द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

माण्डूक्योपनिषद्भाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

மாண்டூக்யோபநிஷத்பாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

‘ज्ञाते द्वैतं न विद्यते’ इत्युक्तम् ‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) इत्यादिश्रुतिभ्यः । आगममात्रं तत् । तत्र उपपत्त्यापि द्वैतस्य वैतथ्यं शक्यतेऽवधारयितुमिति द्वितीयं प्रकरणमारभ्यते —
(ச.பா) (அ.கை) ஞானம் ஏற்பட்டவுடன் த்வைதம் இருக்காது “एकमेवाद्वितीयम्” (ஏகமேவாத்விதீயம் - ஒன்றே அத்வைதம்) என்று சுருதியிலும் கூறப்பட்டுள்ளது, அது கேவலம் சாஸ்திர வாக்கிய மாத்திரம் அல்ல யுக்தியினாலும் மித்தியாத்துவம் நிச்சயம் செய்ய முடியும் என்பதை இரண்டாவது பிரகரணத்தில் ஆரம்பிக்கப்படுகிறது.
वैतथ्यं सर्वभावानां स्वप्न आहुर्मनीषिणः ।
अन्तःस्थानात्तु भावानां संवृतत्वेन हेतुना ॥ १ ॥
कारिका अन्वयः - स्वप्ने सर्वभावानां वैतथ्यं मनीषिणः आहुः भावानां अन्तःस्थानात् संवृतत्वेन हेतुना ।
காரிகா அர்த்தம் - ஸ்வப்னாவஸ்தையில் எல்லா பதார்த்தங்களும் சரீரத்தினுள் இருக்கிறது. ஆகையால் இடம் குறுகியதாய் இருப்பதால் பிரமாணத்தில் வல்லுனர்களான சான்றோர் ஸ்வப்னத்தில் உள்ள எல்லா பதார்த்தங்களும் மித்தியாதன்மை உடையதாய் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
वितथस्य भावो वैतथ्यम् ; असत्यत्वमित्यर्थः । कस्य ? सर्वेषां बाह्याध्यात्मिकानां भावानां पदार्थानां स्वप्ने उपलभ्यमानानाम् , आहुः कथयन्ति मनीषिणः प्रमाणकुशलाः । वैतथ्ये हेतुमाह — अन्तःस्थानात् , अन्तः शरीरस्य मध्ये स्थानं येषाम् ; तत्र हि भावा उपलभ्यन्ते पर्वतहस्त्यादयः, न बहिः शरीरात् ; तस्मात् ते वितथा भवितुमर्हन्ति । ननु अपवरकाद्यन्तरुपलभ्यमानैर्घटादिभिरनैकान्तिको हेतुरित्याशङ्क्याह — संवृतत्वेन हेतुनेति । अन्तः संवृतस्थानादित्यर्थः । न ह्यन्तः संवृते देहान्तर्नाडीषु पर्वतहस्त्यादीनां सम्भवोऽस्ति ; न हि देहे पर्वतोऽस्ति ॥ १ ॥
(ச.பா) वितथं பொய், वितथस्य भावो वैतथ्यम् இந்த பிரபஞ்சத்தின் பொய்மையை விளக்குவது இந்த பிரகரணம்- ஸ்வப்னத்தில் காணப்படுகின்ற (காக்ஷி அளிக்கின்ற) பாஹ்யமாயும், ஆத்யாத்மிகமாயும் உள்ள எல்லா பாவங்களுக்கும், அதாவது குடம் முதலானவை பாஹ்ய பாவங்களாகும். சுகம், துக்கம் முதலியவை ஆத்யாத்மிக பாவங்களாகும் இத்தகைய எல்லா பாவங்களும் பொய்யானவை என்று பிரமாணத்தில் வல்லுனர்களான சான்றோர் கூறுவர். அவர்கள் அவைகள் பொய்யானவை என்று கூறுவதற்கான காரணத்தை மேலே விளக்குகிறார். முற்கூறப்பட்ட அந்த பாவங்களுக்கு சரீரத்திற்குள்ளே இடம் பெற்றமையாலும் அவைகள் பொய்யானவை என்று கூறுகின்றனர். ஆனால் ஸ்வப்னத்தில் காணப்படும் மலை, யானை போன்ற பாவங்கள் சரீரத்தின் உள்ளேயே காணப்படுகின்றன. அவை சரீரத்திற்கு வெளியே காணப்படுவதில்லை ஓர் இடத்தினுள்ளேக் காணப்பட்டன என்பதால் அவைகள் பொய்யானவைகள் என்று கூறுவதற்கில்லை, ஏனெனில் குடம் முதலானவை பொய்யானவைகளாக ஆகிவிடுவதில்லை என்ற ஒரு சந்தேஹத்தை நீக்குவதற்காகவே “संवृतत्त्वेन हेतुना” உள்ளே மூடப்பட்டதான இடத்தில் என்று இரண்டாவது விசேஷணம் கூறப்பட்டது. அதாவது இந்த பாவங்கள் உடலின் மூடப்பட்டதான பகுதிக்குள் இருக்கும் நாடி முதலானவைகளுக்குள் மலை, யானை முதலியவைகள் உண்டாவது இல்லை. உடலில் மலை என்பது இல்லை என்று கூறப்பட்டது. எனவே காணப்படும் ஸ்வப்ன பாவங்கள் உண்மையாகாது. அவைகள் தோன்றுவதற்கு உகந்த இடம் இல்லாமையால் வெள்ளி, பாம்பு போல் பொய்யானவையாகும்.
स्वप्नदृश्यानां भावानामन्तः संवृतस्थानमित्येतदसिद्धम् , यस्मात्प्राच्येषु सुप्त उदक्षु स्वप्नान्पश्यन्निव दृश्यत इत्येतदाशङ्क्याह —
(ச.பா) (அ.கை) ஸ்வப்னத்தில் காக்ஷி அளிக்கும் பதார்த்தங்கள் சரீரத்தின் உள் குறுகிய ஸ்தானத்தில் இருக்கிறது என்பது பொருந்தாது. ஏனெனில் கிழக்குதிசையில் தூங்கினவன் வடக்கு திசையில் ஸ்வப்னம் காண்கிறான் என்ற சங்கைக்குக் கூறுகிறார்.
अदीर्घत्वाच्च कालस्य गत्वा देहान्न पश्यति ।
प्रतिबुद्धश्च वै सर्वस्तस्मिन्देशे न विद्यते ॥ २ ॥
कारिका अन्वयः - कालस्य अदीर्घत्वात् च देशेन गत्वा न पश्यति प्रतिबुद्धः सर्वस्वै तस्मिन् देशे न विद्यते ।
காரிகா அர்த்தம் - ஸ்வப்ன காலத்திற்கு நீண்டதன்மை இல்லாததால்தான் கனவு காணும் தேசத்தை அடைந்து ஸ்வப்னங்களைக் காண்பதில்லை விழித்து எழுந்தபின் கனவு கண்டயாவரும் தான் கனவு கண்ட இடத்தில் இருப்பது இல்லை.
न देहाद्बहिर्देशान्तरं गत्वा स्वप्नान्पश्यति ; यस्मात्सुप्तमात्र एव देहदेशाद्योजनशतान्तरिते मासमात्रप्राप्ये देशे स्वप्नान्पश्यन्निव दृश्यते ; न च तद्देशप्राप्तेरागमनस्य च दीर्घः कालोऽस्ति ; अतः अदीर्घत्वाच्च कालस्य न स्वप्नदृग्देशान्तरं गच्छति ।
(ச.பா) தேஹத்தைக் காட்டிலும் வேறு இடத்திற்குச் சென்று கனவு காண்பது இல்லை. ஏனெனில் தூங்கின மாத்திரத்திலேயே தேகத்தின் இடத்திலிருந்து ஒரு மாசத்தில் சென்று அடையயோக்கியமுள்ள நூ று யோஜனை தூரம் வரையிலும் கனவில் காண்கிறான். (அந்த சமயத்தில்) அங்கு அடைவதற்கும், திரும்புவதற்கும் ஏற்ற நீண்டகாலம் இல்லை. ஆகையால் கனவிற்கு நீண்டகாலம் இல்லாததால் கனவு காண்பவன் வேறு தேசத்திற்கு செல்லுவது இல்லை.
किञ्च, प्रतिबुद्धश्च वै सर्वः स्वप्नदृक् स्वप्नदर्शनदेशे न विद्यते । यदि च स्वप्ने देशान्तरं गच्छेत् , यस्मिन्देशे स्वप्नान्पश्येत् , तत्रैव प्रतिबुध्येत । न चैतदस्ति । रात्रौ सुप्तः अहनीव भावान्पश्यति ; बहुभिः सङ्गतो भवति ; यैश्च सङ्गतः स तैर्गृह्येत, न च गृह्यते ; गृहीतश्चेत्त्वामद्य तत्रोपलब्धवन्तो वयमिति ब्रूयुः ; न चैतदस्ति । तस्मान्न देशान्तरं गच्छति स्वप्ने ॥ २ ॥
(ச.பா) மேலும் விழித்தவுடன் எந்த ஒரு கனவு காண்பவனும் கனவு காணும் இடத்தில் இல்லை. கனவில் தேசாந்தரம் சென்றிருந்தால் எங்கு கனவு கண்டானோ அங்கேயே விழித்து எழவேண்டும். அவ்வாறு உண்டாவதில்லை. இரவில் தூங்குபவன் பகல்போல் பதார்த்தங்களை காண்கிறான். அநேகம் அவனை அடைகிறது. அவைகளைக் கிரஹிக்கிறான். ஆனால் கிரஹிப்பதில்லை. அவ்வாறு கிரஹித்திருந்தால் நாங்கள் உன்னை அங்கு கண்டோம் என்று கூறுவர். அவ்வாறு நிகழாததால் கனவுகாணும் காலத்தில் வேறு எங்கும் செல்வதில்லை என்பதாகும்.
इतश्च स्वप्नदृश्या भावा वितथाः यतः
(ச.பா) (அ.கை) ஆகையால் ஸ்வப்னத்தில் காணும் விஷயங்கள் (பதார்த்தங்கள்) மித்யா (பொய்) ஏனெனில் -
अभावश्च रथादीनां श्रूयते न्यायपूर्वकम् ।
वैतथ्यं तेन वै प्राप्तं स्वप्न आहुः प्रकाशितम् ॥ ३ ॥
कारिका अन्वयः - रथादीनाम् अभावश्च न्यायपूर्वकं श्रूयते तेन वै स्वप्ने वैतथ्यं प्राप्तं प्रकाशितम् आहुः ।
காரிகா அர்த்தம் - சுருதியில் (கனவில் பார்த்த) ரதம் முதலியவைகளின் இன்மையை யுக்தி பூர்வமாய் கேட்டோம், ஆகையால் (முன்பு கூறப்பட்ட யுக்தியினால்) சித்தித்த மித்தியாத் தன்மையை ஸ்வப்னத்தில் ஸ்பஷ்ட்டமாய் கூறுகிறார்.
अभावश्च रथादीनां स्वप्नदृश्यानां श्रूयते, न्यायपूर्वकं युक्तितः श्रुतौ ‘न तत्र रथाः’ (बृ. उ. ४ । ३ । १०) इत्यत्र । तेन अन्तःस्थानसंवृतत्वादिहेतुना प्राप्तं वैतथ्यं तदनुवादिन्या श्रुत्या स्वप्ने स्वयञ्ज्योतिष्ट्वप्रतिपादनपरया प्रकाशितमाहुर्ब्रह्मविदः ॥ ३ ॥
(ச.பா) “न तत्र रथा” (ந தத்ர ரதா அந்த அவஸ்தையில் ரதங்கள் இல்லை) என்பது முதலிய சுருதிகளிலும் கனவில் கண்ட ரதம் முதலியவைகளின் அபாவம் யுக்தி பூர்வமாய் கேட்கப்பட்டது. ஆகையால் அந்த ஸ்தானம் அதாவது நாடியின் உள்ளே அவ்வாறே குறுகிய முதலிய ஹேதுக்களால் சித்திக்கும் மித்தியாதன்மை, அதனை அனுவாதம் செய்யும் அவ்வாறே கனவில் ஆத்மாவின் ஸ்வயம் பிரகாசத்தை பிரதிபாதனம் (கூறும்) சுருதி வாயிலாய் பிரஹ்ம வேத்தா ஸ்பஷ்டமாய் கூறுகிறார்.
अन्तःस्थानात्तु भेदानां तस्माज्जागरिते स्मृतम् ।
यथा तत्र तथा स्वप्ने संवृतत्वेन भिद्यते ॥ ४ ॥
कारिका अन्वयः - भेदानाम् अन्तःस्थानात् तु (वैतथ्यं) स्मृतं तस्मात् यथा तत्र स्वप्ने तथा जागरिते स्मृतं संवृतत्वेन भिद्यते ।
காரிகா அர்த்தம் - இதனால் ஜாக்ரத் அவஸ்தையிலும் பதார்த்தங்கள் மித்தையாகும் ஏனெனில் எவ்வாறு ஸ்வப்ன அவஸ்தையில் மித்தையாகிறதோ அவ்வாறே ஜாக்ரதத்திலும் ஆகிறது. கேவலம் சரீரத்தின் உள்ளே இருப்பதும் குறுகிய இடமாய் இருப்பதும் ஸ்வப்ன திருஷ்ட பதார்த்தத்திற்கு உள்ள பேதமாகும்.
जाग्रद्दृश्यानां भावानां वैतथ्यमिति प्रतिज्ञा । दृश्यत्वादिति हेतुः । स्वप्नदृश्यभाववदिति दृष्टान्तः । यथा तत्र स्वप्ने दृश्यानां भावानां वैतथ्यम् , तथा जागरितेऽपि दृश्यत्वमविशिष्टमिति हेतूपनयः । तस्माज्जागरितेऽपि वैतथ्यं स्मृतमिति निगमनम् । अन्तःस्थानात्संवृतत्वेन च स्वप्नदृश्यानां भावानां जाग्रद्दृश्येभ्यो भेदः । दृश्यत्वमसत्यत्वं चाविशिष्टमुभयत्र ॥ ४ ॥
(ச.பா) ஜாக்ரதத்தில் உள்ள திருஷ்ய பதார்த்தங்கள் மித்யை என்பது பிரதிக்ஞா. அதற்கு ஹேது திருஷ்யமாய் இருப்பதால். ஸ்வப்ன திருஷ்ய பதார்த்தம் போல் என்பது திருஷ்டாந்தம். எவ்வாறு ஸ்வப்ன திருஷ்ய பதார்த்தங்கள் மித்தையோ அவ்வாறு ஜாக்ரதத்திலும் திருஷ்ய பதார்த்தங்களும் இருக்கின்றன என்பதனால் ஹேது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆகையால் ஜாக்ரதத்திலும் மித்தியா என்பது நிகமனம். அந்த: ஸ்தானமாய் இருப்பதாலும், குறுகிய இடமாய் இருப்பதாலும் ஸ்வப்னத்தில் பார்த்த பதார்த்தங்களுக்கும் ஜாக்ரதத்தில் பார்க்கப்படும் பதார்த்தங்களுக்கும் உள்ள வித்தியாசம் திருஷ்யத்துவமும், அதிருஷ்யத்துவமும் ஆகிய இரண்டும் அவஸ்தையில் சமானமே.
स्वप्नजागरिते स्थाने ह्येकमाहुर्मनीषिणः ।
भेदानां हि समत्वेन प्रसिद्धेनैव हेतुना ॥ ५ ॥
कारिका अन्वयः - प्रसिद्धेन हेतुना एव भेदानां समत्वेन हि स्वप्नजागरितस्थाने एकत्वं मनीषिणः आहुः ।
காரிகா அர்த்தம் - இவ்வாறு பிரசித்தமான ஹேதுக்களால் பதார்த்தங்கள் சமானமாய் இருப்பதால் விவேகி புருஷர்கள் ஸ்வப்ன, ஜாக்கிரத் அவஸ்தைகள் ஒன்றே என்று கூறுகிறார்கள்.
