त्रयो धर्मस्कन्धा यज्ञोऽध्ययनं दानमिति प्रथमस्तप एव द्वितीयो ब्रह्मचार्याचार्यकुलवासी तृतीयोऽत्यन्तमात्मानमाचार्यकुलेऽवसादयन्सर्व एते पुण्यलोका भवन्ति ब्रह्मसंस्थोऽमृतत्वमेति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - தர்மத்திற்கு மூன்று ஸ்கந்தங்கள் (ஆதார ஸ்தம்பம்) யக்ஞம், அத்யயனம், தானம் ஆகியவைகள் முதல் ஸ்கந்தம் ஆகும். தபஸ் இரண்டாவது ஸ்கந்தமாகும். ஆச்சாரிய குலத்தில் வசிக்கும் பிரஹ்மச்சாரி, அதாவது ஆச்சாரிய குலத்தில் தன் சரீரத்தை முழுமையாக அர்பணிக்கின்றவன் மூன்றாவது ஸ்கந்தம். இவை எல்லாம் புண்ய லோகங்களை அடைகின்றனர். பிரஹ்மத்தில் நல்ல விதமாக நிலைபெற்று (நான்காவது ஆஸ்ரமத்தில் உள்ளவர்) அம்ருதத்தை அடைகின்றனர்.
ओङ्कारस्योपासनविध्यर्थं त्रयो धर्मस्कन्धा इत्याद्यारभ्यते । नैवं मन्तव्यं सामावयवभूतस्यैवोद्गीथादिलक्षणस्योङ्कारस्योपासनात्फलं प्राप्यत इति ; किं तर्हि, यत्सर्वैरपि सामोपासनैः कर्मभिश्चाप्राप्यं तत्फलममृतत्वं केवलादोङ्कारोपासनात्प्राप्यत इति । तत्स्तुत्यर्थं सामप्रकरणे तदुपन्यासः ।
அனுவாதம் - ஓம்காரத்தின் உபாசனையை விதானம் (விதிப்பதற்காக) செய்வதற்காக “त्रयो धर्मस्कन्धाः” (த்ரியோ தர்மஸ்கந்தா:) என்பது முதலிய பிரகரணங்கள் ஆரம்பிக்கப்படுகிறது. ஸாம அவயவரூப உத்கீதம் முதலிய லக்ஷணங்களுடைய ஓம்கார உபாஸனையினால் பலம் அடைய முடியும் என்பது இல்லை. ஆனால் எவ்வாறு? எந்த எல்லா ஸாம உபாஸனை கர்மங்களினால் அடைய முடியாத அந்த அம்ருதத்துவம் ஓம்கார உபாஸனையினால் மட்டுமே அடைய முடியும் என்பதால் அதைப் போற்றுவதற்காக ஸாமப்பிரகரணத்தின் உபந்யாஸம் செய்யப்படுகிறது.
त्रयः त्रिसङ्ख्याका धर्मस्य स्कन्धाः धर्मस्कन्धाः धर्मप्रविभागा इत्यर्थः ; के ते इति, आह — यज्ञः अग्निहोत्रादिः, अध्ययनं सनियमस्य ऋगादेरभ्यासः, दानं बहिर्वेदि यथाशक्ति द्रव्यसंविभागो भिक्षमाणेभ्यः, इति एषः प्रथमः धर्मस्कन्धः गृहस्थसमवेतत्वात् तन्निर्वर्तकेन गृहस्थेन निर्दिश्यते ; प्रथमः एक इत्यर्थः, द्वितीयतृतीयश्रवणात् न आद्यार्थः ।
அனுவாதம் - (தர்மஸ்கந்தா) - என்பது மூன்று எண்ணிக்கை உள்ள தர்ம விபாகங்களாகும் என்பது பொருள். அவைகள் எவை? அதற்குக் கூறப்படுகிறது - யக்ஞம் அக்னிஹோத்திரம் முதலியவைகள். அத்யயனம் - நியமத்துடன் கூடிய ரிக்வேதம் முதலியவைகளின் அப்யாசம். தானம் - வேதிகைக்கு வெளியே பிக்ஷை கேட்பவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு தனத்தை அளிக்கவேண்டும். இவ்வாறு முதல் தர்ம ஸ்கந்தமாகும். இந்த தர்மம் கிரஹஸ்தர்கள் ஸம்பந்தப்பட்டதால் அதனை அனுஷ்டானம் செய்யும் கிரஹஸ்த்த ரூபமாக நிர்தேசம் செய்யப்பட்டது. இங்கும் முதலில் என்ற சப்தத்தின் அர்த்தம் ஒன்றேயாகும். ஏன்எனில் சுருதியில் இரண்டாவது, மூன்றாவது என்ற சப்தத்தால் முதல் முதலில் என்ற அர்த்தத்தில் கூறப்படவில்லை.
तप एव द्वितीयः ; तप इति कृच्छ्रचान्द्रायणादि तद्वान् तापसः परिव्राड्वा, न ब्रह्मसंस्थः आश्रमधर्ममात्रसंस्थः, ब्रह्मसंस्थस्य तु अमृतत्वश्रवणात् ; द्वितीयः धर्मस्कन्धः ।
அனுவாதம் - தபஸ்தான் இரண்டாவது தர்மஸ்கந்தம் தபஸ் என்பது க்ருச்ர சாந்த்ராயண முதலியவைகளுடன் கூடிய தபஸ்வி பரிவிராஜகனாகவோ பிரஹ்ம நிஷ்டனாகவோ அல்ல. ஆனால் கேவலம் ஆஸ்ரம தர்மத்திலேயே இருப்பவன். ஏன்எனில் சுருதியில் பிரஹ்ம நிஷ்டருக்கே அம்ருதத்துவ பிராப்த்தி என்று கூறப்பட்டுள்ளது. இது இரண்டாவது தர்மஸ்கந்தம்.
