द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

छान्दोग्योपनिषद्भाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

சாந்தோக்யோபநிஷத்பாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

परमार्थतत्त्वोपदेशप्रधानपरः षष्ठोऽध्यायः सदात्मैकत्वनिर्णयपरतयैवोपयुक्तः । न सतोऽर्वाग्विकारलक्षणानि तत्त्वानि निर्दिष्टानीत्यतस्तानि नामादीनि प्राणान्तानि क्रमेण निर्दिश्य तद्द्वारेणापि भूमाख्यं निरतिशयं तत्त्वं निर्देक्ष्यामि — शाखाचन्द्रदर्शनवत् , इतीमं सप्तमं प्रपाठकमारभते ; अनिर्दिष्टेषु हि सतोऽर्वाक्तत्त्वेषु सन्मात्रे च निर्दिष्टे अन्यदप्यविज्ञातं स्यादित्याशङ्का कस्यचित्स्यात् , सा मा भूदिति वा तानि निर्दिदिक्षति ;
அனுவாதம் - அ.கை - பரமார்த்த தத்வ உபதேசம் ஆறாவது அத்யாயத்தில் பிரதானமாக உபதேசிக்கப்பட்டது. சத் ஆத்மா ஏகத்துவத்தை நிர்ணயம் செய்வதில் உபயோகமாகிறது. சத்தைக்காட்டிலும் கீழான விகாரரூப அந்த லக்ஷணங்களை விளக்கவில்லை. ஆகையால் அந்த நாமம் முதலியவைகளை கிரமமாக விளக்கி அதன் மூலமாகவாவது பூமா எனப்படும் நிரதிசய தத்துவத்தை நிரூபிப்பதற்காக சாகா சந்திர தர்சனம் போன்றது என்று இந்த ஏழாவது அத்யாயத்தில் ஆரம்பிக்கப்படுகிறது. அல்லது சத்தைவிட கீழான தத்துவத்தை நிரூபிக்காமல் சத்மாத்திரமே நிரூபிக்கப்பட்டால் மற்றவை அறியப்படாததாகும் என்ற ஆசங்கா யாருக்காவது உண்டாகலாம் அவ்வாறு ஆகக்கூடாது என்பதற்காக அவை இங்கு விளக்கப்படுகிறது.
अथवा सोपानारोहणवत् स्थूलादारभ्य सूक्ष्मं सूक्ष्मतरं च बुद्धिविषयं ज्ञापयित्वा तदतिरिक्ते स्वाराज्येऽभिषेक्ष्यामीति नामादीनि निर्दिदिक्षति ;
அனுவாதம் - அல்லது சோபான கிரமமாக மேல்நோக்கி செல்வதுபோல் (ஏணிபடிகளில் ஏறிச்செல்வதுபோல்) ஸ்தூலத்திலிருந்து ஆரம்பித்து சூக்ஷ்மமான, மிகவும் சூக்ஷ்மமான புத்தி விஷயத்தை அறிவுறச்செய்து அதைக்காட்டிலும் வேறான ஸ்வராஜ்யத்தில் அபிஷேகம் செய்வேன்- என்ற அபிப்ராயத்தால் நாமம் முதலியவைகள் முதலில் விளக்க விரும்புகின்றது.
अथवा नामाद्युत्तरोत्तरविशिष्टानि तत्त्वानि अतितरां च तेषामुत्कृष्टतमं भूमाख्यं तत्त्वमिति तत्स्तुत्यर्थं नामादीनां क्रमेणोपन्यासः ।
அனுவாதம் - அல்லது நாமம் முதலியவை ஒன்றைவிட ஒன்று சிறந்ததான தத்துவங்களைக்காட்டிலும் பூமா எனப்படும் தத்துவம் மிகவும் உத்கிருஷ்டமானது அதாவது மிகவும் உயர்ந்தது என்று இவ்வாறு ஸ்துதிப்பதற்காக நாமம் முதலியவைகள் கிரமமாகக் கூறப்பட்டுள்ளது.
आख्यायिका तु परविद्यास्तुत्यर्था । कथम् ? नारदो देवर्षिः कृतकर्तव्यः सर्वविद्योऽपि सन् अनात्मज्ञत्वात् शुशोचैव, किमु वक्तव्यम् अन्योऽल्पविज्जन्तुः अकृतपुण्यातिशयोऽकृतार्थ इति ;
அனுவாதம் - இந்த கதையானது பரவித்யாவை ஸ்துதிப்பதற்காக கூறப்பட்டது. தேவரிஷிநாரதர் செய்யவேண்டியதை எல்லாம் செய்தவராயும் எல்லா வித்யைகளையும் உடையவராய் இருந்தும் அநாத்மாவை அறிந்தவராய் இருந்ததால் சோகம் உடையவரானார். மற்ற அல்பத்தை அறிந்த ஜீவன் புண்யம் செய்யாத அந்த அகிருதாத்தத்தனைக் குறித்து என்ன சொல்லுவது?
अथवा नान्यदात्मज्ञानान्निरतिशयश्रेयःसाधनमस्तीत्येतत्प्रदर्शनार्थं सनत्कुमारनारदाख्यायिका आरभ्यते, येन सर्वविज्ञानसाधनशक्तिसम्पन्नस्यापि नारदस्य देवर्षेः श्रेयो न बभूव, येनोत्तमाभिजनविद्यावृत्तसाधनशक्तिसम्पत्तिनिमित्ताभिमानं हित्वा प्राकृतपुरुषवत् सनत्कुमारमुपससाद श्रेयःसाधनप्राप्तये ; अतः प्रख्यापितं भवति निरतिशयश्रेयःप्राप्तिसाधनत्वमात्मविद्याया इति ॥
அனுவாதம் - அல்லது ஆத்ம ஞானத்தைக்காட்டிலும் உத்தமமான சாதனம் இல்லை என்பதைத் தெரிவிப்பதற்காக சனத் குமாரர், நாரதர் கதை ஆரம்பிக்கப்படுகிறது. எதனால் சர்வவிக்ஞான சாதனசக்தி உள்ளவராய் இருந்தாலும் தேவரிஷி நாரதர் ச்ரேயஸ்ஸை அடையவில்லை. ஆகையால் உத்தம குல, வித்யா, ஆச்சாரம் மேலும் எல்லாவிதமான சாதனங்களிலும் சாமர்த்திய சம்பத்தி உடையவரானாலும் அவைகளில் உள்ள அபிமானத்தை த்யாகம் செய்து ச்ரேயஸ் சாதனத்தை அடைவதற்காக சாதாரணப் புருஷனைப்போன்று சனத்குமாரரின் சமீபத்திற்கு வந்தார். இதனால் ச்ரேயஸ் பிராப்த்திக்கு ஆத்மவித்யையின் நிரதிசய (ஒப்பற்ற) சாதனத்தன்மை சூசகமாக தெரிவிக்கப்படுகிறது.
अधीहि भगव इति होपससाद सनत्कुमारं नारदस्तꣳ होवाच यद्वेत्थ तेन मोपसीद ततस्य ऊर्ध्वं वक्ष्यामीति स होवाच ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஹே பகவானே! எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று கூறிக்ககொண்டு நாரதர் சனத் குமாரரிடம் வந்தார். அவரிடம் சனத்குமாரர் கூறினார் - உனக்கு எது தெரியுமோ அதைக் கூறு. என் பக்கத்தில் அமர்ந்துகொள். அப்பொழுது நான் உனக்கு அதற்கு மேல் கூறவேண்டியதை கூறுகிறேன் என்ற பொழுது நாரதர் கூறினார்.
अधीहि अधीष्व भगवः भगवन्निति ह किल उपससाद । अधीहि भगव इति मन्‍त्रः । सनत्कुमारं योगीश्वरं ब्रह्मिष्ठं नारदः उपसन्नवान् । तं न्यायतः उपसन्नं ह उवाच — यदात्मविषये किञ्चिद्वेत्थ तेन तत्प्रख्यापनेन मामुपसीद इदमहं जाने इति, ततः अहं भवतः विज्ञानात् ते तुभ्यम् ऊर्ध्वं वक्ष्यामि, इत्युक्तवति स ह उवाच नारदः ॥
அனுவாதம் - ஹே பகவானே! எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று கூறிக்கொண்டு நாரதர் யோகீச்வரரான பிரஹ்மநிஷ்டர் சனத்குமாரரிடம் சிஷ்யபாவத்துடன் அருகில் வந்தார். “अधीहि भगव” (அதீஹி பகவ:) எனக்கு உபதேசியுங்கள் என்பது குருவின் சமீபம் சிஷ்ய ரூபமாய் வருவதற்கான மந்திரம் ஆகும். தன் சமீபத்தில் நியமமாக வந்து அடைந்தவரிடம் கூறினார் - உனக்கு ஆத்ம விஷயத்தில் எவ்வளவு அறிந்திருக்கின்றாயோ அதை என்னிடம் நான் இவ்வாறு அறிந்திருக்கின்றேன் என்று என்னிடம் கூறு. நீ அறிந்ததைக்காட்டிலும் மேலானதை நான் உபதேசம் செய்கின்றேன் என்று சனத்குமாரர் கூறிய பின் நாரதர் இவ்வாறு கூறினார்.
ऋग्वेदं भगवोऽध्येमि यजुर्वेदꣳ सामवेदमाथर्वणं चतुर्थमितिहासपुराणं पञ्चमं वेदानां वेदं पित्र्यꣳ राशिं दैवं निधिं वाकोवाक्यमेकायनं देवविद्यां ब्रह्मविद्यां भूतविद्यां क्षत्त्रविद्यां नक्षत्रविद्याꣳ सर्पदेवजनविद्यामेतद्भगवोऽध्येमि ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - ஹே பகவான்! நான் ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம், நான்காவதான அதர்வவேதம் (இதைத்தவிர) இதிஹாசம், புராண ரூபமான ஐந்தாவது வேதம், வேதங்களின் வேதம் (வ்யாகரணம்), சிரார்த்த கல்பம், கணிதம், உத்பாதஞானம், நிதிசாஸ்திரம், தர்க்க சாஸ்திரம் நீதி சாஸ்திரம் நிருக்தம் (சொல் இலக்கணம்) வேத அங்கங்கள் பஞ்சபூதங்கள் பற்றிய வித்யா, போரிடும் வித்தை, ஜோதிஷம் சர்ப்பவித்யா (கருடமந்திரம்) மேலும் தேவ ஜனங்களின் வித்யை, நடனம், சங்கீதம் முதலியவைகள் எல்லாவற்றையும் ஹே பகவானே அறிந்திருக்கின்றேன்.
ऋग्वेदं भगवः अध्येमि स्मरामि, ‘यद्वेत्थ’ इति विज्ञानस्य पृष्टत्वात् । तथा यजुर्वेदं सामवेदमाथर्वणं चतुर्थं वेदं वेदशब्दस्य प्रकृतत्वात् इतिहासपुराणं पञ्चमं वेदं वेदानां भारतपञ्चमानां वेदं व्याकरणमित्यर्थः । व्याकरणेन हि पदादिविभागशः ऋग्वेदादयो ज्ञायन्ते ; पित्र्यं श्राद्धकल्पम् ; राशिं गणितम् ; दैवम् उत्पातज्ञानम् ; निधिं महाकालादिनिधिशास्त्रम् ; वाकोवाक्यं तर्कशास्त्रम् ; एकायनं नीतिशास्त्रम् ; देवविद्यां निरुक्तम् ; ब्रह्मणः ऋग्यजुःसामाख्यस्य विद्यां ब्रह्मविद्यां शिक्षाकल्पच्छन्दश्चितयः ; भूतविद्यां भूततन्‍त्रम् ; क्षत्रविद्यां धनुर्वेदम् ; नक्षत्रविद्यां ज्यौतिषम् ; सर्पदेवजनविद्यां सर्पविद्यां गारुडं देवजनविद्यां गन्धयुक्तिनृत्यगीतवाद्यशिल्पादिविज्ञानानि ; एतत्सर्वं हे भगवः अध्येमि ॥
அனுவாதம் - நீ எதை அறிந்திருக்கின்றாயோ அதைக் கூறு என்றதால், ஹே பகவானே! நான் அத்யயனம் செய்த ரிக்வேதத்தின் ஸ்மரணம் உள்ளது. (ஞாபகம் உள்ளது) என்று கூறியதற்கான காரணம் எதை அறிந்திருக்கின்றாயோ அதைக்கூறு என்று விக்ஞான விஷயத்தில் பிரச்னம் செய்திருந்தார். அவ்வாறே யஜுர்வேதம், சாமவேதம், நான்காவதான அதர்வணவேதத்தை அறிவேன். “वेद” (வேத- அறிந்தேன்) என்ற சப்தத்தின் பிரயோகத்தால் ஏற்பட்டதின் காரணமாக இதிஹாசம், புராணரூப ஐந்தாவது வேதத்தையும் அறிந்திருக்கின்றேன். மஹாபாரதத்துடன் சேர்த்து ஐந்து வேதங்களின் (वेद) அறிவு என்றது வியாகரணம் ஆகும். ஏன்எனில் வியாகரணத்தின் மூலமாக பதம் முதலியவைகளின் விபாக பூர்வமாக ரிக்வேத முதலியவைகளின் ஞானம் உண்டாகிறது. பித்ரிய - சிராத்த கல்பம், ராசி - கணிதம், தைவ உத்பாத்த ஞானம், நிதி- மஹாகாலம் முதலிய நிதி சாஸ்த்திரம், வாக்கோ வாக்கியம்- தர்க்க சாஸ்த்திரம், ஏகாயன- நீதி சாஸ்திரம், தேவவித்யா- நிருக்தம், பிரஹ்மவித்யா- பிரஹ்மா என்பது ரிக், யஜுர், சாம என்னும் வேதங்களின் வித்யை ஆகிய சிக்ஷா, கல்பம், சந்தஸ், சித்தங்கள், பூதவித்யா- பூத சாஸ்திரம், க்ஷத்ரவித்யா - தனுர்வித்யை, நக்ஷத்திரானீரூபவித்யா - ஜ்யோதிஷம், சர்ப்ப, தேவ ஜனவித்யா- கந்த யுக்தி, நடனம், கானம், வாத்தியம் மேலும் சில்ப்பம் முதலிய விக்ஞானம் ஆகிய இவைகள் எல்லாவற்றையும் ஹே பகவானே! நான் அறிந்திருக்கின்றேன்.
सोऽहं भगवो मन्‍त्रविदेवास्मि नात्मविच्छ्रुतं ह्येव मे भगवद्दृशेभ्यस्तरति शोकमात्मविदिति सोऽहं भगवः शोचामि तं मा भगवाञ्छोकस्य पारं तारयत्विति तं होवाच यद्वै किञ्चैतदध्यगीष्ठा नामैवैतत् ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - ஹே பகவானே! நான் மந்திரத்தை மாத்திரம் அறிந்தவனாக இருக்கின்றேன். நான் ஆத்மாவை அறிந்தவன் அல்ல. ஆத்மாவை அறிந்தவன் சோகத்தைக் கடக்கிறான் என்று உங்களிடம் இருந்து நான் கேட்டிருக்கிறேன். ஹே பகவானே! நான் சோகத்துடன் இருக்கின்றேன். ஹே பகவானே! என்னை சோகத்திலிருந்து கடைத்தேறச் செய்யுங்கள். அப்பொழுது சனத்குமாரர் அவரிடம் கூறினார் - நீ எதை அறிந்து இருக்கின்றாயோ அது நாமமே ஆகும்.
सोऽहं भगवः एतत्सर्वं जानन्नपि मन्‍त्रविदेवास्मि शब्दार्थमात्रविज्ञानवानेवास्मीत्यर्थः । सर्वो हि शब्दः अभिधानमात्रम् अभिधानं च सर्वं मन्त्रेष्वन्तर्भवति । मन्‍त्रविदेवास्मि मन्‍त्रवित्कर्मविदित्यर्थः । ‘मन्त्रेषु कर्माणि’ (छा. उ. ७ । ४ । १) इति हि वक्ष्यति । न आत्मवित् न आत्मानं वेद्मि ।
அனுவாதம் - ஹே பகவானே! அது நான் (सोऽहं) என்பது எல்லாம் அறிந்து இருந்தும் மந்திரத்தை மாத்திரம் அறிந்தவனாக இருக்கின்றேன். அதாவது சப்தார்த்தத்தை மட்டும் அறிந்துள்ளேன் என்பது பொருள். எல்லா சப்தங்களும் நாமங்களே எல்லா நாமங்களும் மந்திரங்களில் அடங்கி உள்ளது. மந்திரங்களை அறிந்தவனாக உள்ளேன். மந்திரங்களை அறிந்தவன் (मन्त्रवित्) என்பது கர்மங்களை அறிந்தவன் (कर्मवित्) என்பது பொருள். “मन्त्रेषु कर्माणि” (மந்திரேஷு கர்மாணி) என்று கூறப்போகிறது. நான் ஆத்மாவை அறியவில்லை.
नन्वात्मापि मन्त्रैः प्रकाश्यत एवेति कथं मन्‍त्रविच्चेत् नात्मवित् ?
அனுவாதம் - சங்கை - ஆனால் ஆத்மாவும் மந்திரங்களால் பிரகாசப்படுத்துவதால் எதற்காக மந்திரவித் (நாரதர்) ஆத்மாவை அறியவில்லை.
न, अभिधानाभिधेयभेदस्य विकारत्वात् । न च विकार आत्मेष्यते । नन्वात्माप्यात्मशब्देन अभिधीयते । न, ‘यतो वाचो निवर्तन्ते’ (तै. उ. २ । ९ । १), ‘यत्र नान्यत्पश्यति’ (छा. उ. ७ । २४ । १) इत्यादिश्रुतेः ।
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறு அல்ல. ஏன்எனில் நாமம், நாமம் உடையது என்ற பேதம் எதற்கோ அதுவே விகாரம் ஆகும். இங்கு விகார ஆத்மாவை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் ஆத்மாவும் ஆத்ம சப்தத்தால் கூறப்படுகிறதே எனில் அவ்வாறு அல்ல ஏன்எனில் “यतो वाचो निवर्तन्ते” (யதோ வாசோ நிவர்த்தந்தே) “यत्र नान्यत्पश्यति” (யத்ர நான்யத்பஷ்யதி) என்பது முதலிய ஸ்ருதிகளால் (அதனை வாக்கு எட்டாததும், காணமுடியாததுமாக) சித்திக்கிறது.
कथं तर्हि ‘आत्मैवाधस्तात्’ (छा. उ. ७ । २५ । २) ‘स आत्मा’ (छा. उ. ६ । १६ । १) इत्यादिशब्दाः आत्मानं प्रत्याययन्ति ?
அனுவாதம் - சங்கை- ஆனால் எவ்வாறு “आत्मैवाधस्तात्” “स आत्मा” (ஆத்மைவாதஸ்தாத், ச ஆத்மா) என்பது முதலிய சப்தங்களால் இவ்வாறு ஆத்மாவைக் கூறுகின்றனர்?
नैष दोषः । देहवति प्रत्यगात्मनि भेदविषये प्रयुज्यमानः शब्दः देहादीनामात्मत्वे प्रत्याख्यायमाने यत्परिशिष्टं सत् , अवाच्यमपि प्रत्याययति — यथा सराजिकायां दृश्यमानायां सेनायां छत्रध्वजपताकादिव्यवहिते अदृश्यमानेऽपि राजनि एष राजा दृश्यत इति भवति शब्दप्रयोगः ; तत्र कोऽसौ राजेति राजविशेषनिरूपणायां दृश्यमानेतरप्रत्याख्याने अन्यस्मिन्नदृश्यमानेऽपि राजनि राजप्रतीतिर्भवेत् —तद्वत् ।
அனுவாதம் - ஸமாதானம் - இதில் எந்த ஒரு தோஷமும் இல்லை. பேத விஷயமான தேஹத்தை உடைய பிரத்யக் ஆத்மாவில் பிரயோகிக்கப்படும் சப்தம், தேஹம் முதலியவைகளின் ஆத்மத்துவம் இல்லையென்று ஆனதும் சத் மாத்திரமே மிஞ்சுகிறது. அது வாச்சியமாக இல்லாவிடினும் (லக்ஷணத்தினால்) அதன் ஞானம் உண்டாகிறது. எவ்வாறு ராஜாவுடன் காணப்படும் சேனையில் குடை, தண்டம் மேலும் கொடி முதலியவைகளின் கூட்டத்தால் ராஜாவைக் காணமுடியவில்லை. ஆயினும் அந்த ராஜாவைப் பார்க்கிறேன் என்று பிரயோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு இருக்கும்பொழுது இதில் ராஜா யார் என்று கேள்வி எழும்புகின்றது. ராஜாவைப் பற்றி கூறுபவன் விசேஷமான லக்ஷணங்களுடன் கூடியவனை நிரூபணம் செய்தபின் மற்ற பார்க்கப்படுகின்ற புருஷர்களை தவிர்த்து அவர்களைவிட வேறான ராஜாவை நேராக காண முடியவில்லை ஆனாலும் ராஜாவின் ஞானம் ஏற்படுகிறது. (இவ்வாறு அநாத்மாவை நீக்கி ஆத்ம ஞானம் உண்டாகிறது.)
तस्मात्सोऽहं मन्‍त्रवित् कर्मविदेवास्मि, कर्मकार्यं च सर्वं विकार इति विकारज्ञ एवास्मि, न आत्मवित् न आत्मप्रकृतिस्वरूपज्ञ इत्यर्थः । अत एवोक्तम् ‘आचार्यवान्पुरुषो वेद’ (छा. उ. ६ । १४ । २) इति ; ‘यतो वाचो निवर्तन्ते’ (तै. उ. २ । ९ । १) इत्यादिश्रुतिभ्यश्च ।
அனுவாதம் - (நாரதர் கூறினார்-) ஆகையால் அந்த நான் “यतो वाचो निवर्तन्ते” மந்திரவித் அதாவது கர்ம வித்தாக இருக்கிறேன். கர்மம் காரியம் எல்லாம் விகாரமாக்கும் என்பதால் நான் விகாரக்ஞனாக (விகார ஞானமுடையவனாக) இருக்கிறேன். நான் ஆத்மாவை அறிந்தவன் அல்ல. ஆத்மரூப பிரக்ருதியின் (காரணத்தின்) ஸ்வரூபத்தை அறியாதவனாக இருக்கின்றேன் என்பது பொருள். ஆகையால் இவ்வாறு ஸ்ருதிகளில் இதற்கு பிரமாணங்கள் இருக்கின்றன. அதாவது “आचार्यवान्पुरुषो वेद” (ஆச்சாரியவான்புருஷோ வேத) என்றும், “यतो वाचो निवर्तन्ते” (யதோ வாசோ நிவர்தந்தே) என்றும் உள்ளன.
श्रुतमागमज्ञानमस्त्येव हि यस्मात् मे मम भगवद्दॄशेभ्यो युष्मत्सदृशेभ्यः तरति अतिक्रमति शोकं मनस्तापम् अकृतार्थबुद्धिताम् आत्मवित् इति ; अतः सोऽहमनात्मवित्त्वात् हे भगवः शोचामि अकृतार्थबुद्ध्या सन्तप्ये सर्वदा ; तं मा मां शोकस्य शोकसागरस्य पारम् अन्तं भगवान् तारयतु आत्मज्ञानोडुपेन कृतार्थबुद्धिमापादयतु अभयं गमयत्वित्यर्थः ।
அனுவாதம் - எதனால் தங்களைப் போன்றவர்களிடம் இருந்து சோகம் அதாவது மனதின் தாபம் என்னும் அக்ருதார்த்த புத்தியை ஆத்மவித்து கடக்கிறான் என்று எனக்கு ஆகமஞானம் உள்ளது. ஆனாலும் ஹே பகவானே! அந்த நான் அநாத்ம வித்தாய் இருப்பதால் சோகமுடையவனாய் அகிருதார்த்த புத்தியினால் எப்பொழுதும் அதனால் தாபித்துக்கொண்டு இருக்கும் என்னை ஹே பகவானே! சோகமாகிய கடலை கடப்பதற்கான ஆத்மஞானம் என்னும் ஓடத்தால் என்னை தாண்டச்செய்து காப்பாற்றுவீராக. கிருதார்த்த புத்தியை அடையச் செய்யுங்கள். அதாவது அபயத்தை அடையச் செய்யுங்கள்.
तम् एवमुक्तवन्तं ह उवाच — यद्वै किञ्च एतदध्यगीष्ठाः अधीतवानसि, अध्ययनेन तदर्थज्ञानमुपलक्ष्यते, ज्ञातवानसीत्येतत् , नामैवैतत् , ‘वाचारम्भणं विकारो नामधेयम्’ (छा. उ. ६ । १ । ४) इति श्रुतेः ॥
அனுவாதம் - இவ்வாறு கூறினவரிடம் (நாரதரிடம்) இவ்வாறு சனத்குமாரர் கூறினார்- நீர் எந்த அளவு அத்யயனம் செய்திருக்கிறீரோ அந்த அத்யயனத்தால் அதன் அர்த்த ஞானமும் உபலக்ஷிக்கப்படுகிறது. அதாவது நீர் எதுவரை அறிந்துள்ளீரோ அது நாமமேயாகும். ஏன்எனில் “वाचारम्भणं विकारो नामधेयम्” (வாசாரம்பணம் விகாரோ நாமதேயம்) என்று சுருதி வாக்கியத்தால் அறிகிறோம்.
नाम वा ऋग्वेदो यजुर्वेदः सामवेद आथर्वणश्चतुर्थ इतिहासपुराणः पञ्चमो वेदानां वेदः पित्र्यो राशिर्दैवो निधिर्वाकोवाक्यमेकायनं देवविद्या ब्रह्मविद्या भूतविद्या क्षत्त्रविद्या नक्षत्रविद्या सर्पदेवजनविद्या नामैवैतन्नामोपास्स्वेति ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - ரிக்வேதம் என்ற பெயர் அவ்வாறே யஜுர்வேதம், சாமவேதம், நான்காவதான அதர்வணவேதம், ஐந்தாவது வேதமாகிய இதிஹாசம் புராணம், வேதங்களின் வேதம் (வியாகரணம்) ஸ்ரார்த்தகல்பம், கணிதம், உத்பாத்த ஞானம், நிதிஞானம், தர்க்கசாஸ்திரம், நீதிசாஸ்திரம், நிருக்தம், வேதவித்யா, பிரஹ்மவித்யா, பூதவித்யா, தனுர்வித்யா, ஜ்யோதிஷம் காருடவித்யா, சங்கீதம் முதலிய கலைகள். மேலும் சிற்பவித்யா இவை எல்லாம் நாமமே. நீ பிரஹ்மம் என்று நாமத்தை பிரஹ்மபுத்தியால் உபாசி.
नाम वा ऋग्वेदो यजुर्वेद इत्यादि नामैवैतत् । नामोपास्स्व ब्रह्मेति ब्रह्मबुद्ध्या — यथा प्रतिमां विष्णुबुद्ध्या उपास्ते, तद्वत् ॥
அனுவாதம் - ரிக்வேதம் நாமமே. அவ்வாறே யஜுர்வேதம் முதலியவைகளும் இந்த நாமமே ஆகும். எவ்வாறு பிரதிமையில் விஷ்ணு புத்தியால் உபாசிக்கின்றோமோ அவ்வாறு பிரஹ்ம என்று பிரஹ்ம புத்தியால் நாமத்தை உபாசனை செய்.
स यो नाम ब्रह्मेत्युपास्ते यावन्नाम्नो गतं तत्रास्य यथाकामचारो भवति यो नाम ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवो नाम्नो भूय इति नाम्नो वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் நாமத்தை இது பிரஹ்மம் என்று உபாசிக்கின்றானோ அவனுக்கு எதுவரை நாமத்தின் கதி ஏற்படுகிறதோ அதுவரை எவ்வாறு தன் இச்சையோ அதன் அனுசாரமாக கதியை அடைகிறான். எவன் இந்த நாமத்தை “இது பிரஹ்மம்” என்று உபாசனை செய்கின்றவனுக்கு. (நாரதர்) ஹே பகவனே! என்ன இந்த நாமத்தைவிட மேலானது ஏதாவது உள்ளதா? (சனத்குமாரர்) நாமத்தைவிட மேலானது உள்ளது. (நாரதர்) அவ்வாறு ஆனால் ஹே பகவான்! எனக்கு அதைக் கூறுங்கள் என்று.
