषाꣳ सर्वेच लोका आत्ताः सर्वे च कामाः स सर्वाꣳश्च लोकानाप्नोति सर्वाꣳश्च कामान्यस्तमात्मानमनुविद्य विजानातीति ह प्रजापतिरुवाच प्रजापतिरुवाच ॥ ६ ॥ மந்த்ரார்த்தம் - எந்த போகங்கள் இந்த பிரஹ்ம லோகத்தில் உள்ளனவோ அவைகளை பார்த்து ரமிக்கின்றனர். அந்த ஆத்மாவை தேவகணங்கள் உபாசிக்கின்றனர். இதனால் அவர்கள் சம்பூர்ண லோகத்தையும் எல்லா போகங்களையும் அடைகின்றனர். எவர்கள் இந்த ஆத்மாவை சாஸ்திரம், ஆச்சாரியர் உபதேசித்தவாறு அறிந்து சாக்ஷாத் ரூபமாய் அனுபவிக்கின்றாரோ அவர் எல்லா லோகத்தையும், எல்லா போகங்களையும் அடைகின்றனர். இவ்வாறு பிரஜாபதி கூறினார். இவ்வாறு பிரஜாபதி கூறினார்.
तं ह चिरं वसेत्याज्ञापयाञ्चकार तं होवाच यथा मा त्वं गौतमावदो यथेयं न प्राक्त्वत्तः पुरा विद्या ब्राह्मणान्गच्छति तस्मादु सर्वेषु लोकेषु क्षत्रस्यैव प्रशासनमभूदिति तस्मै होवाच ॥ ७ ॥ மந்த்ரார்த்தம் - அவரிடம் இங்கு அதிககாலம் தங்கி இருங்கள் என்று ஆக்ஞாபித்தார். மேலும் அவரிடம் இவ்வாறு கூறினார் - ஹே கெளதமரே! எவ்வாறு நீங்கள் என்னிடம் கூறினீரோ அதாவது (நீங்கள் இவ்வாறு அறிந்துகொள்ள வேண்டும்) முன்காலத்தில் உமக்கு முன்னால் இந்த வித்யை பிராஹ்மணர்களிடம் இருந்தது இல்லை. இந்த உலகம் முழுவதிலும் (இந்த வித்யையின் மூலமாக) க்ஷத்திரியர்களுக்கே உபதேசிக்கப்பட்டது என்று கூறி அந்த கெளதமர் இவ்வாறு கூறினார் -
तंहोवाच यथा सोम्य महतोऽभ्याहितस्यैकमङ्गारं खद्योतमात्रं परिशिष्टं तं तृणैरुपसमाधाय प्राज्वलयेत्तेन ततोऽपि बहु दहेत् ॥ ५ ॥ மந்த்ரார்த்தம் - அவனிடம் (ஆருணி) கூறினார் - ஹே சோம்ய! எவ்வாறு மிகப்பெரியதாக எரியும் அக்னியின் ஒரு மின்னல் பூச்சி போன்று கனல் ஆக ஆகிறதோ மேலும் அது (திருணத்துடன்) புல்லுடன் சம்பந்தப்பட்டவுடன் அது மீண்டும் மிக அதிகமாக சுட்டு எரித்துவிடும்.
तत्रोद्गातॄनास्तावे स्तोष्यमाणानुपोपविवेश स ह प्रस्तोतारमुवाच ॥ ८ ॥மந்த்ரார்த்தம் - அங்கு (சென்று) யக்ஞசாலையில் ஸ்துதிசெய்து கானம் செய்யும் உத்காதாக்களின் சமீபத்தில் அமர்ந்து பிரஸ்தோதரரிடம் அதாவது புரோஹிதர்களிடம் கூறினார். (பிரதிஹார பக்தியைப் பாடுபவர்கள் பிரதிஹர்த்ரு புரோஹிதர்கள்)
तथामुष्मिंल्लोके लोक इति स य एतमेवं विद्वानुपास्ते परोवरीय एव हास्यास्मिंल्लोके जीवनं भवति तथामुष्मिंल्लोके लोक इति लोके लोक इति ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - அவ்வாறே பரலோகத்திலும் அதைவிட மிகசிறந்த லோகத்தை அடைகின்றனர். எவர் இதனால் இந்த விதமாக அறிந்தவர் இதை உபாசனை செய்கின்றனர். அவர்களுடைய ஜீவனம் நிச்சயமாக இந்த லோகத்தில் மிகச்சிறந்ததாக இருக்கும். அவ்வாறே பரலோகத்திலும் இதைவிட மிகச்சிறந்த லோகத்தை அடைவர். அதைவிட மேலான லோகத்தை அடைவர்.
तथेति ह समुपविविशुः स ह प्रवाहणो जैवलिरुवाच भगवन्तावग्रे वदतां ब्राह्मणयोर्वदतोर्वाचꣳ श्रोष्यामीति ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அப்பொழுது அவர்கள் மிகவும் சரி என்று கூறிக்கொண்டு அமர்ந்தனர். அதன்பின் ஜீவலகடித்திரர் பிரவாஹணர் கூறினார்- முதலில் பூஜைக்குறிய நீங்கள் இருவரும் முதலில் பிரதிபாதனம் செய்யுங்கள். (கூறுங்கள்). நான் பிராஹ்மணர்களாகிய உங்களுடைய வாக்கை(பேச்சை)க் கேட்கிறேன் (சிரவணம் செய்கிறேன்) என்று.
तदु ह जानश्रुतिः पौत्रायण उपशुश्राव स ह सञ्जिहान एव क्षत्तारमुवाचाङ्गारे ह सयुग्वानमिव रैक्वमात्थेति यो नु कथं सयुग्वा रैक्व इति ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - இந்த கூறப்பட்ட விஷயத்தை ஜான சுருதி பெளத்ராயணர் கேட்டார். (மறுநாள் காலையில்) எழுந்து அவர் சேவகர்களிடம் இவ்வாறு கூறினார்- ஓ பையனே! நீ வண்டியின் கீழ் இருக்கும் ரைக்வனுக்கு சமானமானவனாகவா என்னை புகழ்ந்தாய்? (இதற்கு சேவகன் கேட்டான்) அந்த வண்டி உடைய ரைக்வர் எப்படிப்பட்டவர்? என்று.
तदु ह जानश्रुतिः पौत्रायणः षट्शतानि गवां निष्कमश्वतरीरथं तदादाय प्रतिचक्रमे तं हाभ्युवाद ॥ १ ॥மந்த்ரார்த்தம் - அப்பொழுது அந்த ஜான சுருதி பெளத்ராயணர் அறநூ று பசுக்களையும், தங்க மாலையையும் அதனுடன் வேகமாக செல்லும் இளம் குதிரைகள் பூட்டிய ரதத்தையும் எடுத்துக்கொண்டு அவரிடம் சென்று இவ்வாறு கூறினார்.
तदु ह शौनकः कापेयः प्रतिमन्वानः प्रत्येयायात्मा देवानां जनिता प्रजानां हिरण्यदꣳष्ट्रो बभसोऽनसूरिर्महान्तमस्य महिमानमाहुरनद्यमानो यदनन्नमत्तीति वै वयं ब्रह्मचारिन्नेदमुपास्महे दत्तास्मै भिक्षामिति ॥ ७ ॥மந்த்ரார்த்தம் - அந்த வாக்கியத்தை கபிகோத்திரத்தில் ஜனித்த செளனகர் நினைத்துப் பார்த்தார் மேலும் அந்த பிரஹ்மச்சாரியிடம் வந்து இவ்வாறு கூறினார் -எவர் தேவதைகளுக்கு எல்லாம் ஆத்மாவோ, பிரஜைகளை படைத்தவரோ, தங்கப்பவ் உடையவரோ, போஜனம் செய்வதில் சமர்த்தரோ மேலும் மேதாவி ஆவாரோ அவரின் மஹத்தான மஹிமை உங்களால் கூறப்பட்டது. அவர் மற்றவர்களால் உண்ணப்படாதவர். அன்னம் அல்லாதவர்களை உண்கிறார். ஹே பிரஹ்மச்சாரீ! அவரையே நாங்கள் உபாசனை செய்கின்றோம். (இவ்வாறு கூறி சேவகனிடம்) இந்த பிரஹ்மசாரிக்கு பிக்ஷை அளியுங்கள் என்றார்.
तदुताप्याहुः साम्नैनमुपागादिति साधुनैनमुपागादित्येव तदाहुरसाम्नैनमुपागादित्यसाधुनैनमुपागादित्येव तदाहुः ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - இந்த விஷயத்தில் கூறப்படுகிறது - அவன் ஸாமத்தினால் ஒருவனை (ராஜா முதலியவர்களை) அணுகினான் என்றால் அது அவன் நல்ல முறையில் அணுகினான் என்பது பொருள். அவன் அஸாமத்தால் அணுகினால் அவன் தகாத நல்ல முறையற்றவழிகளில் அணுகினான் என்பது பொருள்.
तदेतच्चतुष्पाद्ब्रह्म वाक्पादः प्राणः पादश्चक्षुः पादः श्रोत्रं पाद इत्यध्यात्ममथाधिदैवतमग्निः पादो वायुः पाद आदित्यः पादो दिशः पाद इत्युभयमेवादिष्टं भवत्यध्यात्मं चैवाधिदैवतं च ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அந்த இந்த (மனம் என்னும்) பிரஹ்மம் நான்கு பாதங்கள் உடையது. வாக் ஒரு பாதம், பிராணன் ஒரு பாதம், (சக்ஷீ கண்கள்) ஒரு பாதம், ஸ்ரோத்திரம் ஒரு பாதமாகும். இது அத்யாத்மம் ஆகும். இப்பொழுது அதிதைவதம் கூறப்படுகிறது - அக்னி ஒரு பாதம், வாயு ஒரு பாதம், ஆதித்தியன் ஒரு பாதம் மேலும் திசைகள் ஒரு பாதம். இவ்வாறு அத்யாத்ம, அதிதைவதம் ஆகிய இரண்டும் உபதேசம் செய்யப்பட்டது.
तदेतन्मिथुनमोमित्येतस्मिन्नक्षरे सं सृज्यते यदा वै मिथुनौ समागच्छत आपयतो वै तावन्योन्यस्य कामम् ॥ ६ ॥ மந்த்ரார்த்தம் - அந்த இந்த மிதுனம் (ஜோடி) “ஓம்” என்ற அக்ஷரத்தில் இணைகிறது. எப்பொழுது இந்த மிதுனம் (ஜோடிகள்) பரஸ்பரம் இணைகின்றனவோ அப்பொழுது அவை ஒன்று மற்றொன்றின் காமனையை அடையச்செய்வதாய் ஆகின்றது.
तदेष श्लोकः । शतं चैका च हृदयस्य नाड्यस्तासां मूर्धानमभिनिःसृतैका तयोर्ध्वमायन्नमृतत्वमेव विष्वङ्ङन्या उत्क्रमणे भवन्त्युत्क्रमणे भवन्ति ॥ ६ ॥ மந்த்ரார்த்தம் - இந்த விஷயத்தைக் குறித்து இந்த மந்திரம் - ஹ்ருதயத்தில் நூ ற்று ஒன்று நாடிகள் இருக்கின்றன. அவைகளில் ஒன்று சிரசின் உச்சியை பிளந்து கொண்டு வெளியேறுகிறது. அதன் வழியாக மேலே செல்லும் ஜீவன் அமரத்துவத்தை அடைகிறது. மற்ற நாடிகள் இங்கும் அங்கும் சென்று கொண்டு உத்கிரமணத்திற்கு காரணமாகின்றன. உத்கிரமணத்திற்குக் காரணமாகின்றன. (அவைகளால் அமரத்துவத்தை அடையமுடியாது).
तदेष श्लोको न पश्यो मृत्युं पश्यति न रोगं नोत दुःखताꣳ सर्वꣳ ह पश्यः पश्यति सर्वमाप्नोति सर्वश इति स एकधा भवति त्रिधा भवति पञ्चधा सप्तधा नवधा चैव पुनश्चैकादशः स्मृतः शतं च दश चैकश्च सहस्राणि च विꣳशतिराहारशुद्धौ सत्त्वशुद्धिः सत्त्वशुद्धौ ध्रुवा स्मृतिः स्मृतिलम्भे सर्वग्रन्थीनां विप्रमोक्षस्तस्मै मृदितकषायाय तमसस्पारं दर्शयति भगवान्सनात्कुमारस्तꣳ स्कन्द इत्याचक्षते तꣳ स्कन्द इत्याचक्षते ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - இந்த விஷயத்தில் இந்த மந்திரம் - வித்வான் மிருத்யுவைக் காண்பதில்லை. நோயை அடைவதில்லை. துக்கத்தையும் அடைவதில்லை. அந்த வித்வான் எல்லாவற்றையும் ஆத்மாவாகவே காண்கிறான். ஆகையால் எல்லாவற்றையும் எப்பொழுதும் அடைகின்றான். அவன் ஒருவனாகின்றான், மேலும் மூன்றாக ஆகின்றான், ஐந்தாக, ஏழாக மேலும் ஒன்பதாக, ரூபங்களை அடைகின்றான். மேலும் அவன் பதினொன்றாக, அவ்வாறே நூ று, பத்து, ஒன்று, ஆயிரம் மேலும் இருபதாக ஆகின்றான். ஆகார சுத்தியினால் அந்தக்கரண சுத்தி ஏற்படுகிறது. அந்தக்கரண சுத்தியினால் சலனமற்ற ஸ்மிருதி (ஞாபகசக்தி) உண்டாகிறது. அவ்வாறே ஸ்மிருதி அடைந்தபின் எல்லா முடுச்சுகளும் நிவிர்த்தி ஆகிறது. இவ்வாறு எவருடைய வாசனைகள் க்ஷீண (நாச) மாகிவிட்டதோ அந்த நாரதருக்கு பகவான் சனத்குமாரர் அக்ஞான அந்தகாரத்திற்கு அப்பாற்பட்ட காட்சியைக் காட்டினார். அவரை (சனத்குமாரரை) ஸ்கந்த அதாவது மஹாஞானி என்று அழைக்கப்படுகிறார். மஹாஞானி என்று அழைக்கப்படுகிறார்.
तदेष श्लोको यदा कर्मसु काम्येषु स्त्रियꣳ स्वप्नेषु पश्यति समृद्धिं तत्र जानीयात्तस्मिन्स्वप्ननिदर्शने तस्मिन्स्वप्ननिदर्शने ॥ ८ ॥ மந்த்ரார்த்தம் - இந்த விஷயத்தில் இந்த ஸ்லோகம் - காமிய கர்மங்கள் செய்யும் சமயத்தில் ஸ்த்ரீயை ஸ்வப்னத்தில் பார்த்தால் அந்த கர்மம் நிறைவுடன் வெற்றி பெற்றுள்ளது என்பது அறியப்படுகிறது.
तदेष श्लोको यानि पञ्चधा त्रीणि त्रीणि तेभ्यो न ज्यायः परमन्यदस्ति ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - இந்த விஷயத்தில் இந்த மந்திரம் எந்த ஐந்துவிதமாக மூன்று மூன்று கூறப்பட்டதோ அதைத் தவிர சிரேஷ்டமானதோ, அதைக்காட்டிலும் வேறானதோ எது ஒன்றும் இல்லை.
तदैक्षत बहु स्यां प्रजायेयेति तत्तेजोऽसृजत तत्तेज ऐक्षत बहु स्यां प्रजायेयेति तदपोऽसृजत । तस्माद्यत्र क्वच शोचति स्वेदते वा पुरुषस्तेजस एव तदध्यापो जायन्ते ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - அது (சத்) பார்த்தது (ऐक्षत) நான் அநேகமாக ஆவேனாக- அநேக விதமாக உண்டாவேனாக. இவ்வாறு ஈக்ஷணம் செய்து அது தேஜஸ்ஸை உத்பன்னம் செய்தது. அந்த தேஜஸ் நினைத்தது நான் அநேகமாக ஆவேனாக- நாநாவிதமாக உத்பன்னமாவேனாக என்று. இவ்வாறு (சிந்தித்து) ஈக்ஷணம் செய்து (தர்சனம் செய்து) ஜலத்தை உண்டாக்கியது. இதனால் எங்கு எந்த புருஷன் சோகத்தை அடைகிறானோ அப்பொழுதும் மிகுந்த உழைப்பதாலும் ஜலம் வருகிறது. அந்த சமயத்தில் அந்த தேஜஸ்ஸிலிருந்து ஜலத்தின் உத்பத்தி சம்பவிக்கின்றது.
तद्धैतत्सत्यकामो जाबालो गोश्रुतये वैयाघ्रपद्यायोक्त्वोवाच यद्यप्येनच्छुष्काय स्थाणवे ब्रूयाज्जायेरन्नेवास्मिञ्छाखाः प्ररोहेयुः पलाशानीति ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - அந்த இந்த பிராண தர்சனத்தை சத்யகாம ஜாபாலர் வையாக்ரபத்ய கோச்ருதியிடம் இதை நிரூபித்து அவ்வாறு கூறினார் - இதை காய்ந்த மரத்தை குறித்து ஸ்துதி செய்தால் அதில் கிளைகள் உண்டாகி அதில் இலைகள் தளிர்கள் உண்டாகும்.
तद्धैतद्घोर आङ्गिरसः कृष्णाय देवकीपुत्रायोक्त्वोवाचापिपास एव स बभूव सोऽन्तवेलायामेतत्त्रयं प्रतिपद्येताक्षितमस्यच्युतमसि प्राणसं शितमसीति तत्रैते द्वे ऋचौ भवतः ॥ ६ ॥மந்த்ரார்த்தம் - கோர அங்கிரஸ ரிஷி தேவகீ புத்திரன் கிருஷ்ணருக்கு இந்த யக்ஞ தர்சனத்தை உபதேசித்து இவ்வாறு கூறினார். இந்த வித்தையானது மற்ற வித்யா விஷயங்களில் தாகமற்று அதனால் அந்திம காலத்தில் (கடைசி காலத்தில்) இந்த மூன்று மந்திரங்களை ஜபிக்க வேண்டும். நீ க்ஷயமற்றவன், அச்சுதன் (நழுவுதலில்லாதவன்), மேலும் மிகவும் சூக்ஷ்மமான பிராணன். அவ்வாறே இதன் விஷயத்தில் இரண்டு ரிக்குகள் இருக்கின்றன.
तद्धैतद्ब्रह्मा प्रजापतय उवाच प्रजापतिर्मनवे मनुः प्रजाभ्य आचार्यकुलाद्वेदमधीत्य यथाविधानं गुरोः कर्मातिशेषेणाभिसमावृत्य कुटुम्बे शुचौ देशे स्वाध्यायमधीयानो धार्मिकान्विदधदात्मनि सर्वेन्द्रियाणि सम्प्रतिष्ठाप्याहिंसन्सर्वभूतान्यन्यत्र तीर्थेभ्यः स खल्वेवं वर्तयन्यावदायुषं ब्रह्मलोकमभिसम्पद्यते न च पुनरावर्तते न च पुनरावर्तते ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - அந்த இந்த ஆத்ம ஞானத்தை பிரஹ்மா பிரஜாபதிக்கு உபதேசித்தார். பிரஜாபதி மனுவிற்குக் கூறினார். மனு பிரஜைகளுக்குக் கேட்கச்செய்தார். நியமானுசாரமாக குருவிற்கு செய்யவேண்டிய கர்மங்களை சமாப்தி செய்து வேதத்தை அத்யயனம் செய்துவிட்டு ஆச்சாரியர் குலத்திலிருந்து திரும்பிவந்து குடும்பத்தில் இருந்துகொண்டு பவித்திரமான இடத்தில் ஸ்வாத்யாயம் செய்துகொண்டு (புத்திரர் அவ்வாறே சிஷ்யர்களுக்கும்) தார்மிகம் செய்துகொண்டு எல்லா இந்திரியங்களையும் தன்னுடைய அந்தக்கரணத்தில் ஸ்தாபித்து (நிறுத்தி) சாஸ்த்திரத்தின் ஆக்ஞைப்படி மற்ற பிராணிகளை ஹிம்சை செய்யாமல் திடமாக ஆயுள் முடியும்வரை இவ்வாறு கடைபிடித்து பிரஹ்மலோகத்தை அடைகிறான். மேலும் மறுபடியும் திரும்புவது இல்லை. மறுபடியும் திரும்புவது இல்லை.
तद्धैतद्ब्रह्मा प्रजापतय उवाच प्रजापतिर्मनवे मनुः प्रजाभ्यस्तद्धैतदुद्दालकायारुणये ज्येष्ठाय पुत्राय पिता ब्रह्म प्रोवाच ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - அந்த இந்த மதுஞானத்தை பிரஹ்மா பிரஜாபதியிடம் கூறினார். பிரஜாபதி மனுவிற்குக் கூறினார். மனு தன் சந்ததியினருக்குக் கூறினார். அவ்வாறே அந்த பிரஹ்ம ஞானத்தையே தன்னுடைய ஜேஷ்ட்ட புத்திரன் அருணருடைய பிள்ளை உத்தாலகருக்கு அவருடைய பிதா கூறினார்.
तद्धोभये देवासुरा अनुबुबुधिरे ते होचुर्हन्त तमात्मानमन्विच्छामो यमात्मानमन्विष्य सर्वाꣳश्च लोकानाप्नोति सर्वाꣳश्च कामानितीन्द्रो हैव देवानामभिप्रवव्राज विरोचनोऽसुराणां तौ हासंविदानावेव समित्पाणी प्रजापतिसकाशमाजग्मतुः ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - பிரஜாபதியின் இந்த வாக்யத்தை தேவர்களும், அசுரர்களும் பரம்பரையாகவே அறிந்திருந்தார்கள். அவர்கள் கூறினார்கள் - நாங்கள் இந்த ஆத்மாவை அறிய விரும்புகின்றோம். இதை அறிவதினால் ஜீவன் எல்லா லோகங்களையும், அவற்றின் எல்லா போகங்களையும் அடைவானோ என்று இவ்வாறு நிச்சயம் செய்து தேவர்களின் ராஜாவான இந்திரன், அவ்வாறே அசுரர்களின் ராஜா விரோச்சனனும் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் அறியவேண்டிய இச்சையை தெரிவித்துக்கொண்டு கைகளில் சமித்துக்களை ஏந்திக்கொண்டு பிரஜாபதியிடம் சென்றனர்.
तद्य इत्थं विदुः । ये चेमेऽरण्ये श्रद्धा तप इत्युपासते तेऽर्चिषमभिसम्भवन्त्यर्चिषोऽहरह्न आपूर्यमाणपक्षमापूर्यमाणपक्षाद्यान्षडुदङ्ङेति मासाꣳस्तान् ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இவ்வாறு அறிகிறானோ அவன் அவ்வாறே வனத்தில் சிரத்தையுடன் உபாசிக்கின்றானோ அவன் (மரணத்திற்குப் பின்) அர்ச்சிர அபிமானி தேவதைகளை அடைகின்றான். அர்ச்சிர அபிமானி தேவதைகளிடமிருந்து தின அபிமான தேவதைகளை அடைகிறான். தின அபிமானிகளிடமிருந்து சுக்லபக்ஷ அபிமான தேவதைகளையும், சுக்லபக்ஷ அபிமானி தேவதைகளிடமிருந்து சூரியன் வடக்கு நோக்கி செல்கின்ற ஆறு மாதங்களை அடைகிறான்.
तद्य इह रमणीयचरणा अभ्याशो ह यत्ते रमणीयां योनिमापद्येरन्ब्राह्मणयोनिं वा क्षत्रिययोनिं वा वैश्ययोनिं वाथ य इह कपूयचरणा अभ्याशो ह यत्ते कपूयां योनिमापद्येरञ्श्वयोनिं वा सूकरयोनिं वा चण्डालयोनिं वा ॥ ७ ॥ மந்த்ரார்த்தம் - அந்த அனுசயீ ஜீவர்களில் எவர் நன்றாக ஆச்சரணம் செய்கின்றனரோ (நன்நடத்தை உள்ளவரோ) அவர்கள் விரைவிலேயே உத்தமமான யோனியை அடைகின்றனர். அவர்கள் பிராஹ்மண யோனியோ, க்ஷத்திரிய யோனியோ அல்லது வைச்யயோனியை அடைகின்றனர். அவ்வாறே எவர்கள் அசுத்த நடத்தை உடையவர்களோ அவர்கள் அந்த சமயத்தில் அசுபயோனிகளை அடைகின்றனர். அவர்கள் நாய் ஜன்மத்தையோ, பன்றி ஜன்மத்தையோ, சண்டாள ஜன்மத்தையோ அடைகின்றனர்.
तद्य एवैतं ब्रह्मलोकं ब्रह्मचर्येणानुविन्दन्ति तेषामेवैष ब्रह्मलोकस्तेषाꣳ सर्वेषु लोकेषु कामचारो भवति ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - இவ்வாறு இருப்பதன் காரணமாக பிரஹ்மலோகத்தை பிரஹ்மச்சர்யத்தின் மூலமாக அதை அறிகின்றனரோ அவர்கள் பிரஹ்மலோகத்தை அடைவர். அவ்வாறே அவர்களுக்கு எல்லா லோகங்களிலும் தான் இச்சித்தவாறு கதியை அடைவர்.
तद्य एवैतावरं च ण्यं चार्णवौ ब्रह्मलोके ब्रह्मचर्येणानुविन्दन्ति तेषामेवैष ब्रह्मलोकस्तेषाꣳ सर्वेषु लोकेषु कामचारो भवति ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - அந்த பிரஹ்மலோகத்தில் எவர்கள் பிரஹ்மச்சரியத்தால் இந்த “अर” “ण्य” (அர, ண்ய) ஆகிய இரண்டு சமுத்திரங்களை அடைகிறான். அவர்கள் பிரஹ்மலோகப் பிராப்தியை அடைகின்றனர். அவர்களுக்கு எல்லா லோகங்களிலும் இச்சைப்படியான கதி ஏற்படுகிறது.
तद्यत्प्रथमममृतं तद्वसव उपजीवन्त्यग्निना मुखेन न वै देवा अश्नन्ति न पिबन्त्येतदेवामृतं दृष्ट्वा तृप्यन्ति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - இவைகளில் எது முதல் அம்ருதமோ அதனால் வசுகணங்கள் அக்னி தேவதையை பிரதானமாக்கி ஜீவனத்தை செய்கின்றனர். (அனுபவிக்கின்றனர்). தேவகணங்களோவெனில் சாப்பிடுவது இல்லை. அருந்துவதும் இல்லை. அவர்கள் இந்த அம்ருதத்தை பார்த்தே திருப்தி அடைகின்றனர்.
तद्यत्रैतत्सुप्तः समस्तः सम्प्रसन्नः स्वप्नं न विजानात्यासु तदा नाडीषु सृप्तो भवति तं न कश्चन पाप्मा स्पृशति तेजसा हि तदा सम्पन्नो भवति ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - அந்த சுஷுப்த்தி அவஸ்தையில் அதாவது நன்றாக தூங்கும்பொழுது எல்லா புலன்களும் அமைதியுற்று பிரசன்னமாகி ஸ்வப்னமும் காண்பதில்லை. அப்பொழுது இந்த நாடிகளில் சென்று விடுகிறது. அப்பொழுது எந்த பாபமும் அவனைத் தீண்டுவது இல்லை. மேலும் தேஜஸால் வியாபிக்கப்படுகின்றான்.
तद्यत्रैतत्सुप्तः समस्तः सम्प्रसन्नः स्वप्नं न विजानात्येष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्मेति स ह शान्तहृदयः प्रवव्राज स हाप्राप्यैव देवानेतद्भयं ददर्श नाह खल्वयमेवꣳ संप्रत्यात्मानं जानात्ययमहमस्मीति नो एवेमानि भूतानि विनाशमेवापीतो भवति नाहमत्र भोग्यं पश्यामीति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - எந்த அவஸ்தையில் நன்றாக தூங்கும்பொழுது எல்லா தர்சன விருத்திகள் அற்றும், ஸ்வப்ன அனுபவமும் இல்லாது இருக்கிறதோ அது ஆத்மா, என்று பிரஜாபதி கூறி அதுவே அம்ருதம், அதுவே அபயம், அதுவே பிரஹ்மம் என்றார். இதைக்கேட்ட இந்திரன் சாந்தமனதுடன் சென்றுவிட்டான். ஆனால் அவன் தேவர்களிடம் செல்லாமல் அவன் இந்த பயத்தைப் பார்த்தான். இந்த அவஸ்தையில் இதன் நிச்சயமான ஞானம் ஒன்றும் ஏற்படவில்லை அதாவது அது நான் மேலும் இந்த மற்ற பூதங்களையும் அறியவில்லை. அந்த சமயத்தை ஏற்றுக்கொண்டால் நாசமே ஏற்படும். இதில் நான் இஷ்டமான பலனை காணவில்லை.
तद्यथा महापथ आतत उभौ ग्रामौ गच्छतीमं चामुं चैवमेवैता आदित्यस्य रश्मय उभौ लोकौ गच्छन्तीमं चामुं चामुष्मादादित्यात्प्रतायन्ते ता आसु नाडीषु सृप्ता आभ्यो नाडीभ्यः प्रतायन्ते तेऽमुष्मिन्नादित्ये सृप्ताः ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - இந்த விஷயத்தில் திருஷ்டாந்தம் என்னவெனில் நீண்ட நெடுஞ்சாலை, சமீபத்தில் இருக்கும் கிராமத்திற்கும் தூரத்தில் இருக்கும் கிராமத்திற்கும் செல்கிறதோ அவ்வாறு இந்த சூரியனுடைய கிரணங்கள் இந்த புருஷனிலும் அந்த ஆதித்திய மண்டலமாகிய இரண்டு லோகங்களிலும் பிரவேசிக்கிறது. அவை நிரந்தரமாக ஆதித்தியனிடத்திலிருந்து பரவி இந்த நாடிகளிலும் வியாபிக்கிறது. அவ்வாறே இந்த நாடிகளில் இருந்தும் வெளிப்பட்டு ஆதித்தியனில் வியாபித்து இருக்கிறது.
तद्यथा लवणेन सुवर्णं सन्दध्यात्सुवर्णेन रजतं रजतेन त्रपु त्रपुणा सीसं सीसेन लोहं लोहेन दारु दारु चर्मणा ॥ ७ ॥ एवमेषां लोकानामासां देवतानामस्यास्त्रय्या विद्याया वीर्येण यज्ञस्य विरिष्टं सन्दधाति भेषजकृतो ह वा एष यज्ञो यत्रैवंविद्ब्रह्मा भवति ॥ ८ ॥மந்த்ரார்த்தம் - இந்த விஷயத்தில் அறியவேண்டியது என்னவெனில் எவ்வாறு உப்பினால் ஸ்வர்ணத்தையும், ஸ்வர்ணத்தால் வெள்ளீயமும் வெள்ளீயத்தால் காரீயமும், காரீயத்தால் இரும்பும், இரும்பினால் மரமும், மரத்தால் தோலும் இணைக்கப்படுகிறது. அதுபோல் இந்த லோகம், தேவதை அவ்வாறே த்ரயீ வித்யா (மூன்று வித்யை)வின் வீர்யத்தால் அதாவது ரசம் என்னும் ஒஜஸ்ஸால் யக்ஞத்தின் குறைபாடு நீங்கி பூர்த்தியாகின்றது. இதை இவ்வாறு அறிந்தவன் பிரஹ்மாவாக ஆகின்றான். அந்த பிரஹ்மாவால் செய்யப்படும் யக்ஞம் நிச்சயமாக மூலிகைகளால் குறைநீங்கி சுத்தமாக பூர்த்தியாகிறது.
तद्यथेषीकातूलमग्नौ प्रोतं प्रदूयेतैवं हास्य सर्वे पाप्मानः प्रदूयन्ते य एतदेवं विद्वानग्निहोत्रं जुहोति ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - இந்த விஷயத்தில் இந்த திருஷ்டாந்தமாகும்- எவ்வாறு அக்னியில் இடப்பட்ட தர்பைப் புல் நுனி சாம்பலாகுமோ அவ்வாறு வைச்வாநர வித்யையை அறிந்து அக்னிஹோத்திரம் செய்பவனுடைய பாபங்கள் சாம்பாலாகிவிடும்.
तद्यथेह कर्मजितो लोकः क्षीयत एवमेवामुत्र पुण्यजितो लोकः क्षीयते तद्य इहात्मानमननुविद्य व्रजन्त्येताꣳश्च सत्यान्कामाꣳस्तेषाꣳ सर्वेषु लोकेष्वकामचारो भवत्यथ य इहात्मानमनुविद्य व्रजन्त्येताꣳश्च सत्यान्कामांस्तेषाꣳ सर्वेषु लोकेषु कामचारो भवति ॥ ६ ॥ மந்த்ரார்த்தம் - கர்மங்களினால் அடையப்பட்ட இந்த உலகம் எவ்வாறு அழிகிறதோ அவ்வாறே புண்யத்தால் அடையப்பட்ட பரலோகமும் அழிவு அடையும். எவன் ஒருவன் இவ்வுலகில் இந்த சத்ய காமனைகள் அற்று ஆத்மாவை அறிந்திருக்காவிடில் அவன் பரலோகத்தை அடைந்து அதன் எல்லா லோகங்களிலும் தன் இச்சைப்படியான கதி கிடைக்காது. மேலும் இவ்வுலகில் ஆத்மாவை அவ்வாறே சத்திய காமனைகளை அறிந்து (பரலோகம்) சென்றால் அவனுக்கு எல்லா லோகங்களிலும் தன் இச்சைப்பட்ட கதியை அடைவான்.
तद्यद्भक्तं प्रथममागच्छेत्तद्धोमीयं स यां प्रथमामाहुतिं जुहुयात्तां जुहुयात्प्राणाय स्वाहेति प्राणस्तृप्यति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஆகையால் எந்த அன்னம் முதல் பகுதியோ அதை ஹவனம் செய்யவேண்டும். அந்த சமயத்தில் போக்தா அதை முதலாவதாக ஆஹுதி செய்யும்பொழுது “प्राणायस्वाहा” (பிராணாயஸ்வாஹா) என்று அளிக்கவேண்டும் (ஆஹுதி செய்யவேண்டும்) இதனால் பிராணன் திருப்தி அடைகிறது.
तद्यद्रजतं सेयं पृथिवी यत्सुवर्णं सा द्यौर्यज्जरायु ते पर्वता यदुल्बं समेघो नीहारो या धमनयस्ता नद्यो यद्वास्तेयमुदकं स समुद्रः ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அதில் எந்த வெள்ளி (ரஜத) பாகம் ஆயிற்றே அது பிருதிவீயாகும். மேலும் எது ஸ்வர்ண பாகம் ஆயிற்றே அது த்யுலோகம் (ஆகாசம்) ஆகும். அதன் (முட்டையின்) ஒரு மலைகள் ஆகும். அதன் ஜவ்வு மேகங்களுடன் கூடிய பனி மூட்டமாகும். அதன் நரம்புகள் நதிகள். சிறுநீர் பையில் உள்ள ஜலம் சமுத்திரம் ஆகும்.
तद्वा एतदनुज्ञाक्षरं यद्धि किञ्चानुजानात्योमित्येव तदाहैषो एव समृद्धिर्यदनुज्ञा समर्धयिता ह वै कामानां भवति य एतदेवं विद्वानक्षरमुद्गीथमुपास्ते ॥ ८ ॥ மந்த்ரார்த்தம் - அந்த இந்த ஓம்காரம் அனுமதியைக் குறிக்கும் அக்ஷரமாகும். எவருக்காவது அனுமதி அளிக்கிறான் என்பதற்கு “ஓம்” என்று கூறுகிறார். அந்த அனுக்ஞை (அனுமதி) நிறைந்து இருக்கிறது. எவன் இவ்வாறு அறியும் புருஷன் இந்த உத்கீத அக்ஷரத்தை உபாசனை செய்கின்றான். அவன் நிச்சயமாக சம்பூர்ண காமனைகளின் நிறைவை அடைகின்றான்.
तद्व्यक्षरत्तदादित्यमभितोऽश्रयत्तद्वा एतद्यदेतदादित्यस्य परं कृष्णꣳ रूपम् ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - அந்த ரசம் விசேஷ ரூபத்துடன் பரந்து (சென்று) ஆதித்யனின் (உத்தர - வடக்கு) பாகத்தை ஆஸ்ரயிக்கிறது. இது எந்த ஆதித்யனின் கிருஷ்ண ரூபமோ (கருப்பு ஒளியோ) அது அதற்கு காரணமாகும்.
तद्व्यक्षरत्तदादित्यमभितोऽश्रयत्तद्वा एतद्यदेतदादित्यस्य मध्ये क्षोभत इव ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - இந்த ரசம் விசேஷ ரூபமாக ஆனது மேலும் ஆதித்யனின் மேல்புற பாகத்தை ஆஸ்ரயித்தது. அந்த எது ஆதித்யனின் மத்தியில் அசைவது போல் தோன்றுகிறதோ அது(மது)வாகும்.
तद्व्यक्षरत्तदादित्यमभितोऽश्रयत्तद्वा एतद्यदेतदादित्यस्य रोहितꣳ रूपम् ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - அவைகள் (யசஸ் முதலிய ரசங்கள்) விசேஷ ரூபமாக ஆயிற்று. அவைகள் (சென்று) ஆதித்தியனின் (கிழக்கு) பாகத்தை ஆஸ்ரயித்து. அந்த ஆதித்தியனிடத்தில் உள்ள ரோஹிதம் அதாவது சிகப்பு ரூபமோ அது இந்த ரசமாகும்.
तमग्निरभ्युवाद सत्यकाम३ इति भगव इति ह प्रतिशुश्राव ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அவனிடம் அக்னியானது ஹே சத்யகாமா! என்று அழைத்தது. அப்பொழுது அவன் ஹே பகவானே! என்று பதில் அளித்தான்.
तमु ह परः प्रत्युवाच कम्वर एनमेतत्सन्तꣳ सयुग्वानमिव रैक्वमात्थेति यो नु कथꣳ सयुग्वा रैक्व इति ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - அதனிடம் மற்ற ஹம்சம் (முன்னே செல்லும் ஹம்சம்) கூறியது- ஹே! நீ எந்த மஹத்தை உடையவனாக இந்த ராஜாவைக் குறித்து இவ்வாறு பெருமையுடன் வசனத்தால் கூறுகிறாய்? என்ன அவர் இந்த வண்டியின் கீழ் உள்ள ரைக்வனுக்கு சமானமாகவா கூறுகிறாய்? அதற்கு முதல் ஹம்சம் இவ்வாறு கேட்டது - அந்த வண்டியின் கீழ் உள்ள ரைக்வர் எப்படிப்பட்டவர் என்று.
तमु ह परः प्रत्युवाचाह हारेत्वा शूद्र तवैव सह गोभिरस्त्विति तदु ह पुनरेव जानश्रुतिः पौत्रायणः सहस्रं गवां निष्कमश्वतरीरथं दुहितरं तदादाय प्रतिचक्रमे ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - அந்த ராஜாவிடம் ரைக்வர் கூறினார் - ஹே சூத்ர! பசுக்களுடன் இந்த மாலை, ரதங்கள் எல்லாம் உன்னிடமே இருக்கட்டும் என்று. அதன்பின் அந்த ஜான ஸ்ருதி பெளத்தராயணர் ஒரு ஆயிரம் பசுக்களையும், ஒரு ஹாரத்தையும், வேகமான இளம் குதிரைகளுடன் கூடிய ரதத்தையும், தன்னுடைய மகளையும், மேலும் தனத்தையும் எடுத்துக்கொண்டு மறுபடியும் அவரிடம் வந்தார்.
तयोरन्यतरां मनसा संस्करोति ब्रह्मा वाचा होताध्वर्युरुद्गातान्यतरां स यत्रोपाकृते प्रातरनुवाके पुरा परिधानीयाया ब्रह्मा व्यवदति ॥ २ ॥ अन्यतरामेव वर्तनीꣳ सꣳस्करोति हीयतेऽन्यतरा स यथैकपाद्व्रजन्रथो वैकेन चक्रेण वर्तमानो रिष्यत्येवमस्य यज्ञो रिष्यति यज्ञं रिष्यन्तं यजमानोऽनुरिष्यति स इष्ट्वा पापीयान्भवति ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - அவைகளில் ஒரு மார்க்கத்தை பிரஹ்மா தன் மனதின் மூலமாக தூய்மைப்படுத்துகிறார். (பவித்திரமாக்குகிறார்). அவ்வாறே ஹோதா, அத்வர்யு, உத்காதா இவர்கள் வாக்கினால் மற்ற மார்க்கத்தை தூய்மைப்படுத்துகின்றனர். பிராதரர் அனுவர்க்கம் ஆரம்பித்தபின் பரிதானியாரிக்கை உச்சரிக்கும் முன் பிரஹ்மா பேசினால் அது ஒரு மார்க்கத்தைத் தூய்மைப்படுத்தும். மறு மார்க்கம் நஷ்டமாகிவிடும். எவ்வாறு ஒற்றைக் காலால் நடப்பவன் துன்புறுவது போலும் ஒற்றை சக்கிரத்தால் செல்லும் ரதம் உடைவது போலும் அவனுடைய யக்ஞமும் நாசத்தை அடையும். யக்ஞம் நாசமடைவதால் யஜமானனும் நாசம் அடைகின்றான். இவ்வாறு யக்ஞம் செய்தால் அதிகபாபம் உடையவனாகின்றான். (மஹாபாபி ஆகின்றான்).
तस्मा आदित्याश्च विश्वे च देवास्तृतीयसवनं सम्प्रयज्छन्त्येष ह वै यज्ञस्य मात्रां वेद य एवं वेद य एवं वेद ॥ १६ ॥ மந்த்ரார்த்தம் - அவனுக்கு (யஜமானனுக்கு) ஆதித்யன் மற்றும் விச்வே தேவர்கள் மூன்றாவது ஸவன பலனை அளிப்பர். எவன் இவ்வாறு அறிகிறானோ அவன் இவ்வாறு அறிகிறான் - அது நிச்சயமாக யக்ஞத்தின் யதார்த்த ஸ்வரூபத்தை அறிகிறான்.
तस्मा उ ह ददुस्ते वा एते पञ्चान्ये पञ्चान्ये दश सन्तस्तत्कृतं तस्मात्सर्वासु दिक्ष्वन्नमेव दश कृतꣳ सैषा विराडन्नादी तयेदꣳ सर्वं दृष्टꣳ सर्वमस्येदं दृष्टं भवत्यन्नादो भवति य एवं वेद य एवं वेद ॥ ८ ॥மந்த்ரார்த்தம் - அப்பொழுது அவர்கள் உணவை அளித்தார்கள். எந்த அந்த அக்னி, சூரியன், சந்திரன், ஜலம் ஆகியவைகளுடன் வாயுவும் சேர்ந்து ஐந்தாகின்றது. அவ்வாறே வாக், சக்ஷு, ஸ்ரோத்திரம், மனம் ஆகியவைகளுடன் பிராணன் சேர்ந்து ஐந்தாகின்றது. இவை எல்லாம் ஒன்று சேர்ந்து பத்தாகின்றது. இவை பத்து க்ருத என்ற பெயருடையதாகும். ஆகையால் எல்லா திசைகளிலும் உள்ள அன்னம் தசக்ருதமாகும். அந்த விராட்டே அன்னத்தைப் புசிப்பதாகும். இதன் மூலமாய் எல்லாம் பார்க்கப்படுகிறது. இதை எவன் அறிகிறானோ அதனால் அவன் எல்லாம் அறிகின்றான். அவன் அந்த அன்னத்தை உண்ணுபவனாக ஆகின்றான்.
