द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

छान्दोग्योपनिषद्भाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

சாந்தோக்யோபநிஷத்பாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

यद्यपि दिग्देशकालादिभेदशून्यं ब्रह्म ‘सत् . . . एकमेवाद्वितीयम्’ ‘आत्मैवेदं सर्वम्’ इति षष्ठसप्तमयोरधिगतम् , तथापि इह मन्दबुद्धीनां दिग्देशादिभेदवद्वस्त्विति एवंभाविता बुद्धिः न शक्यते सहसा परमार्थविषया कर्तुमिति, अनधिगम्य च ब्रह्म न पुरुषार्थसिद्धिरिति, तदधिगमाय हृदयपुण्डरीकदेशः उपदेष्टव्यः ।
அனுவாதம் - அ.கை - திக் தேசம் காலம் முதலிய பேதங்கள் அற்ற பிரஹ்மம் (சத் ஏகமாய் அத்வைதமாய் ஆத்மாவே இவை எல்லாம்) “सत् एकमेवाद्वितीयम् आत्मैवेदं सर्वम्” (சத் ஏகமேவாத்விதீயம் ஆத்மைவேதம் சர்வம்) என்று ஆறாவது ஏழாவது அத்யாயத்தில் கூறப்பட்டிருந்தாலும் திக் தேச முதலிய பேதங்களுடன் கூடிய வஸ்து என்று இவ்வாறான பாவனையுடன் கூடிய மந்தபுத்தி புருஷர்களுடைய புத்தி பரமார்த்த சம்பந்தத்துடன் ஒத்துப்போவதில்லை. பிரஹ்ம ஞானம் இல்லாமல் புருஷார்த்தம் அடையமுடியாது. ஆகையால் அந்த அனுபவம் ஏற்படுவதற்காக ஹிருதய கமலரூப தேசத்தின் உபதேசம் செய்யவேண்டியது அவசியமாகிறது.
यद्यपि सत्सम्यक्प्रत्ययैकविषयं निर्गुणं च आत्मतत्त्वम् , तथापि मन्दबुद्धीनां गुणवत्त्वस्येष्टत्वात् सत्यकामादिगुणवत्त्वं च वक्तव्यम् । तथा यद्यपि ब्रह्मविदां स्त्र्यादिविषयेभ्यः स्वयमेवोपरमो भवति, तथाप्यानेकजन्मविषयसेवाभ्यासजनिता विषयविषया तृष्णा न सहसा निवर्तयितुं शक्यत इति ब्रह्मचर्यादिसाधनविशेषो विधातव्यः । तथा यद्यप्यात्मैकत्वविदां गन्तृगमनगन्तव्याभावादविद्यादिशेषस्थितिनिमित्तक्षये गगन इव विद्युदुद्भूत इव वायुः दग्धेन्धन इव अग्निः स्वात्मन्येव निवृत्तिः, तथापि गन्तृगमनादिवासितबुद्धीनां हृदयदेशगुणविशिष्टब्रह्मोपासकानां मूर्धन्यया नाड्या गतिर्वक्तव्येत्यष्टमः प्रपाठक आरभ्यते ।
அனுவாதம் - ஆத்மதத்துவம் சத்தானது சிறந்த (நல்ல) ஞானம் ஒன்றிற்கே விஷயமாயும், நிர்குணமாயும் இருக்கிறது. ஆனாலும் மந்தபுத்தி உடையவர்களுக்கு சகுணமே இஷ்டமானதாகும். ஆகையால் அRன் சத்ய சங்கல்பம் முதலிய குணங்களுடன் பிரதிபாதனம் (விளக்குவது) செய்வது அவசியமாகிறது. அவ்வாறே பிரஹ்மவித்துக்கள் ஸ்திரீ முதலிய விஷயங்களில் இருந்து ஸ்வயமாகவே விலகி இருந்தாலும் அநேக ஜன்ம விஷயங்களில் ஈடுபட்ட அப்பியாசத்தால் உண்டான விஷயங்களில் உள்ள விஷய ஆசையை போக்க முடியாததாகும் என்பதால் பிரஹ்மச்சரியம் முதலிய சாதனங்களை விசேஷமாக விதிக்கவேண்டியதாகிறது. அவ்வாறே ஆத்ம ஏகத்துவத்தை அறிந்தவர்களின் பார்வையில் செல்பவன், செல்வது, செல்லவேண்டியவை இல்லாததால் அவித்யா முதலிய மீதமுள்ள இருப்பின் நிமித்தமானது க்ஷயம் ஆகும்பொழுது மின்னல், வேகமுடைய வாயு, மேலும் விறகு அற்ற அக்னி இவைகள் ஆகாயத்தில் லீனமாவதுபோல் தன்னுடைய ஆத்மாவில் நிவிர்த்தியாகிறது. ஆனாலும் எவருடைய புத்தி செல்பவன் செல்லுதல் முதலிய வாசனைகளுடன் கூடி தன்னுடைய ஹிருதய தேசத்தில் இருக்கும் குணங்களுடன் கூடிய பிரஹ்மத்தை உபாசனை செய்பவனின் சிரசில் இருக்கும் நாடியில் இருக்கும் கதியை பிரதிபாதனம் செய்வது (விளக்குவது) அவசியம் என்பதால் எட்டாவது அத்யாயம் ஆரம்பிக்கப்படுகிறது.
दिग्देशगुणगतिफलभेदशून्यं हि परमार्थसदद्वयं ब्रह्म मन्दबुद्धीनामसदिव प्रतिभाति । सन्मार्गस्थास्तावद्भवन्तु ततः शनैः परमार्थसदपि ग्राहयिष्यामीति मन्यते श्रुतिः —
அனுவாதம் - திக்தேசகுணகதிபலபேதங்கள் அற்றதே பரமார்த்த சத் அத்வயம் பிரஹ்ம. மந்தபுத்தி உள்ளவர்களுக்கு அது அசத்போல் தோன்றுகிறது. எவர்கள் சன்மார்க்கத்தில் இருக்கின்றார்களோ அப்பொழுது அவர்களை மெதுவாக நான் இந்த பரமார்த்த சத்தை கிரஹிக்கச் செய்வேன் என்று இவ்வாறு சுருதி கூறுகிறது.
अथ यदिदमस्मिन्ब्रह्मपुरे दहरं पुण्डरीकं वेश्म दहरोऽस्मिन्नन्तराकाशस्तस्मिन्यदन्तस्तदन्वेष्टव्यं तद्वाव विजिज्ञासितव्यमिति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - இப்பொழுது இந்த பிரஹ்ம புரத்தின் உள்ளே எந்த இந்த சூக்ஷ்மமான கமலாகார ஸ்தானம் (தாமரை ரூபமான ஸ்தானம்) உள்ளதோ அதில் சூக்ஷ்ம ஆகாசம் உள்ளது. அதன் உள்ளே எந்த வஸ்து உள்ளதோ அதைத் தேடவேண்டும். மேலும் அதை அறிய இச்சை (विजिसा) செய்ய வேண்டும்.
अथ अनन्तरं यदिदं वक्ष्यमाणं दहरम् अल्पं पुण्डरीकं पुण्डरीकसदृशं वेश्मेव वेश्म, द्वारपालादिमत्त्वात् । अस्मिन् ब्रह्मपुरे ब्रह्मणः परस्य पुरम् — राज्ञोऽनेकप्रकृतिमद्यथा पुरम् , तथेदमनेकेन्द्रियमनोबुद्धिभिः स्वाम्यर्थकारिभिर्युक्तमिति ब्रह्मपुरम् । पुरे च वेश्म राज्ञो यथा, तथा तस्मिन्ब्रह्मपुरे शरीरे दहरं वेश्म, ब्रह्मण उपलब्ध्यधिष्ठानमित्यर्थः । यथा विष्णोः सालग्रामः ।
அனுவாதம் - இதன் பின் இனி எது கூறப்படுகிறதோ அந்த “दहरम्” (தஹரம்) அதாவது சிறிய தாமரை போன்ற வீடு இங்கு துவார பாலகர்களுடன் இருப்பதால் வீடு எனப்படுகிறது. அது இந்த பிரஹ்ம புரத்தில் அதாவது பிரஹ்மம் எனப்படும் பரமாத்மாவின் புரத்தில் ராஜா அநேக பிரஜைகளுடன் இருப்பதால் புரம் எனப்படுகிறது. அவ்வாறே இந்த சரீரமும் தன்னுடைய (ஆத்மாரூப) ஸ்வாமியின் விஷயங்களை அடையவிக்கச் செய்யும் அநேக இந்திரியங்களும், மனமும், புத்தியும் கூடியதாகும். ஆகையால் பிரஹ்மபுரம் எனப்படுகிறது. எவ்வாறு நகரத்தில் ராஜாவின் அரண்மனை உள்ளதோ அவ்வாறு இந்த பிரஹ்மபுர சரீரத்தில் ஒரு சூக்ஷ்மமான வீடு அதாவது பிரஹ்மத்தை அறிவதற்கான அதிஷ்டானமாகும் எவ்வாறு சாலக்கிராமத்தில் விஷ்ணுவோ அவ்வாறாகும்.
अस्मिन्हि स्वविकारशुङ्गे देहे नामरूपव्याकरणाय प्रविष्टं सदाख्यं ब्रह्म जीवेन आत्मनेत्युक्तम् । तस्मादस्मिन्हृदयपुण्डरीके वेश्मनि उपसंहृतकरणैर्ब्राह्मविषयविरक्तैः विशेषतो ब्रह्मचर्यसत्यसाधनाभ्यां युक्तैः वक्ष्यमाणगुणवद्ध्यायमानैः ब्रह्मोपलभ्यत इति प्रकरणार्थः ।
அனுவாதம் - இந்த தன்னுடைய விகாரரூப காரியம் அதாவது தேஹத்தில் சத் எனப்படும் பிரஹ்மம் நாம ரூபமாய் வெளிப்படுவதற்காக ஜீவாத்ம பாவமாய் பிரவேசித்தது என்று கூறப்பட்டது. ஆகையால் இந்த ஹிருதய புண்டரீகம் என்னும் வீட்டில் ஒடுக்கப்பட்ட கரணங்களால் பாஹ்ய விஷயங்களில் விரக்தி அடைந்தவர்கள் விசேஷமாக பிரஹ்மச்சரியம் அவ்வாறே சத்திய ரூப சாதனங்கள் உடையவர்களாய் மேலும் இனிக்கூறப்போகும் குணங்களுடன் தியானம் செய்பவர்கள் பிரஹ்மத்தை அறிகிறார்கள் (அடைகிறார்கள்) என்பது இந்த பிரகரணத்தின் தாத்பர்யம் ஆகும்.
दहरः अल्पतरः अस्मिन्दहरे वेश्मनि वेश्मनः अल्पत्वात्तदन्तर्वर्तिनोऽल्पतरत्वं वेश्मनः । अन्तराकाशः आकाशाख्यं ब्रह्म । ‘आकाशो वै नाम’ (छा. उ. ८ । १४ । १) इति हि वक्ष्यति । आकाश इव अशरीरत्वात् सूक्ष्मत्वसर्वगतत्वसामान्याच्च । तस्मिन्नाकाशाख्ये यदन्तः मध्ये तदन्वेष्टव्यम् । तद्वाव तदेव च विशेषेण जिज्ञासितव्यं गुर्वाश्रयश्रवणाद्युपायैरन्विष्य च साक्षात्करणीयमित्यर्थः ॥
அனுவாதம் - இந்த சூக்ஷ்மமான (கிருஹத்தில்) வீட்டில் - அதாவது மிகவும் சிறியதாக வீடு இருக்கும் காரணத்தால் உள்ளே சூக்ஷ்மமாக வியாபித்திருக்கும் ஆகாயம் மிகவும் சூக்ஷ்மமானது என்பது சித்திக்கிறது. ஆகாசமே நாம ரூபங்களை நிர்வகிக்கின்றது என்று சுருதி கூறப்போகிறது. ஆகாசம் போல் சரீரமற்றதாயும், சூக்ஷ்மமாயும், சர்வகதமாயும் இருப்பதால் அந்த ஆகாசம் என்ற தத்துவத்தில் உள்ளே அதாவது மத்தியில் அதைத் தேடவேண்டும். அதையே விசேஷ ஞானத்துடன் அறிய விரும்பவேண்டும் (ஜிக்ஞாசை செய்ய வேண்டும்). அதாவது குருவை ஆஸ்ரயித்தல், சிரவணம் செய்தல் முதலிய உபாயங்களால் விசாரித்து (தேடி) சாக்ஷாத்காரம் அவசியம் செய்ய வேண்டும் என்பது தாத்பர்யம்.
तं चेद्ब्रूयुर्यदिदमस्मिन्ब्रह्मपुरे दहरं पुण्डरीकं वेश्म दहरोऽस्मिन्नन्तराकाशः किं तदत्र विद्यते यदन्वेष्टव्यं यद्वाव विजिज्ञासितव्यमिति स ब्रूयात् ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அவரிடம் (அந்த குருவிடம்) (சிஷ்யர்கள்) இவ்வாறு கூறினர். என்னவெனில் பிரஹ்ம புரத்தில் எந்த சூக்ஷ்மமான கமலாகாரமாய் வீடு (கிருஹம்) உள்ளதோ அதில் எந்த அந்தர் ஆகாசம் உள்ளதோ அதனுள் என்ன வஸ்து உள்ளது. எதைத் தேடவேண்டும் எதை அறியவிரும்ப வேண்டும்? (இவ்வாறு வினவிய சீடர்களுக்கு) ஆச்சாரியர் இவ்வாறு கூறினார்.
तं चेत् एवमुक्तवन्तमाचार्यं यदि ब्रूयुः अन्तेवासिनश्चोदयेयुः ; कथम् ? यदिदमस्मिन्ब्रह्मपुरे परिच्छिन्ने अन्तः दहरं पुण्डरीकं वेश्म, ततोऽप्यन्तः अल्पतर एव आकाशः । पुण्डरीक एव वेश्मनि तावत्किं स्यात् । किं ततोऽल्पतरे खे यद्भवेदित्याहुः । दहरोऽस्मिन्नन्तराकाशः किं तदत्र विद्यते, न किञ्चन विद्यत इत्यभिप्रायः ।
அனுவாதம் - இவ்வாறு கூறப்பட்ட அந்த ஆச்சாரியரிடம் சிஷ்யர்கள் இவ்வாறு கூறினர் அதாவது சங்கை செய்வர். எவ்வாறு சங்கை செய்வர்? இந்த பரிச்சின்ன பிரஹ்ம புரத்தின் உள்ளே இருக்கும் சூக்ஷ்மமான ஹிருதய புண்டரீக கிரஹத்தில் அதற்கும் உள்ளே மிகச் சூக்ஷ்மமான ஆகாசம் உள்ளது. ஹிருதய புண்டரீக வீட்டில் இதுவரை எந்த வஸ்து இருந்தது? என்ன அதைவிட சூக்ஷ்மமான ஆகாயம் இருந்ததா? என வினவுவர். மிக சூக்ஷ்மமான இந்த அந்தர் (உள்) ஆகாசத்தில் அங்கு என்ன இருந்தது? அங்கு வேறு ஒன்றும் இல்லை என்பது அபிப்பிராயம்.
यदि नाम बदरमात्रं किमपि विद्यते, किं तस्यान्वेषणेन विजिज्ञासनेन वा फलं विजिज्ञासितुः स्यात् ? अतः यत्तत्रान्वेष्टव्यं विजिज्ञासितव्यं वा न तेन प्रयोजनमित्युक्तवतः स आचार्यो ब्रूयादिति श्रुतेर्वचनम् ॥
அனுவாதம் - நாமமாத்திரமாகவே (பெயர் மாத்திரமாகவே) இருக்கும் ஏதோ ஒரு வஸ்து இருந்தால் அதைத் தேடுவதினாலும், அதை அறிய விரும்புவதாலும் அதை அறிய விரும்புபவனுக்கு அதனால் என்ன பிரயோஜனம்? ஆகையால் அதை அங்கு தேடுவதாலோ அறிய விரும்புவதாலோ பிரயோஜனம் இல்லை என்று கூறும் சிஷ்யர்களுக்கு ஆசாரியர் இவ்வாறு கூறவேண்டும் என்பது சுருதி வசனமாகும்.
शृणुत — तत्र यद्ब्रूथ पुण्डरीकान्तःस्थस्य खस्याल्पत्वात् तत्स्थमल्पतरं स्यादिति, तदसत् । न हि खं पुण्डरीकवेश्मगतं पुण्डरीकादल्पतरं मत्वा अवोचं दहरोऽस्मिन्नन्तराकाश इति । किं तर्हि, पुण्डरीकमल्पं तदनुविधायि तत्स्थमन्तःकरणं पुण्डरीकाकाशपरिच्छिन्नं तस्मिन्विशुद्धे संहृतकरणानां योगिनां स्वच्छ इवोदके प्रतिबिम्बरूपमादर्श इव च शुद्धे स्वच्छं विज्ञानज्योतिःस्वरूपावभासं तावन्मात्रं ब्रह्मोपलभ्यत इति दहरोऽस्मिन्नन्तराकाश इत्यवोचाम अन्तःकरणोपाधिनिमित्तम् । स्वतस्तु
அனுவாதம் - கேட்பாயாக - இந்த விஷயத்தைக் குறித்து எதைக் கூறுகிறீர்களோ அது ஹிருதய புண்டரீகத்தின் உள்ள ஆகாயம் சூக்ஷ்மமாய் இருப்பதால் அதில் இருப்பதும் மிகவும் சூக்ஷ்மமாய் இருக்கும் என்பது அசத்தாகும். புண்டரீக வீட்டில் இருக்கும் புண்டரீக ஆகாசம் மிகவும் சூக்ஷ்மமானது என்று கருதி கூறவில்லை. ஆனால் அதில் அந்தர்கதமாய் உள்ள ஆகாயம் மிகவும் சூக்ஷ்மமானது என்பதாகும். அதனால் என்ன? புண்டரீகமானது சூக்ஷ்மமானது. அதில் அனுவர்த்தித்து இருக்கும் அந்தக்கரணம் புண்டரீக ஆகாசம் பரிச்சின்னமாகும். அந்த விசுத்தமான கரணங்களை அடக்கிய யோகிகள் சுத்தமான நீரில் உள்ள பிரதிபிம்பம்போல் அவ்வாறே சுத்தமான கண்ணாடியில் போல் சுத்த விக்ஞான ஜ்யோதி ஸ்வரூபமாக பிரதீதி (தோன்றும்) (அவபாசமாகும்) அவ்வளவு மாத்திரமே பிரஹ்மத்தின் அடைவாகும் என்று அதில் உள்ள அந்தராகாசம் சூக்ஷ்மம் என்று கூறினோம். ஏன் எனில் அது அந்தக்கரண உபாதி நிமித்தத்தால் ஆகும். ஸ்வயமாகவோ -
यावान्वा अयमाकाशस्तावानेषोऽन्तर्हृदय आकाश उभे अस्मिन्द्यावापृथिवी अन्तरेव समाहिते उभावग्निश्च वायुश्च सूर्याचन्द्रमसावुभौ विद्युन्नक्षत्राणि यच्चास्येहास्ति यच्च नास्ति सर्वं तदस्मिन्समाहितमिति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - எவ்வளவு (பெளதிக) ஆகாசம் உள்ளதோ அவ்வளவும் ஹிருதயத்தில் உள்ள ஆகாசமும் ஆகும். தியுலோகம், பிருதிவீ லோகம் இரண்டு லோகங்களும் நல்ல விதமாக அதன் உள்ளே நிலைபெற்றுள்ளது. இவ்வாறே அக்னியும் வாயுவுமாகிய இரண்டும். அவ்வாறே சூரிய சந்திரர்களும், அவ்வாறே மின்னல் நக்ஷத்திரங்களும், அவ்வாறே இந்த ஆத்மாவிற்கு எவை எல்லாம் இந்த உலகில் உள்ளதோ. இல்லையோ அவை எல்லாம் இதில் நல்லவிதமாக நிலைபெற்றுள்ளது.
यावान्वै प्रसिद्धः परिमाणतोऽयमाकाशः भौतिकः, तावानेषोऽन्तर्हृदये आकाशः यस्मिन्नन्वेष्टव्यं विजिज्ञासितव्यं च अवोचाम । नाप्याकाशतुल्यपरिमाणत्वमभिप्रेत्य तावानित्युच्यते । किं तर्हि, ब्रह्मणोऽनुरूपस्य दृष्टान्तान्तरस्याभावात् । कथं पुनर्न आकाशसममेव ब्रह्मेत्यवगम्यते, ‘येनावृतं खं च दिवं महीं च’ (तै. ना. १), ‘तस्माद्वा एतस्मादात्मन आकाशः सम्भूतः’ (तै. उ. २ । १ । १), ‘एतस्मिन्नु खल्वक्षरे गार्ग्याकाशः’ (बृ. उ. ३ । ८ । ११) इत्यादिश्रुतिभ्यः ।
அனுவாதம் - அளவைப் பொருத்தவரையில் இந்த பெளதிக ஆகாசம் எவ்வளவு பிரசித்தமோ அந்த அளவை இந்த ஹிருதயத்தின் உள் இருக்கும் ஆகாசமோ அந்த விஷயத்தில் நாம் தேடவேண்டியது அவ்வாறே அறிய வேண்டியதில் இச்சை கொள்ளவேண்டும் என்று கூறினோம். ஆகாசத்திற்கு ஒப்பான அளவு உள்ளது என்று அபிப்பிராயப்பட்டு “அவ்வளவு” என்று கூறவில்லை. அதனால் என்ன? பிரஹ்மத்தைப் போன்ற எந்த ஒரு வேறு திருஷ்டாந்தம் இல்லாததால் இவ்வாறு கூறப்பட்டது. (கேள்வி) ஆனால் பிரஹ்மமாக சத்திற்கு சமானமாக இல்லையெனில் எவ்வாறு அறியமுடியும்? “येनावृतं खं च दिवं महीं च” (யேனாவிருதம் கம்ச்ச திவம் மஹீம் ச்ச) “तस्माद्वा एतस्मादात्मन आकाशः सम्भूतः।” (தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மன ஆகாச: சம்பூத:) “एतस्मिन्नु खल्वक्षरे गार्ग्याकाशः” (ஏதஸ்மின்னு கல்வக்ஷரே கார்கயாகாஷ:) என்பது முதலிய சுருதிகளால் சித்திக்கிறது.
किं च उभे अस्मिन्द्यावापृथिवी ब्रह्माकाशे बुद्ध्युपाधिविशिष्टे अन्तरेव समाहिते सम्यगाहिते स्थिते । ‘यथा वा अरा नाभौ’ (छा. उ. ७ । १५ । १) इत्युक्तं हि ; तथा उभावग्निश्च वायुश्चेत्यादि समानम् । यच्च अस्य आत्मन आत्मीयत्वेन देहवतोऽस्ति विद्यते इह लोके । तथा यच्च आत्मीयत्वेन न विद्यते । नष्टं भविष्यच्च नास्तीत्युच्यते । न तु अत्यन्तमेवासत् , तस्य हृद्याकाशे समाधानानुपपत्तेः ॥
அனுவாதம் - மேலும் இவ்வாறு புத்தி உபாதியுடன் கூடிய பிரஹ்மா ஆகாசத்தின் உள்ளே த்யுலோகம், பிருதிவீ இவைகள் நன்றாக நிலைபெற்றுள்ளன. எவ்வாறு ஆரக்கால்கள் சக்கரத்தின் நாபியில் பொருத்தப்பட்டுள்ளதோ அவ்வாறு. அவ்வாறே அந்த அக்னி வாயு ஆகிய இரண்டும் அவ்வாறே மற்றவைகளும் நிலை பெற்றிருத்தல் சமானமாகும். இந்த தேஹத்தை உடையவன் ஆத்மாவை ஆத்மீயரூபமாக இந்த உலகில் பார்க்கிறானோ. அவ்வாறே ஆத்மீயரூபமாக பார்க்கவில்லையோ, அவ்வாறே நஷ்டம் அடைவதோ, இனிவருங்காலத்தில் அடைவதோ இல்லை என்று கூறப்படுகிறது. அதற்கு ஹிருதயாகாசத்தில் ஸ்திதி சம்பவிக்கவில்லையானாலும் அது அத்யந்த அபாவமல்ல. (முற்றிலும் இல்லை என்பதல்ல.)
तं चेद्ब्रूयुरस्मिꣳश्चेदिदं ब्रह्मपुरे सर्वꣳ समाहितꣳ सर्वाणि च भूतानि सर्वे च कामा यदैतज्जरा वाप्नोति प्रध्वंसते वा किं ततोऽतिशिष्यत इति ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - அந்த ஆச்சாரியரிடம் சிஷ்யர்கள் இவ்வாறு வினவினர் - (தேஹத்தில்) பிரஹ்ம புரத்தில் இவை எல்லாம் நிலைபெற்றுள்ளன. அவ்வாறே எல்லா பூதங்களும் (ஜீவர்களும்) எல்லா காமனைகளும் நல்லவிதமாக நிலைபெற்றுள்ளன. எப்பொழுது இது கிழத்தன்மை அடைந்தாலோ, இந்த சரீரம் நஷ்டமாகிவிட்டாலோ அப்பொழுது எது எஞ்சுகிறது?
तं चेत् एवमुक्तवन्तं ब्रूयुः पुनरन्तेवासिनः — अस्मिंश्चेत् यथोक्ते चेत् यदि ब्रह्मपुरे ब्रह्मपुरोपलक्षितान्तराकाशे इत्यर्थः । इदं सर्वं समाहितं सर्वाणि च भूतानि सर्वे च कामाः ।
அனுவாதம் - இவ்வாறு கூறிய ஆச்சாரியரிடம் சீடர்கள் இவ்வாறு கூறினார் - பிரஹ்மபுரத்தில் அதாவது பிரஹ்மபுர உபலக்ஷிதமான அந்தர் ஆகாசத்தில் (ஹிருதயத்தின் உள் ஆகாசத்தில்) இவை எல்லாம் நன்றாக நிலைத்திருக்கின்றன என்பது பொருள். இவை எல்லாம் அதாவது எல்லா பூதங்களும் காமனைகளும் அதிலேயே இருக்கின்றன.
कथमाचार्येणानुक्ताः कामा अन्तेवासिभिरुच्यन्ते ?
அனுவாதம் - சங்-கை- - எவ்வாறு ஆச்சாரியரால் கூறப்படாத காமனைகளை சீடர்கள் கூறுகின்றனர்?
नैष दोषः । यच्च अस्य इहास्ति यच्च नास्तीत्युक्ता एव हि आचार्येण कामाः । अपि च सर्वशब्देन च उक्ता एव कामाः । यदा यस्मिन्काले एतच्छरीरं ब्रह्मपुराख्यं जरा वलीपलितादिलक्षणा वयोहानिर्वा आप्नोति, शस्त्रादिना वा वृक्णं प्रध्वंसते विस्रंसते विनश्यति, किं ततोऽन्यदतिशिष्यते ?
அனுவாதம் - ஸமாதானம் - இந்த தோஷம் இல்லை. இந்த உலகில் எவை எல்லாம் உள்ளதோ மேலும் எது எல்லாம் இல்லையோ இவ்வாறு ஆச்சாரியர் காமனை விஷயங்களைப் பற்றியே கூறினார். எப்பொழுது இந்த பிரஹ்மபுரம் என்று கூறப்படும் சரீரம் சுருங்கியும், முடி நரைத்து உதிர்ந்தும் கிழத்தன்மையை அடைகிறதோ அவ்வாறே ஆயுள் நஷ்டமாகிறதோ அல்லது கத்தி முதலியவைகளால் வெட்டப்பட்டு நாசமாகிறதோ அதன்பின் வேறு என்ன மிஞ்சுகிறது.
घटाश्रितक्षीरदधिस्नेहादिवत् घटनाशे देहनाशेऽपि देहाश्रयमुत्तरोत्तरं पूर्वपूर्वनाशान्नश्यतीत्यभिप्रायः । एवं प्राप्ते नाशे किं ततोऽन्यत् यथोक्तादतिशिष्यते अवतिष्ठते, न किञ्चनावतिष्ठत इत्यभिप्रायः ॥
அனுவாதம் - கடம் நாசமானால் கடத்தில் இருக்கும் பால், தயிர், நெய் இவைகளைப்போல் தேஹம் நாசம் ஆகும்பொழுது தேஹத்தை ஆஸ்ரயித்தவைகள் முன் முன்காரணம் நாசமானபின் அதன்பின்னர் உண்டான காரியங்களும் நாசமாகின்றன. இவ்வாறு நாசமடைந்தபின் முன் கூறிய மற்றவைகள் எவ்வாறு இருக்கும்? அதாவது சிறிதும் இருக்காது என்பது அபிப்பிராயம்.
एवमन्तेवासिभिश्चोदितः
அனுவாதம் - அ.கை - இவ்வறு சிஷ்யர்கள் (சீடர்கள்) வினவிய பின் -
स ब्रूयान्नास्य जरयैतज्जीर्यति न वधेनास्य हन्यत एतत्सत्यं ब्रह्मपुरमस्मिन्कामाः समाहिता एष आत्मापहतपाप्मा विजरो विमृत्युर्विशोको विजिघत्सोऽपिपासः सत्यकामः सत्यसङ्कल्पो यथा ह्येवेह प्रजा अन्वाविशन्ति यथानुशासनं यं यमन्तमभिकामा भवन्ति यं जनपदं यं क्षेत्रभागं तं तमेवोपजीवन्ति ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - அவர்களுக்கு இதைக் கூறவேண்டும் - இது (தேஹம்) மூப்பு அவஸ்தையில் (ஆகாசம் எனப்படும் பிரஹ்மம்) மூப்பு அடைவதில்லை. அதை வதம் செய்தாலும் நாசம் அடைவதில்லை. இந்த பிரஹ்மபுரம் சத்யம். இதில் எல்லா காமனைகளும் எல்லா விதமாகவும் நிலைபெற்று இருக்கின்றன. அது ஆத்மா, தர்மம் அதர்மம் அற்றது, அவ்வாறே மூப்பு அற்றது, மரணமற்றது, சோகம் அற்றது, சாப்பிடுவதற்கு இச்சை அற்றது, பருகுவதிலும் இச்சை அற்றது. சத்ய காமம் மேலும் சத்ய சங்கல்பம் ஆகும். எவ்வாறு இந்த உலகில் பிரஜைகள் ராஜாவின் ஆணைப்படி அனுசரித்து வாழ்ந்தாலும் எந்த எந்த தேசத்தையோ, ஒரு பகுதியையோ விரும்பினால் அதை ஆஸ்ரயித்தே ஜீவனத்தை மேற்கொள்கின்றனர்.
स आचार्यो ब्रूयात् तन्मतिमपनयन् । कथम् ? अस्य देहस्य जरया एतत् यथोक्तमन्तराकाशाख्यं ब्रह्म यस्मिन्सर्वं समाहितं न जीर्यति देहवन्न विक्रियत इत्यर्थः । न च अस्य वधेन शस्त्रादिघातेन एतद्धन्यते, यथा आकाशम् ; किमु ततोऽपि सूक्ष्मतरमशब्दमस्पर्शं ब्रह्म देहेन्द्रियादिदोषैर्न स्पृश्यत इत्यर्थः ।
அனுவாதம் - அந்த ஆச்சாரியர் அவர்களின். மூட புத்தியை நிவிர்த்தி செய்வதற்காக இவ்வாறு கூறவேண்டும். எவ்வாறு? இந்த தேஹத்தின் மூப்பு முதலியவை எவ்வாறு கூறப்பட்டதோ அந்த அந்தர் ஆகாசம் எனப்படும் பிரஹ்மம். அதிலேயே எல்லாம் நிலைபெற்றுள்ளது. தேஹம் போன்று மூப்பு அடைவதில்லை. அதாவது மாறுதலை அடைவதில்லை என்பது பொருள். அதை கத்தி முதலியவைகளால் வெட்டினாலும் அது ஆகாசம் போன்று நாசம் அடைவதில்லை. அதனாலும் மிகவும் சூக்ஷ்மமானது, அசப்தம், அஸ்பர்சம், பிரஹ்மம், தேஹம் இந்திரியங்கள் முதலியவைகளின் தோஷங்கள் ஒட்டாது (ஸ்பர்சிக்காது) என்பது பொருள். (தாத்பர்யம்).
कथं देहेन्द्रियादिदोषैर्न स्पृश्यत इति एतस्मिन्नवसरे वक्तव्यं प्राप्तम् , तत्प्रकृतव्यासङ्गो मा भूदिति नोच्यते । इन्द्रविरोचनाख्यायिकायामुपरिष्टाद्वक्ष्यामो युक्तितः ।
அனுவாதம் - தேஹ இந்திரியங்கள் முதலியவைகளின் தோஷங்களால் பிரஹ்மம் எவ்வாறு ஒட்டவில்லை என்பதை இப்பொழுது கூறவேண்டியது அவசியமானாலும் இந்த விஷயத்தில் மாறுபாடு ஏற்படாததால் (விச்சேதம் ஏற்படாததால்) இங்கு கூறவில்லை. இனிவரும் இந்திர விரோசன கதை மூலமாக யுக்தியுடன் விளக்கப்படுகிறது.
एतत्सत्यमवितथं ब्रह्मपुरं ब्रह्मैव पुरं ब्रह्मपुरम् ; शरीराख्यं तु ब्रह्मपुरं ब्रह्मोपलक्षणार्थत्वात् । तत्तु अनृतमेव, ‘वाचारम्भणं विकारो नामधेयम्’ (छा. उ. ६ । १ । ४), (छा. उ. ६ । १ । ५), (छा. उ. ६ । १ । ६) इति श्रुतेः । तद्विकारो अनृतेऽपि देहशुङ्गे ब्रह्मोपलभ्यत इति ब्रह्मपुरमित्युक्तं व्यावहारिकम् । सत्यं तु ब्रह्मपुरमेतदेव ब्रह्म, सर्वव्यवहारास्पदत्वात् । अतः अस्मिन्पुण्डरीकोपलक्षिते ब्रह्मपुरे सर्वे कामाः, ये बहिर्भवद्भिः प्रार्थ्यन्ते, ते अस्मिन्नेव स्वात्मनि समाहिताः । अतः तत्प्राप्त्युपायमेवानुतिष्ठत, बाह्यविषयतृष्णां त्यजत इत्यभिप्रायः ।
அனுவாதம் - இந்த பிரஹ்மபுரம் அழிவு அற்றது சத்யமானது. பிரஹ்மமேபுரம் பிரஹ்மபுரம். சரீரம் எனப்படும் பிரஹ்மபுரம் பிரஹ்மத்தின் உபலக்ஷணம் ஆகும். மேலும் அது பொய்யானதே “वाचारम्भणं विकारो नामधेयम्” (வாசாரம்பணம் விகாரோ நாமதேயம்) என்பது சுருதிவாக்கியம், அது விகாரமாயும் அனுருதமாயும் (பொய்யாகவும்) இருந்தாலும் இந்த தேஹரூப முளையில் (காரியத்தில்) பிரஹ்மம் அறியப்படுவதால் (அடையப்படுவதால்) வியாவகாரிக பிரஹ்மபுரம் என்று கூறப்பட்டது. எல்லா வியவஹாரங்களுக்கும் ஆஸ்ரயமாய் இருப்பதால் சத்யமான பிரஹ்மபுரமே பிரஹ்மம். ஆகையால் இந்த புண்டரீக உபலக்ஷித பிரஹ்மபுரத்தில் உள்ள எல்லா காமனைகளையும் நீங்கள் வெளியில் பிரார்த்திக்கின்றீர்கள் (அடைய விரும்புகின்றீர்கள்). அவைகள் இந்த ஸ்வாத்மாவிலேயே நிலைபெற்றிருக்கின்றன. ஆகையால் அந்த பிரஹ்மத்தின் பிராப்திக்காக அனுஷ்டானம் செய்யவேண்டும். இந்த வெளி விஷயங்களில் உள்ள திருஷ்ணாவை (தீவிர ஆசையை) விடவேண்டும் என்பதே இதன் தாத்பர்யம்.
एष आत्मा भवतां स्वरूपम् । शृणुत तस्य लक्षणम् — अपहतपाप्मा, अपहतः पाप्मा धर्माधर्माख्यो यस्य सोऽयमपहतपाप्मा । तथा विजरः विगतजरः विमृत्युश्च ।
அனுவாதம் - அந்த ஆத்மா உங்களுடைய ஸ்வரூபம், அதன் லக்ஷணத்தைக் கேளுங்கள். “अपहतपाप्मा” (அபஹதபாப்மா) என்பது தர்மம் அதர்மம் எனப்படும் பாபம் எவருக்கு நீங்கி உள்ளதோ அவர் அபஹதபாப்மா. அவ்வாறே மூப்பு அற்றவர் மரணமற்றவரும் ஆவர்.
तदुक्तं पूर्वमेव न वधेनास्य हन्यत इति ; किमर्थं पुनरुच्यते ?
அனுவாதம் - சங்கை - இந்த சரீரம் நாசம் அடைந்தாலும் அது நாசமாகாது என்று முன்பே கூறினீர்கள். எதற்காக அதையே மறுபடியும் கூறுகின்றீர்கள்?
यद्यपि देहसम्बन्धिभ्यां जरामृत्युभ्यां न सम्बन्ध्यते, अन्यथापि सम्बन्धस्ताभ्यां स्यादित्याशङ्कानिवृत्त्यर्थम् ।
அனுவாதம் - ஸமாதானம் - தேஹ சம்பந்தமான மூப்பு, மரணம், இவைகளுடன் சம்பந்தம் இல்லாவிடினும் வேறு ஏதாவது சம்பந்தத்தால் ஏற்படாலாமே என்ற சங்கையை (சந்தேகத்தை) நிவிர்த்தி செய்வதற்காக கூறப்பட்டது.
विशोकः विगतशोकः । शोको नाम इष्टादिवियोगनिमित्तो मानसः सन्तापः । विजिघत्सः विगताशनेच्छः । अपिपासः अपानेच्छः ।
அனுவாதம் - அவன் “विशोकः” (விசோக:) சோகம் அற்றவன், சோகம் என்பது இஷ்ட வஸ்து நஷ்டத்தினால் உண்டாகும் மனக்கஷ்டம் “विजिधत्सः” (விஜிகத்ச:) என்பது போஜனத்தில் இஷ்டமில்லாமல் இருப்பது. “अपिपासा” (அபிபாசா) பருகுவதில் இச்சை அற்று இருப்பது ஆகும்.
ननु अपहतपाप्मत्वेन जरादयः शोकान्ताः प्रतिषिद्धा एव भवन्ति, कारणप्रतिषेधात् । धर्माधर्मकार्या हि ते इति । जरादिप्रतिषेधेन वा धर्माधर्मयोः कार्याभावे विद्यमानयोरप्यसत्समत्वमिति पृथक्प्रतिषेधोऽनर्थकः स्यात् ।
அனுவாதம் - சங்கை - ஆனால் அபஹதபாப்மாவாய் இருப்பதால் மூப்பிலிருந்து சோகம் வரையிலும் தள்ளத்தக்கதாக ஆகின்றன. ஏன்எனில் அதன் காரணம் நிஷேதம் செய்யப்பட்டதால். அவைகள் தர்மாதர்மங்களின் காரியங்கள் ஆவதால். மூப்பு முதலியவைகளின் நீக்கத்தால் தர்மாதர்மங்களுக்கு காரியங்கள் இல்லாததால். அவைகள் இருந்தாலும் அசத்திற்கு சமமாக ஆகின்றன என்பதால் அதை தனியாக நிஷேதம் செய்வது அர்த்தமற்றதாக ஆகுமே.
सत्यमेवम् , तथापि धर्मकार्यानन्दव्यतिरेकेण स्वाभाविकानन्दो यथेश्वरे, ‘विज्ञानमानन्दं ब्रह्म’ (बृ. उ. ३ । ९ । २८) इति श्रुतेः, तथा अधर्मकार्यजरादिव्यतिरेकेणापि जरादिदुःखस्वरूपं स्वाभाविकं स्यादित्याशङ्क्येत । अतः युक्तस्तन्निवृत्तये जरादीनां धर्माधर्माभ्यां पृथक्प्रतिषेधः । जरादिग्रहणं सर्वदुःखोपलक्षणार्थम् । पापनिमित्तानां तु दुःखानामानन्त्यात्प्रत्येकं च तत्प्रतिषेधस्य अशक्यत्वात् सर्वदुःखप्रतिषेधार्थं युक्तमेवापहतपाप्मत्ववचनम् ।
அனுவாதம் - ஸமாதானம் - இவ்வாறு உண்மையானாலும் எவ்வாறு ஈஸ்வரனிடத்தில் தர்ம காரியரூபமான ஆனந்தத்தைவிட வேறான ஸ்வபாவமான ஆனந்தமாகும். “विज्ञानमानन्दं ब्रह्म” (விக்ஞானமானந்தம் பிரஹ்ம) என்பது சுருதி வாக்கியமாகும். அவ்வாறே அதர்ம காரியரூப மூப்பு முதலியவைகளை விடவும் மூப்பு முதலிய துக்க ஸ்வரூபமும் ஸ்வாபவம் ஆகலாமே என்று சங்கை ஏற்படலாம். ஆகையால் அந்த சங்கையின் நிவிர்த்திக்காக மூப்பு முதலியவைகளை தர்மாதர்மங்களில் இருந்து தனியாக நிஷேதம் செய்வது பொருத்தமேயாகும். எல்லா துக்கங்களின் உபலக்ஷணமாக மூப்பு முதலியவைகள் கிரஹிக்கப்பட்டது. பாபத்தின் நிமித்தமாக துக்கங்கள் முடிவு அற்று இருப்பதால் ஒவ்வொன்றையும் தனியாக பிரதிஷேதம் (தள்ள) முடியாததால் எல்லா துக்கங்களையும் நீக்குவதற்காக “अपहतपाप्मा” (அபஹதபாப்மா) என்று கூறுவது சரியானதே (பொருத்தமானதே).
सत्याः अवितथाः कामाः यस्य सोऽयं सत्यकामः । वितथा हि संसारिणां कामाः ; ईश्वरस्य तद्विपरीताः । तथा कामहेतवः सङ्कल्पा अपि सत्याः यस्य स सत्यसङ्कल्पः । सङ्कल्पाः कामाश्च शुद्धसत्त्वोपाधिनिमित्ताः ईश्वरस्य, चित्रगुवत् ; न स्वतः ‘नेति नेति’ (बृ. उ. २ । ३ । ६) इत्युक्तत्वात् । यथोक्तलक्षण एष आत्मा विज्ञेयो गुरुभ्यः शास्त्रतश्च आत्मसंवेद्यतया च स्वाराज्यकामैः
அனுவாதம் - எவருக்கு உண்மையான, பொய் அற்ற காமம் உள்ளதோ அவர் சத்யகாமா. சம்சாரிகளுடைய காமனைகள் பொய்யானவை. ஈஸ்வரனுடையது அதற்கு நேர்மாறானது. அவ்வாறே காமங்களுக்கு ஹேதுவான சங்கல்பமும் எவருக்கு சத்யமோ அவர் சத்ய சங்கல்பர். ஈஸ்வரனுடைய சங்கல்பங்களும் காமனைகளும் “चित्रगुवत्” (சித்ரகுபோல்) சுத்த சத்துவ உபாதி நிமித்தமாகும். “नेति नेति” (நேதி, நேதி = இது அல்ல, இது அல்ல) என்று கூறப்பட்டுள்ளதால் தான் (ஆத்மா) காரணமல்ல. ஸ்வராஜ்யத்தை விரும்புபவர்கள் குருக்களாலும், சாஸ்த்திரங்களாலும் ஸ்வசம் வேத்தியத்தாலும் கூறப்பட்ட லக்ஷணங்களுடைய ஆத்மாவை அறியவேண்டும்.
 । न चेद्विज्ञायते को दोषः स्यादिति, शृणुत अत्र दोषं दृष्टान्तेन — यथा ह्येव इह लोके प्रजाः अन्वाविशन्ति अनुवर्तन्ते यथानुशासनम् ; यथेह प्रजाः अन्यं स्वामिनं मन्यमानाः तस्य स्वामिनो यथा यथानुशासनं तथा तथान्वाविशन्ति । किम् ? यं यमन्तं प्रत्यन्तं जनपदं क्षेत्रभागं च अभिकामाः अर्थिन्यः भवन्ति आत्मबुद्ध्यनुरूपम् , तं तमेव च प्रत्यन्तादिम् उपजीवन्तीति । एष दृष्टान्तः अस्वातन्त्र्यदोषं प्रति पुण्यफलोपभोगे ॥
அனுவாதம் - இதை அறியவில்லை எனில் என்ன தோஷம் உண்டாகும்? அதை திருஷ்டாந்த மூலமாக கூறுகிறேன் கேள். எவ்வாறு இவ்வுலகில் பிரஜைகள் அனுசாசனப்படி (கட்டளைப்படி) அதைப் பின்பற்றுகின்றனரோ அதாவது வேறு எஜமானனை தன் எஜமானனாகக் கருதி எவ்வாறு அவருடைய கட்டளைப்படி அனுசரித்து செல்கின்றனறோ அவ்வாறு அனுசரித்து செயல்படுகின்றனர். எதை அனுவர்த்திக்கின்றனர்? புத்தி முதலியவைகளை அனுசரித்து எதை எதை அடைய விரும்புகின்றனறோ அதாவது தேசம் அல்லது இடத்தின் ஒரு பாகம் விரும்பி பிரயத்தனம் செய்கின்றனரோ அதை அதை அடைந்து அதன்படி வாழ்கின்றனர். இந்த திருஷ்டாந்தம் புண்ய பலபோகத்தில் உள்ள சுவதந்தரமற்ற தோஷத்தைக் குறிக்கிறது.
अथ अन्यो दृष्टान्तः तत्क्षयं प्रति तद्यथेहेत्यादिः ।
அனுவாதம் - அ.கை - மேலும் வேறு “तद्यथेत्यादि” (தத்யதேத்யாதி) தத்யதா = அது எவ்வாறு என்பது முதலிய) திருஷ்டாந்தங்கள் (கர்மபலத்தின் (அழிவை) க்ஷயத்தைக் குறித்து உள்ளன.
तद्यथेह कर्मजितो लोकः क्षीयत एवमेवामुत्र पुण्यजितो लोकः क्षीयते तद्य इहात्मानमननुविद्य व्रजन्त्येताꣳश्च सत्यान्कामाꣳस्तेषाꣳ सर्वेषु लोकेष्वकामचारो भवत्यथ य इहात्मानमनुविद्य व्रजन्त्येताꣳश्च सत्यान्कामांस्तेषाꣳ सर्वेषु लोकेषु कामचारो भवति ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - கர்மங்களினால் அடையப்பட்ட இந்த உலகம் எவ்வாறு அழிகிறதோ அவ்வாறே புண்யத்தால் அடையப்பட்ட பரலோகமும் அழிவு அடையும். எவன் ஒருவன் இவ்வுலகில் இந்த சத்ய காமனைகள் அற்று ஆத்மாவை அறிந்திருக்காவிடில் அவன் பரலோகத்தை அடைந்து அதன் எல்லா லோகங்களிலும் தன் இச்சைப்படியான கதி கிடைக்காது. மேலும் இவ்வுலகில் ஆத்மாவை அவ்வாறே சத்திய காமனைகளை அறிந்து (பரலோகம்) சென்றால் அவனுக்கு எல்லா லோகங்களிலும் தன் இச்சைப்பட்ட கதியை அடைவான்.
तत् तत्र यथा इह लोके तासामेव स्वाम्यनुशासनानुवर्तिनीनां प्रजानां सेवादिजितो लोकः पराधीनोपभोगः क्षीयते अन्तवान्भवति । अथ इदानीं दार्ष्टान्तिकमुपसंहरति — एवमेव अमुत्र अग्निहोत्रादिपुण्यजितो लोकः पराधीनोपभोगः क्षीयत एवेति । उक्तः दोषः एषामिति विषयं दर्शयति — तद्य इत्यादिना ।
அனுவாதம் - तत् (தத் - அது) எவ்வாறு இந்த லோகத்தில் தன்னுடைய எஜமானனின் கட்டளையை அனுசரித்து செயல்படுகின்ற பிரஜைகள் சேவை முதலியவைகளால் அந்த இந்த லோகம் மற்றவர்களுடைய அதீனமாயும், அழிவுடையதாயும் ஆகிறது. மேலும் இப்பொழுது த்ராஷ்டாந்தத்தை முடிக்கிறார் - இவ்வாறே பரலோகத்திலும் அக்னிஹோத்திரம் முதலிய புண்யத்தால் அடையப்பட்ட லோகமும் அனுபவித்தல் பரதீனமாய் இருப்பதால் க்ஷீணமாகிறது. (அழிகிறது). கூறப்பட்ட தோஷம் இவர்களுக்கு (அநாத்ம வேத்தாக்களுக்கு) என்ற விஷயத்தை “तद्य” (தத்ய - அது எது) என்பது முதலியவைகளால் தெரிவிக்கப்படுகிறது.