स यस्तु नाम ब्रह्मेत्युपास्ते, तस्य यत्फलं भवति, तच्छृणु — यावन्नाम्नो गतं नाम्नो गोचरं तत्र तस्मिन् नामविषयेअस्य यथाकामचारः कामचरणं राज्ञ इव स्वविषये भवति । यो नाम ब्रह्मेत्युपास्ते इत्युपसंहारः । किमस्ति भगवः नाम्नो भूयः अधिकतरं यद्ब्रह्मदृष्ट्यर्हमन्यदित्यभिप्रायः । सनत्कुमार आह — नाम्नो वाव भूयः अस्त्येवेति । उक्तः आह — यद्यस्ति तन्मे भगवान्ब्रवीतु इति ॥
அனுவாதம் - எவன் ஒருவன் நாமம் பிரஹ்மம் என்று உபாசிக்கின்றானே அவனுக்கு என்ன பலன் என்பதைக்கேள் - எதுவரை நாமத்தின் விஷயமாகிறதோ அதுவரை அந்த நாமத்தின் விஷயத்தில் எவ்வாறு ராஜா தன் விஷயத்தில் தான் நினைத்தபடி செயல்பட முடிகிறதோ அவ்வாறு நினைத்தபடி நடக்கும். எந்த நாமத்தை பிரஹ்மம் என்று உபாசனை செய் என்று உபசம்ஹாரம் செய்யப்படுகிறது. (முடிக்கப்படுகிறது). ஹே பகவானே! நாமத்தைக் காட்டிலும் மேலானது எது? அதாவது பிரஹ்ம திருஷ்டிக்கு யோக்யமான வேறு வஸ்து உள்ளதா? என்பது இதன் அபிப்பிராயம். சனத்குமாரர் கூறினார்- நாமத்தைக் காட்டிலும் மேலானது உள்ளது. இவ்வாறு கூறியபின் (நாரதர்) ஹே பகவானே! அவ்வாறு இருந்தால் அதை எனக்குக் கூறுங்கள்.
इति प्रथमखण्डभाष्यम् ॥
वाग्वाव नाम्नो भूयसी वाग्वा ऋग्वेदं विज्ञापयति यजुर्वेदꣳ सामवेदमाथर्वणं चतुर्थमितिहासपुराणं पञ्चमं वेदानां वेदं पित्र्यꣳ राशिं दैवं निधिं वाकोवाक्यमेकायनं देवविद्यां ब्रह्मविद्यां भूतविद्यां क्षत्रविद्यां सर्पदेवजनविद्यां दिवं च पृथिवीं च वायुं चाकाशं चापश्च तेजश्च देवाꣳश्च मनुष्याꣳश्च पशूꣳश्च वयाꣳसि च तृणवनस्पतीञ्श्वापदान्याकीटपतङ्गपिपीलकं धर्मं चाधर्मं च सत्यं चानृतं च साधु चासाधु च हृदयज्ञं चाहृदयज्ञं च यद्वै वाङ्नाभविष्यन्न धर्मो नाधर्मो व्यज्ञापयिष्यन्न सत्यं नानृतं न साधु नासाधु न हृदयज्ञो नाहृदयज्ञो वागेवैतत्सर्वं विज्ञापयति वाचमुपास्स्वेति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - வாக் நாமத்தைவிட மேலானது. வாக்கே ரிக்வேதத்தை அறியச்செய்கிறது. அவ்வாறு யஜுர்வேதம், சாமவேதம், நான்காவதான அதர்வண வேதம், ஐந்தாவது வேதமான இதிஹாச புராணங்கள், வேதங்களின் வேதம் வியாக்கரணம், ஸ்ராத்தகல்பம், கணிதம், உத்பாத்த சாஸ்திரம், நிதிஞானம், தர்க்கசாஸ்திரம், நீதி, நிருக்தம், வேதவித்யா, பிரஹ்மவித்யா, பூதவித்யா, தனுர்வித்யா, ஜ்யோதிஷம், காருடஞானம், சங்கீதம் முதலிய சாஸ்திரங்கள், மேல் உலகம், பிருதிவீ, வாயு, ஆகாசம், ஜலம், தேஜஸ், தேவ, மனுஷ்ய, பசு, பக்ஷி, புல், மூலிகை, புலி (மிருகம்) புழு, விட்டில், எறும்பு வரையிலான பிராணிவர்க்கங்கள், தர்மம் அதர்மம், சத்தியம் - பொய், சாது (நல்லது) அசாது (கெட்டது), இனிமையானது இனிமை அற்றது என்பவை எல்லாம் வாக் இல்லையெனில் தர்மம் அற்றதையோ, அதர்மம் அற்றதையோ அறியமுடியாது. அவ்வாறே சத்யம் அல்லாததையும், பொய் அல்லாததையும், நல்லதையும், கெட்டதையும் நம்மால் அறியமுடியாது வாக்தான் இவை எல்லாவற்றின் ஞானத்தையும் அளிக்கிறது. ஆகையால் வாக்கை ப்ரஹ்மம் என்று உபாசனைசெய்.
वाग्वाव । वागिति इन्द्रियं जिह्वामूलादिष्वष्टसु स्थानेषु स्थितं वर्णानामभिव्यञ्जकम् । वर्णाश्च नामेति नाम्नो वाग्भूयसीत्युच्यते । कार्याद्धि कारणं भूयो दृष्टं लोके — यथा पुत्रात्पिता, तद्वत् ।
அனுவாதம் - “वाग्वाव” (வாக்வாவ) - வாக் என்பது ஜிஹ்வா (நாக்கின்) மூலம் முதலிய எட்டு ஸ்தானங்களில் இருக்கும் வர்ணங்களே (எழத்துக்களே) நாமம் ஆகும். இதனால் வாக்கே நாமத்தைக்காட்டிலும் மேலானது என்று கூறப்படுகிறது. வர்ணமே நாமம் ஆவதால் நாமத்தைவிட வாக் மேலானது என்று கூறப்படுகிறது. உலகில் புத்திரனைவிட பிதா மேலானவனாகக் காணப்படுவதுபோல் காரியத்தினால் காரணம் மேலானது என்று அறியப்படுகிறது.
कथं च वाङ्नाम्नो भूयसीति, आह — वाग्वा ऋग्वेदं विज्ञापयति — अयम् ऋग्वेद इति । तथा यजुर्वेदमित्यादि समानम् । हृदयज्ञं हृदयप्रियम् ; तद्विपरीतमहृदयज्ञम् । यत् यदि वाङ् नाभविष्यत् धर्मादि न व्यज्ञापयिष्यत् , वागभावे अध्ययनाभावः अध्ययनाभावे तदर्थश्रवणाभावः तच्छ्रवणाभावे धर्मादि न व्यज्ञापयिष्यत् न विज्ञातमभविष्यदित्यर्थः । तस्मात् वागेवैतत् शब्दोच्चारणेन सर्वं विज्ञापयति । अतः भूयसी वाङ्नाम्नः । तस्माद्वाचं ब्रह्मेत्युपास्स्व ॥
அனுவாதம் - வாக் நாமத்தைவிட எவ்வாறு மேன்மையானது? அதற்கு கூறப்படுகிறது - இது ரிக்வேதம் என்று வாக் ரிக்வேதத்தை தெரிவிக்கின்றது. அவ்வாறே யஜுர்வேதம் முதலியவைகளையும் தெரிவிக்கின்றது. “ह्य्दयज्ञं” (ஹ்ருதயக்ஞம்) என்பது ஹிருதயத்தின் பிரியம். அதைவிட விபரீதமானது அஹ்ருதயக்ஞம். வாக் இல்லையெனில் தர்மங்கள் முதலிய விஷயங்களை அறியமுடியாது. வாக் இல்லாவிடில் அத்யயனம் செய்யமுடியாது. அத்யயனம் இல்லாததால் அதன் அர்த்தத்தின் சிரவணமும் இல்லாததால் தர்மம் முதலியவைகளின் ஞானமும் உண்டாகாது. ஆகையால் வாக்கினால் சப்தம் உச்சாரணை செய்யப்படுவதால் எல்லாம் அறியமுடிகிறது. ஆகையால் வாக்கே சிரேஷ்டமானது (மேன்மையானது). ஆகையால் வாக்கை பிரஹ்மம் என்று உபாசனை செய்.
स यो वाचं ब्रह्मेत्युपास्ते यावद्वाचो गतं तत्रास्य यथाकामचारो भवति यो वाचं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवो वाचो भूय इति वाचो वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இந்த வாக்கை “இது பிரஹ்மம்” என்று உபாசிக்கின்றானோ அவனுக்கு எதுவரை வாக்கின் கதி (வ்யாபித்வம்) உள்ளதோ அதுவரை தான் இஷ்டப்பட்டவாறு கதி கிடைக்கும். எவர் இந்த வாக்கை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கின்றனரோ அவர்களுக்கு. (நாரதர்) ஹே பகவானே! என்ன இந்த வாக்கைவிட மேன்மையானது உள்ளதா? (சனத்குமாரர்) வாக்கைக்காட்டிலும் மேன்மையானது உள்ளது. (நாரதர்) ஹே பகவானே! அதை எனக்குக் கூறுங்கள். மற்றவை சமானம்.
इति द्वितीयखण्डभाष्यम् ॥
मनो वाव वाचो भूयो यथा वै द्वे वामलके द्वे वा कोले द्वौ वाक्षौ मुष्टिरनुभवत्येवं वाचं च नाम च मनोऽनुभवति स यदा मनसा मनस्यति मन्त्रानधीयीयेत्यथाधीते कर्माणि कुर्वीयेत्यथ कुरुते पुत्रांश्च पशूंश्चेत्छेयेत्यथेच्छत इमं च लोकममुं चेत्छेयेत्यथेच्छते मनो ह्यात्मा मनो हि लोको मनो हि ब्रह्म मन उपास्स्वेति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - மனம் வாக்கைக்காட்டிலும் மேன்மையானது. இரண்டு நெல்லிக்கனிகளையோ, இரண்டு திராக்ஷகைளையோ அல்லது இரண்டு அக்ஷப்பழங்களையோ கையின் முஷ்ட்டிக்குள் அடக்கமுடியும். அவ்வாறு வாக்கையும், நாமத்தையும் மனதில் அடக்கமுடியும். இந்த புருஷன் எப்பொழுது மனதால் விசாரம் செய்கின்றானோ அப்பொழுது நான் “மந்திரங்களை ஓத” வேண்டும் என்று அப்பொழுது ஓதுகின்றன. எப்பொழுது கர்மங்களை செய்வேன் என்று கர்மத்தை செய்கின்றானோ அப்பொழுது நினைக்கின்றான் நான் புத்திரன் மேலும் பசுக்களை இச்சிப்பேன் என்று. அப்பொழுது அவைகளை இச்சிக்கின்றான். அப்பொழுது இவ்வாறு சங்கல்பம் செய்கின்றான். இந்த லோகம் மற்றும் பரலோகத்திற்காக காமனை செய்வேன் என்று அப்பொழுது அவைகளை காமனை செய்கின்றான். மனமே ஆத்மா, மனமே லோகம், மனமே பிரஹ்மம், நீ மனத்தை பிரஹ்மம் என்று உபாசனை செய்.
मनः मनस्यनविशिष्टमन्तःकरणं वाचः भूयः । तद्धि मनस्यनव्यापारवत् वाचं वक्तव्ये प्रेरयति । तेन वाक् मनस्यन्तर्भवति । यच्च यस्मिन्नन्तर्भवति तत्तस्य व्यापकत्वात् ततो भूयो भवति । यथा वै लोके द्वे वा आमलके फले द्वे वा कोले बदरफले द्वौ वा अक्षौ विभीतकफले मुष्टिरनुभवति मुष्टिस्ते फले व्याप्नोति मुष्टौ हि ते अन्तर्भवतः, एवं वाचं च नाम च आमलकादिवत् मनोऽनुभवति ।
அனுவாதம் - மனம் - மனன சக்தியுடன் கூடிய அந்தக்கரணம் வாக்கைக்காட்டிலும் சிறந்தது. அது மனன வியாபாரத்துடன் கூடிய மனமே வாக்கை கூற(பேச) வேண்டிய விஷயத்தில் பிரேரணை செய்கிறது. ஆகையால் வாக் மனதில் அந்தர்கதமாக உள்ளது. (அடங்கிஉள்ளது) மேலும் எதனுள் அந்தர்கதமாக உள்ளதோ அதை அபேக்ஷித்து அது வியாபகமாக இருப்பதால் அதைவிட சிறந்ததாக ஆகிறது. உலகில் எவ்வாறு இரண்டு நெல்லிக்கனி இரண்டு திராக்ஷை, இரண்டு பதரிபழம் கை முஷ்ட்டியில் வியாபித்திருக்கிறதோ ஆகையால் அது அந்தர்கதமாகிறது. இவ்வாறு நெல்லிக்கனி முதலியவைகளைப் போல் வாக்கு, நாமம் ஆகிய இரண்டும் மனதில் அடங்கியுள்ளது அதாவது மனது அவைகளை அனுபவிக்கின்றது.
स यदा पुरुषः यस्मिन्काले मनसा अन्तःकरणेन मनस्यति, मनस्यनं विवक्षाबुद्धिः, कथं मन्त्रान् अधीयीय उच्चारयेयम् — इत्येवं विवक्षां कृत्वा अथाधीते । तथा कर्माणि कुर्वीयेति चिकीर्षाबुद्धिं कृत्वा अथ कुरुते । पुत्रांश्च पशूंश्च इच्छेयेति प्राप्तीच्छां कृत्वा तत्प्राप्त्युपायानुष्ठानेन अथेच्छते, पुत्रादीन्प्राप्नोतीत्यर्थः । तथा इमं च लोकम् अमुं च उपायेन इच्छेयेति तत्प्राप्त्युपायानुष्ठानेन अथेच्छते प्राप्नोति ।
அனுவாதம் - அந்த புருஷன் எப்பொழுது மனம் அதாவது மனம் அத்யயனம் செய்ய விரும்புகிறதோ அது எவ்வாறு? மந்திரங்களை அத்யயனம் செய்து உச்சரிக்கின்றேன் என்று விரும்பி அத்யயனம் செய்கிறது. அவ்வாறே கர்மங்களை செய்கின்றேன் என்ற புத்தியை செய்து கர்மம் செய்து புத்திரன் மேலும் பசுக்களை விரும்பி அதை அடைய வேண்டியதற்கான கர்மங்களை செய்து விரும்பியவாறு புத்ரன் முதலியவைகளை அடைகிறான் என்பது பொருள். அவ்வாறே இந்த லோகத்தையும், அந்த மேல் லோகத்தையும் விரும்பி அவைகளின் பிராப்த்திக்கான உபாய அனுஷ்டானத்தால் விரும்பியதை அடைகின்றான்.
मनो हि आत्मा, आत्मनः कर्तृत्वं भोक्तृत्वं च सति मनसि नान्यथेति मनो हि आत्मेत्युच्यते । मनो हि लोकः, सत्येव हि मनसि लोको भवति तत्प्राप्त्युपायानुष्ठानं च इति मनो हि लोकः यस्मात् , तस्मान्मनो हि ब्रह्म । यत एवं तस्मान्मन उपास्स्वेति ॥
அனுவாதம் - மனமே ஆத்மா. ஏன்எனில் மனம் இருப்பதால் தான் ஆத்மாவிற்கு கர்த்ருத்தவம், போக்த்ருத்துவம் சித்திக்கிறது. வேறு வகையால் அல்ல. இதனால் மனமே ஆத்மா எனப்படுகிறது. மனமே லோகம். ஏன் எனில் மனம் இருப்பதால் தான் லோகம் இருக்கிறது. அதனை அடைவதற்கான உபாயமும் அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வாறு இருப்பதால் மனமே லோகம். ஆகையால் மனமே பிரஹ்மம். இவ்வாறு இருப்பதால் மனதை பிரஹ்மம் என்று உபாசனை செய் என்பதாகும்.
स यो मनो ब्रह्मेत्युपास्ते यावन्मनसो गतं तत्रास्य यथाकामचारो भवति यो मनो ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवो मनसो भूय इति मनसो वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் மனதை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கின்றானோ அவனுடைய மனம் எதுவரை செல்கிறதோ அதுவரை தன் இச்சைப்படுவதற்கான கதி ஏற்படுகிறது. எவன் மனதை இது பிரஹ்மம் என்று உபாசனை செய்கின்றவனுக்கு. (நாரதர்-) பகவானே! என்ன மனதைவிட மேன்மையானது உள்ளதா? (சனத்குமாரர்) மனதிற்கும் மேலானது உள்ளது. (நாரதர்-) பகவானே! எனக்கு அதைக்குறித்து விளக்குங்கள்.
इति तृतीयखण्डभाष्यम् ॥
सङ्कल्पो वाव मनसो भूयान्यदा वै सङ्कल्पयतेऽथ मनस्यत्यथ वाचमीरयति तामु नाम्नीरयति नाम्नि मन्त्रा एकं भवन्ति मन्त्रेषु कर्माणि ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - சங்கல்பமே மனதைவிட மேன்மையானது. எப்பொழுது புருஷன் சங்கல்பிக்கின்றானோ அப்பொழுது அது நினைக்கிறது. அழ்ன் வாக்கைப் பிரேரணை செய்கிறது. அதனால் அது நாமமாக பிரவிர்த்தி ஆகின்றது. அந்த நாமத்தில் எல்லா மந்திரங்களும் ஒரே ரூபமாக ஆகின்றன. மேலும் மந்திரங்களில் கர்மங்கள் அந்தர்பாவமாகிறது. (அடங்குகிறது)
सङ्कल्पो वाव मनसो भूयान् । सङ्कल्पोऽपि मनस्यनवत् अन्तःकरणवृत्तिः, कर्तव्याकर्तव्यविषयविभागेन समर्थनम् । विभागेन हि समर्थिते विषये चिकीर्षाबुद्धिः मनस्यनानन्तरं भवति । कथम् ? यदा वै सङ्कल्पयते कर्तव्यादिविषयान्विभजते — इदं कर्तुं युक्तम् इदं कर्तुमयुक्तमिति, अथ मनस्यति मन्त्रानधीयीयेत्यादि । अथ अनन्तरं वाचम् ईरयति मन्त्राद्युच्चारणे । तां च वाचम् उ नाम्नि नामोच्चारणनिमित्तं विवक्षां कृत्वा ईरयति । नाम्नि नामसामान्ये मन्त्राः शब्दविशेषाः सन्तः एकं भवन्ति अन्तर्भवन्तीत्यर्थः । सामान्ये हि विशेषः अन्तर्भवति ।
அனுவாதம் - சங்கல்பமே மனதைவிட சிறந்தது. சங்கல்பமும் நினைப்பது போன்று அந்தக்கரண விருத்தியாகும். எது செய்யவேண்டும். எது செய்யக்கூடாது என்ற விஷயத்தை பிரித்து அறியும் சாமர்த்தியம் உடையது. அதை பிரித்து அளித்த விஷயத்தில் செய்யவேண்டும். என்பதில் இச்சை உள்ள புத்தியால் நினைக்கப்படுகிறது. அது எவ்வாறு? எப்பொழுது சங்கல்பிக்கின்றானோ அதாவது இதை செய்ய விரும்புகிறேன் என்று கர்த்தவ்ய விஷயங்களை பிரிக்கின்றானோ அப்பொழுது இவ்வாறு நினைக்கின்றான்- நான் மந்திரங்களை அத்யயனம் செய்வேன் என்று அதன்பின் மந்திரங்களை உச்சரிப்பதற்கு வாக்கை பிரேரணை செய்கிறது. மேலும் அந்த வாக்கின் நாமத்தில் அதாவது நாமத்தை உச்சரிப்பதற்கான நிமித்தமானதை இச்சித்து நாமத்தில் பிரேரணை செய்கின்றது. அவ்வாறே நாமரூப சாமான்ய மந்திரத்தில் எந்த விசேஷ ரூப சப்தமுள்ளதோ அது ஒன்றாகிவிடுகிறது. அதாவது அதில் அந்தர்பாவமாகிறது. ஏன்எனில் சாமான்யத்தில் விசேஷம் அந்தர்பாவத்தை அடைகிறது.
मन्त्रेषु कर्माण्येकं भवन्ति । मन्‍त्रप्रकाशितानि कर्माणि क्रियन्ते, न अमन्‍त्रकमस्ति कर्म । यद्धि मन्‍त्रप्रकाशनेन लब्धसत्ताकं सत् कर्म, ब्राह्मणेनेदं कर्तव्यम् अस्मै फलायेति विधीयते, याप्युत्पत्तिर्ब्राह्मणेषु कर्मणां दृश्यते, सापि मन्त्रेषु लब्धसत्ताकानामेव कर्मणां स्पष्टीकरणम् । न हि मन्त्राप्रकाशितं कर्म किञ्चित् ब्राह्मणे उत्पन्नं दृश्यते । त्रयीविहितं कर्मेति प्रसिद्धं लोके ; त्रयीशब्दश्च ऋग्यजुःसामसमाख्या । मन्त्रेषु कर्माणि कवयो यान्यपश्यन् — इति च आथर्वणे । तस्माद्युक्तं मन्त्रेषु कर्माण्येकं भवन्तीति ॥
அனுவாதம் - மந்திரங்களில் கர்மங்கள் ஒரே ரூபமாகிறது. மந்திரங்களினால் பிரகாசப்படுத்தப்பட்டு கர்மங்கள் செய்யப்படுகின்றன. மந்திரங்கள் அற்ற கர்மங்கள் இல்லை. மந்திரத்தினால் பிரகாசப்படுத்தப்பட்ட சத் கர்மத்தால் அடைந்த சத்ததாவை (நன்மையை) அடையச்செய்யும் சத்கர்மாக்களை ஸ்பஷ்டமாக உத்பத்தி பிராஹ்மணங்களினால் தெளிவுபடுத்தப்படுகிறது. மந்திரங்களால் பிரகாசம் படுத்தப்படாத கர்மங்கள் பிராஹ்மண பாகங்களில் உண்டாவது காணப்படவில்லை. உலகில் त्रयीविहितंकर्मा” (த்ரயீவிஹிதம்கர்மா) என்பது பிரசித்தமாகும். த்ரயீ என்பது ரிக், யஜுர், சாமாவைக் குறிப்பதாகும். “मन्त्रेषु कर्माणि कवयो यान्यपश्यन्” (மந்த்ரேஷு கர்மாணி கவயோ யான்யபச்யன்) என்று அதர்வண உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகையால் மந்திரங்களில் கர்மா ஏக ரூபமாகிறது. (ஒன்றாகிறது) என்பது சரியானதே (பொருத்தமே) ஆகும்.
तानि ह वा एतानि सङ्कल्पैकायनानि सङ्कल्पात्मकानि सङ्कल्पे प्रतिष्ठितानि समक्लृप्तां द्यावापृथिवी समकल्पेतां वायुश्चाकाशं च समकल्पन्तापश्च तेजश्च तेषाꣳ सङ्‍क्लृत्यै वर्षꣳ सङ्कल्पते वर्षस्य सङ्क्लृप्त्या अन्नꣳ सङ्कल्पतेऽन्नस्य सङ्‍क्लृत्यै प्राणाः सङ्कल्पन्ते प्राणानाꣳ सङ्‍क्लृत्यै मन्त्राः सङ्कल्पन्ते मन्त्राणाꣳ सङ्‍क्लृत्यै कर्माणि सङ्कल्पन्ते कर्मणाꣳ सङ्‍क्लृत्यै लोकः सङ्कल्पते लोकस्य सङ्‍क्लृत्यै सर्वꣳ सङ्कल्पते स एष सङ्कल्पः सङ्कल्पमुपास्स्वेति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எந்த அந்த (மனம் முதலியவைகள்) இவை எல்லாம் ஒரே சங்கல்ப ரூபமான லயஸ்தானத்தை உடையதும், சங்கல்பமயமானதும், சங்கல்பத்தில் நிலைபெற்றுள்ளன. மேல் உலகமும், இவ்வுலகமும் சங்கல்பம் செய்தன. வாயுவும், ஆகாசமும் சங்கல்பம் செய்தன. ஜலமும், தேஜஸும் சங்கல்பம் செய்தன. இவைகளின் சங்கல்பத்தால் மழை சங்கல்பித்தது. விருஷ்டி சங்கல்பம் செய்ததால் அன்னம் சங்கல்பம் செய்தது. அன்னத்தின் சங்கல்பத்தால் பிராணன் உண்டாயிற்று. பிராணன் சங்கல்பத்தால் மந்திரம் உண்டாயிற்று மந்திரத்தின் சங்கல்பத்தால் கர்மம் உண்டாயிற்று. ஏன்எனில் சங்கல்பத்திற்காக லோகம் (பலம்) சாமர்த்தியம் உடையதாகிறது. மேலும் லோகங்களின் சங்கல்பத்திற்காக எல்லாம் உண்டாகிறது. இவ்வாறு சங்கல்பம் உள்ளது. நீ சங்கல்பத்தை உபாசனை செய்.
तानि ह वा एतानि मनआदीनि सङ्कल्पैकायनानि सङ्कल्पः एको अयनं गमनं प्रलयः येषां तानि सङ्कल्पैकायनानि, सङ्कल्पात्मकानि उत्पत्तौ, सङ्कल्पे प्रतिष्ठितानि स्थितौ । समक्लृपतां सङ्कल्पं कृतवत्याविव हि द्यौश्च पृथिवी च द्यावापृथिवी, द्यावापृथिव्यौ निश्चले लक्ष्येते । तथा समकल्पेतां वायुश्चाकाशं च एतावपि सङ्कल्पं कृतवन्ताविव । तथा समकल्पन्त आपश्च तेजश्च, स्वेन रूपेण निश्चलानि लक्ष्यन्ते ।
அனுவாதம் - அந்த இந்த மனம் முதலியவைகளுக்கு சங்கல்பமே ஒரே அடையவேண்டிய இடம். அதாவது சங்கல்பம் என்னும் ஒரே அடையவேண்டிய ஸ்தானம் லயமாகும் ஸ்தானம் எவைகளுக்கோ அவைகள் சங்கல்பத்திற்கான ஒரே அடையவேண்டிய ஸ்தானம். எது உத்பத்தி சமயத்தில் சங்கல்பமயமாய் உள்ளவை ஸ்திதி சமயத்தில் சங்கல்பத்தில் நிலைபெற்றுள்ளது. மேல் உலகமும் பிருதிவியும் மனதால் சங்கல்பித்தது. ஏன்எனில் மேல் உலகம், பிருதிவீ இரண்டும் சலனமற்று காணப்படுகின்றன. அவ்வாறே வாயு ஆகாசம் இரண்டும் மனதால் சங்கல்பித்தன. இவ்வாறு ஜலமும் தேஜஸ்ஸும் சங்கல்பித்தன. ஏன்எனில் ஸ்வரூபத்தால் சலனமற்ற தன்மையை தெரிவிக்கின்றன.
यतस्तेषां द्यावापृथिव्यादीनां सङ्‍क्लृप्त्यै सङ्कल्पनिमित्तं वर्षं सङ्कल्पते समर्थीभवति । तथा वर्षस्य सङ्‍क्लृप्त्यै सङ्कल्पनिमित्तम् अन्नं सङ्कल्पते । वृष्टेर्हि अन्नं भवति । अन्नस्य सङ्‍क्लृप्त्यै प्राणाः सङ्कल्पन्ते । अन्नमया हि प्राणाः अन्नोपष्ठम्भकाः । ‘अन्नं दाम’ (बृ. उ. २ । २ । १) इति हि श्रुतिः ।
அனுவாதம் - அந்த த்யுலோகம் பிருதிவீ முதலியவைகளின் சங்கல்பத்தினால் மழை உண்டாகிறது. அவ்வாறே மழையின் சங்கல்ப நிமித்தத்தால் அன்னம் உண்டாகிறது. மழையினால் அல்லவா அன்னம் உண்டாகிறது. அன்னத்தின் சங்கல்பத்தால் பிராணன் உண்டாகிறது. அன்னமயமே பிராணன் அது அன்னத்தை ஆஸ்ரயித்து இருக்கின்றது. “अन्नं दाम” (அன்னம் தாம) என்று ஸ்ருதி கூறுகிறது.
