द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

छान्दोग्योपनिषद्भाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

சாந்தோக்யோபநிஷத்பாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

‘ओमित्येतदक्षरम्’ इत्याद्यष्टाध्यायी छान्दोग्योपनिषत् । तस्याः सङ्क्षेपतः अर्थजिज्ञासुभ्यः ऋजुविवरणमल्पग्रन्थमिदमारभ्यते ।
அனுவாதம் - “ओमित्येतदक्षरम्” (ஓமித்யேத--தக்ஷரம்) முதலிய எட்டு அத்யாயங்களுடன் கூடியது சாந்தோக்கிய உபநிஷத். அதன் அர்த்தத்தை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்காக சுருக்கமாக ருü§ விவரணம் என்னும் சிறிய கிரந்தம் எளிதாக புரிந்துகொள்ளுமாறு ஆரம்பிக்கப்படுகிறது.
तत्र सम्बन्धः — समस्तं कर्माधिगतं प्राणादिदेवताविज्ञानसहितम् अर्चिरादिमार्गेण ब्रह्मप्रतिपत्तिकारणम् ; केवलं च कर्म धूमादिमार्गेण चन्द्रलोकप्रतिपत्तिकारणम् ; स्वभाववृत्तानां च मार्गद्वयपरिभ्रष्टानां कष्टा अधोगतिरुक्ता ;
அனுவாதம் - அங்கு ஸம்பந்தம் இவ்வாறு உள்ளது - எல்லா அறியப்பட்ட கர்மங்கள் பிராணன் முதலிய தேவதா ஞானத்துடன் கூடியதாய் அர்ச்சிராதி மார்க்கத்தால் பிரஹ்மத்தை (பிரஹ்மலோகத்தை) அடைய காரணமாகிறது. கேவலம் கர்மம் தூமாதி மார்க்கத்தால் சந்திரலோகப் பிராப்த்திக்குக் காரணமாகிறது. இரண்டு மார்க்கங்களையும் கைவிட்டவர்கள் ஸ்வபாவப்படி அனுசரிப்பவர்கள் கஷ்ட்டமான அதோகதியை அடைவர் (கீழான கதியை அடைவர்) என்று கூறப்பட்டது.
न च उभयोर्मार्गयोरन्यतरस्मिन्नपि मार्गे आत्यन्तिकी पुरुषार्थसिद्धिः — इत्यतः कर्मनिरपेक्षम् अद्वैतात्मविज्ञानं संसारगतित्रयहेतूपमर्देन वक्तव्यमिति उपनिषदारभ्यते ।
அனுவாதம் - இரண்டு மார்க்கங்களில் எந்த ஒரு மார்க்கத்தை அனுசரித்தாலும் ஆத்யந்திக புருஷார்த்தம் ஸித்திக்காது. ஆகையால் கர்மத்தை அபேக்ஷிக்காமல் அத்வைத ஆத்ம விக்ஞானத்தை மூன்று ஸம்சார கதி ஹேதுக்களையும் நிராகரணம் செய்து பிரதிபாதனம் செய்யவேண்டும் என்று இந்த உபநிஷத் ஆரம்பிக்கப்படுகிறது.
न च अद्वैतात्मविज्ञानादन्यत्र आत्यन्तिकी निःश्रेयसप्राप्तिः । वक्ष्यति हि — ‘अथ येऽन्यथातो विदुरन्यराजानस्ते क्षय्यलोका भवन्ति’ (छा. उ. ७ । २५ । २) ; विपर्यये च — ‘स स्वराड् भवति’ (छा. उ. ७ । २५ । २) — इति ।
அனுவாதம் - அத்வைதாத்மவிக்ஞானத்தைக் காட்டிலும் வேறு ஒன்றால் ஆத்யந்திக (முடிவு அற்ற) நிஸ்ச்ரேயஸின்ப்ராப்தியை அடையமுடியாது. இதையே மேலே கூறப்படுகிறது - “अथ येऽन्यथातो विदुरन्यराजानस्ते क्षय्यलोका भवन्ति।” (அத யேऽன்யதாதோ விதுரன்ய- ராஜானஸ்தே க்ஷய்யலோகா பவந்தி), அதற்கு மாறானது “स स्वराड्भवति” ( ஸ ஸ்வராட்பவதி) என்று.
तथा — द्वैतविषयानृताभिसन्धस्य बन्धनम् , तस्करस्येव तप्तपरशुग्रहणे बन्धदाहभावः, संसारदुःखप्राप्तिश्च इत्युक्त्वा — अद्वैतात्मसत्याभिसन्धस्य, अतस्करस्येव तप्तपरशुग्रहणे बन्धदाहाभावः, संसारदुःखनिवृत्तिर्मोक्षश्च — इति ॥
அனுவாதம் - சூட்டினால் தபிக்கின்ற கோடாலியைத் திருடன் பற்றினால் அதனால் தபிக்கப்பட்டும் பந்தப்பட்டும் துக்கத்தை அடைவதுபோல் த்விதீய விஷயங்களாகிய பொய்யானவைகளில் ஸம்பந்தப்பட்டால் அதனால் பந்தமும், ஸம்ஸார துக்கமும் அடையப்படும் என்று கூறி அத்வைதாத்மபரமஸத்யத்தில் நிலைபெற்றவனுக்கு திருடன் அல்லாதவன் சூடான தபிக்கப்பட்ட கோடலியை பற்றினாலும் பந்தமாயும், தபிக்கச் செய்வதுமாயும் உள்ள ஸம்ஸாரதுக்க நிவிர்த்தியும் மோக்ஷமும் ஆகும்.
अत एव न कर्मसहभावि अद्वैतात्मदर्शनम् ; क्रियाकारकफलभेदोपमर्देन ‘सत् . . . एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १), (छा. उ. ६ । २ । २) ‘आत्मैवेदं सर्वम्’ (छा. उ. ७ । २५ । २) इत्येवमादिवाक्यजनितस्य बाधकप्रत्ययानुपपत्तेः । कर्मविधिप्रत्यय इति चेत् , न ; कर्तृभोक्तृस्वभावविज्ञानवतः तज्जनितकर्मफलरागद्वेषादिदोषवतश्च कर्मविधानात् ।
அனுவாதம் - ஆகையால்தான் அத்வைதாத்ம தர்சனம் கர்மத்துடன் சேர்ந்தது அல்ல. கிரியாகாரக பலபேதமற்றதால் “सत्” “एकमेवाद्वितीयम्” (ஸத் ஏகமேவாத்விதீயம்), “आत्मैवेदं सर्वम्” (ஆத்மைவேதம் ஸர்வம்) என்பன முதலிய வாக்கியத்தால் உண்டான ஆத்ம ஞானம் ஒரு நாளும் பாதகம் ஆகாது. கர்மவிதி பிரத்யயமாய் இருந்தால்? அவ்வாறு ஸம்பவிக்காது. ஏன்எனில் கர்த்ரு போக்த்ரு ஸ்வபாவ விக்ஞானத்தால் உண்டாகும் கர்ம பலம் ராக துவேஷம் முதலிய தோஷங்களுடன் கூடியதும் கர்ம விதானமாய் இருப்பதாலும் ஆகும்.
अधिगतसकलवेदार्थस्य कर्मविधानात् अद्वैतज्ञानवतोऽपि कर्मेति चेत् ?
அனுவாதம் - சங்கை - எல்லா வேத அர்த்தங்களையும் அறிந்தவனுக்காக கர்மம் விதானம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் அத்வைத ஆத்ம ஞானத்திற்கும் கர்மம் செய்யவேண்டும் எனில்?
न ; कर्माधिकृतविषयस्य कर्तृभोक्त्रादिज्ञानस्य स्वाभाविकस्य ‘सत . . . एकमेवाद्वितीयम्’ ‘आत्मैवेदं सर्वम्’ इत्यनेनोपमर्दितत्वात् । तस्मात् अविद्यादिदोषवत एव कर्माणि विधीयन्ते ; न अद्वैतज्ञानवतः । अत एव हि वक्ष्यति — ‘सर्व एते पुण्यलोका भवन्ति, ब्रह्मसंस्थोऽमृतत्वमेति’ (छा. उ. २ । २३ । १) इति ॥
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறு அல்ல. ஏன் எனில் கர்மம் அதிகாரி விஷயமாவதால் கர்த்தா போக்த்தா முதலிய ஞானத்தின் ஸ்வபாவமானவைகளை “सत् एकमेवाद्वितीयम्” (ஸத் ஏகமேவாத்விதீயம், “आत्मैवेदं सर्वम्” (ஆத்மைவேதம் ஸர்வம்) இவைகளால் நிராகரணம் செய்யப்பட்டது. ஆகையால் அவித்யை முதலிய தோஷமுடையவருக்கே கர்மங்கள் விதிக்கப்படுகின்றன. அத்வைதஞானம் உள்ளவர்களுக்கு அல்ல. ஆகையால் இனி சுருதி இவ்வாறு கூறப்போகிறது - “सर्व एते पुण्यलोका भवन्ति ब्रह्मसंस्थोऽमृतत्वमेति” (ஸர்வ ஏதே புண்யலோகா பவந்தி பிரஹ்மஸம்ஸ்தோऽம்ருதத்வமேதி) என்று.
तत्रैतस्मिन्नद्वैतविद्याप्रकरणे अभ्युदयसाधनानि उपासनान्युच्यन्ते, कैवल्यसन्निकृष्टफलानि च अद्वैतादीषद्विकृतब्रह्मविषयाणि ‘मनोमयः प्राणशरीरः’ (छा. उ. ३ । १४ । १२) इत्यादीनि, कर्मसमृद्धिफलानि च कर्माङ्गसम्बन्धीनि ; रहस्यसामान्यात् मनोवृत्तिसामान्याच्च — यथा अद्वैतज्ञानं मनोवृत्तिमात्रम् , तथा अन्यान्यप्युपासनानि मनोवृत्तिरूपाणि — इत्यस्ति हि सामान्यम् । कस्तर्हि अद्वैतज्ञानस्योपासनानां च विशेषः ? उच्यते —
அனுவாதம் - இந்த அத்வைத வித்யாபிரகரணத்தில் அப்யுதய ஸாதனங்களும் உபாஸனைகளும் கூறப்படுகின்றன. கைவல்யத்திற்கு ஸமீபவர்த்தியாயும். அத்வைதத்தைக் காட்டிலும் சிறிது விகாரம் அடைந்த பிரஹ்ம விஷயங்கள் மனோமயமாயும், பிராணசரீரம் முதலியவைகளும் கர்மத்தின் மிகுந்த பலன்களாயும், அந்த உபாஸனைகள் கர்ம ஸம்பந்தம் உள்ளவை. ஏன் எனில் ரஹஸ்யத்தில் ஸமானமானதாயும், மனோ விருத்தியிலும் ஸாமான்யமாய் இருப்பதால் ஆகும். எவ்வாறு அத்வைத ஞானம் மனோ விருத்தி மாத்திரமோ அவ்வாறே மற்ற உபாஸனைகளும் மனோ விருத்தி ரூபங்களிலும் ஸமானமானதாய் இருக்கிறது. ஆனால் அத்வைத ஞானத்திற்கும் உபாஸனைகளுக்கும் என்ன வித்யாசம்? அது கூறப்படுகிறது -
स्वाभाविकस्य आत्मन्यक्रियेऽध्यारोपितस्य कर्त्रादिकारकक्रियाफलभेदविज्ञानस्य निवर्तकमद्वैतविज्ञानम् , रज्ज्वादाविव सर्पाद्यध्यारोपलक्षणज्ञानस्य रज्ज्वादिस्वरूपनिश्चयः प्रकाशनिमित्तः ; उपासनं तु यथाशास्त्रसमर्थितं किञ्चिदालम्बनमुपादाय तस्मिन्समानचित्तवृत्तिसन्तानकरणं तद्विलक्षणप्रत्ययानन्तरितम् — इति विशेषः ।
அனுவாதம் - கிரியை அற்ற ஆத்மாவில் ஸ்வபாவமாக அத்யாரோபம் செய்யப்பட்ட கர்த்தா முதலிய காரக கிரியா பல பேத ஞானத்தை நிவர்த்திப்பது அத்வைத ஞானம், எவ்வாறு ரஜ்ஜு முதலியவைகளில் ஸர்ப்பம் முதலிய ஆரோப லக்ஷண ஞானம் பிரகாசத்தின் நிமித்தத்தால் நீங்கி உண்மையான ரஜ்ஜு முதலியவற்றின் நிஜ ஸ்வரூப நிச்சயம் ஏற்படுகிறதோ அவ்வாறு ஆகும். உபாஸனமோ எவ்வாறு சாஸ்திரத்தில் கூறப்பட்டதை அவலம்பித்து அதில் ஸமான ஸித்த விருத்தியை இடைவிடாமல் (தொடர்ந்து) செய்வது ஆகும். அதைத்தவிற வேறான பிரத்யயத்தைக் காட்டிலும் வேறானது என்பது அவை இரண்டின் வித்யாசமாகும்.
तान्येतान्युपासनानि सत्त्वशुद्धिकरत्वेन वस्तुतत्त्वावभासकत्वात् अद्वैतज्ञानोपकारकाणि, आलम्बनविषयत्वात् सुखसाध्यानि च — इति पूर्वमुपन्यस्यन्ते । तत्र कर्माभ्यासस्य दृढीकृतत्वात् कर्मपरित्यागेनोपासन एव दुःखं चेतःसमर्पणं कर्तुमिति कर्माङ्गविषयमेव तावत् आदौ उपासनम् उपन्यस्यते ॥
அனுவாதம் - அந்த இந்த உபாஸனைகள் சித்த சுத்தி செய்வதால் வஸ்து தத்வத்தைப் பிரகாசிக்கச் செய்வதால் அத்வைத ஞானத்திற்கு உபகாரமானதாயும் அதை அவலம்பித்த விஷயமாயும் இருப்பதால் அதை சாதிக்கின்றன என்று முன்பு உபந்யாசம் செய்யப்பட்டது. இந்த விஷயத்தில் கர்மத்தில் அப்பியாசம் திடமாக ஆகப்பட்டதால் கர்மத்தை பரித்தியாகம் செய்து உபாஸனையில் மனதை செழுத்துவது மிகக்கடினம் என்பதால் கர்மாங்க விஷயத்தையே உபாஸனையாக எடுத்துக் கூறப்படுகிறது.
ओमित्येतदक्षरमुद्गीथमुपासीत । ओमिति ह्युद्गायति तस्योपव्याख्यानम् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஓம் என்ற இந்த அக்ஷரம் உத்கீதம். இதனை உபாஸனை செய்யவேண்டும். “ஓம்” என்று (உச்சாரம் செய்து உத்காதா யக்ஞத்தில்) உத்கானம் (உச்சஸ்வரத்தில் ஸாமகானத்தை) செய்கின்றார். இதன் (உத்கீத உபாஸனையின்) வியாக்யானம் செய்யப்படுகிறது.
ओमित्येतदक्षरमुद्गीथमुपासीत — ओमित्येतदक्षरं परमात्मनोऽभिधानं नेदिष्ठम् ; तस्मिन्हि प्रयुज्यमाने स प्रसीदति, प्रियनामग्रहण इव लोकः ; तदिह इतिपरं प्रयुक्तम् अभिधायकत्वाद्व्यावर्तितं शब्दस्वरूपमात्रं प्रतीयते ; तथा च अर्चादिवत् परस्यात्मनः प्रतीकं सम्पद्यते ; एवं नामत्वेन प्रतीकत्वेन च परमात्मोपासनसाधनं श्रेष्ठमिति सर्ववेदान्तेष्ववगतम् ; जपकर्मस्वाध्यायाद्यन्तेषु च बहुशः प्रयोगात् प्रसिद्धमस्य श्रैष्ठ्यम् ;
அனுவாதம் - உத்கீதம் என்னும் “ஓம்” என்னும் அக்ஷரத்தை உபாஸிக்க வேண்டும். “ஓம்” என்னும் இந்த அக்ஷரம் பரமாத்மாவின் மிக நெருக்கமான பிரியமான பெயர் ஆகும். உலகில் பிரியமான நாமத்தை கிரஹிப்பது போல் இந்த நாமத்தை பிரயோகித்தால் அது பிரசன்னமாகிறது. அது இங்கு “इति परं” (இதி, பரம் என்று பிரயுக்தம் செய்யப்பட்டதால் “இதி” சப்தம் மூலமாய் பரமாத்மாவின் அபிதாயகம் (நாமம்) ஆவதால் இதி (இவ்வாறு) என்ற சப்தத்தால் வியாவர்த்தம் ஆவதால் (வேறாக) காணப்படுவதால் சப்த ரூபமாய் பிரதீயாகிறது (தோன்றுகிறது) அவ்வாறே மூர்த்தி முதலியவை போன்று பரமாத்மாவின் பிரதீகத்தை அடைகிறது. இவ்வாறு நாமத்தாலும் பிரதீகத்தாலும் பரமாத்மாவின் உபாஸனையின் ஸாதனம் ஸ்ரேஷ்டம் என்பது எல்லா வேதாந்தங்களிலும் அறியப்படுகிறது. ஜபம், கர்மம், ஸ்வாத்யாயனம் முதலியவைகளில் அதிகமாக பிரயோகம் செய்யப்படுவதால் இதனுடைய சிரேஷ்டத்தன்மை மிகவும் பிரஸித்தமானது. (அவ்வாறே கீதையிலும் பகவான் இவ்வாறு கூறி இருக்கின்றார்).
(தஸ்மாதோமித்யுஹிருத்ய யக்ஞதானதப: கிரியா:।। ப்ரவர்தந்தே விதானோக்தா: சததம் பிரஹ்மவாதினாம் ।।) என்று.
अतः तदेतत् , अक्षरं वर्णात्मकम् , उद्गीथभक्त्यवयवत्वादुद्गीथशब्दवाच्यम् , उपासीत — कर्माङ्गावयवभूते ओङ्कारेपरमात्मप्रतीके दृढामैकाग्र्यलक्षणां मतिं सन्तनुयात् । स्वयमेव श्रुतिः ओङ्कारस्य उद्गीथशब्दवाच्यत्वे हेतुमाह — ओमिति ह्युद्गायति ; ओमित्यारभ्य, हि यस्मात् , उद्गायति, अत उद्गीथ ओङ्कार इत्यर्थः ।
அனுவாதம் - ஆகையால் இந்த வர்ணரூப அக்ஷரமானது உத்கீத பக்தியின் அவயவமாய் இருப்பதால் உத்கீத (उीथ) சப்த வாச்சியத்தை உபாஸனை செய்யவேண்டும். (உத்கீதத்தின்) கர்மாங்கமான அவயவ பூதமாகிய ஓம்காரத்தில் பரமார்த்த பிரதீகத்தில் திடமான ஏகாக்ர லக்ஷணத்துடன் மனதை நிலைநிறுத்த வேண்டும். ஓம்காரத்தின் உத்கீத சப்த வாச்சியம் எவ்வாறு ஆகும் என்பதற்கு சுருதி ஸ்வயமாகவே ஹேதுவைக் கூறுகிறது. - ஓம் என்பது உத்கீதம் (ओमिति ह्यु उयति) செய்கிறது. எதனால் ஓம் என்று ஆரம்பித்து உத்கானம் செய்யப்படுகிறதோ அதனால் ஓம்காரம் உத்கீதமாகும். (ஸாம வேதத்தின் ஸ்தோத்ர விசேஷத்தின் பெயர் “उीत भक्तिः” (உத்கீத பக்திः). ஓம்காரம் அதன் அம்சம். ஆகையால் இது உத்கீதம் எனப்படுகிறது,)
तस्य उपव्याख्यानम् — तस्य अक्षरस्य, उपव्याख्यानम् एवमुपासनमेवंविभूत्येवंफलमित्यादिकथनम् उपव्याख्यानम् , प्रवर्तत इति वाक्यशेषः ॥
அனுவாதம் - அதனுடைய உபவியாக்யானம் - அந்த அக்ஷரத்தினுடைய உபாக்கியானமே அதன் (उीथस्य (உத்கீதத்தின்) உபாஸனை, அவ்வாறே அதன் விபூதி, அவ்வாறே அதன் பலன் முதலியவைகளைக் கூறுவது ஆகும். அதுவே உபவியாக்யானம். பிரவிர்த்திக்கிறது என்பது வாக்கியசேஷமாகும் அதாவது இந்த வியாக்யானம் பிரவிர்த்திக்கின்றது என்பதாகும்.
एषां भूतानां पृथिवी रसः पृथिव्या आपो रसः । अपामोषधयो रस ओषधीनां पुरुषो रसः पुरुषस्य वाग्रसो वाच ऋग्रस ऋचः साम रसः साम्न उद्गीथो रसः ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - இந்த (ஸராஸரத்திற்கு) பிராணிகளுக்கு பிருதிவீ ரஸம் (உத்பத்தி, ஸ்திதி, லயஸ்தானம்). பிருதிவியின் ரஸம் ஜலம். ஜலத்தின் ரஸம் ஒளஷதிகள் (ஸ்தாவரங்கள்) ஸ்தாவரங்களுக்கு ரஸம் புருஷன். புருஷனின் ரஸம் வாக், வாக்கின் ரஸம் ரிக், ரிக்கின் ரஸம் ஸாமம், ஸாமத்தின் ரஸம் உத்கீதம்.
एषां चराचराणां भूतानां पृथिवी रसः गतिः परायणमवष्टम्भः ; पृथिव्या आपः रसः — अप्सु हि ओता च प्रोता च पृथिवी ; अतः ताः रसः पृथिव्याः । अपाम् ओषधयः रसः, अप्परिणामत्वादोषधीनाम् ; तासां पुरुषो रसः, अन्नपरिणामत्वात्पुरुषस्य ;
அனுவாதம் - இந்த சராசரங்களாகிய பூதங்களுக்கு (பிராணிகளுக்கு) பிருதிவீ ரஸம் அதாவது கதி. கதி என்பது பராயணம், ஆங்ரய ஸ்தானம். பிருதிவியின் ரஸம் ஜலம். ஏன் எனில் பிருதிவியில் ஜலம் ஒதப்ரோதமாய் உள்ளது. ஆகையால் அது பிருதிவியின் ரஸமாகும். ஜலத்தின் ரஸம் ஸ்தாவரங்களாகும். ஏன் எனில் ஸ்தாவரங்கள் ஜலத்தின் பரிணாமங்களாகும். ஸ்தாவரங்களின் ரஸம் புருஷன். ஏன் எனில் புருஷன் அன்னத்தின் பரிணாமம் ஆவதால் ரஸமாகும்.
तस्यापि पुरुषस्य वाक् रसः — पुरुषावयवानां हि वाक् सारिष्ठा, अतो वाक् पुरुषस्य रस उच्यते ; तस्या अपि वाचः, ऋक् सरः सारतरा ; ऋचः साम रसः सारतरम् ; तस्यापि साम्नः उद्गीथः प्रकृतत्वादोङ्कारः सारतरः ॥
அனுவாதம் - அதைவிட புருஷனுடைய வாக் ரஸமாகும். ஏன் எனில் புருஷனுடைய அவயவங்களில் வாக் அதிக ஸாரமுடையது. ஆகையால் வாக் புருஷனுடைய ரஸம் என்று கூறப்படுகிறது. அந்த வாக்கைக் காட்டிலும் ரிக் ரஸம். அதைவிட (வாக்கைவிட) ஸாரம் உடையதாகும். ரிக்கின் ரஸம் ஸாமம், ரிக்கைவிட மிகுந்த ஸாரம் உடையது. அந்த ஸாமத்தைக் காட்டிலும் உத்கீதம் இங்கு ஓம்காரத்தைக் குறிப்பதால் இது அதைவிட மிகுந்த ஸாரத்தை உடையதாகும்.
स एष रसानाꣳ रसतमः परमः परार्ध्योऽष्टमो यदुद्गीथः ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - அந்த ஓம்காரம் எதுவோ இந்த உத்கீதம் ஆகும். அது ரஸங்களில் மிகுந்த ஒப்பற்ற ரஸமுடையது. உத்கிருஷ்டமானது. பரமாத்மாவின் பிரதீகமாய் இருப்பதாலும், பரமாத்மாவின் ஸ்தானம் போல இருப்பதாலும் ஆஸ்ரய ஸ்தானமாகும். மேலும் (பிருதிவீ முதலிய ரஸங்களுள்) எட்டாவது ஆகும்.
एवम् — स एषः उद्गीथाख्य ओङ्कारः, भूतादीनामुत्तरोत्तररसानाम् , अतिशयेन रसः रसतमः ; परमः, परमात्मप्रतीकत्वात् ; परार्ध्यः — अर्धं स्थानम् , परं च तदर्धं च परार्धम् , तदर्हतीति परार्ध्यः, — परमात्मस्थानार्हः, परमात्मवदुपास्यत्वादित्यभिप्रायः ; अष्टमः — पृथिव्यादिरससङ्ख्यायाम् ; यदुद्गीथः य उद्गीथः ॥
அனுவாதம் - அந்த இந்த உத்கீதம் எனப்படும் ஓம்காரம் பிராணி முதலியவைகளுக்கு மேலும் மேலும் அதிகமான ரசம் அதாவது எல்லாவற்றையும்விட மிகுந்த ரஸமுடையதும், பரமம் அதாவது பரமாத்ம பிரதீகமாய் இருப்பது. परार्ध्यः (பரார்த்ய:)- அர்த்தம் என்பது ஸ்தானமாயும் பரமாயும் உள்ளது. அந்த அர்த்தமும் (ஸ்தானம்) பரார்த்தமும் (परार्ध्यं च) ஆக இருப்பதற்கு யோக்யமாய் இருப்பதால் “परार्ध्यः” (பரார்த்ய:) பரமார்த்த ஸ்தான அருகதை உடையது. அதாவது பரமார்த்மாவைப் போன்று உபாஸிக்க வேண்டிய ஸ்தானமாய் இருப்பதற்கு யோக்யமானது. பிருதிவீ முதலிய ரஸ எண்ணிக்கைகளில் எட்டாவதாக இந்த உத்கீதம் உள்ளது.
कतमा कतमर्क्कतमत्कतमत्साम कतमः कतम उद्गीथ इति विमृष्टं भवति ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - இந்த விசாரம் செய்யப்படுகிறது எனில் எது எது ரிக், எது எது ஸாமம், எது எது உத்கீதம் என்று.
वाच ऋग्रसः . . . इत्युक्तम् ; कतमा सा ऋक् ? कतमत्तत्सामः ? कतमो वा स उद्गीथः ? कतमा कतमेति वीप्सा आदरार्था ।
அனுவாதம் - வாக்கின் ரசம் ரிக் - என்று சொல்லப்பட்டது. அந்த வாக் எது? அந்த ஸாமம் எது? மேலும் அந்த உத்கீதம் எது? எது எது என்று கூறியது அதை அறிந்துகொள்வதில் உள்ள விருப்பத்தைக் குறிப்பதாகும்.
ननु ‘वा बहूनां जातिपरिप्रश्ने डतमच्’ (पा. सू. ५ । ३ । ९३) इति डतमच्प्रत्ययः इष्टः ; न हि अत्र ऋग्जातिबहुत्वम् ; कथं डतमच्प्रयोगः ?
அனுவாதம் - சங்கை - ஆனால் “वा बहूनां जातिपरिप्रे डतमच्।” (வா பஹுனாம் ஜாதிபரிப்ரச்னே டமதச்) அதாவது இந்த பாணினி சூத்திரத்தின்படி அநேக ஜாதிகள் இருந்தால் அதில் ஒன்றை நிச்சயம் செய்வதற்காக எது என்ற கேள்வி எழும். ஆனால் இங்கு ரிக் ஜாதி அநேகம் அல்ல. அதனால் எவ்வாறு (டதமச்) “डतमच्”அதாவது எது என்ற கேள்வி எவ்வாறு எழும்?
नैष दोषः ; जातौ परिप्रश्नो जातिपरिप्रश्नः — इत्येतस्मिन्विग्रहे जातावृग्व्यक्तीनां बहुत्वोपपत्तेः, न तु जातेः परिप्रश्न इति विगृह्यते ।
அனுவாதம் - ஸமாதானம் - இது தோஷம் இல்லை. ஏன் எனில் “जाति परिप्रश्नः” (ஜாதி பரிப்ரச்ன ஜாதியில் எத்தனை) என்பதில் जातौ परिप्रश्नो (ஜாதெள பரிப்ரச்னெள - ஜாதியில் கேள்வி) என்று விக்ரஹம் செய்து ரிக் வியக்திகளில் அநேக (விதமான) ரிக்குகள் சம்பவிக்கும். ஆகையால் இங்கு ஜாதியைப் பற்றிய கேள்வி என்று விக்ரஹம் செய்யப்படவில்லை.
ननु जातेः परिप्रश्नः — इत्यस्मिन्विग्रहे ‘कतमः कठः’ इत्याद्युदाहरणमुपपन्नम् , जातौ परिप्रश्न इत्यत्र तु न युज्यते ।
அனுவாதம் - சங்கை - ஆனால் ஜாதியின் கேள்வி என்ற விக்ரஹத்தில் எத்தனையாவது கடம் (தாங்கள் கட சாகையில் யார்?) என்ற உதாஹரணத்தில் பொருந்தும். ஜாதியில் கேள்வி என்பது பொருந்தாது.
— तत्रापि कठादिजातावेव व्यक्तिबहुत्वाभिप्रायेण परिप्रश्न इत्यदोषः । यदि जातेः परिप्रश्नः स्यात् , ‘कतमा कतमर्क्’ इत्यादावुपसङ्ख्यानं कर्तव्यं स्यात् । विमृष्टं भवति विमर्शः कृतो भवति ॥
அனுவாதம் - ஸமாதானம் - அங்கும் கட முதலிய ஜாதியில் வியக்திகள் அநேகமாக இருக்கும் அபிப்பிராயத்தால் இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டது- அதை ஏற்றுக்கொள்வதில் தோஷம் இல்லை. இந்த கேள்வி (ரிக் முதலிய) ஜாதியில் சம்பந்தம் இருந்தால் முன் கூறிய சூத்திரத்தால் எந்த எந்த ரிக் என்பது முதலிய உதாஹரணங்கள் சித்திக்காததால் அதற்கு தனியாக சூத்திரம் விதானம் செய்யப்பட்டது. அது இப்பொழுது விமர்சிக்கப்பட்டது.
विमर्शे हि कृते सति, प्रतिवचनोक्तिरुपपन्ना ।
அனுவாதம் - அ.கை - இவ்வாறு விமர்சனம் (விசாரம்) செய்தால் (பிரதிவசன ரூப) பதில் உக்திக்குப் பொருந்தும் -
वागेवर्क्प्राणः सामोमित्येतदक्षरमुद्गीथः । तद्वा एतन्मिथुनं यद्वाक्च प्राणश्चर्क्च साम च ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - வாக்கே ரிக், பிராணன் சாம, மேலும் ஓம் என்ற இந்த அக்ஷரம் உத்கீதம் (उीथम्) எந்த ரிக்கும், சாம ரூபமும் வாக்காயும், பிராணனாயும் பரஸ்பரம் மிதுனமாகிறது. (சேருகின்றது).
वागेव ऋक् प्राणः साम ओमित्येतदक्षरमुद्गीथः इति । वागृचोरेकत्वेऽपि न अष्टमत्वव्याघातः, पूर्वस्मात् वाक्यान्तरत्वात् ; आप्तिगुणसिद्धये हि ओमित्येतदक्षरमुद्गीथः इति ।
அனுவாதம் - வாக்கே ரிக், பிராணன் சாம, ஓம் என்ற இந்த அக்ஷரம் உத்கீதம் என்று. வாக்கும் ரிக்கும் ஒன்றாக இருந்தாலும் எட்டாவது என்பதில் வியாகாத தோஷம் இல்லை. ஏன் எனில் இது முன்பு கூறிய வசனத்தைக் காட்டிலும் வேறானது. ஓம் என்ற இந்த அக்ஷரம் உத்கீதம் “उीथ” என்ற வசனம் ஓம்காரத்தின் வியாப்த்த குணம் சித்திப்பதற்காக என்பதாகும்.
वाक्प्राणौ ऋक्सामयोनी इति वागेव ऋक् प्राणः साम इत्युच्यते ; यथा क्रमम् ऋक्सामयोन्योर्वाक्प्राणयोर्ग्रहणे हि सर्वासामृचां सर्वेषां च साम्नामवरोधः कृतः स्यात् ; सर्वर्क्सामावरोधे च ऋक्सामसाध्यानां च सर्वकर्मणामवरोधः कृतः स्यात् ; तदवरोधे च सर्वे कामा अवरुद्धाः स्युः । ओमित्येतदक्षरम् उद्गीथः इति भक्त्याशङ्का निवर्त्यते ।
அனுவாதம் - வாக் பிராணன்கள் கிரமமாய் ரிக் சாமங்களுக்கு காரணமாகின்றன. ஆகையால் வாக்கே ரிக், பிராணன் சாமம் என்று கூறப்படுகிறது. எவ்வாறு கிரமமாக ரிக், சாமங்களின் காரணங்களான வாக், பிராணன்களைக் கிரஹிக்கும்பொழுது எல்லா ரிக்குகளும், எல்லா சாமங்களிலும் அந்தர்பாவமாகின்றன. அவ்வாறே எல்லா ரிக்குகளும், எல்லா சாமங்களும் அந்தர்பாவம் அடைந்தபின் ரிக் மேலும் சாமங்களால் சித்திக்கும் எல்லா கர்மங்களும் அந்தர் பாவமாகின்றன. மேலும் அதன் அந்தர் பாவம் அடைந்தபின் எல்லா காமனைகளும் அவற்றில் அந்தர் பாவமாகின்றன. “उीथ” (உத்கீத) சப்தத்தால் எல்லா உத்கீத பக்தியையும் எடுத்துக்கொள்ள முடியுமா என்ற சங்கை எழும்பொழுது “ओं” (ஓம்) என்ற இந்த அக்ஷரம் உத்கீதம் என்று கூறி நிவிர்த்தி செய்யப்படுகிறது.
तद्वा एतत् इति मिथुनं निर्दिश्यते । किं तन्मिथुनमिति, आह — यद्वाक्च प्राणश्च सर्वर्क्सामकारणभूतौ मिथुनम् ; ऋक्च साम चेति ऋक्सामकारणौ ऋक्सामशब्दोक्तावित्यर्थः ; न तु स्वातन्त्र्येण ऋक्च साम च मिथुनम् । अन्यथा हि वाक्प्राणश्च इत्येकं मिथुनम् , ऋक्साम च अपरम् , इति द्वे मिथुने स्याताम् ; तथा च तद्वा एतन्मिथुनम् इत्येकवचननिर्देशोऽनुपपन्नः स्यात् ; तस्मात् ऋक्सामयोन्योर्वाक्प्राणयोरेव मिथुनत्वम् ॥
அனுவாதம் - “तद्वा एतत्” (தத்வா ஏதத்) முதலிய வாக்கியத்தால் மிதுனம் விளக்கப்பட்டது. அந்த மிதுனம் என்பது என்ன? அதற்குக் கூறப்படுகிறது - அந்த வாக்கும் பிராணனும் எல்லா ரிக் சாமங்களின் காரண ரூபமான மிதுனம். ரிக் என்றும் சாமம் என்றும், ரிக்சாம காரணத்தையே ரிக் சாமம் என்ற சப்தத்தால் கூறப்படுகிறது. ரிக்கும், சாமமும் ஸ்வதந்திரமாக மிதுனம் அல்ல. வாக் பிராணன் ஒரு மிதுனம் என்றும், ரிக் சாமம் மற்றொரு மிதுனம் என்றும் இவ்வாறானால் இரண்டு மிதுனங்கள் ஆகும். ஆனால் இங்கு “तद्वा एतन्मिथुनम्” (தத்வா ஏதன்மிதுனம்) என்று ஏக வசனத்தில் இருப்பதால் அது (இரண்டு மிதுனம் என்பது) பொருந்தாது. ஆகையால் ரிக், சாமங்களின் காரணங்களான வாக், பிராணன்களுக்கே மிதுனத்துவம் சித்திக்கிறது.
तदेतन्मिथुनमोमित्येतस्मिन्नक्षरे सं सृज्यते यदा वै मिथुनौ समागच्छत आपयतो वै तावन्योन्यस्य कामम् ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - அந்த இந்த மிதுனம் (ஜோடி) “ஓம்” என்ற அக்ஷரத்தில் இணைகிறது. எப்பொழுது இந்த மிதுனம் (ஜோடிகள்) பரஸ்பரம் இணைகின்றனவோ அப்பொழுது அவை ஒன்று மற்றொன்றின் காமனையை அடையச்செய்வதாய் ஆகின்றது.
तदेतत् एवंलक्षणं मिथुनम् ओमित्येतस्मिन्नक्षरे संसृज्यते ; एवं सर्वकामाप्तिगुणविशिष्टं मिथुनम् ओङ्कारे संसृष्टं विद्यत इति ओङ्कारस्य सर्वकामाप्तिगुणवत्त्वं सिद्धम् ; वाङ्मयत्वम् ओङ्कारस्य प्राणनिष्पाद्यत्वं च मिथुनेन संसृष्टत्वम् ।
அனுவாதம் - அந்த இந்த இவ்வாறான லக்ஷணமுடைய ஜோடி ஓம் என்ற இந்த அக்ஷரத்தில் இணைகிறது. இவ்வாறு எல்லா காமனைகளையும் அடைவிக்கும் லக்ஷணமுடைய மிதுனம் ஓம்காரத்தில் இணைந்து இருக்கிறது. ஆகையால் ஓம்காரத்தின் எல்லா காமனைகளையும் அடைவிக்கும் லக்ஷணமுடையது (மிதுனத்திற்கும்) சித்திக்கிறது. ஓம்காரத்தின் வாஸ்மயத்துவமும், பிராணிகளால் அடையத்தக்கதும் அந்த மிதுனத்தால் இணைக்கப்படுகிறது.
मिथुनस्य कामापयितृत्वं प्रसिद्धमिति दृष्टान्त उच्यते — यथा लोके मिथुनौ मिथुनावयवौ स्त्रीपुंसौ यदा समागच्छतः ग्राम्यधर्मतया संयुज्येयातां तदा आपयतः प्रापयतः अन्योन्यस्य इतरेतरस्य तौ कामम् , तथा स्वात्मानुप्रविष्टेन मिथुनेन सर्वकामाप्तिगुणवत्त्वम् ओङ्कारस्य सिद्धमित्यभिप्रायः ॥
அனுவாதம் - மிதுனத்திற்கு காமனைகளை அடைவிப்பது பிரசித்தம் என்பதற்கு திருஷ்டாந்தம் எவ்வாறு உலகில் ஸ்திரீபுருஷ ஜோடிகள் தங்கள் இணையும்பொழுது ஒருவர் மற்றொருவருடைய காமனையை பூர்த்தி செய்கின்றனறோ அவ்வாறு தன்னிடம் இணைந்த மிதுனத்தின் வாயிலாக சம்பூர்ண காமத்தின் பிராப்திரூப குணத்துவமானது ஓம்காரத்திற்கு சித்திக்கும், என்பது அபிப்பிராயம்.
तदुपासकोऽप्युद्गाता तद्धर्मा भवतीत्याह —
அனுவாதம் - அ.கை - அந்த (ஓம்கார) உபாசகனாகிய உத்காதாவும் அதற்கு சமானமான தர்மத்துடன் கூடியவனாகின்றான் என்பது கூறப்படுகிறது-
आपयिता ह वै कामानां भवति य एतदेवं विद्वानक्षरमुद्गीथमुपास्ते ॥ ७ ॥
மந்த்ரார்த்தம் - எந்த வித்வான் (உபாசகன்) இவ்வாறு உள்ள இந்த உத்கீத ரூப அக்ஷரத்தை உபாசனை செய்கின்றானோ அவன் எல்லா காமனைகளையும் அடையச் செய்பவனாய் ஆகின்றான்.
