सगुणब्रह्मविद्याया उत्तरा गतिरुक्ता । अथेदानीं पञ्चमेऽध्याये पञ्चाग्निविदो गृहस्थस्य ऊर्ध्वरेतसां च श्रद्धालूनां विद्यान्तरशीलिनां तामेव गतिमनूद्य अन्या दक्षिणादिक्सम्बन्धिनी केवलकर्मिणां धूमादिलक्षणा, पुनरावृत्तिरूपा तृतीया च ततः कष्टतरा संसारगतिः, वैराग्यहेतोः वक्तव्येत्यारभ्यते । प्राणः श्रेष्ठो वागादिभ्यः प्राणो वाव संवर्ग इत्यादि च बहुशोऽतीते ग्रन्थे प्राणग्रहणं कृतम् , स कथं श्रेष्ठो वागादिषु सर्वैः संहत्यकारित्वाविशेषे, कथं च तस्योपासनमिति तस्य श्रेष्ठत्वादिगुणविधित्सया इदमनन्तरमारभ्यते —
அனுவாதம் - அ.கை - சகுண பிரஹ்மவித்யையின் உத்தரகதி கூறப்பட்டது. அதன்பின் இப்பொழுது ஐந்தாவது அத்யாயத்தில் பஞ்சாக்னி வித்யையை அறிந்த கிருஹஸ்தர்களுக்கான வேறு வித்யையில் நிபுணர்களான சிரத்தை உடைய ஊர்த்வரேதஸ்கனுக்கான தங்களுக்கான கதியை அனுவாதம் செய்துவிட்டு வேறு தக்ஷிணதிக் சம்பந்தமுடைய கர்மிகளுக்கு மாத்திரமான தூமம் முதலிய லக்ஷணமுடையதும் புனராவ்ருத்தி ரூபமானதும், மூன்றாவதாக அதைவிட கஷ்டமான சம்சாரகதியிலும் வைராக்யம் ஏற்படுத்துவதற்காக மேலும் கூறவேண்டும் என்று ஆரம்பிக்கப்படுகிறது. வாக் முதலியவைகளைக் காட்டிலும் பிராணன் ஸ்ரேஷ்டமானது. “प्राणो वाव संवर्ग” (ப்ராணோ வாவ சம்வர்க்க) முதலியவைகளால் அநேக விதமாக கடந்த கிரந்தத்தில் ப்ராணன் கிரஹிக்கப்பட்டது. எல்லாம் சேர்ந்து காரியம் செய்வதில் எந்த ஒரு விசேஷமும் இல்லாமல் சமானமாக இருப்பதால் இது எவ்வாறு வாக் முதலியவைகளைக் காட்டிலும் சிறந்ததாக ஆகும்? எப்படி உபசானை செய்யவேண்டும்? என்ற இந்த ஐயங்களின் நிவிர்த்திக்காக சிரேஷ்டத்துவம் முதலிய குணங்களை விதானம் செய்வதில் விருப்பம் கொண்டு இனி கிரந்தம் ஆரம்பிக்கப்படுகிறது -
यो ह वै ज्येष्ठं च श्रेष्ठं च वेद ज्येष्ठश्च ह वै श्रेष्ठश्च भवति प्राणो वाव ज्येष्ठश्च श्रेष्ठश्च ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஜ்யேஷ்டனையும் ஸ்ரேஷ்டனையும் அறிகிறானோ அவன் ஜ்யேஷ்டனாகவும், ஸ்ரேஷ்டனாகவும் ஆகின்றான். நிச்சயமாகப் ப்ராணனே ஜ்யேஷ்டனும் சிரேஷ்டனும் ஆவான்.
यो ह वै कश्चित् ज्येष्ठं च प्रथमं वयसा श्रेष्ठं च गुणैरभ्यधिकं वेद, स ज्येष्ठश्च ह वै श्रेष्ठश्च भवति । फलेन पुरुषं प्रलोभ्याभिमुखीकृत्य आह — प्राणो वाव ज्येष्ठश्च वयसा वागादिभ्यः ; गर्भस्थे हि पुरुषे प्राणस्य वृत्तिर्वागादिभ्यःपूर्वं लब्धात्मिका भवति, यया गर्भो विवर्धते । चक्षुरादिस्थानावयवनिष्पत्तौ सत्यां पश्चाद्वागादीनां वृत्तिलाभ इति प्राणो ज्येष्ठो वयसा भवति । श्रेष्ठत्वं तु प्रतिपादयिष्यति — ‘सुहय’ इत्यादिनिदर्शनेन । अतः प्राण एव ज्येष्ठश्च श्रेष्ठश्च अस्मिन्कार्यकरणसङ्घाते ॥
அனுவாதம் - எவன் ஒருவன் வயதால் முதன்மையானவன் என்றும் அதிக குணங்களை உடையவன் ஸ்ரேஷ்டன் என்றும் அறிகிறானோ அவன் ஜ்யேஷ்டனும், ஸ்ரேஷ்டனும் ஆகிறான். பலனைக் கூறி புருஷனை ஈடுபடுத்துவதற்காக சுருதி கூறுகிறது- வாக் முதலியவைகளைக்காட்டிலும் பிராணன் வயதால் முதலாவது ஆகும். புருஷன் கர்பத்தில் இருக்கும் பொழுதே வாக் முதலியவைகளுக்கு முன்பே பிராணனுடைய விருத்தியானது அடையப்பட்டதாக ஆகிறது. அதனால் கர்பம் வளர்கிறது. அதனால் வாக் முதலியவைகளின் விருத்தி லாபம் கண் முதலியவைகளின் ஸ்தானமாகிய அவயவங்கள் தோன்றிய பின்பே அடையப்படுவதால் பிராணனே வயதால் “ज्येष्द्भः” (ஜ்யேஷ்ட: = முதலாமவன்) ஆகின்றது. “सुहयः” முதலிய திருஷ்டாந்தத்தால் (இதே அத்யாயம் 12–ம் மந்த்ரம்) ஸ்ரேஷ்டத்துவம் பிரதிபாதனம் செய்யப்பட்டதாகிறது. ஆகையால் பிராணனே இந்த காரியகாரண சங்காததNO-CHதிலNO-CH ஜ்யேஷ்டனும், ஸ்ரேஷ்டனும் ஆவான்.
यो ह वै वसिष्ठं वेद वसिष्ठो ह स्वानां भवति वाग्वाव वसिष्ठः ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எவன் வசிஷ்டத்தை அறிகிறானோ அவன் தன் ஜாதிகளுள் மிகுந்த தனவான் ஆக ஆகின்றான். நிச்சயமாக வாக்கே வசிஷ்டம் (செல்வம்) ஆகும்.
यो ह वै वसिष्ठं वसितृतममाच्छादयितृतमं वसुमत्तमं वा यो वेद, स तथैव वसिष्ठो ह भवति स्वानां ज्ञातीनाम् । कस्तर्हि वसिष्ठ इति, आह — वाग्वाव वसिष्ठः, वाग्मिनो हि पुरुषा वसन्ति अभिभवन्त्यन्यान् वसुमत्तमाश्च, अतो वाग्वसिष्ठः ॥
அனுவாதம் - எவன் ஒருவன் இந்த “वसिष्द्भम्” -த்தை (வசிஷ்டத்தை) - முற்றிலும் செல்வத்தால் மறைக்கப்பட்டதாக அதாவது செல்வம் நிறைந்ததாக அறிகிறானோ அவன் அது மாதிரியே தன் சுற்றங்களுள் செல்வம் நிறைந்தவனாக (வசிஷ்டன்) ஆவான். அப்படியானால் அந்த வசிஷ்டன் யார்? அதற்கு சுருதி கூறுகிறது - வாக்கே வசிஷ்டம் (वसिष्द्भः) ஏன் எனில் பேச்சாற்றல் உள்ள மனிதனே உலகில் வசிக்கிறான். அதாவது மற்றவர்களைத் தோற்கடிக்கின்றான். மேலும் மிகுந்த செல்வம் உள்ளவனாகவும் ஆகின்றான். ஆகையால் வாக்கே “वसिष्द्भः” (வசிஷ்டம்).
यो ह वै प्रतिष्ठां वेद प्रति ह तिष्ठत्यस्मिꣳश्च लोकेऽमुष्मिꣳश्च चक्षुर्वाव प्रतिष्ठा ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இந்த பிரதிஷ்டையை அறிகின்றானோ அவன் இந்த லோகத்திலும், பரலோகத்திலும் பிரதிஷ்டை ஆகின்றான். சக்ஷு பிரதிஷ்டை ஆகும்.
यो ह वै प्रतिष्ठां वेद, स अस्मिंल्लोके अमुष्मिंश्च परे प्रतितिष्ठति ह । का तर्हि प्रतिष्ठेति, आह — चक्षुर्वाव प्रतिष्ठा । चक्षुषा हि पश्यन् समे च दुर्गे च प्रतितिष्ठति यस्मात् , अतः प्रतिष्ठा चक्षुः ॥
அனுவாதம் - எவன் ஒருவன் இந்த பிரதிஷ்டையை அறிகிறானோ அவன் இந்த லோகத்திலும், பரலோகத்திலும் பிரதிஷ்டையாகின்றான். இது ப்ரஸித்தியானது அந்த பிரதிஷ்டா யாது? அதற்கு சுருதி கூறுகிறது- சக்ஷுவே பிரதிஷ்டா என்று. சக்ஷுவினாலNO-CH அல்லவா சமதளத்தையும் மேடு பள்ளம் உள்ள தளத்தையும் அறிந்து பிரதிஷ்டிதமாகிறது (அதில் நிலைக்கிறது) ஆகையால் சக்ஷுவே பிரதிஷ்டா.
यो ह वै सम्पदं वेद सꣳहास्मै कामाः पद्यन्ते दैवाश्च मानुषाश्च श्रोत्रं वाव सम्पत् ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இந்த சம்பத்தை அறிகின்றானோ அவனை தேவ, மற்றும் மனுஷ்ய காமனைகள் (போகங்களை) நல்லவிதமாக அடைவான். ச்ரோத்திரமே சம்பத் ஆகும்.
यो ह वै सम्पदं वेद, तस्मा अस्मै दैवाश्च मानुषाश्च कामाः सम्पद्यन्ते ह । का तर्हि सम्पदिति, आह — श्रोत्रं वाव सम्पत् । यस्माच्छ्रोत्रेण वेदा गृह्यन्ते तदर्थविज्ञानं च, ततः कर्माणि क्रियन्ते ततः कामसम्पदित्येवम् , कामसम्पद्धेतुत्वाच्छ्रोत्रं वाव सम्पत् ॥
அனுவாதம் - எவன் ஒருவன் சம்பத்தை அறிகின்றானோ அவனை தேவ மற்றும் மனுஷ்ய சம்பத்தும் வந்து அடையும். ஆனால் அந்த சம்பத் யாது? அதற்கு சுருதி கூறுகிறது - ஸ்ரோத்திரமே சம்பத் என்று. எதனால் ஸ்ரோத்தரத்தினால் வேதங்களும் அதன் அர்த்த விக்ஞானமும் கிரஹிக்கப்படுகிறதோ அதனால் கர்மங்கள் செய்யப்படுகிறது. அதனால் காமனைகள் அதாவது காம சம்பத்திற்கு ஹேது ஆவதால் ச்ரோத்திரமே சம்பத் ஆகும்.
यो ह वा आयतनं वेदायतनꣳ ह स्वानां भवति मनो ह वा आयतनम् ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - எவன் இந்த ஆயதனத்தை அறிகிறானோ அவன் தன் சுற்றத்தாருக்கு (சொந்த பந்தங்களுக்கு) ஆயதனம் (ஆச்ரயம்) ஆகின்றான். நிச்சயமாக மனமே ஆயதனம் ஆகும்.
यो ह वा आयतनं वेद, आयतनं ह म्वानां भवतीत्यर्थः । किं तदायतनमिति, आह — मनो ह वा आयतनम् । इन्द्रियोपहृतानां विषयाणां भोक्त्रर्थानां प्रत्ययरूपाणां मन आयतनमाश्रयः । अतो मनो ह वा आयतनमित्युक्तम् ॥
அனுவாதம் - எவன் இந்த ஆயதனத்தை அறிகின்றானோ அவன் தன் சொந்த பந்தங்களுக்கு ஆயதனம் ஆகின்றான். அதாவது ஆஸ்ரயம் ஆகின்றான். அந்த ஆயதனம் என்பது எது? மனமே ஆயதனம். இந்திரியங்களால் இழுக்கப்பட்ட போக்தாவின் பிரத்யய ரூபமான (அறியப்பட்ட) விஷயங்களுக்கு மனமே ஆயதனம் அதாவது ஆஸ்ரயமாகும். ஆகையால் மனமே ஆயதனம் என்று கூறப்பட்டது.
अथ ह प्राणा अहꣳ श्रेयसि व्यूदिरेऽहꣳ श्रेयानस्म्यहꣳ श्रेयानस्मीति ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - ஒரு சமயம் பிராணன் அதாவது இந்திரியங்கள் தங்களுக்குள் நான் சிறந்தவன், நானே சிறந்தவன் என்று விவாதம் செய்தன.
अथ ह प्राणाः एवं यथोक्तगुणाः सन्तः अहंश्रेयसि अहं श्रेयानस्मि अहं श्रेयानस्मि इत्येतस्मिन्प्रयोजने व्यूदिरेनाना विरुद्धं चोदिरे उक्तवन्तः ॥
அனுவாதம் - ஒரு சமயம் பிராணன்கள் அதாவது பிராணன் இந்திரியங்கள் இவ்வாறான குணங்கள் உடையதால் தங்களில் யார் சிறந்தவன், என்பதை நிலைநாட்டுவதற்காக “நானே சிறந்தவன். நானே சிறந்தவன்” என்று அவர்களுக்குள் விவாதம் செய்து மாறுபட்ட கருத்துக்களைக்கூறி சண்டையிட்டன.
ते ह प्राणाः प्रजापतिं पितरमेत्योचुर्भगवन्को नः श्रेष्ठ इति तान्होवाच यस्मिन्व उत्क्रान्ते शरीरं पापिष्ठतरमिव दृश्येत स वः श्रेष्ठ इति ॥ ७ ॥
மந்த்ரார்த்தம் - அந்த பிராணன்கள் தங்களுடைய பிதாவான பிரஜாபதியிடம் சென்று இவ்வாறு கூறினார்-ஹே பகவானே! எங்களில் யார் சிறந்தவர்? (श्रेष्द्भः) பிரஜாபதி அவைகளிடம் கூறினார் - உங்களில் எவர் உத்கிரமணம் ஆனபின் (வெளியேறியபின்) சரீரம் மிகவும் நலிவு அடைந்து பிரயோஜனம் அற்றதாகிவிடுகிறதோ அது எதனால் ஏற்படுகிறதோ அதுவே சாலச் சிறந்தது.
ते ह ते हैवं विवदमाना आत्मनः श्रेष्ठत्वविज्ञानाय प्रजापतिं पितरं जनयितारं कञ्चिदेत्य ऊचुः उक्तवन्तः — हे भगवन् कः नः अस्माकं मध्ये श्रेष्ठः अभ्यधिकः गुणैः ? इत्येवं पृष्टवन्तः । तान् पितोवाच ह — यस्मिन् वः युष्माकं मध्ये उत्क्रान्ते शरीरमिदं पापिष्ठमिवातिशयेन जीवतोऽपि समुत्क्रान्तप्राणं ततोऽपि पापिष्ठतरमिवातिशयेन दृश्येत कुणपमस्पृश्यमशुचिं दृश्येत, सः वः युष्माकं श्रेष्ठ इत्यवोचत् काक्वा तद्दुःखं परिजिहीर्षुः ॥
அனுவாதம் - இவ்வாறு விவாதம் செய்துகொண்டு அவர்கள் தங்களை ஜனனம் செய்த பிதாவான பிரஜாபதியிடம் சென்று இவ்வாறு கூறினார் - ஹே பகவானே! எங்களுக்குள் யார் அதிக சிறந்த குணங்கள் உடையவர் என்று? அதாவது இவ்வாறு கேட்டன. அவர்களிடம் பிதா கூறினார் - உங்களுள் யார் இந்த சரீரத்தில் இருந்து வெளிக்கிழம்பியபின் இந்த சரீரம் பாபமுடையதாய் அதாவது ஜீவித்துக்கொண்டிருக்கும் பொழுதே பிராணன் இல்லாமல் சவம்போல் தொட அருகதை அற்றதாயும், பவித்திரம் அற்றதாயும் அறியப்படுகிறதோ அதுவே உங்களுள் சிரேஷ்டன் என்று இவ்வாறு கூறியதும் துக்க நிவிர்த்தி அடைந்தன. அவர்களை வருத்தம் அடையச்செய்யாமல் ஸுசகமாக தெரிவித்தார்.
तथोक्तेषु पित्रा प्राणेषु
அனுவாதம் - அ.கை - தந்தையால் பிராணன்களிடத்தில் இவ்வாறு கூறப்பட்ட பின் -
सा ह वागुच्चक्राम सा संवत्सरं प्रोष्य पर्येत्योवाच कथमशकतर्ते मज्जीवितुमिति यथा कला अवदन्तः प्राणन्तः प्राणेन पश्यन्तश्चक्षुषा शृण्वन्तः श्रोत्रेण ध्यायन्तो मनसैवमिति प्रविवेश ह वाक् ॥ ८ ॥
மந்த்ரார்த்தம் - அந்த வாக் இந்திரியம் (சரீரத்திலிருந்து) வெளியேறியது. அது ஒரு வருடம் வெளியில் தங்கிவிட்டு அதன்பின் திரும்பிவந்து “நான் இல்லாமல் நீங்கள் எவ்வாறு ஜீவித்துக்கொண்டிருந்தீர்கள்”? (என்று கேட்டது) (அதற்கு அவைகள் கூறின) எவ்வாறு ஊமை பேசாமலே பிராணனால் சுவாசித்துக்கொண்டும், கண்களால் பார்த்துக்கொண்டும், ச்ரோத்திரத்தால் (காதால்) கேட்டுக்கொண்டும், மனதால் சிந்தித்துக்கொண்டும் ஜீவிக்கின்றானோ அவ்வாறு ஜீவித்துக்கொண்டு இருக்கிறோம் என்று. இவ்வாறு கூறியதைக்கேட்டு வாக் இந்திரியம் சரீரத்திற்குள் பிரவேசித்தது.
सा ह वाक् उच्चक्राम उत्क्रान्तवती ; सा च उत्क्रम्य संवत्सरमात्रं प्रोष्य स्वव्यापारान्निवृत्ता सती पुनः पर्येत्य इतरान्प्राणानुवाच — कथं केन प्रकारेणाशकत शक्तवन्तो यूयं मदृते मां विना जीवितुं धारयितुमात्मानमिति ; ते ह ऊचुः — यथा कला इत्यादि, कलाः मूकाः यथा लोकेऽवदन्तो वाचा जीवन्ति । कथम् । प्राणन्तः प्राणेन पश्यन्तश्चक्षुषा शृण्वन्तः श्रोत्रेण ध्यायन्तो मनसा, एवं सर्वकरणचेष्टां कुर्वन्त इत्यर्थः । एवं वयमजीविष्मेत्यर्थः ।आत्मनोऽश्रेष्ठतां प्राणेषु बुद्ध्वा प्रविवेश ह वाक् पुनः स्वव्यापारे प्रवृत्ता बभूवेत्यर्थः ।
அனுவாதம் - அந்த வாக் (சரீரத்திலிருந்து) வெளியேறியது. அது வெளியேறி ஒருவருடம் தங்கி தன்னுடைய வியாபாரத்திலிருந்து நிவிர்த்தியாகி மறுபடியும் திரும்பிவந்து மற்ற பிராணன்களிடம் கேட்டது - எவ்வாறு எந்த பிரகாரமாக நீங்கள் நான் இல்லாமல் ஜீவிப்பதற்கு அதாவது தங்களை தாங்கிக்கொள்ள முடிந்தது? அவைகள் கூறின - ஊமைபோல் என்பது முதலியவைகளால் என்று. ஊமை எவ்வாறு உலகில் பேசாமலேயே வாக்கினால் ஜீவிக்கின்றனரோ அவ்வாறு. எவ்வாறு? பிராணனால் சுவாசித்துக்கொண்டும், கண்களால் பார்த்துக்கொண்டும், ச்ரோத்திரத்தினால் கேட்டுக்கொண்டும், மனதால் சிந்தித்துக்கொண்டும் எல்லா கரணங்களும் சேஷ்டிப்பது போல் நாங்களும் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம் என்பது பொருள். பிராணன்களுள் தன்னுடைய சிறப்பற்ற தன்மையை (अश्रेष्द्भतां) அறிந்து வாக் மறுபடியும் உள்ளே பிரவேசித்து. மறுபடியும் தன் காரியத்தில் பிரவிர்த்தித்தது என்பது பொருள்.
चक्षुर्होच्चक्राम तत्संवत्सरं प्रोष्य पर्येत्योवाच कथमशकतर्ते मज्जीवितुमिति यथान्धा अपश्यन्तः प्राणन्तः प्राणेन वदन्तो वाचा शृण्वन्तः श्रोत्रेण ध्यायन्तो मनसैवमिति प्रविवेश ह चक्षुः ॥ ९ ॥
மந்த்ரார்த்தம் - சக்ஷு வெளியேறியது. அது ஒருவருடம் வெளியில் தங்கி பின் திரும்பிவந்து கேட்டது - நான் இல்லாமல் நீங்கள் எவ்வாறு ஜீவித்துக்கொண்டிருந்தீர்கள்? (மற்றவை கூறின) - எவ்வாறு குருடன் கண்களால் பார்க்காவிடினும் பிராணனால் சுவாசித்துக்கொண்டும், வாக்கினால் பேசிக்கொண்டும், ச்ரோத்திரத்தால் கேட்டுக்கொண்டும், மனதால் சிந்தித்துக்கொண்டும் இருக்கின்றானோ அவ்வாறு நாங்களும் ஜீவித்துக்கொண்டு இருக்கின்றோம் என்று கூறியதைக் கேட்டு கண்ணும் (கண்களும்) உள்ளே பிரவேசித்தது.
श्रोत्रं होच्चक्राम तत्संवत्सरं प्रोष्य पर्येत्योवाच कथमशकतर्ते मज्जीवितुमिति यथा बधिरा अशृण्वन्तः प्राणन्तः प्राणेन वदन्तो वाचा पश्यन्तश्चक्षुषा ध्यायन्तो मनसैवमिति प्रविवेश ह श्रोत्रम् ॥ १० ॥
மந்த்ரார்த்தம் - ச்ரோத்திரம் அதன்பின் உத்கிரமணம் செய்தது (வெளியேறியது). அது ஒரு வருடம் வெளியே தங்கி அதன்பின் திரும்பிவந்து கேட்டது - நான் இல்லாமல் நீங்கள் எல்லோரும் எவ்வாறு ஜீவித்துக் கொண்டிருந்தீர்கள் என்று. (அவைகள் கூறின -) எவ்வாறு செவிடன் காது கேட்காவிடினும் பிராணனால் சுவாசித்துக்கொண்டும், கண்களால் பார்த்துக்கொண்டும், வாக்கால் பேசிக்கொண்டும், மனதால் சிந்தித்துக்கொண்டும் ஜீவித்து இருப்பானோ அவ்வாறு என்று. இதைக் கேட்ட ச்ரோத்திரம் சரீரத்தில் பிரவேசித்தது.
मनो होच्चक्राम तत्संवत्सरं प्रोष्य पर्येत्योवाच कथमशकतर्ते मज्जीवितुमिति यथा बाला अमनसः प्राणन्तः प्राणेन वदन्तो वाचा पश्यन्तश्चक्षुषा शृण्वन्तः श्रोत्रेणैवमिति प्रविवेश ह मनः ॥ ११ ॥
மந்த்ரார்த்தம் - (அதன்பின்) மனம் உத்கிரமணம் செய்தது. அது ஒருவருடம் வெளியில் தங்கி பின் திரும்பிவந்து இவ்வாறு கேட்டது - நான் இல்லாமல் நீங்கள் எவ்வாறு வாழ்ந்தீர்கள்? என்று. (அதற்கு அவைகள் கூறின -) எவ்வாறு குழந்தை மனதால் சிந்திக்காவிட்டாலும், பிராணனால் சுவாசித்துக்கொண்டும், வாக்கினால் பேசிக்கொண்டும், கண்களால் பார்த்துக்கொண்டும், காதுகளால் கேட்டுக்கொண்டும், ஜீவித்திருக்கின்றதோ அவ்வாறு நாங்களும் ஜீவிக்கிறோம் என்று கூறியதைக் கேட்டு மனமும் உள்ளே பிரவேசித்தது.
समानमन्यत् चक्षुर्होच्चक्राम श्रोत्रं होच्चक्राम मनो होच्चक्रामेत्यादि । यथा बाला अमनसः अप्ररूढमनस इत्यर्थः ॥
அனுவாதம் - மற்றவை எல்லாம் சமானமானதாகும். சக்ஷு உத்கிரமணம் செய்தது, ச்ரோத்ரம் உத்கிரமணம் செய்தது, மனம் உத்கிரமணம் செய்தது (மற்ற எல்லாமும் சுருதியின் தாத்பர்யம் சமானமாகும்). எவ்வாறு குழந்தை “अमनसः” (மனம் இல்லாதவன்) என்பது எவனுடைய மனம் விரவு அடையவில்லையோ அதுவாகும் என்பது இதன் தாத்பர்யம்.
एवं परीक्षितेषु वागादिषु,
அனுவாதம் - அ.கை - இவ்வாறு வாக் முதலியவைகளின் பரீக்ஷை முடிந்தபின் -
अथ ह प्राण उच्चिक्रमिषन्स यथा सुहयः पड्वीशशङ्कून्सङ्खिदेदेवमितरान्प्राणान्समखिदत्तं हाभिसमेत्योचुर्भगवन्नेधि त्वं नः श्रेष्ठोऽसि मोत्क्रमीरिति ॥ १२ ॥
மந்த்ரார்த்தம் - அதன்பின் பிராணன் உத்கிரமணம் செய்வதற்கு விரும்பியது. அது எவ்வாறு வீரம் மிகுந்த நல்ல குதிரை தறிகளின் கட்டுக்களில் இருந்து விடுபட்டு ஓடுமோ (அவ்வாறு பிராணன்களுடன்) மற்ற பிராணன்களும் (இந்திரியங்களும்) வெளிப்பெயர்ந்தன. அப்பொழுது அவைகள் ஒன்றாகவே சேர்ந்து பிராணனிடம் கூறின - ஹே பகவானே! தாங்கள் எங்களுடன் இருங்கள். தாங்களே எங்கள் எல்லோரையும்விட ஸ்ரேஷ்டமானவர் தாங்கள் உத்கிரமணம் செய்யாதீர்கள் என்று.
अथ अनन्तरं ह स मुख्यः प्राणः उच्चिक्रमिषन् उत्क्रमितुमिच्छन् किमकरोदिति, उच्यते — यथा लोके सुहयः शोभनोऽश्वः पड्वीशशङ्कून् पादबन्धनकीलान् परीक्षणाय आरूढेन कशया हतः सन् सङ्खिदेत् समुत्खनेत् समुत्पाटयेत् , एवमितरान्वागादीन्प्राणान् समखिदत् समुद्धृतवान् ।
அனுவாதம் - அதன்பின் முக்ய பிராணன் வெளியேறுவதற்கு (உத்கிரமணம் செய்ய) விரும்பி என்ன செய்தது? அது கூறப்படுகிறது - உலகில் எவ்வாறு நல்ல ஆற்றல் உள்ள குதிரை தன்னை பரிசோதிப்பதற்காக அதில் ஏறப்போகும் மனிதன் சவுக்கினால் அதை அடித்தால் எவ்வாறு தன் கட்டுகளில் இருந்து விடுபட்டு எகிறி தறிகெட்டு ஓடுமோ அவ்வாறு முக்கிய பிராணன் மற்ற பிராணன்களையும் (சரீரத்திலிருந்து) வெளியே இழுத்துச் செல்ல ஆரம்பித்தது.
ते प्राणाः सञ्चालिताः सन्तः स्वस्थाने स्थातुमनुत्सहमानाः अभिसमेत्य मुख्यं प्राणं तमूचुः — हे भगवन् एधि भव नः स्वामी, यस्मात् त्वं नः श्रेष्ठोऽसि ; मा च अस्माद्देहादुत्क्रमीरिति ॥
அனுவாதம் - அந்த பிராணங்கள் தங்கள் ஸ்தானங்களில் இருந்து நழுவுவதை அறிந்து பொருத்துக்கொள்ள முடியாமல் அவைகள் ஒன்றாக சேர்ந்து அந்த முக்கியப் பிராணனிடம் கூறின - ஹே பகவன்! நீங்கள் தான் எங்களுக்கு ஸ்வாமி. ஏன்எனில் எங்கள் எல்லோரையும்விட சிரேஷ்டமானவர். அவ்வாறே இந்த சரீரத்திலிருந்து உத்கிரமணம் செய்யாதீர்கள் என்று.
अथ हैनं वागुवाच यदहं वसिष्ठोऽस्मि त्वं तद्वसिष्ठोऽसीत्यथ हैनं चक्षुरुवाच यदहं प्रतिष्ठास्मि त्वं तत्प्रतिष्ठासीति ॥ १३ ॥
மந்த்ரார்த்தம் - அதன்பின் வாக் இந்திரியம் கூறியது - நான் வசிஷ்டனாக (செல்வந்தனாக) இருப்பதற்குக் காரணம் நீர் வசிஷ்டனாக இருப்பதால் ஆகும். அவ்வாறே சக்ஷு கூறியது நான் பிரதிஷ்டாவாக இருப்பதற்குக் காரணம் நீர் பிரதிஷ்டாவாக இருப்பதால் ஆகும்.
अथ हैनं श्रोत्रमुवाच यदहं सम्पदस्मि त्वं तत्सम्पदसीत्यथ हैनं मन उवाच यदहमायतनमस्मि त्वं तदायतनमसीति ॥ १४ ॥
மந்த்ரார்த்தம் - அழ்ன்பின் ச்ரோத்திரம் கூறியது நான் சம்பத் உடையவனாய் இருப்பதற்குக் காரணம் நீர் சம்பத் உடையவராய் இருப்பதால் தான். அவ்வாறே மனம் கூறியது-நான் ஆயதனவனாய் (ஆச்ரயமாய்) இருப்பதற்குக் காரணம் நீங்கள் ஆயதனமாய் இருப்பதால் தான் ஆகும்.
