मघवन्मर्त्यं वा इदꣳ शरीरमात्तं मृत्युना तदस्यामृतस्याशरीरस्यात्मनोऽधिष्ठानमात्तो वै सशरीरः प्रियाप्रियाभ्यां न वै सशरीरस्य सतः प्रियाप्रिययोरपहतिरस्त्यशरीरं वाव सन्तं न प्रियाप्रिये स्पृशतः ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஹே இந்திரனே! இந்த சரீரம் மரணதர்மம் உடையது. அது மிருத்யுவினால் பீடிக்கப்பட்டுள்ளது. இது இந்த அம்ருதமானதும் சரீரமற்றதாயும் உள்ள ஆத்மாவிற்கு அதிஷ்டனம் (இருப்பிடம்) ஆகும். சரீரத்துடன் கூடிய ஆத்மா நிச்சயமாக பிரியம், பிரியமற்ற வஸ்துக்களால் பீடிக்கப்பட்டுள்ளது. சரீரம் உள்ளவரை பிரியம், பிரியம் அற்றவைகளுக்கு நாசம் உண்டாகாது. சரீரம் அற்றபொழுது பிரியமோ, பிரியமற்றதோ அதை ஸ்பரிசிக்கமுடியாது. (தொடமுடியாது) (பிரியம், பிரியமற்றது = இன்பம், துன்பம்).
मघवन् मर्त्यं वै मरणधर्मीदं शरीरम् । यन्मन्यसेऽक्ष्याधारादिलक्षणः सम्प्रसादलक्षण आत्मा मयोक्तो विनाशमेवापीतो भवतीति, शृणु तत्र कारणम् — यदिदं शरीरं वै यत्पश्यसि तदेतत् मर्त्यं विनाशि । तच्च आत्तं मृत्युना ग्रस्तं सततमेव । कदाचिदेव म्रियत इति मर्त्यमित्युक्ते न तथा सन्त्रासो भवति, यथा ग्रस्तमेव सदा व्याप्तमेव मृत्युनेत्युक्ते — इति वैराग्यार्थं विशेष इत्युच्यते — आत्तं मृत्युनेति । कथं नाम देहाभिमानतो विरक्तः सन् निवर्तत इति । शरीरमित्यत्र सहेन्द्रियमनोभिरुच्यते ।
அனுவாதம் - ஹே இந்திரனே! இந்த சரீரம் நிச்சயமாக மரண அடைவது அதாவது மரண தர்மமுடையது. எதை நீ என்னால் கூறப்பட்ட நேத்திரம் முதலியவைகளின் ஆதாரபூதமான சம்பிரசாத ரூப ஆத்மா விநாசம் அடையும் என்று நினைத்தால் (கருதினால்) அதற்கான காரணத்தைக் கேள் - எந்த இந்த சரீரம் காணப்படுகிறதோ அது மரணமடையக் கூடியது அதாவது விநாசம் அடைவதாகும். அது எப்பொழுதும் மிருத்யுவினால் பீடிக்கப்பட்டுள்ளது. அது எப்பொழுதாவது மரணம் அடையும் என்றால் அதில் பயம் உண்டாகாது. அது மரணத்தால் எப்பொழுதும் பீடிக்கப்பட்டுள்ளது என்றால் தான் வைராக்யம் ஏற்படும் என்பதற்காக விசேஷமாக மிருத்யுவினால் வியாபிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. எவ்வாறு தேஹ அபிமானத்திலிருந்து விரக்தி அடைந்து இருக்கிறான் என்பது இங்கு சரீரம் என்றது இந்திரியங்கள் மனம் ஆகியவைகளுடன் சேர்த்தே கூறப்பட்டதாகும்.
तच्छरीरमस्य सम्प्रसादस्य त्रिस्थानतया गम्यमानस्य अमृतस्य मरणादिदेहेन्द्रियमनोधर्मवर्जितस्येत्येतत् ; अमृतस्येत्यनेनैव अशरीरत्वे सिद्धे पुनरशरीरस्येति वचनं वाय्वादिवत् सावयवत्वमूर्तिमत्त्वे मा भूतामिति ; आत्मनो भोगाधिष्ठानम् ; आत्मनो वा सत ईक्षितुः तेजोबन्नादिक्रमेण उत्पन्नमधिष्ठानम् ; जीव रूपेण प्रविश्य सदेवाधितिष्ठत्यस्मिन्निति वा अधिष्ठानम् ।
அனுவாதம் - அந்த சரீரத்தின் மூன்று அவஸ்தைகளிலும் செல்கின்ற அமிருதமாகிய மரண முதலிய தேஹ இந்திரிய தர்மங்கள் அற்றது சம்பிரசாதமாகும். அம்ருதம் என்ற பதத்தால் சரீரம் அற்றது என்று சித்திக்கும்பொழுது எதற்காக மறுபடியும் “சரீரமற்றதற்கு” (अशरीरस्य) என்ற வசனம் அவயவ முதலியவை வாயு முதலியவைகளைப் போல் ஆத்மாவிற்கும் அவயவத்துடன் இருப்பதும், உருவத்துடன் இருப்பதும் உண்டாகக்கூடாது என்பதாகும். ஆத்மாவிற்கு இது போகத்திற்கான அதிஷ்டானமாகும். ஆத்மாவிலிருந்து அதாவது ஈக்ஷணம் செய்யும் சத்திலிருந்து தேஜஸ், ஜலம், அன்னம் முதலியவை கிரமமாக உண்டாகி அதிஷ்டானமாகிறது. ஜீவரூபமாக பிரவேசித்து இதில் எப்பொழுதும் நிலைபெற்றுள்ளதால் அதிஷ்டானம் ஆகிறது.
यस्येदमीदृशं नित्यमेव मृत्युग्रस्तं धर्माधर्मजनितत्वात्प्रियवदधिष्ठानम् , तदधिष्ठितः तद्वान् सशरीरो भवति । अशरीरस्वभावस्य आत्मनः तदेवाहं शरीरं शरीरमेव च अहम् — इत्यविवेकादात्मभावः सशरीरत्वम् ; अत एव सशरीरः सन् आत्तः ग्रस्तः प्रियाप्रियाभ्याम् ।प प्रसिद्धमेतत् ।
அனுவாதம் - எதற்கு இவ்வாறான அதிஷ்டானம் எப்பொழுதும் மிருத்யுவினால் பீடிக்கப்பட்டு தர்மாதர்மங்களால் உண்டான பிரியமான, பிரியமற்றதாய் அதில் அதிஷ்டித்தமாகி (அதில் நிலைபெற்று) அதனுடன் சேர்ந்து அந்த ஆத்மா சரீரமுடையதாகிறது. சரீரமற்ற ஸ்வபாவமுடைய ஆத்மாவிற்கு நான் சரீரம் என்றும் சரீரமே நான் என்றும் உள்ள அவிவேக ஆத்ம பாவம் சரீரத்துவமாகும். அதாவது அதனால் சரீரத்துடன் இருந்துகொண்டு பிரியம், பிரியமற்றவைகளால் பீடிக்கப்பட்டுள்ளது என்பது பிரசித்தமாகும்.