आपयिता ह वै कामानां यजमानस्य भवति, य एतत् अक्षरम् एवम् आप्तिगुणवत् उद्गीथम् उपास्ते, तस्य एतद्यथोक्तं फलमित्यर्थः, ‘तं यथा यथोपासते तदेव भवति’ (शत. ब्रा. १० । ५ । २ । २०) इति श्रुतेः ॥
அனுவாதம் - யஜமானனுடைய காமனைகளை அடையச் செய்பவனாக ஆகின்றான். எவன் இந்த அக்ஷரத்தை இவ்வாறான (காமனைகளை) அடையச் செய்யும் குணமுடைய உத்கீதத்தை உபாசிக்கின்றானோ அவன் இவ்வாறு கூறப்பட்ட பலம் உடையவனாகின்றான் என்பது பொருள். “तं यथा यथोपासते तदेव भवति” (தம் யதா யதோ பாசதே ததைவ பவதி - அதை எவ்வாறு எவ்வாறு உபாசிக்கின்றானோ அவ்வாறு ஆகின்றான்) என்பது சுருதி வாக்கியம்.
तद्वा एतदनुज्ञाक्षरं यद्धि किञ्चानुजानात्योमित्येव तदाहैषो एव समृद्धिर्यदनुज्ञा समर्धयिता ह वै कामानां भवति य एतदेवं विद्वानक्षरमुद्गीथमुपास्ते ॥ ८ ॥
மந்த்ரார்த்தம் - அந்த இந்த ஓம்காரம் அனுமதியைக் குறிக்கும் அக்ஷரமாகும். எவருக்காவது அனுமதி அளிக்கிறான் என்பதற்கு “ஓம்” என்று கூறுகிறார். அந்த அனுக்ஞை (அனுமதி) நிறைந்து இருக்கிறது. எவன் இவ்வாறு அறியும் புருஷன் இந்த உத்கீத அக்ஷரத்தை உபாசனை செய்கின்றான். அவன் நிச்சயமாக சம்பூர்ண காமனைகளின் நிறைவை அடைகின்றான்.
समृद्धिगुणवांश्च ओङ्कारः ; कथम् ?
அனுவாதம் - எவ்வாறு ஓம்காரம் மிகுந்த (பூர்ண) குணமுடையதாய் இருக்கிறது?
तत् वै एतत् प्रकृतम् , अनुज्ञाक्षरम् अनुज्ञा च सा अक्षरं च तत् ; अनुज्ञा च अनुमतिः, ओङ्कार इत्यर्थः । कथमनुज्ञेति, आह श्रुतिरेव — यद्धि किञ्च यत्किञ्च लोके ज्ञानं धनं वा अनुजानाति विद्वान् धनी वा, तत्रानुमतिं कुर्वन् ओमित्येव तदाह ; तथा च वेदे ‘त्रयस्त्रिंशदित्योमिति होवाच’ (बृ. उ. ३ । ९ । १) इत्यादि ; तथा च लोकेऽपि तवेदं धनं गृह्णामि इत्युक्ते ओमित्येव आह ।
அனுவாதம் - அந்த இந்த கூறப்படும் விஷயத்தில் “अनुज्ञाक्षरम्” (அனுக்ஞாக்க்ஷரம் - அதாவது அனுக்ஞாவும் அக்ஷரமும் ஆகும் அது, அனுக்ஞா என்பது ஓம்காரம் என்பது பொருள். எவ்வாறு அனுக்ஞை எனப்படுகிறது? சுருதியே இவ்வாறு கூறுகிறது - உலகில் வித்வான் அல்லது தனவான் எந்த ஒரு ஞானத்தையோ அல்லது தனத்தையோ அனுமதி அளிக்கும்பொழுது ஓம் என்று கூறுகின்றான். அவ்வாறே வேதத்திலும் - “त्रयस्त्रिंशदित्योमिति होवाच” (த்ரியஸ்திரும்உதித்யோமிதி ஹோவாச)! அவ்வாறே உலகிலும் அந்த தனத்தை கிரஹிக்கும் சமயத்திலும் ஓம் என்றே (கூறுகிறான்) கூறப்படுகிறது.
अत एषा उ एव एषैव हि समृद्धिः यदनुज्ञा या अनुज्ञा सा समृद्धिः, तन्मूलत्वादनुज्ञायाः ; समृद्धो हि ओमित्यनुज्ञां ददाति ; तस्यात् समृद्धिगुणवानोङ्कार इत्यर्थः । समृद्धिगुणोपासकत्वात् तद्धर्मा सन् समर्धयिता ह वै कामानां यजमानस्य भवति ; य एतदेवं विद्वानक्षरमुद्गीथमुपास्ते इत्यादि पूर्ववत् ॥
அனுவாதம் - ஆகையால் “एषा उ” (ஏஷா உ) அதாவது இது செல்வம் நிறைந்தது என்பது அனுக்ஞா. எது அனுக்ஞையோ அது நிறைந்த செல்வம். ஏன் எனில் அனுக்ஞை அந்த நிறைந்த செல்வத்திற்குக் காரணமாகிறது. நிறைந்த செல்வம் உடைய புருஷன் “ஓம்” என்று கூறி அனுக்ஞை அளிக்கின்றான். ஆகையால் நிறைந்த செல்வம் என்னும் குணமுடையது ஓம்காரம் என்பது பொருள், நிறைந்த செல்வம் ஆகிற குணத்தை உபாசனை செய்வதால் வித்வான் அந்த தர்மம் உடையவனாகி யஜமானனுடைய காமனைகளை நிறைவடையச் செய்கின்றான். எவன் இந்த அக்ஷரமாகிய உத்கீதத்தை இவ்வாறு அறிந்து உபாசிக்கின்றானோ என்பது முதலியவை முன்பு உள்ளது போல் அறிந்துகொள்ள வேண்டும்.
तेनेयं त्रयीविद्या वर्तते ओमित्याश्रावयत्योमिति शं सत्योमित्युद्गायत्येतस्यैवाक्षरस्यापचित्यै महिम्ना रसेन ॥ ९ ॥
மந்த்ரார்த்தம் - இந்த அக்ஷரத்தினால் திரிவித்யா (ரிக், யஜூர், சாம வேதங்கள்) பிரவிர்த்திக்கின்றது. “ஓம்” என்று கூறிக்கொண்டு (அத்வர்யு) ஆச்ரவண கர்மம் செய்கிறார். ஓம் என்று கூறிக்கொண்டு ஸ்துதிக்கிறார். ஓம் என்று கூறிக்கொண்டு உத்காதா உத்கானம் (பாடுவது) செய்கிறார். இந்த அக்ஷரத்தின் (பரமாத்மாவின்) பூஜைக்காகவே. (எல்லா வைதிக கர்மங்களும்) ஆகும். அவ்வாறே இதன் மஹிமை, ரசம் (நெல், பார்லி­ முதலிய ஹவிஸ்) மூலமாய் (எல்லா கர்மங்களும் பிரவிர்த்திக்கிறது).
अथ इदानीमक्षरं स्तौति, उपास्यत्वात् , प्ररोचनार्थम् ; कथम् ?
அனுவாதம் - ஆகையால் இப்பொழுது அக்ஷரம் உபாசனை செய்வதை உற்சாகப்படுத்துவதற்காக போற்றப்படுகிறது. எவ்வாறு?
तेन अक्षरेण प्रकृतेन इयम् ऋग्वेदादिलक्षणा त्रयीविद्या, त्रयीविद्याविहितं कर्मेत्यर्थः — न हि त्रयीविद्यैव — आश्रावणादिभिर्वर्तते । कर्म तु तथा प्रवर्तत इति प्रसिद्धम् ; कथम् ? ओमित्याश्रावयति ओमिति शंसति ओमित्युद्गायति ; लिङ्गाच्च सोमयाग इति गम्यते ।
அனுவாதம் - அந்த பிரகிருத அக்ஷரத்தால் இந்த ரிக்வேதம் முதலிய லக்ஷணமுடைய திரயீ வித்யா (மூன்று ரிக், யஜூர், சாம வேதங்கள்). அதாவது திரயீ வித்யையினால் விதிக்கப்பட்ட கர்மம் என்பது பொருள். ஏன் எனில் ஆச்ராவண முதலிய கர்மங்கள் மூலமாக தானே இந்த திரிவித்யா பிரவிர்த்திப்பது இல்லை. கர்மமோ அவ்வாறு பிரவிர்த்திக்கிறது என்பது பிரசித்தம். எவ்வாறு? “ஓம்” என்று ஆச்ராவணம் செய்யப்படுகிறது. “ஓம்” என்று ஸ்துதிக்கப்படுகிறது, “ஓம்” என்று உத்கானம் செய்யப்படுகிறது என்ற லிங்கத்தால் (குறியால்) சோமயாகம் என்று அறியப்படுகிறது.
तच्च कर्म एतस्यैव अक्षरस्य अपचित्यै पूजार्थम् ; परमात्मप्रतीकं हि तत् ; तदपचितिः परमात्मन एवस्यात् , ‘स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः’ (भ. गी. १८ । ४६) इति स्मृतेः ।
அனுவாதம் - அவ்வாறே அந்த கர்மமும் இந்த அக்ஷரத்தின் பூஜைக்காக ஆகிறது. அது (அக்ஷரம்) பரமாத்மாவின் பிரதீகம் அல்லவா? “स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः” (ஸ்வகர்மணா தம்ப்யர்ச்ய சித்திம் விந்ததி மானவ:) என்ற கீதா வாக்கியத்தாலும் சித்திக்கிறது.
किञ्च, एतस्यैवाक्षरस्य महिम्ना महत्त्वेन ऋत्विग्यजमानादिप्राणैरित्यर्थः ; तथा एतस्यैवाक्षरस्य रसेन व्रीहियवादिरसनिर्वृत्तेन हविषेत्यर्थः ; यागहोमादि अक्षरेण क्रियते ; तच्च आदित्यमुपतिष्ठते ; ततो वृष्ट्यादिक्रमेण प्राणोऽन्नं च जायते ; प्राणैरन्नेन च यज्ञस्तायते ; अत उच्यते - अक्षरस्य महिम्ना रसेन इति ॥
அனுவாதம் - மேலும் இந்த அக்ஷரத்தின் மஹிமையினால் ரித்விக் யஜமானன் முதலிய பிராணன்களால் என்பது பொருள், அவ்வாறே இந்த அக்ஷரத்தின் ரசத்தால் அதாவது நெல், திணை முதலிய ரசத்தால் ஆன ஹவிசால் என்பது பொருள். யாகம், ஹோமம் முதலியவை அக்ஷரத்தால் செய்யப்படுகிறது. அந்த கர்மம் ஆதித்தியனை அடைகிறது. அதிலிருந்து மழை முதலியவை கிரமமாக பிராணனும் அன்னமும் உண்டாகிறது. பிராணனாலும், அன்னத்தாலும் யக்ஞமானது பரந்து விரிகிறது. ஆகையால் கூறப்படுகிறது “अक्षरस्य महिम्ना रसेन” (அக்ஷரஸ்ய மஹிம்னா ரசேன) என்று கூறப்படுகிறது.
तत्र अक्षरविज्ञानवतः कर्म कर्तव्यमिति स्थितमाक्षिपति —
அனுவாதம் - அ.கை - இவ்வாறு இருக்கும்பொழுது எவருக்கு அக்ஷர விக்ஞானம் உள்ளதோ அவர் கர்மா செய்யவேண்டும் என்பதின் ஸ்திதியை சுருதி ஆக்ஷபேிக்கின்றது -
तेनोभौ कुरुतो यश्चैतदेवं वेद यश्च न वेद । नाना तु विद्या चाविद्या च यदेव विद्यया करोति श्रद्धयोपनिषदा तदेव वीर्यवत्तरं भवतीति खल्वेतस्यैवाक्षरस्योपव्याख्यानं भवति ॥ १० ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இந்த அக்ஷரத்தை இவ்வாறு அறிந்தோ அறியாமலோ இந்த அக்ஷரத்தின் மூலமாய் கர்மம் செய்கின்றான். ஆனால் வித்யா, அவித்யா ஆகிய இரண்டும் வெவ்வேறு பலன்களை அளிப்பவை. எந்த கர்மம் வித்யா, சிரத்தை, யோகத்தினுடன் சேர்ந்து செய்யப்படுகிறதோ அது மிகப் பிரபலமானதாகும் என்று இவ்வாறு நிச்சயம் ஆகும் என்று இவை எல்லாம் அக்ஷரத்தின் வியாக்கியானம் ஆகும்.
तेन अक्षरेण उभौ कुरुतः, यश्च एतत् अक्षरम् एवं यथाव्याख्यातं वेद, यश्च कर्ममात्रवित् अक्षरयाथात्म्यं न वेद, तावुभौ कुरुतः कर्म ; तेयोश्च कर्मसामर्थ्यादेव फलं स्यात् , किं तत्राक्षरयाथात्म्यविज्ञानेन इति ; दृष्टं हि लोके हरीतकीं भक्षयतोः तद्रसाभिज्ञेतरयोः विरेचनम् — नैवम् ; यस्मात् नाना तु विद्या च अविद्या च, भिन्ने हि विद्याविद्ये, तु — शब्दः पक्षव्यावृत्त्यर्थः ।
அனுவாதம் - அந்த அக்ஷரத்தால் இரண்டு விதமாக உலகில் கர்மம் செய்கின்றார். அதில் வியாக்கியானம் செய்தவாறு அறிந்தவனும் கர்மத்தை மாத்திரம் அறிந்தவனாய் அக்ஷரத்தின் உண்மை பொருள் அறியாதவனும் ஆகிய இருவரும் கர்மம் செய்கின்றனர். அவ்விருவரில் கர்ம சாமர்த்தியத்தால் பலன் அடைகிறான். இவ்வாறு இருக்கும்பொழுது அந்த அக்ஷரத்தின் யதார்த்த ஞானத்தால் என்ன பயன்? எனில் உலகில் பச்சை நிறமுள்ள மூலிகையைப் பற்றி தெரிந்தவனும் தெரியாதவனும் ஆகிய இருவரும் சாப்பிட்டால் அதற்கான பலனாகிய பேதி இருவருக்கும் ஏற்படுகிறது. அவ்வாறு இந்த விஷயத்தில் கூறுவது சரியல்ல. ஏன் எனில் வித்யை, அவித்யை ஆகிய இரண்டிற்கும் பேதம் உள்ளது. வித்யா, அவித்யா ஆகிய இரண்டும் வெவ்வேறானது. இங்கு तु (து) என்ற சப்தம் இரண்டு பக்ஷத்தையும் பிரித்துக் காட்டுவதற்காக ஆகிறது.
न ओङ्कारस्य कर्माङ्गत्वमात्रविज्ञानमेव रसतमाप्तिसमृद्धिगुणवद्विज्ञानम् ; किं तर्हि ? ततोऽभ्यधिकम् ; तस्मात् तदङ्गाधिक्यात् तत्फलाधिक्यं युक्तमित्यभिप्रायः ; दृष्टं हि लोके वणिक्शबरयोः पद्मरागादिमणिविक्रये वणिजो विज्ञानाधिक्यात् फलाधिक्यम् ; तस्मात् यदेव विद्यया विज्ञानेन युक्तः सन् करोति कर्म श्रद्धया श्रद्दधानश्च सन् , उपनिषदा योगेन युक्तश्चेत्यर्थः, तदेव कर्म वीर्यवत्तरम् अविद्वत्कर्मणोऽधिकफलं भवतीति ; विद्वत्कर्मणो वीर्यवत्तरत्ववचनादविदुषोऽपि कर्म वीर्यवदेव भवतीत्यभिप्रायः ।
அனுவாதம் - ஓம்காரத்தின் மிக மேன்மையான ரசமும், அதன் அடைவும், செல்வ மிகுதியும் கூடியிருப்பதை அறிந்தவன் கேவல கர்மாங்கத்தை மாத்திரம் அறிந்தவனோடு ஒப்பிட முடியாது. அவ்வாறானால் அது எவ்வாறு? அதைவிட மிகவும் அதிகமானது. ஆகையால் அது கர்மாங்கத்தைக் காட்டிலும் மிக அதிகமானதால் (உத்கிருஷ்டமானதால்) அதனுடைய பலமும் உத்கிருஷ்டமானது என்பது உசிதமாகும். உலகில் வியாபாரியும், வேடனும் பத்மராகம் முதலிய மணிகளை (ரத்தினங்களை) விற்கும்பொழுது மணிகளைப்பற்றி அறிந்த வியாபாரிக்கு அதிக பலன் கிடைக்கிறது என்பதைக் காண்கிறோம் - ஆகையால் வித்யையினால் அதிக ஞானம் உடையவனாய் இருந்துகொண்டு சிரத்தையாக அதாவது சிரத்தையாய் இருந்துகொண்டு உபநிஷத்துடன் அதாவது யோகத்துடன் கூடி கர்மம் செய்கிறான் என்பது பொருள். அந்த கர்மமே மிகவும் வீரியத்துடன் கூடியதாய் அவித்வானுடைய கர்மத்தைக் காட்டிலும் அதிக பலம் உடையதாகிறது. வித் வத் கர்மம் மிகவும் வீரியத்துடன் கூடியது என்ற வசனத்தால் அவிதுஷகனுக்கும் கர்மம் வீரியமுடையதே என்று ஆகிறது என்பது அபிப்பிராயம்.
न च अविदुषः कर्मण्यनधिकारः, औषस्त्ये काण्डे अविदुषामप्यार्त्विज्यदर्शनात् । रसतमाप्तिसमृद्धिगुणवदक्षरमित्येकमुपासनम् , मध्ये प्रयत्नान्तरादर्शनात् ; अनेकैर्हि विशेषणैः अनेकधा उपास्यत्वात् खलु एतस्यैव प्रकृतस्य उद्गीथाख्यस्य अक्षरस्य उपव्याख्यानं भवति ॥
அனுவாதம் - விதுஷன் (பண்டிதன்) அல்லாதவனுக்கும் கர்மத்தில் அதிகாரம் இல்லாமல் இல்லை. ஒளஷத்ய காண்டத்தில் அவித்வான்களுக்கும் ரித்விக் கர்மம் செய்வது காணப்படுகிறது. ரசதம, ஆப்த்தி, சமிருத்தி குணங்களுடன் கூடியது அக்ஷரம் என்று இவ்வாறு ஒரு உபாசனை. ஏன் எனில் இதனை நிரூபணம் செய்யும்பொழுது இதைத் தவிர வேறு எந்த ஒரு பிரயத்தனமும் காணப்படவில்லை. அநேக விசேஷணங்களால் அநேக விதமாய் உபாசிப்பதால் அல்லவா அந்த பிருக்ருத உத்கீதம் (उीथ) எனப்படும் அக்ஷரத்தின் உபாக்கியானம் செய்யப்படுகிறது.
इति प्रथमखण्डभाष्यम् ॥
देवासुरा ह वै यत्र संयेतिरे उभये प्राजापत्यास्तद्ध देवा उद्गीथमाजह्रुरनेनैनानभिभविष्याम इति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - பிரசித்தமானது. (பூர்வ காலத்தில்) பிரஜாபதியின் புத்திரர்களான தேவர்களும் அசுரர்களும் ஏதோ ஒரு காரண வசத்தால் யுத்தம்செய்ய விழைந்தார்கள். அவர்களில் தேவதைகள் இவ்வாறு யோசித்து அவர்களை இவ்வாறு தோற்க்கடிக்க வேண்டும் என்று உத்கீதத்தை அனுஷ்டித்தார்கள்.
देवासुराः देवाश्च असुराश्च ; देवाः दीव्यतेर्द्योतनार्थस्य शास्त्रोद्भासिता इन्द्रियवृत्तयः ; असुराः तद्विपरीताः स्वेष्वेवासुषु विष्वग्विषयासु प्राणनक्रियासु रमणात् स्वाभाविक्यः तमआत्मिका इन्द्रियवृत्तय एव ; ह वै इति पूर्ववृत्तोद्भासकौ निपातौ ; यत्र यस्मिन्निमित्ते इतरेतरविषयापहारलक्षणे संयेतिरे, सम्पूर्वस्य यततेः सङ्ग्रामार्थत्वमिति, सङ्ग्रामं कृतवन्त इत्यर्थः ।
அனுவாதம் - தேவாசுரர்கள் - அதாவது தேவர்கள், அசுரர்கள். “देव” (தேவ) சப்தம் பிரகாசித்தல், தெளிவுபடுத்துதல் என்ற அர்த்தம் “दिव्” (திவ்) தாத்துவினால் சித்திக்கின்றது. இதன் அபிப்பிராயம் சாஸ்திரத்தினால் விளங்கும் இந்திரிய விருத்திகள். அசுரர்கள் அதற்கு விபரீதமானவர்கள். தங்களுடைய பிராணன்களில் வெவ்வேறான விஷயங்களை அறிந்து அந்த அந்த பிராணனைக் கிரியைகளில் ரமிக்கின்ற காரணத்தால் ஸ்வபாவமாகவே தமஸை பிரதானமாக உடைய இந்திரிய விருத்திகளே அசுரம் என்று கூறப்படுகிறது. “ह” “वै” (ஹ, வை) இவைகள் முந்திய விருத்தாந்தங்களை தெரிவிக்கும் நிபாதமாகும். “यत्र” (யத்ர) என்ற நிமித்தால் ஒன்று மற்றொரு விஷயத்தை நீக்கும் லக்ஷணமாக அடைகிறது. “सं” (சம்) உபசர்க்கம் முதலாவதாக உடைய “यत्” (யத்) என்ற தாத்துவின் அர்த்தம் (சங்கிராமம்) சண்டை என்பதால் சண்டையிட்டார்கள் என்பது பொருள்.
शास्त्रीयप्रकाशवृत्त्यभिभवनाय प्रवृत्ताः स्वाभाविक्यस्तमोरूपा इन्द्रियवृत्तयः असुराः, तथा तद्विपरीताः शास्त्रार्थविषयविवेकज्योतिरात्मानः देवाः स्वाभाविकतमोरूपासुराभिभवनाय प्रवृत्ताः इति अन्योन्याभिभवोद्भवरूपः सङ्ग्राम इव, सर्वप्राणिषु प्रतिदेहं देवासुरसङ्ग्रामो अनादिकालप्रवृत्त इत्यभिप्रायः । स इह श्रुत्या आख्यायिकारूपेण धर्माधर्मोत्पत्तिविवेकविज्ञानाय कथ्यते प्राणविशुद्धिविज्ञानविधिपरतया ।
அனுவாதம் - சாஸ்த்ரீய விஷயத்தில் ஞான ரூபமாக பிரவிர்த்திக்கும் விருத்திகளை தோல்வி அடையச் செய்வதற்காக உள்ள ஸ்வாபாவிகமான தமோ ரூப இந்திரிய விருத்திகள் அசுரர்கள். அவ்வாறே அதற்கு விபரீதமான சாஸ்த்திரார்த்த விஷய விவேக ஜ்யோதி ஸ்வரூப தேவகணங்கள் ஸ்வாபாவிக தமோ ரூப அசுரர்களைத் தோல்வி அடையச் செய்வதற்காக பிரவிர்த்திக்கின்றது என்பதால் ஒன்று ஒன்றை தோல்வி அடையச்செய்யும் ரூபமாய் யுத்தம் போல் எல்லா பிராணிகளின் ஒவ்வொரு தேஹத்திலும் தேவாசுர யுத்தம் அநாதி காலமாய் இவ்வாறு நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஸ்ருதி தர்மாதர்மங்களின் உத்பத்தியின் விவேகத்தைத் தெரிவிப்பதற்காக பிராணிகளின் விசுத்தி விக்ஞானம் உண்டாக்குவதற்காக இதை கதை ரூபமாய் வர்ணனை செய்கிறது.
अतः उभयेऽपि देवासुराः, प्रजापतेरपत्यानीति प्राजापत्याः — प्रजापतिः कर्मज्ञानाधिकृतः पुरुषः, ‘पुरुष एवोक्थमयमेव महान्प्रजापतिः’ (ऐ. आ. २ । १ । २) इति श्रुत्यन्तरात् ; तस्य हि शास्त्रीयाः स्वाभाविक्यश्च करणवृत्तयो विरुद्धाः अपत्यानीव, तदुद्भवत्वात् ।
அனுவாதம் - இங்கு தேவாசுரர்களின் இருவரும் பிரஜாபதியின் புத்திரர்கள். ஆகையால் பிரஜாபதிகள் எனப்படுகின்றனர். பிரஜாபதி என்பது கர்ம, ஞான (உபாசனை)களுக்கு அதிகாரம் உடைய புருஷர்கள். இதை வேறு சுருதியும் கூறுகின்றது- “पुरुष एवोक्थमयमेव महान्प्रजापतिः” (புருஷ ஏவோக்த்தமயமேவ மஹான்பிரஜாபதி:) என்று. அதன் சாஸ்த்திரீயமும், ஸ்வாபாவிக்யமும் ஆகிய கரண (இந்திரிய) விருத்திகள் புத்திரர்கள் போல் மாறுபட்டவை. ஏன்எனில் இவைகளின் தோற்றம் அதிலிருந்து (கரணங்களில் இருந்து) தோன்றுவதால் ஆகும்.
तत् तत्र उत्कर्षापकर्षलक्षणनिमित्ते ह देवाः उद्गीथम् उद्गीथभक्त्युपलक्षितमौद्गात्रं कर्म आजह्रुः आहृतवन्तः ; तस्यापि केवलस्य आहरणासम्भवात् ज्योतिष्टोमाद्याहृतवन्त इत्यभिप्रायः । तत्किमर्थमाजह्रुरिति, उच्यते — अनेन कर्मणा एनान् असुरान् अभिभविष्याम इति एवमभिप्रायाः सन्तः ॥
அனுவாதம் - அதில் சாதகமும் பாதகமும் உள்ள லக்ஷணமுடையதாய் இருப்பதால் தேவர்கள் உத்கீதத்தை அதாவது உத்கீத பக்தியுடன் தாங்கள் நினைத்த ஒளகாத்ர கர்மத்தை அனுஷ்டானம் செய்தார்கள். அதை தனியாக செய்யமுடியாததால் அவர்கள் ஜோதிஷ்டோமம் முதலியவைகளை அனுஷ்டானம் செய்தனர் என்பது இதன் அபிப்பிராயம். அவர்கள் இந்த அனுஷ்டானத்தை எதற்காக செய்தார்கள்? அது கூறப்படுகிறது - இந்த கர்மத்தால் அந்த அசுரர்களை தோல்வி அடையச்செய்ய வேண்டும் என்பதற்காக (ஒளகாத்ர கர்மம்) செய்தார்கள்.
यदा च तदुद्गीथं कर्म आजिहीर्षवः, तदा —
அனுவாதம் - அ.கை - எப்பொழுது அந்த உத்கீத கர்மாவை அனுஷ்டானம் செய்வதற்கு இச்சித்தார்களோ அப்பொழுது -
ते ह नासिक्यं प्राणमुद्गीथमुपासाञ्चक्रिरे तꣳ हासुराः पाप्मना विविधुस्तस्मात्तेनोभयं जिघ्रति सुरभि च दुर्गन्धि च पाप्मना ह्येष विद्धः ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அவர்கள் நாசியில் (மூக்கில்) இருக்கும் பிராணனை உத்கீத ரூபமாய் உபாசனை செய்தார்கள். ஆனால் அசுரர்கள் அதை பாபத்துடன் சேர்த்துவிட்டார்கள். (பாபத்தால் தாக்கப்பட்டதாகிறது) இதனால் அவர்கள் நல்ல வாசனையையும், கெட்ட வாசனையையும் முகர்ந்தார்கள். ஏன் எனில் பாபத்தால் தாக்கப்பட்டதாய் இருக்கிறது.
ते ह देवाः नासिक्यं नासिकायां भवं प्राणं चेतनावन्तं घ्राणम् उद्गीथकर्तारम् उद्गातारम् उद्गीथभक्त्या उपासाञ्चक्रिरे उपासनं कृतवन्त इत्यर्थः ; नासिक्यप्राणदृष्ट्या उद्गीथाख्यमक्षरमोङ्कारम् उपासाञ्चक्रिरे इत्यर्थः । एवं हि प्रकृतार्थपरित्यागः अप्रकृतार्थोपादानं च न कृतं स्यात् — ‘खल्वेतस्याक्षरस्य ’ इत्योङ्कारो हि उपास्यतया प्रकृतः ।
அனுவாதம் - அந்த தேவதைகள் நாசியில் உள்ள பிராணன் அதாவது சேதனமுடைய கிராணனாகிய பிராணனை உத்கீத கர்த்தாவாகிய உத்காதா உத்கீத பக்தியுடன் உபாசனை செய்கின்றார். அதாவது உத்கீதம் எனப்படும் ஓம்கார அக்ஷரத்தை நாசியில் உள்ள (கிராணனில் உள்ள) பிராண திருஷ்ட்டியினால் உபாசனை செய்கின்றனர் என்பது பொருள். இவ்வாறு கூறப்பட்ட அர்த்தத்தை (பிரகிருதார்த்தத்தை) விட்டுவிட்டு அப்பிரகிருதத்தை (இங்கு கூறப்படாததை) (சம்பந்தம் இல்லாததை) அங்கீகரிப்பது பொருந்தாது. ஏன் எனில் “खल्वेतस्यैवाक्षरस्य” (கல்வேதஸ்ஸைவாக்ஷரஸ்ய) என்று ஓம்காரத்தை உபாசிக்க வேண்டியதாகும் என்பது இந்த பிரகரணம்.
ननु उद्गीथोपलक्षितं कर्म आहृतवन्त इत्यवोचः ; इदानीमेव कथं नासिक्यप्राणदृष्ट्या उद्गीथाख्यमक्षरमोङ्कारम् उपासाञ्चक्रिर इत्यात्थ ?
அனுவாதம் - சங்கை - உத்கீத உபலக்ஷண கர்மம் அனுஷ்டானம் செய்தனர் என்று கூறப்பட்டது. ஆனால் இப்பொழுது எவ்வாறு நாசிகாபிராண திருஷ்டியினால் ஓம்காரத்தை உபாசனை செய்வது?
नैष दोषः ; उद्गीथकर्मण्येव हि तत्कर्तृप्राणदेवतादृष्ट्या उद्गीथभक्त्यवयवश्च ओङ्कारः उपास्यत्वेन विवक्षितः, न स्वतन्त्रः ; अतः तादर्थ्येन कर्म आहृतवन्त इति युक्तमेवोक्तम् ।
அனுவாதம் - இந்த தோஷம் இல்லை. உத்கீத கர்மத்திலேயே அந்த கர்த்தா பிராண தேவதா திருஷ்டியினால் உத்கீத பக்தி அவயவமான ஓம்காரம் உபாஸ்ய ரூபமாக விளக்கப்பட்டது. ஸ்வதந்தரமாக அல்ல. ஆகையினால் அதன் பொருட்டு கர்மத்தை அனுஷ்டித்தார்கள் என்று கூறியது பொருத்தமானதே.
तम् एवं देवैर्वृतमुद्गातारं ह असुराः स्वाभाविकतमआत्मानः ज्योतीरूपं नासिक्यं प्राणं देवं स्वकीयेन पाप्मना अधर्मासङ्गरूपेण विविधुः विद्धवन्तः, संसर्गं कृतवन्त इत्यर्थः । स हि नासिक्यः प्राणः कल्याणगन्धग्रहणाभिमानासङ्गाभिभूतविवेकविज्ञानो बभूव ; स तेन दोषेण पाप्मसंसर्गी बभूव ; तदिदमुक्तमसुराः पाप्मना विविधुरिति ।
அனுவாதம் - இவ்வாறு தேவர்களால் வர்ணனை செய்யப்பட்ட அந்த உத்காதா ஜ்யோதிரூப நாசியில் இருக்கும் பிராண தேவதையை ஸ்வாபாவிகமாகவே தமசுடன் கூடிய அசுரர்கள் அதர்மத்திலும் ஆசக்தி ரூபபாபத்தில் சேரவைத்தது. (தள்ளிவிட்டது) அந்த நாசிக்கிய பிராணன் நல்ல வாசனையை கிரஹிப்பதில் அபிமானமும், பற்றும் உண்டாகி விவேக விக்ஞானம் உடையவனாகிவிட்டான். அந்த தோஷத்தின் காரணமாக பாபத்தினால் சேர்க்கை உடையவனாகிவிட்டான். ஆகையால் இவ்வாறு கூறப்படுகிறது - அசுரர்கள் அந்த பாபத்தில் மூழ்கடிக்கப்பட்டார்கள்.
यस्मादासुरेण पाप्मना विद्धः, तस्मात् तेन पाप्मना प्रेरितः प्राणः दुर्गन्धग्राहकः प्राणिनाम् । अतः तेन उभयं जिघ्रति लोकः सुरभि च दुर्गन्धि च, पाप्मना हि एषः यस्मात् विद्धः । उभयग्रहणम् अविवक्षितम् — ‘यस्योभयं हविरार्तिमार्च्छति’ (तै. ब्रा. ३ । ७ । १) इति यद्वत् ; ‘यदेवेदमप्रतिरूपं जिघ्रति’ (बृ. उ. १ । ३ । ३) इति समानप्रकरणश्रुतेः ॥
அனுவாதம் - எதனால் அசுரர்களால் பாபத்தினால் மூழ்கடிக்கப்பட்டதால் அந்த பாபத்தினால் பிரேரிக்கப்பட்ட கிராணன் ஆகிய பிராணன் பிராணிகளுக்கு கெட்டவாசனையை கிரஹிக்கச் செய்கிறது. ஆகையால் உலகத்தில் நல்லவாசனை, கெட்டவாசனை இரண்டையும் முகர்கிறான். எதனால் அது பாபத்தினால் கட்டுப்பட்டுள்ளதோ அதனால் ஆகும். இரண்டையும் கிரஹிக்கும் சக்தி விவரிக்கப்பட்டது. “यस्योभयं हविरार्तिमार्च्छति” (யஸ்யோபயம் ஹவிரார்திமார்ச்சதி) என்பது போல். “यदेवेदमप्रतिरूपं जिघ्राति” (ய தேவேமப்ரிதிரூபம் ஜிக்ரதி) என்று சமான பிரகரண சுருதியிலும் கூறப்பட்டுள்ளது.
अथ ह वाचमुद्गीथमुपासाञ्चक्रिरे तां हासुराः पाप्मना विविधुस्तस्मात्तयोभयं वदति सत्यं चानृतं च पाप्मना ह्येषा विद्धा ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - அதன்பின் அவர்கள் (தேவர்கள்) வாக்கை உத்கீத ரூபமாய் உபாசனை செய்தார்கள். ஆனால் அசுரர்கள் அதை பாபத்தில் சேர்த்தனர் (தள்ளிவிட்டனர்). இதனால் உலகத்தில் அதனால் சத்தியம், பொய் இரண்டையும் பேசுகிறார்கள். ஏன்எனில் பாபத்தினால் கட்டுப்பட்டவர்களாய் இருக்கின்றனர்.
अथ ह चक्षुरुद्गीथमुपासाञ्चक्रिरे तद्धासुराः पाप्मना विविधुस्तस्मात्तेनोभयं पश्यति दर्शनीयं चादर्शनीयं च पाप्मना ह्येतद्विद्धम् ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - அதன்பின் அவர்கள் கண்களை உத்கீத ரூபமாய் உபாசித்தார்கள். அசுரர்கள் அதையும் பாபத்துடன் சேர்த்துவிட்டார்கள். ஆகையால் உலகில் அதனால் பார்க்கத்தகுந்ததும், பார்க்கத்தகாததுமாக இரண்டு விதமான பதார்த்தங்களைப் பார்க்கின்றனர். ஏன்எனில் அது (கண்) பாபத்துடன் கலந்துள்ளதால்.
अथ ह श्रोत्रमुद्गीथमुपासाञ्चक्रिरे तद्धासुराः पाप्मना विविधुस्तस्मात्तेनोभयं शृणोति श्रवणीयं चाश्रवणीयं च पाप्मना ह्येतद्विद्धम् ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - அதன்பின் அவர்கள் ஸ்ரோத்திரத்தை உத்கீதரூபமாய் உபாசனை செய்தனர். அசுரர்கள் அதையும் பாபத்துடன் சேர்த்தார்கள். அதனால் உலகில் கேட்பதற்கு தகுதியானதும், கேட்பதற்கு தகுதி அற்றதுமான இரண்டுவித பேச்சுக்களைக் கேட்கின்றனர். ஏன் எனில் பாபத்துடன் அமிழ்த்தப்பட்டுள்ளதால்.
अथ ह मन उद्गीथमुपासाञ्चक्रिरे तद्धासुराः पाप्मना विविधुस्तस्मात्तेनोभयं सङ्कल्पते सङ्कल्पनीयं चासङ्कल्पनीयं च पाप्मना ह्येतद्विद्धम् ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - அதன்பின் மனதை உத்கீத ரூபத்தால் உபாசனை செய்தனர். அசுரர்கள் அதை (மனதை) பாபத்துடன் சேர்த்தார்கள். இதனால் உலகில் நினைப்பதற்கு தகுந்தது, நினைப்பதற்குத் தகாதது என்று இரண்டு விதமாக நினைக்கப்படுகிறது. ஏன் எனில் பாபத்துடன் அமிழ்த்தப்பட்டுள்ளதால்.
मुख्यप्राणस्य उपास्यत्वाय तद्विशुद्धत्वानुभवार्थः अयं विचारः श्रुत्या प्रवर्तितः । अतः चक्षुरादिदेवताः क्रमेण विचार्य आसुरेण पाप्मना विद्धा इत्यपोह्यन्ते । समानमन्यत् — अथ ह वाचं चक्षुः श्रोत्रं मन इत्यादि । अनुक्ता अप्यन्याः त्वग्रसनादिदेवताः द्रष्टव्याः, ‘एवमु खल्वेता देवताः पाप्मभिः’ (बृ. उ. १ । ३ । ६) इति श्रुत्यन्तरात् ॥
அனுவாதம் - முக்கியப் பிராணனின் உபாசனையை சித்தம் செய்வதற்காக அதனுடைய விசுத்தியை அனுபவிக்கச் செய்வதற்காக இந்த விசாரம் செய்ய சுருதி பிரவிர்த்திக்கின்றது. ஆகையால் கண்கள் முதலிய தேவதைகள் கிரமமாக விசாரித்து அசுரர்களால் பாபத்தில் சேர்க்கப்பட்டார்கள் என்று அதை நிராகரிக்கப்படுகின்றன. மற்றவை சமானமானது. இவ்வாறு வாக், சக்ஷு, ஸ்ரோத்திரம், மனம் முதலியவைகளாகும். கூறப்படாத மற்ற துவக், ரசம் முதலிய தேவதைகளையும் இவ்வாறு காணவேண்டும். “एवमु खल्वेता देवताः पाप्मभिः” ( ஏவமு கல்வேதா தேவதா: பாப்மாபி:).
अथ ह य एवायं मुख्यः प्राणस्तमुद्गीथमुपासाञ्चक्रिरे तꣳ हासुरा ऋत्वा विदध्वंसुर्यथाश्मानमाखणमृत्वा विध्वं सेतैवम् ॥ ७ ॥
மந்த்ரார்த்தம் - அதன் பின் எந்த பிரசித்தமான முக்கியப் பிராணனோ அதை உத்கீத ரூபமாய் உபாசனை செய்யவேண்டும். அதன் (பிராணனின்) சமீபத்தை அடைந்து அந்த அசுரகணங்கள் இவ்வாறு குறைபாட்டை அடைந்தவுடன் எவ்வாறு உடைக்க முடியாத கல்பாறையை அடைந்து மண்கட்டி எவ்வாறு சிதறி நஷ்டமாகுமோ அவ்வாறு ஆகும்.
आसुरेण पाप्मना विद्धत्वात् प्राणादिदेवताः अपोह्य -
அனுவாதம் - ஆசுர பாபத்தினால் காயப்படுத்தப்பட்ட கிராணன் முதலிய தேவதைகளை நிராகரித்து -
अथ अनन्तरम् , ह, य एवायं प्रसिद्धः, मुखे भवः मुख्यः प्राणः, तम् उद्गीथम् उपासाञ्चक्रिरे, तं ह असुराः पूर्ववत् ऋत्वा प्राप्य विदध्वंसुः विनष्टाः, अभिप्रायमात्रेण, अकृत्वा किञ्चिदपि प्राणस्य ।
அனுவாதம் - அதன்பின் எவர் இவ்வாறு இந்த பிரசித்தமான முகத்தில் இருக்கும் முக்கிய பிராணனை உத்கீத ரூபமாய் உபாசனை செய்கின்றனரோ அவர் அசுரகணங்கள் அதை அடைந்தால் பிராணன் அதனால் அது சிறிதும் நஷ்டமடையாமல் அதை நஷ்டமடைய சங்கல்பித்து அதை சிதறடித்து நஷ்டமடையச் செய்தது.