प्रसिद्धेनैव भेदानां ग्राह्यत्वेन हेतुना समत्वेन स्वप्नजागरितस्थानयोरेकत्वमाहुर्विवेकिन इति पूर्वप्रमाणसिद्धस्यैव फलम् ॥ ५ ॥
(ச.பா) பதார்த்தங்களின் கிராஹ்ய, கிராஹகத்தன்மை ரூபம் பிரசித்தமாய் இருப்பதன் காரணமாய் சமானமாய் இருப்பதால் விவேகி புருஷன் ஸ்வப்ன, ஜாக்ரத் அவஸ்தைகளின் ஏகத்துவத்தைக் கூறுகிறார்கள். இவ்வாறு முன்பு பிரமாணத்தால் சித்தித்த ஹேதுவின் பலனாகும்.
इतश्च वैतथ्यं जाग्रद्दृश्यानां भेदानामाद्यन्तयोरभावात् ।
(ச.பா) (அ.கை) ஜாக்ரதவஸ்தையில் காணப்படும் பதார்த்தங்கள் மித்தையாகும். ஏனெனில் ஆதியும் அந்தமும் அவைகளுக்கு இல்லை.
आदावन्ते च यन्नास्ति वर्तमानेऽपि तत्तथा ।
वितथैः सदृशाः सन्तोऽवितथा इव लक्षिताः ॥ ६ ॥
कारिका अन्वयः - यत् आदौ अन्ते च नास्ति तत् वर्तमानेऽपि तथा वितथै सदृशाः सन्तः अवितथा इव लक्षिताः ॥
காரிகா அர்த்தம் - எதற்கு ஆரம்பமும், முடிவும் இல்லையோ அது நிகழ் காலத்திலும் (நடுவிலும்) இல்லை. பதார்த்த கூட்டமானது அசத்திற்கு சமானமாய் இருந்து கொண்டு சத் போல் (உண்மையானது போல்) தோன்றிக் கொண்டிருக்கிறது.
यदादावन्ते च नास्ति वस्तु मृगतृष्णिकादि, तन्मध्येऽपि नास्तीति निश्चितं लोके ; तथेमे जाग्रद्दृश्या भेदाः आद्यन्तयोरभावात् वितथैरेव मृगतृष्णिकादिभिः सदृशत्वाद्वितथा एव ; तथापि अवितथा इव लक्षिता मूढैरनात्मविद्भिः ॥ ६ ॥
(ச.பா) கானல்நீர் முதலியவை ஆதியிலும், முடிவிலும் இல்லை. அவ்வாறே நடுவிலும் (மத்தியிலும்) இல்லை என்பது உலகில் நிச்சயம் செய்யப்பட்டது. இவ்வாறு ஜாக்ரதவஸ்தையில் காணப்படும் பின்ன பின்ன பதார்த்தங்களும் ஆதியிலும், முடிவிலும் இல்லாததால் கானல் நீர் முதலிய அசத்வஸ்துவிற்கு சமானமாய் இருப்பதால் அசத்தாகும். அவ்வாறு இருந்தாலும் மூடர்கள் ஆத்மாவை அறியாதவர்கள் சத்ரூபமாய் அறிகிறார்கள்.
स्वप्नदृश्यवज्जागरितदृश्यानामप्यसत्त्वमिति यदुक्तम् तदयुक्तम् ; यस्माज्जाग्रद्दृश्या अन्नपानवाहनादयः क्षुत्पिपासादिनिवृत्तिं कुर्वन्तो गमनागमनादि कार्यं च सप्रयोजना दृष्टाः । न तु स्वप्नदृश्यानां तदस्ति । तस्मात्स्वप्नदृश्यवज्जाग्रद्दृश्यानामसत्त्वं मनोरथमात्रमिति ।
(ச.பா) (அ.கை) சங்கை ஸ்வப்ன திருஷ்ய பதார்த்தங்களுக்கு சமமாய் ஜாக்ரத் அவஸ்தையில் இருக்கும் திருஷ்ய பதார்த்தங்களும் அசத்தியம் (பொய்) என்று கூறப்பட்டது சரியல்ல. ஏனெனில் ஜாக்ரதத்தில் பார்க்கப்படும் (திருஷ்யங்களான) அன்னம், பானம் வாஹனம் முதலிய பதார்த்தங்கள் சாப்பிடுதல், குடித்தல் இவைகளால் பசி, தாகம் நிவர்த்தியாகிறது, அவ்வாறேசெல்லுதல், வருதல் முதலிய காரியங்களை செய்வதன் பிரயோஜனத்தைப் பார்க்கிறோம். ஆனால் ஸ்வப்ன திருஷ்ய விஷயங்களில் அவ்வாறு காணப்படவில்லை. ஆகையால் ஸ்வப்ன திருஷ்யத்திற்கு சமானமாய் ஜாக்ரத் திருஷ்யங்களின் அசத்தியம் (பொய்) என்பது கேவலம் மனோரத மாத்திரமே.
तन्न । कस्मात् ? यस्मात् ।
(ச.பா) (சமாதானம்) - அவ்வாறு அல்ல. எதனால்? அதனால்-
सप्रयोजनता तेषां स्वप्ने विप्रतिपद्यते ।
तस्मादाद्यन्तवत्त्वेन मिथ्यैव खलु ते स्मृताः ॥ ७ ॥
कारिका अन्वयः - तेषां सप्रयोजनता स्वप्ने विप्रतिपद्यते तस्मात् आद्यन्तवत्त्वेन ते मिथ्यैव खलु स्मृताः ॥
காரிகா அர்த்தம் - ஸ்வப்னத்தில் அந்த (ஜாக்ரத் அவஸ்தையின்) பிரயோஜனத்துடன் கூடியிருக்கும் தன்மை காணப்பட்டதோ அந்த த்ருஷ்யங்கள் ஸ்வப்னத்தில் மாறுபட்டவைகளாகக் காணப்படுகின்ற காரணத்தால் அவைகள் நிச்சயமாக மித்யாவே (பொய்யே) ஆகும்.
सप्रयोजनता दृष्टा अन्नपानादीनाम् , सा स्वप्ने विप्रतिपद्यते । जागरिते हि भुक्त्वा पीत्वा च तृप्तो विनिवर्तिततृट् सुप्तमात्र एव क्षुत्पिपासाद्यार्तमहोरात्रोपोषितमभुक्तवन्तमात्मानं मन्यते, यथा स्वप्ने भुक्त्वा पीत्वा च अतृप्तोत्थितः, तथा । तस्माज्जाग्रद्दृश्यानां स्वप्ने विप्रतिपत्तिर्दृष्टा । अतो मन्यामहे तेषामप्यसत्त्वं स्वप्नदृश्यवदनाशङ्कनीयमिति । तस्मादाद्यन्तवत्त्वमुभयत्र समानमिति मिथ्यैव खलु ते स्मृताः ॥ ७ ॥
(ச.பா) ஜாக்ரத் அவஸ்தையில் எந்த அன்னபானாதிகள் பிரயோஜன முடையவைகளாய் இருந்ததோ அவைகள் ஸ்வப்னத்தில் இருப்பதில்லை. ஜாக்கிரத அவஸ்தையில் சாப்பிட்டு குடித்து திருப்தி அடைந்திருந்தாலும் திருப்தி அற்றவனாய் தூங்கும்பொழுது ஸ்வப்னத்தில் அவனுக்கு பசிதாகம் முதலிய கஷ்டங்களால் பகல் இரவு உபவாசம் இருந்து சாப்பிடாதது போல் நினைக்கிறான். இவ்வாறே ஸ்வப்னத்தில் சாப்பிட்டு, குடித்து எழுந்த உடன் அவன் திருப்தி அற்றவனாய் இருக்கிறான் (அனுபவிக்கிறான்). ஆகையால் ஸ்வப்ன அவஸ்தையில் ஜாக்ரத் திருஷ்யங்களை விபரீதமாய் பார்க்கிறான். ஆகையால் ஸ்வப்ன திருஷ்யங்கள் போல் சமானமாய் அவைகளின் அசத்தியத்தைக் குறித்து சங்கை செய்வது பொருந்தாது ஆகையால் நிச்சயம் மித்தியா என்று அறிய வேண்டும்.
स्वप्नजाग्रद्भेदयोः समत्वाज्जाग्रद्भेदानामसत्त्वमिति यदुक्तम् , तदसत् । कस्मात् ? दृष्टान्तस्यासिद्धत्वात् । कथम् ? न हि जाग्रद्दृश्या ये, ते भेदाः स्वप्ने दृश्यन्ते । किं तर्हि ?
(ச.பா) ஸ்வப்ன ஜாக்ரத் பதார்த்தங்கள் சமானமாய் இருப்பதால் ஜாக்ரத் பதார்த்தங்கள் அசத் என்று சொல்லப்பட்டது அது சரியல்ல. ஏனெனில் திருஷ்டாந்தம் பொருந்தாது. எவ்வாறு எனில் பதார்த்தங்கள் ஜாக்ரத அவஸ்தையில் காணப்படுகிறது. ஸ்வப்ன அவஸ்தையில் அவ்வாறு காணப்படவில்லை. அந்த சமயத்தில் எது தான் காணப்படும்?
अपूर्वं स्वप्ने पश्यति चतुर्दन्तगजमारूढोऽष्टभुजमात्मानम् । अन्यदप्येवंप्रकारमपूर्वं पश्यति स्वप्ने । तन्नान्येनासता सममिति सदेव । अतो दृष्टान्तोऽसिद्धः । तस्मात्स्वप्नवज्जागरितस्यासत्त्वमित्ययुक्तम् ।
(ச.பா) ஸ்வப்னத்தில் அபூர்வ வஸ்துக்களைப் பார்க்கிறோம். தன்னை நான்கு தந்தமுள்ள யானையின் மேல் இருப்பதாகவும், எட்டு கைகள் உடையவனாகவும் நினைக்கிறோம் இவ்வாறு ஸ்வப்னத்தில் அபூர்வ வஸ்துக்களைக் காண்கிறோம் சமானமாய் இல்லை. ஆகையால் அது சத்தே. அவைகள் மற்ற இல்லாத (அசத்) வஸ்துக்களுக்கு அதனால் திருஷ்டாந்தம் பொருந்தாது. ஆகையால் ஸ்வப்னத்தில் உள்ளது போல் ஜாக்ரதத்திலும் அசத்தே. ஆகையால் அவ்வாறு கூறுவது பொருந்தாது.
तन्न । स्वप्ने दृष्टमपूर्वं यन्मन्यसे, न तत्स्वतः सिद्धम् । किं तर्हि ?
(ச.பா) (அ.கை) அவ்வாறு அல்ல. ஸ்வப்னத்தில் பார்த்த அபூர்வம் என்று எதை நினைத்தாயோ அது உண்மையில் இல்லை. அவ்வாறு ஆனால் அது என்ன?
अपूर्वं स्थानिधर्मो हि यथा स्वर्गनिवासिनाम् ।
तानयं प्रेक्षते गत्वा यथैवेह सुशिक्षितः ॥ ८ ॥
कारिका अन्वयः - यथा स्वर्गनिवासिनां तथा अपूर्वं स्थानिधर्मः यथा इहैव सुशिक्षितः अयं तान् गत्वा प्रेक्षते ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு (இந்திரன் முதலிய) ஸ்வர்க்கவாசிகளின் அலௌகிக அவஸ்தைகளைக் கேட்கிறோமோ அவ்வாறு அந்த ஸ்வப்னத்தில் உள்ள ஸ்வப்ன திருஷ்ட்டாவின் அபூர்வம் தர்மமாகும். அந்த ஸ்வப்ன பதார்த்தங்களை எவ்வாறு விழித்த பின் பார்க்கிறானோ அவ்வாறே இந்த லோகத்தில் நன்றாக சிக்ஷை பெற்ற புருஷன் அந்த மார்க்கத்தை அறிந்து தன் லக்ஷியத்தை அடைகிறான்.
अपूर्वं स्थानिधर्मो हि, स्थानिनो द्रष्टुरेव हि स्वप्नस्थानवतो धर्मः ; यथा स्वर्गनिवासिनामिन्द्रादीनां सहस्राक्षत्वादि, तथा स्वप्नदृशोऽपूर्वोऽयं धर्मः, न स्वतःसिद्धो द्रष्टुः स्वरूपवत् । तान् एवंप्रकारानपूर्वान्स्वचित्तविकल्पान् अयं स्थानी यः स्वप्नदृक्स्वप्नस्थानं गत्वा प्रेक्षते । यथैव इह लोके सुशिक्षितदेशान्तरमार्गस्तेन मार्गेण देशान्तरं गत्वा पदार्थान्पश्यति, तद्वत् । तस्माद्यथा स्थानिधर्माणां रज्जुसर्पमृगतृष्णिकादीनामसत्त्वम् , तथा स्वप्नदृश्यानामप्यपूर्वाणां स्थानिधर्मत्वमेवेत्यसत्त्वम् ; अतो न स्वप्नदृष्टान्तस्यासिद्धत्वम् ॥ ८ ॥
(ச.பா) அவைகள் ஸ்தானீயத்தின் அபூர்வதர்மம். ஸ்தானி என்றால் ஸ்வப்னத்தை உடைய திருஷ்டாவின் தர்மமாகும். எவ்வாறு ஸ்வர்க்காதிவாசி இந்திரன் முதலியோருக்கு ஆயிரம் கண் முதலிய தர்மமோ அவ்வாறு ஸ்வப்ன திருஷ்டாவின் அபூர்வதர்மமாகும். அதற்கு திருஷ்டாவின் ஸ்வஸ்வரூபத்தைப் போல் அது சுவதஸித்தமல்ல. இவ்வாறு தன்னுடைய சித்தத்தின் மூலம் கல்பனை செய்த அந்ததர்மத்தை அந்த ஸ்வப்னத்தைக் காண்பவன் ஸ்தானீயாவான். ஸ்வப்ன ஸ்தானத்திற்கு சென்று பார்க்கிறான். எவ்வாறு இந்த உலகில் வேறு தேசம் செல்வதற்கான மார்க்கத்தை நன்றாக அறிவுறுத்தப்பட்ட புருஷன் அந்த மார்க்கத்தில் வேறு தேசத்திற்கு சென்று அங்குள்ள பதார்த்தங்களைக் காண்கிறானோ அவ்வாறு பார்க்கிறான். ஆகையால் எவ்வாறு ஸ்தானீயத்தின் தர்மம் ரஜ்ஜு சர்ப்பம், கானல் நீர் முதலியவைகளுக்கு சத்தியத்தன்மை இல்லையோ அவ்வாறு ஸ்வப்னத்தில் கண்டு அறியப்பட்ட அபூர்வ பதார்த்தங்களுக்கும் ஸ்தானீதர்மத்துவம் ஆகும். ஆகையால் அவைகளும் சத்தல்ல ஆகையால் ஸ்வப்ன திருஷ்டாந்தம் பொருந்தாது என்பது இல்லை.
अपूर्वत्वाशङ्कां निराकृत्य स्वप्नदृष्टान्तस्य पुनः स्वप्नतुल्यतां जाग्रद्भेदानां प्रपञ्चयन्नाह —
(ச.பா) (அ.கை) ஸ்வப்ன திருஷ்டாந்தத்தின் அபூர்வத்தின் சங்கை நிராகரிக்கப்பட்டது இப்பொழுது மறுபடியும் ஜாக்ரத் பதார்த்தங்களின் ஸ்வப்னத்திற்கு ஒப்பான ஜாக்ரத் பேதங்களை விவரித்து கூறுகிறார்
स्वप्नवृत्तावपि त्वन्तश्चेतसा कल्पितं त्वसत् ।
बहिश्चेतो गृहीतं सद्दृष्टं वैतथ्यमेतयोः ॥ ९ ॥
कारिका अन्वयः - स्वप्नवृत्तावपि तु अन्तःश्चेतसा कल्पितं तु असत् बहिश्चेतसा सत् एतयोः वैतथ्यं दृष्टम् ॥
காரிகா அர்த்தம் - ஸ்வப்ன அவஸ்தையில் சித்தத்தின் உள்ளே கல்பனை செய்யப்பட்ட பதார்த்தங்கள் அசத் (பொய்) ஆகும். மேலும் சித்தத்திற்கு வெளியில் கிரஹிக்கப்படும் பதார்த்தங்கள் சத் என்று அறியப்படுகிறது ஆனால் இந்த இரண்டும் மித்தையாகவே பார்க்கப்படுகிறது.
