द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

छान्दोग्योपनिषद्भाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

சாந்தோக்யோபநிஷத்பாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

वायुप्राणयोर्ब्रह्मणः पाददृष्ट्यध्यासः पुरस्ताद्वर्णितः । अथेदानीं तयोः साक्षाद्ब्रह्मत्वेनोपास्यत्वायोत्तरमारभ्यते । सुखावबोधार्था आख्यायिका, विद्यादानग्रहणविधिप्रदर्शनार्था च । श्रद्धान्नदानानुद्धतत्वादीनां च विद्याप्राप्तिसाधनत्वं प्रदर्श्यते आख्यायिकया —
(अनुवादः) வாயு பிராணனில் பிரஹ்ம திருஷட்டியின் அத்யாசம் முன்பே நிரூபணம் செய்யப்பட்டது. இப்பொழுது அவைகளின் சாக்ஷாத் பிரஹ்ம ரூபத்தால் உபாசிப்பதை கூறுவதற்காக இனிவரும் பிரகரணத்தில் ஆரம்பமாகிறது. இங்கு கூறப்படும் கதையினால் சுலபமாக புரிந்து கொள்வதற்காகவும், அவ்வாறே வித்யா தானம் அவ்வாறே அதை கிரஹிப்பதற்கான விதியை தெரிவிப்பதற்காக ஆகின்றது. அதனுடன் இந்த கதையின் மூலமாக சிரத்தை, அன்னதானம், மேலும் விநயம் முதலிய வித்யா ப்ராப்திக்கான சாதனத்துவத்தையும் விளக்குகின்றது -
जानश्रुतिर्ह पौत्रायणः श्रद्धादेयो बहुदायी बहुपाक्य आस स ह सर्वत आवसथान्मापयाञ्चक्रे सर्वत एव मेऽन्नमत्स्यन्तीति ॥ १ ॥
ஜனஸ்ருதியின் கொள்ளுப் - பேரனான ஜானஸ்ருதி மிகவும் சிரத்தையுடன் ஏராளமாக தானம் செய்பவர். மிகுந்த உணவை சமைத்து எல்லா மக்களும் உணவு அருந்த வேண்டும் என்று எல்லா இடங்களிலும் அன்ன சத்திரங்களைக் கட்டியிருந்தார்.
जानश्रुतिः जनश्रुतस्यापत्यम् । ह ऐतिह्यार्थः । पुत्रस्य पौत्रः पौत्रायणः स एव श्रद्धादेयः श्रद्धापुरःसरमेव ब्राह्मणादिभ्यो यमस्येति श्रद्धादेयः । बहुदायी प्रभूतं दातुं शीलमस्येति बहुदायी । बहुपाक्यः बहु पक्तव्यमहन्यहनि गृहे यस्यासौ बहुपाक्यः ; भोजनार्थिभ्यो बह्वस्य गृहेऽन्नं पच्यत इत्यर्थः । एवंगुणसम्पन्नोऽसौ जानश्रुतिः पौत्रायणो विशिष्टे देशे काले च कस्मिंश्चित् आस बभूव ।
அனுவாதம் - ஜன சுருதியின் புத்திரன் ஜான சுருதி “ह” (ஹ) என்ற நிபாதம் இதிகாசத்தை தெரிவிப்பது ஆகும். புத்திரனின் பெளத்தரன் (பேரன்) பெளத்ராயணர். அவரே சிரத்தையுடன் பிராஹ்மணர்கள் முதலியோருக்கு தானம் அளிப்பதால் சிரத்தேயர் (சிரத்தியுடன் அளிப்பவர்) எனப்படுகிறார். அதிகமாக அளிப்பர் என்பது அதிகமாக அளிப்பது என்பது எவருக்கு ஸ்வபாவமாக உள்ளதோ அவர் பஹுதாயீ (அதிகமாக தானம் செய்பவர்). எவருடைய வீட்டில் தினசரியும் அதிகமாக சமைக்கப்படுகிறதோ “बहुपाक्यः” (பஹுபாக்ய:) அதிகம் சமைப்படுவதாகும். போஜனம் (சாப்பாடு) வேண்டுபவர்களுக்காக நிறைய அன்னம் கிரஹத்தில் சமைக்கப்படுகிறது என்பது பொருள். இவ்வாறான குணம் உடையவரான அந்த ஜான சுருதியின் சந்ததியில் பிறந்த ப்ரபெளத்ராயணர் சிறந்த தேசத்தில் ஏதோ ஒரு காலத்தில் இருந்தார்.
स ह सर्वतः सर्वासु दिक्षु ग्रामेषु नगरेषु आवसथान् एत्य वसन्ति येष्विति आवसथाः तान् मापयाञ्चक्रे कारितवानित्यर्थः । सर्वत एव मे मम अन्नं तेष्वावसथेषु वसन्तः अत्स्यन्ति भोक्ष्यन्त इत्येवमभिप्रायः ॥
அனுவாதம் - அவர் எங்கும் எல்லா திக்குகளிலும், கிராமங்களிலும், நகரங்களிலும் தர்மசாலைகளில் அதாவது யாத்ரிகள் வந்து தங்கும் இடம் தர்ம சாலை எனப்படுகிறது. அதை எங்கும் நிர்மானம் செய்தார். எங்கும் அவர்களுக்கு என்னுடைய அன்னம் அந்த தர்ம சாலைகளில் தங்குபவர்கள் உணவு உட்கொள்ள வேண்டும் என்பது அபிப்பிராயம் ஆகும்.
अथ हꣳसा निशायामतिपेतुस्तद्धैवꣳ हꣳ सोहꣳ समभ्युवाद हो होऽयि भल्लाक्ष भल्लाक्ष जानश्रुतेः पौत्रायणस्य समं दिवा ज्योतिराततं तन्मा प्रसाङ्क्षी स्तत्त्वा मा प्रधाक्षीरिति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அந்த இரவு வேளையில் இரண்டு ஹம்சங்கள் பறந்து சென்றன. அதில் ஒரு ஹம்சம் மற்றஹம்சத்தினிடம் இவ்வாறு கூறியது - ஹே கூர்மையான பார்வை அற்றவனே! ஹே கூர்மையான பார்வை அற்றவனே! ஜன சுருதியின் பேரனான ஜான ஸ்ருதியின் தேஜஸ் பகல் போன்று (த்விலோகம் போன்று) பரந்து விளங்குகிறது. அதைத் தீண்டாதே (தொடாதே). அது உன்னை சம்ஹாரம் செய்துவிடும்படி செய்துவிடாதே.
तत्रैवं सति राजनि तस्मिन्घर्मकाले हर्म्यतलस्थे-
அனுவாதம் - அ.கை - அங்கு இவ்வாறு இருக்கும்பொழுது அந்த ராஜா ஒரு தடவை கோடை காலத்தில் தன்னுடைய மாளிகையின் உபரிகையில் (மாடியில்) இருந்தார் -
अथ ह हंसा निशायां रात्रौ अतिपेतुः । ऋषयो देवता वा राज्ञोऽन्नदानगुणैस्तोषिताः सन्तः हंसरूपा भूत्वा राज्ञो दर्शनगोचरे अतिपेतुः पतितवन्तः । तत् तस्मिन्काले तेषां पततां हंसानाम् एकः पृष्ठतः पतन् अग्रतः पतन्तं हंसमभ्युवाद अभ्युक्तवान् — हो होयीति भो भो इति सम्बोध्य भल्लाक्ष भल्लाक्षेत्यादरं दर्शयन् यथा पश्य पश्याश्चर्यमिति तद्वत् ; भल्लाक्षेति मन्ददृष्टित्वं सूचयन्नाह ; अथवा सम्यग्ब्रह्मदर्शनाभिमानवत्त्वात्तस्य असकृदुपालब्धस्तेन पीड्यमानोऽमर्षितया तत्सूचयति भल्लाक्षेति ।
அனுவாதம் - இருளில் அதாவது இரவு நேரத்தில் ஹம்சம் பறந்து சென்றது. ரிஷிகளோ, தேவதைகளோ ராஜாவினுடைய அன்னதான குணங்களால் சந்தோஷம் அடைந்து ஹம்ஸ ரூபமாகி ராஜாவின் பார்வையில் படும்படி பறந்து சென்றன. அந்த சமயத்தில் பறந்து கொண்டிருக்கும் ஹம்சங்களில் ஒன்று பின்னால் பறந்து கொண்டே முன்னால் பறக்கும் ஹம்சத்தைப் பார்த்து இவ்வாறு அழைத்தது - பார், பார் என்ன ஆச்சரியம் என்று கூறிக்கொண்டே “भल्लाक्ष! भल्लाक्ष!” (பல்லாக்ஷ, பல்லாக்ஷ) மந்தப்பார்வை உடையவனே! மந்தப்பார்வை உடையவனே! என்று ஆதரவை காண்பித்து என்ன ஆச்சரியம் என்று பார் என்றது. “भल्लाक्ष” (பல்லாக்ஷம்) என்பது மந்தப்பார்வையைக் குறிப்பதாகும். அல்லது நல்ல பிரஹ்ம ஞானத்தின் அபிமானத்துடன் இருப்பதால் முன்னால் செல்லும் ஹம்சம் தன்னை விட்டுவிடுமோ என்ற கவலை அடைந்து க்ரோத வசமாகி மந்தபார்வை உடையவன் என்று தெரிவிக்கிறது.
जानश्रुतेः पौत्रायणस्य समं तुल्यं दिवा द्युलोकेन ज्योतिः प्रभास्वरम् अन्नदानादिजनितप्रभावजम् आततं व्याप्तं द्युलोकस्पृगित्यर्थः ; दिवा अह्ना वा समं ज्योतिरित्येतत् ; तन्मा प्रसाङ्क्षीः सञ्जनं सक्तिं तेन ज्योतिषा सम्बन्धं मा कार्षिरित्यर्थः । तत्प्रसञ्जनेन तत् ज्योतिः त्वा त्वां मा प्रधाक्षीः मा दहत्वित्यर्थः ; पुरुषव्यत्ययेन मा प्रधाक्षीदिति ॥
அனுவாதம் - ஜான சுருதியாக பெளத்ராயரின் ஜ்யோதியானது அன்னதானம் முதலியவைகளின் பிரபாவத்தால் அடையப்பட்ட பிரகாசமானது த்யுலோகத்திற்கு சமானமாக வியாபித்திருக்கின்றது. அதாவது த்விலோகத்தைத் தொடும் அளவுக்கு உள்ளது என்பது பொருள். பகலில் உள்ள ஜ்யோதி ஸுக்கு சமமானது. அதனால் அந்த ஜ்யோதியுடன் சம்பந்தப்படாதே. அதன் சங்கத்தால் அந்த ஜ்யோதி உன்னை தஹித்து விடும் (எரித்துவிடும்) என்பது பொருள். “मा प्रधाक्षीः” (மா பிரதாக்ஷீ) என்பதில் “मा प्रधाक्षीत्” (மா பரதாக்ஷீத்) என்று அறிந்துகொள்ள வேண்டும்.
तमु ह परः प्रत्युवाच कम्वर एनमेतत्सन्तꣳ सयुग्वानमिव रैक्वमात्थेति यो नु कथꣳ सयुग्वा रैक्व इति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - அதனிடம் மற்ற ஹம்சம் (முன்னே செல்லும் ஹம்சம்) கூறியது- ஹே! நீ எந்த மஹத்தை உடையவனாக இந்த ராஜாவைக் குறித்து இவ்வாறு பெருமையுடன் வசனத்தால் கூறுகிறாய்? என்ன அவர் இந்த வண்டியின் கீழ் உள்ள ரைக்வனுக்கு சமானமாகவா கூறுகிறாய்? அதற்கு முதல் ஹம்சம் இவ்வாறு கேட்டது - அந்த வண்டியின் கீழ் உள்ள ரைக்வர் எப்படிப்பட்டவர் என்று.
तम् एवमुक्तवन्तं परः इतरोऽग्रगामी प्रत्युवाच — अरे निकृष्टोऽयं राजा वराकः, तं कमु एनं सन्तं केन माहात्म्येन युक्तं सन्तमिति कुत्सयति एनमेवं सबहुमानमेतद्वचनमात्थ रैक्वमिव सयुग्वानम् , सह युग्वना गन्त्र्या वर्तत इति सयुग्वा रैक्वः, तमिव आत्थ एनम् ; अननुरूपमस्मिन्नयुक्तमीदृशं वक्तुं रैक्व इवेत्यभिप्रायः । इतरश्च आह — यो नु कथं त्वयोच्यते सयुग्वा रैक्वः । इत्युक्तवन्तं भल्लाक्ष आह — शृणु यथा स रैक्वः ॥
அனுவாதம் - இவ்வாறு கூறிய அந்த ஹம்ஸத்திடம் மற்ற ஹம்ஸம் இவ்வாறு கூறியது- ஹே! இந்த ராஜா அதமமானவர் மேலும் பரிதாபமானவர் ஆக உள்ள அவரை எந்த மஹிமையை உடையவர் என்று அவரை பெருமைப்படுத்திய வசனம் அவரை அவமதிப்பு செய்வதற்கு ஒப்பாகும் அல்லவா? ரைக்வருக்கு சமமாகவா கூறுகிறாய்? ரைக்வர் என்பதன் பொருள். வண்டியின் கீழ் இருக்கின்றவர் என்பது பொருள். அவரைப்போல் அதாவது ரைக்வரைப் போல் கூறுவது பொருத்தமாகாது என்பது பொருள். அதற்கு மற்ற ஹம்ஸம் கூறியது - எவரைப் பற்றி கூறினாயோ அந்த வண்டியில் இருக்கும் ரைக்வர் எப்படிபட்டவர்? இப்படிக் கேட்டதற்கு பல்லாக்ஷ கூறிற்று அந்த ரைக்வர் எப்படிப்பட்டவர் என்பதைக் கூறிகிறேன் - கேள் என்று.
यथा कृतायविजितायाधरेयाः संयन्त्येवमेनं सर्वं तदभिसमैति यत्किञ्चप्रजाः साधु कुर्वन्ति यस्तद्वेद यत्स वेद स मयैतदुक्त इति ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - எவ்வாறு (சதுரங்க ஆட்டத்தில்) கிருதத்தை வென்றவனுக்கு அதனால் அதன் கீழே உள்ள மற்ற வரிசைகளும் அவனுக்கு அதீனமாகுமோ அவ்வாறு மக்கள் எந்த சத்கர்மம் செய்தாலும் அவை எல்லாம் அந்த ரைக்வருக்கு சேரும். லுரக்வர் அறிந்தவைகளை எல்லா அறிந்தவர்களிடம் சேரும். அவர் விஷயத்தையே என்னால் கூறப்பட்டது.
यथा लोके कृतायः कृतो नामायो द्यूतसमये प्रसिद्धश्चतुरङ्कः, स यदा जयति द्यूते प्रवृत्तानाम् , तस्मै विजिताय तदर्थमितरे त्रिद्व्येकाङ्का अधरेयाः त्रेताद्वापरकलिनामानः संयन्ति सङ्गच्छन्तेऽन्तर्भवन्ति ; चतुरङ्के कृताये त्रिद्व्येकाङ्कानां विद्यमानत्वात्तदन्तर्भवन्तीत्यर्थः । यथा अयं दृष्टान्तः, एवमेनं रैक्वं कृतायस्थानीयं त्रेताद्ययस्थानीयं सर्वं तदभिसमैति अन्तर्भवति रैक्वे । किं तत् ? यत्किञ्च लोके सर्वाः प्रजाः साधु शोभनं धर्मजातं कुर्वन्ति, तत्सर्वं रैक्वस्य धर्मेऽन्तर्भवति, तस्य च फले सर्वप्राणिधर्मफलमन्तर्भवतीत्यर्थः ।
அனுவாதம் - எவ்வாறு உலகில் சதுரங்கம் விளையாடும்பொழுது தாயக்கட்டையில் உள்ள நான்காவது எண்ணிக்கை கிருதா எனப்படுகிறது. இதை விளையாடுபவர்கள் அந்த சதுரங்கத்தில் ஜெயித்தால் மற்ற மூன்றும் அதாவது த்ரேதாத்வாபர கவி ஆகிய பெயருடையவைகளையும் ஜெயித்ததாக ஆகின்றது. சதுரங்கத்தின் கிரதாவில் மூன்று, இரண்டு, ஒன்று என்பது உள்ளடங்கி உள்ளது. எவ்வாறு இந்த திருஷ்டாந்தமோ அவ்வாறு ரைக்வர் க்ருதாய ஸ்தானத்தில் இருக்கின்றார். ஆகையால் அந்த த்ரேதா முதலிய ஸ்தானத்தில் உள்ளவை எல்லாம் ரைக்வர் இடத்தில் சேருகின்றன. அது என்ன? உலகில் எந்த ஒரு நல்ல சுபமான தர்ம காரியம் எல்லா ஜனங்களும் (பிரஜைகளும்) செய்கின்றனரோ அவை எல்லாம் ரைக்வருடைய தர்மத்தில் அடங்கிவிடுகின்றன. அவருடைய பலத்தில் மற்ற எல்லாப் பிராணிகளுடைய பலமும் அடங்கிவிடுகின்றன என்பது பொருள்.
तथा अन्योऽपि कश्चित् यः तत् वेद्यं वेद । किं तत् ? यत् वेद्यं सः रैक्वः वेद ; तद्वेद्यमन्योऽपि यो वेद, तमपि सर्वप्राणिधर्मजातं तत्फलं च रैक्वमिवाभिसमैतीत्यनुवर्तते । सः एवंभूतः अरैक्वोऽपि मया विद्वान् एतदुक्तः एवमुक्तः, रैक्ववत्स एव कृतायस्थानीयो भवतीत्यभिप्रायः ॥
அனுவாதம் - அவ்வாறே மற்றவர் யாராகிலும் இவ்வாறு அறிய வேண்டியதை அறிந்தால் - அது என்ன? அந்த அறியவேண்டியது எது எனில் அந்த ரைக்வர் அறிந்தது எதுவோ அதை மற்றவரும் அறிய வேண்டியது. எவர் இதை அறிந்தாரோ அவரும் இந்தப் பிராணிகளால் செய்யப்பட்ட தர்மகாரியங்களும் அதன் பலன்களையும் ரைக்வர் போல் அடைபவர் என்பது அறியப்படுகிறது. இவ்வாறு அடைந்த ரைக்வர் அற்ற மற்றவரும் அவர் இவ்வாறு வித்வான் என்று என்னால் கூறப்பட்டது. ரைக்வரைப்போன்று கிருதாய ஸ்தானமும் ஆகின்றான் என்பது அபிப்பிராயமாகும்.
तदु ह जानश्रुतिः पौत्रायण उपशुश्राव स ह सञ्जिहान एव क्षत्तारमुवाचाङ्गारे ह सयुग्वानमिव रैक्वमात्थेति यो नु कथं सयुग्वा रैक्व इति ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - இந்த கூறப்பட்ட விஷயத்தை ஜான சுருதி பெளத்ராயணர் கேட்டார். (மறுநாள் காலையில்) எழுந்து அவர் சேவகர்களிடம் இவ்வாறு கூறினார்- ஓ பையனே! நீ வண்டியின் கீழ் இருக்கும் ரைக்வனுக்கு சமானமானவனாகவா என்னை புகழ்ந்தாய்? (இதற்கு சேவகன் கேட்டான்) அந்த வண்டி உடைய ரைக்வர் எப்படிப்பட்டவர்? என்று.
यथा कृतायविजितायाधरेयाः संयन्त्येवमेनं सर्वं तदभिसमैति यत्किञ्च प्रजाः साधु कुर्वन्ति यस्तद्वेद यत्स वेद स मयैतदुक्त इति ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - ராஜா கூறினார் - எவ்வாறு கிரழ்ம் என்ற பெயருடையதை அடைந்ததால் வென்றவனுக்கு மற்ற அதன் கீழ் உள்ளவைகள் எல்லாம் அவனை சேருகிறதோ அவ்வாறு அந்த ரைக்வருக்கு எல்லாம் அடையப்பட்டதாகின்றன. அதாவது எந்த நல்ல தர்மங்கள் பிரஜைகள் செய்கின்றனரோ அவையெல்லாம் அவரை வந்து சேருகின்றன. அவ்வாறு அந்த ரைக்வர் அறிந்ததையும், அவ்வாறே வேறு ஒருவர் அறிந்ததையும் இதை கூறுவதன் மூலமாகக் கூறப்பட்டது.
तदु ह तदेतदीदृशं हंसवाक्यमात्मनः कुत्सारूपमन्यस्य विदुषो रैक्वादेः प्रशंसारूपम् उपशुश्राव श्रुतवान्हर्म्यतलस्थो राजा जानश्रुतिः पौत्रायणः । तच्च हंसवाक्यं स्मरन्नेव पौनःपुन्येन रात्रिशेषमतिवाहयामास ।
அனுவாதம் - உபரிகையில் இருந்த ராஜா ஜானஸ்ருதி பெளத்ராயணர் தன்னைக் குறித்து தாழ்மையாகவும் மற்ற வித்வான் ரைக்வர் முதலியவர்களை புகழ்ச்சி ரூபமான இவ்வாறான ஹம்ச வாக்கியத்தைக் கேட்டார். அந்த ஹம்ச வாக்கியத்தை நினைத்துக்கொண்டே (ஸ்மரித்துக்கொண்டே) அன்று இரவைக் கழித்தார்.
ततः स वन्दिभी राजा स्तुतियुक्ताभिर्वाग्भिः प्रतिबोध्यमानः उवाच क्षत्तारं सञ्जिहान एव शयनं निद्रां वा परित्यजन्नेव, हेऽङ्ग वत्स अरे सयुग्वानमिव रैक्वमात्थ किं माम् ; स एव स्तुत्यर्हो नाहमित्यभिप्रायः । अथवा सयुग्वानं रैक्वमात्थ गत्वा मम तद्दिदृक्षाम् । तदा इवशब्दोऽवधारणार्थोऽनर्थको वा वाच्यः ।
அனுவாதம் - அப்பொழுது வந்தனம் செய்யப்பட்ட ஸ்துதிகளுடன் கூடிய வாக்கியங்களால் படுக்கையிலிருந்து அல்லது தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டே ராஜா சேவகனிடம் இவ்வாறு கூறினார் - ஓ பையா! ஓ குழந்தாய்! என்ன வண்டியின் கீழ் இருக்கும் ரைக்வருக்கு சமானமாக என்னை கூறினார்களா? இதன் தாத்பர்யம் என்னவெனில் அந்த ஸ்துதிக்கு நான் தகுதியற்றவன். அல்லது வண்டியின் கீழ் இருக்கும் ரைக்வரிடம் நான் பார்க்க விரும்புகின்றேன் என்று கூறு என்பதாகும். அந்த “इव” (இவ - போல) என்ற சப்தம் நிச்சயார்த்தம் அல்லது அர்த்தமற்றதாகக் கூறவேண்டும்.
स च क्षत्ता प्रत्युवाच रैक्वानयनकामो राज्ञोऽभिप्रायज्ञः — यो नु कथं सयुग्वा रैक्व इति, राज्ञा एवं चोक्तः आनेतुं तच्चिह्नं ज्ञातुमिच्छन् यो नु कथं सयुग्वा रैक्व इत्यवोचत् । स च भल्लाक्षवचनमेवावोचत् तस्य स्मरन् ॥
அனுவாதம் - அந்த சேவகன் ரைக்வரை அழைத்துவர விரும்பும் ராஜாவின் அபிப்பிராயத்தை அறிந்து இவ்வாறு கூறினான்- அந்த வண்டியின் கீழ் இருக்கும் ரைக்வர் எவ்வாறு இருப்பார் என்று. ராஜா இவ்வாறு அவரை அழைத்துவர இச்சித்து ரைக்வருடைய அடையாளம் தெரிந்துகொள்ள விரும்பியவனுக்கு இவ்வாறு கூறினார்- அவர் கூறியது அந்த பல்லாக்ஷனுடைய வசனங்களையே கூறினார். (5, 6)
स ह क्षत्तान्विष्य नाविदमिति प्रत्येयाय तꣳ होवाच यत्रारे ब्राह्मणस्यान्वेषणा तदेनमर्च्छेति ॥ ७ ॥
மந்த்ரார்த்தம் - அந்த சேவகன் எவ்வளவு தேடியும் அவர் கிடைக்கவில்லை என்று திரும்பிவந்தான். அப்பொழுது அவனிடம் ராஜா கூறினார்- ஹே! எங்கு பிராஹ்மணனை அதாவது பிரஹ்மத்தை அறிந்தவனை எங்கு தேட வேண்டுமோ அங்கு தேடி செல் என்று.
तस्य स्मरन्-
அனுவாதம் - அதை நினைவுபடுத்தி -
स ह क्षत्ता नगरं ग्रामं वा गत्वा अन्विष्य रैक्वं नाविदं न व्यज्ञासिषमिति प्रत्येयाय प्रत्यागतवान् । तं होवाच क्षत्तारम् — अरे यत्र ब्राह्मणस्य ब्रह्मविद एकान्तेऽरण्ये नदीपुलिनादौ विविक्ते देशे अन्वेषणा अनुमार्गणं भवति, तत् तत्र एनं रैक्वम् अर्च्छ ऋच्छ गच्छ, तत्र मार्गणं कुर्वित्यर्थः ॥
அனுவாதம் - அந்த சேவகன் நகரம். கிராமங்களில் தேடியும் ரைக்வரை அறியவில்லை. (ரைக்வர் கிடைக்கவில்லை) என்று திரும்பிவந்தான். ராஜாவானவர் அந்த சேவகனைக் குறித்துக் கூறினார் - ஏகாந்தமான காட்டிலோ அல்லது நதிக்கரைகளிலோ அல்லது தனியான இடத்திலோ எங்கு பிரஹ்ம வேதாக்களை தேட முடியுமோ அங்கு சென்று தேடு என்றார்.
इत्युक्तः- अन्वयः - इत्युुक्तः
அனுவாதம் - அ.கை - இவ்வாறு கூறப்பட்டபின்
सोऽधस्ताच्छकटस्य पामानं कषमाणमुपोपविवेश तं हाभ्युवाद त्वं नु भगवः सयुग्वा रैक्व इत्यहं ह्यरा३ इति ह प्रतिजज्ञे स ह क्षत्ताविदमिति प्रत्येयाय ॥ ८ ॥
மந்த்ரார்த்தம் - அவன் ஒரு வண்டியின் கீழ் தேடும் பொழுது அங்கு (ரைக்வரை பார்த்து) அவரின் பக்கத்தில் அமர்ந்து இவ்வாறு கூறினான்- ஹே பகவானே! என்ன நீங்கள் வண்டிக்காரனான ரைக்வரா? என்று. அதற்கு ரைக்வர் அரே! நான் தான் என்று கூறி ஒப்புக்கொண்டார். அப்பொழுது அவர் ரைக்வர் என்று அறிந்து திரும்பி வந்தார்.
इत्युक्तः क्षत्ता अन्विष्य तं विजने देशे अधस्ताच्छकटस्य गन्त्र्याः पामानं खर्जूं कषमाणं कण्डूयमानं दृष्ट्वा, अयं नूनं सयुग्वा रैक्व इति उप समीपे उपविवेश विनयेनोपविष्टवान् । तं च रैक्वं ह अभ्युवाद उक्तवान् । त्वमसि हे भगवः भगवन् सयुग्वा रैक्व इति । एवं पृष्टः अहमस्मि हि अरा३ अरे इति ह अनादर एव प्रतिजज्ञे अभ्युपगतवान् — स तं विज्ञाय अविदं विज्ञातवानस्मीति प्रत्येयाय प्रत्यागत इत्यर्थः ॥
அனுவாதம் - சேவகன் ஜன நடமாட்டம் இல்லாத இடத்தில் தேடி வண்டியின் கீழ் தேடியபின் அவரைப் பார்த்து நிச்சயமாக அந்த வண்டிக்காரன் ரைக்வராகத் தான் இருக்கவேண்டும் என்று நிச்சயம் செய்து அவர் அருகில் அமர்ந்தான். அப்பொழுது ரைக்வரிடம் கேட்டான்- ஹே பகவானே! நீங்கள் தான் வண்டிக்கார ரைக்வரா? என்று. இவ்வாறு கேட்டதற்கு அவர் - அரே! ஆம் நான் தான் என்று “हानादर”=அனாதர) ஈடுபாடு அற்று கூறினார். அப்பொழுது அந்த சேவகன் நான் இப்பொழுது இந்த ரைக்வரை அறிந்துவிட்டேன் என்று திரும்பி வந்தான்.
इति प्रथमखण्डभाष्यम् ॥
तदु ह जानश्रुतिः पौत्रायणः षट्शतानि गवां निष्कमश्वतरीरथं तदादाय प्रतिचक्रमे तं हाभ्युवाद ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - அப்பொழுது அந்த ஜான சுருதி பெளத்ராயணர் அறநூ று பசுக்களையும், தங்க மாலையையும் அதனுடன் வேகமாக செல்லும் இளம் குதிரைகள் பூட்டிய ரதத்தையும் எடுத்துக்கொண்டு அவரிடம் சென்று இவ்வாறு கூறினார்.