कथं विनष्टा इति, अत्र दृष्टान्तमाह — यथा लोके अश्मानम् आखणम् — न शक्यते खनितुं कुद्दालादिभिरपि, टङ्कैश्च छेत्तुं न शक्यः अखनः, अखन एव आखणः, तम् — ऋत्वा सामर्थ्यात् लोष्टः पांसुपिण्डः, श्रुत्यन्तराच्च — अश्मनि क्षिप्तः अश्मभेदनाभिप्रायेण, तस्य अश्मनः किञ्चिदप्यकृत्वा स्वयं विध्वंसेत विदीर्येत — एवं विदध्वंसुरित्यर्थः । एवं विशुद्धः असुरैरधर्षितत्वात् प्राणः इति ॥
அனுவாதம் - எவ்வாறு நஷ்டமானது? என்பதற்கு திருஷ்டாந்தம் கூறப்படுகிறது - எவ்வாறு உலகில் கல்பாறையைய் கோடாலியால் வெட்ட முடியாதோ அவ்வாறே குத்தாலம் முதலியவைகளாலும் வெட்ட முடியாத பாறையைய் மண் உருண்டையைய் அதன்மேல் எறிந்தால் பாறையைய் ஒன்றும் செய்யமுடியாமல் அதுவே சிதறி நஷ்டமாகிவிடும். அதுபோல் அசுரர்களும் தோல்வி அடைந்தனர். இவ்வாறு அசுரர்களால் தோல்வியை அடையச்செய்ய முடியாததால் முக்கிய பிராணன் சுத்தமாக இருக்கிறது என்பது இதன் தாத்பர்யம். இவ்வாறு விசுத்தமான பிராணனை அசுரர்களால் நஷ்டமடையச் செய்யமுடியாது.
येवं यथाश्मानमाखणमृत्वा विध्वꣳ सत एवꣳ हैव स विध्वꣳ सते य एवंविदि पापं कामयते यश्चैनमभिदासति स एषोऽश्माखणः ॥ ८ ॥
மந்த்ரார்த்தம் - இவ்வாறு கடினமான பாறையில் (மண் கட்டி) உடைந்து நாசமாகுமோ அவ்வாறு அழிக்க முடியாத பிராணனை உபாசித்து அதை அடைந்தவனை குறித்து தீமையை நினைக்கும் பாபி அதாவது தாக்கி அழிக்க நினைப்பவர்கள் அழிகிறார்கள்.
एवंविदः प्राणात्मभूतस्य इदं फलमाह —
அனுவாதம் - இவ்வாறு அறிந்த பிராணாத்ம பூதமானவனுடைய பலன் என்ன என்பதை சுருதி கூறுகிறது.
यथाश्मानमिति । एष एव दृष्टान्तः ; एवं हैव स विध्वंसते विनश्यति ; कोऽसाविति, आह — य एवंविदि यथोक्तप्राणविदि पापं तदनर्हं कर्तुं कामयते इच्छति यश्चापि एनम् अभिदासति हिनस्ति प्राणविदं प्रति आक्रोशताडनादि प्रयुङ्क्ते, सोऽप्येवमेव विध्वंसत इत्यर्थः ; यस्मात् स एष प्राणवित् प्राणभूतत्वात् अश्माखण इव अश्माखणः अधर्षणीय इत्यर्थः ।
அனுவாதம் - எவ்வாறு மண்பிண்டம் என்பது இதற்கான திருஷ்டாந்தம். அவ்வாறு இது நிச்சயமாக நஷ்டமடைகிறது? எது நஷ்டமடைகிறது? அது கூறப்படுகிறது - எவர் முன்பு கூறியவாறு பிராணனை அறிந்த உபாசகனைக் குறித்து அதற்கு தகுதியற்ற பாப நடவடிக்கையில் இச்சை செய்பவனும், அவ்வாறே அதை இம்சை படுத்துபவனும் இந்த பிராணனை அறிந்தவனை மிகுந்த ஆக்ரோஷத்துடன் அடிப்பதுடன் நஷ்டம் செய்யவும் விழைகிறானோ அவன் அந்த மண்பிண்டம் பாறையை அடைந்து அதை நஷ்டம் செய்ய முடியாமல் தானே நஷ்டமடைந்து அழிகிறதோ அவ்வாறு இவனும் நஷ்டமாவான் என்பது பொருள்.
ननु नासिक्योऽपि प्राणः वाय्वात्मा, यथा मुख्यः ; तत्र नासिक्यः प्राणः पाप्मना विद्धः — प्राण एव सन् , न मुख्यः — कथम् ?
அனுவாதம் - சங்கை- - ஆனால் எவ்வாறு முக்கிய பிராணனே நாசியிலும் வாயு ரூபமான பிராணனாய் இருக்கிறது. ஆனாலும் நாசியில் இருக்கும் பிராணன், பாபத்தினால் அமுழ்த்தப்பட்டாலும் பிராணனாய் இருந்தும் ஏன் முக்கியப் பிராணனாகாது?
नैष दोषः ; नासिक्यस्तु स्थानकरणवैगुण्यात् असुरैः पाप्मना विद्धः, वाय्वात्मापि सन् ; मुख्यस्तु तदसम्भवात् स्थानदेवताबलीयस्त्वात् न विद्ध इति श्लिष्टम् — यथा वास्यादयः शिक्षावत्पुरुषाश्रयाः कार्यविशेषं कुर्वन्ति, न अन्यहस्तगताः, तद्वत् दोषवद्ध्राणसचिवत्वाद्विद्धा घ्राणदेवता, न मुख्यः ॥
அனுவாதம் - ஸமாதானம் - அந்த தோஷமில்லை. நாசியில் உள்ள பிராணன் வாயு ரூபமாய் இருந்தாலும் ஸ்தானத்தால் அவச்சின்னமான இந்திரிய தோஷத்தால் அசுரர்களின் மூலமாய் பாபத்தால் சேதமடைந்தது. ஆனால் முக்கியப் பிராணன் ஆஸ்ரய தோஷமில்லாததாலும் ஸ்தான தேவதையைவிட மேலான (சிரேஷ்டமான)தாலும் பாபத்தால் சேதமடையவில்லை என்று கூறுவது பொருத்தமே. எவ்வாறு கோடாலி முதலிய ஆயுதங்களை நன்கு பயிற்சி பெற்றவனால் கையாளப்படுவது போல் பயிற்சி அற்றவனால் முடியாதோ அவ்வாறு கிராண தேவதைக்கு முடியாது. ஆனால் முக்கியப் பிராணன் அவ்வாறு அல்ல.
नैवैतेन सुरभि न दुर्गन्धि विजानात्यपहतपाप्मा ह्येष तेन यदश्नाति यत्पिबति तेनेतरान्प्राणानवति एतमु एवान्ततोऽवित्त्वोत्क्रामति व्याददात्येवान्तत इति ॥ ९ ॥
மந்த்ரார்த்தம் - இந்த முக்கியப்பிராணன் மூலமாய் நல்ல வாசனையை அறிவதில்லை. அவ்வாறே கெட்ட வாசனையையும் அறிவதில்லை. ஏன்எனில் பாபத்தால் தோல்வியை அடையவில்லை. ஆகையால் எந்த ஒன்றை சாப்பிட்டாலும், குடித்தாலும் அதனால் மற்ற (பிராணன்களை (இந்திரியங்களை) போஷிக்கின்றது. கடைசியில் இந்த முக்கியப் பிராணனை அடையாததினால் (கிராணம் முதலிய பிராண சமூகத்தை) உத்கிரமணம் செய்கின்றான். மேலும் கடைசியில் (உயிர் பிரியும் சமயத்தில்) புருஷன் வாயை திறக்கிறான்.
यस्मान्न विद्धः असुरैः मुख्यः, तस्मात् -
அனுவாதம் - அ.கை - ஏன்எனில் முக்கிய பிராணன் அசுரர்கள் மூலமாக பாபத்தை அடையவில்லை ஆகையால்-
नैव एतेन सुरभि न दुर्गन्धि च विजानाति लोकः ; घ्राणेनैव तदुभयं विजानाति ; अतश्च पाप्मकार्यादर्शनात् अपहतपाप्मा अपहतः विनाशितः अपनीतः पाप्मा यस्मात् सोऽयमपहतपाप्मा हि एषः, विशुद्ध इत्यर्थः ।
அனுவாதம் - அதனால் (அந்த முக்கிய பிராணனால்) நல்ல வாசனையோ கெட்ட வாசனையோ அறியாது. உலகில் அந்த இரண்டையும் கிராண இந்திரியத்தினாலேயே அறியமுடிகிறது. ஆகையால் பாபத்தின் காரியங்கள் காணப்படாததால் முக்கியபிராணன் அபஹதபாப்மா எனப்படுகிறது. அதாவது பாபத்தினால் விநாசம் அடையச்செய்ய முடியாது. அதாவது நெருங்கவிடாமல் தூரமாக தள்ளிவைக்கப்பட்டது. அதனால் முக்கிய பிராணன் அபஹத பாப்மா அதாவது விசுத்தமானது என்பது பொருள்.
यस्माच्च आत्मम्भरयः कल्याणाद्यासङ्गवत्त्वात् घ्राणादयः — न तथा आत्मम्भरिर्मुख्यः ; किं तर्हि ? सर्वार्थः ; कथमिति, उच्यते — तेन मुख्येन यदश्नाति यत्पिबति लोकः तेन अशितेन पीतेन च इतरान् प्राणान् घ्राणादीन् अवति पालयति ; तेन हि तेषां स्थितिर्भवतीत्यर्थः ; अतः सर्वम्भरिः प्राणः ; अतो विशुद्धः ।
அனுவாதம் - எதனால் கிராணன் முதலிய இந்திரியங்கள் தங்கள் தங்களிடம் உள்ள ஆசக்தியினால் தங்களை போக்ஷனை செய்கின்றன. அவ்வாறு முக்கிய பிராணன் தன்னைப் போஷிக்காது எனில் எவ்வாறு உள்ளது? எவ்வாறு அது எல்லாவற்றிக்கும் ஹிதம் செய்வதாகின்றது? அதற்குக் கூறப்படுகிறது - அந்த முக்கிய பிராணனால் எது சாப்பிடப்படுகிறதோ, எது குடிக்கப்படுகிறதோ அதனால் உலகத்தோர் சாப்பிடப்பட்டதாலும், பானம் செய்யப்பட்டதாலும் கிராணன் முதலிய பிராணன்கள் காப்பாற்றப்படுகிறது. அதனால் அவைகளுக்கு ஸ்திதி (இருக்கும் தன்மை) இருக்கிறது என்பது பொருள். ஆகையால் முக்கிய பிராணனே எல்லாவற்றையும் காப்பாற்றுகிறது. ஆகையால் அது விசுத்தம் ஆகும்.
कथं पुनर्मुख्याशितपीताभ्यां स्थितिः इतरेषां गम्यत इति, उच्यते — एतमु एव मुख्यं प्राणं मुख्यप्राणस्य वृत्तिम् , अन्नपाने इत्यर्थः, अन्ततः अन्ते मरणकाले अवित्त्वा अलब्ध्वा उत्क्रामति, घ्राणादिप्राणसमुदाय इत्यर्थः ; अप्राणो हि न शक्नोत्यशितुं पातुं वा ; तदा उत्क्रान्तिः प्रसिद्धा घ्राणादिकलापस्य ; दृश्यते हि उत्क्रान्तौ प्राणस्याशिशिषा, यतः व्याददात्येव, आस्यविदारणं करोतीत्यर्थः ; तद्धि अन्नालाभे उत्क्रान्तस्य लिङ्गम् ॥
அனுவாதம் - மேலும் எவ்வாறு முக்கிய பிராணன் மூலமாய் சாப்பிடுதல், பானம் செய்தல் மற்ற பிராணன்களுக்கு இருக்கிறது என்று அறியமுடிகிறது? அதற்குக் கூறப்படுகிறது - இந்த முக்கிய பிராணன் அதாவது முக்கிய பிராணனின் விருத்தி ரூப அன்ன, பானத்தை ஏற்றுக்கொள்ளாமல் கடைசி சமயத்தில் அதாவது மரணகாலத்தில் கிராணன் முதலிய இந்திரியக் கூட்டம் உத்கிரமணம் செய்கிறது. ஏன் எனில் பிராணன் இல்லாதவனால் சாப்பிடவோ குடிக்கவோ முடியாது. இதனால் அந்த சமயத்தில் கிராணன் முதலிய இந்திரியக் கூட்டம் உத்கிரமணம் செய்வது பிரசித்தமாகும். உத்கிரமண (மரணம் அடையும்) சமயத்தில் பிராணனுக்கு சாப்பிடுவதற்கு இச்சை உண்டாவது ஸ்பஷ்டமாக காணப்படுகிறது. ஆகையால் அந்த சமயத்தில் வாயைத் திறக்கிறது. அந்த உத்கிரமணம் செய்யும் கிராணன் முதலியவைகளுக்கு அன்னம் முதலியவை கிடைக்கவில்லை என்பதின் சின்னமாகும்.
तꣳ हाङ्गिरा उद्गीथमुपासाञ्चक्र एतमु एवाङ्गिरसं मन्यन्तेऽङ्गानां यद्रसः ॥ १० ॥
மந்த்ரார்த்தம் - அங்கிரஸ் ரிஷி இதை (முக்கிய பிராணனை) உத்கீத திருஷ்டியில் உபாசனை செய்தார். ஆகையால் இதுவே (இந்தப் பிராணனே) ஆங்கிரஸ் எனப்படுகிறது. ஏன் எனில் இது எல்லா அங்கங்களின் ரசமாகும்.
तं ह अङ्गिराः — तं मुख्यं प्राणं ह अङ्गिरा इत्येवंगुणम् उद्गीथम् उपासाञ्चक्रे उपासनं कृतवान् , बको दाल्भ्य इति वक्ष्यमाणेन सम्बध्यते ; तथा बृहस्पतिरिति, आयास्य इति च उपासाञ्चक्रे बकः इत्येवं सम्बन्धं कृतवन्तः केचित् , एतमु एवाङ्गिरसं बृहस्पतिमायास्यं प्राणं मन्यन्ते — इति वचनात् ।
அனுவாதம் - அதாவது அங்கிரா - அந்த முக்கியப் பிராணன் அங்கிரா என்ற குணமுடைய உத்கீதத்தை உபாசனை செய்தார். இவ்வாறு தால்ப்யபகர் உபாசனை செய்தார் என்று இனி கூறுவதுடன் சம்பந்தம் உடையது. அவ்வாறே பிருஹஸ்பதி என்றும் ஆயாஸ்ய ரூபத்துடன் பிராணனை உபாசனை செய்தார் இவ்வாறு அதனை என்று சிலர் சம்பந்தப்படுத்துகின்றனர். “एतमु एवािरसं बृहस्पतिमायास्यं प्राणं मन्यन्ते” (ஏதமு ஏவாங்கிரசம் பிரஸ்பதிமாயாஸ்யம் பிரணம் மன்யஞ்தே) என்ற வசனத்தால் அறிகிறோம்.
भवत्येवं यथाश्रुतासम्भवे ; सम्भवति तु यथाश्रुतम् ऋषिचोदनायामपि — श्रुत्यन्तरवत् — ’ तस्माच्छतर्चिन इत्याचक्षते एतमेव सन्तम्’ ऋषिमपि ; तथा माध्यमा गृत्समदो विश्वामित्रो वामदेवोऽत्रिः इत्यादीन् ऋषीनेव प्राणमापादयति श्रुतिः ; तथा तानपि ऋषीन् प्राणोपासकान् अङ्गिरोबृहस्पत्यायास्यान् प्राणं करोत्यभेदविज्ञानाय — ‘प्राणो ह पिता प्राणो माता’ (छा. उ. ७ । १५ । १) इत्यादिवच्च । तस्मात् ऋषिः अङ्गिरा नाम, प्राण एव सन् , आत्मानमङ्गिरसं प्राणमुद्गीथम् उपासाञ्चक्रे इत्येतत् ; यत् यस्मात् सः अङ्गानां प्राणः सन् रसः, तेनासौ अङ्गिरसः ॥
அனுவாதம் - அவ்வாறு இருக்கட்டும். ஆனால் சுருதியின் அர்த்தம் சரளமாக ஏற்படாவிடினும் சுருதியின் அர்த்தம் சம்பவிக்கின்றது. ரிஷிகளின் பிரதிபாதணம் சுருதியை அனுசரித்தே உள்ளது. “तस्माच्छतर्चिन इत्याचक्षत एतमेव सन्तमृषिमपि” (தஸ்மாச் சதர்ச்சின இத்யாசக்க்ஷத ஏதமேவ சந்தம்ருஷிமபி). அவ்வாறே மாத்யமர், க்ருத்சமதர், விச்வாமித்திரர், வாமதேவர், அத்திரி முதலிய ரிஷிகள் இவர்களுக்கு சுருதியானது பிராணத்துவத்தை அடையச்செய்கிறது. அவ்வாறே “प्राणो ह पिता प्राणो माता” (ப்ராணோ ஹ பிதா பிராணோ மாதா) என்பது முதலியவைகள் போல் அங்கிரா ப்ரஹஸ்பதி மேலும் ஆயாஸ்யர் ஆகிய இந்தப் பிராண உபாசாக ரிஷிகளுக்கும் சுருதி அபேதத்தைத் தெரிவிப்பதற்காக பிராணனுக்கு இருக்கின்றது. ஆகையால் அங்கிரஸ் என்ற பெயர் (நாமம்) உடைய ரிஷி பிராண ரூபமாகி அங்கிரச ஆத்ம ரூப பிராணனை உத்கீத திருஷ்டியால் உபாசனை செய்தார். ஏன் எனில் அது பிராணனாக இருப்பதால் அது அங்கங்களின் ரசமாகும். ஆகையால் ஆங்கிரசம் எனப்படுகிறது.
तेन तꣳ ह बृहस्पतिरुद्गीथमुपासाञ्चक्र एतमु एव बृहस्पतिं मन्यन्ते वाग्घि बृहती तस्या एष पतिः ॥ ११ ॥
மந்த்ரார்த்தம் - இதனால் பிருஹஸ்பதி (பிராணனை) அதை உத்கீத ரூபமாய் உபாசனை செய்தார். உலகில் இந்த பிராணனை பிருஹஸ்பதி என்று கருதுகின்றனர். ஏன் எனில் வாக்கே மேலானது (बृहती முதன்மையானது) மேலும் அதனுடைய பதியும் ஆகும்.
तथा वाचो बृहत्याः पतिः तेनासौ बृहस्पतिः ॥
அனுவாதம் - அவ்வாறே அந்த வாக் மேலானதின் பதி ஆகையால் பிருஹஸ்பதி.
तेन तꣳ हायास्य उद्गीथमुपासाञ्चक्र एतमु एवायास्यं मन्यन्त आस्याद्यदयते ॥ १२ ॥
மந்த்ரார்த்தம் - இதனால் ஆஸ்ாஸ்யர் இதனை (பிராணனை) உத்கீத திருஷ்டியால் உபாசனை செய்தார். உலகில் இந்த பிராணனை ஆயாஸ்ய உபாசனை என்கின்றனர். ஏன் எனில் இது வாய் வழியாக வெளியேறுவதால் ஆகும்.
तथा यत् यस्मात् आस्यात् अयते निर्गच्छति तेन आयास्यः ऋषिः प्राण एव सन् इत्यर्थः । तथा अन्योऽप्युपासकः आत्मानमेव आङ्गिरसादिगुणं प्राणमुद्गीथमुपासीतेत्यर्थः ॥
அனுவாதம் - அவ்வாறே ஏன் எனில் அந்த முகத்திலிருந்து (வாயிலிருந்து) வெளியேறுவதால் ஆயாஸ்ய ரிஷி பிராண ரூபமாகி (அதை உபாசித்தார்) என்பது பொருள். அதாவது மற்ற உபாசகர்களும் அங்கிரஸ் முதலிய குணங்களுடன் கூடிய ஆத்ம ரூபமான பிராணனை உத்கீத ரூபத்தால் உபாசனை செய்யவேண்டும்.
तेन तꣳ ह बको दाल्भ्यो विदाञ्चकार । स ह नैमिशीयानामुद्गाता बभूव स ह स्मैभ्यः कामानागायति ॥ १३ ॥
மந்த்ரார்த்தம் - ஆகையால் தல்பகரின் புத்திரர் பகர் (முன்பு கூறியவாறு) அதை அறிந்தார். (அதாவது முன்பு கூறியவாறு பிராணனை உபாசனை செய்தார்). அவர் நைமிஷாரண்யத்தில் யக்ஞம் செய்பவர்களுக்கு உத்காதா ஆனார். மேலும் அவர் அவர்களின் காமனைகளின் பூர்த்திக்காக உத்கானம் செய்தார்.
न केवलमङ्गिरःप्रभृतय उपासाञ्चक्रिरे ; तं ह बको नाम दल्भस्यापत्यं दाल्भ्यः विदाञ्चकार यथादर्शितं प्राणं विज्ञातवान् ; विदात्वा च स ह नैमिशीयानां सत्रिणाम् उद्गाता बभूव ; स च प्राणविज्ञानसामर्थ्यात् एभ्यः नैमिशीयेभ्यः कामान् आगायति स्म ह आगीतवान्किलेत्यर्थः ॥
அனுவாதம் - அங்கிரர் முதலியவர்கள் மட்டும் உபாசனை செய்யவில்லை. அந்த பகர் என்ற பெயருடைய தல்பஸ்யருடைய புத்திரன் தால்ப்யரும் அறிந்திருந்தார் (அவ்வாறு உபாசனை செய்தார்). முன்பு எவ்வாறு பிராணனைப் பற்றி விளக்கப்பட்டதோ அதை அறிந்திருந்தார். அதை அறிந்து நைமிஷாரண்யத்தில் யக்ஞம் செய்பவர்களுக்கு உத்காதாவானார். அவர் தன்னுடைய பிராண விக்ஞான சாமர்த்தியத்தால் நைமிஷாராண்யத்தில் யக்ஞம் செய்பவர்களுடைய காமனைகள் பூர்த்தி அடைவதற்காக உத்கானம் செய்தார். பாடினார் என்பது பொருள்.
आगाता ह वै कामानां भवति य एतदेवं विद्वानक्षरमुद्गीथमुपास्त इत्यध्यात्मम् ॥ १४ ॥
மந்த்ரார்த்தம் - இதனால் இவ்வாறு அறிந்த வித்வான் இந்த உத்கீதம் எனப்படும் அக்ஷரத்தை (ஓம்காரத்தை) இவ்வாறு உபாசனை செய்கிறானோ அவன் காமனைகளை அடையச் செய்பவனாகின்றான். இது அத்யாத்ம உபாசனை.
तथा अन्योऽप्युद्गाता आगाता ह वै कामानां भवति ; य एतत् एवं विद्वान् यथोक्तगुणं प्राणम् अक्षरमुद्गीथमुपास्ते, तस्य एतद्दृष्टं फलम् उक्तम् , प्राणात्मभावसत्वदृष्टम् — ‘देवो भूत्वा देवानप्येति’ (बृ. उ. ४ । १ । २)(बृ. उ. ४ । १ । ३)(बृ. उ. ४ । १ । ४)(बृ. उ. ४ । १ । ५)(बृ. उ. ४ । १ । ६)(बृ. उ. ४ । १ । ७) इति श्रुत्यन्तरात्सिद्धमेवेत्यभिप्रायः । इत्यध्यात्मम् — एतत् आत्मविषयम् उद्गीथोपासनम् इति उक्तोपसंहारः, अधिदैवतोद्गीथोपासने वक्ष्यमाणे, बुद्धिसमाधानार्थः ॥
அனுவாதம் - இவ்வாறு அறிந்த வித்வான் கூறப்பட்ட குணமுடைய பிராணனாகிய அக்ஷர உத்கீதத்தை உபாசிக்கின்றான். அவ்வாறே வேறு ஒரு உத்காதாவும் காமினைகளை அடையச் செய்பவனாகின்றான். அது அவனுடைய திருஷ்ட பலமாகும். “देवो भूत्वा देवानप्येति” (தேவோ பூத்வா தேவானப்யேதி) என்ற வேறு சுருதியினால் பிராணாத்ம பாவம் அதிருஷ்ட பலம் என்று சித்திக்கிறது என்பது அபிப்பிராயம். இவ்வாறு இந்த அத்யாத்ம ஆத்ம விஷயம் உத்கீத உபாஸனம் என்று கூறி உபசம்ஹாரம் செய்வது (முடிப்பது) அதிதைவத உத்கீத உபாஸனை இனிக்கூறுவதில் புத்தியை அதில் நன்றாக நிலைநிறுத்துவதற்காக ஆகும்.
इति द्वितीयखण्डभाष्यम् ॥
अथाधिदैवतं य एवासौ तपति तमुद्गीथमुपासीतोद्यन्वा एष प्रजाभ्य उद्गायति । उद्यं स्तमो भयमपहन्त्यपहन्ता ह वै भयस्य तमसो भवति य एवं वेद ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - இதன்பின் அதிதைவத உபாசனை வர்ணிக்கப்படுகிறது. எந்த இது (ஆதித்யன்) தபிக்கிறதோ அதை உத்கீத திருஷ்டியினால் உபாசனை செய்ய வேண்டும். அந்த உத்கீதாவாகி பிரஜைகளுக்காக உத்கானம் செய்கின்றான். உதயமாகி அந்தகாரத்தையும் (இருளையும்) பயத்தையும் நாசம் செய்கிறது. எவர் இவ்வாறு இதை அறிகின்றனரோ (உபாசனை செய்கின்றனரோ) அவர் அந்தகாரத்தையும், பயத்தையும் நாசம் செய்பவர் ஆகிறார்.
अथ अनन्तरम् अधिदैवतं देवताविषयमुद्गीथोपासनं प्रस्तुतमित्यर्थः, अनेकधा उपास्यत्वादुद्गीथस्य ; य एवासौ आदित्यः तपति, तम् उद्गीथमुपासीत आदित्यदृष्ट्या उद्गीथमुपासीतेत्यर्थः ; तमुद्गीथम् इति उद्गीथशब्दः अक्षरवाची सन् कथमादित्ये वर्तत इति, उच्यते —
அனுவாதம் - இதன்பின் உத்கீதம் அநேக விதமான உபாசனைகள் இருப்பதால் அதிதைவதம் அதாவது தேவதா விஷயம் உத்கீத உபாசனம் ஆரம்பிக்கப்படுகிறது என்பது பொருள். எந்த இந்த ஆதித்தியன் தபிக்கின்றது என்ற ரூபமாய் உத்கீதத்தை ஆதித்திய திருஷ்டியால் உத்கீதத்தை உபாசிக்க வேண்டும் என்பது தாத்பர்யம். “तमुद्गीथम्” (தம்உத்கீதம்) என்பதில் உள்ள “उद्गीथ” (உத்கீத) சப்தம் அக்ஷரவாசகமாகின்றதோ எவ்வாறு ஆதித்திய அர்தத்தில் பிரயோகிக்கப்படுகிறது? என்பது கூறப்படுகிறது-
उद्यन् उद्गच्छन् वै एषः प्रजाभ्यः प्रजार्थम् उद्गायति प्रजानामन्नोत्पत्त्यर्थम् ; न हि अनुद्यति तस्मिन् , व्रीह्यादेः निष्पत्तिः स्यात् ; अतः उद्गायतीवोद्गायति — यथैवोद्गाता अन्नार्थम् ; अतः उद्गीथः सवितेत्यर्थः ।
அனுவாதம் - பிரஜைகளுக்காக இந்த (ஆதித்யன்) உதயமாகிறது, மேலே செல்கிறது. பிரஜைகளுக்காக அன்ன உத்பத்திக்காக உத்கானம் செய்கிறது. ஏன் எனில் அது உதிக்கவில்லை எனில் நெல் முதலியவைகள் உற்பத்தியாகாது. ஆகையால் எவ்வாறு உத்காதா அன்னத்திற்காக உத்கானம் செய்கின்றானோ அவ்வாறு உத்கானம் செய்தது போன்று உத்கானம் செய்கிறது என்பது பொருள். ஆகையால் உத்கீதம் ஆதித்தியன் (சவிதா, சூரியன்) என்பது பொருள்.
किञ्च उद्यन् नैशं तमः तज्जं च भयं प्राणिनाम् अपहन्ति ; तमेवंगुणं सवितारं यः वेद, सः अपहन्ता नाशयिता ह वै भयस्य जन्ममरणादिलक्षणस्य आत्मनः तमसश्च तत्कारणस्याज्ञानलक्षणस्य भवति ॥
அனுவாதம் - மேலும் அது உதித்து இரவின் இருளைப் போக்கி, அதனால் உண்டான பிராணிகளின் பயத்தையும் நாசம் செய்கிறது. இவ்வாறான குணங்களுடன் கூடிய சூரியனை உபாசிப்பவனின் ஜன்ம மரண ரூப தன்னுடைய பயத்தையும் அந்தகாரத்தையும் அதாவது அக்ஞானத்தையும் நாசம் செய்கிறது.
समान उ एवायं चासौ चोष्णोऽयमुष्णोऽसौ स्वर इतीममाचक्षते स्वर इति प्रत्यास्वर इत्यमुं तस्माद्वा एतमिमममुं चोद्गीथमुपासीत ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - இதுவும் (பிராணனும்) அதுவும் (சூரியனும்) பரஸ்பரம் சமானமானதே. பிராணன் உஷ்ணமானது. சூரியனும் உஷ்ணமானது, அவ்வாறே பிராணனை ஸ்வரம் என்று கூறுகிறார்கள், அவ்வாறே சூரியனையும் ஸ்வரம் என்றும் பிரத்யாஸ்வரம் என்றும் கூறுகிறார்கள். (ஸ்வரம் என்பது இந்த இடத்தில் பிரிந்து செல்லுதல் என்பது பொருள்) ஆகையால் இந்த பிராணன், மேலும் இந்த சூரியன் ரூபமாய் உபாசனை செய்யவேண்டும் என்பதாகும்.
यद्यपि स्थानभेदात्प्राणादित्यौ भिन्नाविव लक्ष्येते, तथापि न स तत्त्वभेदस्तयोः । कथम् —
அனுவாதம் - அ.-கை - ஸ்தானபேதத்தின் காரணமாக பிராணன் ஆதித்யன் பின்னம்போல் (வெவ்வேறு ஆனதுபோல்) காணப்படுகிறது. ஆனாலும் அவை இரண்டிற்கும் அந்த தத்வபேதம் ஏன் இல்லை?
समान उ एव तुल्य एव प्राणः सवित्रा गुणतः, सविता च प्राणेन ; यस्मात् उष्णोऽयं प्राणः उष्णश्चासौ सविता । किञ्च स्वर इति इमं प्राणमाचक्षते कथयन्ति, तथा स्वर इति प्रत्यास्वर इति च अमुं सवितारम् ; यस्मात् प्राणः स्वरत्येव न पुनर्मृतः प्रत्यागच्छति, सविता तु अस्तमित्वा पुनरप्यहन्यहनि प्रत्यागच्छति, अतः प्रत्यास्वरः ; अस्मात् गुणतो नामतश्च समानावितरेतरं प्राणादित्यौ । अतः तत्त्वाभेदात् एतं प्राणम् इमम् अमुं च आदित्यम् उद्गीथमुपासीत ॥
அனுவாதம் - பிராணன் குணத்தால் ஆதித்யனுக்கு ஒப்பானது. அவ்வாறே ஆதித்யன் பிராணனுக்கு ஒப்பானது. ஏன் எனில் பிராணன் உஷ்ணமானது. அவ்வாறே இந்த ஆதித்யனும் உஷ்ணமானது. மேலும் இந்தப் பிராணன் ஸ்வரம் எனப்படுகிறது. அவ்வாறே ஆதித்யனை ஸ்வரம் என்றும் பிரத்யா ஸ்வரம் என்று கூறப்படுகிறது. (ஸ்வரம் என்பது இங்கு செல்லுதல் என்ற பொருளில் வந்துள்ளது). எதனால் பிராணன் ஸ்வரத்தால் அதாவது வெளியேறியபின் அதாவது மரித்தபின் திரும்பி வருவதில்லை. ஆனால் சூரியனே அஸ்தமித்து பின் மறுபடியும் தினமும் பகல் திரும்பி வருகிறது. ஆகையால் சூரியன் பிரத்யாஸ்வரம். (திரும்புதலை உடையது). இந்த குணத்தாலும், பெயராலும் இந்த பிராணன் ஆதித்யன் இரண்டும் சமானமானவைகளே. ஆகையால் உண்மையில் அபேதமாய் இருப்பதால் இந்தப் பிராண ஆதித்ய ரூபமாய் உத்கீதத்தின் (உத்கீதத்தின் அவயவ பூதமான ஓம்காரத்தை) உபாசனை செய்ய வேண்டும்.
अथ खलु व्यानमेवोद्गीथमुपासीत यद्वै प्राणिति स प्राणो यदपानिति सोऽपानः । अथ यः प्राणापानयोः सन्धिः स व्यानो यो व्यानः सा वाक् । तस्मादप्राणन्ननपानन्वाचमभिव्याहरति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - அதன்பின் மற்றொரு விதமாக (ஆத்யாத்ம உபாசனை) வியான திருஷ்டியினால் உத்கீத உபாசனை செய்யவேண்டும். எந்த புருஷன் பிராணனை (மூச்சை) மூக்கின் வழியாய் வாயுவை வெளியே விடுகிறானோ) செய்கின்றானோ அது பிராணன். மேலும் அதை உள் இழுக்கின்றானோ அது அபானன். அவ்வாறு பிராணன் அபானனின் சந்தி (அதாவது இரண்டின் நடுபாகம்) வியானன் ஆகும். அந்த வியானன் வாக் ஆகும். அதனால் புருஷன் பிராணனும் அபானனும் செய்யாமல் இருக்கும் சமயத்தில் வாக்கினால் பேசுகின்றான்.
अथ खलु इति प्रकारान्तरेणोपासनमुद्गीथस्योच्यते ; व्यानमेव वक्ष्यमाणलक्षणं प्राणस्यैव वृत्तिविशेषम् उद्गीथम् उपासीत । अधुना तस्य तत्त्वं निरूप्यते — यद्वै पुरुषः प्राणिति मुखनासिकाभ्यां वायुं बहिर्निःसारयति, स प्राणाख्यो वायोर्वृत्तिविशेषः ; यदपानिति अपश्वसिति ताभ्यामेवान्तराकर्षति वायुम् , सः अपानः अपानाख्या वृत्तिः । ततः किमिति, उच्यते — अथ यः उक्तलक्षणयोः प्राणापानयोः सन्धिः तयोरन्तरा वृत्तिविशेषः, सः व्यानः ; यः साङ्ख्यादिशास्त्रप्रसिद्धः, श्रुत्या विशेषनिरूपणात् — नासौ व्यान इत्यभिप्रायः ।
அனுவாதம் - (அத கலு) என்று வேறு பிரகாரமாக உத்கீத உபாசனம் கூறப்படுகிறது. பிராணனின் விருத்தி விசேஷம் மேலே கூறப்போகும் லக்ஷணமுடைய வியானன். அந்த திருஷ்டியினால் உத்கீதம் உபாசிக்க வேண்டும். இப்பொழுது அதன் தத்துவம் நிரூபிக்கப்படுகிறது - எந்த புருஷன் பிராணனம் செய்கிறானோ (மூச்சு விடுகிறானோ) அதாவது வாய், மூக்கு இவைகளின் மூலமாய் வாயுவை வெளியில் விடுகிறதோ அது பிராணன் எனப்படும் வாயுவின் விருத்தி விசேஷம். அது எப்பொழுது अपश्वसिति (அபச்வசிதி) அதாவது வாய் வழியாகவும், மூக்கு வழியாகவும் வாயுவை உள் இழுத்தல் அபானன் எனப்படும் விருத்தியாகும். அதனால் என்ன? அதற்குக் கூறப்படுகிறது - அந்த கூறப்பட்ட லக்ஷணங்களுடைய பிராண அபானங்களின் சந்தியின் வேறு விருத்தி விசேஷம் வியானன். சுருதியினால் விசேஷ ரூபமாய் நிரூபணம் செய்யப்பட்டதால் இங்கு அந்த வியானன் அதுவல்ல. ஆனால் சாங்கியம் முதலிய சாஸ்த்திரத்தில் பிரசித்தமான (சர்வதேஹவியாபி) வியானன் ஆகும் என்பது அபிப்பிராயம்.
कस्मात्पुनः प्राणापानौ हित्वा महता आयासेन व्यानस्यैवोपासनमुच्यते ? वीर्यवत्कर्महेतुत्वात् । कथं वीर्यवत्कर्महेतुत्वमिति, आह — यः व्यानः सा वाक् , व्यानकार्यत्वाद्वाचः । यस्माद्व्याननिर्वर्त्या वाक् , तस्मात् अप्राणन्ननपानन् प्राणापानव्यापारावकुर्वन् वाचमभिव्याहरति उच्चारयति लोकः ॥
அனுவாதம் - எதனால் பிராண அபானன்களைவிட்டு மிகுந்த பிரயாசையுடன் வியானத்தின் உபாசனைக் கூறப்படுகிறது? ஏன் எனில் வீர்யமுடையதே கர்மத்திற்கு ஹேது ஆவதால். எவ்வாறு வீர்யமுடையது கர்மத்திற்கு ஹேதுவாகிறது என்பது கூறப்படுகிறது - எது வியானனோ அது வாக். வாக் வியானனுடைய காரியமாவதால். எதனால் வாக் வியானனால் உண்டாவதால் ஆகும். உலகில் பிராணன், அபானன் கிரியை அற்று இருக்கும்பொழுது வாக் வெளிப்பட்டு உச்சாரணம் செய்கிறது.
या वाक्सर्क्तस्मादप्राणन्ननपानन्नृचमभिव्याहरति यर्क्तत्साम तस्मादप्राणन्ननपानन्साम गायति यत्साम स उद्गीथस्तस्मादप्राणन्ननपानन्नुद्गायति ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - எது வாக்கோ அது ரிக். புருஷன் பிராணனாலும் அபானனாலும் கிரியை செய்யாமல் இருக்கும்பொழுது ரிக்கை உச்சாரணம் செய்கின்றான். எந்த ரிக்கோ அது சாமம். இதனால் எப்பொழுது பிராணன் அபானன் கிரியை அற்று இருக்கிறதோ அப்பொழுது சாமகானம் செய்கின்றான். எந்த சாமமோ அது உத்கீதம். எப்பொழுது பிராணன் அபானன் கிரியை அற்று இருக்கிறதோ அப்பொழுது உத்கானம் செய்கின்றான்.
तथा वाग्विशेषामृचम् , ऋक्संस्थं च साम, सामावयवं चोद्गीथम् , अप्राणन्ननपानन् व्यानेनैव निर्वर्तयतीत्यभिप्रायः ॥
அனுவாதம் - இவ்வாறு வாக் விசேஷம் ரிக். ரிக்கில் இருக்கும் சாமம். மேலும் சாமத்தின் அவயவ பூதமான உத்கீதத்தையும் புருஷன் பிராணன், அபானன் கிரியை அற்று கேவலம் வியானனாலேயே கிரியையை உடையவனாகின்றான் என்பது பொருள்.
अतो यान्यन्यानि वीर्यवन्ति कर्माणि यथाग्नेर्मन्थनमाजेः सरणं दृढस्य धनुष आयमनमप्राणन्ननपानं स्तानि करोत्येतस्य हेतोर्व्यानमेवोद्गीथमुपासीत ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - இதைத் தவிர மற்ற எந்த வீர்யமுள்ள கர்மம் உள்ளதோ - எவ்வாறு அக்னியின் மந்தனம் (கடைதல்) ஒரு இலக்கை அடைவதற்காக ஓடுதல், திடமான வில்லை வளைத்தல் போன்ற எல்லா வீர்யமுடைய கர்மங்களை புருஷன் பிராணன், அபானன் கிரியைகளை செய்யாவிடினும் கிரியைகளை செய்கின்றான். ஆகையால் வியான திருஷ்டியினாலேயே உத்கீத உபாசனை செய்ய வேண்டும்.