स्वप्नवृत्तावपि स्वप्नस्थानेऽपि अन्तश्चेतसा मनोरथसङ्कल्पितमसत् ; सङ्कल्पानन्तरसमकालमेवादर्शनात् । तत्रैव स्वप्ने बहिश्चेतसा गृहीतं चक्षुरादिद्वारेणोपलब्धं घटादि सदित्येवमसत्यमिति निश्चितेऽपि सदसद्विभागो दृष्टः । उभयोरप्यन्तर्बहिश्चेतः कल्पितयोर्वैतथ्यमेव दृष्टम् ॥ ९ ॥
(ச.பா) - ஸ்வப்ன விருத்தியில் அதாவது ஸ்வப்ன அவஸ்தையில் அந்த: சேதஸில் (உள்ளே உள்ள சேதஸில்) மனோரதத்தால் சங்கல்பிக்கப்பட்டவை அசத். சங்கல்பத்திற்குப்பின் சமகாலத்திலேயே ஸ்வப்னத்தில் காணப்படாததால் பஹிர்(வெளி)சேதஸ்ஸால் கிரஹிக்கப்பட்டு கண் முதலிய இந்திரியங்களின் வாயிலாய் அடைந்த கடம் முதலியவைகளை சத் என்கிறோம். இவ்வாறு அசத்தியம் என்று நிச்சயிக்கப்பட்டாலும் சத், அசத் என்ற விபாகம் தோன்றுகிறது. இரண்டும் அதாவது உள்ளிலும், வெளியிலும் சேத^ால் கல்பிக்கப்பட்டவை மித்தையாகவே காணப்படுகிறது.
जाग्रद्वृत्तावपि त्वन्तश्चेतसा कल्पितं त्वसत् ।
बहिश्चेतोगृहीतं सद्युक्तं वैतथ्यमेतयोः ॥ १० ॥
कारिका अन्वयः - जाग्रत् वृत्तावपि तु अन्तश्चेतसा कल्पितं तु असत् बहिश्चेतसा गृहितं सत् एतयोः वैतथ्यं युक्तम् ।
காரிகா அர்த்தம் - இவ்வாறு ஜாக்ரத் அவஸ்தையில் சித்தத்தின் உள்ளே கல்பனை செய்யப்பட்ட பதார்த்தங்கள் அசத், அவ்வாறே சித்தத்திற்கு வெளியில் கிரஹிக்கப்பட்ட பதார்த்தங்கள் சத் என்று அறியப்படுகிறது, ஆனால் இரண்டும் மித்தையே என்று கொள்வதே சரியானதாகும்.
सदसतोर्वैतथ्यं युक्तम् , अन्तर्बहिश्चेतःकल्पितत्वाविशेषादिति । व्याख्यातमन्यत् ॥ १० ॥
(ச.பா) இந்த சத், அசத் பதார்த்தங்கள் மித்தையே, ஏனெனில் ஹிருதயத்திற்கு உள்ளும், வெளியிலும் கல்பனை செய்யப்படுவதால் அவைகளுள் விசேஷம் ஒன்றும் இல்லை. இதனால் எல்லாம் வியாக்கியானம் செய்யப்பட்டதாகிறது.
चोदक आह —
(ச.பா) (அ.கை) பூர்வ பக்ஷீ கூறுகிறான்.
उभयोरपि वैतथ्यं भेदानां स्थानयोर्यदि ।
क एतान्बुध्यते भेदान्को वै तेषां विकल्पकः ॥ ११ ॥
कारिका अन्वयः - उभयोरपि स्थानयोः भेदानां वैतथ्यं यदि कः एतान् भेदान् बुध्यते को वै तेषां विकल्पकः ।
காரிகா அர்த்தம் - (ஜாக்ரத், ஸ்வப்ன ஆகிய) இரண்டு ஸ்தானங்களின் பதார்த்தங்கள் மித்தியாத்துவமானால் அந்த பதார்த்தங்களை யார் அறிகிறார்? மேலும் யார் இந்த கல்பனைகளை செய்கிறார்?
स्वप्नजाग्रत्स्थानयोर्भेदानां यदि वैतथ्यम् , क एतानन्तर्बहिश्चेतःकल्पितान्बुध्यते । को वै तेषां विकल्पकः ; स्मृतिज्ञानयोः क आलम्बनमित्यभिप्रायः ; न चेन्निरात्मवाद इष्टः ॥ ११ ॥
(ச.பா) ஸ்வப்ன ஜாக்ரத் பதார்த்தங்கள் மித்தை என்றால் சித்தத்தின் உள்ளும், வெளியிலும் கல்பிக்கப்படும் பதார்த்தங்களை யார் அறிகிறார். யார் அவைகளை கல்பனை செய்கிறார்கள்? தாத்பர்யம் என்ன வென்றால் நிராத்மவாதமும் இஷ்டம் என்றால் கூறப்பட்ட ஸ்மரணம் (ஸ்வப்னம்) ஞானம் (ஜாக்கிரம்) இவைகளின் ஆலம்பனம் யார்?
कल्पयत्यात्मनात्मानमात्मा देवः स्वमायया ।
स एव बुध्यते भेदानिति वेदान्तनिश्चयः ॥ १२ ॥
कारिका अन्वयः - देवः आत्मा स्वमायया आत्मानम् आत्मना कल्पयति स एव भेदान् बुध्यते इति वेदान्त निश्चयः ॥
காரிகா அர்த்தம் - ஸ்வயம்பிரகாச ஆத்மா தன்னுடைய மாயையால் தானே கல்பனை செய்கிறது. மேலும் அதுவே எல்லா பேதங்களையும் அறிகிறது. இது வேதாந்த நிச்சயமாகும்.
स्वयं स्वमायया स्वमात्मानमात्मादेव आत्मन्येव वक्ष्यमाणं भेदाकारं कल्पयति रज्ज्वादाविव सर्पादीन् , स्वयमेव च तान्बुध्यते भेदान् , तद्वदेवेत्येवं वेदान्तनिश्चयः । नान्योऽस्ति ज्ञानस्मृत्याश्रयः । न च निरास्पदे एव ज्ञानस्मृती वैनाशिकानामिवेत्यभिप्रायः ॥ १२ ॥
(ச.பா) ஸ்வயம் பிரகாச ஆத்மா தன்னுடைய மாயையால் ரஜ்ஜுவில் சர்ப்பம் போல் தன்னிடத்தில் தன்னையே இனிக் கூறப்போகிற அறியக் கூடிய பேதரூபமாய் கல்பனை செய்கிறது, மேலும் தானே அந்த பேதங்களை அறிகிறது. இவ்வாறு இது வேதாந்த நிச்சயமாகும். இதன் தாத்பரியம் என்னவெனில் வைநாசிகர்கள் (பௌத்தர்கள்) கூறுவது போல் ஞானமும், ஸ்மிருதியும் ஆதாரம் அற்றது அல்ல.
सङ्कल्पयन्केन प्रकारेण कल्पयतीत्युच्यते ।
(ச.பா) (அ.கை) இந்த சங்கல்பிக்கப்பட்டது எந்தப் பிரகாரம் கல்பனை செய்யப்படுகிறது? அதைக் குறித்து கூறப்போகிறார்-
विकरोत्यपरान्भावानन्तश्चित्ते व्यवस्थितान् ।
नियतांश्च बहिश्चित्त एवं कल्पयते प्रभुः ॥ १३ ॥
कारिका अन्वयः - प्रभुः अपरान् भावान् अन्तश्चित्ते व्यवस्थितान् नियतान् बहिश्चित्तः एवं विकरोति ।
காரிகா அர்த்தம் - பிரபு ஆத்மா, தன்னுடைய அந்தக்கரணத்தில் (வாசனாரூபமாய்) இருக்கும் மற்ற(லௌகிக) பாவங்களை நாநா ரூபமாகச் செய்கிறது. அவ்வாறே பஹிர்சித்தமாகி (வெளிச்சித்தமாகி) பிருதிவீ முதலிய நியத, அநியத பதார்த்தங்களையும் இவ்வாறு கல்பனை செய்கிறது.
विकरोति नाना करोति अपरान् लौकिकान् भावान् पदार्थाञ्शब्दादीनन्यांश्च अन्तश्चित्ते वासनारूपेण व्यवस्थितानव्याकृतान् नियतांश्च पृथिव्यादीननियतांश्च कल्पनाकालान् बहिश्चित्तः सन् , तथा अन्तश्चित्तो मनोरथादिलक्षणानित्येवं कल्पयति, प्रभुः ईश्वरः, आत्मेत्यर्थः ॥ १३ ॥
(ச.பா) அது சித்தத்திற்கு உள்ளே வாசனாரூபமாய் இருக்கும் அவ்யாகிருத லௌகிக பாவங்களான சப்த முதலிய பதார்த்தங்களை அவ்வாறே மற்ற பிருதிவீ முதலிய நியத கல்பனா காலங்களில் உண்டாகும் அநியத பதார்த்தங்களை பஹிர் சித்தமாகி, அவ்வாறே முதலிய ரூப பதார்த்தங்களை உள்சித்தத்தில் நாநாவாக்குகிறது. இவ்வாறு பிரபு-ஈஸ்வரன் என்று ஆத்மா கல்பனை செய்கிறது.
स्वप्नवच्चित्तपरिकल्पितं सर्वमित्येतदाशङ्क्यते — यस्माच्चित्तपरिकल्पितैर्मनोरथादिलक्षणैश्चित्तपरिच्छेद्यैर्वैलक्षण्यं बाह्यानामन्योन्यपरिच्छेद्यत्वमिति ।
(ச.பா) (அ.கை) ஸ்வப்னத்திற்கு சமானமாக எல்லாம் சித்தத்தால் கல்பிக்கப்பட்டதாகிறது. இந்த விஷயத்தில் சந்தேஹம் எழுகிறது. ஏனெனில் கேவலம் சித்தத்தால் கல்பிக்கப்பட்டதும், சித்தத்தால் மனோரதம் முதலிய பாஹ்ய பதார்த்தங்களை பரிச்சேதம் செய்வது அந்நோன்ய பரிச்சேதரூப விலக்ஷணம் உடையதாகிறது (ஆகையால் ஸ்வப்னம் போல் மித்தியாவாக ஆகாது).
सा न युक्ताशङ्का ।
(ச.பா) (சமாதானம்) இந்த சங்கை சரியல்ல.
चित्तकाला हि येऽन्तस्तु द्वयकालाश्च ये बहिः ।
कल्पिता एव ते सर्वे विशेषो नान्यहेतुकः ॥ १४ ॥
कारिका अन्वयः - ये अन्तस्तु चित्तकालाः ये बहिः द्वयकालाः ते सर्वे कल्पिता एव न विशेषो अन्यहेतुकः ।
காரிகா அர்த்தம் - எந்த ஆந்தரிக பதார்த்தம் கேவலம் கல்பனா காலம் வரையிலேயே உள்ளதாகும். எந்த பாஹ்ய பதார்த்தங்கள், (இரண்டு காலமுடையது) ஒன்றுக் கொன்று பரிச்சேதம் செய்யும் அவையாவும் கல்பிதமாகும், அவைகளுக்குள் விசேஷத்தன்மைக்கு வேறு ஏதும் காரணம் இல்லை.
चित्तकाला हि येऽन्तस्तु चित्तपरिच्छेद्याः, नान्यश्चित्तकालव्यतिरेकेण परिच्छेदकः कालो येषाम् , ते चित्तकालाः ; कल्पनाकाल एवोपलभ्यन्त इत्यर्थः । द्वयकालाश्च भेदकाला अन्योन्यपरिच्छेद्याः, यथा आगोदोहनमास्ते ; यावदास्ते तावद्गां दोग्धि ; यावद्गां दोग्धि तावदास्ते, तावानयमेतावान्स इति परस्परपरिच्छेद्यपरिच्छेदकत्वं बाह्यानां भेदानाम् , ते द्वयकालाः । अन्तश्चित्तकाला बाह्याश्च द्वयकालाः कल्पिता एव ते सर्वे । न बाह्यो द्वयकालत्वविशेषः कल्पितत्वव्यतिरेकेणान्यहेतुकः । अत्रापि हि स्वप्नदृष्टान्तो भवत्येव ॥ १४ ॥
(ச.பா) - எந்த கல்பனா த்ருஷ்யங்கள் சித்தத்தால் தன்னிலேயே படைக்கப்பட்டு, மனோரத ரூபமாய் உள்ளதோ அவை அந்த சிந்திக்கும் காலத்தைத் தவிர வேறு காலத்தில் இல்லாதவையாகும் (கல்பனாகாலத்தில் மட்டும் உள்ளவையாகும். எந்த திருஷ்யங்கள் மனதிற்கு வெளியில் காணப்படுகின்றனவோ அவை இரண்டு காலங்களிலும் நிலைபெற்றவை ஆகும். அதாவது அவ்விரு காலங்களும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டதாகும். மேலும் அஃது முந்தையதான மற்றொரு காலத்துடனும், பிந்தையதான மற்றொரு காலத்துடனும் வரையறுக்கப்பட்டுள்ளதால் (இணைக்கப்பட்டுள்ளதால்) அவை வேறுவேறு காலத்தில் நிலைபெற்றவை போல் எண்ணப்படுகின்றன. எவ்வாறு எனில் மாடு கறக்கும் வரை தேவதத்தன் இருப்பான் என்ற இடத்தில் எவ்வளவு காலம் வரை தேவதத்தன் இருக்கிறானோ அதற்குள் மாடுகறத்தலை முடிக்கின்றான் என்று பல காலம்வரை உள்ள பிரத்தியபிக்ஞையை இதனால் வெளியிடுகிறார். மேலும் இக்குடமானது எந்தக் காலம்வரைத் தன்னுடைய செயலை நிறைவேற்றுவதற்கு சக்தி படைத்ததாய் உள்ளதோ அந்தக் காலம்வரை இருக்கும் நிலைபெற்றதாக உள்ளது என்றும் கூறப்படுவதாலும், குடம் நிலைபெற்றலும், தேவதத்தன் உள்ளதும், மாடுகறத்தலும் ஒன்றைஒன்று வரையருக்கும் வகையில் பிணைக்கப்பட்டுள்ளதால் மனதிற்கு வெளியில் உள்ள பேதங்கள் இரண்டு காலங்களைக் கொண்டவைகள் என்று கூறப்பட்டன அந்த இரண்டு திருஷ்யங்களும் கல்பிக்கப்பட்டவையேயாகும் முற்கூறப்பட்ட கல்பனையைத் தவிர வேறுகாரணத்தால் உண்டானவை அல்ல. எனவே இங்கும் ஸ்வப்ன திருஷ்ட்டாந்தம் பொருந்தும்.
अव्यक्ता एव येऽन्तस्तु स्फुटा एव च ये बहिः ।
कल्पिता एव ते सर्वे विशेषस्त्विन्द्रियान्तरे ॥ १५ ॥
कारिका अन्वयः - ये अन्तस्तु अव्यक्ता एव च ये बहिः स्फुटा एव ते सर्वे कल्पिता एव विशेषस्तु इन्द्रियान्तरे ।
காரிகா அர்த்தம் - ஆந்தரிக (உள்ளே உள்ள) பதார்த்தம் அவ்யக்தமாகும். வெளியில் உள்ளவை ஸ்பஷ்ட்டமாய் விளங்கக்கூடியவை, ஆனால் எல்லாம் கல்பிதமேயாகும். அதன் விசேஷத்தன்மை கேவல இந்திரிய பேதங்களினால் ஆனதாகும்.
यदपि अन्तरव्यक्तत्वं भावानां मनोवासनामात्राभिव्यक्तानां स्फुटत्वं वा बहिश्चक्षुरादीन्द्रियान्तरे विशेषः, नासौ भेदानामस्तित्वकृतः, स्वप्नेऽपि तथा दर्शनात् । किं तर्हि ? इन्द्रियान्तरकृत एव । अतः कल्पिता एव जाग्रद्भावा अपि स्वप्नभाववदिति सिद्धम् ॥ १५ ॥
(ச.பா) - சித்தத்தின் வாசனை மாத்திரத்தாலே அபிவியக்தமாகும் (வெளிப்படும்) பதார்த்தங்கள் அந்தக்கரணத்தில் அவ்யக்தமாய் மேலும் வெளியில் உள்ள கண்முதலிய மற்ற இந்திரியங்களுக்கு அவை தெளிவானவைகளே. அந்த விசேஷமானது பதார்த்தங்களின் சத்தையின் காரணத்தால் அல்ல. ஏனெனில் அவ்வாறு ஸ்வப்னத்திலும் காணப்படுகிறது ஆனால் இதற்குக் காரணம் என்ன? இந்திரியங்களின் பேதமே காரணம். இதனால் சித்திக்கிறது என்னவெனில் ஸ்வப்ன பதார்த்தத்திற்கு ஒப்பானதே ஜாக்ரத் பதார்த்தமும் ஆகும்.