तस्य च न वै सशरीरस्य सतः प्रियाप्रिययोः बाह्यविषयसंयोगवियोगनिमित्तयोः बाह्यविषयसंयोगवियोगौ ममेति मन्यमानस्य अपहतिः विनाशः उच्छेदः सन्ततिरूपयोर्नास्तीति । तं पुनर्देहाभिमानादशरीरस्वरूपविज्ञानेन निवर्तिताविवेकज्ञानमशरीरं सन्तं प्रियाप्रिये न स्पृशतः । स्पृशिः प्रत्येकं सम्बध्यत इति प्रियं न स्पृशति अप्रियं न स्पृशतीति वाक्यद्वयं भवति । ‘न म्लेच्छाशुच्यधार्मिकैः सह सम्भाषेत’ (गौ. ध. १ । ९ । १७) इति यद्वत् । धर्माधर्मकार्ये हि ते ; अशरीरता तु स्वरूपमिति तत्र धर्माधर्मयोरसम्भवात् तत्कार्यभावो दूरत एवेत्यतो न प्रियाप्रिये स्पृशतः ॥
அனுவாதம் - பாஹ்ய விஷயங்களின் சம்யோகமும் வியோகமும் என்னுடையது என்று நினைப்பவன் அந்த சரீரத்துடன் கூடிய புருஷனுக்கு பாஹ்ய விஷயங்களின் அடைவு, நஷ்டமாவது ஆகியவைகளின் பிரவாஹ ரூபங்களான பிரியமான, பிரியமற்றவைகள் நீங்குவதில்லை. அதாவது அவைகளின் நாசம் ஏற்படுவதில்லை. தேஹ அபிமானத்தை விட்டு சரீரமற்ற ஸ்வரூப விக்ஞானத்தால் எவனுடைய அவிவேக ஞானம் நீங்கி சரீரமற்றவனாய் இருப்பதால் பிரியம், பிரியமற்றவை அவனை ஸ்பரிசிக்காது. ஸ்பரிசத்தால் என்றது பிரியம், அபிரியம் இரண்டிற்கும் ஆகும் என்பதால் பிரியத்தை ஸ்பரிசிப்பதில்லை. அபிரியத்தையும் ஸ்பரிசிப்பது இல்லை என்று இரண்டு வாக்கியங்களாக ஆகின்றான். எவ்வாறு மிலேச்சன், சுத்தமற்றவன், அதர்மத்துடன் இருப்பவனிடம் சம்பாஷணை செய்யாதே என்பது போல் ஆகும். அது தர்மாதர்ம காரியங்களாகும். சரீரமற்ற ஸ்வரூபமாய் இருப்பதால் அங்கு தர்மாதர்மங்கள் சம்பவிக்காததால் அதன் காரியபாவமும் நெருங்காமல் தூரமாய் இருப்பதால் இந்த பிரியா பிரியங்கள் ஸ்பரிஸிக்காது.
ननु यदि प्रियमप्यशरीरं न स्पृशतीति, यन्मघवतोक्तं सुषुप्तस्थो विनाशमेवापीतो भवतीति, तदेवेहाप्यापन्नम् ।
அனுவாதம் - சங்கை - ஆனால் சரீரமற்ற ஆத்மாவை பிரியமும் ஸ்பரிசிக்காது என்று எதை இந்திரன் கூறினானோ அந்த தூங்கும் அவஸ்தையில் புருஷன் விநாசத்தை அடைகிறான் என்பது இங்கும் பிராப்தமாகும்.
नैष दोषः, धर्माधर्मकार्ययोः शरीरसम्बन्धिनोः प्रियाप्रिययोः प्रतिषेधस्य विवक्षितत्वात् — अशरीरं न प्रियाप्रिये स्पृशत इति । आगमापायिनोर्हि स्पर्शशब्दो दृष्टः — यथा शीतस्पर्श उष्णस्पर्श इति, न त्वग्नेरुष्णप्रकाशयोः स्वभावभूतयोरग्निना स्पर्श इति भवति ; तथा अग्नेः सवितुर्वा उष्णप्रकाशवत् स्वरूपभूतस्य आनन्दस्य प्रियस्यापि नेह प्रतिषेधः,
‘विज्ञानमानन्दं ब्रह्म’ (बृ. उ. ३ । ९ । २८) ‘आनन्दो ब्रह्म’ (तै. उ. ३ । ६ । १) इत्यादिश्रुतिभ्यः । इहापि भूमैव सुखमित्युक्तत्वात् ।
அனுவாதம் - ஸமாதானம் - இந்த தோஷமில்லை தர்மாதர்ம காரியங்களின் சரீர சம்பந்தமான பிரியம், பிரியமற்றவைகளை நிஷேதிப்பது குறித்து விளக்கப்பட்டது. சரீரமற்றது பிரியம், பிரியமற்றது ஆகியவைகளை ஸ்பரிசிக்காது. எவ்வாறு சீதஸ்பரிசம், உஷ்ண ஸ்பர்ஸ்யங்களாகிய ஆகமாபாயி விஷயங்களில் காணப்படுகிறது. அக்னியின் உஷ்ணம் பிரகாசங்களுக்கு ஸ்வபாவ ரூபமான அக்னி ஸ்பரிசிக்கும் என்பது இல்லை. எவ்வாறு அக்னி, சூரியன் இவைகளின் உஷ்ணமோ அவ்வாறே பிரகாசம் போல் ஸ்வரூபம் பூதமான ஆனந்தம் அவ்வாறே பிரியத்தையும் இங்கு நிஷேதம் செய்யவில்லை. “आनन्दो ब्रह्म” (ஆனந்தோபிரஹ்ம), “विज्ञानमानन्दं ब्रह्म” (விக்ஞானமானந்தம் பிரஹ்ம) என்பது முதலிய சுருதிகளிலும் சித்திக்கிறது. இங்கும் பூமாவே சுகம் என்று கூறப்பட்டுள்ளது.
அனுவாதம் - சங்கை - ஆனால் பூமாவினுடைய பிரியத்தின் ஏகத்துவம் அறியமுடியாததாலும் ஸ்வரூபத்தால் நித்யம் அறியப்படுவதாலும், விசேஷம் அற்றதாய் இருப்பதாலும் அதில் இந்திரனுக்கு இஷ்டமில்லை. “ஏன் எனில் அவன் இவ்வாறு கூறியதால் அதாவது” இந்த அவஸ்தையில் அது நான் என்று இவ்வாறு தன்னை அறிவதில்லை மேலும் மற்ற பூதங்களையும் அறிவதில்லை. அந்த சமயத்தில் விநாசத்தை அடைகிறான். எது பூதங்களையும் தன்னையும் அறிவதில்லை. மேலும் பிரியமற்றதையும் சிறிதும் அறிவதில்லை. ஆகையால் அவன் எந்த ஞானத்தால் எல்லா லோகங்களையும், எல்லா காமனைகளையும் அடைய முடியுமோ அதுவே இந்திரனின் இஷ்டம்.
सत्यमेतदिष्टमिन्द्रस्य — इमानि भूतानि मत्तोऽन्यानि, लोकाः कामाश्च सर्वे मत्तो अन्ये, अहमेषां स्वामीति । न त्वेतदिन्द्रस्य हितम् । हितं च इन्द्रस्य प्रजापतिना वक्तव्यम् । व्योमवदशरीरात्मतया सर्वभूतलोककामात्मत्वोपगमेन या प्राप्तिः, तद्धितमिन्द्राय वक्तव्यमिति प्रजापतिना अभिप्रेतम् । न तु राज्ञो राज्याप्तिवदन्यत्वेन । तत्रैवं सति कं केन विजानीयादात्मैकत्वे इमानि भूतान्ययमहमस्मीति ।
அனுவாதம் - ஸமாதானம் - இதுவே இந்திரனுடைய இஷ்டம் என்பது சரியே. இந்த பூதங்கள் என்னைவிட வேறானவை. எல்லா லோகங்களும் காமனைகளும் என்னைவிட வேறு. நான் அவைகளின் தலைவன் (ஸ்வாமி) என்னும் இது இந்திரனுக்கு ஹிதமானது அல்ல. பிரஜாபதியினால் இந்திரனுக்கு ஹிதமானது கூறப்படவேண்டும். ஆகாயம் போல் சரீரமற்றதாய் எல்லா பூதங்கள், லோகங்களின் காமனைகளை ஆத்ம பாவமாய் அடைவது எதுவோ அதுவே இந்திரனுக்கு ஹிதமானது என்று இந்திரனுக்கு கூறவேண்டும் என்று பிரஜாபதியின் அபிப்பிராயமாகும். ராஜாவால் ராஜ்யத்தை அடைவது போன்று இது வேறாக (தனியாக) இல்லை. இவ்வாறு இருக்கும்பொழுது எதை எதனால் ஆத்மாவின் ஏகத்துவத்தை அறியலாம் என்றால் “इमानि भूतान्ययमहमस्मि” (இமானி பூதான்யயமஹமஸ்மி) இவ்வாறு அறியலாம்.