अथ हैनं वागादयः प्राणस्य श्रेष्ठत्वं कार्येण आपादयन्तः आहुः — बलिमिव हरन्तो राज्ञे विशः । कथम् ? वाक् तावदुवाच — यदहं वसिष्ठोऽस्मि, यदिति क्रियाविशेषणम् , यद्वसिष्ठत्वगुणास्मीत्यर्थः ; त्वं तद्वसिष्ठः तेन वसिष्ठत्वगुणेन त्वं तद्वसिष्ठोऽसि तद्गुणस्त्वमित्यर्थः । अथवा तच्छब्दोऽपि क्रियाविशेषणमेव । त्वत्कृतस्त्वदीयोऽसौ वसिष्ठत्वगुणोऽज्ञानान्ममेति मया अभिमत इत्येतत् । तथोत्तरेषु योज्यं चक्षुःश्रोत्रमनःसु ॥
அனுவாதம் - அதன்பின் எவ்வாறு வைசியர்கள் ராஜாவிற்கு சன்மானம் சமர்ப்பணம் செய்வார்களோ அவ்வாறு வாக் முதலிய இந்திரியங்கள் தங்கள் காரியங்களால் பிராணனுக்கு ஸ்ரேஷ்டத்தன்மையை சம்பாதிக்கின்றனர். எவ்வாறு? முதலாவதாக வாக் இவ்வாறு கூறியது - நான் எந்த வசிஷ்டன் ஆகிறேனோ. இங்கு மூலத்தில் (यत्) (யத்) என்ற சப்தம் கிரியா விசேஷணமாகும். அதாவது நான் எந்த வசிஷ்டத்துவ குணமுடையதோ அந்த நீ அந்த வஷிஷ்டத்துவ குணத்துவத்தால் அந்த வசிஷ்டனாவாய் அதாவது வசிஷ்ட குணத்துவம் உடையவன் என்பது பொருள். அல்லது “तत्” (தத்) சப்தமும் கிரியா விசேஷணமாகும். அப்பொழுது இதற்கு இந்த தாத்பர்யமாகும், எவ்வாறு எனில் உன்னால் செய்யப்பட்ட அதாவது உன்னுடைய எந்த இந்த வசிஷ்டத்துவ குணமுள்ளதோ அந்த அக்ஞானத்தால் என்னுடையது என்று நான் அறிந்து கொண்டேன் என்பதாகும். இவ்வாறு இனிவரும் சக்ஷு, ச்ரோத்திரம் மேலும் மனத்தின் விஷயங்களிலும் அறிந்துகொள்ள வேண்டும்.
श्रुतेरिदं वचः — युक्तमिदं वागादिभिर्मुख्यं प्राणं प्रत्यभिहितम् यस्मात् -
அனுவாதம் - அ.கை - இந்த வாக் முதலிய இந்திரியங்கள் மூலமாய் முக்ய பிராணனிடம் கூறிய சுருதி வாக்கியம் மிகவும் சரியானதே. ஏன்எனில் -
न वै वाचो न चक्षूंषि न श्रोत्राणि न मनांसीत्याचक्षते प्राणा इत्येवाचक्षते प्राणो ह्येवैतानि सर्वाणि भवति ॥ १५ ॥
மந்த்ரார்த்தம் - (உலகில் எல்லா இந்திரியங்களையும்) வாக் என்றே, சக்ஷு என்றே, ஸ்ரோத்திரம் என்றே மனம் என்றே கூறுவது இல்லை. ஆனால் பிராணன் என்றே கூறுகின்றனர். ஏன்எனில் எல்லாம் பிராணனே ஆகும்.
न वै लोके वाचो न चक्षूंषि न श्रोत्राणि न मनांसीति वागादीनि करणान्याचक्षते लौकिका आगमज्ञा वा ; किं तर्हि, प्राणा इत्येव आचक्षते कथयन्ति ; यस्मात्प्राणो ह्येवैतानि सर्वाणि वागादीनि करणजातानि भवति ; अतो मुख्यं प्राणं प्रत्यनुरूपमेव वागादिभिरुक्तमिति प्रकरणार्थमुपसञ्जिहीर्षति ॥
அனுவாதம் - உலகில் இந்த வாக் முதலிய இந்திரியங்களை லெளகிகர்களோ, சாஸ்திரக்ஞர்களோ இது வாக்கல்ல, சக்ஷு அல்ல, ஸ்ரோத்திரம் அல்ல, மனம் அல்ல என்றே கூறுகின்றனர். ஆனால் அதை என்னவென்று கூறுகின்றனர்? பிராணன் என்றே கூறுகின்றனர். ஏன் எனில் பிராணனே இந்த எல்லா வாக் முதலிய இந்திரியங்களுமாக ஆகின்றது. ஆகையால் முக்கிய பிராணன் ஒவ்வொன்றின் ரூபமாய் வாக் முதலியவைகளால் கூறப்படுகிறது என்று இந்த பிரகரணத்தின் அர்த்தத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது.
ननु कथमिदं युक्तं चेतनावन्त इव पुरुषा अहंश्रेष्ठतायै विवदन्तः अन्योन्यं स्पर्धेरन्निति ; न हि चक्षुरादीनां वाचं प्रत्याख्याय प्रत्येकं वदनं सम्भवति ; तथा अपगमो देहात् पुनः प्रवेशो ब्रह्मगमनं प्राणस्तुतिर्वोपपद्यते ।
அனுவாதம் - சங்கை - ஆனால் எவ்வாறு இது சம்பவிக்கும்? சேதனம் உடைய புருஷனைப்போல் நான்தான் ச்ரேஷ்டமானவன் என்று அவைகளுக்குள் விவாதம் செய்து ஒன்றுக்கொண்டு சண்டையிடும்? என்று. ஏன்எனில் (ஸ்ரோத்திரத்தைத் தவிர மற்ற) கண் முதலிய இந்திரியங்கள் ஒன்றாலும் பேச முடியாது. அவ்வாறு இருக்கும்பொழுது எவ்வாறு அவை தேஹத்திற்குள் மறுபடியும் பிரவேசித்தல் என்பதும், பிரஹ்மத்திடம் செல்கிறது என்பதும் ப்ராண ஸ்துதி மாத்திரமேயாகும்.
அனுவாதம் - ஸமாதானம் - அதில் அக்னி முதலிய சேதன தேவதைகளை சார்ந்து (अधिष्द्भित) இருப்பதன் காரணமாக வாக் முதலிய இந்திரியங்களின் சேதனத்தன்மை சாஸ்திரத்தால் சித்திக்கின்றது. இவ்வாறு தேஹத்தில் அநேக சேதனங்கள் இருக்கிறது என்பது தார்கிகர்களின் மதத்திற்கு விரோதம் ஆகும் என்பது சரியல்ல. ஏன் எனில் அவர்களுக்கு ஈஸ்வரன் நிமித்த காரணம் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தார்க்கிகர்கள் எந்த ஈஸ்வரனை ஏற்றுக்கொள்கிறார்களோ அவை ரதம் முதலியவைகளுக்கு சமானமாக ஈஸ்வரனை சார்ந்திருக்கும் மனம் முதலியவை ஆத்யாத்மிக, பாஹ்ய பிருதிவீ முதலியவைகளுக்கும் நியமமாக பிரவிர்த்தி என்று கருதுகிறார்கள். அவ்வாறு நாமோவெனில் அக்னி முதலிய சேதன தேவதைகளையும் அத்யாத்ம போக்தா என்று நாம் கருதுவது இல்லை. அவ்வாறானால் நாம் எவ்வாறு கருதுகிறோம்? அத்யாத்ம, அதிபூத அதிதைவத பேதங்களால் கோடி விகல்பங்களுடைய ஒரே பிராண தேவதையினுடைய பேதரூப அந்த தேஹேந்திரியத்தின் தேவதைகளின் ஈஸ்வரனை அத்யக்ஷ மாத்திரமாக நியந்தா என்று கருதுகிறார்கள். ஏன்எனில் அவர்களே அகரணன் (ஈஸ்வரன்) (இந்திரியம் அற்றவன்) என்று அறியப்படுகிறது. “अपाणिपादो जवनो ग्रहीता पश्यत्यचक्षुः स शृणोत्यकर्णः” (அபாணிபாதோ ஜவனோ க்ரஹீதா பச்யத்யச்சக்ஷு: ச்ருணோத்ய கரண:) என்பது முதலிய மந்திரங்களாலும் அறிகிறோம். “हिरण्यगर्भं पश्यत जायमानम्” (ஹிரண்யகர்பம் பச்யத ஜாயமானம்), “हिरण्यगर्भं जनयामास पूर्वम्” (ஹிரண்யகர்பம் ஜனயாமாச பூர்வம்) முதலிய ச்வேதாச்வதரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
भोक्ता कर्मफलसम्बन्धी देहे तद्विलक्षणो जीव इति वक्ष्यामः । वागादीनां च इह संवादः कल्पितः विदुषोऽन्वयव्यतिरेकाभ्यां प्राणश्रेष्ठतानिर्धारणार्थम्— यथा लोके पुरुषा अन्योन्यमात्मनः श्रेष्ठतायै विवदमानाः कञ्चिद्गुणविशेषाभिज्ञं पृच्छन्ति को नः श्रेष्ठो गुणैरिति ; तेनोक्ता ऐकैकश्येन अदः कार्यं साधयितुमुद्यच्छत, येनादः कार्यं साध्यते, स वः श्रेष्ठः — इत्युक्ताः तथैवोद्यच्छन्तः आत्मनोऽन्यस्य वा श्रेष्ठतां निर्धारयन्ति — तथेमं संव्यवहारं वागादिषु कल्पितवती श्रुतिः — कथं नाम विद्वान् वागादीनामेकैकस्याभावेऽपि जीवनं दृष्टं न तु प्राणस्येति प्राणश्रेष्ठतां प्रतिपद्येतेति ।
அனுவாதம் - தேஹத்தில் அந்த (ஈஸ்வர தேவதைகளுக்கு) வேறான கர்ம பலத்தில் சம்பந்தமுடைய ஜீவன் போக்தாவென்று இனிக் கூறுகிறோம். வாக் முதலியவைகளின் சம்வாதம் இங்கு அறிந்த உபாசகனுக்கு அந்வய வியதிரேக மூலமாக பிராணனின் ச்ரேஷ்டத்தன்மையை நிர்ணயம் செய்வதற்காகக் கல்பிக்கப்பட்டது. எவ்வாறு உலகில் மனிதன் தன்னுடைய ச்ரேஷ்டத்தன்மையை அறிவதற்காக ஒருவருக்கொருவர் விவாதித்துக்கொண்டு நன்றாக விசேஷமான குணங்கள் உடையவரிடம் எங்களில் குணங்களில் யார் சிறந்தவர்? என்று அவர்கள் கேட்டதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் முயற்சி செய்து ஒரு காரியத்தை சரியாக யார் முடிக்கிறாரோ அவரே சிறந்தவர் என்று நிர்ணயம் செய்வது போல் சுருதியானது வாக் முதலிய வ்யவஹாரங்களை கல்பனை செய்து எதனால் வாக் முதலியவைகளுள் ஒவ்வொன்றும் இல்லாதபொழுதும் ஜீவித்திருப்பது காணப்பட்டது. ஆனால் பிராணன் இல்லாதபொழுது காணப்படவில்லை என்று இவ்வாறு அறிந்த உபாசகன் இவ்வாறு (முக்ய) பிராணனின் ச்ரேஷ்டத் தன்மையை அறிந்தான்.
तथा च श्रुतिः कौषीतकिनाम् — ‘जीवति वागपेतो मूकान्हि पश्यामो जीवति चक्षुरपेतोऽन्धान्हि पश्यामो जीवति श्रोत्रापेतो बधिरान्हि पश्यामो जीवति मनोपेतो बालान्हि पश्यामो जीवति बाहुच्छिन्नो जीवत्यूरुच्छिन्नः’ (शां. आ. ५ । ३) इत्याद्या ॥
அனுவாதம் - அவ்வாறே கெளஷீதகீ உபநிஷத் சுருதியிலும் மனிதன் வாக் இல்லாவிடினும் ஜீவிக்கின்றான். ஏன்எனில் ஊமையை நாம் பார்க்கின்றோம். கண்கள் இல்லாமல் ஜீவிக்கின்றான். ஏன்எனில் நாம் குருடனைப் பார்க்கின்றோம். ச்ரோத்திரம் இல்லாமல் ஜீவிக்கின்றான். ஏன்எனில் செவிடனை பார்க்கின்றோம். மனம் இல்லாமல் ஜீவிக்கிறதைப் பார்க்கின்றோம். ஏன்எனில் சிறு குழந்தைகளைப் பார்க்கின்றோம். அவ்வாறே புஜங்கள் வெட்டப்பட்ட பின்னும் வாழ்வதைப் பார்க்கின்றோம். தொடை வெட்டப்பட்ட பின்னும் வாழ்வதைப் பார்க்கின்றோம் என்று.
इति प्रथमखण्डभाष्यम् ॥
स होवाच किं मेऽन्नं भविष्यतीति यत्किञ्चिदिदमा श्वभ्य आ शकुनिभ्य इति होचुस्तद्वा एतदनस्यान्नमनो ह वै नाम प्रत्यक्षं न ह वा एवंविदि किञ्चनानन्नं भवतीति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - அது (முக்ய பிராணன்) கூறியது - என்னுடைய அன்னம் யாது? அப்பொழுது வாக் முதலியவைகள் கூறின - நாய் பக்ஷிகள் முதல் எல்லா ஜீவர்களுக்கும் எந்த ஒரு அன்னம் உள்ளதோ (அவை எல்லாம் உன்னுடைய அன்னம்) அந்த அவை எல்லாம் “अन” (அன) (अन-प्राणः) பிராணனின் அன்னமாகும். “अन” (அன:) என்பது பிராணனின் பிரத்யக்ஷ நாமமாகும். இவ்வாறு அறிந்தவன் अनन्नः (அனன்ன:) அதாவது சாப்பாடு (அன்னம்) இல்லாதவனாக இருக்கமாட்டான் (அல்லது உண்ண முடியாதவனாக ஆகமாட்டான்).
स होवाच मुख्यः प्राणः — किं मेऽन्नं भविष्यतीति । मुख्यं प्राणं प्रष्टारमिव कल्पयित्वा वागादीन्प्रतिवक्तॄनिव कल्पयन्ती श्रुतिराह — यदिदं लोकेऽन्नजातं प्रसिद्धम् आ श्वभ्यः श्वभिः सह आ शकुनिभ्यः सह शकुनिभिः सर्वप्राणिनां यदन्नम् , तत् तवान्नमिति होचुर्वागादय इति । प्राणस्यसर्वमन्नं प्राणोऽत्ता सर्वस्यान्नस्येत्येवं प्रतिपत्तये कल्पिताख्यायिकारूपाद्व्यावृत्य स्वेन श्रुतिरूपेण आह — तद्वै एतत् यत्किञ्चिल्लोके प्राणिभिरन्नमद्यते, अनस्य प्राणस्य तदन्नं प्राणेनैव तदद्यत इत्यर्थः । सर्वप्रकारचेष्टाव्याप्तिगुणप्रदर्शनार्थम् अन इति प्राणस्य प्रत्यक्षं नाम । प्राद्युपसर्गपूर्वत्वे हि विशेषगतिरेव स्यात् । तथा च सर्वान्नानामत्तुर्नामग्रहणमितीदं प्रत्यक्षं नाम अन इति सर्वान्नानामत्तुः साक्षादभिधानम् ।
அனுவாதம் - அந்த முக்கிய பிராணன் எனக்கு எது அன்னம் ஆகும்? என்று கேட்டது. (இவ்வாறு) முக்ய பிராணனை கேள்வி கேட்பவனாகவும், வாக் முதலியவைகளை பதில் அளிப்பவைகளாகவும் கல்பனை செய்து சுருதி கூறுகிறது - இந்த உலகில் நாய்களுடனும் பக்ஷிகளுடனும் சேர்த்து எல்லா பிராணிகளுக்கும் எந்த அன்னம் பிரசித்தமாக உள்ளதோ அவைகள் உன்னுடைய அன்னம் என்று வாக் முதலியவைகள் கூறின. இவ்வாறு எது எல்லாம் உண்டோ அவை பிராணனின் அன்னம். பிராணன் அந்த அன்னத்தின் போக்தா என்று இவ்வாறு அறிந்துகொள்வதற்காக இந்த கல்பிக்கப்பட்ட கதை ரூபமாக விளக்கிய கிரந்தம் தன்னுடைய சுருதி ரூபமாக கூறுகிறது - அந்த இந்த எந்த அன்னம் உலகில் பிராணிகளின் மூலமாய் பக்ஷணம் செய்கிறதோ (சாப்பிடுகிறதோ) அது “अन” (அன) அதாவது பிராணனால் உண்ணப்படுகிறது என்பது பொருள். எல்லா பிரகாரமான காரியங்களால் (சேஷ்டைகளால்) வியாப்த்தி ரூப குணத்தை தெரிவிப்பதற்காக “अन” (அன:) என்று பிராணனுடைய பிரத்யக்ஷ நாமம் ஆகும். “प्र” (ப்ர) முதலிய உபசர்க்க பூர்வமாக இருப்பதால் விசேஷ கதி என்பது சித்திக்கின்றது. அவ்வாறே எல்லா அன்னங்களையும் புசிக்கும் பிராணனின் நாமம் கிரஹிக்கப்பட்டது. ஆகையால் “अन” (அன:) என்பது அதன் பிரத்யக்ஷ நாமம், அதாவது எல்லா அன்னங்களையும் புசிக்கும் பிராணனின் சாக்ஷாத் நாமம் ஆகும்.
न ह वा एवंविदि यथोक्तप्राणविदि प्राणोऽहमस्मि सर्वभूतस्थः सर्वान्नानामत्तेति, तस्मिन्नेवंविदि ह वै किञ्चन किञ्चिदपि प्राणिभिरद्यं सर्वैः अनन्नम् अनद्यं न भवति, सर्वमेवंविद्यन्नं भवतीत्यर्थः, प्राणभूतत्वाद्विदुषः, ‘प्राणाद्वा एष उदेति प्राणेऽस्तमेति’ इत्युपक्रम्य ‘एवंविदो ह वा उदेति सूर्य एवंविद्यस्तमेति’ ( ? ) इति श्रुत्यन्तरात् ॥
அனுவாதம் - “न ह वा एवंविदि” (ந ஹா வா ஏவம்விதி)- முன்பு கூறப்பட்டவாறு பிராணனை அறிந்தவன் நான் எல்லா பூதங்களிலும் இருக்கும் அன்னத்தைப் புசிக்கும் போக்தாவான பிராணன் ஆக இருக்கிறேன். ஆகையால் நான் எல்லா பிராணிகளின் மூலமாக சாப்பிடப்படும் எந்த அன்னமும் சாப்பிடப்படாததாக ஆகாது. தாத்பர்யம் என்னவெனில் இதை அறிந்தவன் பிராண ரூபமாய் இருப்பதால் இவ்வாறு அறிந்தவனுக்கு எல்லாம் அன்னம் ஆகிறது. “प्राणाद्वा एष उदेति प्राणेऽस्तमेति” (ப்ராணாத்வா ஏஷ உதேதி பிராணேஅஸ்தமேதி) என்று ஆரம்பித்து “एवंविदो ह वा उदेति सूर्य एवंविद्यस्तमेति” (ஏவம்விதோ ஹ வா உதேதி சூரிய ஏவம்வித்யஸ்தமேதி = இவ்வாறு அறிந்தவனிடம் இருந்து சூரியன் உதிக்கின்றது. மேலும் இவ்வாறு அறிந்தவனிடத்திலேயே அஸ்தமிக்கின்றது). என்று வேறு சுருதியும் (கூறுகிறது).
स होवाच किं मे वासो भविष्यतीत्याप इति होचुस्तस्माद्वा एतदशिष्यन्तः पुरस्ताच्चोपरिष्टाच्चाद्भिः परिदधति लम्भुको ह वासो भवत्यनग्नो ह भवति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அது (பிராணன்) என்னுடைய வஸ்திரம் எது? என்று கேட்டது. அப்பொழுது வாக் முதலியவைகள் கூறின- ஜலம் என்று. இதனால் சாப்பிடுபவன் சாப்பிடுவதற்கு முன்னும், சாப்பிட்ட பின்னும் ஜலத்தால் ஆச்சமணீயம் செய்கின்றான். (இவ்வாறு செய்வதால்) அது வஸ்திரம் அடைந்ததாயும், வஸ்திரம் இல்லாமலும் ஆகவில்லை. அதாவது மேலாடை அடைந்தவனாகவும் ஆகிறது.
स ह उवाच पुनः प्राणः — पूर्ववदेव कल्पना । किं मे वासो भविष्यतीति । आप इति होचुर्वागादयः । यस्मात्प्राणस्य वासः आपः, तस्माद्वा एतदशिष्यन्तः भोक्ष्यमाणा भुक्तवन्तश्च ब्राह्मणा विद्वांसः एतत्कुर्वन्ति । किम् ? अद्भिः वासस्थानीयाभिः पुरस्तात् भोजनात्पूर्वम् उपरिष्टाच्च भोजनादूर्ध्वं च परिदधति परिधानं कुर्वन्ति मुख्यस्य प्राणस्य । लम्भुको लम्भनशीलो वासो ह भवति ; वाससो लब्धैव भवतीत्यर्थः । अनग्नो ह भवति । वाससो लम्भुकत्वेनार्थसिद्धैवानग्नतेति अनग्नो ह भवतीत्युत्तरीयवान्भवतीत्येतत् ॥
அனுவாதம் - மறுபடியும் அந்தப்பிராணன் கூறியது - இது முன்போன்ற கல்பனையே - எனக்கு வஸ்திரமாகும்? என்று. வாக் முதலியவைகள் ஜலம் என்று கூறின. எதனால் பிராணனுக்கு ஜலம் வஸ்திரமோ ஆகையால் அன்னத்தை சாப்பிடும் பிராஹ்மணர்களாகிய அந்த வித்வான்கள் இவ்வாறு செய்கின்றன. எவ்வாறு? சாப்பிடுவதற்கு முன்னும், சாப்பிட்ட பின்னும் வஸ்திர ஸ்தானத்தில் உள்ள ஜலத்தால் முக்கியப் பிராணனுக்கு ஆச்சமணீயம் செய்கின்றார். ஆகையால் அதுவே வஸ்திரம் ஆகின்றது. ஆகையால் வஸ்திரம் உடையதாகிறது என்பது பொருள். மேலும் மேல் வஸ்திரம் இல்லாதவனாக ஆகமாட்டான். ஆகையால் வஸ்திரம் உடையவனாகவும், மேல் வஸ்திரம் (அங்கவஸ்திரம்) உடையவனாகவும் ஆகின்றான். வஸ்திரம் இல்லாதவனாக ஆகமாட்டான்.
भोक्ष्यमाणस्य भुक्तवतश्च यदाचमनं शुद्ध्यर्थं विज्ञातम् , तस्मिन् प्राणस्य वास इति दर्शनमात्रमिह विधीयते — अद्भिः परिदधतीति ; न आचमनान्तरम् — यथा लौकिकैः प्राणिभिरद्यमानमन्नं प्राणस्येति दर्शनमात्रम् , तद्वत् ; किं मेऽन्नं किं मे वास इत्यादिप्रश्नप्रतिवचनयोस्तुल्यत्वात् । यद्याचमनमपूर्वं तादर्थ्येन क्रियेत, तदा कृम्याद्यन्नमपि प्राणस्य भक्ष्यत्वेन विहितं स्यात् । तुल्ययोर्विज्ञानार्थयोः प्रश्नप्रतिवचनयोः प्रकरणस्य विज्ञानार्थत्वादर्धजरतीयो न्यायो न युक्तः कल्पयितुम् ।
அனுவாதம் - போஜனம் ஆரம்பிக்கிறவனுக்கும், போஜனம் முடித்தவனுக்கும் ஆசமனம் சுத்திக்காக அறியப்படுகிறது. அதில் பிராணனின் வஸ்திரம் என்ற திருஷ்டி மாத்திரம் விதிக்கப்படுகிறது. ஜலத்தினால் மறைக்கிறது என்பதால் மற்ற ஆசமனீயத்தைக் குறிக்கவில்லை). (மறைக்கிறது என்பது ஆடையைக் குறிப்பதாகும்). எவ்வாறு லெளகிக பிராணிகளால் புசிக்கப்பட்ட அன்னம் பிராணன் உடையது என்பது எவ்வாறு திருஷ்டி மாத்திரமாகவே விதானம் செய்யப்பட்டுள்ளதோ அவ்வாறு அறிந்துகொள்ள வேண்டும். என்னுடைய அன்னம் எது? என்னுடைய வஸ்திரம் எது? ஆகிய கேள்விகளும், அதன் பதில்களும் ஆகிய இரண்டும் சமானமாகும். (சுருதியின் அதுசாரமாக) பிராணனுக்காக வேறு புதிய ஆச்சமனம் விதானத்தை ஏற்றுக்கொண்டால் கிருமி முதலிய அன்னங்களும் பிராணனின் சாப்பிடும் ரூபமாக விதிக்கப்பட்டதாக ஆகிவிடும். இவ்வாறு சமான ரூபமாக அறிவதற்காக ஏற்பட்ட வினாக்களும் அதன் பதில்களும் இந்த பிரகரணத்தினால் அறியவேண்டியதாக இருப்பதால் இங்கு “अर्धजरतीयः न्यायं” (அர்த்தஜரீய நியாயம் - கோழி பாதி முட்டைக்கும், பாதி சமைப்பதற்கும் என்ற நியாம்) என்று கல்பனை செய்வது பொருந்தாது.
यत्तु प्रसिद्धमाचमनं प्रायत्यार्थं प्राणस्यानग्नतार्थं च न भवतीत्युच्यते, न तथा वयमाचमनमुभयार्थं ब्रूमः । किं तर्हि, प्रायत्यार्थाचमनसाधनभूता आपः प्राणस्य वास इति दर्शनं चोद्यत इति ब्रूमः । तत्र आचमनस्योभयार्थत्वप्रसङ्गदोषचोदना अनुपपन्ना । वासोऽर्थ एव आचमने तद्दर्शनं स्यादिति चेत् , न, वासोज्ञानार्थवाक्ये वासोर्थापूर्वाचमनविधाने तत्रानग्नतार्थत्वदृष्टिविधाने च वाक्यभेदः । आचमनस्य तदर्थत्वमन्यार्थत्वं चेति प्रमाणाभावात् ॥
அனுவாதம் - எந்த இந்த பிரசித்தமான ஆசமனம் பிராணனின் சுத்திக்காகவும் அவ்வாறே வஸ்தரம் இல்லாத தன்மை அற்று இருப்பதற்கும் ஆகிய இரண்டிற்காக ஆகாது என்ற விஷயத்தில் இவ்வாறு நாம் கூறுவது என்னவெனில் இவ்வாறு நாம் ஆச்சமனத்தை இரண்டு பிரயோஜனங்களுக்காக கூறவில்லை. ஆனால் எதற்காக கூறுகிறார்கள்? நாம் கூறுவது என்னவெனில் சுத்திக்காக பிரயத்தனம் செய்பவர்களுக்கான சாதன பூதமான ஜலம் பிராணனின் வஸ்திரம் என்ற திருஷ்டி விதானம் செய்யப்பட்டது என்று கூறுகிறோம். இந்த விஷயத்தில் ஆசமனத்தின் இரண்டு அர்த்தத்தில் உள்ள தோஷத்தை தேடுவது உசிதமல்ல. பிராணனின் வஸ்திரத்திற்காகவே ஆசமனத்தில் அந்த திருஷ்டி ஆகலாமே? எனில். அவ்வாறு அல்ல. ஏன்எனில் வஸ்த்திர திருஷ்டிக்காக பிரவிர்த்தித்த வாக்கியத்தில் வஸ்த்திரத்திற்காக வேறு புதிய ஆசமனத்தின் விதானமும், அதில் ஆடை இல்லாமல் இல்லாத தன்மையாகிய திருஷ்டியின் விதானமும் ஏற்றுக்கொண்டால் வாக்கியத்தில் பேதரூப தோஷம் உண்டாகும். ஏன்எனில் ஆச்சமனத்தின் வஸ்த்திரத்தன்மையும் அதைத்தவிர வேறு அர்த்தத்துவமும் இருப்பதற்கு வேறு எந்த ஒரு பிரமாணமும் இல்லை.
तद्धैतत्सत्यकामो जाबालो गोश्रुतये वैयाघ्रपद्यायोक्त्वोवाच यद्यप्येनच्छुष्काय स्थाणवे ब्रूयाज्जायेरन्नेवास्मिञ्छाखाः प्ररोहेयुः पलाशानीति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - அந்த இந்த பிராண தர்சனத்தை சத்யகாம ஜாபாலர் வையாக்ரபத்ய கோச்ருதியிடம் இதை நிரூபித்து அவ்வாறு கூறினார் - இதை காய்ந்த மரத்தை குறித்து ஸ்துதி செய்தால் அதில் கிளைகள் உண்டாகி அதில் இலைகள் தளிர்கள் உண்டாகும்.
तदेतत्प्राणदर्शनं स्तूयते । कथम् ?
அனுவாதம் - அ.-கை - அந்த இந்த பிராண தர்சனம் ஸ்துதிக்கப்படுகிறது. அது எவ்வாறு?
तद्धैतत्प्राणदर्शनं सत्यकामो जाबालो गोश्रुतये नाम्ना वैयाघ्रपद्याय व्याघ्रपदोऽपत्यं वैयाघ्रपद्यः तस्मै गोश्रुत्याख्याय उक्त्वा उवाच अन्यदपि वक्ष्यमाणं वचः । किं तदुवाचेति, आह — यद्यपि शुष्काय स्थाणवे एतद्दर्शनं ब्रूयात्प्राणवित् , जायेरन् उत्पद्येरन्नेव अस्मिन्स्थाणौ शाखाः प्ररोहेयुश्च पलाशानि पत्राणि, किमु जीवते पुरुषाय ब्रूयादिति ॥
அனுவாதம் - அந்த இந்தப் பிராண தர்சனம் சத்யகாம ஜாபலர் கோச்ருதி என்ற பெயர் உடைய வையாக்ரபத்யர் அதாவது வ்யாக்ரபதருடைய புத்திரன் வையக்ரர் ஆகிய அந்த கோச்ருதி எனப்படுபவருக்கு கூறியபின் மற்ற இனிக் கூறப்போகிற விஷயத்தையும் கூறினார் - அவர் என்ன கூறினார்? அதற்குக் கூறப்படுகிறது - இந்த தரிசனத்தை அறிந்த புருஷன் இந்த தரிசனத்தை காய்ந்த மரத்தைப் பார்த்துக் கூறினால் அந்த பட்டமரம் கிளைகள் உண்டாகி அதில் இலைகள் துளிர்க்கும் என்று இவ்வாறு இருக்கும்பொழுது ஜீவிர்த்துக்கொண்டிருக்கும் புருஷனைக் குறித்து என்னவென்று கூறுவது.
यथोक्तप्राणदर्शनविदः इदं मन्थाख्यं कर्म आरभ्यते —
அனுவாதம் - அ.கை - மேலே கூறப்பட்ட பிராணதர்சனத்தை அறிந்தவனுக்காக இந்த மன்த்தம் என்ற பெயர் உடைய கர்மம் ஆரம்பிக்கப்படுகிறது.-
अथ यदि महज्जिगमिषेदमावास्यायां दीक्षित्वा पौर्णमास्यां रात्रौ सर्वौषधस्य मन्थं दधिमधुनोरुपमथ्य ज्येष्ठाय श्रेष्ठाय स्वाहेत्यग्नावाज्यस्य हुत्वा मन्थे सम्पातमवनयेत् ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - எப்பொழுது அந்த மஹத்துவத்தை அடைய விரும்பினால் அதற்காக அமாவாசையில் தீக்ஷை செய்துகொண்டு பெளர்ணமி இரவில் எல்லா மூலிகைகளின் மசியலுடன் தயிர், தேன் இவைகளை ஒன்றாய் கலந்து “ज्येष्द्भाय श्रेष्द्भाय स्वाहा” (ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய ஸ்வாஹா) என்று கூறிக்கொண்டு அதை அக்னியில் நெய்யினால் ஹவனம் செய்து கரண்டியில் இருந்த மீதியையும் அதில் சேர்க்கவேண்டும்.
