तद्यत्प्रथमममृतं तद्वसव उपजीवन्त्यग्निना मुखेन न वै देवा अश्नन्ति न पिबन्त्येतदेवामृतं दृष्ट्वा तृप्यन्ति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - இவைகளில் எது முதல் அம்ருதமோ அதனால் வசுகணங்கள் அக்னி தேவதையை பிரதானமாக்கி ஜீவனத்தை செய்கின்றனர். (அனுபவிக்கின்றனர்). தேவகணங்களோவெனில் சாப்பிடுவது இல்லை. அருந்துவதும் இல்லை. அவர்கள் இந்த அம்ருதத்தை பார்த்தே திருப்தி அடைகின்றனர்.
तत् तत्र यत्प्रथमममृतं रोहितरूपलक्षणं तद्वसवः प्रातःसवनेशाना उपजीवन्ति अग्निना मुखेन अग्निना प्रधानभूतेन, अग्निप्रधानाः सन्त उपजीवन्तीत्यर्थः ।
‘अन्नाद्यं रसोऽजायत’ (छा. उ. ३ । १ । ३) (छा. उ. ३ । २ । २) (छा. उ. ३ । ३ । २) (छा. उ. ३ । ४ । २) (छा. उ. ३ । ५ । २) इति वचनात् कबलग्राहमश्नन्तीति प्राप्तम् , तत्प्रतिषिध्यते — न वै देवा अश्नन्ति न पिबन्तीति ।
அனுவாதம் - அங்கு எந்த அந்த சிகப்பு நிற லக்ஷணமுடைய முதல் அம்ருதம் ஆகும். அதனால் உபஜீவிக்கும் பிராத: சவன அதிகாரி வசுகணங்கள் ஆகும். அவர்கள் அக்னி முகத்தால் அதாவது பிரதானமான அக்னியினால் அதாவது அக்னியை பிரதானமாகி அதனால் உபஜீவிக்கின்றார்கள் என்பது பொருள். “अन्नाद्यं रसोऽजायत” (அன்னாத்யம் ஏசோஅஜாயத) என்ற வசனத்தால் கவலங்களாக விழிங்கி சாப்பிட்டார்கள் என்று ஆகிறது. அது நிராகரிக்கப்படுகிறது. தேவர்கள் சாப்பிடுவது இல்லை, பருகுவதும் இல்லை என்று.
कथं तर्हि उपजीवन्तीति, उच्यते — एतदेव हि यथोक्तममृतं रोहितं रूपं दृष्ट्वा उपलभ्य सर्वकरणैरनुभूय तृप्यन्ति, दृशेः सर्वकरणद्वारोपलब्ध्यर्थत्वात् ।
அனுவாதம் - ஆனால் அவர்கள் எவ்வாறு உபஜீவிக்கின்றனர்? அதற்குக் கூறப்படுகிறது- அதுவே அதாவது முன்பு கூறப்பட்ட அம்ருதம் சிகப்பு ரூபம் பார்த்து அடைந்து எல்லா கரணங்களாலும் அனுபவித்து திருப்தி அடைகின்றனர் ஏன்எனில் “दृश्” (த்ருச்) தாது எல்லா இந்திரிய மூலமாக ஞானம் அடையும் அர்த்தத்தில் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
ननु रोहितं रूपं दृष्ट्वेत्युक्तम् ; कथमन्येन्द्रियविषयत्वं रूपस्येति ; न, यशआदीनां श्रोत्रादिगंयत्वात् । श्रोत्रग्राह्यं यशः । तेजोरूपं चाक्षुषम् । इन्द्रियं विषयग्रहणकार्यानुमेयं करणसामर्थ्यम् । वीर्यं बलं देहगत उत्साहः प्राणवत्ता । अन्नाद्यं प्रत्यहमुपजीव्यमानं शरीरस्थितिकरं यद्भवति । रसो ह्येवमात्मकः सर्वः । यं दृष्ट्वा तृप्यन्ति सर्वे । देवा दृष्ट्वा तृप्यन्तीति एतत्सर्वं स्वकरणैरनुभूय तृप्यन्तीत्यर्थः । आदित्यसंश्रयाः सन्तो वैगन्ध्यादिदेहकरणदोषरहिताश्च ॥
அனுவாதம் - ஆனால் இங்கு ரோஹித ரூபம் (சிகப்பு ரூபம்) பார்த்து என்று கூறப்பட்டது. அந்த ரூபம் எவ்வாறு மற்ற இந்திரியங்களுக்கு விஷயமாகும்? அவ்வாறு அல்ல. ஏன்எனில் யசஸ் முதலியவை ஸ்ரோத்திரம் முதலியவைகளுக்கு விஷயமாவதால் ஆகும். யசஸ் ச்ரோத்திரத்திற்கு விஷயமாகிறது. கண்களுக்கு தேஜோரூபம் விஷயமாகிறது. இந்திரியம் - விஷயங்களை கிரஹிக்கும் காரியத்தால் அனுமானம் செய்யும் இந்திரிய சாமர்த்தியத்தின் நாமம் ஆகும். வீர்யம் அதாவது பலம் என்பது தேஹத்தில் உள்ள உற்சாகம். அது பிராணன் உடையதற்கு என்பது பொருள். அன்னாத்யம் என்பது தினமும் அதை ஆஸ்ரயத்து பிராணன் முதலியவைகளை உத்ஜீவிக்கும் சரீரத்தின் நிலைபாட்டிற்குக் காரணமாகும். இவ்வாறு எல்லாவற்றிற்கும் ரசமாகிறது. இதைப் பார்த்து எல்லாம் திருப்தி அடைகின்றன. அதாவது தேவகணங்கள் இவ்வாறு தங்களுடைய கரணங்களால் அனுபவித்து திருப்தி அடைகின்றனர். இவ்வாறு ஆதித்யனை ஆஸ்ரயித்து கெட்ட வாசனை (துர்கந்தம்) முதலிய தேஹம் மற்றும் இந்திரியங்களின் தோஷம் அற்றவர்களாய் இருக்கின்றனர்.
किं ते निरुद्यमा अमृतमुपजीवन्ति ? न ; कथं तर्हि,
அனுவாதம் - அ.கை - என்ன அவர்கள் முயற்சி இல்லாமல் அம்ருதத்தால் உபஜீவி ஆகிறார்களா? இல்லை. அவ்வாறு ஆனால் எவ்வாறு?
त एतदेव रूपमभिसंविशन्त्येतस्माद्रूपादुद्यन्ति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அந்த தேவகனங்கள் இந்த ரூபத்தை லக்ஷித்து உதாசீனம் அடைகின்றனர். அவ்வாறே அதன்பின் இதனால் உற்சாகத்தை அடைகின்றனர். (மேல் எழுகின்றனர்).
एतदेव रूपम् अभिलक्ष्य अधुना भोगावसरो नास्माकमिति बुद्ध्वा अभिसंविशन्ति उदासते । यदा वै तस्यामृतस्य भोगावसरो भवेत् , तदैतस्मादमृतादमृतभोगनिमित्तमित्यर्थः ; एतस्माद्रूपात् उद्यन्ति उत्साहवन्तो भवन्तीत्यर्थः । न हि अनुत्साहवतामननुतिष्ठतामलसानां भोगप्राप्तिर्लोके दृष्टा ॥
அனுவாதம் - இந்த ரூபத்தையே லக்ஷித்து இப்பொழுது நமக்கு போகம் செய்யவேண்டிய அவசரம் இல்லை என்று அறிந்து உதாசீனமாகின்றனர். எப்பொழுது அந்த அம்ருதத்தின் போகத்தின் அவசரம் ஏற்படுகிறதோ அது இந்த அம்ருத போகத்தின் நிமித்தமாகும் என்பது தாத்பர்யம். இந்த ரூபத்திலிருந்து உத்சாகம் எழுகிறது என்பது பொருள். உத்சாகம் இல்லாத, அனுஷ்டானம் இல்லாத மேலும் உத்சாகம் இல்லாதவனுக்கு உலகில் போகத்தின் பிராப்தி என்பது காணப்படவில்லை.
स य एतदेवममृतं वेद वसूनामेवैको भूत्वाग्निनैव मुखेनैतदेवामृतं दृष्ट्वा तृप्यति स एतदेव रूपमभिसंविशत्येतस्माद्रूपादुदेति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இவ்வாறு இந்த அம்ருதத்தை அறிகின்றானோ அவன் அந்த வசுக்களில் ஒருவனாகி அக்னியை பிரதானமாக (தலைவனாக)ப் பார்த்தாலே திருப்தி அடைகின்றான். அவன் இந்த ரூபத்தை லக்ஷித்து உதாசீனன் ஆகின்றான். மேலும் அந்த ரூபத்தாலேயே உத்சாகம் அடைகின்றான்.
स यः कश्चित् एतदेवं यथोदितम् ऋङ्मधुकरतापरससङ्क्षरणम् ऋग्वेदविहितकर्मपुष्पात् तस्य च आदित्यसंश्रयणं रोहितरूपत्वं च अमृतस्य प्राचीदिग्गतरश्मिनाडीसंस्थतां वसुदेवभोग्यतां तद्विदश्च वसुभिः सहैकतां गत्वा अग्निना मुखेनोपजीवनं दर्शनमात्रेण तृप्तिं च स्वभोगावसरे उद्यमनं तत्कालापाये च संवेशनं वेद, सोऽपि वसुवत् सर्वं तथैवानुभवति ॥
அனுவாதம் - எவன் ஒருவன் இவ்வாறு கூறப்பட்ட அம்ருதத்தை இவ்வாறு அறிகிறானோ அதாவது ரிக்வேதத்தில் விதிக்கப்பட்ட கர்ம ரூப புஷ்பத்திலிருந்து ரிக் மந்திரங்கள் ரூபமான தேனீக்களினால் தஹிக்கப்பட்டு அதை (மதுவை) சேகரித்து, அது ஆதித்யனை ஆஸ்ரயித்து சிகப்பு (ரோஹித) ரூபமாவது, அம்ருதத்தின் கிழக்கு திக்கில் இருக்கின்ற கிரணங்கள் என்னும் தேன் அடையில் இருந்துகொண்டு வசு என்னும் தேவர்களுக்கு போக்யமாவது என்பதை அறிந்தவர்கள் வசுகணங்களுடன் சேர்ந்து அக்னியைப் பிரதானமாகக் (தலைவனாகக்) கொண்டு அதனை ஆஸ்ரயித்து உபஜீவிப்பதால் அதனை தர்சித்த மாத்திரத்திலேயே அவர்களுக்கு திருப்தி உண்டாகி தாங்கள் போகத்தின் அவசரம் முடிந்தபின் உதாசீனம் அடைகிறார்கள். அவர்களும் வசுக்களுக்கு சமமாக எல்லாவற்றையும் அனுபவிக்கின்றனர்.
स यावदादित्यः पुरस्तादुदेता पश्चादस्तमेता वसूनामेव तावदाधिपत्यꣳ स्वाराज्यं पर्येता ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - எப்பொழுது ஆதித்யன் கிழக்கு திசையிலிருந்து உதிக்கின்றதோ அவ்வாறே மேற்கு திசையில் அஸ்தமிக்கின்றதோ அவ்வளவு காலம் வரை (அவ்வளவு தூரம்) அந்த வித்வான் வசுக்களின் ஆதிபத்யத்தையும், ஸ்வராஜ்யத்தையும் அடைகின்றான்.
कियन्तं कालं विद्वांस्तदमृतमुपजीवतीति, उच्यते —
அனுவாதம் - அ.கை - எவ்வளவு காலம் வித்வான் அம்ருதத்தை ஆஸ்ரயித்து ஜீவிப்பான்? என்பது கூறப்படுகிறது
स विद्वान् यावदादित्यः पुरस्तात् प्राच्यां दिशि उदेता पश्चात् प्रतीच्याम् अस्तमेता, तावद्वसूनां भोगकालः तावन्तमेव कालं वसूनामाधिपत्यं स्वाराज्यं पर्येता परितो गन्ता भवतीत्यर्थः । न यथा चन्द्रमण्डलस्थः केवलकर्मी परतन्त्रो देवानामन्नभूतः ; किं तर्हि, अयम् आधिपत्यं स्वाराज्यं स्वराड्भावं च अधिगच्छति ॥
அனுவாதம் - முதலில் சூரியன் கிழக்கு திசையில் உதித்து அதன்பின் மேற்கு திசையில் அஸ்தமிக்கும் காலம்வரை வசுக்களின் போக காலமாகும். அந்த வித்வான் அந்த காலம் வரையிலுமே வசுக்களின் ஆதிபத்யத்தையும் ஸ்வராஜ்யத்தையும் எல்லாவகையிலும் அடைகிறான் என்பது பொருள். எவ்வாறு சந்திர மண்டலத்தில் இருக்கும் கேவலம் கர்மத்திலேயே ஈடுபட்ட புருஷன் தேவதைகளின் அன்னபூதமாகி (போக்கியமாகி) பரதந்திரர்களாய் இருப்பது போல் அல்ல. பின் எவ்வாறு இருக்கின்றார்கள்? இவர் அதிபத்யத்தையும், ஸ்வராஜ்யத்தையும் அடைகிறார்.
इति षष्ठखण्डभाष्यम् ॥
अथ यत्तृतीयममृतं तदादित्या उपजीवन्ति वरुणेन मुखेन न वै देवा अश्नन्ति न पिबन्त्येतदेवामृतं दृष्ट्वा तृप्यन्ति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - அதற்குப்பின் மூன்றாவது அம்ருதம். ஆதித்யகணங்கள் வருணனை பிரதானமாகக்கொண்டு அதை ஆஸ்ரயித்து உபஜீவிக்கின்றன. ருதவகணங்கள் சாப்பிடுவதோ பருகுவதோ இல்லை. இந்த அம்ருதத்தைப் பார்த்தே திருப்தி அடைகின்றன.
त एतदेव रूपमभिसंविशन्त्येतस्माद्रूपादुद्यन्ति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அவைகள் இந்த ரூபத்தை லக்ஷித்து உதாசீனமாகின்றன. மேலும் இதனாலேயே வெளிப்படுகின்றனர். (மேல் எழுகின்றனர்)
स य एतदेवममृतं वेदादित्यानामेवैको भूत्वा वरुणेनैव मुखेनैतदेवामृतं दृष्ट्वा तृप्यति स एतदेव रूपमभिसंविशत्येतस्माद्रूपादुदेति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - எந்த இந்த அம்ருதத்தை அறிகிறாரோ அவர் ஆதித்யர்களுள் ஒருவராகி வருணனை பிரதானமாகக் கொண்டு இந்த அம்ருதத்தைப் பார்த்தே திருப்தி அடைகின்றனர். இந்த ரூபத்தால் உதாசீனம் ஆகின்றனர். மேலும் இதனாலேயே வெளிப்படுகின்றனர்.
स यावादादित्यो दक्षिणत उदेतोत्तरतोऽस्तमेता द्विस्तावत्पश्चादुदेता पुरस्तादस्तमेतादित्यानामेव तावदाधिपत्यं स्वाराज्यꣳ पर्येता ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - அந்த ஆதித்யன் எவ்வளவு நேரம் தக்ஷிணத்தில் (தெற்கில்) உதித்து வடக்கில் அஸ்தமாகின்றதோ அதைப்போன்ற இரண்டு மடங்காகும் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் நேரம் வரை அவன் ஆதித்யர்களின் ஆதிபத்தியத்தையும் ஸ்வராஜ்யத்தையும் அடைகின்றான்.
तथा पश्चात् उत्तरतः ऊर्ध्वमुदेता विपर्ययेण अस्तमेता । पूर्वस्मात्पूर्वस्माद्द्विगुणोत्तरोत्तरेण कालेनेत्यपौराणं दर्शनम् । सवितुः चतुर्दिशमिन्द्रयमवरुणसोमपुरीषु उदयास्तमयकालस्य तुल्यत्वं हि पौराणिकैरुक्तम् , मानसोत्तरस्य मूर्धनि मेरोः प्रदक्षिणावृत्तेस्तुल्यत्वादिति ।
அனுவாதம் - அவ்வாறே கிழக்கு, வடக்கு, மேற்பாகத்தில் சூரியன் உதிக்கின்றது. அவைகளின் எதிர் திசையிலும் அஸ்தமிக்கின்றது. ஆனால் முன்னுள்ளதை அபேக்ஷித்து அதற்கு அடுத்தது உதய அஸ்தமன காலம் இருமடங்கு என்ற புராண திருஷ்டிக்கு விரோதமான தர்சனமாகும். ஏன்எனில் பெளரானிகர்கள் நான்கு திசைகளிலும் இந்திரன் யமன், வருணன், மேலும் சோமன் (சந்திரன்) ஆகிய புரிகளில் (லோகங்களில்) சூரியனின் உதய அஸ்தமன காலம் சமானமாகக் கூறுகின்றனர். ஏன்எனில் மானசின் வடக்கு பர்வதத்தின் உச்சியில் (சிகையில்) சுமேகுருவின் நான்கு பக்கங்களிலும் சூரியனின் கமனத்திற்கான (செல்வதற்கான) மார்க்கமாகும். அது எங்கும் சமமாகும்.
अत्रोक्तः परिहारः आचार्यैः । अमरावत्यादीनां पुरीणां द्विगुणोत्तरोत्तरेण कालेनोद्वासः स्यात् । उदयश्च नाम सवितुः तन्निवासिनां प्राणिनां चक्षुर्गोचरापत्तिः, तदत्ययश्च अस्तमनम् ; न परमार्थत उदयास्तमने स्तः । तन्निवासिनां च प्राणिनामभावे तान्प्रति तेनैव मार्गेण गच्छन्नपि नैवोदेता नास्तमेतेति, चक्षुर्गोचरापत्तेस्तदत्ययस्य च अभावात् ।
அனுவாதம் - இங்கு ஆச்சார்யர்களால் பரிஹாரம் கூறப்பட்டுள்ளது. அமராவதி முதலிய புரங்களின் (லோகங்களின்) இருமடங்காக மேலும் மேலும் ஏற்படும் காலங்களால் நாசம் உண்டாகிறது. அந்தபுரிகளில் வசிப்பவர்களின் திருஷ்டியில் சூரியன் வரும்பொழுது உதயமும், திருஷ்டிக்கு புலப்படாதபொழுது சூரியனின் அஸ்தமனமாகும். உண்மையில் உதய அஸ்தமனம் கிடையாது. அந்த புரங்களில் வசிப்பவர்கள் இல்லையெனில் சூரியன் அந்த மார்க்த்தில் சென்றாலும் உதிப்பது இல்லை. அவ்வாறே அஸ்தமனமும் ஆவதில்லை. ஏன் எனில் அப்பொழுது சூரியன் எந்த ஒருவருடைய திருஷ்டிக்கும் விஷயமாகாததால் ஆகும்.
तथा अमरावत्याः सकाशाद्द्विगुणं कालं संयमनी पुरी वसति, अतस्तन्निवासिनः प्राणिनः प्रति दक्षिणत इव उदेति उत्तरतोऽस्तमेति इत्युच्यतेऽस्मद्बुद्धिं च अपेक्ष्य । तथोत्तरास्वपि पुरीषु योजना सर्वेषां च मेरुरुत्तरतो भवति ।
அனுவாதம் - அவ்வாறே அமராவதி புரியை அபேக்ஷித்து இருமடங்கு காலம் சமயமனீ புரி இருக்கின்றது. ஆகையால் அதில் வசிக்கும் பிராணிகளுக்காக சூரியன் தக்ஷிண பாகத்தில் உதிக்கின்றது. வடக்கில் அஸ்தமிக்கின்றது. இந்த விஷயம் நம் லோகத்தின் திருஷ்டியை அபேக்ஷித்து கூறப்பட்டது. இவ்வாறே இனிவரும் மற்றபுரிகளிலும் என்று அறிய வேண்டும். அவ்வாறே மேரு இந்த எல்லாவற்றிற்கும் வடக்கு பக்கத்தில் உள்ளது.