तत् तत्र ये इह अस्मिंल्लोके ज्ञानकर्मणोरधिकृताः योग्याः सन्तः आत्मानं यथोक्तलक्षणं शास्त्राचार्योपदिष्टमननुविद्य यथोपदेशमनु स्वसंवेद्यतामकृत्वा व्रजन्ति देहादस्मात्प्रयन्ति, य एतांश्च यथोक्तान् सत्यान् सत्यसङ्कल्पकार्यांश्च स्वात्मस्थान्कामान् अननुविद्य व्रजन्ति, तेषां सर्वेषु लोकेषु अकामचारः अस्वतन्‍त्रता भवति — यथा राजानुशासनानुवर्तिनीनां प्रजानामित्यर्थः ।
அனுவாதம் - அது இந்த லோகத்தில் ஞான கர்மங்களின் அதிகார யோக்கியர்களாக இருந்துகொண்டு முன்பு கூறப்பட்ட லக்ஷணங்களுடைய ஆத்மாவை சாஸ்திரம் ஆச்சாரியர் உபதேசித்ததை அறியாமல் எவ்வாறு உபதேசிக்கப்பட்டதோ அதை தானாக அறியாமல் இந்த தேஹத்திலிருந்து வெளியேறி, அவ்வாறே இதற்குமுன் கூறிய சத்யமான அதாவது சத்ய சங்கல்ப காரியங்களையும் ஸ்வாத்மாவில் (தன் ஆத்மாவில்) உள்ள காமனைகளையும் (அறியாமல்) மதிக்காமல் வெளியேறுகின்றவர்கள் எல்லா லோகங்களிலும் காமாச்சாரம் அற்றவர்களாயும், ஸ்வதந்திரம் அற்றவர்களாயும் ஆகின்றனர். எவ்வாறு ராஜாவின் ஆணைப்படி செயல்படுகின்ற பிரஜைகள் போல் என்பது தாத்பர்யம்.
अथ ये अन्ये इह लोके आत्मानं शास्त्राचार्योपदेशमनुविद्य स्वात्मसंवेद्यतामापाद्य व्रजन्ति यथोक्तांश्च सत्यान्कामान् , तेषां सर्वेषु लोकेषु कामचारो भवति — राज्ञ इव सार्वभौमस्य इह लोके ॥
அனுவாதம் - மேலும் அவர்களைக்காட்டிலும் வேறானவர்கள் இந்த லோகத்தில் சாஸ்திரம், ஆச்சாரியர் உபதேசத்தை அறிந்து தன் ஆத்மாவையும் அறிந்து அடைந்து தேஹத்தைவிட்டு நீங்கி முன்பு எவ்வாறு கூறப்பட்டதோ அந்த சத்யமான காமனைகளை எல்லா லோகங்களிலும், இந்த உலகில் எவ்வாறு சார்வபெளமனாய் உள்ள ராஜாவைப் போல் தான் எதை இச்சித்தானோ அந்த கதியை அடைகிறான்.
इति प्रथमखण्डभाष्यम् ॥
कथं सर्वेषु लोकेषु कामचारो भवतीति, उच्यते — य आत्मानं यथोक्तलक्षणं हृदि साक्षात्कृतवान् वक्ष्यमाणब्रह्मचर्यादिसाधनसम्पन्नः सन् तत्स्थांश्च सत्यान्कामान् ;
அனுவாதம் - அ.கை - எவ்வாறு எல்லா லோகங்களிலும் இச்சித்த கதியை அடைகிறான் என்பது கூறப்படுகிறது. இனிக் கூறப்போகும் பிரஹ்மசர்யம் முதலிய சாதனங்களை உடையவன் முன்பு கூறப்பட்ட லக்ஷணங்கள் உடைய ஆத்மாவை ஹிருதயத்தில் சாக்ஷாத்காரம் செய்து அதிலேயே நிலைத்து இருப்பவன் சத்யகாமனைகளை அடைகிறான் -
स यदि पितृलोककामो भवति सङ्कल्पादेवास्य पितरः समुत्तिष्ठन्ति तेन पितृलोकेन सम्पन्नो महीयते ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - பித்ரு லோகத்தில் காமனை உடையவனாகிறானோ அவனுடைய சங்கல்பத்தால் பித்ருகணங்கள் அங்கு தோன்றுவார்கள். அந்த பித்ரு லோகத்தை அடைந்து மஹிமையை அடைகின்றனர்.
स त्यक्तदेहः यदि पितृलोककामः पितरो जनयितारः त एव सुखहेतुत्वेन भोग्यत्वात् लोका उच्यन्ते, तेषु कामो यस्य तैः पितृभिः सम्बन्धेच्छा यस्य भवति, तस्य सङ्कल्पमात्रादेव पितरः समुत्तिष्ठन्ति आत्मसम्बन्धितामापद्यन्ते, विशुद्धसत्त्वतया सत्यसङ्कल्पत्वात् ईश्वरस्येव । तेन पितृलोकेन भोगेन सम्पन्नः सम्पत्तिः इष्टप्राप्तिः तया समृद्धः महीयते पूज्यते वर्धते वा महिमानमनुभवति ॥
அனுவாதம் - அந்த தேஹத்தை விட்டபின் பித்ரு லோகத்தில் காமனை உள்ளவனாகின்றான் - பித்ருக்களை உத்பத்தி செய்பவர்களே சுகத்திற்கு ஹேதுவான போகங்கள் உடைய லோகம் என்று கூறுகின்றனர். அதில் காமம் எவர்களுக்கோ அந்த பித்ரு சம்பந்தத்தில் எவருக்கு இச்சை அவருக்கு சத்ய சங்கல்ப மாத்திரத்திலேயே பித்ருக்கள் தோன்றுகின்றனர். அதாவது ஆத்ம சம்பந்தத்தை அடைகின்றனர். விசுத்த சத்துவத்தால் ஈஸ்வரனைபோல் சத்திய சங்கல்பமாவதால் அவன் அந்த போகத்தை உடையவனாகி சம்பத்தி அதாவது இஷ்டப் பிராப்த்தியினால் நிறைவு உடையவனாய் மஹானாய் பூஜைக்குறியவனாய், விருத்தியுடையவனாய் மஹிமையை அனுபவிக்கின்றான்.
अथ यदि मातृलोककामो भवति सङ्कल्पादेवास्य मातरः समुत्तिष्ठन्ति तेन मातृलोकेन सम्पन्नो महीयते ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - மேலும் அந்த மாத்ரு லோகத்தை காமனை செய்பவன் (விரும்புபவன்) அந்த சங்கல்பத்தால் மாத்ருக்கள் அவனுக்கு அங்கே தோன்றுவார்கள். அந்த மாத்ருலோகத்தை அடைந்து அந்த மஹிமையை அடைகின்றனர்.
समानमन्यत् । मातरो जनयित्र्यः अतीताः सुखहेतुभूताः सामर्थ्यात् । न हि दुःखहेतुभूतासु ग्रामसूकरादिजन्मनिमित्तासु मातृषु विशुद्धसत्त्वस्य योगिनः इच्छा तत्सम्बन्धो वा युक्तः ॥
அனுவாதம் - மற்றவை சமானமாகும் (மாத்ர:) (मातरः) அதாவது அவனுக்கு இதற்குமுன் அநேக ஜன்மங்கள் அளித்த சாமர்த்தியத்தால் சுகத்திற்கு ஹேதுவாகிறது. துக்க ஹேது ரூபங்களான கிராம பன்றி முதலிய ஜன்மங்களின் நிமித்தமாக உள்ள மாத்ருக்களில் விசுத்த சத்வமுள்ள யோகிகளுக்கு இச்சையோ அவர்களுடைய சம்பந்தமோ பொருந்தாது. (கிலுடயாது).
अथ यदि भ्रातृलोककामो भवति सङ्कल्पादेवास्य भ्रातरः समुत्तिष्ठन्ति तेन भ्रातृलोकेन सम्पन्नो महीयते ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - மேலும் அந்த ப்ராத்ரு (சகோதர) லோகத்தை இச்சிப்பானாகில் அந்த சங்கல்பத்தினால் அங்கே பிராத்ருகணங்கள் தோன்றுவார்கள். அந்த ப்ராத்ரு லோகத்தை அடைந்து மஹிமையை அடைவார்கள்.
अथ यदि स्वसृलोककामो भवति सङ्कल्पादेवास्य स्वसारः समुत्तिष्ठन्ति तेन स्वसृलोकेन सम्पन्नो महीयते ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - மேலும் சகோதரி லோகத்தை விரும்புபவர்கள் அந்த சங்கல்பத்தால் அங்கு சகோதரிகள் தோன்றுவார்கள். அந்த சகோதரி லோகத்தை அடைந்து அந்த மஹிமையைப் அடைவார்கள்.
अथ यदि सखिलोककामो भवति सङ्कल्पादेवास्य सखायः समुत्तिष्ठन्ति तेन सखिलोकेन सम्पन्नो महीयते ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - மேலும் அந்த சகீலோகத்தை விரும்பினால் அந்த சங்கல்பத்தால் நண்பர்கள் தோன்றுவர். அந்த சகீலோகத்தை அடைந்து மஹிமையை அடைவர்.
अथ यदि गन्धमाल्यलोककामो भवति सङ्कल्पादेवास्य गन्धमाल्ये समुत्तिष्ठतस्तेन गन्धमाल्यलोकेन सम्पन्नो महीयते ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - மேலும் கந்தமால்ய லோகத்தை விரும்பினால் அந்த சங்கல்பத்தால் வாசனையுடன் மாலைகள் தோன்றும் அந்த கந்தமால்ய லோகத்தை அடைந்து மஹிமையை அடைவர்
अथ यद्यन्नपानलोककामो भवति सङ्कल्पादेवास्यान्नपाने समुत्तिष्ठतस्तेनान्नपानलोकेन सम्पन्नो महीयते ॥ ७ ॥
மந்த்ரார்த்தம் - மேலும் அன்னம் பானம் சம்பந்தமான லோகத்தை விரும்பினால் அந்த சங்கல்பத்தால் அன்னம்பானம் அவன் முன்னால் தோன்றும். அந்த அன்ன பானத்தை அடைந்தவனாய் மஹிமையை அடைகிறான்.
अथ यदि गीतवादित्रलोककामो भवति सङ्कल्पादेवास्य गीतवादित्रे समुत्तिष्ठतस्तेन गीतवादित्रलोकेन सम्पन्नो महीयते ॥ ८ ॥
மந்த்ரார்த்தம் - மேலும் அந்த கீதம் வாத்ய சம்பந்தமான லோகத்தை விரும்புகிறவன் அந்த சங்கல்பத்தால் அந்த கீதவாத்யத்தை அங்கு அடைகிறான். அந்த கீதவாத்ய லோகத்தை அடைந்து அவன் அந்த மஹிமையை அடைகின்றான்.
अथ यदि स्त्रीलोककामो भवति सङ्कल्पादेवास्य स्त्रियः समुत्तिष्ठन्ति तेन स्त्रीलोकेन सम्पन्नो महीयते ॥ ९ ॥
மந்த்ரார்த்தம் - மேலும் அவன் ஸ்திரீ லோகத்தை விரும்பினால் அந்த சங்கல்பத்தால் ஸ்திரீகள் அங்கு தோன்றுவர். அந்த ஸ்திரீலோகத்தை அடைந்து மஹிமை அடைவர்.
यं यमन्तमभिकामो भवति यं कामं कामयते सोऽस्य सङ्कल्पादेव समुत्तिष्ठति तेन सम्पन्नो महीयते ॥ १० ॥
மந்த்ரார்த்தம் - எந்த எந்த பிரதேசத்தை விரும்புகிறானோ மேலும் எந்த போகத்தை இச்சிக்கின்றானோ அவை எல்லாம் அந்த சங்கல்பத்தால் அவனை அடையும், அதை அடைந்து மஹிமையை அடைகின்றான்.
यं यमन्तं प्रदेशमभिकामो भवति, यं च कामं कामयते यथोक्तव्यतिरेकेणापि, सः अस्यान्तः प्राप्तुमिष्टः कामश्च सङ्कल्पादेव समुत्तिष्ठत्यस्य । तेन इच्छाविघाततया अभिप्रेतार्थप्राप्त्या च सम्पन्नो महीयते इत्युक्तार्थम् ॥
அனுவாதம் - எந்த எந்த பிரதேசத்தின் காமனை உண்டாகிறதோ முன்பு கூறப்பட்ட போகங்களைக் காட்டிலும் வேறான எந்த போகத்தை இச்சிக்கின்றானோ அந்த பிரதேசத்தையும், போகங்களையும் சங்கல்ப மாத்திரத்தாலேயே (அடைகின்றான்) அங்கு தோன்றுகின்றன. அதனால் இச்சை நீங்கியும், இஷ்டப்பட்ட வஸ்துவையும் அடைந்தவனாய் மஹிமையை அடைகின்றான்.
इति द्वितीयखण्डभाष्यम् ॥
यथोक्तात्मध्यानसाधनानुष्ठानं प्रति साधकानामुत्साहजननार्थमनुक्रोशन्त्याह — कष्टमिदं खलु वर्तते, यत्स्वात्मस्थाः शक्यप्राप्या अपि
அனுவாதம் - அ.கை - மேலே கூறப்பட்ட ஆத்மத்யான சாதனம் அனுஷ்டிப்பதில் சாதகர்களுக்கு உற்சாகம் உண்டாக்குவதற்காக கருணையுடன் கோஷித்துக்கொண்டு சுருதி கூறுகிறது- தன் ஆத்ம ஸ்வரூபத்தில் நிலைத்தலும் அதை அடைவதும்- கஷ்டமானதாக அல்லவா இருக்கிறது.-
त इमे सत्याः कामा अनृतापिधानास्तेषां सत्यानां सतामनृतमपिधानं यो यो ह्यस्येतः प्रैति न तमिह दर्शनाय लभते ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - அந்த இந்த சத்தியகாமம் அநுருதத்தால் (பொய்யால்) மறைக்கப்பட்டுள்ளது. சத்யமாய் இருந்தாலும் அநுருதத்தால் (பொய்யால்) மறைக்கப்படுகிறது. ஏன்எனில் பிராணிகளுக்கு சம்பந்தப்பட்டவை எல்லாம் இங்கு மரணம் அடைந்து வெளியேறுகிறது. அதை மறுபடியும் பார்க்க முடியாது.
त इमे सत्याः कामाः अनृतापिधानाः, तेषामात्मस्थानां स्वाश्रयाणामेव सतामनृतं बाह्यविषयेषु स्त्र्यन्नभोजनाच्छादनादिषु तृष्णा तन्निमित्तं च स्वेच्छाप्रचारत्वं मिथ्याज्ञाननिमित्तत्वादनृतमित्युच्यते । तन्निमित्तं सत्यानां कामानामप्राप्तिरिति अपिधानमिवापिधानम् ।
அனுவாதம் - அந்த இந்த சத்யகாமம் பொய்யால் (அந்ருதத்தால்) மறைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய ஆஸ்ரயத்தால் இருக்கும் அவை ஆத்மாவில் இருக்கும் காமனைகளின் பொய்யான ஸ்திரீ அன்னம், போஜனம், வஸ்திரம் முதலிய விஷயங்களில் உள்ள திருஷ்ணை (ஆசை) இவைகளால் மறைக்கப்பட்ட காரணத்தால் உண்டாகும் தன் இஷ்டப்படி செயல்படுதல் மித்யா ஞானத்தால் உண்டானதால் அது “अनृतम्” (அந்ருதம்) (பொய்) எனப்படுகிறது. அதனால் சத்ய காமனைகளை அடையமுடியாது. ஆகையால் மறைப்பைப் போன்ற மறைப்பு என்று கூறப்படுகிறது. (உண்மையில் மறைப்பு இல்லை).
कथमनृतापिधाननिमित्तं तेषामलाभ इति, उच्यते — यो यो हि यस्मादस्य जन्तोः पुत्रो भ्राता वा इष्टः इतः अस्माल्लोकात् प्रैति प्रगच्छति म्रियते, तमिष्टं पुत्रं भ्रातरं वा स्वहृदयाकाशे विद्यमानमपि इह पुनर्दर्शनायेच्छन्नपि न लभते ॥
அனுவாதம் - எதனால் அவர்கள் மித்யா மறைப்பின் காரணமாக சத்ய காமத்தை அடைவதில்லை. அது கூறப்படுகிறது - ஏன்எனில் எந்த ஜீவன் தன்னுடைய புத்திரனோ, சகோதரனோ, அல்லது இஷ்டமானவைகளோ இந்த லோகத்திலிருந்து வெளியேறும்பொழுது அதாவது மரணமடைந்தால் அந்த இஷ்ட புத்ரனையோ, சகோதரனையோ தன் ஹ்ருதயாகசத்தில் இருந்தாலும் இங்கு மறுபடியும் காண விரும்பினாலும் முடியாது.
अथ ये चास्येह जीवा ये च प्रेता यच्चान्यदिच्छन्न लभते सर्वं तदत्र गत्वा विन्दतेऽत्र ह्यस्यैते सत्याः कामा अनृतापिधानास्तद्यथापि हिरण्यनिधिं निहितमक्षेत्रज्ञा उपर्युपरि सञ्चरन्तो न विन्देयुरेवमेवेमाः सर्वाः प्रजा अहरहर्गच्छन्त्य एतं ब्रह्मलोकं न विन्दन्त्यनृतेन हि प्रत्यूढाः ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - மேலும் எந்த இந்த லோகத்தில் ஜீவித்துக்கொண்டு இருப்பவர்கள் அல்லது இறந்தவர்கள் மேலும் வேறு பதார்த்தங்ளையோ பார்க்க விரும்பினால் அவை எல்லாம் இங்கு (இந்த ஹிருதயஆகாசத்தில் இருக்கும் பிரஹ்மத்திற்கு) சென்று அடைகின்றனர். ஏன்எனில் அங்கு இந்த சத்யகாமம் பொய்யால் மறைக்கப்படாமல் இருக்கின்றது. இந்த விஷயத்தைக் குறித்து திருஷ்டாந்தம் கூறப்படுகிறது- எவ்வாறு பிருதிவியின் அடியில் தங்கம் மறைந்துள்ளது.. அதை அறியாமல் அந்த அறியாத புருஷன் மீண்டும் மீண்டும் அதன் மேல் சஞ்சாரம் செய்தாலும் அதை அறிவதில்லை. அவ்வாறே எல்லா பிரஜைகளும் நித்யப்பிராப்த்தியான பிரஹ்ம லோகத்திற்கு சென்றாலும் அதை அறிவதில்லை. ஏன்எனில் அது மித்யையால் (பொய்யால்) மறைக்கப்பட்டுள்ளது.
अथ पुनः ये च अस्य विदुषः जन्तोर्जीवाः जीवन्तीह पुत्राः भ्रात्रादयो वा, ये च प्रेताः मृताः इष्टाः सम्बन्धिनः, यच्चान्यदिह लोके वस्त्रान्नपानादि रत्नानि वा वस्त्विच्छन् न लभते, तत्सर्वमत्र हृदयाकाशाख्ये ब्रह्मणि गत्वा यथोक्तेन विधिना विन्दते लभते । अत्र अस्मिन्हार्दाकाशे हि यस्मात् अस्य ते यथोक्ताः सत्याः कामाः वर्तन्ते अनृतापिधानाः ।
அனுவாதம் - அவ்வாறே மறுபடியும் இந்த வித்வான் ஜந்துவின் (பிராணியின்) ஜீவர்கள், புத்ரன், சகோதரன் முதலியோர் இங்கு ஜீவித்துக் கொண்டிருந்தாலும் அல்லது மரணம் அடைந்தாலும், தனக்கு இஷ்டமானதின் சம்பந்தமான இவ்வுலகில் உள்ள அன்னம் பானம் முதலியவைகளும், ரத்தினம் முதலியவைகளும் நாம் விரும்பினாலும் இங்கு கிடைப்பதில்லை. அவை எல்லாம் இந்த ஹ்ருதய ஆகாசம் எனப்படும் பிரஹ்மத்தை அடைந்து கூறப்பட்ட விதியினால் (சாதனத்தால்) அடைகின்றனர். ஏன்எனில் இங்கு அவனுடைய ஹிருதயாகாசத்தில் கூறப்பட்ட சத்யகாமனைகள் மித்யையினால் மறைக்கப்பட்டுள்ளது.
कथमिव तदन्याय्यमिति, उच्यते — तत् तत्र यथा हिरण्यनिधिं हिरण्यमेव पुनर्ग्रहणाय निधातृभिः निधीयत इति निधिः तं हिरण्यनिधिं निहितं भूमेरधस्तान्निक्षिप्तम् अक्षेत्रज्ञाः निधिशास्त्रैर्निधिक्षेत्रमजानन्तः ते निधेः उपर्युपरि सञ्चरन्तोऽपि निधिं न विन्देयुः शक्यवेदनमपि, एवमेव इमाः अविद्यावत्यः सर्वा इमाः प्रजाः यथोक्तं हृदयाकाशाख्यं ब्रह्मलोकं ब्रह्मैव लोकः ब्रह्मलोकः तम् अहरहः प्रत्यहं गच्छन्त्योऽपि सुषुप्तकाले न विन्दन्ति न लभन्ते — एषोऽहं ब्रह्मलोकभावमापन्नोऽस्म्यद्येति । अनृतेन हि यथोक्तेन हि यस्मात् प्रत्यूढाः हृताः, स्वरूपादविद्यादिदोषैर्बहिरपकृष्टा इत्यर्थः । अतः कष्टमिदं वर्तते जन्तूनां यत्स्वायत्तमपि ब्रह्म न लभ्यते इत्यभिप्रायः ॥
அனுவாதம் - இது எவ்வாறு சரியானது ஆகாது என்று ஆகும்? என்பதற்கு திருஷ்டாந்தம் மூலமாகக் கூறப்படுகிறது - எவ்வாறு அந்த ஹிரண்ய புதையலை அதாவது அந்த தங்கத்தைத் திரும்பி கிரஹிப்பதற்காக அதைப் புதைப்பவன் அதைப் புதைப்பதால் அது புதையல் ((निधि - நிதி) எனப்படுகிறது. அந்த ஹிரண்ய புதையல் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட இடத்தை அறியாதவன் நிதி சாஸ்த்திரத்தால் நிதியுள்ள இடத்தை அறியாமல் அவர்கள் நிதியின் (புதையலின்) மேலேயே சஞ்சரித்தாலும் அந்த நிதியை அறிய முடிந்தாலும் அதை அவர்கள் அறிவதில்லை. இவ்வாறு அவித்யையின் வசப்பட்ட இந்த எல்லா பிரஜைகளும் எவ்வாறு கூறப்பட்டதோ அந்த ஹிருதய ஆகாசம் எனப்படும் பிரஹ்மலோகத்தை தினம் தினம் சுசுப்தி காலத்தில் அடைந்தாலும் இன்று நான் பிரஹ்ம பாவம் அடைந்தவனாய் இருக்கின்றேன் என்று அறிவதில்லை. ஏன்எனில் முன்பு கூறப்பட்டவாறு மித்யையினால் கட்டுப்பட்டவர்களாய் இருப்பதால் அதாவது, அவித்யா முதலிய தோஷங்களால் ஸ்வரூபத்திலிருந்து வெளிமுகமாக இழுக்கப்பட்டிருக்கின்றனர் என்பது பொருள். ஆகையால் இது மிகவும் கஷ்டமானதாகும். தானாகவே இருந்தாலும் பிரஹ்மத்தை அடையவில்லை என்பது அபிப்பிராயம்.
स वा एष आत्मा हृदि तस्यैतदेव निरुक्तं हृद्ययमिति तस्माद्धृदयमहरहर्वा एवंवित्स्वर्गं लोकमेति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - அந்த இந்த ஆத்மா ஹிருதயத்தில் உள்ளது. “ह्य्दि अयम्” (ஹிருதி அயம் = ஹிருதயத்தில் இது) என்பது இதன் (வியுத்பத்தி) பொருளாகும். இதனால் இது ஹிருதயம். இவ்வாறு அறியும் புருஷன் தினந்தோறும் ஸ்வர்க்க லோகத்திற்குச் செல்கின்றான்.
स वै यः ‘आत्मापहतपाप्मा’ इति प्रकृतः, वै - शब्देन तं स्मारयति । एषः विवक्षित आत्मा हृदि हृदयपुण्डरीके आकाशशब्देनाभिहितः । तस्य एतस्य हृदयस्य एतदेव निरुक्तं निर्वचनम् , नान्यत् । हृदि अयमात्मा वर्तत इति यस्मात् , तस्माद्धृदयम् , हृदयनामनिर्वचनप्रसिद्ध्यापि स्वहृदये आत्मेत्यवगन्तव्यमित्यभिप्रायः । अहरहर्वै प्रत्यहम् एवंवित् हृदि अयमात्मेति जानन् स्वर्गं लोकं हार्दं ब्रह्म एति प्रतिपद्यते ।
அனுவாதம் - அந்த இந்த ஆத்மா “आत्मापहतपाप्मा” (ஆத்மாஅபஹதபாப்மா) என்று இவ்வாறான பிரகரணத்திற்கு “वै” (வை) என்ற சப்தத்தால் சுருதி ஞாபகப்படுத்துகிறது. இந்த விளக்கப்பட்ட ஆத்மா ஹிருதயத்தில் அதாவது ஹிருதய புண்டரீக ஆத்ம சப்தத்தால் கூறப்பட்டது. அந்த இந்த ஹிருதயத்தின் நிர்வசனம் (வியுக்பத்தி) இதுவே. வேறு அல்ல. எதனால் ஹிருதயத்தில் ஆத்மா இருக்கிறதோ அதனால் ஹ்ருதயம். ஹிருதயம் என்ற நாமத்தின் வசனம் பிரசித்தத்தாலும் ஸ்வஹ்ருதய (தன் ஹிருதயம்) ஆத்மா என்று அறிய வேண்டும் என்பது அபிப்பிராயம். தினமும் தினமும் அதாவது ஒவ்வொரு நாளும் “இந்த ஆத்மா ஹிருதயத்தில் உள்ளது” என்று அறியும் புருஷன் ஸ்வர்க்கலோகம் அதாவது ஹிருதயத்தில் இருக்கும் பிரஹ்மத்தை அடைகிறான்.
ननु अनेवंविदपि सुषुप्तकाले हार्दं ब्रह्म प्रतिपद्यते एव, ‘सता सोम्य तदा सम्पन्नः’ (छा. उ. ६ । ८ । १) इत्युक्तत्वात् ।
அனுவாதம் - சங்கை - இவ்வாறு அறிந்தவனும் சுஷுப்தி காலத்தில் பிரஹ்மத்தை அடைகின்றான். ஏன்எனில் அப்பொழுது அவன் சத்தை அடைந்தவன் ஆகின்றான் என்று கூறப்பட்டதால்.
बाढमेवम् , तथाप्यस्ति विशेषः — यथा जानन्नजानंश्च सर्वो जन्तुः सद्ब्रह्मैव, तथापि तत्त्वमसीति प्रतिबोधितः विद्वान् — सदेव नान्योऽस्मि — इति जानन् सदेव भवति ; एवमेव विद्वानविद्वांश्च सुषुप्ते यद्यपि सत्सम्पद्यते, तथाप्येवंविदेव स्वर्गं लोकमेतीत्युच्यते । देहपातेऽपि विद्याफलस्यावश्यम्भावित्वादित्येष विशेषः ॥
அனுவாதம் - ஸமாதானம் - சரிதான். அவ்வாறே ஆகிறது. ஆனாலும் சிறிது விசேஷம் இருக்கிறது. எவ்வாறு அறிந்தவனும், அறியாதவனும் ஆகிய எல்லா ஜீவர்களும் சத் பிரஹ்மமே. அவ்வாறு ஆனாலும் “तत्त्वमसि” (தத்துவமஸி= அது நீயாய் இருக்கிறாய்) என்று உபதேசிக்கப்பட்டு அறிந்த வித்வான் நான் சத்தாகவே இருக்கிறேன், வேறு ஒன்றாக அல்ல என்று அறிந்து சத்தாகவே ஆகின்றான். இவ்வாறு அறிந்தவன், அறியாதவன் (வித்வான், அவித்வான்) ஆகிய இருவரும் சுஷுப்தியில் சத்தை அடைந்தாலும் இவ்வாறு அறிந்தவனே ஸ்வர்கலோகத்தை அடைவான் என்று கூறப்படுகிறது. தேஹம் வீழ்ந்த பின்னும் வித்யாபலம் அவசியம் உண்டாகும் என்பதே இந்த விசே ஷம்.
अथ य एष सम्प्रसादोऽस्माच्छरीरात्समुत्थाय परं ज्योतिरुपसम्पद्य स्वेन रूपेणाभिनिष्पद्यत एष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्मेति तस्य ह वा एतस्य ब्रह्मणो नाम सत्यमिति ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - எவன் ஒருவன் இவ்வாறு பிரசன்னம் (சாந்தமான பிரசாதத்தை) அடைந்தவன் இந்த சரீரத்திலிருந்து வெளியேறி பரம்ஜோதியை அடைந்து தன்னுடைய ஸ்பரூபத்துடன் கலந்துவிடுகிறான். இந்த ஆத்மாவே அம்ருதம் அவ்வாறே அபயம் மேலும் அதுவே பிரஹ்மம் என்று இவ்வாறு ஆச்சாரியர் கூறினார். அந்த இந்த பிரஹ்மத்தின் நாமம் (பெயர்) “सत्यम्” (சத்யம்) ஆகும்.
सुषुप्तकाले स्वेन आत्मना सता सम्पन्नः सन् सम्यक्प्रसीदतीति जाग्रत्स्वप्नयोर्विषयेन्द्रियसंयोगजातं कालुष्यं जहातीति सम्प्रसादशब्दो यद्यपि सर्वजन्तूनां साधारणः, तथापि एवंवित् स्वर्गं लोकमेतीति प्रकृतत्वात् एष सम्प्रसाद इति संनिहितवद्यत्नविशेषात्
அனுவாதம் - சுஷுப்தி காலத்தில் புருஷன் தன் ஆத்ம சத்தை அடைந்து நன்றாக பிரசன்னமானவனாக (சாந்தமானவனாக) ஆகின்றான் என்பதால் ஜாக்ரத் ஸ்வப்னங்களின் விஷய இந்திரிய சம்யோகத்தால் உண்டான கலங்கத்தை நீக்குவதால் “सम्प्रसाद” (சம்பிரசாத = சாந்த) சப்தம் எல்லா ஜீவர்களுக்கும் சாதாரணமாக (சமானமாக) இருந்தாலும் இவ்வாறு அறிந்த வித்வான் ஸ்வர்க்க லோகத்திற்கு செல்கிறான் என்பதால் “एष्” (ஏஷ- இந்த) என்று சம்பிரசாதத்தை நம் அருகில் இருப்பது போல் இங்கு பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
सः अथेदं शरीरं हित्वा अस्माच्छरीरात्समुत्थाय शरीरात्मभावनां परित्यज्येत्यर्थः । न तु आसनादिव समुत्थायेति इह युक्तम् , स्वेन रूपेणेति विशेषणात् — न हि अन्यत उत्थाय स्वरूपं सम्पत्तव्यम् । स्वरूपमेव हि तन्न भवति प्रतिपत्तव्यं चेत्स्यात् । परं परमात्मलक्षणं विज्ञप्तिस्वभावं ज्योतिरुपसम्पद्य स्वास्थ्यमुपगम्येत्येतत् । स्वेन आत्मीयेन रूपेण अभिनिष्पद्यते, प्रागेतस्याः स्वरूपसम्पत्तेरविद्यया देहमेव अपरं रूपम् आत्मत्वेनोपगत इति तदपेक्षया इदमुच्यते — स्वेन रूपेणेति ।
அனுவாதம் - இவ்வாறு விவேகம் ஏற்பட்டபின் அந்த வித்வான் இந்த சரீரத்தைவிட்டு சரீரத்தில் இருந்து வெளியேறி (மேல் கிளம்பி) சரீர ஆத்ம பாவத்தை (புத்தியை) துறக்கிறான். ஆசனம் முதலியவைகளில் இருந்து எழுவது மேல் எழுதல் என்பது இங்கு பொருந்தாது. ஏன் எனில் “स्वेनरूपेण” (ஸ்வேண ரூபேண = தன் ரூபத்தால்) என்ற விசேஷணம் இருப்பதால் ஆகும். வேறு ஒன்றிலிருந்து எழுதல் என்பது ஸ்வரூபத்தை அடைய வேண்டியதில்லை. அது தன் ஸ்வரூபமாக இல்லையெனில் அதை அடைய வேண்டும் என்று ஆகும். பரமாத்ம லக்ஷணம் விக்ஞாப்த்தி ஸ்வரூபம் ஜ்யோதி ரூபத்தை அடைந்து தன்னையே அடைகிறது. தன்னுடைய ரூபத்தை அடைகிறது. அந்த தன்னுடைய ஸ்வரூப பிராப்த்திக்கு முன் அவித்யையினால் வேறு ரூபமான தேஹத்தை ஆத்ம பாவமாக ஆகிறது. அதை அபேக்ஷித்து “स्वेन रूपेण” (ஸ்வேன ரூபேண தன் ரூபத்தால்) என்று கூறப்பட்டது.
अशरीरता हि आत्मनः स्वरूपम् । यत्स्वं परं ज्योतिःस्वरूपमापद्यते सम्प्रसादः, एष आत्मेति ह उवाच — स ब्रूयादिति यः श्रुत्या नियुक्तः अन्तेवासिभ्यः । किं च एतदमृतम् अविनाशि भूमा ‘यो वै भूमा तदमृतम्’ (छा. उ. ७ । २४ । १) इत्युक्तम् । अत एवाभयम् , भूम्नो द्वितीयाभावात् । अत एतद्ब्रह्मेति ।
அனுவாதம் - சரீரம் அற்றதன்மையே ஆத்மாவின் ஸ்வரூபம். எது தன்னுடைய பரம்ஜ்யோதி ஸ்வரூப சம்பிரசாதத்தை (பிரசன்னத்தை) அடைவதே ஆத்மா என்று (ஆச்சாரியர்) கூறினார். சுருதியினால் கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய அந்த ஆச்சாரியர் தன்னுடைய சிஷ்யர்களுக்குக் கூறவேண்டும். மேலும் அந்த பூமா அம்ருதம், அவிநாசி (நாசமற்றது) “यो वै भूमा तदमृतम्” (யோ வை பூமா தத்அம்ருதம்) என்று சுருதியில் கூறப்பட்டுள்ளது. ஆகையால் பூமாவிற்கு வேறாக இரண்டாவது வஸ்து இல்லாததால் “अभयम्” (அபயம் = பயமற்றது) அதுவே பிரஹ்மம்.
तस्य ह वा एतस्य ब्रह्मणो नाम अभिधानम् । किं तत् ? सत्यमिति । सत्यं हि अवितथं ब्रह्म । ‘तत्सत्यं स आत्मा’ (छा. उ. ६ । ८ । ७) इति हि उक्तम् । अथ किमर्थमिदं नाम पुनरुच्यते ? तदुपासनविधिस्तुत्यर्थम् ॥
அனுவாதம் - அந்த இந்த பிரஹ்மத்தின் நாமம் - அபிதானம். அது என்ன? சத்யம் ஆகும். சத்யம் என்பது “अवितथम” (அவிததம் = அசத்தைக்காட்டிலும் வேறானது). அந்த சத்யம் அது ஆத்மா என்று கூறப்பட்டது. ஆனால் எதற்காக நாமம் என்று மறுபடியும் கூறப்படுகிறது? அந்த உபாசனா விதியை துதிப்பதற்காக.
तानि ह वा एतानि त्रीण्यक्षराणि सतीयमिति तद्यत्सत्तदमृतमथ यत्ति तन्मर्त्यमथ यद्यं तेनोभे यच्छति यदनेनोभे यच्छति तस्माद्यमहरहर्वा एवंवित्स्वर्गं लोकमेति ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - அவைகள் “सकारः” சகாரம், “तकारः” தகாரம், மேலும் “यम्” யம் என்று மூன்று அக்ஷரங்கள் (எழுத்துக்கள்). “சகாரம்” என்பது அம்ருதம். “தகாரம்” என்பது அழிவு உடையது (मर्त्यम्) மேலும் “யம்” அந்த இரண்டையும் கட்டுப்படுத்துகிறது. (நியமனம் செய்கிறது). ஏன் எனில் அந்த இரண்டையும் நியமனம் செய்வதால் “யம்” (यम्) என்று இவ்வாறு அறிபவன் தினமும் ஸ்வர்க்க லோகத்திற்கு செல்கின்றான்.
तानि ह वा एतानि ब्रह्मणो नामाक्षराणि त्रीण्येतानि सतीयमिति, सकारस्तकारो यमिति च । ईकारस्तकारे उच्चारणार्थोऽनुबन्धः, ह्रस्वेनैवाक्षरेण पुनः प्रतिनिर्देशात् । तेषां तत् तत्र यत् सत् सकारः तदमृतं सद्ब्रह्म — अमृतवाचकत्वादमृत एव सकारस्तकारान्तो निर्दिष्ठः । अथ यत्ति तकारः तन्मर्त्यम् । अथ यत् यम् अक्षरम् , तेनाक्षरेणामृतमर्त्याख्ये पूर्वे उभे अक्षरे यच्छति नियमयति वशीकरोत्यात्मनेत्यर्थः ।
அனுவாதம் - அந்த இவை பிரஹ்மத்தின் நாமத்தின் அக்ஷரங்கள். இந்த மூன்று நாமாக்ஷரங்கள். स्ा (ச), ती (தீ) “यम्” (யம்) என்பதாகும். இந்த தகாரத்தில் அதாவது தீ என்று ஈகாரத்தால் (நெடிலில்) கூறியது உச்சரிப்பதற்காக கூறப்பட்டது. (குறிலில்) ஹ்ரஸ்வத்தில் இந்த அக்ஷரத்தை குறிப்பிடுகிறார். அவைகளில் எந்த “சத்” எனப்படும் சகாரமோ அது அம்ருதமாகும். சத் பிரஹ்மம். அம்ருதத்திற்கு வாசகமாய் இருப்பதால் அம்ருதரூப சகாரத்தையே தகாராந்தமாக நிர்தேசம் செய்யப்பட்டது. அவ்வாறே “ति” (தி) என்ற தகாரம் “मर्त्यम्” அழிவுடையதாகும். மேலும் எந்த “यम्” (யம்) என்ற அக்ஷரமோ அந்த அக்ஷரத்தால் அம்ருதம் மர்த்தியம் எனப்படும் முன்பு இருக்கும் இரண்டு அக்ஷரங்களையும் கட்டுப்படுத்தி செயல்படுத்துகிறது. அதாவது தன் ஸ்வபாவத்தாலேயே அதை வசப்படுத்துகிறது என்பது அபிப்பிராயம்.
यत् यस्मात् अनेन यमित्येतेन उभे यच्छति, तस्मात् यम् । संयते इव हि एतेन यमा लक्ष्येते । ब्रह्मनामाक्षरस्यापि इदममृतत्वादिधर्मवत्त्वं महाभाग्यम् , किमुत नामवतः — इत्युपास्यत्वाय स्तूयते ब्रह्म नामनिर्वचनेन । एवं नामवतो वेत्ता एवंवित् । अहरहर्वा एवंवित्स्वर्गं लोकमेतीत्युक्तार्थम् ॥
அனுவாதம் - எது எதனால் இந்த “यम्” (யம்) என்று இந்த இரண்டையும் வசப்படுத்துகிறதோ அதனால் “यम्” (யம) எனப்படுகிறது எதனால் அந்த ச, தீ இரண்டும் கட்டுப்பட்டதுபோல் இருக்கிறதோ அதனால் “यमा” (யமா) எனப்படுகிறது. பிரஹ்ம நாமத்தின் அக்ஷரத்திற்கே இவ்வளவு அம்ருத முதலிய தர்மங்கள் அடையப்படும் மஹா பாக்கியம் ஏற்படும்பொழுது அந்த பிரஹ்ம நாமத்திற்கு கூறவும் வேண்டுமா என்று பிரஹ்ம நாமத்தைக் கூறி அதன் உபாசனையை ஸ்துதிக்கிறது. இந்த நாமத்தை இவ்வாறு அறிந்தவனே “एवंवित्” (ஏவம்வித்) என்று கூறப்படுகிறது. இவ்வாறு அறிந்தவன் தினம் தினம் ஸ்வர்க்க லோகத்திற்கு செல்கின்றான் என்று முன்பே கூறப்பட்டது.
इति तृतीयखण्डभाष्यम् ॥
अथ य आत्मा स सेतुर्विधृतिरेषां लोकानामसम्भेदाय नैतꣳ सेतुमहोरात्रे तरतो न जरा न मृत्युर्न शोको न सुकृतं न दुष्कृतꣳ सर्वे पाप्मानोऽतो निवर्तन्तेऽपहतपाप्मा ह्येष ब्रह्मलोकः ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - மேலும் எந்த ஆத்மாவோ அது இந்த லோகங்களை பாதுகாப்பதற்காக இவைகளை விசேஷ ரூபமாக பாதுகாப்பான சேதுவாக (அணையாக) இருக்கிறது. இந்த அணையை பகலும் இரவும் தாண்டுவது இல்லை. இதனால் மூப்பு இல்லை, மரணம் இல்லை, சோகம் இல்லை மேலும் தர்மமும் அதர்மமும் (புண்யமும், பாபமும்) அடைவதில்லை. இதனால் எல்லா பாபங்களும் நிவிர்த்தியாகிறது. ஏன் எனில் பிரஹ்ம லோகம் பாபமற்றதாய் இருக்கிறது.
अथ य आत्मेति । उक्तलक्षणो यः सम्प्रसादः, तस्य स्वरूपं वक्ष्यमाणैरुक्तैरनुक्तैश्च गुणैः पुनः स्तूयते, ब्रह्मचर्यसाधनसम्बन्धार्थम् । य एषः यथोक्तलक्षणः आत्मा, स सेतुरिव सेतुः । विधृतिः विधरणः । अनेन हि सर्वं जगद्वर्णाश्रमादिक्रियाकारकफलादिभेदनियमैः कर्तुरनुरूपं विदधता विधृतम् । अध्रियमाणं हि ईश्वरेणेदं विश्वं विनश्येद्यतः, तस्मात्स सेतुः विधृतिः ।
அனுவாதம் - “अथ य आत्मा” (அதய ஆத்மா = மேலும் அந்த ஆத்மா) என்று மேலே கூறப்பட்ட லக்ஷணங்கள் உடைய அந்த சம்பிரசாதத்தின் ஸ்வரூபம் இனிக்கூறப்போகின்ற, கூறப்படாத குணங்களால் பிரஹ்மச்சரிய சாதனத்தால் சம்பந்தப்படுத்துவதற்காக மறுபடியும் துதிக்கப்படுகிறது. அந்த இந்த மேலே கூறப்பட்ட லக்ஷணம் உடைய ஆத்மாவானது சேதுவைப் (அணையைப்) போன்ற சேதுவாகும். विधृतिः- (வித்ருதி:) விசேஷமாக தாரணம் செய்வது (பாதுகாப்பது) ஆகும். (கரையைப்போன்று பாதுகாப்பது ஆகும்). அதனாலேயே எல்லா ஜகத்தும் வர்ணாச்ரமம் முதலிய கிரியாகாரக பலம் முதலிய பேதங்கள் நியமமாக கர்த்தாவை அனுசரித்து அமைகிறது. ஈஸ்வரனால் இந்த விச்வமானது (ஜகத்தானது) காப்பாற்றப்படவில்லையெனில் அது அழிந்துவிடும். ஆகையால் விச்வத்தைப் பாதுகாப்பது சேது (அணை) எனப்படுகிறது.
किमर्थं स सेतुरिति, आह — एषां भूरादीनां लोकानां कर्तृकर्मफलाश्रयाणाम् असम्भेदाय अविदारणाय अविनाशायेत्येतत् । किंविशिष्टश्चासौ सेतुरिति, आह — नैतम् , सेतुमात्मानमहोरात्रे सर्वस्य जनिमतः परिच्छेदके सती नैतं तरतः । यथा अन्ये संसारिणः कालेन अहोरात्रादिलक्षणेन परिच्छेद्या, न तथा अयं कालपरिच्छेद्य इत्यभिप्रायः, ‘यस्मादर्वाक्संवत्सरोऽहोभिः परिवर्तते’ (बृ. उ. ४ । ४ । १६) इति श्रुत्यन्तरात् ।
அனுவாதம் - எதற்காக அது சேது என்று கூறப்படுகிறது - கர்தாகர்மபலஆஸ்ரயரூபமான இந்த பூ முதலிய லோகங்களை விநாசம் அடையாமல் ரக்ஷிக்கின்றது என்பதால், அந்த சேது எந்த விசேஷணங்கள் உடையது? அதற்கு சுருதி கூறுகிறது - “नैतं” (நைதம்) - இந்த ஆத்மரூப சேதுவை இரவும் பகலும் உத்பத்தி செய்யும் தன்மை உடைய எல்லா பதார்த்தங்களும் பரிச்சேதமானாலும் இதைத் தாண்ட முடியாது. எவ்வாறு மற்ற சம்சாரிகள் இரவு பகல் முதலிய லக்ஷணங்களுடைய காலத்தினால் எவ்வாறு பரிச்சேதமாகின்றதோ அவ்வாறு இது காலத்தால் பரிச்சேதம் ஆவதில்லை என்பது அபிப்பிராயம். “यस्मादर्वाक्संवत्सरोऽहोभिः परिवर्तते” (யஸ்மாதர்வாக்சம்வத் சரோஅஹோபி: பரிவர்த்ததே) என்று வேறு சுருதியிலும் கூறப்பட்டுள்ளது.
अत एव एनं न जरा तरति न प्राप्नोति । तथा न मृत्युः न शोकः न सुकृतं न दुष्कृतम् , सुकृतदुष्कृते धर्माधर्मौ । प्राप्तिरत्र तरणशब्देन अभिप्रेता, नातिक्रमणम् । कारणं हि आत्मा । न शक्यं हि कारणातिक्रमणं कर्तुं कार्येण । अहोरात्रादि च सर्वं सतः कार्यम् । अन्येन हि अन्यस्य प्राप्तिः अतिक्रमणं वा क्रियेत, न तु तेनैव तस्य । न हि घटेन मृत्प्राप्यते अतिक्रम्यते वा ।
அனுவாதம் - இதனால் மூப்பை அடைவது இல்லை. மரணத்தை அடைவதில்லை. சோகத்தை அடைவது இல்லை. தர்மத்தையோ அதர்மத்தையோ (சுகிருதம், துஷ்கிருதமோ) அடைவதில்லை. அங்கு “प्राप्तिः” (அடைதல்) என்பது “तरण” (தரண) சப்தத்தால் “अतिक्रमणम्” (கடத்தலைக்) கூறவில்லை. ஆத்மாவே காரணம். காரியம் காரணத்தை ஒரு நாளும் அதிக்கிரமணம் செய்ய (தாண்ட) முடியாது. பகல் இரவு முதலிய எல்லாம் சத்தின் காரியம். வேறு ஒன்றால் மற்றதை அடைவது அல்லது அதிக்கிரமணம் செய்ய முடியும். தன்னைத்தானே அதிக்கிரமணம் செய்ய முடியாது. கடமானது மண்ணை அடைவதோ அதிக்கிரமணமோ செய்ய முடியாது.
यद्यपि पूर्वम् ‘य आत्मापहतपाप्मा’ (छा. उ. ८ । ७ । १) इत्यादिना पाप्मादिप्रतिषेध उक्त एव, तथापीहायं विशेषः — न तरतीति प्राप्तिविषयत्वं प्रतिषिध्यते । तत्र अविशेषेण जराद्यभावमात्रमुक्तम् । अहोरात्राद्या उक्ता अनुक्ताश्च अन्ये सर्वे पाप्मानः उच्यन्ते ; अतः अस्मादात्मनः सेतोः निवर्तन्ते अप्राप्यैवेत्यर्थः । अपहतपाप्मा हि एष ब्रह्मैव लोकः ब्रह्मलोकः उक्तः ॥
அனுவாதம் - இதற்கு முன் “य आत्मापहतपाप्मा” (ஆத்மாபஹதபாப்மா) என்பது முதலிய வாக்கியங்களால் பாபம் முதலியவைகள் தள்ளப்பட்டது. ஆனாலும் இங்கு இந்த “न तरति” (ந தரதி) என்ற விசேஷணத்தால் அடையக்கூடிய விஷயம் என்பதை நிராகரிக்கிறது. அங்கு விசேஷமற்று சாமான்யரூபமாக மூப்பு முதலியவைகளின் இன்மை மாத்திரம் கூறப்பட்டது. அஹோராத்திரி முதலியவைகளால் கூறப்பட்டதும், கூறப்படாததுமான மற்றவை எல்லாம் பாபம் என்று கூறப்படுகிறது. ஆகையால் இந்த ஆத்மரூப சேதுவினால் இது அடையப்படாமல் நிவிர்த்தி ஆகிறது என்பது பொருள். அபஹதபாப்மா (பாபமற்றது) இந்த பிரஹ்மமே லோகம். இதுவே பிரஹ்மலோகம் என்று கூறப்படுகிறது.