ब्रह्मचारी आचार्यकुले वस्तुं शीलमस्येत्याचार्यकुलवासी । अत्यन्तं यावज्जीवम् आत्मानं नियमैः आचार्यकुले अवसादयन् क्षपयन् देहं तृतीयः धर्मस्कन्धः । अत्यन्तमित्यादिविशेषणान्नैष्ठिक इति गम्यते । उपकुर्वाणस्य स्वाध्यायग्रहणार्थत्वात् न पुण्यलोकत्वं ब्रह्मचर्येण ।
அனுவாதம் - எவருக்கு ஆசாரிய குலத்தில் வசிப்பதற்கான தன்மை உள்ளதோ அவர் அந்த ஆசாரிய குலத்தில் வசிப்பதால் பிரஹ்மச்சாரி. முற்றிலுமாக உயிர் உள்ளவரை (ஜீவிக்கும் வரை) தன்னை நியமங்களுடன் ஆச்சாரிய குலத்தில் வசித்துக்கொண்டு தன்னுடைய தேஹத்தை வருத்திக் கொண்டிருப்பது மூன்றாவது தர்ம ஸ்கந்தமாகும். முற்றிலும் என்ற விசேஷணத்தால் நைஷ்ட்டிக பிரஹ்மச்சாரி என்று அறியப்படுகிறது. ஸாதரணமாக ஸ்வாத்யயக்ரஹணம் செய்வதற்காகவே இருந்தால் பிரஹ்மச்சரியத்தால் புண்ய லோகத்தை அடையமுடியாது.
सर्व एते त्रयोऽप्याश्रमिणः यथोक्तैर्धर्मैः पुण्यलोका भवन्ति ; पुण्यो लोको येषां त इमे पुण्यलोका आश्रमिणो भवन्ति । अवशिष्टस्त्वनुक्तः परिव्राट् तुरीयः ब्रह्मसंस्थाः ब्रह्मणि सम्यक्स्थितः, सोऽमृतत्वं पुण्यलोकविलक्षणममरणभावमात्यन्तिकम् एति, न आपेक्षिकम् , देवाद्यमृतत्ववत् , पुण्यलोकात्पृथक् अमृतत्वस्य विभागकरणात् ॥
அனுவாதம் - இவை எல்லாம் அதாவது இந்த மூன்று ஆஸ்ரமத்தார்களும் கூறப்பட்ட தர்மங்களால் புண்யலோகமாக ஆகின்றார்கள். எவர் இந்த புண்யலோகத்தை அடைகின்ற ஆஸ்ரமி அவர் புண்யலோகம் எனப்படுகிறார். கூறப்படாத மீதமுள்ள பரிவிராட் பிரஹ்மத்தில் நன்றாக நிலைபெற்று அம்ருதத்துவத்தை அதாவது புண்யலோகத்தைவிட வேறான ஆத்யந்திக மரண பாவமற்ற நிலையை அடைகின்றான். புண்யலோகத்தைக் காட்டிலும் அம்ருதத்துவத்தை தனியாக விபாகம் செய்துள்ளதால் தேவதைகளின் அம்ருதத்தைப் போன்று ஆபேக்ஷிகம் (சார்ந்தது) அல்ல.
यदि च पुण्यलोकातिशयमात्रममृतत्वमभ विष्यत् , ततः पुण्यलोकत्वाद्विभक्तं नावक्ष्यत् । विभक्तोपदेशाच्च आत्यन्तिकममृतत्वमिति गम्यते ।
அனுவாதம் - புண்யலோகத்தின் அதிகத் தன்மையே அம்ருதத்துவமாக இருந்தால் புண்யலோக ரூபமாய் அது இருப்பதால் அதைவிட தனியாக வர்ணனை செய்திருக்காது. தனியாக உபதேசம் செய்யப்பட்டுள்ளதால் ஆத்யந்திக அம்ருதத்துவமே அபிப்பிராயம் ஆகும் என்று அறியப்படுகிறது.
अत्र च आश्रमधर्मफलोपन्यासः प्रणवसेवास्तुत्यर्थः, न तत्फलविध्यर्थः, स्तुतये च प्रणवसेवायाः, आश्रमधर्मफलविधये च, इति हि भिद्येत वाक्यम् । तस्मात्स्मृतिप्रसिद्धाश्रमफलानुवादेन प्रणवसेवाफलममृतत्वं ब्रुवन् प्रणवसेवां स्तौति । यथा पूर्णवर्मणः सेवा भक्तपरिधानमात्रफला, राजवर्मणस्तु सेवा राज्यतुल्यफलेति — तद्वत् ।
அனுவாதம் - இங்கு ஆஸ்ரம தர்மபலத்தின் உபன்யாஸம் பிரணவ உபாஸனையின் ஸ்துதிக்காகவே. அதன் பலத்தை விதிப்பதற்காக அல்ல. அவ்வாறு ஆனால் பிரணவ உபாஸனையினால் ஸ்துதிப்பது என்றும் ஆஸ்ரம பலம் விதிப்பதற்கு என்றும் வாக்கியத்தில் பேதம் உண்டாகும். ஆகையால் மந்திரம் ஸ்மிருதியில் கூறிய ஆஸ்ரம பலத்தை அனுவாதத்தின் மூலமாய் பிரணவ உபாஸனையின் பலன் அம்ருதத்துவம் என்று கூறி பிரணவ உபாஸனத்தை ஸ்துதி செய்கிறது. எவ்வாறு பூர்ண வர்மாவின் சேவையானது பணியாளர் போன்ற போஜனம் வஸ்த்திர மாத்திரமே பலனைக் கொடுக்கும். அவ்வாறே ராஜவர்மாவின் சேவை ராஜ்யத்திற்கு ஸமானமான பலனை அளிக்கவல்லது. அதைப் போன்று அறிந்துகொள்ள வேண்டும்.
அனுவாதம் - பிரணவம் அது ஸத்யம் பரம்பிரஹ்மம். அது அதன் பிரதீகமாக இருப்பதால். கடோபநிஷத்தில் “एतद्धयेवाक्षरं ब्रह्म एतद्धयेवाक्षरं परम्” (எதத்தயேவாக்ஷரம் பிரஹ்ம எதத்தயேவாக்ஷரம் பரம்) என்ற சுருதி இருப்பதால் அதை சேவையினால் (உபாஸனையினால்) அம்ருதத்துவத்தை அடையமுடியும் என்பது பொருத்தமேயாகும்.