अथ अनन्तरं यदि महत् महत्त्वं जिगमिषेत् गन्तुमिच्छेत् , महत्त्वं प्राप्तुं यदि कामयेतेत्यर्थः, तस्येदं कर्म विधीयते । महत्त्वे हि सति श्रीरुपनमते । श्रीमतो हि अर्थप्राप्तं धनम् , ततः कर्मानुष्ठानम् , ततश्च देवयानं पितृयाणं वा पन्थानं प्रतिपत्स्यत इत्येतत्प्रयोजनमुररीकृत्य महत्त्वप्रेप्सोरिदं कर्म, न विषयोपभोगकामस्य । तस्यायं कालादिविधिरुच्यते —
அனுவாதம் - இதன்பின் மஹத்துவத்தை அடைய விரும்பியவன் அதாவது மஹத்துவத்தை அறிய ஆசைப்படுபவன் என்பது பொருள். அதற்காக இந்த கர்மம் விதிக்கப்படுகிறது. மஹத்துவம் அடைந்தால் ஹீ (லக்ஷ்மி - செல்வம்) நம் சமீபம் வந்துசேரும். ஏன் எனில் ஶ்ரீமானுக்கு ஸ்வயமாக தனம் வந்து அடையும். அதனால் கர்மம் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த கர்மானுஷ்டானத்தால் தேவயானம் அல்லது பித்ருயான மார்க்கத்தை அடைவது சம்பவிக்கும், என்பது இதன் பிரயோஜனம் என்று உத்தேசித்து மஹத்துவத்தில் இச்சை உள்ளவனுக்காக இந்த கர்மம். விஷயபோகத்தில் காமனை உடையவனுக்கு அல்ல. அதன் காலம் முதலிய விதி கூறப்படுகிறது.
अमावास्यायां दीक्षित्वा दीक्षित इव भूमिशयनादिनियमं कृत्वा तपोरूपं सत्यवचनं ब्रह्मचर्यमित्यादिधर्मवान्भूत्वेत्यर्थः । न पुनर्दैक्षमेव कर्मजातं सर्वमुपादत्ते, अतद्विकारत्वान्मन्थाख्यस्य कर्मणः ।
‘उपसद्व्रती’ (बृ. उ. ६ । ३ । १) इति श्रुत्यन्तरात् पयोमात्रभक्षणं च शुद्धिकारणं तप उपादत्ते । पौर्णमास्यां रात्रौ कर्म आरभते — सर्वौषधस्य ग्राम्यारण्यानामोषधीनां यावच्छक्त्यल्पमल्पमुपादाय तद्वितुषीकृत्य आममेव पिष्टं दधिमधुनोरौदुम्बरे कंसाकारे चमसाकारे वा पात्रे श्रुत्यन्तरात्प्रक्षिप्य उपमथ्य अग्रतः स्थापयित्वा ज्येष्ठाय श्रेष्ठाय स्वाहेत्यग्नावावसथ्ये आज्यस्य आवापस्थाने हुत्वा स्रुवसंलग्नं मन्थे सम्पातमवनयेत् संस्रवमधः पातयेत् ॥
அனுவாதம் - அமாவாசையில் தீக்ஷை செய்து - தீக்ஷபை் பெற்றவன்போல் தரையில் படுப்பது முதலியவைகளை நியமமாய் செய்து தபஸ் ரூபமான, உண்மை பேசுதல், பிரஹ்மச்சரியம் முதலிய தர்மங்கள் உடையவனாகி என்பது பொருள். மேலும் தீக்ஷை சம்பந்தமான எல்லா கர்மங்களும் இதில் கிரஹிக்கப்படவில்லை. ஏன்எனில் இந்த “मन्था” (மந்த்த - கடைதல்) என்ற கர்மம் வேறு கர்மத்தின் விகாரம் அல்ல. “उपसद्व्रती” (உபஸத்விருதீ) என்று வேறு சுருதியில் பால் அருந்துதல் மாத்திரம் அருந்துவது சுத்திக்காரணம் ஆவதால் தபஸ் ஆக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பெளர்ணமி இரவில் கர்மம் ஆரம்பிக்கப்படுகிறது. எல்லா மூலிகைகளும் அதாவது எல்லா கிராமத்தில் உள்ளனவும். வனத்தில் உள்ளதுமான மூலிகைகளை சக்திக்கு தகுந்தவாறு சிறிது சிறிதாக எடுத்துக்கொண்டு மசித்து அந்த மசியலுடன் தயிர், தேன் இவைகளைச் சேர்த்து பாத்திரம் கரண்டி அல்லது மரத்தாலான கிண்ணத்தில் அந்த மசியலை வைத்து ஜ்யேஷ்டாய, ஸ்ரேஷ்டாய ஸ்வாஹா என்று கூறி ஆவஸத்யாக்னியில் ஆவாபஸ்தானத்தில் நெய்யுடன் ஆஹுதி செய்யவேண்டும். கரண்டியில் இந்த மீதி மசியலையும் அதில்விட வேண்டும். அதாவது அந்த நெய் தாரையை மசியலில் சேர்க்கவேண்டும்.
वसिष्ठाय स्वाहेत्यग्नावाज्यस्य हुत्वा मन्थे सम्पातमवनयेत्प्रतिष्ठायै स्वाहेत्यग्नावाज्यस्य हुत्वा मन्थे सम्पातमवनयेत्सम्पदे स्वाहेत्यग्नावाज्यस्य हुत्वा मन्थे सम्पातमवनयेदायतनाय स्वाहेत्यग्नावाज्यस्य हुत्वा मन्थे सम्पातमवनयेत् ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - (இவ்வாறு) “वसिष्द्भाय स्वाहा” (வசிஷ்டாய ஸ்வாஹா) என்ற மந்திரத்தால் அக்னியில் அந்த மசியலை நெய்யுடன் சேர்த்து ஆகுதி செய்யவேண்டும். அதில் கரண்டியில் உள்ள மீதி மசியலையும் பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். “प्रतिष्द्भायै स्वाहा” (பிரதிஷ்ட்டாயை ஸ்வாஹா) என்ற இந்த மந்திரத்தால் அக்னியில் மசியலை நெய்யுடன் சேர்த்து ஆகுதி செய்யவேண்டும். கரண்டியில் மீதிமுள்ள மசியலையும் பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். “सम्पदे स्वाहा” (சம்பதே ஸ்வாஹா) என்ற மந்திரத்தால் மசியலை அக்னியில் நெய்யுடன் சேர்த்து ஆகுதி செய்யவேண்டும். கரண்டியில் மீதமுள்ள மசியலையும் பாத்திரத்தில் விடவேண்டும். அவ்வாறே “आयतनाय स्वाहा” (ஆயதனாய ஸ்வாஹா) என்ற மந்திரத்தால் மசியலை நெய்யுடன் சேர்த்து அக்னியில் ஆகுதி செய்யவேண்டும். கரண்டியில் உள்ள மீதியையும் பாத்திரத்தில் சேர்க்கவேண்டும்.
समानमन्यत् , वसिष्ठाय प्रतिष्ठायै सम्पदे आयतनाय स्वाहेति, प्रत्येकं तथैव सम्पातमवनयेत् हुत्वा ॥
அனுவாதம் - மற்றவைகள் முன்போல் வசிஷ்டாய, பிரதிஷ்டாயை, சம்பதம், ஆயதநாய ஸ்வாஹா என்று ஒவ்வொன்றிலும் அந்த மசியலையும், கரண்டியில் மீதமுள்ள மசியலையும் சேர்க்கவேண்டும்.
अथ प्रतिसृप्याञ्जलौ मन्थमाधाय जपत्यमो नामास्यमा हि ते सर्वमिदं स हि ज्येष्ठः श्रेष्ठो राजाधिपतिः स मा ज्यैष्ठ्यꣳ श्रैष्ठ्यꣳ राज्यमाधिपत्यं गमयत्वहमेवेदं सर्वमसानीति ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - அதன்பின் அக்னியில் இருந்து சிறிது தள்ளி இருந்துகொண்டு மசியலை கைகளில் அஞ்சலி பந்தமாக ஏந்தி “अमो नामासि” (அமோ நாமாசி) என்பது முதலிய மந்திரங்களால் ஜபிக்கவேண்டும். (அமோ நாமாசி என்பது முதலிய மந்திரங்களின் பொருள் -) ஹே மந்த்த! நீ “अम” (அம) என்ற நாமம் உடையவன். ஏன் எனில் ஜகத் முழுவதும் (உன்னுடைய பிராணபூதம்) உன்னிடத்தில் இருக்கின்றது. அந்த நீயே ஜ்யேஷ்டன், ஸ்ரேஷ்டன், ராஜா மேலும் எல்லாவற்றிக்கும் அதிபதி. அந்த நீ எனக்கு ஜ்யேஷ்டத்துவத்தையும், ஸ்ரேஷ்டத்துவத்தையும், ராஜ்யத்தையும், ஆதிபத்யத்தையும் அடையச்செய். அதனால் நான் சர்வ ரூபமாவேன்.
अथ प्रतिसृप्य अग्नेरीषदपसृत्य अञ्जलौ मन्थमाधाय जपति इमं मन्त्रम् — अमो नामास्यमा हि ते ; अम इति प्राणस्य नाम । अन्नेन हि प्राणः प्राणिति देहे इत्यतो मन्थद्रव्यं प्राणस्य अन्नत्वात् प्राणत्वेन स्तूयते अमो नामासीति ; कुतः ? यतः अमा सह हि यस्मात्ते तव प्राणभूतस्य सर्वं समस्तं जगदिदम् , अतः । स हि प्राणभूतो मन्थो ज्येष्ठः श्रेष्ठश्च ; अत एव च राजा दीप्तिमान् अधिपतिश्च अधिष्ठाय पालयिता सर्वस्य । सः मा मामपि मन्थः प्राणो ज्यैष्ठ्यादिगुणपूगमात्मनः गमयतु, अहमेवेदं सर्वं जगदसानि भवानि प्राणवत् । इति - शब्दो मन्त्रपरिसमाप्त्यर्थः ॥
அனுவாதம் - “अथ प्रतिसृप्य” (அதப்ரதி ஸ்ருப்ய) அதாவது அக்னியிலிருந்து விலகி மசியலை (மதனத்தை) கைகளில் அஞ்சலி மந்தமாய் வைத்துக்கொண்டு “अमो नामास्यमा हि ते” (அமோ நாமாஸ்யமா ஹி தே) என்பது முதலிய மந்திரத்தால் ஜபிக்கவேண்டும். “अम” (அம) என்பது பிராணனின் நாமம். அன்னத்தினால் தான் தேஹத்தில் பிராணன் பிராணக்கிரியையைச் செய்கின்றதினால் மந்த்திரவ்யம் (மூலிகை மசியல்) பிராணனின் அன்னமானதால் பிராணரூபமாக “अम” (அம:) என்ற பெயரால் ஸ்துதிக்கப்படுகிறது. எதனால் அமாவுடன் அதாவது எதனால் பிராண பூதமானவையான ஜகத் முழுவதும் உன்னுடையதாய் உள்ளதோ அதனால் அந்த பிராண மந்தமும் (மூலிகை மசியல்) ஜ்யேஷ்டமாயும் ஸ்ரேஷ்டமாயும் இருக்கிறது. அதனாலேயே ராஜா ஒளிபொருந்தினவனாயும், அதிபதியாய் இருந்து எல்லாவற்றையும் பரிபாலனம் செய்கிறவனாய் இருக்கின்றான். அந்த மந்த்தப்பிராணன் என்னையும் ஜ்யேஷ்டன் முதலிய குண சமுதாயமுடையதாய் செய்யட்டும். நானும் இந்த எல்லா ஜகத்தும் பிராணன் போல் ஆகட்டும். இங்கு “इति” (இதி) சப்தம் இந்த மந்திரத்தின் முடிவைக் குறிக்கின்றதாகும்.
अथ खल्वेतयर्चा पच्छ आचामति तत्सवितुर्वृणीमह इत्याचामति वयं देवस्य भोजनमित्याचामति श्रेष्ठं सर्वधातममित्याचामति तुरं भगस्य धीमहीति सर्वं पिबति निर्णिज्य कंसं चमसं वा पश्चादग्नेः संविशति चर्मणि वा स्थण्डिले वा वाचंयमोऽप्रसाहः स यदि स्त्रियं पश्येत्समृद्धं कर्मेति विद्यात् ॥ ७ ॥
மந்த்ரார்த்தம் - அதன்பின் அந்த இந்த ரிக்கினால் ஒவ்வொரு பாதமாக எடுத்து (அந்த மசியலை) உண்கின்றான். “तत्सवितुर्वृणीमहे” (தத்சவித்ர் வ்ருணீமஹே) என்று கூறி அதை உண்கின்றான். “वयं देवस्य भोजनम्” (வயம் தேவஸ்ய போஜனம்) என்று கூறி உண்கின்றான். “श्रेष्द्भ ँºÉ´ÉÇPÉÉiɨɨÉ” (ஸ்ரேஷ்டப் சர்வதாதமம்) என்று கூறி உண்கின்றான். அவ்வாறே “तुरं भगस्य धीमहि” (துரம் பகஸ்ய தீமஹி) என்று கூறி குவலையிலோ, அகப்பையிலோ இருந்ததை வழித்து கழுவி எல்லா மசியலையும் பருகுகின்றான். அதன்பின் அந்த அக்னியின் அருகில் தோலை விரித்து பவித்ரமான யக்ஞ பூமியில் மெளனமாக (வாக்கைக் கட்டுப்படுத்தி) (அநிஷ்டமான ஸ்வப்ன தர்சனமத்தில்) மூழ்காமல் படுக்கின்றான். அந்த சமயத்தில் (ஸ்வப்னத்தில்) ஸ்த்ரீ தர்சனம் ஏற்பட்டால் கர்ம பலமுடையதாக ஆகின்றது.
अथ अनन्तरं खलु एतया वक्ष्यमाणया ऋचा पच्छः पादशः आचामति भक्षयति, मन्त्रस्यैकैकेन पादेनैकैकं ग्रासं भक्षयति । तत् भोजनं सवितुः सर्वस्य प्रसवितुः, प्राणमादित्यं च एकीकृत्योच्यते, आदित्यस्य वृणीमहे प्रार्थयेमहि मन्थरूपम् ; येनान्नेन सावित्रेण भोजनेनोपभुक्तेन वयं सवितृस्वरूपापन्ना भवेमेत्यभिप्रायः । देवस्य सवितुरिति पूर्वेण सम्बन्धः । श्रेष्ठं प्रशस्यतमं सर्वान्नेभ्यः सर्वधातमं सर्वस्य जगतो धारयितृतमम् अतिशयेन विधातृतममिति वा ; सर्वथा भोजनविशेषणम् । तुरं त्वरं तूर्णं शीघ्रमित्येतत् , भगस्य देवस्य सवितुः स्वरूपमिति शेषः ; धीमहि चिन्तयेमहि विशिष्टभोजनेन संस्कृताः शुद्धात्मानः सन्त इत्यभिप्रायः । अथवा भगस्य श्रियः कारणं महत्त्वं प्राप्तुं कर्म कृतवन्तो वयं तद्धीमहि चिन्तयेमहीति सर्वं च मन्थलेपं पिबति । निर्णिज्य प्रक्षाल्य कंसं कंसाकारं चमसं चमसाकारं वा औदुम्बरं पात्रम् ;
அனுவாதம் - அதன்பின் இனிக் கூறப்போகும் ரிக்கினால் ஒவ்வொரு பாதமாக ஆசமனம் அதாவது உண்கின்றான். அதாவது மந்திரத்தின் ஒவ்வொரு பாதத்தாலும் ஒவ்வொன்றாய் உண்கின்றான். எல்லோரையும் பிரசவிக்கின்ற சவிதாவின் அந்த மந்த்தரூப போஜனத்தை, நாம் பிரார்த்தனை செய்கின்றோம். இங்கு பிராணனும் ஆதிதத்யனும் ஒன்றே என்று இவ்வாறு கூறுப்படுகிறது. எந்த இந்த அன்னம் அதாவது ஆதித்ய தேவனால் போஜனம் செய்யப்பட்டதால் அந்த போஜனம் மூலமாய் நாம் அந்த சூரிய ரூபத்தை அடைகிறோம் என்பது அபிப்பிராயம், (देवस्य) தேவஸ்ய (सवितुः) சவிது: என்பது முந்திய பதத்துடன் சம்பந்தம் “श्रेष्द्भ” (ஸ்ரேஷ்டம்) - என்பது எல்லா அன்னங்களை அபேஷித்து மிகவும் மேன்மையானது. “सर्वधातमम्” (சர்வதாதமம்) - உலகம் முழுவதையும் மிகவும் உத்கிருஷ்டமாக தாங்குபவர் அதாவது ஜகத் முழுவதின் அதிசயமான (विधाता) (விதாதா) உத்பத்தி கர்த்தா. இது எல்லாவிதமாகவும் போஜனத்தின் விசேஷணமாகும். “तुरं त्वरं तूर्णं” (துரம், த்வரம், தூர்ணம்) என்பது சீக்கிரம் என்பது ஆகும் “भगस्य” (பகஸ்ய) அதாவது ஆதித்ய தேவனுடைய ஸ்வரூபம் என்பதாகும். அதாவது விசிஷ்ட (சிறந்த) போஜனத்தால் சுத்த சித்தம் உடையவனாய் த்யானம் செய்யவேண்டும் என்பது அபிப்பிராயம். அல்லது பகம் என்பது செல்வம் (श्रियः) மஹத்துவத்தை அடைவதற்கு காரணமான கர்மம் செய்து நாம் அதை தியானம் செய்யவேண்டும் என்று இவ்வாறு கூறி பாத்திரத்தில் அல்லது அகப்பையில் உள்ளதை வழித்து கழுவி பருகவேணடும்.
पीत्वा आचम्य पश्चादग्नेः प्राक्शिराः संविशति चर्मणि वा अजिने स्थण्डिले केवलायां वा भूमौ, वाचंयमो वाग्यतः सन्नित्यर्थः, अप्रसाहो न प्रसह्यते नाभिभूयते स्त्र्याद्यनिष्टस्वप्नदर्शनेन यथा, तथा संयतचित्तः सन्नित्यर्थः । स एवंभूतो यदि स्त्रियं पश्येत्स्वप्नेषु तदा विद्यात्समृद्धं ममेदं कर्मेति ॥
அனுவாதம் - மந்த்த (மசியலை) அருந்தியபின் அக்னியின் அருகில் தோலிலோ அல்லது தரையிலோ கிழக்கு திசையில் தலைவைத்து பேசாமல், மனதை அடக்கி ஸ்திரீ முதலிய அநிஷ்ட சுவப்னங்களையெல்லாம் தவிர்த்து தூங்குகின்றான். அந்த அவஸ்தையில் அதாவது ஸ்வப்னத்தில் ஸ்த்ரீயைப் பார்த்தால் தன்னுடைய கர்மம் நிறைவு (வெற்றி) பெற்றது என்று அறியப்படுகிறது.
तदेष श्लोको यदा कर्मसु काम्येषु स्त्रियꣳ स्वप्नेषु पश्यति समृद्धिं तत्र जानीयात्तस्मिन्स्वप्ननिदर्शने तस्मिन्स्वप्ननिदर्शने ॥ ८ ॥
மந்த்ரார்த்தம் - இந்த விஷயத்தில் இந்த ஸ்லோகம் - காமிய கர்மங்கள் செய்யும் சமயத்தில் ஸ்த்ரீயை ஸ்வப்னத்தில் பார்த்தால் அந்த கர்மம் நிறைவுடன் வெற்றி பெற்றுள்ளது என்பது அறியப்படுகிறது.
तदेतस्मिन्नर्थे एष श्लोको मन्त्रोऽपि भवति — यदा कर्मसु काम्येषु कामार्थेषु स्त्रियं स्वप्नेषु स्वप्नदर्शनेषु स्वप्नकालेषु वा पश्यति, समृद्धिं तत्र जानीयात् , कर्मणां फलनिष्पत्तिर्भविष्यतीति जानीयादित्यर्थः ; तस्मिंस्त्र्यादिप्रशस्तस्वप्नदर्शने सतीत्यभिप्रायः । द्विरुक्तिः कर्मसमाप्त्यर्था ॥
அனுவாதம் - இந்த அர்த்தத்தில் இந்த ஸ்லோகம் அதாவது இந்த மந்திரம் உள்ளது. காமிய விஷயங்களுக்கான கர்மங்கள் நடக்கும் சமயத்தில் ஸ்த்ரீயை ஸ்வப்பனத்தில் கண்டால் அல்லது ஸ்வப்ன காலத்தில் பார்த்தால் அந்த கர்மம் நிறைவான பலன் உடையதாகும் என்று அறியவேண்டும். கர்மங்களின் பலன் அடையப்படுகிறது என்பதை அறியவேண்டும் என்பது பொருள். அதாவது ஸ்திரீ முதலிய சிறந்த ஸ்வப்னத்தை என்பது அபிப்பிராயம். இதில் இருமுறை “तस्मिन्स्वप्ननिदर्शने तस्मिन्स्वप्ननिदर्शने” (தஸ்மின்ஸ்வப்னநிர்தர்சனே, தஸ்மின்ஸ்வப்னநிதர்சனே) என்று இருமுறை கூறியது கர்மத்தின் பூர்த்திக்காக ஆகும்.
इति द्वितीयखण्डभाष्यम् ॥
ब्रह्मादिस्तम्बपर्यन्ताः संसारगतयो वक्तव्याः वैराग्यहेतोर्मुमुक्षूणाम् इत्यत आख्यायिका आरभ्यते —
அனுவாதம் - அ.கை - முமூக்ஷுகளுக்கு வைராக்கியத்திற்காக பிரஹ்மா முதல் ஸ்தம்ப பர்யந்தமான சம்சார கதியை கூறவேண்டும் என்பதற்காக இந்த கதை (ஆக்கியாயிகா) ஆரம்பிக்கப்படுகிறது.
श्वेतकेतुर्हारुणेयः पञ्चालानाꣳ समितिमेयाय तꣳ ह प्रवाहणो जैवलिरुवाच कुमारानु त्वाशिषत्पितेत्यनु हि भगव इति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - அருணனுடைய புத்திரன் ச்வேதகேது பாஞ்சால தேசத்தின் ஜனங்களின் சபைக்கு வந்தார். அவரிடம் ஜாபலருடைய புத்திரன் பிரவாஹணர் இவ்வாறு கூறினார் - ஹே குமாரனே! என்ன உனக்கு உன்னுடைய பிதா சிக்ஷை செய்தாரா? (கற்பித்தாரா). அதற்கு அவர் கூறினார் - ஆம் பகவானே என்று.
श्वेतकेतुर्नामतः, ह इति ऐतिह्यार्थः, अरुणस्यापत्यमारुणिः तस्यापत्यमारुणेयः पञ्चालानां जनपदानां समितिं सभाम् एयाय आजगाम । तमागतवन्तं ह प्रवाहणो नामतः जीवलस्यापत्यं जैवलिः उवाच उक्तवान् — हे कुमार अनु त्वा त्वाम् अशिषत् अन्वशिषत् पिता ? किमनुशिष्टस्त्वं पित्रेत्यर्थः । इत्युक्तः स आह — अनु हि अनुशिष्टोऽस्मि भगव इति सूचयन्नाह ॥
அனுவாதம் - ச்வேதகேது என்ற பெயருடைய- அருணருடைய புத்திரன் ஆருணியின் புத்திரன் ஆருணேயர் பாஞ்சாலத்தின் ஜனங்களின் சபைக்கு வந்தார். இங்கு “ह” (ஹ) என்பது ஜதிகா அர்த்தம். அங்கு வந்தவரிடம் பிரவாஹணன் என்ற பெயருடைய ஜீவலரின் புத்திரர் ஜைவலர் கூறினார் - ஹே குமாரனே! உனக்கு உன் தந்தை சிக்ஷை செய்தாரா (உபதேசித்தாரா) அதாவது உனக்கு உபதேசித்தாரா என்பது பொருள். அதற்கு அவர் கூறினார் - ஆம் பகவானே. நான் பிதாவால் உபதேசிக்கப்பட்டேன் என்று கூறினார்.
वेत्थ यदितोऽधि प्रजाः प्रयन्तीति न भगव इति वेत्थ यथा पुनरावर्तन्त३ इति न भगव इति वेत्थ पथोर्देवयानस्य पितृयाणस्य च व्यावर्तना३ इति न भगव इति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - (பிரவாஹணர்) என்ன உனக்குத் தெரியுமா இந்த லோகத்தில் இருந்து சென்றபின் (இறந்தபின்) மனிதர்கள் எங்கு செல்கின்றனர் என்பது தெரியுமா? (ச்வேதகேது) பகவானே! தெரியாது. என்ன உனக்குத் தெரியுமா மறுபடியும் அவர்கள் இந்த லோகத்திற்குத் திரும்பி வருகின்றனர் என்று? (ச்வேதகேது) பகவானே! எனக்குத் தெரியாது. (ப்ரவாஹணர்) உனக்குத் தெரியுமா தேவையான மார்கமும், பித்ருயாண மார்கமும் ஆகிய இரண்டும் எந்த இடத்தில் பிரிகிறது என்று உனக்குத் தெரியுமா என்று? (ச்வேதகேது) ஹே பகவானே! எனக்குத் தெரியாது என்று.
तं ह उवाच — यद्यनुशिष्टोऽसि,
அனுவாதம் - அ.கை - அவரிடம் இவ்வாறு கூறினார் - நீ உபதேசம் பெற்று இருந்தால் -
वेत्थ यदितः अस्माल्लोकात् अधि ऊर्ध्वं यत्प्रजाः प्रयन्ति यद्गच्छन्ति, तत्किं जानीषे इत्यर्थः । न भगव इत्याह इतरः, न जानेऽहं तत् यत्पृच्छसि । एवं तर्हि, वेत्थ जानीषे यथा येन प्रकारेण पुनरावर्तन्त इति । न भगव इति प्रत्याह । वेत्थ पथोर्मार्गयोः सहप्रयाणयोर्देवयानस्य पितृयाणस्य च व्यावर्तना व्यावर्तनमितरेतरवियोगस्थानं सह गच्छतामित्यर्थः ॥
அனுவாதம் - (ப்ரவாஹணர்) என்ன நீ அறிவாயா? இந்த லோகத்திலிருந்து (இறந்தபின்) மேலே செல்லும்பொழுது மனிதர்கள் எங்கு செல்கின்றார்கள் என்பதை அறிவாயா? என்பது பொருள் (ச்வேதகேது) மற்றவர் கூறினார் - ஹே பகவானே நான் நீங்கள் எதைக் கேட்டீரோ அதை அறியவில்லை என்று. இவ்வாறு இருக்கும்பொழுது அவர்கள் எவ்வாறு திரும்பி வருகின்றனர் என்பது தெரியுமா? அதற்கு தெரியாது பகவானே! என்று பதில் அளித்தான். சேர்ந்தே செல்லும் தேவையான பித்ருயாண இந்த இரண்டு மார்க்கங்களும் எங்கு பரஸ்பரம் வேறுபட்டு செல்கின்றது? பகவானே! எனக்குத் தெரியாது.
वेत्थ यथासौ लोको न सम्पूर्यत३ इति न भगव इति वेत्थ यथा पञ्चम्यामाहुतावापः पुरुषवचसो भवन्तीति नैव भगव इति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - (பிரவாஹணர்) பித்ருலோகம் ஏன் நிறம்பவில்லை என்று உனக்குத் தெரியுமா? (ச்வேதகேது) பகவானே! தெரியாது. (பிரவாஹணர்) பாஞ்சவீ (ஐந்தாவது) ஆகுதியை ஹவனம் செய்தபின் ஜலம் அதாவது (சோமம் நெய் முதலிய ரசம்) புருஷன் என்ற வாசகத்தை (உருவத்தை) எவ்வாறு அடைகின்றான் என்பது தெரியுமா? (ச்வேதகேது) பகவானே தெரியாது தெரியாது என்றார்.
वेत्थ यथा असौ लोकः पितृसम्बन्धी — यं प्राप्य पुनरावर्तन्ते, बहुभिः प्रयद्भिरपि येन कारणेन न सम्पूर्यते इति । न भगव इति प्रत्याह । वेत्थ यथा येन क्रमेण पञ्चम्यां पञ्चसङ्ख्याकायामाहुतौ हुतायाम् आहुतिनिर्वृत्ता आहुतिसाधनाश्च आपः पुरुषवचसः पुरुष इत्येवं वचोऽभिधानं यासां हूयमानानां क्रमेण षष्ठाहुतिभूतानां ताः पुरुषवचसः पुरुषशब्दवाच्या भवन्ति पुरुषाख्यां लभन्त इत्यर्थः । इत्युक्तो नैव भगव इत्याह ; नैवाहमत्र किञ्चन जानामीत्यर्थः ॥
அனுவாதம் - இந்த பித்ரு சம்பந்தமான லோகத்தை அடைந்தவர் எதை அடைந்து புனராவர்த்தி உடையவர்களாக (திரும்புபவர்களாக) இருக்கின்றனர். மேலும் அநேகம் பேர் அதைச்சென்று அடைந்தாலும் எதற்காக அந்த லோகம் நிரம்பவில்லை? என்பதற்கு (ச்வேதகேது) ஹே பகவானே! நான் அறியவில்லை என்று பதில் அளித்தார். ஐந்து எண்ணிக்கை உடைய ஆஹுதியை ஆஹுதி செய்தபின் ஆஹுதியில் இருக்கும் ஆஹுதியின் சாதனரூபமான ஜலம் புருஷன் வாசீ அதாவது புருஷன் என்ற நாமம் ஏற்படுகிறது. இவ்வாறு வச: (वचः) என்பது பெயர் எதற்கோ அது கிரமமாக ஆஹுதி செய்யப்படும் ஆறாவது ஆஹுதி ரூபங்களின் புருஷ அபிதானம் புருஷசப்த வாச்யத்தால் புருஷன் எனப்படுவது எவ்வாறு அடையப்படுகிறது? என்பது பொருள். இவ்வாறு கேட்டதற்கு ஹே பகவானே! நான் இதை ஒரு சிறிதும் அறியவில்லை என்பது பொருள்.