यदा अमरावत्यां मध्याह्नगतः सविता, तदा संयमन्यामुद्यन्दृश्यते ; तत्र मध्याह्नगतो वारुण्यामुद्यन्दृश्यते ; तथोत्तरस्याम् , प्रदक्षिणावृत्तेस्तुल्यत्वात् । इलावृतवासिनां सर्वतः पर्वतप्राकारनिवारितादित्यरश्मीनां सविता ऊर्ध्व इव उदेता अर्वागस्तमेता दृश्यते, पर्वतोर्ध्वच्छिद्रप्रवेशात्सवितृप्रकाशस्य ।
அனுவாதம் - எப்பொழுது அமராவது புரியில் சூரியன் மத்தியானத்திற்கு சென்றதோ அப்பொழுது சம்யமீ புரத்தில் உதிப்பது காணப்படுகிறது. அங்கு மத்தியானத்தில் இருக்கும்பொழுது வருண புரியில் உதிப்பது காணப்படுகிறது. இவ்வாறு உத்தர (வடக்கு) திசையில் நகரும் புரத்தின் விஷயத்தில் இவ்வாறு அறிந்துகொள்ள வேண்டும். ஏன்எனில் பிரதக்ஷணத்தின் சக்கரம் எங்கும் சமமாகும். சூரிய கிரணங்கள் எல்லா பக்கமும் பர்வதரூப பிரகார மூலமாய் மறைக்கப்பட்டு இலா ஆவிர்த்த கண்டத்தில் வசிப்பவர்களுக்கு சூரியன் மேலே உதிப்பது போல் இருக்கிறது. அவ்வாறே கீழே அஸ்தமிப்பது போல் இருக்கின்றது. ஏன்எனில் சூரியனின் பிரகாசம் பர்வதங்களின் மேலே உள்ள துளை மூலமாய் பிரவேசிக்கின்றது.
तथा ऋगाद्यमृतोपजीविनाममृतानां च द्विगुणोत्तरोत्तरवीर्यवत्त्वमनुमीयते भोगकालद्वैगुण्यलिङ्गेन । उद्यमनसंवेशनादि देवानां रुद्रादीनां विदुषश्च समानम् ॥
அனுவாதம் - அவ்வாறே ரிக் முதலிய அம்ருதத்தை ஆஸ்ரயித்து ஜீவனத்தை கழிக்கும் தேவதைகளின் வீர்யம் மேலும் மேலும் இருமடங்காவது போக காலத்தின் இரண்டு மடங்கு குணத்தின் லிங்கத்தால் அனுமானம் செய்யப்படுகிறது. ருத்திரர்கள் முதலியவர்களும், வித்வான்களும் ஆதிபத்தியத்தையும், ஸ்வராஜ்யத்தையும் அடைகின்றனர்.
इति अष्टमखण्डभाष्यम् ॥
अथ तत ऊर्ध्व उदेत्य नैवोदेता नास्तमेतैकल एव मध्ये स्थाता तदेष श्लोकः ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - அதன்பின் அது மேல்நோக்கி சென்று உதித்தபின் உதிப்பது இல்லை அஸ்தமிப்பதும் இல்லை. மேலும் தனியாக மத்தியில் நிலையாக இருக்கின்றது. இந்த விஷயத்தில் இந்த ஸ்லோகமாகும்.
अथ ततः तस्मादनन्तरं प्राण्यनुग्रहकालादूर्ध्वः सन् आत्मन्युदेत्य उद्गंय यान्प्रत्युदेति तेषां प्राणिनामभावात् स्वात्मस्थः नैवोदेता नास्तमेता एकलः अद्वितीयः अनवयवः मध्ये स्वात्मन्येव स्थाता ।
அனுவாதம் - அதன்பின்னர் பிராணிகளின் அனுகிரஹத்திற்காக மேலே இருந்துகொண்டு தன்னிலேயே உதிக்கின்றது. மேல் எழும்பி மறுபடியும் உதிக்கின்றது. அந்த பிராணிகள் இல்லாததால் தன்னிலேயே இருந்துகொண்டு உதிப்பதும் இல்லை அஸ்தமிப்பதும் இல்லை. மாறாக தனியாக அத்விதீயமாய் அதாவது அவயவமற்று தன்னிடத்திலேயே (நடுவிலேயே) நிலைபெற்று இருக்கின்றது.
तत्र कश्चिद्विद्वान्वस्वादिसमानचरणः रोहिताद्यमृतभोगभागी यथोक्तक्रमेण स्वात्मानं सवितारमात्मत्वेनोपेत्य समाहितः सन् एतं मन्त्रं दृष्ट्वा उत्थितः अन्यस्मै पृष्टवते जगाद यतस्त्वमागतो ब्रह्मलोकात् किं तत्राप्यहोरात्राभ्यां परिवर्तमानः सविता प्राणिनामायुः क्षपयति यथेहास्माकम् ; इत्येवं पृष्टः प्रत्याह — तत् तत्र यथा पृष्टे यथोक्ते च अर्थे एष श्लोको भवति तेनोक्तो योगिनेति श्रुतेर्वचनमिदम् ॥
அனுவாதம் - அங்கு ஏதோ ஒரு வித்வான் வசு முதலியவைகளுக்கு சமான ஆசரணமும் (கடைபிடித்தலும்) அவ்வாறே ரோஹிதம் (சிகப்பு) முதலிய அம்ருதத்தை கூறப்பட்ட கிரமமாக ஆத்மாவாகிய சூரியனை தானாக அடைந்து சமாஹித சித்தம் உடையவனாகி இவ்வாறு மந்திரத்தைப் பார்த்து (சாக்ஷாத்காரம் அடைந்து) வியுத்தானமாகி தன்னிடம் பிரசன்னம் செய்பவர்கள் (கேள்வி கேட்பவனிடம்) ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டனர். அவர்கள் என்ன நீ பிரஹ்ம லோகத்திலிருந்து வந்து அங்கும் இவ்வாறு சூரியனால் பகல் இரவு நிகழ்ந்து பிராணிகளின் ஆயுள் இங்கு க்ஷீணம் அடைவது போல் அங்கும் ஆயுள் க்ஷயமடைகிறதா? என்று இவ்வாறு கேட்டதற்கு பதில் அளிக்கப்படுகிறது - அங்கு கேட்டதற்கு எவ்வாறு கூறப்பட்டதோ அந்த அர்த்தமுடையதே இந்த ஸ்லோகம். ஏன்எனில் இது யோகியினால் கூறப்பட்டதால் இது சுருதி வசனமாகும்.
न वै तत्र न निंलोच नोदियाय कदाचन । देवास्तेनाहꣳ सत्येन मा विराधिषि ब्रह्मणेति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அங்கு நிச்சயமாக அவ்வாறு நடைபெறாது. அங்கு சூரியன் ஒரு பொழுதும் அஸ்தமிப்பது இல்லை. அவ்வாறே உதிப்பதும் இல்லை. ஹே தேவ கணங்களே! இந்த சத்தியத்தின் மூலமாய் நான் பிரஹ்மத்திற்கு விருத்தமாக ஆகமாட்டேன். (மாறுபட்டு இருக்கமாட்டேன்) (விலக மாட்டேன்)
न वै तत्र यतोऽहं ब्रह्मलोकादागतः तस्मिन्न वै तत्र एतदस्ति यत्पृच्छसि । न हि तत्र निंलोच अस्तमगमत्सविता न च उदियाय उद्गतः कुतश्चित् कदाचन कस्मिंश्चिदपि काले इति ।
அனுவாதம் - न वै तत्र (ந வை தத்ர) - எந்த பிரஹ்மலோகத்திலிருந்து நான் வந்தேனோ அங்கு நீ எது கேட்டாயோ அது இல்லை. அங்கு எப்பொழுதும் சூரியன் அஸ்தமிப்பது இல்லை. உதிப்பதும் இல்லை.
उदयास्तमयवर्जितः ब्रह्मलोकः इत्यनुपपन्नम् इत्युक्तः शपथमिव प्रतिपेदे हे देवाः साक्षिणो यूयं शृणुत, यथा मयोक्तं सत्यं वचः तेन सत्येन अहं ब्रह्मणा ब्रह्मस्वरूपेण मा विराधिषि मा विरुध्येयम् , अप्राप्तिर्ब्रह्मणो मम मा भूदित्यर्थः ॥
அனுவாதம் - பிரஹ்ம லோகம் உதயம் அஸ்தமனம் இல்லாது என்பது சரியல்ல என்று கூறுபவனுக்கு சபதம் செய்வது போல் செய்யப்பட்டது. ஹே! தேவர்களே! நீங்கள் சாக்ஷியாய் இருந்து கேளுங்கள். எவ்வாறு என்னால் கூறப்பட்ட சத்ய வசனமோ அந்த சத்ய வசனத்தால் நான் பிரஹ்ம சுவரூபத்திற்கு வேறானவனாக ஆகமாட்டேன். அதாவது எனக்கு பிரஹ்மம் அடையாமல் இருப்பது என்பது எனக்கு ஏற்படக்கூடாது.
न ह वा अस्मा उदेति न निंलोचति सकृद्दिवा हैवास्मै भवति य एतामेवं ब्रह्मोपनिषदं वेद ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - எவன் இவ்வாறு பிரஹ்மோப நிஷதத்தை (வேத ரகஸ்யத்தை) அறிகிறானோ அவனுக்கு சூரியன் உதிப்பதும் இல்லை அஸ்தமனம் ஆவதும் இல்லை. அவனுக்கு எப்பொழுதும் பகல் ஆகவே இருக்கின்றது.
सत्यं तेनोक्तमित्याह श्रुतिः —
அனுவாதம் - அவரால் உண்மை கூறப்பட்டது. என்று அதை சுருதி கூறுகிறது -
न ह वा अस्मै यथोक्तब्रह्मविदे न उदेति न निंलोचति नास्तमेति, किं तु ब्रह्मविदेऽस्मै सकृद्दिवा हैव सदैव अहर्भवति, स्वयञ्ज्योतिष्ट्वात् ; य एतां यथोक्तां ब्रह्मोपनिषदं वेदगुह्यं वेद, एवं तन्त्रेण वंशादित्रयं प्रत्यमृतसम्बन्धं च यच्च अन्यदवोचाम एवं जानातीत्यर्थः । विद्वान् उदयास्तमयकालापरिच्छेद्यं नित्यमजं ब्रह्म भवतीत्यर्थः ॥
அனுவாதம் - இதன் பொருள் மேலே கூறப்பட்ட பிரஹ்ம வேதாவிற்காக சூரியன் உதிப்பதில்லை, அஸ்தமிப்பதுமில்லை. அந்த பிரஹ்ம வேதாவிற்கு “सकृद्दिवा” (சக்ருத்திவா) அதாவது எப்பொழுதும் பகல் பொழுதாகவே இருக்கும். ஏன்எனில் ஸ்வயம் ஜ்யோதிஸ்வரூபமாய் இருப்பதால், எவர் கூறப்பட்ட இந்த பிரஹ்மோபநிஷத்தை அதாவது வேத ரஹஸ்யத்தை அறிந்தவருக்கு. அந்த சாஸ்திர மூலமாய் “वंशादित्रयम्” (வம்சாதித்திரயம் = தேனீக்கள், தேன் கூடு. அதில் உள்ள அறைகள்) என்பதை ஒவ்வொன்றையும் அம்ருதத்துடன் வசுக்கள் முதலியவைகளுடன் சம்பந்தமும் அவ்வறே நாம் சொல்லியவற்றையும் இவ்வாறு அறிகின்றான். வித்வான் உதய அஸ்தமான காலத்தால் பரிச்சின்னமாகாமல் நித்யமாயும், பிறப்பற்றவனாயும், பிரஹ்மாவாகவும் ஆகின்றான்.
तद्धैतद्ब्रह्मा प्रजापतय उवाच प्रजापतिर्मनवे मनुः प्रजाभ्यस्तद्धैतदुद्दालकायारुणये ज्येष्ठाय पुत्राय पिता ब्रह्म प्रोवाच ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - அந்த இந்த மதுஞானத்தை பிரஹ்மா பிரஜாபதியிடம் கூறினார். பிரஜாபதி மனுவிற்குக் கூறினார். மனு தன் சந்ததியினருக்குக் கூறினார். அவ்வாறே அந்த பிரஹ்ம ஞானத்தையே தன்னுடைய ஜேஷ்ட்ட புத்திரன் அருணருடைய பிள்ளை உத்தாலகருக்கு அவருடைய பிதா கூறினார்.
तद्धैतत् मधुज्ञानं ब्रह्मा हिरण्यगर्भः विराजे प्रजापतये उवाच ; सोऽपि मनवे ; मनुरिक्ष्वाक्वाद्याभ्यः प्रजाभ्यः प्रोवाचेति विद्यां स्तौति — ब्रह्मादिविशिष्टक्रमागतेति । किं च, तद्धैतत् मधुज्ञानम् उद्दालकाय आरुणये पिता ब्रह्मविज्ञानं ज्येष्ठाय पुत्राय प्रोवाच ॥
அனுவாதம் - அந்த இந்த மது ஞானத்தை பிரஹ்மா ஹிரண்யகர்பர் விராட் பிரஜாபதிக்குக் கூறினார். அவரும் மனுவிற்குக் கூறினார். மனு இக்ஷ்வாகு முதலிய சந்ததியினருக்கு உரைத்தார் என்று பிரஹ்மா முதலிய சிறந்த பரம்பரையிலிருந்து வந்தது என்று கூறி பிரஹ்ம வித்தையை புகழ்கிறார். (ஸ்துதி செய்கிறார்). மேலும் அந்த இந்த மது ஞானத்தை உத்தாலகர் ஆகிய ஆருனருக்கு (அருணருடைய பிள்ளைக்கு) அதாவது அவருடைய தந்தை பிரஹ்ம விக்ஞானத்தை ஜேஷ்ட்ட புத்திரருக்குக் கூறினார்.
इदं वाव तज्ज्येष्ठाय पुत्राय पिता ब्रह्म प्रब्रूयात्प्रणाय्याय वान्तेवासिने ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - ஆகையால் இந்த பிரஹ்ம விக்ஞானத்தை பிதாவானாவர் தன்னுடைய ஜேஷ்ட்ட புத்திரனுக்கு அல்லது நல்ல யோக்யம் உள்ள சிஷ்யனுக்கு உபதேசிக்க வேண்டும்.
इदं वाव तद्यथोक्तम् अन्योऽपि ज्येष्ठाय पुत्राय सर्वप्रियार्हाय ब्रह्म प्रब्रूयात् । प्रणाय्याय वा योग्याय अन्तेवासिने शिष्याय ॥
அனுவாதம் - ஆகையால் வேறு எந்த வித்வான் ஆனாலும் மேலே கூறப்பட்ட பிரஹ்ம விக்ஞானத்தை எல்லாவற்றையும்விட பிரியமான ஜேஷ்ட்ட புத்திரனுக்கோ அல்லது தகுந்த நல்ல யோக்கியமுள்ள சிஷ்யனுக்கோ உபதேசிக்க வேண்டும்.
नान्यस्मै कस्मैचन यद्यप्यस्मा इमामद्भिः परिगृहीतां धनस्य पूर्णां दद्यादेतदेव ततो भूय इत्येतदेव ततो भूय इति ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - வேறு ஒருவருக்கும் கூறக்கூடாது (உபதேசிக்கக் கூடாது). இந்த சமுத்திரத்தால் வளைக்கப்பட்ட இந்த பூமி முழுவதையும் தந்தாலும் கூட உபதேசம் செய்யக்கூடாது ஏன்எனில் இதைவிட மிகவும் அதிக பலம் தரக்கூடியது. அதிக பலன் தரக்கூடியது.
नान्यस्मै कस्मैचन प्रब्रूयात् । तीर्थद्वयमनुज्ञातमनेकेषां प्राप्तानां तीर्थानामाचार्यादीनाम् । कस्मात्पुनस्तीर्थसङ्कोचनं विद्यायाः कृतमिति, आह — यद्यपि अस्मै आचार्याय इमां कश्चित्पृथिवीम् अद्भिः परिगृहीतां समुद्रपरिवेष्टितां समस्तामपि दद्यात् , अस्या विद्याया निष्क्रयार्थम् , आचार्याय धनस्य पूर्णां सम्पन्नां भोगोपकरणैः ; नासावस्य निष्क्रयः, यस्मात् ततोऽपि दानात् एतदेव यन्मधुविद्यादानं भूयः बहुतरफलमित्यर्थः । द्विरभ्यासः आदरार्थः ॥
அனுவாதம் - மேலும் இவர்களைத் தவிர வேறு ஒருவருக்கும் உபதேசம் செய்யாதே. ஏன்எனில் சுருதி கூறுகிறது- ஆச்சாரியர் அநேக தீர்த்தர்கள் (வித்யாதானத்திற்கு பாத்திரர்களாய்) இருந்தாலும் இரண்டு தீர்த்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஆனால் எதற்காக வித்யாபாத்திரர்களை சுருக்கமாக செய்யப்பட்டது? அதற்கு சுருதி கூறுகின்றது. இந்த வித்யைக்கு பதிலாக ஜலத்தால் சூழப்பட்ட அதாவது சமுத்திரங்களால் சூழப்பட்ட இந்த பூமி முழுவதையும் ஒருவர் ஆச்சாரியருக்கு அளித்தாலும் இந்த வித்யைக்கு பதிலாக ஆகமுடியாது. எதனால் இந்த தானத்தைக் காட்டிலும் மது வித்யா தானம் மிக அதிகமான பலன் உடையது என்பது பொருள். இருமுறை கூறியது வித்யை போற்றுவதற்காக ஆகும்.
इति एकादशखण्डभाष्यम् ॥
यत एवमतिशयफलैषा ब्रह्मविद्या, अतः सा प्रकारान्तरेणापि वक्तव्येति ‘गायत्री वा’ इत्याद्यारभ्यते । गायत्रीद्वारेण च उच्यते ब्रह्म, सर्वविशेषरहितस्य
‘नेति नेति’ (बृ. उ. २ । ३ । ६) इत्यादिविशेषप्रतिषेधगंयस्य दुर्बोधत्वात् । सत्स्वनेकेषु च्छन्दःसुगायत्र्या एव ब्रह्मज्ञानद्वारतयोपादानं प्राधान्यात् । सोमाहरणात् इतरच्छन्दोक्षराहरणेन इतरच्छन्दोव्याप्त्या च सर्वसवनव्यापकत्वाच्च यज्ञे प्राधान्यं गायत्र्याः । गायत्रीसारत्वाच्च ब्राह्मणस्य मातरमिव, हित्वा गुरुतरां गायत्रीं ततोऽन्यद्गुरुतरं न प्रतिपद्यते यथोक्तं ब्रह्मापीति, तस्यामत्यन्तगौरवस्य प्रसिद्धत्वात् । अतो गायत्रीमुखेनैव ब्रह्मोच्यते —
அனுவாதம் - அ.கை - எதனால் இவ்வாறு பிரஹ்ம வித்யை மிகவும் அதிசய பலம் உடையது. அதை வேறு விதமாகவும் கூறவேண்டும் என்பதற்காக “गायत्री वा” (காயத்ரீ வா) என்பது முதலியவை ஆரம்பிக்கப்படுகிறது. எல்லா விசேஷங்களும் அற்றதும், நேதி, நேதி (இது அல்ல இது அல்ல) என்பது முதலியவைகளினால் விசேஷங்களை நிஷேதத்தால் அறியக் கூடியதாய் இருப்பதாலும் பிரஹ்மத்தை அறிவது மிகக் கடினம். ஆதலால் அநேக சந்தஸ்கள் உள்ள காயத்திரியினால் மாத்திரமே பிரஹ்ம ஞான வாயிலாக பிரதானமாக இருப்பதால் அதை கிரஹிக்க வேண்டும். (ஏற்றுக்கொள்ள வேண்டும்). சோமம் இதனால் ஈர்க்கப்பட்டுள்ளதாலும் மற்ற சந்தஸ்களின் அக்ஷரங்களையும் கொண்டு வருவதாலும், மற்ற சந்தஸ்களை வியாபிப்பதால் எல்லா வசனங்களையும் வியாபிக்கின்றது. ஆகையால் யக்ஞங்களில் காயத்தி பிரதானமாகும். ஏன்எனில் பிராஹ்மணத்தின் சாரம் காயத்திரியாகும். முன்பு கூறப்பட்ட பிரஹ்மமும் மாதாவிற்கு சமமாக மிகவும் மேலானது. இந்த காயத்திரியை விட்டு இதைவிட மேலானதை அடையமுடியாது. ஏன்எனில் அது முற்றிலும் கெளரவமுடையது அதாவது மிகவும் மேன்மையானது என்பது பிரசித்தமாகும் ஆகையால் காயத்ரி மூலமாகவே பிரஹ்மம் நிரூபிக்கபடுகிறது.