அனுவாதம் - சங்கை - ஆனால் இந்த பக்ஷத்தில் “स्रीभिर्वा यानैर्वा” (ஸ்த்ரீபிர்வா யானைர்வா), “स यदि पितृलोककामः” (ச யதி பித்ருலோககாம:) “स एकधा भवति” (ச ஏகதா பவதி) இவை முதலிய ஐஸ்வர்ய ஸ்ருதிகளுக்கு விரோதமாகும், (பொருந்தாது)
न, सर्वात्मनः सर्वफलसम्बन्धोपपत्तेरविरोधात् — मृद इव सर्वघटकरककुण्डाद्याप्तिः ।
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறு அல்ல. ஏன் எனில் சர்வாத்மாவாகிய வித்வானுக்கு எந்த ஒரு விரோதமும் இல்லாததால் எல்லா பலன்களுடனும் சம்பந்தம் உண்டாகிறது. எவ்வாறு மண்ணில் இருந்து குடம், கமண்டலம், அண்டா முதலிய எல்லா விகாரங்களும் ஏற்படுகிறதோ அவ்வாறு ஆகும்.
ननु सर्वात्मत्वे दुःखसम्बन्धोऽपि स्यादिति चेत् ,
அனுவாதம் - சங்கை - ஆனால் சர்வாத்மாவாய் இருப்பதால் துக்கத்தின் சம்பந்தம் ஏற்படலாமே எனில்?
न, दुःखस्याप्यात्मत्वोपगमादविरोधः । आत्मन्यविद्याकल्पनानिमित्तानि दुःखानि — रज्ज्वामिव सर्पादिकल्पनानिमित्तानि । सा च अविद्या अशरीरात्मैकत्वस्वरूपदर्शनेन दुःखनिमित्ता उच्छिन्नेति दुःखसम्बन्धाशङ्का न सम्भवति ।
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறு அல்ல. துக்கமும் ஆத்மாவாய் அறியப்படுவதால் விரோதமில்லை. பாம்பு முதலியவைகளின் கல்பனை நிமித்தங்கள் கயிற்றில் தோன்றுவது போல் ஆத்மாவில் அவித்யா கல்பனை நிமித்தங்களால் துக்கங்கள் ஏற்படுகின்றன. சரீரமற்ற ஆத்மாவின் ஏகத்துவ ஸ்வரூப தர்சனத்தால் அந்த துக்கங்களின் நிமித்தமான அவித்யா நீங்கிவிடுவதால் துக்க சம்பந்தமான சங்கை சம்பவிக்காது.
शुद्धसत्त्वसङ्कल्पनिमित्तानां तु कामानाम् ईश्वरदेहसम्बन्धः सर्वभूतेषु मानसानाम् । पर एव सर्वसत्त्वोपाधिद्वारेण भोक्तेति सर्वाविद्याकृतसंव्यवहाराणां पर एव आत्मा आस्पदं नान्योऽस्तीति वेदान्तसिद्धान्तः ॥
அனுவாதம் - சுத்த அந்தகரண சங்கல்ப நிமித்தங்களான மானசீக காமனைகள், எல்லா பூதங்களிலும் ஈஸ்வர தேஹ சம்பந்தத்தால் சித்திக்கின்றன. எல்லாம் சத்வமயமான உபாதியின் வாயிலாக அந்த பரமாத்மாவே அந்த ஐஸ்வர்யங்களின் போக்தா. ஆகையால் அவித்யையினால் உண்டான எல்லா வியவகாரங்களுக்கும் பரமாத்மாவே அதிஷ்டானமாகும். வேறு எதனாலும் அன்று, என்பது வேதாந்த சித்தாந்தமாகும்.
‘य एषोऽक्षिणि पुरुषो दृश्यते’ इति च्छायापुरुष एव प्रजापतिना उक्तः, स्वप्नसुषुप्तयोश्च अन्य एव, न परोऽपहतपाप्मत्वादिलक्षणः, विरोधात् इति केचिन्मन्यन्ते । छायाद्यात्मनां च उपदेशे प्रयोजनमाचक्षते । आदावेव उच्यमाने किल दुर्विज्ञेयत्वात्परस्य आत्मनः अत्यन्तबाह्यविषयासक्तचेतसः अत्यन्तसूक्ष्मवस्तुश्रवणे व्यामोहो मा भूदिति ।
அனுவாதம் - “य एषोऽक्षिणि पुरुषो दृश्यते” (ய ஏஷோ அக்ஷிணி புருஷோ த்ருஷ்யதே - எந்த புருஷன் கண்களில் காணப்படுகிறதோ) என்று ச்சாயா புருஷனையே பிரஜாபதியினால் கூறப்பட்டது. ஸ்வப்ன சுழுப்தி அவஸ்தைகளிலும் வேறு புருஷனையே குறிக்கிறது. பரமான அபஹதபாப்மா முதலிய லக்ஷணங்களை உடைய பரமாத்மாவை அல்ல. ஏன் எனில் இவ்விரு லக்ஷணங்களிலும் பரஸ்பர விரோதம் இருப்பதால் என்று சிலர் கருதுகின்றனர். சாயாத்மாவின் உபதேசத்தின் பிரயோஜனத்தை இனி கூறுகின்றனர் - பரமாத்மாவை அறிவது மிகக்கடினமானதாகும். ஆகையால் எவருடைய சித்தம் வெளி விஷயங்களில் முற்றிலும் பற்றற்று இருப்பவர்களுக்கு ஆரம்பத்திலேயே அதன் உபதேசம் அளித்தபின் மிகவும் சூக்ஷ்மமான வஸ்துவை சிரவணம் செய்வதில் எந்த வியாமோகமும் ஏற்படக்கூடாது.
यथा किल द्वितीयायां सूक्ष्मं चन्द्रं दिदर्शयिषुः वृक्षं कञ्चित्प्रत्यक्षमादौ दर्शयति — पश्य अमुमेष चन्द्र इति, ततोऽन्यं ततोऽप्यन्यं गिरिमूर्धानं च चन्द्रसमीपस्थम् — एष चन्द्र इति, ततोऽसौ चन्द्रं पश्यति, एवमेतत् ‘य एषोऽक्षिणि’ इत्याद्युक्तं प्रजापतिना त्रिभिः पर्यायैः, न पर इति । चतुर्थे तु पर्याये देहान्मर्त्यात्समुत्थाय अशरीरतामापन्नो ज्योतिःस्वरूपम् । यस्मिन्नुत्तमपुरुषे स्त्रयादिभिर्जक्षत्क्रीडन् रममाणो भवति, स उत्तमः पुरुषः पर उक्त इति च आहुः ।
அனுவாதம் - சங்கை- - எவ்வாறு இரண்டாவது நாள் சூக்ஷ்மமான சந்திரனை காண்பிப்பதற்கு விரும்பிய ஒருவன் தன் முன்னால் இருக்கும் மரத்தைக் காண்பித்து இந்த சந்திரனைப் பார் என்று காண்பிப்பான். அவ்வாறே வேறு மரத்தையோ அல்லது அதன்பின் சந்திரனின் சமீபத்தில் இருக்கும் மலை சிகரத்தைக் காண்பித்து இது சந்திரன் என்று காண்பிப்பான். அதனால் அவன் சந்திரனைப் பார்ப்பான். அவ்வாறே இந்த “यएषोऽक्षिणि” (யஏஷோஅக்ஷிணி) என்பது முதலியவைகள் பிரஜாபதியினால் மூன்று பரியாங்களால் வியாக்யாணம் செய்தது பர ஆத்மாவை அல்ல. நான்காவது பரியாயத்தில் மரணதர்மம் உடைய தேஹத்திலிருந்து விழித்து எழுந்து எந்த உத்தமமான புருஷனிடத்தில் அந்த ஜ்யோதி ஸ்வரூப சரீரமற்றதாக அடைந்து ஸ்த்ரீ முதலியவைகளுடன் இப்பொழுது பக்ஷணம் செய்தும், விளையாடிக்கொண்டும், ரமிக்கின்றவனாக ஆகின்றான். அந்த உத்தம புருஷனே பரமாத்மா என்று கூறினார் என்றும் கூறுவர்.