तत् तत्र ऋषेर्गार्हस्थ्यं प्रति अभिप्रायं बुद्ध्वा धनार्थितां च उ ह एव जानश्रुतिः पौत्रायणः षट्शतानि गवां निष्कं कण्ठहारम् अश्वतरीरथम् अश्वतरीभ्यां युक्तं रथं तदादाय धनं गृहीत्वा प्रतिचक्रमे रैक्वं प्रति गतवान् । तं च गत्वा अभ्युवाद ह अभ्युक्तवान् ॥
அனுவாதம் - அப்பொழுது அந்த ரிஷியின் கிரஹஸ்த்த சம்பந்தமான அபிப்பிராயத்தாலும், தனம் விஷயத்தில் ஆசையும் உள்ளதாக நினைத்து ஜானசுருதி பெளத்ராயணர் அறநூ று பசுக்களையும், தங்க மாலையையும், வேகமாக உள்ள இளம் குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தையும், தனத்தையும் எடுத்துக் கொண்டு ரைக்வரிடம் சென்றார். அவரிடம் சென்று இவ்வாறு கூறினான்.
रैक्वेमानि षट्शतानि गवामयं निष्कोऽयमश्वतरीरथोऽनु म एतां भगवो देवताꣳ शाधि यां देवतामुपास्स इति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - ஹே! ரைக்வ! தாங்கள் இந்த அறநூ று பசுக்களையும், இந்த ஹாரத்தையும் வேகமான இளம் குதிரைகளுடன் கூடிய ரதத்தையும் (அவ்வாறே இந்த தனத்தையும்) ஏற்றுக்கொள்ளுங்கள். ஹே பகவன்! தாங்கள் எனக்கு அந்த தேவதையின் உபதேசம் செய்யுங்கள். எதை நீங்கள் உபாசனை செய்கின்றீர்களோ அதை செய்யுங்கள்.
हे रैक्व गवां षट् शतानि इमानि तुभ्यं मया आनीतानि, अयं निष्कः अश्वतरीरथश्चायम् एतद्धनमादत्स्व । भगवोऽनुशाधि च मे माम् एताम् , यां च देवतां त्वमुपास्से तद्देवतोपदेशेन मामनुशाधीत्यर्थः ॥
அனுவாதம் - ஹே ரைக்வ! நான் தங்களுக்காக கொண்டுவரப்பட்ட அந்த அறநூ று பசுக்களையும், தங்க மாலையையும், வேகமான இளம் குதிரைகளைப் பூட்டிய ரதத்தையும், இந்த தனத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஹே பகவனே! எனக்கு நீங்கள் எந்த தேவதையை உபாசனை செய்கின்றீர்களோ அதை எனக்கு உபதேசம் செய்யுங்கள். அதாவது அந்த தேவதா உபதேசத்தால் என்னை அதில் ஈடுபட செய்யுங்கள் என்பதாகும்.
तमु ह परः प्रत्युवाचाह हारेत्वा शूद्र तवैव सह गोभिरस्त्विति तदु ह पुनरेव जानश्रुतिः पौत्रायणः सहस्रं गवां निष्कमश्वतरीरथं दुहितरं तदादाय प्रतिचक्रमे ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - அந்த ராஜாவிடம் ரைக்வர் கூறினார் - ஹே சூத்ர! பசுக்களுடன் இந்த மாலை, ரதங்கள் எல்லாம் உன்னிடமே இருக்கட்டும் என்று. அதன்பின் அந்த ஜான ஸ்ருதி பெளத்தராயணர் ஒரு ஆயிரம் பசுக்களையும், ஒரு ஹாரத்தையும், வேகமான இளம் குதிரைகளுடன் கூடிய ரதத்தையும், தன்னுடைய மகளையும், மேலும் தனத்தையும் எடுத்துக்கொண்டு மறுபடியும் அவரிடம் வந்தார்.
तम् एवमुक्तवन्तं राजानं प्रत्युवाच परो रैक्वः । अहेत्ययं निपातो विनिग्रहार्थीयोऽन्यत्र, इह त्वनर्थकः, एवशब्दस्य पृथक्प्रयोगात् । हारेत्वा हारेण युक्ता इत्वा गन्त्री सेयं हारेत्वा गोभिः सह तवैवास्तु तवैव तिष्ठतु न मम अपर्याप्तेन कर्मार्थमनेन प्रयोजनमित्यभिप्रायः । हे शूद्रेति ।
அனுவாதம் - இவ்வாறு கூறிய ராஜாவிடம் இவ்வாறு கூறினார் - இதில் “अह” (அஹ) என்ற நிபாதம் தடை என்ற அர்த்தமுடையது. ஆனால் இங்கு “एव” (எவ) என்று தனியாக பிரயோகம் செய்யப்பட்டுள்ளதால் அர்த்தமற்றதாகிறது. மாலையுடன் கூடி ரதத்துடனும் பசுக்களும் உன்னிடமே இருக்கட்டும். ஹே சூத்ரனே! எது கர்மத்திற்கு இது போதுமானது அல்லவோ அவ்வாறே இந்த தனத்தால் எனக்கு பிரயோஜனம் இல்லை.
ननु राजासौ क्षत्तृसम्बन्धात् , स ह क्षत्तारमुवाचेत्युक्तम् ; विद्याग्रहणाय च ब्राह्मणसमीपोपगमात् शूद्रस्य च अनधिकारात् कथमिदमननुरूपं रैक्वेणोच्यते हे शूद्रेति ।
அனுவாதம் - சங்கை - சேவகனுடன் சம்பந்தப்பட்டதால் அந்த ராஜா ஜான சுருதி முன்பு தன் சேவகனிடம் (ஹே சூத்ர என்று) இவ்வாறு கூறினார். அவ்வாறு சூத்ரனுக்கு அதிகாரம் இல்லாததால் பிராஹ்மணனிடம் வித்யையை கிரஹிப்பதற்காக சென்ற காரணத்தால் எவ்வாறு ஹே! சூத்ர என்று உசிதமில்லாத இந்த சப்தத்தைக் கூறினார்?
तत्राहुराचार्याः — हंसवचनश्रवणात् शुगेनमाविवेश ; तेनासौ शुचा श्रुत्वा रैक्वस्य महिमानं वा आद्रवतीति ऋषिः आत्मनः परोक्षज्ञतां दर्शयन् शूद्रेत्याहेति । शूद्रवद्वा धनेनैव एवं विद्याग्रहणायोपजागम न च शुश्रूषया । न तु जात्यैव शूद्र इति ।
அனுவாதம் - இந்த விஷயத்தில் ஆச்சாரியர்கள் இவ்வாறு கூறுகின்றனர் - ஹம்சத்தின் வசனத்தைக் கேட்டு அவருக்கு சோகம் உண்டாயிற்று. ஆகையால் அவர் சோகம் அடைந்தார். அதாவது ரைக்வருடைய மஹிமையைக் கேட்டு அவர் நெகிழ்ந்து இருப்பதால் ரிஷியானவர் தன்னுடைய அறியமுடியாத உண்மை தன்மையை (परोक्षज्ञता) தெரிவிப்பதற்காக அவரை “சூத்ர” என்று அழைத்தார். அல்லது சூத்திரனைப் போன்று சிசுருஷை செய்யாமல் தனம் அளித்து வித்யையை கிரஹிப்பதற்கு என்பதற்காகவே அவரிடம் கூறினாரே அன்றி சூத்ர ஜாதியினால் என்பது அல்ல.
अपरे पुनराहुः अल्पं धनमाहृतमिति रुषैव एवमुक्तवान् शूद्रेति । लिङ्गं च बह्वाहरणे उपादानं धनस्येति ।
அனுவாதம் - ஆனால் மற்றவர்கள் குறைந்த தனம் கொண்டுவந்தார் என்பதற்காக சூத்ரன் என்றார் என்று கூறுகின்றனர். மேலும் அதிக தனம் பெறவேண்டும் என்பதற்கான சூச்சனை செய்கிறார் என்கின்றனர்.
तदु ह ऋषेर्मतं ज्ञात्वा पुनरेव जानश्रुतिः पौत्रायणो गवां सहस्रमधिकं जायां च ऋषेरभिमतां दुहितरमात्मनः तदादाय प्रतिचक्रमे क्रान्तवान् ॥
அனுவாதம் - அப்பொழுது ஜானஸ்ருதி பெளத்ராயணர் ரிஷியின் அபிப்பிராயத்தை அறிந்து மறுபடியும் ஆயிரத்திற்கு அதிகமான பசுக்களுடன் அவர் விரும்பிய பத்தினி ரூபமான தன்னுடைய ஒரு புத்ரியையும் அவருக்காக கொண்டுவந்தார்.
तꣳ हाभ्युवाद रैक्वेदꣳ सहस्रं गवामयं निष्कोऽयमश्वतरीरथ इयं जायायं ग्रामो यस्मिन्नास्सेऽन्वेव मा भगवः शाधीति ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - மேலும் அந்த ரைக்வரிடம் கூறினார் - ஹே ரைக்வ! இந்த ஆயிரம் பசுக்கள், இந்த ஹாரம், வேகமான இளம் குதிரைகள் பூட்டிய ரதம், இந்த பத்னி, இந்த கிராமம் எல்லாம் உங்களுக்காகவே ஏற்றுக்கொள்ளுங்கள். ஹே பகவானே! எனக்கு அவசியம் உபதேசித்து அருளவேண்டும்.
तस्या ह मुखमुपोद्गृह्णन्नुवाचाजहारेमाः शूद्रानेनैव मुखेनालापयिष्यथा इति ते हैते रैक्वपर्णा नाम महावृषेषु यत्रास्मा उवास स तस्मै होवाच ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - அப்பொழுது அவர் (ராஜ புத்திரியின்) முகத்தை பார்த்தவாறே ஹே சூத்ர! இந்த பசுக்கள் இவற்றையெல்லாம் கொண்டுவந்தாய். (சரிதான்) இந்த வித்யா கிரஹணத்திற்கான காரணமாகிய இவன் மூலமாகவே என்னுடன் பேசமுடிகிறது. அவ்வாறே எங்கு ரைக்வர் எங்கு வசிக்கின்றாரோ அந்த கிரமம் முழுவதும் அவருடைய பெயரால் விளங்கும் என்று ராஜா அனைத்தையும் அவருக்காக சமர்ப்பித்தார். அதற்கு ரைக்வர் கூறினார்.
रैक्व इदं गवां सहस्रम् अयं निष्कः अयमश्वतरीरथः इयं जाया जायार्थं मम दुहिता आनीता अयं च ग्रामः यस्मिन्नास्से तिष्ठसि स च त्वदर्थे मया कल्पितः ; तदेतत्सर्वमादाय अनुशाध्येव मा मां हे भगवः ।
அனுவாதம் - ஹே ரைக்வ! இந்த ஆயிரம் பசுக்கள் இந்த தங்க மாலை, இந்த வேகமான இளம் குதிரைகள் பொருத்திய ரதம், இந்த பத்தினிக்கான என்னுடைய புத்ரி ஆகியவைகளைக்கொண்டு வந்திருக்கின்றேன். அவ்வாறே நீர் வசித்துக்கொண்டு எங்கு இருக்கின்றீரோ அதுவும் உங்களுக்காகவே சமர்பிக்கின்றேன். ஹே பகவானே! தாங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு எனக்கு உபதேசம் செய்யுங்கள்.
इत्युक्तः तस्या जायार्थमानीताया राज्ञो दुहितुः ह एव मुखं द्वारं विद्याया दाने तीर्थम् उपोद्गृह्णन् जानन्नित्यर्थः । ‘ब्रह्मचारी धनदायी मेधावी श्रोत्रियः प्रियः । विद्यया वा विद्यां प्राह तीर्थानि षण्मम’ ( ? ) इति विद्याया वचनं विज्ञायते हि ।
அனுவாதம் - இவ்வாறு கூறியபின் தனக்கு பத்தினி ஆக வேண்டும் என்பதற்காக அழைத்துவரப்பட்ட ராஜாவின் புத்திரியின் மூலமாக அதாவது வித்யையின் த்வாரம் என்பது தீர்த்தம் என்று அறிந்தார் என்பது இதன் பொருள். “ब्रह्मचारी धनदायी मेधावी श्रोत्रियः प्रियः। विद्यया वा विद्यां प्राह तानि तीर्थानि षण्मम” (பிரஹ்ம்மச்சாரீ, தனதாயீ மேதாவீ ஸ்ரோத்ரிய: ப்ரிய:! வித்யயாவா வித்யாம் ப்ராஹ தானி தீர்த்தானி ஷன்மய:) அதாவது (1). பிரஹ்மசாரி, (2). தனம் அளிப்பவன், (3). புத்திசாலி, (4). ஸ்ரோத்திரியன், (5). பிரியமானவன், (6). வித்யைக்கு பதிலாக வித்யையை அளித்தல் ஆகிய இவ் ஆறும் என்னுடைய தீர்த்தமாகும் என்பது பிரசித்தமாகும்.
एवं जानन् उपोद्गृह्णन् उवाच उक्तवान् । आजहार आहृतवान् भवान् इमाः गाः यच्चान्यद्धनं तत्साध्विति वाक्यशेषः शूद्रेति पूर्वोक्तानुकृतिमात्रं न तु कारणान्तरापेक्षया पूर्ववत् । अनेनैव मुखेन विद्याग्रहणतीर्थेन आलापयिष्यथाः आलापयसीति मां भाणयसीत्यर्थः ।
அனுவாதம் - இவ்வாறு அறிந்து ஏற்றுக்கொண்டு ரைக்வர் கூறினார் - இந்த பசுக்கள், தனம் மற்றும் இவைகள் எல்லாம் நீங்கள் கொண்டு வந்தவைகள் எல்லாம் சரியானதே என்பதாகும். சூத்ரன் என்றது முன்பு கூறியதை அனுசரித்தேயாகும். முன்புபோல் எந்த வேறு ஒரு காரணத்தை அபேக்ஷிக்கவில்லை. இதன் மூலமாகவே அதாவது வித்யையை கிரஹிப்பதற்கான வாயிலாய் என்னுடன் சம்பாஷானம் செய்கிறாய் என்பது பொருள்.
ते ह एते ग्रामा रैक्वपर्णा नाम विख्याता महावृषेषु देशेषु यत्र येषु ग्रामेषु उवास उषितवान् रैक्वः, तानसौ ग्रामानदादस्मै रैक्वाय राजा । तस्मै राज्ञे धनं दत्तवते ह किल उवाच विद्यां सः रैक्वः ॥
அனுவாதம் - அந்த இந்த ரைக்வபாணம் என்ற பெயருடைய பிரசித்தமான கிராமம் மஹாவ்ருஷ தேசத்தில் உள்ளது. அந்த கிராமத்தில் ரைக்வர் வசித்து வந்தார். அந்த கிராமத்தை ராஜா ரைக்வருக்கு அளித்தார். இவ்வாறு தனம் அளித்த அந்த ராஜாவிற்கு ரைக்வர் வித்யையை உபதேசித்தார்.
इति द्वितीयखण्डभाष्यम् ॥
वायुर्वाव संवर्गो यदा वा अग्निरुद्वायति वायुमेवाप्येति यदा सूर्योऽस्तमेति वायुमेवाप्येति यदा चन्द्रोऽस्तमेति वायुमेवाप्येति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - வாயுவே சம்வர்க்கம். எப்பொழுது அக்னி அணையும்பொழுது வாயுவில் லயமாகின்றது. சூரியன் அஸ்தமிக்கும் போதும் வாயுவிலேயே லயமாகின்றது. மேலும் எப்பொழுது சந்திரன் அஸ்தமிக்கிறதோ அப்பொழுது வாயுவிலேயே லயமாகின்றது.
वायुर्वाव संवर्गः वायुर्बाह्यः, वावेत्यवधारणार्थः, संवर्जनात्सङ्ग्रहणात्सङ्ग्रसनाद्वा संवर्गः ; वक्ष्यमाणा अग्न्याद्या देवता आत्मभावमापादयतीत्यतः संवर्गः संवर्जनाख्यो गुणो ध्येयो वायोः, कृतायान्तर्भावदृष्टान्तात् । कथं संवर्गत्वं वायोरिति, आह — यदा यस्मिन्काले वै अग्निः उद्वायति उद्वासनं प्राप्नोति उपशाम्यति, तदा असौ अग्निः वायुमेव अप्येति वायुस्वाभाव्यमपिगच्छति । तथा यदा सूर्योऽस्तमेति, वायुमेवाप्येति । यदा चन्द्रोऽस्तमेति वायुमेवाप्येति ।
அனுவாதம் - வாயுவே சம்வர்க்கம். வாயு - இங்கு வாயு என்பது பாஹ்யவாயு என்பது அபிப்பிராயம். இங்கு “वाव” (வாவ) என்றது நிச்சயார்த்தமாகும். “संवर्गः” சம்வர்க்க:) - “संवर्जन” (சம்வர்ஜன - நன்றாக உள்வாங்கிக்கொள்வது), “सङ्ग्रहणात्” (சம்கிரஹனாத் = நன்றாக ஏற்றுக் கொள்ளுதல்) “सङ्ग्रसनात्” (சம்க்ரசனாத் = நன்றாக விழுங்கிவிடுதல்) ஆகிய இவைகளைச் செய்வதால் சம்சர்க்கம் எனப்படுகிறது. இனிக் கூறப்போகும் அக்னி முதிலய தேவதைகளை வாயு தன் ரூபமாகவே ஆக்கிக்கொள்வதால் சம்சர்க்கம் எனப்படுகிறது. சம்வர்ஜனம் என்னும் குணத்தை வாயுவைப்போல் தியானம் செய்யவேண்டும். எவ்வாறு எனில் கிருத என்னும் பெயருடைய சதுரங்கத்தைப்போன்று மற்ற த்ரேதா துவாபரகலி ஆகிய எல்லாம் அடங்கி இருக்கும் திருஷ்டாந்தத்தைப் போல் அறிந்துகொள்ள வேண்டும். எவ்வாறு வாயுவிற்கு சம்வர்க்கத்துவம்? அதற்கு கூறப்படுகிறது - எப்பொழுது அக்னி அணைகிறதோ அப்பொழுது அந்த அக்னி வாயுவிலேயே லயமாகின்றது. அதாவது வாயுவின் ஸ்வபாவத்தை அடைகிறது. அவ்வாறே எப்பொழுது சூரியன் அஸ்தமிக்கின்றதோ அப்பொழுது வாயுவையே அடைகிறது. எப்பொழுது சந்திரன் அஸ்தமிக்கின்றதோ அப்பொழுது வாயுவிலேயே ஆகின்றது.
ननु कथं सूर्याचन्द्रमसोः स्वरूपावस्थितयोः वायौ अपिगमनम् ?
அனுவாதம் - சங்கை - ஆனால் சூரியன், சந்திரன் ஆகியவை தங்களுடைய ஸ்வரூபமாய் இருக்கும்பொழுது எவ்வாறு வாயுவில் லயம் ஆகமுடியும்?
नैष दोषः, अस्तमने अदर्शनप्राप्तेः वायुनिमित्तत्वात् ; वायुना हि अस्तं नीयते सूर्यः, चलनस्य वायुकार्यत्वात् । अथवा प्रलये सूर्याचन्द्रमसोः स्वरूपभ्रंशे तेजोरूपयोर्वायावेव अपिगमनं स्यात् ॥
அனுவாதம் - ஸமாதானம் - இது தோஷமில்லை. ஏன் எனில் வாயுவின் நிமித்தத்தால் அஸ்தமனம் ஆவது காணப்படுகிறது. சலிக்கும் தன்மை உடைய வாயுவின் காரியமாவதால் வாயு சூரியனை அஸ்தமாகச் செய்கின்றது. அல்லது பிரளயத்தில் சூரிய சந்திரர்களின் ஸ்வரூபம் நஷ்டமாகிவிடுவதால் அந்த தேஜோரூபங்களான இரண்டும் வாயுவில் லயமாகின்றது. (அடங்கிவிடுகின்றது).
यदाप उच्छुष्यन्ति वायुमेवापियन्ति वायुर्ह्येवैतान्सर्वान्संवृङ्क्त इत्यधिदैवतम् ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எப்பொழுது ஜலம் உலர்ந்துவிடும் (வற்றிவிடும்)பொழுது வாயுவில் லீனமாகிறது. வாயுவே இந்த ஜலம் முழுவதையும் தன்னில் லயம் அடையச்செய்கிறது. இது அதிதைவத திருஷ்டியாகும்.
तथा यदा आपः उच्छुष्यन्ति उच्छोषमाप्नुवन्ति, तदा वायुमेव अपियन्ति । वायुर्हि यस्मादेव एतान् अग्न्याद्यान्महाबलान् संवृङ्क्ते, अतो वायुः संवर्गगुण उपास्य इत्यर्थः । इत्यधिदैवतं देवतासु संवर्गदर्शनमुक्तम् ॥
அனுவாதம் - எப்பொழுது ஜலம் உலர்ந்துவிடுகிறதோ அப்பொழுது வாயுவிலேயே லீனமாகின்றது. ஏன்எனில் வாயு தான் இந்த அக்னி முதலிய மிகுந்த பலமுடைய தத்துவங்களை தன்னில் லயம் ஆக்குகின்றது. ஆகையால் வாயுவை சம்வர்க்க ரூப குணத்துடன் உபாசனை செய்யவேண்டும் என்பது தாத்பர்யம். இவ்வாறு அதிதைவத தேவதைகளில் சம்வர்க்க திருஷ்டி கூறப்பட்டது.
अथाध्यात्मं प्राणो वाव संवर्गः स यदा स्वपिति प्राणमेव वागप्येति प्राणं चक्षुः प्राणꣳ श्रोत्रं प्राणं मनः प्राणो ह्येवैतान्सर्वान्संवृङ्क्त इति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - இப்பொழுது அத்யாத்ம தர்சனம் கூறப்படுகிறது - பிராணனே சம்வர்க்கம். எப்பொழுது புருஷன் உறங்குகின்றானோ அப்பொழுது பிராணன் வாக் இந்திரியம் அடைகிறது. பிராணனை சக்ஷு, பிராணனை ஸ்ரோத்திரம் மேலும் பிராணனை மனம் ஆகியவை அடைகின்றன. பிராணனே இவை எல்லாவற்றையும் தன்னில் லயம் ஆகச்செய்கிறது.
अथ अनन्तरम् अध्यात्मम् आत्मनि संवर्गदर्शनमिदमुच्यते । प्राणः मुख्यः वाव संवर्गः । स पुरुषः यदा यस्मिन्काले स्वपिति, तदा प्राणमेव वागप्येति — वायुमिवाग्निः । प्राणं चक्षुः प्राणं श्रोत्रं प्राणं मनः प्राणो हि यस्मादेवैतान्वागादीन् सर्वान्संवृङ्क्त इति ॥
அனுவாதம் - இதற்குப்பின் அத்யாத்மம் அதாவது இந்த சரீரத்தில் இந்த சர்வர்க தர்சனம் கூறப்படுகிறது. பிராணனே முக்ய சம்வர்கம். அந்த புருஷன் எப்பொழுது உறங்குகின்றானோ அப்பொழுது பிராணனை வாயுவை அக்னி அடைவதுபோல். (லயம் ஆவது போல்) வாக் அடைகிறது. பிராணனை சக்ஷு, பிராணனை, ஸ்ரோத்திரம், பிராணனை மனம் அடைகின்றன. ஏன்எனில் பிராணனே இந்த வாக் முதலிய எல்லாவற்றையும் தன்னில் லயம் செய்கின்றது.
तौ वा एतौ द्वौ संवर्गौ वायुरेव देवेषु प्राणः प्राणेषु ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - அந்த இந்த இரண்டு சம்வர்க்கங்களும் வாயுவே தேவதைகளிலும், பிராணன் பிராணன்களிலும் கிரஹிக்கப்படுகின்றன.
तौ वा एतौ द्वौ संवर्गौ संवर्जनगुणौ — वायुरेव देवेषु संवर्गः प्राणः प्राणेषु वागादिषु मुख्यः ॥
அனுவாதம் - அந்த இந்த இரண்டு சம்வர்க்கங்களும் சம்வர்ஜன (நன்றாக உள்வாங்கிக்கொள்வது) குணமுடைய வாயுவே தேவதைகளில் சம்வர்க்ம். அவ்வாறே வாக் முதலிய பிராணன் முதலியவைகளில் (இந்திரியங்களில்) முக்ய பிராணனாகும்.
अथ ह शौनकं च कापेयमभिप्रतारिणं च काक्षसेनिं परिविष्यमाणौ ब्रह्मचारी बिभिक्षे तस्मा उ ह न ददतुः ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - ஒருமுறை கபிகோத்திரத்தில் உதித்த சனகர் மேலும் கக்ஷசேனருடைய புத்திரர் அபிபிரதருடன் போஜனம் செய்வதற்காக அமர்ந்து உணவு பரிமாறப்பட்ட பொழுது ஒரு பிரஹ்மச்சாரி பிக்ஷயைிடும்படிக் கேட்டார். ஆனால் அவர்கள் பிக்ஷை அளிக்கவில்லை.
अथ एतयोः स्तुत्यर्थम् इयमाख्यायिका आरभ्यते । हेत्यैतिह्यार्थः । शौनकं च शुनकस्यापत्यं शौनकं कापेयं कपिगोत्रमभिप्रतारिणं च नामतः कक्षसेनस्यापत्यं काक्षसेनिं भोजनायोपविष्टौ परिविष्यमाणौ सूपकारैः ब्रह्मचारी ब्रह्मविच्छौण्डो बिभिक्षे भिक्षितवान् । ब्रह्मचारिणो ब्रह्मविन्मानितां बुद्ध्वा तं जिज्ञासमानौ तस्मै उ भिक्षां न ददतुः न दत्तवन्तौ ह किमयं वक्ष्यतीति ॥
அனுவாதம் - “ह” (ஹ) என்பது ஐதீகமாக கூறப்படுகிறது என்பது பொருள். செளனகர் - சுனகருபடைய புத்திரர் செனகர் காபேயர் அதாவது கபிகோத்திரத்தில் உத்பன்னமானவர். அவரும், கக்ஷசேனருடைய புத்திரர் காக்ஷசேனரும் போஜனத்திற்காக அமர்ந்தனர். சமையல்காரனால் உணவு பரிமாறும்பொழுது பிரஹ்மச்சாரி பிரஹ்ம வேத்தாக்களில் சிறந்தவன் பிக்ஷை கேட்டான். பிரஹ்மசாரிக்கு “நான் பிரஹ்ம வேத்தா” என்ற அபிமானத்தை அறிந்து அதை நிச்சயமாக அறிந்துகொள்ள இச்சித்து நாம் பிக்ஷை அளிக்காவிடின் அவன் என்ன கூறப்போகின்றான் என்று அறிவதற்காக பிக்ஷை அளிக்கவில்லை.
स होवाच महात्मनश्चतुरो देव एकः कः स जगार भुवनस्य गोपास्तं कापेय नाभिपश्यन्ति मर्त्या अभिप्रतारिन्बहुधा वसन्तं यस्मै वा एतदन्नं तस्मा एतन्न दत्तमिति ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - அந்த பிரஹ்மசாரி கூறினார் - புவனங்களை ரக்ஷிக்கின்ற ஒரே தேவன் பிரஜாபதியானவர் நான்கு மஹாத்மாக்களை விழுங்கினார். ஹே காபேய! ஹே அபிப்ரதாரின்! மனிதர்கள் அநேக விதமாக இருந்துகொண்டு இருக்கும் அந்த ஒரே தேவனை மனிதர்கள் காண்பதில்லை. அவ்வாறே எவருக்காக இந்த அன்னமோ அதை அளிக்க மறுக்கிறீர்கள்.