न केवलं वागाद्यभिव्याहरणमेव-
அனுவாதம் - வாக் முதலியவைகளின் உச்சாரணம் மாத்திரமல்ல -
अतः अस्मात् अन्यान्यपि यानि वीर्यवन्ति कर्माणि प्रयत्नाधिक्यनिर्वर्त्यानि — यथा अग्नेर्मन्थनम् , आजेः मर्यादायाः सरणं धावनम् , दृढस्य धनुषः आयमनम् आकर्षणम् — अप्राणन्ननपानंस्तानि करोति ।
அனுவாதம் - இதைத்தவிற மற்ற அதிக வீர்யமுள்ள கர்மங்களில் அதிக பிரயத்தனத்துடன் சாதிக்க வேண்டியது - எவ்வாறு அக்னியை கடைதல்போலும், இலக்கை நோக்கி ஓடுதல்போலும், திடமான வில்லை வளைப்பதுபோலும் உள்ள கிரியைகளிலும் பிராணன் அன்றியும், வியானன் அன்றியும் செய்ய முடிகிறது.
अतो विशिष्टः व्यानः प्राणादिवृत्तिभ्यः । विशिष्टस्योपासनं ज्यायः, फलवत्त्वाद्राजोपासनवत् । एतस्य हेतोः एतस्मात्कारणात् व्यानमेवोद्गीथमुपासीत, नान्यद्वृत्त्यन्तरम् । कर्मवीर्यवत्तरत्वं फलम् ॥
அனுவாதம் - ஆகையால் வியானன் பிராணன் முதலிய விருத்திகளைக் காட்டிலும் மிகவும் சிறந்தது. ராஜாவை புகழ்ந்தால் (சேவை செய்தால்) எவ்வாறு பலன் கிடைக்குமோ அவ்வாறு (பிராணன்களைக்காட்டிலும்) மிகச் சிறந்த உபாசனை மிகவும் சிரேஷ்டமானது. இந்த காரணத்தால் வியானனையே உத்கீதம் என்று உபாசிக்க வேண்டும். மற்ற விருத்திகளை அல்ல. இதன் பலன் கர்ம வீர்யத்துவமாகும்.
अथ खलूद्गीथाक्षराण्युपासीतोद्गीथ इति प्राण एवोत्प्राणेन ह्युत्तिष्ठति वाग्गीर्वाचो ह गिर इत्याचक्षतेऽन्नं थमन्ने हीदं सर्वं स्थितम् ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - அதன்பின் நிச்சயமாக உத்கீத அக்ஷரங்களை உபாசனை செய்யவேண்டும்- “उद्गीथ” (உத்கீத) என்ற சப்தத்தில் பிராணனே “उत्” (உத்) ஆகும். ஏன்எனில் பிராணன் எழுகிறது. வாக்கே “गी” (கீ) ஆகும். ஏன்எனில் வாக்கினால் சொற்களை (பதங்களை) உச்சரிக்கின்றான். அவ்வாறே அன்னமே “थ” (த்த) ஆகும். ஏன்எனில் எல்லாம் அன்னத்திலேயே நிலைபெற்றுள்ளது.
अथ अधुना खलु उद्गीथाक्षराण्युपासीत भक्त्यक्षराणि मा भूवन्नित्यतो विशिनष्टि — उद्गीथ इति ; उद्गीथनामाक्षराणीत्यर्थः — नामाक्षरोपासनेऽपि नामवत एवोपासनं कृतं भवेत् अमुकमिश्रा इति यद्वत् ।
அனுவாதம் - இப்பொழுது உத்கீதத்தில் உள்ள அக்ஷரங்கள் உபாசிக்க வேண்டும் பக்தி அக்ஷரங்களை அல்ல என்பதற்காக விளக்கப்படுகிறது - உத்கீத என்று உத்கீத நாமத்தின் அக்ஷரங்கள் என்பது பொருள். நாம அக்ஷரங்கள் உபாசனையானாலும் நாமம் உடையதையே உபாசனை செய்யப்பட்டதாகும். எவ்வாறு (பெயர் தெரியாதவனை) “अमुकमिश्र” (அமுகமிஸ்ரன்) என்று கூறுவதால் அந்த பெயருடையவனின் விசேஷ ஞானம் ஏற்படுகிறதோ அவ்வாறு ஆகும்.
प्राण एव उत् , उदित्यस्मिन्नक्षरे प्राणदृष्टिः । कथं प्राणस्य उत्त्वमिति, आह — प्राणेन हि उत्तिष्ठति सर्वः, अप्राणस्यावसाददर्शनात् ; अतोऽस्त्युदः प्राणस्य च सामान्यम् । वाक् गीः, वाचो ह गिर इत्याचक्षते शिष्टाः । तथा अन्नं थम् , अन्ने हि इदं सर्वं स्थितम् ; अतः अस्त्यन्नस्य थाक्षरस्य च सामान्यम् ॥
அனுவாதம் - பிராணனே “उत्” (உத்). உத் என்ற இந்த அக்ஷரத்தில் பிராண திருஷ்டி செய்யவேண்டும். எவ்வாறு பிராணனுக்கு உத்வம் என்று கூறப்படுகிறது - பிராணனால் அல்லவா எழுகிறது. எல்லா பிராணன் அற்றவைகள் பராபவம் (தோல்வி) காணப்படுகிறது. ஆகையால் உத்திற்கும், பிராணனுக்கும் சமானத்தன்மைக் காணப்படுகிறது. “वाग्गीः” (வாகீ: = வாக் - சொல்) வாக்கே சொற்கள் என்று சிஷ்ட்டர்கள் கூறுகின்றனர். அவ்வாறே அன்னம் “थम्” (த்தம்). அன்னத்தில் இவை எல்லாம் நிலைபெற்றிருக்கின்றன. ஆகையால் இந்த அன்னத்திற்கும் “थ” (த்தா) அக்ஷரத்திற்கும் சமானத்தன்மை உள்ளது.
त्रयाणां श्रुत्युक्तानि सामान्यानि ; तानि तेनानुरूपेण शेषेष्वपि द्रष्टव्यानि —
அனுவாதம் - அ.கை - இந்த மூன்றின் சமானத்தன்மை சுருதியினால் கூறப்பட்டது. அதை அனுசரித்து மற்ற விடுபட்ட ஸ்தானங்களிலும் அறிந்துகொள்ள வேண்டும் -
द्यौरेवोदन्तरिक्षं गीः पृथिवी थमादित्य एवोद्वायुर्गीरग्निस्थं सामवेद एवोद्यजुर्वेदो गीर्‌ऋग्वेदस्थं दुग्धेऽस्मै वाग्दोहं यो वाचो दोहोऽन्नवानन्नादो भवति य एतान्येवं विद्वानुद्गीथाक्षराण्युपास्त उद्गीथ इति ॥ ७ ॥
மந்த்ரார்த்தம் - த்யுலோகம் (தேவலோகம்) “उत्” (உத்) அந்தரிக்ஷம் “गीः” (கீ:), பிருதிவீ, “थ” (த்த), ஆதித்யன் உத், (उत्) வாயு, கீ (गीः), அக்னி “थ” (த்த), சாமவேத (उत्) (உத்) யஜுர்வேதம் (गीः) (கீ:), ரிக்வேதம் “थ” (த்த) ஆகும். இந்த அக்ஷரங்களை இவ்வாறு அறிந்த வித்வான் “उद्गीथ” (உத்கீத) என்று இவ்வாறு இந்த உத்கீத அக்ஷரங்களை உபாசனை செய்பவனுக்கு வாக்கின் பலனான பாலைத் தருகிறது. ரிக்வேதம் முதலியவைகள் அவனுக்கு பாலைத் தருகிறது. அவ்வாறு அன்னமுடையவனாகின்றான். அதன் போக்தாவும் ஆகின்றான். (உண்பவனாக ஆகின்றான்.)
द्यौरेव उत् उच्चैःस्थानात् , अन्तरिक्षं गीः गिरणाल्लोकानाम् , पृथिवी थं प्राणिस्थानात् ; आदित्य एव उत् ऊर्ध्वत्वात् , वायुः गीः अग्न्यादीनां गिरणात् , अग्निः थं याज्ञीयकर्मावस्थानात् ; सामवेद एव उत् स्वर्गसंस्तुतत्वात् , यजुर्वेदो गीः यजुषां प्रत्तस्य हविषो देवतानां गिरणात् , ऋग्वेदः थम् ऋच्यध्यूढत्वात्साम्नः ।
அனுவாதம் - மேல் (உச்சி) ஸ்தானத்தில் உள்ளதால் द्यौः (த்யெள) (மேல் உலகம்) “उत्” (உத்) ஆகும். லோகங்களை சாப்பிடுவதால் அதாவது அனுபவிப்பதால் அந்தரிக்ஷம் “गीः” (கீ:). பிராணிகளுக்கு ஸ்தானமாய் இருப்பதால் பிருதிவீ “थम्” (த்தம்) எனப்படுகிறது. மேலே இருப்பதால் ஆதித்தியன் “उत्” (உத்), அக்னி முதலியவைகளை கட்டுப்படுத்துவதால் வாயு “गीः” (கீ:) எனப்படுகிறது. யாஞீய (யக்ஞ) கர்மங்களுக்கு ஆஸ்ரயமாய் இருப்பதால் அக்னி “थम्” (த்தம்) ஸ்வர்க்கத்தின் காரணமாய் சாமவேதம் “उत्” (உத்). யஜுர்வேதம் “गीः” (கீ:) ஏன் எனில் யஜுர் வேதிகைகளில் அளிக்கப்படும் ஹவிஸை தேவதைகள் பக்ஷணம் செய்வதால். ரிக்கில் சாமம் நிலைபெற்றுள்ளதால் (அதிஷ்டிதமானதால்) (ऋग्वेद) ரிக்வேதம் “थ” (த்த) ஆகும்.
उद्गीथाक्षरोपासनफलमधुनोच्यते — दुग्धे दोग्धि अस्मै साधकाय ; का सा ? वाक् ; कम् ? दोहम् ; कोऽसौ दोह इति, आह — यो वाचो दोहः, ऋग्वेदादिशब्दसाध्यं फलमित्यभिप्रायः, तत् वाचो दोहः तं स्वयमेव वाक् दोग्धि आत्मानमेव दोग्धि । किञ्च अन्नवान् प्रभूतान्नः अदश्च दीप्ताग्निर्भवति, य एतानि यथोक्तानि एवं यथोक्तगुणानि उद्गीथाक्षराणि विद्वान्सन् उपास्ते उद्गीथ इति ॥
அனுவாதம் - உத்கீதாக்ஷர உபாசனையின் பலன் இப்பொழுது கூறப்படுகிறது. அந்த சாதகனுக்கு அளிக்கிறது. அளிப்பது யார்? வாக். யாருக்கு அளிக்கிறது? அளிப்பவனுக்கு. அந்த அளித்தல் (दोह) என்பது எது? இதற்குக் கூறப்படுகிறது - வாக்கின் அளித்தலாகும். அபிப்பிராயம் என்னவெனில் எந்த ரிக் முதலிய சப்தங்களின் சாத்ய பலன் எதுவோ அது வாக்கின் அளித்தலாகும். இதை வாக் தானாகவே தருகிறது. தன்னையே அளிக்கிறது. அது அன்னம் இல்லாததாய் இல்லை. மிகுந்த அன்னமுடையதாயும் அன்னத்தைப் புசிப்பதாயும் ஜொலிக்கின்ற அக்னியாக ஆகின்றது. இதை முன்பு கூறப்பட்டவாறு உத்கீத அக்ஷரங்களை, மேலே கூறப்பட்ட குணங்களுடன் கூடியதாய் அறிந்த வித்வான் “उद्गीथ” (உத்கீத) ரூபத்தால் உபாசிக்கின்றான்.
अथ खल्वाशीःसमृद्धिरुपसरणानीत्युपासीत येन साम्ना स्तोष्यन्स्यात्तत्सामोपधावेत् ॥ ८ ॥
மந்த்ரார்த்தம் - இப்பொழுது ஆசைகளின் (காமனைகளின்) நிறைவு (समृद्धि) (வர்ணனை செய்யப்படுகிறது) தியானம் செய்ய வேண்டியவற்றை இவ்வாறு உபாசனை செய் - எந்த சாமத்தை ஸ்துதி செய்து உத்காதாவாகின்றானோ அந்த சாமத்தை சிந்தனை செய்.
अथ खलु इदानीम् , आशीःसमृद्धिः आशिषः कामस्य समृद्धिः यथा भवेत् तदुच्यत इति वाक्यशेषः, उपसरणानि उपसर्तव्यान्युपगन्तव्यानि ध्येयानीत्यर्थः ; कथम् ? इत्युपासीत एवमुपासीत ; तद्यथा — येन साम्ना येन सामविशेषेण स्तोष्यन् स्तुतिं करिष्यन् स्यात् भवेदुद्गाता तत्साम उपधावेत् उपसरेत् चिन्तयेदुत्पत्त्यादिभिः ॥
அனுவாதம் - இதற்குப்பின் இப்பொழுது காமனைகளின் சம்ருத்தி (பூர்த்தி) எவ்வாறு காமனைகள் பூர்த்தியாகும் என்பது கூறப்படுகிறது. இவ்வாறு இந்த வாக்கியத்தை முடிக்கவேண்டும். உபசரணம் - உபசர்த்தவ்யம், உபகந்தவ்யம் என்பது த்யேயம் (தியானிக்க வேண்டியது) ஆகும். அதாவது இவைகளை எவ்வாறு உபாசிக்க வேண்டும்? இவ்வாறு உபாசிக்க வேண்டும் - அது எவ்வாறு - எந்த சாமத்தால் அதாவது எந்த சாம விசேஷத்தால் ஸ்துதி செய்து உத்காதா ஆகமுடியுமோ அந்த சாமத்தை அதன் உத்பத்தி முதலியவை கிரமமாக உபதாவனம், உபசரணம் அதாவது சிந்தனை செய்யவேண்டும்.
यस्यामृचि तामृचं यदार्षेयं तमृषिं यां देवतामभिष्टोष्यन्स्यात्तां देवतामुपधावेत् ॥ ९ ॥
மந்த்ரார்த்தம் - (அந்த சாமம்) எந்த ரிக்கில் (பிரதிஷ்டையாகி இருக்கிறதோ) அந்த ரிக்கின் எந்த ரிஷியோ அந்த ரிஷியை அவ்வாறே எந்த தேவதையின் ஸ்துதியை செய்கிறானோ அந்த தேவதையையும் சிந்தனம் செய்யவேண்டும்.
यस्यामृचि तत्साम तां च ऋचम् उपधावेत् देवतादिभिः ; यदार्षेयं साम तं च ऋषिम् ; यां देवतामभिष्टोष्यन्स्यात् तां देवतामुपधावेत् ॥
அனுவாதம் - அந்த சாமம் எந்த ரிக்கில் அதிஷ்டிதமாகி இருக்கிறதோ அந்த ரிக்கால் அதன் தேவதையுடன் சிந்தனை செய்யவேண்டும். அவ்வாறே எந்த சாமம் எந்த ரிஷியினதோ அந்த ரிஷியையும், எந்த தேவதையை ஸ்துதி செய்ய வேண்டுமோ அந்த தேவதையையும் சிந்தனை செய்ய வேண்டும்.
येन च्छन्दसा स्तोष्यन्स्यात्तच्छन्द उपधावेद्येन स्तोमेन स्तोष्यमाणः स्यात्तं स्तोममुपधावेत् ॥ १० ॥
மந்த்ரார்த்தம் - எந்த சந்தஸ் மூலமாக ஸ்துதி செய்கிறதோ அந்த சந்தஸை சிந்தனை செய். அவ்வாறே எந்த ஸ்தோமத்தால் ஸ்துதி செய்பவனாக ஆகிறதோ அந்த ஸ்தோமத்தை சிந்தனை செய்யவேண்டும்.
येन च्छन्दसा गायत्र्यादिना स्तोष्यन्स्यात् तच्छन्द उपधावेत् ; येन स्तोमेन स्तोष्यमाणः स्यात् , स्तोमाङ्गफलस्य कर्तृगामित्वादात्मनेपदं स्तोष्यमाण इति, तं स्तोममुपधावेत् ॥
அனுவாதம் - அது எந்த காயத்திரி முதலிய சந்தஸ்ஸால் ஸ்துதி செய்யப்படுவதாகிறதோ அந்த சந்தஸை சிந்திக்க வேண்டும். அவ்வாறே எந்த ஸ்தோமத்தால் ஸ்துதி செய்யப்படுவதாகிறதோ அந்த ஸ்தோமத்தை சிந்தனை செய்யவேண்டும். ஸ்தோம கர்மத்தின் அங்க பூதபலம் கர்த்தாவினால் அடையப்படுவதால் இங்கு “स्तोष्यमाणः” (ஸ்தோஷ்யமாண:) என்ற பதத்தில் ஆத்மனே பதம் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
यां दिशमभिष्टोष्यन्स्यात्तां दिशमुपधावेत् ॥ ११ ॥
மந்த்ரார்த்தம் - எந்த திசையை ஸ்துதி செய்யப்பட போகிறதோ (இசைக்கப்படப் போகிறதோ) அந்த திசையை சிந்திக்க வேண்டும்.
यां दिशमभिष्टोष्यन्स्यात् तां दिशमुपधावेत् अधिष्ठात्रादिभिः ॥
அனுவாதம் - (அந்த சாமம்) எந்த திசையில் ஸ்துதி செய்ய வேண்டியதாய் உள்ளதோ அந்த திசையின் அதிஷ்டித தேவதை முதலியவைகளுடன் சிந்தனை செய்யவேண்டும்.
आत्मानमन्तत उपसृत्य स्तुवीत कामं ध्यायन्नप्रमत्तोऽभ्याशो ह यदस्मै स कामः समृध्येत यत्कामः स्तुवीतेति यत्कामः स्तुवीतेति ॥ १२ ॥
மந்த்ரார்த்தம் - கடைசியில் தன்னுடைய ஸ்வரூபத்தை சிந்திக்க வேண்டும். தன்னுடைய காமனைகளை சிந்திக்க வேண்டும். (தளராமல்) சோம்பல் அற்று ஸ்துதி செய்யவேண்டும். எந்த பலத்தின் இச்சை உடையவனாகி அந்த ஸ்துதியை செய்யவேண்டும். அந்த சமயத்தில் அந்த பலம் பூர்த்தியாக அடையப்படுகிறது.
आत्मानम् उद्गाता स्वं रूपं गोत्रनामादिभिः — सामादीन् क्रमेण स्वं च आत्मानम् — अन्ततः अन्ते उपसृत्य स्तुवीत, कामं ध्यायन् अप्रमत्तः स्वरोष्मव्यञ्जनादिभ्यः प्रमादमकुर्वन् । ततः अभ्याशः क्षिप्रमेव ह यत् यत्र अस्मै एवंविदे स कामः समृध्येत समृद्धिं गच्छेत् । कोऽसौ ? यत्कामः यः कामः अस्य सोऽयं यत्कामः सन् स्तुवीतेति । द्विरुक्तिरादरार्था ॥
அனுவாதம் - உத்காதா கோத்திரம் நாமங்களுடன் கூடிய தன் ரூபத்தை சிந்தனை செய்துகொண்டே அதாவது சாமம் முதலிய கிரமத்தால் கடைசியில் தன்னை ஸ்மரித்துக் கொண்டு ஸ்துதிக்க வேண்டும். சலிப்பு இல்லாமல் காமத்தை தியானம் செய்துகொண்டு அதாவது ஸ்வர, ஊஷ்ம, வியஞ்ஞனம் முதலிய வர்ணங்களை (எழுத்துக்களை) மாற்றாமல் (பிரமாதமற்று) ஸ்துதிக்க வேண்டும். அதனால் இவ்வாறு அறிந்த அவனுடைய காமனைகள் வெகு சீக்கிரமாகவே சமிருத்தி அதாவது பலன் உடையதாகும். அந்த உபாசகன் எந்த காமனையினால் ஸ்துதி செய்கின்றான். இங்கு “यत्कामः स्तुवीत” (யத்காம: ஸ்துவீத) என்பது இரண்டு முறை கூறியது அதனை திடப்படுத்துவதற்காக. (ஆதரவுக்காக).
इति तृतीयखण्डभाष्यम् ॥
ओमित्येतदक्षरमुद्गीथमुपासीतोमिति ह्युद्गायति तस्योपव्याख्यानम् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - “ஓம்” என்ற இந்த அக்ஷரம் உத்கீதம் என்று இவ்வாறு உபாசனை செய்யவேண்டும். “ஓம்” என்று உத்கானம் செய்கின்றான். இந்த (உத்கீத உபாசனை வியாக்கியானம் செய்யப்படுகிறது.
ओमित्येतत् इत्यादिप्रकृतस्याक्षरस्य पुनरुपादानम् उद्गीथाक्षराद्युपासनान्तरितत्वादन्यत्र प्रसङ्गो मा भूदित्येवमर्थम् ; प्रकृतस्यैवाक्षरस्यामृताभयगुणविशिष्टस्योपासनं विधातव्यमित्यारम्भः । ओमित्यादि व्याख्यातम् ॥
அனுவாதம் - “ओमित्येतत्” (ஒமித்யேதத்) முதலியவை முன்பு கூறப்பட்ட அக்ஷரத்தை மறுபடியும் கிரஹித்துக்கொண்டு உத்கீத அக்ஷரம் முதலிய உபாசனைகளைக் காட்டிலும் வேறானதாக அல்லாததால் வேறுவிதமாக (அதாவது வேறு இடத்தில்) ஆகிவிடாது. கூறப்பட்ட அம்ருத அபய குணமுடைய அக்ஷரத்தின் உபாசனையையே விதிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்படுகிறது. “ஓம்” என்பது முதலியவை முன்பே வியாக்கியானம் செய்யப்பட்டது.
देवा वै मृत्योर्बिभ्यतस्त्रयीं विद्यां प्राविशꣳ स्ते छन्दोभिरच्छादयन्यदेभिरच्छादयꣳ स्तच्छन्दसां छन्दस्त्वम् ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - மிருத்யுவினால் பயம் அடைந்தவர்களான தேவர்கள் மூன்று வித்யாவில் (மூன்று வேதங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களில்) பிரவேசித்தார்கள். அவர்கள் தங்களை சந்தஸ்களால் மறைத்துக்கொண்டார்கள். தேவதைகள் எதன் மூலமாய் தங்களை மறைத்துக்கொண்டார்களோ அந்தச் சந்தத்திற்கு சந்தத்துவமாகும். (அதாவது தேவதைகளை மறைப்பதின் காரணமாக மந்திரங்களின் நாமம் சந்தஸ் என்று ஆயிற்று).
देवा वै मृत्योः मारकात् बिभ्यतः किं कृतवन्त इति, उच्यते — त्रयीं विद्यां त्रयीविहितं कर्म प्राविशन् प्रविष्टवन्तः, वैदिकं कर्म प्रारब्धवन्त इत्यर्थः, तत् मृत्योस्त्राणं मन्यमानाः । किञ्च, ते कर्मण्यविनियुक्तैः छन्दोभिः मन्त्रैः जपहोमादि कुर्वन्तः आत्मानं कर्मान्तरेष्वच्छादयन् छादितवन्तः । यत् यस्मात् एभिः मन्त्रैः अच्छादयन् , तत् तस्मात् छन्दसां मन्त्राणां छादनात् छन्दस्त्वं प्रसिद्धमेव ॥
அனுவாதம் - தேவர்கள் மிருத்யுவினால் மரணம் அடைவோம் என்று பயந்து என்ன செய்தார்கள்? அதற்குக் கூறப்படுகிறது - “त्रयीं विद्यां” (த்ரயீம் வித்யா) மூன்று வேதங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களில் பிரவேசித்து வைதிக கர்மத்தை அந்த மிருத்யுவிலிருந்து மீழ்வதற்காக செய்ய ஆரம்பித்தார். மேலும் அவர்கள் கர்மத்தில் குறிப்பிடப்பட்ட சந்தஸ்களான மந்திரங்களால் ஜபம், ஹோமம் முதலியவைகளை செய்து தங்களை கர்மங்களின் நடுவில் மறைத்துக்கொண்டார்கள். எதனால் அவர்கள் தங்களை இந்த மந்திரங்களின் மூலமாய் மறைத்துக்கொண்டார்களோ அதனால் மறைக்கப்பட்டதால் சந்தஸ்கள் அதாவது மந்திரங்களுக்கு சந்தஸ் என்பது பிரசித்தமாயிற்று.
तानु तत्र मृत्युर्यथा मत्स्यमुदके परिपश्येदेवं पर्यपश्यदृचि साम्नि यजुषि । ते नु विदित्वोर्ध्वा ऋचः साम्नो यजुषः स्वरमेव प्राविशन् ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - எவ்வாறு ஜலத்தில் மீன்கள் காணப்படுகிறதோ அவ்வாறு ரிக், சாம, யஜுர் சம்பந்தமான கர்மங்களில் ஈடுபட்ட அந்த தேவர்களை மிருத்யுவானது பார்த்துவிட்டது. இதை அறிந்தவுடன் அந்த தேவர்கள் ரிக், சாம, மேலும் யஜீஸ் சம்பந்தமான கர்மங்களில் இருந்து நிவிர்த்தியாகி (விடுபட்டு) ஸ்வரத்தில் பிரவேசித்தார்கள்.
तान् तत्र देवान्कर्मपरान् मृत्युः यथा लोके मत्स्यघातको मत्स्यमुदके नातिगम्भीरे परिपश्येत् बडिशोदकस्रावोपायसाध्यं मन्यमानः, एवं पर्यपश्यत् दृष्टवान् ; मृत्युः कर्मक्षयोपायेन साध्यान्देवान्मेने इत्यर्थः । क्वासौ देवान्ददर्शेति, उच्यते — ऋचि साम्नि यजुषि, ऋग्यजुःसामसम्बन्धिकर्मणीत्यर्थः । ते नु देवाः वैदिकेन कर्मणा संस्कृताः शुद्धात्मानः सन्तः मृत्योश्चिकीर्षितं विदितवन्तः ; विदित्वा च ते ऊर्ध्वाः व्यावृत्ताः कर्मभ्यः ऋचः साम्नः यजुषः ऋग्यजुःसामसम्बद्धात्कर्मणः अभ्युत्थायेत्यर्थः । तेन कर्मणा मृत्युभयापगमं प्रति निराशाः तदपास्य अमृताभयगुणमक्षरं स्वरं स्वरशब्दितं प्राविशन्नेव प्रविष्टवन्तः, ओङ्कारोपासनपराः संवृत्ताः ; एव - शब्दः अवधारणार्थः सन् समुच्चयप्रतिषेधार्थः ; तदुपासनपराः संवृत्ता इत्यर्थः ॥
அனுவாதம் - எவ்வாறு உலகில் மீன் பிடிப்பவன் மீன்களை அதிகம் ஆழமில்லாத ஜலத்தில் தூண்டிலினாலோ, தண்ணீரை இறைத்தோ பிடிப்பதற்கான சாதனம் என்று நினைத்து பார்க்கின்றானோ அவ்வாறே மிருத்யு கர்மத்தை க்ஷயம் செய்யும் உபாயத்தால் அதாவது சாதனத்தால் தேவர்களை தன் அதீனமாக்குவதற்கு முடியும் என்று பார்த்தார். அவர் எங்கு தேவதைகளைப் பார்த்தார்? கூறப்படுகிறது - ரிக், சாமம், யஜுர் இவைகளில். அதாவது ரிக், யஜுர், சாம சம்பந்தமான கர்மங்களில் என்பது பொருள். ஆனால் அந்த தேவர்கள் வைதிக கர்மங்களால் நல்ல பண்படுத்தப்பட்ட சுத்த ஆத்மாவாக இருப்பதால் அந்த மிருத்யு என்ன செய்ய விரும்புகின்றான் என்று அறிந்தார்கள். அதை அறிந்து அவர்கள் ரிக், யஜுர், சாமம் அதாவது ரிக், யஜுர் சாமங்களுடன் சம்பந்தப்பட்ட கர்மங்களில் இருந்து நிவிர்த்தியாகி அதற்குமேல் அடையவேண்டும் என்பதாகும். அந்த கர்மங்களால் மிருத்யு பயத்தை நீக்குவதற்கான காரணத்தில் நிராசை ஏற்பட்டு அதைவிட்டு அம்ருத அபய குணங்களுடன் கூடிய அக்ஷரம் ஆகிய ஸ்வரத்தில் அதாவது ஸ்வரம் எனப்படும் அக்ஷரத்தில் பிரவேசித்து அதாவது ஓம்கார உபாசனையில் அதன் மயமாயிற்று (தத்பரமாயிற்று) இங்கு ஏவ (एव) சப்தம் அவதாரணம் செய்வதற்காக - ஆகி சமுச்சயத்தை நீக்குவதற்காக. அவர்கள் (தேவர்கள்) அந்த உபாசனா பரமானார்கள் என்பது பொருள்.
कथं पुनः स्वरशब्दवाच्यत्वमक्षरस्येति, उच्यते —
அனுவாதம் - அ.-கை- - மேலும் எவ்வாறு அக்ஷரத்திற்கு ஸ்வர சப்த வாச்சியத்துவம்? என்பதற்குக் கூறப்படுகிறது
यदा वा ऋचमाप्नोत्योमित्येवातिस्वरत्येवꣳ सामैवं यजुरेष उ स्वरो यदेतदक्षरमेतदमृतमभयं तत्प्रविश्य देवा अमृता अभया अभवन् ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - எப்பொழுது (உபாசகன் அத்யயனம் மூலமாய்) ரிக்கை அடைகிறானோ அப்பொழுது அவன் ओं (ஓம்) என்று கூறிக்கொண்டு மிகுந்த ஆதரவுடன் உச்சாரணம் செய்கின்றான். இவ்வாறே சாமம் யஜுஸ்களையும் அடைகின்றான். இந்த எந்த அக்ஷரமோ அது மற்ற ஸ்வரங்களுக்கு சமான ஸ்வரமாகும். இது அம்ருதம், அபய ரூபமாகும். இதில் பிரவேசித்து தேவகணங்கள் அம்ருதத்தையும் அபயத்தையும் அடைந்தன.
यदा वै ऋचम् आप्नोति ओमित्येवातिस्वरति एवं साम एवं यजुः ; एष उ स्वरः ; कोऽसौ ? यदेतदक्षरम् एतदमृतम् अभयम् , तत्प्रविश्य यथागुणमेव अमृता अभयाश्च अभवन् देवाः ॥
அனுவாதம் - எப்பொழுது (உபாசகன்) ரிக்கை அடைகிறானோ அப்பொழுது அவன் ஓம் என்று கூறி மிகுந்த உற்சாகத்துடன் உச்சாரணம் செய்கின்றான், அவ்வாறே சாமத்தையும், யஜுஸ்ஸையும் ஓம் உச்சாரணம் செய்கின்றான். அது ஸ்வரம் ஆகும். அந்த ஸ்வரம் எது? எது இந்த அக்ஷரம் இந்த அம்ருதம், அபயமாகும். அதில் பிரவேசித்து அதன் குணத்திற்கு சமானமாக தேவர்களும் அம்ருதமாயும், அபயமாயும் ஆனார்கள்.
स य एतदेवं विद्वानक्षरं प्रणौत्येतदेवाक्षरꣳ स्वरममृतमभयं प्रविशति तत्प्रविश्य यदमृता देवास्तदमृतो भवति ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இதை இவ்வாறு அறிந்து இந்த அக்ஷரத்தை உபாசனை செய்கின்றானோ அவன் இந்த அம்ருத அபயரூப அக்ஷரத்தில் பிரவேசிக்கின்றான். அவ்வாறே இதில் பிரவேசித்து இவ்வாறு உபாசித்த தேவகணங்கள் அம்ருதம் ஆனது போல் (அந்த உபாசகனும்) அம்ருதனாகின்றான்.
स यः अन्योऽपि देववदेव एतदक्षरम् एवम् अमृताभयगुणं विद्वान् प्रणौति स्तौति ; उपासनमेवात्र स्तुतिरभिप्रेता, स तथैव एतदेवाक्षरं स्वरममृतमभयं प्रविशति ।
அனுவாதம் - எவன் ஒருவன் தேவர்களைப் போலவே இந்த அக்ஷரத்தை இவ்வாறு அம்ருதம் அபயகுணம் கூடியதை அறிந்த வித்வான் ஸ்துதிக்கின்றான். அதாவது உபாசனை செய்கின்றான். அவ்வாறே ஸ்துதி உபாசனா பரமாத்திரமே என்பது அபிப்பிராயம் - அவன் அவ்வாறே இந்த ஸ்வரம், அம்ருதம், அபய ரூபமான அக்ஷரத்தில் பிரவேசிக்கின்றான்.
तत्प्रविश्य च — राजकुलं प्रविष्टानामिव राज्ञोऽन्तरङ्गबहिरङ्गतावत् न परस्य ब्रह्मणोऽन्तरङ्गबहिरङ्गताविशेषः — किं तर्हि ? यदमृता देवाः येनामृतत्वेन यदमृता अभूवन् , तेनैवामृतत्वेन विशिष्टः तदमृतो भवति ; न न्यूनता नाप्यधिकता अमृतत्वे इत्यर्थः ॥
அனுவாதம் - அதில் பிரவேசமானபின் எவ்வாறு ராஜ குலத்தில் பிரவேசிப்பவன் ராஜாவிற்கு அந்தரங்கம் என்றும், பஹிரங்கம் என்று காண்பதுபோல் பரபிரஹ்மத்தினிடத்தில் பஹிரங்கம் அந்தரங்கம் என்ற விசேஷம் (பேதம்) கிடையாது. ஆனால் என்ன இருக்கிறது. எந்த அம்ருதத்தால் தேவர்கள் அம்ருதத்தை அடைந்தார்களோ அவ்வாறே அந்த உபாசகன் அம்ருதத்துடன் கூடியவனாகி அவர்களுக்கு சமான அம்ருதத்தை அடைகின்றான். இந்த அம்ருதத்தில் கொஞ்சமோ அதிகமோ என்பது இல்லை என்பது பொருள்.
इति चतुर्थखण्डभाष्यम् ॥
प्राणादित्यदृष्टिविशिष्टस्योद्गीथस्योपासनमुक्तमेवानूद्य प्रणवोद्गीथयोरेकत्वं कृत्वा तस्मिन्प्राणरश्मिभेदगुणविशिष्टदृष्ट्या अक्षरस्योपासनमनेकपुत्रफलमिदानीं वक्तव्यमित्यारभ्यते —
அனுவாதம் - பிராணன் ஆதித்திய திருஷ்டியுடன் கூடிய உத்கீதத்தை மறுபடியும் எடுத்துக்கூறி பிரணவம் உத்கீதம் இவைகளை ஒன்றாக்கி (ஏகரூபமாக) ஆக்கி இப்பொழுது கூறப்படும் பிராணன், கிரணங்களின் பேத ரூப குணங்களுடன் கூடிய திருஷ்டியினால் அக்ஷரத்தின் (உத்கீத அவயவரூபமான ஓம்காரத்தின்) அநேக புத்திரரூப பலன் உடைய உபாசனையை கூறவேண்டும் என்பதற்காக ஆரம்பமாகிறது
अथ खलु य उद्गीथः स प्रणवो यः प्रणवः स उद्गीथ इत्यसौ वा आदित्य उद्गीथ एष प्रणव ओमिति ह्येष स्वरन्नेति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - நிச்சயமாக எது உத்கீதமோ அது பிரணவம். எது பிரணவமோ அது உத்கீதம். இவ்வாறு இந்த ஆதித்தியனே உத்கீதம். அது பிரணவம். ஏன் எனில் அந்த (ஆதித்தியன்) “ओं” (ஓம்) என்று உச்சாரணம் செய்துகொண்டே செல்கிறது.
अथ खलु य उद्गीथः स प्रणवः बह्वृचानाम् , यश्च प्रणवः तेषां स एव च्छान्दोग्ये उद्गीथशब्दवाच्यः । असौ वा आदित्य उद्गीथः एष प्रणवः ; प्रणवशब्दवाच्योऽपि स एव बह्वृचानाम् नान्यः ।
அனுவாதம் - நிச்சயமாக எந்த உத்கீதமோ அது ரிக்வேதிகளின் பிரணவமாகும். அவ்வாறே எந்த பிரணவமுள்ளதோ அது சாந்தோக்ய உபநிஷத்தில் “उीथ” (உத்கீத) சப்தத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த ஆதித்தியனே உத்கீதம், அந்த உத்கீதமே பிரணவம். அதாவது ரிக் வேதிகளுக்கு அந்த பிரணவ சப்த வாச்சியமாகும். மற்றவை அல்ல.
उद्गीथ आदित्यः कथम् ? उद्गीथाख्यमक्षरम् ओमिति एतत् एषः हि यस्मात् स्वरन् उच्चारयन् , अनेकार्थत्वाद्धातूनाम् ; अथवा स्वरन् गच्छन् एति । अतः असावुद्गीथः सविता ॥
அனுவாதம் - உத்கீதம் ஆதித்தியன். எவ்வாறு? எதனால் உத்கீதம் எனப்படும் அக்ஷரம் ஓம் என்று ஸ்வரத்துடன் அதாவது உச்சாரணம் செய்துகொண்டு அல்லது தாதுக்களுக்கு அநேக அர்த்தங்கள் இருப்பதால் ஸ்வரன் என்பது செல்கின்றது அர்த்தத்திலும் வருவதால் அந்த சவிதா (ஆதித்தியன்) உத்கீதமாகும்.
एतमु एवाहमभ्यगासिषं तस्मान्मम त्वमेकोऽसीति ह कौषीतकिः पुत्रमुवाच रश्मीꣳ स्त्वं पर्यावर्तयाद्बहवो वै ते भविष्यन्तीत्यधिदैवतम् ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - நான் இந்த ஆதித்யன் ஒருவனைக் குறித்தே கானம் செய்தேன். இதனால் எனக்கு நீ ஒரு மகனாகவே இருக்கிறாய் என்று கெளஷீதகர் தன்னுடைய புத்திரனிடம் கூறினார். ஆகையால் நீ (ஆதித்தியனுடைய) கிரணங்களை (ரச்மிகளை) பேத ரூபமாக சிந்தனை செய். அதனால் உனக்கு நிச்சயமாக அநேக புத்திரர்கள் பிறப்பார்கள். இது அதிதைவத உபாசனையாகும்.
तम् एतम् उ एव अहम् अभ्यगासिषम् आभिमुख्येन गीतवानस्मि, आदित्यरश्म्यभेदं कृत्वा ध्यानं कृतवानस्मीत्यर्थः । तेन तस्मात्कारणात् मम त्वमेकोऽसि पुत्र इति ह कौषीतकिः कुषीतकस्यापत्यं कौषीतकिः पुत्रमुवाच उक्तवान् । अतः रश्मीनादित्यं च भेदेन त्वं पर्यावर्तयात् पर्यावर्तयेत्यर्थः, त्वंयोगात् । एवं बहवो वै ते तव पुत्रा भविष्यन्तीत्यधिदैवतम् ॥
அனுவாதம் - நிச்சயமாக நான் இதை ஒருமுகப்படுத்தி கானம் செய்தேன். அதாவது நான் ஆதித்யன், அதன் கிரணங்களை அபேத ரூபத்தால் தியானம் செய்தேன். இதன் காரணமாக எனக்கு ஒரே மகனாய் பிறந்தாய் என்று தன் புத்திரனிடம் கெளஷீதகி குஷீதருடைய புத்திரன் கெளஷீதகி கூறினார். ஆகையால் நீ ஆதித்தியனையும் அதன் கிரணங்களை பேத பூர்வகமாய் சிந்தனை செய், என்று கூறினார் இவ்வாறு செய்தால் உனக்கு நிறைய புத்திரர்கள் உண்டாவார்கள். இது அதிதைவத உபாசனையாகும்.