यस्माच्च पाप्मकार्यमान्ध्यादि शरीरवतः स्यात् न त्वशरीरस्य,
அனுவாதம் - அ.கை - எதனால் பாபகாரியத்தால் குருட்டுத்தன்மை முதலியவை சரீரம் உடையவனுக்கு இருக்கலாம். ஆனால் சரீரமற்றதற்கு (ஆத்மாவிற்கு) இல்லை-
तस्माद्वा एतꣳ सेतुं तीर्त्वान्धः सन्ननन्धो भवति विद्धः सन्नविद्धो भवत्युपतापी सन्ननुपतापी भवति तस्माद्वा एतꣳ सेतुं तीर्त्वापि नक्तमहरेवाभिनिष्पद्यते सकृद्विभातो ह्येवैष ब्रह्मलोकः ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - ஆகையால் இந்த சேதுவை அடைந்து புருஷன் குருடன் ஆனாலும் குருடன் இல்லை. காயம்பட்டாலும் காயம் அடைவதில்லை. தாபத்தை (துன்பத்தை) அடைந்தாலும் துன்பப்படுவதில்லை. ஆகையால் இந்த சேதுவை அடைந்து இருள் மயமான இரவும் பகல் ஆகிறது. ஏன்எனில் இந்த பிரஹ்மலோகம் எப்பொழுதும் பிரகாச ரூபமாய் இருக்கிறது.
तस्माद्वा एतमात्मानं सेतुं तीर्त्वा प्राप्य अनन्धो भवति देहवत्त्वे पूर्वमन्धोऽपि सन् । तथा विद्धः सन् देहवत्त्वे स देहवियोगे सेतुं प्राप्य अविद्धो भवति । तथोपतापी रोगाद्युपतापवान्सन् अनुपतापी भवति । किञ्च यस्मादहोरात्रे न स्तः सेतौ, तस्माद्वा एतं सेतुं तीर्त्वा प्राप्य नक्तमपि तमोरूपं रात्रिरपि सर्वमहरेवाभिनिष्पद्यते ; विज्ञप्त्यात्मज्योतिःस्वरूपमहरिवाहः सदैकरूपं विदुषः सम्पद्यत इत्यर्थः । सकृद्विभातः सदा विभातः सदैकरूपः स्वेन रूपेण एष ब्रह्मलोकः ॥
அனுவாதம் - இவ்வாறு சேதுரூப ஆத்மாவை அடைந்து முன்பு தேஹத்துவம் இருந்தபொழுது குருடனாய் இருந்தாலும் இப்பொழுது குருடனாகமாட்டான். அவ்வாறே தேஹம் இருக்கும்பொழுது காயம் ஏற்பட்டிருந்தாலும் தேஹம் வீழ்ந்தபின் சேதுவை அடைந்து காயம் உள்ளவனாக ஆகமாட்டான். அவ்வாறே “उपतापी” (உபதாபீ = தாபம் உடையவன்) - நோய் முதலியவைகளால் துன்பப்படுபவனாக (தாபம் உடையவனாக) இருந்தாலும் சேதுவை அடைந்தபின் தாபத்தை அடையமாட்டான். மேலும் சேதுவில் பகல் இரவு இல்லாததால் அந்த சேதுவை அடைந்து மிகவும் இருளுடைய ராத்திரி (இரவு) ஆனாலும் எல்லாம் பகல் போன்று ஆகின்றன. வித்வான் அந்த பகல் போன்று விக்ஞான ஆத்மஜ்யோதிஸ்வரூப (தினம்) பகல் போன்று எப்பொழுதும் ஏகரூபமாய் ஆகின்றான் என்பது பொருள். ஏன்எனில் எப்பொழுது பிரகாசித்துக்கொண்டு எப்பொழுதும் ஒரே ரூபமாய் தன் ரூபமாகவே இந்த பிரஹ்மரூபம் உள்ளது.
तद्य एवैतं ब्रह्मलोकं ब्रह्मचर्येणानुविन्दन्ति तेषामेवैष ब्रह्मलोकस्तेषाꣳ सर्वेषु लोकेषु कामचारो भवति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - இவ்வாறு இருப்பதன் காரணமாக பிரஹ்மலோகத்தை பிரஹ்மச்சர்யத்தின் மூலமாக அதை அறிகின்றனரோ அவர்கள் பிரஹ்மலோகத்தை அடைவர். அவ்வாறே அவர்களுக்கு எல்லா லோகங்களிலும் தான் இச்சித்தவாறு கதியை அடைவர்.
तत् तत्रैवं सति एवं यथोक्तं ब्रह्मलोकं ब्रह्मचर्येण स्त्रीविषयतृष्णात्यागेन शास्त्राचार्योपदेशमनुविन्दन्ति स्वात्मसंवेद्यतामापादयन्ति ये, तेषामेव ब्रह्मचर्यसाधनवतां ब्रह्मविदाम् एष ब्रह्मलोकः, नान्येषां स्त्रीविषयसम्पर्कजाततृष्णानां ब्रह्मविदामपीत्यर्थः । तेषां सर्वेषु लोकेषु कामचारो भवतीत्युक्तार्थम् । तस्मात्परमम् एतत्साधनं ब्रह्मचर्यं ब्रह्मविदामित्यभिप्रायः ॥
அனுவாதம் - இவ்வாறு கூறப்பட்ட காரணத்தால் அந்த பிரஹ்மலோகம் பிரஹ்மச்சர்யத்தால் அதாவது ஸ்திரீ விஷயத்தில் உள்ள ஆசையைத்தியாகம் செய்து சாஸ்திரம், ஆச்சாரிய உபதேசத்திற்குப்பின் எவர் அறிகின்றனரோ அதாவது ஸ்வாத்ம சம்வேத்தியத்தை (ஸ்வாத்மாவை அறிவது) அடைகின்றனரோ அந்த பிரஹ்மச்சர்ய சாதனமுடைய பிரஹ்மத்தை அறிந்தவர்கள் இந்த லோகத்தை அடைகின்றனர். மற்ற ஸ்திரீ விஷயங்களின் சேர்க்கையால் உண்டாகும் திருஷ்ணை (ஆசை) உடையவர்கள் பிரஹ்மத்தை அறிந்தவர்களாய் இருந்தாலும் அவர்களால் அடையமுடியாது என்பது பொருள். அவர்களுக்கு எல்லா உலகங்களிலும் காமசாரம் (இஷ்டப்பட்ட கதி) ஏற்படும் என்பது பொருள். ஆகையால் பிரஹ்மச்சர்யம் பிரஹ்மத்தை உபாசிப்பவர்களுக்கு சிறந்த சாதனம் என்பது பொருள்.
इति चतुर्थखण्डभाष्यम् ॥
य आत्मा सेतुत्वादिगुणैः स्तुतः, तत्प्राप्तये ज्ञानसहकारिसाधनान्तरं ब्रह्मचर्याख्यं विधातव्यमित्याह । यज्ञादिभिश्च तत्स्तौति कर्तव्यार्थम् —
அனுவாதம் - எந்த ஆத்மா சேதுத்துவம் முதலிய குணங்களால் துதிக்கப்பட்டதோ அதை அடைவதற்கான ஞானத்திற்கு சககாரியமான வேறு சாதனமான பிரஹ்மச்சரியம் விதானம் செய்யவேண்டும் என்று ஸ்ருதி கூறுகிறது. அவ்வாறே அதன் கர்த்தவ்யத்திற்காக யக்ஞ முதலிய ரூபமாக அதை ஸ்துதி செய்கிறது.
अथ यद्यज्ञ इत्याचक्षते ब्रह्मचर्यमेव तद्ब्रह्मचर्येण ह्येव यो ज्ञाता तं विन्दतेऽथ यदिष्टमित्याचक्षते ब्रह्मचर्यमेव तद्ब्रह्मचर्येण ह्येवेष्ट्वात्मानमनुविन्दते ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - இப்பொழுது (உலகில்) எதை யக்ஞம் என்கின்றனரோ அது பிரஹ்மச்சர்யமே ஆகும். ஏன் எனில் எது அறியப்படுகிறதோ அது பிரஹ்மச்சரிய மூலமாக அதை (பிரஹ்மலோகத்தை) அடையப்படுகிறது, மேலும் எதை “इष्ट” (இஷ்ட) என்று கூறப்படுகிறதோ அதுவும் பிரஹ்மசர்யமே. ஏன் எனில் பிரஹ்மசரியத்தின் மூலமாக பூஜை செய்து புருஷன் ஆத்மாவை அடைகிறான்.
अथ यद्यज्ञ इत्याचक्षते लोके परमपुरुषार्थसाधनं कथयन्ति शिष्टाः, तद्ब्रह्मचर्यमेव । यज्ञस्यापि यत्फलं तत् ब्रह्मचर्यवाल्लम्भते ; अतः यज्ञोऽपि ब्रह्मचर्यमेवेति प्रतिपत्तव्यम् । कथं ब्रह्मचर्यं यज्ञ इति, आह — ब्रह्मचर्येणैव हि यस्मात् यो ज्ञाता स तं ब्रह्मलोकं यज्ञस्यापि पारम्पर्येण फलभूतं विन्दते लभते, ततो यज्ञोऽपि ब्रह्मचर्यमेवेति । यो ज्ञाता — इत्यक्षरानुवृत्तेः यज्ञो ब्रह्मचर्यमेव ।
அனுவாதம் - இப்பொழுது எது யக்ஞம் என்று கூறப்படுகிறதோ - உலகில் ஸ்ரேஷ்ட்ட புருஷர்கள் பரம புருஷார்த்த சாதனம் என்று கூறுகின்றனரோ அது பிரஹ்மச்சரியமே. யக்ஞத்தின் எந்த பலமோ அதுவே பிரஹ்மச்சரியம் உடையவனும் அடைகிறான். ஆகையால் யக்ஞமும் பிரஹ்மச்சர்யம் என்று அறியவேண்டும். எவ்வாறு யக்ஞமும் பிரஹ்மச்சரியம் என்று அறியவேண்டும்? என்பது கூறப்படுகிறது-எதனால் பிரஹ்மச்சரியத்தால் எதை அறிகின்றனரோ அந்த பிரஹ்மலோகம் அந்த யக்ஞத்தினாலும் பரம்பரையாக ஏற்படும் பலரூபத்தை அடைகின்றனர். ஆகையால் யக்ஞமும் பிரஹ்மச்சர்யமே ஆகும். “यो ज्ञाता” (யோஞாதா) என்பதில் உள்ள அக்ஷரங்கள் அனுவிர்த்திப்பதால் யக்ஞமும் பிரஹ்மச்சர்யம் எனப்படுகிறது.
अथ यदिष्टमित्याचक्षते, ब्रह्मचर्यमेव तत् । कथम् ? ब्रह्मचर्येणैव साधनेन तम् ईश्वरम् इष्ट्वा पूजयित्वा अथवा एषणाम् आत्मविषयां कृत्वा तमात्मानमनुविन्दते । एषणादिष्टमपि ब्रह्मचर्यमेव ॥
அனுவாதம் - அவ்வாறே எது “इष्टम्” (இஷ்டம்) என்று கூறப்படுகிறதோ அது பிரஹ்மச்சரியமே. எவ்வாறு? பிரஹ்மச்சரியம் என்ற சாதனத்தினாலேயே அந்த ஈச்வரனை ஹோமம் செய்து அதாவது பூஜை செய்து அதன்பின் ஆத்ம விஷயத்தில் ஏஷணை (தீவிர ஆசை) செய்து அந்த ஆத்மாவை சாக்ஷாத்காரம் செய்கின்றனர். ஏஷணை முதலிய இஷ்டமும் (ஹோமமும்) பிரஹ்மச்சரியமேயாகும்.
अथ यत्सत्त्रायणमित्याचक्षते ब्रह्मचर्यमेव तद्ब्रह्मचर्येण ह्येव सत आत्मनस्त्राणं विन्दतेऽथ यन्मौनमित्याचक्षते ब्रह्मचर्यमेव तद्ब्रह्मचर्येण ह्येवात्मानमनुविद्य मनुते ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அவ்வாறே எதனால் “सत्त्रायण” (சத்திலை காப்பாற்றுதல்) (சத்திராண) என்று கூறப்பட்டதோ அதுவும் பிரஹ்மச்சரியமே. ஏன் எனில் பிரஹ்மச்சரிய மூலமாக சத் அதாவது பரமாத்மாவால் (சாதகன்) தான் காப்பாற்றப்படுகின்றான். இதைத்தவிர மெளனமும் அவ்வாறே பிரஹ்மச்சரியம் எனப்படுகிறது. ஏன் எனில் பிரஹ்மச்சரியத்தால் ஆத்மாவை அறிந்து மனனம் (தியானம்) செய்கின்றான்.
अथ यत्सत्त्रायणमित्याचक्षते, ब्रह्मचर्यमेव तत् । तथा सतः परस्मादात्मनः आत्मनस्त्राणं रक्षणं ब्रह्मचर्यसाधनेन विन्दते । अतः सत्त्रायणशब्दमपि ब्रह्मचर्यमेव तत् । अथ यन्मौनमित्याचक्षते, ब्रह्मचर्यमेव तत् ; ब्रह्मचर्येणैव साधनेन युक्तः सन् आत्मानं शास्त्राचार्याभ्यामनुविद्य पश्चात् मनुते ध्यायति । अतो मौनशब्दमपि ब्रह्मचर्यमेव ॥
அனுவாதம் - அவ்வாறே எதனால் “सत्त्रायण” (சத்திராயணம் - பரமாத்மாவால் தான் ரக்ஷிக்கப்படுவது) என்று கூறப்படுகிறதோ அதுவும் பிரஹ்மச்சரியமே ஆகும். அவ்வாறே சத்தினால் அதாவது பரமாத்மாவினால் ஆத்மா (தான்) காப்பாற்றப்படுதல் என்பது பிரஹ்மச்சரிய சாதனத்தினாலேயே அடைகின்றான். ஆகையால் “சத்திராயண” சப்தமும் பிரஹ்மச்சரியமே ஆகிறது. மேலும் எது மெளணம் என்று கூறப்படுகிறதோ அதுவும் பிரஹ்மச்சரியமே. பிரஹ்மச்சரிய சாதனத்துடன் கூடியவனாய் இருந்துகொண்டு சாதகன் சாஸ்திரம் ஆச்சாரியரிடம் இருந்து ஆத்மாவை அறிந்து மனனம் அதாவது த்யானம் செய்கின்றான். ஆகையால் “மெளனம்” என்ற பெயர் உடையதாகவும். பிரஹ்மச்சரியம் ஆகிறது.
अथ यदनाशकायनमित्याचक्षते ब्रह्मचर्यमेव तदेष ह्यात्मा न नश्यति यं ब्रह्मचर्येणानुविन्दतेऽथ यदरण्यायनमित्याचक्षते ब्रह्मचर्यमेव तदरश्च ह वै ण्यश्चार्णवौ ब्रह्मलोके तृतीयस्यामितो दिवि तदैरं मदीयꣳ सरस्तदश्वत्थः सोमसवनस्तदपराजिता पूर्ब्रह्मणः प्रभुविमितꣳ हिरण्मयम् ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - அவ்வாறே உண்ணாவிரதம் என்று கூறப்படுவதுவும் பிரஹ்மச்சரியமே. ஏன் எனில் எதனால் (சாதகன்) இந்த பிரஹ்மச்சரியத்தால் அடையப்பட்ட அந்த ஆத்மா அழிவதில்லை. மேலும் எந்த அரண்யாயனம் அதாவது வனவாசம் உள்ளதோ அதுவும் பிரஹ்மச்சரியமே. ஏன் எனில் பிரஹ்ம லோகத்தில் “अर” (அர) “ण्य” (ண்ய) என்று இரண்டு சமுத்திரங்கள் உள்ளன. இங்கு இருந்து (இந்த பூமியில் இருந்து) மூன்றாவதான த்யுலோகத்தில் ஐரம்மதீயம் என்னும் ஏரியும் உள்ளது. சோமசவனம் என்ற பெயருடைய அரசமரம் உள்ளது. அங்கு பிரஹ்மாவின் அபராஜித புரம் உள்ளது. மேலும் ஈஸ்வரனுடைய விச்வரூபத்தால் நிர்மாணம் செய்யப்பட்ட தங்கமயமான மண்டபம் உள்ளது.
अथ यदनाशकायनमित्याचक्षते, ब्रह्मचर्यमेव तत् । यमात्मानं ब्रह्मचर्येण अनुविन्दते, स एष हि आत्मा ब्रह्मचर्यसाधनवतो न नश्यति ; तस्मादनाशकायनमपि ब्रह्मचर्यमेव ।
அனுவாதம் - அவ்வாறே எதனால் “अनाशकायन” (அநாசகாயன) என்று கூறப்படுகிறதோ அதுவும் பிரஹ்மச்சரியமே ஆகும். எந்த ஆத்மாவை பிரஹ்மச்சரியத்தால் அடைகிறோமோ அந்த பிரஹ்மச்சரிய ரூப சாதனம் உடைய புருஷனின் ஆத்மா அழிவது இல்லை. ஆகையால் அந்த அநாசகாயனமும் பிரஹ்மச்சரியமே.
अथ यदरण्यायनमित्याचक्षते, ब्रह्मचर्यमेव तत् । अरण्यशब्द्ययोरर्णवयोर्ब्रह्मचर्यवतोऽयनादरण्यायनं ब्रह्मचर्यम् । यो ज्ञानाद्यज्ञः एषणादिष्टं सतस्त्राणात्सत्त्रायणं मननान्मौनम् अनशनादनाशकायनम् अरण्ययोर्गमनादरण्यायनम् इत्यादिभिर्महद्भिः पुरुषार्थसाधनैः स्तुतत्वात् ब्रह्मचर्यं परमं ज्ञानस्य सहकारिकारणं साधनम् — इत्यतो ब्रह्मविदा यत्नतो रक्षणीयमित्यर्थः ।
அனுவாதம் - மேலும் எதை “अरण्यायनम्” (அரண்யாயனம்) என்பது கூறப்படுகிறதோ அது பிரஹ்மச்சரியமேயாகும். பிரஹ்மச்சரியம் உடையவன் “अर” (அர) “ण्य” (ண்ய) என்ற பெயருடைய இவ்விரு சமுத்திரங்களுக்கு செல்வர். ஆகையால் பிரஹ்மச்சர்யம் அரண்யாயனம் ஆகும். எந்த பிரஹ்மச்சர்யம் ஞானரூபமாவதால் யக்ஞம். ஏஷணையின் காரணத்தால் இஷ்டம் (इष्टम्). சத்தினால் ரக்ஷிக்கப்படுவதால் சத்திராண (सत्त्रायणम्) மாகும். மனனம் செய்யப்படுவதால் மனனமாகும். உண்ணாவிரதத்தால் நஷ்டமாகாமையால் “अनाशकायन” (அணாசகாயன) ஆகும். மேலும் “அரண்ய” ஆகிய சமுத்திரத்தை நோக்கி செல்வதால் (அடைவதால்) “अरण्यायन” எனப்படுகிறது என்று இவ்வாறு புருஷார்த்தத்-தின் சிறந்த சாதனங்களினால் துதிக்கப்படுவதால் (போற்றப்படுவதால்) பிரஹ்மச்சரியம் ஞானத்தின் உத்தமமான சஹகாரிகாரண சாதனமாகும். ஆகையால் பிரஹ்ம வேத்தாக்கள் முயற்சியுடன் ரக்ஷிக்க வேண்டும் என்பது பொருள்.
तत् तत्र हि ब्रह्मलोके अरश्च ह वै प्रसिद्धो ण्यश्च अर्णवौ समुद्रौ समुद्रोपमे वा सरसी, तृतीयस्यां भुवमन्तरिक्षं च अपेक्ष्य तृतीया द्यौः तस्यां तृतीयस्याम् इतः अस्माल्लोकादारभ्य गण्यमानायां दिवि । तत् तत्रैव च ऐरम् इरा अन्नं तन्मयः ऐरः मण्डः तेन पूर्णम् ऐरं मदीयं तदुपयोगिनां मदकरं हर्षोत्पादकं सरः । तत्रैव च अश्वत्थो वृक्षः सोमसवनो नामतः सोमोऽमृतं तन्निस्रवः अमृतस्रव इति वा । तत्रैव च ब्रह्मलोके ब्रह्मचर्यसाधनरहितैर्ब्रह्मचर्यसाधनवद्भ्यः अन्यैः न जीयत इति अपराजिता नाम पूः पुरी ब्रह्मणो हिरण्यगर्भस्य । ब्रह्मणा च प्रभुणा विशेषेण मितं निर्मितं तच्च हिरण्मयं सौवर्णं प्रभुविमितं मण्डपमिति वाक्यशेषः ॥
அனுவாதம் - அந்த பிரஹ்ம லோகத்தில் மூன்றாவதில் அதாவது இந்த லோகத்தை ஆரம்பித்து பார்க்கும் பொழுது பூலோகம், அந்தரிக்ஷத்தை அபேக்ஷித்து மூன்றாவதான தியுலோகத்தில் பிரசித்தமான “அர” “अर” “ண்ய” “ण्य” என்று எந்த இரண்டு சமுத்திரங்களோ அல்லது சமுத்திரத்திற்கு சமானமான இரண்டு ஏரிகள் உள்ளன. அவ்வாறே அங்கே “ऐर” (ஐர)- “इरा” (இரா) என்று அன்னத்தை கூறுகின்றனர். அந்தமயமான “ஐர” அதாவது அந்த அன்னத்தால் உண்டாகும் மதம் அதாவது சந்தோஷத்தை அளிக்கும் ஏரியாகும். அங்கு சோமசவன என்ற பெயருடைய அச்வத்த (அரச) மரம் உள்ளது. அல்லது சோமம் என்று அம்ருதம் கூறப்படுகிறது. அதை வழியச் செய்வதால் அம்ருதத்தைப் பொழியும் (விருக்ஷம்) மரம் எனப்படுகிறது. அந்த பிரஹ்ம லோகத்தில் பிரஹ்மச்சரிய ரூப சாதனம் இல்லாமல் அதாவது பிரஹ்மச்சரிய சாதனை அற்ற மற்றவர்களால் அதை ஜெயிக்க (அடைய) முடியாத அந்த பிரஹ்மா எனப்படும். ஹிரண்யகர்பனின் அபராஜிதா என்னும் பெயருடைய புரம் ஆகும். பிரஹ்ம ரூப பிரபுவினால் விசேஷமாக நிர்மாணம் செய்யப்பட்ட ஸ்வர்ணமயமான மண்டபம் என்பது வாக்கியத்தால் அறிந்துகொள்ள வேண்டும்.
तद्य एवैतावरं च ण्यं चार्णवौ ब्रह्मलोके ब्रह्मचर्येणानुविन्दन्ति तेषामेवैष ब्रह्मलोकस्तेषाꣳ सर्वेषु लोकेषु कामचारो भवति ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - அந்த பிரஹ்மலோகத்தில் எவர்கள் பிரஹ்மச்சரியத்தால் இந்த “अर” “ण्य” (அர, ண்ய) ஆகிய இரண்டு சமுத்திரங்களை அடைகிறான். அவர்கள் பிரஹ்மலோகப் பிராப்தியை அடைகின்றனர். அவர்களுக்கு எல்லா லோகங்களிலும் இச்சைப்படியான கதி ஏற்படுகிறது.
तत् तत्र ब्रह्मलोके एतावर्णवौ यावरण्याख्यावुक्तौ ब्रह्मचर्येण साधनेन अनुविन्दन्ति ये, तेषामेव एषः यो व्याख्यातः ब्रह्मलोकः । तेषां च ब्रह्मचर्यसाधनवतां ब्रह्मविदां सर्वेषु लोकेषु कामचारो भवति, नान्येषामब्रह्मचर्यपराणां बाह्यविषयासक्तबुद्धीनां कदाचिदपीत्यर्थः ॥
அனுவாதம் - அந்த பிரஹ்மலோகத்தில் எந்த “அர”, “ண்ய” “अर” “ण्य” என்ற பெயருடைய இரண்டு சமுத்திரம் உள்ளது என்பது கூறப்பட்டது. இவைகளை எந்த பிரஹ்மச்சரியரூப சாதனத்தால் அடையப்பட்டதோ அது பிரஹ்மலோக பிராப்தியாகும் என்பதும் முன்பே கூறப்பட்டது. அவ்வாறே இந்த பிரஹ்மச்சரிய சாதனம் உடைய பிரஹ்மவேத்தாக்களுக்கு எல்லா லோகங்களிலும் எவ்வாறு விரும்புகிறோமோ அந்த கதி கிடைக்கிறது. பிரஹ்மச்சரியத்தில் ஈடுபடாதவனக்கு வேறு வெளிவிஷயங்களில் ஆசக்தி உள்ள (பற்று உள்ள) வர்களுக்கு ஸ்வசிச்சாகதி (காமசாரம் - விரும்பிய கதி) ஏற்படாது.
नन्वत्र ‘त्वमिन्द्रस्त्वं यमस्त्वं वरुणः’ इत्यादिभिर्यथा कश्चित्स्तूयते महार्हः, एवमिष्टादिभिः शब्दैः न स्त्र्यादिविषयतृष्णानिवृत्तिमात्रं स्तुत्यर्हम् ; किं तर्हि, ज्ञानस्य मोक्षसाधनत्वात् तदेवेष्टादिभिः स्तूयत इति केचित । न, स्त्र्यादिबाह्यविषयतृष्णापहृतचित्तानां प्रत्यगात्मविवेकविज्ञानानुपपत्तेः, ‘पराञ्चि खानि व्यतृणत्स्वयम्भूस्तस्मात्पराङ्पश्यति नान्तरात्मन्’ (का. २ । १ । १) इत्यादिश्रुतिस्मृतिशतेभ्यः । ज्ञानसहकारिकारणं स्त्र्यादिविषयतृष्णानिवृत्तिसाधनं विधातव्यमेवेति युक्तैव तत्स्तुतिः ।
அனுவாதம் - ஆனால் வேறு சிலர் இங்கு எவ்வாறு நீ இந்திரன், நீ யமன், நீ வருணன் என்பது முதலியவைகளால் பூஜைக்கு உரியவர்கள் துதிக்கப்படுகின்றனரோ அவ்வாறு இஷ்டம் முதலிய வாக்கியங்களால் ஸ்திரீ முதலிய விஷயங்களில் உள்ள திருஷ்ணைகளின் நிவிர்த்தி மாத்திரத்தால் மட்டும் ஸ்துதிக்கு அருகதை உள்ளதாக ஆகாது. ஆனால் என்ன? ஞானம் மோக்ஷ சாதனமாவதால் அதுவே இஷ்டம் முதலியவைகளால் துதிக்கப்படுகிறது என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் அவ்வாறு அல்ல. ஏன் எனில் ஸ்திரீ முதலிய பாஹ்ய விஷயங்களில் உள்ள திருஷ்ணைகளால் (ஆசைகளால்) ஈர்க்கப்பட்ட சித்தமுடையவர்களுக்கு பிரத்யக் ஆத்ம விவேக விக்ஞானம் சம்பவிக்காது. “पराि खानि व्यतृणत्स्वयम्भूस्तस्मात्पराङ् पश्यति नान्तरात्मन्” (பராஞ்சி கானி வயத்ருணத்ஸ்வயம்பூ தஸ்மாத் பராங்பஷ்யதி) முதலிய ஸ்ருதி ஸ்ம்ருதிகளால் சித்திக்கிறது. ஞானத்திற்கு சஹகாரி காரணம் ஸ்திரீ முதலிய விஷயங்களில் உள்ள திருஷ்ணை (ஆசை)யின் நிவிர்த்தி சாதனத்தை விதானம் செய்வதற்காக ஸ்துதிக்கப்பட்டது பொருத்தமானதே. (உசிதமானதே).
ननु च यज्ञादिभिः स्तुतं ब्रह्मचर्यमिति यज्ञादीनां पुरुषार्थसाधनत्वं गम्यते ।
அனுவாதம் - ஆனால் யக்ஞம் முதலியவைகளால் ஸ்துதிக்கப்பட்டது என்பதால் யக்ஞம் முதலியவைகளும் புருஷார்த்த சாதனம் என்று தோன்றுகிறது.
सत्यं गम्यते, न त्विह ब्रह्मलोकं प्रति यज्ञादीनां साधनत्वमभिप्रेत्य यज्ञादिभिर्ब्रह्मचर्यं स्तूयते ; किं तर्हि, तेषां प्रसिद्धं पुरुषार्थसाधनत्वमपेक्ष्य । यथेन्द्रादिभिः राजा, न तु यत्रेन्द्रादीनां व्यापारः तत्रैव राज्ञ इति — तद्वत् ॥
அனுவாதம் - நீ சொல்லுவது சரியே. அவ்வாறு இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் இங்கு பிரஹ்ம லோகத்திற்கான யக்ஞம் முதலிய சாதனத்தால் பிரஹ்மச்சரியம் துதிக்கப்படவில்லை. ஆனால் அதனால் என்ன? அவைகளுக்கு பிரசித்தமான புருஷார்த்த சாதனத்தை அபேஷித்து ஸ்துதி செய்யப்படுகிறது. எவ்வாறு இந்திரனாக ராஜாவை துதிப்பது போல். ஆனால் இங்கு இந்திரனின் வியாபாரம் (செயல்கள்) போல் ராஜாவின் செயல்கள் இல்லை என்பது புரிந்துகொள்ள வேண்டும்.
य इमेऽर्णवादयो ब्राह्मलौकिकाः सङ्कल्पजाश्च पित्रादयो भोगाः, ते किं प्रार्थिवा आप्याश्च यथेह लोके दृश्यन्ते तद्वदर्णववृक्षपूःस्वर्णमण्डपानि, आहोम्वित् मानसप्रत्ययमात्राणीति ।
அனுவாதம் - குரு - அந்த இந்த பிரஹ்மலோக சம்பந்தமான சமுத்ரம் முதலியவைகள் மேலும் சங்கல்பத்தால் உண்டான பித்ருலோகம் முதலிய போகங்கள் எவ்வாறு இந்த உலகில் சமுத்திரம், மரம், புரம் மேலும் ஸ்வர்ண மயமான மண்டபம் காணப்படுகிறதோ அதைப்போன்ற பிருதிவீ, ஜலத்தின் விகார ரூபமா? அல்லது மானசீக மாத்திரமா?
किञ्चातः ? यदि पार्थिवा आप्याश्च स्थूलाः स्युः,
அனுவாதம் - சிஷ்யன் - மேலும் ஆகையால் பிருதிவீ, ஜலம் போன்று ஸ்தூலங்கள் ஆகுமே எனில்.
हृद्याकाशे समाधानानुपपत्तिः । पुराणे च मनोमयानि ब्रह्मलोके शरीरादीनीति वाक्यं विरुध्येत ; ‘अशोकमहिमम्’ (बृ. उ. ५ । १० । १) इत्याद्याश्च श्रुतयः ।
அனுவாதம் - குரு - அவை ஹிருதயாகாசத்தில் இருப்பது சம்பவிக்காது. அவ்வாறு ஆனால் புராணத்தில் பிரஹ்ம லோகத்தில் சரீரம் முதலியவைகள் மனமயமே என்று கூறியதற்கு விருத்தமாகும்.“अशोकमहिमम्” (அசோகமஹிமம்) (சோகமற்றது, குளிர்ச்சியை ஸ்பரிக்காது) என்று கூறிய ஸ்ருதிகளுக்கும் விரோதமாகிவிடும்.
ननु समुद्राः सरितः सरांसि वाप्यः कूपा यज्ञा वेदा मन्त्रादयश्च मूर्तिमन्तः ब्रह्माणमुपतिष्ठन्ते इति मानसत्वे विरुध्येत पुराणस्मृतिः ।
அனுவாதம் - சிஷ்யன் - ஆனால் மானசீகமாக இருந்தாலும் சமுத்திரங்கள், நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள், யக்ஞங்கள், வேதங்கள், மந்திரங்கள் உருவமுடையதாய் (ரூபமுடையதாய்) பிரஹ்மத்தின் சமீபத்தில் இருக்கின்றன என்று கூறுவது புராணம் ஸ்மிருதிகளுக்கு விரோதமாகும்,
न, मूर्तिमत्त्वे प्रसिद्धरूपाणामेव तत्र गमनानुपपत्तेः । तस्मात्प्रसिद्धमूर्तिव्यतिरेकेण सागरादीनां मूर्त्यन्तरं सागरादिभिरुपात्तं ब्रह्मलोकगन्तृ कल्पनीयम् । तुल्यायां च कल्पनायां यथाप्रसिद्धा एव मानस्यः आकारवत्यः पुंस्त्र्याद्या मूर्तयो युक्ताः कल्पयितुम् , मानसदेहानुरूप्यसम्बन्धोपपत्तेः । दृष्टा हि मानस्य एव आकारवत्यः पुंस्त्र्याद्या मूर्तयः स्वप्ने ।
அனுவாதம் - குரு - அவ்வாறு அல்ல. ஏன்எனில் உருவமுடையதாய் இருந்தாலும் அந்த சமுத்திரம் முதலியவைகள் பிரசித்தமான ரூபத்துடன் அங்கு செல்வது என்பது சம்பவிக்காது. ஆகையால் பிரசித்தமான ரூபத்தைக் காட்டிலும் வேறு ரூபமாக சாகரம் முதலியவைகளை கிரஹித்து வேறு ரூபத்துடன் பிரஹ்மலோகம் செல்பவனை கல்பனை செய்யவேண்டும். கல்பனைக்கு சமானமாக எவ்வாறு பிரசித்தமான ஆகாரமான - புருஷன், ஸ்திரீ முதலிய மானசீக ரூபங்களை உடையதாய் கல்பனை செய்யவேண்டும். ஏன் எனில் மானசீகமான தேஹத்தை அனுசரித்து அதன் சம்பந்தம் ஏற்படுகிறது. ஸ்வப்னத்தில் புருஷன் இவ்வாறு புமான் ஸ்திரீ முதலிய ரூபங்களை மானசீக ஆகாரமாக காண்கின்றான்.
ननु ता अनृता एव ; ‘त इमे सत्याः कामाः’ (छा. उ. ८ । ३ । १) इति श्रुतिः तथा सति विरुध्येत ।
அனுவாதம் - சிஷ்யன் - ஆனால் அவைகள் மித்யா என்றால் “त इमे सत्याः कामाः” (த இமே சத்யா: காமா:) என்ற ஸ்ருதிக்கு விரோதமாகும் ஆனால் -
न, मानसप्रत्ययस्य सत्त्वोपपत्तेः । मानसा हि प्रत्ययाः स्त्रीपुरुषाद्याकाराः स्वप्ने दृश्यन्ते ।
அனுவாதம் - குரு - அவ்வாறு அல்ல. ஏன் எனில் மானசீக அனுபவம் சத்தியமாவது இல்லை. மானசீக அனுபவங்கள் ஸ்திரீபுருஷன் முதலிய ஆகாரங்களாக ஸ்வப்னத்தில் காணப்படுகின்றன.
ननु जाग्रद्वासनारूपाः स्वप्नदृश्याः, न तु तत्र स्त्र्यादयः स्वप्ने विद्यन्ते ।
அனுவாதம் - சிஷ்யன் - ஆனால் ஸ்வப்னத்தில் காணப்படும் திருஷ்யங்கள் ஜாக்ரத்தின் வாசனா ரூபங்களாகும். அங்கு ஸ்வப்பனத்தில் ஸ்திரீ முதலியவைகள் இல்லை.
अत्यल्पमिदमुच्यते । जाग्रद्विषया अपि मानसप्रत्ययाभिनिर्वृत्ता एव, सदीक्षाभिनिर्वृत्ततेजोबन्नमयत्वाज्जाग्रद्विषयाणाम् । सङ्कल्पमूला हि लोका इति च उक्तम् ‘समक्लृप्तां द्यावापृथिवी’ (छा. उ. ७ । ४ । २) इत्यत्र । सर्वश्रुतिषु च प्रत्यगात्मन उत्पत्तिः प्रलयश्च तत्रैव स्थितिश्च ‘यथा वा अरा नाभौ’ (छा. उ. ७ । १५ । १) इत्यादिना उच्यते । तस्मान्मानसानां बाह्यानां च विषयाणाम् इतरेतरकार्यकारणत्वमिष्यत एव बीजाङ्कुरवत् । यद्यपि बाह्या एव मानसाः मानसा एव च बाह्याः, नानृतत्वं तेषां कदाचिदपि स्वात्मनि भवति ।
அனுவாதம் - குரு - இது மிகவும் அல்பம் அதாவது சிறியது என்று சொல்லப்படுகிறது. ஜாக்ரத் விஷயங்களும் மானசீக அனுபவங்களே ஆகும். ஏன்எனில் ஜாக்ரத்தில் உள்ள விஷயங்கள் சத்தின் ஈக்ஷணத்தால் உண்டான தேஜஸ், அப்பு (ஜலம்) அன்னமயமானவைகளாகும். “समक्लृपतां द्यावापृथिवी” (சமகல்பத்ருபதாம் த்யாவா-பிருதிவீ) என்பது முதலியவைகளால் இந்த லோகங்கள் சங்கல்பத்தை மூலமாக உடையவைகள் என்று கூறப்பட்டது. எல்லா ஸ்ருதிகளிலும் உத்பத்தி, பிரளயம் அவ்வாறே ஸ்திதி ஆகியவை பிரத்யக் ஆத்மாவிடம் இருந்து என்று “यथा वा अरा नाभौ” (யதா வா அரா நாபெள) என்பது முதலியவைகளால் கூறப்பட்டது. ஆகையால் பீஜாங்குரம் போன்று மானச பாஹ்ய விஷயங்கள் ஒன்றுக்கொன்று காரிய காரணங்களாகின்றன. பாஹ்ய விஷயங்களே மானசம், மானசமே பாஹ்யங்களாக இருந்தாலும். அவைகளின் பாஹ்ய மித்யாத்தன்மை (அனுருதம்) ஸ்வாத்மாவில் ஒருநாளும் உண்டாகாது.
ननु स्वप्ने दृष्टाः प्रतिबुद्धस्यानृता भवन्ति विषयाः ।
அனுவாதம் - சிஷ்யன் - ஆனால் ஸ்வப்னத்தில் பார்த்த விஷயங்கள் விழிப்பு ஏற்பட்டவுடன் பொய்யாக ஆகின்றன.
सत्यमेव । जाग्राद्बोधापेक्षं तु तदनृतत्वं न स्वतः । तथा स्वप्नबोधापेक्षं च जाग्रद्दृष्टविषयानृतत्वं न स्वतः । विशेषाकारमात्रं तु सर्वेषां मिथ्याप्रत्ययनिमित्तमिति वाचारम्भणं विकारो नामधेयमनृतम् , त्रीणि रूपाणीत्येव सत्यम् । तान्यप्याकारविशेषतोऽनृतं स्वतः सन्मात्ररूपतया सत्यम् । प्राक्सदात्मप्रतिबोधात्स्वविषयेऽपि सर्वं सत्यमेव स्वप्नदृश्या इवेति न कश्चिद्विरोधः । तस्मान्मानसा एव ब्राह्मलौकिका अरण्यादयः सङ्कल्पजाश्च पित्रादयः कामाः ।
அனுவாதம் - குரு - நீ கூறுவது உண்மையே. ஏன்எனில் ஜாக்ரத் ஞானத்தை அபேக்ஷித்து அது பொய்யானதே. தானாக அல்ல. அவ்வாறே ஸ்வப்ன ஞானத்தை அபேக்ஷித்து ஜாக்ரத் திருஷ்டி விஷயமும் பொய்யானதே தானாக அல்ல. விசேஷ ஆகார மாத்திரமே எல்லா மித்யா ஞானம் என்பது “वाचारम्भणं विकारो नामधेय अमनृतं” (வாச்சாரம்பணம் விகாரோ நாமதேயம் அந்ருதம்) பொய் என்றும் “त्रीणि रूपाणि एव सत्यम्” (த்ரீணி ரூபாணி யேவ சத்யம்) இந்த மூன்று ரூபங்களே சத்யம் ஆகும். அவை மூன்றும் விசேஷ ரூபத்தால் பொய்யே. ஆனால் ஸ்வயமாக சத்மாத்திர ரூபத்தால் சத்யம், ஆத்மஞானம் ஏற்படுவதற்கு முன் தான் (விஷயத்திலும்) மறைக்கப்பட்டிருத்தலும் ஸ்வப்ன த்ருஷ்யங்கள் போன்று எல்லாம் சத்யமே என்பதில் எந்த விரோதமும் இல்லை. ஆகையால் பாஹ்ய லோக சம்பந்தமுடைய சமுத்திரம் முதலியவைகளும் சங்கல்பத்தால் உண்டான பித்ருக்கள் முதலிய காமங்கள் மானசீகமானவைகளே.
बाह्यविषयभोगवदशुद्धिरहितत्वाच्छुद्धसत्त्वसङ्कल्पजन्या इति निरतिशयसुखाः सत्याश्च ईश्वराणां भवन्तीत्यर्थः । सत्सत्यात्मप्रतिबोधेऽपि रज्ज्वामिव कल्पिताः सर्पादयः सदात्मस्वरूपतामेव प्रतिपद्यन्त इति सदात्मना सत्या एव भवन्ति ॥
அனுவாதம் - பாஹ்ய விஷயங்களில் போகங்களைப் போல சுத்தி அற்றதன்மை இல்லாததால் அது சுத்தாந்தக் கரண சங்கல்பத்தால் உண்டாகும். ஆகையால் ஈஸ்வரனுடைய சங்கல்பம் நிரதிசய சுகமயமாயும், சத்யமாகவும் ஆகிறது என்பது பொருள். சத் ஆனது சத்ய ஆத்மா ஞானம் உண்டானாலும் ரஜ்ஜுவில் கல்பிக்கப்பட்ட சர்ப்பம் முதலியவைகளைப் போல் சதாத்ம ரூபத்தை அடைகின்றன என்பதால் சத்ரூபத்தால் சத்யமாகவே ஆகின்றன.
इति पञ्चमखण्डभाष्यम् ॥
यस्तु हृदयपुण्डरीकगतं यथोक्तगुणविशिष्टं ब्रह्म ब्रह्मचर्यादिसाधनसम्पन्नः त्यक्तबाह्यविषयानृततृष्णः सन् उपास्ते, तस्येयं मूर्धन्यया नाड्या गतिर्वक्तव्येति नाडीखण्ड आरभ्यते —
அனுவாதம் - எவன் இந்த பிரஹ்மச்சரியம் முதலிய சாதனங்கள் சம்பன்னனாய் (உடையவனாய்) பொய்யான பாஹ்ய விஷயங்களில் காமனை(ஆசை)களை த்யாகம் செய்து ஹிருதய புண்டரீகத்தில் முன்பு கூறிய குணங்களுடன் கூடிய பிரஹ்மத்தை உபாசனை செய்கின்றானோ அவனுக்கு இந்த சிரஸில் உள்ள நாடி வழியாக கதியை கூறவேண்டும் என்பதற்காக நாடி கண்டம் ஆரம்பிக்கப்படுகிறது.
अथ या एता हृदयस्य नाड्यस्ताः पिङ्गलस्याणिम्नस्तिष्ठन्ति शुक्लस्य नीलस्य पीतस्य लोहितस्येत्यसौ वा आदित्यः पिङ्गल एष शुक्ल एष नील एष पीत एष लोहितः ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - மேலும் எந்த இந்த ஹிருதயத்தின் நாடிகள் உள்ளதோ அவை மங்கலவர்ணம் அதாவது சிகப்பு கலந்த மஞ்சள் நிறம் உள்ள சூக்ஷ்மமான ரசமாகும். அவை வெண்மை, நீலம், மஞ்சள் சிகப்பு ஆகிய ரசங்கள் ஆகும். ஏன் எனில் அந்த ஆதித்யன் சிகப்பு கலந்த மஞ்சள் நிறமுடையது. அவ்வாறே அது வெண்மை, நீலம், மஞ்சள் மேலும் சிகப்பு நிறம் உடையது.
अथ या एताः वक्ष्यमाणाः हृदयस्य पुण्डरीकाकारस्य ब्रह्मोपासनस्थानस्य सम्बन्धिन्यः नाड्यः हृदयमांसपिण्डात्सर्वतो विनिःसृताः आदित्यमण्डलादिव रश्मयः, ताश्चैताः पिङ्गलस्य वर्णविशेषविशिष्टस्य अणिम्नः सूक्ष्मरसस्य रसेन पूर्णाः तदाकारा एव तिष्टन्ति वर्तन्त इत्यर्थः ।
அனுவாதம் - இப்பொழுது மேலும் இனி கூறப்படும் பிரஹ்ம உபாசனைக்கு ஆஸ்ரயமான ஹிருதய புண்டரீகத்தின் சம்பந்தப்பட்ட நாடிகள் ஹிருதயமாம்ச பிண்டத்தால் எங்கும் பரவி ஆதித்ய மண்டலத்தின் கிரணங்கள் போன்று இவைகள் (பிங்கல) சிகப்பு நிறம் கலந்த மஞ்சள் வர்ண விசேஷத்துடன் கூடிய சூக்ஷ்மமான ரசத்தின் ரசத்தால் பூர்ணமாகி அந்த ஆகாரமாகவே ஆகின்றனர் என்பது பொருள்.
तथा शुक्लस्य नीलस्य पीतस्य लोहितस्य च रसस्य पूर्णा इति सर्वत्र अध्याहार्यम् । सौरेण तेजसा पित्ताख्येन पाकाभिनिर्वृत्तेन कफेन अल्पेन सम्पर्कात् पिङ्गलं भवति सौरं तेजः पित्ताख्यम् । तदेव च वातभूयस्त्वात् नीलं भवति । तदेव च कफभूयस्त्वात् शुक्लम् । कफेन समतायां पीतम् । शोणितबाहुल्येन लोहितम् । वैद्यकाद्वा वर्णविशेषा अन्वेष्टव्याः कथं भवन्तीति ।
அனுவாதம் - அவ்வாறே வெண்மை, நீலம், மஞ்சள், சிகப்பு ஆகிய ரசங்களால் பூர்ணமாக உள்ளது என்று இவ்வாறு பூர்ண பதத்தை எங்கும் அத்யாகாரம் செய்ய வேண்டும். அதாவது சேர்த்துக்கொள்ள வேண்டும். பித்தம் எனப்படும் சூரிய தேஜஸ், பிங்கலம் (சிகப்பு கலந்த மஞ்சள்) ஆகிறது. அதுவே வாதம் அதிகமாகும் பொழுது நீலநிறமாகிறது. அதுவே கபம் அதிகமாகும்பொழுது வெண்மை நிறமாகிறது. கபம் சேரும்பொழுது மஞ்சள் ஆகிறது. ரத்தத்தின் மிகுதியால் சிகப்பு நிறமாகிறது. இதை வைத்திய சாஸ்திரத்தில் நிறவிசேஷங்கள் (மாறுதல்கள்) எவ்வாறு உண்டாகிறது என்று ஆராய வேண்டும்.
श्रुतिस्त्वाह — आदित्यसम्बन्धादेव तत्तेजसो नाडीष्वनुगतस्यैते वर्णविशेषा इति । कथम् ? असौ वा आदित्यः पिङ्गलो वर्णतः, एष आदित्यः शुक्लोऽप्येष नील एष पीत एष लोहित आदित्य एव ॥
அனுவாதம் - சுருதி கூறுகிறது- ஆதித்யனின் சம்பந்தத்தால் தான் நாடிகளில் அனுஸ்யூதமாய் (ஊடுருவி) உள்ள அந்த தேஜஸ்ஸின் வர்ணங்கள் விசேஷங்கள் (வித விதமான நிறங்கள்) ஆகும். எவ்வாறு? இது ஆதித்யனுடைய சிகப்பு கலந்த மஞ்சள் நிறம். இந்த ஆதித்யனின் வெண்மை அவ்வாறே இது நீலம், இது மஞ்சள், இது சிகப்பு என்பவை ஆதித்யனுடையதே.
तस्याध्यात्मं नाडीभिः कथं सम्बन्ध इति, अत्र दृष्टान्तमाह —
அனுவாதம் - அ.கை -அந்த அத்யாத்மம் எவ்வாறு சம்பந்தப்படுகிறது என்பதற்கு திருஷ்டாந்தம் கூறப்படுகிறது.
तद्यथा महापथ आतत उभौ ग्रामौ गच्छतीमं चामुं चैवमेवैता आदित्यस्य रश्मय उभौ लोकौ गच्छन्तीमं चामुं चामुष्मादादित्यात्प्रतायन्ते ता आसु नाडीषु सृप्ता आभ्यो नाडीभ्यः प्रतायन्ते तेऽमुष्मिन्नादित्ये सृप्ताः ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - இந்த விஷயத்தில் திருஷ்டாந்தம் என்னவெனில் நீண்ட நெடுஞ்சாலை, சமீபத்தில் இருக்கும் கிராமத்திற்கும் தூரத்தில் இருக்கும் கிராமத்திற்கும் செல்கிறதோ அவ்வாறு இந்த சூரியனுடைய கிரணங்கள் இந்த புருஷனிலும் அந்த ஆதித்திய மண்டலமாகிய இரண்டு லோகங்களிலும் பிரவேசிக்கிறது. அவை நிரந்தரமாக ஆதித்தியனிடத்திலிருந்து பரவி இந்த நாடிகளிலும் வியாபிக்கிறது. அவ்வாறே இந்த நாடிகளில் இருந்தும் வெளிப்பட்டு ஆதித்தியனில் வியாபித்து இருக்கிறது.