अथानु किमनुशिष्टोऽवोचथा यो हीमानि न विद्यात्कथꣳ सोऽनुशिष्टो ब्रुवीतेति स हायस्तः पितुरर्धमेयाय तꣳ होवाचाननुशिष्य वाव किल मा भगवान्ब्रवीदनु त्वाशिषमिति ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - இவ்வாறு நீ எதையும் அறியாமல் இருந்துகொண்டு எனக்கு சிக்ஷை (உபதேசம்) அளிக்கப்பட்டது என்று எதற்காகக் கூறினாய்? இந்த விஷயங்கள் உனக்கு தெரியாததால் உனக்கு எவ்வாறு சிக்ஷிக்கப்பட்டதாகும்? என்று கேட்டபின் பயந்து தன்னுடைய பிதாவின் இடத்திற்கு வந்து அவரிடம் கூறினான்-ஶ்ரீமானாகிய நீங்கள் எனக்கு சிக்ஷை அளிக்காமல் உனக்கு நான் சிக்ஷை அளித்துவிட்டேன் என்று எவ்வாறு கூறினீர்கள்.
अथ एवमज्ञः सन् किमनु कस्मात्त्वम् अनुशिष्टोऽस्मीति — अवोचथा उक्तवानसि ; यो हि इमानि मया पृष्टान्यर्थजातानि न विद्यात् न विजानीयात् , कथं स विद्वत्सु अनुशिष्टोऽस्मीति ब्रुवीत । इत्येवं स श्वेतकेतुः राज्ञा आयस्तः आयासितः सन् पितुरर्धं स्थानम् एयाय आगतवान् , तं च पितरमुवाच — अननुशिष्य अनुशासनमकृत्वैव मा मां किल भगवान् समावर्तनकालेऽब्रवीत् उक्तवान् अनु त्वाशिषम् अन्वशिषं त्वामिति ॥
அனுவாதம் - நீ இவ்வாறு அறியாதவனாய் இருந்தாலும் நீ எவ்வாறு எனக்கு உபதேசம் ஆகிவிட்டது என்று இவ்வாறு ஏன் கூறினாய்? எந்த புருஷனால் என்னால் கேட்கப்பட்ட விஷயங்களை அறிந்து இருக்காமல் எனக்கு சிக்ஷை ஆகிவிட்டது என்று கூறலாம்? என்று இவ்வாறு ராஜாவால் கலக்கம் அடையப்பட்ட அந்த ச்வேதகேது பிதா இருக்கும் இடத்திற்கு வந்து அவரிடம் இவ்வாறு கூறினான் - ஶ்ரீமான் ஆகிய தாங்கள் நான் (அத்யயனம்) சிக்ஷை முடிந்த சம்ஸ்கார சமயத்தில் எனக்கு உபதேசிக்காமலேயே உபதேசித்தேன் என்று கூறினீர்கள் என்று.
यतः
அனுவாதம் - ஏன்எனில் -
पञ्च मा राजन्यबन्धुः प्रश्नानप्राक्षीत्तेषां नैकञ्चनाशकं विवक्तुमिति स होवाच यथा मा त्वं तदैतानवदो यथाहमेषां नैकञ्चन वेद यद्यहमिमानवेदिष्यं कथं ते नावक्ष्यमिति ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - அந்த க்ஷத்திரிய பந்து என்னிடம் ஐந்து கேள்விகளைக் கேட்டார். என்னால் அவைகளில் ஒன்றிற்குக்கூட விளக்கம் அளிக்க முடியவில்லை. அதற்கு அவர் கூறினார் - நீ அந்த சமயத்தில் வரும்பொழுது எந்த கேள்விகளை எனக்குக் கூறினாயோ அதில் எனக்கும் ஒன்று கூட தெரியவில்லை. நான் அதை அறிந்து இருந்தால் உனக்குக் கூறி இருப்பேன்.
पञ्च पञ्चसङ्ख्याकान्प्रश्नान् राजन्यबन्धुः राजन्या बन्धवोऽस्येति राजन्यबन्धुः स्वयं दुर्वृत्त इत्यर्थः, अप्राक्षीत् पृष्टवान् । तेषां प्रश्नानां नैकञ्चन एकमपि नाशकं न शक्तवानहं विवक्तुं विशेषेणार्थतो निर्णेतुमित्यर्थः ।
அனுவாதம் - ராஜபந்து அதாவது க்ஷத்ரியன். ஏன் எனில் அவன் க்ஷத்திரியர்களின் பந்து. அவன் துர்மதி உடையவன் எனக்கு ஐந்து கேள்விகளைக் கேட்டான். அதில் ஒன்றிற்கும் விசேஷமாக என்னால் பதில் அளிக்க முடியவில்லை.
स ह उवाच पिता — यथा मा मां वत्स त्वं तदा आगतमात्र एव एतान्प्रश्नान् अवद उक्तवानसि — तेषां नैकञ्चन अशकं विवक्तुमिति, तथा मां जानीहि, त्वदीयाज्ञानेन लिङ्गेन मम तद्विषयमज्ञानं जानीहीत्यर्थः । कथम् । यथा अहमेषां प्रश्नानाम् एकं चन एकमपि न वेद न जाने इति — यथा त्वमेवाङ्ग एतान्प्रश्नान् न जानीषे, तथा अहमपि एतान्न जाने इत्यर्थः । अतो मय्यन्यथाभावो न कर्तव्यः । कुत एतदेवम् । यतो न जाने ; यद्यहमिमान्प्रश्नान् अवेदिष्यं विदितवानास्मि, कथं ते तुभ्यं प्रियाय पुत्राय समावर्तनकाले पुरा नावक्ष्यं नोक्तवानस्मि —
அனுவாதம் - அந்த பிதா கூறினார் - ஹே மகனே! எவ்வாறு நீ என்னிடம் வந்து இங்கு எந்த இந்த கேள்விகளைக் கூறினாயோ அவைகளில் ஒன்றுகூட என்னால் விளக்க (கூற) முடியாது என்று. அவ்வாறு என்னை அறி. அதாவது நீ அறியாததை அடையாளத்தால் என்னிடம் உள்ள அக்ஞானத்தை அறிந்துகொள் என்பது பொருள். எவ்வாறு? எவ்வாறு நான் அந்த கேள்விகளில் ஒன்றுகூட அறியாமல் இருக்கிறேன் என்பதாகும். எவ்வாறு இந்த கேள்விகளை அறியாமல் இருக்கின்றாயோ அவ்வாறே நானும் அவைகளை அறியவில்லை என்பது பொருள். ஆகையால் என்னிடம் நீ வேறு விதமாக நினைக்காதே. ஆனால் இதை எவ்வாறு அறியவேண்டும். எதனால் நான் அறியவில்லையோ அதனால். நான் இந்த பிரச்னங்களை (கேள்விகளை) குறித்து அறிந்திருந்தால் பிரியமான புத்திரனாகிய உனக்கு அத்யயனம் பூர்த்தியாகும் சமயத்தில் உனக்கு கூறாமல் இருந்திருப்பேனா?
इत्युक्त्वा
அனுவாதம் - இவ்வாறு கூறி -
स ह गौतमो राज्ञोऽर्धमेयाय तस्मै ह प्राप्तायार्हां चकार स ह प्रातः सभाग उदेयाय तं होवाच मानुषस्य भगवन्गौतम वित्तस्य वरं वृणीथा इति स होवाच तवैव राजन्मानुषं वित्तं यामेव कुमारस्यान्ते वाचमभाषथास्तामेव मे ब्रूहीति स ह कृच्छ्री बभूव ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - அப்பொழுது அந்த கெளதமர் ராஜா இருக்கும் இடத்திற்கு வந்தார். தன்னிடம் வந்தவருக்கு பூஜை செய்தார். (மறுநாள்) அதிகாலையில் ராஜாவின் சபையை அடைந்து கெளதமர் அவர் அருகில் சென்றார். அவர் (ராஜா) அவரிடம் (கெளதமரிடம்) கூறினார் - ஹே பகவானே கெளதம! தாங்கள் மனித சம்பந்தமான தனத்தை வரமாகக் கேளுங்கள் என்று. அதற்கு அவர் கூறினார் - ஹே ராஜாவே! அந்த மனித சம்பந்தமான செல்வத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். தாங்கள் என் புத்திரனிடத்தில் எந்த விஷயத்தைக் கேள்வி ரூபமாகக் கூறினீர்களோ அதை எனக்குக் கூறுங்கள் என்றார். அதற்குக் அவர் பிரவாஹணர் சங்கடத்தில் ஆழ்ந்தார். (சங்கடத்திற்கு உள்ளானார்).
स ह गौतमः गोत्रतः राज्ञः जैवलेः अर्धं स्थानम् एयाय गतवान् । तस्मै ह गौतमाय प्राप्ताय अर्हाम् अर्हणां चकार कृतवान् । स च गौतमः कृतातिथ्यः उषित्वा परेद्युः प्रातःकाले सभागे सभां गते राज्ञि उदेयाय । भजनं भागः पूजा सेवा सह भागेन वर्तमानो वा सभागः पूज्यमानोऽन्यैः स्वयं गोतमः उदेयाय राजानमुद्गतवान् ।
அனுவாதம் - அந்த கௌதம கோத்திரத்தில் பிறந்த முனிவர் ராஜா ஜைவலிகருடைய இருப்பிடத்திற்கு வந்தார். தன்னிடம் வந்த கௌதமருக்கு பூஜை செய்தார். இவ்வாறு அதிதி சத்காரியத்தால் நன்கு உபசரிக்கப்பட்ட கௌதமர் அன்று அங்கு தங்கி மறுநாள் அதிகாலையில் ராஜாவின் “सभागम्” (சபாகம்)- சபைக்கு அடைந்து அவருக்கு அருகில் சென்றார். அல்லது பாக என்பது பூஜை சேவை ஆகும். அந்த (सभाग) த்தை) பூஜையை மற்றவர்கள் செய்ய தான் சுயமாகவே கௌதமர் ராஜாவிடம் சென்றார்.
तं होवाच गौतमं राजा — मानुषस्य भगवन्गौतम मनुष्यसम्बन्धिनो वित्तस्य ग्रामादेः वरं वरणीयं कामं वृणीथाः प्रार्थयेथाः । स ह उवाच गौतमः — तवैव तिष्ठतु राजन् मानुषं वित्तम् ; यामेव कुमारस्य मम पुत्रस्य अन्ते समीपे वाचं पञ्चप्रश्नलक्षणाम् अभाषथाः उक्तवानसि, तामेव वाचं मे मह्यं ब्रूहि कथय — इत्युक्तो गौतमेन राजा स ह कृच्छ्री दुःखी बभूव — कथं त्विदमिति ॥
அனுவாதம் - அந்த கெளதமரிடம் ராஜா கூறினார் - ஹே பகவானே கெளதமரே! மனிதர்களின் சம்பந்தமான கிராமம் முதலிய செல்வத்தை நீங்கள் விரும்பியவாறு கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள் என்று. அதற்கு கெளதமர் கூறினார். ஹே ராஜாவே- அந்த செல்வம் எல்லாம் உங்களிடமே இருக்கட்டும். என்னுடைய குமாரனிடம் அதாவது என்னுடைய புத்திரனிடம் எந்த கேள்வி ரூபமான ஐந்து விஷய லக்ஷணங்களை கூறினீர்களோ அந்த விஷயத்தை எனக்கும் தாங்கள் கூறவேண்டும் என்று கெளதமர் கூறியதும் ராஜா இது எவ்வாறு முடியும் என்று துக்கம் அடைந்தார்.
स ह कृच्छ्रीभूतः अप्रत्याख्येयं ब्राह्मणं मन्वानः न्यायेन विद्या वक्तव्येति मत्वा
அனுவாதம் - அ.கை - அவர் துக்கமுடையவராய் பிராஹ்மணனுக்கு மறுக்கக்கூடாது என்று கருதி நியமமாக வித்யையை உபதேசம் செய்யவேண்டும் என்று நினைத்து (அறிந்து) -
तं ह चिरं वसेत्याज्ञापयाञ्चकार तं होवाच यथा मा त्वं गौतमावदो यथेयं न प्राक्त्वत्तः पुरा विद्या ब्राह्मणान्गच्छति तस्मादु सर्वेषु लोकेषु क्षत्रस्यैव प्रशासनमभूदिति तस्मै होवाच ॥ ७ ॥
மந்த்ரார்த்தம் - அவரிடம் இங்கு அதிககாலம் தங்கி இருங்கள் என்று ஆக்ஞாபித்தார். மேலும் அவரிடம் இவ்வாறு கூறினார் - ஹே கெளதமரே! எவ்வாறு நீங்கள் என்னிடம் கூறினீரோ அதாவது (நீங்கள் இவ்வாறு அறிந்துகொள்ள வேண்டும்) முன்காலத்தில் உமக்கு முன்னால் இந்த வித்யை பிராஹ்மணர்களிடம் இருந்தது இல்லை. இந்த உலகம் முழுவதிலும் (இந்த வித்யையின் மூலமாக) க்ஷத்திரியர்களுக்கே உபதேசிக்கப்பட்டது என்று கூறி அந்த கெளதமர் இவ்வாறு கூறினார் -
तं ह गौतमं चिरं दीर्घकालं वस — इत्येवमाज्ञापयाञ्चकार आज्ञप्तवान् । यत्पूर्वं प्रख्यातवान् राजा विद्याम् , यच्च पश्चाच्चिरं वसेत्याज्ञप्तवान् , तन्निमित्तं ब्राह्मणं क्षमापयति हेतुवचनोक्त्या ।
அனுவாதம் - அந்த கெளதமரை நீண்டகாலம் அங்கு வசிக்கும்படி ஆக்ஞாபித்தார். ராஜா முன்பு எந்த வித்யையை கூறுகிறேன் என்றும் நீண்டகாலம் தங்க ஆக்ஞாபித்ததின் காரணமான ஹேது வசனத்தால் அந்த பிராஹ்மணரால் மன்னிக்கப்பட்டவரானார்.
तं ह उवाच राजा — सर्वविद्यो ब्राह्मणोऽपि सन् यथा येन प्रकारेण मा मां हे गौतम अवदः त्वम् — तामेव विद्यालक्षणां वाचं मे ब्रूहि — इत्यज्ञानात् , तेन त्वं जानीहि । तत्रास्ति वक्तव्यम् — यथा येन प्रकारेण इयं विद्या प्राक् त्वत्तो ब्राह्मणान् न गच्छति न गतवती, न च ब्राह्मणा अनया विद्यया अनुशासितवन्तः, तथा एतत्प्रसिद्धं लोके यतः, तस्मादु पुरा पूर्वं सर्वेषु लोकेषु क्षत्त्रस्यैव क्षत्त्रजातेरेव अनया विद्यया प्रशासनं प्रशास्तृत्वं शिष्याणामभूत् बभूव ; क्षत्त्रियपरम्परयैवेयं विद्या एतावन्तं कालमागता ; तथाप्यहेतां तुभ्यं वक्ष्यामि ; त्वत्सम्प्रदानादूर्ध्वं ब्राह्मणान्गमिष्यति ; अतो मया यदुक्तम् , तत्क्षन्तुमर्हसीत्युक्त्वा तस्मै ह उवाच विद्यां राजा ॥
அனுவாதம் - ராஜா அவரிடம் கூறினார் - எல்லா வித்யையும் உடைய பிராஹ்மணனராய் இருந்தாலும் ஹே கெளதமரே! எவ்விதமாகவாவது எனக்கு நீங்கள் அந்த வித்யா லக்ஷணங்களின் விஷயத்தை கூறுங்கள் என்று அக்ஞானத்தால் கேட்டீரோ அதைக் கூறுகிறேன் தெரிந்துகொள் என்றார். இந்த விஷயத்தில் எவ்வாறு இந்த வித்யா உனக்குமுன் பிராஹ்மணர்களுக்கு சென்று அடையவில்லையோ அதை இப்பொழுது கூறவேண்டும். இதற்கு பிராஹ்மணர்களுக்கு இந்த வித்யை உபதேசிக்கப்படவில்லை. ஏன் எனில் இந்த விஷயம் உலகில் பிரசித்தமானது என்பது முன்காலத்தில் உலகம் முழுவதிலும் க்ஷத்திரிய ஜாதியினருக்கே இந்த வித்யாவின் மூலமாய் சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்யப்பட்டதாய் இருந்தது. இந்த காலம் வரை க்ஷத்திரிய பரம்பரைக்கே இந்த வித்யா இருந்தது. அவ்வாறு இருந்தாலும் நான் உங்களுக்கு அந்த வித்யையைக் கூறுகிறேன். உங்களுக்கு அளித்ததற்குப்பின் பிராஹ்மணர்களுக்கும் சென்று அடையும். ஆகையால் நான் முன்பு கூறியதை மன்னிக்கவேண்டும் என்று கூறி ராஜா அவருக்கு அந்த வித்யையை உபதேசித்தார்.
इति तृतीयखण्डभाष्यम् ॥
‘पञ्चम्यामाहुतावापः’ इत्ययं प्रश्नः प्राथम्येनापाक्रियते, तदपाकरणमनु इतरेषामपाकरणमनुकूलं भवेदिति । अग्निहोत्राहुत्योः कार्यारम्भो यः, स उक्तो वाजसनेयके — तं प्रति प्रश्नाः । उत्क्रान्तिराहुत्योर्गतिः प्रतिष्ठा तृप्तिः पुनरावृत्तिर्लोकं प्रत्युत्थायी इति । तेषां च अपाकरणमुक्तं तत्रैव — ‘ते वा एते आहुती हुते उत्क्रामतस्ते अन्तरिक्षमाविशतस्ते अन्तरिक्षमेवाहवनीयं कुर्वाते वायुं समिधं मरीचीरेव शुक्लामाहुतिं ते अन्तरिक्षं तर्पयतस्ते तत उत्क्रामत’ (शत. ब्रा. ११ । ६ । २ । ६) इत्यादि ; एवमेव पूर्ववद्दिवं तर्पयतस्ते तत आवर्तेते । इमामाविश्य तर्पयित्वा पुरुषमाविशतः । ततः स्त्रियमाविश्य लोकं प्रत्युत्थायी भवति इति ।
அனுவாதம் - அ.கை - “पम्यामाहुतावाप” (பஞ்சம்ய-மாஹுதாவாப) என்பதில் இந்தக் கேள்வி எல்லாவற்றிக்கும் முதலிலேயே நிராகரிக்கப்படுகிறது. அதை நிராகரிப்பதால் மற்றவைகளை நிராகரிப்பதற்கு அனுகூலமாகின்றது. அக்னி ஹோத்திர ஆகுதிகளுக்கு எந்த காரியம் ஆரம்பிக்கப்படுகிறதோ அது வாஜசநேய உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. ஆஹுதிகளின் உத்கிராந்தம், கதி, பிரதிஷ்டா, த்ருப்தி, புனராவிர்த்தி, அவ்வாறே லோகத்திற்குத் திரும்பிவருதல் ஆகியவைகளைக்குறித்து இந்த கேள்விகள். அவைகளின் நிராகரணமும் இவ்வாறு கூறப்பட்டது- “ते वा एते आहुती हुते उत्क्रामतस्ते अन्तरिक्षमाविशतस्ते अन्तरिक्षमेवाहवनीयं कुर्वाते वायुं समिधं मरीचीरेव शुक्लामाहुतिं ते अन्तरिक्षं तर्पयतस्ते तत उत्क्रामतः” (தே வா ஏதே ஆஹுதி ஹீதே உத்க்ராமதஸ்தே அந்தரிக்ஷமாவிஷதஸ்தே அந்தரிக்ஷமேவாஹவநீயம் குர்வாதே வாயும் சமிதம் மரீசீரேவ சுக்லாமாஹீதிம் தே அந்தரிக்ஷம் தர்பயதஸ்தே தத உத்க்ராமத:) என்பது முதலியவைகளைப் போலவே முன்புபோல் த்யுலோகத்தை திருப்தி செய்கிறான். அதன்பின் அவர்களுக்கு புனராவிர்த்தி உண்டாகிறது. அங்கிருந்து இந்த லோகத்தில் பிரவேசித்தபின் திருப்தி செய்தபின் (ரேதஸ்) புருஷனிடத்தில் பிரவேசிக்கிறது. அதன் ஸ்திரீயினிடத்தில் பிரவேசித்து மறுபடியும் பரலோகத்திற்கு செல்வதற்கான கர்மங்களை செய்து அதனால் அதை அடையச் செய்கிறது.
तत्र अग्निहोत्राहुत्योः कार्यारम्भमात्रमेवंप्रकारं भवतीत्युक्तम् , इह तु तं कार्यारम्भमग्निहोत्रापूर्वविपरिणामलक्षणं पञ्चधा प्रविभज्य अग्नित्वेनोपासनमुत्तरमार्गप्रतिपत्तिसाधनं विधित्सन् आह । असौ वाव लोको गौतमाग्निरित्यादि ।
அனுவாதம் - அங்கு (வாஜசநேய உபநிஷத்தில்) அக்னி ஹோத்திர ஆஹுதிகளின் காரிய ஆரம்ப பிரகாரமாகவே ஆகிறது என்று கூறப்பட்டது. இங்கு அந்த காரிய ஆரம்ப அக்னிஹோத்திர அபூர்வத்தின் பரிணாமரூபம் அந்த காரிய ஆரம்பத்தை ஐந்துவிதமாகப் பிரித்து அதில் உத்தரமார்க்கத்தின் பிராப்த்திக்காக சாதனரூபமாய் அக்னி பாவமாய் உபாசனையை விதானம் செய்வதற்கு விரும்பி சுருதி கெளதமாக்னி என்பது முதலியவைகளைக் கூறுகிறது.
इह सायम्प्रातरग्निहोत्राहुती हुते पयआदिसाधने श्रद्धापुरःसरे आहवनीयाग्निसमिद्धूमार्चिरङ्गारविस्फुलिङ्गभाविते कर्त्रादिकारकभाविते च अन्तरिक्षक्रमेणोत्क्रम्य द्युलोकं प्रविशन्त्यौ सूक्ष्मभूते अप्समवायित्वादप्शब्दवाच्ये श्रद्धाहेतुत्वाच्च श्रद्धाशब्दवाच्ये । तयोरधिकरणः अग्निः अन्यच्च तत्सम्बन्धं समिदादीत्युच्यते । या च असावग्न्यादिभावना आहुत्योः, सापि तथैव निर्दिश्यते ।
அனுவாதம் - இந்த உலகத்தில் ஜலம் முதலிய சாதனங்கள் எதற்கோ அது சிராத்தாபூர்வமாக ஆகவனீய அக்னி, சமித், தூமம், அர்ச்சி, அங்காரம், மேலும் விஸ்புலிங்கங்கள் அவ்வாறே கர்த்தா முதலிய காரகங்களின் பாவங்கள் ஆகியவைகள் அக்னிஹோத்திரத்தின் சாயங்காலம், அதிகாலைகளில் செய்யும் இரண்டு ஆகுதிகள் அந்தரிக்ஷ கிரமத்தால் த்யுலோகத்தில் பிரவேசிக்கச்செய்து சூக்ஷ்மமாயும் ஜலமயமாயும் ஆகி “अप्” (அப்ஜல) சப்தத்தின் வாச்சியமாயும், சிரத்தை ஏற்படுவதின் காரணமாக சிரத்தை என்னும் சப்தத்திற்கு வாச்சியமாயும் ஆகிறது. அவைகளின் ஆஸ்ரயரூபமான அக்னி அதில் சம்பந்தப்பட்ட சமித் முதலியவைகள் வர்ணிக்கப்பட்டது. அவ்வாறே ஆஹுதிகளில் அக்னி முதலியவைகளின் பாவனைகள் எது உள்ளதோ அதுவும் நிர்தேசம் செய்யப்பட்டது.
असौ वाव लोको गौतमाग्निस्तस्यादित्य एव समिद्रश्मयो धूमोऽहरर्चिश्चन्द्रमा अङ्गारा नक्षत्राणि विस्फुलिङ्गाः ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஹே கெளதம! த்யுலோகம் அக்னி என்பது பிரசித்தம். அதற்கு ஆதித்யன் சமித். கிரணங்கள் தூமம் (புகை), தினம், ஜ்வாலை, சந்திரன் அங்காரம் (தணல்), நக்ஷத்திரம் விஸ்புலிங்கங்கள் (தீப்பொறிகள்).
असौ वाव लोकोऽग्निः हे गौतम — यथाग्निहोत्राधिकरणमाहवनीय इह । तस्याग्नेर्द्युलोकाख्यस्य आदित्य एव समित् , तेन हि इद्धः असौ लोको दीप्यते, अतः समिन्धनात् समिदादित्यः रश्मयो धूमः, तदुत्थानात् ; समिधो हि धूम उत्तिष्ठति । अहरर्चिः प्रकाशसामान्यात् , आदित्यकार्यत्वाच्च । चन्द्रमा अङ्गाराः, अह्नः प्रशमेऽभिव्यक्तेः ; अर्चिषो हि प्रशमेऽङ्गारा अभिव्यज्यन्ते । नक्षत्राणि विस्फुलिङ्गाः, चन्द्रमसोऽवयवा इव विप्रकीर्णत्वसामान्यात् ॥
அனுவாதம் - ஹே கெளதமரே! எவ்வாறு இந்த உலகத்தில் அக்னிஹோத்ர அதிகரணமாகிய (ஆஸ்ரயமாகிய) ஆஹவனீய அக்னியோ அவ்வாறு அந்த த்யுலோக அக்னியாகும். ஆகையால் த்யுலோகம் எனப்படும் அக்னிக்கு ஆதித்யன் சமித் ஆகும். அதனுடைய வெளிச்சத்தால் அந்த லோகம் பிரகாசிக்கிறது. ஆகையால் நன்றாக பிரகாசிப்பதால் ஆதித்யன் சமித். கதிர்கள் மேல் எழும்புவதால் புகையாகும். சமித்திலிருந்து அல்லவா புகை கிளம்புகிறது. பிரகாசமாக இருப்பதாலும், சூரியனுடைய காரியமாய் இருப்பதாலும் பகல் ஜ்வாலையாகும். பகல் மறையும்பொழுது சந்திரன் தோன்றுவதால் தணல் ஆகும். ஏன்எனில் கதிர்கள் சாந்தமானபின் தணல் வெளிப்படுகிறது. சந்திரனுக்கு அவயம் போல் நக்ஷத்திரங்கள் சிதறி இருப்பதால் சமானமாக இருப்பதால் நக்ஷத்திரங்கள் தீப்பொறிகள் ஆகும்.
तस्मिन्नेतस्मिन्नग्नौ देवाः श्रद्धां जुह्वति तस्या आहुतेः सोमो राजा सम्भवति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அந்த இந்த (த்யுலோகரூப) அக்னியில் தேவகணங்கள் சிரத்தையாக ஹவனம் செய்கின்றனர். இந்த ஆஹுதியினால் சோமராஜா உத்பத்தி ஆகிறார்.
तस्मिन्नेतस्मिन् यथोक्तलक्षणेऽग्नौ देवा यजमानप्राणा अग्न्यादिरूपा अधिदैवतम् । श्रद्धाम् अग्निहोत्राहुतिपरिणामावस्थारूपाः सूक्ष्मा आपः श्रद्धाभाविताः श्रद्धा उच्यन्ते,
‘पञ्चम्यामाहुतावापः पुरुषवचसो भवन्ति’ (छा. उ. ५ । ३ । ३) इत्यपां होम्यतया प्रश्ने श्रुतत्वात् ;
‘श्रद्धा वा आपः श्रद्धामेवारभ्य प्रणीय प्रचरन्ति’ (तै. ब्रा. ३ । २ । ४ । २८) इति च विज्ञायते । तां श्रद्धाम् अब्रूपां जुह्वति ;
அனுவாதம் - அந்த இந்த கூறப்பட்ட லக்ஷணங்களை உடைய அக்னியில் தேவதைகள் (அதிதெய்வங்கள்) அதாவது யஜமான பிராணன்களான அக்னி முதலிய ரூபங்களான அதிதேவதைகள் சிரத்தையுடன் அக்னிஹோத்திர ஆகுதியின் பரிணாமா அவஸ்தா ரூபங்களான சூக்ஷ்மமான ஜலம் ஆகியவைகளை, சிரத்தையாக பாவிப்பதால் சிரத்தை என்று கூறப்படுகின்றன. ஐந்தாவது (पम्याम्) (பஞ்சம்யாம்) ஆஹுதி புருஷன் என்று கூறப்படுகின்றன என்பதால் ஜலத்தை ஹோமம் செய்வதாக என்று அந்தக் கேள்வியால் (பிரசன்னத்தால்) கேட்டிருக்கின்றோம். “श्रद्धा वा आपः, श्रद्धामेवारभ्य प्रणीय प्रचरन्ति” (சிரத்தா வா ஆப: சிரத்தாமேவாரப்ய ப்ரணீய ப்ரச்சரந்தி) என்று அறிகிறோம். அந்த ஜல ரூபமான சிரத்தையை ஹவனம் செய்கின்றனர்
तस्या आहुतेः सोमो राजा अपां श्रद्धाशब्दवाच्यानां द्युलोकाग्रौ हुतानां परिणामः सोमो राजा सम्भवति — यथा ऋग्वेदादिपुष्परसा ऋगादिमधुकरोपनीतास्ते आदित्ये यशआदिकार्यं रोहितादिरूपलक्षणमारभन्ते इत्युक्तम् — तथेमा अग्निहोत्राहुतिसमवायिन्यः सूक्ष्माः श्रद्धाशब्दवाच्या आपः द्युलोकमनुप्रविश्य चान्द्रं कार्यमारभन्ते फलरूपमग्निहोत्राहुत्योः ।
அனுவாதம் - அந்த ஆஹுதியிலிருந்து ராஜாசோமம் அதாவது சிரத்தா சப்த வாச்சியமான ஜலத்தை த்யுலோக ரூபமான அக்னியில் ஹவனம் செய்தபின் அதன் பரிணாமரூப பிரகாசமுடைய சந்திரன் ஆகின்றது. எவ்வாறு ரிக்வேதம் முதலிய புஷ்பரசம் ரிக் முதலிய தேனீக்கள் எவ்வாறு சேகரிக்கின்றதோ அவ்வாறு ஆதித்தியனிடமுள்ள சிகப்பு முதலிய லக்ஷணங்களும் யசஸ் (புகழ்) முதலிய காரியங்களும் ஆரம்பம் ஆகிறது என்று கூறப்பட்டது. அவ்வாறு அக்னிஹோத்ரத்தின் ஆஹுதிகளுடன் சம்பந்தமுடைய சிரத்தா சப்தவாச்சியமான சூக்ஷ்ம ஜலம் த்யுலோகத்தில் பிரவேசித்து அக்னி ஹோத்திரத்தின் ஆஹுதிகளின் பலரூபமான சந்திரனுடைய சம்பந்தமான காரியம் ஆரம்பம் ஆகிறது.