सत्यम् , रमणीया तावदियं व्याख्या श्रोतुम् । न तु अर्थोऽस्य ग्रन्थस्य एवं सम्भवति । कथम् ? ‘अक्षिणि पुरुषो दृश्यते’ इत्युपन्यस्य शिष्याभ्यां छायात्मनि गृहीते तयोस्तद्विपरीतग्रहणं मत्वा तदपनयाय उदशरावोपन्यासः
‘किं पश्यथः’ (छा. उ. ८ । ८ । १) इति च प्रश्नः साध्वलङ्कारोपदेशश्च अनर्थकः स्यात् , यदि छायात्मैव प्रजापतिना ‘अक्षिणि दृश्यते’ इत्युपदिष्टः । किञ्च यदि स्वयमुपदिष्ट इति ग्रहणस्याप्यपनयनकारणं वक्तव्यं स्यात् । स्वप्नसुषुप्तात्मग्रहणयोरपि तदपनयकारणं च स्वयं ब्रूयात् । न च उक्तम् । तेन मन्यामहे न अक्षिणि च्छायात्मा प्रजापतिना उपदिष्टः ।
அனுவாதம் - ஸமாதானம் - நீ கூறுவது சரியே. இவ்வாறு இதைக் கேட்பது இனிமையாகவே இருக்கிறது. ஆனால் இந்த கிரந்தத்தின் அர்த்தம் அவ்வாறு சம்பவிக்கவில்லை. எவ்வாறு? “अक्षिणि पुरुषो दृश्यते” (கண்ணில் புருஷன் காணப்படுகிறான்) என்று உபதேசித்தது சிஷ்யர்கள் இருவரும் ச்சாயாத்மாவை கிரஹித்துக்கொண்டார்கள். அவர்கள் விபரீதமாக புரிந்து கொண்டதை அறிந்து அதைப்போக்குவதற்காக ஜல பாத்திரத்தின் மூலமாக உபதேசம் செய்வதற்காக அதில் என்ன பார்க்கிறாய் என்று கேட்டும் நல்ல அலங்காரத்தின் வாயிலாக உபதேசித்தும் சாயா ஆத்மாவே கண்ணில் காணப்படுகிறது என்று கூறுவது பிரஜாபதியினால் உபதேசிக்கப்பட்டது அர்த்தமற்றதாக ஆகிவிடும். மேலும் தானே உபதேசித்தார் என்று எடுத்துக்கொண்டாலும் அதை நிவிர்த்தி செய்வதற்காகவும் அவசியம் கூறவேண்டியதாகின்றது. ஸ்வப்ன சுழுப்தி ஆத்மாவை கிரஹித்துக்கொண்டாலும் அதை விலக்குவதற்கான காரணத்தைக் கூறவேண்டும். ஆகையால் நான் கருதுகிறேன் கண்ணில் உள்ள சாயா ஆத்மாவை பிரஜாபதி உபதேசிக்கவில்லை.
किं चान्यत् , अक्षिणि द्रष्टा चेत् ‘दृश्यते’ इत्युपदिष्टः स्यात् , तत इदं युक्तम् । ‘एतं त्वेव ते’ इत्युक्त्वा स्वप्नेऽपि द्रष्टुरेवोपदेशः । स्वप्ने न द्रष्टोपदिष्ट इति चेत् , न, ‘अपि रोदितीव’ ‘अप्रियवेत्तेव’ इत्युपदेशात् । न च द्रष्टुरन्यः कश्चित्स्वप्ने महीयमानश्चरति ।
‘अत्रायं पुरुषः स्वयञ्ज्योतिः’ (बृ. उ. ४ । ३ । ९) इति न्यायतः श्रुत्यन्तरे सिद्धत्वात् ।
அனுவாதம் - இதைத்தவிர வேறு விஷயம் இதுவாகும் - கண்ணில் திருஷ்டா காணப்படுகிறான் என்று உபதேசித்தால் அப்பொழுது இது சரியானதாகும் “एतं त्वेव ते” (ஏதம் த்வேவதே = அந்த அது நீயே) என்று கூறி ஸ்வப்னத்திலும் திருஷ்டாவையே உபதேசம் செய்தார். இவ்வாறு ஸ்வப்னத்தில் திருஷ்டாவின் உபதேசம் செய்யவில்லை என்று கூறுவது சரியல்ல. ஏன் எனில் அது அழுவது போல் அழுகிறது, அது அப்பிரியத்தையும் அறிகிறது என்று உபதேசம் செய்யப்பட்டது. திருஷ்டாவைத் தவிர வேறு ஒன்றும் ஸ்வப்னத்தில் பூஜிக்கப்பட்டு செயல்படுவது இல்லை (வியவஹாரம் செய்வதில்லை). “अत्रायं पुरुषः स्वयंज्योतिः” (அத்ராயம் புருஷ: ஸ்வயம்ஜ்யோதி:) என்று யுக்தி பூர்வகமாக வேறு சுருதியிலும் சித்திக்கிறது.
यद्यपि स्वप्ने सधीर्भवति, तथापि न धीः स्वप्नभोगोपलब्धिं प्रति करणत्वं भजते । किं तर्हि, पटचित्रवज्जाग्रद्वासनाश्रया दृश्यैव धीर्भवतीति न द्रष्टुः स्वयञ्ज्योतिष्ट्वबाधः स्यात् ।
அனுவாதம் - ஸ்வப்னத்தில் (ஆத்மா) புத்தியுடன் இருந்தாலும் புத்தியானது ஸ்வப்ன போகத்தை (அடைவதற்கு) அறிந்து கொள்வதற்கான காரணமாகாது. ஆனால் எவ்வாறு இருக்கிறது? பட சித்திரம் (துணியில் உள்ள சித்திரம்) போல் ஜாக்கிரத் வாசனைகளை ஆஸ்ரயித்து திருஷ்யமே புத்தியாகிறது. ஆகையால் அந்த அவஸ்தையில் திருஷ்டாவின் ஸ்வயம் ஜோதிக்கு பாதகம் உண்டாகாது.
किञ्चान्यत् , जाग्रत्स्वप्नयोर्भूतानि च आत्मानं च जानाति — इमानि भूतान्ययमहमस्मीति । प्राप्तौ सत्यां प्रतिषेधो युक्तः स्यात् — नाह खल्वयमित्यादि । तथा चेतनस्यैव अविद्यानिमित्तयोः सशरीरत्वे सति प्रियाप्रिययोरपहतिर्नास्तीत्युक्त्वा तस्यैवाशरीरस्य सतो विद्यायां सत्यां सशरीरत्वे प्राप्तयोः प्रतिषेधो युक्तः
‘अशरीरं वाव सन्तं न प्रियाप्रिये स्पृशतः’ (छा. उ. ८ । १२ । १) इति । एकश्चात्मा स्वप्नबुद्वान्तयोर्महामत्स्यवदसङ्गः सञ्चरतीति श्रुत्यन्तरे सिद्धम् ।
அனுவாதம் - இதைத்தவிர வேறு ஹேது என்னவெனில் ஜாக்ரத் ஸ்வப்னங்களில் பூதங்களையும், ஆத்மாவையும் (தன்னையும்) நானாக இருக்கின்றேன் என்று அறியும்பொழுது நான் அல்ல இதுவல்ல என்பது முதலியவைகளால் இல்லை என்று நிஷேதிக்க முடியும். அவ்வறே சேதனத்திற்கு சரீரம் உடையதாய் ஆகும்பொழுது அவித்யையின் நிமித்தமான பிரியம், பிரியமற்றது என்பது நாசமாகாது என்று இவ்வாறு கூறி வித்யையை அடைந்த உடன் சரீரமற்ற தன்மையை அடைந்து அதற்கு சரீரம் இருக்கும் அவஸ்தையில் ஏற்படும் பிரியாபிரியங்கள் சரீரமற்றதை ஸ்பரிசிக்காது என்று இவ்வாறு நிஷேதம் செய்வது சரியானதே. ஸ்வப்னத்திலும் ஒரே ஆத்மா பெரிய மீன்கள் போல் சங்கமற்ற ரூபத்துடன் இங்கும் அங்கும் செல்கிறது என்று மற்றொரு சுருதியிலும் சித்திக்கின்றது.