अथाध्यात्मं य एवायं मुख्यः प्राणस्तमुद्गीथमुपासीतोमिति ह्येष स्वरन्नेति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - இதற்குப்பின் அத்யாத்ம உபாசனை - அந்த எந்த முக்கிய (வாயில் உள்ள) பிராணன் உள்ளதோ அதை உத்கீத ரூபத்தால் உபாசனை செய்யவேண்டும். ஏன் எனில் அது “ஓம்” என்று இவ்வாறு (அனுக்ஞா, (अनुज्ञा) செய்தபடி) உச்சரித்தபடி செல்கிறது.
अथ अनन्तरम् अध्यात्मम् उच्यते । य एवायं मुख्यः प्राणस्तमुद्गीथमुपासीतेत्यादि पूर्ववत् । तथा ओमिति ह्येष प्राणोऽपि स्वरन्नेपि ओमिति ह्यनुज्ञां कुर्वन्निव वागादिप्रवृत्त्यर्थमेतीत्यर्थः । न हि मरणकाले मुमूर्षोः समीपस्थाः प्राणस्योङ्करणं शृण्वन्तीति । एतत्सामान्यादादित्येऽप्योङ्करणमनुज्ञामात्रं द्रष्टव्यम् ॥
அனுவாதம் - இதன் பிறகு அத்யாத்மம் கூறப்படுகிறது. எந்த இந்த முக்ய பிராணனை (வாயில் இருக்கும் பிராணன்) உத்கீத திருஷ்டியில் உபாசனை செய்யவேண்டும் என்பது இவ்வாறு முன்புபோல் என்று அறிந்துகொள்ள வேண்டும். அவ்வாறே ஓம் என்று உச்சரித்துக் கொண்டு வெளியேறுகிறது. அதாவது வாக் முதலியவைகளுக்கும் பிரவிர்த்திப்பதற்கு அனுக்ஞை (அனுமதி) அளிப்பதுபோல் ஓம் என்று உச்சரிக்கிறது. மரண காலத்தில் மரிக்கும் புருஷன் சமீபத்தில் இருப்பவர்கள் பிராணனுடைய ஓம்காரத்தின் உச்சரிப்பை கேட்பது இல்லை. இது சமானமாக இருப்பதால் ஆதித்தியன் செய்யும் ஓம்கார உச்சாரணம் அனுக்ஞா மாத்திரமே என்று அறிந்துகொள்ள வேண்டும்.
एतमु एवाहमभ्यगासिषं तस्मान्मम त्वमेकोऽसीति ह कौषीतकिः पुत्रमुवाच प्राणाꣳ स्त्वं भूमानमभिगायताद्बहवो वै मे भविष्यन्तीति ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - நான் ஒருமுகப்படுத்தி இதன் (முக்கிய பிராணனை) மாத்திரம் கானம் செய்தேன் அதனால் எனக்கு ஒரே மகனாக நீ பிறந்தாய் என்று இவ்வாறு கெளஷீதகர் தன்னுடைய புத்திரனிடம் கூறி ஆகையால் நீ “எனக்கு அநேக புத்திரர்கள் வேண்டும்” என்ற கோரிக்கையுடன் பேத குணமுடைய பிராணன்களை ஒருமுகப்படுத்தி கானம் செய் என்றார்.
एतमु एवाहमभ्यगासिषमित्यादि पूर्ववदेव । अतो वागादीन्मुख्यं च प्राणं भेदगुणविशिष्टमुद्गीथं पश्यन् भूमानं मनसा अभिगायतात् , पूर्ववदावर्तयेत्यर्थः ; बहवो वै मे मम पुत्रा भविष्यन्तीत्येवमभिप्रायः सन्नित्यर्थः ।
அனுவாதம் - “एवमु एवाहमभ्यागासिषम्” முதலியவைகளின் அர்த்தம் முன்புபோல். ஆகையால் வாக் முதலியவைகளையும், முக்கிய பிராணனையும் பேத குணத்துடன் கூடிய உத்கீதத்தை அநேக ரூபமாய் பார்த்து மனதால் அபிகானம் செய்யவேண்டும். அதாவது முன்புபோல் ஆவர்த்தி செய்யவேண்டும். அதாவது எனக்கு அநேக புத்திரர்கள் உண்டாகும் என்ற அபிப்பிராயத்துடன் உபாசனை செய்யவேண்டும் என்பது பொருள்.
प्राणादित्यैकत्वोद्गीथ दृष्टेः एकपुत्रत्वफलदोषेणापोदितत्वात् रश्मिप्राणभेददृष्टेः कर्तव्यता चोद्यते अस्मिन्खण्डे बहुपुत्रफलत्वार्थम् ॥
அனுவாதம் - பிராணன் ஆதித்தியன் ஏகத்துவ உத்கீத திருஷ்டியினால் ஒரே புத்திர பலனுடைய தோஷம் உடையதை நிந்தை செய்து கிரணங்கள், பிராணபேத திருஷ்டியுடன் உபாசனையை அநேக புத்திர பலத்திற்காக செய்யவேண்டும் என்பதை இந்த காண்டத்தில் பிரதிபாதனம் செய்யப்பட்டது.
अथ खलु य उद्गीथः स प्रणवो यः प्रणवः स उद्गीथ इति होतृषदनाद्धैवापि दुरुद्गीतमनुसमाहरतीत्यनुसमाहरतीति ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - நிச்சயமாக உத்கீதமே இந்த பிரணவம். இந்த பிரணவமே உத்கீதம் என்று இவ்வாறு (உபாசனை செய்துகொண்டு) உத்காதா ஹோத்ரு கர்மத்தில் செய்யப்படும் உத்கான சம்பந்தப்பட்ட தோஷத்தை சம்சோதனம் செய்து மன்னிக்கப்படுகிறது.
अथ खलु य उद्गीथ इत्यादि प्रणवोद्गीथैकत्वदर्शनमुक्तम् , तस्यैतत्फलमुच्यते — होतृषदनात् होता यत्रस्थः शंसति तत्स्थानं होतृषदनम् , हौत्रात्कर्मणः सम्यक्प्रयुक्तादित्यर्थः । न हि देशमात्रात्फलमाहर्तुं शक्यम् । किं तत् ? ह एवापि दुरुद्गीतं दुष्टमुद्गीतम् उद्गानं कृतम् उद्गात्रा स्वकर्मणि क्षतं कृतमित्यर्थः ; तदनुसमाहरति अनुसन्धत्त इत्यर्थः — चिकित्सयेव धातुवैषम्यसमीकरणमिति ॥
அனுவாதம் - (அத கலு ய உத்கீத) முதலியவைகளால் பிரணவ உத்கீத ஏகத்துவ தர்சனம் கூறப்பட்டது. அதனுடைய பலன் இப்பொழுது கூறப்படுகிறது. ஹோத்ரு சதனம் என்பது எங்கு ஹோதா இருந்துகொண்டு சம்ஸன கர்மம் செய்கின்றானோ அந்த ஸ்தானம் ஹோத்ரு சதனம் அதாவது நல்லவிதமாக அனுஷ்டானம் செய்து ஹோதாவின் கர்மாவினால் தேச மாத்திரத்தால் (இடத்தின் மாத்திரத்தால்) எந்த பலனும் கிடைக்காது. என்ன ஆகும்? உத்கீத மூலமாய் தோஷத்துடன் கூடியதை உத்கானம் செய்தால் அதனால் தன்னுடைய கர்மத்தில் தோஷம் செய்யப்பட்டதாக ஆகும். அதை அந்த உத்காதா சமாஹாரம் செய்து அதாவது அதை அனுசந்தானம் செய்கிறான். இவ்வாறு சிகிச்சையின் வாயிலாய் தாதுக்களின் விஷமத்தைப் போக்கி சரி செய்கின்றான்.
इति पञ्चमखण्डभाष्यम् ॥
अथेदानीं सर्वफलसम्पत्त्यर्थम् उद्गीथस्य उपासनान्तरं विधित्स्यते —
அனுவாதம் - அதன்பின் இப்பொழுது எல்லா பலன்களையும் அடைவதற்கான உத்கீதத்தின் வேறுவிதமான உபாசனையை விதிக்கிறது
इयमेवर्गग्निः साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयत इयमेव साग्निरमस्तत्साम ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - இதுவே (பிருதிவியே) ரிக், அக்னி சாமம், அந்த இந்த (அக்னி என்னும்) சாமம் இந்த ரிக்கில் நிலைபெற்றுள்ளது. ஆகையால் ரிக்கில் நிலைபெற்றுள்ள சாமத்தை கானம் செய்கிறார்கள். இந்த பிருதிவீயே “सा” (சா) மேலும் அக்னி “सा” ஆகும். இவ்வாறு அவை இரண்டும் சேர்ந்து “साम” (சாம) ஆகிறது.
इयमेव पृथिवी ऋक् ; ऋचि पृथिविदृष्टिः कार्या । तथा अग्निः साम ; साम्नि अग्निदृष्टिः । कथं पृथिव्यग्न्योः ऋक्सामत्वमिति, उच्यते — तदेतत् अग्न्याख्यं साम एतस्यां पृथिव्याम् ऋचि अध्यूढम् अधिगतम् उपरिभावेन स्थितमित्यर्थः ; ऋचीव साम ; तस्मात् अत एव कारणात् ऋच्यध्यूढमेव साम गीयते इदानीमपि सामगैः ।
அனுவாதம் - இந்த பிருதிவியே ரிக் ரிக்கில் பிருதிவீ திருஷ்டியை செய்யவேண்டும். அவ்வாறே அக்னி சாமம், சாமத்தில் அக்னி திருஷ்டியை செய்யவேண்டும். எவ்வாறு பிருதிவீ அக்னிக்கு ரிக் சாமத்துவம் எவ்வாறு? அது கூறப்படுகிறது - எந்த அந்த அக்னி எனப்படும் சாமம் உள்ளதோ அது இந்த பிருதிவீ எனப்படும் ரிக்கில் நிலைத்திருக்கிறது. அதாவது “अधिगत” (அதிகத) என்பது மேலே இருக்கும் பாவத்தில் இருக்கிறது என்பது பொருள். ரிக்கில் இருப்பது போல் சாமமும், ஆகையால் அதன் காரணமாக ரிக்கில் அதிரூடமான சாமத்தை இப்பொழுதும் சாமகானம் செய்பவர்கள் சாமத்தைக் கானம் செய்கின்றனர்.
यथा च ऋक्सामनी नात्यन्तं भिन्ने अन्योन्यम् , तथैतौ पृथिव्यग्नी ; कथम् ? इयमेव पृथिवी सा सामनामार्धशब्दवाच्या ; इतरार्धशब्दवाच्यः अग्निः अमः ; तत् एतत्पृथिव्यग्निद्वयं सामैकशब्दाभिधेयत्वमापन्नं साम ; तस्मान्नान्योन्यं भिन्नं पृथिव्यग्निद्वयं नित्यसंश्लिष्टमृक्सामनी इव । तस्माच्च पृथिव्यग्न्योर्‌ऋक्सामत्वमित्यर्थः । सामाक्षरयोः पृथिव्यग्निदृष्टिविधानार्थमियमेव सा अग्निरम इति केचित् ॥
அனுவாதம் - எவ்வாறு ரிக்கும் சாமமும் (அத்யந்தம்) முற்றிலும் பின்னம் இல்லையோ அவ்வாறே அந்த பிருதிவியும் அக்னியும் பின்னமல்ல. எவ்வாறு? இந்த பிருதிவீ “सा” (சா) “साम” (சாம) நாமத்தின் பாதி சப்தத்தின் வாச்சியமாகும். அவ்வாறே அதன் மற்ற நாமத்தின் பாதி “अम” (அம) என்பதின் வாச்சியம் அக்னி. இவ்வாறு “साम” (சாம) என்று ஒரே சப்தத்தின் வாச்சியத்தை அடைகிறது. அதனால் இந்த பிருதிவீ, அக்னி இரண்டும் சாமம் என்று கூறப்படுகிறது. ஆகையால் ரிக்கும் சாமமும் எப்பொழுது சமானமாக சேர்ந்து இருப்பதால் அந்த பிருதிவியும் அக்னியும் ஒன்று மற்றொன்றுடன் வேறு அல்ல. ஆகையால் பிருதிவீ அக்னிகளுக்கு ரிக் மற்றும் சாமத்துவம் என்பது பொருள். சாம அக்ஷரங்களுக்கு பிருத்வி அக்னி திருஷ்டி விதானம் செய்வதற்காக “इयमेव सा अग्निरमः” (இயமேவ சா அக்னிரம:) என்று வேறு மதத்தவர் இவ்வாறு கூறுகின்றனர்.
अन्तरिक्षमेवर्ग्वायुः साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयतेऽन्तरिक्षमेव सा वायुरमस्तत्साम ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அந்தரிக்ஷமே ரிக் மேலும் வாயு சாமம். அந்த இந்த சாமம் இந்த ரிக்கில் அதிஷ்டமாகி இருக்கிறது. ஆகையால் ரிக்கில் அதிஷ்டித்தமான சாமத்தை கானம் செய்யப்படுகிறது. அந்தரிக்ஷமே “सा” (சா) என்றும் வாயு “अम” (அம) ஆகும். இவ்வாறு இவை இரண்டும் (சேர்ந்து) “साम” (சாமம்) ஆகும்.
द्यौरेवर्गादित्यः साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयते द्यौरेव सादित्योऽमस्तत्साम ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - த்யோ (மேல் உலகம்) ரிக், ஆதித்யன் சாமம். அந்த எது (ஆதித்திய ரூபமோ) சாம இந்த (த்யெள) ரூப ரிக்கில் அதிஷ்டித்தமாய் உள்ளது. ஆகையால் ரிக்கில் அதிஷ்டித்தமான சாமத்தை கானம் செய்கின்றனர். தியோவே “सा” (சா), ஆதித்தியன் “अम” (அம). இவ்வாறு இவை இரண்டும் சாமம் ஆகும்.
अन्तरिक्षमेव ऋक् वायुः साम इत्यादि पूर्ववत् ॥
அனுவாதம் - அந்தரிக்ஷம் ரிக். வாயு, சாம முதலிய மந்திரங்களின் அர்த்தம் முன்போல் அறிந்துகொள்ள வேண்டும்.
नक्षत्राण्येवर्क्चन्द्रमाः साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयते नक्षत्राण्येव सा चन्द्रमा अमस्तत्साम ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - நக்ஷத்திரமே ரிக், சந்திரன் சாமம், அந்த இந்த (சந்திரரூப) சாமம் இந்த (நக்ஷத்திரரூப) ரிக்கில் அதிஷ்டித்திருக்கிறது. ஆகையால் ரிக்கில் அதிஷ்டிதமான சாமத்தை கானம் செய்யப்படுகிறது. நக்ஷத்திரமே “सा” (சா) மேலும் சந்திரன் “अम” (அம) ஆகும். இவ்வாறு அவை (இரண்டும் சேர்ந்து) சாமம் ஆகும்.
नक्षत्राणामधिपतिश्चन्द्रमा अतः स साम ॥
அனுவாதம் - நக்ஷத்திரங்களின் அதிபதி சந்திரன் ஆகையால் அது சாமம்.
अथ यदेतदादित्यस्य शुक्लं भाः सैवर्गथ यन्नीलं परः कृष्णं तत्साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयते ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - அவ்வாறே எந்த அந்த ஆதித்யனின் சுக்ல (வெண்மை) ஜோதியோ அது ரிக் ஆகும். அதில் எந்த நீல நிறம் முற்றிலும் கருமை நிறமாகக் காணப்படுகிறதோ அது சாமமாகும். அந்த இந்த (நீல நிற) சாமம் இந்த (கருமை நிற ஜோதி ரூப) ரிக்கில் அதிஷ்டித்திருக்கின்றது. ஆகையால் ரிக்கில் அதிஷ்டிதமான சாமம் கானம் செய்யப்படுகிறது.
अथ यदेतदादित्यस्य शुक्लं भाः शुक्ला दीप्तिः सैव ऋक् । अथ यदादित्ये नीलं परः कृष्णं परोऽतिशयेन कार्ष्ण्यं तत्साम । तद्ध्येकान्तसमाहितदृष्टेर्दृश्यते ॥
அனுவாதம் - அவ்வாறே அந்த எந்த ஆதித்யனின் சுக்ல (வெண்மை) பிரபையோ - வெண்மையாக பிரகாசிக்கிறது இந்த ரிக். அவ்வாறே ஆதித்தியனில் எந்த நீல நிறமுள்ளதோ அது முற்றிலும் கருமையானது. அதுவே சாமம். ஆனால் அது ஒருமுகப்படுத்தியவனுக்கே அது காணப்படும்.
अथ यदेवैतदादित्यस्य शुक्लं भाः सैव साथ यन्नीलं परः कृष्णं तदमस्तत्सामाथ य एषोऽन्तरादित्ये हिरण्मयः पुरुषो दृश्यते हिरण्यश्मश्रुर्हिरण्यकेश आप्रणखात्सर्व एव सुवर्णः ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - அவ்வாறே அந்த எந்த ஆதித்தியனின் வெண்மையான பிரகாசமோ அது “सा” (சா) ஆகும். மேலும் எந்த நீல நிறமோ அதாவது முற்றிலும் கருப்போ அது “अम” (அம) ஆகும். அவை இரண்டும் சேர்ந்து “साम” (சாம) ஆகும். அவ்வாறே எது ஆதித்திய மண்டலத்தின் உள் இருக்கும் ஸ்வர்ணமய “सा” (சா) புருஷன் காணப்படுகிறான். எந்த ஸ்வர்ணத்திற்குக் சமானமான மீசையும் ஸ்வர்ணத்திற்கு ஒப்பான முடி உடையவனும் அவ்வாறே நகம் வரையிலும் எது ஸ்வர்ண மயமாய் உள்ளதோ அது “सा” (சா).
ते एवैते भासौ शुक्लकृष्णत्वे सा च अमश्च साम । अथ य एषः अन्तरादित्ये आदित्यस्यान्तः मध्ये हिरण्मयः हिरण्मय इव हिरण्मयः । न हि सुवर्णविकारत्वं देवस्य सम्भवति, ऋक्सामगेष्णत्वापहतपाप्मत्वासम्भवात् ; न हि सौवर्णेऽचेतने पाप्मादिप्राप्तिरस्ति, येन प्रतिषिध्येत, चाक्षुषे च अग्रहणात् ; अतः लुप्तोपम एव हिरण्मयशब्दः, ज्योतिर्मय इत्यर्थः । उत्तरेष्वपि समाना योजना ।
அனுவாதம் - அவை இரண்டும் சுக்லம் (வெண்மை) கிருஷ்ண (கருப்பு)மாக இருப்பதால் “सा” (சா) மற்றும் “अम” (அம:) “साम” (சாமம்) ஆகிறது. ஆகையால் எது ஆதித்தியனின் மத்தியில் ஸ்வர்ணமயம் போன்று இருப்பதால் சுவர்ணமயன் போன்று சுவர்ணமயன். ரிக் சாமங்களின் பகுதிகளாக இருப்பதால் ஹிரண்யமயத்திற்கு பாபமற்ற தன்மை இல்லாததால் ஸ்வர்ண விகாரத்துவம் தேவனுக்கு சம்பவிக்காது. அசேதனமான ஸ்வர்ணத்தில் பாபம் முதலியவைகளின் அடைவு இன்மையால் அது கிரஹிக்கப்படவில்லை. கண்களாலும் கிரஹிக்க முடியாதது. ஆகையால் இந்த ஹிரண்மய சப்தம் (लुप्तोपम) (லுப்தோமம்) அதாவது “इव” (போன்ற) என்பதாகும். ஆகையால் இங்கு ஹிரண்மயம் என்பது ஜோதிர்மயம் என்று கிரஹிக்க வேண்டும். இவ்வாறே இனி வருபவைகளிலும் இவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.
पुरुषः पुरि शयनात् पूरयति वा स्वेन आत्मना जगदिति ; दृश्यते निवृत्तचक्षुर्भिः समाहितचेतोभिर्ब्रह्मचर्यादिसाधनापेक्षैः । तेजस्विनोऽपि श्मश्रुकेशादयः कृष्णाः स्युरित्यतो विशिनष्टि — हिरण्यश्मश्रुर्हिरण्यकेश इति ; ज्योतिर्मयान्येवस्य श्मश्रूणि केशाश्चेत्यर्थः । आप्रणखात् प्रणखः नखाग्रं नखाग्रेण सह सर्वः सुवर्ण इव भारूप इत्यर्थः ॥
அனுவாதம் - புரி (சரீரத்தில்) சயனம் செய்வதால் அல்லது தன்னால் ஜகத் முழுவதும் பூரிக்கப்பட்டுள்ளதால் (நிறைந்து இருப்பதால்) புருஷன். எவருடைய கண் முதலிய இந்திரியங்கள் பாஹ்ய விஷயங்களில் இருந்து நிவிர்த்தி ஆகி இருக்கின்றதோ அந்த சமாஹித (அடங்கிய) சித்தமுடைய மேலும் பிரஹ்மச்சர்யம் முதலிய சாதனங்களுடைய புருஷனால் காணமுடியும். தேஜஸ்வியான பின்னர் மீசை முடி முதலியவை கருப்பாகிவிடுமே எனில் அதற்கு சுருதி கூறுகின்றது - அதனுடைய மீசை, முடி ஹிரண்மயமானதே என்று. ஜோதி மயமானதே அதனுடைய மீசை, முடி என்பது பொருள். இதன் தாத்பர்யம் என்ன வெனில் நகம் வரையிலும், அதாவது நக நுனியிலிருந்து எல்லாம் ஸ்வர்ணத்திற்கு சமானமான பிரகாசம் உடையது என்பது பொருள்.
तस्य यथा कप्यासं पुण्डरीकमेवमक्षिणी तस्योदिति नाम स एष सर्वेभ्यः पाप्मभ्य उदित उदेति ह वै सर्वेभ्यः पाप्मभ्यो य एवं वेद ॥ ७ ॥
மந்த்ரார்த்தம் - குரங்கின் உட்காரும் இடத்தில் உள்ளது போன்ற சிகப்பு நிறமுடைய தாமரை போன்று அதற்கு இரண்டு கண்கள். அதற்கு “उत्” (உத்) என்ற பெயர். ஏன்எனில் எல்லா பாபங்களைக் காட்டிலும் மேலே சென்றுவிட்டது. எவன் ஒருவன் இவ்வாறு அறிகிறானோ அவன் நிச்சயமாக எல்லா பாபங்களில் இருந்தும் மேலே கிழம்புகிறான், (கடக்கிறான் என்பது பொருள்).
तस्य एवं सर्वतः सुवर्णवर्णस्याप्यक्ष्णोर्विशेषः । कथम् ? तस्य यथा कपेः मर्कटस्य आसः कप्यासः ; आसेरुपवेशनार्थस्य करणे घञ् ; कपिपृष्ठान्तः येनोपविशति ; कप्यास इव पुण्डरीकम् अत्यन्ततेजस्वि एवम् देवस्य अक्षिणी ; उपमितोपमानत्वात् न हीनोपमा ।
அனுவாதம் - இவ்வாறு எங்கும் சுவர்ண வர்ணமாய் இருந்தாலும் (கண்களில்) நேத்திரங்களில் ஒரு விசேஷம் இருக்கிறது. அது எவ்வாறு? அந்த தேவனுக்கு கபியினுடைய ஆச குரங்கினுடைய முடிவான பாகம் எதனால் உட்காருகிறதோ அதுவாகும். எவ்வாறு கபி ஆசம் போன்ற சிகப்பு நிறமுடைய தாமரை போன்ற தேஜஸ் உடைய கண்கள் உடையது, இங்கு கபியாசம் என்பது குரங்கின் உட்காரும் கடைசி பாகம் உபமானமாக கூறப்பட்டது. கண்களை தாமரை போன்ற நிறமுடையது என்ற உபமானமாக வந்தது. இது உபமானத்தின் உபமானமாக உள்ளது. இழிவான உபமானம் அல்ல.
तस्य एवंगुणविशिष्टस्य गौणमिदं नाम उदिति ; कथं गौणत्वम् ? स एषः देवः सर्वेभ्यः पाप्मभ्यः पाप्मना सह तत्कार्येभ्य इत्यर्थः, ‘य आत्मापहतपाप्मा’ (छा. उ. ८ । ७ । १) इत्यादि वक्ष्यति, उदितः उत् इतः, उद्गत इत्यर्थः । अतः असौ उन्नामा । तम् एवंगुणसम्पन्नमुन्नामानं यथोक्तेन प्रकारेण यो वेद सोऽप्येवमेव उदेति उद्गच्छति सर्वेभ्यः पाप्मभ्यः — ह वै इत्यवधारणार्थौ निपातौ — उदेत्येवेत्यर्थः ॥
அனுவாதம் - இவ்வாறு குண விசேஷம் உள்ளதின் கெளணமான இதன் பெயர் “उत्” (உத்) ஆகும். எவ்வாறு கெளணத்துவம்? அந்த இந்த தேவன் எல்லா பாபங்களில் இருந்து அதாவது பாபங்களுடன் கூடிய காரியங்களைக் கடந்து மேல் செல்கிறான். அதனால் அது “उत्” (உத்) என்ற நாமம் உடையதாகிறது. “य आत्मापहतपाप्मा” (ய ஆத்மாபஹதபாப்மா) முதலியவைகளை சுருதி இனிக் கூறப்போகிறது. “उदित” (உதித) “उत्” (உத்) மேலே “इत” (இத:) இதிலிருந்து (பாபங்களில் இருந்து) கடந்து மேல் செல்கிறது என்பது பொருள். ஆகையால் அதற்கு “उत्” (உத்) என்ற பெயர். அந்த இவ்வாறு குணமுடைய “उत्” (உத்) பெயருடையதை கூறப்பட்டவாறு எவன் அறிகிறானோ அவனும் எல்லா பாபங்களையும் கடந்து (उत्) மேலே செல்கின்றான். (ह वा) (ஹ வா) இவை அவதாரண அர்த்தமுடைய நிபாதம். அதாவது மேலே எழுந்து செல்கிறது என்பது பொருள்.
तस्योद्गीथत्वं देवस्य आदित्यादीनामिव विवक्षित्वा आह —
அனுவாதம் - ஆதித்யன் முதலியவைகளுக்கு சமானமாக இந்த “उत्” (உத் எனப்படும்) தேவனுக்கும் உத்கீதத்துவம் கூறவிரும்பி சுருதி இவ்வாறு கூறுகிறது.
तस्यर्क्च साम च गेष्णौ तस्मादुद्गीथस्तस्मात्त्वेवोद्गातैतस्य हि गाता स एष ये चामुष्मात्पराञ्चो लोकास्तेषां चेष्टे देवकामानां चेत्यधिदैवतम् ॥ ८ ॥
மந்த்ரார்த்தம் - அந்த தேவனுக்கு ரிக், சாமம் ஆகியவை இரண்டு பக்ஷங்களாகும். அதனால் அந்த தேவன் உத்கீத்தரூபன். மேலும் இதனால் (இதை கானம் செய்வதால்) உத்காதா எனப்படுகிறான். ஏன் எனில் அந்த இதை “उत्” (உத்) கானம் செய்கிறவனாகின்றான். அந்த இந்த உத் நாமம் உடைய தேவன் இந்த (ஆதித்ய லோகத்தைக்காட்டிலும்) மேலே உள்ள லோகமாகும். மேலும் தேவதைகளின் காமனைகளையும் ஆளுகின்றார். இது அதிதைவத உத்கீத உபாசனையாகும்.
तस्य ऋक्च साम च गेष्णौ पृथिव्याद्युक्तलक्षणे पर्वणी । सर्वात्मा हि देवः । परापरलोककामेशितृत्वादुपपद्यते पृथिव्यग्न्याद्यृक्सामगेष्णत्वम् , सर्वयोनित्वाच्च ।
அனுவாதம் - அதன் ரிக்கும் சாமமும் பக்ஷமாகும். அதாவது முன்பு கூறப்பட்ட பிருதிவீ முதலிய லக்ஷணங்கள் அந்த தேவனின் பக்ஷமாகும். பராபர லோகங்களின் காமங்களை ஆள்வதாலும் எல்லாவற்றிற்கும் காரணமாய் இருப்பதாலும் பிருதிவீ அக்னி முதலியவைகளுக்கு ரிக் சாமம் பக்ஷங்களாவது பொருத்தமாகிறது.
यत एवमुन्नामा च असौ ऋक्सामगेष्णश्च तस्मादृक्सामगेष्णत्वे प्राप्ते उद्गीथत्वमुच्यते परोक्षेण, परोक्षप्रियत्वाद्देवस्य, तस्मादुद्गीथ इति । तस्मात्त्वेव हेतोः उदं गायतीत्युग्दाता । यस्माद्धि एतस्य यथोक्तस्योन्नाम्नः गाता असौ अतो युक्ता उद्गीतेति नामप्रसिद्धिः उद्गातुः ।
அனுவாதம் - எதனால் இவ்வாறு “उत्” என்ற பெயர் உடையதாய் ரிக் சாமங்கள் இரண்டும் பக்ஷங்கள் உடையதாய் இருக்கிறதோ அதனால் ரிக் சாம பக்ஷங்கள் உடையதால் அடையப்பட்ட உத்கீதத்தை தேவனுக்கு பரோக்ஷம் பிரியமானதால் பரோக்ஷ ரூபமாய் பிரதிபாதனம் செய்யப்பட்டது. அதனால் உத்கீதமாகும். அந்த காரணத்தினால் இந்த “उत्” (உத்)தை கானம் செய்வதால் உத்காதா. இவ்வாறு எதனால் மேலே கூறப்பட்ட “उत्” (உத்) என்ற பெயருடைய தேவனை கானம் செய்வதால் உத்காதா. ஆகையால் உத்காதாவிற்கு உத்காதா என்ற பெயர் பிரசித்தமாய் இருப்பது உசிதமே.
स एषः देवः उन्नामा ये च अमुष्मात् आदित्यात् पराञ्चः परागञ्चनात् ऊर्ध्वा लोकाः तेषां लोकानां च ईष्टे न केवलमीशितृत्वमेव, च - शब्दाद्धारयति च, ‘स दाधार पृथिवीं द्यामुतेमाम्’ (ऋ. सं. मं. १० । १२१ । १) इत्यादिमन्त्रवर्णात् । किञ्च, देवकामानामीष्टे इति एतत् अधिदैवतं देवताविषयं देवस्योद्गीथस्य स्वरूपमुक्तम् ॥
அனுவாதம் - அந்த இந்த “उत्” (உத்) என்ற பெயருடைய இந்த ஆதித்ய லோகத்தைக்காட்டிலும் மேலானதை அறிந்ததினால் அதைக்காட்டிலும் வேறான மேலே உள்ள லோகங்களை ஆள்கிறது. அது ஆள்வது மட்டும் அல்ல “च” (ச) சப்தத்தால் அது அதை தரிக்கிறது (தாங்குகிறது) என்று சித்திக்கிறது. அவ்வாறே “स दाधार पृथिवीं द्यामुतेमाम्” என்ற மந்திர வர்ணத்தால் சித்திக்கிறது. மேலும் தேவதைகளின் காமனைகளையும் ஈடுபடுத்துகிறது (ஆள்கிறது). இவ்வாறு இந்த தேவதையின் உத்கீதாவின் அதிதைவத்வ அதாவது தேவதா விஷய ஸ்வரூபம் கூறப்பட்டது.
इति षष्ठखण्डभाष्यम् ॥
अथाध्यात्मं वागेवर्क्प्राणः साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयते । वागेव सा प्राणोऽमस्तत्साम ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - இதன்பின் அத்யாத்ம உபாசனை - வாக்கே ரிக். பிராணன் ஸாமம். இவ்வாறு இந்த (வாக்ரூப) ரிக்கில் (பிராணரூப) ஸாமம் நிலைபெற்றிருக்கிறது. ஆகையால் ரிக்கில் நிலைபெற்றிருக்கும் ஸாமத்தை கானம் செய்கின்றனர். வாக் “सा” (ஸா), பிராணன் “अम” (அம) ஆகும். இவ்வாறு இவ்விரண்டும் ஸாமம் ஆகும்.
अथ अधुना अध्यात्ममुच्यते — वागेव ऋक् प्राणः साम, अधरोपरिस्थानत्वसामान्यात् । प्राणो घ्राणमुच्यते सह वायुना । वागेव सा प्राणोऽम इत्यादि पूर्ववत् ॥
அனுவாதம் - அதன்பின் இப்பொழுது அத்யாத்ம உபாசனைக் கூறப்படுகிறது. கீழும், மேலும் ஸ்தானமாய் இருப்பதில் சமானமாக இருப்பதால் வாக்கே “ऋक्” (ரிக்), பிராணன் “साम” (ஸாமம்) ஆகும். வாயுவுடன் கூடிய கிராண இந்திரியமே இங்கு பிராணன் எனப்படுகிறது. வாக்கே “सा” (சா), பிராணன் “अम” (அம) ஆகும் என்பது முதலியவை முன்புபோல் அறிந்துகொள்ள வேண்டும்.
चक्षुरेवर्गात्मा साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयते । चक्षुरेव सात्मामस्तत्साम ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - சக்ஷு (கண்) “ऋक्” ரிக், ஆத்மா “साम” (ஸாம) ஆகும். இவ்வாறு (சக்ஷுரூப) ரிக்கில் (ஆத்மரூப) ஸாமம் நிலைபெற்றிருக்கின்றது. ஆகையால் ரிக்கில் நிலைபெற்ற சாமத்தை கானம் செய்கின்றனர். சக்ஷுவே “सा” (ஸா), ஆத்மா “अम” (அம) ஆகும். இவ்வாறு இரண்டும் சேர்ந்து சாமம் ஆகிறது.
चक्षुरेव ऋक् आत्मा साम । आत्मेति च्छायात्मा, तत्स्थत्वात्साम ॥
அனுவாதம் - சக்ஷு ரிக், ஆத்மா ஸாமமாகும். இங்கு ஆத்ம சப்தத்தை சாயாத்மாவாக கிரஹிக்கவேண்டும். ஏன்எனில் கண்களில் இருப்பதின் காரணத்தினால் ஸாம எனப்படுகிறது.
श्रोत्रमेवर्ङ्मनः साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयते । श्रोत्रमेव सा मनोऽमस्तत्साम ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - ச்ரோத்திரமே “ऋक्” (ரிக்), மனம் “साम” (ஸாம) ஆகும். இவ்வாறு இந்த (ச்ரோத்ரரூப) ரிக்கில் (மனரூப) ஸாமம் நிலைபெற்றிருக்கிறது. ஆகையால் ரிக்கில் நிலைபெற்றுள்ள ஸாமத்தை கானம் செய்கின்றனர். ச்ரோத்திரமே “सा” (ஸா), மனம் “अम” (அம) ஆகும். இவ்வாறு இவை இரண்டும் சேர்ந்து ஸாமம் ஆகும்.
श्रोत्रमेव ऋक् मनः साम, श्रोत्रस्याधिष्ठातृत्वान्मनसः सामत्वम् ॥
அனுவாதம் - ச்ரோத்திரமே “ऋक्” (ரிக்), மனம் “साम” (ஸாம) ஆகும். ச்ரோத்திரத்திற்கு அதிஷ்டாதாவாக (நிலைபெறும் ஸ்தானமாக) இருப்பதால் மனதிற்கே ஸாம ரூபத்துவம்.
अथ यदेतदक्ष्णः शुक्लं भाः सैवर्गथ यम्नीलं परः कृष्णं तत्साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयते । अथ यदेवैतदक्ष्णः शुक्लं भाः सैव साथ यन्नीलं परः कृष्णं तदमस्तत्साम ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - அவ்வாறே எது இந்த நேத்திரத்தின் சுக்ல பிரகாசம் உள்ளதோ அது “ऋक्” (ரிக்) மேலும் எந்த நீல நிறம் அதாவது முற்றிலும் கருமை நிறம் உள்ளதோ அது “साम” (ஸாம) ஆகும். இவ்வாறு (சுக்ல பிரகாச ரூப) (வெண்மை பிரகாசரூப) ரிக்கில் (நீலவர்ணமாகிய முற்றிலும் கருமைரூப) ஸாமம் நிலைபெற்றுள்ளது. ஆகையால் ரிக்கில் நிலைபெற்ற ஸாமத்தைக் கானம் செய்கின்றனர். அவ்வாறே அந்த எந்த நேத்திரத்தில் சுக்ல (வெண்மை) பிரகாசம் உள்ளதோ அது “सा” (ஸா) எந்த நீல வர்ணம் அதாவது முற்றிலும் கருமையான வர்ணம் உள்ளதோ அது “अम” (அம) ஆகும். இவ்வாறு இரண்டும் சேர்ந்து “साम” (ஸாம) ஆகும்.
अथ यदेतदक्ष्णः शुक्लं भाः सैव ऋक् । अथ यन्नीलं परः कृष्णमादित्य इव दृक्शक्त्यधिष्ठानं तत्साम ॥
அனுவாதம் - அவ்வாறே அந்த எந்த நேத்திரத்தில் சுக்ல பிரகாசம் உள்ளதோ அது “ऋक्” (ரிக்). மேலும் சூரியனுக்கு சமானமான திருக்சக்தியின் அதிஷ்டான பூதமான நீல வர்ணம் மிகுந்த கருமை உள்ளதோ அது “साम” (ஸாம) ஆகும்.
अथ य एषोऽन्तरक्षिणि पुरुषो दृश्यते सैवर्क्तत्साम तदुक्थं तद्यजुस्तद्ब्रह्म तस्यैतस्य तदेव रूपं यदमुष्य रूपं यावमुष्य गेष्णौ तौ गेष्णौ यन्नाम तन्नाम ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - அவ்வாறே அந்த நேத்திரத்தின் மத்தியில் எந்த புருஷன் காணப்படுகிறானோ அதுவே “ऋक्” (ரிக்), அதுவே “साम” (ஸாம), அதுவே “उक्थ” (உக்த), அதுவே “यजुः” (யஜு:), அதுவே “ब्रह्म” (பிரஹ்ம) ஆகும். அந்த இந்த புருஷனுடைய ரூபம் எதுவோ அது இதன் (ஆதித்யாந்தர்கத புருஷனின்) ரூபமாகும். எது அதற்கு பக்ஷமோ அதுவே இதற்கு பக்ஷம். எது அதன் நாமமோ அதுவே இதன் நாமம் ஆகும்.
अथ य एषोऽन्तरक्षिणि पुरुषो दृश्यते, पूर्ववत् । सैव ऋक् अध्यात्मं वागाद्या, पृथिव्याद्या च अधिदैवतम् ; प्रसिद्धा च ऋक् पादबद्धाक्षरात्मिका ; तथा साम ; उक्थसाहचर्याद्वा स्तोत्रं साम ऋक शस्त्रम् उक्थादन्यत् तथा यजुः स्वाहास्वधावषडादि सर्वमेव वाग्यजुः तत्स एव । सर्वात्मकत्वात्सर्वयोनित्वाच्चेति ह्यवोचाम । ऋगादिप्रकरणात् तद्ब्रह्मेति त्रयो वेदाः ।
அனுவாதம் - அவ்வாறே எந்த அந்த நேத்திரத்தினுள் காணப்படும் புருஷன் என்பதின் தாத்பர்யத்தை முன்பு போல் அறிந்துகொள்ள வேண்டும். அந்த வாக் முதலியவைகளே அத்யாத்மம். அவ்வாறே பிருதிவி முதலியவைகள் அதிதைவத ரிக். பாதத்தில் உள்ள அக்ஷரங்களால் பந்தப்பட்டது ரிக் என்பது பிரசித்தம். அவ்வாறே ஸாமமும் ஆகும். அல்லது உக்தத்தின் சகசாரியாய் இருப்பதால் ஸாமம். மேலும் உக்தத்திற்கு பின்னமான எந்த சாஸ்திரம் (மந்த்ர விசேஷம்) உள்ளதோ அது ரிக். அவ்வாறே ஸ்வாஹா, ஸ்வதா, வஷட் முதலியவை எல்லா வாக்கியங்களும் யஜுஸ். ஸர்வாத்மாவாயும், எல்லாவற்றிற்கும் காரணமாய் இருப்பதாலும் அந்த யஜுஸ் ஸ்வயமாகவே புருஷன் என்பது முன்பே கூறப்பட்டது. ரிக் முதலியவைகளின் பிரகரணமாய் இருப்பதால் “இது பிரஹ்மம்” என்ற வாக்கியத்தால் மூன்று வேதங்களை (त्रयो वेदाः) யும் பிரஹ்ம சப்தத்தால் குறிப்பிடப்படுகிறது என்று அறிந்துகொள்ள வேண்டும்.