गायत्री वा इदं सर्वं भूतं यदिदं किञ्च वाग्वै गायत्री वाग्वा इदं सर्वं भूतं गायति च त्रायते च ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - காயத்திரியே இந்த எல்லா பிராணி வர்க்கங்களும் இருக்கின்ற எல்லா ஸ்தாவர ஜங்கம பிராணிகளும் காயத்ரியே. வாக் காயத்ரீ, வாக்கே எல்லா பிராணிகளும். ஏன்எனில் அதுவே காயத்ரியே (அவைகளின் பெயர்களை உச்சரிக்கின்றது) மேலும் அது (பயம் முதலியவைகளில்) இருந்து ரக்ஷிக்கின்றது.
गायत्री वा इत्यवधारणार्थो वै - शब्दः । इदं सर्वं भूतं प्राणिजातं यत्किञ्च स्थावरं जङ्गमं वा तत्सर्वं गायत्र्येव । तस्याश्छन्दोमात्रायाः सर्वभूतत्वमनुपपन्नमिति गायत्रीकारणं वाचं शब्दरूपामापादयति गायत्रीं वाग्वै गायत्रीति ।
அனுவாதம் - “गायत्री वै” (காயத்ரீவை) என்ற பதத்தில் உள்ள “वै” (வை) சப்தம் நிச்சய அர்த்தத்தை குறிப்பதாகும். இவை எல்லா பூதம் அதாவது எல்லா ஸ்தாவர ஜங்கம் பிராணிகள் உள்ளனவோ அவை எல்லாம் காயத்ரீயேயாகும். ஆகையால் சந்தஸ் மாத்திரம் (மட்டும்) எல்லா பூத (பிராணிகள்)ங்களாவது சம்பவிக்காது. ஆகையால் “वाग्वै गायत्री” (வாக்கை காயத்ரீ) என்று கூறி சுருதி காயத்ரியின் காரண பூதமான சப்த ரூப வாக்கே காயத்ரீ.
वाग्वा इदं सर्वं भूतम् । यस्मात् वाक् शब्दरूपा सती सर्वं भूतं गायति शब्दयति — असौ गौः असावश्व इति च, त्रायते च रक्षति — अमुष्मान्मा भैषीः किं ते भयमुत्थितम् इत्यादिना सर्वतो भयान्निवर्त्यमानः वाचा त्रातः स्यात् । यत् वाक् भूतं गायति च त्रायते च, गायत्र्येव तत् गायति च त्रायते च, वाचः अनन्यत्वाद्गायत्र्याः । गानात्त्राणाच्च गायत्र्या गायत्रीत्वम् ॥
அனுவாதம் - வாக்கே இந்த எல்லா பிராணிகளும். ஏன்எனில் வாக் சப்த ரூபமாய் இருப்பதால் எல்லா பிராணிகளையும் இது பசு, இது குதிரை என்று கானம் செய்கிறது அதாவது சப்தம் செய்கிறது. மேலும் அவைகளை பயத்திலிருந்து காப்பாற்றுகிறது, என்ன அவர்களுக்கு பயம் ஏற்பட்டதா? முதலியவைகளால் முற்றிலும் பயத்திலிருந்து வாக்கால் காப்பாற்றுகிறது. எந்த வாக் பிராணிகளை குறித்து சப்தம் செய்கிறதோ (உச்சரிக்கிறதோ), மேலும் காப்பாற்றுகிறதோ அது காயத்ரியே ஆகும். ஏன்எனில் வாக் காயத்ரியைவிட வேறானது அல்ல. காயத்ரியில் சப்தம் செய்வதாலும் (கானம் செய்வதாலும்), காப்பாற்றுவதாலும் காயத்ரிக்கு காயத்ரித்துவம்.
या वै सा गायत्रीयं वाव सा येयं पृथिव्यस्याꣳ हीदꣳ सर्वं भूतं प्रतिष्ठितमेतामेव नातिशीयते ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எது காயத்ரியோ அதுவே இந்த பிருதிவீ ஆகும். ஏன்எனில் எல்லா பிராணிகளும் இதில் நிலை பெற்றுள்ளன. மேலும் இதை யாராலும் கடந்து செல்வதில்லை.
या वै सा एवंलक्षणा सर्वभूतरूपा गायत्री, इयं वाव सा येयं पृथिवी । कथं पुनरियं पृथिवी गायत्रीति, उच्यते — सर्वभूतसम्बन्धात् । कथं सर्वभूतसम्बन्धः, अस्यां पृथिव्यां हि यस्मात् सर्वं स्थावरं जङ्गमं च भूतं प्रतिष्ठितम् , एतामेव पृथिवीं नातिशीयते नातिवर्तत इत्येतत् ।
அனுவாதம் - எந்த இந்த லக்ஷணங்கள் உடைய எல்லா பிராணி ரூபமான காயத்ரீ இந்த பிருதிவீயாகும். எவ்வாறு அத பிருதிவீரூபம் ஆகும்? கூறப்படுகிறது - எல்லா பூதங்களுடைய (பிராணிகளுடைய) சம்பந்தம் இருப்பதால். எவ்வாறு எல்லா பூத சம்பந்தம் உண்டாயிற்று? எதனால் இந்த எல்லா ஸ்தாவர ஜங்கம பிராணிகளும் பிருதிவியில் நிலைபெற்று இருப்பதால் ஆகும். இந்த பிருதிவியை ஒருவரும் தாண்டுவது இல்லை.
यथा गानत्राणाभ्यां भूतसम्बन्धो गायत्र्याः, एवं भूतप्रतिष्ठानाद्भूतसम्बद्धा पृथिवी ; अतो गायत्री पृथिवी ॥
அனுவாதம் - எவ்வாறு கானம் செய்வது, காப்பாற்றுவது காரணமாக காயத்ரிக்கு பிராணன்களுடன் சம்பந்தம் உள்ளது. அவ்வாறே பூதங்கள் அதில் நிலைபெற்றுள்ளதால் பிருதிவீக்கு பூத சம்பந்தம் உள்ளது. ஆகையால் பிருதிவீ காயத்ரீ.
या वै सा पृथिवीयं वाव सा यदिदमस्मिन्पुरुषे शरीरमस्मिन्हीमे प्राणाः प्रतिष्ठिता एतदेव नातिशीयन्ते ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - எது பிருதிவியோ அதுவே இந்த புருஷனுடைய சரீரம். இதில் பிராணன்கள் நிலைபெற்றுள்ளது. ஏன்எனில் இதில் எந்த பிராணங்கள் நிலைபெற்றுள்ளதோ அது இதைத் (சரீரத்தை) கடந்து செல்வதில்லை.
या वै सा पृथिवी गायत्री इयं वाव सा इदमेव । तत्किम् ? यदिदमस्मिन्पुरुषे कार्यकरणसङ्घाते जीवति शरीरम् , पार्थिवत्वाच्छरीरस्य ।
அனுவாதம் - எந்த இந்த பிருதிவீரூப காயத்ரீயோ அது நிச்சயமாக இதுவே. அது இது? எந்த இந்த புருஷனிடத்தில் அதாவது காரியகாரண சங்காத சரீரம் பிருதிவியின் விகாரமாக இருப்பதால் இந்த சரீரம் ஜீவிக்கின்றது.
कथं शरीरस्य गायत्रीत्वमिति, उच्यते — अस्मिन्हि इमे प्राणाः भूतशब्दवाच्याः प्रतिष्ठिताः, अतः पृथिवीवद्भूतशब्दवाच्यप्राणप्रतिष्ठानात् शरीरं गायत्री, एतदेव यस्माच्छरीरं नातिशीयन्ते प्राणाः ॥
அனுவாதம் - சரீரத்திற்கு காயத்ரித் தன்மை எவ்வாறு? கூறப்படுகிறது - இதில் இந்த பிராணன்கள் பூத சப்த வாச்சியங்களாக நிலைபெற்றுள்ளது. ஆகையால் பிருதிவியைப்போல் பூத சப்த வாச்சியமான பிராணன் நிலைபெற்றுள்ளதால் சரீரம் காயத்ரீ. எதனால் இதுவே சரீரமோ அதனால் (பிராணன்கள்) அதைக்கடந்து செல்வதில்லை.
यद्वै तत्पुरुषे शरीरमिदं वाव तद्यदिदमस्मिन्नन्तः पुरुषे हृदयमस्मिन्हीमे प्राणाः प्रतिष्ठिता एतदेव नातिशीयन्ते ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - எந்த இந்த புருஷனின் சரீரமோ அதுவே இந்த புரஷனின் மத்தியில் (உள்ளே நடுவில்) உள்ள ஹிருதயம். ஏன்எனில் இதில் பிராணன் நிலைபெற்றுள்ளது. இதை தாண்டி செல்வது இல்லை.
அனுவாதம் - எந்த ஒன்று அந்த புருஷனிடத்தில் சரீர ரூப காயத்ரி உள்ளதோ அதுவே இந்த அந்த: புருஷன் அதாவது நடுவில் உள்ள புண்டரீகம் எனப்படும் ஹிருதயமாகும். அதுவே காயத்ரீ. எவ்வாறு? அதற்குக் கூறப்படுகிறது- இதில் இந்த பிராணன்கள் நிலைபெற்று உள்ளன. ஆகையால் சரீரம் போன்று காயத்ரீ ஹிருதயம். பிராணன்கள் இதைக் கடந்து செல்வதில்லை. “प्राणो ह पितो प्राणो माता” (பிராணனோ ஹ பிதா பிராணோ மாதா) என்றும் “अहिंसन्सर्वभूतानि” (அஹிம்சன்சர்வபூதாநி) என்றும் உள்ள சுருதி வாக்கியங்களால் “பூத” சப்த வாச்சியங்கள் பிராணன்கள் ஆகும்.
सैषा चतुष्पदा षड्विधा गायत्री तदेतदृचाभ्यनूक्तम् ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - அந்த இந்த காயத்ரீ நான்கு அடிகள் (பதங்கள்) உடையது. மேலும் ஆறு வகையானது. அந்த இந்த (காயத்ரீ எனப்படும் பிரஹ்மம்) மந்திரங்கள் மூலமாய் பிரகாசப்படுத்தப்படுகிறது.
सैषा चतुष्पदा षडक्षरपदा छन्दोरूपा सती भवति गायत्री षड्विधा — वाग्भूतपृथिवीशरीरहृदयप्राणरूपा सती षड्विधा भवति । वाक्प्राणयोरन्यार्थनिर्दिष्टयोरपि गायत्रीप्रकारत्वम् , अन्यथा षड्विधसङ्ख्यापूरणानुपपत्तेः । तत् एतस्मिन्नर्थे एतत् गायत्र्याख्यं ब्रह्म गायत्र्यनुगतं गायत्रीमुखेनोक्तम् ऋचा अपि मन्त्रेणाभ्यनूक्तं प्रकाशितम् ॥
அனுவாதம் - அந்த அது நான்கு பதங்கள் உடைய ஆறு அக்ஷரங்களின் பதமுடைய சந்தஸ்ரூபம் உடையதாகின்றது காயத்ரீ. அவ்வாறே வாக், பூதம் (பிராணி), பிருதிவீ, சரீரம், ஹ்ருதயம், பிராணன் ஆகிய ரூபங்கள் ஆவதால் ஆறு விதமாகின்றது. வாக் பிராணன்களுக்கு வெவ்வேறு அர்த்தம் நிர்தேசம் செய்து இருந்தாலும் காயத்ரீ ரூபமாகவே கிரஹிக்கப்படுகிறது. வேறு விதமாக ஆறுவித எண்ணிக்கை பூரணமாவது பொருந்தாது. இந்த அர்தத்தில் இந்த காயத்ரீ எனப்படும் பிரஹ்மமே காயத்ரியில் தொடர்ந்து உள்ளது. மேலும் காயத்ரீ மூலமாய் பிரதிபாதனம் செய்யப்பட்ட ரிக் ஆகிய மந்திரங்களால் பிரகாசப்படுத்தப்படுகிறது.
तावानस्य महिमा ततो ज्यायंश्च पूरुषः । पादोऽस्य सर्वा भूतानि त्रिपादस्यामृतं दिवीति ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - (மேலே கூறப்பட்டதோ) இவ்வளவே இதன் (காயத்ரீ என்னும் பிரஹ்மத்தின்) மஹிமையாகும். அவ்வாறே (நிர்விகார) புருஷன் இதைவிட மிகவும் மேலானவன். எல்லா பிராணிகளும் இதன் ஒருபாதம். மேலும் இதன் (புருஷன் என்னும்) “त्रिपाद” (திரிபாதம் - மூன்று பாதம்) அம்ருத பிரகாசமய ஸ்வாத்மாவில் நிலைபெற்றுள்ளது.
तावान् अस्य गायत्र्याख्यस्य ब्रह्मणः समस्तस्य महिमा विभूतिविस्तारः, यावांश्चतुष्पात्षड्विधश्च ब्रह्मणो विकारः पादो गायत्रीति व्याख्यातः । अतः तस्माद्विकारलक्षणाद्गायत्र्याख्याद्वाचारम्भणमात्रात् ततो ज्यायन् महत्तरश्च परमार्थसत्यरूपोऽविकारः पूरुषः पुरुषः सर्वपूरणात् पुरि शयनाच्च ।
அனுவாதம் - இந்த காயத்ரீ என்னும் எல்லா பாத விபாகங்களுடன் கூடிய பிரஹ்மத்தின் மஹிமை அதாவது அதன் விபூதி மிகவும் விஸ்தாரமானது. எவ்வாறு எனில் நான்கு பாதங்களுடன். ஆறு விதமான பிரஹ்மத்தின் விகாரபூத ஒரு பாதம் காயத்ரீ ஆகும். இவ்வாறு கூறி நிரூபிக்கப்பட்டது. ஆகையால் விகார லக்ஷணமுடையதும் வாச்சாரம்பன மாத்திரமே காயத்ரீ எனப்படுவதால் பரமார்த்த சத்ய ரூப விகாரமற்ற புருஷனே என்றும் புருஷனே அதனைவிட மிகவும் சிரேஷ்டமானவன். எல்லாவற்றிலும் பூர்ணமாய் இருப்பதால் புருஷன். புரத்தில் (சரீரத்தில்) சயனிப்பதால் புருஷன். (सर्वपूरणात् पुरिशयनात् पुरुषः) (சர்வ பூர்ணாத் புருஷ:, புரிஷயனாத் புருஷ
तस्य अस्य पादः सर्वा सर्वाणि भूतानि तेजोबन्नादीनि सस्थावरजङ्गमानि, त्रिपात् त्रयः पादा अस्य सोऽयं त्रिपात् ; त्रिपादमृतं पुरुषाख्यं समस्तस्य गायत्र्यात्मनो दिवि द्योतनवति स्वात्मन्यवस्थितमित्यर्थ इति ॥
அனுவாதம் - தேஜஸ், ஜலம் அன்ன முதலிய எல்லா ஸ்தாவர ஜங்கமங்களான பிராணிகள் அநத் இந்த புருஷனின் ஒரு பாதமாகும். “त्रिपात्” (த்ரிபாத் - மூன்று பாதங்கள்) எதற்கு மூன்று பாதங்கள் உள்ளதோ அது த்ரிபாத். எல்லா காயத்ரீ ரூப புருஷனுக்கு புருஷன் எனப்படும் த்ரிபாத் அம்ருதம் தேவலோகத்தில் விளங்குகிறது (பிரகாசிக்கின்றது). அதாவது ஸ்வாத்மாவில் நிலைபெறுகின்றான் என்பது பொருள்.
यद्वै तद्ब्रह्मेतीदं वाव तद्योयं बहिर्धा पुरुषादाकाशो यो वै स बहिर्धा पुरुषादाकाशः ॥ ७ ॥
अयं वाव स योऽयमन्तः पुरुष आकाशो यो वै सोऽन्तः पुरुष आकाशः ॥ ८ ॥
अयं वाव स योऽयमन्तर्हृदय आकाशस्तदेतत्पूर्णमप्रवर्ति पूर्णामप्रवर्तिनीं श्रियं लभते य एवं वेद ॥ ९ ॥
மந்த்ரார்த்தம் - எந்த இந்த (த்ரிபாத அம்ருத ரூப) பிரஹ்மம் எதுவோ அது புருஷனின் வெளியில் உள்ள ஆகாசம். அதுவே புருஷனின் வெளி ஆகாசம். எது புருஷனின் உள்ளே உள்ள ஆகாசமோ அதுவே புருஷனின் உள் ஆகாசம். எந்த ஒரு ஆகாசம் இதயத்தின் (உள்ளே) அந்தர்கதமான ஆகாசமோ அது பூர்ணமாய் ஒன்றிலும் ப்ரவிர்த்திக்காமல் சம்பத்திகளை அடையச் செய்கிறது.
यद्वै तत् त्रिपादमृतं गायत्रीमुखेनोक्तं ब्रह्मेति, इदं वाव तत् इदमेव तत् ; योऽयं प्रसिद्धः बहिर्धा बहिः पुरुषादाकाशः भौतिको यो वै, स बहिर्धा पुरुषादाकाश उक्तः ॥ ७ ॥
अयं वाव सः, योऽयमन्तः पुरुषे शरीरे आकाशः । यो वै सोऽन्तः पुरुष आकाशः॥ ८ ॥
அனுவாதம் - எது காயத்ரீ மூலமாய் கூறப்பட்டதோ அந்த த்ரிபாத் அம்ருதம் பிரஹ்மம் அதுவேயாகும். அது நிச்சயமாக வெளியில் உள்ள அதாவது புருஷனைக்காட்டிலும் வெளியில் உள்ள பெளதிக ஆகாசமாகும். அவ்வாறு இருப்பதால் புருஷனின் வெளியில் உள்ள ஆகாசம் என்று கூறப்படுகிறது.
அனுவாதம் - எது இதுவோ அது அந்த புருஷனின் உள் இருக்கும் ஆகாசம். அதுவே நிச்சயமாக புருஷன் உள் இருக்கும் ஆகாசமாகும்.
अयं वाव सः, योऽयमन्तर्हृदये हृदयपुण्डरीके आकाशः। कथमेकस्य सत आकाशस्य त्रिधा भेद इति, उच्यते — बाह्येन्द्रियविषये जागरितस्थाने नभसि दुःखबाहुल्यं दृश्यते । ततोऽन्तःशरीरे स्वप्नस्थानभूते मन्दतरं दुःखं भवति । स्वप्नान्पश्यतो हृदयस्थे पुनर्नभसि न कञ्चन कामं कामयते न कञ्चन स्वप्नं पश्यति । अतः सर्वदुःखनिवृत्तिरूपमाकाशं सुषुप्तस्थानम् । अतो युक्तमेकस्यापि त्रिधा भेदान्वाख्यानम् ।
அனுவாதம் - இது நிச்சயமாக எந்த இந்த ஆகாசம் ஹிருதயத்தின் உள் இருக்கின்றதோ அதாவது ஹிருதய புண்டரீகத்தில் உள்ள ஆகாசமாகும். எவ்வாறு ஒரே ஆகாசமாய் இருக்கும்பொழுது மூன்றுவித பேதமாகும்? அதற்குக் கூறப்படுகிறது - ஜாக்கிரத்தில் இருக்கும்பொழுது பாஹ்ய இந்திரிய விஷயங்களான ஆகாயத்தில் மிகுந்த துக்கம் காணப்படுகிறது. அதைவிட அந்தக்கரண சரீரத்தில் ஸ்வப்பன ஸ்தான ஆகாயத்தில் ஸ்வப்பனம் காண்பவனுக்கு குறைந்த துக்கம் உண்டாகிறது. மேலும் ஹிருதயத்தில் உள்ள ஆகாயத்தில் ஒருவரும் இச்சிப்பதும் இல்லை, ஒருவரும் ஸ்வப்பமனைத்தையும் காண்பது இல்லை. ஆகையால் எல்லா துக்கங்களின் நிவிர்த்தி ஸ்தானம் சுஷுப்த்தி அவஸ்தையாகும். ஆகையால் ஆகாசத்திற்கு மூன்றுவித பேதம் கூறியது சரியானதே (பொருத்தமானதே)
बहिर्धा पुरुषादारभ्य आकाशस्य हृदये सङ्कोचकरणं चेतःसमाधानस्थानस्तुतये — यथा ‘त्रयाणामपि लोकानां कुरुक्षेत्रं विशिष्यते । अर्धतस्तु कुरुक्षेत्रमर्धतस्तु पृथूदकम्’ ( ? ) इति, तद्वत् ।
அனுவாதம் - புருஷனின் வெளியில் உள்ள ஆகாசத்திலிருந்து ஆரம்பித்து ஹிருதயத்தில் உள்ள ஆகாசம் வரையிலும் சுருக்கிக் கூறியது சித்த ஏகாக்ர ஸ்தானத்தை ஸ்துதிப்பதற்காக. எவ்வாறு “त्रयाणामपि लोकानां कुरुक्षेत्रं विशिष्यते। अर्धतस्तु कुरुक्षेत्रमर्धतस्तु पृथूदकम्” (த்ரயாணாமபி லோகானாம் குருக்ஷதே்ரம் விசிஷ்யதே! அர்த்தஸ்து குருக்ஷதே்ரமர்த்தஷ்து ப்ருதூதகம் = மூன்று உலகங்களினுள் குருக்ஷதே்ரம் மிகவும் மேன்மையானது. அவ்வாறே பாதி குருக்ஷதே்ரம், பாதி “पृथूदकम्” (ப்ருதூதகம்) என்பது போல் ஸ்தான ஸ்துதியின் பொருட்டு ஆகும்.