अत्र आहुः केचित् — चतुर्णामाश्रमिणामविशेषेण स्वधर्मानुष्ठानात्पुण्यलोकता इहोक्ता ज्ञानवर्जितानाम् ‘सर्व एते पुण्यलोका भवन्ति’ इति । नात्र परिव्राडवशेषितः ; परिव्राजकस्यापि ज्ञानं यमा नियमाश्च तप एवेति ; तप एव द्वितीय इत्यत्र तपः — शब्देन परिव्राट्तापसौ गृहीतौ । अतस्तेषामेव चतुर्णां यो ब्रह्मसंस्थः प्रणवसेवकः सोऽमृतत्वमेतीति चतुर्णामधिकृतत्वाविशेषात् , ब्रह्मसंस्थत्वेऽप्रतिषेधाच्च, स्वकर्मच्छिद्रे च ब्रह्मसंस्थतायां सामर्थ्योपपत्तेः ।
அனுவாதம் - இந்த விஷயத்தில் சிலர் இவ்வாறு கூறுகிறார்கள் - ஞானம் இல்லாதவர்களாக நான்கு ஆஸ்ரமத்தாருக்கும் வித்தியாசம் இல்லாமல் கர்மாக்களை அனுஷ்டிப்பதால் புண்யலோகம் உடையவர்கள் என்பது இங்கு எல்லோருக்குமே புண்யலோகப் பிராப்த்தி உண்டு என்று கூறப்பட்டது. மேலும் இங்கு பரிவிராஜர்களையும் விடவில்லை. பரிவிராஜகர்களுக்கும் ஞானம் யம, நியமங்கள் ஆகியவை தபஸ் ஆகும். தபஸ்ஸே இரண்டாவது தர்மஸ்கந்தம் “तप एव द्वितीयः” என்பதால் தபஸ் சப்தத்தால் பரிவிராட், தபஸ் ஆகியவை கிரஹித்துக்கொள்ள வேண்டும். ஆகையால் அந்த நான்கு ஆஸ்ரமத்தாருக்கும் எந்த பிரஹ்மம் நிஷ்டையோ அது பிரணவ உபாஸனையால் அடையப்படும் அம்ருதத்துவமாகும் என்பதால் நான்கு ஆஸ்ரமத்தாருக்கும் வேறுபாடு இல்லாததால் பிரஹ்மநிஷ்டை ஒதுக்கப்படவில்லை (தள்ளப்படவில்லை). தங்கள் தங்கள் கர்மங்களை அனுஷ்டிக்கும்பொழுது கிடைக்கும் அவகாசத்தில் எல்லோருக்கும் பிரஹ்மநிஷ்டையில் இருப்பதில் ஸாமர்த்தியம் ஸம்பவிக்கும்.
न च यववराहादिशब्दवत् ब्रह्मसंस्थशब्दः परिव्राजके रूढः, ब्रह्मणि संस्थितिनिमित्तमुपादाय प्रवृत्तत्वात् । न हि रूढिशब्दा निमित्तमुपाददते । सर्वेषां च ब्रह्मणि स्थितिरुपपद्यते । यत्र यत्र निमित्तमस्ति ब्रह्मणि संस्थितिः, तस्य तस्य निमित्तवतो वाचकं सन्तं ब्रह्मसंस्थशब्दं परिव्राडेकविषये सङ्कोचे कारणाभावात् निरोद्धुमयुक्तम् । न च पारिव्राज्याश्रमधर्ममात्रेणामृतत्वम् , ज्ञानानर्थक्यप्रसङ्गात्
அனுவாதம் - இதைத்தவிர யவை, வராஹம் முதலிய சப்தங்களைப்போல் பிரஹ்ம ஸம்ஸ்த (பிரஹ்மநிஷ்டை) சப்தம் பரிவிராஜகத்தில் ரூடமல்ல (தனியான அர்த்தமுள்ள சப்தமல்ல). ஏன்எனில் பிரஹ்மத்தின் ஸ்திதிரூப நிமித்தத்தால் பரவிருத்திக்கின்றது. ரூடி சப்தம் எந்த நிமித்தத்தையும் ஆஸ்ரியப்பதில்லை. பிரஹ்மத்தில் எல்லா ஸ்திதிகளும் ஸம்பவிக்கும். எங்கு எங்கு பிரஹ்மத்தில் ஸ்திதிரூப நிமித்தம் உள்ளதோ அந்த அந்த நிமித்தம் உடையதின் வாசகமாக இருப்பதால் பிரஹ்மஸம்ஸ்த்த சப்தம் (ब्रह्मसंस्थशब्दम्) பரிவிராட்டின் வாசகமாகும் என்று சுருக்குவதற்கு எந்த ஒரு காரணமும் இல்லாததால் அந்த அர்த்தத்தை நிராகரிப்பது சரியல்ல. இதைத்தவிர பரிவிராஜ (ஸந்யாச) ஆஸ்ரம தர்மத்தாலேயே அம்ருதத்துவத்தை அடைவது என்பது ஸம்பவிக்காது. ஏன் எனில் இதனால் ஞானத்திற்கு அர்த்தமற்ற தன்மை ஏற்படும்.
पारिव्राज्यधर्मयुक्तमेव ज्ञानममृतत्वसाधनमिति चेत् , न, आश्रमधर्मत्वाविशेषात् । धर्मो वा ज्ञानविशिष्टोऽमृतत्वसाधनमित्येतदपि सर्वाश्रमधर्माणामविशिष्टम् । न च वचनमस्ति परिव्राजकस्यैव ब्रह्मसंस्थस्य मोक्षः, नान्येषाम् इति । ज्ञानान्मोक्ष इति च सर्वोपनिषदां सिद्धान्तः । तस्माद्य एव ब्रह्मसंस्थः स्वाश्रमविहितधर्मवताम् , सोऽमृतत्वमेतीति ॥
அனுவாதம் - பாரிவிராஜ்ய தர்மத்துடன் கூடிய ஞானமே அம்ருதத்துவ ஸாதனம் என்று கூறுவது அல்ல. ஏன்எனில் ஆஸ்ரம தர்மம் வேறு ஆஸ்ரம தர்மங்களைக்காட்டிலும் வித்யாசமானது அல்ல அல்லது ஞான விசிஷ்ட தர்மமே அம்ருதத்துவத்திற்கு ஸாதனம் என்றால் அந்த நியமம் எல்லா ஆஸ்ரம தர்மங்களுக்கும் பொருந்தும். மேலும் பரிவிராஜகர்களுக்கு மட்டுமே பிரஹ்ம ஸம்ஸ்த்தம் மற்றவர்களுக்கு இல்லை என்ற ஸாஸ்த்திர வாக்கியம் இல்லை. ஞானத்தால் மோக்ஷம் என்பது எல்லா உபநிஷத்துகளின் சித்தாந்தமாகும். ஆகையால் எவர் பிரஹ்மஸ்தர் தன்னுடைய ஆஸ்ரம விஹித கர்மங்களை கடைபிடிப்பவர்களோ அவர் அம்ருதத்துவத்தை அடைவர் என்பதாகும்.