बाह्याध्यात्मिकानां भावानामितरेतरनिमित्तनैमित्तिकतया कल्पनायाः किं मूलमित्युच्यते ।
(ச.பா) அ.கை) பாஹ்ய ஆந்தரிக பதார்த்தங்கள் பரஸ்பரம் நிமித்தமாயும், நைமித்திகமாயும் கல்பனை செய்யப்படுவதற்கு என்ன காரணம் எனில், கூறப்படுகிறது.
जीवं कल्पयते पूर्वं ततो भावान्पृथग्विधान् ।
बाह्यानाध्यात्मिकांश्चैव यथाविद्यस्तथास्मृतिः ॥ १६ ॥
कारिका अन्वयः - पूर्वं जीवं कल्पयते ततः पृथग्विधान् बाह्यान् आध्यात्मिकांश्चैव भावान् कल्पयते यथाविद्यः तथा स्मृतिः ॥
காரிகா அர்த்தம் - எல்லாவற்றிற்கும் முதலில் ஜீவனை கல்பிக்கிறது. அதன்பின் பலதரப்பட்ட பாஹ்ய, ஆத்யாத்மிக பதார்த்தங்களை கல்பனை செய்கிறது. அந்த ஜீவனுக்கு எவ்வாறு விக்ஞானம் உண்டானதோ அவ்வாறே ஸ்மிருதியும் உண்டாகிறது.
जीवं हेतुफलात्मकम् ‘अहं करोमि, मम सुखदुःखे’ इत्येवंलक्षणम् । अनेवंलक्षण एव शुद्ध आत्मनि रज्ज्वामिव सर्पं कल्पयते पूर्वम् । ततस्तादर्थ्येन क्रियाकारकफलभेदेन प्राणादीन्नानाविधान्भावान्बाह्यानाध्यात्मिकांश्चैव कल्पयते ।
(ச.பா) - முதலில் நான் செய்கிறேன், என்னுடைய சுகதுக்கங்கள் என்பன போன்ற லக்ஷணத்துடன் கூடிய ஹேது பாலாத்மகமான ஜீவனை ரஜ்ஜுவில் சர்ப்பத்தைக் கல்பிப்பதுபோல் விபரீத லக்ஷணமுடைய சுத்த ஆத்மாவில் கல்பிக்கப்படுகிறது. பிறகு ஜீவபாவத்தை அடைந்ததால் அதில் கிரியா. காரக பலபேதங்களுடன் பிராணன் முதலானவைகளையும் பலதரப்பட்ட பாஹ்யங்களாயும், ஆத்யாத்மிகங்களாயும் பதார்த்தங்களை கல்பனை செய்கிறது.
तत्र कल्पनायां को हेतुरित्युच्यते — योऽसौ स्वयं कल्पितो जीवः सर्वकल्पनायामधिकृतः, सः यथाविद्यः यादृशी विद्या विज्ञानमस्येति यथाविद्यः, तथाविधैव स्मृतिस्तस्येति तथास्मृतिर्भवति स इति । अतो हेतुकल्पनाविज्ञानात्फलविज्ञानम् , ततो हेतुफलस्मृतिः, ततस्तद्विज्ञानम् , ततः तदर्थक्रियाकारकतत्फलभेदविज्ञानानि, तेभ्यस्तत्स्मृतिः, तत्स्मृतेश्च पुनस्तद्विज्ञानानि इत्येवं बाह्यानाध्यात्मिकांश्च इतरेतरनिमित्तनैमित्तिकभावेनानेकधा कल्पयते ॥ १६ ॥
(ச.பா) இந்த கல்பனைகளுக்கு ஹேது என்ன என்பது கூறப்படுகிறது. எந்த ஒரு ஸ்வயம்கல்பனை செய்கிற ஜீவன் எல்லா வகையான கல்பனைகளுக்கும் அதிகாரியாவான். அவ்வாறே வித்யா உடையவனாகிறான். அதாவது எவ்வாறு வித்யையோ அவ்வாறு விக்ஞானத்தை அடைகிறான். அவ்வாறே ஸ்மிருதியும் உண்டாகிறது. ஆகையால் அவனே ஸ்மிருதியையும் உடையவனாகிறான். இவ்வாறு (அன்னம் முதலியவை) ஹேதுவின் கல்பனையின் விக்ஞானத்தால் திருப்தி முதலியவை) பலத்தின் விக்ஞானமாகிறது. அதுவே (மறுநாள்) அந்த ஹேது பலன் இவைகளின் ஸ்மிருதி உண்டாகிறது. மேலும் அந்த ஸ்மிருதியினால் அதன் ஞானம் அவைகளுக்கு ஆகவேண்டிய (சமையல் முதலியவை) கர்ம, (அரிசி முதலியவை) காரகம் மேலும் அதன் (திருப்தி முதலிய) பலபேதங்களின் ஞானம் உண்டாகிறது. அதிலிருந்து அதற்கு ஸ்மிருதி ஏற்படுகிறது. அவ்வாறே அந்த ஸ்மிருதியிலிருந்து (ஹேது முதலிய) விக்ஞானம் உண்டாகிறது இவ்வாறு அந்த ஜீவன்பாஹ்ய, ஆத்யாத்மிக பதார்த்தங்களின் பரஸ்பர நிமித்த, நைமித்திக பாவத்தால் அநேக விதமாய் கல்பனை செய்கிறான்.
तत्र जीवकल्पना सर्वकल्पनामूलमित्युक्तम् ; सैव जीवकल्पना किंनिमित्तेति दृष्टान्तेन प्रतिपादयति —
(ச.பா) (அ.கை) இதுவரை ஜீவ கல்பனைதான் எல்லா கல்பனைகளுக்கும் மூலம் என்று கூறப்பட்டது. அந்த ஜீவ கல்பனைக்கு எது நிமித்தம் என்பதை திருஷ்டாந்தத்தால் விளக்குகிறார்.
अनिश्चिता यथा रज्जुरन्धकारे विकल्पिता ।
सर्पधारादिभिर्भावैस्तद्वदात्मा विकल्पितः ॥ १७ ॥
कारिका अन्वयः - यथा अन्धकारे रज्जुः अनिश्चिताः सर्पधारादिभिः भावैः विकल्पिताः तद्वत् आत्मा विकल्पितः ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு தனது ஸ்வரூபம் நிச்சயம் ஆகாதபொழுது ரஜ்ஜுவில் அந்தகாரத்தால் (இருளினால்) சர்ப்பம், தாரை முதலியவை கல்பிக்கப்படுகிறதோ அவ்வாறே ஆத்மாவிடத்திலும் விகல்பிக்கப்படுகின்றன.
यथा लोके स्वेन रूपेण अनिश्चिता अनवधारिता एवमेवेति रज्जुः मन्दान्धकारे किं सर्प उदकधारा दण्ड इति वा अनेकधा विकल्पिता भवति पूर्वं स्वरूपानिश्चयनिमित्तम् । यदि हि पूर्वमेव रज्जुः स्वरूपेण निश्चिता स्यात् , न सर्पादिविकल्पोऽभविष्यत् , यथा स्वहस्ताङ्गुल्यादिषु ; एष दृष्टान्तः । तद्वद्धेतुफलादिसंसारधर्मानर्थविलक्षणतया स्वेन विशुद्धविज्ञप्तिमात्रसत्ताद्वयरूपेणानिश्चितत्वाज्जीवप्राणाद्यनन्तभावभेदैरात्मा विकल्पित इत्येष सर्वोपनिषदां सिद्धान्तः ॥ १७ ॥
(ச.பா) - எவ்வாறு தன்னுடைய ஸ்வஸ்வரூபம் நிச்சயம் ஆகாததால் அதாவது எவ்வாறு தனது ஸ்வரூபத்தை இன்னது என்று மந்தாந்தகாரத்தில் ரஜ்ஜுவானது சர்ப்பமா? ஜலதாரையா? கம்பா? என்று நிச்சயம் செய்ய முடியவில்லையோ அவ்வாறு முதலிலேயே ஸ்வஸ்வரூபத்தை நிச்சம் செய்யாததின் காரணத்தால் அநேகவிதமான கல்பனைகள் உண்டாகிறது. முதலிலேயே ரஜ்ஜு என்ற நிச்சயம் இருந்தால் சர்ப்பம் முதலிய விகல்பங்கள் தோன்றாது. எவ்வாறு எனில் கைகளில் உள்ள விரல்கள் போலாகும், இது ஒரு திருஷ்ட்டாந்தம். இவ்வாறு ஹேது, பலம் முதலிய சம்சார தர்ம ரூப அனர்த்தத்தை விட வேறான தன்னுடைய விசுத்த, விக்ஞப்தி மாத்திர, அத்விதீய சத்தா ஸ்வரூபத்தால் நிச்சயம் ஆகாததின் காரணத்தால் ஆத்மா, ஜீவன் அவ்வாறே பிராணன் முதலிய அனந்த விபின்ன பாவனைகளால் விகல்பிக்கப்படுகிறது. இது எல்லா உபநிஷத்துக்களின் சித்தாந்தமாகும்.
निश्चितायां यथा रज्ज्वां विकल्पो विनिवर्तते ।
रज्जुरेवेति चाद्वैतं तद्वदात्मविनिश्चयः ॥ १८ ॥
कारिका अन्वयः - यथा निश्चितायां रज्ज्वां विकल्पः विनिवर्तते रज्जुरेवेति अद्वैतं च तद्वत् आत्मविनिश्चयः ।
காரிகா அர்த்தம் - எவ்வாறு ரஜ்ஜு நிச்சயம் ஏற்பட்ட உடன் அதில் உள்ள (சர்ப்பாதி) விகல்பங்கள் நிவிர்த்தி உண்டாகிறதோ அப்பொழுது இது ரஜ்ஜு என்ற அத்வைத நிச்சயம் உண்டாகிறது. அவ்வாறே ஆத்மாவின் நிச்சயம் உண்டாகிறது.
रज्जुरेवेति निश्चये सर्पादिविकल्पनिवृत्तौ रज्जुरेवेति चाद्वैतं यथा, तथा नेति नेतीति सर्वसंसारधर्मशून्यप्रतिपादकशास्त्रजनितविज्ञानसूर्यालोककृतात्मविनिश्चयः ‘आत्मैवेदं सर्वमपूर्वोऽनपरोऽनन्तरोऽबाह्यः सबाह्याभ्यन्तरो ह्यजोऽजरोऽमृतोऽभय एक एवाद्वयः’ इति ॥ १८ ॥
(ச.பா) - ரஜ்ஜுதான் என்ற நிச்சயம் ஏற்பட்டவுடன் எல்லா விகல்பங்களும் நிவிர்த்தி ஆகும்பொழுது ரஜ்ஜு தான் என்ற அத்வைத பாவம் அறியப்படுவது எவ்வாறோ அவ்வாறு “नेति नेति” (நேதி, நேதி = இது இல்லை, இது இல்லை) என்ற சர்வசம்சாரதர்ம இல்லாததை பிரதிபாதிக்கின்ற சாஸ்த்திரத்தினால் உண்டான விக்ஞான ரூபசூரிய பிரகாசத்தால் ஆத்மாவின் நிச்சயம் இவ்வாறு உண்டாகிறது. “आत्मैवेदं सर्वम्” (ஆத்மைவேஇதம் சர்வம் = ஆத்மாவே இவை எல்லாம்) “अपूर्वमनपरमनन्तरमबाह्यम्” (அபூர்வமனபரமனந்தரமபாஹ்யம் = காரணமற்றவர், காரியமற்றவர், உள்ளில்லாதவர் வெளியில்லாாதவர்) “सबाह्याभ्यन्तरो ह्यजः” (சபாஹ்யாப்யந்தரோ ஹ்யஜ: = வெளியிலும், உள்ளிலும் அஜன்) अजरोऽमरोऽमृतोऽभय (அஜரோ அமரோ அம்ருதே அபய: = மூப்பற்றவர் இறவாதவர், அழியாதவர் பயமில்லாதவர்) “एकएवाद्वयः” ஏக ஏவாத்வய: = ஒன்றே அத்விதீயம் என்று.
यदि आत्मैक एवेति निश्चयः, कथं प्राणादिभिरनन्तैर्भावैरेतैः संसारलक्षणैर्विकल्पित इति ? उच्यते शृणु —
(ச.பா) (அ.கை) இந்த விஷயம் இவ்வாறு ஆத்மா ஒன்றே என்று நிச்சயிக்கப்பட்டபொழுது அந்த இந்த சம்சாரரூப பிராணன் முதலிய முடிவில்லாத பாவங்களால் எவ்வாறு விகல்பிக்கப்படுகிறது. இந்த விஷயத்தைக் குறித்துக் கூறப்போகிறார். கேள்-
प्राणादिभिरनन्तैस्तु भावैरेतैर्विकल्पितः ।
मायैषा तस्य देवस्य ययायं मोहितः स्वयम् ॥ १९ ॥
कारिका अन्वयः - एतैः अनन्तैः प्राणादिभिः भावैः च विकल्पितः तस्य देवस्य एषा माया ।
காரிகா அர்த்தம் - எது இந்த பிராணன் முதலிய முடிவற்றபாவங்களால் விகல்பிக்கப்பட்டு இருக்கிறதோ அது அந்த பிரகாசமயமான ஆத்மதேவனுடைய மாயையாகும். அதனால் அது தானே மோஹமடைந்துள்ளதாய் இருக்கிறது.
मायैषा तस्यात्मनो देवस्य । यथा मायाविना विहिता माया गगनमतिविमलं कुसुमितैः सपलाशैस्तरुभिराकीर्णमिव करोति, तथा इयमपि देवस्य माया, यया अयं स्वयमपि मोहित इव मोहितो भवति । ‘मम माया दुरत्यया’ (भ. गी. ७ । १४) इत्युक्तम् ॥ १९ ॥
(ச.பா) - அந்த ஆத்ம தேவனுடையது இந்தமாயை. எவ்வாறு மாயாவியினால் ஏவப்பட்ட மாயை, மிகபரிசுத்தமான ஆகாசத்தை மலர்களுடன் நிறைந்த பலாச மரத்தால் நிரம்பியது போல் செய்கிறதோ அவ்வாறு ஸ்வயமாகவே மோஹிக்கச் செய்யப்பட்டது போல் மோஹத்தால் பீடிக்கப்பட்டதாய் இருக்கிறது. “मम माया दुरत्यया” (மம மாயாதுரத்யயா = என்னுடைய மாயை எளிதில் கடக்க முடியாது) என்று இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
प्राण इति प्राणविदो भूतानीति च तद्विदः ।
गुणा इति गुणविदस्तत्त्वानीति च तद्विदः ॥ २० ॥
कारिका अन्वयः - प्राणः इति प्राणविदः भूतानि इति च तद्विदः गुणाः इति गुणविदः तत्वानि इति च तद्विदः ।
காரிகா அர்த்தம் - (பிராண உபாசகர்கள்) பிராணனே ஜகத்திறகுக் காரணம் என்கிறார்கள் (பூதங்கள் அறிந்தவர்கள்) நான்கு பூதங்களே பரமார்த்தம் என்கிறார்கள் (சாங்கியவாதிகள்) குணம்தான் சிருஷ்டிக்கு ஹேது என்று கூறுகிறார்கள், அவ்வாறே தத்துவக்ஞர்கள் (சைவர்கள்) ஆன்மா, அவித்தை, சிவன் என்ற இந்த தத்துவங்களே ஜகத்திற்குக் காரணம் என்று கூறுவர்.