तस्यैतस्य चाक्षुषस्य पुरुषस्य तदेव रूपमतिदिश्यते । किं तत् ? यदमुष्य आदित्यपुरुषस्य — हिरण्मय इत्यादि यदधिदैवतमुक्तम् , यावमुष्य गेष्णौ पर्वणी, तावेवास्यापि चाक्षुषस्य गेष्णौ ; यच्चामुष्य नाम उदित्युद्गीथ इति च तदेवास्य नाम ।
அனுவாதம் - அந்த இந்த நேத்திரத்தில் இருக்கும் புருஷனின் ரூபம் கூறப்படுகிறது. அது என்ன? எது இந்த ஆதித்திய புருஷனுடைய ஹிரண்மயம் முதலியவைகளால் அதிதைவதம் கூறப்பட்டது. எது இதனுடைய (ஆதித்ய புருஷனுடைய) பக்ஷங்களோ அவை இரண்டுமே இந்த நேத்திரத்தின் உள் இருக்கும் புருஷனின் இரு பக்ஷங்களாகும். எதனால் இதற்கு “उत्” (உத்) அல்லது “उद्गीथ” (உத்கீத) முதலிய நாமங்களோ அதுவே இதற்கும் நாமங்களாகிறது.
स्थानभेदात् रूपगुणनामातिदेशात् ईशितृत्वविषयभेदव्यपदेशाच्च आदित्यचाक्षुषयोर्भेद इति चेत् , न ; ’ अमुना’ ‘अनेनैव’ (छा. उ. १ । ७ । ८) इत्येकस्योभयात्मत्वप्राप्त्यनुपपत्तेः ।
அனுவாதம் - ஸ்தானம் வேறாக இருப்பதால் (ஆதித்தியனுள் இருக்கும் புருஷனின்) ரூபம், குணம், நாமம் ஆகியவை (நேத்திர புருஷனிடத்திலும்) ஒன்றின் தர்மம் ஒன்றில் தோன்றுவதாலும் அவ்வாறே ஆறாம்தன்மை (சாசனம் செய்யும் தன்மை) ஆகியவைகளின் விஷய பேதங்களை தெரிவிப்பதற்காக ஆதித்யன் அவ்வாறே நேத்திரத்தில் இருக்கும் புருஷன் என்று பேதம் கூறுவது சரியல்ல. ஏன் எனில் அவ்வாறு இருந்தால் (அமுனர்) “अमुना” (அநேனைவ) அதாவது அவரிடமிருந்து இதனாலேயே கூறிய இந்த சப்தங்கள் பிரதிபாதிக்கும் ஏகத்துவத்தால் இருவர் என்பது சம்பவிக்காது.
द्विधाभावेनोपपद्यत इति चेत् — वक्ष्यति हि ‘स एकधा भवति त्रिधा भवति’ (छा. उ. ७ । २६ । २) इत्यादि, न ; चेतनस्यैकस्य निरवयवत्वाद्द्विधाभावानुपपत्तेः । तस्मादध्यात्माधिदैवतयोरेकत्वमेव । यत्तु रूपाद्यतिदेशो भेदकारणमवोचः, न तद्भेदावगमाय ; किं तर्हि, स्थानभेदाद्भेदाशङ्का मा भूदित्येवमर्थम् ॥
அனுவாதம் - அவை இரண்டும் இரண்டு ரூபமாக உண்டானால் இவ்வாறு “स एकधा भवति त्रिधा भवति” (அது ஒரு ரூபமாய் இருக்கிறது, அது மூன்று ரூபமாய் இருக்கிறது) என்று கூறிற்று என்றாலும் அது சரியல்ல. ஏன் எனில் நிரவயமாய் இருப்பதால் ஒரே சேதனத்திற்கு இரண்டு ரூபம் சம்பவிக்காது. ஆகையால் அத்யாத்ம அதிதெய்வங்கள் ஆகிய இவை இரண்டும் ஒன்றேயாகும். (ஏகமாகும்). மேலும் ரூபம் முதலியவைகளின் அதிதேசத்தால் (ஒன்றின் தர்மத்தை மற்றொன்றின் தர்மமாக ஏற்றுக்கொள்ளுதல்) அதற்கு பேதகாரணம் கூறப்பட்டதோ அது அதன் பேதத்தை காண்பிப்பதற்காக அல்ல. ஆனால் எதற்காக? ஸ்தான பேதத்தால் பேதத்தில் சங்கை உண்டாகக்கூடாது என்பதற்காக ஆகிறது.
स एष ये चैतस्मादर्वाञ्चो लोकास्तेषां चेष्टे मनुष्यकामानां चेति तद्य इमे वीणायां गायन्त्येतं ते गायन्ति तस्मात्ते धनसनयः ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - அந்த இந்த (நேத்திரத்தில் உள்ள புருஷன்) எந்த இந்த (அத்யாத்ம ஆத்மா)வைக்காட்டிலும் கீழே உள்ள லோகமே அவனுக்கு. அவ்வாறே மதிக்கக்கூடிய காமனைகளை ஆள்பவன் (சாசனம் செய்பவன்). ஆகையால் எவர் வீணையில் கானம் செய்கின்றனரோ அவர் அதனுடைய கானத்தை செய்கின்றனர். (போற்றுகின்றனர்). அதனால் அவர்கள் தனவான்களாகின்றனர்.
स एषः चाक्षुषः पुरुषः ये च एतस्मात् आध्यात्मिकादात्मनः अर्वाञ्चः अर्वाग्गताः लोकाः तेषां चेष्टे मनुष्यसम्बन्धिनां च कामानाम् । तत् तस्मात् य इमे वीणायां गायन्ति गायकाः त एतमेव गायन्ति । यस्मादीश्वरं गायन्ति तस्मात्ते धनसनयः धनलाभयुक्ताः, धनवन्त इत्यर्थः ॥
அனுவாதம் - அந்த எந்த நேத்திர புருஷன் (चाक्षुष पुरुषः) எந்த இந்த ஆத்யாத்மிக ஆத்மாவைக்காட்டிலும் கீழே உள்ள லோகம் உள்ளதோ அவைகளையும், மனுஷ்ய சம்பந்தமான காமனைகளையும் சாசனம் (கட்டளை) செய்கின்றான். ஆகையால் எந்த கானம் செய்பவர்கள் இதை வீணையில் கானம் செய்கின்றனரோ அவர்கள் அதை கானம் செய்கின்றனர் (போற்றுகின்றனர்). ஏன் எனில் அவர்கள் ஈஸ்வரனையே த்யானம் செய்கின்றனர். ஆகையால் அவர்கள் தனலாபத்தால் தனவான்களாய் (செல்வந்தர்களாய்) இருக்கின்றனர்.
अथ य एतदेवं विद्वान्साम गायत्युभौ स गायति सोऽमुनैव स एष ये चामुष्मात्पराञ्चो लोकास्ताꣳश्चाप्नोति देवकामाꣳश्च ॥ ७ ॥
மந்த்ரார்த்தம் - இப்பொழுது எவன் இவ்வாறு (நேத்திர ஆத்மாவையும், ஆதித்ய ஆத்மாவையும் ஒன்று என்று) அறிந்த வித்வான் ஸாமகானம் செய்கின்றான். அந்த (நேத்திர ஆத்மா, ஆதித்ய ஆத்மா) இரண்டிற்குமே கானம் செய்கின்றான் (போற்றுகின்றான்). அவ்வாறே இதன் மூலமாய் இந்த ஆதித்திய லோகத்திற்கு மேலே இருக்கும் லோகத்தையும், தேவதைகளின் போகத்தையும் அடைகின்றான்.
अथ य एतदेवं विद्वान् यथोक्तं देवमुद्गीथं विद्वान् साम गायति उभौ स गायति चाक्षुषमादित्यं च । तस्यैवंविदः फलमुच्यते — सोऽमुनैव आदित्येन स एष ये च अमुष्मात्पराञ्चः लोकाः तांश्च आप्नोति, आदित्यान्तर्गतदेवो भूत्वेत्यर्थः, देवकामांश्च ॥
அனுவாதம் - இவ்வாறு மேலே குறிப்பிட்டவாறு தேவனை அறிந்த புருஷன் ஸாம கானம் செய்கின்றான். அந்த நேத்திர ஆதித்திய புருஷர்களுக்காக அந்த புருஷன் கானம் செய்கிறான். இவ்வாறு அறிந்தவருக்கான பலம் கூறப்படுகிறது. அந்த உபாசகன் இந்த ஆதித்தியன் மூலமாக அதைவிட மேலான லோகத்தை அடைகின்றான். அதாவது இந்த ஆதித்யனிடத்தில் அந்தர்கதமான தேவ ரூபத்தை அடைந்து தேவர்களுடைய போகத்தையும் (காமனைகளையும்) சுக போகங்களையும் அடைகின்றான்.
अथानेनैव ये चैतस्मादर्वाञ्चो लोकास्ताꣳश्चाप्नोति मनुष्यकामाꣳश्च तस्मादु हैवंविदुद्गाता ब्रूयात् ॥ ८ ॥
மந்த்ரார்த்தம் - அவ்வாறே இதன்மூலமாய் இதற்கும் கீழே உள்ள லோகங்களினதும், மனித சம்பந்தமான காமனைகளையும் (சுகபோகங்களையும்) அடைகின்றான். ஆகையால் இவ்வாறு அறிந்தவன் உத்காதா எனக் கூறப்படுகின்றான்.
कं ते काममागायानीत्येष ह्येव कामागानस्येष्टे य एवं विद्वान्साम गायति साम गायति ॥ ९ ॥
மந்த்ரார்த்தம் - நான் உனது எந்த இஷ்டபட்ட காமனைக்காக கானம் செய்து பூர்த்திசெய்ய வேண்டும்? ஏன் எனில் இந்த உத்காதா கானம் செய்து காமனைகளை பூர்த்தி செய்வதில் வல்லவர். அவர் இவ்வாறு அறிந்து ஸாம கானம் செய்கிறார். ஸாமகானம் செய்கிறார்.
अथ अनेनैव चाक्षुषेणैव ये च एतस्मादर्वाञ्चो लोकाः तांश्च आप्नोति, मनुष्यकामांश्च — चाक्षुषो भूत्वेत्यर्थः । तस्मादु ह एवंवित् उद्गाता ब्रूयात् यजमानम् — कम् इष्टं ते तव काममागायानीति । एष हि यस्मादुद्गाता कामागानस्य उद्गानेन कामं सम्पादयितुमीष्टे समर्थः इत्यर्थः । कोऽसौ ? य एवं विद्वान् साम गायति । द्विरुक्तिरुपासनसमाप्त्यर्था ॥
அனுவாதம் - அவ்வாறே இந்த சாக்ஷுஷ (நேத்திர) புருஷன் மூலமாய் எந்த இதைவிட கீழே உள்ள லோகங்கள் உள்ளனவோ அவற்றையும், மனுஷ்ய சம்பந்தமான சுகபோகங்களையும் சாக்ஷுஷ புருஷனாகி அடைகின்றான் என்பது பொருள். ஆகையால் இவ்வாறு அறிந்த உத்காதா யஜமானனிடம் உங்களின் எந்த காமனையை பூர்த்தி செய்வதற்காக நான் கானம் செய்யவேண்டும் என்று கேட்கிறார்? ஏன் எனில் அந்த உத்காதாவிற்கு இஷ்டமான காமனைகள் சம்பந்தமான பூர்த்தி செய்கின்ற கானங்களை உத்கானத்தால் அந்த காமனைகளை அடையச்செய்வதில் சாமர்த்தியமுடையவர் ஆகிறார். அந்த உத்காதா யார்? எவர் இவ்வாறு அறிந்து ஸாம கானம் செய்கிறாரோ ஸாமகானம் செய்கிறாரோ அவர். இரண்டுமுறை கூறியது இந்த உபாசனையின் பூர்த்திக்காக ஆகும்.
इति सप्तमखण्डभाष्यम् ॥
त्रयो होद्गीथे कुशला बभूवुः शिलकः शालावत्यश्चैकितायनो दाल्भ्यः प्रवाहणो जैवलिरिति ते होचुरुद्गीथे वै कुशलाः स्मो हन्तोद्गीथे कथां वदाम इति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - சலாவதகரின் புத்திரன் சிலகர், சிகிதாயனரின் புத்திரன் தால்ப்யர் மேலும் ஜீவலகர் புத்திரன் பிரவாஹனர் இவர்கள் மூவரும் உத்கீத வித்தையில் மிகவும் திறமைசாலிகள். அவர்கள் அவர்களுக்குள் இவ்வாறு கூறிக்கொண்டனர். நாம் மூவரும் உத்கீத வித்தையில் நிபுணர்களாக இருக்கின்றோம். ஆகையைால் ஒருவருக்கொருவர் அனுமதி அளித்தால் அந்த உத்கீத விஷயத்தைக் குறித்து பரஸ்பரம் கலந்துரையாடுவோம். (விவாதிப்போம்) என்று.
अनेकधोपास्यत्वात् अक्षरस्य प्रकारान्तरेण परोवरीयस्त्वगुणफलमुपासनान्तरमानिनाय । इतिहासस्तु सुखावबोधनार्थः ।
அனுவாதம் - அ.கை - (உத்கீதமென்னும்) அக்ஷரத்திற்கு அநேக விதமான உபாசனை செய்ய வேண்டியதால் வேறு முறையாக பரோவரியத்துவ (மிக மேன்மையான) குணத்துடன் கூடி பலன் உடைய வேறு ஒரு உபாசனை விளக்கப்படுகிறது. இங்கு இதிகாசம் (கதை) ஆனது சுலபமாக அறிந்துகொள்வதற்காகக் கூறப்படுகிறது.
त्रयः त्रिसङ्ख्याकाः, ह इत्यैतिह्यार्थः, उद्गीथे उद्गीथज्ञानं प्रति, कुशलाः निपुणा बभूवुः ; कस्मिंश्चिद्देशेकाले च निमित्ते वा समेतानामित्यभिप्रायः । न हि सर्वस्मिञ्जगति त्रयाणामेव कौशलमुद्गीथादिविज्ञाने । श्रूयन्ते हि उषस्तिजानश्रुतिकैकेयप्रभृतयः सर्वज्ञकल्पाः ।
அனுவாதம் - மூன்று எண்ணிக்கையாய் உள்ளவர்கள் “ह” (ஹ) என்பது இவ்வாறு ஆயிற்று என்று கூறுவதற்காக அமைந்தது. உத்கீதம் அதாவது உத்கீத ஞானத்தில் மிகவும் சிறந்த நிபுணர்கள் அந்த மூவரும். ஏதோ ஒரு தேசத்தில் அல்லது காலத்தில் அல்லது ஏதோ ஒரு நிமித்தத்தால் ஒன்று சேர்ந்தார்கள் என்பது அபிப்பிராயம். இந்த உலகம் முழுவதிலும் இம்மூவர் மட்டும் உத்கீதம் முதலியவைகளின் விக்ஞானம் உடையவர்கள் அல்ல. ஏன் எனில் உஷஸ்த்தர், ஜான ச்ருதி, மேலும் கைகேயர் முதலியோர் போன்று அநேக சர்வக்ஞ கல்ப புருஷர்களும் பிரசித்தமாக இருக்கின்றார்கள்.
के ते त्रय इति, आह — शिलकः नामतः, शलावतोऽपत्यं शालावत्यः ; चिकितायनस्यापत्यं चैकितायनः, दल्भगोत्रो दाल्भ्यः, द्व्यामुष्यायणो वा ; प्रवाहणो नामतः, जीवलस्यापत्यं जैवलिः इत्येते त्रयः —
அனுவாதம் - அந்த மூவர் யாவர்? இதற்குக் கூறப்படுகிறது - சிலகர் என்ற பெயருடைய சலாவதருடைய புத்திரர் சலாவத்யர், சிகிதாயனருடைய அபத்தியம் (புத்திரர்) சைகிதானர். அவர் தல்பகோத்திர தாபல்யர் அல்லது அவர் த்வயாமுஷ்யாயணர் ஆவார். பிரவாஹணோ நாமம் உடைய ஜீவலருடைய புத்திரர் ஜைவலி: ஆகிய மூவர் ஆவர்.
ते होचुः अन्योन्यम् — उद्गीथे वै कुशलाः निपुणा इति प्रसिद्धाः स्मः । अतो हन्त यद्यनुमतिर्भवताम् उद्गीथे उद्गीथज्ञाननिमित्तां कथां विचारणां पक्षप्रतिपक्षोपन्यासेन वदामः वादं कुर्म इत्यर्थः ।
அனுவாதம் - அவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் இவ்வாறு கூறிக்கொண்டனர் - நாம் உத்கீதத்தில் நிபுணர்களாய் இருக்கின்றோம் என்பது பிரசித்தம். ஆகையால் தங்களின் சம்மதம். இருந்தால் உத்கீதத்தில், உத்கீத வித்யா சம்பந்தமான கதையில் நாம் விசாரம் செய்வோம். அதாவது பக்ஷ பிரதிபக்ஷ உபந்நியாசத்தால் கூறுவோம். அதாவது வாதம் செய்வோமாக என்பது பொருள்.
तथा च तद्विद्यसंवादे विपरीतग्रहणनाशोऽपूर्वविज्ञानोपजनः संशयनिवृत्तिश्चेति । अतः तद्विद्यसंयोगः कर्तव्य इति च इतिहासप्रयोजनम् । दृश्यते हि शिलकादीनाम् ॥
அனுவாதம் - அவ்வாறே அந்த வித்வான்களின் பரஸ்பர சம்வாதத்தால் விபரீத கிரஹணத்தின் நாசமும், அபூர்வ ஞானத்தின் உதயத்தால் சம்சய நிவர்த்தியும் ஏற்படுகிறது. ஆகையால் அந்த வித்வான்களுடன் சங்கம் (சத்சங்கம்) அவசியம் செய்யவேண்டும் என்பது இந்த இதிஹாசத்தின் பிரயோஜனம் ஆகும். இந்த விஷயம் சிலகர் முதலியவர்களின் சங்கத்திலும் காணப்படுகிறது.
तथेति ह समुपविविशुः स ह प्रवाहणो जैवलिरुवाच भगवन्तावग्रे वदतां ब्राह्मणयोर्वदतोर्वाचꣳ श्रोष्यामीति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அப்பொழுது அவர்கள் மிகவும் சரி என்று கூறிக்கொண்டு அமர்ந்தனர். அதன்பின் ஜீவலகடித்திரர் பிரவாஹணர் கூறினார்- முதலில் பூஜைக்குறிய நீங்கள் இருவரும் முதலில் பிரதிபாதனம் செய்யுங்கள். (கூறுங்கள்). நான் பிராஹ்மணர்களாகிய உங்களுடைய வாக்கை(பேச்சை)க் கேட்கிறேன் (சிரவணம் செய்கிறேன்) என்று.
तथेत्युक्त्वा ते समुपविविशुः ह उपविष्टवन्तः किल । तत्र राज्ञः प्रागल्भ्योपपत्तेः स ह प्रवाहणो जैवलिरुवाच इतरौ — भगवन्तौ पूजावन्तौ अग्रे पूर्वं वदताम् ; ब्राह्मणयोरिति लिङ्गाद्राजा असौ ; युवयोर्ब्राह्मणयोः वदतोः वाचं श्रोष्यामि ; अर्थरहितामित्यपरे, वाचमिति विशेषणात् ॥
அனுவாதம் - அவ்வாறே மிக்க நன்று என்று கூறிக்கொண்டு அமர்ந்தார்கள். அப்பொழுது அந்த விஷயத்தில் (பிராஹ்மணர்கள் முதலில் கூறுவதால்) தனக்கு தைரியம் உண்டாகும் என்பது ராஜாவின் அபிப்பிராயம் ஆகிறது. ஆகையால் அந்த ஜீவலகரின் புத்திரர் பிரவாஹணர் மற்ற இருவர்களிடம் இவ்வாறு கூறினார் - பூஜைக்கு உரியவர்களான நீங்கள் இருவரும் முதலில் கூறுங்கள் என்று. பிராஹ்மணர்கள் ஆகிய நீங்கள் என்று - பிராஹ்மணர்களாகிய நீங்கள் இருவரும் கூறும் வசனத்தைக் கேட்கிறேன் என்ற அறிகுறியால் அவர் ராஜா என்பது அறியப்படுகிறது. சிலர் வசனம் என்று கூறியதால் அர்த்தமற்ற சப்தத்தை மாத்திரம் கேட்கிறேன் என்று அர்த்தம் செய்கின்றனர்.
स ह शिलकः शालावत्यश्चैकितायनं दाल्भ्यमुवाच हन्त त्वा पृच्छानीति पृच्छेति होवाच ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - அப்பொழுது அந்த சிலாவதரினுடைய புத்திரர் சிலகர் சிகிதாயனருடைய குமாரர் தால்ப்பியரிடம் கூறினார்- உங்களுடைய அனுமதி கிடைத்தால் நான் உன்னிடம் கேட்கிறேன் - அவர் கேள் என்று கூறினார்.
उक्तयोः स ह शिलकः शालावत्यः चैकितायनं दाल्भ्यमुवाच — हन्त यद्यनुमंस्यसे त्वा त्वां पृच्छानि इत्युक्तः इतरः पृच्छेति होवाच ॥
அனுவாதம் - மேலே கூறப்பட்ட இருவருள் அந்த சாலாவதத்யரின் புத்திரர் சிலகர் சைகிதாயன தல்ப்யரிடம் இவ்வாறு கூறினார் - நீங்கள் அனுமதித்தால் நான் உங்களிடம் கேட்கிறேன் என்று. அப்பொழுது இவ்வாறு கூறியதைக்கேட்டுக் கேளுங்கள் என்று கூறினார்.
लब्धानुमतिराह —
அனுவாதம் - அனுமதித்த மற்றவர் இவ்வாறு (சிலகர்) கூறினார்.
का साम्नो गतिरिति स्वर इति होवाच स्वरस्य का गतिरिति प्राण इति होवाच प्राणस्य का गतिरित्यन्नमिति होवाचान्नस्य का गतिरित्याप इति होवाच ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - ஸாமத்தின் கதி (ஆச்ரயம்) யாது? இதற்கு மற்றவர் “ஸ்வரம்” (स्वरः) என்று கூறினார். ஸ்வரத்தின் கதி என்ன? இவ்வாறு கேள்வி கேட்டதற்கு மற்றவர் “பிராணன்” (प्राणन्) என்று கூறினார் - பிராணனின் கதி என்ன? இதைக் குறித்து மற்றவர் “அன்னம்” (अन्नम्) என்று கூறினார். அவ்வாறே அன்னத்தின் கதி என்ன? இவ்வாறு கேட்டதற்கு தால்ப்யர் ஜலம் (जलम्) என்று கூறினார்.
का साम्नः — प्रकृतत्वादुद्गीथस्य ; उद्गीथो हि अत्र उपास्यत्वेन प्रकृतः ; ‘परोवरीयांसमुद गीथम्’ इति च वक्ष्यति — गतिः आश्रयः, परायणमित्येतत् । एवं पृष्टो दाल्भ्य उवाच — स्वर इति, स्वरात्मकत्वात्साम्नः । यो यदात्मकः स तद्गतिस्तदाश्रयश्च भवतीति युक्तम् , मृदाश्रय इव घटादिः ।
அனுவாதம் - இங்கு ஸாமம் என்பது உத்கீதம் என்று கூறப்பட்டதால். அதன் கதி (ஆச்ரயம்) எது? இங்கு உத்கீதம் உபாசனாரூபம் என்று கூறப்பட்டது. “परोवरीयांसमुद्गीथम्” (பரோவரீயாமுத்கீதம்) என்று கூறப்போகிறது சுருதி. गतिः (கதி) என்றால் ஆஸ்ரயம் மற்றும் பராயணம் எனப்படுகிறது. இவ்வாறு கேட்கப்பட்ட தால்ப்யர் கூறினார் - ஸ்வரம் (स्वरः) என்று. ஏன் எனில் சாமம் ஸ்வராத்மகமானது (ஸ்வரஸ்வரூபமானது) ஆனதால் கடம் முதலியவைகளுக்கு மண் ஆஸ்ரயமாவது போல் எது எதன் ஸ்வரூபமோ அது அதன் கதி அதாவது ஆஸ்ரயமாகிறது.
स्वरस्य का गतिरिति, प्राण इति होवाच ; प्राणनिष्पाद्यो हि स्वरः, तस्मात्स्वरस्य प्राणो गतिः । प्राणस्य का गतिरिति, अन्नमिति होवाच ; अन्नावष्टम्भो हि प्राणः, ‘शुष्यति वै प्राण ऋतेऽन्नात्’ (बृ. उ. ५ । १२ । १) इति श्रुतेः, ‘अन्नं दाम’ (बृ. उ. २ । २ । १) इति च । अन्नस्य का गतिरिति, आप इति होवाच, अप्सम्भवत्वादन्नस्य ॥
அனுவாதம் - ஸ்வரத்திற்கு என்ன கதி? என்று கேட்டதற்கு பிராணன் என்று கூறினார். பிராணனால் வெளிப்படுவது (உண்டாவது) ஸ்வரம். ஆகையால் ஸ்வரத்திற்கு கதி பிராணன் ஆகும். பிராணனுடைய கதி அன்னம் என்று கூறினார். பிராணன் அன்னத்தை ஆச்ரயித்து இருக்கின்றது. “शुष्यति वै प्राणऋतेऽन्नात्” (சுஷ்யதி வை பிராணரிதேஅன்னாத்) என்று சுருதியினால் சித்திக்கின்றது. “अन्नं दाम” (அன்னம் தாம) என்றும் சுருதி கூறுகிறது. அன்னத்தின் கதி ஜலம் என்று கூறினார். அன்னம் ஜலத்தினால் உண்டாவதாகும்.
अपां का गतिरित्यसौ लोक इति होवाचामुष्य लोकस्य का गतिरिति न स्वर्गं लोकमति नयेदिति होवाच स्वर्गं वयं लोकं सामाभिसंस्थापयामः स्वर्गसꣳ स्तावꣳ हि सामेति ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - ஜலத்தின் கதி என்ன? என்ற கேள்வி கேட்டபொழுது அவர் “அந்த லோகம்” என்று கூறினார். இந்த லோகத்தின் கதி என்ன? (இதற்கு தால்ப்யர் கூறினார்). ஸ்வர்க்கலோகத்தைத் தாண்டி ஸாமத்தை வேறு எதன் ஆச்ரயத்தாலும் எடுத்துச்செல்ல முடியாது. இந்த ஸாமம் ஸ்வர்க்கலோகத்தில் நிலைபெறச் செய்யப்படுகிறது. ஏன் எனில் ஸாமத்தை ஸ்வர்க்க ரூபமாக ஸ்துதி செய்து கானம் செய்யப்படுகிறது அதனால் ஆகும்.
अपां का गतिरिति, असौ लोक इति होवाच ; अमुष्माद्धि लोकाद्वृष्टिः सम्भवति । अमुष्य लोकस्य का गतिरिति पृष्टः दाल्भ्य उवाच — स्वर्गममुं लोकमतीत्य आश्रयान्तरं साम न नयेत्कश्चित् इति होवाच आह ।
அனுவாதம் - ஜலத்தின் கதி என்ன? “அந்த லோகம்” என்று கூறினார். ஏன் எனில் அந்த லோகத்தில் இருந்து மழை பொழிகிறது. அந்த லோகத்தின் கதி என்ன? இவ்வாறு கேட்டதற்கு தால்ப்யர் கூறினார் - அந்த ஸ்வர்க்கலோகத்தை அதிக்கிரமணம் செய்து (தாண்டி) ஸாமத்திற்கு அதைவிட வேறான ஆச்ரயத்தை அடையவேண்டியதில்லை.
अतो वयमपि स्वर्गं लोकं साम अभिसंस्थापयामः ; स्वर्गलोकप्रतिष्ठं साम जानीम इत्यर्थः । स्वर्गसंस्तावं स्वर्गत्वेन संस्तवनं संस्तावो यस्य तत्साम स्वर्गसंस्तावम् , हि यस्मात् स्वर्गो वै लोकः साम वेद इति श्रुतिः ॥
அனுவாதம் - ஆகையால் நாமும் ஸ்வர்க்கலோகத்தில் ஸாமத்தைத் ஸ்தாபிப்போமாக. அதாவது ஸாமத்தை ஸ்வர்க்கலோகத்தில் பிரதிஷ்டித்திருக்கின்றது என்று அறிவோம் என்பது பொருள். ஏன் எனில் ஸாமம் “स्वर्गसंस्ताव” (ஸ்வர்கஸம்ஸ்தாவ) அதாவது எதை ஸ்வர்க்க ரூபமாக போற்றுகின்றோமோ அது ஸ்வர்க்க ஸம்ஸ்தாவனமாகும். “स्वर्गो वै लोकः साम वेद” (ஸ்வர்க்கோ வை லோக: ஸாம வேத) இந்த சுருதியினாலும் சித்திக்கின்றது. (ஸாமம் என்பது உத்கீதம் ஆகும்).
तꣳ ह शिलकः शालावत्यश्चैकितायनं दाल्भ्यमुवाचाप्रतिष्ठितं वै किल ते दाल्भ्य साम यस्त्वेतर्हि ब्रूयान्मूर्धा ते विपतिष्यतीति मूर्धा ते विपतेदिति ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - இந்த சிகிதான புத்திரர் தாபல்யரிடம் சாலாவதரின் புத்திரர் சிலகர் கூறினார் - ஹே தால்ப்ய! உன்னுடைய ஸாமம் நிச்சயமாக பிரதிஷ்டிதம் ஆகவில்லை. இந்த சமயத்தில் எந்த ஒரு ஸாமத்தை அறிந்தவர் இவ்வாறு கூறினால் அதாவது உன்னுடைய தலை தரையில் விழுந்துவிடும் என்றால் நிச்சயமாக உன்னுடைய தலை விழுந்துவிடும் என்று.
तम् इतरः शिकलः शालावत्यः चैकितायनं दाल्भ्यमुवाच — अप्रतिष्ठितम् असंस्थितम् , परोवरीयस्त्वेनासमाप्तगति सामेत्यर्थः ; वै इत्यागमं स्मारयति किलेति च, दाल्भ्य ते तव साम । यस्तु असहिष्णुः सामवित् एतर्हि एतस्मिन्काले ब्रूयात् कश्चिद्विपरीतविज्ञानम् — अप्रतिष्ठितं साम प्रतिष्ठितमिति — एवंवादापराधिनो मूर्धा शिरः ते विपतिष्यति विस्पष्टं पतिष्यतीति । एवमुक्तस्यापराधिनः तथैव तद्विपतेत् न संशयः ; न त्वहं ब्रवीमीत्यभिप्रायः ।
அனுவாதம் - அந்த சைகிதனாகிய தால்பியரிடம் மற்றவரான சாலாவத்தியராகிய சிலகர் இவ்வாறு கூறினார் - நிச்சயமாக “ஸாமம்” பிரதிஷ்டிதம் ஆகவில்லை, அதில் நிலைபெறவில்லை அதாவது இது இதற்கும் அதற்கும் பொருத்தமில்லாமல் சமாப்தி அற்ற (முடிவு அற்ற) கதியுடையதாய் ஸாமம் இருக்கிறது என்பது பொருள். “वा” (வா) என்றும், किलेति (கிலேதி) என்றும் ஆகமம் உபதேச பரம்பரையை ஞாபகப்படுத்துகிறது. ஹே தால்ப்ய உன்னுடைய பிரதிஷ்டிதமில்லாத ஸாமத்தை சகிக்காமால் அப்பொழுது இவ்வாறு ஸாமத்தை, நன்றாக அறிந்தவர் உன்னை அபராதம் செய்வதற்காக இவ்வாறு கூறலாம் - நீ விபரீத விக்ஞானம் உடையவனாய் இருக்கின்றாய் ஆகையால் உன்னுடைய தலை நிச்சயமாக கீழே விழுந்துவிடும் என்று அவர் கூறினால் உன்னுடைய அபராதத்தால் நிச்சயமாக தலை கீழே விழுந்துவிடும் இதில் சந்தேஹம் இல்லை. ஆனால் நான் அவ்வாறு கூறமாட்டேன் என்பது தாத்பர்யம்.
ननु मूर्धपातार्हं चेदपराधं कृतवान् , अतः परेणानुक्तस्यापि पतेन्मूर्धा, न चेदपराधी उक्तस्यापि नैव पतति ; अन्यथा अकृताभ्यागमः कृतनाशश्च स्याताम् ।
அனுவாதம் - சங்கை - தலை விழும் அளவிற்கு அபராதம் (தப்பு) செய்திருந்தால் வேறு ஒருவரால் கூறவில்லையென்பதால் தலை விழவில்லையென்றால் வேறு ஒருவர் தப்பு என்று கூறினாலும் விழாது. அப்படி விழுந்தால் அந்யதா கிருத அப்யாகமும், கிருத நாசமும் (செய்யாததின் பிராப்த்தியும், செய்ததின் பல நாசமும்) ஆகிய தோஷங்கள் உண்டாகுமே.
नैष दोषः, कृतस्य कर्मणः शुभाशुभस्य फलप्राप्तेर्देशकालनिमित्तापेक्षत्वात् । तत्रैवं सति मूर्धपातनिमित्तस्याप्यज्ञानस्य पराभिव्याहारनिमित्तापेक्षत्वमिति ॥
அனுவாதம் - அந்த தோஷம் இல்லை. செய்த கர்மங்களின் சுபாசுப பலம் அடைவதற்கு தேச கால நிமித்தத்தை அபேக்ஷிக்கின்றது. இங்கும் தலை விழுவதற்கு நிமித்தமான அக்ஞானத்திற்கும் வேறு ஒருவர் கூறுவது என்ற நிமித்தத்தை அபேக்ஷிப்பதாகும்.
हन्ताहमेतद्भगवत्तो वेदानीति विद्धीति होवाचामुष्य लोकस्य का गतिरित्ययं लोक इति होवाचास्य लोकस्य का गतिरिति न प्रतिष्ठां लोकमति नयेदिति होवाच प्रतिष्ठां वयं लोकꣳ सामाभिसꣳ स्थापयामः प्रतिष्ठासꣳ स्तावꣳ हि सामेति ॥ ७ ॥
மந்த்ரார்த்தம் - நான் இந்த விஷயத்தை பகவனாகிய உங்களிடமிருந்து அறிந்துகொள்ள விரும்புகின்றேன். இதற்கு (சிலகர்) கூறினார் - அறிந்துகொள். அப்பொழுது அந்த லோகத்தின் கதி யாது? என்று கேட்டதற்கு இந்த லோகம் என்று கூறினார். மேலும் இந்த லோகத்தின் கதி என்ன? என்ற கேள்விக்கு இந்த பிரதிஷ்டா ரூபமான லோகத்தை அதிக்கிரமணம் செய்து (தாண்டி) ஸாமத்தை வேறு இடத்திற்கு எடுத்துச்செல்ல முடியாது என்று கூறினார். நாம் பிரதிஷ்டா ரூபமான இந்த லோகத்தில் ஸாமத்தை நிலைநிறுத்துகிறோம். (இருக்கச் செய்கிறோம்) (இதனால் இதுவே முடிவான ஸ்திதி என்று நிச்சயம் செய்கிறோம்) ஏன் எனில் ஸாமத்தின் பிரதிஷ்டா ரூபமாக ஸ்துதி செய்கின்றோம்.
एवमुक्तो दाल्भ्य आह —
அனுவாதம் - அ.கை - இவ்வாறு கூறப்பட்ட தால்ப்யர் கூறினார் -
हन्ताहमेतद्भगवत्तः भगवतः वेदानि यत्प्रतिष्ठं साम इत्युक्तः प्रत्युवाच शालावत्यः — विद्धीति होवाच । अमुष्य लोकस्य का गतिरिति पृष्टः दाल्भ्येन शालावत्यः अयं लोक इति होवाच ; अयं हि लोको यागदानहोमादिभिरमुं लोकं पुष्यतीति ; ‘अतः प्रदानं देवा उपजीवन्ति’ ( ? ) इति हि श्रुतयः ; प्रत्यक्षं हि सर्वभूतानां धरणी प्रतिष्ठेति ; अतः साम्नोऽप्ययं लोकः प्रतिष्ठैवेति युक्तम् ।
அனுவாதம் - எதில் ஸாமம் பிரதிஷ்டித்திருக்கின்ற விஷயத்தை நான் ஶ்ரீமானாகிய தங்களிடம் இருந்து அறிய விரும்புகிறேன் என்று கூறியதை அறிந்து சாலாவத்தியர் பதில் அளித்தார் - அறிந்துகொள் என்று. அந்த லோகத்தின் கதி என்ன? என்று தால்ப்யர் கேட்டதற்கு சாலாவத்தியர் கூறினார் இந்த லோகம் என்று. ஏன் எனில் இந்த லோகத்தில்தான் யாகம், தானம், மேலும் ஹோமம் முதலியவைகளால் அந்த லோகத்தைப் போஷிக்கின்றனர். “अतः प्रदानं देवा उपजीवन्ति” (அத: பிரதானம் தேவா உபஜீவந்தி) இவ்வாறு சுருதியிலும் சித்திக்கிறது. எல்லா பிராணிகளின் பிரதிஷ்டா பிருதிவீ என்பது பிரத்யக்ஷமாய் தெரிகிறது. ஆகையால் ஸாமத்திற்கும் இந்த லோகம் பிரதிஷ்டா என்பது உசிதமேயாகும்.
अस्य लोकस्य का गतिरित्युक्तः आह शालावत्यः — न प्रतिष्ठाम् इमं लोकमतीत्य नयेत् साम कश्चित् । अतो वयं प्रतिष्ठां लोकं साम अभिसंस्थापयामः ; यस्मात्प्रतिष्ठासंस्तावं हि, प्रतिष्ठात्वेन संस्तुतं सामेत्यर्थः ; ‘इयं वै रथन्तरम्’ (तां. ब्रा. १८ । ६ । ११) इति च श्रुतिः ॥
அனுவாதம் - இந்த லோகத்தின் கதி என்ன? என்று கேட்டதற்கு சாலாவத்யர் கூறினார் - எவராலும் இந்த பிரதிஷ்டா ரூபமான இந்த லோகத்தைத் தாண்டி (அதிக்கிரமணம் செய்து) இந்த ஸாமத்தை எடுத்துச்செல்ல முடியாது. ஆகையால் நாம் இந்த பிரதிஷ்டா ரூபமான இந்த லோகத்தில் ஸாமத்தை எல்லாப் பிரகாரமாகவும் நிலைக்கச்செய்வோம். ஸாமம் பிரதிஷ்டா ஸம்ஸாதனம் அதாவது பிரதிஷ்டா ரூபமாக ஸ்துதிக்கப்படுகிறது. “इयं वै रथन्तरम्” (இயம் வை ரதந்தரம் = இந்த பிருதிவீயே ரதந்தரமான ஸாமம்) என்று சுருதியும் கூறுகிறது.
तꣳ ह प्रवाहणो जैवलिरुवाचान्तवद्वै किल ते शालावत्य साम यस्त्वेतर्हि ब्रूयान्मूर्धा ते विपतिष्यतीति मूर्धा ते विपतेदिति हन्ताहमेतद्भगवत्तो वेदानीति विद्धीति होवाच ॥ ८ ॥
மந்த்ரார்த்தம் - அப்பொழுது அவரிடம் ஜீவலருடைய புத்திரர் பிரவாஹணர் கூறினார் - ஹே சாலாவத்ய! நிச்சயமாக உங்களுடைய ஸாமம் முடிவு உடையது, என்று இவ்வாறு யாராவது கூறினால் உன்னுடைய தலை கீழேவிழும், உன் தலை விழுந்துவிடும். இதற்கு (சாலாவத்தியர் கூறினார்-) நான் ஶ்ரீமானாகிய உங்களிடம் அறிந்துகொள்ள விரும்புகிறேன் என்று. இதற்கு பிரவாஹனர் கூறினார் அறிந்துகொள் என்று கூறினார்.