स ह उवाच ब्रह्मचारी महात्मनश्चतुर इति द्वितीयाबहुवचनम् । देव एकः अग्न्यादीन्वायुर्वागादीन्प्राणः । कः सः प्रजापतिः जगार ग्रसितवान् । कः स जागरेति प्रश्नमेके । भुवनस्य भवन्त्यस्मिन्भूतानीति भुवनं भूरादिः सर्वो लोकः तस्य गोपाः गोपायिता रक्षिता गोप्तेत्यर्थः । तं कं प्रजापतिं हे कापेय नाभिपश्यन्ति न जानन्ति मर्त्याः मरणधर्माणोऽविवेकिनो वा हे अभिप्रतारिन् बहुधा अध्यात्माधिदैवताधिभूतप्रकारैः वसन्तम् । यस्मै वै एतत् अहन्यहनि अन्नम् अदनायाह्रियते संस्क्रियते च, तस्मै प्रजापतये एतदन्नं न दत्तमिति ॥
அனுவாதம் - அந்த பிரஹ்மச்சாரி இவ்வாறு கூறினார் - இதில் “महात्मनः” (மஹாத்மன:) “चतुरः” (சதுர:) என்ற பதங்கள் இரண்டாவது வேற்றுமை பஹுவசனமாகும். அவர் இவ்வாறு கூறினார் - அந்த ஒரே தேவன் பிரஜாபதி அதாவது வாயு ஆனது அக்னி, சூரிய, சந்திரர், ஜலம் ஆகியவைகளையும், பிராணன் ஆனது வாக், சக்ஷு, ஸ்ரோத்திரம், மனம் ஆகியவைகளை விழுங்கினார். அதை யார் விழுங்கினார். அந்த ஒரே தேவன் யார்? இவ்வாறு கேள்வி கேட்கப்பட்டது. அது என்னவெனில் புவனத்தின் பிராணிகள் எதில் இருக்கின்றனவோ அது புவனமாகும். பூலோக முதலிய எல்லா லோகங்களும் புவனம் எனப்படுகிறது. அவர் அஹ்ற்றை எல்லாம் ரக்ஷிப்பவர் (காப்பாற்றுபவர்). ஹே காபேய! அந்த எவர் என்பது பிரஜாபதி அல்லது ஹே அபிப்ரதாரின்! இவ்வாறு அத்யாத்ம, அதிதெய்வத, அதிபூதமாக அநேக விதமாக இருக்கும் அந்த தேவனை மரணதர்மமுடைய அவிவேகி புருஷர்களால் காணமுடியாதவர். அவ்வாறே எவரின் போஜனத்திற்காக நித்யம் இவ்வன்னம் தயார் செய்யப்படுகிறதோ அவருக்கு இந்த அன்னத்தை நீங்கள் அளிக்கவில்லை என்று.
तदु ह शौनकः कापेयः प्रतिमन्वानः प्रत्येयायात्मा देवानां जनिता प्रजानां हिरण्यदꣳष्ट्रो बभसोऽनसूरिर्महान्तमस्य महिमानमाहुरनद्यमानो यदनन्नमत्तीति वै वयं ब्रह्मचारिन्नेदमुपास्महे दत्तास्मै भिक्षामिति ॥ ७ ॥
மந்த்ரார்த்தம் - அந்த வாக்கியத்தை கபிகோத்திரத்தில் ஜனித்த செளனகர் நினைத்துப் பார்த்தார் மேலும் அந்த பிரஹ்மச்சாரியிடம் வந்து இவ்வாறு கூறினார் -எவர் தேவதைகளுக்கு எல்லாம் ஆத்மாவோ, பிரஜைகளை படைத்தவரோ, தங்கப்பவ் உடையவரோ, போஜனம் செய்வதில் சமர்த்தரோ மேலும் மேதாவி ஆவாரோ அவரின் மஹத்தான மஹிமை உங்களால் கூறப்பட்டது. அவர் மற்றவர்களால் உண்ணப்படாதவர். அன்னம் அல்லாதவர்களை உண்கிறார். ஹே பிரஹ்மச்சாரீ! அவரையே நாங்கள் உபாசனை செய்கின்றோம். (இவ்வாறு கூறி சேவகனிடம்) இந்த பிரஹ்மசாரிக்கு பிக்ஷை அளியுங்கள் என்றார்.
तदु ह ब्रह्मचारिणो वचनं शौनकः कापेयः प्रतिमन्वानः मनसा आलोचयन् ब्रह्मचारिणं प्रत्येयाय आजगाम । गत्वा च आह यं त्वमवोचः नाभिपश्यन्ति मर्त्या इति, तं वयं पश्यामः । कथम् ? आत्मा सर्वस्य स्थावरजङ्गमस्य । किञ्च देवानामग्न्यादीनाम् आत्मनि संहृत्य ग्रसित्वा पुनर्जनयिता उत्पादयिता वायुरूपेणाधिदैवतमग्न्यादीनाम् । अध्यात्मं च प्राणरूपेण वागादीनां प्रजानां च जनिता ।
அனுவாதம் - அந்த பிரஹ்மச்சாரி கூறியவற்றைக் கேட்டு காபேயர் செளனகர் மனதால் ஆலோசித்துப் பார்த்துவிட்டு பிரஹ்மச்சாரியிடம் இவ்வாறு கூறினார். எதை மரணதர்மம் உடையவர்கள் பார்க்க முடியாது என்று நீ கூறினாயோ அதை நாங்கள் பார்க்கிறோம். எவ்வாறு? எல்லா ஸ்தாவர ஜங்கமங்களின் ஆத்மா அக்னி முதலியதேவதைகளை ஆத்மாவில் லயமடையச் செய்து அதிதைவதங்களாகிய அக்னி முதலியவைகளை வாயு ரூபமாய் மறுபடியும் உத்பத்தி செய்கின்றது. அவ்வாறே அத்யாத்ம வாக் முதலிய பிராணன்களை முக்ய பிராண ரூபமாய் உண்டாக்குகிறது.
अथवा आत्मा देवानामग्निवागादीनां जनिता प्रजानां स्थावरजङ्गमानाम् । हिरण्यदंष्ट्रः अमृतदंष्ट्रः अभग्नदंष्ट्र इति यावत् । बभसो भक्षणशीलः । अनसूरिः सूरिर्मेधावी न सूरिरसूरिस्तत्प्रतिषेधोऽनसूरिः सूरिरेवेत्यर्थः । महान्तमतिप्रमाणमप्रमेयमस्य प्रजापतेर्महिमानं विभूतिम् आहुर्ब्रह्मविदः । यस्मात्स्वयमन्यैरनद्यमानः अभक्ष्यमाणः यदनन्नम् अग्निवागादिदेवतारूपम् अत्ति भक्षयतीति । वा इति निरर्थकः । वयं हे ब्रह्मचारिन् , आ इदम् एवं यथोक्तलक्षणं ब्रह्म वयमा उपास्महे । वयमिति व्यवहितेन सम्बन्धः । अन्ये न वयमिदमुपास्महे, किं तर्हि ? परमेव ब्रह्म उपास्महे इति वर्णयन्ति । दत्तास्मै भिक्षामित्यवोचद्भृत्यान् ॥
அனுவாதம் - மேலும் ஆத்மா அக்னி தேவதை ரூபங்களால் வாக் முதலியவைகளையும், ஸ்தாவர ஜங்கமங்களையும் உண்டாக்கினார். “हिरण्यदंप्त” (ஹிரண்யதம்ஷ்ட்ரதங்கப்பல்) அதாவது அம்ருதபல், அபக்னபல் அதாவது சாப்பிடுவதற்கு சாமர்த்தியம் உள்ளது. “अनसूरी” (அனசூரீ) சூரி என்றால் மேதாவீ. சூரீ இல்லாது அசூரீ. அந்த சூரீ தன்மையற்றது. அனசூரீ. சூரி என்றே பொருள். “महान्तम्” (மஹாந்தம்) பிரமாணங்களைக் கடந்தது அதாவது அப்ரமேயம் ஆகும் அந்தப் பிரஜாபதியின் மஹிமை. பிரஹ்மவித்துக்கள் அதை விபூதி என்று கூறுகின்றனர். எதனால் எனில் தன்னை யாராலும் பக்ஷிக்க (சாப்பிட) முடியாது. மேலும் அக்னி முதலிய தேவதா ரூபமான அன்னத்தை பக்ஷிக்கின்றது. (சாப்பிடுகின்றது). இங்கு “वा” (வா) என்பது அர்த்தமற்றது. ஹே பிரஹ்மச்சாரீ! நாங்கள் மேலே கூறப்பட்ட லக்ஷணங்களுடைய பிரஹ்மத்தை உபாசிக்கின்றோம். “वयम्” (வயம் - நாங்கள்) என்றது கர்த்தாவுடன் சம்பந்தமுடையது. வேறு சிலர் நாங்கள் இதை உபாசிப்பதில்லை என்கின்றார். பின் அவர்கள் எதை உபாசிக்கின்றனர்? பரபிரஹ்மத்தையே உபாசிக்கின்றோம் என்று வியாக்கியானம் செய்கின்றனர். அதன்பின் அவர் சேவகர்களிடம் அவருக்கு பிக்ஷை அளியுங்கள் என்று கூறினார்.
तस्मा उ ह ददुस्ते वा एते पञ्चान्ये पञ्चान्ये दश सन्तस्तत्कृतं तस्मात्सर्वासु दिक्ष्वन्नमेव दश कृतꣳ सैषा विराडन्नादी तयेदꣳ सर्वं दृष्टꣳ सर्वमस्येदं दृष्टं भवत्यन्नादो भवति य एवं वेद य एवं वेद ॥ ८ ॥
மந்த்ரார்த்தம் - அப்பொழுது அவர்கள் உணவை அளித்தார்கள். எந்த அந்த அக்னி, சூரியன், சந்திரன், ஜலம் ஆகியவைகளுடன் வாயுவும் சேர்ந்து ஐந்தாகின்றது. அவ்வாறே வாக், சக்ஷு, ஸ்ரோத்திரம், மனம் ஆகியவைகளுடன் பிராணன் சேர்ந்து ஐந்தாகின்றது. இவை எல்லாம் ஒன்று சேர்ந்து பத்தாகின்றது. இவை பத்து க்ருத என்ற பெயருடையதாகும். ஆகையால் எல்லா திசைகளிலும் உள்ள அன்னம் தசக்ருதமாகும். அந்த விராட்டே அன்னத்தைப் புசிப்பதாகும். இதன் மூலமாய் எல்லாம் பார்க்கப்படுகிறது. இதை எவன் அறிகிறானோ அதனால் அவன் எல்லாம் அறிகின்றான். அவன் அந்த அன்னத்தை உண்ணுபவனாக ஆகின்றான்.
तस्मा उ ह ददुः ते हि भिक्षाम् । ते वै ये ग्रस्यन्ते अग्न्यादयः यश्च तेषां ग्रसिता वायुः पञ्चान्ये वागादिभ्यः, तथा अन्ये तेभ्यः पञ्चाध्यात्मं वागादयः प्राणश्च, ते सर्वे दश भवन्ति सङ्ख्यया, दश सन्तः तत्कृतं भवति ते, चतुरङ्क एकायः एवं चत्वारस्त्र्यङ्कायः एवं त्रयोऽपरे द्व्यङ्कायः एवं द्वावन्यावेकाङ्कायः एवमेकोऽन्यः इत्येवं दश सन्तः तत्कृतं भवति ।
அனுவாதம் - அப்பொழுது அவருக்கு பிக்ஷை அளித்தனர். எந்த அந்த வாக் முதலியவைகளை பக்ஷணம் செய்யப்பட்டது. மேலும் எவர் இவைகளை பக்ஷணம் செய்ததோ அந்த வாயு வாக் முதலியவைகளைக்காட்டிலும் வேறான ஐந்து எண்ணிக்கை உடையதாகும். (அதிதெய்வம்). அவ்வாறே அவற்றைக்காட்டிலும் வேறான வாக் முதலியவைகளும், பிராணனும் ஐந்து எண்ணிக்கை உடைய அத்யாத்மம் ஆகும். அவை எல்லாம் சேர்ந்து பத்து எண்ணிக்கை உடைய பகடை அந்த க்ருதம் ஆகும். அவைகளில் ஒரு பகடை நான்கு எண்ணிக்கை உடையதாகிறது. அவ்வாறே (அக்னி முதலியவைகள், வாக் முதலியவைகள்) நான்கு எண்ணிக்கை உடையது ஆகிறது. அவ்வாறே மூன்று எண்ணிக்கை உடைய பகடை ஆகிறது. அவ்வாறு (அக்னி முதலியவைகளில் வாக் முதலியவைகளில் ஒவ்வொன்றையும் விட்டு) அன்னம் மிஞ்சுகின்றது. இவ்வாறு இரண்டு எண்ணிக்கை உடைய பகடை ஆகிறது. அவ்வாறே (இரண்டும் ஒவ்வொன்றையும் விட்டு) வேறு அன்னமாகிறது. அவ்வாறே ஒரு எண்ணிக்கை உடைய பகடையாகிறது. இவ்வாறு இதைவிட வேறானதாக (வாயு, பிராணன் - மேலும் அன்ன முதலியவை) ஒன்றாகிறது. இவ்வாறு பத்து எண்ணிக்கை சேர்ந்து அது க்ருதம் (कृतं) ஆகின்றது.
यत एवम् , तस्मात् सर्वासु दिक्षु दशस्वप्यग्न्याद्या वागाद्याश्च दशसङ्ख्यासामान्यादन्नमेव, ‘दशाक्षरा विराट्’ ‘विराडन्नम्’ इति हि श्रुतिः । अतोऽन्नमेव, दशसङ्ख्यत्वात् । तत एव दश कृतं कृतेऽन्तर्भावात् चतुरङ्कायत्वेनेत्यवोचाम । सैषा विराट् दशसङ्ख्या सती अन्नं च अन्नादी अन्नादिनी च कृतत्वेन । कृते हि दशसङ्ख्या अन्तर्भूता, अतोऽन्नमन्नादिनी च सा ।
அனுவாதம் - எதனால் இவ்வாறோ அதனால் எல்லா பத்து திக்குகளும், அக்னி முதலியவைகளும், வாக் முதலியவைகளும் அவைகள் பத்து எண்ணிக்கை சமானமாக இருப்பதால் அன்னம் ஆகும். “दशाक्षरा विराट” (தசாக்ஷரா விராட்) “विराडन्नम्” (விராடன்னம்) என்னும் சுருதி வாக்கியமும் ஆகும். ஆகையால் பத்து எண்ணிக்கை உள்ளதால் அன்னமேயாகும். அதனாலேயே பத்து கிருதம் ஆகும். கிருதத்தில் அந்தர்பாவமாய் இருப்பதால் (உள்ளே அடங்கி இருப்பதால்) தாய (சதுரங்க)மாக கூறப்பட்டது. அந்த இந்த விராட் பத்து எண்ணிக்கை உள்ளதால் அன்னம் மேலும் அன்னத்தை உண்பதும் ஆகும். அன்னத்தை உண்பதால் கிருதரூபம் ஆகும். கிருதத்தில் பத்து எண்ணிக்கை அந்தர்பாவமாகி (அடங்கி) உள்ளது. ஆகையால் அது அன்னம், மேலும் அன்னத்தை உண்பதும் ஆகும்.
तथा विद्वान्दशदेवतात्मभूतः सन् विराट्त्वेन दशसङ्ख्यया अन्नं कृतसङ्ख्यया अन्नादी च । तया अन्नान्नादिन्या इदं सर्वं जगत् दशदिक्संस्थं दृष्टं कृतसङ्ख्याभूतया उपलब्धम् । एवंविदः अस्य सर्वं कृतसङ्ख्याभूतस्य दशदिक्सम्बद्धं दृष्टम् उपलब्धं भवति । किञ्च अन्नादश्च भवति, य एवं वेद यथोक्तदर्शी । द्विरभ्यासः उपासनसमाप्त्यर्थः ॥
அனுவாதம் - அவ்வாறே இவ்வாறு அறிந்த உபாசகன் பத்து தேவதைகளுடன் தாதாத்மிய பாவத்தை அடைந்து பத்து எண்ணிக்கை உடையதால் விராட் ரூபமாய் அன்னமாயும் கிருத ரூபமாய் அன்னத்தை புசிப்பவனாயும் ஆகின்றான். அந்த அன்னமாயும் அன்னம் உண்பவனாயும் பத்து திக்குகளிலும் இருக்கும் இந்த ஜகத் முழுவதும் காணப்படுகிறது. அதாவது கிருத எண்ணிக்கை உடையதாய் அடையப்படுகிறது. இவ்வாறு அறிந்தவனுக்கு எல்லா கிருத எண்ணிக்கை உடைய பத்து திக்குகளின் சம்பந்தம் காணப்படுவது அடையப்படுகிறது. மேலும் இவ்வாறு கூறப்பட்டவாறு அறிந்தவன் அன்னம் உண்ணுபவனாகின்றான். இருமுறை கூறியது உபாசனையின் முடிவிற்காக.
इति तृतीयखण्डभाष्यम् ॥
सत्यकामो ह जाबालो जबालां मातरमामन्त्रयाञ्चक्रे ब्रह्मचर्यं भवति विवत्स्यामि किङ्गोत्रो न्वहमस्मीति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஜாபாலையின் புத்திரன் சத்யகாமன் தன்னுடைய தாய் ஜபாலயை அழைத்து இவ்வாறு கூறினார்- ஹே பூஜைக்கு உரியவளே! நான் பிரஹ்மச்சாரியனாக (குரு குலத்தில்) வாழ விரும்புகின்றேன். நான் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்? என்று.
सर्वं वागाद्यग्न्यादि च अन्नान्नादत्वसंस्तुतं जगदेकीकृत्य षोडशधा प्रविभज्य तस्मिन्ब्रह्मदृष्टिर्विधातव्येत्यारभ्यते । श्रद्धातपसोर्ब्रह्मोपासनाङ्गत्वप्रदर्शनाय आख्यायिका ।
அனுவாதம் - அன்னம், அன்னபக்ஷணம் ரூபமாக ஸ்துதி செய்யப்பட்ட வாக் முதலிய அக்னி முதலிய ரூபமான சம்பூர்ண ஜகத்தை ஒன்றாக்கி பதினாறாக பிரித்து அதில் பிரஹ்மதிருஷ்டியை இவ்வாறு தான் என்று தெரிவிப்பதற்கு ஆரம்பிக்கப்படுகிறது. சிரத்தை மற்றும் தபஸ் பிரஹ்ம உபாசனையின் அங்கத்துவத்தை தெரிவிப்பதற்காக இந்த ஆக்யாயிகா (கதை)க் கூறப்படுகிறது.
सत्यकामो ह नामतः, ह—शब्द ऐतिह्यार्थः, जबालाया अपत्यं जाबालः जबालां स्वां मातरम् आमन्त्रयाञ्चक्रे आमन्त्रितवान् । ब्रह्मचर्यं स्वाध्यायग्रहणाय हे भवति विवत्स्यामि आचार्यकुले, किङ्गोत्रोऽहं किमस्य मम गोत्रं सोऽहं किङ्गोत्रो नु अहमस्मीति ॥
அனுவாதம் - (ஹ) என்ற சப்தம் இதிகாசத்தைக் குறிப்பதற்கானது. ஜாபாலாவின் புத்திரன் சத்யகாமன் என்ற பெயருடையவன் தன் தாய் ஜபாலாவிடத்தில் ஹே பூஜைக்குறியவளே! நான் ஸ்வாத்யாயத்தின் பொருட்டு பிரஹ்மச்சரியத்தை அனுஷ்டித்து ஆசாரிய குலத்தில் (குருகுலத்தில்) வசிக்க விரும்புகிறேன் என்று கூறினார். நான் என்ன கோத்திரம்? என்னுடைய கோத்திரம் என்ன? அதாவது நான் எந்த கோத்திரம் உடையவன்? என்பதாகும்.
सा हैनमुवाच नाहमेतद्वेद तात यद्गोत्रस्त्वमसि बह्वहं चरन्ती परिचारिणी यौवने त्वामलभे साहमेतन्न वेद यद्गोत्रस्त्वमसि जबाला तु नामाहमस्मि सत्यकामो नाम त्वमसि स सत्यकाम एव जाबालो ब्रवीथा इति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அவள் அவனிடம் இவ்வாறு கூறினாள் - ஹே மகனே! நீ எந்த கோத்திரம் என்று எனக்குத் தெரியாது. நான் இளமையாய் இருக்கும்பொழுது நான் மிகுந்த வேலை செய்துகொண்டு விட்டு வேலை செய்பவளாய் இருந்தேன். அப்பொழுது உன்னைப் பெற்றேன். ஆகையால் எனக்கு என்ன கோத்திரம் என்று தெரியாது. நான் ஜபாலா என்ற பெயர் உடையவள். நீ சத்யகாமா என்ற பெயர் உடையவன். ஆகையால் உன்னை “சத்யகாம ஜபாலா” என்று கூறு என்று கூறினாள்.
एवं पृष्टा जबाला सा ह एनं पुत्रमुवाच — नाहमेतत् तव गोत्रं वेद, हे तात यद्गोत्रस्त्वमसि । कस्मान्न वेत्सीत्युक्ता आह — बहु भर्तृगृहे परिचर्याजातमतिथ्यभ्यागतादि चरन्ती अहं परिचारिणी परिचरन्तीति परिचरणशीलैवाहम् , परिचरणचित्ततया गोत्रादिस्मरणे मम मनो नाभूत् । यौवने च तत्काले त्वामलभे लब्धवत्यस्मि । तदैव ते पितोपरतः ; अतोऽनाथा अहम् , साहमेतन्न वेद यद्गोत्रस्त्वमसि । जबाला तु नामाहमस्मि, सत्यकामो नाम त्वमसि, स त्वं सत्यकाम एवाहं जाबालोऽस्मीत्याचार्याय ब्रवीथाः ; यद्याचार्येण पृष्ट इत्यभिप्रायः ॥
அனுவாதம் - அந்த ஜபாலா தன் புத்திரனிடம் கூறினாள் - ஹே மகனே! நீ எந்த கோத்ரம் உடையவன் என்பது எனக்கு தெரியாது. ஏன் நீ அறியவில்லை? என்பதற்கு இவ்வாறு கூறினாள் - கணவன் வீட்டில் அநேக அதிதிகள் மற்றும் அநேகர் வந்துகொண்டிருந்தார்கள். அதற்காக எனக்கு மிகுந்த வேலைகள் செய்யவேண்டியதாய் இருந்தது. நான் அவர்களுக்காக பரிசாரம் (வேலைகள்) அல்லது சுக்ஷுருஷை செய்யவேண்டியதாய் இருந்தது. இந்த வேலைகளில் மனம் ஈடுபட்டிருந்ததால் என் மனம் எந்த கோத்திரம் என்பதில் செல்லவில்லை. இளம் வயதிலேயே உன்னை பெற்றுஎடுத்தேன். அப்பொழுதே உன் தந்தை தேஹத்தை துறந்தார். ஆகையால் உன்னுடைய கோத்திரம் எது என்று அறியவில்லை. என்னுடைய பெயர் ஜபாலா. உன்னுடைய பெயர் சத்யகாம. ஆகையால் நான் சத்யகாம ஜபாலா என்று ஆச்சாரியரிடம் கூறுங்கள். ஆச்சாரியர் கேட்டால் இவ்வாறு கூறு என்பது அபிப்பிராயம்.
स ह हारिद्रुमतं गौतममेत्योवाच ब्रह्मचर्यं भगवति वत्स्याम्युपेयां भगवन्तमिति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - அவன் அந்த ஹாரித்ருமத கெளதமரிடம் சென்று கூறினார் - நான் பூஜ்ய ஶ்ரீமானாகிய தங்களிடம் இங்கு பிரஹ்மசர்யத்துடன் வாசம் செய்கிறேன். ஆகையால் உங்களிடம் வந்துள்ளேன்.
स ह सत्यकामः हारिद्रुमतं हरिद्रुमतोऽपत्यं हारिद्रुमतं गौतमं गोत्रतः एत्य गत्वा उवाच — ब्रह्मचर्यं भगवति पूजावति त्वयि वत्स्यामि अतः उपेयाम् उपगच्छेयं शिष्यतया भगवन्तम्
அனுவாதம் - அந்த சத்யகாம கெளதம கோத்திர ஹாரித்ருதமதருடைய புத்திரன் ஹாரித்ருதரை அடைந்து இவ்வாறு கூறினான்- பூஜைக்குரிய உங்களிடம் பிரஹ்மச்சரியத்தை அனுஷ்டித்துக்கொண்டு வசிப்பதற்காக சிஷ்யனாய் உங்களை அடைந்துள்ளேன் என்று.
इत्युक्तवन्तं
அனுவாதம் - இவ்வாறு கூறியவனுக்கு -
तꣳ होवाच किङ्गोत्रो नु सोम्यासीति स होवाच नाहमेतद्वेद भो यद्गोत्रोऽहमस्म्यपृच्छं मातरं सा मा प्रत्यब्रवीद्बह्वहं चरन्ती परिचारिणी यौवने त्वामलभे साहमेतन्न वेद यद्गोत्रस्त्वमसि जबाला तु नामाहमस्मि सत्यकामो नाम त्वमसीति सोऽहं सत्यकामो जाबालोऽस्मि भो इति ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - அவனிடம் கெளதமர் கூறினார் - ஹே செளம்ய! நீ எந்த கோத்திரம் உடையவன்? அதற்கு அவன் கூறினான் - பகவானே! நான் எந்த கோத்திரத்தினன் என்பது எனக்குத் தெரியாது. நான் என் தாயிடம் கேட்டேன். அவள் எனக்கு இவ்வாறு பதில் அளித்தாள் - தான் (நான்) இளம் வயதில் மிகுந்த வேலை செய்யும் வேலை உள்ளவளாக இருந்தேன். அந்த சமயத்தில் உன்னை அடைந்தேன். எனக்கு நீ எந்த கோத்திரம் என்று தெரியவில்லை. நான் ஜபாலா நாமம் உடையவள். நீயோ சத்யகாம என்ற பெயர் உடையவன் என்று. ஆகையால் ஹே! குரோ! நான் சத்யகாம ஜபாலான்.
तं ह उवाच गौतमः किङ्गोत्रः नु सोम्य असीति, विज्ञातकुलगोत्रः शिष्य उपनेतव्यः ; इति पृष्टः प्रत्याह सत्यकामः । स ह उवाच — नाहमेतद्वेद भो, यद्गोत्रोऽहमस्मि ; किं तु अपृच्छं पृष्टवानस्मि मातरम् ; सा मया पृष्टा मां प्रत्यब्रवीन्माता ; बह्वहं चरन्तीत्यादि पूर्ववत् ; तस्या अहं वचः स्मरामि ; सोऽहं सत्यकामो जाबालोऽस्मि भो इति ॥
அனுவாதம் - அவனிடம் கெளதமர் கூறினார்- ஹே செளம்ய! நீ எந்த கோத்திரமுடையவன்? என்று குலம், கோத்திரம் அறிந்து சிஷ்யனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்கப்பட்ட சத்யகாமன் அதற்கு பதில் அளித்தான். அவன் கூறினான்- ஹே! பிரபோ! நான் அதை அறியவில்லை. நான் எந்த கோத்திரம் என்று தாயிடம் கேட்டேன். அவள் நான் கேட்டதற்கு இவ்வாறு கூறினாள் - நான் மிகுந்த பரிசாரம் (வேலை) செய்பவளாய் இருந்தேன் என்பது முதலியவை முன்போல். அவள் கூறியவற்றை நான் நினைவுபடுத்துகிறேன். ஆகையால் ஹே குரோ! நான் சத்யகாம ஜபாலனாவேன் என்றான்.
तꣳ होवाच नैतदब्राह्मणो विवक्तुमर्हति समिधꣳ सोम्याहरोप त्वा नेष्ये न सत्यादगा इति तमुपनीय कृशानामबलानां चतुःशता गा निराकृत्योवाचेमाः सोम्यानुसंव्रजेति ता अभिप्रस्थापयन्नुवाच नासहस्रेणावर्तेयेति स ह वर्षगणं प्रोवास ता यदा सहस्रꣳ सम्पेदुः ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - அவனிடம் கெளதமர் கூறினார் - உன்னைப்போல் பிராஹ்மணன் அல்லாதவனால் இவ்வாறு உண்மையைக் கூறமுடியாது. ஆகையால் ஹே செளம்ய! நீ சமித்துக்களைக் கொண்டு வா. நீ சத்யத்தை விடவில்லை. ஆகையால் உன்னை சீடனாக ஏற்றுக்கொள்கின்றேன் என்று கூறி அவனுக்கு தீக்ஷை அளித்தார். அதன்பின் அவருடைய பசுக்களில் மெலிந்த பலமற்ற நான்கு நூ று பசுக்களை தேர்ந்து எடுத்து அவனிடம் கூறினார்- ஹே செளம்ய! நீ இந்த பசுக்களின் பின்னால் செல். அவன் எடுத்துச் செல்லும்பொழுது அவர் கூறினார்- இவைகளை ஒரு ஆயிரம் பசுக்கள் ஆகாமல் திரும்பக்கூடாது. ஒரு ஆயிரம் பசுக்கள் ஆகும்வரை அநேக வருடங்கள் வனத்திலேயே வாழ்ந்தான்.