पादा इति पादविदो विषया इति तद्विदः ।
लोका इति लोकविदो देवा इति च तद्विदः ॥ २१ ॥
कारिका अन्वयः - पादाः इति पादविदः विषयाः इति तद्विदः लोकाः इति लोकविदः देवाः इति च तद्विदः ॥
காரிகா அர்த்தம் - பாதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள் - விச்வம் முதலிய பாதங்கள் எல்லா வியவஹாரத்திற்கும் காரணம் என்கிறார்கள். விஷயத்தை அறிந்த வாத்சயனாயனார் முதலியவர்கள் சப்த முதலிய ஐந்து விஷயங்களை சத்தியம் என்கிறார்கள். லோகவேதாக்கள் அதாவது பௌராணிகர்கள் லோகமே சத்தியம் என்கிறார்கள். அவ்வாறேதேவ உபாசகர்கள் இந்திரன் முதலியோரே சிருஷ்ட்டியை செய்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
वेदा इति वेदविदो यज्ञा इति च तद्विदः ।
भोक्तेति च भोक्तृविदो भोज्यमिति च तद्विदः ॥ २२ ॥
कारिका अन्वयः - वेदाः इति वेदविदः यज्ञा इति च तद्विदः भोक्ता इति भोक्तृविदः भोज्यम् इति च तद्विदः ।
காரிகா அர்த்தம் - வேதவித்துக்கள் கூறுகிறார்கள் ரிக் முதலிய நான்கு வேதங்களே பரமார்த்தமென்று. யக்ஞத்தை அறிந்தவர்கள் யக்ஞமே சம்சாரத்திற்கு ஆதிகாரணம் என்கிறார்கள். போக்தாவை அறிந்தவர்கள் போக்தாதான் முக்கியமானது என்கிறார்கள். போஜ்யத்தின மர்மத்தை அறிந்தவர்கள் போஜ்ஜிய பதார்த்தங்களின் சாரத்தன்மையைக் கூறுகிறார்கள்.
सूक्ष्म इति सूक्ष्मविदः स्थूल इति च तद्विदः ।
मूर्त इति मूर्तविदोऽमूर्त इति च तद्विदः ॥ २३ ॥
कारिका अन्वयः - सूक्ष्मः इति सूक्ष्मविदः स्थूलः इति च तद्विदः मूर्त इति मूर्तविदः अमूर्त इति तद्विदः ।
காரிகா அர்த்தம் - சூக்ஷ்மத்தை அறிந்தவர்கள் ஆத்மா சூக்ஷ்மம் அதாவது அணுபரிமாணமுள்ளது என்பார்கள். ஸ்தூலவாதிகள் அதாவது சாருவாகர்கள் அதுஸ்தூலம் என்கிறார்கள். மூர்த்தவாதி அதாவது சாகார உபாசகர்கள் பரமார்த்த வஸ்து மூர்த்தி ரூபமாகும் என்பார்கள். அவ்வாறே அமூர்த்தவாதிகள் அதாவது சூன்ய வாதிகள் அது மூர்த்தி அற்றது என்பார்கள்.
काल इति कालविदो दिश इति च तद्विदः ।
वादा इति वादविदो भुवनानीति तद्विदः ॥ २४ ॥
कारिका अन्वयः - कालः इति कालविदः दिश इति च तद्विदः वादा इति वाद विदः भुवनानि इति तद्विदः ॥
காரிகா அர்த்தம் - காலத்தை அறிந்தவர்கள் அதாவது ஜ்யோதிடர்கள் காலமே பரமார்த்தம் என்கிறார்கள். திசைகளை அறிந்தவர்கள் அதாவது ஸ்வரோதயம் முதலிய நூ ல்களை எழுதியவர்கள் திசைகளை சத்திய வஸ்து என்கின்றனர். வாதிகள் அதாவது தாதுவாதம், மந்திரவாதம் அறிந்தோார் வாதமே சத்திய வஸ்து என்பர். அவ்வாறே பூகோளாதி விக்ஞானத்தை அறிந்தோர் (பதிநான்கு) புவனங்களே பரமார்த்த வஸ்து என்று.
मन इति मनोविदो बुद्धिरिति च तद्विदः ।
चित्तमिति चित्तविदो धर्माधर्मौ च तद्विदः ॥ २५ ॥
कारिका अन्वयः - मनः इति मनोविदः बुद्धिरिति च तद्विदः चित्तमिति चित्तविदः धर्माधर्मौ च तद्विदः ॥
காரிகா அர்த்தம் - மனதை அறிந்தவர்கள் மனமே ஆத்மா என்று, பௌத்தர்கள் புத்தி ஆத்மா என்கிறார்கள், சித்தத்தை அறிந்தவர்கள் சித்தம் சத்திய வஸ்து என்று கூறுகிறார்கள். அவ்வாறே தர்மத்தை அறிந்தவர்கள் அதாவது மீமாம்சர்கள் தர்மாதர்மங்களை பரமார்த்தமென்று கருதுகிறார்கள்.
पञ्चविंशक इत्येके षड्विंश इति चापरे ।
एकत्रिंशक इत्याहुरनन्त इति चापरे ॥ २६ ॥
कारिका अन्वयः - पञ्चविंशकः इति एके षड्विंश अपरे एकत्रिंशकः इति आहुः अनन्त इति च अपरे ॥
காரிகா அர்த்தம் - சாங்கியவாதிகள் இருபத்தி ஐந்து தத்துவங்களையும், பாதஞ்சலியை அனுசரிப்பவர்கள் இருபத்தி ஆறு தத்துவங்களையும். பாசுபதர்கள் முத்தி ஓர் தத்துவங்களையும் சத்தியம் என்று கருதுகிறார்கள் அவ்வாறே வேறு மதவாதி முடிவற்ற பேதங்களை பரமார்த்தம் என்று நினைக்கிறார்கள்.
लोकांल्लोकविदः प्राहुराश्रमा इति तद्विदः ।
स्त्रीपुंनपुंसकं लैङ्गाः परापरमथापरे ॥ २७ ॥
कारिका अन्वयः - लोकान् लोकविदः प्राहुः आश्रमाः इति तद्विदः स्रीपुंनपुंसकं लैङ्गाः अथ अपरे परापरे ॥
காரிகா அர்த்தம் - லௌகிகர்கள் உலகத்தில் ரமித்தலை சத்தியம் என கருதுகிறார்கள். ஆஸ்ரமவாதிகள் ஆஸ்ரமத்தை பிரதானமாக கருதுகிறார்கள். லிங்கவாதிகள், ஸ்த்ரீலிங்கம், புல்லிங்கம், நபும்சகலிங்கம் இவைகளை பிரதானமாக கொள்கின்றனர். மற்றவர்கள் பர, அபர பிரஹ்மத்தை பரமார்த்தம் என்று கருதுகிறார்கள்.
सृष्टिरिति सृष्टिविदो लय इति च तद्विदः ।
स्थितिरिति स्थितिविदः सर्वे चेह तु सर्वदा ॥ २८ ॥
कारिका अन्वयः - सृष्टिरिति सृष्टिविदः लय इति च तद्विदः स्थितिरिति स्थितिविदः सर्वे चेह तु सर्वदा ॥
காரிகா அர்த்தம் - ஸ்ருஷ்டியை அறிந்தவர்கள் ஸ்ருஷ்டி சத்தியம் என்கிறார்கள் லயவாதிகள் லயம் சத்தியம் என்று கூறுகிறார்கள். அவ்வாறே ஸ்திதிவேதாக்கள் ஸ்திதியை சத்தியம் எனக் கூறுகிறார்கள். இவ்வாறு எல்லா விதமான வாதங்களையும் இந்த ஆத்மதத்துவத்தில் எப்பொழுதும் கல்பிக்கிறார்கள்.
प्राणः प्राज्ञो बीजात्मा, तत्कार्यभेदा हीतरे स्थित्यन्ताः । अन्ये च सर्वे लौकिकाः सर्वप्राणिपरिकल्पिता भेदा रज्ज्वामिव सर्पादयः । तच्छून्ये आत्मन्यात्मस्वरूपानिश्चयहेतोरविद्यया कल्पिता इति पिण्डितोऽर्थः । प्राणादिश्लोकानां प्रत्येकं पदार्थव्याख्याने फल्गुप्रयोजनत्वात्सिद्धपदार्थत्वाच्च यत्नो न कृतः ।
(ச.பா) பிராணன் பிராக்ஞனுக்கு பீஜாத்மா ஆவான். முன்பு கூறப்பட்ட ஸ்திதி வரையிலும் உள்ள எல்லா விகல்பங்களும் அதன் காரிய பேதங்களாகும். எல்லா பிராணிகளினால் பரிகல்பிக்கப்பட்ட மற்றஎல்லாலௌகிக தர்மங்கள் ரஜ்ஜு சர்ப்பத்திற்கு சமானமாய் அந்த விகல்பங்கள் அற்ற ஆத்மாவிடத்தில் ஆத்ம ஸ்வரூபத்தை நிச்சயம் செய்யாததின் காரணமாய் அவித்தையினால் கல்பிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஸ்லோகத்தின் பொது அர்த்தமாகும். பிராணாதி ஸ்லோகத்தின் ஒவ்வொரு பதத்தின் அர்த்தத்தை வியாக்கியானம் செய்வது அல்ப பிரயோஜனமாய் இருப்பதாலும், சித்த பதார்த்தமாய் இருப்பதாலும் அதில் பிரயத்தனம் செய்யவில்லை.
किं बहुना — ॥ २८ ॥
(ச.பா) (அ.கை) அதிகம் கூறவேண்டியது என்ன?
यं भावं दर्शयेद्यस्य तं भावं स तु पश्यति ।
तं चावति स भूत्वासौ तद्ग्रहः समुपैति तम् ॥ २९ ॥
कारिका अन्वयः - यस्य यं भावं दर्शयेत् सः तं भावं तु पश्यति सः तं च असौ भूत्वा अवति तद्ग्रहः तं समुपैति ।
காரிகா அர்த்தம் - (குருவால்) எந்த பாவனை காட்டப்பட்டதோ அது ஆத்மஸ்வரூபமாய் பார்க்கப்படுகிறது. அவ்வாறு பார்க்கும் அந்த சாதகன் அந்த பாவரூபமாகி ரக்ஷிக்கப்படுகிறான், பின் அந்த பாவத்திலேயே ஈடுபாடு உடையவன் அந்த ஆத்ம பாவத்தை அடைகிறான்.
प्राणादीनामन्यतममुक्तमनुक्तं वा अन्यं यं भावं पदार्थं दर्शयेद्यस्याचार्योऽन्यो वा आप्तः इदमेव तत्त्वमिति, स तं भावमात्मभूतं पश्यत्ययमहमिति वा ममेति वा, तं च द्रष्टारं स भावोऽवति, यो दर्शितो भावः, असौ स भूत्वा रक्षति ; स्वेनात्मना सर्वतो निरुणद्धि । तस्मिन्ग्रहस्तद्ग्रहस्तदभिनिवेशः इदमेव तत्त्वमिति स तं ग्रहीतारमुपैति, तस्यात्मभावं निगच्छतीत्यर्थः ॥ २९ ॥
(ச.பா) எந்த ஒரு சாதகனுக்கு எந்த ஒரு பாவத்தை அதாவது முற்கூறப்பட்ட பிராணன் முதலான பாவங்களில் ஏதாவது ஒன்றையோ அல்லது இங்கு உதாரணத்துடன் கூறப்படாத ஏதாவது ஒரு பாவத்தையோ (பதார்த்தத்தையோ) அவனுடைய ஆசாரியனோ அல்லது மிகவும் ஆப்தனான ஒருவனோ இதுவே தத்துவம் என்று காட்டுகிறானோ அப்படிக் காட்டப்பட்ட சாதகன் பரமார்த்த ஆன்மதத்துவம் என்று காட்டப்பட்ட பாவத்தை இதுவே நான் என்றோ அல்லது எனது என்றோ பார்க்கிறானோ அந்த பாவமானது திருஷ்டாவான சாதகனையும், காப்பாற்றுகிறது. அவனை இதிலேயே ஈடுபாடு கொள்ளச்செய்கிறது. இதுவே தத்துவம் என்ற முறையில் அவன் ஆத்மபாவத்தை அடைகிறான்.
एतैरेषोऽपृथग्भावैः पृथगेवेति लक्षितः ।
एवं यो वेद तत्त्वेन कल्पयेत्सोऽविशङ्कितः ॥ ३० ॥
कारिका अन्वयः - एतैः अपृथक् भावैः एषः पृथगेवेति लक्षितः यः एवं तत्त्वेन वेद सः अविशङ्कितः कल्पयेत् ।
காரிகா அர்த்தம் - (இவ்வாறு எல்லாவற்றிற்கும் அதிஷ்டானமானதால்) இந்த பிராணன் முதலியவைகள் ஆத்மாவைக் காட்டிலும் வேறாக இல்லாவிடினும் அக்ஞானத்தால் ஆத்மாவைவிட வேறானதாய் பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தின் உண்மை ரூபத்தை அறிந்து சங்கையற்றவனாய் (வேதார்த்தத்தை) கல்பனை செய்கிறான்.
एतैः प्राणादिभिः आत्मनोऽपृथग्भूतैरपृथग्भावैः एषः आत्मा रज्जुरिव सर्पादिविकल्पनारूपैः पृथगेवेति लक्षितः अभिलक्षितः निश्चितः मूढैरित्यर्थः । विवेकिनां तु रज्ज्वामिव कल्पिताः सर्पादयो नात्मव्यतिरेकेण प्राणादयः सन्तीत्यभिप्रायः ; ‘इदं सर्वं यदयमात्मा’ (बृ. उ. २ । ४ । ६) इति श्रुतेः ।
(ச.பா) இந்த பிராணன் முதலான ஆத்மாவைக் காட்டிலும் வேறுபடாத பாவங்களால் இந்த ஆத்மாவானவன், ஸர்ப்பம் முதலான கல்பனா ரூபங்களால் கயிறு போல் வேறானதே என்று மூடர்களால் நிச்சயிக்கப்பட்டதாகும். விவேகிகளுக்கோவெனில் இந்த பாவங்கள் கயிற்றில் கற்பிக்கப்பட்ட பாம்பு முதலானவைகள் போன்றது ஆகும். எனவே ஆத்மாவைத் தவிர வேறானதாக பிராணன் முதலியவைகள் இல்லை என்பது கருத்து. “इदं सर्वं यदयमात्मा” (இதம் சர்வம் யதயமாத்மா இது எல்லாம் இந்த ஆத்மா) என்பது சுருதி வாக்கியம்.
एवमात्मव्यतिरेकेणासत्त्वं रज्जुसर्पवदात्मनि कल्पितानामात्मानं च केवलं निर्विकल्पं यो वेद तत्त्वेन श्रुतितो युक्तितश्च, सः अविशङ्कितो वेदार्थं विभागतः कल्पयेत् कल्पयतीत्यर्थः — इदमेवंपरं वाक्यम् अदोऽन्यपरम् इति । न ह्यनध्यात्मविद्वेदान्ज्ञातुं शक्नोति तत्त्वतः, ‘न ह्यनध्यात्मवित्कश्चित्क्रियाफलमुपाश्नुते’ (मनु. ६ । ८२) इति हि मानवं वचनम् ।
(ச.பா) எவன் ஒருவன் இம்மாதிரி அதாவது ஆத்மாவைக் காட்டிலும் வேறாக, ரஜ்ஜு சர்ப்பம் போல், ஆத்மாவில் கல்பிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் பொய்மையையும் அவ்வாறே சுத்தமான நிர்விகல்பமான ஆத்மாவையும் உண்மையாக, அனுபவபூர்வமாய் வேதத்தின் வாயிலாகவும். யுக்தியின் மூலமாகவும் அறிகிறானோ. அந்த அநுபவஞானி சந்தேக மற்றவனாகி வேதார்த்தத்தை அதாவது வேதத்தின் உண்மை பொருளை அறிந்தவனாகிறான் என்று இது விளக்குகிறது. மேலும் இது வேறு அர்த்த முடையது என்று இவ்வாறு விபாகம் செய்து கல்பனை செய்ய முடிகிறது, என்பது இதன் தாத்பர்யம் எவன் அத்யாத்ம தத்துவத்தை அறியவில்லையோ அவன் வேதத்தையும் நன்கு அறிந்தவனாகமாட்டான் “न ह्यनध्यात्मवित्कश्चित्क्रियाफलमुपाश्नुते” (ந ஹ்யனத்யாத்ம வித்கச்சித் கிரியாபலமுபாச்னுதே = அத்தியாத்ம தத்துவத்தை அறியாதவன் எந்த ஒரு கர்ம பலத்தையும் அடையமாட்டான்) என்பது மனுஸ்மிருதி, (இங்கு கர்மபலத்தை அடையமாட்டான் என்றது சித்த சுத்திவாயிலாய் அடையப்படும் ஞானபலன் ஆகும்)
यदेतद्द्वैतस्यासत्त्वमुक्तं युक्तितः, तदेतद्वेदान्तप्रमाणावगतमित्याह ।
(ச.பா) (அ.கை) எது யுக்தி பூர்வமாய் த்வைதத்தின் அசத்தியத்தைக் கூறுகிறதோ அது வேதாந்த பிரமாணத்தாலும் அறியப்பட்டது என்பதைக் கூறுகிறார்.