यजमानाश्च तत्कर्तार आहुतिमया आहुतिभावना भाविता आहुतिरूपेण कर्मणा आकृष्टाः श्रद्धाप्समवायिनो द्युलोकमनुप्रविशय सोमभूता भवन्ति । तदर्थं हि तैरग्निहोत्रं हुतम् । अत्र तु आहुतिपरिणाम एव पञ्चाग्निसम्बन्धक्रमेण प्राधान्येन विवक्षित उपासनार्थं न यजमानानां गतिः । तां त्वविदुषां धूमादिक्रमेणोत्तरत्र वक्ष्यति, विदुषां च उत्तरा विद्याकृताम् ॥
அனுவாதம் - அந்த ஹவனத்தை செய்யும் கர்த்தாவான எஜமானன் ஆஹுதிமயமான அதாவது ஆஹுதியை பாவித்து பாவிக்கப்பட்ட ஆஹுதிரூப கர்மத்தால் ஆகர்ஷிக்கப்பட்ட சிரத்தாரூப ஜலத்தால் பூர்ணமாகி த்யுலோகத்தில் பிரவேசித்து சந்திரரூபமாகின்றனர். ஏன்எனில் அதற்காகவே அக்னி ஹோத்திரம் செய்கின்றனர். ஆனால் இங்கு உபாசனையை பிரதானமாக பஞ்சாக்னி சம்பந்தத்தால் ஆஹுதிகளின் பரிணாமத்தை கூறுவதிலேயே விருப்பம். ஆதலால் இங்கு யஜமானனின் கதிக்கு கூறப்படவில்லை. அந்த அவித்வான்களுக்கு தூமாதி மார்க்கத்தையும், வித்யையினால் அடையப்பட்ட வித்வான்களுக்கு உத்திர மார்க்கத்தையும் இனி வர்ணிக்கப்படுகிறது.
इति चतुर्थखण्डभाष्यम् ॥
அனுவாதம் - இப்பொழுது இந்த லோகத்தில் இருந்து வேறு லோகத்திற்கு பிரஜைகள் எங்கு செல்கின்றனர் என்பது தெரியுமா? என்ற கேள்வியில் உள்ள சந்தேஹத்தைப் போக்குவதற்காக அதன் மஹிமை கூறப்படுகிறது.
तद्य इत्थं विदुः । ये चेमेऽरण्ये श्रद्धा तप इत्युपासते तेऽर्चिषमभिसम्भवन्त्यर्चिषोऽहरह्न आपूर्यमाणपक्षमापूर्यमाणपक्षाद्यान्षडुदङ्ङेति मासाꣳस्तान् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இவ்வாறு அறிகிறானோ அவன் அவ்வாறே வனத்தில் சிரத்தையுடன் உபாசிக்கின்றானோ அவன் (மரணத்திற்குப் பின்) அர்ச்சிர அபிமானி தேவதைகளை அடைகின்றான். அர்ச்சிர அபிமானி தேவதைகளிடமிருந்து தின அபிமான தேவதைகளை அடைகிறான். தின அபிமானிகளிடமிருந்து சுக்லபக்ஷ அபிமான தேவதைகளையும், சுக்லபக்ஷ அபிமானி தேவதைகளிடமிருந்து சூரியன் வடக்கு நோக்கி செல்கின்ற ஆறு மாதங்களை அடைகிறான்.
मासेभ्यः संवत्सरꣳ संवत्सरादादित्यमादित्याच्चन्द्रमसं चन्द्रमसो विद्युतं तत्पुरुषोऽमानवः स एनान्ब्रह्म गमयत्येष देवयानः पन्था इति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - இந்த மாதங்களில் இருந்து வருடங்களுக்கும், வருடங்களில் இருந்து சூரியனுக்கும், சூரியனிலிருந்து சந்திரனுக்கும், சந்திரனிலிருந்து மின்னலையும் அடைகிறான். அங்கு அமானவ புருஷன் (மனிதனல்லாத புருஷன்) அவனை (காரிய) பிரஹ்மத்தை அடையச் செய்கின்றான். இது தேவையான மார்க்கமாகும்.
तत् तत्र लोकं प्रति उत्थितानाम् अधिकृतानां गृहमेधिनां ये इत्थम् एवं यथोक्तं पञ्चाग्निदर्शनम् — द्युलोकाद्यग्निभ्यो वयं क्रमेण जाता अग्निस्वरूपाः पञ्चाग्न्यात्मानः — इत्येवं विदुः जानीयुः ।
அனுவாதம் - அங்கு மேல் உலகத்திற்கு செல்வதற்கான அதிகாரமுடைய க்ருஹத்தில் (கிரஹ்ஸ்தாஸ்ரமத்தில்) உள்ளவர்கள் இவ்வாறு கூறப்பட்ட பஞ்சாக்னி தர்சனமாகிய த்யுலோக முதலிய அக்னியினால் கிரமமாக அடைந்த நாம் அக்னி ஸ்வரூபமான பஞ்சாக்னிமயம் ஆனவர் என்று அறிவர்.
कथमवगम्यते इत्थं विदुरिति गृहस्था एव उच्यन्ते नान्य इति ।
அனுவாதம் - சங்கை - இவ்வாறு கிரஹஸ்தர்கள் மட்டுமே அறிவார்கள், மற்றவர்கள் அல்ல என்று கூறுவது எவ்வாறு அறிந்துகொள்வது?
गृहस्थानां ये त्वनित्थंविदः केवलेष्टापूर्तदत्तपराः ते धूमादिना चन्द्रं गच्छन्तीति वक्ष्यति । ये च अरण्योपलक्षिता वैखानसाः परिव्राजकाश्च श्रद्धा तप इत्युपासते, तेषां च इत्थंविद्भिः सह अर्चिरादिना गमनं वक्ष्यति, पारिशेष्यादग्निहोत्राहुतिसम्बन्धाच्च गृहस्था एव गृह्यन्ते — इत्थं विदुरिति ।
அனுவாதம் - ஸமாதானம் - கிரஹஸ்தர்களில் எவர்கள் இவ்வாறு அறியாமல் இஷ்டாபூர்த்தி அவ்வாறே தானம் செய்வதிலேயே இருப்பவர்கள் தூமாதிகள் மூலமாய் சந்திரனை அடைகின்றனர் என்பது இனி சுருதி கூறப்போகிறது. எவர்கள் வனத்தை ஆச்ரயித்து வானப்ரஸ்தர்களாயும், அவ்வாறே சந்நியாசிகளாயும் இருக்கின்றனரோ அவர்கள் சிரத்தை, தபஸ் என்று உபாசிக்கின்றனர். அவர்கள் இவ்வாறு அறிந்தவர்களுடன் (உத்தர) அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்வது சுருதி கூறப்போகிறது. ஆகையால் பாரிசேஷத்தாலும் அக்னி ஹோத்திராதி ஆஹுதிகளுடனும் சம்பந்தப்படுவதால் “इत्थं विदुः” (இவ்வாறு அறிந்தவர்) என்று கூறுவதால் கிரஹஸ்தர்களையும் குறிப்பதாக அறிந்துகொள்ள வேண்டும்.
ननु ब्रह्मचारिणोऽप्यगृहीता ग्रामश्रुत्या अरण्यश्रुत्या च अनुपलक्षिता विद्यन्ते, कथं पारिशेष्यसिद्धिः ?
அனுவாதம் - சங்கை - கிராம சுருதியினாலும், அரண்ய சுருதியினாலும் கிரஹிக்கபடாவிடினும் பிரஹ்மச்சாரிகளும் இருக்கின்றனர். உங்களுடைய பாரிசேஷம் எவ்வாறு சித்திக்கும்?
नैष दोषः । पुराणस्मृतिप्रामाण्यात् ऊर्ध्वरेतसां नैष्ठिकब्रह्मचारिणाम् उत्तरेणार्यम्णः पन्थाः प्रसिद्धः, अतः तेऽप्यरण्यवासिभिः सह गमिष्यन्ति । उपकुर्वाणकास्तु स्वाध्यायग्रहणार्था इति न विशेषनिर्देशार्हाः ।
அனுவாதம் - ஸமாதானம் - இந்த தோஷம் இல்லை. புராணம் ஸ்மிருதி பிரமாணத்தில் ऊर्ध्वरेतस्” (ஊர்த்வரேதஸ்) மிகக்கடினமாக பிரஹ்மச்சரியத்தை கடைபிடிக்கும் நைஷ்ட்டிக பிரஹ்மச்சாரிகளுக்கு சூரிய சம்பந்தமான உத்தரமார்க்கம் பிரசித்தம். ஆகையால் அவர்களும் வனத்தில் வாசம் செய்பவர்களுடன் மேலே செல்கின்றனர். அவ்வாறு வேத அத்யயனம் செய்யும் பிரஹ்மச்சாரிகள் ஸ்வாத்தியாம் கிரஹிப்பதற்காக இருக்கின்றனர். ஆகையால் அவர்கள் விசேஷமாக கூறுவதற்கு அருகதை அற்றவர்கள் ஆகின்றனர்.
ननु ऊर्ध्वरेतस्त्वं चेत् उत्तरमार्गप्रतिपत्तिकारणं पुराणस्मृतिप्रामाण्यादिष्यते, इत्थंवित्त्वमनर्थकं प्राप्तम् ।
அனுவாதம் - சங்கை - புராணஸ்மிருதி பிரமாணங்களால் உத்தரமார்க்கத்தை அடைவதற்கு காரணமான மிகக்கடினமாக பிரஹ்மசர்யத்தை ஏற்றுக்கொண்டால் “इत्थंवित्त्वम्” (இத்தம்வித்வம்= பஞ்சாக்னிவித்யா) வியர்த்தமாகுமே? (பிரயோஜனமற்றதாகுமே?
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறு அல்ல, ஏன் எனில் கிரஹஸ்தர்களுக்கு சார்த்தமாகிறது. எந்த கிரஹஸ்தர்கள் இவ்வாறு அறியவில்லையோ அவர்களுக்கு ஸ்வாபாவமாகவே தக்ஷிண தூம முதலிய மார்க்கங்கள் பிரசித்தமாகும். இவைகளை இவ்வாறு அறிந்தவர்கள் அல்லது அதற்கு வேறான சகுண பிரஹ்மத்தை உபாசிப்பவர்கள் “अथ यदु चैवास्मिञ्शव्यं कुर्वन्ति यदि च नार्चिषमेव” (அத யது சைவாஸ்மிஞ்சவ்யம் குர்வந்தி யதி நார்சிசேமேவ = இந்த சகுண உபாசகனுக்கு பிரேத கர்மா செய்தாலும், செய்யாவிட்டாலும் அர்ச்சிராதி மார்க்கத்தையே அடைகின்றான்) இந்த ஸ்ருதி ரூப லிங்கத்தை (அடையாளத்தை) அனுசரித்து உத்தர மார்க்கத்தில் செல்கின்றனர்.
ननु ऊर्ध्वरेतसां गृहस्थानां च समाने आश्रमित्वे ऊर्ध्वरेतसामेव उत्तरेण पथा गमनं न गृहस्थानामिति न युक्तम् अग्निहोत्रादिवैदिककर्मबाहुल्ये च सति ;
அனுவாதம் - சங்கை - “ऊर्ध्वरेता” (ஊர்த்வரேதஸ்) (பிரஹ்மச்சரியத்தை திடமாக அனுஷ்டிப்பவனும்) கிரஹஸ்தனும் ஆகிய இவர்களின் ஆஸ்ரமம் சமமானதேயாகும். ஆகையால் ஊர்த்வரேதஸ்களுக்கு மட்டுமே உத்தராயண மார்க்கத்தில் செல்கின்றனர் என்றும், கிரஹஸ்தர்கள் அக்னி ஹோத்திரம் முதலிய வைதிக கர்மங்கள் அதிகமாக இருந்தும் அவர்களுக்கு இல்லை என்று கூறுவது பொருந்தாதே?
नैष दोषः, अपूता हि ते — शत्रुमित्रसंयोगनिमित्तौ हि तेषां रागद्वेषौ, तथा धर्माधर्मौ हिंसानुग्रहनिमित्तौ, हिंसानृतमायाब्रह्मचर्यादि च बह्वशुद्धिकारणमपरिहार्यं तेषाम् , अतोऽपूताः । अपूतत्वात् न उत्तरेण पथा गमनम् । हिंसानृतमायाब्रह्मचर्यादिपरिहाराच्च शुद्धात्मानो हि इतरे, शत्रुमित्ररागद्वेषादिपरिहाराच्च विरजसः ; तेषां युक्त उत्तरः पन्थाः ।
அனுவாதம் - ஸமாதானம் - இந்த தோஷம் இல்லை. அவர்கள் பவித்திரம் அற்றவர்கள். பகைவர்கள், நண்பர்களின் சேர்க்கையின் காரணமாக அவர்களின் ராகதுவேஷத்தாலும், அவ்வாறே ஹிம்சை செய்வது, கிருபை காட்டுவது இதனாலும் தர்மா தர்மங்களாலும் (புண்ய பாபங்களாலும்) அவர்கள் பவித்திரமற்றவர்களாய் இருக்கின்றனர். அவர்களுக்கு ஹிம்சை, பொய் பேசுதல், மாயை, பிரஹ்மச்சரியத்தை கடைபிடிக்காமல் இருத்தல் முதலிய அநேக அசுத்திகளின் காரணத்தால் அதைவிடுவது மிகக்கடினம் ஆகையால் அவர்கள் பவித்திரமற்றவர்கள், அவர்கள் பவித்திரம் அற்றவர்களாய் இருப்பதால் உத்தராயண மார்க்கம் அவர்களுக்குச் சம்பவிக்காது. ஹிம்சை, பொய்பேசுதல், மாயை, பிரஹ்மச்சரியத்தை கடைபிடிக்காமல் இருப்பது இவைகளை கைவிட்டால் சுத்தசித்தம் உடையவர்களும், எதிரி, நண்பன் ராகதுவேஷங்கள் நீங்கிய மலமற்றவர்களுக்கும் உத்தரயாண மார்க்கம் பொருந்தும்.
तथा च पौराणिकाः — ‘ये प्रजामीषिरेऽधीरास्ते श्मशानानि भेजिरे । ये प्रजां नेषिरे धीरास्तेऽमृतत्वं हि भेजिरे’ ( ? ) इत्याहुः ।
அனுவாதம் - பெளராணிகர்கள் - “ये प्रजामीषिरेऽधीरास्ते श्मशानानि भेजिरे। ये प्रजां नेषिरे धीरास्तेऽमृतत्वं हि भेजिरे” (யே பிரஜாமீஷிரேஅதீராஸ்தே ச்மசானானி பேஜிரே. யே பிரஜாம் நேஷிரே தீராஸ்தேஅம்ருதத்தும் ஹி பேஜிரே = மந்தபுத்தி உடைய புருஷர்கள் சந்தானத்தில் இச்சை கொண்டு ஸ்மசானத்தை அடைகின்றனர். ஆனால் புத்திமான்கள் சந்ததியில் இச்சையற்று அமரத்துவத்தை அடைகின்றனர்) என்று கூறுகின்றனர்.
इत्थंविदां गृहस्थानामरण्यवासिनां च समानमार्गत्वेऽमृतत्वफले च सति, अरण्यवासिनां विद्यानर्थक्यं प्राप्तम् ; तथा च श्रुतिविरोधः —
‘न तत्र दक्षिणा यन्ति नाविद्वांसस्तपस्विनः’ (शत. ब्रा. १० । ५ । ४ । १६) इति,
‘स एनमविदितो न भुनक्ति’ (बृ. उ. १ । ४ । १५) इति च विरुद्धम् ।
அனுவாதம் - இவ்வாறு அறிந்துள்ள கிரஹஸ்தர்களுக்கும் வனவாசிகளுக்கும் சமானமான மார்க்கமான அம்ருதத்துவ (மரண தர்மமற்ற) பலம் இருக்கும்பொழுது வனவாசிகளுடைய வித்யா அர்த்தமற்றதாகிவிடும். அவ்வாறே “न तत्र दक्षिणा यन्ति नाविद्वांसस्तपस्विनः” (ந தத்ர தக்ஷிணாயாந்த்தி நாவித்வாம்சஸ்தபஸ்வின: = அங்கு தக்ஷிண மார்கியும், அக்ஞானியும் தபஸ்வீ ஆகமுடியாது) என்ற சுருதிக்கு விரோதமாகும். அவ்வாறே “स एनमविदितो न भुनक्ति” (ச ஏனமவிதிதோ ந புனக்த்தி = தனக்கு ஞானம் உண்டானபின் அவன் (பரமாத்மா) இந்த ஜீவனைக் காப்பாற்றமாட்டான்) என்று கூறியதும் விருத்தமாகும்.
न, आभूतसम्प्लवस्थानस्यामृतत्वेन विवक्षितत्वात् । तत्रैवोक्तं पौराणिकैः — ‘आभूतसम्प्लवं स्थानममृतत्वं हि भाष्यते’ (वि. पु. २ । ८ । ९७) इति । यच्च आत्यन्तिकममृतत्वम् , तदपेक्षया ‘न तत्र दक्षिणा यन्ति’ ‘स एनमविदितो न भुनक्ति’ इत्याद्याः श्रुतयः — इत्यतो न विरोधः ।
அனுவாதம் - ஸமாதானம் - இங்கு அம்ருதத்துவம் என்பது ஜீவர்கள் பிரளய காலம்வரை ஜீவித்து இருப்பது என்று கூறப்படுகிறது. இதை பெளராணிகர்கள் இவ்வாறு கூறுகின்றனர் -“आभूतसंप्लवं स्थानममृतत्वं हि भाष्यते” (ஆபூதச்ம்ப்லவம் ஸ்தானமமிருதத்வம் ஹி பாஷ்யதே) = பூதங்கள் பிரளயம் வரை இருப்பதே அம்ருதத்துவம் என்று அல்லவா கூறப்படுகிறது) என்று. ஆனால் இது ஆத்யந்திக (அந்தமுடைய) அம்ருதத்துவம் இதை அபேக்ஷித்து “न तत्र दक्षिणा यन्ति” (ந தத்ர தக்ஷிணா யந்தி = அவர்கள் தக்ஷிண மார்க்கத்தை அடையமாட்டார்கள்), “स एनमविदितो न भुनक्ति” (ஸ ஏனமவிதிதோ ந புனக்த்தி = தன் ஞானம் இல்லாத ஜீவர்களை பரமாத்மா அவர்களுக்கு மோக்ஷமளித்துக் காப்பாற்றாது) ஆகிய சுருதிகள் இருக்கின்றன. ஆகையால் இதில் விரோதம் ஒன்றும் இல்லை.
‘न च पुनरावर्तन्ते’ (छा. उ. ८ । १५ । १) इति ‘इमं मानवमावर्तं नावर्तन्ते’ (छा. उ. ४ । १५ । ५) इत्यादि श्रुतिविरोध इति चेत् ।
அனுவாதம் - சங்கை - “न च पुनरावर्तन्ते” (ந ச புனராவர்த்ந்தே) என்றும், “इमं मानवमावर्तं नावर्तन्ते” (இமம் மானவாமாவர்தம் நாவர்தந்தே) முதலிய சுருதிகளுக்கு விரோதமாகும்.
न ; ‘इमं मानवम्’ इति विशेषणात् ‘तेषामिह न पुनरावृत्तिरस्ति’ (बृ. मा. ६ । १ । १८) इति च । यदि हि एकान्तेनैव नावर्तेरन् , इमं मानवम् इह इति च विशेषणमनर्थकं स्यात् । इममिह इत्याकृतिमात्रमुच्यत इति चेत् , न ; अनावृत्तिशब्देनैव नित्यानावृत्त्यर्थस्य प्रतीतत्वात् आकृतिकल्पना अनर्थिका । अतः इममिह इति च विशेषणार्थवत्त्वाय अन्यत्र आवृत्तिः कल्पनीया ।
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறு அல்ல. “इमं मानवम्” (இமம் மானவம்) என்று விசேஷணம் இருப்பதால் “तेषामिह न पुनरावृत्तिरस्ति” (தேஷாமிஹ ந புனராவிர்த்தி-ரஸ்தி) இவ்வாறு கூறப்பட்டுள்ளது. எவ்விதமாகவும் புனராவிர்த்தி இல்லையெனில் “इमं मानवं इह” ஆகிய விசேஷணங்கள் அர்த்தமற்றதாகிவிடும். “इमम्” “इह” ஆகியவை ஆகிருதியை (ரூபத்தை) மட்டும் கூறுகிறது என்றால், அவ்வாறு அல்ல. ஏன்எனில் நித்ய அநாவிர்த்தி ரூபத்தின் அர்த்தம் அறியப்படுவதாய் இருந்தால் “अनावृत्तिः” (அநாவிர்த்தி:) என்ற சப்தத்தால் கூறப்பட்டிருக்கும். ஆகையால் இதில் ஆகிருதி கல்பனை அர்த்தமற்றதாகிறது. ஆகையால் “इमम्” “इह” ஆகிய விசேஷணங்கள் அர்த்தமுடையதாக இருப்பதால் இதைத்தவிர மற்றதில் ஆவிர்த்தி கல்பிக்கவேண்டும்.
அனுவாதம் - “सदेकमेवाद्वितीयम्” (சதேகமேவாத்-விதீயம்) என்ற அனுபவம் உள்ளவர்கள் (என்ற ஞானம் உள்ளவர்கள்) சிரஸின் ஸ்தானத்தில் உள்ள நாடிகளின் மூலமாய் அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்வது இல்லை. “ब्रह्मैव सन्ब्रह्माप्येति” (பிரஹ்மை ஸன்பிரஹ்மப்யேதி), “तस्मात्त-iºÉ´ÉǨɦɴÉiÉ” (தஸ்மாத்தத்சர்வமபவத்), “न तस्य प्राणा उत्क्रामन्ति। अत्रैव समवलीयन्ते” (ந தஸ்ய ப்ராணா உத்கிராமந்தி அத்ரைவ சமவலீயந்தே) என்று நூ ற்றுக்கணக்கான சுருதிகள் பிரமாணமாகின்றன.
ननु तस्माज्जीवादुच्चिक्रमिषोः प्राणा नोत्क्रामन्ति सहैव गच्छन्तीत्ययमर्थः कल्प्यत इति चेत् ;
அனுவாதம் - சங்கை - ஆனால் அந்த ஜீவனிடமிருந்து உத்கிரமணம் செய்வதற்கு இச்சையுள்ள பிராணன் உத்கிரமணம் செய்யாமல் அதனுடனேயே செல்கிறது என்று கல்பிக்கலாமே எனில்?
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறு அல்ல ஏன் எனில் “अत्रैव समवलीयन्ते” (அத்ரைவ சமவலீயந்தே = இங்கேயே லீனமாகிறது) என்ற விசேஷணம் அர்த்தமற்றதாகிவிடும். “सर्वे प्राणा अनूत्क्रामन्ति” (சர்வே பிராணா அநூ த்க்ராமந்தி = எல்லா பிராணனும் அதைத்தொடர்ந்து செல்கிறது) என்று பிராணன்களின் வெளியேறுதல் சித்திக்கின்றது. ஆகையால் பிராணன் உத்கிரமணம் செய்கின்றது என்பதில் சங்கை செய்ய வேண்டியதில்லை.
यदापि मोक्षस्य संसारगतिवैलक्षण्यात्प्राणानां जीवेन सह आगमनमाशङ्क्य तस्मान्नोत्क्रामन्तीत्युच्यते, तदापि ‘अत्रैव समवलीयन्ते’ इति विशेषणमनर्थकं स्यात् । न च प्राणैर्वियुक्तस्य गतिरुपपद्यते जीवत्वं वा, सर्वगतत्वात्सदात्मनो निरवयवत्वात् प्राणसम्बन्धमात्रमेव हि अग्निविस्फुलिङ्गवज्जीवत्वभेदकारणमित्यतः तद्वियोगे जीवत्वं गतिर्वा न शक्या परिकल्पयितुम् , श्रुतयश्चेत्प्रमाणम् ।
அனுவாதம் - இதைத்தவிர சம்சார மார்க்கத்திலிருந்து மோக்ஷ மார்க்கம் வேறுபடுவதால் பிராணன்கள் ஜீவனுடன் செல்லுவதில் ஆசங்கை செய்து அதனால் உத்கிரமணம் செய்கின்றது என்று கூறப்படுகிறது. அப்பொழுது இங்கேயே லீனமாகிறது என்று கூறப்படும் விசேஷணம் அர்த்தமற்றதாகிவிடும். பிராணன்களைப் பிரிந்த பிராணனுக்கு கதியோ அல்லது ஜீவத்துவமோ சம்பவிக்காது. ஆத்மா சர்வகதமாயும் (எங்கும் நிறைந்ததாயும்) நிரவயமாயும் இருப்பதால் பிராண சம்பந்தத்தால் மாத்திரமே அக்னியின் தீப்பொறிகள் போல் ஜீவத்துவ பேதத்திற்கு காரணமாகும் ஆகையால் சுருதி பிரமாணத்தால் பிராணன்களின் நாசத்தால் சித்தாத்மாவிற்கு ஜீவத்துவமோ கதியோ கல்பனை செய்யமுடியாது.
அனுவாதம் - சத்திலிருந்து அணு அளவும் பிரிக்க முடியாத ஜீவன் என்னும் அந்த சத்ரூபம் துளை செய்து செல்கிறது என்று கல்பனை செய்யமுடியாது. ஆகையால் “तयोर्ध्वमायन्नमृतत्वमेति” (தயோர்த்வமாயன்னமிதத்வமேதி) (அந்த சிரசின் உச்சி நாடியின் மூலமாய் மேலே சென்று அம்ருதத்தை அடைகிறது) என்பது சகுண உபாசகர்கள் பிராணன்களுடன் நாடிகளின் மூலமாய் செல்வது ஆபேக்ஷிக அம்ருதத்துவமாகும். அது சாக்ஷாத் மோக்ஷமல்ல என்று அறிகிறோம். ஏன் எனில் “तदपराजिता पूस्तदैरं मदीयं सरः” (ததபரஜிதா பூஸ்ததைரம் மதீயம் சர:) இவை முதலியவைகள் கூறி “तेषामेवैष ब्रह्मलोकः” (தேஷாமேவைஷ பிரஹ்மலோக:) என்று விசேஷணங்கள் சுருதியினால் அறிகின்றோம்.
अतः पञ्चाग्निविदो गृहस्थाः, ये च इमे अरण्ये वानप्रस्थाः परिव्राजकाश्च सह नैष्ठिकब्रह्मचारिभिः श्रद्धा तप इत्येवमाद्युपासते श्रद्धधानास्तपस्विनश्चेत्यर्थः ; उपासनशब्दस्तात्पर्यार्थः ; इष्टापूर्ते दत्तमित्युपासत इति यद्वत् । श्रुत्यन्तरात् ये च सत्यं ब्रह्म हिरण्यगर्भाख्यमुपासते, ते सर्वे अर्चिषम् अर्चिरभिमानिनीं देवताम् अभिसम्भवन्ति प्रतिपद्यन्ते । समानमन्यत् चतुर्थगतिव्याख्यानेन । एष देवयानः पन्था व्याख्यातः सत्यलोकावसानः, न अण्डाद्बहिः, ‘यदन्तरापितरं मातरं च’ (ऋ. १० । ८८ । १५) इति मन्त्रवर्णात् ॥
அனுவாதம் - ஆகையால் பஞ்சாக்கினியை அறிந்த கிரஹஸ்தன் அவ்வாறே வனவாசிகளாகிய வானப்ரஸ்தர்கள், நைஷ்டிக பிரஹ்மச்சாரிகள், மேலும் சந்நியாசிகள் சிரத்தை மற்றும் தபஸ் முதலியவைகளை உபாசனை செய்கின்றனர் அதாவது அவர்கள் சிரத்தை உடையவர்கள் (சிரத்தாலும்) மேலும் தபஸ்விகள் என்பதாகும். உபாசனை சப்தத்தின் தாத்பர்யம் என்னவெனில் “इष्टापूर्ते दत्तमित्युपासते” (இஷ்ட்டா பூர்த்தேதத்தமித்யுபாசதே) என்பது போல் ஆகும். அவ்வாறே வேறு சுருதியை அனுசரித்து எந்த ஹிரண்ய கர்பம் எனப்படும் சத்ய பிரஹ்மத்தை உபாசனை செய்பவர்கள் எல்லோரும் அர்ச்சிச அபிமானி தேவதையை அடைகின்றனர். மற்றவை நான்காவது அத்யாயத்தில் உள்ள கோசல வித்யையில் கதியின் வியாக்கியானத்திற்கு சமானமாகும். இந்த சத்யலோகத்தை அடைவிக்கும் தேவயான மார்க்கத்தின் வியாக்கியானம் செய்யப்பட்டது. இந்த மார்க்கம் பிரஹ்மாண்டத்திற்கு வெளியில் இல்லை. “यदन्तरा पितरं मातरं च” (யதந்தரா பிதரம் மாத்தரம் ச) என்ற மந்திரத்தால் சித்திக்கிறது.
अथ य इमे ग्राम इष्टापूर्ते दत्तमित्युपासते ते धूममभिसम्भवन्ति धूमाद्रात्रिं रात्रेरपरपक्षमपरपक्षाद्यान्षड्दक्षिणैति मासांस्तान्नैते संवत्सरमभिप्राप्नुवन्ति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - எவ்வாறு அந்த கிரஹஸ்தர்கள் கிராமத்தில் இஷ்டா பூர்த்தம் மேலும் தத்தம் (தானம்) என்று உபாசிக்கின்றனரோ அவர்கள் தூம மார்க்கத்தை அடைகின்றனர். தூமத்திலிருந்து ராத்திரியை அடைகின்றனர், ராத்திரியிலிருந்து கிருஷ்ணபக்ஷத்தையும் அவ்வாறே கிருஷ்ணபக்ஷத்தினால் ஆறு மாதங்கள் தக்ஷிண மார்க்கத்தில் சென்று அவைகளை அடைகின்றனர் அவர்கள் சம்வத்சரத்தை (வருடத்தை) அடைவதில்லை.
अथेत्यर्थान्तरप्रस्तावनार्थः, य इमे गृहस्थाः ग्रामे, ग्राम इति गृहस्थानामसाधारणं विशेषणम् अरण्यवासिभ्यो व्यावृत्त्यर्थम् — यथा वानप्रस्थपरिव्राजकानामरण्यं विशेषणं गृहस्थेभ्यो व्यावृत्त्यर्थम् , तद्वत् ; इष्टापूर्ते इष्टमग्निहोत्रादि वैदिकं कर्म, पूर्तं वापीकूपतडागारामादिकरणम् ; दत्तं बहिर्वेदि यथाशक्त्यर्हेभ्यो द्रव्यसंविभागो दत्तम् ; इति एवंविधं परिचरणपरित्राणादि उपासते, इति—शब्दस्य प्रकारदर्शनार्थत्वात् । ते दर्शनवर्जितत्वाद्धूमं धूमाभिमानिनीं देवताम् अभिसम्भवन्ति प्रतिपद्यन्ते ।
அனுவாதம் - இங்கு “अथ” (அத) சப்தமானது வேறு விஷயத்தைத் தெரிவிப்பதற்காக. எவர் இந்த கிரஹஸ்தர்கள் கிராமத்தில் என்றது கிராமம் என்பது கிரஹஸ்தர்களின் அசாதாரணமான லக்ஷணம் (விசேஷணம்) மற்ற வனவாசிகளிடமிருந்து வேறுபடுத்துவதற்காக. எவ்வாறு வானப்பிரஸ்த்தர் சந்நியாசிகளுக்கு வனம் விசேஷணம் கிரஹஸ்தர்களிடம் இருந்து வேறுபடுத்துகிறதோ அவ்வாறு ஆகும். “इष्टापूर्ते” (இஷ்டா பூர்த்தே) அக்னி ஹோத்திரம் முதலிய வைதிக கர்மங்கள் “इष्टम्” (இஷ்டம்) ஆகும். குளம், கிணறு, தெப்பம், தர்மசாலை இவைகளை அமைப்பது “पूर्त्तम्” (பூர்த்தம்). யக்ஞத்திற்கு வெளியில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தனத்தைபெற தகுதி உடையவர்க்கு அளித்தல் “दत्तम्” (தத்தம்). “इति” என்ற சப்தம் பிரகரணத்தின் அர்த்தத்தைக் குறிக்கின்றதால் இவ்வாறு பரிசர்யம் (குருசேவை) பரித்ராணம் (தர்மத்தை ரக்ஷிப்பது) ஆகியவைகளை உபாசிப்பவர்கள் இவ்வாறு இந்த தர்சனங்களை செய்யாதவர்கள் தூமம் அதாவது தூமமார்க்த்தின் அபிமானி தேவதையை அடைகின்றனர்.