तं ह उवाच गौतमः — नैतद्वचः अब्राह्मणे विशेषेण वक्तुमर्हति आर्जवार्थसंयुक्तम् । ऋजावो हि ब्राह्मणा नेतरे स्वभावतः । यस्मान्न सत्यात् ब्राह्मणजातिधर्मात् अगाः नापेतवानसि, अतः ब्राह्मणं त्वामुपनेष्ये ; अतः संस्कारार्थं होमाय समिधं सोम्य आहर, इत्युक्त्वा तमुपनीय कृशानामबलानां गोयूथान्निराकृत्य अपकृष्य चतुःशता चत्वारिशतानि गवाम् उवाच — इमाः गाः सोम्य अनुसंव्रज अनुगच्छ ।
அனுவாதம் - கெளதமர் அவனிடம் கூறினார் - இந்த சத்தியத்துடன் கூடி இந்த வார்த்தைகளை விசேஷமாக பிராஹ்மணர் அல்லாதவர்களால் கூறுவதற்கு அருகதை அற்றவர்கள். பிராஹ்மணர்கள் ஸ்வபாவமாகவே உண்மையை உரைப்பார்கள். எதனால் பிராஹ்மண ஜாதி தர்மமான சத்தியத்திலிருந்து நழுவாதவனாக இருக்கிறாயோ அதனால் பிராஹ்மணனாகிய உனக்கு நான் தீக்ஷை செய்கிறேன். அதனால் ஹே செளம்ய! பிராஹ்மணனாகிய நீ ஹோமத்திற்காக அதாவது சம்ஸ்காரத்திற்காக (தூய்மை ஆக்குவதற்காக) சமித்துக்களை கொண்டு வா என்று கூறி மெலிந்த பலமற்ற நான்கு நூ று பசுக்களை பசு கட்டும் ஸ்தம்பத்திலிருந்து விடுவித்து இவ்வாறு கூறினார் ஹே செளம்ய! இந்த பசுக்களுக்குப் பின்னால் செல் என்று.
इत्युक्तः ता अरण्यं प्रत्यभिप्रस्थापयन्नुवाच — नासहस्रेण अपूर्णेन सहस्रेण नावर्तेय न प्रत्यागच्छेयम् । स एवमुक्त्वा गाः अरण्यं तृणोदकबहुलं द्वन्द्वरहितं प्रवेश्य स ह वर्षगणं दीर्घं प्रोवास प्रोषितवान् । ताः सम्यग्गावः रक्षिताः यदा यस्मिन्काले सहस्रं सम्पेदुः सम्पन्ना बभूवुः ॥
அனுவாதம் - இவ்வாறு கூறப்பட்ட அவன் (சத்யகாமன்) வனத்திற்கு செல்லும்பொழுது இவ்வாறு கூறினான் - ஆயிரம் பசுக்கள் முழுமையாக இல்லாமல் நான் திரும்பமாட்டேன் என்று. அவன் இவ்வாறு கூறிவிட்டு பசுக்களை புல், தண்ணீர் அதிகம் உள்ள என்னைத் தவிர வேறு ஒருவர் அற்ற இடத்திற்கு அழைத்து சென்று வருஷக்கணக்கில் அதாவது ஆயிரம் பசுக்கள் பெருகும் வரையில் பசுக்களை நன்றாக காப்பாற்றி அங்கு வசித்து வந்தான். ஆயிரம் எண்ணிக்கை உடையதாக பசுக்கள் ஆகும்வரை அங்கு வசித்தான் என்பது பொருள்.
इति चतुर्थखण्डभाष्यम् ॥
अथ हैनमृषभोऽभ्युवाद सत्यकाम३ इति भगव इति ह प्रतिशुश्राव प्राप्ताः सोम्य सहस्रꣳ स्मः प्रापय न आचार्यकुलम् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - அப்பொழுது அவனிடம் காளை “சத்யகாமா” என்று கூறியது. அவன் பகவானே என்று இவ்வாறு பதில் அளித்தார். (காளை கூறியது) ஹே செளம்ய! நாங்கள் ஒரு ஆயிரம் ஆகிவிட்டோம். இப்பொழுது எங்களை ஆசாரிய குலத்திற்கு அழைத்துச்செல் என்று.
तमेतं श्रद्धातपोभ्यां सिद्धं वायुदेवता दिक्सम्बन्धिनी तुष्टा सती ऋषभमनुप्रविश्य ऋषभभावमापन्ना अनुग्रहाय
அனுவாதம் - அ.கை - சிரத்தை தபஸ் சித்தியான அந்த சத்திய காமனிடம் திக் சம்பந்தி வாயு தேவதை சந்தோஷமடைந்து அனுக்கிரஹிப்பதற்காக காளையின் உள் பிரவேசித்து காளை பாவத்தை (ரூபத்தை) அடைந்தது.
अथ ह एनमृषभोऽभ्युवाद अभ्युक्तवान् सत्यकाम३ इति सम्बोध्य । तम् असौ सत्यकामो भगव इति ह प्रतिशुश्राव प्रतिवचनं ददौ । प्राप्ताः सोम्य सहस्रं स्मः, पूर्णा तव प्रतिज्ञा, अतः प्रापय नः अस्मानाचार्यकुलम् ॥
அனுவாதம் - அப்பொழுது அவனிடம் காளை “சத்யகாமா” என்று அழைத்தது. அதனிடம் சத்யகாமன் பகவானே! என்று பதில் அளித்தான். (அதற்கு காளை) ஹே செளம்ய ஒரு ஆயிரம் ஆகிவிட்டது. உன்னுடைய பிரதிக்ஞை நிறைவேறிவிட்டது. ஆகையால் எங்களை ஆச்சாரிய குலத்தில் அடையச்செய்ய வேண்டும் என்றது.
ब्रह्मणश्च ते पादं ब्रवाणीति ब्रवीतु मे भगवानिति तस्मै होवाच प्राची दिक्कला प्रतीची दिक्कला दक्षिणा दिक्कलोदीची दिक्कलैष वै सोम्य चतुष्कलः पादो ब्रह्मणः प्रकाशवान्नाम ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - நான் உனக்கு பிரஹ்மத்தின் ஒரு பாதத்தைக் கூறவா? அப்பொழுது (சத்யகாமன்) கூறினான்- ஹே பகவானே! எனக்கு அவசியம் கூறுங்கள். காளை அவனிடம் இவ்வாறு கூறியது- கிழக்குத்திக் கலையும், மேற்குத்திக் கலையும், தெற்குத்திக் கலையும், வல்க்குதிக் கலையும் ஹே செளம்ய! பிரஹ்மத்தின் “பிரகாசிப்பவன்” என்ற பெயர் பெற்ற நான்கு கலைகள் உடைய பாதம் ஆகும்.
किञ्च अहं ब्रह्मणः परस्य ते तुभ्यं पादं ब्रवाणि कथयानि । इत्युक्तः प्रत्युवाच — ब्रवीतु कथयतु मे मह्यं भगवान् । इत्युक्तः ऋषभः तस्मै सत्यकामाय ह उवाच — प्राची दिक्कला ब्रह्मणः पादस्य चतुर्थो भागः । तथा प्रतीची दिक्कला दक्षिणा दिक्कला उदीची दिक्कला, एष वै सोम्य ब्रह्मणः पादः चतुष्कलः चतस्रः कला अवयवा यस्य सोऽयं चतुष्कलः पादो ब्रह्मणः प्रकाशवान्नाम प्रकाशवानित्येव नाम अभिधानं यस्य । तथोत्तरेऽपि पादास्त्रयश्चतुष्कला ब्रह्मणः ॥
அனுவாதம் - நான் உனக்கு பரபிரஹ்மத்தின் ஒரு பாதத்தை கூறவா? என்று கேட்டதற்கு திருப்பிக் கூறினான் - ஹே பகவானே! எனக்குக் கூறுங்கள் என்று. இவ்வாறு கூறப்பட்ட ரிஷபர் அந்த சத்யகாமனுக்காக இவ்வாறு கூறினார்- கிழக்குதிக் கலை பிரஹ்மத்தின் பாதத்தின் நான்காவது பாதம். அவ்வாறே மேற்குதிக்கலையும், தெற்குதிக்கலையும், வடக்குதிக்கலையும், ஹே செளம்ய! பிரஹ்மத்தின் நான்கு கலைகளில் மற்ற மூன்று கலைகளும் சேர்ந்த அவயவங்களுடன் கூடியது எதுவோ அது நான்கு கலைகளுடைய பாதம் எதற்கோ அந்த பிரஹ்மத்திற்கு “பிரகாசவான்” (பிரகாசம் உடையவன்) என்ற பெயர் ஆகும். அவ்வாறே பிரஹ்மத்தின் இனிக்கூறப்படும் மூன்று பாதங்களும் நான்கு கலைகள் உடையவைகளே.
स य एतमेवं विद्वांश्चतुष्कलं पादं ब्रह्मणः प्रकाशवानित्युपास्ते प्रकाशवानस्मिंल्लोके भवति प्रकाशवतो ह लोकाञ्जयति य एतमेवं विद्वांश्चतुष्कलं पादं ब्रह्मणः प्रकाशवानित्युपास्ते ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - எந்த புருஷன் பிரஹ்மத்தின் நான்கு கலை உடைய பாதத்தை இவ்வாறு அறிகிறவன் “प्रकाशवात्” (பிரகாசம் உடையவன்) என்ற குணத்துடன் உபாசனை செய்கின்றானோ அவன் இந்த லோகத்தில் பிரகாசிக்கிறவனாக ஆகின்றான். மேலும் பிரகாசிப்பவன் மேல் உலகங்களையும் ஜெயிக்கின்றான் (அடைகின்றான்) என்று இவ்வாறு அறிந்த புருஷன் பிரஹ்மத்தின் நான்கு கலைகளுடைய பாதத்தை பிரகாசிப்பவன் என்ற குணத்துடன் உபாசனை செய்கின்றான்.
स यः कश्चित् एवं यथोक्तमेतं ब्रह्मणः चतुष्कलं पादं विद्वान् प्रकाशवानित्यनेन गुणेन विशिष्टम् उपास्ते, तस्येदं फलम् — प्रकाशवानस्मिंल्लोके भवति प्रख्यातो भवतीत्यर्थः ; तथा अदृष्टं फलम् — प्रकाशवतः ह लोकान् देवादिसम्बन्धिनः मृतः सन् जयति प्राप्नोति ; य एतमेवं विद्वान् चतुष्कलं पादं ब्रह्मणः प्रकाशवानित्युपास्ते ॥
அனுவாதம் - எந்த ஒரு அறிந்தவன் (विद्वान्) இவ்வாறு கூறப்பட்ட பிரஹ்மத்தின் நான்கு கலை உடைய பாதத்தை பிரகாசிப்பவன் (प्रकाशवान्) என்ற குணத்துடன் உபாசிக்கின்றானோ அவனுடைய பலமாவது இந்த லோகத்தில் பிரகாசிப்பவனாகின்றான் அதாவது மிகுந்த புகழுடன் திகழ்வான். அவ்வாறே திருஷ்ட பலத்தினால் பிரகாசிப்பவன் மரணமடைந்தபின் தேவதை முதலிய சம்பந்தமுடைய லோகத்தை அடைவான். எந்த வித்வான் பிரஹ்மத்தின் நான்கு கலைகள் உடைய பாதத்தை “பிரகாசமுடையது” (प्रकाशवान्) என்று உபாசிக்கின்றான்.
इति पञ्चमखण्डभाष्यम् ॥
अग्निष्टे पादं वक्तेति स ह श्वोभूते गा अभिप्रस्थापयाञ्चकार ता यत्राभि सायं बभूवुस्तत्राग्निमुपसमाधाय गा उपरुध्य समिधमाधाय पश्चादग्नेः प्राङुपोपविवेश ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - அக்னி உனக்கு (இரண்டாவது) பாதத்தைக் கூறும் என்று (கூறிவிட்டு ரிஷபம் மெளனமாயிற்று). மறுநாள் அவன் பசுக்களை (குருகுலத்தை நோக்கி) ஒட்டிச்சென்றான். சாயங்காலத்தில் அவைகள் ஒன்று சேர்த்து கட்டிவிட்டு சமித்துக்களால் அக்னியை மூட்டி அதன்முன்னால் கிழக்கு நோக்கி அமர்ந்தான்.
सोऽग्निः ते पादं वक्तेत्युपरराम ऋषभः । सः सत्यकामः ह श्वोभूते परेद्युः नैत्यकं नित्यं कर्म कृत्वा गाः अभिप्रस्थापयाञ्चकार आचार्यकुलं प्रति । ताः शनैश्चरन्त्यः आचार्यकुलाभिमुख्यः प्रस्थिताः यत्र यस्मिन्काले देशेऽभि सायं निशायामभिसम्बभूवुः एकत्राभिमुख्यः सम्भूताः, तत्राग्निमुपसमाधाय गा उपरुध्य समिधमाधाय पश्चादग्नेः प्राङ्मुखः उपविवेश ऋषभवचो ध्यायन् ॥
அனுவாதம் - அந்த அக்னி (இரண்டாவது) பாதத்தைக் கூறும் என்று கூறி ரிஷபம் மெளணமானது. அந்த சத்யகாமன் மறுநாள் நித்ய கர்மாக்களை செய்தபின் பசுக்களை குருகுலத்திற்கு அழைத்துச் செல்ல விழைந்தான். அந்த குருகுலத்திற்கு மெதுவாக செல்லும்பொழுது சாயங்காலம் ஆகிவிட்டது. இரவில் அங்கு பசுக்களை ஒன்றாக திரட்டியபின் சமித்துக்களால் தீயை மூட்டி அதன் முன் கிழக்கு பார்த்து அமர்ந்து ரிஷபம் கூறியவற்றை உபாசனை செய்தான். (தியானம் செய்தான்)
तमग्निरभ्युवाद सत्यकाम३ इति भगव इति ह प्रतिशुश्राव ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அவனிடம் அக்னியானது ஹே சத்யகாமா! என்று அழைத்தது. அப்பொழுது அவன் ஹே பகவானே! என்று பதில் அளித்தான்.
तमग्निरभ्युवाद सत्यकाम३ इति सम्बोध्य । तम् असौ सत्यकामो भगव इति ह प्रतिशुश्राव प्रतिवचनं ददौ ॥
அனுவாதம் - அவனை அக்னி இவ்வாறு சத்யகாம! என்று அழைத்தது. அதனிடம் சத்யகாமன் பகவானே என்று பதில் அளித்தான்.
ब्रह्मणः सोम्य ते पादं ब्रवाणीति ब्रवितु मे भगवानिति तस्मै होवाच पृथिवी कलान्तरिक्षं कला द्यौः कला समुद्रः कलैष वै सोम्य चतुष्कलः पादो ब्रह्मणोऽनन्तवान्नाम ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - ஹே செளம்ய! நான் உனக்கு பிரஹ்மத்தின் ஒரு பாதத்தைக் கூறுகிறேன். (அதற்கு சத்யகாமன்) பகவானே! எனக்கு அவசியம் கூறுங்கள். அப்பொழுது அக்னி அவனிடம் கூறியது - பிருதிவீ கலை, அந்தரிக்ஷ கலை, த்யுலோக கலை, சமுத்திர கலை என்பனவாகும். ஹே செளம்ய! அந்த பிரஹ்மத்தின் நான்கு கலைகள் உள்ள பாதம் “अनन्तवान्” (அனந்தவான்) என்ற பெயர் உடையது ஆகும்.
ब्रह्मणः सोम्य ते पादं ब्रवाणीति । ब्रवीतु मे भगवानिति । तस्मै ह उवाच, पृथिवी कला अन्तरिक्षं कला द्यौः कला समुद्रः कलेत्यात्मगोचरमेव दर्शनमग्निरब्रवीत् । एष वै सोम्य चतुष्कलः पादो ब्रह्मणोऽनन्तवान्नाम ॥
அனுவாதம் - ஹே செளம்ய! உனக்கு பிரஹ்மத்தின் பாதத்தை கூறுகிறேன் என்று அக்னி கூறியதற்கு சத்யகாமன் பகவானே எனக்கு கூறுங்கள் என்றவனுக்கு இவ்வாறு கூறியது - பிருதிவீ கலை, அந்தரிக்ஷ கலை, த்யுலோக கலை, சமுத்திர கலை ஆகிய தன்னுடன் சம்பந்தப்பட்ட தர்சனத்தை அக்னி விளக்கியது. ஹே செளம்ய! இதுவே பிரஹ்மத்தின் நான்கு கலைகள் உடைய பாதம். அது “अनन्तवान्” (அனந்தவான்) என்ற பெயருடையது.
स य एतमेवं विद्वाꣳश्चतुष्कलं पादं ब्रह्मणोऽनन्तवानित्युपास्तेऽनन्तानस्मिंल्लोके भवत्य नन्तवतो ह लोकाञ्जयति य एतमेवं विद्वाꣳश्चतुष्कलं पादं ब्रह्मणोऽनन्तवानित्युपास्ते ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இவ்வாறு அறிந்தானோ அந்த புருஷன் இந்த நான்கு கலைகள் உள்ள பாதத்தை “अनन्तवान्” (அனந்தவான்) என்ற குணத்தால் உபாசிக்கின்றானோ அந்த குணத்தை அடைகின்றான். மரணத்தின் பின் அனந்த லோகத்தை அடைகின்றான். இவ்வாறு அறிந்தவன் என்பது எல்லாம் முன்போல் ஆகும்.
इति षष्ठखण्डभाष्यम् ॥
हꣳसस्ते पादं वक्तेति स ह श्वोभूते गा अभिप्रस्थापयाञ्चकार ता यत्राभि सायं बभूवुस्तत्राग्निमुपसमाधाय गा उपारुध्य समिधमाधाय पश्चादग्नेः प्राङुपोपविवेश ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஹம்சம் உனக்கு (மூன்றாவது) பாதத்தைக் கூறும் என்று கூறியது. (அதன்பின் அக்னி நிவிர்த்தி ஆகிவிட்டது) மறுநாள் சத்யகாமன் அந்த பசுக்களை ஆச்சாரிய குலத்திற்கு அழைத்துச் (ஒட்டிச்) சென்றான். சாயங்காலம் ஆனவுடன் அங்கு எல்லா பசுக்களையும் ஒன்று சேர்த்து பின் அவைகளை கட்டிவிட்டு சமித்துக்களை கொண்டுவந்து அக்னியை மூட்டி அதன்முன்னால் கிழக்கு பார்த்து அமர்ந்தான்.
तꣳ हꣳस उपनिपत्याभ्युवाद सत्यकाम३ इति भगव इति ह प्रतिशुश्राव ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அப்பொழுது ஹம்சம் (அன்னம்) அவனுக்கு அருகில் பறந்து வந்து கூறியது - “सत्यकाम” (சத்யகாம)! அதற்கு அவன் பதில் அளித்தான்- ஹே பகவானே! என்று
सोऽग्निः हंसः ते पादं वक्तेत्युक्त्वा उपरराम । हंस आदित्यः, शौक्ल्यात्पतनसामान्याच्च । स ह श्वोभूते इत्यादि समानम् ॥
அனுவாதம் - அந்த அக்னி உனக்கு ஹம்சம் (மூன்றாவது) பாதம் கூறும் என்று கூறி ஓய்வு அடைந்தது. வெண்மை நிறத்திலும் பறப்பதிலும் சமானமாக இருப்பதால் ஹம்சம் ஆதித்யன். “அவன் மறுநாள் காலை” என்பது எல்லாம் முன்பு கூறியதற்கு சமானமாகும்.
ब्रह्मणः सोम्य ते पादं ब्रवाणीति ब्रवीतु मे भगवानिति तस्मै होवाचाग्निः कला सूर्यः कला चन्द्रः कला विद्युत्कलैष वै सोम्य चतुष्कलः पादो ब्रह्मणो ज्योतिष्मान्नाम ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - (ஹம்சம் கூறியது) - ஹே செளம்ய! நான் உனக்கு பிரஹ்மத்தின் (மூன்றாவது) பாதத்தை கூறுகிறேன் என்று. (சத்யகாமன் கூறினான்)- பகவானே! எனக்குக் கூறுங்கள். அப்பொழுது ஹம்சம் கூறியது-அக்னி, கலை, சூரியன் கலை, சந்திரன் கலை, மின்னல் கலை ஆகியவைகள் ஆகும். ஹே செளம்ய! இந்த பிரஹ்மத்தின் நான்கு கலைகளுடைய பாதம் “ज्योतिष्मान्” (ஜ்யோதி-ஷ்மான்) என்ற பெயர் உடையது.
स य एतमेवं विद्वाꣳश्चतुष्कलं पादं ब्रह्मणो ज्योतिष्मानित्युपास्ते ज्योतिष्मानस्मिंल्लोके भवति ज्योतिष्मतो ह लोकाञ्जयति य एतमेवं विद्वाꣳश्चतुष्कलं पादं ब्रह्मणो ज्योतिष्मानित्युपास्ते ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இவ்வாறு அறிந்துள்ளானோ அந்த புருஷன் பிரஹ்மத்தின் இந்த நான்குகலை உடைய பாதத்தை “ज्योतिष्मान्” (ஜ்யோதி-ஷ்மான்- ஒளி பொருத்தியவன்) என்ற குணத்துடன் உபாசனை செய்கின்றானோ அவன் இந்த லோகத்தில் ஓளி பொருந்தியவனாக ஆகின்றான் அவ்வாறே ஒளிபொருந்திய லோகங்களையும் அடைகின்றான். எவன் ஒருவன் இவ்வாறு அறிந்த புருஷன் பிரஹ்மத்தின் இந்த நான்கு கலை உடைய பாதத்தை “ज्योतिष्मान्” (ஜ்யோதிஷ்மான் - ஒளி பொருந்தியவன்) என்ற குணத்தை கூடியதாய் உபாசனை செய்கின்றான்.
अग्निः कला सूर्यः कला चन्द्रः कला विद्युत्कलैष वै सोम्येति ज्योतिर्विषयमेव च दर्शनं प्रोवाच ; अतो हंसस्य आदित्यत्वं प्रतीयते । विद्वत्फलम् — ज्योतिष्मान् दीप्तियुक्तोऽस्मिंल्लोके भवति । चन्द्रादित्यादीनां ज्योतिष्मत एव च मृत्वा लोकान् जयति । समानमुत्तरम् ॥
அனுவாதம் - அக்னி கலை, சூரியகலை, சந்திர கலை, மின்னல் கலை ஆகிய இவையே செளம்ய! ஜ்யோதி (ஒளி) விஷயமே தர்சனம் என்று கூறியதிலிருந்து ஹம்சம் ஆதித்திய ரூபம் என்பது தெரிகிறது. அறிந்தவனுடைய பலன் - இந்த உலகில் ஒளிபொருந்தியவனாய் இருப்பான். மரணத்திற்குப் பின் சந்திரன் ஆதித்யன் முதலியவைகளைப் ஒளியுடன் கூடிய லோகங்களை அடைவான். மேலே உள்ளதின் அர்த்தம் முன்போல்.
इति सप्तमखण्डभाष्यम् ॥
मद्गुष्टे पादं वक्तेति स ह श्वोभूते गा अभिप्रस्थापयाञ्चकार ता यत्राभि सायं बभूवुस्तत्राग्निमुपसमाधाय गा उपरुध्य समिधमाधाय पश्चादग्नेः प्राङुपोपविवेश ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - நீர் பறவை உனக்கு (நான்காவது) பாதத்தைக் கூறும் (என்று கூறிவிட்டு ஹம்சம் சென்றுவிட்டது). மறுநாள் சத்யகாமன் பசுக்களைக் குருகுலம் நோக்கி ஓட்டிச்சென்றான். சாயங்காலம் ஆனவுடன் அவைகள் ஒன்று சேர்ந்தன. அதன்பின் சமித்துக்களால் தீயை மூட்டி அதன்முன்னால் கிழக்கு முகமாக அமர்ந்தான்.
हंसोऽपि मद्गुष्टे पादं वक्तेत्युपरराम । मद्गुः उदकचरः पक्षी, स च अप्सम्बन्धात्प्राणः । स ह श्वोभूते इत्यादि पूर्ववत् ॥
அனுவாதம் - ஹம்சமும் உனக்கு நீர் பறவை, (मद्गुः) (நான்காவது) பாதத்தைக் கூறும் என்று கூறி சென்றுவிட்டது. मद्गुः (மத்கு:) என்றால் நீரில் செல்லும் பக்ஷி. அதற்கு ஜல சம்பந்தம் இருப்பதால் பிராணன் ஆகும். “स ह श्वोभूते” (ச ஹ ச்வோபூதே = அவன் மறுநாள்) என்பது முதலிய வாக்கியங்களில் தாத்பர்யம் முன் கூறியது போல் ஆகும்.
तं मद्गुरुपनिपत्याभ्युवाद सत्यकाम३ इति भगव इति ह प्रतिशुश्राव ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - நீர் பறவை அவனுக்கு அருகில் பறந்து வந்து கூறியது - ஹே சத்யகாமா! என்று. அப்பொழுது அவன் பகவானே! என்று பதில் அளித்தான்.
ब्रह्मणः सोम्य ते पादं ब्रवाणीति ब्रवीतु मे भगवानिति तस्मै होवाच प्राणः कला चक्षुः कला श्रोत्रं कला मनः कलैष वै सोम्य चतुष्कलः पादो ब्रह्मण आयतनवान्नाम ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - (நீர் பறவை கூறியது) - ஹே செளம்ய! நான் உனக்கு பிரஹ்மத்தின் (நான்காவது) பாதத்தைக் கூறுகிறேன் என்று. (சத்யகாமன் கூறினான்) - பகவானே எனக்குக் கூறுங்கள் என்று. அப்பொழுது அது அவனிடம் கூறியது - பிராணன் கலை, சக்ஷு கலை, ஸ்ரோத்திரம் கலை, மனம் ஒரு கலை என்று. ஹே செளம்ய! இந்த பிரஹ்மத்தின் நான்கு கலை பாதம் “आयतनवान्” (ஆயதனவான் - இருப்பிடம் உடையவன்) என்ற பெயர் உடையது.
स च मद्गुः प्राणः स्वविषयमेव च दर्शनमुवाच प्राणः कलेत्याद्यायतनवानित्येवं नाम । आयतनं नाम मनः सर्वकरणोपहृतानां भोगानां तद्यस्मिन्पादे विद्यत इत्यायतनवान्नाम पादः ॥
அனுவாதம் - அந்த நீர் பறவையான பிராணன் பிராண கலை முதலியவை “आयतनवान्” (ஆயதனவான் = இடம் அளிப்பது) என்ற பெயருடைய பாதம் ஆகும் இவ்வாறு கூறி தன்னுடைய சம்பந்தமான தர்சனத்தை விளக்கிக்கூறியது. எல்லா இந்திரியங்களின் வழியாக கிரஹிக்கப்படும் போகங்களின் இருப்பிடமாய் மனம் இருப்பதால் இந்த பாதம் “आयतनवान्” (ஆயதனவான்) என்ற நாமம் உடையதாகிறது.
स य एतमेवं विद्वाꣳश्चतुष्कलं पादं ब्रह्मण आयतनवानित्युपास्त आयतनवानस्मिंल्लोके भवत्यायतनवतो ह लोकाञ्जयति य एतमेवं विद्वाꣳश्चतुष्कलं पादं ब्रह्मण आयतनवानित्युपास्ते ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இதை இவ்வாறு அறிந்த புருஷன் நான்கு கலைகள் உடைய பாதத்தை “आयतनवान्” (ஆயதனவான் இருப்பிடம் உடையவன்) என்ற குணத்துடன் கூடி உபாசனை செய்கின்றானோ அவன் இந்த உலகத்தில் ஆயதனவான் ஆகின்றான். மேலும் ஆயதனவான் லோகத்தையும் அடைகின்றான். எவன் ஒருவன் இவ்வாறு அறிந்தானோ அந்த புருஷன் பிரஹ்மத்தின் இந்த நான்கு கலைகளுடைய பாதத்தை “ஆயதனவான்” என்ற குணத்துடன் உடையதாய் உபாசிக்கின்றான்.
तं पादं तथैवोपास्ते यः स आयतनवान् आश्रयवानस्मिंल्लोके भवति । आयतनवत एव सावकाशांल्लोकान्मृतो जयति । य एतमेवमित्यादि पूर्ववत् ॥
அனுவாதம் - (அந்த பாதத்தை உள்ளவாறு எவன் உபாசிக்கின்றானோ அவன் இந்த லோகத்தில் ஆஸ்ரயம் உடையவனாக அதாவது ஆயதனவான் ஆகின்றான். அவ்வாறே மரணத்திற்குப்பின் ஆயதனம் உடையவனாகவே அவகாசத்துடன் (இருப்பிடத்துடன்) கூடிய லோகத்தை அடைகின்றான். “य एतमेवम्” (ய ஏதமேவம்) முதலியவை முன் கூறியது போல்.
इति अष्टमखण्डभाष्यम् ॥
प्राप हाचार्यकुलं तमाचार्योऽभ्युवाद सत्यकाम३ इति भगव इति ह प्रतिशुश्राव ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஆச்சாரிய குலத்தை அடைந்தான் அவனிடம் ஆச்சாரியர் கூறினார் - சத்யகாமா என்று அப்பொழுது அவன் பதில் அளித்தான் - பகவானே! என்று.