तत् तत्र यथा लोके महान् विस्तीर्णः पन्था महापथः आततः व्याप्तः उभौ ग्रामौ गच्छति इमं च संनिहितम् अमुं च विप्रकृष्टं दूरस्थम् , एवं यथा दृष्टान्तः महापथः उभौ ग्रामौ प्रविष्टः, एवमेवैताः आदित्यस्य रश्मयः उभौ लोकौ अमुं च आदित्यमण्डलम् इमं च पुरुषं गच्छन्ति उभयत्र प्रविष्टाः । यथा महापथः ।
அனுவாதம் - இந்த விஷயத்தில் எவ்வாறு உலகில் மிக நீண்ட நெடுஞ்சாலை வியாபித்து சமீபத்திலிருப்பதும், தூரத்தில் இருப்பதுமான இரண்டு கிராமங்களுக்கும் செல்கிறதோ இந்த திருஷ்டாந்தத்தில் நெடுஞ்சாலை இரண்டு கிராமங்களுக்கும் செல்கிறதோ அவ்வாறு இந்த ஆதித்யனுடைய கிரணங்கள் அந்த லோகமாகிய ஆதித்ய மண்டலத்தையும் இந்த லோகத்திலுள்ள புருஷனையும் எவ்வாறு நெடுஞ்சாலை இரண்டிற்கும் செல்கிறதோ அவ்வாறு வியாபிக்கிறது.
कथम् ? अमुष्मादादित्यमण्डलात् प्रतायन्ते सन्तता भवन्ति । ता अध्यात्ममासु पिङ्गलादिवर्णासु यथोक्तासु नाडीषु सृप्ताः गताः प्रविष्टा इत्यर्थः । आभ्यो नाडीभ्यः प्रतायन्ते प्रवृत्ताः सन्तानभूताः सत्यः ते अमुष्मिन् । रश्मीनामुभयलिङ्गत्वात् ते इत्युच्यन्ते ॥
அனுவாதம் - எவ்வாறு? அந்த (கிரணங்கள்) ஆதித்ய மண்டலத்திலிருந்து, வெளிப்பட்டு பரவுகின்றன. அவைகள் அத்யாத்மாவில் அதாவது சரீரத்தில் மேலே கூறிய பிங்களம் முதலிய வர்ணங்களுடன் அதாவது நிறங்களுடன் கூடிய நாடிகளில் பிரவேசித்து வியாபிக்கின்றன என்பது பொருள். அந்த நாடிகளில் பரவி அந்த ஆதித்ய மண்டலத்தில் வியாபிக்கிறது. இங்கு “रश्मि” (கிரணம்) ஆண்பால் பெண்பால் ஆகிய இரண்டு லிங்கம் உள்ளதால் ते (தே) என்று கூறப்பட்டது.
तद्यत्रैतत्सुप्तः समस्तः सम्प्रसन्नः स्वप्नं न विजानात्यासु तदा नाडीषु सृप्तो भवति तं न कश्चन पाप्मा स्पृशति तेजसा हि तदा सम्पन्नो भवति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - அந்த சுஷுப்த்தி அவஸ்தையில் அதாவது நன்றாக தூங்கும்பொழுது எல்லா புலன்களும் அமைதியுற்று பிரசன்னமாகி ஸ்வப்னமும் காண்பதில்லை. அப்பொழுது இந்த நாடிகளில் சென்று விடுகிறது. அப்பொழுது எந்த பாபமும் அவனைத் தீண்டுவது இல்லை. மேலும் தேஜஸால் வியாபிக்கப்படுகின்றான்.
तत् तत्र एवं सति यत्र यस्मिन्काले एतत् स्वपनम् अयं जीवः सुप्तो भवति । स्वापस्य द्विप्रकारत्वाद्विशेषणं समस्त इति । उपसंहृतसर्वकरणवृत्तिरित्येतत् । अतः बाह्यविषयसम्पर्कजनितकालुष्याभावात् सम्यक् प्रसन्नः सम्प्रसन्नो भवति । अत एव स्वप्नं विषयाकाराभासं मानसं स्वप्नप्रत्ययं न विजानाति नानुभवतीत्यर्थः । यदैवं सुप्तो भवति, आसु सौरतेजःपूर्णासु यथोक्तासु नाडीषु तदा सृप्तः प्रविष्टः, नाडीभिर्द्वारभूताभिः हृदयाकाशं गतो भवतीत्यर्थः । न हि अन्यत्र सत्सम्पत्तेः स्वप्नादर्शनमस्तीति सामर्थ्यात् नाडीष्विति सप्तमी तृतीयया परिणम्यते ।
அனுவாதம் - “तत्” (தத்-அது) இவ்வாறு இருப்பதால் அங்கு - அதாவது எப்பொழுது இந்த ஸ்வப்ன மயமான ஜீவன் தூங்குகிறதோ அப்பொழுது தூங்குவது இரண்டு விதமாக இருப்பதால் “समस्त” (சமஸ்த - எல்லாம்) என்ற விசேஷணம் இருப்பதால் எல்லா கரண விருத்திகளும் அடங்கிவிடுகின்றன என்பது ஆகும். ஆகையால் பாஹ்ய விஷயங்களின் சம்பந்தத்தால் உண்டான மலினம் இல்லாததால் நன்றாக பிரசன்னமாகிறது (அமைதி அதாவது சாந்தியாகிறது). ஆகையால் தான் ஸ்வப்ன விஷய ஆபாசம் மானச ஸ்வப்னத்தை அறிவதில்லை. அதாவது அனுபவிப்பது இல்லை என்பது பொருள். எப்பொழுது இவ்வாறு தூங்குகின்றானோ அப்பொழுது சூரிய தேஜஸ் பூர்ணமாக முன் கூறப்பட்ட நாடிகளில் பிரவேசிக்கிறது. வழிகள் உடைய நாடிகள் மூலமாக ஹிருதயாகாசத்தை அடைகின்றன என்பது பொருள். சத் சம்பத்தியைத் (சத் பிராப்தியை) தவிர வேறு மார்க்கத்தால் ஸ்வப்னம் காணாமல் இருக்க முடியாது. இந்த சாமர்த்தியத்தால் “नाडीषु” (நாடீஷு = நாடிகளில்) என்ற பதம் ஏழாவது வேற்றுமையாகும். அதை மூன்றாவது வேற்றுமையாக மாற்றப்பட்டுள்ளது.
तं सता सम्पन्नं न कश्चन न कश्चिदपि धर्माधर्मरूपः पाप्मा स्पृशतीति, स्वरूपावस्थितत्वात् तदा आत्मनः । देहेन्द्रियविशिष्टं हि सुखदुःखकार्यप्रदानेन पाप्मा स्पृशतीति, न तु सत्सम्पन्नं स्वरूपावस्थं कश्चिदपि पाप्मा स्प्रष्टुमुत्सहते, अविषयत्वात् । अन्यो हि अन्यस्य विषयो भवति, न त्वन्यत्वं केनचित्कुतश्चिदपि सत्सम्पन्नस्य । स्वरूपप्रच्यवनं तु आत्मनो जाग्रत्स्वप्नावस्थां प्रति गमनं बाह्यविषयप्रतिबोधः अविद्याकामकर्मबीजस्य ब्रह्मविद्याहुताशादाहनिमित्तमित्यवोचाम षष्ठे एव ; तदिहापि प्रत्येतव्यम् ।
அனுவாதம் - அந்த சத்தை அடைந்த ஜீவனை அப்பொழுது தன்னுடைய ஸ்வரூபத்தில் நிலைபெற்றுள்ளதால் தர்மாதர்மங்களாகிய பாபங்கள் ஒன்றும் அண்டாது. (ஸ்பரிசிக்காது). தேஹ இந்திரியங்களுடன் கூடியவனை சுகம் துக்கம் ஆகிய காரியங்களைத் தரும் பாபம் ஸ்பரிசிக்கும் (அண்டும்). ஆனால் சத்தை அடைந்த ஸ்வரூபத்தில் இருப்பவனை எந்த ஒரு பாபமும் விசேஷமற்று இருப்பதால் அதை ஸ்பரிசிக்கமுடியாது. மற்றொன்று அல்லவா மற்றொன்றிற்கு விஷயமாகிறது. சத்தை அடைந்தவனுக்கு எதனாலும், எவ்விதத்தாலும் அன்யத்துவம் அதாவது (வேறாக இருப்பது) கிடையாது. ஆத்ம ஸ்வரூபத்தில் இருந்து நழுவுதல் என்பது ஜாக்ரத் ஸ்வப்ன அவஸ்தைகளைக் குறித்து செல்வதும் பாஹ்ய விஷயங்களை அறிவதுவும் ஆகும். ஏன் எனில் அவித்யா காம கர்ம பீஜம் பிரஹ்ம வித்யாரூப அக்னியினால் தஹிக்கப்படாததால் (எரிக்கப்படாததால்) உண்டாகிறது என்று முன்பே ஆறாவது அத்தியாயத்தில் கூறினோம். அதையே இப்பொழுது திடமாக்கிக்கொள்ள வேண்டும்.
यदैवं सुप्तः सौरेण तेजसा हि नाड्यन्तर्गतेन सर्वतः सम्पन्नः व्याप्तः भवति । अतः विशेषेण चक्षुरादिनाडीद्वारैर्बाह्यविषयभोगाय अप्रसृतानि करणानि अस्य तदा भवन्ति । तस्मादयं करणानां निरोधात् स्वात्मन्येवावस्थितः स्वप्नं न विजानातीति युक्तम् ॥
அனுவாதம் - எப்பொழுது இவ்வாறு உறங்குகின்றவன் சூரியதேஜஸ்சால் நாடியில் அந்தர்கதமாய் எங்கும் வியாபித்தவனாய் ஆகிறான். ஆகையால் கண் முதலிய நாடி துவாரங்களால் பாஹ்ய (வெளி) விஷய போகங்களின் பொருட்டு விசேஷரூபமாய் வெளிபடாமல் கரணங்கள் (இந்திரிரயங்கள்) அடங்கி உள்ளன. ஆகையால் இந்த கரணங்கள் நிரோதமானதால் (அடங்கி இருப்பதால்) தன் ஸ்வரூபத்தில் நிலைபெற்று இருப்பவன் ஸ்வப்னத்தை அறிவது இல்லை என்று கூறியது சரியானதே ஆகும்.
तत्र एवं सति,
அனுவாதம்- அ.கை- இவ்வாறு இருக்கும்பொழுது -
अथ यत्रैतदबलिमानं नीतो भवति तमभित आसीना आहुर्जानासि मां जानासि मामिति स यावदस्माच्छरीरादनुत्क्रान्तो भवति तावज्जानाति ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - எப்பொழுது இந்த சரீரம் பலக்ஷீனத்தை அடைகிறதோ அப்பொழுது நான்கு பக்கங்களிலும் அமர்ந்திருக்கும் சுற்றத்தார் என்ன நான் யார் என்று தெரிகிறதா? நான் யார் என்று தெரிகிறதா? என்று கேட்பர். எதுவரை இந்த சரீரத்திலிருந்து ஜீவன் வெளியேறாதவரை அவர்களை அறிவான்.
अथ यत्र यस्मिन्काले अबलिमानम् अबलभावं देहस्य रोगादिनिमित्तं जरादिनिमित्तं वा कृशीभावम् एतत् नयनं नीतः प्रापितः देवदत्तो भवति मुमूर्षुर्यदा भवतीत्यर्थः । तमभितः सर्वतो वेष्टयित्वा आसीना ज्ञातयः आहुः — जानासि मां तव पुत्रं जानासि मां पितरं च इत्यादि । स मुमूर्षुः यावदस्माच्छरीरादनुत्क्रान्तः अनिर्गतः भवति तावत्पुत्रादीञ्जानाति ॥
அனுவாதம் - மேலும் எப்பொழுது தேஹம் நோய் முதலியவைகளின் காரணமாகவும் வயது முதிர்வினாலும் தேவதத்தன் மெலிந்து காணப்படுகிறானோ அதாவது மூர்ச்சை அடைகின்றானோ அப்பொழுது அவனை எல்லா பக்கமும் சூழ்ந்து அமர்ந்து இருக்கும் சுற்றத்தார் என்னைத் தெரிகிறதா? உன்னுடைய புத்திரனை தெரிகிறதா? உன் தந்தையைத் தெரிகிறதா? என்று கேட்பர். அதற்கு மூர்ச்சை அடைந்தவன் எதுவரை இந்த சரீரத்திலிருந்து வெளியேறவில்லையோ அதுவரை புத்திரன் முதலியவர்களை அறிவான்.
अथ यत्रैतदस्माच्छरीरादुत्क्रामत्यथैतैरेव रश्मिभिरूर्ध्वमाक्रमते स ओमिति वा होद्वा मीयते स यावत्क्षिप्येन्मनस्तावदादित्यं गच्छत्येतद्वै खलु लोकद्वारं विदुषां प्रपदनं निरोधोऽविदुषाम् ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - மேலும் எப்பொழுது அது இந்த சரீரத்திலிருந்து வெளிக்கிளம்புகிறதோ அப்பொழுது இந்தக் கிரணங்களால் மேலே செல்கின்றான். அது ஓம் என்று கூறிக்கொண்டு ஊர்த்வ (மேல்) லோகத்திற்கோ, அல்லது கீழ் லோகத்திற்கோ செல்கிறது. அவன் மனம் ஒரு எண்ணத்திலிருந்து மற்றொரு எண்ணத்தை அடையும் முன் ஆதித்திய லோகத்தை அடைந்துவிடுகின்றான். அந்த ஆதித்தியனே நிச்சயமாக லோகத்துவாரம் (வழி) ஆகும். இது வித்வான்களுக்கான பிரஹ்ம லோகத்திற்கான துவாரம் ஆகும். மேலும் அது அவித்வான்களுக்கு தடை செய்யப்பட்ட ஸ்தானமாகும்.
अथ यत्र यदा, एतत्क्रियाविशेषणमिति, अस्माच्छरीरादुत्क्रामति, अथ तदा एतैरेव यथोक्ताभिः रश्मिभिः ऊर्ध्वमाक्रमते यथाकर्मजितं लोकं प्रैति अविद्वान् । इतरस्तु विद्वान् यथोक्तसाधनसम्पन्नः स ओमिति ओङ्कारेण आत्मानं ध्यायन् यथापूर्वं वा ह एव, उद्वा ऊर्ध्वं वा विद्वांश्चेत् इतरस्तिर्यङ्वेत्यभिप्रायः । मीयते प्रमीयते गच्छतीत्यर्थः ।
அனுவாதம் - மேலும் எப்பொழுது “एतत्” (ஏதத், இந்த) என்பது கிரியா விசேஷணத்தால் இந்த சரீரத்திலிருந்து வெளிக்கிளம்புகிறது என்பதாகும். ஆகையால் அப்பொழுது இந்த முன்பு கூறப்பட்ட கிரணங்களால் எவ்வாறு கர்மத்தால் சம்பாதித்த லோகத்தைக் குறித்து அவித்வான் மேலே செல்கிறான். மற்றவனோ முன்பு கூறப்பட்ட சாதனங்களுடன் கூடிய வித்வானாகிய அதாவது ஞானியாக அவன் ஓம்காரத்தால் ஆத்மாவை தியானம் செய்துகொண்டே மேல் லோகத்தை அடைகிறான். அதாவது வித்வான் மேல் லோகத்தையும், அவித்வான் கீழ்லோகத்தையும் அடைவர் என்பதாகும். “मीयते” “प्रमीयते” (மீயதே ப்ரமீயதே) என்பது செல்கின்றான் என்ற அர்த்தமாகும்.
स विद्वान् उत्क्रमिष्यन्यावत्क्षिप्येन्मनः यावता कालेन मनसः क्षेपः स्यात् , तावता कालेन आदित्यं गच्छति प्राप्नोति क्षिप्रं गच्छतीत्यर्थः, न तु तावतैव कालेनेति विवक्षितम् ।
அனுவாதம் - அந்த வித்வான் உத்கிரமணமானது எதுவரை மனம் செல்கிறதோ அதாவது எவ்வளவு நேரம் மனம் செல்கிறதோ அவ்வளவு நேரத்தில் ஆதித்யனை அடைகிறது. இங்கு வெகு சீக்கிரம் செல்கின்றது என்பது பொருள். ஆனால் அந்த அளவு நேரம் என்று குறிப்பிடுவதற்காக அல்ல.
किमर्थमादित्यं गच्छतीति, उच्यते — एतद्वै खलु प्रसिद्धं ब्रह्मलोकस्य द्वारं य आदित्यः ; तेन द्वारभूतेन ब्रह्मलोकं गच्छति विद्वान् । अतः विदुषां प्रपदनम् , प्रपद्यते ब्रह्मलोकमनेन द्वारेणेति प्रपदनम् । निरोधनं निरोधः अस्मादादित्यादविदुषां भवतीति निरोधः, सौरेण तेजसा देहे एव निरुद्धाः सन्तः मूर्धन्यया नाड्या नोत्क्रमन्त एवेत्यर्थः, ‘विष्वङ्ङन्या’ (छा. उ. ८ । ६ । ६) इति श्लोकात् ॥
அனுவாதம் - அது எதற்காக ஆதித்யலோகம் செல்கிறது? அதற்குக் கூறப்படுகிறது - அந்த எந்த ஆதித்யனே அது நிச்சயமாக பிரஹ்மலோகத்திற்கான பிரசித்தமான வாயிலாகும் (துவாரம் ஆகும்). அந்த வாயிலின் மூலமாக வித்வான் பிரஹ்மலோகம் செல்கின்றான். ஆகையால் பிரஹ்மலோகத்திற்கு இதன் மூலமாக அடைவதால் “प्रपदनम्” (பிரபதனம்) எனப்படுகிறது. அவித்வான்களுக்கு அந்த ஆதித்யனால் தடுக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்குத் தடை (நிரோதம் - निरोधं) யாகும். சூரிய தேஜசால் தேஹத்திலேயே மறைக்கப்ட்டு சிரஸில் உள்ள நாடியால் உத்கிரமணம் ஆவதில்லை என்பது பொருள். “विष्वङ्डन्या” இனிவரும் மந்திரத்தால் சித்திக்கிறது.
तदेष श्लोकः । शतं चैका च हृदयस्य नाड्यस्तासां मूर्धानमभिनिःसृतैका तयोर्ध्वमायन्नमृतत्वमेव विष्वङ्ङन्या उत्क्रमणे भवन्त्युत्क्रमणे भवन्ति ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - இந்த விஷயத்தைக் குறித்து இந்த மந்திரம் - ஹ்ருதயத்தில் நூ ற்று ஒன்று நாடிகள் இருக்கின்றன. அவைகளில் ஒன்று சிரசின் உச்சியை பிளந்து கொண்டு வெளியேறுகிறது. அதன் வழியாக மேலே செல்லும் ஜீவன் அமரத்துவத்தை அடைகிறது. மற்ற நாடிகள் இங்கும் அங்கும் சென்று கொண்டு உத்கிரமணத்திற்கு காரணமாகின்றன. உத்கிரமணத்திற்குக் காரணமாகின்றன. (அவைகளால் அமரத்துவத்தை அடையமுடியாது).
तत् तस्मिन् यथोक्तेऽर्थे एष श्लोको मन्त्रो भवति — शतं च एका एकोत्तरशतं नाड्यः हृदयस्य मांसपिण्डभूतस्य सम्बन्धिन्यः प्रधानतो भवन्ति, आनन्त्याद्देहनाडीनाम् । तासामेका मूर्धानमभिनिःसृता विनिर्गता । तयोर्ध्वमायन् गच्छन् अमृतत्वम् अमृतभावमेति । विष्वक् नानागतयः तिर्यग्विसर्पिण्य ऊर्ध्वगाश्च अन्या नाड्यः भवन्ति संसारगमनद्वारभूताः ; न त्वमृतत्वाय ; किं तर्हि, उत्क्रमणे एव उत्क्रान्त्यर्थमेव भवन्तीत्यर्थः । द्विरभ्यासः प्रकरणसमाप्त्यर्थः ॥
அனுவாதம் - (மேலே) முன்பு கூறப்பட்ட அர்த்தத்தில் இந்த மந்திரம் உள்ளது. மாம்ச பிண்டரூப ஹிருதயத்துடன் சம்பந்தம் உள்ள நூ ற்றி ஒன்று பிரதானமான (முக்யமான) நாடிகள் ஆகும். ஏன் எனில் தேஹத்தில் எண்ணற்ற நாடிகள் இருப்பதால். அவற்றில் ஒன்று சிரஸில் உள்ள நாடி வழியாக வெளியேறி அதன் மூலமாக மேலே சென்று ஜீவன் அம்ருதத்தை அதாவது அம்ருதத்வ பாவத்தை அடைகிறது. அவ்வாறே மற்ற பல நாடிகள் அநேக கதியுடையவை அதாவது குறுக்கும் நெடுக்குமாக (இங்கும், அங்கும்) செல்பவைகளாயும் மேலே செல்வது ஆகவும் உள்ளன அவைகள் சம்சாரப் பிராப்திக்கு துவாரம் ஆகும். அது அம்ருதத்திற்குக் காரணமாகாது, அவ்வாறானால் எவ்வாறு ஆகும்? அவைகளின் உத்கிரமணம் என்றது பிராணனின் வெளியேறுதலையே தாத்பர்யமாக உடையது. “उत्क्रमणे भवन्ति” (உத்க்ரமணே பவந்தி) என்று கூறியது இந்த பிரகரணத்தின் சமாப்த்திக்காகக் கூறப்பட்டது.
इति षष्ठखण्डभाष्यम् ॥
‘अथ य एष सम्प्रसादोऽस्माच्छरीरात्समुत्थाय परं ज्योतिरुपसम्पद्य स्वेन रूपेणाभिनिष्पद्यत एष आत्मेति होवाचैतदमृतभयमेतद्ब्रह्म’ (छा. उ. ८ । ३ । ४) इत्युक्तम् । तत्र कोऽसौ सम्प्रसादः ? कथं वा तस्याधिगमः, यथा सोऽस्माच्छरीरात्समुत्थाय परं ज्योतिरुपसम्पद्य स्वेन रूपेणाभिनिष्पद्यते ? येन स्वरूपेणाभिनिष्पद्यते सं किंलक्षण आत्मा ? सम्प्रसादस्य च देहसम्बन्धीनि पररूपाणि, ततो यदन्यत्कथं स्वरूपम् ? इति एतेऽर्था वक्तव्या इत्युत्तरो ग्रन्थ आरभ्यते । आख्यायिका तु विद्याग्रहणसम्प्रदानविधिप्रदर्शनार्था विद्यास्तुत्यर्था च — राजसेवितं पानीयमितिवत् ।
அனுவாதம் - அ.கை - மேலும் அந்த இந்த சம்பிரசாதம் இந்த சரீரத்திலிருந்து மேல்நோக்கி வெளியேறி ஜ்யோதி ஸ்வரூபத்தை அடைந்து தன் ரூபமாகவே ஆகிறது. இந்த ஆத்மா என்று கூறப்பட்டது. அது அம்ருதம் அது அபயம் அது பிரஹ்மம் என்று கூறப்பட்டது. இதில் எது சம்பிரசாதம்? அதை எவ்வாறு அடைவது? எவ்வாறு இது இந்த சரீரத்தில் இருந்து மேல் கிளம்பி பரம்ஜ்யோதி ரூபத்தை அடைந்து தன்னுடைய ஸ்வரூபத்தை அடைகிறது. எந்த ஸ்வரூபத்தால் அடைகிறது. அந்த ஆத்மா எந்த லக்ஷணமுடையது? சம்பிரசாதத்தின் தேஹ சம்பந்தமுடைய ரூபங்கள் அதைவிட எவ்வாறு அதன் ஸ்வரூபம் என்பது கூறவேண்டும் என்பதற்காக இந்த கிரந்தம் ஆரம்பிக்கப்படுகிறது. இந்த கதை வித்யையை கிரஹிப்பதற்காகவும், தானம் செய்வதின் விதியை தெரிவிப்பதற்காகவும் அவ்வாறே வித்யையை ஸ்துதிப்பதற்காகவும் ஆகிறது. இந்த பானத்தை ராஜா மிகவும் ரசித்தார் என்பது போல் ஆகும்.
य आत्मापहतपाप्मा विजरो विमृत्युर्विशोको विजिघत्सोऽपिपासः सत्यकामः सत्यसङ्कल्पः सोऽन्वेष्टव्यः स विजिज्ञासितव्यः स सर्वाꣳश्च लोकानाप्नोति सर्वाꣳश्च कामान्यस्तमात्मानमनुविद्य विजानातीति ह प्रजापतिरुवाच ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - எந்த ஆத்மா (தர்மாதர்ம முதலிய) பாபங்கள் அற்ற, முதுமை அற்ற, மரணமற்ற, சோகமற்ற, பசி அற்ற, தாகம் அற்ற, சத்யகாமம் மேலும் சத்யஸகல்பமாய் உள்ளதோ அதை நாம் விசாரிக்க (தேட)வேண்டும். மேலும் அதை விசேஷ ரூபமாக அறிய இச்சை (விருப்பம்) கொள்ளவேண்டும். எவன் இந்த ஆத்மாவை சாஸ்திரம் மேலும் குருவிடம் உபதேசித்தவாறு விசாரித்து அறியவேண்டும். அவன் எல்லா லோகங்களையும், எல்லா காமனைகளையும் அடைகிறான் என்று பிரஜாபதி கூறினார்.
य आत्मा अपहतपाप्मा विजरो विमृत्युर्विशोको विजिघत्सोऽपिपासः सत्यकामः सत्यसङ्कल्पः, यस्योपासनाय उपलब्ध्यर्थं हृदयपुण्डरीकमभिहितम् , यस्मिन्कामाः समाहिताः सत्याः अनृतापिधानाः, यदुपासनसहभावि ब्रह्मचर्यं साधनमुक्तम् , उपासनफलभूतकामप्रतिपत्तये च मूर्धन्यया नाड्या गतिरभिहिता, सोऽन्वेष्टव्यः शास्त्राचार्योपदेशैर्ज्ञातव्यः स विशेषेण ज्ञातुमेष्टव्यः विजिज्ञासितव्यः स्वसंवेद्यतामापादयितव्यः ।
அனுவாதம் - எந்த ஆத்மா (தர்மா தர்மங்களாகிய) பாபங்கள் அற்றது, மூப்பு அற்றது, மரணதர்மம் அற்றது, சோகமற்றது, பசி, தாகம் அற்றது, சத்யகாமம், சத்திய சங்கல்பம் ஆகிய லக்ஷணங்களுடையதாய் உள்ளதோ அதனை உபாசனையினால் அடைவதற்காக ஹிருதய புண்டரீக ஸ்தானம் கூறப்பட்டது. மித்யையால் மறைக்கப்பட்டு எதில் இந்த சத்ய காமனைகள் நல்ல விதமாக இருக்கின்றனவோ, எந்த உபாசனையின் அனுசரனையான பிரஹ்மச்சரிய சாதனம் கூறப்பட்டது, உபாசனையின் பலரூபமான காமத்தின் பிராப்த்திக்காக சிரசின் உச்சியில் உள்ள நாடியின் கதி கூறப்பட்டது. அதை தேடவேண்டும். சாஸ்திரம், ஆச்சாரிய உபதேசத்தால் அதை விசேஷமாக (நன்றாக) அறிவதற்கு இஷ்டப்பட வேண்டும். அதை அறிய இஷ்டப்பட்டு அதாவது ஸ்வசம் வேத்தியத்தை அடைவதற்கான யோக்கியமுடையதாகும்.
किं तस्यान्वेषणाद्विजिज्ञासनाच्च स्यादिति, उच्यते — स सर्वांश्च लोकानाप्नोति सर्वांश्च कामान् ; यः तमात्मानं यथोक्तेन प्रकारेण शास्त्राचार्योपदेशेन अन्विष्य विजानाति स्वसंवेद्यतामापादयति, तस्य एतत्सर्वलोककामावाप्तिः सर्वात्मता फलं भवतीति ह किल प्रजापतिरुवाच ।
அனுவாதம் - அதை விசாரித்து அறிவதில் இச்சை கொள்வதால் என்ன ஆகும்? என்பது கூறப்படுகிறது - எல்லா லோகங்களையும் காமனைகளையும் அடைவான். எவன் அந்த ஆத்மாவை முன்பு கூறியவாறு சாஸ்திர ஆச்சாரிய உபதேசத்தால் விசாரித்து அறிந்து ஸ்வசம்வேத்தியத்தை அடைகிறான். அவனுக்கு அந்த சர்வலோகம் பிராப்தியும், எல்லா காமனைகளின் (போகங்களின்) அடைவும் மேலும் சர்வாத்ம பாவமாகிய பலனும் உண்டாகும் என்று அல்லவா பிரஜாபதி கூறினார்.
अन्वेष्टव्यः विजिज्ञासितव्य इति च एष नियमविधिरेव, न अपूर्वविधिः । एवमन्वेष्टव्यो विजिज्ञासितव्य इत्यर्थः, दृष्टार्थत्वादन्वेषणविजिज्ञासनयोः । दृष्टार्थत्वं च दर्शयिष्यति ‘नाहमत्र भोग्यं पश्यामि’ (छा. उ. ८ । ९ । १), (छा. उ. ८ । १० । २), (छा. उ. ८ । ११ । २) इत्यनेन असकृत् । पररूपेण च देहादिधर्मैरवगम्यमानस्य आत्मनः स्वरूपाधिगमे विपरीताधिगमनिवृत्तिर्दृष्टं फलमिति नियमार्थतैव अस्य विधेर्युक्ता, न त्वग्निहोत्रादीनामिव अपूर्वविधित्वमिह सम्भवति ॥
அனுவாதம் - அவசியம் தேட வேண்டும், அவசியம் அறிய இச்சைகொள்ள வேண்டும் என்பது நியமவிதியாகும். அபூர்வ விதி அல்ல, இவ்வாறு தேட வேண்டும், இவ்வாறு அறிய இச்சைகொள்ள வேண்டும் என்பது பொருள். ஏன் எனில் தேடுதல், அறிய இச்சை கொள்ளுதல் என்பவை திருஷ்டார்த்தமாகும். இங்கு நான் போக்யத்தைக் காணவில்லை என்று இதை அடிக்கடி சுருதியானது தெரிவிக்கப்போகிறது. தேஹம் முதலிய தர்ம ரூபங்களைக் காட்டிலும் வேறான ரூபத்தால் அறியவேண்டிய ஆத்மாவின் ஸ்வரூபத்தின் ஞானம் ஏற்படுவதில் விபரீத ஞானத்தை நீக்குவதற்கான இது திருஷ்ட பலம் ஆகும். ஆகையால் இந்த விதி நியமார்த்தம் என்பதே பொருந்தும். அக்னி ஹோத்திரம் முதலியவைகளைப் போல் இதற்கு அபூர்வ விதி ஏற்படுவது சம்பவிக்காது.
तद्धोभये देवासुरा अनुबुबुधिरे ते होचुर्हन्त तमात्मानमन्विच्छामो यमात्मानमन्विष्य सर्वाꣳश्च लोकानाप्नोति सर्वाꣳश्च कामानितीन्द्रो हैव देवानामभिप्रवव्राज विरोचनोऽसुराणां तौ हासंविदानावेव समित्पाणी प्रजापतिसकाशमाजग्मतुः ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - பிரஜாபதியின் இந்த வாக்யத்தை தேவர்களும், அசுரர்களும் பரம்பரையாகவே அறிந்திருந்தார்கள். அவர்கள் கூறினார்கள் - நாங்கள் இந்த ஆத்மாவை அறிய விரும்புகின்றோம். இதை அறிவதினால் ஜீவன் எல்லா லோகங்களையும், அவற்றின் எல்லா போகங்களையும் அடைவானோ என்று இவ்வாறு நிச்சயம் செய்து தேவர்களின் ராஜாவான இந்திரன், அவ்வாறே அசுரர்களின் ராஜா விரோச்சனனும் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் அறியவேண்டிய இச்சையை தெரிவித்துக்கொண்டு கைகளில் சமித்துக்களை ஏந்திக்கொண்டு பிரஜாபதியிடம் சென்றனர்.
तद्धोभये इत्याद्याख्यायिकाप्रयोजनमुक्तम् । तद्ध किल प्रजापतेर्वचनम् उभये देवासुराः देवाश्चासुराश्च देवासुराः अनु परम्परागतं स्वकर्णगोचरापन्नम् अनुबुबुधिरे अनुबुद्धवन्तः ।
அனுவாதம் - “तद्धोभय” (தத்தோபய) முதலிய கதைகளின் பிரயோஜனம் முன்பே கூறப்பட்டது. பரம்பரையாக வந்த தங்களுடைய கரணங்களை அடைந்த (ஸ்ரோத்திரங்களை) பிரஜாபதியின் வசனங்களை தேவர்கள் அசுரர்கள் ஆகிய இருவர்களும் அறிந்து கொண்டார்கள்.
ते च एतत्प्रजापतिवचो बुद्ध्वा किमकुर्वन्निति, उच्यते ते ह ऊचुः उक्तवन्तः अन्योन्यं देवाः स्वपरिषदि असुराश्च — हन्त यदि अनुमतिर्भवताम् , प्रजापतिनोक्तं तमात्मानमन्विच्छामः अन्वेषणं कुर्मः, यमात्मानमन्विष्य सर्वांश्च लोकानाप्नोति सर्वांश्च कामान् इत्युक्त्वा इन्द्रः हैव राजैव स्वयं देवानाम् इतरान्देवांश्च भोगपरिच्छदं च सर्वं स्थापयित्वा शरीरमात्रेणैव प्रजापतिं प्रति अभिप्रवव्राज प्रगतवान् , तथा विरोचनः असुराणाम् ।
அனுவாதம் - இந்த பிரஜாபதியின் வார்த்தைகளைக் கேட்டு அவர்கள் என்ன செய்தார்கள் என்பது கூறப்படுகிறது அவர்கள் கூறினார்கள் அதாவது தேவர்களும் அசுரர்களும் தங்கள் தங்களுடைய சபையில் கூறினார்கள். நீங்கள் அனுமதியுடன் பிரஜாபதியினால் உபதேசிக்கப்பட்ட அந்த ஆத்மாவை (தேடுவதற்காக) விசாரிக்க வேண்டும். ஏன் எனில் அதை விசாரிப்பதால் மனிதன் எல்லா உலகங்களையும் எல்லா போகங்களையும் அடைவான் என்று கூறி தேவர்களின் ராஜா இந்திரன் தானாகவே தன்னுடைய எல்லா போகங்களையும் எல்லா தேவர்களுக்கும் சமர்ப்பணம் செய்துவிட்டு தன் சரீரமாத்திரமாகவே பிரஜாபதியிடம் சென்றான். அவ்வாறே விரோச்சனனும் சென்றான்.
विनयेन गुरवः अभिगन्तव्या इत्येतद्दर्शयति, त्रैलोक्य राज्याच्च गुरुतरा विद्येति, यतः देवासुरराजौ महार्हभोगार्हौ सन्तौ तथा गुरुमभ्युपगतवन्तौ । तौ ह किल असंविदानावेव अन्योन्यं संविदमकुर्वाणौ विद्याफलं प्रति अन्योन्यमीर्ष्यां दर्शयन्तौ समित्पाणी समिद्भारहस्तौ प्रजापतिसकाशमाजग्मतुः आगतवन्तौ ॥
அனுவாதம் - குருக்களிடம் விநயமாக செல்ல வேண்டியதை தெரிவிக்கிறது - மூவுலகத்தின் ராஜாவைக் காட்டிலும் மிகவும் மேலானது வித்யை என்று. எதனால் தேவர்கள் அசுரர்கள் இவர்களின் ராஜாவாக இருந்துகொண்டு மிகவும் மேலான போகங்களுக்கு பாத்திரர்களாய் இருந்தபோதிலும் இவ்வாறு குருவிடம் சென்றார்கள். அவர்கள் இருவருக்குள்ளும் சத்பாவம் இல்லாவிடினும் வித்யா பலத்திற்காக இருவரும் தங்களுக்குள் இருக்கும் விருப்பத்தைத் தெரிவித்துக்கொண்டு சமித்தைக் கைகளில் ஏந்தியவர்களாக பிரஜாபதியிடம் சென்றனர்.
तौ ह द्वात्रिꣳशतं वर्षाणि ब्रह्मचर्यमूषतुस्तौ ह प्रजापतिरुवाच किमिच्छन्ताववास्तमिति तौ होचतुर्य आत्मापहतपाप्मा विजरो विमृत्युर्विशोको विजिघत्सोऽपिपासः सत्यकामः सत्यसङ्कल्पः सोऽन्वेष्टव्यः स विजिज्ञासितव्यः स सर्वाꣳश्च लोकानाप्नोति सर्वाꣳश्च कामान्यस्तमात्मानमनुविद्य विजानातीति भगवतो वचो वेदयन्ते तमिच्छन्ताववास्तमिति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - அவர்கள் இருவரும் முப்பத்தி இரண்டு வருடங்கள் பிரஹ்மச்சரியத்தை அனுசரித்து வாசம் (பிரஜாபதியுடன்) செய்தார்கள். அப்பொழுது அவர்களிடம் பிரஜாபதி கேட்டார் - நீங்கள் எதை விரும்பி இங்கு இருக்கின்றீர்கள் என்று. அதற்கு அவர்கள் கூறினர் - எந்த ஆத்மா பாபமற்றும், முதுமை அற்றும், மரணதர்மம் அற்றும், சோகமற்றும், பசி அற்றும், தாகம் அற்றும் சத்ய காமமாயும், சத்ய சங்கல்பமாயும் உள்ளதோ அதை விசாரிக்க (தேட) வேண்டும். மேலும் அதை விசேஷ ரூபமாக அறிய விருப்பம்கொள்ள வேண்டும். எவர் இந்த ஆத்மாவை விசாரித்து (தேடி) அதை விசேஷ ரூபமாக அறிகின்றாரோ அவர் எல்லா லோகங்களையும், எல்லா போகங்களையும் அடைவர் என்று ஶ்ரீமானாகிய தங்களுடைய வாக்கியத்தை சிரேஷ்ட ஜனங்கள் கூறுகின்றனர். அதை அறிவதற்கு விருப்பம் கொண்டு இங்கு நாங்கள் வசிக்கின்றோம்.
तौ ह गत्वा द्वात्रिंशतं वर्षाणि शुश्रूषापरौ भूत्वा ब्रह्मचर्यम् ऊषतुः उषितवन्तौ । अभिप्रायज्ञः प्रजापतिः तावुवाच — किमिच्छन्तौ किं प्रयोजनमभिप्रेत्य इच्छन्तौ अवास्तम् उषितवन्तौ युवामिति । इत्युक्तौ तौ ह ऊचतुः — य आत्मेत्यादि भगवतो वचो वेदयन्ते शिष्टाः, अतः तमात्मानं ज्ञातुमिच्छन्तौ अवास्तमिति । यद्यपि प्राक्प्रजापतेः समीपागमनात् अन्योन्यमीर्ष्यायुक्तावभूताम् , तथापि विद्याप्राप्तिप्रयोजनगौरवात् त्यक्तरागद्वेषमोहेर्ष्यादिदोषावेव भूत्वा ऊषतुः ब्रह्मचर्यं प्रजापतौ । तेनेदं प्रख्यापितमात्मविद्यागौरवम् ॥
அனுவாதம் - அவர்கள் இருவரும் அவரிடம் சென்று முப்பத்திஇரண்டு வருடங்கள் குரு சேவை செய்வதிலேயே லயித்து பிரஹ்மசரியவாசம் செய்தார்கள். அவர்களின் அபிப்பிராயத்தை அறிந்த பிரஜாபதி கூறினார்- எதை விரும்பி எந்த பிரயோஜனத்தின் அபிப்பிரயோஜனத்தை அடையும் அபிப்பிராயத்தால் நீங்கள் இங்கு தங்கி இருக்கின்றீர்கள் என்று கேட்கப்பட்ட அவர் கூறினார் - “य आत्मा” (ய ஆத்மா - எந்த ஆத்மா) என்பது முதலிய உங்களுடைய வசனங்களை சிஷ்டர்கள் (சிரேஷ்டர்கள்) அறிந்து இருக்கின்றனர். ஆகையால் அந்த ஆத்மாவை அறிந்துகொள்ள விரும்பி இங்கு வாசம் செய்கின்றோம். பிரஜாபதியிடம் வருவதற்கு முன் அவர்கள் ஒருவருக்கொருவர் சத்பாவம் உடையவர்களாய் இல்லாவிடினும் வித்யா பிராப்திக்காகவும் பிரயோஜனத்தின் கெளரவத்தினாலும் அங்கு ராக துவேஷம், மோகம், பொறாமை ஆகிய துவேஷங்களை களைந்து பிரஹ்மச்சரிய வாசம் செய்தார்கள். இதனால் இந்த ஆத்ம வித்யையின் சிரேஷ்டத்தன்மை புகழப்பட்டதாக ஆகிறது.
तौ ह प्रजापतिरुवाच य एषोऽक्षिणि पुरुषो दृश्यत एष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्मेत्यथ योऽयं भगवोऽप्सु परिख्यायते यश्चायमादर्शे कतम एष इत्येष उ एवैषु सर्वेष्वन्तेषु परिख्यायत इति होवाच ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - அவர்களிடம் பிரஜாபதி கூறினார்-எந்த அந்த புருஷன் கண்களில் காணப்படுகிறானோ அது ஆத்மா, அது அம்ருதம், அது அபயம், அது பிரஹ்மம், (அவர்கள் கேட்டனர்) ஹே பகவானே! எது ஜலத்தில் தோன்றுகிறதோ அவ்வாறே கண்ணாடியிலும் காணப்படுகிறதோ அதில் எது ஆத்மாவாகும்? இதற்கு பிரஜாபதி கூறினார் - நான் எந்த கண்களில் அந்தர்கதமான (உள்ளே இருக்கும்) புருஷனை இங்கே வர்ணிக்கப்பட்டது. அது இவை எல்லாவற்றிலும் எங்கும் காணப்படுகிறது. (பிரிதீதியாகிறது).
तौ एवं तपस्विनौ शुद्धकल्मषौ योग्यौ उपलक्ष्य प्रजापतिरुवाच ह — य एषोऽक्षिणि पुरुषः निवृत्तचक्षुर्भिर्मृदितकषायैः दृश्यते योगिभिर्द्रष्टा, एष आत्मापहतपाप्मादिगुणः, यमवोचं पुरा अहं यद्विज्ञानात्सर्वलोककामावाप्तिः एतदमृतं भूमाख्यम् अत एवाभयम् , अत एव ब्रह्म वृद्धतममिति ।
அனுவாதம் - இவ்வாறு அவ்விரு கல்மஷம் (தோஷம்) அற்றவர்களாய் இருக்கும் தபஸ்விகளின் யோக்கியத்தை அறிந்த பிரஜாபதி கூறினார் - எவர்களுடைய இந்திரியங்கள் விஷயங்களில் நிவிர்த்தியாகியும் ராக துவேஷங்கள் நாசமாகியும் உள்ளதோ அந்த யோகிகளுக்கு இந்த நேத்திரத்தில் உள்ள புருஷன் காணப்படும். இந்த அபஹதபாப்மா முதலிய குணங்களுடைய ஆத்மா என்றும். இந்த விஷயத்தில் முன்பு நான் எதைக் கூறினேனோ அதை அறிவதால் எல்லா லோகங்களும், எல்லா காமனைகளும் அடைவதால் அதுவே அம்ருதம் என்றும் பூமா என்றும் அழைக்கப்படுகிறது. ஆகையால் அதுவே அபயம், அதுவே பிரஹ்மம். அது மிகப்பழமையானது ஆகும்.
अथैतत्प्रजापतिनोक्तम् अक्षिणि पुरुषो दृश्यते इति वचः श्रुत्वा छायारूपं पुरुषं जगृहतुः । गृहीत्वा च दृढीकरणाय प्रजापतिं पृष्टवन्तौ — अथ योऽयं हे भगवः अप्सु परिख्यायते परि समन्तात् ज्ञायते, यश्चायमादर्शे आत्मनः प्रतिबिम्बाकारः परिख्यायते खङ्गादौ च, कतम एष एषां भगवद्भिरुक्तः, किं वा एक एव सर्वेष्विति ।
அனுவாதம் - அதன்பின் பிரஜாபதியினால் கூறப்பட்ட நேத்திரத்தின் உள் புருஷன் காணப்படுகின்றான் என்ற வசனத்தைக் கேட்டு நிழல்ரூப புருஷன் என்று கிரஹித்துக் கொண்டார்கள். அவ்வாறு கிரஹித்துக்கொண்டு அதைத் திடப்படுத்துவதற்காக பிரஜாபதியைக் கேட்டார்கள் - ஹே பகவானே! மேலும் எந்த புருஷன் ஜலத்தில் எங்கும் தோன்றுகின்றானோ, அவ்வாறே கண்ணாடியில் தன்னுடைய பிரதிபிம்பம் தோன்றுகிறதோ அல்லது பளபளப்பான கத்தி முதலியவைகளில் தோன்றுவது போலவா. அதாவது நீங்கள் கூறியவைகளில் எது ஆத்மா? அல்லது இவை எல்லாவற்றிலும் ஒரே ஆத்மாவா என்றனர்.
एवं पृष्टः प्रजापतिरुवाच — एष उ एव यश्चक्षुषि द्रष्टा मयोक्त इति । एतन्मनसि कृत्वा एषु सर्वेष्वन्तेषु मध्येषु परिख्यायत इति ह उवाच ॥
அனுவாதம் - இவ்வாறு கேட்கப்பட்ட பிரஜாபதி கூறினார் - இந்த நேத்திரத்தின் உள் (மத்தியில்) இருக்கும் திருஷ்டாவைக் கூறினேன். அதுவே ஆத்மா என்பதை மனதில் வைத்துக்கொண்டு இதுவே எல்லாவற்றிற்குள்ளும் காணப்படுகிறது என்று கூறினார்.
ननु कथं युक्तं शिष्ययोर्विपरीतग्रहणमनुज्ञातुं प्रजापतेः विगतदोषस्य आचार्यस्य सतः ?
அனுவாதம் - சங்கை - ஆனால் தோஷங்கள் அற்ற ஆச்சாரியராகி பிரஜாபதி தன்னுடைய இரண்டு சிஷ்யர்களும் விபரீதமாக கிரஹிக்கப்பட்டதை ஒப்புக்கொள்வது எவ்வாறு பொருந்தும்?
सत्यमेवम् , नानुज्ञातम् ।
அனுவாதம் - ஸமாதானம் - உண்மையே. ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
कथम् ?
அனுவாதம் - சங்கை - எவ்வாறு?
आत्मन्यध्यारोपितपाण्डित्यमहत्त्वबोद्धृत्वौ हि इन्द्रविरोचनौ, तथैव च प्रथितौ लोके ; तौ यदि प्रजापतिना ‘मूढौ युवां विपरीतग्राहिणौ’ इत्युक्तौ स्याताम् ; ततः तयोश्चित्ते दुःखं स्यात् ; तज्जनिताच्च चित्तावसादात् पुनःप्रश्नश्रवणग्रहणावधारणं प्रति उत्साहविघातः स्यात् ; अतो रक्षणीयौ शिष्याविति मन्यते प्रजापतिः । गृह्णीतां तावत् , तदुदशरावदृष्टान्तेन अपनेष्यामीति च ।
அனுவாதம் - ஸமா-தா-ன-ம் - இந்திரன் விரோசனன் இருவரும் தங்களிடத்தில் பாண்டித்யம், மஹத்துவம், புத்திமான் என்று ஆரோபித்துக்கொண்டும், அவ்வாறே அந்த லோகத்தில் காணப்படுகின்றனர். பிரஜாபதி அவர்களிடம் நீங்கள் விபரீதமாக கிரஹித்துக்கொண்டு மூடர்களாய் இருக்கின்றீர்கள் என்று கூறினால் அதனால் அவர்களுடைய மனதில் துக்கம் உண்டாகும். அந்த துக்கம் உண்டானதால் சித்தத்தில் சோர்வு உண்டாகி கேள்வி கேட்பதற்கோ, சிரவணம் செய்வதற்கோ கிரஹித்து அதைப் புரிந்துகொள்வதற்கோ உத்சாகம் இல்லாதவர்களாக ஆகிவிடுவர். ஆகையால் சிஷ்யர்களை ரக்ஷிக்க வேண்டும் என்று பிரஜாபதி நினைத்தார். இப்பொழுது விபரீதமாக கிரஹித்ததை நல்ல முறையில் (உண்மையை) கிரஹிப்பதற்காக ஜலசராவ திருஷ்டாந்தம் மூலமாக அதை (விபரீதமாக கிரஹித்ததை) நிவிர்த்தி செய்கிறார்.