तेषां सङ्‍क्लृत्यै मन्त्राः सङ्कल्पन्ते । प्राणवान्हि मन्त्रानधीते नाबलः । मन्त्राणां हि सङ्‍क्लृप्त्यै कर्माण्यग्निहोत्रादीनि सङ्कल्पन्ते अनुष्ठीयमानानि मन्‍त्रप्रकाशितानि समर्थीभवन्ति फलाय । ततो लोकः फलं सङ्कल्पते कर्मकर्तृसमवायितया समर्थीभवतीत्यर्थः । लोकस्य सङ्‍क्लृत्यै सर्वं जगत् सङ्कल्पते स्वरूपावैकल्याय । एतद्धीदं सर्वं जगत् यत्फलावसानं तत्सर्वं सङ्कल्पमूलम् । अतः विशिष्टः स एष सङ्कल्पः । अतः सङ्कल्पमुपास्स्व — इत्युक्त्वा फलमाह तदुपासकस्य ॥
அனுவாதம் - அவைகளில் சங்கல்பத்திற்காக மந்திரங்கள் சங்கல்பிக்கப்படுகின்றன. (உண்டாகின்றன.) ஏன்எனில் பிராணன் உடையவனே (பலவானே) மந்திரங்களை ஓதமுடியும். பலம் அற்றவர்களால் ஓதமுடியாது. மந்திரங்களின் சங்கல்பத்தினால் (ஓதுவதினால்) அக்னிஹோத்திரம் முதலிய கர்மங்கள் உண்டாகின்றன. ஏன்எனில் மந்திரங்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட கர்மத்தை அனுஷ்டித்தபின் அது பலனை தருவதற்கு சமர்த்தமுடையதாக ஆகிறது. அவைகளால் லோகங்கள் இவைகளின் சங்கல்பத்தால் இந்த உலகம் முழுவதும் ஸ்வரூபத்தை வெளிப்படுத்த முடிகிறது. இந்த ஜகத் முழுவதின் பலத்திற்கும் சங்கல்பமே மூலகாரணம். ஆகையால் அந்த சங்கல்பமே மிகவும் சிறந்தது. ஆகையால் சங்கல்பத்தை உபாசனை செய் என்று கூறி அந்த உபாசகனுடைய பலத்தைக் கூறுகின்றனர்.
स यः सङ्कल्पं ब्रह्मेत्युपास्ते सङ्क्लृप्तान्वै स लोकान्ध्रुवान्ध्रुवः प्रतिष्ठितान् प्रतिष्ठितोऽव्यथमानानव्यथमानोऽभिसिध्यति यावत्सङ्कल्पस्य गतं तत्रास्य यथाकामचारो भवति यः सङ्कल्पं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवः सङ्कल्पाद्भूय इति सङ्कल्पाद्वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் சங்கல்பத்தை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கின்றானே அவன் சங்கல்பித்த லோகங்களை அடைந்து நிச்சயமாக அதில் அழிவற்று நிலைபெற்று அவன் விரும்பியவாறு இருப்பான். எது வரை சங்கல்பத்தின் கதியோ அதுவரை தான் விரும்பிதை அடைவான். எவனுடைய சங்கல்பம் “இது பிரஹ்மா” என்று உபாசிப்பவன் அதன் எல்லைவரை அடைவான். (நாரதர்) பகவானே சங்கல்பத்தைவிட சிறந்தது உள்ளதா? (சனத்குமாரர்) சங்கல்பத்தைவிட சிறந்தது உள்ளது. (நாரதர்) பகவானே! எனக்கு அதை உபதேசியுங்கள்.
स यः सङ्कल्पं ब्रह्मेति ब्रह्मबुद्ध्या उपास्ते, सङ्‍क्लृप्तान्वै धात्रा अस्येमे लोकाः फलमिति क्लृप्तान् समर्थितान् सङ्कल्पितान् स विद्वान् ध्रुवान् नित्यान् अत्यन्ताध्रुवापेक्षया, ध्रुवश्च स्वयम् , लोकिनो हि अध्रुवत्वे लोके ध्रुवक्लृप्तिर्व्यर्थेति ध्रुवः सन् प्रतिष्ठितानुपकरणसम्पन्नानित्यर्थः, पशुपुत्रादिभिः प्रतितिष्ठतीति दर्शनात् , स्वयं च प्रतिष्ठितः आत्मीयोपकरणसम्पन्नः अव्यथमानात् अमित्रादित्रासरहितान् अव्यथमानश्च स्वयम् अभिसिध्यति अभिप्राप्नोतीत्यर्थः । यावत्सङ्कल्पस्य गतं सङ्कल्पगोचरः तत्रास्य यथाकामचारो भवति, आत्मनः सङ्कल्पस्य, न तु सर्वेषां सङ्कल्पस्येति, उत्तरफलविरोधात् । यः सङ्कल्पं ब्रह्मेत्युपास्ते इत्यादि पूर्ववत् ॥
அனுவாதம் - எவன் ஒருவன் சங்கல்பத்தை பிரஹ்மம் என்று பிரஹ்மபுத்தியால் உபாசிக்கின்றானோ அவன் சங்கல்பித்தவற்றை பலனை அளிக்கும் தாதா (கடவுளால்) இந்த லோகங்களின் பலன்கள் நினைத்தவைகள் எல்லாம் சங்கல்பம் செய்த வித்வான் தான் சங்கல்பித்தவாறு அழிவற்ற நிச்சயமான, மற்ற அழிவுரும் லோகங்களைப் போல் அல்லாமல் ஸ்திரமான லோகங்களை தானாகவே அடைவான். ஏன்எனில் உலகினர் ஸ்திரமற்றவர்களாய் இருப்பதால் இதில் ஸ்திரத்தன்மையைக் கல்பிப்பது வியர்த்தமாகும். ஆகையால் ஸ்திரமாக நிலைபெற்று அதாவது சாமக்கிரியைகளுடன் உடையதாகிறது என்பது பொருள். ஏன்எனில் அந்த பசு, புத்திரர்கள் முதலியவைகளில் நிலைபெறுகின்றனர் என்பது காணப்படுகிறது. தானே பிரதிஷ்டையாகி தன்னுடைய உபகரணங்களை அடைந்து அவ்வாறே மனக்கஷ்டங்களான எதிரி முதலியவைகளில் பயமற்று லோகங்களின் தான் மனக்கஷ்டங்களை அடைவதில்லை “अभिसिध्यति” (அபிசித்யதி) அதாவது எல்லா வகையாலும் அடைகின்றனர் என்பது இதன் பொருள். எதுவரை சங்கல்பத்தின் எல்லை உள்ளதோ அதாவது சங்கல்பித்த விஷயம் உள்ளதோ அதுவரை அதன் நினைத்த கதி (அயனம்)யை அடைகின்றான். அவனுடைய கதி எதுவரை சங்கல்பித்தானோ அதுவரையிலுமே. ஆனால் எல்லா சங்கல்ப கதிகளையும் அடைவதில்லை. ஏன்எனில் இனி கூறப்போகும் பலத்திற்கு விரோதமாகும். “यः सल्पं ब्रह्मेत्युपास्ते” (ய: சங்கல்பம் பிரஹ்மமே த்யுபாஸ்தே) என்பது முதலிய மந்திரங்கள் முன்போல் ஆகும்.
इति चतुर्थखण्डभाष्यम् ॥
चित्तं वाव सङ्कल्पाद्भूयो यदा वै चेतयतेऽथ सङ्कल्पयतेऽथ मनस्यत्यथ वाचमीरयति तामु नाम्नीरयति नाम्नि मन्त्रा एकं भवन्ति मन्त्रेषु कर्माणि ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - சித்தம் மனதைக்காட்டிலும் சிறந்தது. எப்பொழுது புருஷன் சேதனம் உடையவனாகின்றானோ அப்பொழுது சங்கல்பம் செய்கின்றான். அதன்பின் மனனம் செய்கின்றான். அதன்பின் வாக்கைப் பிரேரணை செய்கின்றான். அதனால் நாமம் உண்டாகிறது. நாமங்களில் மந்திரம் ஒரே ரூபமாகின்றது. மேலும் மந்திரங்களில் கர்மங்கள் ஒன்றாகின்றன.
चित्तं वाव सङ्कल्पाद्भूयः । चित्तं चेतयितृत्वं प्राप्तकालानुरूपबोधवत्त्वम् अतीतानागतविषयप्रयोजननिरूपणसामर्थ्यं च, तत्सङ्कल्पादपि भूयः । कथम् ? यदा वै प्राप्तं वस्तु इदमेवं प्राप्तमिति चेतयते, तदा तदादानाय वा अपोहाय वा अथ सङ्कल्पयते अथ मनस्यतीत्यादि पूर्ववत् ॥
அனுவாதம் - சித்தமே (புரிந்து) அறிந்துகொள்ளும் தன்மையே சங்கல்பத்தைக் காட்டிலும் சிறந்தது. சித்தம் என்பது அறிவது அதாவது அடைந்த சமயத்திற்கு தகுந்தவாறு அறிவு உண்டாதல். அவ்வாறே சென்றகால வருங்கால விஷயங்களின் பிரயோஜனங்களை நிரூபிப்பதில் சாமர்த்தியமுடையது. ஆகையால் சங்கல்பத்தைக் காட்டிலும் சிறந்தது. எவ்வாறு? எப்பொழுது அடையப்பட்ட வஸ்துவை இவ்வாறு இந்த வஸ்து அடையப்பட்டது. என்று அறிவுடையதாகிறது. அதை ஏற்றுக்கொள்வதற்கோ அதை விடுவதற்கோ அதன்பின் சங்கல்பம் செய்கிறது. அதன்பின் அது நினைக்கிறது என்பது முதலியவை முன்போல் ஆகும்.
तानि ह वा एतानि चित्तैकायनानि चित्तात्मानि चित्ते प्रतिष्ठितानि तस्माद्यद्यपि बहुविदचित्तो भवति नायमस्तीत्येवैनमाहुर्यदयं वेद यद्वा अयं विद्वान्नेत्थमचित्तः स्यादित्यथ यद्यल्पविच्चित्तवान्भवति तस्मा एवोत शुश्रूषन्ते चित्तं ह्येवैषामेकायनं चित्तमात्मा चित्तं प्रतिष्ठा चित्तमुपास्स्वेति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அந்த சங்கல்பம் முதலியவைகள் அனைத்தும் சித்தத்தில் (புத்தியில்) ஒன்றாய் லயமாகும் ஸ்தானமாகும். சித்தமயமாக சித்தத்தில் பிரதிஷ்டித்திருக்கின்றன. (நிலைபெற்றுள்ளன). ஆகையால் ஒரு மனிதன் மிகுந்த அறிவாளியாக இருந்தாலும் அவன் அசித்தாய் இருந்தால் உலகத்தோர் அவனைப்பற்றி இவ்வாறு கூறுவார்.- எவ்வளவு அறிவு உள்ளவனாக தோன்றினாலும் பிரயோஜனமற்றவனே. அவன் உண்மையில் நன்றாக கற்றவனாக இருந்தால் இவ்வாறு அசித்தாக (அறியாத மூடனாக) இருக்கமாட்டான். அதற்கு மாறாக ஒருவன் சிறிது அறிந்திருந்தாலும் சித்தம் (புத்தி) உடையவனாக இருந்தால் அவனிடம் இருந்து சிரவணம் செய்ய விரும்புகின்றனர். ஆகையால் சித்தமே (புத்தியே) இவைகளின் ஒரே ஆஸ்ரயமாகும். சித்தமே ஆத்மா. மேலும் சித்தமே பிரதிஷ்டையாகும் (நிலைபெறும் ஸ்தானமாகும்) நீ அந்த சித்தத்தை உபாசனை செய்.
तानि सङ्कल्पादीनि कर्मफलान्तानि चित्तैकायनानि चित्तात्मानि चित्तोत्पत्तीनि चित्ते प्रतिष्ठितानि चित्तस्थितानीत्यपि पूर्ववत् । किञ्च चित्तस्य माहात्म्यम् । यस्माच्चित्तं सङ्कल्पादिमूलम् , तस्मात् यद्यपि बहुवित् बहुशास्त्रादिपरिज्ञानवान्सन् अचित्तो भवति प्राप्तादिचेतयितृत्वसामर्थ्यविरहितो भवति, तं निपुणाः लौकिकाः नायमस्ति विद्यमानोऽप्यसत्सम एवेति एनमाहुः ।
அனுவாதம் - சங்கல்பம் முதலியவைகளில் இருந்து ஆரம்பித்து கர்மபலன்கள் வரை அவை எல்லாம் சித்ரூபத்தை லயஸ்தானமாக உடையவை. சித்மயம் அதாவது சித்தத்திலிருந்து உண்டானவை. சித்தத்திலேயே நிலைபெறுகிறது. சித்தத்திலேயே இருப்பவையாகும். இவ்வாறு முன்போல் அறிந்துகொள்ள வேண்டும். மேலும் சித்தத்தின் மஹிமை இவ்வாறு ஆகும் - எதனால் சித்தம் சங்கல்பங்கள் முதலியவைகளுக்கு மூலமாக (காரணமாக) இருந்தாலும் மிகுந்த சாஸ்திரங்களை அறிந்தவனாக இருந்தாலும் சித்த மற்றவனாகின்றான். ஏன்எனில் அவன் அடைந்த விஷயங்களைக் குறித்து யதார்த்த (உண்மை) ஸ்வரூபத்தை அறிவதற்கான சாமர்த்தியம் அற்றவனாய் இருப்பதால் நிபுண லெளகிக புருஷர்கள் அவனுடைய விஷயத்தில் ஒன்றும் இல்லை. மேலும் அவ்வாறு இருந்தாலும் அவன் அசத்திற்கு சமானமே என்று கூறுவர்.
यच्चायं किञ्चित् शास्त्रादि वेद श्रुतवान् तदाप्यस्य वृथैवेति कथयन्ति । कस्मात् ? यद्ययं विद्वान्स्यात् इत्थमेवमचित्तो न स्यात् , तस्मादस्य श्रुतमप्यश्रुतमेवेत्याहुरित्यर्थः । अथ अल्पविदपि यदि चित्तवान्भवति तस्मा एतस्मै तदुक्तार्थग्रहणायैव उत अपि शुश्रूषन्ते श्रोतुमिच्छन्ति तस्माच्च । चित्तं ह्येवैषां सङ्कल्पादीनाम् एकायनमित्यादि पूर्ववत् ॥
அனுவாதம் - எவ்வாறோ அவ்வாறே சிறிது சாஸ்திரங்கள் முதலியவைகளை அறிந்து அல்லது சிரவணம் செய்து இருந்தாலும் வியர்த்தம் (பிரயோஜனம் அற்றது) என்று கூறுகின்றனர். எதனால்? எவன் இந்த வித்வானாக ஆகின்றானோ அவன் அசித்தனாக (மூடனாக) ஆகமாட்டான். ஆகையால் இதன் தாத்பர்யம் என்னவெனில் இவன் சிரவணம் செய்திருந்தாலும் சிரவணம் அற்றவனே என்று இவ்வாறு கூறுகின்றனர். அவன் அல்பஞானம் உடையவனாலும் அவன் சித்தம் உடையவனாகின்றான். ஆகையால் அவன் அர்த்தங்களை கிரஹிப்பதற்காக சிரவணம் செய்ய இச்சிக்கின்றனர் என்று கூறுகின்றனர். ஆகையால் சித்தமே இந்த சங்கல்பம் முதலியவைகளுக்கு ஒரே அயனமாகும் என்பது முதலியவை முன்போல் அறிந்துகொள்ள வேண்டும்.
स यश्चित्तं ब्रह्मेत्युपास्ते चितान्वै स लोकान्ध्रुवान्ध्रुवः प्रतिष्ठितान्प्रतिष्ठितोऽव्यथमानानव्यथमानोऽभिसिध्यति यावच्चित्तस्य गतं तत्रास्य यथाकामचारो भवति यश्चित्तं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवश्चित्ताद्भूय इति चित्ताद्वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் சித்தத்தை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கின்றானோ அவன் தான் சம்பாதித்த அழிவற்ற லோகங்களை அடைந்து தான் அழிவற்றவனாக ஆகின்றான். நிலைபெற்ற லோகங்களில் தான் நிலைபெற்று அவ்வாறே அழியும் லோகங்களை அடையாமல் தான் அழிவற்றனாய் அதை எல்லாவிதமாகவும் அடைகின்றான். எதுவரை அவனுடைய சித்தம் செல்கிறதோ அதுவரை தான் இச்சித்த கதியை அடைகின்றான். எவன் இவ்வாறு சித்தத்தை பிரஹ்மம் என்று உபாசிக்கின்றானோ அவன் அதை அடைகின்றான். (நாரதர்) பகவானே! என்ன சித்தத்தைவிட சிறந்தது ஏதாவது உள்ளதா? (சனத்குமாரர்)- சித்தத்தைவிட மேலானது உள்ளது. (நாரதர்) பகவானே! எனக்கு அதன் உபதேசத்தை செய்யுங்கள்.
चितान् उपचितान्बुद्धिमद्गुणैः स चित्तोपासकः ध्रुवानित्यादि च उक्तार्थम् ॥
அனுவாதம் - சித்தம் என்பது புத்தியுடன் கூடிய குணங்களால் சம்பாதிக்கப்பட்ட (ध्रूवलोका) அழிவற்ற லோகங்களை அடைந்து அந்த சித்த உபாசகன் அழிவற்ற வனாகின்றான் - என்பது முதலியவை முன்பு கூறப்பட்ட விஷயமேயாகும்.
इति पञ्चमखण्डभाष्यम् ॥
ध्यानं वाव चित्ताद्भूयो ध्यायतीव पृथिवी ध्यायतीवान्तरिक्षं ध्यायतीव द्यौर्ध्यायन्तीवापो ध्यायन्तीव पर्वता देवमनुष्यास्तस्माद्य इह मनुष्याणां महत्तां प्राप्नुवन्ति ध्यानापादांशा इवैव ते भवन्त्यथ येऽल्पाः कलहिनः पिशुना उपवादिनस्तेऽथ ये प्रभवो ध्यानापादांशा इवैव ते भवन्ति ध्यानमुपास्स्वेति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - தியானமே சித்தத்தைவிட சிறந்தது. பிருதிவீ (பூமி) தியானம் செய்வதுபோல் உள்ளது. அந்தரிக்ஷம் தியானம் செய்வதுபோல் உள்ளது. தியுலோகம் தியானம் செய்வதுபோல் உள்ளது. ஜலம் தியானம் செய்வதுபோல் உள்ளன. பர்வதம் தியானம் செய்வது போல் உள்ளன. தேவர்கள் மனிதர்கள் தியானம் செய்பவர்கள்போல் உள்ளனர். ஆகையால் இங்கு யார் தியானம் செய்கிறாரோ அவர் மனிதர்களில் மஹிமை உடையவர்களாகின்றனர். மற்றவர்கள் அல்பர்களாய் கோபம் உடையவர்களாகி குறுகிய புத்தியுடையவர்களாக ஆகின்றனர். வதந்திகளைப் பரப்புபவர்களாகவும் இருக்கின்றனர். சான்றோர்கள் சிறிது அளவேனும் தியானம் செய்து பலனை அடைந்தவர்களாக இருக்கின்றனர். ஆகையால் த்யானத்தை உபாசனை செய்.
ध्यानं वाव चित्ताद्भूयः । ध्यानं नाम शास्त्रोक्तदेवताद्यालम्बनेष्वचलः भिन्नजातीयैरनन्तरितः प्रत्ययसन्तानः, एकाग्रतेति यमाहुः । दृश्यते च ध्यानस्य माहात्म्यं फलतः । कथम् ? यथा योगी ध्यायन्निश्चलो भवति ध्यानफललाभे, एवं ध्यायतीव निश्चला दृश्यते पृथिवी । ध्यायतीवान्तरिक्षमित्यादि समानमन्यत् । देवाश्च मनुष्याश्च देवमनुष्याः मनुष्या एव वा देवसमाः देवमनुष्याः शमादिगुणसम्पन्नाः मनुष्याः देवस्वरूपं न जहतीत्यर्थः ।
அனுவாதம் - தியானம் சித்தத்தைக் காட்டிலும் சிறந்தது. சாஸ்த்திரத்தில் கூறப்பட்ட தேவதை முதலிய ஆலம்பனங்களில் விஜாதீய விருத்திகளால் தடைபடாமல் ஒரே விருத்தியின் பிரவாஹரூபம் தியானம் எனப்படுகிறது. இது ஏகாக்ரம் என்று கூறப்படுகிறது. பலத்தினால் தியானத்தின் மஹிமை அறியப்படுகிறது. எவ்வாறு? எவ்வாறு தியானித்து யோகி தியானத்தின் பலத்தை அடைந்து சலனமற்றவனாக ஆகின்றான். அவ்வாறே பிருதிவீ தியானிப்பது போல் சலனமற்று காணப்படுகிறது. அந்தரிக்ஷம் முதலியவைகளும் தியானிப்பது போன்று உள்ளன. மற்றவைகளும் இவ்வாறே என்று அறியவேண்டும். தேவர்களும் மனிதர்களும் என்பது தேவ மனிதர்கள். அவர்கள் மனிதர்களே. தேவர்களுக்கு சமானமானதால் தேவ மனிதர்கள். சமம் (शमम्) முதலிய குணங்கள் உடைய மனிதர்கள் தேவஸ்வரூபத்தை விடுவதில்லை (தியாகம் செய்வதில்லை) என்பது பொருள்.
यस्मादेवं विशिष्टं ध्यानम् , तस्मात् य इह लोके मनुष्याणामेव धनैर्विद्यया गुणैर्वा महत्तां महत्त्वं प्राप्नुवन्ति धनादिमहत्त्वहेतुं लभन्त इत्यर्थः । ध्यानापादांशा इव ध्यानस्य आपादनम् आपादः ध्यानफललाभ इत्येतत् , तस्यांशः अवयवः कला काचिद्ध्यानफललाभकलावन्त इवैवेत्यर्थः । ते भवन्ति निश्चला इव लक्ष्यन्ते न क्षुद्रा इव ।
அனுவாதம் - எதனால் இவ்வாறு தியானம் சிறப்பானதோ அதனால் இந்த உலகில் மனிதர்களே தனங்களாலும், வித்யையினாலும், குணங்களாலும் மேலானதை (மஹத்தானதை) அடைகின்றனர். தனம் முதலிய மஹத்துவத்தை அடைவதற்கான ஹேதுவை அடைகின்றனர் என்பது பொருள். தியானத்தின் ஒரு அம்சம் போல் தியானத்தில் ஒரு அம்சத்தின் பலனை அடைகின்றனர். அந்த அம்சத்தின் அதாவது அவயவத்தின் கலா எதுவோ அது தியான பலனை அடைகிறது என்பது இதன் பொருள். அவர்கள் அதை உடையவர்களாகின்றனர். அவர்கள் கலா அற்றவர்கள் போன்று காணப்பட்டாலும் அவர்கள் கீழான புருஷர்களைப்போல் அல்ல.
अथा ये पुनरल्पाः क्षुद्राः किञ्चिदपि धनादिमहत्त्वैकदेशमप्राप्ताः ते पूर्वोक्तविपरीताः कलहिनः कलहशीलाः पिशुनाः परदोषोद्भासकाः उपवादिनः परदोषं सामीप्ययुक्तमेव वदितुं शीलं येषां ते उपवादिनश्च भवन्ति ।
அனுவாதம் - மேலும் எவர் அல்ப - கீழான அதாவது தனம் முதலிய மஹத்துவத்தில் ஒரு அம்சமும் அடையாதவர்களாய் இருக்கும் அந்த மேலே கூறப்பட்ட மனிதர்களைக்காட்டிலும் வேறுபட்டவர்கள். அவர்கள் கலகம் செய்பவர்களாயும் மற்றவர்களின் தோஷங்களை வெளிப்படுத்துபவர்களாயும், பொய் பேசுபவர்களாயும், மற்றவர்களின் தோஷங்களை அவர்கள் சமீபத்திலேயே கூறும் ஸ்வபாவம் உடையவர்கள் ஆவர்.
अथ ये महत्त्वं प्राप्ताः धनादिनिमित्तं ते अन्यान्प्रति प्रभवन्तीति प्रभवः विद्याचार्यराजेश्वरादयो ध्यानापादांशा इवेत्याद्युक्तार्थम् । अतः दृश्यते ध्यानस्य महत्त्वं फलतः ; अतः भूयश्चित्तात् ; अतस्तदुपास्स्व इत्याद्युक्तार्थम् ॥
அனுவாதம் - மேலும் எவர்கள் தனம் முதலியவைகளால் மஹத்துவத்தை அடைந்ததின் காரணமாக மற்றவர்களைக் காட்டிலும் பிரபு ஆகின்றனர். பிரபு என்பது வித்யை, ஆச்சாரியர், ராஜேஷ்வரீ முதலியவர்களின் தியானத்தின் அம்சம் என்பது முன்பு கூறப்பட்ட விஷயமேயாகும். ஆகையால் பலத்தினாலும் தியானத்தின் மஹத்துவம் (அறியப்படுகிறது) காணப்படுகிறது. ஆகையால் சித்தத்தைவிட மிகச்சிறந்தது த்யானம், ஆகையால் தியானத்தை உபாசனை செய்யவேண்டும் என்பதை முன்போல் அறிந்துகொள்ள வேண்டும்.
स यो ध्यानं ब्रह्मेत्युपास्ते यावद्ध्यानस्य गतं तत्रास्य यथाकामचारो भवति यो ध्यानं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवो ध्यानाद्भूय इति ध्यानाद्वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் தியானத்தை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசனை செய்கின்றானோ அதாவது எதுவரை தியானத்தின் எல்லையோ அதுவரை அவனுக்கு தான் இச்சித்த கதியை அடைகிறான். எவன் இந்த தியானத்தை “இது பிரஹ்மம்” என்று தியானம் செய்கின்றானோ அவன் அடைகிறான். (நாரதர்) பகவானே! என்ன இந்த தியானத்தைவிட சிறந்தது ஏதாவது உள்ளதா? (சனத்குமாரர் -) தியானத்தைக் காட்டிலும் சிறந்தது உள்ளது. (நாரதர்) பகவானே! எனக்கு அதை உபதேசம் செய்யுங்கள்.
इति षष्ठखण्डभाष्यम् ॥
विज्ञानं वाव ध्यानाद्भूयो विज्ञानेन वा ऋग्वेदं विजानाति यजुर्वेदꣳ सामवेदमाथर्वणं चतुर्थमितिहासपुराणं पञ्चमं वेदानां वेदं पित्र्यꣳ राशिं दैवं निधिं वाकोवाक्यमेकायनं देवविद्यां ब्रह्मविद्यां भूतविद्यां क्षत्त्रविद्यां नक्षत्रविद्याꣳ सर्पदेवजनविद्यां दिवं च पृथिवीं च वायुं चाकाशं चापश्च तेजश्च देवाꣳश्च मनुष्याꣳश्च पशूꣳश्च वयाꣳसि च तृणवनस्पतीञ्छ्वापदान्याकीटपतङ्गपिपीलकं धर्मं चाधर्मं च सत्यं चानृतं च साधु चासाधु च हृदयज्ञं चाहृदयज्ञं चान्नं च रसं चेमं च लोकममुं च विज्ञानेनैव विजानाति विज्ञानमुपास्स्वेति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - விக்ஞானம் தியானத்தைக் காட்டிலும் ஸ்ரேஷ்டமானது. விக்ஞானத்தால் புருஷன் ரிக் வேதத்தை அறிகின்றான். அவ்வாறே விக்ஞானத்தால் அவன் யஜுர்வேதம், சாமவேதம், நான்காவதான அதர்வண வேதம், வேதங்களில் ஐந்தாவது வேதமான இதிகாச புராணங்கள், வியாகரணம், ஸ்ரார்த்தகல்பம், கணிதம், உத்பாத ஞானம், நிதி விக்ஞானம், தர்க்க சாஸ்திரம், நீதி, தேவவித்யா (நிருக்தம்) பிரஹ்ம்மவித்யா, பூதவித்யா, தனுர்வேதம், ஜ்யோதிஷம், காருடவித்யா மேலும் சில்பவித்யா, த்யுலோகம், பிருதிவீ, வாயு, ஆகாசம், ஜலம், தேஜஸ், தேவ, மனுஷ்ய, பசு, பக்ஷீ, த்ருணம், வனஸ்பதி, (மூலிகைகள், தாவரங்கள்) காட்டு மிருகங்கள், புழு, வண்டுகள், எறும்பு வரையில் உள்ள எல்லா ஜீவராசிகள், தர்மம், அதர்மம், சத்தியம், பொய், நல்லது, கெட்டது, இனிமை, கொடுமை, அன்னம், ரசம் அவ்வாறே இந்த லோகம், பரலோகம் ஆகிய எல்லாவற்றையும் அறிகின்றான். நீ விக்ஞானத்தை உபாசனை செய்.