“पूर्वोपन्यस्तमतनिराकरणम्” (இதற்குமுன் கூறப்பட்ட பரமதத்தை நிராகரித்தல்)
न, कर्मनिमित्तविद्याप्रत्यययोर्विरोधात् । कर्त्रादिकारकक्रियाफलभेदप्रत्ययवत्त्वं हि निमित्तमुपादाय इदं कुरु इदं मा कार्षीः इति कर्मविधयः प्रवृत्ताः । तच्च निमित्तं न शास्त्रकृतम् , सर्वप्राणिषु दर्शनात् ।
‘सत् . . . . . एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) ‘आत्मैवेदं सर्वम्’ (छा. उ. ७ । २६ । २) ‘ब्रह्मैवेदं सर्वम्’ इति शास्त्रजन्यः प्रत्ययो विद्यारूपः स्वाभाविकं क्रियाकारकफलभेदप्रत्ययं कर्मविधिनिमित्तमनुपमृद्य न जायते, भेदाभेदप्रत्यययोर्विरोधात् । न हि तैमिरिकद्विचन्द्रादिभेदप्रत्ययमनुपमृद्य तिमिरापगमे चन्द्राद्येकत्वप्रत्यय उपजायते, विद्याविद्याप्रत्यययोर्विरोधात् ।
அனுவாதம் - ஸித்தாந்தீ - கர்ம நிமித்தமான கொள்கைக்கும் ஞானத்தை உண்டுபண்ணும் கொள்கைக்கும் பரஸ்பரம் விரோதம் இருக்கின்றது. கர்த்தா முதலிய காரக, கிரியா மேலும் பலம் என்ற பேதத்துடன் கூடிய நிமித்தத்தைக் கொண்டு இதை செய், இதை செய்யாதே என்று கர்ம விதியில் பிரவிர்த்தி ஏற்படுகிறது. எல்லாப் பிராணிகளிடமும் இதுக் காணப்படுவதால் அந்த நிமித்தம் ஸாஸ்த்திரத்தினால் உண்டாக்கப்பட்டது அல்ல. “सद् एकमेवाद्वितीयम्” (ஸத் ஏகமேவாத்விதீயம்), “आत्मैवेदं सर्वम्” (ஆத்மைவேதம் ஸர்வம்), “ब्रह्मैवेदं सर्वम्” (பிரஹ்மைவேதம் ஸர்வம்) என்று ஸாஸ்த்திரத்தினால் உண்டாவது வித்யாரூப பிரத்யயம். கர்ம விதி நிமித்த ஸ்வாபாவிகமான கிரியாகாரக பலபேத பிரத்யயம் நஷ்டமாகாமல் வித்யாரூப பிரத்தியம் உண்டாகாது. ஏன்எனில் பேத அபேத பிரத்யயங்கள் ஒன்றுக்கொன்று விரோதமானது. கண்நோய் நஷ்டமானபின் கண் நோயால் ஏற்பட்டு இரட்டை சந்திரனாகக் காணப்பட்ட பேத பிரத்யயம் நாசமாகாமல் சந்திரனின் ஏகத்துவம் அறியப்படாததுபோல் ஆகும். ஏன்எனில் ஞான, அக்ஞான (வித்யா அவித்யா) பிரத்யயங்களில் பரஸ்பர விரோதம் இருக்கின்றது.
“परिव्राजएव ब्रह्मसंस्थत्वम्” (பரிவிராஜமே பிரஹ்மஸம்ஸ்தத்வம்)
அனுவாதம் - அங்கு இவ்வாறு இருக்கும் பொழுது எந்த பேத பிரத்யத்தை வைத்து கர்ம விதிகளில் பிரவிர்த்தி ஆனவர்கள் அதை நீக்கி “सद् एकमेवाद्वितीयम्” (சத் - ஏகமேவாத்வதீயம்), “तत्सत्यम्” (தத்சத்யம்), “विकारभेदोऽनृतम्” (விகாரபேதோऽந்ருதம்) இவ்வாறான வாக்கிய பிரமாணங்களால் உண்டான ஏகத்துவத்துவ பிரத்யயத்தால் அவன் எல்லா கர்மங்களின் நிமித்தத்திலிருந்து விடுபட்டவன் ஆவான் (निमित्तनिवृत्तेः निवृत्तः) அந்த கர்மங்களில் இருந்து விடுபட்டவன் “ब्रह्मसंस्था” (பிரஹ்மஸம்ஸ்த்தா = பிரஹ்ம நிஷ்டன்) எனப்படுகிறான் மற்றவர்களுக்கு (பரிவிராஜத்தைத் தவிர மற்ற ஆஸ்ரமிகளுக்கு அது ஸம்பவிக்காததால் அவனே பரிவிராட்.
अन्यो हि अनिवृत्तभेदप्रत्ययः सोऽन्यत्पश्यञ्शृण्वन्मन्वानो विजानन्निदं कृत्वेदं प्राप्नुयामिति हि मन्यते । तस्यैवं कुर्वतो न ब्रह्मसंस्थता, वाचारम्भणमात्रविकारानृताभिसन्धिप्रत्ययवत्त्वात् । न च असत्यमित्युपमर्दिते भेदप्रत्यये सत्यमिदमनेन कर्तव्यं मयेति प्रमाणप्रमेयबुद्धिरुपपद्यते — आकाश इव तलमलबुद्धिर्विवेकिनः ।
அனுவாதம் - மற்ற பேத புத்தி நிவிர்த்தியாகாதவர் வேறாகப் பார்க்கின்றான், கேட்கின்றான், நினைக்கின்றான், அறிகின்றான் என்பதால் இவ்வாறு செய்து இதை அடைவேன் என்று நினைக்கின்றான். இவ்வாறு செயல்களில் ஈடுபடுபவன் பிரஹ்ம ஸம்ஸ்தாவாக ஆகமுடியாது. ஏன்எனில் அது வாச்சாரம்பண மாத்திர விகாரத்தில் மித்யாவாக தோற்றமளிப்பவைகளாகும். இது அஸத்யம் என்று பேத திருஷ்டியை நீக்கினால் அதனால் இது ஸத்யம், ஆகையால் இதை செய்யவேண்டும் என்ற பிரமாண பிரமேய ரூப புத்தி ஏற்படாது. எவ்வாறு விவேகி புருஷன் ஆகாசத்தில் தலமலாதிகளைக் காண்பது போல் ஆகும்.