तस्मादप्यद्येहाददानमश्रद्दधानमयजमानमाहुरासुरो बतेत्यसुराणाꣳ ह्येषोपनिषत्प्रेतस्य शरीरं भिक्षया वसनेनालङ्कारेणेति सꣳस्कुर्वन्त्येतेन ह्यमुं लोकं जेष्यन्तो मन्यन्ते ॥ ५ ॥ மந்த்ரார்த்தம் - ஆகையால் இந்த உலகில் தானம் செய்யாதவனும், (சத் காரியங்களில்) சிரத்தை இல்லாதவனும், யக்ஞம் செய்யாதவனும் ஆகிய புருஷனை சிரேஷ்ட புருஷர்கள். ஹே! அவன் அசுர ஸ்வபாவம் உள்ளவன் என்று கூறுவர். அந்த உபநிஷத் அசுரர்களுடையது. அவர்கள் இறந்த புருஷனின் சரீரத்தை சந்தனம், புஷ்பம், அன்னம், வஸ்திரம் இவைகளால் அலங்கரித்து சேவை செய்வதனால் நாம் பரலோகத்தை அடைவோம் என்று கருதுகின்றனர்.
तस्मादाहुः सोष्यत्यसोष्टेति पुनरुत्पादनमेवास्य तन्मरणमेवावभृथः ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - ஆகையால் கூறுகின்றார்கள் - பிரசவிப்பாள் என்றும் பிரசவித்துவிட்டாள் என்பது இவன் புனர்ஜன்மமாகும். அவ்வாறே மரணம் என்பது அவப்ருதமாகும்.
तस्मादु हैवंविद्यद्यपि चण्डालायोच्छिष्टं प्रयच्छेदात्मनि हैवास्य तद्वैश्वानरे हुतं स्यादिति तदेष श्लोकः ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - ஆகையால் அதை இவ்வாறு அறிந்தவன் சண்டாளனுக்கு உச்சிஷ்டத்தை (எச்சில் செய்யப்பட்டதை) அளித்தாலும் அந்த அவனுடைய அன்னம் வைச்வாநர ஆத்மாவில் ஹவனம் செய்யபட்டதாகிறது. இந்த விஷயத்தில் இந்த மந்திரம்.
तस्माद्वा एतꣳ सेतुं तीर्त्वान्धः सन्ननन्धो भवति विद्धः सन्नविद्धो भवत्युपतापी सन्ननुपतापी भवति तस्माद्वा एतꣳ सेतुं तीर्त्वापि नक्तमहरेवाभिनिष्पद्यते सकृद्विभातो ह्येवैष ब्रह्मलोकः ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - ஆகையால் இந்த சேதுவை அடைந்து புருஷன் குருடன் ஆனாலும் குருடன் இல்லை. காயம்பட்டாலும் காயம் அடைவதில்லை. தாபத்தை (துன்பத்தை) அடைந்தாலும் துன்பப்படுவதில்லை. ஆகையால் இந்த சேதுவை அடைந்து இருள் மயமான இரவும் பகல் ஆகிறது. ஏன்எனில் இந்த பிரஹ்மலோகம் எப்பொழுதும் பிரகாச ரூபமாய் இருக்கிறது.
तस्मिन्निमानि सर्वाणि भूतान्यन्वायत्तानीति विद्यात्तस्य यत्पुरोदयात्स हिङ्कारस्तदस्य पशवोऽन्वायत्तास्तस्मात्ते हिं कुर्वन्ति हिङ्कारभाजिनो ह्येतस्य साम्नः ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அந்த ஆதித்தியனில் இந்த எல்லா ஜகத்தும் அனுகதமாய் உள்ளது என்று இவ்வாறு அறி. எது இந்த ஆதித்யன் உதயத்திற்கு முன் இருந்ததோ அது “हिंकारः” (ஹிம்காரம்). அந்த சூரியனின் எந்த ஹிம்கார ரூபமோ அதில் மிருகங்கள் அனுகதமாய் உள்ளன. இதனால் அவைகள் “हिंकार” (ஹிம்காரத்தை) செய்கின்றன. ஆகையால் அவை இந்த ஆதித்திய ரூப ஸாமத்திற்கு பாத்திரர்களாகின்றன.
तस्मिन्नेतस्मिन्नग्नौ देवा अन्नं जुह्वति तस्या आहुते रेतः सम्भवति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - அந்த இந்த அக்னியில் தேவகணங்கள் (அதிதெய்வங்கள்) அன்னத்தை ஆஹுதி செய்தன. அந்த ஆஹுதியிலிருந்து வீர்யம் உத்பத்தியாகின்றது.
तस्मिन्नेतस्मिन्नग्नौ देवा रेतो जुह्वति तस्या आहुतेर्गर्भः सम्भवति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - அந்த இந்த அக்னியில் தேவகணங்கள் வீர்யத்தை (ரேதஸ்ஸை) ஹவனம் செய்கின்றன. அந்த ஆஹுதியினால் கர்பம் உண்டாகிறது.
तस्मिन्नेतस्मिन्नग्नौ देवा वर्षं जुह्वति तस्या आहुतेरन्नं सम्भवति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - அந்த இந்த அக்னியில் தேவகணங்கள் மழையை ஆஹுதி செய்தன. அந்த ஆஹுதியால் அன்னம் உண்டாகிறது.
तस्मिन्नेतस्मिन्नग्नौ देवाः श्रद्धां जुह्वति तस्या आहुतेः सोमो राजा सम्भवति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - அந்த இந்த (த்யுலோகரூப) அக்னியில் தேவகணங்கள் சிரத்தையாக ஹவனம் செய்கின்றனர். இந்த ஆஹுதியினால் சோமராஜா உத்பத்தி ஆகிறார்.
तस्मिन्नेतस्मिन्नग्नौ देवाः सोमं राजानं जुह्वति तस्या आहुतेर्वर्षं सम्भवति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - அந்த அக்னியில் தேவகணங்கள் (அதிதெய்வங்கள்) ராஜாவாகிய சோமத்தை ஆஹுதி செய்கின்றன. இந்த ஆஹுதியினால் மழை பெய்கின்றது.
तस्मिन्यावत्सम्पातमुषित्वाथैतमेवाध्वानं पुनर्निवर्तन्ते यथेतमाकाशमाकाशाद्वायुं वायुर्भूत्वा धूमो भवति धूमो भूत्वाभ्रं भवति ॥ ५ ॥ மந்த்ரார்த்தம் - அதில் கர்மங்கள் முடிந்தவுடன் (க்ஷயமானபின்) எந்த மார்க்கத்தில் சென்றதோ அதே மார்க்கத்தில் திரும்புகிறான். அது முதலில் ஆகாசத்தை அடைந்து அந்த ஆகாசத்தால் வாயுவை அடைகிறது. அது வாயுவாகி தூமம் (புகை) ஆகிறது. அது தூமமாகி மழை மேகமாகிறது.
तस्मै श्वा श्वेतः प्रादुर्बभूव तमन्ये श्वान उपसमेत्योचुरन्नं नो भगवानागायत्वशनायामवा इति ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அவர் சமீபம் ஒரு வெள்ளைநிற நாய் வந்தது. அதற்குபின் அவரின் சமீபம் மற்ற நாய்களும் வந்து இவ்வாறு கூறின- பகவன்! தாங்கள் எங்களின் அன்னத்திற்காக ஆகானம் செய்ய வேண்டும். நாங்கள் மிகவும் பசியுடன் இருக்கின்றோம் என்று, வெள்ளை நாயிடம் கூறின.
तस्य क्व मूलꣳ स्यादन्यत्राद्भ्योऽद्भिः सोम्य शुङ्गेन तेजो मूलमन्विच्छ तेजसा सोम्य शुङ्गेन सन्मूलमन्विच्छ सन्मूलाः सोम्येमाः सर्वाः प्रजाः सदायतनाः सत्प्रतिष्ठा यथा तु खलु सोम्येमास्तिस्रो देवताः पुरुषं प्राप्य त्रिवृत्त्रिवृदेकैका भवति तदुक्तं पुरस्तादेव भवत्यस्य सोम्य पुरुषस्य प्रयतो वाङ्मनसि सम्पद्यते मनः प्राणे प्राणस्तेजसि तेजः परस्यां देवतायाम् ॥ ६ ॥ மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! அதற்கு (ஜலத்தின் பரிணாம ரூபமான சரீரத்திற்கு) ஜலத்தைத் தவிர எதுதான் மூலம் ஆக முடியும்? ஹே சோம்ய! ஜல ரூபமான முளையினால் தேஜோரூபமான ரூபத்தின் மூலத்தை தேடு. ஹே சோம்ய! தோஜோ ரூபமான முளையினால் சத்ரூப மூலத்தைத் தேடு ஹே சோம்ய! அது இந்த எல்லா பிரஜைகளின் சத் மூலத்தையும் அவ்வாறே சத்ரூப ஆயதனம் மேலும் சத்ரூப பிரதிஷ்டையை (லய ஸ்தானத்தை) உடையது. ஹே சோம்ய! இவ்வாறு இந்த மூன்று தேவதைகள் புருஷனை அடைந்து அவைகளில் ஒவ்வொன்றும் த்ரிவிருத், த்ரிவிருத் ஆகின்றது. (மும்மூன்றாக ஆகிறது.) இதை நான் முன்பே கூறியுள்ளேன். ஹே சோம்ய! மரணத்தை அடையும் இந்த புருஷனின் வாக் மனதில் லீனமாகிறது. அவ்வாறே மனம் பிராணனில் லீனமாகின்றது. பிராணன் தேஜஸ்ஸில் மேலும் தேஜஸ் பரதேவதைகள் இடத்தில் லீனமாகின்றது.
तस्य क्व मूलꣳ स्यादन्यत्रान्नादेवमेव खलु सोम्यान्नेन शुङ्गेनापो मूलमन्विच्छद्भिः सोम्य शुङ्गेन तेजो मूलमन्विच्छ तेजसा सोम्य शुङ्गेन सन्मूलमन्विच्छ सन्मूलाः सोम्येमाः सर्वाः प्रजाः सदायतनाः सत्प्रतिष्ठाः ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - (இந்த உடம்பு) அன்னத்தை தவிர்த்து அதற்கு மூலம் வேறு எதுவாக இருக்கும்? இவ்வாறு ஹே சோம்ய! நீ அன்னரூப முளையின் மூலமாக ஜலரூப மூலத்தைத் தேடவேண்டும். மேலும் ஹே சோம்ய! ஜலரூப முளையின் வாயிலாக தேஜோரூப மூலத்தைத் தேடவேண்டும். அவ்வாறே தேஜோரூப மூலத்தின் மூலமாக சத்ரூப மூலத்தை அறியவேண்டும். ஹே சோம்ய! இவ்வாறு அது எல்லா ஜீவன்களுக்கும் சத் மூலமாகும். அவ்வாறு சத்தே இவைகளின் ஆஸ்ரயமும் பிரதிஷ்டாவும் ஆகும்.
तस्य प्राची दिग्जुहूर्नाम सहमाना नाम दक्षिणा राज्ञी नाम प्रतीची सुभूता नामोदीची तासां वायुर्वत्सः स य एतमेवं वायुं दिशां वत्सं वेद न पुत्ररोदं रोदिति सोऽहमेतमेवं वायुं दिशां वत्सं वेद मा पुत्ररोदं रुदम् ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அந்த பெட்டியின் (கோசத்தின்) கிழக்கு திசை “ஜீஹீ” என்ற பெயர் உடையது. தக்ஷிண திசைக்கு “ஸஹமானா” என்ற பெயர். மேற்கு திசை “ராக்ஞீ” என்ற பெயர் உடையது. வடக்கு திசை “சுபூதா” (सुभूता) என்ற பெயர் உடையது ஆகும். இந்த திசைகளுக்கு குழந்தை வாயுவாகும். அதை எவர் இவ்வாறு வாயுவை திசைகளின் குழந்தை ரூபமாக அறிகின்றனரோ அவர் புத்திரனைக் குறித்து அழமாட்டான். அதை நான் இவ்வாறு வாயுவை திசைகளின் குழந்தை ரூபமாய் அறிந்திருக்கிறேன். ஆகையால் நான் புத்திரனின் காரணமாக அழமாட்டேன்.
तस्य यथा कप्यासं पुण्डरीकमेवमक्षिणी तस्योदिति नाम स एष सर्वेभ्यः पाप्मभ्य उदित उदेति ह वै सर्वेभ्यः पाप्मभ्यो य एवं वेद ॥ ७ ॥ மந்த்ரார்த்தம் - குரங்கின் உட்காரும் இடத்தில் உள்ளது போன்ற சிகப்பு நிறமுடைய தாமரை போன்று அதற்கு இரண்டு கண்கள். அதற்கு “उत्” (உத்) என்ற பெயர். ஏன்எனில் எல்லா பாபங்களைக் காட்டிலும் மேலே சென்றுவிட்டது. எவன் ஒருவன் இவ்வாறு அறிகிறானோ அவன் நிச்சயமாக எல்லா பாபங்களில் இருந்தும் மேலே கிழம்புகிறான், (கடக்கிறான் என்பது பொருள்).
तस्य यथाभिनहनं प्रमुच्य प्रब्रूयादेतां दिशं गन्धारा एतां दिशं व्रजेति स ग्रामाद्ग्रामं पृच्छन्पण्डितो मेधावी गन्धारानेवोपसम्पद्येतैवमेवेहाचार्यवान्पुरुषो वेद तस्य तावदेव चिरं यावन्न विमोक्ष्येऽथ सम्पत्स्य इति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - அந்த புருஷனுடைய கண் கட்டை அவிழ்த்துவிட்டு ஏதோ இரக்கமுடைய ஒருவன் கூறினான். கந்தார தேசம் இந்த திசையில் இருக்கிறது. ஆகையால் இந்த திசையில் செல் என்றவுடன் அந்த புத்திசாலி புரிந்துகொண்டு ஒவ்வொரு கிராமமாக தேசத்தை அடைந்தான். இவ்வாறு இந்த உலகத்தில் ஆச்சாரியரை (குருவை) உடைய புருஷனே (சத்தை) அறிகிறான். எதுவரை மோக்ஷம் அடைவதில் தாமதம் ஏற்படுகிறதோ அதுவரை தேஹ சம்பந்தத்திலிருந்து விடுபடுவதில்லை. அதன்பின் அதுவாகவே (பிரஹ்மமாகவே) ஆகிறான்.
तस्य ये प्राञ्चो रश्मयस्ता एवास्य प्राच्यो मधुनाड्यः । ऋच एव मधुकृत ऋग्वेद एव पुष्पं ता अमृता आपस्ता वा एता ऋचः ॥ २ ॥ एतमृग्वेदमभ्यतपꣳस्तस्याभितप्तस्य यशस्तेज इन्द्रियं वीर्यमन्नाद्यं रसोऽजायत ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - அந்த ஆதித்யனின் கிழக்கு திசையின் கிரணங்கள் இதன் (அந்தரிக்ஷம் என்னும் குறுக்கு மூங்கில் கம்புவின்) கிழக்கு திசையில் உள்ள துளையாகும். ரிக்கே தேன் ஈ. ரிக்வேதம் புஷ்பம், அந்த சோமம் முதலியவை அம்ருதமே ஜலம். அந்த இந்த ரிக்கே (ரூப தேனீக்களே) இந்த ரிக்வேதத்தை தபிக்கச்செய்தது. அந்த தபிக்கப்பட்ட ரிக்வேதத்திலிருந்து புகழ், தேஜஸ், வீர்யம், மேலும் சாப்பிடத்தகுந்த அன்னரூப ரசம் உத்பன்னமானது.
तस्य ह वा एतस्य हृदयस्य पञ्च देवसुषयः स योऽस्य प्राङ्सुषिः स प्राणस्तच्चक्षुः स आदित्यस्तदेतत्तेजोऽन्नाद्यमित्युपासीत तेजस्व्यन्नादो भवति य एवं वेद ॥ १ ॥மந்த்ரார்த்தம் - அந்த இந்த பிரசித்தமான ஹிருதயத்திற்கு ஐந்து தேவதைகள் காக்கும் வாயில்கள் உள்ளன. இதன் கிழக்கு திசையில் உள்ள வாயில் பிராணன். அதுவே சக்ஷீ, அது ஆதித்யன் ஆகும். அவைகள் தேஜஸ், அன்னாத்யம் ஆகும் என்று இவ்வாறு உபாசனை செய்யவேண்டும். எவன் இவ்வாறு அறிகிறானோ (உபாசனை செய்கிறானோ) அவன் தேஜஸ்வியாகவும், அன்னத்தின் போக்தாவாகவும் ஆகின்றான்.
तस्य ह वा एतस्यात्मनो वैश्वानरस्य मूर्धैव सुतेजाश्चक्षुर्विश्वरूपः प्राणः पृथग्वर्त्मात्मा सन्देहो बहुलो बस्तिरेव रयिः पृथिव्येव पादावुर एव वेदिर्लोमानि बर्हिर्हृदयं गार्हपत्यो मनोऽन्वाहार्यपचन आस्यमाहवनीयः ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - அந்த இந்த வைஷ்வாநர ஆத்மாவின் சிரஸ் “सुतेजा” (ஸுதேஜா - த்யுலோகம்) ஆகும். சக்ஷு “विश्वरूपम्” (விச்வரூபம் - சூரியன்) ஆகும். பிராணன் “पृथग्वर्त्मा” (பிருதக்வர்த்மா-வாயு) ஆகும். தேஹத்தின் நடுப்பாகம் “बहुल” (பஹுலம் -ஆகாசம்) ஆடும், சிறு நீர்ப்பை “रयि” (ரயி - ஜலம்) ஆகும். பிருதிவீ இரண்டு கால்கள் ஆகும். மார்பு யாககுண்டமாகும். மார்பில் உள்ள முடி தர்பைப்புல், கார்ஹபத்ய அக்னி ஹ்ருதயம், மனம் தக்ஷிணாக்னி, மேலும் முகம் ஆஹவநீயாக்னியாகும்.
तस्य ह वा एतस्यैवं पश्यत एवं मन्वानस्यैवं विजानत आत्मतः प्राण आत्मत आशात्मतः स्मर आत्मत आकाश आत्मतस्तेज आत्मत आप आत्मत आविर्भावतिरोभावावात्मतोऽन्नमात्मतो बलमात्मतो विज्ञानमात्मतो ध्यानमात्मतश्चित्तमात्मतः सङ्कल्प आत्मतो मन आत्मतो वागात्मतो नामात्मतो मन्त्रा आत्मतः कर्माण्यात्मत एवेदं सर्वमिति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - அந்த இவ்வாறு பார்ப்பவன், இவ்வாறு மனனம் செய்பவன் மேலும் இவ்வாறு அறிபவனுமாகிய இந்த வித்வானுக்கு ஆத்மாவிலிருந்து பிராணன், ஆத்மாவில் இருந்து ஆசை, ஆத்மாவிலிருந்து ஸ்மிருதி, ஆத்மாவிலிருந்து ஆகாயம், ஆத்மாவிலிருந்து தேஜஸ், ஆத்மாவிலுருந்து ஜலம், ஆத்மாவிலிருந்து வெளிப்படுவதும் (ஆவிர்பாவம்) மறைவதும் (திரோபாவம்), ஆத்மாவிலிருந்தே அன்னம், ஆத்மாவிலிருந்தே பலம், ஆத்மாவிலிருந்தே விக்ஞானம், ஆத்மாவிலிருந்தே த்யானம், ஆத்மாவிலிருந்தே சித்தம், ஆத்மாவிலிருந்தே சங்கல்பம், ஆத்மாவிலிருந்தே மனம், ஆத்மாவிலிருந்தே வாக், ஆத்மாவிலிருந்தே நாமம், ஆத்மாவிலிருந்தே மந்திரம், ஆத்மாவிலிருந்தே கர்மம் மேலும் ஆத்மாவில் இருந்தே இவை எல்லாம் உண்டாயிற்று.
तस्यर्क्च साम च गेष्णौ तस्मादुद्गीथस्तस्मात्त्वेवोद्गातैतस्य हि गाता स एष ये चामुष्मात्पराञ्चो लोकास्तेषां चेष्टे देवकामानां चेत्यधिदैवतम् ॥ ८ ॥மந்த்ரார்த்தம் - அந்த தேவனுக்கு ரிக், சாமம் ஆகியவை இரண்டு பக்ஷங்களாகும். அதனால் அந்த தேவன் உத்கீத்தரூபன். மேலும் இதனால் (இதை கானம் செய்வதால்) உத்காதா எனப்படுகிறான். ஏன் எனில் அந்த இதை “उत्” (உத்) கானம் செய்கிறவனாகின்றான். அந்த இந்த உத் நாமம் உடைய தேவன் இந்த (ஆதித்ய லோகத்தைக்காட்டிலும்) மேலே உள்ள லோகமாகும். மேலும் தேவதைகளின் காமனைகளையும் ஆளுகின்றார். இது அதிதைவத உத்கீத உபாசனையாகும்.
तस्या ह मुखमुपोद्गृह्णन्नुवाचाजहारेमाः शूद्रानेनैव मुखेनालापयिष्यथा इति ते हैते रैक्वपर्णा नाम महावृषेषु यत्रास्मा उवास स तस्मै होवाच ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - அப்பொழுது அவர் (ராஜ புத்திரியின்) முகத்தை பார்த்தவாறே ஹே சூத்ர! இந்த பசுக்கள் இவற்றையெல்லாம் கொண்டுவந்தாய். (சரிதான்) இந்த வித்யா கிரஹணத்திற்கான காரணமாகிய இவன் மூலமாகவே என்னுடன் பேசமுடிகிறது. அவ்வாறே எங்கு ரைக்வர் எங்கு வசிக்கின்றாரோ அந்த கிரமம் முழுவதும் அவருடைய பெயரால் விளங்கும் என்று ராஜா அனைத்தையும் அவருக்காக சமர்ப்பித்தார். அதற்கு ரைக்வர் கூறினார்.
तस्यैषा दृष्टिर्यत्रैतदस्मिञ्छरीरे सꣳस्पर्शेनोष्णिमानं विजानाति तस्यैषा श्रुतिर्यत्रैतत्कर्णावपिगृह्य निनदमिव नदथुरिवाग्नेरिव ज्वलत उपशृणोति तदेतद्दृष्टं च श्रुतं चेत्युपासीत चक्षुष्यः श्रुतो भवति य एवं वेद य एवं वेद ॥ ८ ॥மந்த்ரார்த்தம் - அந்த இந்த (ஹிருதயத்தில் இருக்கும் புருஷனின்) தர்சனத்திற்கான யோக்கியம் எப்பொழுது இந்த சரீரத்தில் ஸ்பர்ச ரூபமாக உஷ்ணத்தன்மையை உணர்கிறானோ அப்பொழுது ஏற்படுகிறது. அவ்வாறே எப்பொழுது காதுகளை மூடி உள்ளே கேட்கும் ரதம் நகர்வது போலும், மாடு கத்துவது போலும் சிரவணம் செய்கிறானோ அப்பொழுது அது ஸ்ரவணயோக்கிய உபாயமாகிறது. ஆகையால் அந்த ஜ்யோதியை பார்க்க முடியும், கேட்க முடியும் என்று உபாசனை செய்யவேண்டும். எந்த உபாசகன் இவ்வாறு அறிகிறானோ (உபாசிக்கின்றானோ காண்பதற்கு மற்றவர்கள் விரும்புபவனாகவும், புகழ்மிக்கவனாகவும் ஆவான்.)
ता आप ऐक्षन्त बह्व्यः स्याम प्रजायेमहीति ता अन्नमसृजन्त तस्माद्यत्र क्व च वर्षति तदेव भूयिष्ठमन्नं भवत्यद्भ्य एव तदध्यन्नाद्यं जायते ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - அந்த ஜலம் ஈக்ஷணம் செய்தது - நான் அநேகமாக ஆவேனாக - அநேக ரூபமாக உத்பன்னம் ஆவேனாக என்று அன்னத்தை சிருஷ்டித்தது. இதனால் எங்கு மழை பெய்கிறதோ அங்கு அதிகமாக அன்னமாகிறது. உண்ணக்கூடிய உணவு ஜலத்தினால் உத்பன்னமாகிறது.
तानि वा एतानि यजूꣳष्येतं यजुर्वेदमभ्यतपꣳस्तस्याभितप्तस्य यशस्तेज इन्द्रियं वीर्यमन्नाद्यꣳ रसोऽजायत ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அந்த இந்த யஜுர் மந்திரங்களால் இந்த யஜுர் வேதத்தை தக்ஷித்து. அந்த தஹிக்கப்பட்ட யஜுர் வேதத்திலிருந்து புகழ், தேஜஸ், இந்திரியம், வீர்யம், மேலும் அன்னாத்ய ரூப ரசம் உண்டாயிற்று. இந்த ரசம் விசேஷ ரூபமாக சென்று ஆதித்தியனின் (தெற்கு) பாகத்தை ஆஸ்ரயித்தது. அந்த எந்த ஆதித்யனின் சுக்ல (வெண்மை) ரூபமோ அதுவே இது.
तानि ह वा एतानि चित्तैकायनानि चित्तात्मानि चित्ते प्रतिष्ठितानि तस्माद्यद्यपि बहुविदचित्तो भवति नायमस्तीत्येवैनमाहुर्यदयं वेद यद्वा अयं विद्वान्नेत्थमचित्तः स्यादित्यथ यद्यल्पविच्चित्तवान्भवति तस्मा एवोत शुश्रूषन्ते चित्तं ह्येवैषामेकायनं चित्तमात्मा चित्तं प्रतिष्ठा चित्तमुपास्स्वेति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - அந்த சங்கல்பம் முதலியவைகள் அனைத்தும் சித்தத்தில் (புத்தியில்) ஒன்றாய் லயமாகும் ஸ்தானமாகும். சித்தமயமாக சித்தத்தில் பிரதிஷ்டித்திருக்கின்றன. (நிலைபெற்றுள்ளன). ஆகையால் ஒரு மனிதன் மிகுந்த அறிவாளியாக இருந்தாலும் அவன் அசித்தாய் இருந்தால் உலகத்தோர் அவனைப்பற்றி இவ்வாறு கூறுவார்.- எவ்வளவு அறிவு உள்ளவனாக தோன்றினாலும் பிரயோஜனமற்றவனே. அவன் உண்மையில் நன்றாக கற்றவனாக இருந்தால் இவ்வாறு அசித்தாக (அறியாத மூடனாக) இருக்கமாட்டான். அதற்கு மாறாக ஒருவன் சிறிது அறிந்திருந்தாலும் சித்தம் (புத்தி) உடையவனாக இருந்தால் அவனிடம் இருந்து சிரவணம் செய்ய விரும்புகின்றனர். ஆகையால் சித்தமே (புத்தியே) இவைகளின் ஒரே ஆஸ்ரயமாகும். சித்தமே ஆத்மா. மேலும் சித்தமே பிரதிஷ்டையாகும் (நிலைபெறும் ஸ்தானமாகும்) நீ அந்த சித்தத்தை உபாசனை செய்.
तानि ह वा एतानि त्रीण्यक्षराणि सतीयमिति तद्यत्सत्तदमृतमथ यत्ति तन्मर्त्यमथ यद्यं तेनोभे यच्छति यदनेनोभे यच्छति तस्माद्यमहरहर्वा एवंवित्स्वर्गं लोकमेति ॥ ५ ॥ மந்த்ரார்த்தம் - அவைகள் “सकारः” சகாரம், “तकारः” தகாரம், மேலும் “यम्” யம் என்று மூன்று அக்ஷரங்கள் (எழுத்துக்கள்). “சகாரம்” என்பது அம்ருதம். “தகாரம்” என்பது அழிவு உடையது (मर्त्यम्) மேலும் “யம்” அந்த இரண்டையும் கட்டுப்படுத்துகிறது. (நியமனம் செய்கிறது). ஏன் எனில் அந்த இரண்டையும் நியமனம் செய்வதால் “யம்” (यम्) என்று இவ்வாறு அறிபவன் தினமும் ஸ்வர்க்க லோகத்திற்கு செல்கின்றான்.
तानि ह वा एतानि सङ्कल्पैकायनानि सङ्कल्पात्मकानि सङ्कल्पे प्रतिष्ठितानि समक्लृप्तां द्यावापृथिवी समकल्पेतां वायुश्चाकाशं च समकल्पन्तापश्च तेजश्च तेषाꣳ सङ्क्लृत्यै वर्षꣳ सङ्कल्पते वर्षस्य सङ्क्लृप्त्या अन्नꣳ सङ्कल्पतेऽन्नस्य सङ्क्लृत्यै प्राणाः सङ्कल्पन्ते प्राणानाꣳ सङ्क्लृत्यै मन्त्राः सङ्कल्पन्ते मन्त्राणाꣳ सङ्क्लृत्यै कर्माणि सङ्कल्पन्ते कर्मणाꣳ सङ्क्लृत्यै लोकः सङ्कल्पते लोकस्य सङ्क्लृत्यै सर्वꣳ सङ्कल्पते स एष सङ्कल्पः सङ्कल्पमुपास्स्वेति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - எந்த அந்த (மனம் முதலியவைகள்) இவை எல்லாம் ஒரே சங்கல்ப ரூபமான லயஸ்தானத்தை உடையதும், சங்கல்பமயமானதும், சங்கல்பத்தில் நிலைபெற்றுள்ளன. மேல் உலகமும், இவ்வுலகமும் சங்கல்பம் செய்தன. வாயுவும், ஆகாசமும் சங்கல்பம் செய்தன. ஜலமும், தேஜஸும் சங்கல்பம் செய்தன. இவைகளின் சங்கல்பத்தால் மழை சங்கல்பித்தது. விருஷ்டி சங்கல்பம் செய்ததால் அன்னம் சங்கல்பம் செய்தது. அன்னத்தின் சங்கல்பத்தால் பிராணன் உண்டாயிற்று. பிராணன் சங்கல்பத்தால் மந்திரம் உண்டாயிற்று மந்திரத்தின் சங்கல்பத்தால் கர்மம் உண்டாயிற்று. ஏன்எனில் சங்கல்பத்திற்காக லோகம் (பலம்) சாமர்த்தியம் உடையதாகிறது. மேலும் லோகங்களின் சங்கல்பத்திற்காக எல்லாம் உண்டாகிறது. இவ்வாறு சங்கல்பம் உள்ளது. நீ சங்கல்பத்தை உபாசனை செய்.
तानु तत्र मृत्युर्यथा मत्स्यमुदके परिपश्येदेवं पर्यपश्यदृचि साम्नि यजुषि । ते नु विदित्वोर्ध्वा ऋचः साम्नो यजुषः स्वरमेव प्राविशन् ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - எவ்வாறு ஜலத்தில் மீன்கள் காணப்படுகிறதோ அவ்வாறு ரிக், சாம, யஜுர் சம்பந்தமான கர்மங்களில் ஈடுபட்ட அந்த தேவர்களை மிருத்யுவானது பார்த்துவிட்டது. இதை அறிந்தவுடன் அந்த தேவர்கள் ரிக், சாம, மேலும் யஜீஸ் சம்பந்தமான கர்மங்களில் இருந்து நிவிர்த்தியாகி (விடுபட்டு) ஸ்வரத்தில் பிரவேசித்தார்கள்.
तान्यभ्यतपत्तेभ्योऽभितप्तेभ्य ओङ्कारः सम्प्रास्रवत्तद्यथा शङ्कुना सर्वाणि पर्णानि सन्तृण्णान्येवमोङ्कारेण सर्वा वाक्सन्तृण्णोङ्कार एवेदं सर्वमोङ्कार एवेदं सर्वम् ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - (அதன்பின் பிரஜாபதி) அந்த அக்ஷரங்களைத் தியானம் செய்தார் அந்த தியானம் செய்யப்பட்ட அக்ஷரங்களில் இருந்து ஓம்காரம் உண்டாயிற்று. எவ்வாறு நாளங்களால் எல்லா இலைகளும் வியாபித்து உள்ளதோ அவ்வாறு ஓம்காரத்தால் எல்லா வாக்குகளும் வியாபித்து உள்ளது. ஓம்காரமே எது எல்லாம் உண்டோ அவையாவும் ஓம்காரமே எவை எல்லாம் உண்டோ அவையாவும்.
तान्होवाच प्रातर्वः प्रतिवक्तास्मीति ते ह समित्पाणयः पूर्वाह्णे प्रतिचक्रमिरे तान्हानुपनीयैवैतदुवाच ॥ ७ ॥ மந்த்ரார்த்தம் - அவர் (ராஜா) கூறினார் - சரிதான். நான் உங்களுக்கு நாளைக் காலையில் பதில் அளிக்கிறேன் என்றார். மறுநாள் காலையில் சமித்துகளுடன் ராஜாவிடம் சென்றனர். அவர்களுக்கு உபநயனம் செய்யாமலேயே ராஜாவானவர் அந்த வித்யையை உபதேசம் செய்தார்.
तान्होवाचाश्वपतिर्वै भगवन्तोऽयं कैकेयः सम्प्रतीममात्मानं वैश्वानरमध्येति तं हन्ताभ्यागच्छामेति तꣳ हाभ्याजग्मुः ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - அவர் அவர்களிடம் கூறினார் - ஹே பூஜைக்குறியவர்களே! இப்பொழுது கேகயகுமாரர் அச்வபதி இந்த வைச்வானரர் என்ற ஆத்மாவை நன்கு அறிந்தவர். வாருங்கள் நாம் அவரிடம் செல்லலாம் என்று கூறி எல்லோரும் அவரிடம் சென்றனர்.
तान्होवाचेहैव मा प्रातरुपसमीयातेति तद्ध बको दाल्भ्यो ग्लावो वा मैत्रेयः प्रतिपालयाञ्चकार ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - மற்ற நாய்களிடம் வெள்ளை நாய் கூறிற்று - நீங்கள் நாளைக் காலையில் என்னிடம் வாருங்கள் என்று. அப்பொழுது தால்ப்யன், பகன் அல்லது மைத்திரேயன் கிலாவன் என்று அழைக்கப்படுபவரும் மறுநாள் காலையில் எதிர்பார்த்திருந்தார்.
तान्होवाचैते वै खलु यूयं पृथगिवेममात्मानं वैश्वानरं विद्वांसोऽन्नमत्थ यस्त्वेतमेवं प्रादेशमात्रमभिविमानमात्मानं वैश्वानरमुपास्ते स सर्वेषु लोकेषु सर्वेषु भूतेषु सर्वेष्वात्मस्वन्नमत्ति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ராஜா அவரிடம் கூறினார் - நீங்கள் எல்லோரும் வைச்வாநர ஆத்மாவை தனித்தனியாக அறிந்து அன்னத்தை உட்கொள்கின்றீர்கள். ஆனால் நீங்கள் வைச்வாநர ஆத்மாவை எல்லாப் பகுதிகளிலும் (அங்கங்களிலும்- பாகங்களிலும்) முழுமையாக இருப்பவரை நானே அவர் என்று இவ்வாறு அபிமானத்துடன் உபாசனை செய்தால் எல்லா லோகங்களிலும், எல்லாப் பிராணிகளிலும், எல்லா ஆத்மாக்களிலும் அன்னத்தை பக்ஷணம் செய்கின்றான்.
तावानस्य महिमा ततो ज्यायंश्च पूरुषः । पादोऽस्य सर्वा भूतानि त्रिपादस्यामृतं दिवीति ॥ ६ ॥மந்த்ரார்த்தம் - (மேலே கூறப்பட்டதோ) இவ்வளவே இதன் (காயத்ரீ என்னும் பிரஹ்மத்தின்) மஹிமையாகும். அவ்வாறே (நிர்விகார) புருஷன் இதைவிட மிகவும் மேலானவன். எல்லா பிராணிகளும் இதன் ஒருபாதம். மேலும் இதன் (புருஷன் என்னும்) “त्रिपाद” (திரிபாதம் - மூன்று பாதம்) அம்ருத பிரகாசமய ஸ்வாத்மாவில் நிலைபெற்றுள்ளது.
तासां त्रिवृतं त्रिवृतमेकैकां करवाणीति सेयं देवतेमास्तिस्रो देवता अनेनैव जीवेनात्मनानुप्रविश्य नामरूपे व्याकरोत् ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - அவைகளில் ஒவ்வொரு தேவதையையும் மும்மூன்றாக செய்வேன் என்று சிந்தித்து (விசாரம் செய்து) அந்த இந்த தேவதா இந்த ஜீவாத்ம ரூபத்தால் அந்த மூன்று தேவதைகளில் பிரவேசித்து நாம ரூபங்களை வெளிப்படுத்தினார்.
तासां त्रिवृतं त्रिवृतमेकैकामकरोद्यथा तु खलु सोम्येमास्तिस्रो देवतास्त्रिवृत्त्रिवृदेकैका भवति तन्मे विजानीहीति ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - அந்த தேவதை அவைகளில் ஒவ்வொன்றையும் திரிவிருத் திரிவிருத் செய்தது. ஹே சோம்ய! இவ்வாறு மூன்று தேவதைகளையும் ஒவ்வொன்றாக ஆக்கி ஒவ்வொன்றும் திருவிருத்- திருவிருத் ஆகும். அதை என் மூலமாய் அறிவாயாக.
ते यथा तत्र न विवेकं लभन्तेऽमुष्याहं वृक्षस्य रसोऽस्म्यमुष्याहं वृक्षस्य रसोऽस्मीत्येवमेव खलु सोम्येमाः सर्वाः प्रजाः सति सम्पद्य न विदुः सति सम्पद्यामह इति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - எவ்வாறு ரசத்திற்கு தேனில் நான் இந்தப் பிரகாரம் அடைந்தேன் என்ற விவேகம் ஏற்படாதோ அவ்வாறு நான் இந்த மரத்தின் ரசம், நான் இந்த மரத்தின் ரசம் என்று விவேகம் உண்டாகாதோ, ஹே சோம்ய! இவ்வாறு எல்லா பிரஜைகளும் சத்தை அடைந்தும் நாம் சத்தை அடைந்துள்ளோம் என்று அறிவதில்லை.
ते वा एते गुह्या आदेशा एतद्ब्रह्माभ्यतपꣳ स्तस्याभितप्तस्य यशस्तेज इन्द्रियं वीर्यमन्नाद्यꣳ रसोऽजायत ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அந்த இந்த ரஹஸ்யமாக உணர்த்தப்பட்ட (பிரணவம் என்னும்) பிரணவத்தை தஹித்தது. அந்த தஹிக்கப்பட்ட பிரஹ்மத்திலிருந்து யசஸ், புகழ், இந்திரியம், வீர்யம் மேலும் அன்னாத்யரூப ரசம் உண்டாகிறது.
ते वा एते पञ्च ब्रह्मपुरुषाः स्वर्गस्य लोकस्य द्वारपाः स य एतानेवं पञ्च ब्रह्मपुरुषान्स्वर्गस्य लोकस्य द्वारपान्वेदास्य कुले वीरो जायते प्रतिपद्यते स्वर्गं लोकं य एतानेवं पञ्च ब्रह्मपुरुषान्स्वर्गस्य लोकस्य द्वारपान्वेद ॥ ६ ॥மந்த்ரார்த்தம் - எந்த அந்த ஐந்து பிரஹ்ம புருஷர்கள் (தேவதைகள்) ஸ்வர்க்கலோகத்தின் த்வாரபாலகர்கள் (வாயிற்காவலர்கள்). எவர் ஸ்வர்க்க லோகத்தின் துவார பாலகர்களான இந்த ஐந்து பிரஹ்ம புருஷர்களை அறிகிறார்களோ அவர்கள் குலத்தில் வீரன் உண்டாகின்றான். எவர் இவ்வாறு ஸ்வர்க்கலோக த்வார பாலகர்களான இந்த பிரஹ்ம புருஷர்களை அறிகிறாரோ அவர் ஸ்வர்க்க லோகத்தை அடைவர்.
ते वा एते रसानाꣳ रसा वेदा हि रसास्तेषामेते रसास्तानि वा एतान्यमृतानाममृतानि वेदा ह्यमृतास्तेषामेतान्यमृतानि ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - அந்த இந்த (முன்பு கூறிய சிகப்பு முதலிய) நிறங்கள் ரசங்களின் ரசம் (சாரங்களின் சாரம்). வேதமே ரசமாகும். மேலும் நிறங்கள் அவற்றின் ரசம். அவைகளே அம்ருதத்தின் அம்ருதமாகும். வேதமே அம்ருதம். அவைகள் இவற்றின் அம்ருதங்களாகும்.
ते वा एतेऽथर्वाङ्गिरस एतदितिहासपुराणमभ्यतपꣳ स्तस्याभितप्तस्य यशस्तेज इन्द्रियं वीर्यमन्नाद्यꣳ रसोऽजायत ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - அந்த இந்த அதர்வ அங்கிரஸ் மந்திரங்கள் இந்த இதிஹாசம் புராணம் இவைகளை தஹித்தது. அந்த தஹிக்கப்பட்ட (இதிகாசம், புராணரூப) புஷ்பத்திலிருந்து யசஸ், தேஜஸ், இந்திரியம், வீர்யம், அன்னாத்யரூப ரசத்தின் உத்பத்தியாகிறது.
ते ह नासिक्यं प्राणमुद्गीथमुपासाञ्चक्रिरे तꣳ हासुराः पाप्मना विविधुस्तस्मात्तेनोभयं जिघ्रति सुरभि च दुर्गन्धि च पाप्मना ह्येष विद्धः ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - அவர்கள் நாசியில் (மூக்கில்) இருக்கும் பிராணனை உத்கீத ரூபமாய் உபாசனை செய்தார்கள். ஆனால் அசுரர்கள் அதை பாபத்துடன் சேர்த்துவிட்டார்கள். (பாபத்தால் தாக்கப்பட்டதாகிறது) இதனால் அவர்கள் நல்ல வாசனையையும், கெட்ட வாசனையையும் முகர்ந்தார்கள். ஏன் எனில் பாபத்தால் தாக்கப்பட்டதாய் இருக்கிறது.
ते ह प्राणाः प्रजापतिं पितरमेत्योचुर्भगवन्को नः श्रेष्ठ इति तान्होवाच यस्मिन्व उत्क्रान्ते शरीरं पापिष्ठतरमिव दृश्येत स वः श्रेष्ठ इति ॥ ७ ॥ மந்த்ரார்த்தம் - அந்த பிராணன்கள் தங்களுடைய பிதாவான பிரஜாபதியிடம் சென்று இவ்வாறு கூறினார்-ஹே பகவானே! எங்களில் யார் சிறந்தவர்? (श्रेष्द्भः) பிரஜாபதி அவைகளிடம் கூறினார் - உங்களில் எவர் உத்கிரமணம் ஆனபின் (வெளியேறியபின்) சரீரம் மிகவும் நலிவு அடைந்து பிரயோஜனம் அற்றதாகிவிடுகிறதோ அது எதனால் ஏற்படுகிறதோ அதுவே சாலச் சிறந்தது.