विज्ञानं वाव ध्यानाद्भूयः । विज्ञानं शास्त्रार्थविषयं ज्ञानं तस्य ध्यानकारणत्वात् ध्यानाद्भूयस्त्वम् । कथं च तस्य भूयस्त्वमिति, आह — विज्ञानेन वै ऋग्वेदं विजानाति अयमृग्वेद इति प्रमाणतया यस्यार्थज्ञानं ध्यानकारणम् । तथा यजुर्वेदमित्यादि । किञ्च पश्वादींश्च धर्माधर्मौ शास्त्रसिद्धौ साध्वसाधुनी लोकतः स्मार्ते वा दृष्टविषयं च सर्वं विज्ञानेनैव विजानातीत्यर्थः । तस्माद्युक्तं ध्यानाद्विज्ञानस्य भूयस्त्वम् । अतो विज्ञानमुपास्स्वेति ॥
அனுவாதம் - விக்ஞானம் தியானத்தைக் காட்டிலும் ஸ்ரேஷ்டமானது. விக்ஞானம் சாஸ்த்திரார்த்த விஷயத்தின் ஞானமாகும். அது தியானத்திற்குக் காரணமாவதால் தியானத்தைக்காட்டிலும் சிறந்தது ஆகும். எவ்வாறு அதற்கு சிறப்புத்தன்மை என்பது கூறப்படுகிறது. விக்ஞானத்தால் ரிக்வேதத்தை இது ரிக்வேதம் என்று பிரமாணரூபமாக அறியப்படுகிறது. இதன் அர்த்தக்ஞானம் தியானத்திற்குக் காரணமாகும். அவ்வாறே யஜுர்வேதம் முதலியவைகளையும் அறியவேண்டும். மேலும் பசு முதலியவைகளும், தர்மம், அதர்மம், சாஸ்திரத்தில் இருக்கும் தர்மம், அதர்மம், லோக திருஷ்டியில் அல்லது ஸ்மிருதிகளினால் நிர்ணயம் செய்யப்பட்ட சுபம் அசுபம் இவ்வாறு எல்லா அதிருஷ்ட விஷயங்களையும் விக்ஞானத்தினாலேயே அறியப்படுகிறது என்பது இதன் தாத்பர்யம். ஆகையால் தியானத்தைக்காட்டிலும் விக்ஞானம் சிறந்தது என்பது சரியானதே ஆகும். ஆகையால் விக்ஞானத்தை உபாசனை செய்வாயாக.
स यो विज्ञानं ब्रह्मेत्युपास्ते विज्ञानवतो वै स लोकांज्ञानवतोऽभिसिध्यति यावद्विज्ञानस्य गतं तत्रास्य यथाकामचारो भवति यो विज्ञानं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवो विज्ञानाद्भूय इति विज्ञानाद्वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் விக்ஞானத்தை “இது பிரஹ்மம்” என்று உபாசனை செய்கின்றானோ அவன் அதனால் விக்ஞானவான்களின் அவ்வாறே ஞானவான்களின் உலகங்களை அடைகின்றான். எதுவரை அவனுக்கு விக்ஞானத்தின் எல்லை உள்ளதோ அதுவரை அவனுக்கு இச்சித்த கதி உண்டாகிறது. எவன் ஒருவன் விக்ஞானத்தை “இது பிரஹ்மம்” என்று உபாசனை செய்கின்றவன் எதை அடைகிறான். (நாரதர்) பகவானே விக்ஞானத்தைக் காட்டிலும் சிறந்தது உள்ளதா? (சனத்குமாரர்-) விக்ஞானத்தைக் காட்டிலும் சிறந்தது உள்ளது. (நாரதர்) பகவானே! எனக்கு அதை உபதேசியுங்கள்.
शृणु उपासनफलं विज्ञानवतः । विज्ञानं येषु लोकेषु तान्विज्ञानवतो लोकान् ज्ञानवतश्च अभिसिध्यति अभिप्राप्नोति । विज्ञानं शास्त्रार्थविषयं ज्ञानम् , अन्यविषयं नैपुण्यम् , तद्वद्भिर्युक्तांल्लोकान्प्राप्नोतीत्यर्थः । यावद्विज्ञानस्येत्यादि पूर्ववत् ॥
அனுவாதம் - விக்ஞானம் உடையவனின் பலத்தைக் கேள் -விக்ஞானம் உடையவர்கள் எந்த லோகங்களில் விக்ஞானமுள்ள அந்த லோகங்களையும் அவ்வாறே ஞானமுடையவர்களின் லோகங்களையும் அடைவர். விக்ஞானம் சாஸ்த்திரார்த்த விஷயமாகும். ஞானமானது மற்ற விஷயங்களில் உள்ள நிபுணத்தன்மையாகும். இந்த லக்ஷணம் உடைவர்களின் லோகத்தை அடைகின்றனர் என்பது தாத்பர்யம். “எதுவரை விக்ஞானம் உடையவன் கதியோ” என்பது முதலியவற்றின் பொருள் முன்போல் ஆகும்.
इति सप्तमखण्डभाष्यम् ॥
बलं वाव विज्ञानाद्भूयोऽपि ह शतं विज्ञानवतामेको बलवानाकम्पयते स यदा बली भवत्यथोत्थाता भवत्युत्तिष्ठन्परिचरिता भवति परिचरन्नुपसत्ता भवत्युपसीदन्द्रष्टा भवति श्रोता भवति मन्ता भवति बोद्धा भवति कर्ता भवति विज्ञाता भवति बलेन वै पृथिवी तिष्ठति बलेनान्तरिक्षं बलेन द्यौर्बलेन पर्वता बलेन देवमनुष्या बलेन पशवश्च वयांसि च तृणवनस्पतयः श्वापदान्याकीटपतङ्गपिपीलकं बलेन लोकस्तिष्ठति बलमुपास्स्वेति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - பலமே விக்ஞானத்தைக் காட்டிலும் சிறந்தது. நூ று விக்ஞானவான்களைக்கூட ஒரு பலவான் நடுங்கச் செய்வான். எப்பொழுது புருஷன் பலவானாகின்றானோ அப்பொழுது (குருவின் முன்பு) எழுகிறான். எழுந்து சேவை செய்கின்றான். அவ்வாறே சேவை செய்து அவர் சமீபம் நெருங்குகின்றான். நெருங்கி அவரை தரிசனம் செய்கின்றான். சிரவணம் செய்கின்றான். மனனம் செய்கின்றான். ஞானம் உடையவனாக ஆகின்றான். கர்த்தாவாகின்றான். அவ்வாறே விக்ஞாதாவாகவும் ஆகின்றான். பலத்தினாலேயே பிருதிவீயின் இருப்பாகும். பலத்தினால் அந்தரிக்ஷம், பலத்தினால் த்யுலோகம், பலத்தினால் பர்வதம், பலத்தினால் தேவதைகள், மேலும் மனிதர்கள், பலத்தினால், பசு, பக்ஷி, த்ருணம் (துரும்பு) ஸ்தாவரங்கள், காட்டு மிருகங்கள், புழு, வண்டு அவ்வாறே எறும்பு வரையில் உள்ள எல்லாப் பிராணிகளின் ஸ்திதியும் (இருப்பும்) உள்ளன. அவ்வாறே பலத்தினாலேயே லோகத்தின் இருப்பும் ஆகும். நீ பலத்தை உபாசனை செய்வாயாக.
बलं वाव विज्ञानाद्भूयः । बलमित्यन्नोपयोगजनितं मनसो विज्ञेये प्रतिभानसामर्थ्यम् । अनशनादृगादीनि ‘न वै मा प्रतिभान्ति भो’ (छा. उ. ६ । ७ । २) इति श्रुतेः । शरीरेऽपि तदेवोत्थानादिसामर्थ्यं यस्माद्विज्ञानवतां शतमप्येकः प्राणी बलवानाकम्पयते यथा हस्ती मत्तो मनुष्याणां शतं समुदितमपि ।
அனுவாதம் - பலமே விக்ஞானத்தைவிட ஸ்ரேஷ்டமானது. அன்னத்தின் உபயோகத்தால் அடையப்பட்ட மனதிற்கு அறிய வேண்டிய விஷயத்தை புரிந்து கொள்வதற்கான சாமர்த்தியமே பலம். சாப்பிடவில்லை எனில் “ऋगादीनि न वै मा प्रतिभान्ति भोः” (ரிகாதீனி ந வை மா பிரதிபாந்த்தி போ:) என்பது சுருதி வாக்கியம்! சரீரத்திற்கும் எழுதல் முதலியவைகளின் சாமர்த்தியமும் அதுவே. ஏன்எனில் நூ று விக்ஞானவான்களையும் ஒரே பலவானாகிய புருஷன் நடுங்கச் செய்கிறான். எவ்வாரு எனில் நூ று மனிதர்கள் சேர்ந்து இருந்தாலும் ஒரு மதம் பிடித்த யானையைப் போல் ஆகும்.
यस्मादेवमन्नाद्युपयोगनिमित्तं बलम् , तस्मात्स पुरुषः यदा बली बलेन तद्वान्भवति अथोत्थाता उत्थानस्य कर्ता उत्तिष्ठंश्च गुरूणामाचार्यस्य च परिचरिता परिचरणस्य शुश्रूषायाः कर्ता भवति परिचरन् उपसत्ता तेषां समीपगोऽन्तरङ्गः प्रियो भवतीत्यर्थः ।
அனுவாதம் - எதனால் இவ்வாறு அன்னம் முதலியவைகளில் உபயோகத்தின் காரணத்தால் அந்த புருஷன் எப்பொழுது பலத்துடன் கூடியவன் ஆகின்றானோ அப்பொழுது அவன் எழுந்திருத்தல் முதலியவைகளை செய்பவனாகின்றான். எழுந்திருத்தலை செய்பவனாகி குருவினிடத்தும், ஆச்சாரியர் இடத்தும் சேவை செய்து அதாவது சுச்ரூஷை செய்கின்றான். சேவை செய்து அவர் சமீபத்தை அடைந்து அவரின் மிக நெருங்கிய பிரியம் உடையவனாகின்றான்.
उपसीदंश्च सामीप्यं गच्छन् एकाग्रतया आचार्यस्यान्यस्य च उपदेष्टुः गुरोर्द्रष्टा भवति । ततस्तदुक्तस्य श्रोता भवति । तत इदमेभिरुक्तम् एवमुपपद्यत इत्युपपत्तितो मन्ता भवति ; मन्वानश्च बोद्धा भवति एवमेवेदमिति । तत एवं निश्चित्य तदुक्तार्थस्य कर्ता अनुष्ठाता भवति विज्ञाता अनुष्ठानफलस्यानुभविता भवतीत्यर्थः । किञ्च बलस्य माहात्म्यम् — बलेन वै पृथिवी तिष्ठतीत्यादि ऋज्वर्थम् ॥
அனுவாதம் - உபசீத (उपसीदन्) என்பது அருகில் சென்று ஏகாக்ர சித்தத்துடன் ஆச்சாரியரிடமோ அல்லது வேறு ஒரு உபதேசம் செய்யும் குருவை தர்சனம் செய்வதாகும். அவர் கூறுவதை சிரவணம் செய்பவன் ஆகின்றான். அதன்பின் அவர் கூறியதை எவ்வாறு அடைவது என்று யுக்தி பூர்வகமாக மனனம் செய்பவனாகின்றான். அவ்வாறு மனனம் செய்து இந்த விஷயம் இவ்வாறு என்று அறிந்து கொள்கின்றான். அதனால் இவ்வாறு நிச்சயம்செய்து அந்த கூறப்பட்ட விஷயத்தை கர்த்தா அதாவது அனுஷ்டிப்பவனாகின்றான். அவ்வாறே விக்ஞாதா அனுஷ்டானத்தின் பலத்தை அனுபவிப்பவனாகின்றான் என்பது இதன் தாத்பர்யம். மேலும் பலத்தின் மஹிமையால் இவ்வாறு பலத்தினால் பிருதிவீ நிலைத்திருக்கிறது. இவை முதலிய மற்ற விஷயங்களும் எளிமையானவைகளே.
स यो बलं ब्रह्मेत्युपास्ते यावद्बलस्य गतं तत्रास्य यथाकामचारो भवति यो बलं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवो बलाद्भूय इति बलाद्वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் பலத்தை “இந்த பலம் பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசனை செய்கின்றானோ அவனுக்கு எதுவரை பலம் உள்ளதோ அதுவரை அவனுடைய எல்லை. அதுவரை அவன் இச்சைப்படியான கதியாகும். எவன் பலத்தை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கின்றான். (நாரதர்) என்ன பலத்தைவிட சிறந்தது உள்ளதா? (சனத்குமாரர்) பலத்தைவிட சிறந்தது உள்ளது. (நாரதர்) பகவானே! அதை எனக்கு உபதேசியுங்கள்.
इति अष्टमखण्डभाष्यम् ॥
अन्नं वाव बलाद्भूयस्तस्माद्यद्यपि दश रात्रीर्नाश्नीयाद्यद्यु ह जीवेदथवाद्रष्टाश्रोतामन्ताबोद्धाकर्ताविज्ञाता भवत्यथान्नस्यायै द्रष्टा भवति श्रोता भवति मन्ता भवति बोद्धा भवति कर्ता भवति विज्ञाता भवत्यन्नमुपास्स्वेति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - அன்னமே பலத்தைக்காட்டிலும் மேன்மையானது. பத்து நாட்கள் சாப்பிடாமல் ஜீவித்துக்கொண்டிருந்தாலும் அவன் எதையும் பார்க்கமுடியாது, கேட்கமுடியாது, நினைக்கமுடியாது, புரிந்துகொள்ள முடியாது, செய்ய முடியாது, எதையும் அறிய முடியாதவன் ஆகின்றான். அவன் அன்னத்தை ஏற்றுக்கொண்டபின் பார்க்கிறான், கேட்கிறான், சிந்திக்கிறான், புரிந்துகொள்கிறான், செயல்படுகிறான், அறிபவனாகவும் ஆகின்றான். நீ அன்னத்தை உபாசனை செய்.
अन्नं वाव बलाद्भूयः, बलहेतुत्वात् । कथमन्नस्य बलहेतुत्वमिति, उच्यते — यस्माद्बलकारणमन्नम् , तस्मात् यद्यपि कश्चिद्दश रात्रीर्नाश्नीयात् , सोऽन्नोपयोगनिमित्तस्य बलस्य हान्या म्रियते ; यद्यु ह जीवेत् — दृश्यन्ते हि मासमप्यनश्नन्तो जीवन्तः — अथवा स जीवन्नपि अद्रष्टा भवति गुरोरपि, तत एव अश्रोतेत्यादि पूर्वविपरीतं सर्वं भवति ।
அனுவாதம் - பலத்திற்குக் காரணமாவதால் அன்னம் பலத்தைவிட சிறந்தது. எவ்வாறு அன்னத்திற்கு பலத்திற்கான காரணமாகிறது? கூறப்படுகிறது- எதனால் பலத்திற்குக் காரணம் அன்னமோ அதனால் ஒருவன் பத்து இரவுகளுடன் கூடி தினங்களில் சாப்பிடாமல் இருந்தால் அன்னத்தின் உபயோக நிமித்தத்தால் உண்டான பலம் நீங்கி இறந்துவிடுவான். அவ்வாறு இறக்கவில்லையாயினும் அவன் ஜீவித்திருந்தாலும் ஒரு மாதம் பசியுடன் இருந்தாலும் அவன் ஜீவிப்பதைக் காண்கிறோம். அவன் ஜீவத்துக்கொண்டிருந்தாலும் குருவை தரிசிக்க முடியாது. அவ்வாறே சிரவணம் செய்ய முடியாது. இவைகளைப் போல் மற்ற எல்லாவற்றையும் முன்பைவிட விபரீதமாகக் காணப்படுகின்றன.
अथ यदा बहून्यहान्यनशितः दर्शनादिक्रियास्वसमर्थः सन् अन्नस्यायी, आगमनम् आयः अन्नस्य प्राप्तिरित्यर्थः, सः यस्य विद्यते सोऽन्नस्यायी । आयै इत्येतद्वर्णव्यत्ययेन । अथ अन्नस्याया इत्यपि पाठे एवमेवार्थः, द्रष्टेत्यादिकार्यश्रवणात् । दृश्यते हि अन्नोपयोगे दर्शनादिसामर्थ्यम् , न तदप्राप्तौ ; अतोऽन्नमुपास्स्वेति ॥
அனுவாதம் - அதன்பின் எப்பொழுது அநேக தினங்கள் போஜனம் செய்யாமல் இருந்தால் தர்சனம் முதலிய கிரியைகள் செய்வதற்கு சாமர்த்தியம் இல்லாத சமயத்தில் அன்னத்தின் “आयै” (ஆயை) அதாவது வருவதின் பெயர் “आय” (ஆய) ஆகும். அது அன்னத்தின் பிராப்தியாகும். (अन्नस्यप्राप्ति). அதுவே “अन्नस्यायी” அன்னஸ்யாயீ - அன்னத்தின் அடைவு) என்று கூறப்படுகிறது. சுருதியில் “आयै” (ஆயை) என்ற பதமானது ஆயீ என்று எழுத்துக்களின் மாறுபாடு ஆகும். அவ்வாறே “अन्नस्याया” (அன்னஸ்யாயா) என்பதையும் இவ்வாறே அறிந்துகொள்ள வேண்டும். ஏன்எனில் சுருதி த்ருஷ்டா முதலிய சாமர்த்தியம் அன்னத்தின் உபயோகத்தால் காணப்படுகிறது. அது அடையப்படவில்லையெனில் சாமர்த்தியம் அற்றதாகும். அன்னத்தை உபாசனை செய்.
स योऽन्नं ब्रह्मेत्युपास्तेऽन्नवतो वै स लोकान्पानवतोऽभिसिध्यति यावदन्नस्य गतं तत्रास्य यथाकामचारो भवति योऽन्नं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवोऽन्नाद्भूय इत्यन्नाद्वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் அன்னத்தை “இது பிரஹ்மம்” என்று உபாசிக்கின்றானோ அவன் அதனால் அன்னம் உள்ள உலகத்தையும், பருகுவதற்கான ஜலம் உள்ள லோகங்களையும் அடைவான். எதுவரை அன்னத்தின் கதி உள்ளதோ அதுவரை தன் இஷ்டப்படி கதியை அடைவான். எவன் அன்னத்தை “இது பிரஹ்மம்” என்று உபாசிக்கிறானோ அவன். (நாரதர்) பகவானே! என்ன அன்னத்தைவிட சிறந்தது உள்ளதா? (சனத்குமாரர்) அன்னத்தைக்காட்டிலும் மேலானது உள்ளது. (நாரதர்) பகவானே! எனக்கு அதை உபதேசியுங்கள்.
फलं च अन्नवतः प्रभूतान्नान्वै स लोकान् पानवतः प्रभूतोदकांश्च अन्नपानयोर्नित्यसम्बन्धात् लोकानभिसिध्यति । समानमन्यत् ॥
அனுவாதம் - அந்த அன்னம் உடையதின் பலன் - அதிகமான அன்னம் உடைய, அதிகமான அருந்துவதற்கான ஜலம் உடைய லோகங்களே அடைவான். ஏன்எனில் நித்யமாக அன்னத்தினதும் ஜலத்தினதுமான சம்பந்தம் உள்ளது. மற்றவை முன்போல்.
इति नवमखण्डभाष्यम् ॥
आपो वावान्नाद्भूयस्तस्माद्यदा सुवृष्टिर्न भवति व्याधीयन्ते प्राणा अन्नं क नीयो भविष्यतीत्यथ यदा सुवृष्टिर्भवत्यानन्दिनः प्राणा भवन्त्यन्नं बहु भविष्यतीत्याप एवेमा मूर्ता येयं पृथिवी यदन्तरिक्षं यद्द्यौर्यत्पर्वता यद्देवमनुष्या यत्पशवश्च वयाꣳसि च तृणवनस्पतयः श्वापदान्याकीटपतङ्गपिपीलकमाप एवेमा मूर्ता अप उपास्स्वेति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஜலமே அன்னத்தைவிட சிறந்தது. இதனால் நல்ல மழை பெய்யவில்லையெனில் அன்னம் சரியாகக்கிடைக்காது. அதாவது அன்னம் குறைந்துவிடும். அதனால் ஜீவர்கள் துக்கம் அடைவார்கள். எப்பொழுது நல்ல மழை உண்டாகிறதோ அப்பொழது அன்னம் அதிகமாக உண்டாகும் என்று ஜீவர்கள் சந்தோஷம் அடைவார்கள். இந்த பிருதீவி, அந்தரிக்ஷம், த்யுலோகம், பர்வதம், தேவமனிதர்கள், பசு, பக்ஷி அவ்வாறே புல், மரம், செடிகொடிகள், காட்டு மிருகங்கள், புழு, வண்டு, எறும்பு ஆகிய எல்லா உருவங்களும் ஜலமேயாகும். ஆகையால் நீ ஜலத்தை உபாசனைசெய்.
आपो वाव अन्नाद्भूयस्य अन्नकारणत्वात् । यस्मादेवं तस्मात् यदा यस्मिन्काले सुवृष्टिः सस्यहिता शोभना वृष्टिः न भवति, तदा व्याधीयन्ते प्राणा दुःखिनो भवन्ति । किंनिमित्तमिति, आह — अन्नमस्मिन्संवत्सरे नः कनीयः अल्पतरं भविष्यतीति ।
அனுவாதம் - ஜலம் அன்னத்திற்கு காரணமாவதால் ஜலமே அன்னத்தைக்காட்டிலும் சிறந்தது. எதனால் இவ்வாறு அதனால் எப்பொழுது நல்லமழை அதாவது ஸ்தாவரங்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய மழை பெய்யவில்லையெனில் அப்பொழுது (பிராணன்கள்) ஜீவர்கள் துக்கத்தை அடைகின்றனர். எதற்காக? அதற்குக் கூறப்படுகிறது - இந்த வருடம் நமக்கு அன்னம் மிகக்குறைவாகவே கிடைக்கும் என்று. ஆகையால் -
अथ पुनर्यदा सुवृष्टिर्भवति, तदा आनन्दिनः सुखिनः हृष्टाः प्राणाः प्राणिनः भवन्ति अन्नं बहु प्रभूतं भविष्यतीति । अप्सम्भवत्वान्मूर्तस्य अन्नस्य आप एवेमा मूर्ताः मूर्तभेदाकारपरिणता इति मूर्ताः — येयं पृथिवी यदन्तंरिक्षमित्यादि । आप एवेमा मूर्ताः ; अतः अप उपास्स्वेति ॥
அனுவாதம் - மேலும் எப்பொழுது நல்லமழை உண்டாகிறதோ அப்பொழுது பிராணிகள் சுகமடைந்து சந்தோஷம் அடைகிறார்கள். ஏன்எனில் மிகுந்த அன்னம் உண்டாகும் என்று. மேலும் மூர்த்தமானது அன்னத்தினாலும் ஜலத்தாலும் உண்டாகிறது. ஆகையால் அந்த மூர்த்தம் அதாவது அந்த மூர்த்தி பலவித ஆகாரமாக பரிணாமம் ஆவதால் அந்த மூர்த்தமே பிருதீவி அந்தரிக்ஷம் என்பன முதலிய மூர்த்தமாக உள்ளவைகள் ஜலமே ஆகும். ஆகையால் நீ அந்த ஜலத்தை உபாசனைசெய்.
स योऽपो ब्रह्मेत्युपास्त आप्नोति सर्वान्कामाꣳस्तृप्तिमान्भवति यावदपां गतं तत्रास्य यथाकामचारो भवति योऽपो ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवोऽद्भ्यो भूय इत्यद्भ्यो वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் ஜலத்தை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கின்றானோ அவன் எல்லா காமனைகளையும் அடைவான். மேலும் திருப்தி உடையவன் ஆவான். எதுவரை ஜலத்தின் கதியோ அதுவரை அவனுக்கு தன் இஷ்டமான கதியை அடைகிறான். எவன் ஒருவன் ஜலத்தை “இது பிரஹ்மம்” என்று உபாசிக்கின்றானோ அவன். (நாரதர்) பகவானே என்ன ஜலத்தைவிட மேலானது உள்ளதா? (சனத்குமாரர்) ஜலத்தைக்காட்டிலும் சிறந்தது உள்ளது. (நாரதர்) பகவானே எனக்கு அதை உபதேசம் செய்யுங்கள்.
फलम् — स यः अपो ब्रह्मेत्युपास्ते आप्नोति सर्वान्कामान् काम्यान्मूर्तिमतो विषयानित्यर्थः । अप्सम्भवत्वाच्च तृप्तेरम्बूपासनात्तृप्तिमांश्च भवति । समानमन्यत् ॥
அனுவாதம் - பலம் - அதாவது எவன் “ஜலம் பிரஹ்மம்” என்று உபாசிக்கின்றானோ அவன் எல்லா காமனைகளையும் அதாவது பிரியப்பட்ட வஸ்து அதாவது உருவமுள்ள விஷயங்களை அடைகின்றான். அவ்வாறே திருப்தி ஜலத்தினால் உண்டானதால் ஜலத்தை உபாசித்து திருப்தி அடைகின்றான். மற்றவை முன்போல்
इति दशमखण्डभाष्यम् ॥
तेजो वावाद्भ्यो भूयस्तद्वा एतद्वायुमागृह्याकाशमभितपति तदाहुर्निशोचति नितपति वर्षिष्यति वा इति तेज एव तत्पूर्वं दर्शयित्वाथापः सृजते तदेतदूर्ध्वाभिश्च तिरश्चीभिश्च विद्युद्भिराह्रादाश्चरन्ति तस्मादाहुर्विद्योतते स्तनयति वर्षिष्यति वा इति तेज एव तत्पूर्वं दर्शयित्वाथापः सृजते तेज उपास्स्वेति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - தேஜஸ் ஜலத்தைக்காட்டிலும் சிறந்தது. அந்த தேஜஸ் எப்பொழுது வாயுவானது சலனமற்று இருக்கிறதோ அப்பொழுது ஆகாசத்தை எல்லா பக்கங்களில் இருந்தும் தபிக்கச்செய்கிறது (சுடுகிறது) என்பதால் உலகில் இவ்வாறு கூறுகின்றனர்- கர்ப்பம் அடைகிறது, மிகுந்த தாபம் (சூடு) உள்ளதாய் இருக்கிறது. ஆகையால் மழைபெய்யும் என்பர். இவ்வாறு முதலில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு பின்னர் ஜலத்தை உத்பத்தி செய்கிறது. அந்த இந்த தேஜஸ் மேல்நோக்கியும், குருக்கேயும் சென்று மின்னல் உடனும் இடியுடனும் மழைபெய்கிறது. இதனால் கூறுகின்றனர் மின்னல் மின்னுகிறது, இடி இடிக்கிறது, மழை பெய்யும் என்று. இவ்வாறு தேஜஸ் முதலில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு அதன்பின் ஜலத்தை உத்பத்தி செய்கின்றது. ஆகையால் தேஜசை உபாசனைசெய் என்று.
तेजो वाव अद्भ्यो भूयः, तेजसोऽप्कारणत्वात् । कथमप्कारणत्वमिति, आह — यस्मादब्योनिस्तेजः, तस्मात् तद्वा एतत्तेजो वायुमागृह्य अवष्टभ्य स्वात्मना निश्चलीकृत्य वायुम् आकाशमभितपति आकाशमभिव्याप्नुवत्तपति यदा, तदा आहुर्लौकिकाः — निशोचति सन्तपति सामान्येन जगत् , नितपति देहान् , अतो वर्षिष्यति वै इति । प्रसिद्धं हि लोके कारणमभ्युद्यतं दृष्टवतः कार्यं भविष्यतीति विज्ञानम् । तेज एव तत्पूर्वमात्मानमुद्भूतं दर्शयित्वा अथ अनन्तरम् अपः सृजते, अतः अप्स्रष्टृत्वाद्भूयोऽद्भ्यस्तेजः ।
அனுவாதம் - தேஜஸ் ஜலத்திற்குக் காரணமாவதால் ஜலத்தைக்காட்டிலும் சிறந்தது. எவ்வாறு ஜலத்திற்குக் காரணமாகிறது? அதற்குக் கூறப்படுகிறது - ஏன்எனில் தேஜஸ் ஜலத்திற்குக் காரணம் ஆகையால் எப்பொழுது தேஜஸ் வாயுவை கிரஹித்து அதாவது அதை ஆஸ்ரயிக்கச்செய்து அதன் காரணமாக வாயுவை அசைவற்றதாகச் செய்து ஆகாயத்தை சூடாக்குகிறது. அதாவது எல்லா பக்கங்களிலும் வியாபித்து சூடாகச் செய்கிறது. அப்பொழுது உலகில் உள்ள புருஷர்கள் ஜகத் சாமான்ய ரூபமாக தபிக்கின்றது. தேஹம் மிகவும் சூடாக இருக்கிறது. ஆகையால் மழைபெய்யும் என்கின்றனர். காரணம் வெளிப்படையாக அறிந்தவனுக்கு காரியம் நிச்சயம் உண்டாகும் என்ற அறிவு ஏற்படுவது உலகில் பிரசித்தமாகும். தேஜஸ் முதலில் தான் உண்டானதைத் தெரிவித்து அதன்பின் ஜலத்தை உண்டாக்கி அளிக்கிறது. இவ்வாறு ஜலத்தின் சிருஷ்டாவாக தேஜஸ் இருப்பதால் ஜலத்தைக் காட்டிலும் சிறந்தது ஆகும்.