तमेवमुक्तवन्तं ह प्रवाहणो जैवलिरुवाच अन्तवद्वै किल ते शालावत्य सामेत्यादि पूर्ववत् । ततः शालावत्य आह — हन्ताहमेतद्भगवत्तो वेदानीति ; विद्धीति होवाच इतरः ॥
அனுவாதம் - இவ்வாறு கூறிய அந்த சாலாவத்தியரிடம் ஜீவலக புத்திரர் பிரவாஹணர் கூறினார் - ஹே சாலாவத்திய உன்னுடைய ஸாமம் நிச்சயமாக முடிவு உடையது என்பது முதலியவை முன்போல் கூறப்பட்டது. அப்பொழுது சாலாவத்தியர் கூறினார் - நான் ஶ்ரீமானாகிய தங்களிடம் இருந்து அறிய விரும்புகின்றேன் என்று. அப்பொழுது மற்றவர் (பிரவாஹணர்) அறிந்துகொள் என்று கூறினார்.
इति अष्टमखण्डभाष्यम् ॥
अस्य लोकस्य का गतिरित्याकाश इति होवाच सर्वाणि ह वा इमानि भूतान्याकाशादेव समुत्पद्यन्त आकाशं प्रत्यस्तं यन्त्याकाशो ह्येवैभ्यो ज्यायानाकाशः परायणम् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - இந்த லோகத்தின் கதி என்ன? இதற்கு பிரவாஹணர் கூறினார் - ஆகாசம் என்று. ஏன் எனில் இந்த எல்லா பூதங்களும் ஆகாயத்தில் இருந்துதான் உண்டாகின்றன. ஆகாசத்திலேயே லயமாகின்றன. மேலும் ஆகாசமே இவைகள் எல்லாவற்றையும்விட பெரியது. ஆகையைால் ஆகாசமே இவைகளின் ஆஸ்ரயம். (கதி)
अनुज्ञातः आह —
அனுவாதம் - அ.கை- பிரவாஹணரின் அனுமதிபெற்று சிலகர் கூறினார் -
अस्य लोकस्य का गतिरिति, आकाश इति होवाच प्रवाहणः ; आकाश इति च पर आत्मा, ‘आकाशो वै नाम’ (छा. उ. ८ । १४ । १) इति श्रुतेः ; तस्य हि कर्म सर्वभूतोत्पादकत्वम् ; तस्मिन्नेव हि भूतप्रलयः — ‘तत्तेजोऽसृजत’ (छा. उ. ६ । २ । ३) ‘तेजः परस्यां देवतायाम्’ (छा. उ. ६ । ८ । ६) इति हि वक्ष्यति ।
அனுவாதம் - இந்த லோகத்தின் கதி என்ன? என்பதற்கு ஆகாசம் என்று பிரவாஹணர் கூறினார். ஆகாசம் என்பது பரமாத்மா “आकाशो वै नाम” (ஆகாசோ வை நாம) என்று சுருதியினால் சித்திக்கிறது. எல்லா பூதங்களையும் உண்டாக்குவது அதன் கர்மம். அதிலேயே எல்லா பூதங்களும் லயமாகின்றன. “तत्तेजोऽसृजत” (தத்தேஜோ அஸ்ருஜத), “तेजः परस्यां देवतायाम्” (தேஜ: பரஸ்யாம் தேவதாயாம்) இனிக் கூறப்படப்போகிறது.
सर्वाणि ह वै इमानि भूतानि स्थावरजङ्गमानि आकाशादेव समुत्पद्यन्ते तेजोबन्नादिक्रमेण, सामर्थ्यात् , आकाशं प्रति अस्तं यन्ति प्रलयकाले तेनैव विपरीतक्रमेण ; हि यस्मादाकाश एवैभ्यः सर्वेभ्यो भूतेभ्यः ज्यायान् महत्तरः, अतः स सर्वेषां भूतानां परमयनं परायणं प्रतिष्ठा त्रिष्वपि कालेष्वित्यर्थः ॥
அனுவாதம் - இந்த எல்லா ஸ்தாவர ஜங்கம பூதங்களும் (சராசரங்களும்) ஆகாசத்திலிருந்தே தேஜஸ் (அக்னி) அப்பு (ஜலம்) அன்னம் முதலிய கிரமமாக உத்பன்னம் ஆகிறது. மேலும் பிரளயகாலத்தில் அந்த விபரீத க்ரமத்தால் ஆகாசத்தில் லீனமாகின்றது என்பது சுருதியின் பலத்தால் அறிகின்றோம், ஏனெனில் இந்த பரமாகாசம் இந்த எல்லா பூதங்களைக்காட்டிலும் மிகவும் மஹத்தானதாயும், முதன்மையானதாயும் இருப்பதால் அதுவே எல்லா பூதங்களுக்கும் முக்காலத்திலும் பராயணம் அதாவது பிரதிஷ்டாவாகும். (ஆச்ரயம்)
स एष परोवरीयानुद्गीथः स एषोऽनन्तः परोवरीयो हास्य भवति परोवरीयसो ह लोकाञ्जयति य एतदेवं विद्वान्परोवरीयाꣳसमुद्गीथमुपास्ते ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எந்த இந்த உத்கீதம் மிகவும் மேலானதும் சிறந்ததாய் இருக்கிறதோ அது அனந்தம் ஆகும். இதனால் இதை இவ்வாறு அறிந்த வித்வான் இந்த மிகவும் மேலான (உத்கிருஷ்டமான பரமாத்ம ரூபத்தை) உத்கீதத்தை உபாசனை செய்கின்றாரோ அவருடைய ஜீவனம் மிகவும் மேலானதாக ஆகும். மேலும் அவர் மேலான உத்கிருஷ்ட லோகங்களை தன் அதீனமாக செய்கிறான்.
यस्मात् परं परं वरीयः वरीयसोऽप्येष वरः परश्च वरीयांश्च परोवरीयान् उद्गीथः परमात्मा सम्पन्न इत्यर्थः, अत एव स एषः अनन्तः अविद्यमानान्तः ।
அனுவாதம் - எதனால் ஒன்றைக்காட்டிலும் மேலும் மேலும் ஸ்ரேஷ்டமோ அதாவது பரமானதும் (மேலானதும்) உத்கிருஷ்டமானதுமான ரூபமாய் இந்த உத்கீதம் இருப்பதால் பரமாத்ம பாவத்தை உடையதாகிறது. ஆகையால் இந்த உத்கீதம் அனந்தம் அதாவது அதற்கு அந்தம் (முடிவு) கிடையாது.
तमेतं परोवरीयांसं परमात्मभूतमनन्तम् एवं विद्वान् परोवरीयांसमुद्गीथमुपास्ते । तस्यैतत्फलमाह — परोवरीयः परं परं वरीयो विशिष्टतरं जीवनं ह अस्य विदुषो भवति दृष्टं फलम् , अदृष्टं च परोवरीयसः उत्तरोत्तरविशिष्टतरानेव ब्रह्माकाशान्तान् लोकान् जयति — य एतदेवं विद्वानुद्गीथमुपास्ते ॥
அனுவாதம் - அந்த இந்த பரோவரீயாந்ஸம் (परोवरीयांसं) அதாவது பரமாத்ம ரூபமான அனந்த உத்கீதத்தை இவ்வாறு அறிந்த வித்வான் இந்த பரமமேலான சிறந்த உத்கீதத்தை உபாசனை செய்கின்றானோ அவன் அடையும் பலத்தை சுருதி கூறுகிறது - எவன் இவ்வாறு அறிந்த வித்வான் உத்கீதத்தை உபாசனை செய்கின்றானோ அந்த வித்வானுடைய ஜீவனம் மேலும் மேலும் மேன்மை அடைந்து திருஷ்ட பலத்தை அடைகின்றான். அவ்வாறே அவன் மேலும் மேலும் மேன்மை அடைந்து பிரஹ்மாகாசம் வரையிலும் கூடிய லோகங்களை ஜெயித்து அதிருஷ்ட பலத்தையும் அடைகின்றான்.
तꣳ हैतमतिधन्वा शौनक उदरशाण्डिल्यायोक्त्वोवाच यावत्त एनं प्रजायामुद्गीथं वेदिष्यन्ते परोवरीयो हैभ्यस्तावदस्मिंल्लोके जीवनं भविष्यति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - சுனகருடைய புத்திரர் அதிதன்வர் அந்த இந்த உத்கீதத்தை உதரசாண்டில்யருக்கு நிரூபணம் செய்து இவ்வாறு கூறினார்- எதுவரை உன்னுடைய சந்ததியினர் (உன் வம்சத்தில் பிறந்தவர்கள்) இந்த உத்கீதத்தை அறிந்திருக்கிறார்களோ அதுவரை இந்த லோகத்தில் அவர்களின் ஜீவனம் மேலும் மேலும் மிக சிறந்ததாக, மேன்மையானதாக ஆகும்.
किं च तमेतमुद्गीथं विद्वान् अतिधन्वा नामतः, शुनकस्यापत्यं शौनकः, उदरशाण्डिल्याय शिष्याय एतम् उद्गीथदर्शनम् उक्त्वा उवाच — यावत् ते तव प्रजायाम् , प्रजासन्ततावित्यर्थः, एनम् उद्गीथं त्वत्सन्ततिजा वेदिष्यन्ते ज्ञास्यन्ति, तावन्तं कालं परोवरीयो हैभ्यः प्रसिद्धेभ्यो लौकिकजीवनेभ्यः उत्तरोत्तरविशिष्टतरं जीवनं तेभ्यो भविष्यति ॥
அனுவாதம் - மேலும் இந்த உத்கீதத்தை அறிந்தவரான அதிதன்வா என்ற பெயருடைய செளனகர் - சுனகருடைய புத்திரர் தன்னுடைய சிஷ்யனான உதரசாண்டில்யருக்கு உத்கீதத் தர்சனத்தை விளக்கி இவ்வாறு கூறினார் - எதுவரை உன்னுடைய சந்ததியினர் அதாவது உன் குலத்தில் பிறந்தவர்கள் உத்கீதத்தை அறிந்திருக்கின்றார்களோ அதுவரை அவர்கள் பிரசித்தமான லெளகிக ஜீவனங்களைக் காட்டிலும் மிகச்சிறப்பான மேன்மையான ஜீவனத்தை அடைவார்கள்.
तथामुष्मिंल्लोके लोक इति स य एतमेवं विद्वानुपास्ते परोवरीय एव हास्यास्मिंल्लोके जीवनं भवति तथामुष्मिंल्लोके लोक इति लोके लोक इति ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - அவ்வாறே பரலோகத்திலும் அதைவிட மிகசிறந்த லோகத்தை அடைகின்றனர். எவர் இதனால் இந்த விதமாக அறிந்தவர் இதை உபாசனை செய்கின்றனர். அவர்களுடைய ஜீவனம் நிச்சயமாக இந்த லோகத்தில் மிகச்சிறந்ததாக இருக்கும். அவ்வாறே பரலோகத்திலும் இதைவிட மிகச்சிறந்த லோகத்தை அடைவர். அதைவிட மேலான லோகத்தை அடைவர்.
तथा अदृष्टेऽपि परलोके अमुष्मिन् परोवरीयांल्लोको भविष्यतीत्युक्तवान् शाण्डिल्याय अतिधन्वा शौनकः । स्यादेतत्फलं पूर्वेषां महाभाग्यानाम् , नैदंयुगीनानाम् — इत्याशङ्कानिवृत्तये आह — स यः कश्चित् एतमेवं विद्वान् उद्गीथम् एतर्हि उपास्ते, तस्याप्येवमेव परोवरीय एव ह अस्य अस्मिंल्लोके जीवनं भवति तथा अमुष्मिंल्लोके लोक इति ॥
அனுவாதம் - அவ்வாறே அதிருஷ்ட பலத்திலும் பரலோகத்திலும் அதைவிட மேலான மேலான மிகச்சிறந்த லோகத்தின் பிராப்த்தி உண்டாகும் என்று சுனக புத்திரர் அதிதன்வர் சாண்டில்யர்க்கு இவ்வாறு பதில் அளித்தார் - இந்த பலம் முன்னோர்களின் மஹா பாக்கியசாலிகளால் அடையப்பட்டது. இந்த யுகத்தில் உள்ள புருஷர்களால் அடைய முடியாது என்ற சங்கையை (சந்தேஹத்தை) நிவிர்த்தி செய்வதற்காக சுருதி இவ்வாறு கூறுகிறது - எவர் ஒருவர் இவ்வாறு அறிந்து உத்கீதத்தை உபாசனை செய்கிறாரோ அவரும் இந்த லோகத்தில் அவ்வாறு மேலான மேலான மிகச்சிறந்த ஜீவனம் ஏற்படுகிறது. அவ்வாறே பரலோகத்திலும் அதைவிட அதைவிட மிகச்சிறந்த லோகத்தை அடைகின்றான்.
इति नवमखण्डभाष्यम् ॥
मटचीहतेषु कुरुष्वाचिक्या सह जाययोषस्तिर्ह चाक्रायण इभ्यग्रामे प्रद्राणक उवास ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - குரு தேசத்தில் மிகுந்த ஆலங்கட்டி மழையில் யானைப் பாகர்களின் கிராமத்தில் சக்ரருடைய புத்திரர் உஷஸ்த்தி தன் திறமையான சிறுமியாகிய பத்தினியுடன் மிகுந்த வறுமையுடன் கஷ்ட நிலையில் வசித்துவந்தார்.
उद्गीथोपासनप्रसङ्गेन प्रस्तावप्रतिहारविषयमप्युपासनं वक्तव्यमितीदमारभ्यते ; आख्यायिका तु सुखावबोधार्था ।
அனுவாதம் - அ.கை - உத்கீத உபாசனா சம்பந்தத்தால் प्रस्तावप्रतिहारविषयम् (பிரஸ்தாவபிரதிஹார-விஷயம் = அதனை பக்தியுடன் அதில் ஈடுபடும் விஷயம்) அதனைக் குறித்த உபாசனையை கூறவேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்படுகிறது. இதை கதை மூலமாக சுலபமாக அறிந்துகொள்வதற்காக ஆரம்பிக்கப்படுகிறது
मटचीहतेषु मटच्यः अशनयः ताभिर्हतेषु नाशितेषु कुरुषु कुरुसस्येष्वित्यर्थः । ततो दुर्भिक्षे जाते आटिक्या अनुपजातपयोधरादिस्त्रीव्यञ्जनया सह जायया उषस्तिर्ह नामतः, चक्रस्यापत्यं चाक्रायणः ; इभो हस्ती तमर्हतीति इभ्यः ईश्वरः, हस्त्यारोहो वा, तस्य ग्रामः इभ्यग्रामः तस्मिन् ; प्रद्राणकः अन्नालाभात् , ‘द्रा कुत्सायां गतौ’, कुत्सितां गतिं गतः, अन्त्यावस्थां प्राप्त इत्यर्थः ; उवास उषितवान् कस्यचिद्गृहमाश्रित्य ॥
அனுவாதம் - (குரு தேசத்தில்)பனிக்கட்டி மழை புயல் வீசியதால் குருதேசம் சிதிலமடைந்ததன் காரணமாக வறுமை ஏற்பட்டு தன்னுடைய வயதிற்குவராத சிறு பெண்ணான மனைவியுடன் உஷஸ்தர் என்ற பெயருடைய சாக்ராயணர் அதாவது சக்ரரின் புத்திரர் “इभ्य” (இப்ய) யானைக்குத் தலைவன் அல்லது யானையின் மேல் அமர்பவனுடைய கிராமம் இப்ய (யானைப்பாகன்) கிராமம். இந்த கிராமத்தில் அன்னம் கிடைக்காததால் வறுமையில் துன்பப்பட்டார். (प्रद्राण) (வறுமை) “द्रा” என்ற தாது தாழ்மையான கதியைக் குறிக்கும் அர்த்தமாகிறது. யாரோ ஒருவருடைய கிரஹத்தை ஆஸ்ரயித்து வசித்துவந்தார்.
स हेभ्यं कुल्माषान्खादन्तं बिभिक्षे तꣳ होवाच । नेतोऽन्ये विद्यन्ते यच्च ये म इम उपनिहिता इति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அவர் உளுந்தினால் செய்யப்பட்ட பதார்த்தத்தை சாப்பிட்டுக்கொண்டிருந்த யானைப்பாகனிடம் அதனை யாசித்தார். அப்பொழுது அவன் கூறினான் - இந்த எச்சில் செய்யப்பட்ட இந்த பதார்த்தத்தை தவிர வேறு என்னிடம் இல்லை. மேலும் எது என்னிடம் உள்ளதோ அதை என் போஜன பாத்திரத்தில் வைத்துவிட்டேன். ஆகையால் நான் எவ்வாறு தங்களுடைய யாசகத்தைப் பூர்த்தி செய்வேன்.
सः अन्नार्थमटन् इभ्यं कुल्माषान् कुत्सितान्माषान् खादन्तं भक्षयन्तं यदृच्छयोपलभ्य बिभिक्षे याचितवान् । तम् उषस्तिं ह उवाच इभ्यः — न इतः, अस्मान्मया भक्ष्यमाणादुच्छिष्टराशेः कुल्माषा अन्ये न विद्यन्ते ; यच्च ये राशौ मे मम उपनिहिताः प्रक्षिप्ताः इमे भाजने, किं करोमि ;
அனுவாதம் - அவர் அன்னத்திற்காக அங்கும் இங்கும் அலையும்பொழுது எதேச்சையாக ஒரு யானைப்பாகன் வேண்டத்தகாத உளுந்தினால் செய்யப்பட்ட பண்டத்தை சாப்பிடுவதைப்பார்த்து அவனிடம் யாசனை செய்தார். அந்த யானைப்பாகன் உஷஸ்தரிடம் கூறினான் - இது சரியல்ல. ஏன் எனில் என்னால் சாப்பிட்டு எச்சில் படுத்தப்பட்ட உளுந்து பதார்தத்தை தவிர வேறு என்னிடம் இல்லை. என்னிடம் உள்ள எல்லாவற்றையும் இந்த ஒன்றாக இந்த பாத்திரத்தில் வைத்துவிட்டேன். நான் என்ன செய்வேன்?
एतेषां मे देहीति होवाच तानस्मै प्रददौ हन्तानुपानमित्युच्छिष्टं वै मे पीतꣳ स्यादिति होवाच ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - நீ அவற்றை எனக்குக்கொடு என்று உஷஸ்தியர் கூறினார். அப்பொழுது யானைப்பாகன் அவருக்கு அந்த உளுந்து பண்டத்தை கொடுத்துவிட்டு குடிப்பதற்கு இந்த ஜலத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினான். அதற்கு அவர் கூறினார் இதை நான் ஏற்றுக்கொண்டால் நிச்சயமாக எச்சில் ஜலத்தை குடித்ததாக ஆகும் என்று.
इत्युक्तः प्रत्युवाच उषस्तिः —
அனுவாதம் - அ.கை - இவ்வாறு கூறப்பட்ட உஷஸ்தி பதில் அளித்தார் -
एतेषाम् एतानित्यर्थः, मे मह्यं देहीति ह उवाच ; तान् स इभ्यः अस्मै उषस्तये प्रददौ प्रदत्तवान् । पानाय समीपस्थमुदकं च गृहीत्वा उवाच — हन्त गृहाणानुपानम् ; इत्युक्तः प्रत्युवाच — उच्छिष्टं वै मे मम इदमुदकं पीतं स्यात् , यदि पास्यामि ।
அனுவாதம் - இவைகளை எனக்குக் கொடு என்று கூறினார். அவைகளை யானைப்பாகன் உஷஸ்தரிடம் அளித்தான். அதனுடன் குடிப்பதற்காக அருகில் இருந்த ஜலத்தை ஏற்றுக்கொள்ள கூறியபொழுது அதற்கு உஷஸ்தர் கூறினார் - நான் இந்த ஜலத்தை குடித்தால் அது எச்சிலை குடித்ததாக ஆகிவிடும் என்று.
न स्विदेतेऽप्युच्छिष्टा इति न वा अजीविष्यमिमानखादन्निति होवाच कामो म उदपानमिति ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - என்ன அந்த (உளுந்து) பண்டமும் எச்சில் இல்லையா? அதற்குக் கூறினார் - இதை சாப்பிடவில்லை யெனில் ஜீவிக்கமுடியாது. ஜலத்தை அருந்துவதோ என்னுடைய இச்சையினால் ஆகிறது என்று.
इत्युक्तवन्तं प्रत्युवाच इतरः —
அனுவாதம் - இவ்வாறு கூறியதற்கு மற்றவர் பதில் அளிக்கிறார் -
किं न स्विदेते कुल्माषा अप्युच्छिष्टाः, इत्युक्तः आह उषस्तिः — न वै अजीविष्यं नैव जीविष्यामि इमान् कुल्माषान् अखादन् अभक्षयन् इति होवाच । कामः इच्छातः मे मम उदकपानं लभ्यत इत्यर्थः ।
அனுவாதம் - என்ன அந்த எச்சில் உளுந்து பண்டம் எச்சில் இல்லையா? என்றதற்கு உஷஸ்தர் கூறினார் - அல்ல ஏன்எனில் இந்த உளுந்து பண்டத்தை சாப்பிடவில்லையெனில் ஜீவிக்கமுடியாது என்றார். நான் இந்த ஜலத்தை அருந்துவது ஆசையினால் (இச்சையினால்) என்று ஆகிவிடும் என்பது பொருள்.
अतश्चैतामवस्थां प्राप्तस्य विद्याधर्मयशोवतः स्वात्मपरोपकारसमर्थस्यैतदपि कर्म कुर्वतो न अघस्पर्श इत्यभिप्रायः । तस्यापि जीवितं प्रति उपायान्तरेऽजुगुप्सिते सति जुगुप्सितमेतत्कर्म दोषाय ; ज्ञानावलेपेन कुर्वतो नरकपातः स्यादेवेत्यभिप्रायः, प्रद्राणकशब्दश्रवणात् ॥
அனுவாதம் - ஆகையால் இந்த வறுமையான நிலையில் வித்யா, தர்மம், புகழ் உடையவன் அவ்வாறே தனக்கும் பிறருக்கும் உபகாரம் செய்வதில் சமர்த்தனாய் இருப்பவன் இவ்வாறான கர்மம் செய்தாலும் அவனை பாபம் (அண்டாது) ஸ்பரிசிக்காது என்பது அபிப்பிராயம். அவனும் ஜீவனத்திற்காக வேறு நிந்திக்கத்தகாத உபாயத்தை மேற்கொண்டாலும் அந்த கர்மம் நிந்தைக்கு உரிய கர்மமேயாகும். நான் மிகவும் அறிந்தவன் என்ற கர்வத்தால் இவ்வாறு கர்மம் செய்பவன் நரகத்திலேயே விழுவான் என்பது இதன் அபிப்பிராயம் அவ்வாறே சுருதியிலும் “प्रद्राणक” (ப்ரத்ராணக - துர்கதி அவஸ்தை) என்ற சப்தம் இருப்பதால் சித்திக்கிறது.
स ह खादित्वातिशेषाञ्जायाया आजहार साग्र एव सुभिक्षा बभूव तान्प्रतिगृह्य निदधौ ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - அவர் சாப்பிட்டுவிட்டு மீதமுள்ள (உளுந்து) பண்டத்தை தன்னுடைய மனைவிக்காக எடுத்துச்சென்றார். அதற்கு முன்பே பத்தினி நல்ல அன்னத்தைப் பெற்றிருந்தார். ஆகையால் அந்த பண்டத்தை எடுத்து தனியாக வைத்தாள்.
तांश्च स खादित्वा अतिशेषान् अतिशिष्टान् जायायै कारुण्यादाजहार ; सा आटिकी अग्रे एव कुल्माषप्राप्तेः सुभिक्षा शोभनभिक्षा, लब्धान्नेत्येतत् , बभूव संवृत्ता ; तथापि स्त्रीस्वाभाव्यादनवज्ञाय तान्कुल्माषान् पत्युर्हस्तात्प्रतिगृह्य निदधौ निक्षिप्तवती ॥
அனுவாதம் - அவர் சாப்பிட்டபின் மீதி பண்டத்தை கருணையுடன் தன் மனைவிக்காக கொண்டுவந்தார். அந்த சிறுவயது மனைவி. இந்த உளுந்து பண்டம் அடைவதற்கு முன்பே நல்ல அன்னத்தை அடைந்தாள். ஆனாலும் ஸ்திரீ ஸ்வபாவத்தால் அதை அவமதிக்காமல் அந்த உளுந்து பண்டத்தை கணவனுடைய கரங்களில் இருந்து அதை வாங்கிவைத்தார்.
स ह प्रातः सञ्जिहान उवाच यद्बतान्नस्य लभेमहि लभेमहि धनमात्राꣳ राजासौ यक्ष्यते स मा सर्वैरार्त्विज्यैर्वृणीतेति ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - அவர் அதிகாலையில் நித்திரையைவிட்டு எழுந்து அதன்பிறகு கூறினார் - நமக்கு ஏதாவது அன்னம் கிடைத்தால் நாம் சிறிது தனத்தை அடையலாம் ஏன்எனில் அந்த ராஜா யக்ஞம் செய்பவர். அவர் எல்லா ரித்விக் கர்மங்களுக்காக என்னை வரித்துக்கொள்வார்.
स तस्याः कर्म जानन् प्रातः उषःकाले सञ्जिहानः शयनं निद्रां वा परित्यजन् उवाच पत्न्याः शृण्वन्त्याः — यत् यदि बतेति खिद्यमानः अन्नस्य स्तोकं लभेमहि, तद्भुक्त्वान्नं समर्थो गत्वा लभेमहि धनमात्रां धनस्याल्पम् ; ततः अस्माकं जीवनं भविष्यतीति ।
அனுவாதம் - அவர் அவளுடைய கர்மத்தை (அதாவது அவளுடைய செயலை) அறிந்திருந்தார். ஆகையால் அதிகாலையில் தூக்கத்தைவிட்டு எழுந்து அல்லது தூக்கத்தை தியாகம் செய்து தன்னுடைய பத்தினி கேட்கும்படி கூறினார். சிறிது அளவாவது அன்னம் இருந்தால் அதை அடைந்து சாப்பிட்ட அன்னத்தால் சாமர்த்தியம் உடையவனாகி சென்று சிறிது அளவாவது தனத்தை அடைவேன். அதனால் நம் ஜீவனம் நன்றாக அமையும் என்று கூறினார்.
धनलाभे च कारणमाह — राजासौ नातिदूरे स्थाने यक्ष्यते ; यजमानत्वात्तस्य आत्मनेपदम् ; स च राजा मा मां पात्रमुपलभ्य सर्वैरार्त्विज्यैः ऋत्विक्कर्मभिः ऋत्विक्कर्मप्रयोजनायेत्यर्थः वृणीतेति ॥
அனுவாதம் - தனத்தை அடைவதில் காரணம் கூறப்படுகிறது - அந்த ராஜா சிறிது தூரமுள்ள இடத்தில் யக்ஞம் செய்வார். இங்கு யஜமானனாவதால் யக்ஞம் செய்வது (यक्ष्यते) என்பதில் ஆத்மனேபதம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. அந்த ராஜா என்னை நல்ல பாத்திரமாக அறிந்து எல்லா ரித்விக் கர்மங்களுக்காக அதாவது ரித்விக் கர்மங்களை செய்விப்பதற்கான பிரயோஜனத்திற்காக என்னை வரிப்பார் (என்னை ஏற்றுக்கொள்வார்) என்பதாகும்.
तं जायोवाच हन्त पत इम एव कुल्माषा इति तान्खादित्वामुं यज्ञं विततमेयाय ॥ ७ ॥
மந்த்ரார்த்தம் - அவரிடம் அவருடைய பத்தினி கூறினார் - ஸ்வாமின்! நீங்கள் அளித்த அந்த உளுந்து பண்டமே உள்ளது என்றாள். (உஷஸ்தி) அதை உண்டுவிட்டு யக்ஞம் நடைபெறும் இடத்திற்குச் சென்றார்.
एवमुक्तवन्तं जायोवाच — हन्त गृहाण हे पते इमे एव ये मद्धस्ते विनिक्षिप्तास्त्वया कुल्माषा इति । तान्खादित्वा अमुं यज्ञं राज्ञो विततं विस्तारितमृत्विग्भिः एयाय ॥
அனுவாதம் - இவ்வாறு கூறப்பட்டவருக்கு மனைவி கூறினார் - ஹே ஸ்வாமின்! இந்த எந்த உளுந்து பண்டம் உங்களால் என் கைகளில் கொடுக்கப்பட்டதோ அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவைகளை உண்டு அந்த ராஜாவால் நடத்தப்படும் யக்ஞத்தில் அதாவது ரித்விக் ஜனங்கள் மூலமாய் நடத்தப்படும் யக்ஞத்திற்குச் சென்றார்.
तत्रोद्गातॄनास्तावे स्तोष्यमाणानुपोपविवेश स ह प्रस्तोतारमुवाच ॥ ८ ॥
மந்த்ரார்த்தம் - அங்கு (சென்று) யக்ஞசாலையில் ஸ்துதிசெய்து கானம் செய்யும் உத்காதாக்களின் சமீபத்தில் அமர்ந்து பிரஸ்தோதரரிடம் அதாவது புரோஹிதர்களிடம் கூறினார். (பிரதிஹார பக்தியைப் பாடுபவர்கள் பிரதிஹர்த்ரு புரோஹிதர்கள்)
तत्र च गत्वा, उद्गातॄन् उद्गातृपुरुषानागत्य, आ स्तुवन्त्यस्मिन्निति आस्तावः तस्मिन्नास्तावे स्तोष्यमाणान् उपोपविवेश समीपे उपविष्टस्तेषामित्यर्थः । उपविश्य च स ह प्रस्तोतारमुवाच ॥
அனுவாதம் - அங்கு சென்று உத்காத்ரு புருஷர்கள் வந்து ஸ்துதியை கானம் இதில் செய்வர் என்பது ஆஸ்தாவம். அந்த ஆஸ்தாவனத்தில் ஸ்துதியை கானம் செய்பவர்கள் சமீபத்தில் அமர்ந்தார்.
प्रस्तोतर्या देवता प्रस्तावमन्वायत्ता तां चेदविद्वान्प्रस्तोष्यसि मूर्धा ते विपतिष्यतीति ॥ ९ ॥
மந்த்ரார்த்தம் - ஹே ப்ரஸ்தோத! எந்த தேவதை பிரஸ்தாவ பக்தியில் அனுகதமாய் உள்ளதோ அதை அறியாமல் பிரஸ்தாவனம் செய்தால் உன்னுடைய தலை விழுந்துவிடும்.
हे प्रस्तोतः इत्यामन्त्र्य अभिमुखीकरणाय, या देवता प्रस्तावं प्रस्तावभक्तिम् अनुगता अन्वायत्ता, तां चेत् देवतां प्रस्तावभक्तेः अविद्वान्सन् प्रस्तोष्यसि, विदुषो मम समीपे — तत्परोक्षेऽपि चेत् विपतेत्तस्य मूर्धा, कर्ममात्रविदामनधिकार एव कर्मणि स्यात् ; तच्चानिष्टम् , अविदुषामपि कर्मदर्शनात् , दक्षिणमार्गश्रुतेश्च ; अनधिकारे च अविदुषामुत्तर एवैको मार्गः श्रूयेत ; न च स्मार्तकर्मनिमित्त एव दक्षिणः पन्थाः, ‘यज्ञेन दानेन’ (बृ. उ. ६ । २ । १६) इत्यादिश्रुतेः ; ‘तथोक्तस्य मया’ (छा. उ. १ । ११ । ५), (छा. उ. १ । ११ । ७), (छा. उ. १ । ११ । ९) इति च विशेषणाद्विद्वत्समक्षमेव कर्मण्यनधिकारः, न सर्वत्राग्निहोत्रस्मार्तकर्माध्ययनादिषु च ; अनुज्ञायास्तत्र तत्र दर्शनात् , कर्ममात्रविदामप्यधिकारः सिद्धः कर्मणीति — मूर्धा ते विपतिष्यतीति ॥
அனுவாதம் - ஹே ப்ரஸ்தோத! இவ்வாறு தன்னைக்குறித்து ஒருமுகப்படுத்துவதற்கு இவ்வாறு அழைத்துக் கூறினார் - எந்த தேவதையின் பிரஸ்தாவம் - அதாவது பிரஸ்தாவ பக்தியில் எது அனுகதமாய் (ஊடுறுவி) இருக்கிறதோ அந்த பிரஸ்த்தாவபக்தி தேவதையை அறியாமல் அதை அறிந்த என்னிடம் பிரஸ்தாவனம் செய்தால் உன்னுடைய தலை விழுந்துவிடும். அது பரோக்ஷமானாலும் கர்மம் மட்டும் அறிந்தவன் கர்மத்தில் அதிகாரம் அற்றவன் ஆகின்றான். அது சரியானது அல்ல. ஏன்எனில் தக்ஷிணமார்க்க சுருதியிலும் அவித்வான்களுக்கும் (அறியாதவர்களுக்கும்) கர்மம் காணப்படுவதாலும் ஆகும். அதிகாரம் (பிரஸ்தாரம் - உத்கீத பக்தி) அற்றதிலும் அவித்வான்களுக்கு உத்தர மார்க்கத்தில் ஒரே மார்க்கம் சுருதியில் பிரதிபாதனம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்த்த கர்ம நிமித்தமும் அல்ல தக்ஷிணமார்க்கம். ஏன் எனில் “यज्ञेन दानेन” (யக்ஞேன தானேன) என்று சுருதியிலும் காணப்படுகிறது. “तथोक्तस्य मया” (யத்தோக்தஸ்ய மயா = என்னால் எவ்வாறு கூறப்பட்டதோ) என்ற விசேஷணத்தால் வித்வான்களுக்கு சமமாக அவர்களுக்கு கர்மத்தில் அதிகாரம் இல்லை. எங்கும் அக்னி ஹோத்திரம், ஸ்மார்த்த கர்மம், அத்யயனம் முதலியவைகளில் இவ்வாறான நியமம் இல்லை. ஏன்எனில் (அக்ஞானிக்கும்) அனுக்ஞை காணப்படுகிறது. ஆகையால் இதனால் கேவலம் கர்மமாத்திரம் அறிந்திருந்தாலும் கர்மத்தில் அதிகாரம் இருக்கிறது என்று சித்திக்கின்றது. அறியாமல் செய்தால் தலை கீழே விழுந்துவிடும் என்று கூறப்பட்டது.
एवमेवोद्गातारमुवाचोद्गातर्या देवतोद्गीथमन्वायत्ता तां चेदविद्वानुद्गास्यसि मूर्धा ते विपतिष्यतीति ॥ १० ॥
மந்த்ரார்த்தம் - இவ்வாறு அவர் உத்காதாவிடம் கூறினார் - ஹே உத்காதா! எந்த தேவதை உத்கீதத்தில் அனுகதமாய் உள்ளதோ அதை நீ அறியாமல் உத்கானம் செய்தால் உன்னுடைய தலை விழுந்துவிடும் என்று.
एवमेव प्रतिहर्तारमुवाच प्रतिहर्तर्या देवता प्रतिहारमन्वायत्ता तां चेदविद्वान्प्रतिहरिष्यसि मूर्धा ते विपतिष्यतीति ते ह समारतास्तूष्णीमासाञ्चक्रिरे ॥ ११ ॥
மந்த்ரார்த்தம் - இவ்வாறே அவர் பிரதிஹர்த்தாவிடமும் கூறினார் - ஹே பிரதிஹர்த்த! எந்த தேவதை பிரதிஹர்த்தாவில் அனுகதமாய் உள்ளதோ அதை அறியாமல் பிரதிஹரணம் செய்தால் உன்னுடைய தலை விழுந்துவிடும் என்று. அப்பொழுது பிரஸ்த்தோதா முதலியவர்கள் தங்கள் தங்கள் கர்மங்களில் இருந்து விலகி மெளனமாக அமர்ந்திருந்தார்கள்.
एवमेवोद्गातारं प्रतिहर्तारमुवाचेत्यादि समानमन्यत् । ते प्रस्तोत्रादयः कर्मभ्यः समारताः उपरताः सन्तः मूर्धपातभयात् तूष्णीमासाञ्चक्रिरे अन्यच्चाकुर्वन्तः, अर्थित्वात् ॥
அனுவாதம் - அவ்வாறே உத்காத்தாரம் பிரதிஹர்த்தாரம் கூறினார் என்பது எல்லாம் சமானமாகும். அந்த பிரஸ்தோத்தா முதலியவர்கள் கர்மங்களிலிருந்து விலகி தலை விழுந்துவிடும் என்ற பயத்தால் அதைப்பற்றி அவரிடம் வேண்டி அறிந்துகொள்வதற்காக மெளனமாக அமர்ந்து இருந்தார்கள்.
इति दशमखण्डभाष्यम् ॥
अथ हैनं यजमान उवाच भगवन्तं वा अहं विविदिषाणीत्युषस्तिरस्मि चाक्रायण इति होवाच ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - அப்பொழுது அவரிடம் யஜமானன் கூறினார்- நான் ஶ்ரீமானாகிய தங்களை அறிய விரும்புகிறேன். இதற்கு அவர் கூறினார்- நான் சக்ரருடைய புத்திரன் உஷஸ்தி என்று.
अथ अनन्तरं ह एनम् उषस्तिं यजमानः राजा उवाच भगवन्तं पूजावन्तम् वै अहं विविदिषाणि वेदितुमिच्छामि ; इत्युक्तः उषस्तिः अस्मि चाक्रायणः तवापि श्रोत्रपथमागतो यदि — इति ह उवाच उक्तवान् ॥
அனுவாதம் - அதன் பின் இந்த உஷஸ்த்தரிடம் யஜமானனாகிய ராஜா இவ்வாறு கூறினார் - நான் ஶ்ரீமானாகிய பூஜைக்குரியவராகிய நீங்கள் யார் என்று அறிந்துகொள்ள விரும்புகின்றேன். கூறினார் அதற்கு நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள் நான் சாக்ராயண உஷஸ்தி என்று கூறினார்.
स होवाच भगवन्तं वा अहमेभिः सर्वैरार्त्विज्यैः पर्यैषिषं भगवतो वा अहमवित्त्यान्यानवृषि ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - (அந்த ராஜா) அவர் கூறினார் - நான் இந்த எல்லா ரித்விக் கர்மங்களுக்காக உங்களைத் தேடினேன். ஶ்ரீமானாகிய நீங்கள் கிடைக்காததால் நான் வேறு ரித்விக்களை நியமித்தேன் என்று.
स ह यजमानः उवाच — सत्यमेवमहं भगवन्तं बहुगुणमश्रौषम् , सर्वैश्च ऋत्विक्कर्मभिः आर्त्विज्यैः पर्यैषिषं पर्येषणं कृतवानस्मि ; अन्विष्य भगवतो वा अहम् अवित्त्या अलाभेन अन्यानिमान् अवृषि वृतवानस्मि ॥
அனுவாதம் - அந்த யஜமானன் கூறினார் - நீர் கூறுவது உண்மையே. நான் மிகுந்த நற்குணங்களுடைய தங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த எல்லா ரித்விக் கர்மங்களுக்காக உங்களைத் தேடினேன். தேடியும் நீங்கள் கிடைக்காததால் மற்றவர்களை நியமித்தேன் என்று.
भगवाꣳस्त्वेव मे सर्वैरार्त्विज्यैरिति तथेत्यथ तर्ह्येत एव समतिसृष्टाः स्तुवतां यावत्त्वेभ्यो धनं दद्यास्तावन्मम दद्या इति तथेति ह यजमान उवाच ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - என்னுடைய எல்லா ரித்விக் கர்மங்களையும் ஶ்ரீமானாகிய நீங்களே முன்னின்று நடத்தித் தர வேண்டும் என்பதைக் கூறக்கேட்டு (அவர்) சரி என்று இவ்வாறு கூறினார் - நல்லது நான் அவர்களுக்கு சந்தோஷமாக ஆக்ஞை அளிக்கின்றேன். அவர்கள் ஸ்துதி செய்யட்டும். மேலும் நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு தனம் தருகின்றீரோ அவ்வளவு தனம் எனக்கும் நீங்கள் அளிக்க வேண்டும். அப்பொழுது யஜமானன் அவ்வாறே ஆகட்டும் என்று கூறினார்.