ते ह यथैवेदं बहिष्पवमानेन स्तोष्यमाणाः सꣳरब्धाः सर्पन्तीत्येवमाससृपुस्ते ह समुपविश्य हिं चक्रुः ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - அந்த நாய்கள் எவ்வாறு கர்மத்தில் பஹிஷ்பவமான ஸ்தோத்திரத்தால் துதிக்கும் உத்காதா ஒன்றைஒன்று ஸ்பரிசித்தபடி சேர்ந்து நடப்பார்களோ அவ்வாறு நடந்து பின் அங்கு அமர்ந்து “ஹிம்” என்று உச்சரித்தனர். (हिंकारं - ஹிங்காரம் செய்தன.)
ते ह सम्पादयाञ्चक्रुरुद्दालको वै भगवन्तोऽयमारुणिः सम्प्रतीममात्मानं वैश्वानरमध्येति तꣳ हन्ताभ्यागच्छामेति तं हाभ्याजग्मुः ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - அந்த பூஜைக்குரிய மஹான்கள் அருணி புத்திரர் உத்தாலகர் இந்த வைச்வனரை குறித்து அறிந்தவர். ஆகையால் நாம் அவரிடம் செல்வோம் என்று நிச்சயம் செய்தார்கள். இவ்வாறு நிச்சயம் செய்து அவரிடம் சென்றார்கள்.
ते होचुरुपकोसलैषा सोम्य तेऽस्मद्विद्यात्मविद्या चाचार्यस्तु ते गतिं वक्तेत्याजगाम हास्याचार्यस्तमाचार्योऽभ्युवादोपकोसल३ इति ॥ १ ॥மந்த்ரார்த்தம் - அவைகள் (அக்னிகள்) கூறின - உபகோசல! ஹே செளம்ய! அந்த உன்னுடைய வித்யையும் ஆத்மவித்யையும் உனக்கு கூறுவார். ஆச்சாரியர் உனக்கான மார்க்கத்தைக் கூறுவார் என்று. அதன்பின் அவனுடைய ஆச்சாரியர் வந்தார். அவனிடம் ஆச்சாரியர் கூறினார் - உபகோசல! என்று.
ते होचुर्येन हैवार्थेन पुरुषश्चरेत्तं हैव वदेदात्मानमेवेमं वैश्वानरं संप्रत्यध्येषितमेव नो ब्रूहीति ॥ ६ ॥ மந்த்ரார்த்தம் - அவர்கள் கூறினார் - எந்த பிரயோஜனத்திற்காக எந்த புருஷனிடம் செல்கிறானோ அவர் அவனுடைய பிரயோஜனத்திகானதைக் கூறவேண்டும். இப்பொழுது தாங்கள் வைச்வாநர ஆத்மாவை அறிந்திருக்கின்றீார்கள். அதைத் தாங்கள் எங்களுக்கு விளக்கியருள வேண்டும்.
तेजसः सोम्याश्यमानस्य योऽणिमा स ऊर्ध्वः समुदीषति सा वाग्भवति ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! உண்ணப்பட்ட தேஜஸ்ஸின் சூக்ஷ்ம பாகமோ அது மேலே கிளம்பி வந்து வாக் ஆக ஆகிறது.
तेजो वावाद्भ्यो भूयस्तद्वा एतद्वायुमागृह्याकाशमभितपति तदाहुर्निशोचति नितपति वर्षिष्यति वा इति तेज एव तत्पूर्वं दर्शयित्वाथापः सृजते तदेतदूर्ध्वाभिश्च तिरश्चीभिश्च विद्युद्भिराह्रादाश्चरन्ति तस्मादाहुर्विद्योतते स्तनयति वर्षिष्यति वा इति तेज एव तत्पूर्वं दर्शयित्वाथापः सृजते तेज उपास्स्वेति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - தேஜஸ் ஜலத்தைக்காட்டிலும் சிறந்தது. அந்த தேஜஸ் எப்பொழுது வாயுவானது சலனமற்று இருக்கிறதோ அப்பொழுது ஆகாசத்தை எல்லா பக்கங்களில் இருந்தும் தபிக்கச்செய்கிறது (சுடுகிறது) என்பதால் உலகில் இவ்வாறு கூறுகின்றனர்- கர்ப்பம் அடைகிறது, மிகுந்த தாபம் (சூடு) உள்ளதாய் இருக்கிறது. ஆகையால் மழைபெய்யும் என்பர். இவ்வாறு முதலில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு பின்னர் ஜலத்தை உத்பத்தி செய்கிறது. அந்த இந்த தேஜஸ் மேல்நோக்கியும், குருக்கேயும் சென்று மின்னல் உடனும் இடியுடனும் மழைபெய்கிறது. இதனால் கூறுகின்றனர் மின்னல் மின்னுகிறது, இடி இடிக்கிறது, மழை பெய்யும் என்று. இவ்வாறு தேஜஸ் முதலில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு அதன்பின் ஜலத்தை உத்பத்தி செய்கின்றது. ஆகையால் தேஜசை உபாசனைசெய் என்று.
तेजोऽशितं त्रेधा विधीयते तस्य यः स्थविष्ठो धातुस्तदस्थि भवति यो मध्यमः स मज्जा योऽणिष्ठः सा वाक् ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - அருந்திய தேஜஸ் (நெய் முதலியவை) மூன்று பாகங்களாக ஆகிறது. அவைகளில் எந்த ஸ்தூல பாகம் உண்டோ அது எலும்புகளாக ஆகிறது. எந்த மத்ய பாகமோ அது மஜ்ஜை ஆகிறது. எது மிக சூக்ஷ்மமான பாகமோ அது வாக் ஆகிறது.
तेन तꣳ ह बको दाल्भ्यो विदाञ्चकार । स ह नैमिशीयानामुद्गाता बभूव स ह स्मैभ्यः कामानागायति ॥ १३ ॥ மந்த்ரார்த்தம் - ஆகையால் தல்பகரின் புத்திரர் பகர் (முன்பு கூறியவாறு) அதை அறிந்தார். (அதாவது முன்பு கூறியவாறு பிராணனை உபாசனை செய்தார்). அவர் நைமிஷாரண்யத்தில் யக்ஞம் செய்பவர்களுக்கு உத்காதா ஆனார். மேலும் அவர் அவர்களின் காமனைகளின் பூர்த்திக்காக உத்கானம் செய்தார்.
तेन तꣳ ह बृहस्पतिरुद्गीथमुपासाञ्चक्र एतमु एव बृहस्पतिं मन्यन्ते वाग्घि बृहती तस्या एष पतिः ॥ ११ ॥ மந்த்ரார்த்தம் - இதனால் பிருஹஸ்பதி (பிராணனை) அதை உத்கீத ரூபமாய் உபாசனை செய்தார். உலகில் இந்த பிராணனை பிருஹஸ்பதி என்று கருதுகின்றனர். ஏன் எனில் வாக்கே மேலானது (बृहती முதன்மையானது) மேலும் அதனுடைய பதியும் ஆகும்.
तेन तꣳ हायास्य उद्गीथमुपासाञ्चक्र एतमु एवायास्यं मन्यन्त आस्याद्यदयते ॥ १२ ॥மந்த்ரார்த்தம் - இதனால் ஆஸ்ாஸ்யர் இதனை (பிராணனை) உத்கீத திருஷ்டியால் உபாசனை செய்தார். உலகில் இந்த பிராணனை ஆயாஸ்ய உபாசனை என்கின்றனர். ஏன் எனில் இது வாய் வழியாக வெளியேறுவதால் ஆகும்.
तेनेयं त्रयीविद्या वर्तते ओमित्याश्रावयत्योमिति शं सत्योमित्युद्गायत्येतस्यैवाक्षरस्यापचित्यै महिम्ना रसेन ॥ ९ ॥ மந்த்ரார்த்தம் - இந்த அக்ஷரத்தினால் திரிவித்யா (ரிக், யஜூர், சாம வேதங்கள்) பிரவிர்த்திக்கின்றது. “ஓம்” என்று கூறிக்கொண்டு (அத்வர்யு) ஆச்ரவண கர்மம் செய்கிறார். ஓம் என்று கூறிக்கொண்டு ஸ்துதிக்கிறார். ஓம் என்று கூறிக்கொண்டு உத்காதா உத்கானம் (பாடுவது) செய்கிறார். இந்த அக்ஷரத்தின் (பரமாத்மாவின்) பூஜைக்காகவே. (எல்லா வைதிக கர்மங்களும்) ஆகும். அவ்வாறே இதன் மஹிமை, ரசம் (நெல், பார்லி முதலிய ஹவிஸ்) மூலமாய் (எல்லா கர்மங்களும் பிரவிர்த்திக்கிறது).
तेनोभौ कुरुतो यश्चैतदेवं वेद यश्च न वेद । नाना तु विद्या चाविद्या च यदेव विद्यया करोति श्रद्धयोपनिषदा तदेव वीर्यवत्तरं भवतीति खल्वेतस्यैवाक्षरस्योपव्याख्यानं भवति ॥ १० ॥ மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இந்த அக்ஷரத்தை இவ்வாறு அறிந்தோ அறியாமலோ இந்த அக்ஷரத்தின் மூலமாய் கர்மம் செய்கின்றான். ஆனால் வித்யா, அவித்யா ஆகிய இரண்டும் வெவ்வேறு பலன்களை அளிப்பவை. எந்த கர்மம் வித்யா, சிரத்தை, யோகத்தினுடன் சேர்ந்து செய்யப்படுகிறதோ அது மிகப் பிரபலமானதாகும் என்று இவ்வாறு நிச்சயம் ஆகும் என்று இவை எல்லாம் அக்ஷரத்தின் வியாக்கியானம் ஆகும்.
तेभ्यो ह प्राप्तेभ्यः पृथगर्हाणि कारयाञ्चकार स ह प्रातः सञ्जिहान उवाच न मे स्तेनो जनपदे न कदर्यो न मद्यपो नानाहिताग्निर्नाविद्वान्न स्वैरी स्वैरिणी कुतोयक्ष्यमाणो वै भगवन्तोऽहमस्मि यावदेकैकस्मा ऋत्विजे धनं दास्यामि तावद्भगवद्भ्यो दास्यामि वसन्तु भगवन्त इति ॥ ५ ॥ மந்த்ரார்த்தம் - அவரிடம் வந்தவர்களை ராஜாவானவர் தனித்தனியாக சத்காரியம் செய்து உபசரித்தார். காலையில் அவர் கூறினார்- என்னுடைய ராஜ்யத்தில் திருடர்கள் இல்லை, கஞ்சத்தன்மை உடையவர் இல்லை, ஞானம் அற்றவர் இல்லை, குடிகாரன் இல்லை, அக்னி காரியம் செய்யாதவன் இல்லை, நடத்தை கெட்டவன் இல்லை. ஆகையால் நடத்தை கெட்டவள் எங்கே இருப்பாள்? ஹே புண்யவான்களே! நான் யாகம் செய்யப்போகின்றேன் அப்பொழுது நான் ஒவ்வொரு ரித்விக்கிற்கும் எவ்வளவு தனம் அளிக்கப்போகிறேனோ அவ்வாறு உங்களுக்கும் அளிக்கின்றேன். ஆகையால் இங்கு தங்கி யாகத்தில் கலந்து கொள்ளுங்கள்.
तेषां खल्वेषां भूतानां त्रीण्येव बीजानि भवन्त्याण्डजं जीवजमुद्भिज्जमिति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - அந்த இந்த (பக்ஷி முதலிய) பிரசித்தமான பிராணிகளின் மூன்று வகையான பீஜங்கள் ஆகின்றன. அவைகள் அண்டஜம், ஜீவஜம் (ஜராயுஜம்) உத்பீஜம் ஆகும்.
तौ वा एतौ द्वौ संवर्गौ वायुरेव देवेषु प्राणः प्राणेषु ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - அந்த இந்த இரண்டு சம்வர்க்கங்களும் வாயுவே தேவதைகளிலும், பிராணன் பிராணன்களிலும் கிரஹிக்கப்படுகின்றன.
तौ ह द्वात्रिꣳशतं वर्षाणि ब्रह्मचर्यमूषतुस्तौ ह प्रजापतिरुवाच किमिच्छन्ताववास्तमिति तौ होचतुर्य आत्मापहतपाप्मा विजरो विमृत्युर्विशोको विजिघत्सोऽपिपासः सत्यकामः सत्यसङ्कल्पः सोऽन्वेष्टव्यः स विजिज्ञासितव्यः स सर्वाꣳश्च लोकानाप्नोति सर्वाꣳश्च कामान्यस्तमात्मानमनुविद्य विजानातीति भगवतो वचो वेदयन्ते तमिच्छन्ताववास्तमिति ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - அவர்கள் இருவரும் முப்பத்தி இரண்டு வருடங்கள் பிரஹ்மச்சரியத்தை அனுசரித்து வாசம் (பிரஜாபதியுடன்) செய்தார்கள். அப்பொழுது அவர்களிடம் பிரஜாபதி கேட்டார் - நீங்கள் எதை விரும்பி இங்கு இருக்கின்றீர்கள் என்று. அதற்கு அவர்கள் கூறினர் - எந்த ஆத்மா பாபமற்றும், முதுமை அற்றும், மரணதர்மம் அற்றும், சோகமற்றும், பசி அற்றும், தாகம் அற்றும் சத்ய காமமாயும், சத்ய சங்கல்பமாயும் உள்ளதோ அதை விசாரிக்க (தேட) வேண்டும். மேலும் அதை விசேஷ ரூபமாக அறிய விருப்பம்கொள்ள வேண்டும். எவர் இந்த ஆத்மாவை விசாரித்து (தேடி) அதை விசேஷ ரூபமாக அறிகின்றாரோ அவர் எல்லா லோகங்களையும், எல்லா போகங்களையும் அடைவர் என்று ஶ்ரீமானாகிய தங்களுடைய வாக்கியத்தை சிரேஷ்ட ஜனங்கள் கூறுகின்றனர். அதை அறிவதற்கு விருப்பம் கொண்டு இங்கு நாங்கள் வசிக்கின்றோம்.
तौ ह प्रजापतिरुवाच य एषोऽक्षिणि पुरुषो दृश्यत एष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्मेत्यथ योऽयं भगवोऽप्सु परिख्यायते यश्चायमादर्शे कतम एष इत्येष उ एवैषु सर्वेष्वन्तेषु परिख्यायत इति होवाच ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - அவர்களிடம் பிரஜாபதி கூறினார்-எந்த அந்த புருஷன் கண்களில் காணப்படுகிறானோ அது ஆத்மா, அது அம்ருதம், அது அபயம், அது பிரஹ்மம், (அவர்கள் கேட்டனர்) ஹே பகவானே! எது ஜலத்தில் தோன்றுகிறதோ அவ்வாறே கண்ணாடியிலும் காணப்படுகிறதோ அதில் எது ஆத்மாவாகும்? இதற்கு பிரஜாபதி கூறினார் - நான் எந்த கண்களில் அந்தர்கதமான (உள்ளே இருக்கும்) புருஷனை இங்கே வர்ணிக்கப்பட்டது. அது இவை எல்லாவற்றிலும் எங்கும் காணப்படுகிறது. (பிரிதீதியாகிறது).
तौ ह प्रजापतिरुवाच साध्वलङ्कृतौ सुवसनौ परिष्कृतौ भूत्वोदशरावेऽवेक्षेथामिति तौ ह साध्वलङ्कृतौ सुवसनौ परिष्कृतौ भूत्वोदशरावेऽवेक्षाञ्चक्राते तौ ह प्रजापतिरुवाच किं पश्यथ इति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - அவர்கள் இருவரிடமும் பிரஜாபதி கூறினர் - நீங்கள் நன்றாக அலங்கரித்துக்கொண்டு அழகான வஸ்திரத்தை அணிந்துகொண்டு பகட்டாகச் சென்று அந்த பாத்திரத்தில் உள்ள ஜலத்தில் உங்களைப் பாருங்கள். அவர்கள் இருவரும் நன்றாக அலங்கரித்துக் கொண்டு அழகான வஸ்திரத்தை அணிந்து கொண்டு ஆடம்பரமாக ஜலம் நிறைந்த பாத்திரத்தில் பார்த்தார்கள். அவர்களிடம் பிரஜாபதி வினாவினார் - நீங்கள் எதைப் பார்த்தீர்கள்.
तौ हान्वीक्ष्य प्रजापतिरुवाचानुपलभ्यात्मानमननुविद्य व्रजतो यतर एतदुपनिषदो भविष्यन्ति देवा वासुरा वा ते पराभविष्यन्तीति स ह शान्तहृदय एव विरोचनोऽसुराञ्जगाम तेभ्यो हैतामुपनिषदं प्रोवाचात्मैवेह महय्य आत्मा परिचर्य आत्मानमेवेह महयन्नात्मानं परिचरन्नुभौ लोकाववाप्नोतीमं चामुं चेति ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - பிரஜாபதி அவர்கள் இருவரும் செல்வதைப் பார்த்து இவ்வாறு கூறினார்-அவர்கள் இருவரும் ஆத்மாவை அறியாமலேயே அதாவது அதை சாக்ஷாத்காரம் செய்யாமலேயே செல்கின்றனர். தேவனோ அல்லது அசுரனோ இவ்வாறு விபரீதமாக செய்தால் அவர்களுக்குத் தோல்வியே ஏற்படும் என்று. எந்த அந்த விரோச்சனன் சாந்தமனது உடையவனாய் அசுரர்களிடம் சென்று அவர்களுக்கு ஆத்ம வித்தையைக் கேட்கச் செய்தான்- இந்த லோகத்தில் ஆத்மாவே (தேஹமே) பூஜைக்கு உரியது. மேலும் ஆத்மாவையே சேவை செய்யவேண்டும். ஆத்மாவை பூஜை செய்பவனும் சேவை செய்பவனும் ஆகிய புருஷன் இகலோகம், பரலோகம் ஆகிய இரண்டையும் அடைவான்.
तौ होचतुर्यथैवेदमावां भगवः साध्वलङ्कृतौ सुवसनौ परिष्कृतौ स्व एवमेवेमौ भगवः साध्वलङ्कृतौ सुवसनौ परिष्कृतावित्येष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्मेति तौ ह शान्तहृदयौ प्रवव्रजतुः ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - அவர்கள் இருவரும் கூறினார் - ஹே பகவானே! எவ்வாறு நாங்கள் இருவரும் நன்றாக அலங்காரத்துடன், அழகான வஸ்திரம் அணிந்தும், ஆடம்பரமாக இருக்கின்றோமோ அவ்வாறே (ஹே பகவானே) அவைகளும் (சாயைகளும்) நன்றாக அலங்கரித்து, அழகான ஆடை அணிந்து ஆடம்பரமாக இருக்கின்றன. அப்பொழுது பிரஜாபதி கூறினார் - அதுவே ஆத்மா, அது அம்ருதம், அது அபயம் மேலும் அதுவே பிரஹ்மம் என்று. அப்பொழுது இருவரும் மனஸ்சாந்தம் அடைந்து சென்றனர்.
त्रयी विद्या हिङ्कारस्त्रय इमे लोकाः स प्रस्तावोऽग्निर्वायुरादित्यः स उद्गीथो नक्षत्राणि वयांसि मरीचयः स प्रतिहारः सर्पा गन्धर्वाः पितरस्तन्निधनमेतत्साम सर्वस्मिन्प्रोतम् ॥ १ ॥மந்த்ரார்த்தம் - மூன்று வித்யை “हिंकारः” (ஹிம்காரம்). இந்த மூன்று உலகங்கள் “प्रस्तावः” (பிரஸ்தாவம்). அக்னி, வாயு, ஆதித்தியன் ஆகியவை “उद्गीथः” (உத்கீதம்). நக்ஷத்திரம், பக்ஷு (பறவைகள்) கிரணங்கள் ஆகியவை “प्रतिहारः” (பிரதிஹாரம்) ஆகும். சர்ப்பம், கந்தர்வர்கள், பித்ருகணங்கள் ஆகியவை “निधनम्” (நிதனம்) ஆகும். இந்த ஸாம உபாசனை எல்லாவற்றிலும் அனுஸ்யூதமாய் உள்ளது.
त्रयो धर्मस्कन्धा यज्ञोऽध्ययनं दानमिति प्रथमस्तप एव द्वितीयो ब्रह्मचार्याचार्यकुलवासी तृतीयोऽत्यन्तमात्मानमाचार्यकुलेऽवसादयन्सर्व एते पुण्यलोका भवन्ति ब्रह्मसंस्थोऽमृतत्वमेति ॥ १ ॥மந்த்ரார்த்தம் - தர்மத்திற்கு மூன்று ஸ்கந்தங்கள் (ஆதார ஸ்தம்பம்) யக்ஞம், அத்யயனம், தானம் ஆகியவைகள் முதல் ஸ்கந்தம் ஆகும். தபஸ் இரண்டாவது ஸ்கந்தமாகும். ஆச்சாரிய குலத்தில் வசிக்கும் பிரஹ்மச்சாரி, அதாவது ஆச்சாரிய குலத்தில் தன் சரீரத்தை முழுமையாக அர்பணிக்கின்றவன் மூன்றாவது ஸ்கந்தம். இவை எல்லாம் புண்ய லோகங்களை அடைகின்றனர். பிரஹ்மத்தில் நல்ல விதமாக நிலைபெற்று (நான்காவது ஆஸ்ரமத்தில் உள்ளவர்) அம்ருதத்தை அடைகின்றனர்.
त्रयो होद्गीथे कुशला बभूवुः शिलकः शालावत्यश्चैकितायनो दाल्भ्यः प्रवाहणो जैवलिरिति ते होचुरुद्गीथे वै कुशलाः स्मो हन्तोद्गीथे कथां वदाम इति ॥ १ ॥மந்த்ரார்த்தம் - சலாவதகரின் புத்திரன் சிலகர், சிகிதாயனரின் புத்திரன் தால்ப்யர் மேலும் ஜீவலகர் புத்திரன் பிரவாஹனர் இவர்கள் மூவரும் உத்கீத வித்தையில் மிகவும் திறமைசாலிகள். அவர்கள் அவர்களுக்குள் இவ்வாறு கூறிக்கொண்டனர். நாம் மூவரும் உத்கீத வித்தையில் நிபுணர்களாக இருக்கின்றோம். ஆகையைால் ஒருவருக்கொருவர் அனுமதி அளித்தால் அந்த உத்கீத விஷயத்தைக் குறித்து பரஸ்பரம் கலந்துரையாடுவோம். (விவாதிப்போம்) என்று.
तꣳ ह प्रवाहणो जैवलिरुवाचान्तवद्वै किल ते शालावत्य साम यस्त्वेतर्हि ब्रूयान्मूर्धा ते विपतिष्यतीति मूर्धा ते विपतेदिति हन्ताहमेतद्भगवत्तो वेदानीति विद्धीति होवाच ॥ ८ ॥மந்த்ரார்த்தம் - அப்பொழுது அவரிடம் ஜீவலருடைய புத்திரர் பிரவாஹணர் கூறினார் - ஹே சாலாவத்ய! நிச்சயமாக உங்களுடைய ஸாமம் முடிவு உடையது, என்று இவ்வாறு யாராவது கூறினால் உன்னுடைய தலை கீழேவிழும், உன் தலை விழுந்துவிடும். இதற்கு (சாலாவத்தியர் கூறினார்-) நான் ஶ்ரீமானாகிய உங்களிடம் அறிந்துகொள்ள விரும்புகிறேன் என்று. இதற்கு பிரவாஹனர் கூறினார் அறிந்துகொள் என்று கூறினார்.
तꣳ ह शिलकः शालावत्यश्चैकितायनं दाल्भ्यमुवाचाप्रतिष्ठितं वै किल ते दाल्भ्य साम यस्त्वेतर्हि ब्रूयान्मूर्धा ते विपतिष्यतीति मूर्धा ते विपतेदिति ॥ ६ ॥மந்த்ரார்த்தம் - இந்த சிகிதான புத்திரர் தாபல்யரிடம் சாலாவதரின் புத்திரர் சிலகர் கூறினார் - ஹே தால்ப்ய! உன்னுடைய ஸாமம் நிச்சயமாக பிரதிஷ்டிதம் ஆகவில்லை. இந்த சமயத்தில் எந்த ஒரு ஸாமத்தை அறிந்தவர் இவ்வாறு கூறினால் அதாவது உன்னுடைய தலை தரையில் விழுந்துவிடும் என்றால் நிச்சயமாக உன்னுடைய தலை விழுந்துவிடும் என்று.
तꣳ हाङ्गिरा उद्गीथमुपासाञ्चक्र एतमु एवाङ्गिरसं मन्यन्तेऽङ्गानां यद्रसः ॥ १० ॥மந்த்ரார்த்தம் - அங்கிரஸ் ரிஷி இதை (முக்கிய பிராணனை) உத்கீத திருஷ்டியில் உபாசனை செய்தார். ஆகையால் இதுவே (இந்தப் பிராணனே) ஆங்கிரஸ் எனப்படுகிறது. ஏன் எனில் இது எல்லா அங்கங்களின் ரசமாகும்.
तꣳ हाभ्युवाद रैक्वेदꣳ सहस्रं गवामयं निष्कोऽयमश्वतरीरथ इयं जायायं ग्रामो यस्मिन्नास्सेऽन्वेव मा भगवः शाधीति ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - மேலும் அந்த ரைக்வரிடம் கூறினார் - ஹே ரைக்வ! இந்த ஆயிரம் பசுக்கள், இந்த ஹாரம், வேகமான இளம் குதிரைகள் பூட்டிய ரதம், இந்த பத்னி, இந்த கிராமம் எல்லாம் உங்களுக்காகவே ஏற்றுக்கொள்ளுங்கள். ஹே பகவானே! எனக்கு அவசியம் உபதேசித்து அருளவேண்டும்.
तꣳ हैतमतिधन्वा शौनक उदरशाण्डिल्यायोक्त्वोवाच यावत्त एनं प्रजायामुद्गीथं वेदिष्यन्ते परोवरीयो हैभ्यस्तावदस्मिंल्लोके जीवनं भविष्यति ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - சுனகருடைய புத்திரர் அதிதன்வர் அந்த இந்த உத்கீதத்தை உதரசாண்டில்யருக்கு நிரூபணம் செய்து இவ்வாறு கூறினார்- எதுவரை உன்னுடைய சந்ததியினர் (உன் வம்சத்தில் பிறந்தவர்கள்) இந்த உத்கீதத்தை அறிந்திருக்கிறார்களோ அதுவரை இந்த லோகத்தில் அவர்களின் ஜீவனம் மேலும் மேலும் மிக சிறந்ததாக, மேன்மையானதாக ஆகும்.
तꣳ होवाच किङ्गोत्रो नु सोम्यासीति स होवाच नाहमेतद्वेद भो यद्गोत्रोऽहमस्म्यपृच्छं मातरं सा मा प्रत्यब्रवीद्बह्वहं चरन्ती परिचारिणी यौवने त्वामलभे साहमेतन्न वेद यद्गोत्रस्त्वमसि जबाला तु नामाहमस्मि सत्यकामो नाम त्वमसीति सोऽहं सत्यकामो जाबालोऽस्मि भो इति ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - அவனிடம் கெளதமர் கூறினார் - ஹே செளம்ய! நீ எந்த கோத்திரம் உடையவன்? அதற்கு அவன் கூறினான் - பகவானே! நான் எந்த கோத்திரத்தினன் என்பது எனக்குத் தெரியாது. நான் என் தாயிடம் கேட்டேன். அவள் எனக்கு இவ்வாறு பதில் அளித்தாள் - தான் (நான்) இளம் வயதில் மிகுந்த வேலை செய்யும் வேலை உள்ளவளாக இருந்தேன். அந்த சமயத்தில் உன்னை அடைந்தேன். எனக்கு நீ எந்த கோத்திரம் என்று தெரியவில்லை. நான் ஜபாலா நாமம் உடையவள். நீயோ சத்யகாம என்ற பெயர் உடையவன் என்று. ஆகையால் ஹே! குரோ! நான் சத்யகாம ஜபாலான்.
तꣳ होवाच नैतदब्राह्मणो विवक्तुमर्हति समिधꣳ सोम्याहरोप त्वा नेष्ये न सत्यादगा इति तमुपनीय कृशानामबलानां चतुःशता गा निराकृत्योवाचेमाः सोम्यानुसंव्रजेति ता अभिप्रस्थापयन्नुवाच नासहस्रेणावर्तेयेति स ह वर्षगणं प्रोवास ता यदा सहस्रꣳ सम्पेदुः ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - அவனிடம் கெளதமர் கூறினார் - உன்னைப்போல் பிராஹ்மணன் அல்லாதவனால் இவ்வாறு உண்மையைக் கூறமுடியாது. ஆகையால் ஹே செளம்ய! நீ சமித்துக்களைக் கொண்டு வா. நீ சத்யத்தை விடவில்லை. ஆகையால் உன்னை சீடனாக ஏற்றுக்கொள்கின்றேன் என்று கூறி அவனுக்கு தீக்ஷை அளித்தார். அதன்பின் அவருடைய பசுக்களில் மெலிந்த பலமற்ற நான்கு நூ று பசுக்களை தேர்ந்து எடுத்து அவனிடம் கூறினார்- ஹே செளம்ய! நீ இந்த பசுக்களின் பின்னால் செல். அவன் எடுத்துச் செல்லும்பொழுது அவர் கூறினார்- இவைகளை ஒரு ஆயிரம் பசுக்கள் ஆகாமல் திரும்பக்கூடாது. ஒரு ஆயிரம் பசுக்கள் ஆகும்வரை அநேக வருடங்கள் வனத்திலேயே வாழ்ந்தான்.
तꣳ होवाच यं वै सोम्यैतमणिमानं न निभालयस एतस्य वै सोम्यैषोऽणिम्न एवं महान्यग्रोधस्तिष्ठति श्रद्धत्स्व सोम्येति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - அப்பொழுது அவனிடம் (ஆருணி) கூறினார் - ஹே சோம்ய! இந்த ஆல விதையில் எந்த அணிமா அதாவது சூக்ஷ்மமானதை உன்னால் காணமுடியவில்லை. ஹே சோம்ய! அந்த சூக்ஷ்மமான நம்மால் காண முடியாததில் இருந்து இவ்வளவு பெரிய ஆலமரம் நின்று கொண்டிருக்கிறது. ஹே சோம்ய! நான் கூறியதில் சிரத்தை கொள்வாயாக.
तꣳ हꣳस उपनिपत्याभ्युवाद सत्यकाम३ इति भगव इति ह प्रतिशुश्राव ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அப்பொழுது ஹம்சம் (அன்னம்) அவனுக்கு அருகில் பறந்து வந்து கூறியது - “सत्यकाम” (சத்யகாம)! அதற்கு அவன் பதில் அளித்தான்- ஹே பகவானே! என்று
तꣳहोवाच यथा सोम्य महतोऽभ्याहितस्यैकोऽङ्गारः खद्योतमात्रः परिशिष्टः स्यात्तेन ततोऽपि न बहु दहेदेवꣳ सोम्य ते षोडशानां कलानामेका कलातिशिष्टा स्यात्तयैतर्हि वेदान्नानुभवस्यशानाथ मे विज्ञास्यसीति ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - அவர் அவனிடம் கூறினார் - ஹே சோம்ய! எவ்வாறு மிக அதிகமாக எறிந்து கொண்டிருக்கும் அக்னியின் ஒரு சிறிய மின்மினிப் பூச்சியின் அளவிலான கனல் அதைவிடப் பெரியது ஒன்றையும் எரிக்க முடியாது. அவ்வாறே ஹே சோம்ய! உன்னுடைய பதினாறு கலைகளில் ஒரு கலை மாத்திரம் இருக்கிறது. அதன் மூலமாக இப்பொழுது உன்னால் வேதங்களை நினைவுகூற முடியவில்லை. சரிதான், நீ இப்பொழுது போஜனம் செய். நான் கூறும் விஷயத்தை அப்பொழுது நீ நன்றாக புரிந்து கொள்வாய்.
दध्नः सोम्य मथ्यमानस्य योऽणिमा स ऊर्ध्वः समुदीषति तत्सर्पिर्भवति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! கடைந்த தயிரின் எந்த சூக்ஷ்ம பாகமோ அது மேல்நோக்கி (வண்ணையாக) எழுகிறது. அதுவே நெய் ஆகிறது.
दुग्धेऽस्मै वाग्दोहं यो वाचो दोहोऽन्नवानन्नादो भवति य एतदेवं विद्वान्वाचि सप्तविधꣳ सामोपास्ते ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - எந்த புருஷன் இதை இவ்விதமாக அறிகின்றானோ அந்த புருஷன் வாக்கில் ஏழுவிதமான ஸாமத்தின் உபாஸனை செய்கின்றானோ அதனால் வாக் எந்த ஒரு வாக்கின் பலனோ (ஸாரமோ) அதை அளிக்கிறது. அவ்வாறே அவன் அதிக அன்னத்தை உடையவனாக ஆகின்றான். மேலும் அதை அனுபவிக்கின்றவனாகவும் ஆகின்றான்.
दुग्धेऽस्मै वाग्दोहं यो वाचो दोहोऽन्नवानन्नादो भवति य एतामेवꣳसाम्ना मुपनिषदं वेदोपनिषदं वेदेति ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இவ்வாறு ஸாமசம்பந்தமான உபநிஷத்தை அறிகின்றானோ அவனுக்கு அதனால் வாக் எது வாக்கின் பலனோ அதாவது பாலை அளிக்கிறது. அவ்வாறே அன்னம் உடையவனாகி அன்னத்தை உண்பவனாக ஆகின்றான்.
देवा वै मृत्योर्बिभ्यतस्त्रयीं विद्यां प्राविशꣳ स्ते छन्दोभिरच्छादयन्यदेभिरच्छादयꣳ स्तच्छन्दसां छन्दस्त्वम् ॥ २ ॥மந்த்ரார்த்தம் - மிருத்யுவினால் பயம் அடைந்தவர்களான தேவர்கள் மூன்று வித்யாவில் (மூன்று வேதங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களில்) பிரவேசித்தார்கள். அவர்கள் தங்களை சந்தஸ்களால் மறைத்துக்கொண்டார்கள். தேவதைகள் எதன் மூலமாய் தங்களை மறைத்துக்கொண்டார்களோ அந்தச் சந்தத்திற்கு சந்தத்துவமாகும். (அதாவது தேவதைகளை மறைப்பதின் காரணமாக மந்திரங்களின் நாமம் சந்தஸ் என்று ஆயிற்று).
देवासुरा ह वै यत्र संयेतिरे उभये प्राजापत्यास्तद्ध देवा उद्गीथमाजह्रुरनेनैनानभिभविष्याम इति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - பிரசித்தமானது. (பூர்வ காலத்தில்) பிரஜாபதியின் புத்திரர்களான தேவர்களும் அசுரர்களும் ஏதோ ஒரு காரண வசத்தால் யுத்தம்செய்ய விழைந்தார்கள். அவர்களில் தேவதைகள் இவ்வாறு யோசித்து அவர்களை இவ்வாறு தோற்க்கடிக்க வேண்டும் என்று உத்கீதத்தை அனுஷ்டித்தார்கள்.
द्यौरेवर्गादित्यः साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयते द्यौरेव सादित्योऽमस्तत्साम ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - த்யோ (மேல் உலகம்) ரிக், ஆதித்யன் சாமம். அந்த எது (ஆதித்திய ரூபமோ) சாம இந்த (த்யெள) ரூப ரிக்கில் அதிஷ்டித்தமாய் உள்ளது. ஆகையால் ரிக்கில் அதிஷ்டித்தமான சாமத்தை கானம் செய்கின்றனர். தியோவே “सा” (சா), ஆதித்தியன் “अम” (அம). இவ்வாறு இவை இரண்டும் சாமம் ஆகும்.
द्यौरेवोदन्तरिक्षं गीः पृथिवी थमादित्य एवोद्वायुर्गीरग्निस्थं सामवेद एवोद्यजुर्वेदो गीर्ऋग्वेदस्थं दुग्धेऽस्मै वाग्दोहं यो वाचो दोहोऽन्नवानन्नादो भवति य एतान्येवं विद्वानुद्गीथाक्षराण्युपास्त उद्गीथ इति ॥ ७ ॥ மந்த்ரார்த்தம் - த்யுலோகம் (தேவலோகம்) “उत्” (உத்) அந்தரிக்ஷம் “गीः” (கீ:), பிருதிவீ, “थ” (த்த), ஆதித்யன் உத், (उत्) வாயு, கீ (गीः), அக்னி “थ” (த்த), சாமவேத (उत्) (உத்) யஜுர்வேதம் (गीः) (கீ:), ரிக்வேதம் “थ” (த்த) ஆகும். இந்த அக்ஷரங்களை இவ்வாறு அறிந்த வித்வான் “उद्गीथ” (உத்கீத) என்று இவ்வாறு இந்த உத்கீத அக்ஷரங்களை உபாசனை செய்பவனுக்கு வாக்கின் பலனான பாலைத் தருகிறது. ரிக்வேதம் முதலியவைகள் அவனுக்கு பாலைத் தருகிறது. அவ்வாறு அன்னமுடையவனாகின்றான். அதன் போக்தாவும் ஆகின்றான். (உண்பவனாக ஆகின்றான்.)
ध्यानं वाव चित्ताद्भूयो ध्यायतीव पृथिवी ध्यायतीवान्तरिक्षं ध्यायतीव द्यौर्ध्यायन्तीवापो ध्यायन्तीव पर्वता देवमनुष्यास्तस्माद्य इह मनुष्याणां महत्तां प्राप्नुवन्ति ध्यानापादांशा इवैव ते भवन्त्यथ येऽल्पाः कलहिनः पिशुना उपवादिनस्तेऽथ ये प्रभवो ध्यानापादांशा इवैव ते भवन्ति ध्यानमुपास्स्वेति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - தியானமே சித்தத்தைவிட சிறந்தது. பிருதிவீ (பூமி) தியானம் செய்வதுபோல் உள்ளது. அந்தரிக்ஷம் தியானம் செய்வதுபோல் உள்ளது. தியுலோகம் தியானம் செய்வதுபோல் உள்ளது. ஜலம் தியானம் செய்வதுபோல் உள்ளன. பர்வதம் தியானம் செய்வது போல் உள்ளன. தேவர்கள் மனிதர்கள் தியானம் செய்பவர்கள்போல் உள்ளனர். ஆகையால் இங்கு யார் தியானம் செய்கிறாரோ அவர் மனிதர்களில் மஹிமை உடையவர்களாகின்றனர். மற்றவர்கள் அல்பர்களாய் கோபம் உடையவர்களாகி குறுகிய புத்தியுடையவர்களாக ஆகின்றனர். வதந்திகளைப் பரப்புபவர்களாகவும் இருக்கின்றனர். சான்றோர்கள் சிறிது அளவேனும் தியானம் செய்து பலனை அடைந்தவர்களாக இருக்கின்றனர். ஆகையால் த்யானத்தை உபாசனை செய்.
न वधेनास्य हन्यते नास्य स्राम्येण स्रामो घ्नन्ति त्वेवैनं विच्छादयन्तीवाप्रियवेत्तेव भवत्यपि रोदितीव नाहमत्र भोग्यं पश्यामीति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - அது இந்த தேஹத்தை கொன்றாலும் நஷ்டமாவது இல்லை. இதற்கு ஸ்ராமத்தால் (கண்கள், மூக்கு இவைகளில் நீர் வடிந்தாலும்) அதற்கு ஸ்ராமம் உண்டாவது இல்லை. ஆனால் கனவில் யாராவது மரணமடைந்தாலோ, அடித்தாலோ துன்புறுவது போலவும், அழுவதுபோலும் கருதுகிறோம். இவ்வாறு இருப்பதால் இதில் (இவ்விதமான ஆத்ம தர்சனத்தில்) நான் ஒரு பலனையும் காணவில்லை.
न वधेनास्य हन्यते नास्य स्राम्येण स्रामो घ्नन्ति त्वेवैनं विच्छादयन्तीवाप्रियवेत्तेव भवत्यपि रोदितीव नाहमत्र भोग्यं पश्यामीत्येवमेवैष मघवन्निति होवाचैतं त्वेव ते भूयोऽनुव्याख्यास्यामि वसापराणि द्वात्रिंशतं वर्षाणीति स हापराणि द्वात्रिंशतं वर्षाण्युवास तस्मै होवाच ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - இதை (இந்த சரீரத்தை) கொன்றால் அது (ஸ்வப்ன சரீரம்) கொல்லபடுவது இல்லை. அதன் கண்களில், மூக்கில் நீர் வடிந்தால் அதற்கு அவ்வாறு ஏற்படுவதில்லை. ஆனால் ஒருவன் கொன்றதுபோல், அடிப்பதுபோல் கண்டு அதைக் குறித்து பிரியமற்றதைக் காண்பவனாய் துன்பப்படுகிறது. இதில் நான் எந்த ஒரு பலனையும் காணவில்லை. அப்பொழுது பிரஜாபதி கூறினார் - ஹே இந்திர! நீ கூறுவது போலவே இருக்கிறது. நான் உனக்கு இதை (இந்த ஆத்மத்துவத்தை) மறுபடியும் விளக்குகிறேன். நீ இங்கு முப்பத்திரண்டு வருடங்கள் பிரஹ்மச்சரிய வாசம் செய் என்று. இந்திரன் அங்கு முப்பத்தியிரண்டு வருடங்கள் வசித்துவந்தான். அப்பொழுது அவனிடம் பிரஜாபதி கூறினார்.
न वै तत्र न निंलोच नोदियाय कदाचन । देवास्तेनाहꣳ सत्येन मा विराधिषि ब्रह्मणेति ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அங்கு நிச்சயமாக அவ்வாறு நடைபெறாது. அங்கு சூரியன் ஒரு பொழுதும் அஸ்தமிப்பது இல்லை. அவ்வாறே உதிப்பதும் இல்லை. ஹே தேவ கணங்களே! இந்த சத்தியத்தின் மூலமாய் நான் பிரஹ்மத்திற்கு விருத்தமாக ஆகமாட்டேன். (மாறுபட்டு இருக்கமாட்டேன்) (விலக மாட்டேன்)
न वै नूनं भगवन्तस्त एतदवेदिषुर्यद्ध्येतदवेदिष्यन्कथं मे नावक्ष्यन्निति भगवाꣳस्त्वेव मे तद्ब्रवीत्विति तथा सोम्येति होवाच ॥ ७ ॥ மந்த்ரார்த்தம் - நிச்சயமாக எனது பூஜைக்குரிய குருதேவர் இதை அறிந்திருக்கவில்லை. அவர் அறிந்து இருந்தால் எனக்கு ஏன் சொல்லாமல் இருந்தார். இப்பொழுது நீங்கள் எனக்குக் கூறுங்கள் என்றதற்கு பிதா கூறினார் - சரி சோம்ய! நான் கூறுகிறேன் என்றார்.
न वै वाचो न चक्षूंषि न श्रोत्राणि न मनांसीत्याचक्षते प्राणा इत्येवाचक्षते प्राणो ह्येवैतानि सर्वाणि भवति ॥ १५ ॥ மந்த்ரார்த்தம் - (உலகில் எல்லா இந்திரியங்களையும்) வாக் என்றே, சக்ஷு என்றே, ஸ்ரோத்திரம் என்றே மனம் என்றே கூறுவது இல்லை. ஆனால் பிராணன் என்றே கூறுகின்றனர். ஏன்எனில் எல்லாம் பிராணனே ஆகும்.
