श्वेतकेतुः ह आरुणेय आस इत्याद्यध्यायसम्बन्धः — ‘सर्वं खल्विदं ब्रह्म तज्जलान्’ इत्युक्तम् , कथं तस्मात् जगदिदं जायते तस्मिन्नेव च लीयते अनिति च तेनैव इत्येतद्वक्तव्यम् । अनन्तरं च एकस्मिन्भुक्ते विदुषि सर्वं जगत्तृप्तं भवतीत्युक्तम् , तत् एकत्वे सति आत्मनः सर्वभूतस्थस्य उपपद्यते, न आत्मभेदे ; कथं च तदेकत्वमिति तदर्थोऽयं षष्ठोऽध्याय आरभ्यते —पितापुत्राख्यायिका विद्यायाः सारिष्ठत्वप्रदर्शनार्था ।
அனுவாதம் - “श्वेतकेतुर्हारुणेय आस” (ச்வேதகேது ஹார்ருணேய ஆச) முதலியவை அத்யாயத்தின் சம்பந்தம் இவ்வாறு ஆகும் - “सर्वं खल्विदं ब्रह्म तज्जलान्” (சர்வம் கல்விதம் பிரஹ்ம தஜ்ஜலான்) என்று கூறப்பட்டது. எவ்வாறு இந்த ஜகத் உண்டானது எவ்வாறு அதில் லயமாகின்றது மேலும் அதன் மூலமாய் அதன் செயல்பாடுகள் நடைபெறுகின்றன? என்பது கூறப்பட்டது. அதன்பின், ஒரே வித்வான் (வைச்வாநர வித்யையை அறிந்தவன்) போஜனம் செய்வதால் ஜகத் முழுவதும் திருப்தி அடைகிறது என்று கூறப்பட்டது. எல்லா பூதங்களிலும் நிலைபெற்று இருக்கும் சத்தியாத்மா ஏகத்துவமாய் இருப்பதால் இவ்வாறு முடிகிறது. ஆத்மா பேத திருஷ்டியால் இவ்வாறு முடியாது. ஆகையால் ஏகத்துவம் எவ்வாறு? என்பது ஆறாவது அத்யாயத்தில் ஆரம்பிக்கப்படுகிறது. பிதா புத்திரர்களின் ஆக்யாயிகா (கதை) வித்யையின் சாரத்தின் சிறப்பை தெரிவிப்பதற்காக ஆகும்.
श्वेतकेतुर्हारुणेय आस तꣳ ह पितोवाच श्वेतकेतो वस ब्रह्मचर्यं न वैसोम्यास्मत्कुलीनोऽननूच्य ब्रह्मबन्धुरिव भवतीति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - அருணரின் பெளத்திரன் (பேரன்) ச்வேதகேது. அவரிடம் பிதா கூறினார் - ஹே ச்வேதகேது! நீ பிரஹ்மசர்யவாசம் செய். ஏன்எனில் ஹே செளம்ய! நம்முடைய குலத்தில் உண்டானவர்களில் ஒருவரும் அத்யயனம் செய்யாமல் பிரஹ்ம பந்துவாக (பெயரளவில் பிராஹ்மணனாக) இருக்கமாட்டார்கள்.
श्वेतकेतुरिति नामतः, ह इत्यैतिह्यार्थः, आरुणेयः अरुणस्य पौत्रः आस बभूव । तं पुत्रं ह आरुणिः पिता योग्यं विद्याभाजनं मन्वानः तस्योपनयनकालात्ययं च पश्यन् उवाच — हे श्वेतकेतो अनुरूपं गुरुं कुलस्य नो गत्वा वस ब्रह्मचर्यम् ; न च एतद्युक्तं यदस्मत्कुलीनो हे सोम्य अननूच्य अनधीत्य ब्रह्मबन्धुरिव भवतीति ब्राह्मणान्बन्धून्व्यपदिशति न स्वयं ब्राह्मणवृत्त इति ।
அனுவாதம் - श्वेतकेतुः (ச்வேதகேது:) என்ற பெயருடையவர். இங்கு ह (ஹ) என்ற இந்த நிபாதம் ஐதிகத்தை தெரிவிப்பது ஆகும். அருணருடைய பெளத்திரன் (பேரன்) ஆருணேயன். பிதாவான ஆருணி தன்னுடைய மகனிடம் அவனுடைய வித்தையை அடைவதற்கான யோக்கியதை அறிந்து இவ்வாறு கூறினார் -ஹே ச்வேதகேது! நம்முடைய குலத்தின் வழக்கப்படி குருவினிடத்தில் சென்று பிரஹ்மச்சரிய வாசம் செய்யவேண்டும். ஹே செளம்ய! நம்குலத்தில் பிறந்து அத்யயனம் செய்யாமல் இருந்தால் பிரஹ்மபந்து அதாவது பெயர் அளவிற்கு பிராஹ்மணனாக இருப்பாய். பிராஹ்மண பந்து என்பவர்கள் தங்களுடைய பிராஹ்மணத்தை ஆச்சரணம் செய்யாமல் பிரஹ்மபந்து ஆகிறார்கள். அது நமக்கு உசிதமாகாது (உகந்ததாகாது).
तस्य अतः प्रवासो अनुमीयते पितुः, . येन स्वयं गुणवान्सन् पुत्रं नोपनेष्यति ॥
அனுவாதம் - இதனால் தந்தையின் இடத்திலிருந்து வெளியே செல்லவேண்டும் என்பது அனுமானம் செய்யப்படுகிறது. ஏன்எனில் தான் நல்ல குணவானாய் (கற்று அறிந்தவனாய்) இருந்தாலும் புத்திரனுக்கு உபநயனம் தானே செய்வதில்லை என்பதாகும்.
स ह द्वादशवर्ष उपेत्य चतुर्विꣳशतिवर्षः सर्वान्वेदानधीत्य महामना अनूचानमानी स्तब्ध एयाय तꣳह पितोवाच ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அந்த ச்வேதகேது பன்னிரண்டு வயதில் உபநயனம் செய்து இருபத்து நான்கு வயதிற்குள் எல்லா வேதங்களையும் அத்யயனம் செய்துவிட்டு தன்னை மஹாபுத்திமானாயும், வியாக்கியானம் செய்பவன் என்று கருதி மிகுந்த ஆணவத்துடன் வீட்டிற்குத் திரும்பினான். அவனிடம் பிதா கூறினார் - ஹே செளம்ய! நீ ஆணவம் நிறைந்தவனாய், பண்டிதன் என்று எண்ணிக்கொண்டு மிக்க வினயமற்று இருக்கிறாய். என்ன நீ எந்த உபதேசத்தைக் கேட்டாய்? என்று.
सः पित्रोक्तः श्वेतकेतुः ह द्वादशवर्षः सन् उपेत्य आचार्यं यावच्चतुर्विंशतिवर्षो बभूव, तावत् सर्वान्वेदान् चतुरोऽप्यधीत्य तदर्थं च बुद्ध्वा महामनाः महत् गम्भीरं मनः यस्य असममात्मानमन्यैर्मन्यमानं मनः यस्य सोऽयं महामनाः अनूचानमानी अनूचानमात्मानं मन्यत इति एवंशीलो यः सोऽनूचानमानी स्तब्धः अप्रणतस्वभावः एयाय गृहम् ।
அனுவாதம் - பிதா கூறியபின் அந்த ச்வேதகேது பன்னிரண்டு வயதில் குருவிடம் சென்று இருபத்து நான்கு வயது ஆகும் வரையில் அவரிடம் சம்பூர்ணமாக நான்கு வேதங்களையும் அத்யயனம் செய்து அதன் அர்த்தத்தையும் அறிந்து அதனால் மஹா மனம் அதாவது எவருடைய மனம் மிகமேன்மையானது என்று நினைத்து கர்வமடைந்து தனக்கு சமானமாக அறிந்தவர் இல்லை என்று இருப்பவர் மஹாமனா எனப்படுகிறார். தானே மிகவும் சிறப்பாக வியாக்கியானம் செய்பவன் என்று நினைத்து செறுக்கடைந்தவனாய் இருப்பவன் “अनूचानमानी” (அனூசாஎமானி) எனப்படுகிறான். அவன் வினயமற்ற சுவபாவம் உடையவனாக வீட்டிற்குத் திரும்பினான்.
तम् एवंभूतं ह आत्मनोऽननुरूपशीलं स्तब्धं मानिनं पुत्रं दृष्ट्वा पितोवाच सद्धर्मावतारचिकीर्षया ॥ श्वेतकेतो यन्नु इदं महामनाः अनूचानमानी स्तब्धश्चासि, कस्तेऽतिशयः प्राप्तः उपाध्यायात् , उत अपि तमादेशं आदिश्यत इत्यादेशः केवलशास्त्राचर्योपदेशगम्यमित्येतत् , येन वा परं ब्रह्म आदिश्यते स आदेशः तमप्राक्ष्यः पृष्टवानस्याचार्यम् ?
அனுவாதம் - அவர் தன்னுடைய புத்திரன் இவ்வாறு அதாவது தன்னுடைய நல்நடைமுறைகளை அனுசரிக்காமலும், வினயமற்றும் இருப்பதை அறிந்து அவனுக்கு நல்ல தர்மத்தில் ஈடுபடுத்த விரும்பி பிதா இவ்வாறு கூறினார் - ஹே ச்வேதகேதோ! நீ இவ்வாறு மஹாமனா அதாவது கர்வத்துடனும் செருக்கடைந்தும், வினயமற்றவனாயும் இருக்கின்றாய். நீ உபாத்யாயரிடம் இருந்து என்னதான் விசேஷமாக அடைந்திருக்கிறாய்? மேலும் நீ எந்த உபதேசத்தை அவரிடம் கேட்டாயோ அந்த உபதேசம் செய்யப்படுகிறது. அது ஆதேசம் எனப்படுகிறது. இதிலிருந்து பிரஹ்மத்தை சாஸ்திரத்தினாலும் குருவின் உபதேசத்தினால் மட்டுமே அறியமுடியும் என்று தெரிகிறது. அல்லது எதன் மூலமாய் பரப்பிரஹ்ம உபதேசம் செய்யப்படுகிறதோ அது ஆதேசம் எனப்படுகிறது. என்ன நீ அதை ஆச்சாரியிடம் கேட்டாயா? என்பதாகும்.
तमादेशं विशिनष्टि —
அனுவாதம் - அ.கை - அந்த ஆதேசத்தை சுருதி விசேஷமாகவும், தெளிவாகவும் கூறுகிறது-.
श्वेतकेतो यन्नु सोम्येदं महामना अनूचानमानी स्तब्धोऽस्युत तमादेशमप्राक्ष्यः येनाश्रुतꣳ श्रुतं भवत्यमतं मतमविज्ञातं विज्ञातमिति कथं नु भगवः स आदेशो भवतीति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - எதனால் கேட்கப்படாதது கேட்டதாக ஆகின்றதோ, சிந்திக்காதது சிந்திக்கப்பட்டதாகிறதோ, அறியப்படாதது விசேஷமாக அறியப்பட்டதாகிறதோ (அந்த உபதேசத்தைப் பெற்றாயா?) , (அதற்கு ச்வேதகேது கேட்டார்) பகவானே! அந்த ஆதேசத்தை (அறிவை) எவ்வாறு பெறுவது?
येन आदेशेन श्रुतेन अश्रुतमपि अन्यच्छ्रुतं भवति अमतं मतम् अतर्कितं तर्कितं भवति अविज्ञातं विज्ञातं अनिश्चितं निश्चितं भवतीति । सर्वानपि वेदानधीत्य सर्वं च अन्यद्वेद्यमधिगम्यापि अकृतार्थ एव भवति यावदात्मतत्त्वं न जानातीत्याख्यायिकातोऽवगम्यते । तदेतदद्भुतं श्रुत्वा आह, कथं नु एतदप्रसिद्धम् अन्यविज्ञानेनान्यद्विज्ञातं भवतीति ; एवं मन्वानः पृच्छति — कथं नु केन प्रकारेण हे भगवः स आदेशो भवतीति ॥
அனுவாதம் - எந்த ஆதேசத்தால் மற்றதைக் கேட்கப்படாமலேயே கேட்டதாக ஆகிறது. (अश्रुतम् श्रुतं भवति) “अमतं” (அமதம்=சிந்திக்காமலேயே)--விசாரம் இல்லாமலேயே மதம் அதாவது விசாரம் செய்யப்பட்டதாகிறதோ, “अविज्ञाता” (அவிக்ஞாதா) - நிச்சயமாக அறியப்படாதது நிச்சயமாக “विज्ञातं” (விக்ஞாதம்) அறியப்பட்டதாகிறதோ,. எல்லா வேதங்களையும் அத்யயனம் செய்தாலும், மற்ற திருஷ்ய பதார்த்தங்களின் ஞானம் இருந்தாலும் எதுவரை ஆத்மதத்துவத்தை அறியவில்லையோ அதுவரை கிருதார்த்தத்தை அடைய முடியாது என்பதை அறிவுறுத்துகின்றது இந்த ஆக்யாயிகா (கதை). அந்த இந்த அற்புதத்தைக் கேட்டு கூறினார் - எவ்வாறு இந்த பிரசித்தமற்ற வேறு ஒன்றை அறிவதால் மற்றொன்று அறியமுடியும் என்று நினைத்து ஹே பகவானே! எவ்வாறு அதாவது எந்த பிரகாரமாக அந்த ஆதேசம் இருக்கிறது என்று கேட்டார்.
यथा स आदेशो भवति तच्छृणु
அனுவாதம் - அ.கை - அந்த ஆதேசம் எவ்வாறு இருக்கிறது என்பதைக் கேள் -
यथा सोम्यैकेन मृत्पिण्डेन सर्वं मृन्मयं विज्ञातꣳ स्याद्वाचारम्भणं विकारो नामधेयं मृत्तिकेत्येव सत्यम् ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - ஹே செளம்ய! எவ்வாறு ஒரு மண் கட்டியை அறிந்ததாலேயே எல்லா மண்ணினால் ஆன பதார்த்தங்களின் ஞானம் உண்டாகிறது (அறிந்ததாகிறது). இந்த மாற்றங்கள் (விகாரங்கள் எல்லாம்) பெயர் மாத்திரமே. உண்மையில் அது மண் மாத்திரமேயாகும்.
हे सोम्य — यथा लोके एकेन मृत्पिण्डेन रुचककुम्भादिकारणभूतेन विज्ञातेन सर्वमन्यत्तद्विकारजातं मृन्मयं मृद्विकारजातं विज्ञातं स्यात् ।
அனுவாதம் - ஹே சோம்ய எவ்வாறு உலகில் கமண்டலம், கும்பம் முதலியவைகளின் காரணத்தை ஒரே மண்கட்டியே என்று அறிந்தபின் அதன் விகாரமான மற்ற எல்லா விகாரங்களும் மண்மயமே அதாவது மண்ணின் விகாரத்தால் உண்டானதே அன்று அறியப்பட்டதாகிறது.
कथं मृत्पिण्डे कारणे विज्ञाते कार्यमन्यद्विज्ञातं स्यात् ?
அனுவாதம் - சங்கை - எவ்வாறு மண் பிண்டமாகிய காரணத்தை அறிந்ததால் மற்ற காரியங்கள் அறிந்ததாக ஆகும்?
नैष दोषः, कारणेनानन्यत्वात्कार्यस्य । यन्मन्यसे अन्यस्मिन्विज्ञातेऽन्यन्न ज्ञायत इति — सत्यमेवं स्यात् , यद्यन्यत्कारणात्कार्यं स्यात् , न त्वेवमन्यत्कारणात्कार्यम् ।
அனுவாதம் - ஸமாதானம் - காரியம் காரணத்தைக் காட்டிலும் வேறு அல்ல. ஆகையால் இந்த தோஷம் இல்லை. நீ இவ்வாறு கருதினால் மற்றொன்றின் ஞானத்தால் வேறு ஒன்றை அறியமுடியாது என்று கூறுவது சரியே. எப்பொழுது எனில் வேறு காரணத்தால் காரியம் உண்டாகும் என்றால். ஆனால் இங்கு காரியம் தன் காரணத்தைக் காட்டிலும் வேறு ஆகாது.
कथं तर्हीदं लोके — इदं कारणमयमस्य विकार इति ?
அனுவாதம் - சங்கை - அவ்வாறானால் உலகில் எவ்வாறு இது காரணம், இதனுடையது இந்த விகாரம் என்று கூறப்படுகிறது?
शृणु । वाचारम्भणं वागारम्भणं वागालम्बनमित्येतत् । कोऽसौ ? विकारो नामधेयं नामैव नामधेयम् , स्वार्थे धेयप्रत्ययः, वागालम्बनमात्रं नामैव केवलं न विकारो नाम वस्त्वस्ति ; परमार्थतो मृत्तिकेत्येव मृत्तिकैव तु सत्यं वस्त्वस्ति ॥
அனுவாதம் - ஸமாதானம் - கேள், அந்த “वागारम्भणं” (வாசாரம்பணம்) என்பது வாக் ஆரம்பம் அதாவது வாக்கையே சார்ந்து இருக்கிறது என்பதாகும். யார் அது? “नामधेयं” (நாமதேய) விகாரம். இதில் “धेय” (தேய) என்பது ஸ்வார்த்தத்தில் நாம சப்தமாகும். உண்மையில் வாக்கை சார்ந்திருப்பது மாத்திரமே நாமம் மாத்திரமே. விகாரம் என்று வஸ்து இல்லை. மண்ணே சத்யவஸ்து ஆகும்.
यथा सोम्यैकेन लोहमणिना सर्वं लोहमयं विज्ञातꣳस्याद्वाचारम्भणं विकारो नामधेयं लोहितमित्येव सत्यम् ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - ஹே ஸோம்ய! எவ்வாறு ஒரு தங்கக்கட்டியின் ஞானம் ஏற்பட்டவுடன் எல்லா தங்கத்தால் ஆன பதார்த்தங்களின் ஞானம் ஏற்படுகிறது. ஏன்எனில் விகாரம் வாக்கை ஆஸ்ரயித்து நாம மாத்திரமேயாகும். தங்கம் மாத்திரமே சத்தியமாகும்.
यथा सोम्य एकेन लोहमणिना सुवर्णपिण्डेन सर्वमन्यद्विकारजातं कटकमुकुटकेयूरादि विज्ञातं स्यात् । वाचारम्भणमित्यादि समानम् ॥
அனுவாதம் - ஹே ஸோம்ய! எவ்வாறு ஒரே தங்ககட்டியை அறிந்ததால் மற்ற எல்லா விகாரங்களான கடகம் (வளை) முகுடம் (கிரீடம்) கேயூரம் (தோள்வளை) முதலியவைகள் அறியப்பட்டாத ஆகிறது. வாச்சாரம்பணம் முதலியவை முன்போல் ஆகும்.
यथा सोम्यैकेन नखनिकृन्तनेन सर्वं कार्ष्णायसं विज्ञातꣳ स्याद्वाचारम्भणं विकारो नामधेयं कृष्णायसमित्येव सत्यमेवꣳ सोम्य स आदेशो भवतीति ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - ஹே ஸோம்ய! எவ்வாறு இரும்பு நகவெட்டியின் ஞானத்தால் எல்லா இரும்பு பதார்த்தங்களையும் அறிந்ததாகிறது. ஏன்எனில் விகாரமானது வாக்கை அவலம்பித்து (ஆஸ்ரயித்து) கேவலம் நாம மாத்திரமே. உண்மையில் அது இரும்பு மாத்திரமே ஆகும். ஹே ஸோம்ய! இவ்வாறு அதன் ஆதேசம் ஆகிறது.
यथा सोम्य एकेन नखनिकृन्तनेनोपलक्षितेन कृष्णायसपिण्डेनेत्यर्थः ; सर्वं कार्ष्णायसं कृष्णायसविकारजातं विज्ञातं स्यात् । समानमन्यत् । अनेकदृष्टान्तोपादानं दार्ष्टान्तिकानेकभेदानुगमार्थम् , दृढप्रतीत्यर्थं च । एवं सोम्य स आदेशः, यः मयोक्तः भवति ।
அனுவாதம் - ஹே ஸோம்ய! எவ்வாறு ஒரே நகவெட்டி உபலக்ஷிதமான இரும்பு பிண்டம் என்பது பொருள். அதை அறிந்தால் எல்லா இரும்பினால் ஆன விகாரங்களும் அறிந்தாக ஆகின்றது. மற்றவை முன்போல். இங்கு அநேக திருஷ்டாந்தங்கள் எடுத்துக்கொண்டு தாஷ்டாந்தத்தில் உள்ள அநேக பேதங்களை தெரிவிப்பதற்காகவும், திடமாக்குவதற்காகவும் ஆகும். ஹே சோம்ய! இவ்வாறு அந்த ஆதேசமானது என்னால் கூறப்பட்டதாகின்றது.
इत्युक्तवति पितरि, आह इतरः —
அனுவாதம் - இவ்வாறு பிதா கூறியதற்கு மற்றவர் கூறினார் -
न वै नूनं भगवन्तस्त एतदवेदिषुर्यद्ध्येतदवेदिष्यन्कथं मे नावक्ष्यन्निति भगवाꣳस्त्वेव मे तद्ब्रवीत्विति तथा सोम्येति होवाच ॥ ७ ॥
மந்த்ரார்த்தம் - நிச்சயமாக எனது பூஜைக்குரிய குருதேவர் இதை அறிந்திருக்கவில்லை. அவர் அறிந்து இருந்தால் எனக்கு ஏன் சொல்லாமல் இருந்தார். இப்பொழுது நீங்கள் எனக்குக் கூறுங்கள் என்றதற்கு பிதா கூறினார் - சரி சோம்ய! நான் கூறுகிறேன் என்றார்.
न वै नूनं भगवन्तः पूजावन्तः गुरवः मम ये, ते एतत् यद्भवदुक्तं वस्तु नावेदिषुः न विज्ञातवन्तः नूनम् । यत् यदि हि अवेदिष्यन् विदितवन्तः एतद्वस्तु, कथं मे गुणवते भक्तायानुगताय नावक्ष्यन् नोक्तवन्तः, तेनाहं मन्ये — न विदितवन्त इति । अवाच्यमपि गुरोर्न्यग्भावमवादीत् पुनर्गुरुकुलं प्रति प्रेषणभयात् । अतो भगवांस्त्वेव मे मह्यं तद्वस्तु, येन सर्वज्ञत्वं ज्ञातेन मे स्यात् , तद्ब्रवीतु कथयतु ; इत्युक्तः पितोवाच — तथास्तु सोम्येति ॥
அனுவாதம் - நிச்சயமாக என்னுடைய பூஜைக்குரிய அந்த குருதேவர் நீங்கள் கூறிய அந்த வஸ்துவை அவர் அறிந்திருக்கமாட்டார். அறிந்திருந்தால் அந்த வஸ்துவை நல்ல குணசாலியாயும், பக்தியுடன் அவரை அனுசரித்திருந்த எனக்கு எவ்வாறு கூறாமல் இருப்பர். ஆகையால் அவர் அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். குருகுலத்திற்கு திருப்பி அனுப்பிவிடுவார் என்று பயந்து கூறக்கூடாத குருவை குறை கூறினார். ஆகையால் தாங்களே எனக்கு அந்த வஸ்துவை, எதை அறிந்தால் எல்லாம் அறிந்ததாக எனக்கு ஆகுமோ அதைக் கூறுங்கள் என்று கூறியதற்கு சோம்ய! அவ்வாறே ஆகட்டும் என்று பிதா கூறினார்.
इति प्रथमखण्डभाष्यम् ॥
सदेव सोम्येदमग्र आसीदेकमेवाद्वितीयम् । तद्धैक आहुरसदेवेदमग्र आसीदेकमेवाद्वितीयं तस्मादसतः सज्जायत ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! ஆரம்பத்தில் இது ஒன்றாகவே அத்விதீய சத்தாக இருந்தது. இந்த விஷயத்தில் சிலர் இவ்வாறு கூறுகின்றனர் - ஆரம்பத்தில் இது ஒன்று மாத்திரமாய் அத்விதீய அசத்தாகவே இருந்தது என்று. அந்த அசத்திலிருந்தே சத் உண்டாயிற்று என்று கூறுகின்றனர்.
सदेव सदिति अस्तितामात्रं वस्तु सूक्ष्मं निर्विशेषं सर्वगतमेकं निरञ्जनं निरवयवं विज्ञानम् , यदवगम्यते सर्ववेदान्तेभ्यः । एव - शब्दः अवधारणार्थः । किं तदवध्रियत इति, आह — इदं जगत् , नामरूपक्रियावद्विकृतमुपलभ्यते यत् , तत्सदेवासीत् इति आसीच्छब्देन सम्बध्यते ।
அனுவாதம் - (ஸதேவ) - சத் என்பது இருக்கும் வஸ்து மாத்திரமே அந்த வஸ்து எதுவோ அது சூக்ஷ்மம், நிர்விசேஷம், நிரஞ்ஞனம், நிரவயவம் என்பது எல்லா வேதாந்தங்களினால் அறியப்படுகிறது. “एव” (ஏவ) நிச்சய அர்த்தத்தைக் குறிக்கின்றது. இதனால் எந்த வஸ்துவின் நிச்சயம் செய்யப்படுகிறது? அதற்கு (ஆருணி) கூறுகிறார் - இந்த நாமரூப விகாரமாகிய ஜகத்தை உண்டாக்கியவன் இருப்பதாகக் காணப்படுகிறது. எது இருக்கிறதோ அது சத்தாகவே இருந்தது என்று “आसीत्” ஆசீத் - இருந்தது) என்று “சத்” சப்தத்துடன் சம்பந்தப்படுகிறது.
कदा सदेवेदमासीदिति, उच्यते —
அனுவாதம் - சங்கை - இது எப்பொழுது சத்தாக இருந்தது என்று கூறப்படுகிறது?
अग्रे जगतः प्रागुत्पत्तेः ।
அனுவாதம் - ஸமாதானம் - अग्र முன்- இந்த ஜகத்தின் உற்பத்திக்கு முன்.
किं नेदानीमिदं सत् , येन अग्रे आसीदिति विशेष्यते ?
அனுவாதம் - சங்கை - அவ்வாறு ஆனால் இப்பொழுது சத் இல்லையா? எதற்காக இதற்குமுன் (ஆரம்பத்தில்) இருந்தது என்ற விசேஷணம் கூறப்பட்டது?
न ।
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறு அல்ல.
कथं तर्हि विशेषणम् ?
அனுவாதம் - சங்கை - ஆனால் எதற்காக இந்த விசேஷணம் அளிக்கப்பட்டது?
इदानीमपीदं सदेव, किन्तु नामरूपविशेषणवदिदंशब्दबुद्धिविषयं च इतीदं च भवति । प्रागुत्पत्तेस्तु अग्रे केवलसच्छब्दबुद्धिमात्रगम्यमेवेति सदेवेदमग्र आसीदित्यवधार्यते । न हि प्रागुत्पत्तेः नामवद्रूपवद्वा इदमिति ग्रहीतुं शक्यं वस्तु सुषुप्तकाले इव । यथा सुषुप्तादुत्थितः सत्त्वमात्रमवगच्छति सुषुप्ते सन्मात्रमेव केवलं वस्त्विति, तथा प्रागुत्पत्तेरित्यभिप्रायः ।
அனுவாதம் - ஸமாதானம் - இப்பொழுதும் இது சத்தே (सदेव). ஆனால் நாமரூப விசேஷணம் போன்று “इदं” (இது) சப்தமும். புத்தி விஷயமும் சேர்ந்து इदं (இதம் - இது) ஆகிறது. உத்பத்திக்கு முன்னால் ஆரம்பத்தில் கேவலம் “சத்” சப்த புத்தி மாத்திரமாகவே அறியப்படுவதால் இது முன்பு ஆரம்பத்தில் சத்தாகவே இருந்தது என்று அறியப்படுகிறது. உத்பத்திக்கு முன் நாமம் போன்று ரூபம் போன்று சுஷுப்த்தி அவஸ்தை போன்று வஸ்துவை கிரஹிக்க முடியாது. எவ்வாறு சுஷுப்த்தியில் இருந்து விழித்தபின் சத்தை மட்டும் அறிகிறானோ அதாவது சுஷுப்த்தியில் வஸ்து கேவலம் சத்மாத்திரமாகவே இருந்ததோ அவ்வாறு உத்பத்திக்கு முன்னும் இருந்தது என்பது அபிப்பிராயம்.
यथा इदमुच्यते लोके — पूर्वाह्णे धटादि सिसृक्षुणा कुलालेन मृत्पिण्डं प्रसारितमुपलभ्य ग्रामान्तरं गत्वा प्रत्यागतः अपराह्णे तत्रैव घटशरावाद्यनेकभेदभिन्नं कार्यमुपलभ्य मृदेवेदं घटशरावादि केवलं पूर्वाह्न आसीदिति, तथा इहाप्युच्यते — सदेवेदमग्र आसीदिति । एकमेवेति । स्वकार्यपतितमन्यन्नास्तीति एकमेवेत्युच्यते । अद्वितीयमिति । मृद्व्यतिरेकेण मृदः यथा अन्यद्घटाद्याकारेण परिणमयितृकुलालादिनिमित्तकारणं दृष्टम् , तथा सद्व्यतिरेकेण सतः सहकारिकारणं द्वितीयं वस्त्वन्तरं प्राप्तं प्रतिषिध्यते — अद्वितीयमिति, नास्य द्वितीयं वस्त्वन्तरं विद्यते इत्यद्वितीयम् ।
அனுவாதம் - எவ்வாறு உலகில் கடம் முதலியவைகளை செய்ய விரும்புபவன் குயவனால் முற்பகலில் மணல் குவியல் பரப்பப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு வேறு கிராமத்திற்கு சென்று விட்டு பிற்பகலில் திரும்பிவந்து அங்கே கடம் சராவம் முதலிய அநேக விதமான வெவ்வேறு காரியங்களைப் பார்த்து இந்த கடம் சராவம் முதலியவைகள் முற்பகலில் வெறும் மண்மாத்ரமே இருந்தது என்று கூறுவதுபோல் இங்கும் சத்தாகவே முன்பும் (ஆரம்பத்திலும்) இருந்தது என்று கூறப்படுகிறது. “एकमेव” (ஏகமேவ - ஒன்றாகவே) என்று - அதாவது மண்ணைத் தவிர வேறு வஸ்து இல்லை. எவ்வாறு மண்ணைக்காட்டிலும் வேறு கடம் முதலிய ஆகாரமாய் பரிணாமத்தை அடையச்செய்யும் குயவன் முதலிய நிமித்த காரணம் காணப்படுகிறதோ அவ்வாறு சத்திற்கு வேறான சத்திற்கு சஹாயமான காரணமாய் இரண்டாவது வேறு வஸ்துவின் அடைவு அது “அத்விதீயம்” என்பதால் அது நிராகரிக்கப்படுகிறது. அதாவது அதைத்தவிர இரண்டாவது வஸ்து இல்லாததால் அது அத்விதீயம்.
ननु वैशेषिकपक्षेऽपि सत्सामानाधिकरण्यं सर्वस्योपपद्यते, द्रव्यगुणादिषु सच्छब्दबुद्ध्यनुवृत्तेः — सद्द्रव्यं सन्गुणः सन्कर्मेत्यादिदर्शनात् ।
அனுவாதம் - சங்கை - ஆனால் வைசேஷிக பக்ஷத்திலும் சத்சாமானாதிகரண்யம் எல்லாவற்றிற்கும் சம்பவிக்கின்றது. திரவியம் குணம் முதலியவைகளில் சத்திரவ்யம், சத்குணம், சத்கர்ம முதலியவைகள் காணப்படுவதால் சத்சப்தம் புத்தியின் அனுவிருத்தியே ஆகும்.
सत्यमेवं स्यादिदानीम् ; प्रागुत्पत्तेस्तु नैवेदं कार्यं सदेवासीदित्यभ्युपगम्यते वैशेषिकैः, प्रागुत्पत्तेः कार्यस्यासत्त्वाभ्युपगमात् । न च एकमेव सदद्वितीयं प्रागुत्पत्तेरिच्छन्ति । तस्माद्वैशेषिकपरिकल्पितात्सतः अन्यत्कारणमिदं सदुच्यते मृदादिदृष्टान्तेभ्यः ।
அனுவாதம் - ஸமாதானம் - உண்மைதான். ஆனால் இந்த வர்த்தமான காலத்தில் அதாவது நிகழ்காலத்தில் இவ்வாறு இருக்கலாம். ஆனால் வைசேஷிகர்கள் உத்பத்திக்கு முன் காரியம் அசத்யமாய் காணப்படுவதால் உத்பத்திக்குமுன் இந்த காரியம் சத்தாக இருந்தது என்பது ஒருநாளும் பொருந்தாது என்றும் உத்பத்திக்குமுன் இவ்வாறு ஒன்றாக சத் அத்விதீயமாய் இருப்பதை விரும்பவில்லை. ஆகையால் மண் முதலிய திருஷ்டாந்தங்களால் வைசேஷிகர்களால் கல்பிக்கப்பட்ட சத்தைக்காட்டிலும் வேறான காரணம் இந்த “சத்” என்று கூறப்பட்டது.
तत् तत्र ह एतस्मिन्प्रागुत्पत्तेर्वस्तुनिरूपणे एके वैनाशिका आहुः वस्तु निरूपयन्तः — असत् सदभावमात्रं प्रागुत्पत्तेः इदं जगत् एकमेव अग्रे अद्वितीयमासीदिति । सदभावमात्रं हि प्रागुत्पत्तेस्तत्त्वं कल्पयन्ति बौद्धाः । न तु सत्प्रतिद्वन्द्वि वस्त्वन्तरमिच्छन्ति । यथा सच्चासदिति गृह्यमाणं यथाभूतं तद्विपरीतं तत्त्वं भवतीति नैयायिकाः ।
அனுவாதம் - இந்த விஷயத்தில் உற்பத்திக்குமுன் வஸ்து எவ்வாறு இருந்தது என்று ஒருவகை வைநாசிகர்கள் (பெளத்தர்கள்)-வஸ்துவை இவ்வாறு நிரூபித்துக் கூறுகின்றனர்- உத்பத்திக்குமுன் ஜகத் ஒன்றாய் ஆரம்பத்தில் அத்விதீயமாய் அசத்தாய் அதாவது சத்பாவமற்றதாய் இருந்தது என்று. உத்பத்திக்குமுன் சத் அபாவமாத்திரம் தத்துவம் என்று பெளத்தர்கள் கல்பிக்கின்றனர். அவர்கள் சத்திற்கு விரோதமான வேறு ஒரு வஸ்துவையும் விரும்புவது இல்லை. நையாசிகர்கள் கிரஹிக்கும் எவ்வாறு உள்ளதோ அந்த வஸ்து மேலும் அதன் விபரீதமான தத்துவம் கிரமமாக சத் என்றும் அசத் என்றும் ஆகிறது.
ननु सदभावमात्रं प्रागुत्पत्तेश्चेदभिप्रेतं वैनाशिकैः, कथं प्रागुत्पत्तेरिदमासीदसदेकमेवाद्वितीयं चेति कालसम्बन्धः सङ्ख्यासम्वन्धोऽद्वितीयत्वं च उच्यते तैः ।
அனுவாதம் - சங்கை - ஆனால் வைநாசிகர்கள் உத்பத்திக்குமுன் சத்அபாவ மாத்திரத்தையே ஏற்றுக்கொள்கிறார்கள் எனில் எவ்வாறு உத்பத்திக்குமுன் இது அசத்தாயும், ஏகமாயும் அத்விதீயமாயும் இருந்தது என்று கூறி அவர்கள் அதன் கால சம்பந்தத்தையும் எண்ணிக்கையின் சம்பந்தத்தையும் அவ்வாறே அத்விதீயயத்தையும் எவ்வாறு நிரூபணம் செய்கின்றனர்?
बाढं न युक्तं तेषां भावाभावमात्रमभ्युपगच्छताम् । असत्त्वमात्राभ्युपगमोऽप्ययुक्त एव, अभ्युपगन्तुरनभ्युपगमानुपपत्तेः । इदानीमभ्युपगन्ता अभ्युपगम्यते न प्रागुत्पत्तेरिति चेत् , न, प्रागुत्पत्तेः सदभावस्य प्रमाणाभावात् । प्रागुत्पत्ते रसदेवेति कल्पनानुपपत्तिः ।
அனுவாதம் - ஸமாதானம் - சரிதான். அவர்களின் பாவத்தை அபாவமாத்திரமாக (சத்தை அசத்தாக) கருதுபவர்கள் இவ்வாறு கூறுவது பொருந்தாது. அசத்தை மாத்திரம் ஏற்றுக்கொள்வதும் பொருத்தமற்றதே. ஏன் எனில் இவ்வாறு அறிந்தவன் அதை அறியவில்லை என்பது பொருந்தாது. இப்பொழுது அறிந்தது உத்பத்திக்கு முன்னால் அறியப்படவில்லை எனில்? அவ்வாறு அல்ல. ஏன் எனில் உத்பத்திக்குமுன் சத்தின் அபாவத்திற்கு பிரமாணம் இல்லை. உத்பத்திக்கு முன் அசத்தாகவே இருந்தது என்ற கல்பனை சம்பவிக்காது.