तदेतद्धार्दाकाशाख्यं ब्रह्म पूर्णं सर्वगतम् , न हृदयमात्रपरिच्छिन्नमिति मन्तव्यम् , यद्यपि हृदयाकाशे चेतः समाधीयते । अप्रवर्ति न कुतश्चित्क्वचित्प्रवर्तितुं शीलमस्येत्यप्रवर्ति, तदनुच्छित्तिधर्मकम् । यथा अन्यानि भूतानि परिच्छिन्नान्युच्छित्तिधर्मकाणि, न तथा हार्दं नभः । पूर्णामप्रवर्तिनीमनुच्छेदात्मिकां श्रियं विभूतिं गुणफलं लभते दृष्टम् । य एवं यथोक्तं पूर्णाप्रवर्तिगुणं ब्रह्म वेद जानाति इहैव जीवन् तद्भावं प्रतिपद्यत इत्यर्थः ॥
அனுவாதம் - அந்த இந்த ஹிருதயாகாசம் என்னும் பிரஹ்மம் பூர்ணம் சர்வகதமாகும் (எங்கும் நிறைந்தது ஆகும்). ஹிருதயாகாசத்தில் சேதனம் சமாஹிதமாய் இருந்தாலும் ஹிருதய அளவில் பரிச்சின்னம் என்று நினைக்கக்கூடாது “अप्रवर्ति” (அப்ரவர்த்தி = பிரவிர்த்தி அற்றது) அதாவது அதை ஒரு பொழுதும் ஒன்றினாலும் அதை பிரவிர்த்தி செய்வதற்கான சாமர்த்தியம் கிடையாது ஆகையால் அது அப்ரவர்த்தி. அதை ஒருவராலும் நாசம் செய்யமுடியாத தர்மம் உடையது. மற்ற பரிச்சின்னமான பூதங்கள் நாச தர்மம் உடையவை. ஆனால் இந்த ஹ்ருதயாகாசம் அவ்வாறு நாசமுடையது அல்ல. பூர்ணமான பிரவிருத்தி அற்றதும், நாசம் செய்ய முடியாததுமான செல்வம் (श्रियं) அதாவது விபூதி ஆகிய திருஷ்ட கெளணபலம் அடைவான். அதாவது இவ்வாறு கூறியவாறு பூர்ண பிரவிர்த்தி அற்ற குணமுடைய பிரஹ்மத்தை எவன் அறிகிறானோ அவன் இங்கேயே ஜீவித்துக்கொண்டே அந்த பாவத்தை அடைவான்.
इति द्वादशखण्डभाष्यम् ॥
तस्य ह वा एतस्य हृदयस्य पञ्च देवसुषयः स योऽस्य प्राङ्सुषिः स प्राणस्तच्चक्षुः स आदित्यस्तदेतत्तेजोऽन्नाद्यमित्युपासीत तेजस्व्यन्नादो भवति य एवं वेद ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - அந்த இந்த பிரசித்தமான ஹிருதயத்திற்கு ஐந்து தேவதைகள் காக்கும் வாயில்கள் உள்ளன. இதன் கிழக்கு திசையில் உள்ள வாயில் பிராணன். அதுவே சக்ஷீ, அது ஆதித்யன் ஆகும். அவைகள் தேஜஸ், அன்னாத்யம் ஆகும் என்று இவ்வாறு உபாசனை செய்யவேண்டும். எவன் இவ்வாறு அறிகிறானோ (உபாசனை செய்கிறானோ) அவன் தேஜஸ்வியாகவும், அன்னத்தின் போக்தாவாகவும் ஆகின்றான்.
तस्य ह वा इत्यादिना गायत्र्याख्यस्य ब्रह्मणः उपासनाङ्गत्वेन द्वारपालादिगुणविधानार्थमारभ्यते । यथा लोके द्वारपालाः राज्ञ उपासनेन वशीकृता राजप्राप्त्यर्था भवन्ति, तथेहापीति ।
அனுவாதம் - “तस्य ह वा” (தஸ்ய ஹ வா) முதலிய கண்டங்களின் மூலமாக காயத்ரீ என்னும் பிரஹ்மத்தின் உபாசனையின் அங்கமாக துவாரபாலகர் முதலிய குணங்களை விதானம் செய்வதற்கு ஆரம்பிக்கப்படுகிறது. எவ்வாறு உலகில் வாயிற்காவலர்களை (திருப்தி செய்து) வசம் செய்து ராஜாவை எளிதில் அடையமுடிகிறதோ அவ்வாறு இங்கும் உபாசனாங்கம் உபயோகம் ஆகிறது.
तस्य इति प्रकृतस्य हृदयस्येत्यर्थः । एतस्य अनन्तरनिर्दिष्टस्य पञ्च पञ्चसङ्ख्याकाः देवानां सुषयः देवसुषयः स्वर्गलोकप्राप्तिद्वारच्छिद्राणि, देवैः प्राणादित्यादिभिः रक्ष्यमाणानि इत्यतो देवसुषयः ; तस्य स्वर्गलोकभवनस्य हृदयस्य अस्य यः प्राङ्सुषिः पूर्वाभिमुखस्य प्राग्गतं यच्छिद्रं द्वारं स प्राणः ; तत्स्थः तेन द्वारेण यः सञ्चरति वायुविशेषः स प्रागनितीति प्राणः ।
அனுவாதம் - அதனுடைய என்று குறிப்பிட்டது. இப்பொழுது கூறப்படும் ஹிருதயம் என்பது பொருள். இந்த அந்தர்ஹ்ருதயத்திற்கு ஐந்து எண்ணிக்கை உள்ள தேவதைகள் காக்கும் வாயில்கள். தேவ வாயில்கள் ஸ்வர்கலோகப் பிராப்திகளான நுழைவாயில்கள். பிராணன் முதலிய தேவதைகளால் ரக்ஷிக்கப்படுவதால் தேவவாயில்கள். அந்த ஸ்வர்க்க லோகம் என்னும் பவனமான ஹிருதயத்தின் எந்த கிழக்குவாயில் உள்ளதோ அது கிழக்கு திசையை நோக்கிய முன்னால் உள்ள எந்த நுழைவாயிலோ அது பிராணன். அந்த இடத்தில் இருக்கும் வாயிலின் மூலமாய் எது சஞ்சரிக்கின்றதோ அந்த வாயில் “प्राक् अनिति” (ப்ராக் அநிதி) பிராணன் ஆகும்.
அனுவாதம் - அந்த பிராணனால் பந்தப்பட்டதும் அபின்னமானது சக்ஷீ. இவ்வாறே ஆதித்யனும் ஆகும். “आदित्यो ह वै बाह्यः प्राणः” (ஆதித்யோ ஹ வை பாஹ்ய பிராண:) சுருதிப் பிரமாணமாகும். சக்ஷீரூப பிரதிஷ்டா கிரமமாக ஹிருதயத்தில் நிலைபெற்றுள்ளது. “स आदित्यः कस्मिन्प्रतिष्द्भित इति चक्षुषि” (ச ஆதித்ய: கஸ்மின் ப்ரதிஷ்ட்டதி இதிசக்ஷீஷி) முதலியவை வாஜசனேயக சுருதியில் உள்ளது. பிராணவாயு தேவதா ஒன்றையே ஆஸ்ரயித்து சக்ஷீ என்றும் ஆதித்யன் என்றும் கூறப்படுகிறது. “प्राणाय स्वाहा” (பிராணாய ஸ்வாஹா) என்று ஆஹுதி செய்யப்படும் ஹவிஸ் இந்த சக்ஷீ முதலிய இந்திரியங்களை திருப்தி செய்கின்றது என்று இனிமேல் கூறப்போகிறது.
तदेतत् प्राणाख्यं स्वर्गलोकद्वारपालत्वात् ब्रह्म । स्वर्गलोकं प्रतिपित्सुः तेजस्वी एतत् चक्षुरादित्यस्वरूपेण अन्नाद्यत्वाच्च सवितुः तेजः अन्नाद्यम् इत्याभ्यां गुणाभ्याम् उपासीत । ततः तेजस्व्यन्नादश्च आमयावित्वरहितो भवति ; य एवं वेद तस्यैतद्गुणफलम् । उपासनेन वशीकृतो द्वारपः स्वर्गलोकप्राप्तिहेतुर्भवतीति मुख्यं च फलम् ॥
அனுவாதம் - அந்த இந்த பிராணன் எனப்படும் பிரஹ்மம் ஸ்வர்க லோகத்தின் வாயிற்காவலன். ஆகையால் ஸ்வர்கலோகத்தில் இச்சை உள்ள புருஷன் சக்ஷீ, ஆதித்யன் இவைகளை தேஜஸ் ரூபமாயும், அன்னாத்யமாகவும் இருப்பதால் ஆதித்யன் தேஜஸ் அன்னாத்ய குணங்கள் உடையதாய் உபாசிக்க வேண்டும். அந்த தேஜஸ்வியாலும் அன்னாத்யத்தாலும் ரோகம் அற்றவனாய் ஆகின்றான். இவ்வாறு அறிந்தவனுக்கு இந்த கெளணபலம் கிடைக்கிறது. இந்த உபாசனையில் வசம் செய்யப்பட்ட துவார பாலகர் ஸ்வர்கலோகப் பிராப்திக்கு ஹேது ஆவதே முக்கிய பலன் ஆகும்.
अथ योऽस्य दक्षिणः सुषिः स व्यानस्तच्छ्रोत्रꣳ स चन्द्रमास्तदेतच्छ्रीश्च यशश्चेत्युपासीत श्रीमान्यशस्वी भवति य एवं वेद ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அவ்வாறே இதன் தெற்கு வாசல் எதுவோ அது வியானன். அது ஸ்ரோத்திரம். அது சந்திரன் மேலும் அதுவே ஹீயும், யசும் ஆகும் என்று இவ்வாறு உபாசனை செய்யவேண்டும். எவன் இவ்வாறு அறிகின்றானோ (உபாசிக்கின்றானோ) அவன் ஶ்ரீமானகவும், புகழ் உடையவனாகவும் ஆகின்றான்.
अथ योऽस्य दक्षिणः सुषिः तत्स्थो वायुविशेषः स वीर्यवत्कर्म कुर्वन् विगृह्य वा प्राणापानौ नाना वा अनितीति व्यानः । तत्सम्बद्धमेव च तच्छ्रोत्रमिन्द्रियम् । तथा स चन्द्रमाः — श्रोत्रेण सृष्टा दिशश्च चन्द्रमाश्च इति श्रुतेः । सहाश्रयौ पूर्ववत् ॥
அனுவாதம் - அவ்வாறே தெற்கு வாசலில் உள்ள வாயுவானது வீரம் உடையவனைப் போன்ற கர்மம் செய்துகொண்டே செல்கின்றது. அந்த பிராண அபானன் மேலும் தனியாகவும் செல்கின்றது அல்லது அநேக விதமாக செல்கிறது என்பதால் வியானன். அதன் சம்பந்தமே அந்த ஸ்ரோத்திர இந்திரியம். அவ்வாறே அது சந்திரன் ஆகும். “श्रोत्रेण सृष्टा दिशश्च चन्द्रमाश्च” (ஸ்ரோத்ரேண ஸ்ருஷ்டா திசஸ்ச சந்தரமாச்ச) என்ற சுருதி வாக்கியமாகும். அதனுடன் ஆஸ்ரயிப்பது என்பது முன்போல். (அதாவது சக்ஷீ ஆதித்யனை ஆஸ்ரயிப்பது போல் ஆகும்).
तदेतत् श्रीश्च विभूतिः श्रोत्रचन्द्रमसोर्ज्ञानान्नहेतुत्वम् ; अतस्ताभ्यां श्रीत्वम् । ज्ञानान्नवतश्च यशः ख्यातिर्भवतीति यशोहेतुत्वात् यशस्त्वम् । अतस्ताभ्यां गुणाभ्यामुपासीतेत्यादि समानम् ॥ २ ॥
அனுவாதம் - அந்த இந்த (வியானன் எனப்படும் பிரஹ்மம்) ஶ்ரீயும், விபூதியும் ஆகும். ஸ்ரோத்திமும், சந்திரனும் முறையாக ஞானத்திற்கும் அன்னத்திற்கும் ஹேதுவாகிறது. ஆகையால் அவை இரண்டிற்கும் ஶ்ரீதன்மை சித்திக்கிறது. ஞானம், அன்னத்தினால் புகழ் கிடைப்பதால் புகழ் அடையும் தன்மை சித்திக்கிறது. ஆகையால் அந்த இரு குணங்களுடன் சேர்த்து உபாசனை செய்யவேண்டும். மற்றவை சமானம்.
अथ योऽस्य प्रत्यङ्सुषिः सोऽपानः सा वाक्योऽग्निस्तदेतद्ब्रह्मवर्चसमन्नाद्यमित्युपासीत ब्रह्मवर्चस्यन्नादो भवति य एवं वेद ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - அவ்வாறே இதன் மேற்கு வாசலோ அது அபானன், அது வாக், அது அக்னி மேலும் அதுவே இந்த பிரஹ்ம தேஜஸ் அவ்வாறே அன்னாத்யமும் ஆகும் என்று இவ்வாறு உபாசனை செய். எவன் இவ்வாறு அறிகிறானோ அவன் பிரஹ்ம தேஜஸாகவும் அன்ன போக்தாவாகவும் ஆகின்றான்.
अथ योऽस्य प्रत्यङ्सुषिः पश्चिमः तत्स्थो वायुविशेषः स मूत्रपुरीषाद्यपनयन् अधोऽनितीत्यपानः । सा तथा वाक् , तत्सम्बन्धात् ; तथा अग्निः ; तदेतद्ब्रह्मवर्चसं वृत्तस्वाध्यायनिमित्तं तेजः ब्रह्मवर्चसम् , अग्निसम्बन्धाद्वृत्तस्वाध्यायस्य । अन्नग्रसनहेतुत्वात् अपानस्य अन्नाद्यत्वम् । समानमन्यत् ॥
அனுவாதம் - அவ்வாறே எந்த இதன் மேற்கு வாயில் - மேற்கில் இருக்கும் வாயு விசேஷமாகும் - அது மூத்ர மலம் முதலியவைகளை கீழ் நோக்கி வெளியேற்றுவதால் அபானன். அவ்வாறே அது வாக். அதன் சம்பந்தத்தால் அவ்வாறே அக்னி. அந்த இந்த பிரஹ்ம தேஜஸ் நல்ல முறையில் அத்தியயனம் செய்வதின் நிமித்தத்தால் உண்டாகும் தேஜஸ் பிரஹ்ம வாச்சம் ஆகும். அக்னி சம்பந்தத்தாலும், நல்ல முறையில் ஸ்வாத்யயனம் செய்வதாலும் உண்டாவது. அன்னத்தை விழுங்குவதற்கு ஹேதுவாய் இருப்பதால் அபானன்க்கு அன்னாத்யத் தன்மையாகும். மற்றவை முன்போல்.
अथ योऽस्योदङ्सुषिः स समानस्तन्मनः स पर्जन्यस्तदेतत्कीर्तिश्च व्युष्टिश्चेत्युपासीत कीर्तिमान्व्युष्टिमान्भवति य एवं वेद ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - அவ்வாறே இதன் எந்த வடக்கு வாயில் உள்ளதோ அது சமானம். அது மனம், அது மேகம், மேலும் அதுவே இந்த கீர்த்தியும் வ்யுஷ்ட்டி (தேஹத்தின் லாவண்யம்) இவ்வாறு இதை உபாசனை செய்ய வேண்டும். எவர் இவ்வாறு அறிகிறாரோ அவர் கீர்த்திமானும் அழகு உடையவனாகவும் ஆகின்றான்
अथ योऽस्योदङ् सुषिः उदग्गतः सुषिः तत्स्थो वायुविशेषः सोऽशितपीते समं नयतीति समानः । तत्सम्बद्धं मनोऽन्तःकरणम् , स पर्जन्यो वृष्ट्यात्मको देवः पर्जन्यनिमित्ताश्च आप इति, ‘मनसा सृष्टा आपश्च वरुणश्च’ (ऐ. आ. २ । १) इति श्रुतेः ।
அனுவாதம் - அவ்வாறே எந்த அந்த வடக்கு வாசல் உள்ளதோ - வல்க்கில் இருக்கும் வாயிலின் எந்த வாயு விசேஷமோ அது சாப்பிடுவதையும், பருகுவதையும் சமமாக இட்டுச் செல்வதால் சமானன். அதன் சம்பந்தம் மனம் அதாவது அந்தக்கரணம். அது பாஜன்யம் (மழை ரூபமான மேகம்) அது விருஷ்டி (மழை) ரூப தேவதையாகும். ஏன் எனில் பர்ஜன்யத்தின் நிமித்தத்தால் ஜலம் (आपः) உண்டாவதால் என்பது “मनसा सृष्टा आपश्च वरुणश्च” (மனசா, ஸ்ருஷ்ட்ட ஆபஷ்ச்ச வருணச்ச) என்று சுருதியினால் அறியப்படுகிறது.
तदेतत्कीर्तिश्च, मनसो ज्ञानस्य कीर्तिहेतुत्वात् । आत्मपरोक्षं विश्रुतत्वं कीर्तिर्यशः । स्वकरणसंवेद्यं विश्रुतत्वं व्युष्टिः कान्तिर्देहगतं लावण्यम् । ततश्च कीर्तिसम्भवात्कीर्तिश्चेति । समानमन्यत् ॥
அனுவாதம் - அவ்வாறே அந்த (சமானன் என்னும் பிரஹ்மம்) கீர்த்தியாகும். ஏன்எனில் ஞானத்தின் கீர்த்திக்கு மனம் காரணமாவதால். தனக்குப் பின்னால் (நாம் அறியாமல்) ஏற்படும் புகழ் எதுவோ அது கீர்த்தி எனப்படும். யாசஸ் என்பது தன் காதுகளேயே கேட்டு அறிந்ததாகும். “व्युष्टिः” (வ்யுஷ்ட்டி:) என்பது காந்தி அதாவது தன்னுடைய தேஹ அழகினால் உண்டாவது. அதனாலும் கீர்த்தி உண்டாகும். அதனால் அதுவும் கீர்த்தியே. மற்றவை முன்போல்.
अथ योऽस्योर्ध्वः सुषिः स उदानः स वायुः स आकाशस्तदेतदोजश्च महश्चेत्युपासीतौजस्वी महस्वान्भवति य एवं वेद ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - அவ்வாறே இந்த மேல் நோக்கிய வாயில் உதானன். அது வாயு, அது ஆகாசம், மேலும் அது ஓஜஸ்சும், மஹ: ஆகும். இவ்வாறு இதனை உபாசனை செய்யவேண்டும். இவ்வாறு எவன் அறிகிறானோ அவன் ஓஜஸ்வியாகவும் (பலவானாகவும்) மஹஸ்வான் (தேஜஸ்வீ) ஆகவும் ஆகின்றான்.
अथ योऽस्योर्ध्वः सुषिः स उदानः आ पादतलादारभ्योर्ध्वमुत्क्रमणात् उत्कर्षार्थं च कर्म कुर्वन् अनितीत्युदानः । स वायुः तदाधारश्च आकाशः । तदेतत् वाय्वाकाशयोरोजोहेतुत्वादोजः बलं महत्वाच्च मह इति । समानमन्यत् ॥
அனுவாதம் - அவ்வாறே இதன் மேள் நோக்கிய வாயில் அது உதானன். அது பாதம் முதல் ஆரம்பித்து மேல்நோக்கி உத்கிரமணம் செய்வதின் காரணத்தாலும், மேல் இழுத்துச் செல்வதற்கான கர்மத்தில் செயல்படுவதாலும் அது உதானன் எனப்படுகிறது. அந்த வாயு அதன் ஆதார ரூபமான ஆகாசமும் ஆகும். வாயுவும், ஆகாசமும் பலத்திற்குக் காரணமாகும். ஆகையால் அந்த உதானன் (எனப்படும் பிரஹ்மம்) பலம் உடையது. மேலும் மஹத்தான காரணத்தால் மஹ: (மஹான்) ஆகும். மற்றவை முன்போல்.