स एवं ब्रह्मवित्सन्-
அனுவாதம் - அ.கை - இவ்வறு பிரஹ்மவேதாவாக இருந்து கொண்டு -
प्राप ह प्राप्तवानाचार्यकुलम् । तमाचार्योऽभ्युवाद सत्यकाम३ इति ; भगव इति ह प्रतिशुश्राव ॥
அனுவாதம் - ஆச்சார்ய குலத்தை அடைந்தான். அவனை ஆச்சாரியர் சத்யகாமா! என்று அழைத்தார். அதற்கு அவன் பகவானே! என்று பதில் அளித்தான்.
ब्रह्मविदिव वै सोम्य भासि को नु त्वानुशशासेत्यन्ये मनुष्येभ्य इति ह प्रतिजज्ञे भगवाꣳस्त्वेव मे कामे ब्रूयात् ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - ஹே செளமியனே! நீ பிரஹ்மத்தை அறிந்தவன் போல் பிரகாசிக்கின்றாய். உனக்கு யார் உபதேசித்தது? இவ்வாறு (ஆச்சாரியர் கேட்டதற்கு) அவன் இவ்வாறு பதில் அளித்தான் - மனிதர்களைக் காட்டிலும் வேறான (தேவதைகள்) எனக்கு உபதேசம் செய்தன. இப்பொழுது என்னுடைய விருப்பத்தை அனுசரித்து பூஜ்ய பாதராகிய தாங்கள் எனக்கு வித்யை உபதேசம் செய்யுங்கள். (என்று வேண்டினான்).
ब्रह्मविदिव वै सोम्य भासि । प्रसन्नेन्द्रियः प्रहसितवदनश्च निश्चिन्तः कृतार्थो ब्रह्मविद्भवति । अत आह आचार्यो ब्रह्मविदिव भासीति ; को न्विति वितर्कयन्नुवाच — कस्त्वामनुशशासेति ।
அனுவாதம் - ஹே செளம்ய! நீ பிரஹ்மவித் போன்று பிரகாசிக்கின்றாய். கிருதார்த்தனாகிய பிரஹ்மவித் பிரசன்ன இந்திரியனாயும், த்வத்வத்தை சகிப்பவனாயும், நிச்சயம் உள்ளவனாயும் இருப்பவனாகும். ஆகையால் ஆச்சாரியர் அவனை பிரஹ்மத்தைப் போல் பிரகாசிக்கின்றான் என்று ஆலோசித்து இவ்வாறு கேட்டார் உனக்கு உபதேசித்தது யார்? என்று.
स च आह सत्यकामः अन्ये मनुष्येभ्यः । देवता मामनुशिष्टवत्यः । कोऽन्यो भगवच्छिष्यं मां मनुष्यः सन् अनुशासितुमुत्सहेतेत्यभिप्रायः । अतोऽन्ये मनुष्येभ्य इति ह प्रतिजज्ञे प्रतिज्ञातवान् । भगवांस्त्वेव मे कामे ममेच्छायां ब्रूयात् किमन्यैरुक्तेन, नाहं तद्गणयामीत्यभिप्रायः ॥
அனுவாதம் - அந்த சத்யகாமன் கூறினான் - மனிதர்கள் அல்லாத மற்ற தேவதைகள் எனக்கு உபதேசித்தன. உங்களுடைய சீடனாகிய எனக்கு உங்களைத் தவிர வேறு எந்த மனிதர்களால் உபதேசிக்க முடியும் என்பது அபிப்பிராயம். ஆகையால் இதிலிருந்து மனிதர்களைக் காட்டிலும் மற்றவர்களால் உபதேசிக்கப்பட்டது. இப்பொழுது நீங்கள் என்னுடைய விருப்பத்திற்கு தகுந்தவாறு பகவானே! எனக்கு உபதேசம் செய்யுங்கள். யார்தான் எனக்கு செய்வர். இதன் அபிப்பிராயம் என்னவெனில் எனக்கு ஒன்றும் தெரியாது என்பதாகும்.
किंच -
அனுவாதம் - மேலும்-
श्रुतꣳ ह्येव मे भगवद्दृशेभ्य आचार्याद्धैव विद्या विदिता साधिष्ठं प्रापतीति तस्मै हैतदेवोवाचात्र ह न किञ्चन वीयायेति वीयायेति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - நான் ஶ்ரீமான்களாகிய ரிஷிகளிடம் இருந்து கேள்விப்பட்டிருக்கிறேன்- ஆச்சாரியர்களிடம் இருந்து அறிந்த வித்தையே மிகுந்த மேன்மையானதாக ஆகும். அப்பொழுது ஆச்சாரியர் அவனுக்கு உபதேசம் செய்தார். இதில் சிறிதும் குறைவு இல்லை. குறைவு இல்லை. (அதாவது இந்த வித்யை பூர்ணமானதாகும்).
किञ्च श्रुतं हि यस्मात् मम विद्यते एवास्मिन्नर्थे भगवद्दृशेभ्यो भगवत्समेभ्यः ऋषिभ्यः । आचार्याद्धैव विद्या विदिता साधिष्ठं साधुतमत्वं प्रापति प्राप्नोति ; अतो भगवानेव ब्रूयादित्युक्तः आचार्यः अब्रवीत् तस्मै तामेव दैवतैरुक्तां विद्याम् । अत्र ह न किञ्चन षोडशकलविद्यायाः किञ्चिदेकदेशमात्रमपि न वीयाय न विगतमित्यर्थः । द्विरभ्यासो विद्यापरिसमाप्त्यर्थः ॥
அனுவாதம் - எதனால் இந்த விஷயத்தில் தங்களைப் போன்றவர்களிடம் இருந்து கேட்டு இவ்வாறு அறிந்தேன். அதாவது ஆச்சாரியர்களிடம் இருந்து அறிந்த வித்யையே மிகுந்த நன்மையை அடைகின்றான். ஆகையால் தாங்களே எனக்கு உபதேசிக்க வேண்டிக்கொண்டவனுக்கு தேவதைகள் கூறிய வித்யையே ஆச்சாரியரும் உபதேசித்தார். அந்த ஷோடச கலைகளையுடைய வித்யையில் ஒரு சிறிதும். ஏக தேசமோ நாசமடையாது, அதாவது அந்த வித்யா பூர்ணமானதாகும். “वीयाय वीयाय” (வியாய வீயாய) என்று இருமுறை கூறியது இந்த வித்யையின் சம்பூர்த்திக்காக ஆகும்.
इति नवमखण्डभाष्यम् ॥
पुनर्ब्रह्मविद्यां प्रकारान्तरेण वक्ष्यामीत्यारभते गतिं च तद्विदोऽग्निविद्यां च । आख्यायायिका पूर्ववच्छ्रद्धतपसोर्ब्रह्मविद्यासाधनत्वप्रदर्शनार्था —
அனுவாதம் - அ.கை - மேலும் பிரஹ்ம வித்யையை வேறு பிரகாரமாக அதை அறிந்தவர்களின் கதியையும் அக்னிவித்யையும் இனி கூறப்போவதற்காக ஆரம்பிக்கப்படுகிறது. முன்பு கூறியது போல் சிரத்தை தபஸ் ஆகிய பிரஹ்மவித்யா சாதனத்தைத் தெரிவிப்பதற்காக இந்த கதை கூறப்படுகிறது.
उपकोसलो ह वै कामलायनः सत्यकामे जाबाले ब्रह्मचर्यमुवास तस्य ह द्वादश वर्षाण्यग्नीन्परिचचार स ह स्मान्यानन्तेवासिनः समावर्तयꣳस्तꣳ ह स्मैव न समावर्तयति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - உபகோசலன் என்ற பிரசித்தமான பெயருடைய கமலாயரின் புத்திரன் சத்யகாம ஜபாலரிடம் பிரஹ்மச்சர்யத்தை கிரஹித்துக்கொண்டு அங்கு வசித்து வந்தார். அவர் பன்னிரண்டு வருடங்கள் அந்த ஆச்சாரியருடைய அக்னிகளை போஷித்து சேவை செய்துவந்தார். ஆனால் ஆச்சாரியர் மற்ற பிரஹ்மசாரியர்களுக்கு வித்யாபூர்த்தி சம்ஸ்காரம் செய்தார். ஆனால் இவருக்கு மட்டும் (உபகோசலனுக்கு மட்டும்) செய்யவில்லை.
उपकोसलो ह वै नामतः कमलस्यापत्यं कामलायनः सत्यकामे जाबाले ब्रह्मचर्यमुवास । तस्य, ह ऐतिह्यार्थः, तस्य आचार्यस्य द्वादश वर्षाणि अग्नीन्परिचचार अग्नीनां परिचरणं कृतवान् । स ह स्म आचार्यः अन्यान्ब्रह्मचारिणः स्वाध्यायं ग्राहयित्वा समावर्तयन् तमेवोपकोसलमेकं न समावर्तयति स्म ह ॥
அனுவாதம் - கமலருடைய புத்திரன் காமலாயன உபகோசல என்ற பெயருடையவன் சத்யகாமா ஜாபலரிடம் பிரஹ்மசரியத்தை அனுசரித்து வசித்து வந்தார். இதில் “तस्य ह” (தஸ்ய ஹ) என்பது இதிகாசார்த்தம். அந்த ஆச்சாரியருடைய அக்னிகளை பன்னிரண்டு வருடங்கள் சிரத்தையாக வளர்த்துவந்தான். அந்த ஆச்சாரியர் மற்ற பிரஹ்மசாரிகளுக்கு ஸ்வாத்யாயம் கிரஹிக்கசெய்து சமாப்த்தி ஸம்ஸ்காரம் செய்தார். ஆனால் அந்த உபகோசலருக்கு மட்டும் சமாப்த்தி ஸம்ஸ்காரம் செய்யவில்லை.
तं जायोवाच तप्तो ब्रह्मचारी कुशलमग्नीन्परिचचारीन्मा त्वाग्नयः परिप्रवोचन्प्रब्रूह्यस्मा इति तस्मै हाप्रोच्यैव प्रवासाञ्चक्रे ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அந்த (ஆச்சாரியரின்) மனைவி அவரிடம் கூறினார் - இந்த பிரஹ்மச்சாரி தீவிரமாக தபஸ் செய்திருக்கிறார். அவ்வாறே அக்னிகளையும் நன்றாக கண்காணித்து வந்தார். அக்னிகள் உங்களை நிந்திக்கக் கூடாது. ஆகையால் இந்த வித்யையை அந்த பிரஹ்மச்சாரிக்கு உபதேசியுங்கள். ஆனால் அவர் உபதேசம் செய்யாமலேயே வெளியே சென்றுவிட்டார்.
तम् आचार्यं जाया उवाच — तप्तो ब्रह्मचारी कुशलं सम्यक् अग्नीन् परिचचारीत् परिचरितवान् ; भगवांश्च अग्निषु भक्तं न समावर्तयति ; अतः अस्मद्भक्तं न समावर्तयतीति ज्ञात्वा त्वाम् अग्नयः मा परिप्रवोचन् गर्हां तव मा कुर्युः ; अतः प्रब्रूहि अस्मै विद्यामिष्टाम् उपकोसलायेति । तस्मै एवं जायया उक्तोऽपि ह अप्रोच्यैव अनुक्त्वैव किञ्चित्प्रवासाञ्चक्रे प्रवसितवान् ॥
அனுவாதம் - அந்த ஆச்சாரியரிடம் அவர் மனைவி இவ்வாறு கூறினார் - இந்த பிரஹ்மச்சாரி மிகுந்த பஸ்வீ. மேலும் அக்னிகளை நான்கு சேவை செய்து காப்பாற்றி வந்தான். பகவான் ஆகிய தாங்கள் அக்னிகளின் பக்தனுக்கு வித்யையின் பூர்த்தி சம்ஸ்காரங்களை நீங்கள் செய்யவில்லை. ஆகையால் அக்னிகள் நம் பக்தனுக்கு வித்யையின் பூர்த்தி சம்ஸ்காரத்தை செய்யவில்லை என்று அறிந்து தங்களை நிந்தை செய்யக்கூடாது. ஆகையால் வித்யையில் விருப்பமுடைய அந்த உபகோசலனுக்கு நீங்கள் உபதேசம் செய்ய வேண்டும் என்று வேண்டினார். இவ்வாறு தன்னுடைய பத்தினி கூறிய பின்னும் அவர் ஒன்றும் கூறாமல் வெளியே சென்றுவிட்டார்.
स ह व्याधिनानशितुं दध्रे तमाचार्यजायोवाच ब्रह्मचारिन्नशान किं नु नाश्नासीति स होवाच बहव इमेऽस्मिन्पुरुषे कामा नानात्यया व्याधिभिः प्रतिपूर्णोऽस्मि नाशिष्यामीति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - அந்த உபகோசலன் (மானசீக) மனதில் உள்ள துக்கத்தால் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று நிச்சயம் செய்தான். அவனிடம் ஆச்சாரியருடைய பத்தினி வினாவினான் - ஹே பிரஹ்மச்சாரி! நீ சாப்பிடு. எதற்காக உண்ணாமல் இருக்கின்றாய்? அதற்கு அவன் கூறினான் - இந்த மனிதனிடத்தில் மிகுந்த காமனைகள் இருக்கின்றன. மேலும் அநேகம் அறிய வேண்டியவைகளும் உள்ளன. நான் இந்த வியாதிகளால் நிறைந்திருக்கின்றேன். ஆகையால் நான் சாப்பிடமாட்டேன்.
स ह उपकोसलः व्याधिना मानसेन दुःखेन अनशितुम् अनशनं कर्तुं दध्रे धृतवान्मनः । तं तूष्णीमग्न्यागारेऽवस्थितम् आचार्यजायोवाच — हे ब्रह्मचारिन् अशान भुङ्क्ष्व, किं नु कस्मान्नु कारणान्नाश्नासि ।
அனுவாதம் - அந்த உபகோசலன் மன வியாதியினால் துக்கமடைந்து சாப்பிடாமல் இருப்பதற்கு மனதில் தீர்மானித்தான். அமைதியாக அக்னி சாலையில் இருப்பதை கவனித்து ஆச்சாரியருடைய பத்தினி அவனைப் பார்த்து இவ்வாறு கூறினார் - ஹே பிரஹ்மசாரி சாப்பிடு. எதனால் நீ சாப்பிடாமல் இருக்கிறாய் என்று.
इति । स ह उवाच — बहवः अनेकेऽस्मिन्पुरुषेऽकृतार्थे प्राकृते कामाः इच्छाः कर्तव्यं प्रति नाना अत्ययः अतिगमनं येषां व्याधीनां कर्तव्यचिन्तानां ते नानात्ययाः व्याधयः कर्तव्यताप्राप्तिनिमित्तानि चित्तदुःखानीत्यर्थः ; तैः प्रतिपूर्णोऽस्मि ; अतो नाशिष्यामीति ॥
அனுவாதம் - அவன் (பிரஹ்மச்சாரி) கூறினான் - இந்த அகிருதார்த்தர்களான சாதாரண புருஷர்கள் செய்ய வேண்டியவைகளில் (कर्तव्यं) மிகுந்த ஆசை உள்ளவர்களாய் இருக்கின்றனர். இந்த வியாதிகளின் கர்த்தவ்ய சம்பந்த சிந்தனைகளால் மனம் மிகுந்த வேதனைகள் அதிகமாக உள்ளது. அந்த அநேக வேதனை மிகுந்த வியாதிகள் அதாவது கர்த்தவ்யத்தன்மை அடைவதின் நிமித்தமான மானசீக துக்கத்தால் நிறைந்துள்ளேன். ஆகையால் சாப்பிடமாட்டேன்.
अथ हाग्नयः समूदिरे तप्तो ब्रह्मचारी कुशलं नः पर्यचारीद्धन्तास्मै प्रब्रवामेति तस्मै होचुः प्राणो ब्रह्म कं ब्रह्म खं ब्रह्मेति ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - அதன்பின் அக்னிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இவ்வாறு கூறியது- இந்த பிரஹ்மச்சாரி தீவிரமாக தபஸ் செய்தவன். இவன் நமக்கும் நன்றாக சேவை செய்தான். நல்லது, இவனுக்கு நாம் உபதேசம் செய்வோம் என்று நிச்சயம் செய்து அவனிடம் கூறின - பிராணன் பிரஹ்மம் “कं” (கம் = சுகம்) பிரஹ்மம். “खं” (க்கம் = ஆகாயம்) பிரஹ்மம் என்று.
उक्त्वा तूष्णीम्भूते ब्रह्मचारिणि-
அனுவாதம் - அ.கை - இவ்வாறு கூறிவிட்டு பிரஹ்மச்சாரி அமைதியாகிவிட்டான்
अथ ह अग्नयः शुश्रूषयावर्जिताः कारुण्याविष्टाः सन्तः त्रयोऽपि समूदिरे सम्भूयोक्तवन्तः — हन्त इदानीम् अस्मै ब्रह्मचारिणे अस्मद्भक्ताय दुःखिताय तपस्विने श्रद्दधानाय सर्वेऽनुशास्मः अनुप्रब्रवाम ब्रह्मविद्याम् , इति एवं सम्प्रधार्य, तस्मै ह ऊचुः उक्तवन्तः — प्राणो ब्रह्म कं ब्रह्म खं ब्रह्मेति ॥
அனுவாதம் - அதன்பின் அக்னிகள் சேவைகளால் ஈர்க்கபட்டு கருணை அடைந்தவர்களாய் மூன்று அக்னிகளும் ஒன்று சேர்ந்து கூறின. இப்பொழுது அந்த நம்முடைய பக்தனாகிய துக்கமடைந்துள்ள தபஸ்வியாயும், சிரத்தை உடையவனாயும் உள்ள பிரஹ்மசாரிக்கு உபதேசம் செய்வோம் என்று நிச்சயம் செய்து இவ்வாறு கூறின - பிராணன் பிரஹ்மம் “कं” (கம் = சுகம்) பிரஹ்மம், “खं” (க்கம் - ஆகாயம்) பிரஹ்மம் என்று.
स होवाच विजानाम्यहं यत्प्राणो ब्रह्म कं च तु खं च न विजानामीति ते होचुर्यद्वाव कं तदेव खं यदेव खं तदेव कमिति प्राणं च हास्मै तदाकाशं चोचुः ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - அவன் (பிரஹ்மச்சாரி உபகோசலன்) கூறினான் - இந்த பிராணன் பிரஹ்மம் என்று அறிகிறேன். ஆனால் “कं” (கம்-= சுகம் ) என்பதையும் “खं” (க்கம் = ஆகாயம்) என்பதையும் அறியவில்லை என்று அதற்கு அவை கூறின - நிச்சயமாக எந்த கம் (சுகம்) உள்ளதோ அதுவே க்கம் (ஆகாயம்) ஆகும். மேலும் எது க்கம் “खं” மோ அதுவே “கம்” “कं” ஆகும். இவ்வாறு அவைகள் (அக்னிகள்) பிராணனையும், அதன் (ஆஸ்ரய ரூபமான) ஆகாசத்தையும் உபதேசம் செய்தன.
स ह उवाच ब्रह्मचारी — विजानाम्यहं यद्भवद्भिरुक्तं प्रसिद्धपदार्थकत्वात्प्राणो ब्रह्मेति, सः यस्मिन्सति जीवनं यदपगमे च न भवति, तस्मिन्वायुविशेषे लोके रूढः ; अतः युक्तं ब्रह्मत्वं तस्य ; तेन प्रसिद्धपदार्थकत्वाद्विजानाम्यहं यत्प्राणो ब्रह्मेति । कं च तु खं च न विजानामीति ।
அனுவாதம் - அந்த பிரஹ்மச்சாரி கூறினான் - எது உங்களால் கூறப்பட்ட பிரசித்தமான பதார்த்தமானதால் பிராணன் பிரஹ்மம் என்பதை நான் அறிவேன். எது இருப்பதால் ஜீவனமும், எது சென்றபின் ஜீவனம் இல்லையோ அதை உலகில் இந்த வாயு விசேஷமான பிராணன் என்று ரூடமாக அறியப்படுகிறது. ஆகையால் அதற்கு பிரஹ்மத்துவம் பொருந்தும். ஆகையால் பிரசித்தமான பதார்த்தமாய் இருப்பதால் அந்த பிராணனே பிரஹ்மம் என்று நான் அறிகிறோம். ஆனால் “कं” (கம்) “खं” (க்கம்) ஆகிய இவைகளை நான் அறியேன். (அறியவில்லை).
ननु कङ्खंशब्दयोरपि सुखाकाशविषयत्वेन प्रसिद्धपदार्थकत्वमेव, कस्माद्ब्रह्मचारिणोऽज्ञानम् ।
அனுவாதம் - சங்கை - ஆனால் கம், க்கம் என்ற சப்தங்களுக்கும் சுகம், ஆகாசம் என்ற விஷயத்தால் பிரசித்த பதார்த்தமாய் இருக்கும்பொழுது பிரஹ்மச்சாரிக்கு எதனால் அக்ஞானம் ஏற்பட்டது.
नूनम् , सुखस्य कंशब्दवाच्यस्य क्षणप्रध्वंसित्वात् खंशब्दवाच्यस्य च आकाशस्याचेतनस्य कथं ब्रह्मत्वमिति, मन्यते ; कथं च भगवतां वाक्यमप्रमाणं स्यादिति ; अतो न विजानामीत्याह ।
அனுவாதம் - ஸமாதானம் - நிச்சயமாக “கம்” சப்த வாச்சியமான சுகம் க்ஷணத்தில் நாசமடைவதால் அவ்வாறே “க்கம்” “खं” சப்தத்தின் வாச்சியமாகிய ஆகாசம் அசேதனமாகும். ஆகையால் அவைகளுக்கு எவ்வாறு பிரஹ்மத்துவம் ஆகும். என்றும் மேலும் அவர்களிடம் உங்களுடைய வாக் எவ்வாறு அப்ரமாணம் என்று நினைத்து இவ்வாறு நான் அறியவில்லை என்று கூறினான்.
तम् एवमुक्तवन्तं ब्रह्मचारिणं ते ह अग्नय ऊचुः — यद्वाव यदेव वयं कम् अवोचाम, तदेव खम् आकाशम् , इत्येवं खेन विशेष्यमाणं कं विषयेन्द्रियसंयोगजात्सुखान्निवर्तितं स्यात् — नीलेनेव विशेष्यमाणमुत्पलं रक्तादिभ्यः । यदेव खम् इत्याकाशमवोचाम, तदेव च कं सुखमिति जानीहि । एवं च सुखेन विशेष्यमाणं खं भौतिकादचेतनात्खान्निवर्तितं स्यात् — नीलोत्पलवदेव । सुखमाकाशस्थं नेतरल्लौकिकम् , आकाशं च सुखाश्रयं नेतरद्भौतिकमित्यर्थः ।
அனுவாதம் - இவ்வாறு கூறிய அந்த பிரஹ்மச்சாரியிடம் அந்த அக்னிகள் கூறின - நாங்கள் எதை கம் (कं) என்று கூறினோமோ அதுவே “க்கம்” (खं) ஆகாயம் ஆகும். எவ்வாறு நீல நிறம் உத்பல புஷ்பம் என்பது மற்ற சிகப்பு முதலிய உத்பலத்தை வேறுபடுத்துமோ அவ்வாறு “க்கம்” (खं) என்ற விசேஷணம் கம் (कं) சுகம்) என்பது விஷயேந்திரியங்களின் சம்பந்தமுள்ள சுகத்தை வேறுபடுத்துகிறது. எதை க்கம் (खं) ஆகாசம் என்று கூறினோமோ அதுவே “கம்” (कं) சுகம் என்று அறி. சுகத்தின் விசேஷ்யமான “खं” ஆகாயம் பெளதிக ஆகாசத்தைக் காட்டிலும் வேறானது. ஆகாசத்தில் இருக்கும் சுகம் மற்ற லெளகிக சுகங்கள் போல் அல்ல. ஆகாசம் சுகத்தின் ஆஸ்ரயம் (பிரஹ்மமே ஆகும்) மற்ற பெளதிக ஆகாசம் போல் அல்ல.
नन्वाकाशं चेत् सुखेन विशेषयितुमिष्टम् , अस्त्वन्यतरदेव विशेषणम् — यद्वाव कं तदेव खम् इति, अतिरिक्तमितरत् ; यदेव खं तदेव कमिति पूर्वविशेषणं वा ।
அனுவாதம் - சங்கை - ஆனால் ஆகாசம் சுகம் மூலமாக விசேஷ்யமாக்குவதற்கு விரும்பினால் ஒரு விசேஷணம் இருக்கவேண்டும் அதாவது “यद्वाव कं तदेव खम्” (யத்வாவ க் ததேவ க்கம்) என்று ஒரு விசேஷணமும், மற்றொன்று “यद्वाव खं तदेव कम्” (யதேவ க்கம் ததேவ கம்) என்பது அதிகமான விசேஷணமாகிறது. அல்லது “यद्वाव खं तदेव कम्” (யதேவ க்கம் ததேவ கம்) என்று இருந்தால் முதல் விசேஷணம் அதிகமாகிறது.
ननु सुखाकाशयोरुभयोरपि लौकिकसुखाकाशाभ्यां व्यावृत्तिरिष्टेत्यवोचाम । सुखेन आकाशे विशेषिते व्यावृत्तिरुभयोरर्थप्राप्तैवेति चेत् , सत्यमेवम् ; किन्तु सुखेन विशेषितस्यैव आकाशस्य ध्येयत्वं विहितम् ; न त्वाकाशगुणस्य विशेषणस्य शुखस्य ध्येयत्वं विहितं स्यात् , विशेषणोपादानस्य विशेष्यनियन्तृत्वेनैवोपक्षयात् । अतः खेन सुखमपि विशेष्यते ध्येयत्वाय ।
அனுவாதம் - ஸமாதானம் - ஆனால் இந்த சுகம், ஆகாசம் இரண்டின் லெளகிகசுகம் மேலும் ஆகாசம் இவைகளில் இருந்து வேறுபடுத்துவதில் இஷ்டமாகும். இதை முன்பே கூறி உள்ளோம். சுகத்தால் ஆகாசம் விசேஷிதம் ஆகும்பொழுது இரண்டும் வேறாக தோன்றுவது ஸ்வதஸித்தமானால் (தானாகவோ சித்தமானால்) அது சரியே. ஆனால் இந்த சுகத்தால் விசேஷியமாவது ஆகாசத்திற்கே த்யேயத்தும் (தியானிக்க வேண்டும்) என்பது விதிக்கப்பட்டதாகிவிடும். ஆகாச குணத்தின் விசேஷணமாகிய சுகத்திற்கு த்யேயத்துவம் விதிக்கப்பட்டதாக ஆகாது. ஏன்எனில் விசேஷணத்தை ஏற்றுக்கொள்ளும்பொழுது தன்னுடைய விசேஷியத்தின் நியந்த்ருத்வத்தில் முடிந்துவிடும். ஆகையால் ஆகாசத்துடன் சுகமும் த்யானத்திற்காக விசேஷியமாக்கப்பட்டதாகும்.
शड्का - कुतश्चैतन्निश्चीयते ?
அனுவாதம் - சங்கை - எதனால் இவ்வாறு நிச்சயம் செய்யப்படுகிறது?
कंशब्दस्यापि ब्रह्मशब्दसम्बन्धात् कं ब्रह्मेति । यदि हि सुखगुणविशिष्टस्य खस्य ध्येयत्वं विवक्षितं स्यात् , कं खं ब्रह्मेति ब्रूयुः अग्नयः प्रथमम् । न चैवमुक्तवन्तः । किं तर्हि ? कं ब्रह्म खं ब्रह्मेति । अतः ब्रह्मचारिणो मोहापनयनाय कङ्खंशब्दयोरितरेतरविशेषणविशेष्यत्वनिर्देशो युक्त एव यद्वाव कमित्यादिः ।
அனுவாதம் - பிரஹ்மசப்தம் “கம்” “खं” சப்தத்துடன் சம்பந்தமானதால் “கம்” பிரஹ்மம். சுக குணத்துடன் கூடிய ஆகாயத்திற்கு த்யேத்துவம் கூறப்பட்டிருக்கும். அக்னிகள் கம் (कं) க்கம் (खं) பிரஹ்மம் என்று கூறி இருக்கும். அவ்வாறு கூறவில்லை. பின் எவ்வாறு? “कं ब्रह्म खं ब्रह्म” (கம் பிரஹ்ம க்கம் பிரஹ்ம) என்று. ஆகையால் பிரஹ்மச்சாரிகளின் சந்தேஹத்தை (மோஹத்தை)ப் போக்குவதற்காக கம் க்கம் சப்தங்களின் ஒன்றுக்கொன்று விசேஷண விசேஷியமாக “यद्वावकम्” (யத்வாவகம்) முதலியவைகளால் நிரூபணம் செய்யப்பட்டது உசிதமேயாகும்.