ननु न युक्तम् एष उ एव इत्यनृतं वक्तुम् ।
அனுவாதம் - சங்கை - ஆனால் இந்த இதுவே ஆத்மா என்று கூறிக்கொண்டு மித்யா என்று கூறுவது உசிதமாகாது.
न च अनृतमुक्तम् ।
அனுவாதம் - ஸமா-தா-ன-ம் - அவர் மித்யையாக கூறவில்லை.
कथम् ?
அனுவாதம் - சங்கை - எவ்வாறு?
आत्मनोक्तः अक्षिपुरुषः मनसि संनिहिततरः शिष्यगृहीताच्छायात्मनः ; सर्वेषां चाभ्यन्तरः ‘सर्वान्तरः’ (बृ. उ. ३ । ५ । १) इति श्रुतेः ; तमेवावोचत् एष उ एव इति ; अतो नानृतमुक्तं प्रजापतिना ॥ तथा च तयोर्विपरीतग्रहणनिवृत्त्यर्थं हि आह —
அனுவாதம் - ஸமா-தா-ன-ம் - சிஷ்யனால் கிரஹிக்கப்பட்ட நிழல் (ச்சாயா) ஆத்மாவைக்காட்டிலும் பிரஜாபதியினால் ஸ்வயமாகக் கூறிய நேத்திரத்தின் உள் இருக்கும் புருஷன் அவர்களின் மனதில் நிலைபெற்றதாகும். “सर्वेषां चाभ्यन्तरः” (சர்வேஷாம் சாப்யந்தர:) என்பது சுருதி வாக்கியம் ஆகும். “एष उ एव” (ஏஷ உ ஏவ) (அதுவே எல்லாவற்றிற்கும் ஆத்மா) என்று பிரஜாபதி அதையே கூறினார். ஆகையால் அவர் மித்யாவாகக் கூறவில்லை. அவ்வாறே அவர்களின் விபரீதமாக கிரஹிக்கப்பட்டதை நிவர்த்திப்பதற்காக கூறினார்.
इति सप्तमखण्डभाष्यम् ॥
उदशराव आत्मानमवेक्ष्य यदात्मनो न विजानीथस्तन्मे प्रब्रूतमिति तौ होदशरावेऽवेक्षाञ्चक्राते तौ ह प्रजापतिरुवाच किं पश्यथ इति तौ होचतुः सर्वमेवेदमावां भगव आत्मानं पश्याव आ लोमभ्य आ नखेभ्यः प्रतिरूपमिति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஜலம் நிறைந்த பாத்திரத்தில் நீங்கள் இருவரும் தங்களைப் பார்த்து அந்த ஆத்ம விஷயத்தில் உங்களுக்கு சரியாக அறிய முடியவில்லையெனில் என்னிடம் கூறுங்கள் என்று கூற அவர்கள் இருவரும் ஜலம் நிறைந்த பாத்திரத்தில் பார்த்தார்கள். அவர்களிடம் பிரஜாபதி கேட்டார் - நீங்கள் என்ன பார்த்தீர்கள் என்று. அவர்கள் கூறினார் - ஹே பகவானே! நாங்கள் எங்களுடைய இந்த முடியிலிருந்து நகம் வரையில் உள்ள இந்த ஆத்மாவை (சரீரத்தை) முழுமையாகப் பார்த்தோம் என்று கூறினார்.
उदशरावे उदकपूर्णे शरावादौ आत्मानमवेक्ष्य अनन्तरं यत् तत्र आत्मानं पश्यन्तौ न विजानीथः तन्मे मम प्रब्रूतम् आचक्षीयाथाम् — इत्युक्तौ तौ ह तथैव उदशरावे अवेक्षाञ्चक्राते अवेक्षणं चक्रतुः । तथा कृतवन्तौ तौ ह प्रजापतिरुवाच — किं पश्यथः इति ।
அனுவாதம் - ஜலம் நிறைந்த பாத்திரம் முதலியவைகளில் உங்களைப் பார்த்து பின் தங்கள் ஆத்மாவை பார்த்தபின் ஏதாவது புரியவில்லையெனில் நீங்கள் என்னிடம் கூறுங்கள் என்றார். இவ்வாறு அவர் கூறியபின் அவர்கள் அவர் கூறியவாறு ஜலப்பாத்திரத்தில் பார்த்தார்கள். அவர் சொன்னபடி செய்தார்கள். அப்பொழுது அவர்களிடம் பிரஜாபதி நீங்கள் என்ன பார்த்தீர்கள் என்று கேட்டார்.
ननु तन्मे प्रब्रूतम् इत्युक्ताभ्याम् उदशरावे अवेक्षणं कृत्वा प्रजापतये न निवेदितम् — इदमावाभ्यां न विदितमिति, अनिवेदिते च अज्ञानहेतौ ह प्रजापतिरुवाच — किं पश्यथ इति, तत्र कोऽभिप्राय इति ;
அனுவாதம் - சங்கை - ஆனால் அதை என்னிடம் கூறவேண்டும் என்று கூறப்பட்டதற்கு அவ்விருவரும் ஜலம் நிறப்பப்பட்ட பாத்திரத்தில் பார்த்துவிட்டு பிரஜாபதியிடம் அக்ஞானத்தால் அவர்கள் அறியாததால் ஒன்றும் தெரிவிக்கவில்லை என்றாலும் பிரஜாபதி கேட்டார் நீங்கள் எதைப் பார்த்தீர்கள்? என்று கேட்டார். அதன் அபிப்பிராயம் என்ன?
उच्यते — नैव तयोः इदमावयोरविदितमित्याशङ्का अभूत् , छायात्मन्यात्मप्रत्ययो निश्चित एव आसीत् । येन वक्ष्यति ‘तौ ह शान्तहृदयौ प्रवव्रजतुः’ (छा. उ. ८ । ८ । ३) इति । न हि अनिश्चिते अभिप्रेतार्थे प्रशान्तहृदयत्वमुपपद्यते । तेन नोचतुः इदमावाभ्यामविदितमिति । विपरीतग्राहिणौ च शिष्यौ अनुपेक्षणीयौ इति स्वयमेव पप्रच्छ — किं पश्यथः इति ; विपरीतनिश्चयापनयाय च वक्ष्यति ‘साध्वलङ्कृतौ’ (छा. उ. ८ । ८ । २) इत्येवमादि ।
அனுவாதம் - ஸமாதானம் - அவர்கள் தங்களுக்கு தாங்கள் அறியவில்லை என்ற சங்கை அவர்களுக்கு ஏற்படவில்லை. ஆகையால் சாயா (நிழல்) மாத்திரத்திலேயே ஆத்மா என்ற நிச்சயமே அவர்களுக்கு இருந்தது. ஆகையால் சுருதி இனிகூறப்போகிறது. “तौ ह शान्तह्य्दयौ प्रवव्रजतुः” (தெள ஹ சாந்த ஹ்ருதயெள ப்ரவவ்ரஜது:) என்று. தான் விரும்பிய வஸ்துவில் நிச்சமில்லாவிடில் அதை அறியமுடியாது. ஆகையால் அவர்கள் நாங்கள் அதை அறியவில்லை என்று கூறவில்லை. ஆகையால் இவ்வாறு விபரீதமாக கிரஹித்த சிஷ்யர்களை உபேக்ஷை செய்யகூடாது என்பதற்காக தானே நீங்கள் எதைப் பார்த்தீர்கள்? என்று கேட்டார். விபரீத நிச்சயத்தை போக்குவதற்காகவும் “साध्वलकृतौ” (சாத்வலங்க்ருதெள) என்பது முதலிய வாக்கியங்களால் இனிக் கூறப்படுகிறது.
तौ ह ऊचतुः — सर्वमेवेदम् आवां भगवः आत्मानं पश्यावः आ लोमभ्य आ नखेभ्यः प्रतिरूपमिति, यथैव आवां हे भगवः लोमनखादिमन्तौ स्वः, एवमेवेदं लोमनखादिसहितमावयोः प्रतिरूपमुदशरावे पश्याव इति ॥
அனுவாதம் - அவர்கள் கூறினர் - பகவானே! நாங்கள் இருவரும் எங்களுடைய ஆத்மாவை முடியிலிருந்து நகம் வரை உள்ளவை எல்லாம் என்று பார்க்கிறோம், ஹே பகவானே! எங்கள் ஸ்வரூபம் இவ்வாறு நாங்கள் பாத்திரத்தில் உள்ள ஜலத்தில் எங்கள் பிரதிபிம்பத்தை முடி முதல் நகம் வரை உள்ளதாகப் பார்க்கிறோம்.
तौ ह प्रजापतिरुवाच साध्वलङ्कृतौ सुवसनौ परिष्कृतौ भूत्वोदशरावेऽवेक्षेथामिति तौ ह साध्वलङ्कृतौ सुवसनौ परिष्कृतौ भूत्वोदशरावेऽवेक्षाञ्चक्राते तौ ह प्रजापतिरुवाच किं पश्यथ इति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அவர்கள் இருவரிடமும் பிரஜாபதி கூறினர் - நீங்கள் நன்றாக அலங்கரித்துக்கொண்டு அழகான வஸ்திரத்தை அணிந்துகொண்டு பகட்டாகச் சென்று அந்த பாத்திரத்தில் உள்ள ஜலத்தில் உங்களைப் பாருங்கள். அவர்கள் இருவரும் நன்றாக அலங்கரித்துக் கொண்டு அழகான வஸ்திரத்தை அணிந்து கொண்டு ஆடம்பரமாக ஜலம் நிறைந்த பாத்திரத்தில் பார்த்தார்கள். அவர்களிடம் பிரஜாபதி வினாவினார் - நீங்கள் எதைப் பார்த்தீர்கள்.
तौ ह पुनः प्रजापतिरुवाच च्छायात्मनिश्चयापनयाय — साध्वलङ्कृतौ यथा स्वगृहे सुवसनौ महार्हवस्त्रपरिधानौ परिष्कृतौ च्छिन्नलोमनखौ च भूत्वा उदशरावे पुनरीक्षेथामिति । इह च न आदिदेश — यदज्ञातं तन्मे प्रब्रूतम् इति । कथं पुनरनेन साध्वलङ्कारादि कृत्वा उदशरावे अवेक्षणेन तयोश्छायात्मग्रहोऽपनीतः स्यात् ?
அனுவாதம் - (மேலும்) மறுபடியும் பிரஜாபதி சாயா ஆத்மாவில் உள்ள அவர்களது நிச்சயத்தைப் போக்குவதற்காக அவர்களிடம் இவ்வாறு கூறினார்- எவ்வாறு தான் வசிக்கும் வீட்டில் எவ்வாறு நன்றாக அலங்கரித்துக்கொண்டு விலை மதிப்பற்ற ஆடைகளை அணிந்து கொண்டு முடி, நகம் இவைகளை வெட்டிக்கொண்டு ஜலம் நிறப்பப்பட்ட பாத்திரத்தில் மறுபடியும் பார்த்தார்கள். அங்கு பிரஜாபதி நீங்கள் அறியாததை எனக்குக் கூறுங்கள் என்று கூறவில்லை. அழகாக நன்றாக அலங்கரித்தல் முதலியவைகளை செய்துகொண்டு ஜலம் நிறைந்த பாத்திரத்தில் பார்ப்பதினால் அது எவ்வாறு அவர்களுடைய சாயா ஆத்மா என்ற நிச்சயம் (கிரஹித்தது) எவ்வாறு நீங்கும்?
साध्वलङ्कारसुवसनादीनामागन्तुकानां छायाकरत्वमुदशरावे यथा शरीरसम्बद्धानाम् , एवं शरीरस्यापि च्छायाकरत्वं पूर्वं बभूवेति गम्यते ; शरीरैकदेशानां च लोमनखादीनां नित्यत्वेन अभिप्रेतानामखण्डितानां छायाकरत्वं पूर्वमासीत् ; छिन्नेषु च नैव लोमनखादिच्छाया दृश्यते ; अतः लोमनखादिवच्छरीरस्याप्यागमापायित्वं सिद्धमिति उदशरावादौ दृश्यमानस्य तन्निमित्तस्य च देहस्य अनात्मत्वं सिद्धम् ; उदशरावादौ छायाकरत्वात् , देहसम्बद्धालङ्कारादिवत् ।
அனுவாதம் - எவ்வாறு தேஹத்துடன் சேர்க்கப்பட்டு நன்றாக அலங்கரித்துக்கொண்டும், விலை மதிப்பற்ற ஆடைகளை அணிந்து கொண்டும், இந்த நடுவில் வந்தவைகளுடன் ஜலம் நிறைந்த பாத்திரத்தில் எந்த சாயாரூபம் உள்ளதோ அவ்வாறே முன்பும் சரீரத்தின் சாயாரூபத்துவம் இருந்தது என்று அறியப்படுகிறது. சரீரத்தின் ஏகதேச ரூபமாயும் அவ்வாறே நித்ய ரூபமாய் கருதப்பட்ட வெட்டப்படாத முடியும், நகமும் கூட சாயாரூபமாகவே இருந்தது. ஆனால் இப்பொழுது முடியும், நகமும் வெட்டப்பட்ட பின் முடியினதும், நகத்தினதும் சாயா ரூபத்துவம் காணப்படவில்லை ஆகையால் முடியும் நகமும் போல் சரீரமும் ஆகாமாபாயீத்துவம் (நடுவில் வந்து போகக்கூடியது) என்பது சித்திக்கின்றது. காணப்படுகின்ற அதன் நிமித்தரூபமான தேஹத்திற்கும் அநாத்மத்தன்மை சித்திக்கிறது. ஏன் எனில் தேஹ சம்பந்தப்பட்ட அலங்காரம் முதலியவைகளைப்போல் அதற்கும் ஜலம் நிறைந்த பாத்திரங்களில் தோன்றும் சாயாத்துவம் போன்றதாகும்.
न केवलमेतावत् , एतेन यावत्किञ्चिदात्मीयत्वाभिमतं सुखदुःखरागद्वेषमोहादि च कादाचित्कत्वात् नखलोमादिवदनात्मेति प्रत्येतव्यम् । एवमशेषमिथ्याग्रहापनयनिमित्ते साध्वलङ्कारादिदृष्टान्ते प्रजापतिनोक्ते, श्रुत्वा तथा कृतवतोरपि च्छायात्मविपरीतग्रहो नापजगाम यस्मात् , तस्मात् स्वदोषेणैव केनचित्प्रतिबद्धविवेकविज्ञानौ इन्द्रविरोचनौ अभूतामिति गम्यते । तौ पूर्ववदेव दृढनिश्चयौ पप्रच्छ — किं पश्यथः इति ॥
அனுவாதம் - இவ்வளவு மட்டுமல்ல. மேலும் இதனால் சுகம், துக்கம், ராகம், துவேஷம் மேலும் மோஹம் ஆகியவைகளை எவ்வளவு ஆத்மரூபமாக பாவிக்கின்றார்களோ அதுவரை இருக்கிறது. அதுவும் முடி முதல் நகம் முதலியவைகளுக்கு சமானமாக அப்பொழுது, அப்பொழுது தோன்றுவதால் அநாத்மாவாகும். இவ்வாறு எல்லாம் மித்யையால் கிரஹிக்கப்பட்டவைகளை நிவிர்த்தி செய்வதற்காக பிரஜாபதி கூறிய நன்றாக அலங்கரித்தல் முதலிய திருஷ்டாந்தங்களைக் கேட்டும் அவர்களுக்கு சாயா சம்பந்தமான விபரீதஞானம் நிவிர்த்தி ஆகவில்லை. எதனால் இவ்வாறு அறியப்படுகிறதோ அதனால் இந்திரன், விரோச்சனன் இருவரும் ஏதோ ஒரு பிரதிபந்தத்தால் விவேக விக்ஞானம் அற்றவர்களாய் இருக்கின்றனர் என்பது தெரிகிறது. (பிரஜாபதி) அவர்கள் இருவரிடமும் இவ்வாறு வினவினார் -நீங்கள் எதைக் காண்கின்றீர்கள் என்று.
तौ होचतुर्यथैवेदमावां भगवः साध्वलङ्कृतौ सुवसनौ परिष्कृतौ स्व एवमेवेमौ भगवः साध्वलङ्कृतौ सुवसनौ परिष्कृतावित्येष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्मेति तौ ह शान्तहृदयौ प्रवव्रजतुः ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - அவர்கள் இருவரும் கூறினார் - ஹே பகவானே! எவ்வாறு நாங்கள் இருவரும் நன்றாக அலங்காரத்துடன், அழகான வஸ்திரம் அணிந்தும், ஆடம்பரமாக இருக்கின்றோமோ அவ்வாறே (ஹே பகவானே) அவைகளும் (சாயைகளும்) நன்றாக அலங்கரித்து, அழகான ஆடை அணிந்து ஆடம்பரமாக இருக்கின்றன. அப்பொழுது பிரஜாபதி கூறினார் - அதுவே ஆத்மா, அது அம்ருதம், அது அபயம் மேலும் அதுவே பிரஹ்மம் என்று. அப்பொழுது இருவரும் மனஸ்சாந்தம் அடைந்து சென்றனர்.
तौ तथैव प्रतिपन्नौ, यथैवेदमिति पूर्ववत् , यथा साध्वलङ्कारादिविशिष्टौ आवां स्वः, एवमेवेमौ छायात्मानौ — इति सुतरां विपरीतनिश्चयौ बभूवतुः । यस्य आत्मनो लक्षणम् ‘य आत्मापहतपाप्मा’ (छा. उ. ८ । ७ । १) इत्युक्त्वा पुनस्तद्विशेषमन्विष्यमाणयोः ‘य एषोऽक्षिणि पुरुषो दृश्यते’ (छा. उ. ८ । ७ । ४) इति साक्षादात्मनि निर्दिष्टे, तद्विपरीतग्रहापनयाय उदशरावमसाध्वलङ्कारदृष्टान्तेऽप्यभिहिते, आत्मस्वरूपबोधाद्विपरीतग्रहो नापगतः । अतः स्वदोषेण केनचित्प्रतिबद्धविवेकविज्ञानसामर्थ्याविति मत्वा यथाभिप्रेतमेव आत्मानं मनसि निधाय एष आत्मेति ह उवाच एतदमृतमभयमेतद्ब्रह्मेति प्रजापतिः पूर्ववत् । न तु तदभिप्रेतमात्मानम् ।
அனுவாதம் - அவர்கள் இருவரும் அவ்வாறே புரிந்து கொண்டார்கள். “यथैवेदम्” (யதைவேதம்) அதாவது முன்புபோல் எவ்வாறு நன்கு அலங்கரித்தல் முதலிய கைகளுடன் கூடி நாங்கள் சுயமாகவே இந்த சாயா ஆத்மாக்கள் என்று விபரீத நிச்சமுடையவர்களாய் ஆனார்கள். எந்த ஆத்மாவின் லக்ஷணம் “य आत्मापहतपाप्मा” (ய ஆத்மாபஹதபாப்மா) என்று இவ்வாறு கூறி மறுபடியும் அதன் விசேஷத்தை தேடி அறிய விரும்புவர்களான அவர்களைக் குறித்து “அந்த கண்ணின் உள்ளே இருக்கும் புருஷன் காணப்படுகிறான்” என்று இவ்வாறு ஆத்மாவை சாக்ஷாத்தாக நிர்தேசம் செய்யப்பட்ட பொழுது அதை விபரீதமாக கிரஹிக்கப்பட்டதால் அதைப் போக்குவதற்காக ஜலம் நிறைந்த பாத்திரம் மேலும் நன்கு அலங்கரித்தல் முதலிய திருஷ்டாந்தங்கள் அளித்தாலும் அவர்கள் இருவரும் ஆத்மாஞான ஸ்வரூபத்தை விபரீதமாக கிரஹித்தது நிவிர்த்தி ஆகவில்லை, என்று சுருதி அதனால் அவர்கள் இருவருக்கும் உள்ள விவேக விக்ஞான சாமர்த்தியம் தன்னுடைய ஏதோ ஒரு தோஷத்தால் பிரதிபந்தம் செய்யப்பட்டுள்ளது என்று பிரஜாபதி நினைத்து எவ்வாறு தான் அபிப்பிராயப்பட்டாரோ அவ்வாறு ஆத்மாவை மனதில் வைத்துக்கொண்டு “இது ஆத்மா” என்று கூறினார். இது அம்ருதம், அபயம், இதுவே பிரஹ்மம் என்று பிரஜாபதி முன்புபோல் கூறினார். அந்த ஆத்மாவை குறித்து அபிப்பிராயப்பட்டு அல்ல.
‘य आत्मा’ (छा. उ. ८ । ७ । १) इत्याद्यात्मलक्षणश्रवणेन अक्षिपुरुषश्रुत्या च उदशरावाद्युपपत्त्या च संस्कृतौ तावत् । मद्वचनं सर्वं पुनः पुनः स्मरतोः प्रतिबन्धक्षयाच्च स्वयमेव आत्मविषये विवेको भविष्यतीति मन्वानः पुनर्ब्रह्मचर्यादेशे च तयोश्चित्तदुःखोत्पत्तिं परिजिहीर्षन् कृतार्थबुद्धितया गच्छन्तावप्युपेक्षितवान्प्रजापतिः । तौ ह इन्द्रविरोचनौ शान्तहृदयौ तुष्टहृदयौ कृतार्थबुद्धी इत्यर्थः ; न तु शम एव ; शमश्चेत् तयोर्जातः विपरीतग्रहो विगतोऽभविष्यत् ; प्रवव्रजतुः गतवन्तौ ॥
அனுவாதம் - “य आत्मा” (ய ஆத்மா = எந்த ஆத்மா) (य आत्मापहतपाप्मा) = ய ஆத்மாபஹதபாப்மா) முதலிய ஆத்மாவின் லக்ஷணங்களைக் கேட்டதினாலும் கண்ணில் உள்ள புருஷ சம்பந்தமான சுருதியினாலும் மேலும் ஜலபாத்திர முதலிய திருஷ்டாந்தங்களாலும் அவர்களுக்கு சம்ஸ்காரம் ஏற்பட்டு நான் கூறியவற்றை மறுபடியும், மறுபடியும் சிந்தித்து பிரதிபந்தம் க்ஷயமாகி சுயமாகவே ஆத்ம விஷயத்தில் விவேகம் என்று கருதி மறுபடியும் அவர்களுக்கு பிரஹ்மச்சரிய உபதேசம் செய்தால் அவர்களுக்கு துக்கம் உண்டாகும் என்று அதை தவிர்ப்பதற்காக பிரஜாபதி கிருதார்த்த புத்தியை அடைந்திருக்கும் அவர்களைத் தவிர்த்தார். அந்த இந்திரன் விரோச்சனன் இருவரும் சாந்த ஹிருதயம் உடையவர்களாய் அதாவது சந்தோஷமடைந்தவர்களாய் கிருதார்த்த புத்தியுடன் சென்றனர் என்பது பொருள். ஆனால் அவர்கள் சாந்தி அடையவில்லை. ஏன் எனில் அவர்கள் உண்மையான சாந்தியை அடைந்திருந்தால் அவர்கள் விபரீதமாக கிரஹித்தது நிவிர்த்தி ஆகி இருக்கும்.
तौ हान्वीक्ष्य प्रजापतिरुवाचानुपलभ्यात्मानमननुविद्य व्रजतो यतर एतदुपनिषदो भविष्यन्ति देवा वासुरा वा ते पराभविष्यन्तीति स ह शान्तहृदय एव विरोचनोऽसुराञ्जगाम तेभ्यो हैतामुपनिषदं प्रोवाचात्मैवेह महय्य आत्मा परिचर्य आत्मानमेवेह महयन्नात्मानं परिचरन्नुभौ लोकाववाप्नोतीमं चामुं चेति ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - பிரஜாபதி அவர்கள் இருவரும் செல்வதைப் பார்த்து இவ்வாறு கூறினார்-அவர்கள் இருவரும் ஆத்மாவை அறியாமலேயே அதாவது அதை சாக்ஷாத்காரம் செய்யாமலேயே செல்கின்றனர். தேவனோ அல்லது அசுரனோ இவ்வாறு விபரீதமாக செய்தால் அவர்களுக்குத் தோல்வியே ஏற்படும் என்று. எந்த அந்த விரோச்சனன் சாந்தமனது உடையவனாய் அசுரர்களிடம் சென்று அவர்களுக்கு ஆத்ம வித்தையைக் கேட்கச் செய்தான்- இந்த லோகத்தில் ஆத்மாவே (தேஹமே) பூஜைக்கு உரியது. மேலும் ஆத்மாவையே சேவை செய்யவேண்டும். ஆத்மாவை பூஜை செய்பவனும் சேவை செய்பவனும் ஆகிய புருஷன் இகலோகம், பரலோகம் ஆகிய இரண்டையும் அடைவான்.
एवं तयोः गतयोः इन्द्रविरोचनयोः राज्ञोः भोगासक्तयोः यथोक्तविस्मरणं स्यात् इत्याशङ्क्य अप्रत्यक्षं प्रत्यक्षवचनेन च चित्तदुःखं परिजिहीर्षुः
அனுவாதம் - அ.கை - இவ்வாறு செல்கின்ற அந்த ராஜாக்களான இந்திரன் விரோசனர்களுக்கு போகத்தில் பற்று உள்ளதால் முன்பு கூறப்பட்ட மறதி இருக்கலாம் என்று சங்கை செய்து பிரத்யக்ஷம் அல்லாததை பிரத்யக்ஷ வசனத்தால் சித்தத்தில் உள்ள துக்கத்தை நிவிர்த்தி செய்ய இச்சித்தவராய் -
तौ दूरं गच्छन्तौ अन्वीक्ष्य य आत्मापहतपाप्मा इत्यादिवचनवत् एतदप्यनयोः श्रवणगोचरत्वमेष्यतीति मत्वा उवाच प्रजापतिः — अनुपलभ्य यथोक्तलक्षणमात्मानम् अननुविद्य स्वात्मप्रत्यक्षं च अकृत्वा विपरीतनिश्चयौ च भूत्वा इन्द्रविरोचनावेतौ व्रजतः गच्छेयाताम् । अतः यतरे देवा वा असुरा वा किं विशेषितेन, एतदुपनिषदः आभ्यां या गृहीता आत्मविद्या सेयमुपनिषत् येषां देवानामसुराणां वा, त एतदुपनिषदः एवंविज्ञानाः एतन्निश्चयाः भविष्यन्तीत्यर्थः । ते किम् ? पराभविष्यन्ति श्रेयोमार्गात्पराभूता बहिर्भूता विनष्टा भविष्यन्तीत्यर्थः ।
அனுவாதம் - (பிரஜாபதி அவ்விருவரும் செல்வதைப் பார்த்து எந்த அபஹதபாப்மா முதலிய வசனங்கள் போல் அதுவும் அவர்களுக்கு ஸ்ரோத்திரத்தால் கிரஹிக்க முடியும் என்று கருதி கூறினார். கூறப்பட்ட லக்ஷணமுடைய ஆத்மாவை அறிய முடியாமலும், தனக்கு பிரத்யக்ஷம் செய்யாமலும் விபரீதமாக நிச்சயம் செய்து இந்திரன் விரோச்சனன் இருவரும் சென்றுவிட்டார்கள். ஆகையால் தேவர்களும் அசுரர்களும் விசேஷ ரூபமாக இந்த உபநிஷத் வாயிலாக அவர்கள் எதை ஆத்மவித்யையாக கிரஹித்தார்களோ அந்த இந்த உபநிஷத் இந்த தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இந்த உபநிஷத் இவ்வாறு அறிந்து நிச்சயம் செய்வார்கள் என்பதுபொருள். அவர்கள் ஜெயம் அடையமாட்டார்கள். அதாவது ஸ்ரேயோ மார்க்கத்தை அடையாமல் பகிர்முகத்திலேயே நிஷ்டை உடையவர்கள் ஆவார்கள் என்பது பொருள்.
स्वगृहं गच्छतोः सुरासुरराजयोः योऽसुरराजः, स ह शान्तहृदय एव सन् विरोचनः असुराञ्जगाम । गत्वा च तेभ्योऽसुरेभ्यः शरीरात्मबुद्धिः योपनिषत् तामेतामुपनिषदं प्रोवाच उक्तवान् — देहमात्रमेव आत्मा पित्रोक्त इति । तस्मादात्मैव देहः इह लोके महय्यः पूजनीयः, तथा परिचर्यः परिचर्यणीयः, तथा आत्मानमेव इह लोके देहं महयन् परिचरंश्च उभौ लोकौ अवाप्नोति इमं च अमुं च । इहलोकपरलोकयोरेव सर्वे लोकाः कामाश्च अन्तर्भवन्तीति राज्ञोऽभिप्रायः ॥
அனுவாதம் - (தங்கள் இருப்பிடத்திற்குச் செல்லும் சுர அசுர ராஜாக்களில் அந்த அசுர ராஜா விரோசனன் சாந்த மனமுடையவனாகி அசுரர்களிடம் சென்றான். அங்கு சென்று அசுரர்களிடம் எந்த தேஹாத்ம ரூப உபநிஷத் உள்ளதோ அந்த உபநிஷத்தை அவர்களைக் கேட்கச்செய்தான். அதாவது தேஹமாத்திரமே ஆத்மா என்று பிரஜாபதி கூறினார் என்று கூறினான். ஆகையால் இவ்வுலகில் தேஹமே ஆத்மா. அதை பூஜை செய்யவேண்டும். சேவை செய்யவேண்டும். அதனால் இந்த லோகம், மேல் லோகம் ஆகியவைகளில் உள்ள எல்லா லோகங்களும், காமனைகளும் அதில் அந்தர் பாவமாகிறது என்பது ராஜாவின் அபிப்ராயமாகும்.
तस्मादप्यद्येहाददानमश्रद्दधानमयजमानमाहुरासुरो बतेत्यसुराणाꣳ ह्येषोपनिषत्प्रेतस्य शरीरं भिक्षया वसनेनालङ्कारेणेति सꣳस्कुर्वन्त्येतेन ह्यमुं लोकं जेष्यन्तो मन्यन्ते ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - ஆகையால் இந்த உலகில் தானம் செய்யாதவனும், (சத் காரியங்களில்) சிரத்தை இல்லாதவனும், யக்ஞம் செய்யாதவனும் ஆகிய புருஷனை சிரேஷ்ட புருஷர்கள். ஹே! அவன் அசுர ஸ்வபாவம் உள்ளவன் என்று கூறுவர். அந்த உபநிஷத் அசுரர்களுடையது. அவர்கள் இறந்த புருஷனின் சரீரத்தை சந்தனம், புஷ்பம், அன்னம், வஸ்திரம் இவைகளால் அலங்கரித்து சேவை செய்வதனால் நாம் பரலோகத்தை அடைவோம் என்று கருதுகின்றனர்.
तस्मात् तत्सम्प्रदायः अद्याप्यनुवर्तत इति इह लोके अददानं दानमकुर्वाणम् अविभागशीलम् अश्रद्दधानं सत्कार्येषु श्रद्धारहितं यथाशक्त्ययजमानम् अयजनस्वभावम् आहुः आसुरः खल्वयं यत एवंस्वभावः बत इति खिद्यमाना आहुः शिष्टाः । असुराणां हि यस्मात् अश्रद्दधानतादिलक्षणैषोपनिषत् ।
அனுவாதம் - ஆகையால் இந்த (அசுரர்களின்) சம்பிரதாயம் இன்றளவும் உள்ளது. ஆகையால் இந்த உலகில் தானம் செய்யாதவர்களாயும் சத்காரியங்களில் ஈடுபட சிரத்தை அற்றவர்களாயும், தன் சக்திக்குத் தகுந்தவாறு யக்ஞம் செய்யாதவர்களாயும் இருப்பவர்களை அசுர புத்தியுள்ளவர்கள் எனப்படுகின்றனர். ஆகையால் இந்த ஸ்வபாவம் இருப்பவர்களை மேலோர் நிச்சயமாக அசுர ஸ்வபாவம் உடையவர்கள் என்கின்றனர். எதனால் அசிரத்தை முதலிய லக்ஷணமுடைய இந்த உபநிஷத் அசுரர்களுடையதாகும்.
तयोपनिषदा संस्कृताः सन्तः प्रेतस्य शरीरं कुणपं भिक्षया गन्धमाल्यान्नादिलक्षणया वसनेन वस्त्रादिनाच्छादनादिप्रकारेणालङ्कारेण ध्वजपताकादिकरणेनेत्येवं संस्कुर्वन्ति । एतेन कुणपसंस्कारेण अमुं प्रेत्य प्रतिपत्तव्यं लोकं जेष्यन्तो मन्यन्ते ॥
அனுவாதம் - அந்த (அசுர) உபநிஷத்தால் சம்ஸ்காரம் அடைந்தவர்களாய் இறந்த சரீரத்தை அதாவது சவத்தை பிக்ஷயைினால் அதாவது சந்தனம், மாலைகள், அன்னம் முதலியவைகளாலும் வஸ்திரம் முதலியவைகளால் போர்த்தி அலங்காரம் செய்து கொடி, பதாகம் முதலியவைகளைக் கொண்டு நன்றாக ஆடம்பரமாக பெருமைப்படுத்தி சவசம்ஸ்காரத்தால் இறந்தபின் தான் அடையவேண்டிய மேல் லோகத்திற்கான தகுதி பெற்று அதை அடையலாம் என்று கருதுகின்றனர்.
इति अष्टमखण्डभाष्यम् ॥
अथ हेन्द्रोऽप्राप्यैव देवानेतद्भयं ददर्श यथैव खल्वयमस्मिञ्छरीरे साध्वलङ्कृते साध्वलङ्कृतो भवति सुवसने सुवसनः परिष्कृते परिष्कृत एवमेवायमस्मिन्नन्धेऽन्धो भवति स्रामे स्रामः परिवृक्णे परिवृक्णोऽस्यैव शरीरस्य नाशमन्वेष नश्यति नाहमत्र भोग्यं पश्यामीति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஆனால் இந்திரனோ தேவர்களிடம் செல்லாமலேயே இந்த பயத்தைக் கண்டான். எவ்வாறு இந்த சரீரம் நன்றாக அலங்காரம் செய்தபின் நன்றாக அலங்காரம் செய்யப்பட்டதாகிறது. அவ்வாறே அழகான வஸ்திரம் அணிவிக்கப்பட்ட பின் அழகான உடை அணிந்ததாக ஆகிறது. அவ்வாறே ஆடம்பரமாக ஆக்கப்பட்டபின் ஆடம்பரமாக இருக்கிறது. அவ்வாறே அவன் குருட்டுத்தன்மை அடைந்தால் குருடனாகின்றான் ஒற்றைக் கண் அடைந்தால் ஒற்றைக் கண்ணுடையவன் அடைந்தவனாகின்றான். வெட்டப்பட்டால் வெட்டப்பட்டவனாக ஆகின்றான். அவ்வாறே இந்த சரீரம் நாசம் அடைந்தபின் இதுவும் (ஆத்மாவும்) நஷ்டமாகிறது.
अथ ह किल इन्द्रः अप्राप्यैव देवान् दैव्या अक्रौर्यादिसम्पदा युक्तत्वात् गुरोर्वचनं पुनः पुनः स्मरन्नेव गच्छन् एतद्वक्ष्यमाणं भयं स्वात्मग्रहणनिमित्तं ददर्श दृष्टवान् । उदशरावदृष्टान्तेन प्रजापतिना यदर्थो न्याय उक्तः, तदेकदेशो मघवतः प्रत्यभात् बुद्धौ, येन च्छायत्मग्रहणे दोषं ददर्श ।
அனுவாதம் - ஆனால் இந்திரனோ தேவர்களிடம் செல்லாமல் அவனுடைய தெய்வீகத் தன்மை க்ரோதமற்ற தன்மை முதலிய சம்பத்துக்களை உடையவனாய் இருப்பதால் குருவின் வாக்கியத்தை மறுபடியும் மறுபடியும் நினைத்துக்கொண்டு இருக்கும்பொழுது இந்த இனி கூறப்போகின்ற ஸ்வாத்ம ரூபத்தை கிரஹிப்பதற்காக இந்த பயத்தைக் கண்டான். ஜலசராவ திருஷ்டாந்தத்தால் பிரஜாபிதியினால் அவ்வாறே பகட்டாக இருந்தால் பகட்டாக ஆகிறதோ எதன் பொருட்டு இந்த நியாயம் கூறப்பட்டதோ அதன் ஏகதேசம் இந்திரனுடைய புத்தியில் தோன்றிற்று. அதனால் ச்சாயாத்ம கிரஹணத்தால் ஏற்படும் தோஷத்தைக் கண்டான்.
अथ कथम् ? यथैव खलु अयमस्मिञ्छरीरे साध्वलङ्कृते छायात्मापि साध्वलङ्कृतो भवति, सुवसने च सुवसनः परिष्कृते परिष्कृतः यथा नखलोमादिदेहावयवापगमे छायात्मापि परिष्कृतो भवति नखलोमादिरहितो भवति, एवमेवायं छायात्मापि अस्मिञ्छरीरे नखलोमादिभिर्देहावयवत्वस्य तुल्यत्वात् अन्धे चक्षुषोऽपगमे अन्धो भवति, स्रामे स्रामः । स्रामः किल एकनेत्रः तस्यान्धत्वेन गतत्वात् । चक्षुर्नासिका वा यस्य सदा स्रवति स स्रामः । परिवृक्णः छिन्नहस्तः छिन्नपादो वा । स्रामे परिवृक्णे वा देहे छायात्मापि तथा भवति । तथा अस्य देहस्य नाशमनु एष नश्यति ।
அனுவாதம் - எவ்வாறு? தோஷம் காணப்படுகிறது? எவ்வாறு இந்த சரீரம் நன்கு அலங்கரிக்கப்ட்ட இந்த சாயா ஆத்மாவும் அலங்காரம் உடையதாகின்றதோ, சிறந்த ஆடை அணிந்தால் அதுவும் சிறந்த ஆடையுடன் கூடியதாகின்றதோ, அவ்வாறே பகட்டாக இருந்தால் பகட்டாக (ஆடம்பரமாக) ஆகிறதோ மேலும் எவ்வாறு நகம் முடி ஆகிய அவயவங்களால் நீக்கப்பட்டபொழுது ச்சாயா ஆத்மாவிலும் நகம் ரோமம் முதலியவைகள் (நீக்கப்பட்டதாகிறது) இன்றி இருக்கின்றது. அவ்வாறே இந்த ச்சாயா ஆத்மாவும் இந்த சரீரத்தில் நகம், முடி இவைகள் போன்று இருப்பதால் குருடனாய் அதாவது கண்களின் குருட்டுத்தன்மையால் குருடனாகிறது. மேலும் “स्रामः” (ஸ்ராம:) ஆகிறது. ஸ்ராம: என்றால் ஒரு கண் குருடனாய் இருத்தல் ஆகும். கண் மூக்கு இவைகள் ஒழுகிக் கொண்டிருப்பதால் அது “स्रामः” (ஸ்ராம:) எனப்படுகிறது. வெட்டப்பட்ட கை கால் வெட்டப்பட்டதும் ஆகும். சரீரத்தில் ச்ராமமோ, வெட்டுதலோ ஏற்பட்டால் ச்சாயாத்மாவும் அவ்வாறே ஆகிறது. அவ்வாறே இந்த தேஹம் நாசமடைந்தால் (அந்த ஆத்மாவும்) நாசமடையும்.
अथ अतः
அனுவாதம் - அ.கை - ஆகையால் -
स समित्पाणिः पुनरेयाय तꣳ ह प्रजापतिरुवाच मघवन्यच्छान्तहृदयः प्राव्राजीः सार्धं विरोचनेन किमिच्छन्पुनरागम इति स होवाच यथैव खल्वयं भगवोऽस्मिञ्छरीरे साध्वलङ्कृते साध्वलङ्कृतो भवति सुवसने सुवसनः परिष्कृते परिष्कृत एवमेवायमस्मिन्नन्धेऽन्धो भवति स्रामे स्रामः परिवृक्णे परिवृक्णोऽस्यैव शरीरस्य नाशमन्वेष नश्यति नाहमत्र भोग्यं पश्यामीति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - நான் இங்கு ஒரு போக்யத்தையும் (பலனையும்) காணவில்லை என்று அவன் சமித்தை கைகளில் ஏந்தி மறுபடியும் பிரஜாபதியிடம் வந்தான். அவனிடம் பிரஜாபதி கூறினார் - ஹே இந்திரனே! நீ விரோச்சனனுடன் சாந்தமான சித்தத்தை அடைந்து சென்றாய். இப்பொழுது எதை விரும்பி மறுபடியும் வந்திருக்கின்றாய்? அதற்கு அவன் கூறினான் - ஹே பகவானே! எவ்வாறு இந்த ச்சாயாத்மா இந்த சரீரத்தை நன்றாக அலங்கரித்தபின் நன்றாக அலங்கரிக்கப்பட்டதாக ஆகிறதோ, அழகான ஆடை அணிவதால் அழகான ஆடை உடுத்தியவனாக ஆகின்றதோ, அவ்வாறே ஆடம்பரமாக இருந்தால் ஆடம்பரமாகிறதோ, அவ்வாறே குருடன் ஆனால் குருடன் ஆகிறதோ, ஒற்றைக் கண் குருடன் ஆனால் ஒற்றைக் கண் குருடனாகின்றானோ, அவ்வாறே வெட்டப்பட்ட பின்னர் வெட்டப்பட்டவனாக ஆகின்றானோ அவ்வாறே இந்த சரீரம் நாசம் அடைந்தால் அதுவும் (ச்சாயா ஆத்மாவும்) நாசமாகிவிடும். இதில் எனக்கு வேண்டிய பலனையும் (சிறப்பையும்) நான் காணவில்லை.
नाहमत्र अस्मिंश्छायात्मदर्शने देहात्मदर्शने वा भोग्यं फलं पश्यामीति ॥ एवं दोषं देहच्छायात्मदर्शने अध्यवस्य स समित्पाणिः ब्रह्मचर्यं वस्तुं पुनरेयाय । तं ह प्रजापतिरुवाच — मघवन् यत् शान्तहृदयः प्राव्राजीः प्रगतवानसि विरोचनेन सार्धं किमिच्छन्पुनरागम इति । विजानन्नपि पुनः पप्रच्छ इन्द्राभिप्रायाभिव्यक्तये — ‘यद्वेत्थ तेन मोपसीद’ (छा. उ. ७ । १ । १) इति यद्वत् । तथा च स्वाभिप्रायं प्रकटमकरोत् — यथैव खल्वयमित्यादि ; एवमेवेति च अन्वमोदत प्रजापतिः ॥
அனுவாதம் - இங்கு நான் இந்த சாயா ஆத்ம தர்சனத்திலோ தேஹாத்ம தர்சனத்திலோ எந்த ஒரு பலனையும் காணவில்லை. (பார்க்கவில்லை) என்று. இவ்வாறு தேஹசாயா ஆத்ம தர்சனத்தில் தோஷம் இருப்பதை நிச்சயம்செய்து அவன் சமித்தை கைகளில் ஏந்தி பிரஹ்மச்சர்ய வாசம் செய்வதற்காக மறுபடியும் வந்தான். பிரஜாபதி அவனைப் பார்த்து இவ்வாறு கூறினார் - ஹே இந்திரனே! விரோச்சனனுடன் எந்த சாந்தமடைந்த ஹிருதயத்துடன் சென்றாய். எதை விரும்பி மறுபடியும் வந்திருக்கின்றாய்? என்று. அவர் அறிந்து இருந்தாலும் இந்திரனுடைய அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவதற்காக மறுபடியும் கேட்டார். அவர் என்ன அபிப்பிராயப்பட்டாரோ அதையே வெளிப்படுத்தினான். நீ எதை அறிந்திருக்கிராயோ அதைக் கூறுவதற்காக என் முன் உட்கார் என்று கூறியபின் எவ்வாறு நாரதர் தன்னுடைய அபிப்பிராயத்தை கூறினாரோ அவ்வாறே இந்திரனும் “यथैव खल्वयम्” (யதைவ கல்வயம் = அவ்வாறே இதுவும்) என்பது முதலிய வாக்கியங்களால் அவருடைய அபிப்பிராயத்தை வெளிப்படுத்தினார். மேலும் பிரஜாபதியும் அவ்வாறே என்று ஆமோதித்தார்.
ननु तुल्येऽक्षिपुरुषश्रवणे, देहच्छायाम् इन्द्रोऽग्रहीदात्मेति देहमेव तु विरोचनः, तत्किंनिमित्तम् ?
அனுவாதம் - சங்கை - ஆனால் அக்ஷி (கண்களிலுள்ள) புருஷனை சமான ரூபமாக கேட்டு இருந்தாலும் இந்திரன் தேஹ ச்சாயையை ஆத்மா என்றும், விரோச்சனன் தேஹமே ஆத்மா என்றும் எந்த நிமித்தால் கிரஹித்தார்கள்?
तत्र मन्यते । यथा इन्द्रस्य उदशरावादिप्रजापतिवचनं स्मरतो देवानप्राप्तस्यैव आचार्योक्तबुद्ध्या छायात्मग्रहणं तत्र दोषदर्शनं च अभूत् , न तथा विरोचनस्य ; किं तर्हि, देहे एव आत्मदर्शनम् ; नापि तत्र दोषदर्शनं बभूव । तद्वदेव विद्याग्रहणसामर्थ्यप्रतिबन्धदोषाल्पत्वबहुत्वापेक्षम् इन्द्रविरोचनयोश्छायात्मदेहयोर्ग्रहणम् । इन्द्रोऽल्पदोषत्वात् ‘दृश्यते’ इति श्रुत्यर्थमेव श्रद्दधानतया जग्राह ; इतरः छायानिमित्तं देहं हित्वा श्रुत्यर्थं लक्षणया जग्राह — प्रजापतिनोक्तोऽयमिति, दोषभूयस्त्वात् । यथा किल नीलानीलयोरादर्शे दृश्यमानयोर्वाससोर्यन्नीलं तन्महार्हमिति च्छायानिमित्तं वास एवोच्यते न च्छया — तद्वदिति विरोचनाभिप्रायः । स्वचित्तगुणदोषवशादेव हि शब्दार्थावधारणं तुल्येऽपि श्रवणे ख्यापितं ‘दाम्यत दत्त दयध्वम्’ इति दकारमात्रश्रवणाच्छ्रुत्यन्तरे । निमित्तान्यपि तदनुगुणान्येव सहकारीणि भवन्ति ॥
அனுவாதம் - சமாதானம் - இந்த விஷயத்தில் சிருஷ்டர்கள் இவ்வாறு கருதுகிறார்கள். எவ்வாறு இந்திரன் பிரஜாபதியின் ஜலபாத்திரம் முதலிய திருஷ்டாந்தத்துடன் கூடிய பிரஜாபதியின் வசனத்தை நினைவுபடுத்திக்கொண்டு தேவர்களிடம் செல்லாமல் ஆச்சாரியர் கூறிய புத்தியின் திருஷ்டியால் ச்சாயா ஆத்ம கிரஹிப்பதில் உள்ள தோஷத்தை தோஷ தர்சனம் ஏற்பட்டது. ஆனால் எதற்காக விரோசனனுக்கு ஏற்படவில்லை? அவனுக்கு தேஹமே ஆத்மா. அதில் தோஷ தர்சனம் ஏற்படவில்லை. அவ்வாறே வித்யையை கிரஹிக்கும் சாமர்த்தியத்தின் தடையான தோஷத்தின் சிறிது, அதிகம் ஆகியவற்றை அபேக்ஷித்து இந்திரன், விரோச்சனன் இவர்களுக்கு ச்சாயாத்மா, தேஹம் ஆகியவற்றின் கிரஹித்தல் ஆகும். இந்திரனின் அல்ப தோஷத்தின் காரணமாக சிரத்தைசெய்து “दृश्यते” (த்ருஷ்யதே= காணப்படுகிறது) என்ற சுருதியின் அர்த்தத்தை கிரஹித்தான், மற்றவனோ (விரோசனன்) தோஷம் அதிகமாக இருப்பதன் காரணத்தால் சுருதி அர்த்தத்தைவிடுத்து லக்ஷணையினால் பிரஜாபதி தேஹத்தைக் குறித்தே கூறினார் என்று கிரஹித்தான். எவ்வாறு கண்ணாடியில் காணப்படும் நீலம், நீலமற்ற வஸ்த்திரங்களில் எந்த நீலம் உள்ளதோ அது விலை மதிப்பற்றது என்று கூறுவதால் ச்சாயையின் நிமித்த ரூபமான வஸ்திரமே ச்சாயை அல்ல என்று கூறப்பட்டதாகிறது. அவ்வாறே (பிரஜாபதியின்) வாக்கால் தேஹமே கூறப்பட்டது என்று விரோச்சனனின் அபிப்பிராயம் ஆகும். வேறு ஒரு சுதியில் தகாரத்தை மட்டும் கேட்டாலும் அந்த சப்தார்த்தத்தை அறிவது ஒன்றாக இருந்தாலும் தன் சித்தத்தின் குண தோஷ காரணத்தினால் புலனடக்கம், தானம், தயை என்று வேறு அர்த்தங்களைக் குறிப்பிடுகிறது. தன், தன் குணங்களை அனுசரித்து யுக்தி ரூப நிமித்தத்தால் அது சஹ காரியமாகிறது.