ते वा एते पञ्च ब्रह्मपुरुषाः स्वर्गस्य लोकस्य द्वारपाः स य एतानेवं पञ्च ब्रह्मपुरुषान्स्वर्गस्य लोकस्य द्वारपान्वेदास्य कुले वीरो जायते प्रतिपद्यते स्वर्गं लोकं य एतानेवं पञ्च ब्रह्मपुरुषान्स्वर्गस्य लोकस्य द्वारपान्वेद ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - எந்த அந்த ஐந்து பிரஹ்ம புருஷர்கள் (தேவதைகள்) ஸ்வர்க்கலோகத்தின் த்வாரபாலகர்கள் (வாயிற்காவலர்கள்). எவர் ஸ்வர்க்க லோகத்தின் துவார பாலகர்களான இந்த ஐந்து பிரஹ்ம புருஷர்களை அறிகிறார்களோ அவர்கள் குலத்தில் வீரன் உண்டாகின்றான். எவர் இவ்வாறு ஸ்வர்க்கலோக த்வார பாலகர்களான இந்த பிரஹ்ம புருஷர்களை அறிகிறாரோ அவர் ஸ்வர்க்க லோகத்தை அடைவர்.
ते वा एते यथोक्ताः पञ्चसुषिसम्बन्धात् पञ्च ब्रह्मणो हार्दस्य पुरुषाः राजपुरुषा इव द्वारस्थाः स्वर्गस्य हार्दस्य लोकस्य द्वारपाः द्वारपालाः । एतैर्हि चक्षुःश्रोत्रवाङ्मनःप्राणैर्बहिर्मुखप्रवृत्तैर्ब्रह्मणो हार्दस्य प्राप्तिद्वाराणि निरुद्धानि । प्रत्यक्षं हि एतदजितकरणतया बाह्यविषयासङ्गानृतप्ररूढत्वात् न हार्दे ब्रह्मणि मनस्तिष्ठति । तस्मात्सत्यमुक्तमेते पञ्च ब्रह्मपुरुषाः स्वर्गस्य लोकस्य द्वारपा इति ।
அனுவாதம் - அந்த இவைகள் மேலே கூறப்பட்ட ஐந்து வாயில்களுடன் சம்பந்தப்பட்டதால் ஹிருதய பிரஹ்மத்தின் ஐந்து புருஷர்கள் ராஜாவைப் போன்று ஹிருதயத்தில் இருக்கும் ஸ்வர்க்கலோகத்தின் த்வாரபாலகர்கள். அந்த சக்ஷீ, ஸ்ரோத்திரம், வாக் மனது, பிராணன் இவைகளின் மூலமாய் வெளியே சென்று பிரவிர்த்திக்கும் இந்திரியங்களால் ஹிருதயத்தில் இருக்கும் பிரஹ்மத்தை அடையும் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. இந்திரியங்கள் ஜெயிக்கப்படாததின் காரணத்தால் பாஹ்ய விஷயங்களின் ஆசக்திரூப அநுருத (பொய்)ங்களால் வியாபிக்கப்பட்டதால் மனம் ஹிருதயத்தில் உள்ள பிரஹ்மத்தில் நிலைத்து இருப்பது இல்லை. ஆகையால் இந்த பஞ்ச பிரஹ்ம புருஷர்கள் ஸ்வர்க்க லோகத்தின் துவார பாலகர்கள் என்று கூறியது உண்மையே.
अतः स य एतानेवं यथोक्तगुणविशिष्टान् स्वर्गस्य लोकस्य द्वारपान् वेद उपास्ते उपासनया वशीकरोति, स राजद्वारपालानिवोपासनेन वशीकृत्य तैरनिवारितः प्रतिपद्यते स्वर्गं लोकं राजानमिव हार्दं ब्रह्म ।
அனுவாதம் - ஆகையால் எவன் ஒருவன் இவைகளை முன் கூறிய குணங்களுடன் கூடிய ஸ்வர்கலோக துவார பாலகர்களை அறிகிறானோ அதாவது உபாசனையினால் வசம் செய்கின்றானோ அவன் ராஜபாலகர்களை வசப்படுத்தி ராஜாவை அடைவது போன்று நிச்சயமாக ஸ்வர்க்கலோகமாகிய ஹிருதய பிரஹ்மத்தை அடைகிறான்.
किं च अस्य विदुषः कुले वीरः पुत्रो जायते वीरपुरुषसेवनात् । तस्य च ऋणापाकरणेन ब्रह्मोपासनप्रवृत्तिहेतुत्वम् । ततश्च स्वर्गलोकप्रतिपत्तये पारम्पर्येण भवतीति स्वर्गलोकप्रतिपत्तिरेवैकं फलम् ॥
அனுவாதம் - மேலும் இந்த விதுஷகனின் குலத்தில் வீர புருஷனை சேவிப்பதால் வீரபுத்திரன் பிறப்பான். அந்த பித்ரு கடன்களைத் தீர்ப்பதால் அது பிரஹ்ம உபாசனையில் ஈடுபடுவதற்கு ஹேதுவாகின்றது. அதனால் பரம்பரையாக ஸ்வர்க்கலோகத்தை அடைவிக்கும் காரணமாகிறது. ஆகையால் ஸ்வர்க்கலோக பிராப்தியே இதன் ஒரே பலனாகிறது.
अथ यत् असौ विद्वान् स्वर्गं लोकं वीरपुरुषसेवनात्प्रतिपद्यते, यच्चोक्तं त्रिपादस्यामृतं दिवीति, तदिदं लिङ्गेन चक्षुःश्रोत्रेन्द्रियगोचरमापादयितव्यम् , यथा अग्न्यादि धूमादिलिङ्गेन । तथा हि एवमेवेदमिति यथोक्ते अर्थे दृढा प्रतीतिः स्यात् — अनन्यत्वेन च निश्चय इति । अत आह —
அனுவாதம் - அவ்வாறே எந்த வித்வான் வீர புருஷனை சேவை செய்து ஸ்வர்க்க லோகத்தை அடைகின்றான். அது இவ்வாறு “त्रिपादस्यामृतं दिवि” (த்ரிபாதஸ்யஅம்ருதம் திவி) என்று வர்ணிக்கப்பட்ட லிங்கத்தால் சக்ஷீ ஸ்ரோத்திர இந்திரியங்களுக்கு விஷயமாகிறது என்று அக்னி முலியவைகள் புகை முதலிய லிங்கங்களால் அறியப்படுவது போல் என்று அறிந்துகொள்ள வேண்டும். அவ்வாறே இது என்று கூறப்பட்ட அர்த்தத்தில் திட ஞானம் வரும். இதனால் அபேத ரூப (அனன்யத்துவரூப) நிச்சயம் ஏற்படுவதற்காக சுருதி இவ்வாறு கூறுகிறது.
अथ यदतः परो दिवो ज्योतिर्दीप्यते विश्वतः पृष्ठेषु सर्वतः पृष्ठेष्वनुत्तमेषूत्तमेषु लोकेष्विदं वाव तद्यदिदमस्मिन्नन्तः पुरुषे ज्योतिः ॥ ७ ॥
மந்த்ரார்த்தம் - அவ்வாறே இந்த த்யுலோகத் (சுவர்க்கம்) தைக் காட்டிலும் மேலான ஜ்யோதி விச்வத்திற்கு மேலே அதாவது எல்லாவற்றிக்கும் மேலே (அப்பால்) இருக்கிறது. இதைவிட உத்தமமான வேறுலோகம் கிடையாது. இவ்வாறு உத்தமமான லோகத்தில் பிரகாசித்துக் கொண்டிருப்பது அது நிச்சயமாக இந்த புருஷனின் உள்ளே உள்ள ஜ்யோதியாகும்.
यदतः अमुष्मात् दिवः द्युलोकात् , परः परमिति लिङ्गव्यत्ययेन, ज्योतिर्दीप्यते, स्वयम्प्रभं सदाप्रकाशत्वाद्दीप्यत इव दीप्यत इत्युच्यते, अग्न्यादिवज्ज्वलनलक्षणाया दीप्तेरसम्भवात् ।
அனுவாதம் - இந்த திவி அதாவது த்யுலோகத்தைக் காட்டிலும் மேலானது. இங்கு “परः” (ப்ர: மேலானது) என்ற சப்தம் பும்லிங்கத்தில் உள்ளது. அதை நபும்சசுலிங்கமாக “परम्” (பரம்) என்று கொள்ள வேண்டும். எந்த ஜ்யோதி ஒளிர்கிறதோ அது எப்பொழுதும் பிரகாசமாக இருப்பதால் அது ஸ்வயம் பிரபம். அது ஒளிர்வது போல் ஒளிர்கிறது என்று கூறப்படுகிறது. ஏன்எனில் அக்னி முதலியவைகளைப் போன்று ஜ்வலிக்கும் (ஒளிரும்) தன்மை அற்றது.
विश्वतः पृष्ठेष्वित्येतस्य व्याख्यानं सर्वतः पृष्ठेष्विति, संसारादुपरीत्यर्थः ; संसार एव हि सर्वः, असंसारिणः एकत्वान्निर्भेदत्वाच्च । अनुत्तमेषु, तत्पुरुषसमासाशङ्कानिवृत्तये आह उत्तमेषु लोकेष्विति ; सत्यलोकादिषु हिरण्यगर्भादिकार्यरूपस्य परस्येश्वरस्य आसन्नत्वादुच्यते उत्तमेषु लोकेष्विति ।
அனுவாதம் - “विश्वतः पृष्द्भेषु” (விச்வதः ப்ருஷ்டேஷீ) என்ற இந்த வியாக்யானம் எல்லாவற்றையும்விட மேலானது என்பதாகும். சம்சாரத்தைக்காட்டிலும் மேல் என்பது பொருள். சம்சாரம் அற்றவன் ஏகத்துவமாயும், பேதமற்றதாய் இருப்பதால் சம்சாரமே எல்லாம் (सर्वः) என்பது ஆகும். இங்கு அனுத்தமேஷீ என்று கூறப்பட்ட தத்புருஷசமாசத்தில் உள்ள சங்கையை நிவிர்த்தி செய்து கூறுகிறார்- உத்தமான லோகங்களில் என்று. சத்யலோகங்கள் முதலியவைகளில் ஹிரண்ய கர்பம் முதலிய காரியரூப மேலான ஈஸ்வரனின் (பிரஹ்மத்தின்) சமீபத்தில் இருப்பதால் அவைகளை உத்தமமான லோகங்கள் என்று கூறப்படுகிறது.
इदं वाव इदमेव तत् यदिदमस्मिन्पुरुषे अन्तः मध्ये ज्योतिः चक्षुःश्रोत्रग्राह्येण लिङ्गेनोष्णिम्ना शब्देन च अवगम्यते । यत् त्वचा स्पर्शरूपेण गृह्यते तच्चक्षुषैव, दृढप्रतीतिकरत्वात्त्वचः, अविनाभूतत्वाच्च रूपस्पर्शयोः ॥
அனுவாதம் - இது நிச்சயமாக இந்த புருஷனினுள்ளே (மத்தியில்) இருக்கும் ஜ்யோதியாகும். சக்ஷீவினாலும், ஸ்ரோத்திரத்தினாலும் கிரஹிக்கும் லிங்கத்தால் அறியும் யோகியமுடையது உஷ்ணத்தன்மையும் சப்த ரூபமும் ஆகும். எது துவக்கால் ஸ்பர்ச ரூபமாய் கிரஹிக்கப்படுகிறதோ அந்த வஸ்துவை கண்களாலும் கிரஹிக்கமுடியும். ஏன்எனில் துவக்கானது அதை திடமாய் அறியச்செய்வதாகும். அவ்வாறே ரூபமும், ஸ்பர்சமும் ஒன்று இல்லாமல் ஒன்று இருக்க முடியாது.
तस्यैषा दृष्टिर्यत्रैतदस्मिञ्छरीरे सꣳस्पर्शेनोष्णिमानं विजानाति तस्यैषा श्रुतिर्यत्रैतत्कर्णावपिगृह्य निनदमिव नदथुरिवाग्नेरिव ज्वलत उपशृणोति तदेतद्दृष्टं च श्रुतं चेत्युपासीत चक्षुष्यः श्रुतो भवति य एवं वेद य एवं वेद ॥ ८ ॥
மந்த்ரார்த்தம் - அந்த இந்த (ஹிருதயத்தில் இருக்கும் புருஷனின்) தர்சனத்திற்கான யோக்கியம் எப்பொழுது இந்த சரீரத்தில் ஸ்பர்ச ரூபமாக உஷ்ணத்தன்மையை உணர்கிறானோ அப்பொழுது ஏற்படுகிறது. அவ்வாறே எப்பொழுது காதுகளை மூடி உள்ளே கேட்கும் ரதம் நகர்வது போலும், மாடு கத்துவது போலும் சிரவணம் செய்கிறானோ அப்பொழுது அது ஸ்ரவணயோக்கிய உபாயமாகிறது. ஆகையால் அந்த ஜ்யோதியை பார்க்க முடியும், கேட்க முடியும் என்று உபாசனை செய்யவேண்டும். எந்த உபாசகன் இவ்வாறு அறிகிறானோ (உபாசிக்கின்றானோ காண்பதற்கு மற்றவர்கள் விரும்புபவனாகவும், புகழ்மிக்கவனாகவும் ஆவான்.)
कथं पुनः तस्य ज्योतिषः लिङ्गं त्वग्दृष्टिगोचरत्वमापद्यत इति, आह —
அனுவாதம் - ஆனால் எவ்வாறு அந்த ஜ்யோதியின் லிங்கமாக துவக் இந்திரியத்தின் திருஷ்டிக்கு கோசரமாகிறது என்பது கூறப்படுகிறது.
यत्र यस्मिन्काले, एतदिति क्रियाविशेषणम् , अस्मिञ्शरीरे हस्तेन आलभ्य संस्पर्शेन उष्णिमानं रूपसहभाविनमुष्णस्पर्शभावं विजानाति, स हि उष्णिमा नामरूपव्याकरणाय देहमनुप्रविष्टस्य चैतन्यात्मज्योतिषः लिङ्गम् , अव्यभिचारात् । न हि जीवन्तमात्मानमुष्णिमा व्यभिचरति । उष्ण एव जीविष्यन् शीतो मरिष्यन् इति हि विज्ञायते । मरणकाले च तेजः परस्यां देवतायामिति परेणाविभागत्वोपगमात् । अतः असाधारणं लिङ्गमौष्ण्यमग्नेरिव धूमः । अतस्तस्य परस्यैषा दृष्टिः साक्षादिव दर्शनं दर्शनोपाय इत्यर्थः ।
அனுவாதம் - यत्र (எங்கு-யத்ர) என்பது எந்த சமயத்தில், அவ்வாறே “एतत्” (ஏதத் - இத) என்பது அறிகிறான் என்பதின் கிரியா விசேஷமாகும். எப்பொழுது இந்த சரீரத்தில் கைகளால் ஸ்பரிசிக்கும்பொழுது ரூபத்துடன் இருக்கும் உஷ்ணத்தை அறிகிறான், அந்த உஷ்ணமே நாம ரூபத்தை விபாகம் செய்வதால் தேஹத்தில் அனுப்பிரவிஷ்டமான சைதன்யாத்ம ஜ்யோதியை அனுமானம் செய்யும் லிங்கமாகும். ஏன்எனில் அது ஒருநாளும் மாறுபடாது (வியபிசாரம் ஆவது இல்லை). ஜீவித்துக் கொண்டிருக்கும் சரீரத்தில் உஷ்ணத்தன்மையானது மாறுபடுவதில்லை. “उष्ण एव जीविष्यञ्शीतो मरिष्यन्” (உஷ்ண ஏவ ஜீவிஷ்யஞ்ஷீதோ மரிஷ்யன் = ஜீவிக்கும்பொழுது உஷ்ணமாகவும், மரித்தபின் குளிர்ச்சியாகவும் சரீரம் இருக்கும் என்பது அறியமுடிகிறது. மரண காலத்தில் தேஜஸ் பரதேவதையில் லீனமாகிவிடுகிறது. ஏன்எனில் அந்த சமயத்தில் பரதேவதையுடன் அபேதமாகிவிடுகிறது. ஆகையால் எவ்வாறு புகை அக்னியின் லிங்கமாகிறதோ அவ்வாறே உஷ்ணத்தன்மை ஜீவனத்திற்கான அசாதாரண காரணமாகும். ஆகையால் பரதேவதையின் த்ருஷ்டி சாக்ஷாத் போன்ற தர்சனம் அதன் தர்சனத்தின் சாதனமாகும் என்பது இதன் தாத்பர்யம்.
तथा तस्य ज्योतिषः एषा श्रुतिः श्रवणं श्रवणोपायोऽप्युच्यमानः । यत्र यदा पुरुषः ज्योतिषो लिङ्गं शुश्रूषति श्रोतुमिच्छति, तदा एतत् कर्णावपिगृह्य, एतच्छब्दः क्रियाविशेषणम् , अपिगृह्य अपिधायेत्यर्थः, अङ्गुलिभ्यां प्रोर्णुत्य निनदमिव रथस्येव घोषो निनदः तमिव शृणोति, नदथुरिव ऋषभकूजितमिव शब्दः, यथा च अग्नेर्बहिर्ज्वलतः एवं शब्दमन्तःशरीरे उपशृणोति ।
அனுவாதம் - அவ்வாறே அந்த இந்த ஜ்யோதிஷ சுருதி - சிரவணம் அதாவது கேட்பதற்கான உபாயமும் இனி கூறப்படுகிறது. அங்கு அதாவது எப்பொழுது புருஷன் ஜ்யோதியின் லிங்கத்தை கேட்க விரும்புகிறானோ அப்பொழுது காதை மூடவேண்டும். இங்கு “एतत् कर्णावपिगृह्य” (ஏதத் கர்ணாவபிக்ருஹ்ய) என்பதில் உள்ள एतत् (ஏதத்) சப்தம் “अपिगृह्य” (அபிக்ருஹ்ய = மூடுவது) என்ற கிரியா விசேஷணம். விரல்களால் காதுகளை மூடும்பொழுது ரதம் நகரும்பொழுது ஏற்படும் சப்தம் போன்று, கேட்கிறது. காளைமாடு கத்துவது போன்ற சப்தமும், வெளியில் அக்னி ஜ்வலிக்கும்பொழுது ஏற்படும் சப்தம் போன்ற சப்தம் சரீரத்தின் உள்ளே கேட்க முடிகிறது.
तदेतत् ज्योतिः दृष्टश्रुतलिङ्गत्वात् दृष्टं च श्रुतं च इत्युपासीत । तथोपासनात् चक्षुष्यः दर्शनीयः श्रुतः विश्रुतश्च । यत् स्पर्शगुणोपासननिमित्तं फलं तत् रूपे सम्पादयति चक्षुष्य इति, रूपस्पर्शयोः सहभावित्वात् , इष्टत्वाच्च दर्शनीयतायाः । एवं च विद्यायाः फलमुपपन्नं स्यात् , न तु मृदुत्वादिस्पर्शवत्त्वे । य एवं यथोक्तौ गुणौ वेद । स्वर्गलोकप्रतिपत्तिस्तु उक्तमदृष्टं फलम् । द्विरभ्यासः आदरार्थः ॥
அனுவாதம் - இவ்வாறு இந்த ஜ்யோதி த்ருஷ்ட ஸ்ருத (கேட்ட) லிங்கமுடையதாய் இருப்பதால் “दृष्टं” (திருஷ்டம்) “श्रुतं” (சுருதம்) என்று உபாசிக்க வேண்டும். அந்த உபாசனையினால் காண்பதற்கு விருப்பமுடையவராயும், புகழைக் கேட்பவராகவும் இருப்பார். ஸ்பர்ச குண உபாசனையினால் எந்த பலம் உண்டாகிறதோ அதை சுருதி “चक्षुष्य” (சக்ஷீஷ்ய) என்று கூறி - ரூபத்தில் அடையச்செய்கிறது. ஏன்எனில் ரூபமும் ஸ்பர்சமும் சகபாவமாய் இருப்பதாலும் இனிமையாக காணப்படுவது எல்லோருக்கும் விருப்பமானதாகும். இவ்வாறு இந்த வித்யையின் பலன் உண்டாகும். ஆனால் மிருது முதலிய ஸ்பர்ச சப்தத்தால் அல்ல. எவன் இவ்வாறு கூறப்பட்ட குணங்களை அறிகிறானோ (உபாசிக்கின்றானோ) அவனுக்கு ஸ்வர்க்கலோகமாகிய அதிருஷ்ட பலம் அடைவான் என்பது கூறப்பட்டது. “य एवं वेद” என்று இருமுறைக் கூறியது அதை ஆதரிப்பதற்காக ஆகும்.