यच्चोक्तं सम्प्रसादः शरीरात्समुत्थाय यस्मिन्स्त्र्यादिभिः रममाणो भवति सोऽन्यः सम्प्रसादादधिकरणनिर्दिष्ट उत्तमः पुरुष इति, तदप्यसत् । चतुर्थेऽपि पर्याये ‘एतं त्वेव ते’ इति वचनात् । यदि ततोऽन्योऽभिप्रेतः स्यात् , पूर्ववत् ‘एतं त्वेव ते’ इति न ब्रूयान्मृषा प्रजापतिः ।
அனுவாதம் - இவ்வாறு கூறப்பட்ட சம்பிரசாதம் சரீரத்திலிருந்து கிளம்பி எதில் ஸ்திரீ முதலியவைகளுடன் ரமிக்கின்றதாய் ஆகிறது. அது வேறு சம்பிரதாயத்தினால் அதிகரண ரூபமாய் நிர்தேசம் செய்யப்பட்ட உத்தம புருஷன் இதைவிட வேறானது என்பதும் சரியல்ல. ஏன் எனில் நான்காவது பர்யாயத்தில் “एतं त्वेव ते” (ஏதம் த்வேவ தே) என்ற வசனத்தால் (நிர்தேசம்) நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அதைவிட வேறான அபிப்பிராயம் இருக்கலாம். முன்போல் “एतं त्वेव ते” (ஏதம் த்வேவ தே) என்று பொய்யானதை பிரஜாபதி கூறமாட்டார்.
किञ्चान्यत् , तेजोबन्नादीनां स्रष्टुः सतः स्वविकारदेहशुङ्गे प्रवेशं दर्शयित्वा प्रविष्टाय पुनः तत्त्वमसीत्युपदेशः मृषा प्रसज्येत । तस्मिंस्त्वं स्त्र्यादिभिः रन्ता भविष्यसीति युक्त उपदेशोऽभविष्यत् यदि सम्प्रसादादन्य उत्तमः पुरुषो भवेत् । तथा भूम्नि
‘अहमेव’ (छा. उ. ७ । २५ । २) इत्यादिश्य ‘आत्मैवेदं सर्वम्’ इति नोपसमहरिष्यत् , यदि भूमा जीवादन्योऽभविष्यत् ,
‘नान्योऽतोऽस्ति द्रष्टा’ (बृ. उ. ३ । ७ । २३) इत्यादिश्रुत्यन्तराच्च । सर्वश्रुतिषु च परस्मिन्नात्मशब्दप्रयोगो नाभविष्यत् प्रत्यगात्मा चेत्सर्वजन्तूनां पर आत्मा न भवेत् । तस्मादेक एव आत्मा प्रकरणी सिद्धः ॥
அனுவாதம் - இதைத்தவிர வேறு காரணமும் இருக்கிறது. அதாவது தேஜஸ் ஜலம் அன்னம் இவைகளை சிருஷ்டிக்கும் சத் தன்னுடைய விகார ரூபமான சரீரத்தில் பிரவேசத்தைக் காண்பித்து இவ்வாறு பிரவேசித்திருப்பதனை அதுவே நீ என்று உபதேசிப்பது மித்யாவாகும். உத்தமமான புருஷன் சம்பிரசாதத்தால் வேறாக ஆனால் அவன் அதில் ஸ்திரீ முதலியவைகளுடன் ரமிக்கின்றவனாக ஆவான் என்று உபதேசம் சரியானதாக ஆகும். பூமா ஜீவனைக் காட்டிலும் வேறு என்றால் பூமாவில் “இது நான் என்று ஆதேசம் செய்து (கூறி)” “இவை எல்லாம் ஆத்மா” என்று உபசம்ஹாரம் (முடிவு) செய்யமுடியாது. “नान्योऽतोऽस्ति द्रष्टा” (நான்யதோऽஸ்தி த்ருஷ்டா) என்று வேறு சுருதியினாலும் சித்திக்கிறது. எல்லா ஜீவன்களின் பிரத்யக் ஆத்மா பர ஆத்மா ஆகாது என்றால் எல்லா சுருதிகளிலும் பரமாத்மாவிற்கு ஆத்ம சப்த பிரயோகம் செய்யமுடியாது. ஆகையால் ஆத்மா ஒன்றே இந்த பிரகரணத்தின் விஷயம் என்பது சித்திக்கின்றது.
न च आत्मनः संसारित्वम् , अविद्याध्यस्तत्वादात्मनि संसारस्य । न हि रज्जुशुक्तिकागगनादिषु सर्परजतमलादीनि मिथ्याज्ञानाध्यस्तानि तेषां भवन्तीति । एतेन सशरीरस्य प्रियाप्रिययोरपहतिर्नास्तीति व्याख्यातम् । यच्च स्थितमप्रियवेत्तेवेति नाप्रियवेत्तैवेति सिद्धम् । एवं च सति सर्वपर्यायेषु ‘एतदमृतमभयमेतद्ब्रह्म’ इति प्रजापतेर्वचनम् , यदि वा प्रजापतिच्छद्मरूपायाः श्रुतेर्वचनम् , सत्यमेव भवेत् । न च तत्कुतर्कबुद्ध्या मृषा कर्तुं युक्तम् , ततो गुरुतरस्य प्रमाणान्तरस्यानुपपत्तेः ।
அனுவாதம் - ஆத்மாவிற்கு சம்சாரித்துவம் இல்லை. ஏன் எனில் சம்சாரம் அவித்யையினால் அத்யஸ்தமாக உள்ளது. ரஜ்ஜு, சுக்தி, ஆகாசம் முதலியவைகளில் சர்பம், வெள்ளை, தல மலாதி முதலியவைகள் மித்யா ஞானத்தால் அவைகள் அத்யாசத்தை அடைகின்றன என்பது உண்மையில் அல்ல. இதனால் சரீரம் உடையவைகளுக்கு பிரியம் அப்பிரியம் நாசம் ஆவதில்லை என்று வியாக்கியானம் செய்யப்பட்டது. மேலும் அப்பிரியம் அறிந்தது போல் என்று கூறியதால் அப்பிரியம் அறிகிறது என்று சித்திக்கின்றது. எல்லா பர்யாயங்களிலும் “இது அம்ருதம், இது அபயம், இதுவே பிரஹ்மம் என்பது பிரஜாபதியின் வசனமாகும். பிரஜாபதியின் வசனமும் அதைப்போன்று சுருதியின் வசனமும் உண்மையே ஆகும். அதை குதர்க்கத்தால் மித்யாவாக ஆகும் என்பது பொருந்தாது. ஆகையால் சுருதி வாக்கியங்களைத் தவிர வேறு உத்கிருஷ்டமான பிரமாணம் கிடைப்பது என்பது சம்பவிக்காது.