उपमर्दितेऽपि भेदप्रत्यये कर्मभ्यो न निवर्तते चेत् , प्रागिव भेदप्रत्ययानुपमर्दनादेकत्वप्रत्ययविधायकं वाक्यमप्रमाणीकृतं स्यात् । अभक्ष्यभक्षणादिप्रतिषेधवाक्यानां प्रामाण्यवत् युक्तमेकत्ववाक्यस्यापि प्रामाण्यम् , सर्वोपनिषदां तत्परत्वात् ।
அனுவாதம் - பேத திருஷ்டியை நீக்கினால் கர்மங்களில் இருந்து விடுபடவில்லையெனில் முன்போல் பேத திருஷ்டி நீக்காததால் ஏகத்துவ திருஷ்டியை தெரிவிக்கும் வாக்கியம் அப்பிரமாணமாகிவிடும். சாப்பிடக் கூடாததை சாப்பிடுவது முதலிய தள்ளதக்க வேண்டிய வாக்கியங்கள் பிரமாணம் ஆவதுபோல் எல்லா உபநிஷத்துக்களின் கருத்தாய் இருப்பதால் ஏகத்துவ வாக்கியத்திற்கு பிரமாணம் பொருந்தும்
कर्मविधीनामप्रामाण्यप्रसङ्ग इति चेत् ,
அனுவாதம் - பூர்வ - இவ்வாறு கர்மவிதிகள் அப்பிரமாணம் ஆகிவிடுமே எனில்?
न, अनुपमर्दितभेदप्रत्ययवत्पुरुषविषये प्रामाण्योपपत्तेः स्वप्नादिप्रत्यय इव प्राक्प्रबोधात् ।
அனுவாதம் - ஸித்தாந்தீ - அவ்வாறு அல்ல. விழிப்பு ஏற்படுவதற்கு முன் உள்ள ஸ்வப்பனம் முதலிய திருஷ்டியைப் போல் நீக்கப்பட்ட பேத திருஷ்டியுடைய புருஷ விஷயத்தில் பிரமாணம் சித்திக்கின்றது.
विवेकिनामकरणात् कर्मविधिप्रामाण्योच्छेद इति चेत् ?
அனுவாதம் - பூர்வ - விவேகிகள் கர்மம் செய்யாததால் கர்ம விதிகளின் பிரமாணத்தை சேதம் செய்ததாக ஆகிவிடுமே எனில்?
न, कांयविध्यनुच्छेददर्शनात् । न हि, कामात्मता न प्रशस्तेत्येवं विज्ञानवद्भिः कांयानि कर्माणि नानुष्ठीयन्त इति, कांयकर्मविधय उच्छिद्यन्ते, अनुष्ठीयन्त एव कामिभिरिति ; तथा ब्रह्मसंस्थैर्ब्रह्मविद्भिर्नानुष्ठीयन्ते कर्माणीति न तद्विधय उच्छिद्यन्ते, अब्रह्मविद्भिरनुष्ठीयन्त एवेति ।
அனுவாதம் - ஸித்தாந்தீ - அவ்வாறு அல்ல. ஏன்எனில் காம்ய விதிக்கும் சேதம் காணப்படவில்லை. ஸகாமம் சரியல்ல என்ற ஞானம் உண்டான புருஷன் காமிய கர்மங்களை செய்வதில்லை. ஆகையால் காமியகர்ம விதிகளுக்கு சேதம் உண்டாகும் என்பது இல்லை. ஏன் எனில் ஸகாம புருஷனால் அனுஷ்டிப்பது காணப்படுகிறது. அவ்வாறே பிரஹ்ம நிஷ்ட பிரஹ்ம வேத்தாக்களும் கர்மங்களை அனுஷ்டிப்பது இல்லை. ஆகையால் அந்த கர்மவிதி இல்லாமல் போகும் என்பது இல்லை. ஏன்எனில் பிரஹ்மவேத்தாவாக இல்லாதவனால் அது அனுஷ்டிக்கப்படுகிறது.
परिव्राजकानां भिक्षाचरणादिवत् उत्पन्नैकत्वप्रत्ययानामपि गृहस्थादीनामग्रिहोत्रादिकर्मानिवृत्तिरिति चेत् ?
அனுவாதம் - பூர்வ - பரிவிராஜகர்களின் பிக்ஷாடனம் முதலியவைகளை செய்வதைப்போல் ஏகத்துவ ஞானம் உண்டான அந்த கிரஹஸ்தர்களிடத்தும் அக்னி ஹோத்திரம் முதலிய கர்மங்கள் நிவிர்த்தி ஆகவேண்டும் என்பதில்லை எனில்?
न, प्रामाण्यचिन्तायां पुरुषप्रवृत्तेरदृष्टान्तत्वात् — न हि, नाभिचरेदिति प्रतिषिद्धमप्यभिचरणं कश्चित्कुर्वन्दृष्ट इति, शत्रौ द्वेषरहितेनापि विवेकिना अभिचरणं क्रियते । न च कर्मविधिप्रवृत्तिनिमित्ते भेदप्रत्यये बाधिते अग्निहोत्रादौ प्रवर्तकं निमित्तमस्ति, परिव्राजकस्येव भिक्षाचरणादौ बुभुक्षादि प्रवर्तकम् ।
அனுவாதம் - ஸித்தாந்தீ - அவ்வாறு அல்ல. ஏன் எனில் பிரமாண்யத்தை விசாரம் செய்யும்பொழுது புருஷனின் பிரவிர்த்தி திருஷ்டாந்தரூபம் ஆகமுடியாது. அபிசாரம் செய்யாதே என்று தடுக்கப்பட்டாலும் சிலர் அபிசாரத்தை செய்வது காணப்படுகிறது. இவ்வாறு இருந்தாலும் எவருக்கு சத்ருக்களிடத்திலும் துவேஷ பாவம் இல்லாத விவேகி புருஷன் அபிசாரம் செய்வது என்பது முற்றிலும் கிடையாது. இவ்வாறு கர்ம விதியின் பிரவிர்த்திக்குக் காரணமான பேத புத்தி நீங்கின ஞானபுருஷன் அக்னிஹோத்திரம் முதலியவைகளில் பிரவிர்த்திப்பதற்கான எந்த காரணமும் காணப்படவில்லை. எவ்வாறு பரிவிராஜனுக்கு பிக்ஷாடணம் முதலியவைகளின் பிரவிர்த்திகளுக்கு பசி முதலிய நிமித்தமோ (காரணமோ) அவ்வாறு.