ननु कथं वस्त्वाकृतेः शब्दार्थत्वे असदेकमेवाद्वितीयमिति पदार्थवाक्यार्थोपपत्तिः, तदनुपपत्तौ च इदं वाक्यमप्रमाणं प्रसज्येतेति चेत् ,
அனுவாதம் - மீமாம்சகர் - ஆனால் சப்த அர்த்தமோ வஸ்துவின் ஆகிருதி (வடிவம்) ஆகிறது. அப்படிப்பட்ட அவஸ்தையில் “ஏக மாத்திர அத்விதீய அசத்தாய் இருந்தது” என்ற பதங்களினதோ அல்லது இந்த வாக்கியத்தின் அர்த்தமோ எவ்வாறு சரியானதாக ஆகும்? இது சரியில்லை என்றால் இந்த சுருதி வாக்கியமும் பிராமணம் அற்றதாக ஆகிவிடும்.
नैष दोषः, सद्ग्रहणनिवृत्तिपरत्वाद्वाक्यस्य । सदित्ययं तावच्छब्दः सदाकृतिवाचकः । एकमेवाद्वितीयमित्येतौ च सच्छब्देन समानाधिकरणौ ; तथेदमासीदिति च । तत्र नञ् सद्वाक्ये प्रयुक्तः सद्वाक्यमेवावलम्ब्य सद्वाक्यार्थविषयां बुद्धिं सदेकमेवाद्वितीयमिदमासीदित्येवंलक्षणां ततः सद्वाक्यार्थान्निवर्तयति, अश्वारूढ इव अश्वालम्बनः अश्वं तदभिमुखविषयान्निवर्तयति — तद्वत् । न तु पुनः सदभावमेव अबिधत्ते । अतः पुरुषस्य विपरीतग्रहणनिवृत्त्यर्थपरम् इदमसदेवेत्यादि वाक्यं प्रयुज्यते । दर्शयित्वा हि विपरीतग्रहणं ततो निवर्तयितुं शक्यत इत्यर्थवत्त्वात् असदादिवाक्यस्य श्रौतत्वं प्रामाण्यं च सिद्धमित्यदोषः । तस्मात् असतः सर्वाभावरूपात् सत् विद्यमानम् जायत समुत्पन्नम् अडभावः छान्दसः ॥
அனுவாதம் - ஸித்தாந்தீ - இங்கு இந்த தோஷம் இல்லை. ஏன்எனில் இந்த வாக்கியம் சத்தை கிரஹிக்கிறது என்பதை நிவர்த்தி செய்வதே இதன் தாத்பர்யம். “சத்” என்ற இந்த சப்தம் சத் ஆகிருதியின் வாசகம் ஆகும். ஏகமேவ அத்விதீயம் (ஒன்றே இரண்டற்றது) என்ற இரண்டு சப்தங்களும் சத் சப்தத்துடன் சமானாதிகரண்ய ரூபத்தால் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறே “इदम्” “आसीत्” (இதம், ஆசீத்) என்ற சப்தங்களும் சமானாதி கரணமாகும். இவ்வாறு இருக்கும்பொழுது சத்வாக்கியத்தில் பிரயோகம் செய்யப்பட்ட “नञ्” (நஞ்- இல்லை) சத்வாக்கியத்தை அவலம்பித்து (ஆஸ்ரயித்து) “सदेकमेवाद्वितीयमिदमासीत्” (சதேகமேவாத்விதீயமிதமாஸீ த்) என்பது முதலிய லக்ஷணங்களுடன் கூடிய சத்வாக்யார்த்த விஷய புத்தியானது எவ்வாறு குதிரையின் மேல் ஏறி இருக்கும் குதிரைக்காரன் அந்த குதிரையை ஆஸ்ரயித்தே அதன் விஷயங்களில் இருந்து நிவிர்த்தி செய்கின்றானோ அவ்வாறு சத்வாக்கிய அர்த்தத்தினால் நிவிர்த்தி செய்கிறது. அதனால் சத்தின் அபாவத்தை நிரூபிக்க முடியாது. ஆகையால் புருஷனுடைய விபரீதமாக கிரஹித்ததை நிவிர்த்தி செய்வதன் பரமானதாகவே இந்த “अदेवे” (அதேவ) முதலிய வாக்யங்கள் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. விபரீதமாக கிரஹித்ததைத் தெரிவித்ததல்லவா அதை நிவிர்த்தி செய்யமுடியும் என்பதற்காக அசத் முதலிய வாக்கியங்களுக்கு சுருதி பிரமாணம் சித்திப்பது தோஷமல்ல. ஆகையால் அந்த சர்வ அபாவரூப அசத்தில் இருந்து சத் அதாவது இருக்கின்ற காரியம் உத்பன்னமாயிற்று. “अट्” (அட்)டின் அபாவ சாந்தசம்.
तदेतद्विपरीतग्रहणं महावैनाशिकपक्षं दर्शयित्वा प्रतिषेधति —
அனுவாதம் - அ.கை - இவ்வாறு வைநாசிகர்களுடைய இந்த விபரீத கிரஹணரூப பக்ஷத்தை தெரிவித்து இப்பொழுது அதை நிராகரிக்கின்றார் -
कुतस्तु खलु सोम्यैवं स्यादिति होवाच कथमसतः सज्जायेतेति । सत्त्वेव सोम्येदमग्र आसीदेकमेवाद्वितीयम् ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - ஆனால் ஹே சோம்ய! இவ்விதம் எவ்வாறு முடியும். அசத்திலிருந்து சத் எவ்வாறு உத்பத்தி ஆகமுடியும்? ஆகையால் ஹே சோம்ய! ஆரம்பத்தில் அது ஏகமாத்திர அத்விதீய சத்தாகவே இருந்தது என்று (ஆருணி) கூறினார்.
कुतस्तु प्रमाणात्खलु हे सोम्य एवं स्यात् असतः सज्जायेत इत्येवं कुतो भवेत् ? न कुतश्चित्प्रमाणादेवं सम्भवतीत्यर्थः । यदपि बीजोपमर्देऽङ्कुरो जायमानो दृष्टः अभावादेवेति, तदप्यभ्युपगमविरुद्धं तेषाम् । कथम् ? ये तावद्बीजावयवाः बीजसंस्थानविशिष्टाः तेऽङ्कुरेऽप्यनुवर्तन्त एव, न तेषामुपमर्दोऽङ्कुरजन्मनि । यत्पुनर्बीजाकारसंस्थानम् , तद्बीजावयवव्यतिरेकेण वस्तुभूतं न वैनाशिकैरभ्युपगम्यते, यदङ्कुरजन्मन्युपमृद्येत । अथ तदस्ति अवयवव्यतिरिक्तं वस्तुभूतम् , तथा च सति अभ्युपगमविरोधः ।
அனுவாதம் - ஹே சோம்ய! ஆனால் எந்த பிரமாணத்தால் இவ்வாறு இருக்கிறது? அதாவது அசத்திலிருந்து சத் உண்டாயிற்று என்று எவ்வாறு கூறமுடிகிறது? இவ்வறு ஏற்படுவது எந்த பிரமாணத்தாலும் சம்பவிக்காது என்பது தாத்பர்யம். எவ்வாறு உலகில் பீஜம் (விதை) நாசமாகி முளை உண்டாகிறது என்று காண்கிறோம் என்று கூறும் அவர்களுடைய விருத்தமாகும். எவ்வாறு விருத்தம்? பீஜாகாரமாய் உள்ளது எதுவோ அந்த பீஜத்தின் அவயவமும் அதனுடன் அதாவது அங்குரத்துடன் (முளையுடன்) அனுவிர்த்திக்கின்றது (தொடர்ந்து இருக்கிறது). அங்குரம் (முளை) அழிந்தாலும் பீஜம் நாசமாவது இல்லை. ஆகையால் பீஜ அவயவத்தைக்காட்டிலும் வேறான உண்மை (சத்) ஸ்வரூபமாய் இருக்கிறது என்பதும் அவர்களுடைய கொள்கைக்கு விருத்தமானதாகும்.
अथ संवृत्या अभ्युपगतं बीजसंस्थानरूपमुपमृद्यत इति चेत् , केयं संवृतिर्नाम — किमसावभावः, उत भावः इति ? यद्यभावः, दृष्टान्ताभावः । अथ भावः, तथापि नाभावादङ्कुरोत्पत्तिः, बीजावयवेभ्यो हि अङ्कुरोत्पत्तिः ।
அனுவாதம் - அதாவது சம்விருத்தி (லெளகிக வ்யவகார) மூலமாக ஏற்றுக்கொண்டால் பீஜரூப இருப்பு நஷ்டமாகும் என்றால்? இந்த சம்விருத்தி என்பது என்னவெனில் - அது என்ன அபாவமா அல்லது பாவமா? அது பாவமாய் இருந்தால் திருஷ்டாந்தம் இல்லை. ஆகையால் பாவம் என்றாலும் அபாவத்திலிருந்து அங்குரம் உத்பத்தியாகாது. பீஜத்தின் அவயவங்களில் இருந்து அங்குரம் உத்பத்தியாகின்றது.
अवयवा अप्युपमृद्यन्त इति चेत् , न, तदवयवेषु तुल्यत्वात् । यथा वैनाशिकानां बीजसंस्थानरूपोऽवयवी नास्ति, तथा अवयवा अपीति तेषामप्युपमर्दानुपपत्तिः । बीजावयवानामपि सूक्ष्मावयवाः तदवयवानामप्यन्ये सूक्ष्मतरावयवाः इत्येवं प्रसङ्गस्यानिवृत्तेः सर्वत्रोपमर्दानुपपत्तिः । सद्बुद्ध्यनुवृत्तेः सत्त्वानिवृत्तिश्चेति सद्वादिनां सत एव सदुत्पत्तिः सेत्स्यति । न तु असद्वादिनां दृष्टान्तोऽस्ति असतः सदुत्पत्तेः । मृत्पिण्डाद्घटोत्पत्तिर्दृश्यते सद्वादिनाम् , तद्भावे भावात्तदभावे चाभावात् ।
அனுவாதம் - அவ்வாறு ஆனால் அவயவங்களும் நாசமாகுமே? அவ்வாறு அல்ல, ஏன்எனில் அவயவிக்கு சமானமாக இருப்பதால். எவ்வாறு வைநாசிகர்களின் மதத்தில் பீஜமாய் இருக்கும் நிலையில் உள்ள ரூபம் அவயவீ (அவயவம் உடையது) இல்லையோ அவ்வாறே அவயவமும் இல்லை. ஆகையால் அவைகளுக்கு நாசம் சம்பவிக்காது. பீஜஅவயவங்களுக்கும் சூக்ஷ்மமான அவயவங்கள் இருக்கவேண்டும். அந்த அவயவங்களுக்கும் அதைவிட சூக்ஷ்மமான அவயவங்கள் இருக்கவேண்டும் என்ற கூற்றிற்கு அநவஸ்தாதோஷம் ஏற்படுவதால் எங்கும் நாசம் அடைவது சம்பவிக்காது. அவ்வாறு எங்கும் சத்புத்தி அனுவிருத்தி (தொடர்வதால்) ஆவதால் சத்திற்கு நிவிர்த்தி உண்டாகாது. இவ்வாறு சத்வாதிகளின் கொள்கையானது. சத்திலிருந்து சத் உத்பத்தியாகிறது. அசத்திலிருந்து அசத்தே உத்பத்தி ஆகின்றது என்பது சித்திக்கும். அசத்திலிருந்து சத்தின் உத்பத்தியாவதில் அசத்வாதிகளின் இடத்தில் ஒரு திருஷ்டாந்தமும் இல்லை, சத்வாதிகளின் மதத்தில் மண்பிண்டத்தினால் கடம் உத்பத்தியாவதுக் காணப்படுகிறது. ஏன்எனில் அதன் சத்தா இருப்பதால் கடத்திற்கு சத்தா இருக்கிறது. மேலும் அதன் அபாவத்தால் கடமும் அபாவமாகிறது.
यद्यभावादेव घट उत्पद्येत, घटार्थिना मृत्पिण्डो नोपादीयेत, अभावशब्दबुद्ध्यनुवृत्तिश्च घटादौ प्रसज्येत ; न त्वेतदस्ति ; अतः नासतः सदुत्पत्तिः ।
அனுவாதம் - அபாவத்திலிருந்து கடம் உத்பத்தியானால் கடத்தை விரும்புபவன் மண் பிண்டத்தை எடுக்க வேண்டியதில்லை. அவ்வாறே கடம் முதலியவைகளின் அபாவ சப்தம், அபாவ புத்தியின் அனுவிருத்தி உண்டாகும். ஆனால் அவ்வாறு அல்ல. ஆகையால் அசத்திலிருந்து சத்தின் உத்பத்தி சம்பவிக்க முடியாது.
यदप्याहुः मृद्बुद्धिर्घटबुद्धेर्निमित्तमिति मृद्बुद्धिर्घटबुद्धेः कारणमुच्यते, न तु परमार्थत एव मृद्घटो वा अस्तीति, तदपि मृद्बुद्धिर्विद्यमाना विद्यमानाया एव घटबुद्धेः कारणमिति नासतः सदुत्पत्तिः ।
அனுவாதம் - இதைத்தவிர இவ்வாறு கூறுகின்றனர் - மண் புத்தியே கட புத்திக்கு நிமித்தமானதால் மண்புத்தியே கடபுத்திக்கு காரணம் என்று கூறுகின்றனர். உண்மையில் மண்ணோ கடமோ ஒரு சிறிதும் இல்லை. அதுவும் மண்புத்தியின் இருப்பு இருப்பதால்தான் கட புத்தியின் காரணம் ஆகிறது. ஆகையால் அசத்திலிருந்து சத்தின் உத்பத்தி சித்திக்காது.
मृद्घटबुद्ध्योः निमित्तनैमित्तिकतया आनन्तर्यमात्रम् , न तु कार्यकारणत्वमिति चेत् , न, बुद्धीनां नैरन्तर्ये गम्यमाने वैनाशिकानां बहिर्दृष्टान्ताभावात् ।
அனுவாதம் - மண்புத்தி கடபுத்தி இவைகளின் நிமித்தம், நிமித்த அற்ற ரூபத்தால் ஆநந்தர்யமாத்திரமே அதாவது அதற்குப்பின் என்பது மாத்திரமேயாகும். காரிய காரணத்துவம் இல்லையெனில்? அவ்வாறு அல்ல. ஏன்எனில் புத்திகளின் நிரந்தரமாக ஞானம் ஏற்படுவதற்கான எந்த ஒரு பாஹ்ய திருஷ்டாந்தமும் வைநாசிகர்கள் இடத்தில் இல்லை.
अतः कुतस्तु खलु सोम्य एवं स्यात् इति ह उवाच — कथं केन प्रकारेण असतः सज्जायेत इति ; असतः सदुत्पत्तौ न कश्चिदपि दृष्टान्तप्रकारोऽस्तीत्यभिप्रायः । एवमसद्वादिपक्षमुन्मथ्य उपसंहरति — सत्त्वेव सोम्येदमग्र आसीदिति स्वपक्षसिद्धिम् ।
அனுவாதம் - ஆகையால் ஹே சோம்ய! எதனால் இவ்வாறு சம்பவிக்கிறது? என்று (ஆருணி) கூறினார். அதாவது எதனால்- எவ்வாறு அசத்திலிருந்து சத் உண்டாகிறது என்று. அசத்திலிருந்து சத்தின் உத்பத்தி சம்பந்தமாக எந்த ஒரு திருஷ்டாந்த பிரகாரமோ இல்லை என்பது அபிப்பிராயம். இவ்வாறு அசத்வாதியின் பக்ஷத்தை நிராகரித்து (ஆருணி) கூறினார்- ஹே சோம்ய! “ஆரம்பத்தில் அது சத்தாகவே இருந்தது” என்று தன் பக்ஷத்தை சித்தி செய்துமுடிக்கின்றார்.
ननु सद्वादिनोऽपि सतः सदुत्पद्यते इति नैव दृष्टान्तोऽस्ति, घटाद्घटान्तरोत्पत्त्यदर्शनात् ।
அனுவாதம் - சங்கை - ஆனால் சத்வாதிகளும் கடத்திலிருந்து வேறு கட உத்பத்தியை காணாததால் சத்திலிருந்து சத் உத்பத்தி ஆயிற்று என்பதற்கு திருஷ்டாந்தம் காணப்படவில்லை.
सत्यमेवं न सतः सदन्तरमुत्पद्यते ; किं तर्हि, सदेव संस्थानान्तरेणावतिष्ठते — यथा सर्पः कुण्डली भवति, यथा च मृत् चूर्णपिण्डघटकपालादिप्रभेदैः ।
அனுவாதம் - ஸமாதானம் - இவ்வாறு கூறுவது சரிதான். சத்திலிருந்து வேறு சத் உண்டாவது இல்லை. ஆனால் எவ்வாறு? சத்தே வேறு ஆகாரமாய் இருக்கின்றது. எவ்வாறு பாம்பு வட்டமிட்டு சுருண்டு இருக்கின்றதோ மேலும் எவ்வாறு மணல் பிண்டம் கடம் கபாலம் முதலிய பேதங்களாக இருக்கின்றனவோ அவ்வாறு உண்டாகிறது.
यद्येवं सदेव सर्वप्रकारावस्थम् , कथं प्रागुत्पत्तेरिदमासीदित्युच्यते ?
அனுவாதம் - சங்கை - இவ்வாறு இருக்கும்பொழுது சத்துதான் எல்லா பிரகாரமாக இருக்கும்பொழுது உத்பத்திக்குமுன் சத்தாகவே இருந்தது என்று எவ்வாறு கூறப்படுகிறது.
ननु न श्रुतं त्वया, सदेवेत्यवधारणम् इदं — शब्दवाच्यस्य कार्यस्य ।
அனுவாதம் - ஸமாதானம் - என்ன நீ சத்தே (सदेव) என்று நிச்சயம் செய்யப்பட்ட சப்த வாச்சியத்தைக் கேட்கவில்லையா?
प्राप्तं तर्हि प्रागुत्पत्तेः असदेवासीत् न इदं — शब्दवाच्यम् , इदानीमिदं जातमिति ।
அனுவாதம் - சங்கை - அப்பொழுது இவ்வாறு சித்திக்கிறது - அதாவது “இது” (इदं) உத்பத்திக்குமுன் அசத்தாக இருந்தது என்பது “इदम्” (இதம் - இந்த) சப்த வாச்சியம் அல்ல. இது இப்பொழுது உத்பன்னமாயிற்று என்று ஆகிறது எனில்
न, सत एव इदं — शब्दबुद्धिविषयतया अवस्थानात् , यथा मृदेव पिण्डघटादिशब्दबुद्धिविषयत्वेनावतिष्ठते — तद्वत् ।
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறு அல்ல. ஏன் எனில் எவ்வாறு மண்ணே பிண்டம் அவ்வாறே கடம் முதலிய சப்தம் புத்தியின் விஷயமாகி இருக்கின்றது. எவ்வாறு சத்தும் இதம் (இந்த “इदम्” சப்தத்திற்கும், இதம் புத்திக்கும் விஷய ரூபமாய் இருக்கின்றதோ அவ்வாறே சத்தே இதம் சப்தமும், இதம் புத்திக்கு விஷய ரூபமாயும் இருக்கின்றது.
ननु यथा मृद्वस्तु एवं पिण्डघटाद्यपि, तद्वत् सद्बुद्धेरन्यबुद्धिविषयत्वात्कार्यस्य सतोऽन्यद्वस्त्वन्तरं स्यात्कार्यजातं यथा अश्वाद्गौः ।
அனுவாதம் - சங்கை- - ஆனால் எவ்வாறு மண் வஸ்துவோ அவ்வாறே பிண்டம் கட முதலிய வஸ்துக்களும் ஆகிறது. அவ்வாறு சத்காரிய சத்புத்தியினால் வேறு புத்தியின் விஷயமாவதால் சத்தை அபேக்ஷித்து வேறு மற்ற வஸ்து குதிரையில் இருந்து பசுவைப்போல் உண்டாகவேண்டும்.
न, पिण्डघटादीनामितरेतरव्यभिचारेऽपि मृत्त्वाव्यभिचारात् । यद्यपि घटः पिण्डं व्यभिचरति पिण्डश्च घटम् , तथापि पिण्डघटौ मृत्त्वं न व्यभिचरतः तस्मान्मृन्मात्रं पिण्डघटौ । व्यभिचरति त्वश्वं गौः अश्वो वा गाम् । तस्मान्मृदादिसंस्थानमात्रं घटादयः । एवं सत्संस्थानमात्रमिदं सर्वमिति युक्तं प्रागुत्पत्तेः सदेवेति, वाचारम्भणमात्रत्वाद्विकारसंस्थानमात्रस्य
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறு சம்பவிக்காது. ஏன் எனில் பிண்டம் கடம் முதலியவைகள் வெவ்வேறாக இருந்தாலும் மண் என்பது ஒன்றிலும் மாறுபடாமல் இருக்கிறது. கடம், பிண்டம் என்று மாறுபட்டு இருந்தாலும் இவை மண் மாத்திரமாகவே உள்ளது. குதிரை, மாடு என்றும், மாடு குதிரை என்றும் வேறுபாடு உள்ளது. ஆகையால் கடம் முதலியவைகள் மண்ணின் இருப்பு மாத்திரமேயாகும். இவ்வாறு இவை எல்லாம் சத்தின் இருப்பேயாகும். வாச்சாரம்பணம் மாத்திரமாக இருப்பதால் விகாரங்களின் இருப்பை உத்பத்திக்கு முன் சத்தாகவே இருந்தது என்பது சரியானதே.
அனுவாதம் - சங்கை - ஆனால் சத் நிரவயவம். “निष्कलं निष्क्रियं शान्तं निरवद्यं निरनम्” (நிஷ்கலம் நிஷ்கிரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்சனம்) என்றும் “दिव्यो ह्यमूर्तः पुरुषः सबाह्याभ्यन्तरो ह्यजः” (திவ்யோஹ்ய மூர்த்த: புருஷ: சபாஹ்யாப்யந்தரோ ஹ்யஜ:) என்று சுருதிகளால் கூறப்பட்ட நிரவயவமான சத்திற்கு விகாரத்தின் இருப்பு எவ்வாறு சம்பவிக்கின்றது?
அனுவாதம் - ஸமாதானம் - இந்த தோஷம் இல்லை. ஏன்எனில் கயிறு முதலிய ஆகாரங்களில் பாம்பு முதலியவை இருப்பது (தோன்றுவது) போல் புத்தியினால் கல்பிக்கப்பட்டதால் சத் அவயங்களின் விகாரம் உண்டாகிறது. “वाचारम्भणं विकारो नामधेयं मृत्तिकेत्येव सत्यम्” (வாச்சாரம்பணம் விகாரோ நாமதேயம் மிருத்திகேத்யேவ சத்யம்) இவ்வாறு “सदेव सत्यम्” (சதேவ சத்யம் = சத்தே சத்யம்) என்பது சுருதிப்பிரமாணம் ஆகும். இந்த (इदं) என்ற புத்தி காலத்திலும் உண்மையில் “एकमेवाद्वितीयम्” (ஏகமேவாத்விதீயம் - ஏகமாகவே அத்வீதயம்) ஆகும்.
तदैक्षत बहु स्यां प्रजायेयेति तत्तेजोऽसृजत तत्तेज ऐक्षत बहु स्यां प्रजायेयेति तदपोऽसृजत । तस्माद्यत्र क्वच शोचति स्वेदते वा पुरुषस्तेजस एव तदध्यापो जायन्ते ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - அது (சத்) பார்த்தது (ऐक्षत) நான் அநேகமாக ஆவேனாக- அநேக விதமாக உண்டாவேனாக. இவ்வாறு ஈக்ஷணம் செய்து அது தேஜஸ்ஸை உத்பன்னம் செய்தது. அந்த தேஜஸ் நினைத்தது நான் அநேகமாக ஆவேனாக- நாநாவிதமாக உத்பன்னமாவேனாக என்று. இவ்வாறு (சிந்தித்து) ஈக்ஷணம் செய்து (தர்சனம் செய்து) ஜலத்தை உண்டாக்கியது. இதனால் எங்கு எந்த புருஷன் சோகத்தை அடைகிறானோ அப்பொழுதும் மிகுந்த உழைப்பதாலும் ஜலம் வருகிறது. அந்த சமயத்தில் அந்த தேஜஸ்ஸிலிருந்து ஜலத்தின் உத்பத்தி சம்பவிக்கின்றது.
तत् सत् ऐक्षत ईक्षां दर्शनं कृतवत् । अतश्च न प्रधानं साङ्ख्यपरिकल्पितं जगत्कारणम् , प्रधानस्याचेतनत्वाभ्युपगमात् । इदं तु सत् चेतनम् , ईक्षितृत्वात् । तत्कथमैक्षतेति, आह — बहु प्रभूतं स्यां भवेयं प्रजायेय प्रकर्षेणोत्पद्येय, यथा मृद्घटाद्याकारेण यथा वा रज्ज्वादि सर्पाद्याकारेण बुद्धिपरिकल्पितेन ।
அனுவாதம் - அந்த சத் ஈக்ஷணம் செய்தது அதாவது தர்சனம் செய்தது. ஆகையால் பிரதானம் அசேதனமாய் இருப்பதாலும் சத்சேதனம் ஈக்ஷணம் செய்வதாலும் சாங்கியர்கள் கல்பிக்கும் பிரதானம் ஜகத் காரணமாகாது. அது எவ்வாறு? அதற்கு கூறப்படுகிறது - அநேகமாக ஆவேனாக. “प्रजायेय” (பிரஜாயேய) மிகச் சிறப்பாக உத்பன்னம் ஆவேனாக என்று. எவ்வாறு மண், கடம் முதலான ஆகாரமாயிற்றோ, அவ்வாறே புத்தியின் கல்பனையினால் ரஜ்ஜு முதலியவைகள் சர்ப்பம் முதலிய ஆகாரமாக உத்பன்னமாகிறதோ அவ்வாறு ஆகும்.
असदेव तर्हि सर्वम् , यद्गृह्यते रज्जुरिव सर्पाद्याकारेण ।
அனுவாதம் - சங்கை - ஆனால் எது ரஜ்ஜுபோல் சர்ப்பம் முதலிய ஆகாரமாக கிரஹிக்கப்படுகிறதோ அவை எல்லாம் அசத்தாகும்.
न, सत एव द्वैतभेदेन अन्यथागृह्यमाणत्वात् न असत्त्वं कस्यचित्क्वचिदिति ब्रूमः । यथा सतोऽन्यद्वस्त्वन्तरं परिकल्प्य पुनस्तस्यैव प्रागुत्पत्तेः प्रध्वंसाच्चोर्ध्वम् असत्त्वं ब्रुवते तार्किकाः, न तथा अस्माभिः कदाचित्क्वचिदपि सतोऽन्यदभिधानमभिधेयं वा वस्तु परिकल्प्यते । सदेव तु सर्वमभिधानमभिधीयते च यदन्यबुद्ध्या, यथा रज्जुरेव सर्पबुद्ध्या सर्प इत्यभिधीयते, यथा वा पिण्डघटादि मृदोऽन्यबुद्ध्या पिण्डघटादिशब्देनाभिधीयते लोके । रज्जुविवेकदर्शिनां तु सर्पाभिधानबुद्धी निवर्तेते, यथा च मृद्विवेकदर्शिनां घटादिशब्दबुद्धी, तद्वत् सद्विवेकदर्शिनामन्यविकारशब्दबुद्धी निवर्तेते —
‘यतो वाचो निवर्तन्ते । अप्राप्य मनसा सह’ (तै. उ. २ । ९ । १) इति,
‘अनिरुक्तेऽनिलयने’ (तै. उ. २ । ७ । १) इत्यादिश्रुतिभ्यः ।
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறு அல்ல. சத்தே த்வைத பேதத்தால் வேறாக கிரஹிக்கப்படுவதால் அசத்துவம் என்பது எந்த ஒரு பதார்தத்திற்கும் ஒரு நாளும் அசத் என்பது கிடையாது. எவ்வாறு சத்தைக் தவிர வேறு வஸ்துவை கல்பித்து மறுபடியும் அதையே உத்பத்திக்கு முன் நாசமடைந்து அதன்பின் அதற்கு அசத்தை தார்க்கிகர்கள் கூறுவது போல் அவ்வாறு நாம் ஒருபொழுதும், ஒரு சிறிதும் சத்தைக்காட்டிலும் வேறான நாமத்திற்கு விஷயமாகும் எந்த பொருளையும் கல்பிக்கவில்லை. எல்லா நாமங்களும் வேறு என்ற புத்தியினால் உண்டாகும் அவை எல்லா பதார்த்தங்களும் நம்மால் கல்பிக்கப்படவில்லை. எல்லா நாமங்களும் வேறு புத்தியினால் கூறப்படுகிறதே தவிர அவை எல்லாம் சத்தேயாகும். உலகில் எவ்வாறு ரஜ்ஜீவே சர்பபுத்தியால் சர்ப்பம் எனப்படுகிறதோ எவ்வாறு பிண்டம் கடம் முதலியவைகள் மண்ணின் வேறு புத்தியால் பிண்டம் கடம் முதலிய சப்தங்களால் கூறுகிறோமோ அவ்வாறு ஆகும். ரஜ்ஜீவின் விவேக தர்சனத்தால் சர்ப்பம் முதலிய புத்தி நீங்குகிறதோ, மேலும் மண்ணின் விவேக தர்சனத்தால் கடம் முதலிய சப்த புத்தி நிவர்த்தியாகிறதோ அவ்வாறு ஆகும். “यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह” (யதோவாசோ நிவர்தந்தே அப்ராப்ய மனசா சஹ) என்றும் “अनिरुक्तेऽनिलयने” (அநிருக்த்தே அநிலயனே) என்பது முதலிய சுருதிகள் பிரமாணங்களாகும்.
एवमीक्षित्वा तत् तेजः असृजत तेजः सृष्टवत् ।
அனுவாதம் - இவ்வாறு ஈக்ஷணை செய்து அது தேஜஸ்ஸை சிருஷ்டித்தது.
அனுவாதம் - சங்கை - “तस्माद्वा एतस्मादात्मन आकाशः सम्भूतः” (தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மன ஆகாச: சம்பூத:) என்பது சுருதி ஆனால் இங்கு எவ்வாறு முதலில் அதிலிருந்து தேஜஸ் சிருஷ்டிக்கப்பட்டது. மேலும் அதிலிருந்து ஆகாசம் சிருஷ்டிக்கப்பட்டது என்றும் ஏன் இவ்வாறு விருத்தமாகக் கூறப்படுகிறது.
नैष दोषः, आकाशवायुसर्गानन्तरं तत्सत् तेजोऽसृजतेति कल्पनोपपत्तेः । अथवा अविवक्षितः इह सृष्टिक्रमः ; सत्कार्यमिदं सर्वम् , अतः सदेकमेवाद्वितीयमित्येतद्विवक्षितम् , मृदादिदृष्टान्तात् । अथवा त्रिवृत्करणस्य विवक्षितत्वात् तेजोबन्नानामेव सृष्टिमाचष्टे । तेज इति प्रसिद्धं लोके दग्धृ पक्तृ प्रकाशकं रोहितं चेति ।
அனுவாதம் - ஸமாதானம் - இந்த தோஷம் இல்லை. ஏன் எனில் ஆகாசம் வாயு ஆகியவற்றிக்குப்பின் தேஜஸ் சிருஷ்டிக்கப்பட்டது என்ற கல்பனை ஏற்படுகிறது. அல்லது இங்கு சிருஷ்டிக்கிரமம் கூறவிரும்பவில்லை எனலாம். எல்லாம் சத்காரியமே ஆகையால் மண் முதலிய திருஷ்டாந்தங்களால் சத் ஒன்றே அத்விதீயம் என்று விளக்கப்பட்டது. அல்லது த்ரிவித்கரணத்தை விளக்குவதால் தேஜஸ், ஜலம், அன்னம் ஆகியவையே சிருஷ்டி என்று கூறப்படுகிறது. உலகில் தேஜஸ் என்பது எரிக்கக் கூடியது, சமைக்கக்கூடியது (பக்குவப்படுத்தக் கூடியது) பிரகாசமானது, செந்நிறமானது என்பது பிரசித்தமாகும்.
तत् सत्सृष्टं तेजः ऐक्षत तेजोरूपसंस्थितं सत् ऐक्षतेत्यर्थः । बहु स्यां प्रजायेयेति पूर्ववत् । तत् अपोऽसृजत आपः द्रवाः स्निग्धाः स्यन्दिन्यः शुक्लाश्चेति प्रसिद्धा लोके । यस्मात्तेजसः कार्यभूता आपः, तस्माद्यत्र क्वच देशे काले वा शोचति सन्तप्यते स्वेदते प्रस्विद्यते वा पुरुषः तेजस एव तत् तदा आपः अधिजायन्ते ॥
அனுவாதம் - அந்த சத் சிருஷ்டித்த தேஜஸ் ஈக்ஷணம் செய்தது அதாவது அந்த தேஜஸ்ஸில் இருக்கும் சத் ஈக்ஷணம் செய்தது என்பது பொருள், அநேகமாக ஆவேனாக என்பது எல்லாம் முன்போல். அது ஜலத்தை சிருஷ்டித்தது. உலகில் ஜலமானது திரவதன்மை, ஒட்டும் தன்மை, ஓடும் தன்மை, வெண்மை ஆகியவைகள் பிரசித்தம். எதனால் தேஜஸ்ஸின் ஜலம் காரியரூபமோ அதனால் எங்கு எப்பொழுது சோகத்தால் தபிக்கின்றனரோ அப்பொழுது வேர்வை உண்டாகிறது அப்பொழுது தேஜஸ்ஸிலிருந்து அல்லவா ஜலம் உண்டாகிறது.
ता आप ऐक्षन्त बह्व्यः स्याम प्रजायेमहीति ता अन्नमसृजन्त तस्माद्यत्र क्व च वर्षति तदेव भूयिष्ठमन्नं भवत्यद्भ्य एव तदध्यन्नाद्यं जायते ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - அந்த ஜலம் ஈக்ஷணம் செய்தது - நான் அநேகமாக ஆவேனாக - அநேக ரூபமாக உத்பன்னம் ஆவேனாக என்று அன்னத்தை சிருஷ்டித்தது. இதனால் எங்கு மழை பெய்கிறதோ அங்கு அதிகமாக அன்னமாகிறது. உண்ணக்கூடிய உணவு ஜலத்தினால் உத்பன்னமாகிறது.
ता आप ऐक्षन्त पूर्ववदेव अबाकारसंस्थितं सदैक्षतेत्यर्थः । बह्वयः प्रभूताः स्याम भवेम प्रजायेमहि उत्पद्येमहीति । ता अन्नमसृजन्त पृथिवीलक्षणम् । पार्थिवं हि अन्नम् ; यस्मादप्कार्यमन्नम् , तस्मात् यत्र क्व च वर्षति देशे तत् तत्रैव भूयिष्ठं प्रभूतमन्नं भवति । अतः अद्भ्य एव तदन्नाद्यमधिजायते । ता अन्नमसृजन्तेति पृथिव्युक्ता पूर्वम् , इह तु दृष्टान्ते अन्नं च तदाद्यं चेति विशेषणात् व्रीहियवाद्या उच्यन्ते । अन्नं च गुरु स्थिरं धारणं कृष्णं च रूपतः प्रसिद्धम् ॥
அனுவாதம் - அந்த ஜலம் ஈக்ஷணம் செய்தது அதாவது முன்போலவே ஜல ரூபத்தில் இருக்கும் சத் ஈக்ஷணம் செய்தது என்பது பொருள். அநேகமாக ஆவேனாக மேலும் மிகவும் சிறப்பாக உத்பன்னமாவேனாக என்று அது பிருதிவீரூப லக்ஷணமுடைய அன்னத்தை சிருஷ்டித்தது. பிருதிவியின் விகாரமே அன்னம். ஆகையால் எந்த தேசத்தில் மழை பெய்கிறதோ அங்குதான் அதிகமாக அன்னம் உண்டாகிறது. ஆகையால் அந்த ஜலத்தினால்தான் நாம் சாப்பிடத்தகுந்த அன்னம் உண்டாகிறது. அது அன்னத்தை சிருஷ்டித்தது என்று கூறி முன்பே ச்ருதியானது “अन्न” (அன்ன) சப்தத்தால் பிருத்வீயை கூறி ஜல திருஷ்டாந்தத்தில் அது அன்னம் என்றும் அன்னாத்யம் (சாப்பிடக்கூடிய அன்னம்) என்ற விசேஷணம் இருப்பதால் ஆத்ய (आद्य) சப்தத்தால் நெல் பார்லி முதலியவை கூறப்படுகின்றன. அன்னம் என்பது கனமானதும், ஸ்திரமானதும், தரிப்பதும், கருமையானதுமான ரூபம் உடையது என்பது பிரசித்தமாகும்.
ननु तेजःप्रभृतिषु ईक्षणं न गम्यते, हिंसादिप्रतिषेधाभावात् त्रासादिकार्यानुपलम्भाच्च ; तत्र कथं तत्तेज ऐक्षतेत्यादि ?