इति त्रयोदशखण्डभाष्यम् ॥
पुनस्तस्यैव त्रिपादमृतस्य ब्रह्मणोऽनन्तगुणवतोऽनन्तशक्तेरनेकभेदोपास्यस्य विशिष्टगुणशक्तिमत्त्वेनोपासनं विधित्सन् आह —
அனுவாதம் - மேலும் அதையே அந்த த்ருபாத அம்ருத அனந்த குணமுடைய, அனந்த சக்தியுள்ள அனந்த பிரகாரமாய் உபாசிக்க வேண்டியதுமான பிரஹ்மத்தை விசேஷமான குணமுடையதாயும் மிகுந்த சக்தி உடைய ரூபத்தாலும் உபாசனை செய்ய வேண்டியதை விதானம் செய்யவிரும்பி சுருதியானது ஆரம்பிக்கப்படுகிறது.
सर्वं खल्विदं ब्रह्म तज्जलानिति शान्त उपासीत । अथ खलु क्रतुमयः पुरुषो यथाक्रतुरस्मिंल्लोके पुरुषो भवति तथेतः प्रेत्य भवति स क्रतुं कुर्वीत ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - இந்த ஜகத் முழுவதும் நிச்சயமாக பிரஹ்மம். ஜகத் அதிலிருந்து உண்டாகி அதிலேயே லயமாகிறது. மேலும் அதிலேயே காப்பாற்றப்படுகிறது. என்று இவ்வாறு (ரஜோகுண தமோகுணமற்று) சாந்தமாகி உபாசனை செய்ய வேண்டும். ஏன்எனில் புருஷன் நிச்சயமாக சிந்தனை மயமான நிச்சய ஆத்மா ஆவான். இந்த உலகில் புருஷன் எவ்வாறு நிச்சயமானவனாக ஆகின்றானோ அவ்வாறே இங்கு மரணமடைந்தபின்னும் ஆகின்றான். ஆகையால் இவனை (இந்த புருஷனை) நிச்சயம் செய்ய வேண்டும்.
सर्वं समस्तम् , खल्विति वाक्यालङ्कारार्थो निपातः । इदं जगत् नामरूपविकृतं प्रत्यक्षादिविषयं ब्रह्म कारणम् ; वृद्धतमत्वात् ब्रह्म ।
அனுவாதம் - இவை எல்லாம் இதில் “खलु” (கலு) என்ற நிபாதம் வாக்கியத்தின் அலங்காரத்தின் பொருட்டாகும். பிரஹ்மம் எல்லாவற்றையும்விட “वृद्धतम्” (விருத்தம்) பெரியதாய், பழமையானதாய், பெருக்குவதாய் இருப்பதால் இந்த ஜகத்தாகிய நாமரூப விகாரம் பிரத்யக்ஷம் முதலிய விஷயங்களுக்குக் காரணம் பிரஹ்மம்.
कथं सर्वस्य ब्रह्मत्वमित्यत आह — तज्जलानिति ; तस्माद्ब्रह्मणो जातं तेजोबन्नादिक्रमेण सर्वम् ; अतः तज्जम् ; तथा तेनैव जननक्रमेण प्रतिलोमतया तस्मिन्नेव ब्रह्मणि लीयते तदात्मतया श्लिष्यत इति तल्लम् ; तथा तस्मिन्नेव स्थितिकाले, अनिति प्राणिति चेष्टत इति । एवं ब्रह्मात्मतया त्रिषु कालेष्वविशिष्टम् , तद्व्यतिरेकेणाग्रहणात् । अतः तदेवेदं जगत् । यथा च इदं तदेवैकमद्वितीयं तथा षष्ठे विस्तरेण वक्ष्यामः ।
அனுவாதம் - எவ்வாறு எல்லாவற்றிற்கும் பிரஹ்மத்துவம்? இவ்வாறான கேள்விக்கு பதில் அளிக்கப்படுகிறது - “तज्जलानिति” (तज्जम् तल्लम् तदन्) (தஜ்ஜலாநிதி - தஜஜம், தல்வம், ததன்) என்று. ஆகையால் பிரஹ்மத்திலிருந்து தேஜஸ், அப்பு (ஜலம்) அன்னம் முதலியவை கிரமமாக ஜகத் எல்லாம் உண்டாயிற்று. அவ்வாறே ஆகையால் “तज्जम्” (தத்ஜம்) அதே ஜனன கிரமத்தைக்காட்டிலும் விபரீத கிரமமாக அந்த பிரஹ்மத்திலேயே லயிக்கிறது. தாதாத்மிய ரூபமாய் அதில் கலப்பதால் “तल्लम्” (தல்லம்). அவ்வாறே அதிலேயே ஸ்திதி காலத்தில் எல்லாம் ஜீவித்துக்கொண்டு சலித்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு பிரஹ்மம் ஆத்மரூபமாய் மூன்று காலங்களிலும் சமானமாய் (ஒரே படித்தாய்) இருக்கின்றது. ஏன்எனில் அது (பிரஹ்மம்) இல்லாமல் கிரஹிக்க முடியாது. ஆகையால் இந்த ஜகத் முழுவதும் பிரஹ்மமேயாகும். எவ்வாறு இந்த ஜகத் ஒரே அதவீதீய பிரஹ்மமோ அவ்வாறு ஆறாவது அத்யாயத்தில் விஸ்தாரமாக கூறுவேன்.
यस्माच्च सर्वमिदं ब्रह्म, अतः शान्तः रागद्वेषादिदोषरहितः संयतः सन् , यत् तत्सर्वं ब्रह्म तत् वक्ष्यमाणैर्गुणैरुपासीत ।
அனுவாதம் - எதனால் இவை எல்லாம் பிரஹ்மமோ ஆகையால் சாந்தமாக ராகதுவேஷ முதலிய தோஷமற்று ஒருமுகப்படுத்தி (இந்திரியங்களை அடக்கி) எந்த அந்த எல்லாமோ அதை இனிக் கூறப்போகும் குணங்களால் உபாசிக்க வேண்டும்.
कथमुपासीत ? क्रतुं कुर्वीत — क्रतुः निश्चयोऽध्यवसायः एवमेव नान्यथेत्यविचलः प्रत्ययः, तं क्रतुं कुर्वीत उपासीत इत्यनेन व्यवहितेन सम्बन्धः । किं पुनः क्रतुकरणेन कर्तव्यं प्रयोजनम् ? कथं वा क्रतुः कर्तव्यः ? क्रतुकरणं च अभिप्रेतार्थसिद्धिसाधनं कथम् ? इत्यस्यार्थस्य प्रतिपादनार्थम् अथेत्यादिग्रन्थः ।
அனுவாதம் - எவ்வாறு உபாசனை செய்யவேண்டும்? (அதற்கு கூறப்படுகிறது)- “क्रतुं कुर्वीत” (க்ரதும் குர்வீத = நிச்சயமாக உறுதியாக சிந்திக்க வேண்டும்) என்று கூறப்படுகிறது. ஆகையால் இதைத்தவிர வேறு விதமாக அல்ல என்பது சலமற்ற (மாறுபாடு அற்று) தோன்றும் அந்த கிருதுவை உபாசிக்க வேண்டும் என்பதாகும். ஆனால் இந்த கிருதுவை செய்வதால் என்ன பிரயோஜனம்? எவ்வாறு தான் க்ரது செய்யவேண்டும்? க்ரதுவை எவ்வாறு செய்து அபிஷ்ட (விரும்பிய) அர்த்தத்தை (பலனை) அடையும் சாதனமாகும்? இந்த விஷயங்களை விளக்குவதற்காக “अथ” (அத) முதலியவை இனிவரும் கிரந்தமாகும்.
अथ खल्विति हेत्वर्थः । यस्मात्क्रतुमयः क्रतुप्रायोऽध्यवसायात्मकः पुरुषः जीवः ; यथाक्रतुः यादृशः क्रतुः अस्य सोऽयं यथाक्रतुः यथाध्यवसायः यादृङ्निश्चयः अस्मिंल्लोके जीवन् इह पुरुषो भवति, तथा इतः अस्माद्देहात् प्रेत्य मृत्वा भवति ; क्रत्वनुरूपफलात्मको भवतीत्यर्थः । एवं हि एतच्छास्त्रतो दृष्टम् —
‘यं यं वापि स्मरन्भावं त्यजत्यन्ते कलेबरम्’ (भ. गी. ८ । ६) इत्यादि । यत एवं व्यवस्था शास्त्रदृष्टा, अतः सः एवं जानन् क्रतुं कुर्वीत ; यादृशं क्रतुं वक्ष्यामः तम् । यत एवं शास्त्रप्रामाण्यादुपपद्यते क्रत्वनुरूपं फलम् , अतः स कर्तव्यः क्रतुः ॥
அனுவாதம் - (அத கலு) என்பது ஹேது அர்த்தமாகும். எதனால் க்ரது மய; அதாவது க்ரது போன்று மிகுந்த முயற்சி செய்து அதனால் ஜீவித்துக்கொண்டிருக்கும் இந்த புருஷன் எவ்வாறு சிந்திக்கின்றானோ அவ்வாறே சிந்தனை உடையவனாகின்றான். அவ்வாறே அத்யவசாம் உமுடையவனாய் அதாவது நிச்சயமுடையவனாய் ஆகிறானோ அவ்வாறே இந்த தேஹத்திலிருந்து வெளியெறி, மரணமடைகின்றான். இதன் தாத்பர்யம் என்னவெனில் தன்னுடைய நிச்சயத்திற்கு ஏற்றவாறு பலன் உடையவனாகின்றான். சாஸ்த்திரத்திலும் இவ்வாறு காணப்படுகிறது - “यं यं वापि स्मरन्भावं त्यजत्यन्ते कलेवरम्” (யம் யம் வாபி ஸ்மரன்பாவம் த்யஜத்யன்தே கலேவரம்) என்பது முதலியவைகள். எதனால் இவ்வாறான வ்யவஸ்தை சாஸ்த்திரத்தால் பிரதிபாதனம் செய்யப்பட்டதே இவ்வாறு அவன் அறிந்து க்ரதும் (சிந்தனை) செய்யவேண்டும். அந்த க்ரது எவ்வாறு என்பதை கூறப்போகிறோம். எதனால் இவ்வாறு சாஸ்திரம் பிரமாணத்தால் க்ரது அனுரூபம் பலம் அடையப்படுமோ அந்த க்ரதுவை அவசியம் செய்ய வேண்டும்.
मनोमयः प्राणशरीरो भारूपः सत्यसङ्कल्प आकाशात्मा सर्वकर्मा सर्वकामः सर्वगन्धः सर्वरसः सर्वमिदमभ्यात्तोऽवाक्यनादरः ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - (அந்த பிரஹ்மம்) மனோமயம், பிராணசரீரம், பிரகாசஸ்வரூபம், சத்யசங்கல்பம், ஆகாசசரீரம், சர்வகர்மம், சர்வகாமம், சர்வகந்தம், சர்வரசம், இந்த சம்பூர்ண ஜகத்தை எல்லா பக்கமும் வியாபித்தவர், வாக் முதலிய இந்திரியங்கள் அற்றது. மேலும் ஒன்றையும் சாராதவர் (நாடாதவர்).
कथम् ?
அனுவாதம் - எவ்வாறு
அனுவாதம் - மனோமய: என்பது மனம் செல்வது என்பதாகும். ஜீவன் அதன் மூலமாக மனனம் செய்கிறான் அதாவது நினைக்கிறான். ஆகையால் மனம் எனப்படுகிறது. மனமானது தன் விருத்தியினால் விஷயங்களில் பிரவிர்த்திக்கின்றது. ஆகையால் அந்த மனதினால் மனோமயன் எனப்படுகிறது. அது பிரவிர்த்திப்பது போலும், நிவிர்த்தியாவது போலும் இருக்கின்றது. ஆகையால்தான் அது பிராண சரீரம் ஆகும். விக்ஞானம், கிரியா சக்தி ஆகிய இரண்டும் சேர்ந்து உண்டானது லிங்கசரீரமே பிராணன் “यो वै प्राणः सा प्रज्ञा या वा प्रज्ञा स प्राणः” (யோ வை பிராண: சா பிரக்ஞா சா வா பிரக்ஞா ச ப்ராண:) என்ற சுருதி கூறுகிறது. அவ்வாறே வேறு சுருதியிலும்- “मनोमयःप्राणशरीरनेता” (மனோமய: பிராணசரீரநேதா) என்று கூறுவதிலிருந்து அந்த சரீரம் எதற்கோ அது பிராண சரீரம் என்று சித்திக்கின்றது.
भारूपः भा दीप्तिः चैतन्यलक्षणं रूपं यस्य सः भारूपः । सत्यसङ्कल्पः सत्या अवितथाः सङ्कल्पाः यस्य, सोऽयं सत्यसङ्कल्पः ; न यथा संसारिण इवानैकान्तिकफलः सङ्कल्प ईश्वरस्येत्यर्थः । संसारिणः अनृतेन मिथ्याफलत्वहेतुना प्रत्यूढत्वात् सङ्कल्पस्य मिथ्याफलत्वं वक्ष्यति —
‘अनृतेन हि प्रत्यूढाः’ (छा. उ. ८ । ३ । २) इति ।
அனுவாதம் - “भारूपः” (பாரூப) என்பது “भा” (பா) என்பது சைதன்யரூப பிரகாசம், பாரூபம், சத்ய சங்கல்பம் என்பது எந்த சங்கல்பம் சத்யமானதும், நஷ்டமாகாத சங்கல்பம் எவருக்கோ அவர் சத்திய சங்கல்பர். சம்சாரிகளைப்போல் ஈஸ்வரனுடைய சங்கல்பம் மாறுபட்ட பலனை கொடுப்பது அல்ல என்பது பொருள். பொய்யான அதாவது மித்யா பலத்தினால் அதில் பிரவிர்த்தி (விருத்தி) ஏற்படுவதால் சம்சாரிகளின் சங்கல்பம் மித்யாபலனை உடையது. இதைக் கூறப்போகிறார்- “अनृतेन हि प्रत्यूढाः” (அநுருதேன ஹி பிரத்யூடா:) என்று.
அனுவாதம் - ஆகாசாத்மா- ஆகாசம் போன்ற ஆத்ம ஸ்வரூபம் எதற்கோ அது ஆகாசாத்மா. அதது சர்வகதமாயும் சூக்ஷ்மமாயும், ரூபம் முதலியவை அற்றதாயும், ஆகாசத்திற்கு சமானமாகவும் ஈஸ்வரன் இருக்கின்றார். “सर्वकर्मा” (சர்வகர்மா) - இந்த ஈஸ்வரனால் இந்த விச்வம் முழுவதும் செய்யப்பட்டது என்பதால் ஜகத் எல்லாம் எவருடைய கர்மமோ அவர் “சர்வ கர்மா” “स हि सर्वस्य कर्ता” (ச ஹி சர்வஸ்ய கர்த்தா) என்பது சுருதி மூலமாய் சித்திக்கின்றது. சர்வகாம:) “धर्माविरुद्धो भूतेषु कामोऽस्मि” (தர்மாவிருத்தோ பூதேஷீ காமோஅஸ்மி” என்று ஸ்மிருதியினாலும் சித்திக்கிறது.
ननु कामोऽस्मीति वचनात् इह बहुव्रीहिर्न सम्भवति सर्वकाम इति ।
அனுவாதம் - சங்கை - ஆனால் “कामोऽस्मि” (காமோஅஸ்மி, நான் காமன்) என்ற வசனம் இருப்பதால் “सर्वकाम” (சர்வகாம) பதத்தில் பஹீவிரீஹி சமாசம் சம்பவிக்காதே? எனில்
न, कामस्य कर्तव्यत्वात् शब्दादिवत्पारार्थ्यप्रसङ्गाच्च देवस्य । तस्मात् यथेह सर्वकाम इति बहुव्रीहिः, तथा कामोऽस्मीति स्मृत्यर्थो वाच्यः ।
அனுவாதம் - அவ்வாறே அல்ல. ஏன்எனில் காமத்திற்கு கர்த்தவ்யம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆகையால் சப்தங்கள் முதலியவைகளைப் போன்று தேவதைக்கும் (பகவானுக்கும்) (परार्थत) மற்றவருக்காக என்ற பொருள் ஏற்படும். ஆகையால் இவ்வாறு இங்கு “सर्वकाम” (சர்வகாம) என்ற பதத்தில் பஹுவ்ரீஹி சமாசம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறே “कामोऽस्मि” (காமோஅஸ்மி) என்று ஸ்மிருதியின் அர்த்தத்தை அறிந்துகொள்ள வேண்டும்.
அனுவாதம் - “सर्वगन्धः” (சர்வகந்த: - எல்லா வாசனை உடையவர்) - எல்லா நல்ல சுகத்தை அளிக்கும் வாசனை உடையவர் சர்வகந்த: “पुण्यो गन्धः पृथिव्याम्” (புண்யோ கந்த: பிருதிவ்யாம்) என்பது சுருதி வாக்கியமாகும். அவித்யா முதலிய தோஷம் இல்லாததால் ஈஸ்வரனுக்கு பாபத்துடன் சேர்க்கை ஏற்படாது. (சம்சர்க்கம் ஏற்படாது).
सर्वमिदं जगत् अभ्यात्तः अभिव्याप्तः । अततेर्व्याप्त्यर्थस्य कर्तरि निष्ठा । तथा अवाकी — उच्यते अनयेति वाक् वागेव वाकः, यद्वा वचेर्घञन्तस्य करणे वाकः, स यस्य विद्यते स वाकी, न वाकी अवाकी । वाक्प्रतिषेधश्च अत्र उपलक्षणार्थः । गन्धरसादिश्रवणात् ईश्वरस्य प्राप्तानि घ्राणादीनि करणानि गन्धादिग्रहणाय ; अतः वाक्प्रतिषेधेन प्रतिषिध्यन्ते तानि ;
‘अपाणिपादो जवनो ग्रहीता पश्यत्यचक्षुः स शृणोत्यकर्णः’ (श्वे. उ. ३ । १९) इत्यादिमन्त्रवर्णात् ।
அனுவாதம் - இந்த ஜகத் முழுவதையும் (எல்லாவற்றையும்) வியாபித்து இருக்கிறது. இங்கு வியாப்தி என்ற அர்த்தமுடைய “अत्” (அத்) தாதுவின் கர்த்தா அர்தத்தில் “क्त” (கத) பிரத்யயம் இருப்பதால் “आत्त” (ஆத்த) என்ற பதம் சித்திக்கின்றது. இவ்வாறே “अवाकी” (அவாக்கீ) என்ற பதமும் ஆகும். எதன் மூலமாய் பேச முடிகிறததோ அதை “वाक्” (வாக்) என்கிறோம். வாக்கே வாக் ஆகும். அல்லது “वच्” (வச்) தாது அர்த்தத்தால் கரண அர்த்தத்தில் “घञ्” (கஞ்) பிரத்தியத்தின் காரணத்தால் “वाक्” (வாக்) என்ற சப்தம் வெளிப்படுகிறது. இந்த வாக் எதில் உள்ளதோ அதை “वाकी” (வாகீ) எனப்படுகிறது. வாக் இல்லாதது “अवाकी” (அவாகீ) என்று கூறப்படுகிறது. இங்கு வாக் நிஷேதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இது மற்ற இந்திரியங்களுக்கும் உப லக்ஷணமாகும் (அதாவது மற்ற இந்திரியங்களும் நிஷேதிக்கப்படுகிறது). கந்தம் ரசம் முதலியவைகளும், சிரவணம் முதலியவைகளும். கிராணன் முதலிய கரணங்களும் கந்தம் முதலியவைகளை கிரஹிப்பதற்காக ஈச்வரனுக்கு சித்திக்கிறது. ஆகையால் வாக்கை நிஷேதித்தலால் அவைகள் எல்லாம் நிஷேதம் செய்யப்பட்டதாகிறது. “अपाणिपादो जवनो ग्रहीता पश्यत्यचक्षुः स श्रृणोत्यकर्णः” (அபாணிபாதோ ஜவனோ க்ரஹீதா பச்யத்யசக்ஷீ: சச்ருவணோத்யகர்ண:) என்பது முதலிய மந்திர வர்ணங்களாலும் சித்திக்கிறது.