किञ्चान्यत् , तदेतत्तेज एव स्तनयित्नुरूपेण वर्षहेतुर्भवति । कथम् ? ऊर्ध्वाभिश्च ऊर्ध्वगाभिः विद्युद्भिः तिरश्चीभिश्च तिर्यग्गताभिश्च सह आह्रादाः स्तनयनशब्दाश्चरन्ति । तस्मात्तद्दर्शनादाहुर्लौकिकाः — विद्योतते स्तनयति, वर्षिष्यति वै इत्याद्युक्तार्थम् । अतस्तेज उपास्स्वेति ॥
அனுவாதம் - மேலும் வேறு வகையாகவும் இந்த தேஜஸ் மின்னல் ரூபமாய் மழைக்குக் காரணமாகிறது. எவ்வாறு? மேல் நோக்கி அல்லது குறுக்கே செல்லும் மின்னலுடன் “கட கட” சப்தத்துடன் கூடிய இடியும் உண்டாகிறது. ஆகையால் அதைப் பார்த்த உலகோர் மின்னல் மின்னுகிறது. இடி இடிக்கிறது, மழை பெய்கிறது என்று கூறுகின்றனர் என்பது மேலே கூறியவாறே ஆகும். ஆகையால் தேஜஸ்ஸை உபாசனை செய்வாயாக.
स यस्तेजो ब्रह्मेत्युपास्ते तेजस्वी वै स तेजस्वतो लोकान्भास्वतोऽपहततमस्कानभिसिध्यति यावत्तेजसो गतं तत्रास्य यथाकामचारो भवति यस्तेजो ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवस्तेजसो भूय इति तेजसो वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எவர் அந்த இந்த தேஜஸ்ஸை “இது பிரஹ்மம்” என்று உபாசனை செய்கிறாரோ அவர் தேஜஸ்வீ ஆகி தேஜஸ்ஸுடன் கூடியதும் பிரகாசமானதுமான தமஸ் அற்ற லோகங்களை அடைவர். எதுவரை தேஜஸ்ஸின் எல்லையோ அதுவரை அவர்களின் இஷ்டமான கதியை அடைவர். எவர் தேஜஸ்ஸை “இது பிரஹ்மம்” என்று உபாசிக்கின்றனரோ அவர். (நாரதர்) பகவானே! என்ன தேஜஸ்ஸைவிட சிரேஷ்டமானது உள்ளதா? சனத்குமாரர் - தேஜஸ்ஸைவிட சிறந்தது உள்ளது. (நாரதர்) பகவானே! அதை எனக்கு உபதேசிப்பீராக.
तस्य तेजस उपासनफलम् — तेजस्वी वै भवति । तेजस्वत एव च लोकान्भास्वतः प्रकाशवतः अपहततमस्कान् बाह्याध्यात्मिकाज्ञानाद्यपनीततमस्कान् अभिसिध्यति । ऋज्वर्थमन्यत् ॥
அனுவாதம் - அந்த தேஜஸ் உபாசனையின் பலன் - நிச்சயமாக தேஜஸ்வீ ஆகின்றான். அவ்வாறே எந்த தேஜஸ்வீ உடைய லோகம் உள்ளதோ அதில் ஒளி பொருந்தி பிரகாசமுடையவன் ஆகின்றான். மேலும் வெளியில் உள்ள தமஸ் (இரவு) அவ்வாறே ஆத்யாத்மிகமான தமஸ் (அக்ஞானம்) முதலிய இருள் அற்ற லோகங்களை அடைகின்றான். மற்ற எல்லாவற்றின் அர்த்தமும் சுலபமானதே ஆகும்.
इति एकादशखण्डभाष्यम् ॥
आकाशो वाव तेजसो भूयानाकाशे वै सूर्याचन्द्रमसावुभौ विद्युन्नक्षत्राण्यग्निराकाशेनाह्वयत्याकाशेन शृणोत्याकाशेन प्रतिशृणोत्याकाशे रमत आकाशे न रमत आकाशे जायत आकाशमभिजायत आकाशमुपास्स्वेति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஆகாசமே தேஜஸ்ஸைவிட சிறந்தது. ஆகாசத்தில்தான் சூரியன், சந்திரன் ஆகிய இரண்டும், அவ்வாறே மின்னல், நக்ஷத்திரம், அக்னியும் நிலைபெற்று இருக்கின்றன. ஆகாசத்தின் வாயிலாக ஒருவர் மற்றொருவரை அழைக்கின்றான், ஆகாசத்தினால் கேட்க்கின்றான். ஆகாசத்தினால் பதில் அளிக்கின்றான். ஆகாசத்தில் ரமிக்கின்றான். ஆகாசத்தில் ரமிப்பது இல்லை. ஆகாசத்தில் தான் (எல்லா பதார்த்தங்களும்) உத்பத்தி ஆகின்றன. ஆகாசத்தை நோக்கியே (எல்லா ஜீவன்களும் முளைகளும்) வளர்கின்றன. நீ ஆகாசத்தை உபாசனை செய்.
आकाशो वाव तेजसो भूयान् , वायुसहितस्य तेजसः कारणत्वाद्व्योम्नः । ‘वायुमागृह्य’ (छा. उ. ७ । ११ । १) इति तेजसा सहोक्तः वायुरिति पृथगिह नोक्तस्तेजसः । कारणं हि लोके कार्याद्भूयो दृष्टम् — यथा घटादिभ्यो मृत् , तथा आकाशो वायुसहितस्य तेजसः कारणमिति ततो भूयान् । कथम् ? आकाशे वै सूर्याचन्द्रमसावुभौ तेजोरूपौ विद्युन्नक्षत्राण्यग्निश्च तेजोरूपाण्याकाशेऽन्तः । यच्च यस्यान्तर्वर्ति तदल्पम् , भूय इतरत् ।
அனுவாதம் - வாயுவுடன் கூடிய தேஜஸ்ஸிற்கு ஆகாசம் காரணம் ஆவதால் ஆகாசம் தேஜஸ்ஸைக் காட்டிலும் சிறந்தது. வாயுவை கிரஹித்துக் கொண்டு என்பதால் தேஜஸ்ஸுடன் வாயு சேர்ந்து இருக்கிறது என்று கூறப்பட்டது. இங்கு தேஜஸ் தனியாகக் குறிப்பிடபடவில்லை. காரணம் காரியத்தைக் காட்டிலும் மேலானது என்பது உலகில் காணப்படுகிறது. எவ்வாறு கடம் முதலியவைகளைக் காட்டிலும் மண் ச்ரேஷ்டமானதோ அவ்வாறே ஆகாசம் வாயுவுடன் சேர்ந்த தேஜஸ்ஸைக் காட்டிலும் மேலானது. எவ்வாறு? ஆகாசத்தில் அல்லவா தேஜஸ் ரூபங்களான சூரியன், சந்திரன் அவ்வாறே மின்னல் நக்ஷத்திரம், அக்னி முதலான தேஜோரோபங்கள் அக்னியில் அடங்கி உள்ளன. எது எதில் அடங்கி உள்ளதோ அதைவிட பெரியது மற்றது. (அதாவது எதில் அடங்கியுள்ளதோ அதுவாகும்.)
किञ्च आकाशेन आह्वयति च अन्यमन्यः ; आहूतश्चेतरः आकाशेन शृणोति ; अन्योक्तं च शब्दम् अन्यः प्रतिशृणोति ; आकाशे रमते क्रीडत्यन्योन्यं सर्वः ; तथा च रमते च आकाशे बन्ध्वादिवियोगे ; आकाशे जायते, न मूर्तेनावष्टब्धे । तथा आकाशमभि लक्ष्य अङ्कुरादि जायते, न प्रतिलोमम् । अतः आकाशमुपास्स्व ॥
அனுவாதம் - இதைத்தவிர மேலும் ஆகாசத்தால் ஒருவன் மற்றொருவனை அழைக்கின்றான். இதன் மூலமாக அழைக்கப்பட்டதை அறிந்து ஆகாசத்தினால் மற்றவன் கேட்கின்றான். ஒருவர் கூறி சப்தத்தை ஆகாயத்தால் மற்ற புருஷன் கேட்கின்றேன். உலகில் எல்லோரும் ஆகாயத்தில் அல்லவா ஒருவர் மற்றொருவருடன் இனிமையுடன் செயல்படுகின்றனர். ஸ்திரீ முதலியவர்களின் நஷ்டத்தால் இனிமையை இழக்கின்றனர். எங்கு மூர்த்த பதார்த்தங்களால் தடுக்கப்படாத ஆகாசத்தில் ஜீவர்கள் உண்டாகின்றனர். அவ்வாறே ஆகாசத்தை லக்ஷ்யித்து அங்குரம் (முளைகள்) உத்பத்தி ஆகின்றன. மாறுபட்ட திசையில் அல்ல. ஆகையால் ஆகாசத்தை உபாசனை செய்வாயாக.
स य आकाशं ब्रह्मेत्युपास्त आकाशवतो वै स लोकान्प्रकाशवतोऽसम्बाधानुरुगायवतोऽभिसिध्यति यावदाकाशस्य गतं तत्रास्य यथाकामचारो भवति य आकाशं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगव आकाशाद्भूय इत्याकाशाद्वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் ஆகாசத்தை “இது பிரஹ்மம்” என்று உபாசனை செய்கின்றாரோ அவர் ஆகாயம் போல பிரகாசமுடையதும், பீடைகள் (கஷ்டங்கள்) அற்றதும், விஸ்தாரமானதுமான லோகங்களை அடைவர். எதுவரை ஆகாசத்தின் கதி உள்ளதோ அதுவரை தன் இச்சைப்படியான கதியை அடைவான். எவன் ஆகாசத்தை “இது பிரஹ்மம்” என்று உபாசிக்கின்றானோ அவன். (நாரதர்) ஹே பகவான்! என்ன ஆகாசத்தைவிட பெரியது ஏதாவது உள்ளதா? (சனத்குமாரர்) ஆகாசத்தைவிட பெரியது உள்ளது. (நாரதர்) பகவானே! அதை எனக்கு உபதேசியுங்கள்.
फलं शृणु — आकाशवतो वै विस्तारयुक्तान्स विद्वांल्लोकान्प्रकाशवतः, प्रकाशाकाशयोर्नित्यसम्बन्धात्प्रकाशवतश्च लोकानसम्बाधान् सम्बाधनं सम्बाधः सम्बाधोऽन्योन्यपीडा तद्रहितानसम्बाधान् उरुगायवतः विस्तीर्णगतीन्विस्तीर्णप्रचारांल्लोकान् अभिसिध्यति । यावदाकाशस्येत्याद्युक्तार्थम् ॥
அனுவாதம் - அதன் பலத்தைக் கேள் - அந்த வித்வான் ஆகாசம் உடையவனாய் விஸ்தாரமான லோகங்களை அவ்வாறே பிரகாசமுடைய அதாவது பிரகாசத்திற்கும் ஆகாசத்திற்கும் நித்ய சம்பந்தமுள்ளது. ஆகையால் பிரகாசமுடைய லோகங்களை அதாவது “असम्बाधान्” (அசம்பாதான்) சம்பாதம் என்றால் பாதிக்கக்கூடியது மேலும் பாதிக்கக்கூடியது ஒன்றை ஒன்று பரஸ்பரம் பாதிக்கும் தன்மை உடையது. அது அற்றது அசம்பாதம் சம்பாதமற்ற மேலும் விஸ்தீரனமான கதியுடையது அதாவது விஸ்தாரமாக விரிந்து இருக்கும் லோகங்களை அடைவான். “எது வரை ஆகாச கதியுள்ளதோ” முதலியவை முன்போல் அர்த்தம் செய்துகொள்ள வேண்டும்.
इति द्वादशखण्डभाष्यम् ॥
स्मरो वावाकाशाद्भूयस्तस्माद्यद्यपि बहव आसीरन्न स्मरन्तो नैव ते कञ्चन शृणुयुर्न मन्वीरन्न विजानीरन्यदा वाव ते स्मरेयुरथ शृणुयुरथ मन्वीरन्नथ विजानीरन्स्मरेण वै पुत्रान्विजानाति स्मरेण पशून्स्मरमुपास्स्वेति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஸ்மரணம் (நினைவாற்றல்) ஆகாசத்தைக் காட்டிலும் மேலானது. ஆகையால் ஒரு இடத்தில் பலர் சேர்ந்து அமர்ந்து இருந்தாலும் நினைவு (ஸ்மரணம்) இல்லாவிடில் ஒன்றும் கேட்கமுடியாது. நினைக்கமுடியாது, அறிந்துகொள்ளவும் முடியாது. எப்பொழுது ஸ்மரணம் உள்ளதோ அப்பொழுது கேட்கமுடியும், நினைக்கமுடியும், அப்பொழுது அறிந்து கொள்ளவும் முடியும். ஸ்மரணத்தினாலேயே புத்திரர்களை அறிய முடிகிறது. மேலும் பசுக்களையும் ஸ்மரணத்தினாலேயே அறிந்துகொள்ளமுடிகிறது. ஆகையால் நீ ஸ்மரணத்தை உபாசனை செய்வாயாக.
स्मरो वाव आकाशाद्भूयः, स्मरणं स्मरोऽन्तःकरणधर्मः, स आकाशाद्भूयानिति द्रष्टव्यं लिङ्गव्यत्ययेन । स्मर्तुः स्मरणे हि सति आकाशादि सर्वमर्थवत् , स्मरणवतो भोग्यत्वात् । असति तु स्मरणे सदप्यसदेव, सत्त्वकार्याभावात् । नापि सत्त्वं स्मृत्यभावे शक्यमाकाशादीनामवगन्तुमित्यतः स्मरणस्य आकाशाद्भूयस्त्वम् ।
அனுவாதம் - ஸ்மரணமே ஆகாயத்தைவிட மேலானது. ஸ்மரணம் என்பது ஸ்மர: (நினைவு) என்ற பெயருடைய அந்தக்கரண தர்மம். அது ஆகாசத்தைக் காட்டிலும் மேலானது என்று (भूयः பூய: நபும்சகலிங்கம்) (स्मरः ஸ்மர: என்பது புல்லிங்கம்) லிங்கத்தை தவிர்த்து அர்த்தம் செய்துகொள்ள வேண்டும். ஸ்மரணம் செய்பவனுடைய ஸ்மரணத்தினால் (நினைவால்) ஆகாயம் முதலியவை எல்லாம் அர்த்தமுடையதாகிறது. ஏன்எனில் ஸ்மரணம் உடையனுக்கே அந்த போகியம் உள்ளது. ஸ்மரணம் இல்லாவிடில் சத்தும் அசத்தேயாகும். ஏன்எனில் சத்தின் காரியம் இல்லாததால் ஆகும். ஸ்மிருதி இல்லையெனில் ஆகாசம் முதலியவைகளில் சத் (இருக்கிறது) என்ற ஞானம் உண்டாகாது. ஆகையால் ஸ்மரணமே ஆகாயத்தைவிட மேலானது.
स यः स्मरं ब्रह्मेत्युपास्ते यावत्स्मरस्य गतं तत्रास्य यथाकामचारो भवति यः स्मरं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवः स्मराद्भूय इति स्मराद्वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் ஸ்மரணத்தை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கின்றானோ அவனுடைய ஸ்மரணத்தின் கதி எது வரையோ அதுவரை தன்னுடைய இஷ்டப்பட்ட கதியை அடைகிறான். எவன் “ஸ்மரணத்தை” இது பிரஹ்மம் என்று உபாசனை செய்கிறானோ அவனுடைய கதியாகும். (நாரதர்) பகவானே! என்ன ஸ்மரணத்தைவிட சிறந்தது உள்ளதா? (சனத்குமாரர்) ஸ்மரணத்தைவிடவும் சிறந்தது உள்ளது. (நாரதர்) பகவானே! அவ்வாறானால் அதைப்பற்றி எனக்குக் கூறுங்கள்.
दृश्यते हि लोके स्मरणस्य भूयस्त्वं यस्मात् , तस्माद्यद्यपि समुदिता बहव एकस्मिन्नासीरन् उपविशेयुः, ते तत्र आसीनाः अन्योन्यभाषितमपि न स्मरन्तश्चेत्स्युः, नैव ते कञ्चन शब्दं शृणुयुः ; तथा न मन्वीरन् , मन्तव्यं चेत्स्मरेयुः तदा मन्वीरन् , स्मृत्यभावान्न मन्वीरन् ; तथा न विजानीरन् । यदा वाव ते स्मरेयुर्मन्तव्यं विज्ञाताव्यं श्रोतव्यं च, अथ शृणुयुः अथ मन्वीरन् अथ विजानीरन् । तथा स्मरेण वै — मम पुत्रा एते — इति पुत्रान्विजानाति, स्मरेण पशून् । अतो भूयस्त्वात्स्मरमुपास्स्वेति ।
அனுவாதம் - எதனால் உலகில் ஸ்மரணத்திற்கே சிறப்புத் தன்மைக் காணப்படுகிறதோ அதனால் பலர் ஒன்றுகூடி ஒரு இடத்தில் உட்கார்ந்து ஒருவருக்கொருவர் சம்பாஷித்துக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு ஸ்மரணம் (நினைவு) இல்லையெனில் அந்த சப்தத்தைக் கேட்கமாட்டார்கள். அவ்வறே மனனம் செய்ய (சிந்திக்க) மாட்டார்கள். அவர்கள் மனனம் செய்யவேண்டிய விஷயத்தை ஸ்மரித்தால் மனனம் செய்யமுடியும். ஆகையால் ஸ்மிருதி இல்லாத காரணத்தால் மனனம் செய்யமுடியாது. அறிந்துகொள்ளவும் முடியாது. எப்பொழுது மனனம் செய்ய வேண்டியது, அறிய வேண்டியது, கேட்கப்படவேண்டிய விஷயங்களை ஸ்மரிக்கும்பொழுது கேட்க முடிகிறது, மனனம் செய்ய முடிகிறது, அறிய முடிகிறது, இந்த ஸ்மரணத்தினால் புத்திரர்களை அறிகிறோம். பசுக்களை அறிகிறோம். ஆகையால் மிகவும் சிரேஷ்டமானதால் நீ ஸ்மரணத்தை உபாசனை செய்வாயாக.
उक्तार्थमन्यत् ॥
அனுவாதம் - மற்றவை முன்போல் ஆகும்.
इति त्रयोदशखण्डभाष्यम् ॥
आशा वाव स्मराद्भूयस्याशेद्धो वै स्मरो मन्त्रानधीते कर्माणि कुरुते पुत्राꣳश्च पशूꣳश्चेच्छत इमं च लोकममुं चेच्छत आशामुपास्स्वेति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஆசையே ஸ்மரணத்தைக் காட்டிலும் மேலானது. ஆசையினால் தூண்டப்பட்டு ஸ்மரணத்தால் (நினைவால்) மந்திரங்களை ஓதுகிறான் கர்மங்களை செய்கின்றான், புத்திரனிடத்திலும், பசுக்களிடத்திலும் ஆசைப்படுகிறான். அவ்வாறே இந்த லோகம், பரலோகங்களில் ஆசை கொள்கிறான். நீ ஆசையை உபாசனை செய்வாயாக.
आशा वाव स्मराद्भूयसी, आशा अप्राप्तवस्त्वाकाङ्क्षा, आशा तृष्णा काम इति यामाहुः पर्यायैः ; सा च स्मराद्भूयसी ।
அனுவாதம் - ஆசையே ஸ்மரணத்தைக் காட்டிலும் சிறந்தது. ஆசை என்றால் அடையப்படாத வஸ்துவில் உள்ள இச்சையாகும். ஆசை, பேராசை, காமம் என்று பரியாய பதங்களால் (ஒத்த பதங்களால்) கூறப்படுகிறதோ அது ஸ்மரணத்தைக் காட்டிலும் சிறந்தது.
कथम् ? आशया हि अन्तःकरणस्थया स्मरति स्मर्तव्यम् । आशाविषयरूपं स्मरन् असौ स्मरो भवति । अतः आशेद्धः आशया अभिवर्धितः स्मरभूतः स्मरन् ऋगादीन्मन्त्रानधीते ; अधीत्य च तदर्थं ब्राह्मणेभ्यो विधींश्च श्रुत्वा कर्माणि कुरुते तत्फलाशयैव ; पुत्रांश्च पशूंश्च कर्मफलभूतान् इच्छते अभिवाञ्छति ; आशयैव तत्साधनान्यनुतिष्ठति । इमं च लोकम् आशेद्ध एव स्मरन् लोकसङ्ग्रहहेतुभिरिच्छते । अमुं च लोकम् आशेद्धः स्मरन् तत्साधनानुष्ठानेन इच्छते । अतः आशारशनावबद्धं स्मराकाशादिनामपर्यन्तं जगच्चक्रीभूतं प्रतिप्राणि । अतः आशायाः स्मरादपि भूयस्त्वमित्यत आशामुपास्स्व ॥
அனுவாதம் - எவ்வாறு? அந்தக்கரணத்தில் இருக்கும் ஆசையினால் புருஷன் ஸ்மரிக்க வேண்டிய விஷயத்தை ஸ்மரிக்கின்றான். ஆசையின் விஷய ரூபத்தை ஸ்மரிப்பதால் ஸ்மிருதியை (ஞாபகத்தை) அடைகின்றான். ஆகையால் ஆசையினால் தூண்டப்பட்டு ஆசை விருத்தி அடைந்து ஸ்மிருதி பூதமான அது ஞாபகப்படுத்தி (ஸ்மரித்து) ரிக் முதலியவைகளை அத்யயனம் செய்கிறான். அவ்வாறே அதை அத்யயனம் செய்தபின் பிராஹ்மணர் வாக்கால் அவற்றின் அர்தத்தையும் விதியையும் சிரவணம் செய்கிறான். அவ்வாறே கர்மத்தின் பல ரூபமான புத்திரன் மேலும் பசுக்கள் இவைகளை இச்சிக்கின்றான். இவ்வாறு ஆசையினால் அதற்கான சாதனங்களை அனுஷ்டிக்கின்றான். ஆசையினால் தூண்டப்பட்டு இந்த லோகத்தை அடையும் ஹேதுக்களால் இந்த லோகத்தை ஸ்மரிக்கின்றான். அவ்வாறே ஆசையினால் தூண்டப்பட்டு அந்த பரலோகத்தை அடைவதற்கான சாதனங்களை அனுஷ்டிப்பதற்கு இச்சை செய்கின்றான். இவ்வாறு ஒவ்வொரு பிராணியும் ஆசை ரூபமான கயிற்றால் கட்டுண்ட காரணத்தால் ஸ்மரணம் அவ்வாறே ஆகாசத்திலிருந்து நாமரூபம் வரையில் உள்ள ஜகத்ரூப சக்ரம் உண்டாக்கப்பட்டது. ஆகையால் ஸ்மரணத்தைக் காட்டிலும் ஆசை மேலானது என்பதால் ஆசையை உபாசனை செய்.
स य आशां ब्रह्मेत्युपास्त आशयास्य सर्वे कामाः समृध्यन्त्यमोघा हास्याशिषो भवन्ति यावदाशाया गतं तत्रास्य यथाकामचारो भवति य आशां ब्रह्मेत्युपास्तेऽस्ति भगव आशाया भूय इत्याशाया वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எவர் ஒருவர் ஆசையை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கின்றாரோ அவருடைய எல்லா ஆசைகளும் நிறைவேறுகின்றன. அவர்களுடைய பிரார்த்தனைகள் பலன் அளிக்கக்கூடியதாகின்றன. எதுவரை ஆசை உள்ளதோ அதுவரை அதன் கதி தன் இச்சைப்படி ஆகிறது. எவர் இந்த ஆசையை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கிறாரோ அவருக்கு அவ்வாறு ஆகிறது. (நாரதர்) பகவானே! என்ன ஆசையைக் காட்டிலும் மேலானது உள்ளதா? (சனத்குமாரர்) ஆசையைவிட மேலானது உள்ளது. (நாரதர்) பகவானே! அதை எனக்குக் கூறுங்கள்.
यस्त्वाशां ब्रह्मेत्युपास्ते शृणु तस्य फलम् — आशया सदोपासितया अस्योपासकस्य सर्वे कामाः समृध्यन्ति समृद्धिं गच्छन्ति । अमोघा ह अस्य आशिषः प्रार्थनाः सर्वाः भवन्ति ; यत्प्रार्थितं सर्वं तदवश्यं भवतीत्यर्थः । यावदाशाया गतमित्यादि पूर्ववत् ॥
அனுவாதம் - எவன் ஒருவன் ஆசையை பிரஹ்மம் என்று உபாசிக்கின்றானோ அவனுடைய பலனைக்கேள் - ஆசையை எப்பொழுதும் உபாசனை செய்து கொண்டிருக்கும் உபாசகனுடைய எல்லா காமனைகளும் அதிகமாக அடைவர். அவனுடைய எல்லா ஆசைகளும், பிரார்த்தனைகளும் அமோகமாக சித்திக்கின்றன. எது பிரார்த்தனை செய்யப்பட்டதோ அது அவசியம் கிடைக்கும் என்பது பொருள். “எதுவரை ஆசையின் கதியோ” என்பவை எல்லாம் முன்போல் ஆகும்.
इति चतुर्दशखण्डभाष्यम् ॥
नामोपक्रममाशान्तं कार्यकारणत्वेन निमित्तनैमित्तिकत्वेन च उत्तरोत्तरभूयस्तया अवस्थितं स्मृतिनिमित्तसद्भावमाशारशनापशैर्विपाशितं सर्वं सर्वतो बिसमिव तन्तुभिर्यस्मिन्प्राणे समर्पितम् , येन च सर्वतो व्यापिना अन्तर्बहिर्गतेन सूत्रे मणिगणा इव सूत्रेण ग्रथितं विधृतं च, स एष
அனுவாதம் - நாமத்தில் ஆரம்பித்து ஆசை வரையிலும் எந்த காரிய காரணத்துவமும் அவ்வாறே நிமித்த நைமித்திக்கத்துவ ரூபத்தாலும் ஒன்றைக் காட்டிலும் ஒன்று சிறப்பு உள்ளதாக இருக்கிறது. அவ்வாறே எதன் சத்பாவரூபம் ஸ்மிருதியின் நிமித்த ரூபமாக சித்திகின்றதோ அது ஆசை ரூபமான வலைகளால் சூழப்பட்ட தாமரையின் தண்டுபோல் எல்லா பக்கமும் பரந்து இந்த ஜகத் முழுவதும் உள்ளும் வெளியும் வியாபித்து நூ லில் கோர்க்கப்பட்ட மணிகளுக்கு சமமாக எல்லாம் (பிராணனில்) கட்டுப்பட்டு விசேஷமாக ஆசையைக் காட்டிலும் பிராணன் விசேஷமாக விளங்குகிறது. என்பது -
प्राणो वा आशाया भूयान्यथा वा अरा नाभौ समर्पिता एवमस्मिन्प्राणे सर्वं समर्पितं प्राणः प्राणेन याति प्राणः प्राणं ददाति प्राणाय ददाति प्राणो ह पिता प्राणो माता प्राणो भ्राता प्राणः स्वसा प्राण आचार्यः प्राणो ब्राह्मणः ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - பிராணனே ஆசையைக் காட்டிலும் மேலானது. எவ்வாறு ரதத்தின் சக்கிரத்தின் நாபியில் ஆரக்கால்கள் சமர்பிக்கப்பட்டு உள்ளதோ அவ்வாறு பிராணனில் ஜகத் முழுவதும் சமர்பிக்கப்பட்டுள்ளது. பிராணன் பிராண சக்தியினால் செயல்படுகிறது. பிராணன் பிராணனை அளிக்கிறது. மேலும் பிராணனுக்காகவே அளிக்கிறது. பிராணனே பிதா, பிராணனே மாதா, பிராணனே சகோதரன், பிராணனே சகோதரி, பிராணனே ஆச்சாரியன், மேலும் பிராணனே பிராஹ்மணன்.