न स्विदेतेऽप्युच्छिष्टा इति न वा अजीविष्यमिमानखादन्निति होवाच कामो म उदपानमिति ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - என்ன அந்த (உளுந்து) பண்டமும் எச்சில் இல்லையா? அதற்குக் கூறினார் - இதை சாப்பிடவில்லை யெனில் ஜீவிக்கமுடியாது. ஜலத்தை அருந்துவதோ என்னுடைய இச்சையினால் ஆகிறது என்று.
न ह वा अस्मा उदेति न निंलोचति सकृद्दिवा हैवास्मै भवति य एतामेवं ब्रह्मोपनिषदं वेद ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - எவன் இவ்வாறு பிரஹ்மோப நிஷதத்தை (வேத ரகஸ்யத்தை) அறிகிறானோ அவனுக்கு சூரியன் உதிப்பதும் இல்லை அஸ்தமனம் ஆவதும் இல்லை. அவனுக்கு எப்பொழுதும் பகல் ஆகவே இருக்கின்றது.
न हाप्सु पॆत्यप्सुमान्भवति य एतदेवं विद्वान्सर्वास्वप्सु पञ्चविधꣳ सामोपास्ते ॥ २ ॥மந்த்ரார்த்தம் - இவ்வாறு அறிந்த புருஷன் இந்த எல்லாவிதமான ஜலத்தில் ஐந்து விதமான ஸாமத்தை உபாஸனை செய்வதால் அவனுக்கு ஜலத்தினால் மரணம் உண்டாகாது. ஜலம் உடையவனாகின்றான்.
नक्षत्राण्येवर्क्चन्द्रमाः साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयते नक्षत्राण्येव सा चन्द्रमा अमस्तत्साम ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - நக்ஷத்திரமே ரிக், சந்திரன் சாமம், அந்த இந்த (சந்திரரூப) சாமம் இந்த (நக்ஷத்திரரூப) ரிக்கில் அதிஷ்டித்திருக்கிறது. ஆகையால் ரிக்கில் அதிஷ்டிதமான சாமத்தை கானம் செய்யப்படுகிறது. நக்ஷத்திரமே “सा” (சா) மேலும் சந்திரன் “अम” (அம) ஆகும். இவ்வாறு அவை (இரண்டும் சேர்ந்து) சாமம் ஆகும்.
नान्यस्मै कस्मैचन यद्यप्यस्मा इमामद्भिः परिगृहीतां धनस्य पूर्णां दद्यादेतदेव ततो भूय इत्येतदेव ततो भूय इति ॥ ६ ॥மந்த்ரார்த்தம் - வேறு ஒருவருக்கும் கூறக்கூடாது (உபதேசிக்கக் கூடாது). இந்த சமுத்திரத்தால் வளைக்கப்பட்ட இந்த பூமி முழுவதையும் தந்தாலும் கூட உபதேசம் செய்யக்கூடாது ஏன்எனில் இதைவிட மிகவும் அதிக பலம் தரக்கூடியது. அதிக பலன் தரக்கூடியது.
नाम वा ऋग्वेदो यजुर्वेदः सामवेद आथर्वणश्चतुर्थ इतिहासपुराणः पञ्चमो वेदानां वेदः पित्र्यो राशिर्दैवो निधिर्वाकोवाक्यमेकायनं देवविद्या ब्रह्मविद्या भूतविद्या क्षत्त्रविद्या नक्षत्रविद्या सर्पदेवजनविद्या नामैवैतन्नामोपास्स्वेति ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - ரிக்வேதம் என்ற பெயர் அவ்வாறே யஜுர்வேதம், சாமவேதம், நான்காவதான அதர்வணவேதம், ஐந்தாவது வேதமாகிய இதிஹாசம் புராணம், வேதங்களின் வேதம் (வியாகரணம்) ஸ்ரார்த்தகல்பம், கணிதம், உத்பாத்த ஞானம், நிதிஞானம், தர்க்கசாஸ்திரம், நீதிசாஸ்திரம், நிருக்தம், வேதவித்யா, பிரஹ்மவித்யா, பூதவித்யா, தனுர்வித்யா, ஜ்யோதிஷம் காருடவித்யா, சங்கீதம் முதலிய கலைகள். மேலும் சிற்பவித்யா இவை எல்லாம் நாமமே. நீ பிரஹ்மம் என்று நாமத்தை பிரஹ்மபுத்தியால் உபாசி.
निधनमिति त्र्यक्षरं तत्सममेव भवति तानि ह वा एतानि द्वाविं शतिरक्षराणि ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - “निधनम्” (நிதனம்) என்ற நாமம் மூன்று அக்ஷரங்களுடையது. ஆகையால் அதற்கு ஸமானமானது. இவை எல்லாம் சேர்ந்து இருபத்தி இரண்டு (22) அக்ஷரங்கள் உடையது.
नैवैतेन सुरभि न दुर्गन्धि विजानात्यपहतपाप्मा ह्येष तेन यदश्नाति यत्पिबति तेनेतरान्प्राणानवति एतमु एवान्ततोऽवित्त्वोत्क्रामति व्याददात्येवान्तत इति ॥ ९ ॥மந்த்ரார்த்தம் - இந்த முக்கியப்பிராணன் மூலமாய் நல்ல வாசனையை அறிவதில்லை. அவ்வாறே கெட்ட வாசனையையும் அறிவதில்லை. ஏன்எனில் பாபத்தால் தோல்வியை அடையவில்லை. ஆகையால் எந்த ஒன்றை சாப்பிட்டாலும், குடித்தாலும் அதனால் மற்ற (பிராணன்களை (இந்திரியங்களை) போஷிக்கின்றது. கடைசியில் இந்த முக்கியப் பிராணனை அடையாததினால் (கிராணம் முதலிய பிராண சமூகத்தை) உத்கிரமணம் செய்கின்றான். மேலும் கடைசியில் (உயிர் பிரியும் சமயத்தில்) புருஷன் வாயை திறக்கிறான்.
न्यग्रोधफलमत आहरेतीदं भगव इति भिन्द्धीति भिन्नं भगव इति किमत्र पश्यसीत्यण्व्य इवेमा धाना भगव इत्यासामङ्गैकां भिन्द्धीति भिन्ना भगव इति किमत्र पश्यसीति न किञ्चन भगव इति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - இந்த எதிரில் இருக்கும் பெரிய ஆலமரத்திலிருந்து ஒரு பலத்தை எடுத்துவா. (ச்வேதகேது) பகவானே! கொண்டுவந்துவிட்டேன். (ஆருணி) அதை வெட்டு. (ச்வேதகேது) பகவானே! வெட்டிவிட்டேன். (ஆருணி) அதில் என்ன இருக்கிறது பார்த்தாயா? (ச்வதேகேது) பகவானே! அதில் அணுவளவு விதைகளை பார்க்கிறேன். (ஆருணி) சரிதான் ஏ குழந்தாய்! அதில் ஒன்றை பிள. (ச்வேதகேது) பகவானே! பிளந்து விட்டேன். (ஆருணி) இதில் எதைப் பார்க்கிறாய்? (ச்வேதகேது) பகவானே! அதில் எதுவும் இல்லை.
पञ्च मा राजन्यबन्धुः प्रश्नानप्राक्षीत्तेषां नैकञ्चनाशकं विवक्तुमिति स होवाच यथा मा त्वं तदैतानवदो यथाहमेषां नैकञ्चन वेद यद्यहमिमानवेदिष्यं कथं ते नावक्ष्यमिति ॥ ५ ॥ மந்த்ரார்த்தம் - அந்த க்ஷத்திரிய பந்து என்னிடம் ஐந்து கேள்விகளைக் கேட்டார். என்னால் அவைகளில் ஒன்றிற்குக்கூட விளக்கம் அளிக்க முடியவில்லை. அதற்கு அவர் கூறினார் - நீ அந்த சமயத்தில் வரும்பொழுது எந்த கேள்விகளை எனக்குக் கூறினாயோ அதில் எனக்கும் ஒன்று கூட தெரியவில்லை. நான் அதை அறிந்து இருந்தால் உனக்குக் கூறி இருப்பேன்.
परोवरीयो हास्य भवति परोवरीयसो ह लोकाञ्जयति य एतदेवं विद्वान्प्राणेषु पञ्चविधं परोवरीयः सामोपास्त इति तु पञ्चविधस्य ॥ २ ॥மந்த்ரார்த்தம் - இதை இவ்வாறு அறிந்த புருஷன் பிராணன்களில் ஐந்து விதமாக மேல் மேல் மிகவும் உத்கிருஷ்டமான ஸாமத்தை உபாஸனை செய்கின்றானோ அவனுடைய ஜீவனம் மேலும் மேலும் சிறப்பு மிக்கதாக ஆகும். மேலும் மேலான மேலான லோகங்களை ஜெயிப்பான் (அடைவான்). இவ்வாறு ஐந்து விதமான ஸாம உபாஸனை நிரூபிக்கப்பட்டது.
पर्जन्यो वाव गौतमाग्निस्तस्य वायुरेव समिदभ्रं धूमो विद्युदर्चिरशनिरङ्गारा ह्रादनयो विस्फुलिङ्गाः ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஹே கெளதமரே! மழைமேகமே அக்னி, அதற்கு வாயுவே சமித், மேகம் புகை, மின்னல் ஜ்வாலை, இடி தணல், அவ்வாறே இடியின் கர்ஜனைத் தீப்பொறிகள்.
पशुषु पञ्चविधꣳ सामोपासीताजा हिङ्कारोऽवयः प्रस्तावो गाव उद्गीथोऽश्वाः प्रतिहारः पुरुषो निधनम् ॥ १ ॥மந்த்ரார்த்தம் - மிருகங்களில் ஐந்து விதமாக ஸாமத்தை உபாஸனை செய்யவேண்டும். ஆடு “हिंकारः” (ஹிம்காரம்), செம்மறியாடு “प्रस्तावः” (பிரஸ்தாவம்), பசு “उीथः” (உத்கீதம்), குதிரை “प्रतिहारः” (பிரதிஹாரம்), புருஷன் “निधनम्” (நிதனம்).
पुरा तृतीयसवनस्योपाकरणाज्जघनेनाहवनीयस्योदङ्मुख उपविश्य स आदित्यं स वैश्वदेवं सामाभिगायति ॥ ११ ॥ மந்த்ரார்த்தம் - மூன்றாவது ஸவனம் ஆரம்பிப்பதற்கு முன் யஜமானன் ஆஹவனீய அக்னிக்கு முன் வடக்கு பார்த்து அமர்ந்து ஆதித்யன் அவ்வாறே விச்வேதேவ ஸம்பந்தமான ஸாமத்தை கானம் செய்கின்றான்.
पुरा प्रातरनुवाकस्योपाकरणाज्जघनेन गार्हपत्यस्योदङ्मुख उपविश्य स वासवं सामाभिगायति ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - பிராதர் அனுவாக்கை அதாவது காலை மந்திரங்களை செய்வதற்கு முன் அந்த எஜமானன் கார்ஹபத்திய அக்னிக்கு முன்னால் வடக்கு நோக்கி உட்கார்ந்து வசுதேவதா ஸம்பந்தமான ஸாமத்தை கானம் செய்கின்றான்.
पुरा माध्यन्दिनस्य सवनस्योपाकरणाज्जघनेनाग्नीध्रीयस्योदङ्मुख उपविश्य सरौद्रं सामाभिगायति ॥ ७ ॥மந்த்ரார்த்தம் - மத்தியான ஸவனம் ஆரம்பிப்பதற்கு முன் யஜமானன் தக்ஷிணாக்கினிக்கு முன்னால் வடக்கு நோக்கி உட்கார்ந்துகொண்டு ருத்ர தேவதை ஸம்பந்தியான ஸாமத்தை கானம் செய்கின்றான்.
पुरुषं सोम्योतोपतापिनं ज्ञातयः पर्युपासते जानासि मां जानासि मामिति तस्य यावन्न वाङ्मनसि सम्पद्यते मनः प्राणे प्राणस्तेजसि तेजः परस्यां देवतायां तावज्जानाति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஹே ஸொம்ய! (ஜ்வரம் முதலியவைகளால்) அவஸ்தையுடன் இருக்கும் (மூர்ச்சை அடைந்த) புருஷனை நான்கு பக்கங்களிலும் சூழ்ந்திருக்கும் பந்துக்கள் என்னைத் தெரிகிறதா? என்னைத் தெரிகிறதா? என்று கேட்பார்கள். எதுவரை அவனுடைய வாக் மனதில் ஒடுங்கவில்லையோ, மனம் பிராணனில் ஒடுங்கவில்லையோ, பிராணன் தேஜஸ்ஸில் ஒடுங்கவில்லையே, தேஜஸ் பரதேவதையினிடத்தில் லயமாகவில்லையோ அதுவரை அவன் அறிகிறான்.
पुरुषो वाव गौतमाग्निस्तस्य वागेव समित्प्राणो धूमो जिह्वार्चिश्चक्षुरङ्गाराः श्रोत्रं विस्फुलिङ्गाः ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஹே கெளதமரே! புருஷனே அக்னி. அதற்கு வாக்கே சமித். பிராணனே புகை. நாக்கு ஜ்வாலை. கண் தணல். மேலும் காது தீப்பொறிகள்.
पुरुषꣳ सोम्योत हस्तगृहीतमानयन्त्यपहार्षीत्स्तेयमकार्षीत्परशुमस्मै तपतेति स यदि तस्य कर्ता भवति तत एवानृतमात्मानं कुरुते सोऽनृताभिसन्धोऽनृतेनात्मानमन्तर्धाय परशुं तप्तं प्रतिगृह्णाति स दह्यतेऽथ हन्यते ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! (ராஜாவின் சேவகர்கள்) ஒருவனை கைகளைக் கட்டி இழுத்துவந்து (இவ்வாறு கூறினார்கள்) அவன் செல்வத்தை திருடிவிட்டான். இவன் திருடனே. இவனுக்காக நன்றாக பழுக்கக்காச்சிய. கோடாரியை கொண்டு வா. அவன் திருடி இருந்தால் அவன் பொய்யான வனாவான். பொய்யினால் தன்னை மறைத்துக் கொள்கிறான். இவ்வாறு இருக்கும்பொழுது அவன் பழுக்க காச்சிய கோடாரியைப் பிடித்தால் அவன் கை எரிந்துவிடும். அப்பொழுது அவன் தண்டிக்கப்படுவான்.
पृथिवी वाव गौतमाग्निस्तस्याः संवत्सर एव समिदाकाशो धूमो रात्रिरर्चिर्दिशोऽङ्गारा अवान्तरदिशो विस्फुलिङ्गाः ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஹே கௌதமரே! பிருதிவீயே அக்னி. அதற்கு வருடங்கள் சமித் ஆகும். ஆகாசம் புகை, ராத்திரி ஜ்வாலை. திசைகள் தணல். அவ்வாறே அவாந்திர (இடையில் உள்ள) திசைகள் தீப்பொறிகள் ஆகும்.
पृथिवी हिङ्कारोऽन्तरिक्षं प्रस्तावो द्यौरुद्गीथो दिशः प्रतिहारः समुद्रो निधनमेताः शक्वर्यो लोकेषु प्रोताः ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - பிருதிவீ “हिंकारः” (ஹிம்காரம்) அந்தரிக்ஷம் “प्रस्तावः” (பிரஸ்தாவம்) த்யுலோகம் “उीथः” (உத்கீதம்) திசைகள் “प्रतिहारः” (பிரதிஹாரம்). ஸமுத்திரம் “निधनम्” (நிதனம்). அந்த சக்வரீ ஸாமம் உலகங்களில் ப்ரோதமாய் (ஊடுருவி) உள்ளது.
प्रजापतिर्लोकानभ्यतपत्तेभ्योऽभितप्तेभ्यस्त्रयी विद्या सम्प्रास्रवत्तामभ्यतपत्तस्या अभितप्ताया एतान्यक्षराणि सम्प्रास्रवन्त भूर्भुवः स्वरिति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - பிரஜாபதி லோகங்களை உத்தேசித்து த்யானரூப தபஸ் செய்தார். அந்த லோகங்களின் தியானத்திலிருந்து மூன்று வேதங்கள் தோன்றின. அந்த மூன்று வேதங்களின் தியானத்தால் “भूः” (பூ:) “भुवः” (புவ:) “स्वः” (ஸ்வ:) தோன்றின.
प्रजापतिर्लोकानभ्यतपत्तेषां तप्यमानानां रसान्प्रावृहदग्निं पृथिव्या वायुमन्तरिक्षादादित्यं दिवः ॥ १ ॥மந்த்ரார்த்தம் - பிரஜாபதியானவர் லோகங்களைக் குறித்து தியானரூப தபஸ் செய்தார். அந்த தபஸ் செய்யும்பொழுது அந்த லோகங்களில் இருந்து ரசத்தை எடுத்தார். பிருதிவியிலிருந்து அக்னி, அந்தரிக்ஷத்திலிருந்து வாயு. மேலும் த்யுலோகத்திலிருந்து ஆதித்தியனையும் அடைந்தார்.
प्रवृत्तोऽश्वतरीरथो दासीनिष्कोऽत्स्यन्नं पश्यसि प्रियमत्त्यन्नं पश्यति प्रियं भवत्यस्य ब्रह्मवर्चसं कुले य एतमेवमात्मानं वैश्वानरमुपास्ते चक्षुष्ट्वेतदात्मन इति होवाचान्धोऽभविष्यो यन्मां नागमिष्य इति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - இளம் குதிரைகள் பூட்டிய ரதங்களும், பெண் பணியாட்களும், ஹாரம் முதலிய ஆபரணங்களும் உள்ளன. நீங்கள் அன்னத்தைப் புசிக்கின்றீர்கள், அவ்வாறே பிரியமானவைகளையும் பார்க்கின்றீர்கள் என்று இவ்வாறு வைச்வாநர ஆத்மாவை உபாசனை செய்பவர் அன்னத்தை புசிக்கின்றனர் மேலும் பிரியமானவைகளை காண்கின்றனர் இவ்வாறானவைகளுடைய குலத்தில் பிரஹ்மதேஜஸ் உண்டாகிறது. ஆனால் அது ஆத்மாவினுடைய நேத்திரம் ஆகும். இவ்வாறு ராஜாவானவர் கூறி மேலும் கூறினார் - நீர் என்னிடம் வராது இருந்திருந்தால் நீர் குருடனாகி இருப்பீர் என்று.
प्रस्तोतर्या देवता प्रस्तावमन्वायत्ता तां चेदविद्वान्प्रस्तोष्यसि मूर्धा ते विपतिष्यतीति ॥ ९ ॥மந்த்ரார்த்தம் - ஹே ப்ரஸ்தோத! எந்த தேவதை பிரஸ்தாவ பக்தியில் அனுகதமாய் உள்ளதோ அதை அறியாமல் பிரஸ்தாவனம் செய்தால் உன்னுடைய தலை விழுந்துவிடும்.
प्राचीनशाल औपमन्यवः सत्ययज्ञः पौलुषिरिन्द्रद्युम्नो भाल्लवेयो जनः शार्कराक्ष्यो बुडिल आश्वतराश्विस्ते हैते महाशाला महाश्रोत्रियाः समेत्य मीमाꣳसां चक्रुः को न आत्मा किं ब्रह्मेति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - உபமன்யு புத்திரன் ப்ராச்சீனசால, புலுஷகருடைய புத்திரன் சத்யயக்ஞன், பல்லவிகியின் புத்திரன் இந்திரத்யும்னன், சர்க்ராக்ஷருடைய புத்திரன் ஜனன், அச்வதரா அச்வதரருடைய புத்திரன் புடில் ஆகியவர்கள் மஹா கிரஹஸ்தர்கள், மேலும் மேலான ச்ரோத்திரியர்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து பரஸ்பரம் (ஒருவருக்கொருவர்) நம்முடைய ஆத்மா எது, பிரஹ்மம் என்பது யாது? என்று விசாரம் செய்தனர்.
प्राण इति होवाच सर्वाणि ह वा इमानि भूतानि प्राणमेवाभिसंविशन्तिप्राणमभ्युज्जिहते सैषा देवता प्रस्तावमन्वायत्ता तां चेदविद्वान्प्रास्तोष्यो मूर्धा ते व्यपतिष्यत्तथोक्तस्य मयेति ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - அவர் (உஷஸ்தி) அது (அந்த தேவதை) பிராணன் என்று கூறினார். ஏன் எனில் எல்லா பூதராசிகளிலும் பிராணனில் பிரவேசித்து பிராணனாலேயே உத்பத்தி ஆகின்றன. அந்த பிராண தேவதை பிரஸ்தாவங்களில் அனுகதமாயிருக்கின்றது. ஆகையால் அதை அறியாமல் நான் கூறிய பின்னும் பிரஸ்தாவனம் செய்தால் தலை விழுந்துவிடும்.
प्राण एव ब्रह्मणश्चतुर्थः पादः स वायुना ज्योतिषा भाति च तपति च भाति च तपति च कीर्त्या यशसा ब्रह्मवर्चसेन य एवं वेद ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - பிராணனே மனோமய பிரஹ்மத்தின் நான்காவது பாதம். அது வாயுரூப ஜ்யோதியினால் பிரகாசிக்கின்றது, தஹிக்கின்றது. இவ்வாறு எவன் அறிகிறானோ அவன் கீர்த்தி, புகழ், பிரஹ்ம தேஜஸ்ஸால் பிரகாசிக்கின்றான் தஹிக்கின்றான்.
प्राणे तृप्यति चक्षुस्तृप्यति चक्षुषि तृप्यत्यादित्यस्तृप्यत्यादित्ये तृप्यति द्यौस्तृप्यति दिवि तृप्यन्त्यां यत्किञ्च द्यौश्चादित्यश्चाधितिष्ठतस्तत्तृप्यति तस्यानुतृप्तिं तृप्यति प्रजया पशुभिरन्नाद्येन तेजसा ब्रह्मवर्चसेनेति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - பிராணன் திருப்தி அடைந்தபின் நேத்திர இந்திரியம் திருப்தி அடைந்தபின் ஆதித்தியன் திருப்தி அடைகிறது. ஆதித்தியன் திருப்தி அடைந்தபின் த்யுலோகம் திருப்தி அடைகிறது. அவ்வாறே த்யுலோகம் திருப்தி அடைந்ததால் த்யுலோகம் மற்றும் ஆதித்யன் கீழ் உள்ளவை அனைத்தும் திருப்தி அடைகின்றன. இவ்வாறு அதற்கு திருப்தி ஆனவுடன் சுயமாக அந்த போக்தா பிரஜைகள், கால் நடைகள், மிகுந்த உணவு, தேஜஸ் அவ்வாறே பிரஹ்மதேஜஸ் இவைகளை அடைந்து திருப்தியை அடைகின்றான்.
प्राणेषु पञ्चविधं परोवरीयः सामोपासीत प्राणो हिङ्कारो वाक्प्रस्तावश्चक्षुरुद्गीथः श्रोत्रं प्रतिहारो मनो निधनं परोवरीयांसि वा एतानि ॥ १ ॥மந்த்ரார்த்தம் - பிராணனில் ஐந்து விதமான சிறந்த ஆற்றல் குணத்துடன் கூடிய ஸாமத்தை உபாஸனை செய். பிராணன் (மூக்கு) “हिंकारः” (ஹிம்காரம்) ஆகும். வாக் “प्रस्तावः” (பிரஸ்தாவம்), சக்ஷு “उद्गीथ” (உத்கீதம்). ஸ்ரோத்திரம் “प्रतिहारः” (பிரதிஹாரம்) மேலும் மனம் “निधनम्” (நிதனம்) ஆகும். இந்த உபாஸனைகளால் நிச்சயமாக மேலும் மேலும் மிகுந்த ஆற்றலை அடையலாம்.
प्राणो वा आशाया भूयान्यथा वा अरा नाभौ समर्पिता एवमस्मिन्प्राणे सर्वं समर्पितं प्राणः प्राणेन याति प्राणः प्राणं ददाति प्राणाय ददाति प्राणो ह पिता प्राणो माता प्राणो भ्राता प्राणः स्वसा प्राण आचार्यः प्राणो ब्राह्मणः ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - பிராணனே ஆசையைக் காட்டிலும் மேலானது. எவ்வாறு ரதத்தின் சக்கிரத்தின் நாபியில் ஆரக்கால்கள் சமர்பிக்கப்பட்டு உள்ளதோ அவ்வாறு பிராணனில் ஜகத் முழுவதும் சமர்பிக்கப்பட்டுள்ளது. பிராணன் பிராண சக்தியினால் செயல்படுகிறது. பிராணன் பிராணனை அளிக்கிறது. மேலும் பிராணனுக்காகவே அளிக்கிறது. பிராணனே பிதா, பிராணனே மாதா, பிராணனே சகோதரன், பிராணனே சகோதரி, பிராணனே ஆச்சாரியன், மேலும் பிராணனே பிராஹ்மணன்.
प्राणो ह्येवैतानि सर्वाणि भवति स वा एष एवं पश्यन्नेवं मन्वान एवं विजानन्नतिवादी भवति तं चेद्ब्रूयुरतिवाद्यसीत्यतिवाद्यस्मीति ब्रूयान्नापह्नुवीत ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - பிராணனே எல்லாம் (பிதா முதலியவைகள்). எவன் ஒருவன் இவ்வாறு காண்கின்றானோ, இவ்வாறு நினைக்கின்றானோ மேலும் இவ்வாறு அறிந்தவன் சிறந்த பேச்சாளி (சிறப்பாக பேசுபவன்) ஆகின்றான். எவராவது நீ சிறந்த பேச்சாளன் என்று கூறினால் ஆம் நான் சிறப்பாக பேசுபவன் என்று கூறவேண்டும். அதை மறுக்கக்கூடாது.
प्राप हाचार्यकुलं तमाचार्योऽभ्युवाद सत्यकाम३ इति भगव इति ह प्रतिशुश्राव ॥ १ ॥மந்த்ரார்த்தம் - ஆச்சாரிய குலத்தை அடைந்தான் அவனிடம் ஆச்சாரியர் கூறினார் - சத்யகாமா என்று அப்பொழுது அவன் பதில் அளித்தான் - பகவானே! என்று.
बलं वाव विज्ञानाद्भूयोऽपि ह शतं विज्ञानवतामेको बलवानाकम्पयते स यदा बली भवत्यथोत्थाता भवत्युत्तिष्ठन्परिचरिता भवति परिचरन्नुपसत्ता भवत्युपसीदन्द्रष्टा भवति श्रोता भवति मन्ता भवति बोद्धा भवति कर्ता भवति विज्ञाता भवति बलेन वै पृथिवी तिष्ठति बलेनान्तरिक्षं बलेन द्यौर्बलेन पर्वता बलेन देवमनुष्या बलेन पशवश्च वयांसि च तृणवनस्पतयः श्वापदान्याकीटपतङ्गपिपीलकं बलेन लोकस्तिष्ठति बलमुपास्स्वेति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - பலமே விக்ஞானத்தைக் காட்டிலும் சிறந்தது. நூ று விக்ஞானவான்களைக்கூட ஒரு பலவான் நடுங்கச் செய்வான். எப்பொழுது புருஷன் பலவானாகின்றானோ அப்பொழுது (குருவின் முன்பு) எழுகிறான். எழுந்து சேவை செய்கின்றான். அவ்வாறே சேவை செய்து அவர் சமீபம் நெருங்குகின்றான். நெருங்கி அவரை தரிசனம் செய்கின்றான். சிரவணம் செய்கின்றான். மனனம் செய்கின்றான். ஞானம் உடையவனாக ஆகின்றான். கர்த்தாவாகின்றான். அவ்வாறே விக்ஞாதாவாகவும் ஆகின்றான். பலத்தினாலேயே பிருதிவீயின் இருப்பாகும். பலத்தினால் அந்தரிக்ஷம், பலத்தினால் த்யுலோகம், பலத்தினால் பர்வதம், பலத்தினால் தேவதைகள், மேலும் மனிதர்கள், பலத்தினால், பசு, பக்ஷி, த்ருணம் (துரும்பு) ஸ்தாவரங்கள், காட்டு மிருகங்கள், புழு, வண்டு அவ்வாறே எறும்பு வரையில் உள்ள எல்லாப் பிராணிகளின் ஸ்திதியும் (இருப்பும்) உள்ளன. அவ்வாறே பலத்தினாலேயே லோகத்தின் இருப்பும் ஆகும். நீ பலத்தை உபாசனை செய்வாயாக.
ब्रह्मणः सोम्य ते पादं ब्रवाणीति ब्रवितु मे भगवानिति तस्मै होवाच पृथिवी कलान्तरिक्षं कला द्यौः कला समुद्रः कलैष वै सोम्य चतुष्कलः पादो ब्रह्मणोऽनन्तवान्नाम ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - ஹே செளம்ய! நான் உனக்கு பிரஹ்மத்தின் ஒரு பாதத்தைக் கூறுகிறேன். (அதற்கு சத்யகாமன்) பகவானே! எனக்கு அவசியம் கூறுங்கள். அப்பொழுது அக்னி அவனிடம் கூறியது - பிருதிவீ கலை, அந்தரிக்ஷ கலை, த்யுலோக கலை, சமுத்திர கலை என்பனவாகும். ஹே செளம்ய! அந்த பிரஹ்மத்தின் நான்கு கலைகள் உள்ள பாதம் “अनन्तवान्” (அனந்தவான்) என்ற பெயர் உடையது ஆகும்.
ब्रह्मणः सोम्य ते पादं ब्रवाणीति ब्रवीतु मे भगवानिति तस्मै होवाच प्राणः कला चक्षुः कला श्रोत्रं कला मनः कलैष वै सोम्य चतुष्कलः पादो ब्रह्मण आयतनवान्नाम ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - (நீர் பறவை கூறியது) - ஹே செளம்ய! நான் உனக்கு பிரஹ்மத்தின் (நான்காவது) பாதத்தைக் கூறுகிறேன் என்று. (சத்யகாமன் கூறினான்) - பகவானே எனக்குக் கூறுங்கள் என்று. அப்பொழுது அது அவனிடம் கூறியது - பிராணன் கலை, சக்ஷு கலை, ஸ்ரோத்திரம் கலை, மனம் ஒரு கலை என்று. ஹே செளம்ய! இந்த பிரஹ்மத்தின் நான்கு கலை பாதம் “आयतनवान्” (ஆயதனவான் - இருப்பிடம் உடையவன்) என்ற பெயர் உடையது.
ब्रह्मणः सोम्य ते पादं ब्रवाणीति ब्रवीतु मे भगवानिति तस्मै होवाचाग्निः कला सूर्यः कला चन्द्रः कला विद्युत्कलैष वै सोम्य चतुष्कलः पादो ब्रह्मणो ज्योतिष्मान्नाम ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - (ஹம்சம் கூறியது) - ஹே செளம்ய! நான் உனக்கு பிரஹ்மத்தின் (மூன்றாவது) பாதத்தை கூறுகிறேன் என்று. (சத்யகாமன் கூறினான்)- பகவானே! எனக்குக் கூறுங்கள். அப்பொழுது ஹம்சம் கூறியது-அக்னி, கலை, சூரியன் கலை, சந்திரன் கலை, மின்னல் கலை ஆகியவைகள் ஆகும். ஹே செளம்ய! இந்த பிரஹ்மத்தின் நான்கு கலைகளுடைய பாதம் “ज्योतिष्मान्” (ஜ்யோதி-ஷ்மான்) என்ற பெயர் உடையது.
ब्रह्मणश्च ते पादं ब्रवाणीति ब्रवीतु मे भगवानिति तस्मै होवाच प्राची दिक्कला प्रतीची दिक्कला दक्षिणा दिक्कलोदीची दिक्कलैष वै सोम्य चतुष्कलः पादो ब्रह्मणः प्रकाशवान्नाम ॥ २ ॥மந்த்ரார்த்தம் - நான் உனக்கு பிரஹ்மத்தின் ஒரு பாதத்தைக் கூறவா? அப்பொழுது (சத்யகாமன்) கூறினான்- ஹே பகவானே! எனக்கு அவசியம் கூறுங்கள். காளை அவனிடம் இவ்வாறு கூறியது- கிழக்குத்திக் கலையும், மேற்குத்திக் கலையும், தெற்குத்திக் கலையும், வல்க்குதிக் கலையும் ஹே செளம்ய! பிரஹ்மத்தின் “பிரகாசிப்பவன்” என்ற பெயர் பெற்ற நான்கு கலைகள் உடைய பாதம் ஆகும்.
ब्रह्मवादिनो वदन्ति यद्वसूनां प्रातः सवनꣳ रुद्राणां माध्यन्दिनꣳ सवनमादित्यानां च विश्वेषां च देवानां तृतीयसवनम् ॥ १ ॥மந்த்ரார்த்தம் - பிரஹ்ம வாதிகள் கூறுகின்றனர் காலை ஸவனம் வசுக்களினது, மத்யான ஸவனம் ருத்ரர்களினது, மூன்றாவது ஸவனம் ஆதித்யனதும் விச்வதேவர்களுக்கும் ஆனது.
ब्रह्मविदिव वै सोम्य भासि को नु त्वानुशशासेत्यन्ये मनुष्येभ्य इति ह प्रतिजज्ञे भगवाꣳस्त्वेव मे कामे ब्रूयात् ॥ २ ॥மந்த்ரார்த்தம் - ஹே செளமியனே! நீ பிரஹ்மத்தை அறிந்தவன் போல் பிரகாசிக்கின்றாய். உனக்கு யார் உபதேசித்தது? இவ்வாறு (ஆச்சாரியர் கேட்டதற்கு) அவன் இவ்வாறு பதில் அளித்தான் - மனிதர்களைக் காட்டிலும் வேறான (தேவதைகள்) எனக்கு உபதேசம் செய்தன. இப்பொழுது என்னுடைய விருப்பத்தை அனுசரித்து பூஜ்ய பாதராகிய தாங்கள் எனக்கு வித்யை உபதேசம் செய்யுங்கள். (என்று வேண்டினான்).
भगव इति ह प्रतिशुश्राव ब्रह्मविद इव सोम्य ते मुखं भाति को नु त्वानुशशासेति को नु मानुशिष्याद्भो इतीहापेव निह्नुत इमे नूनमीदृशा अन्यादृशा इतीहाग्नीनभ्यूदे किं नु सोम्य किल तेऽवोचन्निति ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அவன் பகவானே என்று பதில் அளித்தான். (ஆச்சாரியர் கூறினார்) ஹே செளம்ய! நான் உன்முகத்தை பிரஹ்மத்தை அறிந்தவருக்கு சமானமாக அறிகின்றேன். உனக்கு யார் உபதேசம் செய்தார்? என்றதற்கு ஐயா! எனக்கு யார் தான் உபதேசம் செய்வர் என்று கூறி மெளனமாய் சும்மா இருந்தான். (அதற்குப்பின் அக்னிகளை சந்தேகமாய் கூறினான்) நிச்சயமாக இவைகள் (உபதேசம் செய்தன). அப்பொழுது வேறுவிதமாய் இருந்தது இப்பொழுது இவ்வாறு இருக்கிறது என்று தனக்கு அக்னிகள் உபதேசம் செய்தன என்று சூசகமாக கூறினான். (அப்பொழுது ஆச்சாரியர் கேட்டார்-) ஹே செளம்ய! அவைகள் உனக்கு எதை உபதேசித்தன என்று.
भगवाꣳस्त्वेव मे सर्वैरार्त्विज्यैरिति तथेत्यथ तर्ह्येत एव समतिसृष्टाः स्तुवतां यावत्त्वेभ्यो धनं दद्यास्तावन्मम दद्या इति तथेति ह यजमान उवाच ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - என்னுடைய எல்லா ரித்விக் கர்மங்களையும் ஶ்ரீமானாகிய நீங்களே முன்னின்று நடத்தித் தர வேண்டும் என்பதைக் கூறக்கேட்டு (அவர்) சரி என்று இவ்வாறு கூறினார் - நல்லது நான் அவர்களுக்கு சந்தோஷமாக ஆக்ஞை அளிக்கின்றேன். அவர்கள் ஸ்துதி செய்யட்டும். மேலும் நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு தனம் தருகின்றீரோ அவ்வளவு தனம் எனக்கும் நீங்கள் அளிக்க வேண்டும். அப்பொழுது யஜமானன் அவ்வாறே ஆகட்டும் என்று கூறினார்.
भवन्ति हास्य पशवः पशुमान्भवति य एतदेवं विद्वान्पशुषु पञ्चविधꣳ सामोपास्ते ॥ २ ॥மந்த்ரார்த்தம் - இவ்வாறு அறிந்த புருஷன் வீட்டு மிருகங்களில் ஐந்துவித ஸாமத்தை உபாஸனை செய்கின்றானோ அவன் பசுக்களை அடைவான். அவன் பசு உடையவன் ஆவான்.
मघवन्मर्त्यं वा इदꣳ शरीरमात्तं मृत्युना तदस्यामृतस्याशरीरस्यात्मनोऽधिष्ठानमात्तो वै सशरीरः प्रियाप्रियाभ्यां न वै सशरीरस्य सतः प्रियाप्रिययोरपहतिरस्त्यशरीरं वाव सन्तं न प्रियाप्रिये स्पृशतः ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஹே இந்திரனே! இந்த சரீரம் மரணதர்மம் உடையது. அது மிருத்யுவினால் பீடிக்கப்பட்டுள்ளது. இது இந்த அம்ருதமானதும் சரீரமற்றதாயும் உள்ள ஆத்மாவிற்கு அதிஷ்டனம் (இருப்பிடம்) ஆகும். சரீரத்துடன் கூடிய ஆத்மா நிச்சயமாக பிரியம், பிரியமற்ற வஸ்துக்களால் பீடிக்கப்பட்டுள்ளது. சரீரம் உள்ளவரை பிரியம், பிரியம் அற்றவைகளுக்கு நாசம் உண்டாகாது. சரீரம் அற்றபொழுது பிரியமோ, பிரியமற்றதோ அதை ஸ்பரிசிக்கமுடியாது. (தொடமுடியாது) (பிரியம், பிரியமற்றது = இன்பம், துன்பம்).
मटचीहतेषु कुरुष्वाचिक्या सह जाययोषस्तिर्ह चाक्रायण इभ्यग्रामे प्रद्राणक उवास ॥ १ ॥மந்த்ரார்த்தம் - குரு தேசத்தில் மிகுந்த ஆலங்கட்டி மழையில் யானைப் பாகர்களின் கிராமத்தில் சக்ரருடைய புத்திரர் உஷஸ்த்தி தன் திறமையான சிறுமியாகிய பத்தினியுடன் மிகுந்த வறுமையுடன் கஷ்ட நிலையில் வசித்துவந்தார்.
मद्गुष्टे पादं वक्तेति स ह श्वोभूते गा अभिप्रस्थापयाञ्चकार ता यत्राभि सायं बभूवुस्तत्राग्निमुपसमाधाय गा उपरुध्य समिधमाधाय पश्चादग्नेः प्राङुपोपविवेश ॥ १ ॥மந்த்ரார்த்தம் - நீர் பறவை உனக்கு (நான்காவது) பாதத்தைக் கூறும் (என்று கூறிவிட்டு ஹம்சம் சென்றுவிட்டது). மறுநாள் சத்யகாமன் பசுக்களைக் குருகுலம் நோக்கி ஓட்டிச்சென்றான். சாயங்காலம் ஆனவுடன் அவைகள் ஒன்று சேர்ந்தன. அதன்பின் சமித்துக்களால் தீயை மூட்டி அதன்முன்னால் கிழக்கு முகமாக அமர்ந்தான்.
मनो ब्रह्मेत्युपसीतेत्यध्यात्ममथाधिदैवतमाकाशो ब्रह्मेत्युभयमादिष्टं भवत्यध्यात्मं चाधिदैवतं च ॥ १ ॥மந்த்ரார்த்தம் - “மனம்” பிரஹ்மம் என்று உபாசனை செய். இது ஆத்யாத்மிக திருஷ்டியாகும். அவ்வாறே “ஆகாசம்” பிரஹ்மம். இது அதிதைவத திருஷ்டியாகும். இவ்வாறு அத்யாத்ம, அதிதைவதம் ஆகிய இரண்டு உபாசனைகள் உபதேசிக்கப்பட்டது.
मनो वाव वाचो भूयो यथा वै द्वे वामलके द्वे वा कोले द्वौ वाक्षौ मुष्टिरनुभवत्येवं वाचं च नाम च मनोऽनुभवति स यदा मनसा मनस्यति मन्त्रानधीयीयेत्यथाधीते कर्माणि कुर्वीयेत्यथ कुरुते पुत्रांश्च पशूंश्चेत्छेयेत्यथेच्छत इमं च लोकममुं चेत्छेयेत्यथेच्छते मनो ह्यात्मा मनो हि लोको मनो हि ब्रह्म मन उपास्स्वेति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - மனம் வாக்கைக்காட்டிலும் மேன்மையானது. இரண்டு நெல்லிக்கனிகளையோ, இரண்டு திராக்ஷகைளையோ அல்லது இரண்டு அக்ஷப்பழங்களையோ கையின் முஷ்ட்டிக்குள் அடக்கமுடியும். அவ்வாறு வாக்கையும், நாமத்தையும் மனதில் அடக்கமுடியும். இந்த புருஷன் எப்பொழுது மனதால் விசாரம் செய்கின்றானோ அப்பொழுது நான் “மந்திரங்களை ஓத” வேண்டும் என்று அப்பொழுது ஓதுகின்றன. எப்பொழுது கர்மங்களை செய்வேன் என்று கர்மத்தை செய்கின்றானோ அப்பொழுது நினைக்கின்றான் நான் புத்திரன் மேலும் பசுக்களை இச்சிப்பேன் என்று. அப்பொழுது அவைகளை இச்சிக்கின்றான். அப்பொழுது இவ்வாறு சங்கல்பம் செய்கின்றான். இந்த லோகம் மற்றும் பரலோகத்திற்காக காமனை செய்வேன் என்று அப்பொழுது அவைகளை காமனை செய்கின்றான். மனமே ஆத்மா, மனமே லோகம், மனமே பிரஹ்மம், நீ மனத்தை பிரஹ்மம் என்று உபாசனை செய்.
मनो हिङ्कारो वाक्प्रस्तावश्चक्षुरुद्गीथः श्रोत्रं प्रतिहारः प्राणो निधनमेतद्गायत्रं प्राणेषु प्रोतम् ॥ १ ॥மந்த்ரார்த்தம் - மனம் ஹிம்காரம், வாக் பிரஸ்தாவம், சக்ஷு உத்கீதம், ஸ்ரோத்திரம் பிரதிஹாரம், பிராணன் நிதனம். அந்த காயத்திரி எனப்படும் ஸாமம் பிராணனில் பிரதிஷ்டையாகி உள்ளது.