अनादरः असम्भ्रमः ; अप्राप्तप्राप्तौ हि सम्भ्रमः स्यादनाप्तकामस्य । न तु आप्तकामत्वात् नित्यतृप्तस्येश्वरस्य सम्भ्रमोऽस्ति क्वचित् ॥
அனுவாதம் - அனாதரம் அதாவது சம்பிரமம் அற்றது. (ஆக்ரஹம் அற்றது). ஆப்தகாமன் அல்லாதவனுக்கே அடையப்படாதது அடையப்பட்டபொழுது ஆக்ரஹம் உண்டாகும். ஆப்தகாமனாயும், நித்யத்திருப்தனுமாகிய ஈஸ்வரனிடத்தில் சிறிதும் சம்பிரமம் (ஆக்ரஹம்) இல்லை.
एष म आत्मान्तर्हृदयेऽणीयान्व्रीहेर्वा यवाद्वा सर्षपाद्वा श्यामाकाद्वा श्यामाकतण्डुलाद्वैष म आत्मान्तर्हृदये ज्यायान्पृथिव्या ज्यायानन्तरिक्षाज्ज्यायान्दिवो ज्यायानेभ्यो लोकेभ्यः ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - இருதய கமலத்திற்குள்ளே உள்ள இந்த என்னுடைய ஆத்மா நெல்லைவிட, கேழ்வரகைவிட, கடுகைவிட சோளத்தைவிட சோள மணியைவிட மிகவும் சிறியவர். அவ்வாறேஹிருதய மலத்தின் உள்ளே உள்ள என்னுடைய ஆத்மா பிருதிவீ, அந்தரிக்ஷம், தேவலோகம், மேலும் இந்த எல்லா லோகங்களைக் காட்டிலும் மிகப்பெரியது.
एषः यथोक्तगुणः मे मम आत्मा अन्तर्हृदये हृदयपुण्डरीकस्यान्तः मध्ये अणीयान् अणुतरः, व्रीहेर्वा यवाद्वा इत्यादि अत्यन्तसूक्ष्मत्वप्रदर्शनार्थम् । श्यामाकाद्वा श्यामाकतण्डुलाद्वा इति परिच्छिन्नपरिमाणात् अणीयानित्युक्तेऽणुपरिमाणत्वं प्राप्तमाशङ्क्य, अतः तत्प्रतिषेधायारभते — एष म आत्मान्तर्हृदये ज्यायान्पृथिव्या इत्यादिना । ज्यायःपरिमाणाच्च ज्यायस्त्वं दर्शयन् अनन्तपरिमाणत्वं दर्शयति — मनोमय इत्यादिना ज्यायानेभ्यो लोकेभ्य इत्यन्तेन ॥
அனுவாதம் - மேலே கூறப்பட்ட குணங்களுடன் கூடிய இந்த என்னுடைய ஆத்மா “अन्तर्ह्य्दये” (அந்தர்ஹ்ருதயே) ஹிருதய புண்டரீகத்தின் உள்ளே அதாவது மத்தியில் நெல்லுக்கும், வரகுக்கும் மிகச்சிறியதாக அணுவுக்கும் அணுவாக என்பது மிகவும் சூக்ஷ்மத்தன்மையைத் தெரிவிப்பதற்காக. சோளத்தைக் காட்டிலும் சோள மணியைக்காட்டிலும் மிகவும் சூக்ஷ்மம் என்று இவ்வாறு பரிச்சின்ன அளவால் சூக்ஷ்மமானது என்று கூறியதால் அது அணுவிற்கு சமானமான அளவு உடையது ஆகும் என்று ஏற்படுவதால் இதனால் உண்டாகும் சங்கையை நிவிர்த்தி செய்வதற்காக இந்த என்னுடைய ஹிருதயத்தின் உள் இருக்கும் ஆத்மா பிருதிவீ முதலியவைகளைக் காட்டிலும் மிகவும் பெரிது என்பது முதலிய வாக்கியங்களால் சுருதி ஆரம்பிக்கிறது. ஸ்தூல பதார்த்தங்களை விட பெரிய அளவு உடையது என்றும் அதனுடைய மஹத்துவத்தைத் தெரிவித்து “मनोमयः” (மனோமய:) என்பது முதலியவைகளால் அதன் எல்லையற்ற அளவை (பரிமாணத்தை) தெரிவிக்கிறது. “ज्यायानेभ्यो लोकेभ्य” (ஜ்யானேப்யோ லோகேப்ய:) என்பது முதலியவைகளால் அதன் அநனந்த பரிமாணத்தைத் தெரிவிக்கிறது.
सर्वकर्मा सर्वकामः सर्वगन्धः सर्वरसः सर्वमिदमभ्यात्तोऽवाक्यनादर एष म आत्मान्तर्हृदय एतद्ब्रह्मैतमितः प्रेत्याभिसम्भवितास्मीति यस्य स्यादद्धा न विचिकित्सास्तीति ह स्माह शाण्डिल्यः शाण्डिल्यः ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - எவர் எல்லா கர்மங்களின் வடிவமோ, எல்லா காமனைகளின் வடிவமோ, எல்லா கந்த (வாசனை) ரூபமோ, எல்லா ரச வடிவமோ அவர் எல்லாவற்றிலும் வியாபித்திருகின்றார். வாக் அற்றவர், ஆக்ரஹம் அற்றவர் அவர். அந்த என்னுடைய ஆத்மா ஹ்ருதய கமலத்தின் மத்தியில் இருக்கிறார். அவரே பிரஹ்மம். இந்த சரீரம் மரித்தபின் அவரை அடைவேன். எவருக்கு இவ்வாறான நிச்சயம் உள்ளதோ அவருக்கு இந்த விஷயத்தில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. (அதனால் ஈஸ்வர பாவத்தை அடைகின்றான்) இவ்வாறு சாண்டில்யர் கூறினார். இவ்வாறு சாண்டில்யர் கூறினார்.
यथोक्तगुणलक्षणः ईश्वरः ध्येयः, न तु तद्गुणविशिष्ट एव — यथा राजपुरुषमानय चित्रगुं वा इत्युक्ते न विशेषणस्याप्यानयने व्याप्रियते, तद्वदिहापि प्राप्तम् ; अतस्तन्निवृत्त्यर्थं सर्वकर्मेत्यादि पुनर्वचनम् । तस्मात् मनोमयत्वादिगुणविशिष्ट एवेश्वरो ध्येयः ।
அனுவாதம் - முன்பு கூறப்பட்ட குணங்களால் லக்ஷணை செய்யப்பட்ட ஈஸ்வரனை தியானிக்க வேண்டும். அந்த குணங்களோடு கூடியவனை அல்ல. எவ்வாறு ராஜபுருஷனையோ, அநேக வர்ணங்களுடைய பசுவையோ அழைத்து வா என்றால் அதன் குணங்களான ராஜாவையோ, அல்லது பசுவின் விசேஷணங்களையோ அழைத்து வருவது இல்லை. ஆகையால் இவ்வாறு இங்கும் நிர்குண பிரஹ்மத்தையே (உபாசனை ரூபமாக) பிராப்தியாகிறது. ஆகையால் இதை நிவிர்த்தி செய்வதற்காக “सर्वकर्माः” சர்வ கர்மா முதலிய விசேஷணங்கள் மறுபடியும் கூறப்பட்டது. ஆகையால் மனோமயம் முதலிய குணங்களுடன் கூறிய ஈஸ்வரனை தியானம் செய்ய வேண்டும்.
அனுவாதம் - ஆகையால் ஆறாவது, ஏழாவது அத்யாயங்களில் சுருதி இவ்வாறு “तत्त्वमसि” (தத்துவமஸி) “आत्मैवेदं सर्वम्” (ஆத்மைவேதம் சர்வம்) இந்த வாக்கியங்களால் சாதகனை ஸ்வராஜ்யத்தில் சேர்க்கின்றதோ அவ்வாறு இங்கு நடைபெறுவதில்லை. இது என்னுடைய ஆத்மா, இது பிரஹ்மம். நான் இறந்தபின் இங்கிருந்து சென்று அதை அடைவேன் என்பது முதலிய வாக்கிய விஷயங்களே லிங்கமாகும். இங்கு ஆத்மா சப்தத்தால் பிரத்யக் ஆத்மா நிரூபணம் செய்யப்படவில்லை. ஏன் எனில் “मम” (மம - என்னுடைய) என்று ஆறாவது வேற்றுமையால் சம்பந்தார்த்தத்தை தெரிவிக்கிறது. அவ்வாறே நான் இதனால் அடைவேன் என்ற வாக்கியங்களால் பிரஹ்மம், ஆத்மாவிற்கு கர்மத்துவமும் கர்த்திருத்துவமும் நிர்தேசம் செய்யப்படுகிறது.
அனுவாதம் - ஆனால் ஆறாவது அத்யாயத்திலும் “अथ सम्पत्स्य” (அத சம்பத்ஸ்ய) என்று சுருதி கூறுவதால் சத்ஸ்வரூபமாவதால் வேறு காலத்தை (कालान्तरितत्वं) தெரிவிக்கிறதே எனில்
न, आरब्धसंस्कारशेषस्थित्यर्थपरत्वात् ; न कालान्तरितार्थता, अन्यथा तत्त्वमसीत्येतस्यार्थस्य बाधप्रसङ्गात् । यद्यपि आत्मशब्दस्य प्रत्यगर्थत्वं सर्वं खल्विदं ब्रह्मेति च प्रकृतम् एष म आत्मान्तर्हृदय एतद्ब्रह्मेत्युच्यते, तथापि अन्तर्धानमीषदपरित्यज्यैव एतमात्मानं इतः अस्माच्छरीरात् प्रेत्य अभिसम्भवितास्मीत्युक्तम् ।
அனுவாதம் - அவ்வறு அல்ல. ஏன்எனில் பிராரப்த கர்ம ஸம்ஸ்காரம் முடியும் வரையிலும் ஜீவனின் ஸ்திதியை கூறுவதற்காக ஆனதால் இதில் காலத்தைக் குறித்து தெரிவிப்பதற்காக அல்ல. வேறு மாதிரியாய் இருந்தால் “तत्त्वमसि” (தத்துவமஸி) என்ற அர்த்தம் பாதிக்கப்படும். ஆனாலும் ஆத்ம சப்தம் பிரத்யக் ஆத்மாவாகும். மேலும் இவை எல்லாம் நிச்சயமாக பிரஹ்மம் என்ற பிரகரணமும் உள்ளது. அவ்வாறே இந்த ஆத்மா என்னுடைய இருதயத்தினுள் இருக்கிறது என்றும் இது பிரஹ்மம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் அந்தர் தானத்தை சிறிதும் விடாமல் இந்த ஆத்மா இங்கிருந்து அதாவது இந்த சரீரத்திலிருந்து வெளியேறி தான் நினைத்தவாறு இதை அடைவான் என்பதாகவும் கூறப்படுகிறது.
यथाक्रतुरूपस्य आत्मनः प्रतिपत्तास्मीति यस्यैवंविदः स्यात् भवेत् अद्धा सत्यम् एवं स्यामहं प्रेत्य, एवं न स्यामिति न च विचिकित्सा अस्ति इत्येतस्मिन्नर्थे क्रतुफलसम्बन्धे, स तथैवेश्वरभावं प्रतिपद्यते विद्वान् , इत्येतदाह स्म उक्तवान्किल शाण्डिल्यो नाम ऋषिः । द्विरभ्यासः आदरार्थः ॥
அனுவாதம் - எவ்வாறு க்ரது ரூப உபாசனையை இவ்வாறு அறிந்தவனாய் இருக்கிறேன் என்று எவனுக்கு இவ்வாறு அறிவு உண்டாகிறதோ அவன் இதிலிருந்து கிளம்பி சத்யமாய் நான் இவ்வாறு ஆவேன். நான் இவ்வாறு நான் ஆகமாட்டேன் என்ற சந்தேஹம் அவனுக்கு இருக்காது என்று இந்த விஷயத்தில் க்ரது பல சம்பந்தத்தில் அந்த வித்வான் அவ்வாறே ஈஸ்வர பாவத்தை அடைவான் என்று இதைக் கூறினார். சாண்டில்யர் என்ற பெயருடைய ரிஷி கூறினார் என்று இருமுறை கூறியது திடத்தின் பொருட்டாகும்.
इति चतुर्दशखण्डभाष्यम् ॥
அனுவாதம் - “अस्य कुले वीरो जायते” (அஸ்ய குலே வீரோ ஜாயதே) என்று கூறப்பட்டது. வீரஜன்மத்தினால் மட்டும் பிதாவை காப்பாற்ற முடியாது. (தாண்டுவிக்க முடியாது). “तस्मात्पुत्रमनुशिष्टं लोक्यमाहुः” (தஸ்மாத் புத்ரமனுஷிஷ்ட்ட லோக்யமாஹி:) என்று வேறு சுருதியிலும் உள்ளது. ஆகையால் புத்திரனுக்கு தீர்க்க ஆயுள் எவ்வாறு ஏற்படும் என்பதற்காக கோஷ (பெட்டி) விக்ஞானம் ஆரம்பம் ஆகிறது. அப்யர்ஹித உபாசனை பிரதிபாதனத்தில் சேர்ந்து இருப்பதால் “वीरो जायते” (வீரோ ஜாயேத) என்ற சுருதிக்குப்பின் இதன் வர்ணனை செய்யவில்லை. ஆகையால் இப்பொழுது ஆரம்பிக்கப்படுகிறது.
अन्तरिक्षोदरः कोशो भूमिबुध्नो न जीर्यति दीशो ह्यस्य स्रक्तयो द्यौरस्योत्तरं बिलꣳ स एष कोशो वसुधानस्तस्मिन्विश्वमिदꣳ श्रितम् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஒரு பெட்டி உள்ளது. அதன் அந்தரிக்ஷம் உதரம் (நடுபகுதி)யாகும். பிருதிவீ கீழ் பாகமாகும். அது குறைவது இல்லை. திசைகள் அதன் மூலைகள், (ஆகாசம்) சுவர்க்கம் அதன் மேல் பகுதியில் உள்ள வாயில் அந்த இந்தப் பெட்டி செல்வம் நிறைந்தது. இதில் விச்வம் முழுவதும் நிலைபெற்றுள்ளது.
अन्तरिक्षम् उदरम् अन्तःसुषिरं यस्य सोऽयम् अन्तरिक्षोदरः, कोशः कोश इव अनेकधर्मसादृश्यात्कोशः ; स च भूमिबुध्नः भूमिर्बुध्नो मूलं यस्य स भूमिबुध्नः, न जीर्यति न विनश्यति, त्रैलोक्यात्मकत्वात् । सहस्रयुगकालावस्थायी हि सः ।
அனுவாதம் - அந்தரிக்ஷம் (நடுபகுதி) உள்ளே உள்ள வெளி எதற்கோ அது அந்தரிக்ஷ உதர பெட்டி (கோசம்). கோசம் போன்ற அநேக தர்மங்கள் சமானமாக இருப்பதால் கோசம் (பெட்டி) அது எதற்கு भूमिबुघ्नः (பூமிபுத்ன:) பூமி போன்ற அடிப்பாகம் (மூலபாகம்) எதற்கோ அது “भूमिबुघ्नः” (பூமிபுத்ன:) அது குறையாது நாசமும் ஆகாது. ஏன்எனில் அது த்ரைலோக (மூன்று லோக) ரூபமாய் இருப்பதால் அது ஆயிரம் யுகங்கள் காலம் வரை இருப்பதாகும்.
दिशो हि अस्य सर्वाः स्रक्तयः कोणाः । द्यौरस्य कोशस्य उत्तरम् ऊर्ध्वं बिलम् ; स एष यथोक्तगुणः कोशः वसुधानः वसु धीयतेऽस्मिन्प्राणिनां कर्मफलाख्यम् , अतो वसुधानः । तस्मिन्नन्तः विश्वं समस्तं प्राणिकर्मफलं सह तत्साधनैः इदं यद्गृह्यते प्रत्यक्षादिप्रमाणैः श्रितम् आश्रितं स्थितमित्यर्थः ॥
அனுவாதம் - திசைகளே அதன் மூலைகள், மேல்லோகம் (தேவலோகம்) அந்த பெட்டியின் மேல் வாயில். அந்த இது கூறப்பட்ட குணங்களுடன் கூடிய பெட்டி வசுதானம் (वसुधानः) அதாவது செல்வம் அடங்கிய பெட்டியாகும். (தனகோசம் ஆகும்). அதில் பிராணிகளின் கர்மபலம் எனப்படும் தனம் (செல்வம்) வைக்கப்பட்டுள்ளதால் வசுதானம் ஆகும். அதன் உள்ள இந்த விஷ்வம் அதாவது எல்லா பிராணிகளின் கர்ம பலன்களும் அதன் சாதனங்களையும் பிரத்யக்ஷம் முதலிய பிரமாணங்களால் கிரஹிக்கப்படுகிறது. அதாவது அதில் (அந்த பெட்டியில்) ஆஸ்ரயத்திருக்கிறது என்பது அதில் இருக்கின்றது என்பது பொருள்.
तस्य प्राची दिग्जुहूर्नाम सहमाना नाम दक्षिणा राज्ञी नाम प्रतीची सुभूता नामोदीची तासां वायुर्वत्सः स य एतमेवं वायुं दिशां वत्सं वेद न पुत्ररोदं रोदिति सोऽहमेतमेवं वायुं दिशां वत्सं वेद मा पुत्ररोदं रुदम् ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அந்த பெட்டியின் (கோசத்தின்) கிழக்கு திசை “ஜீஹீ” என்ற பெயர் உடையது. தக்ஷிண திசைக்கு “ஸஹமானா” என்ற பெயர். மேற்கு திசை “ராக்ஞீ” என்ற பெயர் உடையது. வடக்கு திசை “சுபூதா” (सुभूता) என்ற பெயர் உடையது ஆகும். இந்த திசைகளுக்கு குழந்தை வாயுவாகும். அதை எவர் இவ்வாறு வாயுவை திசைகளின் குழந்தை ரூபமாக அறிகின்றனரோ அவர் புத்திரனைக் குறித்து அழமாட்டான். அதை நான் இவ்வாறு வாயுவை திசைகளின் குழந்தை ரூபமாய் அறிந்திருக்கிறேன். ஆகையால் நான் புத்திரனின் காரணமாக அழமாட்டேன்.
तस्यास्य प्राची दिक् प्राग्गतो भागः जुहूर्नाम जुह्वत्यस्यां दिशि कर्मिणः प्राङ्मुखाः सन्त इति जुहूर्नाम । सहमाना नाम सहन्तेऽस्यां पापकर्मफलानि यमपुर्यां प्राणिन इति सहमाना नाम दक्षिणा दिक् । तथा राज्ञी नाम प्रतीची पश्चिमा दिक् , राज्ञी राज्ञा वरुणेनाधिष्ठिता, सन्ध्यारागयोगाद्वा । सुभूता नाम भूतिमद्भिरीश्वरकुबेरादिभिरधिष्ठितत्वात् सुभूता नाम उदीची ।
அனுவாதம் - அந்த இந்த கிழக்கு திசை - கிழக்கு மூலையில் உள்ள பாகம் “ஜீஹீ” என்ற பெயர் உடையது. ஏன்னெனில் கர்மம் செய்பவர்கள் இந்த திசையில் கிழக்கு நோக்கி இருந்துகொண்டு வஹனம் செய்கின்றனர் (जुति) - ஜீஹ்வதி). ஆகையால் “ஜீஹீ” என்ற பெயர். தக்ஷிண திக்கிற்கு சஹமானா (सहमाना) என்ற பெயர். ஏன்எனில் இந்த யம புரியில் இருக்கும் பிராணிகள் பாபகர்ம பலன்களை சஹித்துக்கொண்டு இருப்பதால் தக்ஷிண திக்கிற்கு சஹமானா என்று பெயர். அவ்வாறே மேற்கு திசை ராக்ஞீ (सुभूता) என்ற பெயர் உடையது. ஏன்எனில் ராக்ஞா - மேற்கு திசையில் வருணன் தலைவனாக (ராஜாவாக) இருப்பதால் அல்லது சந்தியாகாலத்தில் இளம் சிகப்பு நிறமாய் இருப்பதால் மேற்கு திசைக்கு ராக்ஞீ என்ற பெயர். சுபூதா என்ற பெயர் வடக்கு திசைக்கு. ஈஸ்வரன், குபேரன் முதலிய ஐஸ்வர்யம் உடைய தேவதைகளால் ஆளப்படுவதால் வடக்கு திசை “सुभूता” (சுபூதா) என்ற பெயர் உடையதாகின்றது.