एवमेवैष मघवन्निति होवाचैतं त्वेव ते भूयोऽनुव्याख्यास्यामि वसापराणि द्वात्रिंशतं वर्षाणीति स हापराणि द्वात्रिंशतं वर्षाण्युवास तस्मै होवाच ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - பிரஜாபதி கூறினார் - ஹே இந்திரனே! நீ மீறியது சரிதான். நான் உனக்கு மறுபடியும் அதைப்பற்றி விளக்குகிறேன். இப்பொழுது நீ இங்கு முப்பத்தி இரண்டு வருடங்கள் வசிப்பாயாக என்று கூறினார். இந்திரன் அங்கு முப்பத்தி இரண்டு வருடங்கள் வசித்து வந்தான். அப்பொழுது அவனிடம் கூறினார்.
एवमेवैष मघवन् , सम्यक्त्वया अवगतम् , न च्छाया आत्मा — इत्युवाच प्रजापतिः । यो मयोक्त आत्मा प्रकृतः, एतमेवात्मानं तु ते भूयः पूर्वं व्याख्यातमपि अनुव्याख्यास्यामि । यस्मात्सकृद्व्याख्यातं दोषरहितानामवधारणविषयं प्राप्तमपि नाग्रहीः, अतः केनचिद्दोषेण प्रतिबद्धग्रहणसामर्थ्यस्त्वम् । अतस्तत्क्षपणाय वस अपराणि द्वात्रिंशतं वर्षाणि — इत्युक्त्वा तथोषितवते क्षपितदोषाय तस्मै ह उवाच ॥
அனுவாதம் - ஹே இந்திரனே! நீ அந்த விஷயம் கூறியவாறே. நன்றாக புரிந்துகொண்டாய். என்று இவ்வாறு கூறினார் நான் உன்னிடம் பிரகிருத ஆத்மாவை விளக்கினேன். முன்பே வியாக்கியானம் செய்த ஆத்மாவைப் பற்றியே மறுபடியும் உனக்காக வியாக்கியானம் செய்யப்போகிறேன். ஏன் எனில் தோஷமற்றவர்கள் ஒருமுறை கூறினாலும் ஞானம் ஏற்பட்டுவிடும். ஆனாலும் உன்னால் இந்த விஷயத்தை கிரஹிக்க முடியவில்லை. ஆகையால் ஏதோ ஒரு தோஷம் கிரஹிப்பதற்கு தடையாக உள்ளது. அதன் நிவிர்த்திக்காக நீ மறுபடியும் முப்பத்தி இரண்டு வருடங்கள் இங்கு பிரஹ்மச்சரிய வாசம் செய், இவ்வாறு கூறியபடி அவன் பிரஹ்மச்சரிய வாசம் செய்யும் இந்திரனிடம் பிரஜாபதி இவ்வாறு கூறினார்.
इति नवमखण्डभाष्यम् ॥
य आत्मापहतपाप्मादिलक्षणः ‘य एषोऽक्षिणि’ (छा. उ. ८ । ७ । ४) इत्यादिना व्याख्यात एष सः । कोऽसौ ?
அனுவாதம் - அ.கை - எந்த ஆத்மா அபஹதபாப்மா முதலிய லக்ஷணமுடையதும், எந்த இந்த அக்ஷிணி (கண்ணின்) என்பது முதலியவைகளால் வியாக்யானம் செய்யப்பட்டதோ இதுவே அது ஆகும். அது எது?
य एष स्वप्ने महीयमानश्चरत्येष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्मेति स ह शान्तहृदयः प्रवव्राज स हाप्राप्यैव देवानेतद्भयं ददर्श तद्यद्यपीदꣳ शरीरमन्धं भवत्यनन्धः स भवति यदि स्राममस्रामो नैवैषोऽस्य दोषेण दुष्यति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - எந்த அது ஸ்வப்னத்தில் மேன்மை (சிறப்பை) அடைந்து ஸ்வப்னத்தில் உலவுகின்றதோ அது ஆத்மா என்று இவ்வாறு பிரஜாபதி கூறினார் - அது அம்ருதம், அபயம், அதுவே பிரஹ்மம் என்று. இதைக்கேட்ட இந்திரன் சாந்தமான மனதுடன் சென்றுவிட்டான். ஆனால் தேவர்களை அடையாமல் அவனுக்கு இந்த பயம். காணப்பட்டது. அதாவது இந்த சரீரம் குருடனாகிறது. ஆனாலும் இங்கு (ஸ்வப்ன சரீரத்தில்) குருட்டுத்தன்மை இல்லை. மேலும் அது ஒற்றைக்கண் உடையதானாலும் அங்கு ஒற்றைக்கண் உடையவனாய் இல்லை. இவ்வாறு இந்த தோஷங்களால் அங்கு (சொப்னத்தில்) தூஷிக்கப்படுவது இல்லை, (குறைக் காணப்படுவது இல்லை).
यः स्वप्ने महीयमानः स्त्र्यादिभिः पूज्यमानश्चरति अनेकविधान्स्वप्नभोगाननुभवतीत्यर्थः । एष आत्मेति ह उवाच इत्यादि समानम् । स ह एवमुक्तः इन्द्रः शान्तहृदयः प्रवव्राज । स ह अप्राप्यैव देवान् पूर्ववदस्मिन्नप्यात्मनि भयं ददर्श । कथम् ? तदिदं शरीरं यद्यप्यन्धं भवति, स्वप्नात्मा यः अनन्धः स भवति । यदि स्राममिदं शरीरम् , अस्रामश्च स भवति । नैवैष स्वप्नात्मा अस्य देहस्य दोषेण दुष्यति ॥
அனுவாதம் - எது ஸ்வப்னத்தில் ஸ்திரீ முதலியவைகளால் மேன்மைபெற்று பூஜைக்குரிதாய் உலாவுகிறதோ அதாவது அநேகவிதமான ஸ்வப்ன போகங்களை அனுபவிக்கிறது என்பது பொருள். “அதுவே ஆத்மா என்று கூறினார்” என்பது எல்லாம் முன் கூறியது போலவே ஆகும். இவ்வாறு கூறப்பட்ட இந்திரன் சாந்தமனது உடையவனாய் சென்றுவிட்டான். அவன் தேவர்களை அடையாமல் முன்புபோல் இந்த ஆத்மாவில் பயத்தைக் கண்டான். எவ்வாறு? அந்த இந்த சரீரம் குருடானாலும் ஸ்வப்பன ஆத்மா குருடாவதில்லை. அவ்வாறே இது ஸ்ராமத்தை (स्राम = ஒற்றைக்கண்) இந்த சரீரம் அடைந்தால் அந்த ஸ்வப்ன ஆத்மாச்ராமம் அடைவதில்லை. (கண்கள், மூக்கு இவைகளில் நீர் வடிதல்) இந்த தேஹத்தின் தோஷமானது ஸ்வப்ன ஆத்மாவில் தோஷத்தை அடைவதில்லை.
न वधेनास्य हन्यते नास्य स्राम्येण स्रामो घ्नन्ति त्वेवैनं विच्छादयन्तीवाप्रियवेत्तेव भवत्यपि रोदितीव नाहमत्र भोग्यं पश्यामीति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அது இந்த தேஹத்தை கொன்றாலும் நஷ்டமாவது இல்லை. இதற்கு ஸ்ராமத்தால் (கண்கள், மூக்கு இவைகளில் நீர் வடிந்தாலும்) அதற்கு ஸ்ராமம் உண்டாவது இல்லை. ஆனால் கனவில் யாராவது மரணமடைந்தாலோ, அடித்தாலோ துன்புறுவது போலவும், அழுவதுபோலும் கருதுகிறோம். இவ்வாறு இருப்பதால் இதில் (இவ்விதமான ஆத்ம தர்சனத்தில்) நான் ஒரு பலனையும் காணவில்லை.
स समित्पाणिः पुनरेयाय तꣳ ह प्रजापतिरुवाच मघवन्यच्छान्तहृदयः प्राव्राजीः किमिच्छन्पुनरागम इति स होवाच तद्यद्यपीदं भगवः शरीरमन्धं भवत्यनन्धः स भवति यदि स्राममस्रामो नैवैषोऽस्य दोषेण दुष्यति ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - (ஆகையால்) அவன் சமித்தை ஏந்திக்கொண்டு மறுபடியும் (பிரஜாபதியிடம்) வந்தான். அவனிடம் பிரஜாபதி கூறினார் - ஹே இந்திரனே! நீ சாந்த மனமுடையவனாகி சென்றாய். இப்பொழுது எதை விரும்பி மறுபடியும் வந்திருக்கிறாய்? அவன் கூறினான் - பகவானே! சரீரம் குருட்டுத்தன்மை உடையதானாலும் அது (ஸ்வப்ன சரீரம்) குருடாவதில்லை. அவ்வாறே கண்களிலும், மூக்கிலும், நீர் வடிந்தாலும் அதற்கு வடிவதில்லை இவ்வாறு இந்த சரீரத்தால் (ஸ்வப்ன சரீரம்) தோஷம் அடைவதில்லை.
न वधेनास्य हन्यते नास्य स्राम्येण स्रामो घ्नन्ति त्वेवैनं विच्छादयन्तीवाप्रियवेत्तेव भवत्यपि रोदितीव नाहमत्र भोग्यं पश्यामीत्येवमेवैष मघवन्निति होवाचैतं त्वेव ते भूयोऽनुव्याख्यास्यामि वसापराणि द्वात्रिंशतं वर्षाणीति स हापराणि द्वात्रिंशतं वर्षाण्युवास तस्मै होवाच ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - இதை (இந்த சரீரத்தை) கொன்றால் அது (ஸ்வப்ன சரீரம்) கொல்லபடுவது இல்லை. அதன் கண்களில், மூக்கில் நீர் வடிந்தால் அதற்கு அவ்வாறு ஏற்படுவதில்லை. ஆனால் ஒருவன் கொன்றதுபோல், அடிப்பதுபோல் கண்டு அதைக் குறித்து பிரியமற்றதைக் காண்பவனாய் துன்பப்படுகிறது. இதில் நான் எந்த ஒரு பலனையும் காணவில்லை. அப்பொழுது பிரஜாபதி கூறினார் - ஹே இந்திர! நீ கூறுவது போலவே இருக்கிறது. நான் உனக்கு இதை (இந்த ஆத்மத்துவத்தை) மறுபடியும் விளக்குகிறேன். நீ இங்கு முப்பத்திரண்டு வருடங்கள் பிரஹ்மச்சரிய வாசம் செய் என்று. இந்திரன் அங்கு முப்பத்தியிரண்டு வருடங்கள் வசித்துவந்தான். அப்பொழுது அவனிடம் பிரஜாபதி கூறினார்.
नापि अस्य वधेन स हन्यते छायात्मवत् । न च अस्य स्राम्येण स्रामः स्वप्नात्मा भवति । यदध्यायादौ आगममात्रेणोपन्यस्तम् — ‘नास्य जरयैतज्जीर्यति’ (छा. उ. ८ । १ । ५) इत्यादि, तदिह न्यायेनोपपादयितुमुपन्यस्तम् ।
அனுவாதம் - ஸ்வப்ன ஆத்மா சாயா மாத்திரமாய் இருப்பதால் அதை வெட்டினாலும் வெட்டுபடுவதில்லை. அவ்வாறே அதன் கண்களிலோ மூக்கிலோ நீர் வடிந்தாலும் அதற்கு வடிவதில்லை. இந்த அத்யாயத்தின் ஆரம்பத்தில் ஆகமத்தால் இதற்கு மூப்பு அவஸ்தையிலும் மூப்பு இல்லை என்பது முதலியவை கூறப்பட்டது. அதுவே இங்கு நியாய பூர்வகமாக நிச்சயம் செய்வதற்காக மேலே விளக்குகிறது.
न तावदयं छायात्मवद्देहदोषयुक्तः, किं तु घ्नन्ति त्वेव एनम् । एव - शब्दः इवार्थे । घ्नन्तीवैनं केचनेति द्रष्टव्यम् , न तु घ्नन्त्येवेति, उत्तरेषु सर्वेष्विवशब्ददर्शनात् ।
அனுவாதம் - அவ்வாறு இது சாயா ஆத்மா போல் தேஹ தோஷத்துடன் கூடியது அல்ல. ஆனால் இதனால் இது கொல்லப்பட்டதாக கருதுகிறான். இங்கு “एव” (ஏவ) சப்தமானது. “इव” (இவ = போன்று) என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இங்கு கொன்றது போல் என்று அறியவேண்டும். ஆனால் கொல்லப்பட்ட அர்த்தத்தில் அல்ல. ஏன் எனில் இனிவரும் எல்லாவற்றிலும் “इव” (இவ) சப்தம் காணப்படுகிறது.
नास्य वधेन हन्यत इति विशेषणात् घ्नन्ति त्वेवेति चेत् , नैवम् । प्रजापतिं प्रमाणीकुर्वतः अनृतवादित्वापादनानुपपत्तेः । ‘एतदमृतम्’ इत्येतत्प्रजापतिवचनं कथं मृषा कुर्यादिन्द्रः तं प्रमाणीकुर्वन् ।
அனுவாதம் - அதைக் கொல்லுவதால் நஷ்டமாவதில்லை என்ற விசேஷணத்தால் கொல்லப்படுகிறது என்றால்? அவ்வாறு அல்ல. பிரஜாபதியை பிரமாணமாகக் கொண்டவனுக்கு அந்ருதமான அதாவது பொய்யானவாதம் சம்பவிக்காது. “एतदमृतम्” (ஏததம்ருதம் - இது அம்ருதம்) என்ற பிரஜாபதியின் வசனத்தை பிரமாணமாக ஏற்றுக்கொண்டபின் அது எவ்வாறு பொய்யாகும்.
ननु च्छायापुरुषे प्रजापतिनोक्ते ‘अस्य शरीरस्य नाशमन्वेष नश्यति’ (छा. उ. ८ । ९ । २) इति दोषमभ्यदधात् , तथेहापि स्यात् ।
அனுவாதம் - சங்கை - ஆனால் பிரஜாபதி கூறிய சாயா புருஷனிடத்தில் “अस्य शरीरस्य नाशमन्वेष नश्यति” (அஸ்ய சரீரஸ்ய நாசமன்வேஷ னச்யதி = சரீரம் நாசம் அடைந்தபின் இதுவும் நாசமாகிறது) என்று தோஷத்தை தெரிவித்தார். அவ்வாறே இங்கும் ஆகலாமே.
नैवम् । कस्मात् ? ‘य एषोऽक्षिणि पुरुषो दृश्यते’ (छा. उ. ८ । ७ । ४) इति न च्छायात्मा प्रजापतिनोक्त इति मन्यते मघवान् । कथम् ? अपहतपाप्मादिलक्षणे पृष्टे यदि च्छायात्मा प्रजापतिनोक्त इति मन्यते, तदा कथं प्रजापतिं प्रमाणीकृत्य पुनः श्रवणाय समित्पाणिर्गच्छेत् ? जगाम च । तस्मात् न च्छायात्मा प्रजापतिनोक्त इति मन्यते । तथा च व्याख्यातम् — द्रष्टा अक्षिणि दृश्यत इति ।
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறு அல்ல. எதனால்? “य एषोऽक्षिणि पुरुषो दृश्यते” (ய யேஷோஅக்ஷிணி புருஷோ த்ருச்யதே) (இந்த கண்ணில் எந்த புருஷன் காணப்படுகிறானோ) என்று பிரஜாபதியால் ச்சாயாத்மா கூறப்படவில்லை என்று இந்திரன் கருதினான். எவ்வாறு? “अपहतपाप्मा” (அபஹதபாப்மா) முதலிய லக்ஷணங்களுடன் கூடிய ஆத்மாவை கேட்டு தெரிந்து கொண்டபின்னர் பிரஜாபதியினால் கூறப்பட்டது சாயாத்மா என்று கருதினால் பின் எவ்வாறு பிரஜாபதியைப் பிரமாணமாக செய்து மறுபடியும் சிரவணம் செய்வதற்கு அவரிடம் வருவான்? மேலும் எவ்வாறு செல்வான்? ஆகையால் பிரஜாபதியினால் கூறப்பட்டது. ச்சாயா ஆத்மா அல்ல என்று கருதினான். அவ்வாறே “द्रष्टाक्षिणि दृश्यत” (த்ருஷ்டாக்ஷிணி த்ருஷ்யத) (த்ருஷ்டா கண்ணில் காணப்படுகிறான்) என்று வியாக்யாணம் செய்யப்பட்டது.
तथा विच्छादयन्तीव विद्रावयन्तीव, तथा च पुत्रादिमरणनिमित्तमप्रियवेत्तेव भवति । अपि च स्वयमपि रोदितीव ।
அனுவாதம் - அவ்வாறே அடிபட்டது போலும், புத்திரன் முதலியவர்களின் மரணத்தின் காரணமாக பிரியமற்றதை அனுபவிப்பது போல் ஆகிறது, மேலும் தானும் அழுவது போல் நினைக்கிறான்.
ननु अप्रियं वेत्त्येव, कथं वेत्तेवेति, उच्यते —
அனுவாதம் - சங்கை - ஆனால் எவ்வாறு பிரியமற்றதை அறிகிறான்? மேலும் நான் பிரியமற்றதை அறிகிறேன் என்று எவ்வாறு கூறுகின்றான்?
न, अमृताभयत्ववचनानुपपत्तेः, ‘ध्यायतीव’ (बृ. उ. ४ । ३ । ७) इति च श्रुत्यन्तरात् ।
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன் எனில் அம்ருதத்துவம் அபயத்துவம் முதலிய வசனங்கள் சரியில்லை என்று (பொருந்தாது என்று) ஆகிவிடும். வேறு சுருதியிலும் “ध्यायतीव” (த்யாயதீவ) என்று கூறப்பட்டுள்ளது.
ननु प्रत्यक्षविरोध इति चेत् ,
அனுவாதம் - சங்கை - பிரத்யக்ஷத்திற்கு விரோதமாகுமே எனில்?
न, शरीरात्मत्वप्रत्यक्षवद्भ्रान्तिसम्भवात् ।
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறு அல்ல, சரீர ஆத்மா பிரத்யக்ஷ அனுபவம் போல் பிராந்தி சம்பவித்தலால் ஆகும். (பிராந்தியினால் உண்டானதாகும்)
तिष्ठतु तावदप्रियवेत्तेव न वेति । नाहमत्र भोग्यं पश्यामि । स्वप्नात्मज्ञानेऽपि इष्टं फलं नोपलभे इत्यभिप्रायः ।
அனுவாதம் - பிரியமற்றதை அறிந்தாலும் அறியாவிட்டாலும் அவ்வாறு இருக்கட்டும். ஆனால் அங்கு ஒரு போக்யத்தையும் (பலனையும்) காணவில்லை. ஸ்வப்ன ஆத்ம ஞானத்தாலும் இஷ்டமான (பிரியமான) பலத்தை அடையவில்லையென்பது அபிப்பிராயம் ஆகும்.
एवमेवैषः तवाभिप्रायेणेति वाक्यशेषः, आत्मनोऽमृताभयगुणवत्त्वस्याभिप्रेतत्वात् ।
அனுவாதம் - (பிரஜாபதி கூறினார்) ஆத்மா அம்ருதம், அபய குணம் உடையது என்ற உங்களுடைய அபிப்பிராயத்தை அனுசரித்து இந்த விஷயம் இவ்வாறு இருக்கிறது. (அதாவது ஸ்வப்ன சரீரத்தை ஆத்மா என்று கருதினால் உண்மையில் லாபம் ஒன்றும் இல்லை). இங்கு “एवमेवैष” (ஏவமேவைஷ) என்பதற்கு பின் “तवाभिप्रायेण” (தவஅபிப்பிராயேண) என்பது வாக்கியசேஷமாகும்.
द्विरुक्तमपि न्यायतो मया यथावन्नावधारयति ; तस्मात्पूर्ववत् अस्य अद्यापि प्रतिबन्धकारणमस्तीति मन्वानः तत्क्षपणाय वस अपराणि द्वात्रिंशतं वर्षाणि ब्रह्मचर्यम् इत्यादिदेश प्रजापतिः । तथा उषितवते क्षपितकल्मषाय आह ॥
அனுவாதம் - என்னால் நியாயமாக (யுக்தி பூர்வகமாக) இருமுறை கூறியும் சரியாக அவன் (இந்திரன்) அறிந்து கொள்ளாததால் முன்புபோல் இன்றும் அவனுக்கு பிரதிபந்த காரணம் உள்ளது என்று அறிந்து அதைபோக்குவதற்காக மறுபடியும் முப்பத்தி இரண்டு வருடங்கள் பிரஹ்மச்சரிய வாசம் செய்ய பிரஜாபதி ஆணையிட்டார். அவ்வாறே அங்கு பிரஹ்மச்சரிய. வாசம் செய்து அதனால் கல்மஷம் (தோஷம்) நீங்கின இந்திரனிடம் இவ்வாறு கூறினார்.
इति दशमखण्डभाष्यम् ॥
तद्यत्रैतत्सुप्तः समस्तः सम्प्रसन्नः स्वप्नं न विजानात्येष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्मेति स ह शान्तहृदयः प्रवव्राज स हाप्राप्यैव देवानेतद्भयं ददर्श नाह खल्वयमेवꣳ संप्रत्यात्मानं जानात्ययमहमस्मीति नो एवेमानि भूतानि विनाशमेवापीतो भवति नाहमत्र भोग्यं पश्यामीति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - எந்த அவஸ்தையில் நன்றாக தூங்கும்பொழுது எல்லா தர்சன விருத்திகள் அற்றும், ஸ்வப்ன அனுபவமும் இல்லாது இருக்கிறதோ அது ஆத்மா, என்று பிரஜாபதி கூறி அதுவே அம்ருதம், அதுவே அபயம், அதுவே பிரஹ்மம் என்றார். இதைக்கேட்ட இந்திரன் சாந்தமனதுடன் சென்றுவிட்டான். ஆனால் அவன் தேவர்களிடம் செல்லாமல் அவன் இந்த பயத்தைப் பார்த்தான். இந்த அவஸ்தையில் இதன் நிச்சயமான ஞானம் ஒன்றும் ஏற்படவில்லை அதாவது அது நான் மேலும் இந்த மற்ற பூதங்களையும் அறியவில்லை. அந்த சமயத்தை ஏற்றுக்கொண்டால் நாசமே ஏற்படும். இதில் நான் இஷ்டமான பலனை காணவில்லை.
पूर्ववदेतं त्वेव त इत्याद्युक्त्वा
அனுவாதம் - அ.கை - முன்புபோல் நான் உனக்கு இதன் வியாக்கியானத்தை மறுபடியும் செய்கிறேன் என்று கூறி -
स समित्पाणिः पुनरेयाय तꣳ ह प्रजापतिरुवाच मघवन्यच्छान्तहृदयः प्राव्राजीः किमिच्छन्पुनरागम इति स होवाच नाह खल्वयं भगव एवꣳ संप्रत्यात्मानं जानात्ययमहमस्मीति नो एवेमानि भूतानि विनाशमेवापीतो भवति नाहमत्र भोग्यं पश्यामीति ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - அவன் சமித்தை ஏந்திக்கொண்டு மறுபடியும் பிரஜாபதியிடம் வந்தான். அவனிடம் பிரஜாபதி கூறினார் - ஹே இந்திரனே! நீ சாந்தமான மனதுடன் சென்றாய். இப்பொழுது எதை விரும்பி நீ இங்கு மறுபடியும் வந்திருக்கிறாய்? இந்திரன் கூறினான் - பகவானே! இந்த அவஸ்தையில் நிச்சயமான ஞானம் ஒன்றும் ஏற்படவில்லை நான் இருப்பதையோ மற்ற பூதங்களையோ அறியவில்லை. அது விநாசத்தையே அடைகிறது. இதில் எனக்கான எந்த ஒரு இஷ்ட பலத்தையும் காணவில்லை.
तद्यत्रैतत्सुप्त इत्यादि व्याख्यातं वाक्यम् । अक्षिणि यो द्रष्टा स्वप्ने च महीयमानश्चरति स एषः सुप्तः समस्तः सम्प्रसन्नः स्वप्नं न विजानाति, एष आत्मेति ह उवाच एतदमृतमभयमेतद्ब्रह्मेति स्वाभिप्रेतमेव ।
அனுவாதம் - “तद्यत्रैतत्सुप्त” (தத்யத்ரேதத்சுப்த:) என்பது முதலிய வாக்கியங்கள் வியாக்யானம் செய்யப்பட்டது. கண்ணில் எந்த திருஷ்டாவோ அது ஸ்வப்னத்திலும் பூஜிக்கப்பட்டு சஞ்சரிக்கின்றது. அது எப்பொழுது நன்றாக உறங்குகிறதோ அப்பொழுது ஸ்வப்னம் காண்பதில்லை. முற்றிலும் ஆனந்தம் அடைந்து ஸ்வப்னத்தையும் காண்பதில்லையோ அதுவே ஆத்மா, அது அம்ருதம், அது அபயம், அதுவே பிரஹ்மம் என்று தன்னுடைய அபிப்பிராயத்தைக் கூறினார்.
मघवान् तत्रापि दोषं ददर्श । कथम् ? नाह नैव सुषुप्तस्थोऽप्यात्मा खल्वयं सम्प्रति सम्यगिदानीं च आत्मानं जानाति नैवं जानाति । कथम् ? अयमहमस्मीति नो एवेमानि भूतानि चेति । यथाजाग्रति स्वप्ने वा । अतो विनाशमेव विनाशमिवेति पूर्ववद्द्रष्टव्यम् । अपीतः अपिगतो भवति, विनष्ट इव भवतीत्यभिप्रायः ।
அனுவாதம் - ஆனால் இந்திரன் அதிலும் தோஷத்தைப் பார்த்தான். எவ்வாறு? இந்த உறங்குகின்ற ஆத்மா இந்த அவஸ்தையில் நிச்சயமாக இவ்வாறு அறிவதில்லை. எவ்வாறு அறிவதில்லை? எவ்வாறு ஸ்வப்ன அவஸ்தையிலும் ஜாக்கிரத் அவஸ்தையிலும் நான் இருக்கிறேன் என்றும் மற்ற பூதங்களையும் அறிவது போல் அறிவதில்லை. ஆகையால் விநாசத்தையே அடைகிறது. அதாவது விநாசம் அடைந்ததுபோல் என்று முன்போல் அறிந்துகொள்ள வேண்டும். விநாசம் அடைந்தது என்பதை விநாசம் அடைந்தது போல் என்று அர்த்தம் செய்யவேண்டும் என்பது தாத்பர்யம்.
ज्ञाने हि सति ज्ञातुः सद्भावोऽवगम्यते, न असति ज्ञाने । न च सुषुप्तस्य ज्ञानं दृश्यते ; अतो विनष्ट इवेत्यभिप्रायः । न तु विनाशमेव आत्मनो मन्यते अमृताभयवचनस्य प्रामाण्यमिच्छन् ॥
அனுவாதம் - ஞானம் இருந்தால் ஞாதாவினால் சத்பாவம் அறியப்படும். அசத்தாய் இருந்தால் அறியமுடியாது. ஆகையால் நஷ்டமானது போல் என்பது அபிப்பிராயம், அம்ருதம் அபய வசனத்தைப் பிராமாண்யத்தை விரும்பிக்கொண்டு இருப்பவன் ஆத்மாவின் விநாசத்தை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமாட்டான்.
पूर्ववत्
அனுவாதம் - முன்போல் -
एवमेवैष मघवन्निति होवाचैतं त्वेव ते भूयोऽनुव्याख्यास्यामि नो एवान्यत्रैतस्माद्वसापराणि पञ्च वर्षाणीति स हापराणि पञ्च वर्षाण्युवास तान्येकशतꣳ सम्पेदुरेतत्तद्यदाहुरेकशतं ह वै वर्षाणि मघवान्प्रजापतौ ब्रह्मचर्यमुवास तस्मै होवाच ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - ஹே இந்திரனே! நீ கூறியது சரிதான் என்று பிரஜாபதி கூறினார் - நான் இதைக் குறித்து மறுபடியும் உனக்கு வியாக்கியானம் செய்கிறான். ஆத்மா இதைத்தவிர வேறு அல்ல. இப்பொழுது நீ ஐந்து வருடங்கள் பிரஹ்மச்சரிய வாசம் செய். அவன் ஐந்து வருடங்கள் வாசம் செய்தான். இவைகள் எல்லாம் சேர்த்து நூ ற்றி ஒரு வருடங்கள் கழிந்தன. இதனால் இந்திரன் நூ ற்றி ஒரு வருடங்கள் பிரஹ்மச்சரிய வாசம் செய்தான் என்று கூறப்படுகிறது. அப்பொழுது அவனிடம் பிரஜாபதி கூறினார்-
एवमेवेत्युक्त्वा आह — यो मया उक्तः त्रिभिः पर्यायैः तमेवैतं नो एवान्यत्रैतस्मादात्मनः अन्यं कञ्चन, किं तर्हि, एतमेव व्याख्यास्यामि । स्वल्पस्तु दोषस्तवावशिष्टः, तत्क्षपणाय वस अपराणि अन्यानि पञ्च वर्षाणि — इत्युक्तः सः तथा चकार । तस्मै मृदितकषायादिदोषाय स्थानत्रयदोषसम्बन्धरहितमात्मनः स्वरूपम् अपहतपाप्मत्वादिलक्षणं मघवते तस्मै ह उवाच ।
அனுவாதம் - நீ கூறியது போலவேதான் என்று கூறிவிட்டு நான் மூன்று பரியாயங்களின் வியாக்கியானம் செய்த அந்த ஆத்மாவைத் தவிர வேறு தனியாக ஆத்மா இல்லை? பின் எதற்கு? என்பதை மேலும் தெளிவுபடுத்துகிறேன். (விளக்குகிறேன்). உனக்கு சிறிது தோஷம் மீதி இருப்பதால் மேலும் ஐந்து வருடங்கள் பிரஹ்மச்சரிய வாசம் இங்கு செய் என்று கூறியபின் அவ்வாறே செய்தான். அந்த கஷாய முதலிய தோஷங்கள் நீங்கிய இந்திரனுக்கு மூன்று அவஸ்தைகளின் தோஷத்தின் சம்பந்தமற்றதும் அபஹதபாப்மா முதலிய லக்ஷணங்களுடைய ஆத்மாவின் ஸ்வரூபத்தை இந்திரனுக்கு நிரூபித்துக் காட்டினார்.
तान्येकशतं वर्षाणि सम्पेदुः सम्पन्नानि बभूवुः । यदाहुर्लोके शिष्टाः — एकशतं ह वै वर्षाणि मघवान्प्रजापतौ ब्रह्मचर्यमुवास इति । तदेतद्द्वात्रिंशतमित्यादिना दर्शितमित्याख्यायिकातः अपसृत्य श्रुत्या उच्यते । एवं किल तदिन्द्रत्वादपि गुरुतरम् इन्द्रेणापि महता यत्नेन एकोत्तरवर्षशतकृतायासेन प्राप्तमात्मज्ञानम् । अतो नातः परं पुरुषार्थान्तरमस्तीत्यात्मज्ञानं स्तौति ॥
அனுவாதம் - அந்த நூ ற்றி ஒரு வருடங்கள் சென்றுவிட்டன. இதனால் உலகில் உள்ள மேலோர் இந்திரன் பிரஜாபதியிடம் நூ ற்றி ஓரு வருடங்கள் பிரஹ்மச்சரிய வாசம் செய்தான் என்று கூறுகின்றனர். இவ்வாறு இந்த “द्वात्रिंशतम्” (துவாத்ரிம்ஷதம் - 32) என்பது முதலிய- வைகளால் கூறப்பட்ட இந்த ஆக்யாயிகாவில் இருந்து (கதையிலிருந்து) சிறிது விலகி சுருதியே கூறுகிறது. இவ்வாறு இது இந்திரத்துவத்தைக் (தேவ ராஜாத் தன்மையைக்) காட்டிலும் மிகவும் மேன்மையானது. இந்திரன் கூட மிகவும் பிரயாசைப்பட்டு (முயற்சி செய்து) நூ ற்றியொரு வருடங்கள் பரிசிரமப்பட்டு ஆத்மஞானத்தை அடையமுடிந்தது. ஆகையால் அதைக்காட்டிலும் மேலான வேறு புருஷார்த்தம் கிடையாது என்று ஆத்ம ஞானத்தை ஸ்துதிக்கின்றது.
इति एकादशखण्डभाष्यम् ॥
मघवन्मर्त्यं वा इदꣳ शरीरमात्तं मृत्युना तदस्यामृतस्याशरीरस्यात्मनोऽधिष्ठानमात्तो वै सशरीरः प्रियाप्रियाभ्यां न वै सशरीरस्य सतः प्रियाप्रिययोरपहतिरस्त्यशरीरं वाव सन्तं न प्रियाप्रिये स्पृशतः ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஹே இந்திரனே! இந்த சரீரம் மரணதர்மம் உடையது. அது மிருத்யுவினால் பீடிக்கப்பட்டுள்ளது. இது இந்த அம்ருதமானதும் சரீரமற்றதாயும் உள்ள ஆத்மாவிற்கு அதிஷ்டனம் (இருப்பிடம்) ஆகும். சரீரத்துடன் கூடிய ஆத்மா நிச்சயமாக பிரியம், பிரியமற்ற வஸ்துக்களால் பீடிக்கப்பட்டுள்ளது. சரீரம் உள்ளவரை பிரியம், பிரியம் அற்றவைகளுக்கு நாசம் உண்டாகாது. சரீரம் அற்றபொழுது பிரியமோ, பிரியமற்றதோ அதை ஸ்பரிசிக்கமுடியாது. (தொடமுடியாது) (பிரியம், பிரியமற்றது = இன்பம், துன்பம்).
मघवन् मर्त्यं वै मरणधर्मीदं शरीरम् । यन्मन्यसेऽक्ष्याधारादिलक्षणः सम्प्रसादलक्षण आत्मा मयोक्तो विनाशमेवापीतो भवतीति, शृणु तत्र कारणम् — यदिदं शरीरं वै यत्पश्यसि तदेतत् मर्त्यं विनाशि । तच्च आत्तं मृत्युना ग्रस्तं सततमेव । कदाचिदेव म्रियत इति मर्त्यमित्युक्ते न तथा सन्त्रासो भवति, यथा ग्रस्तमेव सदा व्याप्तमेव मृत्युनेत्युक्ते — इति वैराग्यार्थं विशेष इत्युच्यते — आत्तं मृत्युनेति । कथं नाम देहाभिमानतो विरक्तः सन् निवर्तत इति । शरीरमित्यत्र सहेन्द्रियमनोभिरुच्यते ।
அனுவாதம் - ஹே இந்திரனே! இந்த சரீரம் நிச்சயமாக மரண அடைவது அதாவது மரண தர்மமுடையது. எதை நீ என்னால் கூறப்பட்ட நேத்திரம் முதலியவைகளின் ஆதாரபூதமான சம்பிரசாத ரூப ஆத்மா விநாசம் அடையும் என்று நினைத்தால் (கருதினால்) அதற்கான காரணத்தைக் கேள் - எந்த இந்த சரீரம் காணப்படுகிறதோ அது மரணமடையக் கூடியது அதாவது விநாசம் அடைவதாகும். அது எப்பொழுதும் மிருத்யுவினால் பீடிக்கப்பட்டுள்ளது. அது எப்பொழுதாவது மரணம் அடையும் என்றால் அதில் பயம் உண்டாகாது. அது மரணத்தால் எப்பொழுதும் பீடிக்கப்பட்டுள்ளது என்றால் தான் வைராக்யம் ஏற்படும் என்பதற்காக விசேஷமாக மிருத்யுவினால் வியாபிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. எவ்வாறு தேஹ அபிமானத்திலிருந்து விரக்தி அடைந்து இருக்கிறான் என்பது இங்கு சரீரம் என்றது இந்திரியங்கள் மனம் ஆகியவைகளுடன் சேர்த்தே கூறப்பட்டதாகும்.
तच्छरीरमस्य सम्प्रसादस्य त्रिस्थानतया गम्यमानस्य अमृतस्य मरणादिदेहेन्द्रियमनोधर्मवर्जितस्येत्येतत् ; अमृतस्येत्यनेनैव अशरीरत्वे सिद्धे पुनरशरीरस्येति वचनं वाय्वादिवत् सावयवत्वमूर्तिमत्त्वे मा भूतामिति ; आत्मनो भोगाधिष्ठानम् ; आत्मनो वा सत ईक्षितुः तेजोबन्नादिक्रमेण उत्पन्नमधिष्ठानम् ; जीव रूपेण प्रविश्य सदेवाधितिष्ठत्यस्मिन्निति वा अधिष्ठानम् ।
அனுவாதம் - அந்த சரீரத்தின் மூன்று அவஸ்தைகளிலும் செல்கின்ற அமிருதமாகிய மரண முதலிய தேஹ இந்திரிய தர்மங்கள் அற்றது சம்பிரசாதமாகும். அம்ருதம் என்ற பதத்தால் சரீரம் அற்றது என்று சித்திக்கும்பொழுது எதற்காக மறுபடியும் “சரீரமற்றதற்கு” (अशरीरस्य) என்ற வசனம் அவயவ முதலியவை வாயு முதலியவைகளைப் போல் ஆத்மாவிற்கும் அவயவத்துடன் இருப்பதும், உருவத்துடன் இருப்பதும் உண்டாகக்கூடாது என்பதாகும். ஆத்மாவிற்கு இது போகத்திற்கான அதிஷ்டானமாகும். ஆத்மாவிலிருந்து அதாவது ஈக்ஷணம் செய்யும் சத்திலிருந்து தேஜஸ், ஜலம், அன்னம் முதலியவை கிரமமாக உண்டாகி அதிஷ்டானமாகிறது. ஜீவரூபமாக பிரவேசித்து இதில் எப்பொழுதும் நிலைபெற்றுள்ளதால் அதிஷ்டானம் ஆகிறது.
यस्येदमीदृशं नित्यमेव मृत्युग्रस्तं धर्माधर्मजनितत्वात्प्रियवदधिष्ठानम् , तदधिष्ठितः तद्वान् सशरीरो भवति । अशरीरस्वभावस्य आत्मनः तदेवाहं शरीरं शरीरमेव च अहम् — इत्यविवेकादात्मभावः सशरीरत्वम् ; अत एव सशरीरः सन् आत्तः ग्रस्तः प्रियाप्रियाभ्याम् ।प प्रसिद्धमेतत् ।
அனுவாதம் - எதற்கு இவ்வாறான அதிஷ்டானம் எப்பொழுதும் மிருத்யுவினால் பீடிக்கப்பட்டு தர்மாதர்மங்களால் உண்டான பிரியமான, பிரியமற்றதாய் அதில் அதிஷ்டித்தமாகி (அதில் நிலைபெற்று) அதனுடன் சேர்ந்து அந்த ஆத்மா சரீரமுடையதாகிறது. சரீரமற்ற ஸ்வபாவமுடைய ஆத்மாவிற்கு நான் சரீரம் என்றும் சரீரமே நான் என்றும் உள்ள அவிவேக ஆத்ம பாவம் சரீரத்துவமாகும். அதாவது அதனால் சரீரத்துடன் இருந்துகொண்டு பிரியம், பிரியமற்றவைகளால் பீடிக்கப்பட்டுள்ளது என்பது பிரசித்தமாகும்.
तस्य च न वै सशरीरस्य सतः प्रियाप्रिययोः बाह्यविषयसंयोगवियोगनिमित्तयोः बाह्यविषयसंयोगवियोगौ ममेति मन्यमानस्य अपहतिः विनाशः उच्छेदः सन्ततिरूपयोर्नास्तीति । तं पुनर्देहाभिमानादशरीरस्वरूपविज्ञानेन निवर्तिताविवेकज्ञानमशरीरं सन्तं प्रियाप्रिये न स्पृशतः । स्पृशिः प्रत्येकं सम्बध्यत इति प्रियं न स्पृशति अप्रियं न स्पृशतीति वाक्यद्वयं भवति । ‘न म्लेच्छाशुच्यधार्मिकैः सह सम्भाषेत’ (गौ. ध. १ । ९ । १७) इति यद्वत् । धर्माधर्मकार्ये हि ते ; अशरीरता तु स्वरूपमिति तत्र धर्माधर्मयोरसम्भवात् तत्कार्यभावो दूरत एवेत्यतो न प्रियाप्रिये स्पृशतः ॥
அனுவாதம் - பாஹ்ய விஷயங்களின் சம்யோகமும் வியோகமும் என்னுடையது என்று நினைப்பவன் அந்த சரீரத்துடன் கூடிய புருஷனுக்கு பாஹ்ய விஷயங்களின் அடைவு, நஷ்டமாவது ஆகியவைகளின் பிரவாஹ ரூபங்களான பிரியமான, பிரியமற்றவைகள் நீங்குவதில்லை. அதாவது அவைகளின் நாசம் ஏற்படுவதில்லை. தேஹ அபிமானத்தை விட்டு சரீரமற்ற ஸ்வரூப விக்ஞானத்தால் எவனுடைய அவிவேக ஞானம் நீங்கி சரீரமற்றவனாய் இருப்பதால் பிரியம், பிரியமற்றவை அவனை ஸ்பரிசிக்காது. ஸ்பரிசத்தால் என்றது பிரியம், அபிரியம் இரண்டிற்கும் ஆகும் என்பதால் பிரியத்தை ஸ்பரிசிப்பதில்லை. அபிரியத்தையும் ஸ்பரிசிப்பது இல்லை என்று இரண்டு வாக்கியங்களாக ஆகின்றான். எவ்வாறு மிலேச்சன், சுத்தமற்றவன், அதர்மத்துடன் இருப்பவனிடம் சம்பாஷணை செய்யாதே என்பது போல் ஆகும். அது தர்மாதர்ம காரியங்களாகும். சரீரமற்ற ஸ்வரூபமாய் இருப்பதால் அங்கு தர்மாதர்மங்கள் சம்பவிக்காததால் அதன் காரியபாவமும் நெருங்காமல் தூரமாய் இருப்பதால் இந்த பிரியா பிரியங்கள் ஸ்பரிஸிக்காது.
ननु यदि प्रियमप्यशरीरं न स्पृशतीति, यन्मघवतोक्तं सुषुप्तस्थो विनाशमेवापीतो भवतीति, तदेवेहाप्यापन्नम् ।
அனுவாதம் - சங்கை - ஆனால் சரீரமற்ற ஆத்மாவை பிரியமும் ஸ்பரிசிக்காது என்று எதை இந்திரன் கூறினானோ அந்த தூங்கும் அவஸ்தையில் புருஷன் விநாசத்தை அடைகிறான் என்பது இங்கும் பிராப்தமாகும்.
नैष दोषः, धर्माधर्मकार्ययोः शरीरसम्बन्धिनोः प्रियाप्रिययोः प्रतिषेधस्य विवक्षितत्वात् — अशरीरं न प्रियाप्रिये स्पृशत इति । आगमापायिनोर्हि स्पर्शशब्दो दृष्टः — यथा शीतस्पर्श उष्णस्पर्श इति, न त्वग्नेरुष्णप्रकाशयोः स्वभावभूतयोरग्निना स्पर्श इति भवति ; तथा अग्नेः सवितुर्वा उष्णप्रकाशवत् स्वरूपभूतस्य आनन्दस्य प्रियस्यापि नेह प्रतिषेधः, ‘विज्ञानमानन्दं ब्रह्म’ (बृ. उ. ३ । ९ । २८) ‘आनन्दो ब्रह्म’ (तै. उ. ३ । ६ । १) इत्यादिश्रुतिभ्यः । इहापि भूमैव सुखमित्युक्तत्वात् ।
அனுவாதம் - ஸமாதானம் - இந்த தோஷமில்லை தர்மாதர்ம காரியங்களின் சரீர சம்பந்தமான பிரியம், பிரியமற்றவைகளை நிஷேதிப்பது குறித்து விளக்கப்பட்டது. சரீரமற்றது பிரியம், பிரியமற்றது ஆகியவைகளை ஸ்பரிசிக்காது. எவ்வாறு சீதஸ்பரிசம், உஷ்ண ஸ்பர்ஸ்யங்களாகிய ஆகமாபாயி விஷயங்களில் காணப்படுகிறது. அக்னியின் உஷ்ணம் பிரகாசங்களுக்கு ஸ்வபாவ ரூபமான அக்னி ஸ்பரிசிக்கும் என்பது இல்லை. எவ்வாறு அக்னி, சூரியன் இவைகளின் உஷ்ணமோ அவ்வாறே பிரகாசம் போல் ஸ்வரூபம் பூதமான ஆனந்தம் அவ்வாறே பிரியத்தையும் இங்கு நிஷேதம் செய்யவில்லை. “आनन्दो ब्रह्म” (ஆனந்தோபிரஹ்ம), “विज्ञानमानन्दं ब्रह्म” (விக்ஞானமானந்தம் பிரஹ்ம) என்பது முதலிய சுருதிகளிலும் சித்திக்கிறது. இங்கும் பூமாவே சுகம் என்று கூறப்பட்டுள்ளது.
ननु भूम्नः प्रियस्य एकत्वे असंवेद्यत्वात् स्वरूपेणैव वा नित्यसंवेद्यत्वात् निर्विशेषतेति न इन्द्रस्य तदिष्टम् , ‘नाह खल्वयं संप्रत्यात्मानं जानात्ययमहमस्मीति नो एवेमानि भूतानि विनाशमेवापीतो भवति नाहमत्र भोग्यं पश्यामि’ (छा. उ. ७ । ११ । २) इत्युक्तत्वात् । तद्धि इन्द्रस्येष्टम् — यद्भूतानि च आत्मानं च जानाति, न च अप्रियं किञ्चिद्वेत्ति, स सर्वांश्च लोकानाप्नोति सर्वांश्च कामान् येन ज्ञानेन ।
அனுவாதம் - சங்கை - ஆனால் பூமாவினுடைய பிரியத்தின் ஏகத்துவம் அறியமுடியாததாலும் ஸ்வரூபத்தால் நித்யம் அறியப்படுவதாலும், விசேஷம் அற்றதாய் இருப்பதாலும் அதில் இந்திரனுக்கு இஷ்டமில்லை. “ஏன் எனில் அவன் இவ்வாறு கூறியதால் அதாவது” இந்த அவஸ்தையில் அது நான் என்று இவ்வாறு தன்னை அறிவதில்லை மேலும் மற்ற பூதங்களையும் அறிவதில்லை. அந்த சமயத்தில் விநாசத்தை அடைகிறான். எது பூதங்களையும் தன்னையும் அறிவதில்லை. மேலும் பிரியமற்றதையும் சிறிதும் அறிவதில்லை. ஆகையால் அவன் எந்த ஞானத்தால் எல்லா லோகங்களையும், எல்லா காமனைகளையும் அடைய முடியுமோ அதுவே இந்திரனின் இஷ்டம்.
सत्यमेतदिष्टमिन्द्रस्य — इमानि भूतानि मत्तोऽन्यानि, लोकाः कामाश्च सर्वे मत्तो अन्ये, अहमेषां स्वामीति । न त्वेतदिन्द्रस्य हितम् । हितं च इन्द्रस्य प्रजापतिना वक्तव्यम् । व्योमवदशरीरात्मतया सर्वभूतलोककामात्मत्वोपगमेन या प्राप्तिः, तद्धितमिन्द्राय वक्तव्यमिति प्रजापतिना अभिप्रेतम् । न तु राज्ञो राज्याप्तिवदन्यत्वेन । तत्रैवं सति कं केन विजानीयादात्मैकत्वे इमानि भूतान्ययमहमस्मीति ।
அனுவாதம் - ஸமாதானம் - இதுவே இந்திரனுடைய இஷ்டம் என்பது சரியே. இந்த பூதங்கள் என்னைவிட வேறானவை. எல்லா லோகங்களும் காமனைகளும் என்னைவிட வேறு. நான் அவைகளின் தலைவன் (ஸ்வாமி) என்னும் இது இந்திரனுக்கு ஹிதமானது அல்ல. பிரஜாபதியினால் இந்திரனுக்கு ஹிதமானது கூறப்படவேண்டும். ஆகாயம் போல் சரீரமற்றதாய் எல்லா பூதங்கள், லோகங்களின் காமனைகளை ஆத்ம பாவமாய் அடைவது எதுவோ அதுவே இந்திரனுக்கு ஹிதமானது என்று இந்திரனுக்கு கூறவேண்டும் என்று பிரஜாபதியின் அபிப்பிராயமாகும். ராஜாவால் ராஜ்யத்தை அடைவது போன்று இது வேறாக (தனியாக) இல்லை. இவ்வாறு இருக்கும்பொழுது எதை எதனால் ஆத்மாவின் ஏகத்துவத்தை அறியலாம் என்றால் “इमानि भूतान्ययमहमस्मि” (இமானி பூதான்யயமஹமஸ்மி) இவ்வாறு அறியலாம்.