तदेतदग्निभिरुक्तं वाक्यार्थमस्मद्बोधाय श्रुतिराह — प्राणं च ह अस्मै ब्रह्माचरिणे, तस्य आकाशः तदाकाशः, प्राणस्य सम्बन्धी आश्रयत्वेन हार्द आकाश इत्यर्थः, सुखगुणवत्त्वनिर्देशात् ; तं च आकाशं सुखगुणविशिष्टं ब्रह्म तत्स्थं च प्राणं ब्रह्मसम्पर्कादेव ब्रह्मेत्युभयं प्राणं च आकाशं च समुच्चित्य ब्रह्मणी ऊचुः अग्नय इति ॥
அனுவாதம் - அக்னிகளால் கூறப்பட்ட வாக்கியங்களின் அர்த்தத்தை நாம் நன்றாக புரிந்து கொள்வதற்காக சுருதி கூறுகின்றது - அக்னிகள் அந்த பிரஹ்மசாரிக்கு பிராணன் மேலும் “तदाकाशः” (அந்த ஆகாசம்) என்று அந்த ஆகாசத்தின் அதாவது ஆஸ்ரய ரூபமான பிராணனுடன் சம்பந்தப்பட்ட ஹிருதயாகாசத்தை உபதேசம் செய்கின்றது. அவ்வாறே சுகமுடன் கூடியதைக் கூறுவதற்காக அந்த ஆகாசத்தை சுக குணத்துடன் கூடியது பிரஹ்மம். மேலும் அதில் இருக்கும் பிராணனுடன் பிரஹ்மத்தின் சேர்க்கையால் பிரஹ்மம் ஆகும். இவ்வாறு பிராணனும், ஆகாசமும் சமுச்சயமாகி இரண்டு பிரஹ்மங்கள் என்று மேலோர் கூறுகின்றனர்.
इति दशमखण्डभाष्यम् ॥
अथ हैनं गार्हपत्योऽनुशशास पृथिव्यग्निरन्नमादित्य इति य एष आदित्ये पुरुषो दृश्यते सोऽहमस्मि स एवाहमस्मीति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - அதன்பின் இந்த கார்ஹபத்ய அக்னி உபதேசம் செய்தது - பிருதிவீ, அக்னி, அன்னம், ஆதித்யன் (ஆகியவை என்னுடைய நான்கு சரீரங்கள்) என்று. ஆதித்யனில் அந்தர்கதமாய் எந்த தேவதைக் காணப்படுகிறதோ அது நான் அதுவே நான் என்று (உபதேசித்தது).
सम्भूयाग्नयः ब्रह्मचारिणे ब्रह्म उक्तवन्तः ।
அனுவாதம் - இவ்வாறு எல்லா அக்னிகளும் ஒன்று சேர்ந்து பிரஹ்மசாரிக்கு பிரஹ்மத்தை உபதேசித்தன.
अथ अनन्तरं प्रत्येकं स्वस्वविषयां विद्यां वक्तुमारेभिरे । तत्र आदौ एनं ब्रह्मचारिणं गार्हपत्यः अग्निः अनुशशास — पृथिव्यग्निरन्नमादित्य इति ममैताश्चतस्रस्तनवः । तत्र य आदित्ये एष पुरुषो दृश्यते, सोऽहमस्मि गार्हपत्योऽग्निः, यश्च गार्हपत्योऽग्निः स एवाहमादित्ये पुरुषोऽस्मि, इति पुनः परावृत्त्या स एवाहमस्मीति वचनम् ।
அனுவாதம் - அதன்பின் ஒவ்வொரு அக்னியும் தங்கள் தங்கள் விஷய வித்யையை நிரூபணம் செய்ய ஆரம்பித்தன. அப்பொழுது முதலாவதாக அந்த பிரஹ்மச்சாரிக்கு கார்ஹபத்திய அக்னி உபதேசித்தது. அதாவது பிருதிவீ, அக்னி, அன்னம், ஆதித்யன் இவைகள் என்னுடைய நான்கு சரீரங்கள். அதில் ஆதித்தியனில் எந்த புருஷன் காணப்படுகிறானோ அந்த நானே கார்ஹபத்தியா அக்னி ஆவேன். எந்த கார்ஹபத்யா அக்னியோ அதுவே ஆதித்தியனில் உள்ள அந்த புருஷன் நான் ஆகும். அது நான் என்ற வாக்கியம் மறுபடியும் மறுபடியும் கூறுவதற்காக ஆகும்.
पृथिव्यन्नयोरिव भोज्यत्वलक्षणयोः सम्बन्धो न गार्हपत्यादित्ययोः । अत्तृत्वपक्तृत्वप्रकाशनधर्मा अविशिष्टा इत्यतः एकत्वमेवानयोरत्यन्तम् । पृथिव्यन्नयोस्तु भोज्यत्वेन आभ्यां सम्बन्धः ॥
அனுவாதம் - போஜ்யத்வ லக்ஷணமுடைய பிருதிவீ அன்னங்களைப் போல் கார்ஹபத்யாக்னி ஆதித்தியன் ஆகியவைகளுக்கு சம்பந்தம் கிடையாது. உண்ணுவது, பாக்கம் செய்வது, பிரகாசப்படுத்தும் தர்மங்கள் சமானரூபமாய் இருப்பதால் இரண்டிற்கும் அத்தியந்தம் அதாவது முற்றிலும் அபேதமாகும். பிருதிவீ அன்னம் ஆகியவைகள் போஜ்யத்துவத்தால் சம்பந்தம் உடையவையாகும்.
स य एतमेवं विद्वानुपास्तेऽपहते पापकृत्यां लोकी भवति सर्वमायुरेति ज्योग्जीवति नास्यावरपुरुषाः क्षीयन्त उप वयं तं भुञ्जामोऽस्मिꣳश्च लोकेऽमुष्मिꣳश्च य एतमेवं विद्वानुपास्ते ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எந்த அந்த புருஷன் இவ்வாறு அறிந்து உபாசனை செய்கின்றானோ அவனுடைய பாப கர்மங்கள் நஷ்டமாகின்றன. அக்னிலோகத்தை உடையவனாக ஆகின்றான். பூர்ண ஆயுளை அடைகின்றான், பிரகாசமான வாழ்க்கையால் வியாபித்திருப்பான். அவ்வாறே அவனுடைய சந்ததியினரும் நாசமாவது இல்லை. அவ்வாறே எவன் ஒருவன் நாம் இந்த லோகத்தையும் பரலோகத்தையும் பரிபாலனம் செய்கின்றோம் என்று அறிந்து உபாசனை செய்கின்றானோ அவன் முன்பு கூறிய பலன்களை அடைவான்.
स यः कश्चित् एवं यथोक्तं गार्हपत्यमग्निम् अन्नान्नादत्वेन चतुर्धा प्रविभक्तम् उपास्ते, सोऽपहते विनाशयति पापकृत्यां पापं कर्म । लोकी लोकवांश्चास्मदीयेन लोकेनाग्नेयेन तद्वान्भवति यथा वयम् । इह च लोके सर्वं वर्षशतम् आयुरेति प्राप्नोति । ज्योक् उज्ज्वलं जीवति नाप्रख्यात इत्येतत् । न च अस्य अवराश्च ते पुरुषाश्च अस्य विदुषः सन्ततिजा इत्यर्थः, न क्षीयन्ते सन्तत्युच्छेदो न भवतीत्यर्थः । किं च तं वयम् उपभुञ्जामः पालयामः अस्मिंश्च लोके जीवन्तम् अमुष्मिंश्च परलोके । य एतमेवं विद्वानुपास्ते, यथोक्तं तस्य तत्फलमित्यर्थः ॥
அனுவாதம் - எந்த புருஷன் இவ்வாறு கூறியவாறு போக்கிய போக்தா ரூபமாய் நான்கு விதமாக பிரித்து முன்பு கூறிய கார்ஹபத்யாக்னியை உபாசிக்கின்றானோ அவனுடைய பாபகர்மங்கள் நாசமாகிவிடும். அவ்வாறே ஆக்நேய லோகங்களின் மூலமாய் நம்மைப்போன்று லோகமுடையவர்கள் ஆகின்றனர். இந்த லோகத்தில் பூர்ணமாக நூ று ஆண்டுகள் ஆயுள் உடையவர்களாய் ஆகின்றனர். மேலும் பிரகாசமான ஜீவனமாய் கழிக்கின்றனர். அதாவது அப்பிரசித்தமாய் ஜீவிப்பதில்லை. அவ்வாறே அவருக்குப்பின் தோன்றும் சந்ததியினரும் க்ஷீணமாவதில்லை. அதாவது அவர்களின் சந்ததி சேதம் உண்டாகாது (அதாவது தொடரும்). இது மட்டுமல்ல. இந்த லோகத்தில் ஜீவித்துக்கொண்டே அவ்வாறே பரலோகத்திலும் நம்மைப்போல் அதை பரிபாலனம் செய்வர். தாத்பர்யம் என்னவெனில் - வித்வான் இவ்வாறு அறிந்து இதை உபாசனை செய்கின்றவன் இதற்கு முன் கூறிய பலத்தை அடைகின்றேன்.
इति एकादशखण्डभाष्यम् ॥
अथ हैनमन्वाहार्यपचनोऽनुशशासापो दिशो नक्षत्राणि चन्द्रमा इति य एष चन्द्रमसि पुरुषो दृश्यते सोऽहमस्मि स एवाहमस्मीति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - அதன்பின் வேறு அன்வாஹார்ய பச்சனம் (தக்ஷிண அக்னி) உபதேசம் செய்தது - ஜலம், திசை, நக்ஷத்திரம், சந்திரமா (ஆகியவை என்னுடைய நான்கு சரீரங்கள்) என்று. சந்திரனில் எந்த தெய்வம் காணப்படுகிறதோ அந்த தெய்வம் நானே, அது நானே.
स य एतमेवं विद्वानुपास्तेऽपहते पापकृत्यां लोकी भवति सर्वमायुरेति ज्योग्जीवति नास्यावरपुरुषाः क्षीयन्त उप वयं तं भुञ्जामोऽस्मिꣳश्च लोकेऽमुष्मिꣳश्च य एतमेवं विद्वानुपास्ते ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எந்த ஒரு புருஷன் இவ்வாறு கூறியவாறு அறிந்து இதை (நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்ட அக்னியை) உபாசனை செய்கின்றாரோ அவர்களுடைய பாபகர்மங்கள் நாசம் செய்யப்படுகிறது. லோகம் உடையவனாகின்றான். பூர்ண ஆயுளை அடைகின்றான். பிரகாசமான வாழ்வை கழிக்கின்றான். தனக்கு பின்வரும் சந்ததியினரும் க்ஷீணமாகமாட்டார்கள். அவ்வாறே இந்த லோகத்தையும் பரலோகத்தையும் நாம் பரிபாலனம் செய்வோம் என்று இவ்வாறு அறிந்து இதை உபாசனை செய்கின்றான்.
अथ ह एनम् अन्वाहार्यपचनः अनुशशास दक्षिणाग्निः — आपो दिशो नक्षत्राणि चन्द्रमा इत्येता मम चतस्रस्तनवः चतुर्धा अहमन्वाहार्यपचने आत्मानं प्रविभज्यावस्थितः । तत्र य एष चन्द्रमसि पुरुषो दृश्यते, सोऽहमस्मि, स एवाहमस्मीति पूर्ववत् ।
அனுவாதம் - அதற்குப்பின் அவனுக்கு அன்வாஹார்யபசன அதாவது தக்ஷிணாஅக்னி உபதேசித்தது - ஜலம், திசை, நக்ஷத்திரம், சந்திரன் இவை நான்கும் என்னுடைய சரீரம் என்று. நான் என்னை நான்கு வகையாக பிரித்து அன்வாஹபசன ரூபமாய் இருக்கிறேன் (தக்ஷிணா அக்னிரூபமாய் இருக்கின்றேன்). அதில் சந்திரனில் எந்த புருஷன் காணப்படுகிறானோ அந்த புருஷன் நானே, அது நானே தான் என்பது முன்போல்.
अन्नसम्बन्धाज्ज्योतिष्ट्वसामान्याच्च अन्वाहार्यपचनचन्द्रमसोरेकत्वं दक्षिणदिक्सम्बन्धाच्च । अपां नक्षत्राणां च पूर्ववदन्नत्वेनैव सम्बन्धः, नक्षत्राणां चन्द्रमसो भोग्यत्वप्रसिद्धेः । अपामन्नोत्पादकत्वादन्नत्वं दक्षिणाग्नेः — पृथिवीवद्गार्हपत्यस्य । समानमन्यत् ॥
அனுவாதம் - அன்ன சம்பந்தத்தால் ஜ்யோதிஷ்டத்தில் சமானமாவதால் அவ்வாறே தக்ஷிண திசையுடன் சம்பந்தம் இருப்பதாலும் அன்வாஹார்ய பசனத்திற்கும், சந்திரனுக்கும் ஏகத்துவம் சித்திக்கிறது. ஜலத்திற்கும், நக்ஷத்திரங்களுக்கும் முன்போல் அன்னரூப சம்பந்தம் உள்ளது. ஏன்எனில் நக்ஷத்திரம் சந்திரனின் போக்யமாகும் என்பது பிரசித்தம். அவ்வாறே அன்னத்தை உற்பத்தி செய்பவராய் இருப்பதால் ஜலமும் இவ்வாறு தக்ஷிணாக்னியின் அன்னத்துவமாகிறது. எவ்வாறு கார்ஹபத்தியத்திற்கு பிருதிவீ ஆவதுபோல்.
इति द्वादशखण्डभाष्यम् ॥
अथ हैनमाहवनीयोऽनुशशास प्राण आकाशो द्यौर्विद्युदिति य एष विद्युति पुरुषो दृश्यते सोऽहमस्मि स एवाहमस्मीति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - அதற்குப்பின் ஆஹவனீய அக்னி உபதேசம் செய்தது - பிராணன், ஆகாசம், த்யுலோகம், மின்னல் ஆகியவை (என்னுடைய நான்கு சரீரங்கள்) ஆகும். எவன் ஒருவன் மின்னலில் எந்த புருஷனை (தேவதையை) காண்கின்றானோ (அந்த தேவதையே) அதுவே நான், அதுவே நான்.
स य एतमेवं विद्वानुपास्तेऽपहते पापकृत्यां लोकी भवति सर्वमायुरेति ज्योग्जीवति नास्यावरपुरुषाः क्षीयन्त उप वयं तं भुञ्जामोऽस्मिꣳश्च लोकेऽमुष्मिꣳश्च य एतमेवं विद्वानुपास्ते ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எந்த புருஷன் இவ்வாறு அறிந்து உபாசனை செய்கிறானோ அவனுடைய பாபகர்மங்கள் நஷ்டமாகின்றன. லோகத்தை உடையவனாகின்றான். பூர்ண ஆயுளை அடைகின்றான். அவ்வாறே பிரகாசமான வாழ்க்கையை கடைசிவரை நடத்துகின்றான். அவனுடைய மேல் வரும் சந்ததியினரும் நஷ்டமாவதில்லை. அவ்வாறே அவைகளை நாம் இந்தலோகம், பரலோகம் ஆகியவைகளை பரிபாலனம் செய்வோம் என்று இவ்வாறு அறிந்து இதை உபாசனை செய்கின்றனர்.
अथ ह एनमाहवनीयोऽनुशशास — प्राण आकाशो द्यौर्विद्युदिति ममाप्येताश्चतस्रस्तनवः । य एष विद्युति पुरुषो दृश्यते, सोऽहमस्मीत्यादि पूर्ववत् सामान्यात् । द्य्वाकाशयोः स्वाश्रयत्वात् विद्युदाहवनीययोः भोग्यत्वेनैव सम्बन्धः । समानमन्यत् ॥
அனுவாதம் - அதன்பின் அவனுக்கு ஆஹவனீயம் உபதேசம் செய்தது - பிராணன், ஆகாசம், த்யுலோகம், மின்னல் இவைகள் என்னுடைய நான்கு சரீரங்கள். இந்த மின்னலில் எந்த புருஷன் (தேவதை) காணப்படுகிறதோ அது நானே என்பது சமானமானதால் முன்போல் ஆகும். த்யுலோகம், ஆகாசத்துடன் மின்னலும் ஆகவனியத்தின் போக்ய ரூபத்துடன் சம்பந்தம் உள்ளது. ஏன்எனில் அவை கிரமமாக இவைகளை ஆசரியிக்கின்றன. மற்றவை முன்போல் ஆகும்.
इति त्रयोदशखण्डभाष्यम् ॥
ते होचुरुपकोसलैषा सोम्य तेऽस्मद्विद्यात्मविद्या चाचार्यस्तु ते गतिं वक्तेत्याजगाम हास्याचार्यस्तमाचार्योऽभ्युवादोपकोसल३ इति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - அவைகள் (அக்னிகள்) கூறின - உபகோசல! ஹே செளம்ய! அந்த உன்னுடைய வித்யையும் ஆத்மவித்யையும் உனக்கு கூறுவார். ஆச்சாரியர் உனக்கான மார்க்கத்தைக் கூறுவார் என்று. அதன்பின் அவனுடைய ஆச்சாரியர் வந்தார். அவனிடம் ஆச்சாரியர் கூறினார் - உபகோசல! என்று.
ते पुनः सम्भूयोचुः ह — उपकोसल एषा सोम्य ते तव अस्मद्विद्या अग्निविद्येत्यर्थः ; आत्मविद्या पूर्वोक्ता प्राणो ब्रह्म कं ब्रह्म खं ब्रह्मेति च । आचार्यस्तु ते गतिं वक्ता विद्याफलप्राप्तये इत्युक्त्वा उपरेमुरग्नयः । आजगाम ह अस्य आचार्यः कालेन । तं च शिष्यम् आचार्यो अभ्युवाद उपकोसल३ इति ॥
அனுவாதம் - அப்பொழுது அவை (அக்னிகள்) ஒன்று சேர்ந்து கூறின - ஹே உபகோசல! செளம்ய! இந்த எங்களுடைய வித்யை அதாவது அக்னிவித்யையை மேலும் ஆத்மவித்யா- முன்பு கூறப்பட்ட “பிராணன் பிரஹ்மம்”, கம் பிரஹ்ம க்கம் பிரஹ்மம் என்பது முதலிய ரூபமாய் கூறப்பட்டது. இப்பொழுது இந்த வித்யையின் பலத்தை அடைவதற்கான மார்க்கத்தை ஆச்சாரியர் உனக்குக் கூறுவர் என்று கூறி உபராமத்தை அடைந்தன. சிறிது நேரத்திற்குப்பின் ஆச்சாரியர் வந்தார். ஆச்சாரியர் அந்த சிஷ்யனிடம் கூறினார் - ஹே உபகோசல! என்று.
भगव इति ह प्रतिशुश्राव ब्रह्मविद इव सोम्य ते मुखं भाति को नु त्वानुशशासेति को नु मानुशिष्याद्भो इतीहापेव निह्नुत इमे नूनमीदृशा अन्यादृशा इतीहाग्नीनभ्यूदे किं नु सोम्य किल तेऽवोचन्निति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அவன் பகவானே என்று பதில் அளித்தான். (ஆச்சாரியர் கூறினார்) ஹே செளம்ய! நான் உன்முகத்தை பிரஹ்மத்தை அறிந்தவருக்கு சமானமாக அறிகின்றேன். உனக்கு யார் உபதேசம் செய்தார்? என்றதற்கு ஐயா! எனக்கு யார் தான் உபதேசம் செய்வர் என்று கூறி மெளனமாய் சும்மா இருந்தான். (அதற்குப்பின் அக்னிகளை சந்தேகமாய் கூறினான்) நிச்சயமாக இவைகள் (உபதேசம் செய்தன). அப்பொழுது வேறுவிதமாய் இருந்தது இப்பொழுது இவ்வாறு இருக்கிறது என்று தனக்கு அக்னிகள் உபதேசம் செய்தன என்று சூசகமாக கூறினான். (அப்பொழுது ஆச்சாரியர் கேட்டார்-) ஹே செளம்ய! அவைகள் உனக்கு எதை உபதேசித்தன என்று.
इदमिति ह प्रतिजज्ञे लोकान्वाव किल सोम्य तेऽवोचन्नहं तु ते तद्वक्ष्यामि यथा पुष्करपलाश आपो न श्लिष्यन्त एवमेवंविदि पापं कर्म न श्लिष्यत इति ब्रवीतु मे भगवानिति तस्मै होवाच ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - அப்பொழுது அவன் (உபகோசலன்) இதை கூறின என்று இவ்வாறு பதில் அளித்தான். (இதற்கு ஆச்சாரியர் கூறினார் -) ஹே செளம்ய! அவைகள் உனக்கு லோகங்களை மட்டுமே உபதேசம் செய்தன. நான் இப்பொழுது இதைக் கூறப்போகிறேன். எதை அறிந்தால் தாமரை இலை தண்ணீர் போல் பாபகர்மங்களின் சம்பந்தம் ஏற்படாதோ அதை இப்பொழுது உனக்குக் கூறபோகிறேன். அவன் கூறினான் - பகவானே எனக்குக் கூறுங்கள் என்று. அப்பொழுது ஆச்சாரியர் அவனிடம் கூறினார்.
भगव इति ह प्रतिशुश्राव । ब्रह्मविद इव सोम्य ते मुखं प्रसन्नं भाति को नु त्वा अनुशशास इत्युक्तः प्रत्याह — को नु मा अनुशिष्यात् अनुशासनं कुर्यात् भो भगवन् त्वयि प्रोषिते, इति इह अप इव निह्नुते अपनिह्नुत इवेति व्यवहितेन सम्बन्धः, न च अपनिह्नुते, न च यथावदग्निभिरुक्तं ब्रवीतीत्यभिप्रायः ।
அனுவாதம் - அவன் ஹே பகவானே என்று பதில் அளித்தான். அதற்கு ஆச்சாரியர் ஹே செளம்ய! உன்னுடைய முகம் பிரஹ்மத்தை அறிந்தவர்கள் போன்று பிரசன்னமாக இருக்கிறது. எவர் உனக்கு - உபதேசித்தார் என்று கேட்டதற்கு அவன் கூறினான்-பகவானே உங்களைத்தவிர யார் தான் உபதேசிக்க முடியும்? என்று. இவ்வாறு கூறியது அக்னி கூறியதை மறைத்ததுபோல் ஆயிற்று. “अप इव निते” (அப இவ நிண்ஹுருதே) என்பதில் “अप निते इव” (அப நிண்ஹுருதே இவ) என்று இவ்வாறு வியவஹித பதத்தால் சம்பந்தம் ஆகும். தாத்பர்யம் என்னவெனில் அக்னி கூறியவற்றை கூறவில்லையெனில் அதைப்பற்றி எவ்விதத்தாலும் மறைக்கப்பட்டதாக ஆகும்.
कथम् ? इमे अग्नयः मया परिचरिताः उक्तवन्तः नूनम् , यतस्त्वां दृष्ट्वा वेपमाना इव ईदृशा दृश्यन्ते पूर्वमन्यादृशाः सन्तः, इति इह अग्नीन् अभ्यूदे अभ्युक्तवान् काक्वा अग्नीन्दर्शयन् । किं नु सोम्य किल ते तुभ्यम् अवोचन् अग्नयः ? इति, पृष्टः इत्येवम् इदमुक्तवन्तः इत्येवं ह प्रतिजज्ञे प्रतिज्ञातवान् प्रतीकमात्रं किञ्चित् , न सर्वं यथोक्तमग्निभिरुक्तमवोचत् ।
அனுவாதம் - எவ்வாறு? என்னால் சேவை செய்யப்பட்ட அக்னிகள் எனக்கு உபதேசம் செய்தன. உங்களைப் பார்த்ததும் அவைகள் நடுங்குவதுபோல் தோன்றுகின்றன. முன்பு வேறுவிதமாக இருந்தன. இப்பொழுது வேறுவிதமாகக் காணப்படுகின்றன என்ற இந்த மாதிரியான வியூக திருஷ்டியால் அவன் அக்னிகளைப் பற்றி கூறினான். ஹே செளம்ய! அக்னிகள் உனக்கு என்ன கூறின? இவ்வாறு கேட்டபின் அவைகள் கூறின - அதாவது அக்னிகள் பிரதீகமாக மட்டும் சிறிது கூறியது. ஆனால் முழுமையாகக் கூறவில்லை என்று.
यत आह आचार्यः — लोकान्वाव पृथिव्यादीन् हे सोम्य किल ते अवोचन् , न ब्रह्म साकल्येन । अहं तु ते तुभ्यं तद्ब्रह्म यदिच्छसि त्वं श्रोतुं वक्ष्यामि, शृणु तस्य मयोच्यमानस्य ब्रह्मणो ज्ञानमाहात्म्यम् — यथा पुष्करपलाशे पद्मपत्रे आपो न श्लिष्यन्ते, एवं यथा वक्ष्यामि ब्रह्म, एवंविदि पापं कर्म न श्लिष्यते न सम्बध्यते इति । एवमुक्तवति आचार्ये आह उपकोसलः — ब्रवीतु मे भगवानिति । तस्मै ह उवाच आचार्यः ॥
அனுவாதம் - அதன்பின் ஆச்சாரியர் கூறினார் - ஹே செளம்ய! அக்னிகள் உனக்கு பிருதிவீ முதலிய லோகங்களை கூறினவேயன்றி பிரஹ்மத்தை முழுமையாக உபதேசிக்கவில்லை. நான் இப்பொழுது உனக்கு எதை அறியவிரும்பினாயோ அந்த பிரஹ்மத்தைப்பற்றி நீ கேட்பதற்காக கூறுகிறேன். அந்த என்னால் கூறப்போகின்ற பிரஹ்மத்தின் ஞான மஹாத்மியத்தைக் கேள். எவ்வாறு தெப்பத்தில் உள்ள தாமரை இலையை ஜலமானது ஒட்டாதோ அவ்வாறு நான் கூறப்போகின்ற பிரஹ்மத்தை உள்ளபடி அறிந்தவனை பாபகர்மம் ஒட்டாது. அவனுடன் சம்பந்தப்படாது, என்று கூறிய ஆச்சாரியாரிடம் உபகோசலன் இவ்வாறு கூறினான் - ஹே பகவன் எனக்குக் கூறுங்கள் என்றான். அவனுக்கு ஆச்சாரியர் நான் கூறுகின்றேன் என்றார்.
इति चतुर्दशखण्डभाष्यम् ॥
य एषोऽक्षिणि पुरुषो दृश्यत एष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्मेति तद्यद्यप्यस्मिन्सर्पिर्वोदकं वा सिञ्चति वर्त्मनी एव गच्छति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - இந்த எந்த புருஷன் நேத்திரத்தில் காணப்படுகிறானோ அதுவே ஆத்மா. அது அம்ருதம், அது அபயம் அதுவே பிரஹ்மம் என்று கூறினார். ஆகையால் நேத்திரத்தில் (கண்களில்) நெய்யோ, ஜலமோ (விட்டால்) தெளித்தால் வெளியே கன்னங்களில் வழிந்துவிடுகிறது.
य एषोऽक्षिणि पुरुषः दृश्यते निवृत्तचक्षुर्भिर्ब्रह्मचर्यादिसाधनसम्पन्नैः शान्तैर्विवेकिभिः दृष्टेर्द्रष्टा, ‘चक्षुषश्चक्षुः’ (के. उ. १ । २) इत्यादिश्रुत्यन्तरात् ।
அனுவாதம் - எவன் ஒருவன் பாஹ்ய இந்திரியங்கள் நிவிர்த்தியாகி உள்ள பிரஹ்மசர்யம் முதலிய சாதன சம்பன்னர்களாயும், சாந்தா ஆத்மாவானர்களாயும் உள்ள விவேகிகளால் எந்த நேத்திரத்தில் அந்தர்கதமாய் உள்ள திருஷ்டியின் திருஷ்டாவான புருஷன் பார்க்கப்படுகிறான். (அறியப்படுகிறான்). “चक्षुषक्षुः” என்பது முதலிய சுருதிகளாலும் அறியப்படுகிறது.
ननु अग्निभिरुक्तं वितथम् , यतः आचार्यस्तु ते गतिं वक्ता इति गतिमात्रस्य वक्तेत्यवोचन् , भविष्यद्विषयापरिज्ञानं च अग्नीनाम् ।
அனுவாதம் - சங்கை - ஆனால் அக்னிகளால் கூறப்பட்டது மித்தையாக தோன்றுகிறது. ஏன்எனில் ஆச்சாரியர் உனக்கு கதியைக் கூறுவார் என்று கூறி கதிமாத்ரத்தையே கூறுவார் என்று கூறியதால் அக்னிகளுக்கு இனிமேல் வரும் விஷயங்களின் சம்பந்தமான ஞானம் இல்லை என்று சித்திக்குமே என்பதாகும்.