तासां दिशां वायुः वत्सः, दिग्जत्वाद्वायोः, पुरोवात इत्यादिदर्शनात् । स यः कश्चित् पुत्रदीर्घजीवितार्थी एवं यथोक्तगुणं वायुं दिशां वत्सम् अमृतं वेद, स न पुत्ररोदं पुत्रनिमित्तं रोदनं न रोदिति, पुत्रो न म्रियत इत्यर्थः । यत एवं विशिष्टं कोशदिग्वत्सविषयं विज्ञानम् , अतः सोऽहं पुत्रजीवितार्थी एवमेतं वायुं दिशां वत्सं वेद जाने । अतः पुत्ररोदं मा रुदं पुत्रमरणनिमित्तं पुत्ररोदो मम मा भूदित्यर्थः ॥
அனுவாதம் - இந்த திசைகளின் குழந்தை வாயு ஆகும். ஏன் எனில் வாயு திசைகளில் இருந்து உண்டாகிறது. அவ்வாறே கிழக்கு வாயு முதலிய பிரயோகங்களால் காணப்படுகிறது. எந்த அந்த ஒரு புருஷன் புத்திரன் நீண்டகாலம் ஜீவிப்பதற்காக கூறப்பட்ட குணங்களுடன் கூடிய திசைகளின் குணங்களுடன் கூடிய திசைகளின் குழந்தை என்று அம்ருத ரூபமான வாயு அறிகிறானோ அவன் புத்திரனின் காரணமாக அழ நேராது. அதாவது அவனுடைய புத்திரன் மரணம் அடையமாட்டான் என்பது பொருள். ஆகையால் கோசம் (பெட்டி) மேலும் திசைகளின் குழந்தை ஆகியவைகளுடன் சம்பந்தமுடையதின் ஞானம் உடையவன். ஆகையால் தன் புத்திரனின் ஜீவன விஷயத்தில் காமம் உடையவன் நான் திசைகளின் குழந்தை ரூபமான வாயுவை இவ்வாறு அறிந்துள்ளேன். ஆகையால் என் புத்திரன் மரணம் அடையமாட்டான் ஆகையால் புத்திரனின் மரணத்தின் காரணமாக நான் அழ வேண்டியது இருக்காது. அதாவது புத்திரன் மரணமடைய மாட்டான் என்பது பொருள்.
अरिष्टं कोशं प्रपद्येऽमुनामुनामुना प्राणं प्रपद्येऽमुनामुनामुना भूः प्रपद्येऽमुनामुनामुना भुवः प्रपद्येऽमुनामुनामुना स्वः प्रपद्येऽमुनामुनामुना ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - இவனுக்காக, இவனுக்காக நான் இவனுடன் நாசமற்ற கோசத்தை (பெட்டியை சரணம் அடைகிறேன். இவனுக்காக, இவனுக்காக இவனுடன் பிராணனை சரணம் அடைகிறேன். இவனுக்காக இவனுக்காக இவனுடன் “भूः” (பூ:) வை சரணம் அடைகிறேன். இவனுக்காக, இவனுக்காக இவனுடன் “भुवः” (புவ:) வை சரணம் அடைகிறேன். இவனுக்காக, இவனுக்காக இவனுடன் “स्वः” (ஸ்வ:) வை சரணம் அடைகின்றேன். (இவனுக்காக என்பது புத்திரனுக்காக).
अरिष्टम् अविनाशिनं कोशं यथोक्तं प्रपद्ये प्रपन्नोऽस्मि पुत्रायुषे । अमुनामुनामुनेति त्रिर्नाम गृह्णाति पुत्रस्य । तथा प्राणं प्रपद्येऽमुनामुनामुना, भूः प्रपद्येऽमुनामुनामुना, भुवः प्रपद्येऽमुनामुनामुना, स्वः प्रपद्येऽमुनामुनामुना, सर्वत्र प्रपद्ये इति त्रिर्नाम गृह्णाति पुनः पुनः ॥
அனுவாதம் - இந்த “अरिष्टम्” (அரிஷ்டம்) அதாவது விநாசமற்ற கோசத்தை புத்திரனின் ஆயுளுக்காக எவ்வாறு கூறப்பட்டதோ அவ்வாறு சரணம் அடைவேன். “अमुना अमुना अमुना” (அமுனா, அமுனா, அமுனா = இவனுக்காக, இவனுக்காக, இவனுக்காக) என்று கூறியது புத்திரனின் நாமத்தை மும்முறை கூறியதாகும். அவ்வாறே இவனுக்காக, இவனுக்காக, இவனுக்காக பிராணனை சரண் அடைகிறேன். இவனுக்காக இவனுக்காக இவனுக்காக “भूः” (பூ:)வைசரணம் அடைகிறேன். இவனுக்காக, இவனுக்காக, இவனுக்காக “भुवः” (புவ:)வை சரணம் அடைகின்றேன். அவ்வாறே “स्वः” (ஸ்வ:)வை சரணம் அடைகின்றேன். இவ்வாறு எல்லா இடத்திலும் மறுபடியும், மறுபடியும் கூறி மூன்று முறை, மூன்று முறை புத்திரனின் நாமம் கிரஹிக்கப்படுகிறது.
स यदवोचं प्राणं प्रपद्य इति प्राणो वा इदꣳ सर्वं भूतं यदिदं किञ्च तमेव तत्प्रापत्सि ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - நான் பிராணனை சரணம் அடைகிறேன் என்று கூறப்பட்டது எதுவோ அது (அந்த பிராணன்) எல்லா ஜீவராசிகளுடைய பிராணன் ஆகும். அதை சரணம் அடைகிறேன்.
अथ यदवोचं भूः प्रपद्य इति पृथिवीं प्रपद्येऽन्तरिक्षं प्रपद्ये दिवं प्रपद्य इत्येव तदवोचम् ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - அவ்வாறே நான் கூறிய “भूः” (பூ:)வை சரணம் அடைகிறேன் என்று கூறியது பிருதிவியை சரணம் அடைகிறேன், அந்தரிக்ஷத்தை சரண் அடைகின்றேன், தேவலோகத்தை சரண் அடைகிறேன் என்பதாகும்.
अथ यदवोचं भुवः प्रपद्य इत्यग्निं प्रपद्ये वायुं प्रपद्य आदित्यं प्रपद्य इत्येव तदवोचम् ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - மேலும் நான் கூறிய “நான்” “भुवः” (புவ:)வை சரணம் அடைகிறேன். என்றது நான் அக்னியை சரணம் அடைகிறேன். வாயுவை சரணம் அடைகின்றேன், ஆதித்யனை சரணம் அடைகின்றேன் என்பதாகும்.
अथ यदवोचं स्वः प्रपद्य इत्यृग्वेदं प्रपद्ये यजुर्वेदं प्रपद्ये सामवेदं प्रपद्य इत्येव तदवोचं तदवोचम् ॥ ७ ॥
மந்த்ரார்த்தம் - அவ்வாறே நான் கூறிய “நான்” “स्वः” (ஸ்வ:)வை சரணம் அடைகிறேன் என்றது நான் ரிக் வேதத்தை சரணம் அடைகின்றேன், யஜுர் வேதத்தை சரணம் அடைகின்றேன். சாம வேதத்தை சரணம் அடைகின்றேன் என்பதாகும். இதை நான் கூறினேன். இதை நான் கூறினேன்.
स यदवोचं प्राणं प्रपद्य इति व्याख्यानार्थमुपन्यासः । प्राणो वा इदꣳ सर्वं भूतं यदिदं जगत् ।
‘यथा वा अरा नाभौ’ (छा. उ. ७ । १३ । १) इति वक्ष्यति । अतस्तमेव सर्वं तत् तेन प्राणप्रतिपादनेन प्रापत्सि प्रपन्नोऽभूवम् ॥ तथा भूः प्रपद्ये इति त्रींल्लोकान्भूरादीन्प्रपद्ये इति तदवोचम् ॥ अथ यदवोचं भुवः प्रपद्ये इति, अग्न्यादीन्प्रपद्ये इति तदवोचम् ॥ अथ यदवोचं स्वः प्रपद्ये इति, ऋग्वेदादीन्प्रपद्ये इत्येव तदवोचमिति । उपरिष्टान्मन्त्रान् जपेत् ततः पूर्वोक्तमजरं कोशं सदिग्वत्सं यथावद्ध्यात्वा । द्विर्वचनमादरार्थम् ॥
அனுவாதம் - நான் எந்த பிராணனை சரணம் அடைகின்றேன் என்று கூறினேனோ அது வியாக்யாணத்தின் அர்த்தத்தை விளக்குவதற்காக ஆகும். இந்த ஜகத் முழுவதிலும் உள்ள எல்லா பிராணிகளின் பிராணன் ஆகும். “यथा वारा नाभौ” (யதா வாரா நாபெள) என்று இனிக் கூறப்படுகிறது. ஆகையால் அதையே எல்லா பிராணிகளின் பிரதிபத்தி (அடைவதின்) மூலமாய் சர்வபூதமாகிய விராட்டையே சரணமடைகின்றான். அவ்வாறே “भूः” (பூ:)வை சரண் அடைகிறேன் என்பது மூன்று லோகங்களாகிய பூலோகம், அந்தரிக்ஷம், தேவலோகம் இவைகளை சரண் அடைகின்றேன். அவ்வாறே “भुवः” (புவ)வை சரணம் அடைகிறான் என்று கூறப்பட்டது. அக்னி, வாயு, ஆதித்தியன் இவைகளை சரணமடைகிறேன் என்று கூறப்பட்டது. அவ்வாறே “स्वः” (ஸ்வ:)வை சரணம் அடைகின்றேன். என்று எது கூறப்பட்டதோ அது ரிக், யஜுர், சாம வேதங்களை சரணம் அடைகிறேன் என்பது பொருள். மேலே கூறப்பட்ட மந்திரங்களை ஜபம் செய்து அதனால் முன்னால் கூறப்பட்ட ஜரை அற்ற கோசத்தின் திசைகளின் குழந்தையுடன் விதி பூர்வகமாய் தியானம் செய்து மேலே கூறப்பட்ட மந்திரங்களை ஜெபிக்கவேண்டும். அது கூறப்பட்டது. அது கூறப்பட்டது என்று இருமுறை கூறியது அதை ஆதரிப்பதற்காக ஆகும்.
इति पञ्चदशखण्डभाष्यम् ॥
पुरुषो वाव यज्ञस्तस्य यानि चतुर्विंशति वर्षाणि तत्प्रातःसवनं चतुर्विंशत्यक्षरा गायत्री गायत्रं प्रातःसवनं तदस्य वसवोऽन्वायत्ताः प्राणा वाव वसव एते हीदं सर्वं वासयन्ति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - நிச்சயமாக புருஷனே யக்ஞம். அவனுடைய (ஆயுளுக்காக) இருபத்தி நான்கு வருடங்களோ அவை பிராத: சவனம் (प्रातःसवनं) ஆகும். காயத்ரீ இருபத்தி நான்கு அக்ஷரங்கள் உடையது. மேலும் பிராதஸ் சவனத்திற்கு காயத்ரீ சந்தஸ்சுடன் சம்பந்தம் உள்ளது. அந்த இந்த பிராத: சவனத்துடன் வசுகணங்கள் தொடர்பு உடையவை. பிராணனே வசு. ஏன் எனில் அதனாலேயே எல்லாம் வசிக்கின்றன.
पुत्रायुष उपासनमुक्तं जपश्च । अथेदानीमात्मनः दीर्घजीवनायेदमुपासनं जपं च विदधदाह ; जीवन्हि स्वयं पुत्रादिफलेन युज्यते, नान्यथा । इत्यतः आत्मानं यज्ञं सम्पादयति पुरुषः —
அனுவாதம் - புத்திரனின் ஆயுளின் பொருட்டு உபாசனையும் ஜபமும் கூறப்பட்டது. ஆகையால் இப்பொழுது தன்னுடைய தீர்க (நீண்ட) காலம் ஜீவிப்பதற்காக இந்த உபாசனையும், ஜபமும் விதிக்கப்பட்டு இவ்வாறு வேதம் கூறுகிறது. தான் ஜீவித்துக் கொண்டிருந்தால்தான் புத்திரன் முதலிய பலன்கள் சேரும். மற்றைவைகளால் அல்ல. ஆகையால் புருஷன் தனக்காக யக்ஞத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதாகும் -
पुरुषः जीवनविशिष्टः कार्यकरणसङ्घातः यथाप्रसिद्ध एव ; वावशब्दोऽवधारणार्थः ; पुरुष एव यज्ञ इत्यर्थः । तथा हि सामान्यैः सम्पादयति यज्ञत्वम् । कथम् ? तस्य पुरुषस्य यानि चतुर्विंशतिवर्षाण्यायुषः, तत्प्रातःसवनं पुरुषाख्यस्य यज्ञस्य ।
அனுவாதம் - ஜீவிப்பதுடன் கூடிய காரிய கரண சங்காதம் எவ்வாறு புருஷன் பிரசித்தமேயாகும். இங்கு “वाव” (வாவ) சப்தம் நிச்சயார்த்தம்) புருஷனே யக்ஞம் என்பது பொருள். இவ்வாறு சுருதி சாமான்யமானவைகளால் புருஷனுக்கு யக்ஞத்துவம் சித்திக்கச் செய்கிறது. எவ்வாறு? அந்த புருஷனுடைய ஆயுள் இருபத்தி நான்கு வருடங்களோ அவை அந்த புருஷன் எனப்படும் யக்ஞத்தின் பிராதஸ் சவனமாகும்.
केन सामान्येनेति, आह — चतुर्विंशत्यक्षरा गायत्री छन्दः, गायत्रं गायत्रीछन्दस्कं हि विधियज्ञस्य प्रातःसवनम् ; अतः प्रातःसवनसम्पन्नेन चतुर्विंशतिवर्षायुषा युक्तः पुरुषः अतो विधियज्ञसादृश्यात् यज्ञः । तथोत्तरयोरप्यायुषोः सवनद्वयसम्पत्तिः त्रिष्टुब्जगत्यक्षरसङ्ख्यासामान्यतो वाच्या ।
அனுவாதம் - எதனால் சாமான்யம்? அதற்குக் கூறப்படுகிறது - இருபத்தி நான்கு அக்ஷரங்கள் காயத்ரீ சந்தஸ் காயத்ரீயே விதி யக்ஞத்தின் பிராதஸ் சவனம். ஆகையால் பிராதஸ் சவனம் உடையவனே இருபத்தி நான்கு வயது உடைய புருஷன். ஆகையால் விதி யக்ஞத்திற்கு சமானமாக இருப்பதால் யக்ஞம். அவ்வாறே இனிவரும் இரண்டு ஆயுளுக்கும் இரண்டு சவன சம்பத்திகளாகிய திருஷ்டுப் ஜகத் சந்தஸ்களின் எண்ணிக்கை சமானமானது என்பது கூறப்படவேண்டும்.
किञ्च, तदस्य पुरुषयज्ञस्य प्रातःसवनं विधियज्ञस्येव वसवः देवा अन्वायत्ताः अनुगताः ; सवनदेवतात्वेन स्वामिन इत्यर्थः । पुरुषयज्ञेऽपि विधियज्ञ इव अग्न्यादयो वसवः देवाः प्राप्ता इत्यतो विशिनष्टि — प्राणा वाव वसवः वागादयो वायवश्च । एते हि यस्मात् इदं पुरुषादिप्राणिजातम् एते वासयन्ति । प्राणेषु हि देहे वसत्सु सर्वमिदं वसति, नान्यथा । इत्यतो वसनाद्वासनाच्च वसवः ॥
அனுவாதம் - மேலும் விதியக்ஞத்தைப் போன்று அந்த புருஷ யக்ஞத்தின் பிராதஸ்சவனம் வசு தேவதைகள் அனுகதமாய் உள்ளன. சவன தேவதாரூபமானாதல் ஸ்வாமியாகும் என்பது பொருள். புருஷ யக்ஞத்திலும் விதி யக்ஞம் போன்று அக்னி முதலிய வசு தேவதைகள் அடையப்படுவதால் அதன் விசேஷம் குறித்து விளக்கப்படுகிறது. பிராணன் நிச்சயமாக வசுக்கள். வாக் முதலியவைகள் வாயுக்கள். அவைகளால் இந்தத புருஷன் முதலிய பிராணிகளாய் பிறந்தவர்கள் வசிக்கின்றார்கள். பிராணன் உள்ள தேஹங்களில் வசிப்பதால் இவை எல்லாம் வசிக்கின்றன. வேறு விதமாக அல்ல. ஆகையால் அது வசிப்பதாலும், வாசனைகளாய் இருப்பதால் வசுக்கள் எனப்படுகின்றன.
तं चेदेतस्मिन्वयसि किञ्चिदुपतपेत्स ब्रूयात्प्रा वसव इदं मे प्रातःसवनं माध्यंन्दिनꣳ सवनमनुसन्तनुतेति माहं प्राणानां वसूनां मध्ये यज्ञो विलोप्सीयेत्युद्धैव तत एत्यगदो ह भवति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - இந்த பிராத: சவனம் உடையவனுடையவனுக்கு (முதல் 24 வயது) ஏதாவது கஷ்டம் வந்தால் இவ்வாறு அதனிடம் கூறவேண்டும். “ஹே! பிராண ரூப வசுகண! என்னுடைய இந்த பிராதஸ் சவனத்தை மத்யதின சவனத்துடன் ஒரே ரூபமாய் செய்து விடு. யக்ஞ ரூபமாகிய நான் தங்களுடைய பிராண ரூப வசுக்களின் மத்தியில் நஷ்டமாகமாட்டேன். அப்பொழுது இந்த கஷ்டங்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமானவனாக ஆவேன்.
तं चेत् यज्ञसम्पादिनम् एतस्मिन् प्रातःसवनसम्पन्ने वयसि किञ्चित् व्याध्यादि मरणशङ्काकारणम् उपतपेत् दुःखमुत्पादयेत् , स तदा यज्ञसम्पादी पुरुषः आत्मानं यज्ञं मन्यमानः ब्रूयात् जपेदित्यर्थः इमं मन्त्रम् —
அனுவாதம் - அந்த யக்ஞத்தை சம்பாதித்தவன் இந்த பிராத: சவனத்தை உடைய வயதில் சிறிது வியாதி முதலியவைகளால் மரணம் உண்டாகுமே என்ற சந்தேகத்திற்கான காரணம் உண்டாகலாம். அந்த சமயத்தில் துக்கம் ஏற்படும்பொழுது யக்ஞத்தை சம்பாதித்த புருஷன் தன்னை யக்ஞம் என்று எண்ணிக்கொண்டு இந்த மந்திரத்தைக் கூறுவான் அதாவது ஜபிப்பான் என்பது பொருள்.
हे प्राणाः वसवः इदं मे प्रातःसवनं मम यज्ञस्य वर्तते, तत् माध्यन्दिनं सवनम् अनुसन्तनुतेति माध्यन्दिनेन सवनेन आयुषा सहितं एकीभूतं सन्ततं कुरुतेत्यर्थः । मा अहं यज्ञः युष्माकं प्राणानां वसूनां प्रातःसवनेशानां मध्ये विलोप्सीय विलुप्येय विच्छिद्येयेत्यर्थः । इतिशब्दो मन्त्रपरिसमाप्त्यर्थः । स तेन जपेन ध्यानेन च ततः तस्मादुपतापात् उत् एति उद्गच्छति । उद्गंय विमुक्तः सन् अगदो ह अनुपतापो भवत्येव ॥
அனுவாதம் - ஹே பிராணரூப வசவ! இந்த யக்ஞத்தினுடைய பிராத: சவனம் என்னிடம் இருக்கிறது. இதனுடன் மத்யதினரூப சவனத்தையும் என்னுடைய ஆயுளுடன் சேர்த்து ஒன்றாக்கி விடு. யக்ஞரூப என்னுடைய பிராத: சவனத்தின் அதிஷ்டாவான தங்களுடைய பிராண ரூப வசுக்களை மத்தியில் நான் சேதம் அடையாமல் செய்யவேண்டும். மூலத்தில் “इति” என்ற சப்தம் மந்திரத்தின் முடிவிற்காக கூறப்பட்டது. அந்த ஜபம் தியானம் மூலமாய் கஷ்டங்கள் நீங்கி சோகம் அற்றவனாக ஆவேனாக.