அனுவாதம் - சங்கை - ஆனால் இந்த பக்ஷத்தில் “स्रीभिर्वा यानैर्वा” (ஸ்த்ரீபிர்வா யானைர்வா), “स यदि पितृलोककामः” (ச யதி பித்ருலோககாம:) “स एकधा भवति” (ச ஏகதா பவதி) இவை முதலிய ஐஸ்வர்ய ஸ்ருதிகளுக்கு விரோதமாகும், (பொருந்தாது)
न, सर्वात्मनः सर्वफलसम्बन्धोपपत्तेरविरोधात् — मृद इव सर्वघटकरककुण्डाद्याप्तिः ।
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறு அல்ல. ஏன் எனில் சர்வாத்மாவாகிய வித்வானுக்கு எந்த ஒரு விரோதமும் இல்லாததால் எல்லா பலன்களுடனும் சம்பந்தம் உண்டாகிறது. எவ்வாறு மண்ணில் இருந்து குடம், கமண்டலம், அண்டா முதலிய எல்லா விகாரங்களும் ஏற்படுகிறதோ அவ்வாறு ஆகும்.
ननु सर्वात्मत्वे दुःखसम्बन्धोऽपि स्यादिति चेत् ,
அனுவாதம் - சங்கை - ஆனால் சர்வாத்மாவாய் இருப்பதால் துக்கத்தின் சம்பந்தம் ஏற்படலாமே எனில்?
न, दुःखस्याप्यात्मत्वोपगमादविरोधः । आत्मन्यविद्याकल्पनानिमित्तानि दुःखानि — रज्ज्वामिव सर्पादिकल्पनानिमित्तानि । सा च अविद्या अशरीरात्मैकत्वस्वरूपदर्शनेन दुःखनिमित्ता उच्छिन्नेति दुःखसम्बन्धाशङ्का न सम्भवति ।
அனுவாதம் - ஸமாதானம் - அவ்வாறு அல்ல. துக்கமும் ஆத்மாவாய் அறியப்படுவதால் விரோதமில்லை. பாம்பு முதலியவைகளின் கல்பனை நிமித்தங்கள் கயிற்றில் தோன்றுவது போல் ஆத்மாவில் அவித்யா கல்பனை நிமித்தங்களால் துக்கங்கள் ஏற்படுகின்றன. சரீரமற்ற ஆத்மாவின் ஏகத்துவ ஸ்வரூப தர்சனத்தால் அந்த துக்கங்களின் நிமித்தமான அவித்யா நீங்கிவிடுவதால் துக்க சம்பந்தமான சங்கை சம்பவிக்காது.
शुद्धसत्त्वसङ्कल्पनिमित्तानां तु कामानाम् ईश्वरदेहसम्बन्धः सर्वभूतेषु मानसानाम् । पर एव सर्वसत्त्वोपाधिद्वारेण भोक्तेति सर्वाविद्याकृतसंव्यवहाराणां पर एव आत्मा आस्पदं नान्योऽस्तीति वेदान्तसिद्धान्तः ॥
அனுவாதம் - சுத்த அந்தகரண சங்கல்ப நிமித்தங்களான மானசீக காமனைகள், எல்லா பூதங்களிலும் ஈஸ்வர தேஹ சம்பந்தத்தால் சித்திக்கின்றன. எல்லாம் சத்வமயமான உபாதியின் வாயிலாக அந்த பரமாத்மாவே அந்த ஐஸ்வர்யங்களின் போக்தா. ஆகையால் அவித்யையினால் உண்டான எல்லா வியவகாரங்களுக்கும் பரமாத்மாவே அதிஷ்டானமாகும். வேறு எதனாலும் அன்று, என்பது வேதாந்த சித்தாந்தமாகும்.
‘य एषोऽक्षिणि पुरुषो दृश्यते’ इति च्छायापुरुष एव प्रजापतिना उक्तः, स्वप्नसुषुप्तयोश्च अन्य एव, न परोऽपहतपाप्मत्वादिलक्षणः, विरोधात् इति केचिन्मन्यन्ते । छायाद्यात्मनां च उपदेशे प्रयोजनमाचक्षते । आदावेव उच्यमाने किल दुर्विज्ञेयत्वात्परस्य आत्मनः अत्यन्तबाह्यविषयासक्तचेतसः अत्यन्तसूक्ष्मवस्तुश्रवणे व्यामोहो मा भूदिति ।
அனுவாதம் - “य एषोऽक्षिणि पुरुषो दृश्यते” (ய ஏஷோ அக்ஷிணி புருஷோ த்ருஷ்யதே - எந்த புருஷன் கண்களில் காணப்படுகிறதோ) என்று ச்சாயா புருஷனையே பிரஜாபதியினால் கூறப்பட்டது. ஸ்வப்ன சுழுப்தி அவஸ்தைகளிலும் வேறு புருஷனையே குறிக்கிறது. பரமான அபஹதபாப்மா முதலிய லக்ஷணங்களை உடைய பரமாத்மாவை அல்ல. ஏன் எனில் இவ்விரு லக்ஷணங்களிலும் பரஸ்பர விரோதம் இருப்பதால் என்று சிலர் கருதுகின்றனர். சாயாத்மாவின் உபதேசத்தின் பிரயோஜனத்தை இனி கூறுகின்றனர் - பரமாத்மாவை அறிவது மிகக்கடினமானதாகும். ஆகையால் எவருடைய சித்தம் வெளி விஷயங்களில் முற்றிலும் பற்றற்று இருப்பவர்களுக்கு ஆரம்பத்திலேயே அதன் உபதேசம் அளித்தபின் மிகவும் சூக்ஷ்மமான வஸ்துவை சிரவணம் செய்வதில் எந்த வியாமோகமும் ஏற்படக்கூடாது.
यथा किल द्वितीयायां सूक्ष्मं चन्द्रं दिदर्शयिषुः वृक्षं कञ्चित्प्रत्यक्षमादौ दर्शयति — पश्य अमुमेष चन्द्र इति, ततोऽन्यं ततोऽप्यन्यं गिरिमूर्धानं च चन्द्रसमीपस्थम् — एष चन्द्र इति, ततोऽसौ चन्द्रं पश्यति, एवमेतत् ‘य एषोऽक्षिणि’ इत्याद्युक्तं प्रजापतिना त्रिभिः पर्यायैः, न पर इति । चतुर्थे तु पर्याये देहान्मर्त्यात्समुत्थाय अशरीरतामापन्नो ज्योतिःस्वरूपम् । यस्मिन्नुत्तमपुरुषे स्त्रयादिभिर्जक्षत्क्रीडन् रममाणो भवति, स उत्तमः पुरुषः पर उक्त इति च आहुः ।
அனுவாதம் - சங்கை- - எவ்வாறு இரண்டாவது நாள் சூக்ஷ்மமான சந்திரனை காண்பிப்பதற்கு விரும்பிய ஒருவன் தன் முன்னால் இருக்கும் மரத்தைக் காண்பித்து இந்த சந்திரனைப் பார் என்று காண்பிப்பான். அவ்வாறே வேறு மரத்தையோ அல்லது அதன்பின் சந்திரனின் சமீபத்தில் இருக்கும் மலை சிகரத்தைக் காண்பித்து இது சந்திரன் என்று காண்பிப்பான். அதனால் அவன் சந்திரனைப் பார்ப்பான். அவ்வாறே இந்த “यएषोऽक्षिणि” (யஏஷோஅக்ஷிணி) என்பது முதலியவைகள் பிரஜாபதியினால் மூன்று பரியாங்களால் வியாக்யாணம் செய்தது பர ஆத்மாவை அல்ல. நான்காவது பரியாயத்தில் மரணதர்மம் உடைய தேஹத்திலிருந்து விழித்து எழுந்து எந்த உத்தமமான புருஷனிடத்தில் அந்த ஜ்யோதி ஸ்வரூப சரீரமற்றதாக அடைந்து ஸ்த்ரீ முதலியவைகளுடன் இப்பொழுது பக்ஷணம் செய்தும், விளையாடிக்கொண்டும், ரமிக்கின்றவனாக ஆகின்றான். அந்த உத்தம புருஷனே பரமாத்மா என்று கூறினார் என்றும் கூறுவர்.
सत्यम् , रमणीया तावदियं व्याख्या श्रोतुम् । न तु अर्थोऽस्य ग्रन्थस्य एवं सम्भवति । कथम् ? ‘अक्षिणि पुरुषो दृश्यते’ इत्युपन्यस्य शिष्याभ्यां छायात्मनि गृहीते तयोस्तद्विपरीतग्रहणं मत्वा तदपनयाय उदशरावोपन्यासः ‘किं पश्यथः’ (छा. उ. ८ । ८ । १) इति च प्रश्नः साध्वलङ्कारोपदेशश्च अनर्थकः स्यात् , यदि छायात्मैव प्रजापतिना ‘अक्षिणि दृश्यते’ इत्युपदिष्टः । किञ्च यदि स्वयमुपदिष्ट इति ग्रहणस्याप्यपनयनकारणं वक्तव्यं स्यात् । स्वप्नसुषुप्तात्मग्रहणयोरपि तदपनयकारणं च स्वयं ब्रूयात् । न च उक्तम् । तेन मन्यामहे न अक्षिणि च्छायात्मा प्रजापतिना उपदिष्टः ।
அனுவாதம் - ஸமாதானம் - நீ கூறுவது சரியே. இவ்வாறு இதைக் கேட்பது இனிமையாகவே இருக்கிறது. ஆனால் இந்த கிரந்தத்தின் அர்த்தம் அவ்வாறு சம்பவிக்கவில்லை. எவ்வாறு? “अक्षिणि पुरुषो दृश्यते” (கண்ணில் புருஷன் காணப்படுகிறான்) என்று உபதேசித்தது சிஷ்யர்கள் இருவரும் ச்சாயாத்மாவை கிரஹித்துக்கொண்டார்கள். அவர்கள் விபரீதமாக புரிந்து கொண்டதை அறிந்து அதைப்போக்குவதற்காக ஜல பாத்திரத்தின் மூலமாக உபதேசம் செய்வதற்காக அதில் என்ன பார்க்கிறாய் என்று கேட்டும் நல்ல அலங்காரத்தின் வாயிலாக உபதேசித்தும் சாயா ஆத்மாவே கண்ணில் காணப்படுகிறது என்று கூறுவது பிரஜாபதியினால் உபதேசிக்கப்பட்டது அர்த்தமற்றதாக ஆகிவிடும். மேலும் தானே உபதேசித்தார் என்று எடுத்துக்கொண்டாலும் அதை நிவிர்த்தி செய்வதற்காகவும் அவசியம் கூறவேண்டியதாகின்றது. ஸ்வப்ன சுழுப்தி ஆத்மாவை கிரஹித்துக்கொண்டாலும் அதை விலக்குவதற்கான காரணத்தைக் கூறவேண்டும். ஆகையால் நான் கருதுகிறேன் கண்ணில் உள்ள சாயா ஆத்மாவை பிரஜாபதி உபதேசிக்கவில்லை.
किं चान्यत् , अक्षिणि द्रष्टा चेत् ‘दृश्यते’ इत्युपदिष्टः स्यात् , तत इदं युक्तम् । ‘एतं त्वेव ते’ इत्युक्त्वा स्वप्नेऽपि द्रष्टुरेवोपदेशः । स्वप्ने न द्रष्टोपदिष्ट इति चेत् , न, ‘अपि रोदितीव’ ‘अप्रियवेत्तेव’ इत्युपदेशात् । न च द्रष्टुरन्यः कश्चित्स्वप्ने महीयमानश्चरति । ‘अत्रायं पुरुषः स्वयञ्ज्योतिः’ (बृ. उ. ४ । ३ । ९) इति न्यायतः श्रुत्यन्तरे सिद्धत्वात् ।
அனுவாதம் - இதைத்தவிர வேறு விஷயம் இதுவாகும் - கண்ணில் திருஷ்டா காணப்படுகிறான் என்று உபதேசித்தால் அப்பொழுது இது சரியானதாகும் “एतं त्वेव ते” (ஏதம் த்வேவதே = அந்த அது நீயே) என்று கூறி ஸ்வப்னத்திலும் திருஷ்டாவையே உபதேசம் செய்தார். இவ்வாறு ஸ்வப்னத்தில் திருஷ்டாவின் உபதேசம் செய்யவில்லை என்று கூறுவது சரியல்ல. ஏன் எனில் அது அழுவது போல் அழுகிறது, அது அப்பிரியத்தையும் அறிகிறது என்று உபதேசம் செய்யப்பட்டது. திருஷ்டாவைத் தவிர வேறு ஒன்றும் ஸ்வப்னத்தில் பூஜிக்கப்பட்டு செயல்படுவது இல்லை (வியவஹாரம் செய்வதில்லை). “अत्रायं पुरुषः स्वयंज्योतिः” (அத்ராயம் புருஷ: ஸ்வயம்ஜ்யோதி:) என்று யுக்தி பூர்வகமாக வேறு சுருதியிலும் சித்திக்கிறது.
यद्यपि स्वप्ने सधीर्भवति, तथापि न धीः स्वप्नभोगोपलब्धिं प्रति करणत्वं भजते । किं तर्हि, पटचित्रवज्जाग्रद्वासनाश्रया दृश्यैव धीर्भवतीति न द्रष्टुः स्वयञ्ज्योतिष्ट्वबाधः स्यात् ।
அனுவாதம் - ஸ்வப்னத்தில் (ஆத்மா) புத்தியுடன் இருந்தாலும் புத்தியானது ஸ்வப்ன போகத்தை (அடைவதற்கு) அறிந்து கொள்வதற்கான காரணமாகாது. ஆனால் எவ்வாறு இருக்கிறது? பட சித்திரம் (துணியில் உள்ள சித்திரம்) போல் ஜாக்கிரத் வாசனைகளை ஆஸ்ரயித்து திருஷ்யமே புத்தியாகிறது. ஆகையால் அந்த அவஸ்தையில் திருஷ்டாவின் ஸ்வயம் ஜோதிக்கு பாதகம் உண்டாகாது.
किञ्चान्यत् , जाग्रत्स्वप्नयोर्भूतानि च आत्मानं च जानाति — इमानि भूतान्ययमहमस्मीति । प्राप्तौ सत्यां प्रतिषेधो युक्तः स्यात् — नाह खल्वयमित्यादि । तथा चेतनस्यैव अविद्यानिमित्तयोः सशरीरत्वे सति प्रियाप्रिययोरपहतिर्नास्तीत्युक्त्वा तस्यैवाशरीरस्य सतो विद्यायां सत्यां सशरीरत्वे प्राप्तयोः प्रतिषेधो युक्तः ‘अशरीरं वाव सन्तं न प्रियाप्रिये स्पृशतः’ (छा. उ. ८ । १२ । १) इति । एकश्चात्मा स्वप्नबुद्वान्तयोर्महामत्स्यवदसङ्गः सञ्चरतीति श्रुत्यन्तरे सिद्धम् ।
அனுவாதம் - இதைத்தவிர வேறு ஹேது என்னவெனில் ஜாக்ரத் ஸ்வப்னங்களில் பூதங்களையும், ஆத்மாவையும் (தன்னையும்) நானாக இருக்கின்றேன் என்று அறியும்பொழுது நான் அல்ல இதுவல்ல என்பது முதலியவைகளால் இல்லை என்று நிஷேதிக்க முடியும். அவ்வறே சேதனத்திற்கு சரீரம் உடையதாய் ஆகும்பொழுது அவித்யையின் நிமித்தமான பிரியம், பிரியமற்றது என்பது நாசமாகாது என்று இவ்வாறு கூறி வித்யையை அடைந்த உடன் சரீரமற்ற தன்மையை அடைந்து அதற்கு சரீரம் இருக்கும் அவஸ்தையில் ஏற்படும் பிரியாபிரியங்கள் சரீரமற்றதை ஸ்பரிசிக்காது என்று இவ்வாறு நிஷேதம் செய்வது சரியானதே. ஸ்வப்னத்திலும் ஒரே ஆத்மா பெரிய மீன்கள் போல் சங்கமற்ற ரூபத்துடன் இங்கும் அங்கும் செல்கிறது என்று மற்றொரு சுருதியிலும் சித்திக்கின்றது.
यच्चोक्तं सम्प्रसादः शरीरात्समुत्थाय यस्मिन्‌स्त्र्यादिभिः रममाणो भवति सोऽन्यः सम्प्रसादादधिकरणनिर्दिष्ट उत्तमः पुरुष इति, तदप्यसत् । चतुर्थेऽपि पर्याये ‘एतं त्वेव ते’ इति वचनात् । यदि ततोऽन्योऽभिप्रेतः स्यात् , पूर्ववत् ‘एतं त्वेव ते’ इति न ब्रूयान्मृषा प्रजापतिः ।
அனுவாதம் - இவ்வாறு கூறப்பட்ட சம்பிரசாதம் சரீரத்திலிருந்து கிளம்பி எதில் ஸ்திரீ முதலியவைகளுடன் ரமிக்கின்றதாய் ஆகிறது. அது வேறு சம்பிரதாயத்தினால் அதிகரண ரூபமாய் நிர்தேசம் செய்யப்பட்ட உத்தம புருஷன் இதைவிட வேறானது என்பதும் சரியல்ல. ஏன் எனில் நான்காவது பர்யாயத்தில் “एतं त्वेव ते” (ஏதம் த்வேவ தே) என்ற வசனத்தால் (நிர்தேசம்) நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அதைவிட வேறான அபிப்பிராயம் இருக்கலாம். முன்போல் “एतं त्वेव ते” (ஏதம் த்வேவ தே) என்று பொய்யானதை பிரஜாபதி கூறமாட்டார்.
किञ्चान्यत् , तेजोबन्नादीनां स्रष्टुः सतः स्वविकारदेहशुङ्गे प्रवेशं दर्शयित्वा प्रविष्टाय पुनः तत्त्वमसीत्युपदेशः मृषा प्रसज्येत । तस्मिंस्त्वं स्त्र्यादिभिः रन्ता भविष्यसीति युक्त उपदेशोऽभविष्यत् यदि सम्प्रसादादन्य उत्तमः पुरुषो भवेत् । तथा भूम्नि ‘अहमेव’ (छा. उ. ७ । २५ । २) इत्यादिश्य ‘आत्मैवेदं सर्वम्’ इति नोपसमहरिष्यत् , यदि भूमा जीवादन्योऽभविष्यत् , ‘नान्योऽतोऽस्ति द्रष्टा’ (बृ. उ. ३ । ७ । २३) इत्यादिश्रुत्यन्तराच्च । सर्वश्रुतिषु च परस्मिन्नात्मशब्दप्रयोगो नाभविष्यत् प्रत्यगात्मा चेत्सर्वजन्तूनां पर आत्मा न भवेत् । तस्मादेक एव आत्मा प्रकरणी सिद्धः ॥
அனுவாதம் - இதைத்தவிர வேறு காரணமும் இருக்கிறது. அதாவது தேஜஸ் ஜலம் அன்னம் இவைகளை சிருஷ்டிக்கும் சத் தன்னுடைய விகார ரூபமான சரீரத்தில் பிரவேசத்தைக் காண்பித்து இவ்வாறு பிரவேசித்திருப்பதனை அதுவே நீ என்று உபதேசிப்பது மித்யாவாகும். உத்தமமான புருஷன் சம்பிரசாதத்தால் வேறாக ஆனால் அவன் அதில் ஸ்திரீ முதலியவைகளுடன் ரமிக்கின்றவனாக ஆவான் என்று உபதேசம் சரியானதாக ஆகும். பூமா ஜீவனைக் காட்டிலும் வேறு என்றால் பூமாவில் “இது நான் என்று ஆதேசம் செய்து (கூறி)” “இவை எல்லாம் ஆத்மா” என்று உபசம்ஹாரம் (முடிவு) செய்யமுடியாது. “नान्योऽतोऽस्ति द्रष्टा” (நான்யதோऽஸ்தி த்ருஷ்டா) என்று வேறு சுருதியினாலும் சித்திக்கிறது. எல்லா ஜீவன்களின் பிரத்யக் ஆத்மா பர ஆத்மா ஆகாது என்றால் எல்லா சுருதிகளிலும் பரமாத்மாவிற்கு ஆத்ம சப்த பிரயோகம் செய்யமுடியாது. ஆகையால் ஆத்மா ஒன்றே இந்த பிரகரணத்தின் விஷயம் என்பது சித்திக்கின்றது.
न च आत्मनः संसारित्वम् , अविद्याध्यस्तत्वादात्मनि संसारस्य । न हि रज्जुशुक्तिकागगनादिषु सर्परजतमलादीनि मिथ्याज्ञानाध्यस्तानि तेषां भवन्तीति । एतेन सशरीरस्य प्रियाप्रिययोरपहतिर्नास्तीति व्याख्यातम् । यच्च स्थितमप्रियवेत्तेवेति नाप्रियवेत्तैवेति सिद्धम् । एवं च सति सर्वपर्यायेषु ‘एतदमृतमभयमेतद्ब्रह्म’ इति प्रजापतेर्वचनम् , यदि वा प्रजापतिच्छद्मरूपायाः श्रुतेर्वचनम् , सत्यमेव भवेत् । न च तत्कुतर्कबुद्ध्या मृषा कर्तुं युक्तम् , ततो गुरुतरस्य प्रमाणान्तरस्यानुपपत्तेः ।
அனுவாதம் - ஆத்மாவிற்கு சம்சாரித்துவம் இல்லை. ஏன் எனில் சம்சாரம் அவித்யையினால் அத்யஸ்தமாக உள்ளது. ரஜ்ஜு, சுக்தி, ஆகாசம் முதலியவைகளில் சர்பம், வெள்ளை, தல மலாதி முதலியவைகள் மித்யா ஞானத்தால் அவைகள் அத்யாசத்தை அடைகின்றன என்பது உண்மையில் அல்ல. இதனால் சரீரம் உடையவைகளுக்கு பிரியம் அப்பிரியம் நாசம் ஆவதில்லை என்று வியாக்கியானம் செய்யப்பட்டது. மேலும் அப்பிரியம் அறிந்தது போல் என்று கூறியதால் அப்பிரியம் அறிகிறது என்று சித்திக்கின்றது. எல்லா பர்யாயங்களிலும் “இது அம்ருதம், இது அபயம், இதுவே பிரஹ்மம் என்பது பிரஜாபதியின் வசனமாகும். பிரஜாபதியின் வசனமும் அதைப்போன்று சுருதியின் வசனமும் உண்மையே ஆகும். அதை குதர்க்கத்தால் மித்யாவாக ஆகும் என்பது பொருந்தாது. ஆகையால் சுருதி வாக்கியங்களைத் தவிர வேறு உத்கிருஷ்டமான பிரமாணம் கிடைப்பது என்பது சம்பவிக்காது.
ननु प्रत्यक्षं दुःखाद्यप्रियवेत्तृत्वमव्यभिचार्यनुभूयत इति चेत् , न, जरादिरहितो जीर्णोऽहं जातोऽहमायुष्मान्गौरः कृष्णो मृतः — इत्यादिप्रत्यक्षानुभववत्तदुपपत्तेः । सर्वमप्येतत्सत्यमिति चेत् , अस्त्येवैतदेवं दुरवगमम् , येन देवराजोऽप्युदशरावादिदर्शिताविनाशयुक्तिरपि मुमोहैवात्र ‘विनाशमेवापीतो भवति’ इति ।
அனுவாதம் - ஆனால் துக்கம் முதலிய அப்பிரியத்தை அறிவது நிச்சயமான பிரத்யக்ஷ அனுபவமாகிறது என்று கூறுவது சரியல்ல. ஏன் எனில் நான் மூப்பு முதலியவை அற்றவன், மூப்பினால் பீடிக்கப்பட்டு உள்ளேன், நான் பிறந்திருக்கின்றேன், நான் ஆயுள் உடையவன், நான் வெள்ளை நிறம் உடையவன், நான் கருப்பு நிறமுடையவன், நான் மரணம் அடைவேன் என்பது முதலிய பிரத்யக்ஷ அனுபவத்திற்கு சமமாகவும் (அப்பிரியத்தை அறிவது) சம்பவிக்கும். இவை எல்லாம் சத்தியம் (உண்மை) என்று கூறினால் அது உண்மையில் அவ்வாறு அறிவது முடியாதது ஆகும். ஆகையால் ஆத்மாவின் நாசமற்றதின் சம்பந்தத்தில் ஜலபாத்திரம் முதலிய யுக்திகளைக் காட்டிய பின்னரும் அதைக் காண்பதற்கு இந்த மோக அவஸ்தையில் அது விநாசத்தையே அடையும்,
तथा विरोचनो महाप्राज्ञः प्राजापत्योऽपि देहमात्रात्मदर्शनो बभूव । तथा इन्द्रस्य आत्मविनाशभयसागरे एव वैनाशिका न्यमज्जन् । तथा साङ्ख्या द्रष्टारं देहादिव्यतिरिक्तमवगम्यापि त्यक्तागमप्रमाणत्वात् मृत्युविषये एव अन्यत्वदर्शने तस्थुः । तथा अन्ये काणादादिदर्शनाः कषायरक्तमिव क्षारादिभिर्वस्त्रं नवभिरात्मगुणैर्युक्तमात्मद्रव्यं विशोधयितुं प्रवृत्ताः । तथा अन्ये कर्मिणो बाह्यविषयापहृतचेतसः वेदप्रमाणा अपि परमार्थसत्यमात्मैकत्वं सविनाशमिव इन्द्रवन्मन्यमाना घटीयन्‍त्रवत् आरोहावरोहप्रकारैरनिशं बम्भ्रमन्ति ; किमन्ये क्षुद्रजन्तवो विवेकहीनाः स्वभावत एव बहिर्विषयापहृतचेतसः ।
அனுவாதம் - மஹா புத்திமானாகிய பிரஜாபதியின் புத்திரனாக விரோசனன் இருந்தபோதிலும் தேஹத்தில் மாத்திரமே ஆத்ம புத்தியை வைத்தான். அவ்வாறே வைநாசிகர்களும் இந்திரனின் ஆத்மரூப விநாச பயத்தை சமுத்திரத்தில் மூழ்கியதுபோல் பார்த்தார்கள். அவ்வாறே சாங்கியர்கள் திருஷ்டாவை (ஆத்மாவை) தேஹத்தைக் காட்டிலும் வேறாக அறிந்து ஆகம பிரமாணத்தை ஏற்றுக்கொள்ளாததால் மிருத்யுவின் விஷயரூபமான பேத தர்சனத்தில் ஈடுபடுகின்றனர். அவ்வாறே மற்ற காணாதி தர்சிகள் (மதவாதிகள்) காவி நிறத்தை அடைந்த வஸ்திரத்தை ரசாயணம் முதலியவைகளால் சுத்தம் செய்வது போல் ஒன்பது குணங்களுடன் கூடிய ஆத்ம வஸ்துவை சுத்தம் செய்ய முற்படுகின்றனர். அவ்வாறே மற்ற கர்மிஷ்டர்கள் பாஹ்ய (வெளி) விஷயங்களில் பற்று உடையவர்களாய் வேதத்தைப் பிரமாணமாக ஏற்றுக்கொண்டாலும் இந்திரனைப் போன்று பரமார்த்த சத்ய ஆத்ம ஏகத்துவத்தை தன்னுடைய விநாசம் என்று கருதி நீர் இறைக்கும் எந்திரம் போல் இரவும் பகலும் மேலும் கீழும் சென்று கொண்டும், வந்து கொண்டும் இருக்கின்றனர். மற்ற ஸ்வபாவமாகவே வெளி விஷயங்களினால் ஈர்க்கப்பட்ட மனதுடைய அவிவேகிகளாகிய கீழான ஜீவர்களைப் பற்றி என்ன கூறுவது.?
तस्मादिदं त्यक्तसर्वबाह्यैषणैः अनन्यशरणैः परमहंसपरिव्राजकैः अत्याश्रमिभिर्वेदान्तविज्ञानपरैरेव वेदनीयं पूज्यतमैः प्राजापत्यं च इमं सम्प्रदायमनुसरद्भिः उपनिबद्धं प्रकरणचतुष्टयेन । तथा अनुशासति अद्यापि ‘त एव नान्ये’ इति ॥
அனுவாதம் - ஆகையால் எவர் எல்லா பாஹ்ய ஏஷணைகளை (ஆசைகளை) தியாகம் செய்து வேறு எந்த ஒரு கதியில்லை என்று இருக்கும்பொழுது எவர் பிரஜாபதியின் இந்த சம்பிரதாயத்தை அனுசரிக்கும் அந்த வேதாந்த விக்ஞானத்தின் பரமாய் இருக்கும் அதி ஆஸ்ரமியான பூஜைக்குரிய பிரஜாபதியினால் பிரதிபாதனம் செய்யப்பட்ட நான்கு பிரகரணத்தால் அறியவேண்டும். அவ்வாறே இன்றும் அதனை உபதேசிக்கின்றனர். வேறு ஒன்றை அல்ல.
तत्र अशरीरस्य सम्प्रसादस्य अविद्यया शरीरेणाविशेषतां सशरीरतामेव सम्प्राप्तस्य शरीरात्समुत्थाय स्वेन रूपेण यथा अभिनिष्पत्तिः, तथा वक्तव्येति दृष्टान्त उच्यते —
அனுவாதம் - அ.கை - இவ்வாறான அவஸ்தையில் அவித்யாவசத்தால் சரீரத்துடன் விசேஷமற்று அதாவது சரீரத்தை அடைந்து சரீரமற்ற சம்பிரசாதத்தின் சரீரத்திலிருந்து மேல் எழுந்து தன்னுடைய ஸ்வரூபத்தை அடைகிறது என்று கூறவேண்டும் என்பதற்காக இந்த திருஷ்டாந்தம் கூறப்படுகிறது.
अशरीरो वायुरभ्रं विद्युत्स्तनयित्नुरशरीराण्येतानि तद्यथैतान्यमुष्मादाकाशात्समुत्थाय परं ज्योतिरुपसम्पद्य स्वेन रूपेणाभिनिष्पद्यन्ते ॥ २ ॥
மந்த்ரார்த்தம் - வாயு சரீரமற்றது. மேகம், மின்னல் மேலும் இடி இவை எல்லாம் சரீரமற்றது. இவை எல்லாம் இந்த ஆகாசத்திலிருந்து எழுந்து சூரியனில் பரமஜ்யோதியை அடைந்து தங்கள் ஸ்வரூபத்தை அடைகின்றன.
अशरीरो वायुः अविद्यमानं शिरःपाण्यादिमच्छरीरमस्येत्यशरीरः । किं च अभ्रं विद्युत्स्तनयित्नुरित्येतानि च अशरीराणि । तत् तत्रैवं सति वर्षादिप्रयोजनावसाने यथा, अमुष्मादिति भूमिष्ठा श्रुतिः द्युलोकसम्बन्धिनमाकाशदेशं व्यपदिशति, एतानि यथोक्तान्याकाशसमानरूपतामापन्नानि स्वेन वाय्वादिरूपेणागृह्यमाणानि आकाशाख्यतां गतानि —
அனுவாதம் - வாயு சரீரமற்றது. அதற்கு தலை கை முதலியவைகளை உடைய சரீரம் இல்லாததால் சரீரமற்றது அதாவது அசரீரம். மேலும் மேகம், மின்னல், இடி ஆகிய இவைகளும் சரீரமற்றவை. இவ்வாறு இருந்தாலும் மழை முதலியைவைகளின் பிரயோஜனம் பூர்த்தியானபின் அது (ஆகாசத்திலிருந்து எழுந்து) இவ்வாறு பூமியில் இருக்கும் சுருதி த்யுலோக சம்பந்தமுடைய ஆகாசத்தைப் பரோக்ஷ ரூபமாக விளக்கி இருக்கிறது. இவ்வாறு கூறப்பட்ட இவைகள் ஆகாசத்திற்கு சமானமான ரூபங்களை அடைந்து தன்னுடைய வாயு முதலிய ரூபங்களை கிரஹித்துக்கொள்ளாமல் ஆகாசம் எனப்படுவதை அடைகிறது.
यथा सम्प्रसादः अविद्यावस्थायां शरीरात्मभावमेव आपन्नः, तानि च तथाभूतान्यमुष्मात् द्युलोकसम्बन्धिन आकाशदेशात्समुत्तिष्टन्ति वर्षणादिप्रयोजनाभिनिर्वृत्तये । कथम् ? शिशिरापाये सावित्रं परं ज्योतिः प्रकृष्टं ग्रैष्मकमुपसम्पद्य सावित्रमभितापं प्राप्येत्यथः । आदित्याभितापेन पृथग्भावमापादिताः सन्तः स्वेन स्वेन रूपेण पुरोवातादिवायुरूपेण स्तिमितभावं हित्वा अभ्रमपि भूमिपर्वतहस्त्यादिरूपेण विद्युदपि स्वेन ज्योतिर्लतादिचपलरूपेण स्तनयित्नुरपि स्वेन गर्जिताशनिरूपेणेत्येवं प्रावृडागमे स्वेन स्वेन रूपेणाभिनिष्पद्यन्ते ॥
அனுவாதம் - எவ்வாறு சம்பிரசாதம் அவித்யா அவஸ்தையில் சரீர ஆத்ம பாவத்தை அடைகிறது. அவ்வாறு அந்த ரூபத்தை அடையும் அவை எல்லா மழை முதலியவைகளின் பிரயோஜனத்திற்காக இந்த த்யுலோக சம்பந்தியான ஆகாச தேசத்திலிருந்து எழுகிறது. எவ்வாறு எழுகிறது? பனி (குளிர்) காலம் முடிந்தவுடன் சூரியனின் பரம தேஜஸ்ஸினால் வெயில் (கோடை) காலம் உச்சகட்டமாகி சூரியனின் தேஜஸ்ஸால் தாபத்தை அடைந்து அதாவது சூரியனின் உஷ்ணத்தை அடைந்து அந்த சூரியனின் மிகுந்த தாபத்தால் வெவ்வேறு பாவத்தை அடைந்து தன் தன் ஸ்வரூபத்தை அடைகின்றன. அவைகளில் வாயு கிழக்கு முதலிய வாயு ரூபமாகவும் மேலும் மேகமும், பூமி, மலை, யானை முதலிய ரூபங்களையும் மின்னலும் தன்னுடைய அசையும் தன்மை ரூபமான பிரகாசமான கொடி போன்ற ரூபத்தையும், அவ்வாறே இடியும் தன் ரூபமான சப்தம் செய்யும் இடியாகவும் ஆகின்றன.
एवमेवैष सम्प्रसादोऽस्माच्छरीरात्समुत्थाय परं ज्योतिरुपसम्पद्य स्वेन रूपेणाभिनिष्पद्यते स उत्तमपुरुषः स तत्र पर्येति जक्षत्क्रीडन् रममाणः स्त्रीभिर्वा यानैर्वा ज्ञातिभिर्वा नोपजनꣳ स्मरन्निदꣳ शरीरꣳ स यथा प्रयोग्य आचरणे युक्त एवमेवायमस्मिञ्छरीरे प्राणो युक्तः ॥ ३ ॥
மந்த்ரார்த்தம் - இவ்வாறு இந்த சம்பிரசாதம் இந்த சரீரத்திலிருந்து வெளிக்கிளம்பி பரம ஜோதியை அடைந்து தன்னுடைய ஸ்வரூபத்தில் நிலைக்கிறது. அதுவே உத்தம புருஷன். இந்த அவஸ்தையில் சிரிக்கிறது, விளையாடுகிறது. மேலும் ஸ்திரீ, வாகனம் மேலும் சொந்த பந்தங்களுடன் ரமித்துக்கொண்டு தன்னுடன் உண்டான இந்த சரீரத்தை நினைக்காமல் வண்டியில் கட்டப்பட்ட காளை போல் பிராணன் இந்த சரீரத்தில் கட்டுப்பட்டுள்ளது.
यथा अयं दृष्टान्तो
அனுவாதம் - அ.கை - எவ்வாறு இந்த திருஷ்டாந்தமோ -
वाय्वादीनामाकाशादिसाम्यगमनवदविद्यया संसारावस्थायां शरीरसाम्यमापन्नः अहममुष्य पुत्रो जातो जीर्णो मरिष्ये — इत्येवंप्रकारं प्रजापतिनेव मघवान् यथोक्तेन क्रमेण नासि त्वं देहेन्द्रियादिधर्मा तत्त्वमसीति प्रतिबोधितः सन् स एष सम्प्रसादो जीवोऽस्माच्छरीरादाकाशादिव वाय्वादयः समुत्थाय देहादिविलक्षणमात्मनो रूपमवगम्य देहात्मभावनां हित्वेत्येतत् , स्वेन रूपेण सदात्मनैवाभिनिष्पद्यत इति व्याख्यातं पुरस्तात् ।
அனுவாதம் - வாயு முதலியவைகள் ஆகாசத்திற்கு சமானமாக ஆகியதைப்போல் அவித்யா வசமான சம்சார அவஸ்தையில் சரீரத்தைப்போன்று அடைந்து நான் இவருடைய புத்திரன், நான் பிறந்தேன், நான் முதுமையை அடைவேன், நான் இறப்பேன் என்று இவ்வாறு என்னமுடைய இந்திரனுக்கு பிரஜாபதியினால் கூறப்பட்ட கிரமமாக தேஹ இந்திரியங்களாகிய தர்மங்கள் உடையவன் அல்ல நீ. நீ அதுவாகவே இருக்கிறாய் என்று அவனுக்கு அறிவுருத்தி (போதித்து) இந்த சம்பிரஸாத ஜீவன் இந்த சரீரத்திலிருந்து ஆகாச வாயு முதலியவைகளைவிட வேறான ஆத்மாவின் ரூபத்தை அறிந்து அதாவது தேஹாத்ம பாவத்தை விடுவதாகும். தன் ரூபமான ஆத்மாவில் எப்பொழுதும் நிலைபெற்றுள்ளது என்பது முன்பே வியாக்கியானம் செய்யப்பட்டது.
स येन स्वेन रूपेण सम्प्रसादोऽभिनिष्पद्यते — प्राक्प्रतिबोधात् तद्भ्रान्तिनिमित्तात्सर्पो भवति यथा रज्जुः, पश्चात्कृतप्रकाशा रज्ज्वात्मना स्वेन रूपेणाभिनिष्पद्यते, एवं च स उत्तमपुरुषः उत्तमश्चासौ पुरुषश्चेत्युत्तमपुरुषः स एव उत्तमपुरुषः । अक्षिस्वप्नपुरुषौ व्यक्तौ अव्यक्तश्च सुषुप्तः समस्तः सम्प्रसन्नः अशरीरश्च स्वेन रूपेणेति । एषामेव स्वेन रूपेणावस्थितः क्षराक्षरौ व्याकृताव्याकृतावपेक्ष्य उत्तमपुरुषः ; कृतनिर्वचनो हि अयं गीतासु ।
அனுவாதம் - அது எந்த தன்னுடைய ரூபமான சம்பிரஸாதத்தில் நிலைக்கின்றதோ - எவ்வாறு விவேகம் உண்டாவதற்கு முன் பிராந்தியின் காரணமாக எவ்வாறு கயிறு சர்ப்பமாக ஆகிறதோ மேலும் வெளிச்சம் ஏற்பட்டவுடன் தன் ஸ்வரூபமாகிய கயிறாக அறியப்படுகிறது. அவ்வாறே அந்த உத்தம புருஷன் அதாவது உத்தமனாய் இருப்பதால் உத்தம புருஷன் எனப்படுகிறான். அந்த உத்தம புருஷனே கண்ணிலும் ஸ்வப்னத்திலும் வியக்தமாக (வெளிப்படையாக)க் காணப்படுகின்றான். விளங்குகின்ற புருஷன் தன்னுடைய ஸ்வாபாவிக ரூபத்தில் நிலைபெற்று நல்லவிதமாக லீனமாகியும், சம்பிரசன்னமாயும், அவ்யக்த்தமாயும் எந்த க்ஷர, அக்ஷர புருஷனோ அதை ஆஸ்ரயித்து அது தன்னுடைய ஸ்வபாவமான ரூபத்தில் நிலைத்து உத்தம புருஷனாகிறது. இதன் நிரூபணம் கீதையில் உள்ளது.
सः सम्प्रसादः स्वेन रूपेण तत्र स्वात्मनि स्वस्थतया सर्वात्मभूतः पर्येति क्वचिदिन्द्राद्यात्मना जक्षत् हसन् भक्षयन् वा भक्ष्यान् उच्चावचान् ईप्सितान् क्वचिन्मनोमात्रैः सङ्कल्पादेव समुत्थितैर्ब्राह्मलौकिकैर्वा क्रीडन् स्त्र्यादिभिः रममाणश्च मनसैव, नोपजनम् , स्त्रीपुंसयोरन्योन्योपगमेन जायत इत्युपजनम् आत्मभावेन वा आत्मसामीप्येन जायत इत्युपजनमिदं शरीरम् , तन्न स्मरन् । तत्स्मरणे हि दुःखमेव स्यात् , दुःखात्मकत्वात् तस्य ।
அனுவாதம் - அந்த சம்பிரதாஸம் தன்னுடைய ஸ்வரூபத்தால் அங்கு ஸ்வாத்மாவில் தானாகவே இருந்துகொண்டு சர்வாத்மரூபமாக ஆகி எங்கும் சஞ்சரிக்கின்றது. சில சமயம் இந்திரன் முதலிய ரூபமாய் “जक्षत्” (ஜக்ஷத்) அதாவது சிரித்துக்கொண்டும் அல்லது நல்லதோ, கெட்டதோ தான் விரும்பியதை சாப்பிட்டுக்கொண்டும், சில சமயம் மனதின் சங்கல்பத்தின் மாத்திரத்தாலேயே உண்டான அல்லது பிரஹ்மலோக சம்பந்தமான போகங்களுடன் விளையாடிக்கொண்டும், ஸ்திரீ முதலியவைகளுடன் மனதால் ரமித்துக்கொண்டும் உபஜனத்தை அதாவது ஸ்திரீ புருஷர்களின் ஒருவருக்கொருவரின் சேர்ந்து இருப்பதால் இந்த சரீரம் உண்டாகின்றது. அல்லது தன் ரூபமாகவே தன் சமீபமாக இருப்பதினால் உண்டாகிறது என்பதை மறந்து இந்த சரீரம் சஞ்சாரம் செய்கிறது. அதை நினைத்தால் (சரீரம்) துக்காத்மகமாய் இருப்பதால் துக்கமே ஏற்படும்.
नन्वनुभूतं चेत् न स्मरेत् असर्वज्ञत्वं मुक्तस्य ;
அனுவாதம் - சங்கை - இந்த அனுபவித்த சரீரத்தை நினைக்கவில்லையென்றால் அப்பொழுது முக்தனுக்கு சர்வக்ஞத்தன்மை சித்திக்காது.
नैष दोषः । येन मिथ्याज्ञानादिना जनितम् तच्च मिथ्याज्ञानादि विद्यया उच्छेदितम् , अतस्तन्नानुभूतमेवेति न तदस्मरणे सर्वज्ञत्वहानिः । न हि उन्मत्तेन ग्रहगृहीतेन वा यदनुभूतं तदुन्मादाद्यपगमेऽपि स्मर्तव्यं स्यात् ; तथेहापि संसारिभिरविद्यादोषवद्भिः यदनुभूयते तत्सर्वात्मानमशरीरं न स्पृशति, अविद्यानिमित्ताभावात् ।
அனுவாதம் - ஸமாதானம் - இந்த தோஷம் இல்லை. ஏன் எனில் எந்த மித்யாஞானம் முதலியவைகளால் உண்டான சரீரத்தின் உத்பத்தி அந்த மித்யாஞானம் முதலியவை வித்யையினால் நாசமானபின் அதை அனுபவிப்பது இல்லை. ஆகையால் அதை நினைக்காததால் சர்வக்ஞத்தின் நாசம் உண்டாகாது. உன்மத்தத்தால் பீடிக்கப்பட்ட புருஷனுக்கு அனுபவம் ஏற்பட்டு அந்த உன்மத்தம் நீங்கிய பின்னரும் அதை நினைக்க வேண்டும் என்பது இல்லை. அவ்வாறே இங்கும் சரீரத்திற்கு அவித்யா தோஷமுடைய சம்சாரிகளால் அனுபவம் ஏற்படுகிறது. அவ்வாறு சரீரமற்ற சர்வாத்மாவை அவித்யையின் நிமித்தம் இல்லாததால் அதை ஸ்பரிசிக்காது.
ये तु उच्छिन्नदोषैर्मृदितकषायैः मानसाः सत्याः कामा अनृतापिधाना अनुभूयन्ते विद्याभिव्यङ्ग्यत्वात् , त एव मुक्तेन सर्वात्मभूतेन सम्बध्यन्त इति आत्मज्ञानस्तुतये निर्दिश्यन्ते ; अतः साध्वेतद्विशिनष्टि — ‘य एते ब्रह्मलोके’ (छा. उ. ८ । १२ । ५) इति । यत्र क्वचन भवन्तोऽपि ब्रह्मण्येव हि ते लोके भवन्तीति सर्वात्मत्वाद्ब्रह्मण उच्यन्ते ॥
அனுவாதம் - ஆனால் எவர்களுடைய தோஷம் நீங்கிவிட்டதோ. அவ்வாறே ராகம், துவேஷம் முதலிய விஷயங்கள் நஷ்டமாகி விட்டதோ அவர்களுடைய மானச சத்ய காமனைகள் பொய்யாக இருந்தாலும் வித்யையினால் வெளிப்படுவதால் (அபிவியங்க்யமாவதால்) அனுபவிக்கப்படுகின்றன. அந்த முக்த புருஷர்களாகிய சர்வாத்ம ரூபத்தால் சம்பந்தப்படுகிறது. என்று ஆத்ம ஞானம் துதிக்கப்படுகிறது என்று நிர்தேசம் செய்யப்படுகிறது. இது சரிதான் என்பது “य एते ब्रह्मलोके” (ய ஏதே பிரஹ்மலோகே) இதனால் கூறப்படுகிறது. எவை எல்லாம் இருக்கிறதோ அவைகள் பிரஹ்ம லோகத்திலேயே இருக்கின்றன என்பதாலும் சர்வாத்மாவாய் இருப்பதாலும் பிரஹ்மம் என்று கூறுகின்றனர்.
ननु कथमेकः सन् नान्यत्पश्यति नान्यच्छृणोति नान्यद्विजानाति स भूमा कामांश्च ब्राह्मलौकिकान्पश्यन्रमते इति च विरुद्धम् , यथा एको यस्मिन्नेव क्षणे पश्यति स तस्मिन्नेव क्षणे न पश्यति च इति ।
அனுவாதம் - சங்கை - ஆனால் எவ்வாறு ஒன்றாகவே இருந்துகொண்டு நான் வேறு ஒன்றைப் பார்க்கவில்லை, மற்றதைக் கேட்கவில்லை, வேறு ஒன்றையும் அறியவில்லை என்னும் அந்த பூமா, பிரஹ்மலோக சம்பந்தமான போகங்களை கண்டு ரமிக்கிறது என்பது விருத்தமாகும். எவ்வாறு ஒரு புருஷன் அதே சமயத்தில் பார்க்கிறான், பார்க்கவில்லை என்பது போல் ஆகுமே -
नैष दोषः, श्रुत्यन्तरे परिहृतत्वात् । द्रष्टुर्दृष्टेरविपरिलोपात्पश्यन्नेव भवति ; द्रष्टुरन्यत्वेन कामानामभावान्न पश्यति च इति । यद्यपि सुषुप्ते तदुक्तम् , मुक्तस्यापि सर्वैकत्वात्समानो द्वितीयाभावः । ‘केन कं पश्येत्’ (बृ. उ. २ । ४ । १४) इति च उक्तमेव ।
அனுவாதம் - ஸமாதானம் - வேறு சுருதியில் இதை நிராகரித்திருப்பதால் இந்த தோஷம் இல்லை. திருஷ்டா திருஷ்டியைக் காட்டிலும் மாறுபாடு அற்றதால் பார்ப்பது போல் இருக்கிறது. திருஷ்டாவைக்காட்டிலும் வேறாக போகங்கள் (காமனைகள்) இல்லாததால் பார்ப்பது இல்லை. ஆனாலும் சுழுப்தியில் எது கூறப்பட்டதோ அதுவே முக்தனுக்கும் எல்லாம் ஏகத்துவமாய் த்விதீயம் அற்றதாய் இருப்பது சமானமாகும். “केन कं पश्येत्” (கேன கம் பச்யேத்) என்று கூறப்பட்டதே.
अशरीरस्वरूपोऽपहतपाप्मादिलक्षणः सन् कथमेष पुरुषोऽक्षिणि दृश्यत इत्युक्तः प्रजापतिना ? तत्र यथा असावक्षिणि साक्षाद्दृश्यते तद्वक्तव्यमितीदमारभ्यते । तत्र को हेतुरक्षिणि दर्शने इति, आह —
அனுவாதம் - சரீரமற்ற அபஹதபாப்மா முதலிய லக்ஷணமுடையதாய் இருந்துகொண்டு இந்த புருஷன் கண்ணில் காணப்படுகிறது என்று எவ்வாறு பிரஜாபதி கூறினார்? அங்கு எவ்வாறு அந்த கண்ணில் சாக்ஷாத்தாகக் காணப்படுகிறது கூறவேண்டும் என்பதற்காக இது ஆரம்பிக்கப்படுகிறது கண்ணின் உள்ளே அதை காண்பிப்பதற்கு என்ன காரணம் என்று சுருதி கூறுகிறது.