अद्यापि भगवांस्त्वेव मे मम सर्वैरार्त्विज्यैः ऋत्विक्कर्मार्थम् अस्तु, इत्युक्तः तथेत्याह उषस्तिः ; किं तु अथैवं तर्हि एते एव त्वया पूर्वं वृताः मया समतिसृष्टाः मया संयक्प्रसन्नेनानुज्ञाताः सन्तः स्तुवताम् ; त्वया त्वेतत्कार्यम् — यावत्त्वेभ्यः प्रस्तोत्रादिभ्यः सर्वेभ्यो धनं दद्याः प्रयच्छसि, तावन्मम दद्याः ; इत्युक्तः तथेति ह यजमानः उवाच ॥
அனுவாதம் - இன்றும் ஶ்ரீமானாகிய தாங்களே என்னுடைய எல்லா ரித்விக் கர்மங்களுக்கும் நீங்களே நடத்திக்கொடுக்க வேண்டும் என்று கூற அதற்கு உஷஸ்தி சரி என்றார். ஆனால் இப்பொழுது நீ முன்பு எந்த ரித்விக் ஜனங்களை நியமித்தாயோ அவர்களுக்கு என் மூலமாக சந்தோஷமாக அடைந்த ஆக்ஞையால் (அனுமதியால்) ஸ்தவனம் (ஸ்துதி) செய்யட்டும் என்று கூறினார். மேலும் உன்னால் அந்த காரியம் அதாவது அந்த எல்லா பிரஸ்தோத்ரா முதலியவர்களுக்கு எவ்வளவு தனம் அளிக்கின்றாயோ அவ்வளவு தனம் எனக்கு அளிக்க வேண்டும் என்று உஷஸ்தி கூற யஜமானன் அவ்வாறே ஆகட்டும் என்று கூறினார்.
अथ हैनं प्रस्तोतोपससाद प्रस्तोतर्या देवता प्रस्तावमन्वायत्ता तां चेदविद्वान्प्रस्तोष्यसि मूर्धा ते विपतिष्यतीति मा भगवानवोचत्कतमा सा देवतेति ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - அதன்பின் அவரிடம் (உஷஸ்தியிடம்) வினயமாக பிரஸ்தோதா வந்து (இவ்வாறு கூறினார்) ஶ்ரீமானாகிய நீங்கள் என்னிடம் கூறியதாவது ஹே ப்ரஸ்தோதா! எந்த தேவதை ப்ரஸ்தோதாவில் அனுகதமாய் உள்ளதோ அதை அறியாமல் நீ பிரஸ்தவனம் செய்தால் உன்னுடைய தலை விழுந்துவிடும் என்று கூறினீர். அந்த தேவதை எது?
अथ ह एनम् औषस्त्यं वचः श्रुत्वा प्रस्तोता उपससाद उषस्तिं विनयेनोपजगाम । प्रस्तोतर्या देवतेत्यादि मा मां भगवानवोचत्पूर्वम् — कतमा सा देवता या प्रस्तावभक्तिमन्वायत्तेति ॥
அனுவாதம் - அதன்பின் உஷஸ்தியின் வசனத்தைக் கேட்டு அவரிடம் வினய பாவத்துடன் பிரஸ்தோதா இவ்வாறு கூறினார் - ஶ்ரீமானாகிய நீங்கள் இதற்கு முன் ஹே ப்ரஸ்தோதா! எந்த தேவதை ப்ரஸ்தாவில் அனுகதமாய் உள்ளதோ என்று கூறினீர்கள். அந்த தேவதை யார்? அதாவது எது ப்ரஸ்தாவ பக்தியில் அனுகதமாய் உள்ளதோ அந்த தேவதை யார்?
प्राण इति होवाच सर्वाणि ह वा इमानि भूतानि प्राणमेवाभिसंविशन्तिप्राणमभ्युज्जिहते सैषा देवता प्रस्तावमन्वायत्ता तां चेदविद्वान्प्रास्तोष्यो मूर्धा ते व्यपतिष्यत्तथोक्तस्य मयेति ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - அவர் (உஷஸ்தி) அது (அந்த தேவதை) பிராணன் என்று கூறினார். ஏன் எனில் எல்லா பூதராசிகளிலும் பிராணனில் பிரவேசித்து பிராணனாலேயே உத்பத்தி ஆகின்றன. அந்த பிராண தேவதை பிரஸ்தாவங்களில் அனுகதமாயிருக்கின்றது. ஆகையால் அதை அறியாமல் நான் கூறிய பின்னும் பிரஸ்தாவனம் செய்தால் தலை விழுந்துவிடும்.
पृष्टः प्राण इति ह उवाच ; युक्तं प्रस्तावस्य प्राणो देवतेति । कथम् ? सर्वाणि स्थावरजङ्गमानि भूतानि प्राणमेव अभिसंविशन्ति प्रलयकाले, प्राणमभिलक्षयित्वा प्राणात्मनैवोज्जिहते प्राणादेवोद्गच्छन्तीत्यर्थः उत्पत्तिकाले ; अतः सैषा देवता प्रस्तावमन्वायत्ता ।
அனுவாதம் - இவ்வாறு கேட்டதற்கு பிராணன் என்று கூறினார். பிரஸ்தாவத்திற்கு பிராணன் தேவதை என்று கூறுவது சரியே. எவ்வாறு? எல்லா ஸ்தாவர ஜங்கம் பிராணிகளும் பிரளயகாலத்தில் பிராணனிலேயே பிரவேசிக்கின்றன. அவ்வாறேபிராணனை வக்ஷியத்து பிராண ரூபமாக உத்பத்தி காலத்தில் வெளிப்படுகிறது. அதாவது பிராணனில் இருந்து உத்பத்தியாகின்றது. ஆகையால் அந்த தேவதையே பிரஸ்த்தாவத்தில் அனுகதமாய் இருக்கின்றது.
तां चेतविद्वान् त्वं प्रास्तोष्यः प्रस्तवनं प्रस्तावभक्तिं कृतवानसि यदि, मूर्धा शिरः ते व्यपतिष्यत् विपतितमभविष्यत् यथोक्तस्य मया तत्काले मूर्धा ते विपतिष्यतीति । अतस्त्वा साधु कृतम् ; मया निषिद्धः कर्मणो यदुपरमामकार्षिरित्यभिप्रायः ॥
அனுவாதம் - அதை (தேவதையை) அறியாமல் பிரஸ்தாவனம் அதாவது பிரஸ்த்தாவபக்தி செய்தால் உன் தலை விழுந்துவிடும் என்பது அந்த சமயத்தில் நான் இவ்வாறு கூறியதால் உன்னுடைய தலை நிச்சயம் விழுந்துவிடும். ஆகையால் இதன் அபிப்பிராயம் என்னவெனில் நான் நிராகரித்த பிறகும் செய்தால் கர்மத்திலிருந்து விலகுவதே நல்லது என்பதாகும்.
अथ हैनमुद्गातोपससादोद्गातर्या देवतोद्गीथमन्वायत्ता तां चेदविद्वानुद्गास्यसि मूर्धा ते विपतिष्यतीति मा भगवानवोचत्कतमा सा देवतेति ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - அதன்பின் அவர் சமீபத்திற்கு உத்காதா வந்து என்னிடம் ஶ்ரீமானாகிய நீர் கூறினீர். ஹே உத்காதா! உத்கீதத்தில் அனுகதமான தேவதையை அறியாமல் உத்கானம் செய்தால் உன்னுடைய தலை விழுந்து விடும் என்று கூறினீர்கள். அந்த தேவதை யார்?
तथोद्गाता पप्रच्छ कतमा सा उद्गीथभक्तिमनुगता अन्वायत्ता देवतेति ॥
அனுவாதம் - இவ்வாறு உத்காதா அந்த உத்கீத பக்தியில் அனுகதமான தேவதை யார்? என்று கேட்டார்.
आदित्य इति होवाच सर्वाणि ह वा इमानि भूतान्यादित्यमुच्चैः सन्तं गायन्ति सैषा देवतोद्गीथमन्वायत्ता तां चेतविद्वानुदगास्यो मूर्धा ते व्यपतिष्यत्तथोक्तस्य मयेति ॥ ७ ॥
மந்த்ரார்த்தம் - உஷஸ்தி அது ஆதித்யன் என்று இவ்வாறு கூறினார். ஏன்எனில் எல்லா பிராணிகளும் மேல்நோக்கி எழுந்து ஆதித்யனை கானம் செய்கின்றன. அந்த ஆதித்ய தேவதை உத்கீதத்தில் அனுகதமாய் உள்ளது. ஆகையால் நான் கூறியவாறு இதை அறியாமல் உத்கானம் செய்தால் உன் தலை விழுந்துவிடும் என்று கூறினார்.
पृष्टः आदित्य इति होवाच । सर्वाणि ह वा इमानि भूतानि आदित्यम् उच्चैः ऊर्ध्वं सन्तं गायन्ति शब्दयन्ति, स्तुवन्तीत्यभिप्रायः, उच्छब्दसामान्यात् , प्रशब्दसामान्यादिव प्राणः । अतः सैषा देवतेत्यादि पूर्ववत् ॥
அனுவாதம் - இவ்வாறு கேட்டதற்குக் கூறினார். ஆதித்யன் என்று. இந்த எல்லா பூதங்களும் உச்சியில் (மேலே) இருக்கும் ஆதித்தியனை கானம் செய்கின்றனர், சப்திக்கின்றனர், ஸ்துதிக்கின்றனர் என்பது அபிப்பிராயம். “प्रस्ताव” (பிரஸ்தாவத்தில்) உள்ள “प्र” (ப்ர) சப்தத்தால் சமானமாவதால் பிராணன் பிரஸ்தாவ தேவதாவோ அவ்வாறே “उद्गत, उद्गीथ” (உத்கத உத்கீத) என்பவைகளில் “उत” (உத்) என்ற சப்தம் ஆதித்யனிடம் சமானமானதால் உத்கீத தேவதாவாகும். ஆகையால் அந்த தேவதை முதலியவை முன்போல் ஆகும்
अथ हैनं प्रतिहर्तोपससाद प्रतिहर्तर्या देवता प्रतिहारमन्वायत्ता तां चेदविद्वान्प्रतिहरिष्यसि मूर्धा ते विपतिष्यतीति मा भगवानवोचत्कतमा सा देवतेति ॥ ८ ॥
மந்த்ரார்த்தம் - மேலும் பிரதி ஹர்த்தா அவரிடம் வந்து ஶ்ரீமானாகிய நீங்கள் என்ன கூறினீர்கள் எனில் - ஹே ப்ரதிஹர்தா! எந்த தேவதை பிரதிஹர்த்தாவில் அனுகதமாய் உள்ளதோ அதை அறியாமல் பிரதிஹரணம் செய்தால் உன்னுடைய தலை விழுந்துவிடும் என்று கூறினீர்கள். அந்த தேவதை யார்?
एवमेवाथ ह एनं प्रतिहर्ता उपससाद कतमा सा देवता प्रतिहारमन्वायत्तेति ॥
அனுவாதம் - இவ்வாறே மறுபடியும் பிரதிஹர்த்தா அருகில் வந்து பிரதிஹாரத்தில் அனுகதமான தேவதை யார்? என்று கேட்டார்.
अन्नमिति होवाच सर्वाणि ह वा इमानि भूतान्यन्नमेव प्रतिहरमाणानि जीवन्ति सैषा देवता प्रतिहारमन्वायत्ता तां चेदविद्वान्प्रत्यहरिष्यो मूर्धा ते व्यपतिष्यत्तथोक्तस्य मयेति तथोक्तस्य मयेति ॥ ९ ॥
மந்த்ரார்த்தம் - இதற்கு அவர் அது (தேவதை) அன்னம் என்று கூறினார். ஏன்எனில் எல்லா ஜீவர்களும் தங்களுக்காக அன்னத்தை உண்டு ஜீவிக்கின்றன. அந்த அன்ன தேவதை பிரதிஹாரத்தில் அனுகதமாகி உள்ளது. நான் கூறியவாறு இந்த தேவதையை அறியாமல் பிரதிஹரணம் செய்தால் உன்னுடைய தலை விழுந்துவிடும்.
पृष्टः अन्नमिति होवाच । सर्वाणि ह वा इमानि भूतान्यन्नमेव आत्मानं प्रति सर्वतः प्रतिहरमाणानि जीवन्ति । सैषा देवता प्रतिशब्दसामान्यात्प्रतिहारभक्तिमनुगता । समानमन्यत्तथोक्तस्य मयेति । प्रस्तावोद्गीथप्रतिहारभक्तीः प्राणादित्यान्नदृष्ट्योपासीतेति समुदायार्थः । प्राणाद्यापत्तिः कर्मसमृद्धिर्वा फलमिति ॥
அனுவாதம் - இவ்வாறு கேட்டதற்கு அன்னம் என்று கூறினார். இந்த எல்லா பிராணிகளும் தனக்காக அன்னத்தையே எவ்விதமாகவும் “प्रतिहरमाणानि” (பிரதிஹரமாணானி = சாப்பிட்டு) ஜீவிக்கின்றன. இந்த தேவதை “प्रति” (பிரதி) சப்தத்தில் சமானமாக இருப்பதால் பிரதிஹார பக்தியில் அனுகதமாய் உள்ளது. மற்றவை நான் முன்பு எவ்வாறு கூறியதற்கு சமானமாகும். பிரஸ்தாவ, உத்கீத, பிரதிஹார ஆகிய பக்திகளை கிரமமாக பிராண ஆதித்யன், அன்னம் ஆகிய திருஷ்டிகளால் உபாசனை செய்யவேண்டும் என்பது பொது அர்த்தமாகும். பிராணன் முதலியவைகளை அடைவது கர்மத்தினால் மிகுந்த பலனை அடைவது என்பது இந்த உபாசனையின் பலன் ஆகும்.
इति एकादशखण्डभाष्यम् ॥
अथातः शौव उद्गीथस्तद्ध बको दाल्भ्यो ग्लावो वा मैत्रेयः स्वाध्यायमुद्वव्राज ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - அதன்பின் இப்பொழுது (அன்னம் அடைவதற்கு அபேக்ஷிக்கப்படும்) செளவ (நாய்களின்) உத்கீதம் ஆரம்பிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் பிரசித்தமாக இருந்த தல்பகரின் புத்திரன் பகன் என்றும் அல்லது மித்திரருடைய புத்திரன் க்லாவன் ஸ்வாத்யாயனம் செய்வதற்காக (கிராமத்திற்கு வெளியே) நீர் நிலைக்குச் சென்றான்.
अतीते खण्डेऽन्नाप्राप्तिनिमित्ता कष्टावस्थोक्ता उच्छिष्टोच्छिष्टपर्युषितभक्षणलक्षणा ; सा मा भूदित्यन्नलाभाय अथ अनन्तरं शौवः श्वभिर्दृष्टः उद्गीथः उद्गानं साम अतः प्रस्तूयते ।
அனுவாதம் - சென்ற கண்டத்தில் அன்னத்தை அடைவதின் நிமித்தமாக உண்டான கஷ்ட அவஸ்தையில் எச்சிலை சாப்பிட வேண்டிய லக்ஷணம் மறுபடியும் ஏற்படக்கூடாது என்பதற்காக அன்னத்தை அடைவதற்கான “शौवः” (செளவ:=நாய்) நாயின் மூலமாய் காணப்படும் உத்கீதம் உத்கான சாமம் ஆரம்பிக்கப்படுகிறது.
तत् तत्र ह किल बको नामतः, दल्भस्यापत्यं दाल्भ्यः ; ग्लावो वा नामतः, मित्रायाश्चापत्यं मैत्रेयः ; वाशब्दश्चार्थे ; द्व्यामुष्यायणो ह्यसौ ; वस्तुविषये क्रियास्विव विकल्पानुपपत्तेः ; द्विनामा द्विगोत्र इत्यादि हि स्मृतिः ; दृश्यते च उभयतः पिण्डभाक्त्वम् ; उद्गीथे बद्धचित्तत्वात् ऋषावनादराद्वा । वा - शब्दः स्वाध्यायार्थः । स्वाध्यायं कर्तुं ग्रामाद्बहिः उद्वव्राज उद्गतवान्विविक्तदेशस्थोदकाभ्याशम् ।
அனுவாதம் - அங்கு மிகவும் பிரபலமானவர் பகர் என்ற பெயருடைய தல்பருடைய புத்திரன் தால்பியர் அல்லது க்லவர் என்ற பெயருடைய மித்திரருடைய புத்திரன் மைத்ரேயர் இருந்தார். இங்கு “वा” “च” (வா = அல்லது) என்ற (ச), “च” இரண்டு என்ற சப்தம் மேலும் என்ற அர்த்தத்தில் உள்ளது. ஏன் எனில் வஸ்து விஷயத்தில் க்ரியைகளைப் போல் விகல்பம் இல்லாததால் ஆகும். “द्विनामा द्विगोत्रः” (த்விநாமா த்விகோத்ரா) என்பது முதலிய சுருதிகளில் பிரஸித்தமானது. இரண்டிற்கும் பிண்டக்ரஹனம் உலகில் காணப்படுகிறது. உத்கீதத்தில் சித்தம் பத்தப்பட்டுள்ளதால் (கட்டுப்பட்டுள்ளதால்) ரிஷிகளிடத்தில் ஆதரவு அற்றதால் “वा” (வா) சப்தத்தின் பிரயோகம் ஸ்வாத்யாயத்திற்கு ஆனதாகும் என்பது பொருள் ஸ்வாத்தியத்தின் பொருட்டு கிராமத்திற்கு வெளியில் தனிமையான நீர் நிலையின் அருகில் சென்றார்.
‘उद वव्राज’ ‘प्रतिपालयाञ्चकार’ (छा. उ. १ । १२ । ३) इति च एकवचनाल्लिङ्गात् एकोऽसौ ऋषिः । श्वोद्गीथकालप्रतिपालनात् ऋषेः स्वाध्यायकरणमन्नकामनयेति लक्ष्यत इत्यभिप्रायतः ॥
அனுவாதம் - உத்வவ்ராஜ, பிரதிபால யாஞ்சகார என்பதில் ஏகவசனமாய் இருப்பதால் ஒரு ரிஷியையேக் குறிக்கின்றது. நாய்களின் உத்கீத காலத்திற்காக எதிர் பார்ப்பதின் தாத்பர்யத்தால் ரிஷியின் ஸ்வாத்யாயனம் அன்னத்தின் காமனைக்காக என்று அறியப்படுகிறது.
तस्मै श्वा श्वेतः प्रादुर्बभूव तमन्ये श्वान उपसमेत्योचुरन्नं नो भगवानागायत्वशनायामवा इति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அவர் சமீபம் ஒரு வெள்ளைநிற நாய் வந்தது. அதற்குபின் அவரின் சமீபம் மற்ற நாய்களும் வந்து இவ்வாறு கூறின- பகவன்! தாங்கள் எங்களின் அன்னத்திற்காக ஆகானம் செய்ய வேண்டும். நாங்கள் மிகவும் பசியுடன் இருக்கின்றோம் என்று, வெள்ளை நாயிடம் கூறின.
स्वाध्यायेन तोषिता देवता ऋषिर्वा श्वरूपं गृहीत्वा श्वा श्वेतः सन् तस्मै ऋषये तदनुग्रहार्थं प्रादुर्बभूव प्रादुश्चकार । तमन्ये शुक्लं श्वानं क्षुल्लकाः श्वानः उपसमेत्य ऊचुः उक्तवन्तः — अन्नं नः अस्मभ्यं भगवान् आगायतु आगानेन निष्पादयत्वित्यर्थः ।
அனுவாதம் - ஸ்வாத்தியனத்தினால் சந்தோஷமடைந்த தேவதைகள் அல்லது ரிஷிகள் நாய் ரூபம் எடுத்துக்கொண்டு வெண்நிற நாயாக அவர் சமீபம் (வெளிப்பட்டது) தோன்றியது. அந்த வெள்ளை நாயிடம் மற்ற நாய்களும் வந்து எங்களுக்காக ஆகானம் செய்து (அத்யயனம் செய்து) அன்னம் அடையச் செய்யுங்கள் என்று கூறின என்பது பொருள்.
मुख्यप्राणवागादयो वा प्राणमन्वन्नभुजः स्वाध्यायपरितोषिताः सन्तः अनुगृह्णीयुरेनं श्वरूपमादायेति युक्तमेवं प्रतिपत्तुम् । अशनायाम वै बुभुक्षिताः स्मो वै इति ॥
அனுவாதம் - அல்லது முக்கிய பிராணன் இடத்தில் வாக் முதலிய கெளண பிராணன்கள் இவ்வாறு கூறின - ஏன் எனில் முக்கியப் பிராணனுக்குப்பின் அன்னத்தை கிரஹிக்கும் கெளண பிராணன்கள் அவருடைய ஸ்வாத்யாயத்தால் சந்தோஷமடைந்து நாய் ரூபத்தை தரித்து அதனால் அனுகிரஹம் செய்கின்றது என்றும் எடுத்துக்கொள்வது உசிதமே. அவசியம் நமக்கு போஜனத்தில் இச்சை உள்ளது. ஏன் எனில் நாம் மிகுந்த பசியுடன் இருக்கின்றோம்.
तान्होवाचेहैव मा प्रातरुपसमीयातेति तद्ध बको दाल्भ्यो ग्लावो वा मैत्रेयः प्रतिपालयाञ्चकार ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - மற்ற நாய்களிடம் வெள்ளை நாய் கூறிற்று - நீங்கள் நாளைக் காலையில் என்னிடம் வாருங்கள் என்று. அப்பொழுது தால்ப்யன், பகன் அல்லது மைத்திரேயன் கிலாவன் என்று அழைக்கப்படுபவரும் மறுநாள் காலையில் எதிர்பார்த்திருந்தார்.
एवमुक्ते श्वा श्वेत उवाच तान् क्षुल्लकान् शुनः, इहैव अस्मिन्नेव देशे मा मां प्रातः प्रातःकाले उपसमीयातेति । दैर्घ्यं छान्दसम् , समीयातेति प्रमादपाठो वा । प्रातःकालकरणं तत्काल एव कर्तव्यार्थम् , अन्नदस्य वा सवितुरपराह्णेऽनाभिमुख्यात् ।
அனுவாதம் - இவ்வாறு கூறப்பட்ட வெண்நிற நாய் மற்ற சிறிய நாய்களிடம் இவ்வாறு கூறிற்று - நீங்கள் அதிகாலையில் இதே இடத்திற்கு என்னிடம் வரவேண்டும் என்று. “समीयात” (சமீயாத - சமீபம் வாருங்கள்) என்ற கிரியாபதத்தில் தீர்கசந்தஸ் அல்லது பிரமாதத்திற்காக வந்தது. அதிகாலையில் என்று கூறியதற்கான காரணம் அந்த சமயத்திலேயே (அதி) காலையிலேயே செய்ய வேண்டும் என்பதால். அல்லது அன்ன தாதாவாகிய (அன்னத்தை அளிப்பவராகிய) ஆதித்தியன் மதியத்திற்குப்பின் உத்காதாவிற்கு முன் காணப்படமாட்டார் என்பது தெரிவிப்பதற்காக ஆகும்.
तत् तत्रैव ह बको दाल्भ्यो ग्लावो वा मैत्रेय ऋषिः प्रतिपालयाञ्चकार प्रतीक्षणं कृतवानित्यर्थः ॥
அனுவாதம் - அப்பொழுது பகர், அதாவது தால்ப்யக்லாவ மைத்தியர் என்ற ரிஷி அந்த இடத்திலேயே எதிர்பார்த்து காத்திருந்தார்.
ते ह यथैवेदं बहिष्पवमानेन स्तोष्यमाणाः सꣳरब्धाः सर्पन्तीत्येवमाससृपुस्ते ह समुपविश्य हिं चक्रुः ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - அந்த நாய்கள் எவ்வாறு கர்மத்தில் பஹிஷ்பவமான ஸ்தோத்திரத்தால் துதிக்கும் உத்காதா ஒன்றைஒன்று ஸ்பரிசித்தபடி சேர்ந்து நடப்பார்களோ அவ்வாறு நடந்து பின் அங்கு அமர்ந்து “ஹிம்” என்று உச்சரித்தனர். (हिंकारं - ஹிங்காரம் செய்தன.)
ते श्वानः तत्रैव आगत्य ऋषेः समक्षं यथैवेह कर्मणि बहिष्पवमानेन स्तोत्रेण स्तोष्यमाणाः उद्गातृपुरुषाः संरब्धाः संलग्नाः अन्योन्यमेव सर्पन्ति, एवं मुखेनान्योन्यस्य पुच्छं गृहीत्वा आससृपुः आसृप्तवन्तः, परिभ्रमणं कृतवन्त इत्यर्थः ; त एवं संसृप्य समुपविश्य उपविष्टाः सन्तः हिं चक्रुः हिङ्कारं कृतवन्तः ॥
அனுவாதம் - அந்த நாய்கள் அங்கு அந்த ரிஷியின் முன் வந்து எவ்வாறு கர்மாவில் பஹிஷ்பவமான ஸ்தோத்திரத்தால் துதிக்கும் உத்காதக்கள் எவ்வாறு ஒருவர் மற்றொருவருடன் கலந்து செல்கின்றரோ அவ்வாறு ஒருவர் மற்றவர் பின்னால் பிடித்துக்கொண்டு செல்கின்றனரோ இந்த நாய்களும் சென்று அதன்பின் அமர்ந்து “हिंकार” (ஹீம்கார) த்தை (சப்தித்தன) உச்சரித்தன.
ओ३मदा३मों३ पिबा३मों३ देवो वरुणः प्रजापतिः सविता२न्नमहा२हरदन्नपते३ । न्नमिहा२हरा२हरो३मिति ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - ஓம் நாம் சாப்பிடுகிறோம், ஓம் நாம் குடிக்கின்றோம், ஓம் தேவதை, வருணன், பிரஜாபதி, சூரிய தேவன் இங்கு அன்னம் கொண்டுவா, ஓம்.
ओमदामों पिबामों देवः, द्योतनात् ; वरुणः वर्षणाज्जगतः ; प्रजापतिः, पालनात्प्रजानाम् ; सविता प्रसवितृत्वात्सर्वस्य आदित्य उच्यते । एतैः पर्यायैः स एवंभूतः आदित्यः अन्नम् अस्मभ्यम् इह आहरत् आहरत्विति ।
அனுவாதம் - ஓம் நாம் சாப்பிடுகிறோம், குடிக்கின்றோம், பிரகாசிப்பதால் தேவன், மழை பெய்யச் செய்வதால் வருணன், பிரஜைகளைக் காப்பாற்றுவதால் பிரஜாபதி. எல்லாவற்றையும் அடையச் செய்வதால் சவிதா. இந்த பரியாயங்களின் குணமுடைய ஆதித்தியன் நமக்காக அன்னத்தைக் கொண்டுவரட்டும்.
ते एवं हिं कृत्वा पुनरप्यूचुः — स त्वं हे अन्नपते ; स हि सर्वस्यान्नस्य प्रसवितृत्वात्पतिः ; न हि तत्पाकेन विना प्रसूतमन्नमणुमात्रमपि जायते प्राणिनाम् ; अतोऽन्नपतिः । हे अन्नपते, अन्नमस्मभ्यमिहाहराहरेति ; अभ्यासः आदरार्थः । ओमिति ॥
அனுவாதம் - அவைகள் இவ்வாறு “हिं” (ஹீம்) காரம் செய்துவிட்டு இவ்வாறு கூறின - அந்த நீர் ஹே அன்னபதி! எல்லா அன்னங்களையும் உத்பத்தி செய்யும் கர்த்தா ஆனதால் அன்னபதி. ஏன் எனில் அதனால் பரிபக்குவம் செய்யப்படவில்லையெனில் அன்னம் உற்பத்தி ஆகாததால் பிராணிகளுக்கு அணுமாத்திரமும் அன்னம் உண்டாகாது. ஆகையால் அவர் அன்னபதி - ஹே அன்னபதியே! நீர் எங்களுக்காக அன்னம் கொண்டு வாரும். இங்கு கொண்டு வா என்று இருமுறை கூறியது ஆதரவுக்காக “ओं” (ஓம்) என்று இந்த பத உபாசனையின் பூர்த்தியை தெரிவிப்பதற்காகக் கூறப்பட்டது.
इति द्वादशखण्डभाष्यम् ॥
भक्तिविषयोपासनं सामावयवसम्बद्धमित्यतः सामावयवान्तरस्तोभाक्षरविषयाण्युपासनान्तराणि संहतान्युपदिश्यन्तेऽनन्तरम् , तेषां सामावयवसम्बद्धत्वाविशेषात् —
அனுவாதம் - ஸாமபக்தி விஷய உபாசனை ஸாம அவயவங்களுடன் சம்பந்தப்பட்டது. ஆகையால் இங்கு முதலில் ஸாமத்தின் ஒரு அவயவ மாத்திரம் “ஸ்தோபாக்ஷர” விஷயமான வேறு ஸம்ஹத உபாசனைகளின் வர்ணம் செய்யப்படுகிறது. ஏன் எனில் அவைகளுக்கும் ஸாம அவயவரூபத்துடன் சம்பந்தம் உள்ளதால் சமானமாகும்.
अयं वाव लोको हाउकारो वायुर्हाइकारश्चन्द्रमा अथकारः । आत्मेहकारोऽग्निरीकारः ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - இந்த லோகம் “हा उकार” (ஹே உகாரம்), வாயு हा इकार (ஹே இகாரம்), சந்திரன் “अथकार” (அதகார) ஆத்மா “इहकार” (இஹகார) மேலும் அக்னி “ईकार” (ஈகார)
अयं वाव अयमेव लोकः हाउकारः स्तोभो रथन्तरे साम्नि प्रसिद्धः — ‘इयं वै रथन्तरम्’ (तां. ब्रा. १८ । ६ । ११) इत्यस्मात्सम्बन्धसामान्यात् हाउकारस्तोभोऽयं लोकः इत्येवमुपासीत । वायुर्हाइकारः ; वामदेव्ये सामनि हाइकारः प्रसिद्धः ; वाय्वप्सम्बन्धश्च वामदेव्यस्य साम्नो योनिः इत्यस्मात्सामान्यात् हाइकारं वायुदृष्ट्योपासीत ।
அனுவாதம் - இந்த லோகமே ரதந்தரசாமத்தில் பிரசித்தமான “हाउकार” (ஹாஉகார) ஸ்தோபமாகும். “इयं वै रथन्तरम्” (இயம் வை ரதந்தரம்) என்று இவ்வாறு சம்பந்த சாமான்யத்தால் “हाउकार” (ஹாஉகார) ஸ்தோபம் இந்த லோகம் என்று உபாசனை செய். வாயு “हाइकारः” (ஹாஇகார:). வாம தேவ்ய ஸாமத்தில் “हाइकार” (ஹாஇகார:) ஸ்தோபம் பிரசித்தமாகும். வாயு ஜல சம்பந்தமே வாமதேவ்ய ஸாமத்தின் யோனி (காரணம்) ஆகும். ஆகையால் இந்த சமானமாய் இருப்பதால் “हाइकारः” (ஹாஇகாரம்) த்தைவாயு திருஷ்டியால் உபாசனை செய்.
चन्द्रमा अथकारः ; चन्द्रदृष्ट्या अथकारमुपासीत ; अन्ने हीदं स्थितम् ; अन्नात्मा चन्द्रः ; थकाराकारसामान्याच्च । आत्मा इहकारः ; इहेति स्तोभः ; प्रत्यक्षो ह्यात्मा इहेति व्यपदिश्यते ; इहेति च स्तोभः, तत्सामान्यात् अग्निरीकारः ; ईनिधनानि च आग्नेयानि सर्वाणि सामानीत्यतस्तत्सामान्यात् ॥
அனுவாதம் - சந்திரன் “अथकारः” (அதகார:). சந்திர திருஷ்டியினால் “अथकारः” (அதகாரத்தை) உபாசனை செய். அன்னத்தில் இது நிலைபெற்றுள்ளது. அன்ன ஆத்மா சந்திரன். த்தகாரமும். அகாரமும் சமானமானதால் ஆத்மா “इहकारः” (இஹகார:) “इह” (இஹ) என்பது ஸ்தோபம். பிரத்யக்ஷமான ஆத்மா “इह” (இஹ) என்று கூறி நிர்தேசம் செய்யப்படுகிறது. ஆகையால் இது சமானமாய் இருப்பதால் ஆத்மா இஹகாரம் (इहकारम्) ஆகும். அக்னி “ईकारः” (ஈகாரம்). எல்லா ஆக்நேய ஸாமங்களும் “ई” (ஈ) யில் சமாப்த்தி ஆகின்றன. ஆகையால் இதற்கு சமானமாக இருப்பதால் அக்னி “ईकारः” (ஈகாரம்) ஆகும்.
आदित्य ऊकारो निहव एकारो विश्वेदेवा औहोयिकारः प्रजापतिर्हिङ्कारः प्राणः स्वरोऽन्नं या वाग्विराट् ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - ஆதித்யன் “ऊकारः” (ஊகாரம்). வரவேற்பு துதி “एकारः” (ஏகாரம்), விச்வதேவன் “औहोयिकारः” (ஒளஹோயிகார:) பிரஜாபதி “हींकारः” (ஹீம்கார:), அவ்வாறே பிராணன் “स्वरः” ஸ்வரம், அன்னம் “या” (யா), விராட் “वाक्” (வாக்) ஆகும்.
आदित्यः ऊकारः ; उच्चैरूर्ध्वं सन्तमादित्यं गायन्तीति ऊकारश्चायं स्तोभः ; आदित्यदैवत्ये साम्नि स्तोभ इति आदित्य ऊकारः । निहव इत्याह्वानम् ; एकारः स्तोभः ; एहीति च आह्वयन्तीति तत्सामान्यात् । विश्वेदेवा औहोयिकारः, वैश्वदेव्ये साम्नि स्तोभस्य दर्शनात् । प्रजापतिर्हिङ्कारः, आनिरुक्त्यात् , हिङ्कारस्य च अव्यक्तत्वात् ।
அனுவாதம் - ஆதித்யன் “ऊकारः” (ஊகாரம்). உச்சியில் மேலே இருக்கும் ஆதித்தியனை உத்காத்தாக்கள் கானம் செய்கின்றனர் என்பதால் “ऊकारः” (ஊகாரம்) ஸ்தோபமாகும். ஆதித்திய தேவதா சம்பந்தமான சாமத்தில் ஸ்தோபம் “ऊ” (ஊ) என்பது ஆதித்யன் “ऊकारः” (ஊகாரமாகும்). “एहि इति” (வா என்று) அழைப்பது “एकारः” (ஏகாரம்) ஸ்தோபமாகும். வா என்பதும் அழைப்பதும் சமானமாக இருப்பதால் ஆகும். வைச்வதேவ சாமத்தில் ஸ்தோபம் காணப்படுவதால் விச்வதேவர் “औहोयिकारः” (ஒளஹோயிகாரம்) ஆகும். பிரஜாபதி “हींकारः” (ஹீம்காரம்). ஏன் எனில் அதை எந்த விதமாகவும் இவ்வாறு இருக்கிறது என்று கூற முடியாததால் “हींकारः” (ஹீம்காரம்) அவ்யக்தமாகும்.
प्राणः स्वरः ; स्वर इति स्तोभः ; प्राणस्य च स्वरहेतुत्वसामान्यात् । अन्नं या या इति स्तोभः अन्नम् , अन्नेन हीदं यातीत्यतस्तत्सामान्यात् । वागिति स्तोभो विराट् अन्नं देवताविशेषो वा, वैराजे साम्नि स्तोभदर्शनात् ॥
அனுவாதம் - பிராணன் “स्वरः” (ஸ்வர:). ஸ்வர: என்ற வேறு வகையான ஸ்தோபம். பிராணன் ஸ்வரத்திற்கு ஹேதுவாய் இருப்பதால் பிராணனுடன் சமானமாய் இருப்பதால் ஆகும். “या” (யா) என்ற ஸ்தோபம் அன்னம். அன்னத்தால் இவை “याति” (செல்கிறது) (செயல்படுகிறது) என்பது சமானமாக இருப்பதால் ஆகும். “वाक्” (வாக்) என்பது ஸ்தோபம். அல்லது விராட் - அன்னம் அல்லது தேவதா விசேஷம் ஆகும். ஏன்எனில் வைராஜ ஸாமத்தில் ஸ்தோபம் காணப்படுகிறது.
अनिरुक्तस्त्रयोदशः स्तोभः सञ्चरो हुङ्कारः ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - எதனை விசேஷ ரூபமாக நிரூபணம் செய்யவில்லையோ மேலும் காரிய ரூபத்தால் சஞ்சாரம் செய்யும் அந்த பதிமூன்றாவது ஸ்தோபம் “हींकारः” (ஹீம்காரம்) ஆகும்.
अनिरुक्तः अव्यक्तत्वादिदं चेदं चेति निर्वक्तुं न शक्यत इत्यतः सञ्चरः विकल्प्यमानस्वरूप इत्यर्थः । कोऽसाविति, आह — त्रयोदशः स्तोभः हुङ्कारः । अव्यक्तो ह्ययम् ; अतोऽनिरुक्तविशेष एवोपास्य इत्यभिप्रायः ॥
அனுவாதம் - நிரூபிக்கப்படாததாயும், அவ்யக்த்தமாயும் இருப்பதால் இது இது என்ற ரூபத்தால் நிரூபிக்க முடியாது. ஆகையால் சஞ்சாரம் செய்கிற அல்லது பலவிதமான ஸ்வரூபம் என்பது பொருள். அது எது? அதற்குக் கூறப்படுகிறது - பதிமூன்றாவது ஸ்தோபம் हुंकारः (ஹும்கார:) என்று. இது அவ்யக்த்தமானதால் அநிருக்த்தி விசேஷரூபமாய் உபாசனை செய்யவேண்டும் என்பது இதன் அபிப்பிராயம். (அநிருக்த்தி உபாசனை செய்ய வேண்டும் என்பது - இவ்வாறுதான் இருக்கின்றது என்று விசேஷத்தை எதிர்பார்க்காமல் அதை உபாசிக்க வேண்டும் என்பதாகும்).
स्तोभाक्षरोपासनाफलमाह —
அனுவாதம் - அ.கை - இப்பொழுது ஸ்தோப அக்ஷரங்களின் உபாசனையின் பலன் கூறப்படுகிறது-
दुग्धेऽस्मै वाग्दोहं यो वाचो दोहोऽन्नवानन्नादो भवति य एतामेवꣳसाम्ना मुपनिषदं वेदोपनिषदं वेदेति ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இவ்வாறு ஸாமசம்பந்தமான உபநிஷத்தை அறிகின்றானோ அவனுக்கு அதனால் வாக் எது வாக்கின் பலனோ அதாவது பாலை அளிக்கிறது. அவ்வாறே அன்னம் உடையவனாகி அன்னத்தை உண்பவனாக ஆகின்றான்.
दुग्धेऽस्मै वाग्दोहमित्याद्युक्तार्थम् । य एतामेवं यथोक्तलक्षणां साम्नां सामावयवस्तोभाक्षरविषयाम् उपनिषदं दर्शनं वेद, तस्य एतद्यथोक्तं फलमित्यर्थः । द्विरभ्यासः अध्यायपरिसमाप्त्यर्थः । सामावयवविषयोपासनाविशेषपरिसमाप्त्यर्थः इति शब्द इति ॥
அனுவாதம் - “दुग्धेऽसौ वाग्दोहम्” (துக்தேऽஸௌ வாக்தோஹம்) முதலிய வாக்கியங்களின் அர்த்தம் முன்பே கூறப்பட்டது. எவர் இவைகளை இவ்வாறு கூறப்பட்ட லக்ஷணங்களை உடைய ஸாமத்தின் அதாவது ஸாம அவயவ ஸ்தோப அக்ஷர விஷயமான உபநிஷத் தர்சனத்தை அறிந்தார்களோ அவர்களுக்கு கூறப்பட்டவாறு பலனை அடைவர் என்பது பொருள். ஸாம அவயவ விஷய உபாசனா விசேஷம் சமாப்த்தி செய்வதற்காகவும் ஆகிறது.
इति त्रयोदशखण्डभाष्यम् ॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ छान्दोग्योपनिषद्भाष्ये प्रथमोऽध्यायः समाप्तः ॥