ननु प्रत्यक्षं दुःखाद्यप्रियवेत्तृत्वमव्यभिचार्यनुभूयत इति चेत् , न, जरादिरहितो जीर्णोऽहं जातोऽहमायुष्मान्गौरः कृष्णो मृतः — इत्यादिप्रत्यक्षानुभववत्तदुपपत्तेः । सर्वमप्येतत्सत्यमिति चेत् , अस्त्येवैतदेवं दुरवगमम् , येन देवराजोऽप्युदशरावादिदर्शिताविनाशयुक्तिरपि मुमोहैवात्र ‘विनाशमेवापीतो भवति’ इति ।
அனுவாதம் - ஆனால் துக்கம் முதலிய அப்பிரியத்தை அறிவது நிச்சயமான பிரத்யக்ஷ அனுபவமாகிறது என்று கூறுவது சரியல்ல. ஏன் எனில் நான் மூப்பு முதலியவை அற்றவன், மூப்பினால் பீடிக்கப்பட்டு உள்ளேன், நான் பிறந்திருக்கின்றேன், நான் ஆயுள் உடையவன், நான் வெள்ளை நிறம் உடையவன், நான் கருப்பு நிறமுடையவன், நான் மரணம் அடைவேன் என்பது முதலிய பிரத்யக்ஷ அனுபவத்திற்கு சமமாகவும் (அப்பிரியத்தை அறிவது) சம்பவிக்கும். இவை எல்லாம் சத்தியம் (உண்மை) என்று கூறினால் அது உண்மையில் அவ்வாறு அறிவது முடியாதது ஆகும். ஆகையால் ஆத்மாவின் நாசமற்றதின் சம்பந்தத்தில் ஜலபாத்திரம் முதலிய யுக்திகளைக் காட்டிய பின்னரும் அதைக் காண்பதற்கு இந்த மோக அவஸ்தையில் அது விநாசத்தையே அடையும்,
तथा विरोचनो महाप्राज्ञः प्राजापत्योऽपि देहमात्रात्मदर्शनो बभूव । तथा इन्द्रस्य आत्मविनाशभयसागरे एव वैनाशिका न्यमज्जन् । तथा साङ्ख्या द्रष्टारं देहादिव्यतिरिक्तमवगम्यापि त्यक्तागमप्रमाणत्वात् मृत्युविषये एव अन्यत्वदर्शने तस्थुः । तथा अन्ये काणादादिदर्शनाः कषायरक्तमिव क्षारादिभिर्वस्त्रं नवभिरात्मगुणैर्युक्तमात्मद्रव्यं विशोधयितुं प्रवृत्ताः । तथा अन्ये कर्मिणो बाह्यविषयापहृतचेतसः वेदप्रमाणा अपि परमार्थसत्यमात्मैकत्वं सविनाशमिव इन्द्रवन्मन्यमाना घटीयन्त्रवत् आरोहावरोहप्रकारैरनिशं बम्भ्रमन्ति ; किमन्ये क्षुद्रजन्तवो विवेकहीनाः स्वभावत एव बहिर्विषयापहृतचेतसः ।
அனுவாதம் - மஹா புத்திமானாகிய பிரஜாபதியின் புத்திரனாக விரோசனன் இருந்தபோதிலும் தேஹத்தில் மாத்திரமே ஆத்ம புத்தியை வைத்தான். அவ்வாறே வைநாசிகர்களும் இந்திரனின் ஆத்மரூப விநாச பயத்தை சமுத்திரத்தில் மூழ்கியதுபோல் பார்த்தார்கள். அவ்வாறே சாங்கியர்கள் திருஷ்டாவை (ஆத்மாவை) தேஹத்தைக் காட்டிலும் வேறாக அறிந்து ஆகம பிரமாணத்தை ஏற்றுக்கொள்ளாததால் மிருத்யுவின் விஷயரூபமான பேத தர்சனத்தில் ஈடுபடுகின்றனர். அவ்வாறே மற்ற காணாதி தர்சிகள் (மதவாதிகள்) காவி நிறத்தை அடைந்த வஸ்திரத்தை ரசாயணம் முதலியவைகளால் சுத்தம் செய்வது போல் ஒன்பது குணங்களுடன் கூடிய ஆத்ம வஸ்துவை சுத்தம் செய்ய முற்படுகின்றனர். அவ்வாறே மற்ற கர்மிஷ்டர்கள் பாஹ்ய (வெளி) விஷயங்களில் பற்று உடையவர்களாய் வேதத்தைப் பிரமாணமாக ஏற்றுக்கொண்டாலும் இந்திரனைப் போன்று பரமார்த்த சத்ய ஆத்ம ஏகத்துவத்தை தன்னுடைய விநாசம் என்று கருதி நீர் இறைக்கும் எந்திரம் போல் இரவும் பகலும் மேலும் கீழும் சென்று கொண்டும், வந்து கொண்டும் இருக்கின்றனர். மற்ற ஸ்வபாவமாகவே வெளி விஷயங்களினால் ஈர்க்கப்பட்ட மனதுடைய அவிவேகிகளாகிய கீழான ஜீவர்களைப் பற்றி என்ன கூறுவது.?
तस्मादिदं त्यक्तसर्वबाह्यैषणैः अनन्यशरणैः परमहंसपरिव्राजकैः अत्याश्रमिभिर्वेदान्तविज्ञानपरैरेव वेदनीयं पूज्यतमैः प्राजापत्यं च इमं सम्प्रदायमनुसरद्भिः उपनिबद्धं प्रकरणचतुष्टयेन । तथा अनुशासति अद्यापि ‘त एव नान्ये’ इति ॥
அனுவாதம் - ஆகையால் எவர் எல்லா பாஹ்ய ஏஷணைகளை (ஆசைகளை) தியாகம் செய்து வேறு எந்த ஒரு கதியில்லை என்று இருக்கும்பொழுது எவர் பிரஜாபதியின் இந்த சம்பிரதாயத்தை அனுசரிக்கும் அந்த வேதாந்த விக்ஞானத்தின் பரமாய் இருக்கும் அதி ஆஸ்ரமியான பூஜைக்குரிய பிரஜாபதியினால் பிரதிபாதனம் செய்யப்பட்ட நான்கு பிரகரணத்தால் அறியவேண்டும். அவ்வாறே இன்றும் அதனை உபதேசிக்கின்றனர். வேறு ஒன்றை அல்ல.
एवमेवैष सम्प्रसादोऽस्माच्छरीरात्समुत्थाय परं ज्योतिरुपसम्पद्य स्वेन रूपेणाभिनिष्पद्यते स उत्तमपुरुषः स तत्र पर्येति जक्षत्क्रीडन् रममाणः स्त्रीभिर्वा यानैर्वा ज्ञातिभिर्वा नोपजनꣳ स्मरन्निदꣳ शरीरꣳ स यथा प्रयोग्य आचरणे युक्त एवमेवायमस्मिञ्छरीरे प्राणो युक्तः ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - இவ்வாறு இந்த சம்பிரசாதம் இந்த சரீரத்திலிருந்து வெளிக்கிளம்பி பரம ஜோதியை அடைந்து தன்னுடைய ஸ்வரூபத்தில் நிலைக்கிறது. அதுவே உத்தம புருஷன். இந்த அவஸ்தையில் சிரிக்கிறது, விளையாடுகிறது. மேலும் ஸ்திரீ, வாகனம் மேலும் சொந்த பந்தங்களுடன் ரமித்துக்கொண்டு தன்னுடன் உண்டான இந்த சரீரத்தை நினைக்காமல் வண்டியில் கட்டப்பட்ட காளை போல் பிராணன் இந்த சரீரத்தில் கட்டுப்பட்டுள்ளது.
यथा अयं दृष्टान्तो
அனுவாதம் - அ.கை - எவ்வாறு இந்த திருஷ்டாந்தமோ -
वाय्वादीनामाकाशादिसाम्यगमनवदविद्यया संसारावस्थायां शरीरसाम्यमापन्नः अहममुष्य पुत्रो जातो जीर्णो मरिष्ये — इत्येवंप्रकारं प्रजापतिनेव मघवान् यथोक्तेन क्रमेण नासि त्वं देहेन्द्रियादिधर्मा तत्त्वमसीति प्रतिबोधितः सन् स एष सम्प्रसादो जीवोऽस्माच्छरीरादाकाशादिव वाय्वादयः समुत्थाय देहादिविलक्षणमात्मनो रूपमवगम्य देहात्मभावनां हित्वेत्येतत् , स्वेन रूपेण सदात्मनैवाभिनिष्पद्यत इति व्याख्यातं पुरस्तात् ।
அனுவாதம் - வாயு முதலியவைகள் ஆகாசத்திற்கு சமானமாக ஆகியதைப்போல் அவித்யா வசமான சம்சார அவஸ்தையில் சரீரத்தைப்போன்று அடைந்து நான் இவருடைய புத்திரன், நான் பிறந்தேன், நான் முதுமையை அடைவேன், நான் இறப்பேன் என்று இவ்வாறு என்னமுடைய இந்திரனுக்கு பிரஜாபதியினால் கூறப்பட்ட கிரமமாக தேஹ இந்திரியங்களாகிய தர்மங்கள் உடையவன் அல்ல நீ. நீ அதுவாகவே இருக்கிறாய் என்று அவனுக்கு அறிவுருத்தி (போதித்து) இந்த சம்பிரஸாத ஜீவன் இந்த சரீரத்திலிருந்து ஆகாச வாயு முதலியவைகளைவிட வேறான ஆத்மாவின் ரூபத்தை அறிந்து அதாவது தேஹாத்ம பாவத்தை விடுவதாகும். தன் ரூபமான ஆத்மாவில் எப்பொழுதும் நிலைபெற்றுள்ளது என்பது முன்பே வியாக்கியானம் செய்யப்பட்டது.