मनो होच्चक्राम तत्संवत्सरं प्रोष्य पर्येत्योवाच कथमशकतर्ते मज्जीवितुमिति यथा बाला अमनसः प्राणन्तः प्राणेन वदन्तो वाचा पश्यन्तश्चक्षुषा शृण्वन्तः श्रोत्रेणैवमिति प्रविवेश ह मनः ॥ ११ ॥ மந்த்ரார்த்தம் - (அதன்பின்) மனம் உத்கிரமணம் செய்தது. அது ஒருவருடம் வெளியில் தங்கி பின் திரும்பிவந்து இவ்வாறு கேட்டது - நான் இல்லாமல் நீங்கள் எவ்வாறு வாழ்ந்தீர்கள்? என்று. (அதற்கு அவைகள் கூறின -) எவ்வாறு குழந்தை மனதால் சிந்திக்காவிட்டாலும், பிராணனால் சுவாசித்துக்கொண்டும், வாக்கினால் பேசிக்கொண்டும், கண்களால் பார்த்துக்கொண்டும், காதுகளால் கேட்டுக்கொண்டும், ஜீவித்திருக்கின்றதோ அவ்வாறு நாங்களும் ஜீவிக்கிறோம் என்று கூறியதைக் கேட்டு மனமும் உள்ளே பிரவேசித்தது.
मनोमयः प्राणशरीरो भारूपः सत्यसङ्कल्प आकाशात्मा सर्वकर्मा सर्वकामः सर्वगन्धः सर्वरसः सर्वमिदमभ्यात्तोऽवाक्यनादरः ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - (அந்த பிரஹ்மம்) மனோமயம், பிராணசரீரம், பிரகாசஸ்வரூபம், சத்யசங்கல்பம், ஆகாசசரீரம், சர்வகர்மம், சர்வகாமம், சர்வகந்தம், சர்வரசம், இந்த சம்பூர்ண ஜகத்தை எல்லா பக்கமும் வியாபித்தவர், வாக் முதலிய இந்திரியங்கள் அற்றது. மேலும் ஒன்றையும் சாராதவர் (நாடாதவர்).
मानवो ब्रह्मैवैक ऋत्विक्कुरूनश्वाभिरक्षत्येवंविद्ध वै ब्रह्मा यज्ञं यजमानं सर्वांश्चर्त्विजोऽभिरक्षति तस्मादेवंविदमेव ब्रह्माणं कुर्वीत नानेवंविदं नानेवंविदम् ॥ १० ॥மந்த்ரார்த்தம் - மெளனமாய் மனனம் செய்யும் மானவ பிரஹ்மாவே ஒரு ரித்விக். எவ்வாறு யுத்தத்தில் குதிரை யுத்தம் செய்பவனை ரக்ஷிக்கின்றதோ அவ்வாறு: இவ்வாறு அறிந்த பிரஹ்மா யக்ஞம், யஜமானன் மற்றும் வேறு எல்லா ரித்விக்ஜர்களையும் எல்லா பக்கமும் ரக்ஷிக்கின்றான். ஆகையால் இவ்வாறு அறிந்தவனையே பிரஹ்மாவாக நியமிக்கவேண்டும். இவ்வாறு அறியாதவர்களை அல்ல. இவ்வாறு அறியாதவர்களை நியமிக்கக்கூடாது.
मासेभ्यः पितृलोकं पितृलोकादाकाशमाकाशाच्चन्द्रमसमेष सोमो राजा तद्देवानामन्नं तं देवा भक्षयन्ति ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - (தக்ஷிணாயனத்தின்) மாதங்களால் பித்ருலோகத்தை அடைகின்றனர். பித்ருலோகத்தில் இருந்து ஆகாசத்தை அடைகின்றனர். மேலும் ஆகாசத்திலிருந்து சந்திரனை அடைகின்றனர். அந்த சந்திரனை ராஜா சோமனாகின்றான். அது தேவர்களுக்கு அன்னமாகிறது. தேவர்கள் அதை உண்கின்றனர்.
मासेभ्यः संवत्सरꣳ संवत्सरादादित्यमादित्याच्चन्द्रमसं चन्द्रमसो विद्युतं तत्पुरुषोऽमानवः स एनान्ब्रह्म गमयत्येष देवयानः पन्था इति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - இந்த மாதங்களில் இருந்து வருடங்களுக்கும், வருடங்களில் இருந்து சூரியனுக்கும், சூரியனிலிருந்து சந்திரனுக்கும், சந்திரனிலிருந்து மின்னலையும் அடைகிறான். அங்கு அமானவ புருஷன் (மனிதனல்லாத புருஷன்) அவனை (காரிய) பிரஹ்மத்தை அடையச் செய்கின்றான். இது தேவையான மார்க்கமாகும்.
य आत्मापहतपाप्मा विजरो विमृत्युर्विशोको विजिघत्सोऽपिपासः सत्यकामः सत्यसङ्कल्पः सोऽन्वेष्टव्यः स विजिज्ञासितव्यः स सर्वाꣳश्च लोकानाप्नोति सर्वाꣳश्च कामान्यस्तमात्मानमनुविद्य विजानातीति ह प्रजापतिरुवाच ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - எந்த ஆத்மா (தர்மாதர்ம முதலிய) பாபங்கள் அற்ற, முதுமை அற்ற, மரணமற்ற, சோகமற்ற, பசி அற்ற, தாகம் அற்ற, சத்யகாமம் மேலும் சத்யஸகல்பமாய் உள்ளதோ அதை நாம் விசாரிக்க (தேட)வேண்டும். மேலும் அதை விசேஷ ரூபமாக அறிய இச்சை (விருப்பம்) கொள்ளவேண்டும். எவன் இந்த ஆத்மாவை சாஸ்திரம் மேலும் குருவிடம் உபதேசித்தவாறு விசாரித்து அறியவேண்டும். அவன் எல்லா லோகங்களையும், எல்லா காமனைகளையும் அடைகிறான் என்று பிரஜாபதி கூறினார்.
य एष स्वप्ने महीयमानश्चरत्येष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्मेति स ह शान्तहृदयः प्रवव्राज स हाप्राप्यैव देवानेतद्भयं ददर्श तद्यद्यपीदꣳ शरीरमन्धं भवत्यनन्धः स भवति यदि स्राममस्रामो नैवैषोऽस्य दोषेण दुष्यति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - எந்த அது ஸ்வப்னத்தில் மேன்மை (சிறப்பை) அடைந்து ஸ்வப்னத்தில் உலவுகின்றதோ அது ஆத்மா என்று இவ்வாறு பிரஜாபதி கூறினார் - அது அம்ருதம், அபயம், அதுவே பிரஹ்மம் என்று. இதைக்கேட்ட இந்திரன் சாந்தமான மனதுடன் சென்றுவிட்டான். ஆனால் தேவர்களை அடையாமல் அவனுக்கு இந்த பயம். காணப்பட்டது. அதாவது இந்த சரீரம் குருடனாகிறது. ஆனாலும் இங்கு (ஸ்வப்ன சரீரத்தில்) குருட்டுத்தன்மை இல்லை. மேலும் அது ஒற்றைக்கண் உடையதானாலும் அங்கு ஒற்றைக்கண் உடையவனாய் இல்லை. இவ்வாறு இந்த தோஷங்களால் அங்கு (சொப்னத்தில்) தூஷிக்கப்படுவது இல்லை, (குறைக் காணப்படுவது இல்லை).
य एषोऽक्षिणि पुरुषो दृश्यत एष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्मेति तद्यद्यप्यस्मिन्सर्पिर्वोदकं वा सिञ्चति वर्त्मनी एव गच्छति ॥ १ ॥மந்த்ரார்த்தம் - இந்த எந்த புருஷன் நேத்திரத்தில் காணப்படுகிறானோ அதுவே ஆத்மா. அது அம்ருதம், அது அபயம் அதுவே பிரஹ்மம் என்று கூறினார். ஆகையால் நேத்திரத்தில் (கண்களில்) நெய்யோ, ஜலமோ (விட்டால்) தெளித்தால் வெளியே கன்னங்களில் வழிந்துவிடுகிறது.
यं यमन्तमभिकामो भवति यं कामं कामयते सोऽस्य सङ्कल्पादेव समुत्तिष्ठति तेन सम्पन्नो महीयते ॥ १० ॥ மந்த்ரார்த்தம் - எந்த எந்த பிரதேசத்தை விரும்புகிறானோ மேலும் எந்த போகத்தை இச்சிக்கின்றானோ அவை எல்லாம் அந்த சங்கல்பத்தால் அவனை அடையும், அதை அடைந்து மஹிமையை அடைகின்றான்.
यच्चन्द्रमसो रोहितꣳ रूपं तेजसस्तद्रूपं यच्छुक्लं तदपां यत्कृष्णं तदन्नस्यापागाच्चान्द्राच्चन्द्रत्वं वाचारम्भणं विकारो नामधेयं त्रीणि रूपाणीत्येव सत्यम् ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - சந்திரனின் எந்த செம்மை ரூபமோ அது தேஜஸ்ஸின் ரூபம். எந்த வெண்மை ரூபமோ அது ஜலத்தினது. எந்த கருமைநிறமோ அது அன்னத்தினுடையது. இவ்வாறு சந்திரனிடத்திலிருந்து சந்திரத்தன்மை நிவிர்த்தி ஆகிறது. ஏன்எனில் சந்திரரூப விகாரம் வாக்கை சார்ந்து இருப்பதால் சந்திரத்தன்மை நிவிர்த்தியாகிறது. அந்த மூன்று ரூபமே உண்மையானது.
यत्र नान्यत्पश्यति नान्यच्छृणोति नान्यद्विजानाति स भूमाथ यत्रान्यत्पश्यत्यन्यच्छृणोत्यन्यद्विजानाति तदल्पं यो वै भूमा तदमृतमथ यदल्पं तन्मर्त्यꣳ स भगवः कस्मिन्प्रतिष्ठित इति स्वे महिम्नि यदि वा न महिम्नीति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - (சனத்குமாரர்) எங்கு வேறு ஒன்றையும் காண்பதில்லையோ, எங்கு வேறு ஒன்றையும் கேட்பது இல்லையோ, வேறு ஒன்றையும் அறிவது இல்லையோ, அது பூமா. ஆனால் எங்கு சிறிது காணப்படுகிறதோ, சிறிது கேட்கப்படுகிறதோ, சிறிது அறியப்படுகிறதோ அது அல்பம். எது பூமாவோ அது அம்ருதம். எது அல்பமோ அது மர்த்தியம் (மரணதர்மம் உடையது). (நாரதர்-) பகவானே! அந்த (பூமா) எதில் பிரதிஷ்டையாகி உள்ளது (நிலைபெற்றுள்ளது). (சனத்குமாரர்-) தன்னுடைய மஹிமையில் அல்லது அதன் மஹிமையிலும் இல்லை.
यथा कृतायविजितायाधरेयाः संयन्त्येवमेनं सर्वं तदभिसमैति यत्किञ्च प्रजाः साधु कुर्वन्ति यस्तद्वेद यत्स वेद स मयैतदुक्त इति ॥ ६ ॥மந்த்ரார்த்தம் - ராஜா கூறினார் - எவ்வாறு கிரழ்ம் என்ற பெயருடையதை அடைந்ததால் வென்றவனுக்கு மற்ற அதன் கீழ் உள்ளவைகள் எல்லாம் அவனை சேருகிறதோ அவ்வாறு அந்த ரைக்வருக்கு எல்லாம் அடையப்பட்டதாகின்றன. அதாவது எந்த நல்ல தர்மங்கள் பிரஜைகள் செய்கின்றனரோ அவையெல்லாம் அவரை வந்து சேருகின்றன. அவ்வாறு அந்த ரைக்வர் அறிந்ததையும், அவ்வாறே வேறு ஒருவர் அறிந்ததையும் இதை கூறுவதன் மூலமாகக் கூறப்பட்டது.
यथा कृतायविजितायाधरेयाः संयन्त्येवमेनं सर्वं तदभिसमैति यत्किञ्चप्रजाः साधु कुर्वन्ति यस्तद्वेद यत्स वेद स मयैतदुक्त इति ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - எவ்வாறு (சதுரங்க ஆட்டத்தில்) கிருதத்தை வென்றவனுக்கு அதனால் அதன் கீழே உள்ள மற்ற வரிசைகளும் அவனுக்கு அதீனமாகுமோ அவ்வாறு மக்கள் எந்த சத்கர்மம் செய்தாலும் அவை எல்லாம் அந்த ரைக்வருக்கு சேரும். லுரக்வர் அறிந்தவைகளை எல்லா அறிந்தவர்களிடம் சேரும். அவர் விஷயத்தையே என்னால் கூறப்பட்டது.
यथा विलीनमेवाङ्गास्यान्तादाचामेति कथमिति लवणमिति मध्यादाचामेति कथमिति लवणमित्यन्तादाचामेति कथमिति लवणमित्यभिप्रास्यैतदथ मोपसीदथा इति तद्ध तथा चकार तच्छश्वत्संवर्तते तंꣳ होवाचात्र वाव किल सत्सोम्य न निभालयसेऽत्रैव किलेति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - (ஆருணி-) எவ்வாறு இந்த உப்பு அதில் (ஜலத்தில்) கலந்து விட்டதோ (லீனமாகிவிட்டதோ) அந்த ஜலத்தின் மேல்பாகத்தை ருசித்துப்பார். என்றார். அது எவ்வாறு இருக்கிறது? அது உப்பாக இருக்கிறது. நடுவில் ருசித்துப்பார். எவ்வாறு இருக்கிறது? உப்பாக இருக்கிறது. அதை அடியில் ருசித்துப்பார் என்றார்? அது எவ்வாறு இருக்கிறது? அதுவும் உப்பாகவே இருக்கிறது என்று (ச்வேதகேது கூற) (ஆருணி-) சரிதான். இப்பொழுது இந்த ஜலத்தைக் கொட்டிவிட்டுவா என்றார். அவன் அவ்வாறே செய்தான். பிறகு கூறினான் ஜலத்தில் உப்பு எப்பொழுதும் இருந்து கொண்டிருந்தது என்று. அதற்கு ஆருணி கூறினார் - ஹே சோம்ய! இந்த சத்தும் எப்பொழுதும் நிச்சயமாக இருக்கிறது. அதை நீ அறியாவிட்டாலும் அது நிச்சயமாக இருக்கிறது.
यथा सोम्य पुरुषं गन्धारेभ्योऽभिनद्धाक्षमानीय तं ततोऽतिजने विसृजेत्स यथा तत्र प्राङ्वोदङ्वाधराङ्वा प्रत्यङ्वा प्रध्मायीताभिनद्धाक्ष आनीतोऽभिनद्धाक्षो विसृष्टः ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! எவ்வாறு ஒரு புருஷனை திருடன் கண்களைக் கட்டி காந்தார தேசத்திலிருந்து அழைத்துவந்து ஜனங்களற்ற இடத்தில் விட்டால் அவனுக்கு எவ்வாறு கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளில் சுற்றி என் கண்களைக்கட்டி இங்கே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விட்டுவிட்டான் கண்களைக் கட்டி இங்கு விட்டுவிட்டான் என்று மிக சத்தமிட்டு கதறினான்.
यथा सोम्य मधु मधुकृतो निस्तिष्ठन्ति नानात्ययानां वृक्षाणाꣳ रसान्समवहारमेकताꣳ रसं गमयन्ति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! எவ்வாறு தேனீக்கள் மதுவை சேகரிக்கின்றன எனில் எல்லா திக்குகளில் உள்ள மரங்களிலிருந்து ரசத்தை ஒன்றாக சேர்த்து அடையச் செய்கின்றது.
यथा सोम्यैकेन नखनिकृन्तनेन सर्वं कार्ष्णायसं विज्ञातꣳ स्याद्वाचारम्भणं विकारो नामधेयं कृष्णायसमित्येव सत्यमेवꣳ सोम्य स आदेशो भवतीति ॥ ६ ॥ மந்த்ரார்த்தம் - ஹே ஸோம்ய! எவ்வாறு இரும்பு நகவெட்டியின் ஞானத்தால் எல்லா இரும்பு பதார்த்தங்களையும் அறிந்ததாகிறது. ஏன்எனில் விகாரமானது வாக்கை அவலம்பித்து (ஆஸ்ரயித்து) கேவலம் நாம மாத்திரமே. உண்மையில் அது இரும்பு மாத்திரமே ஆகும். ஹே ஸோம்ய! இவ்வாறு அதன் ஆதேசம் ஆகிறது.
यथा सोम्यैकेन मृत्पिण्डेन सर्वं मृन्मयं विज्ञातꣳ स्याद्वाचारम्भणं विकारो नामधेयं मृत्तिकेत्येव सत्यम् ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - ஹே செளம்ய! எவ்வாறு ஒரு மண் கட்டியை அறிந்ததாலேயே எல்லா மண்ணினால் ஆன பதார்த்தங்களின் ஞானம் உண்டாகிறது (அறிந்ததாகிறது). இந்த மாற்றங்கள் (விகாரங்கள் எல்லாம்) பெயர் மாத்திரமே. உண்மையில் அது மண் மாத்திரமேயாகும்.
यथा सोम्यैकेन लोहमणिना सर्वं लोहमयं विज्ञातꣳस्याद्वाचारम्भणं विकारो नामधेयं लोहितमित्येव सत्यम् ॥ ५ ॥ மந்த்ரார்த்தம் - ஹே ஸோம்ய! எவ்வாறு ஒரு தங்கக்கட்டியின் ஞானம் ஏற்பட்டவுடன் எல்லா தங்கத்தால் ஆன பதார்த்தங்களின் ஞானம் ஏற்படுகிறது. ஏன்எனில் விகாரம் வாக்கை ஆஸ்ரயித்து நாம மாத்திரமேயாகும். தங்கம் மாத்திரமே சத்தியமாகும்.
यथेह क्षुधिता बाला मातरं पर्युपासत एवं सर्वाणि भूतान्यग्निहोत्रमुपासत इत्यग्निहोत्रमुपासत इति ॥ ५ ॥ மந்த்ரார்த்தம் - எவ்வாறு பசிக்கும் சிறுவர்கள் தாயை எல்லாவிதமாகவும் நாடுவார்களோ அவ்வாறு எல்லாப் பிராணிகளும் அக்னிஹோத்திரத்தை உபாசிக்கின்றன, அக்னிஹோத்திரத்தை உபாசிக்கின்றன. (நாடுகின்றன).
यदग्ने रोहितꣳ रूपं तेजसस्तद्रूपं यच्छुक्लं तदपां यत्कृष्णं तदन्नस्यापागादग्नेरग्नित्वं वाचारम्भणं विकारो नामधेयं त्रीणि रूपाणीत्येव सत्यम् ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - எது அக்னியின் சிகப்பு நிறரூபமோ அது தேஜஸ்ஸின் ரூபம். எது வெண்மை நிற ரூபமோ அது ஜலமாகும். எது கருமைநிற ரூபமோ அது அன்னத்தின் ரூபமாகும். இவ்வாறு அக்னியிலிருந்து அக்னித்தன்மை நிவிர்த்தியாகிறது. ஏன்எனில் (அக்னிரூப) விகாரம் வாக்கினால் கூறுவதற்காக நாம மாத்திரமே. மூன்று (சூக்ஷ்ம) ரூபமே உண்மை (சத்யம்) ஆகும்.
यदा वा ऋचमाप्नोत्योमित्येवातिस्वरत्येवꣳ सामैवं यजुरेष उ स्वरो यदेतदक्षरमेतदमृतमभयं तत्प्रविश्य देवा अमृता अभया अभवन् ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - எப்பொழுது (உபாசகன் அத்யயனம் மூலமாய்) ரிக்கை அடைகிறானோ அப்பொழுது அவன் ओं (ஓம்) என்று கூறிக்கொண்டு மிகுந்த ஆதரவுடன் உச்சாரணம் செய்கின்றான். இவ்வாறே சாமம் யஜுஸ்களையும் அடைகின்றான். இந்த எந்த அக்ஷரமோ அது மற்ற ஸ்வரங்களுக்கு சமான ஸ்வரமாகும். இது அம்ருதம், அபய ரூபமாகும். இதில் பிரவேசித்து தேவகணங்கள் அம்ருதத்தையும் அபயத்தையும் அடைந்தன.
यदा वै करोत्यथ निस्तिष्ठति नाकृत्वा निस्तिष्ठति कृत्वैव निस्तिष्ठति कृतिस्त्वेव विजिज्ञासितव्येति कृतिं भगवो विजिज्ञास इति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - (சனத்குமாரர் -) எப்பொழுது புருஷன் செயல்படுகிறானோ அப்பொழுது நிஷ்டையும் செய்கிறான். செயல்படாமல் நிஷ்டையை செய்ய முடியாது. புருஷன் செயல்பட்டால் நிஷ்டை உடையவனாகின்றான். ஆகையால் செயல்களை விசேஷரூபமாக அறியவிரும்ப வேண்டும் (நாரதர்-) பகவானே! நான் செயல்களை விசேஷரூபமாக அறிய விரும்புகின்றேன்.
यदा वै निस्तिष्ठत्यथ श्रद्दधाति नानिस्तिष्ठञ्छ्रद्दधाति निस्तिष्ठन्नेव श्रद्दधाति निष्ठा त्वेव विजिज्ञासितव्येति निष्ठां भगवो विजिज्ञास इति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - (சனத்குமாரர் -) எப்பொழுது இந்த புருஷன் நிஷ்டையை அடைகிறானோ அப்பொழுது அவன் சிரத்தை உடையவனாகின்றான். நிஷ்டை இல்லாமல் சிரத்தை செய்ய முடியாது. ஆனாலும் நிஷ்டை செய்பவன் சிரத்தை செய்கின்றான். ஆகையால் நிஷ்டையை விசேஷரூபமாக அறிய விருப்பம்கொள்ள வேண்டும். (நாரதர்) பகவானே! நான் நிஷ்டையை விசேஷரூபமாய் அறிய விரும்புகிறேன்.
यदा वै मनुतेऽथ विजानाति नामत्वा विजानाति मत्वैव विजानाति मतिस्त्वेव विजिज्ञासितव्येति मतिं भगवो विजिज्ञास इति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - (சனத்குமாரர்) எப்பொழுது மனிதன் மனனம் செய்கின்றானோ அப்பொழுது அவன் விசேஷரூபமாக அறிகின்றான். மனனம் செய்யவில்லையெனில் ஒன்றையும் அறிவது இல்லை. ஆனால் மனனம் செய்தால் அறிகின்றான். ஆகையால் மதியையே விசேஷரூபமாக அறிவதற்கு இச்சை செய்யவேண்டும் (जिज्ञासा) - ஜிக்ஞாசா செய்யவேண்டும்) (நாரதர்-) பகவானே! நான் மதியின் விக்ஞானத்தை அறிய விரும்புகிறேன்.
यदा वै विजानात्यथ सत्यं वदति नाविजानन्सत्यं वदति विजानन्नेव सत्यं वदति विज्ञानं त्वेव विजिज्ञासितव्यमिति विज्ञानं भगवो विजिज्ञास इति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - எப்பொழுது ஒருவன் சத்யத்தை விசேஷரூபமாக அறிகிறானோ அப்பொழுது அவன் சத்யத்தையே பேசுகின்றான். அறியவில்லையெனில் சத்யத்தை பேசமாட்டான். மேலும் விசேஷரூபமாய் அறிந்தவன் சத்யத்தையே கூறுகின்றான். ஆகையால் விக்ஞானத்தை விசேஷ ரூபமாக அறியவேண்டும். (நாரதர் -) பகவானே! நான் விக்ஞானத்தை விசேஷரூபமாக அறிய விரும்புகின்றேன்.
यदा वै श्रद्दधात्यथ मनुते नाश्रद्दधन्मनुते श्रद्दधदेव मनुते श्रद्धा त्वेव विजिज्ञासितव्येति श्रद्धां भगवो विजिज्ञास इति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - (சனத்குமாரர் -) எப்பொழுது மனிதன் சிரத்தை செய்கின்றானோ அப்பொழுது அவன் மனனம் செய்கின்றான். சிரத்தையில்லாமல் மனனம் செய்யமாட்டான். ஆனால் எவன் சிரத்தை உள்ளவனே அவன் மனனம் செய்கின்றான். ஆகையால் சிரத்தையை விசேஷ ரூபமாக ஜிக்ஞாசை செய்யவேண்டும். (நாரதர் -) பகவானே! நான் சிரத்தையின் விக்ஞானத்தில் இச்சை உள்ளவனாய் இருக்கிறேன்
यदा वै सुखं लभतेऽथ करोति नासुखं लब्ध्वा करोति सुखमेव लब्ध्वा करोति सुखं त्वेव विजिज्ञासितव्यमिति सुखं भगवो विजिज्ञास इति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - (சனத்குமாரர்) - எப்பொழுது மனிதன் சுகத்தை அடைவானோ அப்பொழுது செயல்படுகின்றான். சுகம் கிடையாது. எனில் செயல்படமாட்டான். ஆனால் சுகம் கிடைத்தபின் செயல்படுகிறான். ஆகையால் சுகத்தையே விசேஷரூபமாக அறிய வேண்டும். (நாரதர்-) பகவானே! எனக்கு சுகத்தின் விசேஷத்தை அறிய விரும்புகிறேன் (ஜிக்ஞாசை செய்கிறேன்).
यदादित्यस्य रोहितꣳ रूपं तेजसस्तद्रूपं यच्छुक्लं तदपां यत्कृष्णं तदन्नस्यापागादादित्यादादित्यत्वं वाचारम्भणं विकारो नामधेयं त्रीणि रूपाणीत्येव सत्यम् ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - ஆதித்தியனின் எந்த செம்மை ரூபமோ அது தேஜஸ்ஸின் ரூபம். எந்த வெண்மை ரூபமோ அது ஜலத்தினது. எந்த கருமை ரூபமோ அது அன்னத்தினுடையது. இவ்வாறு ஆதித்தியனிடத்திலிருந்து ஆதித்திய தன்மை நிவிர்த்தி ஆகிறது. ஏன்எனில் விகாரம் வாக்கை சார்ந்திருக்கும் நாமமாத்திரமானதால் ஆகும். இந்த மூன்றுரூபமேயாகும். இதுவே சத்யம். (மூன்று சூக்ஷ்ம பூதங்கள்) (உண்மையாகும்)
यदाप उच्छुष्यन्ति वायुमेवापियन्ति वायुर्ह्येवैतान्सर्वान्संवृङ्क्त इत्यधिदैवतम् ॥ २ ॥மந்த்ரார்த்தம் - எப்பொழுது ஜலம் உலர்ந்துவிடும் (வற்றிவிடும்)பொழுது வாயுவில் லீனமாகிறது. வாயுவே இந்த ஜலம் முழுவதையும் தன்னில் லயம் அடையச்செய்கிறது. இது அதிதைவத திருஷ்டியாகும்.
यदु रोहितमिवाभूदिति तेजसस्तद्रूपमिति तद्विदाञ्चक्रुर्यदु शुक्लमिवाभूदित्यपां रूपमिति तद्विदाञ्चक्रुर्यदु कृष्णमिवाभूदित्यन्नस्य रूपमिति तद्विदाञ्चक्रुः ॥ ६ ॥ மந்த்ரார்த்தம் - எந்த ஒன்று செம்மையோ அது தேஜஸ்ஸின் ரூபம் என்று அவர்கள் அறிந்திருக்கின்றார்கள். எது வெண்மையோ அது ஜலம் என்று அவர்கள் அறிந்திருக்கின்றார்கள். எது கருமையோ அது அன்னம் என்று அவர்கள் அறிந்திருக்கின்றார்கள்.
यदुदिति स उद्गीथो यत्प्रतीति स प्रतिहारो यदुपेति स उपद्रवो यन्नीति तन्निधनम् ॥ २ ॥மந்த்ரார்த்தம் - எந்த ஒரு “उत्” (உத்) என்ற ஸப்தமுள்ளதோ அது “उद्गीथः” (உத்கீதம்). எந்த ஒரு “प्रति” என்ற சப்தம் உள்ளதோ அது “प्रतिहारः” (ப்ரதிஹாரம்) எந்த ஒரு “उप” (உப) என்ற சப்தம் உள்ளதோ அது “उपद्रवः” (உபத்ரவம்) ஆகும். எந்த ஒரு “नि” (நி) என்ற ஸப்த ரூபமுள்ளதோ அது “निधनम्” (நிதனம்). ஆகும்.
यद्वविज्ञातमिवाभूदित्येतासामेव देवतानां समास इति तद्विदाञ्चक्रुर्यथा तु खलु सोम्येमास्तिस्रो देवताः पुरुषं प्राप्य त्रिवृत्त्रिवृदेकैका भवति तन्मे विजानीहीति ॥ ७ ॥ மந்த்ரார்த்தம் - அவ்வறே எது அறியப்பட்டதோ அது அதுவாகும் அதாவது அது இந்த தேவதைகளின் சமுதாயமாகும் என்று அவர்கள் அறிந்திருக்கின்றனர். ஹே சோம்யனே! இப்பொழுது நீ என் மூலமாக எதை அறிந்தாயோ அது எவ்வாறு அந்த மூன்று தேவதைகள் புருஷனை அடைந்து அவைகளில் ஒவ்வொன்றும் திரிவிருத், திரிவிருத் செய்யப்பட்டதாகின்றனர்.
यद्विद्युतो रोहितꣳ रूपं तेजसस्तद्रूपं यत्छुक्लं तदपां यत्कृष्णं तदन्नस्यापागाद्विद्युतो विद्युत्त्वं वाचारम्भणं विकारो नामधेयं त्रीणि रूपाणीत्येव सत्यम् ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - மின்னலின் செம்மை ரூபம் அது தேஜஸ்ஸின் ரூபமாகும். எந்த வெண்மைரூபம் உண்டோ அது ஜலமாகும். அவ்வாறே அதன் எந்த கருமை ரூபம் உண்டோ அது அன்னமாகும். இவ்வாறு மின்னலின் மின்னல் தன்மை நிவிரத்தியாகிறது. ஏன் எனில் (மின்னல் ரூபம்) வாக்கின் விகாரத்தை ஆஸ்ரயித்து நாமமாத்திரமேயாகும். அந்த மூன்றுரூபமே சத்யமாகும். (உண்மையாகும்).
यद्वै तत्पुरुषे शरीरमिदं वाव तद्यदिदमस्मिन्नन्तः पुरुषे हृदयमस्मिन्हीमे प्राणाः प्रतिष्ठिता एतदेव नातिशीयन्ते ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - எந்த இந்த புருஷனின் சரீரமோ அதுவே இந்த புரஷனின் மத்தியில் (உள்ளே நடுவில்) உள்ள ஹிருதயம். ஏன்எனில் இதில் பிராணன் நிலைபெற்றுள்ளது. இதை தாண்டி செல்வது இல்லை.
यद्वै तद्ब्रह्मेतीदं वाव तद्योयं बहिर्धा पुरुषादाकाशो यो वै स बहिर्धा पुरुषादाकाशः ॥ ७ ॥अयं वाव स योऽयमन्तः पुरुष आकाशो यो वै सोऽन्तः पुरुष आकाशः ॥ ८ ॥अयं वाव स योऽयमन्तर्हृदय आकाशस्तदेतत्पूर्णमप्रवर्ति पूर्णामप्रवर्तिनीं श्रियं लभते य एवं वेद ॥ ९ ॥மந்த்ரார்த்தம் - எந்த இந்த (த்ரிபாத அம்ருத ரூப) பிரஹ்மம் எதுவோ அது புருஷனின் வெளியில் உள்ள ஆகாசம். அதுவே புருஷனின் வெளி ஆகாசம். எது புருஷனின் உள்ளே உள்ள ஆகாசமோ அதுவே புருஷனின் உள் ஆகாசம். எந்த ஒரு ஆகாசம் இதயத்தின் (உள்ளே) அந்தர்கதமான ஆகாசமோ அது பூர்ணமாய் ஒன்றிலும் ப்ரவிர்த்திக்காமல் சம்பத்திகளை அடையச் செய்கிறது.
यस्तद्वेद स वेद सर्वꣳ सर्वा दिशो बलिमस्मै हरन्ति सर्वमस्मीत्युपासीत तद्व्रतं तद्व्रतम् ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - எவன் இதை அறிகிறானோ அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாகின்றான். அவனுக்கு எல்லா திசைகளிலிருந்தும் பலி அதாவது போகங்கள் ஸமர்பிக்கப்படுகின்றன. நான் “எல்லாமாக இருக்கின்றேன்” என்று உபாஸனை செய்யவேண்டியது விரதம் ஆகும், விரதம் ஆகும் (நியமம் ஆகும்).
यस्यामृचि तामृचं यदार्षेयं तमृषिं यां देवतामभिष्टोष्यन्स्यात्तां देवतामुपधावेत् ॥ ९ ॥மந்த்ரார்த்தம் - (அந்த சாமம்) எந்த ரிக்கில் (பிரதிஷ்டையாகி இருக்கிறதோ) அந்த ரிக்கின் எந்த ரிஷியோ அந்த ரிஷியை அவ்வாறே எந்த தேவதையின் ஸ்துதியை செய்கிறானோ அந்த தேவதையையும் சிந்தனம் செய்யவேண்டும்.
या वाक्सर्क्तस्मादप्राणन्ननपानन्नृचमभिव्याहरति यर्क्तत्साम तस्मादप्राणन्ननपानन्साम गायति यत्साम स उद्गीथस्तस्मादप्राणन्ननपानन्नुद्गायति ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - எது வாக்கோ அது ரிக். புருஷன் பிராணனாலும் அபானனாலும் கிரியை செய்யாமல் இருக்கும்பொழுது ரிக்கை உச்சாரணம் செய்கின்றான். எந்த ரிக்கோ அது சாமம். இதனால் எப்பொழுது பிராணன் அபானன் கிரியை அற்று இருக்கிறதோ அப்பொழுது சாமகானம் செய்கின்றான். எந்த சாமமோ அது உத்கீதம். எப்பொழுது பிராணன் அபானன் கிரியை அற்று இருக்கிறதோ அப்பொழுது உத்கானம் செய்கின்றான்.
या वै सा गायत्रीयं वाव सा येयं पृथिव्यस्याꣳ हीदꣳ सर्वं भूतं प्रतिष्ठितमेतामेव नातिशीयते ॥ २ ॥மந்த்ரார்த்தம் - எது காயத்ரியோ அதுவே இந்த பிருதிவீ ஆகும். ஏன்எனில் எல்லா பிராணிகளும் இதில் நிலை பெற்றுள்ளன. மேலும் இதை யாராலும் கடந்து செல்வதில்லை.
या वै सा पृथिवीयं वाव सा यदिदमस्मिन्पुरुषे शरीरमस्मिन्हीमे प्राणाः प्रतिष्ठिता एतदेव नातिशीयन्ते ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - எது பிருதிவியோ அதுவே இந்த புருஷனுடைய சரீரம். இதில் பிராணன்கள் நிலைபெற்றுள்ளது. ஏன்எனில் இதில் எந்த பிராணங்கள் நிலைபெற்றுள்ளதோ அது இதைத் (சரீரத்தை) கடந்து செல்வதில்லை.
यां दिशमभिष्टोष्यन्स्यात्तां दिशमुपधावेत् ॥ ११ ॥மந்த்ரார்த்தம் - எந்த திசையை ஸ்துதி செய்யப்பட போகிறதோ (இசைக்கப்படப் போகிறதோ) அந்த திசையை சிந்திக்க வேண்டும்.
यावान्वा अयमाकाशस्तावानेषोऽन्तर्हृदय आकाश उभे अस्मिन्द्यावापृथिवी अन्तरेव समाहिते उभावग्निश्च वायुश्च सूर्याचन्द्रमसावुभौ विद्युन्नक्षत्राणि यच्चास्येहास्ति यच्च नास्ति सर्वं तदस्मिन्समाहितमिति ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - எவ்வளவு (பெளதிக) ஆகாசம் உள்ளதோ அவ்வளவும் ஹிருதயத்தில் உள்ள ஆகாசமும் ஆகும். தியுலோகம், பிருதிவீ லோகம் இரண்டு லோகங்களும் நல்ல விதமாக அதன் உள்ளே நிலைபெற்றுள்ளது. இவ்வாறே அக்னியும் வாயுவுமாகிய இரண்டும். அவ்வாறே சூரிய சந்திரர்களும், அவ்வாறே மின்னல் நக்ஷத்திரங்களும், அவ்வாறே இந்த ஆத்மாவிற்கு எவை எல்லாம் இந்த உலகில் உள்ளதோ. இல்லையோ அவை எல்லாம் இதில் நல்லவிதமாக நிலைபெற்றுள்ளது.
येन च्छन्दसा स्तोष्यन्स्यात्तच्छन्द उपधावेद्येन स्तोमेन स्तोष्यमाणः स्यात्तं स्तोममुपधावेत् ॥ १० ॥மந்த்ரார்த்தம் - எந்த சந்தஸ் மூலமாக ஸ்துதி செய்கிறதோ அந்த சந்தஸை சிந்தனை செய். அவ்வாறே எந்த ஸ்தோமத்தால் ஸ்துதி செய்பவனாக ஆகிறதோ அந்த ஸ்தோமத்தை சிந்தனை செய்யவேண்டும்.
येवं यथाश्मानमाखणमृत्वा विध्वꣳ सत एवꣳ हैव स विध्वꣳ सते य एवंविदि पापं कामयते यश्चैनमभिदासति स एषोऽश्माखणः ॥ ८ ॥மந்த்ரார்த்தம் - இவ்வாறு கடினமான பாறையில் (மண் கட்டி) உடைந்து நாசமாகுமோ அவ்வாறு அழிக்க முடியாத பிராணனை உபாசித்து அதை அடைந்தவனை குறித்து தீமையை நினைக்கும் பாபி அதாவது தாக்கி அழிக்க நினைப்பவர்கள் அழிகிறார்கள்.
यो वै भूमा तत्सुखं नाल्पे सुखमस्ति भूमैव सुखं भूमा त्वेव विजिज्ञासितव्य इति भूमानं भगवो विजिज्ञास इति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - (சனத்குமாரர்) எது பூமாவோ அதுவே நிச்சயமாக சுகம் ஆகும். அல்பத்தில் சுகம் இல்லை. சுகமே பூமா. பூமாவை விசேஷரூபமாக (ஜிக்ஞாசை) அறிவதில் இச்சைக் கொள்ளவேண்டும். (நாரதர்-) பகவானே! நான் பூமாவை விசேஷ ரூபமாக அறிய விரும்புகின்றேன். (ஜிக்ஞாசை கொள்கின்றேன்).
यो ह वा आयतनं वेदायतनꣳ ह स्वानां भवति मनो ह वा आयतनम् ॥ ५ ॥ மந்த்ரார்த்தம் - எவன் இந்த ஆயதனத்தை அறிகிறானோ அவன் தன் சுற்றத்தாருக்கு (சொந்த பந்தங்களுக்கு) ஆயதனம் (ஆச்ரயம்) ஆகின்றான். நிச்சயமாக மனமே ஆயதனம் ஆகும்.
यो ह वै ज्येष्ठं च श्रेष्ठं च वेद ज्येष्ठश्च ह वै श्रेष्ठश्च भवति प्राणो वाव ज्येष्ठश्च श्रेष्ठश्च ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - எவன் ஜ்யேஷ்டனையும் ஸ்ரேஷ்டனையும் அறிகிறானோ அவன் ஜ்யேஷ்டனாகவும், ஸ்ரேஷ்டனாகவும் ஆகின்றான். நிச்சயமாகப் ப்ராணனே ஜ்யேஷ்டனும் சிரேஷ்டனும் ஆவான்.
यो ह वै प्रतिष्ठां वेद प्रति ह तिष्ठत्यस्मिꣳश्च लोकेऽमुष्मिꣳश्च चक्षुर्वाव प्रतिष्ठा ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இந்த பிரதிஷ்டையை அறிகின்றானோ அவன் இந்த லோகத்திலும், பரலோகத்திலும் பிரதிஷ்டை ஆகின்றான். சக்ஷு பிரதிஷ்டை ஆகும்.
यो ह वै वसिष्ठं वेद वसिष्ठो ह स्वानां भवति वाग्वाव वसिष्ठः ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - எவன் வசிஷ்டத்தை அறிகிறானோ அவன் தன் ஜாதிகளுள் மிகுந்த தனவான் ஆக ஆகின்றான். நிச்சயமாக வாக்கே வசிஷ்டம் (செல்வம்) ஆகும்.
यो ह वै सम्पदं वेद सꣳहास्मै कामाः पद्यन्ते दैवाश्च मानुषाश्च श्रोत्रं वाव सम्पत् ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இந்த சம்பத்தை அறிகின்றானோ அவனை தேவ, மற்றும் மனுஷ்ய காமனைகள் (போகங்களை) நல்லவிதமாக அடைவான். ச்ரோத்திரமே சம்பத் ஆகும்.
योषा वाव गौतमाग्निस्तस्या उपस्थ एव समिद्यदुपमन्त्रयते स धूमो योनिरर्चिर्यदन्तः करोति तेऽङ्गारा अभिनन्दा विस्फुलिङ्गाः ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஹே கெளதமரே! ஸ்திரீயே அக்னி. அவளுடைய உபஸ்தம் (பெண் உறுப்பு) சமித். புருஷனின் உறவு ஆரம்பம் புகை. உள் உறுப்பு ஜ்வாலை. அவ்வாறே உறவு கொள்ளுதல் தணல் ஆகும். அதனால் சுகம் அனுபவித்தல் தீப்பொறிகளாகும்.
रैक्वेमानि षट्शतानि गवामयं निष्कोऽयमश्वतरीरथोऽनु म एतां भगवो देवताꣳ शाधि यां देवतामुपास्स इति ॥ २ ॥மந்த்ரார்த்தம் - ஹே! ரைக்வ! தாங்கள் இந்த அறநூ று பசுக்களையும், இந்த ஹாரத்தையும் வேகமான இளம் குதிரைகளுடன் கூடிய ரதத்தையும் (அவ்வாறே இந்த தனத்தையும்) ஏற்றுக்கொள்ளுங்கள். ஹே பகவன்! தாங்கள் எனக்கு அந்த தேவதையின் உபதேசம் செய்யுங்கள். எதை நீங்கள் உபாசனை செய்கின்றீர்களோ அதை செய்யுங்கள்.
लवणमेतदुदकेऽवधायाथ मा प्रातरुपसीदथा इति स ह तथा चकार तं होवाच यद्दोषा लवणमुदकेऽवाधा अङ्ग तदाहरेति तद्धावमृश्य न विवेद ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - இந்த உப்பை ஜலத்தில் இட்டுவிட்டு நாளை காலை என்னிடம் வா என்றார். ஆருணி கூறியவாறு ச்வேதகேது அவ்வாறே செய்தான். அப்பொழுது ஆருணி அவரிடம் கூறினான் - ஹே குழந்தாய்! இரவில் ஜலத்தில் உப்பைப் இட்டாய் அல்லவா அந்த உப்பைக்கொண்டு வா என்றார். ஆனால் அவன் தேடியும் கிடைக்கவில்லை.