स्वप्नमाये यथा दृष्टे गन्धर्वनगरं यथा ।
तथा विश्वमिदं दृष्टं वेदान्तेषु विचक्षणैः ॥ ३१ ॥
कारिका अन्वयः - यथा स्वप्नमाये दृष्टे यथा गन्धर्वनगरं तथा विचक्षणैः इदं विश्वंं वेदान्तेषु दृष्टम् ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு ஸ்வப்னமும் மாயையும் பார்க்கப்படுகிறதோ அவ்வாறு கந்தர்வ நகரமும் காணப்படுகிறது. இவ்வாறு நிபுணர்களான பண்டிதர்கள் வேதாந்திகள் இந்த விச்வத்தைப் (ஜகத்தைப்) பார்க்கிறார்கள்.
स्वप्नश्च माया च स्वप्नमाये असद्वस्त्वात्मिके सत्यौ सद्वस्त्वात्मिके इव लक्ष्येते अविवेकिभिः । यथा च प्रसारितपण्यापणगृहप्रासादस्त्रीपुञ्जनपदव्यवहाराकीर्णमिव गन्धर्वनगरं दृश्यमानमेव सत् अकस्मादभावतां गतं दृष्टम् , यथा च स्वप्नमाये दृष्टे असद्रूपे, तथा विश्वमिदं द्वैतं समस्तमसद्दृष्टम् ।
(ச.பா) எவ்வாறு அவிவேகிகளால் ஸ்வப்னம். மாயை இவைகள் அசத்வஸ்து ரூபமாய் அசத்தாய் இருந்தாலும் சத்வஸ்து போல் காணப்படுகிறது. எவ்வாறு விரிவாக்கப்பட்ட பொருள்களாடு கூடிய கடைகள், கடைத்தெரு, வீடு, மாளிகை இவைகளில் இருக்கும் நகரவாசிகளான ஸ்த்ரீ புருஷர்களின் செயல்களையும் கொண்டு காணப்பட்ட கந்தர்வ நகரமானது பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே எதிர்பாராமல் இல்லாமல் போவதும் காணப்படுகிறதோ அவ்வாறே இந்த விச்வம் அதாவது இந்த எல்லா துவைதங்களும் அசத்தாக காணப்படுகின்றன.
(ச.பா) எங்கு காணப்படுகிறது? ருவதாந்தங்களில் “नेह नानाऽस्तिकिंचन” (நேஹநாநாஸ்தி கிஞ்ச்சன = இங்கு நாநா என்பது சிறிதும் இல்லை) “इन्द्रो मायाभिः” இந்திரோ மாயாபி = இந்திரன் மாயையினால்) “आत्मैवेदमग्र आसीत्” (ஆத்மைவேதமக்ர ஆசீத்) இதற்கு முன் ஆத்மாவே இருந்தது) “ब्रह्म वा इदमग्र आसीत्” (பிரஹ்மவா இதமக்ர ஆசீத் = இதற்கு முன் பிரஹ்மம் இருந்தது) “द्वितीयाद्वै भयं भवति” (த்விதீயாத்வை பயம் பவதி = த்விதீயத்தால் பயம் உண்டாகிறது) “नतुतद्द्वितीयमस्ति” (நது தத்த்விதீயம்ஸ்தி =அதைக் காட்டிலும் இரண்டாவது இல்லை) “यत्रत्वस्य सर्वमात्मैवाभूत्” (யத்ரத்வஸ்ய சர்வமாத்மைவாபூத் = எங்கு இதற்காக எல்லாம் ஆத்மாவாக ஆயிற்றோ) இவை முதலியவைகள் வேதாந்தங்களில் மிகுந்த நிபுணர்களான தத்வதர்சிகளாகிய பண்டிதர்கள் கண்டிருக்கின்றார்கள் என்பது இதன் தாத்பர்யம்.
‘तमः श्वभ्रनिभं दृष्टं वर्षबुद्बुदसंनिभम् । नाशप्रायं सुखाद्धीनं नाशोत्तरमभावगम्’ (मो. ध. ३०१ । ६०) इति ॥ व्यासस्मृतेः ।
(ச.பா) (பிரபஞ்சமானது) மந்தாந்தகாரத்தில் எவ்வாறு அதிஷ்ட்டானமான கயிறு பூமியில் தோண்டப்பட்டவளை போல் தோன்றுகிறதோ, அவ்வாறே மழைகாலத்தில் மழை பெய்யும் பொழுது ஏற்படும் நீர்குமிழி போல் நிலையற்றதாயும், சுகமற்றதாயும், நாசத்திற்குப் பின் இல்லாமையையும் (அபாவத்தையும்) அறிகிறான் என்பது வியாச ஸ்மிருதிப் பிரமாணமாகும்.
प्रकरणार्थोपसंहारार्थोऽयं श्लोकः । यदा वितथं द्वैतम् आत्मैवैकः परमार्थतः सन् , तदा इदं निष्पन्नं भवति — सर्वोऽयं लौकिको वैदिकश्च व्यवहारोऽविद्याविषय एवेति तदा —
(ச.பா) (அ.கை) அடுத்த ஸ்லோகம் இந்த பிரகரணத்தை முடிப்பதற்காக ஆகும். எப்பொழுது த்வைதம் அசத், ஆத்மா ஒன்றே பரமார்த்த சத்தியம் என்ற நிச்சயம் ஏற்பட்ட பொழுது எல்லா லௌகிக, வைதிக வியவஹாரங்கள் அவித்யா விஷயமாகும். அப்பொழுது.
न निरोधो न चोत्पत्तिर्न बद्धो न च साधकः ।
न मुमुक्षुर्न वै मुक्त इत्येषा परमार्थता ॥ ३२ ॥
कारिका अन्वयः - न निरोधः न च उत्पत्तिः न बद्धः न च साधकः न मुमुक्षुः न वै मुक्तः इत्येषा परमार्थता ।
காரிகா அர்த்தம் - பிரளயம் இல்லை, உத்பத்தி இல்லை, பந்தமில்லை, சாதகன் இல்லை, முமூக்ஷு இல்லை, முக்தனும் இல்லை அது பரமார்த்தமான உண்மையாகும்.
न विरोधः, निरोधनं निरोधः प्रलयः, उत्पत्तिः जननम् , बद्धः संसारी जीवः, साधकः साधनवान्मोक्षस्य, मुमुक्षुः मोचनार्थी, मुक्तः विमुक्तबन्धः । उत्पत्तिप्रलययोरभावाद्बद्धादयो न सन्तीत्येषा परमार्थता ।
(ச.பா) நிரோதம் இல்லை என்பது பிரளயம் இல்லை, உத்பத்தி அதாவது ஜனனம், பத்தः என்றால் சம்சாரி ஜீவன், சாதகன், அதாவது மோக்ஷத்தின் பொருட்டு சாதனை செய்பவன். முமூக்ஷு அதாவது மோக்ஷத்தில் இச்சை உள்ளவன், முக்தன் அதாவது பந்தத்திலிருந்து விடுபட்டவன் என்ற இவையாவையும் இல்லை, உத்பத்தி பிரளயங்கள் இல்லாததால் பந்தம் முதலானவைகள் இல்லை என்பது பரமார்த்தமான உண்மை,
कथमुत्पत्तिप्रलययोरभाव इति, उच्यते — द्वैतस्यासत्त्वात् । ‘यत्र हि द्वैतमिव भवति’ (बृ. उ. २ । ४ । १४) ‘य इह नानेव पश्यति’ (क. उ. २ । १ । १०) ‘आत्मैवेदं सर्वम्’ (छा. उ. ७ । २५ । २) ‘ब्रह्मैवेदं सर्वम्’ ‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) ‘इदं सर्वं यदयमात्मा’ (बृ. उ. २ । ४ । ६) इत्यादिनानाश्रुतिभ्यो द्वैतस्यासत्त्वं सिद्धम् ।
>(ச.பா) எவ்வாறு உத்பத்தி பிரளயங்கள் அபாவம் என்று கூறப்படுகிறது எனில் துவைதம் அசத்துவமாய் இருப்பதால். “यत्र हि द्वैतमिव भवति” (யத்ரஹிதுவைதமிவ பவதி = எங்கு துவைதம் போல் பலவாறாக இருக்கிறதோ) “य इह नानेव पश्यति” (ய இஹ நாநேவபச்யதி = எவன் ஒருவன் இந்த ஆத்ம ஸ்வரூபத்தை நாநாவாய் பார்க்கிறானோ) “आत्मैवेदं सर्वम्” (ஆத்மைவேதம் சர்வம் = ஆத்மாவே இந்த காணப்படும் பிரபஞ்சமெல்லாம்) “ब्रह्मैैवेदं सर्वम्” (பிரஹ்மைவேஇதம் சர்வம் = இவை எல்லாம் பிரஹ்மமே) “एकमेवाद्वितीयम्” (ஏகமேவாத்விதீயம் = இரண்டாவது அற்ற பிரஹ்மம் ஒன்றே) “इदं सर्वं यदयमात्मा” (இதம் சர்வம்யதயமாத்மா = இவையாவும் இந்த ஆத்மாவே) என்பன போன்ற அநேக ஸ்ருதி வாக்கியங்களால் துவைதத்தின் அசத்துவம் சித்தித்ததாக ஆகிறது.
सतो ह्युत्पत्तिः प्रलयो वा स्यात् , नासतः शशविषाणादेः । नाप्यद्वैतमुत्पद्यते प्रलीयते वा । अद्वैतं च, उत्पत्तिप्रलयवच्चेति विप्रतिषिद्धम् ।
(ச.பா) உத்பத்தியோ, பிரளயமோ சத்வஸ்துவிற்கே உண்டாகும், முயல் கொம்பு முதலிய அசத் வஸ்துக்களுக்கு உண்டாகாது, இவ்வாறு அத்வைத வஸ்துவும் உத்பன்னமோ லீனமோ ஆகாது. அத்வைத வஸ்து உத்பத்தி பிரளயம் இருக்கிறது என்பது விருத்தமாகும்.
यस्तु पुनर्द्वैतसंव्यवहारः, स रज्जुसर्पवदात्मनि प्राणादिलक्षणः कल्पित इत्युक्तम् ; न हि मनोविकल्पनाया रज्जुसर्पादिलक्षणाया रज्ज्वां प्रलय उत्पत्तिर्वा ; न च मनसि रज्जुसर्पस्योत्पत्तिः प्रलयो वा, न चोभयतो वा । तथा मानसत्वाविशेषाद्द्वैतस्य । न हि नियते मनसि सुषुप्ते वा द्वैतं गृह्यते ।
(ச.பா) எந்த ஒரு பிராணன் முதலிய ரூபமான த்வைத வியவஹாரம் உள்ளதோ அது ரஜ்ஜுவில் சர்ப்பம்போல் ஆத்மாவில் கல்பிக்கப்பட்டது என்று முன்பே கூறப்பட்டது. ரஜ்ஜு சர்ப்பம் முதலிய ரூப விகல்பமும் ரஜ்ஜுவில் உத்பத்தி, பிரளயம் ஏற்படாது, ரஜ்ஜு சர்ப்பத்தின் உத்பத்தி பிரளயம் மனதில் உண்டாகாது. அவ்வாறே மனதிலோ ரஜ்ஜுவிலோ உண்டாகாது. இவ்வாறு துவைதத்தின் மனோமயத்துவம் சமானமே, ஏனெனில் மனம் சமாஹிதமாய் (சமமாய்) இருக்கும் பொழுதோ அல்லது சுஷுப்தியிலோ த்வைதத்தின் க்ரஹணம் ஏற்படாது.
अतो मनोविकल्पनामात्रं द्वैतमिति सिद्धम् । तस्मात्सूक्तम् — द्वैतस्यासत्त्वान्निरोधाद्यभावः परमार्थतेति ।
(ச.பா) ஆகையால் த்வைதம் மனதின் கல்பனா மாத்திரமே என்று சித்திக்கிறது ஆகவே துவைதம் அசத்தியமாய் இருப்பதால் நிரோதம் முதலியவைகளின் அபாவமே (இன்மையே) பரமார்த்தம்) என்று கூறியது சரியானதே ஆகும்.
(भाष्यम्) (पूर्व) - यद्येवं द्वैताभावे शास्त्रव्यापारः, नाद्वैते, विरोधात् ; तथा च सत्यद्वैतस्य वस्तुत्वे प्रमाणाभावाच्छून्यवादप्रसङ्गः, द्वैतस्य चाभावात् ।
(ச.பா) (பூர்வ) சாஸ்திர வியாபரம் த்வைதத்தின் அபாவத்தை பிரதிபாதனம் (கூறுகிறது) என்றால் அது அத்வைத போதமாகாது. ஏனெனில் இதில் விரோதம் வரும். இந்த அவஸ்தையில் அத்வைத வஸ்துவில் ஒரு பிரமாணமும் இல்லாததால் சூன்ய வாதத்தின் பிரசங்கம் உண்டாகும். ஏனெனில் துவைதம் அபாவமாய் இருப்பதால் ஆகும்.
(भाष्यम्) (सिद्धान्ति) - न, रज्जुवत्सर्पादिकल्पनाया निरास्पदत्वेऽनुपपत्तिरिति प्रत्युक्तमेतत्कथमुज्जीवयसीति, आह — रज्जुरपि सर्पविकल्पस्यास्पदभूता कल्पितैवेति दृष्टान्तानुपपत्तिः ।
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல. ஏனெனில் ரஜ்ஜு சர்ப்பம் முதலிய விகல்பங்கள் ஆதாரம் அற்று இருப்பது சம்பவிக்காது. முதலிலேயே நிராகரணம் செய்யப்பட்டதை அறிந்தும் மறுபடியும் சங்கை ஏன் எழுகிறது என்பதற்குக் கூறப்படுகிறது - சர்ப்ப பிராந்திக்கு அதிஷ்டானம் ரஜ்ஜுவும் கல்பிக்கப்பட்டதே, (என்பது சூன்யவாதியின் அபிப்பிராயம்) ஆகையால் இந்த திருஷ்டாந்தம் பொருந்தாது.
(भाष्यम्) (सिद्धान्ति) - न, विकल्पनाक्षये अविकल्पितस्याविकल्पितत्वादेव सत्त्वोपपत्तेः ; रज्जुसर्पवदसत्त्वमिति चेत् , न एकान्तेनाविकल्पितत्वात् अविकल्पितरज्ज्वंशवत्प्राक्सर्पाभावविज्ञानात् , विकल्पयितुश्च प्राग्विकल्पनोत्पत्तेः सिद्धत्वाभ्युपगमादेवासत्त्वानुपपत्तिः ।
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல, கல்பனை க்ஷயம் ஆனவுடன் கல்பிக்கப்படாத ஆத்மாவின் சத்தை அதன் கல்பிதம் அற்றதின் காரணமாகும். ரஜ்ஜு சர்ப்பம்போல் அது அசத்என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் கல்பிதமற்ற ரஜ்ஜு அம்சத்திற்கு சமமாய் சர்ப்ப அபாவ ஞானத்திற்கு முன்பே கல்பிதமற்ற ரூபமாய் இருக்கிறது. இதைத்தவிர எது கல்பிக்கப்படுகிறதோ அது அதன் விகல்பத்தின் உத்பத்தியின் முன்பே இருப்பதால் அதற்கு அசத்தா என்பது இல்லை.
(भाष्यम्) (पूर्व) कथं पुनः स्वरूपे व्यापाराभावे शास्त्रस्य द्वैतविज्ञाननिवर्तकत्वम् ?
(ச.பா) (பூர்வ) - ஆனால் எவ்வாறு ஆத்ம ஸ்வரூபத்தில் பிரமாணத்தின் கதி இல்லாத பொழுது சாஸ்திரம் த்வைத விக்ஞானத்தை நிவர்த்தி செய்யும்?