அனுவாதம் - சங்கை - ஆனால் தேஜஸ் முதலியவைகளில் ஹிம்சை முதலியவை நீக்கப்படாததாலும், பயம் முதலிய காரியம் காணப்படாததாலும் ஈக்ஷணம் காணப்படவில்லையே. அங்கு அந்த தேஜஸ் ஈக்ஷணம் செய்கிறது என்பது முதலியவை எவ்வாறு? ஆகும்.
नैष दोषः । ईक्षितृकारणपरिणामत्वात्तेजःप्रभृतीनां सत एव ईक्षितुः नियतक्रमविशिष्टकार्योत्पादकत्वाच्च तेजःप्रभृति ईक्षते इव ईक्षते इत्युच्यते भूतम् ।
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறான தோஷம் இல்லை, ஏன்எனில் தேஜஸ் முதலியவைகளை ஈக்ஷணம் செய்யும் காரணத்தின் பரிணாமம் ஆகும். ஈக்ஷணம் செய்யும் சத்தே நியதகிரமமாக கர்மத்துடன் கூடி காரியத்தை உண்டுபண்ணுவதால் தேஜஸ் முதலிய பூதங்கள் ஈக்ஷணை செய்வது போல் ஈக்ஷணை செய்கின்றது என்று கூறப்படுகிறது.
ननु सतोऽप्युपचरितमेव ईक्षितृत्वम् ।
அனுவாதம் - சங்கை - ஆனால் சத்தின் ஈக்ஷணமும் உபசாரமே ஆகும்.
न । सदीक्षणस्य केवलशब्दगम्यत्वात् न शक्यमुपचरितं कल्पयितुम् । तेजःप्रभृतीनां त्वनुमीयते मुख्येक्षणाभाव इति युक्तमुपचरितं कल्पयितुम् ।
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறு அல்ல. சத்தின் ஈக்ஷணம் சப்த மாத்திரத்தால் அறியப்படுவதால் உபசாரமாக என்று கல்பிக்க முடியாது. தேஜஸ் முதலியவைகளுக்கு முக்கிய ஈக்ஷணம் இல்லாததால் அனுமானம் செய்யப்படுகிறது என்று உபசாரத்தைக் கல்பிப்பது பொருத்தமேயாகும்.
ननु सतोऽपि मृद्वत्कारणत्वादचेतनत्वं शक्यमनुमातुम् । अतः प्रधानस्यैवाचेतनस्य सतश्चेतनार्थत्वात् नियतकालक्रमविशिष्टकार्योत्पादकत्वाच्च ऐक्षत इव ऐक्षतेति शक्यमनुमातुम् उपचरितमेव ईक्षणम् । दृष्टश्च लोके अचेतने चेतनवदुपचारः, यथा कूलं पिपतिषतीति तद्वत् सतोऽपि स्यात् ।
அனுவாதம் - சங்கை - ஆனால் சத்தாக இருந்தாலும் மண்போல காரணமாக இருப்பதால் அசேதனம் என்று அனுமானம் செய்யமுடியும். ஆகையால் அசேதன பிரதானமான சத்தின் சேதனமானது, நியதகாலக் கிரமத்துடன் கூடிய காரியத்தை உண்டுபண்ணுவதால் ஈக்ஷணை செய்வது போல் ஈக்ஷண செய்கிறது என்று ஈக்ஷணம் உபசாரம் என்பதை அனுமானம் செய்யமுடியும். எவ்வாறு உலகில் கரைவிழுகிறது என்பது போல் சத்தின் ஈக்ஷணமும் உபசாரமாக ஆகும்.
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறு ஆகமுடியாது. ஏன்எனில் “அது சத்யம் அது ஆத்மா” என்று கூறி அதில் ஆத்மதத்துவத்தின் உபதேசம் செய்யப்பட்டுள்ளது.
आत्मोपदेशोऽप्युपचरित इति चेत्— यथा ममात्मा भद्रसेन इति सर्वार्थकारिण्यनात्मनि आत्मोपचारः — तद्वत् ;
அனுவாதம் - சங்கை - எவ்வாறு பத்ரசேனன் என்னுடைய ஆத்மா என்று இந்த வாக்கியத்தால் தன்னுடைய எல்லா காரியங்களையும் செய்யும் தானாக இல்லாதவன் இடத்தில் (அநாத்மாவில்) தான் (ஆத்மா) என்று உபசாரமாக கூறுகின்றானோ அவ்வாறு ஆத்ம உபதேசமும் உபசாரம் என்று கருதலாமே?
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறு கூறுவது சரியல்ல அந்த சத் நானே என்று சத்தில் திட அபிநிவேஷம் செய்பவனுக்காக “तस्य तावदेव चिरम्” (தஸ்ய தாவதேவ சிரம்=அவன் விடுபடும்வரை காத்திருந்து அதன்பின் அவன் கைவல்ய பதத்தை அடைகின்றான்) என்று மோக்ஷம் உபதேசிக்கப்பட்டுள்ளது.
सोऽप्युपचार इति चेत्— प्रधानात्माभिसन्धस्य मोक्षसामीप्यं वर्तत इति मोक्षोपदेशोऽप्युपचरित एव, यथा लोके ग्रामं गन्तुं प्रस्थितः प्राप्तवानहं ग्राममिति ब्रूयात्त्वगपेक्षया — तद्वत् ;
அனுவாதம் - சங்கை - அதுவும் உபசாரமே எனில்? எவ்வாறு உலகில் கிராமத்திற்கு செல்லும் புருஷன் தான் வேகமாக வருவதை அபேக்ஷித்து நான் கிராமத்தை அடைந்துவிட்டேன் என்று கூறுவதுபோல் பிரதானத்தில் ஆத்ம புத்தி செய்பவனுக்கு மோக்ஷத்தின் சமீபமாய் இருப்பதின் காரணமாக இந்த மோக்ஷத்தின் உபதேசமும் உபசாரமாகுமே எனில்?
न, येन विज्ञातेनाविज्ञातं विज्ञातं भवतीत्युपक्रमात् । सति एकस्मिन्विज्ञाते सर्वं विज्ञातं भवति, तदनन्यत्वात् सर्वस्याद्वितीयवचनाच्च । न च अन्यद्विज्ञातव्यमवशिष्टं श्रावितं श्रुत्या अनुमेयं वा लिङ्गतः अस्ति, येन मोक्षोपदेश उपचरितः स्यात् । सर्वस्य च प्रपाठकार्थस्य उपचरितत्वपरिकल्पनायां वृथा श्रमः परिकल्पयितुः स्यात् , पुरुषार्थसाधनविज्ञानस्य तर्केणैवाधिगतत्वात्तस्य । तस्माद्वेदप्रामाण्यात् न युक्तः श्रुतार्थपरित्यागः । अतः चेतनावत्कारणं जगत इति सिद्धम् ॥
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறு அல்ல. ஏன்எனில் அறிந்தால் அறியாதது அறிந்ததாகிறதோ என்று இவ்வாறு ஆரம்பிக்கப்படுகிறது. எந்த ஒன்றேயான சத்தை அறிந்தால் எல்லாம் அறிந்ததாக ஆகிறது. ஏன்எனில் அதைத்தவிர இரண்டாவது வஸ்து அற்று அதுவே எல்லாமாயும் அத்விதீயம் என்ற வசனத்தால் கூறப்படுகிறது. அதைத்தவிர வேறு எந்த ஒரு வஸ்துவும் அறியவேண்டியதில்லை என்று சுருதியினால் கேட்டிருக்கிறோம். மேலும் அதற்கான ஒரு அறிகுறியினாலும் அதை அனுமானம் செய்யமுடியாது. ஆகையால் இந்த மோக்ஷ உபதேசத்தை உபசாரமாக கூறப்பட்டது என்று கருதப்படுகிறது. எல்லா படித்தவற்றின் அர்த்தமும் உபசாரம் என்று கல்பிக்கும்பொழுது நாம் படித்த பகுதியின் அர்த்தத்தை உபசாரமாக கல்பிப்பது கல்பிக்கின்றவனுடைய சிரமமானது வீணேயாகும். ஏன் எனில் அவனுக்கு சித்தாந்தத்தை அனுசரித்த புருஷார்த்த சாதனமான விக்ஞானம் தர்கத்தாலேயே சித்திக்கின்றது. ஆகையால் வேதத்தின் பிரமாணமாக ஆவதால் சுருதி பிரசித்த அர்த்தத்தை விடுவது சரியல்ல. ஆகையால் ஜகத்திற்குக் காரணம் சேதனம் போன்றது என்பது சித்திக்கின்றது.
इति द्वितीयखण्डभाष्यम् ॥
तेषां खल्वेषां भूतानां त्रीण्येव बीजानि भवन्त्याण्डजं जीवजमुद्भिज्जमिति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - அந்த இந்த (பக்ஷி முதலிய) பிரசித்தமான பிராணிகளின் மூன்று வகையான பீஜங்கள் ஆகின்றன. அவைகள் அண்டஜம், ஜீவஜம் (ஜராயுஜம்) உத்பீஜம் ஆகும்.
तेषां जीवाविष्टानां खलु एषां पक्ष्यादीनां भूतानाम् , एषामिति प्रत्यक्षनिर्देशात् , न तु तेजःप्रभृतीनाम् , तेषां त्रिवृत्करणस्य वक्ष्यमाणत्वात् ; असति त्रिवृत्करणे प्रत्यक्षनिर्देशानुपपत्तिः । देवताशब्दप्रयोगाच्च तेजःप्रभृतिषु — ‘इमास्तिस्रो देवताः’ इति । तस्मात् तेषां खल्वेषां भूतानां पक्षिपशुस्थावरादीनां त्रीण्येव नातिरिक्तानि बीजानि कारणानि भवन्ति ।
அனுவாதம் - அந்த ஜீவனுடன் கூடிய இந்த பக்ஷி முதலிய பிராணிகள் - இதில் “एषाम्” (இந்த) என்பது பிரத்யக்ஷமாய் இருப்பதைத் தெரிவிக்கிறது. ஆகையால் அந்த தேஜஸ் முதலியவைகளின் த்ரிவித்கரணத்தை இனிக் கூறப்போவதால் அது பிரத்யக்ஷம் இல்லை. ஏன்எனில் த்ரிவித்கரணம் செய்யவில்லையெனில் அதை பிரத்யக்ஷமாக கரணம் வர்ணிக்க முடியாது. மேலும் தேஜஸ் முதலியவைகளுக்கு இந்த மூன்று தேவதைகள் என்று இருப்பதால் தேவதா சப்த பிரயோகம் காணப்படுகிறது. ஆகையால் அந்த எந்த எந்த பிராணிகளாகிய பக்ஷி பசு ஸ்தாவரம் முதலியவைகளுக்கு மூன்று பீஜங்களே காரணங்களாகும். அதைத்தவிர வேறு காரணங்கள் இல்லை.
कानि तानीति, उच्यन्ते — आण्डजम् अण्डाज्जातमण्डजम् अण्डजमेव आण्डजं पक्ष्यादि । पक्षिसर्पादिभ्यो हि पक्षिसर्पादयो जायमाना दृश्यन्ते । तेन पक्षी पक्षिणां बीजं सर्पः सर्पाणां बीजं तथा अन्यदप्यण्डाज्जातं तज्जातीयानां बीजमित्यर्थः ।
அனுவாதம் - அவை எவை? என்பது கூறப்படுகிறது - ஆண்டஜம் - (முட்டையிலிருந்து) அண்டத்திலிருந்து உண்டாவது அண்டஜம். அண்டஜம் என்பது பக்ஷி முதலியவைகள். பறவை பாம்பு முதலியவைகளில் இருந்து பறவை பாம்பு முதலியவை உண்டாகின்றன என்பது காணப்படுகிறது. ஆகையால் பறவை பறவைகளின் பீஜமாகவும், பாம்பு பாம்புகளின் பீஜமாகவும், அவ்வாறே மற்ற அண்டங்களில் (முட்டைகளில்) இருந்து உண்டானவைகள் அதன் அதன் ஜாதிகளுக்கு பீஜமாகும் என்பது பொருள்.
ननु अण्डाज्जातम् अण्डजमुच्यते, अतोऽण्डमेव बीजमिति युक्तम् ; कथमण्डजं बीजमुच्यते ?
அனுவாதம் - சங்கை - ஆனால் அண்டத்திலிருந்து (முட்டையில் இருந்து) உண்டாவது அண்டஜம். ஆகையால் அண்டமே பீஜம் என்பது பொருந்தும். எவ்வாறு அண்டஜம் (முட்டையில் இருந்து உண்டானது) பீஜமாகும்?
सत्यमेवं स्यात् , यदि त्वदिच्छातन्त्रा श्रुतिः स्यात् ; स्वतन्त्रा तु श्रुतिः, यत आह अण्डजाद्येव बीजं न अण्डादीति । दृश्यते च अण्डजाद्यभावे तज्जातीयसन्तत्यभावः, न अण्डाद्यभावे । अतः अण्डजादीन्येव बीजानि अण्डजादीनाम् ।
அனுவாதம் - ஸமாதானம் - சுருதி உன்னுடைய இச்சைக்கு அதீனமாக இருந்தால் நீ கூறுவது உண்மையே. ஆனால் சுருதியே ஸ்வதந்திரமானது. ஆகையால் அண்டஜங்கள் (முட்டையில் இருந்து உண்டானவைகளே) பீஜமாகும். அண்டம் (முட்டை) அல்ல. அண்டத்தில் உண்டானவைகள் இல்லையெனில் அதன் ஜாதியின் சந்ததி இல்லாமல் ஆகிவிடும். ஆனால் அண்டம் இல்லாவிடில் அவ்வாறு அல்ல. ஆகையால் அண்ட ஜாதிகளுக்கு அண்டஜங்களே பீஜமாகும்.
तथा जीवाज्जातं जीवजं जरायुजमित्येतत्पुरुषपश्वादि । उद्भिज्जम् उद्भिनत्तीत्युद्भित् स्थावरं ततो जातमुद्भिज्जम् , धाना वा उद्भित् ततो जायत इत्युद्भिज्जं स्थावरबीजं स्थावराणां बीजमित्यर्थः । स्वेदजसंशोकजयोरण्डजोद्भिज्जयोरेव यथासम्भवमन्तर्भावः । एवं हि अवधारणं त्रीण्येव बीजानीत्युपपन्नं भवति ॥
அனுவாதம் - அவ்வாறே ஜீவனிடத்திலிருந்து உண்டாவது ஜீவ பீஜம் அதாவது ஜராயுஜம் என்பது புருஷன் பசு முதலானவைகள். “उिजम्” உத்பீஜம் என்பது மேல்நோக்கி பிளந்து உண்டாவது அது ஸ்தாவரம் ஆகும். அதிலிருந்து மேல் கிழம்பி உண்டாவது. தானியங்கள். அதிலிருந்து மேல் கிழம்பி உண்டாவது உத்பிஜம் ஸ்தாவரத்தின் பீஜமாகும். அதாவது ஸ்தாவரங்களின் பீஜமாகும் என்பது பொருள். வேர்வையினால் உண்டாவதும், உஷ்ணத்தினால் உண்டாகும் ஜீவன்கள் எவ்வாறு சம்பவிக்கின்றதோ அண்டஜத்திலோ அல்லது உத்பிஜத்திலோ அந்தர்பாவம் ஆகிறது. (அடங்குகிறது). இவ்வாறு மூன்று பீஜங்களே என்று நிச்சயிக்கப்படுகிறது.
सेयं देवतैक्षत हन्ताहमिमास्तिस्रो देवता अनेन जीवेनात्मनानुप्रविश्य नामरूपे व्याकरवाणीति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அந்த இந்த (சத் எனப்படும்) தேவதையானது ஈக்ஷணை செய்தது நான் இந்த ஜீவாத்ம ரூபமாக இந்த மூன்று தேவதைகளின் உள்பிரவேசித்து நாம ரூபங்களாக வெளிப்படுவேனாக என்று.
सेयं प्रकृता सदाख्या तेजोबन्नयोनिः देवता उक्ता ऐक्षत ईक्षितवती यथापूर्वं बहु स्यामिति । तदेव बहुभवनं प्रयोजनं नाद्यापि निर्वृत्तम् इत्यतः ईक्षां पुनः कृतवती बहुभवनमेव प्रयोजनमुररीकृत्य ।
அனுவாதம் - அந்த இந்த சத் எனப்படும் தேஜஸ், ஜலம், அன்னயோனீ ரூபமான தேவதைகள் முன்பு எவ்வாறு ஈக்ஷணை செய்ததோ அதாவது அநேகமாக ஆவேனாக என்று அவ்வாறு ஈக்ஷணை செய்தது. அந்த அநேகமாக ஆகும் பிரயோஜனம் இன்று வரை பூர்த்தியாகவில்லை என்பதற்காக மறுபடியும் நான் அநேகமாக ஆவேனாக என்ற பிரயோஜனத்தை மனதில்கொண்டு ஈக்ஷணை செய்தது.
कथम् ? हन्त इदानीमहमिमाः यथोक्ताः तेजआद्याः तिस्रो देवताः अनेन जीवेनेति स्वबुद्धिस्थं पूर्वसृष्ट्यनुभूतप्राणधारणम् आत्मानमेव स्मरन्ती आह— अनेन जीवेन आत्मनेति । प्राणधारणकर्त्रा आत्मनेति वचनात् स्वात्मनोऽव्यतिरिक्तेन चैतन्यस्वरूपतया अविशिष्टेनेत्येतद्दर्शयति । अनुप्रविश्य तेजोबन्नभूतमात्रासंसर्गेण लब्धविशेषविज्ञाना सती नाम च रूपं च नामरूपे व्याकरवाणि विस्पष्टमाकरवाणि, असौनामायम् इदंरूप इति व्याकुर्यामित्यर्थः ॥
அனுவாதம் - அது எவ்வாறு ஈக்ஷணம் செய்கிறது? இப்பொழுது நான் இதற்கு முன் கூறப்பட்ட தேஜஸ் முதலிய மூன்று தேவதைகளில் இந்த ஜீவரூபமாய் என்று கூறி சுருதி முந்திய சிருஷ்டியில் தொடர்ந்து இருந்த பிராணனை தரித்த ஆத்மாவை ஸ்மரித்துக்கொண்டே கூறுகிறது. இந்த பிராண ஆத்மாரூபமாக அதாவது பிராணனை தரிக்கும் ஆத்மாவின் மூலமாய் என்று கூறி சருதியானது இதைத் தெரிவிக்கின்றது. அதாவது தன்னுடைய ஆத்மாவைக் காட்டிலும் அபின்னமான அதாவது தேஜஸ், அப் (ஜலம்), அன்னம் ஆகிய பூதங்கள் மாத்திரத்தின் சம்சர்க்கத்தால் (சேர்க்கையால்) எவ்வளவு விசேஷ விக்ஞானம் அடைகிறோமோ அவ்வாறு ஆகி நான் நாம ரூபம் - நாம ரூபங்களை வெளிப்படுத்துவேனாக. எது இந்த நாமம் உடையது மேலும் இது இந்த ரூபம் உடையது என்று வெளிப்படுத்துவேன் என்பது பொருள்.
ननु न युक्तमिदम् — असंसारिण्याः सर्वज्ञायाः देवतायाः बुद्धिपूर्वकमनेकशतसहस्रानर्थाश्रयं देहमनुप्रविश्य दुःखमनुभविष्यामीति सङ्कल्पनम् , अनुप्रवेशश्च स्वातन्त्र्ये सति ।
அனுவாதம் - சங்கை - ஆனால் ஸ்வதந்திரமாக இருக்கும் சர்வக்ஞ தேவதைக்கு புத்தி பூர்வகமாக நூ று ஆயிரக்கணக்கான அநர்த்தங்களை ஆஸ்ரயித்திருக்கும் தேஹத்தில் பிரவேசித்து துக்கம் அநுபவிப்பேன் என்ற சங்கல்பமும், அதில் பிரவேசிப்பேன் என்பதும் பொருந்தாது.
सत्यमेवं न युक्तं स्यात् — यदि स्वेनैवाविकृतेन रूपेणानुप्रविशेयं दुःखमनुभवेयमिति च सङ्कल्पितवती ; न त्वेवम् । कथं तर्हि ? अनेन जीवेन आत्मना अनुप्रविश्य इति वचनात् ।
அனுவாதம் - ஸமாதானம் - நீ கூறுவது (சத்யம்) உண்மைதான். ஆனால் தன்னுடைய ஸ்வரூபத்தை விடாமல் பிரவேசித்து துக்கம் அனுபவிப்பேன் என்றும் சங்கல்பித்தது என்பது பொருந்தாது. அவ்வாறு அல்ல. ஆனால் எவ்வாறு? இந்த ஜீவாத்ம ரூபத்துடன் பிரவேசித்தது என்ற வசனத்தால் சித்திக்கிறது. “जीवेनात्मनानुप्रविश्य” (ஜீவனாத்மானானு பிரவிச்ய்) என்ற வசனத்தால்.
जीवो हि नाम देवताया आभासमात्रम् , बुद्ध्यादि भूतमात्रासंसर्गजनितः — आदर्शे इव प्रविष्टः पुरुषप्रतिबिम्बः, जलादिष्विव च सूर्यादीनाम् । अचिन्त्यानन्तशक्तिमत्या देवतायाः बुद्ध्यादिसम्बन्धः चैतन्याभासः देवतास्वरूपविवेकाग्रहणनिमित्तः सुखी दुःखी मूढ इत्याद्यनेकविकल्पप्रत्ययहेतुः ।
அனுவாதம் - தேவதையின் ஆபாச மாத்திரமே ஜீவன். கண்ணாடியில் பிரவேசித்த புருஷனின் பிம்பம் போன்றும், ஜலம் முதலியவைகளில் தோன்றும் சூரியன் முதலியவைகளைப் போன்றும் புத்தி முதலியவற்றின் சம்பந்த ரூப சைதன்ய ஆபாச தேவதா ரூபத்தை பிரித்து அறியாததினால் சுகி, துக்கி, மூடன் என்று அநேக விகல்பங்கள் தோன்றுவதற்கு ஹேதுவாகிறது.
அனுவாதம் - சாயைமாத்திர ஜீவரூபமாக பிரவேசித்ததினால் தேவதா தானாக சுக துக்கங்களுடன் சம்பந்தப்படவில்லை. எவ்வாறு புருஷஆதித்யன் முதலியவை கண்ணாடி ஜலம் முதலியவைகளில் சாயாமாத்திரமாக பிரவேசித்து கண்ணாடி ஜலம் முதலியவைகளின் தோஷங்களால் சம்பந்தப்படவில்லையோ தேவதையும் சம்பந்தப்படாமல் இருக்கிறது. “सूर्यो यथा सर्वलोकस्य चक्षुर्न लिप्यते चाक्षुषैर्बाह्यदोषैः। एकस्तथा सर्वभूतान्तरात्मंा न लिप्यते लोकदुःखेन बाह्यः” (சூர்யோ யதா சர்வலோகஸ்ய சக்ஷுர்ந லிப்யதே சாக்ஷுஷை:பாஹ்யதோஷ: ஏகஸ்ததா சர்வபூதாந்தராத்மா ந லிப்யதே லோகதுக்கேன பாஹ்ய:), “आकाशवत्सर्वगत नित्यः” (ஆகாசவத்சர்வகத: நித்ய:) என்பது காடகம். “ध्यायतीव लेलायतीव” (த்யாயதீவ லேலாயதீவ) என்பது பிரஹதாரண்ய உபநிஷத்திலும் விளக்கப்பட்டுள்ளது.
ननु च्छायामात्रश्चेज्जीवः मृषैव प्राप्तः, तथा परलोकेहलोकादि च तस्य ।
அனுவாதம் - சங்கை - ஜீவன் சாயா மாத்திரமாக இருப்பதால் மித்யா என்பது சித்திக்கின்றது. அவ்வாறானால் அவனுடைய பரலோகம், இந்த லோகம் முதலியவைகளும் மித்யாவாகுமே?
नैष दोषः, सदात्मना सत्यत्वाभ्युपगमात् । सर्वं च नामरूपादि सदात्मनैव सत्यं विकारजातम् , स्वतस्त्वनृतमेव,
‘वाचारम्भणं विकारो नामधेयम्’ (छा. उ. ६ । १ । ४) इत्युक्तत्वात् । तथा जीवोऽपीति । यक्षानुरूपो हि बलिरिति न्यायप्रसिद्धिः । अतः सदात्मना सर्वव्यवहाराणां सर्वविकाराणां च सत्यत्वं सतोऽन्यत्वे च अनृतत्वमिति न कश्चिद्दोषः तार्किकैरिहानुवक्तुं शक्यः, यथा इतरेतरविरुद्धद्वैतवादाः स्वबुद्धिविकल्पमात्रा अतत्त्वनिष्ठा इति शक्यं वक्तुम् ॥
அனுவாதம் - ஸமாதானம் - சத்ஆத்மாவினால் சத்யத்துவம் அடைந்ததால் இந்த தோஷம் இல்லை. எல்லா நாமரூபங்கள் முதலிய விகாரத்தால் உண்டானவைகள் சத்ஆத்மாவினாலேயே அவைகள் சத்யம் (அவைகளின் இருப்பு). உண்மையில் அவைகள் சுயமாகவே மித்யை ஆகும். ஏன்எனில் “वाचारम्भणं विकारो नामधेयम्” (வாச்சாரம்பணம் விகாரோ நாமதேயம்) என்று கூறப்பட்டுள்ளதால். அவ்வாறே ஜீவனும் ஆகும். எவ்வாறு யக்ஷணோ அதற்கு தகுந்த பலி என்ற நியாயம் பிரசித்தமாகும். ஆகையால் சத்ஆத்மாவினால் எல்லா வியவஹாரங்களுக்கும் எல்லா விகாரங்களுக்கும் சத்யத்துவம். சத்தைவிட வேறாக இருந்தால் அது மித்யாத்துவம் ஆகும் என்பதில் தார்க்கிகர்களால் எந்த ஒரு தோஷத்தையும் காணமுடியாது. எவ்வாறு ஒருவர் மற்றவருக்கு விருத்தமான துவைதவாதிள் சுய புத்தியினால் விகல்ப மாத்திரமாய் இருப்பவர்கள் தத்துவநிஷ்டை அல்லாதவர்கள் என்று கூறமுடியும்.
सैवं तिस्रो देवताः अनुप्रविश्य स्वात्मावस्थे बीजभूते अव्याकृते नामरूपे व्याकरवाणीति ईक्षित्वा
அனுவாதம் - அது இவ்வாறு இந்த மூன்று தேவதைகளில் பிரவேசித்து தன் சொரூபத்தில் இருக்கும் பீஜரூபமான அவ்யாகிருதமான நாமரூபங்களை வெளிப்படுத்துவேன் என்று ஈக்ஷணை செய்தது -
तासां त्रिवृतं त्रिवृतमेकैकां करवाणीति सेयं देवतेमास्तिस्रो देवता अनेनैव जीवेनात्मनानुप्रविश्य नामरूपे व्याकरोत् ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - அவைகளில் ஒவ்வொரு தேவதையையும் மும்மூன்றாக செய்வேன் என்று சிந்தித்து (விசாரம் செய்து) அந்த இந்த தேவதா இந்த ஜீவாத்ம ரூபத்தால் அந்த மூன்று தேவதைகளில் பிரவேசித்து நாம ரூபங்களை வெளிப்படுத்தினார்.
तासां च तिसृणां देवतानामेकैकां त्रिवृतं त्रिवृतं करवाणि — एकैकस्यास्त्रिवृत्करणे एकैकस्याः प्राधान्यं द्वयोर्द्वयोर्गुणभावः ; अन्यथा हि रज्ज्वा इव एकमेव त्रिवृत्करणं स्यात् , न तु तिसृणां पृथक्पृथक्त्रिवृत्करणमिति । एवं हि तेजोबन्नानां पृथङ्नामप्रत्ययलाभः स्यात् — तेज इदम् इमा आपः अन्नमिदम् इति च । सति च पृथङ्नामप्रत्ययलाभे देवतानां सम्यग्व्यवहारस्य प्रसिद्धिः प्रयोजनं स्यात् ।
அனுவாதம் - அந்த மூன்று தேவதைகளையும் ஒவ்வொன்றாக த்ரிவிருதம் த்ரிவிருதம் செய்வேன். ஒவ்வொரு தேவதையையும் திரிவிருத்கரணம் செய்யும்பொழுது ஒவ்வொன்றையும் பிரதானமாகி மற்ற இரண்டை கெளணமாக செய்யவேண்டும். அவ்வாறு இல்லையெனில் எல்லாம் ஒன்றாய் இருந்தால் கயிறுபோல் திரிவிர்த்கரணம் ஆகும். மேலும் ஒவ்வொன்றும் தனித்தனியாக திரிவிர்த்கரணம் செய்யப்பட முடியாது. இவ்வாறு தேஜஸ் அப் அன்னம் இவைகளுக்கு தனித்தனியாக அறிய முடியாததாகிறது. இது தேஜஸ், இது ஜலம் (அப்), இது அன்னம் என்று அறியமுடிகிறது, இதனால் தனியாக நாமத்தின் அறிவு ஏற்பட்டவுடன் தேவதைகள் நன்றாக வியவஹாரத்தின் பிரயோஜனம் சித்திக்கின்றது.
एवमीक्षित्वा सेयं देवता इमास्तिस्रो देवताः अनेनैव यथोक्तेनैव जीवेन सूर्यबिम्बवदन्तः प्रविश्य वैराजं पिण्डं प्रथमं देवादीनां च पिण्डाननुप्रविश्य यथासङ्कल्पमेव नामरूपे व्याकरोत् — असौनामा अयम् इदंरूप इति ॥
அனுவாதம் - இவ்வாறு ஈக்ஷணம் செய்து தேவதை இந்த மூன்று தேவதைகளில் முன்பு கூறியவாறு ஜீவரூபத்தால் சூரிய பிம்பத்தைப்போல் முதலில் விராட் பிண்டத்தில் பிரவேசித்து அதன்பின் தேவதைகளின் பிண்டத்தில் தன்னுடைய சங்கல்பத்தின் அனுசாரமாக நாமரூபங்களாக வெளிப்பட்டது. இந்த பெயருடையது (நாமம் உடையது) இந்த ரூபம் உடையது என்று வெளிப்பட்டது.
तासां त्रिवृतं त्रिवृतमेकैकामकरोद्यथा तु खलु सोम्येमास्तिस्रो देवतास्त्रिवृत्त्रिवृदेकैका भवति तन्मे विजानीहीति ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - அந்த தேவதை அவைகளில் ஒவ்வொன்றையும் திரிவிருத் திரிவிருத் செய்தது. ஹே சோம்ய! இவ்வாறு மூன்று தேவதைகளையும் ஒவ்வொன்றாக ஆக்கி ஒவ்வொன்றும் திருவிருத்- திருவிருத் ஆகும். அதை என் மூலமாய் அறிவாயாக.
तासां च देवतानां गुणप्रधानभावेन त्रिवृतं त्रिवृतम् एकैकामकरोत् कृतवती देवता । तिष्ठतु तावद्देवतादिपिण्डानां नामरूपाभ्यां व्याकृतानां तेजोबन्नमयत्वेन त्रिधात्वम् , यथा तु बहिरिमाः पिण्डेभ्यस्तिस्रो देवतात्त्रिवृदेकैका भवति तन्मे मम निगदतः विजानीहि विस्पष्टम् अवधारय उदाहरणतः ॥
அனுவாதம் - அந்த தேவதை அந்த தேவதைகளின் கெளணம், பிரதான பாவத்தால் ஒவ்வொன்றாக திரிவிருத் (மூன்றாக) செய்தது. இப்பொழுது நாம ரூபங்களாக வெளிப்பட்ட தேவதை பிண்டங்கள் தேஜஸ், ஜலம், அன்னமாக தனித்தனியாக ஆயின. இந்த பிண்டங்களுக்கு வெளியிலும் இந்த மூன்று தேவதைகளும் எவ்வாறு தனித்தனியாக த்ரிவிருத் (மூன்றாக) ஆனது என்பது எனக்கு விளக்கமாக அறியச்செய்யுங்கள்.
इति तृतीयखण्डभाष्यम् ॥
यत्तद्देवतानां त्रिवृत्करणमुक्तम् तस्यैवोदाहरणमुच्यते — उदाहरणं नाम एकदेशप्रसिद्ध्या अशेषप्रसिद्ध्यर्थमुदाह्रियत इति । तदेतदाह —
அனுவாதம் - அ.கை - எந்த அந்த தேவதைகளின் த்ரிவிருத்கரணம் கூறப்பட்டதோ அதற்கு உதாரணம் கூறப்படுகிறது - உதாரணம் என்றால் ஏகதேசமாக உள்ளது முழுமையாய் அறிவதற்காக கூறப்படுகிறது. அந்த உதாரணத்தை ச்ருதி கூறுகிறது.
यदग्ने रोहितꣳ रूपं तेजसस्तद्रूपं यच्छुक्लं तदपां यत्कृष्णं तदन्नस्यापागादग्नेरग्नित्वं वाचारम्भणं विकारो नामधेयं त्रीणि रूपाणीत्येव सत्यम् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - எது அக்னியின் சிகப்பு நிறரூபமோ அது தேஜஸ்ஸின் ரூபம். எது வெண்மை நிற ரூபமோ அது ஜலமாகும். எது கருமைநிற ரூபமோ அது அன்னத்தின் ரூபமாகும். இவ்வாறு அக்னியிலிருந்து அக்னித்தன்மை நிவிர்த்தியாகிறது. ஏன்எனில் (அக்னிரூப) விகாரம் வாக்கினால் கூறுவதற்காக நாம மாத்திரமே. மூன்று (சூக்ஷ்ம) ரூபமே உண்மை (சத்யம்) ஆகும்.
यदग्नेः त्रिवृत्कृतस्य रोहितं रूपं प्रसिद्धं लोके, तत् अत्रिवृत्कृतस्य तेजसो रूपमिति विद्धि । तथा यच्छुक्लं रूपमग्नेरेव तदपामत्रिवृत्कृतानाम् ; यत्कृष्णं तस्यैवाग्नेः रूपम् तदन्नस्य पृथिव्याः अत्रिवृत्कृतायाः इति विद्धि ।
அனுவாதம் - அந்த த்ரிவிருத்கரண அக்னியின் செம்மைநிறம் உலகில் பிரசித்தமானதோ அது திரிவிருத்கர்ணம் செய்யப்படாத தேஜஸ்ஸின் ரூபம் என்று அறி. அவ்வாறே எது வெண்மையான ரூபமோ அது அக்னியின் திரிவிருத்கர்ணம் செய்யப்படாத ஜலத்தின் ரூபம். அவ்வாறே எது அக்னியில் கருமையான ரூபமோ அது திரிவிருத்காணம் செய்யப்படாத பிருதிவியின் ரூபம் என்று அறி.
तत्रैवं सति रूपत्रयव्यतिरेकेण अग्निरिति यन्मन्यसे त्वम् , तस्याग्नेरग्नित्वमिदानीम् अपागात् अपगतम् । प्राग्रूपत्रयविवेकविज्ञानात् या अग्निबुद्धिरासीत् ते, सा अग्निबुद्धिरपगता अग्निशब्दश्चेत्यर्थः — यथा दृश्यमानरक्तोपधानसंयुक्तः स्फटिको गृह्यमाणः पद्मरागोऽयमितिशब्दबुद्ध्योः प्रयोजको भवति प्रागुपधानस्फटिकयोर्विवेकविज्ञानात् , तद्विवेकविज्ञाने तु पद्मरागशब्दबुद्धी निवर्तेते तद्विवेकविज्ञातुः — तद्वत् ।
அனுவாதம் - இவ்வாறு இருக்கும்பொழுது இந்த மூன்று ரூபங்களைக்காட்டிலும் அக்னி வேறு என்று நினைத்தால் நீ அந்த அக்னியின் அக்னித்துவம் இப்பொழுது இல்லாமல் போய்விடும். மூன்று ரூபங்களின் விவேகஞானத்திற்கு முன் உனக்கு எந்த அக்னிபுத்தி இருந்ததோ அந்த அக்னிபுத்தியும், அக்னிசப்தமும் நீங்கிவிடும் என்பதுபொருள். எவ்வாறு காணப்படுகின்ற சிகப்பு நிறத்தை உபாதானத்துடன் கூடிய ஸ்படிகத்தை இது பத்மராகம் என்று சப்தத்தாலும் புத்தியினாலும் தூண்டப்பட்டு கிரஹிக்கப்படுகிறது. முன்பு இருந்த ஸ்படிகத்திற்கும் உபாதான ஸ்படிகத்திற்கும் உள்ள விவேகஞானம் ஏற்பட்டபின் அந்த விவேகஞானத்தால் பத்மராக புத்தி நீங்கி அதன் விவேகஞானம் ஏற்படுகிறதோ அதுபோல் ஆகும்.