नैष दोषः, सुखाकाशस्यैव अक्षिणि दृश्यत इति द्रष्टुरनुवादात् । एष आत्मा प्राणिनामिति ह उवाच एवमुक्तवान् ; एतत् यदेव आत्मतत्त्वमवोचाम, एतदमृतम् अमरणधर्मि अविनाशि अत एवाभयम् , यस्य हि विनाशाशङ्का तस्य भयोपपत्तिः तदभावादभयम् , अत एव एतद्ब्रह्म बृहदनन्तमिति ।
அனுவாதம் - ஸமாதானம் - இந்த தோஷம் இல்லை. சுகம் ஆகாசமே (कं खं यत् अग्निना उपदेशितं तदेव) = கம் க்கம் அக்னிகளால் உபதேசிக்கப்பட்டதேயே) கண்களில் காணப்படும் திருஷ்டா என்று ஆசாரியரால் அனுவாதம் செய்யப்பட்டது. (கூறப்பட்டது). இதுவே பிராணிகளின் ஆத்மா என்று இவ்வாறு கூறினார். இந்த ஆத்மதத்துவம் முன்பே விளக்கப்பட்டது. அது அம்ருதம் - அதாவது மரணதர்மம் அற்றது விநாசம் அற்றது (அவிநாசி). இதனால் அபயம் அதாவது பயமற்றது, எவருக்கு விநாசம் உண்டாகும் என்ற சங்கை உள்ளதோ அவருக்கே பயம் உண்டாகும். அது இல்லாததால் அபயம். அது பிருஹத் (பெரியதற்கெல்லாம் பெரியது) அனந்தம் என்பதால் பிரஹ்மம் ஆகும்.
किञ्च, अस्य ब्रह्मणोऽक्षिपुरुषस्य माहात्म्यम् — तत् तत्र पुरुषस्य स्थाने अक्षिणि यद्यप्यस्मिन्सर्पिर्वोदकं वा सिञ्चति, वर्त्मनी एव गच्छति पक्ष्मावेव गच्छति ; न चक्षुषा सम्बध्यते — पद्मपत्रेणेवोदकम् । स्थानस्याप्येतन्माहात्म्यम् , किं पुनः स्थानिनोऽक्षिपुरुषस्य निरञ्जनत्वं वक्तव्यमित्यभिप्रायः ॥
அனுவாதம் - மேலும் இந்த பிரஹ்மம் அதாவது நேத்திர புருஷனுடைய மாஹாத்மியம் ஆனது அந்த புருஷனுடைய ஸ்தானத்தில் கண்களில் (நேத்திரத்தில்) நெய்யோ தண்ணீரோ தெளித்தால் அது வெளியே கன்னங்களில் வழிகின்றது. தாமரை இலை தண்ணீர் போல் கண்களில் ஒட்டுவது இல்லை. அந்த ஸ்தானத்தில் உள்ளதற்கே இந்த மாஹாத்மியம் இருக்கும்பொழுது தாமரை இலைத் தண்ணீருக்கு சமானமாக கண்களில் உள்ள புருஷன் சம்பந்தப்படாமல் இருப்பது என்பது கூறவேண்டுமா? என்பது இதன் தாத்பர்யம்.
एतꣳ संयद्वाम इत्याचक्षत एतꣳ हि सर्वाणि वामान्यभिसंयन्ति सर्वाण्येनं वामान्यभिसंयन्ति य एवं वेद ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - இதை “संयद्वाम” (சம்யத்வாம - வாம என்றால் மங்கலமான பொருள்.) என்று கூறுகிறார்கள். ஏன் எனில் நமக்குத் தேவையான மங்கலமான வஸ்துக்கள் எல்லா பக்கங்களின் இருந்தும் சேரும். எவன் இவ்வாறு அறிகின்றானோ அவனை எல்லா நன்மை (மங்கலம்) தரும் வஸ்துக்கள் எல்லா பக்கங்களில் இருந்தும் அவனை அடையும்.
एतं यथोक्तं पुरुषं संयद्वाम इत्याचक्षते । कस्मात् ? यस्मादेतं सर्वाणि वामानि वननीयानि सम्भजनीयानि शोभनानि अभिसंयन्ति अभिसङ्गच्छन्तीत्यतः संयद्वामः । तथा एवंविदमेनं सर्वाणि वामान्यभिसंयन्ति य एवं वेद ॥
அனுவாதம் - கூறியவாறு உள்ள புருஷன் “संयद्वाम” (சம்யத்வாம - மங்கலகரமானவன்) என்று கூறுகின்றனர். எதற்காக? எதனால் இந்த எல்லா மங்கலகரமானவைகள் அதாவது சோபனமான பதார்த்தங்கள் அவனை எல்லா பக்கங்களில் இருந்தும் அடையும். இவ்வாறு அறிந்தவன் எல்லா வேண்டப்படும் இனிமையான சோபனமானவைகளை அடைகின்றான்.
एष उ एव वामनीरेष हि सर्वाणि वामानि नयति सर्वाणि वामानि नयति य एवं वेद ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - (பிரஹ்மமே) இவரே மங்கலத்தை அளிப்பவர் ஏன்எனில் அவரே எல்லா மங்கலங்களையும் தரிக்கின்றார். இவ்வாறு எவர் அறிகின்றாரோ அவரை எல்லா மங்கலங்களும் அடையும். எல்லா மங்கலங்களும் அடையும். இவ்வாறு அறிந்தவனுக்கு.
एष उ एव वामनीः, यस्मादेष हि सर्वाणि वामानि पुण्यकर्मफलानि पुण्यानुरूपं प्राणिभ्यो नयति प्रापयति वहति च आत्मधर्मत्वेन । विदुषः फलम् — सर्वाणि वामानि नयति य एवं वेद ॥
அனுவாதம் - இவனே மங்கலகரமானவன். ஏன் எனில் எல்லா மங்கலகரமான புண்ய கர்மபலன்களை புண்யங்களுக்குத் தகுந்தவாறு பிராணிகளுக்கு அடையும்படி செய்கிறார். இவ்வாறு அறிந்த வித்வான் எல்லா மங்கலகரமான பலன்களையும் எங்கும் கொண்டு செல்கின்றான்.
एष उ एव भामनीरेष हि सर्वेषु लोकेषु भाति सर्वेषु लोकेषु भाति य एवं वेद ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - இதுவே பிரகாசத்தை அளிப்பது. இதனாலேயே லோகங்கள் ஒளிமயமாகின்றன. இதை அறிந்தவன் எல்லா உலகங்களிலும் பிரகாசிக்கின்றான்.
एष उ एव भामनीः, एष हि यस्मात् सर्वेषु लोकेषु आदित्यचन्द्राग्न्यादिरूपैः भाति दीप्यते, ‘तस्य भासा सर्वमिदं विभाति’ (मु. उ. २ । २ । ११) इति श्रुतेः । अतो भामानि नयतीति भामनीः । य एवं वेद, असावपि सर्वेषु लोकेषु भाति ॥
அனுவாதம் - அதுவே ஒளிரிவிப்பது. எதனால் இந்த உலகங்களில் சூரியன் சந்திரன் அக்னி முதலிய ரூபங்களால் அதுவே பிரகாசிக்கின்றது. “तस्य भासा सर्वमिदं विभाति” தஸ்ய பாசா சர்வமிதம் விபாதி) என்பது சுருதி வாக்கியம். பிரகாசத்தை எல்லாவற்றிற்கும் கொண்டு செல்வதால் “भामनी” (பாமனீ = ஒளிர்வை அளிப்பது) எனப்படுகிறது. இதை இவ்வாறு எவர் அறிகின்றாரோ அவர் எல்லா உலகங்களிலும் பிரகாசிப்பார். (ஒளிமயமாக இருப்பார்).
अथ यदु चैवास्मिञ्छव्यं कुर्वन्ति यदि च नार्चिषमेवाभिसम्भवन्त्यर्चिषोऽहरह्न आपूर्यमाणपक्षमापूर्यमाणपक्षाद्यान्षडुदङ्ङेति मासाꣳस्तान्मासेभ्यः संवत्सरꣳ संवत्सरादादित्यमादित्याच्चन्द्रमसं चन्द्रमसो विद्युतं तत्पुरुषोऽमानवः स एनान्ब्रह्म गमयत्येष देवपथो ब्रह्मपथ एतेन प्रतिपद्यमाना इमं मानवमावर्तं नावर्तन्ते नावर्तन्ते ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - இப்பொழுது முன்பு கூறப்பட்ட பிரஹ்ம வேதாவின் கதி கூறப்படுகிறது) - அவர்களுக்கு அந்திமகர்மம் (சவகர்மம்) செய்தாலும், செய்யவிட்டாலும் அவர்கள் அர்ச்சிராபிமானி தேவதையை அடைகின்றனர். அதன்பின் அர்ச்சிராபிமானி தேவதையினால் பகல் அபிமானி தேவதையையும், பகல் அபிமானி தேவதையினால் சுக்ல அபிமானி தேவதையும் மேலும் சுக்ல அபிமானி தேவதையினால் உத்ராயணத்தின் ஆறுமாதங்களை அடைகின்றனர். மாதங்களினால் வருடங்களையும். வருடங்களினால் ஆதித்யனையும், ஆதித்யனால் சந்திரனையும், சந்திரனால் மின்னலையும் (विद्युत्) அடைகின்றனர். அங்கிருந்து அமானவ புருஷன் இவர்களை பிரஹ்ம லோகத்தை அடையச் செய்கிறான். இது தேவ மார்க்கம், அதாவது பிரஹ்ம மார்க்கமாகும். ஆகையால் இதை அறிந்த புருஷன் மானவ (மானிட) மண்டலத்திற்கு திரும்பமாட்டான் திரும்பமாட்டான்.
अथेदानीं यथोक्तब्रह्मविदः गतिरुच्यते । यत् यदि उ च एव अस्मिन् एवंविदि शव्यं शवकर्म मृते कुर्वन्ति, यदि च न कुर्वन्ति ऋत्विजः, सर्वथाप्येवंवित् तेन शवकर्मणा अकृतेनापि प्रतिबद्धो न ब्रह्म न प्राप्नोति ; न च कृतेन शवकर्मणा अस्य कश्चनाभ्यधिको लोकः, ‘न कर्मणा वर्धते नो कनीयान्’ (बृ. उ. ४ । ४ । २३) इति श्रुत्यन्तरात् ।
அனுவாதம் - இப்பொழுது முன்பு கூறப்பட்ட பிரஹ்மத்தின் கதி (மார்க்கம்) கூறப்படுகிறது - இவ்வாறு இதை அறிந்தவன் மரணமடைந்தபின் ரித்விக்களால் சவத்திற்கான கர்மம் செய்தாலும், செய்யாவிட்டாலும் இவ்வாறு அறிந்தவன் சவகர்மா செய்யாததினால் பிரஹ்மலோகப் பிராப்திக்கு தடை உண்டாகும் என்பதில்லை. அந்த சவகர்மம் செய்ததினால் இதைவிடப் பெரிய லோகமோ அடைவதில்லை. “न कर्मणा वर्धते नो कनीयान्” (ந கர்மணா வர்த்ததே நோ கனீயான்) என்ற சுருதி வாக்கியமும் பிரமாணமாகின்றது.
शवकर्मण्यनादरं दर्शयन् विद्यां स्तौति, न पुनः शवकर्म एवंविदः न कर्तव्यमिति । अक्रियमाणे हि शवकर्मणि कर्मणां फलारम्भे प्रतिबन्धः कश्चिदनुमीयतेऽन्यत्र । यत इह विद्याफलारम्भकाले शवकर्म स्याद्वा न वेति विद्यावतः अप्रतिबन्धेन फलारम्भं दर्शयति । ये सुखाकाशमक्षिस्थं संयद्वामो वामनीर्भामनीरित्येवंगुणमुपासते प्राणसहितामग्निविद्यां च, तेषामन्यत्कर्म भवतु मा वा भूत् सर्वथा अपि ते अर्चिषमेवाभिसम्भवन्ति अर्चिरभिमानिनीं देवतामभिसम्भवन्ति प्रतिपद्यन्त इत्यर्थः ।
அனுவாதம் - சவகர்மத்தில் ஆதரவு இல்லை என்பதை காண்பித்து வித்யை ஸ்துதிக்கப்படுகிறது. மேலும் சவ கர்மத்தை இவ்வாறு அறிந்தவன் செய்ய வேண்டியது இல்லை என்பது இல்லை. அவித்வான்கள் சவக்கர்மத்தை செய்யாவிடில் பலம் ஏற்படுவதில் பிரதிபந்தம் ஏற்படும். ஆனால் இங்கு பல ஆரம்பகாலத்தில் சவகர்மா செய்தாலும் செய்யாவிட்டாலும் வித்யை உடையவர்களுக்கு பிரதிபந்தம் (தடங்கள்) இல்லாமல் பலம் ஆரம்பிக்கும் என்பது தெரிவிக்கிறது. நேத்திரத்தில் இருக்கும் சுக ஆகாசம், சம்யத்வாமம் (संयद्वामो) வாமநீ அதாவது பிரகாசிப்பது ஆகிய குணங்களுடன் உள்ளதும், பிராணத்துடன் கூடியதுமான அக்னி வித்யையை உபாசிக்கின்றனரோ அவர்களுக்கு கர்மம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எவ்வகையிலும் அர்ச்சிஷமே அடையப்படுகிறது. அதாவது அர்ச்சிர அபிமானி தேவதையை அடைகின்றனர்
अर्चिषः अर्चिर्देवताया अहः अहरभिमानिनीं देवताम् , अह्नः आपूर्यमाणपक्षं शुक्लपक्षदेवताम् , आपूर्यमाणपक्षात् यान्षाण्मासान् उदङ् उत्तरां दिशम् एति सविता तान्मासान् उत्तरायणदेवताम् , तेभ्यो मासेभ्यः संवत्सरं संवत्सरदेवताम् , ततः संवत्सरादादित्यम् , आदित्याच्चन्द्रमसम् , चन्द्रमसो विद्युतम् । तत् तत्रस्थान् तान् पुरुषः कश्चिद्ब्रह्मलोकादेत्य अमानवः मानव्यां सृष्टौ भवः मानवः न मानवः अमानवः स पुरुषः एनान्ब्रह्म सत्यलोकस्थं गमयति गन्तृगन्तव्यगमयितृत्वव्यपदेशेभ्यः, सन्मात्रब्रह्मप्राप्तौ तदनुपपत्तेः । ‘ब्रह्मैव सन्ब्रह्माप्येति’ (बृ. उ. ४ । ४ । ६) इति हि तत्र वक्तुं न्याय्यम् । सर्वभेदनिरासेन सन्मात्रप्रतिपत्तिं वक्ष्यति । न च अदृष्टो मार्गोऽगमनायोपतिष्ठते, ‘स एनमविदितो न भुनक्ति’ (बृ. उ. १ । ४ । १५) इति श्रुत्यन्तरात् ।
அனுவாதம் - அர்ச்சிஷ: - அர்சிஷ அபிமான தேவதையினால் பகல், பகல் அபிமானி தேவதையினால் ஆபூர்யமான பக்ஷம் அதாவது சுக்லபக்ஷம், சுக்லபக்ஷத்தினால் ஆறு மாதங்கள் சூரியன் வடக்கு திசையில் செல்கின்றது. அந்த உத்தராயணத்தில் ஆறு மாதங்களால் வருடங்கள். வருடங்களின் அபிமான தேவதை அடையப்படுகிறது. அதன்பின் வருடங்களினால் ஆதித்தியன், அந்த ஆதித்தியனிலிருந்து சந்திரன். அந்த சந்திரனால் மின்னல் அடையப்படுகிறது. இதில் நிலைத்திருக்கும் ஒரு புருஷன் (உபாசனை) பிரஹ்ம லோகத்தை அடையச் செய்கின்றான். அதன்பின் அவன் (अमानवः) அமானவனால் மானவம் என்பது .சிருஷ்டியினால் உண்டாவது. அந்தமானவ பாவம் இல்லாதது “अमानवः” (அமானவ:). அந்த அமானவ புருஷன் பிரஹ்மலோகத்திற்கு வந்து சத்திய லோகத்தில் இருக்கும் பிரஹ்மத்தின் அருகில் அடையச் செய்கின்றான். அடைபவன், அடையப்பட வேண்டியது, அடைவிப்பவன் என்று கூறுவதால் இங்கு காரிய பிரஹ்ம அபிப்பிராயத்தில் ஆகும். சத் மாத்திரமாய் உள்ள பிரஹ்மத்தில் இது பொருந்தாது. பிரஹ்மமாகவே இருந்துகொண்டு பிரஹ்மமாகவே ஆகின்றான் என்று கூறுவதே பொருத்தமாகும். எல்லா பேதங்களையும் நீக்கி சத் மாத்திரத்தையே அடைவதைக் கூறப்போகிறார். அதன் மார்க்கத்தை அறியாமல் அதை அடையமுடியாது “स एनमविदितो न भुनक्ति” (ச எனமவிதிதோ ந புனக்த்தி) என்ற வேறு சுருதியினாலும் அறிகிறோம்.
एष देवपथः देवैरर्चिरादिभिर्गमयितृत्वेनाधिकृतैरुपलक्षितः पन्था देवपथ उच्यते । ब्रह्म गन्तव्यं तेन च उपलक्षित इति ब्रह्मपथः । एतेन प्रतिपद्यमाना गच्छन्तो ब्रह्म इमं मानवं मनुसम्बन्धिनं मनोः सृष्टिलक्षणमावर्तं नावर्तन्ते आवर्तन्तेऽस्मिञ्जननमरणप्रबन्धचक्रारूढा घटीयन्त्रवत्पुनः पुनरित्यावर्तः तं न प्रतिपद्यन्ते । नावर्तन्ते इति द्विरुक्तिः सफलाया विद्यायाः परिसमाप्तिप्रदर्शनार्था ॥
அனுவாதம் - இது தேவமார்க்கம் - அர்ச்சிரா முதலிய மார்க்கங்களால் உபாசகர்களுக்கு அவர்கள் அடைய வேண்டியதற்கான அதிகாரம் உள்ள தேவதைகளால் உபலக்ஷிக்கப்பட்டதால் தேவ மார்க்கம் எனப்படுகிறது. அவ்வாறே பிரஹ்ம அடையவேண்டிய ஸ்தானமாய் இருப்பதால் அதனால் உபலக்ஷிக்கப்படுவதால் பிரஹ்ம மார்க்கம் எனப்படுகிறது. இதனால் அடைய வேண்டிய பிரஹ்மத்தினை அடைந்தவன் “मानवं” (மானவம்) மனுவின் சிருஷ்டிரூப ஆவரத்தனத்தில் விழமாட்டான். நீர் இறைக்கும் எந்திரம் போல் ஜனனமரண பிரதிபந்த சக்கிரத்தில் ஆவர்த்தனம் செய்பவன் போல் அதில் மாட்டிக்கொள்ளமாட்டான். “नावर्तन्त” “नावर्तन्त” (நாவர்த்தந்த) என்று இருமுறை கூறியது பலத்துடன் கூடிய வித்யையின் சமாப்த்திக்காக ஆகிறது.
इति पञ्चदशखण्डभाष्यम् ॥
रहस्यप्रकरणे प्रसङ्गात् आरण्यकत्वसामान्याच्च यज्ञे क्षत उत्पन्ने व्याहृतयः प्रायश्चित्तार्था विधातव्याः, तदभिज्ञस्य च ऋत्विजो ब्रह्मणो मौनमित्यत इदमारभ्यते —
அனுவாதம் - அ.கை - ரஹஸ்ய (உபாசனா) பிரகரணத்தில் (மார்க்உபதேசம்) கூறப்பட்டதால் முன்பின் பிரகரணங்களில் ஆரண்யகத்துவத்தில் சமானமாக இருப்பதாலும் அல்லது யக்ஞத்தில் ஏதாவது குறை ஏற்பட்டாலும் அதற்கான பிராயச்சித்தத்திற்கான வியாகிருதிகளின் விதானம் செய்யவேண்டும். அவ்வாறே பிராயச்சித்தத்தை அறிந்த ரித்விக் பிராஹ்மணனுக்கு மெளனத்தை விதானம் செய்யவேண்டும் என்பதற்காக இந்தப் பிரகரணம் ஆரம்பிக்கப்படுகிறது.
एष ह वै यज्ञो योऽयं पवत एष ह यन्निदं सर्वं पुनाति यदेष यन्निदं सर्वं पुनाति तस्मादेष एव यज्ञस्तस्य मनश्च वाक्च वर्तनी ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - எது வீடுகிறதோ அது யக்ஞம். எது வீசுகிறதோ அது நிச்சயமாக உலகம் முழுவதையும் பவித்திரம் (தூய்மை) ஆக்குகிறது. ஏன்எனில் அது வீசிக்கொண்டு செல்லும்பொழுது எல்லா சம்சாரத்தையும் பவித்திரமாக்குகிறது ஆகையால் இது யக்ஞம். மனமும் வாக்கும் அதன் இரண்டு மார்க்கங்களாகும்.
एष वै एष वायुः योऽयं पवते अयं यज्ञः । ह वै इति प्रसिद्धार्थावद्योतकौ निपातौ । वायुप्रतिष्ठो हि यज्ञः प्रसिद्धः श्रुतिषु, ‘स्वाहरा वातेधाः’ ‘अयं वै यज्ञो योऽयं पवते’ (ऐ. ब्रा. २५ । ८) इत्यादिश्रुतिभ्यः । वात एव हि चलनात्मकत्वात्क्रियासमवायी, ‘वात एव यज्ञस्यारम्भको वातः प्रतिष्ठा’ इति च श्रवणात् ।
அனுவாதம் - “नावर्तन्त” (ஏஷ ஹ வை) - எந்த வாயு வீசுகிறதோ அது யக்ஞம். “नावर्तन्त” (ஹ வா) என்றது பிரசித்தமான அர்த்தத்தை வெளிப்படுத்தவது ஆகும். சுருதிகளில் யக்ஞம் வாயுரூப பிரதிஷ்டை என்பது பிரசித்தமாகும். “स्वाहा वाते धाः” (ஸ்வாஹா வாதேதா:) “अयं वै यज्ञो योऽयं पवते” (அயம் வை யஞோ யோஅயம் பவதே) என்று சுருதிகளாலும் அறியப்படுகிறது. சலன (வீசும்) ஆத்மக ரூபமானதால் வாயுவின் கிரியையுடன் சமவாய (அபின்ன) சம்பந்தமாகும். அவ்வாறே சுருதியும் கூறுகிறது - “वात एव यज्ञस्यारम्भको वातः प्रतिष्द्भा” (வாத ஏவ யக்ஞஸ்யாரம்ப கோவாத: ப்ரதிஷ்டா) என்று சுருதி கூறுகிறது.
एष ह यन् गच्छन् चलन् इदं सर्वं जगत् पुनाति पावयति शोधयति । न हि अचलतः शुद्धिरस्ति । दोषनिरसनं चलतो हि दृष्टं न स्थिरस्य । यत् यस्माच्च यन् एष इदं सर्वं पुनाति, तस्मादेष एव यज्ञः यत्पुनातीति ।
அனுவாதம் - இது சென்றுகொண்டே எல்லாவற்றையும் புனிதப்படுத்துகிறது. அதாவது தூய்மைப்படுத்துகிறது. அது செல்லவில்லையெனில் (அதாவது விகித கர்மா அனுஷ்டிக்கவில்லையெனில்) அது சுத்தமாகாது. தோஷ நிவிர்த்தியானது (யக்ஞத்தை) நடத்துவதினாலேயே காணப்படுகிறது. அது அசையாமல் (செய்யாமல்) இருந்தால் உண்டாகாது. ஏன்எனில் அது சென்று கொண்டே இந்த ஜகத் முழுவதையும் பவித்திரமாக்குகின்றது. ஆகையால் இது யக்ஞம். ஏன் எனில் தூய்மைப்படுத்துகிறது.
तस्यास्यैवं विशिष्टस्य यज्ञस्य वाक्च मन्त्रोच्चारणे व्यापृता, मनश्च यथाभूतार्थज्ञाने व्यापृतम् , ते एते वाङ्मनसे वर्तनी मार्गौ, याभ्यां यज्ञस्तायमानः प्रवर्तते ते वर्तनी ; ‘प्राणापानपरिचलनवत्या हि वाचश्चित्तस्य चोत्तरोत्तरक्रमो यद्यज्ञः’ (ऐ. आ. २ । ३) इति हि श्रुत्यन्तरम् । अतो वाङ्मनसाभ्यां यज्ञो वर्तत इति वाङ्मनसे वर्तनी उच्येते यज्ञस्य ॥
அனுவாதம் - அந்த இவ்வாறு விசேஷமான யக்ஞத்தின் மந்திரத்தை உச்சரிப்பில் பிரவிர்த்திக்கும் வாக்கும் யதார்த்த வஸ்துவின் ஞானத்தில் பிரவிர்த்திக்கும் மனமும் ஆகிய இரண்டும் அதாவது வாக்கும், மனமும் மார்க்கங்களாகும். இவைகளால் யக்ஞம் நடத்தப்படுவதற்கு பிரவித்திப்பதால் இவைகள் மார்க்கங்கள் ஆகும். “प्राणापानपरिचलनवत्या हि वाचित्तस्य चोत्तरोेत्तरक्रमो यद्यज्ञः” (பிராணாபான பரிசலனவத்யா ஹி வாச சித்தஸ்ய சோத்தரோத்தர க்ரம: யக்ஞ:) என்று வேறு சுருதியாளும் அறிகிறோம். ஆகையால் வாக், மனதினால் யக்ஞம் பிரவிர்த்திக்கின்றது என்பதால் யக்ஞத்திற்கு வாக்கும், மனதும் மார்க்கங்கள் எனப்படுகின்றன.
तयोरन्यतरां मनसा संस्करोति ब्रह्मा वाचा होताध्वर्युरुद्गातान्यतरां स यत्रोपाकृते प्रातरनुवाके पुरा परिधानीयाया ब्रह्मा व्यवदति ॥ २ ॥ अन्यतरामेव वर्तनीꣳ सꣳस्करोति हीयतेऽन्यतरा स यथैकपाद्व्रजन्‌रथो वैकेन चक्रेण वर्तमानो रिष्यत्येवमस्य यज्ञो रिष्यति यज्ञं रिष्यन्तं यजमानोऽनुरिष्यति स इष्ट्वा पापीयान्भवति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - அவைகளில் ஒரு மார்க்கத்தை பிரஹ்மா தன் மனதின் மூலமாக தூய்மைப்படுத்துகிறார். (பவித்திரமாக்குகிறார்). அவ்வாறே ஹோதா, அத்வர்யு, உத்காதா இவர்கள் வாக்கினால் மற்ற மார்க்கத்தை தூய்மைப்படுத்துகின்றனர். பிராதரர் அனுவர்க்கம் ஆரம்பித்தபின் பரிதானியாரிக்கை உச்சரிக்கும் முன் பிரஹ்மா பேசினால் அது ஒரு மார்க்கத்தைத் தூய்மைப்படுத்தும். மறு மார்க்கம் நஷ்டமாகிவிடும். எவ்வாறு ஒற்றைக் காலால் நடப்பவன் துன்புறுவது போலும் ஒற்றை சக்கிரத்தால் செல்லும் ரதம் உடைவது போலும் அவனுடைய யக்ஞமும் நாசத்தை அடையும். யக்ஞம் நாசமடைவதால் யஜமானனும் நாசம் அடைகின்றான். இவ்வாறு யக்ஞம் செய்தால் அதிகபாபம் உடையவனாகின்றான். (மஹாபாபி ஆகின்றான்).
तयोः वर्तन्योः अन्यतरां वर्तनीं मनसा विवेकज्ञानवता संस्करोति ब्रह्मा ऋत्विक् , वाचा वर्तन्या होताध्वर्युरुद्गाता इत्येते त्रयोऽपि ऋत्विजः अन्यतरां वाग्लक्षणां वर्तनीं वाचैव संस्कुर्वन्ति । तत्रैवं सति वाङ्मनसे वर्तनी संस्कार्ये यज्ञे ।
அனுவாதம் - இந்த இரண்டு மார்க்கங்களில் ஒரு மார்க்கத்தை பிரஹ்ம என்னும் ரித்விக் விவேகமும் ஞானத்துடன் கூடிய மனதால் தூய்மைப்படுத்துகிறார். வாக் என்னும் மார்க்கத்தால் ஹோதா அத்வர்யு உத்காதா ஆகிய மூன்று ரித்விக்களும் வேறு மார்க்கமான வாக் லக்ஷண மார்க்கமான வாக்கால் தூய்மைப்படுத்துகின்றனர். இவ்வாறு இருப்பதால் யக்ஞத்தில் வாக் மனம் ஆகிய மார்க்கங்களால் தூய்மைப்படுத்த வேண்டும்.