स दृष्टान्तः यथा प्रयोग्यः, प्रयोग्यपरो वा स-शब्दः, प्रयुज्यत इति प्रयोगः, अश्वो बलीवर्दो वा यथा लोके आचरत्यनेनेत्याचरणः रथः अनो वा तस्मिन्नाचरणे युक्तः तदाकर्षणाय, एवमस्मिञ्छरीरे रथस्थानीये प्राणः पञ्चवृत्तिरिन्द्रियमनोबुद्धिसंयुक्तः प्रज्ञात्मा विज्ञानक्रियाशक्तिद्वयसंमूर्छितात्मा युक्तः स्वकर्मफलोपभोगनिमित्तं नियुक्तः, ‘कस्मिन्न्वहमुत्क्रान्ते उत्क्रान्तो भविष्यामि कस्मिन्वा प्रतिष्ठिते प्रतिष्ठास्यामीति’ (प्र. उ. ६ । ३) ईश्वरेण राज्ञेव सर्वाधिकारी दर्शनश्रवणचेष्टाव्यापारेऽधिकृतः । तस्यैव तु मात्रा एकदेशश्चक्षुरिन्द्रियं रूपोपलब्धिद्वारभूतम् ॥
அனுவாதம் - அந்த திருஷ்டாந்தம் எவ்வாறோ அவ்வாறு கட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள “सः” (ச: அந்த) என்ற சப்தம் கட்டுப்பட்டுள்ளது என்பதாகும். எவ்வாறு குதிரையோ, காளையோ கட்டப்படுவது போல் ஆகும். எவ்வாறு உலகில் எல்லாம் திரிகின்றனவோ அவ்வாறு திரந்துகொண்டு இருப்பது எவ்வாறு ரதத்திலோ, வண்டியிலோ கட்டப்பட்டு அவைகள் (குதிரை, மாடு) இழுக்கப்படுகிறது. அவ்வாறே ரதஸ்தாணீயமான சரீரத்தில் ஐந்து விருத்திகளுடைய பிராணன், இந்திரியம், மனம், புத்திகளுடன் சேர்க்கப்பட்டு பிரக்ஞாத்மா, விக்ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய இரு சக்திகளுடனும் சேர்ந்து அதாவது தன்னுடைய கர்மபலத்தை அனுபவிப்பதற்காக கட்டப்படுகிறது. (சேர்க்கப்படுகிறது). “कस्मिन्न्वहमुत्क्रान्त उत्क्रामन्तो भविष्यामि कस्मिन्वा प्रतिष्द्भिते प्रतिष्द्भास्यामि” (கஸ்மின்வஹமுத்க்ராந்த உத்க்ராமந்தோ பவிஷ்யாமி கஸ்மின்வா ப்ரதிஷ்டிதே ப்ரதிஷ்டாஸ்யாமி) என்று ராஜா எவ்வாறு சர்வ அதிகாரத்தன்மை உடையவராய் எல்லோரையும் காரியங்களில் ஈடுபடச் செய்கிறாரோ அவ்வாறு ஈஸ்வரனால் தர்சன, சிரவண மேலும் செயல்கள் முதலிய வியவகாரங்களில் பிராணனை அதிகாரியாகச் செய்தார். ரூபத்தை அறிவதற்கான வழியாக உள்ள கண் இந்திரியம் மாத்திரம் என்றது ஏகதேசமாகும்.
अथ यत्रैतदाकाशमनुविषण्णं चक्षुः स चाक्षुषः पुरुषो दर्शनाय चक्षुरथ यो वेदेदं जिघ्राणीति स आत्मा गन्धाय घ्राणमथ यो वेदेदमभिव्याहराणीति स आत्माभिव्याहाराय वागथ यो वेदेदं शृणवानीति स आत्मा श्रवणाय श्रोत्रम् ॥ ४ ॥
மந்த்ரார்த்தம் - எதில் இந்த கண்களின் மூலமாக உபலக்ஷிக்கப்படும் ஆகாசம் உள்ளதோ அதுவே சாக்ஷீஷ புருஷன். அதன் ரூபத்தை கிரஹிப்பதற்காக நேத்திர இந்திரியம். மேலும் நான் இதனால் முகர்கிறேன் என்பது ஆத்மா அதை கிரஹிப்பதற்காக மூக்கு இந்திரியமாகும். எதானது இந்த சப்தத்தால் பேசுகிறேன் என்று அறிவது ஆத்மா. அந்த சப்தத்தை உச்சாரணம் செய்வது வாக் இந்திரியம். நான் சிரவணம் செய்கின்றேன் என்று அறிவது ஆத்மா. சிரவணம் செய்வதற்காக ஸ்ரோத்திர இந்திரியமாகும்.
अथ यत्र कृष्णतारोपलक्षितम् आकाशं देहच्छिद्रम् अनुविषण्णम् अनुषक्तम् अनुगतम् , तत्र स प्रकृतः अशरीर आत्मा चाक्षुषः चक्षुषि भव इति चाक्षुषः तस्य दर्शनाय रूपोपलब्धये चक्षुः करणम् ; यस्य तत् देहादिभिः संहतत्वात् परस्य द्रष्टुरर्थे, सोऽत्र चक्षुषि दर्शनेन लिङ्गेन दृश्यते परः अशरीरोऽसंहतः । ‘अक्षिणि दृश्यते’ इति प्रजापतिनोक्तं सर्वेन्द्रियद्वारोपलक्षणार्थम् ; सर्वविषयोपलब्धा हि स एवेति । स्फुटोपलब्धिहेतुत्वात्तु ‘अक्षिणि’ इति विशेषवचनं सर्वश्रुतिषु । ‘अहमदर्शमिति तत्सत्यं भवति’ इति च श्रुतेः ।
அனுவாதம் - மேலும் இங்கு (ஜாக்ரதா அவஸ்தையில்) இந்த கருவிழியின் உபலக்ஷித்தமான (வெளிப்படுத்தப்பட்ட) ஆகாசம் தேஹத்தில் உள்ளே உள்ள வெளியில் (துளையில்) அனுகதமாய் இருக்கும். அவஸ்தையில் இந்த சரீர ஆத்மா சாக்ஷீஷம் - அதாவது கண்களில் இருப்பதால் சாக்ஷீசம் எனப்படுகிறது. அதைப்பார்ப்பதற்காக ரூபத்தை அறிவதற்கு கண் (சக்ஷீ) காரணமாகிறது. தேஹம் முதலியவைகளுடன் கலந்து இருப்பதால் அந்த பரதிருஷ்டாவிற்கு சக்ஷீ இந்த கரணமாகும். அந்த பர சரீரமற்ற ஆத்மா இந்த நேத்திரத்தின் அந்தர்கத தர்சன ரூப லிங்கத்தால் அந்த ஒன்றுடனும் ஒட்டாமல் இருப்பது காணப்படுகிறது. “अक्षिणि दृश्यते” (அக்ஷிணி த்ருஷ்யதே) என்று பிரஜாபதியினால் கூறப்பட்டது. எல்லா இந்திரியங்களின் துவாரத்தின் உபலக்ஷணத்தின் பொருட்டாகும். அதாவது அது எல்லா விஷயங்களையும் அறியச்செய்வதாகும். ஸ்பஷ்டமாக அறியப்படுவதற்குக் காரணம் ஆவதால் “अक्षिणि” (அக்ஷிணி) என்று சுருதிகளிலும் இது விசேஷ வசனமாகும். “अहमदर्शमिति तत्सत्यं भवति” (அஹமதர்ஷமிதி தத்சத்யம் பவதி) என்ற சுருதியினால் சித்திக்கிறது.
अथापि योऽस्मिन्देहे वेद ; कथम् ? इदं सुगन्धि दुर्गन्धि वा जिघ्राणीति अस्य गन्धं विजानीयामिति, स आत्मा, तस्य गन्धाय गन्धविज्ञानाय घ्राणम् । अथ यो वेद इदं वचनम् अभिव्याहराणीति वदिष्यामीति, स आत्मा, अभिव्याहरणक्रियासिद्धये करणं वागिन्द्रियम् । अथ यो वेद — इदं शृणवानीति, स आत्मा, श्रवणाय श्रोत्रम् ॥
அனுவாதம் -இவ்வாறு இந்த சரீரத்தில் இதை எவ்வாறு அறிகிறான்? நான் நல்ல வாசனையையோ, கெட்ட வாசனையையோ முகர்கின்றேன் என்று அறிகிறதோ அது ஆத்மா. அதனுடைய வாசனை என்பது அந்த வாசனையின் ஞானத்திற்கு கிராணன் (இந்திரியம்) ஆகும். மேலும் எவன் ஒருவன் உச்சாரணம் செய்கின்றேன் என்று அறிகின்றானோ அதாவது அவ்வாறு பேசுவது ஆத்மா. அதன் சப்த உச்சாரண கிரியைக்கு வாக் இந்திரியம் கரணமாகும். அவ்வாறே நான் சிரவணிக்கின்றேன் (கேட்கின்றேன்) என்று அறிகின்றானோ அது ஆத்மா. அந்த சப்த சிரவணத்திற்கு ஸ்ரோத்திர இந்திரியம் கரணமாகும்.
अथ यो वेदेदं मन्वानीति स आत्मा मनोऽस्य दैवं चक्षुः स वा एष एतेन दैवेन चक्षुषा मनसैतान्कामान्पश्यन्रमते य एते ब्रह्मलोके ॥ ५ ॥
மந்த்ரார்த்தம் - மேலும் எது மனனம் செய்கின்றேன் என்று அறிகிறதோ அது ஆத்மா. மனது அதன் திவ்ய நேத்திரமாகும். இந்த ஆத்மா இந்த திவ்யமான நேத்திர மூலமாக போகங்களை கண்டு ரமிக்கின்றது.
अथ यो वेद — इदं मन्वानीति मननव्यापारमिन्द्रियासंस्पृष्टं केवलं मन्वानीति वेद, स आत्मा, मननाय मनः । यो वेद स आत्मेत्येवं सर्वत्र प्रयोगात् वेदनमस्य स्वरूपमित्यवगम्यते — यथा यः पुरस्तात्प्रकाशयति स आदित्यः, यो दक्षिणतः यः पश्चात् उत्तरतो य ऊर्ध्वं प्रकाशयति स आदित्यः — इत्युक्ते प्रकाशस्वरूपः स इति गम्यते ।
அனுவாதம் - மேலும் எது இதை மனனம் செய்கிறேன் என்று அறிகிறதோ அதாவது பாஹ்ய இந்திரியங்கள் அற்று கேவலம் மனனம் செய்கிறேன் என்று அறிவது ஆத்மா ஆகும். மனனம் செய்வதற்கு மனம் காரணமாகிறது. “यो वेद स आत्मा” (யோ வேத ச ஆத்மா) என்று எங்கும் பிரயோகம் செய்யப்பட்டுள்ளதால் அறிவது “वेदनम्”வேதனம்) என்பது அதன் ஸ்வரூபம் என்று அறியப்படுகிறது. எவ்வாறு “य पुरस्तात्प्रकाशयति स आदित्यो यो दक्षिणतो यः पश्चात् उत्तरतो य ऊर्ध्वं प्रकाशयति स आदित्यः” (ய புரஸ்தாத் பிரகாசயதி ச ஆதித்யோ யோ தக்ஷிணதோ ய: பஸ்சாய உத்ரதோ ய ஊர்த்வம் பிரகாசயதி ச ஆதித்ய:) என்று கூறுவதால் (சூரியன்) பிரகாச ஸ்வரூபம் என்று அறியப்படுகிறது.
दर्शनादिक्रियानिर्वृत्त्यर्थानि तु चक्षुरादिकरणानि । इदं च अस्य आत्मनः सामर्थ्यादवगम्यते — आत्मनः सत्तामात्र एव ज्ञानकर्तृत्वम् , न तु व्यापृततया — यथा सवितुः सत्तामात्र एव प्रकाशनकर्तृत्वम् , न तु व्यापृततयेति — तद्वत् ।
அனுவாதம் - நேத்திரம் முதலிய கரணங்கள் தர்சனம் முதலிய கிரியைகளை செயல்படுத்துகின்றன. இது அந்த ஆத்மாவின் சாமர்த்தியத்தால் என்று அறியப்படுகிறது. ஆத்மாவின் சத்தாமாத்திரமே ஞான கர்த்திருவம் ஆகும். அதன் வியாப்தியினால் அல்ல. எவ்வாறு சூரியன் சத்தாமாத்திரமாகவே இருந்துகொண்டு பிரகாசப்படுத்தும் கர்த்திருத்துவமோ அதன் வியாப்த்தியும் அல்லவா அவ்வாறு ஆகும்.
मनोऽस्य आत्मनो दैवमप्राकृतम् इतरेन्द्रियैरसाधारणं चक्षुः चष्टे पश्यत्यनेनेति चक्षुः । वर्तमानकालविषयाणि च इन्द्रियाणि अतो अदैवानि तानि । मनस्तु त्रिकालविषयोपलब्धिकरणं मृदितदोषं च सूक्ष्मव्यवहितादिसर्वोपलब्धिकरणं च इति दैवं चक्षुरुच्यते । स वै मुक्तः स्वरूपापन्नः अविद्याकृतदेहेन्द्रियमनोवियुक्तः सर्वात्मभावमापन्नः सन् एष व्योमवद्विशुद्धः सर्वेश्वरो मनउपाधिः सन् एतेनैवेश्वरेण मनसा एतान्कामान् सवितृप्रकाशवत् नित्यप्रततेन दर्शनेन पश्यन् रमते ।
அனுவாதம் - மனம் இந்த ஆத்மாவின் தெய்வசக்ஷு அப்ராக்ருதம் அதாவது மற்ற இந்திரியங்ளைக் காட்டிலும் அசாதரணமாக சக்ஷு ஆகும். சக்ஷு என்பது அதை வைத்துப்பார்க்கிறான் என்பதால் சக்ஷு. நிகழ்கால விஷயங்களை விஷயம் செய்யும் இந்திரியங்கள் அதெய்வகமாகும். மனதோவெனில் மூன்று கால விஷயங்களை அறியும் கரணமாகும். தோஷமற்றதும் சூக்ஷ்மமானதும் அவ்வாறே வியவஹித எல்லா பதார்த்தங்களையும் அறியும் சாதனமாகும். ஆகையால் அது தெய்வ சக்ஷு எனப்படுகிறது. அவ்வாறே அந்த ஆத்மஸ்வரூபத்தில் நிலைத்திருக்கும் முக்தன் அவித்யையினால் ஏற்பட்ட தேஹ இந்திரிய மனம் நீங்கி சர்வாத்மபாவத்தை அடைந்து அவன் ஆகாயம் போல் விசுத்தமாய் சர்வேஸ்வரன் மனஉபாதி உடையவனாய் அதனாலேயே ஈஸ்வரனால் மனதால் அந்த போகங்களை (காமனைகளை) சூரிய பிரகாசம்போல் நித்யம் வெளிப்படும் திருஷ்டியினால் பார்த்து ரமிக்கின்றான்.
कान्कामानिति विशिनष्टि —
அனுவாதம் - அ.கை - எந்த போகங்களுக்கும் தேவதை? இதைக்குறித்து சுருதி விசேஷமாக விளக்குகிறது.
तं वा एतं देवा आत्मानमुपासते तस्मात्तेषाꣳ सर्वेच लोका आत्ताः सर्वे च कामाः स सर्वाꣳश्च लोकानाप्नोति सर्वाꣳश्च कामान्यस्तमात्मानमनुविद्य विजानातीति ह प्रजापतिरुवाच प्रजापतिरुवाच ॥ ६ ॥
மந்த்ரார்த்தம் - எந்த போகங்கள் இந்த பிரஹ்ம லோகத்தில் உள்ளனவோ அவைகளை பார்த்து ரமிக்கின்றனர். அந்த ஆத்மாவை தேவகணங்கள் உபாசிக்கின்றனர். இதனால் அவர்கள் சம்பூர்ண லோகத்தையும் எல்லா போகங்களையும் அடைகின்றனர். எவர்கள் இந்த ஆத்மாவை சாஸ்திரம், ஆச்சாரியர் உபதேசித்தவாறு அறிந்து சாக்ஷாத் ரூபமாய் அனுபவிக்கின்றாரோ அவர் எல்லா லோகத்தையும், எல்லா போகங்களையும் அடைகின்றனர். இவ்வாறு பிரஜாபதி கூறினார். இவ்வாறு பிரஜாபதி கூறினார்.
य एते ब्रह्मणि लोके हिरण्यनिधिवत् बाह्यविषयासङ्गानृतेनापिहिताः सङ्कल्पमात्रलभ्याः तानित्यर्थः । यस्मादेष इन्द्राय प्रजापतिनोक्त आत्मा, तस्मात् ततः श्रुत्वा तमात्मानमद्यत्वेऽपि देवा उपासते । तदुपासनाच्च तेषां सर्वे च लोका आत्ताः प्राप्ताः सर्वे च कामाः । यदर्थं हि इन्द्रः एकशतं वर्षाणि प्रजापतौ ब्रह्मचर्यमुवास, तत्फलं प्राप्तं देवैरित्यभिप्रायः ।
அனுவாதம் - எந்த இந்த போகம் தங்கத்தின் நிதிபோல் பிரஹ்ம லோகத்தில் பாஹ்ய விஷயங்களில் ஆசக்தி ரூப (பற்று) மித்யையினால் (பொய்யால்) மறைக்கப்பட்டு சங்கல்ப மாத்திரத்தினாலேயே அவை அடைய யோக்கியம் உடையதாகிறது என்பது பொருள். எதனால் இதை இந்திரனுக்கு பிரஜாபதியினால் இந்த ஆத்மா கூறப்பட்டதோ அதனால் அதைக்கேட்டு இன்றும் அந்த ஆத்மாவை தேவகணங்கள் உபாசிக்கின்றனர். அந்த உபாசனையினால் அவர்கள் எல்லா லோகங்களையும், எல்லா காமனைகளையும் அடைகின்றனர். எதற்காக இந்திரன் பிரஜாபதியிடம் நூ ற்றி ஒரு வருடங்கள் பிரஹ்மச்சரிய வாசத்தால் எந்த பலனை அடைந்தானோ அது தேவகணங்களாலும் அடையப்படுகிறது என்பது அபிப்பிராயம்.
तद्युक्तं देवानां महाभाग्यत्वात् , न त्विदानीं मनुष्याणामल्पजीवितत्वान्मन्दतरप्रज्ञत्वाच्च सम्भवतीति प्राप्ते, इदमुच्यते — स सर्वांश्च लोकानाप्नोति सर्वांश्च कामान् इदानीन्तनोऽपि । कोऽसौ ? इन्द्रादिवत् यः तमात्मानमनुविद्य विजानातीति ह सामान्येन किल प्रजापतिरुवाच । अतः सर्वेषामात्मज्ञानं तत्फलप्राप्तिश्च तुल्यैव भवतीत्यर्थः । द्विर्वचनं प्रकरणसमाप्त्यर्थम् ॥
அனுவாதம் - தேவகணங்கள் மஹா பாக்கியசாலிகள் என்று கூறப்பட்டதோ அது இப்பொழுது உள்ள மனிதர்கள் அல்ப ஆயுள் உடையவராயும் மிகவும் மந்தமான பிரக்ஞை உள்ளவர்களாய் இருப்பதால் அதை அடைதல் சம்பவிக்காது என்றால் இவ்வாறு கூறப்படுகிறது. இப்பொழுது உள்ளவர்களும் எல்லா லோகங்களையும். காமனைகளையும் அடைவர் என்று. அவர் யார்? இந்திரனைப் போல் ஆத்மாவை அறிந்து சாக்ஷாத்தாக அனுபவிக்கின்றனர் என்று எல்லோருக்கும் சமமாகும் என்று பிரஜாபதி கூறினார். ஆகையால் ஆத்மஞானமும், அதன் பலத்தின் அடைவும் (பிராப்தியும்) எல்லோருக்கும் சமானமாகும் என்பது இதன் தாத்பர்யம். இருமுறை “பிரஜாபதி கூறினார்” என்று கூறியது இந்த பிரகரணத்தின் முடிவிற்காக.
इति द्वादशखण्डभाष्यम् ॥
श्यामाच्छबलं प्रपद्ये शबलाच्छ्यामं प्रपद्येऽश्व इव रोमाणि विधूय पापं चन्द्रं इव राहोर्मुखात्प्रमुच्य धूत्वा शरीरमकृतं कृतात्मा ब्रह्मलोकमभिसम्भवामीत्यभिसम्भवामीति ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - நான் ச்யாம (ஹிருதயத்தில் இருக்கும்) பிரஹ்மத்திலிருந்து சபல பிரஹ்மத்தை (श्यामाच्छबलम्) அடைந்து சபல பிரஹ்மத்திலிருந்து ச்யாமத்தை அடைவேன். குதிரை எவ்வாறு ரோமங்களை அசைத்து = சிலிர்த்து நிர்மலமாகிறதோ அவ்வாறு பாபங்களை நீக்கி, ராகுவின் முகத்திலிருந்து விடுபட்ட சந்திரனைப் போன்று சரீரத்தைத் தியாகம் செய்து கிருதகிருதனாகி அகிருத (நித்ய) பிரஹ்மலோகத்தை அடைகிறான். பிரஹ்ம லோகத்தை அடைகிறான்.
श्यामात् शबलं प्रपद्ये इत्यादिमन्त्राम्नायः पावनः जपार्थश्च ध्यानार्थो वा । श्यामः गम्भीरो वर्णः श्याम इव श्यामः हार्दं ब्रह्म अत्यन्तदुरवगाह्यत्वात् तत् हार्दं ब्रह्म ज्ञात्वा ध्यानेन तस्माच्छ्यामात् शबलं शबल इव शबलः अरण्याद्यनेककाममिश्रत्वाद्ब्रह्मलोकस्य शाबल्यं तं ब्रह्मलोकं शबलं प्रपद्ये मनसा शरीरपाताद्वा ऊर्ध्वं गच्छेयम् । यस्मादहं शबलाद्ब्रह्मलोकात् नामरूपव्याकरणाय श्यामं प्रपद्ये हार्दभावं प्रपन्नोऽस्मीत्यभिप्रायः । अतः तमेव प्रकृतिस्वरूपमात्मानं शबलं प्रपद्य इत्यर्थः ।
அனுவாதம் - (श्यामाच्छबलं प्रपद्य) கருமையிலிருந்து பல்வேறாக அடைவேன் என்பது முதலிய மந்திரங்கள் தூய்மைக்கு தியானத்திற்கு அல்லது ஜபத்திற்காக ஆகிறது. “श्याम” (கருமை) என்பது கம்பீரமான நிறமாகும். ஹிருதயத்தில் இருக்கும் பிரஹ்மம் அறிவதற்கு மிகவும் கடினமானது. ஆகையால் கருமை (இருளைப்) போன்று கருமையானது. அந்த ஹிருதயத்தில் இருக்கும் பிரஹ்மத்தை அறிந்து தியானத்தின் மூலமாக இந்த கருமை (சியாம) சபல (शबल) பிரஹ்மத்தை அதாவது பல்வேறாக இருப்பதற்கு சமமாக பல்வேறாகிறது. ஏன் எனில் பிரஹ்ம லோகம் அரண்யம் முதலிய அநேக காமனைகளுடன் கூடியது, ஆகையால் அதற்கு சபலத்துவம், அந்த சபல பிரஹ்மலோகத்தை தேஹம் வீழ்ந்தபின் மனதால் அடைவேன். ஏன் எனில் நான் சபல பிரஹ்ம லோகத்திலிருந்து நாம ரூபங்களை வெளிப்படுத்துவதற்காக ஹிருதய பாவமாகிய ச்யாமத்தை அடைவேன் என்பது அபிப்பிராயமாகும். ஆகையால் அந்த பிரகிருதி ஸ்வரூப சபல ஆத்மாவை அடைவேன் என்பதாகும் என்பது பொருள்.
कथं शबलं ब्रह्मलोकं प्रपद्ये इति, उच्यते — अश्व इव स्वानि लोमानि विधूय कम्पनेन श्रमं पांस्वादि च रोमतः अपनीय यथा निर्मलो भवति, एवं हार्दब्रह्मज्ञानेन विधूय पापं धर्माधर्माख्यं चन्द्र इव च राहुग्रस्तः तस्माद्राहोर्मुखात्प्रमुच्य भास्वरो भवति यथा — एवं धूत्वा प्रहाय शरीरं सर्वानर्थाश्रयम् इहैव ध्यानेन कृतात्मा कृतकृत्यः सन् अकृतं नित्यं ब्रह्मलोकम् अभिसम्भवामीति । द्विर्वचनं मन्‍त्रसमाप्त्यर्थम् ॥
அனுவாதம் - எவ்வறு சபலம் (शबलं) பிரஹ்ம லோகத்தை அடைய முடிகிறது? அதற்குக் கூறப்படுகிறது - குதிரைபோன்று தன்னுடைய ரோமங்களில் இருந்து சிரமத்தையும், தூசி முதலியவைகளையும் தன்னை சிலிர்த்துக்கொண்டு நீக்குகிறதோ, அவ்வாறு ஹ்ருதய பிரஹ்ம ஞானத்தால் தர்மாதர்மங்கள் எனப்படும் பாபத்தை நீக்கியும், ராஹுவினால் பீடிக்கப்பட்ட சந்திரன் அதன் வாயிலிருந்து விடுபட்டு பிராகாசமுடையதாகிறதோ அவ்வாறு எல்லா அநர்த்தங்களுக்கும் ஆஸ்ரயமான சரீரத்தை விட்டு இங்கேயே தியானத்தினால் கிருதாத்மாவாகி, அதாவது கிருதகிருத்தனாய் “अकृतं” (அக்ருதம்) அதாவது நித்யம் பிரஹ்ம லோகத்தை அடைவேன் என்பதாகும். “ब्रह्मलोकमभिसम्भवामि” என்று இருமுறை கூறியது இந்த மந்திரத்தின் முடிவிற்காக.
इति त्रयोदशखण्डभाष्यम् ॥
आकाशो वा इत्यादि ब्रह्मणो लक्षणनिर्देशार्थम् आध्यानाय ।
அனுவாதம் - அ.கை -“आकाशो वै” (ஆகாசோ வை) முதலிய பிரஹ்மத்தின் லக்ஷணத்தை நிர்தேசம் செய்வதற்காக -
आकाशो वै नाम नामरूपयोर्निर्वहिता ते यदन्तरा तद्ब्रह्म तदमृतꣳ स आत्मा प्रजापतेः सभां वेश्म प्रपद्ये यशोऽहं भवामि ब्राह्मणानां यशो राज्ञां यशो विशां यशोऽहमनुप्रापत्सि स हाहं यशसां यशः श्येतमदत्कमदत्कꣳ श्येतं लिन्दु माभिगां लिन्दु माभिगाम् ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - ஆகாசம் என்ற நாமத்தால் பிரசித்தமான ஆத்மா நாம ரூபத்தை நிர்வாஹம் செய்கிறது. இந்த நாமரூபங்கள் எதில் அந்தர்கதமாக உள்ளதோ (ஊடுருவி உள்ளதோ) அது பிரஹ்மம். அது அம்ருதம், அதுவே ஆத்மா. நான் பிரஜாபதியின் சபாகிரகத்தை அடைந்து இருக்கிறேன். நான் யசஸ் எனப்படும் ஆத்மா ஆவேன். நான் பிராஹ்மணர்களின் யசஸ் நான் க்ஷத்திரியர்களின் யசஷ், வைஸ்யர்களின் யசஷ்ஷை (யசஸ்ஸ்வரூப ஆத்மாவை) அடையவிரும்புகின்றேன். நான் யசஸ்களுக்கெல்லாம் யசஷ். (யசஷ் = பெருமை). நான் சிகப்பு, வெள்ளை நீர் நிறைந்த ஸ்திரீயின் கருப்பையில் புகாமல் இருப்பேனாக. நான் எப்பொழுதும் பசியுடன் சாப்பிட வேண்டும் என்ற நிலையில்லாமல் இருப்பேனாக.
आकाशो वै नाम श्रुतिषु प्रसिद्ध आत्मा । आकाश इव अशरीरत्वात्सूक्ष्मत्वाच्च । स च आकाशः नामरूपयोः स्वात्मस्थयोर्जगद्बीजभूतयोः सलिलस्येव फेनस्थानीययोः निर्वहिता निर्वोढा व्याकर्ता । ते नामरूपे यदन्तरा यस्य ब्रह्मणो अन्तरा मध्ये वर्तेते, तयोर्वा नामरूपयोरन्तरा मध्ये यन्नामरूपाभ्यामस्पृष्टं यदित्येतत् , तद्ब्रह्म नामरूपविलक्षणं नामरूपाभ्यामस्पृष्टं तथापि तयोर्निर्वोढृ एवंलक्षणं ब्रह्मेत्यर्थः । इदमेव मैत्रेयीब्राह्मणेनोक्तम् ; चिन्मात्रानुगमात्सर्वत्र चित्स्वरूपतैवेति गम्यते एकवाक्यता ।
அனுவாதம் - “आकाशो वै नाम” (ஆகாசோ வை நாம) என்று சுருதியில் ஆகாசம் என்ற பெயரால் பிரசித்தமாகும். ஏன் எனில் ஆகாசம் போல் சரீரமற்றும், சூக்ஷ்மமாய் இருப்பதால் ஆகும். அந்த ஆகாசம் தன்னில் இருக்கும் ஜகத்திற்கு பீஜரூபமான நாமரூபங்கள் ஜலம் நுரை திவிலை இவைகளை நிர்வஹிப்பது போல் நிர்வஹிக்கிறது. அதாவது வியக்தமாக்குகிறது (வெளிப்படுத்துகிறது). அந்த நாமரூபங்கள் எதில் அந்தர்கதமாய் உள்ளதோ அதாவது எந்த பிரஹ்மத்தில் மத்தியில் இருக்கிறதோ அல்லது எந்த நாமரூபத்தின் மத்தியில் இருந்துகொண்டு நாமரூபத்தால் தொடப்படாமல் இருக்கிறதோ (ஸ்பரிசிக்காமல் இருக்கிறதோ) அவ்வாறு இருந்தாலும் நாமரூபத்தை நிர்வஹிக்கின்றது இந்த லக்ஷணங்களுடைய பிரஹ்மம் என்பது பொருள். இதையே மைத்ரேய பிராஹ்மணத்தில் இவ்வாறு கூறப்பட்டது. எங்கும் சின்மாத்திரமே அனுகதமாய் இருப்பதால் எல்லாவற்றின் சித்ரூபமாகும் என்றது ஒரே வாக்கியமே என்று அறியப்படுகிறது.
कथं तदवगम्यत इति, आह — स आत्मा । आत्मा हि नाम सर्वजन्तूनां प्रत्यक्चेतनः स्वसंवेद्यः प्रसिद्धः तेनैव स्वरूपेणोन्नीय अशरीरो व्योमवत्सर्वगत आत्मा ब्रह्मेत्यवगन्तव्यम् । तच्च आत्मा ब्रह्म अमृतम् अमरणधर्मा ।
அனுவாதம் - அது எவ்வாறு அறியப்படுகிறது? அதற்குக் கூறப்படுகிறது - அது ஆத்மா ஆத்மா என்ற நாமம் எல்லா ஜீவர்களின் பிரத்யக் சேதனம் என்றும் ஸ்வசம் வேத்தியம் என்றும் பிரசித்தமானதே. அதன் ரூபத்தை ஊகித்து அது சரீரமற்றது என்றும் ஆகாசத்தைப்போன்று சர்வகத ஆத்மா பிரஹ்மம் என்று அறியவேண்டும். அந்த ஆத்மா பிரஹ்மம், அம்ருதம், மரணதர்மம் அற்றது.
अत ऊर्ध्वं मन्‍त्रः । प्रजापतिः चतुर्मुखः तस्य सभां वेश्म प्रभुविमितं वेश्म प्रपद्ये गच्छेयम् । किञ्च यशोऽहं यशो नाम आत्मा अहं भवामि ब्राह्मणानाम् । ब्राह्मणा एव हि विशेषतस्तमुपासते ततस्तेषां यशो भवामि । तथा राज्ञां विशां च । तेऽप्यधिकृता एवेति तेषामप्यात्मा भवामि । तद्यशोऽहमनुप्रापत्सि अनुप्राप्तुमिच्छामि । स ह अहं यशसामात्मनां देहेन्द्रियमनोबुद्धिलक्षणानामात्मा ।
அனுவாதம் - பிரஜாபதியாகிய சதுர்முக பிரஹ்மாவின் சபையில் பிரவேசித்தார். அதாவது பிரபுவிமிதம் என்ற பெயருடைய சபையை அடைவேன். மேலும் நான் யசஸ் (பெருமை) உடையவன். பிராஹ்மணர்களுக்குள் நான் பெருமை உடையவன். பிராஹ்மணர்களுக்குள் நான் பெருமை உடையவனாவேன். பிராஹ்மணர்கள் தான் அதை விசேஷமாக உபாசிக்கின்றனர். ஆகையால் அவர்களுடைய பெருமையை அடைவேன். அவ்வாறே க்ஷத்திரியர்களுடையதும், வைசியர்களுடைய பெருமைகளையும் அடைவேன். அவர்களும் அதற்கு அதிகாரிகளாவதால் அவர்களுடைய ஆத்மாவாகவும் ஆவேன். நான் அவர்களுடைய பெருமையை அடைய விரும்புகின்றேன். அந்த நான் யசஸ் ஸ்வரூப (பெருமை ஸ்வரூப) ஆத்மாக்களுக்கு அதாவது தேஹ, இந்திரிய, மனம் மேலும் புத்திரூப ஆத்மாக்களுக்கு ஆத்மாவாக இருக்கின்றேன்.
किमर्थमहमेवं प्रपद्य इति, उच्यते — श्येतं वर्णतः पक्वबदरसमं रोहितम् । तथा अदत्कं दन्तरहितमप्यदत्कं भक्षयितृ स्त्रीव्यञ्जनं तत्सेविनां तेजोबलवीर्यविज्ञानधर्माणाम् अपहन्तृ विनाशयित्रित्येतत् । यदेवंलक्षणं श्येतं लिन्दु पिच्छलं तन्मा अभिगां मा अभिगच्छेयम् । द्विर्वचनमत्यन्तानर्थहेतुत्वप्रदर्शनार्थम् ॥
அனுவாதம் - எதற்காக நான் இவ்வாறு அடையவில்லை? அது கூறப்படுகிறது. வெள்ளைநிறமுடைய பதரிபழம் பழுத்தவுடன் சிகப்பு நிறமாவது போன்ற சிகப்பு. அவ்வாறே “अदत्क” (அதத்க) - பல் இல்லாவிடினும் ஸ்திரீ சின்னத்தை பக்ஷணம் செய்பவனும் ஏன் எனில் தனக்கு சேவை செய்பவனுடைய தேஜஸ், பலம், வீரியம், விக்ஞானம் மேலும் தர்மத்தை விநாசம் செய்பவன் ஆகிய இந்த லக்ஷணங்களுடைய வெண்மை, சிகப்பு நிறஜலமுடைய ஸ்திரீ சின்னத்தை அடையமாட்டேன். அதற்கு செல்லமாட்டேன். “माभिगाम् माभिगाम्” (மாஅபிகாம் மாஅபிகாம்) என்று இருமுறை கூறியது அதன் முற்றிலும் அநர்த்தத்திற்கு ஹேது ஆவதை தெரிவிப்பதற்காக ஆகும்.
इति चतुर्दशखण्डभाष्यम् ॥
तद्धैतद्ब्रह्मा प्रजापतय उवाच प्रजापतिर्मनवे मनुः प्रजाभ्य आचार्यकुलाद्वेदमधीत्य यथाविधानं गुरोः कर्मातिशेषेणाभिसमावृत्य कुटुम्बे शुचौ देशे स्वाध्यायमधीयानो धार्मिकान्विदधदात्मनि सर्वेन्द्रियाणि सम्प्रतिष्ठाप्याहिंसन्सर्वभूतान्यन्यत्र तीर्थेभ्यः स खल्वेवं वर्तयन्यावदायुषं ब्रह्मलोकमभिसम्पद्यते न च पुनरावर्तते न च पुनरावर्तते ॥ १ ॥
மந்த்ரார்த்தம் - அந்த இந்த ஆத்ம ஞானத்தை பிரஹ்மா பிரஜாபதிக்கு உபதேசித்தார். பிரஜாபதி மனுவிற்குக் கூறினார். மனு பிரஜைகளுக்குக் கேட்கச்செய்தார். நியமானுசாரமாக குருவிற்கு செய்யவேண்டிய கர்மங்களை சமாப்தி செய்து வேதத்தை அத்யயனம் செய்துவிட்டு ஆச்சாரியர் குலத்திலிருந்து திரும்பிவந்து குடும்பத்தில் இருந்துகொண்டு பவித்திரமான இடத்தில் ஸ்வாத்யாயம் செய்துகொண்டு (புத்திரர் அவ்வாறே சிஷ்யர்களுக்கும்) தார்மிகம் செய்துகொண்டு எல்லா இந்திரியங்களையும் தன்னுடைய அந்தக்கரணத்தில் ஸ்தாபித்து (நிறுத்தி) சாஸ்த்திரத்தின் ஆக்ஞைப்படி மற்ற பிராணிகளை ஹிம்சை செய்யாமல் திடமாக ஆயுள் முடியும்வரை இவ்வாறு கடைபிடித்து பிரஹ்மலோகத்தை அடைகிறான். மேலும் மறுபடியும் திரும்புவது இல்லை. மறுபடியும் திரும்புவது இல்லை.
तद्धैतत् आत्मज्ञानं सोपकरणम् ‘ओमित्येतदक्षरम्’ इत्याद्यैः सहोपासनैः तद्वाचकेन ग्रन्थेन अष्टाध्यायीलक्षणेन सह ब्रह्मा हिरण्यगर्भः परमेश्वरो वा तद्द्वारेण प्रजापतये कश्यपाय उवाच ; असावपि मनवे स्वपुत्राय ; मनुः प्रजाभ्यः इत्येवं श्रुत्यर्थसम्प्रदायपरम्परयागतम् उपनिषद्विज्ञानम् अद्यापि विद्वत्सु अवगम्यते ।
அனுவாதம் - शमादि (சமம், தமம் முதலிய) உபகரணங்களுடன் கூடிய ஆத்மஞானம் “ओमित्येतदक्षरम्” (ஓமித்யேததக்ஷரம்) முதலிய உபாசனைகளுடன் கூடிய வசனங்களால் கிரந்தத்தில் உள்ள எட்டாவது அத்தியாயத்தில் கூறிய லக்ஷணங்களுடைய பிரஹ்மா அதாவது ஹிரண்யகர்பன் அல்லது பரமேஸ்வரனாலோ பிரஜாபதியான கஷ்யபருக்குக் கூறினார். அவர்தன் புத்திரனாகிய மனுவிற்குக் கூறினார். மனு பிரஜைகளுக்குக் கூறினார். இவ்வாறு சுருதியின் அர்த்த சம்பிரதாய பரம்பரையாக வந்த உபநிஷத் விக்ஞானம் இன்றளவும் வித்வான்களிடம் காணப்படுகிறது.
यथेह षष्ठाद्यध्यायत्रये प्रकाशिता आत्मविद्या सफला अवगम्यते, तथा कर्मणां न कश्चनार्थ इति प्राप्ते, तदानर्थक्यप्राप्तिपरिजिहीर्षया इदं कर्मणो विद्वद्भिरनुष्ठीयमानस्य विशिष्टफलवत्त्वेन अर्थवत्त्वमुच्यते —
அனுவாதம் - எவ்வாறு இங்கு ஆறாவது முதலிய மூன்று அத்யாயங்களில் வர்ணிக்கப்பட்ட ஆத்ம வித்யா பலத்துடன் கூடியதாய் அறியப்படுகிறது. அவ்வாறு கர்மங்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் காணப்படவில்லையென்று ஏற்படும் பொழுது அதை நிவிர்த்தி செய்வதற்கு விரும்பி இந்த கர்மங்களை வித்வான்கள் அனுஷ்டிப்பதால் உண்டாகும் கர்மங்களின் சிறந்த பலன்கள் அடைவதால் அவைகளுக்கு பிரயோஜனம் உள்ள தன்மை நிரூபிக்கப்படுகிறது.
आचार्यकुलाद्वेदमधीत्य सहार्थतः अध्ययनं कृत्वा यथाविधानं यथास्मृत्युक्तैर्नियमैर्युक्तः सन् इत्यर्थः । सर्वस्यापि विधेः स्मृत्युक्तस्य उपकुर्वाणकं प्रति कर्तव्यत्वे गुरुशुश्रूषायाः प्राधान्यप्रदर्शनार्थमाह — गुरोः कर्म यत्कर्तव्यं तत्कृत्वा कर्मशून्यो योऽतिशिष्टः कालः तेन कालेन वेदमधीत्येत्यर्थः । एवं हि नियमवता अधीतो वेदः कर्मज्ञानफलप्राप्तये भवति, नान्यथेत्यभिप्रायः ।
அனுவாதம் - ஆச்சாரியர் குலத்தில் தங்கி வேதத்தை அத்யயனம் செய்வது எப்படி விதிக்கப்பட்டதோ எவ்வாறு ஸ்மிருதியிலும் கூறப்பட்ட நியமத்துடன் வேதத்தை அர்தத்துடன் ஸ்வ அத்யயனம் செய்யவேண்டும் என்பது பொருள். ஏன் எனில் சேவை செய்துகொண்டு ஆச்சாரியர் இடத்தில் அத்யயனம் செய்யும் பிரஹ்மச்சாரி ஸ்மிருதியில் கூறப்பட்ட எல்லா விதிகளையும் அவசியம் செய்யவேண்டும். ஆகையால் குருவிற்கு செய்வதைப் பிரதானமாக இருப்பதை தெரிவிப்பதற்காக கூறுகிறார் - குருவிற்கு என்ன சேவை செய்யவேண்டுமோ அதை செய்தபின் வேலை இல்லாதபொழுது மீதம் உள்ள நேரத்தில் வேதத்தை அத்யயனம் செய்யவேண்டும் என்பது பொருள். இவ்வாறு நியமமாக அத்யயனம் செய்த வேதம் கர்ம ஞான பலத்தின் பிராப்திக்காக ஆகின்றது. மற்றவைகளால் அல்ல என்பது அபிப்பிராயம்.
अभिसमावृत्य धर्मजिज्ञासां समापयित्वा गुरुकुलान्निवृत्य न्यायतो दारानाहृत्य कुटुम्बे स्थित्वा गार्हस्थ्ये विहिते कर्मणि तिष्ठन् इत्यर्थः । तत्रापि गार्हस्थ्यविहितानां कर्मणां स्वाध्यायस्य प्राधान्यप्रदर्शनार्थमुच्यते — शुचौ विविक्ते अमेध्यादिरहिते देशे यथावदासीनः स्वाध्यायमधीयानः नैत्यकमधिकं च यथाशक्ति ऋगाद्यभ्यासं च कुर्वन् धार्मिकान्पुत्राञ्शिष्यांश्च धर्मयुक्तान्विदधत् धार्मिकत्वेन तान्नियमयन् आत्मनि स्वहृदये हार्दे ब्रह्मणि सर्वेन्द्रियाणि सम्प्रतिष्ठाप्य उपसंहृत्य इन्द्रियग्रहणात्कर्माणि च संन्यस्य अहिंसन् हिंसां परपीडामकुर्वन् सर्वभूतानि स्थावरजङ्गमानि भूतान्यपीडयन् इत्यर्थः ।
அனுவாதம் - “अभिसमावृत्य” (அபிசமாவ்ருத்ய) என்பது தர்ம ஜிஞ்ஞாசயை பூர்த்தி செய்து குருகுலத்திலிருந்து திரும்பி நியாயப்படி இல்லத்தரசியை ஏற்றுக்கொண்டு குடும்பத்தில் இருந்துகொண்டு கிரஹஸ்தனுக்கு விதிக்கப்பட்ட விஹித கர்மங்களில் ஈடுபடவேண்டும் என்பது பொருள். அங்கும் கிரஹஸ்தர்களுக்கு விதிக்கப்பட்ட கர்மங்களில் ஸ்வாத்தியாயத்தின் பிரதானத்தன்மையை (முக்கியத்தன்மையை) தெரிவிப்பதற்காக இவ்வாறு கூறப்படுகிறது-சுத்தமான அதாவது பவித்திரமற்ற இடத்தைத் தவிர்த்து சுத்தமான இடத்தில் அமர்ந்து ஸ்வஅத்யயனத்தை செய்துகொண்டு தினமும் நியமிக்கப்பட்ட பாடத்தை முடிந்த அளவு அல்லது அதைவிட அதிகமாக ரிக் முதலியவைகளை அப்பியாசம் செய்துகொண்டு புத்திரனுக்கும் சிஷ்யர்களுக்கும் தர்மத்தில் ஈடுபடசெய்து தர்மவான்களாகி அதாவது தார்மீகத்தில் அவர்களை ஈடுபடுத்திகொண்டு தன்னுடைய ஹிருதயத்தில் அதாவது ஹிருதயத்தில் இருக்கும் பிரஹ்மத்தில் எல்லா இந்திரியங்களையும் நிலைநிறுத்தி அதாவது அடக்கி இந்திரியங்களை அடக்குவதின் வாயிலாய் கர்மங்களை தியாகம் செய்து (சந்யாசம் செய்து) அஹிம்சை உடையவனாய் எல்லா ஜீவன்களையும் அதாவது ஸ்தாவர ஜங்கம முதலிய எல்லா ஜீவன்களையும் ஹிம்சை செய்யாமல் இருப்பது என்பதுபொருள்.
भिक्षानिमित्तमटनादिनापि परपीडा स्यादित्यत आह — अन्यत्र तीर्थेभ्यः । तीर्थं नाम शास्त्रानुज्ञाविषयः, ततोऽन्यत्रेत्यर्थः । सर्वाश्रमिणां च एतत्समानम् । तीर्थेभ्योऽन्यत्र अहिंसैवेत्यन्ये वर्णयन्ति । कुटुम्बे एवैतत्सर्वं कुर्वन् , स खल्वधिकृतः, यावदायुषं यावज्जीवम् एवं यथोक्तेन प्रकारेणैव वर्तयन् ब्रह्मलोकमभिसम्पद्यते देहान्ते । न च पुनरावर्तते शरीरग्रहणाय, पुनरावृत्तेः प्राप्तायाः प्रतिषेधात् । अर्चिरादिना मार्गेण कार्यब्रह्मलोकमभिसम्पद्य यावद्ब्रह्मलोकस्थितिः तावत्तत्रैव तिष्ठति प्राक्ततो नावर्तत इत्यर्थः । द्विरभ्यासः उपनिषद्विद्यापरिसमाप्त्यर्थः ॥
அனுவாதம் - பிக்ஷகை்காக திரிவதும் பரபீடை (ஹிம்சை) ஆகலாமே என்பதற்குக் கூறப்படுகிறது - தீர்த்தத்தைக்காட்டிலும் வேறு இடத்தில் அதாவது தீர்த்தம் என்பது சாஸ்திரத்தின் ஆணைப்படியான விஷயம். அதைக்காட்டிலும் வேறானதில் என்பது பொருள். எல்லா ஆஸ்ரமிகளுக்கும் பொதுவானது ஆகும். தீர்த்தத்தைக்காட்டிலும் வேறானவைகளும் அஹிம்சை என்று வேறு சிலர் வர்ணிக்கின்றனர். தான் குடும்பத்தில் இருந்துகொண்டு எல்லா (கர்மங்களையும்) காரியங்களையும் செய்யும் அந்த அதிகாரி புருஷன் ஆயுள் உள்ள வரை அதாவது ஜீவன் உள்ளவரை இவ்வாறு கூறிய பிரகாரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவன் தேஹத்தின் முடிவில் பிரஹ்மலோகத்தை அடைகின்றான். வேறு சரீரம் எடுப்பதற்கு திரும்பி வருவதில்லை. ஏன் எனில் புனராவிர்த்தி அடைவது நிஷேதம் செய்யப்பட்டுள்ளது. அர்ச்சிராதி மார்க்கத்தால காரிய பிரஹ்மலோகத்தை அடைந்து எதுவரை பிரஹ்மலோகத்தில் இருக்கவேண்டும் என்று உள்ளதோ அதுவரை அங்கேயே இருப்பர். அதுவரை திரும்பமாட்டார்கள் என்பது பொருள். “न च पुनरावर्तत न च पुनरावर्तत” (ந ச புனராவர்த்தத ந ச புனராவர்த்தத) என்று இருமுறைக் கூறியது இந்த உபநிஷத் வித்யையின் பூர்த்திக்காக என்பது பொருள்.
इति पञ्चदशखण्डभाष्यम् ॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमत्छङ्करभगवतः कृतौ छान्दोग्योपनिषद्भाष्ये अष्टमोऽध्यायः समाप्तः ॥