ननु किमत्र बुद्धिशब्दकल्पनया क्रियते, प्राग्रूपत्रयविवेककरणादग्निरेवासीत् , तदग्नेरग्नित्वं रोहितादिरूपविवेककरणादपागादिति युक्तम् — यथा तन्त्वपकर्षणे पटाभावः ।
அனுவாதம் - சங்கை - ஆனால் என்ன இங்கு அக்னிபுத்தி, அக்னிசப்த கல்பனையினால் உண்டானதா. மூன்றுரூபங்களின் விவேகம் செய்யப்படுவதற்கு முன் அக்னியாகவே இருந்தது. அந்த அக்னியின் அக்னித்தன்மையாகிய சிகப்பு முதலிய ரூபங்களின் விவேகத்தால் நிவிர்த்தி ஆகிறது என்பதே பொருந்தும். எவ்வாறு நூ ல் நீக்கியபின் படம் (வஸ்திரம்) இல்லாமல் போவது போல்.
नैवम् , बुद्धिशब्दमात्रमेव हि अग्निः ; यत आह वाचारम्भणमग्निर्नाम विकारो नामधेयं नाममात्रमित्यर्थः । अतः अग्निबुद्धिरपि मृषैव । किं तर्हि तत्र सत्यम् ? त्रीणि रूपाणीत्येव सत्यम् , नाणुमात्रमपि रूपत्रयव्यतिरेकेण सत्यमस्तीत्यवधारणार्थः ॥
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறு அல்ல. ஏன்எனில் அக்னிபுத்தி அக்னி சப்தமாத்திரமே அக்னி. எதனால் சுருதி கூறுகிறதோ- அக்னி என்பது வாச்சாரம்பணம்விகாரம்நாமதேயம் (वाचारम्भणंविकारोनामधेयम्) = வாக்கினால் ஆரம்பம் ஆகும் விகாரமே நாமதேயமாகும்) என்று. ஆகையால் நாம மாத்திரமேயாகும். ஆகையால் அக்னிபுத்தியும் மித்தையே. அவ்வாறானால் அங்கு எது சத்யம்? அந்த மூன்றுரூபங்களே சத்யம். அந்த மூன்றுரூபங்களைக்காட்டிலும் வேறானதற்கு அனுமாத்திரமும் சத்தியம் இல்லை என்று நிச்சயம் செய்வதற்காக
तथा
அனுவாதம் - அவ்வாறே.
यदादित्यस्य रोहितꣳ रूपं तेजसस्तद्रूपं यच्छुक्लं तदपां यत्कृष्णं तदन्नस्यापागादादित्यादादित्यत्वं वाचारम्भणं विकारो नामधेयं त्रीणि रूपाणीत्येव सत्यम् ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - ஆதித்தியனின் எந்த செம்மை ரூபமோ அது தேஜஸ்ஸின் ரூபம். எந்த வெண்மை ரூபமோ அது ஜலத்தினது. எந்த கருமை ரூபமோ அது அன்னத்தினுடையது. இவ்வாறு ஆதித்தியனிடத்திலிருந்து ஆதித்திய தன்மை நிவிர்த்தி ஆகிறது. ஏன்எனில் விகாரம் வாக்கை சார்ந்திருக்கும் நாமமாத்திரமானதால் ஆகும். இந்த மூன்றுரூபமேயாகும். இதுவே சத்யம். (மூன்று சூக்ஷ்ம பூதங்கள்) (உண்மையாகும்)
यच्चन्द्रमसो रोहितꣳ रूपं तेजसस्तद्रूपं यच्छुक्लं तदपां यत्कृष्णं तदन्नस्यापागाच्चान्द्राच्चन्द्रत्वं वाचारम्भणं विकारो नामधेयं त्रीणि रूपाणीत्येव सत्यम् ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - சந்திரனின் எந்த செம்மை ரூபமோ அது தேஜஸ்ஸின் ரூபம். எந்த வெண்மை ரூபமோ அது ஜலத்தினது. எந்த கருமைநிறமோ அது அன்னத்தினுடையது. இவ்வாறு சந்திரனிடத்திலிருந்து சந்திரத்தன்மை நிவிர்த்தி ஆகிறது. ஏன்எனில் சந்திரரூப விகாரம் வாக்கை சார்ந்து இருப்பதால் சந்திரத்தன்மை நிவிர்த்தியாகிறது. அந்த மூன்று ரூபமே உண்மையானது.
यद्विद्युतो रोहितꣳ रूपं तेजसस्तद्रूपं यत्छुक्लं तदपां यत्कृष्णं तदन्नस्यापागाद्विद्युतो विद्युत्त्वं वाचारम्भणं विकारो नामधेयं त्रीणि रूपाणीत्येव सत्यम् ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - மின்னலின் செம்மை ரூபம் அது தேஜஸ்ஸின் ரூபமாகும். எந்த வெண்மைரூபம் உண்டோ அது ஜலமாகும். அவ்வாறே அதன் எந்த கருமை ரூபம் உண்டோ அது அன்னமாகும். இவ்வாறு மின்னலின் மின்னல் தன்மை நிவிரத்தியாகிறது. ஏன் எனில் (மின்னல் ரூபம்) வாக்கின் விகாரத்தை ஆஸ்ரயித்து நாமமாத்திரமேயாகும். அந்த மூன்றுரூபமே சத்யமாகும். (உண்மையாகும்).
यदादित्यस्य यच्चन्द्रमसो यद्विद्युत इत्यादि समानम् ।
அனுவாதம் - எது ஆதித்யனுடையதோ, எது சந்திரனுடையதோ, எது மின்னலினுடையதோ இவையெல்லாம் சமானமாகும்.
அனுவாதம் - சங்கை - ஆனால் ஹே செளம்யனே! எவ்வாறு இந்த மூன்று தேவதைகளை ஒன்று ஒன்றாக செய்து ஒவ்வொன்றும் த்ரிவிருத்கரணமோ அது என் மூலமாக அறி என்று கூறி அக்னி முதலிய நான்கு உதாரணங்களால் தேஜஸ்ஸின் த்ரிவிருத்கரணம் தெரிவிக்கப்பட்டது. த்ரிவிருத்கர்ணத்தில் அப் (ஜலம்) மற்றும் அன்னத்தின் உதாஹரணம் தெரிவிக்கவில்லை.
नैष दोषः अबन्नविषयाण्यप्युदाहरणानि एवमेव च द्रष्टव्यानीति मन्यते श्रुतिः । तेजस उदाहरणमुपलक्षणार्थम् , रूपवत्त्वात्स्पष्टार्थत्वोपपत्तेश्च । गन्धरसयोरनुदाहरणं त्रयाणामसम्भवात् । न हि गन्धरसौ तेजसि स्तः । स्पर्शशब्दयोरनुदाहरणं विभागेन दर्शयितुमशक्यत्वात् ।
அனுவாதம் - ஸமாதானம் - இந்த தோஷம் இல்லை. ஜலம் அன்ன விஷயங்களையும் இவ்விதமாகவே உதாஹரணங்களை சுருதி கருதுகிறது. தேஜஸ் உதாஹரணம் உபலக்ஷணார்த்தமாகும். ரூபமாய் இருப்பதால் ஸ்பஷ்டமாக அறியப்படுகிறது. ஆகையால் வாசனை ருசி இவைகளின் உதாஹரணம் அந்த மூன்றிற்கும் அளிக்கப்படவில்லை. இந்த மூன்றிற்கும் அவ்வாறு ஏற்படுவது சம்பவிக்காது. அவ்வாறு (மூன்று விதமாக) ஸ்பர்சமும். (மூன்று விதமாக) சப்தமும் தனித்தனியாக பிரித்துக் காணமுடியாது. ஆகையால் அவற்றின் உதாஹரணம் அளிக்கப்படவில்லை.
यदि सर्वं जगत् त्रिवृत्कृतमिति अग्न्यादिवत् त्रीणि रूपाणीत्येव सत्यम् , अग्नेरग्नित्ववत् अपागाज्जगतो जगत्त्वम् । तथा अन्नस्याप्यप्शुङ्गत्वात् आप इत्येव सत्यं वाचारम्भणमात्रमन्नम् । तथा अपामपि तेजःशुङ्गत्वात् वाचारम्भणत्वं तेज इत्येव सत्यम् । तेजसोऽपिसच्छुङ्गत्वात् वाचारम्भणत्वं सदित्येव सत्यम् इत्येषोऽर्थो विवक्षितः ।
அனுவாதம் - ஜகத் முழுவதும் திரிவிருத்கரணம் செய்யப்பட்டு அக்னி முதலியவைகளைப்போல் மூன்று ரூபங்களே சத்யம். அக்னியின் அக்னித்துவம் போன்று ஜகத்தின் ஜகத்தன்மை நிவிர்த்தியாகிறது. அவ்வாறே அன்னம் ஜலத்தின் காரியம் ஆகையால் ஜலமே சத்தியம். அன்னம் கேவல வாச்சாரம்பண மாத்திரமே ஆகும். அவ்வாறே ஜலம் தேஜஸ்ஸின் காரியம் ஆவதால் வாசாரம்பணத்துவம். தேஜஸ்ஸே சத்தியம். தேஜஸ்ஸீ ம் சத்தின் காரியமானதால் தேஜஸ் வாசாரம்பணத்துவமாகும். சத்தே சத்தியம் என்ற விஷயம் விளக்கப்பட்டது.
ननु वाय्वन्तरिक्षे तु अत्रिवृत्कृते तेजःप्रभृतिष्वनन्तर्भूतत्वात् अवशिष्येते, एवं गन्धरसशब्दस्पर्शाश्चावशिष्टा इति कथं सता विज्ञातेन सर्वमन्यदविज्ञातं विज्ञातं भवेत् ? तद्विज्ञाने वा प्रकारान्तरं वाच्यम् ;
அனுவாதம் - சங்கை - ஆனால் வாயு அந்திரக்ஷம் ஆகியவை தேஜஸ் முதலியவைகளில் அந்தர்கதம் ஆகாததால் த்ரிவிருத்கரணம் ஆகாமல் இருக்கின்றன. அவ்வாறே கந்தம், ரசம் சப்தம், ஸ்பர்சம் இவைகளும் அதில் அடங்காமல் இருக்கின்றன என்பதால் எவ்வாறு சத்தை அறிந்தால் மற்ற எல்லா அறியப்படாதவைகளும் அறிந்ததாக ஆகும்? அல்லது அதை அறிவதற்கு சுருதி வேறு பிரகாரமாக கூறவேண்டியதாகும்.
नैष दोषः, रूपवद्द्रव्ये सर्वस्य दर्शनात् । कथम् ? तेजसि तावद्रूपवति शब्दस्पर्शयोरप्युपलम्भात् वाय्वन्तरिक्षयोः तत्र स्पर्शशब्दगुणवतोः सद्भावो अनुमीयते । तथा अबन्नयोः रूपवतो रसगन्धान्तर्भाव इति । रूपवतां त्रयाणां तेजोबन्नानां त्रिवृत्करणप्रदर्शनेन सर्वं तदन्तर्भूतं सद्विकारत्वात् त्रीण्येव रूपाणि विज्ञातं मन्यते श्रुतिः । न हि मूर्तं रूपवद्द्रव्यं प्रत्याख्याय वाय्वाकाशयोः तद्गुणयोर्गन्धरसयोर्वा ग्रहणमस्ति ।
அனுவாதம் - ஸமாதானம் - ரூபம் போன்று திரவியத்திலும் எல்லா குணங்களும் காணப்படுவதால் இந்த தோஷம் இல்லை. எவ்வாறு? ரூபமுடைய தேஜஸ்ஸில் சப்த ஸ்பர்சங்களிலும் அறியப்படுவதால் வாயு அந்தரிக்ஷங்களுக்கும் அங்கு ஸ்பர்ச சப்த குணமுடையவற்றிற்கு சத்பாவம் அனுமானம் செய்யப்படுகிறது. அவ்வாறே ரூபமுடைய ஜலம் அன்னங்களில் ரசம், கந்தம் அந்தர்பாவமாக உள்ளது. ரூபங்களான தேஜஸ், ஜலம், அன்னம் ஆகிய மூன்றின் திரிவிருத்கரணம் தெரிவித்து சுருதியானது அவைகளின் அந்தர்கதமான எல்லாவற்றின் சாரமும் “சத்தின்” காரியமாவதால் அவைகளின் ரூபமே சத்யம் என்று அறியவேண்டும். ரூபமுடைய மூர்த்த பதார்த்தங்களை நீக்கி வாயு ஆகாயம் அவ்வாறே அவற்றின் குணம் அவ்வாறே கந்தம் மேலும் ரசம் இவைகளைக் கிரஹிக்க முடியாது.
अथवा रूपवतामपि त्रिवृत्करणं प्रदर्शनार्थमेव मन्यते श्रुतिः । यथा तु त्रिवृत्कृते त्रीणि रूपाणीत्येव सत्यम् , तथा पञ्चीकरणेऽपि समानो न्याय इत्यतः सर्वस्य सद्विकारत्वात् सता विज्ञातेन सर्वमिदं विज्ञातं स्यात् सदेकमेवाद्वितीयं सत्यमिति सिद्धमेव भवति । तदेकस्मिन्सति विज्ञाते सर्वमिदं विज्ञातं भवतीति सूक्तम् ॥
அனுவாதம் - அல்லது ரூபமுடையவற்றின் த்ரிவிருத் கரணத்தைத் தெரிவிப்பதற்காகவே என்று சுருதி கருதுகிறது. எவ்வாறு திரிவிருத்கரணத்தில் மூன்று ரூபங்களே சத்யமோ அவ்வாறே பஞ்சீகரணத்திலும் சமானமான நியமமே என்பதால் எல்லாம் சத்தின் விகாரமாவதால் சத்தை அறிவதால் இவை எல்லாம் அறியப்பட்டதாகின்றது. சத் ஒன்றே அத்விதீயம், சத்யம் என்று சித்திக்கின்றது. அந்த ஒன்றை அறிந்தால் இவை எல்லாம் அறியப்பட்டதாகிறது என்று கூறுவது சரியானதே.
एतद्ध स्म वै तद्विद्वांस आहुः पूर्वे महाशाला महाश्रोत्रिया न नोऽद्य कश्चनाश्रुतममतमविज्ञातमुदाहरिष्यतीति ह्येभ्यो विदाञ्चक्रुः ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - இந்த த்ரிவிருத்கரணத்தை அறிந்த முன்னோர்களாகிய மஹா கிரஹஸ்தர்களும், மஹாச்ரோத்திரியர்களும் இவ்வாறு கூறினார்கள் - அதாவது இப்பொழுது இந்த விஷயத்தை எங்கள் குலத்தில் ஒருவரும் கேட்காதவர்களாகவோ (அஸ்ரோத்திரியர்களோ), இதைக் குறித்து சிந்திக்காதவர்களாகவோ, அறியாதவர்களாகவோ இருக்கின்றனர் என்று கூறமுடியாது. ஏன் எனில் இந்த அக்னி முதலிய திருஷ்டாந்தங்கள் மூலமாக அவைகள் எல்லாம் அறிந்திருந்தார்கள்.
एतत् विद्वांसः विदितवन्तः पूर्वे अतिक्रान्ताः महाशालाः महाश्रोत्रियाः आहुः ह स्म वै किल । किमुक्तवन्त इति, आह — न नः अस्माकं कुले अद्य इदानीं यथोक्तविज्ञानवतां कश्चन कश्चिदपि अश्रुतममतमविज्ञातम् उदाहरिष्यति नोदाहरिष्यति, सर्वं विज्ञातमेव अस्मत्कुलीनानां सद्विज्ञानवत्त्वात् इत्यभिप्रायः ।
அனுவாதம் - இந்த த்ரிவிருத்கரணத்தை அறிந்த முன்னோர்களான மஹா கிரஹஸ்தர்கள் அவ்வாறே மஹா ச்ரோத்திரியர்கள் இவ்வாறு கூறுகின்றனர்- எவ்வாறு? இவ்வாறு கூறுகின்றனர்- எங்களுடைய குலத்தில் இன்றளவும் முன்பு கூறப்பட்ட த்ரிவிருத்கரணத்தை அறிந்தவர்கள் எவர் ஒருவரும் நான் அஸ்ருதம் (நான் கேட்கவில்லை), நான் சிந்திக்கவில்லை, நான் அறியவில்லை என்று கூறமாட்டார்கள். எங்கள் குலத்தில் உள்ளவர்கள் சத் (உண்மை) அறிந்தவர்கள் ஆனதால் எல்லாம் அறிந்தவர்கள் என்பது அபிப்பிராயம்.
ते पुनः कथं सर्वं विज्ञातवन्त इति, आह — एभ्यः त्रिभ्यः रोहितादिरूपेभ्यः त्रिवृत्कृतेभ्यः विज्ञातेभ्यः सर्वमप्यन्यच्छिष्टमेवमेवेति विदाञ्चक्रुः विज्ञातवन्तः यस्मात् , तस्मात्सर्वज्ञा एव सद्विज्ञानात् ते आसुरित्यर्थः । अथवा एभ्यो विदाञ्चक्रुरिति अग्न्यादिभ्यो दृष्टान्तेभ्यो विज्ञातेभ्यः सर्वमन्यद्विदाञ्चक्रुरित्येतत् ॥
அனுவாதம் - மேலும் அவர்கள் எவ்வாறு எல்லாவற்றையும் அறிந்தார்கள்? அதற்கு கூறப்படுகிறது - இந்த மூன்று செம்மை ரூபம் முதலியவற்றின் த்ரிவிருத்கரணத்தின் ஞானத்தால் மீதம் இல்லாமல் அறிந்துகொண்டார்களோ அதனால் அவர்கள் சர்வக்ஞர்களே. ஏன்எனில் அவர்கள் சத்தை அறிந்து இருந்தால் அவ்வாறு ஆனார்கள். அல்லது “एभ्यो विदाक्रुः” (ஏப்ய: விதாஞ்சக்ரு = இவைகளினால் அறிந்துகொண்டார்கள்) என்பதின் தாத்பர்யம் என்னவெனில் அக்னி முதலிய திருஷ்டாந்தங்களால் அறிந்தவர்கள் மற்ற எல்லாவற்றையும் அறிந்தவர்களாகின்றனர் என்பதாகும்.
कथम् ?
அனுவாதம் - எவ்வாறு? -
यदु रोहितमिवाभूदिति तेजसस्तद्रूपमिति तद्विदाञ्चक्रुर्यदु शुक्लमिवाभूदित्यपां रूपमिति तद्विदाञ्चक्रुर्यदु कृष्णमिवाभूदित्यन्नस्य रूपमिति तद्विदाञ्चक्रुः ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - எந்த ஒன்று செம்மையோ அது தேஜஸ்ஸின் ரூபம் என்று அவர்கள் அறிந்திருக்கின்றார்கள். எது வெண்மையோ அது ஜலம் என்று அவர்கள் அறிந்திருக்கின்றார்கள். எது கருமையோ அது அன்னம் என்று அவர்கள் அறிந்திருக்கின்றார்கள்.
यद्वविज्ञातमिवाभूदित्येतासामेव देवतानां समास इति तद्विदाञ्चक्रुर्यथा तु खलु सोम्येमास्तिस्रो देवताः पुरुषं प्राप्य त्रिवृत्त्रिवृदेकैका भवति तन्मे विजानीहीति ॥ ७ ॥
மந்த்ரார்த்தம் - அவ்வறே எது அறியப்பட்டதோ அது அதுவாகும் அதாவது அது இந்த தேவதைகளின் சமுதாயமாகும் என்று அவர்கள் அறிந்திருக்கின்றனர். ஹே சோம்யனே! இப்பொழுது நீ என் மூலமாக எதை அறிந்தாயோ அது எவ்வாறு அந்த மூன்று தேவதைகள் புருஷனை அடைந்து அவைகளில் ஒவ்வொன்றும் திரிவிருத், திரிவிருத் செய்யப்பட்டதாகின்றனர்.
यदन्यद्रूपेण सन्दिह्यमाने कपोतादिरूपे रोहितमिव यद्गृह्यमाणमभूत् तेषां पूर्वेषां ब्रह्मविदाम् , तत्तेजसो रूपमिति विदाञ्चक्रुः । तथा यच्छुक्लमिवाभूद्गृह्यमाणं तदपां रूपम् , यत्कृष्णमिव । गृह्यमाणं तदन्नस्येति विदाञ्चक्रुः ।
அனுவாதம் - எது வேறு ரூபமாய் சரியாக அறிய முடியாமல் புறா போன்ற ரூபங்களில் செம்மைபோல் எது கிரஹிக்கப்பட்டதாக இருக்கும்பொழுது முன்னோர்களான பிரஹ்ம வேத்தாக்கள் மூலமாய் எந்த அந்த செம்மை கிரஹிக்கப்படுகிறதோ அது தேஜஸ்ஸின் ரூபம் என்று அவர்கள் அறிகிறார்கள். அவ்வாறே எது வெண்மைபோல் தோன்றுகிறதோ அதை கிரஹித்த ரூபம் ஜலமாகும். எது கருமைபோல் கிரஹிக்கப்பட்டதோ அது அன்னத்தினுடையது என்று அறிகின்றனர். இவ்வாறு கடின லக்ஷியமாயும், அறியப்பட்டதாயும் இருப்பதால் விசேஷரூபமாக கிரஹிக்க முடியாதது எதுவோ அதுவும் இந்த மூன்று தேவதைகளின் சமூகம் என்று அவர்கள் அறிகின்றனர்.
एवमेवात्यन्तदुर्लक्ष्यं यत् उ अपि अविज्ञातमिव विशेषतो अगृह्यमाणमभूत् तदप्येतासामेव तिसृणां देवतानां समासः समुदाय इति विदाञ्चक्रुः । एवं तावद्बाह्यं वस्त्वग्न्यादिवद्विज्ञातम् , तथेदानीं यथा तु खलु हे सोम्य इमाः यथोक्तास्तिस्रो देवताः पुरुषं शिरःपाण्यादिलक्षणं कार्यकारणसङ्घातं प्राप्य पुरुषेणोपयुज्यमानाः त्रिवृत्त्रिवृदेकैका भवति, तत् आध्यात्मिकं विजानीहि निगदतः इत्युक्त्वा आह ॥
அனுவாதம் - இவ்வாறு இவ்வளவு வஸ்து அக்னி முதலியவைகளைப் போல் அறியப்படுகிறதோ அவ்வாறு இப்பொழுது ஹே சோம்ய! எவ்வாறு கூறப்பட்டதோ அந்த மூன்று தேவதைகள் தலை, கைகள் முதலிய லக்ஷணங்களான காரிய கரண சங்காதமான புருஷனை அடைந்து புருஷனால் பிரேரணை செய்யப்பட்டதாய் திரிவிருத்கரணமாய் ஒவ்வொன்றாக ஆயிற்று. அதை என்னிடமிருந்து அறிந்துகொள் என்று கூறி மேலும் கூறினார்.
इति चतुर्थखण्डभाष्यम् ॥
अन्नमशितं त्रेधा विधीयते तस्य यः स्थविष्ठो धातुस्तत्पुरीषं भवति यो मध्यमस्तन्माꣳसं योऽणिष्ठस्तन्मनः ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - சாப்பிடப்பட்ட அன்னம் மூன்று (விதமாக) பாகங்களாக பிரிகிறது. அதில் ஸ்தூலமான பாகம் மலம் ஆகிறது. மத்யபாகம் மாம்சமாகிறது. மிகவும் சூக்ஷ்மமான பாகம் மனமாகிறது.
अन्नम् अशितं भुक्तं त्रेधा विधीयते जाठरेणाग्निना पच्यमानं त्रिधा विभज्यते । कथम् ? तस्यान्नस्य त्रिधा विधीयमानस्य यः स्थविष्ठः स्थूलतमो धातुः स्थूलतमं वस्तु विभक्तस्य स्थूलांशः, तत्पुरीषं भवति ; यो मध्यमांशः धातुरन्नस्य, तद्रसादिक्रमेण परिणम्य मांसं भवति ; यः अणिष्ठः अणुतमो धातुः, स ऊर्ध्वं हृदयं प्राप्य सूक्ष्मासु हिताख्यासु नाडीषु अनुप्रविश्य वागादिकरणसङ्घातस्य स्थितिमुत्पादयन् मनो भवति । मनोरूपेण विपरिणमन् मनस उपचयं करोति ।
அனுவாதம் - உண்ணப்பட்ட உணவு (அன்னம்) மூன்றாக பிரிகிறது. அதாவது ஜாடராக்னியினால் செரிக்கப்பட்டு மூன்றாக பிரிகிறது. எவ்வாறு? மூன்றாக பிரிக்கப்பட்ட அன்னத்தின் ஸ்தூல பாகம் அதாவது மிகவும் ஸ்தூலமான வஸ்து அதாவது பிரிக்கப்பட்டதின் ஸ்தூலாம்சம் மலமாகிறது. எந்த அன்னத்தின் மத்யம அம்ச வஸ்து உள்ளதோ அது ரசம் முதலிய கிரமமாக பரிணமித்து மாம்சம் ஆகிறது. எந்த அன்னத்தின் மிக சூக்ஷ்மமான வஸ்து உள்ளதோ அது மேல் எழும்பி ஹிருதயத்தை அடைந்து சூக்ஷ்மமாய் உள்ள ஹிதா என்னும் நாடிகளில் பிரவேசித்து வாக் முதலிய கரண சங்காதத்தின் ஸ்திதியை அடைந்து மனம் ஆகிறது. மனோரூபமாக பரிணமித்து மனதை ஆற்றல் உடையதாகக் செய்கிறது.
ततश्च अन्नोपचितत्वात् मनसः भौतिकत्वमेव न वैशेषिकतन्त्रोक्तलक्षणं नित्यं निरवयवं चेति गृह्यते । यदपि मनोऽस्य दैवं चक्षुरिति वक्ष्यति तदपि न नित्यत्वापेक्षया ; किं तर्हि, सूक्ष्मव्यवहितविप्रकृष्टादिसर्वेन्द्रियविषयव्यापारकत्वापेक्षया । यच्चान्येन्द्रियविषयापेक्षया नित्यत्वम् , तदप्यापेक्षिकमेवेति वक्ष्यामः, ‘सत् . . . एकमेवाद्वितीयम्’ इति श्रुतेः ॥
அனுவாதம் - ஆகையால் அன்னத்தால் ஆற்றல் பெற்றதால் மனது பெளதிகமே ஆகும். வைசேஷிக தந்திரத்தில் கூறப்பட்ட லக்ஷணங்களான நித்யம், நிரவயவம் என்பது கிரஹிக்கப்படவில்லை. “मनोऽस्य दैवं चक्षुः” (மனோஅஸ்ய தைவம் சக்ஷீ:) என்று இனிக்கூறப்போவதும் நித்யத்தை அபேக்ஷித்து அல்ல. ஆனால் எந்த திருஷ்டியில்? கூறப்பட்ட சூக்ஷ்ம, வியவஹித மேலும் தூரமாய் உள்ளது என்பது முதலிய எல்லா விதமாகவும் இந்திரியங்களின் விஷயங்களில் வியாபகமாக இருப்பதை அபேக்ஷித்து கூறப்படுகிறது. எதானது மற்ற இந்திரிய விஷயங்களை அபேக்ஷித்து நித்யத்துவமோ அதுவும் அபேக்ஷிக நித்யத்துவமாகும். அதுவும் அபேக்ஷிகமே என்று இனிக்கூறப்போகிறோம். “सत् एकमेवाद्वितीयम्” (சத் ஏகமேவாஅத்விதீயம்) என்பது சுருதியாகும்.
तथा
அனுவாதம் - அ.கை - அவ்வாறே -
आपः पीतास्त्रेधा विधीयन्ते तासां यः स्थविष्ठो धातुस्तन्मूत्रं भवति यो मध्यमस्तल्लोहितं योऽणिष्ठः स प्राणः ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - பருகிய ஜலம் மூன்று பாகங்களாக பிரிகிறது. அதில் எந்த ஸ்தூல பாகம் உள்ளதோ அது சிறுநீர் ஆகிறது. மத்யபாகமானது எதுவோ அது ரத்தமாகிறது. எந்த மிக சூக்ஷ்மமான பாகமோ அது பிராணனாகிறது.
அனுவாதம் - பருகிய ஜலம் மூன்று பாகங்களாக பிரிகின்றது. அவைகளில் எந்த பாகம் ஸ்தூலமானதோ (வஸ்து) அது சிறுநீர் ஆகிறது. எந்த மத்யபாகம் உள்ளதோ அது ரக்தமாகிறது. எந்த மிகவும் சூக்ஷ்மமான பாகமோ அது பிராணன் ஆகிறது. இனி சுருதி கூறப்போகிறது “आपोमयः प्राणो न पिबतो विच्छेत्स्यते” (ஆபோமய ப்ராணோ ந பிபதோ விச்சேத்ஸ்யதே) என்று.
तथा
அனுவாதம் - அ.கை - அவ்வாறே-
तेजोऽशितं त्रेधा विधीयते तस्य यः स्थविष्ठो धातुस्तदस्थि भवति यो मध्यमः स मज्जा योऽणिष्ठः सा वाक् ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - அருந்திய தேஜஸ் (நெய் முதலியவை) மூன்று பாகங்களாக ஆகிறது. அவைகளில் எந்த ஸ்தூல பாகம் உண்டோ அது எலும்புகளாக ஆகிறது. எந்த மத்ய பாகமோ அது மஜ்ஜை ஆகிறது. எது மிக சூக்ஷ்மமான பாகமோ அது வாக் ஆகிறது.
तेजः अशितं तैलघृतादि भक्षितं त्रेधा विधीयते । तस्य यः स्थविष्ठो धातुः तदस्थि भवति ; यो मध्यमः, स मज्जा अस्थ्यन्तर्गतः स्नेहः ; योऽणिष्ठः सा वाक् । तैलघृतादिभक्षणाद्धि वाग्विशदा भाषणे समर्था भवतीति प्रसिद्धं लोके ॥
அனுவாதம் - உண்ணப்பட்ட தைலம் நெய் முதலியவைகள் மூன்று பாகங்களாக பிரிகின்றன. அதில் எந்த ஸ்தூலபாக வஸ்துவோ அது எலும்பாக ஆகிறது. எந்த மத்யபாகமோ அது மஜ்ஜை ஆகிறது. மஜ்ஜை என்பது எலும்பினுள் இருக்கும் நெகிழ்ந்த வஸ்துவாகும். எந்த மிகவும் சூக்ஷ்மமான பாகமோ அது வாக் ஆகும். எண்ணை நெய் முதலியவைகளை உண்பதால் வாக் சாமர்த்தியம் உண்டாகும் என்பது உலகில் பிரசித்தமாகும்.
यत एवम् ,
அனுவாதம் - அ.கை - எதனால் இவ்வாறோ -
अन्नमयꣳ हि सोम्य मन आपोमयः प्राणस्तेजोमयी वागिति भूय एव मा भगवान्विज्ञापयत्विति तथा सोम्येति होवाच ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! மனம் அன்னமயம், பிராணன் ஜலமயம் மேலும் வாக் தேஜோமயம். இவ்வாறு கூறியபின் ஸ்வேதகேது கூறினார் - ஹே பகவானே! தாங்கள் எனக்கு மேலும் அறிந்துகொள்ள செய்யுங்கள். அப்பொழுது ஆருணி கூறினார் - ஹே சோம்ய ! சரி என்று.
अन्नमयं हि सोम्य मनः आपोमयः प्राणः तेजोमयी वाक् ।
அனுவாதம் - ஹே சோம்ய! மனம் அன்னமயம், ஜலம் பிராணமயம், வாக் தேஜோமயம்.
ननु केवलान्नभक्षिण आखुप्रभृतयो वाग्मिनः प्राणवन्तश्च, तथा अब्मात्रभक्ष्याः सामुद्रा मीनमकरप्रभृतयो मनस्विनो वाग्मिनश्च, तथा स्नेहपानामपि प्राणवत्त्वं मनस्वित्वं च अनुमेयम् ; यदि सन्ति, तत्र कथमन्नमयं हि सोम्य मन इत्याद्युच्यते ?
அனுவாதம் - சங்கை - ஆனால் அன்னத்தை மட்டுமே உண்ணும் எலி முதலியவை வாக் உடையதாய் பிராணன் உள்ளதாயும் காணப்படுகிறது. அவ்வாறே சமுத்திரத்தில் வாழ்பவை ஜலத்தை மாத்திரம் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் மீன், மகரம் முதலியவைகளும் மனதும், வாக்கும் உடையதாய் இருக்கின்றன. அவ்வாறே நெய் முதலியவைகளை மாத்திரம் உண்டுகொண்டிருப்பவையும் பிராணத்துவமும், மனம் உடையதாயும் அனுமானம் செய்ய முடிகிறது. இவ்வாறு இருக்கும்பொழுது ஹே சோம்ய! மனம், அன்னமயம் முதலியவை என்று எவ்வாறு கூறமுடிகிறது?
नैष दोषः, सर्वस्य त्रिवृत्कृतत्वात्सर्वत्र सर्वोपपत्तेः । न हि अत्रिवृत्कृतमन्नमश्नाति कश्चित् , आपो वा अत्रिवृत्कृताः पीयन्ते, तेजो वा अत्रिवृत्कृतमश्नाति कश्चित् इत्यन्नादानामाखुप्रभृतीनां वाग्मित्वं प्राणवत्त्वं च इत्याद्यविरुद्धम् ।
அனுவாதம் - இந்த தோஷம் இல்லை. ஏன் எனில் எல்லாம் த்ரிவிருத்கரணம் செய்யப்பட்டுள்ளதால் எல்லாவற்றிக்கும் சம்பவிக்கும். ஒருவரும் த்ரிவிருத் ஆகாத அன்னத்தை உண்ணுவது இல்லை. த்ரிவிருத் ஆகாத ஜலத்தைப் பருகுவது இல்லை. அவ்வாறே த்ரிவிருத் ஆகாத தேஜஸ்ஸை ஒருவரும் உண்ணுவது இல்லை. ஆகையால் அன்னம் முதலியவைகளை உண்ணும் எலி முதலியவைகளுக்கு வாக்குடன் கூடி இருப்பது மேலும் பிராணனுடன் கூடி இருப்பது என்பது முதலியவை பொருத்தமற்றதாக ஆகாது.
इत्येवं प्रत्यायितः श्वेतकेतुराह — भूय एव पुनरेव मा मां भगवान् अन्नमयं हि सोम्य मन इत्यादि विज्ञापयतु दृष्टान्तेनावगमयतु, नाद्यापि मम अस्मिन्नर्थे सम्यङ्निश्चयो जातः । यस्मात्तेजोबन्नमयत्वेनाविशिष्टे देहे एकस्मिन्नुपयुज्यमानान्यन्नाप्स्नेहजातानि अणिष्ठधातुरूपेण मनःप्राणवाच उपचिन्वन्ति स्वजात्यनतिक्रमेणेति दुर्विज्ञेयमित्यभिप्रायः ; अतो भूय एवेत्याद्याह ।
அனுவாதம் - இவ்வாறு அறிந்த ஸ்வேதகேது கூறினார் - ஹே பகவானே! ’अन्नमयं हि सोम्य मनः’ (அன்னம் ஹி சோம்ய மன:) முதலியவைகளை எனக்கு மறுபடியும் திருஷ்டாந்த மூலமாக நன்றாக புரியும்படி செய்யுங்கள். இந்த விஷயத்தில் இதுவரை எனக்கு நிச்சய அறிவு ஏற்படவில்லை. ஏன்எனில் தேஜஸ், ஜலம் அன்னமய ரூபமாக ஒரே தேஹத்தில் இருந்துகொண்டு எந்த ஒரு தனித்தன்மை (விசேஷதா) இல்லாமலும் ஒரே தேஹத்தில் உபயோகமாகின்ற அன்னம், ஜலம், நெகிழ்வது, (ஸ்நேகத்தன்மை) முதலியவை தன்னுடைய ஜாதியைத் தாண்டாமல் சூக்ஷ்மமான ரூபத்தால் மனம் பிராணன் மற்றும் வாக் இவைகளைப் போக்ஷிக்கின்றது. இதை அறிவது மிகக்கடினம் என்பது அவனுடைய அபிப்பிராயம், இதனால் ‘भूय एव’ (பூய ஏவ) (மறுபடியும்) என்று கூறினான்.
तमेवमुक्तवन्तं तथास्तु सोम्येति ह उवाच पिता शृण्वत्र दृष्टान्तं यथैतदुपपद्यते यत्पृच्छसि ॥
அனுவாதம் - இவ்வாறு கூறியவனிடம் பிதாவானவர் கூறினார் - ஹே சோம்ய! அவ்வாறே ஆகட்டும். நீ எதைக் கேட்டாயோ எவ்வாறு இவ்விதம் ஏற்படும் என்று. அதற்கான திருஷ்டாந்தத்தைக் கேள்.