प्राणो वा आशाया भूयान् । कथमस्य भूयस्त्वमिति, आह दृष्टान्तेन समर्थयन् तद्भूयस्त्वम् — यथा वै लोके रथचक्रस्य अराः रथनाभौ समर्पिताः सम्प्रोताः सम्प्रवेशिता इत्येतत् , एवमस्मिंल्लिङ्गसङ्घातरूपे प्राणे प्रज्ञात्मनि दैहिके मुख्ये — यस्मिन्परा देवता नामरूपव्याकरणाय आदर्शादौ प्रतिबिम्बवज्जीवेन आत्मना अनुप्रविष्टा ; यश्च महाराजस्येव सर्वाधिकारीश्वरस्य, ‘कस्मिन्न्वहमुत्क्रान्त उत्क्रान्तो भविष्यामि कस्मिन्वा प्रतिष्ठिते प्रतिष्ठास्यामीति स प्राणमसृजत’ (प्र. उ. ६ । ३) (प्र. उ. ६ । ४) इति श्रुतेः ; यस्तु च्छायेवानुगत ईश्वरम् , ‘तद्यथा रथस्यारेषु नेमिरर्पितो नाभावरा अर्पिता एवमेवैता भूतमात्राः प्रज्ञामात्रास्वर्पिताः प्रज्ञामात्राः प्राणेऽर्पिताः स एष प्राण एव प्रज्ञात्मा’ (कौ. उ. ३ । ९) इति कौषीतकिनाम् — अत एवमस्मिन्प्राणे सर्वं यथोक्तं समर्पितम् ।
அனுவாதம் - பிராணனே ஆசையைக் காட்டிலும் மிகச் சிறந்தது. அதற்கு எவ்வாறு மேன்மைத் தன்மை? அதற்கு திருஷ்டாந்த மூலமாக அதனுடைய சிறப்புத் தன்மையைக் கூறுகிறார்- எவ்வாறு உலகில் ரதத்தின் சக்கரங்களின் நாபியில் பிரவேசிக்கச்செய்து ஆரக்கால்கள் பொருத்தப்படுகிறதோ அவ்வாறு இந்த லிங்க தேஹத்துடன் கூடிய இந்தப் பிராணன் பிரக்ஞா ஆத்மாவில் அதாவது தேஹத்தின் முக்யப்பிராணனில் பரதேவதை நாமரூபமாக வெளிப்படுவதற்காக கண்ணாடி முதலியவைகளில் உள்ள பிரதிபிம்பம் போல் ஜீவரூபமாக பிரவேசிக்கிறது. மஹாராஜா சர்வாதிகாரியாக இருப்பதுபோல் ஈஸ்வரன் சர்வாதிகாரி ஆவான். “कस्मिन्न्वहमुत्क्रान्त उत्क्रान्तो भविष्यामि कस्मिन्वा प्रतिष्द्भिते प्रतिष्द्भास्यामीति स प्राणमसृजत” (கஸ்மின்னவ ஹமுத்க்ராந்த உத்க்ராந்த்தோ பவிஷ்யாமி கஸ்மின்வா பிரதிஷ்டிதே பிரதிஷ்டாஸ்யாமீதி ச ப்ராணமஸ்ருஜத”) என்பது சுருதிவாக்யம், எதானது நிழல்போல் ஈஸ்வரனிடத்தில் அனுகதமாய் உள்ளது. “तद्यथा रथस्यारेषु नेमिरर्पितो नाभावरा अर्पिता एवमेवैता भूतमात्राः प्रज्ञामात्रास्वर्पिताः प्रज्ञामात्राः प्राणेऽर्पिताः स एष प्राण एव प्रज्ञात्मा” (தத்யதா ரதஸ்யாரேஷு நேமிரர்பிதோ நாபாவரா அர்பிதா ஏவமேவைதா பூதமாத்ரா: பிக்ஞாமாத்ராஸ்வர்பிதா: பிரக்ஞமாத்ரா: பிராணே அர்பிதா: ச ஏஷ பிராண ஏவ ப்ரக்ஞாத்மா) என்பது கெளஷீதகீ பிராஹ்மண வாக்கியம். ஆகையால் இந்த பிராணனில் மேலே கூறப்பட்டவை எல்லாம் அடங்கி உள்ளது. (சமர்பிக்கப்பட்டுள்ளது).
अतः स एष प्राणोऽपरतन्त्राः प्राणेन स्वशक्त्यैव याति, नान्यकृतं गमनादिक्रियास्वस्य सामर्थ्यमित्यर्थः । सर्वं क्रियाकारकफलभेदजातं प्राण एव, न प्राणाद्बहिर्भूतमस्तीति प्रकरणार्थः । प्राणः प्राणं ददाति । यद्ददाति तत्स्वात्मभूतमेव । यस्मै ददाति तदपि प्राणायैव । अतः पित्राद्याख्योऽपि प्राण एव ॥
அனுவாதம் - ஆகையால் பிராணன் பரதந்திரம் அல்ல. பிராணன் தன் சக்தியினாலேயே செல்கிறது. மற்றவைகளால் அல்ல. செல்லுதல் முதலிய கிரியைகள் தன் சாமர்த்தியத்தினாலேயேயாகும் என்பது பொருள். எல்லா கிரியா காரக பலங்களாகிய பேதங்கள் பிராணனாலேயே ஏற்பட்டது பிராணனைக் காட்டிலும் வேறு ஒன்றும் இல்லை என்பது பிரகரண அர்த்தமாகும். பிராணன் பிராணனை அளிக்கிறது. எது அளிக்கிறதோ அது தன் ஸ்வரூபமேயாகும். எவருக்கு அளிக்கிறதோ அதுவும் பிராணனே ஆகையால் பிதா முதலிய பெயர் உடையவை எல்லாம் பிராணனே ஆகும்.
स यदि पितरं वा मातरं वा भ्रातरं वा स्वसारं वाचार्यं वा ब्राह्मणं वा किञ्चिद्भृशमिव प्रत्याह धिक्त्वास्त्वित्येवैनमाहुः पितृहा वै त्वमसि मातृहा वै त्वमसि भ्रातृहा वै त्वमसि स्वसृहा वै त्वमस्याचार्यहा वै त्वमसि ब्राह्मणहा वै त्वमसीति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - எந்த புருஷன் தன்னுடைய பிதாவையோ, மாதாவையோ சகோதரனையோ, சகோதரியையோ, ஆச்சாரியரையோ, பிராஹ்மணனையோ கடுமையாக பேசினால் அவனை நீ நிந்தைக்கு உரியவன். நீ நிச்சயமாக உன் பிதாவை கொன்றவன், மாதாவைக் கொண்றவன், சகோதரனைக் கொன்றவன், சகோதரியைக் கொன்றவன், ஆச்சாரிரைக் கொன்றவன் மேலும் நீ பிராஹ்மணனைக் கொன்றவன் என்று இவ்வாறு கூறுவர்.
कथं पित्रादिशब्दानां प्रसिद्धार्थोत्सर्गेण प्राणविषयत्वमिति, उच्यते — सति प्राणे पित्रादिषु पित्रादिशब्दप्रयोगात् तदुत्क्रान्तौ च प्रयोगाभावात् । कथं तदिति, आह —
அனுவாதம் - அ.கை - பிதா முதலிய சப்தங்களின் பிரசித்தமான அர்த்தங்களை ஏற்றுக்கொள்ளாமல் பிராண விஷயத்துவம் என்று எவ்வாறு கூறப்படுகிறது? பிராணன் இருந்தால் தான் பிதா முதலியவைகளின் பிதா முதலிய சப்த பிரயோகம் செய்யப்படுகிறது. அது வெளியேறிவிட்டால் (உத்கிரமணம் செய்து விட்டால்) இந்த பிரயோகம் இல்லாததாக ஆகும். அது எவ்வாறு? அதற்குக் கூறப்படுகிறது.
स यः कश्चित्पित्रादीनामन्यतमं यदि तं भृशमिव तदननुरूपमिव किञ्चिद्वचनं त्वङ्कारादियुक्तं प्रत्याह, तदैनं पार्श्वस्था आहुः विवेकिनः — धिक्त्वा अस्तु धिगस्तु त्वामित्येवम् । पितृहां वै त्वं पितुर्हन्तेत्यादि ॥
அனுவாதம் - எவன் ஒருவன் பிதா முதலியவர்களை மற்றவர்களிடம், அவர்களிடம் கூறக்கூடாத அரே, தூ இவைகளுடன் கூடி வசனங்களைக் கூறினால் அவர்கள் பக்கத்தில் உள்ள விவேகிகள் அவனை நிந்தை செய்து நீ பிதாவைக் கொன்றவன் என்பது முதலியவைகளைக் கூறுவார்கள். நீ பிதாவைக் கொன்றவன் என்பது முதலியவைகளைக் கூறுவர்.
अथ यद्यप्येनानुत्क्रान्तप्राणाञ्छूलेन समासं व्यतिषन्दहेन्नैवैनं ब्रूयुः पितृहासीति न मातृहासीति न भ्रातृहासीति न स्वसृहासीति नाचार्यहासीति न ब्राह्मणहासीति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - ஆனால் எவருடைய பிராணன் வெளியேறுகிறதோ அந்த பிதா முதலியவர்களை சூலத்தால் ஒரே வெட்டாக வெட்டி சின்னாபின்னமாக்கினாலும் நீ பிதாவைக் கொன்றவன், நீ மாதாவைக் கொன்றவன், நீ சகோதரனைக் கொன்றவன், நீ சகோதரியைக் கொன்றவன், நீ ஆச்சாரியாரைக் கொன்றவன், மேலும் நீ பிராஹ்மணனைக் கொன்றவன் என்று கூறமாட்டார்கள்.
अथ एनानेव उत्क्रान्तप्राणान् त्यक्तदेहनाथान् यद्यपि शूलेन समासं समस्य व्यतिषन्दहेत् व्यत्यस्य सन्दहेत् , एवमप्यतिक्रूरं कर्म समासव्यत्यासादिप्रकारेण दहनलक्षणं तद्देहसम्बद्धमेव कुर्वाणं नैवैनं ब्रूयुः पितृहेत्यादि । तस्मादन्वयव्यतिरेकाभ्यामवगम्यते एतत्पित्राद्याख्योऽपि प्राण एवेति ॥
அனுவாதம் - ஆனால் அவர்களிடம் இருந்து பிராணன் வெளியோரியபின் அதாவது தேஹத்தைவிட்டபின் அவர்களை சூலத்தால் ஒரே வெட்டால் வெட்டி சின்னாபின்னம் செய்தாலும் அந்த தேஹ சம்மந்தமானவைகளை சேர்த்து, பிரித்து எரித்தல் முதலிய மிகக் குரூரமான கர்மாவை செய்தாலும் நீ பிதாவைக் கொன்றவன் என்பது முதலியவைகளைக் கூறுவதில்லை. ஆகையால் அன்வய வியதிரேக மூலமாக அறியப்படுகிறது. அந்த பிதா முதலிய நாமங்களும் பிராணனேயாகும்.
प्राणो ह्येवैतानि सर्वाणि भवति स वा एष एवं पश्यन्नेवं मन्वान एवं विजानन्नतिवादी भवति तं चेद्ब्रूयुरतिवाद्यसीत्यतिवाद्यस्मीति ब्रूयान्नापह्नुवीत ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - பிராணனே எல்லாம் (பிதா முதலியவைகள்). எவன் ஒருவன் இவ்வாறு காண்கின்றானோ, இவ்வாறு நினைக்கின்றானோ மேலும் இவ்வாறு அறிந்தவன் சிறந்த பேச்சாளி (சிறப்பாக பேசுபவன்) ஆகின்றான். எவராவது நீ சிறந்த பேச்சாளன் என்று கூறினால் ஆம் நான் சிறப்பாக பேசுபவன் என்று கூறவேண்டும். அதை மறுக்கக்கூடாது.
तस्मात् प्राणो ह्येवैतानि पित्रादीनि सर्वाणि भवति चलानि स्थिराणि च । स वा एष प्राणविदेवं यथोक्तप्रकारेण पश्यन् फलतो अनुभवन् एवं मन्वानः उपपत्तिभिश्चिन्तयन् एवं विजानन् उपपत्तिभिः संयोज्य एवमेवेति निश्चयं कुर्वन्नित्यर्थः । मननविज्ञानाभ्यां हि सम्भूतः शास्त्रार्थो निश्चितो दृष्टो भवेत् । अत एवं पश्यन् अतिवादी भवति नामाद्याशान्तमतीत्य वदनशीलो भवतीत्यर्थः ।
அனுவாதம் - பிராணனே இந்த எல்லா சராசரங்களாகிய பிதா முதலியவைகள் எல்லாம் ஆகும். அந்த இந்த பிராணனை அறிந்தவன் முற்கூறியவாறு காண்கின்றானோ அவன் பலத்தை அனுபவித்துக்கொண்டு இவ்வாறு மனனம் செய்கின்றானோ அவ்வாறே யுக்தியினால் சிந்தித்து இவ்வாறு அறிந்து யுக்திகளுடன் கூடி “இது இவ்வாறு இருக்கிறது” என்று நிச்சயம் செய்கிறான். ஏன்எனில் மனனம் விக்ஞானங்களின் மூலமாக அடைந்த சாஸ்த்திரார்த்தத்தை நிச்சயம் செய்யப்படுவது காணப்படுகிறது. அதனால் இவ்வாறு கண்டு (அறிந்து) அதிவாதியாக (சிறந்த பேச்சாளனாக) ஆகின்றான். அதாவது நாமம் முதல் ஆசை வரைக் கடந்து சிறந்த பேச்சாற்றல் உடையவனாக ஆகின்றான்.
तं चेद्ब्रूयुः तं ब्रह्मादिस्तम्बपर्यन्तस्य हि जगतः प्राण आत्मा अहमिति ब्रुवाणं यदि ब्रूयुः अतिवाद्यसीति, बाढम् अतिवाद्यस्मीति ब्रूयात् , न अपह्नुवीत । कस्माद्धि असावपह्नुवीत ? यत्प्राणं सर्वेश्वरम् अयमहमस्मि इत्यात्मत्वेनोपगतः ॥
அனுவாதம் - அவனிடம் இவ்வாறு கூறினால் அதாவது இவ்வாறு நன்றாக பேசுபவரை (அதிவாதியை) எப்பொழுது எல்லா சப்தங்களால் நாமம் முதல் ஆசை வரையில் உள்ள தத்துவங்களைத் தாண்டி இப்பொழுது இருக்கும் பிராணனையே கூறுகின்றார் என்பதைக் கண்டு அந்த அதிவாதி நான் பிரஹ்மா முதல் ஸ்தம்பம் வரையில் உள்ள எல்லா ஜகத்தின் பிராணாத்மாவாக இருக்கிறேன் என்று கூறுபவனே நீ அதிவாதி என்று கூறினால் அந்த அதிவாதி நான் அதிவாதி என்று கூறவேண்டும். அதை மறைக்க வேண்டியதில்லை. இந்த சர்வேஷ்வரமயமான பிராணன் நான் என்று ஆத்மபாவத்தை அறிந்த அதிவாதீ ஏன் மறைக்க வேண்டும்.
इति पञ्चदशखण्डभाष्यम् ॥
स एष नारदः सर्वातिशयं प्राणं स्वमात्मानं सर्वात्मानं श्रुत्वा नातः परमस्तीत्युपरराम, न पूर्ववत्किमस्ति भगवः प्राणाद्भूय इति पप्रच्छ यतः । तमेव विकारानृतब्रह्मविज्ञानेन परितुष्टमकृतार्थं परमार्थसत्यातिवादिनमात्मानं मन्यमानं योग्यं शिष्यं मिथ्याग्रहविशेषात् विप्रच्यावयन् आह भगवान्सनत्कुमारः —एष तु वा अतिवदति, यमहं वक्ष्यामि । न प्राणविदतिवादी परमार्थतः । नामाद्यपेक्षं तु तस्यातिवादित्वम् । यस्तु भूमाख्यं सर्वातिक्रान्तं तत्त्वं परमार्थसत्यं वेद, सोऽतिवादीत्याह —
அனுவாதம் - அ.கை - அந்த நாரதர் மிகவும் சிறப்பான தன் ஆத்மாவாகிய பிராணனே சர்வாத்மா என்று அறிந்து அதைத் தவிர மேலானது இல்லை என்று சாந்தமானார் ஏன்எனில் முன்போல் ஹே பகவானே பிராணனைவிட மேலானது உள்ளதா என்று கேள்வியை கேட்கவில்லை. இவ்வாறு விகாரரூபமித்யா பிரஹ்மஞானத்தால் சந்தோஷம் அடைந்து அக்ருதார்த்தராய் தன்னை பரமார்த்த சத்தியவாதியாய் நினைத்துக்கொண்டிருக்கும் யோக்கியமுள்ள சிஷ்யனுக்கு அந்த மித்யாவாக கிரஹித்துக் கொண்ட விஷயத்தால் நழுவிய வரைக் குறித்துக் பகவான் சனத்குமாரர் இவ்வாறு கூறினார் - இனி நான் விளக்கப் போகிறவரே அதிவாதி. உண்மையில் பிராணனை அறிந்தவர் அதிவாதியல்ல. ஏன் எனில் நாமம் முதலியவைகளை அபேக்ஷிப்பதால் அதிவாதித்துவம் கிடையாது. ஆனால் எவர் ஒருவர் பூமா எனப்படும். எல்லாவற்றையும் கடந்த பரமார்த்த சத்தியம் அறிந்தவறே அவரே அதிவாதி என்பது கூறப்படுகிறது.-
एष तु वा अतिवदति यः सत्येनातिवदति सोऽहं भगवः सत्येनातिवदानीति सत्यं त्वेव विजिज्ञासितव्यमिति सत्यं भगवो विजिज्ञास इति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - (சனத்குமாரர்-) எது சத்யத்தின் காரணத்தால் அதிவதனம் செய்கின்றானோ அவன் நிச்சயமாக அதிவதனம் செய்கின்றான். (நாரதர்-) பகவானே! நான் பரமார்த்த சத்ய விக்ஞானத்தால் நான் அதிவதனம் செய்கின்றேன். (சனத்குமாரர்-) சத்தியத்தையே விசேஷரூபமாக அறிய விருப்பம் கொள்ள வேண்டும். (நாரதர்-) பகவானே! நான் விசேஷரூபமாக சத்யத்தை அறிய விரும்புகின்றேன்.
एष तु वा अतिवदति यः सत्येन परमार्थसत्यविज्ञानवत्तया अतिवदति । सोऽहं त्वां प्रपन्नः भगवः सत्येनातिवदानि ; तथा मां नियुनक्तु भगवान् , यथा अहं सत्येनातिवदानीत्यभिप्रायः । यद्येवं सत्येनातिवदितुमिच्छसि, सत्यमेव तु तावद्विजिज्ञासितव्यमित्युक्त आह नारदः । तथास्तु तर्हि सत्यं भगवो विजिज्ञासे विशेषेण ज्ञातुमिच्छेयं त्वत्तोऽहमिति ॥
அனுவாதம் - (சனத்குமாரர்-) எவன் ஒருவன் அதிவதனம் செய்கிறானோ அது பரமார்த்த சத்ய விக்ஞானத்தின் காரணமாக அதிவதனம் செய்கின்றான். (நாரதர்) ஹே பகவானே! தங்களிடம் சரணாகதி அடைந்த நான் சத்தியத்தின் காரணமாக அதிவதனம் செய்கின்றேன். இதன் தாத்பர்யம் என்னவெனில் பகவானே! நீங்கள் எனக்கு சத்யஞானத்தின் காரணமாக அதிவ தனம் செய்வேனோ அவ்வாறு எனக்கு உபதேசியுங்கள். (சனத்குமாரர்) நீ இவ்வாறு சத்தியத்தின் மூலமாக அதிவதனம் செய்ய விரும்பினால் சத்தியத்தை ஜிக்ஞாசை செய்ய வேண்டும். இவ்வாறு கூறியதற்கு நாரதர் கூறினார்- சரிதான் அவ்வாறே ஆகட்டும். பகவானே! நான் சத்யத்தை அறிய இச்சையுடன் உள்ளேன்.
इति षोडशखण्डभाष्यम् ॥
यदा वै विजानात्यथ सत्यं वदति नाविजानन्सत्यं वदति विजानन्नेव सत्यं वदति विज्ञानं त्वेव विजिज्ञासितव्यमिति विज्ञानं भगवो विजिज्ञास इति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - எப்பொழுது ஒருவன் சத்யத்தை விசேஷரூபமாக அறிகிறானோ அப்பொழுது அவன் சத்யத்தையே பேசுகின்றான். அறியவில்லையெனில் சத்யத்தை பேசமாட்டான். மேலும் விசேஷரூபமாய் அறிந்தவன் சத்யத்தையே கூறுகின்றான். ஆகையால் விக்ஞானத்தை விசேஷ ரூபமாக அறியவேண்டும். (நாரதர் -) பகவானே! நான் விக்ஞானத்தை விசேஷரூபமாக அறிய விரும்புகின்றேன்.
यदा वै सत्यं परमार्थतः विजानाति — इदं परमार्थतः सत्यमिति, ततः अनृतं विकारजातं वाचारम्भणं हित्वा सर्वविकारावस्थं सदेवैकं सत्यमिति तदेव अथ वदति यद्वदति ।
அனுவாதம் - எப்பொழுது சத்யத்தை பரமார்த்தமாக (உண்மையாக) அறிகிறானோ என்று - அதாவது இதுவே பரமார்த்த சத்யம் என்று அறிகிறானோ என்பதாகும். ஆகையால் நாம ரூபங்களாகிய விகாரங்களால் உண்டான அந்ருதத்தை அதாவது பொய்யை நீக்கி எல்லா விகாரங்களிலும் நிலைபெற்ற எப்பொழுதும் ஒரே சத்யம் தான் என்று அறிந்து எது பேசினாலும் அது சத்யமான பேச்சேயாகும்.
அனுவாதம் - சங்கை - ஆனால் விகாரமும் சத்யமே. ஏன் எனில் “नामरूपे सत्यं ताभ्यामयं प्राणश्छन्नः” (நாமரூபே சத்யம் தாப்யாமயம் பிராணச்சன்ன:) நாமரூபம் சத்யமே. அதனால் பிராணன் மறைக்கப்பட்டுள்ளது), “प्राणा वै सत्यं तेषामेव सत्यम्” (பிராணா வை சத்யம் தேஷாமேவ சத்யம்) பிராணனே (வாக் முதலியவையே) சத்யம் அவைகளைக்காட்டிலும் முக்கியபிராணன் சத்யம் என்று வேறு சுருதியினாலும் அறிகிறோம்.
सत्यमुक्तं सत्यत्वं श्रुत्यन्तरे विकारस्य, न तु परमार्थापेक्षमुक्तम् । किं तर्हि ? इन्द्रियविषयाविषयत्वापेक्षं सच्च त्यच्चेति सत्यमित्युक्तं तद्द्वारेण च परमार्थसत्यस्योपलब्धिर्विवक्षितेति । ‘प्राणा वै सत्यं तेषामेष सत्यम्’ (बृ. उ. २ । ३ । ६) इति च उक्तम् ।
அனுவாதம் - கூறியது சரியே. வேறு சுருதியில் விகாரத்தின் சத்யத்துவம் கூறப்பட்டுள்ளது. அது பரமார்த்தத்தை அபேக்ஷித்துக் கூறப்படவில்லை. ஆனால் அது எவ்வாறு? இந்திரியங்களுக்கு விஷயமாதல், விஷயம் ஆகாமல் இருத்தல் ஆகிய இவைகளை அபேக்ஷித்து சச்ச, தியச்ச (स त्य इति) என்று சத்யம் என்பது கூறப்பட்டது. அதன் மூலமாக பரமார்த்த சத்யத்தின் அடைவு விளக்கப்பட்டது. (வாக் முதலிய) பிராணன்களைக் காட்டிலும் (முக்ய) பிராணனே சத்யம் என்று கூறப்பட்டது.
इहापि तदिष्टमेव । इह तु प्राणविषयात्परमार्थसत्त्यविज्ञानाभिमानाद्व्युत्थाप्य नारदं यत्सदेव सत्यं परमार्थतो भूमाख्यम् , तद्विज्ञापयिष्यामीति एष विशेषतो विवक्षितोऽर्थः । नाविजानन्सत्यं वदति’ यस्त्वविजानन्वदति सोऽग्न्यादिशब्देनाग्न्यादीन्परमार्थसद्रूपान्मन्यमानो वदति’ न तु ते रूपत्रयव्यतिरेकेण परमार्थतः सन्ति । तथा तान्यपि रूपाणि सदपेक्षया नैव सन्तीत्यतो नाविजानन्सत्यं वदति । विजानन्नेव सत्यं वदति ।
அனுவாதம் - இங்கு இதுவும் உகந்ததே. ஆனால் இங்கு பிராண விஷயத்தில் பரமார்த்த சத்ய விக்ஞானத்தில் உள்ள அபிமானத்தை போக்குவதற்காக நாரதரிடம் எது சத்மாத்திரமோ அது பூமா எனப்படும் பரமார்த்த சத்யமாகும். அதை உனக்கு அறியச் செய்கின்றேன் என்று இதை உனக்கு அறியச் செய்கிறேன் என்று விசேஷமாக (சனத்குமாரர் -) விளக்கினார் என்பது பொருள். சத்தியத்தை விசேஷமாக அறியாமல் சத்யத்தைக் கூறமுடியாது. எவன் அறியாமல் கூறுகின்றானோ அவன் அக்னி முதலிய சப்தங்களால் அக்னி முதலியவைகளை பரமார்த்த சத்ரூபம் என்று கருதி கூறுகின்றான். மூன்று ரூபங்களைத் தவிர்த்து (சிகப்பு, வெண்மை, கருமை ரூபங்களைத் தவிர்த்து) உண்மையில் அவைகள் இல்லை. அவ்வாறே அந்த ரூபங்கள் சத்தை அபேக்ஷிக்காமல் இல்லாததால் சத்யத்தை அறியாமல் கூறமுடிகிறது. அறிந்தவன் சத்யத்தையே (உண்மையே) கூறுகின்றான்.
न च तत्सत्यविज्ञानमविजिज्ञासितमप्रार्थितं ज्ञायत इत्याह — विज्ञानं त्वेव विजिज्ञासितव्यमिति । यद्येवम् , विज्ञानं भगवो विजिज्ञासे इति । एवं सत्यादीनां च उत्तरोत्तराणां करोत्यन्तानां पूर्वपूर्वहेतुत्वं व्याख्येयम् ॥
அனுவாதம் -அந்த சத்ய விக்ஞானத்தை அறிய இச்சை இல்லாதவனுக்கும், அதைக் குறித்து பிரார்த்திக்காதவனும் (உபதேசிக்க வேண்டும் என்று கேட்காதவனுக்கும்) அறிய முடியாது என்பதற்காகக் கூறுகிறார் - விக்ஞானத்தை அறியச்செய்யுங்கள் என்று. இவ்வாறு சத்யம் முதல் செய்கிறான் (करोति = கரோதி, செய்கிறான்) வரை உள்ள பதார்த்தங்கள் உத்தரேத்தர பதார்த்தங்களுக்கு பூர்வ பூர்வ பதார்த்தங்கள் காரணமாகின்றன. இவ்வாறு வியாக்கியானம் செய்யப்படவேண்டும்.
इति सप्तदशखण्डभाष्यम् ॥
यदा वै मनुतेऽथ विजानाति नामत्वा विजानाति मत्वैव विजानाति मतिस्त्वेव विजिज्ञासितव्येति मतिं भगवो विजिज्ञास इति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - (சனத்குமாரர்) எப்பொழுது மனிதன் மனனம் செய்கின்றானோ அப்பொழுது அவன் விசேஷரூபமாக அறிகின்றான். மனனம் செய்யவில்லையெனில் ஒன்றையும் அறிவது இல்லை. ஆனால் மனனம் செய்தால் அறிகின்றான். ஆகையால் மதியையே விசேஷரூபமாக அறிவதற்கு இச்சை செய்யவேண்டும் (जिज्ञासा) - ஜிக்ஞாசா செய்யவேண்டும்) (நாரதர்-) பகவானே! நான் மதியின் விக்ஞானத்தை அறிய விரும்புகிறேன்.