स येन स्वेन रूपेण सम्प्रसादोऽभिनिष्पद्यते — प्राक्प्रतिबोधात् तद्भ्रान्तिनिमित्तात्सर्पो भवति यथा रज्जुः, पश्चात्कृतप्रकाशा रज्ज्वात्मना स्वेन रूपेणाभिनिष्पद्यते, एवं च स उत्तमपुरुषः उत्तमश्चासौ पुरुषश्चेत्युत्तमपुरुषः स एव उत्तमपुरुषः । अक्षिस्वप्नपुरुषौ व्यक्तौ अव्यक्तश्च सुषुप्तः समस्तः सम्प्रसन्नः अशरीरश्च स्वेन रूपेणेति । एषामेव स्वेन रूपेणावस्थितः क्षराक्षरौ व्याकृताव्याकृतावपेक्ष्य उत्तमपुरुषः ; कृतनिर्वचनो हि अयं गीतासु ।
அனுவாதம் - அது எந்த தன்னுடைய ரூபமான சம்பிரஸாதத்தில் நிலைக்கின்றதோ - எவ்வாறு விவேகம் உண்டாவதற்கு முன் பிராந்தியின் காரணமாக எவ்வாறு கயிறு சர்ப்பமாக ஆகிறதோ மேலும் வெளிச்சம் ஏற்பட்டவுடன் தன் ஸ்வரூபமாகிய கயிறாக அறியப்படுகிறது. அவ்வாறே அந்த உத்தம புருஷன் அதாவது உத்தமனாய் இருப்பதால் உத்தம புருஷன் எனப்படுகிறான். அந்த உத்தம புருஷனே கண்ணிலும் ஸ்வப்னத்திலும் வியக்தமாக (வெளிப்படையாக)க் காணப்படுகின்றான். விளங்குகின்ற புருஷன் தன்னுடைய ஸ்வாபாவிக ரூபத்தில் நிலைபெற்று நல்லவிதமாக லீனமாகியும், சம்பிரசன்னமாயும், அவ்யக்த்தமாயும் எந்த க்ஷர, அக்ஷர புருஷனோ அதை ஆஸ்ரயித்து அது தன்னுடைய ஸ்வபாவமான ரூபத்தில் நிலைத்து உத்தம புருஷனாகிறது. இதன் நிரூபணம் கீதையில் உள்ளது.
सः सम्प्रसादः स्वेन रूपेण तत्र स्वात्मनि स्वस्थतया सर्वात्मभूतः पर्येति क्वचिदिन्द्राद्यात्मना जक्षत् हसन् भक्षयन् वा भक्ष्यान् उच्चावचान् ईप्सितान् क्वचिन्मनोमात्रैः सङ्कल्पादेव समुत्थितैर्ब्राह्मलौकिकैर्वा क्रीडन् स्त्र्यादिभिः रममाणश्च मनसैव, नोपजनम् , स्त्रीपुंसयोरन्योन्योपगमेन जायत इत्युपजनम् आत्मभावेन वा आत्मसामीप्येन जायत इत्युपजनमिदं शरीरम् , तन्न स्मरन् । तत्स्मरणे हि दुःखमेव स्यात् , दुःखात्मकत्वात् तस्य ।
அனுவாதம் - அந்த சம்பிரதாஸம் தன்னுடைய ஸ்வரூபத்தால் அங்கு ஸ்வாத்மாவில் தானாகவே இருந்துகொண்டு சர்வாத்மரூபமாக ஆகி எங்கும் சஞ்சரிக்கின்றது. சில சமயம் இந்திரன் முதலிய ரூபமாய் “जक्षत्” (ஜக்ஷத்) அதாவது சிரித்துக்கொண்டும் அல்லது நல்லதோ, கெட்டதோ தான் விரும்பியதை சாப்பிட்டுக்கொண்டும், சில சமயம் மனதின் சங்கல்பத்தின் மாத்திரத்தாலேயே உண்டான அல்லது பிரஹ்மலோக சம்பந்தமான போகங்களுடன் விளையாடிக்கொண்டும், ஸ்திரீ முதலியவைகளுடன் மனதால் ரமித்துக்கொண்டும் உபஜனத்தை அதாவது ஸ்திரீ புருஷர்களின் ஒருவருக்கொருவரின் சேர்ந்து இருப்பதால் இந்த சரீரம் உண்டாகின்றது. அல்லது தன் ரூபமாகவே தன் சமீபமாக இருப்பதினால் உண்டாகிறது என்பதை மறந்து இந்த சரீரம் சஞ்சாரம் செய்கிறது. அதை நினைத்தால் (சரீரம்) துக்காத்மகமாய் இருப்பதால் துக்கமே ஏற்படும்.
नन्वनुभूतं चेत् न स्मरेत् असर्वज्ञत्वं मुक्तस्य ;
அனுவாதம் - சங்கை - இந்த அனுபவித்த சரீரத்தை நினைக்கவில்லையென்றால் அப்பொழுது முக்தனுக்கு சர்வக்ஞத்தன்மை சித்திக்காது.
नैष दोषः । येन मिथ्याज्ञानादिना जनितम् तच्च मिथ्याज्ञानादि विद्यया उच्छेदितम् , अतस्तन्नानुभूतमेवेति न तदस्मरणे सर्वज्ञत्वहानिः । न हि उन्मत्तेन ग्रहगृहीतेन वा यदनुभूतं तदुन्मादाद्यपगमेऽपि स्मर्तव्यं स्यात् ; तथेहापि संसारिभिरविद्यादोषवद्भिः यदनुभूयते तत्सर्वात्मानमशरीरं न स्पृशति, अविद्यानिमित्ताभावात् ।
அனுவாதம் - ஸமாதானம் - இந்த தோஷம் இல்லை. ஏன் எனில் எந்த மித்யாஞானம் முதலியவைகளால் உண்டான சரீரத்தின் உத்பத்தி அந்த மித்யாஞானம் முதலியவை வித்யையினால் நாசமானபின் அதை அனுபவிப்பது இல்லை. ஆகையால் அதை நினைக்காததால் சர்வக்ஞத்தின் நாசம் உண்டாகாது. உன்மத்தத்தால் பீடிக்கப்பட்ட புருஷனுக்கு அனுபவம் ஏற்பட்டு அந்த உன்மத்தம் நீங்கிய பின்னரும் அதை நினைக்க வேண்டும் என்பது இல்லை. அவ்வாறே இங்கும் சரீரத்திற்கு அவித்யா தோஷமுடைய சம்சாரிகளால் அனுபவம் ஏற்படுகிறது. அவ்வாறு சரீரமற்ற சர்வாத்மாவை அவித்யையின் நிமித்தம் இல்லாததால் அதை ஸ்பரிசிக்காது.