इति पञ्चमखण्डभाष्यम् ॥
अन्नस्य भुक्तस्य यो अणिष्ठो धातुः, स मनसि शक्तिमधात् । सा अन्नोपचिता मनसः शक्तिः षोडशधा प्रविभज्य पुरुषस्य कलात्वेन निर्दिदिक्षिता । तया मनस्यन्नोपचितया शक्त्या षोडशधा प्रविभक्तया संयुक्तः तद्वन्कार्यकारणसङ्घातलक्षणो जीवविशिष्टः पुरुषः षोडशकल उच्यते ; यस्यां सत्यां द्रष्टा श्रोता मन्ता बोद्धा कर्ता विज्ञाता सर्वक्रियासमर्थः पुरुषो भवति ; हीयमानायां च यस्यां सामर्थ्यहानिः । वक्ष्यति च
‘अथान्नस्यायी द्रष्टा’ (छा. उ. ७ । ९ । १) इत्यादि । सर्वस्य कार्यकारणस्य सामर्थ्यं मनःकृतमेव । मानसेन हि बलेन सम्पन्ना बलिनो दृश्यन्ते लोके ध्यानाहाराश्च केचित् , अन्नस्य सर्वात्मकत्वात् । अतः अन्नकृतं मानसं वीर्यम्
அனுவாதம் - அ.கை - உண்ணப்பட்ட அன்னத்தின் எந்த சூக்ஷ்மபாகமோ அது மனதில் சக்தியாக ஆகிறது. அன்னத்தால் சம்பாதிக்கப்பட்ட மனதின் சக்தி பதினாறு பாகங்களாக பிரிக்கப்பட்டு புருஷனுடைய கலை ரூபமாக நிச்சயம் (நிர்தேசம்) செய்வது இஷ்டமாகும். அந்த மனதின் அன்னத்தால் சம்பாதிக்கப்பட்ட சக்தியினால் பதினாறு பாகங்களாக பிரிக்கப்பட்ட சக்தியுடன் கூடிய காரியகரண சங்காத லக்ஷணமுடைய ஜீவனுடன் கூடிய புருஷன் (ஷோடசகலா) பதினாறு கலைகள் உடையவன் எனப்படுகிறது. எந்த சக்தி இருப்பதால் திருஷ்டா, ஸ்ரோத்தா, மந்த்தா, போத்தா (¤ÉÉärùÉ) கர்த்தா, விக்ஞாதா அவ்வாறே எல்லா கிரியைகளுக்கும் சாமர்த்தியம் (ஆற்றல்) புருஷனுக்கு ஏற்படுகிறது. எது க்ஷீணமானால் (நாசமடைந்தால்) அதன் சக்தியும் க்ஷீணமாகும். இதையே சுருதி கூறப்போகிறது - “अथान्नस्यायै द्रष्टा” (அதான்னஸ்- யாயை த்ரஷ்டா) என்பது முதலியவை. எல்லா காரிய கரணங்களின் சாமர்த்தியமும் (சக்தியும்) மனதினால் செய்யப்பட்டதே. உலகில் மனதின் பலம் உடையவன் பலவானாகவும், அவ்வாறே சிலர் ஆஹாரத்திலேயே தியானம் உடையவர்களாகவும் இருப்பது காணப்படுகிறது. அன்னம் சர்வாத்ம ரூபமாய் இருக்கிறது. ஆகையால் மானசீக பலம் அன்னத்தால் அடையப்படுகிறது.
षोडशकलः सोम्य पुरुषः पञ्चदशाहानि माशीः काममपः पिबापोमयः प्राणो नपिबतो विच्छेत्स्यत इति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! புருஷன் பதினாறு கலைகள். உடையவன் அவன் பதினைந்து நாட்கள் சாப்பிடாமல் எவ்வளவு இச்சிக்கின்றானோ அவ்வளவு ஜலத்தை பருகி வாழ்கின்றான். பிராணன் ஜலமயம். ஆகையால் ஜலம் பருகுவதால் அவன் நாசம் அடைவதில்லை.
षोडश कलाः यस्य पुरुषस्य सोऽयं षोडशकलः पुरुषः । एतच्चेत्प्रत्यक्षीकर्तुमिच्छसि, पञ्चदशसङ्ख्याकान्यहानि माशीः अशनं माकार्षीः, कामम् इच्छातः अपः पिब, यस्मात् नपिबतः अपः ते प्राणो विच्छेत्स्यते विच्छेदमापत्स्यते, यस्मादापोमयः अब्विकारः प्राण इत्यवोचाम । न हि कार्यं स्वकारणोपष्टम्भमन्तरेण अविभ्रंशमानं स्थातुमुत्सहते ॥
அனுவாதம் - எந்த புருஷனுக்கு பதினாறு கலைகள் இருக்கின்றதோ அந்த இவன் ஷோடசகல புருஷன். இதைப் பிரத்யக்ஷமாக அறியவேண்டும் என்றால் பதினைந்து நாட்கள் போஜனம் செய்யாமல் எவ்வளவு பிரியமோ அவ்வளவு நீர் அருந்தவேண்டும். ஏன்எனில் நீர் அருந்தவில்லையெனில் உன்னுடைய பிராணன் நாசம் அடைந்துவிடும். ஏன்எனில் ஜலமயமான ஜலத்தின் விகாரமாகும் பிராணன் என்று முன்பே கூறினோம், காரியமானது தன்னுடைய காரணத்தை ஆஸ்ரயிக்காமல் இருக்கமுடியாது.
स ह पञ्चदशाहानि नाशाथ हैनमुपससाद किं ब्रवीमि भो इत्यृचः सोम्य यजूꣳषि सामानीति स होवाच न वै मा प्रतिभान्ति भो इति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அவனும் பதினைந்து தினங்கள் போஜனம் செய்யவில்லை. அதன்பின் அவன் அந்த ஆருணரிடம் வந்து கூறினான்- ஹே பகவானே! என்ன கூறவேண்டும். (பிதா கூறினார்-) ஹே சோம்ய! ரிக், யஜுர், சாமத்தை ஓத வேண்டும் என்று கூறினார். அப்பொழுது அவன் கூறினான் - ஹே பகவானே! எனக்கு அவைகள் ஞாபகத்திற்கு வரவில்லை என்று.
स ह एवं श्रुत्वा मनसः अन्नमयत्वं प्रत्यक्षीकर्तुमिच्छन् पञ्चदशाहानि न आश अशनं न कृतवान् । अथ षोडशेऽहनि ह एवं पितरमुपससाद उपगतवान् उपगम्य च उवाच — किं ब्रवीमि भो इति । इतर आह — ऋचः सोम्य यजूंषि सामान्यधीष्वेति । एवमुक्तः पित्रा आह — न वै मा माम् ऋगादीनि प्रतिभान्ति मम मनसि न दृश्यन्त इत्यर्थः हे भो भगवन्निति ॥
அனுவாதம் - அவன் இவ்வாறு கேட்டு மனதின் அன்னமயத்தை பிரத்யக்ஷமாக (நன்றாக) அறிவதற்கு விரும்பி பதினைந்து தினங்கள் சாப்பிடாமல் இருந்தான். அதன்பின் பதினாறாவது நாள் அவனுடைய தந்தையிடம் வந்தான். வந்து இவ்வாறு கூறினான்- நான் என்ன சொல்லவேண்டும் என்று, அதற்கு மற்றவர் (பிதா) கூறினார் - சோம்ய! ரிக், யஜுர், சாமத்தை ஓது என்றார். இவ்வாறு பிதாவால் கூறப்பட்டதற்கு கூறினார். ஹே பகவானே! ரிக் முதலியவைகள் என் மனதில் தோன்றவில்லை என்று.
एवमुक्तवन्तं पिता आह — शृणु तत्र कारणम् , येन ते तानि ऋगादीनि न प्रतिभान्तीति ;
அனுவாதம் - இவ்வாறு கூறியவனிடம் பிதா கூறினார் - அதன் காரணத்தைக் கேள் - எதனால் உனக்கு அந்த ரிக் முதலியவைகள் ஞாபகத்திற்கு வரவில்லை என்று -
तꣳहोवाच यथा सोम्य महतोऽभ्याहितस्यैकोऽङ्गारः खद्योतमात्रः परिशिष्टः स्यात्तेन ततोऽपि न बहु दहेदेवꣳ सोम्य ते षोडशानां कलानामेका कलातिशिष्टा स्यात्तयैतर्हि वेदान्नानुभवस्यशानाथ मे विज्ञास्यसीति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - அவர் அவனிடம் கூறினார் - ஹே சோம்ய! எவ்வாறு மிக அதிகமாக எறிந்து கொண்டிருக்கும் அக்னியின் ஒரு சிறிய மின்மினிப் பூச்சியின் அளவிலான கனல் அதைவிடப் பெரியது ஒன்றையும் எரிக்க முடியாது. அவ்வாறே ஹே சோம்ய! உன்னுடைய பதினாறு கலைகளில் ஒரு கலை மாத்திரம் இருக்கிறது. அதன் மூலமாக இப்பொழுது உன்னால் வேதங்களை நினைவுகூற முடியவில்லை. சரிதான், நீ இப்பொழுது போஜனம் செய். நான் கூறும் விஷயத்தை அப்பொழுது நீ நன்றாக புரிந்து கொள்வாய்.
तं ह उवाच — यथा लोके हे सोम्य महतः महत्परिमाणस्य अभ्याहितस्य उपचितस्य इन्धनैः अग्नेः एकोऽङ्गारः खद्योतमात्रः खद्योतपरिमाणः शान्तस्य परिशिष्टः अवशिष्टः स्यात् भवेत् , तेनाङ्गारेण ततोऽपि तत्परिमाणात् ईषदपि न बहु दहेत् , एवमेव खलु सोम्य ते तव अन्नोपचितानां षोडशानां कलानामेका कला अवयवः अतिशिष्टा अवशिष्टा स्यात् , तया त्वं खद्योतमात्राङ्गारतुल्यया एतर्हि इदानीं वेदान् नानुभवसि न प्रतिपद्यसे, श्रुत्वा च मे मम वाचम् अथ अशेषं विज्ञास्यसि अशान भुङ्क्ष्व तावत् ॥
அனுவாதம் - அவனிடம் ஆருணி கூறினார் - ஹே சோம்ய! உலகில் எவ்வாறு அக்னி மிகப்பெரிதாகி எரிந்து சாந்தமாகி சிறிய மின்மினிப்பூச்சி அளவில் சாந்தமாக மாறிய சிறிய கனல் அதைவிடப் பெரியதை எவ்வாறு சிறிதளவும் தஹிக்காது. அவ்வறே சோம்ய! அன்னத்தால் சேகரிக்கப்பட்ட பதினாறு கலைகளில் ஒரு கலை மாத்திரமே மீதமாக உள்ளது. அதைவைத்து நீ சிறிய மின்னல் பூச்சிபோல் அளவு உள்ள அக்னியை ஒத்து இருப்பதால் இப்பொழுது உன்னால் வேதங்களை ஞாபகப்படுத்த முடியாது. ஆகையால் நீ போஜனம் செய்தபின் என்னுடைய வசனத்தைக் கேட்டு நீ எல்லாவற்றையும் அறிந்து கொள்வாயாக.
स हाशाथ हैनमुपससाद तꣳ ह यत्किञ्च पप्रच्छ सर्वꣳ ह प्रतिपेदे ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - அவன் போஜனம் செய்தபின் அவரிடம் (ஆருணரிடம்) சென்றான். அவர் எதையெல்லாம் கேட்டாரோ அவை எல்லாம் அவன் அறிந்து இருந்தான் (ஞாபகத்திற்கு வந்தது)
स ह तथैव आश भुक्तवान् । अथ अनन्तरं ह एवं पितरं शुश्रूषुः उपससाद । तं ह उपगतं पुत्रं यत्किञ्च ऋगादिषु पप्रच्छ ग्रन्थरूपमर्थजातं वा पिता । स श्वेतकेतुः सर्वं ह तत्प्रतिपेदे ऋगाद्यर्थतो ग्रन्थतश्च ॥
அனுவாதம் - அவ்வாறே அவன் போஜனம் செய்தான். அதன்பின் அவன் தந்தையிடம் கேட்பதற்கு விரும்பினவனாய் அவரிடம் வந்தான். தன்னிடம் வந்த புத்திரனிடம் பிதா என்ன உனக்கு ரிக் முதலியவைகளின் கிரந்தத்தையும் அதன் அர்த்தத்தையும் அறிவாயா? என்று கேட்டார். அந்த ச்வேதகேது அந்த எல்லா ரிக் முதலிய கிரந்தங்களும் அவைகளின் அர்த்தமும் இப்பொழுது அறிகிறேன் என்றான்.
तंहोवाच यथा सोम्य महतोऽभ्याहितस्यैकमङ्गारं खद्योतमात्रं परिशिष्टं तं तृणैरुपसमाधाय प्राज्वलयेत्तेन ततोऽपि बहु दहेत् ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - அவனிடம் (ஆருணி) கூறினார் - ஹே சோம்ய! எவ்வாறு மிகப்பெரியதாக எரியும் அக்னியின் ஒரு மின்னல் பூச்சி போன்று கனல் ஆக ஆகிறதோ மேலும் அது (திருணத்துடன்) புல்லுடன் சம்பந்தப்பட்டவுடன் அது மீண்டும் மிக அதிகமாக சுட்டு எரித்துவிடும்.
तं ह उवाच पुनः पिता — यथा सोम्य महतः अभ्याहितस्येत्यादि समानम् , एकमङ्गारं शान्तस्याग्नेः खद्योतमात्रं परिशिष्टं तं तृणैश्चूर्णैश्च उपसमाधाय प्राज्वलयेत् वर्धयेत् । तेनेद्धेन अङ्गारेण ततोऽपि पूर्वपरिमाणात् बहु दहेत् ॥
அனுவாதம் - மறுபடியும் தந்தை அவனிடம் கூறினார் - ஹே சோம்ய! எவ்வாறு “மிக அதிகமாக எரியும் அக்னி” என்பது முதலியவை முன்பு கூறியதுபோல் ஆகும். சாந்தமான அக்னியின் சிறிய மின்மினி பூச்சி போன்ற சிறிதளவு மிச்சமான ஒரு கனல் அந்த புல்லிறகு முதலியவைகளை அடைந்து எரிந்து பெரிதாகிறதோ அது அந்த எரியும் தணலினால் தன்னுடைய முழு அளவை அபேக்ஷித்து மிக அதிகமாக தக்ஷிக்கும்.
एवꣳ सोम्य ते षोडशानां कलानामेका कलातिशिष्टाभूत्सान्नेनोपसमाहिता प्राज्वाली तयैतर्हि वेदाननुभवस्यन्नमयꣳ हि सोम्य मन आपोमयः प्राणस्तेजोमयी वागिति तद्धास्य विजज्ञाविति विजज्ञाविति ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! இவ்வாறு நீ அன்னத்தை சாப்பிட்டதால் இந்த பதினாறு கலைகளில் ஒரு கலை மாத்திரம் மீதம் இருந்தது. அது அன்னத்தால் விருத்தி அடைந்து அதாவது இப்பொழுது ஞாபகப்படுத்த முடிகிறது. அதனால் நீ வேதங்களை ஞாபகப்படுத்த முடிகிறது. ஹே சோம்ய! ஆகையால் மனம் அன்னமயம், பிராணன் ஜலமயம் மேலும் வாக் தேஜோமயம் ஆகும். இவ்வாறு கூறியதால் ச்வேதகேது விசேஷ ரூபமாய் அறிந்து கொண்டான்.
एवं सोम्य ते षोडशानामन्नकलानां सामर्थ्यरूपाणाम् एका कला अतिशिष्टा अभूत् अतिशिष्टा आसीत् , पञ्चदशाहान्यभुक्तवतः एकैकेनाह्ना एकैका कला चन्द्रमस इव अपरपक्षे क्षीणा, सा अतिशिष्टा कला तव अन्नेन भुक्तेनोपसमाहिता वर्धिता उपचिता प्राज्वाली, दैर्घ्यं छान्दसम् , प्रज्वलिता वर्धितेत्यर्थः । प्राज्वालिदिति पाठान्तरम् , तदा तेनोपसमाहिता स्वयं प्रज्वलितवतीत्यर्थः । तया वर्धितया एतर्हि इदानीं वेदाननुभवसि उपलभसे ।
அனுவாதம் - ஹே சோம்ய! அந்த பதினாறு கலைகளின் ஆற்றலுடைய ரூபங்களில் ஒரு கலை மீதம் இருந்தது. பதினைந்து தினங்கள் சாப்பிடாததால் ஒவ்வொரு கலையாக சந்திரனின் இறங்குமுக பக்ஷம்போல் க்ஷீணமடைந்தது. மீதம் இருந்த இந்த கலை சாப்பிட்ட அன்னத்தால் விருத்தி அடைந்தது. இங்கு “प्रज्वाली” (பிரஜ்வாலீ) என்றால் வளரச்செய்தது என்று பொருள். இங்கு “प्रज्वाली” தீர்கசந்தஸ் ஆகும். “प्रज्वालीत्” (ப்ராஜ்வாலீத்) என்று வேறு விதமாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது அது விருத்தியாகும்பொழுது ஸ்வயமாகவே பிரஜ்வலிக்கிறது என்பது பொருள். ஆனால் அவைகளால் ஆற்றல் வளர்ந்து இப்பொழுது உனக்கு வேதங்களின் ஞாபகம் வருகிறது.
एवं व्यावृत्त्यनुवृत्तिभ्यामन्नमयत्वं मनसः सिद्धमिति उपसंहरति — अन्नमयं हि सोम्य मन इत्यादि । यथा एतन्मनसोऽन्नमयत्वं तव सिद्धम् , तथा आपोमयः प्राणः तेजोमयी वाक् इत्येतदपि सिद्धमेवेत्यभिप्रायः । तदेतद्ध अस्य पितुरुक्तं मनआदीनामन्नादिमयत्वं विजज्ञौ विज्ञातवान् श्वेतकेतुः । द्विरभ्यासः त्रिवृत्करणप्रकरणसमाप्त्यर्थः ॥
அனுவாதம் - இவ்வாறு வியாவிருத்த அனுவிருத்திகளால் மனதின் அன்னமயத்துவம் சித்திக்கிறது. என்று முடிக்கிறார் - “अन्नमयं हि सोम्य मन” (அன்னமயம் ஹி சோம்ய மன) என்பது முதலியவைகளால். அவ்வாறே உன்னுடைய மனதிற்கு அன்னமயத்துவம் சித்திக்கிறது. அவ்வாறே பிராணனுக்கு ஜலமயத்துவம் சித்திக்கிறது. வாக்கிற்கும் தேஜோமயம் சித்திக்கிறது என்பது அபிப்பிராயம், அந்த இந்த பிதாவினால் கூறப்பட்ட மனம் முதலியவைகளின் அன்ன முதலிய மயத்துவத்தை ச்வேதகேது அறிந்து கொண்டான். இருமுறை கூறியது த்ருவிர்த்கரண பிரகரணத்தின் சமாப்திக்காக ஆகும்.
इति सप्तमखण्डभाष्यम् ॥
यस्मिन्मनसि जीवेनात्मनानुप्रविष्टा परा देवता — आदर्शे इव पुरुषः प्रतिबिम्बेन जलादिष्विव च सूर्यादयः प्रतिबिम्बैः, तन्मनः अन्नमयं तेजोमयाभ्यां वाक्प्राणाभ्यां सङ्गतमधिगतम् । यन्मयो यत्स्थश्च जीवो मननदर्शनश्रवणादिव्यवहाराय कल्पते तदुपरमे च स्वं देवतारूपमेव प्रतिपद्यते ।
அனுவாதம் - அ.கை - கண்ணாடியில் புருஷனின் பிரதிபிம்பம் போன்றும், ஜலம் முதலியவைகளில் சூரியன் முதலியவைகளின் பிரதிபிம்பங்கள் போன்றும் இந்த மனதில் பரதேவதா ஜீவாத்ம ரூபமாக பிரவேசித்து அந்த அன்னமயமான மனது, தேஜஸ், மனோமயமான வாக், ஜலமயமான பிராணன் ஆக இருப்பது தெரிகின்றது. எதில் இருக்கும் இந்த மனோமயமான ஜீவன் மனனம் (சிந்திப்பது) தர்சனம், சிரவணம் (காண்பது, கேட்பது) முதலிய வியவஹாரங்கள் கல்பிக்கப்படுவதும், அவைகள் நிவர்த்தியாவதும் தன் தேவதா ஸ்வரூபமே என்று அறியப்படுகிறது.
அனுவாதம் - வேறு ச்ருதிகளிலும் இந்த விஷயத்தைக் குறிந்து கூறப்பட்டுள்ளது - ध्यायतीव लेलायतीव सधीः स्वप्नो भूत्वेमं लोकमतिक्रामति” (த்யாயதீவ லேலாயதீவ சதீ: ஸ்வப்னே பூத்வேமம் லோகமதிக்ராமதி), “स्वप्नेन शारीरम्” (ஸ்வப்னேன சாரீரம்) முதலியவைகள் “प्राणन्नेव प्राणो नाम भवति” (ப்ராணன்னேவ ப்ராணோ நாம பவதி) என்பது முதலியவைகளும்.
तस्यास्य मनस्थस्य मनआख्यां गतस्य मनउपशमद्वारेणेन्द्रियविषयेभ्यो निवृत्तस्य यस्यां परस्यां देवतायां स्वात्मभूतायां यदवस्थानम् , तत् , पुत्राय आचिख्यासुः
அனுவாதம் - அந்த இந்த மனதில் இருக்கும் அதாவது மனம் எனப்படுவதால் அடையப்பட்டதும், மனதின் நிவிர்த்தியினால் இந்திரியங்களின் விஷயங்களில் இருந்து விடுபட்டு தன் ஸ்வரூப பூதமான பரதேவதையின் இடத்தில் நிலைபெற்று இருத்தலை தன்னுடைய புத்திரனுக்கு தெரிவிப்பதற்கு விரும்பி விளக்குகிறார்.
उद्दालको हारुणिः श्वेतकेतुं पुत्रमुवाच स्वप्नान्तं मे सोम्य विजानीहीति यत्रैतत्पुरुषः स्वपिति नाम सता सोम्य तदा सम्पन्नो भवति स्वमपीतो भवति तस्मादेनꣳ स्वपितीत्याचक्षते स्वꣳ ह्यपीतो भवति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - உத்தாலகர் எனப்படும் ஆருணி தன்னுடைய புத்திரன் ஸ்வேதகேதுவிடம் கூறினார் - ஹே சோம்ய! நீ என்னிடம் இருந்து ஸ்வப்னாந்தத்தை (சுஷீப்த்தி அவஸ்தையை) விசேஷமாக அறிந்துகொள். எந்த அவஸ்தையில் புருஷன் தூங்குகின்றான் என்று எப்பொழுது கூறப்படுகிறதோ அப்பொழுது ஹே சோம்ய! அது சத்துடன் கலக்கின்றான். அதாவது தன் ஸ்வரூபத்தை அடைகின்றான். அதனால் அவனை स्वपिति्ा (ஸ்வபிதி = தூங்குகின்றான்) என்கிறோம். ஏன்எனில் அந்த சமயத்தில் அந்த “स्व” (ஸ்வ) தன்னை அடைகின்றது என்பது பொருள்.
उद्दालको ह किल आरुणिः श्वेतकेतुं पुत्रमुवाच उक्तवान् — स्वप्नान्तं स्वप्नमध्यम् स्वप्न इति दर्शनवृत्तेः स्वप्नस्याख्या, तस्य मध्यं स्वप्नान्तं सुषुप्तमित्येतत् ; अथवा स्वप्नान्तं स्वप्नसतत्त्वमित्यर्थः । तत्राप्यर्थात्सुषुप्तमेव भवति, ‘स्वमपीतो भवति’ इति वचनात् ; न हि अन्यत्र सुषुप्तात् स्वमपीतिं जीवस्य इच्छन्ति ब्रह्मविदः ।
அனுவாதம் - உத்தாலகர் எனப்படும் ஆருணி தன்னுடைய புத்திரனாகிய ச்வேதகேதுவிடம் கூறினார் - ஸ்வப்னத்தின் மத்யம், “ஸ்வப்னம்” என்று (வாசனாரூப) தர்சனத்தின் விருத்தி ஸ்வப்னத்தின் பெயராகும். அதன் மத்யத்தை ஸ்வப்னாந்தம் அதாவது சுக்ஷுப்த்தி எனப்படுகிறது. அல்லது ஸ்வப்னாந்தம் என்பது ஸ்வப்னாந்தத்தின் தத்துவம் என்பது பொருள். “स्वपपीतो भवति” (ஸ்வமபீதோ பவதி = தன்னை அடைகின்றான்) என்ற ஸ்ருதி வாக்கியத்தால் அங்கு “அபி” (अपि) என்ற அர்த்தத்தினால் சுக்ஷுப்தியே ஆகிறது. பிரஹ்ம வேத்தாக்கள் சுக்ஷுப்தி அவஸ்தையைத் தவிர்த்து வேறு தசையில் ஜீவனின் ஸ்வரூப பிராப்த்தியை ஏற்றுக்கொள்ள இச்சிப்பது இல்லை.
तत्र हि आदर्शापनयने पुरुषप्रतिबिम्बः आदर्शगतः यथा स्वमेव पुरुषमपीतो भवति, एवं मन आद्युपरमे चैतन्यप्रतिबिम्बरूपेण जीवेन आत्मना मनसि प्रविष्टा नामरूपव्याकरणाय परा देवता सा स्वमेव आत्मानं प्रतिपद्यते जीवरूपतां मनआख्यां हित्वा । अतः सुषुप्त एव स्वप्नान्तशब्दवाच्य इत्यवगम्यते ।
அனுவாதம் - இவ்வாறு கண்ணாடியை நீக்கியபின் கண்ணாடியில் தோன்றிய பிரதிபிம்பம் எவ்வாறு தானாகவே புருஷனை அடைகிறதோ அவ்வாறு மனம் முதலியவை அடங்கிய உடன் சைதன்ய பிரதிபிம்ப ரூப ஜீவாத்மாவாய் பிரவேசித்த அந்த பராதேவதா மனம் எனப்படும். ஜீவரூபத்தை விட்டு தானாகவே தன்னை (ஆத்மாவை) அடைகிறது. ஆகையால் சுக்ஷுப்தியே சுவப்னாந்த சப்த வாச்சியம் என்று அறியப்படுகிறது.
அனுவாதம் - ஆனால் எப்பொழுது தூங்குபவன் ஸ்வப்னத்தைக் காண்கின்றானோ அந்த ஸ்வப்ன தர்சனம் சுக துக்கத்துடன் கூடி இருப்பதால் அது புண்ய பாப காரியம் ஆகும். புண்யபாபங்களினால் அல்லவா சுகதுக்கம் ஆரம்பிக்கின்றது என்பது பிரசித்தமானதாகும். புண்ய பாபங்களினால் எந்த சுக துக்கங்களும் அநேக தர்சன ரூப காரியங்களும் ஆரம்பத்திற்கு உள்ளாகிறது அது அவித்யா காமங்களின் ஆஸ்ரயத்தால் சம்பவிக்கின்றன. வேறு எவ்விதமாகவும் அல்ல. ஆகையால் ஸ்வப்னத்தில் தோன்றும் சம்சாரத்திற்கு காரண ரூபமான அவித்யா, காம கர்மங்கள் இவைகளால் கூடியதாக இருக்கின்றது. ஆகையால் அந்த அவஸ்தையில் ஸ்வஸ்வரூபத்தை அடைவதில்லை. “अनन्वागतं पुण्येनानन्वागतं पापेन तीर्णो हि तदा सर्वाञ्छोकान्ह्य्दयस्य भवति” (அநன்வாகதம் புண்யேனானன்வாகதம் பாபேன தீர்ணோ ஹிததா சர்வான்ச்சோகான்ஹ்ருதயஸ்ய பவதி) “तद्वा अस्यैतदतिच्छन्दाः” (தத்வா அஸ்யைதததிச்சந்தா:) “एष परम आनन्दः” (ஏஷ பரம ஆனந்த:) முதலிய சுருதிகளில் சித்திக்கின்றது. சுஷுப்தியே ஜீவத்துவத்திலிருந்து விடுபட்ட தன் (स्वं) தேவதா ரூபத்தை உனக்குத் தெரிவிக்கிறேன் என்று கூறினார் - ஹே சோம்ய! நான் செல்வதிலிருந்து நீ சுக்ஷுப்தி அவஸ்தையை விசேஷரூபமாக அறிந்துகொள். அதாவது தெளிவாக அறிந்துகொள்.
कदा स्वप्नान्तो भवतीति, उच्यते — यत्र यस्मिन्काले एतन्नाम भवति पुरुषस्य स्वप्स्यतः । प्रसिद्धं हि लोके स्वपितीति । गौणं चेदं नामेत्याह — यदा स्वपितीत्युच्यते पुरुषः, तदा तस्मिन्काले सता सच्छब्दवाच्यया प्रकृतया देवतया सम्पन्नो भवति सङ्गतः एकीभूतो भवति । मनसि प्रविष्टं मनआदिसंसर्गकृतं जीवरूपं परित्यज्य स्वं सद्रूपं यत्परमार्थसत्यम् अपीतः अपिगतः भवति । अतः तस्मात् स्वपितीत्येनमाचक्षते लौकिकाः । स्वमात्मानं हि यस्मादपीतो भवति ; गुणनामप्रसिद्धितोऽपि स्वात्मप्राप्तिर्गम्यते इत्यभिप्रायः ।
அனுவாதம் - எப்பொழுது ஸ்வப்னாந்தம் (சுக்ஷுப்தி) ஏற்படுகிறது? அதற்குக் கூறப்படுகிறது - எப்பொழுது புருஷன் தூங்குகின்றானோ அப்பொழுது இந்த ஸ்வபதி என்ற (நாமம்) ஏற்படுவது உலகில் பிரசித்தமாகும். இந்த நாமம் கெளணம் அதாவது குணசம்பந்தமுடைய நாமம் என்பது குறித்து கூறுகின்றார் - எப்பொழுது புருஷன் தூங்குகின்றான் (स्वपिति- ஸ்வபிதி) என்று கூறப்படுகிறதோ அப்பொழுது அவன் பிரகரணத்தால் பிராப்தமான சத் சப்த வாச்சிய தேவதையை உடையவனாகி ஏகீ பூதமாகின்றான். (ஐக்யத்தை அடைகின்றான்). மனதில் புகுந்த மனம் முதலிய சம்சர்க்கத்தால் ஆன ஜீவரூபத்தை விட்டு தன் சத்ஸ்வரூபம் எதுவோ அந்த பரமார்த்த சத்யத்தை அடைந்ததாக ஆகிறது. ஆகையால் உலகத்தோர் புருஷனை உறங்குகிறான் அதாவது “स्वपिति” (ஸ்வபதி) என்று கூறுகின்றனர். எதனால் அது “अपीतः” (அபீத:) ஸ்வாத்மாவை அடைகிறது. என்பதாகும். கெளணநாமாவாக இருந்தாலும் தன் ஆத்மாவை அடைகிறது என்று அறிகிறோம் என்பது அபிப்பிராயம்.
அனுவாதம் - மறுபடியும் எவ்வாறு உலகோர்களுக்கு ஸ்வாத்ம சம்பத்தி (ஸ்வாத்மாவை அடைவது) பிரசித்தமாகிறது? ஜாக்ரத்தின் சிரமத்தின் காரணமாக உண்டாகிறது நித்திரை என்று கூறப்படுகிறது. ஜாக்ரத்தில் அல்லவா புண்ய, பாப நிமித்தத்தால் சுக துக்க முதலிய அநேக ஆயாசங்களை அனுபவிப்பதால் (சிரமம்) களைப்பு ஏற்படுகிறது. அதனால் பீடிக்கப்பட்டு அநேக பிரகாரமாக வியாபார (செயல்கள்) நிமித்தத்தால் சோர்வு அடைந்த இந்திரியங்கள் தங்கள் செயல்களிலிருந்து நிவிர்த்தி ஆகிறது. சுருதியிலும் “श्राम्यत्येव वाक् श्राम्यति चक्षुः” (ஸ்ராம்யத்யேவ வாக் ச்ராம்யதி சக்ஷீ:) இவை முதலியவைகளால் காணப்படுகிறது. அவ்வாறே “गृहीता वाग् गृहीतं चक्षुर्गृहीतं श्रोत्रं गृहीतं मनः” (க்ருஹீதா வாக் க்ருஹீதம் சஹீக்ருக்ஷுதம் ச்ரோத்ரம், க்ருஹீதம் மன:) இவைகளால் இந்த கரணங்கள் பிராணனால் கிரஹிக்கப்படுகிறது என்று அறிகிறோம். பிராணன் ஒன்றே களைப்பு அடையாமல் சரீரத்தில் முழித்திருக்கின்றது. அப்பொழுது ஜீவனின் களைப்பு நீங்குவதற்காக தன்னுடைய ஸ்வாபாவிகமான தேவதா ரூபத்தை அடைகிறது. ஏன் எனில் தன் ஸ்வரூபத்தில் நிலைபெறாமல் வேறு ஒன்றினாலும் சிரமத்தைப் போக்கமுடியாது. ஆகையால் அந்த சமயத்தில் தன்னுடைய ஸ்வரூபத்தை அடைகின்றான் என்பது உலகத்தோருடைய பிரசித்தி சரியானதே. உலகில் ஜ்வரம் முதலிய நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட்டு ஸ்வஸ்தமானபின் விச்ராமம் கொள்வதைக் காண்கிறோம். ஆகையால் அவ்வாறே இங்கும் அறிந்துகொள்ள முடியும். ஆகையால் இந்த பிரசித்தமானது சரியேயாகும். “तद्यथा श्येनो वा सुपर्णो वा विपरिपत्य श्रान्तः” (தத்யதா ச்யேனோ வா சுபர்ணோ வா விபரிபத்ய ச்ராந்த:) முதலிய சுருதிகளால் சித்தமாகின்றது.
तत्रायं दृष्टान्तः यथोक्तेऽर्थे —
அனுவாதம் - அ.கை - மேலே கூறப்பட்ட அர்த்தத்தில் இந்த திருஷ்டாந்தம் -
स यथा शकुनिः सूत्रेण प्रबद्धो दिशं दिशं पतित्वान्यत्रायतनमलब्ध्वा बन्धनमेवोपश्रयत एवमेव खलु सोम्य तन्मनो दिशं दिशं पतित्वान्यत्रायतनमलब्ध्वा प्राणमेवोपश्रयते प्राणबन्धनꣳ हि सोम्य मन इति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எவ்வாறு கயிற்றால் கட்டப்பட்ட சகுனிப்பறவை எல்லா திசைகளிலும் பறந்து வேறு இடம் கிடைக்காமல் தான் கட்டுப்பட்ட ஸ்தானத்தையே சரணம் அடைகிறதோ அவ்வாறு என்று நிச்சயம் செய்து ஹே சோம்ய! இந்த மனமும் எல்லா திசைகளுக்கும் அலைந்து எங்கும் வேறு ஸ்தானம் கிடைக்காமல் பிராணனையே ஆஸ்ரயிக்கிறது. (சரண் அடைகிறது) ஹே சோம்ய! ஏன்எனில் மனம் பிராண ரூபத்தால் கட்டுப்பட்டுள்ளது. (இங்கு பிராணன் என்பது பிராண உபலக்ஷித தேவதை).
स यथा शकुनिः पक्षी शकुनिघातकस्य हस्तगतेन सूत्रेण प्रबद्धः पाशितः दिशं दिशं बन्धनमोक्षार्थी सन् प्रतिदिशं पतित्वा अन्यत्र बन्धनात् आयतनम् आश्रयं विश्रणाय अलब्ध्वा अप्राप्य बन्धनमेवोपश्रयते । एवमेव यथा अयं दृष्टान्तः खलु हे सोम्य तन्मनः तत्प्रकृतं षोडशकलमन्नोपचितं मनो निर्धारितम् , तत्प्रविष्टः तत्स्थः तदुपलक्षितो जीवः तन्मन इति निर्दिश्यते — मञ्चाक्रोशनवत् । स मनआख्योपाधिः जीवः अविद्याकामकर्मोपदिष्टां दिशं दिशं सुखदुःखादिलक्षणां जाग्रत्स्वप्नयोः पतित्वा गत्वा अनुभूयेत्यर्थः, अन्यत्र सदाख्यात् स्वात्मनः आयतनं विश्रमणस्थानमलब्ध्वा प्राणमेव, प्राणेन सर्वकार्यकरणाश्रयेणोपलक्षिता प्राण इत्युच्यते सदाख्या परा देवता,
‘प्राणस्य प्राणम्’ (बृ. उ. ४ । ४ । १८) ‘प्राणशरीरो भारूपः’ (छा. उ. ३ । १४ । २) इत्यादिश्रुतेः । अतः तां देवतां प्राणं प्राणाख्यामेव उपश्रयते । प्राणो बन्धनं यस्य मनसः तत्प्राणबन्धनं हि यस्मात् सोम्य मनः प्राणोपलक्षितदेवताश्रयम् , मन इति तदुपलक्षितो जीव इति ॥
அனுவாதம் - எவ்வாறு சகுணிபக்ஷி அதாவது பிடிப்பட்ட சகுனி பக்ஷி கையில் இருக்கும் கயிற்றால் கட்டப்பட்டு அதிலிருந்து விடுபட அங்கும் இங்கும் பறந்து அலைந்து ஒய்வு அடைவதற்காக தான் கட்டுப்பட்ட இடத்தைத் தவிர வேறு ஆஸ்ரயத்தை அடையமுடியாமல் திரும்பவும் பந்தப்பட்ட இடத்திற்கே திரும்புகிறது. எவ்வாறு இந்த திருஷ்டாந்தமோ அவ்வாறே- ஹே சோம்ய! அந்த மனம் அந்த ஷோடசகலை அன்னத்தால் அடையப்பட்ட மனம் விளக்கப்பட்டது. அதில் பிரவேசித்து அதில் நிலைத்து அதன் மூலமாக உபலக்ஷிக்கப்பட்ட ஜீவன் “तन्मनः” (தன்மன: அந்தமனம்) என்று கூறி விளக்கப்பட்டது. காட்டில் கூவுகிறது என்பதுபோல் அந்தமனம் எனப்படும் உபாதியுடன் கூடி ஜீவன் அவித்யா காம கர்மங்களால் வழி காட்டப்பட்டு எங்கும் சுகதுக்க முதலிய லக்ஷணங்களுடைய ஜாக்ரத் சொப்பனங்களில் சென்று அனுபவிக்கிறது என்பது பொருள். “சத்” எனப்படும் ஸ்வாத்மாவான ஆயதனம் (இருப்பிடம்) ஆகிய ஓய்வு எடுக்கக்கூடிய (விச்ராமம்) இடம் கிடைக்காமல் பிராணனையே அடைகிறது. பிராணன் என்பது எல்லா காரியகரண ஆஸ்ரயத்தை உபலக்ஷிக்கும் பிராணன் ஆகும். அந்த உபலக்ஷித பிராணனே சத் எனப்படும் பராதேவதா ஆகும். “प्राणस्य प्राणम्” (ப்ராணஸ்ய ப்ராணம்) “प्राणशरीरो भारूपः” (ப்ராண சரீரோ பாரூப:) முதலிய சுருதி சித்தம் ஆகையால் அந்த தேவதையாகிய பிராணனை, அதாவது பிராணன் எனப்படுவதை ஆஸ்ரயிக்கின்றது. பிராண பந்தனம் எதற்கோ அந்த மனம் பிராணபந்தனம். மனம் என்னும் அதை உபலக்ஷித ஜீவன் ஹே சோம்ய! எதனால் எனில் மனம் பிராண உபலக்ஷித தேவதையை ஆஸ்ரயிக்கின்றது.