(भाष्यम्) सिद्धान्ति - नैष दोषः, रज्ज्वां सर्पादिवदात्मनि द्वैतस्याविद्याध्यस्तत्वात् कथं सुख्यहं दुःखी मूढो जातो मृतो जीर्णो देहवान् पश्यामि व्यक्ताव्यक्तः कर्ता फली संयुक्तो वियुक्तः क्षीणो वृद्धोऽहं ममैते इत्येवमादयः सर्वे आत्मन्यध्यारोप्यन्ते । आत्मा एतेष्वनुगतः, सर्वत्राव्यभिचारात् , यथा सर्पधारादिभेदेषु रज्जुः ।
(ச.பா) சித்தாந்தி - இது தோஷமில்லை ரஜ்ஜுவில் சர்ப்பம் முதலியவைகள் போல் ஆத்மாவிடத்தில் த்வைதம் அத்தியாசம் செய்யப்பட்டுள்ளது. எவ்வாறு? நான் சுகி, துக்கி, மூடன், பிறந்தேன், இறந்தேன், வயதானவன் ஆனேன், தேஹத்தை உடையவன், பார்க்கிறேன், நான் வியக்தன், அவ்யக்தன், கர்த்தா, பலனை உடையவன், கூடினவன், விடுபட்டவன், க்ஷீணமானவன், கிழவன், நான், எனது என்பது முதலியவைகள் எல்லாம் ஆத்மாவில் அத்தியாரோபம் செய்யப்பட்டுள்ளன. ஆத்மா அவைகளில் அனுகதமாய் (ஊடுருவி) எங்கும் மாறுபடாமல் இருக்கிறது. சர்ப்பம், தாரை முதலிய பேதங்களில் ரஜ்ஜு எவ்வாறோ அவ்வாறாகும்.
(भाष्यम्) यदा चैवं विशेष्यस्वरूपप्रत्ययस्य सिद्धत्वान्न कर्तव्यत्वं शास्त्रेण । अकृतकर्तृ च शास्त्रं कृतानुकारित्वे अप्रमाणम् । यतः अविद्याध्यारोपितसुखित्वादिविशेषप्रतिबन्धादेवात्मनः स्वरूपेणानवस्थानम् , स्वरूपावस्थानं च श्रेयः इति सुखित्वादिनिवर्तकं शास्त्रमात्मन्यसुखित्वादिप्रत्ययकरणेन नेति नेत्यस्थूलादिवाक्यैः ; आत्मस्वरूपवदसुखित्वादिरपि सुखित्वादिभेदेषु नानुवृत्तोऽस्ति धर्मः । यद्यनुवृत्तः स्यात् , नाध्यारोप्येत सुखित्वादिलक्षणो विशेषः, यथोष्णत्वगुणविशेषवत्यग्नौ शीतता ; तस्मान्निर्विशेष एवात्मनि सुखित्वादयो विशेषाः कल्पिताः । यत्त्वसुखित्वादिशास्त्रमात्मनः, तत्सुखित्वादिविशेषनिवृत्त्यर्थमेवेति सिद्धम् । ‘सिद्धं तु निवर्तकत्वात्’ इत्यागमविदां सूत्रम् ॥ ३२ ॥
(ச.பா) இவ்வாறு இருப்பதால் விசேஷ்ய ரூப பிரஹ்ம ஸ்வரூபத்தின் பிரதீதி (இருப்பு) சித்தமாவதால் அதன் சம்பந்தமாய் சாஸ்திரத்திற்கு கர்த்தவ்வியம் ஒரு சிறிதும் கிடையாது. சாஸ்திரமோ அசித்த வஸ்துவை அசித்தம் என்று சித்திக்கச்செய்கிறது அது சித்த வஸ்துவை அனுவாதம் செய்வதில் பிரமாணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் அவித்தையினால் ஆரோபிக்கப்பட்ட சுகித்துவம் முதலியவைகள் விசேஷ பிரதிபந்தங்களுக்கு காரணமேயன்றி ஆத்மாவின் ஸ்வரூப ஸ்திதி அன்று. மேலும் ஸ்வரூப ஸ்திதியே ஸ்ரேயஸ் (மேலானது) ஆகும். ஆகையால் “नेतिनेति” (நேதி நேதி இது அல்ல இது அல்ல), அவ்வாறே“अस्थूलम्” (அஸ்தூலம் - ஸ்தூலமல்ல) முதலிய வாக்கியங்கள் ஆத்மாவில் சுகித்துவம் முதலியவை இல்லை என்பதை விளக்குவதின் வாயிலாய் சாஸ்திரம் சுகித்துவம் முதலியவைகளை நிவிர்த்தி செய்கிறது. ஆத்ம ஸ்வரூபம் போல் அசுகித்துவம் முதலியவை சுகித்துவாதி பேதங்களில் அனுவிருத்த தர்மம் அல்ல. அனுவிருத்தியானால் அத்தியாரோபமான சுகித்துவாதி லக்ஷணங்கள் விசேஷமாகும். எவ்வாறு உஷ்ணகுணமுள்ள அக்னியில் குளிர்ச்சியை ஆரோபம் செய்யமுடியாதோ அவ்வாறு. ஆகையால் நிர்விசேஷ ஆத்மாவிடத்தில் சுகித்துவாதி விசேஷங்கள் கல்பிக்கப்பட்டது. எந்த அசுகித்துவாதி சாஸ்திரம் உள்ளதோ அது ஆத்மா விஷயத்தில் சுகித்துவாதி விசேஷத்தை நிவர்த்திப்பதற்காக என்று சித்தமாகிறது. “सिद्धं तु निवर्तकत्वात्” (சித்தம் து நிவர்தகத்வாத்) முதலிய ஆகமவாக்கிய சூத்திரத்தால் அறிகிறோம்.
(भाष्यम्) (अव) पूर्वश्लोकार्थस्य हेतुमाह
(ச.பா) (அ.கை) முந்திய ஸ்லோக அர்த்தத்தின் காரணத்தைக் கூறுகிறார்-
भावैरसद्भिरेवायमद्वयेन च कल्पितः ।
भावा अप्यद्वयेनैव तस्मादद्वयता शिवा ॥ ३३ ॥
कारिका अन्वयः - यथा असद्भिः अद्वयेन च भावै अयं कल्पितः भावा अपि अद्वयेनैव तस्मात् अद्वयता शिवा ॥
காரிகா அர்த்தம் - இந்த (ஆத்ம தத்துவம்) பிராணன் முதலிய அசத் பாவங்களினால் அத்வைத ரூபத்தில் கல்பிக்கப்பட்டுள்ள்து. அந்த அசத் பாவமும் அத்வைதத்திலேயே கல்பனை செய்யப்பட்டது. ஆகையால் அத்வைத பாவம் மங்கள ரூபம்.
(भाष्यम्) - पूर्वश्लोकार्थस्य हेतुमाह — यथा रज्ज्वामसद्भिः सर्पधारादिभिः अद्वयेन च रज्जुद्रव्येण सता अयं सर्प इति धारेयं दण्डोऽयमिति वा रज्जुद्रव्यमेव कल्प्यते, एवं प्राणादिभिरनन्तैः असद्भिरेव अविद्यमानैः, न परमार्थतः । न ह्यप्रचलिते मनसि कश्चिद्भाव उपलक्षयितुं शक्यते केनचित् ; न चात्मनः प्रचलनमस्ति । प्रचलितस्यैवोपलभ्यमाना भावा न परमार्थतः सन्तः कल्पयितुं शक्याः । अतः असद्भिरेव प्राणादिभिर्भावैरद्वयेन च परमार्थसता आत्मना रज्जुवत्सर्वविकल्पास्पदभूतेन अयं स्वयमेवात्मा कल्पितः सदैकस्वभावोऽपि सन् ।
(ச.பா) எவ்வாறு ரஜ்ஜுவில் இல்லாத சர்ப்பம். தாரை முதலிய பாவங்கள் இருக்கின்ற அத்வதீய ரஜ்ஜு திரவ்யத்தில் இது சர்ப்பம், இது தாரை, இது தண்டம் இவ்வாறு ரஜ்ஜு திரவியம் கல்பிக்கப்படுகிறதோ அவ்வாறு பிராணன் முதலிய அநந்த அசத் = இல்லாவிட்டாலும் அதாவது உண்மையில் இல்லை. ஏனெனில் சித்தம் சலிக்கவில்லையெனில் எதனாலும் எந்த ஒரு பாவமும் உபலக்ஷிதமாகாது. மேலும் ஆத்மாவிடத்தில் சலனம் இல்லை. அவ்வாறே கேவலம் சலிக்கச் செய்யும் தன்மை உடைய சித்தத்தில் உண்டாகும் பாவம் பரமார்த்த சத்தியம் என்ற கல்பனை பொருந்தாது. ஆகையால் இந்த ஆத்மா ஸ்வயம் ஏகமாத்திர சத் சுவபாவமாக இருந்தாலும் அசத்துவரூப பிராணன் முதலிய பாவங்கள். அவ்வாறே ரஜ்ஜுவைப் போல் எல்லா பிரகார விகல்பங்களுக்கும் ஆஸ்ரய பூதமான பரமார்த்த சத் ஆத்ம ஸ்வரூபத்தால் கல்பிக்கப்பட்டதாகும்.
(भाष्यम्) ते चापि प्राणादिभावाः अद्वयेनैव सता आत्मना विकल्पिताः ; न हि निरास्पदा काचित्कल्पना उपपद्यते ; अतः सर्वकल्पनास्पदत्वात्स्वेनात्मना अद्वयस्य अव्यभिचारात् कल्पनावस्थायामपि अद्वयता शिवा ; कल्पना एव त्वशिवाः, रज्जुसर्पादिवत्त्रासादिकारिण्यो हि ताः । अद्वयता अभया ; अतः सैव शिवा ॥ ३३ ॥
(ச.பா) அந்த பிராணன் முதலிய பாவமும் அத்வயசத்ஸ்வரூப ஆத்மாவிலேயே கல்பனை செய்யப்பட்டதாகும். ஏனெனில் எந்த ஒரு கல்பனையும் ஆதார மற்றதாய் இருக்க முடியாது. ஆகையால் எல்லா கல்பனைகளுக்கும் ஆஸ்ரய பூதமாய் இருப்பதால் தன்னுடைய ஸ்வஸ்வரூப அத்வைதம் ஒருகாலும் மாறுபாடு அடையாததால் கல்பனா அவஸ்தையிலும் அத்வைதமாய் சிவ (மங்கள) மயமாய் இருக்கிறது. கேவலம் கல்பனை அசிவமாய் (மங்கலமற்றதாய்) இருக்கிறது. ஏனெனில் ரஜ்ஜு சர்ப்பம் முதலியவைகளைப் போல் பயம் முதலியவைகளை உண்டுபண்ணக் கூடியதாய் இருக்கிறது. அத்வைதம் அபய ரூபம் ஆகையால் அது மங்கலமயமானது.
कुतश्चाद्वयता शिवा ? नानाभूतं प्रथक्त्वम् अन्यस्य अन्यस्मात् यत्र दृष्टम् , तत्राशिवं भवेत् ।
(ச.பா) (அ.கை) எதனால் அத்வைதம் சிவம்? எங்கு ஒரு வஸ்துவிலிருந்து இரண்டாவது வஸ்துவின் நாநாவாயும் பிருதக்காயும் எதைக் காண்கிறோமோ அது அமங்களமாகிறது அசிவமாகிறது-
नात्मभावेन नानेदं न स्वेनापि कथञ्चन ।
न पृथङ् नापृथक्किञ्चिदिति तत्त्वविदो विदुः ॥ ३४ ॥
कारिका अन्वयः - आत्मभावेन नानेदं न स्वेनापि कथञ्चन न पृथक् न अपृथक् न किञ्चित् इति तत्वविदःविदुः।
காரிகா அர்த்தம் - நாநாத்துவம் ஆத்மஸ்வரூபத்தில் இல்லை. தன்னுடைய ஸ்வரூபத்தாலேயே அவ்வாறு பலவாராகப் ஒரு போதும் உண்டாவது இல்லை ஒரு வஸ்துவும் பிரஹ்மத்தைக் காட்டிலும் பிருதக்காகவோ (வேறாகவோ) அபிருதக்காகவோ இல்லை. என்று தத்துவவேத்தா அறிகின்றான்
(भाष्यम्) - न ह्यत्राद्वये परमार्थसत्यात्मनि प्राणादिसंसारजातमिदं जगत् आत्मभावेन परमार्थस्वरूपेण निरूप्यमाणं नाना वस्त्वन्तरभूतं भवति ; यथा रज्जुस्वरूपेण प्रकाशेन निरूप्यमाणो न नानाभूतः कल्पितः सर्पोऽस्ति, तद्वत् । नापि स्वेन प्राणाद्यात्मना इदं विद्यते कदाचिदपि, रज्जुसर्पवत्कल्पितत्वादेव ।
(ச.பா) இந்த அத்விதீய பரமார்த்தசத்ய ஆத்மாவில் இந்த பிராணன் முதலியவை சம்சாரரூபமாகி ஜகத் ஆத்ம பாவத்தால் அதாவது பரமார்த்த சத்திய ரூபத்தால் நிரூபணம் செய்யப்பட்ட பின் நாநா அதாவது பிருதக்வஸ்துவில் அந்தர்பூதம் ஆகாது. இவ்வாறு பிரகாசமூலமாய் ரஜ்ஜு ஸ்வரூபமாய் நிரூபணம் ஆனபொழுது கல்பித சர்ப்பம் என்பது தனியாக இல்லை. அவ்வாறு (பரமார்த்த ரூபமாய் நிரூபணம் செய்யப்பட்டபொழுது ஜகத் ஆத்மாவைக் காட்டிலும் தனியான வஸ்து இல்லை). ரஜ்ஜு சர்ப்பத்திற்கு சமானமாக கல்பிக்கபட்டதின் காரணமாய் தன்னுடைய பிராணன் முதலிய ஸ்வரூபமாய் சிறிதும் ஒருபொழுதும் இல்லை.
(भाष्यम्) तथा अन्योन्यं न पृथक् प्राणादि वस्तु, यथा अश्वान्महिषः पृथग्विद्यते, एवम् । अतः असत्त्वात् नापि अपृथक् विद्यतेऽन्योन्यं परेण वा किञ्चिदिति । एवं परमार्थतत्त्वविदो ब्राह्मणा विदुः । अतः अशिवहेतुत्वाभावादद्वयतैव शिवेत्यभिप्रायः ॥
(ச.பா) இந்த துவைத வஸ்துக்கள் குதிரையைக்காட்டிலும் எருமை வேறுபட்டது என்பதைப்போல் அவைகளுள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவைகளும் அல்ல. எனவே அவைகள் அஸத்தானவைகளாகும். எனவே அவை ஒன்றுக்கொன்று இணைந்ததாகவோ, அல்லது ஒன்றோடு மற்றொன்று இணைந்ததாகவோ இல்லை. இவ்வாறு ஆத்மா அநாத்மாவின் தாதாத்மியமாகவோ, சுதந்திரமாகவோ உண்டான எந்த வஸ்துவும் இல்லை என்று பரமார்த்ததத்துவமான ஆன்மதத்துவத்தை அறிந்த பிரஹ்ம வித்துக்கள் அறிவர். எனவே அமங்கள ஹேதுவாய் இல்லாமையால் அத்வைத தன்மையே மங்களமானது ஆகும்.
(भाष्यम्) (अव) तदेतत्सम्यग्दर्शनं स्तूयते ।
(ச.பா) (அ.கை) அந்த இந்த சம்யக்தர்சனத்தை ஸ்துதி செய்கிறார்-
वीतरागभयक्रोधैर्मुनिभिर्वेदपारगैः ।
निर्विकल्पो ह्ययं दृष्टः प्रपञ्चोपशमोऽद्वयः ॥ ३५ ॥
कारिका अन्वयः - वीतरागभयक्रोधैः वेदपारगैः मुनिभिः हि अयं निर्विकल्पः प्रपञ्चोपशमः अद्वयः अयं दृष्टः ॥
காரிகா அர்த்தம் - ஆசை. க்ரோதம், பயம் இவைகள் அறவே அற்றவர்களாயும் வேதார்த்தத்தை நன்கு அறிந்தவர்களாயும் உள்ள மனனசீலர்களால் எந்த கல்பனைகளும் அற்றதும், பிரபஞ்சமற்றதுமான அத்வைத தத்துவம் காணப்பட்டது.