यदा वै मनुत इति । मतिः मननं तर्को मन्तव्यविषये आदरः॥
அனுவாதம் - எப்பொழுது மனனம் செய்கின்றானோ என்பது முதலியவை. மதி என்னால் மனனம்-தர்க்கம்- மனன விஷயத்தின் ஆதரவாக ஆகிறது.
इति अष्टादशखण्डभाष्यम् ॥
यदा वै श्रद्दधात्यथ मनुते नाश्रद्दधन्मनुते श्रद्दधदेव मनुते श्रद्धा त्वेव विजिज्ञासितव्येति श्रद्धां भगवो विजिज्ञास इति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - (சனத்குமாரர் -) எப்பொழுது மனிதன் சிரத்தை செய்கின்றானோ அப்பொழுது அவன் மனனம் செய்கின்றான். சிரத்தையில்லாமல் மனனம் செய்யமாட்டான். ஆனால் எவன் சிரத்தை உள்ளவனே அவன் மனனம் செய்கின்றான். ஆகையால் சிரத்தையை விசேஷ ரூபமாக ஜிக்ஞாசை செய்யவேண்டும். (நாரதர் -) பகவானே! நான் சிரத்தையின் விக்ஞானத்தில் இச்சை உள்ளவனாய் இருக்கிறேன்
आस्तिक्यबुद्धिः श्रद्धा ॥
அனுவாதம் - ஆஸ்திகபுத்தியே சிரத்தை ஆகும்.
इति एकोनविंशतितमखण्डभाष्यम् ॥
यदा वै निस्तिष्ठत्यथ श्रद्दधाति नानिस्तिष्ठञ्छ्रद्दधाति निस्तिष्ठन्नेव श्रद्दधाति निष्ठा त्वेव विजिज्ञासितव्येति निष्ठां भगवो विजिज्ञास इति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - (சனத்குமாரர் -) எப்பொழுது இந்த புருஷன் நிஷ்டையை அடைகிறானோ அப்பொழுது அவன் சிரத்தை உடையவனாகின்றான். நிஷ்டை இல்லாமல் சிரத்தை செய்ய முடியாது. ஆனாலும் நிஷ்டை செய்பவன் சிரத்தை செய்கின்றான். ஆகையால் நிஷ்டையை விசேஷரூபமாக அறிய விருப்பம்கொள்ள வேண்டும். (நாரதர்) பகவானே! நான் நிஷ்டையை விசேஷரூபமாய் அறிய விரும்புகிறேன்.
निष्ठा गुरुशुश्रूषादितत्परत्वं ब्रह्मविज्ञानाय ॥
அனுவாதம் - நிஷ்டை என்பது பிரஹ்மவிக்ஞானத்திற்காக குருசுச்ரூஷை (சேவை) முதலியவைகளில் அதிலேயே நிலைத்திருத்தல்.
इति विंशतितमखण्डभाष्यम् ॥
यदा वै करोत्यथ निस्तिष्ठति नाकृत्वा निस्तिष्ठति कृत्वैव निस्तिष्ठति कृतिस्त्वेव विजिज्ञासितव्येति कृतिं भगवो विजिज्ञास इति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - (சனத்குமாரர் -) எப்பொழுது புருஷன் செயல்படுகிறானோ அப்பொழுது நிஷ்டையும் செய்கிறான். செயல்படாமல் நிஷ்டையை செய்ய முடியாது. புருஷன் செயல்பட்டால் நிஷ்டை உடையவனாகின்றான். ஆகையால் செயல்களை விசேஷரூபமாக அறியவிரும்ப வேண்டும் (நாரதர்-) பகவானே! நான் செயல்களை விசேஷரூபமாக அறிய விரும்புகின்றேன்.
यदा वै करोति । कृतिः इन्द्रियसंयमः चित्तैकाग्रताकरणं च । सत्यां हि तस्यां निष्ठादीनि यथोक्तानि भवन्ति विज्ञानावसानानि ॥
அனுவாதம் - எப்பொழுது மனிதன் செயல்படுகின்றானோ என்பதாகும். “कृति” (க்ருதி-செயல்) செயல் இந்திரியங்களுடன் சேர்த்து சித்த ஏகாக்ரம் செய்வதாகும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு அடைந்ததும் மேலே கூறியவாறு (விபரீத கிரமமாக) நிஷ்டையில் ஆரம்பித்து விக்ஞானம் வரை எல்லாம் சாதனங்கள் ஆகின்றன.
इति एकविंशखण्डभाष्यम् ॥
यदा वै सुखं लभतेऽथ करोति नासुखं लब्ध्वा करोति सुखमेव लब्ध्वा करोति सुखं त्वेव विजिज्ञासितव्यमिति सुखं भगवो विजिज्ञास इति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - (சனத்குமாரர்) - எப்பொழுது மனிதன் சுகத்தை அடைவானோ அப்பொழுது செயல்படுகின்றான். சுகம் கிடையாது. எனில் செயல்படமாட்டான். ஆனால் சுகம் கிடைத்தபின் செயல்படுகிறான். ஆகையால் சுகத்தையே விசேஷரூபமாக அறிய வேண்டும். (நாரதர்-) பகவானே! எனக்கு சுகத்தின் விசேஷத்தை அறிய விரும்புகிறேன் (ஜிக்ஞாசை செய்கிறேன்).
सापि कृतिः यदा सुखं लभते सुखं निरतिशयं वक्ष्यमाणं लब्धव्यं मयेति मन्यते तदा भवतीत्यर्थः । यथा दृष्टफलसुखा कृतिः तथेहापि नासुखं लब्ध्वा करोति । भविष्यदपि फलं लब्ध्वेत्युच्यते, तदुद्दिश्य प्रवृत्त्युपपत्तेः ।
அனுவாதம் - அந்த கிருதியும் எப்பொழுது சுகம் கிடைக்கிறதோ அதாவது எப்பொழுது இனிக்கூறப்போகும் நிரதிசய சுகத்தை அடையவேண்டும் என்று நினைக்கின்றானோ அப்பொழுது ஏற்படுகிறது- என்பது பொருள். எவ்வாறு திருஷ்ட பலத்தினால் உண்டாகும் சுகத்திற்காக (கிருதி - செயல்) உண்டாகிறதோ அவ்வாறே சுகம் இல்லாததை அடைவதற்கு ஒருவரும் செயல்படுவதில்லை வருங்காலத்தில் இதன் பலம் கிடைக்கும் என்று கூறினால் அதை உத்தேசித்து பிரவிர்த்திக்கின்றனர்.
अथेदानीं कृत्यादिषूत्तरोत्तरेषु सत्सु सत्यं स्वयमेव प्रतिभासत इति न तद्विज्ञानाय पृथग्यत्नः कार्य इति प्राप्तम् ; तत इदमुच्यते — सुखं त्वेव विजिज्ञासितव्यमित्यादि । सुखं भगवो विजिज्ञास इत्यभिमुखीभूताय आह ॥
அனுவாதம் - அதன்பின் இப்பொழுது கிருதி (செயல்) முதலியவைகளில் மேலே மேலே உள்ள சத்துக்களில் சத்யம் தானாகவே (சுயமாகவே) தோன்றுவதால் அதை அறிவதற்கு தனியாக எந்த சாதனத்தையும் செய்ய வேண்டியதில்லை என்று ஏற்படும்பொழுது இவ்வாறு கூறினார் - சுகத்தை விசேஷரூபமாய் அறிய இச்சை (ஜிக்ஞாசை) கொள்ள வேண்டும் என்பது முதலியவைகளாகும். ஹே பகவானே! நான் சுகத்தை விசேஷரூபமாக அறிய விரும்புகின்றேன் என்று இவ்வாறு (சனத்குமாரரிடம்) அடைக்கலம் அடைந்தவரிடம் சனத்குமாரர் கூறினார்.
इदि द्वाविंशखण्डभाष्यम् ॥
यो वै भूमा तत्सुखं नाल्पे सुखमस्ति भूमैव सुखं भूमा त्वेव विजिज्ञासितव्य इति भूमानं भगवो विजिज्ञास इति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - (சனத்குமாரர்) எது பூமாவோ அதுவே நிச்சயமாக சுகம் ஆகும். அல்பத்தில் சுகம் இல்லை. சுகமே பூமா. பூமாவை விசேஷரூபமாக (ஜிக்ஞாசை) அறிவதில் இச்சைக் கொள்ளவேண்டும். (நாரதர்-) பகவானே! நான் பூமாவை விசேஷ ரூபமாக அறிய விரும்புகின்றேன். (ஜிக்ஞாசை கொள்கின்றேன்).
यो वै भूमा महत् निरतिशयं बह्विति पर्यायाः, तत्सुखम् । ततोऽर्वाक्सातिशयत्वादल्पम् । अतस्तस्मिन्नल्पे सुखं नास्ति, अल्पस्याधिकतृष्णाहेतुत्वात् । तृष्णा च दुःखबीजम् । न हि दुःखबीजं सुखं दृष्टं ज्वरादि लोके । तस्माद्युक्तं नाल्पे सुखमस्तीति । अतो भूमैव सुखम् । तृष्णादिदुःखबीजत्वासम्भवाद्भूम्नः ॥
அனுவாதம் - அது நிச்சயமாக பூமாவேயாகும். பூமா, மஹத், நிரதிசயம், பெரியது என்பது எல்லாம் சுக சப்தத்தின் பரியாயபதங்கள். அதைவிட கீழான பதார்த்தங்கள் சிறிது, பெரிது என்று இருப்பதால் அது அல்பமாகும். ஆகையால் அந்த அல்பத்தில் சுகம் இல்லை. ஏன்எனில் அல்பத்தில் மிகுந்த ஆசை (த்ருஷ்ணா) (तृष्णा) க்கு காரணமாவதால், பேராசையே துக்கத்திற்கான பீஜம், உலகில் துக்கத்திற்குக் காரணமான ஜ்வரம் முதலியவைகளில் சுகம் காணப்படவில்லை. ஆகையால் அல்பத்தில் சுகம் இல்லை. ஏன் எனில் பூமாவிற்கு த்ருஷ்ணா (ஆசை) முதலிய துக்க பீஜமானது சம்பவிக்காது.
इति त्रयोविंशखण्डभाष्यम् ॥
किंलक्षणोऽसौ भूमेति, आह —
அனுவாதம் - அ.கை - இந்த பூமா என்ன லக்ஷணங்கள் உடையது என்பது கூறப்படுகிறது.
यत्र नान्यत्पश्यति नान्यच्छृणोति नान्यद्विजानाति स भूमाथ यत्रान्यत्पश्यत्यन्यच्छृणोत्यन्यद्विजानाति तदल्पं यो वै भूमा तदमृतमथ यदल्पं तन्मर्त्यꣳ स भगवः कस्मिन्प्रतिष्ठित इति स्वे महिम्नि यदि वा न महिम्नीति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - (சனத்குமாரர்) எங்கு வேறு ஒன்றையும் காண்பதில்லையோ, எங்கு வேறு ஒன்றையும் கேட்பது இல்லையோ, வேறு ஒன்றையும் அறிவது இல்லையோ, அது பூமா. ஆனால் எங்கு சிறிது காணப்படுகிறதோ, சிறிது கேட்கப்படுகிறதோ, சிறிது அறியப்படுகிறதோ அது அல்பம். எது பூமாவோ அது அம்ருதம். எது அல்பமோ அது மர்த்தியம் (மரணதர்மம் உடையது). (நாரதர்-) பகவானே! அந்த (பூமா) எதில் பிரதிஷ்டையாகி உள்ளது (நிலைபெற்றுள்ளது). (சனத்குமாரர்-) தன்னுடைய மஹிமையில் அல்லது அதன் மஹிமையிலும் இல்லை.
यत्र यस्मिन्भूम्नि तत्त्वे न अन्यद्द्रष्टव्यमन्येन करणेन द्रष्टा अन्यो विभक्तो दृश्यात्पश्यति । तथा नान्यच्छृणोति । नामरूपयोरेवान्तर्भावाद्विषयभेदस्य तद्ग्राहकयोरेवेह दर्शनश्रवणयोर्ग्रहणम् अन्येषां च उपलक्षणार्थत्वेन । मननं तु अत्रोक्तं द्रष्टव्यं नान्यन्मनुत इति, प्रायशो मननपूर्वकत्वाद्विज्ञानस्य । तथा नान्यद्विजानाति । एवंलक्षणो यः स भूमा ।
அனுவாதம் - எங்கு இந்த பூமாதத்வத்தில் வேறான எந்த ஒரு வேறு திருஷ்டாவையோ, எந்த ஒரு திருஷ்டவ்ய (பார்க்கவேண்டிய) விஷயத்தை வேறான மற்ற இந்திரியங்களால் பார்க்க முடியாது. ஒன்றும் கேட்கவும் முடியாது. விஷயபேதங்களின் அந்தர்பாவம் நாமரூபங்களில் ஏற்படுகிறது. ஆகையால் அவைகளைக் கிரஹிக்கும் தர்சனம் (பார்த்தல்) ஸ்ரவணித்தல் (கேட்டல்) ஆகிய இரண்டு இந்திரியங்களும் மற்ற இந்திரியங்களுக்கு உபலக்ஷணம் என்று அறிந்துகொள்ள வேண்டும். ஆனால் மனனத்தை “नान्यन्मनुते” (நான்யன்மனுதே) வேறு ஒன்றை சிந்திக்காது) என்று கூறி தனியாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது என்று இவ்வாறு அறிந்துகொள்ள வேண்டும். ஏன்எனில் விக்ஞானம் அநேகமாக மனனத்தின் வாயிலாக ஏற்படுகிறது. அவ்வாறே ஒன்றையும் சிறிதும் அறிவதில்லை ஆகிய லக்ஷணங்களை உடையது அந்த இந்த “பூமா”.
किमत्र प्रसिद्धान्यदर्शनाभावो भूम्न्युच्यते नान्यत्पश्यतीत्यादिना, अथ अन्यन्न पश्यति, आत्मानं पश्यतीत्येतत् ।
அனுவாதம் - குரு - என்ன இங்கு “नान्यत्पश्यति” (நான்யத்பச்யதி - வேறு ஒன்றை பார்க்காது) முதலிய வாக்கியங்களால் லோகப் பிரசித்தமான மற்றதின் தர்சனத்தின் அபாவம் கூறப்பட்டது. அல்லது மற்றதைப் பார்க்கவில்லை. தன்னைக் காண்கிறது என்று கூறப்பட்டதா?
किञ्चातः ?
அனுவாதம் - சிஷ்யன் - இதனால் (லாபமா, நஷ்ட்டமா) என்ன?
यद्यन्यदर्शनाद्यभावमात्रमित्युच्यते, तदा द्वैतसंव्यवहारविलक्षणो भूमेत्युक्तं भवति । अथ अन्यदर्शनविशेषप्रतिषेधेन आत्मानं पश्यतीत्युच्यते, तदैकस्मिन्नेव क्रियाकारकफलभेदोऽभ्युपगतो भवेत् ।
அனுவாதம் - குரு - அந்ய (மற்ற) தர்சனங்கள் முதலியவைகளின் இல்லை என்பது கூறப்படும்பொழுது துவைதத்தால் உண்டாகும் வியவஹாரத்தைக் காட்டிலும் விலக்ஷணம் “பூமா” என்று ஆகிறது. மேலும் அந்ய (மற்ற) தர்சன விசேஷங்களை நீக்கி ஆத்மாவைக் காண்கின்றான் என்று கூறப்படுகிறது. அப்பொழுது ஒன்றிலேயே கிரியாகாரக பல பேதங்கள் இருப்பதாக ஆகும்.
यद्येवं को दोषः स्यात् ?
அனுவாதம் - சிஷ்யன் - இவ்வாறு இருப்பதில் என்ன தோஷம் ஏற்படும்?
नन्वयमेव दोषः — संसारानिवृत्तिः । क्रियाकारकफलभेदो हि संसार इति आत्मैकत्वे एव क्रियाकारकफलभेदः संसारविलक्षण इति चेत् , न, आत्मनो निर्विशेषैकत्वाभ्युपगमे दर्शनादिक्रियाकारकफलभेदाभ्युपगमस्य शब्दमात्रत्वात् ।
அனுவாதம் - குரு -ஆனால் இந்த சம்சாரம் நிவிர்த்தி ஆகாததே தோஷமாகும். கிரியாகாரகபலபேதமே சம்சாரம் என்பதாகும். ஆத்மஏகத்வமே கிரியாகாரகபலபேதம் சம்சாரத்தைக் காட்டிலும் வேறானது எனில்? அவ்வாறு அல்ல. ஆத்மாவிற்கு நிர்விசேஷஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டால் அதில் தர்சன முதலிய கிரியா, காரக, பலரூப பேதத்தை ஏற்றுக் கொள்வது சப்தமாத்ரமே ஆகும்.
अन्यदर्शनाद्यभावोक्तिपक्षेऽपि यत्र इति अन्यन्न पश्यति इति च विशेषणे अनर्थके स्यातामिति चेत् — दृश्यते हि लोके यत्र शून्ये गृहेऽन्यन्न पश्यतीत्युक्ते स्तम्भादीनात्मानं च न न पश्यतीति गम्यते ; एवमिहापीति चेत् ,
அனுவாதம் - சிஷ்யன் - ஆனால் மற்ற தர்சனம் முதலியவைகள் இல்லை என்று கூறும் பக்ஷத்திலும் “यत्र” (யத்ர- எங்கு) மேலும் “अन्यन्नपश्यति” (அத்யந்னபஷ்யதி = வேறு ஒன்றைப் பார்க்காது) என்ற இந்த இரண்டு விசேஷணங்களும் அர்த்தமற்றதாக ஆகிவிடும். உலகில் எங்கு காணப்படுகிறதோ எங்கு சூன்யமான வீட்டில் ஸ்தம்பம் முதலியவைகளையும், தன்மையும் பார்க்கவில்லையென்பதும் பொருந்தாது. அவ்வாறே இங்கும் என்றால்?
न, तत्त्वमसीत्येकत्वोपदेशादधिकरणाधिकर्तव्यभेदानुपपत्तेः । तथा सदेकमेवाद्वितीयं सत्यमिति षष्ठे निर्धारितत्वात् । ‘अदृश्येऽनात्म्ये’ (तै. उ. २ । ७ । १) ‘न सन्दृशे तिष्ठति रूपमस्य’ (तै. ना. १ । ३) ‘विज्ञातारमरे केन विजानीयात्’ (छा. उ. २ । ४ । १४) इत्यादिश्रुतिभ्यः स्वात्मनि दर्शनाद्यनुपपत्तिः ।
அனுவாதம் - குரு - அவ்வாறு அல்ல. ஏன்எனில் “தத்வமஸி” (तत्त्वमसि) என்று ஏகத்துவத்தை உபதேசிப்ப-தால் ஆதார ஆதேயரூபபேதம் சம்பவிக்காது. அவ்வாறே சத்ஏகமோவாத்விதீயம் சத்யம் (सदेकमेवाद्वितीयं सत्यम्) என்று ஆறாவது அத்தியாயத்தில் நிச்சயம் செய்யப்பட்டது. “अदृश्येऽनात्म्ये” (அத்ருஷ்யேऽநாத்மயே), “न संदृशे तिष्द्भति रूपमस्य” (ந சம்த்ருஷே திஷ்ட்டதி ரூபமஸ்ய). “विज्ञातारमरे केन विजानीयात्” (விக்ஞாதாரமரே கேன விஜாநீயாத்) முதலிய சுருதிகளிலும் ஸ்வ ஆத்மாவிடத்தில் தர்சனம் முதலியவைகள் சம்பவிக்காது என்பது கூறப்பட்டுள்ளது.
यत्र इति विशेषणमनर्थकं प्राप्तमिति चेत् ,
அனுவாதம் - சிஷ்யன் - ஆனால் இவ்வாறு “यत्र” (யத்ர =எங்கு) என்ற விசேஷணம் வியர்த்தமாகிவிடுமே? (பிரயோஜனம் அற்றதாகிவிடுமே) எனில் -?
न, अविद्याकृतभेदापेक्षत्वात् , यथा सत्यैकत्वाद्वितीयत्वबुद्धिं प्रकृतामपेक्ष्य सदेकमेवाद्वितीयमिति सङ्ख्याद्यनर्हमप्युच्यते, एवं भूम्न्येकस्मिन्नेव यत्र इति विशेषणम् । अविद्यावस्थायामन्यदर्शनानुवादेन च भूम्नस्तदभावत्वलक्षणस्य विवक्षितत्वात् नान्यत्पश्यति इति विशेषणम् । तस्मात्संसारव्यवहारो भूम्नि नास्तीति समुदायार्थः ।
அனுவாதம் - குரு - அவ்வாறு அல்ல. ஏன்எனில் அவித்யையினால் உண்டான பேதத்தை அபேக்ஷிப்பதால். சத்யம் ஏகம் அத்விதீய புத்தியை அபேக்ஷித்து சத்யம் ஒன்றே என்பதால் சாங்கியா முதலியவைகள் யோக்கியமற்றது என்று கூறப்பட்டது. அவ்வாறே ஏகமான அந்த பூமாவில் “यत्र” (யத்ர - எங்கு) என்ற விசேஷணம் கூறப்பட்டது. அவ்வாறே அவித்யா அவஸ்தையில் மற்ற தர்சனங்கள் கூறப்பட்டுள்ளதால் பூமாவிற்கு அவைகளில் அபாவரூப லக்ஷணமுடையது என்று தெரிவிப்பதற்கு விரும்பி “नान्यत्पश्यति” (நான்யத்பச்யதி) என்ற விசேஷணம் அளிக்கப்பட்டது. ஆகையால் பூமாவில் சம்சார வியவஹாரங்கள் இல்லை என்பதே பொதுவான அர்த்தமாகும்.
अथ यत्राविद्याविषये अन्योऽन्येनान्यत्पश्यतीति तदल्पम् अविद्याकालभावीत्यर्थः ; यथा स्वप्नदृश्यं वस्तु प्राक् प्रबोधात्तत्कालभावीति, तद्वत् । तत एव तन्मर्त्यं विनाशि स्वप्नवस्तुवदेव । तद्विपरीतो भूमा यस्तदमृतम् । तच्छब्दः अमृतत्वपरः ;
அனுவாதம் - ஆனால் எங்கு அவித்யா விஷயத்தில் மற்றது மற்றதை மற்றொன்றால் பார்க்கப்படுவது அல்பமாகும். இதன் தாத்பர்யம் என்னவெனில் அவித்யை இருக்கும்பொழுது மட்டுமே இருப்பதாகும். எவ்வாறு ஸ்வப்னத்தில் பார்க்கும் வஸ்து விழிக்கும்முன் ஸ்வப்னகாலத்தில் மட்டும் இருக்கும் பின் நாசமாகும். அவ்வாறு ஸ்வப்பன பதார்த்தத்தைப் போல் (இந்த அவித்யா விஷயமானது) நாசம் அடையக்கூடியது. அதைக்காட்டிலும் விபரீதமான (மாறான) எது பூமாவோ அது அம்ருதம். இங்கு “तत्” (தத் - அது) என்ற சப்தம் அம்ருதத்வ பரமாகும்.
स तर्हि एवंलक्षणो भूमा हे भगवन् कस्मिन्प्रतिष्ठित इति उक्तवन्तं नारदं प्रत्याह सनत्कुमारः — स्वे महिम्नीति स्वे आत्मीये महिम्नि माहात्म्ये विभूतौ प्रतिष्ठितो भूमा । यदि प्रतिष्ठामिच्छसि क्वचित् , यदि वा परमार्थमेव पृच्छसि, न महिम्न्यपि प्रतिष्ठित इति ब्रूमः ; अप्रतिष्ठितः अनाश्रितो भूमा क्वचिदपीत्यर्थः ॥
அனுவாதம் - ஹே பகவானே! இந்த லக்ஷணங்கள் உடைய பூமா எதில் பிரதிஷ்டித்து இருக்கிறது. (நிலைபெற்றுள்ளது) என்று கேட்ட நாரதருக்கு சனத்குமாரர் இவ்வாறு பதில் அளித்தார் - “स्वेमहिम्नि” (ஸ்வமஹிம்ணி = தன்னுடைய மஹிமையில்) என்று. “स्व” (ஸ்வ) - தன்னுடைய மஹிமையில் அதாவது தன்னுடைய விபூதியில் பூமா பிரதிஷ்டித்திருக்கிறது. நீ ஏதாவது ஒரு பிரதிஷ்டையை விரும்பினாலோ அல்லது பரமாத்மாவையே கேட்கிறாயோ அப்படி ஆனாலும் அது தன் மஹிமையில் பிரதிஷ்டிக்கவில்லை என்று கூறுவேன். ஏன்எனில் பூமா பிரதிஷ்டிக்கவும் இல்லை, வேறு ஒன்றையும் ஆஸ்ரயிப்பதும் இல்லை என்பது பொருள்.
यदि स्वमहिम्नि प्रतिष्ठितः भूमा, कथं तर्ह्यप्रतिष्ठ उच्यते ? शृणु—
அனுவாதம் - அ.கை - பூமா தன் மஹிமையில் பிரதிஷ்டா ஆகி இருக்கும்பொழுது எவ்வாறு பிரதிஷ்டியாகவில்லை என்று கூறப்படுகிறது எனில், கேள் -
गोअश्वमिह महिमेत्याचक्षते हस्तिहिरण्यं दासभार्यं क्षेत्राण्यायतनानीति नाहमेवं ब्रवीमि ब्रवीमीति होवाचान्यो ह्यन्यस्मिन्प्रतिष्ठित इति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - இந்த உலகில் பசு, குதிரை முதலியவைகளை அவனுடைய மஹிமை என்கின்றனர். அவ்வாறே யானை, தங்கம், சேவகன், மனைவி, க்ஷதே்ரம் மேலும் வீடு இவைகளும் மஹிமை என்று கூறுவர். ஆனால் நான் அவ்வாறு கூறவில்லை. ஏன்எனில் வேறு பதார்த்தம் வேறு ஒன்றில் பிரதிஷ்டை ஆகிறது. ஆனால் நான் இதைக் கூறுகின்றேன் என்று சனத்குமாரர் இவ்வாறு கூறுகிறார் -
गोअश्वादीह महीमेत्याचक्षते । गावश्चाश्वाश्च गोअश्वं द्वन्द्वैकवद्भावः । सर्वत्र गवाश्वादि महिमेति प्रसिद्धम् । तदाश्रितः तत्प्रतिष्ठश्चैत्रो भवति यथा, नाहमेवं स्वतोऽन्यं महिमानमाश्रितो भूमा चैत्रवदिति ब्रवीमि, अत्र हेतुत्वेन अन्यो ह्यन्यस्मिन्प्रतिष्ठित इति व्यवहितेन सम्बन्धः । किन्त्वेवं ब्रवीमीति ह उवाच — स एवेत्यादि ॥
அனுவாதம் - இங்கு பசு குதிரை முதலியவைகளை மஹிமா என்று கூறுகின்றனர். எங்கும் பசு குதிரை முதலியவைகள் மஹிமா என்பது பிரசித்தமாகும். இவ்வாறு சைத்ரன் (என்பவன்) அதை ஆஸ்ரயித்து அதிலேயே பிரதிஷ்டை ஆகிறானோ அவ்வாறு சைத்திரனைப் போல் பூமாவும் தன்னைத்தவிர வேறு மஹிமையை ஆஸ்ரயிக்கின்றது என்று கூறமுடியாது. இங்கு ஹேதுவினால் வேறு ஒன்று வேறு ஒன்றில் பிரதிஷ்டிக்கிறது என்பது வ்யவஹித சம்பந்தமாகும். மேலும் இவ்வாறு கூறுகிறேன் என்று சனத்குமாரர் “स एव” முதலியவை-களைக் கூறினார்.