एवं स्वपितिनामप्रसिद्धिद्वारेण यज्जीवस्य सत्यस्वरूपं जगतो मूलम् , तत्पुत्रस्य दर्शयित्वा आह अन्नादिकार्यकारणपरम्परयापि जगतो मूलं सद्दिदर्शयिषुः —
அனுவாதம் - அ.கை - இவ்வாறு “स्वपिति” (ஸ்வபிதி) என்ற பிரசித்தமான நாமாவினால் ஜகத்தின் மூலம் எதுவோ அது ஜீவனுடைய சத்திய ஸ்வரூபம் ஜகத்தின் மூலம் என்பதை அந்த புத்திரனுக்கு தெரிவித்து இவ்வாறு கூறுகிறார் -அன்னம் முதலிய காரியகரண பரம்பரையினாலும் ஜகத்தின் மூலமான சத்தை அறியச்செய்வதற்கு விரும்பி கூறுகிறார்.
अशनापिपासे मे सोम्य विजानीहीति यत्रैतत्पुरुषोऽशिशिषति नामाप एव तदशितं नयन्ते तद्यथा गोनायोऽश्वनायः पुरुषनाय इत्येवं तदप आचक्षतेऽशनायेति तत्रैतच्छुङ्गमुत्पतितꣳ सोम्य विजानीहि नेदममूलं भविष्यतीति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! என்னிடம் இருந்து பசி தாகத்தைப் பற்றி அறிந்துகொள். எப்பொழுது இந்த புருஷன் சாப்பிட விரும்புகிறேன் என்று கூறுகிறானோ அப்பொழுது அவன் முன்பு அருந்திய உணவை (அன்னத்தை) ஜலமானது இழுத்துச் சென்றுவிட்டது என்பதாகும். எவ்வாறு உலகில் பசுக்களின் தலைவன், குதிரைகளின் தலைவன், அவ்வாறே மனிதர்களின் தலைவன் என்று கூறுகிறோமோ அவ்வாறே ஜலத்தை உண்ட அன்னத்தின் தலைவன் (अशनाय) என்று கூறி அழைக்கின்றோம். ஹே சோம்ய! இந்த ஜலத்திலிருந்து இந்த சரீரரூப முளை உண்டாகிறது என்பதை அறிவாயாக. ஏன் எனில் இது காரணம் அற்றதாக இருக்கமுடியாது.
अशनापिपासे अशितुमिच्छा अशना, सन् यलोपेन, पातुमिच्छा पिपासा ते अशनापिपासे अशनापिपासयोः सतत्त्वं विजानीहीत्येतत् । यत्र यस्मिन्काले एतन्नाम पुरुषो भवति । किं तत् ? अशिशिषति अशितुमिच्छतीति । तदा तस्य पुरुषस्य किंनिमित्तं नाम भवतीति, आह — यत्तत्पुरुषेण अशितमन्नं कठिनं पीता आपो नयन्ते द्रवीकृत्य रसादिभावेन विपरिणमयन्ते, तदा भुक्तमन्नं जीर्यति । अथ च भवत्यस्य नाम अशिशिषतीति गौणम् । जीर्णे हि अन्ने अशितुमिच्छति सर्वो हि जन्तुः ।
அனுவாதம் - “अशनापिपासे” (அசனாபிபாசே) பக்ஷணம் செய்வதில் இச்சை “अशना” (அசனா) என்பதில் “या” (யா) என்பதை விட்டுவிட்டு “अशना” (அசனா) என்பதாகும். பருகுவதில் உள்ள இச்சை “पिपासा” (பிபாசா) என்பது ஆகும். அந்த அசனாபிபாசாவினால் அந்த அசனாபிபாசங்களின் தத்துவத்துடன் அறிந்துகொள் என்பது ஆகும். எப்பொழுது அந்த புருஷன் இந்த பெயர் உடையவனாகின்றானோ? எந்த நாமம் உடையவனாக? “अशिशिषति” (அசிசிஷதி) அதாவது சாப்பிடுவதற்கு இச்சை ஏற்படுதல். அப்பொழுது இந்த புருஷனுக்கு எந்த காரணத்தால் இந்த நாமம் ஏற்படுகிறது? அதற்கு கூறுகிறார் - எது அந்த புருஷனால் உண்ணப்பட்ட கடினமான அன்னத்தை பருகிய ஜலம் கரைத்து நெகிழச்செய்து ரச முதலிய பாவங்களாக பரிணாமத்தை அடையச் செய்கிறது. அப்போது சாப்பிட்ட அன்னம் ஜீரணமாகிறது. அதன்பின் அதற்கு “अशिशिषति” (அசிசிஷதி) என்ற பெயர் ஏற்படுகிறது. ஏன்எனில் எல்லா ஜீவன்களுக்கும் உண்ணப்பட்ட அன்னம் ஜீரணம் ஆனபின்பே சாப்பிடவேண்டும் என்ற இச்சை உண்டாகிறது.
तत्र अपामशितनेतृत्वात् अशनाया इति नाम प्रसिद्धमित्येतस्मिन्नर्थे । तथा गोनायः गां नयतीति गोनायः इत्युच्यते गोपालः, यथा अश्वान्नयतीत्यश्वनायः अश्वपाल इत्युच्यते, पुरुषनायः पुरुषान्नयतीति राजा सेनापतिर्वा, एवं तत् तदा अप आचक्षते लौकिकाः अशनायेति विसर्जनीयलोपेन ।
அனுவாதம் - போஜனம் செய்த அன்னத்தை எடுத்துச் செல்வதால் ஜலத்தை “अशनाया” (அசனாயா) என்ற பெயர் பிரசித்தமாகும். எவ்வாறு பசுவை நடத்திச் செல்பவனை “गोनाय” (கோனாய) गोपालः (கோபால:) என்றும், குதிரையை நடத்திச்செல்பவனை “अश्वपालः” (அச்வபாலன்) என்றும், மனிதர்களை நடத்திச்செல்பவனை ராஜா என்றும் சேனாதிபதி என்றும் அழைக்கப்படுகின்றனவோ அவ்வாறே லெளகிகர்கள் அந்த ஜலத்தை “अशनाय” (அசனாய) என்று விசர்கத்தை விட்டுவிட்டு கூறுகின்றனர்.
तत्रैवं सति अद्भिः रसादिभावेन नीतेन अशितेनान्नेन निष्पादितमिदं शरीरं वटकणिकायामिव शुङ्गः अङ्कुर उत्पतितः उद्गतः ; तमिमं शुङ्गं कार्यं शरीराख्यं वटादिशुङ्गवदुत्पतितं हे सोम्य विजानीहि । किं तत्र विज्ञेयमिति, उच्यते — शृणु इदं शुङ्गवत्कार्यत्वात् शरीरं नामूलं मूलरहितं भविष्यति
அனுவாதம் - இவ்வாறு ஆகும்பொழுது ஜலத்தினால் ரசம் முதலிய பாவத்தை அடைந்த அன்னத்தின் மூலமாக அடையப்பட்ட இந்த சரீரரூப முளை ஆலம் விதையினால் உண்டாகும் முளைபோல் உத்பன்னமாகிறது. ஹே சோம்ய! ஆலம் முதலிய முளைகள் போல் உத்பன்னமான இந்த சரீரம் என்னும் முளை என்ற காரியத்தை அறிவாயாக. அதில் என்ன அறியவேண்டும்? என்பது கூறப்படுகிறது -கேள். இந்த முளைக்கு சமானமான காரிய ரூபமாய் இருப்பதால் இதற்குக் காரணம் இல்லை என்பது சித்திக்காது. (சம்பவிக்காது).
इत्युक्तः आह श्वेतकेतुः ॥ यद्येवं समूलमिदं शरीरं वटादिशुङ्गवत् , तस्य अस्य शरीरस्य क्व मूलं स्यात् भवेत् इत्येवं पृष्टः आह पिता —
அனுவாதம் - அ.கை - இவ்வாறு (ஆருணியினால்) கூறப்பட்ட ச்வேதகேது கூறினான் - இந்த மூலத்துடன் கூடிய சரீரம் ஆலமுளைபோல் இந்த சரீரத்திற்கு எது அதற்கு மூலம் என்று கேட்டவனுக்கு பிதா இவ்வாறு கூறினார் -
तस्य क्व मूलꣳ स्यादन्यत्रान्नादेवमेव खलु सोम्यान्नेन शुङ्गेनापो मूलमन्विच्छद्भिः सोम्य शुङ्गेन तेजो मूलमन्विच्छ तेजसा सोम्य शुङ्गेन सन्मूलमन्विच्छ सन्मूलाः सोम्येमाः सर्वाः प्रजाः सदायतनाः सत्प्रतिष्ठाः ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - (இந்த உடம்பு) அன்னத்தை தவிர்த்து அதற்கு மூலம் வேறு எதுவாக இருக்கும்? இவ்வாறு ஹே சோம்ய! நீ அன்னரூப முளையின் மூலமாக ஜலரூப மூலத்தைத் தேடவேண்டும். மேலும் ஹே சோம்ய! ஜலரூப முளையின் வாயிலாக தேஜோரூப மூலத்தைத் தேடவேண்டும். அவ்வாறே தேஜோரூப மூலத்தின் மூலமாக சத்ரூப மூலத்தை அறியவேண்டும். ஹே சோம்ய! இவ்வாறு அது எல்லா ஜீவன்களுக்கும் சத் மூலமாகும். அவ்வாறு சத்தே இவைகளின் ஆஸ்ரயமும் பிரதிஷ்டாவும் ஆகும்.
तस्य क्व मूलं स्यात् अन्यत्रान्नादन्नं मूलमित्यभिप्रायः । कथम् ? अशितं हि अन्नमद्भिर्द्रवीकृतं जाठरेणाग्निना पच्यमानं रसभावेन परिणमते । रसाच्छोणितं शोणितान्मांसं मांसान्मेदो मेदसोऽस्थीन्यस्थिभ्यो मज्जा मज्जायाः शुक्रम् । तथा योषिद्भुक्तं च अन्नं रसादिक्रमेणैवं परिणतं लोहितं भवति । ताभ्यां शुक्रशोणिताभ्यामन्नकार्याभ्यां संयुक्ताभ्यामन्नेन एवं प्रत्यहं भुज्यमानेन आपूर्यमाणाभ्यां कुड्यमिव मृत्पिण्डैः प्रत्यहमुपचीयमानः अन्नमूलः देहशुङ्गः परिनिष्पन्न इत्यर्थः ।
அனுவாதம் - அன்னத்தைத் தவிர்த்து அதற்கு எதுதான் மூலமாகும்? அன்னம் மூலம் என்பது அபிப்பிராயம். எவ்வாறு? நாம் சாப்பிட்ட அன்னம் ஜலத்தால் நெகிழச் செய்யப்பட்டு ஜாடாராக்னியினால் பக்குவப்படுத்தப்பட்டு (ஜீர்ணம் செய்யப்பட்டு) ரச பாவமாக பரிணாமம் அடைகிறது. அந்த ரசத்திலிருந்து ரத்தம், ரத்தத்திலிருந்து மாமிசம், மாமிசத்திலிருந்து கொழுப்பு, கொழுப்பிலிருந்து எலும்பு, எலும்புகளில் இருந்து மஜ்ஜை, மஜ்ஜையிலிருந்து சுக்ரம் (வீர்யம்) உண்டாகிறது. அவ்வாறே ஸ்திரீயினால் உண்ணப்பட்ட அன்னம் ரச முதலிய கிரமமாக பரிணாமத்தை அடைந்து லோஹிதம் (சோணிதம் ரஜம்) ஆகிறது. அந்த சுக்ரம் (வீர்யம்) சோணிதங்களால் அன்ன காரியங்களால் சேர்த்து அவ்வாறே பிரதிதினமும் நாம் சாப்பிடும் அன்னத்தால் விருத்தி அடைந்த வீர்யம், ரஜஸ் ஆகிய இவ்விரண்டினால் மிருத் பிண்டத்தால் ஆன குடில்கள்போல் தினமும் விருத்தி அடையச்செய்யும் அன்னத்தை மூலமாக உடைய தேஹரூப முளை உண்டாகிறது என்பது இதன் தாத்பர்யமாகும்.
यत्तु देहशुङ्गस्य मूलमन्नं निर्दिष्टम् , तदपि देहवद्विनाशोत्पत्तिमत्त्वात् कस्माच्चिन्मूलादुत्पतितं शुङ्ग एवेति कृत्वा आह — यथा देहशुङ्गः अन्नमूलः एवमेव खलु सोम्य अन्नेन शुङ्गेन कार्यभूतेन अपो मूलमन्नस्य शुङ्गस्यान्विच्छ प्रतिपद्यस्व । अपामपि विनाशोत्पत्तिमत्त्वात् शुङ्गत्वमेवेति अद्भिः सोम्य शुङ्गेन कार्येण कारणं तेजो मूलमन्विच्छ । तेजसोऽपि विनाशोत्पत्तिमत्त्वात् शुङ्गत्वमिति तेजसा सोम्य शुङ्गेन सन्मूलम् एकमेवाद्वितीयं परमार्थसत्यम् ।
அனுவாதம் - இவ்வாறு தேஹமாகிய அங்குரத்தின் மூலம் அன்னம் என்பது கூறப்பட்டது. அதுவும் தேகம்போல் விநாசம் உத்பத்தி உடையதாய் இருப்பதால் அது எந்த சித் மூலத்திலிருந்து முளை உண்டானது என்பதால் இவ்வாறு கூறுகிறார் - ஹே சோம்ய! எவ்வாறு தேஹமாகிய முளைக்கு அன்னம் மூலம் ஆகிறது. அவ்வாறே ஜலத்தின் காரிய ரூபமாகிய அன்னம் ஆகிய முளையினால் அன்னம் என்னும் முளையின் மூலத்தை தேடி அடை. ஜலமும் விநாசம் உத்பத்தி உடையதால் முளையேயாகும் என்று ஜலமாகிய காரியம் என்னும் முளையினால் காரணம் தேஜஸ் என்று கண்டுபிடித்து அறிவாயாக தேஜஸும் விநாசம் உத்பத்தி உடையதால் முளைத்தன்மை உள்ளது என்று ஹே சோம்ய! தேஜஸ் என்னும் முளையினால் “சத்” ஒன்றே அத்விதீயம் பரமார்த்த சத்யம் மூலம் என்று அறி. “सत् - एकमेवाद्वितीयं परमार्थ सत्यम्” (சத் = ஏகமேவா அத்விதீயம் பரமார்த்த சத்யம்) மூலம் என்று அறி.
यस्मिन्सर्वमिदं वाचारम्भणं विकारो नामधेयमनृतं रज्ज्वामिव सर्पादिविकल्पजातमध्यस्तमविद्यया, तदस्य जगतो मूलम् ; अतः सन्मूलाः सत्कारणाः हे सोम्य इमाः स्थावरजङ्गमलक्षणाः सर्वाः प्रजाः । न केवलं सन्मूला एव, इदानीमपि स्थितिकाले सदायतनाः सदाश्रया एव । न हि मृदमनाश्रित्य घटादेः सत्त्वं स्थितिर्वा अस्ति । अतः मृद्वत्सन्मूलत्वात्प्रजानां सत् आयतनं यासां ताः सदायतनाः प्रजाः । अन्ते च सत्प्रतिष्ठाः सदेव प्रतिष्ठा लयः समाप्तिः अवसानं परिशेषः यासां ताः सत्प्रतिष्ठाः ॥
அனுவாதம் - எதில் இந்த வாக்கினால் ஆரம்பமான எல்லா விகாரங்களான நாமதேயங்கள் ரஜ்ஜுவில் சர்ப்பம் முதலிய விகல்பங்கள் உண்டாவது போல் அவித்யையினால் அத்தியாசம் செய்யப்பட்ட இந்த ஜகத்தின் மூலமாகும். ஆகையால் சத் காரணமாவதால் அவைகளின் மூலம் “சத்” ஆகும். ஹே சோம்ய! ஆகையால் ஸ்தாவர ஜங்கம லக்ஷணங்களுடைய எல்லா பிரஜைகளுக்கும் சத் மூலமாக மட்டும் அல்ல ஸ்திதி காலத்திலும் சத்தே ஆயதனம் அதாவது சத்தே ஆஸ்ரயமாகும். எவ்வாறு கடம் முதலியவைகள் மண்ணை ஆஸ்ரயிக்காவிடில் கடம் முதலியவைகளுக்கு சத் இல்லை. அதாவது அதன் இருப்பு இல்லை. ஆகையால் மண்போல் “சத்” பிரஜைகளுக்கு மூலமாய் இருப்பதால் சத் ஆயதனம் எவற்றிற்கோ அந்த பிரஜைகள் சத் ஆயதனர்கள் (சத்தை ஆஸ்ரயித்தவர்கள்) முடிவில் சத்திலேயே நிலைபெறுகிறார்கள் (பிரதிஷ்டை ஆகின்றனர்). சத்தே பிரதிஷ்டா, லயம், முடிவு அதாவது அதன் முடிவானது என்னவெனில் பிரஜைகள் சத் பிரதிஷ்டர்கள் ஆவர்.
अथ यत्रैतत्पुरुषः पिपासति नाम तेज एव तत्पीतं नयते तद्यथा गोनायोऽश्वनायः पुरुषनाय इत्येवं तत्तेज आचष्ट उदन्येति तत्रैतदेव शुङ्गमुत्पतितꣳ सोम्य विजानीहि नेदममूलं भविष्यतीति ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - இப்பொழுது, இந்த சமயத்தில் இந்த புருஷன் “अशनाया” (பிபாசதி பருக விரும்புகிறான்) என்ற பெயர் உடையவனாகின்றானோ அப்பொழுது அவன் பருகிய ஜலத்தை தேஜஸ் எடுத்துச் செல்கிறது. ஆகையால் எவ்வாறு “गोनाय” (கோநாய) “अशनाया” (அச்வநாய) கோபாலன், அச்வபாலன் அவ்வாறே “अश्वनायः” (புருஷநாய, ராஜா அல்லது சேனாபதி) என்று அழைக்கிறோமோ அவ்வாறே இந்த தேஜஸ் “उदन्या” (உதன்யா) என்று அழைக்கப்படுகிறது. ஹே சோம்ய! இதனால் (இந்த ஜலரூப மூலத்தால்) இந்த சரீரரூப முளை உண்டாகிறது. இவ்வாறு அறிவாயாக. ஏன் எனில் இது மூலம் இல்லாமல் ஆகமுடியாது.
अथ इदानीमप्शुङ्गद्वारेण सतो मूलस्यानुगमः कार्य इत्याह — यत्र यस्मिन्काले एतन्नाम पिपासति पातुमिच्छतीति पुरुषो भवति । अशिशिषतीतिवत् इदमपि गौणमेव नाम भवति । द्रवीकृतस्याशितस्यान्नस्य नेत्र्यः आपः अन्नशुङ्गं देहं क्लेदयन्त्यः शिथिलीकुर्युः अब्बाहुल्यात् यदि तेजसा न शोष्यन्ते । नितरां च तेजसा शोष्यमाणास्वप्सु देहभावेन परिणममानासु पातुमिच्छा पुरुषस्य जायते ; तदा पुरुषः पिपासति नाम ;
அனுவாதம் - இப்பொழுது - இந்த சமயத்தில் ஜலரூப முளையின் வாயிலாக சத்ரூப மூலத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கூறப்படுகிறது - எப்பொழுது இந்த நாமம் “पिपासति” (பிபாசதி) பருக இச்சை என்பது புருஷனுக்கு ஏற்படுகிறது: “अशिशिषतीतिवत्” (அசிசிஷதி) (பசி ஏற்படுகிறது என்பதுபோல்) என்பதுபோல் இதுவும் கெளண பெயராகும். உண்ணப்பட்ட அன்னத்தை நெகிழச்செய்து எடுத்துச்செல்லும் ஜலம் அன்னத்தின் முளையான தேகத்தை தேஜஸால் வரண்டுபோகச் செய்யாவிடில் ஜலத்தின் மிகுதியால் சிதிலம் (நாசம்) அடையும். எப்பொழுதும் தேஜஸால் ஜலம் வரண்டுபோகச் செய்யப்பட்ட தேஹ பாவமாக உள்ளதால் புருஷனுக்கு ஜலம் பருகவேண்டும் என்னும் இச்சை உண்டாகிறது. அந்த சமயத்தில் புருஷன் “पिपासति” (பிபாசதி) என்ற பெயர் உடையவனாக ஆகின்றான்.
तदेतदाह — तेज एव तत् तदा पीतमबादि शोषयत् देहगतलोहितप्राणभावेन नयते परिणमयति । तद्यथा गोनाय इत्यादि समानम् ; एवं तत्तेज आचष्टे लोकः — उदन्येति उदकं नयतीत्युदन्यम् , उदन्येति च्छान्दसं तत्रापि पूर्ववत् । अपामपि एतदेव शरीराख्यं शुङ्गं नान्यदित्येवमादि समानमन्यत् ॥
அனுவாதம் - அந்த விஷயத்தையே சுருதி இவ்வாறு கூறுகிறது- எப்பொழுது பருகப்பட்ட ஜலம் முதலியவைகளை தேஜஸ் வற்றச்செய்து தேஹத்தில் ரத்தம் அவ்வாறே பிராண பாவத்தை அடையச்செய்கிறது. அதாவது அதனால் ரத்தம் அவ்வாறே பிராண ரூபமாக பரிணாமம் அடையச் செய்கிறது அது எவ்வாறு “गोनाय” (கோநாய-கோபாலன்) முதலியவைகளுக்கு சமானமான அந்த தேஜஸ் உலகில் “उदन्या” (உதன்யா) என்று கூறப்படுகிறது. ஜலத்தை எடுத்துத் செல்வதால் “उदन्यम्” (உதன்யம்) எனப்படுகிறது. உதன்யா என்பது சந்தஸ். இதுவும் முன்போல் ஆகும். ஜலமும் இந்த சரீரம் என்னும் முளையாகும். அதைவிட வேறாக இல்லை. இவைகளின் மீதம் உள்ள அர்த்தம் முன்போல் ஆகும்.
तस्य क्व मूलꣳ स्यादन्यत्राद्भ्योऽद्भिः सोम्य शुङ्गेन तेजो मूलमन्विच्छ तेजसा सोम्य शुङ्गेन सन्मूलमन्विच्छ सन्मूलाः सोम्येमाः सर्वाः प्रजाः सदायतनाः सत्प्रतिष्ठा यथा तु खलु सोम्येमास्तिस्रो देवताः पुरुषं प्राप्य त्रिवृत्त्रिवृदेकैका भवति तदुक्तं पुरस्तादेव भवत्यस्य सोम्य पुरुषस्य प्रयतो वाङ्मनसि सम्पद्यते मनः प्राणे प्राणस्तेजसि तेजः परस्यां देवतायाम् ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! அதற்கு (ஜலத்தின் பரிணாம ரூபமான சரீரத்திற்கு) ஜலத்தைத் தவிர எதுதான் மூலம் ஆக முடியும்? ஹே சோம்ய! ஜல ரூபமான முளையினால் தேஜோரூபமான ரூபத்தின் மூலத்தை தேடு. ஹே சோம்ய! தோஜோ ரூபமான முளையினால் சத்ரூப மூலத்தைத் தேடு ஹே சோம்ய! அது இந்த எல்லா பிரஜைகளின் சத் மூலத்தையும் அவ்வாறே சத்ரூப ஆயதனம் மேலும் சத்ரூப பிரதிஷ்டையை (லய ஸ்தானத்தை) உடையது. ஹே சோம்ய! இவ்வாறு இந்த மூன்று தேவதைகள் புருஷனை அடைந்து அவைகளில் ஒவ்வொன்றும் த்ரிவிருத், த்ரிவிருத் ஆகின்றது. (மும்மூன்றாக ஆகிறது.) இதை நான் முன்பே கூறியுள்ளேன். ஹே சோம்ய! மரணத்தை அடையும் இந்த புருஷனின் வாக் மனதில் லீனமாகிறது. அவ்வாறே மனம் பிராணனில் லீனமாகின்றது. பிராணன் தேஜஸ்ஸில் மேலும் தேஜஸ் பரதேவதைகள் இடத்தில் லீனமாகின்றது.
सामर्थ्यात् तेजसोऽप्येतदेव शरीराख्यं शुङ्गम् । अतः अप्शुङ्गेन देहेन आपो मूलं गम्यते । अद्भिः शुङ्गेन तेजो मूलं गम्यते । तेजसा शुङ्गेन सन्मूलं गम्यते पूर्ववत् । एवं हि तेजोबन्नमयस्य देहशुङ्गस्य वाचारम्भणमात्रस्य अन्नादिपरम्परया परमार्थसत्यं सन्मूलमभयमसन्त्रासं निरायासं सन्मूलमन्विच्छेति पुत्रं गमयित्वा अशिशिषति पिपासतीति नामप्रसिद्धिद्वारेण यदन्यत् इह अस्मिन्प्रकरणे तेजोबन्नानां पुरुषेणोपयुज्यमानानां कार्यकरणसङ्घातस्य देहशुङ्गस्य स्वजात्यसाङ्कर्येणोपचयकरत्वं वक्तव्यं प्राप्तम् , तदिहोक्तमेव द्रष्टव्यमिति पूर्वोक्तं व्यपदिशति —
அனுவாதம் - த்ரிவிருத் கரணத்தின் ஆற்றலால் தேஜஸிற்கும் சரீரம் என்னும் முளை (காரிய)மாகும். ஆகையால் (அப்) ஜலத்தின் காரிய பூதமான தேஹத்தின் மூலமாக அதன் மூலமாகிய ஜலத்தின் ஞானம் ஏற்படுகிறது. ஜலரூப காரியத்தால் அதன் மூலமான தேஜஸ்ஸை அறியமுடிகிறது. அவ்வாறே தேஜஸ்ரூப காரியத்தால் அதன் மூலமாகிய சத்தின் ஞானம் உண்டாகிறது. இவை எல்லாம் முன்போல் என்று அறிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு தேஜஸ், ஜலம், அன்னம் இவைகளின் விகாரமான வாசாரம்பண மாத்திரமான தேஹரூப காரியத்தின் பரமார்த்த சத்யம், பயமற்றதன்மை, குறையற்ற, ஆயாசமற்ற சத்ரூப மூலத்தை அன்னம் முதலியவைகளின் பரம்பரையால் (கிரமமாக) அறியவேண்டும் என்று இவ்வாறு புத்திரனுக்கு அறிவுருத்தி அதன்பின் “अशिशिषति” (அசிசிஷதி) “पिपासति” (பிபாசதி) என்ற நாமங்களின் பிரசித்தியினால் இந்த விஷயத்தில் (பிரகரணத்தில்) புருஷன் மூலமாக உபயோகங்களால் அறியப்படும். தேஜஸ், ஜலம் மேலும் அன்னம் இவைகள் தன்னுடைய ஜாதியை விடாமல் காரிய கரண சங்காத ரூபமான இந்த சரீரமாகிய முளையை போஷிப்பதுக்குறித்து சொல்ல வேண்டியது முன்பே கூறப்பட்டதோ அவ்வாறு அறிய வேண்டும் என்பதற்காக முன்பே ஆருணியின் பிரசங்கத்தால் விளக்கப்பட்டது.
यथा तु खलु येन प्रकारेण इमाः तेजोबन्नाख्याः तिस्रः देवताः पुरुषं प्राप्य त्रिवृत्त्रिवृदेकैका भवति, तदुक्तं पुरस्तादेव भवति
‘अन्नमशितं त्रेधा विधीयते’ (छा. उ. ६ । ५ । १) इत्यादि तत्रैवोक्तम् । अन्नादीनामशितानां ये मध्यमा धातवः, ते साप्तधातुकं शरीरमुपचिन्वन्तीत्युक्तम् — मांसं भवति लोहितं भवति मज्जा भवति अस्थि भवतीति । ये त्वणिष्ठा धातवः मनः प्राणं वाचं देहस्यान्तःकरणसङ्घातमुपचिन्वन्तीति च उक्तम् — तन्मनो भवति स प्राणो भवति स वाग्भवतीति ।
அனுவாதம் - எவ்வாறு அதாவது எந்த பிரகாரமாக இந்த தேஜஸ், ஜலம், அன்னம் எனப்படும் மூன்று தேவதைகள் புருஷனை அடைந்து ஒவ்வொன்றும் த்ருவிருத் த்ரிவிருத் ஆகின்றதோ அது முன்பே கூறப்பட்டது. நாம் சாப்பிட்ட அன்னம் மூன்று பாகங்களாக ஆகின்றது என்பதும் கூறப்பட்டது. நாம் சாப்பிட்ட அன்னம் முதலியவைகள் எந்த மத்யமான தாதுக்களோ அந்த ஏழு தாதுக்கள் சரீரத்தைப் போஷிக்கின்றது என்று கூறப்பட்டது. அவை மாம்சமாகிறது, ரக்தமாகிறது, கொழுப்பாகிறது, எலும்பாகிறது என்பது முதலியவைகளால். எந்த சூக்ஷ்மமான தாதுக்களோ அவை மனம், பிராணன், வாக், தேஹத்தின் அந்தக்கரண சங்காதத்தை போக்ஷிக்கின்றது என்று கூறப்பட்டது. அது மனம் ஆகிறது அது பிராணன் ஆகிறது, அது வாக் ஆகிறது என்று.
सोऽयं प्राणकरणसङ्घातः देहे विशीर्णे देहान्तरं जीवाधिष्ठितः येन क्रमेण पूर्वदेहात्प्रच्युतः गच्छति, तदाह — अस्य हे सोम्य पुरुषस्य प्रयतः म्रियमाणस्य वाक् मनसि सम्पद्यते मनस्युपसंह्रियते । अथ तदाहुः ज्ञातयो न वदतीति । मनःपूर्वको हि वाग्व्यापारः, ‘यद्वै मनसा ध्यायति तद्वाचा वदति’ ( ? ) इति श्रुतेः ।
அனுவாதம் - அந்த இந்த பிராணன் கரணங்களுடன் கூடிய தேஹம் நாசம் அடையும்பொழுது ஜீவனில் நிலைபெற்றவை எவ்வாறு முந்திய தேஹத்திலிருந்து வேறு தேஹத்திற்கு நழுவி செல்கிறது என்பதை அவனுக்குக் கூறுகிறார்- ஹே சோம்ய! புருஷன் மரணம் அடையும்பொழுது வாக் மனதை அடைகிறது. அதாவது மனதில் லயமாகின்றது. அப்பொழுது சொந்தபந்தங்கள் பேசவில்லை என்று கூறுவர். மனதினால் அல்லவா வாக்கின் வியாபாரம் “यद्वै मनसा ध्यायति तद्वाचा वदति” (யத்வை மனசா த்யாயதி தத் வாச்சாவததி) (எதை மனதினால் நினைக்கின்றனரோ அதை வாக்கால் கூறுகின்றனர்) என்பது சுருதி வாக்கியம்.
वाच्युपसंहृतायां मनसि मननव्यापारेण केवलेन वर्तते । मनोऽपि यदा उपसंह्रियते, तदा मनः प्राणे सम्पन्नं भवति — सुषुप्तकाले इव ; तदा पार्श्वस्था ज्ञातयः न विजानातीत्याहुः । प्राणश्च तदोर्ध्वोच्छ्वासी स्वात्मन्युपसंहृतबाह्यकरणः संवर्गविद्यायां दर्शनात् हस्तपादादीन्विक्षिपन् मर्मस्थानानि निकृन्तन्निव उत्सृजन् क्रमेणोपसंहृतः तेजसि सम्पद्यते ; तदाहुः ज्ञातयो न चलतीति । मृतः नेति वा विचिकित्सन्तः देहमालभमानाः उष्णं च उपलभमानाः देहः उष्णः जीवतीति यदा तदप्यौष्ण्यलिङ्गं तेज उपसंह्रियते, तदा तत्तेजः परस्यां देवतायां प्रशाम्यति ।
அனுவாதம் - வாக் மனதில் லயமானபின் மனம் தான் மட்டுமே சிந்திக்கும் செயலை செய்கிறது. மனமும் லயமானபின் மனம் பிராணனில் சுஷுப்தி போல் லயமாகிறது. அப்பொழுது அருகில் இருக்கும் சொந்தக்காரர்கள் ஒன்றும் தெரியவில்லை என்கின்றனர். அப்பொழுது எவருடைய வெளி இந்திரியங்கள் தன்னில் லயமாகின்றதோ அப்பொழுது அந்த பிராணன் மேல்நோக்கி செல்கிறது என்று சம்வர்க வித்தையில் காணப்படுவதால் கை கால்கள் முதலியவைகளை விடுத்து மர்மஸ்தானங்கள் சோதித்து வெளியேறுவதற்காக கிரமமாக அடங்கி தேஜஸ்ஸில் லயமாகின்றது. அப்பொழுது அருகில் இருப்பவர்கள் அசைவு அற்று இருக்கிறது என்று கூறுவார்கள். இறந்துவிட்டானா இல்லையா? என்று அறிவதற்கு அருகில் சென்று தொட்டுப்பார்த்து உஷ்ணமாக இருந்தால் இப்பொழுது தேஹத்தில் உஷ்ணம் காணப்படுவதால் அவன் ஜீவிக்கிறான் என்று கூறுவர். எப்பொழுது உஷ்ணத்தன்மை எதன் லிங்கமோ அந்த தேஜஸும் லயமாகிறதோ, அப்பொழுது அந்த தேஜஸ் பரதேவதையினிடத்தில் உபசாந்தி ஆகிறது.
तदैवं क्रमेणोपसंहृते स्वमूलं प्राप्ते च मनसि तत्स्थो जीवोऽपि सुषुप्तकालवत् निमित्तोपसंहारादुपसंह्रियमाणः सन् सत्याभिसन्धिपूर्वकं चेदुपसंह्रियते सदेव सम्पद्यते न पुनर्देहान्तराय सुषुप्तादिवोत्तिष्ठति, यथा लोके सभये देशे वर्तमानः कथञ्चिदिवाभयं देशं प्राप्तः — तद्वत् । इतरस्तु अनात्मज्ञः तस्मादेव मूलात् सुषुप्तादिवोत्थाय मृत्वा पुनर्देहजालमाविशति यस्मान्मूलादुत्थाय देहमाविशति जीवः ॥
அனுவாதம் - அப்பொழுது இவ்வாறு கிரமமாக லயமான மனம் தனது மூல பூதமான பரதேவதையை அடைந்து அதில் இருக்கும் ஜீவனும் சுஷுப்தி காலம் போல் தன் நிமித்தம் (மனம்) லயமானவுடன் அவனும் லயமாகி சத்யானு ஸந்தானமாக லயம் அடைகின்றான். அதாவது சத்தை அடைகின்றான். தூங்கி எழுந்தவன்போல் மறுபடியும் வேறு தேஹத்தை அடையமாட்டான். எவ்வாறு உலகில் பஸ்முள்ள தேசத்தில் வசிப்பவன் எவ்விதத்திலாவது பயமற்ற தேசத்தை அடைவது போல் ஆகும். தூங்குபவன் விழிப்பு அடைவதுபோல் அக்ஞானி மூலத்திலிருந்து எழுந்து மரித்து மறுபடியும் தேஹத்தை அடைகிறது. மறுபடியும் எழுந்து மரித்து தேஹம் என்னும் வலையில் ஜீவன் வீழ்கிறான்.