तया अतिवाहिता धूमाद्रात्रिं रात्रिदेवतां रात्रेरपरपक्षदेवताम् एवमेव कृष्णपक्षाभिमानिनीम् अपरपक्षात् यान्षण्मासान् दक्षिणा दक्षिणां दिशमेति सविता, तान्मासान् दक्षिणायनषण्मासाभिमानिनीर्देवताः प्रतिपद्यन्त इत्यर्थः । सङ्घचारिण्यो हि षण्मासदेवता इति मासानिति बहुवचनप्रयोगः तासु । नैते कर्मिणः प्रकृताः संवत्सरं संवत्सराभिमानिनीं देवतामभिप्राप्नुवन्ति ।
அனுவாதம் - அந்த தூமாபிமானி ராத்திரி தேவதையிடமிருந்து அதிவாஹித. (மேலே எடுத்துச்செல்லும்) அந்த தூமத்திலிருந்து ராத்திரி அதாவது ராத்திரி தேவதை. அந்த ராத்திரியிலிருந்து அபரபக்ஷ என்னும் கிருஷ்ணபக்ஷ அபிமானி தேவதையும், அவ்வாறே கிருஷ்ண பக்ஷத்திலிருந்து ஆறு மாதங்கள் சூரியன் செல்லும் தக்ஷிண திசைக்குச் செல்லும். அந்த மாதங்களாகிய தக்ஷிணாயன ஆறுமாதங்களின் அபிமானி தேவதையை அடைகின்றனர் என்பது தாத்பர்யம். அந்த ஆறுமாத அபிமானி தேவதைகள் சேர்ந்தே இருப்பதால் அவைகளை மாதங்கள் என்று பன்மையில் கூறப்பட்டது. இந்த பிரகரணத்தில் கூறப்பட்ட கர்மிகளின் சம்வத்சர அபிமானி தேவதையை அடைவதில்லை.
कुतः पुनः संवत्सरप्राप्तिप्रसङ्गः, यतः प्रतिषिध्यते ?
அனுவாதம் - சங்கை - ஆனால் எதற்காக சம்வத்சர பிராப்தியை இங்கு பிரதிஷேதம் (தள்ளப்பட்டுள்ளது) செய்யப்பட்டுள்ளது?
अस्ति हि प्रसङ्गः — संवत्सरस्य हि एकस्यावयवभूते दक्षिणोत्तरायणे, तत्र अर्चिरादिमार्गप्रवृत्तानामुदगयनमासेभ्योऽवयविनः संवत्सरस्य प्राप्तिरुक्ता ; अतः इहापि तदवयवभूतानां दक्षिणायनमासानां प्राप्तिं श्रुत्वा तदवयविनः संवत्सरस्यापि पूर्ववत्प्राप्तिरापन्नेति । अतः तत्प्राप्तिः प्रतिविध्यते — नैते संवत्सरमभिप्राप्नुवन्तीति ॥
அனுவாதம் - ஸமாதானம் - இங்கு ஒரு விஷயம் உள்ளது. தக்ஷிண உத்தராயணத்தின் அவயவரூபமான சம்வத்சரத்தில் (வருடத்தில்) அங்கு அர்ச்சிரம் முதலிய மார்க்கங்களில் பிரவிர்த்திக்கும் புருஷர்களுக்கு உத்தராயணத்தின் ஆறு மாதங்கள் வருஷத்திற்கு அவயவமாகிறது என்று கூறப்பட்டது. ஆகையால் இங்கு அதன் அவயவரூபமான தக்ஷிண மாதங்களுக்கு முன்போல் வருடத்திற்கு அவயவரூபம் சம்பவிக்கும். ஆகையால் அவை வருடத்தை அடையவதில்லை என்று கூறி அதை நிஷேதிக்கிறது.
मासेभ्यः पितृलोकं पितृलोकादाकाशमाकाशाच्चन्द्रमसमेष सोमो राजा तद्देवानामन्नं तं देवा भक्षयन्ति ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - (தக்ஷிணாயனத்தின்) மாதங்களால் பித்ருலோகத்தை அடைகின்றனர். பித்ருலோகத்தில் இருந்து ஆகாசத்தை அடைகின்றனர். மேலும் ஆகாசத்திலிருந்து சந்திரனை அடைகின்றனர். அந்த சந்திரனை ராஜா சோமனாகின்றான். அது தேவர்களுக்கு அன்னமாகிறது. தேவர்கள் அதை உண்கின்றனர்.
मासेभ्यः पितृलोकं पितृलोकादाकाशम् आकाशाच्चन्द्रमसम् । कोऽसौ, यस्तैः प्राप्यते चन्द्रमाः ? य एष दृश्यतेऽन्तरिक्षे सोमो राजा ब्राह्मणानाम् , तदन्नं देवानाम् , तं चन्द्रमसमन्नं देवा इन्द्रादयो भक्षयन्ति । अतस्ते धूमादिना गत्वा चन्द्रभूताः कर्मिणो देवैर्भक्ष्यन्ते ।
அனுவாதம் - (தக்ஷிணாயன) மாதங்களினால் பித்ரு லோகத்தையும், பித்ருலோகத்திலிருந்து ஆகாசத்தையும், ஆகாசத்தினால் சந்திரனையும் அடைகின்றனர். இதன் மூலமாய் சென்று அடையப்படும் அந்த சந்திரன் யார்? எந்த இது அந்தரிக்ஷத்தில் (ஆகாசத்தில்) பிராமணர்களின் ராஜாவாகிய சோமம். அது தேவர்களுக்கு அன்னமாகிறது. இந்திரன் முதலிய தேவர்கள் அந்த சந்திரமசம் அன்னத்தை உண்கின்றனர். ஆகையால் தூமாதி மார்க்கங்களின் சென்று சந்திரரூபமாகி அவை கர்மிகளான தேவதைகளால் உண்ணப்படுகின்றனர்.
ननु अनर्थाय इष्टादिकरणम् , यद्यन्नभूता देवैर्भक्ष्येरन् ।
அனுவாதம் - சங்கை - அன்னரூபத்தை அடைந்து தேவர்களால் உண்ணப்படுவதால் இஷ்டா பூர்த்த முதலிய கர்மங்கள் அநர்த்தத்திற்கு ஹேதுவாகுமே.
नैष दोषः, अन्नमित्युपकरणमात्रस्य विवक्षितत्वात् — न हि ते कबलोत्क्षेपेण देवैर्भक्ष्यन्ते कं तर्हि, उपकरणमात्रं देवानां भवन्ति ते, स्त्रीपशुभृत्यादिवत् , दृष्टश्चान्नशब्द उपकरणेषु — स्त्रियोऽन्नं पशवोऽन्नं विशोऽन्नं राज्ञामित्यादि । न च तेषां स्त्र्यादीनां पुरुषोपभोग्यत्वेऽप्युपभोगो नास्ति । तस्मात्कर्मिणो देवानामुपभोग्या अपि सन्तः सुखिनो देवैः क्रीडन्ति । शरीरं च तेषां सुखोपभोगयोग्यं चन्द्रमण्डले आप्यमारभ्यते । तदुक्तं पुरस्तात् — श्रद्धाशब्दा आपो द्युलोकाग्नौ हुताः सोमो राजा सम्भवतीति ।
அனுவாதம் - ஸமாதானம் - இந்த தோஷம் இல்லை. ஏன்எனில் “अन्नम्” (அன்னம்) என்ற சப்தத்தால் அது உபயோகப்படும் சாதனமாகவே (பொருளாகவே) கூறப்பட்டுள்ளது. உண்மையில் அந்த தேவதைகள் உணவுபோல் விழுங்குவது இல்லை. அதனால் என்ன ஆகும்? அந்த ஸ்திரீ, பசு அவ்வாறே சேவகர்கள் ஆகியவை தேவதைகளுக்கு போகத்திற்கு உபயோகம் உடையவைகளாக மாத்திரமே ஆகின்றன. “अन्नम्” (அன்னம்) என்ற சப்தம் ராஜாக்களுக்கு உபயோகமாக உள்ளவைகளாக ஸ்திரீகள் அன்னம், பசுக்கள் அன்னம், ஆகியவை விசேஷ அன்னமாகக் காணப்படுகின்றன. புருஷர்களுக்கு போகத்திற்கு உபயோகமாக இருந்தாலும் ஸ்திரீ முதலியோருக்கு உபயோகமாகாது என்பது இல்லை. ஆகையால் கர்மிகள் தேவர்களுக்கு உபயோகம் உள்ளவர்களாய் இருந்தாலும் ஆனந்தமாக தேவர்களுடன் விளையாடுகின்றனர். அவ்வாறே அவர்களின் உபயோகத்திற்கு யோக்கியமான சரீரம் சந்திரமண்டலத்தில் ஜல ரூபமாக ஆரம்பிக்கின்றது. இந்த விஷயம் கூறப்பட்டது. அதாவது “श्रद्धा” (சிரத்தா) சப்தத்தின் வாச்சியமான ஜலம் த்யுலோகரூப அக்னியில் ஹவனம் செய்யப்பட்டபொழுது சோமராஜாவின் உத்பத்தி சம்பவிக்கின்றது. (உண்டாகிறார்)
ता आपः कर्मसमवायिन्यः इतरैश्च भूतैरनुगता द्युलोकं प्राप्य चन्द्रत्वमापन्नाः शरीराद्यारम्भिका इष्टाद्युपासकानां भवन्ति । अन्त्यायां च शरीराहुतावग्नौ हुतायामग्निना दह्यमाने शरीरे तदुत्था आपो धूमेन सह ऊर्ध्वं यजमानमावेष्ट्य चन्द्रमण्डलं प्राप्य कुशमृत्तिकास्थानीया बाह्यशरीरारम्भिका भवन्ति । तदारब्धेन च शरीरेण इष्टादिफलमुपभुञ्जाना आसते ॥
அனுவாதம் - அந்த கர்ம சம்பந்தமான ஜலம் மற்ற பூதங்களுடன் இணைந்து த்யுலோகத்தை அடைந்து சந்திரத்துவத்தை அடைந்து இஷ்டம் முதலியவைகளை உபாசனை செய்தவர்களின் சரீர முதலியவைகளை ஆரம்பிப்பவைகளாக ஆகின்றன. சரீரத்தின் முடிவில் ஆஹுதி அக்னியில் ஆஹுதி செய்யப்பட்ட அக்னியால் எரிக்கப்பட்ட சரீரத்திலிருந்து உண்டாகும் ஜலம் தூமத்துடன் (புகையுடன்) யஜமானனை வளைத்து மேலே சந்திரமண்டலத்தை அடைந்து தர்பை, மண் போன்று பாஹ்ய சரீரங்களை ஆரம்பிக்கின்றன. அந்த ஆரம்பிக்கப்பட்ட சரீரத்தால் விரும்பிய பலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
तस्मिन्यावत्सम्पातमुषित्वाथैतमेवाध्वानं पुनर्निवर्तन्ते यथेतमाकाशमाकाशाद्वायुं वायुर्भूत्वा धूमो भवति धूमो भूत्वाभ्रं भवति ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - அதில் கர்மங்கள் முடிந்தவுடன் (க்ஷயமானபின்) எந்த மார்க்கத்தில் சென்றதோ அதே மார்க்கத்தில் திரும்புகிறான். அது முதலில் ஆகாசத்தை அடைந்து அந்த ஆகாசத்தால் வாயுவை அடைகிறது. அது வாயுவாகி தூமம் (புகை) ஆகிறது. அது தூமமாகி மழை மேகமாகிறது.
यावत् तदुपभोगनिमित्तस्य कर्मणः क्षयः, सम्पतन्ति येनेति सम्पातः कर्मणः क्षयः यावत्सम्पातं यावत्कर्मणः क्षय इत्यर्थः, तावत् तस्मिंश्चन्द्रमण्डले उषित्वा अथ अनन्तरम् एतमेव वक्ष्यमाणमध्वानं मार्गं पुनर्निवर्तन्ते । पुनर्निवर्तन्त इति प्रयोगात्पूर्वमप्यसकृच्चन्द्रमण्डलं गता निवृत्ताश्च आसन्निति गम्यते । तस्मादिह लोके इष्टादिकर्मोपचित्य चन्द्रं गच्छन्ति ; तत्क्षये च आवर्तन्ते ; क्षणमात्रमपि तत्र स्थातुं न लभ्यते, स्थितिनिमित्तकर्मक्षयात् — स्नेहक्षयादिव प्रदीपस्य ॥
அனுவாதம் - எப்பொழுது அந்த (சந்திர லோகத்தின்) போகத்தின் நிமித்தமான கர்மம் முடிகிறதோ அதுவே (சம்பாத:) கர்மக்ஷயம் அதாவது கர்மத்தின் க்ஷயம். அதாவது எதுவரை கர்மத்தின் க்ஷயம் ஏற்படும்வரை சந்திரமண்டலத்தில் வசித்து அதன்பின் மேலே கூறப்போகும் மார்க்கம் மூலமாக மறுபடியும் திரும்புகின்றனர். “श्रद्धा” (புனர்நிர்வர்த்தந்த) மறுபடியும் திரும்புகின்றனர் என்ற பிரயோகம் இருப்பதால் இதற்கு முன்னும் சந்திரலோகத்திற்கு சென்று திரும்புகின்றனர் என்பது அறியப்படுகிறது. ஆகையால் இந்த லோகத்தில் இஷ்டி முதலிய கர்மங்கள் செய்து அதனால் சந்திரலோகத்திற்குச் செல்கின்றனர். அது க்ஷயம் ஆனவுடன் மறுபடியும் திரும்புகின்றனர். எண்ணை தீர்ந்தவுடன் தீபம் முதலியவைகளைப்போல் ஸ்திதி நிமித்தமானது (இருப்பின் காரணமானது) தீர்ந்த உடன் அங்கு ஒருக்ஷணமும் தங்கமுடியாது.
तत्र किं येन कर्मणा चन्द्रमण्डलमारूढास्तस्य सर्वस्यक्षये तस्मादवरोहणम् , किं वा सावशेष इति ।
அனுவாதம் - பூர்வ - எந்த கர்மத்தால் சந்திரமண்டலம் சென்றவன் அந்த கர்மம் முழுவதும் தீர்ந்தபின் திரும்புகின்றானா? அல்லது அந்த கர்மாவின் மிச்சத்தாலா?
किं ततः ?
அனுவாதம் - ஸித்தாந்தீ - - அதனால் என்ன?
यदि सर्वस्यैव क्षयः कर्मणः, चन्द्रमण्डलस्थस्यैव मोक्षः प्राप्नोति ; तिष्ठतु तावत्तत्रैव, मोक्षः स्यात् , न वेति ; तत आगतस्य इह शरीरोपभोगादि न सम्भवति । ‘ततः शेषेण’ (गौ. ध. २ । २ । २९) इत्यादिस्मृतिविरोधश्च स्यात् ।
அனுவாதம் - பூர்வ - எல்லா கர்மங்களும் தீர்ந்துவிட்டால் சந்திரமண்டலத்தில் இருக்கும்பொழுதே மோக்ஷம் உண்டாகுமே. மேலும் அங்கு இருக்கும்பொழுதே மோக்ஷம் உண்டாகுமா உண்டாகாதா என்ற விசாரம் எழும்பொழுது உலகில் அதன் சரீரத்தின் போகம் முதலியவை சம்பவிக்காது. “तत् शेषेण” (தத் சேஷேண) என்பது முதலிய ஸ்மிருதிகளுக்கு விரோதமாகும்.
नन्विष्टापूर्तदत्तव्यतिरेकेणापि मनुष्यलोके शरीरोपभोगनिमित्तानि कर्माण्यनेकानि सम्भवन्ति, न च तेषां चन्द्रमण्डले उपभोगः, अतोऽक्षीणानि तानि ; यन्निमित्तं चन्द्रमण्डलमारूढः, तान्येव क्षीणानीत्यविरोधः ; शेषशब्दश्च सर्वेषां कर्मत्वसामान्यादविरुद्धः ;
அனுவாதம் - ஆனால் மனித உலகத்தில் இஷ்டா பூர்த்ததத்த கர்மங்களைக் காட்டிலும் சரீரத்தின் உபபோகத்திற்காக அநேக கர்மங்கள் இருக்கின்றன. அவைகள் சந்திரமண்டலம் உபயோகத்திற்காக அல்ல. ஆகையால் அவைகள் க்ஷயம் ஆவது இல்லை (தீர்ந்து போவது இல்லை). சந்திரமண்டலத்திற்கு எந்த நிமித்தத்தால் அடைந்தார்களோ அது தீர்ந்துவிட்டது என்பதில் எந்த ஒரு விரோதமும் இல்லை. எல்லா கர்மங்களும் சமானமாக இருப்பதால் “शेष” (சேஷ) சப்தம் பிரயோகிக்கப்பட்டது விருத்தமல்ல.
अत एव च तत्रैव मोक्षः स्यादिति दोषाभावः ; विरुद्धानेकयोन्युपभोगफलानां च कर्मणाम् एकैकस्य जन्तोरारम्भकत्वसम्भवात् । न च एकस्मिञ्जन्मनि सर्वकर्मणां क्षय उपपद्यते, ब्रह्महत्यादेश्च एकैकस्य कर्मण अनेकजन्मारम्भकत्वस्मरणात् , स्थावरादिप्राप्तानां च अत्यन्तमूढानामुत्कर्षहेतोः कर्मण आरम्भकत्वासम्भवात् । गर्भभूतानां च स्रंसमानानां कर्मासम्भवे संसारानुपपत्तिः । तस्मात् न एकस्मिञ्जन्मनि सर्वेषां कर्मणामुपभोगः ॥
அனுவாதம் - ஆகையால் “அங்கேயே மோக்ஷம் உண்டாகும்” என்ற தோஷம் கிடையாது. ஏன்எனில் அழ்ற்கு மாறான அநேக ஜன்மங்களுக்கான போகபலன்களும், கர்மங்களும் ஒரு ஜீவனுக்கு ஆரம்பம் சம்பவிப்பதால் ஒரே ஜன்மத்திலேயே எல்லா கர்மங்களும் க்ஷயமாகும் என்பது இல்லை. பிரஹ்மஹத்தி முதலிய ஒரே கர்மத்திற்கு அநேக ஜன்மங்கள் அடையப்படுவது ஸ்மிருதியினால் அறியப்படுகிறது. ஸ்தாவர முதலிய ஜன்மம் அடைந்தவைகளின் அதிக மூடத்தன்மையின் தீவிரத்தால் கர்மம் ஆரம்பிப்பது சம்பவிக்காது. அவ்வாறே கர்பத்திலேயே வெளியேறியதன் காரணமாக கர்மம் சம்பவிக்காததால் சம்சாரம் இல்லை என்பதாகும். ஆகையால் ஒரே ஜன்மத்தில் எல்லா கர்மங்களையும் அனுபவிக்க முடியாது.
यत्तु कैश्चिदुच्यते — सर्वकर्माश्रयोपमर्देन प्रायेण कर्मणां जन्मारम्भकत्वम् । तत्र कानिचित्कर्माण्यनारम्भकत्वेनैव तिष्ठन्ति कानिचिज्जन्म आरभन्त इति नोपपद्यते, मरणस्य सर्वकर्माभिव्यञ्जकत्वात् , स्वगोचराभिव्यञ्जकप्रदीपवदिति । तदसत् , सर्वस्य सर्वात्मकत्वाभ्युपगमात् — न हि सर्वस्य सर्वात्मकत्वे देशकालनिमित्तावरुद्धत्वात्सर्वात्मनोपमर्दः कस्यचित्क्वचिदभिव्यक्तिर्वा सर्वात्मनोपपद्यते, तथा कर्मणामपि साश्रयाणां भवेत् —
அனுவாதம் - சிலர் இவ்வாறு கூறுகின்றனர் - அநேகமாக ஜன்மம் ஆரம்பிப்பதற்கு காரணமான எல்லா கர்மங்களின் ஆஸ்ரயம் நசித்தவுடன் ஜன்மம் ஆரம்பிக்கின்றது என்பதும், அந்த சந்தர்பத்தில் சில கர்மாக்கள் ஜன்மத்தை ஆரம்பிக்காமலும் சில ஜன்மத்தை ஆரம்பிக்கிறது என்று. இந்த விஷயம் சம்பவிக்காது. ஏன் எனில் மரணம் என்பது தன்னுடைய விஷயத்தை தீபம் எல்லாவற்றையும் விளக்குவது போல் எல்லா கர்மங்களையும் விளக்குகிறது என்று கூறுவது சரியல்ல. ஏன் எனில் எல்லாவற்றிற்கும் சர்வாத்மகத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் சர்வாத்மா ஆனதால் தேசகால நிமித்தங்கள் நிஷேதிக்கப்பட்டுள்ளதால் எந்த பதார்த்தமும் எவ்விதமாகவும் நாசம் செய்ய முடியாது. அவ்வாறே தோன்றச் செய்யவும் முடியாது. அவ்வாறே கர்மங்களும் அதன் ஆஸ்ரயங்களும் ஆகும்.
यथा च पूर्वानुभूतमनुष्यमयूरमर्कटादिजन्माभिसंस्कृताः विरुद्धानेकवासनाः मर्कटत्वप्रापकेन कर्मणा मर्कटजन्म आरभमाणेन नोपमृद्यन्ते — तथा कर्मण्यप्यन्यजन्मप्राप्तिनिमित्तानि नोपमृद्यन्त इति युक्तम् । यदि हि सर्वाः पूर्वजन्मानुभववासनाः उपमृद्येरन् , मर्कटजन्मनिमित्तेन कर्मणा मर्कटजन्मन्यारब्धे मर्कटस्य जातमात्रस्य मातुः शाखायाः शाखान्तरगमने मातुरुदरसंलग्नत्वादिकौशलं न प्राप्नोति, इह जन्मन्यनभ्यस्तत्वात् । न च अतीतानन्तरजन्मनि मर्कटत्वमेव आसीत्तस्येति शक्यं वक्तुम् ,
‘तं विद्याकर्मणी समन्वारभेते पूर्वप्रज्ञा च’ (बृ. उ. ४ । ४ । २) इति श्रुतेः । तस्माद्वासनावन्नाशेषकर्मोपमर्द इति शेषकर्मसम्भवः । यत एवम् , तस्माच्छेषेणोपभुक्तात्कर्मणः संसार उपपद्यत इति न कश्चिद्विरोधः ॥
அனுவாதம் - எவ்வாறு முன்பு அனுபவித்த மனிதன், மயில், அவ்வாறே குரங்கு முதலிய ஜன்மங்களில் சம்பாதித்த அநேக மாறுபட்ட வாசனைகளினால் குரங்கு ஜன்மத்தை அடையச்செய்யும் குரங்கு ஜன்மத்தை ஆரம்பிக்கும் கர்மத்தால் நசிப்பது இல்லையோ அவ்வாறே மற்ற ஜன்மங்களின் பிராப்திக்குக் காரணமான கர்மங்களும் நசிப்பது இல்லை என்பது சரியே. குரங்கு ஜன்ம நிமித்த கர்மத்தால் பூர்வஜன்ம அனுபவமான எல்லா வாசனைகளும் நாசம் அடைந்ததாக இருந்தால் குரங்கு ஜன்மம் ஆரம்பம் ஆனதும் அந்த சமயத்தில் பிறந்த குரங்கிற்கு அதனுடைய தாய் கிளைக்கு கிளை தாவும்பொழுது தன் தாயின் வயிற்றை கட்டிப்பிடிக்கும் சாமர்த்தியத்தை இந்த ஜன்மத்தில் அப்பியாசம் இல்லாததால் அதனால் அடையமுடியாது. அதேபோல் இதற்குமுன் உள்ள ஜன்மத்திலும் வானரமாக இருந்தது என்று சொல்லமுடியாது. “तं विद्याकर्मणी समन्वारभेते पूर्वप्रज्ञा च” (தம் வித்யாகர்மணீ சமன்வாரபேதே பூர்வபிரக்ஞா ச) என்ற சுருதியினால் சித்திக்கிறது. ஆகையால் வாசனைகளைப்போல் எல்லாக் கர்மங்களும் நாசமாவதில்லை. ஆகையால் “शेष” (சேஷ- மீதி) கர்மங்கள் இருப்பது சித்தமாகிறது. இவ்வாறு அனுபவித்த கர்மங்களின் மீதமான கர்மங்களால் சம்சாரம் அடையப்படுகிறது என்பதில் ஒரு சிறிதும் விரோதம் இல்லை.
कोऽसावध्वा यं प्रति निवर्तन्त इति, उच्यते — यथेतं यथागतं निवर्तन्ते ।
அனுவாதம் - அந்த மார்க்கத்தின் வாயிலாய் திரும்புகின்றனர்? இதற்கு சுருதி கூறுகிறது எந்த மார்க்கத்தில் சென்றார்களோ அதே மார்க்கத்தில் திரும்புகின்றனர்.
ननु मासेभ्यः पितृलोकं पितृलोकादाकाशमाकाशाच्चन्द्रमसमिति गमनक्रम उक्तः, न तथा निवृत्तिः ; किं तर्हि, आकाशाद्वायुमित्यादि ; कथं यथेतमित्युच्यते ।
அனுவாதம் - சங்கை - ஆனால் மாதங்களினால் பித்ருலோகம், பித்ருலோகத்திலிருந்து ஆகாசம், ஆகாசத்திலிருந்து சந்திரலோகம் என்று செல்லும் (கமன (गमन) கிரமம் சொல்லப்பட்டது. அவ்வாறு அதன் திரும்புதலை (निवृत्ति)யை கூறவில்லை. அது எவ்வாறு கூறப்பட்டது? ஆகாசத்திலிருந்து வாயு முதலியவைகள் எவ்வாறு இவ்விதம் கூறப்பட்டது?
नैष दोषः, आकाशप्राप्तेस्तुल्यत्वात्पृथिवीप्राप्तेश्च । न च अत्र यथेतमेवेति नियमः, अनेवंविधमपि निवर्तन्ते ; पुनर्निवर्तन्त इति तु नियमः । अत उपलक्षणार्थमेतत् — यद्यथे तमिति । अतो भौतिकमाकाशं तावत्प्रतिपद्यन्ते —
அனுவாதம் - ஸமாதானம் - ஆகாசத்தை அடைவதும் பிருதிவியை அடைவதும் சமானமாக இருப்பதால் இந்த தோஷம் இல்லை. இதைத்தவிர இதில் எந்த நியமமும் இல்லை. எந்த மார்க்கத்தில் செல்கின்றானோ அதே மார்க்கத்தில் திரும்புகிறான் அல்லது வேறு மார்க்கத்திலும் திரும்புகின்றான். நியமம் என்பது திரும்புதல் மாத்திரமேயாகும். ஆகையால் “यथेतम्” (யதேதம்) எந்த மார்க்கத்தில் சென்றானோ அதே மார்க்கத்தில் திரும்புகின்றான் என்பது உபலக்ஷண மாத்திரமேயாகும். ஆகையால் பெளதிக ஆகாசத்தையே அடைகின்றான்.
यास्तेषां चन्द्रमण्डले शरीरारम्भिका आप आसन् , तास्तेषां तत्रोपभोगनिमित्तानां कर्मणां क्षये विलीयन्ते — घृतसंस्थानमिवाग्निसंयोगे, ता विलीना अन्तरिक्षस्था आकाशभूता इति सूक्ष्माः भवन्ति । ता अन्तरिक्षाद्वायुर्भवन्ति, वायुप्रतिष्टा वायुभूता इतश्चामुतश्च ऊह्यमानाः ताभिः सह क्षीणकर्मा वायुभूतो भवति । वायुर्भूत्वा ताभिः सहैव धूमो भवति । धूमो भूत्वा अभ्रम् अब्भरणमात्ररूपो भवति ॥
அனுவாதம் - சந்திரமண்டலத்தில் எவருக்கு சரீரத்தை ஆரம்பிக்கும் “आपः” (ஆப: ஜலம்) உண்டாகிறதோ அப்பொழுது அவர்களுக்கு அங்கு அனுபவிக்க வேண்டியதற்குக் காரணம் நசித்தபின் லீனம் அடைகிறது. எவ்வாறு அக்னியின் சம்பந்தம் ஏற்பட்டவுடன் நெய்யுடன் கலந்த பிண்டம் லீனமாகிறதோ அவ்வாறு ஆகும். அவை அந்த அந்தரிக்ஷத்தில் இருக்கும் ஆகாசரூபம் போல் சூக்ஷமமாகின்றன. அவை அந்தரிக்ஷத்திலிருந்து வாயு ரூபமாகின்றது. அவை வாயுவில் நிலைபெற்று வாயு ரூபமாகி இங்கும் அங்கும் சென்றுகொண்டு சென்றுகொண்டு அவ்வாறே அதனுடன் எவருடைய கர்மம் நீங்கியதோ அந்த வாயுவாகி அந்த ஜலத்துடன் சேர்ந்து தூமம் ஆகிறது. அவ்வாறே தூமம் ஆகி, ஜலம் நிறைந்த மேகம் ஆகின்றது.
अभ्रं भूत्वा मेघो भवति मेघो भूत्वा प्रवर्षति त इह व्रीहियवा ओषधिवनस्पतयस्तिलमाषा इति जायन्तेऽतो वै खलु दुर्निष्प्रपतरं यो यो ह्यन्नमत्ति यो रेतः सिञ्चति तद्भूय एव भवति ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - மேகமாகி அதன்பின் மழை மேகமாகி மழை பெய்கிறது. அப்பொழுது அந்த ஜீவன்கள் இந்த லோகத்தில் தான்யம், பார்லி, மூலிகைகள், செடி கொடிகள், கடுகு மேலும் உளுந்து முதலியவைகளாக உண்டாகின்றன. இவ்வாறு கீழ்நோக்கி திரும்புதல் நிச்சயமாக மிகக் கஷ்டத்தை அளிப்பதாகும். அந்த அன்னத்தை எவர் எவர் உண்கின்றனறோ அவர் அவர் அந்த ரேதஸ்ஸை அளிப்பவர் போன்ற சந்ததியை அடைகின்றனர்.