इहाप्यकरणे प्रत्यवायभयं प्रवर्तकमिति चेत् ?
அனுவாதம் - பூர்வ - இந்த சமயத்தில் கர்மம் செய்யவில்லையெனில் பிரத்யவாய (நரக) பயம் உண்டாக்கும் எனில்?
न, भेदप्रत्ययवतोऽधिकृतत्वात् । भेदप्रत्ययवान् अनुपमर्दितभेदबुद्धिर्विद्यया यः, स कर्मण्यधिकृत इत्यवोचाम ; यो हि अधिकृतः कर्मणि, तस्य तदकरणे प्रत्यवायः ; न निवृत्ताधिकारस्य, गृहस्थस्येव, ब्रह्मचारिणो विशेषधर्माननुष्ठाने ।
அனுவாதம் - ஸித்தாந்தீ - அவ்வாறு அல்ல. ஏன்எனில் கர்மானுஷ்டானத்தின் அதிகாரி பேத ஞானியாகும். எவருடைய பேத புத்தி வித்யையினால் நீங்காதோ அந்த பேத புத்தியுடையவனே கர்மத்தின் அதிகாரி என்று கூறியுள்ளோம். எவர் கர்மத்திற்கு அதிகாரியோ அவர் அதை செய்யாவிடில் நரகம் ஏற்படும் (பிரத்யவாயப் பிராப்த்தி). அந்த அதிகாரத் தன்மையை கடந்தவருக்கு அவ்வாறு பிரத்யவாயம் ஏற்படாது. எவ்வாறு பிரஹ்மச்சாரியினுடைய விசேஷ தர்மானுஷ்டானம் செய்யவில்லையெனில் பிரத்யவாயம் ஏற்படாதோ அவ்வாறு ஆகும்.
एवं तर्हि सर्वः स्वाश्रमस्थः उत्पन्नैकत्वप्रत्ययः परिव्राडिति चेत् ?
அனுவாதம் - பூர்வ - இவ்வாறு இருக்கும்பொழுது எவருக்கு ஏகத்துவ ஞானம் உண்டானபின் அந்த புருஷன் தன் ஆஸ்ரமத்தில் வசித்துக்கொண்டே பரிவிராஜன் ஆகாலாமே எனில்?
न, स्वस्वामित्वभेदबुद्ध्यनिवृत्तेः, कर्मार्थत्वाच्च इतराश्रमाणाम् —
‘अथ कर्म कुर्वीय’ (बृ. उ. १ । ४ । १७) इति श्रुतेः । तस्मात् स्वस्वामित्वाभावात् भिक्षुरेक एव परिव्राट् , न गृहस्थादिः ।
அனுவாதம் - ஸித்தாந்தீ - அவ்வாறு அல்ல. அவர்களுக்குத் தான் ஸ்வாமி என்ற ரூபமாகிய (அதாவது எனது நான் இதற்கு ஸ்வாமி என்ற அதிகிருத அதிகாரித்துவ ரூபமாகிய) பேத புத்தி நிவிர்த்தியாவதில்லை. ஏன்எனில் அவை மற்ற ஆஸ்ரமங்களுக்கான அனுஷ்டானத்திற்காக ஆகிறது எவ்வாறு எனில் (ஸ்திரீ புத்திரர்கள் பிராப்த்திக்குப்பின்) அதற்குப்பின் நான் கர்மம் செய்வேன் “अथ कर्म कुर्वीय” (அத கர்ம குர்வீய) என்று சுருதி சித்தமாகிறது. ஆகையால் ஸ்வஸ்வாமித்துவ பாவமாவதால் பிக்ஷுவே பரிவிராட் ஆகமுடியும். கிரஹஸ்தன் முதலியவர்கள் அல்ல.
एकत्वप्रत्ययविधिजनितेन प्रत्ययेन विधिनिमित्तभेदप्रत्ययस्योपमर्दितत्वात् यमनियमाद्यनुपपत्तिः परिव्राजकस्येति चेत् ?
அனுவாதம் - பூர்வ - ஏகத்துவ பிரத்யயத்தால் (ஞானத்தால்) உண்டாக்கும் விதி வாக்கியத்தால் உண்டாகும் கர்மவிதி நிமித்தத்தால் பேதஞானம் நிவிர்த்தி ஆனதால் பரிவிராஜகர்களுக்கு (சந்நியாசிகளுக்கு) யமநியம முதலியவைகளை கடைபிடிப்பது (அனுஷ்டிப்பது) சம்பவிக்காது எனில்?
न, बुभुक्षादिना एकत्वप्रत्ययात्प्रच्यावितस्योपपत्तेः, निवृत्त्यर्थत्वात् । न च प्रतिषिद्धसेवाप्राप्तिः, एकत्वप्रत्ययोत्पत्तेः प्रागेव प्रतिषिद्धत्वात् । न हि रात्रौ कूपे कण्टके वा पतितः उदितेऽपि सवितरि पतति तस्मिन्नेव । तस्मात् सिद्धं निवृत्तकर्मा भिक्षुक एव ब्रह्मसंस्थ इति ।
அனுவாதம் - ஸித்தாந்தீ - அவ்வாறு அல்ல. ஏன்எனில் பசி முதலியவைகளால் ஏகத்துவ பிரத்யயத்திலிருந்து நழுவினாலும் அதன் மூலமாய் செய்யக்கூடாத கர்மங்களின் நிவிர்த்திக்காக அதனை கடைபிடிப்பது ஸம்பவிக்கும். இதைத்தவிர ஏகத்துவ (பிரத்யயம்) ஞானம் உண்டாவதற்கு முன்பே அது கடைபிடிக்க தகுந்தது அல்ல என்று தள்ளப்பட்டதால் அந்த செய்யத்தாகாததை அனுஷ்டிப்பது இல்லை. இரவில் கிணற்றிலோ முட்புதரிலோ விழுந்தவன் சூரியன் உதித்தபின் அதில் மறுபடியும் விழமாட்டான். ஆகையால் கர்மாக்களிலிருந்து விடுபட்ட பிக்ஷுவே பிரஹ்மநிஷ்டன் என்று சித்திக்கின்றது.