स य एषोऽणिमैतदात्म्यमिदꣳ सर्वं तत्सत्यꣳ स आत्मा तत्त्वमसि श्वेतकेतो इति भूय एव मा भगवान्विज्ञापयत्विति तथा सोम्येति होवाच ॥ ७ ॥
மந்த்ரார்த்தம் - அந்த எதுவோ அது அணிமா. இந்த ரூபமே எல்லாம். அது சத்தியம், அது ஆத்மா மேலும் ஹே ச்வேதகேதோ! அதுவே நீயாக இருக்கிறாய். (ச்வேதகேது-) பகவானே! எனக்கு மேலும் அறியச்செய்யுங்கள். (ஆருணி) ஹே சோம்ய! நல்லது (சரி) என்று கூறினார்.
அனுவாதம் - எது சத் எனப்படுகிறதோ அந்த அணுபாவம் (அதி சூக்ஷ்மமான பாவம்) ஜகத்திற்கு மூலமாகும். இது ஆத்மீயம். இது சதாத்மா, இந்த எல்லாவற்றிக்கும் இதுவே ஆத்மீயபாவம். இந்த சத் எனப்படுவது எல்லா ஜகத்தின் ஆத்மா ஆகிறது. இந்த ஆத்மாவிற்கு வேறு எந்த ஒரு ஆத்மாவோ சம்சாரியோ கிடையாது. “नान्यदतोऽस्ति द्रष्टु नान्यदतोऽस्ति श्रोतृ” (நான்யததோஅஸ்தி த்ருஷ்ட்டு நானயததோஅஸ்தி ஸ்ரோத்ரு) என்று வேறு சுருதியும் பிரமாணம் ஆகிறது.
येन च आत्मना आत्मवत्सर्वमिदं जगत् , तदेव सदाख्यं कारणं सत्यं परमार्थसत् । अतः स एव आत्मा जगतः प्रत्यक्स्वरूपं सतत्त्वं याथात्म्यम् , आत्मशब्दस्य निरुपपदस्य प्रत्यगात्मनि गवादिशब्दवत् निरूढत्वात् । अतः तत् सत् त्वमसीति हे श्वेतकेतो
அனுவாதம் - எந்த ஆத்மாவினால் இந்த ஜகத் முழுவதும் ஆத்மா ஆகிறதோ அதற்கு சத் எனப்படும் காரணத்தால் சத்தியம் அதாவது பரமார்த்த சத்யமாகும். ஆகையால் அந்த ஆத்மாவே ஜகத்தின் பிரத்யக் ஸ்வரூபம் சத்துவத்துடன் கூடியது அதாவது யாதாத்மியம் (அதன் ஸ்வரூபம் எதுவோ அதுவேயாகும்). பசு முதலிய சப்தங்களைப்போல் ஆத்ம சப்தத்திற்கு வேறு சார்ந்த சப்தம் (பதம்) இல்லாததால் ஆத்ம சப்தமானது பிரத்யக் ஆத்மாவில் ரூபமாகும். ஆகையால் ஹே ச்வேதகேது! அந்த சத் நீ (तत्त्वमसि) = தத்துவமஸி - அதுவாய் நீ இருக்கிறாய்)யாக இருக்கிறாய்.
इत्येवं प्रत्यायितः पुत्रः आह — भूय एव मा भगवान् विज्ञापयतु, यद्भवदुक्तं तत् सन्दिग्धं मम — अहन्यहनि सर्वाः प्रजाः सुषुप्तौ सत् सम्पद्यन्ते इत्येतत् , येन सत् सम्पद्य न विदुः सत्सम्पन्ना वयमिति । अतः दृष्टान्तेन मां प्रत्याययत्वित्यर्थः । एवमुक्तः तथा अस्तु सोम्य इति ह उवाच पिता ॥
அனுவாதம் - இவ்வாறு புரிய வைக்கப்பட்ட புத்திரன் இவ்வாறு கூறினான் - ஹே பகவானே நீங்கள் கூறப்பட்டதில் எனக்கு இந்த சந்தோஹம் உள்ளது. ஆகையால் எனக்குக் கற்றுக்கொடுங்கள். ஒவ்வொறு நாளும் தூங்கும் (சுஷுப்தியில்) பொழுதும் சத்தை அடைகிறோம் என்று நாம் அறிவதில்லை. ஆகையால் திருஷ்டாந்தத்தால் எனக்கு புரியச்செய்யுங்கள். இவ்வாறு கூறவும் பிதா - சோம்ய! அவ்வாறே ஆகட்டும் என்று கூறினார்.
इति अष्टमखण्डभाष्यम् ॥
यत्पृच्छसि — अहन्यहनि सत्सम्पद्य न विदुः सत्सम्पन्नाः स्म इति, तत्कस्मादिति — अत्र शृणु दृष्टान्तम्
அனுவாதம் - அ.கை - நீ எதைக் கேட்கிறாயோ அதாவது ஹே சோம்ய! தினமும் சத்யத்தை அடைந்தும் நாம் “சத்”தை அடைந்தவர்களாக இருக்கின்றோம் என்று ஏன் அறிவதில்லை என்பதை திருஷ்டாந்த மூலமாகக் கேள் -
यथा सोम्य मधु मधुकृतो निस्तिष्ठन्ति नानात्ययानां वृक्षाणाꣳ रसान्समवहारमेकताꣳ रसं गमयन्ति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! எவ்வாறு தேனீக்கள் மதுவை சேகரிக்கின்றன எனில் எல்லா திக்குகளில் உள்ள மரங்களிலிருந்து ரசத்தை ஒன்றாக சேர்த்து அடையச் செய்கின்றது.
— यथा लोके हे सोम्य मधुकृतः मधु कुर्वन्तीति मधुकृतः मधुकरमक्षिकाः मधु निस्तिष्ठन्ति मधु निष्पादयन्ति तत्पराः सन्तः । कथम् ? नानात्ययानां नानागतीनां नानादिक्कानां वृक्षाणां रसान् समवहारं समाहृत्य एकताम् एकभावं मधुत्वेन रसान् गमयन्ति मधुत्वमापादयन्ति ॥
அனுவாதம் - ஹே சோம்ய! எவ்வாறு உலகில் தேனீக்கள் (मधुकृतः- मधुकुर्वन्तीति मधुकृतः) மதுகுர்வந்தீ இதி = மதுவை (தேனை) சேகரிப்பதால் மது கிருத: (தேனீ). தேன் ஈ அதிலேயே ஈடுபாட்டுடன் மதுவை சேகரிக்கின்றன. எவ்வாறு? வெவ்வேறு இடத்திலிருந்தும், வெவ்வேறு திசையில் இருக்கும் அநேக விதமான மரங்களில் இருந்து அதன் சாரத்தை சேகரித்து அதை தேன் ரூபமாய் ஒன்றாகச் செய்கிறது. அதாவது தேனை அடையச்செய்கிறது.
ते यथा तत्र न विवेकं लभन्तेऽमुष्याहं वृक्षस्य रसोऽस्म्यमुष्याहं वृक्षस्य रसोऽस्मीत्येवमेव खलु सोम्येमाः सर्वाः प्रजाः सति सम्पद्य न विदुः सति सम्पद्यामह इति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எவ்வாறு ரசத்திற்கு தேனில் நான் இந்தப் பிரகாரம் அடைந்தேன் என்ற விவேகம் ஏற்படாதோ அவ்வாறு நான் இந்த மரத்தின் ரசம், நான் இந்த மரத்தின் ரசம் என்று விவேகம் உண்டாகாதோ, ஹே சோம்ய! இவ்வாறு எல்லா பிரஜைகளும் சத்தை அடைந்தும் நாம் சத்தை அடைந்துள்ளோம் என்று அறிவதில்லை.
ते रसाः यथा मधुत्वेनैकतां गताः तत्र मधुनि विवेकं न लभन्ते ; कथम् ? अमुष्याहमाम्रस्य पनसस्य वा वृक्षस्य रसोऽस्मीति — यथा हि लोके बहूनां चेतनावतां समेतानां प्राणिनां विवेकलाभो भवति अमुष्याहं पुत्रः अमुष्याहं नप्तास्मीति ; ते च लब्धविवेकाः सन्तः न सङ्कीर्यन्ते ; न तथा इह अनेकप्रकारवृक्षरसानामपि मधुराम्लतिक्तकटुकादीनां मधुत्वेन एकतां गतानां मधुरादिभावेन विवेको गृह्यत इत्यभिप्रायः ।
அனுவாதம் - எவ்வாறு அந்த ரசங்கள் தேனாக ஒன்றாக ஆயிற்றோ அப்பொழுது தனித்தனியாக இவ்வாறு இருக்கிறது என்று பிரித்து அறியமுடியாது. எவ்வாறு? இது மாம்பழ அல்லது பலாமரத்தின் ரசம் என்று எவ்வாறு உலகில் அநேக மனிதர்கள் ஒன்றாக சேர்ந்து இருக்கும்பொழுது நான் இவருடைய புத்திரன், நான் இவருடைய பேரன் என்ற விவேகம் இருப்பதால் அவர்கள் ஒன்றாக கலந்து விடுவதில்லை. ஆனால் அவ்வாறு இங்கு மது ரூபமாக கலந்து ஒன்றான மதுவை அநேக விருக்ஷங்களின் ரசம் இது தித்திப்பு, புளிப்பு, கருப்பு, காரம் என்ற ரூபமாக பிரித்து அறியமுடியாது என்பது அபிப்பிராயம்.
यथा अयं दृष्टान्तः, इत्येवमेव खलु सोम्य इमाः सर्वाः प्रजाः अहन्यहनि सति सम्पद्य सुषुप्तिकाले मरणप्रलययोश्च न विदुः न विजानीयुः — सति सम्पद्यामहे इति सम्पन्ना इति वा ॥
அனுவாதம் - ஹே சோம்ய! எவ்வாறு இந்த திருஷ்டாந்தமோ அவ்வாறே இந்த எல்லா பிரஜைகளும் ஒவ்வொருநாளும் சுழுத்தி காலத்திலும், மரண பிரளய காலத்திலும் சத்தை அடைந்து அதை அறிவதில்லை. அதாவது சத்தை அடைந்து இருக்கின்றனர் அல்லது அதுவாகவே ஆகின்றனர் என்பதாகும்.
यस्माच्च एवमात्मनः सद्रूपतामज्ञात्वैव सत्सम्पद्यन्ते, अतः -
அனுவாதம் - அ.கை - ஏன்எனில் இவ்வாறு தன்னுடைய சத்ரூபத்தை அறியாமலேயே சத்தை அடைகிறான் ஆகையால் -
त इह व्याघ्रो वा सिंहो वा वृको वा वराहो वा कीटो वा पतङ्गो वा दꣳशो वा मशको वा यद्यद्भवन्ति तदाभवन्ति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - உலகில் புலி, சிங்கம், ஓநாய், பன்றி, புழு, வண்டு, வெட்டுக்கிளி, கொசு ஆகிய உயிரினங்களும் (சுழுத்திலிருந்து) முன்புபோல் மறுபடியும் திரும்பிவருகின்றன.
ते इह लोके यत्कर्मनिमित्तां यां यां जातिं प्रतिपन्ना आसुः व्याघ्रादीनाम् — व्याघ्रोऽहं सिंहोहऽमित्येवम् , ते तत्कर्मज्ञानवासनाङ्किताः सन्तः सत्प्रविष्टा अपि तद्भावेनैव पुनराभवन्ति पुनः सत आगत्य व्याघ्रो वा सिंहो वा वृको वा वराहो वा कीटो वा पतङ्गो वा दंशो वा मशको वा यद्यत्पूर्वमिह लोके भवन्ति बभूवुरित्यर्थः, तदेव पुनरागत्य भवन्ति । युगसहस्रकोट्यन्तरितापि संसारिणः जन्तोः या पुरा भाविता वासना, सा न नश्यतीत्यर्थः । ‘यथाप्रज्ञं हि सम्भवाः’ (ऐ. आ. २ । ३ । २) इति श्रुत्यन्तरात् ॥
அனுவாதம் - அவர்கள் இந்த லோகத்தில் எந்த எந்த கர்மங்களின் நிமித்தமாக எந்த எந்த ஜாதிகளாக நான் புலி, நான் சிங்கம் என்று இவ்வாறு அபினிவேசத்தை அடைந்து அவர்கள் அந்த கர்மஞானம் வாசனைகளுடன் இருந்துகொண்டு சத்தில் பிரவேசித்து இருந்தாலும் அந்த பாவனையினால் மறுபடியும் உண்டாகின்றன. அதாவது மறுபடியும் சத்திலிருந்து வெளியே வந்து புலியாகவோ, சிம்மமாகவோ, ஓநாயாகவோ, வராகமாகவோ, புழுவாகவோ, வண்டாகவோ, வெட்டுக்கிளியாகவோ, கொசுவாகவோ மறுபடியும் இந்த லோகத்தில் உண்டாகின்றன. அதுவே மறுபடியும் சகஸ்ரகோடி யுகங்களின் உள்ளே வீழ்ந்தாலும் சம்சாரிகளாகிய பிரஜைகள் முந்தி ஏற்பட்ட வாசனைகள் உண்டாகின்றன. நசிப்பது இல்லை என்பது பொருள். “यथाप्रज्ञं हि सम्भवाः” (யதாபிரக்ஞம் ஹி சம்பவா:) என்ற சுருதியினாலும் சித்திக்கின்றது.
ताः प्रजाः यस्मिन्प्रविश्य पुनराविर्भवन्ति, ये तु इतोऽन्ये सत्सत्यात्माभिसन्धाः यमणुभावं यदात्मानं प्रविश्य नावर्तन्ते,
அனுவாதம் - அ.கை - அந்த பிரஜைகள் எதில் பிரவேசித்து மறுபடியும் தோன்றுகின்றனரோ அவர்களை விட வேறானவர்கள் “சத்” சத்யாத்மாவிலேயே மிகவும் ஈடுபாடு உடையவர்கள் அந்த அனுபாவத்தை அதாவது சத் ஆத்மாவிலேயே பிரவேசித்து திரும்புவதில்லை.
स य एषोऽणिमैतदात्म्यमिदꣳ सर्वꣳ तत्सत्यं स आत्मा तत्त्वमसि श्वेतकेतो इति भूय एव मा भगवान्विज्ञापयत्विति तथा सोम्येति होवाच ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - எது அணிமாவோ அது இந்த சத்ரூபம், இதுவே எல்லாம். அது சத்தியம், அது ஆத்மா. ஹே ச்வேதகேதோ! அது நீயே. (இதைக் கேட்டு ச்வேதகேது கூறினான்). ஹே பகவானே! எனக்கு மேலும் உபதேசியுங்கள் என்றான். அப்பொழுது (ஆருணி) ஹே சோம்ய! அவ்வாறே ஆகட்டும் என்று கூறினார்.
स य एषोऽणिमेत्यादि व्याख्यातम् । यथा लोके स्वकीये गृहे सुप्तः उत्थाय ग्रामान्तरं गतः जानाति स्वगृहादागतोऽस्मीति, एवं सत आगतोऽस्मीति च जन्तूनां कस्माद्विज्ञानं न भवतीति भूय एव मा भगवान्विज्ञापयतु इत्युक्तः तथा सोम्येति ह उवाच पिता ॥
அனுவாதம் - எந்த அந்த இந்த அணிமா முதலியவை முன்பே வியாக்யானம் செய்யப்பட்டது. அவ்வாறே உலகில் தன்னுடைய வீட்டில் தூங்கி எழுந்து வேறு கிராமத்திற்கு சென்றவனுக்கு என் வீட்டிலிருந்து வந்திருக்கின்றேன் என்று அறிவது போல் சத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்று ஜீவன்கள் எதனால் அறிவதில்லை என்பதை ஹே பகவானே! எனக்கு மறுபடியும் நான் அறியும்படி செய்யுங்கள் என்றதற்கு பிதாவானவர் ஹே சோம்ய! அவ்வாறே என்று கூறினார்.
इति नवमखण्डभाष्यम् ॥
यथा सोम्य पुरुषं गन्धारेभ्योऽभिनद्धाक्षमानीय तं ततोऽतिजने विसृजेत्स यथा तत्र प्राङ्वोदङ्वाधराङ्वा प्रत्यङ्वा प्रध्मायीताभिनद्धाक्ष आनीतोऽभिनद्धाक्षो विसृष्टः ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! எவ்வாறு ஒரு புருஷனை திருடன் கண்களைக் கட்டி காந்தார தேசத்திலிருந்து அழைத்துவந்து ஜனங்களற்ற இடத்தில் விட்டால் அவனுக்கு எவ்வாறு கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளில் சுற்றி என் கண்களைக்கட்டி இங்கே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விட்டுவிட்டான் கண்களைக் கட்டி இங்கு விட்டுவிட்டான் என்று மிக சத்தமிட்டு கதறினான்.
यथा लोके हे सोम्य पुरुषं यं कञ्चित् गन्धारेभ्यो जनपदेभ्यः अभिनद्धाक्षं बद्धचक्षुषम् आनीय द्रव्यहर्ता तस्करः तमभिनद्धाक्षमेव बद्धहस्तम् अरण्ये ततोऽप्यतिजने अतिगतजने अत्यन्तविगतजने देशे विसृजेत् , स तत्र दिग्भ्रमोपेतः यथा प्राङ्वा प्रागञ्चनः प्राह्मुखो वेत्यर्थः, तथोदङ्वा अधराङ्वा प्रत्यङ्वा प्रध्मायीत शब्दं कुर्यात् विक्रोशेत् — अभिनद्धाक्षोऽहं गन्धारेभ्यस्तस्करेणानीतोऽभिनद्धाक्ष एव विसृष्ट इति ॥
அனுவாதம் - ஹே சோம்ய! எவ்வாறு உலகில் செல்வத்தை அபஹரிக்கும் திருடன் ஒரு புருஷனை கண்களைக் கட்டி கந்தார நகரத்திலிருந்து ஜனங்கள் அற்றவனத்தில் அதாவது முற்றிலும் ஜனங்கள் இல்லாத இடத்திற்கு கொண்டு வந்து கண்கள் மற்றும் கைகளை கட்டிவிட்டு சென்றதால் அவனுக்கு எது கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு என்று தெரியாமல் பயத்தால் சப்தமிட்டான். என்னை கந்தார தேசத்திலிருந்து கண்களைக் கட்டி அந்த திருடன் இங்கு கொண்டுவந்து விட்டுவிட்டான், இங்கு கொண்டுவந்து விட்டுவிட்டான் என்று கதறினான்.
एवं विक्रोशतः
அனுவாதம் - அ.கை - இவ்வாறு கதறியவன் -
तस्य यथाभिनहनं प्रमुच्य प्रब्रूयादेतां दिशं गन्धारा एतां दिशं व्रजेति स ग्रामाद्ग्रामं पृच्छन्पण्डितो मेधावी गन्धारानेवोपसम्पद्येतैवमेवेहाचार्यवान्पुरुषो वेद तस्य तावदेव चिरं यावन्न विमोक्ष्येऽथ सम्पत्स्य इति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அந்த புருஷனுடைய கண் கட்டை அவிழ்த்துவிட்டு ஏதோ இரக்கமுடைய ஒருவன் கூறினான். கந்தார தேசம் இந்த திசையில் இருக்கிறது. ஆகையால் இந்த திசையில் செல் என்றவுடன் அந்த புத்திசாலி புரிந்துகொண்டு ஒவ்வொரு கிராமமாக தேசத்தை அடைந்தான். இவ்வாறு இந்த உலகத்தில் ஆச்சாரியரை (குருவை) உடைய புருஷனே (சத்தை) அறிகிறான். எதுவரை மோக்ஷம் அடைவதில் தாமதம் ஏற்படுகிறதோ அதுவரை தேஹ சம்பந்தத்திலிருந்து விடுபடுவதில்லை. அதன்பின் அதுவாகவே (பிரஹ்மமாகவே) ஆகிறான்.
तस्य यथाभिनहनं यथा बन्धनं प्रमुच्य मुक्त्वा कारुणिकः कश्चित् एतां दिशमुत्तरतः गन्धाराः एतां दिशं व्रज — इति प्रब्रूयात् । स एवं कारुणिकेन बन्धनान्मोक्षितः ग्रामात् ग्रामान्तरं पृच्छन् पण्डितः उपदेशवान् मेधावी परोपदिष्टग्रामप्रवेशमार्गावधारणसमर्थः सन् गन्धारानेवोपसम्पद्येत । नेतरो मूढमतिः देशान्तरदर्शनतृड्वा ।
அனுவாதம் - அந்த புருஷனுடைய கண் கட்டை நீக்கி கருணை உடைய ஒருவர் இந்த உத்தர (வடக்கு) திசையில் உள்ள கந்தார தேசத்திற்கு இந்த திசையில் செல் என்று கூறவும் இவ்வாறு அந்த கருணை உடையவரால் கண் கட்டு நீக்கப்பட்டவர் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அந்த பண்டிதன் உபதேசிக்கப்பட்ட மேதாவீ மற்றவரால் உபதேசிக்கப்பட்டவாறு சென்றுகேட்டு அறிந்துகொள்ள சாமர்த்தியமுடையவர் கந்தார தேசத்தையே அடையமுடியும். மற்ற மூடபுத்தி உடையவனாலும், வேறு தேசத்தை அறிய விரும்புபவனாலும் அடையமுடியாது.
यथा अयं दृष्टान्तः वर्णितः — स्वविषयेभ्यो गन्धारेभ्यः पुरुषः तस्करैरभिनद्धाक्षः अविवेकः दिङ्मूढः अशनायापिपासादिमान् व्याघ्रतस्कराद्यनेकभयानर्थव्रातयुतमरण्यं प्रवेशितः दुःखार्तः विक्रोशन् बन्धनेभ्यो मुमुक्षुस्तिष्ठति, स कथञ्चिदेव कारुणिकेन केनचिन्मोक्षितः स्वदेशान्गन्धारानेवापन्नः निर्वृतः सुख्यभूत् —
அனுவாதம் - இவ்வாறு திருஷ்டாந்தம் விளக்கப்படுகிறது -தன் தேசமாகிய கந்தார தேசத்திலிருந்து திருடர்களால் கண்கள் கட்டப்பட்டு அழைத்து வந்ததால் எந்த திசை என்று விவேகமற்று அவ்வாறே பசி தாகத்தாலும், புலி, திருடர் முதலியவைகளால் கூடிய பயத்தாலும். அநர்த்தங்கள் நிறைந்த வனத்தில் பிரவேசித்த புருஷன் துக்கத்தால் பீடிக்கப்பட்டு கிலேசமடைந்த பந்தத்திலிருந்து விடுபட இச்சை உள்ளவன் ஏதோ ஒரு கிருபை உடையவரால் பந்தத்திலிருந்து (கண் கட்டிலிருந்து) விடுபட்டபின் எவ்விதமாகவாவது தன்னுடைய தேசமாகிய கந்தார தேசத்தை அடைந்து சுகமுடையவனாகின்றான் அதாவது கிருதார்த்தனாகின்றான்.
एवमेव सतः जगदात्मस्वरूपात्तेजोबन्नादिमयं देहारण्यं वातपित्तकफरुधिरमेदोमांसास्थिमज्जाशुक्रकृमिमूत्रपुरीषवत् शीतोष्णाद्यनेकद्वन्द्वदुःखवच्च इदं मोहपटाभिनद्धाक्षः भार्यापुत्रमित्रपशुबन्ध्वादिदृष्टादृष्टानेकविषयतृष्णापाशितः पुण्यापुण्यादितस्करैः प्रवेशितः अहममुष्य पुत्रः, ममैते बान्धवाः, सुख्यहं दुःखी मूढः पण्डितो धार्मिको बन्धुमान् जातः मृतो जीर्णः पापी, पुत्रो मे मृतः, धनं मे नष्टम् , हा हतोऽस्मि, कथं जीविष्यामि, का मे गतिः, किं मे त्राणम् — इत्येवमनेकशतसहस्रानर्थजालवान् विक्रोशन् कथञ्चिदेव पुण्यातिशयात्परमकारुणिकं कञ्चित्सद्ब्रह्मात्मविदं विमुक्तबन्धनं ब्रह्मिष्ठं यदा आसादयति, तेन च ब्रह्मविदा कारुण्यात् दर्शितसंसारविषयदोषदर्शनमार्गः विरक्तः संसारविषयेभ्यः — नासि त्वं संसारी अमुष्य पुत्रत्वादिधर्मवान् , किं तर्हि, सत् यत्तत्त्वमसि —इत्यविद्यामोहपटाभिनहनान्मोक्षितः गन्धारपुरुषवच्च स्वं सदात्मानम् उपसम्पद्य सुखी निर्वृतः स्यादित्येतमेवार्थमाह — आचार्यवान्पुरुषो वेदेति ।
அனுவாதம் - அவ்வாறே ஜகத்தின் ஆத்மஸ்வரூப சத்திலிருந்து தேஜஸ், ஜலம், அன்னமயமான தேஹ ரூபவனத்தில் எந்த ஒரு வாதம், பித்தம், கபம், ரத்தம், கொழுப்பு, மாமிசம், எலும்பு, மஜ்ஜை, வீர்யம், கிருமி, சிறுநீரினால் நிறம்பி, அவ்வாறே சீதோஷ்ண முதலிய அநேக துவந்தங்களான சுகம், துக்கம், போன்று மோக்ஷ ரூபமான (வஸ்திரத்தால்) துணியால் கட்டப்பட்ட கண்களை உடையவனாகி, அவ்வாறே ஸ்திரீ, புத்திரன், நண்பன், பசு, பந்துக்கள் முதலிய திருஷ்ட விஷயங்களும், அவ்வாறே அதிருஷ்டங்களான அநேக விஷயங்களில் உள்ள ஆசைகளால் கட்டப்பட்டு புண்ய பாபரூப திருடர்களால் இவைகளில் பிரவேசிக்க செய்யப்பட்டு நான் இன்னாருடைய புத்திரன், இவர்கள் என்னுடைய சொந்தக்காரர்கள், நான் சுகி, நான் துக்கி, மூடன், பண்டிதன், நான் தார்மிகன் அல்லது பந்துக்களை உடையவன், நான் பிறந்திருக்கிறேன், நான் மரணமடைவேன், நான் கிழட்டுத் தன்மையினால் பீடிக்கப்பட்டவன், நான் பாபி, என் மகன் இறந்துவிட்டான், தனம் நஷ்டமாகிவிட்டது, ஹா! நான் கஷ்டப்படுகிறேன், நான் எவ்வாறு ஜீவிப்பேன், என்னுடைய கதி என்னவாகும்? நான் எவ்வாறு காப்பாற்றப்படுவேன்? என்று இவ்வாறு அநேக நூ ற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான விஷயங்களான வலையில் கட்டுபட்டிகிருக்கின்றேன் என்று கதறிக்கொண்டு இருக்கும்பொழுது தன்னுடைய புண்யத்தின் மிருதியால் ஏதாவது ஒரு விதத்தில் ஏதோ ஒரு மிகுந்த கருணை உடைய சத் பிரஹ்மாத்தக்ஞனும் பந்தத்திலிருந்து விடுபட்டவனுமான பிரஹ்மநிஷ்ட மஹா புருஷனை அடைந்து அந்த பிரஹ்ம வேத்தாவின் தயையினால் சம்சார விஷயத்தில் உள்ள தோஷங்களை எடுத்து காண்பித்ததால் அந்த சம்சாரத்தில் விரக்தி ஏற்படுகிறது. அவ்வாறே நான் சம்சாரி அல்ல, நான் புத்திரன் முதலிய தர்மம் உடையவனல்ல. ஆனால் நான் யார்? - எது சத் தத்துவமோ அது நீ என்று இவ்வாறு உபதேசம் செய்யப்பட்டதால் அவித்யா மயமான மோஹ ரூப துணியினால் கட்டப்பட்ட கட்டு அவிழந்து காந்தார தேசத்துப் புருஷனைப் (போன்று) போல் தன்னுடைய சத் ஆத்மாவை அடைந்து சுகமாயும், சாந்தமாயும் ஆகின்றான். இந்த விஷயத்தை (ஆருணி) “आचार्यवान् पुरुषो वेद” (ஆச்சாரியவான் புருஷோ வேத) என்ற இந்த வாக்கியத்தால் கூறினார்.
तस्यास्य एवमाचार्यवतो मुक्ताविद्याभिनहनस्य तावदेव तावानेव कालः चिरं क्षेपः सदात्मस्वरूपसम्पत्तेरिति वाक्यशेषः । कियान्कालश्चिरमिति, उच्यते — यावन्न विमोक्ष्ये न विमोक्ष्यते इत्येतत्पुरुषव्यत्ययेन, सामर्थ्यात् ; येन कर्मणा शरीरमारब्धं तस्योपभोगेन क्षयात् देहपातो यावदित्यर्थः । अथ तदैव सत् सम्पत्स्ये सम्पत्स्यते इति पूर्ववत् । न हि देहमोक्षस्य सत्सम्पत्तेश्च कालभेदोऽस्ति येन अथ - शब्दः आनन्तर्यार्थः स्यात् ॥
அனுவாதம் - இவ்வாறு ஆச்சாரியனையுடையவனும், அவித்யாரூப பந்தத்திலிருந்து விடுபட்டவனுமான புருஷனுடைய சதாத்மஸ்வரூப பிராப்த்திக்கு இவ்வளவு காலம் ஷேபம் செய்யவேண்டும். எவ்வளவு காலம்? அதற்குக் கூறப்படுகிறது - புருஷனுடைய சாமர்த்தியத்தால் (பிரயத்தனத்தால்) எதுவரை விடுபடவில்லையோ அது வரையிலும் ஆகும். எந்த கர்மத்தால் சரீரம் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த கர்மத்தை அனுபவித்தபின் தேஹம்விழும் சமயம் சத்தை அடைகிறது. ஆகையால் “सम्पत्स्ये” (சம்பத்ஸ்யே) என்ற இடத்தில் “सम्पत्स्यते” (சம்பத்யஸ்யதே) என்று முன்புபோல் செய்ய வேண்டும். தேஹம் விழுவதற்கும், சத் சம்பத் அதாவது சத்தை அடைவதற்கும் காலபேதம் இல்லை. ஏன் எனில் இங்கு “अथ” (அத - பின்னர்) என்ற அர்த்தத்தில் அல்ல. அதாவது அதே சமயத்தில் என்பதாகும்.
ननु यथा सद्विज्ञानानन्तरमेव देहपातः सत्सम्पत्तिश्च न भवति कर्मशेषवशात् , तथा अप्रवृत्तफलानि प्राग्ज्ञानोत्पत्तेर्जन्मान्तरसञ्चितान्यपि कर्माणि सन्तीति तत्फलोपभोगार्थं पतिते अस्मिञ्शरीरान्तरमारब्धव्यम् । उत्पन्ने च ज्ञाने यावज्जीवं विहितानि प्रतिषिद्धानि वा कर्माणि करोत्येवेति तत्फलोपभोगार्थं च अवश्यं शरीरान्तरमारब्धव्यम् , ततश्च कर्माणि ततः शरीरान्तरम् इति ज्ञानानर्थक्यम् , कर्मणां फलवत्त्वात् ।
அனுவாதம் - ஆனால் எவ்வாறு பிராரப்த கர்மம் மீதி இருப்பதால் சத் விக்ஞானத்திற்கு பின்னும் தேஹத்தின் அழிவோ, சத்தின் அடைவோ ஏற்படாதோ அவ்வாறே ஞான உத்பத்திக்கு முன்பும் ஆரம்பிக்கப்பட்ட பலன்களும், ஜன்மாந்தரத்தில் செய்த சஞ்சித கர்மங்களும் இருப்பதால் அந்த பலன்களை அனுபவிப்பதற்காக இந்த சரீரம் வீழ்ந்தாலும் இந்த சரீரத்தைவிட வேறு சரீரத்தை ஆரம்பிக்க வேண்டும். ஞானம் உண்டான பின்னரும் ஜீவம் உள்ள வரையிலும் விஹித, நிஷித்த கர்மாக்களை செய்து கொண்டு இருப்பதால் அதை அனுபவிப்பதற்காக அவசியம் வேறு சரீரம் ஆரம்பிக்கவேண்டும். அந்த கர்மங்களினால் வேறு சரீரம் அவசியம் சரீரம் ஆரம்பிக்கின்றது என்பதால் கர்மங்களின் பலனாக இருப்பதால் ஞானம் வியர்த்தமாகும் (பிரயோஜனமற்றதாகும்).
अथ ज्ञानवतः क्षीयन्ते कर्माणि, तदा ज्ञानप्राप्तिसमकालमेव ज्ञानस्य सत्सम्पत्तिहेतुत्वान्मोक्षः स्यादिति शरीरपातः स्यात् । तथा च आचार्याभावः इति आचार्यवान्पुरुषो वेद इत्यनुपपत्तिः । ज्ञानान्मोक्षाभावप्रसङ्गश्च देशान्तरप्राप्त्युपायज्ञानवदनैकान्तिकफलत्वं वा ज्ञानस्य ।
அனுவாதம் - பூர்வ - எப்பொழுது ஞானியினுடைய கர்மங்கள் க்ஷீணமாகின்றதோ அப்பொழுது ஞானம் அடைந்த சமகாலத்திலேயே ஞானம் சத்தின் பிராப்த்திக்குக் காரணமாவதால் மோஷம் ஏற்படுகிறது. அதே சமயத்தில் சரீரமும் வீழ்கிறது. அவ்வாறே ஆச்சாரியன் இல்லாமல் போகலாம். ஆகையால் ஆச்சாரியன் உடைய புருஷனுக்கே ஞானம் என்ற வாக்கியம் தள்ளத்தக்கதாக ஆகலாம். அவ்வாறே ஞானத்தினால் மோக்ஷப் பிராப்த்தியும் இல்லை என்று ஆகும். அல்லது வேறு தேசத்தை அடைவதற்கான சாதனத்தின் ஞானத்தைப்போல் ஞானத்திற்கும் அநேக விபரீத பலன்களும் சித்திக்கலாம்.
न, कर्मणां प्रवृत्ताप्रवृत्तफलवत्त्वविशेषोपपत्तेः । यदुक्तम् अप्रवृत्तफलानां कर्मणां ध्रुवफलवत्त्वाद्ब्रह्मविदः शरीरे पतिते शरीरान्तरमारब्धव्यम् अप्रवृत्तकर्मफलोपभोगार्थमिति, एतदसत् । विदुषः ‘तस्य तावदेव चिरम्’ इति श्रुतेः प्रामाण्यात् ।
அனுவாதம் - ஸித்தாந்தீ - இவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன்எனில் கர்மங்களின் பிரவிருத்தியின் பலத்திற்கும், பிரவிருத்தி அற்றதின் பலத்திற்கும் விசேஷத்தன்மை உள்ளது. ஆகையால் நீ கூறும் கர்மத்திற்கேற்ற பலன் அளிக்காத கர்மமும் நிச்சயமாக பலன் அளிக்கக்கூடியது. ஆகையால் தேஹம் வீழ்ந்தபின்னும் பலம் அளிக்காத கர்மத்தால் பலத்தை அனுபவிப்பதற்காக வேறு தேஹத்தை அடைவது நிச்சயம் என்று கூறியது சரியல்ல. ஏன் எனில் ஞானிக்கு “तस्य तावदेव चिरम्” (தஸ்ய தாவதேவ சிரம்) தேஹம் வீழ்வது வரையிலுமே தாமதம் என்ற சுருதி பிரமாணமாகின்றது.
அனுவாதம் - பூர்வ - ஆனால் “पुण्यो वै पुण्येन कर्मणा भवति” (புண்யோ வை புண்யேன கர்மணா பவதி) முதலிய ச்ருதி பிரமாணங்கள் உள்ளனவே.