अभ्रं भूत्वा ततः सेचनसमर्थो मेघो भवति ; मेघो भूत्वा उन्नतेषु प्रदेशेष्वथ प्रवर्षति ; वर्षधारारूपेण शेषकर्मा पततीत्यर्थः । त इह व्रीहियवा ओषधिवनस्पतयस्तिलमाषा इत्येवंप्रकारा जायन्ते ; क्षीणकर्मणामनेकत्वात् बहुवचननिर्देशः । मेघादिषु पूर्वेष्वेकरूपत्वात् एकवचननिर्देशः ।
அனுவாதம் - மேகமாகி அதிலிருந்து மழை பொழியும் மேகமாகிறது. அந்த மேகமாகி செழிப்பான இடத்தில் மழை பெய்கிறது. மழை ஆதாரரூபமாக மீதமுள்ள கர்மா விழுகிறது என்பது பொருள். அவைகள் இங்கு நெல், பார்லி, மூலிகைகள், செடிகொடி, மரங்கள், கடுகு, உளுந்து முதலியவைகளாக பிறக்கின்றன. நசித்த கர்மங்கள் அநேகமாக இருப்பதால் பகுவசனம் உபயோகப்படுத்தப்பட்டது. மேகங்கள் முதலியவைகளுக்கு முன் ஒன்றாகவே இருந்ததால் ஏகவசனம் கூறப்பட்டது.
यस्माद्गिरितटदुर्गनदीसमुद्रारण्यमरुदेशादिसंनिवेशसहस्राणि वर्षधाराभिः पतितानाम् , अतः तस्माद्धेतोः वै खलु दुर्निष्प्रपतरं दुर्निष्क्रमणं दुर्निःसरणम् — यतो गिरितटादुदकस्रोतसोह्यमाना नदीः प्राप्नुवन्ति, ततः समुद्रम् , ततो मकरादिभिर्भक्ष्यन्ते ; तेऽप्यन्येन ; तत्रैव च सह मकरेण समुद्रे विलीनाः समुद्राम्भोभिर्जलधरैराकृष्टाः पुनर्वर्षधाराम्भिर्मरुदेशे शिलातटे वा अगम्ये पतितास्तिष्ठन्ति, कदाचिद्व्यालमृगादिपीता भक्षिताश्चान्यैः तेऽप्यन्यैरित्येवंप्रकाराः परिवर्तेरन् ; कदाचिदभक्ष्येषु स्थावरेषु जातास्तत्रैव शुष्येरन् ; भक्ष्येष्वपि स्थावरेषु जातानां रेतःसिग्देहसम्बन्धो दुर्लभ एव, बहुत्वात्स्थावराणाम् — इत्यतो दुर्निष्क्रमणत्वम् ।
அனுவாதம் - ஏன்எனில் மழையின் தாரை மூலமாக விழும் ஜீவர்கள் மலைப்பகுதி மிக ஆழாமான நதிகள் சமுத்திரம், வனம் அவ்வாறே மருபூமி முதலிய ஆயிரக்கணக்கான ஸ்தானத்தை அடைகின்றனர். அதன் காரணமாக திரும்பிவருதல் என்பது மிகக்கடினம். ஏன்எனில் ஜலத்தின் பிரவாஹ மூலமாக மலைப்பகுதிகளிலிருந்து சென்று நதிகளை அடைகின்றன. அதிலிருந்து சமுத்திரத்தை அடைகின்றன. அதன்பின் அவைகள் மகரம் முதலிய மீன்களால் (திமிங்கிலம் முதலிய) உண்ணப்பட்டு அவை மற்றவைகளால் உண்ணப்படுகிறது. அவ்வாறு அந்த சமுத்திரத்தில் உள்ள மீன்களுடன் லீனமாகி சமுத்திர ஜலத்துடன் மேகங்களால் ஆகர்க்ஷிக்கப்பட்டு அதன்பின் மழைதாரையின் மூலமாக மருபூமி பாறையின் பக்கத்தில் அல்லது அறியப்படாத இடத்தில் விழுகின்றது. ஒருசமயம் அது பாம்பு அவ்வாறே மிருகம் முதலியவைகளால் அருந்தப்பட்டு அல்லது மற்றவைகளாலும் உண்ணப்படுகிறது. அவைகளும் மற்றவைகளால் உண்ணப்படுகின்றன. இவ்வாறு இந்த ஜீவர்கள் மாறி மாறி பரிவர்த்தமாகின்றான். ஒரு சமயம் உண்ண முடியாததாய் உத்பன்னமானால் அது காய்ந்துவிடும். உண்ணத்தகுதி உள்ள ஸ்தாவரங்களில் இருந்து உண்டாகும் ரேதஸ் தேஹத்துடன் சம்பந்தப்படுவது மிகக்கடினம். ஏன் எனில் ஸ்தாவரங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும். ஆகையால் அதை சார்ந்து இருக்கும் ஜீவனுக்கு நிஷ்கிரமணம் (திரும்புதல்) என்பது மிகக்கடினமானதாகும்.
अथवा अतः अस्माद्व्रीहियवादिभावात् दुर्निष्प्रपतरं दुर्निर्गमतरम् । दुर्निष्प्रपरमिति तकार एको लुप्तो द्रष्टव्यः ; व्रीहियवादिभावो दुर्निष्प्रपतः, तस्मादपि दुर्निष्प्रपताद्रेतःसिग्देहसम्बन्धो दुर्निष्प्रपततर इत्यर्थः ; यस्मादूर्ध्वरेतोभिर्बालैः पुंस्त्वरहितैः स्थविरैर्वा भक्षिता अन्तराले शीर्यन्ते, अनेकत्वादन्नादानाम् । कदाचित्काकतालीयवृत्त्या रेतःसिग्भिर्भक्ष्यन्ते यदा, तदा रेतःसिग्भावं गतानां कर्मणो वृत्तिलाभः ।
அனுவாதம் - ஆகையால் இந்த தானியங்கள் முதலிய பாவ(ரூப)ங்களால் ஜீவனுக்கு அதிலிருந்து விடுபடுவது மிகக்கடினம் “दुर्निष्प्रपतरम्” (துர்நிஷ்ப்ரததரம்) என்பதில் ஒரு தகாரம் விடுபட்டுள்ளதை அறியவேண்டும். ஆகையால் தானியம் பார்லி முதலிய பாவங்களில் இருந்து விடுபடுவது மிகக்கடினமாயினும் அதைவிட மிகக்கடினமானது தேஹ சம்பந்தத்தால் ஏற்படும் வீர்யத்தின் வெளியேற்றம். ஏன்எனில் அன்னத்தை உட்கொள்ளும் இல்லற இன்பத்தில் ஈடுபடாதவன், சிறுவன், அலி, மேலும் வயதானவர்கள் இவர்களிடம் வயிற்றிலேயே நஷ்ட்டமாகின்றன. ஏதோ ஒரு சமயத்தில் காக்கை உட்காந்து பனம்பழம் விழுந்த நியாயம் போல் வீர்யத்தை வெளிப்படுத்தும் புருஷனால் உண்ணப்படும் உணவினால் ஏற்படும் வீர்யஷேசன பாவத்தை அடைந்து ஜீவர்களின் கர்ம விருத்திகளுக்கு லாபமாகிறது.
कथम् ? यो यो हि अन्नमत्ति अनुशयिभिः संश्लिष्टं रेतःसिक् , यश्च रेतः सिञ्चति ऋतुकाले योषिति, तद्भूय एव तदाकृतिरेव भवति ; तदवयवाकृतिभूयस्त्वं भूय इत्युच्यते रेतोरूपेण योषितो गर्भाशयेऽन्तः प्रविष्टोऽनुशयी, रेतसो रेतःसिगाकृतिभावितत्वात् ,
‘सर्वेभ्योऽङ्गेभ्यस्तेजः सम्भूतम्’ (ऐ. उ. २ । १ । १) इति हि श्रुत्यन्तरात् । अतो रेतःसिगाकृतिरेव भवतीत्यर्थः । तथा हि पुरुषात्पुरुषो जायते गोर्गवाकृतिरेव न जात्यन्तराकृतिः, तस्माद्युक्तं तद्भूय एव भवतीति ॥
அனுவாதம் - அது எவ்வறு விருத்தியை அடைகிறது? எவர் எவர் வீர்யத்தை செழுத்தி தன்னைப்போன்ற ஜீவர்களுடன் கூடிய அன்னத்தை உண்ணுகின்றனரோ அதன்பின் ருதுகாலத்தில் ஸ்திரீகளிடம் வீர்யத்தை செழுத்தி அந்த ஆகாரம் ஆகின்றனர். அவருடைய அவயவங்களுடன் கூடிய ஆகிருதி (வடிவம்) அதிகமாகக் காணப்படுவதால் மறுபடியும் பிறக்கின்றான் என்கின்றனர். இவ்வாறு “सर्वेभ्योऽेेभ्यस्तेजः संभूतम्” “(சர்வேப்யேஅங்கேப்யஸ்தேஜ: சம்பூதம்)” மற்ற சுருதியிலும் காணப்படுகிறது. ஆகையால் புருஷனிலிருந்து புருஷனும் பசுவிலிருந்து பசுவும் உண்டாகிறதேத் தவிர வேறு ஜாதி உடைய வடிவத்தை அடைவதில்லை. ஆகையால் அது மறுபடியும் உண்டாகிறது என்று கூறுவது பொருத்தமானதே.
ये त्वन्ये अनुशयिभ्यश्चन्द्रमण्डलमनारुह्य इहैव पापकर्मभिर्घोरैर्व्रीहियवादिभावं प्रतिपद्यन्ते, पुनर्मनुष्यादिभावम् , तेषां नानुशयिनामिव दुर्निष्प्रपतरम् । कस्मात् ? कर्मणा हि तैर्व्रीहियवादिदेह उपात्त इति तदुपभोगनिमित्तक्षये व्रीह्यादिस्तम्बदेहविनाशे यथाकर्मार्जितं देहान्तरं नवं नवं जलूकावत्सङ्क्रमन्ते सविज्ञाना एव
‘सविज्ञानो भवति सविज्ञानमेवान्ववक्रामति’ (बृ. उ. ४ । ४ । २) इति श्रुत्यन्तरात् । यद्यप्युपसंहृतकरणाः सन्तो देहान्तरं गच्छन्ति, तथापि स्वप्नवत् देहान्तरप्राप्तिनिमित्तकर्मोद्भावितवासनाज्ञानेन सविज्ञाना एव देहान्तरं गच्छन्ति, श्रुतिप्रामाण्यात् ।
அனுவாதம் - ஆனால் இவ்வாறு அனுசயித்தை உடைய ஜீவர்களைத் தவிர மற்ற பிராணிகள் தங்களுடைய மிக கோரமான பாபங்களினால் சந்திரமண்டலத்திற்கு மேல் சென்று அடைய முடியாமல் தானியம், பார்லி போன்ற வடிவங்களை (பாவங்களை) அடைகின்றன. மனிதர் முதலியவர்கள் பாவங்களை அடையாமல் அவைகளுக்கு தான்யம், பார்லி முதலிய பாவங்களில் இருந்து விடுபடுவது (வெளியேறுவது) கஷ்டப்படுத்துவது அல்ல. எதனால்? ஏன் எனில் அவைகள் கர்மானுசாரமாக தானியம், பார்லி முதலிய தேஹத்தை அடைந்தன. ஆகையால் அந்த கர்மங்களை அனுபவித்ததால் நாசமானபின் அவை தங்களால் சம்பாதிக்கப்பட்ட கர்மங்களின் அனுசாரமாக அட்டைப் பூச்சி போன்ற வெவ்வேறு புதுப்புது சரீரங்களில் விக்ஞானத்துடன் கூடி சங்கிரமணம் செய்கின்றன. இதை வேறு சுருதியிலும் “सविज्ञानो भवति सविज्ञानमेवान्ववक्रामति” (சவிக்ஞானோ பவதி சவிக்ஞானமேவான்வவக்ரமாதி) என்று கூறுகிறது. இந்திரியங்களை லயம் செய்திருந்தாலும் வேறு தேஹங்களுக்குச் செல்கின்றன. ஆனாலும் இந்த சுருதிப்பிரமாணத்தால் அவைகள் ஸ்வப்னம் போன்று வேறு தேஹங்களை அடைவதற்கு நிமித்தமான கர்மங்களால் உண்டான வாசனையின் ஞானத்தால் விக்ஞானமுடையதாய் வேறு தேஹத்தை அடைகிறது என்பது அறியப்படுகிறது.
तथा अर्चिरादिना धूमादिना च गमनं स्वप्नं इवोद्भूतविज्ञानेन, लब्धवृत्तिकर्मनिमित्तत्वाद्गमनस्य । न तथा अनुशयिनां व्रीह्यादिभावेन जातानां सविज्ञानमेव रेतःसिग्योषिद्देहसम्बन्ध उपपद्यते, न हि व्रीह्यादिलवनकण्डनपेषणादौ च सविज्ञानानां स्थितिरस्ति ।
அனுவாதம் - அவ்வாறே அர்ச்சிராதி மார்க்கத்திலும் தூமாதிமார்க்கத்தில் செல்வதும் சொப்னம் போன்று தோன்றிய விக்ஞானத்தாலும் கர்ம நிமித்தத்தாலும் கமனம் (செல்வது) அடையப்பட்ட விருத்தி(செயல்)யாகும். அவ்வாறே தானியம் பார்லி போன்ற ரூபத்தில் உண்டான அதை சார்ந்த ஜீவர்கள் வீர்யத்தை வெளிப்படுத்துதல் ஸ்திரீகளின் சம்பந்தம் ஆகியவை விக்ஞானத்துடன் கூடிய ரூபமாய் சம்பவிப்பது என்பது இல்லை. தான்யம் முதலியவைகளை வெட்டினாலும், குத்தினாலும், அரைத்தாலம் அதற்கு விக்ஞானத்துடன் கூடிய நிலமை ஏற்படுவது இல்லை.
ननु चन्द्रमण्डलादप्यवरोहतां देहान्तरगमनस्य तुल्यत्वात् जलूकावत्सविज्ञानतैव युक्ता, तथा सति घोरो नरकानुभव इष्टापूर्तादिकारिणां चन्द्रमण्डलादारभ्य प्राप्तो यावद्ब्राह्मणादिजन्म ; तथा च सति, अनर्थायैव इष्टापूर्ताद्युपासनं विहितं स्यात् ; श्रुतेश्च अप्रामाण्यं प्राप्तम् , वैदिकानां कर्मणाम् अनर्थानुबन्धित्वात् ।
அனுவாதம் - சங்கை - சந்திரமண்டலத்திலிருந்து கீழே திரும்புகின்றவைகள் வேறு தேஹங்களை அடைவதற்கு சமானமானதாய் இருப்பதால் அட்டைப் பூச்சியைப் போல் விக்ஞாத்துடன் கூடியவைகளே. அவ்வாறு இருக்கும்பொழுது நரக அனுபவம் உடையவர் இஷ்டா பூர்த்தம் முதலியவைகளை செய்தவர்கள் சந்திர மண்டலத்திலிருந்து ஆரம்பித்து பிரஹாமணர்கள் முதலிய ஜன்மத்தை அடைகின்றனர். அவ்வாறு இருக்கும்பொழுது இஷ்டா பூர்த்தம் முதலிய உபாசனை அநர்த்தத்தின் பொருட்டே விதிக்கப்பட்டது ஆகும். வைதிக கர்மங்கள் அநர்தத்துடன் பந்தப்படுவதால் சுருதி அப்பிரமாணம் ஆகும்.
न, वृक्षारोहणपतनवद्विशेषसम्भवात् — देहाद्देहान्तरं प्रतिपित्सोः कर्मणो लब्धवृत्तित्वात् कर्मणोद्भावितेन विज्ञानेन सविज्ञानत्वं युक्तम् — वृक्षाग्रमारोहत इव फलं जिघृक्षोः । तथा अर्चिरादिना गच्छतां सविज्ञानत्वं भवेत् ; धूमादिना च चन्द्रमण्डलमारुरुक्षताम् । न तथा चन्द्रमण्डलादवरुरुक्षतां वृक्षाग्रादिव पततां सचेतनत्वम् —
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறு அல்ல. ஏன் எனில் மரத்தில் ஏறுவது இறங்குவது போன்ற விசேஷம் இருப்பதால் ஆகும். ஒரு தேஹத்திலிருந்து வேறு தேஹத்தை அடைய இச்சை உள்ளவன் கர்மத்தினால் அடைந்த விருத்தியால் (செயலால்) அந்த கர்மங்களால் உண்டான விக்ஞானத்தால் அந்த ஜீவனை விக்ஞானம் உடையவன் என்பது சரியானதே. பழத்தை அடைய இச்சிப்பவன் மரத்தின் உச்சிக்கு ஏறுபவன் போன்று அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்பவர்களுக்கும், தூமாதி மார்க்கத்தில் சந்திர மண்டலத்திற்கு செல்வதற்கு விக்ஞானத்துடன் இருப்பது சம்பவிக்கும். ஆனால் அவ்வாறு சந்திரமண்டலத்திலிருந்து கீழே இறங்கி வருவதற்கு மரத்தின் உச்சியிலிருந்து கீழே விழுவதில் இருப்பது போன்று விக்ஞானத்துவம் சம்பவிப்பது இல்லை.
यथा च मुद्गराद्यभिहतानां तदभिघातवेदनानिमित्तसंमूर्छितप्रतिबद्धकरणानां स्वदेहेनैव देशाद्देशान्तरं नीयमानानां विज्ञानशून्यता दृष्टा, तथा चन्द्रमण्डलात् मानुषादिदेहान्तरं प्रति अवरुरुक्षतां स्वर्गभोगनिमित्तकर्मक्षयात् मृदिताब्देहानां प्रतिबद्धकरणानाम् । अतः ते अपरित्यक्तदेहबीजभूताभिरद्भिः मूर्छिता इव आकाशादिक्रमेण इमामवरुह्य कर्मनिमित्तजातिस्थावरदेहैः संश्लिष्यन्ते प्रतिबद्धकरणतया अनुद्भूतविज्ञाना एव ।
அனுவாதம் - எவ்வாறு சுத்தியல் முதலியவைகளால் வெட்டி அடித்து, பிசைந்து, சமைத்து, சாப்பிட்டு ரச முதலிய ரூபங்களால் பரிணமித்த வீர்யம் வெளிப்படும் சமயத்தில் மூர்ச்சை அடைந்தவனாய் இருக்கின்றன. ஏன்எனில் அவனுடைய தேஹத்தை ஆரம்பிக்கும் கர்மா அடையப்படாமல் இருக்கின்றது. அவை எல்லா அவஸ்தைகளிலும் தேஹத்தின் பீஜ பூதமான ஜலத்தின் சம்பந்தத்தை விடாமல் இருக்கின்றது. ஆகையால் அட்டைப்பூச்சி போன்று அதற்கு சேதனத்துடன் (விக்ஞானத்துடன்) கூடியிருக்கிறது என்பதில் எந்த தோஷமும் இல்லை. அந்தராலத்தில் (நடுவில்) விக்ஞான சூன்ய தசையில் அது மூர்ச்சை அடைந்தது போல் இருக்கிறது. ஆகையால் அதற்கு எந்த தோஷமும் இல்லை.
तथा लवनकण्डनपेषणसंस्कारभक्षणरसादिपरिणामरेतःसेककालेषु मूर्छितवदेव, देहान्तरारम्भकस्य कर्मणोऽलब्धवृत्तित्वात् । देहबीजभूताप्सम्बन्धापरित्यागेनैव सर्वास्ववस्थासु वर्तन्त इति जलूकावत् चेतनावत्त्वं न विरुध्यते । अन्तराले त्वविज्ञानं मूर्छितवदेवेत्यदोषः ।
அனுவாதம் - எ-வ்வாறு சுத்-தி-யல் முதலி-ய-வைக-ளா-ல் வெட்டி அடித்-து, பிசைந்-து, சமைத்-து, சாப்-பி-ட்டு
न च वैदिकानां कर्मणां हिंसायुक्तत्वेनोभयहेतुत्वं शक्यमनुमातुम् , हिंसायाः शास्त्रचोदितत्वात् ।
‘अहिंसन्सर्वभूतान्यन्यत्र तीर्थेभ्यः’ (छा. उ. ८ । १५ । १) इति श्रुतेः शास्त्रचोदिताया हिंसाया न अधर्महेतुत्वमभ्युपगम्यते । अभ्युपगतेऽप्यधर्महेतुत्वे मन्त्रैर्विषादिवत् तदपनयोपपत्तेः न दुःखकार्यारम्भणोपपत्तिः वैदिकानां कर्मणाम् — मन्त्रेणेव विषभक्षणस्येति ॥
அனுவாதம் - வைதிக கர்மங்களில் ஹிம்சையுடன் கூடியிருப்பதால் இரண்டிற்கும் காரணமாய் இருப்பதால் ஹிம்சையுடன் சாஸ்திரத்தில் விதிக்கப்படுகிறது என்று அனுமானம் செய்யமுடியும். “अहिंसन्सर्वभूतान्यन्यत्र तीर्थेभ्यः” (அஹிம்சன் சர்வ பூதான்யன்யத்ர தீர்த்தே ப்ய:) என்ற சுருதியின் சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டுள்ளதால் ஹிம்சையானது அதர்மத்திற்கு ஹேதுவல்ல என்பது அறியப்படவில்லை. அதர்மத்திற்கு ஹேதுவானால் மந்திரங்களால் விஷத்தைப்போல் நீக்கவேண்டும் என்று ஏற்படுவதால் வைதீக கர்மங்களுக்கு மந்திரங்களால் அந்த விஷத்தைப் புசிப்பதால் அதற்கு துக்க ஆரம்பம் இல்லை.
तद्य इह रमणीयचरणा अभ्याशो ह यत्ते रमणीयां योनिमापद्येरन्ब्राह्मणयोनिं वा क्षत्रिययोनिं वा वैश्ययोनिं वाथ य इह कपूयचरणा अभ्याशो ह यत्ते कपूयां योनिमापद्येरञ्श्वयोनिं वा सूकरयोनिं वा चण्डालयोनिं वा ॥ ७ ॥
மந்த்ரார்த்தம் - அந்த அனுசயீ ஜீவர்களில் எவர் நன்றாக ஆச்சரணம் செய்கின்றனரோ (நன்நடத்தை உள்ளவரோ) அவர்கள் விரைவிலேயே உத்தமமான யோனியை அடைகின்றனர். அவர்கள் பிராஹ்மண யோனியோ, க்ஷத்திரிய யோனியோ அல்லது வைச்யயோனியை அடைகின்றனர். அவ்வாறே எவர்கள் அசுத்த நடத்தை உடையவர்களோ அவர்கள் அந்த சமயத்தில் அசுபயோனிகளை அடைகின்றனர். அவர்கள் நாய் ஜன்மத்தையோ, பன்றி ஜன்மத்தையோ, சண்டாள ஜன்மத்தையோ அடைகின்றனர்.
तत् तत्र तेष्वनुशयिनां ये इह लोके रमणीयं शोभनं चरणं शीलं येषां ते रमणीयचरणेनोपलक्षितः शोभनोऽनुशयः पुण्यं कर्म येषां ते — रमणीयचरणाः उच्यन्ते ; क्रौर्यानृतमायावर्जितानां हि शक्य उपलक्षयितुं शुभानुशयसद्भावः ; तेनानुशयेन पुण्येन कर्मणा चन्द्रमण्डले भुक्तशेषेण अभ्याशो ह क्षिप्रमेव, यदिति क्रियाविशेषणम् , ते रमणीयां क्रौर्यादिवर्जितां योनिमापद्येरन् प्राप्नुयुः ब्राह्मणयोनिं वा क्षत्रिययोनिं वा वैश्ययोनिं वा स्वकर्मानुरूपेण ।
அனுவாதம் - அதாவது அங்கு அந்த அனுசயீ (தொடர்ந்து வரும்) ஜீவனிடத்தில் இந்த லோகத்தில் மிக நல்ல ஒழுக்கமுடைய நன்நடத்தை உள்ள ஜீவன். எவரிடத்தில் நன்நடத்தையை அனுசரித்து சுபத்துடன் கூடிய புண்ய கர்மங்கள் உடையவரோ அவரை ரமணியசரணர்கள் அதாவது நன்நடத்தை உள்ளவர்கள் என்று கூறப்படுகின்றனர். எவர்கள் குரூரத்தன்மை, பொய் பேசுதல், கபடத்தன்மை அற்றவர்களோ அவர்களிடத்தில் சுபத்துடன் கூடிய சத்பாவம் அறியமுடிகிறது. அந்த உடன் இருக்கும் புண்ய கர்மத்தால் சந்திர மண்டலத்தில் அனுபவித்த புண்யத்துடன் கூடிய கர்மத்தின் அப்யாசத்தால் விரைவிலேயே ரமணீயமான அதாவது குரூரம் முதலியவை அற்ற பிறப்பை (யோனியை) அடைகின்றனர். இங்கு “यत्” (யத்) என்ற சப்தம் கிரியா விசேஷணமாகும். தங்களுடைய கர்மங்களுக்குத் தகுந்தவாறு அவர்கள், பிராஹ்மண ஜன்மத்தையோ, க்ஷத்திரிய ஜன்மத்தையோ, வைசிய ஜன்மத்தையோ அடைகின்றனர்.
अथ पुनर्येतद्विपरीताः कपूयचरणोपलक्षितकर्माणः अशुभानुशया अभ्याशो ह यत्ते कपूयां यथाकर्म योनिमापद्येरन् कपूयामेव धर्मसम्बन्धवर्जितां जुगुप्सितां योनिमापद्येरन् श्वयोनिं वा सूकरयोनिं वा चण्डालयोनिं वा स्वकर्मानुरूपेणैव ॥
அனுவாதம் - மேலும் எவர்கள் அந்த விபரீதமான கீழான நடவடிக்கையை மேற்கொண்ட கர்மம் உடையவர் அதாவது அசுபத்துடன் கூடியவர்களாக ஆகின்றனர். அவர்கள் விரைவிலேயே தங்களுடைய கர்மத்தை அனுசரித்து கீழான ஜன்மத்தை அடைகின்றனர். “कपूय” (கீழானது) என்பது தர்மசம்பந்தம் இல்லாத நிந்தைக்குரிய ஜன்மத்தை (யோனியை) அடைகின்றனர். அவர்கள் தங்களுடைய கர்மத்திற்குத் தகுந்தவாறு நாய் ஜன்மத்தையோ, பன்றி ஜன்மத்தையோ, சண்டாள ஜன்மத்தையோ அடைகின்றனர்.
अथैतयोः पथोर्न कतरेणचन तानीमानि क्षुद्राण्यसकृतावर्तीनि भूतानि भवन्ति जायस्व म्रियस्वेत्येतत्तृतीयꣳ स्थानं तेनासौ लोको न सम्पूर्यते तस्माज्जुगुप्सेत तदेष श्लोकः ॥ ८ ॥
மந்த்ரார்த்தம் - இந்த மார்க்கங்களில் எதிலும் செல்வது இல்லையோ அவர்கள் கீழ் தரமான ஜன்மங்களை அடைந்து மறுபடியும் மறுபடியும் பிறந்து இறந்து சுழல்கின்றனர். பிறப்பதும் இறப்பதும் அவர்களுடைய மூன்றாவது ஸ்தானமாகும். இந்த காரணத்தால் பரலோகம் அடைவதில்லை. ஆகையால் இந்த சம்சார கதியை வெறுக்கவேண்டும். இந்த மந்திரம் இந்த விஷயத்தைக் குறிப்பிடுகிறது.
ये तु रमणीयचरणा द्विजातयः, ते स्वकर्मस्थाश्चेदिष्टादिकारिणः, ते धूमादिगत्या गच्छन्त्यागच्छन्ति च पुनः पुनः, घटीयन्त्रवत् । विद्यां चेत्प्राप्नुयुः, तदा अर्चिरादिना गच्छन्ति ; यदा तु न विद्यासेविनो नापि इष्टादिकर्म सेवंते, तदा
அனுவாதம் - அ.கை - எவர் நன்நடத்தை உடைய பிராஹ்மணர்கள் தங்களுடைய (ஸ்வ) கர்மத்திலேயே ஈடுபட்டு இஷ்டா முதலியவைகளை செய்பவர்களோ அவர்கள் தூமாதி மார்க்கத்தில் சென்று நீர் இறைக்கும் எந்திரம் போல் போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருப்பார்கள். வித்தையை (உபாசனையை) அடைந்தவர்களானால் அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்கின்றனர். எவர்கள் வித்தையை அடையவில்லையோ அவ்வாறே இஷ்டா முதலிய கர்மங்களை அனுசரிக்கவில்லையோ அப்பொழுது -
अथैतयोः पथोः यथोक्तयोरर्चिर्धूमादिलक्षणयोः न कतरेण अन्यतरेण चनापि यन्ति । तानीमानि भूतानि क्षुद्राणि दंशमशककीटादीन्यसकृदावर्तीनि भवन्ति । अतः उभयमार्गपरिभ्रष्टा हि असकृज्जायन्ते म्रियन्ते च इत्यर्थः । तेषां जननमरणसन्ततेरनुकरणमिदमुच्यते । जायस्व म्रियस्व इति ईश्वरनिमित्तचेष्टा उच्यते । जननमरणलक्षणेनैव कालयापना भवति, न तु क्रियासु शोभनेषु भोगेषु वा कालोऽस्तीत्यर्थः ।
அனுவாதம் - ஆகையால் முன்பு கூறப்பட்ட இரண்டு மார்க்கங்களான அர்ச்சி தூமம் முதலிய பாதைகளில் ஒன்றிலும் ஒருவராலும் செல்லமுடியாது. அந்த இந்த கீழான ஜன்மங்களாகிய ஈ, கொசு, புழு முதலியவைகள் அடிக்கடி வந்து போய்க்கொண்டு இருப்பவைகளாக இருக்கின்றன. ஆகையால் இரண்டு மார்க்கங்களில் இருந்தும் விலக்கப்பட்டதால் அடிக்கடி பிறந்து மரணம் அடைகின்றன என்பது பொருள். அவைகளின் ஜனனமரணத்தின் தொடர்ச்சி “अनुकरणम्” (அனுகரணம்) எனப்படுகிறது. ஜன்மம் எடு, இறந்து விடு என்பது ஈஸ்வர சம்பந்தப்பட்ட செயல் எனப்படுகிறது. ஜனன மரணங்கள் ஒரு க்ஷணத்திலேயே அதாவது அவ்வாறே காலத்தைக் கழிக்கின்றன. ஆனால் கிரியைகளிலோ, நல்ல விஷயங்களை (போகங்களை) அனுபவிப்பதற்கு சமயம் கிடைப்பதில்லை என்பது இல்லை.
एतत् क्षुद्रजन्तुलक्षणं तृतीयं पूर्वोक्तौ पन्थानावपेक्ष्य स्थानं संसरताम् , येनैवं दक्षिणमार्गगा अपि पुनरागच्छन्ति, अनधिकृतानां ज्ञानकर्मणोरगमनमेव दक्षिणेन पथेति, तेनासौ लोको न सम्पूर्यते ।
அனுவாதம் - முன்பு கூறிய மார்க்கங்களில் சஞ்சரிப்பதை அபேக்ஷித்து இந்த கீழான ஐந்து லக்ஷணம் மூன்றாவது ஸ்தானமாகும். ஏன்எனில் தக்ஷிணமார்க்கமும் புனராவிர்த்தி (மறுபடியும் திரும்புதல்) உடையது. ஞானம், கர்மங்களில் அதிகாரம் அற்றவர்கள் இந்த மார்க்கத்திலும் செல்ல முடியாது ஆகையால் பரலோகத்தை அடையமுடியாது.