तदेतत्सम्यग्दर्शनं स्तूयते — विगतरागभयक्रोधादिसर्वदोषैः सर्वदा मुनिभिः मननशीलैर्विवेकिभिः वेदपारगैः अवगतवेदान्तार्थतत्त्वैर्ज्ञानिभिः निर्विकल्पः सर्वविकल्पशून्यः अयम् आत्मा दृष्टः उपलब्धो वेदान्तार्थतत्परैः, प्रपञ्चोपशमः, प्रपञ्चो द्वैतभेदविस्तारः, तस्योपशमोऽभावो यस्मिन् , स आत्मा प्रपञ्चोपशमः, अत एव अद्वयः विगतदोषैरेव पण्डितैर्वेदान्तार्थतत्परैः संन्यासिभिः अयमात्मा द्रष्टुं शक्यः, नान्यैः रागादिकलुषितचेतोभिः स्वपक्षपातिदर्शनैस्तार्किकादिभिरित्यभिप्रायः ॥ ३५ ॥
(ச.பா) ராகம். பயம், க்ரோதம் முதலிய எல்லா தோஷங்களில் இருந்தும் நிவிர்த்தி அடைந்த அந்த மனனசீலர்களாயும். வேத பாராங்கதர்களாயும், வேத அர்த்தத்தின் மர்மத்தை அறிந்தவர்களுமான தத்துவஞானிகளின் வாயிலாய் எல்லா விதமான விகல்பங்கள் அற்ற, நிர்விகல்பமாயும். த்வைதரூபபேதத்தின் விஸ்தாரமான பிரபஞ்சத்தின் நிவிர்த்தியாகிய பிரபஞ்ச உபசமமாகியதாய் ஆத்மா உள்ளது என்று அறியப்படுகிறது. ஆகையால் அத்வைதமான ஆத்மாவை பண்டிதர்களான வேதாந்த அர்த்தத்தில் தத்பரர்கள். தோஷ மற்றசந்நியாசிகள் வாயிலாய் காணமுடிகிறது. எவர்களுடைய சித்தம் ராகம் முதலிய தோஷங்களால் கலங்க முற்றதாயும். எவர்களுடைய தர்சனம் தங்களுடைய பக்ஷத்தில் மிகுந்த ஆக்கிரஹமுடையதாயும் உள்ள அந்த வேறு தார்க்கிகர்கள் இந்த ஆத்ம சாக்ஷாத்காரத்தை அடைய முடியாது என்பது தாத்பரியம்.
(भाष्यम्) (अव) - यस्मात्सर्वानर्थोपशमरूपत्वादद्वयं शिवमभयम् ।
(ச.பா) (அ.கை) ஏனெனில் எல்லா அநர்த்தங்களுக்கும் நிவிர்த்தி ஸ்தானம் ஆவதால் அத்வைதமே மங்களமயமும் அபயரூபமும் ஆகும்.
तस्मादेवं विदित्वैनमद्वैते योजयेत्स्मृतिम् ।
अद्वैतं समनुप्राप्य जडवल्लोकमाचरेत् ॥ ३६ ॥
कारिका अन्वयं - तस्मात् एवं विदित्वा अद्वैते स्मृतिं योजयेत् एनम् अद्वैतं समनुप्राप्य लोकं जडवत् आचरेत् ।
காரிகா அர்த்தம் - ஆகையால் இதை (ஆத்மதத்துவத்தை) இவ்வாறு அறிந்து அத்வைதத்தில் மனதைச் செழுத்தி அத்வைத தத்துவத்தை அடைந்து உலகில் ஜடம் போல் வியவஹாரம் செய்.
(भाष्यम्) - अतः एवं विदित्वैनम् अद्वैते स्मृतिं योजयेत् ; अद्वैतावगमायैव स्मृतिं कुर्यादित्यर्थः । तच्च अद्वैतम् अवगम्य ‘अहमस्मि परं ब्रह्म’ इति विदित्वा अशनायाद्यतीतं साक्षादपरोक्षादजमात्मानं सर्वलोकव्यवहारातीतं जडवत् लोकमाचरेत् ; अप्रख्यापयन्नात्मानमहमेवंविध इत्यभिप्रायः ॥ ३६ ॥
(ச.பா) ஆகையால் இதை இவ்வாறு அறிந்து அத்வைதத்தில் மனதை செழுத்தி அத்வைத போதத்திலேயே சிந்தனை செய், அத்வைதத்தை அறிந்து அதாவது நான் பரப்ரஹ்மமாய் இருக்கிறேன் என்ற ஞானத்தை அடைந்து எல்லா லோக வியவஹாரங்களையும் நீக்கி போஜன முதலியவற்றில் உள்ள இச்சையை கடந்து சாக்ஷாத் அபரோக்ஷ பிறப்பற்ற ஆத்மாவை அனுபவித்துக் கொண்டு உலகில் ஜடம் போல் செயல்படு. தாத்பரியம் என்னவெனில் நான் இப்படிப்பட்டவன் என்று தன்னை பிரகடனப் படுத்தாமல் வியவஹாரம் செய்ய வேண்டும் என்பதாகும்.
(भाष्यम्) (अव) कया चर्यया लोकमाचरेदिति, आह-
(ச.பா) (அ.கை) உலகில் எவ்வாறு வியவஹாரம் செய்யவேண்டும்? என்பது கூறப்படுகிறது.
निःस्तुतिर्निर्नमस्कारो निःस्वधाकार एव च ।
चलाचलनिकेतश्च यतिर्यादृच्छिको भवेत् ॥ ३७ ॥
कारिका अन्वयः - निस्तुतिः निर्नमस्कारः निस्वधाकारः एव च चलाचलनिकेतश्च यतिः यादृच्छिकः भवेत् ॥ ३७ ॥
காரிகா அர்த்தம்- (தேவர்களை) ஸ்துதித்தல், நமஸ்காரம் செய்தல் போன்ற கர்மாக்களை செய்யாமலும், (சிரார்த்தம் போன்ற) ஸ்வதாகார கர்மாக்களை செய்யாமலும், சல (சரீரம்), அசல (ஆத்மா) இவைகளில் விஸ்ராமத்தை அடைந்து எது கிடைத்ததோ அதில் சந்துஷ்டனாக இருப்பான்.
(भाष्यम्) — स्तुतिनमस्कारादिसर्वकर्मविवर्जितः त्यक्तसर्वबाह्यैषणः प्रतिपन्नपरमहंसपारिव्राज्य इत्यभिप्रायः, ‘एतं वै तमात्मानं विदित्वा’ (बृ. उ. ३ । ५ । १) इत्यादिश्रुतेः, ‘तद्बुद्धयस्तदात्मानस्तन्निष्ठास्तत्परायणाः’ (भ. गी. ५ । १७) इत्यादिस्मृतेश्च । चलं शरीरम् , प्रतिक्षणमन्यथाभावात् ; अचलम् आत्मतत्त्वम् । यदा कदाचिद्भोजनादिसंव्यवहारनिमित्तमाकाशवदचलं स्वरूपमात्मतत्त्वम् आत्मनो निकेतमाश्रयमात्मस्थितिं विस्मृत्य अहमिति मन्यते यदा, तदा चलो देहो निकेतो यस्य सोऽयमेवं चलाचलनिकेतो विद्वान्न पुनर्बाह्यविषयाश्रयः । स च यादृच्छिको भवेत् , यदृच्छाप्राप्तकौपीनाच्छादनग्रासमात्रदेहस्थितिरित्यर्थः ॥ ३७ ॥
(ச.பா) -ஸ்துதி, நமஸ்காரம் முதலிய எல்லா கர்மங்களும் அற்ற, சர்வ ஏஷணைகளையும் விட்ட பரமஹம்ச பாரிவிராஜ்யம் என்பது அபிப்பிராயம், அது “एतं वै तमात्मानं विदित्वा” (ஏதம் வை தம் ஆத்மானம் விதித்துவா = அந்த ஆத்மாவை அறிந்து) முதலிய ச்ருதிகளாலும் “तद्बुद्धयस्तदात्मानस्तन्निष्द्भास्तत्परायणाः” (தத் புத்தய ஸ்ததாத்மானஸ்தந்நிஷ்டாஸ்தத்பராயணா = எவருடைய புத்தி, ஆத்மா நிஷ்டையிலேயே நிலைத்திருக்கிறதோ அவ்வாறே அதில் சரணடைந்ததோ) என்ற கீதாஸ்மிருதி வாக்கியத்தாலும் அறிகிறோம், சலம் என்பது சரீரம். அசலம் என்பது ஆத்மதத்துவம், அசலமான ஆத்மாவிற்கு, பிரதிக்ஷணமும் மாறுவதால் சலமான சரீரத்தை இருப்பிடமாகக் கொண்டு, அதாவது பிரதிக்ஷணமும் மாறுபடுவது சரீரம், எம்மாற்றமும் அற்றது ஆத்மா, எப்பொழுதும் ஆத்மஸ்வரூபத்திலேயே ஈடுபட்டிருக்கும் பிரஹ்ம ஞானிகள் ஏதாவது ஒரு சமயம் உணவு போன்ற வியவஹாரங்களின் பொருட்டு, ஆகாயம் போல் எங்கும் நிறைந்திருக்கும் ஆத்மஸ்வரூபத்தை நினைக்காது அந்த சமயத்தில் நான் என்று அந்த ஆத்மஸ்வரூபத்திற்கு உடலை இருப்பிடமாக எண்ணுகிறார்களோ, அப்பொழுது அவர்களுக்கு இந்த பூத உடல் இருப்பிடமாகிறது என்பது பொருள். வேறு சமயங்களில் அந்த ஆத்ம ஞானி வெளிவிஷயங்களில் ஈடுபடுவதில்லை என்றும் அறியத்தக்கது. இத்தகைய பிரஹ்ம ஞானியான சந்நியாசி எதிரிச்சையாய் கிடைத்த கோவணம் முதலானவைகளைக் கொண்டு உடலைப் போர்த்தியவனாயும், ஏதோ, எப்பொழுதோ இட்ட சில கவள அன்னத்தை உடையவனாக் கொண்டு உடலைத் தாங்குபவனாகவும் இருப்பான்.
तत्त्वमाध्यात्मिकं दृष्ट्वा तत्त्वं दृष्ट्वा तु बाह्यतः ।
तत्त्वीभूतस्तदारामस्तत्त्वादप्रच्युतो भवेत् ॥ ३८ ॥
कारिका अन्वयः - आध्यात्मिकं तत्त्वं दृष्ट्वा बाह्यतः तत्त्वं दृष्ट्वा तत्त्वीभूतः तदारामः तत्त्वात् अप्रच्युतः भवेत् ॥ ३८ ॥
காரிகா அர்த்தம் - (விவேகி புருஷன்) அத்யாத்ம தத்துவத்தை அறிந்து (கண்டு) பாஹ்யதத்துவத்தையும் அனுபவித்து தத்துவமாய் ஆகி அதில் ரமிக்கின்றவனாய் தத்துவத்தில் இருந்து நழுவாமல் இருக்க வேண்டும்.
(भाष्यम्) - बाह्यं पृथिव्यादि तत्त्वमाध्यात्मिकं च देहादिलक्षणं रज्जुसर्पादिवत्स्वप्नमायादिवच्च असत् , ‘वाचारम्भणं विकारो नामधेयम्’ (छा. उ. ६ । १ । ४) इत्यादिश्रुतेः । आत्मा च सबाह्याभ्यन्तरो ह्यजोऽपूर्वोऽनपरोऽनन्तरोऽबाह्यः कृत्स्नः तथा आकाशवत्सर्वगतः सूक्ष्मोऽचलो निर्गुणो निष्कलो निष्क्रियः ‘तत्सत्यं स आत्मा तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) इति श्रुतेः, इत्येवं तत्त्वं दृष्ट्वा तत्त्वीभूतस्तदारामो न बाह्यरमणः ; यथा अतत्त्वदर्शी कश्चित्तमात्मत्वेन प्रतिपन्नश्चित्तचलनमनु चलितमात्मानं मन्यमानः तत्त्वाच्चलितं देहादिभूतमात्मानं कदाचिन्मन्यते प्रच्युतोऽहमात्मतत्त्वादिदानीमिति, समाहिते तु मनसि कदाचित्तत्त्वभूतं प्रसन्नमात्मानं मन्यते इदानीमस्मि तत्त्वीभूत इति ; न तथा आत्मविद्भवेत् , आत्मन एकरूपत्वात् , स्वरूपप्रच्यवनासम्भवाच्च । सदैव ब्रह्मास्मीत्यप्रच्युतो भवेत्तत्त्वात् , सदा अप्रच्युतात्मतत्त्वदर्शनो भवेदित्यभिप्रायः ; ‘शुनि चैव श्वपाके च’ (भ. गी. ५ । १८) ‘समं सर्वेषु भूतेषु’ (भ. गी. १३ । २७) इत्यादिस्मृतेः ॥ ३८ ॥
(ச.பா) பிருதிவீ முதலிய பாஹ்யதத்துவம், தேஹம் முதலிய ஆத்யாத்மிகதத்துவம். “वाचारम्भणंविकारोनामधेयम्” (வாச்சாரம்பணம்விகாரோநாமதேயம் என்ற சுருதியை அனுசரித்து ரஜ்ஜு சர்ப்பம் முதலியவைகளுக்கு சமானமானதாய் அவ்வாறே, ஸ்வப்னம், மாயைக்கு சமானமாய் மித்தையாகும், “तत्सत्यं स आत्मातत्त्वमसि” (தத்சத்யம் ச ஆத்மாதத்துவமஸி = அது சத்தியம், அது ஆத்மா அது நீயாய் இருக்கும் என்ற சுருதியின்படி ஆத்மா வெளியிலும், உள்ளும் இருக்கிறது. ஜன்மமற்றது. காரணமற்றது, காரியமற்றது, உள்ளும் புறமும்சூன்யம், பரிபூர்ணம், ஆகாசத்திற்கு சமமாய் சர்வகதம், சூக்ஷ்மம், அசலம், நிர்குணம், நிஷ்களம் அவ்வாறே நிஷ்கிரியையாகும். இவ்வாறு தத்துவ சாக்ஷாத்காரம் அடைந்து தத்துவ பூதர்களாகி அதில் ரமிக்கின்றவர்களாய் வெளியில் உள்ளவற்றில் ஆசை (பிரியம்) அற்றவர்களாய் இருந்து கொண்டு எவ்வாறு மனதை ஆத்மாவாய் கருதி ஏதோ ஒரு அதத்துவதர்சீ புருஷன் ஒரு சமயத்தில் ஆத்மாவையும் சலிக்கும் என்று நினைத்து தன்னை தத்துவத்திலிருந்து சலிக்க செய்து தேஹாதிரூபமாய் அறிந்து அந்த சமயத்தில் தத்துவத்திலிருந்து நழுவிவிட்டேன் என்று நினைக்கின்றான், அவ்வாறே சித்தம் சமாஹிதம் அடைந்த பொழுது தன்னை தத்வீபூதனாயும், மேலும் பிரசன்னம் அடைந்ததாய் இப்பொழுது நான் தத்துவத்தில் நிலைபெற்றிருக்கிறேன். அவ்வாறே ஆத்ம வேத்தாவை அறிய வேண்டியதில்லை. ஏனெனில் ஆத்மா எப்பொழுதும் ஒரே ரூபமாய் இருக்கிறது. அதனுடைய நிலையிலிருந்து நழுவுதல் சம்பவிக்காது. ஆகையால் அது எப்பொழுதும் “பிரஹ்மமாய் இருக்கிறேன்” என்று நிச்சயம் செய்து தத்துவத்திலிருந்து நழுவாது. தாத்பரியம் என்னவெனில் ஆத்ம தர்சி ஒரு நாளும் நழுவமாட்டான். “शुनिचैव श्वपाके च पण्डिताः समदर्शिनः” (சுனி சைவ ச்வபாகே ச பண்டிதா சமதர்சினः = நாயினிடத்திலும். சண்டாளனிடத்திலும் பண்டிதர்கள் சமதிருஷ்டி உடையவர்கள்) “समं सर्वेषु भूतेषु” (சமம்சர்வேஷு பூதேஷு = எல்லா பூதங்களிடமும் சமம்) என்பது முதலிய சுருதிகளால் அறிகிறோம்.
इति द्वितीयं वैतथ्यप्रकरणं सम्पूर्णम् ॥