सत्यमेवम् । तथापि प्रवृत्तफलानामप्रवृत्तफलानां च कर्मणां विशेषोऽस्ति । कथम् ? यानि प्रवृत्तफलानि कर्माणि यैर्विद्वच्छरीरमारब्धम् , तेषामुपभागेनैव क्षयः — यथा आरब्धवेगस्य लक्ष्यमुक्तेष्वादेः वेगक्षयादेव स्थितिः, न तु लक्ष्यवेधसमकालमेव प्रयोजनं नास्तीति — तद्वत् । अन्यानि तु अप्रवृत्तफलानि इह प्राग्ज्ञानोत्पत्तेरूर्ध्वं च कृतानि वा क्रियमाणानि वा अतीतजन्मान्तरकृतानि वा अप्रवृत्तफलानि ज्ञानेन दह्यन्ते प्रायश्चित्तेनेव ;
‘ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात्कुरुते तथा’ (भ. गी. ४ । ३७) इति स्मृतेश्च ।
‘क्षीयन्ते चास्य कर्माणि’ (मु. उ. २ । २ । ९) इति च आथर्वणे ।
அனுவாதம் - நீ கூறுவது உண்மையே. ஆனாலும் பலன் அளிக்க ஆரம்பித்ததும், பலன் அளிக்க ஆரம்பிக்காததற்கும் விசேஷத்தன்மை உள்ளது. எவ்வாறு? பலன் கொடுக்க ஆரம்பித்த எந்த கர்மங்களால் வித்வானுடைய சரீரம் ஆரம்பமானதோ அது பலபோகத்தின் மூலமாக க்ஷயமாகின்றது. எவ்வாறு எய்தப்பட்ட பாணத்தின் வேகம் ஆரம்பித்து லக்ஷ்யத்தை அடைந்து அந்த பாணத்தின் ஸ்திதி அதன் வேகம் க்ஷயமான பின்னும் இருக்கிறது. லக்ஷியத்தை துளைத்தபின் அதற்கு (முன்னேறி செல்வதற்கு) வேறு பிரயோஜனம் ஒன்றும் இல்லை என்பது இல்லை. அவ்வாறே இங்கும் அறிந்து கொள்ளவேண்டும். ஞானியின் மற்றபலனை அளிக்க ஆரம்பிக்காத கர்மங்கள் ஞானம் உண்டாவதற்கு முன் செய்த அல்லது அதற்குபின் செய்தவை அல்லது பூர்வ ஜன்மத்தில் செய்த பலனை அளிக்க ஆரம்பிக்காத கர்மங்கள் பிராயச்சித்தத்தால் பாபங்கள் நீங்குவது போல் ஞானாக்கினியினால் தஹிக்கப்படுகிறது (எரிக்கப்படுகிறது). “ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मासात्कुरुते तथा” (ஞானாக்னி: சர்வகர்மாணி பஸ்மசாத்குருதே ததா) என்ற ஸ்மிருதி பிரமாணமாகின்றது. “क्षीयन्ते चास्य कर्माणि” (க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி) என்று அதர்வண ஸ்ருதியிலும் கூறப்பட்டுள்ளது.
अतः ब्रह्मविदः जीवनादिप्रयोजनाभावेऽपि प्रवृत्तफलानां कर्मणामवश्यमेव फलोपभोगः स्यादिति मुक्तेषुवत् तस्य तावदेव चिरमिति युक्तमेवोक्तमिति यथोक्तदोषचोदनानुपपत्तिः । ज्ञानोत्पत्तेरूर्ध्वं च ब्रह्मविदः कर्माभावमवोचाम
‘ब्रह्मसंस्थोऽमृतत्वमेति’ (छा. उ. २ । २३ । १) इत्यत्र । तच्च स्मर्तुमर्हसि ॥
அனுவாதம் - ஆகையால் பிரஹ்மஞானிக்கு ஜீவனம் முதலிய பிரயோஜனம் இல்லாவிடினும் பிராரப்த்த கர்மத்தின் பலத்தை அனுபவிக்கவேண்டியது இருப்பதால் விடுபட்ட அம்புபோல் “तस्य तावदेव चिरम्” (தஸ்ய தாவதேவ சிரம் = அதற்கு அதுவரையே தாமதம்) என்று பொருத்தமாக கூறியது மேலே கூறிய தோஷத்தில் சங்கை கொள்வது சரியல்ல. பிரஹ்மஞானிக்கு ஞானம் ஏற்பட்ட உடன் “ब्रह्मसंस्थोऽमृतत्वमेति” (பிரஹ்மசம்ஸ்தோऽம்ரு-தத்துவமேதி) என்ற வ்யாக்கியானத்தில் கர்மஅபாவத்தைக் கூறினோம். அதை இப்பொழுது ஸ்மரணம் செய்யவேண்டும். அதாவது ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும்.
स य एषोऽणिमैतदात्म्यमिदꣳ सर्वं तत्सत्यꣳ स आत्मा तत्त्वमसि श्वेतकेतो इति भूय एव मा भगवान्विज्ञापयत्विति तथा सोम्येति होवाच ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - எந்த இந்த அணிமா (மிகவும் சூக்ஷ்மமானதோ) எதுவோ இதன் ரூபமே எல்லாம். அது சத்யம், அது ஆத்மா, மேலும் ஹே! ச்வேதகேதோ! அது நீ என்றார். (இவ்வாறு கூறியதும் ச்வேதகேது கூறினான்) ஹே பகவானே! எனக்கு மேலும் உபதேசியுங்கள் என்றவுடன் (ஆருணி) ஹே சோம்ய! நன்று. அவ்வாறே ஆகட்டும் என்றார்.
स य इत्याद्युक्तार्थम् । आचार्यवान् विद्वान् येन क्रमेण सत् सम्पद्यते, तं क्रमं दृष्टान्तेन भूय एव मा भगवान्विज्ञापयत्विति । तथा सोम्य इति ह उवाच ॥
அனுவாதம் - “स य” (ச ய) என்பது முதலிய மந்திரத்தின் அர்த்தம் முன்பே கூறப்பட்டது. ஹே பகவானே! ஆச்சாரியரை உடைய வித்வான் எந்த கிரமத்தால் சத்தை அடைகிறானோ அந்த கிரமத்தை எனக்கு திருஷ்டாந்தம் மூலமாக எனக்கு மறுபடியும் அறியச்செய்யுங்கள் (உபதேசியுங்கள்) என்று ச்வேதகேது கூறியதற்கு ஆருணி கூறினார் - ஹே ஸொம்ய! நன்று அவ்வாறே ஆகட்டும் என்று.
इति चतुर्दशखण्डभाष्यम् ॥
शृणु — यथा
அனுவாதம் - அ.கை. - எவ்வாறு என்பதைக் கேட்பாயாக -
पुरुषꣳ सोम्योत हस्तगृहीतमानयन्त्यपहार्षीत्स्तेयमकार्षीत्परशुमस्मै तपतेति स यदि तस्य कर्ता भवति तत एवानृतमात्मानं कुरुते सोऽनृताभिसन्धोऽनृतेनात्मानमन्तर्धाय परशुं तप्तं प्रतिगृह्णाति स दह्यतेऽथ हन्यते ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஹே சோம்ய! (ராஜாவின் சேவகர்கள்) ஒருவனை கைகளைக் கட்டி இழுத்துவந்து (இவ்வாறு கூறினார்கள்) அவன் செல்வத்தை திருடிவிட்டான். இவன் திருடனே. இவனுக்காக நன்றாக பழுக்கக்காச்சிய. கோடாரியை கொண்டு வா. அவன் திருடி இருந்தால் அவன் பொய்யான வனாவான். பொய்யினால் தன்னை மறைத்துக் கொள்கிறான். இவ்வாறு இருக்கும்பொழுது அவன் பழுக்க காச்சிய கோடாரியைப் பிடித்தால் அவன் கை எரிந்துவிடும். அப்பொழுது அவன் தண்டிக்கப்படுவான்.
सोम्य पुरुषं चौर्यकर्मणि सन्दिह्यमानं निग्रहाय परीक्षणाय च उत अपि हस्तगृहीतं बद्धहस्तम् आनयन्ति राजपुरुषाः । किं कृतवानयमिति पृष्टाश्च आहुः — अपहार्षीद्धनमस्यायम् । ते च आहुः — किमपहरणमात्रेण बन्धनमर्हति, अन्यथा दत्तेऽपि धने बन्धनप्रसङ्गात् ; इत्युक्ताः पुनराहुः — स्तेयमकार्षीत् चौर्येण धनमपहार्षीदिति । तेष्वेवं वदत्सु इतरः अपह्नुते — नाहं तत्कर्तेति ।
அனுவாதம் - ஹே சோம்ய! எந்த புருஷனிடத்தில் திருடன் என்ற சந்தேஹம் ஏற்பட்டதோ அவனை ராஜாவின் சேவகர்கள் அவனை தண்டிக்கவோ அல்லது பரீக்ஷை செய்வதற்காகவோ கைகளைகட்டி அழைத்து வந்தார்கள். இவன் என்ன செய்தான்? இவ்வாறு கேட்டபொழுது அவர்கள் கூறினார்கள். இவன் ஒரு புருஷனுடைய தனத்தை கொண்டு வந்துவிட்டான். அப்பொழுது (நீதிபதி) கூறினார் - தனத்தைக் கொண்டு வந்ததாலேயே கையைக் கட்ட யோக்கியம் உள்ளதா? அல்லது வேறுவிதமாக தனத்தைத் தந்திருத்தாலும் அதைக்கொண்டு வருவதால் கையைக் கட்டுவதற்கு சரியென்று ஆகுமே என்று கூறியதற்கு அவர்கள் மறுபடியும் கூறினார்கள் - இவன் திருடன் அதாவது திருடி தனத்தைக் கொண்டு வந்துள்ளான் என்று. இவ்வாறு கூறியதற்கு அவன் நான் திருடுபவன் அல்ல என்று தன் செயலை மறுத்தான்.
ते च आहुः — सन्दिह्यमानं स्तेयमकार्षीः त्वमस्य धनस्येति । तस्मिंश्च अपह्नुवाने आहुः — परशुमस्मै तपतेति शोधयत्वात्मानमिति । स यदि तस्य स्तैन्यस्य कर्ता भवति बहिश्चापह्नुते, स एवंभूतः तत एवानृतमन्यथाभूतं सन्तमन्यथात्मानं कुरुते । स तथा अनृताभिसन्धोऽनृतेनात्मानमन्तर्धाय व्यवहितं कृत्वा परशुं तप्तं मोहात्प्रतिगृह्णाति, स दह्यते, अथ हन्यते राजपुरुषैः स्वकृतेनानृताभिसन्धिदोषेण ॥
அனுவாதம் - அப்பொழுது அவர்கள் சந்தேஹத்திற்கு உரிய புருஷனிடம் இவ்வாறு நீ நிச்சயமாக தனத்தைத் திருடியவனே என்று கூறியபின் அவன் மறுத்ததற்கு அப்படியானால் இந்த சூடான (பழுக்கக் காச்சிய) கோடாரியைப் பிடித்து உன் தோஷமற்ற தன்மையை நிரூபி என்றனர். இவ்வாறு திருடுபவன் திருடவில்லையென்றால் அந்த சூடான கோடாரியை பிடித்தால் பொசுக்காது. திருடியிருந்தால் பொசுக்கும். அவ்வாறு இருக்கும்பொழுது அவன் கை பொசிக்கினால் அவன் திருடன் என்று ராஜசேவகர்கள் அவனை தண்டிப்பார்கள்.
अथ यदि तस्याकर्ता भवति तत एव सत्यमात्मानं कुरुते स सत्याभिसन्धः सत्येनात्मानमन्तर्धाय परशुं तप्तं प्रतिगृह्णाति स न दह्यतेऽथ मुच्यते ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அவன் திருடவில்லையெனில் அவன் உண்மையானவன். அவன் உண்மை வழியில் நடப்பவனாய் இருப்பதால் தன்னுடைய சத்தியமானது மறைக்கப்பட்டு அந்த தஹிக்கின்ற கோடாலியை பிடிக்கின்றான். அது அவனது கையை எரிப்பதில்லை. ஆகையால் அவன் விடுவிக்கப்படுகின்றான்.
अथ यदि तस्य कर्मणः अकर्ता भवति, तत एव सत्यमात्मानं कुरुते । स सत्येन तया स्तैन्याकर्तृतया आत्मानमन्तर्धाय परशुं तप्तं प्रतिगृह्णाति । स सत्याभिसन्धः सन् न दह्यते सत्यव्यवधानात् , अथ मुच्यते च मृषाभियोक्तृभ्यः । तप्तपरशुहस्ततलसंयोगस्य तुल्यत्वेऽपि स्तेयकर्त्रकर्त्रोरनृताभिसन्धो दह्यते न तु सत्याभिसन्धः ॥
அனுவாதம் - இந்த கர்மத்தை (திருட்டுச் செயலை) செய்யவில்லையெனில் இதன் மூலமாக தன்னுடைய சத்தியத்தன்மையை சாதிக்கமுடியும். அவன் சத்யமானவனாதலால் திருடவில்லை என்பதனால் அவன் அந்த பழுக்கக் காய்ச்சிய கோடாலியைப் பிடித்தான். அவன் சத்யவான் ஆனதால் சத்யத்தை நிரூபிப்பதற்காக அவனுடைய கைகள் எரிக்கப்படவில்லை. ஆகையால் அவனிடம் பொய்யை கூறியவர்கள் அதை பொய் என்பதை விட்டுவிட்டார்கள். இவ்வாறு பழுக்கக் காய்ச்சிய கோடாலிக்கும் கைகளுக்கும் சம்பந்தம் என்பது சமானமாக இருந்தாலும் பொய் கூறுபவனை தஹிக்கின்றது. சத்யமாய் உள்ளவனை தஹிப்பதில்லை.
स यथा तत्र नादाह्येतैतदात्म्यमिदꣳ सर्वं तत्सत्यꣳ स आत्मा तत्त्वमसि श्वेतकेतो इदि तद्धास्य विजज्ञाविति विजज्ञाविति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - எவ்வாறு இதை பரீக்ஷீக்கும் சமயத்தில் எரிக்கவில்லையோ (அவ்வாறு வித்வானுக்கு புனராவிர்த்தி - திரும்புதல் இல்லை. எரிக்கப்பட்டால் அவித்வானுக்கு புனராவிர்த்தி உண்டு) இவை எல்லாம் இந்த ரூபமே, இது சத்யம், இது ஆத்மா, ஹே ச்வேதகேதோ! அதுவே நீ. அப்பொழுது அந்த ச்வேதகேது இதை நான் அறிந்துகொண்டேன். இதை நான் அறிந்துகொண்டேன்.
स यथा सत्याभिसन्धः तप्तपरशुग्रहणकर्मणि सत्यव्यवहितहस्ततलत्वात् नादाह्येत न दह्येतेत्येतत् , एवं सद्ब्रह्मसत्याभिसन्धेतरयोः शरीरपातकाले च तुल्यायां सत्सम्पत्तौ विद्वान् सत्सम्पद्य न पुनर्व्याघ्रदेवादिदेहग्रहणाय आवर्तते । अविद्वांस्तु विकारानृताभिसन्धः पुनर्व्याघ्रादिभावं देवतादिभावं वा यथाकर्म यथाश्रुतं प्रतिपद्यते ।
அனுவாதம் - அந்த சத்யத்துடன் கூடியவன் எவ்வாறு பழுக்கக் காய்ச்சிய கோடாலியை பிடிக்கும் செயலில் சத்யத்துடன் கூடிய கைகள் ஆனதால் அதை எரிப்பது இல்லை என்பதால் அது எரிக்கப்படவில்லை, அவ்வாறேசத் பிரஹ்ம சத்தியத்துடன் இருப்பவனும், அவ்வாறு இல்லாதவனும் சரீரம் விழும் சமயத்தில் சமமானாலும் சத்தியத்தை உடைய வித்வான் மறுபடியும் புலி தேவதை முதலிய சரீரங்களை கிரஹித்துக்கொண்டு சுழல்வது இல்லை. அவித்வான்கள் விகாரமித்யையுடன் கூடி இருப்பதால் மறுபடியும் புலி முதலிய ரூபங்களையும், தேவதை முதலிய ரூபங்களையும் கர்மத்திற்கும், ஞானத்திற்கும் தகுந்தவாறு ரூபங்களை அடைகின்றார்கள்.
यदात्माभिसन्ध्यनभिसन्धिकृते मोक्षबन्धने, यच्च मूलं जगतः, यदायतना यत्प्रतिष्ठाश्च सर्वाः प्रजाः, यदात्मकं च सर्वं यच्चाजममृतमभयं शिवमद्वितीयम् , तत्सत्यं स आत्मा तव, अतस्तत्त्वमसि श्वेतकेतो — इत्युक्तार्थमसकृद्वाक्यम् ।
அனுவாதம் - ஆத்மாவுடன் ஒன்றியும் ஆத்மாவுடன் ஒன்றாமலும் இருப்பதன் காரணமாக மோக்ஷம், பந்தம் ஏற்படுகிறது. எது இந்த ஜகத்தின் மூலமோ அது எல்லா பிரஜைகளும் எதை ஆச்ரயித்து அதிலேயே பிரதிஷ்டித்திருக்கின்றது (அதிலேயே நிலைபெற்றுள்ளது). எல்லா சம்சாரமும் எதன் ஸ்வரூபமோ அது அவ்வாறே அஜன்மா, அம்ருதம், அபயம், சிவம் மேலும் அது அத்விதீயமாகும். அதுவே சத்யம் அதுவே உன்னுடைய ஆத்மா. ஆகையால் ஹே ச்வேதகேதோ! அதுவே நீ. இவ்வாறு இந்த வாக்கியத்தின் அர்த்தத்தை அநேக தடவை கூறப்பட்டது.
कः पुनरसौ श्वेतकेतुः त्वंशब्दार्थः ? योऽहं श्वेतकेतुरुद्दालकस्य पुत्र इति वेद आत्मानमादेशं श्रुत्वा मत्वा विज्ञाय च, अश्रुतममतमविज्ञातं विज्ञातुं पितरं पप्रच्छ
‘कथं नु भगवः स आदेशो भवति’ (छा. उ. ६ । १ । ३) इति । स एषः अधिकृतः श्रोता मन्ता विज्ञाता तेजोबन्नमयं कार्यकरणसङ्घातं प्रविष्टा परैव देवता नामरूपव्याकरणाय — आदर्शे इव पुरुषः सूर्यादिरिव जलादौ प्रतिबिम्बरूपेण । स आत्मानं कार्यकरणेभ्यः प्रविभक्तं सद्रूपं सर्वात्मानं प्राक् पितुः श्रवणात् न विजज्ञौ । अथेदानीं पित्रा प्रतिबोधितः तत्त्वमसि इति दृष्टान्तैर्हेतुभिश्च तत् पितुरस्य ह किलोक्तं सदेवाहमस्मीति विजज्ञौ विज्ञातवान् । द्विर्वचनमध्यायपरिसमाप्त्यर्थम् ॥
அனுவாதம் - “त्वं” (துவம் - நீ) என்ற வாச்சிய சப்தமாகிய ச்வேதகேது யார்? (பதில்) நான் ச்வேதகேது உத்தாலகருடைய புத்திரன் என்று இவ்வாறு தன்னை அறிந்திருந்தான். (தன்னுடைய தந்தையின் அறிவுறையால் சிரவணம், மனனம், ஞானம் இவைகளை அடைந்து சிரவணம் செய்ய முடியாததும், நினைக்கமுடியாததும், அறியமுடியாததுமானதை அறிவதற்காக தந்தையிடம் இவ்வாறு கேட்டான் - பகவானே! இந்த ஆதேசம் (அறிவு ஸ்வரூபம்) எவ்வாறு உள்ளது? அந்த அதிகாரி ச்ரோதா, மந்தா, விக்ஞாதா (கண்ணாடியில் பிரதிபலிக்கும்) அதர்ச புருஷன் போலும், ஜலம் முதலியவைகளில் பிரதிபலிக்கும் சூரியன் முதலியவைகளைப்போலும் தேஜஸ், ஜலம், அன்னமயமான தேஹ இந்திரிய சங்காதம் நாம ரூபமாக வெளிப்படுவதற்காக பரதேவதை பிரவேசித்திருக்கின்றது. அந்த பிதாவின் உபதேசத்தைக் கேட்பதற்குமுன் தன்னுடைய தேஹம் இந்திரியங்களைக் காட்டிலும் வேறான சத்ரூப சர்வாத்மா இருக்கிறது என்று அறியாமல் இருந்தான். இப்பொழுது பிதாவால் திருஷ்டாந்த மூலமாகவும், ஹேதுக்களின் மூலமாகவும் “तत्त्वमसि” (அது நீயாய் இருக்கிறாய்) என்று அறிவுறுத்தப்பட்டபின் அவர் தந்தையினால் உபதேசிக்கப்பட்டு சத்தே நான் “सदेवाहमस्मि” என்று அறிந்தான். இங்கு இருமுறை கூறியது இந்த அத்யாயத்தின் பூர்த்திக்காக ஆகிறது.
किं पुनरत्र षष्ठे वाक्यप्रमाणेन जनितं फलमात्मनि ?
அனுவாதம் - பூர்வ - ஆனால் இந்த ஆறாவது அத்யாயத்தின் வாக்கியப் பிரமாணத்தால் ஆத்மாவில் பலன் உண்டாகவில்லையா?
कर्तृत्वभोक्तृत्वयोरधिकृतत्वविज्ञाननिवृत्तिः तस्य फलम् , यमवोचाम त्वंशब्दवाच्यमर्थं श्रोतुं मन्तुं च अधिकृतमविज्ञातविज्ञानफलार्थम् । प्राक्च एतस्माद्विज्ञानात् अहमेवं करिष्याम्यग्निहोत्रादीनि कर्माणि, अहमत्राधिकृतः, एषां च कर्मणां फलमिहामुत्र च भोक्ष्ये, कृतेषु वा कर्मसु कृतकर्तव्यः स्याम् — इत्येवं कर्तृत्वभोक्तृत्वयोरधिकृतोऽस्मीत्यात्मनि यद्विज्ञानमभूत् तस्य, यत्सज्जगतो मूलम् एकमेवाद्वितीयं तत्त्वमसीत्यनेन वाक्येन प्रतिबुद्धस्य निवर्तते, विरोधात् — न हि एकस्मिन्नद्वितीये आत्मनि अयमहमस्मीति विज्ञाते ममेदम् अन्यदनेन कर्तव्यम् इदं कृत्वा अस्य फलं भोक्ष्ये — इति वा भेदविज्ञानमुपपद्यते । तस्मात् सत्सत्याद्वितीयात्मविज्ञाने विकारानृतजीवात्मविज्ञानं निवर्तते इति युक्तम् ।
அனுவாதம் - ஸித்-தா-ந்தீ - அறியாததின் அறிவு ரூபமான (விக்ஞான ரூபமான) பவத்திற்காக சிரவணம், மனனம் செய்வதில் அதிகாரமுள்ளவனுக்கு “त्वम्” (துவம்) பத வாச்சியார்த்தம் நம்மால் வர்ணிக்கப்பட்டது. அதனால் தன்னில் ஆரோபிக்கப்பட்ட கர்த்ருத்வம் போக்த்ருத்வம் ஆகியவைகளின் நிவிர்த்தி அதிகாரமுள்ள விக்ஞானிக்கு ஏற்படுவதே பலன் ஆகும். அவ்வாறு விக்ஞானம் ஏற்படுவதற்குமுன் நான் அக்னிஹோத்திரம் முதலிய கர்மங்களை செய்வேன். நான் அதற்கு அதிகாரியாவேன். இவைகள் பலன் இகலோக பரலோகங்களில் அனுபவிப்பேன். மேலும் இந்த கர்மங்களை செய்வதால் கிருதகிருத்யன் ஆவேன் என்று இவ்வாறு நான் கர்த்திருத்வ, போக்திருத்வத்திற்கு அதிகாரி ஆவேன் என்று எவன் அந்த ஆத்மாவில் விக்ஞானம் உள்ளதோ ஒரே அத்விதீய சத்தே ஜகத்தின் மூலம் எதுவோ அதுவே நீ என்ற வாக்கியத்தின் மூலமாக பிரதிபந்தம் நிவிர்த்தி ஆகிறது. (இது முந்திய மித்யா ஞானத்திற்கு) விரோதமானது. ஒரே அத்விதீய ஆத்மாவின் விஷயத்தில் (அஹமஸ்மி, நானாய் இருக்கிறேன்) என்ற ஞானம் ஏற்பட்டவுடன் எனக்கு நான் செய்யவேண்டிய மற்ற காரியங்கள் உள்ளன. இந்த சாதனத்தால் செய்யவேண்டும். இதை செய்வதால் இகலோக பரலோக பலன்களை அனுபவிப்பேன் என்று இவ்வாறான பேத புத்தி சம்பவிக்காது. ஆகையால் சத்ரூப சத்ய அத்விதீய ஆத்மாவின் ஞானம் உண்டானவுடன் விகாரரூப மித்யா ஜீவாத்மபுத்தி நிவிர்த்தியாகிவிடும் என்று கூறுவது சரியானதே.
ननु ‘तत्त्वमसि’ इत्यत्र त्वंशब्दवाच्येऽर्थे सद्बुद्धिरादिश्यते — यथा आदित्यमनआदिषु ब्रह्मादिबुद्धिः, यथा च लोके प्रतिमादिषु विष्ण्वादिबुद्धिः, तद्वत् ; न तु सदेव त्वमिति ; यदि सदेव श्वेतकेतुः स्यात् , कथमात्मानं न विजानीयात् , येन तस्मै तत्त्वमसीत्युपदिश्यते ?
அனுவாதம் - பூர்வ - ஆனால் எவ்வாறு ஆதித்யன், மனம் முதலியவைகளில் பிரஹ்மா முதலிய புத்தி உள்ளதோ அவ்வாறே உலகில் பிரதிமை முதலியவைகளில் விஷ்ணு முதலிய புத்தி ஆரோபிக்கப்படுகின்றதோ அவ்வாறு “तत्त्वमसि” (தத்வமஸி) என்ற இந்த வாக்கியம் மூலமாக “त्वम्” (துவம்) சப்த வாச்சியார்த்தத்தில் சத்புத்தி ஆரோபிக்கப்பட்டுள்ளது. உண்மையில் “துவம்” அர்த்தம் சத் அல்ல. ச்வேதகேது சத்தாக இருந்தால் எதனால் அவன் அறியவில்லை. அதனால் அவனுக்கு “तत्त्वमसि” (தத்துவமஸி- அதுவே நீ) என்று உபதேசிக்கப்பட்டது.
न, आदित्यादिवाक्यवैलक्षण्यात् —
‘आदित्यो ब्रह्म’ (छा. उ. ३ । १९ । १) इत्यादौ इतिशब्दव्यवधानात् न साक्षाद्ब्रह्मत्वं गम्यते, रूपादिमत्त्वाच्च आदित्यादीनाम् । आकाशमनसोश्च इतिशब्दव्यवधानादेव अब्रह्मत्वम् । इह तु सत एवेह प्रवेशं दर्शयित्वा ‘तत्त्वमसि’ इति निरङ्कुशं सदात्मभावमुपदिशति ।
அனுவாதம் - ஸித்தாந்தீ - அவ்வாறு அல்ல. ஏன்எனில் ஆதித்ய முதலிய வாக்கியங்களில் விலக்ஷணம் உள்ளது. ஆதித்யன் பிரஹ்ம என்று உபாசி என்பதில் “इति” (என்று = இதி) சப்தம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கு சாக்ஷாத் பிரஹ்மத்துவம் கிடையாது. இதைத்தவிர ஆதித்யன் முதலியவைகள் ரூபம் உடையதாவதாலும் அவ்வாறே ஆகாசம், மனம் இவைகளை “इति” (இதி, என்று) என்று உபயோகப்பட்டுள்ளதாலும் அவைகள் பிரஹ்மம் ஆகமுடியாது. இங்கேயோ சத்தின் பிரவேசித்ததை தெரிவித்து “तत्त्वमसि” (தத்துவமஸி) என்று தடையற்ற சதாத்ம பாவத்தை உபதேசிக்கின்றார்.
ननु पराक्रमादिगुणः सिंहोऽसि त्वम् इतिवत् तत्त्वमसीति स्यात् ।
அனுவாதம் - பூர்வ - எவ்வாறு பராக்கிரமம் முதலிய குணமுடைய “சிம்ஹம் நீ” என்று கூறுவது போல் “तत्त्वमसि” (தத்வமஸி) என்ற வாக்கியமும் ஆகுமே எனில்?
அனுவாதம் - ஸித்தாந்தீ - அவ்வாறு அல்ல. ஏன்எனில் மண் முதலியவைகளைப் போல் ஒன்றே அத்விதீய சத்யம் என்று உபதேசம் செய்யப்பட்டுள்ளது. உபசார விக்ஞானத்தால் “तावदेव चिरम्” (தாவதேவ சிரம் = அதுவரையே தாமதம்) என்று இவ்வாறு சத்தின் பிராப்தியின் உபதேசம் செய்யப்படவில்லை. ஏன்எனில் நீ இந்திரன், யமன் முதலிய விக்ஞானங்களைப்போல் உபசார விக்ஞானமாய் இருந்தால் அது மித்யா ஆகும்.
नापि स्तुतिः, अनुपास्यत्वाच्छ्वेतकेतोः । नापि सत् श्वेतकेतुत्वोपदेशेन स्तूयेत — न हि राजा दासस्त्वमिति स्तुत्यः स्यात् । नापि सतः सर्वात्मन एकदेशनिरोधो युक्तः तत्त्वमसीतिदेशाधिपतेरिव ग्रामाध्यक्षस्त्वमिति । न च अन्या गतिरिह सदात्मत्वोपदेशात् अर्थान्तरभूता सम्भवति ।
அனுவாதம் - இதைத்தவிர ஸ்துதியும் பொருந்தாது. ஏன்எனில் ச்வேதகேது உபாசிக்க வேண்டிய வஸ்து அல்ல. சத்தானது ச்வேதகேதுத்துவத்தை உபாஸ்ய வஸ்துவாக ஸ்துதிக்கவில்லை. எவ்வாறு ராஜாவை சேவகன் என்று ஸ்துதிப்பது இல்லையோ, அவ்வாறே ராஜ்ய அதிபதியை கிராம அதிபதியாக ஸ்துதிப்பது இல்லையோ சத் என்னும் சர்வாத்மாவை தத்துவமஸி (அதுவே நீயாக இருக்கிறாய்) என்று (ச்வேதகேது ரூபமாக) ஏகதேசத்தில் அர்த்தம் கொள்வது பொருந்தாது. இதைத்தவிர சத்தின் ஆத்மத்துவ உபதேசத்தால் வேறுவிதமான அர்த்தமோ, வேறு கதியோ இந்த வாக்கியத்தில் சம்பவிக்காது.
ननु सदस्मीति बुद्धिमात्रमिह कर्तव्यतया चोद्यते न त्वज्ञातं सदसीति ज्ञाप्यत इति चेत् ।
அனுவாதம் - பூர்வ - இவ்வாறு இருக்கும்பொழுது சத்தாக இருக்கின்றேன் என்ற புத்தியை மாத்திரம் கர்த்தவ்ய ரூபமாக (செய்யவேண்டிய ரூபமாக) உபதேசம் செய்யப்பட்டுள்ளது. “நீ’’ சத் ஆக இருக்கிறாய் என்று அறியாததின் ஞானத்தை உண்டாக்கவில்லை எனின்.
அனுவாதம் - ஸித்தாந்தீ - ஆனால் இந்த பக்ஷத்தை ஏற்றுக்கொண்டாலும் “अश्रुतं श्रुतं भवति” (அச்ருதம் ச்ருதம் பவதி) முதலியவைகளால் கூறப்பட்டதும் சரியல்ல என்று ஆகும்.
न, सदस्मीति बुद्धिविधेः स्तुत्यर्थत्वात् ।
அனுவாதம் - பூர்வ - அவ்வாறு அல்ல. ஏன்எனில் “सदस्मि” (சத்அஸ்மி) என்ற புத்திரூப விதியானது ஸ்துதியின் பொருட்டாகும்.
न,
‘आचार्यवान्पुरुषो वेद । तस्य तावदेव चिरम्’ (छा. उ. ६ । १४ । २) इत्युपदेशात् । यदि हि सदस्मीति बुद्धिमात्रं कर्तव्यतया विधीयते न तु त्वंशब्दवाच्यस्य सद्रूपत्वमेव, तदा न आचार्यवान्वेद इति ज्ञानोपयोपदेशो वाच्यः स्यात् । यथा
‘अग्निहोत्रं जुहुयात्’ ( ? ) इत्येवमादिष्वर्थप्राप्तमेव आचार्यवत्त्वमिति, तद्वत् । ‘तस्य तावदेव चिरम्’ इति च क्षेपकरणं न युक्तं स्यात् , सदात्मतत्त्वे अविज्ञातेऽपि सकृद्बुद्धिमात्रकरणे मोक्षप्रसङ्गात् ।
அனுவாதம் - அவ்வாறு அல்ல. ஏன்எனில் “आचार्यवान्पुरुषो वेद तस्य तावदेव चिरम्” (ஆச்சார்யவான்புருஷோ வேத தஸ்ய தாவதேவ சிரம்) = அதாவது ஆச்சாரியனை உடைய புருஷனுக்கே ஞானம் உண்டாகிறது. அதுவரையே தாமதம்) என்று உபதேசிக்கப்பட்டுள்ளது. “நான் சத்” என்று இவ்வாறு புத்தி அளவில் மாத்திரம் கர்த்தவ்யரூபமாக விதித்திருந்தால் “त्वम्” (துவம் = நீ) என்ற சப்தவாச்சியம் ஜீவனின் சத்ரூபத்தை உபதேசிக்கவில்லையெனில் “आचार्यवान् पुरुषो वेद” (ஆச்சாரியவான் புருஷோ வேத) என்று இவ்வாறு ஞானத்திற்கான உபாயத்தை உபதேசம் செய்திருக்க முடியாது. எவ்வாறு “அக்னிஹோத்திரம் செய்” முதலிய விதிகளிலும் ஆச்சாரியத்துவம் ஏற்படுகிறதோ அவ்வாறே இங்கும் அறிந்துகொள்ள வேண்டும். மேலும் எதுவரை தாமதமோ என்று கூறிக்கொண்டு காலக்ஷபேம் செய்வது சரியல்ல. ஏன்எனில் சத் ஆத்ம தத்துவத்தின் ஞானம் இல்லாவிடினும் ஒரு தடவை சத் புத்தி செய்வதாலேயே மோக்ஷம் என்று நிச்சயமாவதால் ஆகும்.
न च तत्त्वमसीत्युक्ते नाहं सदिति प्रमाणवाक्यमजनिता बुद्धिः निवर्तयितुं शक्या ; नोत्पन्नेति वा शक्यं वक्तुम् , सर्वोपनिषद्वाक्यानां तत्परतयैवोपक्षयात् । यथा अग्निहोत्रादिविधिजनिताग्निहोत्रादिकर्तव्यताबुद्धीनामतथार्थत्वमनुत्पन्नत्वं वा न शक्यते वक्तुम् — तद्वत् ।
அனுவாதம் - இதைத்தவிர எவ்வாறு அக்னிஹோத்திரம் முதலியவைகளால் உண்டான அக்னிஹோத்திரம் அவசியம் செய்ய வேண்டும் என்ற புத்திக்கு பொருந்தாததால் (அல்லது உண்டாகும் என்று கூறமுடியாததால்) இவ்வாறு “तत्त्वमसि” (தத்துவமஸி) என்று கூறியதும் “நான் சத்” என்று பிரமாணத்தால் உண்டான புத்தி நிவிர்த்தியாகாது. மேலும் இவ்வாறு கூறவும் முடியாது. ஏன்எனில் அது உத்பத்தியும் ஆகவில்லை. மேலும் அது உபநிஷத் வாக்கியங்களினால் அதன் பரமாக ஆவதே அதன் முடிவான அர்த்தமாகும்.
यत्तूक्तं सदात्मा सन् आत्मानं कथं न जानीयादिति, नासौ दोषः, कार्यकरणसङ्घातव्यतिरिक्तः अहं जीवः कर्ता भोक्तेत्यपि स्वभावतः प्राणिनां विज्ञानादर्शनात् । किमु तस्य सदात्मविज्ञानम् । कथमेवं व्यतिरिक्तविज्ञाने असति तेषां कर्तृत्वादिविज्ञानं सम्भवति दृश्यते च । तद्वत्तस्यापि देहादिष्वात्मबुद्धित्वात् न स्यात्सदात्मविज्ञानम् । तस्मात् विकारानृताधिकृतजीवात्मविज्ञाननिवर्तकमेव इदं वाक्यम् ‘तत्त्वमसि’ इति सिद्धमिति ॥
அனுவாதம் - மேலும் எது கூறப்பட்டதோ சதாத்மாவாக இருந்துகொண்டு ஆத்மாவை ஏன் அறியவில்லை என்று. அந்த தோஷம் இல்லை. ஏன்எனில் ஸ்வபாவமாகவே ஜீவன்களுக்கு இவ்வாறான புத்தி காணப்படவில்லை. ஆதலால் எவ்வாறு சதாத்ம விக்ஞானம் உண்டாகும். ஏன்எனில் காரியகரண சங்காதத்தைக்காட்டிலும் வேறானவன் நான், ஜீவன், கர்த்தா போக்த்தா என்ற புத்தி இருக்கும்பொழுது எவ்வாறு சத்தாத்மபுத்தி உண்டாகும். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. இவ்வாறான ஸ்திதியில் எவ்வாறு சதாத்மபுத்தி உண்டாகும்? எதுவரை தேஹேந்திரியம் முதலியவைகளைக்காட்டிலும் வேறான புத்தி ஏற்படாதவரை கர்த்திருத்வ முதலிய புத்தி ஏற்படுவதும் எவ்வாறு சம்பவிக்கும் இந்த விஷயம் காணப்படுகிறது. அவ்வாறு இந்த தேஹாதிகளில் ஆத்மபுத்தி இருப்பதால் சதாத்ம புத்தி ஏற்படுவது இல்லை. ஆகையால் இந்த “तत्त्वमसि” (தத்வமஸி) என்ற இந்த வாக்கியம் விகாரரூப மித்யா தேஹம் முதலியவைகளில் வைத்த ஜீவாத்ம பாவத்தை நிவிர்த்தி செய்யக்கூடியதாகும்.
इति षोडशखण्डभाष्यम् ॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ छान्दोग्योपनिषद्भाष्ये षष्ठोऽध्यायः समाप्तः ॥