यत्पुनरुक्तं सर्वेषां ज्ञानवर्जितानां पुण्यलोकतेति — सत्यमेतत् । यच्चोक्तं तपःशब्देन परिव्राडप्युक्त इति — एतदसत् । कस्मात् ? परिव्राजकस्यैव निवृत्तभेदप्रत्ययस्य ब्रह्मसंस्थतासम्भवात् । स एव हि अवशेषित इत्यवोचाम । एकत्वविज्ञानवतोऽग्निहोत्रादिवत्तपोनिवृत्तेश्च । भेदबुद्धिमत एव हि तपःकर्तव्यता स्यात् । एतेन कर्मच्छिद्रे ब्रह्मसंस्थतासामर्थ्यम् , अप्रतिषेधश्च प्रत्युक्तः । तथा ज्ञानवानेव निवृत्तकर्मा परिव्राडिति ज्ञानवैयर्थ्यं प्रत्युक्तम् ।
அனுவாதம் - எது கூறப்பட்டதோ ஞானமற்ற எல்லோருக்கும் புண்யலோகப் பிராப்தி என்பது உண்மையே. ஆனால். “தபஸ்” சப்தத்தால் பரிவிராட்டையும் குறிக்கிறது என்பது உண்மையல்ல. ஏன்? ஏன் எனில் பரிவிராட்டிற்கு பிரஹ்மநிஷ்டை ஸம்பவிப்பதால், இதையே முன்பே கூறினோம், ஏன்எனில் ஏகத்துவ விக்ஞானம் உடையவன் அக்னி ஹோத்திரம் முதலியவைகள் போல் தபஸிலிருந்தும் நிவிர்த்தி ஆகி இருக்கின்றான். பேத புத்தி உள்ளவனுக்கு தபஸ் அவசியம் செய்யவேண்டியதாகும். இதனால் கர்மானுஷ்டானம் அற்ற பிரஹ்மம் நிஷ்டையின் ஸாமர்த்தியத்தால் செய்யக்கூடாததும் நிஷேதம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஞானம் உடையவனே கர்மத்திலிருந்து விடுபட்டவனே பரிவிராட் என்பதால் ஞானம் பிரயோஜனம் அற்றது என்பது கண்டனம் செய்யப்பட்டது.
यत्पुनरुक्तं यववराहादिशब्दवत्परिव्राजके न रूढो ब्रह्मसंस्थशब्द इति, तत्परिहृतम् ; तस्यैव ब्रह्मसंस्थतासम्भवान्नान्यस्येति ।
அனுவாதம் - எது இவ்வாறு மறுபடியும் கூறப்பட்டதோ அதாவது வரகு (யவம்) வராஹம் என்ற சப்தம் போல் பரிவிராட்டிற்கு பிரஹ்ம ஸம்ய்த்த சப்தம் ரூடம் அல்ல என்பது பரிஹாரம் செய்யப்படுகிறது. ஏன் எனில் அந்த பரிவிராட்டிற்கே பிரஹ்ம ஸம்ஸ்த்தா (பிரஹ்மநிஷ்டை) ஸம்பவிக்கிறது. மற்றவர்களுக்கு அல்ல என்பதாகும்.
यत्पुनरुक्तं रूढशब्दाः निमित्तं नोपाददत इति, तन्न, गृहस्थतक्षपरिव्राजकादिशब्ददर्शनात् । गृहस्थितिपारिव्राज्यतक्षणादिनिमित्तोपादाना अपि, गृहस्थपरिव्राजकावाश्रमिविशेषे, विशिष्टजातिमति च तक्षेति, रूढा दृश्यन्ते शब्दाः । न यत्र यत्र निमित्तानि तत्र तत्र वर्तन्ते, प्रसिद्ध्यभावात् । तथा इहापि ब्रह्मसंस्थशब्दो निवृत्तसर्वकर्मतत्साधनपरिव्राडेकविषयेऽत्याश्रमिणि परमहंसाख्ये वृत्त इह भवितुमर्हति, मुख्यामृतत्वफलश्रवणात् ।
அனுவாதம் - எது மறுபடியும் கூறப்பட்டதோ அதாவது ரூட சப்த நிமித்தத்தை மேற்கொள்ளாமல் இவ்வாறு வாதி கூறுவது சரியல்ல. ஏன்எனில் கிரஹஸ்த்தன், தச்சன், பரிவிராஜர் முதலிய சப்தங்கள் காணப்படுவதால் ஆகும், கிருஹத்தில் வசித்தல், பாரிவிராஜ்ய அதாவது எல்லாவற்றையும் தியாகம் செய்து செல்லுதல், மேலும் தச்சன் முதலிய நிமித்தங்களை எடுத்துக்கொண்டாலும் கிருஹஸ்த்தமும், பாரிவிராஜகமும் ஆஸ்ரம விசேஷங்களாகும். ஆனால் தச்சன் என்பது ஜாதி விசேஷமாகும். இவ்வாறு சப்தங்களில் ரூடம் காணப்படுகிறது. எங்கு எங்கு அந்த கிருஹஸ்த்தம் முதலிய சப்த நிமித்தங்களோ அங்கு அங்கு பிரவிர்த்திக்காது. ஏன் எனில் அவ்வாறான பிரசித்தி இல்லை. அவ்வாறே இங்கும் பிரஹ்ம ஸம்ஸ்த்த சப்தம் எல்லா கர்மங்களிலும் அதன் ஸாதனங்களில் இருந்தும் நிவிர்த்தியாகி ஏகமாத்திரமாக (அத்யா ஆஸ்ரமி பரமஹம்ச) பரிவிராஜமாவது உசிதமேயாகும். ஏன் எனில் அதற்கு அம்ருதத்துவமே முக்கிய பலம் என்று கேட்கப்படுவதால் ஆகும்.