अथ स ब्रह्मा यत्र यस्मिन्काले उपाकृते प्रारब्धे प्रातरनुवाके शस्त्रे, पुरा पूर्वं परिधानीयाया ऋचः ब्रह्मा एतस्मिन्नन्तरे काले व्यवदति मौनं परित्यजति यदि, तदा अन्यतरामेव वाग्वर्तनीं संस्करोति । ब्रह्मणा संस्क्रियमाणा मनोवर्तनी हीयते विनश्यति छिद्रीभवति अन्यतरा ; स यज्ञः वाग्वर्तन्यैव अन्यतरया वर्तितुमशक्नुवन् रिष्यति ।
அனுவாதம் - இதற்குபின் அந்த பிரஹ்மா எப்பொழுது பிராதர அனுவாக் சஸ்த்திரத்தை (யாகத்தை) ஆரம்பிக்கப்படும்பொழுது பரிதானீயா ரிக்கை உச்சரித்துக்கொண்டே பிரஹ்மா மெளணத்தை களைத்துவிட்டார். அதாவது வாக் ரூப மார்க்கத்தின் சம்ஸ்காரமே உண்டானது. இவ்வாறு பிரஹ்மா மூலமாக சம்ஸ்காரம் அற்றதாய் அந்த மனரூப மார்க்கம் நஷ்டமாகிறது. அதாவது குறை உடையதாக ஆகிறது. அப்பொழுது அந்த யக்ஞம் வாக் மார்க்கம் ஒன்றையே தழுவி இருப்பதால் அது சாமர்த்யமற்றதாய் நஷ்டமாகிறது.
कथमिवेति, आह — स यथैकपात् पुरुषः व्रजन् गच्छन्नध्वानं रिष्यति, रथो वैकेन चक्रेण वर्तमानो गच्छन् रिष्यति, एवमस्य यजमानस्य कुब्रह्मणा यज्ञो रिष्यति विनश्यति । यज्ञं रिष्यन्तं यजमानोऽनुरिष्यति । यज्ञप्राणो हि यजमानः । अतो युक्तो यज्ञरेषे रेषस्तस्य । सः तं यज्ञमिष्ट्वा तादृशं पापीयान् पापतरो भवति ॥
அனுவாதம் - எவ்வாறு? அதற்கு சுருதி கூறுகிறது - அவன் எவ்வாறு ஒரு பாதம் உடைய புருஷன் செல்லும் பொழுது வழியில் விழுந்துவிடுகிறானோ, ஒரே சக்கரம் உள்ள தேர் போகும்பொழுது எவ்வாறு நஷ்டமாகிறதோ அவ்வாறு இந்த அருகதை அற்ற பிரஹ்மாவினால் இந்த யஜமானனின் யக்ஞம் நஷ்டமாகிறது. யக்ஞம் நஷ்டமானதால் யஜமானனும் நஷ்டமாகின்றான். ஏன் எனில் எஜமானனின் பிராணன் யக்ஞமாகும். ஆகையால் யக்ஞம் நாசம் ஆகும்பொழுது யஜமானனும் நாசம் அடைகின்றான் என்று கூறுவது சரியே. அவன் இவ்வாறு யக்ஞத்தை யக்ஞம் செய்து பாபீ அதாவது மிகுந்த பாபம் உடையவனாகின்றான்.
अथ यत्रोपाकृते प्रातरनुवाके न पुरा परिधानीयाया ब्रह्मा व्यवदत्युभे एव वर्तनी संस्कुर्वन्ति न हीयतेऽन्यतरा ॥ ४ ॥ स यथोभयपाद्व्रजन्‌रथो वोभाभ्यां चक्राभ्यां वर्तमानः प्रतितिष्ठत्येवमस्य यज्ञः प्रतितिष्ठति यज्ञं प्रतितिष्ठन्तं यजमानोऽनुप्रतितिष्ठति स इष्ट्वा श्रेयान्भवति ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - மேலும் பிராத அனுவாக்கம் ஆரம்பித்தபின் பரிதாநீயா ரிக்கினால் அதற்குமுன் பிரஹ்மா உச்சரிக்கவில்லையெனில் (எல்லா ரித்விக்களும் சேர்ந்து) இரண்டு மார்க்கங்களையும் தூய்மைப்படுத்துகின்றனர். அதனால் ஒரு மார்க்கமும் நஷ்டமாகாது. எவ்வாறு இரண்டு கால்களால் செல்லும் புருஷன், அல்லது இரண்டு சக்கரங்களால் செல்லும் ரதமும் ஸ்திரமாய் நிலைத்து இருக்கின்றதோ அவ்வாறே இந்த யக்ஞமும் நிலைத்திருக்கும். யக்ஞம் நிலைத்திருப்பதால் எஜமானனும் நிலைத்து இருக்கின்றான். இவ்வாறு யக்ஞம் செய்து ஸ்ரேஷ்டனாகின்றான்.
अथ पुनः यत्र ब्रह्मा विद्वान् मौनं परिगृह्य वाग्विसर्गमकुर्वन् वर्तते यावत्परिधानीयाया न व्यवदति, तथैव सर्वर्त्विजः, उभे एव वर्तनी संस्कुर्वन्ति न हीयतेऽन्यतरापि । किमिवेत्याह पूर्वोक्तविपरीतौ दृष्टान्तौ । एवमस्य यजमानस्य यज्ञः स्ववर्तनीभ्यां वर्तमानः प्रतितिष्ठति स्वेन आत्मनाविनश्यन्वर्तत इत्यर्थः । यज्ञं प्रतितिष्ठन्तं यजमानोऽनुप्रतितिष्ठति । सः यजमानः एवं मौनविज्ञानवद्ब्रह्मोपेतं यज्ञमिष्ट्वा श्रेयान्भवति श्रेष्ठो भवतीत्यर्थः ॥
அனுவாதம் - ஆனால் இந்த விஷயத்தில் வித்வானாகிய பிரஹ்மா மெளணத்தை மேற்கொண்டு வாக்கினால் பரிதானியின் ரிக்வரை உச்சரிக்காமல் இருந்துகொண்டு மெளணத்தை விடமாலும், அவ்வாறே மற்ற ரித்விக்களும் நியமத்துடன் இருப்பதால் அங்கு அவர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த இரண்டு மார்க்கங்களையும் பவித்தரம் (தூய்மை) ஆக்குகின்றனர். அதனால் ஒரு மார்க்கமும் நஷ்டமாவதில்லை. இவ்வாறு நஷ்டமாவதில்லை என்பதற்கு சுருதி முன்பே விபரீத திருஷ்டாந்தத்தை அளித்தது. தாத்பர்யம் என்னவெனில் இவ்வாறு தன்னுடைய இரண்டு மார்க்கங்கள் மூலமாய் நிலைத்திருந்து இந்த யஜமானனுடைய யக்ஞம் பிரதிஷ்டிதமாகிறது. தன்னுடைய நிலையிலிருந்து மாறாமல் இருக்கின்றான். யக்ஞம் இவ்வாறு நிலைபெற்றவுடன் யஜமானனும் நிலைபெறுகின்றான். அந்த யஜமானன் இவ்வாறு மெளணம், விக்ஞானத்துடன் கூடிய பிரஹ்மாவுடன் சேர்ந்து யக்ஞத்தை செய்து சிரேயசை உடையவனாகின்றான் அதாவது சிரேஷ்டனாகின்றான்.
इति षोडशखण्डभाष्यम् ॥
अत्र ब्रह्मणो मौनं विहितम् , तद्रेषे ब्रह्मत्वकर्मणि च अथान्यस्मिंश्च हौत्रादिकर्मरेषे व्याहृतिहोमः प्रायश्चित्तमिति तदर्थं व्याहृतयो विधातव्या इत्याह —
அனுவாதம் - இங்கு பிரஹ்மாவிற்கு மெளனம் விதிக்கப்பட்டது. அது நஷ்டமான பிரஹ்மத்தின் கர்மாவிலும், மேலும் மற்ற ஹோத்திர முதலிய கர்மங்களிலும் பாதிப்பு ஏற்பட்டால் வ்யாஹ்ருதி ஹோமம் பிராயச்சித்தம் ஆகும் என்பதால் அந்த வியாகிருதிகளை விதானம் செய்ய வேண்டும் என்பதற்காக ஸ்ருதி இவ்வாறு கூறுகிறது.
प्रजापतिर्लोकानभ्यतपत्तेषां तप्यमानानां रसान्प्रावृहदग्निं पृथिव्या वायुमन्तरिक्षादादित्यं दिवः ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - பிரஜாபதியானவர் லோகங்களைக் குறித்து தியானரூப தபஸ் செய்தார். அந்த தபஸ் செய்யும்பொழுது அந்த லோகங்களில் இருந்து ரசத்தை எடுத்தார். பிருதிவியிலிருந்து அக்னி, அந்தரிக்ஷத்திலிருந்து வாயு. மேலும் த்யுலோகத்திலிருந்து ஆதித்தியனையும் அடைந்தார்.
प्रजापतिः लोकानभ्यतपत् लोकानुद्दिश्य तत्र सारजिघृक्षया ध्यानलक्षणं तपश्चचार । तेषां तप्यमानानां लोकानां रसान् साररूपान्प्रावृहत् उद्धृतवान् जग्राहेत्यर्थः । कान् ? अग्निं रसं पृथिव्याः, वायुमन्तरिक्षात् , आदित्यं दिवः ॥
அனுவாதம் - “प्रजापतिः लोकान्” (பிரஜாபதி: லோகான்) - லோகங்களை உத்தேசித்து தபஸ் செய்தார். அதாவது அவைகளின் சாரத்தை (ரசத்தை) கிரஹிப்பதற்கு இச்சை கொண்டு தியானரூப தபஸ் செய்தார். இவ்வாறு தபசினால் அடைந்த இந்த லோகங்களின் சாரரூப ரசங்களை கிரஹித்துக்கொண்டார். எந்த ரசங்களை கிரஹித்தார்? பிருதிவியிலிருந்து அக்னி ரசத்தையும், அந்தரிக்ஷத்திலிருந்து வாயு ரசத்தையும், த்யுலோகத்திலிருந்து ஆதித்ய ரசத்தையும் கிரஹித்தார்.
स एतास्तिस्रो देवता अभ्यतपत्तासां तप्यमानानाꣳ रसान्प्रावृहदग्नेर्‌ऋचो वायोर्यजूंषि सामान्यादित्यात् ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அதன்பின் அவர் இந்த மூன்று தேவதைகளைக்குறித்து தபஸ் செய்தார். அந்த தபஸினால் தேவதைகளிடம் இருந்து ரசத்தை எடுத்தார். அக்னியில் இருந்து ரிக், வாயுவிலிருந்து யஜுஸ், ஆதித்யனிடமிருந்து சாமம் ஆகியவைகளை கிரஹித்தார்.
पुनरप्येवमेवाग्न्याद्याः स एतास्तिस्रो देवता उद्दिश्य अभ्यतपत् । ततोऽपि सारं रसं त्रयीविद्यां जग्राह ॥
அனுவாதம் - மறுபடியும் அவ்வாறே அவர் அக்னி முதலிய அந்த தேவதைகளைக் குறித்து தபஸ் செய்தார். அதிலிருந்தும் “त्रयी विद्या” (த்ரயீ வித்யா) எனப்படும் மூன்று வித்யா ரூபமான சாரத்தை அதாவது ரசத்தை கிரஹித்தார்.
स एतां त्रयीं विद्यामभ्यतपत्तस्यास्तप्यमानाया रसान्प्रावृहद्भूरित्यृग्भ्यो भुवरिति यजुर्भ्यः स्वरिति सामभ्यः ॥ ३ ॥ तद्यदृक्तो रिष्येद्भूः स्वाहेति गार्हपत्ये जुहुयादृचामेव तद्रसेनर्चां वीर्येणर्चां यज्ञस्य विरिष्टं सन्दधाति ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - அதன்பின் அவர் அந்த த்ரயீ (மூன்று) வித்யையைக் குறித்து தபஸ் செய்தார். அந்த தபஸினால் உண்டான வித்யையில் இருந்து ரசத்தை எடுத்தார். ரிக் ஸ்ருதியிலிருந்து “भूः” (பூ:), யஜுஸ் ஸ்ருதியிலிருந்து “भुवः” (புவ:), அவ்வாறே சாம ஸ்ருதியிலிருந்து “स्व” (ஸ்வ:) என்ற இந்த ரசங்களை கிரஹித்தார். எந்த யக்ஞத்தில் ரிக் சுருதிகளின் சம்பந்தம் வந்தத்தில் குறை ஏற்படுகிறதோ அப்பொழுது “भूः स्वाहा” (பூ: ஸ்வாஹா) என்று கூறி கார்ஹபத்யாக்னியில் ஹவனம் செய்கின்றனர். இவ்வாறு ரிக்குகளின் ரசத்தால் ரிக்குகளின் வீர்யத்தால் ரிக் சம்பந்தமான யக்ஞத்தின் குறைபாடு நீங்கி பூர்த்தியாகிறது.
स एतां पुनरभ्यतपत् त्रयीं विद्याम् । तस्यास्तप्यमानाया रसं भूरिति व्याहृतिम् ऋग्भ्यो जग्राह ; भुवरिति व्याहृतिं यजुर्भ्यः ; स्वरिति व्याहृतिं सामभ्यः । अत एव लोकदेववेदरसा महाव्याहृतयः । अतः तत् तत्र यज्ञे यदि ऋक्तः ऋक्सम्बन्धादृङ्निमित्तं रिष्येत् यज्ञः क्षतं प्राप्नुयात् , भूः स्वाहेति गार्हपत्ये जुहुयात् । सा तत्र प्रायश्चित्तिः । कथम् ? ऋचामेव, तदिति क्रियाविशेषणम् , रसेन ऋचां विर्येण ओजसा ऋचां यज्ञस्य ऋक्सम्बन्धिनो यज्ञस्य विरिष्टं विच्छिन्नं क्षतरूपमुत्पन्नं सन्दधाति प्रतिसन्धत्ते ॥
அனுவாதம் - அதன்பின் அவர் இந்த த்ரயீ வித்யா குறித்து மறுபடியும் தபஸ் செய்தார். அதனால் ரிக்கில் இருந்து வித்யையின் ரசத்தை “भूः” (பூ:) என்ற வியாஹிருதியையும், யஜஸ்ஸிலிருந்து “भुवः”(புவ:) வியாஹ்ருதியையும், சாமத்தில் இருந்து “स्व” (ஸ்வ:) என்ற வியாஹ்ருதியையும் கிரஹித்தார். ஆகையால்தான் லோகம், தேவதை, வேதம் ஆகிய ரசங்கள் மஹா வ்யாஹ்ருதங்கள் ஆகும். ஆகையால் அந்த அந்த யக்ஞத்தில் ரிக் சம்பந்தமானதில் குறைவு ஏற்பட்டால் “भूः स्वाहा” (பூ: ஸவாஹா) என்று உச்சரித்துக் கொண்டு கார்ஹபத்யாக்னியில் ஹோமம் செய்கின்றனர். அதை பிராயசித்தம் என்கின்றனர். எவ்வாறு ரிக்குகளின் ரசத்தால் ரிக்குகளுக்கு வீர்யம், ஒஜஸ் மூலமாக யக்ஞத்தின் ரிக் சம்பந்தமான குறை உண்டானால் அதை நீக்கி பூர்த்தி செய்கிறது.
स यदि यजुष्टो रिष्येद्भुवः स्वाहेति दक्षिणाग्नौ जुहुयाद्यजुषामेव तद्रसेन यजुषां वीर्येण यजुषां यज्ञस्य विरिष्टं सन्दधाति ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - யஜுஸ் ரிக்குகளால் குறை (தஹ்று) ஏற்பட்டால் “भूः स्वाहा” (புவ: ஸ்வாஹா) என்று கூறி தக்ஷிணா அக்னியில் ஆஹுதி செய்யவேண்டும். இவ்வாறு யஜுஸ்களின் ரசத்தால் யஜுஸ்களின் வீர்யத்தால் யக்ஞத்தால் யஜுஸ் சம்பந்தமான குறை நீக்கி பிரஹ்மா பூர்த்தி செய்கிறார்.
अथ यदि सामतो रिष्येत्स्वः स्वाहेत्याहवनीये जुहुयात्साम्नामेव तद्रसेन साम्नां वीर्येण साम्नां यज्ञस्य विरिष्टं सन्दधाति ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - மேலும் சாம ரிக்குகளால் குறை ஏற்பட்டால் “स्वः स्वाहा” (ஸ்வ: ஸ்வாஹா) என்று ஆஹவநீய அக்னியில் ஆஹுதி செய்யவேண்டும். இவ்வாறு இந்த சாமத்தின் ரசத்தால் சாமத்தின் வீர்யத்தின் வாயிலாக யக்ஞத்தின் சாம சம்பந்தமான குறை நீங்கி பிரஹ்மா பூர்ணமாக்குகிறார்.
अथ यदि यजुष्टो यजुर्निमित्तं रिष्येत् , भुवः स्वाहेति दक्षिणाग्नौ जुहुयात् । तथा सामनिमित्ते रेषे स्वः स्वाहेत्याहवनीये जुहुयात् । तथा पूर्ववद्यज्ञं सन्दधाति । ब्रह्मनिमित्ते तु रेषे त्रिष्वग्निषु तिसृभिर्व्याहृतिभिर्जुहुयात् । त्रय्या हि विद्यायाः स रेषः, ‘अथ केन ब्रह्मत्वमित्यनयैव त्रय्या विद्यया’ ( ? ) इति श्रुतेः । न्यायान्तरं वा मृग्यं ब्रह्मत्वनिमित्ते रेषे ॥
அனுவாதம் - யஜுர் நிமித்தமான குறை ஏற்பட்டால் “भुवः स्वाहा” (புவ: ஸ்வாஹா) என்று தக்ஷிணாக்னியில் ஆஹுதி செய்யவேண்டும். அவ்வாறே சாம நிமித்தமான குறை ஏற்பட்டால் “स्वः स्वाहा” (ஸ்வ: ஸ்வாஹா) என்று ஆஹவநீயா அக்னியில் ஆஹுதி செய்யவேண்டும். இவ்வாறு முன்போல் இந்த குறைகளை நீக்கி பூர்த்தி செய்யப்படுகிறது. பிரஹ்ம நிமித்தமான குறை இருக்கும்பொழுது மூன்று அக்னிகளிலும் மூன்று வியாகிருதிகளால் ஆஹுது செய்யவேண்டும். அது மூன்று வித்யைகளின் குறையாகும். “अथ केन ब्रह्मत्वमित्यनयैव त्रय्या विद्यया” (அத கேன பிரஹ்மத்வமித்யனயைவ த்ரய்யா வித்யா) என்று சுருதியினால் சித்தமாகிறது. பிரஹ்மத்துவத்தின் குறைக்கான காரணத்தையும், அதற்கான நியாயத்தையும் தேடவேண்டும் (விசாரிக்கவேண்டும்).
तद्यथा लवणेन सुवर्णं सन्दध्यात्सुवर्णेन रजतं रजतेन त्रपु त्रपुणा सीसं सीसेन लोहं लोहेन दारु दारु चर्मणा ॥ ७ ॥ एवमेषां लोकानामासां देवतानामस्यास्त्रय्या विद्याया वीर्येण यज्ञस्य विरिष्टं सन्दधाति भेषजकृतो ह वा एष यज्ञो यत्रैवंविद्ब्रह्मा भवति ॥ ८ ॥
மந்த்ரார்த்தம் - இந்த விஷயத்தில் அறியவேண்டியது என்னவெனில் எவ்வாறு உப்பினால் ஸ்வர்ணத்தையும், ஸ்வர்ணத்தால் வெள்ளீயமும் வெள்ளீயத்தால் காரீயமும், காரீயத்தால் இரும்பும், இரும்பினால் மரமும், மரத்தால் தோலும் இணைக்கப்படுகிறது. அதுபோல் இந்த லோகம், தேவதை அவ்வாறே த்ரயீ வித்யா (மூன்று வித்யை)வின் வீர்யத்தால் அதாவது ரசம் என்னும் ஒஜஸ்ஸால் யக்ஞத்தின் குறைபாடு நீங்கி பூர்த்தியாகின்றது. இதை இவ்வாறு அறிந்தவன் பிரஹ்மாவாக ஆகின்றான். அந்த பிரஹ்மாவால் செய்யப்படும் யக்ஞம் நிச்சயமாக மூலிகைகளால் குறைநீங்கி சுத்தமாக பூர்த்தியாகிறது.
तद्यथा लवणेन सुवर्णं सन्दध्यात् । क्षारेण टङ्कणादिना खरे मृदुत्वकरं हि तत् । सुवर्णेन रजतमशक्यसन्धानं सन्दध्यात् । रजतेन तथा त्रपु, त्रपुणा सीसम् , सीसेन लोहम् , लोहेन दारु, दारु चर्मणा चर्मबन्धनेन । एवमेषां लोकानामासां देवतानामस्यास्त्रय्या विद्याया वीर्येण रसाख्येनौजसा यज्ञस्य विरिष्टं सन्दधाति । भेषजकृतो ह वा एष यज्ञः — रोगार्त इव पुमांश्चिकित्सकेन सुशिक्षितेन एष यज्ञो भवति । कोऽसौ ? यत्र यस्मिन्यज्ञे एवंवित् यथोक्तव्याहृतिहोमप्रायश्चित्तवित् ब्रह्मा ऋत्विग्भवति स यज्ञ इत्यर्थः ॥
அனுவாதம் - எவ்வாறு உப்பினால் தங்கம் கடினமாக இருப்பதால் தங்கத்தை இளகச்செய்து ஒன்றாய் இணைப்பது போல் தங்கத்தால் வெள்ளியும், வெள்ளியால் வெள்ளீயயமும், வெள்ளீயத்தால் காரியமும், காரீயத்தால் இரும்பும், இரும்பால் மரமும், மரத்தின் உதவியால் தோலும் இணைக்கப்படுகின்றன. அவ்வாறு இந்த லோகமும், தேவதா, த்ரியீ வித்யாவின் வீர்யத்தால் அதாவது ரசம் எனப்படும் ஒஜஸ்சால் யக்ஞத்தின் குறை நீங்கி பூர்த்தியாகிறது. எவ்வாறு நன்றாக மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டவன் ரோகத்திலிருந்து விடுபடுகின்றானோ அவ்வாறு இந்த யக்ஞம் மூலிகைகளால் ரக்ஷிக்கப்படுகிறது. அந்த யக்ஞம் எது? எந்த யக்ஞத்தில் இவ்வாறு அறிந்த முன்பு கூறப்பட்ட வியாகிருதி ரூப ஹோமரூப பிராயச்சித்தத்தை அறிந்த பிரஹ்மா ரித்விக்காக இருக்கிறாரோ அந்த யக்ஞமாகும்.
किं च
அனுவாதம் - மேலும்
एष ह वा उदक्प्रवणो यज्ञो यत्रैवंविद्ब्रह्मा भवत्येवंविदं ह वा एषा ब्रह्माणमनुगाथा यतो यत आवर्तते तत्तद्गच्छति ॥ ९ ॥
மந்த்ரார்த்தம் - அதில் இவ்வாறு அறிந்தவன் பிரஹ்மாவாகின்றான். அந்த யக்ஞம் நிச்சயமாக வடக்கு நோக்கியதாக அமைகிறது. இவ்வாறு அறிந்தவன் நிச்சயமாக பிரஹ்மாவின் உத்தேசத்தினால் அந்த கானமும் “எங்கு எங்கு யாகம் செய்யப்படுகிறதோ அங்கங்கு இந்த பிரஹ்மா செல்கிறார்.
एष ह वा उदक्प्रवण उदङ्निम्नो दक्षिणोच्छ्रायो यज्ञो भवति ; उत्तरमार्गप्रतिपत्तिहेतुरित्यर्थः । यत्रैवंविद्ब्रह्मा भवति । एवंविदं ह वै ब्रह्माणम् ऋत्विजं प्रति एषा अनुगाथा ब्रह्मणः स्तुतिपरा — यतो यत आवर्तते कर्म प्रदेशात् ऋत्विजां यज्ञः क्षतीभवन् , तत्तद्यज्ञस्य क्षतरूपं प्रतिसन्दधत् प्रायश्चित्तेन गच्छति परिपालयतीत्येतत् ॥
அனுவாதம் - இங்கு இவ்வாறு அறிந்த பிரஹ்மா ஹோதா ஆகிறார். இந்த யக்ஞம் “उत्तरप्रवण” (உத்ரபிரவண) அதாவது உத்தரத்தை நோக்கி தெற்கிலிருந்து திரும்பி அதாவது உத்தரமார்க்கத்தின் பிராப்த்திக்கு ஹேது ஆகிறார் என்பது பொருள். இவ்வாறு அறிந்த பிரஹ்மா ரித்விக்கின் விஷயத்தில் பிரஹ்மாவின் ஸ்துதி செய்யும் அனுகாதா (अनुगाथा) என்னவெனில் - எந்த எந்த இடத்தில் கர்மா நடக்கின்றதோ அதாவது ஹோதா முதலிய ரித்விக்ஜர்களின் யக்ஞம் குறை உடையதாக ஆகுமோ அந்த அந்த யக்ஞத்தின் குறைக்கான பிராயச்சித்தத்தால் குறைகளை நீக்கி பூர்த்தியை பிரஹ்மா செய்கிறார். அதாவது யக்ஞ கர்த்தாவை எல்லா விதமாகவும் ரக்ஷிக்கின்றார்.
मानवो ब्रह्मैवैक ऋत्विक्कुरूनश्वाभिरक्षत्येवंविद्ध वै ब्रह्मा यज्ञं यजमानं सर्वांश्चर्त्विजोऽभिरक्षति तस्मादेवंविदमेव ब्रह्माणं कुर्वीत नानेवंविदं नानेवंविदम् ॥ १० ॥
மந்த்ரார்த்தம் - மெளனமாய் மனனம் செய்யும் மானவ பிரஹ்மாவே ஒரு ரித்விக். எவ்வாறு யுத்தத்தில் குதிரை யுத்தம் செய்பவனை ரக்ஷிக்கின்றதோ அவ்வாறு: இவ்வாறு அறிந்த பிரஹ்மா யக்ஞம், யஜமானன் மற்றும் வேறு எல்லா ரித்விக்ஜர்களையும் எல்லா பக்கமும் ரக்ஷிக்கின்றான். ஆகையால் இவ்வாறு அறிந்தவனையே பிரஹ்மாவாக நியமிக்கவேண்டும். இவ்வாறு அறியாதவர்களை அல்ல. இவ்வாறு அறியாதவர்களை நியமிக்கக்கூடாது.
मानवो ब्रह्मा मौनाचरणान्मननाद्वा ज्ञानवत्त्वात् ; ततो ब्रह्मैवैकः ऋत्विक् कुरून् कर्तॄन् — योद्धॄनारूढानश्वा बडबा यथा अभिरक्षति, एवंवित् ह वै ब्रह्मा यज्ञं यजमानं सर्वांश्च ऋत्विजोऽभिरक्षति, तत्कृतदोषापनयनात् । यत एवं विशिष्टो ब्रह्मा विद्वान् , तस्मादेवंविदमेव यथोक्तव्याहृत्यादिविदं ब्रह्माणं कुर्वीत, नानेवंविदं कदाचनेति । द्विरभ्यासोऽध्यायपरिसमाप्त्यर्थः ॥
அனுவாதம் - மெளனத்தைக் கடைபிடிப்பதால் அல்லது மனனம் செய்வதால் பிரஹ்மா “मानव” (மானவ) எனப்படுகிறார். ஆகையால் ஞானவானாய் இருப்பதால் பிரஹ்மா ஒரு ரித்விக் ஆகிறார். எவ்வாறு யுத்தத்தில் குதிரை தன்மேல் இருப்பவனை எவ்வகையாலும் காப்பாற்றுகிறதோ அவ்வாறு: இவ்வாறு அறிந்த பிரஹ்மாவும் யக்ஞத்தையும், யஜமானனையும், எல்லா ரித்விக்குகளையும் எல்லா தோஷங்களையும் நீக்கி அவர்களை எல்லாவிதமாகவும், எல்லா பக்கங்களில் இருந்தும் காப்பாற்றுகிறார். ஏன்எனில் வித்வானாகிய பிரஹ்மா இவ்வாறு சிறந்த குணங்கள் உடையவராய் இருப்பதால் இவ்வாறு மேலே கூறப்பட்ட வியாக்ருதி முதலியவைகளின் ஞானத்தை உடையவராய் இருப்பவரையே பிரஹ்மாவாக நியமிக்க வேண்டும். இவ்வாறு அல்லாதவர்களை நியமிக்கக்கூடாது. நியமிக்கக் கூடாது என்று இருமுறை கூறியது இந்த அத்யாயத்தின் பூர்த்திக்காக ஆகிறது.
इति सप्तदशखण्डभाष्यम् ॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ छान्दोग्योपनिषद्भाष्ये चतुर्थोऽध्यायः समाप्तः ॥