लोकेषु पञ्चविधꣳ सामोपासीत पृथिवी हिङ्कारः । अग्निः प्रस्तावोऽन्तरिक्षमुद्गीथ आदित्यः प्रतिहारो द्यौर्निधनमित्यूर्ध्वेषु ॥ १ ॥மந்த்ரார்த்தம் - உலகில் ஐந்து விதமான சாமங்களை உபாசனை செய்யவேண்டும். பிருதிவீ “हिंकारः” (ஹிம்காரம்), அக்னி “प्रस्ताव” (பிரஸ்தாவ), அந்தரிஷம், “उद्गीथ” (உத்கீதம்), ஆதித்யன் “प्रतिहार” (பிரதிஹார), மேலும் த்யுலோகம் “निधनः” (நிதனம்) இவ்வாறு மேல் உலகங்களுக்கு செல்வதற்கான உபாசனை (ஸாமதிருஷ்டி உபாசனை)
लोम हिङ्कारस्त्वक्प्रस्तावो मांसमुद्गीथोऽस्थि प्रतिहारो मज्जा निधनमेतद्यज्ञायज्ञीयमङ्गेषु प्रोतम् ॥ १ ॥மந்த்ரார்த்தம் - முடி “हिंकारः” (ஹிம்காரம்), தோல் (த்வக்) “प्रस्तावः” (பிரஸ்தாவம்), மாம்சம் “उद्गीथः” (உத்கீதம்), எலும்பு “प्रतिहारः” (பிரதிஹாரம்), மஜ்ஜை “निधनम्” (நிதனம்) ஆகும். யக்ஞயாக்ஞீய ஸாமத்தை அங்கங்களில் அனுஸ்யூதமாய் உள்ளன.
लो३कद्वरमपावा३र्णू३३ पश्येम त्वा वयं वैरा३३३३३ हु३म् आ३३ज्या३यो३ आ३२१११इति ॥ ८ ॥மந்த்ரார்த்தம் - (ஹே வாயு!) நீ அந்தரிக்ஷ லோகத்தின் வாயிலைத் திற. எதனால் இந்த வைராஜ்ய பதத்தை அடைவதற்காக நாங்கள் உன்னை தர்சிக்க வேண்டும்.
लो३कद्वारमपावा३र्णू ३३ पश्येम त्वा वयं रा ३३३३३ हु३म् आ ३३ ज्या ३ यो ३ आ ३२१११ इति ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - (ஹே அக்னீ!) நீ இந்த லோகத்தின் வாயிலைத்திற. எதனால் நாங்கள் ராஜ்ய பிராப்த்தியின் பொருட்டு உன்னுடைய தர்சனம் வேண்டும்.
लो३कद्वारमपावा३र्णू३३पश्येम त्वा वयं स्वारा ३३३३३ हु३म् आ३३ ज्या३ यो३ आ ३२१११ इति ॥ १२ ॥ आदित्यमथ वैश्वदेवं लो३कद्वारमपावा३र्णू३३ पश्येम त्वा वयं साम्रा३३३३३ हु३म् आ३३ ज्या३यो३आ ३२१११ इति ॥ १३ ॥ மந்த்ரார்த்தம் - லோகத்தின் வாயிலைத் திற. எதனால் நாங்கள் ஸ்வராஜ்யப் பிராப்திக்காக தங்களை தர்சனம் செய்யவேண்டும். இது ஆதித்ய ஸம்பந்தி ஸாமம் ஆகும். இப்பொழுது விச்வேதேவ ஸம்பந்தி ஸாமத்தைக் கூறுகிறோம் - லோகத்தின் வாயிலைத் திற, அதனால் நாங்கள் ஸ்வராஜ்ய பிராப்திக்காக தங்களைத் தரிசிக்க வேண்டும்.
वर्षति हास्मै वर्षयति ह य एतदेवं विद्वान्वृष्टौ पञ्चविधं सामोपास्ते ॥ २ ॥மந்த்ரார்த்தம் - ஜலத்தை கிரஹிப்பது. “निधनम्” (நிதனம்). இவ்வாறு அறிந்த புருஷன் மழையின் ஐந்துவிதமான ஸாமத்தை உபாஸசனை செய்கின்றான். அவனுக்காக மழை உண்டாகிறது. அவனே மழையைப் பொழியச்செய்கிறான்.
वसन्तो हिङ्कारो ग्रीष्मः प्रस्तावो वर्षा उद्गीथः शरत्प्रतिहारो हेमन्तो निधनमेतद्वैराजमृतुषु प्रोतम् ॥ १ ॥மந்த்ரார்த்தம் - வஸந்தகாலம் (ருது) “हिंकारः” (ஹிம்காரம்), கோடைகாலம் “प्रस्तावः” (பிரஸ்தாவம்), மழைகாலம் “उद्गीथः” (உத்கீதம்), இலையுதிர்காலம் “प्रतिहारः” (பிரதிஹாரம்), குளிர்காலம் “निधनम्” (நிதனம்). இந்த வைராஜ ஸாமம் ருதுக்காலங்களில் அனுஸ்யூதமாய் இருக்கிறது.
वसिष्ठाय स्वाहेत्यग्नावाज्यस्य हुत्वा मन्थे सम्पातमवनयेत्प्रतिष्ठायै स्वाहेत्यग्नावाज्यस्य हुत्वा मन्थे सम्पातमवनयेत्सम्पदे स्वाहेत्यग्नावाज्यस्य हुत्वा मन्थे सम्पातमवनयेदायतनाय स्वाहेत्यग्नावाज्यस्य हुत्वा मन्थे सम्पातमवनयेत् ॥ ५ ॥ மந்த்ரார்த்தம் - (இவ்வாறு) “वसिष्द्भाय स्वाहा” (வசிஷ்டாய ஸ்வாஹா) என்ற மந்திரத்தால் அக்னியில் அந்த மசியலை நெய்யுடன் சேர்த்து ஆகுதி செய்யவேண்டும். அதில் கரண்டியில் உள்ள மீதி மசியலையும் பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். “प्रतिष्द्भायै स्वाहा” (பிரதிஷ்ட்டாயை ஸ்வாஹா) என்ற இந்த மந்திரத்தால் அக்னியில் மசியலை நெய்யுடன் சேர்த்து ஆகுதி செய்யவேண்டும். கரண்டியில் மீதிமுள்ள மசியலையும் பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். “सम्पदे स्वाहा” (சம்பதே ஸ்வாஹா) என்ற மந்திரத்தால் மசியலை அக்னியில் நெய்யுடன் சேர்த்து ஆகுதி செய்யவேண்டும். கரண்டியில் மீதமுள்ள மசியலையும் பாத்திரத்தில் விடவேண்டும். அவ்வாறே “आयतनाय स्वाहा” (ஆயதனாய ஸ்வாஹா) என்ற மந்திரத்தால் மசியலை நெய்யுடன் சேர்த்து அக்னியில் ஆகுதி செய்யவேண்டும். கரண்டியில் உள்ள மீதியையும் பாத்திரத்தில் சேர்க்கவேண்டும்.
वागेव ब्रह्मणश्चतुर्थः पादः सोऽग्निना ज्योतिषा भाति च तपति च भाति च तपति च कीर्त्या यशसा ब्रह्मवर्चसेन य एवं वेद ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - வாக்கே பிரஹ்மத்தின் நான்காவது பாதம். அந்த அக்னி ரூப ஜ்யோதியினால் பிரகாசிக்கின்றது மேலும் தஹிக்கின்றது. எவன் ஒருவன் இவ்வாறு அறிகின்றானோ அவன் கீர்த்தி, புகழ் மேலும் பிரஹ்ம தேஜஸ்ஸால் பிரகாசிக்கின்றான் மேலும் தஹிக்கின்றான்.
वागेवर्क्प्राणः सामोमित्येतदक्षरमुद्गीथः । तद्वा एतन्मिथुनं यद्वाक्च प्राणश्चर्क्च साम च ॥ ५ ॥ மந்த்ரார்த்தம் - வாக்கே ரிக், பிராணன் சாம, மேலும் ஓம் என்ற இந்த அக்ஷரம் உத்கீதம் (उीथम्) எந்த ரிக்கும், சாம ரூபமும் வாக்காயும், பிராணனாயும் பரஸ்பரம் மிதுனமாகிறது. (சேருகின்றது).
वाग्वाव नाम्नो भूयसी वाग्वा ऋग्वेदं विज्ञापयति यजुर्वेदꣳ सामवेदमाथर्वणं चतुर्थमितिहासपुराणं पञ्चमं वेदानां वेदं पित्र्यꣳ राशिं दैवं निधिं वाकोवाक्यमेकायनं देवविद्यां ब्रह्मविद्यां भूतविद्यां क्षत्रविद्यां सर्पदेवजनविद्यां दिवं च पृथिवीं च वायुं चाकाशं चापश्च तेजश्च देवाꣳश्च मनुष्याꣳश्च पशूꣳश्च वयाꣳसि च तृणवनस्पतीञ्श्वापदान्याकीटपतङ्गपिपीलकं धर्मं चाधर्मं च सत्यं चानृतं च साधु चासाधु च हृदयज्ञं चाहृदयज्ञं च यद्वै वाङ्नाभविष्यन्न धर्मो नाधर्मो व्यज्ञापयिष्यन्न सत्यं नानृतं न साधु नासाधु न हृदयज्ञो नाहृदयज्ञो वागेवैतत्सर्वं विज्ञापयति वाचमुपास्स्वेति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - வாக் நாமத்தைவிட மேலானது. வாக்கே ரிக்வேதத்தை அறியச்செய்கிறது. அவ்வாறு யஜுர்வேதம், சாமவேதம், நான்காவதான அதர்வண வேதம், ஐந்தாவது வேதமான இதிஹாச புராணங்கள், வேதங்களின் வேதம் வியாக்கரணம், ஸ்ராத்தகல்பம், கணிதம், உத்பாத்த சாஸ்திரம், நிதிஞானம், தர்க்கசாஸ்திரம், நீதி, நிருக்தம், வேதவித்யா, பிரஹ்மவித்யா, பூதவித்யா, தனுர்வித்யா, ஜ்யோதிஷம், காருடஞானம், சங்கீதம் முதலிய சாஸ்திரங்கள், மேல் உலகம், பிருதிவீ, வாயு, ஆகாசம், ஜலம், தேஜஸ், தேவ, மனுஷ்ய, பசு, பக்ஷி, புல், மூலிகை, புலி (மிருகம்) புழு, விட்டில், எறும்பு வரையிலான பிராணிவர்க்கங்கள், தர்மம் அதர்மம், சத்தியம் - பொய், சாது (நல்லது) அசாது (கெட்டது), இனிமையானது இனிமை அற்றது என்பவை எல்லாம் வாக் இல்லையெனில் தர்மம் அற்றதையோ, அதர்மம் அற்றதையோ அறியமுடியாது. அவ்வாறே சத்யம் அல்லாததையும், பொய் அல்லாததையும், நல்லதையும், கெட்டதையும் நம்மால் அறியமுடியாது வாக்தான் இவை எல்லாவற்றின் ஞானத்தையும் அளிக்கிறது. ஆகையால் வாக்கை ப்ரஹ்மம் என்று உபாசனைசெய்.
वायुर्वाव संवर्गो यदा वा अग्निरुद्वायति वायुमेवाप्येति यदा सूर्योऽस्तमेति वायुमेवाप्येति यदा चन्द्रोऽस्तमेति वायुमेवाप्येति ॥ १ ॥மந்த்ரார்த்தம் - வாயுவே சம்வர்க்கம். எப்பொழுது அக்னி அணையும்பொழுது வாயுவில் லயமாகின்றது. சூரியன் அஸ்தமிக்கும் போதும் வாயுவிலேயே லயமாகின்றது. மேலும் எப்பொழுது சந்திரன் அஸ்தமிக்கிறதோ அப்பொழுது வாயுவிலேயே லயமாகின்றது.
विज्ञानं वाव ध्यानाद्भूयो विज्ञानेन वा ऋग्वेदं विजानाति यजुर्वेदꣳ सामवेदमाथर्वणं चतुर्थमितिहासपुराणं पञ्चमं वेदानां वेदं पित्र्यꣳ राशिं दैवं निधिं वाकोवाक्यमेकायनं देवविद्यां ब्रह्मविद्यां भूतविद्यां क्षत्त्रविद्यां नक्षत्रविद्याꣳ सर्पदेवजनविद्यां दिवं च पृथिवीं च वायुं चाकाशं चापश्च तेजश्च देवाꣳश्च मनुष्याꣳश्च पशूꣳश्च वयाꣳसि च तृणवनस्पतीञ्छ्वापदान्याकीटपतङ्गपिपीलकं धर्मं चाधर्मं च सत्यं चानृतं च साधु चासाधु च हृदयज्ञं चाहृदयज्ञं चान्नं च रसं चेमं च लोकममुं च विज्ञानेनैव विजानाति विज्ञानमुपास्स्वेति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - விக்ஞானம் தியானத்தைக் காட்டிலும் ஸ்ரேஷ்டமானது. விக்ஞானத்தால் புருஷன் ரிக் வேதத்தை அறிகின்றான். அவ்வாறே விக்ஞானத்தால் அவன் யஜுர்வேதம், சாமவேதம், நான்காவதான அதர்வண வேதம், வேதங்களில் ஐந்தாவது வேதமான இதிகாச புராணங்கள், வியாகரணம், ஸ்ரார்த்தகல்பம், கணிதம், உத்பாத ஞானம், நிதி விக்ஞானம், தர்க்க சாஸ்திரம், நீதி, தேவவித்யா (நிருக்தம்) பிரஹ்ம்மவித்யா, பூதவித்யா, தனுர்வேதம், ஜ்யோதிஷம், காருடவித்யா மேலும் சில்பவித்யா, த்யுலோகம், பிருதிவீ, வாயு, ஆகாசம், ஜலம், தேஜஸ், தேவ, மனுஷ்ய, பசு, பக்ஷீ, த்ருணம், வனஸ்பதி, (மூலிகைகள், தாவரங்கள்) காட்டு மிருகங்கள், புழு, வண்டுகள், எறும்பு வரையில் உள்ள எல்லா ஜீவராசிகள், தர்மம், அதர்மம், சத்தியம், பொய், நல்லது, கெட்டது, இனிமை, கொடுமை, அன்னம், ரசம் அவ்வாறே இந்த லோகம், பரலோகம் ஆகிய எல்லாவற்றையும் அறிகின்றான். நீ விக்ஞானத்தை உபாசனை செய்.
विनर्दि साम्नो वृणे पशव्यमित्यग्नेरुद्गीथोऽनिरुक्तः प्रजापतेर्निरुक्तः सोमस्य मृदु श्लक्ष्णं वायोः श्लक्ष्णं बलवदिन्द्रस्य क्रौञ्चं बृहस्पतेरपध्वान्तं वरुणस्य तान्सर्वानेवोपसेवेत वारुणं त्वेव वर्जयेत् ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஸாமத்தின் “विनर्दि” (விநர்தி) என்ற பெயருடைய கானத்தை வரிக்கின்றேன். அது கால் நடைகளுக்கு ஹிதத்தை அளிப்பது. மேலும் அது அக்னி ஸம்பந்தமான உத்கீதமாகும். பிரஜாபதியின் உத்கீதம் “अनिरुक्तः” (அநிருக்தம்) ஆகும். சோமத்தின் (சந்திரனின்) உத்கீதம் “निरुक्तः” (நிருக்தம்). வாயுவின் உத்கீதம் உச்சரிப்பதற்கு ஸரளமாகவும் இதமானதாகும். இந்திரனுடையது இதமானதாயும் பலமுடையதாயும் இருக்கும். பிரஹஸ்பதியினுடையது க்ரெளஞ்ச பறவைக்கு ஸமானமான சப்தமுடையது. வருணனுடையது நாசாகாரமாக (கொடூரமாக) இருக்கும். இந்த எல்லா உத்கீதங்களையும் உபாஸனை செய்யவேண்டும். வருண ஸம்பந்தியான உத்கீதத்தை மட்டும் விட்டுவிடவேண்டும்.
वृष्टौ पञ्चविधं सामोपासीत पुरोवातो हिङ्कारो मेघो जायते स प्रस्तावो वर्षति स उद्गीथो विद्योतते स्तनयति स प्रतिहार उद्गृह्णाति तन्निधनम् ॥ १ ॥மந்த்ரார்த்தம் - மழையின் ஐந்துவிதமான ஸாமத்தை உபாஸனை செய். (மழைக்கு) முந்திய வாயு “हिंकार” (ஹிம்காரம்), மேகம் உற்பத்தியாவது, “प्रस्तावः” (பிரஸ்தாவம்), பொழிவது “उीथः” (உத்கீதம்), மின்னுவதும், இடி இடிப்பதுவும் “प्रतिहारः” (பிரதிஹாரம்) ஆகும்.
वेत्थ यथासौ लोको न सम्पूर्यत३ इति न भगव इति वेत्थ यथा पञ्चम्यामाहुतावापः पुरुषवचसो भवन्तीति नैव भगव इति ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - (பிரவாஹணர்) பித்ருலோகம் ஏன் நிறம்பவில்லை என்று உனக்குத் தெரியுமா? (ச்வேதகேது) பகவானே! தெரியாது. (பிரவாஹணர்) பாஞ்சவீ (ஐந்தாவது) ஆகுதியை ஹவனம் செய்தபின் ஜலம் அதாவது (சோமம் நெய் முதலிய ரசம்) புருஷன் என்ற வாசகத்தை (உருவத்தை) எவ்வாறு அடைகின்றான் என்பது தெரியுமா? (ச்வேதகேது) பகவானே தெரியாது தெரியாது என்றார்.
वेत्थ यदितोऽधि प्रजाः प्रयन्तीति न भगव इति वेत्थ यथा पुनरावर्तन्त३ इति न भगव इति वेत्थ पथोर्देवयानस्य पितृयाणस्य च व्यावर्तना३ इति न भगव इति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - (பிரவாஹணர்) என்ன உனக்குத் தெரியுமா இந்த லோகத்தில் இருந்து சென்றபின் (இறந்தபின்) மனிதர்கள் எங்கு செல்கின்றனர் என்பது தெரியுமா? (ச்வேதகேது) பகவானே! தெரியாது. என்ன உனக்குத் தெரியுமா மறுபடியும் அவர்கள் இந்த லோகத்திற்குத் திரும்பி வருகின்றனர் என்று? (ச்வேதகேது) பகவானே! எனக்குத் தெரியாது. (ப்ரவாஹணர்) உனக்குத் தெரியுமா தேவையான மார்கமும், பித்ருயாண மார்கமும் ஆகிய இரண்டும் எந்த இடத்தில் பிரிகிறது என்று உனக்குத் தெரியுமா என்று? (ச்வேதகேது) ஹே பகவானே! எனக்குத் தெரியாது என்று.
व्याने तृप्यति श्रोत्रं तृप्यति श्रोत्रे तृप्यति चन्द्रमास्तृप्यति चन्द्रमसि तृप्यति दिशस्तृप्यन्ति दिक्षु तृप्यन्तीषु यत्किञ्च दिशश्च चन्द्रमाश्चाधितिष्ठन्ति तत्तृप्यति तस्यानु तृप्तिं तृप्यति प्रजया पशुभिरन्नाद्येन तेजसा ब्रह्मवर्चसेनेति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - வியானன் திருப்தி அடைந்தபின் ச்ரோத்திர இந்திரியம் திருப்தி அடைகிறது. ஸ்ரோத்திரம் திருப்தி அடைந்தபின் சந்திரன் திருப்தி அடைகிறது. சந்திரன் திருப்தி அடைந்தால் திசைகள் திருப்தி அடைகின்றன. அவ்வாறே திசைகள் திருப்தி அடைந்தபின் எவைகளில் இந்த சந்திரன் திசைகள் ஸ்வாமி பாவத்தால் நிலைபெற்றுள்ளதோ அவைகளும் திருப்தி அடைகின்றன. அவற்றின் திருப்தியின் பின் அவை போக்த்தா, பிரஜை, (பசு) கால்நடை, அன்னாத்ய, தேஜஸ், பிரஹ்ம தேஜஸ் இவைகளால் திருப்தி ஏற்படுகிறது.
श्यामाच्छबलं प्रपद्ये शबलाच्छ्यामं प्रपद्येऽश्व इव रोमाणि विधूय पापं चन्द्रं इव राहोर्मुखात्प्रमुच्य धूत्वा शरीरमकृतं कृतात्मा ब्रह्मलोकमभिसम्भवामीत्यभिसम्भवामीति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - நான் ச்யாம (ஹிருதயத்தில் இருக்கும்) பிரஹ்மத்திலிருந்து சபல பிரஹ்மத்தை (श्यामाच्छबलम्) அடைந்து சபல பிரஹ்மத்திலிருந்து ச்யாமத்தை அடைவேன். குதிரை எவ்வாறு ரோமங்களை அசைத்து = சிலிர்த்து நிர்மலமாகிறதோ அவ்வாறு பாபங்களை நீக்கி, ராகுவின் முகத்திலிருந்து விடுபட்ட சந்திரனைப் போன்று சரீரத்தைத் தியாகம் செய்து கிருதகிருதனாகி அகிருத (நித்ய) பிரஹ்மலோகத்தை அடைகிறான். பிரஹ்ம லோகத்தை அடைகிறான்.
श्रुतꣳ ह्येव मे भगवद्दृशेभ्य आचार्याद्धैव विद्या विदिता साधिष्ठं प्रापतीति तस्मै हैतदेवोवाचात्र ह न किञ्चन वीयायेति वीयायेति ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - நான் ஶ்ரீமான்களாகிய ரிஷிகளிடம் இருந்து கேள்விப்பட்டிருக்கிறேன்- ஆச்சாரியர்களிடம் இருந்து அறிந்த வித்தையே மிகுந்த மேன்மையானதாக ஆகும். அப்பொழுது ஆச்சாரியர் அவனுக்கு உபதேசம் செய்தார். இதில் சிறிதும் குறைவு இல்லை. குறைவு இல்லை. (அதாவது இந்த வித்யை பூர்ணமானதாகும்).
श्रोत्रं होच्चक्राम तत्संवत्सरं प्रोष्य पर्येत्योवाच कथमशकतर्ते मज्जीवितुमिति यथा बधिरा अशृण्वन्तः प्राणन्तः प्राणेन वदन्तो वाचा पश्यन्तश्चक्षुषा ध्यायन्तो मनसैवमिति प्रविवेश ह श्रोत्रम् ॥ १० ॥ மந்த்ரார்த்தம் - ச்ரோத்திரம் அதன்பின் உத்கிரமணம் செய்தது (வெளியேறியது). அது ஒரு வருடம் வெளியே தங்கி அதன்பின் திரும்பிவந்து கேட்டது - நான் இல்லாமல் நீங்கள் எல்லோரும் எவ்வாறு ஜீவித்துக் கொண்டிருந்தீர்கள் என்று. (அவைகள் கூறின -) எவ்வாறு செவிடன் காது கேட்காவிடினும் பிராணனால் சுவாசித்துக்கொண்டும், கண்களால் பார்த்துக்கொண்டும், வாக்கால் பேசிக்கொண்டும், மனதால் சிந்தித்துக்கொண்டும் ஜீவித்து இருப்பானோ அவ்வாறு என்று. இதைக் கேட்ட ச்ரோத்திரம் சரீரத்தில் பிரவேசித்தது.
श्रोत्रमेव ब्रह्मणश्चतुर्थः पादः स दिग्भिर्ज्योतिषा भाति च तपति च भाति च तपति च कीर्त्या यशसा ब्रह्मवर्चसेन य एवं वेद य एवं वेद ॥ ६ ॥மந்த்ரார்த்தம் - ஸ்ரோத்திரமே மனோரூப பிரஹ்மத்தின் நான்காவது பாதம். அது திசை ரூபமான ஜ்யோதியால் பிரகாசிக்கின்றது. தஹிக்கின்றது. எவன் இவ்வாறு அறிகின்றானோ அவன் கீர்த்தி, புகழ், பிரஹ்மம் தேஜஸால் பிரகாசிக்கின்றான், தஹிக்கின்றான்.
श्रोत्रमेवर्ङ्मनः साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयते । श्रोत्रमेव सा मनोऽमस्तत्साम ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - ச்ரோத்திரமே “ऋक्” (ரிக்), மனம் “साम” (ஸாம) ஆகும். இவ்வாறு இந்த (ச்ரோத்ரரூப) ரிக்கில் (மனரூப) ஸாமம் நிலைபெற்றிருக்கிறது. ஆகையால் ரிக்கில் நிலைபெற்றுள்ள ஸாமத்தை கானம் செய்கின்றனர். ச்ரோத்திரமே “सा” (ஸா), மனம் “अम” (அம) ஆகும். இவ்வாறு இவை இரண்டும் சேர்ந்து ஸாமம் ஆகும்.
श्वेतकेतुर्हारुणेय आस तꣳ ह पितोवाच श्वेतकेतो वस ब्रह्मचर्यं न वैसोम्यास्मत्कुलीनोऽननूच्य ब्रह्मबन्धुरिव भवतीति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - அருணரின் பெளத்திரன் (பேரன்) ச்வேதகேது. அவரிடம் பிதா கூறினார் - ஹே ச்வேதகேது! நீ பிரஹ்மசர்யவாசம் செய். ஏன்எனில் ஹே செளம்ய! நம்முடைய குலத்தில் உண்டானவர்களில் ஒருவரும் அத்யயனம் செய்யாமல் பிரஹ்ம பந்துவாக (பெயரளவில் பிராஹ்மணனாக) இருக்கமாட்டார்கள்.
श्वेतकेतुर्हारुणेयः पञ्चालानाꣳ समितिमेयाय तꣳ ह प्रवाहणो जैवलिरुवाच कुमारानु त्वाशिषत्पितेत्यनु हि भगव इति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - அருணனுடைய புத்திரன் ச்வேதகேது பாஞ்சால தேசத்தின் ஜனங்களின் சபைக்கு வந்தார். அவரிடம் ஜாபலருடைய புத்திரன் பிரவாஹணர் இவ்வாறு கூறினார் - ஹே குமாரனே! என்ன உனக்கு உன்னுடைய பிதா சிக்ஷை செய்தாரா? (கற்பித்தாரா). அதற்கு அவர் கூறினார் - ஆம் பகவானே என்று.
श्वेतकेतो यन्नु सोम्येदं महामना अनूचानमानी स्तब्धोऽस्युत तमादेशमप्राक्ष्यः येनाश्रुतꣳ श्रुतं भवत्यमतं मतमविज्ञातं विज्ञातमिति कथं नु भगवः स आदेशो भवतीति ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - எதனால் கேட்கப்படாதது கேட்டதாக ஆகின்றதோ, சிந்திக்காதது சிந்திக்கப்பட்டதாகிறதோ, அறியப்படாதது விசேஷமாக அறியப்பட்டதாகிறதோ (அந்த உபதேசத்தைப் பெற்றாயா?) , (அதற்கு ச்வேதகேது கேட்டார்) பகவானே! அந்த ஆதேசத்தை (அறிவை) எவ்வாறு பெறுவது?
षोडशकलः सोम्य पुरुषः पञ्चदशाहानि माशीः काममपः पिबापोमयः प्राणो नपिबतो विच्छेत्स्यत इति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! புருஷன் பதினாறு கலைகள். உடையவன் அவன் பதினைந்து நாட்கள் சாப்பிடாமல் எவ்வளவு இச்சிக்கின்றானோ அவ்வளவு ஜலத்தை பருகி வாழ்கின்றான். பிராணன் ஜலமயம். ஆகையால் ஜலம் பருகுவதால் அவன் நாசம் அடைவதில்லை.
स एतां त्रयीं विद्यामभ्यतपत्तस्यास्तप्यमानाया रसान्प्रावृहद्भूरित्यृग्भ्यो भुवरिति यजुर्भ्यः स्वरिति सामभ्यः ॥ ३ ॥ तद्यदृक्तो रिष्येद्भूः स्वाहेति गार्हपत्ये जुहुयादृचामेव तद्रसेनर्चां वीर्येणर्चां यज्ञस्य विरिष्टं सन्दधाति ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - அதன்பின் அவர் அந்த த்ரயீ (மூன்று) வித்யையைக் குறித்து தபஸ் செய்தார். அந்த தபஸினால் உண்டான வித்யையில் இருந்து ரசத்தை எடுத்தார். ரிக் ஸ்ருதியிலிருந்து “भूः” (பூ:), யஜுஸ் ஸ்ருதியிலிருந்து “भुवः” (புவ:), அவ்வாறே சாம ஸ்ருதியிலிருந்து “स्व” (ஸ்வ:) என்ற இந்த ரசங்களை கிரஹித்தார். எந்த யக்ஞத்தில் ரிக் சுருதிகளின் சம்பந்தம் வந்தத்தில் குறை ஏற்படுகிறதோ அப்பொழுது “भूः स्वाहा” (பூ: ஸ்வாஹா) என்று கூறி கார்ஹபத்யாக்னியில் ஹவனம் செய்கின்றனர். இவ்வாறு ரிக்குகளின் ரசத்தால் ரிக்குகளின் வீர்யத்தால் ரிக் சம்பந்தமான யக்ஞத்தின் குறைபாடு நீங்கி பூர்த்தியாகிறது.
स एतास्तिस्रो देवता अभ्यतपत्तासां तप्यमानानाꣳ रसान्प्रावृहदग्नेर्ऋचो वायोर्यजूंषि सामान्यादित्यात् ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அதன்பின் அவர் இந்த மூன்று தேவதைகளைக்குறித்து தபஸ் செய்தார். அந்த தபஸினால் தேவதைகளிடம் இருந்து ரசத்தை எடுத்தார். அக்னியில் இருந்து ரிக், வாயுவிலிருந்து யஜுஸ், ஆதித்யனிடமிருந்து சாமம் ஆகியவைகளை கிரஹித்தார்.
स एवमेतद्गायत्रं प्राणेषु प्रोतं वेद प्राणी भवति सर्वमायुरेति ज्योग्जीवति महान्प्रजया पशुभिर्भवति महान्कीर्त्या महामनाः स्यात्तद्व्रतम् ॥ २ ॥மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இவ்வாறு காயத்ரி எனப்படும் பிராணனில் ஊடுறுவி இருப்பதை (பிரதிஷ்டித்திருப்பதை) அறிகிறானோ அவன் பிராணன் உடையவனாகின்றான். பூர்ண ஆயுளையும் அனுபவிக்கின்றான். மிகுந்த புகழுடைய ஜீவனத்தை அடைகின்றான். பிரஜை பசுக்கள் மூலமாய் மிகவும் மேலானவனாக ஆகின்றான். அவ்வாறே கீர்த்தியினாலும் மஹான் ஆகின்றான் பெரிய மனதுடையவனாய் (உதாரமனமுடையவனாய்) அடைவேனாக என்பது அவனுடைய விரதமாகும்.
स एवाधस्तात्स उपरिष्टात्स पश्चात्स पुरस्तात्स दक्षिणतः स उत्तरतः स एवेदꣳ सर्वमित्यथातोऽहङ्कारादेश एवाहमेवाधस्तादहमुपरिष्टादहं पश्चादहं पुरस्तादहं दक्षिणतोऽहमुत्तरतोऽहमेवेदꣳ सर्वमिति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - அது கீழே இருக்கிறது. அது மேலே இருக்கிறது. அது பின்னால் இருக்கிறது. அது முன்னால் இருக்கிறது. அது வலது பக்கம் இருக்கிறது. அது இடது பக்கம் இருக்கிறது. அதுவே எல்லாமாக இருக்கிறது. இப்பொழுது இவைகளில் அஹங்காரத்துடன் இருப்பதைக் கூறுகிறது. நான் கீழே இருக்கின்றேன். நான் மேலே இருக்கின்றேன். நான் பின்னால் இருக்கின்றேன், நான் முன்னால் இருக்கின்றேன், நான் வலது பக்கம் இருக்கின்றேன், நான் இடது பக்கம் இருக்கின்றேன். நானே எல்லாமாகவும் இருக்கின்றேன்.
स एष परोवरीयानुद्गीथः स एषोऽनन्तः परोवरीयो हास्य भवति परोवरीयसो ह लोकाञ्जयति य एतदेवं विद्वान्परोवरीयाꣳसमुद्गीथमुपास्ते ॥ २ ॥மந்த்ரார்த்தம் - எந்த இந்த உத்கீதம் மிகவும் மேலானதும் சிறந்ததாய் இருக்கிறதோ அது அனந்தம் ஆகும். இதனால் இதை இவ்வாறு அறிந்த வித்வான் இந்த மிகவும் மேலான (உத்கிருஷ்டமான பரமாத்ம ரூபத்தை) உத்கீதத்தை உபாசனை செய்கின்றாரோ அவருடைய ஜீவனம் மிகவும் மேலானதாக ஆகும். மேலும் அவர் மேலான உத்கிருஷ்ட லோகங்களை தன் அதீனமாக செய்கிறான்.
स एष ये चैतस्मादर्वाञ्चो लोकास्तेषां चेष्टे मनुष्यकामानां चेति तद्य इमे वीणायां गायन्त्येतं ते गायन्ति तस्मात्ते धनसनयः ॥ ६ ॥மந்த்ரார்த்தம் - அந்த இந்த (நேத்திரத்தில் உள்ள புருஷன்) எந்த இந்த (அத்யாத்ம ஆத்மா)வைக்காட்டிலும் கீழே உள்ள லோகமே அவனுக்கு. அவ்வாறே மதிக்கக்கூடிய காமனைகளை ஆள்பவன் (சாசனம் செய்பவன்). ஆகையால் எவர் வீணையில் கானம் செய்கின்றனரோ அவர் அதனுடைய கானத்தை செய்கின்றனர். (போற்றுகின்றனர்). அதனால் அவர்கள் தனவான்களாகின்றனர்.
स एष रसानाꣳ रसतमः परमः परार्ध्योऽष्टमो यदुद्गीथः ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - அந்த ஓம்காரம் எதுவோ இந்த உத்கீதம் ஆகும். அது ரஸங்களில் மிகுந்த ஒப்பற்ற ரஸமுடையது. உத்கிருஷ்டமானது. பரமாத்மாவின் பிரதீகமாய் இருப்பதாலும், பரமாத்மாவின் ஸ்தானம் போல இருப்பதாலும் ஆஸ்ரய ஸ்தானமாகும். மேலும் (பிருதிவீ முதலிய ரஸங்களுள்) எட்டாவது ஆகும்.
स जातो यावदायुषं जीवति तं प्रेतं दिष्टमितोऽग्नय एव हरन्ति यत एवेतो यतः सम्भूतो भवति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - இவ்வாறு ஜன்மம் ஏற்பட்டபின் அவன் ஆயுள் வரை ஜீவிக்கின்றனர். மரணத்திற்குப்பின் கர்ம வசத்தின் காரணமாய் பரலோகத்திற்குச் செல்வதற்காக அவனை அக்னிக்கே எடுத்துச் செல்கின்றனர். அவன் எங்கிருந்து உத்பன்னம் ஆனானோ அந்த அக்னியின் இடத்திற்கே சென்று அடைகின்றான்.
स ब्रूयान्नास्य जरयैतज्जीर्यति न वधेनास्य हन्यत एतत्सत्यं ब्रह्मपुरमस्मिन्कामाः समाहिता एष आत्मापहतपाप्मा विजरो विमृत्युर्विशोको विजिघत्सोऽपिपासः सत्यकामः सत्यसङ्कल्पो यथा ह्येवेह प्रजा अन्वाविशन्ति यथानुशासनं यं यमन्तमभिकामा भवन्ति यं जनपदं यं क्षेत्रभागं तं तमेवोपजीवन्ति ॥ ५ ॥ மந்த்ரார்த்தம் - அவர்களுக்கு இதைக் கூறவேண்டும் - இது (தேஹம்) மூப்பு அவஸ்தையில் (ஆகாசம் எனப்படும் பிரஹ்மம்) மூப்பு அடைவதில்லை. அதை வதம் செய்தாலும் நாசம் அடைவதில்லை. இந்த பிரஹ்மபுரம் சத்யம். இதில் எல்லா காமனைகளும் எல்லா விதமாகவும் நிலைபெற்று இருக்கின்றன. அது ஆத்மா, தர்மம் அதர்மம் அற்றது, அவ்வாறே மூப்பு அற்றது, மரணமற்றது, சோகம் அற்றது, சாப்பிடுவதற்கு இச்சை அற்றது, பருகுவதிலும் இச்சை அற்றது. சத்ய காமம் மேலும் சத்ய சங்கல்பம் ஆகும். எவ்வாறு இந்த உலகில் பிரஜைகள் ராஜாவின் ஆணைப்படி அனுசரித்து வாழ்ந்தாலும் எந்த எந்த தேசத்தையோ, ஒரு பகுதியையோ விரும்பினால் அதை ஆஸ்ரயித்தே ஜீவனத்தை மேற்கொள்கின்றனர்.
स य आकाशं ब्रह्मेत्युपास्त आकाशवतो वै स लोकान्प्रकाशवतोऽसम्बाधानुरुगायवतोऽभिसिध्यति यावदाकाशस्य गतं तत्रास्य यथाकामचारो भवति य आकाशं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगव आकाशाद्भूय इत्याकाशाद्वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் ஆகாசத்தை “இது பிரஹ்மம்” என்று உபாசனை செய்கின்றாரோ அவர் ஆகாயம் போல பிரகாசமுடையதும், பீடைகள் (கஷ்டங்கள்) அற்றதும், விஸ்தாரமானதுமான லோகங்களை அடைவர். எதுவரை ஆகாசத்தின் கதி உள்ளதோ அதுவரை தன் இச்சைப்படியான கதியை அடைவான். எவன் ஆகாசத்தை “இது பிரஹ்மம்” என்று உபாசிக்கின்றானோ அவன். (நாரதர்) ஹே பகவான்! என்ன ஆகாசத்தைவிட பெரியது ஏதாவது உள்ளதா? (சனத்குமாரர்) ஆகாசத்தைவிட பெரியது உள்ளது. (நாரதர்) பகவானே! அதை எனக்கு உபதேசியுங்கள்.
स य आशां ब्रह्मेत्युपास्त आशयास्य सर्वे कामाः समृध्यन्त्यमोघा हास्याशिषो भवन्ति यावदाशाया गतं तत्रास्य यथाकामचारो भवति य आशां ब्रह्मेत्युपास्तेऽस्ति भगव आशाया भूय इत्याशाया वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - எவர் ஒருவர் ஆசையை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கின்றாரோ அவருடைய எல்லா ஆசைகளும் நிறைவேறுகின்றன. அவர்களுடைய பிரார்த்தனைகள் பலன் அளிக்கக்கூடியதாகின்றன. எதுவரை ஆசை உள்ளதோ அதுவரை அதன் கதி தன் இச்சைப்படி ஆகிறது. எவர் இந்த ஆசையை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கிறாரோ அவருக்கு அவ்வாறு ஆகிறது. (நாரதர்) பகவானே! என்ன ஆசையைக் காட்டிலும் மேலானது உள்ளதா? (சனத்குமாரர்) ஆசையைவிட மேலானது உள்ளது. (நாரதர்) பகவானே! அதை எனக்குக் கூறுங்கள்.
स य इदमविद्वानग्निहोत्रं जुहोति यथाङ्गारानपोह्य भस्मनि जुहुयात्तादृक्तत्स्यात् ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இந்த வைச்வாநர வித்யையை அறியாமல் ஹவனம் செய்கின்றானோ அவனுடைய ஹவனம் எவ்வாறு அக்னி அனைந்து இருக்கும் சாம்பலில் ஹவனம் செய்வது போல் ஆகும்.
स य एतदेवं विद्वानक्षरं प्रणौत्येतदेवाक्षरꣳ स्वरममृतमभयं प्रविशति तत्प्रविश्य यदमृता देवास्तदमृतो भवति ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இதை இவ்வாறு அறிந்து இந்த அக்ஷரத்தை உபாசனை செய்கின்றானோ அவன் இந்த அம்ருத அபயரூப அக்ஷரத்தில் பிரவேசிக்கின்றான். அவ்வாறே இதில் பிரவேசித்து இவ்வாறு உபாசித்த தேவகணங்கள் அம்ருதம் ஆனது போல் (அந்த உபாசகனும்) அம்ருதனாகின்றான்.
स य एतदेवं विद्वान्साधु सामेत्युपास्तेऽभ्याशो ह यदेनꣳ साधवो धर्मा आ च गच्छेयुरुप च नमेयुः ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - இவ்வாறு அறிந்தவன் “साम साधु” (ஸாம சாது - ஸாமம் நன்மை தருவது) என்று உபாசனை செய்பவனிடம் எந்த சாது (நல்ல) தர்மம் உள்ளதோ அது சீக்கிரமாகவே அவனை வந்து அடையும். மேலும் அவனுக்கு சேவையும் செய்கின்றன. அதாவது போகரூபமாய் தயாராக இருக்கும்.
स य एतदेवममृतं देव मरुतामेवैको भूत्वा सोमेनैव मुखेनैतदेवामृतं दृष्ट्वा तृप्यति स एतदेव रूपमभिसंविशत्येतस्माद्रूपादुदेति ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - இந்த அம்ருதத்தை இவ்வாறு எவர் அறிகிறாரோ அவர் மருத்கணங்களுள் ஒருவராகி சோமனை பிரதானமாக்கி இந்த அம்ருதத்தைப் பார்த்தே திருப்தி அடைகிறார். அவர் இந்த ரூபத்தால் உதாசீனமாகிறார். மேலும் உத்சாஹத்தை அடைகிறார்.
स य एतदेवममृतं वेद रुद्राणामेवैको भूत्वेन्द्रेणैव मुखेनैतदेवामृतं दृष्ट्वा तृप्यति स एतदेव रूपमभिसंविशत्येतस्माद्रूपादुदेति ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - அந்த எவர் இவ்வாறு அம்ருதத்தை அறிகிறாரோ, ருத்திரர்களில் ஒருவனாகின்றான். இந்திரனை பிரதானமாக்கி அம்ருதத்தைப் பார்த்து திருப்தி அடைகின்றனர். இந்த ரூபத்தினால் உதாசீனம் ஆகின்றனர் மேலும் இந்த ரூபத்தால் வெளிப்படுகின்றனர்.
स य एतदेवममृतं वेद वसूनामेवैको भूत्वाग्निनैव मुखेनैतदेवामृतं दृष्ट्वा तृप्यति स एतदेव रूपमभिसंविशत्येतस्माद्रूपादुदेति ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இவ்வாறு இந்த அம்ருதத்தை அறிகின்றானோ அவன் அந்த வசுக்களில் ஒருவனாகி அக்னியை பிரதானமாக (தலைவனாக)ப் பார்த்தாலே திருப்தி அடைகின்றான். அவன் இந்த ரூபத்தை லக்ஷித்து உதாசீனன் ஆகின்றான். மேலும் அந்த ரூபத்தாலேயே உத்சாகம் அடைகின்றான்.
स य एतदेवममृतं वेद साध्यानामेवैको भूत्वा ब्रह्मणैव मुखेनैतदेवामृतं दृष्ट्वा तृप्यति स एतदेव रूपमभिसंविशत्येतस्माद्रूपादुदेति ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - அந்த எவர் இவ்வாறு இந்த அம்ருதத்தை அறிகின்றாரோ சாத்ய கணங்களில் ஒருவராகி பிரஹ்மாவை பிரதானமாக்கி இந்த அம்ருதத்தைப் பார்த்தே திருப்தி அடைகின்றனர். இந்த ரூபத்தை ஆஸ்ரயித்து உதாசீனம் ஆகின்றனர். மேலும் இந்த ரூபத்தால் உற்சாகம் அடைகின்றனர்.