ये तु उच्छिन्नदोषैर्मृदितकषायैः मानसाः सत्याः कामा अनृतापिधाना अनुभूयन्ते विद्याभिव्यङ्ग्यत्वात् , त एव मुक्तेन सर्वात्मभूतेन सम्बध्यन्त इति आत्मज्ञानस्तुतये निर्दिश्यन्ते ; अतः साध्वेतद्विशिनष्टि —
‘य एते ब्रह्मलोके’ (छा. उ. ८ । १२ । ५) इति । यत्र क्वचन भवन्तोऽपि ब्रह्मण्येव हि ते लोके भवन्तीति सर्वात्मत्वाद्ब्रह्मण उच्यन्ते ॥
அனுவாதம் - ஆனால் எவர்களுடைய தோஷம் நீங்கிவிட்டதோ. அவ்வாறே ராகம், துவேஷம் முதலிய விஷயங்கள் நஷ்டமாகி விட்டதோ அவர்களுடைய மானச சத்ய காமனைகள் பொய்யாக இருந்தாலும் வித்யையினால் வெளிப்படுவதால் (அபிவியங்க்யமாவதால்) அனுபவிக்கப்படுகின்றன. அந்த முக்த புருஷர்களாகிய சர்வாத்ம ரூபத்தால் சம்பந்தப்படுகிறது. என்று ஆத்ம ஞானம் துதிக்கப்படுகிறது என்று நிர்தேசம் செய்யப்படுகிறது. இது சரிதான் என்பது “य एते ब्रह्मलोके” (ய ஏதே பிரஹ்மலோகே) இதனால் கூறப்படுகிறது. எவை எல்லாம் இருக்கிறதோ அவைகள் பிரஹ்ம லோகத்திலேயே இருக்கின்றன என்பதாலும் சர்வாத்மாவாய் இருப்பதாலும் பிரஹ்மம் என்று கூறுகின்றனர்.
ननु कथमेकः सन् नान्यत्पश्यति नान्यच्छृणोति नान्यद्विजानाति स भूमा कामांश्च ब्राह्मलौकिकान्पश्यन्रमते इति च विरुद्धम् , यथा एको यस्मिन्नेव क्षणे पश्यति स तस्मिन्नेव क्षणे न पश्यति च इति ।
அனுவாதம் - சங்கை - ஆனால் எவ்வாறு ஒன்றாகவே இருந்துகொண்டு நான் வேறு ஒன்றைப் பார்க்கவில்லை, மற்றதைக் கேட்கவில்லை, வேறு ஒன்றையும் அறியவில்லை என்னும் அந்த பூமா, பிரஹ்மலோக சம்பந்தமான போகங்களை கண்டு ரமிக்கிறது என்பது விருத்தமாகும். எவ்வாறு ஒரு புருஷன் அதே சமயத்தில் பார்க்கிறான், பார்க்கவில்லை என்பது போல் ஆகுமே -
नैष दोषः, श्रुत्यन्तरे परिहृतत्वात् । द्रष्टुर्दृष्टेरविपरिलोपात्पश्यन्नेव भवति ; द्रष्टुरन्यत्वेन कामानामभावान्न पश्यति च इति । यद्यपि सुषुप्ते तदुक्तम् , मुक्तस्यापि सर्वैकत्वात्समानो द्वितीयाभावः ।
‘केन कं पश्येत्’ (बृ. उ. २ । ४ । १४) इति च उक्तमेव ।
அனுவாதம் - ஸமாதானம் - வேறு சுருதியில் இதை நிராகரித்திருப்பதால் இந்த தோஷம் இல்லை. திருஷ்டா திருஷ்டியைக் காட்டிலும் மாறுபாடு அற்றதால் பார்ப்பது போல் இருக்கிறது. திருஷ்டாவைக்காட்டிலும் வேறாக போகங்கள் (காமனைகள்) இல்லாததால் பார்ப்பது இல்லை. ஆனாலும் சுழுப்தியில் எது கூறப்பட்டதோ அதுவே முக்தனுக்கும் எல்லாம் ஏகத்துவமாய் த்விதீயம் அற்றதாய் இருப்பது சமானமாகும். “केन कं पश्येत्” (கேன கம் பச்யேத்) என்று கூறப்பட்டதே.
अशरीरस्वरूपोऽपहतपाप्मादिलक्षणः सन् कथमेष पुरुषोऽक्षिणि दृश्यत इत्युक्तः प्रजापतिना ? तत्र यथा असावक्षिणि साक्षाद्दृश्यते तद्वक्तव्यमितीदमारभ्यते । तत्र को हेतुरक्षिणि दर्शने इति, आह —
அனுவாதம் - சரீரமற்ற அபஹதபாப்மா முதலிய லக்ஷணமுடையதாய் இருந்துகொண்டு இந்த புருஷன் கண்ணில் காணப்படுகிறது என்று எவ்வாறு பிரஜாபதி கூறினார்? அங்கு எவ்வாறு அந்த கண்ணில் சாக்ஷாத்தாகக் காணப்படுகிறது கூறவேண்டும் என்பதற்காக இது ஆரம்பிக்கப்படுகிறது கண்ணின் உள்ளே அதை காண்பிப்பதற்கு என்ன காரணம் என்று சுருதி கூறுகிறது.
स दृष्टान्तः यथा प्रयोग्यः, प्रयोग्यपरो वा स-शब्दः, प्रयुज्यत इति प्रयोगः, अश्वो बलीवर्दो वा यथा लोके आचरत्यनेनेत्याचरणः रथः अनो वा तस्मिन्नाचरणे युक्तः तदाकर्षणाय, एवमस्मिञ्छरीरे रथस्थानीये प्राणः पञ्चवृत्तिरिन्द्रियमनोबुद्धिसंयुक्तः प्रज्ञात्मा विज्ञानक्रियाशक्तिद्वयसंमूर्छितात्मा युक्तः स्वकर्मफलोपभोगनिमित्तं नियुक्तः,
‘कस्मिन्न्वहमुत्क्रान्ते उत्क्रान्तो भविष्यामि कस्मिन्वा प्रतिष्ठिते प्रतिष्ठास्यामीति’ (प्र. उ. ६ । ३) ईश्वरेण राज्ञेव सर्वाधिकारी दर्शनश्रवणचेष्टाव्यापारेऽधिकृतः । तस्यैव तु मात्रा एकदेशश्चक्षुरिन्द्रियं रूपोपलब्धिद्वारभूतम् ॥
அனுவாதம் - அந்த திருஷ்டாந்தம் எவ்வாறோ அவ்வாறு கட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள “सः” (ச: அந்த) என்ற சப்தம் கட்டுப்பட்டுள்ளது என்பதாகும். எவ்வாறு குதிரையோ, காளையோ கட்டப்படுவது போல் ஆகும். எவ்வாறு உலகில் எல்லாம் திரிகின்றனவோ அவ்வாறு திரந்துகொண்டு இருப்பது எவ்வாறு ரதத்திலோ, வண்டியிலோ கட்டப்பட்டு அவைகள் (குதிரை, மாடு) இழுக்கப்படுகிறது. அவ்வாறே ரதஸ்தாணீயமான சரீரத்தில் ஐந்து விருத்திகளுடைய பிராணன், இந்திரியம், மனம், புத்திகளுடன் சேர்க்கப்பட்டு பிரக்ஞாத்மா, விக்ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய இரு சக்திகளுடனும் சேர்ந்து அதாவது தன்னுடைய கர்மபலத்தை அனுபவிப்பதற்காக கட்டப்படுகிறது. (சேர்க்கப்படுகிறது). “कस्मिन्न्वहमुत्क्रान्त उत्क्रामन्तो भविष्यामि कस्मिन्वा प्रतिष्द्भिते प्रतिष्द्भास्यामि” (கஸ்மின்வஹமுத்க்ராந்த உத்க்ராமந்தோ பவிஷ்யாமி கஸ்மின்வா ப்ரதிஷ்டிதே ப்ரதிஷ்டாஸ்யாமி) என்று ராஜா எவ்வாறு சர்வ அதிகாரத்தன்மை உடையவராய் எல்லோரையும் காரியங்களில் ஈடுபடச் செய்கிறாரோ அவ்வாறு ஈஸ்வரனால் தர்சன, சிரவண மேலும் செயல்கள் முதலிய வியவகாரங்களில் பிராணனை அதிகாரியாகச் செய்தார். ரூபத்தை அறிவதற்கான வழியாக உள்ள கண் இந்திரியம் மாத்திரம் என்றது ஏகதேசமாகும்.