अतश्चेदमेवैकं वेदोक्तं पारिव्राज्यम् , न यज्ञोपवीतत्रिदण्डकमण्डल्वादिपरिग्रह इति ;
‘मुण्डोऽपरिग्रहोऽसङ्गः’ (जा. उ. ५) इति च । श्रुतिः
‘अत्याश्रमिभ्यः परमं पवित्रम्’ (श्वे. उ. ६ । २१) इत्यादि च श्वेताश्वतरीये ;
‘निस्तुतिर्निर्नमस्कारः’ (मो. ध. २४२ । ९) इत्यादिस्मृतिभ्यश्च ;
‘तस्मात्कर्म न कुर्वन्ति यतयः पारदर्शिनः । ’ (मो. ध. २४१ । ७)‘तस्मादलिङ्गो धर्मज्ञोऽव्यक्तलिङ्गः’ (अश्व. ४६ । ५१) (व. १० । १२) इत्यादिस्मृतिभ्यश्च ॥
அனுவாதம் - ஆகையால் வேதம் கூறுவது பாரிவிராஜ்யம், ஒன்றை மட்டுமே. யக்ஞோப வீதம், த்ரிதண்டம், கமண்டலம் முதலியவைகளை கிரஹிப்பது முக்கிய பாரிவிராஜ்யம் அல்ல. இந்த விஷயத்தில் “मुण्डोऽपरिग्रहः” (முண்டோऽபரிகிரஹ:) “असः” (அசங்க:) என்பது சுருதி வாக்கியம். “अत्याश्रमिभ्यः परमं पवित्रम्” (அத்யாஸ்ரமிப்ய: பரமம் பவித்ரம்) முதலியவை ச்வேதா ச்வதர உபநிஷத் வாக்கியமாகும். “निःस्तुति र्निर्नमस्कारः” (நிஸ்துதிர் நிர்நமஸ்கார:) முதலிய ஸ்மிருதி வாக்கியங்களாலும், மேலும் “तस्मात्कर्म न कुर्वन्ति यतयः पारदर्शिनः। तस्मादलिङ्गो धर्मज्ञोऽव्यक्तिलिङ्गः” (தஸ்மாத்கர்ம ந குர்வந்தி யதய: பாரதர்சின: தஸ்மாதலிங்கோ தர்மஞோऽவ்யத்கதலிங்க:) என்பன போன்ற ஸ்மிருதிகளாலும் அறிகின்றோம்.
यत्तु साङ्ख्यैः कर्मत्यागोऽभ्युपगम्यते, क्रियाकारकफलभेदबुद्धेः सत्यत्वाभ्युपगमात् , तन्मृषा । यच्च बौद्धैः शून्यताभ्युपगमात् अकर्तृत्वमभ्युपगम्यते, तदप्यसत् , तदभ्युपगन्तुः सत्त्वाभ्युपगमात् । यच्च अज्ञैरलसतया अकर्तृत्वाभ्युपगमः, सोऽप्यसत् , कारकबुद्धेरनिवर्तितत्वात्प्रमाणेन । तस्मात् वेदान्तप्रमाणजनितैकत्वप्रत्ययवत एव कर्मनिवृत्तिलक्षणं पारिव्राज्यं ब्रह्मसंस्थत्वं चेति सिद्धम् । एतेन गृहस्थस्यैकत्वविज्ञाने सति पारिव्राज्यमर्थसिद्धम् ॥
அனுவாதம் - கிரியாகாரக புத்தியை ஸத்யம் என்று ஏற்றுக்கொண்டு எந்த அந்த ஸாங்கியர்கள் கர்மாதியாகத்தை ஒப்புக்கொள்கின்றனர். அது உண்மையல்ல. அவ்வாறே பெளத்தர்கள் சூன்யத்தை ஒப்புக்கொண்டு அகர்த்ருத்துவத்தை ஏற்றுக்கொள்கின்றனர். அதுவும் உண்மையல்ல. ஏன்எனில் இருந்தால் அல்லவா அதை தியாகம் செய்யமுடியும். மேலும் அக்ஞானிகளால் ஆலஸ்யத்தால் (சோம்பேறிதனத்தால்) அகர்த்துவத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். அதுவும் சரியல்ல. ஏன்எனில் பிரமாணங்களால் காரக புத்தியை நிவிர்த்தி செய்ய முடியாது. ஆகையால் வேதாந்தப் பிரமாணத்தால் உண்டான ஏகத்துவ ஞானம் உடையவனுக்கே கர்ம நிவிர்த்தி லக்ஷணம் பாரிவிராஜ்யம் பிரஹ்ம ஸம்ஸ்தத்துவம் (பிரஹ்மநிஷ்டை) என்பது ஸித்திக்கிறது. இதனால் கிருஹஸ்தனுக்கும் ஏகத்துவ ஞானம் ஏற்பட்டவுடன் பாரிவிராஜ்யம் ஸித்தமாகிறது.
ननु अग्न्युत्सादनदोषभाक्स्यात् परिव्रजन् —
‘वीरहा वा एष देवानां योऽग्रिमुद्वासयते’ (तै. सं. १ । ५ । २) इति श्रुतेः, न, दैवोत्सादितत्वात् , उत्सन्न एव हि स एकत्वदर्शने जाते —
‘अपागादग्नेरग्नित्वम्’ (छा. उ. ६ । ४ । १) इति श्रुतेः । अतो न दोषभाक् गृहस्थः परिव्रजन्निति ॥
அனுவாதம் - ஆனால் (கிருஹஸ்த்தன்) பரிவிராஜன் ஆனதினால் அக்னியை பரித்தியாகம் செய்ததோஷம் உடையவன் ஆவான் என்பது எவ்வாறு “वीरहा वा एष देवानां योऽग्निमुद्वासयते” (வீராஹா வா ஏஷ தேவானாம் யோऽக்னிமுத்வாஸ்யதே) என்ற சுருதியினால் சித்திக்கின்றதே எனில் அவ்வாறு கூறுதல் சரியல்ல. ஏன்எனில் ஏகத்துவ தர்சனத்தால் அக்னியும் தானாகவே சாந்தமாகிவிடுகிறது. “अपागादग्नेरग्नित्वम्” (அபாகாதக்னேரக்னித்துவம்) என்ற சுருதியினால் அறிகிறோம். ஆகையால் பரிவிராஜன் ஆனதால் கிருஹஸ்தன் தோஷமுடையவன் ஆகமாட்டான்.