स य एतदेवममृतं वेदादित्यानामेवैको भूत्वा वरुणेनैव मुखेनैतदेवामृतं दृष्ट्वा तृप्यति स एतदेव रूपमभिसंविशत्येतस्माद्रूपादुदेति ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - எந்த இந்த அம்ருதத்தை அறிகிறாரோ அவர் ஆதித்யர்களுள் ஒருவராகி வருணனை பிரதானமாகக் கொண்டு இந்த அம்ருதத்தைப் பார்த்தே திருப்தி அடைகின்றனர். இந்த ரூபத்தால் உதாசீனம் ஆகின்றனர். மேலும் இதனாலேயே வெளிப்படுகின்றனர்.
स य एतमेवं विद्वांश्चतुष्कलं पादं ब्रह्मणः प्रकाशवानित्युपास्ते प्रकाशवानस्मिंल्लोके भवति प्रकाशवतो ह लोकाञ्जयति य एतमेवं विद्वांश्चतुष्कलं पादं ब्रह्मणः प्रकाशवानित्युपास्ते ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - எந்த புருஷன் பிரஹ்மத்தின் நான்கு கலை உடைய பாதத்தை இவ்வாறு அறிகிறவன் “प्रकाशवात्” (பிரகாசம் உடையவன்) என்ற குணத்துடன் உபாசனை செய்கின்றானோ அவன் இந்த லோகத்தில் பிரகாசிக்கிறவனாக ஆகின்றான். மேலும் பிரகாசிப்பவன் மேல் உலகங்களையும் ஜெயிக்கின்றான் (அடைகின்றான்) என்று இவ்வாறு அறிந்த புருஷன் பிரஹ்மத்தின் நான்கு கலைகளுடைய பாதத்தை பிரகாசிப்பவன் என்ற குணத்துடன் உபாசனை செய்கின்றான்.
स य एतमेवं विद्वानादित्यं ब्रह्मेत्युपास्तेऽभ्याशो ह यदेनं साधवो घोषा आ च गच्छेयुरुप च निम्रेडेरन्निम्रेजेरन् ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - எவன் இவ்வாறு அறிந்தவனாகி ஆதித்யனை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசனை செய்கின்றானோ (அவன் ஆதித்ய ரூபமாகின்றான்) அதன் சமீபத்தில் வேகமாக (சீக்கிரமாக) அழகான (மங்களமான) கோஷம் அவனை அடையும். அவனுக்கு சுகத்தை அளிக்கும், அவனுக்கு சுகத்தை அளிக்கும்.
स य एतमेवं विद्वानुपास्तेऽपहते पापकृत्यां लोकी भवति सर्वमायुरेति ज्योग्जीवति नास्यावरपुरुषाः क्षीयन्त उप वयं तं भुञ्जामोऽस्मिꣳश्च लोकेऽमुष्मिꣳश्च य एतमेवं विद्वानुपास्ते ॥ २ ॥மந்த்ரார்த்தம் - எந்த அந்த புருஷன் இவ்வாறு அறிந்து உபாசனை செய்கின்றானோ அவனுடைய பாப கர்மங்கள் நஷ்டமாகின்றன. அக்னிலோகத்தை உடையவனாக ஆகின்றான். பூர்ண ஆயுளை அடைகின்றான், பிரகாசமான வாழ்க்கையால் வியாபித்திருப்பான். அவ்வாறே அவனுடைய சந்ததியினரும் நாசமாவது இல்லை. அவ்வாறே எவன் ஒருவன் நாம் இந்த லோகத்தையும் பரலோகத்தையும் பரிபாலனம் செய்கின்றோம் என்று அறிந்து உபாசனை செய்கின்றானோ அவன் முன்பு கூறிய பலன்களை அடைவான்.
स य एतमेवं विद्वानुपास्तेऽपहते पापकृत्यां लोकी भवति सर्वमायुरेति ज्योग्जीवति नास्यावरपुरुषाः क्षीयन्त उप वयं तं भुञ्जामोऽस्मिꣳश्च लोकेऽमुष्मिꣳश्च य एतमेवं विद्वानुपास्ते ॥ २ ॥மந்த்ரார்த்தம் - எந்த ஒரு புருஷன் இவ்வாறு கூறியவாறு அறிந்து இதை (நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்ட அக்னியை) உபாசனை செய்கின்றாரோ அவர்களுடைய பாபகர்மங்கள் நாசம் செய்யப்படுகிறது. லோகம் உடையவனாகின்றான். பூர்ண ஆயுளை அடைகின்றான். பிரகாசமான வாழ்வை கழிக்கின்றான். தனக்கு பின்வரும் சந்ததியினரும் க்ஷீணமாகமாட்டார்கள். அவ்வாறே இந்த லோகத்தையும் பரலோகத்தையும் நாம் பரிபாலனம் செய்வோம் என்று இவ்வாறு அறிந்து இதை உபாசனை செய்கின்றான்.
स य एतमेवं विद्वानुपास्तेऽपहते पापकृत्यां लोकी भवति सर्वमायुरेति ज्योग्जीवति नास्यावरपुरुषाः क्षीयन्त उप वयं तं भुञ्जामोऽस्मिꣳश्च लोकेऽमुष्मिꣳश्च य एतमेवं विद्वानुपास्ते ॥ २ ॥மந்த்ரார்த்தம் - எந்த புருஷன் இவ்வாறு அறிந்து உபாசனை செய்கிறானோ அவனுடைய பாபகர்மங்கள் நஷ்டமாகின்றன. லோகத்தை உடையவனாகின்றான். பூர்ண ஆயுளை அடைகின்றான். அவ்வாறே பிரகாசமான வாழ்க்கையை கடைசிவரை நடத்துகின்றான். அவனுடைய மேல் வரும் சந்ததியினரும் நஷ்டமாவதில்லை. அவ்வாறே அவைகளை நாம் இந்தலோகம், பரலோகம் ஆகியவைகளை பரிபாலனம் செய்வோம் என்று இவ்வாறு அறிந்து இதை உபாசனை செய்கின்றனர்.
स य एतमेवं विद्वाꣳश्चतुष्कलं पादं ब्रह्मण आयतनवानित्युपास्त आयतनवानस्मिंल्लोके भवत्यायतनवतो ह लोकाञ्जयति य एतमेवं विद्वाꣳश्चतुष्कलं पादं ब्रह्मण आयतनवानित्युपास्ते ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இதை இவ்வாறு அறிந்த புருஷன் நான்கு கலைகள் உடைய பாதத்தை “आयतनवान्” (ஆயதனவான் இருப்பிடம் உடையவன்) என்ற குணத்துடன் கூடி உபாசனை செய்கின்றானோ அவன் இந்த உலகத்தில் ஆயதனவான் ஆகின்றான். மேலும் ஆயதனவான் லோகத்தையும் அடைகின்றான். எவன் ஒருவன் இவ்வாறு அறிந்தானோ அந்த புருஷன் பிரஹ்மத்தின் இந்த நான்கு கலைகளுடைய பாதத்தை “ஆயதனவான்” என்ற குணத்துடன் உடையதாய் உபாசிக்கின்றான்.
स य एतमेवं विद्वाꣳश्चतुष्कलं पादं ब्रह्मणो ज्योतिष्मानित्युपास्ते ज्योतिष्मानस्मिंल्लोके भवति ज्योतिष्मतो ह लोकाञ्जयति य एतमेवं विद्वाꣳश्चतुष्कलं पादं ब्रह्मणो ज्योतिष्मानित्युपास्ते ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இவ்வாறு அறிந்துள்ளானோ அந்த புருஷன் பிரஹ்மத்தின் இந்த நான்குகலை உடைய பாதத்தை “ज्योतिष्मान्” (ஜ்யோதி-ஷ்மான்- ஒளி பொருத்தியவன்) என்ற குணத்துடன் உபாசனை செய்கின்றானோ அவன் இந்த லோகத்தில் ஓளி பொருந்தியவனாக ஆகின்றான் அவ்வாறே ஒளிபொருந்திய லோகங்களையும் அடைகின்றான். எவன் ஒருவன் இவ்வாறு அறிந்த புருஷன் பிரஹ்மத்தின் இந்த நான்கு கலை உடைய பாதத்தை “ज्योतिष्मान्” (ஜ்யோதிஷ்மான் - ஒளி பொருந்தியவன்) என்ற குணத்தை கூடியதாய் உபாசனை செய்கின்றான்.
स य एतमेवं विद्वाꣳश्चतुष्कलं पादं ब्रह्मणोऽनन्तवानित्युपास्तेऽनन्तानस्मिंल्लोके भवत्य नन्तवतो ह लोकाञ्जयति य एतमेवं विद्वाꣳश्चतुष्कलं पादं ब्रह्मणोऽनन्तवानित्युपास्ते ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இவ்வாறு அறிந்தானோ அந்த புருஷன் இந்த நான்கு கலைகள் உள்ள பாதத்தை “अनन्तवान्” (அனந்தவான்) என்ற குணத்தால் உபாசிக்கின்றானோ அந்த குணத்தை அடைகின்றான். மரணத்தின் பின் அனந்த லோகத்தை அடைகின்றான். இவ்வாறு அறிந்தவன் என்பது எல்லாம் முன்போல் ஆகும்.
स य एवमेतत्साम सर्वस्मिन्प्रोतं वेद सर्वं ह भवति ॥ २ ॥மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இவ்வாறு எல்லாவற்றிலும் அனுஸ்யூதமான இந்த ஸாமத்தை அறிகிறானோ அவன் ஸர்வ (எல்லா) ரூபமாக ஆகின்றான்.
स य एवमेतद्बृहदादित्ये प्रोतं वेद तेजस्व्यन्नादो भवति सर्वमायुरेति ज्योग्जीवति महान्प्रजया पशुभिर्भवति महान्कीर्त्या तपन्तं न निन्देत्तद्व्रतम् ॥ २ ॥மந்த்ரார்த்தம் - எந்த ஒரு புருஷன் இவ்வாறு பிருஹத் ஸாமத்தை சூரியனில் நிலைபெற்றுள்ளது என்று அறிகிறானோ அவன் தேஜஸ் உடையவனாயும், அன்னத்தை அனுபவிப்பனாகவும் ஆகின்றான். அவன் பூர்ண ஆயுளை அடைகின்றான். பிரகாச ரூபமாக ஜீவனத்தைக் கழிக்கின்றான். பிரஜைகள், பசுக்களை உடையவனாய் மஹான் (மேலானவன்) ஆகின்றான். அவ்வாறே கீர்த்தியினாலும் மஹான் ஆகின்றான். தபிக்கும் (சுட்டு எரிக்கும்) சூரியனை நிந்தை செய்யக்கூடாது இது விரதமாகும்.
स य एवमेतद्यज्ञायज्ञीयमङ्गेषु प्रोतं वेदाङ्गी भवति नाङ्गेन विहूर्छति सर्वमायुरेति ज्योग्जीवति महान्प्रजया पशुभिर्भवति महान्कीर्त्या संवत्सरं मज्ज्ञो नाश्नीयात्तद्व्रतं मज्ज्ञो नाश्नीयादिति वा ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அந்த எந்த புருஷன் இவ்வாறு இந்த யக்ஞயக்ஞீய ஸாமத்தை அங்கங்களில் அனுஸ்யூதமாய் உள்ளதை அறிகிறானோ அவன் அங்கங்கள் உடையவனாகின்றான். அந்த அங்கங்கள் பழுது ஆவதில்லை. பூர்ண ஆயுளை அடைகிறான். பிரகாசமாக வாழ்கின்றான். பிரஜைகளாலும் கால்நடைகளும் உடையவனாகியும், கீர்த்தியை அடைந்தும் மஹான் ஆகின்றான். ஓராண்டு மாமிசத்தை உண்ணக்கூடாது அல்லது எப்பொழுதும் மாமிசத்தை உண்ணக்கூடாது என்பது விரதம்.
स य एवमेतद्रथन्तरमग्नौ प्रोतं वेद ब्रह्मवर्चस्यन्नादो भवति सर्वमायुरेति ज्योग्जीवति महान्प्रजया पशुभिर्भवति महान्कीर्त्या न प्रत्यङ्ङग्निमाचामेन्न निष्ठीवेत्तद्व्रतम् ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அந்த எந்த புருஷன் இவ்வாறு ரதந்தர ஸாமத்தை அக்னியில் அனுஸ்யூதமாக உள்ளது என்று அறிகின்றானோ அவன் பிரஹ்ம தேஜஸ்ஸை அடைகின்றான். மேலும் அன்ன போக்தாவாகவும் ஆகின்றான். பூர்ண ஜீவனத்தையும் அனுபவிக்கின்றான். அவனுடைய ஜீவனத்தை மிக ஒளிமிக்கதாக (பிரகாசமுடையதாக) கழிக்கின்றான். பிரஜைகளாலும் பசுக்களாலும் மஹான் ஆகின்றான். (சிறந்தவனாகின்றான்) அவ்வாறே கீர்த்தியினாலும் மஹான் ஆகின்றான். அக்னியைப் பார்த்த வண்ணம் உணவோ நீரோ அருந்தக்கூடாது. உமிழவும் கூடாது.
स य एवमेतद्राजनं देवतासु प्रोतं वेदैतासामेव देवतानाꣳ सलोकताꣳ सार्ष्टितांꣳसायुज्यं गच्छति सर्वमायुरेति ज्योग्जीवति महान्प्रजया पशुभिर्भवति महान्कीर्त्या ब्राह्मणान्न निन्देत्तद्व्रतम् ॥ २ ॥மந்த்ரார்த்தம் - எந்த இந்த புருஷன் இவ்வாறு ராஜன ஸாமத்தை தேவதைகளில் அனுஸ்யூதமாய் உள்ளது என்று அறிகிறானோ அவன் தேவதைகளின் ஸாலோக்கியத்தையும், அவர்களுக்குச் ஸமமான ஐஸ்வர்யத்தையும் ஸாயுஜ்யத்தையும் அடைகின்றான். அவன் பூர்ண ஆயுள் உடையவனாக ஆகின்றான். பிரகாசமான வாழ்க்கையை உடையவனாகின்றான். பிரஜகளையும், பசுக்களையும் உடையவனாகி மஹான் ஆகின்றான். அவ்வாறே கீர்த்தியும் பெற்று மிகச் சிறந்தவனாகின்றான். பிராஹ்மனர்களை நிந்தை செய்யாமல் இருப்பது விரதம்.
स य एवमेतद्वामदेव्यं मिथुने प्रोतं वेद मिथुनी भवति मिथुनान्मिथुनात्प्रजायते सर्वमायुरेति ज्योग्जीवति महान्प्रजया पशुभिर्भवति महान्कीर्त्या न काञ्चन परिहरेत्तद्व्रतम् ॥ २ ॥மந்த்ரார்த்தம் - स य (ஸ ய) இவை முன்போல், மிதுனம் ஏற்படுகிறது மிதுனத்துடன் தொடர்புடைய வாமதேவ்ய உபாஸனையால் நல்ல தகுந்த ஸ்திரீயை உடையவனாகின்றான். அதன் பலனாக அநேக பிரஜைகளை அடைகின்றான். பூர்ண ஆயுளையும் அடைகின்றான். அவ்வாறே பசுக்களை அடைகிறான். மிகுந்து கீர்த்தியுடனும் இருக்கின்றான். எந்தப் பெண்ணையும் இழிவுபடுத்தக் கூடாது.
स य एवमेतद्वैराजमृतुषु प्रोतं वेद विराजति प्रजया पशुभिर्ब्रह्मवर्चसेन सर्वमायुरेति ज्योग्जीवति महान्प्रजया पशुभिर्भवति महान्कीर्त्यर्तून्न निन्देत्तद्व्रतम् ॥ २ ॥மந்த்ரார்த்தம் - எந்த அந்த புருஷன் இவ்வாறு வைராஜ ஸாமத்தை ருதுக்களில் (காலங்களில்) அனுஸ்யூதமாய் உள்ளதை அறிகிறானோ அவன் பிரஜைகள், வீட்டு மிருகங்கள், இவைகளாலும் பிரஹ்ம தேஜஸ்சாலும் சோபிக்கின்றான். அவன் பூர்ண ஆயுளை அடைகின்றான். அவனுடைய ஜீவனம் மிக ப்ராகாசமுடையதாகிறது. பிரஜைகள், வீட்டு மிருகங்கள் இவைகளாலும் அவ்வாறே கீர்த்தியினாலும் மஹான் ஆகின்றான். ஆகையால் ருதுக்களை (காலங்களை) நிந்தை செய்யாமல் இருப்பது விரதமாகும்.
स य एवमेतद्वैरूपं पर्जन्ये प्रोतं वेद विरूपाꣳश्च सुरूपाꣳश्च पशूनवरुन्धे सर्वमायुरेति ज्योग्जीवति महान्प्रजया पशुभिर्भवति महान्कीर्त्या वर्षन्तं न निन्देत्तद्ब्रतम् ॥ २ ॥மந்த்ரார்த்தம் - எந்த அந்த புருஷன் இவ்வாறு அநேக ரூப ஸாமத்தை மழை மேகத்தில் அனுஸ்யூதமாய் அறிகின்றானோ அவன் அழகான பல்வேறு மிருகங்களை உடையவனாகின்றான். பூர்ண ஆயுளை அடைகின்றான். நல்ல பிரகாசமான ஜீவனத்துடன் இருக்கின்றான். பிரஜைகள், கால்நடை செல்வங்களுடனும் மேலானவனாக ஆகின்றான். அவ்வாறே கீர்த்தியினால் மஹான் ஆகின்றான். மழையை நிந்திக்கக்கூடாது. இதுவே விரதமாகும்.
स य एवमेता रेवत्यः पशुषु प्रोता वेद पशुमान्भवति सर्वमायुरेति ज्योग्जीवति महान्प्रजया पशुभिर्भवति महान्कीर्त्या पशून्न निन्देत्तद्व्रतम् ॥ २ ॥மந்த்ரார்த்தம் - எந்த அந்த புருஷன் இவ்வாறு ரேவதீஸாமத்தை பசுக்களில் அனுஸ்யூதமாய் அறிகிறானோ அவன் கால்நடைகளை உடையவனாகின்றான். பூர்ண ஆயுளை அடைகின்றான். பிரகாசமான வாழ்க்கையை அடைகின்றான் பிரஜைகள், கால்நடைகளாலும் நல்ல கீர்த்தியினாலும் மிக சிறந்தவனாக ஆகின்றான். பசுக்களை நிந்தை செய்யாமல் இருப்பது விரதமாகும்.
स य एवमेताः शक्वर्यो लोकेषु प्रोता वेद लोकी भवति सर्वमायुरेति ज्योग्जीवति महान्प्रजया पशुभिर्भवति महान्कीर्त्या लोकान्न निन्देत्तद्व्रतम् ॥ २ ॥மந்த்ரார்த்தம் - எந்த அந்த புருஷன் இவ்வாறு இந்த சக்வர்ய ஸாமத்தை உலகங்களில் அனுஸ்யூதமாய் அறிகின்றானோ உலகங்களை உடையவனாகின்றான். பூர்ண ஆயுளை அடைகின்றான். பிரகாசமாக வாழ்க்கையை கழிக்கின்றான். பிரஜைகள் கால்நடைகளுடன் சிறப்பானவனாகின்றான். அவ்வாறே கீர்த்தியினாலும் மஹான் ஆகின்றான். லோகங்களை நிந்தை செய்யாமல் இருப்பது விரதம்.
स य एषोऽणिमैतदात्म्यमिदं सर्वं तत्सत्यं स आत्मा तत्त्वमसि श्वेतकेतो इति भूय एव मा भगवान्विज्ञापयत्विति तथा सोम्येति होवाच ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - அந்த எது இந்த அணிமாவோ அதன் ரூபமே இவை எல்லாம். அது சத்யம் அது ஆத்மா! அதுவே நீ. (ஆருணி இவ்வாறு கூறியதும் ச்வேதகேது கூறினான்)- பகவானே! எனக்கு மேலும் அறியச் செய்யுங்கள். (அப்பொழுது ஆருணி கூறினார்-) ஹே சோம்ய! சரி என்று இவ்வாறு கூறினார்.
स य एषोऽणिमैतदात्म्यमिदꣳ सर्वं तत्सत्यꣳ स आत्मा तत्त्वमसि श्वेतकेतो इति भूय एव मा भगवान्विज्ञापयत्विति तथा सोम्येति होवाच ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - அந்த இது எதுவோ அது அணிமா. இவை எல்லாம் அதன் ரூபமே. அது சத்யம். அது ஆத்மா. மேலும் ஹே ச்வேதகேதோ! அதுவே நீ - இவ்வாறு ஆருணி கூறியதற்கு ச்வேதகேது கூறினான்- பகவானே! எனக்கு மேலும் உபதேசியுங்கள் என்று. (அதற்கு ஆருணி) ஹே ஸோம்ய! நன்று அவ்வாறே ஆகட்டும் என்றார்.
स य एषोऽणिमैतदात्म्यमिदꣳ सर्वं तत्सत्यꣳ स आत्मा तत्त्वमसि श्वेतकेतो इति भूय एव मा भगवान्विज्ञापयत्विति तथा सोम्येति होवाच ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - எது அணிமாவோ அந்த ரூபமே இவை எல்லாம். அது சத்யம், அது ஆத்மா. ஹே ச்வேதகேதோ! அது நீயே. (பிதா கூறியபின் ச்வேதகேது) பகவானே! எனக்கு மேலும் உபதேசியுங்கள். (ஆருணி) அவ்வாறே ஆகட்டும் என்றார்.
स य एषोऽणिमैतदात्म्यमिदꣳ सर्वं तत्सत्यꣳ स आत्मा तत्त्वमसि श्वेतकेतो इति भूय एव मा भगवान्विज्ञापयत्विति तथा सोम्येति होवाच ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - எந்த இந்த அணிமா (மிகவும் சூக்ஷ்மமானதோ) எதுவோ இதன் ரூபமே எல்லாம். அது சத்யம், அது ஆத்மா, மேலும் ஹே! ச்வேதகேதோ! அது நீ என்றார். (இவ்வாறு கூறியதும் ச்வேதகேது கூறினான்) ஹே பகவானே! எனக்கு மேலும் உபதேசியுங்கள் என்றவுடன் (ஆருணி) ஹே சோம்ய! நன்று. அவ்வாறே ஆகட்டும் என்றார்.
स य एषोऽणिमैतदात्म्यमिदꣳ सर्वं तत्सत्यꣳ स आत्मा तत्त्वमसि श्वेतकेतो इति भूय एव मा भगवान्विज्ञापयत्विति तथा सोम्येति होवाच ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - எந்த இந்த அணிமாவோ இந்த ரூபமே இவை எல்லாம். அது சத்யம், அது ஆத்மா. ஹே ச்வேதகேதோ! அது நீயே. (ஆருணி இவ்வாறு கூறியதற்கு) (ச்வேதகேது கூறினான்) ஹே பகவானே! எனக்கு மேலும் உபதேசியுங்கள். (அதற்கு ஆருணி) சோம்ய! சரி அவ்வாறே ஆகட்டும் என்று கூறினார்.
स य एषोऽणिमैतदात्म्यमिदꣳ सर्वं तत्सत्यꣳ स आत्मा तत्त्वमसि श्वेतकेतो इति भूय एव मा भगवान्विज्ञापयत्विति तथा सोम्येति होवाच ॥ ७ ॥ மந்த்ரார்த்தம் - அந்த எதுவோ அது அணிமா. இந்த ரூபமே எல்லாம். அது சத்தியம், அது ஆத்மா மேலும் ஹே ச்வேதகேதோ! அதுவே நீயாக இருக்கிறாய். (ச்வேதகேது-) பகவானே! எனக்கு மேலும் அறியச்செய்யுங்கள். (ஆருணி) ஹே சோம்ய! நல்லது (சரி) என்று கூறினார்.
स य एषोऽणिमैतदात्म्यमिदꣳ सर्वꣳ तत्सत्यं स आत्मा तत्त्वमसि श्वेतकेतो इति भूय एव मा भगवान्विज्ञापयत्विति तथा सोम्येति होवाच ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - எது அணிமாவோ அது இந்த சத்ரூபம், இதுவே எல்லாம். அது சத்தியம், அது ஆத்மா. ஹே ச்வேதகேதோ! அது நீயே. (இதைக் கேட்டு ச்வேதகேது கூறினான்). ஹே பகவானே! எனக்கு மேலும் உபதேசியுங்கள் என்றான். அப்பொழுது (ஆருணி) ஹே சோம்ய! அவ்வாறே ஆகட்டும் என்று கூறினார்.
स यः सङ्कल्पं ब्रह्मेत्युपास्ते सङ्क्लृप्तान्वै स लोकान्ध्रुवान्ध्रुवः प्रतिष्ठितान् प्रतिष्ठितोऽव्यथमानानव्यथमानोऽभिसिध्यति यावत्सङ्कल्पस्य गतं तत्रास्य यथाकामचारो भवति यः सङ्कल्पं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवः सङ्कल्पाद्भूय इति सङ्कल्पाद्वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் சங்கல்பத்தை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கின்றானே அவன் சங்கல்பித்த லோகங்களை அடைந்து நிச்சயமாக அதில் அழிவற்று நிலைபெற்று அவன் விரும்பியவாறு இருப்பான். எது வரை சங்கல்பத்தின் கதியோ அதுவரை தான் விரும்பிதை அடைவான். எவனுடைய சங்கல்பம் “இது பிரஹ்மா” என்று உபாசிப்பவன் அதன் எல்லைவரை அடைவான். (நாரதர்) பகவானே சங்கல்பத்தைவிட சிறந்தது உள்ளதா? (சனத்குமாரர்) சங்கல்பத்தைவிட சிறந்தது உள்ளது. (நாரதர்) பகவானே! எனக்கு அதை உபதேசியுங்கள்.
स यः स्मरं ब्रह्मेत्युपास्ते यावत्स्मरस्य गतं तत्रास्य यथाकामचारो भवति यः स्मरं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवः स्मराद्भूय इति स्मराद्वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் ஸ்மரணத்தை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கின்றானோ அவனுடைய ஸ்மரணத்தின் கதி எது வரையோ அதுவரை தன்னுடைய இஷ்டப்பட்ட கதியை அடைகிறான். எவன் “ஸ்மரணத்தை” இது பிரஹ்மம் என்று உபாசனை செய்கிறானோ அவனுடைய கதியாகும். (நாரதர்) பகவானே! என்ன ஸ்மரணத்தைவிட சிறந்தது உள்ளதா? (சனத்குமாரர்) ஸ்மரணத்தைவிடவும் சிறந்தது உள்ளது. (நாரதர்) பகவானே! அவ்வாறானால் அதைப்பற்றி எனக்குக் கூறுங்கள்.
स यथा तत्र नादाह्येतैतदात्म्यमिदꣳ सर्वं तत्सत्यꣳ स आत्मा तत्त्वमसि श्वेतकेतो इदि तद्धास्य विजज्ञाविति विजज्ञाविति ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - எவ்வாறு இதை பரீக்ஷீக்கும் சமயத்தில் எரிக்கவில்லையோ (அவ்வாறு வித்வானுக்கு புனராவிர்த்தி - திரும்புதல் இல்லை. எரிக்கப்பட்டால் அவித்வானுக்கு புனராவிர்த்தி உண்டு) இவை எல்லாம் இந்த ரூபமே, இது சத்யம், இது ஆத்மா, ஹே ச்வேதகேதோ! அதுவே நீ. அப்பொழுது அந்த ச்வேதகேது இதை நான் அறிந்துகொண்டேன். இதை நான் அறிந்துகொண்டேன்.
स यथा शकुनिः सूत्रेण प्रबद्धो दिशं दिशं पतित्वान्यत्रायतनमलब्ध्वा बन्धनमेवोपश्रयत एवमेव खलु सोम्य तन्मनो दिशं दिशं पतित्वान्यत्रायतनमलब्ध्वा प्राणमेवोपश्रयते प्राणबन्धनꣳ हि सोम्य मन इति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - எவ்வாறு கயிற்றால் கட்டப்பட்ட சகுனிப்பறவை எல்லா திசைகளிலும் பறந்து வேறு இடம் கிடைக்காமல் தான் கட்டுப்பட்ட ஸ்தானத்தையே சரணம் அடைகிறதோ அவ்வாறு என்று நிச்சயம் செய்து ஹே சோம்ய! இந்த மனமும் எல்லா திசைகளுக்கும் அலைந்து எங்கும் வேறு ஸ்தானம் கிடைக்காமல் பிராணனையே ஆஸ்ரயிக்கிறது. (சரண் அடைகிறது) ஹே சோம்ய! ஏன்எனில் மனம் பிராண ரூபத்தால் கட்டுப்பட்டுள்ளது. (இங்கு பிராணன் என்பது பிராண உபலக்ஷித தேவதை).
स यदवोचं प्राणं प्रपद्य इति प्राणो वा इदꣳ सर्वं भूतं यदिदं किञ्च तमेव तत्प्रापत्सि ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - நான் பிராணனை சரணம் அடைகிறேன் என்று கூறப்பட்டது எதுவோ அது (அந்த பிராணன்) எல்லா ஜீவராசிகளுடைய பிராணன் ஆகும். அதை சரணம் அடைகிறேன்.
स यदशिशिषति यत्पिपासति यन्न रमते ता अस्य दीक्षाः ॥ १ ॥மந்த்ரார்த்தம் - எவன் பசியை உணர்ந்து சாப்பிட இச்சிப்பது, தாகத்தை உணர்ந்து பருக இச்சிப்பது ஆகிய சிரமங்கள் தாங்குவது. மேலும் ஒன்றினாலும் ரமிக்காமல் இருப்பது ஆகியவை அதனுடைய தீக்ஷயைாகும். (பசி, தாகம், கிடைக்காத விஷயத்தில் ரமித்தல் ஏற்படுவது இல்லை. இவைகளால் ஏற்படும் துக்கத்தை சகித்தல் தீக்ஷயைாகும்.)
स यदि पितरं वा मातरं वा भ्रातरं वा स्वसारं वाचार्यं वा ब्राह्मणं वा किञ्चिद्भृशमिव प्रत्याह धिक्त्वास्त्वित्येवैनमाहुः पितृहा वै त्वमसि मातृहा वै त्वमसि भ्रातृहा वै त्वमसि स्वसृहा वै त्वमस्याचार्यहा वै त्वमसि ब्राह्मणहा वै त्वमसीति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - எந்த புருஷன் தன்னுடைய பிதாவையோ, மாதாவையோ சகோதரனையோ, சகோதரியையோ, ஆச்சாரியரையோ, பிராஹ்மணனையோ கடுமையாக பேசினால் அவனை நீ நிந்தைக்கு உரியவன். நீ நிச்சயமாக உன் பிதாவை கொன்றவன், மாதாவைக் கொண்றவன், சகோதரனைக் கொன்றவன், சகோதரியைக் கொன்றவன், ஆச்சாரிரைக் கொன்றவன் மேலும் நீ பிராஹ்மணனைக் கொன்றவன் என்று இவ்வாறு கூறுவர்.
स यदि पितृलोककामो भवति सङ्कल्पादेवास्य पितरः समुत्तिष्ठन्ति तेन पितृलोकेन सम्पन्नो महीयते ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - பித்ரு லோகத்தில் காமனை உடையவனாகிறானோ அவனுடைய சங்கல்பத்தால் பித்ருகணங்கள் அங்கு தோன்றுவார்கள். அந்த பித்ரு லோகத்தை அடைந்து மஹிமையை அடைகின்றனர்.
स यदि यजुष्टो रिष्येद्भुवः स्वाहेति दक्षिणाग्नौ जुहुयाद्यजुषामेव तद्रसेन यजुषां वीर्येण यजुषां यज्ञस्य विरिष्टं सन्दधाति ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - யஜுஸ் ரிக்குகளால் குறை (தஹ்று) ஏற்பட்டால் “भूः स्वाहा” (புவ: ஸ்வாஹா) என்று கூறி தக்ஷிணா அக்னியில் ஆஹுதி செய்யவேண்டும். இவ்வாறு யஜுஸ்களின் ரசத்தால் யஜுஸ்களின் வீர்யத்தால் யக்ஞத்தால் யஜுஸ் சம்பந்தமான குறை நீக்கி பிரஹ்மா பூர்த்தி செய்கிறார்.
स यश्चित्तं ब्रह्मेत्युपास्ते चितान्वै स लोकान्ध्रुवान्ध्रुवः प्रतिष्ठितान्प्रतिष्ठितोऽव्यथमानानव्यथमानोऽभिसिध्यति यावच्चित्तस्य गतं तत्रास्य यथाकामचारो भवति यश्चित्तं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवश्चित्ताद्भूय इति चित्ताद्वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் சித்தத்தை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கின்றானோ அவன் தான் சம்பாதித்த அழிவற்ற லோகங்களை அடைந்து தான் அழிவற்றவனாக ஆகின்றான். நிலைபெற்ற லோகங்களில் தான் நிலைபெற்று அவ்வாறே அழியும் லோகங்களை அடையாமல் தான் அழிவற்றனாய் அதை எல்லாவிதமாகவும் அடைகின்றான். எதுவரை அவனுடைய சித்தம் செல்கிறதோ அதுவரை தான் இச்சித்த கதியை அடைகின்றான். எவன் இவ்வாறு சித்தத்தை பிரஹ்மம் என்று உபாசிக்கின்றானோ அவன் அதை அடைகின்றான். (நாரதர்) பகவானே! என்ன சித்தத்தைவிட சிறந்தது ஏதாவது உள்ளதா? (சனத்குமாரர்)- சித்தத்தைவிட மேலானது உள்ளது. (நாரதர்) பகவானே! எனக்கு அதன் உபதேசத்தை செய்யுங்கள்.
स यस्तेजो ब्रह्मेत्युपास्ते तेजस्वी वै स तेजस्वतो लोकान्भास्वतोऽपहततमस्कानभिसिध्यति यावत्तेजसो गतं तत्रास्य यथाकामचारो भवति यस्तेजो ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवस्तेजसो भूय इति तेजसो वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - எவர் அந்த இந்த தேஜஸ்ஸை “இது பிரஹ்மம்” என்று உபாசனை செய்கிறாரோ அவர் தேஜஸ்வீ ஆகி தேஜஸ்ஸுடன் கூடியதும் பிரகாசமானதுமான தமஸ் அற்ற லோகங்களை அடைவர். எதுவரை தேஜஸ்ஸின் எல்லையோ அதுவரை அவர்களின் இஷ்டமான கதியை அடைவர். எவர் தேஜஸ்ஸை “இது பிரஹ்மம்” என்று உபாசிக்கின்றனரோ அவர். (நாரதர்) பகவானே! என்ன தேஜஸ்ஸைவிட சிரேஷ்டமானது உள்ளதா? சனத்குமாரர் - தேஜஸ்ஸைவிட சிறந்தது உள்ளது. (நாரதர்) பகவானே! அதை எனக்கு உபதேசிப்பீராக.
स यावदादित्य उत्तरत उदेता दक्षिणतोऽस्तमेता द्विस्तावदूर्ध्व उदेतार्वागस्तमेता साध्यानामेव तावदाधिपत्यं स्वाराज्यꣳ पर्येता ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - இந்த ஆதித்தியன் எவ்வளவு காலம் உத்திர (வடக்கு) திசையில் உதித்து தெற்கு திசையில் அஸ்தமிக்கிறதோ அதைவிட இருமடங்கு காலம் மேற் பாகத்தில் உதித்து கீழ்பாகத்தில் அஸ்தமிக்கின்றது. இவ்வளவு காலம் வரை அந்த சாத்தியர்கள் ஆதிபத்தியத்தையும், ஸ்வராஜ்யத்தையும் அடைகின்றனர்.
स यावदादित्यः पश्चादुदेता पुरस्तादस्तमेता द्विस्तावदुत्तरत उदेता दक्षिणतोऽस्तमेता मरुतामेव तावदाधिपत्यं स्वाराज्यꣳ पर्येता ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - அந்த ஆதித்யன் எவ்வளவு நேரம் மேற்கு திசையில் உதித்து கிழக்கு திசையில் அஸ்தமிக்கிறாரோ அதைவிட இருமடங்கு அதிகமான நேரத்தில் வடக்கில் உதித்து தெற்கில் அஸ்தமிக்கின்றது. இந்த காலம் வரை மருத்கணங்கள் ஆதிபத்தியத்தையும் ஸ்வராஜ்யத்தையும் அடைகின்றனர்.
स यावदादित्यः पुरस्तादुदेता पश्चादस्तमेता द्विस्तावद्दक्षिणत उदेतोत्तरतोऽस्तमेता रुद्राणामेव तावदाधिपत्यꣳ स्वाराज्यं पर्येता ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - எவ்வளவு காலத்தில் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் அஸ்தமிக்கிறதோ அதைவிட இரண்டு மடங்கு காலத்தில் சூரியன் தெற்கில் உதித்து வடக்கில் அஸ்தமிக்கிறது. இந்த சமயம்வரை அந்த ருத்திரர்களின் ஆதிபத்தியமும் ஸ்வாராஜ்யமும் பிராப்தியாகின்றது.
स यावदादित्यः पुरस्तादुदेता पश्चादस्तमेता वसूनामेव तावदाधिपत्यꣳ स्वाराज्यं पर्येता ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - எப்பொழுது ஆதித்யன் கிழக்கு திசையிலிருந்து உதிக்கின்றதோ அவ்வாறே மேற்கு திசையில் அஸ்தமிக்கின்றதோ அவ்வளவு காலம் வரை (அவ்வளவு தூரம்) அந்த வித்வான் வசுக்களின் ஆதிபத்யத்தையும், ஸ்வராஜ்யத்தையும் அடைகின்றான்.
स यावादादित्यो दक्षिणत उदेतोत्तरतोऽस्तमेता द्विस्तावत्पश्चादुदेता पुरस्तादस्तमेतादित्यानामेव तावदाधिपत्यं स्वाराज्यꣳ पर्येता ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - அந்த ஆதித்யன் எவ்வளவு நேரம் தக்ஷிணத்தில் (தெற்கில்) உதித்து வடக்கில் அஸ்தமாகின்றதோ அதைப்போன்ற இரண்டு மடங்காகும் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் நேரம் வரை அவன் ஆதித்யர்களின் ஆதிபத்தியத்தையும் ஸ்வராஜ்யத்தையும் அடைகின்றான்.
स यो ध्यानं ब्रह्मेत्युपास्ते यावद्ध्यानस्य गतं तत्रास्य यथाकामचारो भवति यो ध्यानं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवो ध्यानाद्भूय इति ध्यानाद्वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் தியானத்தை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசனை செய்கின்றானோ அதாவது எதுவரை தியானத்தின் எல்லையோ அதுவரை அவனுக்கு தான் இச்சித்த கதியை அடைகிறான். எவன் இந்த தியானத்தை “இது பிரஹ்மம்” என்று தியானம் செய்கின்றானோ அவன் அடைகிறான். (நாரதர்) பகவானே! என்ன இந்த தியானத்தைவிட சிறந்தது ஏதாவது உள்ளதா? (சனத்குமாரர் -) தியானத்தைக் காட்டிலும் சிறந்தது உள்ளது. (நாரதர்) பகவானே! எனக்கு அதை உபதேசம் செய்யுங்கள்.
स यो नाम ब्रह्मेत्युपास्ते यावन्नाम्नो गतं तत्रास्य यथाकामचारो भवति यो नाम ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवो नाम्नो भूय इति नाम्नो वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ ५ ॥ மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் நாமத்தை இது பிரஹ்மம் என்று உபாசிக்கின்றானோ அவனுக்கு எதுவரை நாமத்தின் கதி ஏற்படுகிறதோ அதுவரை எவ்வாறு தன் இச்சையோ அதன் அனுசாரமாக கதியை அடைகிறான். எவன் இந்த நாமத்தை “இது பிரஹ்மம்” என்று உபாசனை செய்கின்றவனுக்கு. (நாரதர்) ஹே பகவனே! என்ன இந்த நாமத்தைவிட மேலானது ஏதாவது உள்ளதா? (சனத்குமாரர்) நாமத்தைவிட மேலானது உள்ளது. (நாரதர்) அவ்வாறு ஆனால் ஹே பகவான்! எனக்கு அதைக் கூறுங்கள் என்று.
स यो बलं ब्रह्मेत्युपास्ते यावद्बलस्य गतं तत्रास्य यथाकामचारो भवति यो बलं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवो बलाद्भूय इति बलाद्वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் பலத்தை “இந்த பலம் பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசனை செய்கின்றானோ அவனுக்கு எதுவரை பலம் உள்ளதோ அதுவரை அவனுடைய எல்லை. அதுவரை அவன் இச்சைப்படியான கதியாகும். எவன் பலத்தை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கின்றான். (நாரதர்) என்ன பலத்தைவிட சிறந்தது உள்ளதா? (சனத்குமாரர்) பலத்தைவிட சிறந்தது உள்ளது. (நாரதர்) பகவானே! அதை எனக்கு உபதேசியுங்கள்.
स यो मनो ब्रह्मेत्युपास्ते यावन्मनसो गतं तत्रास्य यथाकामचारो भवति यो मनो ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवो मनसो भूय इति मनसो वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் மனதை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கின்றானோ அவனுடைய மனம் எதுவரை செல்கிறதோ அதுவரை தன் இச்சைப்படுவதற்கான கதி ஏற்படுகிறது. எவன் மனதை இது பிரஹ்மம் என்று உபாசனை செய்கின்றவனுக்கு. (நாரதர்-) பகவானே! என்ன மனதைவிட மேன்மையானது உள்ளதா? (சனத்குமாரர்) மனதிற்கும் மேலானது உள்ளது. (நாரதர்-) பகவானே! எனக்கு அதைக்குறித்து விளக்குங்கள்.
स यो वाचं ब्रह्मेत्युपास्ते यावद्वाचो गतं तत्रास्य यथाकामचारो भवति यो वाचं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवो वाचो भूय इति वाचो वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இந்த வாக்கை “இது பிரஹ்மம்” என்று உபாசிக்கின்றானோ அவனுக்கு எதுவரை வாக்கின் கதி (வ்யாபித்வம்) உள்ளதோ அதுவரை தான் இஷ்டப்பட்டவாறு கதி கிடைக்கும். எவர் இந்த வாக்கை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கின்றனரோ அவர்களுக்கு. (நாரதர்) ஹே பகவானே! என்ன இந்த வாக்கைவிட மேன்மையானது உள்ளதா? (சனத்குமாரர்) வாக்கைக்காட்டிலும் மேன்மையானது உள்ளது. (நாரதர்) ஹே பகவானே! அதை எனக்குக் கூறுங்கள். மற்றவை சமானம்.
स यो विज्ञानं ब्रह्मेत्युपास्ते विज्ञानवतो वै स लोकांज्ञानवतोऽभिसिध्यति यावद्विज्ञानस्य गतं तत्रास्य यथाकामचारो भवति यो विज्ञानं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवो विज्ञानाद्भूय इति विज्ञानाद्वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் விக்ஞானத்தை “இது பிரஹ்மம்” என்று உபாசனை செய்கின்றானோ அவன் அதனால் விக்ஞானவான்களின் அவ்வாறே ஞானவான்களின் உலகங்களை அடைகின்றான். எதுவரை அவனுக்கு விக்ஞானத்தின் எல்லை உள்ளதோ அதுவரை அவனுக்கு இச்சித்த கதி உண்டாகிறது. எவன் ஒருவன் விக்ஞானத்தை “இது பிரஹ்மம்” என்று உபாசனை செய்கின்றவன் எதை அடைகிறான். (நாரதர்) பகவானே விக்ஞானத்தைக் காட்டிலும் சிறந்தது உள்ளதா? (சனத்குமாரர்-) விக்ஞானத்தைக் காட்டிலும் சிறந்தது உள்ளது. (நாரதர்) பகவானே! எனக்கு அதை உபதேசியுங்கள்.