पञ्चमस्तु प्रश्नः पञ्चाग्निविद्यया व्याख्यातः । प्रथमो दक्षिणोत्तरमार्गाभ्यामपाकृतः । दक्षिणोत्तरयोः पथोर्व्यावर्तनापि — मृतानामग्नौ प्रक्षेपः समानः, ततो व्यावर्त्य अन्येऽर्चिरादिना यन्ति, अन्ये धूमादिना, पुनरुत्तरदक्षिणायने षण्मासान्प्राप्नुवन्तः संयुज्य पुनर्व्यावर्तन्ते, अन्ये संवत्सरमन्ये मासेभ्यः पितृलोकम् —इति व्याख्याता । पुनरावृत्तिरपि क्षीणानुशयानां चन्द्रमण्डलादाकाशादिक्रमेण उक्ता । अमुष्य लोकस्यापूरणं स्वशब्देनैवोक्तम् — तेनासौ लोको न सम्पूर्यत इति ।
அனுவாதம் - ஐந்தாவது கேள்விக்கு பஞ்சாக்கினி வித்யையினால் வியாக்கியானம் செய்யப்பட்டது. முதல் கேள்விக்கு தக்ஷிண உத்தரமார்க்கங்களின் விளக்கத்தால் பதில் அளிக்கப்பட்டது. தக்ஷிண உத்தரமார்க்கங்களில் திரும்புகின்றவர்கள் இறந்தவர்களை அக்னியில் போடுவதற்கு சமானமாக அங்கு இருந்து வந்ததும் அவைகளுக்கு பிரிவு ஏற்படுகிறது. அவைகளில் ஒன்று அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்கிறது. மற்றது தூமாதி மார்க்கத்தில் செல்கிறது. அதன்பின் உத்தராயணம், தக்ஷிணாயனம் என்று இவை ஆறு, ஆறு மாதங்களை அடைந்து அவை ஒன்றாய் சேர்ந்து பின் பிரிகின்றன. அவைகளில் ஒன்று வருடத்தை அடைகிறது. மற்றொன்று மாத அபிமானி தேவதைகளால் பித்ருலோகம் செல்கின்றது. இவ்வாறு தக்ஷிண, உத்தர மார்க்கங்களின் வேற்றுமைத்தன்மையும் வியாக்கியானம் செய்யப்பட்டது. இந்த பரலோகம் இவ்வாறு பூர்த்தி அற்று இருக்கிறது என்பது (असौ) இந்த) என்ற பிரத்யக்ஷ சப்தத்தால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
यस्मादेवं कष्टा संसारगतिः, तस्माज्जुगुप्सेत । यस्माच्च जन्ममरणजनितवेदनानुभवकृतक्षणाः क्षुद्रजन्तवो ध्वान्ते च घोरे दुस्तरे प्रवेशिताः — सागर इव अगाधेऽप्लवे निराशाश्चोत्तरणं प्रति, तस्माच्चैवंविधां संसारगति जुगुप्सेत बीभत्सेत घृणी भवेत् — मा भूदेवंविधे संसारमहोदधौ घोरे पात इति । तदेतस्मिन्नर्थे एषः श्लोकः पञ्चाग्निविद्यास्तुतये ॥
அனுவாதம் - எதனால் இவ்வாறு சம்சார கதிமிக்க கஷ்டமானதோ ஆகையால் அதில் விரக்த்தி (வெறுப்பு) கொள்ளவேண்டும். எதனால் ஜன்மமரணத்தினால் அனுபவிக்கும்பொழுது அந்த கீழான ஜந்துக்கள், (படகு) ஓடம் அற்ற ஆழமான சமுத்திரத்தில் இருந்துகொண்டு கடக்க ஆசை கொள்ளாமல் இருப்பதுபோல் மிகவும் கடப்பதற்கு கடினமான கோரமான அக்ஞான அந்தகாரத்தில் இருந்துகொண்டு இருக்கும் நாம் அந்த சம்சார கதியில் விரக்தி (வெறுப்பு) கொள்ளவேண்டும். இவ்வாறு கோரமாக உள்ள சம்சார மஹாசாகரத்தில் விழுந்துவிடக் கூடாது. இந்த அர்த்தத்தில் பஞ்சாக்னி வித்யையை ஸ்துதிப்பதற்கானது இந்த மந்திரம்.
स्तेनो हिरण्यस्य सुरां पिबꣳश्च गुरोस्तल्पमावसन्ब्रह्महा चैते पतन्ति चत्वारः पञ्चमश्चाचरꣳस्तैरिति ॥ ९ ॥
மந்த்ரார்த்தம் - தங்கத்தைத் திருடுபவன், மது அருந்துபவன், குருவின் பத்தினியை நாடுபவன், பிராஹ்மணனைக் கொல்வது ஆகிய நால்வரும் விழுகின்றனர். ஐந்தாமவர் இவர்களுடன் தொடர்பு கொள்பவன் ஆவான்.
स्तेनो हिरण्यस्य ब्राह्मणसुवर्णस्य हर्ता, सुरां पिबन् , ब्राह्मणः सन् , गुरोश्च तल्पं दारानावसन् , ब्रह्महा ब्राह्मणस्य हन्ता चेत्येते पतन्ति चत्वारः । पञ्चमश्च तैः सह आचरन्निति ॥
அனுவாதம் - தங்கத்தைத் திருடுபவன் அதாவது பிராஹ்மணனுடைய தங்கத்தை அபஹரிப்பவன். பிராஹ்மணனாய் இருந்துகொண்டு மது அருந்துபவன். குருவினுடைய படுக்கை அதாவது குருபத்தினியை நாடுவது. பிரஹ்மஹத்தி அதாவது பிராஹ்மணனை கொல்வது ஆகிய இந்த நால்வரும் வீழ்கிறார்கள். இந்த நால்வருடன் சேர்ந்து பழகுபவனும் ஆகிய ஐந்தாமவனும் வீழ்கிறான்.
अथ ह य एतानेवं पञ्चाग्नीन्वेद न सह तैरप्याचरन्पाप्मना लिप्यते शुद्धः पूतः पुण्यलोको भवति य एवं वेद य एवं वेद ॥ १० ॥
மந்த்ரார்த்தம் - எவர் இவ்வாறு இந்த பஞ்சாக்னிகளை அறிகிறாரோ அவருடன் சேர்ந்து இருப்பவர்களையும் பாபம் அண்டாது. அஹ்ர் சுத்தமான பவித்திர புண்ய லோகமாகவே ஆகின்றனர். எவர் இவ்வாறு அறிகிறாரோ, எவர் இவ்வாறு அறிகிறாரோ அவர்.
अथ ह पुनः यो यथोक्तान्पञ्चाग्नीन्वेद, स तैरप्याचरन् महापातकिभिः सह न पाप्मना लिप्यते, शुद्ध एव । तेन पञ्चाग्निदर्शनेन पावितः यस्मात्पूतः, पुण्यो लोकः प्राजापत्यादिर्यस्य सोऽयं पुण्यलोकः भवति ; य एवं वेद यथोक्तं समस्तं पञ्चभिः प्रश्नैः पृष्टमर्थजातं वेद । द्विरुक्तिः समस्तप्रश्ननिर्णयप्रदर्शनार्था ॥
அனுவாதம் - அதன்பின் மேலும் எவர் எவ்வாறு பஞ்சாக்னி வித்யை கூறப்பட்டதோ அதை அறிந்தவன் அந்த மஹா பாதகர்களுடன் சஹவாசம் இருந்தாலும் அந்த பாபம் அவனை ஒட்டாது. அவன் சுத்தமானவனே. ஏன் எனில் அந்த பஞ்சாக்னி தர்சனத்தால் சுத்தமான புண்யலோகம் அதாவது பிரஜாபதி முதலியவர்களுடைய புண்யலோகமாகின்றான். இவ்வாறு அறிந்தவன் அதாவது இந்த எல்லா ஐந்து கேள்விகளால் கேட்கப்பட்ட அர்த்தத்தை அறிந்தவன், அர்த்தத்தை அறிந்தவன் என்று இருமுறை கூறியது எல்லா கேள்விகளின் அர்த்தம் நிர்ணயம் செய்யப்பட்டது என்று காண்பிப்பதற்காக.
इति दशमखण्डभाष्यम् ॥
அனுவாதம் - அ.கை - தக்ஷிண மார்க்கத்தில் செல்பவர்கள் தேவர்களுக்கான அன்னபாவத்தை அடைகின்றனர் - “तद्देवानामन्नम्” (தத்தேவானாமான்னம்) என்று. அவர்களை தேவர்கள் உண்கின்றனர் (போக்ய பாவம் அனுபவிக்கின்றனர்) என்பதாகும். கீழான ஐந்து லக்ஷணம் மிகவும் கஷ்டமான சம்சாரகதி என்று கூறப்பட்டது. அந்த இரண்டின் தோஷத்தை நிவிர்த்தி செய்வதற்கு விரும்பி வைச்வானர போக்துருத்துவ பாவத்தை அடைவதற்காக இனிமேல் வரும் கிரந்தம். “अत्स्यन्नं पश्यसि प्रियम्” (அத்ஸ்யன்னம் பச்யஸி ப்ரியம்) என்ற லிங்கத்தால் ஆரம்பிக்கப்படுகிறது. இனிவரும் கதையானது சுலபமாக புரிந்துகொள்வதற்காகவும், வித்யா சம்பிரதாயத்தை தெரிவிப்பதற்காகவும் கூறப்படுகிறது.
प्राचीनशाल औपमन्यवः सत्ययज्ञः पौलुषिरिन्द्रद्युम्नो भाल्लवेयो जनः शार्कराक्ष्यो बुडिल आश्वतराश्विस्ते हैते महाशाला महाश्रोत्रियाः समेत्य मीमाꣳसां चक्रुः को न आत्मा किं ब्रह्मेति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - உபமன்யு புத்திரன் ப்ராச்சீனசால, புலுஷகருடைய புத்திரன் சத்யயக்ஞன், பல்லவிகியின் புத்திரன் இந்திரத்யும்னன், சர்க்ராக்ஷருடைய புத்திரன் ஜனன், அச்வதரா அச்வதரருடைய புத்திரன் புடில் ஆகியவர்கள் மஹா கிரஹஸ்தர்கள், மேலும் மேலான ச்ரோத்திரியர்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து பரஸ்பரம் (ஒருவருக்கொருவர்) நம்முடைய ஆத்மா எது, பிரஹ்மம் என்பது யாது? என்று விசாரம் செய்தனர்.
प्राचीनशाल इति नामतः, उपमन्योरपत्यमौपमन्यवः । सत्ययज्ञो नामतः, पुलुषस्यापत्यं पौलुषिः । तथेन्द्रद्युम्नो नामतः, भल्लवेरपत्यं भाल्लविः तस्यापत्यं भाल्लवेयः । जन इति नामतः, शर्कराक्षस्यापत्यं शार्कराक्ष्यः । बुडिलो नामतः, अश्वतराश्वस्यापत्यमाश्वतराश्विः । पञ्चापि ते हैते महाशालाः महागृहस्था विस्तीर्णाभिः शालाभिर्युक्ताः सम्पन्ना इत्यर्थः, महाश्रोत्रियाः श्रुताध्ययनवृत्तसम्पन्ना इत्यर्थः, ते एवंभूताः सन्तः समेत्य सम्भूय क्वचित् मीमांसां विचारणां चक्रुः कृतवन्त इत्यर्थः ।
அனுவாதம் - ப்ராச்சீனசாலர் என்ற பெயருடைய உபமன்யுவினுடைய புத்திரர் ஒளபன்யவர், சத்யயக்ஞன் என்ற பெயருடைய புலுஷஸ்யருடைய புத்திரன் பெளலுஷி:, அவ்வாறே இந்திரத்யும்னர் என்ற பெயருடைய பல்லவருடைய புத்திரன் பால்லவேயர், ஜன என்ற பெயருடைய சர்கராக்ஷருடைய புத்திரன் சாக்கராக்ஷன். புடிலர் என்ற பெயருடைய அச்வதராச்வருடைய புத்திரன் ஆச்வதாராக்ஷி ஆகிய இந்த ஐவரும் சிறந்த கிரஹஸ்தர்கள். அதாவது அநேக தர்மசாலைகள் உடையவர்கள், அவ்வாறே மிகச்சிறந்த ஸ்ரோத்திரியர்கள், சுருதி அதாவது சாஸ்திரங்களை அத்யயனம் செய்தவர்களாயும் அதன்படி நல்ல ஆசாரம் (நடவடிக்கை) உள்ளவர்களும் ஆவார்கள். இவ்வாறு இருக்கும் இவர்கள் ஒன்றுசேர்ந்து விசாரத்தில் ஈடுபட்டனர்.
कथम् ? को नः अस्माकमात्मा किं ब्रह्म — इति ; आत्मब्रह्मशब्दयोरितरेतरविशेषणविशेष्यत्वम् । ब्रह्मेति अध्यात्मपरिच्छिन्नमात्मानं निवर्तयति, आत्मेति च आत्मव्यतिरिक्तस्य आदित्यादिब्रह्मण उपास्यत्वं निवर्तयति । अभेदेन आत्मैव ब्रह्म ब्रह्मैव आत्मेत्येवं सर्वात्मा वैश्वानरो ब्रह्म स आत्मेत्येतत्सिद्धं भवति, ‘मूर्धा ते व्यपतिष्यत्’ ‘अन्धोऽभविष्यः’ इत्यादिलिङ्गात् ॥
அனுவாதம் - இவ்வாறு விசாரம் செய்ய ஆரம்பித்தனர்- எவ்வாறு? நம்முடைய ஆத்மா எது? பிரஹ்மம் என்பது யாது? என்று. இங்கு ஆத்மா, பிரஹ்மம் என்பது பரஸ்பர விசேஷண விசேஷ்ய பாவம் ஆகும். பிரஹ்மம் என்று அத்யாத்ம பரிச்சின்ன ஆத்மாவை (தேஹாத்மாவை) ஆத்மா என்று நிவிர்த்தி செய்கின்றது. அவ்வாறே ஆத்மாவைக்காட்டிலும் வேறான ஆதித்யன் முதலிய பிரஹ்ம உபாசித்தலையும் நிவிர்த்தி செய்கின்றது. அபேதத்தால் ஆத்மாவே பிரஹ்மம், பிரஹ்மமே ஆத்மா என்று இவ்வாறு சர்வாத்மாவை ச்வானரன் பிரஹ்ம. அதுவே ஆத்மா என்று. “मूर्धा ते व्यपतिष्यत्” (மூர்த்தா தே வ்ய பதிஷ்யத்), “अन्धोऽभविष्यः” (அந்தோऽபவிஷ்ய:) என்பது முதலிய லிங்கங்களால் சித்திக்கின்றது.
ते ह सम्पादयाञ्चक्रुरुद्दालको वै भगवन्तोऽयमारुणिः सम्प्रतीममात्मानं वैश्वानरमध्येति तꣳ हन्ताभ्यागच्छामेति तं हाभ्याजग्मुः ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அந்த பூஜைக்குரிய மஹான்கள் அருணி புத்திரர் உத்தாலகர் இந்த வைச்வனரை குறித்து அறிந்தவர். ஆகையால் நாம் அவரிடம் செல்வோம் என்று நிச்சயம் செய்தார்கள். இவ்வாறு நிச்சயம் செய்து அவரிடம் சென்றார்கள்.
ते ह मीमांसन्तोऽपि निश्चयमलभमानाः सम्पादयाञ्चक्रुः सम्पादितवन्तः आत्मन उपदेष्टारम् । उद्दालको वै प्रसिद्धो नामतः, भगवन्तः पूजावन्तः, अयमारुणिः अरुणस्यापत्यं सम्प्रति सम्यगिममात्मानं वैश्वानरम् अस्मदभिप्रेतमध्येति स्मरति । तं हन्त इदानीमभ्यागच्छाम इत्येवं निश्चित्य तं ह अभ्याजग्मुः गतवन्तः तम् आरुणिम् ॥
அனுவாதம் - அவர்கள் விசாரம் செய்தாலும் நிச்சயம் ஏற்படாததினால் தங்களுக்கான உபதேசிப்பவரை யார் என்று ஸ்திரப்படுத்திக் கொண்டார்கள். உத்தாலகர் என்ற பிரசித்தமான நாமமுடைய பூஜைக்குரிய அருணருடைய புத்திரர் ஆருணியிடம் இந்த ஆத்மாவாகிய வைஸ்வானரனை தங்களுடைய அபிப்பிராயப்படி நமக்கு ஞாபகப்படுத்துவார் என்று சென்றார்கள். சரிதான் நாம் இப்பொழுது அவரிடம் செல்வோம் என்று நிச்சயம் செய்து அவரிடம் சென்றார்கள். அதாவது ஆருணரிடம் சென்றார்கள்.
स ह सम्पादयाञ्चकार प्रक्ष्यन्ति मामिमे महाशाला महाश्रोत्रियास्तेभ्यो न सर्वमिव प्रतिपत्स्ये हन्ताहमन्यमभ्यनुशासानीति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - (உத்தாலகர்) அவர் இவ்வாறு நிச்சயம் செய்தார்- அவர்கள் சிறந்த ச்ரோத்திரியர்களும் மஹா கிரஹஸ்தர்களும் ஆகிய அவர்கள் என்னிடம் கேள்வி கேட்பார்கள். அவர்களுக்கு என்னால் முழுமையாக பதில் அளிக்கமுடியாது. நான் அவர்களை வேறு உபதேசிப்பவரை அனுகச்செய்யலாம் என்று நினைத்தார்.
स ह तान् दृष्ट्वैव तेषामागमनप्रयोजनं बुद्ध्वा सम्पादयाञ्चकार । कथम् ? प्रक्ष्यन्ति मां वैश्वानरम् इमे महाशालाः महाश्रोत्रियाः, तेभ्योऽहं न सर्वमिव पृष्टं प्रतिपत्स्ये वक्तुं नोत्सहे ; अतः हन्ताहमिदानीमन्यम् एषामभ्यनुशासानि वक्ष्याम्युपदेष्टारमिति ॥
அனுவாதம் - அவர் அவர்களைப் பார்த்த உடனேயே அவர்களுடைய வருகைக்கான பிரயோஜனத்தை அறிந்து இவ்வாறு மனதில் நிச்சயித்தார். எவ்வாறு? இந்த மஹாகிரஹஸ்தர்களும், மஹாச்ரோத்திரியர்கள் என்னை வைச்வானரைப்பற்றிக் கேட்பார்கள். என்னால் அவர்கள் கேட்பதை முழுமையாக அவர்கள் புரிந்து கொள்ளும்படி கூற என்னால் முடியாது. ஆகையால் இப்பொழுது நான் அவர்களுக்கு வேறு ஒரு உபதேசம் செய்பவரை அவர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்று.
एवं सम्पाद्य
அனுவாதம் - அ.கை - இவ்வாறு நிச்சயம் செய்து -
तान्होवाचाश्वपतिर्वै भगवन्तोऽयं कैकेयः सम्प्रतीममात्मानं वैश्वानरमध्येति तं हन्ताभ्यागच्छामेति तꣳ हाभ्याजग्मुः ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - அவர் அவர்களிடம் கூறினார் - ஹே பூஜைக்குறியவர்களே! இப்பொழுது கேகயகுமாரர் அச்வபதி இந்த வைச்வானரர் என்ற ஆத்மாவை நன்கு அறிந்தவர். வாருங்கள் நாம் அவரிடம் செல்லலாம் என்று கூறி எல்லோரும் அவரிடம் சென்றனர்.
तान् ह उवाच — अश्वपतिर्वै नामतः भगवन्तः अयं केकयस्यापत्यं कैकेयः सम्प्रति सम्यगिममात्मानं वैश्वानरमध्येतीत्यादि समानम् ॥
அனுவாதம் - அவர் அவர்களிடம் கூறினார் - ஹே பகவான்களே! இப்பொழுது அச்வபதி என்ற பெயருடைய கேகயருடைய புத்திரன் கைகேயர் இந்த வைச்வானர ஆத்மாவை நன்கு அறிந்தவர். அவரிடம் செல்வோம் என்பது எல்லாம் முன்போல்.
तेभ्यो ह प्राप्तेभ्यः पृथगर्हाणि कारयाञ्चकार स ह प्रातः सञ्जिहान उवाच न मे स्तेनो जनपदे न कदर्यो न मद्यपो नानाहिताग्निर्नाविद्वान्न स्वैरी स्वैरिणी कुतोयक्ष्यमाणो वै भगवन्तोऽहमस्मि यावदेकैकस्मा ऋत्विजे धनं दास्यामि तावद्भगवद्भ्यो दास्यामि वसन्तु भगवन्त इति ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - அவரிடம் வந்தவர்களை ராஜாவானவர் தனித்தனியாக சத்காரியம் செய்து உபசரித்தார். காலையில் அவர் கூறினார்- என்னுடைய ராஜ்யத்தில் திருடர்கள் இல்லை, கஞ்சத்தன்மை உடையவர் இல்லை, ஞானம் அற்றவர் இல்லை, குடிகாரன் இல்லை, அக்னி காரியம் செய்யாதவன் இல்லை, நடத்தை கெட்டவன் இல்லை. ஆகையால் நடத்தை கெட்டவள் எங்கே இருப்பாள்? ஹே புண்யவான்களே! நான் யாகம் செய்யப்போகின்றேன் அப்பொழுது நான் ஒவ்வொரு ரித்விக்கிற்கும் எவ்வளவு தனம் அளிக்கப்போகிறேனோ அவ்வாறு உங்களுக்கும் அளிக்கின்றேன். ஆகையால் இங்கு தங்கி யாகத்தில் கலந்து கொள்ளுங்கள்.
तेभ्यो ह राजा प्राप्तेभ्यः पृथक्पृथगर्हाणि अर्हणानि पुरोहितैर्भृत्यैश्च कारयाञ्चकार कारितवान् । स ह अन्येद्युः राजा प्रातः सञ्जिहान उवाच विनयेन उपगम्य — एतद्धनं मत्त उपादध्वमिति । तैः प्रत्याख्यातो मयि दोषं पश्यन्ति नूनम् , यतो न प्रतिगृह्णन्ति मत्तो धनम् इति मन्वानः आत्मनः सद्वृत्ततां प्रतिपिपादयिषन्नाह — न मे मम जनपदे स्तेनः परस्वहर्ता विद्यते ; न कदर्यः अदाता सति विभवे ; न मद्यपः द्विजोत्तमः सन् ; न अनाहिताग्निः शतगुः ; न अविद्वान् अधिकारानुरूपम् ; न स्वैरी परदारेषु गन्ताः ; अत एव स्वैरिणी कुतः दुष्टचारिणी न सम्भवतीत्यर्थः ।
அனுவாதம் - தன்னை அடைந்தவர்களை ராஜா புரோஹிதர்களாலும் சேவகர்களாலும் தனித்தனியாக மரியாதை செய்தார். மறுநாள் காலை எழுந்தவுடன் அவர்களிடம் வினயத்துடன் சென்று என்னிடம் இருந்து தனத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார். அவர்கள் அதை பெற்றுக்கொள்ள மறுத்ததால் தன்னிடம் நிச்சயமாக தோஷத்தைக் காண்கிறார்கள் அதனால் என்னிடம் இருந்து தனத்தை மறுக்கின்றனர் என்று கருதி தன்னுடைய நன்நடத்தையை தெரியப்படுத்த விரும்பி இவ்வாறு கூறினார் - என்னுடைய ராஜ்யத்தில் திருடர்கள் அதாவது பிறருடைய தனத்தை அபஹரிப்பவர்கள் எவரும் இல்லை. கருமிகள் அதாவது பிறருக்கு தானம் அளிக்காதவர்கள் எவரும் இல்லை பிராஹ்மணனாய் இருந்துகொண்டு மது அருந்துபவர்கள் இல்லை. நூ று பசுக்களை வைத்துக்கொண்டு அக்னிஹோத்திரம் செய்யாமல் இருப்பவர் இல்லை. தன்னுடைய அதிகாரத்திற்கு அனுரூபமாக இல்லாத எந்த ஒரு அவித்வானும் இல்லை. “स्वैरी” (ஸ்வைரீ) பரதாரத்தை நாடுபவன் (பிறர் மனைவியை நாடுபவன்) இல்லை. ஆகையால் துஷ்ட ஆசாரத்தை உடைய ஸ்திரீகளும் இல்லை என்பது தாத்பர்யம்.
तैश्च न वयं धनेनार्थिन इत्युक्तः आह — अल्पं मत्वा एते धनं न गृह्णन्तीति, यक्ष्यमाणो वै कतिभिरहोभिरहं हे भगवन्तोऽस्मि । तदर्थं क्लृप्तं धनं मया यावदेकैकस्मै यथोक्तम् ऋत्विजे धनं दास्यामि, तावत् प्रत्येकं भगवद्भयोऽपि दास्यामि । वसन्तु भगवन्तः, पश्यन्तु च मम यागम् ॥
அனுவாதம் - எங்களுக்கு தனத்தில் விருப்பம் இல்லை என்று கூறி பின்னும் அவர் (ராஜா) தனம் குறைவாக இருக்கிறது. ஆகையால் ஏற்றுக்கொள்ளவில்லை என்று நினைத்து இவ்வாறு கூறினார் - ஹே பகவான்களே! சில தினங்களில் நான் யக்ஞத்தை அனுஷ்டிக்கப் போகின்றேன். அதனால் அதில் கலந்துகொள்ளும் ரித்விக்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தனம் அளிக்கவேண்டும் என்று சங்கல்பம் செய்திருக்கிறேன். அவ்வாறே உங்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கின்றேன். ஆகையால் தாங்கள் இங்கு தங்கியிருந்து அந்த என்னுடைய யாகத்தை தர்சித்துச் செல்லுங்கள் என்று.
इत्युक्ताः
அனுவாதம் - அ.கை - இவ்வாறு கூறியபின் -
ते होचुर्येन हैवार्थेन पुरुषश्चरेत्तं हैव वदेदात्मानमेवेमं वैश्वानरं संप्रत्यध्येषितमेव नो ब्रूहीति ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - அவர்கள் கூறினார் - எந்த பிரயோஜனத்திற்காக எந்த புருஷனிடம் செல்கிறானோ அவர் அவனுடைய பிரயோஜனத்திகானதைக் கூறவேண்டும். இப்பொழுது தாங்கள் வைச்வாநர ஆத்மாவை அறிந்திருக்கின்றீார்கள். அதைத் தாங்கள் எங்களுக்கு விளக்கியருள வேண்டும்.
ते ह ऊचुः — येन ह एव अर्थेन प्रयोजनेन यं प्रति चरेत् गच्छेत् पुरुषः, तं ह एवार्थं वदेत् । इदमेव प्रयोजनमागमनस्येत्ययं न्यायः सताम् । वयं च वैश्वानरज्ञानार्थिनः । आत्मानमेवेमं वैश्वानरं संप्रत्यध्येषि सम्यग्जानासि । अतस्तमेव नः अस्मभ्यं ब्रूहि ॥
அனுவாதம் - அவர்கள் கூறினார்கள் - எந்த பிரயோஜனத்தை விரும்பி புருஷர்கள் ஒருவரிடம் வருகிறாரோ அந்த பிரயோஜனத்தை நாடிவருபவர்களுக்கு அளிப்பதே சத் புருஷர்களுடைய நியாயம். நாங்கள் வைச்வானரரைப்பற்றி அறிய விருப்பம் உள்ளவர்கள். நீங்கள் இந்த வைச்வாநர ஆத்மாவை நன்றாக அறிந்திருக்கின்றீார்கள். ஆகையால் அதையே எங்களுக்கு விளக்கி அருளுங்கள்.
इत्युक्तः
அனுவாதம் - அ.கை -இவ்வாறு கூறியபின் -
तान्होवाच प्रातर्वः प्रतिवक्तास्मीति ते ह समित्पाणयः पूर्वाह्णे प्रतिचक्रमिरे तान्हानुपनीयैवैतदुवाच ॥ ७ ॥
மந்த்ரார்த்தம் - அவர் (ராஜா) கூறினார் - சரிதான். நான் உங்களுக்கு நாளைக் காலையில் பதில் அளிக்கிறேன் என்றார். மறுநாள் காலையில் சமித்துகளுடன் ராஜாவிடம் சென்றனர். அவர்களுக்கு உபநயனம் செய்யாமலேயே ராஜாவானவர் அந்த வித்யையை உபதேசம் செய்தார்.
तान् ह उवाच । प्रातः वः युष्मभ्यं प्रतिवक्तास्मि प्रतिवाक्यं दातास्मीत्युक्ताः ते ह राज्ञोऽभिप्रायज्ञाः समित्पाणयः समिद्भारहस्ताः अपरेद्युः पूर्वाह्णे राजानं प्रतिचक्रमिरे गतवन्तः ।
அனுவாதம் - அவர்களிடம் கூறினார் - உங்களுக்கு இதனுடைய பதிலை நாளைக் காலையில் அளிக்கிறேன். கூறியதும் அவர்கள் ராஜாவின் அபிப்பிராயத்தை அறிந்தவர்களாய் சமித்துக்களை ஏந்திக்கொண்டு மறுநாள் காலையில் ராஜாவிடம் சென்றார்கள்.
यत एवं महाशालाः महाश्रोत्रियाः ब्राह्मणाः सन्तः महाशालत्वाद्यभिमानं हित्वा समिद्भारहस्ताः जातितो हीनं राजानं विद्यार्थिनः विनयेनोपजग्मुः । तथा अन्यैर्विद्योपादित्सुभिर्भवितव्यम् । तेभ्यश्च अदाद्विद्याम् अनुपनीयैव उपनयनमकृत्वैव तान् । यथा योग्येभ्यो विद्यामदात् , तथा अन्येनापि विद्या दातव्येति आख्यायिकार्थः । एतद्वैश्वानरविज्ञानमुवाचेति वक्ष्यमाणेन सम्बन्धः ॥
அனுவாதம் - ஏன்எனில் இவ்வாறு மஹாகிரஹஸ்தர்களாயும், மஹாச்ரோதிரியர்களான பிராமணர்களாய் இருந்தும் மஹாகிரஹஸ்தர் என்பது முதலிய அபிமானத்தை துறந்து சமித்துக்களை ஏந்திக்கொண்டு வித்யார்த்திகளாய் (வித்யையில் விருப்பம் உள்ளவர்களாய்) ஜாதியினால் குறை இருந்தாலும் ராஜாவிடம் மிக வினயத்துடன் சென்றனர். இதனால் வித்யையை பெறவிரும்பும் மற்றவர்களும் இவ்வாறு அணுகவேண்டும். அவர்களுக்கு உபநயனம் செய்யாமலேயே வித்யையை அளித்தார். எவ்வாறு யோக்கியர்களுக்கு வித்யா அளிக்கப்பட்டதோ அவ்வாறே மற்ற வித்வான்களும் வித்யா தானம் செய்யவேண்டும் என்பது இந்த ஆக்யாயிகாவின் (கதையின்) அர்த்தம். “இந்த வைச்வாநர ஞானம் கூறினார்” என்றது இனிக்கூறப்போகும் விளக்கத்துடன் சம்பந்தமானது ஆகும்.
इति एकादशखण्डभाष्यम् ॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ छान्दोग्योपनिषद्भाष्ये पञ्चमोऽध्यायः समाप्तः ॥