इति चतुर्विंशखण्डभाष्यम् ॥
कस्मात्पुनः क्वचिन्न प्रतिष्ठित इति, उच्यते — यस्मात्स
அனுவாதம் - அ.கை - எதனால் மேலும் ஒன்றும் பிரதிஷ்டமாகவில்லை? என்று கூறப்படுகிறது - எதனால் -
स एवाधस्तात्स उपरिष्टात्स पश्चात्स पुरस्तात्स दक्षिणतः स उत्तरतः स एवेदꣳ सर्वमित्यथातोऽहङ्कारादेश एवाहमेवाधस्तादहमुपरिष्टादहं पश्चादहं पुरस्तादहं दक्षिणतोऽहमुत्तरतोऽहमेवेदꣳ सर्वमिति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - அது கீழே இருக்கிறது. அது மேலே இருக்கிறது. அது பின்னால் இருக்கிறது. அது முன்னால் இருக்கிறது. அது வலது பக்கம் இருக்கிறது. அது இடது பக்கம் இருக்கிறது. அதுவே எல்லாமாக இருக்கிறது. இப்பொழுது இவைகளில் அஹங்காரத்துடன் இருப்பதைக் கூறுகிறது. நான் கீழே இருக்கின்றேன். நான் மேலே இருக்கின்றேன். நான் பின்னால் இருக்கின்றேன், நான் முன்னால் இருக்கின்றேன், நான் வலது பக்கம் இருக்கின்றேன், நான் இடது பக்கம் இருக்கின்றேன். நானே எல்லாமாகவும் இருக்கின்றேன்.
एव भूमा अधस्तात् न तद्व्यतिरेकेणान्यद्विद्यते यस्मिन्प्रतिष्ठितः स्यात् । तथोपरिष्टादित्यादि समानम् । सति भूम्नोऽन्यस्मिन् , भूमा हि प्रतिष्ठितः स्यात् ; न तु तदस्ति । स एव तु सर्वम् । अतस्तस्मादसौ न क्वचित्प्रतिष्ठितः ।
அனுவாதம் - ஏன்எனில் அந்த பூமாவே கீழே உள்ளது. மேலும் அதற்கு வேறான அவ்வாறான வஸ்து இல்லாததால் எதில் பிரதிஷடையாகும். இவ்வாறே “மேலே” முதலியவைகளையும் அர்த்தம் செய்துகொள்ள வேண்டும். பூமாவைவிட வேறு ஏதாவது பதார்த்தம் இருந்தால் பூமா அதில் பிரதிஷ்டையாகும். ஆனால் அவ்வாறு இல்லை. அதுவே எல்லாம். ஆகையால் அதில் வேறு ஒன்றும் பிரதிஷ்டித்திருக்கவில்லை.
‘यत्र नान्यत्पश्यति’ इत्यधिकरणाधिकर्तव्यतानिर्देशात् स एवाधस्तादिति च परोक्षनिर्देशात् द्रष्टुर्जीवादन्यो भूमा स्यादित्याशङ्का कस्यचिन्मा भूदिति अथातः अनन्तरम् अहङ्कारादेशः अहङ्कारेण आदिश्यत इत्यहङ्कारादेशः । द्रष्टुरनन्यत्वदर्शनार्थं भूमैव निर्दिश्यते अहङ्कारेण अहमेवाधस्तादित्यादिना ॥
அனுவாதம் - “यत्र नान्यत्पश्यति” (யத்ர நான்யத்பச்யதி = எங்கு வேறு ஒன்றையும் பார்க்கவில்லையோ) இந்த வாக்கியத்தால் ஆதார ஆதேயத்தின் விளக்கமாக இருப்பதாலும் மேலும் அது கீழே இருக்கிறது. (स अधस्तात्) என்று கூறப்பட்டுள்ளதாலும் திருஷ்டா வேறு ஜீவன் வேறு என்ற சங்கை ஏற்படக்கூடாது என்பதற்காக இப்பொழுது அஹங்கார ஆதேசம் செய்யப்படுகிறது. அஹங்காரரூபமாக உபதேசம் செய்யப்பட்டதால் அஹங்கார ஆதேசம் எனப்படுகிறது. திருஷ்டாவின் அபின்னத்தன்மையை தெரியப்படுத்துவதற்காக பூமாவை “நான் கீழே இருக்கிறேன்” என்பது முதலிய வாக்கியங்களால் அஹங்கார ரூபமாக நிர்தேசம் செய்யப்பட்டது.
अहङ्कारेण देहादिसङ्घातोऽप्यादिश्यतेऽविवेकिभिः इत्यतः तदाशङ्का मा भूदिति
அனுவாதம் - அவிவேகிகளின் அஹங்காரத்தால் தேஹ முதலிய சங்காதத்தையும் உபதேசம் செய்கின்றனர். ஆகையால் இவ்வாறன சங்கை (சந்தேஹம்) ஏற்படாது இருப்பதற்காக -
अथात आत्मादेश एवात्मैवाधस्तादात्मोपरिष्टादात्मा पश्चादात्मा पुरस्तादात्मा दक्षिणत आत्मोत्तरत आत्मैवेदꣳ सर्वमिति स वा एष एवं पश्यन्नेवं मन्वान एवं विजानन्नात्मरतिरात्मक्रीड आत्ममिथुन आत्मानन्दः स स्वराड्भवति तस्य सर्वेषु लोकेषु कामचारो भवति अथ येऽन्यथातो विदुरन्यराजानस्ते क्षय्यलोका भवन्ति तेषाꣳ सर्वेषु लोकेष्वकामचारो भवति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - இப்பொழுது ஆத்மரூபமாக பூமாவின் ஆதேசம் (உபதேசம்) செய்யப்படுகிறது. ஆத்மாவே கீழே இருக்கிறது, ஆத்மாவே மேலே இருக்கிறது. ஆத்மாவே பின்னால் இருக்கிறது, ஆத்மாவே முன்னால் இருக்கிறது, ஆத்மாவே வலது பக்கம் உள்ளது, ஆத்மாவே இடது பக்கம் உள்ளது. இவை எல்லாம் ஆத்மாவேயாகும். அதை இவ்வாறு பார்க்கின்றவன். இவ்வாறு மனனம் செய்கிறவன், இவ்வாறு விசேஷரூபமாய் அறிகின்றவன் ஆத்மரதி, ஆத்மக்ரீடன், ஆத்ம மிதுனன் (ஆத்மாவில் கலந்து இருப்பவன்)) மேலும் ஆத்மானந்தன் ஆகின்றான். அவன் ஸ்வராட், மேலும் எல்லா லோகங்களிலும் தன் இஷ்டப்படியான கதி ஏற்படும். ஆனால் இதை விபரீதமாக அறிந்தவன் அந்யராட் (அதாவது தன்னைவிட வேறு ராஜவை உடையவன் ஆவான்) மேலும் க்ஷயம் அடையக்கூடிய லோகத்தை அடைவான். அவனுக்கு எல்லா லோகங்களிலும் தன் இச்சைப்படியான கதி உண்டாகாது.
अथ अनन्तरम् आत्मादेशः आत्मनैव केवलेन सत्स्वरूपेण शुद्धेन आदिश्यते । आत्मैव सर्वतः सर्वम् — इत्येवम् एकमजं सर्वतो व्योमवत्पूर्णम् अन्यशून्यं पश्यन् स वा एष विद्वान् मननविज्ञानाभ्याम् आत्मरतिः आत्मन्येव रतिः रमणं यस्य सोऽयमात्मरतिः । तथा आत्मक्रीडः । देहमात्रसाधनाः रतिः बाह्यसाधना क्रीडा, लोके स्त्रीभिः सखिभिश्च क्रीडतीति दर्शनात् । न तथा विदुषः ; किं तर्हि, आत्मविज्ञाननिमित्तमेवोभयं भवतीत्यर्थः ।
அனுவாதம் - இப்பொழுது இதன்பின் ஆத்ம ஆதேசமானது கேவல சத்ஸ்வரூப சுத்தமான ஆத்மாவே உபதேசிக்கப்படுகிறது. ஆகாசம்போல் எங்கும் பூரணமாய், ஒன்றாய், பிறப்பற்றதாய், வேறு ஒன்றும் அற்றதாய் ஆத்மாவே எல்லாம் என்று பார்க்கும் அந்த இந்த வித்வான் மனன விக்ஞானத்தினால் ஆத்மரதி - ஆத்மாவில் எவருக்கு ரதியோ அவர் ஆத்மரதி. அவ்வாறே ஆத்மகிரீடா ஆகிறார். ரதியின் சாதனம் தேஹமாத்திரமே. மேலும் கிரீடை பாஹ்ய சாதனமுடையதாகும். ஏன்எனில் உலகில் ஸ்திரீகளுடனும், நண்பர்களுடனும் கிரீடை செய்வதைப் பார்க்கின்றோம். விதூஷன் அவ்வாறு அல்ல. ஆனால் எவ்வாறு ஏற்படுகிறது எனில் இவை (ரதி, கிரீடை) இரண்டும் ஆத்ம விக்ஞானத்தின் காரணமாக உண்டாகிறது.
मिथुनं द्वन्द्वजनितं सुखं तदपि द्वन्द्वनिरपेक्षं यस्य विदुषः । तथा आत्मानन्दः, शब्दादिनिमित्तः आनन्दः अविदुषाम् , न तथा अस्य विदुषः ; किं तर्हि, आत्मनिमित्तमेव सर्वं सर्वदा सर्वप्रकारेण च ; देहजीवितभोगादिनिमित्तबाह्यवस्तुनिरपेक्ष इत्यर्थः ।
அனுவாதம் - மிதுனம் (சேர்வது) என்பது இரட்டையினால் உண்டாகும் சுகம். வித்வான் இந்த துவந்துவத்தை (இரட்டையை) அபேஷிப்பது இல்லை. ஆத்மானந்தமும் அவித்வான்களுக்கு சப்தம் முதலியவைகளால் உண்டாகும். வித்வானுக்கு அவ்வாறு ஆனந்தம் ஏற்படுவதில்லை. அவ்வாறு ஆனால் வித்வானுக்கு (எவ்வாறு) எந்த காரணத்தால் ஆனந்தம் ஏற்படுகிறது. எப்பொழுதும் எல்லாவிதமாகவும் ஆத்மாவே காரணமாகிறது. தேஹம், ஜீவனம், போகங்கள் முதலியவைகளுக்கு நிமித்தமான பாஹ்யவஸ்துவை அபேக்ஷை அற்றதாகும்.
स एवंलक्षणः विद्वान् जीवन्नेव स्वाराज्येऽभिषिक्तः पतितेऽपि देहे स्वराडेव भवति । यत एवं भवति, तत एव तस्य सर्वेषु लोकेषु कामचारो भवति । प्राणादिषु पूर्वभूमिषु ‘तत्रास्य’ इति तावन्मात्रपरिच्छिन्नकामचारत्वमुक्तम् । अन्यराजत्वं च अर्थप्राप्तम् , सातिशयत्वात् । यथाप्राप्तस्वाराज्यकामचारत्वानुवादेन तत्तन्निवृत्तिरिहोच्यते — स स्वराडित्यादिना ।
அனுவாதம் - இந்த லக்ஷணங்களுடன் கூடிய அந்த வித்வான் ஜீவித்துக்கொண்டு இருக்கும்பொழுதே ஸ்வராட் ஆகவே இருக்கிறான். அவ்வாறே சரீரம் வீழ்ந்தபின்னரும் ஸ்வராட்டே. ஆகையால் எவன் ஒருவன் இவ்வாறு ஆகின்றானே அவன் எல்லா உலகங்களிலும் காமசாரனாகவே (தான் விரும்பிய கதியை உடையவனாக) ஆகின்றான். பிராணன் முதலிய முந்திய பூமிகளில் அங்கு அவனுடைய ஸ்வேச்சாகதி கூறப்பட்டது. ஆகையால் அதிசயத்துடன் இருப்பதால் இங்கு அவனுக்கு அந்யராஜ்யத்துவம் ஸ்வதஸித்தமாகிறது. இப்பொழுது அவ்வாறு அடையப்பட்ட ஸ்வாராஜ்யம் மேலும் காமசாரம் கூறி இங்கு “स स्वराड् भवति” (ச ஸ்வராட் பவதி) என்பது முதலிய வாக்கியங்களால் அதன் நிவிர்த்தியை நிரூபணம் செய்கிறது.
अथ पुनः ये अन्यथा अतः उक्तदर्शनादन्यथा वैपरीत्येन यथोक्तमेव वा सम्यक् न विदुः, ते अन्यराजानः भवन्ति अन्यः परो राजा स्वामी येषां ते अन्यराजानस्ते किञ्च क्षय्यलोकाः क्षय्यो लोको येषां ते क्षय्यलोकाः, भेददर्शनस्य अल्पविषयत्वात् , अल्पं च तन्मर्त्यमित्यवोचाम । तस्मात् ये द्वैतदर्शिनः ते क्षय्यलोकाः स्वदर्शनानुरूप्येणैव भवन्ति ; अत एव तेषां सर्वेषु लोकेष्वकामचारो भवति ॥
அனுவாதம் - ஆனால் இதைவிட வேறான - மேலே கூறப்பட்ட திருஷ்டியினால் வேறுவிதமாக அதாவது இதற்கு விபரீதமாக அறிந்தவரோ அல்லது இவ்வாறு நன்றாக அறியாதவரோ அவரை அந்யராட் ஆகிறார். அந்யராட் என்றால் அவருக்குமேலே வேறு ஒரு ராஜா அதாவது ஸ்வாமி (எஜமானன்) உள்ளாறே அவர் அந்யராட். இதைத்தவிர அவர்களுடைய லோகம் க்ஷயத்துடன் கூடிய க்ஷயலோகமாகும். ஏன் எனில் பேததிருஷ்டி அல்பமாகும். எது அல்பமோ அது மரண தர்மம் உடையது என்பதை முன்பே கூறினோம். ஆகையால் துவைத திருஷ்டி உடையவர் தன்னுடைய திருஷ்டிக்குத் தகுந்தவாறு க்ஷயலோகத்தை அடைகின்றனர். ஆகையால் அவர்களுக்கு ஸ்வேச்சாகதி (இஷ்டபட்டகதி) உலகங்களில் கிடையாது.
इति पञ्चविंशखण्डभाष्यम् ॥
तस्य ह वा एतस्यैवं पश्यत एवं मन्वानस्यैवं विजानत आत्मतः प्राण आत्मत आशात्मतः स्मर आत्मत आकाश आत्मतस्तेज आत्मत आप आत्मत आविर्भावतिरोभावावात्मतोऽन्नमात्मतो बलमात्मतो विज्ञानमात्मतो ध्यानमात्मतश्चित्तमात्मतः सङ्कल्प आत्मतो मन आत्मतो वागात्मतो नामात्मतो मन्त्रा आत्मतः कर्माण्यात्मत एवेदं सर्वमिति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - அந்த இவ்வாறு பார்ப்பவன், இவ்வாறு மனனம் செய்பவன் மேலும் இவ்வாறு அறிபவனுமாகிய இந்த வித்வானுக்கு ஆத்மாவிலிருந்து பிராணன், ஆத்மாவில் இருந்து ஆசை, ஆத்மாவிலிருந்து ஸ்மிருதி, ஆத்மாவிலிருந்து ஆகாயம், ஆத்மாவிலிருந்து தேஜஸ், ஆத்மாவிலுருந்து ஜலம், ஆத்மாவிலிருந்து வெளிப்படுவதும் (ஆவிர்பாவம்) மறைவதும் (திரோபாவம்), ஆத்மாவிலிருந்தே அன்னம், ஆத்மாவிலிருந்தே பலம், ஆத்மாவிலிருந்தே விக்ஞானம், ஆத்மாவிலிருந்தே த்யானம், ஆத்மாவிலிருந்தே சித்தம், ஆத்மாவிலிருந்தே சங்கல்பம், ஆத்மாவிலிருந்தே மனம், ஆத்மாவிலிருந்தே வாக், ஆத்மாவிலிருந்தே நாமம், ஆத்மாவிலிருந்தே மந்திரம், ஆத்மாவிலிருந்தே கர்மம் மேலும் ஆத்மாவில் இருந்தே இவை எல்லாம் உண்டாயிற்று.
तस्य ह वा एतस्येत्यादि स्वाराज्यप्राप्तस्य प्रकृतस्य विदुष इत्यर्थः । प्राक्सदात्मविज्ञानात् स्वात्मनोऽन्यस्मात्सतः प्राणादेर्नामान्तस्योत्पत्तिप्रलयावभूताम् । सदात्मविज्ञाने तु सति इदानीं स्वात्मत एव संवृत्तौ । तथा सर्वोऽप्यन्यो व्यवहार आत्मत एव विदुषः ॥
அனுவாதம் - “तस्य ह वा एतस्य” (தஸ்ய ஹ வா ஏதஸ்ய) முதலியவை ஸ்வாராஜ்யம் அடைந்த பிரகிருத வித்வான் என்பது தாத்பர்யம். சத் ஆத்ம விக்ஞானத்திற்கு முன் பிராணன் முதலியவைகளில் இருந்து ஆரம்பித்து நாமம் வரையிலும் உள்ளவற்றின் உத்பத்தி, பிரளயம் இவை ஸ்வாத்மாவைக்காட்டிலும் வேறு சத்தினால் உண்டாகிறது. சதாத்ம விக்ஞானம் அடைந்தபின் தன் ஆத்மமாகவே ஆகிவிடுகின்றனர். இவ்வாறு எல்லா வியவஹாரங்களும் வித்வானுக்கு ஆத்மாவினாலேயே உண்டாகிறது.
किञ्च
அனுவாதம் - மேலும்-
तदेष श्लोको न पश्यो मृत्युं पश्यति न रोगं नोत दुःखताꣳ सर्वꣳ ह पश्यः पश्यति सर्वमाप्नोति सर्वश इति स एकधा भवति त्रिधा भवति पञ्चधा सप्तधा नवधा चैव पुनश्चैकादशः स्मृतः शतं च दश चैकश्च सहस्राणि च विꣳशतिराहारशुद्धौ सत्त्वशुद्धिः सत्त्वशुद्धौ ध्रुवा स्मृतिः स्मृतिलम्भे सर्वग्रन्थीनां विप्रमोक्षस्तस्मै मृदितकषायाय तमसस्पारं दर्शयति भगवान्सनात्कुमारस्तꣳ स्कन्द इत्याचक्षते तꣳ स्कन्द इत्याचक्षते ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - இந்த விஷயத்தில் இந்த மந்திரம் - வித்வான் மிருத்யுவைக் காண்பதில்லை. நோயை அடைவதில்லை. துக்கத்தையும் அடைவதில்லை. அந்த வித்வான் எல்லாவற்றையும் ஆத்மாவாகவே காண்கிறான். ஆகையால் எல்லாவற்றையும் எப்பொழுதும் அடைகின்றான். அவன் ஒருவனாகின்றான், மேலும் மூன்றாக ஆகின்றான், ஐந்தாக, ஏழாக மேலும் ஒன்பதாக, ரூபங்களை அடைகின்றான். மேலும் அவன் பதினொன்றாக, அவ்வாறே நூ று, பத்து, ஒன்று, ஆயிரம் மேலும் இருபதாக ஆகின்றான். ஆகார சுத்தியினால் அந்தக்கரண சுத்தி ஏற்படுகிறது. அந்தக்கரண சுத்தியினால் சலனமற்ற ஸ்மிருதி (ஞாபகசக்தி) உண்டாகிறது. அவ்வாறே ஸ்மிருதி அடைந்தபின் எல்லா முடுச்சுகளும் நிவிர்த்தி ஆகிறது. இவ்வாறு எவருடைய வாசனைகள் க்ஷீண (நாச) மாகிவிட்டதோ அந்த நாரதருக்கு பகவான் சனத்குமாரர் அக்ஞான அந்தகாரத்திற்கு அப்பாற்பட்ட காட்சியைக் காட்டினார். அவரை (சனத்குமாரரை) ஸ்கந்த அதாவது மஹாஞானி என்று அழைக்கப்படுகிறார். மஹாஞானி என்று அழைக்கப்படுகிறார்.
तत् एतस्मिन्नर्थे एष श्लोकः मन्त्रोऽपि भवति — न पश्यः पश्यतीति पश्यः यथोक्तदर्शी विद्वानित्यर्थः, मृत्युं मरणं रोगं ज्वरादि दुःखतां दुःखभावं चापि न पश्यति । सर्वं ह सर्वमेव स पश्यः पश्यति आत्मानमेव । सर्वं ततः सर्वमाप्नोति सर्वशः सर्वप्रकारैरिति ।
அனுவாதம் - இந்த விஷயத்தில் இந்த ஸ்லோகம் அதாவது மந்திரம் ஆகிறது - பார்க்கவில்லை, பார்க்கின்றான் என்று. பார்க்கிறவன் “पश्य” (பச்ய:) என்பது மேலே கூறியவாறு காண்கின்ற வித்வான் மரணம், ஜ்வரம் முதலிய நோய்கள், துக்க பாவங்களையோ பார்ப்பது இல்லை. எல்லாவற்றையும் பார்ப்பவன் எல்லாவற்றையும் ஆத்மாவாகவே பார்க்கின்றான். ஆகையால் எங்கும் எல்லா பிரகாரமாகவும் எல்லாவற்றையும் அடைகின்றான்.
किञ्च स विद्वान् प्राक्सृष्टिप्रभेदात् एकधैव भवति ; एकधैव च सन् त्रिधादिभेदैरनन्तभेदप्रकारो भवति सृष्टिकाले ; पुनः संहारकाले मूलमेव स्वं पारमार्थिकम् एकधाभावं प्रतिपद्यते स्वतन्‍त्र एव — इति विद्यां फलेन प्ररोचयन् स्तौति ।
அனுவாதம் - மேலும் அந்த வித்வான் ஸ்ருஷ்டி பேதத்திற்கு முன் ஒன்றாகவே இருந்தது. ஸ்ருஷ்டி காலத்தில் மூன்றாக என்பது முதலிய பேதங்களால் அளவிட முடியாத பேதங்களாக ஆயிற்று. மறுபடியும் சம்ஹார காலத்தில் தன்மூலமாக பாரமார்த்திக ஏக பாவத்தை அடைகிறது. அது ஸ்வந்திரமானது என்று வித்யாபலத்தால் போற்றி (சனத்குமாரர்) ஸ்துதிக்கின்றார்.
अथेदानीं यथोक्ताया विद्यायाः सम्यगवभासकारणं मुखावभासकारणस्येव आदर्शस्य विशुद्धिकारणं साधनमुपदिश्यते — आहारशुद्धौ । आह्रियत इत्याहारः शब्दादिविषयविज्ञानं भोक्तुर्भोगाय आह्रियते । तस्य विषयोपलब्धिलक्षणस्य विज्ञानस्य शुद्धिः आहारशुद्धिः, रागद्वेषमोहदोषैरसंसृष्टं विषयविज्ञानमित्यर्थः ।
அனுவாதம் - அதன்பின் இப்பொழுது முகத்தை பிரதிபலிக்கச் செய்வதற்கு கண்ணாடியின் மிகுந்த சுத்தமானது காரணமாகிறதோ அவ்வாறு மேலே கூறப்பட்ட வித்யை நன்கு பிரதிபலிப்பதற்கு காரணமான சாதனத்தை உபதேசிக்கின்றனர். ஆஹாரசுத்தி என்பது முதலியவைகளால். ஆஹாரசுத்தி என்பது ஆஹரதி (இழுக்கிறது) என்பதால் ஆஹாரம் எனப்படுகிறது. சப்தம் முதலிய விஷய விக்ஞானம் போக்த்ருவின் போகத்திற்காக ஆஹரணம் செய்கிறது (இழுக்கின்றது). அதன் விஷய உபலப்த்தி ரூப விக்ஞானத்தின் சுத்தியே ஆஹாரசுத்தி. அதாவது ராக, துவேஷே, மோஹம் முதலிய தோஷங்களை அண்டாமல் இருப்பதே விஷய விக்ஞானம் என்பது தாத்பர்யம்.
तस्यामाहारशुद्धौ सत्यां तद्वतोऽन्तःकरणस्य सत्त्वस्य शुद्धिः नैर्मल्यं भवति । सत्त्वशुद्धौ च सत्यां यथावगते भूमात्मनि ध्रुवा अविच्छिन्ना स्मृतिः अविस्मरणं भवति । तस्यां च लब्धायां स्मृतिलम्भे सति सर्वेषामविद्याकृतानर्थपाशरूपाणाम् अनेकजन्मान्तरानुभवभावनाकठिनीकृतानां हृदयाश्रयाणां ग्रन्थीनां विप्रमोक्षः विशेषेण प्रमोक्षणं विनाशो भवतीति । यत एतदुत्तरोत्तरं यथोक्तमाहारशुद्धिमूलं तस्मात्सा कार्येत्यर्थः ।
அனுவாதம் - அந்த ஆஹார சுத்தி இருக்கும்பொழுது இதை உடையவனுடைய அந்தக்கரணத்தின் அதாவது சத்துவத்தின் சுத்தி - நிர்மலமாகிறது. சத்துவ சுத்தி ஆகும் பொழுது மேலே கூறப்பட்டவாறு அறியப்பட்ட பூமாத்மாவில் திடமான, நீங்காத ஸ்மிருதி அதாவது அவிஸ்மரணம் (மறத்தல் அற்ற தன்மை) உண்டாகிறது. அவ்வாறே அதை ஸ்மிருதியை அடைந்தபின் அநேக ஜன்மங்களில் அனுபவித்த பாவனைகளால் கடினமான அவித்யையினால் உண்டான அநர்த்தம் என்னும் பாசரூப (கயிறுரூப) ஹிருதயத்தில் இருக்கும் முடிச்சுகளில் இருந்து விடுபடுகிறான். விசேஷரூபமாக விநாசம் அடைகிறது. இவ்வாறு ஒவ்வொன்றும் மேலே மேலே கூறப்பட்ட எல்லாவற்றிகும் முன்பு கூறிய ஆஹார சுத்தி மூலமாகும். ஆகையால் அதை அவசியம் செய்யவேண்டும்.
सर्वं शास्त्रार्थमशेषत उक्त्वा आख्यायिकामुपसंहरति श्रुतिः — तस्मै मृदितकषायाय वार्क्षादिरिव कषायो रागद्वेषादिदोषः सत्त्वस्य रञ्चनारूपत्वात् सः ज्ञानवैराग्याभ्यासरूपक्षारेण क्षालितः मृदितः विनाशितः यस्य नारदस्य, तस्मै योग्याय मृदितकषायाय तमसः अविद्यालक्षणात् पारं परमार्थतत्त्वं दर्शयति दर्शितवानित्यर्थः । कोऽसौ ? भगवान् ‘उत्पत्तिं प्रलयं चैव भूतानामागतिं गतिम् । वेत्ति विद्यामविद्यां च स वाच्यो भगवानिति’ एवंधर्मा सनत्कुमारः । तमेव सनत्कुमारं देवं स्कन्द इति आचक्षते कथयन्ति तद्विदः । द्विर्वचनमध्यायपरिसमाप्त्यर्थम् ॥
அனுவாதம் - சாஸ்த்திரத்தின் மீதம் இல்லாமல் முழு அபிப்பிராயத்தையும் கூறி சுருதி இந்த கதையை முடிக்கிறது - அந்த தள்ளதக்க கஷாயத்தை (பிசினை) அதாவது மரம் முதலியவைகளில் தோன்றும் பிசின்போல் ராகம்துவேஷம் முதலிய தோஷங்கள் சத்துவத்தின் (அந்தகரணத்தின்) ரஞ்ஞனைக்குரியதாய் இருப்பதால் அதை ஞானவைராக்ய அப்பியாசரூபரசத்தால் (ஜலத்தால்) நாசம் செய்த அந்த யோக்கியம் உள்ள நாரதருக்கு அந்த கல்மஷங்களாகி. அவித்யாரூபமான தமஸின் லக்ஷணங்களைக் கடப்பதற்காக பரமார்த்த தத்வத்தை தெரிவித்தார் என்பது தாத்பர்யம். அவர் யார்? “भगवान्” (பகவான்) “उत्पत्तिं प्रलयं चैव भूतानामागतिं गतिम्। वेत्ति विद्यामविद्यां च स वाच्यो भगवानिति” (உத்பத்திம் பிரளயம் சைவ பூதாநாமாகதிம் கதிம். வேத்தி வித்யாமவித்யாம் ச்ச ச வாச்யோ பகவானிதி) இந்த தர்மம் உடையவர் சனத்குமாரர். அந்த சனத்குமார தேவரை (ஸ்கந்த) (உத்தமகுரு) என்று தத்துவத்தை அறிந்தவர்கள் கூறுகின்றனர். இரண்டுமுறை கூறியது அத்யாயம் முடிவு அடைகிறது என்பதற்காக ஆகிறது.
इति षड्विंशखण्डभाष्यम् ॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमत्छङ्करभगवतः कृतौ छान्दोग्योपनिषद्भाष्ये सप्तमोऽध्यायः समाप्तः ॥