स योऽन्नं ब्रह्मेत्युपास्तेऽन्नवतो वै स लोकान्पानवतोऽभिसिध्यति यावदन्नस्य गतं तत्रास्य यथाकामचारो भवति योऽन्नं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवोऽन्नाद्भूय इत्यन्नाद्वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் அன்னத்தை “இது பிரஹ்மம்” என்று உபாசிக்கின்றானோ அவன் அதனால் அன்னம் உள்ள உலகத்தையும், பருகுவதற்கான ஜலம் உள்ள லோகங்களையும் அடைவான். எதுவரை அன்னத்தின் கதி உள்ளதோ அதுவரை தன் இஷ்டப்படி கதியை அடைவான். எவன் அன்னத்தை “இது பிரஹ்மம்” என்று உபாசிக்கிறானோ அவன். (நாரதர்) பகவானே! என்ன அன்னத்தைவிட சிறந்தது உள்ளதா? (சனத்குமாரர்) அன்னத்தைக்காட்டிலும் மேலானது உள்ளது. (நாரதர்) பகவானே! எனக்கு அதை உபதேசியுங்கள்.
स योऽपो ब्रह्मेत्युपास्त आप्नोति सर्वान्कामाꣳस्तृप्तिमान्भवति यावदपां गतं तत्रास्य यथाकामचारो भवति योऽपो ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवोऽद्भ्यो भूय इत्यद्भ्यो वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் ஜலத்தை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கின்றானோ அவன் எல்லா காமனைகளையும் அடைவான். மேலும் திருப்தி உடையவன் ஆவான். எதுவரை ஜலத்தின் கதியோ அதுவரை அவனுக்கு தன் இஷ்டமான கதியை அடைகிறான். எவன் ஒருவன் ஜலத்தை “இது பிரஹ்மம்” என்று உபாசிக்கின்றானோ அவன். (நாரதர்) பகவானே என்ன ஜலத்தைவிட மேலானது உள்ளதா? (சனத்குமாரர்) ஜலத்தைக்காட்டிலும் சிறந்தது உள்ளது. (நாரதர்) பகவானே எனக்கு அதை உபதேசம் செய்யுங்கள்.
स वा एष आत्मा हृदि तस्यैतदेव निरुक्तं हृद्ययमिति तस्माद्धृदयमहरहर्वा एवंवित्स्वर्गं लोकमेति ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - அந்த இந்த ஆத்மா ஹிருதயத்தில் உள்ளது. “ह्य्दि अयम्” (ஹிருதி அயம் = ஹிருதயத்தில் இது) என்பது இதன் (வியுத்பத்தி) பொருளாகும். இதனால் இது ஹிருதயம். இவ்வாறு அறியும் புருஷன் தினந்தோறும் ஸ்வர்க்க லோகத்திற்குச் செல்கின்றான்.
स समित्पाणिः पुनरेयाय तꣳ ह प्रजापतिरुवाच मघवन्यच्छान्तहृदयः प्राव्राजीः किमिच्छन्पुनरागम इति स होवाच तद्यद्यपीदं भगवः शरीरमन्धं भवत्यनन्धः स भवति यदि स्राममस्रामो नैवैषोऽस्य दोषेण दुष्यति ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - (ஆகையால்) அவன் சமித்தை ஏந்திக்கொண்டு மறுபடியும் (பிரஜாபதியிடம்) வந்தான். அவனிடம் பிரஜாபதி கூறினார் - ஹே இந்திரனே! நீ சாந்த மனமுடையவனாகி சென்றாய். இப்பொழுது எதை விரும்பி மறுபடியும் வந்திருக்கிறாய்? அவன் கூறினான் - பகவானே! சரீரம் குருட்டுத்தன்மை உடையதானாலும் அது (ஸ்வப்ன சரீரம்) குருடாவதில்லை. அவ்வாறே கண்களிலும், மூக்கிலும், நீர் வடிந்தாலும் அதற்கு வடிவதில்லை இவ்வாறு இந்த சரீரத்தால் (ஸ்வப்ன சரீரம்) தோஷம் அடைவதில்லை.
स समित्पाणिः पुनरेयाय तꣳ ह प्रजापतिरुवाच मघवन्यच्छान्तहृदयः प्राव्राजीः किमिच्छन्पुनरागम इति स होवाच नाह खल्वयं भगव एवꣳ संप्रत्यात्मानं जानात्ययमहमस्मीति नो एवेमानि भूतानि विनाशमेवापीतो भवति नाहमत्र भोग्यं पश्यामीति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - அவன் சமித்தை ஏந்திக்கொண்டு மறுபடியும் பிரஜாபதியிடம் வந்தான். அவனிடம் பிரஜாபதி கூறினார் - ஹே இந்திரனே! நீ சாந்தமான மனதுடன் சென்றாய். இப்பொழுது எதை விரும்பி நீ இங்கு மறுபடியும் வந்திருக்கிறாய்? இந்திரன் கூறினான் - பகவானே! இந்த அவஸ்தையில் நிச்சயமான ஞானம் ஒன்றும் ஏற்படவில்லை நான் இருப்பதையோ மற்ற பூதங்களையோ அறியவில்லை. அது விநாசத்தையே அடைகிறது. இதில் எனக்கான எந்த ஒரு இஷ்ட பலத்தையும் காணவில்லை.
स समित्पाणिः पुनरेयाय तꣳ ह प्रजापतिरुवाच मघवन्यच्छान्तहृदयः प्राव्राजीः सार्धं विरोचनेन किमिच्छन्पुनरागम इति स होवाच यथैव खल्वयं भगवोऽस्मिञ्छरीरे साध्वलङ्कृते साध्वलङ्कृतो भवति सुवसने सुवसनः परिष्कृते परिष्कृत एवमेवायमस्मिन्नन्धेऽन्धो भवति स्रामे स्रामः परिवृक्णे परिवृक्णोऽस्यैव शरीरस्य नाशमन्वेष नश्यति नाहमत्र भोग्यं पश्यामीति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - நான் இங்கு ஒரு போக்யத்தையும் (பலனையும்) காணவில்லை என்று அவன் சமித்தை கைகளில் ஏந்தி மறுபடியும் பிரஜாபதியிடம் வந்தான். அவனிடம் பிரஜாபதி கூறினார் - ஹே இந்திரனே! நீ விரோச்சனனுடன் சாந்தமான சித்தத்தை அடைந்து சென்றாய். இப்பொழுது எதை விரும்பி மறுபடியும் வந்திருக்கின்றாய்? அதற்கு அவன் கூறினான் - ஹே பகவானே! எவ்வாறு இந்த ச்சாயாத்மா இந்த சரீரத்தை நன்றாக அலங்கரித்தபின் நன்றாக அலங்கரிக்கப்பட்டதாக ஆகிறதோ, அழகான ஆடை அணிவதால் அழகான ஆடை உடுத்தியவனாக ஆகின்றதோ, அவ்வாறே ஆடம்பரமாக இருந்தால் ஆடம்பரமாகிறதோ, அவ்வாறே குருடன் ஆனால் குருடன் ஆகிறதோ, ஒற்றைக் கண் குருடன் ஆனால் ஒற்றைக் கண் குருடனாகின்றானோ, அவ்வாறே வெட்டப்பட்ட பின்னர் வெட்டப்பட்டவனாக ஆகின்றானோ அவ்வாறே இந்த சரீரம் நாசம் அடைந்தால் அதுவும் (ச்சாயா ஆத்மாவும்) நாசமாகிவிடும். இதில் எனக்கு வேண்டிய பலனையும் (சிறப்பையும்) நான் காணவில்லை.
स ह क्षत्तान्विष्य नाविदमिति प्रत्येयाय तꣳ होवाच यत्रारे ब्राह्मणस्यान्वेषणा तदेनमर्च्छेति ॥ ७ ॥மந்த்ரார்த்தம் - அந்த சேவகன் எவ்வளவு தேடியும் அவர் கிடைக்கவில்லை என்று திரும்பிவந்தான். அப்பொழுது அவனிடம் ராஜா கூறினார்- ஹே! எங்கு பிராஹ்மணனை அதாவது பிரஹ்மத்தை அறிந்தவனை எங்கு தேட வேண்டுமோ அங்கு தேடி செல் என்று.
स ह खादित्वातिशेषाञ्जायाया आजहार साग्र एव सुभिक्षा बभूव तान्प्रतिगृह्य निदधौ ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - அவர் சாப்பிட்டுவிட்டு மீதமுள்ள (உளுந்து) பண்டத்தை தன்னுடைய மனைவிக்காக எடுத்துச்சென்றார். அதற்கு முன்பே பத்தினி நல்ல அன்னத்தைப் பெற்றிருந்தார். ஆகையால் அந்த பண்டத்தை எடுத்து தனியாக வைத்தாள்.
स ह गौतमो राज्ञोऽर्धमेयाय तस्मै ह प्राप्तायार्हां चकार स ह प्रातः सभाग उदेयाय तं होवाच मानुषस्य भगवन्गौतम वित्तस्य वरं वृणीथा इति स होवाच तवैव राजन्मानुषं वित्तं यामेव कुमारस्यान्ते वाचमभाषथास्तामेव मे ब्रूहीति स ह कृच्छ्री बभूव ॥ ६ ॥ மந்த்ரார்த்தம் - அப்பொழுது அந்த கெளதமர் ராஜா இருக்கும் இடத்திற்கு வந்தார். தன்னிடம் வந்தவருக்கு பூஜை செய்தார். (மறுநாள்) அதிகாலையில் ராஜாவின் சபையை அடைந்து கெளதமர் அவர் அருகில் சென்றார். அவர் (ராஜா) அவரிடம் (கெளதமரிடம்) கூறினார் - ஹே பகவானே கெளதம! தாங்கள் மனித சம்பந்தமான தனத்தை வரமாகக் கேளுங்கள் என்று. அதற்கு அவர் கூறினார் - ஹே ராஜாவே! அந்த மனித சம்பந்தமான செல்வத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். தாங்கள் என் புத்திரனிடத்தில் எந்த விஷயத்தைக் கேள்வி ரூபமாகக் கூறினீர்களோ அதை எனக்குக் கூறுங்கள் என்றார். அதற்குக் அவர் பிரவாஹணர் சங்கடத்தில் ஆழ்ந்தார். (சங்கடத்திற்கு உள்ளானார்).
स ह द्वादशवर्ष उपेत्य चतुर्विꣳशतिवर्षः सर्वान्वेदानधीत्य महामना अनूचानमानी स्तब्ध एयाय तꣳह पितोवाच ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - அந்த ச்வேதகேது பன்னிரண்டு வயதில் உபநயனம் செய்து இருபத்து நான்கு வயதிற்குள் எல்லா வேதங்களையும் அத்யயனம் செய்துவிட்டு தன்னை மஹாபுத்திமானாயும், வியாக்கியானம் செய்பவன் என்று கருதி மிகுந்த ஆணவத்துடன் வீட்டிற்குத் திரும்பினான். அவனிடம் பிதா கூறினார் - ஹே செளம்ய! நீ ஆணவம் நிறைந்தவனாய், பண்டிதன் என்று எண்ணிக்கொண்டு மிக்க வினயமற்று இருக்கிறாய். என்ன நீ எந்த உபதேசத்தைக் கேட்டாய்? என்று.
स ह पञ्चदशाहानि नाशाथ हैनमुपससाद किं ब्रवीमि भो इत्यृचः सोम्य यजूꣳषि सामानीति स होवाच न वै मा प्रतिभान्ति भो इति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - அவனும் பதினைந்து தினங்கள் போஜனம் செய்யவில்லை. அதன்பின் அவன் அந்த ஆருணரிடம் வந்து கூறினான்- ஹே பகவானே! என்ன கூறவேண்டும். (பிதா கூறினார்-) ஹே சோம்ய! ரிக், யஜுர், சாமத்தை ஓத வேண்டும் என்று கூறினார். அப்பொழுது அவன் கூறினான் - ஹே பகவானே! எனக்கு அவைகள் ஞாபகத்திற்கு வரவில்லை என்று.
स ह प्रातः सञ्जिहान उवाच यद्बतान्नस्य लभेमहि लभेमहि धनमात्राꣳ राजासौ यक्ष्यते स मा सर्वैरार्त्विज्यैर्वृणीतेति ॥ ६ ॥ மந்த்ரார்த்தம் - அவர் அதிகாலையில் நித்திரையைவிட்டு எழுந்து அதன்பிறகு கூறினார் - நமக்கு ஏதாவது அன்னம் கிடைத்தால் நாம் சிறிது தனத்தை அடையலாம் ஏன்எனில் அந்த ராஜா யக்ஞம் செய்பவர். அவர் எல்லா ரித்விக் கர்மங்களுக்காக என்னை வரித்துக்கொள்வார்.
स ह व्याधिनानशितुं दध्रे तमाचार्यजायोवाच ब्रह्मचारिन्नशान किं नु नाश्नासीति स होवाच बहव इमेऽस्मिन्पुरुषे कामा नानात्यया व्याधिभिः प्रतिपूर्णोऽस्मि नाशिष्यामीति ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - அந்த உபகோசலன் (மானசீக) மனதில் உள்ள துக்கத்தால் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று நிச்சயம் செய்தான். அவனிடம் ஆச்சாரியருடைய பத்தினி வினாவினான் - ஹே பிரஹ்மச்சாரி! நீ சாப்பிடு. எதற்காக உண்ணாமல் இருக்கின்றாய்? அதற்கு அவன் கூறினான் - இந்த மனிதனிடத்தில் மிகுந்த காமனைகள் இருக்கின்றன. மேலும் அநேகம் அறிய வேண்டியவைகளும் உள்ளன. நான் இந்த வியாதிகளால் நிறைந்திருக்கின்றேன். ஆகையால் நான் சாப்பிடமாட்டேன்.
स ह शिलकः शालावत्यश्चैकितायनं दाल्भ्यमुवाच हन्त त्वा पृच्छानीति पृच्छेति होवाच ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - அப்பொழுது அந்த சிலாவதரினுடைய புத்திரர் சிலகர் சிகிதாயனருடைய குமாரர் தால்ப்பியரிடம் கூறினார்- உங்களுடைய அனுமதி கிடைத்தால் நான் உன்னிடம் கேட்கிறேன் - அவர் கேள் என்று கூறினார்.
स ह सम्पादयाञ्चकार प्रक्ष्यन्ति मामिमे महाशाला महाश्रोत्रियास्तेभ्यो न सर्वमिव प्रतिपत्स्ये हन्ताहमन्यमभ्यनुशासानीति ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - (உத்தாலகர்) அவர் இவ்வாறு நிச்சயம் செய்தார்- அவர்கள் சிறந்த ச்ரோத்திரியர்களும் மஹா கிரஹஸ்தர்களும் ஆகிய அவர்கள் என்னிடம் கேள்வி கேட்பார்கள். அவர்களுக்கு என்னால் முழுமையாக பதில் அளிக்கமுடியாது. நான் அவர்களை வேறு உபதேசிப்பவரை அனுகச்செய்யலாம் என்று நினைத்தார்.
स ह हारिद्रुमतं गौतममेत्योवाच ब्रह्मचर्यं भगवति वत्स्याम्युपेयां भगवन्तमिति ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - அவன் அந்த ஹாரித்ருமத கெளதமரிடம் சென்று கூறினார் - நான் பூஜ்ய ஶ்ரீமானாகிய தங்களிடம் இங்கு பிரஹ்மசர்யத்துடன் வாசம் செய்கிறேன். ஆகையால் உங்களிடம் வந்துள்ளேன்.
स हाशाथ हैनमुपससाद तꣳ ह यत्किञ्च पप्रच्छ सर्वꣳ ह प्रतिपेदे ॥ ४ ॥ மந்த்ரார்த்தம் - அவன் போஜனம் செய்தபின் அவரிடம் (ஆருணரிடம்) சென்றான். அவர் எதையெல்லாம் கேட்டாரோ அவை எல்லாம் அவன் அறிந்து இருந்தான் (ஞாபகத்திற்கு வந்தது)
स हेभ्यं कुल्माषान्खादन्तं बिभिक्षे तꣳ होवाच । नेतोऽन्ये विद्यन्ते यच्च ये म इम उपनिहिता इति ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அவர் உளுந்தினால் செய்யப்பட்ட பதார்த்தத்தை சாப்பிட்டுக்கொண்டிருந்த யானைப்பாகனிடம் அதனை யாசித்தார். அப்பொழுது அவன் கூறினான் - இந்த எச்சில் செய்யப்பட்ட இந்த பதார்த்தத்தை தவிர வேறு என்னிடம் இல்லை. மேலும் எது என்னிடம் உள்ளதோ அதை என் போஜன பாத்திரத்தில் வைத்துவிட்டேன். ஆகையால் நான் எவ்வாறு தங்களுடைய யாசகத்தைப் பூர்த்தி செய்வேன்.
स होवाच किं मे वासो भविष्यतीत्याप इति होचुस्तस्माद्वा एतदशिष्यन्तः पुरस्ताच्चोपरिष्टाच्चाद्भिः परिदधति लम्भुको ह वासो भवत्यनग्नो ह भवति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - அது (பிராணன்) என்னுடைய வஸ்திரம் எது? என்று கேட்டது. அப்பொழுது வாக் முதலியவைகள் கூறின- ஜலம் என்று. இதனால் சாப்பிடுபவன் சாப்பிடுவதற்கு முன்னும், சாப்பிட்ட பின்னும் ஜலத்தால் ஆச்சமணீயம் செய்கின்றான். (இவ்வாறு செய்வதால்) அது வஸ்திரம் அடைந்ததாயும், வஸ்திரம் இல்லாமலும் ஆகவில்லை. அதாவது மேலாடை அடைந்தவனாகவும் ஆகிறது.
स होवाच किं मेऽन्नं भविष्यतीति यत्किञ्चिदिदमा श्वभ्य आ शकुनिभ्य इति होचुस्तद्वा एतदनस्यान्नमनो ह वै नाम प्रत्यक्षं न ह वा एवंविदि किञ्चनानन्नं भवतीति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - அது (முக்ய பிராணன்) கூறியது - என்னுடைய அன்னம் யாது? அப்பொழுது வாக் முதலியவைகள் கூறின - நாய் பக்ஷிகள் முதல் எல்லா ஜீவர்களுக்கும் எந்த ஒரு அன்னம் உள்ளதோ (அவை எல்லாம் உன்னுடைய அன்னம்) அந்த அவை எல்லாம் “अन” (அன) (अन-प्राणः) பிராணனின் அன்னமாகும். “अन” (அன:) என்பது பிராணனின் பிரத்யக்ஷ நாமமாகும். இவ்வாறு அறிந்தவன் अनन्नः (அனன்ன:) அதாவது சாப்பாடு (அன்னம்) இல்லாதவனாக இருக்கமாட்டான் (அல்லது உண்ண முடியாதவனாக ஆகமாட்டான்).
स होवाच भगवन्तं वा अहमेभिः सर्वैरार्त्विज्यैः पर्यैषिषं भगवतो वा अहमवित्त्यान्यानवृषि ॥ २ ॥மந்த்ரார்த்தம் - (அந்த ராஜா) அவர் கூறினார் - நான் இந்த எல்லா ரித்விக் கர்மங்களுக்காக உங்களைத் தேடினேன். ஶ்ரீமானாகிய நீங்கள் கிடைக்காததால் நான் வேறு ரித்விக்களை நியமித்தேன் என்று.
स होवाच महात्मनश्चतुरो देव एकः कः स जगार भुवनस्य गोपास्तं कापेय नाभिपश्यन्ति मर्त्या अभिप्रतारिन्बहुधा वसन्तं यस्मै वा एतदन्नं तस्मा एतन्न दत्तमिति ॥ ६ ॥மந்த்ரார்த்தம் - அந்த பிரஹ்மசாரி கூறினார் - புவனங்களை ரக்ஷிக்கின்ற ஒரே தேவன் பிரஜாபதியானவர் நான்கு மஹாத்மாக்களை விழுங்கினார். ஹே காபேய! ஹே அபிப்ரதாரின்! மனிதர்கள் அநேக விதமாக இருந்துகொண்டு இருக்கும் அந்த ஒரே தேவனை மனிதர்கள் காண்பதில்லை. அவ்வாறே எவருக்காக இந்த அன்னமோ அதை அளிக்க மறுக்கிறீர்கள்.
स होवाच विजानाम्यहं यत्प्राणो ब्रह्म कं च तु खं च न विजानामीति ते होचुर्यद्वाव कं तदेव खं यदेव खं तदेव कमिति प्राणं च हास्मै तदाकाशं चोचुः ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - அவன் (பிரஹ்மச்சாரி உபகோசலன்) கூறினான் - இந்த பிராணன் பிரஹ்மம் என்று அறிகிறேன். ஆனால் “कं” (கம்-= சுகம் ) என்பதையும் “खं” (க்கம் = ஆகாயம்) என்பதையும் அறியவில்லை என்று அதற்கு அவை கூறின - நிச்சயமாக எந்த கம் (சுகம்) உள்ளதோ அதுவே க்கம் (ஆகாயம்) ஆகும். மேலும் எது க்கம் “खं” மோ அதுவே “கம்” “कं” ஆகும். இவ்வாறு அவைகள் (அக்னிகள்) பிராணனையும், அதன் (ஆஸ்ரய ரூபமான) ஆகாசத்தையும் உபதேசம் செய்தன.
सङ्कल्पो वाव मनसो भूयान्यदा वै सङ्कल्पयतेऽथ मनस्यत्यथ वाचमीरयति तामु नाम्नीरयति नाम्नि मन्त्रा एकं भवन्ति मन्त्रेषु कर्माणि ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - சங்கல்பமே மனதைவிட மேன்மையானது. எப்பொழுது புருஷன் சங்கல்பிக்கின்றானோ அப்பொழுது அது நினைக்கிறது. அழ்ன் வாக்கைப் பிரேரணை செய்கிறது. அதனால் அது நாமமாக பிரவிர்த்தி ஆகின்றது. அந்த நாமத்தில் எல்லா மந்திரங்களும் ஒரே ரூபமாக ஆகின்றன. மேலும் மந்திரங்களில் கர்மங்கள் அந்தர்பாவமாகிறது. (அடங்குகிறது)
सत्यकामो ह जाबालो जबालां मातरमामन्त्रयाञ्चक्रे ब्रह्मचर्यं भवति विवत्स्यामि किङ्गोत्रो न्वहमस्मीति ॥ १ ॥மந்த்ரார்த்தம் - ஜாபாலையின் புத்திரன் சத்யகாமன் தன்னுடைய தாய் ஜபாலயை அழைத்து இவ்வாறு கூறினார்- ஹே பூஜைக்கு உரியவளே! நான் பிரஹ்மச்சாரியனாக (குரு குலத்தில்) வாழ விரும்புகின்றேன். நான் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்? என்று.
सदेव सोम्येदमग्र आसीदेकमेवाद्वितीयम् । तद्धैक आहुरसदेवेदमग्र आसीदेकमेवाद्वितीयं तस्मादसतः सज्जायत ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! ஆரம்பத்தில் இது ஒன்றாகவே அத்விதீய சத்தாக இருந்தது. இந்த விஷயத்தில் சிலர் இவ்வாறு கூறுகின்றனர் - ஆரம்பத்தில் இது ஒன்று மாத்திரமாய் அத்விதீய அசத்தாகவே இருந்தது என்று. அந்த அசத்திலிருந்தே சத் உண்டாயிற்று என்று கூறுகின்றனர்.
समस्तस्य खलु साम्न उपासनꣳ साधु यत्खलु साधु तत्सामेत्याचक्षते यदसाधु तदसामेति ॥ १ ॥மந்த்ரார்த்தம் - ஓம் எல்லா ஸாமத்தின் உபாசனைகளும் நிச்சயமாக நன்மை செய்வதே. எது நன்மையை அளிக்கின்றதோ அதை ஸாமம் என்று கூறுகின்றோம். எது நன்மை தராதோ அது அஸாமம் (நன்மைதராத ஸாமம்). என்று கூறப்படுகிறது.
समान उ एवायं चासौ चोष्णोऽयमुष्णोऽसौ स्वर इतीममाचक्षते स्वर इति प्रत्यास्वर इत्यमुं तस्माद्वा एतमिमममुं चोद्गीथमुपासीत ॥ २ ॥மந்த்ரார்த்தம் - இதுவும் (பிராணனும்) அதுவும் (சூரியனும்) பரஸ்பரம் சமானமானதே. பிராணன் உஷ்ணமானது. சூரியனும் உஷ்ணமானது, அவ்வாறே பிராணனை ஸ்வரம் என்று கூறுகிறார்கள், அவ்வாறே சூரியனையும் ஸ்வரம் என்றும் பிரத்யாஸ்வரம் என்றும் கூறுகிறார்கள். (ஸ்வரம் என்பது இந்த இடத்தில் பிரிந்து செல்லுதல் என்பது பொருள்) ஆகையால் இந்த பிராணன், மேலும் இந்த சூரியன் ரூபமாய் உபாசனை செய்யவேண்டும் என்பதாகும்.
समाने तृप्यति मनस्तृप्यति मनसि तृप्यति पर्जन्यस्तृप्यति पर्जन्ये तृप्यति विद्युत्तृप्यति विद्युति तृप्यन्त्यां यत्किञ्च विद्युच्च पर्जन्यश्चाधितिष्ठतस्तत्तृप्यति तस्यानु तृप्तिं तृप्यति प्रजया पसुभिरन्नाद्येन तेजसा ब्रह्मवर्चसेनेति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - சமானன் திருப்தி ஆனவுடன் மனம் திருப்தி அடைகிறது. மனம் திருப்தி அடைந்தபின் மழைமேகம் திருப்தி ஆகிறது. மழைமேகம் திருப்தியானவுடன் மின்னல் திருப்தியாகிறது. அவ்வாறே மின்னல் திருப்தியான உடன் எந்த ஒன்று வித்யுத் (மின்னல்) மழைமேகத்தில் நிலைபெற்றுள்ளதோ அது திருப்தி அடைகிறது. இவ்வாறு திருப்தி அடைந்தபின் போக்தா, பிரஜா பசு (கால்நடை) அன்னாத்யம், தேஜஸ் மேலும் பிரஹ்மதேஜஸ் இவைகளின் மூலமாய் திருப்தி அடைகிறது.
सर्वं खल्विदं ब्रह्म तज्जलानिति शान्त उपासीत । अथ खलु क्रतुमयः पुरुषो यथाक्रतुरस्मिंल्लोके पुरुषो भवति तथेतः प्रेत्य भवति स क्रतुं कुर्वीत ॥ १ ॥மந்த்ரார்த்தம் - இந்த ஜகத் முழுவதும் நிச்சயமாக பிரஹ்மம். ஜகத் அதிலிருந்து உண்டாகி அதிலேயே லயமாகிறது. மேலும் அதிலேயே காப்பாற்றப்படுகிறது. என்று இவ்வாறு (ரஜோகுண தமோகுணமற்று) சாந்தமாகி உபாசனை செய்ய வேண்டும். ஏன்எனில் புருஷன் நிச்சயமாக சிந்தனை மயமான நிச்சய ஆத்மா ஆவான். இந்த உலகில் புருஷன் எவ்வாறு நிச்சயமானவனாக ஆகின்றானோ அவ்வாறே இங்கு மரணமடைந்தபின்னும் ஆகின்றான். ஆகையால் இவனை (இந்த புருஷனை) நிச்சயம் செய்ய வேண்டும்.
सर्वकर्मा सर्वकामः सर्वगन्धः सर्वरसः सर्वमिदमभ्यात्तोऽवाक्यनादर एष म आत्मान्तर्हृदय एतद्ब्रह्मैतमितः प्रेत्याभिसम्भवितास्मीति यस्य स्यादद्धा न विचिकित्सास्तीति ह स्माह शाण्डिल्यः शाण्डिल्यः ॥ ४ ॥மந்த்ரார்த்தம் - எவர் எல்லா கர்மங்களின் வடிவமோ, எல்லா காமனைகளின் வடிவமோ, எல்லா கந்த (வாசனை) ரூபமோ, எல்லா ரச வடிவமோ அவர் எல்லாவற்றிலும் வியாபித்திருகின்றார். வாக் அற்றவர், ஆக்ரஹம் அற்றவர் அவர். அந்த என்னுடைய ஆத்மா ஹ்ருதய கமலத்தின் மத்தியில் இருக்கிறார். அவரே பிரஹ்மம். இந்த சரீரம் மரித்தபின் அவரை அடைவேன். எவருக்கு இவ்வாறான நிச்சயம் உள்ளதோ அவருக்கு இந்த விஷயத்தில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. (அதனால் ஈஸ்வர பாவத்தை அடைகின்றான்) இவ்வாறு சாண்டில்யர் கூறினார். இவ்வாறு சாண்டில்யர் கூறினார்.
सर्वास्वप्सु पञ्चविधꣳ सामोपासीत मेघो यत्सम्प्लवते स हिङ्कारो यद्वर्षति स प्रस्तावो याः प्राच्यः स्यन्दन्ते स उद्गीथो याः प्रतीच्यः स प्रतिहारः समुद्रो निधनम् ॥ १ ॥மந்த்ரார்த்தம் - இவ்வாறு ஜலத்தை ஐந்து வகையான ஸாமத்தால் உபாஸனை செய். மேகம் எப்பொழுது அடர்த்தியாகிறதோ (திரள்கிறதோ) அது “हिंकारः” (ஹிம்காரம்). மழை பொழிவது “प्रस्तावः” (பிரஸ்தாவம்). (நதிகள்) கிழக்கு திக்கில் பிரவஹிப்பது “उद्गीथः” (உத்கீதம்). அவ்வாறே மேற்கில் பிரவஹிப்பது “प्रतिहारः” (பிரதிஹாரம்). ஸமுத்திரம் “निधनम्” (நிதனம்) ஆகும்.
सर्वे स्वरा इन्द्रस्यात्मानः सर्व ऊष्माणः प्रजापतेरात्मानः सर्वे स्पर्शा मृत्योरात्मानस्तं यदि स्वरेषूपालभेतेन्द्रं शरणं प्रपन्नोऽभूवं स त्वा प्रति वक्ष्यतीत्येनं ब्रूयात् ॥ ३ ॥மந்த்ரார்த்தம் - எல்லா ஸ்வரங்களும் (உயிர் எழுத்துகள்) இந்திரனின் ஆத்மா. எல்லா ஊஷ்ம வர்ணங்கள் பிரஜாபதியின் ஆத்மா. எல்லா ஸ்பர்ஷ வர்ணங்களும் மிருத்யுவின் ஆத்மா. அந்த உத்காதாவிடம் எந்த புருஷன் ஸ்வரத்தின் உச்சாரணத்தில் தோஷத்தைக் காட்டினால் அவனிடம் நான் இந்திரனிடம் சரணாகதம் அடைந்து உள்ளேன் என்று பதில் அளிக்க வேண்டும்.
सर्वे स्वरा घोषवन्तो बलवन्तो वक्तव्या इन्द्रे बलं ददानीति सर्व ऊष्माणोऽग्रस्ता अनिरस्ता विवृता वक्तव्याः प्रजापतेरात्मानं परिददानीति सर्वे स्पर्शालेशेनानभिनिहिता वक्तव्या मृत्योरात्मानं परिहराणीति ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - எல்லா ஸ்வரங்களும் மென்மையான அதாவது தெளிவானதாகவும் வலிமை உடையதாய் உச்சரிக்க வேண்டும். ஆகையால் (அதை உச்சரிக்கும் ஸமயத்தில்) நான் இந்திரனிடத்தில் வலிமையை (ஆற்றலை) அளிக்கின்றேன் என்று (சிந்தனை செய்ய வேண்டும்). எல்லா ஊஷ்ம வர்ணத்தை விழுங்காமல், விட்டு விடாமல், பிரயத்தனத்துடன் உச்சாரணம் செய்ய வேண்டும். மேலும் நான் பிரஜாபதிக்கு ஆத்ம தானம் செய்கின்றேன் (என்று சிந்தனை செய்ய வேண்டும்) அவ்வாறே எல்லா ஸ்பர்ச வர்ணத்தையும் மிருதுவாக ஒன்றுக்கொன்று சேராமல் கூறவேண்டும். எவ்வாறு குழந்தைகள் மெதுவாக மெதுவாக எழுந்திருக்கின்றனவோ அவ்வாறு மெதுவாக மெதுவாக மிருத்யுவிடமிருந்து என்னைக் காத்துக்கொள்கின்றேன்.
सा ह वागुच्चक्राम सा संवत्सरं प्रोष्य पर्येत्योवाच कथमशकतर्ते मज्जीवितुमिति यथा कला अवदन्तः प्राणन्तः प्राणेन पश्यन्तश्चक्षुषा शृण्वन्तः श्रोत्रेण ध्यायन्तो मनसैवमिति प्रविवेश ह वाक् ॥ ८ ॥ மந்த்ரார்த்தம் - அந்த வாக் இந்திரியம் (சரீரத்திலிருந்து) வெளியேறியது. அது ஒரு வருடம் வெளியில் தங்கிவிட்டு அதன்பின் திரும்பிவந்து “நான் இல்லாமல் நீங்கள் எவ்வாறு ஜீவித்துக்கொண்டிருந்தீர்கள்”? (என்று கேட்டது) (அதற்கு அவைகள் கூறின) எவ்வாறு ஊமை பேசாமலே பிராணனால் சுவாசித்துக்கொண்டும், கண்களால் பார்த்துக்கொண்டும், ச்ரோத்திரத்தால் (காதால்) கேட்டுக்கொண்டும், மனதால் சிந்தித்துக்கொண்டும் ஜீவிக்கின்றானோ அவ்வாறு ஜீவித்துக்கொண்டு இருக்கிறோம் என்று. இவ்வாறு கூறியதைக்கேட்டு வாக் இந்திரியம் சரீரத்திற்குள் பிரவேசித்தது.
सा हैनमुवाच नाहमेतद्वेद तात यद्गोत्रस्त्वमसि बह्वहं चरन्ती परिचारिणी यौवने त्वामलभे साहमेतन्न वेद यद्गोत्रस्त्वमसि जबाला तु नामाहमस्मि सत्यकामो नाम त्वमसि स सत्यकाम एव जाबालो ब्रवीथा इति ॥ २ ॥மந்த்ரார்த்தம் - அவள் அவனிடம் இவ்வாறு கூறினாள் - ஹே மகனே! நீ எந்த கோத்திரம் என்று எனக்குத் தெரியாது. நான் இளமையாய் இருக்கும்பொழுது நான் மிகுந்த வேலை செய்துகொண்டு விட்டு வேலை செய்பவளாய் இருந்தேன். அப்பொழுது உன்னைப் பெற்றேன். ஆகையால் எனக்கு என்ன கோத்திரம் என்று தெரியாது. நான் ஜபாலா என்ற பெயர் உடையவள். நீ சத்யகாமா என்ற பெயர் உடையவன். ஆகையால் உன்னை “சத்யகாம ஜபாலா” என்று கூறு என்று கூறினாள்.
सेयं देवतैक्षत हन्ताहमिमास्तिस्रो देवता अनेन जीवेनात्मनानुप्रविश्य नामरूपे व्याकरवाणीति ॥ २ ॥ மந்த்ரார்த்தம் - அந்த இந்த (சத் எனப்படும்) தேவதையானது ஈக்ஷணை செய்தது நான் இந்த ஜீவாத்ம ரூபமாக இந்த மூன்று தேவதைகளின் உள்பிரவேசித்து நாம ரூபங்களாக வெளிப்படுவேனாக என்று.
सैषा चतुष्पदा षड्विधा गायत्री तदेतदृचाभ्यनूक्तम् ॥ ५ ॥மந்த்ரார்த்தம் - அந்த இந்த காயத்ரீ நான்கு அடிகள் (பதங்கள்) உடையது. மேலும் ஆறு வகையானது. அந்த இந்த (காயத்ரீ எனப்படும் பிரஹ்மம்) மந்திரங்கள் மூலமாய் பிரகாசப்படுத்தப்படுகிறது.
सोऽधस्ताच्छकटस्य पामानं कषमाणमुपोपविवेश तं हाभ्युवाद त्वं नु भगवः सयुग्वा रैक्व इत्यहं ह्यरा३ इति ह प्रतिजज्ञे स ह क्षत्ताविदमिति प्रत्येयाय ॥ ८ ॥மந்த்ரார்த்தம் - அவன் ஒரு வண்டியின் கீழ் தேடும் பொழுது அங்கு (ரைக்வரை பார்த்து) அவரின் பக்கத்தில் அமர்ந்து இவ்வாறு கூறினான்- ஹே பகவானே! என்ன நீங்கள் வண்டிக்காரனான ரைக்வரா? என்று. அதற்கு ரைக்வர் அரே! நான் தான் என்று கூறி ஒப்புக்கொண்டார். அப்பொழுது அவர் ரைக்வர் என்று அறிந்து திரும்பி வந்தார்.
सोऽहं भगवो मन्त्रविदेवास्मि नात्मविच्छ्रुतं ह्येव मे भगवद्दृशेभ्यस्तरति शोकमात्मविदिति सोऽहं भगवः शोचामि तं मा भगवाञ्छोकस्य पारं तारयत्विति तं होवाच यद्वै किञ्चैतदध्यगीष्ठा नामैवैतत् ॥ ३ ॥ மந்த்ரார்த்தம் - ஹே பகவானே! நான் மந்திரத்தை மாத்திரம் அறிந்தவனாக இருக்கின்றேன். நான் ஆத்மாவை அறிந்தவன் அல்ல. ஆத்மாவை அறிந்தவன் சோகத்தைக் கடக்கிறான் என்று உங்களிடம் இருந்து நான் கேட்டிருக்கிறேன். ஹே பகவானே! நான் சோகத்துடன் இருக்கின்றேன். ஹே பகவானே! என்னை சோகத்திலிருந்து கடைத்தேறச் செய்யுங்கள். அப்பொழுது சனத்குமாரர் அவரிடம் கூறினார் - நீ எதை அறிந்து இருக்கின்றாயோ அது நாமமே ஆகும்.
स्तेनो हिरण्यस्य सुरां पिबꣳश्च गुरोस्तल्पमावसन्ब्रह्महा चैते पतन्ति चत्वारः पञ्चमश्चाचरꣳस्तैरिति ॥ ९ ॥ மந்த்ரார்த்தம் - தங்கத்தைத் திருடுபவன், மது அருந்துபவன், குருவின் பத்தினியை நாடுபவன், பிராஹ்மணனைக் கொல்வது ஆகிய நால்வரும் விழுகின்றனர். ஐந்தாமவர் இவர்களுடன் தொடர்பு கொள்பவன் ஆவான்.
स्मरो वावाकाशाद्भूयस्तस्माद्यद्यपि बहव आसीरन्न स्मरन्तो नैव ते कञ्चन शृणुयुर्न मन्वीरन्न विजानीरन्यदा वाव ते स्मरेयुरथ शृणुयुरथ मन्वीरन्नथ विजानीरन्स्मरेण वै पुत्रान्विजानाति स्मरेण पशून्स्मरमुपास्स्वेति ॥ १ ॥ மந்த்ரார்த்தம் - ஸ்மரணம் (நினைவாற்றல்) ஆகாசத்தைக் காட்டிலும் மேலானது. ஆகையால் ஒரு இடத்தில் பலர் சேர்ந்து அமர்ந்து இருந்தாலும் நினைவு (ஸ்மரணம்) இல்லாவிடில் ஒன்றும் கேட்கமுடியாது. நினைக்கமுடியாது, அறிந்துகொள்ளவும் முடியாது. எப்பொழுது ஸ்மரணம் உள்ளதோ அப்பொழுது கேட்கமுடியும், நினைக்கமுடியும், அப்பொழுது அறிந்து கொள்ளவும் முடியும். ஸ்மரணத்தினாலேயே புத்திரர்களை அறிய முடிகிறது. மேலும் பசுக்களையும் ஸ்மரணத்தினாலேயே அறிந்துகொள்ளமுடிகிறது. ஆகையால் நீ ஸ்மரணத்தை உபாசனை செய்வாயாக.
हन्ताहमेतद्भगवत्तो वेदानीति विद्धीति होवाचामुष्य लोकस्य का गतिरित्ययं लोक इति होवाचास्य लोकस्य का गतिरिति न प्रतिष्ठां लोकमति नयेदिति होवाच प्रतिष्ठां वयं लोकꣳ सामाभिसꣳ स्थापयामः प्रतिष्ठासꣳ स्तावꣳ हि सामेति ॥ ७ ॥மந்த்ரார்த்தம் - நான் இந்த விஷயத்தை பகவனாகிய உங்களிடமிருந்து அறிந்துகொள்ள விரும்புகின்றேன். இதற்கு (சிலகர்) கூறினார் - அறிந்துகொள். அப்பொழுது அந்த லோகத்தின் கதி யாது? என்று கேட்டதற்கு இந்த லோகம் என்று கூறினார். மேலும் இந்த லோகத்தின் கதி என்ன? என்ற கேள்விக்கு இந்த பிரதிஷ்டா ரூபமான லோகத்தை அதிக்கிரமணம் செய்து (தாண்டி) ஸாமத்தை வேறு இடத்திற்கு எடுத்துச்செல்ல முடியாது என்று கூறினார். நாம் பிரதிஷ்டா ரூபமான இந்த லோகத்தில் ஸாமத்தை நிலைநிறுத்துகிறோம். (இருக்கச் செய்கிறோம்) (இதனால் இதுவே முடிவான ஸ்திதி என்று நிச்சயம் செய்கிறோம்) ஏன் எனில் ஸாமத்தின் பிரதிஷ்டா ரூபமாக ஸ்துதி செய்கின்றோம்.
हꣳसस्ते पादं वक्तेति स ह श्वोभूते गा अभिप्रस्थापयाञ्चकार ता यत्राभि सायं बभूवुस्तत्राग्निमुपसमाधाय गा उपारुध्य समिधमाधाय पश्चादग्नेः प्राङुपोपविवेश ॥ १ ॥மந்த்ரார்த்தம் - ஹம்சம் உனக்கு (மூன்றாவது) பாதத்தைக் கூறும் என்று கூறியது. (அதன்பின் அக்னி நிவிர்த்தி ஆகிவிட்டது) மறுநாள் சத்யகாமன் அந்த பசுக்களை ஆச்சாரிய குலத்திற்கு அழைத்துச் (ஒட்டிச்) சென்றான். சாயங்காலம் ஆனவுடன் அங்கு எல்லா பசுக்களையும் ஒன்று சேர்த்து பின் அவைகளை கட்டிவிட்டு சமித்துக்களை கொண்டுவந்து அக்னியை மூட்டி அதன்முன்னால் கிழக்கு பார்த்து அமர்ந்தான்.